ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-9-
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-
சுட்டுரைத்த நன் பொன் ஒளியையும் அத்யுஜ்ஜ்வலமான ரத்னத்தின் ஒளியையும் யுடைத்தான திரு உடம்பை யுடையனாய்
அழகியனாய்த் தன் ஒப்பார் இன்றியே இருந்த திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் தன் அழகாலே எனக்கு ஸ்வாமியாய்
தன்னுடைய ஸுசீல்யத்தாலே பெற்ற தாயும் வளர்த்த தாயும் பண்ணக் கடவ ஸ்நேஹத்தை என் பக்கலிலே பண்ணி
ஸ்வ விஸ்லேஷ ஜெனிதமான என்னுடைய நிரவதிக சந்தாபம் எல்லாம் போம்படி அதி சீதளமாய் ம்ருத சஞ்ஜீவனமான
தன் திருவடிகளின் நிழலை எனக்குத் தந்து அருளினான் -என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-9-
என்னுடைய சிரமம் எல்லாம் தீரும்படி-தன்னுடைய பாதச் சாயையை எனக்கு -நான் அல்லேன் -என்ன -வலியது தந்தான் என்கிறார்-
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-
எனக்கு உறுதியான என் பிதாவாய் -தோழியாய் -பொன்னும் மணியும் முத்தும் போலே போக்யனாய் -எனக்கு அவ்வளவும் அன்றிக்கே மிகவும் உபகாரகனாய்
என் போல்வாருக்கு எளியனாம் படி திரு விண்ணகரிலே வருகை யாகிற உபகாரகத்தை பண்ணினவன் -உபகாரகனாம் இடத்திலே தனக்கு ஒப்பு இல்லாதவன் –
—————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-9-
அநந்தரம் பரஸ்பர விருத்த ஆகாரமான பந்து வர்க்கமும் ஸ்ப்ருஹணீய வஸ்துக்களும் தனக்கு பிரகாரமாக யுடையனான
தன்னுடைய உபகாரகத்வத்துக்கு ஒப்பில்லாத சர்வேஸ்வரன் தன்னுடைய பாதச் சாயையை எனக்குத் தந்து அருளினான் என்கிறார் –
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்–எனக்கு அசாதாரணனாய் என் சத்தா ஹேதுவாய் இருந்துள்ள பிதாவாய்
அந்த பும்ஸ்த் வத்துக்கு விருத்தமான ஸ்த்ரீத்வத்தை யுடைய செவிலித் தாயானவளாய் –
அவளைப் போலே வளர்த்து விடுகை யன்றிக்கே பெற்றவளாக வேறுபாட்டையுடைய நல் தாயாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்–பொன் போலே தன்னுடைய ஸ்ப்ருஹணீயதையை பிரகாசிப்பித்தும் –
அதில் காட்டில் உஜ்ஜ்வல்யத்தாலும் மஹார்ஹத்தையாலும் வேறுபட்ட ரத்னம் போலே தன்னுடைய தேஜஸ்விதையை பிரகாசிப்பித்தும்
முத்துப் போலே தன் சீதளமான நீர்மையை பிரகாசிப்பித்தும் -இப்படி பஹுமுகமாக-எனக்கு உபகாரகனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்–ஓளி விடும்படி பொன்னான மதிலால் சூழப்பட்ட திரு விண்ணகரிலே
வர்த்திக்கிற ஸர்வ ஸ்வாமியாய் -இப்படி ஸர்வ பிரகார உபகாரகத்வத்துக்கு
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–தனக்கு ஒப்பில்லாத மஹா உபகாரகனானவன்
தன் திருவடிகளின் நிழலை எனக்குத் தந்து அருளினான்
——
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-9-
என்னுடைய சிரமம் எல்லாம் தீரும் படி தன்னுடைய பாதச் சாயையை எனக்கு -நான் அல்லேன் -என்ன -வலியது தந்தான் என்கிறார்
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-
என்னப்பன் எனக்காய்
பூதா நாம் யோ அவ்யய பிதா என்கிற போது வன்றிக்கே -எனக்கே யான பிதாவாய் –
இகுளாய் -தோழியாய் -இது தமிழர் நிர்வாகம் -நம்முடையவர்கள் செவிலித் தாய் -என்று நிர்வஹிப்பர்கள்-தாய்க்கு தோழியாய் இருக்கும் இ றே செவிலித் தாய் -அத்தைச் சொல்கிறது –
என்னைப் பெற்றவளாய்ப்-உடம்பு நொந்து பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்-
பொன்னும் மணியும் முத்தும் போலே எனக்கு உபகாரகன் –
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
மின்னா நின்றுள்ள பொன் மதிள் சூழ்ந்த திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகை யாகிற உபகாரத்தை பண்ணினவன் –
தன்னொப்பார் இல்லப்பன் –
உபகாரகரில் தன்னோடு ஒப்பார் இல்லாத உபகாரகன் -ப்ரணய ரோஷத்தால் நான் அகலப் புக தான் தாழ நின்று பொருந்த விட்டுக் கொண்டவன் –
தந்தனன் தன தாள்நிழலே.-
தன் தாள் நிழல் தந்தான் -தன் பாதாச்சாயைத் தந்தான் -அழித்தாய் உன் திருவடியால் -என்கிறபடியே என் மநோ ரத்தத்தை திருவடிகளாலே அழித்து தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டான் –
——
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-9-
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே.–6-3-9-
நிதானப் பாசுரம் இது -பரஸ்பர வ்ருத்த ஆகாரம் பந்து வர்க்கம் -ஸ்ப்ருஹணீய வஸ்து -பிரகாரம் -உபகாரத்வத்துக்கு ஒப்பு இல்லாத
சர்வேஸ்வரன் பாதச் சாயை தந்து அருளினான்
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்-சத்தைக்கு ஹேது இவன் -இகுள் -வளர்த்த தாய் -ஸ்த்ரீத்வம்
செவிலித்தாய் -பெற்றவள் நல் தாய் -பந்து வர்க்கத்தில் வேறுபாடு
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்-பொன் போலே ஸ்ப்ருஹணீயத்வம் பிரகாசிப்பித்தும் –
அதில் காட்டில் ஔஜ்வல்யத்தால் மிக்கு மஹார்கதை-ரத்னம் போலே தேஜஸ் பிரகாசிப்பித்தும்
அதில் காட்டில் நீர்மை குளிர்த்தியாலும் வியார்வர்தமான -முத்தப்பன்-நீர்மையை பிரகாசப்படுத்தி -என்னப்பனுமாய்-பஹு முக உபகாரகன்
மின்னப் பொன் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த அப்பன்-சர்வ ஸ்வாமி -மதில்களும் பொன் மணி முத்து
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே–உபகாரத்தில் ஒப்பார் இல்லாத -திருவடி நிழல் தந்து அருளினான்
எனக்கு என் அப்பனாகியும், எனக்குச் செவிலித் தாயாகியும், என்னைப் பெற்ற தாயாகியும், பொன்னைப் போன்றவனும் மணியைப் போன்றவனும்
முத்தைப் போன்றவனும் என் அப்பனும் ஆகியும், பிரகாசிக்கின்ற அழகிய மதிள்களாற் சூழப்பட்ட திரு விண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில்
எழுந்தருளி யிருக்கின்ற அப்பன், தனக்குச் சமானமானவர்கள் இல்லாத அப்பன் தன்னுடைய திருவடிகளின் நிழலைத் தந்தான்.
எனக்கு என்னப்பன் ஆய் என்று மாற்றுக. இகுளை – தோழி. ஆய் ஆய் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல் அப்பன் அவன்தன தாள் நிழல் தந்தனன் என்க.
எனக்குச் சரணமான மாத்திரமே யன்று, மற்றும் எல்லாமும் அவனே என்கிறார்.
அன்றிக்கே,
எனக்கு எல்லா வகையாலும் உபகாரகனாம் தன் திருவடி நிழலை,
‘அல்லேன்’ என்ன,
வலிய எனக்குத் தந்தான் என்கிறார் என்னுதல்.
எனக்கு என் அப்பன் ஆய் –
எனக்கு அசாதாரணனாய்ச் சத்தைக்குக் காரணமாயுள்ள பிதாவாய்.
பஞ்சகாலத்திலே குழந்தைகளைவிற்று உண்ணும் தமப்பனைப் போல் அன்றியிலே,
தன்னை அழிய மாறியும் என்னை நோக்கக் கடவ தமப்பனாய்.
இகுளாய் –
எனக்கு நடந்த செயலைப் பற்றிச் சொல்லுவதற்குரிய தோழியுமாய்.
இகுளை என்று தோழிக்குப் பெயர். அது கடைக்குறைந்து ‘இகுள்’ என நிற்கிறது.
என்னைப் பெற்றவளாய் –
வளர்த்துக் கொள்ளியான தாயைப் போல் அன்றியே, பத்து மாசம் வயிற்றிலே வைத்து நோக்கிப் பெற்ற தாயாய்.
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பன் –
வேறே இனிய பொருள்களாய்க் கொண்டு உபகாரகம் ஆவன சில பொருள்கள் உள;
எனக்கு அப்பொருள்கள் எல்லாம் தானாய் நின்று உபகரித்தவன்.
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் –
மின்னா நின்றுள்ள பொன் மதிளாலே சூழப்பட்ட திரு விண்ணகரிலே நின்ற உபகாரகன்.
தன் ஒப்பார் இல் அப்பன் –
சிலர்க்கு ஒன்றைக் கொடுக்குமிடத்தில், தன்னோடு ஒக்கக் கொடுக்க வல்லார் இல்லாதபடியான மஹோபகாரகன்.
இதற்கு, ‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியிலே, அவன் மேல் வந்து விழ,
‘நீ எனக்கு வேண்டா’ என்று நான் தள்ளத் தள்ள,
‘நீ உனக்கு ஹிதம் அறிந்தாயோ? நான் உனக்கு வேணுங்காண் என்று தன்னை எனக்குத் தந்தவன்’ என்று சீயர் அருளிச் செய்வர்.
தன தாள் நிழல் தந்தனன் –
‘உன்னை ஒழிந்த வெய்யிலே எனக்கு அமையும்’ என்று நான் அகலப் புக,
“அழித்தாய் உன் திருவடியால்” என்று தன்னுடைய திருவடிகளாலே என் செருக்கை-மமதையைப்- போக்கி,
திருவடி நிழலை எனக்குத் தந்தான்.
அடிபட்டவாறே, ‘எனக்கு’ என்று வைத்தவற்றையும் பொகடுவர்களே.
திருவடிகளாலே என் செருக்கைப் போக்கினான்’ என்றதனை ரசோக்தியாக அருளிச்செய்கிறார்
‘அடிபட்டவாறே’ என்று தொடங்கி.
திருவடிகள் என்றும்- தண்டனை என்றும் பொருள்.
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply