ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-5-
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-
ஆர்ஜவ அநார்ஜவ சித நீல ஸத்ய அஸத்ய யவ்வன வார்பக நவத்வ அநவத்வாதி ரூபனான எம்பெருமான்
ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்த நிகில ஐந்து பரி பூர்ணமான ஸர்வ லோகங்களுக்கும் ரக்ஷகன் -என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-5-
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-
சிறியார் பெரியார் என்னாதே-எல்லார்க்கும் ரக்ஷகன் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என்கிறார் –
ப்ரஹ்மாதி பீபீலிகா அந்தமான சகல ஜந்துக்களும் அவனாக்கின சோலை -எல்லாரையும் ஓக்க ஸ்தாவரமாக பேசுகையாலே தந்தாமுடைய சகல நிர்வாஹத்வமும் பகவத் அதீனம் என்று கருத்து-
———
ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-5-
அநந்தரம் உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ரூப ஸமஸ்தவாஸ்து பிரகாரகனான சர்வேஸ்வரனுக்கு
சகல ஜகத்தும் லீலா உத்யானம் என்கிறார் –
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்-அபக்ருஷ்டமான கௌடில்யமும் உத்க்ருஷ்டமான ஆர்ஜவமும் –
தத் தத் சத்ருசமான கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்-அப்படி உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ரூப ஸத்ய அஸத்யங்கள்-
யவ்வன வார்த்தகங்கள் -அபி நவத்வ ஜீர்ணதைகளுமாய்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-தொழில் படச் செய்யப்பட திரு விண்ணகரிலே சேர்ந்த சர்வேஸ்வரன்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–வைத்த லீலா உத்யானம் கிடிகோள் -ப்ரஹ்மாத்யுத்க்ருஷ்ட தேவதைகளை யுடைய மூவுலகும்
——
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-5-
சிறியார் பெரியார் என்னாதே சர்வர்க்கும் ரக்ஷகன் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என்கிறார் –
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
கிரித்திரிமம்–ஆர்ஜவம் –கறுப்பும் வெளுப்பும் –
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
சத்யம் -அசத்தியம் -பால்ய-வர்த்தகம் -அத்யாதனமும் புராதனமும் –
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
புதிதாக செய்தாப் போலே -தொழிலை யுடைத்தாய் திண்ணிதான மதிள்-பெய்த காவு கண்டீர் -பெருந்தேவுடை மூவுலகே.-
ப்ரஹ்மாதி ஸ்தாவர அந்தமான ஜந்துக்கள் அவனாக்கின சோலை – மூவுலகே.-மேலும் கீழும் நடுவும் –பெய்த காவு-உண்டாக்கின சோலை -சர்வரையும் ஸ்தாவரமாக சொல்லுகையாலே -சர்வருடைய ரக்ஷணமும் பகவத் அதீனம் என்கை -மின்னிடை மடவாரிலே -பொருந்தோம் என்றதுவும் ஸ்வ அதீனம் அன்று என்கை –
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-5-
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண் மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.–6-3-5-
பிரகாரம் -சகல ஜகத்தும் லீலா உத்த்யானம் தோட்டம்
கை தவம் செம்மை கருமை வெளுமையுமாய்-தாழ்ந்த உத்க்ருஷ்ட -அதன் நிறமும் –
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்-சத்ய அசத்திய -யுவான -அபி நவம் -புதியவை ஜீரணம் பழைமை
செய்த திண் மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-நித்ய வாசம்
பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.-ப்ரஹ்மாதி உயர்ந்த தெய்வங்கள் உள்ள லோகங்களும் பெரிய தோட்டம் -லீலைக்காக
வஞ்சனையும் நேர்மையுமாகி, கருமையும் வெண்மையுமாகி, மெய்யும் பொய்யுமாகி, இளமையும் முதுமையுமாகி, புதுமையும் பழமையுமாகி,
செய்யப்பட்ட திண்ணிய மதிள்களாற் சூழப்பட்ட திரு விண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் நின்ற திருக் கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமான் வைத்து வளர்க்கின்ற சோலை காண்மின்; பெரிய தெய்வங்களை யுடைய இந்த மூன்று உலகங்களும்.
பெருந் தேவுடை மூவுலகு, ஆய், சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் என்க. கா – சோலை.
சிறியார் பெரியார் என்னாதே எல்லார்க்கும் ரக்ஷகன் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் என்கிறார்.
கைதவம் செம்மை –
வஞ்சனை நேர்மைகள்.
கருமை வெளுமை –
கருப்பு வெளுப்பு.
மெய் பொய் –
உண்மை இன்மை.
இளமை முதுமை –
இளமை கிழத்தனம்.
புதுமை பழமை –
புதுமையும் பழமையும்.
அத்ய தனமும் புராதனமும்
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் –
காலம் செல்லச் செய்தேயும் இப்பொழுது செய்தாற் போலே இருக்கிற தொழிலின் புதுமையைச் சொல்லுகிறது.
பெய்த காவு கண்டீர் –
வைத்து ஆக்கின சோலை கண்டீர்.
பெரும் தேவுடை மூஉலகே –
ஈஸ்வர அபிமானிகளான தேவர்களையுடைத்தான மூன்று உலகங்களும்.
இத்தால், என் சொல்லியவாறோ? எனின்,
சோலையானது தனக்கு வேண்டும் பாதுகாவலை அறிவிக்கமாட்டாது அன்றோ;
நின்ற இடத்தே நின்று வாடிக் காட்டுகையும்,
பின்னர், வைத்து ஆக்கினவனே அதற்கு வேண்டும் காவலைச் செய்ய வேண்டுகையும்
முதலாயினவற்றை யுடைத்தாயிருக்கையாய் இருக்குமன்றோ.
அப்படியே, நியமிக்கின்றவர்கள் நியமிக்கப்படுகின்ற பொருள்கள் என்னும் வேற்றுமை அற எல்லாம்
அவன் புத்தியதீனமாக இருப்பதனைத் தெரிவித்தபடி.
அம்ருதம் பிந்து கடாஷம் முன்பு நஷ்டம் வாடிக் காட்டும் -சதுஸ்லோஹி
மின்னிடை மடவாரில் பொருந்தோம்-சேர மாட்டேன்- என்றதும் அவன் அதீனம்-
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply