ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-7-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–6-3-7-
நிரதிசய தேஜோ மய திவ்ய ரூபனாய் ஸமஸ்த ஹேயாஸ்பாத ஸர்வ ஜகச் சரீரனாய் -ஸமஸ்த ஹேய ரஹிதனாய் –
துர் விஜ்ஜே யனாய் ஆஸ்ரித அர்த்தமாக பிறந்து அவர்களோடு ஸம்ஸ்லேஷித்தும் பிரதிகூலர்க்குக் கைத்தவம் செய்தும்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர் சேர்ந்த பிரானுடைய திருவடிகள் அல்லது ஒருவருக்கும் ஆத்ம ரஷகம் இல்லை என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-7-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–6-3-7-
எத்தனையேனும் அளவுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார் -அப்ராக்ருதமான திரு உடம்பை உடையவனாய் -ஜகத் சரீரனாய் -அதீந்திரனாயும் -கண் காண வந்து திருவவதாரம் பண்ணியும் -ஆஸ்ரிதற்காக அத் திரு உடம்போடு நெடு நாள் வர்த்தித்து அருளியும்-இப்படி ஸூ லபனாய் வைத்து தன்னை யுகாவாதார் திறத்து வஞ்சனங்கள் பண்ணியும் –
——
ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-7-
அநந்தரம் ஆஸ்ரித அநாஸ்ரித விஷயமான ஆகார பேதத்தை யுடைய சர்வேஸ்வரன்
திருவடிகளே சரவர்க்கும் பிரபல ஆஸ்ரயம் என்கிறார் –
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–6-3-7-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்–ஆஸ்ரித அநு பாவ்யமான அப்ராக்ருத விக்ரஹத்தையும் –
அநாஸ்ரிதர்க்கு அநு பாவ்யமான ஹேயதையால் பூரணமான ஜெகதாகாரத்தையும் யுடையனாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்-அநாஸ்ரித விஷயத்தில் பிரகாசியாதேயும் –
ஆஸ்ரித விஷயத்தில் பிரகாசித்தும் – பிரகாசிக்கும் விஷயத்தில் ஸ்த்திரனாயும் -இதர விஷயத்தில் அஸ்த்திரனாயும் இருப்பானாயும் –
ப்ரஹ்ம ருத்ராதிகள் ஸ்வ அபிமத சித்த்யர்த்தமாக
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்–தம்தாம் தலைகளால் வணங்கும்படி திரு விண்ணகரிலே சேர்ந்த சர்வேஸ்வரனுடைய
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–சமாப்யதிக தரித்ரமான ஸ்ரைஷ்ட்யத்தை உடைய
திருவடிகள் ஒழிய ஸர்வ சேதனர்க்கும் அபயஸ்த் தலமாம் படி பிரபலமான புகலிடம் வேறில்லை –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-7-
எத்தனையேனும் அளவுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார் –
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–6-3-7-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
நிரவதிக தேஜோ ரூபனாய் -அப்ராக்ருதமான திரு மேனியை யுடையனாய் -தேஜஸாம் ராசி மூர்ஜிதம்-ஜகத் சரீரனாய் –
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
யமாத்மா நவேத-என்று அவனுக்கு அத்ருஷ்டனாய்க் கொண்டு அந்தராத்மாவாய் நின்றும் –
ஆவிர்ப்பூதம் மஹாத்மான -என்று ராம கிருஷ்ணாதி அவதாரங்களை பண்ணியும் -அவ்வோ இடங்களிலே பதினோராயிரம் ஆண்டு -நூறாண்டு -நின்றும்
தன் படிகள் சிசுபாலாதிகளுக்கு தோற்றாத படி பண்ணியும் -ஆஸ்ரிதற்கு தோற்றும் படி பண்ணியும் –கைதவம் -வஞ்சனம்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
ப்ரஹ்மாதிகள் தலையால் வணங்கும் படி திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் –
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–
வரையாதே எல்லார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படியான ஸ்ரேஷ்டமான திருவடிகள்
சிறியோர் பெரியோர் என்று அன்றிக்கே எல்லார்க்கும் தஞ்சமான புகல் வேறு இல்லை –அல்லாதவை ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் கழுத்துக் கட்டியாய் இ றே இருப்பது –
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-7-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-
ஆஸ்ரித அநாஸ்ரிதர் விஷயமான ஆகார பேதம் -உடைய சர்வேஸ்வரன் திருவடிகளே சர்வருக்கும் பிரபல ஆஸ்ரயம்
பொது நின்ற பொன் அம் கழல் -இது முக்கிய பாசுரம்-6-3-9-பாசுரம் பதிகத்துக்கு நிதான பாசுரம்
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்-அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரகம் -அழுக்கு-பதிந்த ஜகதாகாரம்
மரத்தை கடலை வணங்கி -இயற்கை -என்பர் அநாஸ்ரிதர் -பத்ம நாப அமரப் பிரபு –
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்-மறைந்தும் -அநாஸ்ரிதர் விஷயத்தில் -ஆஸ்ரிதர் விஷயத்தில் தோன்றியும் –
பிரகாசிக்கும் விஷயத்தில் ஸ்திரமாக -இதர விஷயத்தில் அஸ்திரமாகவும் –
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-ப்ரஹ்மாதிகள் தங்கள் அபேஷிதம் பெற வணங்கும்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே-அவனே சரண்யன் –
சமாப்திக தாரித்ர்யம் பெருமை உடைய திருவடிகள் ஒழிய பிரபல ஸ்தலம் இல்லை
பிரகிருதி சம்பந்தம் இல்லாத திருமேனியை யுடையவனாயும், உலகத்தையே உருவமாக வுடையவனாயும், கண்களுக்கு வெளிப்படாது மறைந்தவனாயும்,
இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் செய்து கண்களுக்குத் தோன்றுகின்றவனாயும், அந்த அந்த அவதாரங்களில் பல ஆண்டுகள் நிலை பெற்று
நிற்கின்றவனாயும், வஞ்சனையான காரியங்களைச் செய்கின்றவனாயும் இருந்து, தேவர்கள் தலைகளால் வணங்குகின்ற திரு விண்ணகரம்
என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய சிறப்பை யுடைத்தான
திருவடிகள் அல்லாமல் எத்தகையார்க்கும் வலிய உபாயம் வேறு ஒன்று இல்லை.
உடம்பாய் உடம்பாய்க் கரந்தும் தோன்றியும் நின்றும் செய்தும் சேர்ந்த பிரான் என்க. பிரான் பாதம் அல்லால் வன்சரண் யாவர்க்கும் இல்லை என்க.
எத்தனையேனும் ஞானமுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார்.
பரஞ் சுடர் உடம்பாய்-
“திரு மேனி ஒளிகளின் கூட்டம்” -தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்”-இது, ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 67.
என்கிறபடியே, சுத்த சத்துவ மயமான அசாதாரண திவ்விய விக்கிரகத்தை யுடையனாய்.
அழுக்குப் பதித்த உடம்பாய் –
முக் குணங்களுக்கு வசப்பட்ட உலகத்தையே உருவமாக வுடையனாய். -நீராய் நிலனே -ஜகதாகாரமாய் –
கரந்தும் –
இவற்றுக்கு அந்தராத்மாவாய்ப் புக்கு நிற்கச் செய்தே
“எந்தப் பரமாத்மாவை ஆத்மா அறிகிறான் இல்லை” -“யம் ஆத்மா ந வேத”-என்பது, பிருஹதாரண்யக உப.-என்கிறபடியே,
இவற்றுக்குத் தோன்றாத படி நின்று, இவற்றின் சத்தையை நோக்கியும்.
தோன்றியும் –
காண வாராய் -திருவாய். 8. 5 : 2.-என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்திருப்பார்க்குக் காணலாம்படி
இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் செய்தும்.
(ஹார்த்தமாய் கரந்தும் அவதரித்து தோன்றியும்)
நின்றும் –
நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள் நின்றும். அவ்விடங்களிலே,
கைதவங்கள் செய்தும் –
வஞ்சனைகள் பொருந்திய காரியங்களைச் செய்தும்.
அதாவது, அவதரித்து நிற்கச் செய்தே தன் படிகள் சிசுபாலன் முதலாயினார்கட்குத் தோற்றாதபடி செய்தும்
தன்னை அடைந்தவர்கட்குத் தோன்றும்படி செய்தும் போந்தமையைத் தெரிவித்தபடி.
(ஆஸ்ரிதர்களுக்கு விஸ்வரூபம் -சதுர் புஜங்களைக் காட்டி அருளையும் )
விண்ணோர் சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்-
‘பிரமன் முதலாயினோர்’ தலை படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று வணங்கும்படி திரு விண்ணகரிலே நிற்கிற உபகாரகன்
வரம் கொள் பாதம் அல்லால் –
எத்தனையேனும் தண்ணியாரும் கிட்டலாம்படியான சிறப்புப் பொருந்திய திருவடிகள் அல்லது.-
வர -சிறந்த –
யாவர்க்கும் வன் சரண் இல்லை –
எத்தனையேனும் கிழார் கிழார்க்கும் வலிய புகல் இல்லை.
அவனை ஒழிந்த சரண்யர் அனைவரும் இவனைக் கொண்டு முழுகும் பேர்.
இவனைக் கொண்டு கரை ஏறுதற்குத் தக்க வலிய புகல் அவன் திருவடிகள் அல்லது இல்லை.
அடியே பிடித்து ஜீவிக்கில் ஜீவிக்குமத்தனை.
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply