Archive for April, 2024

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-4-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-4-

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

புண்ணிய பாப தத் பல பூத அபிமத விஷய சம்ச்லேஷ விஸ்லேஷ ஸ்மரண விஸ்மரண பாவ அபாவாதி சகல பதார்த்த அந்தர்யாமி தயா
வ்யாப்தனாய் இருந்து வைத்தே தத் கத தோஷைர் அசம்ப்ருஷ்டனாய் இருந்த திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்
சேர்ந்த பிரானுடைய கிருபையால் சகல புருஷார்த்த சாதன பூத கரண களேபர ப்ரப்ருதி சர்வ பதார்த்தங்களும் ஸ்ப்ருஷ்டமான
இவ்வர்த்தம் திரு விண்ணகரிலே ப்ரத்யஷிக்கலாம் என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-4-

புண்ணியம்  பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

புண்ய பாப ரூபாதியால் எம்பெருமானுக்கு விசேஷணத் வேன தோற்றுகிற விபூதி எல்லாம் அவன் கிருபையால் உண்டாயிற்று -இது பொய்யல்லாமை ஆராய்ந்து பார்த்து கொள்ளுங்கோள் -என்கிறார் –
புணர்ச்சி பிரிவு -புண்ய பாப பல ரூபமான சம்ச்லேஷ விஸ்லேஷன்கள்-/ அல்லனாய்-புண்ய பாபாதிகளுக்கு நியாமகனாய் அவற்றுக்கு வஸ்யன் அன்றிக்கே இருக்கும் என்கிறது –இன்னருள் என்கிறது -ஒரு காரணம் அறப் பண்ணும் கிருபை –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-4-

அநந்தரம் கீழ்ச் சொன்ன புகர் கொள் கீர்த்தியானது புண்ய பாப அநு பந்தி பதார்த்த விபூதிகனான
ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிர்ஹேதுக கிருபை என்கிறார் –

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்–இஷ்ட அநிஷ்ட ஹேதுவான புண்ய பாபங்கள் –
தத் க்ருதமான தத் தத் சம்ச்லேஷ விஸ்லேஷன்கள் எண்டு இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்-சம்ச்லேஷ விஸ்லேஷ கணநையும் விஸ்மரணு மாய் –
தத் தத் அநு ரூப வஸ்துக்களுடைய ஸத்பாவை அஸத்பாவங்களாய் வைத்து தத் தத் கர்மவஸ்யன் இன்றியே இருப்பானாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்–ஸ்த்திறமான மாடங்கள் சூழ்ந்த திரு விண்ணகரிலே சேர்ந்த சர்வாதிகனான
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–ஸ்ரீ கிருஷ்ணனுடைய அதிசயித போக்யமாம்படி
அநந்ய ப்ரயோஜனமான கிருபையையே கீழ்ச் சொன்ன உத்தார கீர்த்தியாகக் கண்டு கொள்ளுங்கோள்
-இது கைதவமோ -பரமார்த்தம் என்று கருத்து –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-4-

இவ்விபூதி யடங்க அவன் கிருபையால் உண்டாயிற்று –இது பொய்யல்லாமை பார்த்துக் கொள்ளுங்கோள் என்கிறார் –

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
ஸூ க துக்க ஹேதுவான புண்ய பாபங்களும் -தத் பல பூதமான அபிமத சம்ச்லேஷ விஸ்லேஷன்களும்–
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய்
அநு கூல விஷயமான எண்ணமும் -பிரதி கூல விஷயமான விஸ்ம்ருதியும் -ஸத்பாவ அஸத் பாவங்களுமாய் –
அல்லனாய்-புண்ய பாவங்களை அனுபவியா நிற்க செய்தே தான் அகர்ம வஸ்யனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-கண்ணன்
பிரளயத்திலும் அழியாத மாடங்கள் -அவ்வவதாரத்துக்கு பிற்பட்ட என்னைப் பெறுகைக்காக திரு விண்ணகரிலே வந்து நிற்கிற கிருஷ்ணனான உபகாரகன்
இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.
தன் பேறாகப் பண்ணும் கிருபையால் இது அடங்க உண்டாயிற்று –கைதவமே.–-இதில் அர்த்தவாதம் உண்டோ -இல்லை இ றே – -ஆராய்ந்து கொள்ளுங்கோள்-

——

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-4-

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

புகர் கொள் கீர்த்தி -புண்ய பாப அனு பந்தி பதார்த்திக விபூதிமான் -அவன் அனுக்ரகத்தால்
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்-தத் தத் சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்-மற்றவை இரட்டை -உள்ளனாய் இல்லை
புண்யம் சம்ச்லேஷம் -நினைவு -சத்பாவம் -இன்மை அசத்பாவம் -உளது இலது –
அல்லனாய் -தத் தத் கர்ம வச்யனாய் இல்லாமல் இருப்பதால் –
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்-ஸ்திரமான மாடங்கள்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.-கிரித்ரமம் இல்லை பிரிநிலை எவகாரம் -அதிசயித போக்யதமான
அருள் கிருபையையே -கீழ் சொன்ன உத்தார கீர்த்தி -பரமார்த்தம் இதுவே

புண்ணியம் என்ன, பாவம் என்ன; புணர்ச்சி என்ன, பிரிவு என்ன; ஆகிய இவையாகியும், நினைவு ஆகியும், மறப்பு ஆகியும்,
உண்மையாகியும், இன்மையாகியும், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாகியும், திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திரு விண்ணகரம் என்னும்
திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற பிரானாகிய ஸ்ரீ கிருஷ்ணனுடைய இனிய திருவருளையே உய்வு பெறுதற்குரிய
புண்ணியமாகக் கண்டு கொள்ளுங்கள்; யான் கூறும் இது கைதவம் அன்று.
ஆய் ஆய் ஆய் ஆய் ஆய் ஆய் சேர்ந்த பிரான் இன்னருளே கண்டு கொண்மின் என்க.
‘கைதவமே’ என்றதிலுள்ள ஏகாரம், எதிர்மறைக் கண் வந்தது. கைதவம் – வஞ்சனை. ஈண்டு, பொய்யைக் காட்டுகிறது.

புண்ணியம் பாவம் முதலானவைகளாய் எம்பெருமானுக்கு விசேடணமாகத் தோற்றுகிற விபூதிகள்
எல்லாம் அவன் கிருபையாலே உண்டாயின என்கிறார்.

புண்ணியம் பாவம் –
இன்பத்திற்குக் காரணமான புண்ணியம், துன்பத்திற்குக் காரணமான பாவம்.

புணர்ச்சி பிரிவு –
புண்ணியத்தின் பலமான கலவி, பாவத்தின் பலமான பிரிவு.

எண்ணமாய் மறப்பாய் –
விருப்பமுள்ள பொருளில் நினைவு, விருப்பம் இல்லாத பொருளில் மறதி.

உண்மையாய் இன்மையாய் –
உள்ளது என்ற சொல்லின் பொருளுமாய், இல்லது என்ற சொல்லின் பொருளுமாய். என்றது,
சேதன அசேதனங்களுமாய் என்றபடி.
அன்றிக்கே,
உண்மை இன்மை என்னுதல்.

(இல்லத்தும் உள்ளதும் அல்லது அவன் உரு -முன்பு பார்த்தோம் –
இல்லது அல்லது அவன் உரு என்றதே உள்ளது அவன் உரு
வ்யதிரேகம்-அங்கு நேராக இங்கே )

அல்லனாய் –
புண்ணிய பாவங்கட்கு நியாமகனாய்,
அவற்றுக்குக் கட்டுப்பட்டவன் அன்றிக்கே இருப்பவனாய்.

திண்ண பாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் –
“ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய திரு மாளிகை ஒன்றனை மாத்திரம் கடல் அழிக்க வில்லை” –
“வாசுதேவ க்ருஹம் து ஏகம் நப்லாவயதி ஸாகர.”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 38 : 9.-என்கிறபடியே,
பிரளய காலத்துக்கும் அழியாதபடி திண்ணிதான மாடங்களாலே சூழப்பட்ட திரு விண்ணகரிலே
சேர்ந்து நிற்கிற உபகாரகனான ஸ்ரீ கிருஷ்ணன்.

இன்னருளே –
புண்ணியம் பாவம் முதலாயினவைகளாய்க் கொண்டு அவனுக்கு விபூதிகளாகத் தோற்றுகிறவை யெல்லாம்
அவனுடைய கிருபையாலே உண்டாயின.
பாவமும் அவன் கிருபையாலேயோ? என்னில், அதுவும் அப்படியே.
சேதனனுடைய முற் பிறவியின் கர்மங்களுக்குத் தகுதியாக நடத்துவிக்கின்ற காரணத்தாலே –
சாபேஷ்த்வாத் -கர்மம் எதிர்பார்த்தே செய்பவன்
அதுவும் அவன் கிருபையாலே யாமத்தனை.
நன்று; எல்லாம் செய்தாலும் தீமை அவன் கிருபையாலே வரக் கூடுமோ? என்னில்,
தீயதனைக் காட்டி வெதுப்பி நல் வழி போக்கு கையினாலே கூடும் அன்றோ.-
அதுவும் அவனது இன்னருளே –

இன் அருள் –
நிர்ஹேதுக விஷயீ காரம்
காரணம் இல்லாமலே செய்யப்படுகின்ற அருள்.

கைதவமே –
நான் சொல்லுகிற இதில் அர்த்தவாதம் இல்லை.

கண்டு கொண்மின்கள் –
நீங்களும் எல்லாம் சாஸ்திரங்களிலே கண்டு கொள்ளுங்கோள்.
அன்றிக்கே,
கைதவமே – என்பதற்கு,
க்ருதகம் -செய்யப்பட்டவை என்றபடியாய்,
செய்யப்பட்டவை அடங்கலும் அவனுடைய காரணமில்லாமலே செய்யப்படுகின்ற
இனிய திருவருளாலே உண்டாயின என்னுதல்.
பூ புவ சுவ -மூன்று லோகங்கள் -க்ருதகம் -அவன் இன் அருளால் படைக்கப் பட்டன என்றபடி

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-3-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-3-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

நகர ஜன பஜ் ஞான அஜ்ஞ்ஞான தமஸ் பிரகாச அவ நிபவந ஸர்வ நியந்தாவாய் இருக்க சிகர மாடங்கள் சூழ்
திரு விண்ணகர் சேர்ந்த பிரானுடைய
நிரவதிக காருண்யம் அல்லது மற்று உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தமக்கு
உஜ்ஜீவன உபாயமான காருண்ய புண்யத்தை அநு பவிக்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-3-

நகரமும்  நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

திரு விண்ணகர் சேர்ந்த பிரானுடைய கல்யாண குணங்களை ஒழிய ஒருவருக்கும் உத்தாரகம் இல்லை என்கிறார் -நகரமும் நாடுகளும்-சிறுமை பெருமையாலே விரோதம் சொல்லிற்று / நிலனாய் விசும்பாய்ச் -ரூபியான நிலனும் அரூபியான விசும்புமாய் / புகர்கொள் கீர்த்தி-என்றது திரு நாட்டில் காட்டில் திரு விண்ணகரிலே புகுந்த பின்பு அவனுடைய கல்யாண குணங்கள் நிறம் பெற்ற படி –

———–

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-3-

அநந்தரம் ஞான அஞ்ஞான அநு பந்தி பதார்த்தங்களை விபூதியாக யுடைய சர்வேஸ்வரனுடைய
உஜ்ஜவலமான குண ப்ரத்தையை ஒழிய வேறு ஒருவருக்கும் உத்தாரகம் இல்லை என்கிறார் –

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்-விசேஷ ஞான பிரசுரமான நகரமும் அவிசேஷஜிஞ்ஞா பிரசுரமான நாடும் –
தத் ஆகார ஹேதுவான ஞானமும் மௌக்த்யமுமாய் –
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்-அந்த ஞான அஞ்ஞான சாம்யத்தை யுடைத்தாய் ஒப்பு இன்றிக்கே
பரந்த ப்ரகாசமுமாய் தமஸ்விதமான இருளுமாய் இருளுக்கு சதானமான பூமியும் பிரகாச ஸ்தானமான ஆகாசமுமாய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-சிகரங்களை யுடைத்தான மாடங்கள் சூழ்ந்த திரு விண்ணகரிலே
பொருந்தி வர்த்திக்கிற சர்வேஸ்வரனுடைய
புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-உஜ்ஜ்வல்யத்தை யுடைத்தான குண ப்ரதையை ஒழிய
சர்வருக்கும் உஜ்ஜீவன ஹேதுவான ஸூஹ்ருதம் இல்லை –

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-3-

திரு விண்ணகர் அப்பனுடைய கல்யாண குணங்களை ஒழிய வேறு ஒருவருக்கும் உத்தாரகம் இல்லை என்கிறார்  –

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால்இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

நகரமும் நாடுகளும் –
சிறுமை பெருமையால் வந்த விரோதம் ஆதல் -நாகரிகர் போக பிரதானராய் உத்க்ருஷ்டராய் இருப்பார்கள் -நாட்டில் உள்ளார் அபக்ருஷ்டராய் தேஹ தாரண மாத்திரமே பிரயோஜனமாய் இருக்கும்மா தாழ்வு உண்டு -அத்தால் வந்த விரோதம் ஆதல் –
ஞானமும் மூடமுமாய்-ஞாதாக்களும் அஞ்ஞருமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய்
ஒப்பு இன்றிக்கே சூழப் பட்ட பரப்பை யுடைத்தான தேஜசாய் -அதற்கு எதிர்தலையான தமஸாய்
நிலனாய் விசும்பாய்ச்-கடினமான பூமியாய் -அச்சமான ஆகாசமாய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
சிகரங்களை சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்கள் சூழ்ந்த திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன்
புகர்கொள் கீர்த்தி அல்லால்இல்லை யாவர்க்கும் புண்ணியமே.
ஸத்பாவமே இ றே பரம பதத்தில் உள்ளது –அந்தகாரத்தில் தீபம் போலே புகர் பெற்றது -இங்கே இ றே கீர்த்தி -மின்னிடை மடவாரிலே இறாய்த்த நமக்கே அன்றியே இதில் இழியாதார்க்கும் கீர்த்தி யல்லது உஜ்ஜீவன சாதனம் இல்லை –

——

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-3-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

ஞான அஜ்ஞ்ஞான அனுபந்தி பதார்த்தங்கள் விபூதி சர்வேஸ்வரன் உஜ்ஜ்வலமான குணங்களே உத்தாரகம் –
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்-விசேஷஜ்ஞ்ஞர் உள்ள இடம் நகர் -அவிசேஷஜ்ஞ்ஞர் உள்ள இடம் நாடு –
தத் தத் ஆகார ஞானம் மூடமும்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்-ஒப்பு இல்லாத -பிரகாசம் -இருட்டுமாய் -இருளுக்கு ஸ்தானம் பூமியுமாய்
பிரகாச ஸ்தானம் ஆகாயம் சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-பொருந்தி வர்த்திக்கும்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-ஔஜ்ஜ்வல்யம் உடைய குண ப்ரதை
யாவர்க்கும் புண்ணியமே-யாவர்க்கும் உஜ்ஜீவன ஹேதுவான ஸூஹ்ருதம் இல்லை

நகரத்திலுள்ளவர்களும் நாட்டிலுள்ளவர்களுமாகி, அறிவும் அறியாமையுமாகி, ஒப்பு இல்லாமல் பரந்திருக்கின்ற ஒளியாகி இருளாகி,
நிலமாகி ஆகாசமாகி, சிகரங்களையுடைய மாடங்கள் நிறைந்துள்ள திருவிண்ணகர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற
எம்பெருமானுடைய ஒளி பொருந்திய கீர்த்தியே யல்லாமல் எத்தகையார்க்கும் உய்வு பெறுதற்குரிய புண்ணியம் வேறு இல்லை.
ஆய் ஆய் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் என்க. பிரானுடைய கீர்த்தியல்லால் யாவர்க்கும் புண்ணியம் இல்லை என்க. புகர் – ஒளி.

திருவிண்ணகர் அப்பனுடைய கல்யாண குணங்களை ஒழிய
ஒருவர்க்கும் பிழைத்தற்குரிய வேறு வழி இல்லை என்கிறார்.
(நன்னகர் பிராப்யம் புண்யம் பிராப்பகம் )

நகரமும் நாடுகளும் –
போகமே மிக்கிருப்பாராய் இன்பம் நுகர்ந்திருக்கும் நகரத்திலுள்ளார்,
பயிர்த் தொழில் செய்து கொண்டு தேக யாத்திரையை நடத்திக் கொண்டிருக்கும் நாட்டிலே யுள்ளார்.
அன்றிக்கே,
அளவிற்கு உட்பட்டனவா யுள்ளவையும், அளவிற்கு உட்படாதனவா யுள்ளவையும் என்னலுமாம்.

ஞானமும் மூடமுமாய் –
பொருள்களின் தன்மைகளை உள்ளபடியே அறியக் கடவதான ஞானமும்,
அதனை மாறுபாடாக எண்ணக் கூடியதான அறியாமையும்.

நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் –
உபமானம் இல்லாததாய்க் கொண்டு எங்கும் பரந்து நிற்கிற ஒளியாய்,
அதற்கு எதிர்த்தட்டான இருட்டாய்.

நிலனாய் விசும்பாய் –
உருவத்தோடு கூடிய பூமியாய், உருவம் இல்லாத ஆகாசமுமாய்.
அன்றிக்கே,
கடினத் தன்மையையுடைய பூமியும், இலேசான ஆகாசமும் என்னலுமாம்.

சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் –
மலைகளின் சிகரங்களைக் கொண்டு வந்து வைத்தாற் போலே இருக்கிற மாடங்களாலே
சூழப்பட்ட திருவிண்ணகரிலே பொருந்தி நிற்கிற உபகாரகன்.

புகர் கொள் கீர்த்தி யல்லால் –
பரம பதத்தில் புகழ் மழுங்கி யாகாதே கிடப்பது.
அங்கு உள்ளாரில் தன்னில் குறைந்தார் இலரே!

மம ஸாதர்மியம் ஆகதா:” என்பது. ஸ்ரீ கீதை, 14 : 2.-4“
என்னுடைய உருவம் முதலானவற்றிற்குச் சமானமான உருவம் முதலானவற்றை அடைந்தவர்கள்” என்றும்
“பூர்ண சாம்யத்தை அடைகிறான்”-நிரஞ்ஜன: பரமம் ஸாம்யம் உபைதி” இது, முண்டகோபநிடதம்.- என்றும்,
“தம்மையே ஒக்க அருள் செய்வார்” -பெரிய திருமொழி, 11. 3 : 5.-என்றும் சொல்லுகிறபடியே,
தனக்குச் சமானமாயுள்ளவர்களாய் அன்றோ அங்குள்ளார் இருப்பது.
குறைவாளர்க்கு முகங் கொடுத்தால் அன்றோ புகழ் நிறம் பெறுவது.

யாவர்க்கும் புண்ணியம் இல்லை –
எல்லார்க்கும் உய்வு பெறுதற்கு வழி அது வல்லது இல்லை.
தாம் தாம் தேடிக் கொள்ளுமவை எல்லாம் கழுத்துக் கட்டியாமத்தனை.
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் அவன் வர, ‘வேண்டா’ என்று முடிந்து போகப் புக்காரன்றோ.
இவன் பார்க்கும் உபாயம் இவனுக்கும் கழுத்துக் கட்டியாம்.
அவன் காட்டும் உபாயம் அவனுக்கும் காற் காட்டாம். –
போகு நம்பி சொன்னாலும் போக முடியாத கால் கட்டு அன்றோ
இது வன்றோ உபாயத்தில் அடிப்பாடு.-பரகத ஸ்வீகார பெருமை

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-2-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-2-

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

உப லப்யமான ஸூக துக்க காலுஷ்ய பிரசாத நிக்ரஹ அநு க்ரஹ ஸீத உஷ்ணாதி அந்யோன்ய
விருத்த வஸ்த்வந்தராத்ம பூதனாய்
ஸூ துர்த்தரசனாய் இருந்த சர்வேஸ்வரனை
நான் கண்ணாலே கண்டு அடிமை செய்யும் படி
புகுந்து அருளின திரு நகரி திரு விண்ணகர் என்று திரு நகரியை அநு பவிக்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-2-

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

விருத்தமான விபூதி விஸ்தாரங்களை யுடையனாய் -ஸ்வ பாஹு பலத்தாலே ஒருவராலும் காண ஒண்ணாத படி அறப் பெரியனாய் இருந்து வைத்து என்னை அடிமை கொள்ளுகிறவனுடைய ஊரான திரு விண்ணகர் அவனுடைய திவ்ய நகரங்கள் எல்லா வற்றிலும் நல்ல நகரம் என்கிறார் -கண்ட இன்பம்-பரிச்சின்ன ஸூ கம் / தண்டமும் தண்மையும் -கொடுமையும் தண்ணளியும் /
தழலும் நிழலுமாய்க்-உஷ்ணிக்கும் நெருப்பும் குளிரும் நிழலும் –

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-2-

அநந்தரம் அந்த ப்ரீத் அப்ரீதி ரூப ஸூக துக்கங்களை அநு பந்தித்து வரும் பதார்த்தங்களை விபூதியாக யுடையனாய்
தத் சஜாதீய தயா த்ரஷ்டும் அஸக்யனான சர்வேஸ்வரனுக்கு அசாதாரண தேசம் திரு விண்ணகரம் -என்கிறார்

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்-லோக த்ருஷ்டமான ஸூக துக்கங்களையும்
துக்கம் அடியாக வரும் சித்த வ்யாகுலத்தைகளும் ஸூகம் அடியாக வரும் தெளிவுகளுமாய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்-அக்கலக்கம் அடியாக வரும் கோபமும் -தேற்றம் அடியாக வரும் பிரசாதமும்
கோப சமமான உஷ்ணத்தை யுடைய அக்னியும் பிரசாத சமமான சைத்யத்தையுடைய நிழலுமாய்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்-சஜாதீய தயா காண அரியனாய் இருக்கிற சர்வேஸ்வரனாய்
என்னை அடிமை கொண்டவன் ஊர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–தெளிந்து திரைக் கிளப்பத்தையுமுடைய ஜலத்தால் சூழப்பட்ட
விண்ணகர் ஆகிற தர்ச நீய நகரம் –

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-2-

ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் காண ஒண்ணாத பெருமையை யுடையனாய் வைத்து என்னை அடிமை கொள்ளுகிறவன் ஊரான திரு விண்ணகர் சர்வ வி லக்ஷணம் என்கிறார் –

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

கண்ட இன்பம் – பரிச்சின்ன ஸூ கம் -ப்ரத்யக்ஷ சித்தம் அன்றிக்கே -சாஸ்திர ஸித்தமாய்-அபரிச்சின்னமான ஸூ கத்திலே இ றே தமக்கு அந்வயம்
துன்பம் -அதற்கு எதிர்த்தட்டான துக்கம் –தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கலக்கங்களும் தேற்றமுமாய்த்-அஞ்ஞானங்கள் / ஞானம் /கோபம் /பிரசாதம் /உஷ்ணத்தை பண்ணும் அக்னியும் /சீதா ஸ்வ பாவமான நிழலும்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
ஸ்வ யத்னத்தாலே காண ஆசைப்பட்டார்க்கு அரியனாய் இருக்கிறவன் கிடீர்-தான் மேல் விழுந்து என்னைக் காண ஆசைப்படுகிறான் –கண்டு கொள்வதற்கு அரிய சர்வேஸ்வரனாய் என்னை அடிமை கொண்டவனூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–தெளிந்த திரையை யுடைத்தான ஜலத்தாலே சூழப்பட்ட திரு விண்ணகர் -பரமபதம் உத்தேச்யம் ஆனவாறே -விரஜாய் உத்தேச்யம் ஆமா போலே -அவ்வூர் உத்தேச்யம் ஆனவாறே அங்கு உள்ள ஜல ஸம்ருத்தியும் உத்தேச்யமாய் இருக்கிறது இ றே இவர்க்கு –-நன்னகரே-கலங்கா பெருநகரம் இதற்கு சத்ருசம் அன்று -விடாய்த்த இடத்திலே விடாய் தீரலாம் படி இருக்கிற ஏற்றம் உண்டு இ றே இதுக்கு –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-2-

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

ப்ரீதி அப்ரீதிகங்கள் -அனுபந்தித்து வரும் பதார்த்தங்கள் விபூதி -மானாகவும் இருந்து -சஜாதீயர் இல்லாமல் -விஜாதீயன் –
அனைத்தையும் சரீரம் பிரகாரம் -உள்ளும் இருப்பார்
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்-விபூதியாக இருந்தும் -லோகத்தில் பார்க்கும் -துக்கம் -வந்தால் மனக்கலக்கம்
சுகம் -மனப் பிரசாதம் -தெளிவு தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்-கலக்கத்தால் வரும் கோபமும் -தெளிவால் வரும் பிரசாதமும் –
அக்னியும் அவனது நிழலும் அவனது -பிரசாத சமமான சைத்யமான நிழல் –
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்-ஸூசஜாதீயமாக காண அரியவன் சர்வேஸ்வரன் -என்னை அடிமை கொண்டவன்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே-நன்னகரிலே விஸ்தீரணம் -அலை நீர் வாய்ப்பு -அஹோ ராத்திரி புஷ்கரணி

அநுபவிக்கின்ற இன்பமும் துன்பமுமாகி, கலக்கமும் தேற்றமுமாகி, சீற்றமும் அருளுமாகி. நெருப்பும் நிழலுமாகிக் கண்டு கொள்வதற்கு
அரியவனாகிய பெருமானாகி, என்னை ஆள்கின்றவனுடைய ஊரானது, தெளிந்த அலைகளையுடைய புனலால் சூழப்பட்ட
திருவிண்ணகரம் என்னும் நல்ல நகரமேயாகும்.
ஆய் ஆய் கண்டுகோடற்கு அரிய பெருமான். ஊர் திருவிண்ணகராகிய நல் நகர் என்க. தண்டம் – கோபம். தழல் – நெருப்பு.

தங்கள் முயற்சியாலே ஒருவர்க்கும் காண ஒண்ணாத பெருமையையுடையனாய் வைத்து என்னை
அடிமை கொண்டவனுடைய ஊரான திருவிண்ணகரம் எல்லா நன்மைகளும் பொருந்திய நகரம் என்கிறார்.

கண்ட இன்பம் –
“ஐங்கருவி கண்ட இன்பம்”-திருவாய். 4. 9 : 10.- என்னுமாறு போலே, அளவிற்கு உட்பட்ட சுகம்.

துன்பம் –
பெயர் வேறுபாடு மாத்திரமேயாய் அதனோடு ஒத்த துக்கம்.

கலக்கங்களும் தோற்றமுமாய் –
இதர விஷயங்களைப் பெறாமையால் வரும் கலக்கமும், அவற்றைப் பெற்றால் வரும் தேற்றமும்.

தண்டமும் தண்மையும் –
கோபமும் அருளும்.

தழலும் நிழலுமாய் –
வெப்பத்தைச் செய்யக் கூடிய நெருப்பும், குளிர்ச்சியைச் செய்யக்கூடியதான நிழலுமாய்,

கண்டு கோடற்கு அரிய பெருமான் –
இவை எல்லாவற்றாலும் அவனுடைய அளவு இடற்கு அரிய தன்மையைச் சொன்னபடி. –அபரிச்சேத்யம்-

இவருடைய ஞானத்தின் தெளிவு இருந்தபடி என் தான்!
இங்கே சில விசேடணங்களை சொல்லா, “கண்டு கோடற்கு அரிய பெருமான்” என்று அவனைச் சொல்லா நின்றார்;
மேலே சிலவற்றைச் சொல்லா, “பல்வகையும் பரந்த பெருமான்” என்னா நின்றார்;
இது என்ன அநுசந்தான முறை தான்!
இவனை ஒழிந்தது ஒரு வஸ்துவுக்கு சத் பாவம் இன்றிக்கே இருக்கிறபடி அன்றோ.
இதுவும் ஒரு வ்ருத்த ஸ்வ பாவம் என்றவாறு -அப்ரஹ்மாத்மக வஸ்துவே இல்லையே –

நல்லாரும், நம்பி ஸ்ரீ சேநாபதி தாசரும் கூடத் திருமலைக்குப் போகா நிற்க,
ஸ்ரீ சேநாபதி தாசர் ஒரு கோலை யிட்டுத் தூற்றை அடிக்க,
நல்லார் ‘அர்த்த காம நிமித்தமான துவேஷம் இதனோடு இன்றிக்கே இருக்க,
ஒரு காரணமும் இல்லாமல் ஈஸ்வரனுடைய விபூதியை நலிவதே!’ என்ற வார்த்தையை நினைப்பது.

என்னை ஆள்வான் ஊர் –
என்னை இழக்க மாட்டாமல் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் மிறுக்கு எல்லாம் பட்டு
என்னை அடிமை கொண்டவனுடைய ஊர்.

தெண் திரைப் புனல்சூழ் திரு விண்ணகர் நல்நகரே –
தெளிந்த திரைகளை யுடைத்தான புனலாலே சூழப்பட்ட திரு விண்ணகராகிற நன்னகர்.
திவ்விய நதியான விரஜைக்குப் போலியான ஆறும் உண்டாகப் பெற்றது என்பார் ‘தெண்திரைப் புனல் சூழ்’ என்கிறார்.
அங்கு இருக்கிறவன் இங்கே வந்து நின்றால் அங்கு உள்ளவை எல்லாம் இங்கு உண்டாகத் தட்டு இல்லையே.
அன்றிக்கே, இவ்வளவில் முகங்காட்டாத ஸ்ரீ வைகுண்டமும் ஒரு தேசமாயிற்றதோ?
அவன் விரும்பின இடம் பிராப்பிய பூமியாமித்தனை யன்றோ.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-1-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-1-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

தாரித்ர்ய சம்பத் -நரக ஸ்வர்க்க -அஸ்நேஹ ஸ்நேஹ-விஷ அம்ருத -ப்ரப்ருதி விதித்த பதார்த்த அந்தராத்ம பூதனாய் –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து என்னோடே ஸம்ஸ்லேஷித்த எம்பெருமானை
கைங்கர்ய ரதித்வ சம்பத் சம்ருத்த திவ்ய ஜன பரிபூரணமான திரு விண்ணகரிலே கண்டேன் -என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-1-

முதல் பாட்டில் விருத்த விபூதிகனான சர்வேஸ்வரனை திரு விண்ணகரிலே காணப் பெற்றேன் என்கிறார் –

நல்குரவும்  செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

தாரித்ரியமும் -வெல்லப்படும் பகையும் உறவும் -விபூதி முகத்தாலே பல படியும் விஸ்த்ருதனான-சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -நான் அல்லேன் என்று அகலப் புக தான் மேல் விழுந்து என்னை சேர்த்துக் கொண்டு அடிமை கொள்ளுகிறவனை –செல்வம் மல்கு -சம்பத் மிகுகை-

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-1-

முதல் பாட்டில் -ப்ரீத் அப்ரீதி ஹேதுவான விருத்தார்த்தங்களை விபூதியாக யுடைய
ஸர்வ வ்யாபகனைத் திரு விண்ணகரிலே கண்டேன் -என்கிறார் –

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்-பதார்த்த சங்கோச ரூப தாரித்ர்யமும்-தத் விகாச ரூபமான சம்பத்தும் –
ஸ்த்தானமான நரகமும் ஸூக ஸ்தானமான ஸ்வர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்-எதிர்த்தலையைச் சாய்க்கும் ஸாத்ரவமும்-அதுக்கு எதிர்த்தட்டான மைத்ரமும் –
முடிக்கும் விஷமும் உஜ்ஜீவிப்பிக்கும் அம்ருதமாய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்-இப்படி பலவகையிலும் வ்யாப்தனான சர்வாதிகனாய் –
இவ்வாகாரத்தை எல்லாம் எனக்குப் பிரகாசிப்பித்து
அடிமை கொண்ட ஸ்வாமியானவனை
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–பகவத் அனுபவ ஐஸ்வர்யம் மிகா நிற்கிற
ஸஜ் ஜன சமவாயத்தையுடைய திரு விண்ணகரிலே அப ரோஷிக்கப் பெற்றேன்
ஆய் -என்கிறது பிரதி பதம் சேர்த்துக் கொள்வது –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-1-

விருத்த விபூதிகனான சர்வேஸ்வரனை திரு விண்ணகரிலே காணப் பெற்றேன் என்கிறார்-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்-வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
தாரித்ரியமும் -அதற்கு எதிர்த்தட்டான ஐஸ்வர்யமும் -துக்க அனுபவம் பண்ணும் நரகமும் -ஸூக அனுபவம் பண்ணும் சுவர்க்கமும் –
சமாதானத்தால் மீளுமது அன்றிக்கே வென்றே விட வேண்டும் பகையும் –அதற்கு எதிர்த்தட்டான உறவும்
முடித்தே விடக் கடவதான விஷமும் -முடியாத படி காத்து போக்யமுமாய் இருக்கும் அமுதமுமாய் –
அநிஷ்டமான தாரித்யாதிகளோடு இஷ்டமான ஐஸ்வர்யாதிகளோடு -வாசியற -ததீயத் ஆகாரத் வேண-இவருக்கு உத்தேசியமாய் இருக்கும் இ றே -இதில் தோஷ அம்சம் அஸஹ்யம் அன்றோ என்னில் -தன்னை தேஹ விசிஷ்டனாக அனுசந்தித்த போது த்யாஜ்யமாம் -சேஷத்வ விசிஷ்டனாக அனுசந்தித்த போது உபாதேயமாகக் கடவது -ராஜ புத்திரனுக்கு பிதாவினுடைய ஓலக்கத்தோடு சிறைக் கூட்டத்தோடு வாசியற பிதாவின் ஐஸ்வர்யம் என்று இருக்கும் இ றே
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
இப்படி விபூதி முகத்தாலே பல படியும் விஸ்ருத்தனானவன் -நாஸ்த்யந்தோ விஸ் தரஸ்ய மே என்று தன் விபூதிக்கு எல்லையில்லை என்று இ றே தானும் சொல்லுவது –
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.
சர்வகதனானது தமக்காக என்று இருக்கிறார் –ஒருவனை பிடிக்க சுற்றி ஒரூரை வளைப்பாரை போலே -இப்படி சர்வகதனான பெருமையை உடையனாய் வைத்து -ப்ரணய ரோஷத்தாலே அகன்று -முடிய புக்க என்னை தாழ நின்று சேர்த்துக் கொண்ட உபகாரகனை என்றுமாம் –
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.
நிரவதிக சம்பத்தை உடைய தேசம் -பிரிந்து தூது விட வேண்டாதே-ப்ரணய ரோஷத்தாலே -கிட்ட ஓட்டோம் -என்று வியசனப் படாதே -நித்ய அனுபவம் பண்ணலாம் இடம் என்கை -லஷ்மனோ லஷ்மி சம்பன்னவ் -என்கிறபடியே இடைவிடாதே பகவத் அனுபவ ஸ்ரீ -இ றே சம்பத்து ஆகிறது –
திருவிண்ணகர்க் கண்டேனே.-ஓர் இடத்திலே காண ஆசைப்பட்டு ஓர் இடத்தே காண்கை அன்றிக்கே தூது விட்ட அர்ச்சாவதாரத்திலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

——

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-1-

நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

வ்ருத்த -விபூதிகள் -குணங்கள் -பொருள்கள் -பாசுரம் தோறும் -மிகப் பெரியவன் -ப்ரீதி அப்ரீதி ஹேதுவான
வ்ருத்த அர்த்தங்களை விபூதியாக கொண்ட சர்வ வியாபகன் –
அனைத்தையும் சரீரமாகக் கொண்டவன் -பிரகாரம் -விசேஷணம்
நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்-பதார்த்த சங்கோச ரூப தாரித்ர்யம் –கீழே பகவத் அனுபவ தாரித்ர்யம்
தத் விகாச ரூபமான சம்பத் துக்க ஸ்தானம் சுக ஸ்தானம்
ஆய்-ஒவ் ஒரு இரட்டையிலும் சேர்த்துக் கொண்டு
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்-எதிர்த் தலையைச் சாய்க்கும் -சாத்ரமும் பகைமை -குணம் இங்கு -குணம் ஸ்தானம் பொருள் –
முடிக்கும் விஷம் உஜ்ஜீவிக்கும் அமிர்தம்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்-வியாப்தன் -என்னை இந்த ஆகாரத்தை பிரகாசிப்பித்தது -காட்டி –
இது தானே விபூதி அத்யாயம் -அடுத்த அத்யாயம் சங்கதி –
ஸ்ரீ மத் எனபது எல்லாம் தேஜஸ் உடைய திவலை -விபூதி மானை சேவிக்க விஸ்வ ரூபம் காட்டி அருளினான் –
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே-இது தான் 11 அத்யாயம் போலே -கண்டேனே என்கிறார் –
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அன்றோ -ஸ்ரீ கீதார்த்தமே விரவிக் கிடக்குமே
பகவத் அனுபவ ஐஸ்வர்யம் எதிர் பொங்கி வரும் -சத் ஜனம் வாழும் -திவ்ய தேசம் -அபரோஷிக்கப் பெற்றேன் -பிரத்யஷமாக கண்டேன் –

வறுமையும் செல்வமுமாகி, நரகமும் சுவர்க்கமுமாகி, வெல்லக்கூடிய பகையும் நட்புமாகி, விஷமும் அமுதமுமாகி, பலவகையாகவும் பரந்து
பெருமானாகி என்னை ஆள்கின்றவனைச் செல்வம் நிறைந்திருக்கின்ற மக்களை யுடைய திரு விண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் பார்த்தேன்.
ஆகி ஆகிப் பரந்த பெருமான் என்க. என்னை ஆள்வானைத் திருவிண்ணகர்க் கண்டேன் என்க. இந்தத் திவ்யதேசம்,
உப்பிலியப்பன் சந்நிதி என்றும், ஒப்பிலியப்பன் சந்நிதி என்றும் இப்பொழுது வழங்கப் படுகிறது. செல்வு – செல்வம்.
இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.

விருத்த விபூதிகனான சர்வேசுவரனைத் திருவிண்ணகரிலே காணப்பெற்றேன் என்கிறார்.

நல்குரவும் செல்வும் –
வறுமையும், அதற்கு எதிர்த்தட்டான செல்வமும்,

நரகும் சுவர்க்கமும் –
துக்கத்திற்கே இருப்பிடமான நரகமும், சுகத்திற்கே இருப்பிடமான சுவர்க்கமும்.

வெல் பகையும் நட்பும் –
சமாதானத்தாலே மீளுமதன்றிக்கே வென்றே விட வேண்டும் பகையும், அதற்கு எதிர்த்தட்டான உறவும்.

விடமும் அமுதமுமாய் –
முடித்தே விடுவதான விஷமும், போன உயிரை மீட்கவற்றான அமுதமுமாய்.
போன உயிரை மீட்டுத் தான் போக்கியமுமாய் அன்றோ அமிருதம் இருப்பது.

விருப்பம் இல்லாத வறுமை முதலானவற்றோடு விரும்பக்கூடிய செல்வம் முதலானவற்றோடு வாசியறத் ததீயத்வ
ஆகாரத்தாலே இவர்க்கு உத்தேசியமாய் இருக்குமன்றோ.

பல் வகையும் பரந்த பெருமான் –
ஞானதிகனான தானும்கூட விபூதியைப் பேசப் புக்கு “என்னுடைய விபூதியின் பரப்பிற்கு முடிவு இல்லை” –
ஹந்த தே கதயிஷ்யாமி விபூதீராத்மநஸ்ஸுபா:
ப்ராதாந்யத: குருசிரேஷ்ட நாஸ்தி அந்த: விஸ்தரஸ்ய மே”-என்பது, ஸ்ரீ கீதை, 10 : 19.
என்று இளைத்துக் கை வாங்கினத்தை, இவ்வளவு அன்பிலே கனத்த இவரால் சொல்லப் போகாது அன்றோ.
ஆனாலும் சிறிது பேசினாராகவும் வேணும் அன்றோ.

வஸ்துவுக்கு விசேடணத்தை ஒழியத் தோன்றுதல் இல்லை யன்றோ.
“வஸ்து விசேடணம் இல்லாதது” என்று விசேடணம் இல்லாததாக மாயாவாதம் சொல்லுகிறார் அலரே.
அங்ஙனேயாகில் மோக்ஷ சாஸ்திரந்தான் வேண்டாவே.
வஸ்துவின் உண்மையைக் கொள்ளும் போது விசேடணம் வேறுபடுத்துவதாயல்லது இராது.
ஒன்றற்கு ஒன்று விசேடணமாகும் போது அந்ய யோக வியவச்சேதம் பண்ணிக் கொண்டல்லது விசேடணம் ஆகமாட்டாது.
இங்கு, இவனுக்கு, தன்னினின்றும் வேறுபட்ட பொருள்களடங்கலும் விசேடணமாயிருக்கையாலே
அந்ய யோக வியவச்சேதம் பண்ண ஒண்ணாது.
ஆனால், மாறுபட்ட விசேடணங்கள் ஒரு பொருளிலே சேருகிறபடி எங்ஙனே? என்னில்,
அயோக வியவச்சேதம் பண்ணிக் கொண்டு சேருகிறது.

பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தம் -ஆய் -சப்தம் தானே அனைத்தையும் சேர்த்து -சரீரம் பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம்
கடிகாரம் இருக்கிறது என்றதும் மற்றதை வேறுபடுத்திக் காட்டுமே -அந்ய யோக வியச்சேதம் ராமனே வில்லாளி –
ராமன் வில்லாளியே -அயோக விவச்சேதம்-யோகம் சேர்த்தி –
இவை எல்லாம் சர்வேஸ்வரன் இடம் உண்டு -அயோக விவச்சேதம்
வேறு யார் இடம் இல்லை -அன்யோக விவச்சேதம் –
அனைவரும் இவருக்கு விசேஷணம் -ஆதலால் அன்யயோக விவச்சேதம் பண்ண வழி இல்லையே
அவனுக்கே விசேஷணம் தானே எல்லா குணங்களும் பொருள்களும் -அன்யோக விவச்சேதம் சொல்லவே முடியாதே
விசேஷணம் -கொண்டே ப்ரஹ்மம் இருக்கும் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -அடைந்து சோஸ்நுதே சர்வான் காமான்
ஆனந்தமாக அனுபவிக்கிறார் -மோஷ சாஸ்திரம் -விசேஷணம் இல்லை என்றால் இது சொல்ல வேண்டாவே என்றவாறு –

இவர் தாம் அவனை அநுபவிக்கவன்றோ இழிகிறது,
இந்த மாறுபட்ட விசேடணங்களைச் சொல்லுகிற இவற்றால் பிரயோஜனம் என்? என்னில்,
அவனை உள்ளபடி கண்டு அநுபவிக்கவேணுமே. இராஜபுத்திரனுக்கு, இராஜாவினுடைய இன்பத்திற் கிடமான ஓலக்கத்தோடு
சிறைக்கூடத்தோடு வாசி அற ‘என் தமப்பனுடைய செல்வம், என்று தோன்றுமன்றோ.
இவர் தமக்கு இங்கு உண்டான அநுசந்தானம், முக்தனுக்கு லீலா விபூதி அநுசந்தானம் போலே அன்றோ.
“ஜனங்களின் நடுவில் இருந்துள்ள இந்தச் சரீரத்தை நினையாதவனாகிறான்”
“நோபஜநம்ஸ்மரந் இதம் சரீரம்” (சாந்தோக்யம், 8. 12 : 3:) -என்னா நிற்கச் செய்தே,
முக்தனுக்கு லீலாவிபூதி ததீயத்வ ஆகாரத்தாலே உத்தேசியமாகா நின்றதன்றோ.
இவர்க்கும் அப்படி முக்தரோடு ஒக்கத் ததீயத்வ ஆகாரம் ஒழிய, வேறு ஆகாரமாக நினைவு இல்லாதபடி
இங்கே இருக்கச் செய்தே மயர்வு அறுத்துக் கொடுத்தான்.
தம்முடைய சம்பந்தத்தாலே பார்த்த போது கால்வாங்கியல்லது நிற்க ஒண்ணாதபடி தியாஜ்யமாகத் தோற்றும்.
அன்றிக்கே, ஞான அஜ்ஞானங்களுக்குப் பொதுவான இந்த இருப்பைக் கழித்து,
அதற்குக் கலக்கமில்லாத தேசத்திலே போகையிலே விரையக்கடவன் எனப்படுதலால் என்னுதல்.

பல்வகையும் பரந்த பெருமான் –
இப்படி உலக முகத்தாலே பலபடியாக விரிந்திருப்பவனானவன்.

பரந்த பெருமான் என்னை ஆள்வானை –
இங்ஙனம் பரந்து இருத்தல் எல்லாம் தம்மை அகப்படுத்த என்று இருக்கிறார்;
ஒருவனை அகப்படுத்த நினைத்தார் ஊரை வளையுமாறு போலே.

செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேன்-
மரு பூமியிலே -மருபூமி – நீரும் நிழலும் அற்ற பாலை நிலம்.-பொய்கை கண்டாற்போலே இருக்கிறபடி.
மிக்க செல்வத்தை யுடைத்தான குடிகளையுடைய திருவிண்ணகர் என்பார் ‘செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்’ என்கிறார்.

“இலக்குமணன் செல்வத்தால் நிறைந்தவன்”
– ஸர்வ ப்ரியகர: தஸ்ய ராமஸ்ய அபி ஸரீரத:
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர:-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 28.-என்னுமாறுபோலே,
சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, கடக்கக் கிடந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போலன்றிக்கே,
கிட்ட நின்று அடிமை செய்யும் இளைய பெருமாளைப் போலே.
‘காண வேண்டும்’ என்னும் ஆசையோடே இருந்து வேறு சரீரத்தை அடைந்து வேறு தேசத்திலே போய்க் காண்கை யன்றிக்கே,
பசித்த இடத்தே சோறு பெறுமாறு போலே, -தேசாந்தரம் தேகாந்த்ரம் காலாந்த்ரம் இல்லாமல்
ஆசைப்பட்ட இடத்தே அநுபவிக்கப் பெறுதலின் ‘திருவிண்ணகர்க் கண்டேன்’ என்கிறார்;
“நான் சென்று நாடி நறையூரிற் கண்டேனே”- பெரிய திருமொழி, 6. 8 : 1.– என்னுமாறு போலே.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-நல்குரவும் செல்வும் -ப்ரவேஸம்

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி —

இப்படி எம்பெருமான் திறத்துப் படுவோம் அல்லோம் -என்று இருந்த ஆழ்வார் தம்மோடு ஸம்ஸ்லேஷிக்கைக்காகத்
திரு விண்ணகரிலே எழுந்து அருளின எம்பெருமானுடைய நிரவதிக ஸுந்தர்யத்தாலும்
ஸ்வ சம்ச்லேஷ ரஸ ஜெனிதமான அவசாதத்தாலும் நிவ்ருத்த ப்ரணய கோபராய் அவனோடே ஸம்ஸ்லேஷித்து
தத் சம்ச்லேஷ ஜெனித நிரவதிக ப்ரீதியாலே
ச சம்ப்ரமமாக அந்தத் திரு விண்ணகரிலே தாம் அவனைக் கண்டு ஸம்ஸ்லேஷித்த படியையும்
கீழ் ப்ரஸ்துதமான ஜகத் ஐஸ்வர்யத்தையும் அசேஷ தோஷ ப்ரத்ய நீகத்வ அசங்க்யேய
கல்யாண குணங்களையும் பேசுகிறார் –

———————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —

இப்படி பிரணய கோபம் தலையெடுத்து சர்வ பிரகாரத்தாலும் எம்பெருமானோடு சம்ச்லேஷிப்போம் அல்லோம் -என்று இருந்த தம்மை
தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி சேர்த்துக் கொண்டு சம்ச்லேஷித்த படியைக் கண்டு -தன்னோடு சேர்வோம் அல்லோம்
என்பாரையும் சேர்த்துக் கொள்ள வல்ல திரு விண்ணகர் அப்பனுடைய விருத்த கடநா சாமர்த்தியம் இருந்த படி என் -என்று விஸ்மிதராக
-இப் பிரசங்கத்தாலே -இன்னமும் பாரீர் -என்று -தன்னுடைய விபூதி கத்வத்தைக் காட்டி அருளக் கண்டு -பண்டு -தன்னைப் பிரிந்து
-மஹா அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று இன்னாதாரான ஆழ்வார் -இப்படி உபகாரகனாய் கொண்டு தானே தனக்கு ப்ராப்யமும் ப்ராபகமும்
-மற்றும் எல்லாமாயும் இருக்கிற படியையும் -அவனுடைய விருத்த விபூதி கத்வத்தையும்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வத்தையும்
-மற்றும் உண்டான ஸுந்தரியாதிகளையும் ப்ரீதராய்க் கொண்டு பேசுகிறார் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி —

மூன்றாம் திருவாய்மொழியில்-இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே
பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு
நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்து
அதுக்கு அடியான ஸர்வ வ்யாபகத்வத்தையும்
இதர விசஜாதீயதையையும்
உஜ்ஜ்வல கீர்த்தித்தவத்தையும்
அதிசயித கிருபா யோகத்தையும்
லீலா விபூதி நிர்வாஹகத்வத்தையும்
ஆஸ்ரித அநு பாவ்யமான உஜ்ஜ்வல்யத்தையும்
ஸர்வ லோக சரண்யத்வத்தையும்
ஆஸ்ரித பவ்யத்தையையும்
நிருபம உபகாரகத்வத்தையும்
அசாதாரண ரக்ஷகத்வத்தையும்
அநு சந்தித்து -இவ்வோ ஆகாரங்களாலே அகடி தங்களை கடிப்பிக்க வல்லவன் –
நித்ய சம்சாரிகளான நம்மையும் நித்ய ஸூரி களோடு சேர்க்க வல்லவன் என்று
அவனுடைய பல பிரதத்வ சக்தியை அநு சந்தித்து தாம் கண்டபடியே உபதேசித்து அருளுகிறார்-

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி –

கீழ் பிரணய ரோஷத்தாலே -அவனோடே சம்ச்லேஷிப்போம் அல்லோம் என்று இருந்த தம்மை -தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி
சேர்த்துக் கொண்ட படியைக் கண்டு விஸ்மிதராக -நீர் இது ஓன்று கொண்டோ விஸ்மிதர் ஆகிறது -நாம் சேராத வற்றை எல்லாம்
சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு -முன்பு பிரிவாலே வந்த
அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே
நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்
-நித்ய சம்சாரியாய் போனவன்றும் மயர்வற மதி நலத்தை நிர்ஹேதுகமாக அருளி என்னை பொருந்த வீட்டுக் கொண்டான்
-வள வேழ் உலகில் அயோக்யதையை அனுசந்தித்து -அகலப் புக-தன் நீர்மையைக் காட்டி சேர்த்துக் கொண்டான்
-இப்போது பிரணய ரோஷத்தாலே அகன்று முடிய புக -தன்னுடைய சர்வ சக்தி யோகத்தாலே சேர விட்டுக் கொண்டான்
-அவை போல் அன்று இ றே பிரணய ரோஷம் -அகல ஒண்ணாதே அணுக ஒண்ணாதே இருப்பது ஓன்று இ றே -இத்தால் சொல்லிற்று ஆயிற்று
–அகன்று முடிந்து போவோம் என்பாரையும் உடையவன் முடிய விட்டுக் கொடான்-என்கிறது –
முதல் திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்தித்து -பத்துடை அடியவரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்தார் –
இங்கு மின்னிடை மடவாரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்து இது திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்திக்கிறார்-
இப்படி கண் அழிவு அற்ற மேன்மையும் நீர்மையும் உள்ளது இவனுக்கே என்று அனுசந்தித்து ப்ரீதி பிரகர்ஷத்தாலே பேசுகிறார் –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி —

இப்படித் தாழ நின்றவன் சர்வேஸ்வரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச் செய்வர்.
அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய
சர்வேஸ்வரத்வத்தை அருளிச் செய்கிறார் என்றபடி.

‘இதிலே ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச் செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர்.–
பரத்வனே வ்ருத்த விபூதிகன் – அதாவது,
“சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேர விட்டுக் கொண்ட ஆச்சரியத்தைக்
கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்.

சேர விட்டுக் கொண்ட படி தாம் பலவாக இருக்குமன்றோ:
முதல் தன்னிலே-1-1- தம்மையும் அறியாதே அவனையும் அறியாதே இருக்க,
தன் படிகளை அறிவித்துக் கூட்டுவித்துக் கொண்டான்.

உள்ளே புகுர நின்று தம்முடைய தாழ்வினையும் அவனுடைய உயர்வினையும் அநுசந்தித்து
‘நாம் அங்குத்தைக்குத் தக்கவர் அல்லோம்’ என்று அகல,-1-5- தன் செல்லாமையைக் காட்டிப் பொருந்த விட்டுக் கொண்டான்.

இனி, அவை போன்றது அன்றே இது; ஒன்றால் போக்கக் கூடியது அன்றே.
அகலில் குற்றம், அணுகில் குற்றமாய் இருப்பது ஒன்றே யன்றோ!
ஜாதி சண்டாளனை நோக்கினால் பிராயச் சித்தம் உண்டு;
பிரணயத்தால் உண்டாகிய கோபம் ஆகிற காரணத்தால் சண்டாளர் ஆனவர்க்கு அதுவும் இல்லை.
ஆக, இந்தப் படிகளாலே
தன் செல்லாமையைக் காட்டி அவன் பொருந்த விட்டுக் கொண்ட படியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்றபடி.

பாவியேன் மனத்தே -கடாஷித்து -ஜாதி சண்டாளன் -என்கிறார் –
ஈஸ்வரன் மேல் விழா நிற்க -சேராமல் விலக்கிய பிராயச்சித்தம் இல்லாத பாபம்
சந்த்யா வந்தனம் பண்ணா விடில் பிராயச்சித்தம் தேடலாம் -பகவத் அனுபவம் இல்லாததுக்கு இல்லையே -கூரத் ஆழ்வான்
நாயக விஷயத்தில் நாயகிக்கு ஏற்பட்ட பிரணய ரோஷத்துக்கு பரிகாரம் இல்லை
பிரணயத்தால் பிறந்த கோபம் ஆகிற அபராதத்தால் -வந்த பாபிஷ்டருக்கு பிராயச்சித்தம் இல்லையே
ஈஸ்வரனை சொல்லாமல் -பிரணய கோபத்தையே சொல்கிறார் –

அங்ஙனம் ஆச்சரியப்படுகிற இவர்க்கு, ‘இவ்வளவு அல்ல காணும் நம்முடைய ஆச்சரியங்கள் இருக்கும்படி.
உலகத்தில் தம்மில் தாம் சேராத மாறுபட்ட பொருள்களும் எல்லாம் நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர்!
ஆன பின்னர், நம்மோடு சேராதார் இலர் காணும்!’ என்று தன்னுடைய விருத்த விபூதிகத்வத்தைக் காட்டிக் கொடுக்க இவரும் கண்டார்.
கண்ட இவர் ‘இவை இருந்தபடி என்!’ கொடுத்த அறிவைக் கொண்டு அகலுகைக்குக் காரணமாயிருக்கிற இவற்றை
எல்லாம் கூட விட்டுக்கொடு நிற்கிற படிகளும்,
இனி, நிமித்த காரணமானது உபாதான காரணமாக மாட்டாது; உபாதான காரணமானது நிமித்த காரணமாக மாட்டாது;
இங்ஙனே இருக்க, இவை எல்லாம் தானே யாயிருக்கிற படியையும்,-பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-
இவற்றோடே கூடி இருக்கச் செய்தேயும் இவற்றின் குற்றங்கள் தன்னைத் தீண்டாமல் இருக்கிற படியையும்,-பரஞ்சுடர் –
குற்றம் தீண்டாமல் கடக்க இருக்கை மாத்திரமன்றிக்கே நியமிக்கின்றவனாய் இருக்கிற படியையும்,-
இனி, நாட்டில், பிராப்யமானது பிராபகம் ஆக மாட்டாது; பிராபகமானது பிராப்யம் ஆகமாட்டாது; இங்ஙனே இருக்க,
பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் தானே யாக இருக்கிற படியையும்,–என் சரண் என்னை ஆளுடை –
மற்றும், இவனுடைய அழகு சீலம் முதலானவைகளையும் அநுசந்தித்து, -பொன்னப்பன் -தந்தனன் தன் தாள் நிழல்-
‘இப்படி உபகார சீலனான சர்வேசுவரன் திருவிண்ணகரிலே வந்து அண்மையில் இருப்பவனானான்;
இவன் அல்லது நமக்குப் பரம பந்துக்கள் இலர்’ என்று அறுதி யிட்டு,
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்-6-3-9-
‘இவன் திருவடிகள் அல்லது பற்று இல்லை’ என்று பேசுகிறாராயிருக்கிறது.
திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10

முதல் திருவாய்மொழியிலே பரத்துவ அநுபவம் பண்ணி,
மூன்றாந் திருவாய்மொழியிலே சௌலப்யத்தை அநுசந்தித்து “எத்திறம்” என்று கிடந்தார்.

இங்கு, “போகு நம்பி” என்று தள்ளச் செய்தேயும் கால் வாங்க மாட்டாதே நின்ற நீர்மையை அநுசந்தித்து,
அதற்கு எதிர்த்தட்டான பரத்துவத்தை அநுசந்திக்கிறார்.

இப்படிக் கிரமம் இல்லாமல் அருளிச் செய்கிறதற்குக் காரணம் யாது? என்னில்,
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அலரோ; மேன்மையை அநுசந்திப்பது, நீர்மையை அநுசந்திப்பதாமத்தனை அன்றோ!

இத் திருவாய்மொழியிற் கூறப்படுகின்ற பொருளோடு
“தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ வேதத்து மறை நீ பூதத்து முதலு நீ
வெஞ்சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ அனைத்தும் நீ அனைத்தினுட் பொருளும் நீ”-என்ற பரிபாடற் பகுதி ஒப்பு நோக்கத் தகும்.

1-வைகுண்ட விண்ணகரம்
2-பரமேஸ்வர விண்ணகரம்
3-காளிச்சீராம விண்ணகரம்
4-நந்திபுர விண்ணகரம்
5-அரி மேய விண்ணகரம்
6-காழிச் சீராம விண்ணகரம்
7-ஸ்ரீ வைகுண்டம் -நவ திருப்பதி நின்ற திருக்கோலம்

8-திரு விண்ணகர் -அடை மொழி இல்லாமல்
உத்சவ மூர்த்தி பொன்னப்பன் –
மிகுநர் இலன் -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
சமாப்யதிக ராகித்யன் -தரித்திரம் -குறை சொல்லலாம் படி அன்றோ –
பூமா தேவி -துளசி தேவி -ஸ்ரீ மஹா லஷ்மி போல் ஆக ஆசை கொள்ள
மார்க்கண்டேயர் திருக்குமாரி –
லவண வர்ஜித ஸ்வாமி –

விளம்ப விரோதம் அழிக்கும்-வ்ருத்த கடநா – சாமர்த்தியம் -நன்னகரிலே விஸ்தீரணம்
நன்னகரிலே-தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-
விஸ்தீரணம் -பல் வகையும் பரந்த பெருமான்-6-3-1-

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-2-11-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-11-

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–6-2-11-

அதில் ஸ்நேஹினியான யசோதைபி பிராட்டி வெண்ணெய் களவு கண்டாய் என்று பொடித்த போது போலே ஆழ்வார் தாம் ப்ராணாய கோபத்தாலே
எம்பெருமானோடு கலப்பேன் அல்லேன் என்று அகல அது பொறுக்க மாட்டாமே தளர்ந்த தளர்த்தியை அநு சந்தித்து இனியராய்
அவ்வெம்பெருமானை எத்தின இத்திருவாய் மொழியை இப்பான வ்ருத்தி இன்றிக்கே சொன்னார்க்கும் எம்பெருமான் ஸந்நிஹிதனாய்
இருக்கச் செய்தே -பிறங்கி-செறிந்து -தாம் பட்ட துக்கம் பட வேண்டா என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-2-11-

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–6-2-11-

அதி ஸ்நேஹிதையான யசோதை பிராட்டி வெண்ணெய் களவு கண்டாய் என்று பொடிந்தது போலே -ஆழ்வார் தாம் பிரணய கோபத்தால் எம்பெருமானோடே கலப்பேன் அல்லேன் என்று அகல -அது பொறுக்க மாட்டாமை தளர்ந்த தளர்த்தியை அனுசந்தித்து இனியராய் -எம்பெருமானை ஏத்திய இத்திருவாய் மொழியை -இப்பாவ வ்ருத்தி இன்றிக்கே வாக் மாத்திரத்திலே சொன்னார்க்கும் எம்பெருமான் சந்நிஹிதனாய் இருக்கச் செய்தே பிறங்கி ஆழ்வார் தாம் பட்ட வியஸனம் பட வேண்டா என்கிறார் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-2-11-

அநந்தரம் இத்திருவாய் மொழியைச் சொல்லுமவர்களுக்கு பகவத லாப ரூபமான
தாரித்ர்யம் இல்லை என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–6-2-11-

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு–இடைக்குலத்திலே பிறந்த யசோதையாகிற
தாயாரால் வெண்ணெய்க் களவு வார்த்தை பிறந்த அளவிலே சீறப்பட்டு அழுது தோப்புக் கண்டமிட்ட
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்-ஏத்திய -கூத்தை யுடையனான லோக உபகாரகனை ஆழ்வார் ஸ்தோத்ர ரூபமாக அருளிச் செய்த
தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்-திராவிட சந்தர்ப்ப ரூபமான ஆயிரத்துள்ளும் விமுகரை
அபி முகராக்கிக் கொண்ட அத்விதீயமான இவை பத்தையும் இசையோடு கூட
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–நாவுக்கு பிரயோஜனமாக செறிய உரைப்பார்க்கு
பகவத் அலாபமாகிற தாரித்ர்யம் இல்லை
இது ஆசிரியத்துறை –

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-2-11-

நிகமத்தில் இப்பத்தை சாதரமாகக் கற்குமவர்கள் நான் பட்ட கிலேசம் படார் என்கிறார் –

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–6-2-11-

ஆய்ச்சியாகிய அன்னையால்-
அன்னை என்று பொதுவில் சொன்னால் -தேவகி பிராட்டி பக்கலிலும் ஏறும் என்று -ஆய்ச்சியாகிய என்று விசேஷிக்கிறார் -முலை உண்டு வளர்ந்த இடத்திலே இ றே அச்சம் உள்ளது –
அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டு
வெண்ணெய் களவு போயிற்று என்கிற வார்த்தையிலே -இவனே செய்தான் -என்று தாயார் பொடிய பொடி யுண்டு கண்ணும் கண்ண நீருமாய் நின்றால் போலே யாயிற்று -இன்று இவர்கள் திரளில் புகுற வேண்டா என்ற போது நின்ற நிலை
அழு-கூத்த அப்பன்-அழுகிற தசையில் கால் மாறி இட்ட போது வல்லார் ஆடினால் போலே இருந்த படி
அப்பன் தன்னைக் -அந்நிலையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டு தம்மை உண்டாக்கின படி
குருகூர்ச் சடகோபன்-ஏந்திய தமிழ்மாலை –
பிரணய ரோஷம் போனவாறே -போகு நம்பீ என்றும் -புள்ளுவம் பேசாதே என்றும் சொன்னவை ஏத்திற்றாய் விட்டது
ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
அத்விதீயமான பத்து -ஆஸ்ரிதரோடு பாவ பந்தம் வெளியிட்ட பத்து
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–
வாக் மாத்திரத்தாலே சாதரமாகச் சொல்லுவார்க்கு -தூது விட்டு அவன் வரக் கொண்டு புகுர ஓட்டோம் என்று பட்ட கிலேசம் பட வேண்டா -சோறும் புடைவையும் கிடைக்கும் என்கிறது அன்று -பகவத் தாரித்ரியம் இல்லை என்கிறது -சென்று ஒன்றி நின்ற திரு -என்கிறபடியே அவன் தானே வந்து மேல் விழ-நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

—————-

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-2-11-

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல் குரவே.–6-2-11-

இல்லை நல் குரவே-பகவத் அ லாபம் ஆகிய தாரித்ர்யம் இல்லை –
ஜீவ ஸ்வா தந்திரத்தால் விலக்கினாலும் சேர்த்துக் கொண்டு அருளுவான் –
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு–வார்த்தை கேட்டதும் அழுது
விம்மல் -பொருமல் -தோப்பு கர்ணம் போட்டு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்-கூத்தை போலே நாடகம் தோற்ற நான் -லோக உபகாரகன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர் பத்து இசையொடும்-ஸ்தோத்ர ரூபம் -போகு நம்பி இத்யாதியால் -வசவையும் ஸ்தோத்ரம் ஆக
கொள்ளும் அவன் ஸ்வ பாவம் -நஞ்சை அமுதம் ஆக்கும் முஹூர்த்தம் அவதரித்தவன் அன்றோ -விமுகரை அபிமுகர் ஆக்கின இந்த பத்தும்
நாத் தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல் குரவே.-இசை உடன் கூடி -நாவுக்கு பிரயோஜனமாக நன்கு அனுசந்தானம் பண்ணினால்
அலாபம் -சங்கோசம் கிடையாமை -பகவத் அலாபம் இல்லை -ஜீவ ஸ்வா தந்த்ரத்தால் அவனை விலக்கும் நிலை வராது –

அன்று வெண்ணெய் களவு போயிற்று என்ற வார்த்தை பிறந்த அளவிலே ஆய்ச்சியாகிய தாயால் சீறப்பட்டு அழுத கூத்தனாகிய அப்பனை,
திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் துதித்த தமிழ்மாலை ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் இசையோடும்
நாவினால் விருப்பத்தோடு சொல்லுகின்றவர்கட்கு வறுமை இல்லை.
அன்று வெண்ணெய் வார்த்தையுள் ஆய்ச்சியாகிய அன்னையால் சீற்றம் உண்டு அழு அப்பன் என்க. ‘ஆய்ச்சியாகியஅன்னை’ என்றது,
பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம். நவில உரைத்தல்-மனத்தொடு படவுரைத்தல்.

இத் திருவாய்மொழியை ஆதரத்தோடு சொல்ல வல்லார்க்குப் பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறார்.

ஆய்ச்சியாகிய அன்னையால்-
அரசர் குலத்தில் ஒரு தாயும் ஆயர் குலத்தில் ஒரு தாயும் ஆகையாலே.
பொது வறுத்து ஆய்ச்சியாகிய தாயாலே என்கிறார்.
தேவகிப் பிராட்டியார் அடிக்கில் இத்தனை நோவாது காணும்.
“தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி” -இது, பெரிய திருமொழி, 8. 3 : 5.-என்கிறபடியே,
‘இவள் நம்மை அதட்டுவதே!’ என்று உளைந்தன்றோ கிடப்பது.
தெய்வம் அறியத் தாய் ஆயினமை அன்றோ தேவகியார் பக்கல் உள்ளது;
முலைச் சுவடு அறிந்ததும் முகம் பழகிற்றும் வளர்ந்ததும் எல்லாம் இங்கே அன்றோ.

அன்று வெண்ணெய் வார்த்தையுள் –
ஊரில் ‘வெண்ணெய் களவு போயிற்று’ என்றார்கள்; அவ்வளவிலே ‘நாம் அன்றோ இதற்கு இலக்கு’ என்று அழப் புக்கான்.
‘மடம் மெழுகுவார் யார்?’ என்ன, ‘அஸ்ரோத்திரியன்’ என்றார்கள்;
‘இப் பரப்பு எல்லாம் என்னாலே மெழுகப் போமோ’ என்றான்; அதுபோலே.
யாரேனும் ஏதேனும் செய்யிலும் இவனைச் சொல்லும்படி யன்றோ இவனுடைய தீம்பு தான் இருப்பது!
“பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன்
மேலன்றிப் போகாது” -பெரியாழ்வார் திருமொழி, 2. 8 : 5.-என்னும்படியன்றோ இருப்பது.

சீற்றம் உண்டு அழு கூத்த அப்பன் தன்னை –
தாயார் பொடியப் பொடியுண்டு அழுகிற நிலையில் “பையவே நிலையும்” -திருவாய். 5. 10 : 3.-என்கிறபடியே
நிற்கிற நிலை,வல்லார் ஆடினாற் போலே இருந்தபடி.
அன்றிக்கே,
அழுகையாகிற கூத்தையுடைய மஹோபகாரகனை என்றுமாம்.
இது ஒன்றற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறது, “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும்
இவர்கள் சொன்ன போது ஒன்றிலும் விருப்பம் இல்லாத அவன் கால் வாங்கிப் போக மாட்டாதே நின்ற நிலைக்குத் தியோதகம்.
நகராமல் ஆணி அடித்தால் போலே நின்றானே -தாய் இடமும் தாரம் இடமும்
அவள் நில் போனால் அடி என்றாள் -இவள் போ என்றாலும் போகாமல் நின்றானே
நிரபேஷன் ஆனவன் இப்படி செய்தானே -வெண்ணெய்க்காகவே பெண்ணுக்காகவே பிறந்தவன் போலே இருந்தானே –

அப்பன் தன்னை –
அந்த நிலையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டு தம்மை உண்டாக்கினபடி.

குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை –
பிரணய ரோஷத்தாலே “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும்,
“நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ” என்றும் சொன்னவை யெல்லாம்
அந்தப் பிரணய ரோஷம் போனவாறே ஏத்தாய் விட்டது.

ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து –
தன்னை அடைந்தவர்களோடு உண்டான பாவ பந்தத்தை வெளியிட்ட ஒப்பற்ற பத்து.

இசையொடும் –
சொல் மாத்திரத்தாலே.–அர்த்தம் புரிய வேண்டாம் -புரிவதும் கஷ்டம் தானே

நவில உரைப்பார்க்கு –
ஆதரத்தோடு சொல்லுவார்க்கு.

நல்குரவு இல்லை –
வறுமை இல்லை; பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை. என்றது,
தூதுவிட்டு, –6-1- ராமன் கண்ணனாக வர -அவன் வரக்கொண்டு
‘புகுர ஓட்டோம்’ என்று பட்ட கிலேசம் படவேண்டா என்றபடி.
சோறும் புடைவையும் கிடைக்கும் என்கிறது அன்று; பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறது.
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்”-திருவாய். 6. 7 : 1.- என்று
இருக்கிற இவருடைய வறுமை அன்றோ.
ஆகையாலே, அதிகாரிகட்குத் தகுதியாக அன்றோ உண்ணும் உணவு முதலானவைகளும் இருப்பன.
“உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்” –பெருமாள் திருமொழி, 3 : 4.-
என்கிறவர்கள் இவற்றைச் செல்வமாக நினையார்களே.
“சென்று ஒன்றி நின்ற திரு” – நான்முகன் திருவந். 61.-என்கிறபடியே அவன் தானே வந்து
மேல் விழ நித்தியாநுபவம் பண்ணப் பெறுவர்கள்.

‘அழு கூத்த அப்பன்’ என்கிற இடத்தில்
“முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்”- பெருமாள் திருமொழி, 7 : 8.– என்கிற
பாசுரத்தை யோஜித்துக் கொள்வது.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-2-10-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-10-

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

இப்படி எம்பெருமானுடைய அழகாலும் ஸ்வ விஸ்லேஷ ஜெனித நிரவதிக அவசாதத்தாலுமாகத் தன்னுடைய ஊடல் எல்லாம் தீர்ந்து
தன்னை அகப்படுத்தின அவனுடைய அழகையும் ஸுர்ய காருண்ய வாத்சல்யாதி குணங்களையும் பேசி இப்படியே குணவானாய்
இருந்து வைத்து விஸ்லேஷ பரம்பரைகளாலே எங்களை என்றும் இங்கனே நலிவே செய்து போனாய்
ஆய்ச்சியோமாய்ப் பிறந்து நாங்கள் உன்னால் பட்டது உன்னைப் பிரிந்தார் படும் வ்யஸனம் அறியாத நீ அறியாய் காண் என்கிறாள் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-2-10-

நின்றிலங்கு  முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

அந்நிய பரைகளாய்-நேராகப் பாராதே இருந்த இப்பிராட்டியும் தோழிமாரும் நேராகப் பார்க்கைக்காக இழைக்கிற சிற்றிலை திருவடிகளாலே அழித்து அருள -அவ் வன்னியாயப் பாடு அறிவிப்பாரைப் போலே -அவனை திருவடிகளே தொடக்கி திரு முடி அளவும் நோக்குகையாலே -அவனுக்குப் பிறந்த அழகையும் மேன்மையையும் -தங்கள் இவனோடு சம்ச்லேஷிப்போம் அல்லோம் என்று அபிசந்தி பண்ணி இருக்க -அத்தை அழித்த பிரசங்கத்தாலே -இருபத்தொரு கால் ஷத்ரிய குலத்தை எல்லாம் கோலி யறுத்த ஆண் பிள்ளைத் தனத்தையும் -பண்டு பிரளய காலத்தில் அஸத் கல்பமான ஜகத்தை உண்டாக்கினால் போலே -இடைச் சாதி அடைய தலை எடுக்கும் படி வந்து திருவவதாரம் பண்ணி யருளின உபகாரத்தையும் பேசா நின்று கொண்டு -ஊடல்  தீர்ந்து -அவனோடே சம்ச்லேஷித்து-ஏவம்விதமான உன்னால் இதைப் பெண்களான நாங்கள் நலிவே படப் பிறந்தோமே என்று தங்களுடைய ஆர்த்தி எல்லாம் தீர தங்கள் பட்ட நோவை அறிவிக்கிறார்கள் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-2-10-

அநந்தரம் -முக ஓளி திகழ முறுவல் செய்து நின்றிலையே என்று முகம் பார்த்து வார்த்தை சொன்ன அளவிலே தங்கள்
அகவாயில் மரம் தீர்ந்து தங்களை பஹு முக ப்ரவ்ருத்தியாலே அவன் அபிமுக்யம் பண்ணுவித்தபடியை நினைத்து
ஸர்வ பிரகார ரக்ஷகனான உன்னாலே நாங்கள் இப்படி நலிவு படுவதே என்று ஸமாஹிதையாய் வார்த்தை சொல்லுகிறாள் –

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

நின்றிலங்கு முடியினாய்! -ஸமஸ்த ஜகத் ரக்ஷணத்துக்கும் ஒரு காலும் தாழ்வில்லாமையாலே -நிலை நிற்க
விளங்குகிற திரு அபிஷேகத்தை யுடையையாய்
இருபத்தோர்கால் அரசு களை கட்ட–இருபத்தொரு படிகால் ராஜாக்களை உன்மூலம் பண்ணின
வென்றி நீள் மழுவா? -வென்றியை யுடைத்தான மழுவையுடையையாய்
வியன்ஞாலம் முன்படைத்தாய்!—விஸ் தீர்ணமான ஜகத்தை ஸ்ருஷ்ட்டி காலத்திலேயே உத்பாதித்தவனாய்
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய பெரிய
கரு மாணிக்கச்சுடர்!-இக்காலத்திலும் இந்த இடைக்குலமானது தங்கள் குடியோடே உஜ்ஜீவிக்கும்படியாக அவ தீர்ணனான
நீல ரத்ன பிரபா உஜ்ஜவலமான வடிவையுடையவனே
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–இப்படி சர்வ பிரகார ரக்ஷகனாகையாலே எங்களுக்கு நாயகனுமாய்
எங்கள் மறத்தையும் அளித்து அழிந்த சத்தையும் யுண்டாக்கி
எங்களோடு உறவும் உடையையாய் அநு பாவ்யமான வடிவையுமுடைய உன்னாலே
அறி வில்லாத கிடைக் குலத்திலே பிறந்த நாங்கள் என்றும் நலிவு படும்படியாவதே என்று ஸமாஹிதையான பின்பு
முன்பு பட்ட நலிவை நினைத்து சொன்னாளாகிறது
நான் அது அஞ்சுவான் -என்று முதல் பாட்டிலே வந்த ஒருமைக்கு பின்பு வந்த பன்மை எல்லாம் -ஆத்மநி பஹு வசனமாதல்
தோழிமார்களையும் கூட்டி அவர்களுக்காக சமைத்து சொன்னதாதால் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-2-10-

லீலையை திருவடிகளால் அழித்த சீற்றத்தாலே முன்புத்தவற்றை மறந்து அவ்வந்நியாயப் பாட்டை அறிவிப்பாரைப் போலே -இவனை முகம் பாரோம் என்ற சங்கல்பம் அழிந்து முகத்தைப் பார்த்தார்கள் -நெஞ்சில் மறம் எல்லாம் போய் -அந்தத் திருவடிகளே தொடங்கி திரு முடி அளவும் பார்க்க -அத்தாலே அவனுக்குப் பிறந்த விசேஷத்தை சொல்லுகிறாள் –

நின்றிலங்கு  முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

நின்றிலங்கு முடியினாய்!
என்னைத் தோற்ப்பிக்கையாலே நிலை நின்று விளங்கா நின்றுள்ள திரு அபிஷேகத்தை யுடையவன் -அபிஷிக்த க்ஷத்ரியர் விஜய அபிஷேகம் பண்ணினால் போலே -எங்களை தோற்பித்த பின்பு முடியும் நல் தரித்து விளங்குவதும் செய்தது என்கை -இத்தலையில் சத்தை யுண்டாய் அத்தாலே ரக்ஷகத்வம் நிலை நின்ற படி –
இருபத்தோர்கால் அரசு களை கட்ட-வென்றி நீள் மழுவா?
உங்கள் அபிசந்தியைக் குலைத்து முகம் பார்க்கப் பண்ணினோம் இ றே -என்ன -உன்னோடு எதிர் இட்டாரில் உன்னை வென்றார் உண்டோ – இருபத்தொரு கால் ஷத்ரிய குலத்தை கோலி யறுத்த ஆண் பிள்ளை யல்லையோ -எதிரிகளை மழுவாலே அழித்தால் போலே அனுகூலரை அழகாலே அழிப்பு தீ -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம் -என்று ஆண்களை அழிக்கக் கடவ நீ அபலைகளை அழிக்க சொல்ல வேணுமோ –
வியன்ஞாலம் முன்படைத்தாய்!
பிரளயத்தில் உரு மாய்ந்து கிடந்த பூமியை உண்டாக்கினால் போலே ப்ரணய ரோஷத்தாலே அழிந்த எங்களை உண்டாக்கின படி -வியன் -விஸ்மயம்-பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே விரஹ பிரளயம் கொண்ட எங்களை எடுத்த படி -அங்கு விலக்குவார் இல்லாமையால் செய்யலாம் -நிஷேதிக்க செய்தே அன்றோ உண்டாக்கிற்று
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
இன்று இவ் விடைச் சாதி ச பரிகரமாக உஜ்ஜீவிக்கும் படி தோன்றினவன் –வீடுய்ய -ச பரிகரமாக உய்ய
கரு மாணிக்கச்சுடர்!
பிரணய ரோஷத்தாலே இறா ய் த்து இருக்கிற எங்களை மேல் விழுந்து உன் அழகை அனுபவிப்பித்தவனே
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.
இவ்வனுபவம் ஸ்வப்ன கல்பமாய் ஆற்றாமை இ றே எங்களுக்கு நிலை நின்று போருவது என்று தங்கள் பட்ட நோவை அறிவிக்கிறார்கள் என்னுதல்-ஜிதந்தே என்றும் தோற்றோமே மட நெஞ்சமே என்றும் தங்கள் தோற்ற படியை அவன் தனக்கு சொல்லுகிறார்கள் என்றுமாம் -இடக்கையும் வலக்கையும் அறியாத நாங்கள் –

——

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-2-10-

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

முக ஒளி திகழ முறுவல் -முகம் பார்த்து வார்த்தை -அகவாயில் மறம் அதர்ம சிந்தனை தீர்ந்து -த்ருஷ்டே பராவரே -சுருதி போலே
பஹுமுக பிரவ்ருத்தியால் தங்களை ஆபிமுக்யம் பண்ணி வித்தபடியை சர்வ பிரகார ரஷகன் -நீ இருக்க நலிவதா
நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட-நிலை நிற்க -ரஷணம் -விளங்கும் திரு அபிஷேகம் -அதற்கு கவித்த முடியும்
அசங்காமல் நிலை நிற்குமே -21 ஷத்ரிய அரசர்களை உன்மூலம் -வெற்றி பெற்ற மழுவை பரசுராமனே
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன்படைத்தாய்!-வியப்பான ஞாலத்தை சிருஷ்டி காலத்தில் உத்பாதித்தாய்
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!-ஆயர் குலம் சம்ரஷிக்க பிறந்தாய் -வீடு குடி குடுத்தனம் உடன் உய்ய
நீல ரத்ன பிரபா ஔஜ்வலம் வடிவை உடையவனே
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே–இப்படி சர்வ பிரகார ரஷகன் ஆகையாலே -எங்கள் நாயகன் -எங்கள் மறத்தையும் அழித்து –
அழிந்த சத்தையும் உண்டாக்கி -சர்வ வித உறவும் கொண்டாடி –அனுபாவ்யமான வடிவையும் கொண்டு -உன்னாலே -அறிவில்லா இடைகுலம்-
முன்பு பட்ட நலிவை நினைத்து சொல்கிறார்கள் –படும் படி ஆவதே என்று சமாஹிதர்
முன்பு நான் அஞ்சுவன் -ஒருமை -பின்பு ஆத்மனி பகு வசனம் -தோழிகளையும் சேர்த்து சொன்னது ஆதல்

நிலை பெற்று விளங்குகின்ற கிரீடத்தை யுடையவனே! இருபத்தொருபடி கால் அரசர்களைக் குலத்தோடு வேர் அறுத்த வெற்றி பொருந்திய
நீண்ட மழு என்னும் ஆயுதத்தை யுடையவனே! அகன்ற உலகத்தை யெல்லாம் முன்னே உண்டாக்கினவனே! இக் காலத்திலும் இந்த ஆயர் குலமானது
அடியோடு உய்வு பெறும்படியாகத் தோன்றிய கரிய மாணிக்கச் சுடரே! ஆய்ச்சியர்களாகிய நாங்கள் எப்பொழுதும் உன்னால் துன்பமே படுகின்றோம்.
களைகட்டல் – களைபிடுங்குதல். ‘மழுவா’ என்றது, பரசுராமனை. குலத்தை – குலமானது; உருபு மயக்கம். வீடு உய்ய – விடுபட்டு உய்ய என்னலுமாம்;
மோக்ஷத்தைப் பெற்று உய்வுபெற என்னலுமாம். ஆய்ச்சியோம் நலிவே படுவோம் என்க.

“நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே” என்று விழுக்காடு அறியாதே
வாய் தப்பச் சொல்லிக் கொண்டு நின்றார்கள்;
காலால் அழித்தது சிற்றிலை யன்று; இவர்கள் நெஞ்சுகளிலுள்ள மறத்தையே யன்றோ.
அந்த மறம் போனவாறே மேல் நோக்கிப் பாதாதி கேசாந்தமாகப் பார்த்தார்கள்;
தங்களை வென்றதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி நின்றான்;
அவ்வடிவிலே பிறந்த வேறுபாட்டினைச் சொல்லுகிறார்கள்.

நின்று இலங்கு முடியினாய் –
இவர்களை வெல்வதற்கு முன்பு தலைச் சுமையாய்க் காணும் கிடந்தது;
இப்போதாயிற்று நற்றரித்து ஒளி விடத் தொடங்கிற்று.
இராசாக்கள் சிலர் தந்தாம் பகைவர்களை அழித்து வீர அபிடேகமும், விஜய அபிடேகமும் பண்ணிநிற்குமாறு போலே.
முன்பே முடி சூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது.
இராவணன் முதலாயினோர்களை வென்றதற்கு முடி சூடினது போன்று அன்று காணும்,
காதலிமார்களை வென்றதற்குச் சூடின முடி இருப்பது;
இவர்கள் எண்ணங்களைக் குலைத்துப் பொருந்தவிட்டுக் கொண்ட பின்பு காணும்
மேன்மையையுடையவனாய்ப் பிரகாசிக்கின்றவனுமாய் முடியும் நற்றரித்தது.

“ஸ்ரீராமபிரான் விபீடணனை அரக்கர்களுக்குத் தலைவனாக இலங்கையில் அபிடேகம் செய்து,
அப்போது செய்து முடித்த எல்லாக் காரியங்களையுமுடையவராயும் நடுக்கம் அற்றவராயும் மகிழ்ந்தார் அன்றோ.
”அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீக்ஷணம்
க்ருத க்ருத்ய: ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 85.
ஸ்ரீ பரதாழ்வானைப்போலே, ‘நான் முடி சூடேன், நீர் முடிசூடும்’ என்று முடிக்கு இறாய்க்கின் செய்வது என்? என்று
உடம்பு வெளுத்துக் காணும் இவர் இருந்தது;
ஒரு படி அத்தலைச் சுமையைக் கழித்துப் போந்தோம்; இதுவும் ஒரு தலைச் சுமையாகின் செய்வது என்?’ என்று.
இக்ஷ்வாகு குலத்தார்க்குப் பணியன்றோ முடிக்கு இறாய்க்கை.

குகனொடும் ஐவரானேம் முன்பு; பின் குன்று சூழ் வான்ம கனொடும் அறுவரானேம்; எம் முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னோடும் எழுவ ரானேம்; புகலருங் கானந் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
நடுவினிப் பகர்வ தென்னே நாயக! நாயி னேனை உடனுதித் தவர்களோடும் ஒருவனென் றுரையா நின்றாய்
அடிமையிற் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித் தொடுகழற் செம்பொன் மௌலி
சென்னியிற் சூட்டிக் கொண்டான்.-என்பன அநுசந்தேயம்.

அடிக்கு இறாயாதிருக்கையும் முடிக்கு இறாய்க்கையுமன்றோ சொரூபம்.
‘அது கிடக்க; உங்களுடைய எண்ணங்களைக் குலைத்து உங்களை வென்றோம் அன்றோ’ என்றான்.
இருபத்தொருகால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா –
மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!
களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை.
ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே

வியன் ஞாலம் முன் படைத்தாய் –
பிரளயத்தில் உருமாய்ந்து கிடந்த பூமியை உண்டாக்கினாற் போலே அன்றோ,
பிரணய ரோஷத்தாலே அழிந்த எங்களை உண்டாக்கினபடி.
வியன் – ஆச்சரியம்.
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தாற் போலே, விரஹ பிரளயம் கொண்ட எங்களை எடுத்தபடி.
அங்கு விலக்குவார் இல்லாமையாலே செய்யலாம்; ‘கழக மேறேல்’ என்று விலக்கச் செய்தேயன்றோ உண்டாக்கிற்று.

இன்று இவ் வாயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய கருமாணிக்கச் சுடர் –
“பல பொருள்களாக ஆகக் கடவேன்” என்று பொதுவான சிருஷ்டியைத் தேடிப் போக வேணுமோ?
இந்த ஆயர் குலத்திலே வந்து பிறந்து, இன்று இவ் வாயர்குலத்தை வடிவைக் காட்டி
மனைவி மக்கள் முதலியவர்களோடு ரக்ஷித்தவனாதலின் ‘கரு மாணிக்கச் சுடர்’ என்கிறார்கள்.
அன்றிக்கே,
தன்னை அடைந்தார் திறத்திற் பண்ணின ஓரம் தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்றும்படி காணும் இருக்கிறது;
ஆதலின், ‘கரு மாணிக்கச் சுடர்’ என்கிறார்கள் என்னுதல்.
அன்றிக்கே,
பிரணயரோஷத்தாலே ‘சேரோம்’ என்று இருக்கிற தங்களைச் சேர்த்தபடியாலே
‘கருமாணிக்கச்சுடர்’ என்கிறார்கள் என்னுதல்.

ஒளி காட்டி குலம் ஜெயித்தான் —
ரஷித்த படியாலே பொலிந்தான் —
தன்பேறு என்று –பிரணய ரோஷம் தோற்பித்தான்-மூன்றும் –

“புத்திர பௌத்திரர்களாகிய அடிமைப் பொருள்களோடு” என்கிறபடியே,
ஒரு சேர உய்வு பெறும்படி செய்தானாதலின் ‘வீடு உய்ய’ என்கிறது. தோன்றிய – ஆவிர்ப்பவித்த.

நின் தன்னால் என்றும் நலிவே படுவோம் ஆய்ச்சியோமே –
பகைவர்களாய் முடிந்து போகப்பெறாதே, சம்சாரிகளாய் வேறு ஒன்றிலே நோக்குள்ளவர்களாய்ப் போகப் பெறாதே,
நீ நலியவும் நாங்கள் நோவுபடவுமாம்படி சமைந்து விட்டதன்றோ!
இரண்டு தலையும் கூடி மேல் விழுந்து அணைத்துக் கொண்டு நின்று சொல்லுகிற வார்த்தை அன்றோ.
இவ்வளவும் தங்கள் வெற்றியே அன்றோ சொல்லிப் போந்தது; இப்போது அன்றோ தங்கள் தோல்விக்கு இசைந்தது.

நலிவே படுவோம் –
இது தான் எங்களுக்கு மெய்யாகப் புகாநின்றதோ, எங்களுடையது அன்றோ எங்களுக்குச் சித்தித்து விடுவது.
இவர்களுடையதாவது, “கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்” – திருவிருத்தம்.-16–என்று மெலிவே யாயிருக்கை.
கூடில் மேல் பிரிவு வருமோ என்கிற பயம் -நீங்கில் விஸ்லேஷ விசனத்தால் மெலிவோம் –
செய்வது இன்னது என்று அறியாத தாங்கள் என்பார் “ஆய்ச்சியோமே” என்கிறார்கள்.

இத் திருப்பாசுரக் கருத்தோடு,
“வாராக் கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்”- என்னும் திருக்குறள், ஒரு புடை ஒப்புமையுடைத்தாம்.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆறாயிரப்படி —
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
ஸ்ரீ பன்னீராயிரப்படி —
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி –
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி —

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-2-9-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-9-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

தன்னை எம்பெருமான் இப்படி வளைக்கச் செய்தேயும் அவனைக் கடாஷியாதே இருந்து தன் தோழிமாரோடு கூடச்
சிற்றில் இழைத்துச் சிறு சோறிட்டு விளையாடா நிற்க
இவளுடைய கடாக்ஷம் அல்லது தனக்கு ஆத்ம தாரணம் இல்லாமையால் ஏதேனும் ஒரு படியால்
இவள் நம்மைக் கடாக்ஷிக்க அமையும் -என்று பார்த்து
இவள் தன்னைப் பார்த்து அருளும்படியாக இவளுடைய சிற்றிலைத் தன்னுடைய திருவடிகளாலே அழித்து அருள –
இவளும் அவனுடைய திரு முகத்தைப் பார்த்து அவனுடைய திருக் கண்களின் அழகாலே வசீக்ருதையாய்
உன் பக்கலுள்ள ப்ரீதி அதிசயத்தாலே நெஞ்சு உருகிக் கொண்டு
உன் தாமரைத் தடம் கண் விழிகளாகிற வலையிலே நாங்கள் அகப்படுகைக்காக
எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் உன் திருவடியால் அழித்து அருளினாய் –
நாங்கள் விளையாடுகிற படியைக் கண்டு உகந்து கொண்டு
நிற்க மாற்றிற்று இல்லை -ஒன்றும் கிருபை இல்லை யாகாதே -என்று கொண்டு
தன்னுடைய அத்யாவசாயத்தை எம்பெருமான் தன் அழகாலே அழித்ததாக அவனை இன்னாதாகிறாள் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-2-9-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

எம்பெருமான் தன்னை போக ஒட்டாது ஒழிய -அவனைக் கடைக் கணியாது இருந்து  தானும் தோழிமாரும் சிற்றில் இழைக்கை தொடக்கமான லீலா விநோத வியாஜத்தாலே-அந்நிய பரைகளாய் இருக்க  -இவளுடைய வீஷி தாதிகளை   ஒழிய தான் தரிக்க ஷமன் அல்லன் ஆகையால் -இவள் கடாஷிக்கைக்காக இவளுடைய சிற்றிலையும் சிறு சோற்றையும் தன திருவடிகளாலே சிதற -சிற்றில் அழித்த சீற்றத்தாலே-தன்னுடைய சங்கல்பத்தை மறந்து –அவன் முகத்தை பார்த்து -அவன் கண் அழகிலே ஈடுபட்ட பிராட்டி -நாங்கள் ப்ரீதி அதிசயத்தாலே  நெஞ்சு உருகி தாமரைத் தடாகம் போலே மநோ ஹரமான உன்னுடைய திருக் கண்களின் நோக்காகிற வலையுள்ளே அகப்படும்படி பண்ணுகைக்காக எங்களுடைய சிற்றிலையும் -நாங்கள் அடுகிற சிறு சோற்றையும்  உன் திருவடிகளாலே அழித்து அருளினாய் -எங்களுடைய லீலா விநோதங்களை கண்டு ப்ரீதனாய் உன்னுடைய முக ஒளி திகழ முறுவல் செய்து -நின்றிலை -இங்கனே செய்தவிடம் தக்கோர்மை செய்தாய் அல்ல என்று சொல்லி எம்பெருமானோடு சம்ச்லேஷியின் என்று தான் பண்ணின சங்கல்பத்தையும் அவன் தன்னுடைய ஸுந்தரியாதிகளாலே சிதிலம் ஆக்கின படியைச் சொல்லி அவனை இன்னாதாகிறாள் –

———————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-2-9-

அநந்தரம் இவன் தகைந்தவாறே கடக்கப் போய்ச் சிற்றில் இழைக்க -நம்மை அநு வர்த்தித்துப் போகாதே அநாதரித்தார்கள்
என்கிற சீற்றத்தால் சிற்றிலை அழிக்க
நாங்கள் உன் முக சோபையைப் பார்த்திருந்து சிற்றில் இழையாதபடி இத்தை அழித்தாயே
என்று இன்னாதாகிறாள்

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்–அகவாயில் உகப்பாலே நெஞ்சானது
உள்ளுருகி உன் தாமரை போலே இருக்கிற பெரிய திருக் கண்ணினுடைய பார்வைகளாகிற
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;– தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–வலைக்குள்ளே அகப்படுத்துகைக்காக எங்கள் சிற்றிலையும் –
நாங்கள் அடுகிற சிறு சோற்றையும் கண்டு உன்னுடைய திரு முகத்தில் ஓளி திகழும் படி முறுவல் செய்து பார்த்துக் கொண்டு
நில்லாதே உன் திருவடிகளாலே அழித்தாய்-இதில் ஓர் இரக்கமறச் செய்தாய்
இத்தால் ஆஸ்ரிதருடைய லீலா விபூதியில் பாரிப்பை அழிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-2-9-

போக ஓட்டேன் என்றால் நினைத்த பரிமாற்றம் பெற்றால் அன்றோ இவனுக்கு பிரயோஜனம் உள்ளது -ஒரு தேச விசேஷத்திலே முக்தர் சம்சாரிகளோடு உறவு அற்று இருக்குமா போலே அந்நிய பரதை  பண்ணுவோம் -என்று சிற்றில் இழைக்க தொடங்கினார்கள் -இவர்களுடைய வீஷிதாதிகளை ஒழிய தனக்கு செல்லாமையாலே இவர்கள் கடாஷிக்கைக்காக சிற்றிலையும் சிறு சோற்றையும் தன திருவடிகளாலே அழித்தான்-அத்தாலே இவர்களுக்கு சீற்றம் பிறந்து தங்கள் சங்கல்பத்தை மறந்து அவன் முகத்தை பார்த்து சொல்லுகிறார்கள் –

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி
பிரிந்து நெஞ்சை புண் படுத்துகையால் வந்த உருகுதல் ஒழிய -எங்கள் உகவையால் நெஞ்சம் உள்ளுருகி
உன் தாமரைத் தடம்கண் விழிகளின்-அகவலைப் படுப்பான் –
தாமரைத் தடாகம் போலே மநோ ஹரமான உன்னுடைய கண்ணிலே நோக்கு ஆகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக -த்ருஷ்ட்டி பந்தத்தாலே இ றே அநந்யார்ஹம் ஆக்குவது –
அழித்தாய் உன் திருவடியால்;
உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இ றே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ
தகவு செய்திலை;
நிர்த்தயர் செய்வதைச் செய்தாய் -பிரிந்த போதே பிரணயித்தவம் போயிற்று இ றே -நீர்மை யுடையார் செய்வதுவும் செய்திலை-நான் செய்த குறை என் என்ன –
எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு-நின்-முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-
எங்கள் லீலைகளைக் கண்டு ப்ரீதனாய் -நின் முகத்தில் ஒளி திகழ முறுவல் செய்து நிற்க -நாங்கள் சிற்றிலை தொட்டுக் கொண்டு இருந்து கடைக் கண்ணாலே உன்னைப் பார்த்துக் கொண்டு இருக்க வைத்திலையே -முழுக்க பார்க்கில் எல்லோரையும் பாதி யுமாமே -பிரணயியைப் பார்ப்பது கடைக் கண்ணாலே இ றே -உன்னுடைய லீலை போலே என்று இருந்தாயோ எங்களுடைய லீலையை –கர்மா நிபந்தம் ஆகையால் த்யாஜ்யம் இ றே இது -உன்னோடே சம்ஸ்லேஷியன் என்று நான் பண்ணின சங்கல்பத்தை அழகாலே அழித்தாய்-லீலைகளைத் திருவடிகளாலே அழித்தாய் என்று இன்னாதாகிறாள்-

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-2-9-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

இவன் தகைந்தவாறே நகன்று போக -அநு வர்த்தித்து போகாமல் -காலால் சிற்றிலை அழிக்க –
நீ உன் முக சோபையைப் பார்க்காமல் -நல்லது கண்டால் பொறுக்க மாட்டாமல் -லௌகிகர் நல்லது பிரயோஜ நாந்தரம் -தானே –
தன் விபூதியும் தன்னையும் மட்டும் அழிக்காமல் -அது தானே அநந்ய பிரயோஜனம்
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின் -அகவாயில் உகவையால் -ஆனந்தமாக
அக வலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;-எங்களை அகப்படுத்திக் கொள்ளாமல்
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்-எங்கள் சிற்றிலையும் சோற்றையும் அழிக்க
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-பார்த்துக் கொண்டு நிலாதே -நின் முகம் உளவாகில் நோக்கிப் போ என்றாள்-
தகவு நியாயம் இறக்கம் இல்லாமல் ஆஸ்ரிதர் உடைய லீலா விபூதி ஆதாரம் அழிக்கும்

மகிழ்ச்சியாலே மனமானது உருகும்படியாக, உனது தாமரை போன்ற விசாலமான திருக் கண்களின் பார்வையாகிற வலைக்குள்ளே அகப்படுத்துவதற்கு,
எங்களுடைய சிற்றிலையும் யாங்கள் சமைக்கின்ற சிறு சோற்றினையும் பார்த்துக் கொண்டு நினது முகத்தின் ஒளி திகழும்படியாகப் புன்முறுவல்
செய்து கொண்டு நின்றாய் இல்லை; உன் திருவடியால் அழித்தாய்; அதனால் தக்க காரியத்தைச் செய்தாயில்லை.
நெஞ்சம் உள் உருக, கண்டு திகழ முறுவல் செய்து நின்றிலை; சிற்றிலையும் சிறு சோறும் உன் திருவடியால் அழித்தாய்; தகவு செய்திலை என முடிக்க.
உருக என்பது, உருகி எனத் திரிந்து நின்றது. வலை அகப்படுப்பான் முறுவல் செய்து நின்றிலை என்க. அகவலைப் படுப்பான் என்பதனை,
வலை அகப்படுப்பான் எனப் பிரித்துக் கூட்டுக. பிரித்துக் கூட்டாது, நின்றவாறே பொருள் கோடலுமாம்.
முற்றிலைப் பந்தைக் கழங்கைக் கொண்டோடினை முன்னும், பின்னும்
அற்றிலை தீமை, அவை பொறுத்தோம்; தொல்லை ஆலினிளங்
கற்றிலை மேற்றுயில் வேங்கடவா! இன்றுன் கான்மலரால்
சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெரு வீட்டினைச் செய்தருளே.- என்ற அருமைத் திருப்பாசுரம்
இங்கு நினைவிற்கு வருகின்றது. திருவேங்கடத்தந். 97.

“இவன் ‘போகவொட்டேன்’ என்று வளைத்துக் கிடந்ததற்குப் பிரயோஜனம் உள்ளது
இவன் நினைத்தபடி பரிமாறப் பெற்றால் அன்றோ? ஒரு தேச விசேடத்திலே முக்தர் சம்சாரிகளோடு உறவு அற்று
இருக்குமாறு போன்று இவன் முகம் பாராதே இருக்கிறோம்” என்று அறுதியிட்டுப் பேசாதே இருந்தார்கள்;
பின்னர், நாம் இங்ஙனம் இருப்பின் இவன், ‘தன்னை நினைத்துக் கொண்டிருந்தோம் என்று இருப்பான்’ என்று
‘வேறு ஒன்றிலே நோக்குள்ளமை தோற்றச் சிற்றில் இழைப்போம்’ என்று இழைக்கப் புக
‘என்னைப் பாராதே இருப்பது மன்றிக்கே வேறு ஒன்றிலே சிறிது நோக்குள்ளவர்களாகவும் இருப்பதே’ என்று
சிற்றிலையும் சிறு சோற்றினையும் தன் திருவடிகளாலே அழிக்க, அதனாலே அவர்களுக்குச் சீற்றம் பிறந்து,
தாங்கள் கொண்ட கொள்கையை மறந்து அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்.
அவனுடைய விருப்பம் நிறைவேறுவதற்கும் சாதனம் திருவடிகள் காணும்.
அடி யுடையார்க்கெல்லாம் சாதித்துக்கொள்ளலாமே.
அவனுக்கு அபிமதம் திருவடியால் பெற்றானே -அடி -ஐஸ்வர்யம் -திருவடி

உகவையால் நெஞ்சம் உள் உருகி –
வாராய்! உன் செயல் பயன் இல்லாத செயல் காண்;
பிரிந்து நெஞ்சினைப் புண்படுத்துகையாலே வந்த உருகுதல் ஒழிய,
எங்களுக்கு உகவையால் நெஞ்சம் உள்உருகப் பண்ணவன்றோ நீ பார்த்தது; அது செய்யப் போகாது.

உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அக வலைப் படுப்பான் –
பகல் கண்ட குழியிலே விழவிட்டு அகப்படுத்துவான்;
திருஷ்டி பந்தத்தாலே யன்றோ தனக்கே உரிமையாக்குவது.
தாமரையைப் போலே வாசனையையும் குளிர்த்தியையும் சிவப்பையுமுடைத்தாய், அநுபவிக்கின்றவர்களால்
உண்டறுக்க ஒண்ணாத இன்ப மிகுதியை யுடைய திருக்கண்களின் நோக்காகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக.

அகவலை –
வலைக்குள்ளே.
அன்றிக்கே,
அகவிய வலை -என்றுமாம்;
கண்ணென்னும் நெடுங் கயிறே அன்றோ, நாய்ச்சியார் திரு. 14 : 4.-. 6‘
கண்ணிலே அகப்பட்டால், ஜன்னி ஜு ரத்தாலே பீடிக்கப்பட்டவர்களைப் போலே பிதற்றுமித்தனை அன்றோ.
“தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை”-திருவாய்.2. 6 : 3.-என்பதன்றோ மறை மொழி.

உன் திருவடியால் அழித்தாய் –
தன் சிற்றிலை அன்றோ சங்கல்பத்தால் அழிக்கலாவது;
இவர்களுடைய சிற்றிலைத் தொட்டு-ஸ்பர்சத்தால் மட்டுமே அழிக்க வேணுமே;
உன் சிற்றில் அழிக்கும் பரிகரம் அமையாதோ இதற்கு? உலகத்தை அழிப்பது சங்கல்பத்தாலே அன்றோ.
அடியவர்களுக்குத் திருவடிகள் உத்தேசியமாமாறு போன்று காதலிமார்கட்கும் உத்தேசியமாய் அன்றோ திருவடிகள் இருப்பன.

அழித்தாய் –
வெறும் சிற்றிலை அன்று காண் நீ அழித்தது;
எங்கள் அக வாயையும் நீ அழித்தாய் காண்;
சிற்றிலோடு எங்கள் சிந்தையையும் சிதைத்தாய் காண்.முற்றத்தூடு புகுந்து” என்ற
நாய்ச்சியார் திருமொழி திருப்பாசுரம் அனுசந்தேயம். 2 : 9.- 6
காலாலே சிற்றிலை அழித்து, கண்ணாலே எங்கள் எண்ணங்களையும் அழித்தாய் காண் என்கிறார்கள்.

தகவு செய்திலை –
கிருபையுடையார் செய்வதைச் செய்திலை.
பிரிந்த போதே அன்புடைமை போயிற்றே யன்றோ; இனிக் கண்ணுடையார் செய்வதும் செய்திலை என்னுதல்.
கண் படைத்ததற்குப் பிரயோஜனம் நல்லது கண்டு கொண்டிருத்தலன்றோ?
உன் முகத்தன கண்கள் அல்லவே? -இது,நாய்ச்சியார் திருமொழி, 2 : 5.-
‘நான் செய்த குறை என்?’ என்ன,

எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலை –
உன் படைப்பினைப் போன்று கொள்ளத் தக்கதாகாததோ எங்கள் படைப்பு? கொள்ளத் தக்கதன்றோ?
‘என்னுடைய படைப்புக் கொள்ளத் தகாததாயினவாறு என்? உங்கள் படைப்புக் கொள்ளத் தக்கதாயினவாறு என்?’ என்னுமே அவன்;
உன்னுடைய படைப்புப் போன்று நெருப்பும் காற்றும் அன்னலும் துன்னலுமாக விட்டுக்
கருமங்கட்குத் தகுதியாகப் படைக்கப்பட்டதோ இது?
வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டுப் படைக்கப்பட்ட தன்றோ இது.
அன்னல் – வெயில். துன்னல் – சிறு திவலை. ‘வண்டல்’ என்று தொடங்கும்
இவ்விடத்தில் “குண்டு நீர் உறை” என்ற நாய்ச்சியார் திருமொழி,திருப்பாசுரம் அநுசந்தேயம். 2 : 3.

நீ அடு சிறு சோறு
நிர்மால்யத்தைப்போன்று புறம்பு ஒருவர்க்கு உண்ணலாகாது; நீயே உண்ணுமத்தனை;
நாங்கள் அடு சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து
உண்ணு மத்தனை யன்றோ என்பார் ‘யாம் அடு சிறு சோறும்’ என்கிறார்கள்.

‘கண்டு நின்முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே’ என்றதனால்
எங்களுடைய லீலா விநோதங்களைக் கண்டு பிரீதனாய், உன்னுடைய
முக ஒளி திகழப் புன்முறுவல் செய்து நிற்க மாட்டிற்றில்லையே;
இங்ஙன் செய்தவிடம் தக்கோர்மை செய்தாயல்லையே என்று தங்களுடைய இன்னாமையைத் தெரிவிக்கிறார்கள்.

தகவு செய்திலை –
நாங்கள் சிற்றில் இழைக்கிறோமாகப் பாவித்துக் கடைக் கண்ணாலே உன் முக ஒளியையும் முறுவலையும்
கண்டு கொண்டிருக்க வொட்டிற்றிலையே? முழுக்கப் பார்க்கில் எல்லாரையும் போன்றவர்களாவோமே?
காதலனைப் பார்ப்பது கடைக் கண்ணாலே யன்றோ?
எங்ஙனே பாராதே இருந்து சிற்றில் இழைத்தார்கள் தாம்!

எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும் மெய் விளை விடத்து முதலையம் விட லுற்றாள்
ஐயனை யகத்து வடிவேயல புறத்தும் கை வளை திருத்துபு கடைக் கணி னுணர்ந்தாள்.- என்றார் கம்பநாட்டாழ்வார்.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-2-8-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-8-

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-

இப்படி இவன் க்ருத்ரிமம் செய்து நம்மை இங்கிருந்து விளையாட ஒட்டானாகில் நாம் இங்கு நின்றும் போவோம் -என்று பார்த்துத்
தன் தோழிமாரோடு கூடப் போகப் புக நான் போக ஓட்டேன் என்று இவன் தங்களை வளைத்து அருள –
அறியாதே விளையாடப் போந்த எங்களை உன்னுடைய நிரவதிக ஸுந்தர்யத்தாலே இழுவித்துக் கொண்டு சர்வேஸ்வரனான
நீ வளைத்தால் உன்னை உகவாதவர் உனக்கு என்ன பழி சொல்லார் -உனக்கு எங்களோடு சம்ச்லேஷம் வ்ருத்தம் என்றும் சொல்லுவர் இறே
ஆனபின்பு இது யீடல்ல -என்று அவனை உபாலம்பிக்கிறாள் –

—————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-2-8-

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-
நாம் இருக்கில் இ றே இங்கு இவனுக்கு நம்மை நலியலாவது -நாம் போவோம் என்று தானும் தோழிமாரும் போக உபக்ரமிக்க எம்பெருமானும் அவர்கள் போகிற வழியைக் கொண்டு அவர்களை போக ஒட்டாதே வளைக்க -அவர்களும் சேதன அசேதனங்களை -தேவ திர்யக் மனுஷ்யாதி விபாகங்களை ஒளிந்து ஒன்றாம் படி கலசி -அழித்தது ஸ்ருஷ்டித்தது என்று தெரியாத படி சம்ஹார காலத்துக்கு முன்பு இருந்த படிகளில் ஒரு வாசி படாத படி ஸ்ருஷ்டித்து -இதில் ஓர் ஆயாஸப் படாத படி மஹா ப்ரபாவமான வி லக்ஷண சங்கல்ப ரூப ஞானத்தை யுடைய -சர்வேஸ்வரனான நீ தோழிமார் தங்களோடு கூடிக் கொண்டு விளையாட்டுப் போருங்கோள் -என்ன அறியாதே போந்த எங்களை -உன்னுடைய ஸுந்தர்யாதி களாலே நெருக்கி எங்களை போக ஒட்டாது ஒழிந்தால் -இத்தை சஹியாத உன்னுடைய மின்னிடை மடவார் இம்மாத்திரத்தை கொண்டு யோக்யதையாலே சம்ச்லேஷம் வ்ருத்தம் என்று சொல்லி உன்னை உபேக்ஷிப்பார் என்கிறாள் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-2-8-

அநந்தரம் -இவன் சந்நிதியில் இருக்கில் அன்றோ மர்மம் சொல்லுவது -என்று போகத் தேட
இவர்கள் போகிற வழியைக் கட்டித் தகைந்த அவனை நோக்கி -எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்-என்று
சர்வஞ்ஞனான நீ எங்களைத் தகைந்தால் யுகவாதார் என் சொல்லார் -என்கிறாள் –

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்–சகல சேதன அசேதனங்களையும் ஸம்ஹ்ருத்ய அவஸ்தையில்
நாம ரூப விபாஹ ரஹிதமாம் படி கலசி -ஸ்ருஷ்டியில் வந்தவாறே அவ்வோ சேதனருடைய கர்மங்களுக்கு சாங்கர்யம் பிறவாதபடி
தேவ திர்யகாதி பேதத்தைப் பண்ணினவிடத்தும்-தத் கத தோஷத்தால் ஸ்வரூபத்துக்கு பேதம் வராதபடி அத்விதீயமாய்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!–அபரிச்சின்னமான கீர்த்தி சமுத்திரத்தை யுடைத்தாய் இருக்கிற
பிரபா ரூபமான சங்கல்ப ரூப ஞானத்தை வடிவாக யுடையவனே
இணக்கி எம்மை விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை–சஜாதீயைகளாய் ஸமான துக்கைகளான தோழிமார்
நாங்கள் இசையும்படி வார்த்தை சொல்லி விளையாட போங்கோள்-என்று லீலையை வ்யாஜமாகச் சொன்னபடியாலே
நீ இங்கு நிற்பது அறியாதே லீலா பரைகளாய் வந்த எங்களை உண்ணவும் ஒட்டாதே
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–உணங்கும் படி பண்ணி நீ தகைத்தால்-இச் செய்தி கண்டு
உகக்க மாட்டாத நாட்டார் என்ன சொல்லார் –
உன்னுடைய மின்னிடை மடவார் என்றுமாம்
இங்கு இன்னக்கி எம் தோழிமார் என்றது ஸஜாத்யத்தால் கலந்து லீலா ரஸ வ்யபதேசத்தாலே
பகவத் விஷயத்திலே மூட்டும் பாகவத விஷயத்தை ஸூசிப்பிக்கிறது –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-2-8-

நாம் இங்கு இருக்கில் இ றே இவனுக்கு மர்மங்களை சொல்லி நலியலாவது -நாம் போவோம் என்று எல்லாரும் கூடப் போகப் புகார்கள் -இவர்கள் போகிற வழி ஓர் அடிப்பரப்பாய் ஒழுகப் போக வேண்டுகையாலே  வழியைக் கட்டி இரு விலங்காகக் கிடந்தான் -அவனைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறார்கள்

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் –
சேதன அசேதனங்களை தேவாதி விபாகம் அற்று-தம ஏகி பவதி-என்று தன்னோடே அவி பக்தமாம் படி கலசி -ஸ்ருஷ்ட்டி காலத்தில் ஒருத்தன் கர்மம் வேறு ஒருத்தன் அனுபவியாத படி -பேதித்தும் -ஸ்ருஷ்ட்டித்தும் என்றபடி
பேதியாதது ஓர்கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
சம்ஹார காலத்தில் அசித்கதமான சூஷ்ம பரிணாகம் – சேதனகதமான அஞ்ஞானம் –ஸ்ருஷ்ட்டி காலத்தில் அசித் கதமான ஸ்வரூப அந்யதா பாவம் -சேதனகதமான ஸ்வ பாவ அந்யதா பாவம் -ஆக இப்பேதங்கள் ஒன்றும் இன்றிக்கே ஏக ரூபமாய் ஏக ரூபமாய் அத்விதீயமாய் அனவதியான ஏக ரூபத்வம் ஆகிற கீர்த்தி சமுத்திரத்தை யுடையையாய் பிரபா ரூபமான சங்கல்ப ஞானத்துக்கு ஆஸ்ரயமானவனே-இத்தால் விஸ்லேஷ தசையில் கலக்கமும் சம்ச்லேஷ தசையில் போக ரூப விக்ருதியும் இன்றிக்கே ஏக ரூபன் என்கை
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உன்னோட்டை கலவி அபாயம் என்று அறியாதே எங்களை உன்னோடே சேர்த்து –இவ்வளவாக விளைத்தவர்களை சொல்லாதே உன்னைத் சொல்லுகிறது என்-பகவத் விஷயத்தில் வைஸத்யம் பிறந்தால் உபகாரகரை கொண்டாடும் என்னும் அர்த்தம் இ றே உள்ளோடுகிறது-நித்யம் யதீய சரனவ் சரணம் மதியம் -எம் தோழிமார் -சஜாதீயராய் இ றே இருப்பது
விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை-
கிருஷ்ணன் உண்டு என்று அறிந்தோம் ஆகில் வாரோம் –இவ்வகப்பாட்டை அறிந்து இருந்தோம் ஆகில் வாராது ஒழியல் யாயிற்று -அத்தால் வந்தது என் என்ன –
உணக்கி, நீ வளைத்தால்,
உணக்குகை யாவது -தரிக்க மாட்டாமே துவளும் படி பண்ணுகை -உன் முகம் பார்த்து அனுபவிக்க பெறாமையாலே தரிக்க மாட்டு கிறி லோம்
என்சொல்லார் உகவாதவரே?
நீயும் நாங்களுமாக இருக்கக் கண்டால் உகவாதவர் என் சொல்லார் -உங்கள் சந்நிதி மாத்திரமே யன்றோ உள்ளது -இதுக்கு சொல்லுகிறது எத்தை என்ன -யோக்யதையாலே சம்ச்லேஷம் வ்ருத்தம் -என்று உன்னுடைய மின்னிடை மடவார்கள் உபேக்ஷிப்பார்கள் –பிரிவாற்றாமையாலே கண்ணாஞ்சுழலை இடுகிறவர்கள் எத்தை சொல்லார் -உன் மேன்மையையும் குணவத்தா ப்ரதையையும் இழக்கக் கிடாய் புகுகிறாய் -ஆப்பான் -இவனை இவர்கள் கடந்து போனார்கள் ஆகில் செய்வது என் என்ன ஜீயர் -அது ஆர்க்கு அழகு -என்று அருளிச் செய்தார் -நின்றார்கள் ஆகில் நினைத்தது பெற்றான் ஆகிறான் -கடந்து போனார்கள் ஆகில் சம்ச்லேஷ அர்த்தமான க்ருஷி தலைக் கட்டிற்று ஆகிறது –

——

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-2-8-

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என் சொல்லார் உகவாதவரே?–6-2-8-

இவன் சந்நிதியில் இருக்கில் அன்றோ மர்மம் -சிற்றில் இளைக்க போகலாம் என்று போகத் தேட -போகிற வழியை மறித்த அவனை நோக்கி
எல்லாம் அறிவீர் ஈதே அறீயீர்-சர்வஜ்ஞ்ஞன் நீ எங்களை தகித்தால் உகவாதார் என் சொல்வார்
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்-சகல அசேதனம் சேதனம் -பிணக்கி கூட்டி –
சம்ஹ்ருத் அவஸ்தையில் நாம ரூப ரஹிதமாம் படி பின்பு சிருஷ்டித்து -குற்றம் வாராமல் -கர்மம் விட்டுப் போகாமல் –
தேவ திர்யக்-பிரித்தும் -ஸ்வரூப பேதம் வாராமல் –
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!-அபரிச்சின்னமான கீர்த்தி சமுத்ரம் -பிரபா ரூபம் -சங்கல்ப ரூபம் -ஞானமே ஒரு மூர்த்தியாக –
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை-சஜாதீயர் -தோழிமார் -சொல்ல -இசையும் படி வார்த்தை சொல்லி -விளையாட –
வாராயோ என்றாற்கு சென்றேன் என் வல் வினையால் -குடக் கூத்துக்கு போலே -வினையாவது அறியாமல் –
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?-உண்ணவும் ஒட்டாதே நீ ஸ்ரமம் கொடுத்து தகைத்தால் –
உகவாதார் நாட்டார் -உன்னுடைய மின்னிடை மடவார்-என் சொல்வார் –
ஆச்சார்யர் கோயில் பிரசாதம் ஆசை காட்டி கூட்டிச் சென்று அவன் இடம் சேர்ப்பார் போலே –
கங்கை தீர்த்தம் -ஜகன்னாத பிரசாதம் -நாம சங்கீர்த்தனம் -ஆசை காட்டி அவன் இடம் கூட்டிச் சேர்ப்பார்கள் –
லீலா ரச விபதேசத்தால் -பகவத் விஷயத்திலே மூட்டி வைப்பார்கள் –

அழிக்குங் காலத்திலே அசேதனங்களையும் சேதனங்களையும் ஒன்றாகச் சேர்த்து, பின், படைக்குங் காலத்தில் ஓர் ஆன்மாவின் கர்ம பலத்தை
மற்றோர் ஆன்மா அநுபவியாதபடி படைத்தும் வேறுபடாததாகிய ஒப்பற்ற எல்லை யில்லாத கீர்த்தி வெள்ளத்தினையுடைய கதிர் ஞானத்தினையே
திருமேனியாக வுடையவனே! எம் தோழிமார் எம்மை இசையச் செய்து விளையாடுவதற்கு வாருங்கோள் என்ன,
வந்த எங்களைத் துவளச் செய்து நீ வளைத்தால் விருப்பமில்லாதவர்கள் என்ன சொல்ல மாட்டார்கள்?
பேதித்தும் பேதியாதது ஓர் ஞானம் என்க. ஞானம் – சங்கல்பரூப ஞானம். கணக்கில் கீர்த்திவெள்ளக் கதிர்ஞானம் என்க.
அத்தகையஞானமே மூர்த்தி என்க. எம் தோழிமார் எம்மை இணக்கி விளையாடப் போதுமின் என்னப் போந்தோம் என்க.

கிட்டு நின்று இவர்களைச் சில மிறுக்குக்களைச் செய்யப் புக்கான்;
‘இங்கே இருக்கில் அன்றோ இவை எல்லாம் செய்வது’ என்று பார்த்து, ஒருவர் ஒருவராகப் போகப் புக்கார்கள்.
‘இதுவோ பார்த்தபடி!’ என்று வழியைப் பற்றி இரு விலங்காகக் கிடந்தான்.–இருகை விலங்கு —
பூஞ் சோலை யாகையாலே வழி ஓர் அடிப்பாடாய் இருக்குமன்றோ.
இப் பாசுரத்தைச் சீயர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே, அங்கே இருந்தவரான ஆப்பான்
‘இவர்கள் இவனைக் கடந்து போனார்களாகிற் செய்வது என்?’ என்று கேட்க,
‘அது யார் காரியம்? பின்னை இரண்டத்தில் ஒன்று சித்திக்கும் என்று
அன்றோ அவன் தான் கிடந்தது’ என்று அருளிச் செய்தார்.
தாண்டி போனால் இடித்திக் கொண்டு தான் போக வேண்டும் –
நின்றார்கள் ஆகில் இவன் நினைத்தது சித்திக்கும் என்று இருந்தான்

நீ வழியைப் பற்றிக் கிடவா நின்றாய்; நீ செய்கிறவை எல்லாம் உறவு உண்டாய்ச் செய்கிறாய் என்று இருப்பர்கள் காண்;
நீ எல்லா ஆன்மாக்கள் விஷயமகாவும் செய்யும் லீலைக்கு ஓர் அளவு உண்டோ?
உன்னை ஒழிந்த வஸ்துக்கள் எல்லாவற்றுக்கும் கோடி விகாரத்தைச் செய்து,
விகாரம் இல்லாதவனாய் இருப்பான் ஒருவன் அன்றோ;
அப்படியே எங்களை வேறுபாட்டினை யுடையவர்களாகச் செய்து நீ வேறுபாடு இல்லாதவனாய் இரா நின்றாய்.

யாவையும் யாவரும் பிணக்கி-
தன் பக்கல் பொருந்துகைக்கு நினைவு இல்லாதனவற்றையும் — நினைவாலே பொருந்தாதனவற்றையும் கூட்டி,
“மூலப் பிரகிருதியானது பரமாத்மாவினிடத்தில் கலக்கிறது”
-“தம: பரே தேவ ஏகீபவதி” சுபால உப. 2.-என்கிறபடியே, தன்னோடு வேற்றுமையறக் கலசி.

பிணக்கி –
வயிற்றில் வைத்து அவாந்தர பிரளயம் —

பிழையாமல் பேதித்தும் –
தப்பாமல் பிரித்தும் என்றது, வயிற்றில் நின்றும் புறப்பட விடுதல், சம்ஹரித்துப் புறப்பட விடுதல்களைக் குறித்தபடி.
ஒவ்வொரு கலகத்திலே அமர்ந்த நிலங்களிலே குடி வாங்கிப் பின்பு தெளிந்தவாறே தம்தம் இடங்களிலே புகுந்து,
விட்ட காரியங்களிலே அதிகரிப்பாரைப் போலே.
ஒருவன் செய்த கர்மம் வேறு ஒருவன் சென்று அநுபவியாதபடி தன்பக்கல் நின்றும் பிரித்தும்.

பேதியாதது ஓர் கணக்கு இல் கீர்த்தி வெள்ளம் கதிர் ஞான மூர்த்தியினாய்-
காரிய நிலையானதுவே காரண நிலையானாலும்,
காரண நிலையில் அசித்தைப் பற்றி வருகின்ற சூக்ஷ்ம பரிணாமம்,
சேதனத்தைப் பற்றி வருகின்ற அஜ்ஞானம்,
படைப்புக் காலத்தில் அசித்தைப் பற்றியுள்ள ஸ்வரூபத்தின் வேறுபாடு,
சேதனத்தைப் பற்றியுள்ள தன்மையின் வேறுபாடு,
ஆக, இந்த வேற்றுமைகள் ஒன்றும் இன்றிக்கே,
ஒரே உருவமாய், அத்விதீயமாய், எல்லையில்லாத கீர்த்திக் கடலை யுடைத்தாய்,
ஒளி உருவமான சங்கல்ப ரூப ஞானத்துக்கு இருப்பிடமானவனே!

எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் -திருவாய்மொழி, 1. 5 : 2.-முதலில் சிதையாத மனஞ்செய் ஞானமன்றோ.
இதனால், பிரிவு நிலையில் கலக்கமும், கூடிய நிலையில் இன்பத்தாலே வேறுபாடும் இன்றிக்கே
இருக்கின்ற ஏக ரூபன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘இப்படிபட்ட குணங்களை அளவிடுவோம்’ என்று பார்த்தார் உளராகில் இளைத்துக் கால்வாங்கும்படி இருத்தலின்
‘கணக்கில் கீர்த்தி வெள்ளம்’ என்கிறது.
இப்படிக் கூட்டுவன கூட்டிப் பிரிப்பன பிரித்தாலும், ஞானத்திற்கு ஒரு குறைவு அற்று இருத்தலின்
‘கதிர் ஞான மூர்த்தியினாய்’ என்கிறது. என்றது,
காரியம் கொண்டது என்னா மழுங்காது இருக்கை;
காரியம் கொள்ளப் புகர்த்து வருகையைத் தெரிவித்தபடி.
ஞான மூர்த்தியினாய் –
அன்றிக்கே, ஞானமே ஸ்வரூபனாயுள்ளவனே! என்னுதல்.

எம் தோழிமார் எம்மை இணக்கி விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை –
நீ செய்கிறவற்றால் பிரயோஜனம் உள்ளது நீ இருந்த இடத்தே நினைத்துத் தேடி வந்தார் உளராகில் அன்றோ?
இணக்கி –
இசையும்படி வார்த்தை சொல்லி. என்றது,
‘அவ்விடம் கிருஷ்ணன் வாராத இடம்’ என்று காண் சொல்லிக்கொண்டு போந்தது என்றபடி.
உன்னுடைய கலவியாகிற அயாயம் வரும் என்று அறியாத நாங்கள் என்பார் ‘எம்மை’ என்கிறார்கள்.
உன்னை வெறுக்கிறது என்? உன்பக்கல் குற்றம் உண்டோ? சேர்த்தாராலே வந்தது காண் என்பார் ‘எம்தோழிமார்’ என்கிறார்கள்.
ஒரே சாதியினராயிருந்து சேர்க்க வேண்டுமாதலின் ‘எம்தோழிமார்’ என்கிறார்கள்.

அவர்கள் உனக்குப் பெருநிலை நிற்பது அறியப் பெற்றிலோம்.
சொலவுக்கு மேல் அகவாய் ஆராயப் பெற்றிலோம் என்பார் ‘விளையாடப் போதுமின் என்னப் போந்தோம்’ என்கிறார்கள்.
என்றது, ‘நீ இங்கே உண்டு’ என்று அறிந்தோமாகில் இவ்விடம் என்றும் நினையோம் என்றபடி.
“அவர்கள் உனக்குப் பார்வை” என்னுமிடம் அறியப் பெற்றிலோம். -ஆச்சார்யர்கள் -பெருமாளுக்கு சகாயம் பண்ணுபவர்கள் என்றபடி –
பகவத் விஷயத்தில் வைலக்ஷண்யம் நெஞ்சிலே பட்டால் உபகாரகரைக் கொண்டாடவேண்டும் என்னும் அர்த்தமன்றோ உள் ஓடுகிறது.

“எந்த நாத முனிவருடைய இரண்டு திருவடிகளானவை எப்பொழுதும் எனக்கு ரக்ஷக வஸ்துக்கள்”-
“நாதாய நாதமுநயேத்ர பரத்ரசாபி
நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திரரத்நம், 2
என்கிறபடியே, இங்கோடு அங்கோடு வாசிஅற அவர்களாலே வருமதன்றோ.

பொகடுங்கோள்; ஆனால் என்? அவர்கள் சொல்லப் போந்தீர் கோளாகில் உங்களுக்கு வந்த தீங்கு என்? என்றான்.
உணக்கி நீ வளைத்தால் என்சொலார் உகவாதவரே –
உணக்குகையாவது, தரிக்க மாட்டாதே துவளும்படி செய்கை.
எங்களுக்கு இதற்கு மேல் வருவது என்? கால் வாங்கிப் போகப் பெறுகின்றிலோம்;
கிட்டி நின்று முகம் பார்த்து அநுபவிக்கப் பெறுகின்றிலோம்.
இதனைக் காண வேண்டாதவர்கள் என் சொல்லுவர்கள்? “எதனைச் சொல்லுவது?
என்னை ‘ஈஸ்வரன்’ என்றீர் கோளாகில், உங்களை ‘ஆயர் சிறுமியரோம்’ என்றீர் கோளாகில்,
இனி எதனைச் சொல்லுவது?” என்றான்.
நீ சர்வேஸ்வரனான இதுவும், நாங்கள் ஆய்ப் பெண்கள் ஆன இதுவுமே யன்றோ சொல்லுகைக்குக் காரணமும்.’
ஈஸ்வரனோடு ஒக்கப் பழி சொல்லுகைக்கு இவர்கள் தாம் ஒரு நப்பின்னைப் பிராட்டி போல்வார் ஆகாதே தான்.
‘அது என்தான்? என்னோடு உங்களுக்கு உறவு முறை இல்லை என்றீர் கோளாகில் இதனால் வருவது என்?’ என்றான்.

என் சொலார் உகவாதவரே –
உன் பக்கல் எங்களுக்கு உறவு முறை இல்லை என்று அறிவார்களோ உகவாதார்? என்றது,
நீ சிறிது கால் தாழ்த்த இதுவே ஏதுவாகக் ‘கலவி உண்டாயிற்று’ என்னார்களோ?
வளைக்கிற உன்னையும், வளைப்புண்கிற எங்களையும் அறிந்தோ அவர்கள் வார்த்தை சொல்லுவது என்றபடி.
அன்றிக்கே,
உன்னுடைய மின்னிடை மடவார் உன்னை நெகிழ வார்த்தை சொல்லுவர்கள் என்னுதல்.
பிரிவாற்றாமல் கண்ணாஞ்சுழலை இடுகிறவர்கள் எதனைச் சொல்லார்.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-2-7-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-7-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7-

இப்படி அவன் நிவார்யமாணனாய் இருக்கச் செய்தேயும் இவளுடைய பரிஷத்திலே ஏறி
இவளுடைய கையில் பாவையைப் பறித்து அருள –
எங்கள் கையில் பாவை பறிப்பது உனக்கு அவத்யாவஹமாம்-அநந்ய ப்ரயோஜனனாய்க் கொண்டு சர்வாத்மாக்களையும்
திரு வயிற்றிலே வைத்து
மஹா குணத்தை விளைத்தால் போலே இத்தீமையும் உனக்கு மஹா அவத்யத்தை விளைக்கும் என்று இவள் சொல்ல
அதன் மேலே பணி மொழிகளை இவன் அருளிச் செய்ய –
இங்கனே அதி துஸ் ஸஹமான வார்த்தைகளையே சொல்லி எம்மை விளையாடுதி
அது கேட்க்கில் என்னைமார் இது கூடும் கூடாது என்று பாராதே உன்னை யுபேஷித்து
ஒரு நாளும் கடாக்ஷிப்பதும் செய்யார் -என்கிறாள் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-2-7-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7-

இவர்கள் கழகத்தில் ஏறப் புக்கு -இவர்களால் நிவாரய மாணனாய் ஏறப் பெறாது ஒழிந்த எம்பெருமான் -செய்யலாவது காணாமையாலே -அவர்களுடைய லீலா உபகரணமான பாவையை சென்று எடுக்க கணிசிக்க -அத்தை இவன் தான் அவர்கள் கையில் நின்றும் பறிக்கப் புக -அவர்களும் எங்கள் கையில் பாவையைப் பறிப்பது உனக்கு போராது என்று சொல்ல -அவனும் பஹு குணனான எனக்கு அல்ப தோஷம் தோற்றப் படுமோ என்று அருளிச் செய்ய -அவர்களும் நிர்ஹேதுகமாக ஜகாத்தை பிரளய காலத்திலே திரு வயிற்றிலே வைத்து  பரிகரிக்கை தொடக்கமான அபரிச்சேதய மஹா குணங்களை உடையையாய் இருந்தாயே யாகிலும் -அக் குணங்களுக்கு நிறம் தருமா போலே இப் போராச் செயலும் உனக்கு அவித்யாவஹம் என்று அருளிச் செய்ய -அதுக்கு மேலே சில பணி மொழிகளை எம்பெருமான் அருளிச் செய்ய -இப்படி பொறுக்க ஒண்ணாத வார்த்தைகளை சொல்லி எங்களோடு நீ விளையாடுதி-அது கேட்க்கில் எம்மனைமார் கூடும் கூடாது என்று நிரூபியாது ஒழிவர்கள் என்ன -ஆனால் வந்தது என் என்ன -ஒரு நாளாக அவர்களுக்கும் உனக்கும் விப்ரதிபத்தியாய் முடியும் என்கிறாள் -ஐ ம்மார் -ஆணுடன் பிறந்தார் –

—————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-2-7-

அநந்தரம் ப்ரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும் பெருமையை யுடைய உனக்கு எங்களை
ஸ்பர்சித்துகே கையில் பாவையைப் பறிக்கிற இது கார்யம் அன்று என்கிறாள் –

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது –என்கை கையில் இருக்கிற பாவையை தீண்டிப் பறிப்பது காரியம் அன்று
கடல்ஞாலம் உண்டிட்ட நின்மலா! –பிரளய ஆர்ணவத்திலே அழுந்துகிற ஜகத்தை அமுது செய்து திரு வயிற்றிலே வைத்து ரஷித்து
அது தானே பிரயோஜனமாம் படியான உஜ்ஜ்வல்யத்தை யுடையையாய் –
நெடியாய்! -இன்னமும் செய்தது போராது-என்று அவற்றை வெளிநாடு காட்டி ரசிக்கும் பெருமையை யுடையவனே
உனக்கேலும் பிழை பிழையே;-இப்படிப்பட்ட உனக்கும் அப்படி அபலைகளாய் இருப்பாரைத்
தீண்டிப் பறித்தாய் என்கிற பிழையே அவத்யமாய் விடும்
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; –இப்படி பெரியையாய் இருக்கிற நீ நான் உங்களை ஸ்பர்சிக்கலாமோ –
அன்று ஆரை நினைத்து இருந்து கோள் என்று பூர்வ சம்ச்லேஷ ஸ்மரணத்தைப் பண்ணுவித்து
எங்களுக்கு நினைக்கவும் சொல்லவும் ஒண்ணாத மர்மங்களை எங்களை நோக்கி சொல்லி லீலை கொண்டாட நின்றாய்
அது கேட்கில்என்னைமார்–எங்களுடைய ஆணுடன் பிறந்தார் அது கேட்ப்பாராகில்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–தர்மமும் பாபமும் என்று நிரூபியார்கள் –
ஒரு நாள் வரையில் வந்து தடியை எடுத்து பிணங்கும்படியாம்
என்னை மார் –ஆணுடன் பிறந்தார் –
என்னை மார் என்கிறது -ஸஹஜமான துர்மான தம்பமதாதிகள் பகவத் விரோதிகள் என்று ஸூசிப்பிக்கிறது
பாவை -என்கிறது ஆஸ்ரித விஷயத்தில் பரதந்த்ரமான அசித் வஸ்துவும் ஈஸ்வரனுக்கு உத்தேச்யம் என்று ஸூசிப்பிக்கிறது

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-2-7-

கழகம் ஏறேல்  நம்பீ -என்று தங்கள் திரளில் புகுர ஒட்டிற்று இலர்கள் -அவனும் செய்யலாவது  காணாமையாலே அவள் கையில் பாவையை கடாக்ஷித்தான் -ப்ரேஷி தஞ்ஜாஸ்து கோசலா -என்று நினைவு அறியுமவர்கள் ஆகையால் எல்லாரும் கூட அத்தைப் பற்ற இவன் அத்தை அவர்கள் கையில் நின்றும் பறிக்கப் புக்கான்

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது
எங்கள் கையில் பாவையை பறிப்பது கார்யம் அன்று -நீ நினைக்கிறவர்களது அல்லாமையாலே உனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை –எங்கள் அனுமதி இல்லாமையால் பறிக்கப் போகாது –தன்னுடைய சக்தி கொண்டு அழிக்கலாவது எதிரிகள் ஆகில் இ றே-அபலைகள் கையில் அத்தை பறிக்க சக்தன் அல்லனே -ஒரு கலத்தில் உண்பாரை போலே அவர்கள் கையிலும் தன் கையிலும் இருக்குமாகில் இறே பிரயோஜனம் உள்ளது -பிரயோஜனம் இல்லாமையே அன்று -உனக்கு குண ஹானியாய் வரும் என்ன -பஹு குணனான எனக்கு ஒரு அல்ப தோஷம் தோற்றப் படுமோ என்ன
கடல்ஞாலம் உண்டிட்ட-நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
நிர்ஹேதுகமாக பிரளய ஆபத்தில் ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து நோக்கினவனாய் -ஆகாச இவ நிர்மல-என்கிறபடியே ஹேயப்ரத்ய நீகனாய் -யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று அபரிச்சேதய மஹா குணனாய் இருந்த உனக்கு வந்ததாகிலும் பிழையானது பிழையே காண் -லோகத்துக்கு பிரகாசகனான சந்திரனுக்கு உண்டான மறுவும் லோக பிரசித்தம் அன்றோ -குணங்கள் புக்க இடம் எங்கும் குண ஹானியும் புகும் காண் -குணங்கள் உனக்கு நிறம் தருமா போலே இந்த ஷூத்ர ப்ரவ்ருத்தியும் உனக்கு அவத்யாவஹம் காண் மேல் சொல்லலாவது கண்டிலேன் –அவர்கள் செவியில் இன்னது சொன்னான் -என்று அநு பாஷிக்க ஒண்ணாதாய் இருப்பது ஒன்றை சொன்னான் -அதாவது பிரணய வேளையில் பணி மொழிகள்
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி;
நினைக்கவும் கூட கூச வேண்டும் நெஞ்சு அறிந்த வார்த்தையைச் சொல்லி எங்களோடு விளையாடுதீ -இவன் போக புத்தியால் நோக்கு அழிய சொன்ன வார்த்தையை தங்களோடு அவனுக்கு பாவ பந்தம் இல்லை என்று தோற்றுகைக்காக அஸத் சமமாகி விளையாடுதீ என்கிறாள் -எங்களோடு விளையாட முறை யுண்டோ –என்ன பஞ்ச லசஷம் குடியில் பெண்களிலும் எனக்கு விளையாட முறை இல்லார் உண்டோ என்ன
அது கேட்கில்என்னைமார்-தன்மம் பாவம் என்னார்;
என் பந்துக்கள் அத்தை கேட்க்கில் கூடும் கூடாது என்று நிரூபியார்கள்-என்னைமார் -தமையன்மார் -ஐம் மார் -ஆணுடன் பிறந்தார் வேலைப்பிடித்து என்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ -என்ன கடவது இ றே -பந்துக்களுக்கு உப லக்ஷணம் -உன்னோடு பாவ பந்தம் இல்லை என்று அறியாதே உன்னுடைய சள பிரவ்ருத்தியை மெய் என்று சம்ச்லேஷம் வருத்தம் என்று மேலிடுவார்கள் -நிரூபித்து சொல்லுகை தர்மம் -நிரூபியாதே சொல்லுகை பாபம் என்னாதே கேட்ட மாத்திரத்திலே பொறாதார்கள்-அவர்கள் அறிய புகா நின்றார்களோ என்ன -பிறந்தது ஓன்று நாள் ஓட்டத்தில் அறியார்களோ என்ன -ஆனால் வருவது என் என்ன
ஒரு நான்று தடிபிணக்கே.
ஒரு நாளாக உன்னோடே விவாதமாய் முடியும் என்கை -இடையர் பெரு மிடுக்கரை அளியச் செய்யும் போதும் தடியால் அழிக்கும் அத்தனை-

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-2-7-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.–6-2-7-

பிரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும்-பெருமை -எங்களை ஸ்பர்சித்து -கையில் உள்ள பாவையைப் பறிப்பது
கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட-இது கார்யம் இல்லையே உனக்கு -திரு வயிற்றில் வைத்து ரஷித்து
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;-தன் பேறாக செய்து அத்தாலே ஔஜ்வல்யம் -அடைந்து -இன்னமும் செய்தது
போராது என்று வெளிநாடு உமிழ்ந்து அருளி –உனக்கும் பிழை பிழையே -அவத்யமே ஆகும்
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார்-பெரியவனான நீ -பூர்வ சம்ஸ்லேஷ ஸ்மரணம் சொல்லி மர்மம் –
சம்ஸ்லேஷம் போது நடந்தவற்றை சொல்லி -எங்களுக்கு நினைக்கவும் முடியாத -சொல்லவும் வெட்க்கப் படும் வார்த்தைகளை சொல்லி –
இத்தை எங்கள் பந்துக்கள் கேட்கில்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.-தர்மம் -பாபம் -இருவருக்கும் சம்பந்தம் உண்டு என்று உணர்ந்து அடிக்க –
சம்பந்தம் நிரூபிகாமால் உதை பாபம் – தடி அடி பிரயோகம் -தர்ம அடியா பாப அடியா –
சஹஜ துர்மான -என்னைமார் – டம்பம் மதம் உள்ளவர்கள் –
பாவை -ஆஸ்ரித விஷயத்தில் பரதந்த்ரமான அசித் வஸ்துவும் ஈஸ்வரனுக்கு உத்தேச்யம்
ஆய்ச்சியர் கை வெண்ணெய்-கண்டால் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்

பிரளய வெள்ளத்தில் அழுந்துகிற உலகத்தைப் புசித்துக் காப்பாற்றிய குற்றமற்றவனே! நெடியவனே! எங்கள் கையிலேயுள்ள பாவையைப் பறிப்பது
செய்யத்தக்க காரியம் அன்று; இப்படிப்பட்ட உனக்கும் குற்றம் குற்றமேயாகும்; எம்மைப் பார்த்து மர்மமான வார்த்தைகளைச் சொல்லி நீ விளையாடுகின்றாய்;
அதனைக் கேட்கில், எங்களுடைய தமையன்மார்கள் தர்மம் பாவம் என்று நினையார்கள்; ஒரு நாள் தடியைக் கொண்டு மாறுபடுவர்.
கர்மம் வர்மம் தர்மம் என்பன, கன்மம் வன்மம் தன்மம் எனத் திரிந்து வந்தன. பாவை – விளையாடுதற்குரிய பொம்மை.
என்னை மார் – தமப்பன், தமையன்மார்கள். நான்று – காலம்.

ஸ்ரீபரதாழ்வான் எல்லா உபாயங்களையும் அநுஷ்டித்துத் தன்பக்கல் பட்டன எல்லாம் தான் இவர்கள் பக்கலிலே பட்டான்.
“ஸ்ரீராம பிரான் திரும்புவதற்கு எல்லாவிதமான உபாயங்களையும் மேற்கொள்ளப் போகின்றேன்”
“ஸர்வோபாயம் து வர்திஷ்யே விநிவர்தயிதும் பலாத்
ஸமக்ஷம் ஆர்ய மிச்ராணாம் ஸாதூனாம் குண வர்திநாம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 82 : 19.
என்று மீட்கையிலே போர வருந்தினான் அன்றோ.
தாமே இரங்கி மீளும்படி செய்கிறேன், அது தான் கேட்டார் வாய்க் கேட்க வேண்டுமோ?
“எவ்வளவு வரையில் அவர் என்னிடம் இரங்க வில்லையோ அவ் வளவு வரையிலும் பர்ண சாலையில் அவருக்கு முன்பு படுக்கிறேன்”
“அநாஹாரோ நிராலோகோ தநஹீநோ யதா த்விஜ:
சேஷ்யே புரஸ்தாத் சாலாயா யாவந்மே ந ப்ரஸீததி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 111 : 14.
என்றான் அன்றோ.

இவனும் அப்படியே எல்லா உபாயங்களையும் செய்து பார்த்த விடத்திலும்
அணுக ஒண்ணாதபடி கடுமை தோற்ற இருந்தார்கள். ‘இனிச் செய்யலாவது என்?’ என்று பார்த்தான்;
‘பலத்தாலே காரியங்கொள்ளுவோம்’ என்று நிச்சயித்து, இவர்களுடைய பாவையை எடுப்பதற்குக் கணிசித்தான்;
“கோசல தேசத்தவர்கள் பார்வையைக் கொண்டே பிறர் எண்ணத்தை அறிவார்கள்”
“இங்கிதஜ்ஞாஸ்து மகதா: பிரேக்ஷிதஜ்ஞாஸ்து கோஸலா: அர்த்தோக்தா: குரு பாஞ்சாலா: ஸர்வோக்தா தக்ஷிணாபதா:”
நினைந்த முனி பகர்ந்தவெலாம் நெறி யுன்னி அறிவனும் தன்
புனைந்த சடை முடி துளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான்
வனைந்தனைய திருமேனி வள்ளலும் அம் மாதவத்தோன்
நினைந்தவெலாம் நினைந்து அந்த நெடுஞ்சிலையை நோக்கினான்.-என்ற கம்பர்
என்கிறபடியே, நினைவு அறியுமவர்களாகையாலே, எல்லாரும் கூடிச் சென்று, வைத்த பாவையை எடுத்துக் கொண்டார்கள்;
அது தான் “நம் காரியம்” என்றே இருந்தான்.
‘தனித்து முயற்சி செய்ய விருப்பம் இன்றிக்கே ஒழியப் பெற்றோம்’ என்று பார்த்தான். என்றது
திருக் குரவை போலே ஆளுக்கு ஆளாய் நின்று கைப் பிடிக்க வேண்டாவாய் இருந்தது என்றபடி.
‘நல்ல வாய்ப்பு’ என்று இவர்கள் பாவையைச் சென்று பற்றினான்.
(எங்கள் -பஹு வசனம் பாவை ஒருமை என்பதால் இவ் வியாக்யானம் )

கன்மம் அன்று –
வாராய்! உனக்கு இது காரியம் அன்று காண் என்கிறார்கள்.
‘ஏன் தான் இது காரியம் அன்றிக்கே ஒழிவான் என்?’ என்றான்.
எங்கள் கையில் பாவை பறிப்பது –
இதுதான் யாரது என்று இருக்கிறாய்? நீ நினைக்கிறவர்களது அன்று காண்!
இது எங்களது காண்! என்றார்கள். ‘அது தான் மெய்யே’ என்றான்;
“மனைவி முதலான இவர்கள் எவருக்கு உடைமைப்பட்டவர்களோ, இவர்களுடைய செல்வமும் அவருடைமையே”
“த்ரய ஏவாதநா ராஐந் பார்யா தாஸஸ் ததா ஸு த:
யத்தே ஸமதி கச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத்தநம்”-என்பது பாரதம் உத்யோக பர்.–என்பதே யன்றோ பிரமாணம்.
இவர்கள் ‘எங்களது’ என்கை அன்றோ அவன் விருப்பத்துக்கு அடி.
‘இவர்களது’ என்னுமிடம் அறுதியிட்டுக் கொள்ளுகையிலே யன்றோ அவனுக்குத் தாத்பரியம்.
நீ நினைக்கிறவர்களது அன்று என்கையிலே யன்றோ இவர்களுக்குத் தாத்பரியம்.

எங்கள் கையில் பாவை பறிப்பது –
இவர்கள் கையிலே பாதி கொடுத்துப் போலே காணும் பறிப்பது!
அவர்கள் விட்டுக் கடக்க நிற்குமதில் ஒரு பிரயோஜனம் இல்லையே; -ஒல்லை நானும் கடைவன் என்று -இருந்தவன் அன்றோ –
அதனை அவர்கள் ஒருதலை பற்றத் தானும் ஒரு தலை பற்றும் போதே யன்றோ ஒரு கலத்திலே உண்பாரைப் போலே இன்பமாயிருப்பது.

கையில் பாவை பறிப்பது –
கிடக்குமவை யெல்லாம் கிடக்க, எங்கள் கையிற் பாவை பறிப்பது கர்மம் அன்று.
செய்யக் கடவது அல்லாததனைச் செய்யா நின்றாய்; உனக்கு இதனால் ஒரு பிரயோஜனம் இல்லை காண் என்றார்கள்.
ஆக, இதனால், பலித்தது என்? என்னில்,
ஒரு வைஷ்ணவன் “என்னது” என்று அபிமானித்துக் கைப்பிடித்தால் “அவன் விரும்புவது” என்றபடி.
“‘செய்யக் கடவது அல்லாததைச் செய்யா நின்றாய்’ என்று நீங்கள் சொல்லுவான் என்?
செய்யக் கடவனவற்றிற்கும் செய்யக் கடவவல்லாதனவற்றிற்கும் வரம்பு கட்டினேன் நானே அன்றோ” என்றான்.

கடல் ஞாலம் உண்டிட்ட –
பிரளய ஆபத்திலே இவற்றை எல்லாம் எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கிற்றிலேனோ?
இவர்கள் அளவும் அப்படியே ஆகாதே தான். இவன் சென்று பறித்திலனாகில் அழியுமளவே அன்றோ இவர்களது.
அது வேறு நிலையை அடைந்தாகிலும் கிடக்குமன்றோ. இவர்களுக்கு இவனை ஒழிந்த அன்று சத்தைக்கு அழிவன்றோ உள்ளது.
இவர்களும் அவன் ஸ்பர்சித்தான் ஆனால் தான் ரஷிக்கப் படுவார்கள் -இவன் தொடாமல் இருந்தால் அழிந்து போகுமே
அதனாலே பாவையைப் பறித்தான் -அசித் அழிந்தால் அவஸ்தான்தரம்–ஸ்வரூப நாசம் அன்றோ இவர்களுக்கு –

அன்றிக்கே –
‘ஆபத்து ரக்ஷகனன்றோ நான், ஆன பின்பு, நான் செய்யுமவையெல்லாம் பிரயோஜனத்தை எதிர்பாராமலே அன்றோ இருப்பன.
ஆகையினால் எனக்கு இது தானே யன்றோ பிரயோஜனம்.
பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் வருமன்று முடிவு இல்லாமை ஆகுமன்றோ.
இதனைச் சாதனமாக நினைத்திருக்கிலன்றோ நான் வேறே ஒன்றனைப் பிரயோஜனமாகச் சாதித்துக்கொள்வது’ என்றான்.
நீ இங்ஙன் சொல்லுமது வார்த்தை அன்று காண்;
எங்கள் இசைவு இன்றிக்கே இருக்க, நீ பலத்தாலே பறிக்கிற இதற்கு “ஆபத்து ரக்ஷகன்” என்று
சொல்லுகிற இது எடுத்துக்காட்டு ஆக மாட்டாது காண்.
ஆன பின்பு, உன்னுடைய குணத்திற்குக் கேடு காண் மேற்படுவது என்றார்கள்

நின்மலா நெடியாய் –
குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டானவனாய் அளவிடமுடியாத மஹா குணங்களையுடையவனே!
‘பலகுணங்களை யுடைய எனக்கு ஒரு குற்றம் கிடந்த அளவிலே அது தெரியா நின்றதோ?’ என்றான்.
நின்மலா! நெடியாய்!-நின்மலனான சந்திரனுக்கும் அன்றோ மறு கிடக்கிறது?
ஆன பின்பு, குணங்கள் பிரகாசிக்கின்ற இடங்கள் எங்கும் குண மின்மையும் பிரகாசிக்குங்காண்.

உனக்கேலும் பிழை பிழையே –
அளவிடமுடியாத குணங்களை யுடையையாயிருந்தாயே யாகிலும், குற்றம் குற்றமேயாய்க் கிடக்குங்காண்.
இவர்கள் இப்படிச் சொன்னவாறே, இதற்கு ஒரு மறுமாற்றம் காணாமையாலே,
பிறர்க்குப் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இவர்கள் செவிகளிலே சிலவற்றைச் சொல்லப் புக்கான்.

‘வன்மமே சொல்லி’
என்கிறார்கள். தங்கள் மனமும் அவன் மனமும் அறியுமித்தனை;-
வார்த்தைகளால் சொல்ல ஒண்ணாது.

எம்மை நீ விளையாடுதி –
நீ மர்மம் சொல்லும்போது, சொல்லுகிற உன்னையும் கேட்கிற எங்களையும் அறிந்தன்றோ சொல்லுவது.
‘இவன் சொன்ன மர்மம் ஏது?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, “மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் பாசுரமிட மாட்டாமல்
‘வன்மம்’ என்னா நின்றார்; என்னைப் பாசுரம் இடச் சொல்லுகிறீர்களோ?” என்று அருளிச் செய்தார்.

விளையாடுதி-
அவன் தன்னை அழிய மாறி ஒரு மர்மம் சொன்னானானான்;
இவர்கள் அதனை விளையாட்டாக்குகிறார்கள்.
நெஞ்சில் இல்லாதனவற்றைச் சொல்லுகிறதனால் உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்கிறார்கள்.
மீளவும் சிலவற்றைச் சொல்லப் புக்கான்.
பஞ்ச லஷம் பெண்கள் -உடன் சம்சலேஷித்த பிரகாரம் –அடியைப் பிடி பாரதம் என்றவாறு பேசப் புக்கான்
அது கேட்கில் என்னைமார் தன்மம் பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே –
சொல்லுகிறவை எல்லாம் எங்கள் பந்துக்கள் கேட்பாராகில் சாலத் தப்பாய் விடுங்காண்.

என்னைமார் –
ஆணுடன் பிறந்தார்.
‘தன்மம் பாவம் என்னார்’
என்றதனால், உன் பக்கல் எங்களுக்குப் பாவபந்தம் இல்லை என்னுமிடம் அறியார்கள்.
நீ மேல் விழுகிறவதனைக் கண்டு, ‘இது செய்யலாம், இது செய்ய ஒண்ணாது’ என்ற பாராதே
நலிவர் காண் என்பதனைத் தெரிவித்தபடி.
‘ஆனால் என்? அவர்கள் இதனை அறியா நின்றார்களோ? அவர்கள் இங்கு இல்லையே?’ என்றான்.

ஒரு நான்று –
அதுவோ! முதலிலே தவிரில் அறியாதொழியுமத்தனை போக்கி எல்லாம் செய்தாலும் உண்டானால்
ஒரு நாள் வரையிலே அறிவர்கள் காண். ‘அழகிது; அறிந்தால் தான் வருவது என்?’ என்றான்

தடி பிணக்கே –
பின்னைக் குத்தும் பூசலுமாயன்றோ தலைக் கட்டுவது.
இராமாவதாரத்தில் எல்லாக் காரியங்களையும் வில்லினைக் கொண்டே செய்யுமாறுபோலே,
கிருஷ்ணாவதாரத்திலே தடி கொண்டே காரியம் கொள்ளுமத்தனை.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –