மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –கடலோசைக்கு ஆற்றாத தலைவி இரங்கல் –-நண்ணாதார் முறுவலிப்ப -4-9-
மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயம் -அசலமானதையும் கொடியதையும் துணைக் கருவியாகக் கொண்ட பேராற்றல்
வேரி-மணம் என்றும் தேன் என்றும்
துழாய் துணையாக -திருத்துழாயுக்கு ஆசைப்பட்டது தளரும் சமயம் நோக்கித் தானும் வருத்தத் தொடங்குதல்
துலை கொண்டு –திருத்துழாய் துணை இல்லாத போது எனக்கு எதிராக மாட்டாதது -துணை கொண்ட பின்பு எதிராய் வந்தது -என்றபடி
துலை கொண்டு–என்னைத் தொலைத்தலைக் கொண்டு -அழித்திட வேண்டி -என்றுமாம்
தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து–தாயாதிகள் வழக்குத் தொடர்ந்து மீட்கப் பார்ப்பது போல் அன்றோ இதன் செயல்
அவனையும் வறுத்த வேண்டாவோ –
கடல் அவன் திருமேனி நிறத்துக்கும் -கடலோசை அவனது கம்பீர குரல் ஒலிக்கும் போலி யாய் வருத்தமே
அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது-தன்னை கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி
நெஞ்சிலே மந்தரத்தை நட்டு உலக்கையை-விடு நகம் கட்டி நல் ஜீவனை வாங்கிக் கொண்டவன்
பாடு சென்று அத்தை மீட்டுக் கொள்ள மாட்டாது –
கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து –நாச்சியார் திருமொழி -10-9-என்கிற
அவன் பாடு போக மாட்டாது–அவன் கடைந்து எடுத்தவற்றை மீட்க சக்தி இல்லாத கடல்
அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது–கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி மந்த்ரத்தைக் கொடு வந்து கடலின் நடு நெஞ்சில் வைத்து
மஹா பாஹு வான தனது தோள் மிடுக்காலே கடல் குழம்பும்படி கலக்கி தன் பக்கலில் நின்றும் தன் நல்லுயிரை வாங்கிக் கொண்ட அவன் நெஞ்சைக் கலக்கி அத்தை மீட்டுக் கொள்ளப் பார்க்கிறது இல்லை-எல்லாரும் எளியர் பாடே செல்லும் அத்தனை இறே –
பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத் துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து–என்பதற்கு
சம்சாரத்தைக் கடக்க நீந்துகிற ஆச்சார்யரால் எனது வழிபாட்டுக்கு ஈடாகாது தரப்பட்டதும்
எனது கைவசமாக உள்ளதுமான ஸூத்த ஸத்வ ஸ்வ பாவத்தை மீட்டுக் கொள்ளப் பார்க்கிறது –
தலை கொண்டு பாட பேதம் -வருத்தத் தலைப்பட்டு என்ற பொருளில்
கண்டு ஆற்றேன் உலகு இயற்க்கை கடல் வண்ணா அடியேனைப்
பண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள்ளே
————–
அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர் வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே – 52-கால மயக்கு –அந்தாமத் தன்பு -2-5-
திருமால் -பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு
ஸ்ரீ தேவியைப் பாராட்டிய நிலையில் பூமா தேவி படும் பாட்டைப் பார் என்று ஓர் இயற்கையைத் தெரிவித்து ஆற்றுகிறாள்
என்று வார்கின்றதே – அவனுடைய கொடுமையைச் சொல்லி அழுகிறவளுடைய கண்ணீர் ப்ரவஹிக்கிற படி காண் –
அவனது நிரங்குச ஸ்வா தந்தர்யத்தைச் சொன்னபடி-கால விளம்பத்துக்கு ஆறி இருத்தலே தக்கது என்றபடி
நம்பாவிடிலும் ஆராய்வதில் திரு உள்ளம் செல்ல அந்த அவகாசத்தில் -தலைமகன் வந்து விடுவான் என்கிற எண்ணம்
கருங்கடல் -நீலக்கடல் கடைந்தாய் -கருமை பெருமை பெரிய கடல் என்றுமாம்
மழைக் கண் மடந்தை -தனது கண் அழகால் திருமகள் திருமாலை ஈடுபடுத்திய படி-
பகவத் லாபத்தால் அல்லது கால ஷேபம் பண்ண இவர்க்கு அரிதாகையாலே
பார்ஸ்த்வஸ்தர் அநுப பன்னங்களைச் சொல்லியாகிலும்
ஆஸ்வசிப்பிக்க வேண்டும்படியான தசை பிறந்தபடியைச் சொல்லுகிறது –
———–
வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –கட்டுவிச்சி கூறுதல்-வெறி விலக்கு துறையாகவுமாம் -வைகுந்தா மணி வண்ணனே -2-6-
வாராயின முலையாள்-அவனுக்கே உரித்தான அநந்யார்ஹ பக்தி -பக்குவமாய் முதிர்ந்த பக்தியுடைய ஆழ்வார் என்றபடி
வானோர் தலைமகனாம்-நித்ய முக்த -அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவன்-சீராயின நல் நோய் என்றும் சீராயின வானோர் தலைமகனாம் என்றுமாம்
தெய்வத் தண் அம் துழாய் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே– எந்தை பிரான் தனக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே-பாகவத சம்பந்தமே இவள் ஆற்றாமைக்குப் பரிகாரம் என்றபடி
நின்ற மண்ணாயினும்–பாகவதர் எழுந்து அருளி இருக்கும் இடத்தின் சம்பந்தமும் பரிகாரம் -கொண்டாடத்தக்கது என்றபடி –
ஸ்பர்ச வேதி ஆகையாலே -இவ்வருகே போரப் போர உறைத்து இருக்கும் இறே-
———–
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –வண்டு விடு தூது –கேசவன் தமர் -2-7-
நெய்–பால் தயிர் வெண்ணெய்களுக்கும் உப லக்ஷணம்
நெய் தொடு வுண் டேசும்படி யன்ன செய்யும் -என்று ஸுலப்யம் காட்டி வண்டுகளை ஆஸ்வாசிக்கும் படி செய்தபடி
எம்மை சேர்விக்கும் வண்டுகளே–புகழ்ந்தபடி -அவன் திரு உள்ளத்தில் கருணை பிறப்பிக்கைக்கும் வல்லவர்கள் அன்றோ-
ஆச்சார்ய முகமாக -ஸாஸ்திரங்கள் சார தம அர்த்தங்களான மதுவை சேர்ப்பிக்குமே
மாசின் மலரடி-ஆஸ்ரிதர் குற்றம் பாராமை-
————
வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55- நலம் பாராட்டுதல்-சார்வே தவ நெறி -10-4-
வண்டுகளோ வம்மின்-பூவின் வாசியும் மணத்தின் வாசியும் தேனின் வாசியும் அறிவீர்கள்
நீர்ப்பூ – கிட்ட அரிதான பூ -திருப்பாற் கடல் வியூஹ விளக்கம
நிலப்பூ -எல்லாருக்கும் கிட்ட எளிதான பூ–கொடிப்பூ புதர் பூ போன்றவை -ராம கிருஷ்ணாதி விபவ விளக்கம்
மரத்தில் ஒண் பூ -உயர்ந்த சாகைகளில் நிற்கும் பூ -வேத சாகைகள் மூலமே அறியப்படும் பரத்வ விளக்கம்
இவற்றை எல்லாம் இடைவிடாமல் அனுபவித்து ஆனந்தித்து தீர்த்தகராறாய் தடை இல்லாமல் திரியும் உங்களுக்கு ஓன்று சொல்கிறேன்
குழல்வாய் விரை –ஸ்வா பாவிகமான பரிமளம்
ஏனம் ஒன்றாய் மண்டுகளாடி –மஹா வராஹம் -பூமி எல்லாம் ஒரு துகள் போல் அன்றோ இவனுக்கு
வைகுந்த மன்னாள்-அழியாத நலம் உடையவள்-ஆழ்வாரது பக்தி மணம் போல் நீங்கள் கண்டது உண்டோ என்றபடி
இத்தால்-பர-வியூக-விபவாதிகள் எங்கும் புக்கு-பகவத் குணங்களை அனுபவித்து திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
அக் குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர் படி-நீங்கள் அனுபவிக்கிற அவ்விஷயத்தில் தானுண்டோ -என்று
தம்மை அனுபவிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தையை –-அவர்கள் பாசுரத்தாலே தாம் அனுபவிக்கிறார் –
இவ்வாறு இவரைக்கொண்டு அவன் பாடுவித்தான்
(பாட்டுக் கேட்க்கும் இடம் கூப்பீடு கேட்க்கும் இடம் வளைத்த இடம் குதித்த இடம் –
எல்லாம் வகுத்த இடமே-ஆச்சார்யர்களே – சேஷிகளும் உத்தேசயர்களும் ஆவார்கள் அன்றோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடியேன் – போல் இங்கும் ஆழ்வார் வை லக்ஷண்யம் சொல்லப்படுகிறது )
————-
வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 –தலைவன் இரவில் கலந்ததைத் தோழியிடம் தலைவி கூறுதல் –கண்கள் சிவந்து -8-8-
திருவருளும்-அவனுக்குச் செல்வமாகிய கருணை
விடுத்த திரு அருளால்—அவனது கருணை வெள்ளத்துக்கு ஜீவாத்மாவின் முயற்சி எதுவுமே ஹேது அல்லவே-தூது விட்டதை உபாயமாகக் கொள்ள மாட்டாளே -பிரபன்ன ஜன கூடஸ்தர் அன்றோ-இத் தலையில் உள்ளது ஒன்றும் பாராதே –தம் பேறாக-அவர் பண்ணின அருளாலே –
அஞ்சலம் தோழி -அஞ்சல் அம் தோழி –அழகிய தோழியே எனது ஆற்றாமைக்காகக் கலங்காதே-அம் தோழி -ஸ்வ பிரயோஜனத்தை பாராதே –
இத் தலையிலே பிரயோஜனமே பிரயோஜனமாய் இருக்கை
ஓர் தண் தென்றல் வந்து-அத்விதீய குளிர்ந்த புதுமையான -நாட்டில் நடையாடாத தென்றல்
அயலிடை யாரும் அறிந்திலர்-ஊரவர் கவ்வைக்கு அஞ்சாமைப் பொருட்டு அருளிச் செய்கிறாள்
புயலுடை நீர்மையினால்-திருவருளைப் பாராட்டிய படி
புலன் கலனே-பொலன் காலன் -இந்திரியங்களின் விடாய் தீரவும் பொன்னாலான ஆபரணங்கள் கழலாத படியும் தீண்டிற்று
குண ஞானத்தாலே தரித்த படி சொன்ன படி
—————–
புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – -57-தலைவன் தோழனிடம் எதிர்வார்த்தை பேசுதல் –முடியானே மூவுலகும் -3-8-
புலப்படுத்தல் -காணப்படுதல் —புலக் குண்டலம் -விரும்பிக் காணப்படும் அழகிய குண்டலம் –பொலக் குண்டலம் -பொன்னாலான குண்டலம்
புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை— இங்கு புலக் குண்டலத்தை கெண்டைக்கு அடைமொழியாக்கி
காதணி அளவும் அளாவிச் செல்லும் பெரியவாய நீண்ட கண்கள் என்றுமாம்
வல்லி –மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று–இரண்டு மத்த கஜம் தன்னிலே பொர உத்யோகித்து -நடுவிலே கணையம் இட்டவாறே -தாம் நினைத்தபடி பொரப் பெறாது ஒழிந்து-சீற்றத்தோடே ஸஞ்சரிக்குமா போலே நின்று
வேல் விழிக்கின்றன-தன்னை வருத்தும் படி கூரிய பார்வை -கொடுமை மாறாமல் இருப்பதால்–விழிக்கின்றன-வர்த்தமானம்
நெஞ்சைக் கலக்கி சாரமான ஞானத்தை கொண்டமையைச் சொல்லும்
யாரும் கழறலரே -அனுபவித்தாற்கு அல்லது அறிய ஒண்ணாமை
குண்டலம் -காது ஸ்ரவணம்—ஹ்ருத் புண்டரீகம் -நினைவு –மனனம்—வேல் விழிக்கின்ற -கண்கள் –தர்சனம் -காட்சி–மூன்றும் இப்பாசுரத்தில் உண்டே
ஆழ்வார் ஸ்வரூபம்-வை லக்ஷண்யம் – அறிந்தவர் இப்படி ஈடுபடக் கூடாது என்று-தடுக்க மாட்டார்களே -என்று சொல்லும் பாசுரம் –
———-
கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் –திண்ணன் வீடு -2-2-
என்னோ விங்களக்கின்றதே–அளக்கைக்கு ஓர் அவகாசம் காண்கிறிலோம்-நின்ற நிலையிலே நின்றாரை -அளந்தார் -என்ன ஒண்ணாது இறே–அடி மாறி இடில் இறே அளந்தது ஆவது –
என்னோ விங்களக்கின்றதே –கால் பெருத்து போலி சிறுத்தாலும் அளப்பார் உண்டோ- மரக்கால் பெருத்து நெல் அல்பமானால் அளப்பார் உண்டோ-
ரஷ்ய வர்க்கம் சுருங்கி ரஷகன் பாரிப்பே விஞ்சி இருக்கிறது என்றபடி-
நிழல் தர–சேஷித்வம் ஆகிய நிழலை உலகோர் அனைவருக்கும் கொடுக்க
ப்ரஹ்மாதிகளுக்கும் ஒருவன் திருவடியை விளக்கவும் ஒருவன் அந்த நீரை தலையால் சுமக்கவும் பண்ணிற்றே
பிரார்த்திக்காமாலே சேஷித்வம் காட்டி முதுகிலே அணைத்துக் கொள்ளும் தாய் அன்றோ -உம்மையும் தானே வந்து ரஷிப்பான் என்று ஆஸ்வாஸப் படுத்தினமை தோற்றும்-தாழ்ச்சி மற்று எங்கும் -உனது திருவடி நிழலே வாழ்ச்சி -நம்மாழ்வார்-திருமால் இரும் சோலை எந்தாய் -உன் பாத நிழல் அல்லால் மற்றோர் இருப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் –( பெரியாழ்வார் )
நிழல் தர-பள்ளம் உள்ள இடம் எங்கும் வெள்ளம் பாயுமா போலே –வெளி உள்ள இடம் எங்கும் போய் வியாபித்தது –
வாஸூ தேவ தருச்சாயா —எங்கும் ஒக்க வ்யாப்தமாய் இருப்பதொரு வ்ருஷத்தின் உடைய நிழல் ஆயிற்று –
வண்டத்துக் கண்ணன்—-உயர்ந்தோரை இல்லாக் கண்ணன்–தாமரைக் கண்ணன்–என்று இயையும்
ஞான சுடர் விளக்காய்–ஞான விளக்காய் சுடர் விளக்காய் -ஸ்வயம் ப்ரகாஸம்
1- பண்டும் பல பல வில் பட்ட வியசனம் என்ன
2-மலை கொண்டு என்றதில் கார்ச்யம் என்ன
3-வர்ஷா காலத்தில் வந்த கிலேசம் என்ன
4-வாராயின முலையாளில் மோஹம் என்ன –
5-வீசும் சிறகாலில் தூஷ ப்ரேஷ்ணம் என்ன -இவை எல்லாம் தீரும்படி
வியலிடம் என்கிற பாட்டில் –குண ஞானத்தினாலே தரிக்கை யாகிற-சம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆகையாலே –
தானான தன்மை பிறந்து –அந்த குணம் தானும் சௌசீல்யம் ஆகையாலே-அத்தை இப்பாட்டில் அருளிச் செய்கிறார் என்று சங்கதி
இப்படி சர்வஞ்ஞனாய் –பராத் பரனான புண்டரீ காஷன் – இவ் விபூதியிலே சேர்ந்த என்னையும்-முன்னமே அளந்து இருக்க
இப்போது அத் திரிவிக்கிரம அவதாரத்தை எனக்கு பிரகாசிப்பத்தது –மறுபடியும் எதை அளைக்கைக்காவோ தெரிய வில்லை –
————-
அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59 –இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் – முந்நீர் ஞாலம் -3-2-
அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் –அளக்க அரியதை அளந்த அவன் திருவடிகளாலும் அளக்க முடியாத எனது ஆற்றாமை -காதல் போல் அன்றோ இந்த இரவும்–அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்கின்றேன் -அதனால் நீண்ட இரவு–அவனால் இவற்றை அளக்கலாக்கில் வந்து தோற்றானோ
ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன்–உலகத்தை கடல் விழுங்காமல் ரக்ஷிப்பவன்
மது சூதன்-உலகோரின் பிரதிபந்தங்களைத் தீர்ப்பவன்
ஊழி யங்கங்குல்-கங்குலுக்கு அழகு கல்பத்திலும் கொடியதாய் இருக்கை –
ஊழி யங்கங்குல்- இயற்கையில் கலவிக்கு உரிய காலமானதால் வந்த அழகு என்றுமாம் –
ஊழி யங்கங்குல்- இகழ்ச்சி பற்றி எதிர்மறை -லக்ஷணை யாலுமாம்
வல்வினையேன்-கங்குலைக் குறுக்குதல் -அவனைக் கூட்டுதல் செய்ய மாட்டாமையாலே தன்னைத் தான் வெறுக்கிறாள்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே –ஆழ்வாரது திருமுக மண்டல விளக்கத்தையும் -சொல் திறத்தையும் -பக்தி வளர்ச்சியையும் காட்டும்
இத்தால்-அனுபவ யோக்யமான சம்பந்தமும் ஸ்வரூப ஞானமும் உண்டாய் இருக்க
போக யோக்யமான காலமும் போகத்துடன் செல்லப் பெறாமையாலே வந்த ஆற்றாமையை- பார்ஸ்வத்தார் சொல்லுகிறார்கள்-
————–
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்குதல் –அறுக்கும் வினையாயின -9-8-
முலையோ முழு முற்றும் போந்தில–யவ்வன ஸூசகமாதலால் முதலில் முலையைச் சொல்லிற்று
முலையோ முழு முற்றும் போந்தில–மீமிசையாய் மிகுதியைக் காட்டும் -முற்றும் என்று முகம் திரண்டு கிளர்ந்தவை இல்லை என்றவாறு
கடல் மண்ணெல்லாம் விலையோ-இரத்தின ஆகாரமான கடல்களும் பூ லோகமும் மற்ற லோகங்களும் சேர்த்தாலும் விலை போதாவே
மிளிரும் கண் –காதல் குறிப்பை வெளிப்படுத்தும் சிறப்பு நோக்கும் இல்லை-தத்வ ஞானம் ஒழிய த்யான ரூபமான ஞானம் இல்லை
மொய் பூம் குழல் குறிய-தலையால் வசப்படுத்துகிற ப்ரணமாதிகள் பூர்ணமாகத் தோன்றவில்லை
கலையோ அரையில்லை–முயற்சி லேசமும் காண்கிறோம் இல்லை
நாவோ குழறும்–இடைவிடாத பகவத் திருநாம சங்கீர்த்தனமும் இல்லை
இவள் பரமே -பரதந்த்ரமாக இல்லாமல் -பக்தி முதலானவை பூர்ணமாகாமல் இருக்க- பேற்றுக்குத் த்வரிப்பது எதனால் என்றபடி
பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
திருமலை யாகிய போக ஸ்தானத்தையே வாய் புலத்தலால் திரு அவதரித்த பொழுதே தொடங்கி எம்பெருமானால் அல்லது தரியாமை இப்பாசுரத்தில் வெளியாம்–கற்கின்ற -வாசகம் -வர்த்தமானம் -நிகழ் காலம் -வேங்கடம் என்றே அப்யசிப்பாளே
மயங்கிய நிலையிலும் –தேறியும் தேறாமலும் இதே தானே வாசகம்
இவளுக்குபரத்வாதிகளையும் விட்டு அர்ச்சை அளவும் சென்று மேலே திவ்ய தேசமே பிராப்தம் என்கிறாளே
அதுவே சாம்யா பத்தி கொடுக்கும் –சமன் கொள் தடம் குன்றமே-அளவிட முடியாத திருமலையின் ஸுலப்யாதிகளை அன்றோ பேசுகிறாள்
இத்தால் கீழே சொன்ன சர்வேஸ்வரத்வமும் விரோதி நிரசனத்வமும் – ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் என்றும் மது சூதனன் என்றதும்
ஆச்சர்யம் இல்லையே -என்கிறாள் –
————
வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –தோழி தலைவன் நீர்மையைத் தலைவிக்கு கூறுதல் –பிறந்தவாறும் -5-10-
வாசகம் செய்வது நம் பரமே –வேதங்களே மீண்ட அவன் விஷயத்தைக் கூறுதல் நம்மால் ஆகுமோ
வேயகமாயினும்-ஒரு மூங்கில் நாட்டப்படும் இடமாயினும் –சிறுது இடமேனும்
இரண்டே யடியால் தாயவன்–தான் கேட்ட மூவடி க்கும் பற்றாமை
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று–அரசர் குலத்தில் ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் இடையர் குலத்தில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்தவன்
இவை சொல்லும் திறம் அன்று –எத்திறம் என்னவே பண்ணும் அன்றோ
மேன்மையுடன் நீர்மையும் உடையவன் ஆகையால் உம்மைச் சேர்த்துக் கொள்வான்-விரைந்து வருந்த வேண்டாமே என்று ஆஸ்வாஸப் படுத்தியமை தோற்றும்
தொல்லை வானவர் தம் நாயகன் -வாசகம் செய்வது நம் பரமே
நாயகர் எல்லாம் தொழுமவன் -வாசகம் செய்வது நம் பரமே
ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் -வாசகம் செய்வது நம் பரமே
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று -வாசகம் செய்வது நம் பரமே
நம்மிறையே-வாசகம் செய்வது நம் பரமே என்று தனித்தனியாகவும்
தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று
நம்மிறையே-வாசகம் செய்வது நம் பரமே சேர்த்தும் அந்வயிக்கலாமே
கீழே திருவேங்கடம் என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லக் கேட்டு-மோஹம் தெளிந்து தாமான தன்மை அடைந்து
தமது பாழியான கிருஷ்ண அவதாரத்தில் இழிகிறார்-
——————
இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் –தேவிமார் ஆவார் -8-1-
கருங்கடல்-புறத்தில் உள்ள கறுமை போல் அகத்திலும் கொடுமை இருந்தபடி -பெண் என்றால் பேயும் இரங்கும் போது இது இரங்குகிறது இல்லை –
கருங்கடல்–கோபமுடைய கடல் என்றுமாம் –கறுப்பு வெகுளிப் பொருளது
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –கடலாகிய பெரும் பகையும் உண்டாய் -தனக்கு
நிறை காக்கும் ஆற்றலும் இல்லையான பின்பு இவள் கடின ஸ்தானத்தில் கிடக்க நீர் மெல்லிய படுக்கையைத் தேடிக் கிடப்பீரோ
முகில் வண்ணனே -மேகம் போல் உதார குணமும் இருக்க இவள் துயரம் தீர உதவ வேண்டாவோ
அரவணை மேல் பள்ளி கொண்–ஆதி சேஷனான ஒரு சேதனனை விட்டுப் பிரிய ஷமன் இன்றிக்கே இருப்பவனும்
முகில் வண்ணனே–போக்யமே வடிவு கொண்டவனுமான நீர் இவளை உபேக்ஷித்து இருப்பது முறையோ-உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்-
முறையோ –தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து –கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது –
செங்கற் சீரை கட்டி கூப்பிட்டாகிலும் பெற வேண்டும் படி யாயிற்று-வடிவு அழகும்-படுக்கையும் –
———–
வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத் தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக் காலம் இருக்கின்றதே — 63-தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –இவையும் அவையும் -1-9-
வண்ணம் சிவந்துள-இவளின் மேல் வைத்த அநு ராகத்தால் வந்த சிவப்பு
வானாடமரும் குளிர் விழிய-இத்தால் சீற்றத்தால் இல்லாமல் அன்பினால் சிவந்தமையைச் சொன்னவாறு
தாமிவையோ-இடைவிடாத நினைவினால் தோற்றத்துக்கு மேல் அதன் முதிர்ச்சியால் உரு வெளிப்பாடாகத் தோன்றுதல்
ஓ -தேற்றத்தோடே இரக்கமும் -அன்பு இல்லாமல் பிரிந்தான் என்று நினைப்பதும் சொல்வதும் தகுதி இல்லையே –
பிறர் பழிக்கத் தான் கேட்டும் திரியாமல் மறுத்து -தமக்குப் பேர் அருள் செய்தவற்றை உரைத்து சமாதானப் படுத்துதல் தோற்றும்
ஆர்த்தி விளைக்க –இவையும் அவையும் -சூழல் உளானே -இதன் விவரணம்
சுவையன் திருவின் மணாளன் –திருமுடியில் நேராக வராமல்–சூழலில் -அருகில் -ஒக்கலில் –நாவில் -உச்சியில் -படிப்படியாக –அமலங்களாக விளிக்கும்-
———
இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 –தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –-பாமுரு மூவுலகும் -7-6-
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று -என்றும்
திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -என்றும்
திரு நாமங்களை சொல்லியும் சொல்லக் கேட்டும் தரித்து இருந்தமை
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே -என்றதால் இத்தால் அதிருப்தி விளங்கும்-
அவனைக் கண்ணாலே கண்டு கையாலே அணைக்க ஆசைப்பட்டவர் அவன் பேரைக் கொண்டு என் செய்வர்
கனி கிடைக்காமல் காய் உண்பாரைப் போல் -சொல் கற்றேன்–திருநாமம் சொல் கற்றனமே –திருநாமம் கற்க வில்லை -சொல் கற்றேன் -அர்த்தம் அறியாமல் திரு நாமம் அஹ்ருத்யமாக சொன்னதால்-திருமால் இருஞ்சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து நெஞ்சு நிறைய புகுந்தானே–
கனி இன்றிக்கே ஒழியும்படி முன்பே கருக்காய் கடிப்பாரைப் போலே –நித்ய ஸூரிகளுக்கு போக்கியம் அன்றிக்கே ஒழியும்படி
இவ் வஸ்துவை நான் பேசி அழித்தேன் என்று ஆகவுமாம்
அவர்களைப் போல் பக்தி பரவசனாய் அனுபவிக்க பெறாமை இழந்தேன் என்றும் –
அவர்கள் அனுபவிக்கும் விஷயத்தை கிட்டி அவத்யத்தை விளைத்தேன் என்றும் -விஷாதத்திலே தாத்பர்யம் –
————
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே –65 –தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –நோற்ற நோன்பு -5-7-
ஒரோ கருமமுற்றுப் பயின்று செவியொடு உசாவி –இருவரும் ஒருவர் அறியாமல் ஒருவரை நோக்குதலும்
பார்க்கும் பொழுது பொதுவாக வேறே ஒன்றை நோக்குதல் போலவும்
இப்படி அடிக்கடி பல காலும் நிகழ்வதால் காதை அடுத்து வினவி அதனோடு ஆராய்தல் போலுதலும்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ் உற்றும் உறாதும் மிளிர்ந்த–குறிப்பு நோக்கம் அனுகூலமாகவும் பொது நோக்கம் பிரதிகூலமாகவும் இருக்குமே
உண்கின்றவே –வசப்படுத்துகின்ற
மலர்க் கண்–மலர் போல் மென்மையான கண் –-மலர் கண் -மலரும் கண்
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று–ஸம்ஸார காட்டில் திரியும் பேதமையுள்ள மிருகம் போல் ஐம்புலன் பின்னே செல்லும்
சம்சாரிகள் ஞானத்தை மேம்பட்டு இருக்கும் ஆழ்வாரது ஞானம் என்றபடி
ஒரோ கரும முற்றுப் பயின்று–ஆழ்வாரது ஞானம் அறியத்தக்க பகவத் ஸ்வரூபாதிகளிலே பொருந்தி ஊன்றி ஆராயும் தன்மை-இத்தால்
பிரபத்தியை சொன்ன படி
செவியொடு உசாவி–செவியாலேயே ஸ்ருதி சொல்வதைக் கேட்டு நிச்சயித்து-அந்த ஞானம் வேத ஸ்ருதிகள் படியே ஒத்து இருந்ததும் தோன்றும்
உற்றும் உறாதும்–கீழ் எண்ணம் புகுந்து என்று மானஸ அனுபவம் நடத்தலாம் வந்த உற்றும்
கருக்காய் கடிப்பவர் போல் என்று பூர்ண அனுபவம் பெறாமையால் உண்டான உறாமையும்
மிளிர்ந்து -ஆழ்வாரது ஞானம் குவியாது விசாலித்து உள்ளமையைக் காட்டும்
எம்மை உண்கின்றவே -இப்படிப்பட்ட ஆழ்வாரது ஞானம் தம்மை வசப்படுத்தினமையைச் சொன்னவாறு
ததீய சேஷத்வ பாரதந்தர்யம் சரம பர்வ நிஷ்டை பெறாமல்
ஆழ்வாரது திருக்கண்கள் துன்பம் கொடுக்கின்றனவே -என்று வருந்திச் சொல்லும் பாசுரம் –
ஆழ்வாரது ஞானத்தின் சீர்மையைச் சொன்னபடி-நல்லார் நவில் குருகூரான் அன்றோ
ஆழ்வார் ஞானம் -அவன் திருவடியே சரணம் என்று இருந்தும் நமக்கு உபதேசித்தும் அருளிச் செய்த -பாசுரங்கள் இவை
இப்பாசுரம் -இதுவே புகல் -வேறே கிஞ்சித்தும் இல்லை-நோற்ற நோன்பிலேன்-ஆறு எனக்கு நின் பாதமே சரணம் ஆகிஞ்சன்யம் சொல்லும் -உபாயாந்தர சம்பந்தம் இல்லை–இத்தை விட்டால் வேறே இல்லை அடுத்த பாசுரம் – -அநந்ய கதித்வம் சொல்லும் ஆராவமுதே- விவரணம்
———–
உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 –தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –ஆராவமுதே -5-8-
உயிராயின காவிகளே–பரமபதம் போல் அழிவற்றவரும் எப்பொழுதும் அனுபவிக்கத்தக்க ஆழ்வாரது ஞானம்
நமக்கு உயிர் போல் அன்புக்கு இடமாய் உள்ள மெல்லிய மலர்கள்
நித்ய ஸூரிகளும் சிரம் மேல் கொண்டாடத்தக்க தன்மை பற்றி காவிகளே என்கிறது
ஆழ்வாரது ஞானம்-1-வைகுந்தம் போல் போக்யம்-2-எனக்கு உயிர்-3-யோகிகளால் எண்ணவும் அரியது என்கிறது
இத்தால்-ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை கண்டு அனுபவிக்கும் பாகவதர்களுக்கு –
தேவு மற்று அறியேன் -என்னும் படி இறே இருப்பது –அவர்கள் அதை ஆதரிக்கிறது-பகவத் சம்பந்தத்தால் இறே –
அதுக்கு அடியான பகவத் விஷயத்தை அநாதரித்து –இவரை ஆதரிக்க-வேண்டும்படி இவருக்கு
ஸ்ரீ வைஷ்ணத்வம் தலை நிரம்பின படியை சொல்கிறது –
சரம அவதியை-கண்டு அனுபவித்தவர்கள்-பிரதம அவதியில் நில்லார்கள் இறே –-அவன் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகமாட்டானே-
———–
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – 67-தலைவன் தன் வலி யழிவு உரைத்தல் –உலகமுண்ட பெரு வாயா -6-10-
அசுரைச் செற்ற மாவியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்தலாவது –துஷ்ட நிக்ரஹ சீலன் -கருட வாஹனா ரூடன் – வேத ப்ரதிபாத்யன் –
ஸ்ரீ யபதி -ஆத்மாக்களை பரிபாலனம் செய்பவன் -போக ஸ்தானமான திருமலையில் ஈடுபட்டவர் என்றவாறு
அசுரரைச் செற்ற –புள்ளுக்கும் கோவிந்தனுக்கும் விசேஷணம்–சேர்தல் -இடைவிடாது நினைத்தல்
கருட வாஹனன் லஷ்மி பதி -என்கிற இவை இப்போது சொல்லுகிறது என் என்னில் –
சௌலப்யம் சொல்ல நினைத்து – அது குணம் ஆகைக்கு அடியான பரத்வத்தை சொல்லி –
பின்பு- அந்த சௌலப்யம் எல்லையில் வந்தார் –
(நிகரில் புகழாய் வாத்சல்யம்-உலகம் மூன்று உடையாய் -ஸ்வாமித்வம்-திருவேங்கடத்தானே ஸுசீல்யம்-என்னை ஆள்வானே -ஸுலப்யம் )
தூவியம் பேடை யன்னாள் –ஸூத்த வ்ஸ்வ பாவமும் -ஞான அனுஷ்டான ரூப பரிகரங்களை யுடைமையும் -பாரதந்தர்யமும் சொன்னவாறு
வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்–என்று திருமகள் கொல் இத்யாதிப்படியே அலர்மேல் மங்கைத் தாயாருக்கு ஒப்பு என்றுமாம்
கண்களாய துணை மலரே–தமக்கும் தமது அடியாருக்கும் துணையாகும் பரந்த ஞான வகைகள் –
கடைக் கண் சிகப்பினால் செங்கழு நீரையும்
கரு விழியின் கருமையினால் -கரு நெய்தலையும்
நோக்கின் கூர்மையினால் வேலாயுதத்தையும்
ஆகார சௌந்தர்யம் -கெண்டைகளையும் –
இப்படி மற்று உள்ள குணங்களினால் மற்ற வஸ்துக்களையும் அதிசயித்து –என் ஆத்மாவையும் அபகரித்து –
எனக்கு ரஷகனான ஸ்ரீய பதியையும் வசீகரிப்பதாய் வியாபிக்கத் தொடங்கிற்று – ஆகையால் நான் இதன் நின்றும் மீள சக்தன் ஆகிறிலேன்-
அந்த ஞானத்துக்கு காவியை வெல்லுதல் -செந்நிறத்த ரஜோ குணத்தை வெல்லுதல்
நீலத்தை வெல்லுதல் -கரு நிறத்தான தமோ குணத்தை வெல்லுதல்
வேலை வெல்லுதல் -வெண்ணிறத்த ஸத்வ குணத்தை வெல்லுதல்
கயலை வெல்லுதல் -இப்படி முக்குணங்களையும் வென்று ஜட பதார்த்தங்களுடன் சேராமையும் -சஞ்சல தன்மையும் இல்லாமையும்-மௌ க்த்யத்தாலே கயலை வென்று என்றுமாம்
பலபல வெல்லுதல் -ஸமஸ்த ஸகல இதர விலக்ஷணமாய் இருத்தல்
காவி -என்கிற நிறத்தாலே -ராகத்தை சொல்லி பக்தி நிஷ்டரையும் –
நீலம் -என்ற அஞ்ஞனத்தாலே -பிரகாசத்தை சொல்லி –ஞான நிஷ்டரையும் –
வேலும் கயலும் -என்ற சகாரத்தாலே –கர்ம நிஷ்டரையும் –
எல்லாரையும் ஜெயித்து இருக்கும் ஆழ்வார் உடைய ஞானம் என்றபடி யாகவுமாம் –
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு-இந்த மஹிமைக்கு என்னை வசப்படுத்துதல் பெரிய கார்யம் அல்லவே
யளவல்ல-அல்ல என்றது எதிர்மறைக் குறிப்பு முற்று
ஆவி -பிராணன் – அத்தையும் தண்டி ஆத்மா -ஆவி -ஜீவன் -அத்தையும் தாண்டி –பரமாத்மாவையும் வென்று
பக்தி ரூபா பன்ன ஞானத்தின் சீர்மை அனைத்தையும் வென்றதாய் இருக்குமே
சூழ்ந்து அதனில் -அசேதன சேதன -ஈஸ்வர தத்துவங்களையும் விஞ்சிய ஆழ்வாரது அவா பக்தி காதல்-
———-
மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – 68-கால மயக்கு காலம் இளையது என்றல் –கொண்ட பெண்டிர் -9-1-
அக்காலம் அல்ல காண் என்னுமே தோழி-கெடுவாய் இவை இங்கனே மலரா நிற்க அல்ல காண் என்னும்படி எங்கனே என்ன
மலர உபக்ரமித்தது அத்தனை காண் மலர்ந்து சமைந்தது இல்லை காண் என்கிறாள் தோழி
புலந்தோய் தழை-ஐம் புலன்களுக்கும் இனிய தழை –என்றும் -நிலத்தில் வந்து தோயும்படி கவிழ்ந்து செழித்து உள்ள தழை என்றுமாம்
தனது வைகுந்த மன்னாய்–ஸ்ரீ வைகுண்டம் அவனுக்கே யாமா போல் இவளும் அநந்யார்ஹை -இதனால் உன்னைப் பிரிந்து ஆற்றாதவள் என்றபடி -அவ் விபூதியை விடில் அன்றோ உன்னை விடுவது –உன்னை தளர விட்டு இருக்குமோ-
கலந்தார்–பிரிந்து இருக்கும் நிலையில் கலந்தார் என்றது உன்னுடன் கலந்து உன் தன்மை அறிந்தவர் உன்னை விட்டு இருக்க மாட்டார் என்று ஆற்றுகைக்காக-கலந்தார் -என்றே காணும் அவனுக்கு நிரூபகம் –
வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே–வாசி அறியாத தாவரங்களும் அலரா நிற்க நீ தளரலாமோ
வன் கொன்றைகள்–நாம் மலரத் தொடங்கினாள் இவள் கலங்குவாளே என்ற இரக்கம் இல்லையே
கார்த்தனவே –கருக்கொண்டன -அரும்பின நிலையே ஒழிய மலரின் நிலையை அடைந்தது இல்லை-அரும்பிக்கத் தொடங்கிற்று
இவை பூத்து சமையும் அளவில் வந்தே தீருவான் கவலைப்படாதே என்று சமாதானம் பண்ணுகிறார்கள்–கார்த்தனவே–கார் காலத்தைக் காட்டா நின்றன என்றுமாம்-
————–
காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 –மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் – கற்பார் இராம பிரானை -7-5-
காரேற் றிருள் செகிலேற்றின சுடர் –இருள் மேலிட்டு பகல் சுருங்குவதால் -காலையில் பகலுக்குத் தோற்ற இருள் மாலையில் மேலிடுவதால் ஏறு என்கிறது
புன் தலை மாலை-நலியும் ஸ்வ பாவத்தாலும் விரைந்து கழியும் தன்மையாலும் இவ்வாறு சொல்லிற்று –
நெடிய பிரான் -யாவற்றிலும் மேம்பட்டவன் -தாமஸ பிரகிருதிகள் ஆனவர் மேலிடப் புக்கால் வந்து உதவுமவன் –தமஸ்ஸூ தான் வந்து அனுபவிக்கப் புக்கால் விட்டு இருக்குமோ –
தன்னுடைமையை பிறர் -என்னது -என்று இருந்தால் – தன்னை அரத்தி யாக்கி -அவர்கள் பக்கலிலும் வந்து இரந்து கொள்ளுமவன் –இரக்க வேண்டாதே -தன் உடைமையான உன்னை -விட்டு இருக்குமோ –
காரேற் றிருள்–முன்பு இல்லாத அஞ்ஞானம்
செகிலேற்றின சுடருக்கு உளைந்து–பக்தி ரூபமான செவ்விய ஞானத்தால் அஞ்ஞானம் கழிந்தமை
வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை–உராய காலத்தில் அனுபவிக்கப் பெறாததால் இருந்த விவேகமும் அழியும்படி மோஹ அந்தகாரம் மேலிடும் தன்மை
வாரேற்றி இள முலையாய்–பக்தியின் அபிவிருத்தி யுடையவள்
வருந்தேல் உன் வளைத் திறமே–அடிமைத் தனம் குலையுமோ என்று வருந்த வேண்டாம்
புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே–இரந்து வந்து அடிமை யாக்கிக் கொள்ளும் பெருமையை யுடையவன் உமக்கு அருளாது ஓழியான்-என்று ஆற்றியபடி –
புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே
1-அவன் படியை அறிந்தால் வரும் என்று இருக்க வேண்டாவோ –
2-இந்த்ரன் வ்யாஜ்யமாக எல்லார்-தலையிலும் -நிர்ஹேதுகமாக – அமரர் சென்னிப் பூவாய் இருக்கிற திருவடித் தாமரைகளை வைக்குமவன் அன்றோ —
3-இப்படி எல்லாருக்கும் உபகாரகனாய் இருக்குமவன் -உன்னை விடுமோ –
4-தாமஸ பிரகிருதிகள் ஆனவர் மேலிடப் புக்கால் வந்து உதவுமவன் –தமஸ்ஸூ தான் வந்து அனுபவிக்கப் புக்கால் விட்டு இருக்குமோ –
தன்னுடைமையை பிறர் -என்னது -என்று இருந்தால் – தன்னை அரத்தி யாக்கி -அவர்கள் பக்கலிலும் வந்து இரந்து கொள்ளுமவன் –
இரக்க வேண்டாதே -தன் உடைமையான உன்னை -விட்டு இருக்குமோ –(தமோ குணம் இரவு -தமஸ் குணவான் மஹா பலி )
4-காடும் மேடுமான பூமியில் ஒன்றும் விடாதவன்-உன்னை இங்கனே அறிவு அழிய விடுமோ –
5-மண்ணுக்குப் பதறி இரந்தவன்பெண் ஒரு தலை யானால் ஆறி- இருக்குமோ –
6-வாரேற்றி இள முலையாய் -என்னும் அளவுக்கு –காடும் மேடுமான பூமியிலே காலை வைத்தவன்- உன் முலை மேலே காலை வையாது ஒழியுமோ –
புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே
பூமிப் பரப்படைய நீரேற்று அளந்து கொண்டு – எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைக்கச் செய்தேயும்
பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கும் மகா உபகாரன் ஆனவன் –
அருளா விடுமே –
சத்வம் உடையாருக்கு தன்னை அழிய மாறுமவன் சுத்த சத்வமேயான உன் விஷயத்தில் கை வாங்கி இருக்குமோ
அருளா விடுமே –-பிரண யித்வம் போனால் ஸ்வரூப அநு பந்தியான அருளும் உன் பக்கம் கார்ய கரம் இன்றிக்கே ஒழியுமோ –
————-
வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –பிறவித் துயரற -1-7-
எங்கள் வானவனார்-அங்கு வைக்கும் அபிமானத்தை அடியவர்களாகிய எங்கள் பக்கலிலே பண்ணுபவன்
வளைவாய்த் திருச் சக்கரத்து–தலைமைக்கு அறிகுறியான திருச்சக்கரம் என்றும் சங்கத்தையும் கூரிய சக்கரத்தையும் உடையவன்
மிக வந்து–ஒன்றுக்கு ஓன்று மிகும்படி வந்து-அநேகம் ராத்திரி எல்லாம் வந்தது இறே –இது ஒரு ராத்திரி இருந்தபடி என்-
இப்பொழுது எனது எளிமையையும் தனிமையையும் அறிந்து நலிய-இரவு வந்து பரிணமிக்கும் காலம் போல் இல்லாமல்
அளவுக்கு உட்பட்ட காலம் இல்லாமல்-அளவு இல்லாதத அநேக கல்பங்களாய் பரிணமிக்கத் தொடங்க
இத்தைக் கடந்து நாம் ஜீவிப்பது எங்கனே என்கிறாள்-
————
ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே – – -71-செவிலித் தாயின் கோபத்தைத் தலைவி தோழியிடம் கூறுதல் –-எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-
ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்–சாதனாந்தர நிஷ்டை யுடையாரைப் போலே உபாஸனைக்கு உரிய காரண வடிவத்தைச் சொன்னோம் அல்லோம்
பழம் கண்டு ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு -பயனாகிய வடிவத்தைக் குறித்து இவ்வடிவம் கடல் போலும் என்று கூறின எமக்கு
அக்தே கொண்டு–அந்தச் சொல்லுக்கு வேறே பொருளைக் கொண்டு
அன்னை–ஞானிகள்
நாழ இவளோ வென்னும் –இவரோ பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு மாறாக ஸ்வ தந்திரம் யுடையவன் என்று குறை ஏறிட்டுச் சொல்வார்கள்
நாழ –நான் என்று அபிமானிக்கைக்கும் -பொல்லாங்குக்கும் -நறு வட்டாணித் தனத்துக்கும் பேர்
நாமா மிகவுடையோம் நாழ்–பெரிய திருவந்தாதி 10-என்றும் —நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை-என்றும்-நாழால் பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் என்றும் -குற்றம் என்ற பொருளில் உண்டே
நாழ–திறமை யுடைமை -ஏற்றம் -இவள் எங்களிலும் ஏற்றம் உடையவளோ என்னா நின்றாள்
ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்-உபாஸனைக்கு விஷயமாகிய காரண வடிவத்தை யாம் கூறியதாகக் குற்றம் கூறுவார்
நாழி வளோ என்றும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்றும் -பாட பேதம்
யம்மனை சூழ் கின்றவே -தாயைப் போல் பரிவுள்ள ஞானிகள் ஸ்வரூப ஹானியோ என்று எறிட்டுச் சங்கித்த சங்கைக்கு
தோழிகளோ உரையீர் -எனது நெஞ்சை அறிந்த அன்பர்களே -நீங்கள் பரிகாரம் சொல்லித் தெளிவிக்க வேணும்
ப்ரபன்னர் திவ்ய மங்கள விக்ரஹ அனுபத்திலே இழிவார்கள் –
ஸ்வரூபம் பற்றி உபாசித்து முக்தி பெறுதல் அத்தனை ஸ்ரேஷ்டம் அல்ல என்றவாறு
இத்தால் அவனோடு போலியாய் இருப்பது ஓன்று அல்லது தரியாதபடியையும் –
பகவத் விஷயத்தில் உண்டான பிராவண்ய அதிசயம் ஒருவராலும் மீட்க ஒண்ணாதபடி இருக்கிறதையும் சொல்லுகிறது –
ஸத்ருச வஸ்துக்களை ஆகிலும் கண்டால் ஒழிய ஜீவிக்கக் கூடாமையாகிய ப்ராவண்ய அதிசயத்தைக் கண்ட சில அன்பர்
சாதனாந்தர பரராக பிரமித்து இவரது ப்ராவண்யத்தை நிஷேதிக்க
தம்முடைய அபிப்ராயத்தை மற்றும் சில ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ்கரித்து
அவர்களைக் கொண்டு இவர்கள் பிராந்தியைப் போக்கினை பாசுரத்தை
நாயகனுடன் ஒத்த பாதார்த்தங்களைக் கண்டு தரிக்க நினைத்த விரஹிணியான நாயகியை நிஷேதித்த தாயமார்க்கு
சகிகளைக் கொண்டு தன் அபிப்ராயத்தை அறிவித்து தெரிவித்த நாயகியின் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-
————-
சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – 72–இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் – சீலமில்லாச் சிறியன் -4-7-
பேறு கிடைக்காததால் வந்த மோஹ அந்தகாரமும் -அதனை அடக்கி மேலிடுவதான தத்வ ஞான பிரகாசமும்
விஸ்லேஷ தலையிலே ஒன்றுக்கு ஓன்று மிகுதியாகி வருத்தி தனது ஸ்வரூபத்தையே அழிக்கும் தன்மையை வெளியிட்டு அருளுகிறார்
சந்திரோதயம் -விவேகத்தை
இதுவோ வந்து தோன்றிற்று -இப்பிறையோ
வாலியது -சீரியதாக உள்ளது -எதிர்மறை லக்ஷணை யால் வெறுத்த படி
பிள்ளை -இளமைப் பெயர்
இத்தால் –இருளன்ன மா மேனி -என்கிறபடியே – திரு நிறத்துக்கு போலியான இருள் – அதுக்கு ஸ்மாரகமாய் நலிகிற படியையும் –
(கண்ணன் என்னும் கரும் தெய்வம் )
அதுக்கு மேலே சந்திரனும் –திரு முகத்துக்கு ஆதல்-திருக் கையில் திரு பாஞ்ச ஜன்யத்துக்கு ஆதல் –
நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து திருவாய்-என்கிறபடியே-திரு முகத்துக்கு ஸ்மாரகமாய்-நலிகிற படியால் இவற்றைச் சொல்லுகிறது –
————
வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73-துறையடைவு-தலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் – வேய் மரு தோள் இணை -10 -3 –
வுலகார–உலகமாகிய தாழி நிறையும் படி
விண் சுரவி–தெய்வப்பசு
பொழில் -உலகம் -சோலை
பிரான் பெய்த காவு கண்டீர் பெரும் தேவுடை மூ வுலகே –உலகங்களை சிங்கார பூம் தோட்டம் என்பார்களே
உரிய காலத்தில் பேறு கிடைக்காததால் ஞான விளக்கமும் பாதகமாக ஆழ்வார் அடைந்த தளர்ச்சியைக் கண்ட அன்பர்கள் நொந்து உரைத்த வார்த்தை
சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே –ஸ்வ பாவிகிமான ஸர்வ ரக்ஷகத்வமும் இவர் திறத்தில் நிகழாது ஒழிவதே –என்று சங்கித்த படி –
———–
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 -துறையடைவு–தலைவி மகிழ்வுடன் சொல்லும் பாசுரம்-செய்ய தாமரை -3 -6 –
திரைப்பாயில் திரு நெடுங்கண் வளர்ந்தும்-திரைப்பாயல் பாட பேதம்–திருப்பாற் கடலில் -ஆதி சேக்ஷனில் கண் வளர்ந்து
அந்தோ -ஹந்த போல் மகிழ்ச்சிப் பொருளில் வந்தது -அன்றோ -பாட பேதம் -தேற்றம்
கண் வளர்ந்தும் அறிவுற்றும்–உறங்குவான் போல் யோக சிந்தனை -லோக ரக்ஷனார்த்தம் -கூப்பீடு கேட்கும் இடம் அன்றோ
ஆகவே யோக நித்திரை -அறி துயில் -விழி துயில் -துயிலாத துயில் -பொய்யுறக்கம் -என்றும் சொல்லப்படும்
மறிதர-கோவர்த்தன கிரியைத் தலைகீழாகப் பிடித்தமை
சிறு பசுந்தென்றல்-மந்த மாருதம்-வெறும் தென்றல் என்று இருந்தாயோ –மாளிகை சாந்து நாறா நின்றால்-ராஜ புத்திரன் -வரவணித்து – என்று
இருக்க வேண்டாவோ – இது அவன் வரவுக்கு ஸூ சகம் காண் -நீ சோகிக்க வேண்டா -என்று ஆஸ்வசிப்பிக்கிறாள்-ஆக இருக்கிறது
விஸ்லேஷ தசையில் அவனது சேஷித்வத்தையும் தயாளுவானதையும் நினைத்து ஆறி இருக்கும் தன்மையை வெளியிட்டு அருளுகிறார்-
—————
உலாகின்ற கெண்டை யொளி யம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 –துறையடைவு-தலைவன் தலையின் வூரைப் பற்றி விசாரித்தல் –சன்மம் பல பல -3 -10 –
ஒளி யம்பு –இவன் பார்த்த போது (அவள் ) பாராதே –பாராத போதாகப் (அவள் )பார்க்கையாலே –
வரவு தெரியாதபடி-காணாக் கோலாக வந்து தைக்கிற படி –ஒளிக்கிற அம்பு –கண் கொண்டு தப்ப ஒண்ணாது இருக்கிறபடி –
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே–ஸ்ரீ வைகுண்டமோ -வையகமோ -உங்கள் ஊர் விகல்பித்து சொல்லலாம் படி அன்றோ
வாள் முகத்தீர்–திரு முகத்தில் கொண்ட வில் அம்புகளால் வருத்துவதால் சொன்னபடி–வாள் -வர்த்திக்கிற-உடைத்தான -வில் போன்ற புருவம் உள்ள திருமுகம் –வாள் என்று ஒளியாய் –வெஞ்சிலையையும்-ஒளியையும் உடைத்தான முகத்தை உடையீர்
புணரி-நதிகளோடு புணர்தலை யுடையது
புலாகின்ற-புலம்புகின்ற –ஸப்திக்கின்ற –சங்கின் வெள் ஒளியால் எப்பொழுதும் விடிந்தால் போல் இருக்கிற என்றுமாம்
வேலை -கரை அமைதியுமாம்
அம்மான் -அப்படிப்பட்ட மஹான்
இத்தால் ஆழ்வார் இருக்கிற இருப்பைக் கண்டாருக்கு –உபய விபூதியிலும் இவர் படிக்கு ஒப்பு இல்லை -என்று சொல்லும்படி
இருக்கிற படியை சொல்லுகிறது –ஆழ்வாருக்கு உபய விபூதியிலும் நிகர் யாருமே இல்லையே -என்றவாறு-
————-
இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – -76 ––துறையடைவு-தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி சந்த்ரனைக் கண்டு வருந்துதல் —-ஓராயிரமாய் -9 -3-
வடம் போதினை–வடம் போதில் -பாட பேதம்
இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய் வடம் போதினையும் மட நெஞ்சமே-அவனது குணங்களில் ஈடுபட்டு -பூர்ண அனுபவம் பெறாமையால் வருந்தும் இள மனமே
வியன் தாமரையின் தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே –சிறந்த பொருள்களை வெளிக்காட்டாமல் இழிந்த பொருள்களை வெளிக்காட்டும் விவேகம்
நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது -நமது சேஷத்வ ஸ்வரூபத்தையும் அழிக்க பரவும் இது
வியப்பே–ஆச்சர்யமோ
—–
திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -77-துறையடைவு-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு இரங்குதல்–தாள தாமரை -10-1-
தென் பால் -ஆரியர்கள் இகழ்ந்த மிலேச்ச பூமியான தெற்குத் திக்கு
இலங்கை வெங்களம் செய்த -இலங்கையில் உள்ள அரக்கர்களை வேர் அறும் படி போர் செய்து அழித்த -வெங்களம் செய்த-மயானம் ஆக்கல்
தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் –பிராட்டிக்காக அத்தனை செயதும் -தேவர்களுக்கும் கொடுமை தீர்த்ததும் செய்து அருளிய பிரானார் எமக்குக் கொடுமை தீர்த்திலரே
திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை–தமக்கு உண்டான ஞானப்பிரகாசம் துயர் அடையும்படி
செவ்விதான மஹா விவேகமும் குலைந்து பக்தியே விஞ்சி ஆற்றாமையை விளைக்கிற இக் கொடிய காலமானது
தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா–துஷ்ட நிக்ரஹ ஸிஷ்ட பரிபாலன சீலனான எம்பெருமான் போக்யதையை நினைவூட்டிக் கொண்டு
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –எமது ஸ்வரூபத்தை மாற்றும்படி வருத்துகிறது –
மாலை பொழுது செக்கர் வானம்-வாலியைக் கண்டு தாரை அங்கத பிள்ளையைக் கூட்டி புலம்பினது போல் புலம்பி என்னை நலிகிறதே–கீழ் 35 பாட்டில் போல் இங்கும் வர்ணனை
கீழ்-திரு உலகு அளந்து அருளின போது இட்ட மாலையை பெற வேணும் என்று
ஆசைப் பட்டு பெறாமையாலே நோவு பட்ட படி சொல்லிற்று –
இதில்-ராவண வத அநந்தரம்-இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டு
வந்து கிடையாமையாலே-நோவு பட்ட படி சொல்லுகிறது
76-77-78-மூன்று பாசுரங்களில் -உலகு அளந்த திரிவிக்ரமன் சாத்திய திருத்துழாய்–இலங்கை அளித்த பெருமாள் சாத்திய திருத்துழாய்–பாணாசூரனை முடித்த கண்ணன் சாத்திய திருத்துழாய்
அன்று இவ்வுலகம் அளந்தான் அடி போற்றி–சென்று அங்கு தென் இலங்கை செற்றான் திறல் போற்றி–பொன்றச் சகடம் உதைத்தான் கழல் போற்றி -அங்கும் இதே வரிசை-
————
நலியும் நரகனை வீட்டிற்றும் வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – 78-துறையடைவு-பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் –இன்பம் பயக்க-7-10-
நலியும் நரகனை வீட்டிற்றும் வாணனை திண் தோள் துணித்த வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல–எம்பெருமான் விரோத நிரசன சக்தியும்
பரத்வ மகிமையும் எம் புலவருக்கு வரையறுத்துச் சொல்லும் அளவல்லவே -வேதங்களுக்கும் எட்டாதவை அன்றோ –
மைவரை போல் பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே –கிட்டு அனுபவிக்கப் பெறாத அளவில் அழகிய வடிவமுடைய அவனது இனிமையில் மனம் செலுத்துதல் ஆற்றாமையையே மூட்டித் துயர் விளைக்கின்றதே
மெலியும் மட நெஞ்சினார் –சாத்மிக்கும் விஷயத்தில் ஆசைப்பட்டு கிடையா விட்டால் படும் அதைப்பட்டு கிடையாது என்று இருந்தாலும் –
பற்றிற்று விடாதே நிற்கிற நம் நெஞ்சு தந்து போன-கிலேசம் இறே இது எல்லாம் –
——–
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79–துறையடைவு-தலைவனைப் பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்குதல் –-மொய்ம்மாம் பூம் பொழில் –3 -5-
பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனை-திருமகள் மண் மகள் அடி வருடப்பெற்ற பேறு தனக்கு கிட்ட வில்லையே –சீதன் -அருளுடையான் என்றவாறு-
சீதனை-திருப்பாற்கடலில் கிடக்கிறபடியை நினைத்தாலே தாபம் போக்கி குளிர வைப்பவன் அன்றோ தாபார்த்த ஜல ஸாயீனம் –
வேதனை–வேதங்களால் சொல்லப்படுபவர்-புக்க இடமும் புறப்பட்ட இடமும் தாம் பட்டது படும் வேதத்தை நினைக்கிறார் –
வெண் புரி நூலனை–வைதிக புருஷ லக்ஷண யஜ்ஜோ பவீதத்தை உடையவன்
வேத முதல்வன் விளங்கு புரி நூலன் -என்றவாறு
விண்ணோர் பரவ நின்ற நாதனை – நித்ய ஸூரிகளும் அடைவு கெட்டு கிடந்தது கூப்பிடுவது-அவ்வடிவை இறே –
ஞாலந்தத்தும் பாதனை–பூமி தோன்றுவதற்கு இடமான திருவடிகள் யுடையவன்
ஆதியிலே திருமால் திருவடியில் இருந்து பூமி தோன்றியதாக வேத ஸாஸ்த்ரம் சொல்லுமே
வாழி திருவடியாய மண்ணுலகை –உத்யோக பர்வம் –மண கழலில -திருவரங்கத்து மாலை-
———
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –துறையடைவு-பிரிவு ஆற்றாத தலைவி மாலைப் பொழுதுக்கு இரங்குதல் – முடிச் சோதியாய் -3–1-
எம் விசும்பு அரசே –ஆழ்வாருக்கு பரமபதம் அண்ணியது தானே-பார் அளந்த பேர் அரசே –இருளின் கையில் அகப்பட்ட ஆதித்யனை மீட்கும் போது –
மகா பலி-கையிலே அகப்பட்ட பூமியை மீட்டவனே வேணும் போலே காணும் – –எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே–இப்படியும் ஒரு தலைவன் உண்டோ என்று குறைப் பட்ட படி
என்னை உபேக்ஷித்து உன்னைக் காட்டாது இருக்கிற ஸ்வ பாவத்தில் முடி சூடி இருக்கிறவன்
இருளாய் வந்து உறுகின்றதே – ஊழி என்ற பேராய் தலைக் கட்டுகை தவிர்ந்து இருளாயே பாதகமாகா நின்றது
உறுகின்றதே-இருள் வந்து ஸ்பர்சிக்க புகா நின்றது –அதுக்கு முன்னே – இருளன்ன மா மேனியை-( பெரிய திருவந்தாதி )கொண்டு வந்து இடை இட்டுக் கலக்க வேணும் என்கிறாள் –
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு -ஸூர்ய பிரகாசம் போல் உலகுக்கு நன்மை செய்யும் விவேகமும் பேறு கிடையாமையாலே குலைந்தது
அருளாய் –எம் பக்கல் கருணை செய்-உன்னையே கதியாக கொண்ட என்னை –-உனது அருளுக்கு விஷயம் ஆக்க வேண்டும் -என்று பிரார்திக்கிறார்
இருளாய் வந்து உறுகின்றதே -மோஹ அந்தகாரம் மேலிட்டு வந்து சூழ்ந்து வருத்துகிறது
இத்தால் ஸம்ஸாரத்தில் இருப்பு அஞ்ஞானம் வந்து மேலிடும்படி இருக்கையாலே கடுக இவ் விருப்பைக் கழித்துத் தர வேணும் என்று அருளிச் செய்கிறார் –
———-
உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்றதால் இவள் ஆகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81 –துறையடைவு-வெறி விலக்குத் தொடங்கிய தோழி இரங்குதல் –-வீடுமின் முற்றவும் -1-2-
துழாய் குழல் வாய்த்துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்--திருத்துழாயை முடியில் சூற்றுவதும் திருவேங்கடம் கூட்டிச் செல்வதும் பரிகாரம்-அடிக்கீழ் அமர்ந்து புகுந்து இருக்க வேண்டுமே
வேங்கடமாட்ட வும் -தாபத்ரயங்கள் தீர்க்கும் பொய்கை என்பதால் ஆட்டவும் என்கிறாள் -வேங்கடத்தில் இவளை நடையாடச் செய்ய -பிரார்த்தனை வேண்டிக் கொள்ளவும் செய்கிறிலள்-கல்லும் காடுமாய் இருக்கிறது அடைய ஒரு தடாகம் போலே காணும் இவளுக்குத் தோற்றுகிறது –
உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய்-பரிவின் மிகுதியால் உபாயாந்தரங்களில் இவளது ஆற்றாமையைத் தணிக்க முயல்கிறார்கள்
இவளைப் பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல்–இவள் அருமையை நினைந்து வருத்தப் படத்தக்கவள் அன்றோ-தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ -பெரியாழ்வார்
துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்–பகவத் ப்ரஸாதமும் திவ்ய தேச வாசமும் இவர் ஆற்றாமைக்குப் பரிகாரங்கள் -அவை செய்ய மாட்டில்லை-துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர் –மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்ற அளவும் போய் –
அது கடக்க நின்று வீசுமளவும் போராதே – அது தன்னையே கொண்டு வந்து குழலிலே -நிரம்ப-துறுக்க
இப் பாட்டால் தரிப்பிப்பார்க்கும் ரஷகனுக்கும் இடமறும்படி இவர் பகவத் விஷயத்திலே அவஹாகித்த படியாய் சொல்கிறது –
(பகவத் பிரசாதமும் திவ்ய தேச வாசமும் பரிகாரம் )-
———–
எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே உதய மலை வாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82–துறையடைவு–தலைவி தலைவனின் கண் அழகைப் பாராட்டி இரங்குதல் —-உருகுமால் நெஞ்சு -9–6-
ஆற்றாமை மிக்கு அவனது ரக்ஷகத்வத்திலும் சங்கை கொள்ளும் படி
ஜீயர் –இப்பாட்டு சொல்ல வநபிமதமாய் இருக்கும் -என்று அருளிச் செய்வர் –
உரு வெளிப்பாட்டிலே சர்வேஸ்வரன் உடைய திருக் கண்கள் பாதகமாம் படியை சொல்லுகிறது இது இறே –
இவருடைய ஆற்றாமை உண்டாகில் இறே இப் பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது –தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணன் அன்றோ –
தண் தாமரைக் கண்களை இப்படி அக்னி போல் சொல்வது-ஆற்றாமை மிக்கு — குண அனுபவம் -கொடுத்த ப்ரீதி
அனுபவம் தலைக் கட்டமையால் வெறுத்து சொன்ன படி-
——————
விளரிக் குரலன்றில் மென் பெடை மேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே – – -83 –துறையடைவு-அன்றிலின் குரலுக்கு தலைவி தளர்வதைக் கண்டு தோழி இரங்குதல் –-உண்ணிலாய ஐவரால் -7–1-
அன்றில் -கிரௌஞ்சம் -பனை மரத்தில் வாழும் குருகு -குடல் காம உத்தீபகமாய் பிரிந்து இருப்பாரை வருத்தும்
ஷட்ஜம் -ரிஷபம் -காந்தாரம் -மத்தியமாம் -பஞ்சமம் -தைவதம் -நிஷாதம் -ஸப்த ஸ்வரங்கள்
இவற்றையே தமிழில் -குரல் -துத்தம் –கைக்கிளை -உழை -இளி –விளரி -தாரம் -என்று ஏழிசை என்பர்
விளரி -தைவதம் என்னும் சுரம்
கிரௌஞ்ச கவணதி மத்யமம் -என்றும் சொல்வதால் மத்யம சுரம் என்றுமாம்
விளரி என்ற ஒரு பண்ணும் உண்டு-விளரி–உச்ச ஸ்வர கண்ட த்வநி
மென் பெடை -பிரிவு பெறாத மென்மையை யுடைய பேடை
முளரிக் குரம்பை -தாமரை இலைகளையும் பூக்களையும் கொண்டு வந்து சமைத்த கூடு
இது விது-கண்ணுக்கு புலனாகும் பலவற்றைச் சூட்டியது
அன்றில் மென் பேடை மேகின்ற முன்றிற பெண்ணை முளரிக்குரம்பை இது என்பதை அடி ஒற்றி ஆறங்கம் கூற அவதரித்த திருமங்கை ஆழ்வாரும்
முன்றில் பெண்ணை மேல் முளரிக்கூட்டகத்து அன்றிலின் குரல் அடரும் என்னையே –
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந் தீர்கின்ற வன்றிலின் கூட்டை- பிரிக்க கிற்பவர் யார் கொலோ -பெரிய திரு மொழி – 11- 2- 1- –
அவனை கொடு வருவர் யாரோ -என்கிறபடி இறே – (நம்மாழ்வார் அங்கி பாசுரம் போல் அங்கம் பேசுறதுக்கு இதுவும் )
இத்தால் ஆழ்வார் படியை கண்டவர்களுக்கு யாதநா சரீரம் போலே க்லேசமே யாகாதே இவர்க்கு உள்ளது –
இச் சரீரத்தோடு பகவல் லாபம் உண்டாய் இவர் தரித்து இருக்க காண மாட்டோம் ஆகாதே-
இஸ் சரீர விஸ்லேஷத்துக்கு பின்பு ஆகாதே இவர்க்கு ஆஸ்வாசம் உள்ளது -என்று தோற்ற-இருக்கிறபடியை சொல்கிறது –
————-
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – -84-துறையடைவு-தலைவி தலைவனைக் காண விரைதல்– மையார் கருங்கண்ணி -9–4-
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் எறி த்வரை எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் என்றும்
காந்தள் முகிழ விறல் சிதைக்காகிக் கடுஞ்சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் ஜனகராசன் தன் வேள்வியில் கண்டார் உளர் -என்றும்
தையல் குழு வினுள்ளும்–பரதந்த்ரராக பிரபன்ன ஜனங்களின் குழுவினுள்ளும் –
ஐய நல்லோர்கள் –ஆரியர் ஸ்ரேஷ்டர்கள் -கைங்கர்ய வ்ருத்தி சீலர்கள் – குழு வினுள்ளும் காணத் தக்கவன்
மைய வண்ணா -கண்டார் கண்ணிலே அஞ்சனம் எளிதினால் போல் குளிர்ந்து இருக்கும்படி –(மைப்படி மேனியான் அஞ்சன வண்ணன் அன்றோ அவன் )
மணியே -அப்படியே இருக்கச் செய்தே -முடிந்து ஆளலாய் இருக்கிறபடி –
முத்தமே -உடம்பிலே ஏறிட்டுக் கொண்டால் விடாய் எல்லாம் தீரும்படி இருக்கை –முத்தம் -தெளிவிக்கும் -நீர்மைக்கும் -குளிர்ச்சிக்கும்
என் தன் மாணிக்கமே -பெரு விலையனாய் இருக்கை –-மாணிக்கம் -பெருமைக்கும் கறுமைக்கும்
முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே -மூன்று உவமைகளும் உண்டே
மைய வண்ணா–மையல வண்ணா -பாட பேதம் -ஆசை மயக்கத்தை உண்டாக்கும் வடிவு அழகன்-
———–
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85—துறையடைவு-மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் ––எம்மா வீடு -2-9-
காலை அரும்பிப் பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் காதல் நோய் -திருக்குறள்
அடியேன் அடி யாவி—எனது அடிமையான சொத்தான மகள் –ஆவி -உயிர் போல் அருமையான பெண் –அடியேனுடைய ஆவி -பாட பேதம்
மாணிக்கம் ஸூர்ய மண்டலத்துக்கும் –குரங்கு இருளுக்கும் –அஸ்தமித்தல் -மாணிக்கம் மீளக் காணாமல் போவதற்கும்
அன்றிக்கே மாலைக்கு குரங்கும் -ஸூர்யனுக்கு மாணிக்கமும் -அவன் வாழ்வதற்கு அது எறியப்படுத்தலும் இருளுக்கும் எறியப்படும் இடமும்
ஆணிப்பொன் மாற்று அறிய -உயர் தர பொன் -இதுக்கு மேல் மாறு இல்லை என்னும் படியான பொன்
மிக்க விளக்கமுடைய விவேகம் மோஹ அந்தகாரத்திலே விழுந்து ப்படும்படியா இந்த நிலையிலே
உன்னைத் சரணம் அடைந்த உயிருக்கு நீயே அன்றோ ரக்ஷகன் என்று உரைத்தார்
ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகையும் மிகையாம்படி இறே -இவனுக்கு அத்யந்த சேஷமாய் இருக்கிறபடி –
பிரமித்த போது இறே சமர்ப்பிக்கலாவது –-
சமர்ப்பித்த வநந்தர ஷணம் -என்னத்தை எவனுக்கு கொடுத்தேன் -என்று நினைக்க ஒண்ணாதபடி
தன்னோடு தான் தொற்று அற்று இறே-இருப்பது –
———–
அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – 86-துறையடைவு-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் – வள வேழ்வுலகு -1-5-
அடைக்கலத் தோங்கு கமலம் -பசிய இலையின் மீது உயர்ந்து அலர்தல் போல் பச்சை மா மலை போல் மேனியில் இருந்து எழுந்து தோன்றியமை
அடைக்கல -அரனுக்கு அடைமொழியாக்கி -அடைக்கலமாகப் புக்க சிவனுக்கும் என்றும்
நீக்கி என்பதற்கு அடைமொழியாக்கி ரக்ஷகமாக இருந்து நீக்கினவன்
அடைக்கலத் தோங்கு -கமலத்தல ரயன்-என்று அவனுக்கு அடைமொழியாக்கி அடைக்கலமாக வளர்ப்பவன்
அடைக்கலம் என்று காத்தற்கு உரிய பொருளையும் காப்பவனையும் குறிக்கும் –
கமலத்து அலர் -தாமரைப்பூ என்று கொண்டு தோன்றின -பதம் அத்யாஹாரம் வருவித்துக் கொள்ள வேண்டும்
படைக்கலம் ஏந்தி -படையும் காலமுமான -ஆயுத ஆபரண கோடிகளில் சேரும் அவற்றை பூ ஏந்தினால் போல் ஏந்தி
தாம்புகளால் புடைக் கலந்தானை–நான்கு புடையும் சூழ்ந்து கட்டப்பட்டவன்
புடைக்கலந்தானை –அலந்து இருக்கும் இதுக்கு மேற்பட இதுக்கு ஒரு பிரதி கிரியை இல்லை பண்ணலாவது –
அலந்தானை -அலவென்று மலர்வாய் – இவள் அடிக்க அடிக்க முகம் மலர்ந்து-இருந்த படியாகவும் –
என் சொல்லிப் புலம்புவனே –அவனது குணங்கள் சேஷ்டிதங்களில் குறை காணாமல் எனது குறைகளையே நானே சொல்லக் கடவேன்
நாம் இப்போது பெறாது ஒழிகிறது நம்முடைய க்ரம ப்ராப்தி பற்றாமை என்று இத் தலையிலே கை வாங்கலாய் இருந்தது –
ஆற்றாமை மிக்கு அவனது குண சேஷ்டிதங்களைச் சொல்லி முறையிடுகிறார் –
————–
புலம்பும் கனகுரல் போழ்வாய வன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம் புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87-துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் – பண்டை நாளாலே -9-2-
பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழி–நதிபதியான கடல் மனைவியைத் தழுவி ஆரவாரம் செய்து அணைத்துக் கொள்ளுமா போல்
சேதனமாகிய சிறு பறவையான அன்றில் புலம்பலும் அசேதனமான பெரும் கடலோசையும் ஸம்ஸ்லேஷத்தால் மகிழ்வதும் விஸ்லேஷத்தில் வருந்துவதும் காணலாமே
புள்ளது நலம் -கருடன் அவனைக் நம்மிடம் கூட்டி வருவதே நலம்
நின்-வலம் புள்ளது நலம்பாடுமிது குற்றமாக–த்வதங்க்ரி சம்மர்த கிணாங்க சோபினா (ஸ்தோத்ர ரத்னம் )-என்கிறபடியே-உனக்கு அடிமை செய்து அவன் தழும்பு அலங்காரமாக சுமந்து கொண்டு இருப்பது போல் ஸம்ஸ்லேஷ சிஹ்னங்களைத் தரிக்க ஆசைப்பட்டதே குற்றமாக
வையம் சிலம்புதலாவது -தாயும் தோழியும் ஊராரும் இவள் தளர்ச்சிக்காக முறையிடுதல்
திருமால்-பித்தர் பனி மலர்ப்பாவைக்கு என்று ஒருத்திக்கு இருக்க நீ இவளை இங்கனம் வருந்துவது பக்ஷபாதமே அன்றோ
இத்திருவினையே –அத்திரு உன்னையே பற்ற இத்திரு இருவரையும் பற்றி அவளுக்கு நிழல் போல் இருக்க இவளையும் பார்க்க வேண்டாவோ
இத்திருவினையே-அடிமைச் செல்வம் நிறைந்த ஆழ்வார்-உம்முடைய திவ்ய மஹிஷி நோவு படப் பார்த்து இருக்கை உமக்கு குறை யன்றோ
ஆங்கவை –மணியோசை சந்திரோதயம் தென்றல் -என்றும் கீழ் சொன்ன கடல் ஓசையும் அன்றில் குரலும்
இத்தால் – அத் தலையாலே வரக் கண்டார் ஆறி இருக்கை அன்றி – இவர் க்ரம ப்ராப்தி பற்றாமை பதறி மேல் வி
———–
திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88–துறையடைவு–போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் –-புகழும் நல் ஒருவன் -3-4-
திருமால் தலைக் கொண்ட–ஆசையின் மேல் எல்லையில் நிற்கிற -பக்கத்தின் மேல் எல்லையில் நிற்கும் நமக்கு பேறு பெறாமைக்கு ஹேதுவான பாபம் வர விரகுண்டோ-மேல் எல்லை —ஜகதா காரனாய் இருக்கிற அளவில் பர்யவசியாதே –அவனுடைய அசாதாராணமான ரூபத்தையும் –
அசாதாராணமான சிஹ்னங்களையும் – காண வேணும் என்று ஆசைப்பட்டு கூப்பிடும்படி –எம்பெருமான் பக்கலிலே அன்றி அவன் வடிவம் ஒத்த போலி கண்டு ஈடுபடுதல்- இதே போல் போலிகளை அவனாகவே பாவித்து வாய் பிதற்றுவதை –செய்ய தோர் நாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்-என்றும் –நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா வென்று கூவும் -போல்வனவிலும் காணலாம்
தலைக் கொண்ட – தலைக் கொள்கை யாவது -சிலர் பழி சொன்னார்கள் -என்று மீளாதபடி ஆசைப்பட்டு கூப்பிடும்படி
———–
தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-துறையடைவு-தலைவனது கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் — அங்கும் இங்கும் -8-3-
தீ வினை -பாபச் செயல்களும் உபாயாந்தரங்களும்
நல் வினை-முக்திக்கு காரணமான பிரபத்தியைச் சொன்னவாறு
வல்லாயனை—-இடையர் ஜாதி குணங்களில் நின்ற உறைப்பு –
ஏற்றை – லோகத்தை அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ள பெற்ற படியால் மேணானித்து இருக்கிறவனை –
இத்தால் வந்த பலமும் தன்னதாய் இருக்கும் படி-ஏறு -காலை ஸிம்ஹம் -மேம்பாடு
தீ வினைக்கு ஆரு நஞ்சே -தளை தப்பாமல் பாட பேதம் –ஆற்ற ஒண்ணாத -ஆற்ற அரிய நஞ்சு
இவ்வண்ணமாக பரத்வ ஸுலபயங்களைக் காட்டி என்னை ஆளாக்கிக் கொண்டான்
எப்போது நித்ய கைங்கர்யம் பெறப்போகிறேனோ என்று பிராப்தி -காலத்தைப் பிரதேஷிக்கிறார்- எதிர்பார்த்து அருளிச் செய்கிறார் –
———-
தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே – – – 90-துறையடைவு–தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது உரைத்தல் – குரவை ஆய்ச்சியர் -6–4–
சுருங்கலதே – காலம் சுருங்குகிறது இல்லை -என்றும் உடன்பாடாக சுருங்குதலை உடையது -இவ்வாறு பேறு பெறாமல் என் காலம் கழிந்து விடுகிறதே என்றுமாம்
உன் திருவடிகளில் அடிமையால் அல்லது செல்லாத படியான சரீரத்தைப் பெற்ற படியையும்
அப்படி இருக்கச் செய்தே அவ்வடிமையை இழந்து இருக்கிற இருப்பையும் அனுசந்திக்கக் காலம் போருகிறது இல்லை
திருவடிச் சூடும்–சென்னிக்கு அணியான திருவடித் தாமரைகள் –கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
உன்னைப்பெறாத இக்காலம் கல்பமாக நெடுகி உள்ளதே-நாதனான நீயோ ஆஸ்ரித விரோதி நிரசன நீயும்
ரக்ஷண தீஷிதனாயும் உள்ளாய்-இப்படி இருக்க வீணாகா காலம் பெருகுவது பொறுக்கப் போவது இல்லை என்று
சர்வேஸ்வரன் இடம் முறை இடுகிறார் –
————–
சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –துறையடைவு–தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல் –-வார் கடா அருவி -8–4-
சுருந்குறி–கள்ளக்கயிற்றை உருவி விரல் நுழைக்க ஒண்ணாத படி நெருக்கப்பட்ட உறி
சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை–இவ்வுடம்பாகிய சிக்கத்தில கட்டப்பட்டுள்ள வெண்ணெயின் தன்மையான முமுஷுவை எவரும் அறியாதபடி அபி நிவேசத்துடன் விரும்பிக் கைக்கொள்ளுமவன்—தொடு வுண்ட கள்வனை-வுண்ட பெரு வயிற்றாளனை -மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை-மூன்று கள்ளத்தனத்தை அனுசந்திக்கிறார் இதில்
இருங்குறளாகி-மிகக்குறிய வடிவம் -பெரிய வடிவத்தை உட்க்கொண்ட சிறு வடிவம் -மஹிமை யுடைய வடிவம் -கரிய குறள் வடிவமுமாம்
பாவோ நான்யத்ர கச்சதி போல்-இவரும் ஸுலப்ய குண அனுசந்தானத்தைத் தாண்டி பரத்வத்துக்கும் போக வல்லார் அல்லரே –
———
பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-துறையடைவு—தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் – ஆழி எழ -7–4-
விண்ணோர் நாள் நிலந்தோய்ந்து தொழுவர்–அநந்ய ப்ரயோஜனர்க்கு நேர்த்தி அற்பமாய் பலம் அநேகமாய் இருக்கும்
பிரயோஜனாந்தர பரருக்கு மாறி நேர்த்தி அநேகமாய் பலம் அற்பமாய் இருக்குமே
கீழ் அவதார குணங்களை அனுபவித்தார் -இதில்-தேவர்கள் பிரார்த்தனையால் அன்றோ
தன் சௌகுமார்யம் பாராமல் இந்த கர்சகமான லோகத்தில் அவதரித்தது என்று அவர்களை வெறுக்கிறார் –
———-
காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –துறையடைவு—இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் — ஒரு நாயகமாய் -4–1-
காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்–தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய–13 பாசுரம் போல் இங்கும்
காலை -ஸத்வ குணம் அதிகமாக உள்ள
நன் ஞானத் துறை படிந்தாடி–ஆத்ம ஞானத்துக்கு இறங்கும் துறையான ஆச்சார்யரை வணங்கி–நல் ஞானம் – ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் திருவந்தாதி )என்னக் கடவது இறே –
ஆடி -அவன் உபதேசத்தில் ஆழ்ந்து
கண் போது செய்து—பகவத் விஷயத்தில் உள் கண் மலர்ந்தும் காணாமல் -விஷயாந்தர ப்ராவண்யம் தவிர்ந்து –போது -மொட்டுகைக்கும் அலர்வதற்கும் கொள்ளலாம்-புறம்புள்ள விஷயங்களில் கண் செம்பளித்தும் பகவத் விஷயத்தில் விழித்தும் என்றபடி
மாலை நல் நாவில் கொள்ளார் -நம் மேல் பித்தனான அவனை நாவால் கூட சொல்லாமல் விமுகராய்
நினையார் அவன் மைப்படியே-அவனது திவ்ய மங்கள விக்ரஹத்தை மனத்தில் வைக்காமல்
நந்தத் யுதித ஆதித்யே– விடிந்தவாறே அபிமத விஷயத்தை சாதிக்கைக்கு-த்ரவ்யார்ஜனம்-பண்ணுக்கைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள் நந்தந்த் யஸ்தமிதே ரவவ் -அஸ்தமித்தவாறே இவற்றைக் கொண்டு பிறர் அறியாதவாறே அவ் விஷயங்களை புஜிக்க-காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள்-இவ்வாறு உள்ள நாட்டாரை பழிக்கிறார்–பிறர் இழவுக்காக பரிந்து அருளிச் செய்கிறார்
பெயரினையே புத்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் அந்தியால் ஆம் பயன் எங்கன் -என்பதால் –நாவில் கொள்ளார்-என்பது மாத்ரத்துடன் நில்லாமல் நினையார் அவன் மைப்படியே- என்கிறார் நாராயணா என்னா நா என்ன நாவே போல் இங்கும்
அவன் திரு நாமம் சொல்லாமல்-அஞ்சன திரு மேனியை நினையாமல்-கெட்டுப்போகிறார்கள் என்று சோகிக்கிறார்
பர உபதேசம்-ஒரு நாயகமாய் இதனால் தானே-
——–
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94-துறையடைவு–தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –இருத்தும் வியந்து -8-7–
மைப்படி மேனி–உள்ளுள்ள வாத்சல்யம் கண்ணில் வெளியில் கசிந்து பரிவாஹம் ஆகுமே–கண்டார் கண்கள் எல்லாம் குளிரும்படியான வடிவு–நஞ்சீயர் –இன்னார் என்று அறியேன்–என்னப் பண்ணுகை யாகாதே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்–கேட்டார் வாய்க் கேட்கை அன்றிக்கே மெய்யாகக் கண்டபடியாலே உன்னுடைய திருவடிகளைத் தலை மேல் கொண்டு அனுபவிக்கும் தன்மை கொண்டவர்கள்-
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும் அப்படி யானும் சொன்னேன்— யூர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைக்கும் போலவே அப்படியே வேத வைதிக புருஷர்கள் சொல்வதைக் கேட்டு நானும் சொன்னேன்-வைதிகர்கள் தானே அவனது திவ்ய மங்கள விக்ரஹத்தையும் செந்தாமரைக்கண்ணும் அறிவார்கள் -உள்ளத்தில் இருந்து காட்சி கொடுப்பான்-காட்டவே காண்பார்கள் -கண்டதை நமக்கும் அருளிச் செய்வார்கள்
அடியேன் -சொல்லுவதற்கு அடியானை சம்பந்தம் உடையவன் -பக்தி பரவசமுடையவன்
மற்று யாது என்பனே -இவ்வாறு சொன்னேன் அல்லது எனது ஞானத்தால் கண்டு சக்தியால் சொன்னேன் என்ன வல்லேனோ-
————-
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 –துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –-திருமாலிருஞ்சோலை -10-8-
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்தல் –பிரிதல் இன்றி வெளிப்படையாகக் கூடி இருக்கும் படி மணம் செய்தல்
களவு ஒழுக்கத்தில் –இயற்கைப் புணர்ச்சி
பங்காற் கூட்டம் -பகல் குறி
பாங்கியில் கூட்டம் -இரவுக் குறி
இவ்வாறு ஒவ்வொரு வகையில் பிரிவு இருப்பதால் விரதம் பத பிரயோகம் -தவறாமல் ஏற்றுக் கொண்டு ஒழுகும் ஒழுக்கம்
நல் வீடு செய்தல்–கைவல்யமும் வீடே -நல் வீடு இல்லையே –பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே
யாதானும் பற்றி-கல்வி செல்வம் குளம் ஒழுக்கம் அன்பு வேண்டுகோள் யாரும் காலம் கொடுத்தல் போன்ற காரணங்களால் மனம் செய்வார்களே –
யாதானும் பற்றி நீங்கும் என்றும் யாதானும் பற்றி வீடு செய்யும் என்றும் இயையும்
மூதாவியில் தடுமாறும்-முதுமை ஆவி -உடம்பை உணர்த்தும் –விட்டு நீங்குதல் இல்லாத ஸூஷ்ம சரீரம் மூலமாக நிலை பெயரும் என்றுமாம் –
நல் வீடு செய்யும் மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே –இப்படி சரீர சம்பந்தம் அநாதியாய் இருப்பதால் -சரீர பற்று இல்லையாம் படி நீக்கி அருளும் திரு மால் -தாயையும் தந்தையாயும் இருக்கும் அவனைச் சரணம் அடைந்து –திருமால்-வாத்சல்யமும் ஸ்வாமித்வமும் சொல்லிற்று ஆகவுமாம்
வணங்குவனே –இதர விஷயங்களில் அருசியைப் பிறப்பித்து –தன் பக்கலில் பிராவண்யத்தைப் பிறப்பித்த -இவ் உபகாரத்துக்கு
சத்ருசமாய் இருப்பதொரு பிரத்யு உபகாரம் நம்மால் பண்ண ஒண்ணாது இறே –அவனதான வஸ்துவை அவன் பக்கலில் சமர்ப்பிக்கும் அத்தனை இறே –
அதுவும் அவனது இன்னருள்-இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்-(அவனதான வஸ்துவை -அவனது தான் என்று இசைவதே ஆத்ம சமர்ப்பணம்)
விரதத்தை மாற்றி உனது திருவடிகளில் பிராவண்யம் உண்டாக்கி ஜென்ம பிரவ்ருத்த -திருத்துழாய் அங்குரிக்கும் போதே பரிமளம் உண்டாய் இருப்பது போல் சஹஜ பக்தி உண்டாக்கி அருளின ஆப்த பந்துவான ஸ்ரீ யபதியை ஆஸ்ரயியா நின்றேன் என்று அருளிச் செய்கிறார் இதில்-
————-
வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –துறையடைவு–தலைவி வெறி விலக்குவிக்க நினைத்தல் – ஒன்றும் தேவும் -4-10-
துறை -ஆசிரியர் –சமயம் -சமய நூல்கள்
இணங்கு நின்னோரை இல்லாய்-ஒப்பார் மிக்கார் இலையாய தனி அப்பன் அன்றோ –இணங்கி நின்றோரை –பாட பேதம் கல்பிதம்
தேவ ஜாதிகளில் இவனை இனைத்துச் சொல்லலாம் படி உன் போல்வாரை யுடையவன் இல்லாதவன் அன்றோ நீ
உன்னோடு ஓக்க நிற்கும்படி உனக்குப் போலியானாரை யுடையாய் அல்லை –
நின் கண் வேட்கை எழுவிப்பனே–சேதனர்களுக்கு அறிய வல்ல -செய்ய வல்ல சக்தியையும் கொடுத்து வைத்தாய்
அவற்றைக் கொண்டு அந்த தேவர்களையே தொழுது சம்சாரிகளாகவே திரியா நின்றார்கள்
நீ அவர்களை உபேக்ஷித்தாலும் அவர்களைத் திருத்தி உன்னிடம் ஆஸ்ரயிக்கும் படி உனது பக்கலிலே ப்ரீதியை எழுவிப்பன் என்கிறார்-
———
எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97-துறையடைவு–தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் –பரிவதில் ஈசனை -1-6-
பூர்ண அனுபவம் செய்யக் கருதி இழிந்தாருக்கு ஞானம் குவியாது
உலகப் பொருள்களின் அநித்தியம் ப்ரத்யக்ஷமாகக் காண்பதால் நித்தியமான அவனைக் கண்டு அனுபவிக்காத தொடங்கினார்களுக்கு அவனை உபேக்ஷிக்க ஹேது எதுவுமே இல்லையே
தொல்லை மால் -ஜீவர்கள் இடம் அநாதி காலமாக பித்து கொண்டவன் -பழமையான பெரியவன் என்றுமாம் –
கண் ஆர -கண் படைத்த பயன் பெற –கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே கண் இமைத்துக் காண்பார் கண் என்ன கண்ணே –
காதல் உற்றாருக்கு எள்கல் அல்லால் துஞ்சுதல் உண்டோ என்றுமாம்-எள்கை –இரங்குகை -ஈடுபடுதல் -இகழ்தல் –
————–
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –துறையடைவு-தலைவனது அருமையை தோழி கூறுதல் – கெடுமிடராய-10-2-
துஞ்சா முனிவர் -உணவு உறக்கம் விட்டு தவ ஒழுக்கம் கொண்டவர் -ஞான சங்கோசம் இல்லாதவர் -இடைவீடில்லா அழியாத என்றுமாம் –ஸநகாதி யோகிகள்-அல்லாதவர் -உபய பாவனை கொண்ட ப்ரஹ்மாதிகள்
எஞ்சாப் பிறவி இடர்–ஆத்யாத்மீக ஆதி பவ்திக ஆதி தெய்விக –போன்ற கரி இன்றி வரும் பிறப்புத் துன்பங்கள்
இமையோர் தமக்கும்-தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி–அத்விதீயன் -ஒப்பில்லா அப்பன் -தனக்கு வேறே ஒருவரைச் சார்ந்து இருக்கும் நிலை இல்லாதவன்-ப்ரஹ்மாதிகள் தங்கள் துக்க-நிவ்ருத்திக்கு உடலாக தன்னை ஆஸ்ரிக்கிறவோபாதி-
தான் வேறு சிலரை ஆஸ்ரயணீயராக உடையன் அன்றிக்கே இருக்குமவன்
ஸர்வேஸ்வரனாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் கூட ஆஸ்ரயணீயனுமாய் –அவாப்த ஸமஸ்த காமனாய் இருக்குமவன்
ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள த்ரவ்யமே தனக்குத் தாரகமாய் -அது தான் நேர் கொடு நேர் கிட்டப்பெறாதே இப்படிக் களவு கண்டாகிலும் புஜிக்க வேண்டி
அது தானும் தலைக்கட்டப் பெறாதே வயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடிபட்டு பிரதி கிரியை அற்று உடம்பு வெளுத்து பேகணித்து நின்ற நிலை சிலருக்கு நிலமோ -நம்பிள்ளை ஈடு
நித்ய ஸூரிகளுக்கும் நெஞ்சால் நினைக்க அரிதாய் இருக்க இத்தை நான் நினைத்து பொழுது போக்க ஒண்ணுமோ
நான் இவ்வவஸ்தை போய் மோஹமேயாய் விடும் அல்லது ஸூகமாய் இருக்கப் போமோ என்கிறார்-
———-
ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- –துறையடைவு–தலைவி தன் அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –செஞ்சொல் கவிகாள் -10-7-
ஈனச் சொல்லாயினுமாக–களவு ஒழுக்கத்தை புலப்படுத்துதலால் பழி தூற்றுக்குப் பின் வாங்காமை தோன்றும் -சம்சாரிகள் அறம் பொருள் இன்பத்தில் ஈடுபட்டு பகவத் விஷயத்தை பாரா முகம் செய்தாலும் என்றுமாம்
ஏனத்துருவாய் யிடந்த பிரான்–பிரஜை கிணற்றில் விழுந்தவாறே புதனே குதிக்கும் தாயைப் போல் பிரளயம் கொண்டவாறே முழுகி இடந்த பெரும் நன்றியாளன்
இரும் கற்பகம்–தன்னையே நமக்கு நல்கும் பெரிய கற்பகம் அன்றோ -நம்மை உருவாக்கி -இசைவித்து தாளிணைக் கீழ் இருத்தி கைங்கர்யம் கொண்டு மகிழ்ந்து நாம் மகிழ் அது கண்டு மேலேம் மகிழும் கற்பகம்
வானத்தவர்க்கும் –ப்ரஹ்மாதிகள்
அல்லாதவர்க்கும்-அவனை விட்டுத் தரித்து இருக்க மாட்டாதாரான நித்ய முக்தர்கள்
மற்று எல்லாயவர்க்கும்-மநுஷ்ய திரியக் ஜங்காதி
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே ––இசைவே வேண்டுவது-அவன் இரக்கம் உபாயம்-அவன் இனிமை புருஷார்த்தம்
———-
நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-துறையடைவு-தாமான நிலையில் அருளியது–முனியே நான்முகன் -10-10-
இந்நூறும் –மகா பாரதம் போலே பரந்து இருத்தல் –பிரணவம் போலே சுருங்கி இருத்தல் -செய்யாதே –
நூறு பாட்டாய் – ஜ்ஞாதவ்யாம்சம் அடைய உண்டாய் இருக்கை –
வினை -நல்வினையும் தீ வினையும் பிறப்புக்கு ஹேது என்பதால் பொதுப்பட வினை என்கிறார்
இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே –பொல்லாததுமாய்-அருவினையாய் – மாயமுமாய் -பொய் நிலமுமாய் இருக்கிற பிறப்பாகிற வன் சேற்று அள்ளலில் அழுந்தார் –
அவன் சேற்றில் கால் வைத்து இடந்து எடுப்பதை அனுசந்திக்கவே நாம் சம்சார சேற்றில் உழல வேண்டாமே
நானும் பிறந்து நீயும் பிறக்க வேண்டுமோ -கீதாச்சார்யன்
ஆழ்வார் தாமாக அருளிச் செய்கிறார் இதில்
விண்ணப்பம் செய்த – அடியேன் செய்யும் விண்ணப்பமே -என்று தொடங்கி – விண்ணப்பம் செய்து-தலைக் கட்டின வார்த்தை யாயிற்று –
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே, சடகோப ராமானுஜ ஆச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply