Archive for October, 2023

அகலிகை, நெஞ்சினால் பிழை இலாதாள்–கல்லைப் பெண்ணாக்கிய சரித்திரம்  -ஆழ்வார் பாசுரங்கள் இல்லை —

October 9, 2023

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி

ஸ்ரீ தப ஸ்வாத்யாய நிரதாம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் பரிப்ரச்ச வாலமீகி முனி புங்கவம் — 1-1-1

கோன் வஸ்மின் ஸம்ப்ரதம் லோகே குணவான் கா ச வீர்யவான் தர்மஞ்சந ச க்ருதஞ்ஞந ச ஸத்ய வாக்யோ த்ரிட வ்ரத–1-1-2–

சாரித்ரேண ச கோ யுக்த சர்வ பூதேஷு கோ ஹிதா -வித்வான் கா சமர்த்த ச கா ச ஏக பிரிய தர்சன -1-1-3–

ஆத்மவான் கா ஜித க்ரோத த்ருதிமான் கா அநஸூயகா -கஸ்ய பிப்யதி தேவா ச ஜாத ரோசயா சம்யுகே-1-1-4–

1-குணவான் -சம்யக் போஜனம் -உடனே உண்பன் என்றானே
இன்று போய் நாளை போருக்கு வா -சரணாகதி இன்றே பண்ணலாம் –

2-வீர்யவான் -மீண்டும் வந்தாலும் வெல்வேன் -ரஞ்சனீயஸ்ய விக்ரம் அன்றோ

3-தர்மஞ்ஞன் -அறிந்து அனுஷ்ட்டித்து -கீழ் சொன்னவை இதுக்கு -சரணாகத வத்சன் -விரதம் கொண்டவன் அன்றோ

4-க்ருதஜ்ஜயன் -செய் நன்றி மறவாமை

5-சத்ய வாக்யன் -13-த்ரேதா யுகம் கண்ட சூர்ப்பணகை-37-வயசு ராமன் காட்டிய ஆர்ஜவம் -சத்யான் லோகான் ஜயதி-

6-திருட விரதன் –புறா கதை -குரங்கு புலி மனுஷ்யன் கதை –
அனைத்து குணங்களும் சரணாகதன் ரக்ஷணம்

7-ஸாரித்ரன்-நல்ல அனுஷ்டானம் -ஒரே வில் ஒரு சொல் ஒரே இல்

8-சர்வ பூதேஷு ஸூஹ் ருதம் –காகுத்தன் பாத தூளி – ரஜா
கழல் துகள் கதுவ -பாதுகையாலும் தீண்டாதவன் -அன்னை என்று பொன்னடி வணங்கினான் அகலிகையைப் பார்த்து –
கௌதமர் சாபம் -12- மாதங்கள் கருவில் சுமந்தாள் இவளோ கருத்தில் சுமந்தாள் பல யுகமாகங்களில்
மை வண்ணம் –நான்கு வண்ணங்கள் –
இவ்வண்ணம் மை வண்ணம் -கம்பர் எட்டு வண்ணங்கள் -கால் வண்ணம் கண்டேன்

9-வித்வான் -ஆய கலைகள் -64-

10-சமர்த்தன் -கல்லைப் பெண்ணாக்கி புல்லை அம்பாக்கி -வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

11-சதா சர்வ பிரிய தரிசன-ராமா -ரம யிதி-மனத்துக்கு இனியான் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் –
லஷ்மணன் லஷ்மீ சம்பன்னன் -நற் செல்வன்

12–ஆத்மவான்–துணிச்சல் மிக்கு –காரா தூஷணாதிகள் அசகாய ஸூரன்

13-ஜித க்ரோதன் -கோபத்தை தன் வசம் -கோப வசம் ஆனான் திருவடியைத் தாக்கிய பின்பு

14-த்யுதி மான் –தேஜோ மாயம் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்தா அபகாரம் –
தோள் கண்டார் தோளே கண்டார்-தாள் கண்டார் தாளே கண்டார் –தடக்கை கண்டாரும் அஃதே –
யாவருக்கும் கண்ணன் -என்று -கண்ணில் இருக்கும் ராமனே கண்ணன்

15-அநஸூயா -பொறாமை படைத்தவன் -வியாச நேஷு மனுஷ்யானாம்

16-ஜாத ரோஷ -யாருக்கு கோபம் வந்தால் தேவர்களும் அஞ்சும் படி
வைத்ய வீர ராகவன் -ராகவன் வீரம் -ராவணன் கொடுத்த பெயர் -சாது மிரண்டால் காடு கொள்ளாதே

ஸ்ரீ ராம சந்த்ரன் -பூர்ண சந்த்ரன்

———————

கல்லைப் பெண்ணாக்கி -ஆழ்வார் பாசுரங்கள் இல்லை
பெண்மணி ஒருத்தி பரிபவப் பட்டமையை பாட திரு உள்ளம் கொண்டவர்கள் அல்லர்

ஸ்ரீ பெருமாள் காலால் தீண்டவில்லை –அடித் துகள் கதுவாமுன்னம்.
திருவடி துகள்கள் பட்டே அகலிகை விமோசனம்
நெஞ்சினால் பிழைக்கிலள்-கம்பர் -இந்திரனே வந்தானே என்று அறிந்தவள்

அஞ்சன வண்ணத்தான்தன்   அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை   வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை  நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன   முனிவனும். கருத்துள் கொண்டான்.*

அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற
வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்
அடித் துகள் = திருவடி துகள்–திருவடியால் கூட வேறே பெண்ணைத் தீண்டாத ஏக பத்னீ விரதன் அன்றோ பெருமாள்
கதுவா முன்னம்.= படுவதற்கு முன்
வஞ்சி போல் = வஞ்சிக் கொடி போன்ற
இடையாள் = இடையை உள்ள அகலிகை
முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்
ஆகி நின்றாள்; = மாறி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை
நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்
கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற
முனிவனும்.= கௌதமனும்
கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்

கம்ப இராமாயணம் – அகலிகை, நெஞ்சினால் பிழை இலாதாள்

இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.

இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.

இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.

முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…

“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.

அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.

அ + ஹல்யா = மாசு அற்றவள்!

கை வண்ணம் அங்குக் கண்டேன்= உன் கை வண்ணம், தாடகை அழிப்பிலே கண்டேன்!

* கால் வண்ணம் இங்குக் கண்டேன்= உன் கால் வண்ணம், அகலிகை வாழ்விலே கண்டேன்!

வால்மீகி= “உடல் உணர்ச்சி”
* கம்பன்= “உள்ள உணர்ச்சியால் உடல் உணர்ச்சி”
அவன் திருவடி பெருமையை சொல்ல இத்தைச் சொல்ல வேண்டுமே
கல்லைப் பெண்ணாக்கி பெரிய வாச்சான்பிள்ளை

————-

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் (10) முதல் அடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே !

குட்டிப் பெண் கதை செல்ல ஆரம்பித்தாள். கௌதம முனிவரின் மனைவி அகல்யை. அகல்யா என்றால் அழகியவள் என்று பொருள். பெயருக்கு ஏற்றார் போலப் பேரழகியாக இருந்தாள். முனிவரும் அகல்யையும் கங்கைக் கரையில் சந்தோஷமாக ஆசிரமத்தில் வசித்து வந்தார்கள்.
இந்திரனுக்கு அகல்யையின் அழகில் மயங்கினான். கெட்டது பற்றி யோசித்தால் கெட்ட எண்ணம் தான் வரும். அவனுக்கும் வந்தது. முனிவரை ஆசிரமத்தை விட்டு அனுப்பிவிட்டு, உள்ளே போகத் திட்டம் போட்டான். யோசித்தான். ஆசிரம வாசலில் காலைப் பொழுது விடுவதற்குள் கோழிபோலக் கூவினான். உள்ளே உறங்கிக்கொண்டு இருந்த முனிவர் விடிந்துவிட்டது என்று எழுந்து நீராடச் சென்றார். இது தான் தக்க சமயம் என்று இந்திரன் முனிவர் வேஷத்தில் உள்ளே புகுந்தான். திருட்டுத்தனமாக வந்த இந்திரன் அகல்யையை பார்த்து ‘அழகியே! எனக்கு உன்மீது மிகுந்த ஆசை” என்றான். வந்திருப்பது இந்திரன் என்று தெரிந்தாலும் இந்திரனே என்னை அழகி என்று சொல்லிவிட்டான் என்ற கர்வத்தால் மனநிலை மாறி அவனிடம் அன்பு செலுத்தினாள் அகல்யை.

நீராடிவிட்டு முனிவர் திரும்பி வந்த விட்டார். தன் மனைவி தன்னை மாதிரி ஒருவனிடம் ஆசை வைத்துள்ளார் என்று கோபப்பட்டு “இனி நீ என் மனைவி இல்லை யார் கண்ணிலும் படாமல் சாம்பலாகப் போவாயாக” என்று சபித்துவிட்டார். அகல்யை ஆசிரமத்தின் கல்மீது சாம்பலாகக் கிடந்தாள். அகல்யைக்கு அப்போது தான் தான் செய்த தவறு புரிந்தது. மன்னிக்க வேண்டும் என்று முறையிட்டாள். முனிவர் நாராயணன் ராமராக அவதாரம் செய்வார் அப்போது விஸ்வாமித்திரர் ராமரை அழைத்துக்கொண்டு இங்கே வருவார். ராமர் கால் உன்மீது பட்டவுடன் நீ தூய்மை பெற்று என்னுடன் மீண்டும் வாழ்வாயாக என்றார். அகல்யை ஆயிரம் ஆண்டுகள் தூசியாக அந்த ஆசிரமத்தில் யார் கண்ணிலும் படாமல் கிடந்தாள்.

ராமர் அவதாரம் செய்தார். விஸ்வாமித்திரர் தமது யாகத்தைக் காக்க ராம, லக்ஷ்மணர்களை அழைத்து வரும்போது கௌதம முனிவரின் ஆசிரமம் வந்தது. ஆசிரமத்துக்குள் சென்ற போது ராமரின் திருவடி பட்டதால் அகல்யை சாபம் தொலைந்து தூயவளானாள். மீண்டும் அழகிய பெண்ணாக மாறினாள். கௌதமரும் அகல்யையைத் திரும்பத் தன் மனைவியாக ஏற்றார்.
கௌதம முனிவரும் அகல்யையும் பெருமகிழ்ச்சியுடன் ராமரை வணங்கிப் பூஜித்தார்கள் என்று கதையை நிறுத்தினாள் பெண் பிள்ளை.

ராமானுஜர் ஆழ்ந்த யோசனையிலிருந்தார்.“சாமி எந்த ஆழ்வார் பற்றி யோசிக்கிறீர்கள்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
ராமானுஜர் அவளின் புத்திக் கூர்மையை வியந்து ”பெரியாழ்வார் பற்றித் தான் பெண்ணே!” என்றார்.
“சொல்லுங்க சாமி” என்று அந்தப் பெண் ஆவலாகக் கேட்கத் தயாரானாள்.
ராமானுஜர் “பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே என்கிறார் ஆழ்வார். பெருமாளின் பாத தூளிக்கு அவ்வளவு ஏற்றம்” என்றார்.
”அருமை! சாமி, எங்க ஊர் மதுரகவி ஆழ்வார் அவருடைய குருவான நம்மாழ்வாரை தன் தலையால் தாங்கினார். அவரோ பெருமாளின் திருவடியைத் தாங்கிச் சடாரியாகக் கோயிலில் இருக்கிறார்!” என்றாள்
ராமானுஜர் கண்கலங்கினார்.
“ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா ?” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
“இல்லை பெண்ணே! என் மானசீக ஆசாரியன் ஆளவந்தார் நினைவு வந்தது” என்றார்
“நாங்கள் தெரிந்துகொள்ளலாமா ?” என்று சிஷ்யர் ஒருவர் கேட்க அதற்கு ராமானுஜர் ”உன் திருவடி எப்போது தலையால் தாங்குவேன் என்று நம் ஆசாரியன் ஆளவந்தார் தன் ஸ்லோகத்தில் சொல்லியுள்ளார். இந்த பெண் சொன்னதைக் கேட்டபோது நினைவுக்கு வந்தது” உடையவர் மேலும் “பெண்ணே பெருமாள் பாதம் பட்டால் நல்லவையே நடக்கும். ராமாவதாரம் மட்டும் இல்லை, கிருஷ்ணாவதாரத்திலும் இது போலச் சம்பவம் ஒன்று இருக்கு” என்றார்.

கூடியிருந்த சிஷ்யர்களும், பெண் பிள்ளையும் என்ன என்று யோசிக்க ராமானுஜர் தொடர்ந்தார் “உத்திரையின் மகன் பரிட்சித் கருவிலேயே இறந்து இருந்தான். கிருஷ்ணர் தன் பாதத்தால் உயிர்ப்பித்தான் அல்லவா ?” என்றார்
”ஆகா ! ” என்று எல்லோரும் வியந்தார்கள் “நீங்களே சொல்லுங்கள் சாமி காடு நடந்த சேவ்வடி, கல்லைப் பெண்ணாக்கிய திருவடி. அகல்யை மாதிரி ராமருடைய திருவடி என் மீது பட நான் பாக்கியம் செய்யாதவள், அதனால் ஊரை விட்டுப் போகிறேன்”
“பிள்ளாய் ! பிஞ்சாய் இருந்தாலும், உன் பேச்சுப் பழம்போல இனிக்கிறது, வா ஊருக்குள் போகலாம்!”

“பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப்போலே!” என்று சொன்னபோது
ஆண்டாள் கதைக்கு எல்லோரும் தயாரானார்கள்.

வாமன அவதாரத்தில் உலகளந்த பாதங்கள் ராமஅவதாரத்தில் கானகத்தில் மெய்ந்நோக நடந்தனவே என இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவைப் பாடலில் உருகி உருகிப் பாடுகிறார். ‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து சோஅரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே  திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!`

அருள்மிகு ராமபிரான் திருப்பள்ளியெழுச்சி பாடல்.:-

தேவானு குலவா, தேவி கௌசலை பாலா
தசரத ராமனே எழுந்திரும்.

ஆவலோடு அழைத்திட்ட கௌசிகன் வேள்வியை
அன்புடன் காத்தவனே எழுந்திரும்.

கல்லைக் பெண்ணாக்கிய கமல பொற்பாதனே
கல்யாண ராகவா எழுந்திரும்.

வில்லொடித்து மிதிலை வேந்தன் பெண் சீதையை
விவாஹம் செய்தோனே எழிந்திரும்.

அட்டகாசமாய் வந்த பரசுராமனை ஜெயித்து
அயோத்தி வந்த துரையே எழுந்திரும்.

தட்டாமல் தந்தை மொழி பிசகாமல் தம்பி, சீதையுடன்
தண்டகாரண்யம் வந்தவரே எழுந்திரும்.

சித்தம் மகிழ்வுடன் குகனார் தோழமை கொண்டு
சித்ரகூடம் வந்தவரே எழிந்திரும்.

பக்தியுடன் அழைத்த பரதர்க்கு மகிழ்வுடன்
பாதுகை அளித்தோனே எழுந்திரும்.

மூர்க்கன் விராதனைக் கொன்றவனே! சூர்ப்பனகை
மூக்கை அறுத்தவரே எழுந்திரும்.

ஜடாயுவுக்கும், சபரிக்கும் மோட்சமளித்துவிட்டு
அடியேனை எதிர்கொண்டவரே எழுந்திரும்.

சுக்ரீவனிடம் நட்புகொண்டு மாமரங்களைத் துளைத்த
கோதண்ட ராமரே எழுந்திரும்.

வாலியை வதம் செய்து தாசனைத் தூதுவிட்ட
காருண்ய ராகவா எழுந்திரும்.

அரக்கர் விபீஷணருக்கு அபயம் கொடுத்து கடல்
துணையால் அக்கரை சென்றவனே எழுந்திரும்.

வம்சத்துடனே இலங்கை எதிர்த்து இராவணனை அவன்
வம்சத்தோடு அழித்தவரே எழுந்திரும்.

தசமுகனை வதைத்து தேவி ஜானகியுடன்
திருவுளம் மகிழ்ந்தோனே எழுந்திரும்.

திசை எங்கும் புகழவே புஷ்பரத மேறிய திருவை
அயோத்தி வந்தவரே எழுந்திரும்.

உலகம் புகழ் பரதன் மனம்மிக மகிழ்ந்திட
மகுடாபிஷேகம் ஏற்றுக் கொள்பவரே எழுந்திரும்.

உன் அருள் பெற அடியேனும் சீதாபிராட்டி உதவி
அருளவேணும் எழுந்திரும்.

சங்கீத ராமனே, ஜானகி நேசனே, ஸ்ரீ பரந்தாமனே
ஜனகரின் மருகரே எழுந்திரும்.

ஆத்ம ராமனே, கல்யாண ராமனே பட்டாபிஷேகம் காண
அருள வேண்டும் எழுந்திரும்.

கல்லைப் பெண்ணாக்கும் கழலினைப் போற்றுவோம்!

முல்லை நிலத்தில் பாதம் பதித்தாய் போற்றி!

எல்லையில்லா வனப்புடை எந்தாய் அணைக்கும் பாதம்!

சொல்லை மாலையாக்கி அளித்த கோதைக்கு வேதம்!”

—————–———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பகவத் கீதா தியான ஸ்லோகங்கள்:

October 9, 2023

ஸ்ரீ கஸ்தூரி திலகம் -லலாட பாடலே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாஸாக்ரே முத்து பல்லாக்கு —
கர தலே வேணு -கரே கங்கணம் -ஸர்வாங்கே ஹரி சந்தனம்
ஸூ லலிதம் -கண்டேஸ் முக்தா வலீ கோப ஸ்த்ரீ பரி வேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணி
விஜய சாரதி -பார்த்த சாரதி தேரோட்டி ஆசைப்பட்டு -தேர்ப்பாகு –

———

ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம் |

வ்யாஸேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மஹாபாரதம் |

அத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீமஷ்டா தஶாத்யாயினீம் |

அம்ப த்வாம் அனுஸந்ததாமி பகவத்கீதே பவத்வேஷிணீம் ||–1-

புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.

பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது கீதை. பதினெட்டு என்ற எண் தனிச்சிறப்பு வாய்ந்தது.மகாபாரத யுத்தம் நடந்தது பதினெட்டு நாட்கள். பாகவதபுராணம் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. ஒன்று எட்டு இவற்றின் கூட்டுத்தொகை ஒன்பது. மாறாத நம்பர். அத்துடன் எதைக் கூட்டினாலும் அந்த எண்களின் கூட்டுத்தொகை 9 ஆகவே இருக்கும்

.பஞ்ச பூதங்கள், பத்து இந்த்ரியங்கள், மனம், புத்தி அஹங்காரம் இவை மொத்தம் பதினெட்டு. இவைகளின் மூலம்தான் சம்சார பந்தம் ஏற்படுகிறது.இதை அகற்றுவதால் சம்சார சாகரத்தின் எதிரி எனப்படுவது கீதை. ஒரு அன்னையைப் போல் நல்வழி காட்டுவதால் அன்னை என்று கூறலாம்.

——

நமோஸ்து தே வ்யாஸ விஶால புத்தே புல்லாரவிந்தாயத பத்ர நேத்ர ||

யேன த்வயா பாரத தைல பூர்ண: ப்ரஜ்வாலிதோ ஞானமய ப்ரதீப: ||-2-

அளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக்கண்களை உடைய வ்யாசகுருவே , உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளிவீசுகிறது.

இந்த பிரபஞ்சம் ஒரு விளக்கு என்றால் அதில் தர்மம் என்பது தைலம். புத்தி என்கிற திரி இறையருள் என்ற நெருப்பால் ஏற்றப்பட்டால் உலக அறிவு எரிந்து ஞான ஒளியாக மாறுகிறது. மகாபாரதத்தை உலகுக்கு அளித்ததன் மூலம் இதை செய்தவர் வியாசர். அதனால் அவரை வணங்க வேண்டும். வேதத்தை தொகுத்து அளித்ததனால் வேத வியாசர எனப்படும் இவரை நினைவுகூருவதே குரு பூர்ணிமா. அதனால்தான் இது வ்யாசபூர்ணிமா எனப்படுகிறது.

———-

ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே |

ஞான முத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருத  துஹே நம: ||–3-

ஆச்ரயித்தவர்களுக்கு கற்பகத்தருவைப்போல் வேண்டுவதையும் மேலும் அவர்க்கு நன்மை தரும் எல்லாவற்றையும் அளிக்கும், சாட்டைக்குச்சியையும் கடிவாளத்தையும் கையில் கொண்டு பார்த்தசாரதியாக , இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன், கீதை என்கிற பாலைக்கறந்து,அர்ஜுனனுக்கு உபதேசம் அளித்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.

—-

ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |

பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||-4-

உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.

பசு கன்றைப் பார்த்தால் எளிதில் பால் கறக்கும். அர்ஜுனன்தான் கன்று என்கிறார். அர்ஜூனன் அறிவுத்தாகம் எடுத்த மனிதன். ‘அதாதோ பிரம்ம ஜிக்ஞாசா,’ என்று பிரம்ம சூத்திரத்தில் கூறியபடி, யாருக்கு பிரம்மததைப்பற்றி அறிய வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதோ அவருக்குத்தான் அந்த ஞானத்தைப் பெற தகுதியுள்ளது. அர்ஜுனன் பரம் விசுவாசத்துடன் கேட்டதனால் அவனை பசுவின் கன்றாக உவமை கூறுகிறார்.

பாலைக் கறந்தபின் அது முழுவதும் கன்றுக்காக அல்லவே. உலகில் எல்லோருடைய உபயோகத்திற்காகவே அல்லவா? அதனால் ஸுதீ: நல்ல மதியுடையவர் இதை அனுபவிக்கிறார்கள் என்கிறார் . அருமையான உருவகம்.

ஸ்ரீ பகவத் கீதை பாலை ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு அளிக்கிறான் -உபநிஷத் பசு மாட்டு பாலை அர்ஜுனன் கன்றாக வியாஜ்யம்
-சர்வ உபநிஷத் காவ -கோபால நந்தன் இடைப்பிள்ளை -பார்த்தோ வத்ஸா —ஞானான் மோக்ஷம் -வேதாந்தம் –
கீதா ஸூ கீதா கர்த்தவ்ய -கிம் அந்யயைகி சாஸ்திரம் -இதை அறிந்தால் வேற வேண்டாம் –
ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் -திரு முகமே தாமரை

சேயன் –மாயன் அன்று ஓதிய வாக்கு -நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞாலத்து ஒரு மூர்த்தி –
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையும் விசதமாக்கி காட்டி அருளும் –
தத்வ த்ரயம் -ஒவ் ஒன்றை பிரதானம் -கொண்டு –தத்வ ஹித புருஷார்த்தம் -ஹரி நாராயண ஸ்ம்ருதி –
ஆலோக்ய சர்வ சாஸ்த்ராணி விசார புன புன –ஹரி ஒன்றே தத்வம்

——–

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |

தேவகீ பரமா நந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||–5-

இந்த ஸ்லோகம் கீதாசார்யனின் நிஜ ஸ்வரூபத்தை விளக்கும் ஒன்று.

வசுதேவரின் மகன் ஆனால் தேவன். அதாவது பகவானே கிருஷ்ணனாக அவதரித்தான் என்பதை சுட்டுகிறது. . கம்சன் சாணூரன் இவர்களை அழித்தவன்., இது அவன் அவதார நோக்கமான துஷ்டசம்ஹாரம். தேவகியின் பரமானந்தத்திற்குக் காரணம் ஆனவன். இது அவன் பால லீலைகளால் தேவகிக்கு மட்டும் அல்ல யசோதைக்கும் மற்றும் எல்லோருக்கும் இந்த உலகத்துக்குமே ஆனந்தத்தை கொடுத்தது. கடைசியில் ஜகத்குருவான க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன் என்று அவன் யார் என்பதை காட்டுகிறார்.

ஜகத்குரு . முதலில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தவரான பரம்பொருள். இங்கு கீதாசார்யனாக உலகுக்கு உபதேசம் செய்கிறார்.

——

பீஷ்மத்ரோண தடா ,ஜயத்ரத ஜலா ,காந்தார நீலோத்பலா |

ஶல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ , கர்ணேன வேலாகுலா||

அஶ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனாவர்தினீ ,

ஸோத்தீர்ணா கலு பாண்டவைர் ரண நதீ, கைவர்தகே கேஶவே ||-6-

பூபாரம் தீர்க்க வந்தவர் கிருஷ்ணன். அதன் விளைவு மகாபாரதப்போர் . இந்த ச்லோகம் ஒரு அதிசய உருவகத்தின் மூலம் அதை வர்ணிக்கிறது.

இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப்படுகிறது. இதில் பீஷ்மரும் துரோணரும் கரைகள். கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதால். ஜெயத்ரதன் கௌரவரின் ஒரே சஹோதரியின் கணவன். இவன்தான் அபிமன்யுவின் வதத்திற்கு மூல காரணம்.அவனை நதியின் நீர் என்று கூறுகிறார்.

சகுனி நீலதாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும்.சல்லியன் முதலையாகவும் கிருபர் நதியின் வேகமாகவும் கர்ணன் அந்த நதியின் அலை போலவும் அஸ்வத்தாமன விகர்ணன் இவர்கள் சுறாமீன்கள் எனவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

துரியோதனன் நீர்ச்சுழலுக்கு ஒப்பானவன் ஏனென்றால் அவன்தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக்கொண்டு அழிக்கிறான். அப்படிப்பட்ட ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

கேசவன் என்ற சொல்லின் பொருள் மும்மூர்த்திகளையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்பது. அதுவே அழகிய கேசங்கள் உடைய கண்ணனாக வந்து பாண்டவர்களுக்குதவியது. பவசாகரம் கடக்கவே உதவும் பகவான் யுத்தமாகிய ரண நதியைக் கடக்க உதவியதில் என்ன ஆச்சரியம்!

—-

பாராஶார்ய வச: ஸரோஜமமலம்  கீதார்த கந்தோத்கடம் | நானாக்யானக கேஸரம் ஹரிகதா ஸம்போதனா போதிதம் ||

லோகே ஸஜ்ஜன ஷட்பதைரஹரஹ: பேபீயமானம் முதா |

பூயாத் பாரத பங்கஜம் கலிமல ப்ரத்வம்ஸி ந: ஶ்ரேயஸே ||

அடுத்து ஒரு அழகான உருவகம். மகாபாரதம் ஒரு மலர்ந்த தாமரையாக சித்தரிக்கப்படுகிறது. அது வியாசரின் வாக்கென்ற ஏரியில் மலர்ந்திருக்கிறது. அதிலிருந்து கீர்த்தி என்னும் நறுமணம் வீசுகிறது. பலப்பல கதைகள் அதன் கேசரங்கள். ஹரியின் கதை என்ற சூரியனால் முழுவதும் மலர்ந்துள்ளது. இந்த தாமரையின் தேனை அடிக்கடி மகிழ்ந்து பருகும் வண்டுகள் நல்லோராவர். இது கலியின் தீமைகளைப் போக்கி நன்மை விளைவிக்கும்.

—-

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |

யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் ||

யாருடைய கருணை ஊமையை பேச்சாளனாக்கி முடவனுக்கு மலை ஏறும் திறன் அளிக்குமோ அந்த பரமானந்தசாகரம் ஆகிய மாதவனை வணங்குகிறேன். மாதவன் என்றால் மாயா: தவ: (மா என்றால் லக்ஷ்மி) லக்ஷ்மி பதி என்று பொருள்,. தாயாரின் கருணை ஊமையை பேசவைக்கும்குருடனைக் காணவைக்கும் முடவனை ஓட வைக்கும் அல்லவா? அவளை ஹ்ருதயத்தில் வைத்த பகவானின் கிருபை அதனால் மிகப்பெரிது.

—-

யம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை: | வேதை: ஸாங்கபத க்ரமோபனிஷதை: காயந்தி யம் ஸாமகா: | த்யானாவஸ்திதேன மனஸா பஶ்யந்தி யம் யோகினோ | யஸயாந்தம் ந விது: ஸுராஸுர கணா: தேவாய தஸ்மை நம: ||

இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணனை பரப்ரம்மமாகவே வந்தனைசெலுத்துகிறார். பிரம்ம ருத்ரன் வருணன் இந்திரன் வாயு முதலியோர் யாரை திவ்ய ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ., சாம வேத கானம் செய்வோர் வேதாங்கங்கள் , உபநிஷத் இவைகளுடன் கூடிய வேதத்தால் கானம் செய்கிறார்களோ , யோகிகள் த்யானத்தின் மூலம் ஒருமுகப்பட்ட மனதால் யாரைப் பார்க்கிறார்களோ எவருடைய ஆதியும் அந்தமும் தேவர்களும் அசுரர்களும் அறியார்களோ, அந்த பகவானுக்கு நமஸ்காரம்.

—————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கோயில் திருவாய்மொழி

October 9, 2023

பக்தாம்ருதம் விஶ்வஜநாநுமோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீஶடகோபவாங்மயம் |
ஸஹஸ்ரஶாகோபநிஷத்ஸமாகமம் நமாம்யஹம் த்ராவிட வேதஸாகரம் ||

எம்பெருமானின் பக்தர்களுக்கு அமுதம் போன்றிருக்கும், எல்லோருக்கும் ஆனந்தத்தைக் கொடுக்ககூடியதும், எல்லா அர்த்தங்களையும் காட்டகூடியதும், ஸ்ரீ சடகோபரின் திருவாக்கிலே உதித்ததும், ஆயிரம் சாகைகளையுடைய ஸாம வேதமாய், அதன் ஸாரமான சாந்தோக்ய உபநிஷத்தாய் இருக்கும், தமிழ் வேதக் கடலான திருவாய்மொழியை நான் வணங்குகிறேன்.

திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்
மருவினிய வண்பொருநலென்றும் அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே ஏப்பொழுதும்

சிந்தியாய் நெஞ்சே தெளிந்து

நெஞ்சே! திருவழுதி நாடு என்கிற ப்ராந்தியத்தை நினைத்தும், அதனுள் இருக்கும் அழகிய திருக்குருகூர் என்ற திவ்யதேசத்தை நினைத்தும், அனைவரும் விரும்பும்படி இனிமையாய் இருக்கும் தாமிரபரணி ஆற்றை நினைத்தும், பெறுதற்கரிய வேதங்களை அந்தாதி க்ரமத்தில் திருவாய்மொழியாகப் பாடின ஆழ்வாரின் இரண்டு திருவடிகளை எப்பொழுதும் தெளிவுடன் சிந்திப்பாயாக.

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரையல்லாது இறைஞ்சேன் தனத்தாலும்
ஏதும் குறைவிலேன்
எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று

என்னுடைய மனத்தாலும் வாக்காலும் வள்ளல் தன்மையுடைய திருக்குருகூரை ஆதரிக்கும் கோஷ்டியில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களை வணங்கமாட்டேன். கைங்கர்யச் செல்வத்திலும் எவ்விதமான குறையும் என்னிடத்தில் இல்லை. ஏனெனில் என்னுடைய ஸ்வாமியான நம்மாழ்வாரின் திருவடிகள் நம்முடைய பற்றுக்கோலாக இருப்பதால்.

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெருஞ்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம்தரிக்கும்

பேராத உள்ளம் பெற

குற்றமில்லாத சிறந்த குணங்களால் நிறைந்து இருப்பவரான நம்மாழ்வார் அருளிச்செய்த நேர்மை மிகுந்த தமிழ் வேதத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி கொண்டதாய் வேறொரு விஷயத்தில் செல்லாத நெஞ்சை அடைவதற்காக தகுதியான பெரிய புகழையுடைய எம்பெருமானாரின் பொருத்தமான திருவடித்தாமரைகளை வணங்குகிறேன்.

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வன்புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் 
மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமானுசன்

ஆகாசத்தளுவும் வளர்ந்திருக்கும் மரங்களையுடைய சோலைகளையும் ஏழு மதிள் சுற்றுக்களையும் உடைய திருவரங்கத்தில் சயனித்திருக்கும் பெரிய பெருமாளின் திருக்கல்யாண குணங்கள் விஷயமாக அமைந்த தமிழ் வேதமான ஆயிரம் பாசுரங்களையும் முதலிலே பெற்றெடுத்த தாய் நம்மாழ்வார், மிடுக்குடன் அதனை வளர்த்த, அதன் நன்மையைப் பார்க்கும் இரண்டாம் தாய், எம்பெருமானார்.

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் 
வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்தியல்

ஆழ்வார் திருநகரியில் இருப்பவர்களுக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த வீணையின் இசை போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள் மிகவும் உயர்ந்தவனான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் தன்மையையும், நித்யமாக இருக்கும் ஜீவாத்மாவின் தன்மையையும், ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த உபாயத்தின் தன்மையையும், அந்த எம்பெருமானை அடைந்து அனுபவிக்கும் நிலைக்கு விரோதியாய்ச் சேர்ந்து இருக்கும் முன்னை வினைகளின் தன்மையையும், வாழ்வாகிற உயர்ந்த புருஷார்த்தத்தின் தன்மையும் விளக்கிக் கூறும்.

ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் எல்லாரையும் விட உயர்ந்தவன், அனைத்துக் கல்யாண குணங்களையும் உடையவன், திருமேனியை உடையவன், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஸம்ஸாரம் ஆகிய இரு உலகங்களுக்கும் தலைவன், வேதத்தாலே முழுவதுமாகக் காட்டப்பட்டவன், எல்லாவிடத்திலும் வ்யாபித்திருப்பவன், எல்லாரையும் நியமிப்பவன், சேதனர்களுக்கும் அசேதனப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் இருந்து அவர்களை முழுவதுமாக ஆள்பவன் ஆகிய விஷயங்களை எடுத்துச் சொல்லி அப்படிப்பட்ட எம்பெருமான் தனக்கு மயர்வற மதிநலம் அருளியதை நினைத்து மகிழ்கிறார் இப்பதிகத்தில்.

திருவாய்மொழிக்கு இந்தப் பதிகம் சுருக்கம். இந்தப் பதிகத்துக்கு முதல் மூன்று பாசுரங்கள் சுருக்கம். முதல் மூன்று பாசுரங்களுக்கு முதல் பாசுரம் சுருக்கம். முதல் பாசுரத்துக்கு முதல் வரி சுருக்கம் என்பர் பெரியோர்.

முதல் பாசுரம். எம்பெருமானின் பரத்வத்தைக் காட்டும் கல்யாண குணங்களுடன் கூடியிருப்பதையும், தன் விஷயத்தில் காரணமில்லாமல் அவன் செய்த நன்மையும், நித்யஸூரிகளை ஆள்வதையும், அழகிய திருமேனியுடன் இருப்பதையும் அனுபவித்து அப்படிப்பட்ட எம்பெருமானின் திருவடிகளில் தொண்டு செய் என்று தன் நெஞ்சுக்குச் சொல்லுகிறார்.

உயர்வற உயர் நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

மற்ற உயர்த்திகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்யுமளவுக்கு உயர்ந்ததான ஆனந்தம் முதலிய கல்யாண குணங்களையுடையவன். சாஸ்த்ரத்தில் பரதெய்வமாகக் காட்டப்பட்ட அவன் என்னுடைய அறியாமை முழுவதும் அழியும்படி இயற்கையான ஞானம் மற்றும் ப்ரேமத்தை எனக்கு அருளினான். அவன் மறதி போன்ற குறைகள் இல்லாத நித்யஸூரிகளுக்குத் தலைவனானவன். நம் துயர் போகும்படி அவனுடைய மிகவும் ஒளிவிடக்கூடிய திருவடிகளைக் குறித்துத் தொண்டு செய்து, என் மனஸ்ஸே! உஜ்ஜீவனத்தைப் பெற்று எழு.

இரண்டாம் பாசுரம். “யவன்” என்று சொன்ன எம்பெருமானின் ஸ்வரூபத்தினுடைய தனித்துவம் வாய்ந்த பெருமையை அருளிச்செய்கிறார்.

மனனகமலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர்வளவிலன் பொறியுணர்வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனிலன் எனனுயிர் மிகு நரையிலனே

மனஸ்ஸிலிருந்து மலமான காமம் க்ரோதம் முதலியவை கழிய, அதனால் மலர்ந்து மேலே வளரக்கூடியதான ஞானத்தாலே அளவிடமுடியாத நிலையிலும் ஆத்மாவைவிட உயர்ந்தவனாக இருப்பவனாய், வெளிப் புலன்களுக்கு விஷயமான அசித்தைவிட உயர்ந்தவனாய், இப்படி சேதனாசேதனங்களை விட உயர்ந்தவனாய், ஞானம் மற்றும் ஆனந்தத்தை அடையாளமாக உடையவனாய், எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் இறந்தகாலத்திலும் தனக்கு ஒப்பாகவோ, தன்னைவிட உயர்ந்தோ வேறொன்று இல்லாதவன் எனக்கு உயிராக இருக்கிறான். “அவன் துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே” என்று எல்லாப் பாசுரங்களிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாம் பாசுரம். எம்பெருமானின் லீலாவிபூதியுடன் கூடியிருக்கும் தன்மையைக்காட்டி அவன் எல்லாப் பொருள்களிலும் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதைக் காட்டுகிறார்.

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே

“இந்தப் பொருள் அவனிடத்தில் இல்லை, இந்தப் பொருள் உள்ளது” என்று சில பொருள்களிலும் மட்டும் அளவிட்டு நினைக்க முடியாதவனாய், பூமியிலும், மேலுலகத்திலும் இருப்பவனாய், உருவத்துடன் இருக்கும் அசித்தையும் உருவம் இல்லாத ஆத்மாவையும் தனக்கு சரீரமாக உடையவனாய், இப்படிக் கண்ணுக்குப் புலப்படும் பொருள்களுள் கலந்து நிற்கும்பொழுதே அவற்றின் தன்மை (குறைகள்) தனக்கு இல்லாதவனாய், ஒன்றொழியாமல் எல்லாவற்றிலும் வ்யாபித்திருப்பவனாய், முன்பு சொன்ன கல்யாணகுணங்களுடன் கூடியிருப்பவனாய், தனித்துவம் வாய்ந்தவனை நாம் அணுகப் பெற்றோம்.

நான்காம் பாசுரம். எல்லாப் பொருள்களினுடைய ஸ்வரூபம் எம்பெருமானின் அதீனத்தில் உள்ளது என்று ஸாமாநாதிகரண்யத்தாலே அருளிச்செய்கிறார்.

குறிப்பு – ஸாமாநாதிகரண்யம் என்பது வேறுபட்ட பல தன்மைகள் ஒரே பொருளை ஆதாரமாகக் கொண்டு இருப்பது. ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் என்றும் விளக்கப்படும்.

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு இவை
ஆம் அவை ஆய் அவை ஆய் நின்ற அவரே

(மேலே காட்டப்படும் பல விதமான வஸ்துக்களைப் பார்க்கும்) தாமும், தூரத்தில் இருப்பவனும், அருகில் இருப்பவனும், நடுவில் இருப்பவனும், தூரத்தில் இருப்பவளும், அருகில் இருப்பவளும், நடுவில் இருப்பவளும், எவள் என்று கேட்கப்படுபவளும், கௌரவம் உடையவரும், அவர்களில் தூரத்தில் இருப்பவரும், அருகில் இருப்பவரும், நடுவில் இருப்பவரும், தூரத்தில், அருகில் மற்றும் நடுவில் இருக்கும் அஃறிணைப் பொருளும், எது என்று கேட்கப்படும் பொருளும், அழியக்கூடிய தாழ்ந்த பொருள்களும், தூரத்தில், அருகில், நடுவில் இருக்கும் பொருள்களும், உயர்ந்த மற்றும் தாழ்ந்த தர்மங்களும், வரப்போகும் மற்றும் வந்திருக்கும் எல்லாப் பொருள்களுமாய் தாமேயாய் நின்ற எம்பெருமான் இவற்றை எல்லாம் தன் அதீனத்தில் வைத்துள்ளான்.

ஐந்தாம் பாசுரம். ரக்ஷண ரூபத்தில் இருக்கும் ஸ்திதி எம்பெருமானின் அதீனத்தில் உள்ளது என்று வையதிகரண்யத்தாலே அருளிச்செய்கிறார்.

குறிப்பு – வையதிகரண்யம் என்பது இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட பொருள்கள் வேறுபட்ட ஆதாரங்களைக்கொண்டு இருப்பது. இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட சொற்கள் வேறுபட்ட பொருள்களைக் குறிக்கும் என்றும் விளக்கப்படும்.

அவரவர் தமதமது அறிவறி வகை வகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே

வேறு வேறு ப்ரயோஜனங்களுக்காக அதிகாரிகள் (வேறு வேறு தகுதியுடையவர்கள்) தங்கள் அறிவின் வகையாலே தங்களுடைய ருசிக்கு ஏற்ற தேவதைகளைப் பலனைக் கொடுக்கும் தலைவர்களாகக் கருதி அடைவார்கள். அந்த தேவதைகள் பலம் கொடுக்கும் தலைவராக எந்தத் தடையுமில்லை. எல்லாருக்கும் ஸ்வாமியான எம்பெருமான் அந்த அந்த அதிகாரிகள் தங்களின் விதிப்படி பலனை அடையும்படி அந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக நின்றான்.

ஆறாம் பாசுரம். எல்லா ப்ரவ்ருத்தி (செயல்பாடு), நிவ்ருத்திகளும் (செயல்படாமல் இருப்பது) எம்பெருமானின் அதீனத்தில் உள்ளன என்று ஸாமானாதிகரண்யாத்தாலே அருளிச்செய்கிறார்.

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றுமொரியல்வினர் என நினைவரியவர்
என்றுமொரியல்வொடு நின்ற எம் திடரே

நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் ஆகிய ப்ரவ்ருத்திகளுக்கு இருப்பிடமான பொருள்களும், நிவ்ருத்திக்கு இருப்பிடமான பொருள்களுமாய், இதனாலே, என்றும் ஒரு குறிப்பிட்ட தன்மையை உடையவர் என்று நினைக்க முடியாதவனாய் இருப்பான் எம்பெருமான். எல்லாப் பொருள்களிலும் இருந்து வேறுபட்டவன். வேதம் என்ற உறுதியான ப்ரமாணத்தாலே அறியப்படுபவன்.

ஏழாம் பாசுரம். இந்த ஸாமானாதிகரண்யம், சரீராத்மபாவ ஸம்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்.

திடவிசும்பு எரி வளி நீர் நிலம்  இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்
உடல்மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள்  இவை உண்ட சுரனே

நிலையாக நிற்கும் ஆகாசமும் அக்னியும் வாயுவும் நீரும் பூமியும், இவைகளை இருப்பிடமாகக் கொண்டு பரந்த எல்லாப் பொருள்களும் தான் என்று சொல்லும்படி அவைகளுக்கு உபாதான காரணமாய், அவை எல்லாவற்றிலும் சரீரத்தில் ஆத்மா வ்யாபித்து இருப்பதைப் போலே, மறைந்து வ்யாபித்து இருக்கிறான். ஒளி மிகுந்து இருக்கும் வேதத்தின் உட்பொருளாகத் தோற்றுபவன் ப்ரளயம் வரும்பொழுது இவை எல்லாவற்றையும் விழுங்கிய “சுரன்” (தேவன்).

எட்டாம் பாசுரம். வ்யஷ்டி ஸ்ருஷ்டி (அண்டத்துக்குள் பல வகையாகக் காணப்படும் பொருள்களைப் படைத்தல்) மற்றும் வ்யஷ்டி ஸம்ஹாரத்தைச் செய்யும் ப்ரஹ்மா மற்றும் ருத்ரனும் எம்பெருமானுக்கு அதீனப்பட்டவர்கள் என்கிறார்.

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய அவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்றெரித்து  அமரர்க்கும் அறிவு இயந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே

தேவர்களான ப்ரஹ்மா முதலியவர்களுக்கும் அறியமுடியாத நிலையையுடைத்தான ஆகாசம் முதலான ஸமஷ்டிரூபத்தில் (பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் இருக்கும்) எல்லாப் பொருள்களுக்கும் பெரிய காரணமாய் அவற்றை முழுவதுமாக உண்டு அழிப்பதாலே பரர்களான (பெரியவர்களான) ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களுக்கும் பரனானவன் எம்பெருமான். அந்த எம்பெருமான், ருத்ரன் என்றும் ப்ரஹ்மா என்றும் ப்ரஸித்தராய் தனித்துவம் வாய்ந்த மூன்று நகரங்களை எரித்தும், தேவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்தும், அண்டத்துக்குள் இருக்கும் உலகங்களை அழித்தும் அவற்றை ஸ்ருஷ்டித்தும், அவர்களுக்குள்ளே அந்தாராத்மாவாக உள்ளான்.

ஒன்பதாம் பாசுரம். ஈச்வரனை ஒத்துக்கொள்ளாத வேத பாஹ்யர்களில் (வேதத்தை ஒத்துக் கொள்ளாதவர்) முதலில் கருதப்படுபவரான ஸர்வசூன்யவாதிகளான மாத்யமிக பௌத்தரை நிராகரிக்கிறார்.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே

நம்முடைய கருத்தால் ஈச்வரன் உளன் என்றாலும் பிறர் கருத்தால் ஈச்வரன் இலன் என்றாலும் உளன் என்ற விஷயத்தை ஒத்துக்கொண்டே பேசவேண்டும். உளன் என்றும் இலன் என்றும் சொல்லுகிற இவற்றை குணமாக உடையவனாகையாலே உருவத்துடனும் உருவம் இல்லாமலும் இவ்வுலகில் இருக்கும் பொருள்கள் தன்னை வெளிப்படுத்தும் மற்றும் மறைக்கும் இரண்டு நிலையில் இருக்கும் தன்மையோடு உளனாய் அவை எல்லாவற்றையும் வ்யாபித்து, அவற்றை விடாமல் இருப்பவன் இந்த எம்பெருமான்.

பத்தாம் பாசுரம். முன் பாசுரத்தில் சொன்ன எம்பெருமானின் வ்யாப்தியினுடைய ஸௌகர்யத்தை அருளிச்செய்கிறார்.

பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நில விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே

எம்பெருமான் எல்லாவிடமும் பரந்த குளிர்ந்த காரணஜலமான ஏகார்ணவத்தில் ஒவ்வொரு அணுவிலும் பெரிய இடமுடைய இந்த அண்டத்தில் இருப்பதுபோல சுருக்கம் இல்லாமல் இருக்கிறான். பூமியிலும், மேலுலகங்களிலும் ஒன்றுவிடாமல் மிக நுண்ணியதாய் மிகச்சிறிய இடங்கள்தோறும் இந்த இடங்களில் தானே ஒளிவிடக்கூடிய ஆத்மாக்கள்தோறும் மறைந்து எல்லாவிடத்திலும் வ்யாப்தனாயிருப்பவன், இந்தப் பொருள்களை ஸம்ஹார நிலையிலும் தனக்குள்ளே அடக்கிவைத்துக் கொண்டு தான் ஸ்திரமாய் இருந்தவன்.

பதினொன்றாம் பாசுரம். இதுவரை விளக்கிய பர்த்வத்தை சுருங்கச் சொல்லி இத்திருவாய்மொழிக்குப் பலம் மோக்ஷமாக அருளிச்செய்கிறார்.

கர விசும்பு  எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல்வலி யளி பொறை யாய் நின்ற
பரன் அடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே

மறைந்து இருக்கும் ஆகாசம், அக்னி, வாயு, ஜலம், பூமி ஆகிய இவற்றை இருப்பிடமாகக்கொண்ட, மேலும் இவற்றுக்குத் தன்மைகளாக உள்ள உயர்ந்ததான சப்தம், எரிக்கும் தன்மை, வலிமை, குளிர்த்தி, பொறுமை ஆகிய இந்தப் பொருள்களும் அவற்றின் தன்மைகளும் எல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி (சரீரமாம்படி) நின்ற ஸர்வேச்வரனுடைய திருவடி விஷயமாக, திருநகரியைப் பிறப்பிடமாக உடையராய், எதிர்வாதம் செய்பவர்களை வெல்லும் தன்மையையுடையவரான ஆழ்வார் அருளிச்செய்ததாய் பொருத்தமாக நிறைந்திருக்கும் ஆயிரம் பாசுரங்களுக்குள், இந்தப் பதிகம், எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்பட்டன. இவை மோக்ஷத்தை அளிக்ககூடியவை.

எம்பெருமானின் பரத்வத்தை முழுவதுமாக அனுபவித்த பின்பு, ஆழ்வார் அந்த எம்பெருமானை அடைவதற்கு வழியை இந்தப் பதிகத்தில் மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார். தாம் அனுபவித்த விஷயம் மிக உயர்ந்ததாக இருக்க, இதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்து இங்கிருக்கும் ஸம்ஸாரிகளைப் பார்க்க, அவர்கள் உலக விஷயத்திலேயே மண்டிக் கிடந்தார்கள். தன் பெருங்கருணையாலே அவர்களுக்கும் நன்மை செய்வோம் என்று பார்த்து அவர்களுக்கு மற்ற விஷயங்களில் ஆசையைவிட்டு பகவத் விஷயத்தில் பக்தி செய்யுங்கள் என்று உபதேசம் செய்கிறார்.

முதல் பாசுரம். மற்ற விஷயங்களை விட்டு எம்பெருமானைப் பற்றப் பாருங்கள் என்கிறார்.

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடு உடையான் இடை வீடு செய்ம்மினே

எம்பெருமானை வழிபடுவதற்கு விரோதியான எல்லாவற்றையும் அடியோடு விடுங்கள். அவற்றை விட்டு, உம்முடைய ஆத்மாவை மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய எம்பெருமான் விஷயத்திலே ஸமர்ப்பியுங்கள்.

இரண்டாம் பாசுரம். மற்ற விஷயங்களை விடுவதை எளிமைப்படுத்துவதற்காக, அவற்றின் நிரந்தரமில்லாத தன்மையை விளக்குகிறார்.

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே

ஆத்மா விரும்பி எடுத்துக் கொண்ட சரீரங்கள் மின்னலைக்காட்டிலும் நிலையற்ற தன்மையுடன் இருக்கும் என்று சொல்லப்படுவதால் நீங்கள் எம்பெருமானைப் பற்றிச் சிந்தியுங்கள்.

மூன்றாம் பாசுரம். எப்படி விடுவது என்பதைச் சுருக்கமாக விளக்குகிறார்.

நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே

ஆத்மா மற்றும் அதன் உடைமைகளில் இருக்கும் அஹங்காரம் மற்றும் மமகாரம் ஆகிய இவற்றை ருசி மற்றும் வாஸனைகளாகிற வேரோடே அறுத்து எம்பெருமானைச் சேருங்கள். ஆத்மாவுக்கு இதையொத்த நிறைவு வேறில்லை.

நான்காம் பாசுரம். இப்படி மற்ற விஷயங்களை விட்டு பற்றப்படும் எம்பெருமானின் பெருமையை அருளிச்செய்கிறார்.

இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு
எல்லையில் அந்நலம் புல்கு  பற்று அற்றே

அசித்தைப்போலவும் சித்தைப்போலவும் இல்லாத அவனுடைய ஸ்வரூபமானது எல்லையில்லாத ஆனந்தத்தை வடிவாகக் கொண்டிருக்கும். ஆகையால் மற்ற விஷயங்களில் பற்றை விட்டு, எம்பெருமானை ஆசையுடன் பற்று.

ஐந்தாம் பாசுரம். வணங்கப்படும் எம்பெருமான் மிகவும் உயர்ந்த புருஷார்த்தமாக இருப்பதை அருளிச்செய்கிறார்.

அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்று இறை பற்றே

மற்ற விஷயங்களில் பற்று விடப்பட்டவுடனே ஆத்மா கைவல்ய மோக்ஷத்தைப் பெற்றதாகும். அந்த எண்ணத்தையும் விட்டு பகவத் விஷயத்தைப் பற்றப் பார்க்கில் மற்ற விஷயங்களில் ஆசையை விட்டு ஈச்வரனைப் பற்று.

ஆறாம் பாசுரம். வணங்கப்படும் எம்பெருமான் எல்லோரிடமும் ஸமமாக இருப்பதை அருளிச்செய்கிறார்.

பற்று இலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்று இலை ஆய் அவன் முற்றில் அடங்கே

ஸர்வேச்வரனாக இருந்தும் தன் விருப்பத்துக்கு விஷயமானவர்களில் பற்றைவிட்டு நம் விஷயத்தில் முழுவதுமாக ஈடுபட்டு நின்றான். நீயும் ஸம்ஸார ஸங்கத்தை விட்டு அவனுடைய எல்லா விஷயங்களிலும் முழுகப்பார்.

ஏழாம் பாசுரம். அவனுடைய மிகப் பெரிய விபூதியைப் பார்த்து அஞ்சி விலகாமல், அவனுக்கு அத்தோடு உண்டான ஸம்பந்தத்தை நினைத்து அதனுள்ளே புகுவதற்கு முயற்சி செய் என்கிறார்.

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில்   அஃதென்று  அடங்குக உள்ளே

மிகவும் அழகியதான செல்வத்தை ஒன்றுவிடாமல் பார்த்து “ஈச்வரனுக்கு அது மிகவும் அழகான, பெருமையைக் கொடுக்கும் சேஷமாயிருக்கும்” என்று உணர்ந்து அதினுள்ளே மூழ்க முயற்சி செய்.

எட்டாம் பாசுரம். எப்படி வணங்குவது என்பதை அருளிச்செய்கிறார்.

உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே

மனஸ்ஸும் வாக்கும் உடம்பும் நமக்கு முதலிலேயே இருப்பதாய், இருக்கும் இம்மூன்றையும், இவற்றின் ப்ரயோஜனத்தை ஆராய்ந்தறிந்து, மற்ற விஷயத்தில் இருந்து விலக்கி, எம்பெருமானாகிய வகுத்த விஷயத்தில் பரதந்த்ரனாய் ஒதுங்கு.

ஒன்பதாம் பாசுரம். எம்பெருமானை வணங்குவதால் ஏற்படும் விரோதி நிவ்ருத்தியை அருளிச்செய்கிறார்.

ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே

எம்பெருமானிடத்திலே மூழ்கவே ஆத்மாவின் ஞானம் முதலியவைகளின் சுருக்கமும், அவித்யை முதலியவைகள் எல்லாம் விட்டுக் கழியும். பின்னையும் இந்த உடலின் முடிவை எதிர்பார்த்திரு.

பத்தாம் பாசுரம். எம்பெருமானின் ப்ராப்யத்வ பூர்த்தியை அருளிச்செய்கிறார்.

எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே

கணக்கற்றதாய் ஆனந்தம் முதலிய குணங்களையுடைய ஆத்மாக்கள் மற்றும், எல்லையில்லாத கல்யாண குணங்களையுடைய நாராயணனின் உறுதியான திருவடிகளைச் சென்று சேர்.

பதினொன்றாம் பாசுரம். இந்தப் பதிகம் எவ்வளவு முக்யமாகக் கைக்கொள்ளத்தக்கது என்பதை பலமாக அருளிச்செய்கிறார்.

சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து ஓர்த்த இப் பத்தே

சேர்ந்திருக்கும் தடாகங்களையுடைய அழகிய திருநகரியில் நம்மாழ்வார் அருளிச்செய்த முறையான சீர்களின் (பா)மாலையையுடைய ஆயிரம் பாசுரங்களிலும், இத்திருவாய்மொழி உயர்ந்ததாக நிரூபிக்கப்பட்டன.

ஆழ்வார், எம்பெருமான் உகந்த கைங்கர்யத்தை ஆசைப்பட எம்பெருமானும் தெற்குத் திருமலை என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை ஸ்தலத்தை எண்ணித் தான் அங்கே இருக்கும் இருப்பை ஆழ்வாருக்குக் காட்டிக் கொடுத்து “நாம் உமக்காக இங்கே வந்துள்ளோம், நீர் இங்கே வந்து எல்லா விதமான கைங்கர்யங்களிலும் ஈடுபடலாம்” என்று சொல்ல, ஆழ்வாரும் திருமலையை முழுவதுமாக அனுபவித்து இனியராகிறார்.

முதல் பாசுரம். மிகவும் ஒளிவிடும் ஸர்வேச்வரன் விரும்பிய திருமலையே நமக்குக் குறிக்கோள் என்கிறார்.

கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
வளரொளி மாயோன் மருவிய கோயில்
வளரிளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே

கிளர்ந்து வருகிற ஞான ஒளிக்கு யோக்யதை உண்டான இளமையானது கெடுவதற்கு முன்னே வளர்ந்து வருகிற குண ஒளியையுடைய ஆச்சர்ய ரூபனான ஸர்வேச்வரன் பொருந்தி வாழ்கிற திவ்யஸ்தானமாய் வளர்ந்திருந்தாலும் இளமையாக இருக்கும் பொழில்களாலே சூழப்பட்டு அதனாலே மாலிருஞ்சோலை என்று திருநாமம் கொண்ட திருமலையை வேறு ப்ரயோஜனங்களை எதிர்பார்க்கும் தளர்த்தி இல்லாமல் அடைவதுவே சிறந்தது.

இரண்டாம் பாசுரம். அழகருடைய திருமலையோடு சேர்ந்து இருக்கும் திவ்யதேசத்தைக் கொண்டாடுவதே குறிக்கோள் என்கிறார்.

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை
பதி அது ஏத்தி எழுவது பயனே

ஸாமர்த்யம் மற்றும் இளமை ஆகியவற்றை உடைய ஸ்த்ரீகளுடைய தாழ்ந்ததான காமச்சொற்கள் மற்றும் செயல்களை ஆசைப்படாமல் முழங்குகிற ஸ்ரீபாஞ்சஜன்யத்தை உடையவராகையாலே மிகவும் அழகாக இருக்கும் அழகருக்கு தனித்துவம் வாய்ந்த ஸ்தானமாய் சந்த்ரனானவன் தவழும்படி ஓங்கின சிகரங்களைக் கொண்ட திருமலையில் இருக்கும் ப்ரஸித்தமான திவ்யதேசத்தை ஸ்தோத்ரம் பண்ணி வாழ்ச்சிபெறுவதே குறிக்கோள்.

மூன்றாம் பாசுரம். பெரிய வள்ளல் தன்மையை உடைய எம்பெருமான் வாழ்கிற திருமலையோடு சேர்ந்த அருகாமை மலையை அடைவதே குறிக்கோள் என்கிறார்.

பயன் அல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
அயல் மலை  அடைவது அது கருமமே

நெஞ்சே! பயனற்ற செயலைச் செய்து ஒரு ப்ரயோஜனமும் இல்லை. தூறலும் துளியுமான காளமேகம்போலே ஸ்வபாவத்தையுடைய அழகர் எம்பெருமான் ஈடுபாடு கொண்டு நிரந்தரமாக வாழ்கிற ஸ்தானமாய், கண்டார் நெஞ்சு கலங்கும்படி அழகான பொழில் சூழ்ந்த திருமலைக்கு அருகில் இருக்கும் மலையை அடைவதுவே செய்ய வேண்டியது.

நான்காம் பாசுரம். நம்மைக் காக்கும் எம்பெருமான் வாழ்கிற பெரிய பொழில் சூழ்ந்த திருமலையை அடைவதுவே செய்யவேண்டியது என்கிறார்.

கருமவன் பாசம் கழித்து உழன்றுய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிருஞ்சோலை
திருமலை அதுவே அடைவது திறமே

கர்மங்களாகிற கழற்ற அரிய கயிறுகளைக் கழற்றி அடிமைசெய்து ஆத்மாக்கள் உஜ்ஜீவனம் அடையவே கோபர்கள்/கோபிகைகளின் துன்பம் தீரும்படி பெரிய மலையை எடுத்துக் காத்தவன் தன்னுடைய காப்பாளன் என்கிற பெருமை விளங்கும்படி வாழ்கிற ஸ்தானமாய் வருகிற மேகங்கள் தவழும்படி மிகவும் உயர்ந்து பரந்த சோலையையுடைத்தான திருமலையை அடைவதே செய்யவேண்டியது.

ஐந்தாம் பாசுரம். ரக்ஷிக்க உதவும் திருவாழியையுடைய எம்பெருமான் வாழ்கிற திருமலையின் சுற்றில் இருக்கும் மலையை அடைவது நல்ல வழி என்கிறார்.

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அறமுயல் ஆழிப் படை அவன் கோயில்
மறுவில் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை
புற மலை சாரப் போவது கிறியே

பல விதமான வலிமையினாலே கொடிய பாபங்களை வளர்த்துக் கொள்ளாமல் அடியார்களைக் காக்கும் தர்மத்தில் முயலும் திருவாழியை ஆயுதமாக உடையவனுடைய இருப்பிடமாய், வந்து அடைபவர்களுக்கு நன்மை செய்யும் களங்கம் இல்லாத சுனைகளாலே சூழப்பட்ட திருமலையின் சுற்றில் இருக்கும் மலைக்கு அருகே போவது நல்ல வழி.

ஆறாம் பாசுரம். அடியார்களிடத்திலே மிகுந்த அன்புகொண்ட எம்பெருமான் வாழ்கிற திருமலைக்குப் போகும் வழியை நினைப்பதே நன்மை என்கிறார்.

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை
நெறிபட அதுவே நினைவது நலமே

உலக விஷயங்களில் ஈடுபட நினைக்கும் தாழ்ச்சியைச் செய்யாமல் இதை நல்ல வழி என்று நினையுங்கள். ஏனெனில் உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுதுசெய்த க்ருஷ்ணனுடைய கோயிலாய், கன்றுகளோடேகூட மான்பேடைகள் சேருகிற திருமலையினுடைய வழியிலே இருக்கவேண்டும் என்கிற அதையே நினைக்கை நமக்கு ப்ரயோஜனம்.

ஏழாம் பாசுரம். ப்ரளய ஆபத்திலே நம்மைக் காக்கும் எம்பெருமான் வாழ்கிற திருமலை விஷயத்தில் செய்யும் அனுகூலமான செயல்களே சிறந்தது என்கிறார்.

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுனம் இடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதிசேர் மாலிருஞ்சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே

ஸம்ஸாரம் என்னும் நரகத்தில் அழுந்தாதே இதை உயர்ந்த குறிக்கோள் என்று எண்ணுங்கள். முற்காலத்திலே பூமியை இடந்தெடுத்தவன் நிரந்தரமாக வாழ்கிற கோயிலாய், களங்கமில்லாத சந்த்ரன் பொருந்தியிருக்கும் திருமலையை தலைவைன்/தொண்டன் என்ற க்ரமத்தில் அனுகூலமான செய்லகளைச் செய்து பொருந்துவதே உயர்ந்த ப்ரயோஜனம்.

எட்டாம் பாசுரம். அடியார்கள் விஷயத்தில் நன்மைகளைச் செய்யும் க்ருஷ்ணன் வாழ்கிற திருமலையிலே நிரந்தரமாக அனுகூலமான செயல்களைச் செய்வதே நம் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்தது என்கிறார்.

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே

அடியார்களுக்கு அடங்கி இருக்கும் அனுகூலமான செயலை பண்ணும் க்ருஷ்ணனான ஆச்சர்யபூதனுடைய கோயிலான, பரமபதத்தைச் சேர்ந்தவர்களும் அனுகூலமான செயல்களைச் செய்யும் திருமலையைக் குறித்து, வலிமையை உண்டாக்கி நிரந்தரமாக அந்த வலிமையை வேறு விஷயங்களில் செலவிட்டு வீணாக்காமல், ப்ரதக்ஷிணம் முதலிய அனுகூலமான செயல்களைச் செய்து, நிரந்தரமாகக் கூடி இருத்தலே ந்யாயம்.

ஒன்பதாம் பாசுரம். பூதனையைக் கொன்ற எம்பெருமான் வாழ்கிற திருமலையைத் தொழவேண்டும் என்கிற நினைவில் உறுதியே வெற்றிக்குக் காரணம் என்கிறார்.

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெரும் கோயில்
மழக்களிற்றினம் சேர் மாலிருஞ்சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே

மிகவும் வலிமையான பாபங்களிலே மூழ்காதே, இது ஸ்வரூபத்துக்குச் சேர்ந்தது என்று நினையுங்கள். பேயான பெண்ணை அழைத்தவன் பொருந்து வாழும் பெரிய கோயிலாய் ஆனைக்கன்றுகளின் கூட்டம் சேரும் திருமலையை தொழவேண்டும் என்கிற நினைவிலே உறுதியுடன் இருக்கையே ஸம்ஸாரத்தை வெல்வதற்கான வழி.

பத்தாம் பாசுரம். வேதத்தை சொல்லிக் கொடுத்து வளர்ப்பவனான எம்பெருமான் வாழ்கிற திருமலையில் புகுகிற இதுவே குறிக்கோள் என்று தொடங்கிய உபதேசத்தை முடித்தருளுகிறார்.

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிருஞ்சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே

எளிமையான வழி என்று நினைத்து களவாடுதல், பார்த்துக்கொண்டிருக்கும்போதே அபஹரித்தல் ஆகியவைகளைச் செய்யாமல் முற்காலத்தில் கீதோபதேசம் மூலமாக, வேதார்த்தத்தை விவரித்தவனான எம்பெருமான் விரும்பி வாழும் கோயிலாய், மென்மையை உடைய மயில்கள் சேர்ந்து வாழும் ஓங்கி, பரந்த சோலைகளில் பூவானது மலருகிற திருமலையிலே சென்று புகுவதே குறிக்கோள்.

பதினொன்றாம் பாசுரம். பகவானை அடைவதை இந்தப் பதிகத்துக்கு ப்ரயோஜனமாக அருளிச்செய்கிறார்.

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்து
அருள் உடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே

அடியார்களின் அனுகூலம் ப்ரயோஜனம் என்று இந்த உலகத்தைப் படைத்தவனுடைய தயை, க்ஷமை முதலிய குணங்களின் பெருமை விஷயமாக, அறியாமை சற்றும் இல்லாதவராய், உயர்ந்ததான ஆழ்வார்திருநகரிக்குத் தலைவராய், பெரிய வள்ளலான நம்மாழ்வார், உண்மை ஞானமானது ஆத்மாக்கள் பெறும்படி அருளிச்செய்த தனித்துவம் வாய்ந்த ஆயிரத்துள் இந்தப் பதிகமானது, ஸம்ஸாரத்தை அழித்து பரிபூர்ண க்ருபையையுடைய அழகருடைய திருவடிகளைப் பெற்றுக் கொடுக்கும்.

“தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வதற்குத் தடையாக இருக்கும் சரீரத்தைப் போக்கியருள வேண்டும்” என்று ஆழ்வார் எம்பெருமானிடம் வேண்ட, எம்பெருமானும் “உம்முடைய இந்த சரீரத்துடன் கைங்கர்யம் பெற்றுக் கொள்ளத்தான் வடக்குத் திருமலையில் வந்த சேவை சாதிக்கிறோம். ஆகையால் இங்கே வந்து நீர் நம்மை அனுபவிக்கலாம்” என்று சொல்ல, ஆழ்வார் மிகவும் மகிழ்ந்து, எம்பெருமானிடம் தனக்கு நிரந்தரமான கைங்கர்யத்தைத் தந்தருளுமாறு ப்ரார்த்திக்கிறார்.

முதல் பாசுரம். எல்லோருக்கும் தலைவனான திருவேங்கடமுடையானுக்கு எல்லா விதமான கைங்கர்யத்தையும் செய்ய வேண்டும் என்று தன் பந்துக்களுடன் சேர்ந்து ஆசைப்படுகிறார்.

ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டுநாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே

பெரிய ஆரவாரத்தை எழுப்பும் அருவியையுடைய திருவேங்கடமாகிற திருமலையில் இருப்பதாலே அழகையுடைத்தான ஒளிமயமான திருமேனியையுடைய நம்முடைய குலநாதனுக்கு நாம் ஒழிவில்லாத காலமெல்லாம் எல்லாவிடத்திலும் உடனிருந்து, எல்லா நிலைகளிலும் பிரியாமல் நின்று, ஒன்றும் நழுவாதபடி எல்லாக் கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும்.

இரண்டாம் பாசுரம். இப்படிப்பட்ட எல்லோரையும் விட உயர்ந்த தலைவனின் குணங்கள், திருமேனி ஆகியவற்றின் பெருமையை அருளிச்செய்கிறார்.

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து
அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே

நமது பரம்பரபரையில் முதல்வனாகத் திகழும் எம்பெருமான், பரமபதத்திலே வசிப்பவர்கள் தங்கள் தலைவரான சேனை முதலியாருடன், நிலத்தில் தூவின புஷ்பங்கள் மலரும்படியான திருமலையில் வாழ்வதாலே, முடிவில்லாத புகழை உடையவனாய் கறுத்த வடிவழகையுடைய தலைவனாக விளங்குகிறான்.

மூன்றாம் பாசுரம். இப்படி அழகிய திருமேனியை உடையவன் நித்யஸூரிகளால் வணங்கப்படுபவன் என்கிறார்.

அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் 
கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம்
தெண்ணிறைச் சுனை நீர்த் திருவேங்கடத்து
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே

திருமேனியைப் பார்த்தாலே ஸ்வாமி என்று தோற்றும்படியாய், ஆச்சர்யமான குணங்கள் மற்றும் சொத்துக்களை உடையவனாய், அழகை உடைய புண்டரீகாக்ஷனாய், சிவந்த கனி போன்ற திருப்பவளத்தை உடையவனாய் நீல ரத்னம் போலே ஒளிவிடும் திருமேனியை உடையவன். தெளிந்து ப்ரகாசமான நிறத்தையுடைய சுனைநீரைக் கொண்ட திருமலையிலே நிற்பதாலே கணக்கற்ற இயற்கையான குணத்தை உடையவனாய் பரமபதத்திலே வசிப்பவர்களுக்கு ஸ்வாமியானவன்.

நான்காம் பாசுரம். என்னைப் போன்ற தாழ்ந்தவனை ஏற்றுக்கொண்ட எம்பெருமானின் எளிமைக்கு முன்பு நித்யஸூரிகளால் வணங்கப்படுவது ஒரு பெருமையோ என்கிறார்.

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் 
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே

நித்யஸூரிகளுக்குத் தலைவன் என்று சொல்லுவேன். இப்படிச் சொன்னால், மிகவும் தாழ்ந்தவனாய், நல்ல குண பூர்த்தி இல்லாமல் இருக்கும் என்னிடத்தில் அன்பைவைத்து அதனாலே மிகவும் ஒளிபடைத்த திருமேனியையுடையவனான திருவேங்கடத்தானுக்கு அது ஒரு பெருமையோ?

ஐந்தாம் பாசுரம். எளிமையை உடையவன் என்று மட்டுமோ அவன் பெருமை? எளிமையுடன் மிகவும் இனிமையானவனுக்கு ஸர்வேச்வரன் என்பதனால் ஒரு பெருமையோ என்கிறார்.

சோதியாகி எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ
வேதியர் முழு வேதத்தமுதத்தைத்
தீதில் சீர்த் திருவேங்கடத்தானையே

வைதிகர்களுடைய எல்லா வேதங்களிலும் கொண்டாடப்பட்டபடி மிகவும் இனிமையை உடையவனாய் ஆள்பார்த்து அனுபவம் கொடுக்கும் தீமை இல்லாத எல்லாருக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் குணத்தை உடையவனான  ஒளிவிடும் திருவேங்கடமுடையானைக் கொண்டு எல்லாரும் தொழும்படி எல்லாருக்கும் காரணனான ஸர்வேச்வரன் என்றால் அது ஒரு பெருமையோ?

ஆறாம் பாசுரம். விரோதிகள் நீங்கி பகவானை அனுபவிப்பதற்குக் காரணமான எளிமையாக அடையும்படி இருப்பதை அருளிச்செய்கிறார்

வேங்கடங்கள் மெய்ம் மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்துறைவார்க்கு நமவென்னல்
ஆம் கடமை அது சுமந்தார்கட்கே

திருமலையிலே நிரந்தரமாக வாழும் ஸ்வாமிக்கு “நம:” என்று சொல்வதை தங்கள் தலையிலே சுமப்பவர்களுக்கு முற்காலத்தில் சேர்த்துவைத்த பாபங்கள் மற்றும் வருங்காலத்தில் வரும் பாபங்கள் ஆகிய இரண்டும் முழுவதுமாக எரிந்துபோய்விடும். இது ஸத்யம். அப்படி எம்பெருமானை அடைபவர்கள் தங்கள் ஸ்வரூபத்துக்கு இனிமையைக் கொடுக்கும் பகவானை அனுபவிப்பது போன்றவைகளையே செய்வார்கள்.

ஏழாம் பாசுரம். எம்பெருமானை அடைவதின் எல்லை நிலமாக அவன் நின்றருளின திருமலை தானே பரம ஸாம்யாபத்தியைத் தரும் என்று அருளிச்செய்கிறார்

சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்றெழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே

உயர்ந்ததான புஷ்பங்களையும் நல்ல நீரையும் சிறந்ததான தீபத்தையும் நல்ல தூபத்தையும் கையிலே ஆசையுடன் வைத்துக்கொண்டு வேறு ப்ரயோஜனங்களில் ஆசை இல்லாமல் நன்றாக அமர்ந்து, நித்யஸூரிகள், தங்கள் தலைவரான சேனைமுதலியாருடன் வணங்கி எழும்படி, திருவேங்கடம் என்ற திருநாமத்தை உடைய மிகவும் பரந்த திருமலை, நமக்கு பரம ஸாம்யாபத்தி மோக்ஷத்தைத் தானே தரும்.

எட்டாம் பாசுரம். இப்படிப்பட்ட திருமலையை அனுபவிக்க, ப்ராப்திக்குத் தடையாக இருப்பவை தானே அழிந்துவிடும் என்கிறார்.

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே

கல் மாரியாலே திருவாய்ப்பாடியில் இருந்தவர்கள் துன்பப்பட, கோவர்த்தன மலையை ஏந்தி அவர்களைக் காத்தவனாய், அன்று பூமியை அளந்து தனக்காகக் கொண்ட உபகாரகனான உயர்ந்த தலைவன் சென்று சேர்ந்த திருவேங்கடமாகிற பெரிய திருமலை ஒன்றை மட்டும் தொழ, நம்முடைய விரோதிகள் தானே ஒழிந்துவிடும்.

ஒன்பதாம் பாசுரம். நல்ல கதியைக் காட்டக்கூடிய திருவேங்கடமுடையானுக்கும் விரோதியைப் போக்கும் தன்மை இந்த தேசத்துடன் இருக்கும் ஸம்பந்தத்தாலே என்கிறார்.

ஓயும் மூப்புப் பிறப்பிறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே

அப்பொழுது அலர்ந்த திருவடித்தாமரைகளை வாக்குள்ளும் மனத்துள்ளும் வைப்பவர்களுக்கு பலவீனத்தைக் கொடுக்கும் வயோதிகம், பிறப்பு, இறப்பு, நோய்கள் ஆகியவை அழியும்படிச் செய்பவன் திருமலையிலே வாழும் கண்ணன் எம்பெருமான்.

பத்தாம் பாசுரம். மிகவும் இனிமையான திருவேங்கடத்தைப் பற்றுங்கள் என்று தன் பந்துக்களுக்கு உபதேசம் செய்கிறார்.

வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று
எய்த்திளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திருவேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே

உங்களுக்கு நிர்ணயித்து வைத்த நாளினுடைய எல்லையானது உங்களருகில் வந்து பலவீனத்தைத் தந்து அதன் காரணமாக இளைப்பதற்கு முன்னே, விரிகிற பணங்களையுடைய அநந்தனை படுக்கையாக உடைய ஸர்வேச்வரனின் திருமலையில், செறிந்த சோலையினுடைய அழகிய புஷ்பங்களையுடைய பரந்த திருத்தாழ்வரையைச் சென்று அடையுங்கள்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக கைங்கர்யஸ்ரீ கிடைக்கும் என்பதை அருளிச்செய்கிறார்.

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே

திருவடிகளைப் பரப்பி பூமியை அளந்துகொண்ட ஸர்வேச்வரனை, உயர்ந்த சோலையையுடைய ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த ஒப்பில்லாத ஆயிரம் பாசுரங்களுள் இந்தப் பத்து பாசுரங்களையும் அர்த்தத்துடன் சொல்ல வல்லவர்கள் கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெற்று உலகம் புகழும்படி அடிமை செய்து வாழப்பெறுவார்கள்.

ஐச்வர்யம், கைவல்யம், பகவத் கைங்கர்யம் ஆகிய மூன்று விதமான புருஷார்த்தங்களில் ஐச்வர்யமும் கைவல்யமும் ஆத்ம ஸ்வரூபத்துக்குச் சேராது என்றும் அவை மிகவும் தாழ்ந்தது என்றும் சொல்லி, ச்ரிய:பதியான ஸர்வேச்வரனின் திருவடிகளில் கைங்கர்யம் செய்வதே மிக உயர்ந்த புருஷார்த்தம் என்று தன்னுடைய பெரிய கருணையாலே ஸம்ஸாரிகளுக்கு உபதேசம் செய்கிறார் ஆழ்வார். எம்பெருமானார் இந்தப் பதிகத்தைத் திருநாராயணபுரம் திருநாரணன் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்தார்

முதல் பாசுரம். மிகப் பெரிய சக்கரவர்த்திகளே பிக்ஷை எடுத்து வருந்துவார்கள். ஆதலால் நம்முடன் இயற்கையான ஸம்பந்தமுடைய, எப்பொழுதும் செல்வத்தையுடைய நாராயணன் திருவடிகளை அடையுங்கள் என்கிறார்.

ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ

எல்லாவற்றுக்கும் தலைவராய் நெடுங்காலம் நடக்கும்படி உலகத்துடன் பொருந்தி ராஜ்யம் நடத்தியவர்கள் அந்த ஐச்வர்யம் தீர்ந்தவுடன் பிக்ஷையெடுக்கப்பார்த்து அந்த ஸமயத்தில் கறுத்த நாயாலே கவ்வப்பட்ட காலையுடையவர்களாய் உபயோகமற்ற பானையைப் பாத்ரமாகக் கொண்டு இந்தப் பெரிய பூமியில் எல்லாரும் காணும்படி இந்தப் பிறவியிலேயே பிச்சை எடுப்பார்கள். இப்படி இவ்வுலக ஐச்வர்யம் நிரந்தரமாக இல்லாததால், எப்பொழுதும் செல்வத்துடன் இருக்கும் நாராயணனுடைய திருவடிகளை காலம் தாழ்த்தாமல் உடனே நினைத்து உஜ்ஜீவனத்தைப் பெறுங்கள்.

இரண்டாம் பாசுரம். ஐச்வர்யத்தை இழப்பது மட்டுமல்லாமல் விரும்பிய விஷயத்தையும் பிரிய நேரிடும் ஆதலால் எல்லாருக்கும் தலைவனான ச்ரிய:பதியை அடையுங்கள் என்கிறார்.

உய்ம்மின் திறை கொணர்ந்து என்று உலகாண்டவர் இம்மையே
தம் இன் சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமை தின்பர்கள்
செம்மின் முடித் திருமாலை விரைந்தடி சேர்மினோ

திறையைக் கொண்டுவந்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்று இந்த வார்த்தையைக் கொண்டே உலகத்தை ஆண்டவர்கள் இப்படி வாழ்ந்த பிறவியிலேயே தங்களுக்கு என்று தனித்துவமாய் மிகவும் பிடித்தவர்களாய் இன்பத்தையுடையவர்களாய் இருக்கும் ஸ்த்ரீகளை, மற்றவர்கள் பறித்துக்கொள்ளும்படி, தாங்களே கைவிட்டு, வெப்பம் மிகுந்த, பார்த்தவர் கண்களில் மின்னொளி பரக்கும், வெயிலையுடைய காட்டுக்குள்ளே போய் அங்கும் வேறு ராஜாக்களால் துன்புறுவார்கள். ஆதலால் விரைந்து சென்று தடுக்கப்படாத ஒளிமிகுந்த கிரீடத்தையுடைய திருமாலின் திருவடிகளில் சேருங்கள்.

மூன்றாம் பாசுரம். காலில் விழுந்த ராஜாக்களையும் மதிக்காமல் இருந்தவர்கள் பின்பு ஒரு மதிப்பும் இல்லாமல் ஆவார்கள். ஆதலால் இனியவனான கண்ணன் திருவடிகளை அடையுங்கள் என்கிறார்.

அடி சேர் முடியினராகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ

தங்கள் காலில் விழுந்த கிரீடத்தையுடைய ராஜாக்கள் தாங்களே தொழும்பொழுது இடிபோன்ற முரசங்கள் முற்றத்திலே ஓசை செய்யும்படி இருந்தவர்கள் ஒரு பொருளின் துகளுடன் சேர்ந்த மிகச்சிரிய துகளாகும்படி மதிப்பற்றுப் போவார்கள். ஆதலால் உடனே நறுமணம் மிகுந்த திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடைய கண்ணன் திருவடிகளை நினையுங்கள்.

நான்காம் பாசுரம். அவமானப்படுவது மட்டும் இல்லாமல் ஆயுளும் நிலைநில்லாததாகையால் விரோதிகளைப் போக்கும் கண்ணன் திருவடிகளை வணங்குங்கள் என்கிறார்.

நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலில் பலர்
எனைத்தோருகங்களும் இவ்வுலகாண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறட்டவன் பாதம் பணிமினோ

ஆராய முயன்றால் பல யுகங்களும் இந்த உலகத்தை ஆண்டு கழிந்துபோனவர்கள் கடலில் உருவாகிய மேடுகளில் இருக்கும் மிக நுண்ணிய மணலைவிட மிகுதியானவர். தங்களின் வீட்டின் பகுதிகளுக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் வித்யாசம் தெரியாதபடி அழிவதைத் தவிர வேறு நிலையைப் பார்த்ததில்லை. ஆதலால் பனைபோலே பருத்த அடிப்பரப்பையுடைய யானையை அழித்தவனான கண்ணனின் திருவடிகளை வணங்குங்கள்.

ஐந்தாம் பாசுரம். விருப்பத்துக்குரித்தான் பெண்களும் அவர்களுடன் கூடுவதும் நிலையற்றதாகையாலே அழகிய உருவத்தையுடையவனான ஸர்வேச்வரன் திருநாமத்தைச் சொல்லி வாழப் பாருங்கள் என்கிறார்.

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுதுண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாமிழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ

அழகியதாய் குளிர்ந்ததாய் பரந்த பூப்படுக்கையிலே, திருவருளைப் பண்ணியருளவேணும் என்னும் ஆசையையுடைய, அழகாக அலங்கரிக்கப்பட்ட மிகவும் மென்மையான கூந்தலையுடையவர்களின் இன்பமான கலவி என்னும் அமுதத்தை அனுபவித்தவர்கள், தாங்கள் அணிந்திருக்கும் வஸ்த்ரமானது பின்பக்கம் வரை எட்டாமல் இருப்பதால் முன்னே தொங்கும்படி இருக்க, முன்பு ஈடுபட்டிருந்த பல வகைப்பட்ட ஸ்த்ரீகள் தாங்களே பழித்தாலும்கூட, அவர்களை நோக்கி நடப்பார்கள். ஆதலால் நீலரத்னம்போலே ஒளிபடைத்த திருமேனியையுடையவனாய், நமக்கு தன் அனுபவத்தைக் கொடுக்கும் ஆச்சர்யபூதனின் திருநாமங்களைச் சொல்லி ஆனந்தமாக வாழுங்கள்.

ஆறாம் பாசுரம்.. இவ்வுலகில் நிலைநின்ற வாழ்க்கை இல்லாததால் அப்படி இருக்க ஆசைப்படுபவர்கள் திருப்பாற்கடல்நாதனுக்குத் தொண்டராகுங்கள் என்கிறார்.

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்றல்லால் அன்று முதல் இன்றறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பதில்லை நிற்குறில்
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவராமினோ

வாழ்ந்தார்களாகத் தங்களை நினைத்திருப்பவர்கள் வாழ்ந்தது பெருமழையில் நீர்க்குமிழிபோலே நசித்து நசித்துக் கீழே போனார்கள் என்பதைத் தவிர, உற்பத்தி முதல் இன்று வரை ஓரே நிலையில் வாழ்ந்தார்கள் என்பது இல்லை. நிலைநின்ற வாழ்வு வேண்டுமாகில் ஆழ்ந்து நிறைந்த கடலைப் படுக்கையாகவுடைய ஸர்வஸ்வாமிக்கு அடியார் ஆகுங்கள்.

ஏழாம் பாசுரம். உடம்பை வளர்க்கும் உணவு முதலிய இன்பமும் நிரந்தரமற்றது ஆகையால் எல்லாருக்கும் காரணமான ஸர்வேச்வரன் குணங்களை நினையுங்கள் என்கிறார்.

ஆமின் சுவை அவை ஆறோடடிசில் உண்டார்ந்த பின்
தூ மென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவார்
ஈமின் எமக்கொரு துற்றென்று இடறுவர் ஆதலின்
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே

ப்ரக்ருதிக்குச் சேர்ந்ததாய் விரும்பத்தக்கதாய் உலக ப்ரஸித்தமான ஆறு ரஸங்களோடு கூடின உயர்ந்ததான அன்னத்தை உண்டு த்ருப்தியடைந்தபின், சுத்தமாய் மென்மையான பேச்சையுடைய ஸ்த்ரீகள் கேட்பதால் மீண்டும் முயன்று உண்ணுபவர்கள், அந்தச் செல்வம் அழிந்த பிறகு, அந்த ஸ்த்ரீகளிடமே சென்று எங்களுக்கு ஒரு பிடி அன்னம் இடவேணும் என்று கேட்டு அது கிடைக்காததால் ஆங்காங்கே திரிவார்கள். ஆதலால் திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடைய எல்லாருக்கும் காரணமான, அழகிய ஒளிபடைத்த திருமேனியையுடைய ஸர்வேச்வரனின் குணங்களை, அவனை அடைந்து அனுபவியுங்கள்.

எட்டாம் பாசுரம். பகவானுடைய அருள் இல்லாதபோது கிடைக்கும் ராஜ்யமும் நிலையற்றதாகையாலே ஆதிசேஷனில் சயனித்திருப்பவன் திருநாமங்களைச் சொல்லுங்கள் என்கிறார்.

குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக் கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுடன் ஆக்கிலும் ஆங்கவனை இல்லார்
மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வில்லை
பணம் கொள் அரவணையான் திருநாமம் படிமினோ

சீலம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமாய் பூர்ணமான புகழையுடையவராய் க்ஷத்ரிய குல புத்ரர்களாய் வள்ளல் தன்மையை ஏறிட்டுக்கொண்டு நிலைபெற்று நின்று இருந்து உலகம் உடன்படும்படி ரக்ஷித்துப் போனாலும் அந்த ஐச்வர்ய விஷயமாக ஸர்வேச்வரனை அடிபணிந்து நில்லாதவர்கள், எப்பொழுதும் புதியதாக இருக்கும் ஐச்வர்ய இன்பத்திலே இப்படி நிலைநின்றார்களாகிலும் அந்த ஐச்வர்யத்தை இழப்பார்கள். விரிகிற பணங்களையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாக கொண்டுள்ள எம்பெருமான் திருநாமங்களை எப்பொழுதும் சொன்னால் மீண்டும் இவ்வுலகுக்கு வரவேண்டாத மோக்ஷம் கிடைக்கும்.

ஒன்பதாம் பாசுரம். மேலுலகத்தில் இருக்கும் ஸ்வர்க்கானுபவமும் நிலையற்றதாகையாலே நிலைநின்ற கைங்கர்யத்தைக் கொடுக்கும் ஈச்வரனை அடையுங்கள் என்கிறார்.

படி மன்னு பல்கலன் பற்றோடறுத்து ஐம்புலன் வென்று
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வில்லை
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ

நிலத்தையும் எப்பொழுதும் அணிந்திருந்த பலவகைப்பட்ட ஆபரணங்களையும் பற்றோடு அறுத்து, ஐம்புலன்களையும் வென்று, தூறுமண்டிக்கிடக்கிற சரீரத்தை ஜயித்தவர்களும், இந்த தவத்தின் பலனால் பொருந்தி இருக்கும் குடியிருப்பையுடைய உயர்ந்த இனிமையையுடைய ஸ்வர்க்கத்தை பெற்றாலும், அந்த இன்பத்துக்காக, அங்கும் எம்பெருமானை வணங்காதவர்கள் அதை இழந்து திரும்புவார்கள். மீளாத இன்பத்தை அடைய கொடியிலே எப்பொழுதும் இருக்கும் பெரியதிருவடியையுடைய ஸர்வேச்வரனுடைய திருவடிகளை அடையப்பாருங்கள்.

பத்தாம் பாசுரம். இப்படி உலக இன்பங்களைப் போலே நிரந்தரமற்றதாக இல்லாமல் கைவல்யம் நிரந்தரமான ப்ரயோஜனமாக இருந்தாலும் அதில் எம்பெருமானுக்குத் தொண்டு செய்து அனுபவிக்கும் வாய்ப்பில்லாததால் ஸர்வேச்வரனை அடையும் பகவத் ப்ராப்தியே உயர்ந்த ப்ரயோஜனம் என்கிறார்.

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பென்னும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்
சிறுக நினைவதோர் பாசம் உண்டாம் பின்னும் வீடில்லை
மறுகலில் ஈசனைப் பற்றி விடா விடில் வீடஃதே

உள்நோக்கிய ஞானத்தாலே நிரூபிக்கப்படும் ஆத்மவஸ்துவுடன் ஆழமாக நினைத்து ஆத்மாவைத் தவிர எல்லா விஷயங்களையும் விட்டவனாய் ஆத்மாவில் மட்டும் சென்று முடிந்த மோக்ஷத்தை புருஷார்த்தம் என்றிருக்கும் ஞானிக்கும் எம்பெருமானை உபாயமாகப் பற்றுகை இல்லையாகில் தாழ்ந்த புருஷார்த்தங்களை நினைப்பதற்குக் காரணமான ஓர் பாசம் ஏற்பட்டு அதனால் அந்த கைவல்ய மோக்ஷமும் கிடைக்காது. ஆதலால் எல்லாவிதமான தோஷங்களுக்கும் எதிர்த்தட்டான, எல்லாவிதமான மங்கள குணங்களையும் உடைய ஸ்வாமியை அடைந்து அகலாமல் இருந்தால் அதுவே சிறந்த புருஷார்த்தம்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக துக்கம் போய் ஆத்மா உஜ்ஜீவனத்தை அடைவதை அருளிச்செய்கிறார்.

அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் ஸூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்தாயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே

வாழ்ச்சிக்குக் காரணமாகக் கிட்டும் உபாயம் அதுவே என்று அறுதியிட்டு கண்ணனுடைய திருவடிகளின்மேலே கொய்யப்படும் புஷ்பங்களையுடைய பொழிலையுடைய ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அந்தரங்க கைங்கர்யங்களாகச் செய்த சீரும் தொடையும் கொண்ட அழகிய ஆயிரம் பாசுரங்களில் இவை பத்தையும் நழுவாதபடிக் கற்பவர்கள் ஆழ்ந்து வரும் துக்கம் போய் ஆத்ம உஜ்ஜீவனத்தை அடைவார்கள்.

ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் அர்ச்சாவதார ரூபத்திலே பெருங்கருணையுடன் ஆத்மாக்களுக்கு உதவுவதற்காக இவ்வுலகில் வந்து காத்திருக்க, இங்குள்ளவர்கள் அவனால் நியமிக்கப்பட்ட வேறு தெய்வங்களைத் தேடிப் போவதைக்கண்டு, எல்லோருக்கும் எம்பெருமானுடைய பரத்வத்தை விரிவாக உபதேசம் செய்து அவர்களைத் திருத்தி மகிழ்கிறார். அர்ச்சாவதாரத்திலே எம்பெருமானின் பரத்வத்தை ஆழ்வார் காட்டிய பதிகம் இது. இந்த திவ்யதேசம் ஆழ்வாருடைய திருவவதார ஸ்தலம் ஆகையாலே இங்கிருக்கும் எம்பெருமானிடத்தில் ஆழ்வாருக்குத் தனி ஈடுபாடு என்பதும் வெளிப்படுகிறது.

முதல் பாசுரம். எல்லாவற்றுக்கும் காரணமான ஸர்வேச்வரன் இங்கே இருக்க வேறு எந்த தேவதையைத் தேடுகிறீர்கள் என்கிறார்.

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா 
அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே

எம்பெருமானிடத்தில் ஒன்றியிருக்கும்படிச் சேர்வதான தேவதைகளும் அவர்களின் உலகங்களும் மனுஷ்யர் தொடக்கமான ப்ராணிகளும் மற்றும் உண்டான எல்லாப் பொருள்களும் எதுவும் இல்லாத அன்று இவர்களை ஸ்ருஷ்டிக்கவேணும் என்னும் கருணை உள்ளத்துடன் ப்ரஹ்மாவுடன் தேவதைகள், உலகம், ப்ராணிகள் ஆகியவற்றைத் தன்னை அடைவதற்கு வழிசெய்யும் வகையில் படைத்தவனாய் மலைகள்போலே மாணிக்கமயமான மாடங்கள் உயர்ந்திருக்கிற திருக்குருகூரில் நிற்கிற எல்லாவற்றுக்கும் காரணனான மஹோபகாரகன் இங்கிருக்க ஸ்ருஷ்டி ஸம்ஹாரம் ஆகியவற்றுள் கர்மத்தாலே ஈடுபடும் தேவதைகளைத் தேடுகிறீர்களே.

இரண்டாம் பாசுரம். அந்த தேவர்களையும் உங்களையும் படைப்பதற்குத் தேவையான நித்யமங்கள குணங்களை உடைய எம்பெருமான் வாழும் திருநகரியை அடையுங்கள் என்கிறார்.

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக்குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே

பலவகைப்பட்ட உலகத்தீரே! நீங்கள் உங்கள் குணத்துக்கு ஏற்றதாக வணங்கும் தேவதைகளையும் உங்களையும் ஸ்ருஷ்டி காலத்திலே படைத்தவனான, அதற்குத் தேவையான ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவனான, புகழையுடைய ஆதிப்பிரானான எம்பெருமான், பொருந்தி வாழும் ஸ்தானமாய், மாடங்களும், மாளிகைகளும் சூழ்ந்து அதனாலே அழகாக இருக்கும் திருநகரியைப் பாடி ஆடி ஸ்துதித்து எல்லாவிடத்திலும் சென்று சொல்லுங்கள்.

மூன்றாம் பாசுரம். இப்பொழுது படைக்கப்பட்டிருக்கும் ஜகத்தை எம்பெருமான் காப்பாற்றுவதே, அவன் மேன்மையைக் காட்டும் என்கிறார்.

பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்து அன்றுடனே விழுங்கிக்
கரந்துமிழ்ந்து கடந்திடந்தது கண்டும் தெளியகில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறம் அன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே

பரந்திருக்கும் தேவதைக் கூட்டங்களையும் பல் வித உலகங்களையும் படைத்து, ப்ரளயம் வந்த காலத்தே உடனே விழுங்கி, அதை ஒளித்து வைத்து, ப்ரளயத்துக்குப் பிறகு வெளியே உமிழ்ந்து, பின்பு அளந்து கொண்டு, மீண்டும் இடைப்பட்ட ப்ரளயத்திலே இடந்து எடுத்த இவற்றைக் கண்டும், தெளிவான அறிவில்லாமல் இருக்கிறீர்களே. தேவர்கள் தங்களது தலைகளால் வணங்கும் திருநகரிக்குள்ளே நிற்கிற பரம்பொருளுக்குச் சரீரமாயல்லது வேறு ஸ்வதந்த்ரமான தெய்வம் இல்லை. பல விதமான உலகத்தில் உள்ளவர்களே, அப்படி இருந்தால் சொல்லுங்கள்.

நான்காம் பாசுரம். இவ்வுலகில் ஈச்வரர்கள் என்று கொண்டாடப்படுபவர்களுக்கும் ஈச்வரனான, வேதத்தில் பரதெய்வமாகச் சொல்லப்பட்ட ஸர்வேச்வரன் விஷயத்தில் அவன் ஈச்வரன் இல்லை என்றும் அனுமானத்தாலே ஈச்வரனைச் சொல்லும் நையாயிகர்களுக்கு என்ன ப்ரயோஜனம் என்கிறார்.

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேசமாமதிள் சூழ்ந்தழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே

ஈச்வரனாகச் சொல்லப்பட்ட ருத்ரனுக்கும் அவனுக்கும் தந்தையான ப்ரஹ்மாவுக்கும் மற்ற தேவதைகளுக்கும் நாயகனானவன் அந்த ஸர்வேச்வரனே. ப்ரஹ்மாவின் சாபத்தால் ருத்ரன் கையிலே ஒட்டியிருந்த கபாலத்தை நன்றாகப் போக்கின இந்த சரித்ரத்தை ஐந்தாவது வேதமான மஹாபாரத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஒளிமயமாய் மிகச்சிறந்ததான மதிள்களாலே சூழப்பட்டு அத்தாலே அழகாக இருக்கும் திருநகரிக்குள்ளே இருக்கும் இயற்கையான ஸர்வேச்வரன் விஷயத்திலே இவன் ஈச்வரன் இல்லை என்ற தாழ்ந்த வார்த்தைகளைச் சொல்லுகிற இத்தால் நையாயிகர்களுக்கு என்ன ப்ரயோஜனம் உண்டு?

ஐந்தாம் பாசுரம். பாஹ்ய (வேதத்தை ஒத்துக்கொள்ளாதவர்கள்) குத்ருஷ்டி (வேதத்துக்குத் தவறான அர்த்தம் சொல்லுபவர்கள்) மதத்தவர்களை ஜயித்து, திருநகரியில் நிற்கிற ஸர்வேச்வரனே எல்லாரையும் விட உயர்ந்தவன் என்கிறார்.

இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே

லிங்கத்தை வணங்குவதைக் காட்டும் தாமஸ புராணத்தை நம்பும் குத்ருஷ்டிகளான நீங்களும், வேதத்தை ஒத்துக்கொள்ளாத சமணர்கள் மற்றும் பௌத்தர்களும், வீணான தர்க்கங்களில் ஈடுபட்டு வாதம் செய்யும் வைசேஷிகர்கள் முதலியவர்களும் மற்றும் நீங்கள் விரும்பி வணங்கும் தேவதைகளும் தன் அதீனத்திலே இருக்கும்படி அவற்றை வளர்த்துவிட்டவன், செந்நெலானது மிகுந்து கவரிபோலே அசைகிற திருநகரியில் பரிபூர்ணனாய் தன் மேன்மை ஒளிவிடும்படி நிற்கும் ஸர்வேச்வரனே! இதை நீங்களே காணுங்கள். இதில் ஒன்றும் பொய் இல்லை. ஆகையாலே உங்கள் கொள்கைகளை விட்டு அவனையே கொண்டாடுங்கள்.

ஆறாம் பாசுரம். இது உங்களுக்குத் தெரியாமல் இருப்பது அவரவர் கர்மத்துக்கு ஏற்றபடி எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தை நடத்துகிற ஸாமர்த்யத்தாலே என்கிறார்.

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அதறிந்தறிந்து ஓடுமினே

வேறு ஒரு தேவதையை ஸ்தோத்ரம் பண்ணி ஆதரிக்கும்படி தன்னிடத்திலிருந்து உங்களை விலக்கி, இப்படி அவர்கள் விஷயத்தில் நம்பிக்கையுடன் வைத்திருப்பது, எல்லாரும் பகவானை அடையும் மோக்ஷத்தைப் பெற்றால் சாஸ்த்ரத்தில் காட்டப்பட்ட உலக மர்யாதை குலையும் என்பதற்காக. இதற்குக் காரணம், சேற்று நிலத்தில் செந்நெலும் தாமரையும் போட்டிபோட்டுக் கொண்டு வளரும் திருநகரியிலே வாழும், மிக உயர்ந்த பல விதமான சக்திகளை உடையவனாய்க் கொண்டு எல்லாரையும் கர்மத்தை அனுபவிக்கச்செய்பவனுடைய, ஆச்சர்யமான ப்ரக்ருதியுடன் சேர்ந்த ஸம்பந்தம். அதை நன்றாக அறிந்து இந்த உலகைக் கடக்கப் பாருங்கள்.

ஏழாம் பாசுரம். இப்படியே மற்ற தெய்வங்களை வணங்கி வந்தால் இதற்கு முன்பு பெற்ற பலனையே பெறுவீர்கள். ஆதலால், கருடக்கொடியை உடைய, எல்லாவற்றுக்கும் காரணமான எம்பெருமானுக்கு அடிமை ஆகுங்கள் என்கிறார்.

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல் படிகால் வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே

வேறு சில பெயர் சொல்லவும் தகுதியில்லாத தேவதையைப் பாடுவது, ஆடுவது என்று கொண்டு வணங்கி, பல விதத்தாலும் சாஸ்த்ர மார்கத்தாலே மேலும் மேலும் வணங்கி, பல பிறவிகளில் ஓடிப் பிறந்து, நேரே அனுபவித்தீர்கள். ஆதலால், நீங்கள் வணங்கும் தேவர்கள் எல்லாரும் கூடி ஸ்தோத்ரம் பண்ணி அடையும்படித் திருநகரியிலே நிற்கும், ஆடிவருகிற பெரியதிருவடியை கொடியாகவுடைய எல்லாருக்கும் காரணனான ஸர்வேச்வரனுக்கு அடிமை ஆகுங்கள்.

எட்டாம் பாசுரம். மார்க்கண்டேயனுக்கு ருத்ரன் உதவியதும் எம்பெருமான் க்ருபையாலே என்று மற்ற தேவதைகளுக்கும் பலன் கொடுக்கும் சக்தி எம்பெருமானே கொடுக்கிறான் என்பத உதாரணத்துடன் அருளிச்செய்கிறார்.

புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்றுய்யக் கொண்டது நாராயணன் அருளே
கொக்கலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே

தொண்டு செய்து உள்கலந்து தன்னை நேராகக் கண்ட மார்க்கண்டேயனென்று ப்ரஸித்தமானவனை, நக்கபிரான் என்று திக்கையே ஆடையாகக் கொண்டிருப்பவனும் தன் அடியார்களுக்கு நன்மை செய்பவனுமான ருத்ரனும், ஆபத்துக்காலத்திலே காப்பாற்றி பகவானுக்கு அடிமையாக்கி வாழவைத்தது நாராயணன் அருளாலேயே நடந்தது. ஆதலால், கொக்கின் நிறம்போலே வெளுத்து மலரும் பூவையுடைய பெரிய தாழைகளை வேலியாகவுடைய திருநகரியுள் நிற்கும் எல்லாரையும் விட உயர்ந்தவனாய், ஆதி காரணனாய், மஹோபகாரனான எம்பெருமான் நிற்க, வேறு எந்த தெய்வத்தைச் சொல்லுகிறீர்கள்?

ஒன்பதாம் பாசுரம். மற்றவர்களாலே புரிந்து கொள்ள முடியாத எம்பெருமான் வாழும் திருநகரியை உங்களுடைய வாழ்ச்சிக்காக நினையுங்கள் என்று அருளிச்செய்கிறார்.

விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன் பால்
அளந்து காண்டற்கரியனாகிய ஆதிப் பிரான் அமரும்
வளம் கொள் தண் பணை சூழ்ந்தழகாய திருக்குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே

வார்த்தைகளால் மட்டும் நிறைந்திருக்கும் ஆறு பாஹ்ய சமயங்களும் (வேதத்தை ஒத்துக்கொள்ளாத சார்வாக, பௌத்த, சமண, வைசேஷிக, ஸாங்க்ய, பாசுபத மதங்கள்) மற்றுமுள்ள குத்ருஷ்டி (வேதத்துக்குத் தவறான அர்த்தம் கூறும்) மதங்களும் எல்லாம் கூடி வந்தாலும், தன்விஷயத்தில் ஆராய்ந்து காண்பதற்கு அரியதான தன்மையை உடைய, எல்லாருக்கும் காரணனான, மஹோபகாரகன் பொருந்தி வாழும் தேசமாய், அழகியதாய், குளிர்ந்ததான நீர்நிலங்களாலே சூழப்பட்டு மிகவும் இனிமையாக இருக்கும் திருநகரியை, நீங்கள் வாழ்ச்சியைப் பெறவேண்டும் என்று நினைத்தீர்களானால் உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஞானத்தில் வையுங்கள்.

பத்தாம் பாசுரம். எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய், மிகவும் எளியவனாய், எல்லாரையுடைய மனதையும் கவரக்கூடிய சேஷ்டிதங்களையுடைய எம்பெருமானுக்கு அடிமை செய்வதே விரும்பத்தக்கதும் தகுந்ததும் என்று அருளிச்செய்கிறார்.

உறுவதாவது எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடோங்கு திருக்குருகூர் அதனுள்
குறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே

எல்லா தேவதைகளும் எல்லா உலகங்களும் மற்றுமுண்டான எல்லா சேதனர்களும் அசேதனப் பொருள்களும் இவை எல்லாவற்றையும் தன் ஸ்வரூபத்திலே, குற்றமில்லாத தனித்துவம் வாய்ந்த திருமேனியைப் போலே, பெருமை சேர்க்கும் சரீரமாய்க்கொண்டு, தன்னுடைய ஸ்வரூபம், ஸ்வபாவம் ஆகியவை குலையாதபடி நிற்கும் எம்பெருமான் அம்மேன்மையோடே விளைநிலங்களில் செந்நெலானது கரும்புடன் வளரும்படியான திருநகரிக்குளே நிற்பவனாய், அடியார்கள் எளிதில் அனுபவிக்கும்படி வாமனனாய் ப்ரஹ்மசாரி உருவத்துடன், மிகப்பெரிய பெருமையையுடைய குடக்கூத்தாடிய கண்ணனுக்கே அடிமை செய்வதே சிறந்ததும் தகுந்ததுமாய் இருக்கும் புருஷார்த்தம்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியை நினைத்துச் சொன்னவர்களுக்குப் பரமபதம் கையிலேயென்று பலத்தை அருளிச்செய்கிறார்.

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான்
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கை அதுவே

வாசிக கைங்கர்யத்தைப் பண்ணி திருவாழியைத் திருக்கையிலேயேந்திய உபகாரகனை அடைந்தவராய் உயர்ந்ததான திருநகரிக்குத் தலைவராய் புதிய பரிமளத்தையுடைய திருமகிழமாலையை திருமார்பிலேயுடையவராய் மாறன் என்கிற குடிப்பெயரையும் சடகோபர் என்கிற விசேஷமான திருநாமத்தையும் உடைய ஆழ்வார், பகவத் விஷயத்தில் கொண்ட மிகுந்த ஆசையால் அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களுக்குள் இப்பத்துப் பாசுரங்களையும் அர்த்தத்துடன் அனுபவிக்க வல்லவர்கள் கையிலே இதை அனுபவிப்பதாகிய பலத்துக்கு மேலே, மிகவும் தூரத்தில் இருக்கும், மீட்சியில்லாத ஸ்ரீவைகுண்டமாகிற மாநகரம் இருக்கும்.

ஆழ்வார் பராங்குச நாயகியாக மடலூரப் பார்த்து, இரவிலே மிகவும் வ்யசனப்பட்டு, பின்பு விடிந்தவுடன் சிறிது தெளிவு பெற்றாள். பின்பு தாய்மார்களும் தோழிமார்களும் இவளுக்கு அறிவுரை சொல்லப் பார்க்க, இவள் அவர்கள் சொல்லைக் கேட்காமல், அவனை நினைப்பதால் ப்ரீதியுடனும் அவனை நேரில் காணப் பெறாததால் அப்ரீதியுடனும் பாடக்கூடிய பாசுரங்களாக இவை அமைந்துள்ளன. இது உருவெளிப்பாடு என்னும் க்ரமத்தில் ஆழ்வாரால் எம்பெருமானை நேரே காண்பதைப் போலே அனுபவிக்கப்பட்டது. இதில் நம்பி எம்பெருமானின் திருமேனி அழகை ஆழ்வார் பூர்த்தியாக அனுபவிக்கிறார்.

முதல் பாசுரம். நம்பியின் தனித்துவம் வாய்ந்த அடையாளமான திருவாழி திருச்சங்கத்தாழ்வார்களிலும், ப்ரதானமான அவயவ அழகிலும் என் நெஞ்சு ஈடுபடுகிறது என்கிறாள்.

எங்ஙனேயோ அன்னைமீர்காள்! என்னை முனிவது நீர்
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றதென் நெஞ்சமே

அன்னைமீர்காள்! என்னைப் பெற்ற நீங்கள் எனக்கு விருப்பமானதைச் செய்யாமல், என்னை நினைத்து உகக்க வேண்டியிருக்க இப்படிக் கோபப்படுவது ஏன்? நம் குடிக்குத் தனித்துவம் வாய்ந்தவராய், அழகிய திருமேனியுடையவராய், திருக்குறுங்குடியில் கல்யாணகுண பூர்த்தியையுடைய நம்பியை நான் அனுபவித்தபின் அவருடைய சங்கினோடும், திருவாழியோடும், தாமரைபோலே அழகாய் இருக்கும் திருக்கண்களோடும் சிவந்த கனிபோலே தனித்துவமாய் இருக்கும் திருவதரத்தோடும் என் நெஞ்சு ஆசையுடன் செல்கிறது.

இரண்டாம் பாசுரம். நம்பியுடைய ஒப்பனை அழகும், தோளும் எல்லாவிடத்திலும் வந்து நின்று அனுபவத்துக்கு விஷயமாகிறது என்கிறாள்.

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே

என்னை ஆணையிடாமல் என் நெஞ்சினாலே அனுபவித்துப் பாருங்கள். தெற்குத் திக்கிலே அழகான சோலையையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின்பு ஒளிவிடும் திருயஜ்ஞோபவீதமும், திருமகர குண்டலங்களும், திருமார்பில் ஆபரணமான ஸ்ரீவத்ஸமும், எப்பொழுதும் கழற்றாத ஆபரணங்களும் நான்கு திருத்தோள்களும் நான் போகுமிடமெல்லாம் வந்து நிற்கின்றன.

மூன்றாம் பாசுரம். நம்பியின் அழகை காப்பாற்றி வளர்க்கும் ஆயுதங்கள் எல்லாவிடத்திலும் ஒளிவிடுகின்றன என்கிறாள்.

நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே

வாயடைத்து நிற்கும், அறிவை இழக்கும், சிதிலையாகும் என்றுகொண்டு பெற்ற தாய்மார்களான நீங்கள் முன்பு நம்பி விஷயத்தில் ஈடுபடுத்தி இப்பொழுது கோபப்படாதீர்கள். மலைபோலே இருக்கிற மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் அனுபவித்தபின் வெற்றியையுடைய வில்லும், கதையும், வாளும், சக்கரமும் சங்கமும் ஒன்றாக நின்று என் கண்ணுக்குள் தோன்றி விலகிப்போகாமல் இருக்கின்றன. நெஞ்சுக்குள்ளும் இருந்து விலகிப்போகாமல் இருக்கின்றன.

நான்காம் பாசுரம். மேன்மை பொலியும் நமபியின் திருமேனி அழகின் உயர்த்தி என் அருகில் வந்தது என்கிறாள்.

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
பூந்தண் மாலைத் தண்டுழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே

இவள் கண்ணீர் குறையவில்லை என்று நம்பி விஷயத்தில் மூட்டின தாய்மார்களான நீங்களும் கோபப்படுகிறீர்கள். தேனையுடைய சோலைகளைக்கொண்ட திருக்குறுங்குடியில் நம்பியை நான் அனுபவித்த பின்பு அனுபவிக்கத் தகுந்ததாய் குளிர்ச்சியாய் மாலை வடிவில் இருக்கும் செவ்வித் திருத்துழாயும் அவன் பரத்வத்தைக் காட்டும் விரும்பத்தக்க கிரீடமும் திருமேனியும் அதற்குத் தகுந்த பட்டாடையும் அரைநாணும் அருகிலே சென்று அனுபவிக்க முடியாத பாபத்தையுடைய என் அருகில் வந்தன.

ஐந்தாம் பாசுரம். நம்பியின் திருமுகத்தின் அழகு என் ஆத்மா வரை செல்கிறது என்கிறாள்.

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே

அவன் வரும் பக்கத்தை நோக்கி நிற்கும், சிதிலையாகும் என்று தாய்மார்களான நீங்களும் கோபித்து வார்த்தை சொல்கிறீர்கள். பூர்த்திக்குத் தகுதியான கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் அனுபவித்தபின்பு திரண்ட ஒளியையுடைய தொண்டைப்பழம் போலிருக்கிற திருவதரமும் நீண்ட திருப்புருவங்களும் அதற்குத் தகுதியான நீட்சியையுடைய தாமரை போன்ற திருக்கண்களும் நினைத்தபடி அனுபவிக்கப்பெறாத பாபத்தையுடைய என் ஆத்மாவின் வரை செல்கிறது.

ஆறாம் பாசுரம். நம்பியின் திருமுகத்தின் அழகும், ரூபம், புஜம் முதலியவற்றின் உயர்த்தியும் என் நெஞ்சிலே பூர்ணமாக நிறைந்தது என்கிறாள்.

மேலும் வன் பழி நம் குடிக்கிவள் என்று அன்னை காண கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே

அவன் வந்து கைக்கொள்ளும் வரை காத்திருக்கும் நம் குடிக்கு, தானாகக் காண ஆசைப்படும் இவள், உள்ளதனையும் பெரியதான பழி ஒரு வடிவெடுத்தாப்போலே இருக்கிறாள் என்று தாயாரானவள் நம்பியைக் காண அனுமதிப்பதில்லை. சோலை சூழ்ந்த குளிர்ச்சியான திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின்பு, மிகவும் அழகாய் நீண்ட கற்பகக் கொடி போலேயிருக்கிற திருமூக்கும், தாமரைப் பூப்போன்ற திருக்கண்களும், பழுத்த திருவதரமும் நீல நிறத்தையுடைய திருமேனியும் நான்கு திருத்தோள்களும் என் நெஞ்சிலே வந்து நிறைந்தன.

ஏழாம் பாசுரம். மிகவும் ஒளிமயமான ஓங்கிய விரும்பத்தக்க திருமேனியுடன் நம்பி என் நெஞ்சுக்குள்ளே கையும் திருவாழியுமாய் நின்றார் என்கிறாள்.

நிறைந்த வன் பழி நம் குடிக்கிவள் என்று அன்னை காண கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான் நேமியங்கையுளதே

நம்முடைய குடிக்கு இவள் பூர்ணமான, வலிமையான பழி என்று தாயார் நம்பியைக் காண அனுமதிக்கவில்லை. சிறந்த கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் அனுபவித்தபின்பு, பூர்ணமான ஒளிக்கற்றையாலே சூழப்பட்டு ஓங்கிய விரும்பத்தக்க திருமேனியோடு என் நெஞ்சுக்குள்ளே நிறைந்து நின்றுவிட்டான். அந்நிலையில் அழகிய திருக்கையிலே திருவாழியும் இருந்தது.

எட்டாம் பாசுரம். நம்பியினுடைய எல்லா அவயங்களின் அழகும் என் முன்னே நிற்கின்றன என்கிறாள்.

கையுள் நன்முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே

கையுள் அழகிய முகத்தை வைக்கும், சிதிலையாகும் என்று இதற்குக் காரணமான தாய்மார்களான நீங்களும் கோபிக்கிறீர்கள். கரிய நிறத்தையுடைய மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களும், அரை ப்ரதேசமும், சிறுத்த இடையும், அழகிய திருமேனியும், செறிவையுடைய நீண்ட திருக்குழல்கள் (கூந்தல்) தாழ்ந்த திருத்தோள்களும் ஆசைப்படி அனுபவிக்கமுடியாத பாபத்தையுடைய என் முன்னே நிற்கின்றன.

ஒன்பதாம் பாசுரம். நம்பி கணக்கற்ற அழகுகளுடன் கூடியிருந்து எல்லையில்லாத இனிமையையுடையவனாகக் கொண்டு என் நெஞ்சை விட்டுப் போகாமல் இருக்கிறார் என்கிறாள்.

முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீள் முடி ஆதியாய உலப்பில் அணிகலத்தன்
கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே

எல்லோரும் காணும்படி முன்னே வந்து நின்றாய் என்று தோழிகளும் தாய்மாரும் கோபிக்கிறீர்கள். பொருந்தி இருக்கும் மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின்பு, தலையில் அவன் மேன்மையைக் காட்டும் ஓங்கிய கிரீடம் முதலான கணக்கற்ற அணியப்பட்ட ஆபரணங்களையுடையவன் சர்க்கரை, பால், அமிர்தம் ஆகியவைபோலே மிகவும் இனிமையானவனாக வந்து என் நெஞ்சைவிட்டுப் போகாமல் இருக்கிறான்.

பத்தாம் பாசுரம். நித்யஸூரிகளுக்கு இனிமையான, மிகவும் ஒளி படைத்த, அடைய வேண்டிய திருமேனியானது, மற்றவர்களுக்குப் பார்க்க முடியாதபடி என்னுளே ஒளிவிடுகிறது என்கிறாள்.

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காண கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே

இவள் கைகழிய விஞ்சின காதலையுடையவளானாள் என்று தாயானவள் நம்பியைக் காண அனுமதிப்பதில்லை. குறைவற்ற கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் ஸூரிஸங்கங்கள் பரஸ்பரம் கூடியிருந்து தொண்டு செய்து அனுபவிக்கும்படி ஒளிக்கற்றையின் நடுவில் உயர்ந்து தோன்றுகிற தனித்துவம் வாய்ந்த திருமேனியானது அப்படியே என் நெஞ்சுக்குள்ளே தோன்றுகிறது. எத்தனையேனும் அறிவுடையார்க்கும் இது தங்கள் முயற்சியால் அடைய அரியது.

பதினொன்றாம் பாசுரம். இதிதிருவாய்மொழியைச் சொன்னவர்களுக்கு தான் பகவானுக்கு அடிமை என்ற உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்வதே பலம் என்று அருளிச்செய்கிறார்.

அறிவரிய பிரானை ஆழியங்கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி அதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே

தங்கள் ஸாமர்த்யத்தால் அறிய ஒண்ணாதபடியான ஸ்வாமியாய் திருவாழியை அழகிய திருகையிலேயுடையவனைக் காதலால் அலற்றி, உயர்ந்த பரிமளத்தையுடைய சிறந்ததான புஷ்பங்களைப்போலே ஆராய்ந்து, சிறந்த குணங்களையுடையவராய் திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரத்துள் ஆயுத அவயவ ஆபரண ரூப அடையாளங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பி விஷயமாக உள்ள இந்தப் பதிகத்தையும் ஞான ஒளி பிறக்கும்படிக் கற்று அர்த்தத்தையும் நினைத்துப் பார்க்க வல்லவர்கள் ஆழமான கடல் சூழ்ந்த பூமியில் பகவத் ஸம்பந்தத்துடன் வாழ்வார்கள்.

எம்பெருமான் தன்னிடத்தில் சிறிது ஆசையுடையவர்களையும் ரக்ஷிப்பவனாக இருந்தும் ஏன் இன்னும் தன்னை வந்து ரக்ஷிக்கவில்லை என்று பார்த்தார் ஆழ்வார். தான் மற்றைய உபாயங்களில் ஈடுபட்டிருப்பதாக நினைத்து எம்பெருமான் நம்மை ரக்ஷிகாமல் இருக்கலாம் என்று நினைத்து ஆழ்வார் இந்தத் திருவாய்மொழியில் வானமாமலை எம்பெருமானுக்குத் தன்னுடைய தாழ்ச்சியையும் தனக்கு வேறு உபாயங்களில் அந்வயம் இல்லாததையும் அறிவித்து, சரணாகதி செய்கிறார்.

முதல் பாசுரம். உன்னை அடைவதற்காக சாஸ்த்ரத்தில் காட்டப்பட்ட உபாயங்கள் என்னிடம் இல்லாதபோதும் உன்னை அடைய வேண்டும் என்கிற ஆசை உள்ளது. இப்படி இருந்தும் அடியார்களுடன் கூடியிருப்பதற்கு இங்கே எழுந்தருளியிருக்கும் உனக்கு வெளிப்பட்டவனோ என்கிறார்.

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்றும் 
ஆற்றகிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே

பலத்தைப் பெறுவதற்கு அனுஷ்டிக்கப்படும் கர்மயோகத்தை உடையவனல்லேன். ஆதலால், நுண்ணியதான ஞான யோகத்தை உடையவனல்லேன். இவை இரண்டாலும் கூடும் பக்தியும் இல்லாதபோதும் உன் குணங்களை நினைத்துப் பார்த்த பின்பு உன்னை விட்டு ஒரு க்ஷணமும் வாழ முடியவில்லை. ஆதிசேஷணைப் படுக்கையாகக் கொண்டு உன் திருமேனியை அவனுக்குக் கொடுத்த ஸ்வாமியாய் சேற்று நிலத்தில் தாமரையானது செந்நெலோடே கலந்து மலரும்படி அழகான சிரீவரமங்கல நகரிலே அடியார்களைக் காப்பதற்காகக் கொண்ட தனித்துவம் வாய்ந்த வீற்றிருந்த திருக்கோலத்தாலே எனக்கு உபகாரகனானவனே! அங்கே ரக்ஷகனாக இருக்கும் உன்னால் காக்கப்படுபவர்களுள் நான் வெளிப்பட்டவன் அல்லேன்.

இரண்டாம் பாசுரம். என்னை ஏற்றுக்கொள்வதற்குத் தடைகள் இருந்தாலும், அவற்றை போக்கக் கூடியவன் நீயே என்பதால், எனக்கு க்ருபைபண்ணி அருள வேண்டும் என்கிறார்.

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே 
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவரமங்கல நகர் உறை
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கருளாயே

உன் அருளால் உன்னை அடைந்து உன்னிடத்திலும் அல்லேன். நீ கைக்கொள்ளும் வரை காத்திருக்கலாம் என்று இங்கும் என்னால் இருக்க முடியவில்லை. மிகவும் இனியவனான உன்னைக் காணவேண்டும் என்கிற ஆசையில் அகப்பட்டு, நான் உலக விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் இல்லை. இலங்கையை அழித்து, பின்பு பெற்றுக் கொண்ட ஸ்வாமியாய், சந்த்ரனோடு சேரும்படி மாணிக்கமயமான மாடங்கள் வளர்கிற சிரீவரமங்கலநகரிலே நிரந்தரமாக வாழ்பவனாய், எதிரிகளை அழிக்க உதவும் திருச்சங்கு திருவாழி ஆகியவற்றை உடையவனே! உன்னைத் தவிர வேறு துணையில்லாத எனக்கு நீ க்ருபை பண்ணி அருள வேண்டும்.

மூன்றாம் பாசுரம். பரத்வத்தை வெளியிடும் சிறந்த திருமேனிகளைக் கொண்டு, என்னை ஏற்றுக்கொண்டு என் தொண்டையும் ஏற்றுக்கொண்ட உபகாரத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்தேன் என்கிறார்.

கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாட எம் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத என்னைப் பொருள் ஆக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கிருந்தாய்! அறியேன் ஒரு கைம்மாறே

கருடனாகிற பறவையைக் கொடியாகவும் திருவாழியை ஆயுதமாகவும் பரமபதத்தை நாடாகவுமுடைய காளமேகம் போலே எனக்காகக்கொடுத்த திருமேனியை உடையவனாய் ஒரு வஸ்து என்று நினைக்கமுடியாதபடி இருந்த என்னை ஸ்வரூபத்தை உணர்ந்தவனாக ஆக்கி, வாசிக கைங்கர்யத்தையும் ஏற்றுக்கொண்டாய். உயர்ந்த ஞானத்தை உடையவராய்க்கொண்டு நான்கு வேதங்களையும் நடத்தவல்லவர்கள் பலரும் வாழும் சிரீவரமங்கலநகருக்கு அருளைப்பண்ணி அங்கே இருக்கிறவனே! நீ செய்த உபகாரத்துக்கு ஒரு கைம்மாறு நான் செய்ததாகத் தெரியவில்லை.

நான்காம் பாசுரம். அடியார்களை நன்றாகக் காக்கும் தன்மையையுடைய உன்னை என் ஆசையைக் கொண்டு எப்படிப் பெறுவது என்கிறார்.

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவரமங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கெய்தக் கூவுவனே?

எதிரிகளாய்க் கூடின சேனையையுடைய துர்யோதனன் முதலிய நூற்றுவரும் நசிக்கும்படி தனியரான பஞ்ச பாண்டர்களுக்கும் உதவுபவனாய் அன்று ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடைய யுத்தத்தைப் பண்ணி எல்லாரையும் பொடிப்பொடியாகும்படிச் செய்த மஹோபகாரகனாய், பூமியை இடந்தெடுத்த ஸ்வாமியாய், தெளிந்த ஞானத்தையுடையவர்களுடைய வைதிகமான பகவதாராதனம் இடைவிடாமல் நடக்கும் சிரீவரமங்கலநகரில் ஏறி, தனித்துவம் தோன்றும்படி எழுந்தருளியிருந்த எம்பெருமானே! உன்னை எங்கே அடைவதாகக் கூவுவேன்?

ஐந்தாம் பாசுரம். எதிரிகளை அழிக்கும் தன்மையையுடைய நீ அடியார்களின் அனுபவத்துக்காக இங்கே இருப்பதைக் கண்டேன். இப்படி இருக்கிற உன்னை அடைய நான் முயற்சி செய்வது தகுமா என்கிறார்?

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெவ்வத் துளாயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவரமங்கல நகர்
கை தொழ இருந்தாய் அது நானும் கண்டேனே

உன்னாலேயே ரக்ஷிக்கப்பட வேண்டிய எனக்கு உபாயமாக உன்னை அழைப்பது தகுமா? எவ்வகைப்பட்ட எதிரிகளாகிற அஸுரக்கூட்டத்துள் புத்தர் முதலிய அவதாரங்களைச் செய்து நின்று அவர்களை ஏமாற்றும் செயல்களைச் செய்யும் அழகிய கறுத்த திருமேனியையுடைய ஸ்வாமியே! செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவர்களாய் இவ்வுலகிலேயே நித்யஸூரிகளைப்போன்று இருப்பவர்கள் விடாமல் வாழும் சிரீவரமங்கலநகர் முழுவதும் தொண்டு செய்யும்படித் தலைவனாய் இருந்தாய். நானும் அந்த இருப்பைக் கண்டேன். ஆனபின்பு அங்கே என்னையும் சேர்த்துக் கொள்வது உன் பொறுப்பு என்று கருத்து.

ஆறாம் பாசுரம். அடியார்களுக்கு உதவுவதில் மிகவும் ஒளிபடைத்த தன்மையையுடைய நீ உன்னை நான் வந்து அனுபவித்துத் தொண்டு செய்யும்படி வந்தருள வேண்டும் என்கிறார்.

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா! என்றும் என்னை ஆளுடை  
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கை தொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே

வராஹவேஷத்தைக் கொண்டு பூமியை இடந்தெடுத்த செயலால் எனக்கு உபகாரகனாய், கண்ணனாய், எப்பொழுதும் என் இருப்பு அழியாமல் அடிமைகொண்டு, பரமபதத்தில் இருக்கும் ஆனந்தத்தைப்போலே வாசிக கைங்க்கர்யத்தை ஏற்றுக் கொண்ட நாயகனான எம்பெருமானே! உயர்ந்ததான மாணிக்கம்போலே மிகவும் ஒளிபடைத்த தேஜஸ்ஸையுடையவனாய், தேனையுடைய மாஞ்சோலைகளையுடைய குளிர்ச்சியான சிரீவரமங்கலத்திலே உள்ளவர்கள் கைங்கர்யம் செய்யும்படி அங்கே நிரந்தரமாக வாழும், பரம்பதத்திலே இருப்பவர்களுக்கும் அனுபவிக்கும்படி பெரிய மலைபோலே மிகவும் ஸ்திரமான திருமேனியை உடையவனே! அடியவனான நான் தொண்டு செய்யும்படி அந்த நிலையை விட்டு என்னிடத்தில் வந்து அருள வேண்டும்.

ஏழாம் பாசுரம். எல்லாருடைய இருப்புக்கும் காரணமான நீ என்னை உன்னிடத்தில் இருந்து பிரித்து என் இருப்பை அழிக்காமல் இருக்க வேண்டும் என்கிறார்.

வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழ் உலகும் உண்டாய்
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவரமங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே

உன் இருப்பிடங்களை விட்டு இங்கே வந்தருளி, உன் விஷயத்தில் விருப்பமற்றிருந்த என் நெஞ்சை இருப்பிடமாகக் கொண்டு என் இருப்பை நோக்கி பரமபதவாஸிகளின் இருப்பையும் வளர்ப்பவனாய் இவ்வுலகத்திற்கு தனித்துவம் வாய்ந்த முதன்மைத் தாயாய் தந்தையாய் எல்லா உலகங்களையும் அமுதுசெய்து திருவயிற்றில் வைத்து ரக்ஷித்தாய். வேறு எதிர்பார்ப்பு இல்லாத நேர்மையான செயல்களை உடையவர்களுடைய வைதிகமான பகவதாராதனம் மாறாமல் நடக்கும் சிரீவரமங்கலநகரிலே முடிவற்ற குணங்களையுடையவனே! அடியேனை நீ உன் விஷயத்தில் இருந்து அகற்றாமல் இருக்கவேண்டும்.

எட்டாம் பாசுரம். உன்னை விட்டுப் பிரிவதற்குக் காரணமான புலன்கள் நடையாடும் ஸம்ஸாரம் உனக்குக் கீழ்ப் படிந்திருக்க, அதிலே என்னை வைத்தது என்னை அகற்றுவதற்காகவோ என்கிறார்.

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகற்க்கதிர் மணி மாட நீடு சிரீவரமங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே!

உன்னிடத்தில் ஈடுபாடு இல்லாதவர்களை அகற்றுவதற்காக நீ உண்டாக்கி வைத்தவையாய், ஆச்சர்யத் தன்மையை உடையதாய், வெல்ல அரிதான ஐம்புலன்களை நன்றாக அறிந்தேன். நீ என்னையும் உன்னிடத்தில் இருந்து அகற்றி அரிதான சேற்றிலே தள்ளிவிட்டாய் என்று நினைத்து அஞ்சுகின்றேன். விளங்குகிற ஒளியையுடைய மாணிக்கங்களையுடைய மாடங்கள் ஓங்கி இருக்கும் சிரீவரமங்கைக்குத் தலைவனாய், ஒரு நாளும் உள்ளே புக முடியாத என் ஸ்வாமியாய், பகாஸுரன் வாயைப் பிளந்தவனே! நீ இப்படி சக்தியுடன் இருந்தும் என் விரோதிகளைப் போக்கவில்லையே என்று கருத்து.

ஒன்பதாம் பாசுரம். அடியார்களின் விரோதிகளைப் போக்குவதாலே மிகவும் ஒளிவிடுபவனாக இருக்கும் நீ, நான் உஜ்ஜீவிக்கும்படி க்ருபைபண்ணி அருளவேண்டும் என்கிறார்.

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என் 
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திருநான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவரமங்கை
உள் இருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறெனக்கே

பகாஸுரனை அழித்தவனாய் யமளார்ஜுன மரங்களை வீழ்த்தியவனாய் ஏழு எருதுகளையும் அழிப்பவனாய், இப்படி ஒருவருக்கும் புரியாத ஆழமான விஷயங்களை எனக்குக் காட்டித்தந்த ஆச்சர்யபூதனே! கறுத்த மாணிக்கத்தின் சுடர்போலேயிருக்கிற திருமேனி அழகையுடையவனே! தெளிவை உடையவர்களாய் பகவத் ஸ்வரூபத்தைக் காட்டும் ஸ்ரீயையுடைய நான்கு வேதங்களின் தாத்பர்யங்களும் தாங்களிட்ட வழக்காய் இருப்பவர்கள் மிகுதியாக வாழ்க்கையாலே ஸம்ஸார தாபம் இல்லாதபடி குளிர்ச்சியான சிரீவரமங்கையின் உள்ளே என்னை அனுபவிக்கச் செய்வதற்காக எழுந்தருளியிருந்த உபகாரகனே! எனக்கு உன் திருவடிகளில் தொண்டு செய்து உஜ்ஜீவிக்கும் வழியை க்ருபைபண்ணியருள வேண்டும்.

பத்தாம் பாசுரம். எம்பெருமான் “நம்மைப் பெறுவதற்கு நம் திருவடிகளே உபாயம்” என்று காட்டிக்கொடுக்க, இந்த உபகாரத்துக்கு என்னிடத்தில் ஒரு கைம்மாறு இல்லை என்கிறார்.

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர் 
கைம்மாறு நான் ஒன்றிலேன் எனதாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ்செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை
நாறு பூந்தண்டுழாய் முடியாய்! தெய்வ நாயகனே

எனக்கு உன்னை அடைவதற்கு வழியாக உன் திருவடிகளையே புகலிடமான உபாயமாகக் கொடுத்து விட்டாய். இப்படிப்பட்ட உனக்கு ஓர் கைம்மாறு ஒன்றும் உள்ளவனாக நான் இல்லை. எனது ஆத்மாவும் முன்பே உன்னுடையதாக இருக்கிறது. சேற்று நிலத்திலே இருக்கும் கரும்பும் அதைக்காட்டிலும் பெரிதாக வளரும் செந்நெலும் நெருங்கிக் குளிர்ச்சியாக இருக்கும் சிரீவரமங்கையில் இருப்பவனாய் மிகவும் நறுமணம் வீசும் புதிய, குளிர்ச்சியான திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடையவனாய் நித்யஸூரிகளுக்கு நாயகனாய் இருப்பவனே! இப்படிப்பட்ட உனக்கு நான் கைம்மாறு செய்ய முடியாது என்று கருத்து.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைப் பாடவல்லவர்கள் நித்யஸூரிகளுக்கு மிகவும் இனியவர்களாவார்கள் என்று பலத்தை அருளிச்செய்கிறார்.

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்காரவமுதே

நித்யஸூரிகளுக்குத் தலைவனான ஸர்வேச்வரனாய் இயற்கையான தாயன்பையுடைய நாராயணனாய்த் தன் சொத்தை தான் கொள்ளும் த்ரிவிக்ரமன் திருவடிகளிலே, கொய்துகொள்ளும்படி மிகுதியாக இருக்கும் பூக்களையுடைய பொழில்களாலே சூழப்பட்ட திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களில் குளிர்ச்சியான சிரீவரமங்கையை மேவிய இந்தப் பத்துப் பாசுரங்களையும் அர்த்தத்தோடே உடன்பட்டுப் பாட வல்லவர்கள் பரமபதவாஸிகளுக்கு எப்போதும் ஆராவமுதம்போலே இனிமையாக இருப்பார்கள்.

சிரீவரமங்கலநகரிலே எழுந்தருளியிருக்கும் வானமாமலை எம்பெருமானிடத்தில் வேரற்ற மரம் போலே விழுந்து சரணாகதி செய்தும் அவன் வந்து முகம் காட்டாமல் இருக்க, ஒரு வேளை எம்பெருமான் நம்முடைய சரணாகதியைத் திருக்குடந்தையிலே ஏற்றுக்கொள்வான் போலிருக்கிறது என்று எண்ணித் திருக்குடந்தையில் ஆராவமுதன் எம்பெருமானிடத்தில் தன்னுடைய அநந்யகதித்வத்தைச் (வேறு புகலில்லாமல் இருக்கும் நிலை) சொல்லிச் சரணம் புகுகிறார் ஆழ்வார்.

முதல் பாசுரம். உன்னுடைய இயற்கையான ஸம்பந்தமே காரணமாக உன் அழகையும் இனிமையையும் காட்டிக்கொண்டு, நான் சிதிலமாகும்படி நீ திருக்குடந்தையிலே கண்வளர அதைக் கண்டேன் என்கிறார்.

ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெற்கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே

எனக்கு இயற்கையான தலைவனாய், எத்தனை அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாத எப்பொழுதும் இனிமையானவனாய், அடியேனுடைய சரீரம் உன் விஷயத்தில் அன்பே வடிவாக நீரைப்போலே உருக்குலைந்து வருத்தத்துடன் கரையும்படி உருகப்பண்ணும் அளவிடமுடியாத இனிமையை உடையவனே! கனத்தாலே விஞ்சின செந்நெற்கதிர்கள் கவரிவீசினாப்போலே இருப்பதாய் அதற்குக் காரணமான ஜல ஸம்ருத்தியை உடைய திருக்குடந்தையிலே அழகு விஞ்சின ஒப்பனை திகழும்படிக் கண்வளர்ந்தருளினாய். என் கண்ணாலே கண்டு அனுபவித்தேன். ஆனால் வேறு பரிமாற்றங்கள் கிடைக்கவில்லை என்று கருத்து.

இரண்டாம் பாசுரம். அடியார்களுக்காகப் பல அவதாரங்களைச் செய்த நீ உன் கண்ணாலே நன்றாகக் கடாக்ஷிக்கவில்லை, நான் என் செய்வேன் என்கிறார்.

எம்மானே என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே!
எம்மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக்குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?

எனக்கு ஸ்வாமியாய், எனக்கு ஸத்வகுணம் பிறக்கும்படி பரிசுத்தமான வடிவை உடையவனாய், எனக்கு அனுபவத்தைக் கொடுப்பவனாய், எல்லா விதங்களிலும் இருக்கும் உயர்ந்த திருமேனிகளை ஆசையால் அங்கீகரித்து இருப்பவனாய், அந்த அந்த விக்ரஹங்களில் இருக்கும் அழகாலே எல்லாருடைய மனங்களையும் கவர்ந்து செருக்கனாயிருக்குமவனாய் இருப்பவனே! சிவந்து பெருத்த தாமரைகள் மிகுதியாக நீரின்மேலே எல்லாவிடங்களிலும் மலரும் திருக்குடந்தையிலே அந்த உயர்ந்ததான தாமரைப்பூப்போலே இருக்கிற திருக்கண்கள் வளரும்படி கிடக்கிறவனே! நான் இப்பொழுது என் செய்வேன்?

மூன்றாம் பாசுரம். கைம்முதல் இல்லாத நான் உன்னைத் தவிர வேறொருவராலும் ரக்ஷிக்கப்பட வேண்டாம். இப்படியாக்கின நீயே எப்பொழுதும் என்னை உன் திருவடிகளிலே அடிமை கொள்ளாப் பார் என்கிறார்.

என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக்காணே

நான் என்னைக் காத்துக்கொள்ள என்ன செயலைச் செய்வேன்? எனக்கு ரக்ஷகர் யார்? என்னை என்ன செய்வதாக இருக்கிறார்? உன்னைத் தவிர வேறு யாராலும் ஒரு குறையும் போக்கப்பட வேண்டியவனாக நான் இல்லை. மிகவும் திண்ணிய மதிள் சூழ்ந்த திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனே! அடியேனுடைய ஆத்மா உஜ்ஜீவிக்கும் காலம் இருக்கும் நாள் எத்தனை நாளோ அந்த நாளெல்லாம் உன் திருவடிகளை பிடித்துக்கொண்டே நடக்கும்படி பார்த்தருளவேண்டும்.

நான்காம் பாசுரம். அளவற்ற பெருமையையுடைய ஸர்வேச்வரனான உன்னை இந்த அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு அது முடியாமல் கலங்கி நிற்கிறேன் என்கிறார்.

செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே

மேலே போகக் காணவல்ல சக்தியையுடையவர்கள் காணுமளவுக்கும் மேலே போகக்கூடிய குண கீர்த்தியையுடையவனாய் அதற்கு முடிவில்லாமல் இருப்பவனே! எல்லா உலகத்தையும் அடிமையாகவுடைய அத்விதீயமான திருமேனியையுடையவனாய் உன்பக்கல் ஆசை விஞ்சியிருப்பவர்களுடைய திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனே! உன்னை நான் நினைத்தபடி கண்டு அனுபவிக்கைக்காக அலமந்து ஆகாசத்தை நோக்கி பக்திபரவசரைப்போலே அழுது ப்ரபன்னரைப்போலே தொழுவேன்.

ஐந்தாம் பாசுரம். உன் கண்ணழகிலே ஈடுபட்டுப் பலவிதமான செயல்களைச் செய்யும் நான் உன் திருவடிகளைச் சேரும்படிப் பார்த்தருள வேண்டும் என்கிறார்.

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தாமரைக் கண்ணா
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்

அழுவது, தொழுவது, ஆடிப் பார்ப்பது, பாடுவது, அலற்றுவது, என்னைத் தழுவி இருக்கும் காதலாகிற ப்ரபலமான பாபத்தால் அவன் வரக்கூடிய பக்கங்களைப் பார்த்து அங்கு வாராமையாலே வெட்கப்பட்டுத் தலை கவிழ்ந்திருப்பேன். மிகுதியாய் அழகாய் இருக்கும் நீர் நிலங்களையுடைய திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனாய் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனே! உன்னைத் தொழுபவனான என்னை உன் திருவடிகளை அடையும்படி ஒரு நல்ல வழியை நீயே பார்க்க வேண்டும்.

ஆறாம் பாசுரம். நித்யஸூரிகளால் வணங்கப்படும் மிகவும் இனிமையை உடையவனான நீ என் விரோதியைப் போக்கி உன் திருவடிகளிலே சேர்த்துக்கொண்டருள வேண்டும் என்கிறார்.

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே!
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரியேறே

வாழ்ச்சியாலே இயற்கையான புகழை உடையவர்களுக்காகத்தான் திருக்குடந்தையிலே சயனித்தருளினாய். நித்யஸூரிகளுக்கும் தலைவனாய் யாழின் இசைபோலே, எப்பொழுதும் இனிக்கும் அமுதம்போலே, ஸ்துதிப்பது முதலான செயல்களால் நாக்குக்கு இனியவனாய், மனதுக்கும் இனியவனாய் உயர்ந்த சிங்கத்தைப்போன்ற பெருமையை உடையவனே! உன் திருவடிகளைச் சேர்ந்து அதற்கே ஆட்பட்டிருக்கும் பழமையான நிலையைக் கண்டிருந்தே, நிரப்பமுடியாத ஆசை என்னும் குழியை தூர்த்து எத்தனை நாள் அகன்று இருப்பேன். என் அநாதிகால பாபத்தை அறுத்து உன் திருவடிகளைச் சேரும்படிச் சூழ்ந்தருள வேண்டும்.

ஏழாம் பாசுரம். உன்னுடைய திருமேனி அழகைக்காட்டி என்னை அடிமை கொண்டபின்பு உன் திருவடிகளைத் தந்து என் விரோதியைப் போக்கவேண்டும் என்கிறார்.

அரியேறே என்னம் பொற்சுடரே செங்கட்கருமுகிலே
எரியே பவளக் குன்றே நால் தோள் எந்தாய் உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே

கட்டுக்கடங்காத ஸ்வாதந்த்ரியத்தாலே செருக்குடன் இருப்பவனாய் விரும்பத்தக்க பொன்போலேயிருக்கிற திருமேனியில் ஒளியை எனக்கு அனுபவிக்கக் கொடுத்தவனாய் சிறந்த திருக்கண்களையுடையவனாய் முன்பு சொன்ன பொன்னொளிக்கு இருப்பிடமான கறுத்த திருமேனியையுடையவனாய், எதிரிகளுக்கு அக்னிபோலே சிவந்த பவளக்குன்றுபோலே உயர்ந்த திருமேனியையுடையவனாய் நான்கு தோள்களையும் காட்டி என்னை எழுதிக்கொண்ட ஸ்வாமியே! உன்னுடைய க்ருபையை ஒருகாலும் பிரியாதபடி வாசிக கைங்கர்யங்களைக் கொண்டாய். திருக்குடந்தையிலே பிராட்டியுடன் சேவைசாதிப்பவனே! இனி நான் உன் பிரிவைத் தாங்கமாட்டேன். உன் திருவடிகளைத் தந்து என்னுடைய சரீர ஸம்பந்தத்தை போக்கியருள வேண்டும்.

எட்டாம் பாசுரம். விபரீதமான பலமே கிடைத்தாலும் உன்னைத் தவிர வேறொரு ரக்ஷகர் எனக்கு இல்லை. இப்படி வேறு தலைவன் இல்லாத நான் உன் திருவடிகளை விடாதபடி அனுமதி கொடுக்கவேண்டும் என்கிறார்.

களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்
வளை வாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மா மாயா
தளரா உடலம் எனதாவி சரிந்து போம் போது
இளையாதுன தாள் ஒருங்கப்பிடித்துப் போத இசை நீயே

நீ என் துன்பத்தைப் போக்கினாலும் போக்காவிட்டாலும் வேறு ஒரு துன்பத்தைப் போக்கும் புகல் எனக்கு இல்லை. சூழ்ந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையாய்! திருக்குடந்தையிலே சயனித்திருக்கிற மிகவும் ஆச்சர்யமான அழகை உடையவனே! என் உடல் தளர்ந்து எனது ப்ராணன் நிலைகுலைந்து சரீரத்தைவிட்டு போகும்போது சித்தமானது பலவீனத்தை அடையாமல் உன் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாக ஒருபடிப்படப் பிடித்து இருக்கும்படி நீயே அனுமதி பண்ணியருள வேண்டும்.

ஒன்பதாம் பாசுரம். எனக்கு அனுமதி தந்து உன் திருவடிகளை காட்டிய நீ, எப்படி உன் சயனத் திருக்கோலத்தின் அழகைக் காண்பித்தாயோ அதைப்போல் நடையழகையும் காட்டவேண்டும் என்கிறார்.

இசைவித்தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
அசைவில் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெருமூர்த்தி!
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே

என்னை அடிமைத்தனத்தில் இசையும்படிப் பண்ணி, உன் திருவடிகள் விஷயமான வழி மற்றும் பலனாகிய எண்ணத்துடன் இருத்திய ஸ்வாமியே! பகவதனுபவத்துக்கு ஒரு அசைவும் இல்லாத ஸூரிகளுக்குத் தலைவர்களான அநந்த கருட விஷ்வக்ஸேனர் ஆகியோருக்கும் தலைவனாய், எல்லாவற்றுக்கும் காரணனாய் மிகவும் மேன்மை பொருந்திய திருமேனியை உடையவனே! திக்குக்கள் தோறும் ஒளியை வீசும் அழகிய விலையுயர்ந்த ரத்னங்கள் சேருகிற திருக்குடந்தையில் அலைச்சல் தீர்ந்து உலகம் கொண்டாடும்படி சயனித்திருப்பவனே! நான் காணும்படி வரவேண்டும்.

பத்தாம் பாசுரம். மனதிலே நீ இருந்து ஆனந்தத்தைக் கொடுத்தாலும் வெளியிலே நான் கண்டு அனுபவிக்கமுடியாதபடி இருக்கிற உன்னை, எத்தனை திவ்யதேசங்களிலே தேடித் திரிவது என்கிறார்.

வாரா அருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை
ஊரா உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ

கண்ணாலே அனுபவிக்கலாம்படி திருமேனியழகோடு நடந்து வாராமல், உருவமில்லாதவனாய் என் மனதிலே தோன்றி உன் ஆச்சர்ய குணங்களை எனக்குக் காட்டுபவனாய், அழிவில்லாத திருமேனியோடு எத்தனை அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாத அம்ருதம்போலே இனியவனாய் உனக்கு அடிமையான என் ப்ராணனின் இருப்பிடமான நெஞ்சுக்குள்ளே மிகவும் ஆனந்தத்தை விளைக்கிறாய். தீராத வினைகள் தீரும்படி என்னை வாசிக கைங்கர்யம் கொண்டவனாய், கண்டு அனுபவிக்கும்படி திருக்குடந்தையை தனித்துவம் வாய்ந்த இருப்பிடமாய்க்கொண்டு இருப்பவனே! உனக்கு அடிமைப்பட்டிருந்தும் வேறு கதியில்லாத அடியேன் இன்னும் மேலுண்டான காலத்திலும் நினைத்தபடி அனுபவிக்கமுடியாமல் வருந்துவேனோ?

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியை நன்றாகக் கற்கவல்லவர்கள் அடியார்களுக்கு விரும்பத்தவர்களாவர்கள் என்கிறார்.

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே

உழலை கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய பேய்ச்சி முலையினுள்ளிருந்த அவளுடைய ப்ராணனை எடுத்த க்ருஷ்ணனுடையவையாய் தமக்கு உபாயமாக முன்பு காட்டிகொடுத்த திருவடிகளையே உபாயமாக புத்திபண்ணிக்கொண்ட, திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் குழலிலும் மிகவும் இனிதாக இருக்கும்படி அருளிச்செய்த தனித்துவம் வாய்ந்த ஆயிரம் பாசுரங்களுக்குள் இப்பத்தையும் தங்கள் சிறுபிள்ளைத்தனம் தீர்ந்து சொல்ல வல்லவர்கள் மான்போலிருக்கிற கண்களையுடைய திவ்ய அப்ஸரஸ்ஸுகளுக்கு ப்ரஹ்மாலங்காரம் செய்யும் க்ரமத்தில் விரும்பத்தக்கவர்களாக ஆவார்கள். மான்போன்ற கண்களை உடையவர்களுக்கு காமுகர்கள் எப்படியோ அதைப்போலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இந்த பாசுரங்களைச் சொல்ல வல்லவர்கள் என்று கருத்து.

சரணாகதி செய்யும் காலத்தில் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லிக்கொண்டும் நமக்கு வேறு புகலில்லை என்பதையும் வேறு உபாயங்களில் அந்வயம் இல்லை என்பதையும் சொல்லி பிராட்டி புருஷகாரமாக எம்பெருமான் திருவடிகளை அணுகவேண்டும். இதை ஆழ்வார் இந்தப் பதிகத்தில் திருவேங்கடமுடையான் விஷயத்தில் மிகவும் அழகாகச் செய்து காட்டுகிறார்.

முதல் பாசுரம். எல்லோரையும் ரக்ஷிக்கும் தன்மைகளைக் கொண்டு திருமலையிலே இருக்கும் உன்னை அடிமையான நான் கிட்டும் வழியை அருளிச்செய்ய வேணும் என்கிறார்.

உலகம் உண்ட பெரு வாயா உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே

ப்ரளய காலத்திலே உலகத்தை அமுதுசெய்தபோது, காப்பதற்கு உபகரணமான பெரிய பாரிப்பையுடைய திருவாயையுடையவனாய் முடிவில்லாத கீர்த்தியை உடைய இயற்கையான ஸ்வாமியே! இயற்கையான அழகு முதலிய குணங்களால் ஜ்வலிக்கும் பூர்ணமாய் ஒளிமயமான திருமேனியையுடையவனாய் அளவற்ற பெருமையுடையவனாய் எனக்கு ப்ராணனானவனே! எல்லா உலகுக்கும் திலகமாய் நின்ற திருமலையிலே எனக்கு உன்னுடைய ஸ்வாமித்வத்தைக் காட்டிக்கொண்டு நின்றவனே! பரம்பரையாகப் பழைய அடியவனான நான் உன் திருவடிகளைச் சேரும் வழியை நீ அருளிச்செய்யவேண்டும்.

இரண்டாம் பாசுரம். எல்லா விரோதிகளையும் போக்கும் ஆய்தங்களையுடைய நீ, உன்னிடத்திலே மிகவும் ஈடுபாடு கொண்டுள்ள நான் உன் திருவடிகளைச் சேரும்படி க்ருபை பண்ணியருள வேண்டும் என்கிறார்.

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலம் எல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே

க்ரூரராய் மிகவும் வலிமை படைத்த அசுரர்களுடைய கூட்டம் எல்லாம் சிதறி தூளியாம்படித் தரைப்பட்டிருக்கும்போது மேலும் சீறி ஜ்வலிக்கும் வீரஸ்ரீயையுடைய திருவாழியை அடக்கி ஆளவல்லவனாய் நித்யஸூரிகளுக்குத் தலைவனே! சேற்றாலே பூர்ணமான சுனையிலே சிவந்த தாமரையானது சிவந்த தீயைப்போன்ற நிறத்தைக் கொண்டு மலரும்படியிருக்கும் திருமலையிலே வாழ்பவனே! அளவற்ற அன்பை உடையவனான அடியேன் உன் திருவடிகளைச் சேரும்படி க்ருபை பண்ணியருள வேண்டும்.

மூன்றாம் பாசுரம். உன்னுடைய ரூபத்தாலும் குணத்தாலும் இனிமையாலும் மிகவும் உய்ரந்தவிதத்தில் அனுபவிக்கப்படுபவனான நீ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமலையிலே புகலிடமாய் வந்ததைப்போலே அடியோங்களுக்கு இரங்கி அருளவேண்டும் என்கிறார்.

வண்ணம் அருள் கொள் அணி மேக வண்ணா! மாயவம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!
அண்ணலே! உன் அடி சேர அடியேற்கு ஆவாவென்னாயே

நிறத்தில் பிச்சேறும்படியான அழகையுடைய மேகம்போன்ற திருமேனியையுடையவனே! ஆச்சர்யமான குணங்களால் எல்லோரையும் விடப் பெரியவனாய் இருப்பவனே! நெஞ்சில் புகுந்து தித்திக்கும் அமுதே! நித்யஸூரிகளுக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்கும் பெருமையையுடையவனே! தெளிந்த அழகான அருவிகள் மணியையும் பொன்னையும் முத்தையும் அலைக்கும் திருமலையிலே இருப்பவனாய் தனித்துவம் வாய்ந்த தலைவனாய் இருப்பவனே! உன்னுடைய திருவடிகளைச் சேரும்படி அடியோங்களுக்கு ஐயோ! ஐயோ! என்று இரங்கி அருளவேண்டும்.

நான்காம் பாசுரம். உலகத்துக்கு விரோதிகளை அழையச்செய்யும் செல்வத்தையுடைய நீ, உன்னுடைய மிகவும் இனிமையான திருவடிகளை நான் கிட்டும்படி பண்ணியருள வேண்டும் என்கிறார்.

ஆவா! என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள் கேள்வா
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே

உலகத்தை ஐயோ! ஐயோ! என்று இரங்காதே துன்புறுத்தும் அசுரர்கள் ப்ராணன் விஷயமாக அக்னிமுகமான அம்புகளை மழைபோலே பொழிந்த ஸ்ரீ சார்ங்கம் என்னும் வில்லையுடையவனே! வீரபத்னியான லக்ஷ்மிக்கு தகுந்த நாயகனாய் அதனாலே உஜ்ஜ்வலரூபனாய், தேவர்களும், ரிஷிகளும் கூட்டமாக ஆதரிக்கும்படியான திருமலையில் வாழ்பவனே! பூவாலே நிறைந்த உன் திருவடிகளை இழக்கும்படி மிக அரிதான பாபத்தையுடைய நான் உன்னைக் கிட்டும் வழியைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.

ஐந்தாம் பாசுரம். அடியார்களைக் காப்பதற்காக அநாயாஸமான செயல்களையுடைய உன் திருவடிகளைச் சேர்வது எந்நாள் என்கிறார்.

புணரா நின்ற மரம் ஏழ் அன்றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத்துன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?

கூட்டமாக நின்ற ஏழு மராமரங்களையும் ஸுக்ரீவ மஹாராஜருக்கு எம்பெருமான் சக்தியிலே தேவையில்லாத ஸந்தேஹம் வந்த அக்காலத்திலே அவருக்கு நம்பிக்கை பிறக்கும்படியாக எய்த ஒரு வில்லை உடையவனே! பொருந்தி நின்ற இரண்டு மரங்களின் நடுவே போன ஜகத்துக்குக் காரணனானவனே! கதிப்பு விஞ்சின மேகங்கள் என்று சொல்லும்படி யானைகள் சேர்ந்து வாழும் திருமலையிலே வாழ்பவனே! பெருமையையுடைய ஸ்ரீசார்ங்கத்தையுடையவனான உன் திருவடிகளை அடியேன் சேருவது எந்நாள்? ஓ என்று வருத்தத்தின் மிகுதியை ஒவ்வொரு வரியிலும் வெளியிடுகிறார்.

ஆறாம் பாசுரம். மிகுந்த ஞானத்தையுடைய ஸூரிகளும் அடிமை செய்யும் திருமலையிலே உன் திருவடிகளைக்கிட்டி நான் அடிமை செய்வது எந்நாள் என்கிறார்.

எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய்ந்நாமனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?

எல்லா லோகங்களையும் அளந்த திருவடித்தாமரைகள் இரண்டையும் நாம் காண்பதற்கு எந்த நாளை உடையோம் என்று ஸூரிகள் எல்லாக்காலத்திலும் நின்று இப்படிச் சொல்லி துதித்து வணங்கி கூட்டம் கூட்டமாக சரீரம், வாக்கு மற்றும் மனதாலே அடிமை செய்யும்படியான திருவேங்கமுடையானே! உனக்கே ஆட்பட்டவனான நான் உண்மையாகக் கிட்டி, உன் திருவடிகளிலே பொருந்துவது எந்நாள்?

ஏழாம் பாசுரம். எல்லோருக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கும் உன்னை அனுபவிக்கு எந்த ஸாதனத்தையும் அனுஷ்டிக்காமல் இருந்தும் அனுஷ்டித்துப் பலம் காலம் தாழ்த்திக் கிடைப்பதைப்போலே என்னால் பொறுக்கமுடியவில்லை என்கிறார்.

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் உடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியா வினைகள் தீர் மருந்தே! திருவேங்கடத்து எம்பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலாதாற்றேனே

இயற்கையான அடிமைத்தனத்தையுடைய நான், உன்னைக் கிட்டி நிரந்தர அனுபவம் பண்ணும்படியான அமுதமே! நித்யஸூரிகளுக்குத் தலைவனே!
அடியார்களின் விரோதிகளை அழிப்பவனான பெரியதிருவடியைக் கொடியாக உடையவனே! அழகிய கனிந்த பழத்தைப்போன்ற சிவந்த திருவதரத்தை உடையவனே! செடிபோலே செறிந்த பாபங்களை தீர்க்கும் மருந்தே! திருவேங்கடத்தில் இருக்கும் என் ஸ்வாமியே! எந்த நோன்பையும் நோற்காமல் இருந்தும், உன்னை அடையாமல் இருக்கும் ஒரு நொடிப்பொழுதைக்கூட என்னால் தாங்கமுடியவில்லை.

எட்டாம் பாசுரம். தங்களை ஈச்வரர்களாக நினைப்பவர்களும் நன்றாக வணங்கும்படி ஸுலபனாய் நிற்கிற நீ, க்ருஷ்ணனாய் வந்ததைப்போலே என்பக்கல் வரவேண்டும் என்கிறார்.

நோலாதாற்றேன் உன பாதம் காணவென்று நுண்ணுணர்வின்
நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன்பால் வந்தாய் போலே வாராயே

உன் திருவடிகளைக் காண்பதற்கு எந்த ஸாதனத்தையும் அனுஷ்டியாதிருந்தாலும், பொறுக்கமுடியவில்லை என்று சொல்லி எல்லாமறிந்த நுணுக்கமான ஞானமுடைய கறுத்திருக்கும் கழுத்தையுடையவனான ஜகத்துக்குத் தலைவனான ருத்ரனும், அவனுக்கும் தந்தையாய் நிறைந்த ஞாபத்தையுடைய ப்ரஹ்மாவும் மூன்றுலோகங்களுக்குத் தலைவனான இந்த்ரனும், இளம் மீன்களைப்போன்ற கண்களையுடைய பார்வதி, ஸரஸ்வதி, இந்த்ராணி போன்ற பெண்களும் சூழ, ஆசையுடன் வந்து வணங்கும் திருவேங்கடத்தானே! கரிய நிறத்தையுடைய க்ருஷ்ணனாய் எல்லோரையும் மயக்கி வந்தாற்போலே அடியேன்பக்கல் நீ வரவேண்டும்.

ஒன்பதாம் பாசுரம். மிகவும் இனிமையான மற்றும் அழகான உன் திருவடிகளை ஒரு க்ஷணமும் பிரிய மாட்டேன் என்கிறார்.

வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய் நாற்றோளமுதே எனதுயிரே
சிந்தாமணிகள் பகரல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே

உன்னை விரும்பாதவர்கள் விஷயத்தில் வருவதைப்போலே இருந்து வாராமல் இருப்பாய். அடியார்கள் விஷயத்தில் வருவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்திருக்கும்போது அவர்கள் ஆசைப்படி அனுபவத்தைக்கொடுக்க வருவாய். சிவந்த தாமரைபோலே அழகாய் இருக்கும் திருக்கண்களையும், சிவந்த கனி போலே இனிமையாய் இருக்கும் திருவதரங்களையும், அடியார்களை எடுத்தணைக்கும் நான்கு திருத்தோள்களையும் உடையவனே! அடியார்களுக்கு அமுதம்போன்று இருக்கும் நிலையை எனக்குக் காட்டிக்கொடுத்து எனக்கு உயிராய் இருப்பவனே! நினைத்ததெல்லாம் கொடுக்கக்கூடிய விலையுயர்ந்த ரத்னங்களினுடைய ஒளியானது இரவைப் பகலாக ஆக்கும் திருமலையில் வாழ்பவனே! ஐயோ! உன் திருவடிகளை அடியேன் சிறிதும் அகல முடியாதவனாக இருக்கிறேன்.

பத்தாம் பாசுரம். புருஷகாரமான பிராட்டியையும், குணங்களையுமுடைய உன் திருவடிகளை வேறுபுகலில்லாதவனாக அடைந்தேன் என்று முறையாக சரணாகதியைப் பண்ணுகிறார்.

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே

“நொடிப்பொழுதும் அகல மாட்டேன்” என்று அலர்மேல்மங்கைத் தாயார் நிரந்தரமாக வாழும் திருமார்பையுடையவனே! ஒப்பில்லாத எல்லையில்லாத வாத்ஸல்யத்தை உடையவனே! மூன்று விதமான சேதனர்கள் மற்றும் அசேதனப் பொருள்களையும் சொத்தாகக் கொண்டிருக்கும் ஸ்வாமித்வத்தை உடையவனே! என்னையும் அடிமைகொள்ளும் ஸௌசீல்யத்தை உடையவனே! ஒப்பில்லாத கைங்கர்ய நிஷ்டரான அமரரும் குணானுபவ நிஷ்டரான முனிவர்களுமான கூட்டங்கள் விரும்பி வாழும் திருமலையிலே இருக்கும் ஸௌலப்யத்தை உடையவனே! வேறு புகல் ஒன்றும் இல்லாத அடியேன் உன்னுடைய திருவடிகளின் கீழே ஸ்திரமாக அமர்ந்துவிட்டேன்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைப் பற்றியவர்கள் பரமபதத்திலே பெருமையுடன் நிரந்தரமாக விளஙுவார்கள் என்று பலனை அருளிச்செய்கிறார்.

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்! வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக்கேழ் இல்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே

“அடியார்களே! நம்முடைய திருவடிகளின் கீழே ஸ்திரமாகப் புகுந்து நிரந்தரமான அனுபவத்தைப் பண்ணுங்கள்!” என்றென்று தன் க்ருபையைக் கொடுக்கும் நிலைக்கு ஒப்பில்லாத ஸர்வேச்வரனைக் குறித்து, குளிர்ச்சியான நீர்நிலங்களையுடைய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் தம்முடைய கார்யங்களை முடித்துக்கொள்வதற்காக அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களிலும் வைத்துக்கொண்டு திருமலைக்கு என்று ஏற்பட்ட இந்தப் பத்துப் பாசுரங்களை அர்த்தத்துடன் பிடித்துக்கொண்டவர்கள் மிகவும் பெருமை வாய்ந்த பரமபதத்தில் பெருமையுடன் வீற்றிருந்து நிரந்தர அனுபவத்துடன் வாழ்வார்கள்.

எம்பெருமானைத் துறந்து துயரத்தின் உச்சியை அடைந்த நம்மாழ்வார் தன்னிலை மாறிப் பெண்ணிலையை அடைந்தார். பராங்குச நாயகியாக ஸ்ரீரங்கநாதனிடத்தில் மிகவும் ஈடுபட்டு பேச முடியாத நிலையை அடைந்து, பராங்குச நாயகியின் திருத்தாயாராகத் தன் மகளைக் கொண்டு போய் பெரிய பெருமாள் திருமுன்பே இருக்கும் திருமணத்தூண்களுக்கு நடுவே கிடத்தித் தன் மகளின் அவல நிலையை அவனிடத்தில் முறையிட்டு “இவள் விஷயத்தில் நீ தான் எல்லா ரக்ஷணங்களையும் செய்யவேண்டும்” என்று ப்ரார்த்தித்து நிற்கிறாள்.

முதல் பாசுரம். மிகவும் விரும்பத்தக்கதான தனித்துவம் வாய்ந்த அடையாளங்களைச் சொன்ன இவள் துன்பத்துடன் இருக்கிறாள், இவள் விஷயத்தில் என்ன செய்வதாக நினைத்திருக்கிறீர் என்கிறாள்.

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு? என்னும் இரு நிலம் கை துழாவிருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்தென் செய்கின்றாயே?

இரவும் பகலும் கண்கள் துயிலவேண்டும் என்ற அறிவும் இல்லாதவள். கண்ணில் பெருகும் நீரை கடல் நீரைக் கையாலே இறைப்பதைபோலே இறைக்கிறாள். எம்பெருமானுடைய சங்கு சக்கரம் என்று சொல்லி கையைக் கூப்புகிறாள். எம்பெருமானுக்குத் தாமரை போன்ற கண் என்று சொல்லித் தளர்கிறாள். உன்னை விட்டு எப்படி வாழ்வேன் என்று சொல்லுகிறாள். பெரிய பூமியை கையாலே துழாவி ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறாள். சிவந்த கயல்கள் துள்ளிப் பாயும் நீரையுடைய திருவரங்கத்திலே வாழ்பவனே! இப்படிப்பட்ட மாறுபாடுகளை உடையவள் விஷயத்தில் என்ன செய்யப்போகிறாய்?

இரண்டாம் பாசுரம். நீ எல்லாவிதத்திலும் ரக்ஷகனாயிருக்க, இவளுடைய சரீரம் என்ன ஆகப் போகிறது என்கிறாள்.

என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய் என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில் வண்ணா தகுவதோ என்னும்
முன் செய்திவ்வுலகம் உண்டுமிழ்ந்தளந்தாய் என் கொலோ முடிகின்றது இவட்கே

என்னை உனக்கே ஆக்கிகொண்ட, மிகவும் அழகிய திருக்கண்களை உடையவனே! என்பாள். கண்களில் கண்ணீர் பெருகி எதுவும் செய்ய முடியாமல் இருப்பாள். அலையெறிகிற நீரையுடைய திருவரங்கத்தில் வாழ்பவனே! உன்னை அடைய நான் என்ன செய்ய முடியும் என்பாள். வெப்பமான மூச்சை பலமுறை விட்டு உருகுவாள். நான் முன்பு செய்த பாபத்தினாலேயே நீ என் முன் வாராதிருக்கிறாய் என்று சொல்லுவாள். மேகத்தைபோன்ற உதாரகுணத்தை உடையவனே! நீ செய்வது தகுமோ என்பாள். இந்த லோகத்தை முன் காலத்தில் படைத்து, பிறகு அளந்து கொண்டவனே! என் பெண்பிள்ளைக்கு என்ன ஆகப்போகிறதோ?

மூன்றாம் பாசுரம். அடியார்களின் விரோதிகளைப் போக்கும் பல அவதாரங்களைச் செய்த நீ, இவள் இப்படித் துன்பப்படுவதற்கு என்ன செய்தாய் என்கிறாள்.

வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும் மையாக்கும்
உட்குடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே! என்னும் உள்ளுருகும்
கட்கிலீ உன்னைக் காணுமாறருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும்
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்! இவள் திறத்தென் செய்திட்டாயே?

சிறிதும் வெட்கம் இல்லாதவளாக இருக்கிறாள். மணியைப்போன்று எளிமையாக இருப்பவனே என்பாள். இதைக் கேட்டு வருகிறானா என்று வானத்தைப் பார்ப்பாள். வாராததாலே மயங்குவாள். வலிமையை உடைய அசுரர்களுடைய உயிர்களை சிறிதும் மிச்சம் வைக்காமல் உண்ட தனித்துவம் வாய்ந்த வீரனே என்பாள். அதை நினைத்து உள்ளம் உருகுவாள். கண்ணுக்குக் காண அரிய நீ உன்னை நான் காணும்படி க்ருபை பண்ண வேண்டும். எல்லோருக்கும் தரிசனம் கொடுத்த ஸ்ரீராமனாயும் க்ருஷ்ணனாயும் அவதரித்தாயே என்பாள். திண்ணியதாய், கொடியையுடைய மதிள் சூழ்ந்த திருவரங்கத்திலே வாழ்பவனே! இவளிப்படித் துன்பத்துடன் இருப்பதற்கு நீ செய்தது என்ன?

நான்காம் பாசுரம். மிகவும் பெருமை பொருந்தியவனாய் இருந்து இவளை துன்பத்துக்கு ஆளாக்கின நீ இவள் விஷயத்தில் என்ன நினைத்திருக்கிறாய் என்கிறாள்.

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல் வண்ணா! கடியை காணென்னும்
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்றென்றே மயங்கும்
சிட்டனே! செழு நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத்தென் சிந்தித்தாயே?

இட்டு வைத்த இடத்தில் இருக்கும்படியான காலையும் கையையும் உடையவளாய் இருப்பாள். அந்த நிலை மாறி எழுந்திருந்து உலாவுவாள். பிறகு மோஹிப்பாள். எம்பெருமான் வருவான் என்று கைகூப்புவாள். வாராததால், இந்தக் காதல் மிகவும் கஷ்டப்படுத்துகிறது என்று வெறுத்து மூர்ச்சை அடைவாள். எல்லாவற்றையும் தன்னுள்ளே வைத்து ரக்ஷிக்கும் கடலைப்போன்றவனே! எனக்கு மிகவும் கடியவனாய் நின்றான் என்பாள். எல்லாப் பக்கங்களிலும் வாயையுடைய திருவாழியை வலக்கையிலே உடையவனே என்பாள். வந்துவிட்டாய் என்று பலமுறை ஆசைப்பட்டுப்பார்த்து அப்படி வாராததாலே மயக்கம் அடைவாள். பேரொழுக்கம் உடையவனைப்போலே அழகிய நீர்க்கரையிலே, திருவரங்கத்திலே சயனித்திருப்பவனே! இவள் விஷயத்தில் என்ன நினைத்திருக்கிறாய்?

ஐந்தாம் பாசுரம். நீ அடியார்கள் விருப்பத்தை நிறைவேற்றும் பவ்யதையை உடையவனாயிருக்க, இவள் ஒவ்வொரு க்ஷணமும் நிலை மாறும் துன்பத்தை உடையவளாக இருக்கிறாள் என்கிறாள்.

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக் கண் நீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும்
அந்திப் போதவுணன் உடல் இடந்தானே! அலை கடல் கடைந்த ஆரமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே

அந்திப்பொழுதில் அஸுரனான ஹிரண்யனுடைய சரீரத்தைப் பிளந்தவனே! அலையையுடைய கடலைக் கடைந்த மிகவும் இனிமையானவனே! உன் திருவடிகளையே சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற ஸ்திரமான எண்ணத்தை உடைய இப்பெண்பிள்ளையை மதிகெடுத்தவனே! இவள் முன்பு உன்னுடன் கூடியதை நினைப்பாள். அது இப்போது கிடைக்காததால் அறிவழிவாள். பிறகு தேறி நிற்பாள். கை கூப்புவாள். திருவரங்கத்தில் சயனித்திருப்பவனே என்பாள். தலையாலே வணங்குவாள். அங்கேயே குளிர்ந்த கண்ணீர் பெருகும்படி வந்து என்னைக் கொள்ளாய் என்று பல முறை சொல்லி மயங்குவாள்.

ஆறாம் பாசுரம். அடியார்களை ரக்ஷிக்கத் தேவையான ஆயுதங்களைப் பூர்த்தியாக உடைய நீ, இவள் இப்படி அலற்றும்படிச் செய்துள்ளாய், இந்நிலையில் நான் என்ன செய்வது என்பதை அருளிச்செய்ய வேண்டும் என்கிறாள்.

மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே! என்னும் மாமாயனே! என்னும்
செய்யவாய் மணியே! என்னும் தண்புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்! என்னும்
பைகொள் பாம்பணையாய்! இவள் திறத்தருளாய் பாவியேன் செயற்பாலதுவே

என்னை மையல் கொள்ளும்படி பண்ணி நெஞ்சை அபஹரித்தவனே! என்பாள். எல்லை இல்லாத ஆச்சர்யச் செயல்களை உடையவனே! என்பாள். சிவந்த திருவதரங்களையுடைய மணிபோன்று எளிமையானவனே! என்பாள். குளிர்ந்த நீர் சூழ்ந்த திருவரங்கத்தில் சயனித்திருப்பவனே ! என்பாள். விரோதிகள் விஷயத்தில் வெப்பமே வடிவான ஸ்ரீபஞ்சாயுதங்களையும் எப்பொழுதும் ஏந்தியிருந்து, நித்யஸூரிகளுக்குக் காரணனே! என்பாள். உன்னுடைய ஸ்பர்சத்தாலே விரிகிற பணங்களை உடையவனாய், திருவநந்தாழ்வானைப் படுக்கையாக உடையவனே! இவள் விஷயத்தில், இவளை இப்படி பார்க்க வேண்டிய பாபத்தை உடைய நான் செய்யும் செயலை அருளிச்செய்ய வேண்டும்.

ஏழாம் பாசுரம். அடியார்களைக் காக்க உதவும் திருப்பாற்கடலில் சயனித்திருப்பது ஆகிய குணங்களை உடையவன் தன்மைகளைச் சொல்லி வருந்துகிறாள் என்கிறாளை

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக்கரத்தாய்! கடல் இடம் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே! என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என்னும் என் தீர்த்தனே! என்னும்
கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே

என்னுடைய மென்மைத்தன்மையை உடைய கொழுந்துபோலே மெலிந்திருக்கும் இவள் “எல்லா இடங்களிலும் எதிரிகளுக்குத் துன்பங்களையும் அடியார்களுக்கு இன்பங்களையும் உண்டாக்கினவனே! வேறு புகல் இல்லாதவர்களான ஜயந்தன் (காகாஸுரன்) முதலியவர்களும் பற்றும்படி நின்றவனே! கால சக்கரத்தை நடத்துபவனே! கடலிலே ஒரு கடல் சாய்ந்தாற்போலே சயனித்திருப்பவனே! கண்ணனே! சேல்களை உடைய குளிர்ந்த நீர் சூழ்ந்த திருவரங்கத்திலே சயனித்திருபவனே!” என்று சொல்லி கண்ணீர் மல்க செயலற்று இருப்பாள்.

எட்டாம் பாசுரம். உன்னுடைய அதிமானுஷ சேஷ்டிதங்களில் ஈடுபட்டு மேன்மேலும் துன்புறுகிற இவளுக்கு நான் என்ன செய்வேன்? என்கிறாள்.

கொழுந்து வானவர்கட்கு! என்னும் குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே! என்னும்
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும்
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என் செய்கேன் என் திருமகட்கே

நித்யஸூரிகளுக்குத் தலையானவன் என்பாள். கோவர்த்தன மலையை எளிதில் ஏந்திப் பசுக்களைக் காத்தவனே என்பாள். பக்தி பரவசரைப் போலே அழுவாள். ப்ரபன்னரைப் போலே தொழுவாள். ஆத்ம வஸ்து வெந்துபோகும்படி வெப்பமாக மூச்சுவிடுவாள். இப்படி துக்கத்தைக் கொடுத்த கரிய திருமேனியை உடையவனே! என்பாள். மேலே தலையெடுத்துப் பார்த்து கண்ணை இமைக்காமல் இருப்பாள். எப்படி உன்னைக் காண்பேன்? என்பாள். அழகிய பெருத்த நீர் சூழ்ந்த திருவரங்கத்தில் சயனித்திருப்பவனே! லக்ஷ்மியைப்போன்ற என் பெண்பிள்ளைக்கு நான் என்ன செய்வேன்?

ஒன்பதாம் பாசுரம். லக்ஷ்மி, பூமி, நீளா நாயகனான உன் மிகுந்த ப்ரணயித்வத்தில் (காதலில்) அகப்பட்ட இவளுக்கு என்ன முடிவு ஏற்படும் என்பது எனக்குத் தெரியவில்லை என்கிறாள்.

என் திருமகள் சேர் மார்பனே! என்னும் என்னுடை ஆவியே! என்னும்
நின் திருவெயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும்
அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே! என்னும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே

எனக்குத் தலைவியான லக்ஷ்மி விரும்பி உறையும் திருமார்பை உடையவனே! என்பாள். அதனாலே எனக்கு ஆவியாய் இருப்பவனே! என்பாள். உன்னுடைய திருவெயிற்றால் இடந்து எடுத்து நீ கொண்ட ஸ்ரீபூமிப்பிராட்டிக்கு நாயகனே! என்பாள். ருஷபங்களைப் பந்தயமாக வைத்த அன்று, இடிபோலே ஓசை எழுப்பிய ஏழு ருஷபங்களையும் தழுவி, அழித்து, நீ ஏற்றுக்கொண்ட நப்பின்னைப்பிராட்டி விஷயத்தில் அன்புடையவனே! என்பாள். கட்டளைப்பட்ட திருவரங்கத்தை இருப்பிடமாகக் கொண்டவனே! என்பாள். இவளின் துன்பத்துக்கு முடிவு எப்படி ஏற்படும் என்று தெரியவில்லை.

பத்தாம் பாசுரம். எம்பெருமான் பராங்குச நாயகியுடன் கலக்க, அதைக் கண்ட திருத்தாயார் தன் ஆனந்தத்தை வெளியிடுகிறாள்.

முடிவு இவள் தனக்கொன்றறிகிலேன் என்னும் மூவுலகாளியே! என்னும்
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும் நான்முகக் கடவுளே! என்னும்
வடிவுடை வானோர் தலைவனே! என்னும் வண் திருவரங்கனே! என்னும்
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே

இவள் இப்படி இருந்த தன் நிலைக்கு முடிவு ஒன்று தெரியவில்லை என்பாள். மூன்று லோகங்களையும் ஆளும் இந்த்ரனுக்கு அந்தராத்மாவாக நின்று நடத்துபவனே! என்பாள். நறுமணம் மிகுந்த கொன்றை மாலையைச் சூடிய ஜடையயுடைய ருத்ரனுக்கு அந்தராத்மாவாக நின்று நடத்துபவனே! என்பாள். இவர்களுக்கும் தலைவனான ப்ரஹ்மா என்னும் தெய்வத்துக்கும் அந்தராத்மாவாக நின்று நடத்துபவனே! என்பாள். தன்னைப்போன்ற வடிவையுடைய நித்யஸூரிகளுக்குத் தலைவனே! என்பாள். வள்ளல் தன்மையுடன் இருக்கும் திருவரங்கனே! என்பாள். அவன் திருவடிகளை கிட்டமாட்டாதாப்போலிருந்த இவள் காளமேகம் போன்ற திருமேனியையுடையவன் திருவடிகளை கிட்டி அடைந்தாள்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள் பரமபதத்தில் நித்யஸூரிகளுக்கு நடுவே ஆனந்தத்துடன் இருப்பார்கள் என்று பலத்தை அருளிச்செய்கிறார்.

முகில் வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சடகோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்திப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே

வள்ளல் தன்மையுடைய மேகத்தைப்போன்ற பெரியபெருமாளின் திருவடிகளையே அடைந்து அதுக்கடியான அவருடைய க்ருபையை தலையில்சூடி உஜ்ஜீவித்தவராய் மிகுதியான நீரையுடைய திருப்பொருநல்லின் துகிலின் வண்ணம்போன்ற பரிசுத்தமான நீரையுடைய இடத்துக்கு அருகில் இருக்கும் சிறந்ததான பொழில்களாலே சூழப்பட்ட, செல்வம் மிகுந்த திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார், காளமேகம்போலே மிகவும் அழகையுடைய பெரியபெருமாள் திருவடிகள் விஷயமாக அருளிச்செய்த ஆயிரம் பாமாலைகளில், இப்பத்தையும் உண்மையான பாவத்துடன் சொல்லவல்லவர்கள் மேகத்தைப்போன்ற நிறத்தையுடைய பரமபதத்தில் நித்யஸூரிகள் சூழ எல்லையில்லாத ஆனந்தக் கடலில் இருப்பார்கள்.

எம்பெருமானைப் பிரிந்து துக்கப்பட்ட ஆழ்வார் இரண்டு பதிகங்களில் பெண் பாவனையில் மிகவும் வருத்தத்துடன் பாசுரங்களை அருளிச்செய்தார். ஆழ்வாரை தேற்றவேண்டும் என்று பார்த்த எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை எல்லாம் ஆழ்வாருக்கு நன்றாகக் காட்டிக்கொடுக்க அவற்றை மிகவும் ஈடுபட்டு அனுபவித்த ஆழ்வார் அதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தாலே ஆழியெழ என்று தொடங்கி இப்பதிகத்தில் அருளிச்செய்கிறார்.

முதல் பாசுரம். எம்பெருமான் திருவுலகளந்தருளின விதத்தை நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுகிறார் ஆழ்வார்.

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே

ஆயுதங்களில் முக்யமானவனான திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும், உடனே ஸ்ரீபாஞ்சஜந்யமும் ஸ்ரீசார்ங்கமும் தோன்றவும், கதையும் வாளும் தோன்றவும், இந்த ஆயுத பூர்த்தியைக் கண்டு திசைதோறும் நின்றவர்கள் பெருத்த கோஷத்துடன் மங்களாசாஸனம் செய்ய, எம்பெருமான் வேகமாக வளர, அண்டகபாலம் பிளந்து அது வழியாக ஆவரண ஜலம் நீர்க்குமிழியாகக் கிளம்பும்படி திருமுடியும் திருவடியும் உயரக்கிளம்பும்படி, நல்லகாலமும் தோன்றும்படி ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்ட விதம் இருந்தபடியே!

இரண்டாம் பாசுரம். எம்பெருமான் அம்ருதத்தைக் கடைந்தெடுத்த சரித்ரத்தை நினைத்துப்பார்த்து ஆனந்தம் அடைகிறார் ஆழ்வார்.

ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி அர
வூறுசுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே

பெரிய உபகாரகனான ஸர்வேச்வரன் தேவர்களுக்கு மஹோத்ஸவம் உண்டாம்படி அம்ருதத்தைக் கொண்ட நாளன்று, கடலைக் கடைந்த வேகத்தில் ஆறுகள் தங்கள் பிறப்பிடமான மலையை நோக்கி எதிர்ப்பக்கம் ஓடுகிற ஒலியும், வாசுகி என்கிற பாம்பின் உடம்பைச் சுற்றி மந்தர மலையிலே தேய்க்கும் ஒலியும் கடல் இடம் வலமாக மாறிச் சுழன்று அழைக்கின்ற ஒலியும் கேட்டன.

மூன்றாம் பாசுரம். எம்பெருமான் பூமியை இடந்தெடுத்த சரித்ரத்தை நினைத்துப்பார்த்து ஆனந்தம் அடைகிறார் ஆழ்வார்.

நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே

பெரிய உபகாரகனான எம்பெருமான் பூமியை அண்ட கபாலத்தில் இருந்த ஒட்டு விடும்படிக் குத்தி இடந்து, எயிற்றில் கொண்ட காலத்தில் ஏழு தீவுகளைக் கொண்ட பூமியும் நழுவாமல் தங்கள் இடத்தில் இருந்தன. மேலும் பூமியைத் தாங்கி நிற்கும் ஏழு மலைகளும் அசையாமல் தங்கள் இடத்தில் இருந்தன. மேலும், ஏழ கடல்களும் உடைந்தொழுகாமல் தங்கள் இடத்தில் இருந்தன.

நான்காம் பாசுரம். எம்பெருமான் ஜகத்தை ஸம்ஹரித்துத் தன் வயிற்றில் வைத்து ரக்ஷிப்பதை நினைத்து ஆனந்தம் அடைகிறார்.

நாளும் எழ நில நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தானும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே

பகல் இரவு போன்ற மாறுபாடுகள் குலையும்படியும் நிலம், நீர் ஆகியவைகள் நிலைகுலைந்துபோகும்படியும், ஆகாசமும், க்ரஹங்களும் நிலைகுலைந்துபோகும்படியும், மலைகள் அடிவாரத்துடன் தூக்கப்படும்படியும், நக்ஷத்ரம் முதலிய ஒளி படைத்த பதார்த்தங்களும் குலையவும், ப்ரளய ஆபத்திலே காக்கும் எம்பெருமானின் பெரிய உபகாரங்கள் “பசித்துண்டான்” என்று சொல்லும்படி இந்த உலகத்தை உண்டது இருந்தபடியே!

ஐந்தாம் பாசுரம். எம்பெருமான் மஹாபாரத யுத்தத்தை நடத்தியதை நினைத்துப் பார்க்கிறார்.

ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே

அடியார்களிடத்தில் பக்ஷபாதியான கண்ணன் அழகிய மஹாபாரத யுத்தத்தை கைதட்டி ஏற்பாடு செய்த போது வலிமை வாய்ந்த உடலை உடைய மல்லர்கள் நெரிந்துவிழுகிற ஓசையும், ராஜாக்களுடைய வீர புருஷர்களை உடைய சேனைகள் நடுங்கும் ஓசையும், ஆகாசத்திலே தங்களுக்குரிய பெருமைகளை உடைய தேவர்கள் யுத்தத்தைப் பார்க்க வந்து கொண்டாடுகிற ஓசையும் கேட்டது.

ஆறாம் பாசுரம். எம்பெருமான் ஹிரண்யனை அழித்ததை நினைத்துப் பார்க்கிறார்.

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே

நாள் கழியும் வேளையில் இளம் செக்கர்போலே ஆகாசமும் திசைகளும் சூழ எழுந்து ரத்த நீராகும்படி அடியார்களுக்கு உதவுபவனான நரஸிம்ஹன் எம்பெருமான் பெரிய துக்கத்தை விளைத்து அஸுரனான ஹிரண்யனைக் கொல்லும் விதம் மலை கிழியும்படி பிளந்த சிங்கத்தை ஒத்திருந்தது.

ஏழாம் பாசுரம். எம்பெருமான் இலங்கையை அழித்ததை நினைத்துப் பார்க்கிறார்.

மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலை போல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே

எதிரெதிராக ஓசை செய்யும் அம்புகளாலே கூட்டம் கூட்டமாக நூறு நூறாய் ராக்ஷஸப் பிணங்கள் மலைபோலே புரண்டு வீழ ஆறுகளை உட்கொண்ட கடலைப்போலே ரத்தம் பெருக, அடியார்களுக்கு உதவி செய்யும் சக்ரவர்த்தித் திருமகன் இலங்கையை பஸ்மமாகும்படி யுத்தம் செய்த நேர்மை இருந்தபடி.

எட்டாம் பாசுரம். பாணாஸுர யுத்தம் நடந்த விதத்தை நினைத்துப் பார்க்கிறார்.

நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே

தன் பேரனான அநிருத்தனுக்கு உதவிய கண்ணன் எம்பெருமான், ருத்ரன் முதலியவர்களை நம்பி வந்த பாணனுடைய திடமான தோள்களை அறுத்து வெற்றி கொண்ட அன்று , மயிலைக் கொடியாக உடைய ஸுப்ரஹ்மண்யன் எதிரே நிற்க முடியாமல் சாய்ந்துபோனான். மேலும் ருத்ரனோ என்று ப்ரமிக்கும்படியான க்ரௌர்யத்தையுடைய அக்னியும் எதிர் நில்லாமல் சரிந்தான். மேலும் மூன்று கண்களை உடையவனாகையாலே சக்தி மிகுந்தவனான ருத்ரனும் புறமுதுகிட்டுப் போனான். இதை நீங்கள் எல்லோரும் பார்த்தீர்களே!

ஒன்பதாம் பாசுரம். எம்பெருமான் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கும் விதத்தை நினைத்துப் பார்க்கிறார்.

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் 
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே

உலகத்தைப் படைத்த பெரிய உபகாரகன் முதலில் உலகத்தை உண்டாக்கியதும் அக்காலத்திலே அதுக்குக் காரணமான பஞ்சபூதங்களையும், உலகில் இருக்கும் மலை முதலிய பொருள்களையும் உண்டாக்கியதும், அக்காலத்தில் சந்த்ரன் ஸூர்யன் ஆகிய இருவரையும் மற்ற ஒளி விடும் பொருள்களையும் உண்டாக்கியதும், அக்காலத்திலே, அதுக்குமேலே மழையையும், மழையை நம்பி இருக்கும் ப்ராணிகளையும், மழையைக் கொடுக்கும் தேவர்களையும், மற்ற ப்ராணிகளையும் உண்டாக்கியதும் எல்லாம் ஒரே ஸமயத்தில் நடந்தன.

பத்தாம் பாசுரம். எம்பெருமான் கோவர்த்தன மலையைத் தூக்கியதை நினைத்துப் பார்த்து அனுபவிக்கிறார்.

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொறிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்துக் குன்றம் எடுத்தானே

மேய்கிற பசுக்களானவை கீழே ஒதுங்கும்படியும் கீழ் மேலாக மலையை எடுத்ததால் மலையில் வாழும் யானை முதலிய மிருகங்கள் புரண்டு விழும்படியும் சுனைகளின் வாய்வரை நிறைந்த நீரானது பெரிய கோஷத்தோடு சொரியும்படியும் தன் இனமான ஆயர்களையும் தன் பசுக்களையுமுடைய திருவாய்ப்பாடி முழுவதும் அங்கே ஒடுங்கும்படியும் ஆபத்தைப் போக்குபவனான கண்ணன் தீய மழையைத் தடுக்க கோவர்த்தனம் என்கிற மலையை எடுத்தான்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைக் கற்றவர்களுக்கு இது எல்லாவிதத்திலும் வெற்றியைக்கொடுக்கும் என்று பலத்தை அருளிச்செய்கிறார்.

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே

கோவர்த்தனத்தைத் தூக்கிய மஹோபகாரனான கண்ணனுக்கு அடியார்களான பாகவதர்களோடே ஒன்றாகக்கூடி நின்ற ஆழ்வாருடைய ஆயிரம் பாசுரங்களுக்குள் ஸர்வேச்வரனுடைய வெற்றிச்சரித்ரங்களைக் காட்டும் நன்மையை உடைய இந்த பதிகத்தை அர்த்தத்துடன் கற்பவர்களுக்கு எல்லாவிதமான வெற்றியையும் இது தரும்.

ஆத்மாவினுடைய உண்மையான ஸ்வரூபத்துக்கு ஏற்ற வ்ருத்தி (செயல்) அடியார்களுக்குத் தொண்டு செய்வதே என்ற விஷயத்தை ஆழ்வார் இந்தப் பதிகத்தில் தானும் அனுபவித்து மற்றவர்களுக்கும் உபதேசமாக அருளிச்செய்கிறார். பகவானுக்குத் தொண்டு செய்வது முதல் நிலை. அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வது என்பது இறுதி நிலை என்ற விஷயத்தை ஆழ்வார் இப்பதிகத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்.

முதல் பாசுரம். அடியார்களிடத்தில் அன்புகொண்டவனான ஸர்வேச்வரனுக்கு அடியார்களான பாகவத விஷயமான சேஷத்வத்துக்கு மூன்று லோக ஐச்வர்யம் ஒப்பன்று என்கிறார்.

நெடுமாற்கடிமை செய்வேன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இதுவல்லால்
விடுமாறென்பதென்? அந்தோ! வியன் மூவுலகு பெறினுமே

எல்லையில்லாத ஆசையை உடைய ஸர்வேச்வரனுக்கு அடிமைசெய்பவன்போல அவனை மனதிலே நினைத்த நிலையில், என்னுடைய தடுமாற்றம் போகும்படியும், என்னிடத்தில் இருக்கும் பொல்லாவழிகள் எல்லாம் வஞ்சித்து என்னை விட்டுப்போயின. இனி, தகுந்தது எது என்று பார்த்தால் அவனுக்கு அடியவர்களான பாகவதர்களுடைய திருவடிகளையே அடைவதைத் தவிர பரந்த மூன்று உலகங்களின் செல்வத்தையும் பெற்றாலும் கொடிய, பெரிய பாபத்தை உடைய நான் அந்த அடியவர்களுக்கு அடிமையாக இருப்பதை விடுவது என்று சொல்லவும் கூடுமோ? ஐயோ!

இரண்டாம் பாசுரம். மழைமேகம்போலே அடியார்கள் விஷயத்தில் வள்ளல்தன்மையுடைய ஸர்வேச்வரன் திருவடிகளிலே அடிமை செய்கிற பாகவதர்களுக்கு ஐச்வர்யோத்தோடு கூடின ஆத்மானுபவமும் ஒப்பன்று என்கிறார்.

வியன் மூவுலகு பெறினும் போய்த் தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூங்கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே?

பெரியதான மூவுலக ஐச்வர்யத்தைப் பெற்றாலும், இதில் ஈடுபாடில்லாமல் தன்னைத் தானே அனுபவிக்கப் பெற்றாலும், மழைமேகம்போலே திருமேனியையுடைய ஸர்வேச்வரனுடைய புனையப்பட்ட புஷ்பங்களையும் வீரக்கழலையுமுடைய திருவடிகளின்கீழே ஸ்வயம்ப்ரயோஜனமாய் இருக்கிற தொண்டின் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுடைய உயர்ந்ததான திருவடிகளை வணங்கி இந்த லோகத்திலேயே பலனாக நான் பெற்றதான ஆனந்தத்துக்கு இப்படி வித்யாசத்தைச் சொல்ல வேண்டும்படி பாபத்தைப்பண்ணின எனக்கு அந்த ஐச்வர்ய கைவல்யங்கள் சேருமோ?

மூன்றாம் பாசுரம். எல்லோருடனும் கூடும் தன்மையை உடைய வாமனன் திருவடி பெறுகையும், அவனடியார்களான பாகவதர்கள் இங்கே இருக்கிற இதைவிட உயர்ந்ததல்ல என்கிறார்.

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலகம் மூன்றும் உடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்த்த என் செந்தாமரைக் கண் திருக்குறளன்
நறு மா விரை நாண்மலர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே

மூன்று லோகங்களும் ஒரே செயலிலே நிறையும்படி சிறிய ஆனால் அழகிய மற்றும் பெருமை வாய்ந்த திருமேனியை வளரும்படி பண்ணினவனாய் எனக்கு மிகவும் இனிமையாய், சிவந்த தாமரை போலே இருக்கிற திருக்கண்களையுடைய ஸ்ரீவாமனனுடைய நறுமணம் வீசும் சிறந்ததான தேனையுடைய செவ்விப்பூவைப்போலே இருக்கிற திருவடிகளின்கீழே சென்றடைவது, அந்த எம்பெருமானுக்கு அடியவர்களான மனுஷ்யராக இருக்கும் சிறுமையும் மஹாபுருஷர்களாய் இருக்கும் மேன்மையையும் உடையவராய் என்னை அடிமைகொண்டவர்கள் இந்த லோகத்திலே நம் கண்வட்டத்திலே இருக்க அதைத் தவிர, இப்படி அவனுக்கடிமையாக இருப்பதற்கும் அவனடியார்களுக்கு அடிமையாக இருப்பதற்கும் வித்யாசம் சொல்ல வேண்டும்படியான பாபத்தையுடைய எனக்குச் சீரியதோ? அடியார்களுக்கு அடிமையாக இருப்பதே சிறந்தது என்று கருத்து.

நான்காம் பாசுரம். அடியார்கள் இருக்கும் இவ்வுலகில் அவர்களுக்கு உகப்பாகும்படி ஆபத்தில் ரக்ஷிக்கும் எம்பெருமானுடைய கைங்கர்யமும் கிடைத்தால் குறையில்லை என்கிறார்.

இங்கே திரிந்தேற்கிழுக்குற்றென்? இரு மா நிலம் முன் உண்டுமிழ்ந்த
செங்கோலத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன் கொள் வடிவென் மனத்ததாய்
அங்கேய் மலர்கள் கையவாய் வழிபட்டோட அருளிலே

பரந்ததான சிறந்ததான ஜகத்தை ப்ரளயாபத்து வந்த காலத்திலே அமுதுசெய்து பின்பு உமிழும்போது சிவந்த அழகிய பவளம்போலே இருக்கிற திருவதரத்தையும், சிவந்த தாமரைபோன்ற கண்ணையும் உடையவன் என் ஸ்வாமி. வளர்ந்து கிளம்புகிற தன் குணங்கள் வாக்குக்கு விஷயமாகவும் நம் புலன்களைக் கவரும் திருமேனி என் மனத்திலேயாகவும் அந்த எம்பெருமானுக்குத் தகுந்ததான மலர்களை கையிலே கொள்ளவும் அடியார்களின் வழியிலே நானும் உடன்பட்டு இங்கே நடக்கும்படி அருளுமாகில் இங்கே திரியும் எனக்கு என்ன தாழ்ச்சி ஏற்படும்? தாழ்ச்சி ஏற்படாது என்று கருத்து.

ஐந்தாம் பாசுரம். பரமபதத்திலே ஆனந்தத்துடன் இருந்தாலும் அத்துடன் இவ்வுலகத்து செல்வங்களும் கூடினாலும், இங்கே ஒரு சரீரத்தில் இருந்து கொண்டு அடியார்களுக்கு உகப்பாகத் திருவாய்மொழி பாடி அனுபவிப்பதற்கு ஒப்பாகுமா என்கிறார்.

வழிபட்டோட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக் கீழ்
சுழிபட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்றிருந்தாலும்
இழிபட்டோடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழிபட்டோடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ? முழுதுமே

நித்யகைங்கர்யத்திலே நெறிபட்டுச் செல்லும்படி அவன் அருளைப் பெற்று ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடைய ஸர்வேச்வரனுடைய மிகவும் இனிமையான திருவடிகளின்கீழே சுழித்து ஓடுகிற ப்ரபையை உடைய ஒளிக்கற்றையைப்போன்ற பரமபதத்திலே மிகவும் ஆனந்தத்துடன் இருந்தாலும் கீழே சொன்ன ஐச்வர்ய கைவல்யங்கள் கிடைத்தாலும், மிகவும் தாழ்ந்த சரீரத்திலே பிறந்து அவனுடைய குணங்களை யான் கற்று சொல்லாய்ப் பெருகும் கவியாகிற அமுதமான திருவாய்மொழியை அடியார்களுடன் கூடியிருந்து அனுபவித்து ரஸிக்கைக்குச் சேருமோ?

ஆறாம் பாசுரம். விரோதிகளைப் போக்கும் ஸர்வேச்வரனின் குணகணங்களை அடியார்களுக்கு இன்பம் கொடுக்கும்படித் திருவாய்மொழி மூலம் அனுபவிக்குமதுக்கு ஜகத்காரண பூதனான ஈச்வரனாயிருக்கும் இருப்புத்தான் ஒப்பாகுமோ? என்கிறார்.

நுகர்ச்சி உறுமோ? மூவுலகின் வீடு பேறு தன் கேழில்
புகர்ச் செம் முகத்த களிறட்ட பொன் ஆழிக் கை என் அம்மான்
நிகர்ச் செம்பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் 
தகர்த்துண்டு உழலும் புட்பாகன் பெரிய தனி மாப் புகழே

தனக்கு ஒப்பில்லாத, ஒளியையுடைய சீற்றத்தாலே சிவந்த முகத்தையுடைய ஆனையை அழித்த, விரும்பத்தக்க திருவாழிமோதிரத்தை அணிந்த திருக்கையை உடையவன் என் ஸ்வாமி. ஜாதிக்கு ஏற்ற சிவந்த மயிர்களையும் அக்னிசக்ரம் போலே இருக்கிற விழிகளையும் உடைய உயரமான சரீரத்தையுடைய அஸுரர்களுடைய ப்ராணன்களையெல்லாம் தகர்த்து உண்டு திரியும் பெரிய திருவடியை ஆளக்கூடியவனுடைய பெரிய தனித்துவம் வாய்ந்த மிகவும் இனிமையான குணகணங்களை அடியார்களுக்கு விருப்பமான திருவாய்மொழி மூலம் அனுபவித்து ரஸிப்பதை மூன்று உலகங்களின் விஷயமான உருவாக்கும் சக்தியைப் பெற்றிருக்கும் ஈச்வரனாக இருக்கும் தன்மை கிட்டமுடியுமோ?

ஏழாம் பாசுரம். எல்லா உலகுக்கும் காரணனான ஸர்வேச்வரன் திருவடிகளை அடைவதைவிட அவனுக்கு அடியார்களான பாகவதர்களுடைய சேர்த்தியே நமக்கு என்றும் வேண்டும் என்கிறார்.

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாத்தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகமூன்றும் முளைப்பித்த
தனிமாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே

தனித்துவமாய் மிகவும் உயர்ந்ததான புகழை எல்லாக்காலமும் நிற்கும்படித் தானே ஸ்ருஷ்டியில் ஈடுபட்டு, ஸ்ருஷ்டியைப் பற்றிச் சிந்திப்பதாய், ப்ரஹ்மம் என்ற வார்த்தையால் சொல்லப்படும், ப்ரதானமாய் உள்ள உபாதான காரணமான மூன்று உலகங்களையும் படைத்த, தனித்துவம் வாய்ந்த பரதேவதையின் ஸுகுமாரமான திருவடிகளின்கீழே சேருவதைவிட அவன் அடியார்களின் மிகவும் சிறந்ததான சேர்த்தியின் இன்பமே நமக்கு எப்பொழுதும் வாய்க்க வேண்டும்.

எட்டாம் பாசுரம். தனிக்கடலில் சயனித்திருக்கும் ஸர்வேச்வரனுடைய அடியார்களோடு உண்டான சேர்த்தியே நமக்கு எப்பொழுதும் வேண்டும் என்கிறார்.

நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர்க் கடலைப் படைத்துத் தன்
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பன்னாயிற்றின்
கோளும் உடைய மணிமலைபோல் கிடந்தான் தமர்கள் கூட்டமே

குளிர்ந்த ஜலத்தையுடைய கடலைப் படைத்து தனக்கென்று இருப்பதாய் வேதத்தில் காட்டப்பட்ட ஒப்பில்லாத திருவடிகளையும் திருத்தோள்களையும் திருமுடிகளையும் (கிரீடம்) பலவாகப் பரப்பி, நீள்கின்ற, பணைத்து அழகான கற்பகச்சோலையையும் நிறைந்த பலவான ஆதித்ய தேஜஸ்ஸையும் உடைய மாணிக்கமலைபோலே சயனித்திருப்பவனின் அடியார்களோடு ஏற்பட்ட சேர்த்தியானது நமக்கு எப்பொழுதும் கிடைக்க வேண்டும்.

ஒன்பதாம் பாசுரம். எதிரிகளைப் போக்க உதவும் திவ்யாயுதங்களை உடைய ஸர்வேச்வரனுக்கு அடியார்களான பாகவதர்களுடன் தொடர்புடையவர்களுக்கு அடியவராகிற உறுதிப்பாடு நமக்கு உண்டாகவேண்டும் என்கிறார்.

தமர்கள் கூட்ட வல் வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர்கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படையன்
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே

அடியார்களுடைய கூட்டத்துக்கு வரும் வலிய பாபங்களுடைய விநாசத்தைச் செய்யும் ஸாமர்த்யத்தை உடைய ஸ்வாமியாய், யுத்தத்துக்குத் தயாராய் இருக்கும் ஸ்ரீபஞ்சாயுதங்கள் தொடக்கமான பல ஆயுதங்களை உடையவனாய் பருவத்தில் இளமையை உடையவனாய், அழகுக்கு உதாரணமான ஐந்து அம்புகளை உடைய காமனுக்கும் தந்தையானவனுடைய குற்றம் இல்லாத அடியார்களின் அடியார்களுக்கும் அடியார்களைப் பற்ற தாஸ்ய ஸம்பந்தத்தை உடையோம் ஆகிற அருளானது ஸம்ஸாரத்தில் துணையற்றவர்கள் ஆன நமக்கு உண்டாக வேண்டும்.

பத்தாம் பாசுரம். மிகவும் இனிமையான திருமேனி மற்றும் அவயவங்களையுடைய ஸர்வேச்வரனைப் பிரியாமல் இருக்கும் அடியார்களின் ஸம்பந்தி பரம்பரையின் எல்லையில் அடிமை செய்து நடக்கவேண்டியது கல்பந்தோறும் உண்டாக வேண்டும் என்கிறார்.

வாய்க்க தமியேற்கு ஊழி தோறூழி ஊழி மாகாயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கம் இல்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே

அழகின் உயர்த்தியையுடைய காயாம்பூ நிறத்தைக் கொள்ளும் திருமேனியையும் நான்கு திருத்தோள்களையும் விரும்பத்தக்க திருவாழியை உடைய திருக்கைகளையும் உடைய, இவ்வடிவழகைக் காட்டிக் கொடுத்து என்னை எழுதிக்கொண்ட ஸ்வாமி எம்பெருமான். அவனை பிரிவில்லாதபடி அனுபவிக்கிற அடியார்களுக்கு தனித்துவம் வாய்ந்த சேஷ பரம்பரையில் உள்ளவர்கள் எனக்கும் என்னை உடையவர்களுக்கும் தலைவர்கள். அவர்களுக்கே தொண்டு செய்யும் குலம், செல்லும்படியராய் சிறந்ததான ஸ்வீகாரத்தைச் செய்வது ஒரொரு மஹா கல்பம் தோறும் இங்கே தனியனாக இருக்கும் எனக்கும் உண்டாக வேண்டும்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக, அடியார்களுக்குத் தொண்டு செய்யும் குடும்பம் அமைவதை அருளிச்செய்கிறார்.

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே

உயர்ந்ததான இடத்தை உடைய மூன்று லோகங்களிலும் எம்பெருமான் வ்யாப்தனாய், மலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கிற திருக்கண்களை உடையவனைப் பற்ற, அழகிய குளிர்ந்த குருகூர்க்குத் தலைவரான நம்மாழ்வாரால் அருளிச்செய்யப் பட்ட ஆயிரம் பாசுரங்களுக்குள் இந்தப் பதிகத்தையும் வல்லவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனைவி மக்களை உடையவராய்க் கொண்டு நல்ல பதத்தை, குடும்ப வாழ்க்கையில் நன்றாக வாழப் பெறுவார்கள்.

எம்பெருமானைப் பிரிந்து மிகவும் வருந்தி இருந்த ஆழ்வாருக்கு அவன் தான் தன்னை எல்லோரும் எளிமையாகக் கண்டு அனுபவிக்கும்படி திருக்கண்ணபுரத்தில் அர்ச்சாரூபத்தில் எழுந்தருளியிருப்பதைக் காட்டி, இந்த தேஹத்தின் முடிவில் தன்னை அடைந்து விடலாம் என்று உறுதிகொடுக்க, அதை நினைத்து ஆனந்தத்தை அடைகிறார் ஆழ்வார் இந்தப் பதிகத்தில்.

முதல் பாசுரம். ஆலிலைக் கண்ணனான மஹோபகாரகன் திருவடிகளிலே எல்லாக்காலங்களிலும் அன்புடன் தொண்டு செய்யுங்கள் என்று இத்திருவாய்மொழியின் முக்கியக் கருத்தைச் சுருக்கமாக அருளிச்செய்கிறார்.

மாலை நண்ணித் தொழுதெழுமினோ வினை கெட
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே

அலைவீசும் கடலாலே மோதப்பட்ட மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே வாழும், ஆலிலையில் இருந்து ஜகத்தை ரக்ஷித்த நினைத்துப்பார்க்கமுடியாத செயலைச் செய்த எம்பெருமான் திருவடிகளைக் குறித்து ஆசையுடன் பகல் இரவு என்று வித்யாஸம் பார்க்காமல் சிறந்த தாமரைப்பூக்களை ஸமர்ப்பித்து நீங்கள் உங்கள் எம்பெருமானை அனுபவிப்பதற்குத் தடையாக இருக்கும் வினைகள் தீரும்படிக் கைங்கர்யம் செய்து வாழ்ச்சியைப் பெறுங்கள்.

இரண்டாம் பாசுரம். அவன் வாழும் தேசத்தை வணங்கி அதினுடைய பாதுகாப்பை நினைத்து இன்பத்துடன் வாழப்பாருங்கள் என்கிறார்.

கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுதெழுமினோ தொண்டரே!

அனுபவத்தில் ஆசை உள்ள நீங்கள் தேனை ஒழுகவிடும் பூக்களைக்கொண்டு ஆராதியுங்கள். பெண் நண்டுகளுடன் ஆண் நண்டுகள் சேர்ந்து வாழும் வயல்களாலே சூழப்பட்ட அகழினுடைய அருகிலே வெள்ளியாலே செய்யப்பட்ட மதிளாலே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தை பாதுகாப்பான இடம் என்று எப்பொழுதும் நினைத்து, தொழுது கிளர்த்தியோடு ப்ரார்த்தியுங்கள்.

மூன்றாம் பாசுரம். உயர்ந்த விபூதிகளை உடையவனாய்க் கொண்டு எளிமையாக இருக்கும் ஸர்வேச்வரனை முழுவதுமாய் ஆராதியுங்கள் என்கிறார்.

தொண்டர் நுந்தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே

வண்டுகள் களித்துப் பாடும் சோலையாலே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே பரமபதநாதனாய் நித்யஸூரிகளாலே அனுபவிக்கப்படுபவனாய் இருப்பவனுக்குக் கைங்கர்யம் செய்ய ஆசைப்படுபவர்களே! உங்களின் துன்பமானது தீரும்படி நீங்கள் முழுமனதுடன் மலர்ந்த புதுமை மாறாத பூக்களை இட்டு உங்கள் அடிமைத்தனத்துக்கேற்ப ஆராதியுங்கள்.

நான்காம் பாசுரம். மிகவும் இனியவனான கண்ணனை நப்பின்னைப் பிராட்டியின் சேர்த்தியிலே ஆராதியுங்கள் என்கிறார்.

மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனை
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள்சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரணாகுமே

மானே வருந்தும்படியான நோக்கையுடையவளாய் ஆத்மகுணபூர்த்தியை உடையவளான நப்பின்னைப்பிராட்டிக்குக் கேள்வனாய் தேன்போலே இனிமையாக இருக்கும் கண்ணனை, வாடாத மலர்களைக்கொண்டு நீங்கள் ஆராதியுங்கள். ஆகாசத்தை உந்தித்தள்ளும்படியான ஓக்கத்தை உடைய மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தைத் தானே விரும்பின ஸர்வேச்வரன் உங்களுக்குப் புகலிடமாக இருப்பான்.

ஐந்தாம் பாசுரம். அடியார்களுக்குப் பரமபதத்தைக் கொடுப்பவனான எம்பெருமான், தன் விஷயத்தில் தொண்டு செய்யும் ஆசையை உடையவர்களுக்கு தான் அவர்கள் விஷயத்தில் அன்பே வடிவெடுத்தவனாக இருப்பான் என்கிறார்.

சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கெல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனதன்பர்க்கு அன்பாகுமே

தன் திருவடிகளைக் குறித்து ப்ரபத்தி பண்ணின எல்லாருக்கும் தானே உபாயமாக இருந்து கொண்டு, அவர்களின் மரண காலத்தில் திரும்பி வர வேண்டாத மோக்ஷ தேசத்தைக் கொடுக்கும் மஹோபகாரகனாய், பாதுகாப்புக்கு அமைந்த மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே பூமியைக் காப்பதற்காக வந்து நிற்பவன், தன் திருவடிகளில் அன்புபூண்டவர்களுக்கு அன்பே வடிவெடுத்தவனாக இருப்பான்.

ஆறாம் பாசுரம். ப்ரஹ்லாதனுடைய பகவத் அனுபவத்துக்குத் தடையாக இருந்த ஹிரண்யனைப் பிளந்தவன், தன் பக்கல் உயர்ந்த ப்ரேமத்தை உடையவர்களுக்கு உயர்ந்த ப்ரயோஜனமாக இருப்பான்.

அன்பனாகும் தன தாள் அடைந்தார்க்கெல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
நன்பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே

தன் திருவடிகளை ஆச்ரயித்தவர்களுக்கெல்லாம் எல்லையில்லாத வாத்ஸல்யத்தை உடையவனாய் சிவந்த பொன்போலேயிருக்கிற வடிவையுடைய ஹிரண்யாஸுரனுடைய சரீரத்தைப் பிளந்தவனாய் நல்ல பொன்னாலே செய்யப்பட்ட மதிள்சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே விரும்பி வாழ்பவன் தன்னையே உயர்ந்த குறிக்கோளாய் உடையவர்களுக்கு எப்பொழுதும் அவர்களையே உயர்ந்த குறிக்கோளாய் உடையவனாய் இருப்பான்.

ஏழாம் பாசுரம். தன்னையே ஆசைப்படுபவர்களுக்குத் தன்னை எளிமையாகக் கொடுத்து, வேறு விஷயங்களை விரும்புபவர்களுக்கு அவற்றைக் கொடுத்து விலகி நிற்பான் என்கிறார்.

மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கெல்லாம்
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கெல்லாம்
செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து
ஐயன் ஆகத்தணைப்பார்கட்கு அணியனே

தன் விஷயத்தில் ப்ரயோஜன புத்தியுடன் இருப்பவர்களுக்குத் தன்னுடைய உயர்ந்த நிலையைக் காட்டிக் கொடுத்து நிற்பான். வேறு சில ப்ரயோஜனங்களை ஆசைப்பட்டு ஆச்ரயிப்பவர்களுக்கு அந்த ப்ரயோஜனங்களைக் கொடுத்து தான் மறைந்து நிற்பான். வயலிலே வாளை மீன் துள்ளி விளையாடும் திருக்கண்ணபுரத்திலே இருக்கும் எல்லோருக்கும் ஸ்வாமியானவன் தங்கள் உள்ளத்திலே தன்னைப் பலமாக நினைப்பவர்களுக்கு மிகவும் எளியவானாக இருப்பான்.

எட்டாம் பாசுரம். அவனைச் சென்று அடையுங்கள். உங்களுடைய துக்கத்தையும் அதற்குக் காரணமான ஸம்ஸாரத்தையும் போக்கியருளுவான் என்கிறார்.

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கெல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்தாளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே

மிகவும் இனியதான திருவடிகளை அடைந்தவர்களுக்கு மிகவும் அருகிலே இருந்து அனுபவிப்பான். அதனால், மற்றைய விஷயங்களில் ஆசை ஆகிற வ்யாதியும் கழிந்துவிடும். அதற்குக் காரணமான பிறவியையும் கழித்து அடிமை கொள்வான். ஆதலால், மணியும் பொன்னும் சேர்ந்த மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே பரமபதத்தில் இருப்பதைப்போலே இருப்பவனின் திருவடிகளை எப்பொழுதும் வணங்கி அனுபவிக்கப் பாருங்கள்.

ஒன்பதாம் பாசுரம். நான் அவனை அடைந்து என்னுடைய எல்லா துக்கங்களும் தீரப்பெற்றேன். ஆதி காரணனானவனைக் கிட்டினார்க்குத் துன்பம் உண்டோ என்கிறார்.

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை?
வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே

அவன் திருவடிகளை எப்பொழுதும் அனுபவிக்க முன்புண்டான துக்கங்கள் எல்லாம் போய்விடும். மேலும் எந்த துக்கங்களும் வந்து சேராது. ஆதலால், எனக்கு என்ன குறை உண்டு? வேதத்தைச் சொல்லுவதையே நாக்குக்கு அடையாளமாகக் கொண்டவர்கள் விரும்பும்படியான திருக்கண்ணபுரத்திலே இருக்கும் பரமகாரணபூதனை அடைந்தவர்களுக்கு துக்கம் இல்லையே.

பத்தாம் பாசுரம். திருமகள் கேள்வனான ஸர்வேச்வரனுடைய திருக்கண்ணபுரத்தைச் சொன்னவுடன் துக்கங்கள் வாராமல் இருந்தன. எனக்கினி என்ன குறை உண்டென்கிறார்.

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை?
அல்லி மாதர் அமரும் திருமார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே

தாமரைப்பூவை இருப்பிடமாக உடையவளாய் பெண்களில் சிறந்தவளான லக்ஷ்மி நிரந்தரமாக வாழும் திருமார்பை உடையதாய், கல்லாலே செறிந்த மதிள்சூழ்ந்த திருக்கண்ணபுரத்தைச் சொன்னவுடன் எப்பொழுதும் துக்கங்கள் அருகில் வாராமல் இருந்தன. ஆதலால் எனக்கு எம்பெருமானை அனுபவிக்காமல் இருக்கும் துக்கம் இல்லை. இனி என்ன குறையுண்டு?

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக பகவதனுபவத்தை அருளிச்செய்கிறார்.

பாடு சாரா வினை பற்றற வேண்டுவீர்!
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே

ஸம்ஸாரத்தில் இருக்கும் எல்லா துக்கங்களும் உங்கள் அருகில் இல்லாதவாறு முழுவதுமாக நீங்கவேண்டியிருந்தீர்களாகில், மாடங்கள் உயர்ந்த திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்ததாய் கானரூபமான தமிழ் பாசுரங்கள் ஆயிரத்துள்ளும் இப்பத்தையும் அன்பினாலே பாடி, ஆனந்தத்தாலே ஆடி அந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கி அனுபவிக்கப் பாருங்கள்.

எம்பெருமானுக்கு நித்யகைங்கர்யத்தைப் பண்ண ஆசைப்பட்ட ஆழ்வார் அது இங்கே செய்ய முடியாது என்றுணர்ந்து, பரமபதத்துக்குச் சென்று கைங்கர்யம் செய்வதை ஆசைப்பட, அங்கே போவதற்கான விரோதிகளைக் கழித்து நம்மை அழைத்துப் போகக்கூடியவன் திருமோகூரிலே இருக்கும் காளமேகம் எம்பெருமானே என்று அவனே தனக்கு வழித்துணையாக இருப்பான் என்று அவன் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றுகிறார்.

முதல் பாசுரம். எதிரிகளை அழிக்கும் தன்மையையுடைய மிகவும் இனியவனான காளமேகத்தைத் தவிர வேறு புகலில்லை என்கிறார்.

தாள தாமரைத் தட மணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை அன்றி மற்றொன்றிலம் கதியே

வலிமையான தாளையுடைய தாமரைகள் தடாகங்களை அலங்கரிக்கும் வயலையுடைய திருமோகூரிலே எப்பொழுதும் வசித்து மிகவும் உகப்புடன் பொருந்தியிருப்பவனாய் விரோதிகளான அஸுரர்களை துன்புறுத்தி அழிக்கும்படி நான்கு திருத்தோள்களையுமுடைய சுரிந்திருக்கும் குழலையுடையவனாய் அன்பான திருவதரங்களையுடையவனாய் காளமேகம்போலே வள்ளல் தன்மையையுடைய எம்பெருமானைத் தவிர வேறு நமக்குத் துணையாக இருக்கும் புகலிடத்தை உடையோமல்லோம்.

இரண்டாம் பாசுரம். மிகவும் இனியவனாய் எப்பொழுதும் அனுபவிக்கலாம்படியான நாம பூர்த்தியையுடைய ஸர்வேச்வரன் திருவடிகளைத் தவிர எல்லா நிலைகளிலும் எனக்கு வேறொரு கதியில்லை என்கிறார்.

இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலங்கலங்கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ் திருமோகூர்
நலங்கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே

பூந்தாரை இனியதாக்குகிற குளிர்ந்த திருத்துழாயையுடைத்தாய் அசைகிற அழகிய மாலையையுடையவனாய் அனுபவிக்கத்தக்க ஆயிரம் திருநாமங்களையுடைய இயற்கையான தலைவனாய், கருணை முதலிய உயர்ந்த குணங்களையுடையவராய் நான்கு வேதங்களை நடத்துபவர்கள் வாழ்ச்சியுடன் இருக்கும் திருமோகூரிலே வாழ்கிறவனாய், அழகிய வீரக்கழலை உடையவனுடைய திருவடி நிழலாகிற தடாகத்தைத் தவிர, நாம் எல்லாப் பிறவிகளிலும் கதியாக வேறொன்றை உடையவர்கள் அல்லோம்.

மூன்றாம் பாசுரம். எல்லா உலகத்தையும் ரக்ஷிக்கும் தன்மையை உடைய எம்பெருமானின் திருமோகூரை நம் துக்கம் கெடும்படி அடைவோம் என்கிறார்.

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்றென்றலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்று இம்மூவுலகளித்து உழல்வான் திருமோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமதிடர் கெடவே

உன்னைத் தவிர நாங்கள் வேறு ஒரு புகலை உடையவர்கள் அல்லோம் என்று தங்கள் தளர்த்தி தெரியும்படி பலமுறை கூப்பிட்டு, பலன் கிடைக்கும் வரை நின்று, ப்ரஹ்மா ருத்ரன் ஆகிய தேவர்கள் தேடி வணங்க, விரோதிகளை வென்று இந்த மூன்று லோகங்களையும் காப்பதையே தொழிலாகக் கொண்டவனுடைய திருமோகூரை நாம் நம் துக்கம் தீரும்படி இனி வேறு பலனை எதிர்பார்க்காதவர்களாக இருந்து கொண்டு, அடைவோம்.

நான்காம் பாசுரம். ருசியையுடைய பாகவதர்களைப் பார்த்து, உலகத்தை ரக்ஷிப்பதற்காக திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவனுடைய திருவடிகளை அடைவோம் வாருங்கள் என்று அழைத்தருளுகிறார்.

இடர் கெட எம்மைப் போந்தளியாய் என்றென்றேத்திச்
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடரப்
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர்! வம்மினே

எம்பெருமானுடைய திருவடிகளில் ஆசையுடையவர்களே! “துக்கம் தீரும்படி எழுந்தருளி எங்களைக் காக்க வேண்டும் ” என்று பலமுறை தளர்த்தி தெரியும்படிக் கொண்டாடி, அதனால் பெரிய ஒளியை உடைய சோதிமயமான திருமேனியை தேவர்களும், முனிவர்களும் வந்தடைவதற்காக எம்பெருமான் ஸ்பர்சத்தாலே விரிந்த படத்தையுடைய ஆதிசேஷப் படுக்கையிலே பள்ளிகொண்டருளுபவனுடைய திருமோகூரிலே நம் துக்கம் தீரும்படி அவன் திருவடிகளைக் கொண்டாடுவோம். வாருங்கள்.

ஐந்தாம் பாசுரம். எல்லோருடனும் கூடும் தன்மையையுடைய த்ரிவிக்ரமன் வாழும் திருமோகூரில் கோயிலை அனுபவிட்த்து இன்பமடைவோம் வாருங்கள் என்கிறார்.

தொண்டீர்! வம்மின் நம் சுடரொளி ஒரு தனி முதல்வன்
அண்டமூவுலகளந்தவன் அணி திருமோகூர்
எண்திசையும் ஈன் கரும்பொடு பெருஞ்செந்நெல் விளையக்
கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே

நமக்கு அனுபவிக்கத்தக்கதாய், மிகவும் ஒளிபடைத்த ஒளிவடிவாய் இருக்கும் திருமேனியையுடையவனாய், உலகுக்கு உபாதான, நிமித்த, ஸஹகாரி காரணங்களாய்த் தானே இருப்பவனாய், படைக்கப்பட்ட அண்டத்துள் இருக்கும் மூன்று லோகங்களையும் அளந்து கொண்டவனுடைய அழகிய திருமோகூரிலே எல்லாத் திசைகளிலும் இனிய கரும்பொடு பெரிய செந்நெலானது விளையும்படி ஏற்றுக்கொண்ட கோயிலை இந்த பூமியிலே ப்ரதக்ஷிணம் செய்து ப்ரீதியின் மிகுதியால் நடனம் ஆடுவோம். ஆசையுடைய தொண்டர்களே! வாருங்கள்.

ஆறாம் பாசுரம். அனுபவிப்பவர்களுக்கு அனுபவத்தைக் கொடுப்பவனாய் நம்பத்தகுந்தவனான எம்பெருமான் திருவடிகளைத் தவிர வேறொன்றை ரக்ஷமாக உடையோம் அல்லோம் என்கிறார்.

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரணே

தேர்ந்த நாட்டியக்காரர் ஆடினாற்போலே நடப்பவனாய், காக்கப்பட வேண்டியவர்களின் பின் சென்று காப்பவனாய், துன்புறுத்துவர்களாய் மிகவும் பலம் வாய்ந்த அஸுரர்களுக்கு ம்ருத்யுவாய், வேறு ப்ரயோஜனத்தை எதிர்பார்க்காமல் கொண்டாடும் நமக்கும், அமரர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பவனாய், ஸம்ருத்தமாய் குளிர்ந்த நீர்நிலைகளாலும் அழகிய வயலாலும் சூழப்பட்ட திருமோகூரிலே அடியார்களுக்கு நம்பிக்கையுடன் பற்றும்படி நிற்கும் ஆப்ததமனுடைய தாமரைபோன்ற திருவடிகளை அன்றி வேறு புகல் உடையோம் அல்லோம்.

ஏழாம் பாசுரம். எல்லா உலகங்களையும் படைத்த ஸர்வேச்வரன் வாழும் திருமோகூரைப் பற்றி அங்கே கைங்கர்யங்களைச் செய்தால் உடனே நம் துக்கங்கள் போய்விடும் என்கிறார்.

மற்றிலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திருமோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே

தனித்துவம் வாய்ந்த பெரிய மேன்மையையுடைய தகுதிவாய்ந்த ப்ரக்ருதி முதலாகக் கொண்டு எல்லா இடத்திலும் வ்யாபித்திருக்கும் காரண ஜலத்தைப் படைத்து அதன் மூலமாக மிகவும் பழையவனாய் படைப்பை நினைத்திருக்கும் ப்ரஹ்மா முதலாக எல்லா தேவர்களுடன் கூடின எல்லா லோகங்களையும் செய்பவனுடைய திருமோகூரை ப்ரதக்ஷிணம் முதலான கைங்கர்யங்களை நாம் செய்ய நம்முடைய துன்பமானது உடனே போய்விடும். ஆதலால் இனி நாங்கள் வேறு ஒரு புகல் உடையவர்கள் அல்லோம்.

எட்டாம் பாசுரம். உங்களுடைய எல்லாத் துன்பங்களும் தீரும்படி தசரதபுத்ரன் என்னும் குளிர்ந்த தடாகத்தை அடைந்து அனுபவியுங்கள் என்கிறார்.

துயர் கெடும் கடிதடைந்து வந்து அடியவர்! தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி ஒளி திருமோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கழுந்தத்
தயரதன் பெற்ற மரதக மணித் தடத்தினையே

உயர்த்தியையுடைய சோலைகளையும் சிறந்த தடாகங்களையும் அலங்காரமாகவுடைத்தாய் மிகவும் ஒளிவிடும் திருமோகூரிலே கணக்கற்ற திருநாமங்களையுடையவராய், மிகவும் வலிமை பொருந்திய ராக்ஷஸர்கள் புகுந்து மூழ்கும்படியாக தசரதன் பெற்ற மரதகமணி போலே கறுத்த நிறத்தையுடைய தடாகத்தை அவன் குணத்துக்கு அடிமையான நீங்கள் வந்து அடைந்து தொழுங்கள். உங்கள் துன்பமானது உடனே நீங்கும்.

ஒன்பதாம் பாசுரம். உயர்ந்த அவயங்களுடன் இருக்கும் எம்பெருமான் வாழும் திருமோகூரை நமக்கு ரக்ஷகமாக அடைந்தோம் என்று ஆனந்தப்படுகிறார்.

மணித்தடத்தடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக்கொள் நால் தடந்தோள் தெய்வம் அசுரரை என்னும்
துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திருமோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே

தெளிந்த தடாகம்போலே திருவடிகளையும் மலர்ந்த தாமரைபோலே இருக்கிற திருக்கண்களையும் பவளம்போலே சிவந்த திருவதரத்தையும் உடையவனாய், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட நான்கு பெரிய திருத்தோள்களையுடைய திவ்ய திருமேனியையுடையவனாய், அஸுரர்களை எப்பொழுதும் அழிக்கும் பெரிய பலத்தையுடையவன் நிரந்தரமாக வாழுமிடமாய் பொழிலையுடைய திருமோகூராகிற நம்முடைய சிறந்த ரக்ஷகமான தேசமானது அருகிலே வந்தது. நாம் அதை அடைந்தோம்.

பத்தாம் பாசுரம். அடியார்கள் ஆசைப்பட்ட திருமேனியை எடுத்துக்கொண்டு ரக்ஷிப்பவனுடைய திருமோகூரின் திருநாமத்தை நம்மோடு அந்வயமுடையவர்கள் நினைத்துக் கொண்டாடுங்கள் என்கிறார்.

நாம் அடைந்த நல் அரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபங்கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்!

“நமக்கு நாம் பாற்றின அரண் சிறந்த ஒன்று” என்றுகொண்டு நல்லதறியும் தேவர்கள், பொல்லாங்கைச் செய்யும் மிகவும் வலிமை வாய்ந்த அஸுரர்களைப் பார்த்து அஞ்சிச்சென்று அடைந்தால், அவர்கள் விரும்பின திருமேனியைக்கொண்டு கிளர்ந்து ரக்ஷிப்பவனுடைய திருமோகூரின் புகழையே, நம்முடன் தொடர்புடையவர்களான நீங்கள் பயின்று நினையுங்கள். அவற்றை ப்ரேமத்துடன் கொண்டாடுங்கள்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக பகவானை அடைவதற்குத் தடையாக இருப்பவை விலகுவதை அருளிச்செய்கிறார்.

ஏத்துமின் நமர்காள்! என்று தான் குடமாடு
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே

“நம்முடையவர்கள் எல்லாரும் ஏத்துங்கள்” என்று தான் குடத்தைக் கொண்டு கூத்தாடினவனை, திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வாருடைய அந்தரங்க கைங்கர்யங்களாய் இவை எம்பெருமானுக்குத் தகுதியாக வாய்த்த ஆயிரம் பாசுரங்களுக்குள்ளே உயர்ந்ததான திருமோகூர்க்கு ஸமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பத்துப் பாசுரங்களை அன்புடன் பாடவல்லவர்களுக்கு சரீரத்தின் முடிவில் துணை இல்லை என்ற துக்கம் தீரும்.

ஆழ்வார் பரமபதத்தை விரைந்து சென்று அடையவேண்டும் என்று ஆசைப்பட, எம்பெருமானும் அதற்கு இசைந்தான். ஆனால் அவனோ ஆழ்வாரைத் திருமேனியுடன் பரமபதத்துக்கு அழைத்துச் சென்று அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதைக் கண்ட ஆழ்வார் அவனுக்கு அவ்வாறு செய்யலாகாது என்று உபதேசிக்க, எம்பெருமானும் இறுதியில் ஆழ்வாரின் விருப்பத்துக்கு இசைந்தான். அதைக் கண்ட ஆழ்வார், எம்பெருமானின் சீல குணத்தைக் கண்டு மிகவும் ப்ரீதியை அடைந்து, அதை இந்தப் பதிகத்தில் வெளியிடுகிறார்.

முதல் பாசுரம். ஈச்வரன் தன்னிடத்தில் கொண்ட ஆசையைப் பார்த்த ஆனந்தத்தாலே, தங்களை காத்துக்கொள்ள ஆசைப்படுபவர்கள் எம்பெருமான் விஷயத்தில் ஈடுபடும்போது அவனிடத்தில் மூழ்கிவிடாமல் இருக்குமாறு அருளிச்செய்கிறார்.

செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்தாட்செய்ம்மின் திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானேயாகி நிறைந்தானே

திருமாலிருஞ்சோலை மலையில் இருப்பவனாய் எல்லாரிடத்திலும் எல்லாவற்றையும் அவர்கள் அறியாமல் அபஹரிப்பவனாய் அதுக்குக் காரணமான ஆச்சர்யமான ரூபம், குணம் முதலியவைகளை உடையவனான எம்பெருமான், கவி பாடுவித்துக்கொள்ளும் வஞ்சச் செயலாலே உளனாய், இங்கே வந்து என் நெஞ்சினுள்ளும் உயிரினுள்ளும் கலந்து, அருகில் இருப்பவர்களும் அறியாதபடி அந்த என்னுடைய நெஞ்சையும் உயிரையும் உண்டு தானே அனுபவிப்பவனாய் எல்லா ஆசைகளும் நிறைவேறப்பெற்றவன் ஆனான். நேர்மையான சொற்களாலே கவிபாட வல்லவர்களே! அவன் கையில் உங்கள் உயிர் மற்றும் உயிரைச் சார்ந்த பொருள்களும் அகப்படாதபடி காத்துக்கொண்டு வாசிக கைங்கர்யம் செய்யப் பாருங்கள்.

இரண்டாம் பாசுரம். என்னுடன் கூடிய ஆனந்தத்தாலே எனக்கு மிகவும் இனியவனாகக் கொண்டு செய்ய வேண்டியதைச் செய்தவனாக இருந்தான் என்கிறார்.

தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய்
தானே யான் என்பான் ஆகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக்
கோனேயாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே

என்னை எல்லா விதத்திலும் அனுபவித்து, தானே ப்ரதானனாகி, பரிபூர்ணனாய் எல்லா லோகங்களும் ஆங்காங்கே இருக்கும் எல்லா ப்ராணிகளும் தானேயாம்படி அந்தர்யாமியாய் இருந்து, நான் என்ற வார்த்தையால் குறிக்கப்படும் வஸ்துவும் தானேயாகி, தன்னைப் பற்றித் தானே துதிப்பவனுமாய் இருந்து துதித்து, அதனால் ஏற்பட்ட ஆனந்தத்தை எனக்குக் காட்டுகையாலே, தேனும் பாலும் சர்க்கரையும் அமுதுமாய் அவற்றில் இருக்கும் எல்லாவித இனிமையும் திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் தலைவனான தானேயாகி நின்றுவிட்டான்.

மூன்றாம் பாசுரம். என்னளவில்லாமல் என் சரீரத்திலும் ஆசை கொண்டு, அதனாலே ஆனந்தத்துடன் நிலைத்து நிற்கிறான் என்கிறார்.

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமாலிருஞ்சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திருவருளே

என்னை எல்லா விதத்திலும் அனுபவித்து அத்துடன் நில்லாமல் என்னுடைய அஜ்ஞானம் ஆகியவற்றுக்குக் காரணமான சரீரத்துக்குள்ளே புகுந்து என்னையும் சரீரத்தையும் தானே அபிமானியாகி நின்ற ஆச்சர்ய குண சேஷ்டிதங்களையுடைய இயற்கையான ஸ்வாமியானவன் பொருந்தி வாழும் தேசமாய் தெற்குத் திசையில் சிறந்ததாய் இருக்கும் திருமாலிருந்சோலையில் நிற்கிற திசையை நோக்கி கை கூப்பி அடைந்த நான் அந்தத் திசையிலும் ஆசை பிறந்தவனாய், வேறு ஒரு போக வேண்டிய இடம் இருப்பதாக நினைத்துப் போவேனோ? இயற்கையான தலைவனின் ஆசைகள் எப்படி இருக்கிறது!

நான்காம் பாசுரம். என் சரீரத்தை விரும்புவதற்குக் காரணம் இந்தத் திருமலை ஆகையால் இரண்டையும் ஆதரித்து இரண்டு இடங்களையும் கைவிடாமல் இருக்கிறான் என்கிறார்.

என்கொல் அம்மான் திருவருள்கள்? உலகும் உயிரும் தானேயாய்
நன்கென் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்துழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே

என்னைப்பிடிப்பதற்காக எல்லா உலகங்களும் எல்லா ப்ராணிகளும் தானேயாகும்படி அந்தர்யாமியாய் இருந்து அத்துடன் நில்லாமல் தன்னை ஆசைப்படாத அஸுரர்கள் நசிக்கும்படி பூமியிலே மிகவும் நடந்து தெற்குத் திசைக்குத் திலகமாய் நின்ற திருமாலிருஞ்சோலை என்று பேரைக்கொண்டிருக்கும், நம் போன்றவர்களுக்கு அனுபவிக்கும்படி இருக்கும் திருமலையைக் கைவிடமாட்டான். என் சரீரத்தையும் மிகவும் கைவிடாமல் இருக்கிறான். ஸ்வாமியானவனுடைய உபகாரங்கள் எப்படி இருக்கின்றன!

ஐந்தாம் பாசுரம். தன்னுடன் கூடி திருவாய்மொழி பாடக் கேட்ட ப்ரீதியாலே ரஸிகனாய் தலையை ஆட்டுகிறான் என்கிறார்.

நண்ணா அசுரர் நலிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த
எண்ணாதனகள் எண்ணும் நன்முனிவர் இன்பம் தலை சிறப்பப்
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடித்
தென்னாவென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே

எம்பெருமானை ஆசைப்படாத அஸுரர்கள் நசிக்கும்படியும் பக்தி பரவசராய் எம்பெருமானை ஆசைப்படும் தேவர்கள் பொலிவடையும்படியும் எம்பெருமானின் எண்ணிப்பார்க்க முடியாத வைபவங்களை ப்ரேமத்தாலே ஆசைப்படும் நல்ல முனிவர்கள் ஆனந்தத்தை அடையும்படியும் பண் நிறைந்த இசையையுடைய இனிய கவிகளை எனக்கு அந்தர்யாமியாய் இருந்து கொண்டு தன்னையே தான் பாடி திருமாலிருஞ்சோலையானாய் நிற்கிற என் ஸ்வாமியானவன் தென்னா தெனா என்று தலையை ஆட்டி அனுபவிக்கிறான்.

ஆறாம் பாசுரம். ப்ரஹ்மா ருத்ரன் முதலியவர்களுக்கும் உபகாரகனாய் ச்ரிய:பதியானவன் திருமலையில் நின்று என்னை அடிமைகொள்ளுகைக்கு மிகவும் ஆசையுடன் இருக்கிறான் என்கிறார்.

திருமாலிருஞ்சோலையானே ஆகிச் செழுமூவுலகும் தன்
ஒரு மா வயிற்றினுள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே

ருத்ரனும் ப்ரஹ்மாவும் காணப்பெறாமல், அவர்கள் பெறுதற்கரிதான பெரிய பக்தியை உடையவர்களாய்க் கொண்டு திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ணும்படித் தன் அருளைக் கொடுத்த ஸர்வாதிகனாய், உயர்ந்த மூன்று லோகங்களையும் தன்னுடைய தனித்துவம் வாய்ந்த சக்திபெற்ற திருவயிற்றினுள்ளே ஒரு சிறு பகுதியிலே வைத்து கல்பந்தோறும் சிறந்த முறையில் ரக்ஷிப்பவனாய், திருமகள் கேள்வனாய் திருமாலிருஞ்சோலையிலே நிலை பெற்றவனாய் இருந்து என்னை அடிமை கொள்ளுவதில் பெரும் பித்தனாய் இருக்கிறான்.

ஏழாம் பாசுரம். தம்மை ஏற்றுக்கொள்வதற்காக அவன் வந்து நின்ற திருமலையினுடைய பெருமையைப் புகழ்ந்து அருளுகிறார்.

அருளை ஈ என்னம்மானே! என்னும் முக்கண் அம்மானும்
தெருள்கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே

என்னுடைய ஸ்வாமியே! க்ருபையைத் தந்தருளவேண்டும் என்று முக்கண்ணனான ருத்ரனும், ஞானம் போன்ற குணங்களையுடைய ப்ரஹ்மாவும் தேவர்களின் தலைவனான இந்த்ரனும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அஜ்ஞானம் முதலிய தமஸ்ஸுக்களை போக்கக்கடவரான ரிஷிகளும் ஸ்தோத்ரம் பண்ணும்படியான ஸ்வாமியின் இருப்பிடமான திருமலையாய் எல்லா விதமான கலக்கங்களையும் போக்கக்கூடிய மிகவும் இனிமையான சிறந்த மலை திருமாலிருஞ்சோலை மலையே.

எட்டாம் பாசுரம். திருமலை தொடக்கமான திவ்யதேசங்களைப்போலே என்னுடைய எல்லா அவயவங்களையும் விரும்பி ஒரு நொடியும் பிரியாமல் இருக்கிறான். இப்படியும் ஒருவனா! என்று ஆச்சர்யப்படுகிறார்.

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அருமா மாயத்தெனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே

திருமாலிருஞ்சோலை மலையையும் திருப்பாற்கடலையும் என் தலையையும், திருமகள் கேள்வனானவனின் பரமபதத்தையும் குளிர்ந்த திருவேங்கடம் என்கிற பெரிய திருமலையையும் என் சரீரத்தையும் கடத்தற்கரியதாய் மிகப் பெரியதாய் ஆச்சர்யமான ப்ரக்ருதியோடே சேர்ந்து படைக்கப்பட்ட என் ஆத்மாவையும் மனஸ்ஸையும் வாக்கையும் செயல்களையும் ஒரு க்ஷணத்தில் ஒரு சிறு பகுதியும் பிரியாமல் இருக்கிறான். என்னைப் பெறுவதற்காக காலத்துக்கு உட்பட்ட எல்லா பொருள்களுக்கும் காரணனான ஒருவனாயிருக்கிறானே!

ஒன்பதாம் பாசுரம். ஜகத் ஸ்ருஷ்டி முதலியவற்றுக்குக் காரணமான ஸர்வேச்வரன் தம்முடைய சரீரம் முதலியவற்றை விரும்பியதைக் கண்டு, அத்தை அவன் விடும்படிக்கு, தன் திருவுள்ளத்தைக் குறித்து “அவன் எழுந்தருளி இருக்கும் திருமலையை விடாமல் வணங்கு” என்று அருளிச்செய்கிறார்.

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன் உள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே! கை விடேல் உடலும் உயிரும் மங்கவொட்டே

காலத்துக்கு உட்பட்ட எல்லாப் பொருள்களுக்கும் தனிக் காரணன் என்று சொல்லப்பட்ட, தனித்துவம் வாய்ந்தவனாய், எல்லா லோகங்களையும் எல்லாக் காலத்திலும் தன் ஸங்கல்பத்தின் சிறு பகுதிக்குள் படைத்து, காத்து, அழித்து, இதுவே தொழிலாகச் செய்யும் எல்லைகாணமுடியாத தன்மையை உடையவனாய் இந்த உறவாலே எனக்கு ஸ்வாமியானவனின் அழகிய குளிர்ந்த திருமாலிருஞ்சோலையை, மனமே! நமக்கு த்யாஜ்யமான தேஹம் ப்ராணன் முதலியவை மங்கும்படி, நெருங்கி அடையப்பாராய். இதை அவன் நம் கார்யம் செய்து முடிக்கும்வரை கைவிடாதே. இத்தாலே நீ வாழ்ச்சியடைய வேண்டும்.

பத்தாம் பாசுரம். இப்படித் தான் திருமலையை அடைந்திருந்தும் அவனுடைய ஆசையை நிவர்த்தி செய்வதற்காக ப்ரக்ருதி மற்றும் ப்ராக்ருதமான பொருள்களின் தாழ்ச்சியைக் காட்டி, இப்படிப்பட்ட மாயை நசிக்கும்படி அருளவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.

மங்கவொட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே! யானே நீயாகி என்னை அளித்தானே!
பொங்கைம்புலனும் பொறியைந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே

திருமாலிருஞ்சோலை மலையிலே நித்யவாஸம் பண்ணி என்போல்வார்க்கு ஸ்வாமியானவனாய் நானே என் குறைகளைப் போக்கிக்கொள்ளுமாபோலே வேறுபாடற நீதானேயாகி என்னை ரக்ஷித்தவனே! கிளர்ந்து புலப்படும் சப்தம் முதலிய ஐந்து விஷயங்களும், அதிலே ஈடுபடும் கண் முதலிய ஐந்து இந்த்ரியங்களும், அவற்றில் ஈடுபடுவதற்கு உதவும் ஐந்து கர்மேந்த்ரியங்களும், பஞ்ச பூதங்களும், ஸம்ஸாரத்தில் ஜீவனோடு சேர்ந்து படைக்கப்படும் மூலப்ரக்ருதியும், மஹான் என்கிற தத்வமும், அஹங்காரம் என்கிற தத்வமும், மனஸ்ஸும் ஆகிற உன்னுடைய மிகவும் ஆச்சர்யமான ப்ரக்ருதி மற்றும் ப்ராக்ருதங்களான இவை எல்லாம் மங்கும்படி இசைந்து அருள வேண்டும்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக இவர் ஆசைப்பட்டபடி ஈச்வரன் விரோதிகளை போக்குவதில் ஈடுபட்டதைச் சொல்லி, அதுவே பலமாக அருளிச்செய்கிறார்.

மானாங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்கத்
தானாங்காரமாய்ப் புக்குத் தானே தானே ஆனானைத்
தேனாங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மானாங்காரத்திவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே

மஹத், அஹங்காரம், மனம் ஆகியவை மூலமாக இருக்கும் இந்த சரீரத்துடனான ஸம்பந்தம் நசிக்கும்படியும் மிகவும் வலிய ஐந்து இந்த்ரியங்கள் மங்கும்படியும் தானே பெரிய அபிமானத்துடன் புகுந்து என் ஆத்மா மற்றும் ஆத்மாவின் உடைமைகள் எல்லாம் தன் அதீனத்தில் இருக்கும்படி ஆனவனை, வண்டுகளின் செருக்கை உடைய பொழிலை உடைய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களுக்குள் திருமாலிருஞ்சோலை மலைக்கேயான இந்தப் பத்துப் பாசுரங்களும் மஹத் அஹங்காரம் மனம் ஆகியவற்றால் சொல்லப்பட்ட எல்லாப் பொருள்களின் நிவ்ருத்தியில் நோக்காக இருக்கும். அவை தன்னடையே கழியும் என்று கருத்து.

எம்பெருமான் ஆழ்வாரைப் பரமபதத்துக்கு அழைத்துப்போகத் தானே கருடவாஹனத்திலே வந்தருளினான். ஆழ்வாரும் எம்பெருமான் தனக்கு முதலில் இருந்து செய்த நன்மைகளை எண்ணிப்பார்த்து, நாம் இதற்காக ஒன்றுமே செய்யாமல், அவனே நம்மைக் கைக்கொள்ளுகிறான் என்றிருந்தார். அந்த ஸமயத்தில் ஆழ்வாருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இத்தனை காலம் நாம் ஒன்றும் செய்யாமல் இருக்க இன்று எப்படி எம்பெருமானின் கடாக்ஷம் நம் விஷயத்தில் பலித்தது என்று ஒர் ஸந்தேஹம் ஏற்பட அதை எம்பெருமானிடத்திலேயே கேட்டார். எம்பெருமானோ அதற்கு பதில் சொல்ல முடியாமல் இருக்க, ஆழ்வார் எம்பெருமானின் நிர்ஹேதுக (இயற்கையான) க்ருபையைப் புரிந்து கொண்டு, நம் விஷயத்தில் எம்பெருமான் இப்படி விசேஷ கடாக்ஷம் செய்தானே என்று மகிழ்ந்து களிக்கிறார்.

முதல் பாசுரம். தற்செயலாக நான் திருமாலிருஞ்சோலை மலையை அடையும்போது எம்பெருமான் பிராட்டியுடன் என் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்கிறார்.

திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத்
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணி உந்து புனல் பொன்னித் தென்பால்
திருமால் சென்று சேர்விடம் தென்திருப்பேரே

நாட்டில் வார்த்தை சொல்வதைப் போலே நான் திருமாலிருஞ்சோலை மலை என்றேன். அப்படிச் சொன்ன அளவிலே ச்ரிய:பதியாய் பரிபூர்ணனான தான் வந்து என் நெஞ்சுக்குள்ளே பூர்ணமாகப் புகுந்தான். அந்தத் திருமால் சென்று சயனித்தருளின இடம் மிகவும் உயர்ந்த மாணிக்கங்களை உந்தித் தள்ளுகிற நீரையுடைய காவிரியின் தென்பக்கத்தில் இருக்கும் அழகிய திருப்பேர்.

இரண்டாம் பாசுரம். முன்பு குறைவாளரைப் போலே இன்று இங்கிருந்து போகேன் என்று சொல்லிக்கொண்டு என் நெஞ்சிலே பூர்ணனாய்ப் புகுந்தான் என்கிறார்.

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலை ஏழுலகுண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

திருப்பேரிலே நிரந்தரமாக வாழும் ஸர்வேச்வரன் முன்பு குறைவாளனாய் இருந்தாற்போலே இன்று வந்து போகேன் என்று என் நெஞ்சிலே பரிபூர்ணமாம்படிப் புகுந்தான். மேகங்கள் ஏழையும், ஸமுத்ரங்கள் ஏழையும், குல பர்வதங்கள் ஏழையும் லோகங்களை எல்லாம் அமுதுசெய்தும் நிறையாத வயிற்றை உடையானை என்னுள்ளே எல்லாவிதத்திலும் பரிபூர்ணமாய் அனுபவிக்கப் பெற்றேன்.

மூன்றாம் பாசுரம். அடியார்களுக்கு எளியவனான ஸர்வேச்வரனுடைய திருவடிகளை அடைவது எளிதாகி, அதன் காரணமாக எல்லா துக்கங்களும் விலகப் பெற்றேன் என்கிறார்.

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
அடிச்சேர்வது எனக்கு எளிதாயினவாறே

கொடிகளையுடைய கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப்பட்ட திருப்பேரை இருப்பிடமாக உடைய ஸுலபனான எம்பெருமானின் திருவடிகளை அடைவது எனக்கு எளிதான பின்பு அவற்றைப் பெற்றேன். அதன் காரணமாக பிறவித் தொடர்பை அறுத்தேன். அதனால் வரும் துக்கங்களைச் சேரேன். ஸம்ஸாரத்தில் நிற்கையாகிற அஜ்ஞானத்தைப் போக்கினேன்.

நான்காம் பாசுரம். எனக்குப் பரமபதத்தைக் கொடுப்பதாக இருந்தான். அதனாலே என் கண்ணும் நெஞ்சும் களிக்கும்படி ஆனந்தித்தேன் என்கிறார்.

எளிதாயினவாறென்று என் கண்கள் களிப்பக்
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிதாகிய சேண் விசும்பு தருவானே

வருந்தின என் கண்கள் கிடைத்தற்கரிய பலம் எளிமையாகக் கிடைக்கிறதே என்று களிக்கும்படி ஆனந்தம் நிறைந்த நெஞ்சை உடையவனாகக் கொண்டு ஆனந்தித்தேன். அதற்குக் காரணம் கிளிகள் தாவும்படி செறிந்த சோலைகள் சூழ்ந்த திருப்பேரிலே ஸுலபனாக இருப்பவன், மிகவும் தெளிவையுடைய ப்ரகாசமான பரமபதத்தைக் கொடுப்பதாக இருந்ததே.

ஐந்தாம் பாசுரம். இப்படிப் புருஷார்த்தத்தைக் கொடுப்பதற்காக என்னுடைய எல்லா விரோதிகளையும் போக்கினான் என்கிறார்.

வானே தருவான் எனக்கா என்னோடு ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனேய் பொழில் தென்திருப்பேர் நகரானே

வண்டுகள் நிறைந்த பொழிலையுடைத்தாய் அழகியதான திருப்பேர் நகரிலே எழுந்தருளி இருப்பவன், எனக்குப் பரமபதத்தையே தருவதாக எண்ணி, என்னோடு சேர்ந்து சபதம் செய்து மாம்ஸம் நிறைந்த கூடான இந்த சரீரத்துக்குள்ளே இன்று தானே வந்து புகுந்து, அவனைப் பிரிந்து நாம் தடுமாறுவதற்குக் காரணமான புண்ய பாபங்களைப் போக்கினான்.

ஆறாம் பாசுரம். மற்றை உகந்தருளின (எம்பெருமான் ஆசைப்பட்டு வாழும்) தேசங்களை விட என் நெஞ்சில் அதிகம் ஆசை கொண்டு இங்கே புகுந்து அவன் அனுபவிக்க அதைக் கண்டு ஆனந்தி ஆனேன் என்கிறார்.

திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே

என்னை அடைவதற்காக திருப்பேர் நகரிலேயும் பின்பு இன்னும் அருகில் உள்ள திருமாலிருஞ்சோலை மலையிலும் நிரந்தரமாக வாழும் மஹோபகாரகன் இன்று தானே வந்து “இங்கேயே இருப்பேன்” என்று எண்ணி என் நெஞ்சு நிறையும்படிப் புகுந்தான். அவனுடைய பெரிய ஆசையைப் பெற்று குணானுபவம் என்னும் அமுதத்தைப் பருகி ஆனந்தித்தேன்.

ஏழாம் பாசுரம். இப்படி என் நெஞ்சில் நிரந்தரமாக இருப்பவனை அனுபவித்துக் களிக்கிற எனக்கு என்ன குறை உண்டு என்கிறார்.

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை? மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே

வண்டுகள் களிக்கும் பொழில் சூழ்ந்த திருப்பேர்நகரான் தன்னை எப்பொழுதும் கண்டு அனுபவிக்கும்படி என் கண்ணுக்குள்ளே நின்று போகாமல் இருக்கிறான். இப்படி அனுபவித்து ஆனந்தித்த எனக்கு மேலே பரமபதத்திலே போய் அனுபவிக்க என்ன குறை இருந்தது? அதிகமான தொண்டு மேலெழுந்து முடிவிலே தொழுகைக்கு வாசகமான “நம: என்னும் வார்த்தையைச் சொன்னேன்.

எட்டாம் பாசுரம். எல்லா விதத்திலும் மிகவும் இனியவனாகக் கொண்டு என் நெஞ்சிலே த்ருடமாகப் புகுந்தான் என்கிறார்.

கண்ணுள் நின்றகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நன் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றே

வெளிக்கண்களுக்கு எப்பொழுதும் அனுபவிக்கும்படி அகலாமல் இருக்கிறான். என்னைப் பரமபதத்தில் கொண்டுபோய் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் பெரியவனாய் இருக்கிறான். எண்ணிப்பார்க்கில் மிகவும் நுண்ணிய தன்மைகளை உடையவனாய், தானே ஏழ் இசையின் சுவைகளை உடையவனாய், பல வர்ணங்களில் உயர்ந்ததான மாணிக்கங்களாலே அமைக்கப்பெற்ற மாடங்கள் சூழ்ந்த திருப்பேரிலே வாழ்பவன் என் மனதில் நிர்ஹேதுகமாக (காரணமே இல்லாமல்) இன்று த்ருடமாம்படிப் புகுந்தான்.

ஒன்பதாம் பாசுரம். “இன்று காரணமேயில்லாமல் எனக்கு நன்மை செய்தவன் முன்பு என்னை கைவிட்டிருந்ததற்குக் காரணம் என்ன?” என்று கேட்கவேண்டியிருந்தது என்கிறார்.

இன்றென்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்றென்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கருள் செய்ய உணர்த்தல் உற்றேனே

அஸத்தாக இருந்த என்னை இன்று ஸத்தான வஸ்துவாக்கி மிகவும் உயர்ந்த இனிமையை உடையவனான தன்னை என் நெஞ்சுள்ளே வைத்தான். முற்காலத்தில் என்னை மற்ற விஷயங்களில் ஈடுபட்டு இருக்கும்படி எண்ணியிருந்தது எதற்காக? குன்றென்று சொல்லும்படி விளங்குகிற மாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் இவை இரண்டில் ஒன்றுக்கான காரணத்தை அருளிச்செய்வதற்காக நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

பத்தாம் பாசுரம். கைங்கர்யத்தைப் பெற்றுக்கொள்பவனான அவன் திருவடிகளை அடிமைசெய்து பெற்றேன். இனி வரும் காலம் எல்லாம் இதுவே போதும் என்கிறார்.

உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே

என் முயற்சியாக எந்த ஒரு காரணமும் இல்லாமல் உன் திருவடிகளை அடைந்தேன். ப்ரீதியால் தூண்டப்பட்டு வாசிகமான கைங்கர்யத்தைச் செய்து உன்னுடைய திருவடிகளைப் பெற்றேன். இயற்கையான பந்துவானவனே! இந்தக் கைங்கர்யமே எனக்கு எப்பொழுதும் வேண்டுவது. ஆசார்யன் மூலமாக வேதார்த்தங்களைக் கற்று அதை நடத்தவல்லவர்கள் பகவதனுபவத்துடன் வாழும் திருப்பேரிலே எழுந்தருளியிருக்கும் உனக்காகவே இருக்கும் அடியவர்களுக்கு துன்பங்கள் தன்னடையே நில்லாதே.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாகப் பரமபதத்தை ஆள்வதை அருளிச்செய்கிறார்.

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே

துக்கத்துக்கு இடமல்லாத தேசமாய் பெரிய பரப்பை உடைய வயல்களாலே சூழப்பட்ட திருப்பேர் விஷயமாக உயர்ந்த மஹான்கள் பலரும் திருவாய்மொழி கேட்டு வாழும் திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வாருடைய சொற்கள் சேர்ந்திருக்கும் ஆயிரம் தமிழ் பாசுரங்களுக்குள் இவை பத்தையும் கற்க வல்லவரான தொண்டர்கள் தாங்கள் நிர்வாஹகராய் நடத்துவது, பெரியதாகச் சூழ்ந்திருக்கும் பொன்மயமான பரமபதமே.

பரமபதத்துக்கு விரைந்து செல்லவேண்டும் என்ற எண்ணம் ஆழ்வாருக்கு ஏற்பட, எம்பெருமானுக்கும் இவரைப் பரமபதத்துக்கு அழைத்து போகும் ஆசை மிகவும் அதிகமாக, அதற்கு முன் ஆழ்வாருக்குப் பரமபதத்தை அடைவதில் ஆசையை மேலும் அதிகமாக்க வேண்டும் என்று எண்ணி வேதாந்தத்தில் சொல்லப்பட்ட அர்ச்சிராதி கதியைக் காட்டிக்கொடுத்தான். ஆழ்வார் அதை அனுபவித்து அந்த அர்ச்சிராதி மார்க்கத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் போகும்படியையும் பரமபதத்தை அடைந்து அங்கே நித்யஸூரிகளுடன் இருப்பதையும் இந்தப் பதிகத்தில் வெளியிடுகிறார், தான் பெற்ற பேறு எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் கிடைக்கும் என்று அவர்கள் விச்வஸிப்பதற்காக.

முதல் பாசுரம். அர்சிராதி மார்க்கத்தில் செல்வதற்கு முற்பட்டவர்களாய் பூர்ணமாக இனிமையான ஸர்வேச்வரனின் அடியார்களான பாகவதர்களைக் கண்டு, அசையும் மற்றும் அசையாப் பொருள்களையுடைய இந்த ஜகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அருளிச்செய்கிறார்.

சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கையெடுத்தாடின
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டுகந்தே

எனக்கு தனித்துவம் வாய்ந்த பந்துவாய் ஆனந்தத்தை அளிக்கும் குணங்களை உடைய நாராயணனுக்கு தனித்துவம் வாய்ந்த பந்துக்களான அடியார்களைக் கண்டு மகிழ்ந்து எல்லா இடத்திலும் சூழ்ந்த ஆகாசத்திலே திரண்டிருக்கும் மேகங்கள் தூர்ய கோஷத்தைப் பண்ணின. ஆழமான கடல்கள் அலைந்து வருகிற திரையை கையாக எடுத்து ஆடின. ஏழு தீவுகளும் பரிசு ரூபமான நல்ல வஸ்துக்களை ஏந்தின.

இரண்டாம் பாசுரம். இயற்கையான தலைவனான நாராயணனுக்கு அடியார்களானவர்களைக் கண்டு உலகத்தார் கௌரவித்த விதத்தை அருளிச்செய்கிறார்.

நாரணன் தமரைக் கண்டுகந்து நல்நீர்முகில்
பூரண பொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே

இயற்கையான தலைவனான நாராயணனுக்கு அடியார்களைக் கண்டு உகப்பையுடைத்தாய் சுத்தமான ஜலத்தாலே பூர்ணமான மேகமானது உயர்ந்த ஆகாசத்திலே பூர்ணமான பொற்குடங்களாக நிறைந்தது. நிரைக் கொண்டிருக்கும் கடல்களானவை நின்று கோஷித்தன. நெடிய மலைகளாகிற தோரணங்களை அணிவகுத்து உலகிலுள்ளார் எல்லா இடத்திலும் தொழுதனர்.

மூன்றாம் பாசுரம். த்ரிவிக்ரமன் எம்பெருமானின் அடியார்கள் முன்னிலையில் ஆதிவாஹிக லோகத்திலுள்ளவர்கள் வந்து வரவேற்ற விதத்தை அருளிச்செய்கிறார்.

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி அன்றளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இரு மருங்கிசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற்கு என்று வந்தெதிரே

மஹாபலி “என்னது” என்று அபிமானித்த அன்று பூமியை தனக்கே ஆக்கிக் கொள்ளும்படி அளந்தவனின் அடியார்களுடைய முன்னிலையில் தூபத்தை ஸமர்ப்பித்து, நல்ல புஷ்ப மழைகளை பொழிந்து, அவ்வோ உலகங்களில் உள்ளவர்களுடையவர்கள் அஞ்சலி செய்தவர்கள். அந்த உலகங்களில் உள்ள நாவடக்கம் உடைய முனிவர்கள் ஸ்ரீவைகுண்டத்துக்குப் போகுமவர்களுக்கு வழி இது என்று சொல்லி எதிரே வந்து “எழுந்தருளலாமே” என்று இரண்டு பக்கத்திலும் நின்றுகொண்டு ஆசையாகச் சொன்னார்கள்.

நான்காம் பாசுரம். பூர்த்தியான இனிமையை உடையவனான திருமாலின் அடியார்களைக் கண்டு தேவலோகத்திலுள்ளவர்கள் வரவேற்ற விதத்தை அருளிச்செய்கிறார்.

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே

மதுவை வெளியிடும் திருத்துழாயைத் திருமுடியிலே உடைய திருமாலின் அடியார்களுக்கு கண் இமைக்காதவர்களான தேவர்கள் இவர்கள் போகிறவழிக்கு முன்னே இருப்பிடங்களைச் செய்தார்கள். பன்னிரண்டு ஆதித்யர்களும் தம் தம் நிலையிலே கிரணங்களாகிற கைகளை நிரையாகக் கொடுத்தார்கள். அவர்கள் அடித்த முரசங்கள் அதிருகிற குரலானவை அலை கடலிலே ஓசையைப் போன்று இருந்தன.

ஐந்தாம் பாசுரம். வருணன் இந்த்ரன் ப்ரஜாபதிகளானவர்கள் திருமாலுக்கு அடியார்கள் என்று ஆதரித்த விதத்தை அருளிச்செய்கிறார்.

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமதிடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே

வருணன் இந்த்ரன் ப்ரஜாபதிகளாகிற ஆதிவாஹிக தேவர்கள் தங்கள் இருப்பிடங்களின் வாசலில் வந்து நின்று திருமால் அடியார்கள் இவர்கள் என்று ஆதரித்து “இங்கே எழுந்தருளுங்கள், எங்கள் இருப்பிடங்களில் ப்ரவேசியுங்கள்” என்று பரிசுகளுடன் வரவேற்ற அளவிலே, வேதத்தைச் சொல்லுவதாகிற சிறப்பை உடையவர்கள் யாகம் முதலிய தர்மங்களை நமக்குக் கிடைத்ததே என்று ஆசையுடன் ஸமர்ப்பித்து கின்னரர்களும் கருடர்களும் கீதங்களைப் பாடினர்.

ஆறாம் பாசுரம். “எல்லாருக்கும் தலைவன் என்பதற்கு அடையாளமாகத் திருவாழியை உடையவனுக்கு அடியவரான நீங்கள் இந்த மேலுலகத்தை ஆளுங்கள்” என்று ஆதிவாஹிகர்களின் மஹிஷிகள் வாழ்த்தினவிதத்தை அருளிச்செய்கிறார்.

வேள்வியுள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே

வைதிகர்கள் எல்லா தர்மங்களையும் ஸமர்ப்பித்தவுடன் பரிமளத்தை வெளியிடும் ஸுகந்தமான தூபங்கள் எல்லாவிடமும் கலந்து, காளங்களையும், வலம்புரிச் சங்குகளையும் கொண்டு ஒலி எழுப்பினார்கள். இந்த அடியார்களைக் கண்ட ஆனந்தத்தால், ஒளி படைத்த கண்களையுடைய தேவஸ்த்ரீகள் திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு அடியார்களான நீங்கள் இந்த ஸ்வர்க்கம் முதலான இடங்களை ஆளுங்கள் என்று ப்ரீதியுடன் வாழ்த்தினார்கள்.

ஏழாம் பாசுரம். திருப்பாற்கடலில் சயனித்திருப்பவனாய் எல்லாருக்கும் தலைவனாய் அர்ச்சாவதாரத்தில் எளிமையானாவனாய் இருப்பவனின் அடியார்களை மருத் கணங்களும் வஸு கணங்களும் பின்தொடர்ந்து ஸ்தோத்ரம் பண்ணின விதத்தை அருளிச்செய்கிறார்.

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எங்கேசவன் கிளரொளி மணி முடி
குடந்தை எங்கோவலன் குடி அடியார்க்கே

ஆழமான கடலிலே சயனித்தருளி இருப்பவனாய், எனக்கும் ப்ரஹ்மா முதலியவர்களையும் படைத்தவனான கேசவனாய் கிளர்ந்த ஒளியுடையவனாய் மணிமயமான கிரீடத்தை அணிந்தவனாய் திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனான க்ருஷ்ணனுக்கு பரம்பரையாக அடியார்களானவர்களை தேவஸ்த்ரீகள் வாழ்த்தினவுடன் மருதர்களும் வஸுக்களும் எல்லாவிடமும் தொடர்ந்து சென்று ஸ்தோத்ரம் செய்தார்கள்.

எட்டாம் பாசுரம். அடியார்களுக்கு எளியவனான க்ருஷ்ணனின் அடியார்கள் என்கிற ஆசையால் பரமபதவாஸிகள் தங்கள் நாட்டெல்லையில் வந்து எதிர்கொள்ள, அடியார்கள் பரமதத்தைக் கிட்டினார்கள் என்று அருளிச்செய்கிறார்.

குடியடியார் இவர் கோவிந்தன் தனக்கென்று
முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ளக்
கொடியணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே

அடியார்களுக்காக அவதரித்த கோவிந்தனுக்கு என்றே இருக்கும் குலத்தையுடைய அடியார்கள் என்று ஈச்வரனைப் போலே கிரீடம் முதலியவைகளையுடைய நித்யஸூரிகள் தங்கள் நிலைக்கேற்ப இவர்களை வந்து எதிர்கொள்ள, அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவனாய் பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரனுடைய ஸ்ரீவைகுண்டத்திலே புகுவதற்கு கொடியாலே அலங்கரிக்கப்பட்ட பெரிய மதிள்களையுடைய கோபுரவாசலில் புகுந்தார்கள்.

ஒன்பதாம் பாசுரம். “ஸ்ரீவைகுண்டநாதனுடைய அடியார்கள் நமக்கு விரும்பத்தக்கவர்கள்” என்று, திருவாசல் காக்கும் முதலிகள் ஆசையுடன் இருந்த விதத்தை அருளிச்செய்கிறார்.

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

ஸ்ரீவைகுண்டத்தில் சென்று புகுந்தவுடன், திருவாசல் காக்கும் முதலிகள் “ஸ்ரீவைகுண்டநாதனின் விருப்பத்துக்கு ஆட்பட்டவர்கள் நமக்கும் விரும்பத்தக்கவர்கள். எங்கள் இருப்பிடத்தில் வரவேண்டும்” என்று உகந்தார்கள். அத்தேசத்திலே கைங்கர்யபரர்களான அமரர்களும் குணானுபவபரர்களான முனிவர்களும் “பூமியிலே தாழ்ந்த விஷயங்களில் மூழ்கியிருந்தவர்கள் பரமபதத்திலே புகுவது ஒரு பாக்யமே!” என்று உகந்தார்கள்.

பத்தாம் பாசுரம். ஸ்ரீவைகுண்டநாதனின் ஆணையின் பேரில் நித்யஸூரிகளும் திவ்யாப்ஸரஸ்ஸுக்களும் அடியார்களை ஆதரித்த விதத்தை அருளிச்செய்கிறார்.

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நற்சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே

“நம்முடைய பாக்யம் அடியாக ஈச்வரனின் ஆணையின் பேரில் இந்த அடியார்கள் வந்து புகுந்தார்கள்” என்று சிறந்தவர்களாக வேதாந்தத்தில் காட்டப்பட்ட நித்யஸூரிகள் தங்கள் இருப்பிடங்களில் உபசாரங்களுடன் அடியார்களுடைய திருவடிகளை விளக்கினார்கள். அடியார்களுக்கு மிகச் சிறந்த தனமான எம்பெருமானின் திருவடி நிலைகளையும் எம்பெருமான் திருமேனி ஸம்பந்தம் பெற்றதால் சிறந்ததான திருச்சூர்ணத்தையும் பூர்ண கும்பங்களையும் மங்களதீபங்களையும் பூர்ணசந்த்ரனைப் போன்ற முகத்தையும் மடப்பத்தையும் உடைய திவ்ய அப்ஸரஸ்ஸுக்கள் ஏந்திக்கொண்டு வந்தார்கள்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக பகவதனுபவத்தை அருளிச்செய்கிறார்.

வந்தவர் எதிர் கொள்ள மாமணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை
கொந்தலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே

பிராட்டியுடன் இருக்கும் எம்பெருமானே வந்து எதிர்கொள்ள, திருமாமணி மண்டபத்தில் எல்லை இல்லாத பெரிய ஆனந்தத்தையுடைய ஸூரிகளோடே கூடி இருந்த விதத்தை, பூங்கொத்து அலருகிற பொழிலையுடைய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்ததாய் பல விதமான சந்தஸ்ஸுக்களை உடைய ஆயிரம் பாசுரங்களுக்குள் இப்பத்தையும் அனுஸந்திக்கவல்லார்கள் பகவத் குணங்களை அனுபவிக்கப் பெறுவார்கள்.

பரமபதத்தை மானஸீகமாக அனுபவித்த ஆழ்வார், தன்னுடைய திருக்கண்களை விழித்துப் பார்த்துத் தான் இன்னும் ஸம்ஸாரத்தில் இருப்பதைப் பார்த்து, மிகவும் வருத்தப்பட்டார். இனியும் தன்னால் தரிக்க முடியாது என்றுணர்ந்து எம்பெருமானைக் கதறி அழைத்தும், பிராட்டியின் மீது ஆணையிட்டும் எம்பெருமானிடத்தில் தன்னைப் பரமபதத்தில் சேர்த்துக்கொள்ளும்படி ப்ரார்த்திக்க, எம்பெருமானும் இவர் பிரிவால் இவரை விடவும் வருந்தி, உடனே பரமபதத்தில் இருந்து பிராட்டியுடன் தன்னுடைய கருட வாஹனத்தில் புறப்பட்டு ஆழ்வார் இருந்த இடத்துக்கு வந்து, ஆழ்வாரைத் தானே பரமபதத்துக்கு அழைத்துச் சென்றான். ஆழ்வாரும் ஆனந்தமாக “அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்” என்று தானே ஆனந்தத்துடன் சொல்லி இந்த ப்ரபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.

முதல் பாசுரம். ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களாலே முதலிலிருந்து உபகாரகனாய் இருந்து, வடிவழகைக் காட்டி ருசியை உண்டாக்கி, உன்னை விட்டு வாழ முடியாதபடி எனக்கு அனுபவத்தைக் கொடுப்பதாக ஆசையுடன் வந்த நீ, இனியும் குணங்களை மட்டும் காட்டி வஞ்சித்து அகன்று போக விட மாட்டேன் என்கிறார்.

முனியே நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே! என் கள்வா!
தனியேன் ஆருயிரே! என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே

ஸ்ருஷ்டி செய்யும் விதத்தை நினைப்பவனே! ஸ்ருஷ்டியைச் செய்வதற்காக ப்ரஹ்மாவைச் சரீரமாக உடையவனே! ஸ்ருஷ்டித்த உலகத்தை பின்பொரு நாள் அழிப்பதற்காக முக்கண்ணனாய் உபகாரகனான ருத்ரனைச் சரீரமாக உடையவனே! எனக்கு பழுத்த பழம் போலே மிக இனிமையாக இருக்கும் திருவதரத்தையும் தாமரைப்பூப்போலே இருக்கும் திருக்கண்களையும் துளைக்கப்படாத, கறுத்த மாணிக்கம் போன்ற திருமேனியையும் உடையவனே! என்னையும் அவ்வழகாலே வஞ்சித்துக் கொண்டவனே! ஸம்ஸாரத்தில் தனிமைப்பட்ட எனக்கு உயிரானவனே! என் தலைக்கு மேலே வந்து இருந்து உன்னிடத்தில் எனக்கு ஆர்த்தியையும் உண்டாக்கின பின்பு நான் உன்னை முன்புபோலே அகன்று போக அனுமதிக்கமாட்டேன். என்னை நீ சிறிதும் வஞ்சிக்காமல் இருக்கவேண்டும்.

இரண்டாம் பாசுரம். தம்முடைய கார்யத்தை எம்பெருமான் செய்கைக்காக அவனுக்கும் விரும்பத்தக்கவளான பிராட்டியுடைய திருவாணை என்கிறார்.

மாயஞ்செய்யேல் என்னை உன் திருவார்வத்து மாலை நங்கை
வாசஞ்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்
நேசஞ்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசஞ்செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்தந்தோ

என்னை இனி வஞ்சிக்காமல் இருக்க வேண்டும். உன் செல்வத்தின் அடையாளமாய், திருமார்புக்கு பரபாகமாய் (எதிர் நிறம்) ஒரு தங்க மாலை போன்றவளாய் குண பூர்த்தியை உடையவளாய் சிறந்த கூந்தலையுடைய லக்ஷ்மியின் ஆணையானது உனக்கு ஆணையாக இருக்கும். அன்பு செய்து உன்னோடு என்னை ஆத்மபேதம் இல்லாதவாறு ஒன்றாக நினைக்கும்படிக்கு என்னைக் கூசாமல் அங்கீகரித்து அருளினாய். என்னை வந்து “ஆழ்வீர் வாரும்” என்று அழைத்துக்கொண்டருள வேண்டும். ஐயோ! உன் ஆசையை நிறைவேற்ற நான் ஆணையிட வேண்டியிருக்கிறதே என்று கருத்து.

மூன்றாம் பாசுரம். ப்ரஹ்மா முதலிய ஸகல ஆத்மாக்களுக்கும் பிறப்பிடமான திருநாபீகலத்துக்கு மூலஸ்தானமான நீ வந்து என்னை ஏற்றுக்கொளண்டருள வேண்டும் என்கிறார்.

கூவிக் கொள்ளாய் வந்தந்தோ! என் பொல்லாக் கருமாணிக்கமே!
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம்
நாவிக் கமல முதற்கிழங்கே உம்பரந்ததுவே

எனக்கு மிகவும் இனியவனாய் துளைக்கப்படாத கறுத்த மாணிக்கம் போன்ற திருமேனியை உடையவனாய், அடைந்து வணங்கக்கூடிய ப்ரஹ்மா ருத்ரன் இந்த்ரன் முதலானவர்களுக்கு முதலான திருநாபீகமலத்துக்கு இருப்பிடமாய், நித்யஸூரிகளுக்கும் இருப்பு செயல்கள் முதலியவைகளுக்கு நிர்வாஹகன் ஆனவனே! என் ஆத்மாவுக்கு ஓர் பற்றுக்கொம்பு உன்னைத்தவிர நான் அறிகின்றிலேன். நீயே வந்து அழைத்து என்னைக் கொண்டருளவேண்டும். ஐயோ! உன் கார்யத்தை நான் சொல்ல வேண்டியுள்ளதே.

நான்காம் பாசுரம். எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்ட நீ, உன் சரீரமான என்னை ஆள்வதாக ஏறிட்டுக்கொண்டு வைத்து, என்னை இந்த ஸம்ஸாரத்தில் தவிக்க விட்டாயே என்று வருத்தத்துடன் கூப்பிடுகிறார்.

உம்பர் அந்தண் பாழேயோ! அதனுள் மிசை நீயேயோ!
அம்பர நற்சோதி! அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரஞ்சாதிக்கலுற்று என்னைப் போரவிட்டிட்டாயே

மேலானதாய், உனக்கு விளையாட்டுப்பொருளாக இருப்பதாலே சிறந்ததாய், குளிர்ந்திருப்பதாய், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷத்தை விளைத்துக்கொள்ளும் இடமாய் இருக்கும் மூலப்ரக்ருதிக்குள் இருப்பவனே! ஆகாசம், சிறந்ததான தேஜஸ்ஸு முதலிய பொருள்களைப் படைத்து அதற்குள்ளும் அந்தர்யாமியாய் இருந்து, அண்டத்துக்குள்ளே ப்ரஹ்மா ருத்ரன் ஆகியோரைப் படைத்து அவர்களுக்கும் அந்தர்யாமியாய் இருப்பவன் நீ. தேவர்களையும், மனுஷ்யர் முதலிய அறிவுடையவர்களையும், சிந்தித்துப் படைத்தவன் நீ. என்னுடைய சரீரத்தை ஆள்வதாக ஏறிட்டுக்கொண்டு என்னை இங்கேயே விட்டு வைத்தாயே.

ஐந்தாம் பாசுரம். எனக்கு மிகவும் இனியவனாக இருந்தும் என்னை நீ விலக்கினால் எனக்கு ஒரு உஜ்ஜீவனம் உண்டோ என்கிறார்.

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனதென்பதென்? யானென்பதென்?
தீர இரும்புண்ட நீரது போல என் ஆருயிரை
ஆரப் பருக எனக்கு ஆராவமுதானாயே

தன் காய்ச்சல் தீரும்படி இரும்பு உறிஞ்சின நீரைப்போலே என் ஆத்மாவின் வருத்தம் தீரும்படி முழுவதுமாகப் பருகுகைக்கு எனக்கு ஆராத அமுதமானாயே. நீ விலக்கி விட்டு அநாதரித்து என்னை மற்ற விஷயங்களிலே போக்க நினைத்தால், பின்பு நான் மற்று ஆரைக்கொண்டு எந்தப் பலனைப் பெறுவேன்? ஐயோ! என்னது என்று சொல்வதற்கு எந்த உபகரணமும் இல்லை. நான் என்பதற்கு ஸ்வதந்த்ரன் இல்லை.

ஆறாம் பாசுரம். பிராட்டியிடத்தில் கொண்டாற்போலே என்னிடத்திலும் மிகவும் ஆசைகொண்ட நீ உன் இனிமையான தன்மையைக் காட்டி அனுபவத்தைக் கொடுத்தாய். இனி முழுக்க என்னை ஆளவேண்டும் என்கிறார்.

எனக்கு ஆராவமுதாய் எனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கேற்கும் கோலமலர்ப் பாவைக்கன்பா! என் அன்பேயோ

தன்னிலத்தில் அலர்ந்த காயாம்பூப்போன்ற நிறத்தை உடையவனாய் தாமரை போன்ற திருக்கண்களையும் சிவந்த திருவதரத்தையும் உடைய உனக்குத் தகுதியான திருமேனியை உடையவளாய் பூவில் பிறப்பாலே மிகவும் இனியவளாய் பெண்களுக்குரிய ஆத்மகுணங்களை உடைய லக்ஷ்மிக்கு அன்பை உடையவனே! என்னிடத்தில் அன்பே வடிவொத்தவனாக இருப்பவனே! எனக்கு மிகவும் இனியவனாய் என்னுடைய உடம்பையும் சிறந்ததான ஆத்மாவையும் ஹ்ருதயத்துக்கு த்ருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக அனுபவித்தாய். இனி, குறையும் (மீதம் உள்ளவற்றையும்) அனுபவித்தே விடவேண்டும்.

ஏழாம் பாசுரம். அடியார்களின் ரக்ஷகனான உன்னைப் பெற்றும், இனி விடுவேனோ என்கிறார்.

கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!
நீலக் கடல் கடைந்தாய்! உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ

வடிவழகையும் இனிமையையும் உடையவளான பிராட்டிக்கு உகப்பான அத்தாலே என்னிடத்திலும் மிகவும் ஆசையுடன் இருப்பவனே! நீல ரத்னகிரியானது இரண்டு பிறையைக்கவ்வி எழுந்திருந்தாற்போலே சிறந்த வடிவழகை உடைய தனித்துவம் வாய்ந்த மஹாவராஹமாய் பூமியை ப்ரளயத்திலிருந்து முழுகி எடுத்துத் தன் திரு எயிற்றிலே வைத்த செயலாலே எனக்கு ஸ்வாமியானவனே! உன் வடிவின் நிழல்பட்டு நீலமான கடலைக் கடைந்து அடியார்களை ரக்ஷித்தவனே! உன்னைப் பெற்றுவைத்து இனி நழுவவிடுவேனோ?

எட்டாம் பாசுரம். கிடைத்தற்கரியவனாய் எல்லாருக்கும் அந்தர்யாமியாய் எனக்குத் தாரகனான உன்னைப் பெற்றுவைத்துக் கைவிடுவேனோ என்கிறார்.

பெற்றினிப் போக்குவனோ? உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய்
முற்ற இம்மூவுலகும் பெருந்தூறாய்த் தூற்றில் புக்கு
முற்றக் கரந்தொளித்தாய் என் முதல் தனி வித்தேயோ!

இரண்டு வகைப்பட்ட கர்மங்கள் அதாவது புண்யம் மற்றும் பாபங்களுக்கு நிர்வாஹகனாய், ஆத்மாவை நடத்துபவனாய், அந்தக் கர்மங்களால் உண்டான பலன்களைக் கொடுப்பவனாய். இந்த மூன்று லோகங்கள் மற்றும் எல்லாமாகிற பெரிய புதரிலே புகுந்து ஒன்றும் தெரிந்து கொள்ளமுடியாதபடி மறைந்து நிற்பவனாய் எனக்கு முதல் ஸுக்ருதமான (நற்செயல் – நற்பயன்) தனித்துவம் வாய்ந்த காரணனே! உன்னைக் கைபுகும்படிப் பெற்றுவைத்து, உன்னைப் பிரிந்து வாழமுடியாத இந்த நிலையில், விட வழியுண்டோ?

ஒன்பதாம் பாசுரம். காரணம் மற்றும் கார்ய நிலையில் இருக்கும் எல்லா அறிவுள்ள மற்று அறிவற்ற பொருள்களுக்கு அந்தர்யாமியாய் இருப்பது முதலான நிலைகளாலே ப்ரதானனாய், அவற்றிலிருந்து வேறுபட்ட சிறந்த ஸ்வரூப ரூப குணம் முதலியவைகளை உடைய உன்னை என்று வந்து அடைவேன் என்கிறார்.

முதல் தனி வித்தேயோ! முழு மூவுலகாதிக்கெல்லாம்
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவிலீயோ!

மூன்று லோகங்கள் முதலான எல்லாப் பொருள்களுக்கும் நிமித்த மற்றும் உபாதான காரணமாய் அண்டத்துக்கு உள்ளும் புறமும் இருக்கும் எல்லாப் பொருள்களையும் வ்யாபித்து தனித்துவம் வாய்ந்த காரணமாய் வாழ்ச்சிக்கு விளை நிலமான மூல ப்ரக்ருதியை நடத்துபவனாய், முதல்வனாய், ஒப்பற்றவனாய், எங்கும் பரவி, பத்துத் திக்கிலும் உண்டாய், நித்யமான ஆத்மாக்களுக்கு நியந்தாவனவனே! இப்படி முதல்வனாய் ஒப்பற்றவனான உன்னை நான் எந்நாள் வந்து கூடுவேன்?

பத்தாம் பாசுரம். மூன்று தத்வங்களையும்விடப் பெரியதான தன் ஆசை தீரும்படி எல்லாவிதத்திலும் பரிபூர்ணனாய்க்கொண்டு கூடினாய் என்று தனக்கு ஸாயுஜ்ய மோக்ஷத்தை அளித்து எல்லை இல்லாத ஆனந்தத்தை அளித்தபடியை அருளிச்செய்கிறார்.

சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்ததனில் பெரிய பர நன்மலர்ச் சோதீயோ
சூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்ததனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே

கார்ய நிலையில் இருக்கும் எல்லாப் பொருள்களையும் சூழ்ந்து வ்யாபித்து கீழும் மேலும் இருப்பதால் பத்துத்திக்கிலும் இருக்கும் நித்யமான பெரிய மூல ப்ரக்ருதியைச் சரீரமாக உடையவனாய், தன்னுடைய ஞானத்தாலே வ்யாபித்து அந்த ப்ரக்ருதியைவிடப் பெருத்து மேலானதாய் சிறப்பை உடைய மலர்ந்திருக்கும் ஞானத்தையுடைய ஆத்மாவைச் சரீரமாக உடையவனாய், இந்த ப்ரக்ருதி மற்றும் ஆத்மாக்களை வ்யாபித்து அதற்கும் மேலே கல்யாண குணங்களால் ஞானம் ஆனந்தம் முதலிய குணங்களை உடைய நியந்தா ஆனவனே! வளைத்துக்கொண்டு இவற்றை விடப் பெரிதாய் இருக்கும் என் ஆசையானது தீரும்படி நான் உனக்கு உள்ளே அடங்கும்படி ஸாயுஜ்ய மோக்ஷத்தைக் கொடுத்தாயே!

பதினொன்றாம் பாசுரம். தனக்குப் பலன் கிடைத்த விதத்தை வெளியிட்டு இத்திருவாய்மொழிக்குப் பலமாக, இதில் ஞானம் உடையவர்களுடைய பிறவியின் உயர்த்தியை அருளிச்செய்கிறார்.

அவாவறச்சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே

அடியார்களுடைய ஆசை தீரும்படி எல்லையில்லாத ஸம்ச்லேஷத்தைப் பண்ணுகையாலே துக்கத்தைப் போக்கும் அரியாய், ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய், அப்படியே ருத்ரனுக்கும் அந்தராத்மாவான பரமப்ராப்யபூதனைக் கூப்பிட்டு தன் ஆசை தீரப்பெற்று மோக்ஷத்தைப் பெற்ற திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த சிறந்த அந்தாதிப் பாசுரங்களாக அமைந்த இவையாயிரமும் பரபக்திரூபமாக முடிந்த ஆசையிலே அந்தாதிகளான இப்பத்தையும் அனுஸந்தித்தவர்கள் இவ்வுலகில் பிறந்தே மேன்மையை அடைந்தவர்கள் ஆவார்கள்.

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பகவத் கீதை வெண்பா -ஸ்ரீ அழகிய மணவாள ஜீயர்–மூன்றாவது ஷட்கம்

October 8, 2023

ஸ்ரீ பகவத் கீதை வெண்பா  பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
14 ஆம் நூற்றாண்டில் வாதிகேசரி – அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் என்பவரால் இயற்றப்பட்டது. இது வெண்பாவால் ஆன நூல்.
பாயிர  வெண்பாக்கள் 223.
இந்த நூலுக்குப் பதினெட்டு ஓத்து என்னும் பெயரை நூலாசிரியர் சூட்டியுள்ளார்.

மாயனருள் கீதை மன்னு பொருடன்னைத்
தூய பெரும்பூதூர்த்‌ தொன்முனிதன்‌–மேய
தகையான்‌ மணவாள மா முனிவன்‌ சொன்னான்‌
தொகையாரும்‌ லெண்பாச்‌ சுரந்து.

சொட்டை மணவாளத் தூ முனிவன் சொல் செறிந்த
சிட்டம் மருவும் தமிழ்ப் பாவால் – கட்டு எழில் சீர்க்
கோமான் அருள் கீதை கூறும் பொருள் உணர்வோர்
சீமான் அடி சேர்வர் சென்று.-ஆசிரியர் பெயரைக் குறிப்பிடும் பாடல்

————

1. கண்ணாநீ பார்த்தர்க்குக் காத்தற் கினிதுரைத்த
திண்ணார் திறபருளுஞ் சீர்கீதை – யெண்ணாரு
நன்பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
புன்பொருளிற் போகா புலன்.

2. மாதவன் மாமாது மாறனும்வண் பூதூர்வாழ்
போதமுனி யுந்தந்தம் பொன்னடிக்ண் – மீதருள
வுச்சிமேற் கொண்டே யுயர்கீதை மெய்ப்பொருளை
நச்சிமேற் கொண்டுரைப்பன் னான்.

3. நாத னருள்புரியு நற்கீ தைன்படியை
வேதம் வகுத்த வியன்முனிவன் – பூதலத்துப்
பாரதத்தே காட்டும் பதினெட்டோத் தும்பகர்வன்
சீர்த்தழைத்த வெண்பாத் தெரிந்து.

4. வேதப் பொருளை விசயர்க்குத் தேர்மீது
போதப் புயன்ற புகழ்மாயன் – கீதைப்
பொருள்விரித்த பூதூர்மன் பொன்னருளால் வந்த
தெருள்விரிப்ப னந்தமிழாற் றேர்ந்து.–இராமானுசரின் மாபாடியத்தைப் பின்பற்றிப் பாடியதாகச் சொல்லும் பாடல்

5. தேயத்தோ ருய்யத் திருமா லருள்கீதை
நேயத்தோ ரெண்ணெய் நிறைவித்துத் – தூய
தெருணூல தேபெரிய தீபத்தை நெஞ்சி
லிருணூற வேற்றுகேன் யான்.–இருள் நூந -அஞ்ஞான இருள் கெட

6. சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
லத்தியா தொன்றை யறந்துறந்தோர் – பத்தியா
னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
கெண்ணும் பொருளா மிசைந்து.

தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தி யடைந்த தம் நெஞ்சில், ஒன்றை அ(ர்)த்தியாது –
(பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
பத்தியால் – (முற்கூறிய கர்மஜ்ஞாநவைராக்யங்களாலே உண்டான) பக்தியோகத்தாலே,
நண்ணும் – அடையும்,
பரமன் – பரப்ரஹ்மமாகிற, நாரணனே – நாராயணனே,
நற்கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.

7. ஞானங் கரும நலஞ்சேர் நிலையதனை
யான மனயோகத் தாராய்ந்திங் – கூனமறத்
தன்னா ருயிருணருந் தன்மையினை நற்கீதை
முன்னாறோத் தோதும் முயன்று.

ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞான யோகத்தையும், கர்ம யோகத்தையும்,
ஆன மன யோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
இங்கு – இவ்வுலகிலேயே,
ஊனம் அற – குறைவில்லாமல்,
தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
நற்கீதை – மிகச்சிறந்த கீதையின்,
முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.

8. உள்ளபடி யிறையை யுற்றெய்த முற்றறஞ்சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி – வெள்ள
நடையாடும் யோகத்தை நாதனருள் கீதை
யிடையாறோத் தோது மெடுத்து.

உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்ம யோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
பத்தி வெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்தி வெள்ளம் பெருகி வரும் பக்தி யோகத்தை,
நாதன் அருள் கீதை – ஸர்வ ஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.

9. கருமமறி வன்பிவற்றின் கண்ணார் தெளிவில்
வருஞ்சித் தசிதிறையோன் மாட்சி – யருமையற
வென்னாதன் றந்த வெழிற்கீதை வேதாந்தப்
பின்னாறோத் தோதும் பெயர்ந்து.

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய
இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூல ரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
அருமை அற – சிரமம் இல்லாமல்,
என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என் ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.

10. தானமுடன் றீர்த்தந் தவம்பிரித லைவேள்வி
யனமுத லாறு மறமிறைவற் – கேநயந்த
தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
கன்மயோ கத்தின் கணக்கு.

தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐ வேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம் செய்தல்,
பஞ்ச மஹா யஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
இறைவற்கே நயந்த தன்மையால் – (இக் கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
கன்ம யோகத்தின் கணக்கு – கர்மயோகத்தின் ஸ்வரூபமாகும்.

11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
பத்தியோ கத்தின் படி.

அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
நெஞ்சில் குடி யிருத்தி – நெஞ்சில் அமைத்து,
மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
பத்தி யோகத்தின் படி – பக்தி யோகத்தின் ஸ்வரூபமாகும்.

12. புலன் பொறியை நீக்கித்தம் புத்தியினிற் செம்மை
யலம்புரிவார்க் குற்றவுயிர் மாட்சி – நலம்புனைந்து
மானயோ கத்திறையை மன்னுநிலை காண்பதே
ஞானயோ கத்தி னலம்.

புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
செம்மை அலம் புரிவார்க்கு – நேர்மைக் குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
உற்ற – தோன்றும்,
உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
மான யோகத்து – யோக முறைகளினாலே,
இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
காண்பதே – அனுபவித்தலே,
ஞான யோகத்தின் நலம் – ஞான யோகத்தின் ஸ்வரூபமாகும்.

13. இந்த வகை யமைந்த யோகங்க ளிம்மூன்றுந்
தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
மானந் தருமியல்பால் வாய்ந்து.

ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
இந்த வகை அமைந்த யோகங்கள் இம் மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளை யுடைய இந்த மூன்று யோகங்களும்,
தந்தம் இடையே தனித் தனி சேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித் தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.

———————————-

கன்ம உயிர் உணர்வால் கட்டவரு முன்னாறு
நன்மை இறை பத்தி நடுவாறு தன்மையுடன்
காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை
யேய வமைந்தேலும் ஈறு ஆறு

13 – ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
தாங்குடல மாருயி ராப்புறுத – னீங்குநெறி
தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
நன்மையுடன் சொல்லு நயந்து.

ஈங்கு – இந்த கடைசி ஷட்கத்தில்,
முதல் ஆகி ஏய்ந்த பதிமூன்றாம் ஓத்து – முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதிமூன்றாம் அத்தியாயம்,
ஆங்கு – இந்த ஸம்ஸாரத்தில்,
ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல் – ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்,
நீங்கு நெறி – அதிலிருந்து விடுபட வழியையும்,
தன்மையுடன் – அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்துடன்,
முற்றும் தகைமை பெற – மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்,
சோதித்து – ஆராய்ந்து,
நன்மையுடன் நயந்து சொல்லும் – சிறப்பாக விருப்பத்தோடு கூறும்

இந்தச் சரீர இகல் விசயா கேத்திரம் என்று
அந்தப் பரிசறிவார் ஆய்ந்து உரைப்பார் –முந்தி தனை
ஈங்கு அறிவான் கேத்திரஞ்ஞன் என்றும் உயிர் என்றவனை
யாங்கு அறிவார் சொல்வார் அமைந்து –1-

கேத்திரங்கள் எங்கும் அமர் கேத்திரஞ்ஞனாக
பார்த்து அறிவு மேவு நீ பார்த்தனே –சீர்த்த
இவை இரண்டு மற்றும் அறியும் இந்த அறிவுக்கு
நவையில் அறிவு என்று அறிவனான்–2-

அக்கேத்திரம் யாதாம் அங்கு எவ்வாறு இவ்விகற்பு
மிக்கெதிலாம் எம் மயமாய் மேவி அமரும் தக்க விவன்
தான் எவன் எத்தகையோன் சார்ந்த சுருக்கத்ததனை
யான் நேர்ந்து சொல்லக்கேள் இங்கு –3-

போத முனிவர் புகல்வர் பல வகையே
வேதம் விவிதக்கால் வேறு பட -வோதுமது
வேதாந்த ஸூத்ரங்கள் வேறுரைக்கும் ஏதுவுடன்
மீதார்ந்த நிச்சயத்தான் மிக்கு –4-

பூதங்கள் பூதாதி புத்தி ப்ரக்ருதி
யோதிந்தி யம் பதினொன்று ஒண் புலன் ஐந்து இதில் வரும்
இச்சை சினம் இன்ப துன்ப மேலும் உடல் சேதனை தாதுச்
சிருப்பிதாகும் சுருக்கு –5-

இவ்வியல்பில் கேத்திரம் தான் இன்னே சுருக்காக
வல் வினை சேர் காரியத்தோடு ஆய்ந்து உரைத்தேன் செவ்வியுடன்
ஆர் உயிரின் தன்மை அறிவாம் உபாயங்கள்
சேரு நெறி கேண்மின் சிறந்து –6-

மானமுடனே டம்பம் வன் கொலையின் மாறு நிலை
யான பொறை செவ்வை யமர் குருவின் பான் அணுகல்
சுத்தி யமர் வுற்ற துணி யுடைமை சூழ் மனத்தைச்
சித்தி யளவும் செறுப்பு –7-

இந்தியங்கள் சார் பொருளில் ஒன்றும் துறந்து இருத்தல்
வந்தியலும் ஆங்கார மற்று ஒழிதல் –புந்தியினால்
சென்ம மரண சரை நோய் சேர் துக்கமாம்
புன்மை யுணரும் புணர்ப்பு –8–

நின்ற நசை யறுதல் நேர் புதல்வர் தாரம் மனை
ஓன்று மனம் அங்கு ஒழிவித்தல் என்றுஞ்சமன்
ஆர்ந்தே இருத்தல் உகப்பு வெறுப்பாம் பொருள்கள்
சேர்ந்து வரலிற் றெளிந்து –9-

என் பால் அநநியிமாய் எய்ந்து புறம் போகாத
வன்பாரும் பத்தி யமர் யுறுத லின்பார்
தனி இடத்தில் சார்தல் சனம் குழுவு கண்டால்
நனி யுகப்புச் சேரா நலம் –10–

ஆர் உயிரின் மேல் அறிவில் ஆய்ந்து என்று நின்றமர்வு
பேர் உணர்வாந் தத்துவத்தின் பீடறிவு –சீருடைய
மெய்ஞ்ஞான மாமதென மிக்குரைத்தேன் வேறுளது
பொய்ஞ்ஞான மாகும் புறம் –11-

இவ்வறிவால் எய்தும் உயிர் தன்னை ஈங்கு உரைக்கேன்
எவ்வறிவா னல்லமுத மெய்தலாம் செவ்வை யதில்
ஆதி யில தெற் பரமா யான்ற பிரமமா
ஈதுல் அது உண்டு என்று உரைப்பதில் –12–

எங்கும் கரம் பாதம் எங்கும் கண் சென்னி முகம்
எங்கும் செவியாம் இயல்புடைத்தாய் -இங்கு வதில்
எப்பொருளும் தன் தகவால் ஏய்ந்து பரந்து நிற்கும்
அப்பொருளின் தன்மை யது –13–

எல்லாப் புலன் இயல்வும் ஏய்ந்தே விளங்குமதா
எல்லாப் புலன் இயல்வும் இல்லையா –எல்லாந்
தரிக்கும் ஒரு தத்தற்றுச் சார் குண மூன்று இன்றி
விரித்தனைக் துய்க்கும் மிக –14-

பூதங்களுக்குள் புறம்புமாய்த் தான் நின்று
மீது அங்கு இயல்வதுமாய் மேவியே –போதந்து
நுண்ணிமையினான் மிகவும் நோக்க அரியதாய் தூரத்து
மண்ணிமையினால் அருகுமாம் –15-

வேறுபாடு அற்ற வது வேற்றுமை சேர் பூதத்து
வேறுபாடு உற்றது போன் மிக்கு இருக்கும் –கூறு பாடு
உற்ற பொருள் தான் பரிக்கும் உண்ணும் உண்டாக்கும் என
மற்று அறியத் தக்கதது வாய்ந்து –16-

சோதிகளின் மிக்கது தான் சோதியாய்த் தொக்க தம
மீது பரன் என்னும் உரை மேவுமதாய்ப் -போதமெனத்
தான் அறியலா வறிவாற் சாருமதா யாவர்க்கும்
ஊன மற உள்ளிருக்கு முற்று –17-

இப்படியாற் கேத்திரமும் ஞானத்து இயல் வகையும்
மெய்ப்படியா ஜேய வியப்பதுவும் –தப்பறவே
யான் திரளச் சொன்னேன் என் பத்தனாய் ஈது அறிந்து
தான் திகழ்ந்து என் மயனாம் சார்ந்து–18–

சித்தும் அசித்தும் அநாதி எனச் சிந்தி நீ
பத்தில் விகார மணி குணங்கள் ஒத்து எழுந்து
பந்த முறு வித்தாகும் பந்த மொழி வித்தாகும்
வந்தென வெண்ணுற்று மதி–19-

கார்ய காரணங்கள் கர்த்தா வியற்றுமிடத்
தேய ப்ரக்ருதி யேதுவா –மேய சுகம்
துக்கம் புசிக்கும் தொடர்பு அதனிலேதுவா
ஓக்க வரும் புருடன் உற்று–20-

வாய்ந்த ப்ரக்ருதி நின்ற புருடன் அதில்
ஏய்ந்த குணத்தின் இயல்பு எய்தும் –தோய்ந்த குண
சங்கம் அடியான சதசத்தாம் யோனிகளில்
தங்க வவர் பிறப்பிற் சார்ந்து –21-

இவ்வுடம்பின் மேலாம் புருடன் கண் டேய்ந்திசை வான்
அவ்வுடம்பு தாங்கி யதித் துய்ப்பான் –செவ்வி யதிற்
தங்கிய பேர் ஈசனாய்த் தான் பரம வான் மாவா
யிங்கியம்பப் பட்டான் இவன்–22-

இந்தப் புருடனையும் இந்த அசித்தினையும்
அந்தக் குணங்களுடன் ஆய்ந்து அறிவான் -எந்தவவன்
எவ்வாறு மேவும் இயல்பால் திரிந்திடினும்
இவ்வாறு அவன் பிறவான் இங்கு–23-

மிக்கார் சிலர் நெஞ்சால் மெய்ப்ப ரதியானத்தாற்
றக்கார் உயிர் காண்பர் தாம் சிலர்கள் –எக்கால
சாங்கிய யோகம் தன்னால் தம் கர்ம யோகத்தால்
ஆங்கு அறிவர் வேறு சிலர் ஆய்ந்து–24-

மற்று இங்கு அவ்வாறு அறியார் மன்னறிவார் பாற் கேள்வி
யுற்று அன்புடனே யுபாசிப்பர் -நற்றமா
வந்தவரும் அரும் பவத்தைத் தாம் கடப்பர்
இந்த மிகக் கேள்வி யாய்ந்து –25-

எவ்வளவு நின்று இயலும் இந்தப் பொருள் உண்டாம்
அவ்வளவு தன்னை யடல் விசயா –விவ்வகையே
சித்தும் அசித்தும் சிறந்த புணர்ப்பதனால்
ஒத்தியல்வது என்றே யுணர் –26–

ஒத்துப் பொருள் அனைத்துள்ளே அமர விருந்
தத்துப் பரமோ னாகியே தத்துவங்கள்
மாயும் அளவதிலும் மாயா தவணைக் கண்
டாயுமவன் கண்டா னமைந்து –27-

எவ்விடத்தும் தான் இறையாய் ஏய்ந்து இருக்கும் இவ்வுயிர் தான்
எவ்விடத்தில் ஒத்தி அல்லதா வறியான் இவ்விடத்தில்
தன்னைத் தன் நெஞ்சத்தினாற் றானலியான் றானடையும்
பின்னைப் பர கதியாம் பேறு–28-

ஏய்ந்த ப்ரக்ருதி இத்தால் கருமம் எல்லாம்
வாய்ந்து இயலும் என்று அறிந்து மன்னுயிரை யாய்நது இவனைக்
கர்த்தா இவன் என்று காண்பான் எவன் அவனே
சத்தாம் உணர்வுடையான் தான் –29–

அப்போது பூதத்து இயல் வேறுபாட்டினையும்
ஒப்பொருவா ஒன்றில் உறு வகையும் தப்போடார்
பந்தப்பரப்பும் உணர் பங்கானப் போது யிரா
மந்தப் பிரமம் அடைந்ததாம்–30–

இங்கனையும் ஆதி இலானாம் குணம் இவனாம்
பங்கடலோ இந்தப் பரமான்பர் தங்கி யுடன்
நின்றிடிலும் கௌந்தேயா நேர் ஒன்றும் தான் செய்யான்
என்று மதிற்றோய் விலனா மேய்ந்து –31-

ஓங்கு விசும்பு எங்கும் உளதாய் அநுட் பத்தால்
அங்க தனிற்றோயா தது போலத் தாங்குடல
மேதிலு நின்றாலும் இலகும் உயிர் அவ்வண்ணம்
ஆதி யல்வாற் றோயானாம் அங்கு–32–

எவ்வா றிரவிதான் இந்த உலகனைத்தும்
இவ்வாறு எழில் விளக்கம் எய்துவிக்கம் அவ்வாறு
பாரதனே இவ்வுடல் எல்லாம் பரந்து உயிர் தான்
சீரதனாற் றான் விளங்கும் சேர்ந்து –33–

காயம் உயிர் இவற்றின் கண்ணார் பிரிவவ்வா
றேய வறிவாம் எழில் கண்ணான் –மேயவுடல்
வீடமர்வு தானும் மிக உணர்வார் தாம் பரமாம்
பீடமர்வர் தன்மையினைப் பெற்று –34–

இத் தன்மையால் உடலும் இவ்வுயிரும் சேர்ந்து இயலும்
அத் தன்மை யாம் அப்பவிழ் விரகு –மேய்த்தன்மை
யோர்ந்த பதின் மூன்றாம் ஓத்து இங்கு உரைந்து முடித்து
ஆய்ந்த பொருள் ஆய்ந்தோம் அறிந்து

————

14 – குண த்ரய விபாக யோகம்:

முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
போதத் தியல்பாற் புரிந்து.

மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஓத்து – மிகச் சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம்,
முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் – (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில்
(தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்ற முறையும்,
அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் – அந்த குணங்களை நீங்கச் செய்யும் முறையையும்,
போதத்து இயல்பால் – அறிவிக்க வேண்டிய முறையில்,
புரிந்து – விருப்பத்தோடு,
கிளர்ந்து உரைக்கும் – உறுதியாகக் கூறும்.

மற்றும் உனக்கு இன்னம் மன வறிவின் மேல் அறிவை
வுற்று உணரும் வண்ணம் உரைக்கின்றேன் -அற்ற மறை
யாது அறிந்து மா முனிவர் இப்பவம் விட்டு எய்தினார்
மீதம் அரும் தன்மையினை மிக்கு –1-

இந்த அறிவை இனிது ஆர்ந்து இங்கு என் ஒப்பாம்
அந்த உயர்வை அடைந்தவர்கள் –பந்தமுடன்
சற் கத்திலும் பிறவார் தாம் துயரம் சாரார்
ஓற்கப் ப்ரளயத்தினுள் –2–

மிக்க பிரமம் விறல் யோநி என்று உரைக்கத்
தக்க தெனத சித்திற் சார்வு பெறத் -தொக்க வுயிர்
கெற்பத்தை யான் சேர்ப்பன் கேழ் கிளரும் பூதங்கள்
உற்பத்தி சேரும் இதில் உற்று –3–

இங்கு உலகில் யோனிகளாம் எத்திறத்து மூர்த்திகளா
அங்கு உதயம் செய்யும் அவை தமக்குப் -பங்கம் இலா
விந்தப் பரமமே யோனி கருவளிக்கும்
அந்தப் பிதா யானே யாங்கு–4–

சத்துவ ரசோ தமமாய்ச் சாரும் குணம் மூன்று
மொய்த்த பிரகிருதி உள்ளவையாம் -இத்தகைய
ஆருயிரைத் தேகத்து அமரப் பிணைக்குமே
சீராய் அரும் தோளாய் செறுத்து –5-

ஆங்கு அவற்றில் சத்துவம் தான் அன்று அழுக்கு அற்றார் தலினால்
ஈங்கு ஒளி செய்தலு நோ யீடழித்துப் –பாங்கில்
வரும் சுகத்தில் மற்று அறிவின் மன்னு நசை தன்னாற்
பொருந் துயிரைக் காட்டும் பண்பு–6–

ராக மதின் தன்மை ராசதமாம் கௌந்தேயா
தாகமுடன் சங்கம் தனை விளைக்கு மாக நினை
மற்றது தான் கன்மத்தில் வன் நசையாற் றேகிதனை
யுற்ற அமரக் கட்டும் உறைத்து–7-

தம் அறிவு கேடு தரும் தான் அறி நீ மோக
மம ருயிர் கட் கு எல்லாம் அளிக்கும் -தமர் என்னாது
ஓராமை சோம்பல் உறக்கத்தால் பார்த்தனே
சோராமல் காட்டும் துணிந்து–8-

சத்துவம தின்பத் தனிற் றுவக்குந் தான் இரசத்
தொத்தியலும் கன்மம் துவக்குவிக்கு -மைத்தும்
மன்னறிவு தன்னை மறைத்திட்டு ஓர்ப்பின்மையினிற்
றுன்ன மிகத் தான் துவக்கும் சூழ்ந்து–9–

முக்குணங்கள் தம்மின் முதல் குணம் தான் மற்ற இரண்டும்
ஓக்க வமுக்கி யுற மேவா –மிக்க
விடைக்குணம் தான் பார்த்தனே மற்ற இரண்டும் இங்கே
கடைக்குணமும் அவ்வாறு காண்–10-

பொறி வாயில் எங்கும் புணரும் ஒளியாம்
அறிவானது எப்பொழுது உண்டாகும் –குறியாலே
மன்னுடம்பில் அப்பொழுது வாய்ந்து யரும் சத்துவமுமாம்
என்னுமது தான் அறிவான் இங்கு–11-

ஈயாமை வீண் உழற்றி ஏய்ந்த கருமத் தொடக்கம்
சாயா புலன் எழுச்சி தன்னாசை –ஓயாமல்
உண்டாம் இவை கண்டாய் உற்றி ரசத்து ஒங்கதனால்
வண்டாரும் தார் விசயா மற்று–12–

மன்னு உணர்வில்லாமை ஒன்றின் முயல்வறு தன்
மன்னும் உயிர் ஓர்ப்பின்மை மா மோகம் என்னும் இவை
மீதில் உயர் தமத்தின் மேவும் அவையாக நீ
கோதில் குரு முதல்வா கொள்–13–

சத்து மிக்கு ஒக்கம் தரும் பொழுதில் தான் மரணத்து
ஒத்து உடம்பு விட்ட உயிர் உடையோன்–தத்துவத்தின்
மேலறிவு சேர்ந்தார் மிக வமலமாம் குலத்துச்
சால வவன் தான் பிறக்கும் சார்ந்து–14–

கன்ம நயந்தோர் குளத்தில் காதலுடன் தான் பிறக்கும்
வன்மையிர சத்துயர்வின் மாய்ந்தவவன் நன்மை இலா
மூடர் இடைப்பிறக்கும் முழுதும் தமத் துயர்வில்
பீடை யுற மரித்தான் பின்–15–

நீதி கருமத்து நின்மலமா நற் பயனைக்
கோதின் முதற் குணத்தே கூறுவரான் மீதியலும்
துக்கம் இடைக் குணத்தில் சூழ் பயனாம் பிற் குணத்திற்
றக்க அறிவின்மை தான்–16–

முற் குணத்தில் ஆரு முழுதுணர்வு தானிடையி
லற் குணத்து லோப மதுவுண்டாம் பிற் குணத்தில்
ஓராமை மோகம் உணராமை யுண்டாரும்
சீரார் புகழ் விசயா சேர்ந்து –17–

மேலடைவர் முற் குணத்தோர் மேவு நடுக்குணத்தோர்
சால நடுவாம் உலகிற் குனிற்பர் –ஞாலத்துப்
பின்னால் குணத்தியல்வோர் பீடழிவர் கீழ்மையினை
எந்நாளும் சேர விழிந்து–18–

மிக்க குணம் அவற்றில் வேறுபட்ட கர்த்தாவைத்
தக்க வுணர்வுடையோன் தான் உணரான் –ஓக்க குணர்
தன்னில் பரம் எனவும் தன் அறிவால் சேருமே
என்னிற் பரத்தன்மை யேய்ந்து–19-

இங்கு உடல் மேவி யமர் இக் குணங்கண் மூன்றினையும்
மங்கும் வகை கடந்து மன்னினவன் –றங்கு
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி விடுத்துத் தன்னாம்
சிறப்பு அமுதம் சேரும் சிறந்து–20-

இவ்வளவில் பார்த்தன் இயம்பினான் இங்கு இறைவா
வவ்வகை சேர் முக்குணத்தை யாங்கு அன்னோன் –எவ்வகையில்
சேரும் அடையாளத் தன் செய் தொழில் ஏது எங்கனே
சீருடன் இத்தைக் கடப்பான் செப்பு–21-

ஈண்டு அவனுக்கு கண்ண வியல்பின் றக வுரைத்தான்
பாண்டவனே முந்திப் பரந்த ஒளி –மூண்டியற்றி
மோக முளவற்றை முனியான் முன் மூண்டத்து
வேக நசையிலான் மிக்கு–22-

முன்னுக்கு உதாசீனம் போல் இருக்கும் முக்குணங்கள்
தன்னுற்று அலைந்திடினும் தான் சலியான் –மன்னு குணச்
செய்தி இது என்று இருக்கும் செய் தொழிலில் சேட்டியான்
மெய்திருந்து நெஞ்சுடையான் மேல்–23–

தன் சுகத்தும் துக்கத்தும் தான் சமனாயத் தன்னமர்ந்து
பொன் கலுட னோடி தனிற் புத்தி ஓத்தோன் -அன்பர்
வெறுப்பரிடை ஒப்போன் மிகு பழி நன் கீர்த்தி
நிறுத்த சம நிற்கு நிகழ்ந்து –24-

தன்ன மரு மான மவமானஞ் சாரான் நண்பன்
என்னலர் தம் பக்கத்த மொத்தியல்வான் –மன்ன
செய்ம் முயற்றி எல்லாம் செய்யான் அவன் குணம் கண்
மெய்ம் முயற்றியால் கடந்தான் மிக்கு –25-

என்னைப் புறம் போகா யோகமாம் பத்தியினான்
மன்னப் பயின்று மருவுமவன் –றன்னமரப்
பேசு குணம் செற்றுப் பிரமமாம் தன்மையினை
மாசில் குணம் சேர்ந்திடுமே மற்று–26–

குன்றா வமுதக் குணப் பிரமமாம் உயிர்க்கு
நன்றாம் இருப்பிடம் தானானவன் நின்றாரும்
தன்மப் பயனுக்கும் தான் ஒருமை சார் சுகமா
நன்மைக்கும் என்று நயந்து –27–

கட்டுதலும் கர்த்தவாம் தன்மையும் கட்டு அவிழ்ப்பு
விட்டுத் திகழ் அமுதின் மேவுதலும் –தொட்டு வரு
முக்குணத்தின் சார்வா முயன்று பதினாலாம் ஒத்
துக்கும் உரை ஓரும் உணர்ந்து

———

15 – ஸ்ரீ புருஷோத்தம யோகம்:

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும்
மாறு உன்னும் உயிர் வகையில் – உத்தமனா மன்னி அவை
மீது உள் பரந்து பரித்து இறையாய் மேவினனை
யோதும் பதினைந்தா மோத்து.

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் – அனாதி காலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத சரீரத்தோடு
கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும்,
மாறு உன்னும் உயிர் வகையில் – அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக் காட்டிலும்,
உத்தமனா மன்னி – மேற்பட்டவனாக விளங்கி,
அவை மீது உள் பரந்து – அவ்விரண்டையும் வ்யாபித்து,
பரித்து – அவற்றைத் தாங்கி,
இறையாய் – அவற்றை உடையவனாய்,
மேவினனை – பொருந்தியிருக்கும் புருஷோத்தமனான நாராயணனை,
பதினைந்தாம் ஓத்து – (கீதையின்) பதினைந்தாம் அத்யாயம்,
ஓதும் – கூறும்.

மீது முதலாய் மிகு சாகை கீழாக
வோது முலகா முயராசைப் போதுந்
தளிர்கள் மறையாகத் தானுணர் வானந்த
ஒளி கொள் மறை யுணர்ந்தான் உற்று–1-

கீழ் தனிலும் மேலும் கிளைகள் அதுக்குப் பரந்து
தாழ்வில் குணத்து உயரும் சார் புலன் தன் –சூழ் தளிரா
மூலம் கீழும் பரக்கு முன்னை வினைத் தொடர்பாய்
ஞாலத்தின் மேல் அமர்ந்து நன்கு –2-

இத்தின் உருவும் இதில் முடிவும் ஆதியும் மற்று
அத்தின் இருப்பு அறிவரிதாம் -மொய்த்தமர்ந்த
மூல வர சாமி தனை முற்று மறுத்தறவாங்
கோல வலிச் சத்திரம் தான் கொண்டு –3–

ஆங்கு அதனால் இப்பதம் தான் ஆராயதற்காகுமேல்
ஈங்கு அதனில் சென்றால் இனி மீளார் -பங்காதற்குப்
பற்றுவா நாகப்பரனை எவனான் மன்னு
முற்றும் இயல்வுண்டா முயன்று–4-

மனமோ நங்களின்றி மற்று நசைக் குற்றமற்
றான உயிர்த் தன்மை யமர்ந்தாசையது தானகன்று
இன்ப மிகு துன்ப இருமை விட்டு இங்கு உணர்வோர்
மன் பதமே தாம் அடைவர் வாய்ந்து –5-

அந்த உயிர்ச் சோதியினை ஆதித்தன் சந்திரனும்
செம் தழலும் தாம் விளக்கம் செய்யார்கள் -அந்தத்
தாளடைந்தார் மீளார்கள் தாமம் அஃது எனக்கே
யான வகை நீ தான் அறி–6-

என்னாரு மாம்சமா இவ்வுலகிற் சீவனாய்
முன்னார நின்று முயலு முயர் -தன்னாரு
மைம்புலனும் நெஞ்சும் அவை யாறையும் வலிக்கும்
வெம் புலத்துச் சேர விரைந்து–7–

எந்த உடல் விட்டு எவ்வுடல் அடையும் ஈசனவன்
சந்தமுடன் அங்கு இவற்றைத் தான் வாங்கிப் -பந்தமுடன்
தானேகும் வாயுத்தன் சார் மணங்கள் வாங்கியே
பூ நேர் நின்று ஏகுமது போல் –8–

செவி கண் டுவக்குடன் சிங்கவை நாசிச் சேர்ந்
தவி மின்றி நெஞ்சோடு அமர்ந்து -நவிவில் வாய்
புன் பொருள்கள் எல்லாம் புசித்தியலும் இவ்வுயிர் தான்
இன்புறுதல் சேர் நசையால் இங்கு–9-

இந்த உடல் விட்டேக லேய்ந்து மிதிலிருந்தும்
வந்து புசித்தும் குணத்தின் மன்னினவனை –வந்தறிவின்
மூடர் உணர் முக அறியார் முற்றுணர்வர்
நாட உணர்வழியார் நன்கு –10–

மன்னு கருமத்து மருவியல் யோக்கியர்கள்
தன்னுடம்பின் மேவி அவனைச் சார்ந்து உணர்வார் –முன்னு ணரு
நெஞ்சம் இல்லாதார் நிறைவின்றித் தாம் உணரார்
எஞ்சல் அறவியன்றிம் இங்கு–11-

ஆதித்தன் பானின்று அனைத்து உலகும் தான் விளக்கும்
சோதிச் சுடர் சோமன் சூழங்கி -மீதிலகி
மன்னு மொழி தன்னின் வனப்பதவு மன்னனே
என்னதன உற்று அறி நீ ஏய்ந்து–12–

பூதலத்தின் மேவியே பூதங்கள் தான் தரிப்பன்
மீது அடர்த்து நின்று மிடுக்கால் –சீதளம் சேர்
சோமன் என நின்று அமுதம் சோர்ந்தே பயிர் எல்லா
சேம முற நிறைப்பன் சேர்ந்து–13-

நான் அமர்ந்து நின்று உலகினில் நடும் உயிர் உடலி
லூன மறக்கிளரும் ஒள் எரியாத் –தான் கலவா
வேல் வகை சேர் வாயு விரண்டால் அறப்புசிப்ப
னால் வகை சேர் அன்னத்தை நன்கு-14-

எல்லார் இதயத்து இருப்பேன் நான் என்னாலே
நல்லார் நினைவறிவு நாட்டமாம் –சொல்லார்ந்த
வேதங்கள் யானைக்கும் வேத்தியனான் மேவு பயன்
மிதந்தது அறிவேன் மிக்கு–15–

கண்ணார் உலகிற் கரனக் கரன் என்றே
எண்ணாம் புருடர் இவர் இருவர் -பண்ணாரும்
பூத யுயிர் எல்லாம் கரனாம் பொருவில் சீர்
மீத வுயிரக் கரனாம் வேறு–16-

ஆங்கு இவரில் உத்தமனே யாம் புருடன் அன்னியனாய்ப்
பாங்கிற் பரமான் மா வென்று உரைத்தான் ஓங்கியே
தாம் புகுந்து நின்றே தரித்து உலக மூன்று இறையா
யோம்பு மவன் குன்றாது மேல்–17–

எத்தகவால் யான் கரன் மீது ஏகியே யக்கரனாம்
உத்தனிலும் உத்தமனா உற்று உயர்ந்தேன் -இத்தகவால்
வேதம் உலகு இவற்றின் மேவு புருடோத்தமனா
வோத உரை சிறந்தேன் உற்று –18–

என்னை இங்கே இவ்வண்ணம் ஏய்ந்த புருடோத்தமனாம்
உன்னை யமர் ஒழித்து முற்று உணர்ந்தான் பின்னையவன்
எல்லாம் அறிந்தே எனை அடைந்து பத்தியுடன்
செல்வான் எவ்வாறும் சிறந்து –19–

இன்னே இச்சாத்திரமாய் ஏய்ந்த மறைப்பொருளை
மன்னே யுரைத்தேன் நான் மற்று இதனை நன்னெறியா
யுற்று அறிந்தான் நேரே யுணர்ந்தானாம் பார்த்தனே
மற்று அனைத்தும் செய்தவனாம் ஆய்ந்து –20–

ஏலும் புருடோத்தமனாம் ஏற்றத்தைச்
சால இறைவனே தான் உரைத்த –மேலான
கீதை பதினைந்தாம் ஒத்துக் கெழு மிகு சீர்ப்
போதப் பொருள் உரைத்தோம் பூண்டு

———-

16 – தேவாசுர ஸம்பத் விபாக யோகம்:

தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
நன்மைசேர் சாத்திரத்தி னாடுதலும் – தொன்மை
யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
யுரைக்கும் பதினாறா மோத்து.

கீதை பதினாறாம் ஓத்து – கீதையின் பதினாறாம் அத்தியாயம்,
அங்கு தொன்மை உரைக்கு – அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப் பற்றியும்
அதை (அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின்,
அறிவு உரைப்பு காட்டுதற்கு – அறிவு உறுதிப்படுவதற்காக,
தன்மையால் தேவர் அசுரர் என சார்பிறவி – (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகை
பிறவிகளாகப் பிரிவுபட்டிருப்பதையும்,
நன்மை சேர் சாத்திரத்தின் நாடுதலும் – நன்மையை அடைவிக்கும் சாஸ்திரத்திற்கு வசப்பட்டிருக்கும்
தன்மையையும், உரைக்கும் – விளக்குகிறது.

அஞ்சாமை நெஞ்சு தெளிவாய்ந்து அறிவாம் யோக நிலை
எஞ்சாத தானம் இசைந்த தமந் -துஞ்சாத
வெச்ச மறை வேலும் தவ முயற்றி
நிச்சந்தனிற் செவ்வை நேர்ந்து –1-

கொல்லாமை மெய்ம்மை வெகுளாமை கோள் விடுத்து
றோல்வார் சமங்குறளைச் சொல்லாமை -எல்லாத்து
மேவு தயை தான் சலிப்பு மேவாமை மேன்மை நாண்
பாவு பொருள் சாபவந்தீர் பண்பு–2-

தேசு பொறை திண்மை தூய்மை சின மறு தன்
மாசு நிகழ் மிசை சேர் மான மொழி வாசலியை
தெய்வ மெனும் சம்பத்திற் சேர்ந்து பிறந்தார்க்கு உண்டோ
மெய் வகையாற் பார்த்தனே மிக்கு–3-

தன்ம மிலா டம்பம் தன் செருக்குத் துன்மானம்
வன்மை யுறு செற்றம் வளர் கொடுமை -நன்மை
அறியாமை பார்த்தனே யாசுரமாம் செல்வம்
செறிவாருக்கு உண்டாம் திறம்–4–

தெய்வம் எனும் செல்வம் திகழ் மோக்கத் தாசுரந்தா
னை வகை சார் பந்தத்து நாடுறுப்பாம் -இவ்வகையாற்
சேர்ந்து உயர்ந்த சீர்ப் பார்த்தா தெய்வமாம் சம்பத்தை
நேர்ந்துதித்தாய் சோகியே நீ–5–

பூதம் இரு வகையாப் போருமே இவ்வுலகி
லாத மரும் தெய்வமாம் அங்கு அசுரமாம் -ஈது அதனில்
தெய்வம் விரித்து உரைத்தேன் சேர்ந்து நீ யாசுரத்தை
மெய் வகை கேள் பார்த்தா விரித்து–6–

செய்கின்ற இல்லறமும் செய்யாத் துறவறமும்
நைகின்ற வாசுரர்கள் நன்கறியார் –மெய் குன்றாத்
தூய்மை யுடனா சாரம் சொல்லின் பயனாய்
வாய்மையும் மற்றில்லை யவர் மாட்டு–7–

இச்சகத்து மெய்யன் இதற்கோர் நிலையில்லை
மிச்ச விறை இல்லென்று மேல் விழுந்து -பிச்சுரைப்பார்
தன்னிற்றான் காமத்தாற் சார்ந்தே பிறக்கு மதென்
றென்னிற்றான் மற்றேது எனில் –8–

இங்கு இதுவே கண்ணாகவே வேற்றுத் தன்னறியா
தங்கியலும் புத்தி யறவறமாய்ப் பொங்கு
கொடும் தொழிலராகிக் குல வுலகைத் தீம்பால்
அடும் தொழிலராவர் அவர்–9–

கிட்டாத காமத்தை யுன்னியது கிட்டும் வினைப்
பட்டாங் கறிவின்றிப் பாவத்தாலிட்ட பொருள்
வாங்கி மத டம்பம் சேர் மானமுடன் இங்கு உழல்வார்
தீங்கியன்று மல் விரதம் சேர்ந்து–10-

துங்க வளவில்லாதே தோற்றம் சேர் சிந்தையினைத்
தம் கண் முடிவளவும் தாமருவி அங்கு அமரும்
காம போகம் பரமாக் கண்டறுதி மேவுவரே
யேமமிது வல்ல திலை என்று –11-

காமம் சேர் ஆக்கை சதங்களால் கட்டுண்டு
காமம் க்ரோதத்துக் கை வளர்ந்து -சேமமுடன்
ஆங்கு அதனைப் துய்ப்பர் அனியாய வத்தத்தை
யோங்கி மிகத் தாம் சேர்ப்பர் உற்று–12–

இது பெற்றேன் இப்போது இது யான் இணைந்தது
இது கிட்டுவன் மேலும் இன்னே இது என்ன
தாயே யுண்டாகின்றதாம் அதற் பின் இத்தனமு
மேயே யுண்டாம் எனக்கு மிக்கு–13–

இப்பகைவன் பட்டான் மற்றி யாவரையும் கொல்வேன் நான்
செப்பம் இறை நான் போகி சித்தனான் –மெய்ப்பொருளோன்
மேவு வலியோன் சுகி நான் மேற் குல நானாகின்றேன்
எவன் என்னோடு ஓப்பான் மற்று இங்கு–14–

நானே யெசிப்பேன் கொடுப்பேனனி யுகப்பேன்
றானே என மோகம் சார்ந்தவர்கள் நானா நெஞ்
சோடியே மோகித்து உறங்கா மத்தார் நரகிற்
கூடியே வீழ்வர் தொலைந்து–15–

தம்மைத் தாம் சம்மதிப்பார் தாமுயலார் தம்பித்துச்
செம்மைத் தன் மானம் சேர் செருக்கால் -இம்மைக்கே
நாம வினையால் யசிப்பர் நாட்டியலும் டம்பத்தாற்
சேம விதி சேராது சென்று–16–

ஆங்காரம் வன்மை யதன் செருக்குக் காமமுடன்
தீங்கார் க்ரோதமது சேர்ந்தவவர் –பாங்காரத்
தம் பிறர்க டேகத்துச் சார்ந்த வெனைத் தான் வெறுப்பார்
வெம்பிய சூயைச் சுடரால் வெந்து–17–

ஆங்கு என்னைத் தான் வெறுத்த வந்த நராதமரை
ஈங்கு உழலும் இப் பகத்தில் என்று நான் -ஈங்கு உழலும்
அசுரமாம் யோனி யவை தன்னிடை எய்த
மாசறவே தள்ளுவேன் மற்று–18–

உற்று நிகழ்ந்த அசுரமாம் யோனிகளில் பல் பிறப்பில்
முற்றும் அறிவின்றியே மூடராய்க் -கொற்றவனே
என்னை அடையாதே ஈங்கு அதனில் ஆழ்ந்த கதி
தன்னடைவர் என்றும் தளர்ந்து–19-

மா நரகின் வாசலாய் மன்னும் இவை மூன்று யிருக்
கீனமா நாசம் இயற்றுமவை -தான் அமரும்
காமம் குரோதம் உலோபம் கடிதிவற்றி
னாமம் செறு நீ நவிற்று–20-

இந்த அறிவு கேட்டுக்கு இம் மூன்றும் வாசல் என
அங்கு அறிந்து விட்டோன் அரசனே -சங்கை அறத்
தன்நன்மை யாசரிக்கத் தண்மை பரகதியாம்
இந்நன்மை சேரும் எழுந்து–21-

விட்டமரும் சாத்திரத்தின் மேய விதியை எவன்
இட்ட மிகத் தன்னால் இயல்கின்றான் –றட்டறு சீர்ச்
சித்தியது சேர்ந்தடையான் சேரான் சுகம் பரமா
முத்தியது சாரான் முதிர்ந்து–22-

மன்னிச் செய்யுமதுவும் மற்றதுவும் முற்றறிவு
தன்னில் பிரமாணம் சாத்திரமே -என்னுமதால்
அந்த விதானம் அறிந்தே கருமத்தை
முந்த வியனீ முயன்று–23–

இப்படியே தேவ அசுரமாம் இயல்வதனைத்
தப்பது சீர் ஞானத் தரு நிலைமைக்கு ஒப்பாப்
பகர்ந்த சீர்க் கீதை பதினாறாம் ஒத்தில்
நிகந்த பொருள் முற்றியது நேர்ந்து

———–

17–ஸ்ரத்தா த்ரய விபாக யோகம்

ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசு நெறி
சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
வோர்ந்தே பதினேழா மோத்து.

சாத்திரந்தான் இன்மை – சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆசுரம் ஆம் – அசுரர்க்குரியதாகும்;
சாத்திரத்தில் தேசுடைய கன்மம் – சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்,
செறி குணத்தால் மூவகையா – (தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்
மூன்று குணங்களை யிட்டு மூவகையாகவும்,
பேசு நெறி இம்முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா – (சாஸ்த்ரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்)
இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்,
பதினேழாம் ஓத்து – பதினேழாம் அத்தியாயம்,
ஓர்ந்தே செப்புமே – ஆராய்ந்து கூறும்.

மேவிய சீரப் பார்த்தன் வினவ யுரைத்தான் கண்ணனே
பாவிய சீர்ச் சாத்திரத்தின் பாங்கு ஒழிந்து இங்கு ஓவா
விருப்பற்று இயல்வார்க்கு மிக்க குணம் மூன்றில்
இருப்பேது இனி உரையாய் இங்கு–1-

ஐயன் அவனுக்கு ஆங்கு அறிய உரை செய்தான்
செய்ய கருமச் சிரத்தை தான் மெய் யமரும்
தன்மையான் முக்குணத்தின் சார்வாகு மூ வகையாம்
பன்மை நீ கேளாய் பயின்று–2–

நீடுலகில் எல்லார்க்கு நெஞ்சுக்கு அநு குணமாப்
பாடு பெறும் இந்தப் பருஞ் சிரத்தை–நாடுஞ்
சிரத்தை யுருவாம் புருடன் சேர்ந்தே சிரத்தை
வுரைத்தது எவற்கு ஆங்கு அவனாம் உற்று–3-

சத்துவத்தர் சார்வமரர் தாம் இயக்கரோடு அரக்கர்
மத்தியத்தர் சேரும் வகையது தான் புத்தி செறு
புன்மைத் தமோ குணத்தர் பூதம் பிரேத கணம்
தன்னைச் சமைந்து அணைவர் தாம் –4–

கோரமாய்ச் சாத்திரத்தில் கூறாத் தவம் தன்னைச்
சேரவே யார் இயல்வால் டம்பமுடன் –ஈரமிலா
வாங்காரம் கூடி யதி காம ராகங்கள்
தீங்காகும் திண்மை செறிந்து –5-

உற்ற உடல் பூதங்கள் தன்னை ஓறா நின்றே
மற்று அதனுள் மேவு வுயிராய் மன் எனையும் -பற்று அற்று
அற வருந்து விப்பர ராசுரமாம் புத்தி
மறவர் என நினை நீ மற்று–6–

எவர்க்கும் தான் உகப்பா மூணெச்ச மேய்ந்த தவ
மேவத் தகு தானம் வேறுபடப் -பாவும்
குணம் தன்னான் மூ வகையாகக் கூறிய அப்பேதம்
உணர்ந்து இங்கே கேள் இதனை உற்று–7–

வாழ் நாள் மனம் தெளிவு மன்னு வலி நோயாமை
பூணாம் சுக முகப்பைப் பொங்குவித்து –மாணார்ந்த
தித்தித்து நெய்த்துத் திரமாய் மநோ கரமாய்
ஒத்திடுமே முற் குணத்தில் ஊண்–8-

காழ்த்துப் புளித் துப்பாய்க் கைக் கொதித்துத் தான் கடிதா
யாழ்ச்சிக் கொடிதா யழல் விளைத்து –மூழ்ச்சியினிற்
றுக்கஞ் சோகம் பிணியைச் சூழ்க்கு நடுக் குணத்தின்
ஓக்க உகந்து உண்ணும் ஊண்–9-

காலம் கழிந்து கழிந்து இரந்துற் கெந்தித்
தேல மிகப்பழகி எச்சிலாய்ச -சாலப்
படைத்த முதுக்காகத பாவச் சோறாகும்
கடைக் குணத்தால் உண்ணும் கணக்கு–10-

வேண்டாததில் பயனை வேத விதி மேவி மணம்
பூண்டார் இயல்வாகப் புந்தித்து மூண்டு ஆங்கு
தாம் இயல்வர் எச்சம் தகவான் முதற் குணத்திலாம்
எனவே கொள்க அறிந்து–11-

சேர்ந்த பயன் இனைந்தும் டம்பம் பொருட்டாயும்
சார்ந்தது எது பரதர் தம் தலைவா கூர்ந்த
மனத்தால் அவ்வெச்சத்தை வாய்ந்து அறி நீ அந்த
வினத்தால் இடைக்குணத்தது என்று–12–

விதியற் றவியற்று மந்திரமும் விட்டே
யதின் மேவு தக்கணையும் அற்றுக் கதி சேர்ந்த
வேலும் சிரத்தை இலா எச்சம் கடைக்குணத்தாற்
கோலும் என உரைப்பர் கூர்ந்து–13-

காயம் சொலவு மனம் காட்டும் தவங்களவை
மேய குணம் கண் மிகு நெறியா லாய வெனின்
மூன்று அதனின் நின்று முயலும் படி உரைக்க
வேன்றதனைக் கீழ் நீ யினி–14–

தேவர் மறையோர் குணங்கண் மிக உணர்ந்தோர்
மேவ வருச் சித்தன் மெய் தூய்மை யோவாத
செவ்வை மகளிடரைச் செல்லாமை கொல்லாமை
இவ்வகைக் காயத் தவமாம் இங்கு–15-

அஞ்சா வகை சொல் லதன் மெய் யுகப்பிதமாத்
துஞ்சா மறையின் சொலின் வலியால் எஞ்சாத
வாக்கத்தனின் நின்றும் மருவு தவம் என்பரே
யூக்க மனமுடையோர் உற்று–16-

மனம் தெளிந்தது நன்கு அறிதல் வாயுரையை மீட்ட
நினைவும் மனம் சேர நிறுத்தலினம் இயல்வு
சேராதே தூய்மையிவை சித்தத்துச் சேர் தவம் என்று
ஆராய்வர் ஞானத்தவர்–17-

முக்கரணம் செய் தவங்கள் முற்று விதம் ஆர்வம் உயர்ந்து
ஓக்க வரு பயனை யுள் ஒழித்துத் தக்கவர்கள்
செய்யும் தவத்தைச் சிறக்கின்ற முற்குணத்து என்று
உய்யுமவர் யுரைப்பர் யுற்று–18-

நாடு நல நினைந்து கொண்டாடி நன்கு இறைஞ்சத்
தேடு மனம் நினைந்து டம்பத்தாற் பீடுறவே
ஏய்ந்த தவ நில்லாது இடைக் குணத்ததாய்ச சலித்து
மாய்ந்து யறும் என்றே உரைப்பர் மற்று–19-

மூட மதியான் முயல் வுற்றுத் தம்முயிர் தான்
பீடை மருவப் பிறர் கேடு கூடவே
யுற்ற தவமானத்துடனே கடைக் குணத்தைப்
பற்ற வரும் என்பர் பயின்று–20-

வேறு உபகாரத்தை வரும் பாதியில் வென்று
கூற இடம் கால நலம் கொள் பவனைத் தேறியே
தான் கொடுக்கும் தானம் தான் சத்துவத்தின் நின்று மேல்
வான் கொடுக்கும் என்பர் மதித்து–21-

மீண்டு உபகாரம் கொளவும் வேறு பலம் இச்சித்தும்
பூண்டு மிக வருந்திப் புன் பொருள்கள் வேண்டு நெறி
இட்டு இயலும் தானம் இடைக் குணத்தின் பாங்கு அதனில்
பட்டு இயலும் என்பர் பலர்–22-

தேச காலம் சிறப்புச் சிந்தியா தேற் பவன் பால்
அசின்மை பாராது அவமதித்து நேசம் செய்யா
தரிப்பது இல்லா தவத்தானாம் பிற் குணத்தை
மீதரிப்பது என்று உரைப்பர் மிக்கு–23–

ஒந்தற் சத்து என்னும் உரை முயன்று ஒண் மறையாய்
வாய்ந்த பிரமத்தின் மண்ணியவர் ஏய்ந்து இவ்
விலக்கணத்தால் அந்தணர்கள் வேதங்கள் எச்சம்
கலக்கம் அற வுண்டான் காண்–24–

ஆதலால் ஓம் என்று அமர்ந்து உரைத்தே யந்தணர்க்கு
வேத நின்றோதும் விதி வகையே போதமுடன்
எச்சம் தானம் தவங்கள் எல்லாம் எக்காலத்தும்
இச்சந் தன்னா னடக்கு மேல்–25–

நெஞ்சால் பலத்தை நினையாது எச்சம் தானம்
துஞ்சாத் தவமுத்தி தொன்மை நினைந்து எஞ்சாமல்
ஒத்து இங்கு இயலும் உயர்ந்தது எனச் சொல்லும்
எத்து என்று உரைக்கும் தரம்–26-

உண்மையிலும் நன்றான ஒண்மையிலும் சத்து எனும்
வண்மை யுரை தன்னை மதித்து உரைப்பர் -திண்மை யுயர்ந்
தேலும் கருமத்தைச் சத் கர்மம் என்று உரைப்பர்
மாலும் புகழ் விசையா வாய்ந்து–27-

அங்கு அதனால் எச்சம் தவம் தானமாம் இவற்றில்
ஓங்கமரும் தன்னிலையும் உற்றவற்றில் பாங்கியலும்
சத்து என்று உரைக்கத் தகும் என்று வேதியர்கள்
ஒத்து என்று உரைப்பர் உகந்து–28–

தான் விருப்பம் இன்றிச் செய் தானம் தவம் ஓமம்
வான் விருப்பத் தேற வழியாகா வான் விருப்பாக
காயத்தின் நன்கு காரணத்தாற் தான் சத்தாய்
மாயத் துறுவிக்கு மற்று –29–

மேவு குணங்களினால் வேறாம் கருமங்கள்
பாவு சுருதிப் பயில் வகையே சேவையுறும்
பாங்குரைத்த கீதை பதினேழாம் ஒத்ததனை
ஈங்கு யுரைத்தோம் இப்பொருளா ஏய்ந்து

———-

18 -ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:

செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
சாருங்க் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
றோரும் பதினெட்டா மோத்து.

செய் கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும் – அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஶ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்,
மெய் கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும் – உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்,
உய்கருமம் சாரும் கதியும் – முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதையும்,
இச்சாரத்தின் சாரமும் – ஶாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்திப்ரபத்திகளே என்பதையும்,
பதினெட்டாம் ஓத்து – (கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்,
உற்று ஓரும் – நன்கு ஆராய்ந்துரைக்கும்.

ஸந்யாஸம் கன்மத்தில் சாரும் தியாகத்தில்
முன் யான் பிறிவொருமை முற்றறியேன் பின் பின் யான்
தோன்றாது நீ இதனைச் சொல் என்றான் பார்த்தன் அதற்க்கே
என்று அங்கு இறைத்தான் இறை–1-

காமக் கருமங்கள் கை விடுதல் சந்நியாஸம்
சேமத்தது என்று சிலர் உரைப்பர் -ஏமத்தால்
எக்கரும அப்பேறு மிகழ்வு தியாகம் எனச்
சிக்கனவே சொல்வர் சிலர் -2-

ஏதம் போற் கன்ம மிகழப் படும் என்று
போதர் சில யுரைப்பர் புந்தியான் -மீதென்று
மெச்சத் தவம் தான் ஈங்கு இழவு அல்லது என
நிச்சம் சிலர் யுரைப்பர் நின்று–3-

அந்தத் தியாகத்து அறுதியினை என் பால் கேள்
சந்ததிகள் பாரதர் தம் தலைவா முந்துறுவே
யான் பகர்ந்தேன் மூன்று வகை என்றே தியாகத்தைத்
தான் பயணம் சங்கம் தவிர்ந்து–4-

பாவியர் எச்சம் பயிலும் தவம் தான்
மேவி இகழாது என்று முற்றியல மேவினவை
யாவின் பால் ஆங்கு அவை தானான வறிவினர்க்கும்
பாவனமாம் என்றும் பயின்று–5-

இக்கருமமான விவை என் கருமம் என
மிக்கமருஞ் சங்க மிகு பயன்கள் ஓக்க விடுத்து
ஏய்ந்த இயல் வென்றே இயலுமது என் தனக்கு இங்கு
ஆய்ந்த வறுதி மிகமாம்–6-

என்று நியதமாய் இந்தக் கருமங்கள்
ஒன்றும் விட இவனுக்கு ஒண்ணாதான் இன்று இவற்றை
மோகத்தால் தான் விடுதன் முக்குணத்திற் பிற் குணத்தில்
வாகத்தால் வந்த அது–7-

துக்கம் எனக் கன்மத்தைத் தோன்றும் உடல் வருத்த
மிக்க பயத்தால் செய்யா விட்டவன் தான் சிக்கெனவில்
வாய்ந்த விடைக்குணத்தான் மற்றது விட்டப் பயனாம்
ஏய்ந்த அறிவு பெறான் இங்கு–8-

நின்று நியதக் கருமத்தை நேர்ந்தி அல்ல என்று
என்றும் இயன்றே யிகல் விசையா-வொன்றி யரும்
சங்கம் பயன்று றப்பார் சாரும் தியாகம் தான்
அங்கு அந்த முற் குணத்ததாம்–9-

தத்துவத்தின் நின்றும் தவிர்ந்த பயன் சார்ந்த அறிவு
சத்துவத்தில் சந்தேகம் தான் அற்றான் ஒத்து வரும்
தீ வினையில் நல் வினையில் சேர் வெருப்பு சங்கமிவை
யோவி யிருப்பு எய்தும் உகந்து–10–

காய முடையோன் கருமம் எல்லாம் கை விடுத
லாய வகை யங்கு அரிதாகு மேய
பலன் துறந்தோன் நன்றாம் படி துறந்தோன் என்று
நலம் சிறந்தோர் சொல்வர் நயந்து–11-

நன்றும் தீதும் கலந்து நண்ணும் பல மூன்றாப்
பொன்றும் துறவாதுடன் சென்றார்க்கு என்றும்
கருமத்தில் ஒன்றிற் கருது பயன் சாராது
ஒருமைப்படத் துறந்தார்க்கு உற்று–12–

செய்யும் கருமம் எல்லாம் சிந்திக்க நீ விசையா
வுய்யு மதி யறுதி யுற்று உணர்ந்தவை வகை சேர்
காரணங்கள் என் பாற் கருத்து அமர்ந்து கேட்டு அறி நீ
யாரணங்கள் சொல்லுமது–13–

நிற்க நிலை யாகும் உடன் நேர்ந்த வுயிராம் கர்த்தா
வற்க்கு நிழல் செய் கரண மற்றவை தானாற் கழிலாச்
சேட்டை பல பஞ்சமாம் தெய்வ விறை தன் மத்துக்
கூட்ட மாவதாகவே கொள்–14–

காயத்தால் வாக்கால் கருது மனம் தன்னால்
வாயத்தான் செய்ய மருவி முயல் -நேயத்தால்
நல் வினைக்கும் தீ வினைக்கு நாட்டில் இவை ஐந்தும்
செய்வினையில் ஏதுவாம் சேர்ந்து–15–

இவ்விகையால் ஈசனால் கர்த்தாவாம் இவ்வுயிரில்
செவ்வை மதியாது வெறும் சீவனை எவ்வகையில்
கர்த்தாவாம் என்னவே காண்கின்றது உன் மதி தான்
ஓத்தாரும் புத்தி யுறான்–16–

நான் செய்தேன் என்று நடக்கு மனம் இன்றித்
தான் சேர் பயன் அதனில் சார்வற்றான் -தான் சேரும்
இவ்வுலகைக் கொன்றும் இவன் கொல்லான் கட்டுண்ணான்
அவ்வினையில் சேரான் அவன்–17–

அறிவு ஆங்கு அறியப்படும் கன்ம மத்தை
யறிவான் விதி மூன்றோடு ஆகும் செறிவார்
கரணம் செய் கருமம் அதில் கர்த்தவாம் மூன்றாம்
கரணம் செய் கன்மத்து அடைவு–18–

காண் உணர்வும் கன்மமும் கர்த்தாவும் மும் மூன்றாய்ப்
பேணும் குணத்தில் பிரியுமதென் றேணுறவே
யக்குணம் சேர் தண்மை யற வுரைப்பாராம் ஆங்கு அதனை
மிக்கு உணர்ந்து மன்னா கேள் வேறு–19–

வன்னாச் சிரம வகை சேர் எஞ்ஞானத்தும்
கண்ணாருயிர் ஒருமைக் காட்சியாற் திண்ணார
வேறறவே நோக்கு மிகும் அறிவைச் சத்துவத்தில்
சேர் அறிவாம் என்றே தெளி–20–

வேறு படு பூதம் கண் மேவு உயிரும் வெவ்வேறாய்க்
கூறு படும் வகையில் கூடும் எனத் தேறும்
அறிவை இடைக்குணத்தில் ஆகி இவ்வண்ணம்
செறிவது எனவே அறி நீ தேர்ந்து –21–

ஏதேனும் ஓர் கருமுத்து எல்லாம் பெறலாம் என்
றாதே நசை பண்ணி அற்பமாய் மீதேயோர்
மெய்ம்மை யடையா வெறும் அறிவு பிற் குணத்திற்
பொய்ம்மை புனையும் புணர்ந்து–22-

உகப்பு வெறுப்பு அன்றி வுயர் நசையும் அற்றே
மிகத் தனி இயல்வாம் என்று மேவி அகப்பயனில்
ஆசை ஒழிந்து அங்கு இயலும் அக்கருமம் முக்குணத்திற்
பேச வரும் மேல் யுயர்த்தி பெற்று–23–

காம நசை தன்னால் அகங்காரக் காழ்ப்பினிற்
றாம் மருவும் ஆயாசம் தான் மிக்குச் சேமமென
நின்று இயலும் அக்கரும நேர்ந்தே இடைக்குணத்திற்
சென்று இயலும் என்று உரைப்பர் தேர்ந்து–24-

துக்கத் தொடர்ச்சி பொருள் நாசம் சூழ் பீடை
ஓக்க வியல் வலிதான் ஒன்றினையும் தக்கறியான்
மோகத்தால் செய்யும் கருமம் உண்டேற் கடைக்குணத்தின்
வேகத்தால் ஆகுமே மிக்கு–25–

ஆர்ந்த பயன் ஆசை யது விட்டு அகங்காரம்
தீர்ந்து திடனாய் முயற்றி சென்றி யன்று -சேர்ந்து வரும்
பேர் இழவில் வேறு படாப் பீடுடைய கர்த்தாவாம்
வீறு இயலும் சத்துவத்தான் மிக்கு –26–

புகழ் விரும்பிப் புன் பயனை வேண்டிப் பொருளை
மிக வவ்விப் பீடையினை மேவித் தகவு என்னும்
சுத்தி உறாது உட் களிப்புச் சோகத் துறும் கர்த்தா
மத்தியமாம் குணத்தான் மற்று–27-

நன்மைத் தகான் அறிவு நண்ணான் முயற்றி யுறான்
வன்மைச் சடன் மறத்தின் மன்னுவான் புன்மை சேர்
மந்தன் சோம் பன்நெடுக வாதை நினையும் கர்த்த
கந்தத்தாற்றா மதனாம் தான்–28-

புந்தியிலும் திண்மையிலும் பூணும் குணப்பிரிவால்
வந்திவை தான் முன்றாம் வகை யதனைச் சிந்தை திகழ்ந்து
எல்லாம் பிறிவறிய யான் இயம்பக் கேள் இதனை
நல்லாய் தனஞ்சயனே நன்கு–29-

துக்க வியல் அறமும் நல்ல அறமும் காரியமும்
மிக்க வகாரியமும் மேல் அச்சம் தக்க வரும்
அஞ்சாமை பந்தம் வீடான்றறியும் புந்தி தான்
எஞ்சா முதற் குணத்தாம் இங்கு -30-

தன்மமும் மற்று யதன்மையும் காரியமும்
புன்மைய காரியமும் போக்குத்தா நன்மை யுறக்
காணும் வகை யன்றிக் காணலுறும் புத்தி தான்
பேணும் இடைக்குணத்தைப் பேர்ந்து–31-

மேவு பொருள் எல்லாம் விபரீதமாகவே
தாவும் இருள் சேர்ந்து தனஞ்சயனே -யாவதென
வொன்று மதன்மத்தை வேறுணரும் புத்தி தான்
சென்று கடைக்குணத்தாம் சேர்ந்து–32–

உண்மையினால் நெஞ்சை உயிர் புலன்கள் உற்ற செயல்
வண்மை யறி யோகத்து மன்னி வரும் திறமையினால்
உற்றே தரிக்கும் உயர் திருதி பார்த்தனே
யற்றே முதற் குணத்ததாம்–33-

தன்ம காம அர்த்தங்கள் தன்னையே யாதினாற்
புன்மை சேர் தன் பயனாற் புந்தித்து -வன்மை சேர்
சங்கமுடனே தரிக்கின்றானத் திருதி
யங்க விடைக் குணத்ததாம்–34–

மன்னும் உறக்கம் பயம் சோகம் வாட்டம் அதந்
துன்னுமிவை இத்தனையும் துன் மதியால் மன்னி
இடைவிடாதே மருவும் இத் திருதி பார்த்தா
கடையிலாம் குணத்தின் காழ்ப்பு–35–

தான் அமர்ந்து சேர் சுகம் தான் தன் குணத்தான் மூன்று மிகை
யானபடி கேள் நீ அமர் விசயா வூன மற
மிக்கு அதனிற் சீலத்தான் மெய்யே உகப்பு எய்துத்
துக்க முடிவும் செறியும் சூழ்ந்து–36–

எது முதல் விடம் போல் இன்னாது பின்னது தான்
மீது வளர்ந்து அமுதமே ஒக்கும் ஒத்து உயிர்ப்
புந்தித் தெளிவு தகும் பொற் பார் சுகமது தான்
முந்தித் திகழ் குணத்தின் மொய்ம்பு–37–

மூளும் பொறி புலனான் முன்னமுதம் போலாகி
மீளும் பொழுதில் விடம் போலே -நாளும்
கொடு நிரையத்தே வீழ்க்கக் கூட்டும் சுகம் தான்
அடும் திகழும் அக்குணத்தின் நட்பு–38-

தோன்றுழியிற் றுய்ப்பிற் றுளங்கா வுயிர் மயக்கி
யூண் றுறக்க முண் மடிவோர்ப் பின்மையா லேன்று வரு
மோகச் சுகமது தான் முற்குணத்திற் பிற குணத்த
தாகப் புகன்றார் அறிந்து–39–

பூமி மிசை மானிடரிற் பொன்னுலகின் மன்னுவா
ராம் இமையோர் தம்மில் அமர்ந்து ஒருவர் தாம் இயலும்
முன்னைப் ப்ரக்ருதி மூளுந்த முக்குணங்கள்
தன்னைப் பிரிந்ததிலைத் தான்–40-

மா மறையோர் மன்னவர்கள் வைசியர்கள் சூத்திரர்க
ளாம் மனிசர்க்காகி யமர் தருமே தா மருவும்
தன்மை யமர் குணத்தின் சார்வுடனே வேறு படு
நன்மை யமரு நயந்து–41–

சமம் தமம் சார்ந்த தவம் தன்னமர்ந்த சுத்தி
நமர்ந்த பொறை செவ்வை ஞானம் அமர்ந்த
இறையை அறி உண்மை யுணர் விக்கரும மாகு
மறையவர் தம் தண்மை மதம்–42-

ஸுர்யமும் மிக்கு ஒளியும் தத் துணிவும் தன சமத்தும்
வைரியமர் நாணாமை வாய்ந்த கொடை சீரியனாய்
ஒக்கரிய மிக்குமதும் ஓங்கு அரசர் தம் தன்மை
தக்க கருமமாம் சார்ந்து–43–

காணி விளைப்பதுவும் காலி யாவை காப்பதுவும்
வாரியமும் வைசியர்க்கு வாய்த்த தொழில் பேணி அவர்
மூவருக்கும் ஆளாய் முயலுமதே சூத்திரர்க்கு
மேவப்படும் தொழிலாம் மிக்கு–44-

தம் தம் கருமத்துச் சார்ந்தே தரும பயன்
வந்தடைய லாகு மனிசர்க்கும் சந்தமுடன்
தன கருமம் நின்று ஒருவன் தன் சித்திக் சார் வகையை
நன்கு அமரக் கேள் நீ நயந்து –45-

எவன் பால் பூதங்கள் எல்லாம் பிறந்து இயலும்
எவன் தான் இங்களிடைப் பரம்பும் மேவியே
அங்கு அவனைத் தன் கருமத்தாலே அருச்சித்தே
ஒங்க அவன் சித்தி உறும்–46-

தன் கருமம் அல் குணத்தைச் சார்ந்திடினு மிக்கியன்ற
வன் கருமமானவது மற்று ஒன்றி -நன்கு அதுவாம்
தன்மை சேர் கன்மத்துத் தக்கியல்லால் சார் துயரப்
புன்மை சாரான் போய்ப் புறத்து–47–

கூடப் பிறந்த கருமம் குறையுறிலும்
வீடப் படாது விகல் விசையா -பீடுற்ற
எல்லா முயற்றியையும் ஏய்ந்து எரியத் தூமம் போற்
பொல்லாங்கு சூழும் புகுந்து–48–

எங்கும் துவக்கின்றி ஏலும் மனம் செயித்துப்
பொங்கு நசையில்லாப் போதத்தால் அங்குத்
தனி யமர் சந்நியாசச் சார்வதனாற் மேவும்
வினை யகன்ற மேலாம் வியப்பு–49–

செவ்வி யுறும் தியானத்தின் சித்தியினைச் சேர்ந்தவவன்
எவ்வாறு தான் பிரமம் எய்தினான் அவ்வாறு
சேர்ந்த வதில் இலையாம் சித்தியது சுருக்க
வார்ந்து எனது பால் நீ யறி–50-

கோதறு சீரப் புத்தியுடன் கூடித்தன்று இன்மையான்
மீதியாலும் நெஞ்சை மிக யடக்கித் தீத மரு
மோசை முதற் பொருள்கள் உள்ளுற விட்டு ஒன்றி வரும்
ஆசை வெறுப்பு அவையும் அற்று–51–

தக்க தணியும் இடத்துச் சார்ந்த அறிவு தான் சிறிது உண்டு
ஓக்க உரை காய நெஞ்சு உள் ஒடுக்கி மிக்கு அமர்ந்தே
என்றும் தியானமாம் யோகம் சேர்ந்து எவ்விடத்தும்
ஒன்று நசை விடுதல் உற்று –52–

ஆங்காரம் யத்தில் செருக்கும் காமமுடன்
தீங்கார் வெகுளி தான் சேர் சுற்றம் தேங்காது
நீந்து மமதை நெகிழ்ந்தே நிகழ் சாந்தின்
வாய்ந்த பிரமத்தானாம் வந்து–53–

தொண்மைப் பிரம வுயிர் தோன்ற மனதில் தெளிந்து
புன்மைப் பல சோகம் பூண் நசையின் றன்மை யவித்து
எப்பொருட்க்கும் ஒத்து என்பால் ஏய்ந்த பரபத்தியினைப்
தப்பறவே சேரும் சமைந்து–54–

எவன் நானாவேன் மற்று எவ்வளவின் உண்மையினால்
ஆவன் ஆங்கு என்னை யறிவது தான் -மேவ நிகழ்
பத்தி யான் மெய் யுணர்ந்தே பண்பால் எனைப் பின்னே
முத்தியால் வந்து அடையும் முற்று–55–

மற்று இக்கர்மங்கள் எல்லாம் மருவி எனைப்
பற்றிப் பயின்று எங்கும் பார்த்தி யல்லான் அற்ற மந
மேவும் எனது அருளால் மிக்கடையும் அற்கமற
ஓவுதல் இல்லாப் பதத்தை யுற்று–56–

நெஞ்சாற் கருமம் எல்லா நேராக என்னிடை வைத்து
எஞ்சாம் வெற் பரனாய் எந்நாளும் துஞ்சாத
புத்தி யோகத்தைப் புணர்ந்து பொருவில் என் தன்
பத்தி யோகம் பெறு நீ பார்த்து–57–

என்னை நினைந்த நீ என்றும் இத் துற்கங்கள்
தன்னிகரில்லா என் அருளால் தான் கடத்தி-பின்னை தனை
யாங்காரத்தாலே யமர்ந்து நீ கேளாய் ஏற்
றாம் காதிங்கேந சித்தி தான் –58-

ஓங்கும் அகங்காரத்தில் உற்றே வுயர் சமரம்
ஈங்கு முயலேன் என்று இருத்தியேல் ஆங்கு நிறை
மேவும் துணிவதுவும் மெய்யன்று தன்மை யுனை
ஏவும் சமயத்தில் ஏய்ந்து–59-

தன்மை யமர் தன் கருமம் தன்னால் பிணிப்புண்டு
நன்மை யமர்ந்த வமர் நாணி நீ யுன் மருவு
மோகத்தால் மீண்டிடினும் உண்டே யவசனாய்
வேகத்தாற் செய்வுதி நீ மிக்கு –60–

ஈசன் அவன் ஒருவன் எல்லார் இதயமாம்
தேசம் அதனில் நிற்கும் சீர் விசயா பாசமுடன்
எல்லா உயிர்களையும் மாயையினால் திரிக்க
வல்லான் இயந்திரத்தில் வைத்து–61-

அந்த அவன் தன்னையே யானாதவன் சரணாச்
சந்தமுடன் அடை நீ தார் விசயா முந்த வவன்
தன்னருளால் மேலான சாந்தியையும் சாயாத
வன் பதமும் நீ பெறுதி வாய்ந்து–62–

இவ்வாறு ஞானம் உனக்கு இங்கே எழில் மறையிற்
செவ்வா மறைப்பொருளைச் செப்பினேன் எவ்வாறு
தன்னியல்வை ஆராய்ந்து சாய்ந்து அதனை இச்சித்தாய்
நின்னியல்வாற் செய் நீ நிகழ்ந்து–63–

செவ்வாம்‌ மறைட்பொருளை- செவ்வை யான ரவாஸ்யார்த்தங்களை,
செப்பினேன்‌…உபதேஸித்‌தேன,
நின்‌ இய்ல்வால்‌–உன்‌ அதிகாரத்துக்குத்‌ தக்க படி-

இன்ன மறைப் பொருள்களுக்கு எல்லாம் மிக மேலா
மென்ன மருஞ்சொல்லின் இறுதி கேள் முன் அமரும்
இட்டன் றிடன் என்னும் இத்தால் உனக்கு இதமாய்ப்
பட்டதனைச் சொல்வன் பரிந்து–64–

இட்டன்‌–இஷ்டன்‌,
இதமாப்‌ பட்டதனை –இதமாகவுள்ளதை.
பரிந்துசொல்‌வன்‌–பரிவாகச்‌ சொல்லுவேன்‌,

என்னை மனனம் பண்ணு என் பக்தனாகியே
என்னை அருச்சி என்னை வணங்கு என்னையே
மேவுதிரி மெய் உனக்கு மிக்கறுதி சொன்னேன் நான்
ஏவு தவற்று என் உகப்பால் உற்று–65–

என் பத்தனாகியே –. என்னிடத்தில்‌ பிரீதியைக்‌ கொண்டு,
என்னை மனனம்‌ பண்‌ணு –பிரீதி ரூப மாயிருக்கிற ஸ்மிருதி பரம்பரையைச்‌ செய்‌.
வேதகம்‌,தியானம்‌, உபாஸனம்‌ முதலிய சொற்களுக்குப்‌ பொருளாய்‌, தரிசனத்துக்கு ஸமானமாயிருக்கும்‌ மிகுக்த
பிரீதி ரூபமாயிருக்கும்‌ ஸ்மிருதி பரம்பரை யென்சு,]
அருச்சி–ஆராதனஞ்செய்‌, ஆராதனமாவது–பரிபூர்‌ண சேஷ விருத்தி.
என்னையே மேவுதி–என்னையே யடைவாய்‌.
அறுதி—நிச்சயம்‌,

எல்லா அறங்களையும் இங்கு அற விட்டு என்னையே
நல்லார் சரணமா எண்ணி யிடு தொல்லாரும்
பாவங்களின் நின்று வுன்னைப் பற்று விடுவிப்பன் நான்
தவம் தனை ஒழி நீ தான்–66-

எல்லா அறங்களையும்‌ ௮றவிட்டு…சர்மயோகம்‌, ஞானயோகம்‌, பக்தியோகம்‌ என்கிற மோக்ஷ ஸாதனங்களான எல்லாத்‌ தர்மங்களையும்‌
என்னுடைய ஆராதன ரூபமாக மிகுந்த பிரீதியோடு உன்‌ ௮திகாரத்‌துக்குத் தக்கபடி செய்து கொண்டே, கீழ்ச சொன்ன படி பலனையும்‌, கர்மத்தையும் ,கர்த்ருத்வத்தையும்‌ விட்டு,
என்னையே சரணமாக எண்ணியிடு–ஆராத்ய ஸ்வரூபனான என்னையே பலமாகவும்‌ உபாயமாகவும் கருதி சரணம் புகுவாய்‌.
பாவங்களின் நின்று வுன்னைப் பற்று விடுவிப்பன் நான்–(என்னை யடைதற்கு விரோதிகளாய்‌,
செய்யத்‌ தகாவற்றைச்‌ செய்கையும்‌, செய்யத் தக்கனவற்றைச்‌ செய்யாமையுமான)
ஸகல பாவங்களினின்றும நான்‌ உன்னைப் பற்று விடுவிப்பேன்‌.
தவம் தனை ஒழி–(ஆகையால்‌)நீ சோசம் கை விடு[பக்தி யோகத்தை நாம்‌ செய்ய வொட்டாமல்‌ விரோதியாய் பாதிக்குமவைகளாய்‌
அநாதி காலமாய்‌ ஸம்பாதிக்கப்பட்டவைகளாய்‌ நாநாவிதங்களாய்‌ அநேகங்களாயுள்ள பாபங்களுக்குத் தக்க
பிராயச்சித்த ரூபங்களாயும்‌, இருச்சிரம்‌, சாந்திராயணம்‌, கூச்மாண்‌டம, வைச்சுவாரரம்‌, வ்ராதபிவித்திரேஷ்டி, சரிவரத்‌நிஷ்டோமம்‌ போலப்‌ பலவித௩்களாயும்‌-௮னந்தங்களாயும்‌ எத்தனை காலம்‌ ஜீவித்திருந்து அனுஷ்டித்தாலும்‌ அனுஷ்டிக்க உரியவைகளாயுமிருக்கின்‌ற கர்மங்களையும்‌ விட்டு,
பக்தியோகம் ஆரம்பிப்பதற்‌ காகப்‌ பரம காருணிகனாய்ப்‌ பிராணிகளிடத்தில்‌ ஒரு விசேஷத்தையும்‌ ஆலோசியாமல்‌ அவைகளுக்கெல்லாம்‌ சரண்யனாய்‌
ஆஸ்ரிதர்களிட த்திலுண்டான வாத்ஸல்‌யத்துக்குக்‌ கடலாயிருக்கின்ற என்னையே சரணகப்‌ பற்று,
நான்‌ உன்னைக் கீழ்ச சொன்ன பக்தியோக ஆரம்பத்திற்கு விரோதிகளான பாபங்களினின்ரும் விடுவிக்கின்றோம்‌,இதற்காகச்‌ சோகிக்க வேண்டாம்‌ என்று உரைத்‌தலுமுண்டு, |

இப்பொருளை இல்லாத் தவத்தாற்கும் என்னிடையின்
மெய்ப்பொருளாம் பக்தி இலா வீணற்கும் சொப்படவே
இச்சையுடன் கேளார்க்கும் என்னைப் பொறாதற்கும்
அச்சமுற நீ யுரையேல் ஆங்கு–67–

இப்பொருளை–( இப்போது நான்‌ உனக்குச்‌ சொன்ன பாம ரஹஸ்யமான) இந்த அரத்தத்தை,
இல்லாத்‌ தவத்தாற்கும்‌–இல்லாத தவத்தை யுடையானுக்கும்‌ –௮தாவது தவம் புரியாதவனுக்கும்‌,

என்னைப்‌ பொறாதாற்கும்‌–என்‌ குணங்களைக் கேட்க ஸஹிக்காதவனுக்கும்

இத்தகையின் மேலா மறைப்பொருளை யேவன் என் தன்
பத்தரிடை நின்று பரிந்து உரைக்கும் அத்தகையோன்
அன்பால் பரமாம் பக்தி எய்தி ஐயமற
இன்பால் எனை யடையும் ஏய்ந்து–68–

மிகவும்‌ ரஹஸ்யமான இவ் வர்ததத்தை யாவன் ஓருவன்‌ என்‌ பக்தரிடத்தில்‌ பரிவோடு சொல்லுகிறானோ
௮வன்‌ என்னிடத்தில்‌ மிகுந்த பக்தியைச் செய்‌து ஸந்தேகமில்லாமல்‌ என்னையடைவான்‌.

மானிடரால் ஆங்கு அவனின் மற்று ஒருவன் என் உகப்பில்
தான் இயல்வு மிக்கவவன் தான் இல்லை மேனிகழும்
எக்காலும் மேதினியில் இல்லையாம் என்னுகப்பில்
தக்கார்வம் மிக்கு இனியன் தான்–69–

௮வனின்‌–அவனைப்போல,
மேதினிபில்‌–பூமியில்‌,
இனியும்‌ உண்டாகப் போவதில்லை யென்பார்‌ எக்காலுமில்லை என்கிறார் .
(அயோக்கியர்களை முந்தி யெடுத்தது, இவ்வர்த்தததை யோக்கியர்களுக்குச சொல்லாமல் இருப்பதைப்‌ பார்க்க அவர்களுக்குச் சொல்‌வது மிகவும்‌ ௮நிஷ்டம் என்கைக்காக என்க .]

நாம் இருவர் நின்று இயம்பு நல்லறம் சேர் இக்கீதை
பா மருவி ஓதும் பரிவன் எனைத் -தூ மருவு
நெஞ்சறிவாம் எச்சத்தால் நேரே இறைஞ்சினன் என்று
எஞ்சலற யான் மதிப்பன் இங்கு–70–

செஞ்சறிவாம்‌ எச்சம்‌–ஞான யோகம்‌,
இறைஞ்சினான் -ஆராதித்தான்‌.
எஞ்சலற-குறைவற,

சேர்ந்து ஸ்ரத்தையினைச் சேராத அஸூயை யினை
யார்நது இதனைக் கேட்க்கும் நரன் ஆனவனுக்கும் தீர்ந்து துயர்
அற்றே அறிவெய்தும் அன்புடையோர் தம் கூட்டம்
பெற்றே மகிழும் பெருத்து–71-

துயரற்று-பக்தி ஆரம்ப பாபக்களினின்றும்‌ விடுபட்டு

பார்த்தனே நின் ஒருமை பற்றி யாம் சித்தத்தால்
சேர்க்க இது கேட்டுச் சிறந்தாயே பேர்த்து உன்னை
மோகத்தைச் செய் மாயம் முற்றும் கழிந்ததே
போகத்தைச் சேர்ப்பான் புணர்ந்து–72–

என்று இறையோன் சொல்ல எழில் விசயன் செப்பினான்
இன்றியலும் மோகம் போய் ஏய்ந்து மதி நின்று நான்
உன்னருளினால் மயக்கம் ஒன்றும் இன்றிச் சென்று இயல்வன்
சொன்னது எல்லாம் செய்வன் துணிந்து–73-

உன்னுடைய பிரஸாதத்தால்‌ விபரீத ஞானம்‌
போய்‌ ஞானத்தைப்‌ பெருக்கி மயக்கத்தை யொழித்தேன்‌, சொன்னதெல்லாஞ்‌ செய்வேன்‌ என்க,
[தேகாதிகளே ஆத்மாவென்கிற துரபிமானமும்‌,
சேதனாசேதன ரூபமான ஸகல பிரபஞ்சமும்‌ பரம புருஷனுக்‌குச்‌ சரீரமென்கிற விஷயமும் தெரியாமல்‌
நினைத்திருந்த துரபிமானமும்‌,
நித்திய நைமித்திகமான கர்மம்‌ பரம புருஷனுடைய ஆராதன ரூபமாக அனுஷ்டிக்கப்படுமாகில்‌
அவனை யடைவதற்கு உபாயமாகுமென்கிற விஷயமும் தெரியாமல்‌
அதைச் சரீரத்துக்குடலாச நினைத்திருந்த அஞ்ஞானமும் தொலைந்தன.
ஆத்‌மா பிரகிருதியின்‌ ஸ்வபாவமின்றி அறிவதே ஸ்வபாவ
மாயப்‌ பரமபுருஷனுக்குச்‌ சேஷப்பட்டு ௮வனால் ஆளப்‌
படுவதே ஸ்‌வரூபமாயிருக்கிறது என்ற ஞானமும்‌,
பரம புருஷனுடைய உண்மையை யறியும் படியான ஞானமும்‌,
பரமபுருஷனுக்குப்‌ பிரீதியை வளர்ப்பதான
நித்திய நைமித்திக கர்மங்களை யனுஷ்டிப்பதாலும்‌,
சமம்‌, தமம்‌ முதலிய ஆத்ம குணங்களாலும் பெறவேண்டிய (பக்தி ரூபமாய்ப்‌ பரிண மிக்கி இருக்கிற) பரமபுருஷோபாஸனத்தால்‌ மாத்திரம்‌
அடையப்படும்‌ பொருளும்‌,
வேதாந்த விழுப் பொருளும்‌, பரம புருஷனுமான வாஸுதேவன்‌ தேவரீரே யென்ற ஞானமும்‌ எனக்கு உண்டாயின என்பதாம்‌.]

இவ்வண்ணம் மாயனுக்கும் ஏந்து உயர் சீரப் பார்த்தனுக்கு
மெய் வண்ணம் வார்த்தை விளைந்த படி செய் வண்ணம்
மீண்டே நான் கேட்டேன் இவ்வற்புதத்தை இவ்வுடலில்
பூண்டே மயிர் எறிவாம் பூண்டு –74–

இப்படி மஹாத்மாவான வாஸூ தேவனுக்கும்‌ பார்த்தனுக்கும் உண்டான அற்புதமாய்‌
ரோம ஹர்ஷணமான இந்த ஸம்வாதத்தை நான்‌ கேட்டேன்‌ என்க
செவ்வண்ணம்‌ என்றும்‌ பாடம்‌,

சீரார் வியாதன் திருவருளால் மிக்குயர்ந்த
ஏரார் மறைப்பொருளாம் இவ் யோகத்தைப் பேர் ஆண்மைக்
கண்ணன் அவன் தானே கருத்தோடு உரைத்து அருள
வெண்ணமுடன் கேட்டேன் நான் இங்கு–75-

யோகத்தை நேரே யருளிச் செய்கிற யோகேஸ்வரனான கண்ணன்‌ பக்கல்‌ நின்றும்‌
இந்தப்‌ பரமான குஹ்ய தமத்தை வியாஸ மகரிஷயினுடைய பிரஸாதத்தாலே கேட்டேன்‌ என்க,

மன்னவா கேசவனும் பாண்டவனும் வார்த்தியினைச்
சொன்னவா நான் நினையும் தோறு எல்லாம் இன்னவாறு
என்ன ஒண்ணாது அற்புதமாய் இயல்கின்ற புண்ணியமாப்
பன்ன வுகப்பவன் பயின்று–76-

ராஜாவே! கேசவார்ஜுனர்களுடைய, புண்யமாய்‌ ௮த்புதமான இந்த ஸம்வாதத்தை
நினைக்க நினைக்க எனக்கு ஸந்தோஷமுள்ளடங்காமல்‌ வருகின்றது என்பதாம்‌.

அங்கு மிக அற்புதமாம் அண்ணல் வடிவினையும்
ஈங்கு நினைதோறும் எழ வியப்பாய் ஓங்கும்
உகப்பு மிகு மேன்மேலும் உற்று என்று உரைத்தான்
மிகப் புகழ் சேர் சஞ்சயன் தான் மிக்கு–77-

கிருஷ்ணனுடைய ௮த்புதமான அந்த ரூபத்தை நினைக்க நினைக்க எனக்குப்‌ பெரிய விஸ்மயமுண்டாகா நின்றது.
பின்னையும்‌ பின்னையும்‌ பிரீதனாகா நின்றேன்‌ என்க,

எவ்விடத்தான் யோகத்துக்கு ஈசனாம் கண்ணன் தான்
எவ்விடத்தான் வில்லேந்தும் எழில் விசயன் அவ்விடத்தே
வாய்ந்த திருவிசை யம் வாழ்வு வள நீதி திட
மேய்ந்தன வென்றே மதிப்பன் யான்–78–

எங்கே யோகேஸ் வரனான ஸ்ரீ கிருஷ்ண பகவான்‌ எழுந்தருளி யிருக்கின்றானோ,
௮வன்‌ திருவடிகளையே நம்பிபிருக்கின்ற வில்லுங்கையுமான அர்ச்சுனன்‌ எங்கே விளங்குகின்றானோ
அங்கு லஷ்மியும்‌, விஜயமும்‌, விபூதியும்‌, நீதியும்‌ சாஸ்வதமாய்‌ நிலை நிற்கும்‌ என்பது என்னுடைய ஸித்தாந்தம்‌,

தன்மைக் கருமம் தகு குலத்தின் தூய்மை யுடன்
நன்மை பயில் சார நன்கு அறியத் தொன்மைப்
பரமன் அருள் கீதை பதினெட்டாம் ஒத்தாம்
சாமம் உரைத்து சார்ந்தது இது தான்

————

த்ருதீய ஷட்கத்தின் ஸாரப் பொருள்:

உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
யிடரிலெழி லீசன்ற னேற்றந் திடவசுரர்
தேவ ரியல்வுகுணஞ் சேர்க்கருமண்ய் சார்ந்தமர்வு
மாவனபின் னாறோத் தமர்ந்து.

உடல் உயிரின் தன்மை – உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்,
உறு குணத்தின் பன்மை – உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை,
இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம் – குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்,
திட அசுரர் தேவர் இயல்வு – (ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்,
குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன – குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றை,
பின் ஆறு ஓத்து அமர்ந்து – கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீய ஷட்கம் கூறுகிறது.

ஸந்யாஸம் கன்மத்தில் சாரும் தியாகத்தில்
முன் யான் பிறிவொருமை முற்று அறியேன் –பின் பின் யான்
தோன்றாது நீ இதனைச் சொல் என்றான் பார்த்தன் அதற்கு
என்று அங்கு உரைத்தான் இறை–1–

காமக் கருமங்கள் கை விடுதல் ஸந்நியாசம்
சேமத்தது என்று சிலர் உரைப்பர் -ஏமத்தால்
எக் கருமம் அப்பேறும் இகழ்வும் தியாகம் எனச்
சிக்கெனவே சொல்வர் சிலர் –2-

ஏதம் போற் கன்மம் இகழப்படும் என்று
போதர் சிலர் உரைப்பர் புந்தி யான்–மீதென்றும்
எச்சம் தவம் தானம் ஈங்கு இகழ்வது அல்லது என
நிச்சம் சிலர் உரைப்பர் நின்று–3-

அந்தத் தியாகத்து அறுதியினை என் பால் கேள்
சந்ததிகள் பாரதர்கள் தம் தலைவா -முந்துறவே
யான் பகர்ந்தேன் மூன்று வகை என்றே தியாகத்
தான் பயனச் சங்கந் தவிர்ந்து –4-

பாவிய சீர் எச்சம் பயிலும் தவம் தான்
மேவி இகழாது என்று முற்றியல மேவினவை
யாவின் பால் ஆங்கு அவை தானான அறிவினர்க்கும்
பாவனமாம் என்றும் பயின்று–5–

————-——————-

பின்னுரை

தூய கருமங்களினால் சத்வம் மிக யுண்டாக்கி
ஏய உணர்வால் உயிரின் ஈறு அறிந்து -மாயனிடை
முத்தி யுறும் சிந்தை முயலாசை முன் பணிவாள்
பத்தி யுறல் கீதைப்பயன் –1–

எவ்வறமும் சொல்லி யிறுவாம் ஸ்லோகத்தால்
செவ்வறமாம் தன் சரணாச் செப்புதலால் அவ்வறத்துத்
தான் துணையா மாயன் தனித்துத் தனை அளிக்கும்
வான் துணையாம் என்று இருத்தல் வாய்ப்பு –2-

நெஞ்சுள் கலந்து என்னை நேர் நினைத்து நூல் இட்டுச்
செஞ்சுடர் சேர் தாற்பரிய தீபத்தால் பஞ்சவர் தம் தேர்ப்பாகன் கீதைச் சிறந்த பொறுப்பில் காட்டினேன்
நேர்ப்பாகு நன்றே இனிது –3

மாயனருள் கீதை மன்னு பொருடன்னைத்
தூய பெரும்பூதூர்த்‌ தொன்முனிதன்‌–மேய
தகையான்‌ மணவாள மா முனிவன்‌ சொன்னான்‌
தொகையாரும்‌ லெண்பாச்‌ சுரந்து.

சொட்டை மணவாளத் தூ முனிவன் சொல் செறிந்த
சிட்டம் மருவும் தமிழ்ப் பாவால் – கட்டு எழில் சீர்க்
கோமான் அருள் கீதை கூறும் பொருள் உணர்வோர்
சீமான் அடி சேர்வர் சென்று.-ஆசிரியர் பெயரைக் குறிப்பிடும் பாடல்

————–————-——————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பகவத் கீதை வெண்பா -முதல் ஷட்கம் -ஸ்ரீ அழகிய மணவாள ஜீயர்

October 3, 2023

ஸ்ரீ பகவத் கீதை வெண்பா  பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
14 ஆம் நூற்றாண்டில் வாதிகேசரி – அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் என்பவரால் இயற்றப்பட்டது. இது வெண்பாவால் ஆன நூல்.
பாயிர  வெண்பாக்கள் 223.
இந்த நூலுக்குப் பதினெட்டு ஓத்து என்னும் பெயரை நூலாசிரியர் சூட்டியுள்ளார்.

—–

மாயனருள் கீதை மன்னு பொருடன்னைத்
தூய பெரும்பூதூர்த்‌ தொன்முனிதன்‌–மேய
தகையான்‌ மணவாள மா முனிவன்‌ சொன்னான்‌
தொகையாரும்‌ லெண்பாச்‌ சுரந்து.

சொட்டை மணவாளத் தூ முனிவன் சொல் செறிந்த
சிட்டம் மருவும் தமிழ்ப் பாவால் – கட்டு எழில் சீர்க்
கோமான் அருள் கீதை கூறும் பொருள் உணர்வோர்
சீமான் அடி சேர்வர் சென்று.-ஆசிரியர் பெயரைக் குறிப்பிடும் பாடல்

————

1. கண்ணாநீ பார்த்தர்க்குக் காத்தற் கினிதுரைத்த
திண்ணார் திறபருளுஞ் சீர்கீதை – யெண்ணாரு
நன்பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
புன்பொருளிற் போகா புலன்.

2. மாதவன் மாமாது மாறனும்வண் பூதூர்வாழ்
போதமுனி யுந்தந்தம் பொன்னடிக்ண் – மீதருள
வுச்சிமேற் கொண்டே யுயர்கீதை மெய்ப்பொருளை
நச்சிமேற் கொண்டுரைப்பன் னான்.

3. நாத னருள்புரியு நற்கீ தைன்படியை
வேதம் வகுத்த வியன்முனிவன் – பூதலத்துப்
பாரதத்தே காட்டும் பதினெட்டோத் தும்பகர்வன்
சீர்த்தழைத்த வெண்பாத் தெரிந்து.

4. வேதப் பொருளை விசயர்க்குத் தேர்மீது
போதப் புயன்ற புகழ்மாயன் – கீதைப்
பொருள்விரித்த பூதூர்மன் பொன்னருளால் வந்த
தெருள்விரிப்ப னந்தமிழாற் றேர்ந்து.–இராமானுசரின் மாபாடியத்தைப் பின்பற்றிப் பாடியதாகச் சொல்லும் பாடல்

5. தேயத்தோ ருய்யத் திருமா லருள்கீதை
நேயத்தோ ரெண்ணெய் நிறைவித்துத் – தூய
தெருணூல தேபெரிய தீபத்தை நெஞ்சி
லிருணூற வேற்றுகேன் யான்.–இருள் நூந -அஞ்ஞான இருள் கெட

6. சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
லத்தியா தொன்றை யறந்துறந்தோர் – பத்தியா
னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
கெண்ணும் பொருளா மிசைந்து.

தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தி யடைந்த தம் நெஞ்சில், ஒன்றை அ(ர்)த்தியாது –
(பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
பத்தியால் – (முற்கூறிய கர்மஜ்ஞாநவைராக்யங்களாலே உண்டான) பக்தியோகத்தாலே,
நண்ணும் – அடையும்,
பரமன் – பரப்ரஹ்மமாகிற, நாரணனே – நாராயணனே,
நற்கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.

7. ஞானங் கரும நலஞ்சேர் நிலையதனை
யான மனயோகத் தாராய்ந்திங் – கூனமறத்
தன்னா ருயிருணருந் தன்மையினை நற்கீதை
முன்னாறோத் தோதும் முயன்று.

ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞான யோகத்தையும், கர்ம யோகத்தையும்,
ஆன மன யோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
இங்கு – இவ்வுலகிலேயே,
ஊனம் அற – குறைவில்லாமல்,
தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
நற்கீதை – மிகச்சிறந்த கீதையின்,
முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.

8. உள்ளபடி யிறையை யுற்றெய்த முற்றறஞ்சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி – வெள்ள
நடையாடும் யோகத்தை நாதனருள் கீதை
யிடையாறோத் தோது மெடுத்து.

உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்ம யோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
பத்தி வெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்தி வெள்ளம் பெருகி வரும் பக்தி யோகத்தை,
நாதன் அருள் கீதை – ஸர்வ ஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.

9. கருமமறி வன்பிவற்றின் கண்ணார் தெளிவில்
வருஞ்சித் தசிதிறையோன் மாட்சி – யருமையற
வென்னாதன் றந்த வெழிற்கீதை வேதாந்தப்
பின்னாறோத் தோதும் பெயர்ந்து.

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய
இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூல ரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
அருமை அற – சிரமம் இல்லாமல்,
என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என் ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.

10. தானமுடன் றீர்த்தந் தவம்பிரித லைவேள்வி
யனமுத லாறு மறமிறைவற் – கேநயந்த
தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
கன்மயோ கத்தின் கணக்கு.

தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐ வேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம் செய்தல்,
பஞ்ச மஹா யஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
இறைவற்கே நயந்த தன்மையால் – (இக் கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
கன்ம யோகத்தின் கணக்கு – கர்மயோகத்தின் ஸ்வரூபமாகும்.

11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
பத்தியோ கத்தின் படி.

அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
நெஞ்சில் குடி யிருத்தி – நெஞ்சில் அமைத்து,
மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
பத்தி யோகத்தின் படி – பக்தி யோகத்தின் ஸ்வரூபமாகும்.

12. புலன் பொறியை நீக்கித்தம் புத்தியினிற் செம்மை
யலம்புரிவார்க் குற்றவுயிர் மாட்சி – நலம்புனைந்து
மானயோ கத்திறையை மன்னுநிலை காண்பதே
ஞானயோ கத்தி னலம்.

புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
செம்மை அலம் புரிவார்க்கு – நேர்மைக் குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
உற்ற – தோன்றும்,
உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
மான யோகத்து – யோக முறைகளினாலே,
இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
காண்பதே – அனுபவித்தலே,
ஞான யோகத்தின் நலம் – ஞான யோகத்தின் ஸ்வரூபமாகும்.

13. இந்த வகை யமைந்த யோகங்க ளிம்மூன்றுந்
தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
மானந் தருமியல்பால் வாய்ந்து.

ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
இந்த வகை அமைந்த யோகங்கள் இம் மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளை யுடைய இந்த மூன்று யோகங்களும்,
தந்தம் இடையே தனித் தனி சேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித் தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.

———————————-

அத்யாயம்‌ I,–அர்ஜனவிஷாதயோகம்‌.

வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீன்டகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விச
னுற்றமயல் சொல்லுமுத லோத்து.

வேண்டிடத்தில் அன்றி – தகாத இடத்தில்,
நலம் இரக்கம் பூண்டு – அன்பையையும் கருணையையும் கொண்டு,
வெறுத்து – (யுத்தம் முதலான ஸ்வதர்மங்களை) வெறுத்து,
அவற்றை – அந்த ஸ்வதர்மங்களை,
பொல்லா புலம் என்று – தர்மம் அல்லாதவை என்று கூறி,
மீண்டு அகன்று – (யுத்தத்திலிருந்து) மீண்டு விலகிப்போய்,
சுற்றம் அது நோக்கியே – (பற்று வைக்கத் தகாத) அந்த உறவினர்களைப் பார்த்து,
சோகித்த – வருத்தமுற்ற,
தேர் விசயன் – தேரிலுள்ள அர்ஜுனன்,
உற்ற – அடைந்த,
மயல் – மயக்கத்தை,
முதல் ஓத்து சொல்லும் – முதல் அத்தியாயம் உரைக்கும்..

தன்ம நில மாகும் குரு நிலத்‌து தாம் சேர்ந்து
வன்மை யமர் இச்சிதது என்‌ மைந்தரு்‌,ம் தன்மை யுறப்‌
பஞ்சவரும் என்செய்தா ரென்றந்தன்‌ பண்புரைப்பச்
சஞ்சயனுஞ்‌ சொன்னான்‌ சமைந்து.-1

முன்னரில்லா திருந்த தர்மத்துக்கு உற்பத்தி ஸ்தானைமாயும்‌
இருந்ததர்கு ௮பி விருததி ஸ்தானமாயும்‌
வித்துக்கு விளை நிலம் போல விளங்கியதால்‌–குருக்கள்‌ வாழ்ர்த நிலத்தைத் -தன்‌மநிலம்‌’ என்றார்‌,

சஞ்சயன்‌-நன்றாக (ராக த்‌வேஷாதிகளை) ஜயித்தவன்‌, வியவகார நேத்திரம் இழந்தவனாய் இருப்பதோடு புத்திர வாஞ்சையே மேலிட்டுத்‌
தர்ம நோக்கத்தையும் இழந்தவனாய் இருத்தல்‌ பற்றிப்‌ பெயரைச் சொவ்லாமல்‌ :௮ந்தன்‌’ எனக் கூறினான்

பாண்டவ சேனையைக் கண்டு துரியோதனன்‌ பெரிதும் அச்சம் உற்றானென்பதையும்‌.
சென்று செப்பினானென்‌னாமல்‌ சென்றடைந்து செப்பினான்‌’ என்பதனால்‌
தனுர் வித்யா ஸம்ப்ரதாய பிரவர்த்தகரான தனது குருவாகிய துரோணரை ஸ்வ ரக்ஷணார்த்தம்‌ சரணம்‌ புகுந்தானென்பதையும்‌
ஸஞ்சயர்‌ திருதராஷ்டிரனுக்‌குக் குறிப்பாயுணர் ததினாரென்௧,
தார் அழகே யல்லாமல்‌ வார்த்தை யழகொன்று மில்லை யென்பார்‌ தாரார்‌ துரியோதனன்‌? என்றார்‌.

பாண்டவர் கடங்கள்‌ படை வகுத்த பாங்கதனைப்‌
பூண்டு மிக நோக்கிப்‌ பொறாமையினாற்‌–றூண்டுபரித்‌
தேரார்‌ துரோணன் பாற்‌ சென்றடைந்து செப்பிஞன்‌
றாரார்‌ துரியோதனன்‌, 2

பாரா ரியனேயிப்‌ பாண்டவர்கள்‌ சேனையினைத்
தாராரும்‌ பாஞ்சாலன்‌ றந்தமகன்‌–சீரார்‌
மதியுடைமை நீ கொடுக்க வண்மையினாரற் காக்கும்‌
விதியுடைமை பூண்ட வியப்பு. 3

பாண்டவர்கள்‌ துரோணருக்குப்‌ பிரியமான சிஷ்யர்களாகையால்‌ ஒருவேளை ௮ப்பாண்டவர்களின்‌
வில் வன்மையைச்‌ கண்டு மகிழ்ந்து
இவர்‌ போர்புரியாமல்‌ நின்று விடுவரோ என்ற சங்கை யுடையவனாகையால்‌ சத்துருக்கள்‌ செய்யும்‌ அவமதிப்பைத்‌
துரோணருக்கு அறிவித்துசக் கோபமூட்டும்‌ பொருட்டுப்‌ பார்‌ என்று தொடங்கி இப்பாசுரத்தைச் சொல்லலானான் என்க
தங்களைப்‌ போலொத்த மகானுபாவர்கள்‌ சமீபத்‌திலிருப்பதையும் கவனியாமல்‌ சற்றேனும்‌ பய
மின்றி யெதிர்த்து நிற்கும்‌ பாண்டு புத்திரர்களுடைய பெரியதான இச் சேனையைப்‌ பாராய் என்கிறான்
௮வர்சள்‌ ௮வமதிப்பாலாவதென்‌? என்று ஓழியப்‌ போகாது காண் –
தங்கள்‌ சிஷ்யனை யன்றோ படைத் தலைவனாகக்
கொண்டு எதிர்க்கக் கோலினார்கள்‌ என்பதைத்‌
தெரிவிக்க ‘நீ கொடுத்த வண்மையினுல் காக்கும்‌’ என்‌கிறான்
திருஷ்டத்யும்நன்‌ என்னாது பாஞ்சாலன்‌ தந்த மகன்‌’ என்றது திருபதனுக்கும்‌ துரோணருக்கு
முள்ள
பழைய விரோதத்தைச்‌ தெரிவித்துக்‌ குரோதத்தை யெழுப்புவதற்காக வென்க,
உபேஷிக்கத்தக்கவனல்லன்‌ என்பான்‌ :மதியுடைமை’ யினான்‌ என்றும்‌,
௮ம்மதிதானும்‌ அதிசயித்தன்‌றோ விருப்பது என்பான்‌
“சீரார்மதியுடைமை” என்றும்‌ குறிப்பதை யுணர்க,
இனி, பராக்காயிருக்காமல்‌ கார்யத்திற்‌ கண்ணுடைய
வனாயிரு என்று வர்புறுத்த *பார்‌’ இச்சேனையை என்று
சுட்டிக் காட்டி மனத்தைத்‌ திருப்புகிறான்‌,
இனி மற்‌ரோர் பொருள்‌ தோன்றுமாறு :-துரோணர்‌ பாண்டவரகளிடத்தில்‌ பிரீதியுடையவ ராகையால்‌ *பாண்டவர் தன் ஆரியனே!’ என விளிக்கின்றானென்க, சத்‌ருவான உன்னைக்‌ கொல்ல உன்னிடத்திலேயே வித்யை கற்‌றானே ௮வனல்லவோ புத்திமான்‌ என்பதைக் காட்ட(சீரார்‌ மதியுடைமை’ யென்றும் ,
உன்னுடைய வதை நிமித்தமாகவே நோற்றுப்‌ பெற்றவனென்பதை யறியாமல்‌ பகைவன்‌ புத்திரனான பாஞ்சாலன் தந்த மகனுக்கு நீ
வித்தையைக்‌ கொடுத்த மதியின்மையாலன்றோ எனக்‌கு இவ்வாறு நேர்ந்தது என்பதைக்காட்ட பாஞ்சாலன் தந்த மகன்‌–சீரார்‌, மதியுடைமை நீ கொடுத்த வண்‌மையினால்‌ காக்கும்‌’ என்றும்‌,
இவ் வெட்கக்கேட்டை .யாருடன்‌ விளம்புகேன்‌! நீயே காணாய்‌ என்பதைக் காட்டப்‌ :பார்‌’ என்றும்‌
இக்தோர்‌ புதமையென்பான்‌*வியப்பு’ என்றும்‌,
இது விதியால்‌ வந்ததென்பான்‌ :விதி யுடைமை பூண்ட வியப்பு” என்றும்‌ ஆற்றாமைப் பட்டு உரைக்கிறான் என்க
தன்ம நிலத்திருந்தும்‌ இவ்வாறு தனது ஆசார்யனையே இகழ்ந்தும் சினந்தும் பேசத் துணிந்தானுக்குத்
துஷ்டபுத்தி தொலைந்து தெளிவு எவ்வாறு உண்டாகும்‌ என அந்தனுக்கு ஸஞ்சயர்‌ ௮றிவிக்கலானார் என்க

வென்றியமர்‌ வில்லாளர்‌ வீமன்‌ விசயனென
நன்றியமர் தன்னு ணலம்புனைவோர்‌-நின்றிகல்வோன்‌
வெல்லும்‌ விராடன்‌ மிகு தோளன்‌ பாஞ்சாலன்‌
சொல்லு மளவோ தொகை, |-4-

மற்றம்‌ பல வரசர்‌ மா ரதராய்‌ நிற்கின்றார்
முற்று மபிமனுடன்‌ முந் துற்றுப் –பற்றி
யமர் முயற்றி சேர்வ ரது நிற்க கேளாய்‌
நமர் முயற்றி தன்னை நயந்து. 5-

பாஞ்சாலன் மகன்‌ ஒருவன் மாத்திரமேயோ !-போரில்‌ வீமனுக்கும்‌ அர்ஜுனனுக்கும்‌ நிகராகச் சொல்‌லத்தக்க
வில்லாளர்களான, யுயுதானன்‌, விராடன்‌.பாஞ்சாலன் முதலிய பவரிருக்கின்றார்கள்‌,
ஆகையால்‌ உதாஸீனமாக இருக்க வொண்ணாதென்கிறான்‌
வென்றி அமர் என்பதற்கு ஜயம் பொருந்திய போர் என்றும்‌ போரில்‌ வெற்றியை யுடைய என்றும்‌ பொருள் கொள்ளலாம்
நின்றிகல்வோன்‌ –யுயுதானன்‌, சஸ்திர சாஸ்திரங்களில்‌ வல்லவனாய்ப்‌ போரில்‌
தான்‌ பதினாயிரம் பேரை வெல்ல வல்லன்‌- மகா ரதனாம்‌. -மாரதன்‌–மகா ரதன்‌,
சத்ருக்களுடைய சேனை இப்படிப்பட்ட மகாரதர்களான சூரர்களோடு கூடினதாக்க இருக்கிறது என்று
சொன்ன தினால்‌ சமரத்தை நிறுத்திச் சமாதானமாய்ப் போய்விடு என்று
ஆசார்யர்‌ சொல்லுவரோ என்று சங்கித்து நம்மவர்‌ சேனையையும்‌ பாரென்பான்‌ –
அது நிற்க, கேளாய்‌–நமர் முயற்றி தன்னை நயந்து ” என்‌று சொன்னானெனக . முயற்றி-முயற்சி,
“முயற்றி சுமந் தெழுந்து முந்துற்ற செஞ்சே என்பதுபெரிய திருவந்தாதி –1-

மின்னு நூல்‌ வேதியனே வெற்றியரை யானுரைக்கேன்‌
முன்னு நீ பாட்டன்‌ முயல் கன்னன்‌–முன்னங்‌
கிருபன் அஸ்வத்‌ தாமா விகன்னனுடன்‌ கேளீர்‌
நிருபர்‌ பலரு நிறைந்து,– 6–

வேறும்‌ பல சூரர்‌ மெய்யே யெனக்காக
வூறு படவுடல முள்ளுபிர்விட்‌–டேறு
நிலையுடைய பல்படையார்‌ நின்றமரு ளென்று
மலை யுமவ ரெல்லாரும்‌ வந்து . –7-

நங்கள் படை பாட்ட னயந்தினிது காக்கவே
யிங்கமைவு போதா திரா நிற்கு–மங்கவர்தம்‌
வீமன்‌ மிகக் காக்கும்‌ வென்றிப்‌ படையமைந்து
சேம முறுதிபெறுஞ்‌ சேர்‌ந்து — 8

வேகப்‌ படை நடப்பி லெல்லாம்‌ வியரந் துமது
பாகத்தை நீங்காது பாட்டனையே—யேகமா
யாங்கமர்ந்து சூழ்ந்தே யமர் முகத்து நோக்குங்கோள்‌
பாங்கறிந்து நீங்கள் பலர்‌, 9

இவ்வா றியம்பு மிகலரச னுண் மகிழ்ந்து
தெவ்வார்‌ குருமுதலாஞ்‌ சீர்மாட்ட–னெவ்வாறுஞ்‌
சிங்க வரவஞ்‌ செலுத்திஞன்‌ வீடுமனற்‌
சங்கு முழங்குவித்தான்‌ தான்‌. 10

பின்னும்‌ பல சங்கம் பேரி பெருமூரசு
துன்னும்‌ பணவமுதற்‌று ஓல்லியங்கள்‌—பன்னி
யறைந் தெழுந்த வந்த வொலி மேலாகு மாழி ”
நிறைந்தெழுந்த பேரொலிபோ னின்று, 11

ஆங்கதற்பின்‌ வெள்ளைப்‌ புரவி யணி தேரின்மேற்‌
பங்கமரு மாதவனும்‌ பாண்டவனு–மோங்கரவச
சங்கமலர்க்‌ கைகளினாற்‌ றம்முகம் வைத்தூதினா
ரங்கமலத்‌ தன்ன மதுவாம்‌, –12

பன்னிய சீர்ப்‌ பாஞ்ச சனியப்‌ பணவத்தை
முன்னிருடீ கேசன்‌ முழக்கினான் –மன்னிய பூந்
தாரார்‌ தனஞ்சயனுந் தன்றேவ தத்தமெனுஞ்‌
சீரார் சங்கூதினான்‌ சேர்ந்து –. 13-

பாடார்‌ பவுண்டரமாம்‌ பாரப்‌ பணிலத்தை
யோடா விறலவீழ நூதினான்‌-சேடார்ந்த
வர்தருமன்‌ மைந்தனனந்த விசயமெனு
நந்தருவம் செய்தாம் நயந்து –. 14–

துங்கப்‌ பரிநகுலன்‌ றொல்சீர்ச்‌ சகோடமெனுஞ்‌
சங்கத்‌ தரவந் தனை விளைத்தான்‌-றுங்க மலர்‌
மிக்க மணிப்‌ புட்பகத்தை வென்றிச சகதேவன்
ஓக்க வெடத்‌ தூதினான் உற்று, 15

வில்லாண்மைக் காசிமனும்‌ வென்றிச்‌ சிகண்டியுடன்‌
மல்லார் பாஞ்‌ சாலனவன்‌ மைந்தனும் மற்‌றெல்லாரும்
சாத்திகியும் செளபத்‌திரனும் தனித் தனியே
வாய்த்த தஞ்சங் கூதினார்‌ மற்று, 16

அக்கடிய பேரரவ மந்தன்‌ சுதரிதயஞ்‌
சிச்செனச்‌ தீரச்‌ சிதைத்ததே–தொக்கெழுந்து
வான்றிசையு மண்ணகமு மற்றும்‌ பலவிடமுசந்
தான்றிகழ வோங்கித்‌ தழைத்து –. 17–

போர் முகத்தில்‌ வந்துன்‌ புதல்வர்‌ தமை நோக்கிக்‌
கார் முகத்தை வாங்கிசக் கவித்துவசன்‌–பார் முகத்து
நின்றா ரிருபடைக்கு ணீநிறுத்தென்‌ தேர் கண்ணா
வென்றாங்‌ குரைத்தா னிது, –18-

மகா லீரனும்‌, ஜயப் பிரதனும்‌, பய நாசகனுமான ஹநுமான்‌-துவஜ ரூபமாக வந்து அனுக்கிரகித்ததால்‌
அர்ஜுனன்‌ எவ் விதத்தும்‌ பயமில்லாதவன் என்பார்‌ :கவித்துவசன்‌’ என்று கூறினார் என்க –

பொல்லாத வந்தன்‌ புதல்வனுக்குப்‌ போர் முயல
லெவ்லாரும்‌ வந்திங்‌ கெதிர்நின்‌றே –வில்லாண்மை
யேவருடன்‌ காட்டுதென்‌ றேவவும்‌ படை முனையில்‌
யாவரையுங்‌ காண்பனினி யான்‌, 19

என்று விசய னிசைப்ப வெழிற்கண்ணன்‌
சென்றங்‌ கிருபடையுட்‌ டேர்கிறுத்தி–நின்றணியும்‌
பாட்டன்‌ றுரோணன் முன்‌ பார்த்தனே பல்குருக்க
ளீட்டம்பா ரென்றா னெடுத்து.–20–

பந்தமுற வாங்கவனும்‌ பார்த்தான்‌ படையிரண்டிற்‌
றந்தையர்கள்‌ பாட்டர் தாந் தாழ் குருச்கள்‌–மைந்த
ருடன் பிறர்தார்‌ பேர ருயர்மாமர்‌ தோழர்‌
மடந்தையருண்‌ மாமடிகண்‌ மற்று, 21

மேலலராய்‌ நின்றெதிர்ந்த மிக்க பெருஞ்‌ சுற்றமாங்
காவலரை நோக்கிக் கவுந்தேய–னோவதனான்‌
மிக்க மனம்‌ பேரிரக்க மேவிப்‌ பிரான் முன்றான்‌
றக்க வுரை செய்தான்‌ றளர்ந்து, 22

நன்றி புனையு நமரெல்லா நாளமருட்‌
கன்றி வரக்கண்டு கண்ணனே–குன்றி
முகஞ்சுவறி மெய்ந் நடுங்கி முற்றும் தளர்ந்தென்‌
னகம் குழைய ரோமாஞ்ச மாம்‌, -23–

கைந் நின்றுங்‌ காண்டீவம்‌ வீழும்‌ கனன்‌றுடறோன்‌
மெய்ந் நின்று தாங்கமிக மாட்டேன்‌–மைந்நின்ற
நெஞ்சந் திகைக்கு நிமித்தங்‌ களுந் தீதா
வஞ்சும்‌ படியா மவை. –24–

தன்‌றமரைச்‌ கொன்று சமரத்தத்‌ தான்‌ சேரு
நன்றி தனையொன்று நான் காணேன்‌–கொன்ற
விசையமுநான்‌ கண்ணனே வேண்டே னரசு
மசைவில்‌ வருஞ்சுகமு மாங்கு.–25–

இந்த வுயிரரசு போகங்கக ளாலெமககென்
னந்தவவை யாவர்க்கா வத்திக்தோ –நந்தமரா
மங்கவர்க ளெல்லா மமர்த்தலையி   லேநின்றார்‌
தங்களுயிர்‌ வித்தரந் தவிர்ந்து –, 26

தந்தை குரு பாட்டர்‌ தம்மாமர்‌ மாமடிகண்‌
மைந்த ரவர் மைந்தர்‌ மற்றுள்‌ள–பந்தத்‌
தியன்ற விவர் தம்மை யான் கொல்ல வெண்ணேன்‌
முயன்று கொலினுமெனை மொய்த்து.– 27–

மூவுலகும்‌ பேறெனினு முன்னேன்‌ கொலை யதனிற்‌
பாவுதரைக்‌ காகப்‌ பகைப்பனோ–மேவு சினத்
தந்தன் புதல்வர்களை யாஙகமருட்‌ கொன்று எங்கட்‌
கெந்த வுகப்‌ புண்டா மினி, –28–

பாவிகளா மற்றிவரைச்‌ கொன்றாலும்‌ பாவமே
மேவுமெமை யாதலினிம்‌ மேவலரைச்‌—சாவ நினைந்
தேதமுயல்‌ கிற்கிலோ மென்சுற்றங்‌ கொன்றிங்சே
மாதவனே யாம் சுகிப்போம்‌ வந்து, –29–

கோதில்‌ குலஞ்செற்ற குற்றங்‌ குலச்கேளைக்
காதி வரும் பாவம்‌ காணாத–வேதிலர்க
ளீங்‌கிவர் களேலு மிஃதறிர்த யாந் தவிர்த
லாங்‌கிசைகை யான வமைவு, –30–

குலங்‌குறையின்‌ மாளுங்‌ குலத்தறங்கண்‌ மீது
விலங்‌கு நெறியமுக்கி மேலா–நலங் குலைரந்து
மாதர்‌ நெறியழிவர்‌ வண்ணங்‌ கெடுமதுவே
போத நரகப்‌ புணர்ப்பு. 31

மீது மவர்பிதுக்கள்‌ வீழ்வர்‌ மிகு பழியாற்‌
சாதி குலதன்மந் தானழியு–மாதலினா
னீங்கா நிரயத்து நிற்பவ ரென்றுரைக்கும்‌
பாங்கார்‌ சுருதிப்‌ பயன்‌,– 32–

ஜயோ பெரும்பாவத்‌ தாங்கமைந்தோ மாதலினான்‌
மெய்யோருஞ்‌ சுற்றத்தை வீழ்த்‌துதலால்‌-வையோவாச்
சத்திரத்தால்‌ வீண்கையெனைத்‌ தாந்தடிவ ரேன்மாற்றா
ரத்திரத்தா லக்தே சடன்‌,–33–

இவ்வாறு சொல்லி யிகல் விசய னம்புடனே
தெவ்வார்‌ சிலைபொகட்டுச் சிந்தை தளரந்–தவ்வாறு
நின்றதேர்‌ மீது நிலை குலைந்து தானிருந்தான்‌
துன்றுசோ சத்தாற்‌ றிகைத்து, -34–

இப்படியார்‌ பார்த்த னெழுந்த பெருஞ்‌ சோகத்தாற்
றப்படியார்‌ தன்மையினைச்‌ சரர்ந்ததனை–மைப்படியா
மாயனருள்‌ கீதை மன்னு முத லோத்துரைக்கு
மேய பொருண்முடிந்த திங்கு —

—————-

2: ஸாங்க்ய யோகம்:

மேலிரண்டா மோத்தால் விசயன் வெறுப்பகற்றக்
கோலி யுயிருடலின் கூற்றிவைகள் – காலியுடன்
போமாயன் மன்னுயிர்கள் பொன்றாமை முன்னகமா
மாமாயன் சொன்னான் மகிழ்ந்து.

காலியுடன் போம் ஆயன் – பசுக்களின் பின் போகும் இடையனும்,
மா மாயன் – பேராச்சிரியமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையவனுமான கண்ணன்,
விசயன் வெறுப்பு அகற்றக் கோலி – அர்ஜுனனுக்கு (யுத்தத்தினாலுண்டான) வெறுப்பை நீக்க நினைத்து,
மன் உயிரின் பொன்றாமை முன்னகமா – நிலை நிற்கும் ஆத்மாவின் ஆத்மாவின் அழியாமையை முன்னிட்டுக் கொண்டு,
உயிர் உடலின் கூற்றிவைகள் – உயிரினுடையவும், உடலினுடையவும் (அழியாமை, அழியும் தன்மை முதலான) இத்தன்மைகளை,
மேல் இரண்டாம் ஓத்தால் – அடுத்ததான இரண்டாமத்தியாயத் தால், மகிழ்ந்து சொன்னான் – மகிழ்ச்சியுடன் உபதேசித்தான்.

‘ஆத்மாவை யறிபவன்‌ சோகத்தைக்‌ கடந்து நிற்கிறான்‌’–ஸ்ருதி

தண்கொ ளருளாவே சூழ்வுற்ற தார் விசயன்‌
கண்க ளழுநீர்சக் கலுழியெழ–வெண்குலைந்த
வண்ணங் கண்‌டாங்கே மதுசூ தனனவன்ற
னெண்ணம் கொண்‌ டீ.துரைத்தா னேன்று, –1–

எத்தாலே யுன்னைகத் தகாவிடத்தே யிசக் கலச்கஞ்‌
சத்தானார்‌ சாராது சார்ந்ததுதா–னித்தாலே
மேலுலக மில்லை மிகுபழியாம்‌ பார்த்தனே
யேலு மதன்றே காண் இது –2-

இந்த வலித்தனத்தை யெய்தாதே யீதுன்பால்‌
வந்தணை வதல்ல காண்‌ மன்னவனே–குந்தி
சிறுவனே நெஞ்சிளைப்பாஞ்‌ சிற்றியல்பை நீங்கி
யுறவதே கொண்டெழு நீ யுற்று, –3–

௮வ்வளவி லந்த வருச்சுனனு மண்ணலைப் பார்த்‌
தெவ்வகையாம்‌ பாட்ட னெழிற்குருவா–மில்வவரைப்‌
‘பூசிப்ப தன்றிப்‌ பொருவதேதம்‌ பாலென்று
வாசிப்‌ பட வுரைத்தான்‌ மற்று,–4–
,
தொழப்படும் மேலோரைத்‌ தொலையா துலகில்
எழப்படுத னன்றே யிரப்பில்‌—விழப் படுத்தி
வாய்ந்த பொருள்‌ காமித்த மற்றவரை யக்குருதி
தோய்ந்ததுவோ போகத்தின்‌ றுய்ப்பு, -3-

ஏதறியோஞ்‌ சீரிதென யாம் வெல்‌ லவுமாகு
மீதவர்கள்‌ வெல்லவுமாம்‌ வேறில்லை–பூதலத்‌தல்‌
யாவரை நாம் கொன்றா லீராதே முடிகின்றோ
மாவரிவர்‌ போர்முன்‌ னமர்ந்து –, 6–

கார்ப்பண்யத்‌ தாற் கலங்கிக்‌ கண்ண தருமமனத்து
ஓர்ப்பதிலேன்‌ கேட்கின்றே னுன்னை யான்‌-றாற்பரியத
தேதிறலாஞ்‌ சொல்லது நீ யான்‌ உன் அடியனெனைச்‌
சாதி யுனைத்‌ தாழ்ந்தேனைச்‌ சார்ந்து –, 7–

சால வெதி ரற்றித்‌ தலத்தரசில்‌ வீற்றிருப்பு
மேலமரர்‌ நாயகமு மேவிடிலு–ஞாலத்தென்‌று
ஓல்லைப்‌ புலனுவர்‌,ததுஞ்‌ சோகத்தைப்போச்குவதோர்
எல்லைப்‌ பொருள் காணேன்‌ யான்‌, –8-

மைவண்ண மாயவனை மன்னன்‌ குடாகேச [
னிவ்‌வண்ணம்‌ வார்த்தை யியம்பியே–தெய் வண்ணங்
கோலேன்யான்‌ போரென்று கோவிந்தனை யுரைத்து
மேலேதுஞ்‌ செய்யான்‌ வெறுத்து –9–

முன்ன மவனை முறுவலிப்பான்‌ போன்மாயன்‌
மன்ன னிருபடையிலன் மத்தியத்தே–யின்னே தன்‌
சிந்தை யழிந்தோனைத்‌ தெளிவித்தல்‌ காரணமா
விந்த மொழி சொன்னா னெடுத்து –, 10–

சோகிக்க லாதவற்றைச்‌ சோகித்தாய்‌ தொல்லறிவி
லாகப்‌ படி பகர்வ தாகின்றா–யோகத்தான்‌
மாயு முயிர்களையு மாயா வுயிர்களையு
மாயுமவர்‌ சோகியா ராங்கு, –11-

இறையாகிய நானும் இவ்வுயுரா நீயு
முறையா லரசரிவர்‌ முற்று–மறையாலே
முன்னாளு மின்மையிலை மு.ற்றுமிதன்‌ மேலாகு
மென்னாளு மின்மையிலம்‌ யாம்‌. –12–

இந்தவுயிர்‌ கௌமாரம்‌ யெளவனமூப்‌ பென்பவற்றை
வந்தவுட னின்று மருவுதல்போ—லந்தவுயிர்‌
வேறுடல மேவுதலு மிக்கன்ன தாஙகதனைத்
சேறுமவர்‌ தாங்கலங்கார்‌ தீர்ந்து — 15

தன்மாத்‌ திரை தீண்டும் தன்மையவை சீதமழ
லென்மாச்‌ சுக துக்க மெய்துவிக்கும்‌–புன்‌ மாயம்‌
வந்தியன்று போமதனான்‌ மற்றவற்றை யெய்த லுறாத
குந்தி சுதா நீபொறுத்துசக் கொள்‌. 14

ஒத்த சு௧துக்க னுயர்திரன் என்னாரை அட
யித் தகைய தன்மையிவை யீ டழியா–முத்தனென
வாங்கவன்றா னாகுமே யாணேறாம்‌ பார்த்தனே
யோங்கமுதத்‌ தன்மைக்‌ குறுப்பு, –15–

நில்லா வுடலகத்து நிற்குமுயிர்‌ சத்த தனா
லில்லா ததுக் குண்மை யில்லை யுண்மைக்‌–கில்லாத
தென்றிரண்டி னீறுங்கண்‌ டேய்ந்தவகத் தத்துவத்தை
நின்றென்றுங்‌ காண்பார்‌ நிகழ்ந்து –.16–

யாதினா லிந்த வசித்தெங்கும்‌ யாப்புற்ற
தாதிதனை மாயாதென்‌ றாங்குணர்வாய்‌–மீ து தனக்‌
கூன மிலாதா லிதற்கொருவ னாசத்தை
யான மியற்றுவா னல்‌, –17–

மாயா தளவின்றி மன்னுஞ்‌ சரீரிதனக்‌
கோயாது மாறு முடலமிவை–மீயாரு
மந்த முடையவெனு மாதலினாற்‌ பார்ததனே
யிந்த வமர் முயல்வா யின்று. –18–

யாவ னிவனை யிவன் கொல்வா னென்றறியும்‌
யாவனிவன்‌ கொல்லுண்பா னென்றறியும்‌–மேவு
மறிவிருவ ருஞ்சாரா ராங்கிவனும்‌ கொல்லா
னெறியவனுங் கொல்லுண்ணா னேர்ந்து.– 19–

என்றும்‌ பிறவா னிவனிறவான முன்புளனாய்ச்‌
சென்று பிறந்திலனாஞ்‌ செய்தி யில–னின்‌ ரென்‌றுந்
தொல்லை யவனானவிவன்‌ றோன்றுமுடல்கொன்றாலுங்‌
கொல்லரிய னாகும்‌ குறித்து, –20–

உண்டாய்ப்‌ பிறந்து வளர்‌ந் தோங்கிக்‌ குறைந் திறத்தல்‌
கொண்டோ டுடம்பியல்வைக் கூடானைக் —கண்டா
னெவனைத் தான்‌ கொல்லுவிக்க வேல்வான்மற்‌ றெங்க
னெவனைத்தான்‌ கொல்வா னியன்று, –21–

பீறும்‌ பழம்புடைவை பேணாது விட்டொருவன்‌
வேறு புதுப்புடைவை மேவுதல்போ–லீறிலவன்‌
முத்துடம்பை விட்டு முதிராது வேறுவரும்‌
புத்துடம்பைச்‌ சேரும்‌ புகுந்து –. 22–

ஆயுதங்க ளாங்கிவனைச்‌ சேதியா வன்னவகை
தியு மவனைசத் தெகியா து–பாயுஞ்‌
சலத்தாறு மற்றவனைத்‌ தான் கரைக்க மாட்டா
துலர்த்தாது மாருதமு முற்று, –23–

௮வ்வவற்றா லேது மழியா னிவனென்று
மெவ்விடத்து்‌ந் தாணுவா யேய்ந் தசசைவ்‌-றிவ்வகையென்
றாதுந் துயரே தெரியா னறிவறிவா னென்றறிந்து
யாதுந் துயரேனீ யிங்கு –24-

இத்தன்மை யன்றியிவ னென்றும்‌ பிறந் திறக்கு
மத்தன்மை யாக வறிதியோ.-.சித்தந்
தளரும்‌ படியிங்கன்‌ றான் வெறுக்க வேண்டா
வளருரந் திரடோளாய்‌ மற்று,–25-

பிறந்தவனுக் காங்கிறத்தல்‌ பின்னறுதி யவ்வா
றிறந் .தவனுக்‌ கும்பிறட்பு மெய்‌துந் –திறந் தன்னா
லொன்றும்‌ பரிசார மில்லா வொருபொருட்கு
நின்று மனர்தளரே னீ. –26–

பூதங்க ளான புணர்ச்சி முதல் விளங்கா
சாதனங்க ளானவிடை தான் விளங்கு—மீதங்குப்‌
பொன்று நிலை தான் விளங்கா போக்கா மதில் வெறுப்பெ
னின்றதனைக்‌ கேளின்ன நீ –. 27–

வியப்புளனாக்‌ காணு மிவனை யொருவன்‌
வியப்புளனாக்‌ கூறு மொருவன்‌–வியப்புளனாய்‌
மற்றொருவன்‌ கேட்குமிம்‌ மன்னுயிரைசக் கேட்குந்தா
னுற்றுணர்க லானொருவ னோர்ந்து.– 28–

நின்ற வுயிர் வதத்தை நேரா துடலெதிலு
மென்றதனி லெங்கு மிடரெய்தே –லுன்றருமம்‌
பார்த்துந் தளர்வுறாய்‌ பார்த்திபர்க்குத்‌ தன்மப்போர்க்‌
கேற்குந் தகைமைய தொன்‌றில்‌,– 29–

தானே வருமிந்தத் தன்ம சமரத்தை
வானேறும்‌ வாயி லென மதித்துத்‌–தேனேருந்
தார் மன்னர்‌ பார்த்தனே தாங்கள்‌ சுகமுடனே
சீர்மன்ன வேறுவர் காண்‌ சென்று,– 30–

நீ யித் தரும சமரத்தை நின்றியலா
யாயிற்‌ புகழுன்‌ னறம்விட்டுப்‌–போயிற்றால்‌
பாவந் தனையடைதி பாரெல்லா நின்றிசைக்கு
மேவந் தனையே யெழுந்து,–31-

கொண்டாட்டுற் றார்க்குக்‌ கொடிதுபழி சாமதனிற்‌
கண்டார்க ளச்சத்தாற்‌ காதமரிற்‌…றிண்டாடி
மீண்டா யென நினைப்பர் மேலாம்‌ வியப்புறு நீ
வேண்டாத நோய்மை யுறேன்‌ மிக்கு.– 32–

ஒன்னாதா ருனனாண்மை யொன்றன்‌ றெனப்பழீத்துச்
சொன்னாடாப்‌ பல் பழியைச் சொல்லு வார்‌.-எந் நாளு
மாஙகதனின்‌ மிக்க வருந் துன்பந் தானுண்டோ
வோஙகினிதாரந் தோளா யுரை,–33–

இன்றிகலிர்‌ பொன்றினீ யிந்திரலோ கம் பெறுதி
வென்றி யுறி லாளுதியிம்‌ மேதினியை–யென்றிதனை
யோரந் ததனாற்‌ கெளந்தேயா வுற்றெழு நீ வெஞ்சமத்துத்‌
தீர்ந்த மனத்‌ தோடுந் தெளிந்‌து –.34–

இன்பந் துன்‌ பம்பே றிழவு சயாசயங்க
ளுன்பந்தத்‌ தொக்க வுணர்வெய்தி–வன்பந்தத்
தெவ்வகையார்‌ வெஞ்சமத்தைச்‌ சேர்வுறு நீ பாவத்தை
யிவ் வகையான்‌ மேலணையா யிஙகு, –35–

சாங்கியத்தின்‌ தன்மையின் மேற்‌ புந்தித் தக வுரைத்தே
னீங்கு கன்ம யோகத் தியல்பிலி தன்‌–பாங்கியம்பக்
கேளாயிப்‌ புத்தியினைக் கிட்டவினைக்‌ கட்டினை நீ
மூளா மனிற்றி முயன்று — 36–

செய்தவறங் குன்றாது சேரா தவஞ்சிறிது
மெய்தருமங் காக்கு மிகு பயத்திற் -பொய்தவிரும்‌
புத்‌தி தீர்‌ வொன்றாகும்‌ புன்மைப்‌ பல நினைவா
மத்தி ரந்தீர்‌ வில்லா தவர்க்கு, –37–

புன்பயனாற்‌ பூத்தவுரை போதப்‌ புகல்வரறி
வென்பதனை யில்லா ரெழின்மறையி–னன்பகருஞ்‌
சொற்பயனே பற்றிய திற்றொல் பொருண் மற்‌ றில்லென்‌
பார்‌, கற்பதனைக் காணாதார்‌ கண்‌–38–

காமத்தை யுன்னிக்‌ கணிசித்து மேலுலகைச்‌
சேமத்தை யிட்டுச்‌ செளித்துழலு–மீமத்‌
தியற்றி தரும்‌ போகத்தி லின்பத்தை நோக்கி
முயற்றி யுட னே யெழுவர்‌ மூண்டு, –39–

போகமிகு செல்வத்துப்‌ பூண்ட தன் னெஞ்சழிந்தார்க்‌
கேக வகை யுற்ற வெழிற்புந்தி.-யோக
மமைவுறா துள்ளத்தி லாதலால்‌ வேதச்‌
௪மைவுதான்‌ கேளாய்‌ தரித்து. –40–

முக் குணத்தோர்‌ பண்புரைச்கு மூண்டுமறை நீமன்னா
வக்குணத்து மன்னே லவாநெஞ்சா-.-யிக் குணத்தாற்‌
சாரு துய ரற்றென்றுஞ்‌ சத்துவத்தி னப்புறத்தி
லாருமியோ கக்சேம மற்று, –41–

எங்கு நிறை நீ ரெழிற்றடத்து யாவர்க்கு
மிங்கு மருவுபய னெவ்வளவா…_மங்கனைத்‌து
வேதத்து மந்தணற்கு வேண்டுபய னவ்வளவாம்‌ ‘
போதத்துக் கீடாப்‌ புணர்ந்து–42–

கருமத்தே யுன்‌ற னதிகாரங் கண்டாய்‌
வருமப்‌ பயனிலணு மன்னா–தொருமித்‌த
மற்றதனுசக் கேதுவா மன்னேல்‌ கருமமலா
வெற்றமைவில்‌ வேண்டா விருப்பு,–43–

பேறிழவி லொத் தமைத்‌துப்‌ பேணு நசை துறந்து
தேறி வரும்‌ யோகத்துச் சேர்ந்து நீ -யாறியமைந்
தித்‌ தகைவி லாங்கரும மேந்திய நீ யோகந்தான்
ஓத்த லெனவுரைப்ப ரோர்ந்து,–44–

தக்கமரும்‌ புத்தியோ கத்திரற் றனஞ்சயனே
யக்கருமந் தூர வவரங்கா–ணொக்கவரும்‌
புத்திக்கே நிற்கும்‌ புகல்விருப்புப்‌ புல்லியா்கா
ணத்தித்தே செய்யு மவர்‌–45–
,
இந் நிலையிமற் புத்தியுட னேய்ந்தா ரிருமைவினை
தந் நிலையை யிங்கே தவிர்வர்கா -ணன்னிலையான்‌
மெய்கருதி யோகத்து மேவுதிர நீ யோகம் காண்‌
செய்கருமசத் தாகுஞ்‌ சிறப்பு–46–
,
தீர்ந் த மனத்துத் தெளிவுற்றார்‌ செய்கருமத்‌
தார்ந்த பயனை யறத்துறந்து —சேர்ந்த
பிறப்பணையும் கட்டவிழ்த்து பெய் துயர் நோய் தீர்ந்த
சிறப்பு அணைவர் நன்மையினைச் சேர்ந்து –47–

எவ்வளவி னின்மோகத் திற்கலக்க மாமிதனை
யிவ்வகையே புந்தி யெழக் கடக்கு–மவ்‌வளவிழற்
கேத மருவுதி நீ கேட்பதிலுங்‌ கேட்ட திலும்
ஏத மிகும் பயனா மென்று, –48–

ஒதுமென்‌ பாற்கேள்வி யுற்றமைந்த புந்தி யுயிர்‌
மீது சமாதிக் கண்‌ மிசச் சலியாப்‌–போதினீ
வந்தி யோகத்‌ துணர்வை மன்னுறுதி யாங்கதுகாண்‌
புந்தி யோகத்தின்‌ புணர்ப்பு, –49–

என்று திருமா லியம்பு நிலை கேட்ட
வென்றி விசயன்‌ மிக விரும்பி–நின்‌ற
வறிவுடையான்‌ மாற்ற மவனிலைமை பேற்றின்‌
பிறிவுறையா யென்றுரைத்தான்‌ பின்‌,–50–

ஆங்கவனுக்‌ கண்ண லது வுரைத்தா னாங்குயிரின்‌
பாங்கதனாற்‌ ருனே படிந் தமைந்து —தாங்கரிய
வெண்ணரிய காமங்க ளெல்லாந் துறக்குமவன்‌
றிண்ணறிவ னாகுமெனச்‌ செப்பு, –51–

துன்பத்தி லென்றுந் துளங்கா மனத்தனா
யின்பத்‌ திடையாசை யில்லவனாய்ப்‌—புன்‌ பற்றி
லன்பு பயம்வெகுளி யற்றவனே யாங்குணர்வின்‌
வன்பு பெறு முனியா மற்று, –52–

எங்கு மருவு நசை யேது மறத்துறந்து
தங்கு நலந்தீங்கு தானணைந்தே–யங்கங்கு
முந்து முகப்பு முதிர் வெறுப்பு மற்றார்க்கு
வந்து நிலையா மதி, –55–

௮ங்ககக ளாமை யகத்தடக்கு மாறுபோ
லிங்கைம்‌ பொறிக ளியல்பனைத்தும்‌–பொங்கைம்‌
புலனின்‌ றகத்தடக்கும்‌ போதத்‌ தனக்கு
வலனின்ற வேற்குமே வந்து –54-

துய்யாது தான்றுறந்தான்‌ றுய்த்த பொருள்‌ விட்டாலு
மெய்யாருஞ்‌ சங்கம்‌ விடாதிருக்கும்‌–பெய்யவே
சென்று பரமாகுஞ்‌ சீருயிரைச்‌ கண்டக்கா
னின்றதவு நீங்கு நெகிழ்ந்து — 55–

முயன்றிடினுந் தன்புலன்கண்‌ மொய்ம்பான்‌ மனத்தை
யியன்று நிலை தொலைக்கு மென் பா–னயந்தே
யவையென்றுங்‌ காக்சி லவன் கண்‌ வசமா
நவையின்று நிற்குமதி நன்கு.– 56–

புன்பொருளை யுள்ளும்‌ புமானுக்‌ கதிற்சங்கம்‌
பின்பதனாற்‌ காமமதிற்‌ பின்‌வெகுளி–யன்பதனான்‌
மோகமதிற் பொன்று மிருதியதிற்‌ புத்தியழி
வாகுமதிற்‌ றான சிக்கு மாங்கு. –57–

உகப்பு வெறுப்‌ பற்றுத் தன்‌ னுள்ளாற்‌ பொருள்க
ளகத்‌து .வசமாம் புலனா லார்ந்தோன்‌–மிகத்தெளிவு
சேரு மதிற்றுயருசந் தீருந் தெளிநெஞ்சி
லாரு நிலைப் புந்தி யாசு.– 58–

யோக மென்‌ பக்க லிலானுக்குப்‌ புந்தியில்லை
யேக நினை வவனுக்‌ கில்லையுமாம்‌–போகத்திற்‌
சாந்தியவ னுக்கில்லை சாந்தியில னுக்கெத்தா
லேந்திவரு மின்பந்தா னீங்கு,– 59–

ஏயு மனந் தோய்புலனி லேதுடனா மாதுணர்வை
வாயுமரத்‌ தோணியென மாய்க்குமால்‌–தோயும்‌
பொருளிடத்து நின்று புலன்மீட்க வாங்கே
தெருளுறைப்புச் சேருஞ்‌ சிறந்து — 60–

யாது வுலகர்க்‌ கிருளிரவா மாங்குணர்ந்து
போத மருவும்‌ புலன் வென்றோ–னேதி
லுணர்வுறுவ ரீங்கிவர்க ளுற்றுணர்ந்த யோகிக்
கிணரில்லா தாகு மிருண்டு, –61–

நிறைந்து நிலை சலியா நீள் கடல்வாய்‌ நீர்யா
றுறைந்த வகையதுபோ லள்ளே–மறைந்தெவன்பால்‌
காமங்க ளெல்லாங் கரக்குமவன்‌ சாந்தி பெறு
மேமம்‌ பெறான் காமி யிங்கு, –62–

காம மவை யனைத்துங்‌ கைவிட்‌ டவணசையற்‌
றேமமுற யானெனதென்‌ றிவ் விரண்டி–னாம
மறத்துறந்து நின்றா னவன் கண்டாய்‌ சாந்தி
பெறப் பயின்று நின்றான்‌ பெரிது –. 63–

இது காண்‌ பிரமமெனு மிவ்வுயிரின்‌ றன்மை
யிது காண்‌ பெறின்‌ மயக்க மெய்தா..னிதுதன்னி
னந்த காலத் தமர்ந்தப் பிரமானந் தமெனுஞ்‌
சந்தமாந் தன்மை பெறும்‌, –64–

ஆய னருள் கீதை யாய்ந்த விரண்‌டா மோததின்‌
மேய வுயிர்நிலைமை மெய்ம்முடிவு– தூய் மனத்த
ரன்றதுணி வற்ற லமைந்தா ரமர் பொருள்க
ளென்ற வகை தான் முடிந்த திங்கு–

———-

3: கர்ம யோகம்

மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
ஏன்றா வதுகரும மென்பதனா – லான்றமைந்து
தன்கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
வன்கருமந் தீரும் வகை.

முன் உரைத்த புந்தியினும் –
முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட ஞானயோகத்தைக் காட்டிலும்,
ஏன்று ஆவது கருமம் – (அனைவரும்) ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருப்பது கரும யோகமே,
என்பதனால் – என்னும் காரணத்தினால்,
ஆன்று அமைந்து – மற்ற பலன்களில் பற்றில்லாமல் இருந்து கொண்டு, கர்த்ருத்வ த்யாகத்தையும் செய்து கொண்டு,
தன் கருமம் செய்யுமதே – தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களைச் செய்வதே,
வன் கருமம் தீரும் வகை – வலியதான புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்கும் வழிகளுள்,
தக்கது – (அனைவருக்கும்) தக்கது,
என – என்று,
மூன்றாம் ஓத்தாகும் இது – இந்த மூன்றாம் அத்தியாயம்,
மிக்கு உரைக்கும் – உறுதியுடன் கூறும்.

நாதா கருமத்தி னன்றாகிற்‌ புத்தியினை
யேதாக விக்கரும்த தேவுதி-சூதார்ந்த [னன்றியெனத்‌
வுன்னுரை யென்‌ லுண்மயக்கு மொன்றுரையென்‌
தன்னுரை செய்‌தான் விசயன்‌ தான்‌.– 1–

௮ண்ணலவன்‌ கேட்க வதனியல்க ளங்குரைத்தா
னெண்ணமருஞ்‌ சாங்கியருக் கின்னறிவு-வண்ண நிகழ்‌
சீருடைய யோகியர்க்குச்‌ செய்கரும மென்றிரண்டும்‌
பேருலகிற் சொன்னேன்‌ பிரித்து, –2–

இட்டத்‌தாற் கன்மத்‌ திழியார்‌ வினை யொழியார்‌
விட்டத்தாற்‌ பேறதனை மேலடையார்‌-தொட்டொன்‌
செய்யாரிறைப் பொழுது நில்லார் செறிந் தியல்வர்‌ | றைச
மெய்யார்‌ குணத்தெவரு மிக்கு,– 3–

கருமக் கரணங்கள்‌ கட்டித்தன்‌ னெஞ்சில்‌
வருமப்‌ பொருணினைந்து மன்னிப்‌–பெருமைவினைக்‌
கைம்மையினாற்‌ பாவிக்குங்‌ கள்ளக்‌ கருத்துடையான்‌
பொய்ம்மையினா னென்றே புகல்‌,– 4–

நெஞ்சாற்‌ புலனடச்கி நேர் கரும யோகத்தை
யெஞ்சா துழல் கரும விந்தியத்தாற் –றுஞ்சாது
தான்றொடங்கி நன்றியலுந் தன்மையுடன் றொத்தற்றான்‌
வான்றொடர்ந்த வண் புகழான்‌ மற்று, –5–

நின்று நீ செய்யு நியதக் கருமத்தை
யென்றுமிது மற்றறிவி லேற்றமுடைத்‌… துன்ற
னுடனடப்பு மோடா தொருகரும மற்றா
லடலடர்த்த தோளா யறி, –6–

ஐவகைய வேள்வியினுக் காகாக்‌ கருமங்கண்‌
மெய் வகையே கட்டு மிக வுலகை–யிவ் வகையா
யாங்கதனுக் காக வமைந்துன்‌ னசையை விடுத்
தீங்கிதனை நின்றே யியற்று, –7–

வேள்வியுடன்‌ மானிடரை வேதாப்‌ படைத்து முனங்
கேள்வி யவர்க்குரைத்தான்‌ கேண்மையுட–நூழ்வி
மித்தாலே துய்பய னுற்றிடுமி னுங்களுக்கிங்கினையா
கெத்தாலு மின்பளிக்கு மீது. –8–

இவ் வேள்வி யானீ ரிறைஞ்சிடுமின்‌ வானோரை
யவ் வேள்வி யாலவரு மாக் கத்தா _லெம்வாறு
மும்மை யளிப்ப ரொருவர்சக் கொருவர்நீ
ரிம்மை மறுமை யுறு மிங்கு –9–

௮ன்ன பெரு வேள்வியா லாங்கிறைஞ்சப்‌ பட்டமரர்‌
மன்ன பெரியவள மற்றளிப்ப–ரின்னே
யவர் தந்த போக மவாக்களியா துண்பான்‌
கவர்கின்றான்‌ கள்வனே காண்‌, –10–

வேள்வியினின்‌ மிக்கதனை யுண்பார்‌ விடப்படுவ
ரூழ் வினைக ளின்‌ தொடர்சசி யுண்ணின்‌றுங் கேள்வியிலாத்
தன்னுடம்புக் காகச் சமைத்துண்பார்‌ பாவத்தை
முன்னுடனே யுண்பார்‌ முயன்று, –11–
.
அன்னத்தாற்‌ பூதங்க ளுண்டாகு மன்னந் தான்‌
மின்னத் தாழ்‌ மாரியான்‌ மிக்கியலு–மன்னத்தான்‌ ,
மாரியது வேள்வியால்‌ வந்தியலு மவ்வேள்வி
காரியம தாலாகுங்‌ காண்‌, –12–

இக் கருமங்‌ காய மெனச்சேர்‌ பிரமத்தா
மக்கருமஞ்‌ சீவனா லாங்‌கதுவாஞ்‌–சிக் கெனவே
யெங்கு நிகழ் வுடலா மிப் பிரமம்‌ வேள்வியிலே
தங்கு நிலை யமருந் தான்‌, –13–

இப்படியே யீங்கமைந்த சக்கிரத்தை யேவன்றான்‌
மெய்ப்படியே தான் சென்று மேவலுறா –னெப்படியும்‌
பாவி யுயி ராகிப்‌ பழுதே படர் பொறிப்பட்‌
டாவி சுமப்பா னவன் –14–

தன் விரும்பித்‌ தன்னுகந்து ,தன்னமைந்த ஞானிக்குப்‌
பின்‌ விரும்பிச் செய் கருமம பெற்றில்லை-முன்‌ விரும்பிச்‌
செய்தத்தா லொன்றில்லை செய்யாத்த தாலில்லை
வையத்தா தும்பயனின்‌ மற்று, –15–

ஆதலினாற்‌ பற்றற்‌ றமரியற்பாய்‌ நின்கரும
நீ தகவு தன்னுடனே நின்றியல்வாய்‌–மீததனைப்‌
பற்றற் றியன்றார்‌ பரமா முயிரினையே
பெற்றத்தை நின்றுய்யும்‌ பின்‌, –16–

முன்னஞ்‌ சனகாதி யோகியரு மூண்டியன்‌ற
வன்ன கருமத்தா லானபயன்‌–மன்னினர்கா
ணிந்த வுலக மிசைவகையும்‌ பார்த்தியலா
யந்த வுயர் கரும மாய்ந்து.–17–

மேல் ஒருவன் செய்த மிகு கருமம் தான் எது என்று
ஏலுமதின்‌ மற்றிங் கியல்சனமுஞ்‌–சால வவன்‌
யாதைத் தன்‌ னங்க மென வியலு மிவ்வுலக
மாதைப்பின்‌ செல்லு மமர்ந்து.– 18–

மூவுலகுரந் தன்னுள்ளு முன்பெய்‌த தாய்ப்பின்பு
மேவுமியல்‌ பாலெய்.த வேண்டுவதொண்‌ட றாவதெனக்‌
கில்லையா யே.பிருக்க வெல்லாக்‌ கருமத்து
மொல்லையா லின்‌றி யல்வ னோர்ந்து — 19–

யானியலா திங்கொழியி லென்‌ வழியைப்‌ பின்செல்வர்‌
மானிடர் மற்றிவ்வுலக மாயுமாற் .றானிலைசேர்‌
நன் மரபு தான் கலக்கி நானே யிவர் தம்மைப்‌
புன்மையினி லுய்த்தேனாய்ப்‌ போம்‌. –20–

நசை.புடையார்‌ செய்கைபோன்‌ ஞானி நசையின்றி
யிசை யுலகுக் காக வியல்யான்‌–பசை கருமத்‌
தானவறி வில்லார்க்‌ கதினெஞ்சைப்‌ பேதியேற்‌
றானிசைவு செய்கவதிற்‌ சார்ஈ்‌து,– 21–

மெய்க்கருமந் தன்குணத்தான்‌ மேவிவரும்‌ வேறறியா
னிக் கருமம்‌ யான் செய்தே னென்றிருக்கு–மக்கருமத்‌
தேயகுணம்‌ வேறறிவா னிக்குணங்க டன்னிற்றா
னாயவென வுன்னு நசை யற்று. –22–

முக் குணத்தான்‌ மூடரா மாந்தர்‌ முயல் கரும
மக்குணத்து நாளு மமர்வுறுவர்‌–மிக்க
வறிவுடையா ரல்லாரை யாங்கசைவு செயயார்‌
செறிவுடைய ஞானத்தன்‌ சேர்ந்து –23–

என்னிடையே யிக்கரும மெல்லா மினிதிருத்தி
நின்னிடையின்‌ மிக்கமர்ந்த நெஞ்சினான்‌.-மன்னியபே
ராசை யுட னீமமதை யற்று அங்கு அமர் முயல்வா
யாசையுட னுள் வெதுப்பற்‌ ரார்ந்து –24-

எவர்‌ விருப்போ டிழவின்‌றி யென்மதத்தை
மேவி முயல்வார்‌ விடப்படுவார்‌–பாவத்தா
லாங்கவர்க ளல்லா ரறிவழிந்து மூடராய்த்
தீங்கமர்வ ரென்றே தெரி,–25–

தன்னியல்வுக்‌ கீடாகத் தானியலும பேரறிவு
மன்னியவ னானமையு மற்றெயையு… மந் நிலையே
தன்செய்தி யாகுதலாற் றான்விலக்க நூலுரைப்ப
தென்செய்வதாக விசைந்து –26–

உற்றபொரு டோறு முகப்பு பெறுப்பவைதாம்‌
பெற்ற நிலைபினவாம்‌ பேசுங்கான் –மற்றவற்றை
யாங்கணைவா னல்‌ல னவையிவனுசக் கெவ்வாறுந்
தீங்கமைக்குஞ்‌ சேரச செறிந்து –27–

குறைந்திடிலுந் தன் கருமம் குற்றமா மேலே
நிறைந்தியலு மற்றை யதி னேரே -மறைந் திருந்து
தன கருமத் தைச் செயினுந் தானனறு வேறான
வன கருமத் தசசம வரும. –28–

பின்பு விசயன் பெருமானே பாவத்தை
யன்பிலனே லும் புருட னாஙகெததால–வன் பதனி
லேவுறறான் போல வியலு மெனவ்வனுக
காவறறான் சொன்னா னமைநது, –29–

காம மிதுதான கடுங் கோபமுமாதித்
தீமை நடுக் குணததுச் சோந்திககு– மாமதெலலாம
வாரி யுடன புசிக்கு மாபாவ மாமிதனை
வைரி யெனவே மதி,– 30–

தூ மத்தாலங்கி சுணை யழுக்காற் கண்ணாடி
தாமக கருவுற பாக கட்டதனா -லே மத்தச்
சூழ்வுற்ற௱ தெனனவே சூழபபடடு இங்கு அதனாற்
றாழ்வுற்ற திசசெந்துத் தான, –31–

மனனறிவி னுக் கென்றும் வைரியாயக் காமமெனு
மனனவுரு மேலியதா யாங்கு அனைத்தும் துன்ன விடும்
போது நிறை யாதமையாப பொலலாங்கு இதனாலே
மீ.துணர்வு சூழ்ச்சி யுறும் மிக்கு –32–.

புலன்கண்‌ மனமதுவாம்‌ புத்‌தி நிலை யாகு
மலங்கொளிதற்‌ கென்பர்‌ மதித்தோர்‌–சலங்கிளரு
மின்னவிது தானிவற்றா லீங்கிவனைச்‌ தான்‌ மயக்கு
மன்னறிவு தன்னை மறைத்து — 33–

ஆதலா னீபரதா வாதியிலே வைம்புலனைக்‌
காதி யுனதறிவு கட்டழித்‌ து—மீதியலிப்‌
பாவத்தை நீக்கும படிபா ரதுதன்னா
லாவத் தவைதரா லாங்கு, –34–

புலன் கண் மே லாமென்பர்‌ போதஞ்‌ செறுக்க
வலங்கொண்‌ மனமதன் மேன்‌ மன்னும்‌–புலங்கிளரும்‌
புந்தியதின்‌ மேலாகும்‌ புந்தி தனிற்‌ காமந் தான்‌
குந்தி சிறு வாபரமாக் கொள்‌, –35–

புந்திக்கு மேற்காமம்‌ புந்தித்துப்‌ புந்தியாற்‌
சந்தித்‌ தறத்து மனஞ்‌ சார்த்‌தி நீ –வரந்தியலுஞ்‌
சேமமிக வீழ்த்‌துந் தீங்கி யற்றும்‌ வன் பகையாக
காமமது நீத்தல்‌ கடன்‌. 20

மெய்யமரும்‌ புததி விடாதென்று ரின்றிவணுஞ்‌
செய்ய கருமச்‌ சிறப்பதனை. வையத்து
வாய்ந்த புகழ்க்‌ கீதை வளர் மூன்றா மோத்துரைத்த
வேய்ந்த பொருண் முடிந்த திங்கு–

————-

4: ஜ்ஞான யோகம்:

நாரா யணன்கீதை நாலாமோத் திற்றனது
சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
மேகப் பலபரிசா வேய்ந்து.

நாராயணன் – (கண்‍ணனாய் அவதரித்த) நாராயணன்,
கீதை நாலாமோத்தில் – கீதையின் நாலாம் அத்தியாயத்தில்,
தனது சீரார் பிறவிச் சிறப்புடனே – பெருமை மிகுந்த தன் அவதாரச் சிறப்போடு கூட,
ஏராரும் யோகத்துடன் – சிறப்புற்ற ஞானத்தோடு,
ஏகம் கருமம் – ஒன்றான கருமம்,
பலபரிசா ஏய்ந்து – பல வகைகளாக இருந்துகொண்டு,
முற்று இயலும் ஆறு – (ஜ்ஞான யோகத்தை இடையிடாமலே) பரிபூர்ண ஸாதனமாயிருக்கும் வகையை,
உரைக்கும் – உபதேசிக்கிறான்.

இந்த யோகத்தை யிரவிக்கு யானுரைத்தேன்‌
வந்த வவன் மனுவுக்‌கு ஆங்கு உரைத்தான் –மைந்தனா
மிக்குவா குக்கவனு மேன்றுரைத்தான் இப்படியா,ற்‌
றக்கு வாய்ந் துற்றது தான்‌. –1-

இன்னே பரம்பரையா லேய்ந்ததனை யீங்கறிவர்‌
முன்னே யரைச முனிவர்கள்‌–பின்னேபோய்சக்
காலத்தி னான்‌ மறைந்து கை கழிந்து விட்டதே
ஞாலத்தில்‌ யோத நலம்‌–2–,

போதமிகு மிந்தப்‌ புராதனமாம்‌ யோகத்தை
யேத மற வுனக்கு இங்‌கு யானுரைத்தேன்‌–காதலமர்‌
பத்தனுமாய்த்‌ தோழனுமாய்ப்‌ பண்பான்‌ மறைப்பொருளா
முத்தமமீ தென்றோர்‌ந் துகந்து –3–

ஆங்கு விசயன்றா ன் ஆதித்தன்‌ முன் பிறந்தா
னீங்கு நீ பின் பிறந்தா யெங்கன் நான்‌–பாங்கினின்‌
முன்னுரை செய்‌ வண்ணம்‌ மித முற்றுணர்வ னென்றுரைக்கத்‌
தன்னுரை செய்‌தான் பரமன்‌ தான் –4–

என் பிறவி யான தியம்பிரற் பலவாகு
முன் பிறவி யானயையு மொக்குமவை–தன்‌ படியை
யானறிவன் எல்லா மிகல் விசயா விங்கு
தானறியாத் தகைமை தான்‌,–5–

மேவ பிறப்‌ பில்லனுமாய்‌ மெய்த தன்மை குன்றானாய்‌
மூவுலகுச்‌ கெண்ணு முறையிறையாந் –தேவுடனே
யென்னுடையா மூர்த்தியினையெய்தியே யென்னிணைவ
தன்னியல்வாலே பிறப்பன்‌ சார்ந்து –6-

அறங் தளரு மக்கால மெக்கால மாங்கே
மறங் கிளர்ந்து பாவம்‌ வளரும்‌–பிறங்கரசர்‌
வெந்தைத் தருவிக்கும்‌ வில் விசயா வக்காலத்‌து
என்னைப்‌ பிறப்பிப்பன்‌ யான்‌, –7-

நல்லார்க டம்மை நலம் புரிந்து காத்தற்கும்‌
பொல்லாரைப்‌ பொன்று நெறி போக்கற்கும் –சொல்‌லாரு
முந்தை யற நாட்ட முய்த்தற்கு நான் பிறப்பன்
இந்த யுகம் தோறும் உகந்து –8–

என் பிறவி யென் கரும மிவ்வண்ணந் திவ்ய மென்‌
றன்பினொடு முண்மை யறிவுற்றான்‌–முன்‌ பிறவி
யேய்ந்த உடல் விட்டே யெதிர்ப்பிறவி யேவாதே
யாய்ந் தெனையே யெய்து மவன்‌,–9-

நேயம்‌ பயம் வெகுளி 8ீக்கி யென்‌ றன்மையரே
யாய திறத்தா லடைந் தென்னைத்‌–தூய
வறிவாரந் தவத்தா லனேகரென்‌ றன்மை
செறிவார்கள்‌ பூதராய்ச்‌ சேர்ந்து,–10–

என்னை யெவ ரெவ்வா றடைந் தியல்வர்‌ யானவரை
யன்னவகை யான்‌ மிகவு மன்புற்றே –பின்னடைந்து
காட்டுவன் மற்‌றாதலினா லென்னெறியைக்‌ காதலினா
னாட்டெவரும்‌ பின் செல்வர்‌ நன்கு. –11-

கரும பயன்‌ காமித்தார்‌ காமத்தா லிங்கே
யொருமையுடன்‌ றேவருட னொன்றி–யருமையினாற்‌
றாங்கி நின்றஞ்‌சா நிற்பர்‌ தாழா துலகு தனி
லாங்கருமத்‌ தானபயனார்ந்து.–12–

வண்ணங்க ணாலு மருவுங்‌ குணங்களுடன்‌
பண்ணுங்‌ கருமம்‌ பலவகையா–லெண்ணி
வகுத்தேயான்‌ செய்திடினு மற்றதுசெய்‌ யேனா
மிகுத்தே யெனை நீ வேறு,– 13–

ஏது மிழிசா வெனைக் கரும மென்றெனக்கிங்
கோது பயனாசை யொன்றிலையென்‌று –நீ துணர்ந்தே
யென்னை மிக வறிவான்‌ யாவ னவன் கண்டாய்‌
முன்னை வினை யகல்வான்‌ முற்று, –14–

இன்னே யறிர்து கருமத்தை யென்றி யன்றார்‌
முன்னே வீ டெய்த முயல்வாரு–மன்னே
தொல்லையார்‌ தாமுயன்ற தொல்கருமந் தன்னையே
யொல்லையாய்‌ நின்றியல்வா யுற்று, –15–

ஏது கருமமாங்‌ கேதுணர்வா மென்றறியார்‌
மூதிணர்வினின்றாரு மோகிப்பர் –மீதுனக்கு இங்கு
அக் கருமந் தன்னை யமர்ந் துரைக்கே னாங்கதனை
மிக்குணர்ந்தே தீங்க்கல்வை விட்டு, –16–

இக்கருமத்‌ துக்கு மிதில்விவித மானதுக்கு
மக்கரும மல்லா வறிவுக்கு—மிச்க
வறிவுடைமை வேண்டு மது வுரைக்‌கி லாங்குப்‌
பிறிதுணர்வு தானரிது பின்‌,–17–

கன்மதகின்‌ ஞானத்தைக்‌ காணு மவனெவன்றான்‌
கன்மததின் ஞானத்தைக் கண்டியல்வான்‌–நன்மைக்கே
தக்க பெரும் புத்தி சமைந்தா னவனவனே
யெக்கருமஞ்‌ செய்தானும் இங்கு .– 18–

எலலா முயற்சியுமொன்‌ றிச்சியா தோர்ந்தியல
வலலானைப்‌ பண்டிதனா யாயந் துரைப்பர்‌—நலலா
ரறிவா லவன்வினைக ளெல்லா மழிந்தே
பொறி வாயிற்‌ பஞ்செனவே போம்‌, –19–

கருமப்‌ பயனசையைச்‌ கைவிட்டே யெனறு
மொருமித துகந்து புறத் தொட்டாப்‌-பெருமையோன்‌
மெய்யார் கருமத்து மேலியன்றா னேலுமவன்‌
செயயான தொன்றுஞ்‌ செறிந்து — 20–

ஆசை துறந் துள்ள மமைந்த வுணர்வினனாய்ப்‌
பாசமுட னெப்பொருளின்‌ பற்றற்றுப்‌–பேசியதன்‌
சாரீர கன்மமே சார்ந்தியல்வான போந்தணையான்‌
சேரீரு பாவமுஞ்‌ சென்று, –21–

பேறிழவி லொத்திருந்து பெற்றததா லுள்ளமைந்து
கூறு மிரு துயரிற்‌ கூடாதே- வேறொருவன்‌
தன்பாற்‌ பொரறாமையிலான்‌ றன்கருமஞ செய்திடினு
மன்பாற்‌ பிணிப்புண்ணா னங்கு,–22–

போன நசையினனாய்ப்‌ புன்‌ புலனின்‌ முத்தனாய்‌
ஞான நிலைகொண்ட நன்னெஞ்சா–யானதொழில்‌
வேள்வியினுக் காக விரும்பி முயல்வானுக்‌
கூழ்வினையெல்‌ லாம்போ முடைந்து, –23–

செய்யுந் தொழில் கண்மணஞ்‌ சேரும்‌ விதியதனிற்‌
பெய்யு மவியாற்‌ பெறுந் தொழின்‌–மெய்யணைந்து
தான் பிரம மென்றுன்னித்‌ தன் பிரம கன்மத்தான்‌
வான் பிரமத்‌ தன்மையுறும்‌ வாய்ந்து, –24–

வேறுசில யோகியர்கண்‌ மேலான தேவரிடைசக்
கூறுபடு மெச்சங்‌ குறித்தியல்‌வ–ரீறில்‌
பிரமமா மங்கிப்‌ பிறரெச்ச முய்ப்பா
ரூரமத்தா லெச்சவுறப்‌ புற்று, –25–

அறிபொறியை யான்றமைத லாமனலிற்‌ பெய்வர்‌
பிறிதுசி ல ரோமமெனப்‌ பேணிப்‌–பொறியனல்வாய்‌
வந்தியலு மைம்பயனை வாரியுட னோமிப்பர்‌
செந் தொழிலி னின்றார்‌ சிலர்‌.– 26–

எல்லாப் புலனி னியல்வும்‌ பிராணனாற்‌
செல்லா வி.பலுஞ்‌ செயலனைத்துஞ்‌–சொல்லாரு
முள்ளமைந்த, யோகவன லுய்ப்பர்‌ சிலருணர்விற்‌
சொன்னவது மேல் விளக்கிற்‌ கொண்டு,–27–

பொருளெச்சம்‌ பொன்றாத்‌ தவவெச்சம்‌ யோகத்‌
தெருளெச்சம்‌ சேர்வர்‌ சிலர்கண்‌–மருளற்ற
வாய்ந்த மறை யுணர்வா மன்னெச்ச மேவுவரே
யேய்ந்த வதிவிரக ரிங்கு. –28–

மற்றும்பி ராணாயா மத்தியல்வார்‌ வாயுகதி
யுற்றுத்‌ தகைந் தங்குடனாக்கச்‌–செற்றுப்‌
பிராண னபானனிடைப்‌ பெய்த லபானன்‌
பிராணனிலுய்த்‌ தோமிப்பர்‌ பேர்த்து,– 29–

உண்ணா வவர்நியத ; மொல்லைப்‌ பிராணனவை
திண்ணார வங்க வற்றிற்‌ சேர்விப்ப–ரெண்ணார்ந்த
வெல்லாரு மெச்ச மவரறிவ ரெச்சத்தாற்‌
பொல்லா வினையொழியப்‌ போந்து,– 30–

ஆங்கெச்ச மிசச மமுதூண்‌ விரும்புமவ
ரோங்கு பிர மத்தை யுற்றணைவர்‌–பாஙகாக
விவ் வுலக மில்லெச்ச மில்லார்க்கு மேலாகு
மவ் வுலக மத்தாலுண்‌ டாம, –31–

இன்னே பலவகையா லெச்சம்‌ பிரமத்து
முன்னே பரந்த முகஞ்செய்தே–யன்னவை
தான்கருமத்‌ தானவெனச்‌ சார்ந்தறி நீ யாங்குனக்கு
வான்கருது முத்தி வரு மற்று, –32–

பொருண் மயமா மெச்சத்திற் போதமிகு”மெல்லாந்
தெருண் மயமா மெச்சந் தெளிதாங்–கருமமெல்லாம்‌
ஞானத்து வந்து முடிந்தே நலம் பயக்கு
மானத்தைப்‌ பார்த்தான்‌ மதித்து –. 33–

௮ந்த வறிவை யறிநீ யடிவணங்கிச்
சிந்தை யுடன் கேட்டுச்‌ சேவித்தே–முந்தறிவை
யொத்துபதே சிப்ப ருனக் குணர்ந் தோராய்த்‌
தத்துவத்தைக்‌ கண்டிருப்பார்‌ தாம்‌, –34–

யாததனை யிங்கறிந்தா லிவ் வண்ண மோகியா
யாததனா லுன்னிடத்து மென்னிடத்து –மேதமறப்‌
பூதங்க ளெல்லாம்‌ பொருந்து நெறி தாண்டி நீ
யாதங்‌ கறிவென்‌ பதம்‌, –35–

பாவிகளெல்‌ லாரினு நீ பாவத்தை மிக்கயன்று
மேவதி யாகிலுமிம்‌ மெய்யுணர்வாற் -றாவிவருந்
தெப்பத்தை மேற் கொண்டு தீவினையாம்‌ வெங்கடலைத்‌
தப்பக் கடப்புதி நீ தான்‌.– 36–

அங்கி விற கெல்லா மெரிப்பதுபோ லவ்வறிவு
பொங்கிவரு கன்மம்‌ பொடியாக்கு–மிங்கில்லை
மெய்யறிவிற்‌ றூயது தான்‌ மிக்க வதும்‌ யோகி தான்‌
பையவெய்து நெஞ்சிற் பயின்று–37–,

ஆதரவு மிக்கா னறிவு பெற மாங்கதனின்‌
மீதமருந் தன்மையான்‌ வென்று புலன்‌–போதமது
பெற்றொல்லை யாங்கே பெரிதான சாந்தியினை
யுற்றெய்தும்‌ யோகி யுணர்ந்து, –38–

அறியானா யாதரவு மற்றே மயச்கஞ்‌
செறிவான்‌ விநாசத்தைச்‌ சேரும்‌–பொறி வாயில்‌
வந்தலா திம்மை மறுமையுட னின் பந்தான்‌
சந்தேகப்‌ பட்டான்‌ றனக்கு, –39–

ஆன யோ கத்தா லமர்கருமத்‌ தன்பற்று
ஞான யோகத்‌ தான் மயக்க நன்கறுத்து –வானையோர்‌
நெஞ்சந் தனைக் கரும நேர் பிணியா வாகியவத்‌
தஞ்சந் தனஞ்செயனே சார்‌, –40–

ஆதலினா னீ.யுள்‌ யறியாமை யால் வந்த
போத மயக் கத்தைப்‌ புகருடைய–மீதறிவாம்‌
வாளா லறுத்து வளர் கரும யோகத்து
மூளா வெழு நீ முயன்று,– 41–

எண்று கரும மிகை யடனே யோகத்தை
நன்று புணர்லித்து நற் கீதை –யொன்றிய விந்
நாலாமோத்‌ தாலுரைத்து நாதனருள்‌ செய்த பொருள்‌
மேலாய்‌ முடிந்ததிது மிக்கு,

————-

5 – கர்ம ஸந்யாஸ யோகம்:

அண்ண லருள்கீதை யஞ்சாமோத் துக்கருமந்
திண்ண முனர்வதனைச் சேர்ந்தமைந்த – வண்ணமது
சிந்தை தெளியத் தெளிவுற் றுரைக்குமதே
முந்தை மறைநெறியை மூண்டு.

அண்ணல் -ஸ்வாமியாகிற கண்ணன்,
அருள் – அருளிச் செய்த,
கீதை – கீதாஶாஸ்திரத்தின்,
அஞ்சாம் ஓத்து – ஐந்தாம் அத்தியாயம்,
முந்தை மறை நெறியை மூண்டு – பழையதான வேதமார்க்கத்தைப் பின்பற்றி,
கருமம் – கர்ம யோகம்,
உணர்வு அதனை திண்ணம் சேர்ந்து அமைந்த வண்ணம் அது – “நான் கர்த்தாவல்லன்” என்னும் அறிவோடு
உறுதியாகச் சேர்ந்து பொருந்தியிருக்கும் தன்மையை,
சிந்தை தெளிய – (அர்ஜுனனுடைய) மனம் தெளிவடையும்படியாக, தெளிவுற்று உரைக்குமதே – மிக விளக்கமாகச் சொல்லுவதாகும்.

கரும விடுமறிவுங் கண்ணவதற்‌ பின்னு
மொருமையுடன்‌ யோகு முரைத்தி–யிருமையிலு
மொன்றுரைப்பா யென்றுரைத்தான்‌ பார்த்தனுயரிறையை
நின்றுரைத்தா னிச்சயத்தை நேர்ந்து –1-

இக் கரும யோகமது விட்டுணர்வா மிவ்விரண்டுந்
தக்க நலஞ்‌ சாதிக்குஞ்‌ சாதனமா–மக்கருமம்‌
விட்டிய றன்னின்‌ மிக நன்‌றதன்‌ செயவிற்‌
பட்டியலு மாறு பயின்று, –2–

வெறுப்பு நசை யற்றவவன்‌ விட்டவனா மென்றும்‌
பொறுப்புடனே தன்னிருமை பூண்ட–செறுப்பகற்றி
நின்றான்‌ விசயனே நீள் வினையின்‌ கட்டுவிட்டுச
சென்றான்‌ சுகத்துச்‌ சிறந்து –3–

சாங்கியமாம்‌ யோக மதுந் தானறியார்‌ வேறென்
ராங்கதனை நன்கறிவா ரஃதரையா–ராங்கவற்றி
லொன்றுதனி னின்று முடனியல்வா னவ் விரண்டி
னின்‌ற பய னெல்லா நிகழ்ந்து –4–

அறிவாராஞ்‌ சாங்கியருக்‌ காகுபயன்‌ கன்மச்‌
செறிவாராம்‌ யோகியர்க்குச சேரு–நெறியாலே
யொன்றெனவே சாங்கியமும்‌ யோகமது முன்னினவ
னன்‌றெனவே கண்டா னலம்‌, –5–

ஏலுந் துறவறிவிங் கெய்தவறி தாகுமுனே
கோலுமயோகத்‌ தக்கருமங் கூடாமல்‌–மேலுந் தா
னுற்றா னியோக முயர் முனிவன்‌ றாழாமற்
பெற்றான பிரம வுமிர்ப்‌ பேறு –6–

ஒன்‌றிய யோகத்தா லுளந் தெளிந்து தன்வசமாய்‌
வென்று புல னெவ்வுயிரு மேவினனாய்‌–நின்‌றவவ
னெல்லாக்‌ கரும மியற்றிலு மப்பயன்கள்‌
செல்லா வவனிடையிற்‌ சேர்ந்து –7–

காட்சிமுத லைந்தின்‌ கதி கண்‌ டுயிலுயிர்ந்ததன்‌
மாட்சியுரை மற்றயையும வன்புலன்‌ களாட்சி யினிற்
றன்பயனிற்‌ செல்லுமெனத்‌ தான்மதித்து யானியலே
னென்பதறி வான்யோகி யிங்கு,. –8–

காத லது விட்டுக்‌ கருமம்‌ பிர மமெனு
மூதுயிரிற்‌ றானமைத்து முற்றியல்வான்‌–றீதான
பாவத்தின்‌ மன்னான்‌ பதுமத திலை நீரின்‌
மேவப்‌ படாதது போன்‌ மிக்கு, –9-

காயத்தா னெஞ்சாற்‌ கருத்தமரும்‌ புத்தியான்‌
மாயத்துச்‌ சேரா வரும்புலனா–னேயத்து
நீக்கத்‌ துடன்கரும நின்றியல்வர்‌ யோகியர்க
ளூக்கத்‌ துளந் தெளிவை யுற்று, –10–

ஏற்ற மிகும் யோகி யியல்கருமப்‌ பேழவிடுத்‌
தாற்ற நிலைமை யடைந் தியலு–மூற்றமில்லாக்‌
காமத்தா னந்தக் கருமம்‌ பலனசையாந்
தாமத்தாற்‌ கட்டுண்ணுந் தான்‌, –11–

ஒன்பதெனும்‌ வாச லுடையபுர மாமுடலிற்‌
றன்பயிலுஞ்‌ செய்தியெனத்‌ தானியலா–னென்பதனா
லேது மியலா னியற்றான்‌ சுகமிருக்கு
மோது புலன்வென்றோ னுற்று, –12–

கத்தாவா குந் தன்மை கன்மங்க ளாங்கலற்றி
லொத்தாம்‌ பலன்சே ருலகுக்குசத் –தத்துவமா
நின்ற வுயிர்‌ தான் செய்யா நேர் நடக்கு மாறிதுதா
னொன்றிய முன்‌ வாதனையா லுற்று,–13–

ஆங்கொருவன்‌ தீ வினையும் நல் வினையும் பெரியோன்‌
பாங்கு இனிஆற்‌றான் வாங்கும்‌ பண்பினா –லீங்கறிவு
மாய வினையான்‌ மறைந்தன்றி மோகத்தி
லாய வுயிர்க ளவை, –14–

அந்த மயர்வை யறிவா னசிப்பித்துச்
சிந்தை தெளிந்து சிறப்புடையோர்‌_.தந்தமது
பேரறிவு தானே பகலவனிற்‌ பீடுடைத்தாய்‌
நேரறிவு காட்டு நிறத்து –15–

௮ப்புந்தி யந்த மன மந் நிலைமை யப்பயனா
மிப்புந்தி யால் வினையை யீடழித்தோர்‌–மெய்ப்புந்தி
மீளா வகையுடைய மெய்ப்பயனை நண்‌ணு வரேன்‌
மாளா வுயிரின்‌ வழீ, –16–

ஆன்றுணர்ந்த வந்தணனா வத்திநாய்‌ நீசனெனத்‌
தோன்றுடலந் தோறுந் தவக்கமைந் தங்கேன்‌ற வுயி
ரொக்க நிகழு முணர்வோ ரெனமறையிற்‌
றக்க வறிவுடையோர்‌ தாம்‌, –17–

இப்பிறவிச்‌ சங்க மிவரால்‌ வெலப்பட்ட
தொப்பி லெவர்க்குமன மொத்தமைந்த….தப்படியாத்‌
தீதிலா வொத்தவுயிர்‌ சீரார்‌ பிரமத்துள்‌
மீது தான்‌ நிற்குமவர்‌ மிக்கு, –18–

இன்பமது பெற்றுகவா னின்னாத துண்ணடுங்கான்‌
றன்படியிற்‌ புந்தி தனை நிறுத்‌தி–முன்பயிலு
மோக மொழிசந் திறையை முற்றுமறிந் திவ் வுயிரின்‌
போக மதி னின்றமைந்தான்‌ பூண்டு, –19–

புறம்பயிலுந் தொத்தற்ற புந்தியனா யுள்ளே
சிறந்த வுயிரின்‌ பமெவன்‌ சேருந் – துறந்தவவன்‌
சேரும்‌ பிரமத்திற்‌ சிந்தையனா யந்தமிலா
தாருஞ்‌ சுகமடையு மாங்கு, –20–

புலன்சேர்‌ பொறியில் வரும்‌ போகங்க டுன்பக்‌
குலஞ்சேருங்‌ காரணமாங்‌ கோளா–னலஞ்சேர்ந்து
நிற்பதுவு மில்லை நிறை ஞான வானவற்றி
லற்பமுகப்‌ பெய்தா னமர்ந்து,– 21–

காயங் கழிப்பதற்கு முன்னிலிலிக் காலத்தே
மாயந் தருகாமம்‌ வல் வெகுளி–யாயவிவை
வேகத்தைத் தானடக்க வல்லா னவன் யோகி
போகத்தைத்‌ தானடையும்‌ போய்‌, –22–

தன்னுள மரின்பத்தோன் றன்னி ழவிற்றான் மகிழ்வோன்
றன்னு ளுயர் சோதி தானுடையோன்‌-றன்னுருவே
யான பிரமமா மந்தப்‌ பிரமத்தைத்‌ .
தானடையு மின்பந் தழைத்து. –23-

கண்ட முனிவர்‌ கடுவினையின்‌ கட்டழித்துக்
கொண்ட வுயிரிருமை கூர்ந்த துயர்‌–விண்டறவே
கெஞ்ச நிறிஇயுயிர்க்கு நீடின்பம்‌ பூண்டவரே
யெஞ்சாப்‌ பரம்பெறுவ ரேய்சந்து,– 24–

இவ்வாறு காம வெகுளி யடக்கி மதி
லெவ்வாறு தாமனத்தை வென்றோர்க்கு எவ்வாறு
மீளாது துய்க்கு மிகு பிரம வாநந்த
நீளாகு மென்று நிகழ்ந்து –25-

புறப்பற்றை நீக்கிப்‌ புருவத்துட்‌ கண்ணாற்‌
சிறந்தொக்க மூச்சிருகாற்‌ செலல–நிறுத்து மனப்‌
புந்தியான்‌ வென்ற பயவெகுளி யானவனே
சிந்தையான்‌ முத்தன்‌ சிறந்து, –26–

வேள்வி தவங்‌ கொள்வோனாய்‌ மிக்கனைத்து மென்வசமா
வாள் வினையனாகி யனைத்துலகு–நீ ளுற்ற
வெல்லா வுயிர்க்கு முறவா மெனையறிந்த
நல்லான்‌ பெறுஞ்சாச்தி நன்கு –27–

 

———

6 – அத்யாத்ம யோகம்:

அத்த னருள்கீதை யாறாமோத் தாற்கருமத்
தொத்த தெளிவைத் தெரிந்துரைக்கு
— — — —
— — — — (லுப்தம்)

யோக விதியோகி யோகத்து நாலுவகை
யோகமது மேலா வுயர்நிலைமை – மேகநிக
ரண்ண லருள்கீதை யாறாமோத் தின்பொருளாத்
திண்ண முடிந்ததிது சேர்ந்து.

யோக விதி – யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தைப் பழகும் முறையும்,
யோகி யோகத்து நாலு வகை – அதைப் பழகும் யோகியரிலும், அந்த யோகத்திலும் உள்ள நாலு பிரிவும்,
யோகம் அது – ஸு ப்ரஸித்தமான பக்தி யோகம்,
மேலா உயர் நிலைமை – எல்லா யோகங்களைக் காட்டிலும் மேலாக உயர்ந்து நிற்கும் நிலையும்,
இது சேர்ந்து – ஆகிய இவ்வர்த்தங்கள் சேர்ந்து,
மேகம் நிகர் அண்ணல் அருள் கீதை ஆறாம் ஓத்தின் பொருளா திண்ணம் முடிந்தது – மேகத்தை ஒத்த ஸ்வாமியான
கண்ணன் அருளிய கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் பொருளாக அறுதியிடப்பட்டு நிறைவடைந்தது.

கன்ம பல னண்ணாது காரியமென்‌ றுன்னியவத்
தன்மையுமத்‌தூய்‌ வனதிற் சார்ந்தியல்‌வா -னன்மையமர்‌
ஞானியவன்‌ யோகி யவ னல் லங்கி யிற் கிரிசை
தானிகழா னென்றுஞ்‌ சமைந்து, –1–

கூரறிவு சேர்‌ துறகென்‌ றெத்தைக்‌ குறித்‌ துரைப்பர்‌
பாரறிவில்‌ யோக மதாம்‌ பாண்டவனே– தூரநசை
விட்டியலா தானொருவன்‌ மெய் கரும யோகி யெனப்‌
பட்டியல மாட்டான்‌ பயின்று, –2–

ஞானயோ கத்தி னயந்தற வேண்டுமுனிக்‌
கானயோ கக் கரும மாமுதலா–மேனலஞ்சேர்‌
மிக்கமர்ந்தே யோகத்தின்‌ மேலா மவனுக்கே
தக்க முதலாகும் சமம்‌–3–

கோலும்‌ புலன்பொருளிற்‌ கூட்டுங் கருமத்தி
லேலு நசையறுத்தா னெப்பொழுது –மேலுயர்ந்தே
யெப்பொருளின்‌ சங்கற்பம் விட்டேறும் யோகி யென
வப்பொழுதே பேருடைய னாம் –, 4–

தன்னைத் தன் நெஞ்சாலே தான் எடுப்பான் தன் நெஞ்சாற் றன்னைத் தளர் விக்கத் தானியலா னன்னவனா
தன்னுடைய நெஞ்சு தனக்குறவு தன்னெஞ்சே
தன்னுடைய வான்பகையாந் தான்‌. ’–5–

எவன் றன்னாற்‌ றன்னெஞ்ச மேனறு வெலப்‌ பட்ட
தவன் றனக்கந் நெஞ்ச முறவாகு–மெவன்றன்னா
லான்ற நெஞ்சில்‌ லாதவனுக் காங்கதுமா றேயியலு
மேன்ற பகை வன்போ லிங்கு –6–

சீத மழலின்பந் துன்பஞ்‌ சிறப்பிகழ்வின்‌
மீதமைவு சேர்ந்து மிக வென்றுமனம்‌–போதந்
திகழ்ந்தவவ னெஞ்சிற்‌ றெளிவுறவே நிற்கு
நிகழ்ந்த வுயிர் பரமா நேர்ந்து –7–

ஞான விவேகத்து நன்குகந்தார்‌ தன்மையனா
யான புலன்வென்‌ றமர்யோகி –தானோட்டிற்
கற் கனகத்‌ தொத்தியல் வான்‌ காட்சியினாற் றக்கானெள
றோற் கமறுஞ்‌ சொற்கேரு முற்று–8–

நன்னெஞ்சன்‌ றோழன்‌ பகைவ னயப்பறியான்‌
பன்னு நடுவோன்‌ பழிவெறுப்போன்‌- றன்னளவி
லுற்றாயர் கருமர்‌ பாவிகளா லொத்த மனம்‌
பெற்றான்‌ மிகத் தக்கான்‌ பின்‌,–9-

தானே யிருந்து தனியிடத்து தன் சிந்தைக்‌
கானா மனமடக்கி யாசையற்றுத்‌.-தானேய்ந்த
வெத்துவக்கு மற்ற வெழில்யோகி தன்னையென்று
தத்துவத்திற் சார்விப்பான்‌ தான்‌,–10–

தூய நிலத்‌ தோக்கந் தாழ்‌ வற்றதகில்‌ தோலதுமே
லாயது கீழாக்குசமா மாசனத்து —மேயதன்‌
புத்தி யொரு மித்துப்‌ புலனடக்கி யோகததைச்
சுத்தி பெச் செய்வான்‌ தொடர்ந்து –11–.

தன் காயஞ்‌ சென்னி களந் தாங்கிச்‌ சலியாமன்‌
முன் காண மூக்கைக் கண்‌ மொய்த்த திசைப்‌-பின்‌ காணா
தாறியஞ்‌ சாதே யறத்‌ துரனாய்‌ நெஞ்சடக்கித்‌
‘தேறியென்‌ பால்விருப்பான்‌ சேர்ந்து –12–

இன்னே நெஞ்‌ செந் நாளு மென்னிடை யிற்‌ சேர்யோகி
தன்னேர்‌ மனமக்கித்‌ தானிறுத்தி.-மன்னேர்ந்த
வானந்த மேலா யமர்சாந்தி யென்னிடையிற்‌
றானந்த மற்றடையுந் தான்‌,–13–

உண்ணுமவ னுக்குமிக வுண்ண தவனுக்கும்
கண்ணுறங்கு வோற்குங்‌ கடிந்தோற்கு–மெண்ணுங்‌காண்
மண்ணாளும்‌ வேந்தனே மாயோக மிவ்வோர்க்கு
நண்ணாது காணு நயந்து — 14–

தக்௧ வுணவியற்றி தன் கருமசத் துண் முயற்றி
தக்க துயிலுணர்த்தி தானமர்ந்த —தக்கவனுக்‌
கெவ்வாறும்‌ யோக மிருந் துயரை நீக்கியே
யெவ்வாறு வந்தியலு மாங்கு. –15–

எப்போது நெஞ்ச மினிய வுயிர்‌ தன்னிற்‌
றப்பாது பூண்டு தனி நிற்கு–மப்போது
காம மனைத்திற்‌ கழிந்த நசை யோகி யெனு
நாம முடையனா நன்கு, –16–

வாயு விலாதிடத்து மன்னும் விளக்கதுதா
னேயு சலனமறு மெவ்வாறு–தூயமள
நன்‌மையினிற் சேர்ந்தியலு நல் யோகி யோகிதன .
தன்மையினுக் கொப்பதுவே தான்‌, –17–

நெஞ்சுதா னேதினிருத்தமாம்‌ யோகத்தா
லெஞ்சலிலா தென்று மினிதமரு–நெஞ்சமா
வேதின்‌ மனத்தாலே யினிய வுயிர் கண்டு
மீததனிற் றானுகக்கு மிக்கு.–18–

புலங்கடந்து யோகத்துப்‌ புந்திபினாற்‌ றோன்று
நிலங் கடந்த வின்ப நுகர்வோ–னலங்கலந்த
புன்மையிலா னந்தப்‌ புணர்ப்பெய்தி நின்றவவன்
றன்மையினின்‌ றுஞ்சலியா தான்‌,–19–

யாதொன்றைப்‌ பெற்றா லதனில்வே றோர்பேறு
மீதென்று பின்றான்‌ மிகமதியான்‌–போதமுடன்‌
மிக்க கதி நின்றான்‌ மிகு துன்ப மேலிடினுந்
தக்கவதிற்‌ பின்சலியான்‌ றான்‌,–20-

யோகமென்று போரம்‌ வியோக மதுதுன்ப
மாக வுறும்யோக மஃ்தறிவான்‌–யோக மது
தீங்கு இன்றி நின்ற திசைப்பற்ற செஞ்சினாற்‌
பாங்கொன்றி யொன்றப்‌ படும்‌,–21–

தன்னிலாங்‌ காமங்க டானெல்லா நெஞ்சால்விட்‌
டன்ன புலனனைத்து மான்றடக்கி -மன்னுநிலைப்‌
புந்தியினின்‌ மெள்ளமனம்‌’ பூண்டாங் குயிர் மன்னச்
சிந்தியான்‌ வேறொன்றுஞ்‌ சேர்ந்து –22–

நில்லா துழனெஞ்சு நீங்கு மவை மேலவற்றிற்‌
செல்லாமைத்‌ தன்வசத்தைச்‌ சேர்விப்பான்‌-நல் யோகி
யாறினான்‌ றீங்கு செருசக் கற்றுப்‌ பிரமவுயிர்‌
தேறினா னின்ப மிகச்‌ சேர்ந்து,– 23–

இவ்வண்ணமே தன்னை யோகத்திலே விடுத்துத்‌
தெவ் வண்ண வல்வினைகள்‌ செற்றென்று-மெய்வண்ண
யோகி பிரமத்‌ தணைந் தீறி வின்பத்தா
னாகி யுயிரேலெளிதே யாங்கு, –24–

எல்லா வுயிரு மென துயிர்போ லென்னுயிர்தா
னெல்லா வுயிர்‌ போ லெனக் காணுஞ்‌–சொல்லார்ந்த
யோகஞ்சேர்‌ நன்னெஞ்ச னெவ்விடத்து மொத்துயிர்க
ளேகஞ்சேர்‌ வண்ணமறிக்‌ தேய்ந்து, –25–

என் றன்மையா லுயிர்க ளெங்கு மெனைக் கண்டவற்றைத்‌
தன்றன்மை யாலென்பாற்‌றான் காண்பான்‌–சிந்தை யினில்‌
நான்றோன்றா வாறில்லை நன்குணர்‌ந்தான்‌ றன்‌ னிடையிற்
றான்றோன்றா வாறில்லை தான்‌. –26–

எங்கு நிகழ்ந்‌ திருக்கு மென்றன்னை யேகமாத்‌
தங்குஞ்‌ சமநினைவான்‌ றானுணார்ந்தா –னங்கங்கே
யெவ்வா றியன்றிடினும்‌ யோகி யவ னென்னிடையி
லவ்வா றியன்றவனே யாம்‌, –27–

தன்னொத்த வெவ்விடத்து மன்னா சமமாக
மன்னொத்த வின்பம்‌ வளர்‌ துன்ப–முன்‌னலுறி
லாங்கவனே சால வதி நாம யோகி யெள
வோங்கறிவார்‌ தாமதிப்ப ருற்று, –28–

௮ண்ணலைப் பின்‌ கேட்டா னமர் விசய னீ யுரைத்த
லெண்ண மரு மொப்பா ரெழில் யோகந் –திண்ணமிது
மன்னு நிலைமை மது ஸூதனா காணே
னுன்னு மனஞ்‌ சஞ்சலத்தா லோர்ந்து. –29–

வன்னெஞ்சு சஞ்சலமாய்‌ மாறாய்‌ வலிந் தடரு
நந் நெஞ்சு காற்றைப்போ லான்றடக்கித் –தன்னி
லரிதென்‌ றிருப்பனென காங்கவனுங் கேட்கச்
சுரிசங்கன்‌ றானுரைத்தான்‌ சொல்‌. –30–

நேராக நின்றடக்க நில்லா தரிது மனங்
காரார்‌ கொடைத் தடந் தோட்‌ கெளந்தேயா–சீராரும்‌
யோகத் திடைப்பயில்வா லேலுந் துறவதனா
லாகத்‌ தது வடக்க லாம்‌.– 31–

தன்னிசையா நெஞ்சு தன்னாற் சார்வரிதாம் யோகமென்‌
றென்னிசைவ தாகு மிது பின்னை-.-முன்‌னிசையு
செஞ்சான்‌. முயன்‌றவன னேரே யுபாயுத்தா
லெஞ்சா தடையலா மிங்கு –32–

ஆங்கு விசய னமலன்‌ றனைக்கேட்டா
னீங்கு விருப்‌ புற்றா னியல்‌ வற்றுப்‌. பாங்கு மனந்
தக்க யோகத்துச்‌ சலித்தங்க்‌ கதுசேரா
தெக்கதியைத்‌ தானடையு மிங்கு. –33–

முன்பயன்சேர்‌ கன்ம முழுதொழிந்து மேற்பிரமந்
தன் பயனா நல் வழியிற்‌ சாராதே–பின்‌ பவன்‌ றான்‌
றஞ்சமில்லா தவ்விரண்டுந் தானழூவிச் சின்னமா
மஞ்செனவே மாயுமோ மற்று, –34–

மிக்க மயக்கி தனை மீண்டொன்‌று ஓழியாமற்‌
றக்க பரிச றுக்கத் தக்சவனீ–மிக்கோரி
லுன்னை யொழிய யொழிப்பா ரித கண்ணா
பின்னையெவ ருண்டு பெயர்ந்து.–35–

ஆய வவனுக் கறிய வுரை செய்தான்‌
மேயவுல கத்தினு மேலிடத்து –மாய்‌வவனுக்
கில்லாதா னன்றி யிவன்றான்‌ விசயனே
பொல்லா நெறியிற்‌ புகான்‌, –36–

புண்ணியர்கள் எய்து பெரும் போகத்து இனிதமர்ந்தே
நண்ணியதிற்‌ பல்லூழி நாளிருந்து..-திண்ணிய சீர்‌
செல்வ நலந் தூயார்‌ சிறந்த மனை யிற் பிறக்கு
நல்வினையோ கஞ்சிதைந்தா னன்கு, –37–

மற்றதவே யன்றி வளர் மதி சேர்‌ யோகியர்க
ளுற்ற குலத்தி லுதயமா_ முற்‌றுலகி ,
லிவ்வாறு சேரு மிதிற்பிறவி தான் மன்னா
வெல்வாறு தானரிதே யிங்கு.–38–

ஆங்கேதன்‌ முன் பிறவி யானயோ கத் துணர்வைப்‌
பாங்கேலும்‌ புத்தியினிற்‌ பற்றியே–யீங்கமர்ந்த
பின்னு மதின்முயற்றி பெற்றியன்று பேறதனின்‌
மன்னுமவ னாகுமே மற்று, –39–

முன்னியலும்‌ யோக முயற்சி வசமறவே
பின்னிவனைத்‌ தன்வசமாம்‌ பேறளிக்கு–மன்னு நசை
யோகத்தி லுற்ற னுரைசேர்‌ பிரமமா
மாகத்து மீதியல்‌வா னாம் — 40–

மிக்க முயற்றியுடன்‌ மேவியல்வான்‌ பல்பிறப்பி
லொக்க வருநல்‌ லுயர் வினையிற் –றக்கமர்ந்து
சாருந் துயரகன்று தானியன்றா னாய்ப் பின்னுஞ்‌
சேரும்‌ பரகதியைச்‌ சென்று, ‘– 41–

தவம் புரிந்தார்‌ தன்மை யுணர்ந்தார்‌ கருமத்
துவந்தி யன்றார்‌ தங்களிலும்‌ யோகி –யவன் சிறந்து
மிக்குணர்ந் தானென்றுணரப்‌ பட்டான்‌ விசயாநீ
தக் குயா்ந்த யோகமே சார்‌. -42–

முன்னுரைதத யோகி கண் முற்றுமென்பான்‌ மனஞ்சேர்‌
தன்னுரைப்பான்‌ மேல் விரும்பித்‌ தானென்னை -மன்னு நலம்
பெற்றே பணிந்தான்‌ பிறங்கி யுயிர்‌ யோகி யென
வற்றே நான் கொள்வன் உகந்து –43–

யோக வதியோகி யோக்த்து நாலுவகை
போகமது மேலா வுயர் நிலைமை –மேகநிக
ரணண வருள கீதை யாறுமோத் தினபொருளாக
திண்ண முடிந்ததிது சேர்ந்து

——–

முதல் ஷட்கத்தின் ஸாரம்:
சோக முயிருணர்வு தொல்கருமச் செய்தியதி
லாகு மறிவுயர்த்தி யார்வகைகள் – யோகமுயிர்
காட்சி யிவற்றின் கருத்துமுத லாறோத்தின்
மாட்சிமை சொல்லும் வகை.

சோகம் – (அர்ஜுனனுடைய) சோகம்,
உயிர் உணர்வு – ஜீவாத்மதத்துவத்தைப் பற்றிய அறிவு,
தொல் கருமச் செய்தி – பழைமையான கர்மயோகாநுஷ்டானம்,
அதில் ஆகும் அறிவுயர்த்தி – அக்கர்மயோகத்தில் அடங்கிய அறிவின் சிறப்பு.
(அதில்) ஆர் வகைகள் – அக்கர்மயோகத்தில் உள்ள சில வகைகள்,
உயிர் காட்சி யோகம் – ஆத்மாவைக் காண்பதாகிற யோகம்,
இவற்றின் கருத்து – ஆகிய இவ்வாறு அர்த்தங்களின் விளக்கமும்,
முதல் ஆறு ஓத்தின் – (முறையே) முதல் ஆறு அத்தியாயங்களின்,
மாட்சிமை சொல்லும் வகை – முக்கியமான அர்த்தங்களைச் சொல்லும் வகையாகும்.

பூர்வமத்யமஷட்கார்த்த ஸங்கதி:
முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தாற்
றன்னா ருயிருணர்வு தானுரைத்துப் – பின்னார்வத்
தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
கூறு நடுவாறுங் கூர்ந்து

முதல் ஆறு – முதல் ஷட்கத்தினால் (ஆறு அத்தியாயங்களால்),
நல்லுணர்வின் முற்றும் கருமத்தால் – (ஆத்மாவைப் பற்றிய) உண்மையறிவினால் நிறைவடையும் கர்மயோகத்தால்,
தன் ஆர் உயிர் உணர்வு தான் உரைத்து – தனது அருமையான ஜீவாத்மஸ்வரூபத்தின் ஸாக்ஷாத்காரம் உண்டாவதாகக் கூறி,
ஆர்வம் தேறு மனத்தால் – அன்பு நிறைந்த நெஞ்சினால்,
இறைவன் பால் அன்பு செயல் – ஸர்வேஶ்வரனிடம் பக்தி செலுத்துவதாகிற பக்தி யோகத்தை,
நடு ஆறும் – (கீதையின்) நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்களும், கூர்ந்து கூறும் – விரிவாக விளக்கும்.

அங்கம், ப்ராப்தா ஆகிய இரண்டையும் முதல் ஷட்கத்தில் கூறிய பின்
அங்கி, ப்ராப்யம் ஆகிய இரண்டையும் மத்யமஷட்கத்தில் கூறுகிறது.
ஞானாம்ஶத்தை உள்ளடக்கிய கர்மயோகத்தை அங்கமாகக் கொண்டு பக்தியோகம் அங்கியாகிறது.
ஜீவாத்மாவான ப்ராப்தாவுக்கு பரமாத்மா பரமப்ராப்யம்.

———
7-விஜ்ஞான யோகம்:

ஆங்குமுத லேழாமோத் தன்புக் கிலக்காகு
மோங்குமிறை மாயத் தொழிக்குமப் – பாங்கிற்
சரண நெறியடைந்தார் தம்பேத ஞானி
யரணுயர்வு சொல்லு மமைந்து.

ஆங்கு முதல் – அந்த மத்யமஷட்கத்தில் முதல் அத்தியாயமான,
ஏழாம் ஓத்து – ஏழாம் அத்தியாயம்,
அன்புக்கு இலக்காகும் ஓங்கும் இறை – பக்திக்கு விஷயமாகும் தலைசிறந்த ஸர்வேஶ்வரனையும்,
மாயம் – (அவனை ஜீவனுக்கு மறைக்கும்) ப்ரக்ருதியையும்,
ஒழிக்கும் அப்பாங்கில் சரண நெறி – (அம்மறைவைப்) போக்கடிக்கும் தன்மையையுடைய ஶரணாகதியையும்,
அடைந்தார் தம் பேதம் – உபாஸிப்பவர்களின் (நாலு வகையான) உட்பிரிவையும்,
ஞானி அரண் உயர்வு – (அந்நால்வரில்) ஞானி (எம்பெருமானுக்கே) தாரகனாயிருக்கும் சிறப்புற்றவன் என்பதையும்,
அமைந்து சொல்லும் – நன்றாகக் கூறும்.

————–

8 – அப்யாஸ யோகம்:

போக முயிருண்மை பூமகள்கோனைப்பெறுதற்
காக முயல்வார்க் கறிவமர – மேகநிறத்
தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.

போகம் – ஐஶ்வர்ய போகங்கள்,
உயிருண்மை – ப்ரக்ருதியினின்றும் நீங்கிய ஆத்மாநுபவம்,
பூமகள் கோனை – ஸ்ரீமந்நாராயணன் ஆகிய இம்மூன்று ப்ராப்யங்களில் ஒன்றை,
பெறுதற்காக – பெறுவதற்காக, முயல்வார்க்கு – முயற்சி செய்பவர்களுக்கு,
அறிவு அமர வகை – அறியவேண்டியவைகளையும்,
செய் மா வகை – அநுஷ்டிக்க வேண்டியவைகளையும்,
மேக நிறத்து எம்மான் அருள்கீதை எட்டாம் ஓத்தில் பொருள்கள் – மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானான
கண்ணன் அருளிய கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஶ்லோகங்கள், சேர்ந்து உரைக்கும் – ஒன்றுகூடிச் சொல்லும்.

——–

9 – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்:

உன்னப் படும்பர னொண்சீர் மருவுயர்த்தி
மன்னப் பயில்ஞானி வாசிதான் – றன்னமர்ந்து
நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
யொன்றியசீ ரொன்பதா மோத்து.

உன்னப்படும் – உபாஸிக்கப்படும்,
பரன் – பரமாத்மாவினுடைய,
ஒண்சீர் மருவு – ஸெளலப்ய ஸெளசீல்யங்களோடு கூடிய,
உயர்த்தி – மேன்மையை,
மன்னப் பயில்ஞானி வாசிதான் – எப்போதும் சிந்திக்கும் ஞானியின் சிறப்போடு,
தன்னமர்ந்து நின்றியலும் பத்தி – தன்னிடத்தில் பொருந்தி நிலையாக உபாஸிப்பதாகிற பக்தியோகத்தை,
நற்கீதை சீர் ஒன்றிய ஒன்பதா மோத்து – நல்ல கீதையின் சிறப்புப் பொருந்திய ஒன்பதாம் அத்தியாயம்,
நிகழ்ந்துரைத்த – நன்கு உரைத்தது.

————–

10 – விபூதி யோகம்:

அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
வண்ணம் விரித்துரைத்த வண்மையினைத் – திண்ணமாங்
கன்புறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
தின்புறவே யோது மெடுத்து.

——

11 – விஶ்வரூப தர்சனம்:

பார்த்தனுக்கு மாயனருள் கீதைப் பதினொன்றா
மோத்திவ் வுலகெல்லா முடம்பதனிற் – கோத்தபடி
காட்டுமது தன்னறிவு கண்டடைத றன்பத்தி
கூட்டுமதுஞ் சொல்லுங் குறித்து.

பார்த்தனுக்கு – அர்ஜுனனுக்கு,
மாயன் அருள் – மாயப் பிரானாகிய கண்ணன் அருளிய,
கீதை பதினொன்றாம் ஓத்து – கீதையின் பதினொன்றாம் அத்தியாயம்,
இவ்வுலகெல்லாம் – இவ்வுலகனைத்தையும்,
உடம்பதனில் – தன் சரீரத்தில்,
கோத்தபடி காட்டுமது – (கண்ணனின் ஒரு பகுதியாகக்) கோத்துக் கொண்டிருக்கும் படியைக் காட்டுவதாகும்.
தன் அறிவு கண்டு அடைதல் – தன்னை அறிவதும், காண்பதும், அடைவதுமாகிற பயன்களை,
தன் பத்தி கூட்டுமதும் – தன் விஷயமான பக்தியோகம் கூட்டி வைப்பதையும்,
குறித்துச் சொல்லும் – குறிக்கொண்டு கூறும்.

————-

12 – ஸ்ரீ பக்தி யோகம்:

பத்தி யறிவாற் கடக்கும் பலவகையு
மத்தி லுகப்பி னதிசயமு – முத்தி தரும்
பண்பி னருள்கீதை பன்னிரண்டா மோத்துரைக்குந்
திண்பயிலுந் சொல்லாற் செறிந்து.

முத்திதரும் பண்பின் அருள் கீதை – வீடு பேற்றைத் தரும் இயல்பால் (கண்ணன்) அருளிய கீதையின்,
பன்னிரண்டாமோத்து – பன்னிரண்டாவது அத்தியாயம்,
பத்தி யறிவாற்கு – பக்தியோகத்தை அறிபவனுக்கு,
அடக்கும் பல வகையும் – கைக் கொள்ள வேண்டிய பல குணங்களும்,
அத்தில் – அந்த பக்தி யோகத்தில்,
உகப்பின் அதிசயமும் – (எம்பெருமானுக்குள்ள) அன்பின் மிகுதியும்,
திண் பயிலும் சொல்லால் செறிந்து உரைக்கும் – உறுதியானதாய் அனைவராலும் அனுஸந்திக்கத் தக்கதான
சொற்களால் நன்றாகக் கூறும்.

மத்யம ஷட்கத்தின் ஸாரப்பொருள்:
பத்திவகை யாங்கறிந்து சேரப் பரன்பெருமை
யெத்தியலு மாய்நித் ததுவடிவி – லொத்தியலக்
காட்டியது பத்திநலங் கண்ணன் றருகீதை
மாட்டிடையா றொத்தின் வகை.

கண்ணன் தரு கீதை மாட்டு – கண்ணன் அருளிச் செய்த கீதையில்,
இடை ஆறு ஓத்தின் வகை – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எத்தியலுமாய் – கர்ம யோகம் முழுவதையும் அநுஷ்டித்து,
நித்தது வடிவிலொத்தியல – நித்யமான ஆத்மஸ்வரூபத்தை நேரே காண்பது போன்ற காட்சியைக் கண்டு,
பத்தி வகை ஆந்கு அறிந்து – பக்தியோகத்தின் தன்மைகளை அதன்பின் அறிந்து,
பரன் பெருமை சேர – பரம்பொருளின் அனுபவத்தைப் பெறுவதற்காக,
பத்தி நலம் – பக்தி யோகத்தின் பெருமைகளை, காட்டியது – விளக்கிற்று.

மூன்று ஷட்கங்களின் ஸாரப் பொருள்:
கன்ம முயிருணர்வாற் கட்டவரு முன்னாறு
நன்மையிறை பத்தி நடுவாறு – தன்மையுடன்
காயமுயி ரீசன் கருமமறி வன்புவகை
யேயவமைந் தேலுமீ றாறு.

முன் ஆறு – முதல் ஆறு அத்தியாயங்கள்,
கட்டவரும் – முயற்சி செய்ய உண்டாகும்,
கன்மம் உயிருணர்வால் – கர்மஜ்ஞாந யோகங்களால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்,
நடு ஆறு – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
நன்மை இறை பத்தி – சிறப்புமிக்க பரமாத்ம பக்தியோகத்தால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.
ஈறு ஆறு – கடைசியிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை – உடல், உயிர், ஈச்வரன், கர்ம ஜ்ஞான பக்தி யோகங்கள்,
தன்மையுடன் – இவற்றின் தன்மைகளோடு,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.

———————

13 – ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
தாங்குடல மாருயி ராப்புறுத – னீங்குநெறி
தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
நன்மையுடன் சொல்லு நயந்து.

ஈங்கு – இந்த கடைசி ஷட்கத்தில்,
முதல் ஆகி ஏய்ந்த பதிமூன்றாம் ஓத்து – முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதிமூன்றாம் அத்தியாயம்,
ஆங்கு – இந்த ஸம்ஸாரத்தில்,
ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல் – ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்,
நீங்கு நெறி – அதிலிருந்து விடுபட வழியையும்,
தன்மையுடன் – அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்துடன்,
முற்றும் தகைமை பெற – மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்,
சோதித்து – ஆராய்ந்து,
நன்மையுடன் நயந்து சொல்லும் – சிறப்பாக விருப்பத்தோடு கூறும்

————

14 – குண த்ரய விபாக யோகம்:

முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
போதத் தியல்பாற் புரிந்து.

மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஓத்து – மிகச் சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம்,
முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் – (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில்
(தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்ற முறையும்,
அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் – அந்த குணங்களை நீங்கச் செய்யும் முறையையும்,
போதத்து இயல்பால் – அறிவிக்க வேண்டிய முறையில்,
புரிந்து – விருப்பத்தோடு,
கிளர்ந்து உரைக்கும் – உறுதியாகக் கூறும்.

———

15 – ஸ்ரீ புருஷோத்தம யோகம்:

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும்
மாறு உன்னும் உயிர் வகையில் – உத்தமனா மன்னி அவை
மீது உள் பரந்து பரித்து இறையாய் மேவினனை
யோதும் பதினைந்தா மோத்து.

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் – அனாதி காலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத சரீரத்தோடு
கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும்,
மாறு உன்னும் உயிர் வகையில் – அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக் காட்டிலும்,
உத்தமனா மன்னி – மேற்பட்டவனாக விளங்கி,
அவை மீது உள் பரந்து – அவ்விரண்டையும் வ்யாபித்து,
பரித்து – அவற்றைத் தாங்கி,
இறையாய் – அவற்றை உடையவனாய்,
மேவினனை – பொருந்தியிருக்கும் புருஷோத்தமனான நாராயணனை,
பதினைந்தாம் ஓத்து – (கீதையின்) பதினைந்தாம் அத்யாயம்,
ஓதும் – கூறும்.

———-

16 – தேவாசுர ஸம்பத் விபாக யோகம்:

தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
நன்மைசேர் சாத்திரத்தி னாடுதலும் – தொன்மை
யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
யுரைக்கும் பதினாறா மோத்து.

கீதை பதினாறாம் ஓத்து – கீதையின் பதினாறாம் அத்தியாயம்,
அங்கு தொன்மை உரைக்கு – அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப் பற்றியும்
அதை (அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின்,
அறிவு உரைப்பு காட்டுதற்கு – அறிவு உறுதிப்படுவதற்காக,
தன்மையால் தேவர் அசுரர் என சார்பிறவி – (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகை
பிறவிகளாகப் பிரிவுபட்டிருப்பதையும்,
நன்மை சேர் சாத்திரத்தின் நாடுதலும் – நன்மையை அடைவிக்கும் சாஸ்திரத்திற்கு வசப்பட்டிருக்கும்
தன்மையையும், உரைக்கும் – விளக்குகிறது.

———–

ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசு நெறி
சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
வோர்ந்தே பதினேழா மோத்து.

சாத்திரந்தான் இன்மை – சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆசுரம் ஆம் – அசுரர்க்குரியதாகும்;
சாத்திரத்தில் தேசுடைய கன்மம் – சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்,
செறி குணத்தால் மூவகையா – (தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்
மூன்று குணங்களை யிட்டு மூவகையாகவும்,
பேசு நெறி இம்முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா – (சாஸ்த்ரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்)
இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்,
பதினேழாம் ஓத்து – பதினேழாம் அத்தியாயம்,
ஓர்ந்தே செப்புமே – ஆராய்ந்து கூறும்.

———-

18 -ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:

செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
சாருங்க் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
றோரும் பதினெட்டா மோத்து.

செய் கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும் – அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஶ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்,
மெய் கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும் – உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்,
உய்கருமம் சாரும் கதியும் – முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதையும்,
இச்சாரத்தின் சாரமும் – ஶாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்திப்ரபத்திகளே என்பதையும்,
பதினெட்டாம் ஓத்து – (கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்,
உற்று ஓரும் – நன்கு ஆராய்ந்துரைக்கும்.

த்ருதீய ஷட்கத்தின் ஸாரப் பொருள்:

உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
யிடரிலெழி லீசன்ற னேற்றந் திடவசுரர்
தேவ ரியல்வுகுணஞ் சேர்க்கருமண்ய் சார்ந்தமர்வு
மாவனபின் னாறோத் தமர்ந்து.

உடல் உயிரின் தன்மை – உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்,
உறு குணத்தின் பன்மை – உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை,
இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம் – குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்,
திட அசுரர் தேவர் இயல்வு – (ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்,
குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன – குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றை,
பின் ஆறு ஓத்து அமர்ந்து – கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீய ஷட்கம் கூறுகிறது.

————-——————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ குருகூர் பத பிரயோகம் – நிகமன பாசுரத்தில் இல்லாத திருவாய் மொழிகள்-

October 1, 2023

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11-

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே–2-4-11-

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11-

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11- .

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-

அவனுடைய திவ்ய அவயவங்களின் அழகினைக் கண்டு-மற்று ஓன்று அறியாதபடி ஈடுபட்டாள்-என்கிறாள் –

இருத்தும் வியந்து -திருவாய் மொழியில் அனுபவித்த-அதனை தோழி பேச்சிலே பேசி இனியர் ஆகிறார் –

பேரன்றிப் பேச்சிலள்-பரம் வியூகம் விபவம் என்னும் இவைகட்கு உரிய-திரு நாமங்களைச் சொல்லுகின்றிலள்-
அன்றிக்கே
அல்லாத உகந்து அருளின திவ்ய தேசங்களின்-நிற்கிறவர்கள் பெயர்களும் சொல்லுகின்றிலள்-என்னுதல் –

———————————————————————

 

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –