Archive for December, 2021

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள் / ஸ்ரீ ராம மங்களம்

December 17, 2021

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள்

ஆதித்ய ஹ்ருதய சர்க்கத்தின் முதல் 2 ஸ்லோகங்கள் அகத்தியர் இராமபிரானை அணுகுதல்.
மூன்றாவது ஸ்லோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஆதித்ய ஹ்ருதய மந்திரம் 4வது ஸ்லோகம் முதல் 26 வரை வெளிப்படுத்த பட்டுள்ளது.
ஸ்லோகங்கள் 4,5 ஆதித்யஹ்ருதயத்தின் பெருமைகள்.
ஸ்லோகங்கள் 6-15 சூரியனின் பெருமைகள், ஆத்ம போதம், உள்ளிருப்பதும் வெளியிலிருப்பதும் ஒன்றே என நிறுவுதல்
ஸ்லோகங்கள் 16-20 மந்திர ஜபம்
ஸ்லோகங்கள் 21-24 சூரிய போற்றிகள்
ஸ்லோகங்கள் 25, 26 பலன்கள், ஜபிக்கும் முறை
27-30 ஸ்லோகங்கள் ராமர் ஜபித்த முறையை கூறுகிறது.
முப்பத்தி ஒன்றாம் ஸ்லோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன்
இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

———

ஓம் அஸ்யஸ்ரீ, ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய,
அகஸ்த்யோ பகவான் ரிஷிஹி, அனுஷ்டுப் சந்தஹ:
ஸ்ரீ ஆதி ஆத்மா சூர்ய நாராயணோ தேவதா, நிரஸ்தா சேஷ விக்நதயா
பிரம்ம வித்யாதி ஸித்யர்த்தே, ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோகஹ

—————-

பூர்வாங்க ஸ்தோத்ரம் / தியானம்
ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமித பாப க்லேஷ துக்கஸ்ய நாஷம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||

வெற்றி வெற்றி (தரும்) கர்ம வீரமே (ஸூர்யம்), ஏழு உலகங்களின் தீபமே
ஒளிக்கதிர்களால் பாபங்களையும், கவலைகளையும் (உடல்வலி பற்றிய எண்ணங்களையும்), துக்கங்களையும் போக்குபவனே.
கிரணங்களால் ஆட் கொள்பவனே. ஆதி முதல்வனே. பரமாத்மனே
ஸகல உலகங்களாலும் வணங்க படுபவனே. ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

ஏழு உலகங்கள்- பூலோகம், புவர், ஸ்வர், மஹர, ஜனர், தபோ, ஸத்ய லோகம்

———

ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம் |
ராவணம்ச-அக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் || 1

போர்க்களத்தில் போரினால் களைப்படைந்து,
போர் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளுடன் இராமன் நின்றார்
இராவணன் தயாராகி களத்தில் முன்னிலையில் நின்று பலமுடையவனாக தோன்றினான்.

———–

தெய்வ-தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்ய-அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ர்ஷி(ஹி): || 2

தேவர்கள் அணைவரும் ஒன்று கூடி போரைப் பார்க்க இருந்தனர்
தேவர்களுடன் இருந்த அகஸ்த்ய பகவான்,
போருக்கு முயன்று நிற்கும் ராமரை அருகில் அணுகி சொன்னார்.

———

ராமராம மஹாபாஹோ ஷ்ருனு குஹ்யம் ஸனாதனம் |
யேன-சர்வான்-நரீன், வத்ஸ, ஸமரே விஜயி-ஷ்யஸி || 3

இராமா, இராமா! பெரும் தோள் வலிமை கொண்டவனே! கேள் இரகசியத்தை,
(அது) காலம் காலமாக என்றுமுள்ளது
எல்லா மக்களும் விரும்பி பயன்படுத்துவது.
குழந்தாய், அது போரில் வெற்றி தருவது

————

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம் |
ஜயா-வஹம் ஜபே-ந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்|| 4

ஸர்வ மங்கல மாங்கல்யம், ஸர்வ-பாப-ப்ரணாசனம் |
சிந்தா-சோக-ப்ரசமனம் ஆயுsர்-வர்தனம் உத்தமம் || 5

ஆதித்யஹ்ருதயம் புண்யம்- ஆதிபரமனின் ஹிருதயம் – மந்திரம் நல்வினைகளைத் தருவது
ஸர்வசத்ரு விநாசனம் – உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் நசிக்க-அழிக்க வல்லது
ஜயாவஹம்-வெற்றி தருவது
ஜபே ந்நித்யம் – எப்போதும் ஜபிக்க கூடியது
அக்ஷய்யம்- பொங்கி பெருகி கொண்டே இருப்பது (அழிவற்றது)
பரமம் – மிகப் பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது. விடுதலையை தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் – அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது. நிலையான பேரின்பம் தருவது
ஸர்வ பாப ப்ரணாஸனம் – அனைத்து பாவங்களையும் போக்குவது
சிந்தா சோக ப்ரஸமனம் – மனக் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர்வர்த்தனம் – நீண்ட ஆயுளைத் தர வல்லது
உத்தமம் – சிறந்தது

———–

ஆதித்யரின் தன்மைகள் – பெருமைகள்

ரஷ்மி-மந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் |
பூஜையஸ்வ-விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||

ரஷ்மி-மந்தம் (இதமான) பொன்னிறக் கதிர்களை பிரதிபலிப்பவர்.
ஸமுத்யந்தம் – பிரபஞசத்தின் எல்லையாக விளங்குபவர்
தேவாசுர நமஸ்க்ருதம்- தேவர்களாலும், அசுரர்களாலும், (நன்மை, தீமை செய்பவர்கள்) வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-வணங்கத் தகுந்தவர்.
விவஸ்வந்தம் – பரமசிவம்
பாஸ்கரம் – எல்லா ஞானத்தையும்- ஒளியையும் (மதி, அக்னி உள்பட) உருவாக்குவது.
புவனேஸ்வரம் – புவனத்தின் தலைமை.

இரகசியம்-3 ஒளி-சுயம்/ஆத்மன்/பிரமம், இருட்டு-மாயை/சுய அறிவின்மை.
கட உபநிசத் (II.ii.15) சூரியனோ சந்திரனோ, நட்சத்திரங்களோ ஒளிர்பவையல்ல.
பராமத்மனே அந்தர்யாமியாய் அணைத்திலும் ஒளிர்கிறான்.
எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவர்.
(அதனால்) தேவர்களாலும் அசுரர்களாலும், எல்லோராலும் வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-கடமைக்கு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பதால் வணங்கத் தகுந்தவர்.

————–

ஸர்வ தேவாத்மகோஹி ஏஷ ஹ: தேஜஸ்வீ ரஸ்மி பாவனஹ: |
ஏஷ தேவாசுர கணான் லோகான் பாதி-கபஸ்திபி ஹி:|| 7

எல்லா தேவர்களின் வடிவம்
ப்ரகாசங்க்களிலும் ப்ரகாசமானது. அதே நேரத்தில் இதமானப் பொன்னிறக் கதிர்களை வெளிப்படுத்துவது.
இவரே தேவர்களும் அசுரர்களும் எல்லா உலகங்களையும் கதிர் கரங்களால் காப்பாற்றுபவர்.

—————-

ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணு ச சிவ-ஸ்கந்த: ப்ரஜாபதிஹி:|
மஹேந்த்ரோ-தனத: காலோ யம-ஸோமோஹ் அபாம்பதி ஹி:||8

ஸூர்ய பகவானே பிரும்மா(ஆக்குபவர்- ப்ரஹம என்றால் பெரிதிலும் பெரிதானவனும்),
விஷ்ணு(காப்பவர் விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது ),
சிவன் (அழிப்பவர் சிவ என்றால் மங்கலம்),
ஸ்கந்தன் (ஸ்கந்த என்றால் இணைப்பு & ஊற்று=, அன்பிற்கும் அறிவிற்கும் அணைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும்),
ப்ரஜாபதி-ஜீவ ராசிகளின் தலைவர்,
இந்திரன் (புலங்களின் அதிபதி),
தனத – குபேரன் (செல்வத்தின் அதிபதி),
காலோ – காலத்தை (நேரத்தை) உண்டாக்குவன்,
யமன்(இறப்பின் அதிபதி, தண்டிப்பவன், நல்வழிபடுத்துபவன்),
ஸோமோ -சந்திரன்(ஊட்டத்தின் அதிபதி),
அபாம் பதிஹி – தண்ணீருக்கு அதிபதி (வருணன்).

————-

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ அஷ்வினௌ மருதோ மனுஹு: |
வாயு அஹ்னி: ப்ரஜா ப்ராணஹ: ர்துகர்த்தா ப்ரபாகரஹ: || 9

பிதரோ -மூதாதை(முன்னோர்கள், வம்சம், குலம்),
வஸவ-எல்லா செல்வங்களும் ஆன அஷ்டவசுக்கள்,
சாத்யர்கள்-கருமவசப்படாத நித்யர்களும்,
அச்வினி தேவர்கள் (தேவலோக வைத்தியர்கள்),
மருத்துக்கள் (காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்- தென்றல், புயல்),
மனு (மனிதர்களின் தந்தை),
வாயு-காற்று, அக்னி-நெருப்பு,
ப்ரஜா ப்ராணன்-மக்களின் உயிர்க் காற்று,
ர்துகர்த்தா- பருவங்களை (மாற்றங்களை) உண்டாக்குபவர்.
ப்ரபாகர: – உதயத்தை ஏற்படுத்துகிரார்; புகழைத் தருபவர்

எட்டு வசுக்கள் – அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா
சாத்யா – அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்
ஆறு பருவங்கள், கோடை, மழை, முன்பனி, கடும்பனி, இலையுதிர், வசந்தம்

—————-

ஆதித்ய ஸவிதா ஸூர்யஹ: கக: பூஷா கபஸ்திமான் |
ஸ¤வர்ண ஸத்ர்சோ பானு: ஹிரண்யரெதா திவாகரஹ:|| 10

ஆதித்ய–, மூலப் பரம் பொருள்
ஸவிதா – உயிரை உருவாக்குபவர்
ஸூர்ய-செயல் வீரர் செயலாற்றத் தூண்டுபவனும்
கக-வானத்துப் பறவை வானவெளியில் நடமாடுபவனும்
பூஷா -வளர்ப்பவனும்-மழையால் வளர்ச்சி தருபவர் அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்
கபஸ்திமான் -ஒளிக் கதிரோன்
ஸ¤வர்ண ஸத்ருசோ- பொன்னிறத்தோன்
பானு- ஒளிக் காந்தியுள்ளவன்
ஹிரண்யரேதோ – அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்
திவாகர – பிரகாசமான பகலொளியை தோற்றுவிப்பவர்

————–

ஹரித்-அஸ்வ ஸஹஸ்ரார்சிஹி: ஸப்த ஸப்திர் மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்பு த்வஷ்டா மார்தாண்ட அம்ஷுமான்|| 11-

ஹரித் அஸ்வ – வெற்றியை வாகனமாக உடையவர்–பச்சைக் குதிரையுடையவர் (பச்சை வெற்றியின் சின்னம்).
பச்சைப்பயிர்களை வளர்ப்பவன்
ஸஹ்ஸ்ரார்ச்சி – ஆயிரம் கரங்களால் எல்லா செயல்களையும் செய்பவர்-
ஆயிரம் கிரணங்களை (தீ நாக்குகள்) கொண்டு இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்
ஸப்த ஸப்தி-ஏழு குதிரைகள் / உலகங்கள் / நிறங்கள் / நாட்கள் உடையவர்
மரீசிமான் -ஓளிக்கிரணங்கள் கொண்டவர்.உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.
திமிரோன் மதன – இருளை / அறியாமையையை போக்குவர்
ஷம்பு -மங்களம் அளிப்பவர்.அனைத்தையும் குறைப்பவன்.
ஸ்த்வஷ்ட துரத்ரிஷ்டத்தை விரட்டுகிறவர்–இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.
மார்தாண்ட – மிகுந்த வலிமை உடையவன். உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் இவனிடமிருந்தே வலிமையைப் பெறுகின்றன.
அம்சுமான் -மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும்
தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.

———–

ஹிரண்யகர்ப்ப ஷிஷிர தபனோ, பாஸ்கரோ ரவி(ஹி): |
அக்னிகர்ப்பா அதிதிபுத்ர-(ஹ): ஷன்க ஷிஷிர நாஷன (ஹ): || 12

ஹிரண்ய கர்ப்ப-சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர் ஞானத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்.
பொன்மயமான கருப்பையை உடையவன்.
உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.
ஷிஷிர- கடுங்குளிரை உருவாக்குபவர். கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை.
அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.
ஸ்தாபனோ-சூடாகவும், நெருப்பாய் எரிபவர்.
பாஸ்கரோ -ஒளியானவர்/ஞானமானவர். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.
ரவி- எல்லாவற்றையும் உருவாக்குபவன். எல்லோராலும் புகழ்ப்படுபவர்.
அக்னி கர்ப்போ தீயை தன்னுடலாகக் கொண்டவன்.
அதிதே: புத்ர அதிதியின் புதல்வர்
ஷன்க- ஆனந்த மயமானவன் மறையும் போது குளிர்ச்சியாக தோற்றமளிப்பவர்
ஷிஷிர நாஷன- குளிரை விலக்குபவர்

————–

வ்யோம நாத ஸ் தமோ பேதீ, ருக் யஜு ஸ்ஸாம பாரக ஹ: |
கனவ்ரிஷ்டிர் அபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கமஹ: || 13-

ஸூர்ய பகவான் ஸூர்ய பகவான் அண்ட வெளியின் தலைவன்.
அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர்.
கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களால் பெரும் மழையை பொழிவிக்கிறார்.
அபாம் மித்ர – நீர் நிலைகளை நேசிக்கிறார்.
விந்த்ய வீதி ப்லவங்கம- விந்த்ய மலைகளை தெய்வீகமாக – விரைவாக கடக்கிறார்.
(ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன்.
வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள்.
அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள்.
அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர்.)

—————

ஆதபீ மண்டலீ ம்ருத்யு ஹு: பிங்கல: ஸர்வ தாபன ஹ: |
கவிர் விஷ்வா மஹாதேஜா ஹ: ரக்த: ஸர்வ-பவோத்பவ ஹ: || 14

அவரே வெப்பத்தை கொடுக்கிறார். உயிர்களின் முதலும் முடிவும் அவரே. அவரே அகிலத்தை இயக்குகிறார்.
எங்கும் நிறைந்து இருக்கிறார். அவரது செங்கதிர்கள் உலகத்தை உயிரினங்களை வாழ வைக்கின்றன.
ஆதபீ -வெப்பத்தை உருவாக்குபவர் கொளுத்துபவன்
மண்டலீ – வட்ட வடிவானவர்
ம்ருத்யு- மரணவடிவானவன்
பிங்கல-பொன் நிறத்தோன்
ஸர்வதாபன- எல்லாவற்றையும் எரிப்பவர்
கவி அனைத்தையும் அறிந்தவன்.
விஷ்வோ- அண்ட வடிவானவன்.
மஹா தேஜா- மிகப்பெரும் ஒளிவடிவானவன்.-சிவந்த வண்ணம் கொண்டவன்.
ரக்த-எல்லோரிடத்தும் அன்பானவர்
ஸர்வபவோத்பவ- எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.

———

ஆதித்யருக்கு நமஸ்காரங்கள் / சூரிய துதி

நக்ஷத்ர-க்ரஹ தாராணாம் அதிபோ விஷ்வ பாவன ஹ: |
தேஜஸாம் அபிதேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோஸ்து தே || 15

வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் பால்வெளிக்கும் தலைவர். அவரே அண்டத்தின் வடிவம்.
ஒளி வீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன் பன்னிரெண்டு உருவில் ஒளி மயமானவரே நமஸ்காரம்.

பன்னிரண்டு மூர்த்திகளின் பெயர்கள்
இந்திரன், தாதா , பகன், பூஷா, மித்ரன், வருணண் அர்யமான், அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, சவிதா – விஷ்ணு.

————–

நம: பூர்வாய கிரயே பச்சி-மா-த்ரயே நம ஹ: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம ஹ: || 16-

வணங்குகிறேன் உதிப்பவரே உதயத்தை தருபவரே மறைபவரே நிறைவை தருபவரே வணக்கம்.
ஓளிர் தன்மை படைத்தவர்களுக்கு அதிபதியே
ஒவ்வொரு நாளின் அதிபதியே வணக்கம்.
வணங்குகிறேன் கிழக்கு மலையில் உதிப்பவரே மேற்கு திசையில் மறைபவரே வணக்கம்.

———–

ஜயாய ஜயபத்ராய ஹர்யஷ்வாய நமோ நம ஹ: |
நமோ நம-ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம ஹ: || 17

வெற்றி வடிவானவருக்கு, வெற்றியின் மங்களங்களை தருபவருக்கு நமஸ்காரம்.
பச்சை குதிரையை -வெற்றியை – வளத்தை உடையவருக்கு மீண்டும் மீண்டும் வணக்கங்கள்
ஆயிரம் கதிர்களினால் அணைப்பவருக்கு எல்லையில்லா அம்சமுள்ளவர் நமஸ்காரம் நமஸ்காரம்.
ஆதி முதல்வனுக்கு நமஸ்காரம் நமஸ்காரம்

————-

நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம ஹ: |
நம-பத்ம-ப்ரபோதாய மார்த்தண்டாய நமோ நம ஹ: || 18-

கடுமையானவருக்கு (உக்ரம்) வீரருக்கு வணக்கம். சீரானவர்க்கும் தடைகளற்றவனுக்கு நமஸ்காரம்
பல வண்ண கதிர்கள் ஏவும் வில்லை உடையவருக்கு வணக்கம்.
தாமரைகளை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம்
மிக்க வலிமை பொருந்தியவருக்கு – அழிக்கவும் பின் அவற்றை உருவாக்கவும் வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்.

————

ப்ரஹ்ம்-ஈஷான்-அச்யுத்-ஈஷாய ஸூர்யாய ஆதித்ய வர்சஸே |
பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய-வபுஷெ நம ஹ: || 19 ||

ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு மூவருக்கும் தலைவரே
செயல் வீரனே, ஆதி முதல்வனே எங்கும் வியாபித்து இருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.
மிகுந்த ஒளி – காந்தி படைத்தவனுக்கு,
எல்லாவாற்றையும் விழுங்குபவனுக்கு – கால உருவானவருக்கு,
ருத்ரனின் உருவங்கொண்டவனுக்கு நமஸ்காரம்.

—————

தமோக்னாய ஹிமக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம்-பதயே நம ஹ: || 20-

இருளை (அறியாமை) அழிப்பவருக்கு
குளிரை அழிப்பவருக்கு, எதிரிகளை அழிப்பவருக்கு, எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவருக்கு
செய்நன்றி மறந்தவர்களை அழிப்பவருக்கு
ஒளி வீசுபவரே
பிரபஞ்சத்தின் மூலம் – ஒளிகளுக்கெல்லாம் தலைவருக்கு நமஸ்காரம்

————-

தப்த சாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நம(ஸ்) தமோ-(அ)பினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||

உருக்கப்பட்ட தங்கம் போல் ஒளிப்பிழம்பானவர்க்கு,
தீ வடிவானவருக்கு -அணைத்தையும் எரிப்பவர்,
உலகத்தை படைத்தவருக்கு- அதன் அணைத்து செயல்களுக்கும் காரகர்,
இருளை நீக்குபவருக்கு,
உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு, உலக சாட்சியானவருக்கு நமஸ்காரம்.

————-

நாச-யத்யேஷ வை-பூதம் ததேவ-ஸ்ருஜதி ப்ரபு ஹு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி ஹி: || 22

உயிர்களை எல்லாம் அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம்.
அவரது அவற்றை இவனே பிறப்பிக்கிறான் இறைவன் இவனே
இவனே காக்கிறான்
தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால் இவனே வெயிலாக காய்கிறான். மழையாகப் பொழிகிறான்

————-

ஏஷ-ஸுப்தேஷு ஜாகர்த்தி பூதேஷு பரிநிஷ்தித ஹ: |
ஏஷ-ஷேவாக்னி-ஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23-

ஸூர்ய பகவான் உலகத்து எல்லா உயிர்களின் இருதயத்தில்-ஜீவனாக இருந்து விழிப்பாக நிலை நிற்கிறான்.
இவர் தான் வேள்வித் தீ. தீ வழிபாட்டின் வடிவம் – வேள்வியின் நிவேதனமும் பலனும் அவரே.

———-

வேதாஸ்-ச க்ரத-வஷ்சைவ க்ர்தூனாம் பலம்-ஏவ ச |
யானி-க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு ஹு: || 24

வேதங்களின் சாரத்தில் இருக்கிறார்.
தத்தம் கடமைகளாகவும் – சடங்குகளாகவும்
உண்மையுடன் செய்பவர்களுக்கு,சடங்குகளின் கடமையின் பலனாக இருக்கிறார்.
என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ இவ்வுலகத்தில்
அவை எல்லாமும் ஒளி படைத்தவன் அவரே இறைவன்-தலைவன்

——————-

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரத்தின் பெருமைகள்: பலஸ்ருதி

ஏனம் ஆபத்ஸு க்ருச்ரேஷு கான்தாரேஷு பயேஷு ச |
கீர்த்தயன் புருஷ: கச்சிந்-நாவ-ஸீததி ராகவ || 25-

ராகவா ரவி, எல்லாவித ஆபத்து நேரங்களிலும்(உடல், மன, ஆன்மீக காரணிகளால்), அவமானத்திலோ,
பயமுறுத்தும் நேரங்களிலும், துன்பங்களிலும் வழிபடுவோரை எப்போதும் கைவிடமாட்டான்.
இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.

————–

பூஜ-யஸ்-வைனம் ஏகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயி ஷ்யஸி || 26-

ஒருமிக்க மனதுடன் வணங்குவாய்
தேவர்களுக்கும் தெய்வமானவனை உலகத்தின் நாதரை
இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை மும்முறை ஜபித்து
போரில் கண்டிப்பாக வெற்றி அடைவாய்.

——————–

இராமர் மந்திரம் ஓதி மனத்தெளிவு பெறுதல்

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி|
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம-ச-யதா-கதம் || 27

இந்த நொடியிலேயே, வலிமையான தோள்கள் உள்ளவனே,
இராவணனை நீ வதைப்பாய்
என்று கூறி அங்கிருந்த அக்ஸ்த்ய முனிவர்
எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

————–

ஏதச்சுர்த்வா மஹாதேஜா நஷ்டசோகோ-பவத்-ததா |
தாரயாமாஸ-ஸுப்ரிதொ ராகவ: ப்ரய-தாத்மவான்(உ) || 28-

அருள் மொழிகளைக் கேட்ட, மிகுந்த தேஜஸ்வி ராகவன்
அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்
நோக்கத்தில் உறுதியுள்ளவனும், மிகவும் மகிழ்ந்தவனும் ஆனான் முயற்சிகளில் சிறந்தவன் ஆன இராகவன்

—————

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷ-மவாப்தவான் (உ) |
த்ரிர்-ஆசம்ய ஷுசிர்பூத்வா தனுராதயாய வீர்யவான் (உ) || 29-

ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (ஸ்தோத்ரத்தை) ஜபித்து
மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்
மும்முறை ஆசமனீயம் செய்து உடலை பரிசுத்தம் செய்துகொண்டு, வில்லை ஏந்தினான் வீரத்தில் சிறந்தவன்

————-

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்தாத்மா யுத்தாய ஸமுபா-கமத் (உ) |
ஸர்வ யத்னேன-மஹதா வதே-தஸ்ய த்ர்தோ-பவது || 30

இராவணன் போர் செய்யும் நோக்கத்துடன் வருவதை பார்த்து
மேலான எல்லா முயற்சிகளுடனும்
அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

—————–

சூரியன் ஆசி வழங்குதல்

அத-ரவி: ரவதத் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமான ஹ: |
நிசி-சரபதி ஸம்க்ஷயம் அன்கி-விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ்த்-வ்ரேதி || 31

அப்போது ரவி ‘விரைவில் நடத்துவாய் இராமா’ என்று மிகவும் மகிழ்ந்த மனத்துடன்,
மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக, இருட்டில் உழல்பவர்களின் முதல்வனின்
அழிவு நேரம் நெருங்கியதை அறிந்து, தேவர்களின் மையத்திலிருந்து அருளினார்.

———-

முடிவு துதி

பானோ பாஸ்கர மார்தாண்ட ச்சண்ட ரஸ்மை திவாகர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் வித்யாம் தேஹி நமஸ்துதே

ராமாயணத்தில் சர்க்க முடிவு

இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே யுத்த காண்டே
ஆதித்ய ஹ்ருதயம் நாம சப்தோத்தரசததம: சர்க்க: ||

இவ்வாறு வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
ஆதித்ய ஹிருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் நிறைவடைந்தது.

———

மகிமைகள்
ஆதித்ய ஹ்ருதயம் எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை இராமாயணத்தில் காணலாம்.
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் – அது நல்வினைப்பயன்களைத் தருவது
ஸர்வ சத்ரு விநாசனம் (உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் அழிக்க வல்லது)
ஜயாவஹம் (வெற்றி தருவது)
ஜபேத் நித்யம் – நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
அக்ஷயம் – அழிவற்றது பொங்கி பெருக கூடியது.
பரமம் – மிகப்பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் (அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது)
ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
சிந்தா சோக ப்ரஸமனம் (மனக்கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது)
ஆயுர்வர்த்தனம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)
உத்தமம் – சிறந்தது

———–

வத்ரு வைலக்ஷண்யம் ,ஸ்தல வைலக்ஷண்யத்துடன் கூடிய அவதாரிகையுடன் – முன்னுரையுடன்
ஆதித்ய மண்டலத்தில் மத்யமத்தில் எழுந்தருளியிருக்கும் சூரியநாராயணன் பீடு கொண்டு அத்புதமாய் உதயமானார் .
ஆதித்ய ஹ்ருதயத்தை அருளிய அகஸ்தியர் மஹரிஷி நாமம் மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் பிறந்த கதை – விவரணம் அருமை .
ஆரோக்கியத்திற்கு – பாஸ்கரரையும் ,
ஞானத்திற்கு – ஈஸ்வரனையும்
தனத்திற்கு – அக்னிபகவானையும் மற்றும் மோக்ஷத்தை கொடுக்கும் வல்லமை படைத்த ஜனார்தனனான
நாராயணனையும் மோக்ஷபலத்திற்கு ஸ்துதிக்க வேண்டும் .தன்யோஸ்மின் .

சுந்தர காண்டத்தில் குறிப்பிட்டது போல் ஹனுமன் சீதாப்பிராட்டியுடன் உரையாட அருமையான
பொன்மொழியாகிற செந்தமிழை தேர்ந்தெடுத்து பேச தீர்மானித்ததின் மூலம் செம்மொழியாகிற
செந்தமிழ் – தீந்தமிழின் ஏற்றம் உலகுக்கு புலப்படும் .
ஸ்ரீ ராமாயணத்தில் ராவணனுடன் ராமன் போர் புரியும்போது சற்று சோர்வு அடைந்த தருணத்தில்
அகஸ்தியர் மகரிஷியால் ராமருக்கு புத்துணர்ச்சி ஊட்ட உத்திராயண புண்ய காலத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசிக்கபட்டது
ஆதித்ய ஹ்ருதயத்தில் முதல் இரு ஸ்லோகத்தின் அர்த்தவிசேஷங்கள் அருமை .
உலகமெங்கும் சூரியனாருக்கென்று ப்ரத்யோகமாய் பல கோவில்கள் எழுப்பப்பட்டுள்ள – அரிய பெரிய தகவல்கள்
விவரம் மற்றும் சூரியபகவானை ஆராதனை தெய்வகமாக கருதி வணங்கும் சௌராஷ்டிர வகுப்பினர் செய்தி அத்புதம் .

ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட’ சூரிய ஸுக்தம் ‘ ,ஸ்ரீ இராமாயணத்தில் அகஸ்திய மகரிஷியால் வழஙகப்பட்ட ஆதித்ய ஹ்ருதயம் ,
மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும் ,த்ரௌபதியும் கூறிய சூரிய அஷ்டோத்தர சத நாமாவளி மற்றும்
மஹநீயர் அப்பய்ய தீக்ஷிதராரால் இயற்றப்பட்ட சூரிய சதகம் – இவைகள் சூரியநாயனாரின் பெருமைகளை உணர்த்தவல்லது .

ஆதித்யஹ்ருதயத்திற்கு கோவிந்த ராஜ்ஜிய பூஷணம் என்ற பெயரில் தனி வ்யாக்யானம் மற்றும்
மஹேஸ்வர தீர்த்தர் அருளிய ‘தத்துவ தீபிகா ‘ போன்ற பெரிய வ்யாக்யாத்தாக்களால் போற்றப்பட்ட
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் என்பதின் மூலம் இந்த ஸ்லோகத்தின் ப்ராதான்யத்தை ஆஸ்த்ரிகர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது .

சூரியனை சஞ்சாரிக்கும் பாதை ஒரு எல்லைக்குள் உட்படாத நீண்ட பாதையாக இருப்பதாலும் ,
சூர்ய ரதத்திற்கு ஏக சக்ரம் அதை சாரத்யம் செய்யும் கருடனின் தமையனார் அங்க ஹீனம் கொண்ட அருணன் ,
அதில் பூட்டப்பட்ட 7 குதிரைகளுக்கு ஓரே ஒருசக்ரம் என பொருத்தமில்லாமல் சூரிய ரதத்தை செலுத்தும் பிரபாவம்
நமக்கு எந்த கடினமான சூழ்நிலையையும் எளிதில் வென்று விடலாம் என்ற உத்வேகத்தை கொடுக்க வல்லது
சூரியநாயனாரின் பிண்ணனி என்பது வெட்ட வெளிச்சம் .ஆதித்ய ஹ்ருதயத்திற்கு குரு அகஸ்திய மகரிஷி .
இது போன்ற பலபல அரிய பெருமைகளை அறிய வைக்கும் ஆதித்ய ஹ்ருதயம்

கும்பகோணத்தைச் சுற்றி சோழர்கள் கால நவக்ரஹ ஸ்தலங்களைப்போலவே சென்னையச் சுற்றி
பல்லவர் கால நவக்ரஹ ஸ்தலங்கள் ௨ள்ளன.கொளப்பாக்கத்தில் சூரிய ஸ்தலம். ௮கஸ்த்தீஸ்வரர் ஆலயம்.
நல்ல வேலை கிடைக்க இப்போதும் இளைஞர் கூட்டம் ௮லைமோதும்.

வந்தவாசியில் உள்ள இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோவில் திருமணிச்சேறையில் அகஸ்திய முனிவர் குகை உள்ளது.
அவர் தெற்கு நோக்கி வந்த போது அந்த மலையில் கால் பதித்து தெற்கை தாழச்செய்து சமப்படுத்தியதாக கூறப்படுகிறது

ஆதித்ய ஸ்தோத்ர ரத்னம் -அப்பயா தீக்ஷிதர்
வால்மீகி பெயராலே திருவான்மியூர்
திரு நீர் மலை எழுந்து அருளு உள்ளார்
பூஷணம் கோவிந்தராஜர் -ஸ்ரீ ராமாயண வியாக்யானம்

ப்ரணவத்துடன் சேர்த்து ஸ்மரிக்கும் இம்மந்திரம் காம க்ரோத மத மாத்ஸயலயாதிகள் உட்பட
எல்லா விரோதிகளையும் போக்க வல்லது .
இந்த ஸ்லோகத்தை ஜபிப்போருக்கு அழிவு இல்லாத பலத்தையும் பரம மங்களத்தையும் கொடுக்கும் .
இதை கேட்பவருக்கு கவலை ,துக்கம் ஒழிந்து, பக்தி ரூபாவண்ண ஞானம் பிறந்து ,
நல்ல ஆரோக்யத்துடன் கூடிய தீர்காயுசை பெற்றுத்தரும் .
இந்த ஸ்லோகத்தை சொன்னவர் – அகஸ்திய மகரிஷி கேட்டவர் – ராமர் ,
இதை தொகுத்தவர் தபஸ்வி வாலமீகி.ஜ்வாஜலயமாய் – அதீத பிரகாசத்துடன் ஸ்வர்ணத்தை ஒத்த எண்ணற்ற
சூர்ய கிரணங்கள் பஞ்ச இந்திரியங்கள் வழியாய் – சரீரத்திற்குள் ஊடூரூவி சைதன்யமான- ஞானத்தை பிறப்பிக்கிறது .
அக்னி ,இந்திரன் ,வருணாதிகள் போன்ற தேவர்களுக்கு மிஸ்ர ஸத்வத்தையும் அசுரர்களை ரஜஸ் தமஸ் போன்ற குணங்களையும் கொடுத்து
தேவர்கள் ,இந்திரர்களால் ஏக ஸ்துதியாய் போற்றப்படுபவனாகவும் ஆதித்யன் திகழ்கிறான் .
இங்கனம் அவனை துதிப்போருக்கு நல்ஞானத்தை கொடுக்க வல்ல சூரிய பகவானை நமஸ்கரிக்கிறேன் .

தேவாஸுர நமஸ்க்ருத்தாய நமஹ வைவஸ்தே நமஹ ,பாஸ்கராய நமஹ ,புவனேஸ்வராய நமஹ ,தேஜஸ்வியே நமஹ ,
ரஷ்மி பாவ்னாயே நமஹ ,ப்ரஹ்மணே நமஹ ,ப்ரஜாபதியே நமஹ மஹேந்திராய நமஹா –
இந்த ஆதித்யனாய் விளங்கும் சூரிய நாராயணனை குறிக்கும் நவ நாமாவளிகளின் அணிவரிசை –
அவைகளின் அர்த்த விசேஷங்கள் அத்புதம் .தன்யோஸ்மின் .

எவன் ஒருவன் – யஞயத்திற்கு ப்ரஜாபதியாய் இருப்பதாலும் (ப்ரஜாபதியே நமஹ ),இந்திரனின் ஐராவத மஸ்தகத்தில்
சூர்யகிரணங்கள் பட்டு தெறித்து அக்கற்றைகள் தாமரைத்தடாகம் வரை பரவி அதையும் பிரகாசிக்க வைப்பதால் –
மஹேந்திராய நமஹ என போற்றப்படுவதாய் , ஸ்வாமி திலகர் வ்யாக்யானத்தின் படி தனம் என்ற ஞானத்தை பெற்று தந்து ,
பின் தனதான்யத்தையும் குபேரன் போல் கொடுப்பதால் தநதாந்யய் நமஹ எனவும் ,

செவந்தகமணி ப்ரபாவத்தை எடுத்துரைத்து – அதற்கு உடையவனான சத்யஜித் அதனுடன் நடந்தது வரும் தோற்றம் –
சூரியன் ஆகாசத்திலிருந்து இறங்கி பூமியில் பவனி வரும் தோற்றத்தை ஒத்து இருந்தது என அதன் பெருமைகளையும் கூறி ,
காலனாயும் சூரியன் இருப்பதால் கால மண்டல ஸ்பந்தனாய நமஹ எனவும் போற்றப்பட்டு ,
பின் ம்ருத்யுக்கும் ம்ருத்யுவையை சூர்யநாராயணனாய் திகழ்வதால் எமனாய நமஹ எனவும் ,
சோமனாகிய சந்திரனும் சூரியனிடத்திலிருந்து ஒளிக் கற்றைகளை பெற்று தான் பிரகாசிப்பதாலும் ,
சிவனார் தன் உடலின் பாதி பாகத்தை உமையவளைக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் என பெயர் பெற்று
தன் சக்தியை வெளிப்படுத்திய- சக்தியுடன் கூடிய ஆதித்யனாய் கருதுவதாலும் -சோமாய நமஹ என ஸ்துதிக்க படுகிறார் ஆதித்யன் .

இங்கனம் அக்னியாய ,திவாகராய பித்ருதேவதாய மருதமூர்த்தாய ,வசுமூர்த்திய சத்ய மூர்த்தியே ,வாயுவே ,ப்ராணாய ,
ருது கர்த்தயே ,பிரபாகராய , ஆதித்யாய சவித்ரே ,ஸ்வர்ணசத்ருயை பானுவே பூஷனோ ,கபஸ்திதே ,பானுவேஷாய ,
திவகராய சாயாதிபதே – போன்ற பற்பல ப்ரபாவத்தை உள்ளடக்கியதால் பல்வேறு பெருமைகள் வாய்ந்த
திரு நாமங்களால் சூர்ய நாராயணனை அந்தர்யாமியாகக் கொண்ட ஆதித்யன் போற்றப்படுகிறார் என்பதை அழகாய் ஸ்வாமி வருணித்தார் .

As per Rig Veda (8:72:16) says :
Adhukshat pipyushimisham urjam saptapadimarih Suryasya sapta rashmibhih
It means, 7 different colors of rays emitting from Sun, will give 7 different energies.
Sun temples built in Konark etc places in india are seen with 7 colored horses chariot.

ஆரோக்கியத்திற்கு பாஸ்கரனையும் ,தனதான்ய வ்ருத்திக்கு அக்னி பகவானையும் ,ஞானத்திற்கு சிவபெருமானையும் பிரார்தித்தாலும்
இவர்கள் அனைத்துள்ளும் அந்தர்யாமியாக ஸ்ரீமன் நாராயணன் உறைந்து அவரவர் தம்தம் தொழில்களை புரிய வைக்கிறார் என்றும்
மோக்ஷத்தை பெற்றுத்தர ஜனார்தனனான ஸ்ரீமந் நாராயணன் அனுகிரஹிக்கிறார்

ஸ்வாமி மயூர கவி அருளிய சூரிய சதகம் சதஸ் – ஸ்வாமி வேதாந்த தேசிகரின் கருட பஞ்சாசத்த்தை
ஓத்து இருப்பதை கோடிட்டு .கூர்நாராயணஜீயர் சாதித்த சுதர்ஷன் சதகமும் ஆதித்யனின் பெருமைகளை குறிப்பிட்டிருக்கிறது என்றார் .
மேலும் அகஞானம் என்கின்ற இருளை போக்குவதால் திமிரோன் மதனாய நமஹ என ஆதித்யன் போற்றப்படுகிறார்.
மற்றும் ,ரக்ஷிமிப்பதயே நமஹ,ஹரிதஸ் வஹாய நமஹ ,த்வவுட்ரே நமஹ மார்த்தாண்டாய நமஹ ,ஹயன சந்தயே நமஹ
அம்சுபதயே நமஹ ,ஹிரண்ய கர்ப்பாய

ஹரண்யகர்ப்பாயை ,சிசிராய ,தபாநாய யஸ்கரோ ரவிகி or பாஸ்கரோ ரவிகி ,ரவயே ,அக்னிகர்ப்ப ,அதிதே புத்ராய ,
சங்காய ,சிசிரநாசன ,வ்யோமநாதாய ,
தபோபேதியை ,ரிக் யஜுர் சாம பாரகாயை ,கண்வருஷ்டயே ,அபா மித்ராயே ,விந்த்யவீதி ப் ல வங்க மாணாய ,
ஆத்மீனே ,மண்டலினே ,ம்ருத்யவே ,பிங்களாய ,ஸர்வதாபனாயே ,
கவயே , விஸ்வஸ்மை, மஹாதேஜஸே சர்வேஷ்வரேலூ ரக்தக ,ரக்தாய ,ஸர்வ ப்யோத்பலாயே ,சூரியனாவே ,விஸ்வபாலனாக –
போன்ற இந்த நாமக்களுடன் ‘நமஸ் ‘ சப்தத்தை கூட்டி நாமாவளியாக நாராயணனை அந்தர்யாமியாக கொண்ட
சூரியபாகவனை ஸ்துதி செய்யக்கடவோம் என்றார் .

இந்த விஸ்வத்தில் ப்ரத்யக்ஷமாய் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு ஸ்வரூப ரூபமாக ஒளிவிட்டு காப்பதால்
விஸ்வபாலனாயே நமஹா என போற்றப் படுகிறார் .
மஹா தேஜஸ்வியாய் ஒளியை கொடுக்கும் ஸ்ரீமன் நாராயணனை அந்தர்யாமியாய் கொண்ட தேஜஸ்வியான
சூரியபகவான் என்றபடியால் தேஜஸாமபி தேஜஸ்வி என அழைக்கப்படுகிறார் .
இதுபோல் துவாதச மாதங்களுக்கும் சுடர் விடும் பெரும் ஜ்யோதியாய் – நாயகனாய் திகழ்வதால் த்வதசாத்மனே என ஸ்துதிக்கப்படுகிறார் .

நம பூர்வாய நமஹ – தொண்டரடிபொடி ஆழவார் திருமாலை என்ற திவ்யப்ரபந்தத்தில் சாதித்தபடி
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி என்றாற்போல் திருவரங்கப்பெருமான் –
குணதிசையாக போற்றப்படும் கிழக்கு திசையில் தன் திருவடிதாமரைகளை நீட்டிக்கொண்டு அடியார்களுக்கு திருவடி சேவை சாதிப்பதாலும் ,
மேலும் எம்பெருமானின் கால்களை தொழ ஹேதுவாய் சூரியன் காலையில் கிழக்குத்திசையில் உதித்தும் ,
பின் மாலை வேளையில் மால் ஆன திருமாலின் கடாக்ஷம் பெற்று மேற்கு திசையில் அஸ்தமிக்கிறார் என்கிற வேங்கடகவியின் கூற்றை .

இந்த வகையான காரணங்களால் சூரியன் முறையே – பூர்வாயாகிரனே நமஹ என்றும் ,பஸ் சிமாத்ரயே நமஹ எனவும்
அழைக்கிக்கப்படுகிறார் .வாரத்தின் எழு நாட்களுக்கும் அதிபதியாய் விளங்குவதில் தினாதிபதியே என வணங்கப்படுகிறார்.
மேலும் ஜெயமூர்த்தயே ,ஜெயபத்ராய ,ஹர்யஸ்வாய ,ஸ்யமாஸ் வாய வாய, சஹஸ்ராக்ஷீ ,ஆதித்யாய,உக்ராய ,வீராய சாரங்காய ,பத்மபிரதாய
பிரசாண்டாய ,ப்ரஹ்மாவிஷ்ணு சிவாத் மிகாயை ,- ஏஷ நாராயனாக – ப்ரஹ்மாச்சுத்தாயே ,பாஸ்வதே ,சர்வபக்ஷயாயே ,ரௌத்ரவடிவே ,தமோக் நாய ,ஹிமக் நாய சத்ருக்கினாயே என அந்தந்த நாமாவளிக்கு ஏற்ப அர்த்தங்களை தாங்கிக்கொண்டு ஜ்வாஜால்யமாய் பிரகாசிக்கிறார்

ஆதித்யா கிருதய நாமாவளியை நிறைவாய் வரிசைப்படுத்தியத்திலிருந்து –
சத்ருக்னாயே ,அமிதாத்மினே ,க்ருதகனனாகி ,தேவாய ,ஜ்யோதிஷயாம் பதயே ,தப்தகாமிக்கரா பாய ,
ஹரவே விஸ்வகர்மனே ,தபோயீ நிர்ணாயே ,ருசயே ,லோகஸாக்ஷினே ,பூதநாஸாயே ,பூத சிரஷ்டரே ,ப்ரபவே பாத யே ,
தபதே ,வர்ஷதே சுக் தேவி ஜாக்ரதே ,அந்தர்யாமிஸ்திதாயே ,அக்னிஹோத்ராயா ,அக்னிஹோத்ரபலப்ரதா யே
பதுமஸ்ம்ருத்தாயே பகவதே ப்ரஹ்மணே ,ருதேஹு விஜயஸ் யசு நிசந்தேகமாயே – போன்ற இந்த நாமாக்களை
‘நமஸ் ‘ சப்தத்தைக்கூட்டி 125-நாமாவளியாக்கி ஸ்வாமி ராமவர்மா என்ற திலகர் ,ஸ்வாமி சுதாகர் போன்றோரின் வ்யாக்யானத்த –

மேலும் அகஸ்திய மகரிஷி அருளிய இந்த ஸ்லோகம் ஸ்ரீராமாயணத்தில் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெறுகிறது.
மஹாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் சூரியநாராயணனை அந்தர்யாமியாகக் கொண்ட சூரியபகவானை ப்ரார்தித்து
அக்ஷய பாத்திரத்தை பெற்றதாலும் சூரியசதகத்தில் இதன் ப்ராதான்யத்தைக் குறிப்பிட்டதாலும் –
இதிகாசங்கள் புராணங்களில் இதன் முக்கிய பங்கு அனைவரும் அறியும் வண்ணம் புலப்படுகிறது .
இத்தகைய பெருமைகள் வாய்ந்த ஆதித்ய ஹ்ருதயத்தின் ச்லோகர்த்தங்களை எளிமைப்படுத்தி
ஆஸ்த்ரிகர்கள் அனைவரும் ஆச்ரயிக்கும் வண்ணம் அத்புதமாய் இதன் முக்கியத்துவத்தையும் பலாப லனையும் உணர வேண்டும்

——

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

“ஸ்ரீ ராம்” என்று ஒரு முறை சொல்லப்படும் நாமம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு நிகரானது.
எனவே ஒவ்வொரு நாளும் “ஸ்ரீ ராம்” என்று நாம் பாராயாணம் செய்யும் போது
அது முழு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் பாராயாணம் செய்வதற்கு நிகரானது.

————–

9 வரிகளை கொண்ட ஶ்ரீ ராமாயணம் ஸ்லோகம்

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோ கரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச் சந்திர பாலயமாம்

———————

ஏக ஸ்லோக ஶ்ரீ ராமாயணம்

ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்

—————–

*ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்*

ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமம்த்ரஸ்ய புதகௌஶிக றுஷிஃ
ஶ்ரீ ஸீதாராம சம்த்ரோதேவதா
அனுஷ்டுப் சம்தஃ
ஸீதா ஶக்திஃ
ஶ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசம்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோகஃ

த்யானம்
த்யாயேதாஜானுபாஹும் த்றுதஶர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோவஸானம் னவகமல தளஸ்பர்தி னேத்ரம் ப்ரஸன்னம்
வாமாம்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் னீரதாபம்
னானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமம்டலம் ராமசம்த்ரம்

ஸ்தோத்ரம்
சரிதம் ரகுனாதஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம்
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக னாஶனம்

த்யாத்வா னீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம்
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மம்டிதம்

ஸாஸிதூண தனுர்பாண பாணிம் னக்தம் சராம்தகம்
ஸ்வலீலயா ஜகத்ராது மாவிர்பூதமஜம் விபும்

ராமரக்ஷாம் படேத்ப்ராஜ்ஞஃ பாபக்னீம் ஸர்வகாமதாம்
ஶிரோ மே ராகவஃ பாதுபாலம் தஶரதாத்மஜஃ

கௌஸல்யேயோ த்றுஶௌபாது விஶ்வாமித்ர ப்ரியஃ ஶ்றுதீ
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸலஃ

ஜிஹ்வாம் வித்யானிதிஃ பாது கம்டம் பரத வம்திதஃ
ஸ்கம்தௌ திவ்யாயுதஃ பாது புஜௌ பக்னேஶகார்முகஃ

கரௌ ஸீதாபதிஃ பாது ஹ்றுதயம் ஜாமதக்ன்யஜித்
மத்யம் பாது கரத்வம்ஸீ னாபிம் ஜாம்பவதாஶ்ரயஃ

ஸுக்ரீவேஶஃ கடீபாது ஸக்தினீ ஹனுமத்-ப்ரபுஃ
ஊரூ ரகூத்தமஃ பாது ரக்ஷகுல வினாஶக்றுத்

ஜானுனீ ஸேதுக்றுத் பாது ஜம்கே தஶமுகாம்தகஃ
பாதௌவிபீஷண ஶ்ரீதஃபாது ராமோ‌உகிலம் வபுஃ

ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் யஃ ஸுக்றுதீ படேத்
ஸசிராயுஃ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்

பாதாள பூதல வ்யோம சாரிணஶ்-சத்ம சாரிணஃ
ன த்ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபிஃ

ராமேதி ராமபத்ரேதி ராமசம்த்ரேதி வாஸ்மரன்
னரோ னலிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விம்ததி

ஜகஜ்ஜைத்ரைக மம்த்ரேண ராமனாம்னாபி ரக்ஷிதம்
யஃ கம்டே தாரயேத்தஸ்ய கரஸ்தாஃ ஸர்வ ஸித்தயஃ

வஜ்ரபம்ஜர னாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்
அவ்யாஹதாஜ்ஞஃ ஸர்வத்ர லபதே ஜய மம்களம்

ஆதிஷ்டவான் யதாஸ்வப்னே ராம ரக்ஷா மிமாம் ஹரஃ
ததா லிகிதவான் ப்ராதஃ ப்ரபுத்தௌ புதகௌஶிகஃ

ஆராமஃ கல்பவ்றுக்ஷாணாம் விராமஃ ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரிலோகானாம் ராமஃ ஶ்ரீமான்ஸனஃ ப்ரபுஃ

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ
பும்டரீக விஶாலாக்ஷௌ சீரக்றுஷ்ணா ஜினாம்பரௌ

பலமூலாஸினௌ தாம்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ
புத்ரௌ தஶரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ

ஶரண்யௌ ஸர்வஸத்வானாம் ஶ்ரேஷ்டா ஸர்வ தனுஷ்மதாம்
ரக்ஷஃகுல னிஹம்தாரௌ த்ராயேதாம் னோ ரகூத்தமௌ

ஆத்த ஸஜ்ய தனுஷா விஷுஸ்ப்றுஶா வக்ஷயாஶுக னிஷம்க ஸம்கினௌ
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்ரதஃ பதிஸதைவ கச்சதாம்

ஸன்னத்தஃ கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோரதான்னஶ்ச ராமஃ பாது ஸ லக்ஷ்மணஃ

ராமோ தாஶரதி ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸஃ புருஷஃ பூர்ணஃ கௌஸல்யேயோ ரகூத்தமஃ

வேதாம்த வேத்யோ யஜ்ஞேஶஃ புராண புருஷோத்தமஃ
ஜானகீவல்லபஃ ஶ்ரீமானப்ரமேய பராக்ரமஃ

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்பக்தஃ ஶ்ரத்தயான்விதஃ
அஶ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி னஸம்ஶயஃ

ராமம் தூர்வாதள ஶ்யாமம் பத்மாக்ஷம் பீதாவாஸஸம்
ஸ்துவம்தி னாபிர்-திவ்யைர்-னதே ஸம்ஸாரிணோ னராஃ

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸும்தரம்
காகுத்ஸம் கருணார்ணவம் குணனிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்

ராஜேம்த்ரம் ஸத்யஸம்தம் தஶரததனயம் ஶ்யாமலம் ஶாம்தமூர்திம்
வம்தேலோகாபிராமம் ரகுகுல திலகம் ராகவம் ராவணாரிம்

ராமாய ராமபத்ராய ராமசம்த்ராய வேதஸே
ரகுனாதாய னாதாய ஸீதாயாஃ பதயே னமஃ

ஶ்ரீராம ராம ரகுனம்தன ராம ராம
ஶ்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் பவ ராம ராம

ஶ்ரீராம சம்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ வசஸா க்றுஹ்ணாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶிரஸா னமாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶரணம் ப்ரபத்யே

மாதாராமோ மத்-பிதா ராமசம்த்ரஃ
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசம்த்ரஃ
ஸர்வஸ்வம் மே ராமசம்த்ரோ தயாளுஃ
னான்யம் ஜானே னைவ ன ஜானே

தக்ஷிணேலக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா
புரதோமாருதிர்-யஸ்ய தம் வம்தே ரகுவம்தனம்

லோகாபிராமம் ரணரம்கதீரம்
ராஜீவனேத்ரம் ரகுவம்ஶனாதம்
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசம்த்ரம் ஶரண்யம் ப்ரபத்யே

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேம்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஶ்ரீராமதூதம் ஶரணம் ப்ரபத்யே

கூஜம்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்யகவிதா ஶாகாம் வம்தே வால்மீகி கோகிலம்

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஶ்ரீராமம் பூயோபூயோ னமாம்யஹம்

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்

ராமோ ராஜமணிஃ ஸதா விஜயதே ராமம் ரமேஶம் பஜே
ராமேணாபிஹதா னிஶாசரசமூ ராமாய தஸ்மை னமஃ
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலயஃ ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே

இதி ஶ்ரீபுதகௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———-

*ஶ்ரீ ராமாயண ஜெய மந்திரம்*

ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாபலஃ
ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலிதஃ |

தாஸோஹம் கோஸலேம்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மணஃ
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் னிஹம்தா மாருதாத்மஜஃ ||

ன ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
ஶிலாபிஸ்து ப்ரஹரதஃ பாதபைஶ்ச ஸஹஸ்ரஶஃ |
அர்தயித்வா புரீம் லம்காமபிவாத்ய ச மைதிலீம்
ஸம்றுத்தார்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||

———

ஸ்ரீ ராம மங்களம்

ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்

விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்

தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்

ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்

ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அகஸ்திய மகரிஷி திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதாப் பிராட்டி லஷ்மண பரத சத்ருக்ந திருவடி சமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

காலம் அறிந்து -நோய் அற்ற வாழ்வு -ஸூகத்துக்கு ஸாதனம் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

December 16, 2021

மார்கழித் திங்கள்
ஓழிவில் காலம் எல்லாம் -என்றும்
அநாதிர் பகவான் கால -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் விஷயத்தில் இவனுக்கு ஆபிமுக்யம் பிறந்தால்
பின்னை அவன் தன்னை அல்ல காணும் கொண்டாட அடுத்து –
அக் காலத்தை யாய்த்து-

சைத்ர ஸ்ரீ மான் அயம் மாச -என்று ஒரு ஸம்ருத்தியைப் பார்த்து கொண்டாடிற்று இறே
சைத்ர-
அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே
மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-

ஸ்ரீ மான் —
அவர் எல்லாருக்கும் ராஜாவாக பிராப்தர் ஆனாப் போலே
சைத்ர மாசம் சர்வருக்கும் ஸுகககரம் ஆகையாலே மாசங்களுக்கு எல்லாம் ராஜா என்கிறது

அயம் மாச –
அபிஷேக மனோரத சமயத்திலே சந்நிஹிதமான தன்னேற்றம் அங்கு

சேஷியை சேஷ பூதர் லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம் இங்கு-
சேஷி பூதரை சேஷி லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்-

புண்ய புஷ்பிதகாநந-
பாவநஸ்சர்வ லோகாநாம்த்வமேவ -என்றும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் -என்றும்-
அவருக்கு இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-
இக்காலமும் பாவனமாயும் போக்யமுமாயும் இருக்கை

புஷ்பித காநந –
படை வீடு போலே நாம் அலங்கரிக்க வேண்டாதே தானே அலங்கரிக்கை-

புஷ்பித காநந —
பெருமாள் பொன் முடி சூட காடு பூ முடி சூடிற்று

மார்கழி திங்கள் –
நாதி சீதா ந கர்மதா-என்கிற ந்யாயத்தாலே
அதி உஷ்ணமாதல் அதி சீதளமாதல் அன்றிக்கே இருக்கும் மாசம்

மார்கழி திங்கள்-
தேவர்களுக்கு விடிகிற காலம் ஆகையால் விரதங்கள் அனுஷிப்பார் தொடங்கும் காலமாய் இருக்கை –

மார்கழி திங்கள்-
இம் மலட்டு மாசங்களில் இதுவும் ஒரு மாசமே -என்கிறார்கள் –

இம் மாசத்துக்கு விசேஷம் என் என்னில்
சர்வேஸ்வரன் இவ் விபூதியில் பருப் பருத்தவற்றை எல்லாம் நான் – என்கிற போது –
மாசா நாம் மார்க்க சீர் ஷோஹம் -என்று
மாசங்களில் வைத்துக் கொண்டு மார்கழி மாசம் ஆகிறேன் என்று அருளிச் செய்தான் –

மார்கழி திங்கள்-
குளிருக்கு அஞ்சி கோப வ்ருத்தர்கள் புறப்படாத காலமும் –
நாளுக்கு ப்ரஹ்ம முகூர்த்தம் போலே சம்வத்சரத்துக்கு இம் மாஸம் ஆகையால் சர்வ உத்தர காலம் இறே
சாத்விக பலம் இறே தாங்களும் கணிசிக்கிறது –
கால க்ருத பரிணாமம் இல்லாமையைக் கொண்டாடும் போலே பரிணாமத்தைக் கொண்டாடுகிறார்கள் இறே
பரிணாமம் உண்டாகவுமாம்-இல்லை யாகவுமாம் –
பகவத் அனுபவத்துக்கு புறம்பானது த்யாஜ்யமாம் அத்தனை இறே

இனித் தான் பர்வத பரிசரத்திலே கிடந்ததொரு பீஜத்தோடு
கடலின் அருகே கிடந்ததொரு பீஜத்தோடு வாசி அற
பருவம் செய்யும் காலமாய்த்து –

கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான காலம் ஆகையால் ஒழிவில் காலம் என்னுமா போலே கொண்டாடுகிறார்கள்
அசாதாரணமான மாசத்தில் அசாதாரணமான பலத்தைப் பெறுவோம் –
சர்வோத்தரமான காலத்திலே சாத்விக பலம் பெறுவோம் –
எல்லாரும் அபி மதம் பெரும் காலத்திலே நாமும் அபிமதம் பெறுவோம் என்கிறார்கள் –

மதி நிறைந்த –
மாசம் நேர் பட்டால் போலே இருந்ததீ -பக்ஷமும் நேர் பட்ட படி –
ஆபூர்ய மாணே பக்ஷே புண்யே நக்ஷத்ரே —என்று
மங்கள கார்யம் செய்வார்க்கு விதிக்கிற விதியும் இவர்களுக்குக் கோல் விழுக்காட்டாலே சேர விழுந்தது-
பகவத் பிரவணராய் இருப்பார் உடைய தேக யாத்ரையை-விதி தான் பின் செல்லக் கடவதாய் இறே இருப்பது
த்வதீய கம்பீர மநோநுசாரிணா -என்னக் கடவது இறே

முன்பு இருள் தேட்டமானால் போலே இப்பொழுது நிலா தேட்டமாய்த்து –
காமுகர்க்கும் கோபர்க்கும் இருள் திட்டமாய் இருக்கும் இறே
நள் இருள் கண் என்னை உய்த்திடுமின் -என்று இறே முன்பு இருப்பது –
தாய்க்கும் தகப்பனுக்கும் அஞ்ச வேண்டா
இருளிலே புறப்பட்டு அணைக்கலாம் என்கிறாள் –

இருள் அன்ன மா மேனி எம்மிறை –
இருளோடு சேர்ந்து இறே வடிவு தான் இருப்பது
பிஷக்குக்கள் வாசலில் ஆர்த்தர் கட்டணமாகக் கிடைக்குமா போலே
ஸ்ரீ நந்தகோபர் வாசலில் கிருஷ்ணனால் புண் பட்ட பெண்கள்
கட்டணமாய் கிடக்குமாய்க் கொள்ளீர் -என்று பட்டர் –
(வைத்யோ நாராயண ஹரி அன்றோ )

அப்படி நிலாவுக்கு இறாய்க்க வேண்டாதே ஊர் இசைந்து மேல் எழுத்து இட்ட நாள் இறே –
ஒருவரை ஒருவர் எழுப்புகைக்கும் கிருஷ்ண முக அவலோகநத்துக்கும் நிலா உண்டாகப் பெற்றது என்கை
ஷயாதிகள் போய் பூர்ணன் ஆகிறான் இறே அவனும் –
இவர்களும் நாமும் உளோமாய் பூர்ணைகளாக வாரிகோள் என்கிறாள் –

நன்னாள் ஆல்-
மாசத்துக்கும் பஷத்துக்கும் நாயகக் கல் போலே
இருப்பதொரு நாள் நேர்பட்ட படி என்

நன்னாள் ஆல் –
முன்பு கழிந்தவை தீய நாள் போலே- –
நம்மை கிருஷ்ணனோடு கிட்ட ஒட்டாதவர்கள் தாங்களே
கிருஷணனோடு சேருகைக்கு பிரமாணம் பண்ணிக் கொடுத்த நாளாக பெற்றதே

பகவத் விமுகனான போன இவனுக்கு பகவல் லாபம் உண்டான நாள் இறே நல் நாள் ஆகிறது –
அவன் எதிர் சூழல் புக்கு திரிய –
இவன் வைமுக்யம் பண்ணுகை தவிர்ந்து
அவன் கிருஷி பலித்த நாள் என்கை –

தா நஹம் த்விஷத க்ரூரான் சம்ஸாரேஷூ நராதமான் ஷிபாமி (ஸ்ரீ கீதை )-என்று
நானே இவற்றைக் குழியைக் கல்லி மணலை இடுவேன் என்று
என்று ஸர்வேஸ்வரன் தானே
ததாமி புத்தி யோகந்தம்-(ஸ்ரீ கீதை )என்னும் நாள் இறே

அத்யமே ச பலம் ஜென்ம ஸூப்ரபாத சமே நிசா –என்னுமா போலே
கம்சன் சோறுண்டு வளர்ந்த எனக்கு விடியும் நாள் உண்டாவதே என்றான் இறே

ஸூப்ர பாதாத்ய ரஜநீ மதுரா வாஸ யோஷிதாம் -என்று
ஸ்ரீ மதுரையில் உள்ளார்க்கு வெளிச் செறித்தால் -விளங்கினது- போலேயும் –
ஸூ ப்ரபாதாச -திருவாய்ப்பாடியினின்றும் எழுந்து அருளின போது அங்குள்ளார்க்கு அஸ்தமித்து
ஸ்ரீ மதுரையில் உள்ளார்க்கு விடிந்தது இறே

அஸூர்யமிவ ஸூர்யேண நிவாதமிவ வாயு நா -(பாரதம் )
அப் படை வீட்டில் கண் இல்லாதார்க்கு கண் உண்டானால் போலேயும்
பிராணன் இல்லாதார்க்கு பிராணன் உண்டானால் போலேயும் யாய்த்து இவர்களுக்கும்

நன்னாளால்
திரு அயோத்யையில் உள்ளார் பெருமாளை முடி சூட்டி அனுபவிக்க பாரித்துக் கொண்டு இருக்க
வெறும் தறையான நாள் போல் அன்றிக்கே
மீண்டு வந்து திருமுடி சூடி அருளின நாள் போலே –

நன்னாள்
பகல் கண்டேன் –
உதிப்பது அஸ்தமிப்பதாக நிற்கச் செய்தே இறே –
பகல் கண்டேன் -என்கிறது -அதாகிறது
நாரணனைக் கண்டேன் -(இரண்டாம் திருவந்தாதி -82-)என்கை –

அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் –
ப்ராதேசிகன் அல்லாத ஆதித்யனைக் கண்டேன் –
ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணினால் ஓர் இரவும் ஓர் பகலுமே உள்ளது –
பகவத் ப்ரத்யாசத்திக்கு முன்பு எல்லாம் பகல் விரவாத இரவாய் –
பின்பு எல்லாம் இரவு விரவாத பகலாய் யாய்த்து இருப்பது –
சென்ற நாள் செல்லாத (மூன்றாம் திருவந்தாதி )இத்யாதி –
கையார் சக்கரத்தின் (5-1)முன்னாள் போலே இறே முன்பு கழிந்த நாள்
(காருணிகத்தவம் அறிந்த பின்பே-கீழே எல்லாம் காரணத்வம் பஜனீயத்வம் வியாகத்வம் நியாமகத்வம்
இவை எல்லாம் கார்யகரம் ஆவது காருணிகத்தவம் இருந்தால் தானே )

(ஆல் –நினைத்து நினைத்து ஈடுபட்டு இப்பதம் )
மாசத்தைக் கொண்டாடுவது –
பக்ஷத்தைக் கொண்டாடுவது
நாளைக் கொண்டாடுவதாய் -இதிலே
இவர்களுக்கு கிடக்கிற த்வரை வெள்ளம் என் தான் -இவர்கள் ப்ராப்ய ருசி இருந்தபடி –

1-காலத்தைக் கொண்டாடி —
2-பலத்தைச் சொல்லி —
3-அதிகாரிகளை சொல்லி–
4-இது கேட்ட பின்பு-அவர்களுக்கு பிறந்த புஷ்கல்யத்தை சொல்லி –
5-கிருஷ்ண சம்ச்லேஷத்துக்கு ஏகாந்தமான ஊரிலே பிறக்கப் பெற்ற நீங்களும் சிலரே என்று-
ஸ்ரீ நந்த கோபர்க்கும் யசோதை பிராட்டிக்கு பவ்யனாகையாலே இழக்க வேண்டா என்று-
அவர்கள் ஒளித்தாலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகாய்ச் சொல்லி–
6-விரூபனானாலும் விட ஒண்ணாத படியான ப்ராப்தியைச் சொல்லி–
7-உபாய நைரபேஷ்யம் சொல்லி–
8-ஆகிஞ்சன்யத்தில் நைரபேஷ்யம் சொல்லி–
9-உகவாதாரும் உகந்து கொண்டாடும் படி சொல்லித் தலைக் கட்டுகிறார் —

நெடுநாள் சிறையிற் கிடந்தவன், அதினின்றும்; விடுபட்டுச் சுற்றத்தாருடனே கூடப் பெற்ற நாளில்
“கீழ்க் கழிந்த நாள்களைப் போலனறியே இற்றை நாளின் வைலக்ஷண்யமிருந்தவாறு எனக்கொல்!” என்று
அந் நாளை முந்துறக் கொண்டடுவது போல்,
நெடு நாளாக நிலவறைகளில் அடைபட்டுக் கண்ண பிரானோட்டைக் கருவியை இழந்து கிடந்த
இவ்வாயர் சிறுமியரும் தாங்கள் க்ருஷ்ணனோடு ஸம்ச்லேஷிக்குமாறு வாய்த்த நாளென்று
அந் நாளை முதலடியிற் கொண்டாடுகின்றனர்.

“மார்கழித் திங்கள்” என்று – ஸத்துவ குணம் நிறம்பெறும் படியான கால விசேஷத்தைக் கூறியவாறு.
“மதி நிறைந்த நன்னாள்” என்று – ஆசிரினுடைய அருளடியாக ஸ்வருப வுணர்ச்சி பெற்று
எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு இலக்காகப் பெற்ற நாளைக் கூறியவாறு.
“அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்” என்றபடி –
பிறந்தநாள் இதுவாதலால் அதனைக் கொண்டாடுகிறபடி.

—————-

காலம் -நல்ல பொழுதாக செலுத்தி
மீண்ட காலம் மீட்க முடியாதே
ஆரோக்யம் பாஸ்கர இத்யாதி
உடல் -இந்திரியம் -மனம் -ஆத்மா –

வாதம் வாயு
பித்தம் தலைச்சுத்து
கபம் சளி

தாதுக்கள் 7
1-ரசம் -த்ரவ்யம் சுரக்கும் -சக்தி கொடுக்க
2-ரத்தம் – பிராணன்
3-மாம்சம் தசை
4-மேதா -கொழுப்பு -மூட்டு தெயாமல் இருக்க வேணுமே
5-அஸ்தி -எலும்பு -தூண் நாட்டி பூச வேண்டுமே
6-மஜ்ஜை -எலும்புக்குள் பசை
7-சுக்லம் -வீர்யம்
ஏழும் அக்னிகள் -வைஸ்வானர அக்னி -காற்று சரியாக இருந்தால் தானே

பஞ்ச பிராணன் -உள்ளே சமையல் பண்ண வேண்டுமே
பிராண ஹ்ருதயத்தில் -ரத்த ஓட்டம் -நடித்த துடிப்பு
அபான -பின்புறம் கழிவு வெளியேற்ற –
சபான நாபி மண்டல -வைச்வானர அக்னி சரியாக
உதான -கண்ட தேசே -மேல் நோக்கி போய் பேச வைக்கும்
வியான -சர்வ சரீரம்-கைகளைத் தூக்க -கால் நடக்க

ரஜஸ்
தமஸ்
ஆக பத்தும் சமமான கட்டுப்பாட்டுக்குள்

ஆகார சுத்தி சத்வ சுத்தி

நோய் நாடி நோய் முதல் நாடி

சரீரே ஜர்ஜரீ பூதே வியாதி க்ரஸ்தே களேபரே ஒளஷதம் ஜாஹ்ன வீதோயம் வைத்தியோ நாராயணோ ஹரி

ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புன புன இத மேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயா நாராயணோ ஹரி

பஞ்ச பாண்டவர்களை பலவகையிலும் காத்து அருளும் பெருமாள் வந்தார் -வரதர் கண்ணபிரான் காக்கும் இயல்பினன்
‘திரௌபதி ஜீவாத்மா சபா உலக வாழ்க்கை பஞ்ச இந்திரியங்களை காத்து
பீஷ்மர் துரோணர் புத்தி
கட உபநிஷத்
இந்தர்யங்களை விட உலக விஷயங்கள் பலம் -அவற்றை விட மனசுக்கு பலம் -அதுக்கு மேல் புத்தி –
அதுக்கும் மேல் ஜீவாத்மா -அதுக்கும் மேல் சரீரம் தர்ம சாதனம் -அனைத்தும் விட உயர்ந்த பராத்பரன் சா காஷ்டா சா பாராயணம்
சா காஷ்டா சா பரா கதி பாஷ்யத்திலும் காட்டி அருளுகிறார் ஸ்ரீ பாஷ்யகாரர் ஆறும் பேறும் அவனே

சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43 -த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் –
அருள் என்னும் புடவை சுரந்து பல வகையிலும்
உபாய வைபவம் சொல்லும் மஹா பாரதம்

வித்யா ததாதி விநயம் பாத்ரதாம் -விநயம்-தனம் -தர்மம் ஸூ கம் ஸம்பன்னம் -பகவானும் கீதை
அர்த்த பஞ்சக ஞானமே நிரந்தர பேர் இன்பத்துக்கு முதல் சாதனம் –

திட உணவு பாதி வயிறு
நீர் கால் வயிறு
வாயு கால் வயிறு -சஞ்சரிக்க இடம் தர வேண்டுமே –

அலை பாயாத மனம் -திட நிச்சயம் -சாந்தி -சுகம் -ஸ்ரீ கீதை -2-61-

———

ஸர்வோப நிஷதோ காவோ தோக்தா கோபாலநந்தந:!
பார்த்தோ வத்ஸ: சுதீபோர்க்தா தக்தம் கீதாம்ருதம் மஹத்!! (கீதா மங்களா சரணம் – 4)
எல்லா உபநிடதங்களும் பசுக்களாம். அவைகளைக் கறக்கும் இடையன் ஸ்ரீகிருஷ்ண பகவான்.
அப் பசுக்களின் கன்று அர்ஜூனன். அப்பசுக்களின் கறந்த பால் கீதையென்பதாகும். பாலைக் குடிப்பவர்கள் வித்வான்கள்.’

அமுதம் கடைந்த கிருஷ்ணன்
மதி மந்தான -வியாசர் கிருஷ்ண த்வைபாயனர்
மறைப்பாற் கடலை திரு நாவின் மந்திரத்தால் கடைந்து -பாம்பணைப்பள்ளியான் ஈட்டம் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –

ரிஷிகேசன் குடா கேசன் சம்வாதம் கீதை
யதி ராஜர் ரெங்க ராஜர் கத்ய த்ரயம்

கீதா கங்கா கோவிந்த காயத்ரி -நான்குமே புனிதம் ஸ்ரேஷ்டம்

வேதேஷூ புருஷ ஸூக்தம் –
ஸ்ரீ ராமாயணம் -சாரம்-அபய பிரதானம் –
மஹா பாரதத்தில் -ஸ்ரீ கீதை – –
தர்ம சாஸ்திரம் சாரம்-மனு சாஸ்திரம் –
புராணங்களில் சாரம் ஸ்ரீ விஷ்ணு புராணம்-
அருளிச் செயல்கள் சாரம் திருவாய் மொழி

பாரதே பகவத் கீதா தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம் வேதேஷூ பவ்ருக்ஷம் ஸூ க்தம் புராணேஷூ ச வைஷ்ணவம் —என்றும்
ஐந்தாம் வேதமான மஹா பாரதத்தில் கீதை உள்ள பகுதியே பிரதான்யம் -என்றும் உரைக்கப் பட்டது –

தேகத்துக்கு ஷேம கரம் கீரை
ஆத்மாவுக்கு ஷேம கரம் ஹீதை
அதுவும் வேணுமே தர்ம காரியங்களுக்கு

பத்தாம் நாளுக்கு பின்பே பிறந்தது கீதை
சர கல்பத்தில் பீஷ்மர் விழுந்ததும் பிறந்தது கீதை

———————–

நமது உடலானது கால்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் மாங்கனீசு போன்ற
பல வகையான தாதுக்களைப் பொறுத்தே இயங்குகிறது.
இவற்றில் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் நம் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம்.
இதனை முறையாக கவனிக்காவிட்டால் நாளடைவில் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தும்.

சித்த மருத்துவத்தில் நமது உடலில் ஏழு (சப்த) வகையான தாதுக்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ள‍து.
அந்த ஏழு (சப்த) தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால்,
நமது உடலுக்கு எந்த நோய்கள் இல்லை.
அந்த ஏழு தாதுக்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தாதுக்கள் கூடும்போதோ அல்லது குறையும்போதோதான்
நோய்கள் வருகின்றன்
அந்த சப்த தாதுக்கள் கீழே காணலாம்.

1.நிணநீர் 2. இரத்தம் 3. தசை 4. கொழுப்பு 5. எலும்பு 6. மஜ்ஜை 7. சுக்கிலம் ஆகியனவாகும்.

மனித உடலில் ஏழு வகையான தாதுக்கள் உள்ளன.தாதுக்கள் என்பது நமது உடலை வலுவூட்டுபவைகள் ஆகும்.

1. ரச தாது….உடலின் சாரம்
2. ரக்த தாது….ரத்தம்
3. மாம்ச தாது….சதை
4. மேத தாது….கொழுப்பு திசு
5. அஸ்தி தாது….எலும்பு
6. மஜ்ஜை தாது….எலும்பு மஜ்சை
7. ஷுக்ர தாது…..விந்து (ஆண்களில்),கருமுட்டை ( பெண்களில்)

ஏழு தாதுக்களின் முக்கிய வேலை:

1. ரச தாது…ஊட்டச்சத்து
2. ரக்த தாது….உயிர் ஓட்டம்
3. மாம்ச தாது….பாதுகாப்பு
4. மேத தாது…. மென்மை
5. அஸ்தி தாது….ஆதரவு
6. மஜ்ஜை தாது…அடைத்தல்
7. ஷுக்ர தாது….இனப்பெருக்கம்

தாதுக்கள் உருவாகும் விதம்:

நாம் உண்ணும் உணவானது முதலில், ரச தாது அக்னியால் ரச தாதுவாக மாறுகிறது.
பின் ரக்த தாது அக்னியால் ரக்த தாதுவாகிறது.
பின் மாம்ச தாது அக்னியால் மாம்ச தாதுவாகிறது.
பின் மேத தாது அக்னியால் மேத தாதுவாகிறது.
பின் அஸ்தி தாது அக்னியால் அஸ்தி தாதுவாகிறது.
பின் மஜ்ஜை தாது அக்னியால் மஜ்ஜை தாதுவாகிறது.
பின் ஷுக்ர தாது அக்னியால் ஷுக்ர தாதுவாகிறது.

———-

மதி என்ற சொல்லில் இருந்தே மாதம் என்ற சொல் தோன்றிற்று.
தமிழிலும் நிலவைக் குறிக்கிற திங்கள் என்ற சொல்லைத்தான் மாதத்தைக் குறிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலத்தில் வழங்குகிற Month (மாதம்) என்ற சொல் Moon என்ற சொல்லில் இருந்தே தோன்றியதாகும்.
எனவே, சித்திரை நட்சத்திரத்தில் முழுமதி திகழ்கிற மாதம் சித்திரை மாதம் ஆகும்.
சிலப்பதிகாரத்தில், இந்திர விழவூரெடுத்த காதையில் (வரி 64) ”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென” என்ற
குறிப்பு உள்ளது இதற்குச் சான்றாகும்.

அது போன்றே, விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் வைசாகி அல்லது வைகாசி ஆகும்.
இன்றும் வட இந்தியாவில் வைசாகி என்ற பெயர் வழக்கில் உள்ளது.

விசாக நட்சத்திரத்தின் பெயரை ஆட்பெயராகக் கொண்ட விசாகன் என்ற பெயருடையவர்கள், சங்க காலத்தில் இருந்துள்ளார்கள்.
இப்பெயர் வியாகன், வியகன், வியக்கன் என்ற வடிவங்களில் வழங்கியுள்ளதென குறிப்பிடுகிறார்.

சித்திரை, விசாகம் என்ற நட்சத்திரப் பெயர்களைப் போன்றே
அனுஷம் என்ற நட்சத்திரமும் ஆனுஷி என்ற மாதப் பெயராக வழங்கத் தொடங்கி அதுவே ஆனி எனத் திரிந்திருக்கிறது.
அனுஷம் அல்லது அனுடம் அல்லது அனிழம் என்ற நட்சத்திரம் முடப்பனை என்ற பெயரில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுஷ நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அனுஷ நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமாகிய
ஜேஷ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கருதுகிற மரபும் உண்டு.
அந்த அடிப்படையில் ஆனி மாதத்தை ஜேஷ்ட மாதம் என்றும் குறிப்பிடுவதுண்டு.

இவ்விரண்டு நட்சத்திரங்களிலும் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், இவற்றை அடுத்து வருகிற
மூல நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்கிற வழக்கமே தற்போது நடைமுறையில் உள்ளது.

மார்கழி மாத மிருகசிரஸ் நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல்,
அதற்கு அடுத்த நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் முழுநிலா நாள் அமைவதாகக் கொள்வதை
இதனையொத்த நிகழ்வாகக் கருதலாம்.

பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது.
இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது.

சிராவணம் என்ற நட்சத்திரம் திருவோணம் எனத் தமிழில் வழங்குகிறது. ஓணம் என்று இதனைக் குறிப்பிடுவதுண்டு.
சிராவண நட்சத்திரத்தில் பௌர்ணமி அமைகிற மாதமே சிராவணி ஆகும். இது ஆவணி என வழங்கப்படுகிறது.

சிரமணர் என்பது சமணர் எனத் திரிந்து அமணர் என வழங்குவது போன்றதே இம்மாற்றமும் ஆகும்.
ஆவணி மாத முழுநிலா நாள் ‘ஓண நன்னாள்’ என மதுரைக்காஞ்சியில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

பூர பாத்ர பதம் என்கிற நட்சத்திரப் பெயர் பூரட்டாதி எனத் தமிழில் வழங்கும்.
இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் புரட்டாசி எனத் தமிழில் வழங்குகிறது.

அசுவதி நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் வட இந்தியாவில் ஆஸ்வின மாதம்,
ஆஸ்விஜ மாதம் என்றும் வழங்கப்படுகிறது.
தமிழிலோ அற்பசி, ஐப்பசி, அற்பிகை என்றெல்லாம் வழங்கியுள்ளது.
இவற்றுள் ஐப்பசி என்பதே வழக்கில் நிலைத்துவிட்டது.

மான் தலை போன்று தோற்றமளிக்கும் நட்சத்திரக் கூட்டம் மிருகசிரஸ் என்று வடமொழியில் வழங்கிற்று.
இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மார்கசிருஷி என வடமொழியில் வழங்கத் தொடங்கி,
தமிழில் மார்கழி எனத் திரிந்துள்ளது.
பிராகிருத மொழியில் மிருகசிரஸ் என்பது மகசிர என வழங்கிற்று.
மார்கழி மாதமும் மகசிர என்ற நட்சத்திரப் பெயராலேயே பிராகிருதத்தில் வழங்கியுள்ளது.
இதற்கான ஆதாரம் இலங்கையில் வரலாற்று நூலான மகாவம்சத்தில் உள்ளது.
‘யாப்பருங்கலவிருத்தி’ என்ற பழமையான இலக்கண நூலில் மகயிரம் என இந்நட்சத்திரப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூச நட்சத்திரம் வடமொழியில் பூஷ்யம் என்றும், திஷ்யம் என்றும் இரு வகையாக வழங்கும்.
திஷ்ய நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் என்பதால் தைஷ்யம் என இம்மாதம் வழங்கப்படத் தொடங்கி
தைசம், தைய்யியம், தை எனத் திரிந்துள்ளது.
தை என்பது பூச நட்சத்திரத்தின் பெயர் என்று பழமையான தமிழ் நிகண்டு நூலாகிய சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது.

தைசம் என்பது பூசம் நட்சத்திரத்தைக் குறிக்கும் என்று 1910ஆம் ஆண்டில் கதிரைவேல் பிள்ளை அவர்களால்
தொகுத்து வெளியிடப்பட்ட சங்கத்து அகராதி குறிப்பிடுகிறது.
புஷ்யம் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு பௌஷ்ய மாதம் என்றும், பௌஷ மாதம் என்றும்
தைத் திங்களைக் குறிப்பிடுவதும் உண்டு.

மக நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மாகி என வழங்கத் தொடங்கிப் பின்னர் மாசி எனத் திரிந்துள்ளது.
கரம், ஹரமாகத் திரிந்து ஒலிக்கப்படத் தொடங்கிப் பின்னர் சகரமாகத் திரிந்திருக்கலாம்.
ஹிந்து என்ற பாரசீக வழக்கு, சிந்து என இந்திய மொழிகளில் வழங்குவதை நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.

இறுதியாகப் பங்குனி என்ற கடைசி மாதப் பெயருக்கு வருவோம்.
”பங்குனி உயர் அழுவத்துத் தலைநாள் மீன்” எனப் புறநானூறு குறிப்பிடுகிறது.
அதாவது பங்குனி மாதத்தில் முழுநிலா அமைகிற முழுமையான நட்சத்திரமாகிய உத்தர பால்குண நட்சத்திரமே
அதாவது உத்தரமே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
நாள்மீன் என்பது நட்சத்திரத்தையும், கோள்மீன் என்பது கிரகத்தையும் குறிப்பதற்குச் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களாகும்.
அதாவது Constellation என்பது நாள்மீன் அல்லது நட்சத்திரம், Planet என்பது கோள்மீன் அல்லது கிரகம் ஆகும்.

கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும்.
வடமொழியில் கிரகித்தல் என்ற கருத்தின் அடிப்படையில்தான் கிரகம் என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.

உத்தர பால்குண நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் பல்குனி என வழங்கத் தொடங்கிப் பங்குனி எனத் திரிந்துள்ளது.

“கணிதம் பன்னிரெண்டாண்டு பயில்வர் பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்
அணி செய் காவிய மாயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவி உளம் காண்கிலார்
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவர்
வாழும் நாட்டிற் பொருள் கெடல் கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள்
சொல்லுவார் எத்துனை பயன் கண்டிலார்.”

“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்
நம்பரும் திறலோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின்
இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவர் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்ததும் தர்மம் வளர்த்ததும்
பேரருட் சுடர் வாள் கொண்டு அசோகனார்
பிழை படாது புவித் தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர் தம் தீய கோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
அன்ன யாவும் அறிந்திலர் …………. (மகாகவி பாரதி)

————————

26-இது ஒரு விசேஷமான எண் . 26ல் , “2” என்பது “த்வயம் ” என்று சொல்லலாம்.
26ல் , “6” என்பது, “விஷ்ணு மந்த்ரம்” என்று சொல்லலாம்
26யைக் கூட்டினால், வருவது, “8” இது அஷ்டாக்ஷரத்தைக் குறிக்கிறது.
26யைப் பெருக்கினால், வருவது , “12” .இது, த்வாதசாக்ஷரத்தைக் குறிக்கிறது.
நாராயண மந்த்ரம் —8 அக்ஷரங்கள்
வாஸுதேவ மந்த்ரம் —-12 அக்ஷரங்கள்
விஷ்ணு மந்த்ரம்—6 அக்ஷரங்கள்
இந்த மூன்றும் விஷ்ணு காயத்ரியில் அடக்கம்.
மொத்தம்–26 அக்ஷரங்கள்
26 என்றாலே, பகவான்

——–

நக்ஷத்ரங்கள் 27 என்பது யாவருக்கும் தெரிந்ததே
இந்த 27 நக்ஷத்ரங்களும் , தேவ நக்ஷத்ரங்கள், யம நக்ஷத்ரங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன
அதாவது கிருத்திகை முதல் விசாகம் வரை 14 நக்ஷத்ரங்கள்—வானத்தில்
ஸ்வர்க்க லோகத்துக்கு அருகில் இருப்பதால், இவை தேவ நக்ஷத்ரங்கள் எனவும்
அனுஷம் முதல் பரணி வரை 13 நக்ஷத்ரங்கள் யமலோகத்துக்கு சமீபத்தில் இருப்பதால்
யம நக்ஷத்ரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன

தேவ நக்ஷத்ராணி வா அன் யானி |
யம நக்ஷத்ரான் யன்யானி |
கிருத்திகா : ப்ரதமம் | விசாகே உத்தமம் |
தானி தேவ நக்ஷத்ராணி |
அனுராதா : ப்ரதமம் அபபரணீருத்தமம் தானி யம நக்ஷத்ராணி |
யாணி தேவ நக்ஷத்ராணி | தானி தக்ஷிணேந பரியந்தி |
யானி யம நக்ஷத்ராணி |தான்யுத்தரேண |
இதுதான் இதற்கான ஸ்லோகம்

——–

காயத்ரி சந்தஸ் —24 அக்ஷரங்கள் .
உஷ்ணிக் சந்தஸ்—28 அக்ஷரங்கள்.
அனுஷ்டுப் சந்தஸ்–32 அக்ஷரங்கள் .
ப்ருஹதீ சந்தஸ்–36 அக்ஷரங்கள்.
பங்க்தீ சந்தஸ்—40 அக்ஷரங்கள்.
ஜகதீ சந்தஸ்—48 அக்ஷரங்கள்

——–

ஏழு சிரஞ்சீவிகள்

அஸ்வத்தாமா பலிர் வ்யாஸோ ஹநுமான் ச விபீஷண:
க்ருப பரசுராமஸ்ச சப்தை தே சிரஞ்சீவன:—பத்ம புராணம்

அஸ்வத்தாமன், பலி, வியாஸர், ஹநுமான், விபீஷணன், க்ருபர், பரசுராமர் ஆகிய எழுவரும் சிரஞ்சீவிகள்.
(அதிகாலையில் இவர்களின் நாமங்களை உச்சரிப்பது – இந்த ஸ்லோகத்தை சொல்வது – மங்களகரமானது )

——–

ஸ்ரீ ராமபிரானின் ஸ்ரீ ஸூக்திகள் -அயோத்யா காண்டம் –

சர்வே க்ஷயஅந்தா நிசயா: பதன அந்த: சமுக்ச்ரயா:
சம்யோகா விப்ரயோக அந்தா மரண அந்தம் ச ஜீவிதம்

சேர்ந்தன எல்லாம் கரையும்; உயர்ந்தன தாழும்; சேர்ந்தவர் பிரிவர்; பிறப்பவர் இறப்பர்.

யதா பலானாம் பக்வானாம் ந அன்யத்ர பதனாத் பயம்
ஏவம் நரஸ்ய ஜாதஸ்ய ந அன்யத்ர மரணாத் பயம்

பழுத்த பழங்கள் கீழே விழவேண்டும்; அதுபோல இருப்பவர்கள் இறப்பர். அவைகள் பயப்படுவதில்லை.

யதா காரம் த்ருஅ ஸ்தூணம் ஜீர்ணம் பூத்வா அவசீததி
ததா வசீதந்தி நரா ஜரா ம்ருத்ய வசம் கதா:

உறுதியான கட்டிடங்கள் இடிந்து விழும்; அழிந்து போகும் அதைப் போல வயதும் மரணமும் வந்தே தீரும்

அன்யேதி ரஜனீ யா து சா ந ப்ரதிநிவர்தத
யாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம்

இரவுப் பொழுது கழிந்துவிட்டால் திரும்பி வாராது; யமுனை நதி அதன் தண்ணீரைக் கடலில் கொட்டிவிட்டால் அது திரும்பிவராது.

அஹோராத்ராணி கச்சந்தி சர்வேஷாம் ப்ராணினாம் இஹ
ஆயும்ஷி க்ஷபயந்த்ய ஆசு க்ரீஷ்மே ஜலம் இவ அம்சவ:

கோடை காலத்தில் தண்ணீரை சூரியன் வற்றச் செய்வது போல, ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் உயிரினங்களை மாயச் செய்கின்றன.

ஆத்மானம் அனுசோச த்வம் கிம் அன்யம் அனுசோசசி
ஆயு: தே ஹீயதே யஸ்ய ஸ்திதஸ்ய ச கதஸ்ய ச

நீ நின்றாலும் நகர்ந்தாலும் வாழ்நாள் குறைந்து கொண்டே வரும்; ஆகையால் உன்னைப் பற்றி வருதப்படு; மற்றவர்கள் குறித்து வருந்தாதே.

சஹ ஏவ ம்ருத்யுர் வ்ரஜதி சஹ ம்ருத்யுர் நிஷீததி
கத்வா சுதீர்கம் அத்வானம்சஹ ம்ருத்யுர் நிவர்தத

நாம் நடந்தாலும் மரணம் நம்மைப் பின் தொடரும்; உட்கார்ந்தாலும் அதுவும் அருகில் அமர்ந்து ஓய்வெடுக்கும்;
எவ்வளவு தூரம் போனாலும் அதுவும் வரும்; நாம் திரும்பி வந்தால் நம்முடன் திரும்பியும் வரும்.

காத்ரேஷு வலய ப்ராப்தா: ஸ்வேதாள் சைவ சிரோ ரஹா:
ஜரயா புருஷோ ஜீர்ண: கிம் ஹி க்ருத்வா ப்ரபாவயேத்

நம் அங்கங்களின் மீது சுருக்கம் விழுகிறது; முடி நரைத்து விடுகிறது;முதிய வயது காரணமாக போன அழகு திரும்பி வருமா?

நந்தந்த்ய உதித ஆதித்யேநந்தந்த்ய அஸ்தம் இதே ரவௌ
ஆத்மனோ அவபுத்யந்தே மனுஷ்யா ஜீவித க்ஷயம்

காலையில் சூரியன் உதிக்கும்போதும், மாலையில் சூரியன் அஸ்தமிக்கும்போதும் மக்கள் சந்தோஷம் அடைகிறார்கள்;
ஆனால் அவர்களின் ஆயுள் குறைந்து வருவதை அவர்கள் உணர்வதில்லை.

ஹ்ரச்யந்த்ய ருது முகம் த்ருஷ்ட்வா நவம் நவம் இஹ ஆகதம்
ருதூணாம் பரிவர்தேன ப்ராணினாம் ப்ராண சம்க்ஷய:

ஒவ்வொரு பருவம் வரும்போதும் ஏதோ புதிதாக வருவது போல மகிழ்கிறார்கள்;
ஆனால் மாறி மாறி வரும் பருவங்களினால் அவன் ஆயுள் குறைந்துகொண்டே வரும்.

யதா காஷ்டம் ச காஷ்டம் ச சமேயாதாம் மஹா அர்ணவே
சமேத்ய ச வ்யபேயாதாம் காலம் ஆஸாத்ய கஞ்சன
ஏவம் பார்யா: புத்ரா: ச ஜ்நாதய: ச வசூனி ச
சமேத்ய வ்யவதாயந்தி த்ருவோ ஹ்ய ஏஷாம் விநா பவ:

கடலில் மிதக்கும் இரண்டு மரக் கட்டைகள் சிறிது காலத்துக்கு ஒன்றாகப் பயணித்துப் பிரிந்து விடுகின்றன.
அது போலத்தான் மனைவி, மக்கள், உடன் பிறந்தோர், சொத்து, சுகம் ,செல்வம் எல்லாம்
சிறிது காலத்துக்கு உடன் வரும். அவை பிரிவது தவிர்க்கமுடியாதது.

ந அத்ர கஸ்சித் யதா பாவம் ப்ராணீ சமபிவர்ததே
தேன தஸ்மின் ந சாமர்த்யம் ப்ரேதஸ்ய அஸ்த்ய அனுசோசத:

ஒருவனுடைய தலைவிதியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது.
மற்றவர் இறக்கும் போது அழுவதால் ஒருவன் தனது மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது.

யதா ஹி சார்தம் கக்சந்தம் ப்ரூயாத் கஸ்சித் ப்தி ஸ்தித:
அஹம் அப்ய ஆகமிஷ்யாமி ப்ருஷ்டதோ பவதாம் இதி
ஏவம் பூர்வைர் கதோ மார்க: பித்ரு பைதாமஹோ த்ருவ:
தம் ஆபன்ன: கதம் சோசேத் யஸ்ய ந அஸ்தி வ்யதிக்ரம:

வண்டியில் போகும் பயணிகளைப் பார்த்து நானும் பின்னால் வருகிறேன் என்று சொல்லுவதைப் போல
நாமும் நமது முன்னோர் சென்ற வழியில் செல்கிறோம்;
அது திரும்பிவராத பயணம். அதில் சேர்ந்த பின்னர், புகார் செய்வதற்கு என்ன இருக்கிறது?

வயஸ: பதமானஸ்ய ஸ்ரோதசோ வா அநிவர்தின:
ஆத்மா சுகே நியோக்தவ்ய: சுக பாஜ: ப்ரஜா: ஸ்ம்ருதா:

ஓடும் நதியின் நீர் திரும்பி வருவதில்லை; அதுபோலத்தான் நம் வாழ்நாளும்.
ஒவ்வொருவரும் அற வழியில் இன்பம் அடைய முயல வேண்டும்; எல்லோரும் விரும்புவது சந்தோஷத்தைத் தானே.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேடு பறி உற்சவம்

December 16, 2021

ஸ்ரீ வேடு பறி உற்சவம்

பௌர்ணமி தினம் என்றாலே அது ஒரு பண்டிகை நாள் தானே.
அதுவும் கோடை காலத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது.
பங்குனி மாதம் வரும் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்துடன் இனைந்து வரும்.
இந்த பங்குனி உத்திரம் கல்யாண விரத நாள்.
ஆண்டாள்-ரங்க மன்னார், சீதா-இராமர் ஆகியோர் திருக்கல்யாணங்களும் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றது.
எனவே ,அன்று அனேகமாக எல்லா பெருமாள் கோவில்களிலும் திருக்கல்யாணம் அல்லது
சேர்த்தி சேவை பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகின்றது.

மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் சோழ மண்டலத்தில் உள்ள
திருவாலி- திருநகரி திவ்ய தேசத்தில் நடைபெறும் திருக்கல்யாணம் மிகவும் தனித்தனமை பெற்றது,
இங்கு பெருமாள் கள்வனாக இருக்கும் தன்னுடைய கலியனை ஆட்கொள்ள, திருமந்திர உபதேசம் கொடுக்க
இங்கு மணக்கோலம் கொள்கின்றார்
இவ்விழா திருவாலி-திருநகரியில் 10 நாள் உற்ச்வமாக வேடுபறி உற்சவம் என்று
ஆயிரம் தீவட்டிக்கள் ஒளிர நடைபெறுகின்றது

———

வேதத்தின் சாரத்தை பகதர்கள் அனைவருக்கும் புரியும் படி அமுதத் தமிழில் அளிப்பீர் என்ற,
அஞ்சன வண்ணன், ஆயர் பெருமான், அடியவர்க்கு மெய்யன், அமரற்கரிய ஆதி பிரான், உம்பர் கோன்,
எம்பெருமானின் ஆணைப்படி, நீளாதேவி, பஞ்சாயுதங்கள், ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம், வனமாலி,
அனந்தன், கருடன், மற்றும் விஷ்வசேனர் பன்னிருவரும், கலியுகத்தில் பூமியில் தோன்றி
பரந்தாமனின் கல்யாண குண வைபவம் என்னும் கடலை மேகங்களாக்கி அந்த அருள் மேகத்தை பக்தி மழையாக
நமக்கு பொழிந்து நமது நெஞ்சங்களிலெல்லாம் பேரானந்தம் பொங்க செய்தார்கள்.
எம்பெருமானின் பக்தியில் ஆழ்ந்து இருந்ததால் இவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.

ஜீவன் பக்தியால் பரமாத்மாவை நெருங்கி, பக்தி பெருக்கினால்
தன்னிலும் மேலான பகவானை வாழ்த்துகின்றான் இதுவே மங்களாசாசனம்,
இவ்வாறு மயர்வற மதி நலம் அருளிய தேவாதி தேவனை மங்களாசாசனம் செய்தவர்கள் ஆழ்வார்கள்.
இவர்கள் வேதாந்த தத்துவத்தையும், பகவத் கீதையின் உபதேச மொழிகளையும் திவ்ய பிரபந்தங்களின் மூலம்
தேனினும் இனிய தமிழ் மொழியில் போதித்த பரமனடியார்கள்.
இவர்களில் கடைக்குட்டியான திருமங்கை ஆழ்வாருக்கு மற்ற ஆழ்வார்கள் எல்லாருக்கும் இல்லாத ஒரு சிறப்பு உண்டு
அதுதான் எம்பெருமானிடமே திருமந்திர உபதேசம் பெற்றது.
இந்தவைபவம் தான் வேடுபறி உற்சவமாக திருவாலி-திருநகரியில் பங்குனி உத்திரத்தின் போது கொண்டாடப்படுகின்றது.

முதலில் இத்திவ்ய தேசத்தின் மாண்பைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.
திருவாலி – திருநகரி இரண்டும் 5 கி.மீ இடைவெளியில் உள்ள திருத்தலங்கள்,
திருநகரியில் சேவை சாதிக்கும் வயலாளி மணவாளனை “திருவாலி நகராளா” என்று
திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளதால் இரு தலங்களும் ஒரே திவ்ய தேசமாக கொள்ளப்படுகின்றது.
திருமங்கை நாடு, ஆலி நாடு என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திவ்ய தேசத்தை 41 பாசுரங்களினால்
மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கை ஆழ்வார்.
தேரோடும் நெடுவீதி திருவாலி நகர்,
சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி,
எங்கும் ஆலைப்புகை கமழும் அணியாலி , என்று குறிப்பிடுகின்றார் ஆழ்வார் இத்திருத்தலத்தை, தன் பாசுரங்களில்.
வயலாலி மணவாளனை, அணியாலியம்மான், திருவாலியம்மான் –
மண்ணளந்த தாளாளா! தண் குடந்தைகுடமாடீ! வரையெடுத்த தோளாளா! பாரளந்த
பண்பாளா! மரமெய்த திரளாளா! என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

தம்முடைய கண்ணபுர பாசுரத்தில் “ ஆலிநகருக்கு அதிபதி “ என்று
சௌரி ராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் குலசேகர ஆழ்வார்.

திருவாலியில்
மூலவர்: இலஷ்மி நரசிம்மர், வயலாளி மணவாளன்,
உற்சவர்: திருவாலி நகராளன்.
தாயார் : அம்ருத கடவல்லி.

மூலவர் வலப்பக்கத்தில் மஹாலஷ்மித் தாயாரை அணைத்த நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
ஹிரண்யனை கொன்ற பின்னும் கோபம் அடங்காமல் பெருமான் இருந்த போது தேவர்களும் முனிவர்களும் வேண்டிட
பெரிய பிராட்டியார் வந்து பெருமாளின் வலது தொடையில் அமர, அவரை அனைத்து சாந்தமடைந்ததாக ஐதீகம்.
ஆலிங்கன கோலத்தில் சேவை சாதிப்பதால் இத்தலம் திருவாலி ஆயிற்று.
தாயார் அனேகமாக எல்லாத் தலங்களிலும் பெருமாளின் இடது தொடையில் அமர்ந்தவாறு தான் சேவை சாதிப்பது வழக்கம்
ஆனால் இத்தலத்தில் வலப்பக்கம் இருப்பது ஒரு தனி சிறப்பு.
பூர்ண முனிவரின் மகளாக லஷ்மி பிறந்து வளர்ந்து வரும் போது பெருமாள் அவரை திருவாலியில் மணந்து
திருநகரி செல்லும் போது தான் திருமணங்கொல்லையில் கலியன் வாளால் வெருட்டி
திருமந்திர உபதேசம் பெற்றதாக ஐதீகம்.
இத்தலம் பில்வாரண்யம் என்று அறியப்படுகின்றது.

இத்தலம் பஞ்ச நரசிம்ம ஷேத்திரமும் ஆகும்.
திருமங்கையாழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூரில் ஸ்ரீ உக்ர நரசிம்மர்,
ஆழ்வார் ஒரு வருடம் முழுவதும் 1008 வைணவர்களுக்கு ததியாராதனம் நடத்திய திருமங்கைமடத்தில் ஸ்ரீ வீர நரசிம்மர்,
திருநகரியில் ஆழ்வார் ஆராதித்த ஸ்ரீயோக நரசிம்மர், மற்றும் ஸ்ரீ ஹிரண்ய நரசிம்மர் என்று
ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.
சிவபெருமான் அசுரர்களுக்கு பல் வேறு வரங்களை அளித்ததால் அவர்கள் செய்த பாவங்கள் சிவபெருமானை பற்றிக் கொள்கின்றன,
அவை தீர சிவபெருமான் தனது ஐந்து முகங்களால் ஸ்ரீநரசிம்மரை துதிக்க
பெருமாளும் ஐந்து கோலத்தில் சேவை சாதித்து சிவபெருமானின் பாவங்களை அழித்ததாக ஐதீகம்.

திருநகரி தலம் ஸ்ரீபுரி, லஷ்மிபுரம், ஆலிங்கன புரம், விக்னேஸ்வர நல்லூர் என்றும் வழங்கப்படுகின்றது.
இத் தலத்தைப்பற்றிய குறிப்புகள் கருட புராணத்தில் உள்ளன.

மூலவர் ஸ்ரீ தேவி, பூமா தேவி சமேத வேதராஜன்,
உற்சவர் கல்யாண ரங்கனாதர்.
தாயார் : அம்ருத வல்லி.

மூலவர் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி சேவை சாதிக்கின்றார்.
வயலாளி மணவாளன் என்றும் அழைக்கப்படுகின்றார்.
திருமால் திருமகளை மூவுலகமும் தேடி காணாமல் இறுதியாக இத்தலத்தில் புஷ்கரணியில்
தாமரை மலரில் தாயாரைக் கண்டு ஆனந்தம் அடைந்து ஆலிங்கனம் செய்ததால் இத்தலம் ஆலிங்கனபுரம் ஆயிற்று.
திருமகள் வந்து தங்கியதால் ஸ்ரீ – மஹா லஷ்மி, புரி – நகர் என்று தமிழில் திருநகரி ஆயிற்று.

திருமங்கையாழ்வாரின் சந்நிதி இத்தலத்தில்தான் உள்ளது.

வேலணைத்த மார்பும் விளங்கு திருவெட்டெழுத்தை மாலுரைக்க தாழ்த்த வல செவியும்,
தாளிணைத் தண்டையும் விளங்க, குமுதவல்லி நாச்சியாருடனும், ஆழ்வார் ஆராதித்த சிந்தனைக் கினியானுடனும்
கள்ளர் கோலத்தில் சேவை சாதிக்கின்றார்
60 மேற்பட்ட திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்த, மாலிடமே மந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார்.
திருமங்கையாழ்வாரின் வடிவழகிலீடுபட்டு மணவாளமாமுனிகள் அருளிய வடிவழகு சூர்ணிகை இவ்வாறு வர்ணிக்கின்றது

அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும்,
ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், பதித்த நெற்றியும், நெறித்த புருவமும்
சுருண்ட குழலும், வடிந்த காதும் அசைந்த காது காப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும்,
திரண்ட தோளும் நெளித்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக் கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும்
தொங்கலும் தனி மாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்
சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்,
தஞ்சமான தாளிணையும், குந்தியிட்ட கனைக்காலும்,
குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும்,
வயலாளி மணவாளனும், வாடினேன் வாடி (என்று)
வாழ்வித்தருளிய , நீலிக்கலிகன்றி, மருவலர் தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே.

அந்த கொண்டையும், சடையும் அதில் மலர்களும். மேலங்கியின் அழகும், அற்புத நவரத்ன நகைகளும்
இடையில் வாளும், கட்டாரியும், முதுகில் கேடயமும். கையில் வில்லும்,
திருப்பாதங்களில் இராஜ பாதுகைகளும் விளங்க, ஒரு கரத்தில் பஞ்ச கல்யாணிக் குதிரையை செலுத்தும் பாங்கும்,
மறு கையில் ஈட்டியும் விளங்க, நீல நிற ரத்ன அங்கியில் நீலன் வரும் அழகை எப்படி வர்ணிப்பது.

திருமாலின் வில்லான சார்ங்கத்தின் அம்சமாக சோழ வள நாட்டில் திருமங்கையென்னும் பகுதியில்
திருவாலி திருப்பதியினருகே திருக்குறையலு‘ரில் கள்ளக்குடியில் பூர்ணிமை வியாழக்கிழமை, கிருத்திகை
இவைகள் பொருந்திய நாளில் கார்த்திகை திங்களில் சோழ அரசனின் சேனை தலைவர் இல்லத்தில் அவதரித்தார்.
இவருக்கு பெற்றோர் இட்டபெயர் நீலன். குடிப்பிறப்பிற்கேற்ப்ப போர்த் தேர்ச்சி பெற்று அரசனுக்காக
பல போர்களில் வென்று திருமங்கை நாட்டின் மன்னனாக பகைவர்களை வெல்லுவதில் வல்லவரானதால்
பரகாலன் என்ற திருநாமத்துடன் முடி சூடப்பட்டார்.
சிற்றரசன் என்ற முறையில் சோழவரசனுக்கு கப்பம் செலுத்தி வந்தார்.

பூலோக மாயையில் உழன்று கொண்டிருக்கும் தன் அன்பனை திருத்திப் பணிகொள்ள விரும்பிய பெருமாள்
தேவலோகத்திலிருந்து பூவுலகில் கண்ணார் கடல் போல் திருமேனிக்கரிய அண்ணனாய்
எம்பெருமான் சேவை சாதிக்கும் திருவெள்ளைக்குளத்தில் நீராடவந்தப் பெண்னை மானிட உருக்கொண்டு இங்கேயே தங்க வைத்தார்.
குமுத மலர் பறித்து நின்ற அப்பெண்னை அவ்வழி வந்த ஒரு வைணவ மருத்துவன் கண்டு
குமுதவல்லி என்னும் பெயரிட்டு வளர்த்து வந்தான்.
ஒற்றர்கள் மூலம் குமுதவல்லியின் அழகைப்பற்றி அறிந்த மங்கை மன்னன் வைத்தியனிடம் சென்று
குமுதவல்லியை தனக்கு மணம் முடித்துத் தருமாறு வேண்டினார்.

குமுதவல்லியோ திருமணத்திற்க்கு நிபந்தனை விதித்தாள்.
சங்கு சக்கர இலச்சினை பொறித்தல், திருமண்காப்பு தரித்தல், தாஸ்ய நாமம் பெறுதல், திருவாராதனை செய்தல்,
திருமந்திரம் பெறுதல், என்னும் ஐவகை சிறப்புடைய வைணவருக்கேயன்றி வேறொருவருக்கு துணையாகேன் என்று மறுத்து விட்டாள்.
பரகாலனும் திருநறையூர் சென்று அவ்வூரில் கோவில் கொண்டுள்ள நம்பியிடமிருந்து திருவாழி திருச்சங்கிலச்சினை பெற்றும்,
திருக் கண்ணபுரத்தம்மானிடம் திருமந்திரோபதேசம் பெற்றும் பன்னிரு திருமண்காப்புகளணிந்து
குமுதவல்லியிடம் மீண்டும் சென்று மணம் புரிய வேண்டினார்.

அப்போது ஆயிரத்தெட்டு திருவைட்டணவர்களுக்கு நாடோறும் ஓராண்டு காலம் அமுது செய்வித்து
அவர்கள் போனகம் செய்த சேடத்தையும், அவர்கள் திருவடிகளை விளக்கிய நீரையுமுட்கொண்டால் தான்
மங்கை மன்னனை மணம் புரிய இசைவதாக குமுதவல்லி பணித்தாள்.
மங்கையாசையினால் ஆலி நாடனும் அதற்கிசைந்து வாக்களிக்க திருமணம் நிறைவேறியது.
மங்கை மடத்தில் “ததியாராதனையை “ தொடங்கினார் மங்கை மன்னர்.
இதற்காக மிகவும் பொருள் வேண்டியிருந்தமையால் அரசனுக்கு சரியாக கப்பம் கட்டமுடியாமல் போயிற்று,

அரசனிடமிருந்து வந்த ஏவலாலர்களை ஆழ்வார் விரட்டியடிக்க அவரை சிறைப்பிடிக்க,
அரசனின் சேனைத் தலைவன் வந்தான், “ஆடல்மா” என்ற தன்னுடைய பஞ்ச கல்யாணிக் குதிரையின் மீதேறி பொருது
அவனை புறமுதுகிட்டு ஓடச்செய்தபின், அரசனே போருக்கு வந்தான்.
வஞ்சத்தினால் அரசன் ஆலி நாடனை அருகிலழைத்து அமைச்சனிடம் ஒப்புவித்து கப்பப் பணம் தந்தால் விடுவிப்பதாக கூறிச் சென்றான்.
திருக்கச்சியம்பதி பேரருளானன் மங்கை மன்னன் கனவில் தோன்றி வேகவதி ஆற்றங்கரையில் பொருள் கிட்டும் என்று கூற,
இவரும் அமைச்சனிடம் கூறி அவனுடன் காஞ்சி சென்று இறையருளால் வேகவதியாற்றங்கரையில்
புதையுண்ட நிதி காட்டப்பட்டு நிதியையெடுத்து அரசனுக்கு கப்பமாக செலுத்தினார்.
அரசனும் உண்மை யறிந்து கப்பப் பணத்தை திருப்பி யளித்து அடியார்களின் பூசனைக்கு உதவினான்.

மேலும் பொருள் வேண்டியிருந்ததால் தன் தோழர்களான
நீர் மேல் நடப்பான், நிழலிலொதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் என்ற நால்வரின் துணையோடு
வழிப்பறி செய்து அடியார்களுக்கு ததியாராதனம் செய்ய முற்பட்டார். இவரை ஆட்கொள்ள வேண்டிய நேரம்
வந்து விட்டதால் எம்பெருமான் பிரசன்ன வதனத்துடன், கமல நயனங்களுடன்,
பவழம் போன்ற சிவந்த செவ்வாயில் குமிண் சிரிப்புடன், வலம்புரி சங்கு போல் மிளிரும் கண்டத்துடன்,
நிர்மலமான பீதாம்பரங்களுடன், திவ்ய மங்கள ஆபரணங்களை பூண்டு பெரிய பிராட்டியாருடன்
தன் தாமரைப் பாதங்களில் வீரக்கழல்களுடன் புது மணக் கோலத்தில் நடந்து வந்தார்.
அப்போது “திருமணங்கொல்லை” என்னும் இடத்தில் நாட்டியம் ஆட வல்லதான தனது ” ஆடல்மா ” என்னும்
பஞ்ச கல்யாணிக் குதிரையிலே வந்த மங்கை மன்னன் அவரை வாள் கொண்டு வெருட்டி நகைகளையெல்லாம் கழற்ற சொன்னார்.

பெருமாளும் பயந்தவர் போல் தனது நகைகள் மற்றும் தாயாரின் ந்கைகளையும் கழற்றிக் கொடுக்க
அதை ஒரு மூட்டையாக கட்டுகிறார் நீலன். மணமகனின் காலில் இன்னும் மெட்டி இருப்பதைக் கண்டு
அதை கழற்ற முடியாததால் பல்லால் கடித்து கழற்ற முயன்ற போது மண்மகன் நீ கலியன் என்றார்.
பின்னர் பரகாலன் நகை மூட்டையை தூக்க முயல அதை அவரால் தூக்க முடியவில்லை
மிகவும் வெகுண்டு வாள் வீசி ஏய் என்ன மந்திரம் போட்டாய்? என்று வெருட்ட
எம்பெருமானும் மந்தகாச புன் சிரிப்புடன் மந்திரம் தரத்தானே நான் வந்தேன் என்று
“ஓம் நமோ நாராயணா” என்ற திருமந்திரத்தை,
உண்மைப் பொருளை அவருக்கு உபதேசித்து அவரின் பூலோகக் கடைமையை உணர்த்தி
மன்னனை திருத்தி ஆழ்வாராக்கினார்.
மந்திரத்தின் சக்தியாலும் எம்பெருமானின் பாதங்களில் அவர் முகம் பட்டதாலும்,
எம்பெருமானின் தரிசனம் பெற்றதாலும் மெய்ப்பொருளுணர்ந்த பரகாலர்

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்
என்று பாசுரங்கள் பாடத் தொடங்கி வடமொழி வேதங்கள் நான்குக்கொப்பான

நம்மாழ்வாரின் அருளிச் செயல்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று
பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திடுநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல்,
பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்விய நூல்களை அருளி திருமங்கையாழ்வார் என்ற திருநாமம் பெற்றார்.

இவற்றுள் பெரியதிருமொழியைப் பாடும் போது எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பதிகளுக்கு
தானே சென்று நேரில் வணங்கி திருப்பிருதி முதலாக திருக்கோட்டியூரீறாக
அறுபது திருப்பதிகளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்று நான்கு கவிகளிலும் வல்லவராக விளங்கியதால்
“நாலு கவிப் பெருமாள்” என்ற பட்டம் பெற்றார்.

சிறிய திருமடலிலே நாராண நாமத்தையும்,
பெரிய திருமடலில் கண்ணன் என்ற நாமத்தையும் எதுகை பயில்கிறார் ஆழ்வார்,
எம்பெருமானின் திவ்ய தேசங்களையும் பட்டியலிடுகிறார்.

இனி அஷ்டாக்ஷரம் என்னும் திருவெட்டெழுத்தின் பெருமை
” ஓம் நமோ நாராயணா” என்னும் இத்திருமந்திரத்தின் பெருமையை இவ்வாறு பெரிய திருமொழியிலே குறிப்பிடுகின்றார்

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயினவெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள் விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

இறைவனுக்கு அடிமை நிலை (சேஷத்துவம்) என்ற ஞானமாகிய குலத்தையும்,
தொண்டு (கைங்கர்யம்) ஆகிய செல்வம் தரும் தொண்டர்களின் துன்பங்களை யெல்லாம் தரை மட்டமாக்கும்,
பரமபதமளிக்கும், பேரானந்தத்தில் திளைக்க வைக்கும், தன் முனைப்பு நீங்கும் வலிமை தரும்
பிற நன்மைகளையும் தரும் அந்த திருமந்திரம் என்று நாம் எல்லோரும் உய்ய பாடியருளியுள்ளார் திருமங்கையாழ்வார்.

பெருமாளை கருட வாகனத்தில் ஏழப்பண்ணி அலங்காரம் செய்யும் நேரத்தில்
ஆழ்வார் ஒரு தனி மண்டபத்தில் சென்று தங்குகின்றார்.
மைதானத்தில் இருந்த திருமாலடியார்கள் அங்கு சென்று ஆழ்வாரை சுற்றி வந்து சேவித்து
ஆழ்வாரின் சௌந்தர்யத்தில் திளைக்கின்றனர்.

இந்த திருமந்திர உபதேச உற்சவமே பங்குனி உற்சவ பத்து நாள் பிரம்மோற்சவமாக திருநகரியிலே கொண்டாடப்படுகின்றது.
பத்து நாளும் வெவ்வேறு கோலங்களில் சேவை சாதிக்கின்றார் ஆழ்வார்.
அவற்றுள் சௌரிராஜர் திருக்கோலத்தையும், வெண்ணைத் தாழி கிருஷ்ணர் திருக்கோலத்தையும் கண்டு மகிழலாம்

இந்த உற்சவத்தில் ஐந்தாவது உற்சவ நாளன்று,
வயலாளி மணவாளனுடன் திருவாலிக்கு தனித் தனி பல்லக்குகளில் செல்கிறார் ஆழ்வார்.
மன்னன் என்ற முறையில் இவர் முன்னிலையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
பின் ஆழ்வாருடன் திருநகரிக்கு திரும்புகிறார் பெருமாள்.

எட்டாம் உற்சவ நாள் அதாவது பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள்

இதுவோ! திருவரசு? இதிவோ! திருமணங்கொல்லை
இதுவோ! எழிலாலி என்னுமூர்
இதுவோ தான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்.
ஆடல் மாவிலே மங்கை மன்னர் முன்னழகு

என்னும் திருமணங்கொல்லையிலே காலையிலே சர்வாபரண பூஷ’தராக
கல்யாண ரங்கனாதர் சென்று திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.
இரவு ஏழு மணி அளவில் ஆலி நாடன், அருள்மாரி, அரட்டமுக்கி, அடையார்சீயம், கொங்குமலர்க் குழலியர்வேள்,
மங்கை வேந்தன், கொற்றவேல் பரகாலன், கலியன், ஆடல்மாவலவன், கலிகன்றி, குமுதவல்லி மணாளன்
என்றெல்லாம் அழைக்கப்படும் திருமங்கையாழ்வார் தனது ஆடல்மா என்னும் தங்கக் குதிரை வாகனத்திலே
ஈட்டி கையில் ஏந்தி ஆழ்வார் ஆயிரக்கணக்கான வைணவர்கள் தீவட்டி ஏந்தி வர புறப்படுகின்றார்.
எதிரே திவ்ய அலங்காரத்தில் உடல் முழுவதும் நகைகளுடன் எம்பெருமான் திருக்கல்யாணக் கோலத்தில் எம்பெருமான் வருகிறார்.

ஆயிரக் கணக்கான தீவட்டிகளின் ஒளியில் ஆடல்மாவில் கொள்ளைக்கு திருமங்கை மன்னர் புறப்படுகின்றார்.
திருநகரி கிராம இளைஞர்கள் அனைவரும் தீவட்டி தாங்கி, ஆ! ஆ! ஊ! ஊ! என்று சத்தம் எழுப்பிக் கொண்டு
முன் செல்ல பின்னர் கையில் ஈட்டி தாங்கி பின் செல்கின்றார் மங்கை மன்னர்.

வேதராஜபுரம் அருகே வரும் போது நள்ளிரவு தன் தூதுவர் மூலம் செய்தியறிந்த மங்கை மன்னன்
வாள் வலியால் எம்பெருமானை வெருட்ட மணமகனும் பயந்தது போல்
தனது மற்றும் புது மனைவி€யின் நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுக்க
அவர் அதை ஒரு மூட்டையாக கட்டி கீழே வைத்து விட்டு நிமிரும் போது மணமகனின் காலில் உள்ள மெட்டி கண்ணில் பட்டது,
அதையும் கழற்றிக் கொடு என்று வெருட்ட மணமகனும் கழற்ற முடியவில்லை நீயே கழற்றிக் கொள் என்று கூற
கையினால் கழற்ற முடியாமல் தனது பல்லினால் கழற்ற முயன்றார்
என்வே மணமகனான பெருமான் இவரை கலியன் என்று பெயரிட்டார்.

பின் நகைகள் கட்டிய மூட்டையை தூக்க முயன்ற போது அவரால் அதை அசைக்கக் கூட முடியவில்லை.
கோபம் கொண்ட அவர் ஏய்! என்ன மந்திரம் போட்டாய் ? என்று வாளை வீசி வெருட்ட
எம்பெருமானும் குனிந்து அவர் காதில் நாம் எல்லாம் உய்ய அஷ்டாக்ஷர மந்திரத்தை அவருக்கு அருள
அதை மடியொடுக்கி, மனமடக்கி வாய் புதைத்து ஏற்றார். மன்னராக இருந்து ஆழ்வாராக மாறினார்.

இந்த மந்திர உபதேச நிகழ்ச்சி ஆயிரம் தீவட்டி வெளிச்சத்தில் நடைபெறுவது கண்ணுக்கு விருந்தாக அமைகின்றது.
அதை சொற்களால் வர்ணிக்க அந்த ஆயிரம் நாவுகள் கொண்ட அனந்தனுக்கே முடியும்.
திருமந்திர உபதேசம் பெற்றவுடன் வைணவர்கள் அனைவரும் வாடினேன் வாடி வருந்தினேன் என்ற பாசுரம் தொடங்கி
ஆழ்வாரின் அனைத்து பாசுரங்களையும் பாடிக்கொண்டே வருகின்றனர்,
திருநகரி வந்தடையும் போது அதிகாலையாகிவிடும். இது வேடுபறி உற்சவம்.

மற்ற திருத்தலங்களில் பெருமாள் குதிரை வாகனத்தில் சேவை சாதிக்கும் போது வேடுபறி உற்சவம் நடைபெறும்
இங்கோ ஆழ்வார் குதிரை வாகனத்திலே வருகின்றார்.

பங்குனி உத்திரத்தன்று ( 9- நாள் உற்சவத்தன்று ) ஆழ்வாரும் வயலாளி மணவாளனும்
இரண்டு தனித்தனித் தேர்களில் வீதி புறப்பாடு கண்டருளுகின்றனர்.
பிறகு தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் சிறப்பாக முடிவடைகின்றது.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருநாங்கூர் 11 கருடசேவை வைபவம்-ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: ஸ்ரீ உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்

December 16, 2021

ஸ்ரீ திருநாங்கூர் 11 கருடசேவை வைபவம் –

இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது.
ஆனால் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து,
அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே நம்மேல் கருணை கொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு
மற்றோர் உருவம் எடுத்துக் கொண்டது.

அவ்வுருவத்தின் தலையாக வேதத்திலுள்ள திரிவ்ருத் மந்திரமும்,
கண்களாக காயத்திரி மந்திரமும்,
உடலாக வாமதேவ்யம் எனும் வேதப்பகுதியும்,
இரு இறக்கைகளாக பிருகத்-ரதந்தரம் ஆகிய வேதப்பகுதிகளும்,
கால்களாக வேதத்தின் சந்தங்களும்,
நகங்களாக திஷ்ண்யம் எனும் வேதப்பகுதியும்,
வாலாக யஜ்ஞாயஜ்ஞம் எனும் வேதப்பகுதியும்,
ஆத்மாவாக ஸ்தோமம் எனும் வேதப்பகுதியும் வடிவெடுக்க,
அவ்வாறு உருவான வடிவமே வேதசொரூபியான கருடனின் வடிவம்.

கருட சேவை உற்சவத்தின் போது, இறைவனைத் தனது தோளில் சுமந்தபடி நம்மைத் தேடி வரும் வேத ஸ்வரூபியான
கருட பகவான், நம்மைப் பார்த்து, “நீ வேதங்களின் துணைகொண்டு இறைவனைத் தேடிக் கொண்டிருந்தாயே!
இதோ அந்த இறைவனையே நான் உன்னிடம் அழைத்து வந்துவிட்டேன் பார்!” என்று
சொல்லிப் பரமனின் பாதங்களைப் பாமரர்க்கும் எளிதில் காட்டித் தந்து விடுகிறார்.

காஸ்யப மகரிஷிக்கும் வினதைக்கும் மகனாக ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி நன்னாளில் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினார் கருடன்.
பருத்த உடல், பொன்மயமான சிறகுகள், வெண்மையான கழுத்துப் பகுதி, உருண்டையான கண்கள், நீண்ட மூக்கு,
கூரிய நகங்களுடன் கூடியவராய்க் கருடன் திகழ்கிறார்.
‘கரு’ என்றால் சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பவர்.
சிறகுகளைக் கொண்டு பறப்பதால் ‘கருடன்’ என்றழைக்கப்படுகிறார்.
வடமொழியில் ‘க்ரு’ என்பது வேத ஒலிகளைக் குறிக்கும்.
வேத ஒலிகளின் வடிவாய்த் திகழ்வதாலும் ‘கருடன்’ எனப் பெயர் பெற்றார்.

கருடனின் தாயான வினதை, தனது சகோதரியான கத்ருவிடம் ஒரு பந்தயத்தில் தோற்றாள்.
அதன் விளைவாகக் கத்ருவுக்கும் அவளது பிள்ளைகளான நாகங்களுக்கும் அடிமையாகிச் சிறைப்பட்டிருந்தாள் வினதை.
அவளை விடுவிக்க வேண்டும் என்றால், தேவலோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வர வேண்டும் என்று
நிபந்தனை விதித்தாள் கத்ரு. தேவலோகத்துக்குச் சென்று அமுதத்தைக் கொண்டு வந்து
தன் தாயான வினதையைச் சிறையிலிருந்து மீட்டார் கருடன்.

தனது தாயைக் கத்ருவும் அவள் ஈன்றெடுத்த பாம்புகளும் சிறைவைத்தபடியால், பாம்புகளைப் பழிவாங்க நினைத்த கருடன்,
பாம்புகளை வீழ்த்தி அவற்றையே தனது திருமேனியில் ஆபரணங்களாக அணிந்தார்.
கருடன் தனது உடலில் எட்டுப் பாம்புகளை எட்டு இடங்களில் அணிந்துள்ளார். அவையாவன,

1.தலையில் சங்கபாலன்
2.வலக்காதில் பத்மன்
3.இடக்காதில் மகாபத்மன்
4.கழுத்தில் மாலையாகக் கார்க்கோடகன்
5.பூணூலாக வாசுகி
6.அரைஞாண்கயிறாக தட்சகன்
7.வலக்கையில் குளிகன்
8.இடக்கையில் சேஷன்

அதனால் தான் கருடன், ‘அஷ்ட நாக கருடன்’ என்றழைக்கப்படுகிறார்.
திருமால் ஒருமுறை கருடனிடம், “நான் உனக்கு ஒரு வரம் தரட்டுமா?” என்று கேட்டார்.
கருடனோ, “திருமாலே! எனக்கு வரம் வேண்டாம்! உமக்கு ஏதேனும் வரம் வேண்டுமென்றால், நான் தருகிறேன்! கேளுங்கள்!” என்றார்.
கருடனின் பிரபாவத்தைக் கண்டு வியந்த திருமால், “நீயே எனக்கு வாகனமாகி விடு!” என்று கருடனிடம் வரம் கேட்டார்.
கருடனும் அதற்கு இசைந்து, திருமாலுக்கு வாகனமானார்.

அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் சந்நதிக்கு நேராகக் கருடன் சந்நதி இருப்பதைக் காணலாம்.
ஏனெனில், நாம் ஒப்பனை செய்து கொண்டால், கண்ணாடியில் அழகு பார்ப்போம் அல்லவா?
அதுபோல் அலங்காரப் பிரியரான திருமால் அலங்காரம் செய்துகொண்டால் அழகு பார்க்க ஒரு கண்ணாடி வேண்டுமல்லவா?
இறைவனைக் காட்டும் கண்ணாடி வேதம்! கருடன் வேத ஸ்வரூபியாகவே இருப்பதால்,
கருடனையே கண்ணாடியாகக் கொண்டு திருமால் அழகு பார்க்கிறார்.
அதனால் தான் பெருமாள் சந்நதிக்கு நேரே, கண்ணாடி போல் கருடன் சந்நதி இருக்கும்.

பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவங்கள் நடைபெறும் போது கருடனின் படம் வரைந்த கொடி,
கொடி மரத்தில் ஏற்றப்படுவதைக் காணலாம்.
திருமலையிலுள்ள ஏழு மலைகளுள் கருடனின் பெயரில் ‘கருடாத்ரி’ என்றொரு மலை உள்ளது.
ராம ராவணப் போரில், இந்திரஜித்தின் நாகபாசத்தால் தாக்கப்பட்டு ராமனும் வானர சேனையும் மயங்கிக் கிடந்த வேளையில்,
வானிலிருந்து தோன்றிய கருடன் அந்த நாக பாசங்களை உடைத்து, ராமனும் வானர வீரர்களும் மீண்டும் எழுவதற்கு உதவினார்.

இறைவனை நாம் அழைக்கும் போதெல்லாம், அவனை விரைவில் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வாகனமாகக் கருடன் திகழ்கிறார்.
கருடனை வழிபடுவோர்க்குப் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம் விலகி, குடும்பத்தில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

கருடன் எத்தனை கருடனடி?
பட்சிராஜன்,
வைனதேயன்,
கருத்மான்,
சுபர்ணன்,
தார்க்ஷ்யன்,
காச்யபி,
சுதாஹரன்,
ககேச்வரன்,
நாகாந்தகன்,
விஷ்ணுரதன்,
புள்ளரசன்,
புள்ளரையன்,
மங்களாலயன்,
பெரிய திருவடி,
கலுழன் எனப் பல்வேறு பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.

ஆளவந்தார் என்னும் மகான்,
“தாஸ: ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய:” என்ற ஸ்லோகத்தில்
கருடன் திருமாலுக்குத்
தொண்டராகவும்,
நண்பராகவும்,
வாகனமாகவும்,
இருக்கையாகவும்,
கொடியாகவும்,
மேல்கட்டாகவும்,
விசிறியாகவும் இருப்பதாகக் காட்டுகிறார்.

கருட மந்திரத்தை ஜபித்து, கருடனை நேரில் தரிசித்தவர் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதாந்த தேசிகன் என்னும் மகான்.
அவர் ஒன்று, இரண்டு, மூன்று… என எண்ணிக்கைகளை வைத்து வடமொழியில் ஸ்லோகம் அமைத்துக் கருடனைத் துதித்தார்.
ஒப்பற்ற ஒருவரான கருடன்,
திருமாலின் இரண்டாவது வடிவமாய் விளங்குகிறார்.
ஞானியர், முனிவருள்ளும் மூன்று,
நான்கு பேர்கள் மட்டுமே
ஐந்தெழுத்து உடைய கருட மந்திரத்தின் பெருமையை நன்கறிவர்.
ஞானம், பலம், வீரியம், சக்தி, ஐஸ்வரியம், தேஜஸ் என ஆறு குணங்களை உடையவர் கருடன்.
ஏழு ஸ்வரங்களுக்கும் ஆதாரமான சாம வேத ரூபியாக உள்ளார்.
எட்டு மகாசித்திகளையும் பெற்றவர்.
அவரது உடல் நவமாக உள்ளது. (நவம் என்பது எண் ஒன்பதையும் குறிக்கும், எப்போதும் புதிதாக இருத்தல் என்றும் பொருள்படும்.
கருடனின் திருமேனி எப்போதும் புதிதாகவே உள்ளது. அதையே நவம் எனக்குறிப்பிடுகிறார்.)
பத்து நூறு (10×100=1000) கண்களை உடைய இந்திரனின் ஆயிரக்கணக்கான எதிரிகளை வீழ்த்துகிறார் கருடன்.
அவர் எண்ணிலடங்காத உருவங்களை உடையவர் என்று அந்த ஸ்லோகத்தில் கூறுகிறார் வேதாந்த தேசிகன்.

இந்த ஸ்லோகத்துக்கு ஸ்ரீமான். அன்பில் ஸ்ரீநிவாசன் என்பவர் வழங்கிய
தமிழ் மொழி பெயர்ப்பை வாசகர்களின் அனுபவத்திற்காக வழங்குகிறோம்.

“ஒருவராயும் விட்டுவிற்கு இரண்டாவது மூர்த்தியாயும்
திரிநான்கு பேர்களேதான் நன்கறிய முடிந்ததான
ரகசிய மந்திரமாம் ஐயெழுத்தின் தேவராயும்
இருமூன்று குணங்களினால் இணையற்று விளங்குவரும்
ஸ்ருதியான ஏழுஸ்வர சாமத்தின் உறைவிடமும்
இருநான்கு அணிமாதி ஐஸ்வரியக் கொள்கலனும்
திருமேனி நவமென்னும் புதிதாக அமைந்தவரும்
இருவைந்து நூறான கண்ணுடைய இந்திரனின்
விரோதிகள் பல்லாயிரர் தம்மோடு விளையாடும்
சிறகுகளின் கூர்முனையைச் சிறப்பாக உடையவரும்
உருக்களுமே எண்ணற்று உடையவரும், நாகங்களின்
ஒருபெரிய பகைவருமாய் உறும் கருட பகவானே
பெரிதாம் நம் சம்சார பயந்தன்னைப் போக்கிடுக!”

எண்ணற்ற உருவங்கள் உடையவராகக் கருடன் விளங்குவதால், கருட சேவை உற்சவங்களில்
பற்பல உருவங்களோடு கருடன் வருவதைக் காணலாம்.

தஞ்சையில் நடைபெறும் 24 கருட சேவை,
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையிலுள்ள கூழமந்தலில் நடைபெறும் 15 கருட சேவை,
அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 12 கருட சேவை,
திருநெல்வேலிக்கு அருகே ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் 9 கருட சேவை,
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் 5 கருட சேவை உள்ளிட்ட உற்சவங்கள் இதற்குச் சான்றாகும்.

நாச்சியார்கோவிலில் கல் கருடனாகத் திகழும் கருடன்,
தானே உற்சவராகவும்,
மூலவராகவும்,
வாகனமாகவும் திகழ்கிறார்.

———–

திருநாங்கூர் திருத்தலங்கள்

இப்படிப் பல ஊர்களில் கருட சேவை உற்சவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றாலும்,
தை அமாவாசைக்கு மறுநாளன்று, சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவை உற்சவம்
உலகப் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
சுமார் 125 வருடங்களுக்கு முன்பு திருநாங்கூரில் வாழ்ந்த திருநாராயணப் பிள்ளை, இன்ஸ்பெக்டர் சுவாமி ஐயங்கார்
போன்ற பெரியோர்கள் இந்த உற்சவத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
அன்று தொட்டு இன்று வரை வருடந்தோறும் இவ்வுற்சவம் செவ்வனே நடந்து வருகிறது.

ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூர்
எனும் ஊரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.
தட்சனின் யாகத்துக்குச் சென்ற சதிதேவியை தட்சன் அவமானப் படுத்திய செய்தியைக் கேள்வியுற்றுக்
கடுஞ்சினம் கொண்ட பரமசிவன், சீர்காழிக்கு அருகிலுள்ள உபயகாவிரி எனும் இடத்தில் ருத்திர தாண்டவம் ஆடத் தொடங்கினார்.

அவரது ரோமம் விழுந்த இடங்களில் எல்லாம் புதிய ருத்திரர்கள் தோன்றத் தொடங்கினார்கள்.
சிவபெருமானின் கோபத்தை அடக்க வழிதெரியாது தேவர்கள் தவித்தபோது,
திருநாங்கூரில் பதினொரு வடிவங்களோடு திருமால் வந்து காட்சி கொடுத்து,
பதினொரு வடிவங்களில் இருந்த பரமசிவனின் கோபத்தைத் தணித்தார்.
அதனால் தான் இன்றும் திருநாங்கூரில் 11 பெருமாள் கோயில்களும்,
அவற்றுக்கு இணையாக 11 சிவன் கோயில்களும் இருப்பதைக் காணலாம்.

1.திருமணிமாடக்கோவில் (ஸ்ரீநாராயணப் பெருமாள்)
2.திரு அரிமேய விண்ணகரம் (குடமாடு கூத்தர்)
3.திருச்செம்பொன்செய்கோவில் (செம்பொன் அரங்கர்)
4.திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால்)
5.திருவெள்ளக்குளம் (அண்ணன் பெருமாள்)
6.திருவண்புருடோத்தமம் (புருஷோத்தமப் பெருமாள்)
7.திருமணிக்கூடம் (வரதராஜப் பெருமாள்)
8.திருவைகுந்த விண்ணகரம் (வைகுந்தநாதன்)
9.திருத்தேவனார்த் தொகை (மாதவன்)
10.திருப்பார்த்தன்பள்ளி (தாமரையாள் கேள்வன்)
11.திருக்காவளம்பாடி (கோபாலன்)
ஆகியவையே திருநாங்கூரைச் சுற்றியுள்ள பதினொரு திருமால் திருத்தலங்களாகும்.

1.திருநாங்கூர் மதங்கேஸ்வரர்
2.திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர்
3.திருயோகீஸ்வரம் யோகநாதஸ்வாமி
4.கார்த்தியாயினி இருப்பு (காத்திருப்பு) ஸ்வர்ணபுரீஸ்வரர்
5.திருநாங்கூர் ஜ்வரஹரேஸ்வரர்
6.அல்லிவிளாகம் நாகநாதஸ்வாமி
7.திருநாங்கூர் நம்புவார்க்கு அன்பர்
8.திருநாங்கூர் கயிலாயநாதர்
9.திருநாங்கூர் சுந்தரேஸ்வரர்
10.பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர்
11.அன்னப்பன்பேட்டை கலிக்காமேஸ்வரர்
எனப் பதினொரு திருவடிவங்களுடன் திருநாங்கூரைச் சுற்றி சிவபெருமான் காட்சி தருகிறார்.

திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் பகல்பத்து – ராப்பத்து உற்வசவங்களைப்
பன்னிரு ஆழ்வார்களுள் கடைக்குட்டியான திருமங்கையாழ்வார் நடத்தி வைத்தார்.
அது நிறைவடைந்த பின், தைமாதம் அமாவாசை அன்று திருநாங்கூரில் கோயில் கொண்டிருக்கும்
பதினொரு பெருமாள்களையும் இனிய தமிழ்ப் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்வதற்காகத்
திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு வருகிறார்.

அப்பாசுரங்களைப் பெறும் ஆர்வத்தில் பதினொரு பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் வந்து காட்சி கொடுத்து,
ஆழ்வாரிடம் பாடல்களை ஏற்றுச் செல்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுவது தான் திருநாங்கூர் பதினொரு கருட சேவை.
ஒவ்வொரு வருடமும் இந்தப் பெருமாள்களைப் பாடத் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு நேரே வருவதாக ஐதீகம்.
இந்தக் கருட சேவைக்கு முந்தைய நாள் நள்ளிரவில், திருநாங்கூர் வயல் வெளிகளில் காற்றினால்
நெற்பயிர்கள் சலசலவென ஓசையிடும்.
இந்த ஓசையைக் கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் நுழைந்துவிட்டதாக மக்கள் புரிந்து கொள்வார்கள்.
திருமங்கையாழ்வாரின் ஸ்பரிசம் பட்ட வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்படும் என்பது அவ்வூர் விவசாயிகளின் நம்பிக்கை.

திருநாங்கூர் 11 கருட சேவை உற்சவம் மூன்று நாள் உற்சவமாக நடைபெறுகிறது

1.தை அமாவாசை அன்று நடைபெறும் திருமங்கை ஆழ்வாரின் மஞ்சள் குளி உற்சவம்
2.தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் பதினொரு கருட சேவை
3.அதற்கு மறுநாள் பெருமாள்களும் ஆழ்வாரும் தத்தம் திருக்கோயில்களுக்குத் திரும்புதல்

திருநாங்கூர் பதினொரு கருட சேவை திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாகத்
தை அமாவாசையன்று திருமங்கையாழ்வாருக்கு மணிகர்ணிகை நதிக்கரையில் ‘மஞ்சள் குளி உற்சவம்’ நடைபெறுகின்றது.
மஞ்சள் குளி உற்சவம் என்றால் என்ன?
திருவரங்கத்தில் கார்த்திகை தீப நன்னாளில் ‘திருநெடுந்தாண்டகம்’ என்றழைக்கப்படும் முப்பது பாசுரங்களை இயற்றி
அரங்கன் முன்னே விண்ணப்பித்தார் திருமங்கையாழ்வார்.
அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த அரங்கன், ஆழ்வாரிடம், “உமக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்குத் திருமங்கை ஆழ்வார், “அரங்கா! உனக்கு மார்கழி மாதத்தில் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது,
வடமொழி வேதங்களை மட்டும் ஓதுகிறார்கள். அத்தோடு சேர்த்து நம்மாழ்வார் தந்த தமிழ் வேதமாகிய
திருவாய்மொழியையும் அந்த உற்சவத்தில் ஓதச் செய்யுமாறு அருள் புரிய வேண்டும்!” என்று வேண்டினார்.
அரங்கனும் அதற்கு இசைந்தார்.

வடமொழி மறை, தென்மொழி மறை ஆகிய இருமறைகளின் பாராயணத்தோடு வெகுசிறப்பாக அத்தியயன உற்சவம் நிறைவடைந்தது.
இவ்வுற்சவத்துக்கு ஏற்பாடு செய்த திருமங்கையாழ்வாரைப் பாராட்ட விழைந்தார் அரங்கன்.
ஒவ்வொரு வருடமும் தை அமாவாசையன்று, அரங்கன் மஞ்சள் நீரில் திருமஞ்சனம் கண்டருள்வது வழக்கம்.
அதற்கு மஞ்சள் குளி உற்சவம் என்று பெயர்.
“எனக்கு நடைபெறும் இந்த மஞ்சள்குளி உற்சவம் இனி திருமங்கையாழ்வாருக்கும் வருடா வருடம் நடைபெற வேண்டும்!”
என்று அருட்பாலித்தார் அரங்கன்.

அந்த வருடம் தை அமாவாசையன்று, திருமங்கையாழ்வாரைக் கொள்ளிடக் கரைக்கு அழைத்துச் சென்ற அரங்கன்,
ஆழ்வாருக்குத் தன் கையால் மஞ்சள் குளியலை நடத்தி வைத்தார்.
வெகுசிறப்பாக நடைபெற்ற அந்த மஞ்சள் குளி உற்சவத்தின் முடிவில், “அரங்கா! நீ கருணை கூர்ந்து இந்த உற்சவத்தை
எனக்காக நடத்தி வைத்தாய். ஆனால் எங்கள் ஊரில் வாழும் எனது அன்பர்கள், இவ்வளவு தூரம் தள்ளி வந்து
இக்காட்சியைக் காண இயலாதே!” என்று அரங்கனிடம் கூறினார் திருமங்கையாழ்வார்.

“உங்களது ஊரார் கண்டு களிக்கும்படி இந்த உற்வசத்தை அடுத்த ஆண்டு முதல் உங்கள் ஊரிலேயே நடத்தி விடலாம்!” என்றார் அரங்கன்.
திருமங்கையாழ்வார் திருநாங்கூருக்கு அருகிலுள்ள திருக்குறையலூர் என்னும் ஊரைச் சேர்ந்தவரானபடியால்,
அடுத்த வருடம் முதல் தை அமாவாசை அன்று திருநாங்கூரை ஒட்டி ஓடும் மணிகர்ணிகை ஆற்றங்கரையில்
திருமங்கையாழ்வாருக்கு மஞ்சள் குளி உற்சவம் நடைபெறத் தொடங்கியது.

மஞ்சள்குளி உற்சவம்

தை அமாவாசையன்று அதிகாலை 3 மணி அளவில், திருமங்கையாழ்வார் தனது மனைவி குமுதவல்லி நாச்சியாருடன்
திருவாலி திருநகரியில் இருந்து மஞ்சள்குளி உற்சவத்துக்காகப் புறப்படுகிறார்.
திருமங்கை ஆழ்வார் ஆராதித்த பெருமாளான சிந்தனைக்கு இனியானும் அவருடன் புறப்பட்டுச் செல்கிறார்.

முதலில் திருக்குறையலூரிலுள்ள உக்ர நரசிம்மப் பெருமாள் கோயிலை அடைந்து,
உக்ர நரசிம்மரை மங்களாசாசனம் செய்துவிட்டு,
அடுத்து,
தான் திருமால் அடியார்களுக்கு அன்னதானம் செய்த இடமான மங்கை மடத்தை அடைந்து,
அங்கே வீர நரசிம்மரையும் மங்களாசாசனம் செய்து,
அதைத் தொடர்ந்து,
திருநாங்கூரிலுள்ள திருக்காவளம்பாடிக்கு எழுந்தருளி, “காவளம்பாடி மேய கண்ணா!” என்று அங்குள்ள பெருமாளைப் பாடி,
அடுத்து
திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாளை, “திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே!” என்று பாடிவிட்டு,
நிறைவாகத்
திருப்பார்த்தன் பள்ளியில் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளை,
“பவள வாயால் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவானே!” என்று பாடிவிட்டு,
நண்பகல் 12 மணியளவில் திருநாங்கூர் மணிகர்ணிகை நதிக்கரையில் உள்ள மஞ்சள் குளி மண்டபத்தை
அடைகிறார் திருமங்கை ஆழ்வார்.

அங்கிருந்தபடி, தனக்கு வைணவ இலச்சினை அளித்த ஆசாரியனாகத் திகழும் நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாளை,

“குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும்
தலையார்ந்த இளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி
நிலையார நின்றான்தன் நீள்கழலே அடைநெஞ்சே!”–என்று பாடி விட்டு,
மஞ்சள் குளி உற்சவத்தை நடத்தி வைத்த திருவரங்கநாதனை மங்களாசாசனம் செய்கிறார் திருமங்கையாழ்வார்.

அந்தத் திருத்தலங்களில் இருந்து விசேஷமான மாலைகளும், பரிவட்டங்களும் ஆழ்வாருக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன.
மஞ்சள்குளி மண்டபத்தில், முதலில் திருமங்கை ஆழ்வார் ஆராதித்த பெருமாளான
சிந்தனைக்கினியானுக்கு ஸஹஸ்ர தாரைத் தட்டில் மஞ்சள் நீரால் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
பின், அதே ஸஹஸ்ர தாரைத் தட்டில் திருமங்கையாழ்வாரும் மஞ்சள் நீரால் திருமஞ்சனம் கண்டருள்கிறார்.
அதன்பின் விசேஷ அலங்காரங்கள் பெருமாளுக்கும் ஆழ்வாருக்கும் செய்யப்படுகின்றன.

அன்று மாலை 4 மணியளவில் அங்கிருந்து புறப்படும் திருமங்கையாழ்வார்,
திருநாங்கூர் மணிமாடக் கோயிலை அடைந்து,
“மணிமாடக் கோவில் வணங்கு என் மனனே!” என்று அப்பெருமாளைப் பாடி,
அதன்பின்
“நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே!” என்று
திருவண்புருடோத்தமப் பெருமாளைப் பாடி,
திருவைகுந்த விண்ணகரத்தில்,
“வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே!” என்று வைகுந்த நாதனைப் பாடி,
திருச்செம்பொன்செய் கோயிலில்,
“கடல்நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே!”
என்று செம்பொன் அரங்கரைப் பாடி,
திருத்தெற்றியம்பலத்தில் பள்ளிகொண்ட பெருமாளை,
“திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே!” என்று பாடி,
அரிமேய விண்ணகரத்தை அடைந்து,
“நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே!” என்று குடமாடு கூத்தரைப் பாடுகிறார்.

அன்று இரவு திருநாங்கூர் மணிமாடக் கோயிலை அடைகிறார் திருமங்கை ஆழ்வார்.
அங்கே அர்த்த ஜாம பூஜை நடைபெறுகிறது.
அடுத்த நாள் – தை அமாவாசைக்கு மறுநாள் காலை,
மணிமாடக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருமங்கையாழ்வாரிடம் மங்களாசாசனம் பெற்றுக் கொள்வதற்காக,
வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்த நாதப் பெருமாள்,
அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்,
திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள்,
திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்,
செம்பொன்செய்கோவிலின் செம்பொன் அரங்கர்,
திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்,
திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள்,
திருக்காவளம்பாடியின் கோபாலகிருஷ்ணன்,
திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள்,
திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன் ஆகிய
பத்து திவ்ய தேசத்துப் பெருமாள்களும் நாங்கூர் மணிமாடக் கோயிலை நோக்கிப் பல்லக்குகளில் வரத் தொடங்குவார்கள்.

ஆழ்வாரைக் காணும் ஆவலுடன் ஒவ்வொரு பெருமாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் வருவார்கள்.
பக்தனைக் காண்பதில்தான் பரமனுக்கு எத்தனை ஆனந்தம்!
திருமங்கை ஆழ்வார் கோயிலுக்குள்ளே வீற்றிருக்க, வெளியே பத்து பெருமாள்கள் அவருக்காகக் காத்து நிற்கிறார்கள்.
அப்போது அங்கிருக்கும் அடியார்களுள் சிலர்,
“இதென்ன தலைகீழாக உள்ளது? பக்தரான ஆழ்வாருக்காக பகவான் காத்திருக்கிறாரே!” என்று பேசிக் கொள்வார்களாம்!
ஆனால் பத்துப் பெருமாள்களும் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வார்களாம்,
“முப்பத்தேழு திவ்ய தேசத்துப் பெருமாள்கள் திருக்குருகூரில் புளியமரப் பொந்தில் யோகத்தில் அமர்ந்திருந்த
நம்மாழ்வாரைத் தேடிச் சென்று காத்திருந்து அவரிடம் இருந்து பாடல் பெற்று வந்தார்களல்லவா?
அவர்களெல்லாம் நம்மாழ்வாரிடம் பாடல் பெற்று திவ்ய தேசப் பெருமாள்கள் ஆகி விட்டார்கள்.
ஆனால், திருநாங்கூரில் உள்ள நமது பதினோரு கோயில்களையும் தனது பாசுரங்களால் பாடி,
திவ்ய தேசங்களாக ஆக்கிய ஆழ்வார் திருமங்கை ஆழ்வார். நம்முடைய ஆழ்வாருக்காக நாம் காத்திருக்க வேண்டாமா?” என்று.
பக்தன் மேல் இறைவன் கொண்டிருக்கும் அன்பை இதன் மூலம் அறிய முடிகிறதல்லவா?
அவ்வாறு காத்திருந்து, மணிமாடக் கோயிலுக்குள் வரிசையாகப் பத்துப் பெருமாள்களும் நுழைகிறார்கள்.
அவர்களுடன் மணிமாடக் கோவில் பெருமாளும் இணைவார்.
பதினோரு பெருமாள்களையும் மங்களாசாசனம் செய்யக் குமுதவல்லி நாச்சியாரோடு திருமங்கையாழ்வார் தயாராவார்.

ஒவ்வொரு பெருமாளும் வந்து ஆழ்வாருக்குக் காட்சியளிக்க,
அந்தப் பெருமாளைத் தமது பாசுரங்களால் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வார்.
அந்தப் பெருமாளை வலம் வந்துவிட்டு, மாலை உள்ளிட்ட பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு,
அடுத்த பெருமாளைப் பாடச் செல்வார் ஆழ்வார்.
இவ்வளவு நேரம் புறப்பாடுகளில் திருமங்கையாழ்வார் மெல்ல நகர்வதையும்,
ஒரே நேரத்தில் பதினோரு பெருமாள்களையும் தரிசித்தபின் அந்த மகிழ்ச்சியில்
ஆழ்வாரின் புறப்பாடு புதிய வேகம் எடுப்பதையும் இன்றும் கண்கூடாகக் காணலாம்!
இவ்வாறு வரிசையாகப் பதினோரு பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தவுடன்,
வண்புருடோத்தமம் திருத்தலத்தில் இருந்து அங்கே எழுந்தருளும் மணவாள மாமுனிகள்,

“வேல் அணைத்த மார்பும் விளங்கு திரு எட்டெழுத்தை
மால் உரைக்கத் தாழ்த்த வலச்செவியும்
தாளிணைத் தண்டையும் தார்க் கலியன் நன்முகமும்
கண்டு களிக்கும் என் கண்”
என்று பாடித் திருமங்கையாழ்வாரை மங்களா சாசனம் செய்வார்.

அதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில், ஒரே நேரத்தில் பதினோரு திவ்ய தேசத்துப் பெருமாள்களுக்கும்,
திருமங்கை ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் நடைபெறும்.
அப்போது பெருமாள் திருமங்கையாழ்வாரிடம்,
“ஆழ்வீர்! உமது பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தேன். நீங்கள் பாடிய பாடல்கள் யாவும் வேதத்துக்கு நிகரானவை.
எனவே இன்று இரவு வேத ஸ்வரூபியான கருடன் மேலேறி உங்களுக்கு காட்சி தர உள்ளேன்.

திருமங்கை மன்னரே! நீங்கள் வழிப்பறி செய்தாலும், என் அடியார்க்கு உணவளிப்பதற்காகவே அதைச் செய்தீர்கள்!
உங்களது உள்ளம் தங்கம் போல் தூய்மையாகத் திகழ்கிறது.
உங்களது தங்கம் போன்ற உள்ளத்தைப் பறைசாற்றும் வகையில் தங்கக் கருடன் மேல் ஏறி உங்களுக்குக் காட்சி தரவுள்ளேன்.
நீங்கள் பாடிய பெரிய திருமொழி என்னும் நூலில் பதினொரு சதகங்கள் உள்ளன.
அதற்கு இணையாகப் பதினோரு கருடன்கள் மேல் பதினோரு வடிவங்களுடன் நான் காட்சி தர உள்ளேன்!” என்று கூறுவார்.

மேலும், “மங்கை மன்னரே! அன்னப் பறவை எப்படித் தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால்,
தண்ணீரை விலக்கி விட்டுப் பாலை மட்டும் எடுத்துக் கொள்கிறதோ,
அதுபோல் நீங்களும் சாரமில்லாத உலக விஷயங்களை விலக்கிவிட்டு, சாரமாக இருக்கும் இறைபக்தியைக் கைக்கொண்டீர்கள்!
எனவே நீங்கள் அன்னப்பறவையின் மீது அமர்ந்து வந்து என்னைத் தரிசனம் செய்யுங்கள்!
அதுவே பொருத்தமாக இருக்கும்!” என்று திருமங்கையாழ்வாரிடம் கூறுவார் பெருமாள்.

பதினோரு கருடன்மேல் பதினோரு பெருமாள்கள் அன்றைய தினம் நள்ளிரவில், தோளுக்கினியானில்
மணவாள மாமுனிகள் முதலில் மணிமாடக் கோயிலில் இருந்து வெளியே வருவார்.
அவரைத் தொடர்ந்து, அன்னப்பறவை (ஹம்ஸ) வாகனத்தில், குமுதவல்லி நாச்சியாரோடு திருமங்கை ஆழ்வார் வெளியே வந்து,
பெருமாள்களை வரவேற்கத் தயாராக நிற்பார்.

1.மணிமாடக் கோயிலின் நாராயணப் பெருமாள்
2.அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்
3.செம்பொன்செய்கோயிலின் செம்பொன் அரங்கர்
4.திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்
5.திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள்
6.திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்
7.திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள்
8.வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்
9.திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள்
10.திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன்
11.திருக்காவளம்பாடியின் கோபால கிருஷ்ணன்

ஆகிய பதினோரு பெருமாள்களும் விசேஷ அலங்காரங்களோடு தங்கக் கருட வாகனங்களில்
திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் இருந்து புறப்படுவார்கள்.
பதினோரு பெருமாள்கள் மங்களாசாசனம் பெறும் வரிசை பற்றி அழகான வடமொழி ஸ்லோகம் ஒன்று உள்ளது.

“நந்தாதீப கடப்ரணர்தக மஹாகாருண்ய ரக்தாம்மக
ஸ்ரீ நாராயண புருஷோத்தமதி ஸ்ரீ ரத்னகூடாதிபாந் |
வைகுண்டேஸ்வர மாதவௌ ச கமலாநாதம் ச கோபீபதிம்
நௌமி ஏகாதசாந் நாகபுரி அதிபதீந் ஸார்தம் கலித்வம்ஸிநா ||”

இதன்பொருள்: மணிமாடக் கோயிலின் நாராயணப் பெருமாள், அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்,
செம்பொன்செய்கோயிலின் செம்பொன் அரங்கர், திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்,
திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள், திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்,
திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள், வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்,
திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள், திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன்,
திருக்காவளம்பாடியின் கோபாலகிருஷ்ணன்
ஆகிய பதினோரு பெருமாள்களையும்
திருமங்கை ஆழ்வாரையும் வணங்குகிறேன்.

மணிமாடக் கோயிலிலிருந்து வரிசையாக வெளியே வரும் ஒவ்வொரு பெருமாளுக்கும் கோயில் வாசலில்
விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது.
ஒவ்வொரு பெருமாளாகத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்வார்.
பதினோரு பெருமாள்களுக்கும் மங்களாசாசனம் ஆனபின், கருட வாகனத்தில் வீதியுலா செல்லும் பெருமாள்களைப் பின்தொடர்ந்து,
ஹம்ஸ வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் செல்வார்.

ஆழ்வாரின் பாடல்களைப் பெற்று அவருக்கு அருள்புரிந்தாற்போல், ஊர்மக்களுக்கும், உற்சவத்தைத் தரிசிக்க வந்த
அடியார்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்ற எண்ணத்தில், பக்தர்கள் வெள்ளத்துக்கு மத்தியில்,
பதினோரு பெருமாள்களும் கருட வாகனத்தில் திருநாங்கூர் மாட வீதிகளைச் சுற்றி
மேளவாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் வலம் வருவார்கள்.

இந்த 11 கருட சேவையைத் தரிசிக்கும் அடியார்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில்
பதினோரு திவ்ய தேசங்களைத் தரிசித்த பலன் கிட்டும் என்பது பெரியோர்களின் வாக்கு.

————-

மூன்றாம் நாள் உற்சவம் திருமங்கை ஆழ்வார் திருநகரிக்குத் திரும்புதல்
11 கருட சேவை உற்சவம் நடைபெற்ற மறுநாள் காலை, மணிமாடக் கோயிலிலிருந்து புறப்பட்டு,
அந்தந்தப் பெருமாள்கள் தத்தம் திருத்தலங்களுக்கு மீண்டும் எழுந்தருள்வார்கள்.

காலையில் மணிமாடக் கோயிலில் திருமஞ்சனம் கண்டருளும் திருமங்கையாழ்வார், மாலையில் குமுதவல்லியுடன் புறப்பட்டு,
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாளை,
“அண்ணா அடியேன் இடரைக் களையாயே!” என்று மங்களாசாசனம் செய்து,
திருத்தேவனார்தொகை மாதவப் பெருமாளை,
“தேதென என்றிசைப் பாடும் திருத்தேவனார்த் தொகையே!” என்று பாடி,
திருவாலியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலட்சுமிநரசிம்மப் பெருமாளை “திருவாலி அம்மானே!” என்று பாடிவிட்டுத்
தனது இருப்பிடமான திருநகரியை அடைவார்.
திருநகரியில் எழுந்தருளியிருக்கும் வயலாளி மணவாளன் எனப்படும் பெருமாள், கருட வாகனத்தில் வந்து,
ராஜகோபுரத்தின் முன்னே திருமங்கையாழ்வாரையும் குமுதவல்லியையும் எதிர்கொண்டு அழைப்பார்.

“கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீள் வயல் சூழ் வயலாலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே!”–என்று திருமங்கையாழ்வார் பாடி,
வயலாலி மணவாளனோடு திருக்கோயிலுக்குள்ளே எழுந்தருளுவதோடு,
இந்தப் பதினோரு கருட சேவைத் திருவிழா இனிதே நிறைவடையும்.

சிறப்பம்சங்கள்
பக்தர்கள் இறைவனை நாடிச் செல்வது வழக்கமாய் இருக்க, இங்கே இறைவன் பக்தரைத் தேடி வருகிறார்.
ஆம்! திருநாங்கூரிலுள்ள பதினோரு திருத்தலங்களுள் ஒன்றான மணிமாடக் கோயில் திருமங்கையாழ்வார் அமர்ந்திருக்க,
மீதமுள்ள பத்துத் திருத்தலங்களின் பெருமாள்களும் ஆழ்வாரைத் தேடி வந்து, காத்திருந்து, அவரிடம் பாடல் பெற்றுச் செல்வார்கள்.

* திருமங்கையாழ்வார் அருளிய தமிழ்ப் பாசுரங்கள் யாவும் வேதத்துக்கு நிகரானவை என்பதால்,
வேத ஸ்வரூபியாக இருக்கும் கருடனின் மேல் வந்து காட்சி தந்து பாடல் பெற்றுக் கொள்கிறார் பெருமாள்.

* திருமங்கை ஆழ்வாரின் பொன்போன்ற உள்ளத்தைப் பறைசாற்றும் வகையில் தங்கக் கருடன் மேல் திருமால் காட்சி தருகிறார்.
திருமங்கை ஆழ்வார், பதினோரு சதகங்களை உடைய பெரிய திருமொழி என்னும் பிரபந்தத்தால் திருமாலைத் துதி செய்தார்.
சதகம் என்பது நூறு பாடல்களின் தொகுப்பைக் குறிக்கும்.
1084 பாடல்களை உடைய பெரிய திருமொழியில் பதினோரு சதகங்கள் உள்ளன.
அந்தப் பதினோரு சதகங்களுக்கு இணையாகத் திருமாலும் பதினோரு கருடன்கள் மேல் ஆழ்வாருக்குக் காட்சி அளிக்கிறார்.

* இறைவன் கருட சேவை கண்டருள்வதோடு மட்டுமின்றி, அந்த இறைவனைக் காட்டித் தந்த ஆழ்வார் அன்ன வாகனத்திலும்,
அந்த ஆழ்வாரின் பாசுரங்களுக்கு விளக்கவுரை தந்த ஆசாரியர் தோளுக்கினியானிலும் சேர்ந்து எழுந்தருள்வது
இந்த உற்சவத்தின் மற்றொரு சிறப்பு.

கடந்த பதினேழு ஆண்டுகளாக, பதினோரு கருட சேவைக்கு மறுநாள்,
திருநாங்கூருக்கு அருகிலுள்ள திருவெள்ளக்குளம் எனப்படும் அண்ணன் கோவிலில்,
ஸ்ரீஅண்ணன் பெருமாள் திருமண மண்டபத்தில், திருமாலின் பெருமைகளையும்,
திருமங்கை ஆழ்வாரின் பெருமைகளையும் பற்றிச் சான்றோர்கள் பங்கேற்று உரையாற்றும்
‘கலியன் ஒலி மாலை’ என்னும் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சித்ரகூடம் ரங்காச்சாரியார் சுவாமிகளின் தலைமையில்,
கோயில் ஸ்ரீ மான். சடகோப கல்யாணராமன் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் ஒரே சமயத்தில் பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் ஒன்று கூடி
இறைவனை வணங்கும் ஒப்பற்ற உற்சவமாகிய இந்தப் பதினோரு கருட சேவை விழாவில் பங்கேற்று,
தங்கக் கருட வாகனத்தில் காட்சி அளிக்கும் பதினோரு பெருமாள்களையும், கருடன்களையும்,
அன்ன வாகனத்தில் வரும் திருமங்கையாழ்வார் – குமுதவல்லி நாச்சியாரையும்,
மணவாள மாமுனிகளையும் கண்ணாரக் கண்டு, மனதாறத் தொழும் அனைத்து அன்பர்களுக்கும்
உடல்நலம், மன அமைதி, நீண்ட ஆயுள், ஆற்றல், பொலிவு ஆகியவை பெருகும். நினைத்த நற்செயல்கள் கைகூடும்.
நோய்கள் அகலும். நற்செல்வம் பெற்றுப் பல்லாண்டு வாழ்வர் என்பதில் ஐயமில்லை.

—————

தை அமாவாசையை ஒட்டி மூன்று நாட்கள் சீர்காழி அருகில் உள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை நடக்கும்.
முதல் நாள் திருமங்கையாழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு
ஸ்ரீ நாராயணப் பெருமாளிடம் தொடங்கி,11 திவ்யதேசங்களையும் மங்களாசாஸனம் செய்யும் விழா நடைபெறும்.

அடுத்த நாள் ஸ்ரீ திருமங்கை யாழ்வார் ஹம்ஸ வாஹன உத்ஸவமும் நடக்கும்.

முதல் நாள் அதிகாலை 1 மணிக்கு ஸ்ரீ திருமங்கை யாழ்வார்
திருநகரியிலிருந்து புறப்பட்டு
திருக் குறை யலூர்,
திருமங்கை மடம்,
1. திருக்காவளம்பாடி, ஸ்ரீகோபாலன்.
2. திருமணிக்கூடம், ஸ்ரீவரதராஜன்
3. திருப்பார்த்தன் பள்ளி ,ஸ்ரீபார்த்தசாரதி ஆகிய திவ்யதேசங்களுக்கு
சென்று மங்களாசாஸனம் செய்து விட்டு, மஞ்சள் குளி மண்டபம் எழுந்தருளுவார்.

அங்கு திருநறையூர் நம்பியையும், ஸ்ரீ ரங்கம் அழகிய மணவாளனையும் மங்களாசாஸனம் செய்த பிறகு
திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமுறை நடைபெறும்.
அருகில் இருக்கும் நதியில் இருந்து நீர் எடுத்து வந்து திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருமஞ்சனம் முடிந்த பின் திருமங்கையாழ்வார் தன் மனைவியார் குமுத வல்லி நாச்சியாரின் வஸ்திரத்தைத்
தலையில் சூடிக் கொள்கிறார்.
தன்னைக் கடைத் தேற்றிய குமுதவல்லிநாச்சியாரை உயர்த்த அந்த வஸ்திரத்தை அணிந்து கொள்கிறார்.

மாலை 6 மணிக்கு ஆரம்பித்து திருநாங்கூரிலிருந்து புறப்பட்டு,
4.மணிமாடக்கோயில், -ஸ்ரீநாராயணப்பெருமாள்
5.வண்புருடோத்தமம், -ஸ்ரீவண்புருடோத்தமப் பெருமாள்
6.வைகுந்த விண்ணகரம் – ஸ்ரீவைகுண்டநாதர்,
7.செம்பொன்செய் கோயில்,- ஸ்ரீசெம்பொன்னரங்கர்
8.திருத்தெற்றி யம்பலம்-ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள்
9.அரிமேய விண்ணகரம் -ஸ்ரீகுடமாடுகூத்தர்
ஆகிய திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களா சாஸனம் செய்து முடித்து
இரவு மணிமாடக்கோயி லுக்கு எழுந்தருளிய பின் அர்த்த ஜாமம் நடைபெறும்.

இரண்டாம் நாள் பகலில் சுமார் 12 மணி அளவில் மேற்கண்ட 9 திவ்யதேசத்து எம்பெருமான்களுடன்
10 திருவெள்ளக்குளம்,_ ஸ்ரீஅண்ணன் பெருமாள்
11 திருத்தேவனார் தொகை_ ஸ்ரீமாதவப்பெருமாள்
ஆக 11 திவ்ய தேசத்து எம்பெருமான்களும் மணி மாடக்கோயில் முன் பந்தலில் எழுந்தருளுவர்.
அவர்களை ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வார்.

ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாள் ஸந்நிதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமணவாளமாமுனிகள்
ஸ்ரீ திருமங்கையாழ்வாரை மங்களாசாஸனம் செய்வார்.
மாலை பதினொரு திவ்யதேசத்து எம்பெருமான்களுக்கும் மற்றும்
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கும் திருமஞ்சனம் நடை பெறும்.
இரவு பதினொரு எம்பெருமாளுக்கும் கருட சேவையும்,
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கு ஹம்ஸ வாஹன உத்ஸவமும்
ஸ்ரீ மணவாள மாமுனிகள்
திருவீதி புறப்பாடும் நடைபெறும்.

மூன்றாம் நாள் காலை மணிமாடக் கோயிலில் ஸ்ரீ திருமங்கை யாழ்வாருக்கு திருமஞ்சனம்,
திருப்பாவை சாற்றுமுறை, நடைபெறும்.
பிறகு காலையில் 11 மணியளவில் புறப்பட்டு
திருவெள்ளக் குளம்,
திருததேவனார்தொகை,
திருவாலி ஆகிய
திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம் செய்து திருநகரி சேர்வார்.

இரவு திருநகரியில்
ஸ்ரீ வயலாலி மணவாளன் கருடசேவையும்
ஸ்ரீதிருமங்கையாழ்வார் மங்களாசாஸனமும்
நடைபெறும்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அரவந்தவல்லித்தாயார் ஸமேத ஸ்ரீ பதரி நாராயணன்–

December 15, 2021

கூர்மாதின் திவ்ய லோகான் ததுமணி மண்டவம் தத்தரு சேஷம்
தஸ்மின் தர்மாதி பீடம் சதுமரி கமலம் க்ராஹஹ க்ராஹஹநிம்ச
விஷ்ணும்தே விபூஷா ஷினாதே வைனதேயம்
சேநேசத்துவார பாலன் விஷ்ணு முகத்தான் பிரபத்தியே !!

ஸ்ரீ அரவந்தவல்லித்தாயார் ஸமேத ஸ்ரீ பதரி நாராயணன் திருவடிகளே போற்றி போற்றி !!!

திவ்யதேசம் திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்), அஷ்டாக்ஷர க்ஷேத்திரம், விஷாலபுரி
மூலவர் பத்ரி நாராயணன்
உத்ஸவர்
தாயார் அரவிந்தவல்லித்தாயார்
திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம்
திசை கிழக்கு
பாசுரங்கள் 22
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 21-பெரியாழ்வார் -1-

இத்தலம் வடநாட்டு திவ்யதேசங்களில் மிக முக்கியமான பத்ரிகாச்ரமம் எனப்படும் பெரும் திவ்ய தேசமாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் இமய மலையில் பனிபடர்ந்த சூழலில், மலையின் மத்தியில்,
எழில்மிக்க ரம்யமான மலைச்சிகரங்களுக்கு நடுவில், நர நாராயண பர்வதத்தின் மடியில்,
பவித்திரமான அலகநந்தா நதிக்கரையில், அலகநந்தாவும், தோலி கங்காவும் சங்கமமாகும்
பத்ரிநாத் மலைச் சிகரங்களின் மத்தியில், நீலகண்ட சிகரத்தின் பக்கத்தில்,
இலந்தை மரக்காடுகள் நிறைந்து விளங்கும் இடத்தில் அமைந்துள்ளது.
அலகநந்தாவின் கரையில்தான் கோவில் அமைந்துள்ளது.
இந்த க்ஷேத்திரம் தேவபூமி என்ற பெயருடன் வணங்கப்பட்டு வருகிறது.
பத்ரி என்றால் இலந்தை என்று பொருள்.

பத்ரிநாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும் தீர்த்தம் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும்.
தொடக்கூட முடியாத அளவில் வேகமாகவும், மிகக்குளிர்ந்த நிலையிலும்,
அலகநந்தா பக்கத்திலேயே ஓடிக்கொண்டு இருக்கும் போது இந்த வெந்நீர் ஊற்று மிகவும் ஆச்சர்யமான ஒன்றாகும்.
அதற்கான காரணம் இன்னும் அறியப்படாததும் மேலும் ஆச்சர்யம் தரும்.
தப்தகுண்டத்தின் நீர் எப்பொழுதும் சூடாக வருகிறது. இது பத்ரி யாத்ரிகர்களுக்கு எம்பெருமானின் அனுக்கிரகம்.
இந்தக் குளிர்ந்த இடத்திலும் பக்தர்கள் குளித்து, தரிசிக்க வசதியாக உள்ளது.

தப்த குண்டத்தில் நீராடிவிட்டு சில படிகள் ஏறிச்சென்றதும் சிம்ம துவாரத்தில் இருக்கும் கருடாழ்வார் நமக்கு காட்சி தருகிறார்.
கருடாழ்வாரைத் தரிசித்துவிட்டுத் தான் பத்ரிநாராயணன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.
இங்கு
பத்ரி நாராயணன்,
கருடாழ்வார்,
நாரதர்,
உத்தவர்,
குபேரன்,
நரன் மற்றும் நாராயணன் முதலானோர் மிக்க பேரெழில் பொங்க வீற்றிருக்கின்றனர்.

பத்ரி நாராயணர், இலந்தை மரத்தின் கீழ், ஜடாபரிதனாய், நான்கு திருக்கரங்களுடன், (சதுர் புஜங்களுடன்),
கிழக்கு நோக்கி மேல் வலது திருக்கரத்தில் சக்கரமும், மேல் இடது திருக்கரத்தில் சங்கும்,
கீழ் வலது இடது திருக்கரங்களை யோக முத்திரையாக் கொண்டு,
மார்பில் ஸ்ரீவத்ஸ சின்னத்துடன்,
பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மூர்த்தியாக
வீற்று இருந்து தபஸ்வி வேஷத்தில் காட்சி கொடுக்கிறார்.

பகவானின் வலப்புறம் குபேரனும், கருடனும் அமர்ந்திருக்கிறார்கள்.
இடப்புறத்தில் தேவரிஷி நாரதர், உத்தவர், நாராயணர், நரர் முதலியோர் உள்ளனர்.

ஸாளக்கிராமச் சிலையாலான மூலமூர்த்தி, மற்றவையெல்லாம் உத்ஸவ மூர்த்திகளே.

தெற்குப் பிரகார ஆரம்பத்தில் அனுமான் சந்நிதிக்குப் பிறகு வடக்கு நோக்கியுள்ள தாயார் சந்நிதியில்,
மகாலக்ஷ்மி (அரவிந்த வல்லித்தாயார்) தரிசனம் அளிக்கிறாள்.
பிராகாரத்தில் ஆதிசங்கரருக்குத் தனி சந்நிதி உள்ளது.
கோவிலின் பின்புறம் லக்ஷ்மி நரசிம்ஹருக்கு ஒரு தனிக்கோவில் உள்ளது,
அதில் இராமானுஜருக்கும், சுவாமி தேசிகனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு.

இங்கு எம்பெருமானுக்கு நடைபெறும் சகல விதமான பூஜைகளும், திருமஞ்சனம், திருவாராதனம், சாத்துமுறை,
மக்களுக்கு எதிரிலேயே, திரை எதுவும் போடாமல் பக்தர்கள் நேரடியாக காண்பதற்கு ஏதுவாக
கேரளத்தை சேர்ந்த நம்பூத்ரிகளே தலைமை அர்ச்சகராக இருந்து நடைபெறுகின்றன.

தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு, திருமஞ்சனம் செய்து
நம்பூதிரி சாளக்கிராம சிலையிலான மூல மூர்த்திக்கு ஆரத்தி செய்து,
ஒவ்வொரு அங்கத்தையும் தரிசனம் செய்து வைத்து விளக்கம் அளிக்கிறார்.
இங்கு இரவில் பெருமாளுக்கு சாந்தி பஞ்சகம் என்னும் பூஜை நடைபெறும். அ
ப்போது எம்பெருமானின் ஆடைகளையும், மாலைகளையும் களைவர்.
இவ்வாறு எம்பெருமானின் ஆடைகள் மற்றும் மாலைகளை களைந்துவிட்டு சிறிய துண்டு ஒன்றை அணிவிப்பர்.
இந்நிகழ்ச்சிக்கு கீதகோவிந்தம் என்று பெயர்.
இந்த பூஜை நடைபெறும் சமயம் எம்பெருமானின் பக்கத்தில் அமர்ந்தே பூஜை நிகழ்ச்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும்.

இங்கு கோவிலின் வடபுறம் அலகநந்தாவின் கரையில் பிரம்ம கபாலம் என்னும் ஒரு இடம் உள்ளது.
இங்குள்ள ஒரு பெரிய பாறையில் பித்ருக்களுக்கு, கயா ஸ்ராத்தம் போல், இங்கும் ஸ்ராத்தம் செய்யப்படுகிறது.
பத்ரிநாராயணனுக்கு காலையில் நிவேதனம் செய்துவிட்டு, பித்ருக்களுக்கு கொடுக்கும் பிண்டம் எனப்படும் பிரசாதத்தை,
கோவிலிலேயே கொடுப்பார்கள்.
இவ்விடத்தில் ஸ்ராத்தம் செய்தால் நம் முன்னோர்களின் அனைத்து தலைமுறையினர்க்கும் மோக்ஷம் கிடைப்பதாக ஐதீஹம்.

பத்ரிநாத் க்ஷேத்திரத்தில் பஞ்ச தீர்த்தங்கள் உள்ளன.
அவை,
தப்த குண்டம்,
பிரகலாத குண்டம்,
நாரத குண்டம்,
கூர்ம தாரா மற்றும் ரிஷிகங்கா.

இதில் தப்த குண்டத்தில், அக்னி வாசம் செய்வதாக வரலாறு.
தப்த குண்டத்தின் கீழ் பாகத்தில் மார்க்கண்டேய சிலை உள்ளது.
மார்க்கண்டேய முனிவர் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மார்க்கண்டேய சிலைக்குப் பக்கத்தில் நரசிம்ம பகவான் சிலை உள்ளது.

கூர்ம தாரா தீர்த்தம் அன்னதான பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

நீலகண்ட மலைக்குக் கீழே, மூன்று கி.மீ. தூரத்தில் சரண பாதுகை உள்ளது.
இங்கு எம்பெருமானின் திருவடிகளை தரிசனம் செய்யலாம்.

பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள வியாச குகை, கணேச குகை, பீமர் பாலம் முதலியவை
மானா கிராமத்தில் உள்ள முக்கியமான புனித இடங்கள்.
இந்த மானா கிராமம் இந்தியாவின் கடைசி கிராமமாக கருதப்படுகிறது,
அதற்கு பிறகு திபெத். இங்கே கொஞ்சம் கீழே சரஸ்வதி நதி ஓடுகிறது.
சரஸ்வதி நதி இங்கே பூமிக்குள் சென்று, திரிவேணி சங்கமத்தில் ( அலஹாபாத் பிரயாகை) மீண்டும்
வெளிவருவதாக நம் புராணங்களும் வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன.
இவற்றை தவிர, பத்ரியில் வஸுதார என்ற பனித்திவலைகள் விழும் நீர்வீழ்ச்சியும் உண்டு.
அந்த நீர்திவிலைகள் நம் மேல் படும் போது புண்ணியம் தரும் என்று நம்பப் படுகிறது.

பத்ரிகாச்ரம் பற்றி குறிப்பிடுகையில் “பஞ்ச பத்ரி” என்று ஐந்து பத்ரி பற்றி சொல்லப்பட்டுள்ளது.
பெரும்பாலானவை இறுதியில் 4 அல்லது 5 கிமீ, போல் நடைப் பயணத்தின் மூலமாகவே அடைய வேண்டி உள்ளது.
புருஷசூக்தம் ஸ்லோகத்தை இயற்றிய நாராயணர், இந்த ஐந்து இடங்களில் தவம் இருந்ததாக சொல்வர்.
அவை,
யோக பத்ரி,
வ்ருத்த பத்ரி,
த்யான பத்ரி,
தபோ பத்ரி மற்றும்
பவிஷ்ய பத்ரி.

வ்ருத்த பத்ரி
அலகநந்தாவின் அழகான பள்ளத்தாக்கு , மிகவும் ரம்யமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார்.
ஆதி சங்கரர் இங்கு பூஜைகள் செய்தார்.

த்யான பத்ரியில்
பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.

யோக பத்ரியில்
தியான மந்திர் அமைந்துள்ளது. அங்கே, கோயில் கருவறையில் யோக த்யானீ பகவான்
தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார்.

த்யானபத்ரி, யோகபத்ரி இரண்டும் ஒன்று, பாண்டுகேஸ்வரில் உள்ளது, என்று சொல்பவர்கள் உண்டு.
அவர்கள், இதனைத் தவிர, ஆதிபத்ரி என்று இன்னொரு ஸ்தலமும் கர்ண ப்ரயாகை அருகில் சொல்லப்படுகிறது.

பவிஷ்ய பத்ரி
தபோவனில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு அகத்தியர் வழிபட்டதாகவும்,
கலியுகத்தில் தாம் இங்கு எழுந்தருளப் போவதாகவும் சொல்லப் படுகிறது.
வரும் காலத்தில், இயற்கையின் சீற்றத்தின் காரணமாக மக்கள் பத்ரிநாத் சென்று அடைவது இயலாது போகும் என்றும்,
அது சமயம் பத்ரி நாராயணன், பவிஷ்ய பத்ரியில் எழுந்தருளி பூஜைகளை ஏற்று அருள்பாலிப்பார் என்று கூறப்படுகிறது.

தபோ பத்ரி தான் இன்றைய பத்ரிநாத், அல்லது பத்ரி விஷால் என்றும் அழைக்கப்படுகிறது

தப்த குண்டம் :
அக்னி பகவான் ஒரு நாள் உணவில் நெய் அதிகமாக சேர்த்துக் கொண்டார்.
இதனால் அவருக்கு ஏற்பட்ட அஜீரண பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று விஷ்ணுவிடம் வேண்டினார்.
விஷ்ணு, அக்னி பகவானை, தண்ணீராக மாறச் செய்து, அந்தத் தண்ணீரில் பக்தர்கள் நீராடினால்
அவருடைய பாவமெல்லாம் நீங்கும் என்றும், அதனால் அக்னி பகவானின் அஜீரண கோளாறும் நீங்கும் என்றும் வரமளித்தார்.
அந்த சம்பவத்திற்குப் பின் தான் அக்னி பகவான், நீர் ஊற்றாக எடுத்து தப்த குண்டத்தில் பாய்ந்தார் என்கிறது புராணம்.
சூடான நீர் ஓடும் இந்த தப்த குண்டத்தில் நதிக்கு அருகில் உள்ள அலகாநந்தா நதியில் தொட முடியாத அளவிற்கு
குளிர்ந்த நிலையில் நீர் இருப்பது அதிசயமான ஒன்று.

நாரதர் :
வ்ருத்த பத்ரி நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம்.
இங்குதான் நாரதர் தவம் செய்தார் என்பதும் அவருக்கு அங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு.
நாரதர் தான் இந்தக் கோவிலுக்கு அடிகோலினார் என்றும்,
பின்னாளில் ஆதி சங்கரர் இங்கு பூஜைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

குபேரன் :
மஹாலக்ஷ்மியை திருமணம் முடிக்க எம்பெருமான் இங்கு குபேரனை அழைத்து
விமரிசையாக தன்னுடைய திருமண ஏற்பாட்டை செய்த திருத்தலம்.
அதனால், குபேரனும் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார்.

ப்ரம்ம கபாலம் :
சிவனுக்கும், பிரம்மனுக்கும் முன்னொரு காலத்தில் ஐந்து தலைகள் இருந்தன.
சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார்.
இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது.
அவர் கிள்ளி எடுத்த பிரம்மனின் தலை கையை விட்டு கீழே விழவில்லை.
சிவன், விஷ்ணுவிடம் இதற்கு பரிகாரம் கேட்டபோது, ‘பூலோகத்தில் ஒரு பதி விரதையிடம் பிச்சையினை பெற்றால்’,
பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிடும் என்று கூறினார்.
சிவபெருமான், பூலோகத்தில் பத்ரி ஆசிரமத்தில் நாராயணருக்கு உதவி செய்து கொண்டிருந்த மஹாலக்ஷ்மியிடம் சிவன் பிச்சை கேட்க,
மகாலட்சுமி பிச்சை அளித்ததும் சிவபெருமானின் கையில் இருந்த பிரம்மனின் தலை கீழே விழுந்தது.
அந்த இடம்தான் இன்று பத்ரிநாத்தில் பிரம்ம கபாலம் என்று அழைக்கின்றனர்.
இதனால் இந்த இடத்தில் பித்ருக்களுக்கு பிண்டம் வைப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

ஹனுமான் :
பத்ரிநாத் செல்லும் வழியில் ஹனுமான் கட்டி என்ற ஓர் இடம் உள்ளது.
இங்கு பீமனும் அனுமனும் சண்டையிட்டதாகக் கூறுவர்.
ஹனுமான் கட்டியைத் தாண்டி சுமார் 4 கி.மீ. சென்றதும் பத்ரிகாஸ்ரமம் காட்சி தரும்.

உத்தவர் :
ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பத்ரிகாசிரமத்தை தனது ஆச்ரமமாகக் குறிப்பிட்டுக் கூறி
உத்தவரை அங்கு சென்று, தனது திருவடி தீர்த்தமான அலகநந்தாவின் புனித தீர்த்தத்தால் மேலும் புனிதமடைய வேண்டும் என்று உபதேசித்தார்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கிருஷ்ண அவதாரம் முடித்துக் கொண்டு, வைகுண்டம் செல்ல நினைக்கும் போது,
தனது நண்பரும், அமைச்சரும், பரம பக்தருமான உத்தவர், கிருஷ்ணைரை சந்தித்து,
தன்னையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வேண்டினார்.
உத்தவருக்கும், அருச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்தது போன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,
உத்தவருக்கு உத்தவ கீதை எனும் ஆத்ம உபதேசம் செய்கிறார்.
பின்னர் உத்தவரிடம், உன் வாழ்நாள் காலம் முடிந்த பின் வைகுண்டம் வரலாம் என்றும்,
அதுவரை பத்ரி சென்று தங்கி பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் இறுதியில் வைகுந்தம் வந்தடைய ஆசி வழங்கினார்.
கிருஷ்ணர் கூறியபடி, உத்தவர் பத்ரிநாத் சென்று பதரி ஆசிரமத்தில் தங்கி, பகவானை தியானித்துக் கொண்டு,
வாழ்நாள் முடிந்த பின் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார்.

வியாசர் :
இந்த மலையில், மணிபத்ரபூர் என்ற மானா கிராமத்தில், ஒரு குகையில் அமர்ந்து வியாசர் மகாபாரத புராணத்தை இயற்றினார்.
வியாச குகைக்கு எதிரில் உள்ளது. இந்த குகை புராதனப் பெருமையைப் பறை சாற்றியபடி அமைந்திருக்கிறது.
இந்த குகைக்குள் அமர்ந்தபோதுதான் வியாசப் பெருமானுக்கு மகாபாரத காவியம் மனதில் ஊன்றியது.
வியாச மகரிஷி, மகாபாரதத்தைச் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமான் இங்கு அமர்ந்துதான் அதை அப்படியே எழுதியிருக்கிறார்.
உற்பத்தியான சந்தோஷத்தில் பேரிரைச்சலுடன் சரஸ்வதி பிரவாகம் எடுத்ததாகவும்,
அதனால் வியாசர் சொன்ன மகாபாரதம், விநாயகர் காதுகளில் தெளிவாக விழவில்லை என்றும்,
ஆகவே வியாச முனிவர் நதியை மறைந்து போகச் செய்து விட்டார் என்றும் ஒரு விளக்கம் இங்கே சொல்லப்படுகிறது.

பாண்டு :
இது பாண்டவர்கள் பிறந்த இடமாகவும்,
அவர்களது தந்தையான பாண்டு மகாராஜா தவம் செய்த இடமாகவும் கருதப்படுகிறது.
பீமன் கட்டிய பீம்பாலம் வழியாகத் தான் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் சென்று முக்தி அடைந்தார்கள்
என்று இங்கு நிலவும் செவி வழி செய்தி.

ஆதி சங்கரர்:
எம்பெருமானின் உத்திரவு படி பிரம்மா முதலிய தேவர்கள், அலகானந்தா, நாரத குண்டத்தில் இருந்த
பகவானின் திவ்ய மங்கள மூர்த்தியை (விக்ரகம்) வெளியில் எடுத்து, பத்ரிநாத்தில் ப்ரதிஷ்டை செய்து
அன்று முதல் தேவர்களாலும், மனிதர்களாலும் பகவான் பத்ரிநாத் ஆராதிக்கப்பட்டு வந்தார்.
இடையில் இதற்கு தடை ஏற்பட்டு, விக்ரகம் மறைந்தது.
ஆதிசங்கரர் பத்ரிநாத் வந்தபோது, அவர் கனவில் தோன்றிய எம்பெருமானை,
ஆதிசங்கரரே மீண்டும் நாரத குண்டத்தில் இருந்து மீட்டு மறுபடியும் பத்ரியில், முன்னர் இருந்த கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.
இதனால் தான் இன்னும் ஆதிசங்கரர் அவதரித்த கேரளா மாநிலத்தில் இருந்து வரும் நம்பூதிரிகளால்,
அவரால் ஏற்படுத்தப்பட்ட ஆராதன முறைப்படி ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிரஸித்த அபிமான திவ்ய தேசங்கள் —

December 15, 2021

அரியாய அம்மானை அமரர் பிரானை
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே –

———-

ஸ்ரீ பிரஸித்த அபிமான திவ்ய தேசங்கள்
1-ஸ்ரீ திரு நாராயண புரம் -மேல்கோட்டை
2-ஸ்ரீ தொண்டனூர் –
3-ஸ்ரீ ரெங்கப்பட்டணம்
4-ஸ்ரீ சிஞ்சன்கட்டாவும் மிதுன சாளக்கிராமம்
5-ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணன் கோயில்
6-ஸ்ரீ மயிலாப்பூர் -மயூர க்ஷேத்ரம்
7-ஸ்ரீ குச லவ புரி -கோயம்பேடு
8-ஸ்ரீ பூவிருந்த வல்லி
9-ஸ்ரீ பச்சை வாரணப் பெருமாள் கோயில்
10-ஸ்ரீ மழலை மங்கலம் ஸ்ரீ மதுர மங்கலம்
11-ஸ்ரீ திரு மழிசை
12- ஸ்ரீ அப்பன் கோயில்
13-ஸ்ரீ திருக்குறையலூர்
14-ஸ்ரீ பெரும் புதூர்
15-ஸ்ரீ மதுர மங்கலம்
16-ஸ்ரீ கூரம்
17-ஸ்ரீ திரு முக்கூடல்
18-ஸ்ரீ மதுராந்தகம் –
19-ஸ்ரீ மலவையாவூர் -ஸ்ரீ திருமலை வையாபுரி
20-ஸ்ரீ உத்திர மேரூர்
21-ஸ்ரீ சிங்கிரி கோயில்
22-ஸ்ரீ சிங்கப்பெருமாள் கோயில்
23-ஸ்ரீ மதுராந்தகம்
24-ஸ்ரீ திருவஞ்சிக்களம்
25-ஸ்ரீ குருவாயூர்
26-ஸ்ரீ வர்க்கலா
27-ஸ்ரீ முஷ்ணம்
28-ஸ்ரீ காட்டு மன்னார் கோயில்
29-ஸ்ரீ குருகைக் காவல் அப்பன் கோயில்
30-திரு மண்டங்குடி
31-ஸ்ரீ செங்க நல்லூர்
32-ஸ்ரீ ராஜ மன்னார் கோயில்
33-ஸ்ரீ குணசேகரம் -ஸ்ரீ குணசீலம்
34-ஸ்ரீ பிரமதேச மன்னார் கோயில்
35-ஸ்ரீ திருவஞ்சிக்களம்
36-ஸ்ரீ திருப்பாற் கடல்
37-ஸ்ரீ கிஷ்கிந்தை
38-ஸ்ரீ பண்டரிபுரம்
39-ஸ்ரீ சோனேபூர்
40-ஸ்ரீ சிந்துர கிரி-ஸ்ரீ ராம க்ஷேத்ரம் -நாக்பூர் அருகில்
41-ஸ்ரீ கூர்மம் –
42-ஸ்ரீ சிம்மாசலம்
43-ஸ்ரீ பத்ராச்சலம் –
44-ஸ்ரீ நாத துவாரகை
45-ஸ்ரீ நாசிகை பஞ்சவடி
46-ஸ்ரீ மங்கள கிரி
47-ஸ்ரீ புருஷோத்தமன் -ஸ்ரீ ஜெகந்நாதம்
48-ஸ்ரீ கும்ஸி -ஸ்ரீ கோமதி துவாரகை
49-ஸ்ரீ பேட் துவாரகை
50-ஸ்ரீ ப்ரபாஸ தீர்த்தம் -இதற்கு ஸூர்ய குண்டம் என்றும் பெயர் –
51-ஸ்ரீ சுசீந்திரம்
52-ஸ்ரீ பெரும் புலியூர்
53-ஸ்ரீ செஞ்சி -ஸ்ரீ ராஜ கிரி
54-ஸ்ரீ மணக்கால்
55-ஸ்ரீ நாமக்கல்
56-ஸ்ரீ சித்ரகூடம்
57-ஸ்ரீ சீதாபூர்
58-ஸ்ரீ பரத்வாஜ ஆஸ்ரமம்
59-ஸ்ரீ நந்தி கிராமம்
60-ஸ்ரீ புஷ்கரம்
61-ஸ்ரீ அவந்திகை -உஜ்ஜயினி
62-ஸ்ரீ பிருந்தாவனம்
63-ஸ்ரீ கோவர்த்தன கிரி
64-ஸ்ரீ பலதேவம்
65-ஸ்ரீ உகால க்ஷேத்ரம் -ஸ்ரீ வராஹ -ஸூகர க்ஷேத்ரம்
66-ஸ்ரீ குரு க்ஷேத்ரம்
67-ஸ்ரீ ஹரித்வாரம்
68-ஸ்ரீ பிரயாகை
69-ஸ்ரீ கயா க்ஷேத்ரம்
70-ஸ்ரீ காசி க்ஷேத்ரம்

———

திரு நாராயண புரம் -மேல்கோட்டை
திரு நாராயணப்பெருமாள்
செல்வப்பிள்ளை
யதுகிரி நாச்சியார்
யாதவ கிரி ஆனந்த விமானம்
கல்யாண தீர்த்தம் -வைகுந்த தீர்த்தம் -பராசர தீர்த்தம் மயித்ரேய தீர்த்தம்
தனுஷ்கோடி தீர்த்தம் -யாதவ தீர்த்தம் -லோக பாவன தீர்த்தம் -பாண்டவ தீர்த்தம் –
கிழக்கே திருமுக மண்டலம்
நின்ற திருக்கோலம்
பங்குனி ஹஸ்தம் இறுதியாக ப்ரஹ்மோத்சவம் -நான்காம் நாள் -வைர முடி ப்ரஸித்தம்
ஆடி மாதம் திருவோணம் முதல் ரோஹிணி வரை கிருஷ்ண ராஜ முடி உதசமும் ப்ரஸித்தம்
தாயார் சந்நிதி எதிர் மண்டபத்தில் அங்குஷ்ட மாத்ரமாய் ஸ்தம்பத்தில் உடையவர் எழுந்து அருளி உள்ளார்
இங்குள்ள திருமண் ப்ரஸித்தம் –
நஞ்சீயர் திரு அவதார ஸ்தலம்
யோக நரஸிம்ஹர் சேவையும் ப்ரஸித்தம்

—-

ஸ்ரீ தொண்டனூர் –
நம்பி நாராயண சந்நிதி -கிருஷ்ண ஸ்வாமி சந்நிதி -மலை மேல்-32-படிகள் ஏறி – நரஸிம்ஹ சந்நிதி –
ஸப்த பணமுள்ள உடையவர் த்ரிதண்டம் இல்லாமல் சேவை –
தொண்டனூர் நம்பி அவதார ஸ்தலம் –

——-

ஸ்ரீ ரெங்கப்பட்டணம் –
ஆதி ரெங்க க்ஷேத்ரம்
ஸ்ரீ ரெங்க நாச்சியார் சமேத ஸ்ரீ ரெங்க நாதன்
பிரணவ விமானம்
காவேரி நதிக்கரை
கிழக்கே திருமுக மண்டலம்
கௌதும மகரிஷிக்கும் காவேரிக்கும் ப்ரத்யக்ஷம்
அருகில் ஸ்ரீ நரஸிம்ஹ சன்னியும் உண்டு –

——

ஸ்ரீ சிஞ்சன்கட்டாவும் மிதுன சாளக்கிராமம்
ஸ்ரீ ராமர் சந்நிதி சிஞ்சன்கட்டாவிழும்
ஸ்ரீ நரஸிம்ஹ சந்நிதியும்
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாத சந்நிதியும் ஸ்ரீ பாத தீர்த்த குளமும்
மிதுன சாளக்கிராமம் உண்டு

——

5-ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணன் கோயில்
மத்வர் அவதாரம்
மேற்கு சமுத்திரக்கரையில் உள்ள க்ஷேத்ரம்

——–

ஸ்ரீ மயிலாப்பூர் -மயூர க்ஷேத்ரம்
ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள்-மயூர நாதன்
ஸ்ரீ மயூர வல்லித் தாயார்
மயூர விமானம்
மயூர தீர்த்தம்
மணி கைரவ வாவி என்னும் சந்தான தீர்த்தம்
கிழக்கே திருமுக மண்டலம்
நின்ற திருக்கோலம்
ப்ராந்த முனிவருக்கு ப்ரத்யக்ஷம்
ஸ்ரீ பேயாழ்வார் திரு அவதார ஸ்தலம் –
ஆழ்வார் அவதரித்த கூபம் சேவிக்கலாம்
பங்குனி திருவோணம் இறுதியாக ப்ரஹ்மோத்சவமும்
ஐப்பசி சதயம் ஈறாக ஆழ்வார் உத்சவமும் உண்டு

———

ஸ்ரீ குச லவ புரி -கோயம்பேடு
ஸ்ரீ வைகுண்டப்பெருமாள்
ஸ்ரீ கனக வல்லித் தாயார்
சாயா விமானம்
குசலவ தீர்த்தம்
கிழக்கே -நின்ற திருக்கோலம்
விகநஸ மஹரிஷிக்குப் ப்ரத்யக்ஷம்
ஆனி ஸ்வாதி இறுதியாக ப்ரஹ்மோத்சவம்
ஐந்தாம் நாள் இரவு கருட உத்சவம்

——–

ஸ்ரீ பூவிருந்த வல்லி
ஸ்ரீ வரதராஜப்பெருமாள்
ஸ்ரீ புஷ்ப்ப வல்லித்தாயார்
ஸ்ரீ புஷ்ப்பக விமானம்
ஸ்ரீ கருட புஷ்கரணி
மேற்கே நின்ற திருக்கோலம்
ஸ்ரீ கஜேந்திர தாசர் -ஸ்ரீ திருக்கச்சி நம்பி திரு அவதாரம்-

———–

ஸ்ரீ பச்சை வாரணப் பெருமாள் கோயில்
ஸ்ரீ பச்சை வாரணப் பெருமாள்
ஸ்ரீ அம்ருத வல்லித் தாயார்
தர்ம விமானம்
தர்ம புஷ்கரணி
கிழக்கே வீற்று இருந்த திருக்கோலம்
தர்ம புத்ரருக்கு ப்ரத்யக்ஷம்
முதலியாண்டான் திரு அவதார ஸ்தலம்

——–

ஸ்ரீ மழலை மங்கலம் ஸ்ரீ மதுர மங்கலம்
ஸ்ரீ ஆதி கேசவப்பெருமாள்
ஸ்ரீ எம்பார் திருவவதாரம்

————-

ஸ்ரீ திரு மழிசை
மஹீ சார க்ஷேத்ரம்
ஜெகந்நாதப்பெருமாள்
திரு மங்கை வல்லித்தாயார்
ஜகத் ஆனந்த விமானம்
பிருகு தீர்த்தம்
கிழக்கு -வீற்று இருந்த திருக்கோலம்
பிருகு மகரிஷிக்கும் மார்கண்டேயருக்கும் ப்ரத்யக்ஷம்
திரு மழிசைப்பிரான் திரு அவதார ஸ்தலம் –

——–

ஸ்ரீ அப்பன் கோயில்
ஸ்ரீ நம்மாழ்வார் திரு அவதாரம்

———

ஸ்ரீ திருக்குறையலூர்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அவதார ஸ்தலம்

————-

ஸ்ரீ பெரும் புதூர்
ஸ்ரீ ஆதி கேசவப்பெருமாள்
ஸ்ரீ எதிராஜ நாத வல்லித்தாயார்
ஸ்ரீ அநந்த விமானம்
ஸ்ரீ அநந்த தீர்த்தம்
கிழக்கே நின்ற திருக்கோலம்
பூத கணங்களுக்கும் ஹரித மஹா ராஜனுக்கும் ஆஸூரி கேசவாச்சார்யருக்கும் ப்ரத்யக்ஷம்
ஸ்ரீ எம்பெருமானார் திரு அவதார ஸ்தலம்
சித்திரை திருவோணம் இறுதியாகவும் திருவாதிரை இறுதியாகவும் உத்சவங்கள்

—————————–

ஸ்ரீ கூரம்
ஸ்ரீ ஆதி கேசவப்பெருமாள்
ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு அவதார ஸ்தலம்

——–

ஸ்ரீ திரு முக்கூடல்
ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள்
ஸ்ரீ அலர்மேல் மங்கைத் தாயார்
ஸ்ரீ சேஷ விமானம்
திரு முக்கூடல் தீர்த்தம்
வடக்கே நின்ற திருக்கோலம்
பாலாறு செய்யாறு வேகவதி -மூன்றும் சேர்ந்த இடம்
சீவரம் அருகில்
ஸ்ரீ வரதன் ஸங்கராந்தி பரிவேட்டை உத்சவம் பிரசித்தம் –

———–

ஸ்ரீ மதுராந்தகம் –
ஸ்ரீ கோதண்ட ராமர்
ஸ்ரீ ஜானகிப்பிராட்டியார்
மந்த்ர விமானம்
மந்த்ர வாவி தீர்த்தம்
மகிழ வ்ருக்ஷம்
தெற்கு -நின்ற திருக்கோலம்
விபாண்டக மகரிஷிக்கு ப்ரத்யக்ஷம்
ஸ்ரீ உடையவருக்கு ஸ்ரீ பெரிய நம்பி பஞ்ச சம்ஸ்காரம் செய்து அருளிய ஸ்தலம்
ஆனி புனர்பூசம் துவஜ ஆரோஹணம் -ஆறாம் நாள் காலை கருட உத்சவம் –

————————

ஸ்ரீ மலவையாவூர் -ஸ்ரீ திருமலை வையாபுரி
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
ஸ்ரீ அலர்மேல் மங்கைத் தாயார்
ஆனந்த விமானம்
ஸ்வாமி புஷ்கரணி
பாண்டவ தீர்த்தம் சேஷ தீர்த்தம் கஜேந்திர தீர்த்தம்
கிழக்கே நின்ற திருக்கோலம்
பிருகு மகரிஷிக்கு ப்ரத்யக்ஷம்
அக்பர் மந்திரியான தோடர்மால் கொள்ளை அடித்து கொண்டு வந்த
ஸ்ரீ வைகுண்டம் கள்ளப்பிரான் உத்சவர் இங்கே உள்ளார் என்பர்
இவருக்கு சித்திரை திருவோணம் இறுதியாக ப்ரஹ்மோஸ்த்வமும்
புரட்டாசி திருவோணம் இறுதியாக வேங்கடேசப்பெருமாளுக்கு ப்ரஹ்மோஸ்த்வம் உண்டு

—————

ஸ்ரீ உத்திர மேரூர்
ஸ்ரீ சவுந்தர்ய வரதராஜர்
ஸ்ரீ ரெங்கநாதன் வைகுண்ட நாதன் சந்நிதிகளும் உண்டு
ஆனந்தவல்லித் தாயார்
ஷண்ண வதி விமானம்

———-

ஸ்ரீ சிங்கிரி கோயில்
மூலவர் 16 திருக்கரங்களுடன் உக்ர நரஸிம்ஹர் ஸ்வாமி
உத்சவர் ஸ்ரீ ப்ரஹ்லாத வரதர்
ஸ்ரீ கனக வல்லித்தாயார்
பாவன விமானம்
பிருகு புஷ்கரணி
மேற்கு -வீற்று இருந்த திருக்கோலம்
ஸ்ரீ ப்ரஹ்லாதன் பிருகு ஜைமினி வசிஷ்டாதி மகா ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷம்
திருப்பா புலியூருக்கு அருகில் உள்ள ஸ்தலம்

———

ஸ்ரீ சிங்கப்பெருமாள் கோயில்
ஸ்ரீ பாடலாத்ரி -பாடலம்-சிவப்பு -சிவந்த குன்று
நான்கு திருக்கரங்கள் -சங்கு சக்கரம் -அபய ஹஸ்தம் -இடது திருக்கை மடியில் வைத்து சேவை
பிரணவ கோடி விமானம்
கிழக்கு நோக்கி இருந்த திருக்கோலம்
த்ரி நேத்ரிதாரி
உத்சவர் ஸ்ரீ ப்ரஹ்லாத வரதர்
ஸ்ரீ அஹோ பில வல்லித் தாயார்
சுத்த-சித்த- புஷ்கரணி
பாரிஜாதம் ஸ்தல வருஷம்
ஜாபாலி முனிவருக்கு அருள்
பிரகாரத்தில் அழிஞ்சல் மரம்

———

ஸ்ரீ மதுராந்தகம்
வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்டதால்
மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது.
நாளடைவில் மதுராந்தகம் என மருவிற்று
வகுளாரண்ய ஷேத்ரம் (மகிழ மரங்கள் நிறைந்த இடம்) என்ற மற்றொரு பெயரும் உண்டு.
பெருமாள்: ஏரி காத்த ராமர், கருணாகரன் . கிழக்கே நின்ற திருக்கோலம்
மூலவர் ஸ்ரீ ராமர் சீதாதேவியின்கைகளப் பற்றியவாறு, லக்ஷ்மண ஸமேதராய் நின்ற திருக்கோலத்தில்,
விபண்டக மகரிஷிக்குக் காட்சி தரும்போது இந்த அன்புக் கோலத்தைக் காட்டி அருளினாராம் ராமர்.
இதனையொட்டி விபண்டக மகரிஷி கை கூப்பிய நிலையில் இங்கு காட்சி அளிக்கிறார்.
ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தமாகிய விசிடாத்வைத தரிசனத்தை நிலை நாட்டியவரான ஸ்ரீராமானுஜருக்கு ஸ்ரீ பெரியநம்பிகள்
இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள மகிழ மரத்தடியில் பஞ்சஸ்ம்ஸ்காரம் செய்து
திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகியவற்றை உபதேசித்தார்.
த்வயத்தை விசேஷ அர்த்தங்களுடன் உபதேசித்தார். இதனால் இந்த க்ஷேத்திரத்திற்கு த்வயம் விளைந்த தூயப்பதி என்று பெயர் ஏற்பட்டது.

———

ஸ்ரீ திருவஞ்சிக்களம்
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அவதரித்த இடம்.
திருச்சூரிலிருந்து சுமார் 45 கிமீ தொலைவில் கொடுங்களூர் உள்ளது.
அங்கிருந்து சுமார் 4 கிமீ தூரத்தில் திருவஞ்சிக்களம்.
அங்கே திருக்குலசேகரபுரம் என்ற சின்ன ஊரிலே ஆழ்வாருக்குக் கோயில் உள்ளது.
குலசேகர ஆழ்வார் மூர்த்தி திருவஞ்சிக்களத்தில் உள்ள முகுந்தன்/கிருஷ்ணன் கோயில் உள்ளது.

———

ஸ்ரீ குருவாயூர்
நாள் ஒன்றுக்கு இங்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பெரிய கோயில் ஆகும்.
குருவாயூரப்பன் ஆலய வரலாறு மிகவும் பழைமை வாய்ந்தது. நாரத புராணத்தில் இக்கோவிலின் வரலாறும்,
தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன. தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணரே வழிபட்ட இந்த விக்ரகத்தை, தனது அவதார காலம் முடிந்து வைகுண்டம் திரும்பும் போது
உத்தவரிடம் கொடுத்து ஒரு புனிதமான இடத்தில் பிரதிஷ்டை செய்யக் கூறினார்.
துவாரகையை கடல் கொண்டபின் குருவும் வாயுவும் இணைந்து ஸ்ரீ பரசுராமரின் வழிகாட்டுதலின் படி இங்கு பிரதிஷ்டை செய்தனர்.
எனவே இந்த தலம் குருவாயூர் என்றழைக்கப்படுகின்றது.

அப்போது ருத்ர தீர்த்தத்தின் இக்கரையில் இருந்த சிவபெருமானும் பார்வதியும் பெருமாளுக்கு இத்தலத்தை கொடுத்துவிட்டு
மறு கரையில் உள்ள மம்மியூருக்கு சென்று விட்டனராம். ஆகவே குருவாயூர் யாத்திரை வருபவர்கள்
மம்மியூர் சென்று சிவனை தரிசித்தாலே யாத்திரை முழுமையடையும் என்பது நம்பிக்கை.
தற்போது பகவதி சன்னதியை சுற்றி வரும் போதே மம்மியூர் உள்ள வடப்பக்கம் திரும்பி நின்று வழிபாடு செய்கின்றனர் பக்தர்கள்.

பெருமாள் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சதுர்புஜராக நின்ற கோலத்தில் பால ரூபத்தில் சேவை சாதிக்கின்றார்,
மேலிரண்டு திருக்கரங்களில் சங்கு மற்றும் சக்கரமும், கீழிரண்டு திருக்கரங்களில் கதையும், தாமரையும் கொண்டு
துளசி, முத்துமாலைகள் கழுத்தில் தவழ, கிரீடம், மகரகுண்டலம், கேயூரம், கங்கணம், உதரபந்தனம் அணிந்து,
வலப்பக்க மார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் மருவும், வைஜயந்தி மாலையும், கௌஸ்துப மணியும் இலங்க
எழிலாக சேவை சாதிக்கின்றார் குருவாயூரப்பன்.
மிகவும் புனிதமானது எனக்கருதப்படும் பாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது.
இந்த மலை நாட்டு திவ்யதேச யாத்திரையில் சதுர்புஜத்துடன் நின்ற கோலத்தில் பல பெருமாள்களை சேவித்த போது
குருவாயூரப்பனை சேவித்தது போலவே இருந்தது. குருவாயூரப்பனுக்கு சார்த்தும் அந்த மயிற்பீலி கிரீடமும்,
மலர் அலங்காரம் மற்றும் மயிற்பீலி விசிறி அலங்காரமும் எப்போதும் நம் கண்ணில் நிற்கின்றன.

கிழக்கு வாசல், மேற்கு வாசல் என்று இரண்டு பிரதான வழிகள் இருந்தாலும், கிழக்கு நோக்கிய வாசல்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், தங்கத் தகடுகள் வேயப்பட்ட 33.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பத்தின் இருபுறமும்
உயரமான தீபஸ்தம்பங்கள் கண்களைக் கவர்கின்றது.
இதன் வட்ட அடுக்குகளில் விளக்குகள் ஏற்றப்படும் போது காணக் கண் கொள்ளா காட்சியாகும்.
ஸ்ரீகோவிலின் சாய்ந்த கூரைகளில் தங்க ஓடுகள் மின்னுகின்றன. சுவர்களில் அருமையான இயற்கை ஓவியங்கள்
இன்றும் புதிதாக காட்சி தருகின்றன, கருவறையைச் சுற்றி வெளிச்சுவர்களில் மரச் சட்டங்களில்
சுமார் 3,000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாலை நேரத்தில் இவற்றில் தீபம் ஏற்றப்பட்டு
இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் போது மனத்தில் பரவசம் ஏற்படுகிறது.

அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வ ரூப தரிசனம் காண இங்கு கூடும் பக்தர்களின் கூட்டம் சொல்லி மாளாது.
குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் தரிசிப்பது கூடுதல் ஆனந்தம்!
இரவு மூன்றாம் யாமம் முடிந்ததும் மூன்று மணிக்கு நாதஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர்.
அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு ‘நிர்மால்ய தரிசனம்’ என்று பெயர். நிர்மால்ய தரிசனத்தின் போது
குருவாயூரப்பனுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக்காப்பு, ஆடை, ஆபரணங்கள், மாலைகள் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைவர்.
விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். தைலாபிஷேகத்துக்குப் பின் அந்த தெய்வத் திருமேனியை வாகைத் தூளால் தேய்ப்பர்.
இதற்கு ‘வாகைசார்த்து’ என்று பெயர். அடுத்து சங்காபிஷேகம் நடைபெறும். அப்போது புருஷஸூக்தம் சேவிக்கப்படுகின்றது.
இதன் இறுதியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் திருமஞ்சனம் நடை பெறுகின்றது.

இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியம் செய்கின்றனர் .
அப்போது உண்ணிக் கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார் குருவாயூரப்பன்.
இதன் பின் ஆரம்பமாகும் காலை நேர உஷத்பூஜை நடைபெறுகின்றது.
இந்த பூஜையின் போது நெய்ப்பாயசமும், அன்னமும் பிரதான நைவேத்தியம்.
இது முடிந்து நடைதிறக்கும் போது பகவான் திருமுடியில் மயிற்பீலி, நெற்றியில் திலகம், இடையில் பொன் அரைஞாண்,
திருக்கரங்களில் ஓடக்குழல், மஞ்சள்பட்டு ஆகிய ஆபரண அலங்காரங்களுடன் அற்புதமாக தரிசனம் தருவார்.
குருவாயூரப்பனுக்கு சாயங்காலம் (சந்தியாகாலம்) மட்டும்தான் தீபாராதனை செய்கிறார்கள்.
ஏழடுக்கு விளக்கு, ஐந்துதிரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரிவிளக்கு என்று பல தீபங்கள் ஏற்றி ஆராதனை செய்து,
கடைசியில் கற்பூர ஆரத்தி நடக்கும். சுற்றம்பல அனைத்து விளக்குகளும் மங்கலமாக எரிய பெருமாளின் ஆரத்தி சேவிப்பதே ஒரு ஆனந்தம்.
மங்கள ஆரத்தியின் போது முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்து குருவாயூரப்பனை வணங்குவதாக ஐதீகம்.
இதற்கு அன்னமும், சர்க்கரை, பாயசமும் ஆகியவை நைவேத்தியம். ஸ்ரீகுருவாயூரப்பனுக்குப் பிடித்த நைவேத்தியம்,
பால்பாயசம், நெய்பாயசம், சர்க்கரை பாயசம், அப்பம், திரிமதுரம், மற்றும் பழவகைகள்.
தினமும் ஐந்து பூசைகளும் மூன்று சீவேலிகளும் நடைபெறுகின்றது.
இரவு நடைபெறும் அத்தாழ சீவேலி மிகவும் சிறப்பாக மூன்று யானைகளுடன் நடைபெறுகின்றது
நாதஸ்வர இசையுடன் மூன்று முறை சுற்றி வருகிறார் உற்சவ மூர்த்தி.
அஷ்ட கந்த புகையிட்டு நடையை அடைப்பதை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

———-

ஸ்ரீ வர்க்கலா

திருவனந்தபுரத்திற்கு சுமார் 50 கி.மீ முன்பாக உள்ள வர்க்கலா என்ற
கடற்கரையோர கிராமத்தில் ஜனார்த்தன சுவாமியை சேவித்தோம்.

வர்க்கலா இயற்கை எழிலும் இறையருளும் சேர்ந்த தலம். அமைதியான ஒரு சிறு கிராமம்.
அருமையான கடற்கரை உள்ளதால் வெளி நாட்டினர் பலர் இக்கிராமத்தை நாடி வருகின்றனர்.
இக்கடற்கரையின் ஒரு சொட்டு நீர் மேனியில் பட்டாலும் அது ஆன்மாவையும், பாவங்களையும் கழுவி
நிர்மூலமாக்கி விடும் என்பதால் பாபநாசம் கடற்கரை என்றும் அழைக்கப்படுகின்றது.

ஸ்ரீ ஜோஷிர்மட் திவ்யதேசத்தில் குறிப்பிடுவதைப் போலவே இத்தலத்திலும் பெருமாளின் வலது கரம் திரும்பிக்கொண்டு வருகிறதாம்.
கீழ் நோக்கிய வலதுதிருக்கரம் தற்போது மேல் நோக்கி திரும்பி விட்டது.
முழுவதுமாக தீர்த்தம் அருந்துவது போல வரும்போது உலகம் அழியும் என்று கூறுகின்றனர்.

முதலில் நாக லிங்க மரத்தடியில் சிவன் சன்னதி, லிங்க வடிவில் அருள் பாலிக்கின்றார் சிவபெருமான்.
அற்புத சிற்பங்கள் ஆலயத்தில் நிறைந்துள்ளன. நடராஜர், காளி, பிக்ஷாடணர், அம்பாள், மோகினி,
ஸ்ரீவேணு கோபாலர், ரதி மன்மதன் என்று அற்புதமான சிற்பங்கள் ஆலயம் முழுவதும் கொள்ளை அழகு.
அடுத்து ஸ்ரீ ஜனார்த்தன சுவாமி சன்னதி பெருமாளை திவ்யமாக சேவித்தோம்.
வட்ட வடிவ ஸ்ரீகோவில் தொப்பி விமானம் அருமையாக சுத்தமாக இருந்தது ஆலயம்.

———

ஸ்ரீ முஷ்ணம்
ஆதி வராகப்பெருமாள்
அம்புஜ வல்லித்தாயார்
வாமன விமானம்
நித்ய புஷ்கரணி
மேற்கே நின்ற திருக்கோலம்
அஸ்வத்த நாராயணனுக்கு ப்ரத்யக்ஷம்
அஷ்ட ஸ்வயம்பூ க்ஷேத்ரங்களில் ஓன்று
கோரைக்கிழங்கு பிரசாதம் இங்கு பிரசித்தம் –

————

ஸ்ரீ காட்டு மன்னார் கோயில்
ஸ்ரீ வீர நாராயணப் பெருமாள்
ஸ்ரீ செங்கமல வல்லித்தாயார்
புண்ணிய விமானம்
வேத தீர்த்தம்
கிழக்கே நின்ற திருக்கோலம்
மதங்க மகரிஷிக்கு ப்ரத்யக்ஷம்
நாதமுனிகள் ஆளவந்தார் அவதார ஸ்தலம்

————-

ஸ்ரீ குருகைக் காவல் அப்பன் கோயில்
ஸ்ரீ ராமன் சந்நிதி
ஸ்ரீ மன் நாதமுனிகள் திரு நாட்டுக்கு எழுந்து அருளிய ஸ்தலம்
ஸ்ரீ குருகைக் காவல் அப்பன் அவதாரம் திருக் குரு கூராக இருந்தும் இங்கேயே யோகத்தில் ஆழ்ந்து இருந்தார்
ஸ்ரீ காட்டு மன்னார் கோயிலுக்கு தென் மேற்கில் 6 மைல் தூரத்தில் உள்ள ஸ்தலம் –

————

திரு மண்டங்குடி
ஸ்ரீ கல்யாண ரெங்கநாதன் சந்நிதி
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திரு அவதார ஸ்தலம்

—-

ஸ்ரீ செங்க நல்லூர்
ஸ்ரீ நிவாஸன் சந்நிதி
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அவதார ஸ்தலம்

————-

ஸ்ரீ ராஜ மன்னார் கோயில்
ஸ்ரீ ராஜகோபாலன் -குண்டலம் ஒரு திருக்காதிலும் கம்மல் மற்ற ஒரு திருக்காதிலும் அணிந்து சேவை –
ஸ்ரீ செங்கமல வல்லித்தாயார்
ஸ்வயம்பூ விமானம்
அரித்ரா நதி புஷ்கரணி-சங்கு தீர்த்த,சக்ர தீர்த்தம்
கிருஷ்ண தீர்த்தம் ருக்மிணி தீர்த்தம் கஜேந்திர தீர்த்தம்
ஷீர சாகர தீர்த்தம் கோ பிரளய தீர்த்தம் சம்ப காரண்ய தீர்த்தம்
கிழக்கு நின்ற திருக்கோலம்
கோபில கோப்ரளய மகா முனிவர்களுக்கு ப்ரத்யக்ஷம்
பங்குனி ரோஹிணி இறுதியாக 18 நாள் ப்ரஹ்மஸ்தோவம் -12 நாள் வெண்ணெய் தாளி உத்சவம் -17 நாள் ரத உத்சவம் –

———–

ஸ்ரீ குணசேகரம் -ஸ்ரீ குணசீலம்
ஸ்ரீ நிவாசப்பெருமாள்
ஸ்ரீ அலர் மேல் மங்கைத்தாயார்
அஷ்டாங்க விமானம்
பினாக புஷ்கரணி
அகண்ட காவேரி
கிழக்கே நின்ற திருக்கோலம்
குணசீல மகரிஷிக்கு ப்ரத்யக்ஷம்

———–

ஸ்ரீ பிரமதேச மன்னார் கோயில்
ஸ்ரீ வேத நாராயணப் பெருமாள்
ஸ்ரீ ராஜ மன்னார்
ஸ்ரீ வேத வல்லித்தாயார்
வேத விமானம்
ஸ்ரீ அகஸ்தியர் தீர்த்தம்
கிழக்கே நின்ற திருக்கோலம் -மேலே வீற்று இருந்த -அதுக்கும் மேலே சயன திருக்கோலங்களும் உண்டு
ஸ்ரீ அகஸ்தியர்-ஸ்ரீ குலசேகரப்பெருமாளுக்கும் ப்ரத்யக்ஷம்
ஸ்ரீ குலசேகரப்பெருமாள் திருவரசு இங்கு உண்டு
மாசி பிரஹ்மோஸ்தவம்
ஸ்ரீ தசாவதார சந்நிதி ஸ்ரீ ரங்கநாதன் சந்நிதி ஸ்ரீ மணவாளமா முனிகள் சந்நிதிகளும் உண்டு –

———

ஸ்ரீ திருவஞ்சிக்களம்
முகுந்த பெருமாள்
திருவேங்கடேசர் சந்நிதி
அலர்மேல் மங்கைத்தாயார்
குலசேகரப்பெருமாள் திரு அவதார ஸ்தலம்

——–

ஸ்ரீ திருப்பாற் கடல்
பிரளய ரோதக ஸ்வாமி
ஸ்ரீ ரெங்க நாதன்
ஸ்ரீ ரெங்க நாயகி
புண்டரீக புஷ்கரணி
ஷீர நதி
வேத சார விமானம்
கிழக்கே சயனத்திருக்கோலம்
ப்ரம்மதேவருக்கு ப்ரத்யக்ஷம்

—–

ஸ்ரீ கிஷ்கிந்தை
ஸ்ரீ சீதா ஸ்ரீ ராகவன் சந்நிதியும் ஸ்ரீ நரசிம்மர் சந்நிதியும் உண்டு
பம்பை ஸரஸ்ஸூ -ருசியமுக மலையும்

—————-

ஸ்ரீ பண்டரிபுரம்
ஸ்ரீ பாண்டு ரங்கர் -விட்டல தேவர் –ருக்மபாய்
ஞானானந்த விமானம்
கிருஷ்ண தீர்த்தம்
சந்திரபாகா நதி -மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் நதி –
கிழக்கு முகமாய் இடுப்பிலே கை வைத்துக் கொண்டு நின்ற திருக்கோலம்
ஸ்ரீ புண்டரீகருக்கு ப்ரத்யக்ஷம்
இந்த பாண்டுரெங்கம் நாத ப்ரஹ்மம் -ஜெகந்நாதாம் அன்ன ப்ரஹ்மம் – கயா பிண்ட ப்ரஹ்மம் என்பர் –

——

ஸ்ரீ சோனேபூர்
ஸ்ரீ கஜேந்திர வரதர்
ஸ்ரீ திருமகள் நாச்சியார்
சேஷ விமானம்
பத்ம சரஸ்ஸூ -கஜேந்திர புஷ்கரணி
தெற்கே நின்ற திருக்கோலம்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு ப்ரத்யக்ஷம்
ஸ்ரீ ராமனால் ப்ரதிஷ்டை என்பர்
கார்த்திகை பவுர்ணமி இறுதியாக மேலா உத்சவம் நடக்கும் –

————–

ஸ்ரீ சிந்துர கிரி-500 அடி உயரம் – -ஸ்ரீ ராம க்ஷேத்ரம் -நாக்பூர் அருகில்
காசி தக்ஷிண துவாரம் என்பர்
ஸ்ரீ ராமர் -ஸ்ரீ சீதா -ஸ்ரீ லஷ்மணன் ஸ்ரீ பரதன் சத்ருக்கனன் திருவடி சேவை
தாரக விமானம்
பாவன தீர்த்தம்
தெற்கே நின்ற திருக் கோலம்
த்ரேதா யுகத்தில் தபஸ்ஸூ செய்த சூத்ர ஜன்மாவான ஜம்புகனைக் கொன்று அவனுக்கு மோக்ஷம்
ஸ்ரீ நரஸிம்ஹர்
ஸிம்ஹ வல்லித்தாயார்
பாவன விமானம்
ஸ்ரீ வராக தீர்த்தம் -ஸ்ரீ நரஸிம்ஹ தீர்த்தம் -ஸ்ரீ தத்தராய தீர்த்தம்
மேற்கு வீற்று இருந்த திருக்கோலம்
அம்பரீஷ மஹாராஜருக்கு ப்ரத்யக்ஷம்

———–

ஸ்ரீ கூர்மம் –
ஸ்ரீ கூர்ம நாத ஸ்வாமி
ஸ்ரீ ராஜ்ய லஷ்மி
காந்தர்வ விமானம்
நாரத குண்டம் சுதா குண்டம்
சக்ர தீர்த்தம் கௌடில்ய தீர்த்தம்
வக்ர தீர்த்தம் மஹோ ததி
மேற்கே -நின்ற திருக்கோலம்
சுவேத மஹாராஜனுக்குப் ப்ரத்யக்ஷம்
ஸ்வேத புஷ்கரணியில் எலும்புகளைப் போட்டால் ஆமைகளாக மாறுகின்றனவாம் –

—————-

ஸ்ரீ சிம்மாசலம்
ஸ்ரீ வராஹ நரஸிம்ஹர்
ஸ்ரீ ஸிம்ஹ வல்லித்தாயார்
ஸ்ரீ பிரகலாத விமானம்
கங்கா தாரை கோதாவரி தாரை வேகவதி தாரை
மலாபகாரிணி -அனுமந்த தாரை -மாதவ தாரை
மேற்கே நின்ற திருக்கோலம்
ஸ்ரீ பிரகலாதனுக்கு புரூருவச் சக்கரவர்த்திக்கும் ப்ரத்யக்ஷம்

———–

ஸ்ரீ பத்ராச்சலம் –
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி
ஸ்ரீ சீதாப்பிராட்டியார்
ஸ்ரீ லஷ்மணப்பெருமாள்
ஸ்ரீ திருவடி
ஆனந்த நிலைய விமானம்
ஸ்ரீ ராம தீர்த்தம் உஷ்ண குண்ட தீர்த்தம் கோதாவரி நதி
கிழக்கே திருமுக மண்டலம் -நின்ற திருக்கோலம்
மேரு நந்தன் -பத்ரம மகரிஷிக்கு ப்ரத்யக்ஷம்
ஸ்ரீ ரெங்கநாத சந்நிதியும் உண்டு

———

ஸ்ரீ நாத துவாரகை
பூர்வம் ஸ்ரீ வடமதுரையில் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே சேவை சாதிக்கிறார்

—–

ஸ்ரீ நாசிகை பஞ்சவடி
குடும்ப சகிதமாக ஸ்ரீ திருவடி உடன் ஸ்ரீ ராமபிரான் சேவை
கோதாவரி வடகரை -ஐந்து ஆல வருஷங்கள்
சூர்ப்பணகை மூக்கு அறிந்த இடம் என்பதால் இந்தப்பெயர்
கோதாவரியை கங்கை என்றும் நாசிகையை காசி என்றும் இங்கு சொல்வர்

——-

ஸ்ரீ மங்கள கிரி
மலை மேல் பானக ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தி
ஸ்ரீ சக்ர தீர்த்தம்
ஸ்ரீ ராஜ லஷ்மி பிராட்டியார்
மங்கள விமானம்
கல்யாண புஷ்கரணி
சீ கடி கோனேரி
கிழக்கே திரு முக மண்டலம்
யுதிஷ்டருக்குப் பிரத்யக்ஷம்
343-படிகள்
மலைக்குக் கீழும் 11 நிலையுள்ள கோபுரம் -அழகிய சிங்கர் சந்நிதி

——

ஸ்ரீ புருஷோத்தமன் -ஸ்ரீ ஜெகந்நாதம்
ஸ்ரீ ஜகந்நாதன் -ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி -பலபத்திரர் சுபத்திரை
ஸ்ரீ மந்த்ர விமானம்
மார்க்கண்டேய தீர்த்தம்
வருண தீர்த்தம்
ரோகிணி தீர்த்தம் போல ஆயிரம் உண்டாம்
குண கடல் தீர்த்தம்
ஆல விருக்ஷம்
கிழக்கே திருமுக மண்டலம் -நின்ற திருக்கோலம்
இந்த்ரத்யும்னன் மார்கண்டேயருக்கு ப்ரத்யக்ஷம்
வருண பகவானால் ப்ரதிஷ்டை
தரு திரு மேனி
பாண்டுரெங்கம் நாத ப்ரஹ்மம் -கயா பிண்ட ப்ரஹ்மம் -ஜெகந்நாதம் அன்ன ப்ரஹ்மம் –

———-

ஸ்ரீ கும்ஸி -ஸ்ரீ கோமதி துவாரகை
ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ கேசவன் ஸ்ரீ மாதவன் ஸ்ரீ புருஷோத்தமன்
ஸ்ரீ ராதா கிருஷ்ணன் ஸ்ரீ நரஸிம்ஹன் ஸ்ரீ ஸாக்ஷி கோபாலன் சந்நிதிகள்

——-

ஸ்ரீ பேட் துவாரகை
ஸ்ரீ துவாரகா நாதன் -ஸ்ரீ பலராமன் -ஸ்ரீ ப்ரத்யும்னன்
ஸ்ரீ ருக்மிணி பிராட்டியார் ஸ்ரீ சத்யபாமா பிராட்டியார் ஸ்ரீ ராதா பிராட்டியார் ஸ்ரீ ஜாம்பவதி பிராட்டியார் சந்நிதிகள்

——–

ஸ்ரீ ப்ரபாஸ தீர்த்தம் -இதற்கு ஸூர்ய குண்டம் என்றும் பெயர் –
பஞ்ச ஸ்ரோதா -ஹிரண்யா -விரங்கனி -லக்மு -கபிலை -ஐந்தும் சேர்ந்து சரஸ்வதி நதியாக மேற்கு நோக்கி ஓடும்
த்ரை வேணி தீர்த்தம் பிரசித்தம்
ஸ்ரீ கண்ணன் தன்னுடைச்சோதி எழுந்து அருளி
நவகோடி நாராயண யாதவ குலம் கோரைப்புல்லினால் நாசம் அடைந்த ஸ்தலம்

———-

ஸ்ரீ சுசீந்திரம்
மும்மூர்த்திகளுக்கும் சந்நிதிகள் -ஸ்தாணு மால்யன் -அஜஹரீஸ்வரர் இவர்களை சொல்வார்கள்
மத்யத்தில் ஸ்ரீ நாராயணர் சந்நிதி
அநசூயா தேவிக்கு ப்ரத்யக்ஷம்

———

ஸ்ரீ பெரும் புலியூர்
ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள்
ஸ்ரீ ஸுந்தர நாயகிப்பிராட்டியார்
ஸ்ரீ ஸூந்தர விமானம்
காவேரி நதி
கிழக்கு -நின்ற திருக்கோலம்
சிவன் -பதஞ்சலி -வ்யாக்ர பாதர் -திரு மழிசைப்பிரான் -ப்ரத்யக்ஷம்
கிருஷ்ணா நாம் வரீஹீ நாம் நக நிர்பின்னம் -வேத வாக்கியம் நினைவு படுத்திய வ்ருத்தாந்தம்

அக்கரங்கள் அக்கரங்கள் என்றும் ஆவது என் கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரம் கொள் கையனே சடங்கர் வாய் அடங்கிட
உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே

காட்டி அருள -அபராத ஷாமணம் செய்து -அக்ர பூஜை பெற்ற ஸ்தலம்

————-

ஸ்ரீ செஞ்சி -ஸ்ரீ ராஜ கிரி
ஸ்ரீ ரெங்கநாதன் சந்நிதி
நம்பெருமாள் இங்கு எழுந்து அருளிய விசேஷம் உண்டே

——–

ஸ்ரீ மணக்கால்
ஸ்ரீ வரதராஜப்பெருமாள்
ஸ்ரீ மணக்கால் நம்பி திரு அவதாரம்
லால்குடிக்கு அருகில்

———

ஸ்ரீ நாமக்கல்
சஞ்சீவி மலை கொண்டு வரும் பொழுது
கண்டகீ நதியில் இருந்து சாளக்ராம மூர்த்தியே இங்கு ப்ரதிஷ்டை என்பர்
இதனால் இதை சாளக்கிராமம் என்றே சொல்வர்
ஸ்ரீ நரஸிம்ஹர் -ஸ்ரீ ரெங்கநாதர் சந்நிதிகளும் உண்டு
ஸ்ரீ நரஸிம்ஹ தீர்த்தம்
கமலாலயம்
நாமகிரி அம்மா பிராட்டியார்

———

ஸ்ரீ சித்ரகூடம்
ஸ்ரீ சீதா ராமபிரான் சந்நிதி
கோடி தீர்த்தம் -திவான் கங்கா -ஹநுமதாரா -பாடக் சிலா -அன்ஸ்யா -குப்த கோதாவரி -பாரதிகூபம் போன்ற தீர்த்தங்கள்
மந்தாகினி நதி
12 மைல் சுற்றளவு -ப்ரத்யக்ஷணம் செய்வார் –

——–

ஸ்ரீ சீதாபூர்
மந்தாகினி நதிக்கரை
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் சந்நிதி
ஸ்ரீ வால்மீகி ஆஸ்ரமும் அருகில் உண்டு

————

ஸ்ரீ பரத்வாஜ ஆஸ்ரமம்
யமுனை உத்தர கரையில்

—–

ஸ்ரீ நந்தி கிராமம்
ஸ்ரீ பரதாழ்வான்
பரத கண்டம் கயா கண்டம்

——-

ஸ்ரீ புஷ்கரம்
ஸ்ரீ பரமபுருஷன்
ஸ்ரீ புண்டரீக வல்லித்தாயார்
மங்கள விமானம்
புஷ்கர தீர்த்தம்
கிழக்கே திருமுக மண்டலம்
வீற்று இருந்த திருக்கோலம்
ப்ரம்மதேவருக்கு ப்ரத்யக்ஷம்
பிரம்மதேவருக்கும் சந்நிதி இங்கு உண்டு
தீர்த்த ரூபி -அஷ்ட ஸ்வயம்பூ மூர்த்திகளின் ஒருவர் இங்கு
ஸ்ரீ பத்ரி நாராயண ஸ்ரீ வராக ஸ்வாமி சந்நிதிகளும் உண்டு
பாஞ்சராத்ர ஆகமம்

———-

ஸ்ரீ அவந்திகை -உஜ்ஜயினி
ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ நாராயணன்
ஸ்ரீ திரு மா மகள் நாச்சியார்
தாரக விமானம்
நித்ய புஷ்கரணி -தேவ புஷ்கரணி
வட வ்ருக்ஷம்
தெற்கே திருமுக மண்டலம்
நின்றும் கிடந்தும் திருக்கோலம்
தேவர்களுக்கும் ஸாந்தீப முனிவருக்கும் பிரத்யக்ஷம் –

———–

ஸ்ரீ பிருந்தாவனம்
ஸ்ரீ ராதா வல்லபன்
ஸ்ரீ ராதா தேவி
வஸ்த்ர அபஹரண தீர்த்தம் -யமுனா நதி
கிழக்கே திரு முக மண்டலம்
நின்ற திருக்கோயிலாம்
32-ஸ்நான கட்டங்கள் யமுனைக்கரையில் உண்டு
காளிங்க மடு -கதம்ப வருஷம்
ஷீரகாட் -வஸ்த்ர அபஹரணம்
கேசி காட்
வில்வ வனம்
நிதுவனம்-ஸ்ரீ ராதா நிவாஸம் -இங்கு இரவில் பட்சிகளும் வானரங்களும் கூட தாங்காமல் இருப்பது ஆச்சர்யம்
ரெங்க மந்த்ரம் –கோவர்தனம் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் ஸப்த பிரகாரத்தோடு -ரெங்கமன்னார் சந்நிதி

——–

ஸ்ரீ கோவர்த்தன கிரி
10 மைல் சுற்றளவு
ப்ரதக்ஷிணம் செய்பவர் மதியத்தில் தங்க இடங்கள் உள்ளன

———–

ஸ்ரீ பலதேவம்
ஸ்ரீ பலராமர் சந்நிதி
ஷீரா சாகர தடம்

———–

ஸ்ரீ உகால க்ஷேத்ரம் -ஸ்ரீ வராஹ -ஸூகர க்ஷேத்ரம்
ஸ்ரீ பகீரதன் கங்கை கொண்டு வரும் முன்பே மேருவின் இளைய பெண்ணாகிய குடிலா சக்தி கங்கை இங்கு உள்ளது

——-

ஸ்ரீ குரு க்ஷேத்ரம்
1160 சதுர மைல் விஸ்தீரணம்
352 புண்ய ஸ்தலங்களும் தீர்த்தங்களும் இங்கு உண்டு

——-

ஸ்ரீ ஹரித்வாரம்
ஸ்ரீ ஆதி நாராயணன்
ஸ்ரீ ஆதி லஷ்மி
ஸ்ரீ ஆனந்த விமானம்
ஸ்ரீ ஹரி பாத தீர்த்தம்
கங்கா நதி
புஜங்க சயனம் -தெற்கே திரு முக மண்டலம்
ஸூ கரும் பரிக்ஷித்தும் தவம் செய்த ஸ்தலம்
அஜ்ருத்ர இந்த்ராதிகளுக்கு ப்ரத்யக்ஷம்
ஸப்த புரியில் ஓன்று -ஹரி துவாரம் கங்கா துவாரம் மாயா துவாரம்
ஹரி சரண காட்
கங்கா தேவி தேவாலயம்
ஸ்ரீ விஷ்ணு பாத தர்சனம்

——–

ஸ்ரீ பிரயாகை
ஸ்ரீ ஆதி முதல்வன்
ஸ்ரீ மாதவப்பெருமாள்
ஸ்ரீ செங்கமல வல்லித்தாயார்
பாவன விமானம்
திரிவேணி சங்கம தீர்த்தம்
வட வ்ருக்ஷம்
புஜங்க சயனம்
கிழக்கே திருமுக மண்டலம்
மார்கண்டேயருக்கு ப்ரத்யக்ஷம்

உடை திரை நீர்ப் ப்ரளயத்து மார்க்கண்டேயன் முதன் முனிவன் உறைவதாய
வடதருவை புனிற்று மதியலை புரட்டும் கங்கையோடு அனைந்த வேணிக்
கடவுளை வெண் மதி கொழிக்கும் பாலாழி துறந்து செழும் கமலையோடு
மடியர் துயர் அகற்றுவல் என்று இனிது அடைந்த மாதவனை ஆங்கு கண்டான் –

பிரமதேவர் தசை அஸ்வமேதம் செய்த ஸ்தலம் -விஷ்ணு பிரஜாபதி க்ஷேத்ரம்
யாகங்களை பிரதான ஸ்தலம் என்பதால் பிரயாகை
த்ரி வேணிம் மாதவம் சோமம் பரத்வாஜஞ்ச வாசுகீம்
வந்தே அக்ஷய வடம் சேஷம் பிரயோகம் தீர்த்த நாயகம்
1-த்ரி வேணிம் -முக்கிய ஸ்நான கட்டம் -வழியில் பாதாள திருவடி தர்சனம்
2-மாதவம் -மாதவ ஸ்வாமி
3-சோமம் -சோமேசர்
4-பரத்வாஜஞ்ச -பரத்வாஜர் ஆஸ்ரமம் -ராமர் சீதை திருவடி சந்நிதிகள் உள்ளன
5-வாசுகீம் -ஸர்ப்ப தர்சனம்
வந்தே
அக்ஷய வடம் -கோட்டைக்குள் இதுவும் -பஞ்ச பாண்டவர் வியாசர் வால்மீகீ சரஸ்வதி நரசிம்மர் தர்சனம்
சேஷம் -சேஷேஸ்வரர்
பிரயோகம் தீர்த்த நாயகம்

————

ஸ்ரீ கயா க்ஷேத்ரம்
பல்குனி நதிக்கரை
ஸ்ரீ விஷ்ணு பாத தர்சனம்
பல்குனி நதி தீர்த்தம் -உத்தர மானஸ தீர்த்தம் -தக்ஷிண மானஸ தீர்த்தம் -உதீசி தீர்த்தம் -கனக தீர்த்தம் -=பஞ்ச தீர்த்தங்கள் உண்டு

பிரயாகா முண்டம்
காசி தண்டம்
கயா பிண்டம்
பாண்டுரெங்கம் நாத ப்ரஹ்மம்
ஜெகந்நாதம் அன்ன ப்ரஹ்மம்
கயா பிண்ட ப்ரஹ்மம்
கயா க்ஷேத்ர ராஜா
பிரயாகை தீர்த்த ராஜா

——

ஸ்ரீ காசி
ஸ்ரீ பிந்து மாதவப்பெருமாள்
ஸ்ரீ மாதவி தேவி
ஸ்ரீ ஆனந்த வல்லித்தாயார்
தாரக விமானம்
மணி கர்ணிகை
சக்கர தீர்த்தம்
பஞ்ச நதி
ஞான வாவி
புஜங்க சயனம்
கிழக்கே திரு முக மண்டலம்
சிவனுக்கு ப்ரத்யக்ஷம்

ஸ்ரீ அயோத்யை
ஸ்ரீ வடமதுரை
ஸ்ரீ மாயை
ஸ்ரீ காசி
ஸ்ரீ காஞ்சி
ஸ்ரீ அவந்திகை
ஸ்ரீ துவாரகை
ஏழும் முக்தி தரும் ஷேத்ரங்கள்

மூவர் இருப்பிடமாய் முகிலூர்தி முதல் தேவர்
மே வரு தற்கு அரிதாய ருண் முத்தியின் வீடாய்ப்
பாவம் அகறறு று காசியின் வாழ்வு படைத்தோர்கள்
யாவரவர்க்கு அரிதாய விழுப் பொருள் யாதேயோ —

இத்தலை எய்தி யிறக்குனர் யாரும் இளைப்பாற
வுத்தரியம் கொடுமாதுமை வீசிட வுமையோர் பால்
வைத்த அரும்பொருள் மேவரு தாரக மறையோதி
முத்தி அளித்திடும் இப்பதி யார் விட முயல்வாரே –

ஒளியதான காசி மீதுவந்து தங்குவோர்க்கு எல்லாம்
வெளியதான சோதி மேவு விஸ்வனாதனவன்
தெளியு மங்கை யுடன் இருந்து செப்புகின்ற தாரகம்
வெளியதோர் ராம ராம ராம நாமம் இந்த நாமமே –

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நூற்று எட்டுத் திருப்பதி அகவல் —

December 13, 2021

திருவரங்கத்தம்மனாரின் நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை,
வங்கிபுரத்தாய்ச்சியின் 108 திருப்பதிக் கோவை, பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி,
குரவை ராமானுஜதாசரின் நூற்றெட்டுத் திருப்பதித் திருப்புகழ்,
திருநின்றலூர் திருமலை தத்தங்கியார் தொண்டன் இயற்றிய 108 திருப்பதி அந்தாதி, நூற்றெட்டு திருப்பதி வெண்பா,
முத்துசாமி ஐயங்காரின் 108 திருப்பதி அகவல், ந.சுப்பராயப்பிள்ளையின் 108 திருப்பதிக்கோவை,
ரா.ராகவையங்காரின் 108 திருப்பதிப் பாடல்கள், சண்முக முதலியாரின் 108 திருப்பதிப் போற்றி அகவல்,
உபயகவி அப்பாவின் 108 திருப்பதித் தாலாட்டு, 108 திருப்பதி வண்ண விருத்தம் (உ.வே.சா. நூலகம்),
விஷ்ணு ஸ்தல மஞ்சரி போன்றவை திவ்ய தேசங்களைப் பற்றிய தகவல்களைத் தரும் சில நூல்களாகும்.

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்–ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார்

நடு நாடு -தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திவ்ய தேசங்கள்
தொண்டை -தொண்டர்கள் நிறைந்த தேசம் -தொண்டை நில மகட்கு முக்கிய அங்கம்-

1-பதின்மர் மங்களா சாசனம் -திருவரங்கம் மட்டும்
2-தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் தவிர மற்றவர்கள் அனைவரும் மங்களா சாசனம் -திருவேங்கடமும் திருப்பாற் கடலும்
3-எண்மர் மங்களா சாசனம் -ஸ்ரீ பரமபதம்
4-எழுவர் மங்களா சாசனம் -ஸ்ரீ திருக்குடந்தை
5-அறுவர் மங்கள சாசனம் -ஸ்ரீ திருமாலிருஞ்சோலை
6-ஐவர் மங்களா சாசனம் –6 திவ்ய ஸ்தலங்கள்
7-நால்வர் மங்களா சாசனம் –5 திவ்ய ஸ்தலங்கள்
8-மூவர் -மங்களா சாசனம் –5 திவ்ய ஸ்தலங்கள்
9-இருவர் -மங்களா சாசனம் –21 திவ்ய ஸ்தலங்கள்
10-ஒருவர் மங்களா சாசனம் –61 திவ்ய ஸ்தலங்கள்

திருப்பாணாழ்வார் -3-
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -4-
பொய்கை ஆழ்வார் –6-
குலசேகரப்பெருமாள் -8-
ஆண்டாள் -11-
பூதத்தாழ்வார் -13-
பேயாழ்வார் -15-
திருமழிசைப்பிரான் -17-
பெரியாழ்வார் –19-
நம்மாழ்வார் –36-
திருமங்கை ஆழ்வார் –86-

இவற்றில்
கிழக்கு – 79 திவ்ய தேசங்கள்
மேற்கு – 19 திவ்ய தேசங்கள்
வடக்கு – 3 திவ்ய தேசங்கள்
தெற்கு – 7 திவ்ய தேசங்கள்

இவற்றில்
கடல் கரை ஸ்தலங்கள் –7-
கட்டு மலையில் –6-
காவிரிக்கரையில் -12-
மலைமேல் சரிவில் உள்ளவை –13-
வடகலை திருமண் காப்பு உள்ளவை –13-

இவற்றில்
சயன திருக்கோலம் -27-
வீற்று இருந்த திருக்கோலம் -21-
நின்ற திருக்கோலம் -60-

இவற்றில்
உத்யோக சயனம் -1-
தர்ப்ப சயனம் -1-
தல சயனம் -1-
புஜங்க சயனம் -20-
போக சயனம் -1-
மாணிக்க சயனம் -1-
வடபத்ர சயனம் -1-
வீர சயனம் -1-

——–

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார் -15-/திருமழிசையார் -17-/ நம்மாழ்வார் -37-/குலசேகரர் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ திருப்பாணாழ்வார் -3-/
திருமங்கை ஆழ்வார் -86-திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம் –

11-ஆழ்வார்கள் –திருவரங்கம் –
9-ஆழ்வார்கள் -திருமலையும் திருப்பாற் கடலும் –
8-ஆழ்வார்கள்–பரமபதம் –
7-ஆழ்வார்கள் –திருக்குடந்தை –
6-ஆழ்வார்கள் –திருமாலிருஞ்சோலை –
5-ஆழ்வார்கள்-6-திவ்ய தேசங்கள்
4-ஆழ்வார்கள்-3-திவ்ய தேசங்கள் –
3-ஆழ்வார்கள் -5-திவ்ய தேசங்கள் –
2-ஆழ்வார்கள்-21-திவ்ய தேசங்கள்
1–ஆழ்வார்-67-திவ்ய தேசங்கள்

ஐவர் மங்களாசாசனம் –6-திவ்ய தேசங்கள்
-1-திரு அயோத்தியை –பெரியாழ்வார் / குலசேகரர் /தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருக் கண்ணபுரம் –பெரியாழ்வார் / ஆண்டாள் / குலசேகரர் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-3-திருக் கோட்டியூர் –பூதத்தார் / பேயார் /திரு மழிசையார் / பெரியாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-4-திருத் துவாரகை –திருமழிசையார் / பெரியாழ்வார் / ஆண்டாள் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-5-திரு வடமதுரை –பெரியாழ்வார் / ஆண்டாள் / தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
திருக் கோவர்த்தனம் –பெரியாழ்வார் -10-பாசுரங்கள் / ஆண்டாள் -3-பாசுரம்
திரு விருந்தாவனம் –ஆண்டாள் -10-பாசுரங்கள்
–6-திரு வெக்கா -பொய்கையார் /-பேயார் /திரு மழிசையார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

நால்வர் மங்களா சாசனம் -3-திவ்ய தேசங்கள்
-1-திருக்குறுங்குடி –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருப்பாடகம் –பூதத்தார் / பேயார் / திருமழிசையார் / திருமங்கை ஆழ்வார்
திருவாய் -5–10–6-நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் வியாக்யானத்தால் மங்களாசாசனம் உண்டே -என்பாரும் உண்டு
-3-திருப்பேர் நகர் –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

மூவர் மங்களா சாசனம் -5-
-1-திரு அத்திகிரி –பூதத்தார் / பேயார் / திருமங்கையார்
-2-திரு வல்லிக் கேணி –பேயார் / திருமழிசையார் / திருமங்கையார்
-3-திரு ஆய்ப்பாடி –பெரியாழ்வார் / ஆண்டாள் / திருமங்கையார்
-4-திருக் கோவலூர் –பொய்கையார் -பூதத்தார் -திருமங்கையார்
-5-திரு விண்ணகர் –பேயார் / நம்மாழ்வார் / திருமங்கையார்

இருவர் மங்களா சாசனம் -20-திவ்ய தேசங்கள்
திரு அட்டபுயகரம் –பேயார் -கலியன் /திருவாலி –கலியன் -குலசேகரர் /திரு ஊரகம் -கலியன்-திருமழிசையார் /
திருக்கடிகை –பேயார் -கலியன் /திரு எவ்வுள்ளூர் –திருக் கடல் மல்லை –திரு சாளக்கிராமம் -திருச் சித்ர கூடம் –திரு தஞ்சை –
-திருத் தண் கால் –திரு நாவாய் –திரு மோகூர் திரு பதரி -திரு வல்ல வாழ் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -திரு வெள்ளறை –திரு வேளுக்கை –

பாஞ்சராத்ர பாத்மம் ஐந்து வகை பிரதிஷ்டைகளைச் சொல்லும்
1–ஸ்தாபனா -நின்ற திருக்கோலம் /
2–அஸ்தாபனா -அமர்ந்த திருக்கோலம் /
3–சமஸ்தாபனா –கிடந்த திருக்கோலம்
4–பரஸ்தாபனா –வாஹனங்களிலே பல திருக்கோலம் உத்சவர் அலங்காரம்
5–ப்ரதிஷ்டானா–சன்மார்ச்சையுடன் அமைப்பது –

நின்ற திருக்கோலம் -67-/ கிழக்கு நோக்கி -39-/ மேற்கு நோக்கி -12-/ தெற்கு நோக்கி -14-/ வடக்கு நோக்கி -2-
அமர்ந்த திருக்கோலம் -17-/ கிழக்கு நோக்கி -13-/ மேற்கு நோக்கி -3-/ தெற்கு நோக்கி -0-/ வடக்கு நோக்கி -1-
கிடந்த திருக்கோலம் -24-/ கிழக்கு -18-/ மேற்கு -3-/ தெற்கு -3-/ வடக்கு -0-

ஜல சயனம் / தல சயனம் / புஜங்க சயனம் -சேஷ சயனம் /உத்தியோக சயனம் /வீர சயனம் /போக சயனம் /
தர்ப்ப சயனம் /பத்ர -ஆலிலை -சயனம் /மாணிக்க சயனம் /உத்தான சயனம்

———————

பிரஸித்த அபிமான திவ்ய தேசங்கள்
1-திரு நாராயண புரம் -மேல்கோட்டை
2-ராஜ மன்னார் கோயில்
3- பூரி ஜெகன்நாத்
4-ஸ்ரீ முஷ்ணம்
5- ஸ்ரீ புஷ்கரம்
6- ஸ்ரீ ஜநார்த்தனம் -கேரளா மேற்கு கடல் கரை
7- ஸ்ரீ கூர்மம்
8- ஸ்ரீ சிங்கப்பெருமாள் கோயில்
9-அவந்தி -உஜ்ஜயினி
10-கயா க்ஷேத்ரம்
11-பிரயாகை
12- மயிலாப்பூர்
13- திரு மழிசை
14-திரு வஞ்சிக்களம்
15-திரு மண்டங்குடி
16-திருக்குறையலூர்
17-காட்டு மன்னார் கோயில்
18-பூ இருந்த வல்லி
19-ஸ்ரீ பெரும் புதூர்
20- ஸ்ரீ கூறும்
21- மழலை மங்கலம்
22-பச்சைப்பெருமாள் கோயில்
23-மதுராந்தகம் ஏரி காத்த ராமர் திருக்கோயில்
24-ஸ்ரீ குருவாயூர்
25-குணசீலம்
26-பண்டரிபுரம்
27-தொண்டனூர்
28-ஸ்ரீ ரெங்க பட்டணம்

——

நூற்று எட்டுத் திருப்பதி வெண்பா -குருகை இளைய பெருமாள் சிஷ்யர்

சோழ நாடு ஈர் இருபதாம் சொற் பாண்டி ஈர் ஒன்பதாம்
பாழி மலை நாட்டுப் பதின்மூன்றும் -வாழ் தொண்டை
நாடு இரு பத்து மூன்று வடநாடு ஆறு இரண்டு நடு நாடு இரண்டு
கடல் வீட்டோடு நூற்று எண் பதியாம் –

————

ஸ்ரீ நூற்றெட்டுத் திருப்பதிப் போற்றி அகவல்
ஸ்ரீ ஆழ்வார் களின் மங்களாசாகனம் (பாடல்) பெற்ற
ஸ்ரீ நூற்றெட்டுத் திருப்பதிகளின் பெயர்களையும் அடக்கி 108 அடிகள் கொண்ட ஒர் அகவல் பா –
இதில் ஆறு அபிமான ஸ்தலங்களை குறிப்பிடுகிறார்

இந்நூலின் ஆசிரியர் -ஸ்ரீ முத்து ஸ்வாமி ஐயங்கார் -ஸ்ரீ ராகவ ஐயங்காரின் திருத்தந்தையார் –

108 திருப்பதிப்பாடல்கள் என்று ஸ்ரீ ராகவ ஐயங்கார் அருளிச் செய்த 8 வெண்பாக்களும் உண்டு

———–

உலகு உய்ய அரங்கம் உறையூர் தஞ்சை அன்பில்
கரம்பனூர் ஆதனூர் வெள்ளறை கண்டியூர்
அழுந்தூர் கவித்தலம் புள்ளம் பூதங்குடி
சிறு புலியூர் குடந்தை திருவிண்ணகரம்

திருத்தலைச் சங்க நாண் மதியம்
திருப்பேர் நகர் திருச்சேறை வெள்ளியங்குடி
அரிமேய விண்ணகரம் வண் புருஷோத்தமம்
ஆலி நறையூர் தில்லைச் சித்ரகூடம்

சீ ராம விண்ணகரம் காவளம்பாடி கண்ண மங்கை
நந்திபுர விண்ணகரம் நாக்கை இந்தளூர்
கண்ணங்குடி திருக்கண்ண புரம்
மணி மாடக்கோயில் வைகுண்ட விண்ணகரம்

கூடலூர் வெள்ளக்குளம் மணிக்கூடம்
தேர்வானார் தொகை திருத்தெற்றி அம்பலம்
செம் செய் பொன் கோயில் திருப்பார்த்தன் பள்ளி
சோழ நாட்டிடை மறை சொல் பதி நாற்பதின்

திரு மாலிருஞ்சோலை ஸ்ரீ வர குண மங்கை
திருப்புல்லாணி திரு மெய்யம் திருப்புளிங்குடி
திருமோகூர் திருக்குருகூர் திருக்கோட்டியூர் திருக்கூடல்
ஸ்ரீ வைகுண்டம் திருக்குளந்தை திருக்குறுங்குடி

திருக்கோளூர் ஸ்ரீவில்லி புதுவை
தொலைவில்லி மங்கலம் தூய்த் திருப்பேரை
சீ வர மங்கை திருத்தண் காலூர்
பாண்டி நாட்டிடை வாழ் பதி பதினெட்டின்

போற்றும் அநந்த புரம் புலியூர் செங்குன்றூர்
வித்துவக்கோடு மூழிக் களம் வண் பரிசாரம்
காட்கரை நாவாய் வாறன் விளை வண் வண்டூர்
வல்ல வாழ் திருக்கடித்தானம் திருவட்டாறு
பகர் மலை நாட்டிடை பதி பதின்மூன்றின்

திருவகீந்த்ர புரம் திருக்கோவலூர்
நடு நாட்டிடை இரண்டு நலம் தரு பதியின்

அத்தி மா மலை யூரகம் திருத்தண்கா
புட் குழி அட்ட புயங்க நீரகம் காரகம்
வெக்கா கள்வனூர் பாடகம் நின்றவூர்
எவ்வுளூர் நிலாத் திங்கள் துண்டம்

திரு வேளுக்கை திருக்கார்வானம்
பவள வண்ணம் பரமேஸ்வர விண்ணகரம்
திருவிடை வெந்தை திருக்கடல் மல்லை
அல்லிக்கேணி வளர் திருக்கடிகை நீர்மலை
தொண்டை நாட்டிடையின் இன்புறும் பதிகள் இருபத்து இரண்டின்

திருவேங்கடம் சிங்க வேழ் குன்றம் அயோத்யை
தேங்கிய வதரியாச்சிரம் நைமிசாரண்யம்
பிரீதி சாளக்ராமம் கங்கைக்கரை வாழ் கண்டம்
திருவாய்ப்பாடி துவாரகை பாற்கடல் மதுரை
வடநாட்டிடை மன்னிய பதிகள் பத்துடன் இரண்டில்

பரமபதம் என்னும் திரு நாடு ஒன்றையும் சேர்த்து நூற்று எட்டில்

யதிபதி அருளால் இயற்றிய திரு நாராயண புரம்
திரு ராஜமன்னார் கோயில்
மன்னிய வ்ருந்தாவனம் பெரும் பூதூர்
மெய்ப்புகழ் பாப விநாசம் சீர் மூஷ்ணம்
புராண நூல் தலங்கள் போற்றும் ஓர் ஆறின்

உலகிடை மற்றுள ஓங்கிய பதியின்
மலர்மகளுடனே மன்னிய திருமால்
ஏழையேன் உள்ளத்து இருந்து இங்கு
ஊழி என ஊழியாய் உலகு அளித்திடவே –

———–

ஆந்திர பிரதேசம் மற்றும் வட இந்தியா

1. திருமலா (திருப்பதி) ஆந்திர பிரதேசம் 2. அஹோபிலம் ஆந்திர பிரதேசம் 3. முக்திநாத், சாலிகிராமம் நேபாளம்
4. நைமிசாரண்யம் உ.பி. 5. மதுரா உ.பி. 6. கோகுலம் உ.பி. 7. ரகுந்தாதர் ஆலயம் உத்தர்கண்ட்
8.பத்ரிநாத் ஆலயம் உத்தர்கண்ட் 9. ஜ்யோதிமட் உத்தர்கண்ட் 10. அயோத்யா உ.பி. 11. த்வாரகா குஜராத்.

மலைநாடு

12. ஸ்ரீ பத்மநாபஸ்வாமி ஆலயம், திருவனந்தபுரம் 13. திருகட்கரை 14. மூழிக்களம் 15. திருவல்லா
16. திருகடிதானம் 17. செங்குன்றூர் 18. திருப்புள்ளியூர் 19. திருவாரன்விளை 20. திருவான்வந்தூர் 21. திருநாவாய் 22. வித்துவக்கோடு

மதுரை

23. திருமயம் 24. திருக்கோஷ்டியூர் 25. கூடல் அழகர் பெருமாள் கோவில் 26. அழகர்கோவில்
27.திருமோகூர் 28. ஸ்ரீ வில்லிப்புத்தூர் 29. திருத்தங்கள் 30. திருப்புல்லாணி

காஞ்சிபுரம்

31. திருக்கச்சி 32. அஷ்டபுஜகரம் 33. திருவெஃகா 34. திருத்தண்கா (தூப்புல்) 35.திருவேளுக்கை 36. திருக்கள்வனூ
37.திரு ஊரகம் 38. திரு நீரகம் 39. திருக்காரகம் 40. திருக்கார்வானம் 41. திருப்பரமேஸ்வர விண்ணகரம்
42. திருப்பவளவண்ணம் 43. திருப்பாடகம் 44. நிலாத் திங்கள் துண்டம் பெருமாள் கோவில் 45. திருப்புட்குழி

சென்னை

46. திருவல்லிக்கேணி 47. திருநீர்மலை 48. திருவாடானை 49. திருக்கடல்மல்லை 50. திருநின்றவூர் 51. திருவள்ளூர் 52. திருக்கடிகை

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி

53. திருவழுந்தூர் 54. திருவிந்தளூர் 55. காழீசிரம விண்ணகரம் 56. திருக்காவளம்பாடி 57.திருச்செம்பொன்சேய்
58. திரு அரிமேய விண்ணகரம் 59. திரு வண்புருஷோத்தமம் 60. திருவைகுந்த விண்ணகரம் 61. திருமணிமாடம்

62. திருதேவனார்தொகை 63. திருத்தெற்றியம்பலம் 64. திருமணிக்கூடம் 65.திருவெள்ளக்குளம் 66. திருப்பார்த்தன்பள்ளி
67. தலை சங்க நன்மதியம் 68. திருச்சிறுபுலியூர் 69. திருவாலி-திருநகரி

தஞ்சாவூர்

70. திருச்சித்ரகூடம் 71. திருக்கண்ணன்குடி 72. திருநாகை 73. திரு தஞ்சை 74. திருக்கூடலூர் 75. திருக்கவித்தாலம்
76. திரு ஆதனூர் 77. திருப்புள்ள பூதங்குடி 78. திருக்குடந்தை 79. திருச்சேறை 80. திருநந்திபுர விண்ணகரம்
81. திருநறையூர் 82. திரு விண்ணகர் 83. திரு வெள்ளியங்குடி 84. திருக்கண்ண மங்கை 85. திருக்கண்ணபுரம்
86. திருவந்திபுரம் 87. திருக்கோவலூர் 88. திருக்கண்டியூர்

திருச்சி

89. ஸ்ரீரங்கம் 90. திருக்கோழி 91. திருகரம்பனூர் 92. திருவெள்ளறை 93. திரு அன்பில் 94. திருப்பேர் நகர்

திருநெல்வேலி

95. திருவரமங்கை 96. திருக்குறுங்குடி 97. ஸ்ரீவைகுந்தம் 98. திருவரகுணமங்கை 99. திருப்புளிங்குடி
100. திருக்குருகூர் 101. திருத்துளை வில்லி மங்கலம் 102. திருக்கோளூர் 103. திருக்குளந்தை 104. தென் திருப்பேரை

கன்யாகுமரி

105. திருவட்டாறு 106. திருவன்பரிசரம்

விண்ணுலகம்

107. திருப்பாற்கடல் 108. பரமபதம்

108 திருப்பதிகளை சுலபமாக நினைவில் கொள்ள நூற்றெட்டு திருப்பதி யகவல் உள்ளது

———

சோழநாட்டு திருப்பதிகள்:

1. ரங்கநாத பெருமாள் திருக்கோயில் ஸ்ரீரங்கம்திருச்சி
2. அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர்திருச்சி
3. உத்தமர் திருக்கோயில் உத்தமர் கோவில்திருச்சி
4. புண்டரீகாட்சன் திருக்கோயில் திருவெள்ளறைதிருச்சி
5. சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் அன்பில்திருச்சி
6. அப்பக்குடத்தான் திருக்கோயில் கோவிலடிதஞ்சாவூர்
7. ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில் கண்டியூர்தஞ்சாவூர்
8. வையம்காத்த பெருமாள் திருக்கோயில் திருக்கூடலூர்தஞ்சாவூர்
9. கஜேந்திர வரதன் திருக்கோயில் கபிஸ்தலம்தஞ்சாவூர்
10. வல்வில்ராமன் திருக்கோயில் திருப்புள்ளம்பூதங்குடிதஞ்சாவூர்
11. ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் ஆதனூர்தஞ்சாவூர்
12. சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம்தஞ்சாவூர்
13. ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருநாகேஸ்வரம்தஞ்சாவூர்
14. திருநறையூர் நம்பி திருக்கோயில் நாச்சியார்கோயில்தஞ்சாவூர்
15. சாரநாதப்பெருமாள் திருக்கோயில் திருச்சேறைதஞ்சாவூர்
16. பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணமங்கைதிருவாரூர்
17. சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணபுரம்நாகப்பட்டினம்
18. லோகநாதப்பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணங்குடிநாகப்பட்டினம்
19. சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் நாகப்பட்டினம்நாகப்பட்டினம்
20. நீலமேகப்பெருமாள் (மாமணி) திருக்கோயில் தஞ்சாவூர்தஞ்சாவூர்
21. ஜெகநாதன் திருக்கோயில் நாதன்கோயில்தஞ்சாவூர்
22. கோலவில்லி ராமர் திருக்கோயில் திருவெள்ளியங்குடிதஞ்சாவூர்
23. தேவாதிராஜன் திருக்கோயில் தேரழுந்தூர்நாகப்பட்டினம்
24. கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில் திருச்சிறுபுலியூர்திருவாரூர்
25. நாண்மதியப்பெருமாள் திருக்கோயில் தலச்சங்காடுநாகப்பட்டினம்
26. பரிமள ரங்கநாதர் திருக்கோயில் திருஇந்தளூர்நாகப்பட்டினம்
27. கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் காவளம்பாடிநாகப்பட்டினம்
28. திரிவிக்கிரமன் திருக்கோயில் சீர்காழிநாகப்பட்டினம்
29. குடமாடு கூத்தன் திருக்கோயில் திருநாங்கூர்நாகப்பட்டினம்
30. புருஷோத்தமர் திருக்கோயில் திருவண்புருசோத்தமம்நாகப்பட்டினம்
31. பேரருளாளன் திருக்கோயில் செம்பொன்செய்கோயில்நாகப்பட்டினம்
32. பத்ரிநாராயணர் திருக்கோயில் திருமணிமாடக்கோயில்நாகப்பட்டினம்
33. வைகுண்டநாதர் திருக்கோயில் வைகுண்ட விண்ணகரம்நாகப்பட்டினம்
34. அழகியசிங்கர் திருக்கோயில் திருவாலிநாகப்பட்டினம்
34A. வேதராஜன் திருக்கோயில் திருநகரிநாகப்பட்டினம்
35. தெய்வநாயகர் திருக்கோயில் திருத்தேவனார்த்தொகைநாகப்பட்டினம்
36. செங்கண்மால் திருக்கோயில் திருத்தெற்றியம்பலம்நாகப்பட்டினம்
37. வரதராஜப்பெருமாள் திருக்கோயில் திருமணிக்கூடம்நாகப்பட்டினம்
38. அண்ணன் பெருமாள் திருக்கோயில் திருவெள்ளக்குளம்நாகப்பட்டினம்
39. தாமரையாள் கேள்வன் திருக்கோயில் பார்த்தன் பள்ளிநாகப்பட்டினம்
40. கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில் சிதம்பரம்கடலூர்

நடுநாட்டு திருப்பதிகள்:

41. தேவநாத பெருமாள் திருக்கோயில் திருவகிந்திபுரம்கடலூர்
42. திருவிக்கிரமசுவாமி திருக்கோயில் திருக்கோவிலூர்விழுப்புரம்

தொண்டைநாட்டு திருப்பதிகள்:

43. வரதராஜப் பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம்காஞ்சிபுரம்
44. அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம்காஞ்சிபுரம்
45. விளக்கொளி பெருமாள் திருக்கோயில் தூப்புல்காஞ்சிபுரம்
46. அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம்காஞ்சிபுரம்
47. உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருநீரகம்காஞ்சிபுரம்
48. பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் திருப்பாடகம்காஞ்சிபுரம்
49. நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில் நிலாதிங்கள்துண்டம்காஞ்சிபுரம்
50. உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருஊரகம்காஞ்சிபுரம்
51. சொன்ன வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில் திருவெக்காகாஞ்சிபுரம்
52. உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருகாரகம்காஞ்சிபுரம்
53. உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருக்கார்வானம்காஞ்சிபுரம்
54. கள்வப்பெருமாள் திருக்கோயில் திருக்கள்வனூர்காஞ்சிபுரம்
55. பவளவண்ணபெருமாள் திருக்கோயில் திருபவளவண்ணம்காஞ்சிபுரம்
56. பரமபதநாதர் திருக்கோயில் பரமேஸ்வர விண்ணகரம்காஞ்சிபுரம்
57. விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழிகாஞ்சிபுரம்
58. பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் திருநின்றவூர்திருவள்ளூர்
59. வீரராகவர் திருக்கோயில் திருவள்ளூர்திருவள்ளூர்
60. பார்த்தசாரதி திருக்கோயில் திருவல்லிக்கேணிசென்னை
61. நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் திருநீர்மலைகாஞ்சிபுரம்
62. நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் திருவிடந்தைகாஞ்சிபுரம்
63. ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம்காஞ்சிபுரம்
64. யோக நரசிம்மசுவாமி திருக்கோயில் சோளிங்கர்வேலூர்

வடநாட்டு திருப்பதிகள்:

65. ரகுநாயகன் திருக்கோயில் சரயு-அயோத்திபைசாபாத்
66. தேவராஜன் திருக்கோயில் நைமிசாரண்யம்உத்தர் பிரதேஷ்
67. பரமபுருஷன் திருக்கோயில் நந்தப் பிரயாக்உத்தராஞ்சல்
68. நீலமேகம் திருக்கோயில் தேவப்ரயாகைஉத்தராஞ்சல்
69. பத்ரிநாராயணர் திருக்கோயில் பத்ரிநாத்சாமோலி
70. ஸ்ரீமூர்த்தி திருக்கோயில் முக்திநாத்நேபாளம்
71. கோவர்த்தநேசன் திருக்கோயில் மதுராஉத்தர் பிரதேஷ்
72. நவமோகன கிருஷ்ணன் திருக்கோயில் ஆயர்பாடிடெல்லி
73. கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில் துவாரகைஅகமதாபாத்
74. பிரகலாத வரதன் திருக்கோயில் அஹோபிலம்கர்நூல்
75. வெங்கடாசலபதி திருக்கோயில் மேல்திருப்பதிசித்தூர்

மலைநாட்டுத் திருப்பதிகள்:

76. நாவாய் முகுந்தன் திருக்கோயில் திருநாவாய்மலப்புரம்
77. உய்யவந்தபெருமாள் திருக்கோயில் திருவித்துவக்கோடுபாலக்காடு
78. காட்கரையப்பன் திருக்கோயில் திருக்காக்கரைஎர்ணாகுளம்
79. லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில் திருமூழிக்களம்எர்ணாகுளம்
80. திருவாழ்மார்பன் திருக்கோயில் திருவல்லவாழ்பந்தனம் திட்டா
81. அற்புத நாராயணன் திருக்கோயில் திருக்கடித்தானம்கோட்டயம்
82. இமையவரப்பன் திருக்கோயில் திருச்சிற்றாறுஆலப்புழா
83. மாயப்பிரான் திருக்கோயில் திருப்புலியூர்ஆலப்புழா
84. திருக்குறளப்பன் திருக்கோயில் திருவாறன் விளைபந்தனம் திட்டா
85. பாம்பணையப்பன் திருக்கோயில் திருவண்வண்டூர்ஆலப்புழா
86. அனந்த பத்மநாபன் திருக்கோயில் திருவனந்தபுரம்திருவனந்தபுரம்
87. ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருவட்டாறுகன்னியாகுமரி
88. திருவாழ்மார்பன் திருக்கோயில் திருப்பதிசாரம்கன்னியாகுமரி

பாண்டியநாட்டுத் திருப்பதிகள் :

89. அழகிய நம்பிராயர் திருக்கோயில் திருக்குறுங்குடிதிருநெல்வேலி
90. தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் நாங்குனேரிதிருநெல்வேலி
91. வைகுண்டநாதர் திருக்கோயில் ஸ்ரீ வைகுண்டம்தூத்துக்குடி
92. விஜயாஸனர் திருக்கோயில் நத்தம்தூத்துக்குடி
93. பூமிபாலகர் திருக்கோயில் திருப்புளியங்குடிதூத்துக்குடி
94. ஸ்ரீ நிவாசன் திருக்கோயில் தொலைவிலிமங்கலம்தூத்துக்குடி
94A. அரவிந்தலோசனர் திருக்கோயில் தொலைவிலிமங்கலம்தூத்துக்குடி
95. வேங்கட வாணன் திருக்கோயில் பெருங்குளம்தூத்துக்குடி
96. வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் திருக்கோளூர்தூத்துக்குடி
97. மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் தென்திருப்பேரைதூத்துக்குடி
98. ஆதிநாதன் திருக்கோயில் ஆழ்வார் திருநகரிதூத்துக்குடி
99. ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீ வில்லிபுத்தூர்விருதுநகர்
100. நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் திருத்தங்கல்விருதுநகர்
101. கூடலழகர் திருக்கோயில் மதுரைமதுரை
102. கள்ளழகர் திருக்கோயில் அழகர்கோவில்மதுரை
103. காளமேகப்பெருமாள் திருக்கோயில் திருமோகூர்மதுரை
104. சவுமியநாராயணர் திருக்கோயில் திருக்கோஷ்டியூர்சிவகங்கை
105. ஆதிஜெகநாதர் திருக்கோயில் திருப்புல்லாணிராமநாதபுரம்
106. சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் திருமயம்புதுக்கோட்டை

நில உலகில் காணமுடியாத திருப்பதிகள்:

107. ஸ்ரீ க்ஷீராப்தி நாதன் திருக்கோயில்திருப்பாற்கடல்விண்ணுலகம்
108. ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோயில்பரமபதம்விண்ணுலகம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ திரு நின்றவூர் திருமலை அத்தங்கி தாதாச்சார்யர் தொண்டன் அருளிச் செய்த நூற்று எட்டுத் திருப்பதி அந்தாதி —

December 13, 2021

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்–ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார்

நடு நாடு -தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திவ்ய தேசங்கள்
தொண்டை -தொண்டர்கள் நிறைந்த தேசம் -தொண்டை நில மகட்கு முக்கிய அங்கம்-

1-பதின்மர் மங்களா சாசனம் -திருவரங்கம் மட்டும்
2-தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் தவிர மற்றவர்கள் அனைவரும் மங்களா சாசனம் -திருவேங்கடமும் திருப்பாற் கடலும்
3-எண்மர் மங்களா சாசனம் -ஸ்ரீ பரமபதம்
4-எழுவர் மங்களா சாசனம் -ஸ்ரீ திருக்குடந்தை
5-அறுவர் மங்கள சாசனம் -ஸ்ரீ திருமாலிருஞ்சோலை
6-ஐவர் மங்களா சாசனம் –6 திவ்ய ஸ்தலங்கள்
7-நால்வர் மங்களா சாசனம் –5 திவ்ய ஸ்தலங்கள்
8-மூவர் -மங்களா சாசனம் –5 திவ்ய ஸ்தலங்கள்
9-இருவர் -மங்களா சாசனம் –21 திவ்ய ஸ்தலங்கள்
10-ஒருவர் மங்களா சாசனம் –61 திவ்ய ஸ்தலங்கள்

திருப்பாணாழ்வார் -3-
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -4-
பொய்கை ஆழ்வார் –6-
குலசேகரப்பெருமாள் -8-
ஆண்டாள் -11-
பூதத்தாழ்வார் -13-
பேயாழ்வார் -15-
திருமழிசைப்பிரான் -17-
பெரியாழ்வார் –19-
நம்மாழ்வார் –36-
திருமங்கை ஆழ்வார் –86-

இவற்றில்
கடல் கரை ஸ்தலங்கள் –7-
கட்டு மலையில் –6-
காவிரிக்கரையில் -12-
மலைமேல் சரிவில் உள்ளவை –13-
வடகலை திருமண் காப்பு உள்ளவை –13-

இவற்றில்
கிழக்கு – 79 திவ்ய தேசங்கள்
மேற்கு – 19 திவ்ய தேசங்கள்
வடக்கு – 3 திவ்ய தேசங்கள்
தெற்கு – 7 திவ்ய தேசங்கள்

இவற்றில்
தவழ்ந்த திருக்கோலம் -1-
சயன திருக்கோலம் -29-
வீற்று இருந்த திருக்கோலம் -19-
நின்ற திருக்கோலம் -58-

இவற்றில்
உத்யோக சயனம் -1-
தர்ப்ப சயனம் -1-
தல சயனம் -1-
புஜங்க சயனம் -20-
போக சயனம் -1-
மாணிக்க சயனம் -1-
வடபத்ர சயனம் -1-
வீர சயனம் -1-

——-

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார் -15-/திருமழிசையார் -17-/ நம்மாழ்வார் -37-/குலசேகரர் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ திருப்பாணாழ்வார் -3-/
திருமங்கை ஆழ்வார் -86-திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம் –

11-ஆழ்வார்கள் –திருவரங்கம் –
9-ஆழ்வார்கள் -திருமலையும் திருப்பாற் கடலும் –
8-ஆழ்வார்கள்–பரமபதம் –
7-ஆழ்வார்கள் –திருக்குடந்தை –
6-ஆழ்வார்கள் –திருமாலிருஞ்சோலை –
5-ஆழ்வார்கள்-6-திவ்ய தேசங்கள்
4-ஆழ்வார்கள்-3-திவ்ய தேசங்கள் –
3-ஆழ்வார்கள் -5-திவ்ய தேசங்கள் –
2-ஆழ்வார்கள்-21-திவ்ய தேசங்கள்
1–ஆழ்வார்-67-திவ்ய தேசங்கள்

ஐவர் மங்களாசாசனம் –6-திவ்ய தேசங்கள்
-1-திரு அயோத்தியை –பெரியாழ்வார் / குலசேகரர் /தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருக் கண்ணபுரம் –பெரியாழ்வார் / ஆண்டாள் / குலசேகரர் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-3-திருக் கோட்டியூர் –பூதத்தார் / பேயார் /திரு மழிசையார் / பெரியாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-4-திருத் துவாரகை –திருமழிசையார் / பெரியாழ்வார் / ஆண்டாள் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-5-திரு வடமதுரை –பெரியாழ்வார் / ஆண்டாள் / தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
திருக் கோவர்த்தனம் –பெரியாழ்வார் -10-பாசுரங்கள் / ஆண்டாள் -3-பாசுரம்
திரு விருந்தாவனம் –ஆண்டாள் -10-பாசுரங்கள்
–6-திரு வெக்கா -பொய்கையார் /-பேயார் /திரு மழிசையார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

நால்வர் மங்களா சாசனம் -3-திவ்ய தேசங்கள்
-1-திருக்குறுங்குடி –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருப்பாடகம் –பூதத்தார் / பேயார் / திருமழிசையார் / திருமங்கை ஆழ்வார்
திருவாய் -5–10–6-நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் வியாக்யானத்தால் மங்களாசாசனம் உண்டே -என்பாரும் உண்டு
-3-திருப்பேர் நகர் –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

மூவர் மங்களா சாசனம் -5-
-1-திரு அத்திகிரி –பூதத்தார் / பேயார் / திருமங்கையார்
-2-திரு வல்லிக் கேணி –பேயார் / திருமழிசையார் / திருமங்கையார்
-3-திரு ஆய்ப்பாடி –பெரியாழ்வார் / ஆண்டாள் / திருமங்கையார்
-4-திருக் கோவலூர் –பொய்கையார் -பூதத்தார் -திருமங்கையார்
-5-திரு விண்ணகர் –பேயார் / நம்மாழ்வார் / திருமங்கையார்

இருவர் மங்களா சாசனம் -20-திவ்ய தேசங்கள்
திரு அட்டபுயகரம் –பேயார் -கலியன் /திருவாலி –கலியன் -குலசேகரர் /திரு ஊரகம் -கலியன்-திருமழிசையார் /
திருக்கடிகை –பேயார் -கலியன் /திரு எவ்வுள்ளூர் –திருக் கடல் மல்லை –திரு சாளக்கிராமம் -திருச் சித்ர கூடம் –திரு தஞ்சை –
-திருத் தண் கால் –திரு நாவாய் –திரு மோகூர் திரு பதரி -திரு வல்ல வாழ் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -திரு வெள்ளறை –திரு வேளுக்கை –

பாஞ்சராத்ர பாத்மம் ஐந்து வகை பிரதிஷ்டைகளைச் சொல்லும்
1–ஸ்தாபனா -நின்ற திருக்கோலம்
2–அஸ்தாபனா -அமர்ந்த திருக்கோலம்
3–சமஸ்தாபனா –கிடந்த திருக்கோலம்
4–பரஸ்தாபனா –வாஹனங்களிலே பல திருக்கோலம் உத்சவர் அலங்காரம்
5–ப்ரதிஷ்டானா–சன்மார்ச்சையுடன் அமைப்பது –

நின்ற திருக்கோலம் -67-/ கிழக்கு நோக்கி -39-/ மேற்கு நோக்கி -12-/ தெற்கு நோக்கி -14-/ வடக்கு நோக்கி -2-
அமர்ந்த திருக்கோலம் -17-/ கிழக்கு நோக்கி -13-/ மேற்கு நோக்கி -3-/ தெற்கு நோக்கி -0-/ வடக்கு நோக்கி -1-
கிடந்த திருக்கோலம் -24-/ கிழக்கு -18-/ மேற்கு -3-/ தெற்கு -3-/ வடக்கு -0-

ஜல சயனம் / தல சயனம் / புஜங்க சயனம் -சேஷ சயனம் /உத்தியோக சயனம் /வீர சயனம் /போக சயனம் /
தர்ப்ப சயனம் /பத்ர -ஆலிலை -சயனம் /மாணிக்க சயனம் /உத்தான சயனம்

————–

பிரஸித்த அபிமான திவ்ய தேசங்கள்
1-திரு நாராயண புரம் -மேல்கோட்டை
2-ராஜ மன்னார் கோயில்
3-பூரி ஜெகன்நாத்
4-ஸ்ரீ முஷ்ணம்
5-ஸ்ரீ புஷ்கரம்
6-ஸ்ரீ ஜநார்த்தனம் -கேரளா மேற்கு கடல் கரை
7-ஸ்ரீ கூர்மம்
8-ஸ்ரீ சிங்கப்பெருமாள் கோயில்
9-அவந்தி -உஜ்ஜயினி
10-கயா க்ஷேத்ரம்
11-பிரயாகை
12-மயிலாப்பூர்
13-திரு மழிசை
14-திரு வஞ்சிக்களம்
15-திரு மண்டங்குடி
16-திருக்குறையலூர்
17-காட்டு மன்னார் கோயில்
18-பூ இருந்த வல்லி
19-ஸ்ரீ பெரும் புதூர்
20-ஸ்ரீ கூரம்
21-மழலை மங்கலம்
22-பச்சைப் பெருமாள் கோயில்
23-மதுராந்தகம் ஏரி காத்த ராமர் திருக்கோயில்
24-ஸ்ரீ குருவாயூர்
25-குணசீலம்
26-பண்டரிபுரம்
27-தொண்டனூர்
28-ஸ்ரீ ரெங்க பட்டணம்

————

நூற்று எட்டுத் திருப்பதி வெண்பா -குருகை இளைய பெருமாள் சிஷ்யர்

சோழ நாடு ஈர் இருபதாம் சொற் பாண்டி ஈர் ஒன்பதாம்
பாழி மலை நாட்டுப் பதின்மூன்றும் -வாழ் தொண்டை
நாடு இரு பத்து மூன்று வடநாடு ஆறு இரண்டு நடு நாடு இரண்டு
கடல் வீட்டோடு நூற்று எண் பதியாம் –

——–

ஸ்ரீ நூற்றெட்டுத் திருப்பதிப் போற்றி அகவல்
ஸ்ரீ ஆழ்வார் களின் மங்களாசாகனம் (பாடல்) பெற்ற
ஸ்ரீ நூற்றெட்டுத் திருப்பதிகளின் பெயர்களையும் அடக்கி 108 அடிகள் கொண்ட ஒர் அகவல் பா –
இதில் ஆறு அபிமான ஸ்தலங்களை குறிப்பிடுகிறார்

இந்நூலின் ஆசிரியர் -ஸ்ரீ முத்து ஸ்வாமி ஐயங்கார் -ஸ்ரீ ராகவ ஐயங்காரின் திருத்தந்தையார் –
108 திருப்பதிப்பாடல்கள் என்று ஸ்ரீ ராகவ ஐயங்கார் அருளிச் செய்த 8 வெண்பாக்களும் உண்டு

—————

இங்கு ஒவ்வொரு திருப்பதியைப் பற்றியும்
வழி பட்டோர்
தீர்த்தம்
விமானம்
பிராட்டி திருநாமம்
திரை
கோலம்
திருமால்
திருப்பதி ஆகிய எட்டு விஷயங்களும் உண்டு
இதில் 72 வைத்து பாடலாக திரு நாராயண புரமும் உண்டு

——-

காப்புச் செய்யுள்

பேறு பெற்றோர் புஷ்கரணி விமானம் பிராட்டி திசை
வீறு உயர் கோலம் திருமால் திருப்பதி மிக்க தொரு
நூறுடன் எட்டு முறையே இசைக்க நுவல் பொருநல்
ஆறுடையான் குருகூருடையான் பொன்னடி அரணே –1-குருகைப்பிரான்

——–

பரகாலன் பாசக்கயத்து ஆர்ப்புணாகா அருள் பார் என அம்
பர காலனாம் திருமால் அவன் கண் படாமையினிம்
பரகாலன் அன்றி யவர்க்கு உரித்தாள் உன்னைப்பற்றினம் சீர்ப்
பரகால நான்மறை ஆறு அங்கம் ஓதும் மெய்ப்பா வலனே —

அம்பர காலனாம் திருமால் -உலகு அளந்த -விண்ணை அளந்த பாதத்தை உடைய திருமால்
இம்பா அ காலன் அன்றி அவர்க்கு உரித்தாள் உன்னைப் பற்றினம்

———-

எதிரா சனன மரணங்கள் என்பது இனிப்புவில்
எதிரா சனக சநந்தனாதி எவர்க்கும் மெய்
எதிராசன் அங்கனாய் வாழ் இங்கு எழுபத்து நால்வருக்கு அருள்
எதிராசன் பொன்னடியார் அடியார் அடி எய்தினர்க்கே –எதிராசர்

—————

நூல் பயன்
பரமபதம் திருப்பாற் கடல் பாஸ்கரன் பற்றும் அன்பர்
அரவனந் தாங்க மட்டாங்க நடுவிதையத் தினித்த
சுரர் பரவத் தெற்கு இருந்து துயின்று நின்றாடும் செய்யாள்
வரதன் அம் தாள் கொண்டு அதில் நூற்று எட்ட ஓத வரும் கதியே —

—————

திருவரங்கம்
சீதரனே யயன் விபீடணன் தர்மன் சிவன் பரவித்
தீதல புன்னைச் சசி வாவி வேத ஸ்ருங்கம் திகழ்
ஒதரு மானத்து அரங்க மின்னூடு தெற்கு ஓர்ந்து துயில்
மாதவன் அரங்கத்து அரங்கர் சொல் வரன் அருளே –

தர்மன் -தர்ம வர்மன்
புன்னை தலவிருஷம்
சசி வாவி -சந்த்ர புஷ்கரணி
வேத ஸ்ருங்கம் திகழ் ஒதரு மானம் -வேத ஸ்ருங்கம் எனும் ப்ரணவாக்ருதி விமானம்
அரங்கமின் -ஸ்ரீ ரெங்க நாச்சியார் -ஸ்ரீ பெரிய பிராட்டியார்
சேவை சாதிக்கும் திக்கு -தெற்கு
சயனத் திருக்கோலம்

எட்டு ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரங்களில் முதன்மையானது ஸ்ரீமந் நாரயணன், அரங்கனாய் அருளும் திருவரங்கம்.
(மற்றவை – ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி எனும் திருவேங்கடம், முக்திநாத், திருநைமிசாரண்யம்,
தோதாத்திரி எனும் வானமாமலை, புஷ்கரம் மற்றும் பத்ரிநாத்).

எம்பெருமான் பள்ளி கொண்ட திருக்கோலத்தினையே தனது பெயராகக் தாங்கி, ” திருச் சீரங்கன் பள்ளி ” என அழைக்கப்பட்டது.
பின்னர் அதுவே நாளடைவில் மருவி “திருச்சிராப்பள்ளி” என்றானது

ஏழு மதில்களும் ஏழு உலகங்களின் பெயர்களையே தாங்கி நிற்கின்றன.
இவற்றை தன்னுள் அடக்கி காட்சி தருகின்றது 8 – வது திருச்சுற்று.
இச் சுற்றில்தான் ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமான ராயர் கோபுரம் எனும் தெற்கு கோபுரம் பிரதான நுழைவு வாயிலாக நம்மை வரவேற்கின்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் -13 நிலைகள், 13 கலசங்கள் கொண்ட, 236 அடி உயர மிகப் பிரம்மாண்டமான இக் கோபுரம்,
மன்னர் கிருஷ்ண தேவ ராயரால் ஆரம்பிக்கப்பட்டது. எனவே இது “ராயர் கோபுரம்” என்றும் அழைக்கப்படுகின்றது.
ஆசியாவிலேயெ மிக உயரமான கோவில் கோபுரம் என்ற பெருமையுடைய இக் கோபுரம் பல இன்னல்களை தாண்டி,
ஆந்திர அஹோபில மடத்தின் 41 வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகளின் பெரும் முயற்சியால் 1987 – ல் நிறைவடைந்தது.

ஸ்ரீரங்கத்தின் ஏழு திருமதில்களும் – 7 வது திருமதிலின் பெயர் பூலோகமாகும்.
இதற்கு ராஜ வீதி, சித்திர வீதி, மாட வீதி எனப் பல பெயர்கள் உண்டு.
இங்கு ் கண்ணன் சந்நதயும், ஆஞ்சனேயர் திருக்கோவிலும், வானமாலை மண்டபமும் காணப்படுகின்றன.
7 மதிகளை உள்ளடக்கிய 8 வது சுற்றுக்கு “அடயவளைத்தான் சுற்று” என்று பெயர்.
2 வது திருமதிலின் பெயர் “புவர்லோகம்”. இச் சுற்று திருவிக்கிரமன் திருவீதி என்றும் அழைக்கப்படுகின்றது.
பெருமாள் திருவாகனங்கள் உலாப் போகும் இதற்கு உத்திர வீதி என்ற பெயரும் உண்டு.
ஸ்ரீமான் இராமானுஜர் தங்கியிருந்து ஸ்ரீரங்கத்தை நிர்வகித்ததும், மணவாள மாமுனிகள் தன் அவதார ரகசியத்தை
உத்தம நம்பி எனும் தன் சீடருக்கு காட்டியருளியதும் இங்குதான்.
அஹோபில மடமும், யானை கட்டும் மண்டபமும் இங்கேயே உள்ளன.

ஸூவர்லோகம் என்பது 3 வது திருமதில். நான்முகன் கோட்டை வாசல், அகளங்க சோழன் கட்டியதால்
அகளங்கன் சுற்று என்றும் அழைக்கப்படகிறது. தாயார் சந்நதியும்,, ஆண்டாள் சந்நதியும்,
அழகிய மேட்டு சிங்கர் எனும் நரசிங்கப் பெருமாள் சந்நதியும், எட்டு கரங்களுடன் வரப்பிரசாதியாய் காட்சி தரும் சக்கரத்தாழ்வார் சந்நதியும்,
பேரழகு வாய்ந்த வேணு கோபால கிருஷ்ணர் சந்நதியும், வசந்த மண்டபமும் இத் திருச்சுற்றிலேயே அமைந்துள்ளன.

கம்பர் பெருமான் தன் இராமாயணத்தை அரங்கேற்றிய கம்பர் மண்டபம் தாயார் சந்நதியின் எதிரே அமைந்துள்ளது.
இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில்தான் வைகுண்ட ஏகாதசியன்று துவங்கும் திருவாய்மொழித் திருநாள் உற்சவம் நடைபெறும்.
அரையர் சேவையும் இங்கிருந்தே துவங்கும். இராமானுஜரின் “தானான திருமேனி” உள்ளதும் இங்குதான்.
அரங்கனுக்கு மலர் கைங்கர்யம் செய்திட்ட தொண்டரடிப்பொடியார், பிள்ளை லோகாச்சார்யார், திருப்பாணார்,
கூரத்தாழ்வார் போன்றோரது சந்நதிகளும் இத் திருச்சுற்றிலேயே அமைந்துள்ளன.

“திரு அந்திக் காப்பு” நடைபெறுவதும் இவ்விடமே. பெருமாள் வீதி் உளா முடித்து வந்ததும்,
சிறு குடத்தின் மீது கிண்னம் ஒனறு வைத்து, அச் சிறியதொரு கீன்ணத்தில் நெய்யிட்டு திருவிளக்கேற்றி
அரங்கனுக்கு திருஷ்டி கழிக்கும் நிகழ்வே திரு அந்திக் காப்பு எனும் விஷேஷ நிகழ்வு.
ஸ்ரீரங்க விலாச மண்டபம் அமைந்துள்ளது் இத் திருசுற்றிலேயே.

நடுநாயகமாய் விளங்கும் மஹர்லோகம் எனும் 4 வது சுற்று. இதனை கட்டுவித்த திருமங்கையாரின் பெயர் தாங்கி
“திருமங்கை மன்னன் சுற்று” என்று அழைக்கப்படுகின்றது. ஆலிநாடன் வீதி என்ற பெயரும் உண்டு.
இதன் நுழை வாயிலுக்கு கார்த்திகை கோபுர வாசல் என்று பெயர். அரங்கனை தன் இருகைகள் கூப்பித் தொழுதவாறு,
மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி அருளும் 20 அடி உயர கருடாழ்வாரின் சந்நதி இத் திருச்சுற்றிலேயே அமைந்திருக்கின்றது.

கருட சந்நிதியின் எதிரில் அமைந்துள்ள பரமன் மண்டபச் சிற்பங்கள் கலை நுணுக்கம் வாய்ந்தவை.
முதலாழ்வார்கள் மூவர், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் திருக்கச்சி நம்பிகள் சந்நதிகளும்,
வேறெங்கும் காண இயலாத தன்வந்திரி ப்கவான் சந்நதியும், சந்திர புஷ்கரணியும் அமைந்துள்ளது
இத் திருச்சுற்றின் தனிப் பெரும் சிறப்புகள். சொர்க்க வாசல் திறக்கப்டுவதும் இவ்விடமே.
திருக்கோவில் பிரசாத விற்பனையும் இங்குதான் நடைபெறுகிறது.

ஜநோலோகம் என்பது 5 வது திருச்சுற்றின் பெயர். முன்னொரு சமயம் ஆரியர்கள் எனும் வட நாட்டு அந்தணர்கள்
இத் திரு வாயிலை காவல் புரிந்து வந்ததால் இதற்கு ஆர்யபடவாசல், குலசேகரன் திருச்சுற்று எனறும் அழைக்கப்படுகின்றது.
விஜய நகர மன்னர்களால் உருவாக்கப்பட்ட, 108 தங்கத் தகடுகள் பதித்த கொடிமரமும், உள் கோடை மண்டபமும்,
பரமபத வாசலும் இங்கேயே அமைந்துள்ளன. ஊஞ்சள் உற்சவம் நடைபேறுவதும் இவ்விடமே.

தபோலோகம் என்பது 6 வது திருச்சுற்றின் பெயர். மன்னன் ராஜ மகேந்திர சோழனால் கட்டப்பட்டதால்
இதற்கு ராஜ மகேந்திரன் திருச்சுற்று என்ற பெயரும் உண்டு. இதன் நுழைவாயிலுக்கு “நாழிகேட்டான் வாசல்” என்ரு பெயர்.
இங்கு துலுக்க நாச்சியார் சந்நதி, சேனை முதலியார் சந்நதி, கண்ணாடி அறை, திருப்பரிவட்டாரங்கள் வைக்கும் அறை,
யாக சாலைகள் போன்றவை அமைந்துள்ளன. இங்குள்ள கிளி மண்டபம் திருமங்கையாரால் கட்டப்பட்டது.

கற்பூர படியேத்தம் எனும் ஒரு விசேஷ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியன்று
இச் சுற்றிலேயே நடைபெறும். ஒரு சமயம் இந் நிகழ்ச்சியை காண வேண்டி விஜய ரங்க சொக்கநாதர் தன் குடும்பத்துடன் வர,
அதற்குள் வைபவம் நிறைவுற்றது. தவறாது இதனை காண வேண்டும் என்ற பேராவலில் விஜயரங்க நாயக்கர்
இங்கேயே ஓராண்டு காலம் தங்கியிருந்து அடுத்த ஆண்டு இந் நிகழ்ச்சியை கண்டுகளிததே தன் நாடு திரும்பினார்..

சத்தியலோகம் எனும் முதலாம் திருச்சுற்றை உண்டாக்கியது சோழ மன்னன் தர்ம வர்மன்.
இதன் நுழை வாயிலுக்கு திரு அணுக்கன் திருவாசல் என்று பெயர். கருவறை எனும் மூலவர் சந்நதியில்,
பேரழகுடன் சத்தியலோக பெருமாள் ஆதிஷேஷ அனந்தனின் மீது சயனித்திருப்பது இங்குதான்.
கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு ரங்க மண்டபம் என்று் பெயர்.
இங்குள்ள 24 தூண்களும் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களாய் கொண்டு வணங்கப்படுகின்றது.

ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, வேறெங்கும் காண இயலாத வண்னம் தன் இரு புறமும் சுக்கிரீவனையும்,
அங்கதனையும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் 20 அடி உயர கருடாழ்வார்,
உடையவர் ஸ்ரீமான் ராமானுஜர் சந்நதிகள் இச் சுற்றல் உள்ளன. மூலவரை தரிசித்த பின்னர் தரிசிக்க வேண்டிய
“ப்ரணவாக்ருதி விமானம்”, அதில் தெற்கில் அமைந்துள்ள “பரவாஸுதேவர் தங்க விக்ரஹம்” போன்றவை ஸ்ரீரங்கத்தின் சிறப்புகள்.

அழகிய சிங்க பெருமாள் அங்கீகரித்த கம்ப ராமாயணம் – கம்பர் பெருமான் தனது கம்ப ராமாயணத்தை இவ்விடமே இயற்றினார்.
கம்பர் மணடபம் தாயார் சந்நதிக்கருகே அமைந்துள்ளது.
கம்பர் தனது ராமாயணத்தில் ஹிரண்யணை வதம் செய்த வரலாற்றை விளக்குகின்றார்.
அது சமயம் இங்கிருந்த பல சமய வல்லுனர்கள் ராமாயணத்தில் ஹிரண்ய சம்ஹாரம் வருவதால்,
இவ்விடம் ராமாயண அரங்கேற்றத்தினை ஏற்கமாட்டோம் என மறுதலித்தனர்.
அவ்வாறயின் எம்பெருமான் முன்பு இக் காவியத்தை அரங்கேற்றுவோம்.
எம்பெருமான் ஏற்றுக்கொண்டால் நாம் அனைவரும் இதனை ஏற்போம்” எனக் கூறி கம்பர் பெருமான்
தனது ராமாயணத்தினை இத் திருக்கோவிலில் அரங்கேற்ற, அது சமயம் சந்நதியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள
அழகிய சிங்க பெருமாள் ” கம்பரின் ராமாயண காவியத்தினை யாம் அங்கீகரித்தோம் ” என
சிம்ம கர்ஜனையுடம் பெரு முழக்கம் செய்து ஏற்றுக் கொண்டார்..

ஆழ்வார்களும், ஸ்ரீரங்கமும் – ஆழ்வார்களுக்கும் , ஸ்ரீரங்கத்திற்குமான பிணைப்பு மிக தாத்பரியமானது.
பங்குனி மாத திருவிழாக்களின் பொழுது, அரங்கன் உறையூர் சென்று கமலவல்லியை மணம் புரிந்ததை அறிந்த
ஸ்ரீரங்கத்து பிராட்டியார் அவனுடன் பிணக்கு கொண்டு தவடைப்பார். அது சமயம் நம்மாழ்வார் இருவரையும் சமாதானம் செய்திடுவார்.
இந் நிகழ்ச்சி ப்ரணய கலஹம் என திருவரங்க பங்குனி மாத உற்சவங்களில் கொண்டாடப்படுகிறது.

திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு திருமதில் எழுப்பினார். திருநறையூர் சாரநாதன் மீது திருமடல் பாடினார்.
தமக்கு மதில் எழுப்பியதால் மகிழ்ந்த அரங்கன், திருமங்கையாரை அழைத்து தீர்த்தம், சடாரி, மாலை, பரிவட்டம் போன்றன தந்து
“எமக்கும் மடல் உரைக்கலாகாதோ ” என்று கேட்டார். அதற்கு திருமங்கையாரோ “மதில் இங்கே மடல் அங்கே ” என்றாராம்.

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கத்தில் அரங்கனுக்காக சிறு நந்தவனம் ஒன்றமைத்து அனுதினமும் அரங்கனுக்கு பூமாலை சாற்றி வந்தார்.
திருமங்கையார் கோவிலுக்கு திரு மதில் எழுப்பிக் கொண்டிருந்த சமயம் அது. இடையில் நந்தவனம் குறுக்கிட,,
அதனை ஒதுக்கி விட்டு மதில் எழுப்பலானார். மகிழ்ந்த தொண்டரடியார் தனது மலர் கொய்யும் ஆயுதத்திற்கு,
திருமங்கையின் பெயர்களில் ஒன்றான “அருள்மாரி” எனப் பெயரிட்டு நன்றி கூர்ந்தார்

பெரியாழ்வார் அரங்கனுக்கு தன் பெண்ணையே கொடுத்தார். திருமங்கையார் திருமதில் கொடுத்தார்.
தொண்டரடிப்பொடியாரோ தினம் தினம் மலர் கொடுத்தார். திருப்பாணர் அவன்தன் திருவடி கலந்தார்.
மதுரகவியார், அரங்கனுக்காக அவன் விரும்பியவாறு நம்மாழ்வாரை இவ்விடம் கொணர்ந்தார்.
நம்மாழ்வார் பெருமானுக்கும், பிராட்டிக்கும் ஆண்டுதோறும் சமாதானம் செய்கின்றார்.
என்னே அரங்கனின் மாண்பும், ஆழ்வார்களின் பிணைப்பும்.

திருவரங்கத்தில் அனைத்தும் பெரியவைகளே – திருக்கோவில் மிகப் பெரிது.
அதனாலேயே பெரியகோவில் ஆயிற்று. 20 அடி உயர கருடாழ்வார் மிகப் பிரம்மாண்டம். 7 மதில்களும் சுற்றி அமைந்துள்ள தூண்களும் பெரியன.
அரங்கன் பெரிய பெருமாள். தாயார் பெரிய பிராட்டி. இங்கிருந்த நம்பிகள் பெரிய நம்பி.
இங்கு சமர்ப்பிக்கும் தளிகை பெரிய தளிகை. வாத்யம் பெரிய மேளம். பக்ஷசணங்கள் பெரிய திருப்பணியாரங்கள்.
பெண் கொடுத்தவர் பெரியாழ்வார்.

இரு புறம் ஓடும் நதிகளான காவிரியும், கொள்ளிடமும் பெரிய நதிகள்.
ஆழ்வார்களின் மங்களாசாசனங்கள் பெரிய மங்களாசாசனங்கள். 11 ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற பாசுரங்கள் 247.
ராயர் கோபுரம் எனும் தெற்கு கோபுரம் 13 நிலைகள், 13 கலசங்கள் கொண்ட 236 அடி உயர ஆசியாவின் மிக உயரமான கோபுரம்.
மூலவரை தரிசித்து வெளி வந்த பின்னர் தரிசிக்க வேண்டிய “ப்ரணவாக்ருதி விமானமும்”
அதில் தெற்கில் அமைந்துள்ள “பரவாஸுதேவர் விக்ரஹமும்” ஸ்ரீரங்கத்தின் தனிப் பெறும் சிறப்புகள்

————-

அருள் குலசேரன் தொழா விவன் மன் முன்னர்ச் சித்துய்ந்த
பெருக்க மதாம் புஷ்கரணி நதியும் பிறங்கு மணி
வருக்கங் கொள் சோபன மானத் தவ்வூர் வல்லி மன் வடக்காயத்
திருப்பாணர் தொன்று உறையூர் நின்ற நம்பி என் சிந்தையனே –2-திரு உறையூர் -திருக்கோழியூர்

பேறு பெற்றோர் -ரவி தர்மராசன்
குடமுருட்டி நதி புஷ்கரணி
பிறங்கு மணி வருக்கங் கொள் சோபன மானம் -பிரகாசிக்கின்ற மணிகள் பொருந்திய கல்யாண விமானம்
பிராட்டி -அவ்வூர் வல்லி -உறையூர் வல்லி
கோலம் -நின்ற திருக்கோலம்
எம்பெருமான் -நின்ற நம்பி
திருப்பாண் ஆழ்வார் திரு அவதார ஸ்தலம் –

————-

சிந்தை செய்து இன்பம் பராசரன் மார்கண்டன் றேர்ந்து இரவி
விந்தை செய் தீர்த்தத்தன் வேதாலையவன் விமானத்தினில்
இந்து நுதல் செங்கமலையோடு தெற்கு இருந்து அருளும்
எந்தை நல் தஞ்சை அழகிய சிங்கரை எண்ணு நெஞ்சே –3-திருத் தஞ்சை மா மணித்தலம்

பராசர முனிவரும் மார்கண்டேயரும் பேறு பெற்ற இடம்
தீர்த்தம் -ஸூர்ய புஷ்கரணி
விமானம் -வேத சுந்தர விமானம்
இந்து நுதல் செங்கமலை -செங்கமல வல்லி பிராட்டி
தெற்கு
வீற்று இருந்த திருக்கோலம்
நரஸிம்ஹன் -அழகிய சிங்கர்
தஞ்சாசுரனைக் கொன்ற இடம் –

——–

எண்ணம் பல என் கொல் வான்மீகர் மெய்த்தவம் எய்து அன்பு
வண்ண மெய்த்தீர்த்தம் படிந்துயர் கேத்தி மானத்து எழில்
நண்ணும் அழகிய வல்லியுடன் குண திக்கில் துயில்
அண்ணலை அன்பில் வடி வழகா எனிலாம் கதியே –4-திரு அன்பில்

வால்மீகி முனிவருக்கு அருள் பாலித்தது
அன்பு வண்ண மெய்த்தீர்த்தம்
தாரக விமானம்
அழகிய வல்லி நாச்சியார்
கிழக்கு
சயனத் திருக்கோலம்
வடிவு அழகிய நம்பி –

————

கதி பெறுவான் முன் கதம்ப முனிவன் கதம்பத் தரு
விதியப் பெயர் புனலாடி யுத்தியோக விமானம் தனில்
துதி செய் யொரு வரம் தேவியோடு கிழக்கில் துயிலும்
நிதியக் கரம்பையில் உத்தம என்பவர் நின்மலரே –5- திருக் கரம்பனூர்-உத்தமர் கோயில்

கதம்ப மகரிஷிக்கு அருள் புரிந்த ஸ்தலம்
உத்தமர் கோயில் என்றும் வளக்கப் படும்
தல விருட்ஷம் -கதம்ப தரு
கதம்ப தீர்த்தம்
உத்யோக விமானம்
அழகிய தேவி பிராட்டி
கிழக்கு
சயனத் திருக்கோலம்
நிதியக் கரம்பை -செல்வ வளம் பொருந்திய தேசம்
எம்பெருமான் -புருஷோத்தமன் –

————–

நின்மல மாற்க்ண்டேயன் புவி மங்கை நிமிக்கு அருளும்
மன் மேய் குசலவ தீர்த்தன் பதும விமானத்து ஒளிர்
பொன் மலர்ச் செல்வியுடன் கீழ்த் திசை நின்ற புண்டரீக
நன் மலர்க் கண்ணனை வெள்ளறையில் கண்டு நாடுமினே –6- திரு வெள்ளறை

வெண்மையான பாறைகளால் இயன்ற மலை -ஸ்வேதாத்ரி
மார்க்கண்டேயர் பூ தேவி நிமி -சிபி சக்ரவர்த்தி
குசலவ தீர்த்தம் -இங்கு குச சக்ர புஷ்கல பத்ம வராஹ மணி கர்ணிகா தீர்த்தங்கள் உள்ளன என்பர்
பதும விமானம்
பங்கயச் செல்வி பிராட்டி
கிழக்கே நின்ற திருக்கோலம்
புண்டரீக நன் மலர்க் கண்ணன்- புண்டரீகாக்ஷப் பெருமாள் –

————-

நாடிய சீதை மணாளன் உயர் கழு நாதற்கு அருள்
நீடு கிருத தீர வாவியன் சோபன நேர் இருப்பில்
ஏடலராளோடு மண்டங்குடி கிழக்கே ஏய்ந்து துயில்
கூடும் வல் வில் ராமன் புள்ளம் பூதங்குடிக்கு அரசே –7-திரு புள்ளம் பூதங்குடி

ஜடாயு மோக்ஷ ஸ்தலம்
கிருத–கிருத்ர – தீர்த்தம்
சோபன விமானம் -நேர் இருப்பு விமானம்
பொற்றாமரையாள் பிராட்டி
கிழக்கு திசை
சயனத் திருக்கோலம்
கோல வல் வில் ராமன்

———–

அரைசனு பரிசர வசனி கொள் பராசரனும்
திரை செறி யிந்த்ர நீராடி யிந்த்ரச் சின கரத்தில்
உரை செய் கமலையுடன் மேல் திசைக் கண் உறங்கு அரங்கன்
விரை செய் பொழில் திருப்பேரினுள் உற்றார் அதை மேவு நெஞ்சே –8-திருப்பேர் நகர் -அப்பக் குடத்தான் -கோயிலடி

கல்லணைக்கு கிழக்கே 5 மைல் தொலைவில் காவேரி வடகரையில் உள்ளது
பேறு பெற்றவர்கள் -இந்திரனும் பராசரரும்
இந்த்ர தீர்த்தம்
இந்த்ர விமானம்
கமலவல்லி பிராட்டியார்
மேற்கு திசை
சயனக் கோலம்
அப்பால ரெங்கன்
உபரிசரன் -ஆகாய சஞ்சாரிகள்
அரைசனு பரிசர வசனி கொள் -உபரிசர அரசனி கொள் அரசன் -ஆகாசத்தில் சஞ்சரிக்கும் மேகத்தை
வாகனமாகக் கொண்ட அரசன் இந்த்ரன்
திரு மழிசைப் பிரான் நம்மாழ்வார் பெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார் நால்வரால் மங்களா சாசனம் –

——————-

மேவித் தொழும் புவி மங்கைக்கு அருள் முகில் வெங்கதிரோன்
வாவிப் புனலிடை மூழ்கிப் பிரணவ மானம் தனில்
வூறிற்று வரங்கத்தான் கிழக்கில் பொருந்தத் துயில்
ஆவிக்கு அமுதம் தொல் ஆதனூர் ஆண்டு அளப்பான் தன்னையே -9-ஆதனூர்

ஆ -காமதேனுக்கு ப்ரத்யக்ஷம்-ஆகவே ஆதன் ஊர் –
பேறு பெற்றவர் -பூமா தேவி காமதேனு
தீர்த்தான் -வெங்கதிரோன் வாவி
ஸூர்ய புஷ்கரணி
பிரணவ விமானம்
ஸ்ரீ ரெங்க நாயகி பிராட்டி
கிழக்கு
சயன திருக்கோலம்
ஆண்டு அளக்கும் ஐயன் -பூமியை ஆண்டு பூமியை அளக்கும் பிரான்

————-

தன்னைத் தனக்கு இணையாம் பிரகலாதன் தனக்கு அருள்வோன்
மன்னப் புனிதன் பெயர் நீர்க் கருட விமானம் தனில்
மின்னில் பொலி செங்கமலையன் கீழ்த் திசை மேவி நின்றான்
உன்னிப் பன்னா மருவி யப்பன் தேரழுந்தூர் அப்பனே —-10–திரு அழுந்தூர்

பேறு பெற்றோர் -பிரகலாதன்
அப் புனிதன் பெயர் நீர் -பிரகலாதன் தீர்த்தம்
கருட விமானம்
செங்கமல வல்லி பிராட்டியார்
ஆ மருவி அப்பன்
உபரி சரவஸூ தேர் அழுந்தியதால் வந்த பெயர்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
ஆ மருவி மேய்த்த அரண்கள் என்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
திருமங்கை ஆழ்வார் -அடியார்க்கு ஆ ஆ என்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற தேவாதி தேவன் –
கம்ப நாட்டாழ்வார் அவதார ஸ்தலம் –

———–

ஊரும் வியாக்ர முனி கல்விய முனிக்கு உண்மை தந்தோன்
வாரும் அநந்தப் புனலொடு நந்தன் வர்த்தகத்தில்
சேரும் திரு மா மகளோடு தெற்கு வாழ் நன் புயங்கண்
ணாருஞ் சிறு புலியூர் அருள் மா கடலாம் சரணே –11–திருச் சிறு புலியூர்

கொல்லுமாங்குடிக்கு அருகில் ஒரு மைல் தூரம்
பேறு பெற்றோர் -வ்யாக்ர பாதர் -புலிக்கால் முனிவரும் -வியமுனி என்னும் வியாச முனிவரும்
அநந்த ஸரஸ்
நந்த வர்த்தன விமானம்
திரு மா மகள் நாச்சியார்
தெற்கு
சயனத் திருக்கோலம்
அருள் மாக்கடல் பெருமாள்
புயம் கண் ஆகும்-புஜத்தில் கையில் தலையை வைத்துக் கண் வளரும் –

————-

சரண் புகு காவிரிக்கு இன்பம் தரு மெய்யன் சார நதி
யரண் பெரும் சார விமானத்தில் சார வணங்கினொடு
நிரந்தரம் கீழ்த் திசை நின்று ஒளிர் சாரப்பிரான் மதலைப்
பரம்பரனைத் திருச் சேறையில் கண்டு பணிந்து உய்மினே –12–திருச்சேறை –

பஞ்ச சார க்ஷேத்ரம் -பெருமாள் நாச்சியார் விமானம் தீர்த்தம் நிலம் –
சார நாதன் -சார நாயகி -சார விமானம் -சார புஷ்கரணி-சார க்ஷேத்ரம்
கிழக்கு
நின்ற திருக்கோலம் –
காவேரி தவம் செய்து உயர்ந்த ஸ்தலம்

———

உய்ய நினைவுடையீர் சந்த்ரன் பணிந்து உய்ந்தவவன்
துய்ய பெயர்ப் புனலாடிச் சுடர் மணி மானத்தருள்
செய்யும் தலைச் சங்க நாயகியான் குண திக்கில் நின்ற
வையன் தலைச் சங்க நாண் மதியத்தின் அடைமின்களே –13– திருச்சங்க நாண் மதியம் -தலைச்சங்காடு

ஆக்கூர் -2 மைல் தூரம்
பேறு பெற்றோர் -சந்த்ரன்
சந்த்ர புஷ்கரணி
சந்த்ர விமானம்
தலைச்சங்க நாச்சியார் -செங்கமல பிராட்டியார்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
நாண் மதியப் பெருமாள் -வெண் சுடர்ப் பெருமாள்
மதியானம் -நண் பகல் கதிரோன்
பாஞ்ச ஜன்யத்தை ஏந்திய நாண் மதியப் பெருமாள் ஆதலால் தலைச் சங்க நாண் மதியம் -திருப்பெயர் அமைந்தது –

—————-

அடைந்த ஐம்புலந் தவஞ் செய் யேம மா முனி யன்றருளே
கிடைத்துய்யு மேமப் புனலோன் வைதீகக் கிழக்கு இருப்பை ப்
படைத்திடும் கோமள வல்லியன் சாரங்க பாணி துயில்
உடைத் தண் குடந்தையில் ஆராவமுதனை உன்னு நெஞ்சே –14-

அடைந்த ஐம்புலந் தவஞ் செய் யேம மா முனி-ஐம்புலன் அடைத்து தவஞ் செய் யேம மா முனி–ஹேம மகரிஷி
தீர்த்தம் -காவேரி நதி
ஏமம் -பொன் -ஏமப் புனலோன்-பொற்றாமரைக் குளம்
வைதிக விமானம்
கோமள வல்லித்தாயார்
சாரங்க பாணிப் பெருமாள்
ஆராவமுதன்
கிழக்கு நோக்கி சந்நிதி
சயனத் திருக்கோலம்
பூதத்தாழ்வார் -பேயாழ்வார் -திரு மழிசைப்பிரான்-நம்மாழ்வார் – -பெரியாழ்வார் -ஆண்டாள் –
திருமங்கை ஆழ்வார் -எழுவராலும் -51- பாசுரங்கள் மங்களா சாசனம்

———

நெஞ்சம் குளிர்ந்து அரவங் கைக் கபாலத்தை நீக்கும் எழில்
செஞ்சுங் கபாலப் புனலோன் தன் சந்த்ரச் சினகரத்தில்
எஞ்சிற் செழும் கமலையுடன் கிழக்கே எய்ந்து இருந்தான்
உஞ்சரன் சாபம் அறுத்தான் திருக்கண்டியூர் முகிலே –15–திருக்கண்டியூர்

ருத்ரன் பூஜித்து கபாலம் நீங்கப் பெற்றான்
கபால தீர்த்தம்
சந்த்ர விமானம்
எஞ்சில் -குறைவற்ற -கமல வல்லி பிராட்டியார்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
ஹர சாப விமோசனப் பெருமாள்
உஞ்சு -அரன் -உய்யும் படி –

———-

முகிலே அருள் எனும் மார்கண்டயன் பிருகுக்கு முன்னாள்
மகிழ்வோடு அருளும் அகோராத்ரிப் புனல் விட்டுவத்தின்
திகழ்வாய பூ மகளாரக் குண திசை சேர்ந்து நின்றான்
புகழாரும் விண்ணகர் ஒப்பிலி யப்பன் என் புந்தியனே –16-

உருவத்திலும் வள்ளன்மையிலும் முகில் போன்றவன்
மார்க்கண்டேயர் பிருகு மஹரிஷிகள்
அகோராத்ரி புஷ்கரணி
வட்டுவத்தின் -வட்ட வடிவமான விமானம்
பூமி தேவி
ஒப்பிலி அப்பன்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
திருவேங்கடமாகவே பிரார்த்தனா ஸ்தலம் –

———

புந்தி மிகும் துண்டக முனிவன் கண்வன் போற்று நித்திய
கந்த நல் நீரன் உயர் உட்பலா வதகத்தினிடைச்
சுந்தர வப்புர வல்லியன் கீழ்த் திசை தோய்ந்து நின்ற
எந்தை கணபுரம் சேர் ஸுவ்ரி ராயரை ஏத்து நெஞ்சே –17–திருக்கண்ண புரம்

நன்னிலத்தில் இருந்து 4.5 மைல் தூரம்
துண்டக முனிவரும் கண்வ முனிவரும் பேறு பெற்றனர்
நன்னீர் -நித்ய புஷ்கரணி
கந்த நன்னீரான் -வாசனை பொருந்திய தடாகத்தான்
உட்பலா வதக –உத்பலா வதக -விமானம்
அப்புர வல்லி -திருக்கண புர வல்லி நாச்சியார்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
சவுரி ராஜப்பெருமாள்
நம்மாழ்வார் குலசேகரப்பெருமாள் பெரியாழ்வார் ஆண்டாள் திருமங்கை ஆழ்வார் -மங்களா சாசனம் –

———–

ஏற்றிப் பணிமின் கலியன் யாரும் தமிழ்க்கு இன்பமருள்
சாற்ற லிலாக் கனி வாவி விமான ஒண் சஞ்சனத்தின்
மேல் திசை அங்கு அமுதில் பிறந்தாளோடும் வீற்று இருந்து அங்கு
ஆற்றலருள் மணவாளனே கன் வயலாலியானே — 19-திருவாலி —

திருமகள் எம்பெருமானை ஆலிங்கனம் செய்ததால்-திரு ஆலி
அருகில் வேத ராஜ புரம் -வாள் வழியால் மந்த்ரம் பெற்றார் -வேடு பறி உத்சவம் பிரசித்தம்
அலாதனி புஷ்கரணி
எண் சஞ்சன விமானம் -அஷ்டாக்ஷர விமானம்
அம்ருதத்தில் பிறந்த அம்ருத கூட வல்லித் தாயார்
மேற்கு
வீற்று இருந்த திருக்கோலம்
வயலாலி மணவாளப் பெருமாள்
குலசேகரப்பெருமாள் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம்

——————–

ஆல மருவுமொரு நாகராசனுக்கு அன்று அருளும்
மால் உயர் சாந்த தடத்தோன் பொற் சுந்தர மானம் தன்னில்
நூலிடைச் சுந்தர வல்லியன் கீழ் கடனோக்கி நின்ற
காலழகன் திரு நாகை அழகனைக் கண்டு உய்மினே –19–திரு நாகை

சார புஷ்கரணி
ஸுந்தர்ய விமானம்
சுந்தர வல்லித் தாயார்
கிழக்கே உள்ள கடலை நோக்கி சந்நிதி
நின்ற திருக்கோலம்
ஸுந்தர்ய ராஜப்பெருமாள்

———–

மின்னிடை மேதமுனிகனிக் கூமை விளம்பச் செய்தோன்
மன்னெழில் வாவி யதுஞ் சீனிவாச விமானஞ்சிளக்
கன்ன வடிவழகி வாசுதேவனை யாதியவாந்
துன்ன நின்றான் நறையூர் வடிவார் நம்பி தொன்மையனே –20- திரு நறையூர் -நாச்சியார் கோயில்

நறு மணம் மிக்க ஸ்தலம் -ஸூ கந்த கிரி
மேதாளி முனிவரின் கன்னிகையை பலி கவர்ந்து செல்ல -அவனை சபித்து அருள் செய்தமை
எழில் வானி தீர்த்தம்
ஸ்ரீ நிவாஸ விமானம்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
அன்ன வடிவழகி நாச்சியார் – வஞ்சுள வல்லித் தாயார்
வடிவார் நம்பி பெருமாள்

———

தொன்மை பிரானிமி நந்திக்கு முன் வரும் தூய நந்தி
மென்மைத் தடத்தன் அநந்த விமானத்தன் மேல் திசையாய்
மின்மைக்கண் சங்க வல்லிக்கு ஈசன் விண்ணகர் ஈசன் துயில்
புன்மைத் தவிர்க்கும் சகந்நாத நந்தி புரப்பரனே –21- ஸ்ரீ நந்தி புர விண்ணகரம் –நாதன் கோயில்

நிமி என்னும் ஸூர்ய குலத்தரசனும் நந்தி தேவனும்
நந்தி மென்மைத் தடத்தன் – நந்தி தீர்த்தம் –
அநந்த விமானம் -மந்தார விமானம் என்பர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
திசை -மேற்கு
சயனத் திருக்கோலம்
சங்கவல்லி நாச்சியார் -செண்பக வல்லி நாச்சியார்
மின் -ஒளி பொருந்திய -மைக்கண் -மை யுண்ட கண நாதன் -ஜெகந்நாதப்பெருமாள் -நாத நாதன் –

————-

புரந்து ஆள் எனும் இந்து முன் உய்ந்திடும் இந்து புஷ்கரணி
வரம் தான் அருளும் வேதாமோத மானத்தின் வன் குண பால்
சரம் தாழ் குழல் புண்டரீகயன் வீர சயனமுற்ற
திரந்தான் மருவினிய மைந்தன் இந்தளூர்ச் சின்மயனே –22-திரு இந்தளூர்

சந்திரன் பூசித்து சாபம் தீரப் பெற்றான்
ஸூ கந்த வனம்
இந்து -சந்த்ர -புஷ்கரணி
வேத ஆமோத விமானம்
புண்டரீக வல்லி நாச்சியார்
கிழக்கு
சயனத் திருக்கோலம்
மருவினிய மைந்தன் -பரிமள ரங்கன்

————

மயங்காத கண்ணுவர் உம்பர்க்கும் இன்பம் வழங்க வையோன்
வியன் காணும் புண்டரீகத் தடம் சாற்று விகவிருப்பின்
நயம் காண் எழில் புண்டரீக ஐயன் கீழ்த் திசை நண்ணித் துயில்
அயன் கோவிந்தன் தில்லைச் சித்ரகூடத்து அரும் பொருளே –23

கண்ணுவ மகரிஷியும் தேவர்களும்
புண்டரீக தீர்த்தம்
சாத்விக விமானம்
புண்டரீக வல்லித்தாயார்
கிழக்கு
சயனத்திருக்கோலம்
தில்லை -எள்ளுக்காடு – வனத்தின் நடுவில் –
கோவிந்த ராஜப்பெருமாள்
குலசேகரர் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் –

———-

அரும் தவம் செய்யப்பட கோண முனிக்கு அருளை யன் சங்கம்
வரும் சக்கரத் தடத்தோன் புட்கலா வத்தம் வன் கிழக்காய்
பெரும் திரு மட்ட விழும் குழலாள் உரம் பெற்று நின்று
விரும்பும் தாடாளன் தன் சீ ராம விண்ணகர் மெய்ப்பொருளே –24-

அட்ட கோணி முனிக்கு அருள் செய்த இடம்
அவ்வப்போது சங்கம் வெளித் தோன்றும் சக்கர புஷ்கரணி
புஷ்கலா வர்த்தக விமானம்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
பெரும் மட்டவிழும் குழலாள் நாச்சியார்

————

மெய்த்தவம் செய் நந்தகற்கு ஒரு மூன்று எனும் வீடு தந்தோன்
மொய்த்து ஒளிர் சக்கர நீர் சுத்த சத்துவ மூதிருப்பில்
செய்த்தடம் தாமரை மேல் இருந்தான் குண திக்கு நின்றான்
கொய்த்துளவோன் வையம் காத்த பெம்மான் திருக்கூடல் மன்னே –25–திருக்கூடல் –ஆடுதுறைப்பெருமாள் கோயில்

நந்தக முனிக்கு அருள்
சக்கர தீர்த்தம்
சுத்த சத்துவ விமானம்
பத்மாஸநித் தாயார்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
துளவ மாலை அணிந்த வையம் காத்த பெருமாள்
பஞ்சாயுதம் ஏந்திய திருக்கோலம் என்பர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் –

————-

கூடல் அழிக்கும் விழியாளைக் கூடும் கொல் கோதமற்கு
வீடு அருளும் தண் சவுனத் தடமும் விமானம் கிழக்
காடு அருள் சீரூப் பலா வதகத்தின் அரவிந்தை பால்
நீடு அருளா நின்ற மேகர் கணங்குடி நித்தர் அன்றே –26– திருக்கண்ணங்குடி

கூடல் அழிக்கும் விழியாள் -தான் இழைத்த கூடலைத் தனது கண்ணீரைக் கொண்டே அழிக்கும் விழியாள் –

கௌதம முனிவருக்கு அருள்
சவுனத்தடம் தீர்த்தம்
உத்பல விமானம்
கிழக்கு நோக்கி சந்நிதி
நின்ற திருக்கோலம்
அரவிந்த வல்லித்தாயார்
மேக ஸ்யாமள மேனிப்பெருமாள்
கூடல் அழித்த அகத்துறைப்பாடல் இது –
உறங்காப்புளி –ஊராக்கிணறு–காயா மகிழ் -தீரா வழக்கு -திருக் கண்ணங்குடி

———

நித்தன் வருண நெறி மார்கண்டேயனும் ரோமசனும்
கத்தும் தெரிசைப் புனல் உப்பலா வதகத்தில் உயர்
புத்தமுதே அன்ன அபிஷேக வல்லி மன் பூர்வ நின்ற
பத்தர்களாவிப் பெம்மான் கணமங்கை பரஞ்சுடரே –27– திருக்கண்ண மங்கை

வருணன் மார்க்கண்டேயன் ரோமேசன்
கத்தும் நித்தன் -இவர்கள் ஸ்துதிக்கும் நித்தன்
தெரிசைப்புனல் – தர்சன புஷ்கரணி
உத்பல விமானம்
அபிஷேக வல்லித்தாயார்
கிழக்கு நோக்கி சந்நிதி
நின்ற திருக்கோலம்
பக்தராவிப்பெருமாள் -பக்த வத்சலன்
தாயார் சந்நிதியில் தேவர்கள் தேன் கூடு வடிவில் நித்தியமாக சேவித்துக் கொண்டு இருக்கிறார்கள் –

—————

சுடரைக் கனி என்று பாய்ந்தவன் முன் வரும் தூயன் துயர்
விடவ கெசேந்த்ர தீர்த்தன வேதாங்க விமானம் தன்னில்
கடன் மின்னொடு குண பால் பொன்னி ஆற்றங்கரைக் கிடக்கும்
படரக் கவித்தலத் தானையைக் காத்த பராபரனே –28–திருக்கவித்தலம்

திருவடிக்கு அருளியதால் இப்பெயர்
கஜேந்திர புஷ்கரணி
வேதாங்க விமானம்
கடல் மின்னொடு -திருப்பாற்கடல் -அமுத்தினில் தோன்றிய பெண்ணமுதம்
கிழக்கு நோக்கி சயன திருக்கோலம்
ரமாமணி வல்லித்தாயார்
கஜேந்திர வரதப் பெருமாள்
திருமழிசைப் பிரான் மங்களா சாசனம் –

—————–

பராசரன் இந்திரன் சுக்கிரன் வேதன் பணிய வரும்
கிரேத யுகன் சுக்கிர தீர்த்தன் புட் பலத்தில் கிழக்காய்
விராவு மரகத வல்லியுடன் துயில் கோல வில்லின்
ராமன் தனை வெள்ளியங்குடியில் கண்டு இறைஞ்சுமினே –29–திருவெள்ளியங்குடி

பராசரர் இந்திரன் சுக்ரன் ப்ரம்மா
சுக்கிர தீர்த்தம்
புருகலா வர்த்தக விமானம்
கிழக்கு
சயனத் திருக்கோலம்
மரகத வல்லித் தாயார்
கோல வில்லி ராமன்
பார்க்கவ புரி -சுக்ராச்சார்யருக்கு ப்ரத்யக்ஷம் –

————–

இறைஞ்சிக் கசேந்திரன் இந்திரன் ஏகாதச ருத்ரிரர்
திறம் செப்பு ருத்திர வாவி விமானம் திகழ் ப்ரணவத்து
அறம் செய் கொழும் புண்டரீகையன் கீழ் நின்றான் அக்கரியான்
நறும் செய்த தண்ணாம்கை மணி மாடக் கோயில் நந்தா விளக்கே — 30–திரு மணி மாடக் கோயில் –

திரு மணி மாடக் கோயில் -அழகிய உபரிகை திருமாளிகைகள் நிறைந்த திருக்கோயில் என்றவாறு
ருத்ர புஷ்கரணி
பிரணவ விமானம்
புண்டரீக வல்லித்தாயார்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
நந்தா விளக்குப் பெருமாள் –

————

விளங்குத் தவம் செய் மதங்கனும் சேது நல வேந்தனும் உய்
வளம் கொள் இலக்குமி வாவியன் சத்தியா வர்த்தகத்தின்
கிளர்ந்து ஒளிர் வைகுந்த வல்லி தன்னூடு கிழக்கு இருந்த
களங்கமில் வைகுண்ட விண்ணகர் தாமரைக்கண்ணன் எந்தையே –31–திரு வைகுந்த விண்ணகர்

இலக்குமி தீர்த்தம்
சத்தியா வர்த்திக விமானம்
வைகுந்த வல்லித்தாயார்
ஸ்ரீ வைகுண்டம் போலவே -கிழக்கு நோக்கி வீற்று இருந்த திருக்கோலம்
வைகுந்த நாதப் பெருமாள் -தாமரைக் கண்ணுடைய பிரான்

—————

எந்தை எனக்குக் குரு தெய்வம் நீ என்று எழில் மதங்கன்
சிந்தை செய் தேற்று மமுதப் புனலுச்ச சிங்கத்து எழில்
விந்தை யமுத கடவல்லி மேல் திசை வீற்று இருக்க
வந்த அரிமேய விண்ணூர்க் குடமாடும் வன் கூத்தன் என்றே –32– ஸ்ரீ அரிமேய விண்ணகரம்

நீயே என் நற் குரு தெய்வம் என்று தியானித்து வழி பட்ட மதங்கன்
அமுதப்புனல் தீர்த்தம்
உச்ச ஸ்ருங்க விமானம் –சிங்கம் ஸ்ருங்கம் மருவி
அமுத கட வல்லித் தாயார்
மேல் திசை நோக்கி வீற்று இருந்த திருக்கோலம்
குடமாடு கூத்த பெருமாள் –

—————-

என்றும் அழிவில் மறை இந்து உவணனுக்கு இன்பு அளித்தோன்
மன்று இந்து வாவிப் பிரசவ நாப விமானத்து ஒளிர்
துன்றும் திரு மா மகளுடன் கீழ்த்திசை தோய்ந்து நின்றான்
நல் இன்பர் உள் எம்பிரான் மணிக்கூடத்து நாயகனே –33– திருமணிக்கூடம்

மன்று இந்து வாவிப் பிரசவ-பொருந்திய தேன் சிந்தும் சந்த்ர புஷ்கரணி
நாப விமானம் -சாம்பூ நதம் என்னும் பொன்னால் செய்த கனக விமானம்
திருமா மகள் நாச்சியார்
கீழ்த் திசை நின்ற திருக்கோலம்
மணிக்கூட நாயகப்பெருமாள் –

————

நாய் அடியேன் உய்யக் கொண்டான் வசிட்டர்க்கு நன்கு அளித்தோன்
தூய் அத்தி வாவி யுடையோன் விமான சுப கரத்தில்
ஏய பைந்தோகை யுடன் மேல் திசையில் இசைந்து நின்றோன்
மாய மணாள திருத் தேவனார் தொகை மாதவனே –34–திருத்தேவனார் தொகை

தூய அத்தி தீர்த்தம்
சோபன விமானம்
பைந் தோகைப் பிராட்டியார்
மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
மாதவப்பெருமாள்

இந்நூலின் ஆசிரியர் தம்மையும் உய்யக் கொண்ட தெய்வ நாயகப் பெருமாள் இவரே என்கிறார் –

————

மாதவம் செய் யுபமன்ய முனிக்கு அருள் மாரி செழும்
சீத நற் பாற் கடல் வாவி விமானச் சஞ்சீவனத்தின்
தீதறு தேவி தன்னூர் பேர் ஒன்றால் அக்குண திக்கில் நின்றான்
ஒதரன் சாபம் தவிர்ந்து அருள் வண் புருடோத்தமனே –35–திரு வண் புருஷோத்தமம்

தீர்த்தம் -திருப்பாற் கடல்
சஞ்சீவி விமானம்
தேவி புருஷோத்தம நாயகி
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
புருஷோத்தமப் பெருமாள்
அரன் சாபம் தீர்த்த பெருமாள்

திருவரங்கம் திருவேங்கடம் திருக்குடந்தை திருமாலிருஞ்சோலை திருத்துவாரகை போல்
முக்கியமான திவ்ய க்ஷேத்ரம் என்பார் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் –

————-

உத்தமனாம் த்ரி நேத்ரிரற்கி ராகவன் ஒண் மகத்தில்
சித்திய தாம்பரன் நித்ய வாவி திகழ் கனகச்
சுத்த விமானம் மலராள் குண திசை தோய்ந்து நின்ற
அத்தன் உயர் செம் பொன் செய் கோயில் பேர் அருளாளன் அன்றே –36–திருச் செம் பொன் செய் கோயில்

சிவன் யாகம் செய்து பேறு பெற்றான்
நித்ய புஷ்கரணி
கனக விமானம்
அல்லி மா மலர் நாச்சியார் -மலராள்
கிழக்கு சந்நிதி -நின்ற திருக்கோலம்
பேர் அருளாளப் பெருமாள்

—————

ஆளும் பிரான் திரு மாதோடு அனந்தற்கு அருள் புரிந்தோன்
நீளும் அனந்த சரஸ் ஒன்றேய் அப்பெயர் நேர் இருப்பில்
நாளும் கிழக்கு முகம் செங்கமலையை நண்ணித் துயில்
தாள் உந்தி கைச் செங்கண் மால் தெற்றி யம்பலத்து தற் பரனே –37-

அநந்த புஷ்கரணி
செங்கண் மால் விமானம்
கிழக்கு
சயனத் திருக்கோலம்
தாள் உந்தி கை கண் அனைத்தும் சிகப்பு நிறம்
தெற்றி -திண்ணை -மேட்டிடமாக அமைந்த மன்றம்

————-

தற் பரனே என்று அரி மித்ரன் சேனைத் தலைவர் தொழும்
சிற் பரன் ஏமப் புனலோன் உத்துங்கச் சினகரத்தின்
அற்பின் மடவரன் மங்கையுடன் கிழக்கு ஆர்ந்து நின்ற
பொற் புயர் காவளம் பாடி நம் கண்ணல் புராதனனே –38- திருக் கவளம்பாடி

அரிமித்ரன் -சிவன் -ருத்ரனுக்கும் சேனைமுதலியாருக்கும் ப்ரத்யக்ஷம்
ஏமப் பொய்கை
உத்துங்க விமானம்
மடவர மங்கை நாச்சியார்
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
கண்ணன் பெருமாள்

———–

தனது எனாப் பாகும் சுவேத மன்னற் கவச் சாவகலத்
துனி யறுத்தாளும் ஸ்வேதத் தடந்தத்து வச்சோதி தனில்
இனி திருமா மகள் இன்புறக் கீழ் திசை ஏய்த்து நின்ற
நனி திரு வெள்ளக்குளத்து அண்ணல் நீடருள் நாரணனே –39- திரு வெள்ளக்குளம் -அண்ணன் கோவில் –

தனதன் -குபேரன் -குபேட்டானுக்கு ஒப்பான சுவேத மன்னனுக்கு அருள்
அவச்சாவு அகல வழி பட்டான்
துனி -துன்பம்
ஸ்வேதத் தடம் -திரு வெள்ளக்குள தீர்த்தம்
தத்துவ விமானம்
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
நாராயணப் பெருமாள்

—————

நாரணன் ஆரணம் பற் குணன் பன்னொரு நம்பருக்கு அருள
பூரணன் கங்கைப்புனல் நாரணாக்கிய புகழ் இருப்பின்
காரணன் தாமரையாள் கேள்வன் மேற்கில் களித்து இருந்தான்
பார் அணங்கில் புகழ் சேர் பார்த்தன் பள்ளிப் பரம் பரனே –40-

சங்க தீர்த்தம்
நாராயண விமானம்
தாமரை நாயகி நாச்சியார்
நாராயணப் பெருமாள்
மேற்கு -நின்ற திருக்கோலம் –

——————————————–

பர மன்னிய யமனொடு மலயத்துவச பாண்டியனும்
வரமுற நூபுர நன்னதி சந்த்ர விமானம் ஸுந்
தர வல்லி ஸூந்தரத்தோன் கீழ்த் திசை நின்ற தாள் அழகன்
சுரர் பரவும் சந்தனத்தரு மாலிருஞ்சோலை மன்னே –41- திருமாலிருஞ்சோலை –

சிலம்பாறு தீர்த்தம்
சந்த்ர விமானம்
ஸுந்தர்ய வல்லித் தாயார்
சுந்தரர் -அழகர்
கிழக்கு -நின்ற திருக்கோலம் –
பெரியாழ்வார் திருப்பல்லாண்டு அருளிச் செய்த ஸ்தலம் கூடல் அழகருக்கும் இங்குள்ள அழகருக்கும் –

———-

இருக்கோர் கதம்ப முனிக்கு தெய்வ வீர்ந் தடத்தோன்
மருக்கேழ் அட்டாங்க விமானம் தனில் திரு மா மகளோடு
அருள் கீழ் திசை துயில் வைகுந்த நாதன் அரவணையான்
திருக்கோட்டியூர் சொக்க நாரணன் என் சச்சி தாநந்தனே –42- திருக்கோட்டியூர்

கதம்ப முனிக்கு அருள்
தெய்வ புஷ்கரணி
அஷ்டாங்க விமானம்
திரு மா மகள் நாச்சியார்
கிழக்கு
சயனத் திருக்கோலம்
சொக்க நாராயணப் பெருமாள்
நான்கு தளங்கள் -கீழ் சயனம் -அடுத்து நின்றும் இருந்தும் நடனம் ஆடியும் – கிருஷ்ணன் சேவை –
தேவர்கள் கோஷ்டியாக வந்து ஆலோசனை பண்ணிய ஸ்தலம்
திருக் கோஷ்ட்டியூர் நம்பிக்கும் ராமானுஜருக்கு சந்நிதி உண்டே –

——–

ஆனந்தமாம் சத்திய தேவதைக்கு அநந்தற்கும் அருள்
ஈனம் தவிர சத்தியப் புனல் சத்திய வோர் இருப்பில்
வானம் தனில் உய்ய வந்தாளுடன் தென் திசைக் கண் வளர்
கானம் பலாத் திரு மெய்ய மெய்யன் மெய்க்கதி நமக்கே –43-திரு மெய்யம் —

சத்திய தீர்த்தம்
சத்திய கிரி விமானம்
உய்ய வந்த நாச்சியார்
பலா விருட்ச்சம்
தெற்கு நோக்கி சயனம்
மெய்யப்பன் -சத்ய மூர்த்திப் பெருமாள் –

—————-

மெய்யன் சமுத்ரன் புல்லவனுக்கு அருள் வேந்த சுவம்
மையறு சக்கர நீர் புண்டரீக விமானத்து அருள்
செய்ய ஒண் பூவில் இருந்தாளுடன் குண திக்கு இருந்த
தெய்வச் சிலையனைப் புல்லாணி நாதனைச் சேர்ந்து உய்மினே–44 –திருப்புல்லாணி

புல்லவன் -புல்லாரண்ய ரிஷிக்கும் சமுத்திர ராஜனுக்கும் அஸ்வத்த நாராயணனுக்கும் பேறு
சக்கர தீர்த்தம் -மையறு -குற்றம் தீர்க்கும் –
புண்டரீக விமானம்
பூவில் இருந்த நாச்சியார்
கிழக்கு
இருந்த திருக்கோலம்
தெய்வச் சிலையன் பெருமாள்
தர்ப்ப சயனப் பெருமாள்

———–

சேர்ந்து ஓதும் தேவர் எவர்க்கும் திருவருள் செய்து இலங்கும்
ஈர்ந்தாள் நல் தாமரைப் பாற்கடல் வாவியோடு ஒண் கிழக்காய்
ஆர்ந்து ஓங்கி கேதகி மானத்த வூர் வல்லி யார நின்ற
தேர்ந்தோர் உறை திரு மோகூர் மை மேகர் தம் சேவடியே –45–திரு மோகூர் –ஸ்ரீ மோஹன புரம்

அயன் ருத்ரன் தேவர்கள் அனைவருக்கும் பேறு
திரு மோகூர் வல்லித் தாயார்
ஷீராப்தி புஷ்கரணி -பாற்கடல் வாவி
கேதகி விமானம்
கிழக்கு நின்ற திருக்கோலம்
மை மேகர்-காள மேகப்பெருமாள்
மோகம் பக்தியை அருளுமூர்

—————

சேவடி நண்ணும் புலிச் சந்த்ர வல்லவன் சித்தி பெற்ற
பாவ விநாசத் தடம் தேவ சந்திரப் பம்பிருப்பில்
நால்வர் மின்னார் குண நின்ற தண் கால் எந்தை நன்கு அறியார்
தேவரும் தேவர் பிரானும் அயனும் சிவனும் அன்றே –46– திருத் தண்கால் —

பேறு பெற்றோர் -பலி -ஸ்ரீ வல்லபன் -சந்திரன்
பாவ விநாசத் தடம்
தேவ சந்த்ர விமானம்
நான்கு பிராட்டிமார்கள் -அன்ன நாயகி -அநந்த நாயகி -அம்ருத நாயகி -ஜாம்ப வல்லித் தாயார்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
திருத்தண் கால் அப்பன் –
பூதத்தாழ்வார் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் –

————–

சிவ வாக்கியற்குப் பரத்வம் தேற்றிய செல்வ நம்பி
தவ வம்பரீடன் சனகாதியார்க்கு அருள் சக்கர நீர்
திவன் குண பாலில் அட்டாங்க விமானம் திகழ் மதுரை
யவளோடு இருந்த மதுரை யம் கூடல் அழகு அண்ணலே –47– திருக்கூடல்

சக்கர தீர்த்தம்
அஷ்டாங்க விமானம்
மதுர வல்லித் தாயார்
கூடல் அழகர்
கிழக்கு
வீற்று இருந்த திருக்கோலம்
திவன் -பரமபதத்தன்
தாழ்விலாப் பாடல் அழகார் புதுவை பட்டர் பிரான் கொண்டாடும் கூடல் அழகர்
அஷ்டாங்க விமானம் மேல் எழுந்து அருளி இருக்கும் வையந் தாய பெருமாள் -பெரியாழ்வாரும் அருளியவர் –

————

அண்ணல் எனும் பட்டர் கோன் தவ மண்டூகற்க்கு ஆர்ந்து அருள்வோன்
வண்ண மகிழ் முக்குளத்தோன் பொற் சஞ்சன மானம் தன்னில்
தண்ணலர் கோதையுடன் பூர்வம் ஆலில் சயனம் உற்று
நண்ணும் அரங்க மன் வில்லி புத்தூர்த் திரு நாட்டு அரசே –48- ஸ்ரீ வில்லிபுத்தூர்

தீர்த்தம் -திரு முக்குளம்
சஞ்சன விமானம்

—————

நாதமுனி மதுரக்கவி மாறன் மன்னற் சக்கரன்
வேதன் புவிக்கு அருள்வோன் பிரமத்தடம் விண்ணவர் சூழ்
கோதகல் கோவிந்தராதி கிழக்கில் குருகை மின்னோ
டோத நின்றான் குருகூர் ஆதி நாதன் ஒரு பொருளே –49–

பிரமத்தடத் தீர்த்தம்
கோது அகல் -குற்றம் நீங்கிய -கோவிந்த விமானம் –
குருகூர் வல்லித்தாயார்
ஆதி நாதப் பெருமாள்
ஓத நின்றான் -பக்தர்கள் புகழ் பாடும் படி நின்றான் –

———–

ஒரு பொருளாய் வருணன் கோ சிகற்கின் புதவுமிடம்
வருணச் செழும் தடமோடுயர் கற்ப விமானம் தனில்
திரு ஒண் கரும் தடம் கண்ணியுடன் குண திக்கு நின்ற
மருவும் கரும் கடல் வண்ணன் தொலை வில்லி மங்கலமே –50–திருத்தொலை வில்லி மங்கலம் –

வருணன் கோசிகன் -இருவருக்கும் அருள் –
வருண தீர்த்தம்
கற்ப விமானம்
கரும் தடம் கண்ணிப் பிராட்டியார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
கரும் கடல் வண்ணன் பெருமாள் –

————

கலங்கா பெரு நகர் எம்மான் உரோம மகா முனிவன்
நலங்காமல் உய் இந்திர வாவியும் தன் வர்த்தகத்தின்
இலங்கா இழைப்பதி மங்கையனன் கிழக்கே ஏய்ந்த இருந்த
புலம் காணும் தேவபிரான் சீ வர மங்கைப் புண்ணியனே —-51- ஸ்ரீ நாங்குநேரி

இந்த்ர புஷ்கரணி
நந்த வர்த்தகம்
ஸ்ரீ வர மங்கைத்தாயார்
கிழக்கு
இருந்த திருக்கோலம்
தெய்வ நாயகம்

——-

புண்ணியன் வேதன் சிவன் உம்பர் யாவரும் போற்ற வந்தோன்
திண்ணம் அருள் சுக்ர வாவி ஒளிர் பத்திர இருப்பில்
ஒண் நிதியார் குழைக்காதாளோடு கிழக்கு உற்று இருந்த
கண்ணன் முகில் வண்ணன் தென் திருப்பேரை நம் கண் மணியே –52-

சுக்கிர புஷ்கரணி
பத்திர விமானம்
குழைக்காது வல்லித்தாயார்
கிழக்கு
வீற்று இருந்த திருக்கோலம்
நிகரில் முகில் வண்ணன் மகர நெடும் குழைக்காதர்

————–

மணி வண்ணன் நான் மறையோடு நிருதி முன் வந்து அருள்வோன்
பிணி கொய் நிருதித் தடம் வேத சாரப் பிறங்கு இருப்பில்
அணி கொள் அவ்வூர் வல்லி மன் கீழ்த் திசை புவியார்ந்து துயில்
நணியன் புளியங்குடி காய்ச்சின வேந்தன் நமர்களுக்கே –53-

நிருதித்தடம்
வேத சார விமானம்
திருப்புளிங்குடி வல்லித்தாயார்
கிழக்கு
சயனத்திருக்கோலம்
காய்ச்சின வேந்தப் பெருமாள் –

—————-

நமனுக்கு அஞ்சா ரக்கினிக்கு அருளக் கினி நற் புனலில்
சம தமம் செய்து விசய விமானம் தனை வலம் செய்து
அமரப்பதி மங்கை கீழ் பாலுறு விசை யாசனனார்
தமது இருப்பைத் தண் வர குண மங்கையில் ஆழ்ந்தவரே –54-ஸ்ரீ வரகுண மங்கை

அக்னி தேவதைக்கு அருள்
அக்னி தீர்த்தம்
விஜய விமானம்
பிராட்டி பதி மங்கை வரகுண வல்லித்தாயார்
கிழக்கு வீற்று இருந்த திருக்கோலம்
விசயாசனப் பெருமாள் –

—————

தாழாத செல்வப் பிருது மன் இந்த்ரன் தன் முன் வந்தோன்
நீழாசரு தண் பிருதுப் புனல் இந்த்ர நீள் இருப்பில்
காழார் வைகுந்தையுடன் கீழ் திசை நின்ற கள்ளப்பிரான்
வாழாரு தாம்பர வன்னி யினாத்தர் தம் வைகுந்தமே –55-ஸ்ரீ வைகுண்டம்

பிருது சக்கரவர்த்திக்கு அருள்
இந்திர விமானம்
ஸ்ரீ வைகுந்தவல்லித்தாயார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
ஸ்ரீ கள்ளபிரான் ஸ்ரீ வைகுண்ட நாதன்
நதி தாமிரபரணி
தாழ் ஆர் -மன உறுதி பொருந்திய
ஆத்தர் -ஆப்தர் –

—————–

வையம் புகழ் பற் குணன் பொன்னியமற்கும் வாய்ந்து அருள்வோன்
மெய்யிந்த்ரத் தடம் ஆநந்தம் என்னும் விமானம் தனில்
செய்யம் புயக்குளந்தை மின் பிரான் குண திக்கு நின்றான்
பொய்யில் குளந்தையன் வாழ் மாயக்கூத்தன் பொற் கோசிகனே –56-ஸ்ரீ திருக்குளந்தை -ஸ்ரீ பெரும் குளம்

அருள் பெற்றோர் -அர்ஜுனன் யமன் பிரகஸ்பதி
சுக்ரனை வெள்ளி என்பது போல் பிரு உறஸ்பதியை-பொன் -என்கிறார்
தானே முன் வந்த பொற் கோசிகன் -பீத அம்பரன்
தீர்த்தம் -இந்த்ரத்தடம்
ஆனந்த விமானம்
செய் அம்புய -செந்தாமரை -போன்ற ஸ்ரீ திருக்குளந்தை வல்லித்தாயார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
மாயக்கூத்தன்

————–

கோசிகன் நூறு அந்தணர்கள் ருத்ரர்கள் கோடி க்கு அருள்
வாச நற் பாற்கடல் வாவி ஒண் சீகர மானம் தன்னில்
ஆசில் பாற் கடலாள் பூர்வ நின்ற வழக நம்பி
ஈசன் குறுங்குடி வாழ் பஞ்ச நம்பி இறையவனே –57–

திருப்பாற் கடல் தீர்த்தம்
ஸ்ரீ கர விமானம்
ஸ்ரீ லஷ்மி தாயார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
அழக நம்பி-ஸ்ரீ வைஷ்ணவ நம்பி -நின்ற நம்பி -இருந்த நம்பி -திருப்பாற் கடல் நம்பி -மலை மேல் நம்பி –
இவரே நம்மாழ்வாராக திரு அவதாரம்
திருமங்கை ஆழ்வார் திரு வைரசு இங்கே
பெரியாழ்வார் திரு மழிசைப் பிரான் நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் –

————–

இறைவன் மதுரகவிக்கும் தனதருக்கும் பின்பு அருள்வோன்
நிறையும் குபேரத்தடம் திரு மானத்தின் நேர் கிழக்கு ஆர்ந்து
உறையப் பதி வல்லி தன்னோடு பூங்கண்ணன் உறையும் பிரான்
மறை முழங்கும் திருக்கோளூர் வளர் வைத்த மா நிதியே –58–

தனதன் -குபேரன்
நவநிதிகள் இங்கு ஒளிந்து இருப்பதைக் குபேரனுக்கு கோள் சொல்லியதால் திருக்கோளூர்
மதுரகவி ஆழ்வார் திரு அவதாரம்
குபேர தீர்த்தம்
ஸ்ரீ கர விமானம்
கிழக்கு சயனத் திருக் கோலம்
அப்பதித்தாயார் -ஸ்ரீ திருக்கோளூர் வல்லித்தாயார்
ஸ்ரீ வைத்த மா நிதிப்பெருமாள்

—————-

மா நிதி இந்த்ரனுக்கு இந்துக்கு அருள் மச்ச வாவி யுளோன்
கானல ராதி இலக்குமிக்கு ஒண் கனக சபை
மானமதில் குண பால் துயிற்று என் மலை நாட்டு அரசன்
ஆன அநந்தபுரம் பத்ம நாபன் அகளங்கனே –59- திரு அநந்தபுரம் –

மச்ச வாவி தீர்த்தம்
கனகசபை விமானம்
ஸ்ரீ ஆதி லஷ்மித்தாயார்
கிழக்கு சயனத் திருக்கோலம்
கேளார் சினந்த புரம் சுட்டான் திசை முகத்தான் போற்றும் அநந்தபுரம் -ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் –

————–

அகளங்கராகிய காரி யுடைய நங்கைக்கு அருள்வோன்
நிகழும் திருப்புனல் ஒண் கல்யாண நிலை இருப்பில்
திகழும் திரு மார்பு அணங்கோடு கீழ் திசை சேர்ந்து இருந்த
புகழ் திரு மார்பு அண்ணல் வண் பரிசாரப் புனிதன் அன்றே –60– திரு வண் பரிசாரம் –ஸ்ரீ திருப்பதி சாரம் –

தீர்த்தம் -இலக்குமி தீர்த்தம்
கல்யாண விமானம்
திரு மார்பு அணங்கு நாச்சியார் -ஸ்ரீ இலக்குமி தெவித்தாயார்
கிழக்கு வீற்று இருந்த திருக்கோலம்
திரு ஆர் மார்பன் பெருமாள் –

————-

புனிதன் கபிலன் புவிக்கு அருளும் கபிலப் புனலோன்
நனி ஒளிரும் புட் கல மானம் தன்னில் நன்னீர் வன சந்
தனில் உறையும் பெரும் செல்வி யுடன்றக் கணத்தின் நின்றான்
இனியன் எனவற்கும் தென் காட்கரை மேவிய என் அப்பனே –61-திருக்காட்கரை

கபில முனிவனுக்கு அருள்
புவி மடந்தை
கபில தீர்த்தம்
புட்கல விமானம்
நீர் வனசம் -தாமரை
பெரும் செல்வ நாயகித்தாயார்
தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
ஸ்ரீ காட்கரை அப்பன் பெருமாள்

————-

அப்பெங்கு மாகிய வேனன் மருத முனிவனுக்காய்
செப்பும் பதியில் வராதான் விசாலச் செழும் புனலோன்
மற் பங்கை யையோடு கீழ்த் திசை சந்த்ர மானம் நின்றான்
ஒப்பொன்றின் மூழிக் களப் பூந்துழாய் முடி ஒண் மயனே –62– திரு மூழிக்களம்

வேனன் மருத முனி ஹரீத மஹா முனிவர்
விசால தீர்த்தம் -பெரும் குள தீர்த்தம்
சந்த்ர விமானம்
மல் பங்கையை -திண்மையை யுடைய வளப்பமான தாமரை மலரில் இருப்பவள்
கிழக்கு -நின்ற திருக்கோலம்
அப்பு எங்குமாகிய -நீரால் சூழப்பட்ட -ஒப்பில்லாத திவ்ய தேசம்
நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம்
துழாய் முடி -திருத்துழாய் தளத்தால் ஆகிய கண்ணி -புனத்துழாய் கண்ணி வேந்து –

————–

ஒண் மகம் செய்த மூ வாயிரர் சங்கற்கு உண்மை தந்தோன்
வண்மை அஞ்சங்கத் தடம் செகச் சோதி விமானம் தனில்
தண்மை யஞ் செங்கமலை யுடன் மேல் திசை சார்ந்து நின்றான்
திண்மைத் திருச் செங்குன்றூர் இமையோர் அப்பன் சின்மயனே –63- திருச் செங்குன்றூர்

சங்க தீர்த்தம்
ஜக ஜ்யோதி விமானம்
செங்கமலத்தாயார்
மேற்கு நின்ற திருக்கோலம்
இமையோர் அப்பன்

—————-

சின் மயன் ஏழ் முனி யோர் அவுணற்கு அருள் செய்த பிரான்
புன் மயல் நீக்கும் தளர் பூதன் வாவிப் புருட நிலைப்
பொன் மய மானத்தில் பொற் கொடியாளோடு பூர்வ நின்றான்
கன்மய மாயப்பிரான் தன் திருப்புலியூர்த் தலமே–64- –ஸ்ரீ குட்ட நாட்டுத் திரு புலியூர் –

சப்த ரிஷிகளுக்கும் பெரிய திருவடிக்கும் அருள் -உவணன் -கருடன்
தீர்த்தம் -பூதன் வாவி
புருஷோத்தம விமானம்
பொற் கொடி நாச்சியார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
மாயப்பிரான்
நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் –

———–

தலம் தாழ்ந்து இறைஞ்சும் கசேந்திரர்க்கும் சவரிக்கும் அருள்
மலந்தாழ் கமலத் தடத் தோன்றோல் வேத விமானம் தனில்
பொலந் தாமரை மலர் மங்கையுடன் திசை பூர்வ நின்றான்
நலந்தாவிய திரு நாவாய் நெடும் திரு நாரணனே –65–திரு நாவாய்

மலம் தாழ் -மும்மலங்களையும் போக்கி அருளும் -கமல சரசு தீர்த்தம்
வேத விமானம்
மலர் மங்கை நாச்சியார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
நலம் தாவிய -நலம் பொங்கும்
திரு நாராயணப்பெருமாள்
நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் மங்களா ஸாஸனம் –

———————

திருமால் கண்டா கர்ணனாகாய வாணி மண்டேவிக்கு அருள்
அருமால் உயர் செங்கழு நீர்த் தடம் சதுரானனமாய்
வருமானம் செல்லக் கொழுந்தொடு கீழ்த்திசை மன்னி நிற்கும்
பெரு மாயக் கோலப் பிரான் வல்லை வாழ் எம்பிரான் அடியே –66-திருவல்ல வாழ் –

கண்டா கர்ணனுக்கு அருள்
செங்கழு நீர்த்தடம்
சதுரங்க கோல விமானம்
செல்வத் திருக் கொழுந்துப் பிராட்டியார்
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
கோலப் பிரான் பெருமாள் –

————-

அடியேன் சரணம் எனும் நாரதன் சம்சாரம் அறும்
படியே புரிந்து அருள்வோன் பம்பை உத்தரப் பைந்தடம் தோள்
வெடி சேர் கமலையுடன் தேவ கூட்டத்தின் மேற்கு நின்ற
வடிவார் திரு வண் வண்டூர் கடல் மேனிப்பிரான் வள்ளலே –67–திரு வண் வண்டூர்–

நாரதர் அருள் பெற்றவர்
தீர்த்தம் -பம்பா நதியின் வடகரையில் உள்ள பைந்தடம்
வெடி -வாசனை
வேதாலய விமானம்
கமலவல்லிப் பிராட்டியார்
மேற்கு
நின்ற திருக்கோலம்
கடல்மேனிப்பெருமாள் –

———

வள்ளல் பரசுடை ராமன் இந்த்ரன் வாழ்த்தும் பிரான்
தெள்ளிய ராமப்புனல் அராட்டாக்கரச் சேண் இருப்பின்
ஒள்ளயில் கட்டிரு மங்கையன் மேற்கில் உவந்து துயில்
கொள்ளும் அம் கேசவன் வாட்டாறு மேய கொழும் புயலே –68– திருவட்டாறு

பரசுராமர் சந்திரன் இந்திரன் அருள் பெற்றவர்கள்
ராமப்புனல் தீர்த்தம்
அஷ்டாக்கர விமானம்
ஒள்ளயில் கண் ஒளி பொருந்திய வேல் போன்ற கண்
திரு மங்கை பிராட்டி
மேற்கு
சயனத் திருக் கோலம்
ஆதி கேசவப்பெருமாள்

————

கொழும் செல்வமார் அம்பரீடனுக்கு இன்பம் கொடுத்த பிரான்
செழும் சுதர்சன வாவி சந்தோடச் சினகரத்தில்
தொழும் செய்ய தாமரைக் கையாளுடன் தென் துயில் அமர்ந்தான்
எழும் சொல் அபயப் பிரதானன் வித்துவக் கோட்டு எந்தையே –69-திரு வித்துவக்கோடு –

சுதர்சன வாவி -சக்கர தீர்த்தம்
விமானம் -சந்தோடச் சினகரம்
தாமரைக் கையாள் பிராட்டியார்
தெற்கு நோக்கி வீற்று இருந்த திருக்கோலம்
அபய பிரதானப் பெருமாள் –

—————

எந்தை என் உருக்கு மங்காத வேந்தற்கு இயைந்து அருள்வோன்
வந்த வினை யறும் பூமித்தடம் புண்ணிய மானம் தன்னில்
கொந்தலர் கற்பக வல்லிக்கு இன்பு ஏந்து குணக்கில் நின்றான்
நந்தித் திருக்கடித் தானத்தில் அற்புத நாரணனே –70- திருக்கடித்தானம் –

பூமி தீர்த்தம்
புண்ய கோடி விமானம்
கற்பக வல்லி நாச்சியார்
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
நந்தி -உகந்து நின்றான்
அற்புத நாராயணப் பெருமாள்
கொத்து -எதுகை நோக்கி கொந்து -என விகாரம் –

————–

அற்புதம் அற்புத வேந்தனுக்கு இன்பம் அளித்த பிரான்
நற்புனல் வாமன வாவியன் வாமன நல்லிருப்பின்
உற்பலக் கட் பதுமாசனையோடு உத்தரத்து நின்ற
மற் பெரும் பாம்பணை யப்பன் தொல் ஆறன் விளை தொழலே –71–திருவாறன் விளை –

வேதன் -நான்முகன் -வேத வியாசர்
தீர்த்தம் -வாமன வாவி
விமானம் -வாமன நல்லிருப்பு
உற்பலக் கண் -கருங்குவளைக் கண்
பத்மாஸன நாச்சியார்
வடக்கு சந்நிதி
நின்ற திருக்கோலம் –
பாம்பணை அப்பன் பெருமாள் –

————

வளை மதி முக்குவணன் கண்ணன் ராமன் மருவு மன்பு
விளையஞ் சுமேத சரிமேத ஸூஷ்ம வியன்றருமால்
தளை கல்யாணத் தட மாந்ந் தக்கண திக்கில் நின்ற
அள கிரி வல்லி செல்வன் திரு நாரணார் புரமே –72-திரு நாராயண புரம்

நாராயணாத்ரி -வேதாத்ரி -யாதவாத்ரி -யதி சைலம்
செல்லப்பிள்ளை செல்வப்பிள்ளை சம்பத்குமாரர்
கல்யாண தீர்த்தம்
கல்யாண விமானம்
தெற்கு -நின்ற திருக்கோலம்
அழகிரி வல்லித் தாயார்

———-

புரந்தர நம்பன் அயன் மார்க்கண்டேயன் புலி பிருகு
நிரந்தரமும் விரசைப்புனல் சந்த்ர நீடிருப்பில்
தரங்க முகுந்த தனி பூருவ மூ வுருவும் தன்னின் நின்று
வரந்தரு நன்னாடு நாட்டயிந்தரத்த தெய்வ நாயகனே –73-திரு வயிந்திர புரம்

புலி -வியாக்ரபாத முனிவர்
நம்பன் -சிவன்
அஹீந்த்ரன் -அனந்தாழ்வான் பெயரால் திவ்ய தேசம்
தீர்த்தம் -விரசைப்புனல்
விரசை -தர்ப்பை
சந்த்ர விமானம்
கிழக்கு -நின்ற -திருக்கோலம்
ஸ்ரீ வைகுண்ட நாயகித் தாயார்
ஸ்ரீ தெய்வ நாயகப் பெருமாள்

—————-

அக நெகிழ்வா முதல் ஆழ்வார்கள் அம்மிரு கண்டன் பலி
மகிழ வந்தோன் புங்க வாவியும் சீகரமானமும் சீர்
திகழ அம் போருகப் பூங்கோவிலாள் குண திக்கில் நின்றான்
மிகவும் இடை கழி அம் கோவலூர்த் திரி விக்ரமனே –74–திருக்கோவலூர்

தீர்த்தம் -புங்க வாவி
விமானம் -சீகர விமானம்
பூங்கோவில் நாச்சியார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
ஆயன் -திரிவிக்ரமன்

————–

விக்கிரமத்தை ஐம் புலம் அறுத்து ஏற்றுதி வேந்தற்கு அருள்
வைக்கும் அநந்த சரசோன் குகை ஒண் விமானத்து எழில்
மிக்கரி தேவியுடன் அத்தியூர்க் கச்சி மேற்கு இருந்த
மைக்கடல் சூழ் தொண்ட மண்டலச் சிங்கப்பிரான் நெஞ்சே –75– திரு அத்திகிரி -பெருமாள் கோயில்

அநந்த ஸரஸ்
குகை போன்ற விமானம்
பிராட்டி -அரி தேவி நாச்சியார்
மேற்கு வீற்று இருந்த திருக்கோலம்
அழகிய சிங்கப்பிரான்

————–

நெஞ்சேக சேந்த்ரனுக்கு அருளப் பெயர் நேர் தடத்தோன்
மஞ்சே யுலவும் ககனாக்ருத விமானம் தனில்
செஞ்சேல் விழி அலர் மேல் மங்கையான் பச்சிமத்தில் நின்றான்
அஞ்சே அருள் சக்கர பாணி அட்டபுய மேகரனே —-76- திரு அட்டபுயகரம் —

கஜேந்திர புஷ்கரணி
ககனாக்ருத விமானம்
அலர் மேல் மங்கைப் பிராட்டியார்
மேற்கு -நோக்கி -நின்ற திருக்கோலம்
அட்டபுய சக்ரபாணிப் பெருமாள் –

————-

கரவிற் சனகர் முதலோர் பிருகும் களிக்க வந்தோன்
இரணிய வாவியுடனே விமானம் இரண்ணியத்தில்
அரவிந்த லக்குமி தன்னொடு கீழ்த் திசை யார்ந்து நின்றான்
பரன் முகுந்தன் திரு வேளுக்கை ஆளரிப் பைம் பொருளே –77–திரு வேளுக்கை –

கரவில் சனகன் -ஒளித்தல் இல்லாத தூய்மையான
தீர்த்தம் -ஹிரண்ய வாவி -கனக ஸரஸ்
விமானம் -ஹிரண்ய விமானம் -கனக விமானம்
அரவிந்த லஷ்மித் தாயார்
கிழக்கு -நின்ற திருக்கோலம்
திரு வேளுக்கை யாளரிப் பெருமாள் -முகுந்த நாயகன்

————-

பொருவரும் கோகுல மா முனிக்கு இன்பம் புரிந்த பிரான்
துரிசில ரித்திர வாவியும் பாண்டவ தூத பத்திரம்
திரு சத்திய பாமை யுருக்குமிணி குண திக்கு இருந்தே
யருள் திருப்பாடகப் பாண்டவ தூதன் எம் அச்சுதனே –78–திருப்பாடகம் –

துரிசு -துன்பம்
தீர்த்தம் -அரித்ர வாவி
பாண்டவ தூத பத்ர விமானம்
ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ சத்ய பாமா பிராட்டிமார்
கிழக்கு நோக்கி வீற்று இருந்த கோலம்
பாண்டவ தூதப்பெருமாள்
கல்வெட்டுகளில் தூத ஹரி என்ற பெயர் உண்டே
பூதத்தாழ்வார் -பேயாழ்வார் -திருமழிசை பிரான் -திருமங்கை ஆழ்வார் –

————

அச்சுதன் கண்ணன் என்று ஏத்திய காந்தினியாள் மகனுக்கு
இச்சை தந்தோன் அக்ரூரப் புனலும் இரவி தனில்
உச்சித நீரக வல்லி யுடன் கிழக்கு உற்று நின்றான்
பச்சை வடம் துயிலும் திரு நீரகப் பண்ணவனே –79–திரு நீரகம்

காந்தினியாள் மகன் -அக்ரூரர்
தீர்த்தம் -அக்ரூரப்புனல்
விமானம் -இரவி -ஸூர்யப் புனல்
நீரக வல்லித்தாயார்
கிழக்கு நோக்கி நின்ற கோலம்
மார்கண்டேயருக்கு சேவை தந்த பச்சை ஆலிலை துயின்ற பிரான் –

————-

நீர் அணியும் செஞ்சடை அரனார்க்கு அருள் நித்தன் உயர்
பேரணியும் சந்திரத் தடம் அஞ்சனப் பேர் இருப்பில்
காரணி கூந்தலுறை வல்லி மேற்கில் கலந்து நின்றான்
தேரணி சேரும் நிலாத் திங்கள் துண்டச் செழும் பொருளே –80-நிலாத் திங்கள் துண்டம்

சந்த்ர புஷ்கரணி
விமானம் -சஞ்சனப் பேர் இருப்பு
மேற்கு -நின்ற திருக்கோலம்
13 நாள் அர்ஜுனன் கைலாச யாத்திரையில் தான் கண்ணன் இட்ட பூக்களை சிவன் மேலே கண்டு அறிந்தானே
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல்
தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் –

————–

துண்டப்பிறை எயிற்றார் சேடனுக்கு அருள் துய்யன் மலர்
வண் தண் பொனார் ஊரகத்தடம் சீகர மானத்து அருள்
கொண்டல் அருண வல்லிக்கு அன்பன் மேற்கில் உலாவி நின்றான்
அண்டர்க்கு உலகு அளந்தான் ஊரகத்தின் அருள் கடலே –81-திரு ஊரகம்

தீர்த்தம் -ஊரக-நாக -தீர்த்தம் –
ஸ்ரீ கர விமானம்
அருண வல்லித் தாயார்
மேற்கு நின்ற திருக்கோலம்
உலகு அளந்த பெருமாள்

————–

கடல் வைய நெய் தகளா யிட்ட வன் கணி கண்ணற்க்கு அருள்
தட நெடும் பொய்கைத் தடம் வேத சார தனியிருப்பில்
மிட்டல் எழில் கச்சி இலக்குமி யாளன் கண் மேற்கில் துயில்
சுடர் தன் வெஃகாவினில் சொன்ன வண்ணம் செய்த சுந்தரனே –82–திரு வெக்கா

வேகவதி நதிக்கு அணையாக வெக்கணை -வெக்கா
மிடன் -சந்திரன் –
பொய்கையாழ்வார் திரு அவதாரம் –
கணி கண்ணன்
பொய்கை புஷ்கரணி
விமானம் -வேத சார மானம்
கச்சி இலக்குமிப் பிராட்டியார்
மேற்கு -சயனத் திருக் கோலம்
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -யதோத்த காரி பெருமாள்

——————

செய்த மலரணி பிருகுவின் முன்பு திகழ்ந்து அருள்வோன்
மெய் தவ ஞானத் தடத்தோன் விசுத்த விமானம் தன்னில்
நெய் தலம் கண்ணி ராமா மணி கீழ்த்திசை நேர்ந்து துயில்
எய்த பிரான் கருணாகரன் காரகத்து என் அப்பனே –83- திருக்காரகம்

கார்ஹ ருசிக்கு ப்ரத்யக்ஷம்
ஞானத்தடம்
விசுத்த விமானம்
ரமா மா மணிப்பிராட்டியார்
கிழக்கு
சயனத் திருக்கோலம்

————–

என்னப்பன் அம்பிகைக்கு பின்பு அருள் அப்பன் எவருக்கு அருளும்
முன்னப்பன் மொய் கவுரித்தடம் ஊரிக் கருடன் வெற்பில்
மின்னப்பன் ஒண் கமலத்து இருப்ப பங்கின் வடக்கு இருந்த
பன்னப்பன் கள்வன் தன் கார்வானம் வாழ் பரந்தாம அப்பனே –84- திருக் கார்வானம்

மூரி -வலிமை யுள்ள –
கௌரி தீர்த்தம்
கருட விமானம்
கமலவல்லித் தாயார்
வடக்கு நோக்கி இருந்த திருக்கோலம்
பரந்தாம அப்பன் பெருமாள்

————

பரந்த விண்ணோர் முனிவோர் மாற்று எவரும் பணியும் பிரான்
திருந்த அரும் பாவன வாவி அட்டாங்க சிகரத்தில்
புரந்தருள் தேவியுடன் இருந்தே நின்ற பூர்வனிந்த
தரம் பச்சை வண்ணன் பவள வண்ணன் கச்சித் தாமத்தனே –85–

பாவன புனித வாவி தீர்த்தம்
அட்டாங்க விமானம்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
பவள வண்ணன் பெருமாள் பச்சை வண்ணன் பெருமாள்

————-

தாம மணி நித்திலம் பூண்ட வாணி தனக்கு அருள்வோன்
வாமச் சரசுவதித் தடத்தோன் பிரபை மானம் தன்னில்
காமர் மரகதவல்லி மன் மேல் திசை காண நின்றான்
வீம தண் கா ஒண் விளக்கு ஒளி மேய விளக்கு ஒளியே –86- திருத் தண் கா

குளிர்ந்த சோலைகள் உடைத்தான் திவ்ய தேசம்
சரஸ்வதிக்கு அருள் -முத்து மாலையை அணிந்த வாணி -நித்திலம் -முத்து
தாமம் மணி வடம்
தீர்த்தம் -சரஸ்வதி தீர்த்தம்
விமானம் பிரபை மானம்
மரகத வல்லித் தாயார்
மேற்கு -நின்ற திருக்கோலம்
விளக்கு ஒளிப் பெருமாள் -தீபப் பிரகாசப்பெருமாள் -திவ்யப் பிரகாசப் பெருமாள்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் திரு அவதார ஸ்தலம் –

——–

விளக்கு ஒளி அன்பர் உள்ளத்தின் முன் பல்லவ வேந்தற்கு அருள்
வளக்குடி யைரம்மதி நீர் அட்டாங்க விமானம் தனில்
துளக்கிய வைகுந்த வல்லியன் மேற் கிற்று தைந்திருந்தான்
அளக்கரும் சீர்ப் பரமேச்சுர விண்ணகர் அவ்வண்ணலே –87- திருப்பரமேஸ்வர விண்ணகரம்

தீர்த்தம் -ஐரம்மதி
அஷ்டாங்க விமானம்
வைகுந்த வல்லிப் பிராட்டியார்
மேற்கு -வீற்று இருந்த திருக்கோலம்
மேல் தளத்தில் சயனத் திருக்கோலமும்
அதுக்கும் மேல் நின்ற திருக்கோலமும் உண்டே
பரமபத நாதப் பெருமாள்

——————-

அவ்விய நீத்த சடாயு மயற்கு இன்பு அளித்த பிரான்
ஒவ்விற் கிருத்திர நீர் வீர கோடி உயர் இருப்பில்
செவ்வி மரகத வல்லிக்கு அன்பன் குண திக்கு இருந்த
எவ்வமில் புட் குழியில் வாழ் விஜய ராகவனே –88- திருப் புட் குழி

அவ்வியம் -வஞ்சகம்
கிருத்திர புஷ்கரணி
விஜய கோடி விமானம்
மரகத வல்லித் தாயார்
கிழக்கு இருந்த திருக்கோலம்
விஜய ராகவப் பெருமாள்

—————

கவன மகன்றிட முன் சாலி கோத்திரன் கண்டு உய் வள்ளல்
தவமிக்கு அளிக்கும் இருத்தாப நாசத் தடம் புனலோன்
செவி சய கோடியில் செங்கமலை குண திக்கு உகந்து
திவளத் துயில் எவ்வுளூர் வீர ராகவன் சிற் பரனே –89–திரு எவ்வுளூர்

கவனம் அகன்றிட -கலக்கம் நீங்குமாறு
ஹ்ருத்தாப நாச தீர்த்தம்
விஜய கோடி விமானம்
செங்கமலை நாச்சியார்
கிழக்கு நோக்கி துயில்
வீர ராகவப் பெருமாள்

————–

சிற் பரன் எம் குரவன் வருணன் தர்ம சேனற்க்கு அருள்
அற்புதன் தண் வருண தடமோடும் பலாவதகப்
பொற் புயமானத்து எனைப்பெற்ற தாயோடு பூர்வ நின்றான்
மற் புகழாரும் திரு நின்ற வூர்ப் பக்த வத்சலனே –90–

வருண தீர்த்தம்
உத்பலா வதக விமானம்
என்னைப்பெற்ற தாயார்
கிழக்கே நின்ற திருக்கோலம்
பக்தவத்சலப்பெருமாள்
இந்நூல் ஆசிரியர் இந்த திவ்ய சேதத்தைச் சேர்ந்தவர்

——

பக்தி செயும் தொண்டை மான் முனிவோர் உம்பருக்கும் அருள்
வைத்த மணி கர்ணிக நீர் அரங்க மணி இருப்பில்
கொத்தலர் மா மணி மாலிகைக்கு அன்பன் குணக்கில் துயில்
அத்தன் பொன் மாணிக்க மெல்லணை நீர் மலை அம் கணனே–91– திருநீர் மலை

மணி கர்ணிகா தீர்த்தம்
அரங்க மணி விமானம்
கொத்தலர் மா மணி மாலிகைப் பிராட்டியார்
கிழக்கு
அறி துயில்
பொன் மாணிக்கப்பெருமாள்

———-

அம் கணன் முப்பத்து நாலாயிரத்து அறு பான் முனிவர்
புங்கவர் மார்கண்டேயற்கு அருள் பூர்வ முகன் தடமும்
கொங்குறை மானமும் கல்யாண கோடியில் கோமள மின்
தங்க நின்றான் இட வெந்தை வராகத் தயா நிதியே –92- திருவிடவெந்தை

காலவ மஹரிஷியின் 360 பெண்களை
நித்ய கல்யாணப் பெருமாள்
கிழக்கு நின்ற திருக்கோலம்
வராக தீர்த்தம் -பூர்வமுகன் -வராஹம் –
கல்யாண விமானம்
கோமள வல்லி நாச்சியார்

———–

தயா நிதி புண்டரீகன் பூதன் மட்டவிசன் கண் வைத்தாய்
மயாலறு தீர்த்தமும் மானமும் வல்லி யும் மன்னிய பேர்
இயாதினும் புண்டரீகந்தோய் குண திசை ஏய்ந்து உறைந்தாய்
சயா கடல் மல்லைத் தல சயனா யுன் சரணே சரண் –93-திருக்கடல் மல்லை

ஸ்ரீ பூதத்தாழ்வார் திரு அவதார ஸ்தலம்
புண்டரீக மகரிஷி
மண் தவிசன் -பூ மேல் உறை பிரமன்
புண்டரீக தீர்த்தம்
புண்டரீக விமானம்
புண்டரீக வல்லித்தாயார்
மாயல் அறு -மயக்கத்தைப் போக்கிஅருளும் -மயலின் விகாரம்
கிழக்கு சயனத் திருக்கோலம்
தலசயனப்பெருமாள்
சயா -ஜெயம் வெற்றியை யுடையவன்
கடற்கரைக்கோயில் ஜல சயனம்

—————–

சரணம் புகும் காண்டீவப் பெயரோன் தொண்டைமான் சக்கிரி
வரம் கொள் கயிரவ வாவியன் பாற்கர மானம் பரி
புர வேத வல்லிக ஒண் கண் பார்த்த சாரதி பூர்வ நின்றான்
திரம் செய் திருவல்லிக்கேணியில் தெள்ளிய சிங்கர் அன்றே –94-

ஸ்ரீ கண்ணபிரான் குடும்ப சகிதமாக சேவை
கயிரவ புஷ்கரணி -கயிரவம் -செவ்வாம்பல் அல்லி
பாஸ்கர விமானம்
வேதவல்லித்தாயார் சமேத மந்நாதப்பெருமாள்
ருக்மினித்தாயார் சமேத பார்த்தசாரதிப்பெருமாள்
கிழக்கே நின்ற திருக்கோலம்
மேற்கே வீற்று இருந்த திருக்கோலம் தெள்ளிய சிங்கப்பெருமாள் –
திருமழிசைப்பிரான் முதல் ஆழ்வார்கள் சந்தித்த திவ்ய தேசம் –

——–

அன்று ஏழு மா முனிவருக்கும் அநுமாற்க்கும் அருள் புரிந்தோன்
மன்றல் அமுதத் தடத்தோன் அட்டாங்க விமானம் தனில்
ஒன்றும் அமுதப்பிராட்டி மன் கீழ்த்திசை யோக நரசிங்கர்
கன்றில் கடிகை இருந்த அக்காரக் கனி அமுதே –95-திருக்கடிகை

அமுதக்கடம் தீர்த்தம்
அஷ்டாங்க விமானம்
அமுதவல்லித்தாயார்
கிழக்கு வீற்று இருந்த திருக்கோலம்
அக்காரக்கனி எம்பெருமான்
கீழ்த்திசை யோக நரஸிம்ஹன்

———-

கனிந்தயில் வேலனொடு தொண்டைமானுக்கு காட்சி தந்தோன்
நினைந்து எண் வராகத் தடத்தோன் ஆனந்த நிலையம் தன்னில்
வனைந்தலர் மேல் மங்கையான் பூர்வ நின்ற வடமலையான்
முனிந்து ஐம்புலன் வென்ற யோக அருள் சோதி முழு முதலே –96–திருவேங்கடம்

வேலன் -முருகன்
அயில் -எக்கு
ஸ்ரீ வராகத்தடம் -ஸ்வாமி புஷ்கரணி
ஆனந்த நிலைய விமானம்
அலர்மேல் மங்கைப்பிராட்டியார் -பத்மாவதித் தாயார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
சோதி முழு முதலை நினைந்து எண் -என்று கூட்டுக –

——-

முதல் அரியே எனும் பாலகன் உய்ந்திட முன் வந்து அருள்
மதமறும் சோணித வாவிக் ககன விமானம் தனில்
இத குண பால் எம் அழகிய வல்லிக்கு இன்பு ஈந்து நின்று
உன்னத சிங்க வேள் குன்றம் வாழும் ஜ்வால நரஸிம்ஹனே –97- ஸ்ரீ சிங்க வேள் குன்றம் -ஸ்ரீ அஹோபிலம்

சோணித வாவி
ககன விமானம்
கிழக்கு -நின்ற திருக்கோலம்
அழகிய வல்லித்தாயார்
ஜ்வாலா நரஸிம்ஹன்

—————-

வாழும் படியும் பரியார்க்கும் பரதற்கும் வாய்க்கும் பெம்மான்
தாழுச் சரயு யமுனை நதி அநுஷ்டானத் தடம்
நீழும் தன் புட்பகச் சீதை யொடு உத்தர நேர்ந்து இருந்தான்
ஆழும் கருணையன் பட்டாபி ராமன் அயோத்தி மன்னே –98- திரு அயோத்யை

பெரு பெற்றோர் எல்லாத்தேவர்களும் பரதனும்
சரயு -யமுனை -அனுஷ்டானத்தடம் –
புஷ்பக விமானம்
சீதாப்பிராட்டியார்
வடக்கு
வீற்று இருந்த திருக்கோலம்
பட்டாபி ராமன்
முக்தி தரும் ஏழு க்ஷேத்ரங்களில் ஓன்று –

———–

மன்னே சவுனகராதியர் இந்திரன் வாழ வந்தோன்
பொன் ஏய்ந்த விச்சுர வாவி பரி எனப் போற்றி இருப்பில்
மின்னேரரி வல்லி கீழ்த்திசை சக்கரம் மேவி நின்றாய்
நன்னேயர் வாழ் நைமி சாரணியத்துறை நாரணனே –99– திரு நைமிசாரண்யம்

விச்சுர வாவி -விஸ்ரான் தீர்த்தம்
ஸ்ரீ ஹரி லஷ்மி
கிழக்கு நின்ற திருக்கோலம்
நன்னேயர் வாழ் -ஸூத பவ்ராணிகர் –18- புராணங்கள் போதித்த ஸ்தலம்
ஸ்ரீ நாராயணப்பெருமாள் –

———-

உறை மலரோன் அரன் கண்டகிக்கும் முறை யோகை தந்தான்
மறை தொழும் சக்கர வாவிக் கனக விமானம் தனில்
நறை பூ விலக்குமி யூடு உத்திர திகை நண்ணி நின்றான்
பொறை சாளக்கிராமத் திரு மூர்த்தி நந்தம் புயற் கொழுந்தே —100–திரு சாளக்கிராமம்

பேறு பெற்றோர் -அரன் -கண்டகி நதி
சக்கர தீர்த்தம்
ககன விமானம்
பூ இலக்குமி -ஸ்ரீ தேவிப்பிராட்டியார்
வடக்கு நின்ற திருக்கோலம்
திரு மூர்த்திப் பெருமாள்

————

புயல் வண்ணன் நாரதனுக்கு உபதேசம் புரிந்து அருள்வோன்
மயலறும் தத்வ வாவி வதரி விமானம் தனில்
கயலங் கணி தய மாதுடன் பூர்வங் களித்து இருந்தான்
நயனுறும் தண் வதரிப்பெருமாள் நர நாரணனே -101-திரு வதரியாஸ்ரமம்

பதரி -இலந்தை மரம்
தத்துவ வாவி
கயல் அம் கண் இதய மாது பிராட்டியார்
கிழக்கு சந்நிதி -இருந்த திருக்கோலம்

————-

மான் படு கண்ணியர் மாலாரப் பாரத்து வாசற்கு அருள்
வான் புகழ் மங்கல வாவியன் மங்கல மானம் தனில்
தேன் புண்டரீகை யம் சீ ராமன் பூர்வம் சிறந்து நின்ற
கான் வெறும் கங்கைக் கரை கண்டம் நார சிங்கன் சரணே –102–திரு கங்கைக் கரைக் கண்டம் -ஸ்ரீ தேவப்ரயாகை

பாரத்வாஜ மஹ்ரிஹிக்கு அருள்
மங்கள புஷ்கரணி
மங்கல விமானம்
புண்டரீக வல்லித்தாயார்
கிழக்கே நின்ற திருக்கோலம்
நாரஸிம்ஹப் பெருமாள்

————-

நாரங்களுக்கு இறைவன் பார்வதிக்கு நயந்து அருள்வோன்
வாரம் செய் மானச வாவி அனந்தன வர்த்தனத்தில்
பாரம் பரிமள வல்லிக்கு இன்பாகத் தென் பால் துயிலும்
ஆரம் செறி யிமையப்பால் திருப் பிரிதிக்கு அரசே –103– திருப்பிருதி -ஜோஷி மட் -நந்தப்ரயாகை –

மானஸ ஸரஸ்
நந்தன வர்த்தனம் விமானம்
பரிமள வல்லிப் பிராட்டி
தெற்கு
துயிலும் திருக்கோலம்
ஆரம் செறி-சந்தன மரங்கள் நிறைந்த பொழில்

————–

பிரிவில் துருவன் வசுதேவன் தேவகி பேண அருள்
மருவார் துருவத் தடத்தோன் வயிட்டுவ மானம் தனில்
இர மா மணி வல்லி தன்னொடு கீழ்த்திசை ஏய்ந்து இருந்தான்
பரவு மதுரையில் கேசவராய் பசும் கொண்டலே–104—ஸ்ரீ வடமதுரை

துருவத்தடம் தீர்த்தம்
வைஷ்ணவ விமானம்
இர
கிழக்கு
வீற்று இருந்த திருக்கோலம்
மா மணி வல்லித்தாயார்
கேசவப் பெருமாள் –

————

கொண்டை முடிக்ககிலாப் பெண்டுகிற்கு அவை கூவ வந்தோன்
விண்டரும் கவ்வத் தடமேம கூட விமானம் தனில்
எண்டரும் எட்டு மனையாரொடு பச்சிவத்து இருந்தான்
தெண் திசை சூழும் துவரைக் கல்யாணச் செழும் கண்ணனே –105–திருத்துவாரகை

தீர்த்தம் -கவ்வத்தடம் -கோமதி நதி
விமானம் -ஏம கூட விமானம்
அஷ்ட திவ்ய மஹிஷிகள் -ருக்மிணிப் பிராட்டி -சத்ய பாமை -இலக்கணை -சாம்பவதி -காளிந்தி -மித்திரவிந்தை -சக்தியை -பத்ரை
சக்தியை நப்பின்னைப் பிராட்டியை
மேற்கு -இருந்த திருக்கோலம்
கல்யாண நாராயணப்பெருமாள்
முக்தி தரும் ஏழு க்ஷேத்ரங்களில் ஓன்று –

———–

கண்ணே கருணைக் கடலே அயன் அரன்களுக்கு அருள்வாய்
தண்ணேர் தடவத் திரபாரம் பூபோ தல இருப்பும்
நண்ணேன் படிந்து வலமாகச் சூழ்கிலன் எனக்கு அருள்வாய்
மண்ணோர் குண விருந்தாவன ராதைக்கு வல்லபனே –106-திரு விருந்தாவனம் –

தீர்த்தம் -கோபியர் துயில் கவர்ந்த பொய்கை
வத்திரபாரம் -வஸ்திர அபஹரணம்
விமானம் -பூ போதல இருப்பு
மண் ஓர் குண -பூமியை உருண்டை ஆக்கி உதரத்தில் அடக்கியவனே
கிழக்கு நோக்கி வீற்று இருந்த திருக்கோலம்
ராதா தேவிப்பிராட்டி
ராதா வல்லபப் பெருமாள்

———-

வல் இந்திரன் பல யாதவற்கு முன்னம் வந்து அருள்வோன்
மல்லயன் ராதைத் தடத்தோன் பருவத மானம் தன்னில்
புல்லு நற் பின்னைத் திருவுடன் நாள் தோறும் பூர்வ நின்றான்
வில்லுயர் கோவர்த்தன வரை ராச விரோசனனே –107-திரு கோவர்த்தன கிரி

ராதைத் தடத் தீர்த்தம்
பர்வத விமானம்
கிழக்கு நின்ற திருக்கோலம்
கோவர்த்தன தாரி
ராச விரோசனன்–அரசர்களுள் ஸூர்யன்
வில் உயர் -ஒளி பொருந்திய கோவர்த்தன கிரி

————–

சனக சநந்தற்க்கு எட்டான் கோபிகை நந்தனுக்கு அருள்வோன்
எனகங்கொய் காளிய னீரேம கூட எழில் இருப்பில்
இனமுயர் ஆய மகளொடு கீழ்த்திசை ஏய்ந்து தவழ்
தினகரன் றண்டு திருவாய்ப்பாடிக் கண்ணன் எனும் சீதரனே –108–திருவாய்ப்பாடி –கோகுலம்

தீர்த்தம் -யமுனையில் காளியத்தடம்
விமானம் -ஏம கூட விமானம்
கீழ்த்திசை இருந்த திருக்கோலம்
திரு ஆய்ப்பாடிக்கண்ணன்
தவழ் தினகரன் -தவழ்ந்து மருதம் முறித்த பிரான் –

——–

வரும் சோழ மண்டலத்து எண் ஐந்து பாண்டிய மண்டலத்தின்
திரு பதினெட்டு ஈர் ஏழாம் மலை நாட்டினில் சார் நடு
இருபதி யோர் இரண்டாம் தொண்டை நாட்டு இருபத்து இரண்டு
திருப்பதி ஆறு இரண்டு உத்தரம் நூற்று எட்டுமாம் தொகையே -109-

———

வரு மலை யத்தங்கிரி நேர் சனன மரணம் எனும்
பொரு மலை யத்தங் கிரகமில் சயெனும் புன்மை யச்சார்
செரு மலை யத்தங் கிரு டீர்த்து அருளும் திரு நின்ற ஊர்த்
திருமலை யத்தங்கி தாதாரியர் தொண்டன் செப்பியதே –110-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு நின்றவூர் திருமலை அத்தங்கி தாதாச்சார்யர் தொண்டன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ வேதாந்த தேசிக நூற்றந்தாதி–

December 13, 2021

ஸ்ரீ வேதாந்த தேசிக நூற்றந்தாதி

“வரதகுரு நன்றான தொல்லருளோ”96- என்பதால் இவ் வந்தாதி வாசிரியர்
ஸ்ரீ நயினாராசாரி யாரிடம் ஆச்ரயித்தவர் என்று கொள்ள இடந்தருகின்றது.

தேவர் முனிவர்களுஞ் சித்தர்களும் பத்தர்களும்
பூவின் மழை பொழிந்து போற்றியே – தாவி
யுலகளந்த மாலை யுணர்ந்துகக்குந்
தூப்புற் குல குருவே யெங்கள் குரு. (26)

இந்த இருபத்தாறாவது பாசுரம் திருவத்திகிரிப் பேரருளாளப் பெருமாள் திருமஞ்சனங் கண்டருளுங் காலத்து
அநுஸந்திக்கப்பெறும் கட்டியத்தில் இன்றும் ஸேவிக்கப் பெறுவதாயின்
இந்நூற்றந்தாதியின் தொன்மையும் பெருமையும் ஆன்றோர்களாற் போற்றி வரப் பெற்றுள்ள பெற்றியும் கூறாமலே விளங்கும்.

————–

1-சென்னியில் சூடும் மலர்

வேதமுடித் தேசிகனே ! வேதியர் குலத்து அரசே!
சாது சனங்களுக்குத் தாவளமே! — போது அமரும்
நின் அடியை என்றும் நினைந்திருப்பர் பாதம் என் தன்
சென்னி தனில் சூடும் மலர். .1.

வேதங்களை உனது திருமுடியில் தரித்த அழகனே ! அந்த வேதங்களை நாள் தோறும் ஓதிக் கொண்டிருக்கும்
அந்தணர்கள் கூட்டத்துக்குத் தங்கும் இடமாக இருப்பவளே! தாமரை மலர் போன்ற உனது திருவடியை என்றும்
எண்ணிக் கொண்டு இருக்கின்ற அடியார்களது திருவடியே எனது தலையில் (முடியில்) அணிந்து கொள்ளும் மலராகும்.

—-

2. நமக்குப் பற்று

மலர்மகள் கோன் தாள் இணையை மன்னி இருப்பார்கள்
சிலர் அவரால் செய் கருமம் என்னாம்? – மலர் அறு சீர்
வேதாந்த தேசிகனை வேறு ஆகாது ஏத்துவார்
பாதாம்புயம் நமக்குப் பற்று. (2)

தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளது கணவன் திருமாலின் திருவடியைப் பொருந்தி (நினைந்து) இருப்பவர்கள் சிலர் உண்டு.
அவர்களால் செய்யக்கூடிய காரியம் என்ன இருக்கிறது? ஆனால், குற்றம் நீங்கிய சிறப்பை உடைய வேதாந்த தேசிகனை,
தன்னோடு வேறு ஆகாமல், அந்த ஆசாரியரோடு ஒன்றி நின்று போற்றும் அடியார்களது திருவடித் தாமரையே,
நமக்குப் பற்றுக்கோடு ஆகும். (தஞ்சமாக) அடைக்கலமாக ஆகும்.

மலர்மகள்கோன் – திருமாமகள் கேள்வன், திருமால்; மன்னி – பொருந்தி; கருமம் – கடமை ;
மலம் – அழுக்கு, பற்று, ஆர்வம், செற்றம் முதலியவற்றிற்கும் மலமெனக் கூறுவர்;
வேதாந்த தேசிகன் – “எழில் வேதாந்தாரியன்” – (தேசிக மாலை திருச்சின்ன மாலை சிறப்புத் தனியன்),
“மின்னுறு நூலமர் வேங்கட நாதனந் தேசிகனே” – (தேசிகமாலை, பன்னிரு நாமம் சிறப்புத்தனியன்),
“ சீர்கொண்ட தூப்புற் றிருவேங்க டாரியன்.”- (௸,௸),
“ சிட்டர்தொழும், வேதாந்த தேசிகனை -(தேசிகமாலை. கீதார்த்தசங்கிரகம். சிறப்புத் தனியன்),
* கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார்.” (௸,௸),
“ சீராரும்‘வேதாந்த தேசிகர்கோன்,”- (தேசிக மாலை, ஆகார நியமம். சிறப்புத்தனியன்),
“ ஞானியர்கள், சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே” ‘தூப்புல் வருநிகமாந்தாசிரியன்’-(வாழித்திருநாமம்),
“வேண்பெரிய விரிதிரைநீர் வையத் துள்ளே வேதாந்த வாரியனென் றியம்ப நின்றோம். ‘ -(தேசிக மாலை, அமிருதாசுவாதினி. 37),
“சந்தமிகு தமிழ்மறையோன் றுாப்புற் றோன்றும் வேதாந்த குரு.”- (தேசிகமாலை. பிரபந்தசாரம், 18),
“ தீதற்ற நற் குணப் பாற்கடற் றாமரைச் செம்மலர்மேன், மாதுற்ற மார்பன் மருவவின் கீதையின் வண்பொருளைக், கோதற்ற நான்மறை
மெளலியி னாசிரி யன்குறித்தான், காதற் றுணிவுடை யார் கற்கும் வண்ணங் கருத்துடனே.” – தேசிகமாலை. கீதார்த்தசங்கிரகம் 21),
’ மெய்விரத நன்னிலத்து மேன்மை யேத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே.”-(தேசிகமாலை. மெய்விரத நன்னிலத்து மேன்மை. 28),
“பெருவேலியா மெம்பி ரான் பேசுபய வேதாந்த தேசிகன்”-(அழகர்பிள்ளைத் தமிழ். பழிச்சினர்ப்பரவல். 12),
“செந்தமிழு மாரியமுந் தேர்ந்த பொதுத் தேசிகனே, யெந்தவிதச் சித்து மியற்ற வல்லாய்.”, “ தேசிக னிதயக் கோயிற் செழுமலர் மிசைவார்”,
“செந் தமிழ்ப் புலவரேத்துந் தேசிகப் பெருமான்,” “ மருள்புகாநிலைத் தேசிகன்,” “சருவ சித்தியு மெய்தித் தேசிகன் றன்னையே நிகர், “
“ தேசிக னென்னுமாசான்,”” புவனி போற்று நந் தேசிகன் “-(ஸ்ரீலஸ்ரீ தண்டபாணிசுவாமிகள்) ;
“வேறாகா தேத்துவார் – “,” தேவுமற்றறியேன், “ “வேறென்றும் நான் அறியேன்” என்ற நிலையிலுள்ளோர்;
பாதாம்புயம் – திருவடித் தாமரை பற்று – அடைக்கலம் *
“பற்றுக பற்றற்றான் பற்றினையப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு”-(திருக்குறள். துறவு, 10),
“ கட்டப் பொருள்விரித்த காசினியி னான்மறையி, னிட்டப் பொருளியம்பு மின்பொருளைச் –
சிட்டர்தொழும், வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கடிருப் பாதாம் புயமடியேன் பற்று. ’,
‘* கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார், பாதார விந்தமலர் பற்று “-(தேசிகமாலை, கீதார்த்தசங்கிரகம், சிறப்புத் தனியன்கள்);
நமக்குப்பற்று- ஸ்ரீவைஷ்ணவர்களாகிய அனைவருக்குந் தஞ்சமாகும்.

——–

என்பால் இருப்பார்.

பற்று ஒன்றும் இன்றிப் பராங்குசனையே பற்றும்
சித்தம் உடை வேதாந்த தேசிகனை – குற்றம் இல்லா
அன்பால் அடைபவர்க்கு ஆளாகும் அன்பரே
என்பால் இருப்பர் இசைந்து. .3.

எந்தவிதமான உலகப் பற்றும் இல்லாமல், நம்மாழ்வாரையே தஞ்சமாகப் பற்றிக் கொள்கின்ற மனத்தை உடைய வேதாந்த தேசிகனை,
குற்றம் இல்லாத அன்போடு அடைகின்ற பக்தர்களுக்கு அடியவர்களாகின்ற அன்பர்களே, என்னிடத்தில் விருப்பத்துடன் தங்கியிருப்பார்கள்.

(3) பற்று – ’ இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு, எல்லையில் அந்நலம், புல்குபற்றற்றே.” -(திருவாய்மொழி 1-2-4),
“ அற்றது பற்றெனில், உற்றது வீடுஉயர், செற்றது மன்னுறில், அற்றிறைபற்றே.” –( ௸1-2-5),
“புற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன், பற்றிலையாய் அவன் முற்றிலடங்கே.” (௸1-2-6);
பராங்குசன் – பிற மதங்களாகிய யானைகளைத் தமது பிரபந்தங்களிற் கூறிய தத்துவார்த்தங்களாற் செருக்கடக்கி
அவற்றிற்கு மாவெட்டியென்னுங் கருவிபோல இருக்கும் நம்மாழ்வார்.

“பாடுவ தெல்லாம் பராங்குசனை நெஞ்சத்தாற், றேடுவதெல் லாம்புளிக்கீழ்த் தேசிகனை-
ஓடிப்போய்க், காண்ப தெலா நங்கையிரு கண்மணியை யான்விரும்பிப், பூண்பதெலா மாறனடிப் போது.”-(பெருந்தொகை. பொருளியல். 1823),
”தேன ருமகிழ்த் தொடையலு மவுலியுந் திருக்கிளர் குழைக் காதும், கான ருமலர்த் திருமுகச் சோதியுங் கயிரவத் துவர்வாயும்,
மோன மாகிய வடிவமு மார்பமு முத்திரைத் திருக்கையும், ஞான தேசிகன் சரணதா மரையுமென் னயனம்விட் டகலாவே.”. (௸1824);
பராங்குசனையே பற்றும் – பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த, பாமன்னுமாறனடி பணிந் துய்ந்தவன் ”-(இராமாநுச நூற்றந்தாதி. 1)
“மாமலர்மன் னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன்றாட் டூமலர் சூடியதொல் லருண் மாறன் றுணயடிக்கீழ், வாழ்வை யுகக்கும்.”-(பிள்ளை யந்தாதி. 1);
அன்பாலடைபவர் – ”அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம், அன்பன் தென்குருகூர் நகர் நம்பிக்கு, அன்பனாய்.”- (கண்ணிநுண் சிறுத்தாம்பு. 11);
ஆளாகும் அன்பர் – ” என் நம்பிக்கு ஆள், புக்ககாதல் அடிமைப் பய னன்றே ” – (கண்ணிநுண்சிறுத்தாம்பு, 9),
” நகர்நம்பிக்கு ஆள், உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே.” – (கண்ணிநுண் சிறுத்தாம்பு. 3) ;
என்பால் – என்னிடத்து; இசைந்து – உடன்பட்டு.

———–

4. மன்னினர்

இசைந்தேன் மனம் இவரை ஏத்த எப்போதும்
கசிந்து கரையும் உளம் என் செய்கேன் – பசுந்துளவ
மாலையான் தன்னிலும் மன்னினரே வண்டு அறையும்
சோலை சூழ் தூப்புல் இறை. .4.

பசுமையான திருத்துழாய் மாலையை அணிந்த திருமாலை விட, வண்டுகள் ஒலிக்கும்படியான மலர்கள் நிறைந்த சோலைகள்
சூழ்ந்துள்ள தூப்புல் என்ற திருத்தலத்தில் அவதாரம் செய்த தலைவராகிய தேசிகர், எனது உள்ளத்தில் நிலையாகத் தங்கிக் கொண்டார்.
அதனால், எனது மனம், எல்லாக் காலத்தும் இந்தத் தேசிகரையே போற்றுகிறது. அதனையே நான் விரும்பினேன்.
எனது உள்ளமும் அவரிடத்திலேயே ஈடுபட்டு உருகிக் கொண்டிருக்கும். நான் என்ன செய்வேன்?

இசைந்தேன் – ஒப்பினேன்;
மனமிவரையேத்த – “பற்றிப் பொருந்தாதான் மார்பிடந்து பூம்பாடகத்துள், இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு.” – (இயற்பா. இரண்டாம் திருவந்தாதி. 94.)
ஏத்த – புகழ: கசிந்து – ஈடுபட்டு; என் செய்கேன் – என்ன செய்வேன்;
பசுந்துளவமாலையான் – பசுமையாகிய துளசி மாலையைத் தரித்த எம்பெருமான்:
தன்னிலும் – “அன்பர்க்கே யவதரிக்கு மாய னிற்க வருமறைக டமிழ் செய்தான் றாளே கொண்டு,
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டுந் தொல்வழியே நல்வழிக டுணிவார் கட்கே.”– (தேசிக மாலை. அதிகார சங்கிரகம், 21);
அறையும் – சப்திக்கும், முறையிடும்; தூப்புல் இறை – தூப்புற் கோமான், ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன்,
நையும் மனம் உன் குணங்களை யுன்னி என் நா இருந்து எம், ஐயனி ராமாநுசன் என்றழைக்கும் அருவினையேன்,
கையும் தொழும் கண் கருதிடும் காணக்கடல் புடைசூழ், வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே.”- (இராமாநுச நூற்றந்தாதி. 102).

———

5. ஆழ்துயர் அறுக்கும்

இறையும் எமக்காய், இருள் அகற்றும் தேசாய்,
கறையில் குணம் கொள் கடவுளோனாய் – மறை அனைத்தும்
வாழ்வித்த வாதியர் சீயம் இவ் வையகத்தில்
ஆழ் துயர் எல்லாம் அறுக்கும் ஆய்ந்து (5)

எங்களுக்குத் தலைவனாகவும், அறியாமையாகிற இருட்டைப் போக்கக் கூடிய ஞான ஒளியாகவும்,
குற்றம் இல்லாத குணங்களைக்கொண்ட கடவுளாகவும், வேதங்கள் எல்லாவற்றையும் உலகத்தில் வாழ வைத்தவராகவும்,
வாதம் செய்பவர்களுக்குச் சிங்கமாகத் தோன்றுபவராகவும் உள்ள வேதாந்த தேசிகர்,
இந்த உலகத்தில், ஆழமாக மண்டிக் கிடக்கின்ற துன்பங்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்து,
அவைகள் இனி வளராதபடி, அவற்றை அடியோடு அறுத்து விடுவார். (போக்கி விடுவார்.)

(5) இறை – ஆள்பவன், நாயகன், ஈசுவரன், அரசன் ; அகற்றும் – போக்கும் ; தேசு – ஒளி, பிரகாசம் ; கறையில் – அழுக்கற்ற, குற்றமற்ற,
குணங்கொள் கடவுள் – “குன்றனைய குற்றம் செயினும் குணங்கொள்ளும், இன்று முதலாக என் நெஞ்சே!-என்றும்,
புறனுரையே யாயினும் பொன்னுழிக் கையான், திறனுரையே சிந்தித் திரு.”-(இயற்பா. முதல் திருவந்தாதி. 41);
மறை யனைத்தும் வாழ்வித்த – பகவதாராதந ரூபமான கர்மங்களை முக்கியமாய் வெளியிடுவதால் கர்ம காண்டம்
எனப் பெயர் கொண்ட பூர்வ மீமாம்ஸையும், அக் கர்மங்களால் ஆராதிக்கப் பெறும் பகவானை முக்கியமாய்ப் பேசுவதால்
ப்ரஹ்ம காண்டம் எனப் பெயர்பெற்ற உத்தர மீமாம்ஸையும் ஒரே-சாஸ்திரம் ஆகும் என்பது
போதாயனர், ஆளவந்தார், ஸ்ரீபாஷ்யகாரர் முதலிய முன்னேர்களால் ஸ்தாபிக்கப்பட்டதை நன்கு நிலைநிறுத்தி
வேதமனைத்தும் வாழச் செய்தவர்.
‘கனை கடல்போ லொருநீராஞ் சூத்தி ரத்தைக் கவந்தனையு மிராகுவையும் போலக் கண்டு நினைவுடனே
நிலைத்தரும மிகந்து நிற்கு நீசர்நிலை நிலைநாடா வண்ண மெண்ணி, வினைபரவு சைமினியார்
வேத நூலை வேதாந்த நூலுடனே விரகாற் கோத்த, முனையுடைய முழுமதிநம் முனிவர் சொன்ன
மொழிவழியே வழியென்று முயன்றிட்டோமே..?-(தேசிகமாலை. பரமத பங்கம். 35.);
சீயம் சிங்கம். “வலிமிக்கசீயம்.”-(இராமாநுச நூற்றந்தாதி. 88); வையகத்தில் – நிலவுலகத்தில் ; ஆய்ந்து – ஆராய்ந்து.

——–

6. விரும்புவார்

ஆய்ந்த புகழ் மங்கையர் கோனம்புயத் தாளிணையிற்
சாய்ந்த மனத்தராய்த் தம்மடியார்க் – கீய்ந்த
பெருங் குணத்த ரெம்மைப் பெருகு மருளால்
விரும்புவர் வே தாந்த குரு. (6)

வேதாந்த தேசிக ஆசார்யர், ஆராயத்தக்க பெரும்புகழை உடைய திருமகள் கேள்வனான திருமாலினது
தாமரை மலர் போன்ற திருவடிகளில் ஈடுபட்ட மனத்தவராகி, தமது அடியவர்களுக்கு ஞான உபதேசம் கொடுக்கும்
சான்றோராக விளங்குகின்றார். அவர், தமது நிறைவான திருவருளினால், எங்களை விரும்புபவராக அமர்ந்துள்ளார்.

(6) மங்கையர் கோன் – திருமா மகள் கணவன், திருவுக்குந் திருவாகிய செல்வன்; அம்புயத்தாளிணை – திருவடித் தாமரை;
சாய்ந்த – ஈடுபட்ட; பெருங் குணத்தர் – சான்றோர் ; விரும்புவர் – ஆசைப்படுவர்;
வேதாந்த குரு – “ சந்த மிகு தமிழ் மறையோன் றூப்புற் றோன்றும், வேதாந்த குரு.” -(தேசிகமாலை. பிரபந்த சாரம், 18)

——–

7. குணத்தனையே கூறு.

குரு மா மணியே குலவு வரை மார்பன்
திரு மா மகள் கணவன் றன்னைத் — தருவானாய்
நின்றீலு மென் வாக்கே நீள் சோலைத் தூப்புல் வரும்
குன்றாக் குணத்தனையே கூறு. .7.

எனது நாக்கே! ஒளிமயமான சிறந்த கௌத்துவமணி விளங்கும் மலை போன்ற திருமார்பை உடையவனும்,
திருமாமகளாகிய இலக்குமிப் பிராட்டியின் கணவனுமாகிய திருமால், நமக்கு முன்னால் நின்று,
தன்னையே தருவதாக இருந்தாலும், நீண்ட சோலைகள் சூழ்ந்த தூப்புல் நகரில் அவதாரம் செய்து,
குறையாத பெருங்குணத்தினராக தேசிகரது பெருமையைப் பேசுவாய்.

குருமாமணி – சிறந்த விலக்ஷணமான மாணிக்கம் ; “தோளாத மாமணி.”-(தேசிக மாலை. பரமபத சோபானம். 21.);
குலவு – விளங்குகின்ற ; வரை – மலை ;
மார்பன் – “திருவுடன் வந்த செழுமணி போற்றிரு மாலிதய மருவிடம்.” -(தேசிகமாலை. அதிகார சங்கிரகம், 8) ,
திருமா மகள் கணவன் – “ தேனார் கமலத் திருமக ணாதன்.”- (தேசிக மாலை அதிகார சங்கிரகம். 26.),
“பூவள ருந்திரு மாது புணர்ந்த நம் புண்ணியனார்.”-(தேசிகமாலை. பரமபத சோபானம்.18)
* தரும வரும் பயனாய, திருமகளார் தனிக்கேள்வன், பெருமை யுடைய பிரானார், இருமைவினை கடிவாரே.”- (திருவாய் மொழி. 1-6-9);
தூப்புல் வரும் குன்றாக்குணத்தன் – “ குணக்குலமோங்கு மிராமானுசன்குணங் கூறுந்தூப்பு லணுக்கன்.”- (பிள்ளை யந்தாதி.9) ;
குன்ரறா – குறைவில்லாத பூரணமான. “கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்,
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத், தொய்யில் கிடக்கிலும் சோதி விண்சேரிலும்
இவ்வருள்நீ செய்யில் தரிப்பன் இராமாநுச! என்செழுங் கொண்டலே.” -(இராமாநுச நூற்றந்தாதி. 104)

———

8. உறுப்பினர்களின் உயர்வு

கூறாது நா வேறு கொண்டு பிற வற்றை நெஞ்சந்
தேறாது சென்னி வணங்காது – சேறாரும்
நீள் வயல் சூழ் தூப்புனகர் நின்மலனார் தேசுடைய
தோளல் லது தொழா தோள். .8.

எனது நாக்கு, தேசிகரின் புகழை அன்றி, பிறருடைய புகழை வேறு சிறப்புக்குரியதாகக் கொண்டு, பேசாது.
எனது மனம், பிற பொருள் எதையும், உய்வுக்குரியதாகத் தெளியாது.
எனது தலை, தேசிகரையன்றி வேறு யாரையும் வணங்காது.
எனது கைகள் சேறு நிறைந்த பெரிய வயல்கள் சூழ் தூப்புல் நகரில் அவதரித்த குற்றமற்ற, ஒளி பொருந்திய
தேசிகரது திருவடியை அல்லாமல் வேறு ஒருவர் பாதத்தைத் தொழாதவையாகும்.

(8) “ வாய் அவனை யல்லது வாழ்த்தாது கை உலகம், தாயவனை யல்லது தாம்தொழா –
பேய் முலை நஞ்சு, ஊணாக வுண்டான் உருவொடு பேரல்லால், காணாகண் கேளா செவி” – (முதல் திருவந்தாதி. 11);
தேறாது – தெளியாது, நிச்சயிக்காது;
சென்னி வணங்காது – “சென்னி வணங்கச் சிறுபனி சோரவெங் கண்ணிணைகள், வெந்நரகங்களும் வீய
வியன்கதி யின்பமேவத், துன்னு புகழுடைத் தூப்புற் றுரந்தன் றுாமலர்த்தாண்,
மன்னிய நாள்களு மாகுங்கொன் மாநிலத் தீர்நமக்கே.” – (பிள்ளை யந்தாதி. 2) ;
சேறு ஆரும் – சேறுநிறைந்த நின்மலன் – “இப்படி ஸெளலப்ய ஸெளசீல்யங்கள் உண்டானாலும்,
ஆச்ரித தோஷத்தைக் காணுமாகில் அணுகக் கூசார்களோ என்னில்
(நின்மலன்) * அவிஜ்ஞாதா” என்றும், “ என்னடியார் அது செய்யார்” என்றும் சொல்லுகிறபடியே
ஆச்ரிதருடைய தோஷ தர்சநமாகிற சரண்ய தோஷமில்லாதவன்.
ஸர்வஜ்ஞனா யிருக்கச் செய்தே ஆச்ரித தோஷத்தைக் காணான் என்றது,
காணுமதுவும் இவர்களுடைய தோஷத்தைக் கழிக்கைக் குறுப்பாம் என்றபடி.
“விமலன் என்று தொடங்கி இவ்வஞ்சு பதங்களாலே நாராயண சப்தத்தில்
உபாயத்வ ப்ராப்யத்வங்களுக்கு உபயுக்தமான உபய லிங்கத்வமும்
உபயவிபூதி நிர்வாஹத்வமும் சொல்லிற்றாயிற்று.” -(முநிவாஹந போகம்);
தோளல்லது தொழாதோள் – “தோள் அவனையல்லால் தொழா.”-(முதல் திருவந்தாதி. 63);
தேசுடைய தோள் – “தேசுடைய சக்கரத்தான் சங்கினன் சார்ங்கத்தான்.”-(மூன்றாந் திருவந்தாதி. 21);
கூறாது ……… வணங்காது – “ புவனமெங்கும், ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின் என்,
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்றொன்றையே.” (இராமாநுச நூற்றந்தாதி. 56.)

————-

9. அருள் செய்வார்.

தோளா யிரமுந் துணித்தன்று வாணன்றன்
மாளாத செல்வத்தை மாற்றினான் – தாளென்றும்
தான் வணங்கி யான் வணங்கத் தன்னை யளித்தருளும்
வானருளான் தூப்புல் வளல். .9.

தூப்புல் நகரில் அவதரித்த வள்ளலாகிய தேசிகர், தன்னை நான் வணங்குவதற்காக,
வாணனது ஆயிரம் தோள்களையும் வெட்டி வீழ்த்தி, அவனது அழியாத செல்வத்தையும் இல்லாதபடி
செய்தவனாகிய திருமாலினது திருவடிகளை, எல்லாக் காலத்தும் தாம் வணங்கி,
அவரது சிறந்த திருவருளால், என்னிடத்தில் அன்பு காட்டி அருள் பாலிப்பார்.

(9) வாணன். மாற்றினான் – “ மூவுலகும் பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை”(இராமாநுச நூற்றந்தாதி. 22)
‘ விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்.”(திருவாய்மொழி. 2-4-2); மாளாத அழியாத ;
மாற்றினான் – அழித்தான், கண்டித்தான், விலக்கினன்; வானருளான் – சிறந்த கிருபா மூர்த்தி, அளவிடவரிய பெருகு மருளான்;
தூப்புல் வளல் – ‘வண் தூப்புல் வள்ளல் ’ (பிள்ளையந்தாதி. 20)

—-

10. உதித்தான்

வள்ளல் மணிவண்ணன் மாயன் பவக் கடலில்
அள்ள லழுந்து மெமை யாதரித்துக் – கள்ள மனம்
தீர்த்துத் தன் சேவடியைச் சிந்திக்கச் செய்வதற்கே
பார்த்துதித்தான் றூப்புற் பரன். (10)

பிறவியாகிய சேற்றில் அழுந்திக் கிடக்கும் எங்களை, ஆசைப்பட்டு, வள்ளலாகவும், மாணிக்கம் போன்ற கருநிறத்தனாகவும்
ஆச்சரியமான செயல்களுக் குரியவனாகவும் உள்ள திருமால், எங்களுடைய திருட்டுத்தனமான எண்ணத்தை நீக்கி,
தனது சிவந்த திருவடியைச் சிந்திக்கச் செய்வதற்காகவே, ஆராய்ந்து பார்த்து,
வேதாந்த தேசிகராகத் தூப்புல் என்ற நகரில் அவதாரம் செய்தான்.

(10) வள்ளல் – வரையாது கொடுப்போர், கொடையாளர் ; மணிவண்ணன் எம்பெருமான் ; நீல ரத்நம் போன்ற வடிவையுடையவன்.”
(‘மணிவண்ணா”) – அபரிச் சேத்யனா யிருக்கச் செய்தேயும் முன்தானையிலே முடிந்து ஆளலாம்படி யிருக்கை.
கீழ்ச் சொன்ன வ்யாமோஹம் வடிவிலே நிழலிடுகை. இந் நீர்மையின்றிக்கே காதுகனானாலும் விட வொண்ணாத வடிவழகு,
பெண்கள் பிச்சுக்கு நிதானமான வடிவென்னவுமாம்.
“ மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை” என்னக்கடவதிறே -(திருப்பாவை. 26. மூவாயிரப்படி);
மாயன் – ‘மாயனை’ (திருப்பாவை. 5.) பவம் – சம்ஸாரம்; அள்ளல் – குழைசேறு, நெருக்கம் ;
கள்ளமனம் – “கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்” (பெரிய திரு மொழி. 7-9-1) ;
சேவடி – சிவந்தபாதம். * சேவடி செவ்வி திருக்காப்பு.” (திருப்பல்லாண்டு. 1) உதித்தான் – அவதரித்தான்;
பரன் – உயர்ந்தவர்களுக்குள்ளும் உயர்ந்தவன். “ தூப்புல் மாபூருடன்” (பிள்ளையந்தாதி. 8);
“ தூப் புற்றேவே “ (௸ 12), “ தூப்புன்மாலே.” ( ௸ 13.);
கள்ள மனம் தீர்த்து – “ விளக்காகி வேங்கட வெற்பினில் வாழும் விரைமலராள், வளக்காதல் கொண்டுறை மார்பன் றிறத்து
முனதடியார், துளக்காத லில்லவர் தங்க டிறத்திலுந் தூய்மை யெண்ணிக்,
களக்காதல் செய்யுநிலைகடியாய்தூப்புற் காவலனே.” -(பிள்ளையந்தாதி. 16.)

——-

11. உரைத்தான்

பரனா ரணனவன்பா தத்திற்காட் செய்கை
உரமிவ் வுயிர்கட்கென் றோரார் — சிரமத்தைத்
தீர்க்க வேதாந்த தேசிகனாய் வந்துதித்து
மார்க்கமிது வென்றுரைத்தான் மால். (11)

இந்த உலகத்தில் உயிர்களுக்கு, எது வல்லமை தருவது என்று ஆராய்ந்து பார்க்காத மக்களது துன்பத்தைப் போக்குவதற்காகவே,
திருமால், வேதாந்த தேசிகனாக வந்து இம்மண்ணுலகத்தில் அவதாரம் செய்து, அந்தத் திருமால், மேலோனாகிய நாராயணனது
திருவடிகளுக்கு அடிமைப் பணி செய்வதே, அந்த இறைவனை அடைவதற்குரிய வழி, இதுவே சிறந்த மார்க்கம் என்று உரைத்தான்.

(11) பரன் நாரணன் – உயர்வற வுயர்நலமுடையவன், அயர்வறு மமரர்கட்கதிபதி ; நாரணன் – விட்டுணு,
“கள்ளகந்தளித்த மலர்த்தலைச் சேக்குங் கடவுணாரனன் முதலானோர்” (தனிகை. நந்தி. 3),
நாராயணன்-(நீரையிடமாக வுடையவ னென்றபடி, நாராயண: நாரம் – நீர், அயந – இடம்)
“ நாரா யணன்பர னாமவ னுக்கு நிலையடியோஞ், சோரா தனைத்து மவனுடம் பென்னுஞ் சுருதிகளாற்
சீரார் பெருந்தகைத் தேசிக ரெம்மைத் திருத்துதலாற், றீரா மயலகற் றுந்திறம் பாத்தெளி வுற்றனமே” (தேசிகமாலை. அமிருதரஞ்சனி.17);
அவன் பாதத்திற்கு ஆட்செய்கை உரம் – கைங்கரியமே புருஷார்த்தம். பரதத்வம் ஸ்ரீமந் நாராயணன்.
அநந்யார்ஹசேஷத்வமே ஸ்வரூபம். குணநுபவஜநித ப்ரீதிகாரித கைங்கர்யமே புருஷார்த்தம்.
அஹங்கார மமகாரங்கள் தத்விரோதி. தந் நிவ்ருத்திக்கும் கைங்கர்ய ஸித்திக்கும் ஸர்வஸுலபனான ஸர்வேச்வரன் திருவடிகளே உபாயம்.
ஜிதேந்த்ரியத்வம் தொடக்கமாகக் கைங்கர்ய பர்யந்தமாக உபாயபலம். ஸகலவேத தாத்பர்யம் இவையே;
உரம் – பலம்; ஒர்தல் – ஆராய்தல், நிச்சயித்தல், அறிதல், தெளிதல்; ஒரார் – ஆராய்ந்து அறியார் ; சிரமம் – கஷ்டம் ; தீர்க்க நீக்க.
‘ இடுக்கண் டீர்த்தசேவடி “ (சேதுபு. சேதுச. 1) மார்க்கம் – வழி, சமயம்; மால் – திருமால்,
* திருமலைமால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன்” (வாழித் திருநாமம்) வந்துதித்து மார்க்கமிது வென்றுரைத் தான்
” சீராரும் வேதாந்த தேசி கர்கோன் செழுமறையினுட் பொருளைச் சிந்தை செய்தே,
யாராய்ந்து வாழ்வுறவிப் புவியோர் தங்கட் கன்புடனே யாகார நியதி சொன்னான்” (தேசிகமாலை. ஆகார நியமம். சிறப்புத்தனியன்);
மால்-ஆச்ரித விஷ யத்தில் வ்யாமோஹத்தை யுடையவன். “மணிவரை யூர்ந்த மங்குன் ஞாயிற், றணிவனப் பமைந்த
பூந்துகில் புனைமுடி இறுவரை யிழிதரும் பொன்மணி யருவியின், நிறனொடு மாறுந் தார்ப் புள்ளுப்பொறி
புனைகொடி தண்ணளி கொண்ட வணங் குடை நேமிமால்.
” (பரிபாடல். 13:1-6, “ நீலவரைக்கட் பரந்த இளஞாயிற்றினது அழகு போலும் அழகமைந்த பீதாம்பரத்தையும்,
நீல வரையை ஊர்ந்த இளஞாயிற்றினது அழகு போலும் அழகமைந்த புனை முடியையும், அவ்வரையினின்றிழியும்
பொன்மணிகளை யுடைய அருவியின் நிறத்தொடு மாறு கொள்ளும் தாரினையும், புள் எழுதிய புனைகொடியையு முடையையாய்
விண்ணின் கண் நின்று அளித்தற்றொழிலைக் கொண்டமாலே !)

———

12. நாரணனும் ஒவ்வான்

மாலா யடியவர் பான் மா நிலத்தில் வந்துதித்த
நால் வேத மெய்ப் பொருளா நாரணனும் – சால
அருள் செய்த வேதாந்த வாரியரோ டொவ்வான்
இருளனைத்து மீங்ககற்றியே. (12)

அடியவர்களிடத்தில் அன்பு கொண்டவனாய், பெரிய இந்த மண்ணுலகத்தில் வந்து தோன்றிய,
நான்கு வேதங்களுக்குரிய உண்மையான பொருளாக விளங்குகின்ற நாராயணனும் அறியாமையாகிய
இருட்டை இவ்வுலகத்தில் போக்கி, மிகுதியான திருவருளைச் செய்த வேதாந்த ஆசாரியரோடு ஒத்திருக்க மாட்டான்.

(12) அடியவர் – பரன் திருவடிக் கடவாதே வழிபடுவார்.
“ பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும், கொண்டு, நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடிகுடி வழி வந்து ஆட்செய்யும், தொண்டர்.” (திருவாய்மொழி 9-2-1),
“குடிக்கிடந்தாக்கஞ் செய்து நின்தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து உன்பொன் அடிக்கடவாதே வழிவருகின்ற அடியர்” (௸ 9-2-2),
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டர்.” ( ௸ 9-2-3), “நம்முடையடியர் “ ( ௸ 9-27),
“ தேட்டருந்திறல் தேனினைத் தென்னரங்கனைத் திருமாது வாழ், வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி
மால் கொள் சிந்தை யராய், ஆட்டமேவி யலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் “ -(பெருமாள் திருமொழி 2-1),
“ தோடுலா மலர்மங்கை தோளிணை தோய்ந்ததும் சுடர்வாளியால், நீடுமாமரம் செற்றதும் நிரைமேய்த்ததும்
இவையே நினைந்து, ஆடிப்பாடி அரங்கவோ ! என்றழைக்கும் தொண்டர்” (௸ 2-2),
“ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்முன் இராமனாய், மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடி
வண் பொன்னிப்பேராறுபோல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம் சேறுசெய் தொண்டர்.” (௸ 2-3),
“தோய்த்ததண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் உடன்றாய்ச்சி கண்டு, ஆர்த்த தோளுடை எம்பிரான்
என்னரங்கனுக்கு அடியார்களாய், நாத்தழும்பெழ நாரணா வென்றழைத்து மெய்தழும்பத் தொழுது, ஏத்தி இன்புறும் தொண்டர்’ (௸ 2-4),
‘ஆதியந்த மனந்த மற்புதமான வானவர் தம்பிரான் பாதமா மலர்கூடும் பத்தியிலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கனெம் மானுக்கே, காதல் செய்தொண்டர்” ( ௸ 2-6),
“மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டுகிண்டு நறுந்துழாய், மாலையுற்ற வரைப் பெருந் திரு மார்வனை
மலர்க்கண்ணனை, மாலையுற்றெழுந் தாடிப் பாடித் திரிந்து அரங்கனெம்மானுக்கே, மாலையுற்றிடும் தொண்டர்” ( ௸ 2-8),
“ மொய்த்துக்கண் பனிசோர மொய்கள் சிலிர்ப்ப ஏங்கி யிளைத்து நின்று, எய்த்துக் கும்பிடு நட்டமிட்டெழுந்து
ஆடிப்பாடி யிறைஞ்சி என், அத்தனச்சனரங்கனுக்கு அடியார்கள்” ( ௸ 2-9),
அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன் மெய்யடியார்கள்” (௸ 2-10),

‘அடியார்” என்கிற இத்தாலே த்ரீதீயாக்ஷரத்திலே சொன்ன ஜீவவர்க்கமும், ஜீவர்களுக்கு ஈசுவரனைக் காட்டில் வேறுபாடும்,
அந்யோந்யம் பிரிவும் காட்டப்படுகிறது.
“அடியார்? என்ருல் ஸர்வ ஸாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களையெல்லாம் காட்டிற்றேயாகிலும்,
இங்கு அடியார்” என்கிறது “யோஹ்யேநம் புருஷம் வேத தேவோ அபிநதம் விது:” என்னும்படி
அபரிச்சேத்ய மாஹாத்ம்யரான சேஷத்வஜ்ஞாந ரஸிகரை. ”(ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த முநிவாஹந போகம்),
“அருடரு மடியர்பான் மெய்யை வைத்துத், தெருடர நின்ற தெய்வநாயக“- (தேசிக மாலை. மும்மணிக்கோவை, 1),
‘திருமா லடியவர்க்கு மெய் யனார்”.- (௸. ௸, 2), நின்றனக்குநிகர் நின்னடி யடைவார்.” -( ௸. ௸.10);
நால்வேத மெய்ப்பொருளா நாரணன்* ஸர்வே வேதா யத்பதமாமநந்தி “ (எல்லா வேதங்களும் எந்தப் பதத்தைப் பேசுகின்றனவோ),
“ வேதைச்ச ஸர்வைரஹமேவ வேத்ய” (எல்லா வேதங்களாலும் நானே அறியப்படுபவன்),
நாராயண பரா வேதா” (வேதங்களெல்லாம் நாராயணனைப் பேசுபவை),
‘உளன், சுடர்மிகு சுருதியுள்” (திருவாய்மொழி 1-1-7),
“மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே.” (திருவாய்மொழி 3-1-10),
ஒதுவாரோத் தெல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும் சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை” ( ௸ 3-1-6),
வீடாக்கும் பெற்றியறியாது மெய் வருத்திக், கூடாக்கி நின்றுண்டு கொண்டுழல்வீர்! –
வீடாக்கும் மெய்ப்பொருள் தான் வேதமுதற் பொருள்தான் விண்ணவர்க்கு நற்பொருள்தான் நாரா யணன்.” (இயற்பா நான்முகன் திருவந்தாதி. 13),

“இனியறிந்தேன் ஈசர்க்கும் நான்முகற்குந் தெய்வம், இனியறிந்தேன் எம்பெருமான் ! உன்னை –
இனியறிந்தேன், காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ நற்கிரிசை, நாரணன்நீ நன்கறிந்தேன் நான்.” ( ௸. ௸. 96);
சால – மிகவும் ; இருளனைத்தும் ஈங்கு அகற்றியே- “ பேரிருள் சீப்பன “ -(சடகோபரந்தாதி, 2),
‘ஆதித்யராமதிவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, சோஷியாத பிறவிக்கடல் வற்றி,
விகஸியாத போதிற் கமலம் மலர்ந்தது வகுள பூஷண பாஸ்க ரோதயத்திலே” (ஆசார்யஹ்ருதயம்),
ராமகிருஷ்ணாதி அவதாரங்கள் உலகத்தை நல்வழிப் படுத்துதலிற் பயன்பட்ட விதம் போதாதென்று
அதன்பின் எம்பெருமான் பிரபஞ்சத்தவரைப் பிறவிப் பெருங் கடலினின்று கரையேற்றிக் கைப்பற்றுதற்கு
ஆழ்வாராசார்யர்களை அவதரிப்பிப்பான் என்பது ஐதிகியம் ;

நாரணனும் சால, அருள் செய்த வேதாந்த வாரியரோ டொவ்வான்-
“அன்பர்க்கே யவதரிக்கு மாயனிற்க வருமறைக டமிழ்செய்தான் றாளே கொண்டு,
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டுந் தொல்வழியே நல்வழிகடுணிவார் கட்கே” (தேசிக மாலை. அதிகார சங்கிரகம், 2)
ஸ்ரீமதுரகவிகள் ஆழ்வார் திருவடிவாரத்திற்கு வரும்போது கண்ணன் இப்பூமியிலேதான் எழுந்தருளி யிருந்தான்;
இதையறிந்தும் மதுரகவிகள் அவனைப் புறக்கணித்து, ஆழ்வாரையே சிறந்த கதியாகப் பற்றினதால் ஆயன் நிற்க, என்னப்பட்டது.)
“நின்னிற் சிறந்த நின்றாளிணை யவை”-(பரிபாடல் 4-62. வீடளிக்குங்கால் நின்னினுஞ் சிறந்த நின்தாளிணையை யுடையை)
“ஐந்தறிவார், இருளொன் றிலா வகை யெம்மனந் தேற வியம்பினரே,” (தேசிகமாலை அதிகாரச் சுருக்கு 11),
’மறைநூல் தந்த ஆதியர் அருளால் தேற இயம்பினர்’ (௸. ௸ 12),
“துணை ஆம்பரனை வரிக்கும் வகை அன்பர் அறிவித்தனர்” ( ௸. ௸ 18).
ஒவ்வான் “ என்பதை நன்கு ஆராய்ந்து தெளிக.

—————

13. வைம்மின்

அகற்றி வினை யனைத்து மந்தமிறஞ் சீராற்
சகத்திற் சதிராக வெம்மை – உகப்புடனே
உய்விக்கும் வேதாந்த தேசிகரா முத்தமரை
வைம்மின் மனந்தன்னில் வைகல்.

வேதாந்த தேசிகர் தான், மக்களது தீவினைகளை நீக்கி அவர்களைப் பக்தர்களாக வாழச் செய்பவர்.
அவரே, தமது சிறப்பான ஞானத்தினால் பக்தர்களை, சாமர்த்தியம் உள்ளவராக வாழவைத்து மகிழ்பவர்.
அதுவே, மக்கள் உய்யும் வழி. இப்படி உய்வகை காட்டும் உத்தமராகிய சுவாமி தேசிகனை,
என்றும் மறவாது மனத்துள் வைத்துக் கொள்வது மக்களது கடமையாகும்.

(13) வினை – பாபம். ‘ வினைகா ளுமக்கினி வேறோ ரிடந் தேட வேண்டும்” -(பிள்ளையந்தாதி, 7),
“மங்கிய வல்வினை நோய்காள்” -(பெரியாழ்வார் திருமொழி 5-2-4)
“இருவினை பற்றறவோடும்” -(இராமாநுசநூற்றந்தாதி 43); சகத்தில் – உலகத்தில்; சதிர் – பெருமை, சிறப்பாக;
சதிராக – நேர்த்தியாக ; வ்யாவ்ருத்தமாக,
“எந்தை எதிராசனின்னருளுக் கென்று மிலக்காகிச் சதிராக வாழ்ந்திடுவர் தாம்’-(உபதேச ரத்தினமாலை. 73);
உய்விக்கும் உஜ்ஜீவிப்பிக்கும் அகற்றி உய்விக்கும்-
“மயக்கும் இருவினை வல்லியில்பூண்டு மதிமயங்கித், துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயரகற்றி,
உயக்கொண்டு நல்கும் இராமாநுச!”-(இராமாநுசநூற்றந்தாதி. 101); உத்தமர் – அனைவரினும் மேம்பட்டவர்,

‘ எங்கள் தூப்புல், மெய்த்தவன் உத்தமன்” -(பிள்ளையந்தாதி, 6.)
“ உத்தமன் – இத்தை, இவர்களுக்கு ஒரு உபகாரம் பண்ணினானாகவன்றிக்கே தன் பேறாக நினைத்திருக்கிறபடி ;
பிறரை ஹிம்ஸித்துத் தன் வயிற்றை வளர்க்க வேணுமென்று இருக்கு மவன் – அதமன் ;
’பிறரும் ஜீவிக்கவேணும், நாமும் ஜீவிக்க வேணும்’ என்று இருக்குமவன் – மத்யமன்
தன்னையழிய மாறியாகினும் பிறர் ஜீவிக்கவேணுமென்று இருக்குமவன் – உத்தமன்.
‘ பக்தாநாம் “ (** நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நசாஸ்பதம், ததாபிபுருஷாகாரோ பக்தாநாம்த்வம் ப்ரகாசசே.
” தேவரீருடைய திவ்யாத்மஸ்வ ரூபமானது தேவரீருக்கு அன்று. தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரஹமும் தேவரீருக்கு அன்று.
தேவரீருடைய திருவாழி முதலான ஆயுதங்களும் தேவரீருக்கு அன்று. ஆச்ரித விரோதி நிரஸநத்துக்காகவே.
தேவரீருக்கு ஸ்தானமான பரமபதமும் தேவரீருக்கன்று. ஆனபோதிலும் அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹத்தை
யுடையவராய்க் கொண்டு தேவரீர் ஆச்ரிதர்களுக்காகவே ப்ரகாசிக்கிறீர்.-(ஜிதந்தா ஸ்தோத்ரம், 5)

”அப்யஹம் ஜிவிதம் ஜஹ்யாம்” (“ அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் தீவாம் வாஸிதேஸலக்ஷ்மணாம்,
நதுப்ரதிஜ்ஞாம் ஸம்ச்ருதிய ப்ராஹ்மணேப்யோ விசேஷத” -(ஸ்ரீமத்ராமாயணம். ஆரண்யகாண்டம். 10-17.
பிராட்டியைப் பார்தீதுச் சக்ரவர்த்தித் திருமகன் வார்த்தை.- ஸீதையே! நான் எல்லாவற்றாலும் ரக்ஷிக்கத் தக்க ப்ராணனையாகிலும்
எனக்கு சரீரபூதஞன இலக்குவனை யாகிலும், என் ஆத்மாவில் பாதியான உன்னையாகிலும் விடுவேன்.
பிரதிஜ்ஞையை ஒருவன் பொருட்டுச் செய்து பின்பு அதை நழுவவிடமாட்டேன்.
ப்ரஹ்மஜ்ஞாநிகள் விஷயத்திற் செய்யப் பட்ட ப்ரதிஜ்ஞையையோ
விசேஷமாகக் கை விடவேமாட்டேன்) என்றிருக்கை,” (திருப்பாவை, 3, மூவாயிரப்படி);

வைம்மின் -வையுங்கள்; வைகல் – தினந்தோறும் * வைகலும் வெண்ணெய், கைகலந்து உண்டான்,
பொய் கலவாது என் மெய் கலந்தானே” (திருவாய்மொழி 1-8-5).
“மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே” (௸ 5-10-11).
“வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு” (திருவாய் மொழி நூற்றந்தாதி. 51).
“வைகலும் வைகல்வரக் கண்டு மஃதுணரார், வைகலும் வைகலை வைகுமென்-றின்புறுவர்,
வைகலும் வைகற்றம் வாழ்நாண் மேல்வைகுதல், வைகலை வைத்துணரா தார்.”-(நாலடியார். அறன் வலியுறுத்தல், 9).

—————-

14. ஈது ஒப்பது இல்லை.

வைகல் கவி வாதி சிங்க மறையவரைக்
கை கலந்து நாமங் கருதினால் – செய் கருமம்
ஈதொப்ப தில்லை யிங் கிப்படியே யங்கமெனச்
சாதுசனங் காட்டுஞ் சதிர். (14)

கவியால் வாதிட்டு வழக்கிடுபவர்களுக்குச் சிங்கமாகத் தோன்றுகின்ற வேதாந்த தேசிகரை,
நாள்தோறும், கைகூப்பி வணங்கி அவரது திருநாமத்தை (வாயால் சொல்லி) மனத்தில் கருதிக் கொண்டிருந்தால்
(அதுவே) செய்யக்கூடிய நல்ல காரியமாகும். இந்த நற்செயலை ஒத்து விளங்கக் கூடியது வேறு எதுவும் இல்லை.
இம் மண்ணுலகில் இதுவே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு (பாகவதர் களுக்கு) அழகு என்று காட்டக்கூடிய சாதுரியமாகும்.

(14) மறையவர் – வேதமுணர்ந்த பிராமணர், வேதாந்தி; கலந்து – சேர்ந்து.
“திருக்கலந்து சேரும் மார்ப!” , தேவதேவ தேவனே! இருக்கலந்த வேதநீ ஆகிநின்ற நின்மலா ,
கருக் கலந்த காளமேக மேனியாய்! நின்பெயர், உருக்கலந்தொழி விலாது உரைக்குமாறு உரைசெயே.” (திருச்சந்தவிருத்தம் 103);
நாமங் கருதினால் – “துஞ்சும்போது அழைமின் துயர் வரில்நினைமின் துயரிலீர்சொல்லிலும் நன்றாம்,
நஞ்சுதான். கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணா வென்னும்நாமம்.” -(பெரிய திருமொழி 1-1-10);
சாதுசனம்-சாதுக்கள்; சதிர்க்ருதக்ருத்யம், பெருமை

“கேசவன்தமர் கீழ்மேலெம ரேழேழு பிறப்பும், மாசதிரிதுபெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!” -(திருவாய்மொழி 7-1-1).
“தமர்கள் கூட்ட நல்வினையை நாசஞ்செய்யுஞ் சதிர்மூர்த்தி தமர்கள்தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே”- (திருவாய்மொழி 8-10-9);
கை கலந்து – “இப்படி “த்வதங்க்ரி முத்திச்ய” என்கிற ச்லோகத்திலே முமுக்ஷுவான அதிகாரியினுடைய அநந்ய தேவதாகத்வமும்,
அநந்ய ப்ரயோஜநத்வமும், இவன் ஸர்வஸ்வாமி திருவடிகளை உத்தேசித்துப் பண்ணுகிற அஞ்ஜலிக்குக் காலநியமமும்,
இத்தால் உபலக்ஷிதமான தேசநியமமும், வர்ணாச்ரமாதிகார நியமமும் ப்ரகாரநியமமும்,
ஆவ்ருத்திநியமமும் என்றவிவை இல்லாத படியையும், இதினுடைய ஆசுகாரித்வமும், அசேஷ தோஷநிவர்த்தகத்வமும்,
அசேஷ கல்யாண காரணத்வமும், அநுபந்திரக்ஷகத்வமும், அக்ஷய பலப்ரதாநத்வமும்,
பலரூபஸ ஜாதீய பரிணதிமத்த்வமும் என்கிற ப்ரபாவங்களையும்,
இது அநந்யப்ரயோஜ நனானப்ரபத்தி நிஷ்டனுக்கும் ப்ரயோஜநாந்தர பரனுக்கும் நிற்கிற நிலைகளையும் அநுஸந்தித்தால்,
கைகளைக் கட்டின அஞ்சலி ஒருவருக்கும் கைவிட வொண்ணாதபடி நிற்கும்.*-(அஞ்சலிவைபவம்).

‘கண்ணன் கழறொழக் கூப்பிய கையின் பெருமைதனை, யெண்ணங் கடக்க வெமுனைத் துறைவ ரியம்புதலாற், றிண்ண
மிதுவென்று தேறித் தெளிந்தபின் சின்மதியோர், பண்ணும் பணிதிகள் பாற்றிப் பழந்தொழில் பற்றினமே.” (தேசிகமாலை. அமிருதாசுவாதினி. 24.)
கைகளைக் கூப்புவது அஞ்சலி, ஈதோர் அடையாளம். இது கண்டு பகவானுக்கு உண்டாகும் மகிழ்ச்சி உரைக்கும் தரமன்று.
எம்பெருமானிடம் பரந்யாஸம் செய்தவன் தன்னைக் காத்துக்கொள்ள வேறொரு காரியமும் செய்யாதவாறு நிற்கும் நிலையையும் காட்டுவது இவ்வடையாளம்)
“ஐச்வர்யமக்ஷரகதிம் பரமம் பதம்வா கஸ்மைதஞ்சலிபரம் வஹதேவிதீர்ய, அஸ்மை நகிஞ்சிது சிதம்
க்ருதமித்யதாம்ப த்வம் லஜ்ஜஸே கதய கோயமுதாரபாவ:” –(ஸ்ரீகுணரத்நகோசம். 58.
‘ஹே அம்மா! கைகூப்புதல் என்கிற அஞ்சலியைச் செய்தவனுக்கு ஜாத்யாதி வைஷம்யமன்றியில் இஹலோக ஐச்வர்யம்,
கைவல்யம், பரமபதம் இவைகளெல்லா வற்றையும் நீர் கொடுத்தாலும் “இவ்வளவு சுமைசுமந்தவனுக்கு இதுதானா நாம் கொடுக்கிறது.
சரியானகூலி நாம் கொடுக்க வில்லையே?” என்று வெட்கப்படுகிறீர்.
இவ்வளவு ஒளதார்யம் எங்கிருந்து உம்மால் அப்யஸிக்கப்பட்டதோ நீர்தான் சொல்ல வேணும்.”)

“ஹஸ்தீச துக்க விஷதிக்த பலாநுபந்தி ந்யாப்ரஹ்மகீட மபராஹத ஸம்ப்ரயோகே, துஷ்கர்மஸஞ்சய வசாத்துரதி க்ருமேந:
ப்ரத்யஸ்த்ர மஞ்சலிரஸெள தவநிக்ரஹாஸ்த்ரே.” -(ஸ்ரீவரதராஜபஞ்சாசத், 30.)
“அத்தீச துக்கமாமால மார்ந்த பலமுற்ற தாகி யமர, எத்தாலுந் தாக்க வியலாததாகி யிறையாதி கீடம் வரையே,
வித்தார மாமெம் வினையால் விலக்க வொண்ணாத தாகி யிலகு, மத்தாவு னிக்ர கத்தம் மெதிர்க்கு மம்பெங்க ளிவ்வஞ் சலியே”-
ஏ! ஹஸ்தீச! துக்கம் என்கிற விஷத்தால் பூசப்பட்ட (ஸம்ஸார) பலத்துடன் (பலம் — பாணத்தின்முனை) சம்பந்தப் பட்டிருக்கிறதும்,
பிரமன் முதல் புழுவரையிலும் ஒருவராலும் எவ் விதமும் தடுக்க முடியாததாய் தன் கார்யத்தை முடித்துக் கொள்வதில் ஸாமர்த்யமுடையதும்,
விஸ்தாரமாக பாவங்களைச் செய்திருக்கும் அடியோங்களால் விலக்க முடியாததுமான உன் நிக்ர ஹாஸ்த்ரத்திற்கு
ப்ரத்யஸ்த்ரம் அடியோங்களுடைய இந்த அஞ்சலியே.-தவிர வேறே யொன்றுமில்லை.”)

—————

15. மயங்குவதே

சதிருடையோம் யாமென்றுந் தம்மை யெண்ணி யிங்கே
எதிரெமக்கி யாரென்று மெண்ணி – மதியில்லா
மானிடர்க ளந்தோ மயங்குவதே வாதி சிங்கந்
தானிருக்க விங்கே சதிர்த்து.

அறிவில்லாத மக்களே! வாதிடுபவர்களுக்கெல்லாம் சிங்கமாகத் தோன்றும் வேதாந்த தேசிகர் இங்கு அவதாரம் செய்திருக்க,
நீங்கள், ‘நாம் அழகு உடையோம்’ என்று உங்களை எண்ணிக்கொண்டும், ‘எமக்கு எதிராக எண்ணிக் கொண்டும்’
உங்கள் உடல் வலிமையில் மயங்குகின்றீர்களே! என்னே அறியாமை! (நீங்கள் பரிதாபத்துக்கு உரியவர்களே!)

(15) சதிர் – சாதுரியம், “ சார்வது சதிரே” (திருவாய் மொழி 2-10-1 ’திருமலையைக் கிட்டுமிதுவே இவ்வாத்மாவுக்குச் சதிர் ;
அல்லாதவையெல்லாம் இளிம்பு. “கண்ணுக் கிலக்கான விஷயங்களை விட்டு வேறே சிலவற்றைப் பெறுகைக்கு
யத்நியா நின்றிகோளி” என்று நினைத்திருக்குமதுவே இளிம்பு “ இதுவே சதிர் “ – ஈடு),
“சதிரிளமடவார்” (திருவாய்மொழி 2-10-2. “சதிரை யுடையராயிருப்பர்கள் – பிறரை யகப்படுத்திக் கொள்ளுகைக்கீடான
விரகையுடையராயிருப்பர்கள், செத்துக் காட்டவுங்கூட வல்லராயிருக்கை. சதிரையும் பருவத்தினிளமை யையுங் காட்டியாயிற்று அகப்படுத்துவது.
கீழே “கிளரொளி யிளமை” என்றதே, அப்பருவங்கண்டவிடத்தே இழுத்துக் கொள்ளும் முதலைகளாயிற்று விஷயங்கள்,” ஈடு);

மதி — புத்தி தத்துவம், அறிவு. மதிநுட்பம் – இயற்கையாகிய, நுண்ணறிவு
“மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம், யாவுள முன்னிற்பவை,” (திருக்குறள், அமைச்சு. 6.)
“இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கையாகிய நூலறிவோடு உடைய அமைச்சர்க்கு மிக்க நுட்பத்தையுடைய
சூழ்ச்சிகளாய் முன்னிற்பன யாவையுள. மதி நுட்பமென்றது பின்மொழி நிலையல். அது தெய்வந்தர வேண்டுதலின் முற்கூறப்பட்டது.)
மதியாவது மூவகைப்படும், அதமம் மத்யமம் உத்தமம் என்று.
அவற்றில் அதமமதியாவது தேவதாந்தரங்களுக்கு சேஷமென்றிருக்கை,
மத்யமமதியாவது எல்லாம் அவன் மூர்தீதியாகையால் எல்லாத் தெய்வங்களுக்கும் நாம் சேஷமென்றிருக்கை.
உத்தமமதியாவது எம்பெருமானுக்கே சேஷமென்றிருக்கை,
“துய்யமதி – பெற்ற மழிசைப்பிரான்” (உபதேசரத்தினமாலை.12. ‘என் மதிக்கு விண்ணெலாமுண்டோ விலை” (நான்முகன் திருவந்தாதி 51)
என்று தாமும் ஆதரித்துப் பேசும்படியாயிறே யிருப்பது. மதிக்குத் தூய்மையாவது – தேவதாந்தரங்கள்பக்கல் பரத்வபுத்தியாகிற மாலிந்ய மற்றிருக்கை”);

மானிடர் – மனிதப்பிறவியடைந்தோர்; அந்தோ – “யாவரணுகப் பெறுவார்? இனியந்தோ!” (திருமொழி 9-8-9),
(“அந்தோ! அணுகப்பெறுநாள் என்று எப்போதும் சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பேன்.” (திருவாய்மொழி 9-8-10);
மயங்குவதே – அறிவு கலங்குதலே; சதிர்த்து – “அன்பனாயடியேன் சதிர்த்தேனின்றே” – (கண்ணி நுண்சிறுத்தாம்பு, 5.
“அபூர்ணமான பகவத் விஷயத்திலே அடியனுமவனாகாதே பூர்ணரான வாழ்வாருக்கு அடியேனாய் சதுரனானேனென்கிறார்.
ஸ்திரீகளை விச்வஸித்து இளிம்பனான நான் ஆழ்வாரைப்பற்றி இன்று சதுரனானேனென்றுமாம் – நஞ்ஜியர் வியாக்கியாநம்.”

“சதிர்த்தேன் — ஈச்வர சேஷமான வாத்ம வஸ்துவை என்னதென்றிருக்கைக்கும் இதர விஷய ப்ரவணனாகைக்கும்
மேற்பட சதிர்க்கேடில்லை யிறே. அவற்றைவிட்டு பகவச்சேஷத்வத்தளவிலும் நில்லாதே
ஆழ்வாரளவும் வருமவனாம்படியான சதிரையுடையவனானேன். ஆசார்யர்களை நம்பியென்கைக்கும்,
அவர்களழைத்தால் அடியேன் என்கைக்கும் ஹேது ஸ்ரீ மதுர கவிகள் வாஸநையாய்த்து. – நம்பிள்ளை ஈடு. “
“சதிர்த்தேன் – சதிரையுடையனானேன். ஈச்வர சேஷமான வாத்ம வஸ்துவை என்னதென்றிருக்கைக்கும்
இதர விஷய ப்ராவண்யத்துக்கும் மேற்பட சதிர்க்கேடில்லையிறே. அவற்றைவிட்டு பகவத் விஷயத்தளவிலே நில்லாதே
ஆழ்வாரளவும் வரும்படியான சதிரையுடைய னானேன், – பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யாநம்,”

“ சதிர்த்தேன் – சதிரனானேன், “மோக்ஷயிஷ்யாமி” என்றவன் முழங்கைத் தண்ணீர் பார்த்திராதே” (பகவற்கீதை 18.66)
ஆழ்வாருடைய ப்ரபாவத்தை யிட்டு வென்றேன். (நம்பிக் கன்பனாய் சதிர்த்தேன்) –
“மாற்பால் மனம் சுழிப்பமங்கையர் தோள்கைவிட்டு” (மூன்றந்திருவந்தாதி. 14) என்கிறபடியே
ஆழ்வாருக்கன்பனாய் அந்ய விஷயங்களை வென்றேன், (நம்பிக்கன்பனாயடியேன்) – ஆத்மாத்மீயங்களிரண்டும் ஆழ்வாரதாய்த்து,
அவர்தாம் “யானேநீ என்னுடைமையும் நீயே” (திருவாய் மொழி 2-9-9) என்று தத்விஷயத்திலே ஸமர்ப்பித்தாப்போலே,
(மடவாரையும் நம்பினநான் சதிர்த்தேன்) அவர்கள் சதிரிளமடவாராகையாலே இளிம்புபட்டநான்,
ஆழ்வாரை யண்டைகொண்டு சதிரனாய்விட்டேன்.” – அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் வ்யாக்யாநம்.)

———–

16. மதித்தார்

சதிர்த்தா ரவர் காண்மின் றாரணியின் மீதில்
எதிர்த்தாரு மிப்பவ நீங்க – மதித்தார்
கவி வாதி சிங்கத்தைக் காதலுடன் கண்டு
புவியிடத்துப் புண்ணிய ரானார். (16)

இந்த மண்ணுலகத்தில் தம்மை எதிர்த்து வாதிடுபவரும், இந்தப் பிறவி நீங்குவதற்காக உபாயம் செய்தவர் அந்த வேதாந்த தேசிகர்தான்.
இதனை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். கவிகளால் வாதிடக்கூடிய எதிரிகளுக்குச் சிங்கமாகத் தோன்றும் அந்த தேசிகரை,
அன்புடன் நோக்கி, அவரை மனதால் போற்றி மதித்தவர், இந்த உலகத்தில் புண்ணியம் செய்த நல்லவராக விளங்குவார்கள்.

(16) தாரணி – பூமி. “தசரதன் மதலையாய் வருதுந் தாரணி”. — (இராமாவதாரம், பாலகாண்டம், திருவவதாரப் படலம். 22);
பவம் – ஸம்ஸாரம். ‘நிறுத்தார் பவத்தி னெடுநா ளுழன்றமை கண்டு — (தேசிகமாலை, பரமபதசோபாநம். 4.)
“ஆராய்ந்துபார்த்து நிறைந்த ஸம்ஸாரத்தில் வெகுகாலம் வருந்தியது கண்டு “),
“ஊனேறு பவக்குழியை வெறுத்து, ” — -(தேசிகமாலை, பரமபதசோபாநம், சிறப்புத்தனியன்,
“சரீரத்தையே வ்ருத்திசெய்கிற ஸம்ஸாரமாகிய படுகுழியை வெறுத்துத்தள்ளி,”. காதல் – பக்தி, ஆசை; புவி – பூமி,
“நிறையிரும்புவியை முன்போனிலைபெற நிறுவிற்றன்றே.” — (கூர்மபு, அந்தகா 6) ;
புண்ணியர் – ஸ்ரீ தேசிகனை இடைவிடாது அநுபவிக்கும் பாக்கியசாலிகள், தருமவான்கள்,
“புண்ணியம் புரிந்தோர்”— (இராமா. பால. நகரப். 5), “புண்ணிய!”– (பால. பரசுராமப், 40.)

————-

17அமரரோ! மற்றவரோ!

ஆனா ரிவரார்தா மந்தமில் பேரின்ப
வானாட் டமரரோ மற்றவரோ – தேனாரும்
பங்கயத்தா ணாதன் போற் பாடும் புகழுடைய
எங்கவிஞர் சிங்கத்தின் பா.

தேன் நிறைந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய நாதமுனிகளைப் போன்று,
தமிழ் மறையைப் பாடக்கூடிய புகழைப் பெற்றிருக்கின்ற எமது கவிஞராகிய சிங்கத்திடத்தில் ஒன்றியவராக இருக்கும் இவர் யார்?
முடிவு இல்லாத பேரின்பம் நிறைந்த வானுலகத்தில் உள்ள தேவரோ? மண்ணுலகத்தில் உள்ள மக்களோ?

(17) அந்தமில் பேரின்பவானாட்டு அமரர் –
“ வந்தவர் எதிர்கொள்ள மாமணி மண்டபத்து, அந்தமில்பேரின்பத்து அடியர்” — (திருவாய்மொழி 10-9-11);
அந்தமில் பேரின்பம் – முடிவில்லாத நிரதிசயவின்பம்; அமரர்– த்ரிபாத்விபூதி யோகத்தைப்பற்றச் சொல்லுகிறது.
பரம ஸாம்யாபந்நராயிருக்கையாலே ஒலக்கமிருந்தாலாயிற்று,
அவர்களுக்கும் அவனுக்கும் வாசியறியலாவது; பிராட்டிமாராலேயாதல், ஸ்ரீ கெளஸ்துபாதிகளாலே யாதல்
சேஷியென்று அறியுமத்தனை — (திருவாய்மொழி 1-1-1) ஈடு.”

தேன்ஆரும் – தேன்நிரம்பிய ; புகழ் – கீர்த்தி, “புகழும் நல் ஒருவன்” — (திருவாய்மொழி 3-4-1),
“ நாள் தோறும் பாடிலும் நின்புகழே பாடுவன்”– (முதல் திருவந்தாதி,88),
“ புகழொன்று மால் “-(திருவாய்மொழி நூற்றந்தாதி. 24); நாதன் – எப்பொருட்குமிறைவன்.
“சங்குசக்கரம் அங்கையில்கொண்டான், எங்கும் தானுய, நங்கள்நாதனே,” – – (திருவாய்மொழி 1-8-9,
“நங்கள் நாதனே — நம்மையெழுதிக் கொள்ளுகையே ப்ரயோஜநமாக. – ஈடு).
“நாதன் ஞாலங்கொள், பாதன் என்னம்மான், ஒதம்போல்கிளர், வேதநீரனே.”- – (திருவாய்மொழி 1-8-10);

கவிஞர் சிங்கம் – “கச்சிநகர் வந்துதித்த பொய்கைப்பிரான் கவிஞர்போரேறு” –(முதல் திருவந்தாதி, தனியன்
“கவிஞர் போரேறு என்கையாவது கவிச்ரேஷ்டர் என்றபடி,
முதலாழ்வார்கள் மூவரில் முதலானவராகையாலே ‘ஆதிகவி’ என்னும்படியான அதிசயத்தையுடைய ராயிருப்பர்.
படைத்தான் கவியாலும், பரகாலகவியாலும் “செஞ்சொற்கவிகாள்” என்றும், ‘செந்தமிழ் பாடுவார்’ என்றும்
கொண்டாடப்படுமவராய் நாட்டிற்கவிகளுக்கும் விலக்ஷணகவியாயிருப்பர்.
இது பொய்கையார் வாக்கிற் கண்டு கொள்க’ என்றிறே தமிழ் கூறுவது.
அந்த வேற்றமெல்லாவற்றையும் பற்ற ’கவிஞர் போரேறு’ என்கிறது.”);

பா – பாட்டு, தூய்மை ; கவிஞர் சிங்கத்தின்பா –
“ நொண்டிச்சிந்து “
சிங்கம் வருகிறதைப் பார் கவிவாதி சிங்கம் வருகிறதைப்பார். (சிங்).
வேதாந்தாசார்ய ரென்று வேதியர்கள் விருதூத, வேதவொலி முழங்க, வாதியர்கள் பயந்தோட, (சிங்).
ஸர்வார்த்தஸித்தி என்னும் கவசமணிந்து கொண்டு, சததூஷணி என்னும் கர்ஜனைகள் செய்துகொண்டு, (சிங்).
பரமதபங்கமென்னும் பற்களின் ஒளிவீச, பரவாதியர்கள் பல முகமாய்ப் பயந்தோட (சிங்).
ந்யாயஸித்தாஞ்ஜனம் ந்யாய பரிசுத்தி என்னும், ஜ்ஞானக்கண்கள் ஒளிவீச மெளனமாய் வாதியர்கள் நிற்க, (சிங்),
ஐந்துரக்ஷை என்னும் அங்கை உகிரைக் கண்டு, அஞ்சியே வாதியர்கள் பஞ்சுபோல் பறந்தோட (சிங்).
திருவடிதொழுதேத்தும் நரஸிம்மதாஸன் தன்னை, அருள்மழை பொழிந்திட அன்புடனே நோக்கம்கொண்டு, (சிங்)”–
(தமிழர் தொழுவேதாந்த வாசிரியன், திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு 16),
“பா வளருந்தமிழ்”– (தேசிக மாலை, பரமபதஸோபானம், 18)

———–

18. இன்பம் பெறலாம்.

இன்பம் பெறலா மிமையோர்த நற்பதமும்
அம்புவியோ டாளலா மாங்கே – செம்பவள
வாயான் மலர்ப் பதத்தான் வண்மை யுடை வேதாந்த
தேசிகனைச் சிந்திப்பார்க் கின்று. (18)

(18) இன்பம் பெறலாம் – “ நாவினால் நவிற்றின்ப மெய்தினேன்” -(கண்ணிநுண் சிறுத்தாம்பு. 2).
“ அடியை யடைந்து உள்ளம்தேறி, ஈறிலின்பத்திருவெள்ளம் யான் மூழ்கினன்” – (திருவாய்மொழி 2-6-8)
“ இன்பம் வளர” – (திருவாய்மொழி 2-7-9);
இமையோர் – இமையவர் – கண்ணிமையாதவர், எப்பொழுதும் எம்பெருமானையே ஸேவித்துக் கொண்டிருப்பவர்,
அகநோக்காகிய ஞானக்கண் குவியாதவர், பரமபதத்தில் எம்பெருமானை ஸேவிப்பதற்குப் பிரதிபந்தக மொன்றுமில்லாமையாலே
அங்கு அவனைக் கண்டு ஆநந்திப்பதையே பொழுது போக்காக வுடைய விண்ணுலகத்து அடியார்கள். இமை – ஒளி,
“மாசுஅற இமைக்கும் உறவினர்”- (திருமுருகாற்றுப்படை 128, எக்காலத்தும் நீராடுதலின் அழுக்கற விளங்கும் வடிவினையுடையவர் – நச்சினார்க்கினியருரை),
தேவருடைய மேனிகள் எப்போதும் மழுங்காமல் மிக்க ஒளியைப் – பிரகாசத்தை உடைத்தாய் இருக்கும்.

“இருளிரியச்சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி” – (பெருமாள் திருமொழி 1-1),
“விடுசுடர் இமைக்கும் பூணான்”- (சீவகசிந்தாமணி 213) “கதிர்பரந்து இமைக்கும் மேனியன்” (சீவகசிந்தாமணி 950),
“மணிபரந்து இமைக்கும் மேனியன்” – (சீவகசிந்தாமணி 2266), “இமை” என்னும் உரிச்சொல் “ஒளி – பிரகாசம்” என்னும் பொருளைச் சுட்டுகின்றது.
** “இமையோர்தலைவா!” – (திருவிருத்தம். 1. “ஸ்வ ஸ்வாமி பாவஸம் பந்தம் ஒத்திருக்கச்செய்தே,
அநாதி கர்ம வசத்தாலே நாங்கள் இழந்து கிடக்க, நித்யஸூரிகள் நித்யாநுபவம் பண்ணும்படி
ஸர்வஸமனான ஸர்வ ஸ்வாமியானவனே” – (உபகார ஸங்க்ரஹம்) ; அம்புவி – அங்கண்மா ஞாலம்;

இன்பம் – “நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும் நிறைவேங்கடப்பொற் குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்,
உன் தனக்கு. எத்தனையின்பந்தரும் உன்னிணைமலர்த்தாள், என்தனக்கும் அது இராமாநுச! இவை ஈந்தருளே”.- (இராமாநுச நூற்றந்தாதி. 76).
“இடுமே இனிய சுவர்க்கத்தில்? இன்னும் நரகிலிட்டுச் சுடுமே? அவற்றைத் தொடர்தருதொல்லை சுழல் பிறப்பில், நடுமே?
இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே விடுமே? சரணமென்றால் மனமே? நையல்மேவுதற்கே.”, – (இராமாநுச நூற்றந்தாதி 98);
“இன்பம்……ஆளலாம்” – “ நீதியனு போகநெறி நின்றுநெடு நாளதினி றந்து சகதண்ட முழுதுக், காதிபர்க ளாயரசு செய்துள
நி னைத்ததுகி டைத்தருள்பொறுத்துமுடிவிற் சோதிவடி வாயழிவில்
முத்திபெறு வாரெனவு ரைத்தசுரு தித்தொகைகளே.”- (இராமாவதாரம், காப்பு முதலியன. 19);
செம்பவளவாயான் — சிவந்த பவழம்போன்ற வாயை யுடையவன். “செம்பவளத்திரள்வாய்” – (பெருமாள் திருமொழி. 10-8);
செம்பவள ……….வேதாந்த தேசிகன் – “வடிவழ கார்ந்தவண் டூப்புல்வள்ளல்”- (பிள்ளையந்தாதி. 20);
சிந்திப்பார்க்கு – “சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினலும் தேவபிரானையே,
தந்தைதாயென்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்”- (திருவாய்மொழி 6-5-11)

சிந்தை மற்றென்றின் திறத்ததல்லாத்தன்மை தேவபிரானறியும்,
சிந்தையினால் செய்வதானறியாதன மாயங்கள் ஒன்றுமில்லை,
சிந்தையினல் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழுவணங்கும்,
சிந்தைமகிழ் திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.” – (திருவாய்மொழி 7-10-10),

‘நல்லோர், சீரினில் இன்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே.”- (இராமாநுச நூற்றந்தாதி, 68),
“சிந்தையினேடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள், அந்த முற்றாழ்ந்தது கண்டு அவை யென்தனக் கன்றருளால்,
தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானது தந்து எந்தை இராமாநுசன் வந்தெடுத்தனன் இன்று என்னையே.” –(இராமாநுச நூற்றந்தாதி. 69) –
“பெயரினையே, புந்தியால் சிந்தியாது ஒதியுருவெண்ணும், அந்தியாலாம் பயனங்கென்” — (முதல் திருவந்தாதி. 33),

“மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கில்லை திருமாலே.” – (முதல்திருவந்தாதி, 75);
இன்று – திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும், அருக்கனணி நிறமும் கண்டேன் –
செருக்கிளரும், பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன், என்னாழி வண்ணன்பால் இன்று” -(மூன்றாந்திருவந்தாதி. 1)
“இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்” (௸, 2),
“அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர், சிறியார் சிவப்பட்டார் செப்பில் –
வெறியாய மாயவனை மாலவனை மாதவனையேத்தாதார், ஈனவரே யாதலால் இன்று” – (நான்முகன் திருவந்தாதி. 6),
“இன்றாக நாளையேயாக இனிச்சிறிதும், நின்றாக நின்னருள் என்பாலதே –
நன்றாக, நான் உன்னையன்றியிலேன் கண்டாய் நாரணனே! நீ யென்னை யன்றியிலை.” – (நான்முகன் திருவந்தாதி. 7),
“ஒன்றே செய்யவும் வேண்டும் அதுவும் நன்றே செய்யவும் வேண்டும் அதுவும் இன்றே செய்யவும் வேண்டும். “

———–

19. துயரம் அடையார்

இன்று நிகமாந்த தேசிகனை யெண்ணுவார்
ஒன்று மடையா ருறு துயரம் – குன்றெடுத்த
மாயன் மலரடிக் கீழ் வாழ்ச்சி பெறுவரே
மாயும் வினை யனைத்து மற்று. (19)

இன்றைய நல்ல நாளில், வேதாந்த தேசிகனை மனத்தில் நினைத்துக் கொண்டிருப்பவர்கள்,
(மேலும்) கோவர்த்தனகிரியைக் குடையாக ஏந்திய ஆச்சரியமான செயலினனாகிய கண்ணபிரானது
திருவடிக்கீழ் வாழும் வாழ்க்கையை அடைவார்கள். அதனால் அவர்கள் பாபங்கள் எல்லாம் அகன்று விடும்.
(“மற்று” அசைநிலை.)

(19) நிகமம் — வேதம். “நிகமமெனிலொன்றுமற்றுநாடொறு” — (திருப்பு. 145. நியமமாகவுணர்தற்கருவி என்க.)
“நிகமாந்த தேசிகன் – வேதாந்த தேசிகன் துயரம் – துன்பம் “இம்மூன்று-மருந்துயரங் காட்டு நெறி. – (திரிகடுகம். 5),
துக்கம். — “துயரமேதரு துன்பவின்ப வினைகளாய்”.-(திருவாய் மொழி. 3-6-8);
எண்ணுவார் ஒன்று மடையாருறுதுயரம் – “விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினை தொழுமின்தூய
மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே.” -(திருவாய்மொழி 3-6-7);
குன்றெடுத்த மாயன் – “குன்ற மேந்திக் குளிர்மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்,
சென்று சேர் திருவேங்கடமாமலை, ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே.” — (திருவாய்மொழி 3-3-8);
மாயன் – அதிசயச் செய்கையன். “மாயன் என்னெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்கும் அஃதே,
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே.” -(திருவாய்மொழி 1-9-6)
மலரடிக்கீழ்வாழ்ச்சி – “ நின் தாளிணைக்கீழ், வாழ்ச்சி”- (திருவாய்மொழி 3-2-4);
வாழ்ச்சி – வாழ்க்கை, செல்வம், வாழ்தல், வாழ்நாள்; பெறுவர் – அடைவர்; மாயும் – மறையும்;
மற்று – அசைநிலை, பிறிது, வினைமாற்று. இம்மூன்று பொருளையுந் தரும் இடைச்சொல்.

————

20. சித்தந் தெளியும்.

மற்றொன்றுஞ் சேரா மனக் கவலை மானிடர்க்குச்
சித்தந் தெளியுஞ் சிறப்புடனே – குற்றமில் சீர்
தூப்புனகர் வந்துதித்த தூய மனத்தரையே
சேர்ப்பரேல் சிந்தை தனித்தே. (20)

புகழோடு குற்றம் இல்லாத சிறப்புடைய தூப்புல் என்ற நகரத்தில் வந்து அவதாரம் செய்த தூய்மையான மனத்தை உடைய தேசிகரையே,
தனித்த சிந்தையில் இடைவிடாது நினைப்பவரானால், அத்தகைய மக்களுக்கு, மனத்தை வாட்டும் துன்பம் எதுவும் வாராது.
(அதற்கு மேல்) அவரது மனமும் தெளிவு பெறும்.

(20) மற்றென்றுஞ் சேரா – “மற்றொருபேறுமதியாது”. – (இராமாநுச நூற்றந்தாதி 57);
“மற்றென்றும் வேண்டா மனமே!”– (திருமாலைத்தனியன்); மனக்கவலை – மனத்தின் கணிகழுந் துன்பங்கள்.
“தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான், மனக்கவலை மாற்றலரிது.” — (திருக்குறள் கடவுள் வாழ்த்து. 7. )
“தாள் சேராதார் பிறவிக் கேதுவாகிய காம வெகுளி மயக்கங்களை மாற்ற மாட்டாமையின்,
பிறந்து அவற்றான் வருந் துன்பங்களுள் அழுந்துவரென்பதாம்.”); சித்தம் – மனம்; தெளியும் – தெளிவுபடும்;
தூப்புனகர் வந்துதித்த தூயமனத்தர் – “தூப்புற் புனிதர்”– (பிள்ளையந்தாதி. 7);

தூயமனத்தர் – “புறந்தூய்மை நீரானமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்.”-(திருக்குறள். வாய்மை. 8).
“ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே யுண்டாம் ; அதுபோல மனந்தூய்தாந்தன்மை வாய்மையானுண்டாம்.
காணப் படுவதுள்ளதாகலின், உண்டாமென்றுரைக்கப் பட்டது.
உடம்பு துாய்தாதல் வாலாமை நீங்குதல். மனந்தூய்தாதல் மெய்யுணர்தல். புறந்தூய்மைக்கு நீரல்லது காரணமில்லாதாற்போல,
அகந்தூய்மைக்கு வாய்மையல்லது காரணமில்லை யென்றவாறாயிற்று.
இதனானே துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டுமென்பதூஉம் பெற்றாம்.”)

தூப்புற்கோமான் இல்லறத்துறவியிறே. மாந்தர்க்குப் பொதுவுணர்வு மனங் காரணமாகவுண்டாம்.
மனந்தூய னாதலாவது விசேடவுணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமை யினீங்குதல்.
மனந்தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும். நிலைபெற்ற வுயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்.
ஒருவற்கு மனநன்மையானே மறுமையின்பமுண்டாம். ஒருவன் தன் மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின்
அவன் தவமுந் தானமும் ஒருங்கு செய்வாரினுஞ் சிறப்புடையன்.
தத்தமக்கு இயலுந் திறத்தான் அறமாகிய நல்வினையை ஒழியாதே அஃதெய்துமிடத்தா னெல்லாஞ் செய்க.
இயலுந் திறமாவது இல்லறம் பொருளளவிற்கேற்பவும், துறவறம் யாக்கைநிலைக் கேற்பவுஞ் செய்தல்.
ஓவாமை இடைவிடாமை. எய்துமிடமாவன மனம் வாக்குக் காயமென்பன. அவற்ருற் செய்யும் அறங்களாவன முறையே
நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலுமெனவிவை. இதனால் அறஞ் செய்யுமாறு அறியலாம்.

அவ்வாற்றான் அறஞ்செய்வான் தன் மனத்தின்கட் குற்றமுடையனல்லனாகுக ;
அனைத்தளவே அறமாவது; அஃதொழிந்த சொல்லும் வேடமும் அறமெனப்படா, ஆரவார நீர்மைய. குற்றம் தீயன சிந்தித்தல்.
பிறரறிதல்வேண்டிச் செய்கின்றன வாகலின், ஆகுல நீரவென்றார். மனத்து மாசுடையனாய வழி அதன் வழியவாகிய
மொழி மெய்களாற் செய்வன பயனிலவென்பதும் கூருமலே விளங்கும் ; சேர்ப்பரேல் – இடைவிடாது நினைப்பரேல்.

————-

21-நெஞ்சு உருகும்

தேறு மனக் கலக்கஞ் சிக்கென வாந்தேசும்
மாறு மறமனைத்தும் வண் புகழோர் – கூறும்
குணத்தன் குளிர் சோலைத் தூப்புனகர்க் கோமான்
குணத்திற் குருகுமென் னெஞ்சு. (21)

நிறைந்த புகழுடையோர் போற்றிக் கூறிக்கொண்டிருக்கும் குணத்தினை உடையவரும், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த
தூப்புல் நகர்க்குத் தலைவருமாகிய தேசிகரது குணத்திற்கு எனது மனம் உருகும்.
(அதனால்) மனத்திலிருந்த மயக்கம் (நீங்கியது) தெளிந்தது. புகழும் உறுதியாக்கப் பட்டது.
பாவம் எல்லாம் என்னைவிட்டு மாறிப் போய்விட்டது.

(21) தேசு – அழகு, ஒளி, கீர்த்தி, ஞாநம், பெருமை, விசிட்டம் ;
குணத்தன் – “உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந் தொறும் திருவாய்மொழியின் மணந்தரு மின்னிசை மன்னுமிடந் தொறும்
மாமலராள், புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி தொறும்புக்கு நிற்கும், குணந்திகழ் கொண்டல்.”– (இராமாநுச நூற்றந்தாதி. 60);
குணத்திற்கு உருகும் என் நெஞ்சு – “நையும் மனம் உன் குணங்களை யுன்னி — (இராமாநுச நூற்றந்தாதி. 102)

————–

22. அன்பர் காண்பர்.

நெஞ்சு நெகிழ்ந்து நினையாமன் மற்றொன்றை
அஞ்சும் படியாக வுள்ளடக்கி – வெஞ்சுடரோன்
சோதியெனத் தோன்றுந் தொல் புகழ் சேர் தூப்புனக
ராதியையே காண்பரன் பர். (22)

ஆசாரியரிடம் அன்புகொண்ட அடியார்கள், மனம் கட்டுக்குலைந்து, வேறு எதனையும் எண்ணாமல்,
பிழைக்கும்படியாக மன எழுச்சியை அடக்கிவைத்து, வெம்மையான ஒளி உடைய சூரியனது ஒளி என்று சொல்லும்
வண்ணம் அவதரித்த பழமைப் புகழ் நிறைந்த தூப்புல் நகரின் முதல்வராகிய தேசிகரையே அகக் கண்களால் காண்பார்கள்.

(22) நெஞ்சு –மனம். “அஞ்சன்மினும்மை நானவனிதோயுமு, னெஞ்ச வீட்டிடுவனிவ், விறைவன்றன்னையு,
நெஞ்சுறத் தந்தைபானிறுத்தி நானுமவ், வஞ்சகப் பிறப்பினை மாற்றுவேனென்றாள்.” – (மகாபாரதம். ஆதிபருவம். குருகுலச் சருக்கம். 70),
“எம்பிரானைத் தொழாய் மடநெஞ்சமே” (திருவாய்மொழி 1-10-3)
“நெஞ்சமே ! நல்லைநல்லை.” – (௸. 1-10-4),
“ நெடியானே! என்று கிடக்கும் என் நெஞ்சமே” – (௸ 3-8-1)
“நெஞ்சமே நீள்நகராக இருந்த என், தஞ்சனே!” – (௸. 3-8-2),
“நல்லை நெஞ்சே! நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்” – (பெரிய திருமொழி 1-7-9);
நெகிழ்ந்து – இளகி, உருகி. “சேவடிநோக்கி – விரும்பியுண்ணெகிழ”-(கூர்மபு. அரியய. 16);
நினையாமல் – தியானிக்காமல்; நெஞ்சு நெகிழ்ந்து –

“கருமமும் கருமபலனுமாகிய காரணன் தன்னை திருமணிவண்ணனைச் செங்கண்மாலினைத் தேவபிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்தெழுந்தாடி, பெருமையும் நானும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.” – (திருவாய்மொழி3-5-10);
அஞ்சும்படியாக – “அஞ்சுவதஞ்சாமை பேதைமை யஞ்சுவ, தஞ்ச லறிவார் தொழில்.” – (திருக்குறள். அறிவுடைமை. 8,)
“அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்; அவ்வஞ்சப் படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.
பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும் சாதி பற்றி அஞ்சுவதென்றார்.
அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல், அஞ்சுதல் எண்ணித் தவிர்தல்.”),
“அஞ்சுவ தோறு மறனே யொருவனை, வஞ்சிப்ப தோரு மவா – (திருக்குறள் அவா வறுத்தல் 6,)

“மெய்யுணர்தலீறாகிய காரணங்களெல்லா மெய்தி அவற்றான் வீடெய்தற்பாலனாய ஒருவனை மறவிவழியாற் புகுந்து
பின்னும் பிறப்பின்கண்ணே வீழ்த்துக் கெடுக்கவல்லது அவா. ஆகலான், அவ்வவாவை அஞ்சிக்காப்பதே துறவறமாவது.
அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை யொழிந்து பராக்காற்காவானாயின்
அஃதிடமாக அவனறியாமற் புகுந்து பழைய வியற்கையாய் நின்று பிறப்பினை யுண்டாக்குதலான்,
அதனை வஞ்சிப்பதென்றார். காத்தலாவது வாய்மை வேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமற் பரிகரித்தல்.”)
“அஞ்சும்” – (திருக்குறள். பகைமாட்சி 3). ஒருவன் அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சா நிற்கும்.”);
உள்ளடக்கி – * ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி, னெழுமையு மேமாப் புடைத்து,”-(திருக்குறள், அடக்கமுடைமை, 6,)
“ஆமை போல ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையுமடக்க வல்லனாயின் அவ்வன்மை அவனுக்கு
எழுபிறப்பின்கண்ணும் அரணாதலை யுடைத்து. ஆமை ஐந்துறுப்பினையும் இடர்புகுதாமல் அடக்குமாறுபோல
இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாம லடக்கவேண்டுமென்பார், ஆமைபோலென்றார்.”),
“ உரனென் னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்பிற் கோர் வித்து.” -(திருக்குறள். நீத்தார் பெருமை, 4.)

“திண்மையென்னுந் தோட்டியால் பொறிகளாகிய யானை யைந்தனையும் தத்தம் புலன்கண்மேற் செல்லாமற் காப்பான்
எல்லா நிலத்தினும் மிக்கதென்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்தாம்.”),
“வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும், சேரிதிரியாமல் செந்நிறீஇ – கூரிய மெய்ஞ்ஞானத்தால் உணர்வார்காண்
பரேமேலொருநாள், கைந்நாகம் காத்தான் கழல்.”- (முதல் திருவந்தாதி. 47.)
பொய்கையார்மாலை. திருவல்லிக் கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு. 24-பக்கம் 97-ல் இதன் விளக்கம் காண்க)
“அடல்வேண்டு மைந்தன்புலத்தை விடல் வேண்டும், வேண்டிய வெல்லா மொருங்கு.” – (திருக்குறள் துறவு. 3)
“வீடெய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட் குரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும்.
கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுதையும் ஒருங்கே விடுதல்.வேண்டும்.
புலமென்றது அவற்றை நுகர்தலை, அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானுமன்றி வாராத பொருள்கண்
மேலல்லது வீட்டு நெறியாகிய யோக ஞானங்களிற் செலுத்தாமையின், அதனை யடல்வேண்டு மென்றும்,
அஃது அப்பொருள்கண்மேற் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின்,
வேண்டிய வெல்லாமொருங்குவிடல் வேண்டுமென்றுங் கூறினார்.”);

அன்பர் அன்புடைய மஹான்கள், “அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா, ரென்பு முரியர் பிறர்க்கு.” – (திருக்குறள். அன்புடைமை.2)
‘அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானுந் தமக்குரியர்; அன்புடையார் அவற்றானேயன்றித்
தம்முடம்பானும் பிறர்க்குரியர். என்பு முரியராதல் ‘தன்னகம் புக்க குறுநடைப் புறவின் றபுதி யஞ்சிச்சீரை புக்கோன்? முதலாயினர்கட் காண்க.”),
“அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம், அன்பன்தென்குருகூர் நம்பிக்கு அன்பனாய்” (கண்ணிநுண்சிறுத்தாம்பு 11)

—————

23. போற்றுமின்

அன்பரா யாதரிக்கு மாரியர்காள் போற்றுமின்
இன்பமிகு வேதியர்க ளேத்தவே – அம்புவியில்
வந்துதித்த வள்ள லெதிராசன் வண் புகழே
சிந்திக்குந் தூப்புனகர்ச் சிங்கம். (23)

தூப்புல் நகரில் தோன்றிய கவிவாதி சிங்கமாகிய சுவாமி தேசிகன், அழகிய பூமியில் வந்து அவதாரம் செய்த
வள்ளலாகிய இராமாநுசரது வண்மைப் புகழையே சிந்தித்துக் கொண்டிருப்பார். மேலோர்களே!
நீங்கள், அத்தகைய தேசிகரையே, விரும்புகின்ற அன்பர்களாக இருந்து, இன்பம் நிறைந்த
வேதம் ஓதுபவர்களாகிய உங்களைப் போற்றும்படியாக, தேசிகரைப் பின்பற்றுங்கள்.

(23) அன்பராயாதரிக்கும் – “ஐயன்கழற்கு அணியும் பரன்தாளன்றியாதரியா மெய்யன்” -(இராமாநுச நூற்றந்தாதி 13);
ஆரியர்காள் – சிறந்த அனுஷ்டானமுள்ளவர்களே!; “ஓராண் வழியா யுபதேசித் தார்முன்னோர், ஏரா ரெதிராச ரின்னருளால் –
பாருலகில், ஆசையுடையோர்க்கெல்லா மாரியர்காள் கூறுமென்று, பேசி வரம்பறுத்தார் பின்.” -(உபதேசரத்தின மாலை. 37)
ஆரியர்காள் – ஆச்சார்யர்களே ! ‘கார்யங்கருண மார்யேண’ என்கிறபடியே நீங்களும் கேவல க்ருபையாலே உபதேசித்துப் போருங்கோள்.),
“அரிய, அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கிப்போ, தருளிச் செயலாய்த் தறிந்து” -(உபதேசரத்தின மாலை. 46),
“ஆரியர்காள், என்றனக்கு நாளும் இனிதாக நின்றது” -(௸ 59) ;

போற்றுமின் – போற்றுங்கள், துதியுங்கள், வணங்குங்கள், பேணுங்கள், மங்களா சாஸனஞ் செய்யுங்கள் ;
ஏத்தவே – துதிக்கவே; இன்பமிகு வேதியர்கள் ஏத்தவே அம்புவியில் வந்துதித்த வள்ளல் –
“தாழ்வொன்றில்லா மறைதாழ்ந்து தலமுழுதும் கலியே, ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன்…….வாழ்கின்ற வள்ளல்.” -(இராமாநுச நூற்றந்தாதி.16),
‘இராமாநுசன் புகழோதும் நல்லோர், மறையினைக்காத்து இந்த மண்ணகத்தே மன்னவைப்பவரே.’ – (௸ 9),
“அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொற், கடல் கொண்ட வொண்பொருள் கண்டளிப்ப
பின்னும் காசினியோர், இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண் பொருள் கொண்டு அவர்பின், படருங்குணன் எம் இராமா நுசன்.”-(௸ 36),
“சுருதிகள் நான்கும் எல்லை, யில்லா அற நெறியாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர், நல்லார் பரவும் இராமா நுசன்.”- (௸ 44),
“புன்மையிலோர், பகரும் பெருமை இராமாநுச!-(௸ 48), “ஆனது செம்மையறநெறி பொய்ம்மையறு சமயம்,
போனது பொன்றி இறந்தது வெங்கலி. இராமாநுசன் இத்தலத்துதித்தே.” – (௸ 49),
“நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது தென்குருகை வள்ளல், வாட்டமிலா வண்தமிழ்மறை வாழ்ந்தது.” – (௸ 54),
“தொகையிறந்த, பண்தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டலைமேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குலமே.” – (௸ 55),
“நல்தவர் போற்றும் இராமாநுசனை.” – (௸ 57), பேதையர் வேதப்பொருளி தென்று உன்னி பிரமம் நன்றென்று,
ஒதி மற்றெல்லாவுயிரும் அஃதென்று உயிர்கள் மெய்விட்டு, ஆதிப்பரனோடொன்றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்,
வாதில் வென்றான், எம் இராமாநுசன் மெய்ம்மதிக்கடலே.” – (௸ 58),
“எங்களிராமாநுசமுனி வேழம் மெய்ம்மை, கொண்ட நல்வேதக் கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது.” – (௸ 64),
“மறையவர் தம் தாழ்வற்றது….. இராமாநுசன் தந்த ஞானத்திலே” – (௸ 65), “நல்லார் பரவும் இராமாநுசன்.” – (௸ 80),
“ஒதிய வேதத்தின் உட்பொருளாய் அதனுச்சி மிக்க, சோதியை நாதனென அறியாது
உழல்கின்ற தொண்டர், பேதைமை தீர்த்த இராமாநுசனை.” – (௸ 85),
“எம் இராமாநுசன், மண்ணின் தலத்து உதித்து மறைநாலும் வளர்த்தனனே.” – (௸95),
“நல்வேதியர்கள் தொழும் திருப்பாதனி ராமாநுசனை.” – (௸ 105);

வள்ளல் எதிராசன் – “வள்ளல் இராமானுசனென்னும் மாமுனியே.” – (இராமாநுச நூற்றந்தாதி. 16),
“கொள்ளக் குறைவற்றி லங்கி கொழுந்து விட்டோங்கியவுன், வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்.” – (௸ 27),
“செறுகலியால், வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த, அருந் தவன் எங்களிராமாநுசனை” – (௸ 32),
“வண்மை இராமானுச!” – (௸ 71), “நிறைபுகழோருடனே, வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே” – (௸ 72),
‘’வண்மையினாலும்….ஞானமுரைத்த இராமானுசனை” – (௸73), ‘’வண்மை இராமானுசற்கு” – (௸ 77),
‘’உன்னுடைய, கார்கொண்ட வண்மை இராமானுச ! – (௸ 83),
“உணர்வின்மிக்கோர், தெரியும் வண்கீர்த்தி இராமானுசன்” – (௸87),
“பின்னருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல்” -(தேசிகமாலை. அதிகார சங்கிரகம், 3);
எதிராசன் வண்புகழே – “பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ்பாடி” – (இராமாநுச நூற்றந்தாதி. 7),
“இராமாநுசன் புகழோதும் நல்லோர்” (௸9), “வஞ்சர்க்கரிய இராமாநுசன் புகழன்றி” – (௸ 28),
“இராமாநுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்” – (௸ 29), ‘’இராமாநுசன் தன்நயப்புகழே” – (௸ 34),
“எம் இராமாநுசன் தொல்புகழ், சுடர்மிக்கெழுந்து” (௸61).

எதிராசன் வண்புகழே சிந்திக்கும் தூப்புனகர்ச்சிங்கம் – “மாறன் றுணையடிக்கீழ் வாழ்வை யுகக்கு மிராமா னுசமுனி
வண்மைபோற்றுஞ் சீர்மைய னெங்கடூப் புற்பிள்ளை.” – (பிள்ளையந்தாதி. 1.
நம்மாழ்வாருடைய திருவடிகளையே உபாயமாகவும் பலனாகவும் நாடி நின்று பெருமை பெற்றவர் ஸ்ரீபாஷ்யகாரர்.
ஸ்ரீபாஷ்யம் முதலிய தம் ஸூக்திகளின் வாயிலாக உலகுக்கு க்ஷேமத்தைச் செய்தருளிய இந்த ஸ்ரீபாஷ்யகாரருடைய
ஒளதார்ய குணத்தை வாயாரப் புகழ்ந்து பேசுமவர் ஸ்ரீதேசிகன்),
‘’உத்தர வேதியுள் வந்துதித்த, செய்ய வண் மேவிய சீரரு ளாளரைச் சிந்தைசெய்யு, மெய்யவ னெந்தை
யிராமானுசனருண் மேவிவாழு, மையனிலங்குதூப் புற்பிள்ளை.” -(பிள்ளையந்தாதி. 4. )
பிரமனுடைய அசுவமேதயாக வேதியில் வந்து திருவவதரித்த பெருந்தேவி நாயகஞன பேரருளாளனையே
எப்பொழுதும் தொழும் பெருமையை உடையவரான ஸ்ரீபாஷ்யகாரருடைய கிருபையையே தமக்கு ஆதாரமாகக் கொண்டு வாழும் ஸ்ரீதேசிகன்),
“மாநிலத் தோதிய மாமறை மன்னிய நற்கலைகலைளானவை செப்பு மரும்பொரு ளத்தனை யேயருளுந்,
தூநெறி காட்டு மிராமா னுசமுனித் தோத்திரஞ்செய், யூனமி றுாப்புலம்மான்.” – (பிள்ளையந்தாதி. 3.)
ஸகல ஜீவராசிகளுக்கும் ஹிதமான அம்சங்களையே போதிக்கும் வேதங்கள், அவற்றைத் தழுவி நிற்கும் சாஸ்திரங்கள்
ஆகிய இவற்றின் உண்மைப் பொருளை உலகுக்கு வெளியிட்டு ப்ரபத்தி மார்க்கத்தையும் காட்டிக் கொடுத்த
ஆசார்யசிரேஷ்டரான ஸ்ரீபாஷ்யகாரரின் புகழை வாய் வெருவிப் பேசி மகிழ்ந்து நிற்பவரான ஸ்ரீதேசிகன்),
“இராமா னுசமுனி யின்னுரை சேருந்தூப்புற், புனிதர்.-(பிள்ளையந்தாதி. 7.)
ஸ்ரீபாஷ்யகாரருடைய திவ்ய ஸூக்திகள் தம்முள்ளத்தில் குடி கொள்ளப் பெற்ற ஸ்ரீதேசிகன்),

“குணக்குல மோங்கு மிராமா னுசன் குணங் கூறுந்தூப்பு லணுக்கன்.” – (பிள்ளையந்தாதி, 3).
அளவற்ற நற்குணங்கள் நிரம்பப் பெற்ற ஸ்ரீபாஷ்யகாரருடைய பெருமையையே பேசுமவரும்
தூப்புலில் தோன்றிய பாகவத சீரேஷ்டருமான ஸ்ரீதேசிகன்),
“ஆரண நூல்வழிச் செவ்வை யழித்திடு மைதுகர்க்கோர், வாரண மாயவர் வாதக் கதலிகண்
மாய்த்தபிரா, னேரணி கீர்த்தி யிராமா னுசமுனி யின்னுரைசேர்,
சீரணி சிந்தையி னோஞ்சிந்தி யோமினித் தீவினையே.” – (தேசிகமாலை. அதிகாரசங்கிரகம், 4.)
வேதாந்த சாஸ்திரத்தின் வழியின் நேர்மையைக் கெடுப்பவர்களான ஹைதுகர்களுக்கு நிகரற்ற யானையாய் வந்து
அவர்களுடைய வாதமாகிய வாழைகளை ஒழித்த உபகாரகரும், உலகுக்கே பொருந்திய அலங்காரமாய் உள்ள
புகழையுடைய வருமான ஸ்ரீபாஷ்யகாரருடைய இனிய ஸூக்திகளில் பொருந்திய சிறப்புப் பெற்ற மனத்தை யுடையோமாஞேம்.
இனிமேல் கொடிய கர்மங்களை மனத்தாலும் நினைக்கமாட்டோம்.),
“அடற்புள் ளரசினு மந்தணர் மாட்டினு மின்னமுதக், கடற்பள்ளி தன்னினுங் காவிரி யுள்ள முகந்தபிரா, னிடைப்
பிள்ளை யாகி யுரைத்த துரைக்கு மெதிவரனார், மடைப் பள்ளி வந்த மணமெங்கள் வார்த்தையுண் மன்னியதே.” -(தேசிகமாலை. பரமபத சோபானம். 1.)

வேத வேதாந்தங்களிற் காட்டிலும் இனிய அமுதமாகிய பிராட்டி அவதரித்த திருப்பாற்கடலாகிய படுக்கையிடத்திற் காட்டிலும்,
காவிரிக் கரையில் உள்ள திருவரங்கம் முதலிய திவ்விய தேசங்களில் மணம் மிக மகிழ்ந்து எழுந்தருளியுள்ள
எம்பெருமான் இடைச்சிறுவனாய் அவதரித்து வெளியிட்ட பகவத்கீதையின் தாத்பர்யத்தையே தம் பாஷ்யங்களில்
விளக்கியவரான யதிகளுள் சிறந்த ஸ்ரீபாஷ்யகாரருடைய திருமடைப்பள்ளி வழியாக வீசிய வாசனை
யாம் வெளியிடும் கிரந்தங்களுள் மன்னியுள்ளது.
ஸர்வேசுவரனான எம்பெருமான் கோப குமாரனாகிக் கண்ணனாய்த் திருவவதரித்து உரைத்தது ஸ்ரீபகவற்கீதை,
அதற்கு வியாக்கியானம் இட்டருளினார் ஸ்ரீபாஷ்ய காரர்.

கீதோபநிஷதாசார்யனான கண்ணன் அருளிச் செய்ததையே அருளிச்செய்யும் இராமாநுசன். அதாவது,
இடைப்பிள்ளையாகி யுரைத்ததையே இராமாநுசனாகி யுரைக்கும். எதிராசனுடைய திருவாக்கு
கண்ணனுடைய கீதைக்கு ஒப்பு எனலுமொன்று. கண்ணபிரான் பலராமனுக்குத் தம்பியாக அவதரித்ததனால்
அவனை “ராமாநுஜன்” என்பர். ஸ்ரீபாஷ்யகாரரை இளைய பெருமாளுடைய அபராவதாரமென்று சொல்லுவது
போலவே கண்ணபிரானுடைய அபராவதாரமென்றும் நிர்வஹிப்பர்.
இதனைப் ‘’பெரும் பூதூர் வந்த வள்ளல்”-(வேதாந்த தீபிகை. 25-ஆம் ஸம்புடம். பக்கங்கள். 519-521-
கண்ணனும் ஸ்ரீபாஷ்யகாரரும் என்ற பகுதி) என்ற எமது கட்டுரையில் பரக்கக் காண்கலாம்.
“உரைத்ததுரைக்கும்” என்ற சொல்லாற்றலால் இவரது ஒருமையே மொழியு நீர்மை நன்கு புலனாகும்.
‘’இப்படி ரஹஸ்யத்ரயத்தைப் பற்றின கீழு மேலுமுள்ள பாசுரங்களெல்லாம் வேதாந்தோதயந ஸம்ப்ரதாயமான
மடப்பள்ளி வார்த்தையை ஆசார்யன் பக்கலிலே தாங்கேட்டருளின படியே கிடாம்பி அப்புள்ளார்
அடியேனைக் கிளியைப் பழக்குவிக்குமாபோல பழக்குவிக்க அவர் திருவுள்ளத்திலிரக்கமடியாகப்
பெருமாள் தெளிய ப்ரகாசிப்பித்து மறவாமற்காத்துப் பிழையறப் பேசுவித்த பாசுரங்கள்.”-(ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், ஆசார்யக்ருத்யாதிகாரம்.)

ஸ்ரீபாஷ்யகாரருடைய திருமடைப்பள்ளியில் அந்தரங்க கைங்கர்யம் செய்து வந்து அவரிடமே ஸகலார்த்தங்களையும் கற்றறிந்த
கடாம்பியாச் சான் வழியாக நம் ஸம்ப்ரதாயம் தழைத்தோங்குவதுபற்றி “மடைப்பள்ளி வந்த மணம்” என்னப்பட்டது.
உண்ணக்கடவ உயர்ந்த பண்டங்களைச் சேமித்துத் திருமடைப்பள்ளி யில் வைத்து அனைவருக்கும் வழங்குமாறு போல
கற்றறிந்து அநுபவிக்க வேண்டிய வேதாந்தத்தின் ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம் ஸ்ரீபாஷ்யகாரர் கடாம்பியாச்சானுக்கு உபதேசித்து,
அவர் முகமாய் உலகுக்கு வழங்கச் செய்தபடியால் அவருக்கு மடைப்பள்ளி யாச்சானெனத் திருநாமம் வந்தது என்றும் கூறுவர் பேரறிஞர்.),
“அலர்ந்த வம்பு யத்தி ருந்து தேனருந்தி யின்னக லல்கு லார சைந்த டைந்த நடைகொ ளாத தனமெனோ, நலந்த விர்ந்த தாலதென்கொ னாவின் வீறி ழந்ததா னாவ ணங்கு நாதர் தந்த நாவின் வீறி ழந்ததென், சலந்த விர்ந்து வாது செய்து சாடி மூண்ட மிண்டரைச் சரிவி லேனெ னக்க னைத்து ரைத்த வேதி ராசர்தம்,
வலந்த ருங்கை நாய னார்வ ளைக்கிசைந்த கீர்த்தியால் வாரி பால தாம தென்று மாசில் வாழி வாழியே.”- (தேசிகமாலை. அமிருதாசுவாதினி. 33.)

ஸ்ரீபாஷ்யகாரருடைய திருவடிகளில் ஈடுபட்ட இருவர் அவரது புகழைப்பற்றி ஸம்பாஷித்ததாக அமைந்துள்ளது இப்பாசுரம்,
ஒருவர் :- அன்னம் மலர்ந்த தாமரைப்பூவில் வீற்றிருந்து அதில் உள்ள தேனைப் பருகி அழகிய அகன்ற அல்குலையுடைய
ஸ்திரீகளின் அசைந்து நடக்கும் நடையைக்கொள்ளாமல் வருந்தி வாடிக்கிடப்பதன் காரணம் என்ன?
மற்றவர் – தன் பெருமையை அது இழந்துவிட்டதால் தான் வருந்திக்கிடக்கின்றது.
ஒருவர் :- அது எவ்வாறு பெருமை இழந்தது?
மற்றவர் :- தன் நாவிற்குள்ள பாலையும் நீரையும் பிரிக்கும் சக்தியை இழந்து, விட்டதால் இவ்வாறு வருந்துகின்றது.
ஒருவர் :- வாக்குக்குத் தேவதையாகிய நாமகள் கணவனான பிரமனால் அளிக்கப்பெற்ற நாவின் அந்தச் சக்தியை ஏன் இழந்தது?
மற்றவர் :- கூறு கின்றேன் கேளும். அடிக்கடி வாதத்திற்கு வந்த முரடர்களான வாதிகளை குற்றமில்லாது வாதம் செய்து ஜயித்து,
இன்னும் யாவர் வாதம்புரிய வந்தாலும் தளரமாட்டேன் என்று கர்ஜித்துக் கூறிய ஸ்ரீபாஷ்யகாரருடையதும் அடைந்தவர்களுக்குப்
பலத்தைத் தரும் கையையுடைய எம்பெருமானுடைய சங்கம் போன்றதுமான கீர்த்தி உலகமெங்கும் பரவியதால்
ஜலம் முழுதும் பாலாகிவிட்டதாம். ஜலம் முழுதுமே பாலாகிவிட்டதால் பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் சக்திக்கு
உபயோகமே ஏற்படாமல் பயனற்றுப் போய்விட்டதை எண்ணி இந்த அன்னம் வருந்தி நிற்கின்றது.
எக்காலத்திலும் குறைவுபடாத அந்தப் புகழ் வாழக்கடவது),

‘வாழி யருளாளர் வாழியணி யத்திகிரி, வாழி யெதிராசன் வாசகத்தோர்-வாழி, சரணா கதியெனுஞ் சார்வுடன் மற் றென்றை,
யரணாகக் கொள்ளாதா ரன்பு.” – (தேசிகமாலை. மெய்விரத நன்னிலத்து மேன்மை. 1),
‘ ஆகாரத் திருவகையா நன்றுந் தீது மருமறைகொண் டெதிராச ரிவைமொ ழிந்தா, ராகாத வழிவிலக்கி யாக்குங்
கண்ண னனைத்துலகும் வாழவிது சாற்றி வைத்தான்.” -(தேசிகமாலை. ஆகார நியமம். 1);
தூப்புனகர்ச்சிங்கம் – “ஏராரு மெதிராச ரருளினாலே யெதிர்ந்தவர்கள் சிங்கமென விங்கு வந்தோன்,
சீராரும் வேங்கடவன் றுாப்புற் பிள்ளை.”-(தேசிகமாலை. ஆகார நியமம். சிறப்புத்தனியன்).

————

25. வருத்தம் அறக் காக்கும்

கடைந்தான் கடலைக் கடல் வண்ணன் முன்னம்
இடந்தான் பின் னேனமாப் பூமி – அடைந்தார்
வருத்த மறக் காக்குமே வையத் தருளால்
திருத்த முடைத் தூப்புல் வாழ் தேவு. (25)

கடல்போன்ற நீலநிறத்தினனாய் திருமால், முன்காலத்தில், பாற்கடலைக் கடைந்தான். பிறகு, வராக அவதாரம் எடுத்து,
பூமியினைக் கீழிருந்து குத்தி எடுத்துப் பெயர்த்தான். (ஆனால்) ஒழுங்கு நிறைந்த தூப்புல் நகரில் வாழும் தெய்வமாகிய தேசிகர்,
தமது அருளால், இந்த உலகத்தில் தம்மை அடைக்கலமாக அடைந்த அடியவர்களைத் துன்பம் இல்லாமல் பாதுகாப்பார்.

(25) கடைந்தான் கடலை – ”அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன்” – (திருவாய்மொழி 1-3-11);
இடந் தான் பின்னேனமாப்பூமி “இடந்தது பூமி” – (முதல் திருவந்தாதி. 39)
“ஈனச் சொல்லாயினுமாக எறிதிரைவையம் முற்றும் ஏனத்துருவாய் இடந்த பிரான் இருங்கற்பகம் சேர்,
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லா யவர்க்கும் ஞானப் பிரானையல்லாலில்லை நான் கண்ட நல்லதுவே.” திருவிருத்தம். 99),
“கோலமலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ, நீலவரை இரண்டு பிறைகவ்வி நிமிர்ந்ததொப்ப,
கோலவராக மொன்றாய் நிலம் கோட்டிடைக்கொண்ட எந்தாய் ! நீலக்கடல் கடைந்தாய் !
உன்னைப் பெற்று இனிப்போக்குவனோ” -(திருவாய்மொழி 10-10-7);
வருத்தம் – துன்பம் ; வையத்து – பூமியில்; திருத்தம் — ஒழுங்கு.
“திருத்தம் பெரியவர்” -(தேசிகமாலை, அமிருதாசுவாதினி 20.
திருந்திய ஜ்ஞாநம் அநுஷ்டாநம் இவற்றால் பெரிய மஹரிஷிகள்) ; தேவு – தெய்வம், தேவாந்தன்மை.
“தேவிற் சிறந்த திருவள்ளுவர்”- (திருவள்ளுவமாலை 39.); தூப்புல் வாழ் – தூப்புல் மாநகரில் நித்ய வாஸஞ் செய்யும்.

—————

26. எங்கள் குரு.

தேவர் முனிவர்களுஞ் சித்தர்களும் பத்தர்களும்
பூவின் மழை பொழிந்து போற்றியே – தாவி
யுலகளந்த மாலை யுணர்ந்துகக்குந்
தூப்புற் குல குருவே யெங்கள் குரு. (26)

விண்ணுலகத் தேவர்களும், மண்ணுலகத் துறவிகளும், ஞானிகளும், பக்தர்களும் மலர் மழை சிதறிப் போற்றிப்
புகழுமாறு கடந்து உலகைத் தன் காலால் அளந்த திருமாலை, உள்ளத்தால் உணர்ந்து மகிழும் தூப்புல்வந்த
வைணவ குலத்துக் குருவே, எங்களுக்கும் குருவாக விளங்குவார்.

(26) தேவர் – சுரர், விண்ணுலகத்து உள்ளவர், விளங்குபவர்,
“நஞ்சடவெழுதலு நடுங்கி நாண்மதிச், செஞ்சடைக் கடவுளை யடையுந் தேவர் போல்.” – (இராமாவதாரம், பால காண்டம், வேள்விப்படலம் 50.),
“சிவன்றேவர்க்கிறைவன் போல” – (அபிதா, சிவரக. அபுத்திபூருவ. 4);
முனிவர் – மநநசீலர், கடவுளை எப்பொழுதும் தியானஞ் செய்பவர், திரிகால ஞானமுடையவர்; பத்தர் – பக்தர், பாகவதர் ;
தேவர் முனிவர்களும் சித்தர்களும் பத்தர்களும் –
“அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ? அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ”-(திருப்பள்ளியெழுச்சி. 7),
“மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர்”- (திருப்பள்ளியெழுச்சி. 9);
பூவின் மழை பொழிந்து போற்றியே – புஷ்ப வருஷத்தைச் சொரிந்து துதித்து,
“விற்கொண்ட மழைய னான் மேற் பூமழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் போயினாரே.” – (இராமாவதாரம். பாலகாண்டம். தாடகைவதைப் படலம். 76),
“புனித மாதவ ராசியின் பூமழை பொழிந்தார்.” – (இராமாவதாரம். பாலகாண்டம். வேள்விப்படலம் 56);
தாவி – கடந்து; உலகளந்தமால் – திரிவிக்கிரமன்.
இந்த இருபத்தாறாவது பாசுரம் திருவத்திகிரிப் பேரருளாளப் பெருமாள் திருமஞ்சனங் கண்டருளுங் காலத்து
அநுஸந்திக்கப்பெறும் கட்டியத்தில் இன்றும் ஸேவிக்கப் பெறுவதாயின்
இந்நூற்றந்தாதியின் தொன்மையும் பெருமையும் ஆன்றோர்களாற் போற்றி வரப் பெற்றுள்ள பெற்றியும் கூறாமலே விளங்கும்.

————

27. கோப்பு உடையோம்
குருவுங் குலத்தரசுங் குற்றமிலாச் சுற்றந்
தருமமுந் தாய் தகப்ப னாரும் – வரு புனல் சூழ்
தூப்புல் வருந் தூய் மறையோன் றொல்லருளே யென்றிந்தக்
கோப்புடையோம் யாமென்றே கூறு. (27)

(மனமே) ஓடிவருகின்ற ஆற்றுநீர் சூழ்ந்த தூப்புல் நகரில் அவதரித்த, தூய்மையான வேதம் கற்ற தேசிகரே
தமது இயல்பான பழமையைக் கொண்ட திருவருளாலே, ஞான ஒளி காட்டும் குருவாகவும்,
எங்கள் வைணவக் குலத்துக்குத் தலைவராகவும், குற்றம் இல்லாத உறவினராகவும், நல்வழிப்படுத்தும் அறத்தினராகவும்,
பெற்றெடுத்த தாய் தகப்பனாராகவும் அமைந்துள்ளார் என்று சொல்லும்
இந்த உபாயத்தை நாங்கள் உடையோம் என்று உலகினர் அறியக் கூறுவாய்.

(27) குரு – “குருப்யஸ்தத்குருப்யச்ச நமோவாக மதீமஹே, வ்ருணிமஹேச தத்ராத்யெள தம்பதி ஜகதாம்பதீ.”-
(ஸ்ரீகுரு பரம்பராஸாரம், ஆசார்யர்களின் பொருட்டும், அவர்களின் ஆசார்யர்களின் பொருட்டும்,
நம: என்கிற வார்த்தையை அடிக்கடி சொல்லுகிறோம். அந்த ஆசார்யபரம்பரையில் எல்லாவற்றிற்கும்
காரணமாகிய லோகங்களுக்கு சேஷிகளான பிராட்டியும் எம்பெருமானுமாகிய தம்பதிகளை ஆச்ரயிக்கிறோம்.)

“தமிமம் ஸர்வ ஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும்”- (பா. ஸ. 41-21. ஸஹாதேவன் வார்த்தை.
அப்படிப்பட்ட இந்த அக்ரபூஜையை அடைவதற்குத் தகுந்த ஸர்வாகாரங்களினாலும் பூர்ணரான
ப்ரும்ம வித்யையை உபதேசம் செய்தவராயும் தகப்பனாராயும் வேதாத்ய யனம் செய்வித்தவராயும் இருக்கிற),

“மமாப்யகில லோகாநாம் குருர் நாராயணோ குரு:”-(வி.பு.5-1-14.
எல்லா லோகங்களுக்கும் ஆசார்யனாகிய நாராயணன் எனக்கும் ஆசார்யன்),
“த்வமேவ பந்துச்ச குருஸ்த்வமேவ ” (நீரே பந்துவும் நீரே ஆசார்யனும்)
“இவர்கள் தேஹேந்திரியாதி வ்யதிரிக்தனாய் நித்யனாயிருப்பானொரு ஆத்மாவுண்டு.
இச்சேதநா சேதநங்களிரண்டுமொழிய விவற்றுக்கந்தர்யாமியாய் சேஷியா யிருப்பானொரு பரமாத்மாவுண்டு.
இப்பரமாத்மாவையொழிய விவ்வாத்மாவுக்குத் தானும் பிறரும் ரக்ஷகராக மாட்டாரென்ற தத்வத்தையும்,
அநாதிகால மந்தாதியாக ஸம்ஸரித்துப் போந்தவடியேனுக்கு இனியொரு கர்ப்பவாஸாதிக்லேசம் வாராதபடி
திருவடிகளைத் தந்து ரக்ஷித்தருளவேணுமென்று ஆசார்யன் ப்ரஸாதித்த குருபரம்பரா பூர்வக த்வயத்தாலே
ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை சரணமாகப் பற்றி ஆத்மாத்மீயங்களையும் அவற்றைப் பற்றவருஞ் சுமைகளையும்
அங்கே ஸமர்ப்பிப்ப தென்று ஹிதத்தையும், ஸதாசார்யன் காட்டிக்கொடுக்கக் கைக்கொண்ட வெம்பெருமானினி
நம்மை யொருபடிக்குங் கைவிடானென்கிற தேற்றத்தோடே யிங்கிருந்த காலம் அபவர்க்க பூர்வாங்கமான
நிரபராதாநுகூல வ்ருத்தியோடே நடப்பதென்று உத்தரக்ருத்யத்தையும்
ஸங்கிரஹருசிகளுக்குச் சுருங்கவருளிச் செய்வார்கள்.”- (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம். ஆசார்ய க்ருத்யாதிகாரம்),

“தன் குருவின் றாளிணைகள் தன்னிலன் பொன்றில்லாதார்”- (உபதேசரத்தினமாலை. 60),
“மருளாமிருளோட மத்தகத்துத் தன்றாளருளாலே வைத்தவராய், தனக்கு வகுத்த விஷயமான ஆசார்யனுடைய
அங்கிரி யுகளந் தன்னிலே யாய்த்து ப்ரபத்திபண்ண ப்ராப்தம்.”
“அவன் றாளிணையே யுன்னுவதே சாலவுறும் என்றிறே இருப்பது.”
“ஞான மநுட்டான மிவை நன்றகவேயுடைய,னான குருவை யடைந்தக்கால்”-(உபதேசரத்தினமாலை. 61.

அஜ்ஞாந நிவர்த்தகனாய் ஆசாரப்ரவர்த்தகனாயிருக்கிற ஆசாரியனை உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத்” என்கிறபடியே
தனக்கு ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவும் அத்யவஸித்து ஆச்ரயித்தக்கால். அடைந்தக்கால் – கெடுமரக்கலம் கரைசேர்ந்தாற் போலே
அஞ்சினான் புகலிடமான ஆசார்யாபிமாநத்தை அவன் ப்ரஸாதத்தாலே ப்ராபிக்கப் பெற்றால்,
தங்களுக்காகச் சரண வரணம் பண்ணி ரக்ஷிக்குமவனைத் தாங்கள் சரணமாக அடைந்தக்கால் ;

குருவை யடைந்தக்கால் – குருரேவ பரம்ப்ரஹ்மம் என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும்
சொல்லுகிறபடியே குருதரனான குருவை ஆச்ரயித்தக் கால். இப்படி அலப்யலாபமானது லபிக்கப்பெற்றால்,
அந்த ஆச்ரயண ராஜகுல மாஹாத்ம்யத்தாலே ஸ்ரீய:பதியானவன், ஸ்வப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்கும்.) ;
தாய் – அண்ணன் றேவி, ஊட்டுந்தாய், குருவின்றேவி, செவிலித்தாய், தன்றேவியை யீன்றாள், நற்றாய், பாராட்டுந்தாய்;
தாயின் சகோதரிக்கும் பெயர் கூறுவர்; புனல் – நீர்; தொல் – பழமை ;
தூய்மறை – “தொல் வகை காட்டுந் துணிந்ததூ மறையே”- (தேசிகமாலை. மும்மணிக்கோவை. 4),
“தூமறையி னுள்ளம்.”- (௸. ௸. 5.); கோப்பு – பலதிறப்பட்ட பாங்கு.

—————-

27. கோப்பு உடையோம்
குருவுங் குலத்தரசுங் குற்றமிலாச் சுற்றந்
தருமமுந் தாய் தகப்ப னாரும் – வரு புனல் சூழ்
தூப்புல் வருந் தூய் மறையோன் றொல்லருளே யென்றிந்தக்
கோப்புடையோம் யாமென்றே கூறு. (27)

(மனமே) ஓடிவருகின்ற ஆற்றுநீர் சூழ்ந்த தூப்புல் நகரில் அவதரித்த, தூய்மையான வேதம் கற்ற தேசிகரே
தமது இயல்பான பழமையைக் கொண்ட திருவருளாலே, ஞான ஒளி காட்டும் குருவாகவும்,
எங்கள் வைணவக் குலத்துக்குத் தலைவராகவும், குற்றம் இல்லாத உறவினராகவும்,
நல்வழிப்படுத்தும் அறத்தினராகவும், பெற்றெடுத்த தாய் தகப்பனாராகவும் அமைந்துள்ளார் என்று
சொல்லும் இந்த உபாயத்தை நாங்கள் உடையோம் என்று உலகினர் அறியக் கூறுவாய்.

(27) குரு – “குருப்யஸ்தத்குருப்யச்ச நமோவாக மதீமஹே, வ்ருணிமஹேச தத்ராத்யெள தம்பதி ஜகதாம்பதீ.”-
(ஸ்ரீகுரு பரம்பராஸாரம், ஆசார்யர்களின் பொருட்டும், அவர்களின் ஆசார்யர்களின் பொருட்டும்,
நம: என்கிற வார்த்தையை அடிக்கடி சொல்லுகிறோம். அந்த ஆசார்யபரம்பரையில் எல்லாவற்றிற்கும் காரணமாகிய
லோகங்களுக்கு சேஷிகளான பிராட்டியும் எம்பெருமானுமாகிய தம்பதிகளை ஆச்ரயிக்கிறோம்.)

“தமிமம் ஸர்வ ஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும்”- (பா. ஸ. 41-21. ஸஹாதேவன் வார்த்தை.
அப்படிப்பட்ட இந்த அக்ரபூஜையை அடைவதற்குத் தகுந்த ஸர்வாகாரங்களினாலும் பூர்ணரான ப்ரும்ம வித்யையை
உபதேசம் செய்தவராயும் தகப்பனாராயும் வேதாத்ய யனம் செய்வித்தவராயும் இருக்கிற),
“மமாப்யகில லோகாநாம் குருர் நாராயணோ குரு:”-(வி.பு.5-1-14.
எல்லா லோகங்களுக்கும் ஆசார்யனாகிய நாராயணன் எனக்கும் ஆசார்யன்),
“த்வமேவ பந்துச்ச குருஸ்த்வமேவ ” (நீரே பந்துவும் நீரே ஆசார்யனும்)

“இவர்கள் தேஹேந்திரியாதி வ்யதிரிக்தனாய் நித்யனாயிருப்பானொரு ஆத்மாவுண்டு.
இச்சேதநா சேதநங்களிரண்டுமொழிய விவற்றுக்கந்தர்யாமியாய் சேஷியா யிருப்பானொரு பரமாத்மாவுண்டு.
இப்பரமாத்மாவையொழிய விவ்வாத்மாவுக்குத் தானும் பிறரும் ரக்ஷகராக மாட்டாரென்ற தத்வத்தையும்,
அநாதிகால மந்தாதியாக ஸம்ஸரித்துப் போந்தவடியேனுக்கு இனியொரு கர்ப்பவாஸாதிக்லேசம் வாராதபடி
திருவடிகளைத் தந்து ரக்ஷித்தருளவேணுமென்று ஆசார்யன் ப்ரஸாதித்த குருபரம்பரா பூர்வக த்வயத்தாலே
ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை சரணமாகப் பற்றி ஆத்மாத்மீயங்களையும் அவற்றைப் பற்றவருஞ் சுமைகளையும்
அங்கே ஸமர்ப்பிப்ப தென்று ஹிதத்தையும், ஸதாசார்யன் காட்டிக்கொடுக்கக் கைக்கொண்ட வெம்பெருமானினி
நம்மை யொருபடிக்குங் கைவிடானென்கிற தேற்றத்தோடே யிங்கிருந்த காலம் அபவர்க்க பூர்வாங்கமான நிரபராதாநுகூல
வ்ருத்தியோடே நடப்பதென்று உத்தரக்ருத்யத்தையும் ஸங்கிரஹருசிகளுக்குச் சுருங்கவருளிச் செய்வார்கள்.”-
(ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம். ஆசார்ய க்ருத்யாதிகாரம்),

“தன் குருவின் றாளிணைகள் தன்னிலன் பொன்றில்லாதார்”- (உபதேசரத்தினமாலை. 60),
“மருளாமிருளோட மத்தகத்துத் தன்றாளருளாலே வைத்தவராய், தனக்கு வகுத்த விஷயமான
ஆசார்யனுடைய அங்கிரி யுகளந் தன்னிலே யாய்த்து ப்ரபத்திபண்ண ப்ராப்தம்.”
“அவன் றாளிணையே யுன்னுவதே சாலவுறும் என்றிறே இருப்பது.”
“ஞான மநுட்டான மிவை நன்றகவேயுடைய,னான குருவை யடைந்தக்கால்”-(உபதேசரத்தினமாலை. 61.

அஜ்ஞாந நிவர்த்தகனாய் ஆசாரப்ரவர்த்தகனாயிருக்கிற ஆசாரியனை உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத்” என்கிறபடியே
தனக்கு ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவும் அத்யவஸித்து ஆச்ரயித்தக்கால். அடைந்தக்கால் –
கெடுமரக்கலம் கரைசேர்ந்தாற் போலே அஞ்சினான் புகலிடமான ஆசார்யாபிமாநத்தை அவன் ப்ரஸாதத்தாலே ப்ராபிக்கப் பெற்றால்,
தங்களுக்காகச் சரண வரணம் பண்ணி ரக்ஷிக்குமவனைத் தாங்கள் சரணமாக அடைந்தக்கால் ;
குருவை யடைந்தக்கால் – குருரேவ பரம்ப்ரஹ்மம் என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும்
சொல்லுகிறபடியே குருதரனான குருவை ஆச்ரயித்தக் கால்.
இப்படி அலப்யலாபமானது லபிக்கப்பெற்றால், அந்த ஆச்ரயண ராஜகுல மாஹாத்ம்யத்தாலே ஸ்ரீய:பதியானவன்,
ஸ்வப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்கும்.) ;

தாய் – அண்ணன் றேவி, ஊட்டுந்தாய், குருவின்றேவி, செவிலித்தாய், தன்றேவியை யீன்றாள், நற்றாய், பாராட்டுந்தாய்;
தாயின் சகோதரிக்கும் பெயர் கூறுவர்; புனல் – நீர்; தொல் – பழமை ;
தூய்மறை – “தொல் வகை காட்டுந் துணிந்ததூ மறையே”- (தேசிகமாலை. மும்மணிக்கோவை. 4),
“தூமறையி னுள்ளம்.”- (௸. ௸. 5.); கோப்பு – பலதிறப்பட்ட பாங்கு.

—————

28. மூப்பு வரு முன்னமே பற்று.

கூறி முடியாக் குணத்தனை நன் னெஞ்சமே
நாறு துழாயானை நண்ணுமோர் – வீறுடைய
தூப்புலனந் தாரியனார் தொல் புகழ் சேர் மைந்தனை நீ
மூப்புவரு முன்னமே பற்று. _(28)

நல்ல மனமே! நீ, நமக்கு முதுமைக் காலம் வருவதற்கு முன்னதாகவே, மணம் வீசும் திருத்துழாய் மாலையணிந்த
நாராயணனை அடைந்த, வேறு ஒன்றுக்கும் இல்லாத சிறப்பினை உடைய, ஒரு தூப்புல் நகரில் வாழ்ந்த
அனந்தசூரி என்ற திருநாமத்தினருடைய பழைய புகழ் சேர்ந்த திருக்குமாரனும், சொல்லி முடியாத
அளவற்ற உயர்ந்த குணங்களை உடையவனுமாகிய சுவாமி தேசிகனைப் பற்றிக் கொள்.

(28) கூறிமுடியாக்குணத்தன் — எண்பெருக்கந்நலத்தினன், “ திசையனைத்தும், ஏறும்குணன்” (இராமாநுச நூற்றந்தாதி. 46)
“ஏரார்குணத்தெம்மிராமாநுசன்.” -௸. 74); நாறுதுழாயான் – “நாற்றத்துழாய்முடி நாராயணன்”- (திருப்பாவை. 10.)
“எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார்ப், புரிமலர்த் துழாஅய் மேவன் மார்பினோய்” – (பரிபாடல் 13, 59-60.
“நிறத்தால் எரியை யொத்த வெட்சிமலரை யிடையிட்டுக் கட்டின புரிமலர் நறுந்தார்த்துழாயை மேவலையுடைய மார்பினோய்.”),

“நக்கலர் துழாஅய் நாறினர்க் கண்ணியை.” -(பரிபாடல். 4, 53.
* பிணிவிட்டலர்ந்த துழாயது நாறிணராற் றொடுத்த கண்ணியையுடையை.”),
“நாறிணர்த் துழாயோ னல்கி னல்லதை, ஏறுத லெளிதோ வீறுபெறு துறக்கம், அரிதிற் பெறுதுறக்க மாலிருங் குன்றம்,
எளிதிற் பெறலுரிமை யேத்துகஞ் சிலம்ப” – (பரிபாடல். 15. 15-18.

துழாய் மாலையை யுடைய திருமால் அருள் புரிந்தாலல்லாமல் துறக்கம் அடைதல் எளியதாகுமோ ?
அரிதிற் பெறுந்துறக்கத்தை எளிதிற்பெறச் செய்வதனால் திருமாலிருஞ்சோலை மலையை ஏத்தக்கடவேம்);

நண்ணும் – நெருங்கும், அடையும், பொருந்தும், எதிர்ப்படும், சேரும் ; விறு – உயர்ச்சி,
சிறப்பு பெருமை, பொலிவு, வெற்றி, வேறொன்றற்கில்லாவழகு,
“அகிற், சேற ணிந்த முலைத்திரு மங்கைதன் வீற ணிந்தவன்.” – (இராமாவதாரம். பால காண்டம். ஆற்றுப்படலம், 2);

தூப்புல் அநந்தாரியனார் தொல்புகழ் சேர்மைந்தன் – “வேங்கடேச கண்டாம்சரான இவர் கலி 4370-க்கு மேல்
சுக்ல ௵ புரட்டாசிமீ ஞாயிற்றுக் கிழமை திருவோண நக்ஷத்திரம் சுக்ல ஏகாதசியில் ஸ்ரீ காஞ்சியில்
அநந்தசூரிகளுக்குத் தோதாரம்மன் திருவயிற்றில் பன்னிரண்டு வருஷம் இருந்து அவதரித்தவர்.
இவரைப் புதன்கிழமையில் அவதரித்தவர் என்று சிலர் கூறுவர்.” – (அபிதாநசிந்தாமணி);

“பிதா யஸ்யாநந்தஸூரி: புண்டரீகாக்ஷயஜ்வந: பெளத்ரோ யஸ்தநய ஸ்தோதாரம்பாயாஸ்தஸ்ய மங்கலம்.”-
(ஸ்ரீநயினாராசார்யர் அருளிச்செய்த வேதாந்த தேசிகமங்களம். 3.
அநந்தஸூரி என்கிற ஸ்வாமிக்கும் தோதாரம்மை யென்கிற தத்திவ்ய மஹிஷிக்கும் திருக்குமாரராயும்
புண்டரீகாக்ஷ ஸோமயாஜிகளுக்குத் திருப்பேரனாராயும் திருவவதரித்தருளின ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன் வாழ்க,
யதிராஜ மாஹாநஸிகரான கிடாம்பியாச்சானுடைய ப்ரபெளத்ரியாய், ராமாநுஜாசார்யர் என்பவருடைய பெளத்ரியாய்,
ஸ்ரீரங்கராஜப் பிள்ளான் என்கிற பத்மநாபாசார்யருடைய புத்ரியாய், வாதிஹம்ஸாம்புவாஹாசார்யர் என்கிற
கிடாம்பியப் புள்ளாருடைய ஸஹோதரியுமான மங்கை தோதாரம்மை);
மைந்தனை – திருமகனை ; மூப்பு – முதுமை முன்னம் – முன்பே ; பற்று – பிடி அநந்தாரியர் – அநந்த சூரிகள்,
“புண்டரீகாக்ஷயஜ்வாவின் குமரர். தோதாரம்மன் புருஷர். திருவேங்கடமுடையான் கட்டளைப்படி
திருவேங்கடஞ் சென்றிருக்கையில் சுவப்பனத்தில் திருவேங்கடமுடையான் பிராமணப் பிள்ளைபோல் வந்து
திருமணி தர அதனை வாங்கி மனைவியிடந் தந்து அதனால் வேதாந்த தேசிகரைப் பெற்றவர். — (அபிதான சிந்தாமணி)

—————

29. முத்தி அருளும்.

பற்றி யடி யிணையைப் பாவித்து நல் வடிவைச்
சுற்றிக் குணங்களையே சொல்லிப் – பத்தியுடன்
நிற்றியே நீ மனமே நீள் வயல் சூழ் தூப்புலிறை
முத்தி யருளு முயன்று. (29)

மனமே! நீ, பெரிய வயல்கள் சூழ்ந்துள்ள தூப்புல் நகர்த் தெய்வமாகிய தேசிகரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டும்,
அவரது திரு உருவை மனத்தால் தியானித்துக் கொண்டும், அவரது திருக்குணங்களையே, ஓயாது சொல்லிக் கொண்டும்,
பக்தியோடு வருந்தி, நிலையாக நிற்பாயேயானால், அந்த ஆசாரியப் பெருமான் நமக்குப் பரமபதத்தை அருளுவார்.

(29) பாவித்து– தியாநித்து, அநுஸந்தித்து; நல்வடிவு – திவ்யதிருமேனி,
‘ வடிவழ கார்ந்த வண் துப்புல்வள்ளல்’ – (பிள்ளையந்தாதி. 20), திருமேனி வருணனை – வெண்பா –
’வேண்டுவீ ரன்புபெறு வீரேப வக்கடலைத், தாண்டுவீர் ஞானத் தனிவிளக்கைத்-
தூண்டுவீர், தானிவர்ண னையுரைக்குஞ் சாந்த வேதாந்தகுரு, மேனிவர்ணனையுரைக்கவே.
தரு – இராகம் – முகாரி தாளம் சாப்பு – கண்ணிகள்.
(1) கதிர்வீசு மிரவிபோற் காந்தி சேருந்திவ்ய கள விக்கிரக வேதாந்ததேசிகரே,
புதுமலர்ச்சியாகிய செந்தாமரை மலரைப் போன்ற பொன்னடியுள்ள – தேசிகரே.
(2) களங்கமில்லாமல் மனோகரங்களாகிய திருக்கணைக்கால்களு மிலங்குந் – தேசிகரே,
விளங்கி நிற்கிற நல்ல முழந்தாளுடைய திருவேங்கடநாதார்ய – தேசிகரே.
(3) திருவரையுமதிற் சார்த்தின திருப்பரிவட்டச் சேர்த்தியாலும் விளங்குந் – தேசிகரே,
திருநாபிக்கமலமுந் திருவுத்தரியச் சேர்வும் சிறந்து விளங்குமெங்கள் – தேசிகரே.
(4) மருவுமுந்நூலுந் திருமணிவடத்துடன் கூடும் மார்பினணிதுலங்குந் – தேசிகரே,
திருவாழி திருச்சங்குந்திகழ் புஜங்களுடனே செழிப்பான நிகமாந்த – தேசிகரே.
(5) பவித்ரங்களையணிந்த பங்கஜகர தீர்க்க பாணியுகம் பொருந்துந் -தேசிகரே,
குவித்தே திருமந்திரமுங் கெண்டதுவய முச்சரிக் குந்திருப்பவளவாய்த் – தேசிகரே,
(6) கிருபைக்குள்ளாய்க் கடாக்ஷிக்கிற திருக்கண்களென்றே கீர்த்திக்கவே வளருந் – தேசிகரே,
உருகித் தற்காலங்கண்டு சார்த்தின பனிரண்டு ஊர்த்துவ புண்ட்ரங்களேற்குந் – தேசிகரே.
(7) மண்டலந்தனிற் புகழ்கொண்ட கண்டாவதாரர் மவுலிமூடத் துலங்குந் – தேசிகரே,
தொண்டர்கள் மனத்தன்பு கொண்டிடுஞ் சர்வதந்திர சுவந்தராரியரெங்கள் – தேசிகரே. கட்டளைக்கலித் துறை.

வடத்தேறு கண்டுயில் கொண்டான் மடுவின் மணியரவின் படத்தேறு தாண்மிதித்தாடியங் கோவியர் பாரமுலைக்
குடத்தேறு மார்பர்தங் கண்டாவதாரரைக் கூப்புகையர், கடத்தேறுவார்கள் கவிவாதிசிங்கவரைக் கண்டவரே.” –
(ஸ்ரீமத் வேதாந்த தேசிகவைபவப்பிரகாசிகைக் கீர்த்தனை);

நிற்றியேல் – நிலை நிற்பாயாகில் முயன்று – வருந்தி; முத்தி – “இது சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என நான்கு.
இவற்றுள் முதற்கூறிய மூன்றும் பதமுத்தி, மற்றது உண்மை முத்தி. இவற்றுள் சாலோகம் அவ்வுலகமடைந்து நித்தியசுகம் அநுபவித்தல்.
சாமீபம் இறைவனுக்கு அருகிலிருந்து சேவித் திருத்தல். சாரூபம் அவனது உருவத்தையடைந்து ஆநந்த மடைதல்.
சாயுச்சியம் அவ்விறைவனுடன் கலந்துங் கலவாமலும் பரமானந்தமனுபவித்தல்.
இவற்றை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானத்தில் முதிர்ச்சிபெற்றவர் அடைவர்” -(அபிதான சிந்தாமணி),
மோக்ஷம். “முத்திக்கு அருள்சூட” – (தேசிக மாலை. அமிருதரஞ்சனி 3.)
மோக்ஷத்திற்குக் காரணமான பகவானுடைய கிருபையைப் பெறுவதற்கு)
“பத்தருக்கு நிஷித்தகாம்ய கர்த்ருத்வம் ஸம்ஸாரஹேது. தத்வஞ்ஞாநமூல நிவ்ருத்தி தர்மகர்த்ருத்வம் மோக்ஷஹேது.
பத்தன் முன்பு பண்ணின பந்தங்களுக்கெல்லாம் தன்னதிகாராநுகுணமாக ப்ரபத்யாதி ப்ராயச்சித்தம் பண்ணி,
மேலபராதம் பண்ணாதே ப்ராப்தகர்மத்தையும் ஒருவழியாலே கழித்து முக்தனாம்.” – (தத்வ பதவி),
“முத்திதரும், மூல மறையின் முடிசேர் முகில்வண்ணன்” – (தேசிகமாலை, அமிருதரஞ்சனி. 7),
“முத்தி வழி தந்தார்” – (தேசிகமாலை. அமிருதரஞ்சனி. 9), “முத்திதரு மெதிராசர் பொன்னடி.” – (தேசிகமாலை, பிரபந்தசாரம். 16).

————–

30. பயம் போகும்.

முயன்று முகுந்தன் மலரடிமே லன்பால்
பயந்துறந்தார் பார்த்திருக்க முன்னம் – உயர்ந்த
துணிவான் மணிமாடத் தூப்புல்வந்த சோதி
பணிவோம்யாம் போமே பயம். (30)

நாங்கள் உயரமும், ஒளியும், சிறப்பும், அழகும் கொண்ட மாளிகைகள் நிறைந்த தூப்புல் நகரில் அவதரித்த
ஒளியாகிய வேதாந்த தேசிகரை வணங்குவோம். (அதனால்) நாராயணனது தாமரை மலர்போன்ற திருவடிகளில்,
அன்பால் முயற்சி செய்து, தமது அச்சத்தைத் துறந்த ஞானிகள் பார்த்துக் கொண்டிருக்க
வணங்குவதற்கு முன்னமே, எங்களது அச்சம் போய்விடும்.

30) முகுந்தன் – விட்டுணு. “முகுந்தன் வாசகங் கேட்பதன் முன்னமே” – (பாரத படையெழுச்சி. 2)
துணிவு – ஆண்மை, தெளிவு, நிச்சயம், மறங்கலங்காமை; சோதி – தேஜஸ்வி.
“திருமழிசை வந்த சோதி”. – (தேசிகமாலை, அதிகார சங்கிரகம். 1.)
பணிவோம் – வணங்குவோம். பயம் – அச்சம்; போம் – போகும்.

—————-

31. சிந்தித்தலின் நன்மைகள்.

பயமாயினமாயும் பாவங்கள் வீயுஞ்
சயமனத்துந் தாமே கை கூடும் – துயரொன்றும்
வாராது வண்மையால் வாதி சிங்க மிங்குதித்த
சீரொன்று சிந்திப்பரேல் (31).

தமது வள்ளல் தன்மையால் இம்மண்ணுலகத்தில் வந்து அவதரித்த கவிவாதி சிங்கமாகிய வேதாந்த தேசிகரது
சிறந்த உபதேச மொழிகளில் ஏதேனும் ஒன்றை மனத்தில் வைத்துச் சிந்திப்பார்களேயானால்,
அவரது அச்சம் அனைத்தும் அகலும். அவர் அறியாது செய்த பாபங்கள் எல்லாம் அழிந்துவிடும்.
அவருக்குக் கிடைக்க வேண்டிய வெற்றிகள் அனைத்தும், எந்தவித முயற்சியும் இன்றி,
தாமாகவே வந்து சேரும். துன்பம் எதுவும் வராது.

31) மாயும் – அழியும்; பாவம் – அக்கிரமம், விலக்கப்பட்ட தீவினை வடிவமாய்த் துக்க சாதனமாயிருப்பது;
வீயும் – கெடும்; துயர் – கிலேசம், துன்பம்.

————-

32. உள்ளத்து உறையும்.

சிந்தித்து வாதி சிங்கத் தேசிகர் தம் வடிவை
வந்தித்தவர் மலர்ப் பாதத்தை -புந்தியில் வைத்
துள்ளுவர ருள்ளத் துறையுமே யும்பர் கோன்
தெள்ளியார் சிந்திக்குந் தேசு. (32)

தேவர்கள் தலைவனாகிய இந்திரனும், ஞானிகளும், மனத்தில் வைத்து தியானிக்கும் திருமால்,
கவிவாதி சிங்கமாகிய தேசிகரது திருவடிவைத் தியானித்து அவரது மலர் போன்ற திருவடிகளை வணங்கி
மனத்தில் வைத்து நினைத்துக் கொண்டிருப்பவர்களது நெஞ்சில் நிலையாக வந்து தங்கிக் கொள்வார்.

(32) வந்தித்து – வணங்கி, வழிபாடு செய்து; புந்தி – மனம், புத்தி, அறிவு; தெள்ளியார் – அறிவுடையார்,
“திருவேறு தெள்ளியராதலும் வேறு” (திருக்குறள், ஊழ். 4. ஆதலாற் செல்வமுடையவராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு.)
“உள்ளுவார் உள்ளத் துறையுமேயும்பர்கோன், தெள்ளியார் உள்ளுவாருள்ளத்து உளன் கண்டாய்” – (மூன்றாம் திருவந்தாதி 40),
“உள்ளுதலுள்ளி யுரைத்த லுரைத்ததனைத் தெள்ளுத லன்றே செயற்பால” – (திருவள்ளுவமாலை 17.
ஆதலால், நாம் இந்நூலைக் குறித்துச் செயக்கடவன நாம் இதன் பொருளைச் சிந்தித்துக் கொள்ளுதலும்,
சிந்தித்துப் பிறருக்கு அதனைச் சொல்லுதலும், பிறராலே சொல்லப்பட்ட அதனைத் தெளிதலும் அன்றே.
உள்ளுதல் எனவே கேட்டலும், தெளிதலெனவே அவ்வாறொழுகலும் அடங்கின.)
“தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார், வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்” – (தையொருதிங்கட்பாமாலை. 4-1.)
தேசு – ஞானம், பெருமை.

————–

33. கண் காணக் கருதும்

தேசுடைய வாழியுஞ் சங்கமுங் கையேந்தி
வாச மலர்த் துழாய் வாழ் மார்பன் – காசினியிற்
காண நின் றாலுங் கவி வாதி சிங்கனையே
காணக் கருதுமென் கண். (33)

ஒளியை உடைய சக்கராயுதத்தையும், வலம்புரிச் சங்கத்தையும் கையில் ஏந்தியுள்ள மணமான மலர்த்துழாய்
தங்கிய திருமார்பினனாகிய நாராயணன், இந்த மண்ணுலகத்தில் யாவரும் பார்க்குமாறு நின்றாலும்,
எனது கண், கவிவாதி சிங்கமாகிய வேதாந்த தேசிகரையே கண்டு மகிழ்வதற்கு ஆசைப்படும்.

(33) வாசம் –வாசனை; காசினி – பூமி. “காசினிமேல் வாதியரை வென்ற ரங்கர் கதியாக
வாழ்ந்தருளு மெதிரா சா” – (தேசிகமாலை, பிரபந்தசாரம் 14)
“கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும் உன்தன்,
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்” (இராமாநுச நூற்றந்தாதி 104);
கருதும் – ஆசைப்படும். “கண்கருதிடுங்காண” – (இராமாநுச நூற்றந்தாதி 102)

————–

34-காட்சியும் கேள்வியும்
கண் ணவரையே காணும் காதவர் சீரே கேட்கும்
எண்ண மவர் தொல் புகழே யெண்ணும் – திண்ணம்
கவி வாதி சிங்கக் கடவுளையே நண்ணி
அவியாத காதலடைந்து. (34)

கவிவாதி சிங்கம் என்று போற்றப்படுகிற தெய்வமாகிய தேசிகரையே சேர்ந்து தணியாத பக்தியுடன் கலந்து,
எனது கண் அந்த ஆசாரியரது திருவுருவத்தையே கண்டுகொண்டிருக்கும்.
எனது செவி அவரது சிறப்பையே கேட்டுக்கொண்டிருக்கும்.
மனம் பழமையான புகழையே நினைத்துக் கொண்டிருக்கும். இது எனது உறுதியாகும்.

(34) கண்ணவரையே ………… எண்ணும் — “வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி …….
தொல்லைமால்தன்னை, வழாவண் கைகூப்பி மதித்து.” (நான்முகன் திருவந்தாதி. 11); காதல் – பக்தி.

—————

35-வாழ்க்கை
அடைந்து மட நெஞ்சே யன்பா லவனைக்
கிடந்து மலரடியின் கீழே – தொடர்ந்தென்றும்
தூய மலர்ச் சோலை சூழ் தூப்புனகர் வந்துதித்த
மாயவனையே வணங்கி வாழ். (35)

இளமைத் தன்மை வாய்ந்த மனமே! தூய்மையான மலர்களைக் கொண்ட சோலைகள் சுற்றியுள்ள
தூப்புல் நகரில் வந்து அவதரித்த வேதாந்த தேசிகரையே எல்லாக் காலமும் தொடர்ந்து சென்று,
அன்பால் ஆசாரியரைச் சேர்ந்தும், அவரது மலர் போன்ற திருவடிகளின்கீழ் அசையாமல் கிடந்தும்,
அவரையே வணங்கி வழிபாடு செய்தும் வாழ்வாய். அதுதான் சிறந்த வாழ்க்கையாகும்.

(35) அன்பாலவனை – “அன்பு ஆழியானை அணுகென்னும் நா அவன்தன், பண்பாழித்தோள் பரவியேத் தென்னும் –
முன்பூழி, காணானைக் காணென்னும் கண் செவிகேளென்னும், பூணாரம் பூண்டான் புகழ்.” (முதல் திருவந்தாதி 72);
அடைந்து மடநெஞ்சே யன்பாலவனை – “என்றும் விடலாழி நெஞ்சமே!
வேண்டினேன் கண்டாய், அடலாழி கொண்டான் மாட்டு அன்பு.” – (முதல் திருவந்தாதி .71);
மாயவன் – “மாயவனுந்தம்முனும்” – (திணைமாலை நூற்றைம்பது 58)

—————–

36-காழ்ச்சி
வாழ்ச்சி யிது நெஞ்சே வாதி சிங்கத் தேசிகர் தம்
காழ்ச்சி யுணக் குண்டா மேற்கன்மந் – தாழ்ச்சி யொன்றும்
சாரா வகை தீருஞ் சன்மதி துயர் தொலையும்
சீரார் சிரீதரனைச் சேர்ந்து. (36)

மனமே! உனக்கு, வாதி சிங்கமாகிய தேசிகரிடத்து வைராக்கியம் (உறுதி) ஏற்படுமானால்,
நாம் செய்த தீய கர்மாக்கள் அனைத்தும் தவறு எதுவும் சேராவகையில் நீங்கிவிடும்.
பிறவியாகிய துன்பமும் அழிந்துவிடும். இது சிறப்புமிக்க திருமகள்வாழ் மார்பினனாகிய நாராயணனை அடைந்த வாழ்க்கையாகும்.

(36) வாழ்ச்சி – வாழ்நாள் ; இது நெஞ்சே – “வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சும்.” – (தேவார. திருநாவுக். தனித் திருத். 7);
காழ்ச்சி – வன்மை; தாழ்ச்சி – தவறு, தாழ்வு நீட்டிப்பு; சிரீதரன் – லக்ஷ்மியைத் திருமார்பில் தரிப்பவன். “617.
ஸ்ரீதர: – மணிக்கு ஒளிபோலவும், மலருக்கு மணம் போலவும், மதிக்கு நிலவு போலவும், அமுதத்துக்குச் சுவை போலவும்
இயற்கையாகவுள்ள ஸம்பந்தத்தினால் எப்பொழுதும் லக்ஷ்மியைச் சேர்ந்திருப்பவர்.
“யோக்யனாயிருப்பவன் கீர்த்தியை எப்படி விடமுடியாதோ அப்படித்தான் இந்தப் பிராட்டியை விட முடியாது”
(நஹிஹாதுமியம் சக்யா கீர்த்தி ராத்மவதோயதா) என்பது ஸ்ரீமத் ராமாயணம்.” – (ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம்.)

—————

37) வாழ்த்து
சேரும் புகழோன் றிருவத்தியூர் வரதன்
காரொத்த வண்ணம் கழலிணையைத் – தார் மன்னுஞ்
சென்னியில் வைத்தென்றுஞ் சிறக்கு மணி தூப்புல் :
மன்னனை யென் னெஞ்சமே வாழ்த்து. (37)

எனது மனமே! திருஅத்தி ஊர் என்று சொல்லப்படுகிற காஞ்சிபுரத்தை அடைந்த பெரும் புகழுடையவனும்
கேட்டார்க்குக் கேட்ட வரங்களைத் தருபவனும், மேகத்தை ஒத்த நீல நிறத்தை உடையவனுமாகிய
நாராயணனது திருவடிகளை எல்லாக் காலத்திலும், தமது, மாலை நிறைந்த
தூப்புல் நகர் அரசனான தேசிகனை தேசிகனை வாயார வாழ்த்துவாய்.

(37) திருவத்தியூர் வரதன் – “உலகேத்தும் ஆழியான் அத்தியூரான்” – (இரண்டாந்திருவந்தாதி 95),
“அத்தியூரான் புள்ளையூர் வான்” – (இரண்டாந்திருவந்தாதி. 96),
“அத்திகிரி, யிடமுடைய வருளாளர்.” – (தேசிகமாலை, அடைக்கலப் பத்து. 2);
“சீர்அத்திகிரித்திருமால்” – (தேசிகமாலை. அருத்த பஞ்சகம். 3); “திருமால் திருவத்தி நகரானே” – (௸ ௸. 6)
வரதன் கழலிணையை…. மன்னன்– “உத்தரவேதியுள் வந்துதித்த செய்யவண் மேவிய சீரருளாளரைச்
சிந்தை செய்யும் மெய்யவன் எந்தை தூப்புற்பிள்ளை” – (பிள்ளையந்தாதி. 4).

————-

(38) நல்வினை
வாழ்த்திக் கவிவாதி சிங்கன் மலரடியைத்
தாழ்த்தித் தலையை யதன் கீழே – சூழ்த்தென்றும்
தொல் புகழே சிந்திப்பார் சூழ் வினையை மாற்றுவரே
நல்வினையா.நானிலத்தி லீது. (38)

கவிவாதி சிங்கம் என்று பலராலும் போற்றப்படுகின்ற தேசிகரது தாமரை மலர் போன்ற திருவடியை
வாயார வாழ்த்தியும் அந்தத் திருவடியின் கீழே தலையைத் தாழ்த்தியும், எல்லாக் காலத்தும்
அவரை வலம் செய்தும் பழைமையான புகழையே சிந்தித்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் பக்தர்கள்,
தீவினையை இல்லாதபடி மாற்றிவிடுவார்கள். இதுவே, இந்த உலகத்தில் ஆசாரிய அடியார்கள் பெறும் நல்வினையாகும்.

(38) நானிலம் – நால்வகை நிலம்; அவை: குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தலென்பன.
இப் பகுப்புப் பற்றிப் பூமிக்கு நானிலம் எனப்பெயர் கூறுவர் ; ஈது – இது.

—————

(39) உபாயம்

ஈதே யுயிர்க்கிதமு மெத்தவமும் மெப்பொருளும்
ஈதே பேரின்ப மிகு வீடும் — தீதறு சீர்த்
தூப்புனகர் வந்துதித்த தொல் புகழ் சேராரியன் பேர்
கோப்புடனே கூறுவதா முற்று. (39)

குற்றம் இல்லாத சிறப்பினை உடைய தூப்புல் நகரில் வந்து தோன்றிய பழம் புகழ் நிறைந்த ஆசாரியன்
திருப்பெயரை உபாயமாகக் கொண்டு, அந்த ஆசாரியனோடு பொருந்தி நின்று கூறுவது.
இதுவே, உயிர்க்கு நன்மையும் எவ்வகையான தவமும், எல்லா விதமான பொருளுமாகும்.
பேரின்பம் மிக்க பரமபதமும் இதுவேயாகும்.

(39) இதம் – ஹிதம், மோக்ஷத்திற்கு ஸாதநமாக அநுட்டிக்கப் பெறும் உபாயம் ;
பேரின்பமிகுவீடு – அந்தமில் பேரின்பமளிக்கும் மோக்ஷம்.

——————

(40) நண்ணுவார்.

உற்று நின் சேவடியை யுய்வதோர் காரணத்தால்
பற்றொன்று மின்றிப் பவக் கடலின் – தொத்தறுப்பார்
வேத முடித் தேசிகனே வேத விழுப் பொருளாம்
மாதவனை நண்ணுவரே மன். (40)

வேதங்களை உன் திருமுடியில் ஏற்றிக்கொண்ட ஆசாரியப் பெருமானே! பிழைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினால் ,
உனது செம்மையான திருவடிகளைச் சேர்ந்து ஒருவிதமான உலகப் பற்றும் இல்லாமல் பிறவியாகிய கடலின்
தொடர்பினை நீக்கியவர், வேதங்களின் விழுப்பொருளாக விளங்கும் மாதவனாகிய நாராயணனை அடைவார்கள். இஃது உறுதி.

(40) உற்று – அடைந்து, பொருந்தி; சேவடி – சிவந்த திருப்பாதம்; உய்வது – உஜ்ஜீவிப்பது;
பற்று – ஆசை, கதி, உரிமை, உபாயம்; பவக்கடல் – ஸம்ஸாரஸாகரம், பிறவிப் பெருங்கடல்;
தொத்து – ஸம்பந்தம், தொடர்ச்சி, சார்பு; விழுப்பொருள் – சிறந்தநுண்பொருள்;
வேதவிழுப் பொருளாம் மாதவன் – “வேதாந்தவிழுப்பொருளில் மேலிருந்தவிளக்கை.” – (பெரியாழ்வார் திருமொழி 4-3-11);
மாதவன் – திருமால், 73. ஸ்ரீதேவியின்கணவர். திருமகள் தம்மைவிட்டு என்றும் அகலாமல் இருக்கப்பெற்றவர்.
ஞானம், சக்தி, பலம் ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்களும் சேர்ந்து உருவெடுத்திருப்பவளும்,
பகவானுடைய எல்லாச்சக்திகளுக்கும் தலைமையாக உலகங்களை நடத்தும் பராசக்தியும்,
பகவானுடைய மற்றச்சக்திகளை நடத்திக்கொண்டு சராசரங்கள் அடங்கிய உலகமனைத்தையும் வ்யாபித்திருப்பதனால்
அனந்தையென்று சொல்லப் படுகிறவளும், தயாமூர்த்தியுமாகிய திருமகளுக்கும் ஸ்வாமி யென்பது. 169.
“மா” எனப்படும் பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர் ; மெளனம், த்யானம், யோகம் இம்மூன்றும் பொருந்தினவர். 741,
லக்ஷ்மிக்குக்கணவர். உலகங்களுக்கு லக்ஷ்மி தாயும் தாம் தந்தையுமாக உறவாயிருப்பவர் என்பது;
மதுவென்னும் யாதவகுலத்தில் அவதரித்தவர் ; மெளனம், தியானம் யோகம் இம்மூன்றும் உடையவர்.
“பாரதனே! மெளனத்தினாலும் தியானத்தினாலும் யோகத்தினாலும் நான் மாதவனாகிறேன்” என்று
ஸ்ரீமஹாபாரதம், உத்தியோகபர்வத்தில் சொல்லப்படுகிறது.”- (ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம்);
நண்ணுவரே – கிட்டுவர், பொருந்துவர்; மன் – அசைநிலை, திடம், மிகுதி

————

41-வம்பு கற்றார்.
மன்னு மறையனைத்து மா குருவின் பாற்கேட்டாங்
குன்னி யதனுட் பொருள்களத் தனையுந் -துன்னு புகழ்
பெற்றலுந் தூப்புற் பெருமானை நண்ணாதார்
கற்றாரே காசினியில் வம்பு. (41)

நிலையான வேதங்கள் எல்லாவற்றையும் தமது சிறந்த குருவினிடத்தில் காதாரக் கேட்டு, அதன் உள்ளடங்கிய பொருள்கள்
முழுவதையும் மனத்தில் நினைத்து, நெருங்கிய புகழைப் பெற்றிருந்தாலும், தூப்புல் நகரில் அவதாரம் செய்த
ஆசாரியப் பெருமகனாகிய வேதாந்த தேசிகரை, ஒன்றிக் கலவாதவர், இந்த உலகத்தில் பயனற்றவற்றைக் கற்றவரேயாவர்.

(41) மன்னு – திடமான, நிலைபெற்ற, பொருந்தின; மாகுரு – மாதேசிகன்; உன்னி –நினைத்து;
துன்னு – பொருந்திய, மிகுதியான; நண்ணாதார் – அடையாநவர், ஒன்றிக்கலவாதவர்;
வம்பு –வஞ்சனை, வீம்பு; “வய்யம் சுமப்பதே வம்பு.”

—————

42-அடிமை அருள்வான்.
வம்பார் குழன்மாதர் வான் கலவி யாசை தன்னால்
அம்பாய பட்டலைந்து நின்றேனைத் – தன் பாத
தாமரைமேற் காதலையே தந்தடிமை கொண்டருள்வான்
தூயமனன் றுாப்புலவ னின்று. (42)

வாசனை நிறைந்த கூந்தலை உடைய பெண்களது சிறந்த கலவியாகிய ஆசையினால், மன்மதனது மலராகிய அம்பு பாயப்பட்டு,
வீணாகத் துன்பத்தில் அலைந்து திரிந்து கொண்டு நின்ற என்னை, இன்றைய தினம், தூய்மையான மனத்தை உடையவனும்,
தூப்புல் நகரில் தோன்றியவனுமாகிய சுவாமி தேசிகன் தனது திருவடிகளாகிய தாமரை மலரின்மேல் பக்தி கொள்ளச் செய்து,
என்னைத் தனது அடிமையாக ஏற்றுக்கொண்டு அருளினான்.

(42) வம்பு –வாசனை; வம்பார்குழன்மாதர் – “வம்புலாம் கூந்தல் மனைவி” – (பெரிய திருமொழி 1-6-4);
வான் – வலிமையான; கலவி –கலத்தல்; காதல் – ஆசை.

———

43-எண்ணேன்
இன்று முதல் யாவரையு மெண்ணே னிறையென்று
சென்று சே ணாடர் மிகப் போற்றக் – குன்றெடுத்த
வேங்கடமால் வித்தகத்தால் வேதாந்த தேசிகனாய்
ஈங்குதித்த வேற்ற மறிந்து. (43)

உயர்ந்த வான் நாட்டவரான தேவர்களும் போற்றிப் புகழுமாறு, ஆயர்பாடிக்குச் சென்று,
கோவர்த்தன கிரியைக் குடையாக எடுத்த, திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கும் திருமால்,
தமது ஞானத்தால் வேதாந்த தேசிகனாக இந்த உலகத்தில் அவதரித்த உயர்வை அறிந்து கொண்ட நான்
வேறு யாரையும் இன்றுமுதல் பரமாத்மாவாக எண்ணமாட்டேன்.

(43) இன்றுமுதல் – “இன்று முதலாக என் நெஞ்சே.” – (முதல் திருவந்தாதி, 40)
இறை – பரமாத்மா; சேண் – உயர்ச்சி, தூரம்; வித்தகம் –ஆச்சர்யமான குணசேஷ்டிதம்;
உதித்த – அவதரித்த; ஏற்றம் – தகுதியாயிருக்குந்தன்மை.

—————

44-என்றும் காப்பார்.
அறிந்தறிந்து நற்கலைக ளாய்ந்தப் பொருளிற்
செறிந்த பெருஞ் சிந்தையராய்ச் செவ்வே – சிறந்த புகழ்த்
தூப்புனகர் வந்துதித்த தூய் மனத்தன் பாதமே
காப்பென்பார் காப்பரென் றும். (44)

நல்ல ஆன்மிக ஞானம் நிறைந்த கலைகளை, நன்றாகத் தெரிந்துகொண்டு, அதன் உட்பொருளை ஆராய்ந்து,
அந்தப் பொருளில் பொருந்திய பெருமை நிறைந்த மனத்தவராக நின்று, நேர்மையாக, சிறந்த புகழுடைய
தூப்புல் நகரில் வந்து தோன்றிய தூய்மையான மனத்தை உடைய தேசிகரது திருவடியே, தமக்குப் பாதுகாப்பு
என்று சொல்லும் அன்பர்கள், அந்த ஆசாரியரால் எல்லாக் காலத்தும் பாதுகாக்கப் படுவார்கள்.

(44) செறிந்த – பொருந்திய, நிறைந்த; சிந்தை – மனம், நினைவு; செவ்வே – நேர்மையாக; காப்பு – பாதுகாவல், ரக்ஷை.

————–

இன்பக் கதி.
என்று மினி யெமக்கோ ரின்பக் கதியிதுவே
குன்ற மெடுத்த பிரான் குற்றமில் சீர் – நன்றாக
வேத்துங் கவி வாதி சிங்கரையே யெப்பொழுதும்
நாத்தழும்ப நாமுரைப்போ நன்று. (45)

கோவர்த்தனகிரியைக் குடையாகத் தூக்கிய குற்றம் இல்லாத சிறப்பை நன்றாகப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும்
கவி வாதி சிங்கராகிய வேதாந்த தேசிகரையே எப்பொழுதும் நாம் சிறப்பாக, நா, தழும்பு ஏறும் அளவுக்குப் பேசுவோம்.
இந்த நற்செயலே, இனி, எக்காலத்தும் எங்களுக்குப் பேரின்பம் அளிக்கும் பரமபத வாழ்வாகும்.

(45) கதி – உபாயம், பலன், வழி, ப்ரகாரம் ; பிரான் – ஸ்வாமி, உபகாரி
நாத்தழும்ப – “நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால், ஏத்த” –(பெரியதிருமொழி. 1-7-8)

————–

46-இப்போது பெற்றது
நன்றிதுவாந் தீததுவா மென்றொன்று நன்கறியா
தின்றறுதி யாகவே யென்னெஞ்சம் – வென்றிமிகும்
வேத முடித் தேசிகனை வேறாக வேத்திய பின்
தீதில் மதி பெற்றதிப்போ தீது. (46)

எனது மனம், நல்லது இதுதான் என்றும், தீமையானது அதுதான் என்றும், இன்றைய தினம் உறுதியாகவே நன்றாகத் தெளியாது.
ஆனால், வெற்றி மிகுந்த, வேதமுடித் தேசிகனாகிய ஆசாரியரை உயர்ந்தவராகக் கொண்டு போற்றிப் புகழ்ந்த பிறகு,
தீமையில்லாத தெளிந்த அறிவைப் பெற்றுக் கொண்டுவிட்டது. இந்த்த் தெளிவு இப்பொழுது நான் பெற்றுக் கொண்டதாகும்.

(46) உறுதி – உறைப்பு ; வென்றிமிகும் வேதமுடித் தேசிகன் –
“வென்றிப் புகழ்த்திரு வேங்கடநாத னெனுங் குரு” -(பிள்ளையந்தாதி. 5);
தீதில்மதி – “துய்யமதி” – (உபதேசரத்தின மாலை. 12); மதி – ஞானம், புத்தி.
“உன்னைப் பிறரறியார் என்மதிக்கு, விண்னெல்லாமுண்டோவிலை” – (நான்முகன் திருவந்தாதி. 51)

———–

நிலத்தேவர்
ஈதே யாம் வேண்டும் பயனிதுவே சாதனமும்
ஈதே மற் றெல்லா மெமக்கென்று – சாதுவராய்த்
தண் புனல் சூழ் தூப்புற்கோன் றாளிணையே நண்ணுவார்
மண் மிசை வாழ் வானவரே மற்று. (47)

நாம் விரும்பும் பலன் இதுவே. விரும்பும் உபாயமும் இதுவே. மற்றைய எல்லாமும் எங்களுக்கு இதுவேயாகும்
என்று எண்ணிக் கொண்டு சாந்தமான குணமுடையவராய், குளிர்ந்த நீர் சூழ்ந்த தூப்புல் நகரில் தோன்றிய
தலைவனாகிய தேசிகரது திருவடிகளைச் சேர்ந்தவர் இந்த மண்ணுலகத்தில் வாழும் தேவரேயாவர்.

(47) சாதனம் – உபாயம்; சாதுவராய் – “சாதுவராய்ப் போதுமின்கள்” – (நான்முகன் திருவந்தாதி. 68);
மண் மிசைவாழ்வானவர் – பூசுரர்; மற்று – அசைநிலை.

———–

48-வினை தோற்றாது.
மற்றொன்றும் யான் வேண்டேன் மானிடர்காண் மாநிலத்துக்
குற்றமில் சீர்த் தூப்புனகர்க் கோமான்றன் – எத்திசையும்
கொண்டாடி யேத்துங் குணங்களுக்கே யெஞ்ஞான்றுந்
தொண்டானேன் றோற்றா வினை . (48)

மக்களே! இந்தப் பெரிய நில உலகத்தில் மற்று எதையும் நான் விரும்ப மாட்டேன்.
குற்றம் இல்லாத சிறப்புடைய தூப்புல் நகரில் அவதரித்த தலைவனாகிய சுவாமி தேசிகனது,
எல்லாத் திக்குகளிலும் கொண்டாடிப் போற்றுகின்ற குணங்களுக்கே, எல்லாக் காலத்திலும் தொண்டனாக ஆனேன்.
அதனால் எனக்குத் தீவினைகள் (பாவம்) எதுவும் தோன்றாது.

(48) மற்றொன்றும் யான் வேண்டேன் – “மற்றொன்றும் வேண்டாமனமே ” – (திருமாலைத்தனியன்) ;
தொண்டு – அடிமை; “குணங்களுக்கே யெஞ்ஞான்றுந் தொண்டானேன் –
“உயர்வறவுயர் நலமுடையவன் துயரறுசுடரடிதொழு தெழப்பாராயென்கிறார்” ;
“அஹமஸ்யாவரோப்ராதா குணர் தாஸ்யமுபாகத” என்னுமாபோலே : இளையபெருமாளை ‘நீர் இவர்க்கு என்னாவீர்?’ என்ன,
‘பெருமாளும் ஒருபடி நினைத்திருப்பர், நானும் ஒருபடி நினைத்திருப்பேன்” என்றார் ;
“அவர் நினைத்திருக்கும்படியென் ? நீர் நினைத்திருக்கும்படியென் ?” என்ன,
‘அவர் தம் பின் பிறந்தவனென்றிருப்பார்; நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனாயிருப்பன்’ என்றாரிறே
அப்படியே இவரும் “உயர்வற வுயர்நல முடையவன் துயரறு சுடரடி தொழுதெழப்பாராய் நெஞ்சே!” என்கிறார்.
இவர் தாம் முற்படக்குணங்களிலே யிழிவானென்? என்னில் தாம் அகப் பட்டதுறை அதுவாகையாலே
இவரைக் குணத்தையிட்டாயிற்று வணங்குவித்தது.” – (திருவாய்மொழி 1-1-1, ஈடு.)

————–

49-சேர்த்தார் பெறும் பயன்.
வினையனைத்துந் தீருமே வேமே துயரம்
மனை மனைவி யாசையுமா ளுமே – தனை யுணர்ந்து
செங்கமல நாபனையும் சேரலாமே வாதி
சிங்கரைத்தன் சிந்தை தனிற் சேர்த்து. (49)

வாதம் செய்யும் எதிரிகளுக்குச் சிங்கமாகத் தோன்றும் வேதாந்த தேசிகரைத் தனது மனத்தில் வைத்து,
தியானித்தால், கர்மங்கள் எல்லாம் ஒழியும், துன்பங்கள் யாவும் வெந்துவிடும்; வீட்டில் உள்ள மனைவிமேல்
கொண்டுள்ள ஆசையும் இல்லாமல் போகும்; தன்னை நன்றாக உணர்ந்து,
செந்தாமரைமலர் போன்ற திருஉந்தியை (தொப்பூழ்) உடைய நாராயணனையும் அடையலாம்.

(49) வினை – கருமம்; தீரும் – ஒழியும் நீங்கும்; துயரம் – துன்பம்; வேமே – எரிந்து போம்; மனை – வீடு,
இரண்டாயிரத்து நானூறு குழிகொண்ட நிலமென்றும், பதினாறரைக்காற் குழிகொண்ட நிலமென்றுங் கூறுவர்.
மனைவி – நாயகி; மனை மனைவியாசை – மண்ணாசை, பெண்ணாசை; மாளும் – இறந்துபடும்;
தனையுணர்ந்து — சேதநன் நித்யனாய் அணுவாய் ஜ்ஞாநாநந்தவிலக்ஷணனாய் ஜ்ஞாநகுணகனாய் ஏகரூபனாய்
பகவத் சேஷபூதனாயிருக்கும் இயல்பை நன்கு தெளிந்து;
செங்கமல நாபன் – பத்மநாபன், பற்பநாபன், விஷ்ணு. பத்மநாப:– பிரம்மதேவருக்கும் பிறப்பிடமான
காலரூபமான கமலத்தை நாபியில் உடையவர்; பகவானுடைய நாபியில் புஷ்கரமுண்டாகிறது;
“புஷ்கரம், புண்டரீகம், பத்மம், சக்ரம் என்னப்படுவது காலம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நாபியில் பத்மத்தையுடையவர்; மேற்சொல்லிய பொன்மயமான கமலத்தை நாபியில் உடையவர்.
“யோகநித்ரை செய்துகொண்டிருந்த அந்தப் பகவானுடைய நாபியில் பூமிரூபமான சிறந்ததும் அற்புதமுமான
அஷ்டதளபத்மம் ஒருகால் ஸங்கல்பமாத்திரத்தினால் உண்டாயிற்று.
மேருமலையானது அதன் பொன்மயமான காயென்று சொல்லப்படுகின்றது” என்று கூறப்பட்டுள்ளது.
பதுமம் போன்ற நாபியை உடையவர் – (ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யம்); சிந்தை – மனம்.

————

50-வைப்பார்
சேர்ப்பரேற் றந்நெஞ்சிற் சிக்கெனவே சீராருந்
தூப்புனகர் வந்துதித்த தூயவனைக் – காப்பரவர்
காசினியி லுள்ளாரைக் கன்ம மறுத்திட்டு
மாசில் மன மெய்த வும்வைப் பார். (50)

தமது மனத்தில், சிறப்பு நிறைந்த தூப்புல் நகரில் அவதாரம் செய்த தூய்மையான மனம் பெற்ற தேசிகரை
நன்றாகச் சேர்த்து வைத்தால், அவரை, அந்த ஆசாரியர் பாதுகாப்பார்.
மேலும், இந்த மண்ணுலகத்தில் உள்ள மக்களது கருமங்களை ஒழித்து,
அவர்களைக் குற்றம் இல்லாத மனத்தை அடையவும் வைப்பார்.

(50) காப்பர் – ரக்ஷிப்பர்; மாசில் மனம் – குற்றமற்ற மனம்,
“மாசில் மனந்தெளி முனிவர்” – (தேசிக மாலை. அமிருதாசு வாதினி 27).

————

51-அற்புதம்
வைப்பார் மனந்தன்னின் மாநிலத்து மாதவத்தோர்
எப்பொழுது மெங்கள் பெருமானை –அற்புதமாந்
தேசுடைய வேதாந்த தேசிகனைச் சீர் மிகுந்த
மாசின் மதியுடையோர் வாழ்வு. (51)

(பொழி.) சிறந்த தவத்தை உடைய ஞானிகள், இந்த உலகத்தில், தமது மனத்தில் எக்காலத்திலும்,
எங்கள் இறைவன் ஆகிய நாராயணனை வைத்துக்கொள்வார்கள். (ஆனால்) ஒளி மிகுந்த வேதாந்த தேசிகனே,
சிறப்பு நிறைந்த குற்றம் இல்லாத அறிவு பெற்றவர்களுக்கு நல்வாழ்வாக அமைவான். இஃது ஓர் ஆச்சரியமாம்.

(51) மாதவத்தோர் – சரணாகதி நிஷ்டர்; தேசு – அழகு, ஒளி, கீர்த்தி, ஞாநம் பெருமை;
மாசின்மதி – “துய்யமதி” (உபதேசரத்தின மாலை 12); மதி – நுண்ணறிவு.

————–

52-இதுவே வாழ்வு.
வாழ்விதுவே யுந்தமக்கு வம்மி னுலகத்தீர்
தாழ்வெங்கும் வாரா தளர்ச்சி நில்லா – சூழ் வினைகள்
சேரச்சி தைந்திடுமே திண்ணமிது வாழ்த்துமினோ
ஆரணத் தேசிகரை யாய்ந்து. (52)

உலகத்தில் வாழும் மக்களே! இங்கே வாருங்கள். வேதம் கற்ற ஆசாரியரை (இவரே நமக்கு நன்மை செய்வார் என்று)
ஆராய்ந்து தெளிந்து வாழ்த்துங்கள். அதனால் உங்களுக்குத் தவறு எதுவும் வராது.
உடலிலோ உள்ளத்திலோ சோர்வு என்பது நிற்காது. உம்மைச் சூழ்ந்துள்ள தீவினைகள் அனைத்தும் ஒருசேர அழிந்துவிடும்.
இந்த நன்மைகள் கிட்டுவது உறுதி. ஆகவே, இதுவே உங்களுக்கு நல்வாழ்வாகும். (முறைமை)

(52) வாழ்வு – சீவிதம்; வம்மின் – வாரீர்; ஆரணம் – வேதம்.

—————

53-ஓதமுடியா
ஆய்ந்துரைக்க லாமணிக ளாழ்கடலு ளித்தனையென்
றாய்ந்துரைக்க லாமமரர் கோன் புகழும் – ஏய்ந்த சீர்
வேத முடித் தேசிகனார் வீறுடைய வண் குணங்கள்
ஓதமுடியா வெவர்க்கு மோர்ந்து. (53)

ஆழமான கடலுள் மூழ்கி, அங்கள்ள இரத்தினங்கள், இத்தனை உள்ளன என்று எண்ணிப் பார்த்துச் சொல்லிவிடலாம்.
(ஆனால்)எத்தகைய ஆற்றல் படைத்தவர்க்கும், நிறைந்த சிறப்பினரான வேதமுடித் தேசிகனாரது பெருமை உடைய,
வள்ளன்மை பொருந்திய குணங்கள், ஆராய்ந்து பார்த்துக் கூற இயலாதவைகளாகும்.

(53) மணி – இரத்தினம்; ஏய்ந்தசீர் – “ஏற்கும் பெரும் புகழ்வான வரீசன்” என்னுமாபோலே
அங்குத்தைக்கு அநுரூபமாய்ப் பொருந்தியிருக்கிற அனந்த கல்யாண குணங்களையுடைய; ஒர்ந்து – ஆராய்ந்தறிந்து

————

54-பாட்டினைப் பாடுவார்
ஒரா ரறத்தை யுணரார் பெரும் பொருளைப்
பாரார் பயனான வின்பத்தைச் – சீராரும்
வீட்டையும் வேண்டாரே வேதாந்த தேசிகர் தம்
பாட்டினைப் பாடு மவர். (54)

வேதாந்த தேசிகருடைய உபதேசப் பாசுரங்களைப் பாடும் அன்பர்கள், அறத்தை ஆராய மாட்டார்கள்.
பெருமைக்குரிய பொருளையும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். பயன்தரும் இன்பத்தையும் வேண்டும் என்று பார்க்க மாட்டார்கள்.
சிறப்புப் பொருந்திய மோட்சத்தையும் விரும்பமாட்டார்கள்.
(ஆக, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் தேசிகரது பாசுரங்களிலேயே அனுபவிப்பார்கள், அதனைப் பாடுவார்கள்.)

(54) அறத்தை……வீட்டை – இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் அந்தமி லின்பத்தழிவில் வீடும் நெறியறிந்து
எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரா னெடுக்கப் பட்ட பொருள் நான்கு:
அவை அறம், பொருள், இன்பம், வீடென்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ்செல்லா நிலைமைத்தாகலின்,
துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின்,
நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமே யாம்”; பாட்டினை – பெருமையை; பாடுமவர் – அநுபவிப்பவர்.

————

55-மேவுவார்
அவரவர் தந்த மறிவளவின் மாலைத்
தவ நெறிகளால் வணங்கிச் சார்வார் – எவரேலும்
தூயமறை யோர் வணங்குந் தூப்புனகர்க் கோமானை
மேயறிவான் மேவுவரே யிங்கு. (55)

திருமாலை,அவரவர்கள் தத்தமது அறிவின் அளவைக் கொண்டு தவம் செய்யும் வழிகளில் வழிபாடு செய்து சேர்வார்கள்.
ஆனால், இம்மண்ணுலகத்தில் யாராகவிருந்தாலும், தூய்மையான வேதங்களைக் கற்ற பெரியோர்கள் வணங்கக்கூடிய
தூப்புல் கோமானாகிய சுவாமி தேசிகனையே வந்து சேர்வார்கள்(பொருந்துவார்கள்).

(55) தவம் – பிரபத்தி, “தஸ்மாந்ந்யாஸ மேஷாம்தபஸா மதிரிக் தமாஹு:” – (தைத்ரீயம் 2);
தவநெறி – யோகமார்க்கம், – பக்தி மார்க்கம். “சார்வேதவநெறி’’ – (திருவாய்மொழி 10-6-9)
‘’தவமாவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலியன”;
மேயம் – ஞேயம், அறியத்தக்கது; மேவுவர் – பொருந்துவர்.

————

56-இங்கு இருந்தால் ஏன்?

இங்கிருந்தா லேதமென்னெந்தமக்கு வாதிசிங்கர்
செங்கமல பாதமுஞ் சீர்வடிவும்-அங்கமலக்
கைகளும் வாயுங் கருணைமிகு கண்ணிணையும்
கைகனி போற்காணக் கூடில். (56)

வாதம் செய்பவர்க்குச் சிங்கமாகத் தோன்றக்கூடிய தேசிகரது செம்மையான தாமரை மலர் திருவடிகளும்,
சிறப்பான திருவுருவும், அழகிய தாமரை மலர் போன்ற திருக்கைகளும் பொருந்திய அருள் மிகுந்த கண்களும்,
உள்ளங்கை நெல்லிக்கனி போல் எமக்குக் காணுமாறு கிடைத்துவிட்டால்,
நாம் இந்த மண்ணுலகத்தில் இருந்தால் வரும் குற்றம் என்ன? (ஒன்றும் இல்லை)

(56) ஏதம் – குற்றம், துன்பம்; செங்கமல……..கண்ணிணையும் –
“கேட்டுரைக்கில் தாமரை நின் கண்பாதம் கையொவ்வா,
சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி யொளியொவ்வாது” -(திருவாய் மொழி 3-1-2);
கைகனிபோற் காண – “கையில் கனி யென்னவே”-(இராமாநுச நூற்றந்தாதி. 103)

————–

57-பதம் எய்தலாம்
கூடி லவர் குணத்தைக் கூறவே யெந்தமக்குத்
தேடி லவர் பதத்தைச் சென்னி தனிற் – சூடத்
துலங்கொளி சேர் தூப்புல் வருந் தூயோ னருளால்
வலங்கொள் பத மெய்தலாம் வான். (57)

எங்களுக்கு, அந்த ஆசாரியது பெருங்குணங்களை எடுத்துப் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால்,
அவரது திருவடிகளை, முடியில் அணிந்துகொள்ள, தேடிக்கொண்டால், விளங்குகின்ற ஒளி சேர்ந்த
தூப்புல் நகரில் அவதரித்த தூய்மை உடையவனான தேசிகனது திருவருளால், நாங்கள், வெற்றிகொண்ட பரமபதம் எய்தலாம்.

(57) கூடில் – பெற்றால், சேர்ந்தால்; துலங்கு – பிரகாசித்து; வான் – பரமபதம்.

———

58-தோன்றினவோ
வானிற் றிகழு மதியோ கதிரவனோ
ஊனமிலா வோமத் தொளியழலோ – மாநிலத்தில்
சோதியவை மூன்றுமொன்றாய்த் தோன்றினவோ தூப்புனகர்
வாதிசிங்கத் தேசிகராய் வந்து. (58)

ஆகாயத்தில் விளங்குகின்ற சந்திரனோ, அல்லது சூரியனோ, அல்லது குற்றம் இல்லாத யாகத்தில் உள்ள ஒளிமிக்க நெருப்போ,
அல்லது ஒளியோடு கூடிய மூன்றும் ஒன்றாகச் சேர்ந்தோ, இந்த மண்ணுலகத்தில் வந்து,
தூப்புல் நகர் வாதிசிங்கர் எனப் போற்றப்படுகின்ற வேதாந்த தேசிகராய் உதித்தனவோ?

(58) வான் – ஆகாசம்; மதி – சந்திரன்; கதிரவன் – சூரியன்; அழல் – ஒமாக்னி;
சோதியவை மூன்று – முச்சுடர் மூன்று சுடர். அவை அக்கிநி ஆதித்தன், சந்திரன் என்பர்.

————

59-தாங்கியவை
வந்து கருணையால் வானவர் கோன் வன் படைகள்
ஐந்து மனைத்துலகு முய்யவே – செந்தார்க்
கவி வாதி சிங்கராய்க் காசினியைத் தேசிற்
றவிவின்றித் தாங்கின தாம். (59)

இந்த மண்ணுலக மக்கள் உய்வு பெறுவதற்காகவே, அமர்ர்க்கு அதிபதியாகிய நாராயணனது
வலிமை நிறைந்த ஆயுதங்கள் ஐந்தும், திருவருளால், செம்மையான மாலை அணிந்த,
கவிவாதி சிங்கராகிய தேசிகராக வந்து, இந்த உலகத்தை நிரந்தரமான ஒளியோடு (இடையீடு இல்லாமல்) தாங்கிக் கொண்டு விட்டன.

(59) வானவர்கோன் – அமரர்கட்கதிபதி; வன்படைகள் ஐந்து – பஞ்சாயுதங்கள்: சங்கு சக்கரம், தண்டு, வாள், வில் என்பன,
“அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன் கையாழி யென்னும், படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்,
புடையார்புரி சங்கமும் இந்தப் பூதலங்காப்பதற்கென்று, இடையே இராமாநுச முனியாயின இந்நிலத்தே,” – (இராமாநுச நூற்றந்தாதி 33.)

————

60-சிங்கராயினான்.
தாங்கி யுலகனைத்துந் தானருவாய் நின்றபிரான்
ஓங்கு புகழ் வேங்கடக்கோ னுந்தமக்குத் – தீங்கேதும்
வாராத வண்ணமிவ் வாதி சிங்க ராயினான்
பாருலகீர் பாங்குடனே வந்து. (60)

பரந்த உலகத்து மக்களே! தான் அருவாக நிற்கின்ற தலைவனும் புகழ் ஓங்கிய திருவேங்கடமலையைத் தங்கும்
இடமாகக் கொண்டவனுமாகிய நாராயணன் உங்களுக்குத் தீமை எதுவும் வராதபடி, உலகம் முழுவதையும் தான் தாங்கிக் கொண்டு,
பக்கவமாக வந்து இந்தக் கவிவாதி சிங்கராகக் காட்சி அளித்தான்.

(60) தானருவாய் நின்ற பிரான் – “உளனெனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள்,
உளனலனெனில் அவனருவம் இவ் வருவுகள், உளனென இலனென இவை குணமுடைமையில்,
உளனிரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே.” – (திருவாய் மொழி 1-19);
வேங்கடக்கோன் வாதி சிங்கராயினான் – “அன்றிவ்வுலகினை யாக்கி யரும்பொரு ணுால் விரித்து,
நின்று தன் னீள்புகழ் வேங்கடமாமலை மேவியும்பின், வென்றிப் புகழ்த் திரு வேங்கடநாத னெனுங் குருவாய்,
நின்று திகழ்ந்துமண் மேனின்ற நோய்க டவிர்த்தனனே” – (பிள்ளையந்தாதி 5) ;
வண்ணம் — விதம்; பாங்கு – அழகு, உரிமை, உறவு, நற்குணம், யோக்கியம்.

————-

61-காண்பன்
வந்தென்றன் வன்னெஞ்சின் மன்னி யிருந்தானை
எந்தை யெதி ராச ரிணையடியைக் – கொந்தலரும்
சோலை சூழ் தூப்புனகர் வந்துதித்த தூயவனைக்
காலமெலாங் காண்பன் களித்து. (61)

எனது வலிமையான மனத்தில் வந்து நிலை பெற்றிருந்தவனும், எனது ஆசாரியத் தலைவராகிய
இராமாநுசரது திருவடியாக விளங்குபவனும், கொத்தாக மலர்ந்த மலர்களைக் கொண்ட சோலைகள்
சுற்றியுள்ள தூப்புல் நகரில் வந்து தோன்றிய தூயவனுமாகிய சுவாமி தேசிகனை
என் ஆயுள் காலம் முழுவதும் இன்பம் பெருகக் காண்பேன்.

(61) வன்னெஞ்சம் – கடினமான நெஞ்சு, வலியநெஞ்சு: எதிராசர் – ஸ்ரீபாஷ்யகாரர்.
“ மாறன் றுணையடிக்கீழ், வாழ்வை யுகக்கு மிராமா நுசமுனி வண்மை போற்றுஞ்,
சீர்மைய னெங் கடூப் புற்பிள்ளை.” – (பிள்ளையந்தாதி 1); கொந்து-கொத்து;
கொந்தலரும் சோலை — “கொந்தலர் பொழில் குருகூர்” -(திருவாய்மொழி 10-9-11);
தூயவன் – பரிசுத்தன்; காண்பன் – பார்ப்பேன்.

————–

62-என்று கொல் களிப்பது
களிக்கும தென்றுகொலோ கண்களாற் கண்டு
துளிக்கு நறுந்துழாய்க் கண்ணி – ஒளிக் கொளும்
அண்டர்கோ னென்ன வடியார்க் கருள் புரியும்
கொண்டலார் தூப்புற்கோ வை. (62)

துளிர்விட்டு வளர்ந்துள்ள நல்ல மணம் வீசுகின்ற திருத்துழாய் மாலை அணிந்த, ஒளி நிறைந்த,
தேவர்கள் தலைவனாகிய நாராயணன் போன்று, தமது அடியவர்களுக்குத் திருவருள் புரியும் மேகம் நிறைந்த
தூப்புல் நகரத்துத் தேசிகரை, கண்களால் பார்த்துக் களிப்படைகின்ற அந்த நாள் என்றைக்கு அமையுமோ?

(62) கண்களால் – கண்கள் படைத்த பயனாகக் கண்டு; கண்ணி – மாலை,
“கண்ணி பறித்து” – (பரிபாடல் 7-45), “கண்ணியோச்சித் தடுமாறுவார்” – (பரிபாடல் 9-45),
“கல்லகாரப் பூவாற் கண்ணி தொடுத்தாளை” – (பரிபாடல் 11-103),
“அடிமே லடிமே லொதுங்கித் தொடிமுன்கைக், காரிகை யாகத் தன் கண்ணி திருத்தினாள்.” – (பரிபாடல் 12.90-91),
“கண்ணி எனதுயிர்” – (திருவாய்மொழி 4-3-5),
“கண்ணியர் தாரர் கமழ் நறுங் கோதையர்” – (பரிபாடல் 16. 50.);
ஒளி – ப்ரகாசம், ஜ்ஞானம்; அண்டர் – நித்திய சூரிகள், இடையர்;

“அண்டர் கோன் – இடையர்க்கு நியாம்யனாய் நின்ற எளிமை குணமாம்படி அண்டாதிபதியான
ப்ரஹ்மா முதலாக மற்றும் அண்டாந்தர்வர்த்திகளான தேவாதிகளை யெல்லாம் ஸ்வாதீநராக்கி வைத்திருக்கிற
ஸ்வாமித்வ ஸ்வாதந்த்ரியாதிகளை யுடையவன்.
“கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டானாகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கு” – (பெரிய திருமொழி 11-5-5) என்கிறராகவுமாம்.” –
(முநிவாஹந போகம்) ;‘அடியார்க்கு – ’அடியார்’ என்கிற இத்தாலே த்ருதீயாக்ஷரத்திலே சொன்ன ஜீவவர்க்கமும்,
ஜீவர்களுக்கு ஈச்வரனைக் காட்டில் வேறுபாடும், அந்யோந்யம் பிரிவும் காட்டப்படுகிறது.

’அடியார்’ என்றால் ஸர்வ ஸாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களை யெல்லாம் காட்டிற்றேயாகிலும்,
இங்கு ’அடியார்’ என்கிறது “யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவோ அபி நதம் விது:” என்னும்படி
அபரிச்சேத்ய மாஹாத்மியரான சேஷத்வ ஜ்ஞாநரஸிகரை.” – (முநிவாஹந போகம்);
அருள் புரியும் கொண்டலார் – “கொண்ட லாரருண் மாரிபொ ழிந்திடக் கொண்ட தோருயர் கூர்மதி யன்பினாற்,
பண்டை நான்மறை மெளலிப டிந்தயான் பாரின் மெய்விர தக்கவி பாடினேன்” .-(தேசிகமாலை. மெய் விரத நன்னிலத்து மேன்மை);
கொண்டல் – மேகம், “ஜங்கமஸ்த்தாவரங்களெல்லாம் உஜ்ஜீவிக்கும்படி ஜலஸ்தல விபாகமற காருண்யரஸத்தை
வர்ஷிப்பதொரு காளமேகத்தின் ஸ்வபாவத்தை உடையவர்.”;

அருள்புரியும் – “நின்குண மெதிர்கொண்டோ றரங்கொண்டோ ரல்லதை மன்குண முடையோர்
மாதவர் வணங் கியோ ரல்லதை செறுதீ நெஞ்சத்துச் சின நீடி னோரும் சேரா வறத்துச் சீரிலோரும்,
அழிதவப் படிவத் தயரி யோரும், மறு பிறப்பில்லெனு மடவோருஞ் சேரார், நின்னிழ லன்னோ ரல்ல தின்னோர்,
சேர்வா ராதலின் யாஅ மிரப்பவை, பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால், அருளு மன்பு மறனு
மூன்றும் உருளிணர்க் கடம்பி னொலிதா ரோ யே.”- (பரிபாடல் 5. 71-81.

“நினது குணத்தை ஏற்றுக் கொண்டோராகிய அறங் கொண்டோரல்லது வீடு பெறுங்குணமுடையோராகிய
மாதவரால் வணங்கப்பட்டோரல்லது உயிர்களைச் செறுகின்ற தீய நெஞ்சத்துச் சினத்தையுடையோரும்
அறத்தின்கட் சேராத புகழில்லோரும் கூடா வொழுக்கத்தால் அழிந்த தவ விரதத்தையுடையோரும்
இப்பிறப்பின் நுகர்ச்சியேயுள்ளது மறு பிறப்பு இல்லை யென்னும் மடவோருமாகிய இவர் நின் தாள் நிழலை அடையார்;
அத்தன்மை யோரல்லது இத்தன்மையோர் நின் தாள்நிழலை அடைவர்; ஆதலான், நின்னையாம் இரப்பவை நுகரப்படும்
பொருள்களும் அவற்றை உளவாக்கும் பொன்னும் அவ்விரண்டானும் நுகரும் நுகர்ச்சியுமல்ல;
எமக்கு வீடு பயக்கும் நின்னருளும் அதனை உண்டாக்க நின்னிடத்து யாம் செய்யும் அன்பும்
அவ்விரண் டானும் வரும் அறனுமாகிய இம்மூன்றுமே.”); கோ – ஸ்வாமி.

—————-

63-காணார்
கோவைக் கனியொத்த வாயுங் குளிர் விழியும்
தாவந் தவிர்க்கு முறுவலும் – பாவந்தீர்
வேத முடித் தேசிகன்றன் மெய்யொளியு மேவாதார்
சாதுவரைக் காணார் தளர்ந்து. (63)

பாவத்தை நீக்கக்கூடிய வேதமுடித் தேசிகனாகிய ஆசாரியரது திருமேனியின் ஒளியும்,
கோவைப் பழத்தை ஒத்து சிவந்த திருவாயும், அருள் நிறைந்த திருக்கண்களும்,
பக்தர்களது ஆன்ம தாகத்தைப் போக்கக்கூடிய புன்முறுவலும், பொருந்தப் பெறாதவர்,
தளர்ச்சியால், ஸ்ரீவைஷ்ணவர்களைக் காணப் பெறாதவர்களாவர்.

(63) கோவைக் கனியொத்தவாய் – கோவைப் பழம் போல சிவந்த அதரம். ‘
“கோவை வாயாள் பொருட்டு” – (திருவாய்மொழி 4-3-1); விழி — கண் ; தாவம் – வெப்பம்;
தவிர்க்கும் – தீர்க்கும், போக்கடிக்கும்; முறுவல் – சிரிப்பு மெல்ல நகுதல்; தீர் – நீங்கிய;
மெய் – உண்மையான, சத்தியமான ; ஒளி – ஒழுங்கு ; சாதுவர் – சாதுக்கள்; தளர்ந்து – சோர்ந்து.

———

64-பேச்சு
தளர்த்திமற் றொன்றத் தரித்து நீ நெஞ்சே
கிளர்த்தியுடன் கேடில் சீ ரானை – அளத்தற்
கரியானை யம்மானை யன்புடனே தூப்புற்
பெரியானை யெப்பொழுதும் பேசு. (64)

மனமே! நீ, உன்னை, நெகிழ்த்திக்கொண்டு, உன்னில் பொருந்தும் வண்ணம் தாங்கிக் கொண்டு,
எழுச்சியோடு, அழிவு இல்லாத சிறப்பினை உடையவனும், அளந்து காண்பதற்கு அரியவனும்,
நமது தலைவனும், தூப்புல் நகரில் தோன்றிய மேம்பாடு உடையவனுமாகிய சுவாமி தேசிகனை,
பக்தியுடன் எல்லாக் காலத்திலும் பேசிக் கொண்டே இரு.

(64) தரித்து – தாங்கி; கிளர்த்தி – எழுச்சி ; கேடில் – அழிவில்லாத,
“கேடில் விழுச்செல்வங் கல்வி” – (திருக்குறள், கல்வி. 10. அழிவில்லாத சீரிய செல்வமாவது கல்வி.);
அம்மான் — ஸ்வாமி, “அம்மான் ஆழிப்பிரான்” – (திருவாய் மொழி. 5-1-7.
“ஸர்வேச்வரன். கையும் திருவாழியுமான அழகை நித்ய ஸூரிகளுக்குக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கும் அவன்” – ஈடு);
பெரியான் – மேம்பாடுடையவன்; பேசு – சொல்லு.

———–

65-தோற்றார்.
பேசுமினே கூச்சமின்றிப் பேரின்பம் வேண்டினீர்
தேசுடைய செந்தாமரை யடியைப் – பாசமொன்றும்
நில்லாது தூப்பு னிமலனையே நாடோறும்
சொல்லாதார் சூழ் வினை தோற்றார். (65)

பேரின்பத்தை விரும்புகின்றவர்களே! நீங்கள் எல்லாம், கூச்சம் எதுவும் இல்லாமல் (ஆசாரியர் புகழைப்) பேசுங்கள்.
(அதனால்) உலகப் பற்று எதுவும் நில்லாமல் நீங்கிவிடும். ஒளி பொருந்திய செந்தாமரை மலர் போன்ற
திருவடியை உடையவனும், தூப்புல் நகர் தூயவனுமாகிய தேசிகனை, தினந்தோறும் சொல்லாதவர்கள்,
தங்களது சூழ்வினைக்குத் தோற்றவர்களேயாவார்.

(65) கூச்சம் – பயம்; பேரின்பம் – மோக்ஷம் ; வேண்டினீர் – விரும்புவோர்; பாசம் – அவிச்சை;
நிமலன் – குற்றமற்றவன், சுத்தன், “விரையார்பொழில் வேங்கடவன் – பரிமளம் வடிவு கொண்டாற்போல
இருக்கிற திருச்சோலைகளையுடைய திரு மலையிலே
“கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு” -(திருவாய்மொழி 1-8-3) என்கிறபடியே
எல்லாருக்கும் ஆச்ரயிக்கவும் அநுபவிக்குமாம்படி “இருள் தருமா ஞாலத்துள்” – (திருவாய்மொழி 10-6-1)
குன்றத்திட்ட விளக்காய் நிற்கிறவன்” ; நாடோறும் – பிரதிதினமும்.

————–

66-வீட்டின் சிறப்பு
தோற்றா தவர்க்கேதுந் தொல் வினை யெஞ்ஞான்றும்
மேற்றான் வருவது மொன்றுண்டோ – ஆற்றாத
ஆர்வத்தால் வேத முடி யாரியனைப் பற்றுகையே
சீருற்ற வீட்டிற் சிறப்பு. (66)

ஞானம் தோன்றாத அறிவிலிகளுக்கு எதுவும் பழைய தொந்தரவாகவே அமையும். எப்பொழுதும், அதிகமாக
வருவதாகிய நல்வினை ஒன்று உண்டோ? இல்லை. (ஆனால்) தணியாத அன்பால் வேதமுடி ஆரியனாகிய
சுவாமி தேசிகனைச் சரணாகப் பற்றிக் கொள்ளுதலே, சிறப்புமிக்க பரமபதத்தின் பெருமையாகும்.

(66) தொல் – அநாதியான ; தொல்வினை – பழவினை; மேல் – அதிகமாக; வருவது – வளர்வது;
ஆற்றாத – தணிதலில்லாத ; ஆர்வம் – அன்பு; பற்றுகை – அன்பு செய்தல், பிடித்துக்கொள்ளுதல்,
பொருந்துதல், மனத்துக்கொள்ளுதல்; வீடு – மோக்கம்.
“சென்றாங்கின்பதுன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே” – (திருவாய்மொழி. 8-8-6) ;
சிறப்பு – மேன்மை, “எனக்கே கண்ணனையான் கொள்சிறப்பே” – (திருவாய்மொழி 2-9-4 )

சிறப்பே – பலகால்வேண்டா, ஒருகால் அமையும்; அது தன்னிலும், திருவாசலைத் திருக்காப்புக்கொண்டு
ஒருவர் அறியாதபடி சிறப்பாகச் செய்யவும் அமையும். சிறப்பாகிறது – ஏற்றம்.
அதாவது – புருஷார்த்தம். ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருளவேணு மென்றபடி.
சிறப்பாவது – முக்தியும், ஸம்பத்தும், நன்றியும். இவற்றில், நான் உன் பக்கல் கொள்ளும் மோக்ஷம்
உனக்கேயாக எனைக்கொள்ளுமதுவே. உன்பக்கல் நான் கொள்ளும் ஸம்பத்தென்னவுமாம். நன்றியென்னவுமாம்.” – ஈடு.
“சிறப்பில் வீடு சுவர்க்க நரகம்” – (திருவாய்மொழி 2-9-5.
“சிறப்பில் வீடு – நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்தவன் நித்ய ஸூரிகளுடைய அநுபவத்தைப் பெற்று
அநுபவிக்கக் கடவதாகச் சொல்லுகிற மோக்ஷம்.” – ஈடு.)

——————

67-சென்னியில் சேர்க்கும் செவ்வு
சிறப்பு முயிர்க்கிதுவே சேமமு மீதே
அறப் பொருளு மாம் வீடு மீதே – மறப்பின்றி
மன்னிய சீர் தூப்புல் வரு மா மறையோன் பாதத்தைச்
சென்னிதனிற் சேர்ப்பதுவே செவ்வி. (67)

உலகத்து மனித உயிர்களுக்குச் சிறப்பாக அமைவது இதுவே ஆகும். பாதுகாப்பாக இருப்பதும் இதுவே.
அறமும் பொருளும் ஆகும் இதுவே மோட்சமும் ஆகும். நிலைபெற்ற சிறப்பினை உடைய தூப்புல் நகரில்
அவதரித்த சிறந்த வேதங்களைக் கற்ற சுவாமி தேசிகனது திருவடிகளை மறதி இல்லாமல்
தலையில் தாங்குவதே செம்மையானதாகும். (நேர்மை)

(67) சேமம் – ரக்ஷகம், க்ஷேமம், இன்பம்; மறப்பின்றி – மறவாதே.
“மறப்பொன்றின்றி யென்று மகிழ்வனே” – (திருவாய்மொழி 2-9-5 )
மறப்பொன்றின்றி – இத்தலையிலுள்ளதெல்லாம் மறக்கலாம், அத்தலையிலுள்ள தெல்லாம் நழுவவொண்ணாது.
என்றும் மகிழ்வேனே – மகிழ்ச்சியென்றும், அநுபவமென்றும் – பர்யாயம். அநுபவிப்பேனென்கிறார்.
ஆக, இத்தாலே – ஸ்வரூபமும் வெளியிடுகிறார். பெருமானென்கையாலே — தம் முடைய சேஷத்வமும்,
மறப்பொன்றின்றி – என்கையாலே – ஜ்ஞாத்ருத்வமும், என்றுமென்கையாலே – நித்யத்வமும்,
மகிழ்வு என்கையாலே – போக்த்ருத்வமும்,” – ஈடு) ;
மாமறையோன் பாதத்தைச், சென்னிதனிற் சேர்ப்பதுவே செவ்வி –
“தூப்புற்பிள்ளை பாதமென் சென்னியதே.” – (பிள்ளை யந்தாதி. 1); சென்னி – முடி, தலை; செவ்வி – அழகு, நேர்மை.

————–

68-அந்தம் இல் வீட்டு இன்பம்
செவ்வியராய்ச் செங்கண் மால் சேவடியைச் சேவிப்பார்
அவ்வப் பயனை யடைந்திடுவார் – அவ்வாறு
சிந்தை தனிற் றுாப்புல் வந்த தேசிகனை நண்ணுவரேல்
அந்தமில் வீட் டின்பமவர்க் காம். (68)

நேர்மை உடையவர்களாக, சிவந்த கண்களை உடைய திருமாலுடைய செம்மையான திருவடிகளை வணங்குபவர்,
அந்தந்த நற்பயனைப் பெற்றிடுவார். அந்த வகையில் தூப்புல் நகரில் அவதரித்த தேசிக ஆணாரியரை
மனத்தில் வைத்து தியானிப்பார்களானால், அவர்களுக்கு, அதுவே, முடிவு இல்லாத பரமபதத்து இன்பம் ஆகும்.

(68) செங்கண்மால் – சிவந்தகண்களையுடைய திருமால்,
“குன்றெடுத்தாயர் மாதர்குரவை கொண்டொரு விளாவிற், கன்றெடுத்தெறிந்து வெய்ய காளியற் கிருதாணல்கி,
யன்றெடுத்திறுத்த வில்லேயனைய வில்விழவு காண்பான், சென்றெடுத்திறுத்து நின்ற
செங்கண்மாலெங்கள் கோவே.” – (மகாபாரதம். உத்தியோக பருவம் – களப்பலியூட்டு சருக்கம். 1)
“எங்கணான் மறைக்குந் தேவ ரறிவிற்கும் பிறர்க்கு மெட்டாச், செங்கண்மால்.” – (இராமாவதாரம், பாலகாண்டம், வேள்விப் படலம், 16),
“செயிர்தீர் செங்கட் செல்வ.” (பரிபாடல். 4-10). “செங்கட் காரி” – (பரிபாடல். 3-81) ;
சேவிப்பார் – வணங்குவார்; அந்தமில் வீட்டின்பம் – “அந்தமில் பேரின்பத்து” – (திருவாய்மொழி 10-9-11);
சிந்தைதனில் நண்ணுவரேல் – மனத்தால் நினைப்பரேல்; இன்பம் – “இன்பந் தலைப்பெய்து எங்குந்தழைத்த” – (திருவாய்மொழி 9-5-11)

————–

69-அவம்
அவர்க்காந் தெளி விசும்பி லந்தமில் பேரின்பம்
எவர்க்கேனு மித்துணிவுண் டாகில் – எவர்க்கும்
கவி வாதி சிங்கரல்லாற் காப்பார் மற் றில்லை
அவமா மற்றோர் பேசுஞ் சொல். (69)

தேசிகரைச் சிந்தித்தல், அந்த அடியார்களுக்கு, தெளிந்த ஆகாயத்தில் உள்ள முடிவு இல்லாத பெரிய இன்பம்
நல்கும் பரமபதம் ஆகும். இந்த உறுதி, யாவர்க்காயினும் தோன்றுமானால், கவிவாதி சிங்கராகிய
தேசிகரைச் சென்று சேரவேண்டும். அவர் அல்லாமல், காப்பவர் வேறு யாரும் இல்லை.
மற்றவர்கள் காப்பார் என்று சொல்லுவது எவர்க்காயிருந்தாலும் அஃது அவத்தமே. (வீணான தாகும்)

(69) தெளிவிசும்பு – பரமபதம், “தெளிவிசும்பு கடிதோடித் தீவளைத்து மின்னிலகும், ஒளிமுகில்காள்!
திருமூழிக்களத்துறையும் ஒண்சுடர்க்கு, தெளிவிசும்பு திருநாடாத்தீவினையேன் மனத் துறையும்,
துளிவார்கட்குழலார்க்கு என்தூதுரைத்தல் செப்புமினே.” – (திருவாய்மொழி 9-7-5.
தெளிவிசும்பித்யாதி – பரம பதத்திற் பண்ணும் வ்யாமோஹத்தை என்னெஞ்சிலே பண்ணி வர்த்தியா நின்றான்” – ஈடு),

“தகவிலைதகவிலையே நீ கண்ணா ! தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்காரா? சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை
மூழ்க்கச் சூழ்ந்து அதுகனவென நீங்கி யாங்கே.”- (திருவாய்மொழி 10-3-2.

“விசும்பு இத்யாதி – ஸர்வபதார்த்தங்களையும் தன்னுள்ளே வைத்துக் கொண்டிருக்குமதிறே ஆகாசமாகிறது.
அது தன்னைக்குளப்படியாக்கி, மயர்வற மதிநலம் அருளப்பெற்ற அறிவையும் விளாக்கொலை கொள்ளா நின்றதாய்த்து,
அன்றிக்கே,
விசும்பென்று – பரமபதமாய், – *தாமரைக் கண்ணாணுலகு” என்னக் கடவதிறே. ஸுகாதிசயத்துக்கு –
“விசும்பிறந்து” என்றதுக்கர்த்தாந்தரம் –
அன்றிக்கே இத்யாதி.
மோக்ஷஸுகத்தைப் பற்றவும் ஸம்ச்லேஷஸுகம் விஞ்சி யிருக்குமோ வென்ன – தாமரை இத்யாதி.
அதாவது –
அத்யந்த விஷயாஸக்தனாயிருப்பா னொருவனை மீட்கைக்காக “காம புருஷார்த்தம் அல்பாஸ்திரத்வாதி தோஷதுஷ்டம்,
மோக்ஷ ஸுகமேகாண் அநஸ்த்திரபலம்” என்ன, விஷயாஸக்தன் சொல்லுகிறான் –
“தாம் வீழ்வார் மென்றோட்டுயிலி னினிதுகொல், தாமரைக்கண்ணாணுலகு” என்று; :
தாமரைக்கண்ணா ணுலகுண்டு மோக்ஷஸுகம்; அது, தாங்களே விழுந்து ஆசைப்படும் ஸ்த்ரீகளுடைய
ம்ருதுவான தோளிலே யுறங்குகிறதிற் காட்டில் இனிது கொல்? அன்றே யென்றபடி
“தாமரைக் கண்ணாணுலகு – இனிது கொல்” என்றந்வயம்.” – சீயர் அரும்பதவுரை.

“தாம் வீழ்வார்” என்பது திருக்குறள் காமத்துப்பால் புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்துள்ள மூன்றாவது குறட்பா.
அதற்குப் பரிமேலழகர் உரை வருமாறு :- “நிரதிசயவின்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கின்னையாதல் தகாதென்ற
பாங்கற்குச் சொல்லியது. ஐம்புலன்களையு நுகர்வார்க்குத் தாம் விரும்புமகளிர் மெல்லிய தோளின்கட்டுயிலுந் துயில்போல
வருந்தாமலெய்த லாமோ அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்துஞ் செங்கண் மாலுலகம்.
ஐம்புலன்களையு நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. இப்பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான்
வருந்தவேண்டுதலின், எம்மனோர்க்காகாதென்னுங் கருத்தால் இனிது கொலென்றான். இந்திரனுலகென்றுரைப்பாருமுளர்.
தாமரைக்கண்ணானென்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃதுரையன்மை யறிக.”

ஆக – த்ரிபாதி விபூதியையும் விஞ்சி, உபயவிபூதியையும் தன்னுள்ளே யாம்படியிருக்கிற அறிவையும் மேலிடும்படியாய்த் திருக்கிறது.” – ஈடு.);
கவிவாதிசிங்க ரல்லாற் காப்பார் மற்றில்லை – “கண்ணனல்லால் இல்லை கண்டீர், அவனன்றி மற்றில்லை”. -(திருவாய்மொழி 9-1-10),
“ஆதுமில்லை மற்றவனில் என்றதுவே துணிந்து”.-(திருவாய் மொழி 9-1-11); அவம் – வீண், அவத்தம்.

———-

70-காட்டில் நிலவு
சொல்லார் சுருதி முடித் தேசிகன் றொல்புகழை
எல்லா விடத்திலு மெப்பொழுதும் – நல்லார்கள்
கோட்டிதனிற் கூட்டீரேற் கோதின் மனத் தீரும்மைக்
காட்டினில வாக்குவதே கா. (70)

நல்லவர்கள், வேதத்தை முடியில் தாங்கிய தேசிகரது பழைய புகழை எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் சொல்ல மாட்டார்கள்.
(தகுதியான இடத்தில் தக்க சமயத்தில் சொல்வார்கள்). குற்றம் இல்லாத மனத்தை உடையவர்களே!
உங்களை, அத்தகைய நல்லவர்களது கூட்டத்தில் சேர்ப்பிக்கவில்லை என்றால்,
அது காட்டில் நிலவாக உங்களை ஆக்கியது ஆகும். அந்தக் குற்றம் உங்களை விட்டு நீங்காது.

(70) சுருதி – வேதம். “புரியுறு நரம்பு மியலும் புணர்ந்து, சுருதியும் பூவுஞ் சுடருங் கூடி எரியுரு ககிலோ டாரமுங் கமழும்,
செருவேற் றானைச் செல்வநின்னடி யுறை, உரிதினி னுறைபதிச் சேர்ந்தாங்குப் பிரியா திருக்கவெஞ் சுற்றமோ டுடனே,” (பரிபாடல். 18-51-56,
“ செருவேற்றானைச்செல்வ! நின் பூசைக் கட்புரிதலுற்ற நரம்பினது ஒலியும் புலவர் பாடிய இயற்பாட்டுக்களும் பொருந்தி
வேதவொலியும் உபசாரமாகிய பூவும் தீபமுங் கூடி எரியின்கண் உருகுமகிலும் சந்தனமும் தூபமாய்க் கமழா நிற்கும்
நின் அடியின்கண் உறைதலை எமக்கு உரித்தாக உறையும் பதியைச் சேர்ந்தாற்போல எம் சுற்றத்தோடு கூடியாம் பிரியாதிருப்போமாக.”)

“சுருதிநினை விவையறியுந் துணிவுடையார் தூமொழிகள், பரிதிமதி யாசிரியர்.” – (தேசிகமாலை. அடைக்கலப்பத்து. 9),
“சொல்லுமவிடு சுருதியாம்” – (ஞானஸாரம்), “ப்ரத்யக்ஷாதிப்ரமாணங்களிற் காட்டிலும்’’வேதாச்சாஸ்திரம் பரம்நாஸ்தி’” இத்யாதிகளிற்படியே
“மற்றுள்ள சாஸ்திரங்களிற் காட்டிலும் பாரலெளகிக புருஷார்த்தததுபாயங்களை யதாவஸ்த்திதமாகக் காட்டுகிற வேதம் ப்ரதாநம்.
அதில் பராவரதத்வஹித புருஷார்த்தங்களில் அந்யதாஸித்த ப்ரமாணாந்தரங்களால் வரும் கலக்கங்களை யெல்லாம் தீர்க்கவல்ல வேதாந்தம் ப்ரதாநம்.”-
(ப்ரதாநசதகம்); நல்லார் – அறிஞர், உத்தமர். “நல்லாரைக்காண் பதுவுநன்றே – (வாக்குண்டாம் 8) ;
கோட்டி – சபை. “கோட்டியுட் கொம்பர் குவிமுலை நோக்குவோன், ஒட்டை மனவனுரமிலி யென்மரும்.” – (பரிபாடல் 12-50-51.
அவைக்கண்ணே நின்று கொம்பரொப்பாளுடைய குவிமுலையை நோக்குகின்றவன் இளநெஞ்சன், திண்மையிலனென்பாரும்.)
கூட்டு – “கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே” – (திருவாய்மொழி 4-99);
கோது – குற்றம்; நிலவு – நிலா, ஒளி, சந்திரப் பிரபை.

—————-

71-பரிவுடனே பாவித்தல்.
காரீரும் மாருயிரைக் கை குழிந்து போகாமே
பாரி ருலகியலைப் பாங்குடனே – வாரீர்
சுருதி முடித் தேசிகனைத் தூய் மனத்த ராகிப்
பரிவுடனே பாவித் திரும். (71)

மக்களே! உங்களது பெறுதற்கு அருமையான உயிர் உங்களை விட்டு, உரிமை நீங்கிப் போகாதபடி,
அதனைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். உலகத்தின் நடைமுறைச் செயலைப் பக்குவத்தோடு கவனியுங்கள்.
இங்கே வாருங்கள். சுருதிமுடித் தேசிகனாகிய ஆசாரியப் பெருமானை,
தூய்மையான மனத்தவராக நின்று அன்போடு தியானித்துக் கொண்டிருங்கள்.

(71) காரீர் – காப்பாற்றுங்கள்; ஆருயிர் – அருமையாகிய உயிர்; பாரீர் – பாருங்கள்; பாங்கு – பிரீதி, உரிமை ;
பரிவு – அன்பு, “பாகனைய சொல்லியொடு தம்பி பரிவிற் பின்போக” – (இராமாவதாரம், அகத்தியப் படலம். 56.); பாவித்து – தியாநித்து.

————-

72-சேமம்
இரும்பொழில் சூழ் தூப்புல் வருமெம் பெருமானை
அரும் பெறலாவானை மாற் றார்க்கு – விரும்புவார்க்
காரா வமுதை யனைத்துலகும் போற்றி செயும்
சீரானைச் செப்புதல் சேமம். (72)

பெரிய சோலைகள் சூழ்ந்துள்ள தூப்புல் நகரில் அவதரித்த எமது சுவாமியும், பகைவர்க்குப் பெறுவதற்கு அருமை உடையவனும்,
தன்னை ஆசைப்படுபவர்க்கு, தெவிட்டாத அமுதமாக இருப்பவனும், எல்லா உலகமும் புகழ்ந்து துதித்தலைச் செய்யும்
சிறப்பினை உடையவனுமாகிய தேசிக ஆசாரியப் பெருமானைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பது நல்வாழ்வாகும்.

(72) பெறல் – பெறுதல்; மாற்றார் – மாற்றலர், பகைவர்; விரும்புவார் – ஆசையுடையோர்;
ஆராஅமுதை – தெவிட்டாத, பரமபோக்யமான அமிருதத்தை. “ஆராவமுதே” – (திருவாய்மொழி. 5-8-1.
“ஆராவமுதே – அநுபவியா நின்றாலும் க்ரமப்ராப்தி பற்றாத விஷயத்தைப் பிரிந்தார் எங்ஙனே ஆறியிருக்கும்படி,
முற்பட தர்சநமாய், அநந்தரத்திலே அணுகி, பின்னை ஸ்பர்சமாய், இப்படியேயிறே அநுபவப்ரகாரங்கள்;
அத்தனை க்ரமம் பார்த்திருக்க வொண்ணாதபடியாயிருக்கை.
ஆராவமுதே – கடலில் உப்புச்சாறு குடிப்பார்க்கு தேவயோநியிலே பிறக்கவேணும்,
ப்ரஹ்மசர்யமனுஷ்டிக்க வேண்டிய இத்தனை பட்டால் ஸக்ருதி ஸேவ்யமாயிருக்கும்;
இது அங்ஙனன்றிக்கே ஸர்வாதி காரமுமாய், ஸதாஸேவ்யமுமாய், ப்ரஹ்மசர்யாதி வைகல்யமுண்டானவையும்
தானே பரிக்ஹரிக்கக் கடவதாயிருக்கும். உத்தர பூமியிலே லோகஸாரங்க மஹாமுநிகள் வர்த்தியாநிற்க,
இங்குத்தையானொருவன் அங்கேறச் செல்ல, “பிள்ளாய், தக்ஷிணபூமியில் விசேஷமென்?” என்று கேட்க,
“திருவாய்மொழி என்றொரு ப்ரபந்தமவதரித்து, சிஷ்டர்கள் பரிக்ரஹித்துப் போரக் கொண்டாடிக் கொடுபோகா நின்றார்கள்”என்ன,
“அதிலே உனக்குப் போவதொரு சந்தை சொல்லிக் காணாய்” என்ன,
“ஆராவமுதே” என்கிற வித்தனையும் எனக்குப்போம்” என்ன,
“நாராயணாதி நாமங்கள் கிடக்க, இங்ஙனேயுமொரு நிர்த்தேச முண்டாவதே” என்று அத்ருப்தராய்,
“இச் சொல்லு நடையாடுகிற தேசத்தேறப் போவோம்” என்று அப்போதே புறப்பட்டுப் போந்தார்.

ஆராவமுதே –“ஸஹபத்ந்யா”- ஆழங்காலிலே யிழிபவர் ஒரு கொம்பைக் கொடியைப் பிடித்து இழியுமாபோலே.
“பத்ந்யா – ஸஹ” – கிண்ணகத்திலிழிவார் தேசிகரைக் கைப்பிடித்துக் கொண்டிழியுமாபோலே,
பெருமாள் பெரிய பெருமாளை யநுபவிக்கும்போது, பிராட்டியைக் கூடக் கொண்டாயிற்றிழிவது.
“விசாலாக்ஷ்யா” – இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கலுண்டான ப்ரேமாதிசயத்தைக் கண்டு,
தன்னை யணைக்கும் போதையிற் காட்டிலும் உடம்பெல்லாம் கண்ணானபடி.”

“நாராயணமுபாகமத்” – இவர் நியதியிருக்கிறபடி, இக்கண்ணுக் கிலக்காய் ஆழங்காற் படாதே அவ்வருகு பட்டார்.
இத்தால் சொல்லிற்றாயிற்று. தான்தன்னை யநுபவிக்கும்போதும் கூட்டுத் தேடவேண்டும்படி யாயிற்று ஆராமை யிருக்கும்படி யென்கிறது.

“ஆராவமுதே” – இத்திருவாய்மொழியில் இவர்க்குண்டான ஆற்றாமைக் கெல்லாம் பீஜம் இப்பதமாயிற்று,” – ஈடு);
போற்றி – துதிக்கும், வணங்கும், “எதிர்கால வினைமுற்றாய் நீ காத்தல் செய்யென்னும் பொருளிலும்,
தொழிற் பெயர் முற்றாய் நின்று செயப்பாட்டு வினையாய்ப் போற்றப்படுவது என்னும் பொருளிலும்
வியங்கோட் பொருளிலும் வருமொரு மொழி. விரும்பி என்னும் வினையெச்சப் பொருளிலும் வரும்.”;
சீரான் – நற்குணநிதி; செப்புதல் – அநுஸந்தித்தல் சேமம் – க்ஷேமம், ரக்ஷகம், இன்பம்.

————–

—————

77-போக்குவார்
வாழ்வாரவரெங்கும் வையகத் தார் போற்றத்
தாழ்வொன்று மின்றித் தளர்ச்சியாச் – சூழ் வினைகள்
வேருடனே போக்குவரே வேதாந்த தேசிகன் பேர்
சீருடனே சிந்திப்பரேல். (77)

வேதாந்த தேசிகனது திருப் பெயரை, அதன் சிறப்போடு தியானிப்பார்களானால்,அவர், எல்லா இடத்திலும்,
உலக மக்கள் போற்றிப் புகழும் வண்ணம் வாழ்வார்கள். மேலும், அவர், குறைவு எதுவும் இல்லாமல், நெகிழ்ச்சியோடு,
தம்மைச் சூழ்ந்துள்ள தீவினைகள் அனைத்தையும் அடியோடு அழிப்பார்கள்.

(77) வையகம் – பூமி, “வையகமெல்லாங்கழனியாய்” – (விசாக. யாப்.35); வேருடனே – அடியோடே ;
” நீர்நும தென்றிவை, வேர்முதல்மாய்த்து” -(திருவாய்மொழி. 1-2-3); போக்குவர் . அழிப்பர்;
சிந்திப்பரேல் – எண்ணினால், “மற்றோன்றில்லை சுருங்கச் சொன்னோம்
மாநிலத்தெவ்வுயிர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பேயமையும்” -(திருவாய்மொழி.9-1-7.
மற்றொன்றில்லை – இத்தோடொக்க வேறு எண்ணலாவதில்லையென்னுதல், இப்போது இதீதைச் சொல்லி வேறொருபோது
வேறொன்றைச் சொல்லுகின்றா னென்றிருக்க வேண்டா வென்னுதல். சுருங்கச் சொன்னோம் –
இது தன்னைப் பரப்பறச் சொன்னோம். ப்ரதிபத்திக்கு அவிஷயமாம்படி சொல்லுகை யன்றிக்கே, ஸுக்ரஹமாகச் சொன்னோம்.
மாநிலத்து – இதுக்கு அதிகாரிகள் ஸம்ஸாரத்திலே. இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரம பதத்திலுள்ளாராகிலும்
உபதேசத்துக்கதிகாரிகள் ஸம்ஸாரத்தி லுள்ளா ரென்க: எவ்வுயிர்க்கும் – இது அதிக்ருதாதிகாரமன்று ஸர்வாதி காரம்.
சிற்றவேண்டா – ஆயாஸிக்க வேண்டா. சிற்றுதல் – சிதறுதலாய், பரக்கவேண்டா வென்கை.
ஒருவ்யாபாரம் வேண்டாவென்றபடி, சிந்திப்பேயமையும் உக்திநிரபேக்ஷமான சிந்தா மாத்திரமே யமையும்.” – ஈடு)

——-

78-அடங்குமோ
சிந்தித் தடங்குமோ செங்கமலப் பூ வுதித்த
அந்தமில் சீர் மங்கை தனக்கன்பன் – கந்த மிகு
தண்டுழாய்த் தார் மார்பன் போலத் தமர்க்கென்றும்
கொண்டல் கவி வாதி சிங்கக் கோ. (78)

செந்தாமரை மலரில் தோன்றிய, முடிவில்லாத சிறப்பினை உடைய, இலக்குமிக்கு அன்பனும்,
வாசனை நிறைந்த குளிர்ந்த திருத்துழாய் மாலை அணிந்த திருமார்பினனுமாகிய நாராயணனைப்போல்,
மேகம் போன்று அருள் மழை பொழியும், கவிவாதி சிங்கமாகிய தேசிகரது அளவு கடந்த பெருமை,
தம்முடைய பக்தர்களுக்கு எப்பொழுதும் அவர்களது சிந்தனையுள் அடங்குமா? அடங்காது.

(78) செங்கமலப் பூவுதித்த அந்தமில்சீர் மங்கை, தனக்கன்பன் -தாமரையாள் கேள்வன்,
“உனக்கேற்கும் கோலமலர்ப் பாவைக்கன்பாகிய என்னன்பேயோ” -(திருவாய்மொழி. 10-10-6.
“உனக்கேற்கும் – இவனோ பாதி வாசாவிமர்த் திக்கைக்கும் பெறாத ஸெளகுமார்யத்தையுடையவள்.
இப்படிப் பட்ட உனக்கு ஸத்ருசமான அழகையுடையளாய், புஷ்பத்தில் பரிமளத்தை வடித்து வகுத்தாற்போலே யிருக்கிற
பிராட்டிக்கு ஸ்நிக்தனானவனே! உனக்கேற்கும் கோலமென்று – அவ்வழகையிங்கே யதிதேசிக்கிறர். ந்யாயாதிதேசம் பண்ணுகிருர்,
கோல மலர்ப்பாவைக்கு அன்பா ! என்னன்பேயோ! – அவள் பக்கலன்பனென்று தோற்றியிரா நின்றது;
தம்முடைய பக்கல் அன்பென்றும் அது உடையனென்றும், தெரிக்கப் போகிறதில்லை;
ஜ்ஞாதாவை ஜ்ஞாநமென்னு மாபோலே. தத்குண ஸாரத்வாத்து தத்வ்யபதேச:” – ஈடு.
“அதிதேசிக்கிருர் — ஏறிடுகிறர். அதிதேசிப்பது ஸர்வதாஸாம்யமுண்டான விடத்திலே யன்றோ,
காளமேக நிபச்யாமமான நிறம் முதலானவற்றை ஹிரண்ய வர்ணையான இவளிடத்திலே யதிதேசிக்கக் கூடுமோவென்ன –
ந்யாயாதி தேசம் இத்யாதி. அதாவது – ஸ்வரூபாதி தேசம் பண்ணுகிறதன்று.
அவனைப் போல இவளும் அழகுடையவளென்கிற தென்றபடி, ஸ்வரூபாதிதேசமென்றும், ந்யாயாதிதேசமென்றும் இரண்டு.
ஸ்வரூபாதி தேசமாவது-ஸர்வதா ஸாம்யம் கொள்ளுகை.
ந்யாயாதி தேசமாவது – அதுபோல இதுவும் ச்லாக்யமா யிருக்கு மென்கை.” – சீயர் அரும்பதவுரை)
தமர் – அடியார் ; கொண்டல் – மேகம் ; கோ – ஸ்வாமி.

————

79-அளிப்பான்
கோவாகி வானவர்க்கு குற்றமிலாத் தொல்லருளால்
ஓவாது வேங்கடத்தி லோங்கி நின் – றாவாவென்
றெம்மை யளிப்பா னிரும் பொழில் சூழ் தூப்புல் வரு
செம்மை யுடை வாதி சிங்கத் தேவு. (79)

பெரிய சோலை சூழ்ந்த தூப்புல் நகரில் தோன்றிய நேர்மை உடைய கவிவாதி சிங்கமாகிய தேசிகத் தெய்வம்,
தேவர்களுக்குத் தலைவனாக விளங்கி, குற்றம் இல்லாத பழம்பெரும் திருவருளால், இடையீடு இல்லாது
திருவேங்கடத்தில் உயர்ந்து நின்று, “ஆ!ஆ!” என்று எங்கள்மேல் இரக்கம் கொண்டு எங்களைப் பாதுகாப்பான்.

(79) ஒவாது – ஒழியாது; ஓங்கி – உயர்ந்து, எழுந்து; செம்மை – ருஜூத்தன்மை.

——

80-திருமணி காக்கும்
தேவ ரசுரர்களுந் தேசுடைய வானவரும்
பூவுலகிற் புண்ணியரும் போற்றி செய – மூவுலகுக்
கீசனெழில் வேங்கடக்கோ னேரார் திருமணியிக்
காசினியைக் காக்குமே வந்து. (80)

மூன்று உலகுக்கும் இறைவனாக இருப்பவனும், அழகிய திருவேங்கடமலையில் வீற்றிருப்பவனுமாகிய
எம்பெருமானது அழகு நிறைந்த செல்வமணி, தேவர்களும், அசுரர்களும், ஒளி உடைய நித்திய ஸூரிகளும்,
மண்ணுலகத்தில் வாழும் புண்ணியம் செய்த நல்லோர்களும் புகழும் வண்ணம் இங்கு வந்து இந்த உலகத்தைப் பாதுகாக்கிறது.

80) மூவுலகுக்கீசன் – “நிகரில்புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை யாள்வானே.” – (திருவாய்மொழி. 6-10-10);
வேங்கடக்கோனேரார் திருமணி – “திருமலைமால் திருமணியாய்ச் சிறக்கவந்தோன்”

——————–

81-ஈசன் பிறந்தான்

கார்க்குமென்று மெம்மைக் கருக் குழியில் வீழாமே
தீர்க்கும் வினை யனைத்துஞ் சேராமே – ஏற்கும்
பெரும் புகழோ னீசன் பிறந்தான் சிறந்த
சுரும்பமருஞ் சோலை சூழ் தூப் புல். (81

நிறைந்த பெரும் புகழுடையவனான இறைவன், சிறப்புடைய வண்டுகள் அமர்ந்துள்ள சோலை சுற்றியுள்ள
தூப்புல் நகரில் தேசிகராகத் தோன்றினான். அப்படித் தோன்றி எங்களைக் கருக்குழியில் மறுபடியும் வீழாதபடி,
எல்லாக் காலத்தும் பாதுகாப்பான். மேலும், தீவினைகள் ஏதும் எங்களைச் சேராதபடி, அதனை ஒழிப்பான்.

(81) கருக் குழியில் விழாமே — “கருவிருத்தக்குழிநீத்தபின் காமக்கடுங்குழி வீழ்ந்து, ஒரு விருத்தம் புக்குழலுறுவீர்!
உயிரின்பொருள்கட்கு. ஒரு விருத்தம் புகுதாமல் குருகையர் கோனுரைத்த திருவிருத்தத்து ஓரடிகற்றீர் திருநாட்டகத்தே” – (திருவிருத்தம் தனியன்)

———

82. துன்பம் தொலையும்

தூப்புனகர் நாதன் றுலங்கொளி சேர் சேவடியே
காப்பென்னக் கன்மங் கழியுமே – மூப்பில்லா
இன்பம் பெருகுமே யிப் புவியி லெவ் வுயிர்க்கும்
துன்பமது தொலையுமே. (82)

தூப்புல் நகரில் அவதரித்த தலைவனாகிய சுவாமி தேசிகனது, விளங்குகின்ற ஒளி சேர்ந்த செம்மையான திருவடியே,
எமக்குப் பாதுகாப்பு என்று சொல்ல, அதனால், இந்த உலகத்தில் எல்லா உயிர்களுக்கும், கருமங்கள் நீங்கும்;
முதுமைத் தொல்லை இல்லாத இன்பம் வளரும்; துன்பமாகிய அதுவும் அழிந்துவிடும்.

(82) தூப்புனகர்………. காப்பு – தூப்புல் வேதாந்ததேசிகன் திருவடிகளே சரணம்; துலங்கு – பிரகாசிக்கின்ற பெருகும் – விருத்தியாகும் ;
துன்பம் வருத்தம். ‘”துன்பத்திற்கிடங் கொடேல்”- (ஆத்திசூடி); தொலையுமே நீங்குமே “துதித்திடுவோர்தங்கள் பாவந்தொலையுந்தானே.”

——-

83. சிலையால் சிதைக்கவற்றோ

தொலையாத தொல் வினைகள் சூழ் பவ வாழி
சிலையாற் சிதைக்கவற்றோ விங்கு – துலை யில்லாக்
கோதில் புக ழாரியர்கள் கூறுங் குண மிக்க
வாதி சிங்கர் மன்னருளா லன்று. (83)

ஒப்பு இல்லாத குற்றம் இல்லாத புகழை உடைய மேலோர்கள் கூறக்கூடிய குணம் மிக்க வாதிசிங்கராகிய
தேசிகரது நிலையான திருவருளால் அல்லாமல் ஒழியாத பழைய தீவினைகள் சூழ்ந்த பிறவிக்கடலை, வில்லால் அழிக்க முடியுமா? முடியாது.

(83) தொலையாத – ஒழியாத, நீங்காத; பவவாழி – ஸம்ஸார ஸாகரம், பிறவிப்பெருங்கடல் ; சிலை வில், கல்; சிதைக்க – அழிக்க;
துலை – ஒப்பு, உபமானம்; “அலையற்ற வாரமு தக்கட லக்கடலுண்டமுகில், விலையற்ற நன்மணி வெற்பு வெயினில வோங்குபக,
றுலையுற் றனவென்பர் தூமறை சூடுந் துழாய்முடியாற், கிலையொத் தனவவன்
பாதம் பணிந்தவர்க் கெண்ணுதற்கே.” -(தேசிகமாலை, அமிருதரஞ்சனி, 6.)

———

84. அருமை

மன்னருளால் வாதி சிங்க ரிங்குரைத்த நற் கலைகள்
உன்னி யுணர்ந்திட வல்லவர்கள் – துன்னுஞ்
சுருதி முடி யுட் பொருளைச் சோரா தறிவர்
அருமையா மற்றோ ரறிவு. (84)

வாதிசிங்கர் எனப் புகழப்படுகிற வேதாந்த தேசிகர், இவ்வுலகில் இயற்றி அருளிய நல்ல வைணவச் சாத்திர நூல்களை,
அவரது நிலையான திருவருளால், நினைத்து உணர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்,
நெருங்கிய வேதங்களின் முடிவாக விளக்கும் விழுப் பொருளை, மறப்பின்றி அறிந்து கொள்வார்கள்.
மற்றையோரது அறிவு, அந்த உட்புருளை அறிவது அருமையாகும்.

(84) கலைகள் – கிரந்தங்கள்; உன்னி – நினைத்து; வல்லவர் – ஸமர்த்தர். “வல்லான் வகுத்ததே வாய்க்கால்”;
துன்னும் – சேரும் ; சுருதிமுடியுட்பொருள் – “மிக்கவேதியர் வேதத்தி னுட்பொருள்.” — (கண்ணிநுண்சிறுத்தாம்பு, 9);
சோராது – மறப்பின்றி; அருமை – இன்மை. “மனக்கவலை மாற்றல் அரிது.” -(திருக்குறள். கடவுள் வாழ்த்து. 7,
“ஈண்டு அருமை இன்மை மேனின்றது” – பரிமேலழகருரை.)

————–

85. ஓதி உணராதவர்

அறிவரோ வாழ்வா ரரு மறையின் சீரை
நெறிதா னினைந்திட வல் லாரோ – சிறியராய்
வேத முடித் தேசிகன் றன் வீறுடைய நற் கலைகள்
ஓதி யுணராத வர். (85)

வேதங்களைத் தம் திருமுடியில் தரித்த தேசிகன் செய்த பெரும் சிறப்பு உடைய நல்ல வைணவச் சாத்திர நூல்களை
அனுசந்தானம் செய்து, அதன் கருத்துக்களை உணர்ந்து தெளியாதவர்கள், சிறுமைக் குணத்தினராக நின்று,
ஆழ்வார்களது அருளிச் செயலாகிய தமிழ் வேதத்தின் சிறப்பை அறிவார்களோ?
மேலும் அந்தத் தமிழ்மறை கூறும் தீதில் நன்னெறியை எண்ணுவதற்கு வல்லவரோ? இல்லை.

(85) ஆழ்வார் – மாலுகந்தவாசிரியர், எம்பெருமானுடைய திவ்ய மங்கள குண கணங்களாகிய அமுத வெள்ளத்திலே
ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவராகிய பரமபாகவதர், திருமாலின் அபிநவ தசாவதாரம் எனக்கொண்டாடப் பெறுபவர்.
“ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி”- (உபதேசரத்தினமாலை. 3); நெறி – மார்க்கம்; வீறு – உயர்ச்சி,
சிறப்பு, பெருமை, பொலிவு வெற்றி, வேறொன்றற்கில்லா வழகு.

————–

———

91-சிந்தித்தவர்

கண்டார் கரையைக் கடந்தார் பவக் கடலை
அண்டாத வார்வ மடைந்திட்டார் – வண்டாரும்
கொந்தலர்பூந் தூப்புல் வருங் குற்றமில் சீர் வாதி சிங்கர்
செந்தமிழ்நூல் சிந்தித்தவர். (91)

வண்டுகள் நிறைந்த, கொத்தாக மலர்ந்த மலர்களைக் கொண்ட, சோலை சூழ்ந்த தூப்புல் நகரில் தோன்றிய,
குற்றம் இல்லாத வாதிசிங்கராகிய தேசிகர் அருளிச் செய்த செந்தமிழ் நூலாகிய தேசிகமாலையை
நன்கு மனத்தில் வைத்துக் கொண்டவர்கள், துன்பக் கடலின் எல்லையைத் தாண்டியவராவார்.
பிறவிக் கடலைக் கடந்தவராவர். நிறைவான பக்தியை அடைந்தவராவர்.

(91) ஆர்வம் – அன்பு ; செந்தமிழ்நூல் – தேசிகமாலை,

———–

92. களித்தோம்

சிந்தித் தவர் மொழியைச் சிந்தாதே நாடோறும்
வந்தித் தவர் மலர்ப் பாதத்தை – அந்தமில் சீர்
தூப்புனகர் வந்துதித்த தூய் மறையோர் தொல்லருளால்
கோப்புடனே யாங்களித்தோ மின்று. (92)

முடிவு இல்லாத சிறப்பினை உடைய தூப்புல் நகரில் வந்து அவதரித்த தூய்மையான வேதங்களைக் கற்ற
தேசிகரது பழம்பெரும் திருவருளால் நாம் இன்று, அவர் கூறியுள்ள உபதேச மொழிகளை மனதில் சிந்தித்தும்,
அவரது தாமரை மலர் போன்ற திருவடிகளை தினம் தோறும் மனம் சிதறாமல் (ஒருமை மனத்துடன்)
வணங்கியும் (வழிபாடு செய்தும்) அடியார் கூட்டத்தோடு இன்பம் அடைந்தோம்.

(92) வந்தித்து — வணங்கி, வழிபாடுசெய்து; களித்தோம் – இன்பமடைந்தோம்.

———–

93. நாளும் நல்குவது

இன்றறிந்தோ மெந்தமக்கோ ரின்பமிலை யீதன்றி
இன்றறிந்தோ மெய்த் தவமு மீதென்றே – குன்றாத
தொல் புகழ் சேர் தூப்புல் வாழ் தூயன் மலர்ப் பதத்தை
நல்குவதே நாளும் பிற. (93)

(ஆசாரிய அடியார்களின் திருக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாழ்வதாகிய) இஃது அல்லாமல், எமக்கு இன்பம் தருவது
வேறு எதுவும் இல்லை என்று இன்று அறிந்துகொண்டோம். இதுவே உண்மையான தவமும் ஆகும் என்றும் இன்று அறிந்துகொண்டோம்.
(இந்தப் பேரின்பமே) குறையாத பழம்புகழ் நிறைந்த தூப்புல் நகரில் வாழும் தூயவனான சுவாமி தேசிகனின்
தாமரை மலர் போன்ற திருவடிகளையும், (ஆன்மீக வாழ்வுக்கு ஏற்ற) பிறவற்றையும் நாள்தோறும் கொடுக்கும்.

(93) குன்றா – குறையாத; நல்குவது – ஈவது, உண்டு பண்ணுவது.

———-

(94) சொல்பவர் பெரிது

பிறவித் துயரறும் பேரின்பஞ் சேரும்
குறை யொன்று மில்லாக் குணத்து – மறையவர்கள்
போற்று மிந்த வாதி சிங்கப் புண்ணியரை யல்லாது
தோத்திரித்துச் சொல்லா தவர்க்கு. (94)

குறை எதுவும் இல்லாத குணத்தையுடைய, வேதியர்கள் புகழக்கூடிய இந்த வாதிசிங்க நல்லவராகிய
வேதாந்த தேசிகரை அல்லாமல், வேறு யாரையும் துதிபாடிப் புகழாதவர்க்கு பிறவியினால் ஏற்படும் துன்பம் நீங்கும். பேரின்பம் வளரும்.

(94) பிறவித்துயர் – “பிறவித்துயரற ஞானத்துள் நின்று துறவிச்சுடர் விளக்கம் தலைப்பெய்வார்,
அறவனை ஆழிப்படை அந்தணனை, மறவியை யன்றி மனத்து வைப்பாரே.” – (திருவாய்மொழி 1-7-1);
குறையொன்றுமில்லா – “குறை வொன்றுமில்லாத கோவிந்தா” – (திருப்பாவை, 28); தோத்திரித்து – துதித்து.

———

95. செம்மை செய்
சொல்வது முன் னாமந் தொழுவது முன் பாத மலர்
நல்குவது முன்னுடைய நற்குணமே – தொல்லருளுக்
கெம்மையிலக் காக்கி யீனமா மெம்பரிசு
செம்மை செய் தேசிகனே யின்று. (95)

சுவாமி தேசிகனே! நாங்கள் பேசிக் கொண்டிருப்பதும் உம்முடைய திருப்பெயர்தான்;
வணங்குவதும் உம்முடைய திருவடி மலர்தான். விரும்புவதும் உம்முடைய நல்குணங்களையே.
(அதனால்) எம்மை உமது பழம்பெரும் திருவருளுக்குக் குறிக்கோளாக்கி, குறைபாடான எமது தன்மையை,
இன்று நல்ல கொடைப் பொருள் (காணிக்கை) ஆகுமாறு செய்தருளுக.

(95) தொல் – அநாதி; இலக்கு — லக்ஷ்யம் ; ஈனம் – தாழ்வு; பரிசு – வெகுமதி, விதம்

————–

96- மனம் பெற்ற விதம்

இன்றென்றன் பாக்கியமோ வேரார் வரத குரு
நன்றன தொல்லருளோ நாரணன்றன் – குன்றாத
நன்னினைவோ நானின்று வாதி சிங்கர் நல்லடியை
மன்னு மணம் பெற்றவி தம். (96)

நான், இன்றைக்கு வாதிசிங்கராகிய தேசிகரது நல்ல திருவடியைச் சேரும் மனத்தைப் பெற்றுக் கொண்ட விதம்,
இன்று எனக்குக் கிடைத்த செல்வமோ? அழகு நிறைந்த வரதாரிய குருவினது நல்ல பழம் பெரும் திருவருளோ?
நாராயணனது குறையாத நல்ல தியானமோ? (என்ன என்று சொல்வது?)

(96) பாக்கியம் — செல்வம், புண்ணியம், “பாக்கியம் புரிந்திலாப்பரதன்”-(இராமாவதாரம், அயோத்தியா காண்டம், மந்தரைசூழ்ச்சிப் படலம், 59),
“பாக்கியம்மெனக் குளதென நினைவுறும் பான்மை” – (இராமாவ தாரம், பாலகாண்டம், வேள்விப்படலம் 57. )
பொருளல்லாத என்னை நீ ஒரு பொருளாக மதித்துவந்து உன்னால் வேள்வி காக்கப்படுதற்கு ஏதுவானதொரு
நல்வினை தனக்கு யிருந்ததென்று யான் எண்ணுகின்ற அத்தன்மை);
ஏரார் வரதகுரு – “சீரா கியவர தாரியன் பாதந் துணைநமக்கே.” – (பிள்ளையந் தாதி, தனியன்)
“நயினராசாரியர் தேசிகர்குமரர், இவர்க்கு வரதாசார்யர் என்றும் பெயர்.
இவரும் தந்தையைப் போல் பலரிடத்தில் வாதஞ்செய்து திவ்யதேச யாத்திரை செய்து வருகையில் கேரளதேசம் சென்று
மடைப்பள்ளி பரிசனங்களுக்குத் தலைச்சுமையாய் கூடி க்ஷூத்ரர் ஏவியகல்லை அவர்களுக்கே திருப்பி அவர்கள் வேண்ட
அதைப்போக்கிச் சாகல்லியமல்லன் விட்ட பூதத்தைப் பல்லக்குச் சுமப்பித்துத் தாஸராசாவென்கிற பிராமணனை
ஸ்ரீவைஷ்ணவனாக்கித் தம்மிடம் வாதத்திற்கு வந்த மாயசந்நியாசியை அண்ணனைக்கொண்டு
வெல்வித்துத் தம்மை யாச்ரயித்த முதலிகளுக்குப் பாஷ்ய காலக்ஷேபாதிகளைச் செய்து 69 வருஷமிருந்து
திருநாட்டிற்கெழுந்தருளினர்.”-(அபிதான சிந்தாமணி) விதம் – வகை.
“வரதகுரு நன்றான தொல்லருளோ” என்பதால் இவ் வந்தாதி வாசிரியர் நயினாராசாரி யாரிடம் ஆச்ரயித்தவர் என்று கொள்ள இடந்தருகின்றது.

————

97. அருள்வீர்

தம்மை வணங்கினர்க் கெஞ்ஞான்றுந் தம்முடைய
தன்மை யளிக்கு மிரா மாநுசர் போல் – உம்மை
வணங்கு மடியேற்கு வாதி சிங்கரே நீர்
இணங்கும் வகை யருள் வீரின்று. (97)

தம்மை வழிபாடு செய்த அன்பர்களுக்கு, எப்பொழுதும் தமது அருளைக் கொடுக்கக் கூடிய எம்பெருமானாரைப்போல,
வாதிசிங்கராகிய தேசிகரே! உம்மை வழிபாடு செய்கின்ற அடியவனாகிய எனக்கும் இன்றைக்கு,
நீங்கள், நான் வந்து உங்களோடு சேர்ந்து கொள்ளும் முறையை அருள் செய்யுங்கள்.

(97) இராமாநுசர் — எம்பெருமானர்; தம்முடைய தன்மையளிக்கும் – “தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்.”

————

98. நீ தேவு

என்று மெனக்குநீ யீன்றெடுத்த தாய் தந்தை
நன்றளிக்கு நற் குருவு நற்கதியுங் – குன்றெடுத்த
மாயனைப் போன் மற்று மறை மகுட தேசிகனே
தூய மனத் தோர்க்கு நீ தேவு. (98)

வேதங்களை உனது திருமுடியில் கொண்ட தேசிகனே! எனக்கு நீ எப்பொழுதும் எம்மைப் பெற்றெடுத்த
தாய், தந்தையாக விளங்குகின்றாய். மேலும், நல்ல ஞானத்தைக் கொடுக்கக் கூடிய நல்ல ஆசாரியராகவும்,
நல்ல அடைக்கலப் பொருளாகவும் அமைந்துள்ளாய். அப்படிப்பட்ட நீ, தூய்மையான உள்ளத்தை உடைய
பக்தர்களுக்கு கோவர்த்தனகிரியைக் குடையாகத் தூக்கிய ஆச்சரியமான செயலைச் செய்யும்
கண்ணபிரானைப் போலத் தெய்வமாகக் காட்சி அளிக்கின்றாய்.

(98) என்றுமெனக்கு……..கதியும் – “சேலேய் கண்ணி யரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய்தந்தையு மவரே யினியாவாரே” – (திருவாய்மொழி 5-1-8);
தேவு – “தேவும் எப்பொருளும் படைக்க, பூவில் நான்முகனைப் படைத்த, தேவன் எம்பெருமானுக்கல்லால்,
பூவும் பூசனையும் தகுமே?” (திருவாய்மொழி 2-2-4 )
தேவும் எப்பொருளும் படைக்க – தேவஜாதியையும் ஸகல பதார்த்தங்களை யும் உண்டாக்குகைக்காக,
ஒரு பூவிலே நாலுபூப் பூத்தாற்போலே சதுர்முகனை யுண்டாக்கினவன். இத்தால் ஜ்ஞாநத்திற் காட்டில்
வைராக்யத்துக்கு உண்டான ப்ராதான்யம் சொல்லுகிறது. ஈடு), தெய்வம், தேவாந்தன்மை

———

99. அருளாய்

தேவ ரொடு முனிவர் தேசுடைய யோகி யரு
மேவி யடிபரவு மெய்த்தவனே – காவி மலர்க்
கண்ணார் மயக்கிற் கலங்கா வகை யருளாய்
கண்ணாளா தூப்புற் கனி. (99)

விண்ணில் உள்ள தேவர்களோடு, துறவிகள், ஒளி உடைய யோகம் செய்பவர்களும், மனம் பொருந்தி,
உனது திருவடிகளைத் துதிக்கின்ற உண்மையான தவச்செல்வனாக விளங்குபவனே!
உலகத்து உயிர்களுக்குக் கண்களாக இருந்து, ஒளி கொடுப்பவனே! தூப்புல் நகரில் உதித்து,
அடியார்களுக்குத் தித்திப்பைக் கொடுக்கும் பழமாக இருப்பவனே! நீலோற்பல மலர் போன்ற
நீல நிறக் கண்களை உடைய பெண்களது காம மயக்கத்தில் நான் கலங்கி விழாத வண்ணம் என்னைக் காத்தருள்வாய்.

(99) தேவர் — சுரர்; முனிவர் – மநநசீலர் ; யோகி – யோகமுடையவர்; மேவி – பொருந்தி; அடி – பாதம்;
பரவு — துதிக்கும்; மெய்த்தவன் – உண்மையான தவமுடையவன்; காவி – நீலோற்பலம்; கலங்கா – கலங்காத

————

100. வீறுடைத்து
கனிவாய்க் கவிவாதி சிங்கரிப் பார்க்கோர்
நுனியார் திகிரி போ னுாக்கப் – பனி போலக்
கூறாயிற் றன்றே குமதிகடங் கோது குலம்
வீறுடைத்தே வேத முடி. (100)

பழம் போன்ற சிவந்த மென்மையான வாயை உடைய கவிவாதி சிங்கராகிய வேதாந்த தேசிகர்,
இந்த உலகத்தை, ஒரு கூர்மை மிக்க சக்கரத்தைப் போன்று தள்ள,
அதனால், பிறழ்ந்த அறிவுடைய அறிவிலிகளின் மகிழ்ச்சி, பிளவுபட்டது!
ஆகவே, வேதத்தின் முடி பெரும் சிறப்புப் பெற்றது. (வேறு ஒன்றுக்கும் இல்லாத சிறப்பு வேதத்திற்குக் கிடைத்தது)

(100) நுனியார் — கூர்மைமிக்க, “பொழிலேழுமேன மொன்ருய், நுனியார் கோட்டில் வைத்தாய்!” – (திருவாய்மொழி 2-3-5)
“பொழில் இத்யாதி – தனிமையிலே வந்து உதவும் படியைச் சொல்லுகிறது அத்விதீய மஹாவராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து,
ப்ரளயங்கொண்ட புவநங்களேழையுமெடுத்து.” நுனியார்கோட்டில்வைத்தாய் – நுனியென்று – கூர்மை. ஆர்கை – மிகுதி.
கூர்மை மிக்க கோட்டிலே வைத்தாயென்றபடி இத்தால் ரக்ஷ்யவர்க்கத்தினளவல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பைச் சொல்லுகிறது.” – ஈடு);
திகிரி – சக்கரம்; நூக்க – தள்ள; கோது குலம் – கெளதுாகலம், மிக்க சந்தோஷம், “கோதுகுலமுடைய பாவாய்” – (திருப்பாவை. 8).

நிறைவு பெற்றது.

———

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் – —கண்டேன் -கண்டு கொண்டேன் –போன்றவை ஒரே பாசுரத்தில் பல காலும் உள்ள -பாசுரங்கள் –

December 11, 2021

ஸ்ரீ அருளிச் செயல்களில் –கண்டேன் -கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள்
ஞானம் தர்சன பிராப்தி -நடு நிலை -காலஷேபம் -உத்தர க்ருத்யம்
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய -அகிஞ்சநோ- அகதி — த்வம் ஏவ உபாய பூத மே பவ –
இதி பிரார்த்தனா மதி சரணாகதி ச தேவப்ஸ்மின் ப்ரயுஜ்யதாம் –ஸ்ரீ பாஞ்ச ராத்ர வசனம்

———-

பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே
பவள வாயீர் வந்து காணீரே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -1-2-1-

நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே -1-2-7-

வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே -1-2-15-

கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-

உருவு கரிய ஒளி மணி வண்ணன் புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-

எழில் கொள்மகர குழை இவை திண்ணம் இருந்தவா காணீரே செய் இழையீர் வந்து காணீரே -1-2-18-

பரமன் தன நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே -1-2-19-

கன்று இனங்கள் மறித்து திரிவான் குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20-

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன் யேடி வந்து காணாய்
ஓன்று நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள மூளையும் என் வசம் அல்லவே -3-4-4 – –

அவதார விசிஷ்டனாக சர்வேஸ்வரனை கண்ணாலே காண வேண்டும் என்று தேடித் திரிகிறார் சிலரும்
அப்படி தேடி கிறிகோள் ஆகில் அவனை உள்ளபடி கண்டார் உளர் -என்று சொல்லுகிறார் சிலருமாக கொண்டு
தம்மை இரண்டு வகையாக வகுத்து நின்று பேசி இனியர் ஆகிறார் -இத் திரு மொழியில் –

நாடுதிரேல்-என்றும் -கண்டார் உளர் -என்றும் பன்மையாக அருளிச் செய்தது
கட் கண்ணால் காண்கையில் அபேஷா ரூப ஞான வ்யக்திகளும்
உட் கண்ணால் கண்டு அதில் ஊற்றத்தாலே பாஹ்ய அனுபவமும்
சித்தித்தது என்று தோற்றும்படியான ஞான வ்யக்திகளும் பல உண்டு ஆகையாலே

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளர் தரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1 1-

நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலி சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4 1-2 –

கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச்
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4 1-3 –

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாட உறில் வம்மின் சுவடு உரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்மையே கண்டார் உளர் – 4-1 4-

நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான் முகனும் முறையால்
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திரு மாலை நாடுதிரேல்
வாரேறு கொங்கை உருப்பிணையை வலியப் பிடித்துக் கொண்டு
தேர் ஏற்றிச் சேனை நடுவே போர் செய்ய சிக்கனக் கண்டார் உளர் – 4-1 5-

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 1-6 –

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – 4-1-7- –

நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போக படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – 4-1 8-

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 1-9 –

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 11-

——–

கண்டீரே -என்று -பரம பக்தி தசையை -கேட்கிறவர்கள் பாசுரத்தாலும்
கண்டோம் -என்று-தான் பெற்ற பேற்றை – சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும் –
ஆக தான் பெற்ற பேற்றைச் சொல்லித் தலைக் கட்டுகிறது

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –-14-1-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின்மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2-

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-3-

காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-4-

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே —14-5-

தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே –14-6-

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-7-

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே —14-9-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

———

கண்டாள் கொலோ –
ஸ்ரவண ஜ்ஞானம் என்று தோற்றி இருக்கிறது இல்லை
கண்டவர்களுக்கு தெரியுமா போலே தெரியுமோ இவள் வார்த்தையை கேட்டு அறிந்த நமக்கு –
கண்டாள் கொலோ –
நெடுநாள் நோன்பு நோற்று பெற்ற தாயான முன்னே அறிந்த அம்சம் மறைக்கக் கடவதே இருக்க
என் முன்னே இப்படி வெளியிட்டுச் சொல்லும் போது
அவ்விஷயத்தில் இப்படி ஒரு சக்ருத் தர்சனம் உண்டாய் இருக்க வேணுமே –
ஒரு கால் கண்டால் பூர்வ வாசனையும் மறக்கும் படியான
வை லஷண்யம் உள்ளத்து அவ்விஷயத்துக்கே இறே
கலை இலங்கும்படியான பேச்சை உடையராய் இருப்பார் அவ் ஊரில் உள்ளார் –
அப்படியே இவள் பேச்சைக் கொண்டு-இவள் திருக் கண்ண புரத்திலே புக்கு
சௌரிப் பெருமாளை சாஷாத் கரித்தாள் ஆகாதே என்று சொல்லலாய் இரா நின்றது –
அகவாயில் ஓட்டம் எல்லாம் வார்த்தையிலே தெரியும் இறே

ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ–8-1-4-

———–

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண் ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரி கின்றனவே–5-2-2-

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-

கண்ண புரம் என்று காட்டினாள்-
பிரான் இருந்தமை காட்டினீர் -என்று அவனைக் காட்டினாள் தாயார் –
அவன் இருந்த ஊரை காட்டுகிறாள் இறே இவள் –
இது போலே காணும் சதாசார்யானில் காட்டில் சத் சிஷ்யனுக்கு உண்டான வாசி –
உனக்கு பிராப்ய பிர்ராபகங்கள் இரண்டும் ஈஸ்வரன் திருவடிகளே -என்று காட்டிக் கொடுக்கும் ஆசார்யன் –
அவ்விரண்டு அர்த்தைத்தையும் என் நெஞ்சில் பிரதிஷ்டிப்பித்த
உன் திருவடிகள் அன்றோ என் புருஷார்த்தம் -என்று இறே சச் சிஷ்யன் இருப்பது –
அதவா –
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்–
திருக் கண்ண புரத்தை காணி கோள்-அஞ்சலியைப் பண்ணி கோள்
என்று சொல்லப் புக்கு-முடியும் சொல்ல மாட்டாதே குறையும் ஹஸ்த முத்ரையாலே காட்டினாள் –
அதவா –
காணுமோ -என்கிறாள் –
இக் கண்ணால் கொள்ளும் பிரயோஜனம் திருக் கண்ண புரத்தை காண்கை அன்றோ –
இத்தை நிஷேதிப்பாரும் சிலர் உண்டாவதே -என்று-விஷண்ணை யாகிறாள் -என்றுமாம் –

கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-

கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ-
ஒரு தேச விசேஷத்திலே போனால்-சதா தர்சன நத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை
இங்கே கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் –
இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்-இவருடைய த்வரை இருக்கிற படி இறே-

நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப்
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே —8-10-9-

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் –
விரோதி போகப் பெற்ற அளவேயோ – அது போனால் பெறக் கடவ கைங்கரியத்தையும் பெற்றேன் –
வாசிகமான வடிமையும் செய்யப் பெற்றேன் –
நாம் பாடின கவியினுடைய மதிப்பு இருந்த படியாலே இது நம்மால் வந்ததாகக் கூடாது –
உள்ளே இருந்து பாடுவிக்கிறான் ஒருத்தன் உண்டு என்று அறிந்த இது கொண்டே
நீ என் ஹிருதயத்தில் இருக்கிற இருப்பை நிச்சயிக்கலாம் படி பண்ணினாய் –
கண்ண புரத்துறை யம்மானே –
இவரைப் பாடுவித்த முக்கோட்டையாய் இருந்தபடி –

—-

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–-திரு நெடும் தாண்டகம்–-21–

கண்டும் -குணம் கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கச் செய்தே –கண்டும் –என்கிறபடி -என் என்னில் –
கண் என்று உட் கண்ணாய் -ஜ்ஞான சாஷாத் காரத்தை சொல்கிறது –
அவன் பண்ணின தாழ்ச்சிகளை அனுபவித்து இருக்கச் செய்தேயும் -என்றபடி –
கண்டும்
முன்பு உன் பக்கல் கேட்டுப் போந்தேன் இத்தனை இ றே -கேட்டாப் போலே கண்டு வைத்தும்
கண்டும்
நெடுநாள் சாதனானுஷ்டானம் பண்ணி காண வேண்டிய விஷயம் அனாயாசமாக கண்ணுக்கு விஷயமாக
இருக்கச் செய்தே கிடாய் நழுவ விட்டது –
காணாத போது வெருவ ப்ராப்தமாய் இருக்க கண்டு வைத்து கலங்கினேன் –
கண்டு தெளிய கில்லீர் -என்னக் கடவது இறே –

——-

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–திருக் குறும் தாண்டகம் –1-

கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –
சுவடு அறிவிக்கும் தனையும் இறே வருத்தம் உள்ளது – பின்னை அத்தலை -இத்தலையாம் -இத்தனை –
கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –
கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் – இழந்தது கண்டால் போலே இருக்கிறது –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்ட லமந்தால் இரங்கி யொரு நாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயி றுதிக்கும் கரு மா மாணிக்கம்
நாள் நன் மலை போல் சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே–8-5-2-

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-

எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர் தனக்கும் ஆங்கு அனையாய்
செம்மடல் வரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை அடியவர் கவ்வை கண்டு உகந்து நாம் களித்து உள நலங்கூர
இம்மட உலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே –9-2-7-

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
வின்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

———

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் ——முதல் திரு வந்தாதி–99-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும்கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —இரண்டாம் திருவந்தாதி–24-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ——மூன்றாம் திருவந்தாதி—-1-

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —2-

கீழே பஞ்ச வர்ணம் -அதில் பச்சை வர்ணம் சேர்ந்து இங்கு )
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் தலம் ஹரே -என்று
பிராட்டி -தானே ஆசைப்பட்டு வந்து ஏறும்படியான மார்பு படைத்த -ஸ்ரீ யபதி

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-நான்முகன் திருவந்தாதி-86-

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – திரு விருத்தம்– 97- –

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –பெரிய திருவந்தாதி–28-

காரார் திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்றா திரி தருவான் பின்னையும்–
காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திருவேங்கடமே பேரகமே–சிறிய திருமடல்–

தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 –

இவர் நம்மோடு சஜாதீயர் அல்லர் –நம்மை உத்தரிப்பிக்க வந்தவர் என்று
அஸ்மத் ஸ்வாமியான எம்பெருமானாரை உள்ளபடி கண்டு கொண்டேன் .
(ஜென்ம கர்மம் மே திவ்யம் யோ வேத்தி தத்வதக -உண்மையாக )
இப்படி தர்சித்த அளவிலே -அவர் தம் அளவிலே -நின்று விடாதே
அவர்க்கு அநந்யார்ஹர் ஆனவர்களுடைய அழகிய திருவடிகளிலே அடிமைப்பட்டேன் –
என்னுடைய அநாதியாய் -அதிக்ரூரமான கர்மங்களை நீக்கிக் கொண்டேன் –
அவருடைய குண பூரமாகிற சமுத்ரத்தைப் பெரு விடாயர் மடுவிலே வாய் மடுத்து
பருகுமா போலே பெரிய அபிநிவேசத்தொடே இன்று புசித்து கொண்டேன்

பிரார்த்தித்து பெற வேண்டிய வடிவு அழகை ஆகஸ்மிகமாக கண்ணாரக் கண்டு கொண்டேன் –-
கண்டோம் கண்டோம்-கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும்
கண்டேன் -இத்யாதிப் படியே-மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள்
ததீயரைக் கண்டால் போலே சாஷாத் கரித்தது என்றபடி-
கண்டு கொண்டேன் எம்மிராமானுசன் தன்னை–
இவர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் அல்லர் -நம்மை உய்விப்பதற்காக விண்ணின் தலை
பரம பதத்தில் -நின்றும் மண்ணின் தலத்து உதித்தவர் என்று உள்ளபடி கண்டு கொண்டேன் -என்றபடி .
காண்டலுமே –தொண்டர் பொற்றாளில்-
கண்ட மாத்திரத்திலே -அவர் அளவோடு நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய
அழகிய திருவடிகளில் அடிமைப் பட்டு விட்டேன்

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –