யக்ஷ ப்ரஸ்னம் (யுதிஷ்டிரன், இறந்த தன் தம்பிகளை மீட்க யக்ஷனின் பரிக்ஷைக்கு ஆளாகும் படலம்) தர்ம பாடம்
யஷ பிரஷணத்தைக் குறித்து நான் அறிந்த கதை கொக்கு யுதிஷ்டிரனைக் கேள்வி கேட்பது (அல்லது) அசிரீரி (யஷனின் குரல்) கேட்பதாக. மஹாபாரதத்தில் இதை யக்ஷ பிரச்ணம் என்ற படலமாக விவரிப்பார்கள்
‘ப்ரஸ்னம்’ என்பது சரியான சொல். தமிழில் ‘பிரச்னை ஆரூடம்’ என்பார்கள். ‘ப்ரஸ்னம்’ என்பது கேள்வியைக் குறிக்கும்.
மகாபாரத்தில் எட்சன் ஒருவன் அருவமாக இருந்துகொண்டு யுதிஷ்டிரரிடம் கேள்விகள் கேட்டான். தர்மரும் அதற்கெல்லாம் ஏற்ற பதில்களைச் சொன்னார். அந்தக் கேள்வி பதில் சம்பவத்தை ‘யக்ஷ ப்ரஸ்ஸன்னம்’ என்று அழைப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில் ‘ப்ரஸ்ன தந்த்ரம்’ என்பது ஒரு பிரிவு. இதிலே பலவகைகள் இருக்கின்றன. சோவிகளைக் குலுக்கிப்போட்டு அந்த எண்ணிக்கைகளை வைத்துக் கட்டம்கட்டி பதில் சொல்வதும்
உண்டு. ‘தேவதா ப்ரஸ்னம்’ என்னும் முறையில் கன்னிப்பெண் அல்லது அதற்கும் குறைந்த வயதுள்ள பெண்ணின்மீதுகுறிப்பிட்ட தேவதையை உச்சாட்ணத்தின்மூலம் வரவழைத்து அதனைவைத்துக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வார்கள்.
ஒரு முறை ஜயத்ரதன் பாஞ்சாலியை அபகரிக்க, பாண்டவர்கள் அவனை கொன்று அவளை மீட்டனர். களைப்பினால் நீர் குடிக்க ஒரு ஏரி அருகில் செல்ல,அது ஒரு யக்ஷனுக்கு சொந்தமானதால், அதன் நீரை குடிக்க சென்ற, நகுலன், சஹதேவன் ,பீமன், அர்ச்சுனன், என பலரும் மயக்கமுற, கடைசியில் தருமர் செல்ல, அவரிடம் யக்ஷன் பல கேள்விகள் கேட்க அவர் அவைகளுக்கு பதில் சொல்ல, எல்லோரும் உயிர் பெற்றனர். தருமருக்கும் ய்க்ஷனுக்கும் நடந்த விவாதமே” யக்ஷ ப்ரஸ்னம்”என புகழ் பெற்றது. யக்ஷன் யமனின் அவதாரமே.
————
யட்சனின் கேள்விகளும் தருமரின் பதில்களும்.
சூதாட்டத்தில் தோற்று வனவாசம் மேற்கொண்டிருந்த பஞ்ச பாண்டவர்கள் துவைத வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு பிராமணன் தருமரிடம் வந்து ஒரு வேண்டுகோள் விடுத்தான்.
அந்தப் பிராமணன் தன்னுடைய யாகத்துக்காக வைத்திருந்த அரணிக் கட்டை ஒரு மானின் கொம்பில் மாட்டிக் கொண்டதால் மான் ஓடிய போது அதுவும் மானுடனேயே சென்றுவிட்டதாகவும், எப்படியாவது அந்த மானிடமிருந்து மீட்டுதருமாறும் வேண்டினான்.
உடனே ஐவரும் வில்லம்புகளோடு மானைத் துரத்திக்கொண்டு சென்றனர். மான் இழுத்தடித்து அவர்களை மிகவும் களைப்புறச் செய்யவே தாகம் மேலிட்டவர்களாய் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்தனர்.
தண்ணீர் கொண்டுவரச் சென்ற தம்பிகள் நால்வரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று திரும்பியே வரவில்லை. தருமர் சென்று பார்க்கையில் ஒரு மடுவின் அருகில் நால்வரும் இறந்துகிடந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டார். இவர்கள் இறந்த காரணம் என்னவென்று தெரியவில்லையே என்று எண்னியவாறே, குளத்தில் இறங்கித் தண்ணீரைக் கையில் அள்ளவும் ஒரு அசரீரி ஒலித்தது.
“நில்தர்மா! எனது கேள்விகளுகுப் பதில் கூறாது அலட்சியப்படுத்திய உன்தம்பியர் இறந்துபட்டனர். நீயாவது என் கேள்விகளுக்குப் பதில் கூறிய பின்னர் தண்ணீர் குடிப்பாயாக”
உடனே தருமர், ” நீ யார் மலைகளுக்கு நிகரான என் இளவல்களைக் கொன்றது யார்? என்று கேட்டார். உடனே அசரீரியாய் தோன்றிய யமன் முன்வந்து நின்று தன் கேள்விகளுக்கு சரியான பதில்இறுக்காமல் நீர் அருந்தவேண்டாம் என்றான்..
“சரி உன் கேள்விகளைக் கேள். பதில் கூறிய பிறகே அருந்துகிறேன்” என்றார் தருமர்.
———————————————————————-
கேள்விகளும் பதிலும்
———————————————————————-
யஷன் கேள்வி கேட்கிறான். தருமன் பதிலளிக்கிறார். இவை ஆத்ம ஞானத்தைத் தருபவை.-136 கேள்விகள் உண்டு -124 என்பாரும் உண்டு
இந்த யக்ஷ ப்ரஸ்னத்தில் ஒரு வரியில் இரண்டு மூன்று கேள்விகளை யக்ஷன் கேட்டுக்கொண்டே போக அதற்கிணையாக யுதிஷ்டிரர் பதில் சொல்லிக்கொண்டே போகிறார். இதை விரித்து எழுதினால் ஒவ்வொரு வார்த்தையும் பலபக்கங்களுக்கு எழுதக்கூடும்.
(1) சூரியனை உதிக்கச் செய்பவர் யார்?
ப்ரஹ்ம ஆதித்யம் உன்னதி –நான்முகன் உபதேசம் இது -சூரியனை உதிக்கச் செய்வது ப்ரஹ்ம. இங்கு சூரியன் என்பது ஞான ஒளியுடன் கூடிய ஆத்ம சூரியன். அதாவது ஜீவன். அதை அறிய உதவுவது வேதம். ஆகவே வேதமே பிரும்மம் என்று கூறப்பட்டது.
ப்ரஹ்மம் -காயத்ரி சந்தஸ்ஸுக்களில் மாதா -ப்ரஹ்ம உபதேசம் -காயத்ரி மந்திரமே ப்ரஹ்மம் உயர்ந்தது
மந்தேகர் அரக்கர் உதிக்க விடாமல் தடுக்க -சந்த்யா வந்தனம் அர்க்ய பிரதானம் -செய்ய -காயத்ரி மந்திரத்தால் அஸ்திரமாக -தீவில் தள்ளுமாம்
இவ்வாறு தினமும் நடக்கும்
ஆதித்யே இதி ஆதித்யன் -ஜீவாத்மா
ஜீவர்களை உயர்த்துவது யார் என்றுமாம்
ப்ரஹ்மமே உயர்த்தும்-ப்ரஹ்மம் வேதத்தையும் சொல்லும் -ஞானத்தால் உயர்த்தும்
————
(2)சூரியனுக்கு இரண்டு பக்கங்களிலும் சஞ்சரிப்பவர் எவர்?–அதி கச்சதரா –
தேவர்களே அவனுக்கு இரு புறங்களிலும் சஞ்சரிக்கின்றனர். சமம், தமம் என்ற ஒழுக்கங்கள் ஆன்ம அறிவு பெற உதவுகின்றன. எனவே அவை தேவர்களாகக் குறிப்பிடப்பட்டன.
12 ஆதித்யர்கள் -கேசவாதி துவாதச -மார்கழி கேசவன் -தேவாதி தேவன் -கார்த்திகை -தாமோதரன்-இதனால் தான் ஸந்த்யாவந்தனத்தில் கேசவாதி தர்ப்பயாமி -பண்ணுகிறோம்
உடன் செல்பவர்–ஜீவருடன் -தேவர் -இந்திரியங்கள் -புலன்களைக் குறிக்கும்-தேவர் போல் இஷ்டப்படி நடக்கும்
——-
(3) ஏநம் அஸ்தம் நயதி -சூரியனை அஸ்தமிக்கச் செய்பவர் யார்?
தருமம். இங்கே தருமம் என்பது முக்தி, செய்வினை, வழிபாடு எனும் உருவில் இருக்கும் தருமமே ஆன்ம விடுதலைக்கு உதவுகிறது.
ஜீவரின் பிறவி முடிப்பவர் யார்-தர்மம் இங்கு சாதனங்களைக் குறிக்கும் -பக்தி பிரபத்தி போல்வன-
——–
(4) சூரியன் நிலை பெறுவது எதில்?-ப்ரதிஷ்டதி –
சத்தியதில் சூரியன் நிலை பெறுகின்றான். அதுவே பரமாத்மா.. வருவதும், இருப்பதும்,போவதும் பரமாத்மாவிலேயே என்பதால் அதில் ஆன்மனாகிய ஜீவன் நிலை பெறுகிறான்.
சத்யம் உண்மை -மாறாமல் இருப்பதே சத்யம்-நிலவு போல் வருவதோ தெய்வதோ இல்லையே –
சத்யம் -ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-ப்ரஹ்மமே சத்யம் -எப்போதும் மாறாமல் -தோற்றமோ அழிவோ இல்லையே
ஜீவாத்மாக்களை தாங்குவதும் ப்ரஹ்மமே–உள்ளே இருந்து தாங்கி நியமித்து-இல்லை சொல்வாருக்கும் சத்தை ப்ரஹ்மமே
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்
——-
(5) மனிதன் ஸ்ரோத்திரியனாவது எதனால்?
வேதம் ஓதுவதனால். அதாவது வேதப் பொருளான பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை, ஆசிரியனிடம் கேட்டு அறிபவனே ஸ்ரோத்திரியன் எனப்படுகிறான்.
ஸ்ரோத்தரியன் – என்பது ஸ்ருதி எனப்படும் அந்த வேதத்தை அறிந்தவன் என்று பொருள் படுகிறது.
யக்ஷன்: கேனஸ்வி ஸ்ரோத்தரியோ பவதி?
யுதிஷ்டிரன்: ஸ்ருதேன ஸ்ரோத்தரியோ பவதி.
முக்தி அடைவது எப்போது எதனால் –
ஆச்சார்ய உபதேசத்தால் மனாஸ் பக்குவம் பெற்று சரணாகதி செய்து முக்தி
——
(6) ‘மஹத்தை’த்தை அடைவது எதனால்?
தவத்தினால்.-விந்ததே மஹத் -கடின முயற்சியை தவம் -there is no substitute fir hard work
ஆன்மிகத்திலுயர்வு தபஸ் -அனுஷ்டானங்களால்-கீழ் உபதேசம் பெற்றதை அனுஷ்ட்டித்து உயரலாம்
—-
(7) மனிதனுக்கு எது துணை?
துணிவு.–துணிவே துணை -த்ருதி -துணிவு என்றும் மஹா விஸ்வாசம் –
ப்ரபன்னன் கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை
—-
(8) புத்திசாலி ஆவது எப்படி?
அறிவில் சிறந்த பெரியவர்களைச் சேர்ந்து இருப்பதால் மனிதன் புத்திசாலி ஆகிறான்.
கீழே ஸ்ரோத்ரியன் வேத ஞானம் உள்ளவன் பற்றி
இங்கு வ்ருத்த சேவாவன்–பணிவிடை செய்து-அனுபவ ஞானம் பெறலாம்
வ்ருத்த சேவை நல்ல சதாச்சார்ய ஸுஸ்ரூஷை செய்து-
வாழ்வியல் விஷயம் பற்றி இந்த நான்கு கேள்விகள்–ஆன்மிக விஷயங்களும் இவற்றில் உண்டே -இரண்டுக்கும் பதிலில் உண்டு
———-
அடுத்த நான்கும் அந்தணர் பற்றிய கேள்விகள்
(9) பிராமணரின் தேவத் தன்மை எது?-பூ ஸூரர் -நிலத்தேவர்– -plus point
ஸ்வாத்யாயமே ஏஷ தேவத்வம் –ஓவாதே இருப்பது பட்டினி நாள் —வேதமோதுதலே! அதுவே தேவத் தன்மையான சொர்க்க லோக வாசத்தைத் தருகின்றது.
ப்ரஹ்மத்தை அடைய சரணாகதி செய்த பிரபன்னர்களையே பிராமணன் இங்கு-ரஹஸ்ய த்ரய அனுசந்தானம் வேண்டுமே
————
(10) துறவிகளுக்கு இருப்பது போன்று இவர்களின் தர்மம் எதூ?
தவமே. –தபஸ் -தன்னை வருத்திக் கொள்ளுதல் -ஸ்ரத்தையாக ஸாஸ்த்ர நியமங்களை அனுஷ்டானம் செய்தல்
அதாவது சமமும், தமமுமாகும். அதாவது, உடல்,மன, உள், வெளி அடக்கமே தவமாகவும், வேதம் ஓதுதலுடன் தர்மமாகவும் இருக்கிறது.
பிரபன்னர்களுக்கு தபஸ் -ஆலோசனை அர்த்தம் இங்கு-திருமேனி த்யானம் -அவனை அடைய அவனே வழி சிந்தித்து இருப்பதே
——-
(11) ஏஷாம் மானுஷோ பவ –மனிதத் தன்மை அவர்களுக்கு எது?
மரணம். –மரணம் இயற்க்கை உண்மை என்பதை உணர வேண்டும்
அதாவது, ஜனன- மரணத்தைத் தரும் கருமங்கள். அவற்றின் அடிப்படையான ‘நான்’, ‘எனது’ என்ற அகங்காரம். இதுவே மானுஷோ பாவம் ஆகும்.
மரணம் அடையும் உடலையும் அழியாத ஜீவனும் ஓன்று என்று எண்ணுவதே மனிதத்தன்மை
———–
(12) அவர்களை அஸத்து என்றாக்கும் ‘அதர்மம்’ எது?
பரிவாதம் செய்வதே இவர்கள் தோஷம்-negative points
பிறரை நிந்திப்பது, அதாவது, தெய்வங்களை, பெரியவர்களை, சாதுக்களைப் பழித்துரைப்பது.
பல்லையும் அந்தணரையும் த்விஜ -குறிக்கும்-பல் பல்லும் உண்டே
துரும்பு மாட்டினால் நாக்கு வெளியில் தள்ளாமல் விடாது
வம்பு பேசினால் வேறே ஒருவர் இடம் சொல்லாமல் இருக்க மாட்டார்
நுமர்களைப் பழிப்பராகில் -தோஷம்
பாகவத அபசாரம் பிரபன்னனுக்கு தோஷம்
——–
அடுத்த நான்கும் க்ஷத்ரியர் பற்றி-இங்கும் அனைவர்க்கும் பொதுவாக -க்ஷத்ரியர் -அர்ச்சாவதாரப் பெருமாள் பற்றி கேள்விகள்
(13) ஷத்திரியர்களின் தேவத் தன்மை எது?
இஷு அஸ்திரம் –மந்த்ர பூர்வகமாக ஆயுதங்கள் செலுத்துதல் அம்பு, வில் போன்ற ஆயுதங்களே1
அரசர்கள் ஆயுதங்களின் சிறப்பாலே, தருமத்தையும் நாட்டையும், தங்களையும் காத்துக் கொள்கின்றனர்.
இஷு அஸ்திரம்-திவ்ய ஆயுதங்கள் ஏந்தியதே அர்ச்சாவதார தெய்வத் தன்மை
ஞான சக்தியாதிகளைக் காட்டும்
——
(14) துறவிகளைப் போல இவர்களின் தர்மம் எது?
யாகங்கள். அசுவ மேதம், ராஜ சூயம் போன்றவை. கள வேள்வி எனப்படும், நியாய வழியில் நேரும் போரும் இவர்களின் தருமம்.
அந்தணர் யாகங்கள் பண்ணி வைக்கலாம் -செய்வதற்கு ஷத்ரியர்களுக்கே அதிகாரம்
பக்தர்களுக்கு திருவாராதனம் செய்வதே தர்மம்
——–
(15) சத்திரியர்களின் மனிதத் தன்மை எது?
அச்சம். அரச குலத்தினர் அஞ்சுவதே இழுக்கு.-அச்சம் என்பது மடமையடா
மனிதத் தன்மை -பக்தி மிக்கு -பொங்கும் பரிவால் ரஷ்ய ரக்ஷக பாவம் மாறுமே
பல்லாண்டு பாடுவோமே
கட்டுண்ணப்பண்ணிய பெரு மாயன் -அவனும் பாவிப்பான்
நாகப்பழம் தயிர் சாதம் சேர்த்து -கஷாயம் -தன்வந்திரி சந்நிதி ப்ரதிஷ்டை
——–
(16) அவர்களின் அதருமம் எது?
அஞ்சி அடைக்கலம் புகுந்தவனைக் காப்பாற்றாதது அதருமம்.
பரித்யாகம் -சரணாகதி -பண்ணும் யாருக்கும் அடைக்கலம் செய்ய வேண்டும் –
கை விடுவது பெரிய தோஷம்
பக்தன் பகவானை விட்டு -நம்மூர் பெருமாள் விட்டுப் போவதே தோஷம் –எத்தனை திவ்ய தேசம் போனாலும் இது தோஷமாகவே முடியும்
——–
17, 18, 19, 20 ஆகியவற்றில் மூலத்திலிருந்து:
யக்ஷன்:
கிமேகம் யக்ஞாயாம் சாம கிமேகம் யக்ஞாயாம் யஜு:
கா சைசாம் வ்ருணுதே யக்ஞம் காம் யக்ஞோ நாதிவர்ததே
சாமவேதத்திற்கு சமமான ஆத்ம த்யாகம் (அர்ப்பணிப்பு – spiritual sacrifice) எது? யஜுர் வேதத்திற்கு சமமானது எது? ருக்வேதத்திற்கு சமமானது எது? ஆத்ம அர்பணிப்பிற்கு மிகவும் அவசியமானது எது? அது இல்லாமல் முடியாது என்பது எது?
தர்ம புத்திரன்:
ப்ராணோ வை யக்ஞாயாம் சாமா
மனோவை யக்ஞாயாம் யஜு:
ருகேக வ்ருணுதே யக்ஞாம்
தம் யக்ஞோ நாதிவர்ததே.
ஆத்ம அர்ப்பணிப்பில் சாம வேதத்தைப் போன்றது உயிர். மனமே யஜுர் வேதத்துக்கு சமமானது. பக்தியே (prayerfulness) ருக் வேதத்திற்கு சமம். அந்த வகையான பக்தியே ஆத்ம அர்ப்பணிப்பிற்கு மிகவும் தேவையான ஒன்று.
————-
திரு ஆராதனம் பற்றி அடுத்த நான்கு கேள்விகள்-இதற்கு இரண்டாம் அர்த்தம் இல்லை
ஆகவே கீழும் தர்மபுத்ரரை பரிசாய் பண்ண மறைத்து கேட்டான்
இனி நேராகவே கேள்வி
(17) அவர்களின் யாகத்திற்கான ஹோமம் எது?
உயிர், அது தான் முக்கிய ஹோமம்(கீதம்).-சாம வேதம் -கீதத்துடன் கூடியது
பிடித்த இசை -பிராணன் தான் அவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் -மூச்சுக்காற்று இசையாக சமர்ப்பிக்க வேண்டும் -பிராண வேள்வி
பூசும் சாந்து என் நெஞ்சமே –புனையும் கண்ணி வாசகம் செய் மாலையே —
அணிகலனும் கை கூப்புச் செய்கையே
—-
(18) யாக யஜு எது?–உரைநடை வேதம் எத்தைச் சொல்ல வேண்டும்
மனம் தான் முக்கிய யஜு.(ஹோமம்)
யாகத்தில் ஓமத்தால்(பாட்டால்) தேவதைகளை அழைப்பர். யஜுர் வேதத்தால் ஹோமம் செய்வர். ருக்வேதத்தால் துதிப்பர். இதில் பிராணனும், மனமும் அடக்கப் படுவதே யாகமாகிறது.
உரைநடைக்கு எல்லை வரம்பு இல்லையே –அளவில்லாமல் சமர்ப்பிக்கலாம் –
நூறு தடா அக்கார வடிசில் பாவம் வேண்டுமே
மனசில் பக்திக்கு வரம்பு இல்லையே
மனஸு தான் உரைநடையாக சமர்ப்பிக்க வேண்டும்
—
(19) யாகத்தை வரிப்பது எது?-யஜ்ஜம் ஆகிய நாராயணனை எது ஈர்க்கும்
ரிக்கு, அதாவது வாக்கு, ஆக வாக்கு, மனம், பிராணன் என்ற மூன்றும் ஆன்ம ஞானம் அல்லது, ஆன்ம வித்தை என்னும் யாகத்தில் உதவவே உண்டாகி உள்ளன.
ஏகா ரிக் -ஒரு -அத்விதீயம் -காயத்ரிக்கு நிகர் இல்லையே –
ப்ரஹ்ம உபதேசம் என்றே இதற்குப் பெயர்
குமார போஜனம் நிறைந்த வயிற்றுடன்
வத்ஸலையான தாய் போல் காயத்ரி மந்த்ரம்
நாராயணன் திருமேனி ஒளி ஈர்க்கும் -அந்தர்யாமி -உள்ளத்தில் வைத்து போற்றினால் புத்தியை நல்ல வழியில் செலுத்தும்-இது செய்த பின்பே திரு ஆராதனம்
——-
(20) எதை யக்ஞம் மீறாமல் உள்ளது?–எந்த மந்த்ரம் கடந்து போக மாட்டான்
‘ரி’க்கை, வேத வாக்கை மீறாமலுள்ளது.
அதே காயத்ரி மந்த்ரத்தை கடக்க மாட்டான்
கானத்துடன் காயத்ரியை கானம் பண்ணுபவனை காத்தே தீருவான்
———
பொது அறிவு பற்றிய நான்கு கேள்விகள்
(21) விவசாயிக்கு எது சிறந்தது?மேல் இருந்து கீழ் விழுபவற்றுள் சிறந்தது எது
வர்ஷம் ஆபவதாம் ஸ்ரேஷ்டம் -மழை! –வானம் அழுதால் பூமி சிறக்கும் -கருணை மலையை நினைவூட்டும்
நன்று பெய்யும் மழையைக் காணில் நாரணன் வந்தான் -ஆழ்வார்
யாகம் செய்பவருக்கும் அதுவே சிறந்தது. மழையால் பொருள்கள் விளைந்து யாகம் செய்வர். மழை இல்லா விட்டாலும் அதைவேண்டி யாகம் செய்வர்.
——–
(22) விதைப்பவருக்கு எது சிறந்தது?-புதைத்து வைக்கும் பொருள்களில் சிறந்தது எது
விதை, (நிலம், தோட்டம்) விதையிருந்தாலேயே விதைக்க முடியும்.. நிலம் இல்லாவிட்டால் விதைக்க முடியாது.
பீஜம் -வ்ருஷமாக பலன் கொடுக்கும்
வித்து -முதல் தனி வித்தேயோ
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்தில் கொன்ப்து பக்தி மரம் வளரும்
———
(23) இன்ப வாழ்வு நிலைக்கத் தேவையானது எது?
பசுக்கள், நிம்மதியான மன நிலைக்கு ஏற்ற சாத்வீக ஆகாரத்தை, பால், வெண்ணெய்,தயிர், என்று தருவன.
நிலைத்த செல்வம் பசுக்கள் தானே
விழுச் செல்வம் கல்வி –மாடல்ல மற்றவை-மாடு -செல்வம் -அந்தணர் மாடு
கோ ஆச்சார்யர் உபதேசங்கள் என்றுமாம்-இதுவே நிலைத்த மோக்ஷ சாம்ராஜ்யம் கொடுக்கு
———-
(24) வமிசா வழிக்கு எது சிறந்தது?-ப்ரஸவம் -உருவா வதுவதில் ஸ்ரேஷ்டம் -புத்ரன் -குழந்தைச் செல்வமே
பிள்ளை, அதாவது ஆன்சந்ததியே சிறந்த பரம்பரையாகும் எனப்பட்டது. மகள் வழி ஒருவனது பரம்பரையாகாது.
——–
ஒரே கேள்வி இங்கு -பொது அறிவில்
(25) கண், காது, மூக்கு, நாக்கு,தோல் ஆகிய ஐம்பொறிகள் மூலம் , ஒளி, ஒலி, மணம், சுவை, தொடுகை எனும் ஐந்து புலனுணர்வு உடையனவாகவும், நல்ல நிலையிலுள்ள புத்திமானாகவும், உலகில் எல்லாராலும் பணக்காரன் என்று பாராட்டப் படுபவனாகவும், எல்லா ஜீவன்களும் மனிதன் என்று ஒப்புக் கொள்ளும்படி யுமுள்ளவனாகவும், மூச்சு விட்டுக் கொண்டு உயிருடன் இருப்பவனாகவும், ஒருவன் இருந்தும் எந்த மனிதன் உயிரில்லாதவன் ஆவான்? (அதாவது நடைப் பிணமாவான்?)
தேவதைகள். அதிதிகள், வேலைக் காரர்கள், முன்னோர்கள் (பித்ருக்கள்)அல்லது நீத்தார், தான் ஆகிய ஐந்து பேருக்கும் எவன் ?-எதுவும் சமர்ப்பிக்காமல் இருந்தால் அவனே நடைப் பிணமாவான்..
திருவாராதனம் செய்து பிரசாதம் தானே உண்ண வேண்டும்-இந்த ஐந்து கடைமைகள் செய்யாமல் இருக்கக் கூடாது-பிறருக்குப் பயன் இல்லாத வாழ்வு வீணாகுமே
———-
மேல் நான்கு கேள்விகள் பொது அறிவு பற்றி
(26) பூமியை விடக் கனமானது -மதிப்பு மிக்கது -எது?
தோண்டுவாரையும் பொறுக்கும் பூமி இகழ்வார் பொறுத்தல் தலை -தாய்! பிறந்த பின்பே பூமி தாங்குகிறது. பிறக்கும் முன் சிசு கருவாக பூமியில் விடப்பட்டால் இறந்து விடும். ஆனால், அந்நிலையிலுள்ள தாய் சிசுவை அருமையாகப் பேணுகிறாள். அனைத்துயிரும் தாயின் கர்ப்பத்திலிருந்தே பூமிக்கு வருகின்றன. ஆகவே தாய் பூமியை விட மதிப்பிலுயர்ந்த கனமானவள்.மதிப்பு மிக்கவள்
‘பிரிதிவி மாதா’ என்கிறது வேதம்
———-
(27) ஆகாயத்தை விட உயர்ந்தது எது?
கம் -ஆகாசம் -பிதா உச்ச தர –தந்தை! வானத்தை விடப் புகழ் உயர்ந்தது. அந்தப் புகழ் தந்தையாலேயே உண்டாகிறது. நேரடியாகவோ, அவரளிக்கும் கல்வி மூலமாகவோ புகழ் உண்டாகிஅது. ‘தந்தையோடு கல்வி போம்’ என்பது பழமொழி. குலப் பெருமை என்பதும் தந்தையால் வருவதே!
——
(28) காற்றை விட -சீக்ர தரம் -வேகமானது எது?
மனம்! மனோ வேகம் அதிகமானது. ஏற்கனவே மனம் எல்லாவற்றிலும் பரவியுள்ளது; மனத்திலேயே அனைத்தும் உள்ளது.
நின்றவா நில்லா நெஞ்சு அன்று-
————-
(29) புல்லை விட அற்பமானது எது?-பஹு தரம் -மட்டமானது எது –
சிந்தா -கவலை! எவரும் பொருட்படுத்தாததே ‘அற்பம்’ என்பது. புல்லை எவரும் பிரமாதமாக நினைக்க மாட்டார். அதே போலக் கவலையை எவரும் பொருட்படுத்திப் பெரிதாக நினைக்கக் கூடாது என்பது பொருள்.
தேவை இல்லாமல் புல் தானே முளைக்கும் -அதே போல் கவலை -வெட்டி எறிந்தால் தான் நல்ல பயிர்கள் எண்ணங்கள் விளையும்
களை களையவே பயிர் விளையும்
———–
உள் கருத்து வைத்து அடுத்த நான்கு கேள்விகள்
(30) தூங்கும் போதும் கண்ணை மூடாதிருப்பது எது?
மீன்!
அதாவது ஜீவன் எப்போதும் விழிப்பு நிலையிலிருக்கிறான். எப்போது எனில் கவலைகள் முற்றும் ஒழிந்த பின்னர். கவலைகளைப் பெரிதாக நினைத்தால் அவற்றிற்கு இசைந்து ஆசைகளை நிறைவேற்ற அலைய வேண்டி வரும்.
மத்ஸ்யம் -கண் இமைகள் கிடையாது-மீனம் -பத பிரயோகம் இல்லாமல் மத்ஸ்யம் பத பிரயோகம்
அக்னி நாம் தேவர்களுக்கு கொடுப்பதை கொண்டு போய் சேர்ப்பான்
முதலில் இந்த வேலை பிடிக்காமல் நீரில் ஒளிந்து கொண்டானாம்
மீன் கோள் சொல்லிற்றாம்
அப்புறம் வேலை பிடித்ததாம்
அந்த ஸமயத்தில் கோபம் கொண்டு உன்னை வலை வீசிப் பிடிப்பார்கள் சாபம் கொடுத்தான் -யஜுர் வேதம் சொல்லும்
மத்ஸ்யம் என்பது கோள் சொன்னவனைக் காட்டும் —
மத் -என்னுடைய -குறைகளை அறியாமல் தூங்கி -அடுத்தவர் குறைகளைக் காண கண்ணைத்திறந்து கொண்டே இருப்பானே கோள் சொல்பவன்
———-
(31) எது பிறந்தாலும் அசைவின்றி உள்ளது ?
முட்டை தான்.
அது பிறந்தும் அப்படியே இடப்பட்டபடி இருக்கிறது. அண்டம் ஆகிய பிரபஞ்சமே முட்டை எனச் சொல்லப்பட்டது. அண்டம் பிரக்ருதி ஜடமானது. அதைப் புருஷனைச் சேர்த்து பரமாத்மாவே இயங்கச் செய்கிறார்.
உடனே அசையாது–பொறுத்தார் பூமி ஆள்வார்
காத்து இருந்தால் காலம் கனிய வைக்கும் -பலத்தில் கண் வைக்காமல் பொறுமையுடன் அவனுக்கு அர்ப்பணித்து செய்ய வேண்டும்
————
(32) எதற்கு இருதயம் இல்லை?
கல்லுக்கு! அப்படி இயங்கினாலும் பிரக்ருதி கல் போன்றே சுக துக்க அனுபவம் இல்லாதது என்பதால் இதயமற்றது என்று கூறப்பட்டது..
உடம்பை கல் போலும் மனதை பஞ்சு போலும் வைத்துக் கோலா வேண்டும்
மனம் கல்லாய்ப் போன மனிதர்களால் கடவுள் கல்லானார்
—————
(33) எது சொந்த வேகத்தால் வளருகிறது?
நதி வேகத்தால் வளர்ந்து போகிறது. புலனுகர்ச்சியை விரும்பும் ஆசை வேகத்தால் f£வனுக்கு நதி வளர்வது போல உலக வாழ்க்கை (சம்சாரம்) பற்பல பிறவிகளாக நீண்டு வளர்கின்றது.
தனது சொந்த திறமையால் முயற்சியால் வளர வேண்டும்
ஆசீர்வாதம் பெறலாம் recommendation மூலம் பெற்றால் நிலையாதே-
————-
மேல் நண்பன்–மித்ரன் -பத பிரயோகம் -ஆபத்தில் உதவும் நண்பன் – பற்றிய நான்கு கேள்விகள்
உடுக்கை இழந்தவன் கை போல்
(34) ஊர் ஊராகச் சுற்றப் போகிறவனுக்கு தோழன் யார்?
கற்ற வித்தையே! போகிற இடங்களில் பிழைப்புத் தேடிக் கொள்ளவும், ஆபத்தின்றிக் காத்துக் கொள்ளவும், வழிப் போக்கர்களின் கூட்டத்தில் அனைவரும் விரும்பும்படித் துணையாகக் கொண்டு பேசிச் செல்லவும் கல்வியும், வித்தையும் கை கொடுத்து தோழனாகின்றன.
கற்றவனுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு-ஆன்மிகப் பயணம் -பரமாத்மா நோக்கி -ப்ரஹ்ம வித்யைகளே உதவும்
————-
(35) வீட்டிலிருப்பவனுக்குத் துணை யார்?
பார்யா -மனைவி
அறிவை உரைப்பதில் அமைச்சன் அன்றோ
———
(36) நோயாளிக்குத் துணைவன் யார்?
பிஷக் -மருத்துவன்! அவனாலேயே நோய்க்குச் சிகிச்சை யளிக்க முடியும் என்பதால்.
வாளால் அறுக்கும் மருத்துவன் பால் காதல் வைக்க வேண்டுமே
பகவானும் நம்மைப் பக்குவப படுத்தவே ஆபத்துக்கள்
நாம் எல்லாரும் பிறவிப்பிணியில் இருக்க
வைத்யோ நாராயனோ ஹரி
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
———-
(37) இறக்கிறவனுக்குத் தோழன் யார்?
சாகப் போகிறவன் -மரணம் சமயம் மட்டும் இல்லை
அனைவருமே மரணம் இன்றியமை யாழ் -ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தானம்! புண்ணிய பலனை உண்டாக்கி மறுமைக்கும் நலம் சேர்ப்பதாலும், இம்மையில் அவனப் பலர் புகழ்ந்து பேச ஏது ஆவதாலும், அவன் விட்டுச் செல்லும் பணிகள், சந்ததி உறவினர், பொருள்களைக் கவனித்துப் பார்க்க அவன் செய்து சென்ற தானங்கள் உதவும்.
———–
தர்ம ஸாஸ்த்ர விஷய நான்கு கேள்விகள்
(38) அனைத்துயுரின் விருந்தாளி யார்?
அக்னியே! அனைத்துயிரின் உடலிலும் அக்னியே இருந்து உண்ணும் உணவுகளைச் சீரணிக்கிறது.
விருந்தோம்பல் -அதிதி தேவோ பவ -க்ருஹஸ்தனுக்கு முதல் விருந்தாளி அக்னி தேவன்
ப்ரதிஷ்ய ஹோமம் -அந்த அக்னியைப் பாத்து காத்து -வாழ் நாள் முழுவதும் உணவு அளிக்க வேண்டும்
அக்னி ஹோத்ரம் -கண் எதிரே வாங்கி உண்ணுவார்-அந்திம சம்ஸ்காரம் இந்த அக்னியைக் கொண்டே செய்ய வேண்டும்
அக்னி -ஆச்சார்யரைக் குறிக்கும் இங்கு -அக்ரம் நியதி -முன்னே வழி நடத்தி செல்பவர்
ஒளி காட்டி அஞ்ஞானம் போக்கி -அறியாக் காலத்து அடிமைக் கண் வைத்து அருளுகிறார் நம் மேல் அன்பு வைத்து
——–
(39) சனாதன தர்மம் -எது நிலையான தருமம்?
முக்திக்கான வழிகளே நிலையான தருமம். மற்ற தருமங்கள் பிறவிகளைத் தருவனவாகும்.
தர்மம் -ஸாதனம் -ப்ரஹ்மம் அடைய -ஸாஸ்த்ரம் அருளியபடி –
சனாதனம் -தொன்று தொட்டு -அநாதியாக இருப்பது
அம்ருதம் -ஆராவமுதே –வேதமும் ஏஷ அந்தர்யாமி அம்ருதம் சொல்லும்
சா காஷ்டா ச பராங்கதி கட உபநிஷத் -1-4- ஆனுமானிகா அதிகாரணம் –
அவனே அவனை அடையும் வழி -ஸ்ரீ பாஷ்யத்தில் சரணாகதியும் உண்டே-ஆறும் அவனே பேறும் அவனே –ஸித்த உபாயம்
————-
(40) எது அமிருதம்?
பசுவின் பால் ஆகிய ‘அமிருதம்’ எனப்படுவதே. மோட்சத்தில் இச்சையை உண்டாக்கும் சாத்வீக குணத்தைத் தருவதால் பசும்பால் அமுதம் எனப்பட்டது.
இங்கு பெருமாளைப் பற்றிக் கேட்கவில்லை
பசுமாடு பால் கைம்மாறு கருதாமல் பால் கொடுக்கும் அன்றோ
இதுவே உலகில் காணும் பொருள்களில் ஸ்ரேஷ்டம்
கவாம்ருதம் =பசு ஆச்சார்யர் சுரபிகள் போல் சொல் அமுதம் சுரப்பார்கள்
உபதேசம் பால்
———–
(41) இவ் வுலகம் முழுவதும் எப்படி உள்ளது?
பிராணனாகவே உள்ளது (வாயு)
வாயு சர்வம் இதம் ஜகத்
வாயு பத பிரயோகம் -நகர்ந்து கொண்டே இருப்பத்தைச் சொல்லும் -ஓட்டம் -movement -அசைந்து கொண்டே இருக்கும்
வாழ்வே பயணம் தானே
பெருமாளை 415 ஹிரண்ய கர்ப்ப –வாயு -சஹஸ்ர நாமம்
415–வாயு
செல்பவன் -அடியார் உள்ள இடம் தானே -குகன் பரத்வாஜர் சபரி
சோபியகச்சத் மஹா தேஜா சபரீம் சத்ரு ஸூதந -பால
எதிரிகளை அழிக்கும் ராமன் சபரியின் இடத்துக்குச் சென்று பெருமை அளித்தான்
பரத்வாஜ ஆஸ்ரமம் கத்வா–பால
பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றான்
குஹம் ஆஸாத்ய தர்மாத்மா–பால
குகனை மேன்மைப் படுத்தினான் –
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
சென்று நின்று ஆழி தொட்டான் –
தம்மைத் தியானிப்பவர் இருக்குமிடம் தேடி ஆங்காங்கு செல்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
———-
அடுத்த நான்கு கேள்விகளும் பதிலும் வேதத்தில் உள்ளதை அப்படியே கேட்க்கிறான்
(42) எவன் தனியாக சஞ்சரிக்கிறான்?
ஸூரியனே! யாருதவியின்றி சுய ஒளியுடன் சூரியன் பிரகாசிக்கிறான். உலகப் பொருள் இருந்தாலும் இல்லா விட்டாலும் அவன் பிரகாசித்துக் கொண்டிருப்பான்.
ஸூர்ய ஏகோ விசரதே
கீழ் ஏழு தேவர்கள்–கந்தர்வாதிகள் கூடப் போகிறார்கள்
இங்கு தனியாக -தனித் தன்மையாக என்ற அர்த்தங்கள்
இவன் ஒளியால் மற்றவை மங்கி இருப்பார்கள்
இதே போல் நாமும் ஆட்டு மந்தை போல் இல்லாமல் தனித் தன்மையுடன்
ஸூர்யன் நாராயணனுக்கு பெயர் உண்டே
புறப்பாடு -முன்னும் பின்னும் பலர்-இருந்தாலும் -இவன் அசாதாரணம் தானே –
அழகர் உடன் பலர் வந்தாலும் ஆற்றில் இறங்குபவர் அழகர் என்கிறோம்
———-
(43) எவன் பிறந்தும் மீண்டும் பிறக்கிறான்?
சந்திரன்! சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று ‘சந்திரன்’ எனப் பிறக்கிறான். அவ் வொளியைப் பூமியில் வீசி பூமியிலுள்ளோருக்கு மீண்டும் ‘சந்திரன்’ பிரகாசிக்கிறான். சந்திரனே மனS தத்துவமாகி அந்த மனத்தாலேயே ‘சந்திரன்’ என்று அறியப்படுகிறான்.
சந்த்ரமா ஜாயதே புந
புதிதாகப் பிறந்து போல் -இனிமையுடன் குளிர்ந்து -அமுதை பொலியும் நிலவு அன்றோ
பார்க்கப் பார்க்க சலிக்காமல் இருக்கும்
அன்று வந்ததும் அதே நிலை -இன்று வந்ததும் அதே நிலா-பார்த்துப் பார்த்து சலித்த நிலா பாதி தேய்ந்தது –
————–
(44) பனிக்கு மருந்து எது?
அக்னி தான்! சூரியன் சந்திரன் இரண்டும் அப்படி இருப்பது அக்னியாலேயே. அக்னி வித்தை எனப்படுவது பிறவிப் பிணியையே பனி போலப் போக்க வல்லது.
ஹிமம் -நெருப்பு தான் மருந்து
ஸூர்யனைக் கண்ட பனி என்றாலும் அக்னியையே பதிலாகச் சொல்ல வேண்டும்
நான் யார் -அறியாமை மூடும் -ஹிமம் அறியாமைச் சொல்லும் -அக்னியான ஆச்சார்யர் போக்குவார்
————
(45) எல்லாவற்றையும் அடக்கக் கூடிய பெரிய பாத்திரம் எது?
பூமி! பூவுலக வாழ்க்கையை வைத்தே கடவுள், தேவர், மனிதர், வேதம் பற்பல வித்தைகளும் இருக்கின்றன. இதனால் பூமியில் எல்லாம் அடக்கம்.
பூமியில் எத்தைப் போட்டாலும் வாங்கிக் கொள்ளும்
பூமி -பிறவிப்பிணி -ஸம்ஸாரமே பெட்டி -கர்ம வினை பூட்டு
அருள் என்னும் சாவியால் வெளியே வர வேண்டும்
————
எதுக்கு எது ஆதாரம் பற்றி நான்கு கேள்விகள்
(46) தர்மம் முக்கியமாக எதில் நிலை பெறுகிறது?
செயல் திறனில் உள்ளது. ஏனெனில் சூட்சுமமான தருமத்தைச் செய்தல், காப்பாற்றுதல், அதருமத்தைத் தவிர்த்தல் எல்லாம் சாமர்த்தியமாகச் செயப்படுவதிலேயே இருக்கிறது.
————–
(47) முக்கியமாகப் புகழ் எதில் நிலை பெறுகிறது?
தானம் செய்வதில் தான். கொடுப்பவனையே உலகம் புகழ்கிறது.
———-
(48) சொர்க்கம் எதில் உள்ளது?
உண்மையில் தான் சொர்க்கம் உள்ளது. கனவில் எதை அனுபவித்தாலும் விரைவில் போய் விடுவதால் உண்மை நல்வாழ்வே சொர்க்கமாக உள்ளது. தற்காலிக சுகமும், பயமும் இருப்பதால் உண்மையில்தவிர சொர்க்கம் இராது.
நிம்மதியே சுவர்க்கம்
வாய்மை தீமை இல்லாத சொல்
உண்மை அப்படியே சொல்லுதல்
நன்மை செய்யும் உண்மையே வாய்மை
———–
(49) சுகம் எதில்,நிலைத்து நிற்கிறது?
நல்லொழுக்கத்தில்தான். ஒழுக்கமில்லாத வழியில் வரும் சுகம் நிலைக்காதது. அந்த சுகமே துக்கமாகி விடும்.
நிம்மதி வேறே சுகம் வேறே -நல்ல ஒழுக்கம் சீலம் சுகம் தரும்
சீலம் -பணிவு humility-வித்யா ததாதி விநயம்
———–
வாழ்வு பற்றி நான்கு கேள்விகள்
(50) மனிதனுக்கு ஆத்மா எது?
புத்திரனே மனிதனின் ஆன்மா. வேதம் ஆத்மாவை புத்ர நாமாஸீ -சொல்லுகிறது -ஆப் நோதி இதி ஆத்மா -அடைய முடியாத ஒன்றை அடைவதற்கும் ஆத்மா என்கிறோம்-mankind போல் புத்ரன் பொதுச்சொல்
————–
(51) மனிதனுக்கு தெய்வம் உண்டாக்கித் தந்த துணை யார்?
மனைவி. மனைவி என்பவள் தெய்வத்தால் படைக்கப் பட்டவள்.
தெய்வம் தரும் சஹா இங்கு
கீழ் -35 கேள்வியில் மித்ரன் -ஆபத்தில் உதவும் நண்பனின்
சஹா இன்பம் துன்பம் சமமாகப் பங்கு எடுக்கும் நண்பன்
———-
(52) மனிதனுக்குப் பிழைக்க வழி எது? (சாதனம்)-எத்தை நம்பி வாழ்வு -உப ஜீவனம் -எத்தை அண்டி பிழைக்கிறான்
மழையே எல்லாவற்றின் அடிப்படை சாதனமாகும்.-ஏரி கட்டி காத்து இருக்க வேண்டும் -மாரி யார் பெய்கிற்பார் மற்று
அருள் மழை பொலிந்து பிரபன்னரை ரக்ஷிக்கிறான் அன்றோ -தீது இன்றி மும்மாரி பெய்ய ஆண்டாள் கட்டளை
———
(53) மனிதனின் சிரேயஸ் ஸூக்குச் சாதனம் எது?– பராயணம் -நல்ல வழி போக
மனிதனின் மேலான நிலைக்குத் தானம் தான் சிறந்த சாதனம். கொடுப்பது தியாக புத்தியைத் தரும். தியாகம் அகங்காரத்தை விடும் வழி. அதுவே துறவாகி முக்திக்கு வழிவிடுகிறது.
———-
ஒவ்வொன்றிலும் மிக உயர்ந்தது உத்தமம் -பத பிரயோகம் -பற்றி நான்கு கேள்விகள்
(54) செல்வதைக் கொடுப்பதில் எது சிறந்தது?-பணம் சம்பாதிக்கும் வழிகளில் சிறந்தது -தனவான் பற்றி இது -தனம் பற்றி அடுத்தது
திறமையான முயற்சியே! முயற்சி திருவினையாக்கும்.
தாரஷ்யம் சொந்த திறமை
விரல்கள் பத்தும் மூல தனம்
youth are used less -புத்தகப் புழு ஆக்குகிறோம்-திறமையை வெளியே கொண்டு வருவதே சிறந்த பாடம் கற்றுக் கொடுப்பது
————-
(55) பொருள்களுள் சிறந்தது எது?
ஸாஸ்த்ர ஞானம். ஸாஸ்த்ர ஞானம் இன்றி எதையும் செய்து அனுபவிக்க முடியாது.போகமோ, யோகமோ, பந்தமோ, மோட்சமோ சாத்திர ஞானமின்றிக் கிட்டாது.
செல்வத்துள் செல்வன் செவிச் செல்வம் அச் செல்வம் செல்வத்துக்குள் எல்லாம் தலை -திரு வள்ளுவர்
நீ எனது செவியின் வழி புகுந்து -என்னை பெரியவனாக்கினாய் -ஆழ்வார்
—————-
55) ஒருவனது உடைமைகள் அனைத்திலும் மிகவும் மதிப்பு மிக்கது எது?
உடைமைகள் அனைத்திலும் சிறந்தது ஞானம்
——–
56) லாபங்கள் அனைத்திலும் எது சிறந்தது?
லாபங்கள் அனைத்திலும் சிறந்தது உடல் நலமே {ஆரோக்கியம்}
when wealth is lost nothing is lost-when health is lost all is lost
————-
57) அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் எது சிறந்தது?
அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் சிறந்தது மன நிறைவே-துஷ்டி -போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
—
தர்மம் பற்றி நான்கு கேள்விகள்
58) உலகத்தில் உயர்ந்த கடமை {அறம்} எது?
ஊறு இழைக்காமையே {அஹிம்சையே} {தீங்கு செய்யாமையே} கடமைகளில் உயர்ந்தது {அறம்}
ஆன்ரு சம்சயம் பரோ தர்மம் பெருமாள்–ராமோ விக்ரஹவான் தர்மம் -அவரே சொன்ன பதில்
——-
59) எப்போதும் கனியைக் {பலனைக்} கொடுக்கும் அறம் எது?
மூன்று வேதங்களால் விதிக்கப்பட்ட சடங்குகள் எப்போதும் கனி {பலன்} கொடுக்கின்றன
த்ரேதா தர்மம்
மூன்று அக்னி ஹோத்ரம் -இஹ பர பலன்களைக் கொடுக்கும் -சஹா பாலன் எப்பொழுதும்
மூன்று வித தர்மமாக இருக்கும் நாராயணன் -ஒருவனே எப்பொழுதும் பலன் அளிப்பவன் அன்றோ -அவனே த்ரேதா தர்மம்
இவனே தத்வம் ஹிதம் புருஷார்த்தம்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
ராமனே த்ரேதா தர்மம் -த்ரேதா யுக அவதார புருஷன் -ராமோ விக்ரஹவான் தர்மம் -ராமனே எப்பொழுதும் ரக்ஷகன்
———–
60) அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழி வகுக்காதது எது?-கிம் நியமய -யாரை அடக்கினால் துக்கம் இல்லாமல் இருக்கலாம்
மனமானது அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழி வகுக்காது-அகந்தை வழியில் போகும் மனதை அடக்க வேண்டுமே
———-
61) கூட்டணியை {நட்பை} உடைக்காதவர்கள் (முறிக்காதவர்கள்) யார்?-யார் உடன் நடப்பு நிலைத்து இருக்கும்
நல்லோருடன் கூட்டணி {நட்பு} எப்போதும் உடையாததாகும் (முறியாததாகும்)
ஸத் சங்கம் -நிலைத்து நிற்கும் -எப்பொழுதும் துணை –
ஸத் -கல்யாண குணங்களை அறிந்தவனே ஸத்
அஸ்தி ப்ரஹ்மணே சேத் வேத சந்தமென்னும் பவதி
இந்த நடப்பு ந ஜீயதே -அழியாதே ஸ்ரீ வைகுண்டத்திலும் வழி நடத்திச் செல்வார்கள்
—————
விடவேண்டியவற்றைப் பற்றி நான்கு கேள்விகள் மேல்
62) எது துறக்கப் படுவதால், ஒருவன் மற்றவர்களால் ஏற்கப் படுகிறான்?-பிரியமானவன் ஆகிறான்
ego-மானம் -அபிமானம் -அஹங்காரம் -கர்வத்தைத் துறப்பதால், அது ஒருவனை {மற்றவருக்கு} ஏற்புடையவனாக மாற்றுகிறது
அஹங்காரம் விடுவதே சரணாகதி
காம்பற தலை சிறைத்து –கடைத்தலை வாழும் சோம்பர்
அவனுக்கே பிரியவனாகி -அனைத்தும் பெறலாம்
———
63) எது துறக்கப் பட்டால், வருத்தத்துக்கு வழி வகுக்காது?
க்ரோதம்–கோபத்தைத் துறந்தால், அது வருத்தத்துக்கு வழி வகுக்காது
தரையை ஓங்கி அடித்து வலி பெறுவது போல் சினப்பட்டால் வருத்தம் வந்தே தீரும்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
————
64) எது துறக்கப் பட்டால், ஒருவன் -அர்த்த வான் -செல்வன் -வளமானவன் ஆகிறான்?
ஆசையைத் துறந்தால், அது ஒருவனை வளமானவனாக்குகிறது
தேவை இல்லாத பேராசை -தேவை இல்லாவற்றுக்கு செலவழித்து செல்வம் இழப்பான்
ஆசை அடக்கினால் எல்லாம் காலடியில் கிடைக்கும்
money not spend is money earned-
———-
65) எது துறக்கப் பட்டால் ஒருவன் மகிழ்ச்சி யடையலாம்?–ஸூகீ பவேத்
பேராசையைத் துறந்தால், அது ஒருவனை மகிழ்ச்சியடையச் செய்கிறது
கர்மாதீனம் படி வேண்டியதை பகவான் அளிக்கிறான்
கிடைத்தவற்றைக் கொண்டு நிம்மதியாக இருக்க வேண்டுமே
பகவான் சொத்தை எனது நினைப்பதே பெரிய கள்ளத்தனம்
தாஸ்யம் உணர வேண்டுமே
பெரிய பெருமாள் சொத்தை ஆசைப்படுவதே பேராசை
——-
தானம் பற்றிய நான்கு கேள்விகள்
66) ஒருவன் வேதம் கற்ற அந்தணர்களுக்கு எதற்காகக் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்?
அறத் தகுதிக்காக ஒருவன் அந்தணர்களுக்குத் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்.-வேதம் விதித்ததே தர்மம் -விதி அடிப்படையில் புண்யம் பெற
———
67) நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் எதற்காகக் கொடுக்க வேண்டும்}?
நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் புகழுக்காகக் கொடுக்க வேண்டும்
கலையை வளர்க்க சம்பளம் வேறே சிலர் கொடுப்பார்
இங்கு யஸஸ் -விளம்பரம் பெறவே கொடுக்கிறார்கள் -விளம்பரம் வருமே
———-
68) பணியாட்களுக்கு {வேலைக்காரர்களுக்கு} எதற்கா-tips-bonus {கொடுக்க வேண்டும்}?
பணியாட்களுக்கு அவர்கள் தங்களைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடுக்க வேண்டும்
சங்க்ரஹ அர்த்தம் -உடனே இருக்கச் செய்யவே tips
——–
69) மன்னனுக்கும்-ராஜ சபையில் பணி செய்பவர்களுக்கும் -எதற்காக {கொடுக்க வேண்டும்}?
பயார்த்தம்-அச்சத்தில் இருந்து நிவாரணம் பெற ஒருவன் மன்னர்களுக்குத் தானமளிக்க வேண்டும்
——-
உலகம் பற்றிய நான்கு கேள்விகள்
70) உலகத்தை மூடியிருப்பது எது?
உலகம் இருளால் மூடியிருக்கிறது-ஆவிருத்தோ -அஞ்ஞானத்தாலே -அறியாமையால் சூழப் பட்டுள்ளது -லீலா விபூதி
உப யுக்தேஷூ வை ஷம்யம் –எல்லாக்கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது
அவனைப் பற்றிய கேள்விகளை கேட்டு அறிந்து-அங்கு சென்ற பின்-இவற்றுக்கு எல்லாம் தானே பதில் கிட்டும்
அஞ்ஞானம் இங்கு -கர்ம ரூபமான அவித்யை -முன்பு செய்த இரு வினைகள் –
லீலா விபூதி கர்மத்துக்கு உட்பட்டே செயல்படும்
———-
71) தன்னைத் தானே ஒரு பொருள் கண்டறிய முடியாததற்குக் காரணமாக இருப்பது எது?-ந ப்ரகாஸதே
ஒரு பொருள் தன்னை வெளிப் படுத்திக் கொள்ள இருள் அனுமதிக்காது
தமஸ் -மூடி உள்ளது
சோம்பலாலே -தானே கடமை செய்யாமல்
தூங்கி -நாட்டையும் தம்மையும் கெடுத்துக் கொண்டான் –
பொன்னான வேலைகள் எல்லாம் தூங்குதப்பா
திரோதான கரீ–ஆத்மாவின் ஞான ஒளியை மறைக்கும் ப்ரக்ருதி -அங்கே ஸ்வரூபம் ஆவிர்பாவம்
————
72) நண்பர்கள் கைவிடப்படுவதற்குக் காரணம் எது?
லோபா -பேராசையின் காரணமாகவே நண்பர்கள் கைவிடப்படுகிறார்கள்-
அடியார் அடியார் கூட்டங்களைக் கைவிட்டால் மேல் மேல் தீங்கு விளையும் அன்றோ
———
73) சொர்க்கம் செல்வதில் ஒருவனைத் தோல்வி யுறச் செய்வது எது?
உலகத்துடனான இத் தொடர்பினாலேயே {அதாவது பற்று [அ] ஆசையால்} ஒருவன் சொர்க்கம் செல்வதில் தோல்வி யுறுகிறான்
பாபம் செய்பவர்களுடன் சங்காத்
ஐம் பெரும் பாவங்கள் பொய் சொல்வது -பிறர் மனைவி மேல் ஆசை -போதை ஹேது இல்லாமல் வெறுப்பது -இவர்களுடன் நட்பு
நல்ல மணம் –தீய கந்தம் –குணமும் அதுவே யாகுமே
———–
74) ஒருவன் எதனால் இறந்தவனாகக் கருதப்படலாம்?
செல்வமற்ற மனிதன் இறந்தவனாகக் கருதப்படலாம்
தரித்ரன் -இங்கு -அறிவுச் செல்வம் இல்லாதவன் -அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவு இல்லாதவர் எதுவுமே இல்லாதவன் -வள்ளுவர்
ஒன்பது வாசல் கோட்டைக்கு விளக்கு அறிவு என்னும் விளக்கு –
———
75) ஒரு நாடு எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்?
அராஜகம் –மன்னனற்ற நாடு இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்–ராஜதே இதி ராஜா ஆளுமை மிக்க மன்னன் –
———–
76) சிராத்தம் எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்?
அஸ்ரோத்தியம் –வேதம் கல்லாத -கல்லாத புரோகிதன் துணை கொண்டு செய்யப்படும் சிராத்தம் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்
———
77) ஒரு வேள்வி எதனால் இறந்ததாகக் {அழிந்ததாக} கருதப்படலாம்?
அந்தணர்களுக்குத் தானம் -தஷிணை-இல்லாத வேள்வி இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்
———
அடுத்து ஐந்து கேள்விகள் சேர்த்து
78) வழி என்பது எது?-கா திக் எது திசை -எந்த திசையில் போக வேண்டும் என்பதைக் கேட்டவாறு
சந்தோ சான்றோர்களே திக்கு –எது நன்மையோ அதுவே வழி-சான்றோர்கள் பயணித்த வழியே திசையே நமக்கும் போக வேண்டிய வழி திசை -மேலையார் செய்வனகள்
——
79) நீராகப் பேசப்படுவது எது?–எங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது
வெளியே {ஆகாயமே} நீராகப் பேசப்பட்டு வருகிறது
வானம் பார்த்த பூமி
நீ பூமி நான் வானம் கல்யாண வேத மந்த்ரம் -பூமி -விதை -வானத்தில் இருந்து வரும் மழையையே எதிர்பார்க்கும்-அநந்யார்ஹம் அன்பை சொன்னவாறு
——–
80) உணவு எது?-கிம் அன்னம் -எது உணவு தருகிறது
பசுவே உணவு –பசுவின் பாலே அம்ருதம் -இதில் இருந்தே தயிர் நெய் வெண்ணெய்
ஸாளக்கிராம கல்லைக் கழுவியே சாப்பிடு என்பர் -யாகம் திருவாராதனத்தையும் கௌ சப்தம் குறிக்கும் -ப்ரஸாதமே உணவு
——-
81) நஞ்சு எது?–கிம் சவை விஷம்
அந்தணர் விஷம்
வேதம் படித்தவன் செல்வம் அபகரித்தல் விஷம் போல்
வேண்டுகோளே {யாசிப்பது; பிச்சை கேட்பது} விஷம்
———
82) சிராத்தத்துக்கான உகந்த நேரம் எது?–பதில் சொல்லிய பின்னர் தண்ணீர் குடிக்கலாம் சேர்த்து சொன்னான்
ஒரு அந்தணனே சிராத்தத்துக்கான உகந்த நேரம்
அபரான்ன காலம் மதியம் 12 மணிக்கு மேலே பண்ண வேண்டும்
நல்ல வேதம் வல்ல அந்தணர் கிடைத்தால் -அப்போதே பண்ணலாம்-திதிக்குப் பண்ணுவதும் வேண்டும் -இதுவும் சிறப்பான ஸ்ரார்த்தம்
———
யக்ஷன் நீ பதில்களை பற்றி என்ன நினைக்கிறாய் கேட்டான்
இதுவரை சரி -இன்னும்-29- கேள்விகள் உண்டு-rapid fire rounds -definition பற்றிய கேள்விகள் -சொல்லிய பின்பு தண்ணீர் கொண்டு போகலாம்
இங்கும் நான்கு நான்கு -ஓன்று மட்டும் ஐந்து கேள்விகள்
83) தவத்தின் குறி {குறியீடு} எனச் சொல்லப்படுவது எது?
தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பது தவம் {தவத்தின் குறியீடு};ஸ்வ வர்ணாஸ்ரம தர்மமே தபஸ் –
——-
84) உண்மையான அடக்கம் {தமம்} எது?
மனதின் அடக்கமே, அடக்கங்கள் அனைத்திலும் உண்மையானது-புலன் அடக்கத்தில் பிரதானம் மன அடக்கமே -புலன்களை விட விஷயாந்தரங்கள் பிரபலம்
———-
85) பொறுமை எனப்படுவது எது?
பகையைச் சகிப்பதே பொறுமை
இரட்டைகளை சகிப்பதே பொறுமை -புகழுக்கும் மயங்காமல் -பேணும் கால் நாணமும் வேண்டும் -த்வந்த்வம் ஸஹித்வம்
அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா
———
86) வெட்கம் என்பது எது?
தகாத செயல்கள் அனைத்திலும் இருந்து விலகுவதே வெட்கம்
———–
87) ஞானம் என்று சொல்லப்படுவது எது?
தெய்வீகமே {உண்மைப் பொருளை அறிவதே} உண்மையான ஞானமாகும்.
ஒண் கேள்வன் ஒருவனை உணர்வதே ஞானம்–உண்மைப் பொருளை ஆராய்ந்து -அறிவு
அப் பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு -வள்ளுவர்
தத்துவார்த்த சம்போதகமே ஞானம்
————–
88) அமைதி எது?-இங்கு மனம் அடக்கம் பற்றி கீழ் புலன் அடக்கம் பற்றி
இதய {மன} அமைதியே உண்மையான அமைதி
சமம் மன அடக்கம் -தமம்-புலன் அடக்கம்
சமம் –தமம் பழகி பழகி மனம் சாந்தமாகி இருக்கும் நிலை -ஆசாபாசங்கள் விலகி –
———
89) கருணை எது?
அனைவருக்கும் மகிழ்ச்சியை விரும்புவதே கருணை
தயை -ஸர்வ ஸூகமாக இருக்க நினைப்பதும் முயல்வதும்
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ
பாம்பின் நாக்கில் உள்ள முள்ளை எடுத்த எம்பார் -கடிப்பது பாம்பின் வேலை கருணை காட்டுவது நம் வேலை
———-
90–கிம் ச ஆர்ஜவம்
சமமாக அனைவரையும் பார்ப்பதே நேர்மை
சொந்த விருப்பை கொண்டு பார்க்கக் கூடாதே
———–
91-கஸ் சத்ரு துர்ஜய
க்ரோதமே -வெல்வதற்கு கஷ்டமான எதிரி -கோபமே வெல்லப்பட முடியாத எதிரி
கோபத்தின் வேகம் தணிந்த பின்பே உணர்வோம்
தன்னைத்தான் காக்க சினம் காக்க -இல்லையேல் தன்னையே கொள்ளும் சினம்
ஆசை நிறைவேறாமல் கோபமாக மாறும் -இதுவே துர்ஜயம் கீதையிலும் உண்டே
————————
92) வெல்லப்படமுடியாத எதிரி எது?—மனிதனின் தீராத நோய் எது?கஸ் ய வியாதி முடிவே இல்லாத வியாதி
ஸம்ஸார வியாதியும் முடியும்
லோபம் -பேராசைக்கு மட்டும் மனுடிவே இல்லையே
பேராசையே தீர்க்கப்படமுடியாத நோய்
———
93) எவ்வகை மனிதன் நேர்மையானவன்?-93-சாது சான்றோர் யார்
சர்வ பூத ஹித சாது
அனைத்துயிர்களின் மகிழ்ச்சியை விரும்புபவனே நேர்மையானவன்
தயை சுகமாக இருக்க முயல்பவன்
இங்கு சர்வ பூத ஹிதம் மிகச்சிறந்த நன்மையை அடைய
மோக்ஷம் -நிரந்தர நன்மை பெற முயல்பவன்
———
94) எவ்வகை மனிதன் நேர்மையற்றவன்?-அஸாது–கீழ் மகன் -யார்
கருணயற்றவன் நேர்மையற்றவனாவான்
நிர்தயை -கருணை இல்லாதவன்-simpathy மேல் yemnpathi பிறர் கஷ்டம் தனது கஷ்டம் போல் பார்ப்பவன்
———–
95) அறியாமை என்பது எது?-மோஹம் மயக்கம்
தர்ம மூடஸ்தம் -பகுத்தறிவு இல்லாதவன் -தர்ம அதர்ம வியாகுலம் -தன் கடமைகளை அறியாததே உண்மையான அறியாமை
——–
96) கர்வம்-மானம் என்பது எது?
ஒருவன் தன்னைச் செயல்படுபவனாகவோ {actor = நடிகனாகவோ} வாழ்வில் பாதிக்கப்பட்டவனாகவோ உணர்வதே கர்வம் ஆகும்
தன்னை உயர்ந்தவனாக நினைக்கும்
அனைவரும் ஞான ஆனந்த மயன் என்று உணராமலும்
ஆத்ம அபிமானம் கர்வம் -வித்யை தனம் குளம் அழகு கீர்த்தியால் செருக்கி நிறுத்தல்
———
97) சோம்பலெனப் புரிந்து கொள்ளப்படுவது எது?-ஆலஸ்யம்
தர்ம நிஷ் க்ரியதா -ஒருவன் தனது கடமைகளைச் செய்யாதிருப்பதே சோம்பலாகும்
———-
98) துன்பமெனப் பேசப்படுவது எது?
ஜீவாத்மாவின் யாதாத்ம்யம் அறியாததே -ஒருவனது அறியாமையே துக்கமாகும்-உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
—————-
99) முனிவர்களால் நிலைமாறா உறுதி –ஸ்தைர்யம் -எனச் சொல்லப்பட்டுள்ளது எது?
ஒருவன் தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பதே நிலைமை மாறா உறுதியாகும்.
இதுவே மன உறுதி-கீழே தபஸ் இதே -அங்கு தனது தர்மத்தை சரியான நேரத்தில் பண்ணுவது
இங்கு மன உறுதி -அதற்க்கு தடை வந்தாலும் செய்வது
———
100) பொறுமை எது?-தைர்யம் எது
புலன்களை அடக்குவதே உண்மையான பொறுமையாகும்-தைர்யம்-ஐந்து குதிரைகள் மனம் கடிவாளம்
——–
101) உண்மையான சுத்தம் என்பது எது?-உயர்ந்த நீராட்டம் ஸ்நாநம்
மனம் மாசடையாமல் கழுவுவதே உண்மையான நீராடலாகும் {சுத்தமாகும்}.
——–
102) தானம் என்பது எது?
அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதே தானமாகும்
பூத ரக்ஷணம் -சரணாகத ரக்ஷணமே மிக சிறந்த தானம்-யதி வா ராவணன் -அபய பிரதானம்
புறா கதை
குரங்கு புலி மனிதன் கதை
———
103) எந்த மனிதன் கற்றவனாகக் {பண்டிதனாகக்} கருதப்பட வேண்டும்?
தன் கடமைகளை அறிந்தவன் கற்றவன் {பண்டிதன்} என்று அழைக்கப்பட வேண்டும்.
———
104) எவன் நாத்திகன் என்று அழைக்கப்பட வேண்டும்?
ஞானமற்றவனே நாத்திகன்.
———
105) எவன் ஞானமற்றவன் {அறியாமையில் இருப்பவன்} என்று அழைக்கப்பட வேண்டும்?
நாத்திகனே ஞானமற்றவன்
———
106) எது ஆசை என்று அழைக்கப்படுகிறது? மற்றும் ஆசையின் ஊற்றுக்கண் எது?
உடைமைகளுக்குக் காரணமே ஆசை (ஆசைகளின் ஊற்றுக்கண் பொருள் உடைமைகள்)
———–
107) பொறாமை எது?
இதய {மன} துக்கமே பொறாமை
————
108) கர்வம் {அகங்காரம்} எது?
எழுச்சியற்ற அறியாமையே கர்வம் {அகங்காரம்}
ஆகும்{அஞ்ஞானமே அகங்காரம்}.
——
109) பேடிசம் {டம்பம்}
{#} எது?
அறநிலை நிறுவுதலே பேடிசம் {டம்பம்} ஆகும் {தான் அறம் கடைப்பிடிப்பதாகப் பிறருக்குத் தெரிவிப்பது டம்பமாகும் [போலித்தனமாகும்]}.
——–
110) தேவர்களின் அருள் எது?
தானங்களின் கனியே {பலனே} தேவர்களின் அருளாகும்
—
111) பொல்லாங்கு {தீய குணம்} எது?
பிறரைக் குறித்துத் தவறாகப் பேசுவதே பொல்லாங்கு {தீய குணம்} ஆகும்
——-
தனிப் பெரும் கேள்வி
112) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன ஒன்றுக்கொன்று எதிரானவை. இப்படி ஒன்றுக்கொன்று பகையானவை எப்படி இணைந்து இருக்க முடியும்?
மனைவியும் அறமும் ஒருவருக்கொருவர் ஏற்புடன் செயல்படும்போது, நீ சொன்ன மூன்றும் {அனைத்தும்} இணைந்து இருக்க முடியும்
தர்ம சிந்தனை உள்ள வாழ்க்கைத்துணை கிடைத்தால் -இல்லறம் நல்லறம் ஆகும்
பொருளையும் சம்பாதித்து தர்மம் செய்வான்
இருவரும் சாஸ்திரம் வழியில் இருந்து இன்பமும் பெறுவார்கள்-அன்பும் அறனும் உடைத்தாயின் பண்பும் அது வள்ளுவர்
———
தனிப் பெரும் கேள்வி-ப்ரச்னம் சீக்ரம் பதில் சொல்லு-என்று இதற்குச் சொல்லி கேட்க நீண்ட மூன்று பதில்கள்
113) அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடையும் மனிதன் எவன்?
“ஏழை அந்தணனுக்குத் தானமளிப்பதாக உறுதியளித்து அவனை அழைத்து, பிறகு, கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்பவன் அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடைகிறான்.
வேதங்களிலும், சாத்திரங்களிலும், அந்தணர்களிடமும், தேவர்களிடமும், பித்ரிக்களுக்கு மரியாதை அளித்துச் செய்யப்படும் விழாக்களிலும் பொய் கூறுபவனும் அழிவில்லா நரகத்தை அடைய வேண்டும்.
செல்வத்தின் உடைமையாளன், தானமளிக்காமலோ, பேராசையின் காரணமாகத் தானே அனைத்தையும் அனுபவித்து மற்றவர்களுக்கு இல்லை என்று சொன்னாலோ அவனும் அழிவில்லா நரகத்தை அடைகிறான்.
————-
தனிப் பெரும் கேள்வி–எங்கே ப்ராஹ்மணன் சோ –நிச்சயித்து சொல் என்று -குலத்தாலோ வகுத்த வேதம் கற்பதாலா ஆச்சார்யர் மூலம் அறிவதாலா நல்ல ஒழுக்கத்தாலா -என்று choice கொடுத்து கேள்வி –
114) எந்தப் பிறவி, நடத்தை, {வேத} படிப்பு அல்லது {சாத்திர}
கல்வி ஆகியவற்றால் ஒரு மனிதன் பிராமணனாகிறான் {அந்தணனாகிறான்}?
பிறவியோ, {வேத} படிப்போ, {சாத்திர} கல்வியோ பிராமணத் தன்மைக்குக் காரணமில்லை என்பதில் ஐயமில்லை. நடத்தையே அது {பிராமணத்தன்மை}.
ஒருவனது நடத்தை எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக ஓர் அந்தணரால் {பாதுகாக்கப்பட வேண்டும்}.
ஒருவன் தனது நடத்தையைக் கெடா நிலை யுடையதாகப் பராமரித்தால், அவன் எப்போதும் கெடு நிலையை அடைவதில்லை.
பெரும் ஆசிரியர்கள், மாணவர்கள் கற்றும் தீய ஒழுக்கம் இருந்தால் கூடாதே,-ஞானம் அனுஷ்டானத்திலும் வர வேண்டுமே -அறக் கடமைகளைச் செய்பவனே கற்றவன்.
நான்கு வேதங்களைப் படித்தும், இழிந்த தீயவனாக இருந்தால் அவன் சூத்திரனில் இருந்து வேறுபட்டவனல்ல என்று (அவனது நடத்தை சரியில்லாததாக) கருதப்பட வேண்டும்.
நல்ல ஒழுக்கம் அனுஷ்டானம் காத்து -அந்தணர் என்பர் அறவோர் -கல்வியில் குறைபாடு இருந்தாலும் வாழ்வான்
படித்தாலும் பாடம் சொல்லிக் கொடுத்தாலும் சதாசிசில் ஆராய்ந்து பேசினாலும் தீய ஒழுக்கம் உள்ளவன் மூர்க்கனாகவே ஆவான்
கற்றபின் நிற்க அதற்குத் தக-சாதி அந்தணர்களே யாகிலும் நுமர்களைப் பழிப்பர் ஆகில்
அக்னி ஹோத்ரம் செய்து, புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் {அந்தணன்} என்று அழைக்கப்படுகிறான்.
————
நான்கு கேள்விகள் -யார் யார் ஏற்றைப் பெறுகிறார்கள்
115) ஏற்புடைய {இனிமையான} வார்த்தைகளைப் பேசும் ஒருவன் அடையும் லாபம் என்ன?-பயன் உள்ள வார்த்தை சொல்லாமல் பிடித்ததை- பேசும் ஒருவன்
ஏற்புடைய வார்த்தைகளைப் {இனிமையாகப்} பேசும் ஒருவன் அனைவருக்கும் ஏற்புடையவனாகிறான் {அன்பனாகிறான்}
—————
116) எப்போதும் தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் அடையும் லாபம் என்ன?
தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் தான் முயற்சிப்பதை {தேடுவதை} {வெற்றியை} அடைகிறான்-அதிக வெற்றியைப் பெறுவான் -சிந்தித்து செயல்பட வேண்டுமே
————-
117) நிறைய நண்பர்களை உடையவன் அடையும் லாபம் என்ன?
பல நண்பர்களை உடைய ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.
————-
118) அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனுக்கு {அவன் அடையும் லாபம்} என்ன?
அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன் (அடுத்த உலகில்) இன்ப நிலையை அடைகிறான்
————-
மேல் நான்கு கேள்விகள்–யார் மகிழ்ச்சியுடன் -இத்யாதி –
119) உண்மையில் மகிழ்ச்சியானவன் எவன்?
கடனுக்கு ஆட்படாமல், வீட்டில் இருந்து வெளியே போக வேண்டிய தேவை இல்லாமல், {வாழ்வுக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமில்லாதவன்} ஒரு நாளின் {ஒரு பகலை எட்டுப் பகுதிகளைப் பிரித்து அதில் வரும்} ஐந்தாவது அல்லது ஆறாவது பகுதியில், சொற்ப காய்கறிகளைத் தன் இல்லத்தில் {தன் சொந்த வீட்டில்} சமைப்பவன் {சமைத்து உண்பவன்} உண்மையில் மகிழ்ச்சியுடைவனாவான்
திருவாராதனம் -காலம் -பகவத் ப்ரஸாதம் –உண்டு -தேவர் ரிஷி வேதம் ஓதி பித்ரு-பிள்ளைகளை பெற்று அற வழியில் செலுத்தி -மூன்று கடனையும் கழித்து நிம்மதி யாக வாழலாம்
———-
120) மா பெரும் அதிசயமானது எது?
நாளுக்கு நாள் எண்ணிலடங்கா உயிரினங்கள் யமனின் வசிப்பிடம் செல்கின்றன. இருப்பினும், மீந்திருப்பவை {உயிரோடு இருக்கும் உயிரினங்கள்} தங்களை இறவாத் தன்மை கொண்டவை என்று நினைத்துக் கொள்கின்றன. இதை விட வேறு எது அதிசயமானதாக இருக்க முடியும்?
——–
121) பாதை எது?-முக்தி அடைய வழி
வாதம் செய்வது எந்த ஒரு குறிப்பிட்ட முடிவுக்கும் வழிவகுக்காது. சுருதிகள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருக்கின்றன; {இவரது} கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டது என்று சொல்லுமளவுக்கு ஒரு முனிவர் கூட இல்லை; தர்மம் {அறம்} மற்றும் கடமை சம்பந்தமான உண்மை {சத்தியம்} குகைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது; எனவே, பெருமை மிக்கவர்கள் {பெரியோர்} நடந்து சென்ற பாதையே நமக்கான பாதை.
ஸ காஷ்டா ஸ பரா கதி -பரம குஹ்யம் -அவனை அடைய அவனே வழி-மேலையார் செய்வனகள் -பெரியவராகிய மஹா ஜனமாகிய நம்மாழ்வார் பிரபன்ன ஜன கூடஸ்தர் -புகல் இன்று இல்லா அடியேன் உனது அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
——–
122) {தினமும் நடை பெறும்} செய்தி எது?hot current news
அறியாமை நிறைந்த இந்தப் பூமி {சமையற் செய்யத்தக்க} ஒரு பெரிய கடாய் ஆகும். -ஆகாசம் மூடியாக்கி -காலன் சமையல் காரன் -உயிர்கள் உணவுப் பண்டங்களை -பகல்களையும், இரவுகளையும் எரி பொருளாய்க் கொண்டிருக்கும் சூரியன் நெருப்பு ஆகும். மாதங்களும், பருவங்களும் மரக் கரண்டிகளாகும். {உலகம் என்ற அந்தக் கடாயில்} காலம் அனைத்தையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே {தினமும் நடைபெறும்} செய்தி ஆகும்.
———–
123) உண்மையில் யார் மனிதன்?
ஒருவனது நற்செயலின் அறிக்கை சொர்க்கத்தை அடைந்து, பூமி எங்கும் பரவுகிறது. அந்த அறிக்கை நீடிக்கும் வரை, {அவன் மனிதன் எனப்படுகிறான்.}
- வாழ்பவர்களில் “புருஷன் (மனிதன்)” என்று அழைக்கப்படுபவர் யார்?கனிகளில் ஆர்வம் இல்லாமல் அல்லது அதன் பலன்களில் ஆர்வம் இல்லாமல் செய்யும் நற்செயல்கள், ஒருவரின் பெயரை வானத்திலும் பூமியிலும் பரவச் செய்கின்றன. அவரது புகழ் நிலைத்திருக்கும் வரை, அவர் “புருஷா” என்று அழைக்கப்படுகிறார்
- இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் -புகழ் ஒலித்துக் கொண்டே இருந்தால் புருஷன்
இரட்டைகளையும் சமமாகப் பார்ப்பவன் -கடந்த காலம் எதிர் காலம் சமமாக நினைப்பவன்
நேற்று உடைந்த பானை -நாளை மதிள் மேல் பூனை -இன்று கையில் உள்ள வீணை-strike the rod when it is hot
————
124) அனைத்து வகைச் செல்வங்களையும் உண்மையில் கொண்டிருக்கும் மனிதன் யார்?
ஏற்புடையதும் ஏற்பில்லாததும், இன்பமும் துன்பமும், கடந்த காலமும் எதிர்காலமும் {என உள்ள அனைத்து இரட்டைகளும்} எந்த மனிதனால் சமமாகக் கருதப்படுகிறதோ, அவன் அனைத்து வகைச் செல்வங்களையும் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்
எல்லாவற்றிலும் வியாபித்திருப்பவர் யார்?ஆசை, வெறுப்பு, இன்பம், துன்பம், வருவது, தொலைந்து போவது போன்றவற்றைச் சமமாக எண்ணுபவன் “ பிரம்ம ஞானி ( பிரம்மத்தை அறிந்தவன் )” என்று அழைக்கப்படுபவன்.
ஸதா பகவத் ஸ்மாரணம் செய்பவனே உயர்ந்த செல்வம் உடையவன்
———–
வ்யாஸ பாரதத்தில் 124 கேள்விகள்-
வில்லி பாரதத்தில் 11 கேள்விகள் அதிகம் உண்டே
125-சொல்லும் நூல்களின் பெரியது எது
அரிய மெய் ஸ்ருதி -கேட்டு கேட்டு -வேதமே கருணையால் அர்த்தம் உணர்த்தும்
மெய் -மாறாதது -உண்மை மட்டும் அல்ல -யுகம் தோறும் மாறாமல் இருக்குமே
எழுதாக் கிளவி
———-
126- இல்லறத்துக்கு உரியது எது
எண்ணுடை இல்லாள் —நல்ல வாழ்க்கைத் துணை -life patner
——
127-ஜாதிப்பூ மாலை வாசனை மிக்கு இருக்கும்
——–
128—-முன்னோர் வழியில் செய்வது
129-மொய் துழாய் முகுந்தன் பரதெய்வம்
130-இயற்க்கை குழல் மணம் -பெண்ணுக்கு நாணம்
131-தனவானுக்கு அரண் தானமே -பண்ணப்பண்ண பெருகும்
132- இனியது செவிக்கு இளம் குழந்தை மழலைச் சொல் –
133-நிலையாய் நிற்பது -நீடு இசை புகழ் ஒன்றுமே நிற்கும்
134-கற்பது -கசடு அற -சங்கை இல்லாமல் கற்பதே கல்வி
135-அற்பம் அனைத்திலும் -அயல் கையை ஏற்று வாழ்தல்
——-
136-புருஷன் -நினைத்த புருஷன்-பதில் நன்றாக சொன்னீர் -உனது தம்பிக்கு உயிர் கொடுப்பேன்
எந்தத்தம்பிக்கு சொல்
நகுலனுக்கு கொடு
பீமன் பிடித்தவன் அர்ஜுனன் வேண்டியதவன் மாற்றாந்தாய் பிள்ளை எதனால் கேட்டாய்
தர்மோ ரஷித்த ரஷணம் -தர்மம் கைவிடாமல் இருந்தால் அது காக்கும்
ஆந்ரு சம்சயம் பரா தர்மம்
குந்தீ சைவ–நானாவது உள்ளேன் -மாத்ரீ -தாயும் யாருமே இல்லையே
யஷன் உருகி -தஸ்மாத் நான்கு சகோதர்களும் உயிர் எழுவார்கள்
நீங்கள் யார் கேட்டான்
உண்மையான வடிவம் -யம தர்ம ராஜன் -அவனே
என்னுடைய மகனைப் பார்க்க வந்தேன்
ஸத்யம் புகழ் வாய்மை புலன் அடக்கம் நேர்மை உறுதி தானம் தபஸ் ப்ரஹ்மசர்யம் இருக்கும் இடத்தில் உள்ளேன்
அஹிம்சா-ஷாந்தி தபஸ் மனத்தூய்மை உடல் தூய்மை பொறாமை இல்லாமை ஆறு வாசல்கள் தர்மம் நிலைத்து இருக்க
ஐந்தில் சிறந்தவன் -திருப்தி ஷாந்தம் தாந்தம் போதும் என்ற எண்ணம் ஆசை வென்றாய்
பசி தாகம் ஆசை மயக்கம் மூப்பு மரணம்
வரம் என்ன கேட்க
அரணிக்கட்டை தேடி வந்தோம்
வைதிகருக்கு கிடைக்க வேண்டும்
அப்பொழுதும் மற்றவரை நினைத்து தர்ம புத்ரன்
மான் வடிவத்தில் நானே வந்தேன்
வேறே வரம்
வனபர்வம் நிறைவு
12 வருஷம்
மறைந்து இருக்க வழி சொல்லு
அஞ்ஞா வாஸம்
வேறே வரம்
மனதில் -பேராசை மயக்கம் கோபம் இல்லாமல் இருக்க வேண்டும்
தானம் தபஸ் ஸத்யம் நிலைத்து இருக்க வரம்
இல்லாதவற்றை வரமாக கேள் என்றான்
பல ஸ்ருதி -இம்மையிலும் மேலும் நல்ல வாழ்வு –
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –