நன்றும் தீதும் நமக்கு உரைப்பாரை நாடிப் பெறுதல்
1-க்ரந்தத்தின் தலை வாசல் திறப்பு
2- எட்டு இரண்டு எண்ணிய சத்திற்கும் தனி நிலை
3-துழாய் முடியான் உடம்பாய் நாம் அடியோம் என்ற முக்கிய அடிப்படைக் கொள்கை
4- அடிப்படையில் அலர்ந்த ஐந்து அறிவு
5-அடி -உருவானவை பற்றிய ஆய்வு
6-திரு மாதுடன் நின்ற புராணன்
7-வீடினை வேண்டும் பெரும் பயன்
8- நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளை ஏற்பவர்
9-பழ மறையின் பரம நெறி
10-அநன்யராய் வந்து அடையும் வகை
11-துணையாம் பரனை வரிக்கும் வகை
12-அறமே பரன் என்று அடைக்கலம் வைத்தமை
13-வேள்வி அனைத்தும் முடித்தமை
14-மூன்றில் நிலையுடைமை
15-கடன்கள் கழற்றிய அடிமை
16-நல்லடியாருக்கு ஆதரம் மிக்க அடிமை
17-மேதியினில் இருப்பது விதியினாலே
18-மாளாத வினை அனைத்தும் மாலா வகை
19-வானாடு உகந்தவர் வையத்து இருப்பிடம் தன்னிலும்
20-உடலைச் சிறை வெட்டிவிட்டு வழிப்படுத்தும் வகை
21- வீண் ஏறும் வழி காண்டொம்ம்
22-அந்தம் இல்லாப் பேர் இன்பம் அருந்துதல் –குருக்கள் குறை கழல் கீழ் மகிழ்ந்து எழும் பொய்த்து மன்னுதல்
23-திரு நாரணன் மன்னிய சரண்
24-வரிக்கின்றேன் குறி ஒன்றால்
25-அடியார் ஆதரித்தில் ஆரண நீதி நெறி குலையாமை
26-தண்மை கிடக்க தாம் உள்ளமை
27-நன் மனு ஓதினமே
28-திருமால் பாதம் இரண்டும் சரண் எனப் பற்றி அடிமை கொள்ளுதல்
29-மன்னருள் வாசகத்தால் மருள் அற்றமை
30-அருளுற்ற சிந்தையினால் அழியா விளக்கு ஏற்றினார்
31-இருள் அனைத்தும் மாற்றின வர்க்கு ஒரு கைம்மாறு
32-நிலைகள் தான் உளனாய் உகக்கும் தரம்
முதல் ஆறு அத்தியாயங்கள் தத்வ விளக்கம் -அடுத்த ஏழு அதிகாரங்கள் ஹித விளக்கம் -மேல் புருஷார்த்த விளக்கம்
————-
இந்த கிரந்தத்தில் 32 அதிகாரங்களும் ஒரே விஷயத்தைச் சொல்லுமே
அர்ஜுனன் கீதாச்சார்யானை அணுகி வேண்டிய கணக்கிலே பயனை விழைவோர் ஆச்சார்யரை அணுக வேண்டியதன் அவசியத்தை விளக்குவது
1- அவர் கடாக்ஷத்தால் -மூன்றினுள்ளும் நாளும் உகக்கப் பெறுவதே -இக்கிரந்தத்தின் பயன் என விளக்குவது
2-ஆச்சார்யரிடம் கற்கும் கல்விகள் பலவாயினும் எட்டு இரண்டும் எண்ணுவதே சத்திற்கும் தனி நிலை என்கிறது
3-இம் மூன்றில் முக்கியமாம் மூல மந்த்ரம் முதல்வனுக்கு இவ்வுலகம் உடல் எனத் தெளிவிக்கும் என்கிறது
4-இம் முக்யத்தைச் சார்ந்ததான ஐந்தறிவு புகட்டி நிற்கிறது
5-இவ் வைந்தில் உடம்பில் கொடு மோஹம் கெட உதவும் முத்தத்வத்தை விலகி நிற்கிறது
6-இத் தத்துவம் மூன்றில் திரு மாதுடன் நின்ற புராணனே புகல் பயன் என்கிறது
7-எனக்கு உரியவன் -இவ்வளவான அறிவால் -எனக்கு உரியவன் -எனது பரம் -என் பேறு என்னாது –அஞ்சிறைக்கு அஞ்சி –பெரும் பயன் வீட்டினை வேண்டுபவர் -முமுஷு என விளக்கம் அளிக்கிறது
8- இவ்விதம் வீடு வேண்டும் தகுதி யுடையோர் செய்யும் பக்தி அல்லது பிரபத்தி தான் இருவகையாய் நின்ற போதிலும்
அவர்கள் உடலை விட்ட பின் பெரும் பேறு ஒரே வகை தான் என்று விவரிக்கிறது
9-இவ்வதிகாரிகள் அனுஷ்ட்டிக்க வேண்டிய மோக்ஷ உபாயங்கள் பக்தி பிரபத்தியாய் இருவகை என விளக்கும்
10- இவ்விரு உபாயங்களுக்குள் பிரபத்தி செய்யத் தகுதியை 15 வகையாக எடுத்து இத்தகுதி ஒழிய ஜாதி ஆஸ்ரமம் போன்ற வேறே தகுதி ஏதும் வெண்டாதே அனைத்து உலகும் வந்து அடைய உரியது என தேர்ந்து அளிக்கிறது
11-செய்ய விழையும் பிரபத்தியின் அங்கங்களை விளக்கி நிற்கிறது
12-இப்பிரபத்திக்கு அங்கி பரம் அறுத்து பரமனுக்கு மிக்க அடிமை என்ற நினைப்பே என்கிறது
13–இப்படி பிரபத்தி செய்வதற்கு முன் சோகம் உற்றவனாய் செய்த பின் சோகம் அற்றவனாய் –வேள்வி அனைத்தும் முடித்து நிற்கும் நிலையை அறிவிக்கிறது
14- இந்நிலையில் நிஷ்டையுடன் இருப்பதை அறியும் படியையும் அப்படிப்பட்டவர்கள் மேதினியில் மேவிய விண்ணவர் எனவும் விவரிக்கிறது
15- மேதினியில் இருக்கும் அளவும் பகவத் ஆஜ்ஞா அநுஜ்ஞா கைங்கர்யங்களை சங்கிலி துவக்கு போல் உகந்து செய்து வர வேண்டும் என்கிறது
16-இக்கைங்கர்யங்களை பாகவதர்கள் வரையில் செய்ய பிராப்தம் என்கிறது
17-இப்படி பகவத் பாகவத கைங்கர்யங்களை ஸாஸ்த்ரப்படியே செய்து வரச் சொல்கிறது
18-இப்படி எஞ்சிய காலத்தைக் கழிக்கும் பிரபன்னனுக்கு ப்ராரப்த கர்ம விசேஷத்தினால் அறியாமலோ ஆபத்தில் அறிந்தோ செய்யும் பாபங்கள் ஒட்டாது -அநா பத்தில் அறிந்து செய்பவை பிராயச்சித்தம் செய்வதாலோ சிறு தண்டனை அனுபவித்தோ கழியும் என்பதைக் கூறுகிறது
19-இப்படி எஞ்சிய காலத்தைக் கழிக்க வர்ண தர்மங்கள் நிலைத்து இருப்பதாய் –பாகவதர்கள் வஸிப்பதாய் உள்ள இடமே ஏற்றது என்கிறது
20-இப்படி வார்த்தைக்கும் பிரபன்னனுக்கு சரீரம் விழக் குறித்த சமயம் வந்தவாறே –எம்பெருமான் தன்னைப் பற்றிய கடைசி நினைவை யுண்டாக்கி ஜீவனை ஸ்தூல சரீரத்தை விட்டு ப்ரஹ்ம நாடி வழியே அர்ச்சிராதி மார்க்கத்தில் புறப்படச் செய்கிறான் என்கிறது
21-இப்படிப் புறப்பட்ட ஜீவனை எம்பெருமான் போகங்கள் பல அனுபவிக்கச் செய்து விரஜா நதியைக் கடத்துவித்து அப்ராக்ருதமான ராஜ உபகாரங்களைப் பண்ணுவித்து அழகு ஓலக்கத்திலே நித்ய முக்தர்களோடு புரையறப் பரிமாறும்படி செய்விக்கிறான் என்கிறது
22-இவ்விதம் இந்த ஜீவன் தேச விசேஷத்தை அடைந்து எல்லா தேச -கால -நிலைகளிலும் –எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு முழுமையான பேர் இன்பத்தை மாறுதல் இன்றி அனுபவித்துக் கொண்டே இருப்பான் என்கிறது
23- மேலே இதுவரை விவரித்த விஷயங்களில் -குறிப்பாக –ஸித்த உபாயமான எம்பெருமான்
ஸ்வா தந்தர்யம் –கருணை -சேஷித்வம் -லஷ்மீ ஸஹத்வம் ஆகிய குணங்கள் பற்றிய கலக்கங்களுக்கு சமாதானம் சொல்லி அறிந்த ஞானத்தையும் ஸ்திரப்படுத்துகிறது
24- பக்தி பிரபத்தி யாகிற ஸாத்ய உபாயங்களை பற்றிய அதிகாரம் ஸ்வரூபம் பரிகாரங்கள் பற்றிய கலக்கங்களைப் போக்கி அறிந்த ஞானத்தையும் ஸ்திரப்படுத்துகிறது
ஆச்சார்யரை அணுக–அவர் கடாக்ஷத்தால்–கற்கும்-மூல மந்த்ரம்-ஐந்தறிவு புகட்டி-இவ்வைந்தில்-முத்தத்வத்தை-இத்தத்துவம் மூன்றில் புராணனே புகல் பயன் என்கிறது
வீட்டினை வேண்டுபவர் செய்யும் பக்தி அல்லது பிரபத்தி தான் மோக்ஷ உபாயங்கள் பிரபத்தி செய்ய அனைத்து உலகும் உரியது என அங்கங்களை விளக்கி பரமனுக்கு அடிமை என்ற நினைப்பே அங்கி என்கிறது
இப்படி வேள்வி நிஷ்டையுடன் மேதினியில் இருக்கும் அளவும் கைங்கர்யங்களை பாகவதர்கள் வரையில் ஸாஸ்த்ரப்படியே செய்து காலத்தைக் கழிக்கும் பிரபன்னனுக்கு பாபங்கள் கழியும்
காலத்தைக் கழிக்க பாகவதர்கள் வஸிப்பதாய் உள்ள இடமே ஏற்றது
எம்பெருமான் அர்ச்சிராதி மார்க்கத்தில் புறப்படச் செய்கிறான்
புறப்பட்ட ஜீவனை விரஜா நதியைக் கடத்துவித்து அழகு ஓலக்கத்திலே நித்ய முக்தர்களோடு புரையறப் பரிமாறும்படி செய்விக்கிறான்
ஜீவன் தேச விசேஷத்தை அடைந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு முழுமையான பேர் இன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பான்
மேலே ஸித்த உபாயமான எம்பெருமான் அறிந்த ஞானத்தையும் ஸாத்ய உபாயங்களை பற்றிய அறிந்த ஞானத்தையும் ஸ்திரப்படுத்துகிறது
முதல் 22 அத்தியாயங்கள் -மேல் 4 அத்தியாயங்கள் விவரணம் நிலை நாட்டி அருளி —
மேல் மூன்று அத்தியாயங்கள் ரஹஸ்ய த்ரய விவரணம் -இறுதியில் 3 அத்தியாயங்கள் இவற்றை அறிந்த முமுஸுக்களின் கடைமைகளைக் காட்டி அருளுகிறார்-
————
நன்றும் தீதும் நமக்கு உரைப்பாரை நாடிப் பெறுதல்
நன்றும் தீதும் உரைப்பார் யார் – எம்பெருமானும் -அவன் அவதாரமான நம் ஸம் ப்ரதாய பூர்வாச்சார்யர்களும்
ஏன் நாட வேண்டும் –ஏன் எனில் ஆச்சார்யன் உபதேசித்த வித்யை தான் நிலைக்கும்
நாடிப் பெற பிரமாணம் என்ன–
1-விதி உள்ளது -அது நித்யமாகிறது
2-பிராயச்சித்தம் ஆகிறது -ஆக நைமித்தியம் ஆகிறது
3- ஞான சாதனம் ஆகிறது -ஆக காம்யம் ஆகிறது
எவருக்குத் தேவை –பாபியான ஷத்ரபந்து வாகிலும் –புண்ணியனான புண்டரீகனே யாகிலும்
எதற்குத் தேவை -மோக்ஷ உபாயம் அறிய –செய்து எல்லையில்லா ப்ரஹ்ம ஆனந்தம் அனுபவிக்க
பெற்று இனிச் செய்வது என்ன
1- ஆச்சார்யர்களைப் போற்றுவது
2-அவர் உபதேசித்த மந்த்ரங்களை மறைத்துக் காப்பது
எம்பெருமான் பரம ஆச்சார்யனாவது எப்படி
ஹம்ஸ -மத்ஸ்ய -ஹயக்ரீவ -நாராயண கீதாச்சார்யனாக அவதரித்து அருளுதல்
வ்யாஸாதிகள் ஆழ்வார்களை அநு பிரவேசிப்பித்து அருளுதல்
ஸநகாதி ஜீவர்களை நியமித்து அருளுதல்
சனக ஆழ்வாராதிகளுக்கு அருளால் உபதேசித்து அருளுதல்
வேதார்த்த ஸம் ப்ரதாயம் தொடர்ந்து வரும்படிக்கு எம்பெருமான் அருளிச் செய்யும் உபகாரங்கள்
1- தானே பிரம்மாவுக்கு வேதங்களை உபதேஸித்தல்
2- மது கைடவர்களால் அபகரிக்கப் பட்ட வேன்களை மீட்டு அருளுதல்
3- ப்ரம்மா மூலம் ஸாஸ்த்ர ப்ரவசனம் செய்து அருளுதல்
4-ஸநத் குமாரர்களுக்கு ஞானம் கொடுத்தருளி அவர்கள் மூலம் ஸாஸ்த்ர ப்ரவசனம் செய்து அருளுதல்
5-நாரதர் -பராசரர் -ஸூ கர் -ஸுநகர் மூலம் ஸாஸ்த்ர ப்ரவசனம் தொடரச் செய்தல்
7–தானே ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நாராயண கீதாச்சார்யனாக அவதரித்து உபதேசித்தல்
8-பீஷ்மர் முதலானோரைக் கொண்டு ஸாஸ்திரங்களை மூதலிப்பித்து அருளுதல்
9-தானே அருளிச் செய்த பாஞ்ச ராத்ரத்தை ஸங்கர்ஷணணாக த்வாபரத்தில் வெளியிட்டு அருளுதல்
10-பராங்குச பரகாலாதி அபிநவ தச அவதாரம் செய்து அருளி தமிழ் மறைகளை வெளியிட்டு அருளுதல்
11- பாஷண்டிகள் இடமிருந்து அவ்வப்போது ஆச்சார்யர்கள் மூலம் ரக்ஷிக்காவதரித்துக் கொண்டே இருத்தல்
———–
விசேஷ விஷயங்கள்
1-குரு பக்தி உடையவருக்கே ஞானம் உண்டாகும்
ஆச்சார்யன் எல்லாருக்கும் ஓன்று போல் உபதேசித்த போதிலும் சிஷ்யர்களுக்குள் ஞான தாரதம்யம் இருப்பதற்கு குரு பக்தியில் ஏற்றத்தாழ்வே காரணம்
2- வருவது விசாரியாதே சிஷ்யனுக்கு உபதேசித்தால் ஆச்சார்யனின் நிஷ்டை குலையும்
3-குரு என்றால் பரம குருக்களையும் -சாமான்யமான குருக்களையும் குறிக்கும்
4-மந்த்ரம் என்றால் மந்த்ராந்தங்களான ரஹஸ்யங்களையும் குறிக்கும்
5– மந்த்ர -மந்த்ராந்தங்களை உபதேசிக்கும் போதும் –உபதேசம் பெறும் போதும் எம்பெருமான் தொடங்கி தம் ஆச்சார்யர் வரை இறங்கு முகமாகவும்
மந்த்ராந்தங்களை விமர்ச்சிக்கும் போது ஆச்சார்யர் தொடங்கி எம்பெருமான் வரையில் ஏறு முகமாகவும்
குரு பரம்பரா பஜநம் செய்வது வழக்கம்
————-
நாம் ஏன் ரஹஸ்ய த்ரயத்தை அப்யஸிக்க வேண்டும்
நாம் -ஜீவாத்மா -சரீரத்தை விட வேறுபட்டவன் –
கௌஸ்துபம் போல் இனியவன் -குமாரன் -சிஷ்யன் -ப்ரேஷியன் -சேஷ பூதன் -தாஸ பூதன் –
ஸ்வரூபத்தால் பிராட்டிமார்களைப் போலவே -மிதுன தம்பதிகளுக்கு எல்லா கால தேச அவஸ்தைகளிலும்
இவ்வவை நிலைகளுக்கு ஏற்றகைங்கர்யங்களை நித்யர்களைப் போலவே செய்யவே இட்டுப் பிறந்தவர்கள்
ஆனால் ஸ்வ பாவத்தால் -ஸ்திதியில் -அநாதியான மாயையால் பிரகிருதி சம்பந்தத்தை அடைந்து தத்வ ஹித விஷயங்களில் அறிவு இழந்த நிலையில் நிற்கிறான்
இப்பொழுது அறிவு இழந்த நிலையை உணர்ந்து -அந்த நிலையை மாற்றி ஸ்வரூப ஞானம் பெறவே –
இந்த ரஹஸ்ய த்ரயங்களில் அர்த்த பஞ்சகமும் சொல்லப்படுவதால் –
அப்யசிப்பது -ஆச்சார்யர் மூலம் உபதேசிக்கப் பெற்று அவற்றையே ஆலோசித்து பொழுது போக்குவது
ஆச்சார்யர்கள் கன்றுக்குப் பாலூட்டும் பசு போல் நமக்கு குறைவற -ஐயம் திரிபு அற அப்பியாசம் செய்வார்கள்
ஆச்சார்ய அனுக்ரஹத்தால் தான் நம் மனதில் ரஹஸ்ய த்ரய சாரம் நிலைத்து நிற்கும்
இப்படிப்பட்ட ஆச்சார்யரைப் பெறுவதற்கு
எம்பெருமானின் ஸூஹ்ருதமே ஹேது
யாதிருச்சிக்க ஸூஹ்ருதம் -நாமும் அறியாமல் சாஸ்திரமும் அறியாமல் -எம்பெருமான் தானே அறிந்த ஓன்று
த்வேஷம் இல்லாமையே வேண்டுவது –
அவனைப் பற்றிய விஷயங்களை விரும்புவதும் சாதுசமோஹமும் வேண்டும்
அவனுக்கும் நமக்கும் உண்டான குடல் துவக்கை அறிவித்து அவனை அடையும் உபாயங்களிலே மூட்டுகிறார்
பாஹ்ய குத்ருஷ்ட்டி சாஸ்திரங்கள் -விஷம் போல்வன -அத்யந்த அஸாரம்
கர்ம காண்ட விஷயங்கள் -அத்யல்ப ஸாரம்
ஸ்வர்க்காதிகளுக்கு உபாயாந்தரங்கள் ஸாரமாகிலும் ஏழு வகைக் குற்றங்கள் உண்டே
கைவல்யத்துக்கு வழிகள் -சார தரம்
உபநிஷத் -வேதாந்தம் -பரமாத்மாவை அடைய வழிகள் -சாரதமம்
அவற்றுள் ரஹஸ்ய த்ரயம் மிகவும் சார தமம்
அதைக் காட்டிலும் பிரதான பிரதிதந்தர -தத்வ ஸ்வரூப ஹித மஹா விசுவாசங்களைக் காட்டும்
ரஹஸ்ய த்ரய சாரமே -அமுதினில் வந்த பென்னமுதம் போல் மிக மிக சார தமம்
———–
நாராயண தத் புருஷ ஸமாஹத்தாலும் -அஹம் -மாம் -என்பதால் ஜீவன் பகவானைத் தவிர ஆதாரம் ஏதும் இல்லாதவன் என்றும்
நாராயண பஹு வரீஹீ ஸமாஹத்தால் ஜீவன் பகவானைத் தவிர வேறு எவராலும் இயக்கப் படாதவன் என்றும்
அகத்தின் மேல் லுப்த சதுர்த்தியாலும் ஆய பதத்தாலும் -ஏக பத பிரயோகத்தாலும் பகவானுக்கே பிரயோஜனமாக இயங்குபவன் என்றும்
பிரணவம் நமஸ் சரண மாம் ஏகம் -ஜீவன் பகவானைத் தவிர வேறே உபாயம் ஏதும் இல்லாதவன் என்றும்
அறிகிறோம்
எம்பெருமான் ஸமஸ்த லோகத்துக்கு ஆத்மாவாக ஆவது
த்ரவ்யங்களுக்கு ஸ்வரூபத்தால் ஆதாரமாகி -குணங்களுக்கு த்ரவ்ய வழியாகவும்
நித்ய அநித்ய வஸ்துக்களை தன் நித்ய அநித்ய சங்கல்பத்தால் நியமித்தும்
வஸ்துக்களை தனது ப்ரயோஜனத்துக்காக ஏற்று மேன்மை பெறும் சேஷியாகவும்
பிரதான பிரதிதந்தரம்
எம்பெருமானுக்கு சேதன அசேதனங்களுடைய உறவு சம்பந்தம் -ஆத்மா சரீரம் போல் ஒழிக்க ஒழியாதது
எல்லாப் பெயர்களும் எம்பெருமானையே குறிக்கும்
எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதே புருஷார்த்தம்
பிராட்டியும் எம்பெருமானும் சேர்ந்தே புருஷார்த்தம் -சேஷிகள்
பக்தி பிரபத்திக்கு அல்லது மோக்ஷம் கிட்டாது
விசேஷ விஷயங்கள்
1- எம்பெருமானின் இச்சை வஸ்துக்களை அவனுடைய ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்தே இருக்கச் செய்கிறது
2-பகவானின் ஆதாரத்வ -சேஷித்வ -நியந்த்ருத் வத்தால்-சேதனனுக்கு அப்ருதக் ஸித்த -அவனை விட்டுப் பிரியாத தன்மை –
புருஷார்த்தத்தில் ஆசை -உபாய விசேஷ அறிவு இவை முறையே பலிக்கின்றன
3-சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் பொதுவானது -எம்பெருமானின் நிருபாதிக சேஷித்வமும் -அவனுக்கு நிருபாதிக சேஷமாய் இருப்பது என்றும்
அவற்றுள் சேதனர் விஷயத்திலோ புருஷார்த்தம் தருவதால் பகவான் ஸ்வாமி யாகிறார்
கைங்கர்ய ரூப புருஷார்த்தம் பெறுவதால் சேதனன் தாஸன் ஆகிறான்
4- இயற்கையாகவே தன்னைக் காத்துக் கொள்ள தகுதியும் சக்தியும் இல்லாதவர்கள் சேதனர்கள்
எம்பெருமானோ சேதனரைக் காப்பதற்கு கடமையும் சக்தியும் படைத்தவன்
அப்படிக் காக்கும் போது கர்ம வஸ்யரை ஒரு உபாயத்திலே மூட்டியே ரக்ஷிப்பது என்பது எம்பெருமான் தீர்ந்த சங்கல்பம்
———–
அப்புள்ளார் திருமந்திரம் பற்றி அருளிச் செய்தவை
பிரணவம் -அ -ஆய -உ -ம -ஓம்
அகாரம் -எம்பெருமான் -அ ஆய -எம்பெருமானுக்கு -அ -ஆய -உ-எம்பெருமானுக்கே -அ -ஆய -உ -ம-எம்பெருமானுக்கே ஜீவன் -சேஷன்
அர்ஜுனன் ரதம் இத்தையே காட்டும் –அர்ஜுனன் ரதத்தில் முன்னால் எம்பெருமான் -பின்பு ஜீவனான அர்ஜுனன் அமர்ந்து இருப்பது போல்
ப்ரணவத்திலும் முன்னால் அகாரமும் பின்னால் மகாரமும்
அன்றிக்கே
உகாரம் பிராட்டியைச் சொல்லி -அ -ஆய -உ -ம-எம்பெருமானுக்கு பிராட்டிக்கு ஜீவன் சேஷன் என்கிறது
ஸீதா பிராட்டி– பின்னால் லஷ்மணன் -இருவருக்கும் முன்பு சக்ரவர்த்தி திருமகனும் போல்
நம -எனக்கு ஸ்வா தந்தர்யம் இல்லை -சேஷித்வமும் இல்லை -பரதாழ்வான் பாதுகா தேவிக்கு கைங்கர்யம் -பாகவத தொண்டனான சத்ருக்கனன் தொண்டனான பரதனுக்கும் அடிமை செய்தது போல்
நாராயண -ஆதாரத்வமும் வியாபகத்வமும் கொண்ட எம்பெருமான்
தன்னுடைச் சோதிக்கு சக்ரவர்த்தி திருமகன் எழுந்து அருள சராசரங்கள் பின் தொடர்ந்து
நீ என்னை அன்றி இல்லை நாங்களும் உன்னை அன்றி இல்லாம என்று காட்டினார்கள்
ஆய -கைங்கர்ய ரூபமான புருஷார்த்தம் -சேஷி உகந்த கைங்கர்யம்
இளைய பெருமாள் -கானகத்துக்குத் தொடர்ந்து ப்ரவ்ருத்தி ரூபமாகவும்
பாதுகா தேவி நாடு திரும்பி நிவ்ருத்தி ரூபமாகவும் உண்டே –
அடிப்படையில் அலர்ந்த ஐந்து அறிவு -அர்த்த பஞ்சகம் –
அடையப்படும் ப்ரஹ்ம ஸ்வரூபம்
பெரிய பிராட்டியாரோடு உடன் ஸதா கூடியே இருத்தல்
ஸத்யம் ஞானம் அநந்தம் -ஆனந்தம் -அமலமயம் –
அகில ஹேய ப்ரத்ய நீகன்
கல்யாண குண ஸ்தானன்
விபு
திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவன்
உபய -போக லீலா விபூதியை யுடையவன்
லீலையாக உலகை நடத்துபவன்
இவற்றை விளக்கும் பிரணவம் -நாராயண பதம் –த்வயம் -ஸ்ரீ மந் நாராயண பதங்கள் –மாம் அஹம் பதங்கள்
அடையும் ஜீவ ஸ்வரூபம்
அணு
ஞான ஆனந்த அமலமயம்
அநந்யார்ஹ சேஷத்வம்
அவனாலேயே தூண்டப்பட்டு இயங்குதல்
மகாரம் -நார பதங்கள்
ப்ரபத்யே -வ்ரஜ -த்வா -மா ஸூச பதங்கள்
உபாய ஸ்வரூபம்
ஸ்வரூப ரூபாதிகளுடன் கூடிய பகவானை ப்ரீதியோடு இடைவிடாது தியானித்தால்
அங்கங்களோடு கூடியதாக தன்னையும் -தன்னைக் காக்கும் பொறுப்பையும் -பலனையும் பகவானிடம் சமர்ப்பித்தல்
நம -அயன பதங்கள் -த்வயத்தின் முற்பகுதி -சரம ஸ்லோகத்தின் முற் பாதி
அடைய வேண்டிய பல ஸ்வரூபம்
பெருமானின் ப்ரீதிக்காகவே -அவனுக்கே எல்லையில்லா அடிமைப்பணி செய்து கிடத்தல்
நான்காம் வேற்றுமை உருபுகள்
த்வயத்தில் நம பதம்
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -வாக்யம்
விரோதி ஸ்வரூபம்
அவித்யா கர்ம வாஸனா ருசி ப்ரக்ருதி சம்பந்தம் காரணமாக நாம் பகவத் ஆஜ்ஜையை மீறியதால் பிறந்த அவனின் நிக்ரஹ ஸங்கல்பம்
இவை பக்தனுக்கு ஞான ஸங்கோசம் உண்டாக்கும் -ப்ரக்ருதியுடன் சம்பந்தத்தை உண்டாக்கும்
புலன்களோடு சேர விட்டு பரதந்த்ரனாக்கும்-பாஹ்ய குத்ருஷ்டிகள் உடன் கலக்கும் -உலகு இயல்பில் ஈடுபடுத்தும் –
கர்ப்பம் ஜென்மம் மூப்பு மரணம் நரகம் சுழற்சியில் சிக்க வைக்கும்
சிறு பயன்களில் மயங்க வைக்கும்-அல்ப மனிதர் கால்களில் விழப்பண்ணும்-ஆத்ம உபாசகரை அதிலேயே நிறுத்தும்
விசேஷ விஷயங்கள்
ரஹஸ்ய த்ரய ஞானத்தால் சேஷியான எம்பெருமானுக்கு ஏற்றவனான அடியேன் உரிமையாகக் கிடைக்க கூடிய பகவத் கைகர்யத்தை
அஹங்காராதிகளால் இழந்து நிற்கும் நிலையில் செய்ய வேண்டியது மிதுன தம்பதிகள் இடம் சரணாகதியை
அர்த்த பஞ்சகத்தில் உள்ள -எம்பெருமான் -நான் -அஹங்காரம் -இவையே தத்வ த்ரயம்
வஸ்துக்களின் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் எம்பெருமானின் அதீனமே -அவை ஸ்வ பாவத்தால் அனுகூலமாகவே இருக்கும்
அவை கர்மங்களுக்கு ஈடாகப் பலன் கொடுக்கும் பகவத் சங்கல்பத்தால் பக்தன் தனக்கு என்று கொண்டால் அவை அல்ப அனுகூலமாயோ பிரதிகூலமாயோ உதாசீதனம்மாவோ இருக்கும்
அனைத்தும் அவனுக்கே என்று கொண்டால் -அவனுக்கே என்பதில் அவன் அடியார்களும் அடங்கும் அனுகூலமாகவே இருக்கும்
திருவுடன் இருக்கும் பரனே பரதத்வம் ஸூபாஸ்ரயம்
சரீரத்தையே ஆத்மாவாக எண்ணுதல் அஹங்காரம் -சரீரத்தோடு தொடர்புள்ள மனைவி மக்கள் வீடு தனதாக எண்ணுவது மமகாரம்
மன ஞானே –அவ போதனே -மஸ பரிமானே –ஜீவன் ஞானவான் பொருளை அறிபவன் -அணுவானவன் என்று அறிந்து சரீரத்தை விட வேறு பட்டவன் என்று அறியலாம்
நான் எனக்கே உரியவன் -அஹங்காரம் -என்னுடைய குணம் போன்றவை எனக்கு உரியன -மமகாரம்
லுப்த சதுர்த்தி -நானும் என்னைச் சேர்ந்தவர்களும் அவனுக்கு சேஷம் என்று உணர்ந்து இவற்றைத் தவிர்க்கலாம்
அந்நிய சேஷத்வம் தவிர்க்க உகாரார்த்தம் அவனுக்கே உணர வேண்டும்
நாமே ரக்ஷகன் நினைவு தவிர்க்க ந ம நிஷேதம் அறிய வேண்டும்
நமக்குப்பலன் நம் ப்ரீத்திக்கு பலன் -நினைவு தவிர்க்க நம பதம் மேல் உள்ள நாராயணாய பதத்துடன் சேர்த்து உணர வேண்டும்
இவ்வளவும் அறிந்தவனே முமுஷு வாக யோக்யதை கொண்டவன்
பழ மறையின் பரம நெறி -பகவானே உபாயம் உபேயம் என்று உணர்வது -ஞானத்துக்கு விஷயமாய் பக்தி ஸ்தானத்தில் நின்று பலன் அளிப்பதால் அவனே உபாயம்
ஞானத்துக்கு விஷயமாகக் கொண்டு குண விபூதிகளோடு பரிபூரணமாய் அனுபவிக்கப்படுவதால் அவனே உபேயம்
ஸ்வ பாவிகம் -பிராப்தம் -இந்திரியங்களை எதிர்பாராதது
குண விபூதிகளால் பரிபூரணம் -அவ்வநுப பரிவாஹ கைங்கர்யம் –
ஞான விகாஸ விசேஷம் -பர பக்தி -பரஞானம் -பரம பக்தி –
பிரபத்திக்கு -சக்தியோ ஞானமோ தேவை இல்லை –வர்ண நியமும் இல்லை -தாமதம் பொறுக்காதவர் –
ஆனு கூல்ய ஸங்கல்பம் -பிராதி கூல்ய வர்ஜனம் -மஹா விஸ்வாஸம் –கார்ப்பண்யம் -கோப்த்ருத்வ வரணம்
திரிவித தியாக பூர்வகமாக பிரபத்தி செய்பவன்
பரம் இல்லாதவனாய்
ஸந்தேஹம் அற்றவனாய்
பயம் இல்லாதவனாய்
மகிழ்ந்து ஆஜ்ஜா கைங்கர்யங்களை செய்து க்ருதக்ருத்யன் -செய்த வேள்வியன் -ஆகிறான்
ஸ்வரூப நிஷ்டை
குற்றம் சொல்பவர் சொல்லும் குற்றம் எல்லாம் உடலைப் பற்றியதே -ஆத்ம ஸ்வரூபத்தில் இல்லை என்று வருத்தம் இல்லாமலும்
இவ்வாறு சொல்லி பாபம் ஸம்பாதிக்கிறார்களே என்று அவர்கள் பக்கலிலே கிருபை கொள்ளுதல்
பூர்வர்கள் அநுஸந்திக்கும் நைச்ய அனுசந்தான பாசுரங்களை நினைவூட்டுவதால் அவர் பக்கலில் நன்றியும்
பிறரைக் கருவியாக்கி ஈஸ்வரன் செய்கிறான் என்ற எண்ணத்தால் மனா விகாரம் அடையாமல்
அனுபவித்தே கழிக்க வேண்டிய இவர்கள் பாபங்கள் கழிகின்றன என்ற உகப்பும் கொள்வான்
இவ்வாறு ஸ்வரூப உபாய புருஷார்த்த நிஷ்டைகளுடன் இருந்து பகவத பாகவத அபசாரங்களிலே இழியாமல்
கைங்கர்யம் இல்லாத பலன்களில் மனம் செல்லாமல் இருப்பவர் பாக்ய விசேஷத்தால் நிலத்தேவர் பூ ஸூரர் ஆவார்கள்
தேனார் கமலத் திரு மகள் நாதன் திகழ்ந்து உறையும்
வானாடு உகந்தவர் வையத்து இருப்பிடம் வன் தரும
கானார் இமயமும் கங்கையும் காவிரியும் கடலும்
நாநா நகரமும் நாகமும் கூடிய நன்னிலமே
———————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply