ஸ்ரீ திரு நின்றவூர் திருமலை அத்தங்கி தாதாச்சார்யர் தொண்டன் அருளிச் செய்த நூற்று எட்டுத் திருப்பதி அந்தாதி —

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்–ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார்

நடு நாடு -தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திவ்ய தேசங்கள்
தொண்டை -தொண்டர்கள் நிறைந்த தேசம் -தொண்டை நில மகட்கு முக்கிய அங்கம்-

1-பதின்மர் மங்களா சாசனம் -திருவரங்கம் மட்டும்
2-தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் தவிர மற்றவர்கள் அனைவரும் மங்களா சாசனம் -திருவேங்கடமும் திருப்பாற் கடலும்
3-எண்மர் மங்களா சாசனம் -ஸ்ரீ பரமபதம்
4-எழுவர் மங்களா சாசனம் -ஸ்ரீ திருக்குடந்தை
5-அறுவர் மங்கள சாசனம் -ஸ்ரீ திருமாலிருஞ்சோலை
6-ஐவர் மங்களா சாசனம் –6 திவ்ய ஸ்தலங்கள்
7-நால்வர் மங்களா சாசனம் –5 திவ்ய ஸ்தலங்கள்
8-மூவர் -மங்களா சாசனம் –5 திவ்ய ஸ்தலங்கள்
9-இருவர் -மங்களா சாசனம் –21 திவ்ய ஸ்தலங்கள்
10-ஒருவர் மங்களா சாசனம் –61 திவ்ய ஸ்தலங்கள்

திருப்பாணாழ்வார் -3-
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -4-
பொய்கை ஆழ்வார் –6-
குலசேகரப்பெருமாள் -8-
ஆண்டாள் -11-
பூதத்தாழ்வார் -13-
பேயாழ்வார் -15-
திருமழிசைப்பிரான் -17-
பெரியாழ்வார் –19-
நம்மாழ்வார் –36-
திருமங்கை ஆழ்வார் –86-

இவற்றில்
கடல் கரை ஸ்தலங்கள் –7-
கட்டு மலையில் –6-
காவிரிக்கரையில் -12-
மலைமேல் சரிவில் உள்ளவை –13-
வடகலை திருமண் காப்பு உள்ளவை –13-

இவற்றில்
கிழக்கு – 79 திவ்ய தேசங்கள்
மேற்கு – 19 திவ்ய தேசங்கள்
வடக்கு – 3 திவ்ய தேசங்கள்
தெற்கு – 7 திவ்ய தேசங்கள்

இவற்றில்
தவழ்ந்த திருக்கோலம் -1-
சயன திருக்கோலம் -29-
வீற்று இருந்த திருக்கோலம் -19-
நின்ற திருக்கோலம் -58-

இவற்றில்
உத்யோக சயனம் -1-
தர்ப்ப சயனம் -1-
தல சயனம் -1-
புஜங்க சயனம் -20-
போக சயனம் -1-
மாணிக்க சயனம் -1-
வடபத்ர சயனம் -1-
வீர சயனம் -1-

——-

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார் -15-/திருமழிசையார் -17-/ நம்மாழ்வார் -37-/குலசேகரர் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ திருப்பாணாழ்வார் -3-/
திருமங்கை ஆழ்வார் -86-திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம் –

11-ஆழ்வார்கள் –திருவரங்கம் –
9-ஆழ்வார்கள் -திருமலையும் திருப்பாற் கடலும் –
8-ஆழ்வார்கள்–பரமபதம் –
7-ஆழ்வார்கள் –திருக்குடந்தை –
6-ஆழ்வார்கள் –திருமாலிருஞ்சோலை –
5-ஆழ்வார்கள்-6-திவ்ய தேசங்கள்
4-ஆழ்வார்கள்-3-திவ்ய தேசங்கள் –
3-ஆழ்வார்கள் -5-திவ்ய தேசங்கள் –
2-ஆழ்வார்கள்-21-திவ்ய தேசங்கள்
1–ஆழ்வார்-67-திவ்ய தேசங்கள்

ஐவர் மங்களாசாசனம் –6-திவ்ய தேசங்கள்
-1-திரு அயோத்தியை –பெரியாழ்வார் / குலசேகரர் /தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருக் கண்ணபுரம் –பெரியாழ்வார் / ஆண்டாள் / குலசேகரர் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-3-திருக் கோட்டியூர் –பூதத்தார் / பேயார் /திரு மழிசையார் / பெரியாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-4-திருத் துவாரகை –திருமழிசையார் / பெரியாழ்வார் / ஆண்டாள் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-5-திரு வடமதுரை –பெரியாழ்வார் / ஆண்டாள் / தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
திருக் கோவர்த்தனம் –பெரியாழ்வார் -10-பாசுரங்கள் / ஆண்டாள் -3-பாசுரம்
திரு விருந்தாவனம் –ஆண்டாள் -10-பாசுரங்கள்
–6-திரு வெக்கா -பொய்கையார் /-பேயார் /திரு மழிசையார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

நால்வர் மங்களா சாசனம் -3-திவ்ய தேசங்கள்
-1-திருக்குறுங்குடி –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருப்பாடகம் –பூதத்தார் / பேயார் / திருமழிசையார் / திருமங்கை ஆழ்வார்
திருவாய் -5–10–6-நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் வியாக்யானத்தால் மங்களாசாசனம் உண்டே -என்பாரும் உண்டு
-3-திருப்பேர் நகர் –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

மூவர் மங்களா சாசனம் -5-
-1-திரு அத்திகிரி –பூதத்தார் / பேயார் / திருமங்கையார்
-2-திரு வல்லிக் கேணி –பேயார் / திருமழிசையார் / திருமங்கையார்
-3-திரு ஆய்ப்பாடி –பெரியாழ்வார் / ஆண்டாள் / திருமங்கையார்
-4-திருக் கோவலூர் –பொய்கையார் -பூதத்தார் -திருமங்கையார்
-5-திரு விண்ணகர் –பேயார் / நம்மாழ்வார் / திருமங்கையார்

இருவர் மங்களா சாசனம் -20-திவ்ய தேசங்கள்
திரு அட்டபுயகரம் –பேயார் -கலியன் /திருவாலி –கலியன் -குலசேகரர் /திரு ஊரகம் -கலியன்-திருமழிசையார் /
திருக்கடிகை –பேயார் -கலியன் /திரு எவ்வுள்ளூர் –திருக் கடல் மல்லை –திரு சாளக்கிராமம் -திருச் சித்ர கூடம் –திரு தஞ்சை –
-திருத் தண் கால் –திரு நாவாய் –திரு மோகூர் திரு பதரி -திரு வல்ல வாழ் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -திரு வெள்ளறை –திரு வேளுக்கை –

பாஞ்சராத்ர பாத்மம் ஐந்து வகை பிரதிஷ்டைகளைச் சொல்லும்
1–ஸ்தாபனா -நின்ற திருக்கோலம்
2–அஸ்தாபனா -அமர்ந்த திருக்கோலம்
3–சமஸ்தாபனா –கிடந்த திருக்கோலம்
4–பரஸ்தாபனா –வாஹனங்களிலே பல திருக்கோலம் உத்சவர் அலங்காரம்
5–ப்ரதிஷ்டானா–சன்மார்ச்சையுடன் அமைப்பது –

நின்ற திருக்கோலம் -67-/ கிழக்கு நோக்கி -39-/ மேற்கு நோக்கி -12-/ தெற்கு நோக்கி -14-/ வடக்கு நோக்கி -2-
அமர்ந்த திருக்கோலம் -17-/ கிழக்கு நோக்கி -13-/ மேற்கு நோக்கி -3-/ தெற்கு நோக்கி -0-/ வடக்கு நோக்கி -1-
கிடந்த திருக்கோலம் -24-/ கிழக்கு -18-/ மேற்கு -3-/ தெற்கு -3-/ வடக்கு -0-

ஜல சயனம் / தல சயனம் / புஜங்க சயனம் -சேஷ சயனம் /உத்தியோக சயனம் /வீர சயனம் /போக சயனம் /
தர்ப்ப சயனம் /பத்ர -ஆலிலை -சயனம் /மாணிக்க சயனம் /உத்தான சயனம்

————–

பிரஸித்த அபிமான திவ்ய தேசங்கள்
1-திரு நாராயண புரம் -மேல்கோட்டை
2-ராஜ மன்னார் கோயில்
3-பூரி ஜெகன்நாத்
4-ஸ்ரீ முஷ்ணம்
5-ஸ்ரீ புஷ்கரம்
6-ஸ்ரீ ஜநார்த்தனம் -கேரளா மேற்கு கடல் கரை
7-ஸ்ரீ கூர்மம்
8-ஸ்ரீ சிங்கப்பெருமாள் கோயில்
9-அவந்தி -உஜ்ஜயினி
10-கயா க்ஷேத்ரம்
11-பிரயாகை
12-மயிலாப்பூர்
13-திரு மழிசை
14-திரு வஞ்சிக்களம்
15-திரு மண்டங்குடி
16-திருக்குறையலூர்
17-காட்டு மன்னார் கோயில்
18-பூ இருந்த வல்லி
19-ஸ்ரீ பெரும் புதூர்
20-ஸ்ரீ கூரம்
21-மழலை மங்கலம்
22-பச்சைப் பெருமாள் கோயில்
23-மதுராந்தகம் ஏரி காத்த ராமர் திருக்கோயில்
24-ஸ்ரீ குருவாயூர்
25-குணசீலம்
26-பண்டரிபுரம்
27-தொண்டனூர்
28-ஸ்ரீ ரெங்க பட்டணம்

————

நூற்று எட்டுத் திருப்பதி வெண்பா -குருகை இளைய பெருமாள் சிஷ்யர்

சோழ நாடு ஈர் இருபதாம் சொற் பாண்டி ஈர் ஒன்பதாம்
பாழி மலை நாட்டுப் பதின்மூன்றும் -வாழ் தொண்டை
நாடு இரு பத்து மூன்று வடநாடு ஆறு இரண்டு நடு நாடு இரண்டு
கடல் வீட்டோடு நூற்று எண் பதியாம் –

——–

ஸ்ரீ நூற்றெட்டுத் திருப்பதிப் போற்றி அகவல்
ஸ்ரீ ஆழ்வார் களின் மங்களாசாகனம் (பாடல்) பெற்ற
ஸ்ரீ நூற்றெட்டுத் திருப்பதிகளின் பெயர்களையும் அடக்கி 108 அடிகள் கொண்ட ஒர் அகவல் பா –
இதில் ஆறு அபிமான ஸ்தலங்களை குறிப்பிடுகிறார்

இந்நூலின் ஆசிரியர் -ஸ்ரீ முத்து ஸ்வாமி ஐயங்கார் -ஸ்ரீ ராகவ ஐயங்காரின் திருத்தந்தையார் –
108 திருப்பதிப்பாடல்கள் என்று ஸ்ரீ ராகவ ஐயங்கார் அருளிச் செய்த 8 வெண்பாக்களும் உண்டு

—————

இங்கு ஒவ்வொரு திருப்பதியைப் பற்றியும்
வழி பட்டோர்
தீர்த்தம்
விமானம்
பிராட்டி திருநாமம்
திரை
கோலம்
திருமால்
திருப்பதி ஆகிய எட்டு விஷயங்களும் உண்டு
இதில் 72 வைத்து பாடலாக திரு நாராயண புரமும் உண்டு

——-

காப்புச் செய்யுள்

பேறு பெற்றோர் புஷ்கரணி விமானம் பிராட்டி திசை
வீறு உயர் கோலம் திருமால் திருப்பதி மிக்க தொரு
நூறுடன் எட்டு முறையே இசைக்க நுவல் பொருநல்
ஆறுடையான் குருகூருடையான் பொன்னடி அரணே –1-குருகைப்பிரான்

——–

பரகாலன் பாசக்கயத்து ஆர்ப்புணாகா அருள் பார் என அம்
பர காலனாம் திருமால் அவன் கண் படாமையினிம்
பரகாலன் அன்றி யவர்க்கு உரித்தாள் உன்னைப்பற்றினம் சீர்ப்
பரகால நான்மறை ஆறு அங்கம் ஓதும் மெய்ப்பா வலனே —

அம்பர காலனாம் திருமால் -உலகு அளந்த -விண்ணை அளந்த பாதத்தை உடைய திருமால்
இம்பா அ காலன் அன்றி அவர்க்கு உரித்தாள் உன்னைப் பற்றினம்

———-

எதிரா சனன மரணங்கள் என்பது இனிப்புவில்
எதிரா சனக சநந்தனாதி எவர்க்கும் மெய்
எதிராசன் அங்கனாய் வாழ் இங்கு எழுபத்து நால்வருக்கு அருள்
எதிராசன் பொன்னடியார் அடியார் அடி எய்தினர்க்கே –எதிராசர்

—————

நூல் பயன்
பரமபதம் திருப்பாற் கடல் பாஸ்கரன் பற்றும் அன்பர்
அரவனந் தாங்க மட்டாங்க நடுவிதையத் தினித்த
சுரர் பரவத் தெற்கு இருந்து துயின்று நின்றாடும் செய்யாள்
வரதன் அம் தாள் கொண்டு அதில் நூற்று எட்ட ஓத வரும் கதியே —

—————

திருவரங்கம்
சீதரனே யயன் விபீடணன் தர்மன் சிவன் பரவித்
தீதல புன்னைச் சசி வாவி வேத ஸ்ருங்கம் திகழ்
ஒதரு மானத்து அரங்க மின்னூடு தெற்கு ஓர்ந்து துயில்
மாதவன் அரங்கத்து அரங்கர் சொல் வரன் அருளே –

தர்மன் -தர்ம வர்மன்
புன்னை தலவிருஷம்
சசி வாவி -சந்த்ர புஷ்கரணி
வேத ஸ்ருங்கம் திகழ் ஒதரு மானம் -வேத ஸ்ருங்கம் எனும் ப்ரணவாக்ருதி விமானம்
அரங்கமின் -ஸ்ரீ ரெங்க நாச்சியார் -ஸ்ரீ பெரிய பிராட்டியார்
சேவை சாதிக்கும் திக்கு -தெற்கு
சயனத் திருக்கோலம்

எட்டு ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரங்களில் முதன்மையானது ஸ்ரீமந் நாரயணன், அரங்கனாய் அருளும் திருவரங்கம்.
(மற்றவை – ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி எனும் திருவேங்கடம், முக்திநாத், திருநைமிசாரண்யம்,
தோதாத்திரி எனும் வானமாமலை, புஷ்கரம் மற்றும் பத்ரிநாத்).

எம்பெருமான் பள்ளி கொண்ட திருக்கோலத்தினையே தனது பெயராகக் தாங்கி, ” திருச் சீரங்கன் பள்ளி ” என அழைக்கப்பட்டது.
பின்னர் அதுவே நாளடைவில் மருவி “திருச்சிராப்பள்ளி” என்றானது

ஏழு மதில்களும் ஏழு உலகங்களின் பெயர்களையே தாங்கி நிற்கின்றன.
இவற்றை தன்னுள் அடக்கி காட்சி தருகின்றது 8 – வது திருச்சுற்று.
இச் சுற்றில்தான் ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமான ராயர் கோபுரம் எனும் தெற்கு கோபுரம் பிரதான நுழைவு வாயிலாக நம்மை வரவேற்கின்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் -13 நிலைகள், 13 கலசங்கள் கொண்ட, 236 அடி உயர மிகப் பிரம்மாண்டமான இக் கோபுரம்,
மன்னர் கிருஷ்ண தேவ ராயரால் ஆரம்பிக்கப்பட்டது. எனவே இது “ராயர் கோபுரம்” என்றும் அழைக்கப்படுகின்றது.
ஆசியாவிலேயெ மிக உயரமான கோவில் கோபுரம் என்ற பெருமையுடைய இக் கோபுரம் பல இன்னல்களை தாண்டி,
ஆந்திர அஹோபில மடத்தின் 41 வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகளின் பெரும் முயற்சியால் 1987 – ல் நிறைவடைந்தது.

ஸ்ரீரங்கத்தின் ஏழு திருமதில்களும் – 7 வது திருமதிலின் பெயர் பூலோகமாகும்.
இதற்கு ராஜ வீதி, சித்திர வீதி, மாட வீதி எனப் பல பெயர்கள் உண்டு.
இங்கு ் கண்ணன் சந்நதயும், ஆஞ்சனேயர் திருக்கோவிலும், வானமாலை மண்டபமும் காணப்படுகின்றன.
7 மதிகளை உள்ளடக்கிய 8 வது சுற்றுக்கு “அடயவளைத்தான் சுற்று” என்று பெயர்.
2 வது திருமதிலின் பெயர் “புவர்லோகம்”. இச் சுற்று திருவிக்கிரமன் திருவீதி என்றும் அழைக்கப்படுகின்றது.
பெருமாள் திருவாகனங்கள் உலாப் போகும் இதற்கு உத்திர வீதி என்ற பெயரும் உண்டு.
ஸ்ரீமான் இராமானுஜர் தங்கியிருந்து ஸ்ரீரங்கத்தை நிர்வகித்ததும், மணவாள மாமுனிகள் தன் அவதார ரகசியத்தை
உத்தம நம்பி எனும் தன் சீடருக்கு காட்டியருளியதும் இங்குதான்.
அஹோபில மடமும், யானை கட்டும் மண்டபமும் இங்கேயே உள்ளன.

ஸூவர்லோகம் என்பது 3 வது திருமதில். நான்முகன் கோட்டை வாசல், அகளங்க சோழன் கட்டியதால்
அகளங்கன் சுற்று என்றும் அழைக்கப்படகிறது. தாயார் சந்நதியும்,, ஆண்டாள் சந்நதியும்,
அழகிய மேட்டு சிங்கர் எனும் நரசிங்கப் பெருமாள் சந்நதியும், எட்டு கரங்களுடன் வரப்பிரசாதியாய் காட்சி தரும் சக்கரத்தாழ்வார் சந்நதியும்,
பேரழகு வாய்ந்த வேணு கோபால கிருஷ்ணர் சந்நதியும், வசந்த மண்டபமும் இத் திருச்சுற்றிலேயே அமைந்துள்ளன.

கம்பர் பெருமான் தன் இராமாயணத்தை அரங்கேற்றிய கம்பர் மண்டபம் தாயார் சந்நதியின் எதிரே அமைந்துள்ளது.
இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில்தான் வைகுண்ட ஏகாதசியன்று துவங்கும் திருவாய்மொழித் திருநாள் உற்சவம் நடைபெறும்.
அரையர் சேவையும் இங்கிருந்தே துவங்கும். இராமானுஜரின் “தானான திருமேனி” உள்ளதும் இங்குதான்.
அரங்கனுக்கு மலர் கைங்கர்யம் செய்திட்ட தொண்டரடிப்பொடியார், பிள்ளை லோகாச்சார்யார், திருப்பாணார்,
கூரத்தாழ்வார் போன்றோரது சந்நதிகளும் இத் திருச்சுற்றிலேயே அமைந்துள்ளன.

“திரு அந்திக் காப்பு” நடைபெறுவதும் இவ்விடமே. பெருமாள் வீதி் உளா முடித்து வந்ததும்,
சிறு குடத்தின் மீது கிண்னம் ஒனறு வைத்து, அச் சிறியதொரு கீன்ணத்தில் நெய்யிட்டு திருவிளக்கேற்றி
அரங்கனுக்கு திருஷ்டி கழிக்கும் நிகழ்வே திரு அந்திக் காப்பு எனும் விஷேஷ நிகழ்வு.
ஸ்ரீரங்க விலாச மண்டபம் அமைந்துள்ளது் இத் திருசுற்றிலேயே.

நடுநாயகமாய் விளங்கும் மஹர்லோகம் எனும் 4 வது சுற்று. இதனை கட்டுவித்த திருமங்கையாரின் பெயர் தாங்கி
“திருமங்கை மன்னன் சுற்று” என்று அழைக்கப்படுகின்றது. ஆலிநாடன் வீதி என்ற பெயரும் உண்டு.
இதன் நுழை வாயிலுக்கு கார்த்திகை கோபுர வாசல் என்று பெயர். அரங்கனை தன் இருகைகள் கூப்பித் தொழுதவாறு,
மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி அருளும் 20 அடி உயர கருடாழ்வாரின் சந்நதி இத் திருச்சுற்றிலேயே அமைந்திருக்கின்றது.

கருட சந்நிதியின் எதிரில் அமைந்துள்ள பரமன் மண்டபச் சிற்பங்கள் கலை நுணுக்கம் வாய்ந்தவை.
முதலாழ்வார்கள் மூவர், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் திருக்கச்சி நம்பிகள் சந்நதிகளும்,
வேறெங்கும் காண இயலாத தன்வந்திரி ப்கவான் சந்நதியும், சந்திர புஷ்கரணியும் அமைந்துள்ளது
இத் திருச்சுற்றின் தனிப் பெரும் சிறப்புகள். சொர்க்க வாசல் திறக்கப்டுவதும் இவ்விடமே.
திருக்கோவில் பிரசாத விற்பனையும் இங்குதான் நடைபெறுகிறது.

ஜநோலோகம் என்பது 5 வது திருச்சுற்றின் பெயர். முன்னொரு சமயம் ஆரியர்கள் எனும் வட நாட்டு அந்தணர்கள்
இத் திரு வாயிலை காவல் புரிந்து வந்ததால் இதற்கு ஆர்யபடவாசல், குலசேகரன் திருச்சுற்று எனறும் அழைக்கப்படுகின்றது.
விஜய நகர மன்னர்களால் உருவாக்கப்பட்ட, 108 தங்கத் தகடுகள் பதித்த கொடிமரமும், உள் கோடை மண்டபமும்,
பரமபத வாசலும் இங்கேயே அமைந்துள்ளன. ஊஞ்சள் உற்சவம் நடைபேறுவதும் இவ்விடமே.

தபோலோகம் என்பது 6 வது திருச்சுற்றின் பெயர். மன்னன் ராஜ மகேந்திர சோழனால் கட்டப்பட்டதால்
இதற்கு ராஜ மகேந்திரன் திருச்சுற்று என்ற பெயரும் உண்டு. இதன் நுழைவாயிலுக்கு “நாழிகேட்டான் வாசல்” என்ரு பெயர்.
இங்கு துலுக்க நாச்சியார் சந்நதி, சேனை முதலியார் சந்நதி, கண்ணாடி அறை, திருப்பரிவட்டாரங்கள் வைக்கும் அறை,
யாக சாலைகள் போன்றவை அமைந்துள்ளன. இங்குள்ள கிளி மண்டபம் திருமங்கையாரால் கட்டப்பட்டது.

கற்பூர படியேத்தம் எனும் ஒரு விசேஷ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியன்று
இச் சுற்றிலேயே நடைபெறும். ஒரு சமயம் இந் நிகழ்ச்சியை காண வேண்டி விஜய ரங்க சொக்கநாதர் தன் குடும்பத்துடன் வர,
அதற்குள் வைபவம் நிறைவுற்றது. தவறாது இதனை காண வேண்டும் என்ற பேராவலில் விஜயரங்க நாயக்கர்
இங்கேயே ஓராண்டு காலம் தங்கியிருந்து அடுத்த ஆண்டு இந் நிகழ்ச்சியை கண்டுகளிததே தன் நாடு திரும்பினார்..

சத்தியலோகம் எனும் முதலாம் திருச்சுற்றை உண்டாக்கியது சோழ மன்னன் தர்ம வர்மன்.
இதன் நுழை வாயிலுக்கு திரு அணுக்கன் திருவாசல் என்று பெயர். கருவறை எனும் மூலவர் சந்நதியில்,
பேரழகுடன் சத்தியலோக பெருமாள் ஆதிஷேஷ அனந்தனின் மீது சயனித்திருப்பது இங்குதான்.
கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு ரங்க மண்டபம் என்று் பெயர்.
இங்குள்ள 24 தூண்களும் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களாய் கொண்டு வணங்கப்படுகின்றது.

ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, வேறெங்கும் காண இயலாத வண்னம் தன் இரு புறமும் சுக்கிரீவனையும்,
அங்கதனையும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் 20 அடி உயர கருடாழ்வார்,
உடையவர் ஸ்ரீமான் ராமானுஜர் சந்நதிகள் இச் சுற்றல் உள்ளன. மூலவரை தரிசித்த பின்னர் தரிசிக்க வேண்டிய
“ப்ரணவாக்ருதி விமானம்”, அதில் தெற்கில் அமைந்துள்ள “பரவாஸுதேவர் தங்க விக்ரஹம்” போன்றவை ஸ்ரீரங்கத்தின் சிறப்புகள்.

அழகிய சிங்க பெருமாள் அங்கீகரித்த கம்ப ராமாயணம் – கம்பர் பெருமான் தனது கம்ப ராமாயணத்தை இவ்விடமே இயற்றினார்.
கம்பர் மணடபம் தாயார் சந்நதிக்கருகே அமைந்துள்ளது.
கம்பர் தனது ராமாயணத்தில் ஹிரண்யணை வதம் செய்த வரலாற்றை விளக்குகின்றார்.
அது சமயம் இங்கிருந்த பல சமய வல்லுனர்கள் ராமாயணத்தில் ஹிரண்ய சம்ஹாரம் வருவதால்,
இவ்விடம் ராமாயண அரங்கேற்றத்தினை ஏற்கமாட்டோம் என மறுதலித்தனர்.
அவ்வாறயின் எம்பெருமான் முன்பு இக் காவியத்தை அரங்கேற்றுவோம்.
எம்பெருமான் ஏற்றுக்கொண்டால் நாம் அனைவரும் இதனை ஏற்போம்” எனக் கூறி கம்பர் பெருமான்
தனது ராமாயணத்தினை இத் திருக்கோவிலில் அரங்கேற்ற, அது சமயம் சந்நதியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள
அழகிய சிங்க பெருமாள் ” கம்பரின் ராமாயண காவியத்தினை யாம் அங்கீகரித்தோம் ” என
சிம்ம கர்ஜனையுடம் பெரு முழக்கம் செய்து ஏற்றுக் கொண்டார்..

ஆழ்வார்களும், ஸ்ரீரங்கமும் – ஆழ்வார்களுக்கும் , ஸ்ரீரங்கத்திற்குமான பிணைப்பு மிக தாத்பரியமானது.
பங்குனி மாத திருவிழாக்களின் பொழுது, அரங்கன் உறையூர் சென்று கமலவல்லியை மணம் புரிந்ததை அறிந்த
ஸ்ரீரங்கத்து பிராட்டியார் அவனுடன் பிணக்கு கொண்டு தவடைப்பார். அது சமயம் நம்மாழ்வார் இருவரையும் சமாதானம் செய்திடுவார்.
இந் நிகழ்ச்சி ப்ரணய கலஹம் என திருவரங்க பங்குனி மாத உற்சவங்களில் கொண்டாடப்படுகிறது.

திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு திருமதில் எழுப்பினார். திருநறையூர் சாரநாதன் மீது திருமடல் பாடினார்.
தமக்கு மதில் எழுப்பியதால் மகிழ்ந்த அரங்கன், திருமங்கையாரை அழைத்து தீர்த்தம், சடாரி, மாலை, பரிவட்டம் போன்றன தந்து
“எமக்கும் மடல் உரைக்கலாகாதோ ” என்று கேட்டார். அதற்கு திருமங்கையாரோ “மதில் இங்கே மடல் அங்கே ” என்றாராம்.

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கத்தில் அரங்கனுக்காக சிறு நந்தவனம் ஒன்றமைத்து அனுதினமும் அரங்கனுக்கு பூமாலை சாற்றி வந்தார்.
திருமங்கையார் கோவிலுக்கு திரு மதில் எழுப்பிக் கொண்டிருந்த சமயம் அது. இடையில் நந்தவனம் குறுக்கிட,,
அதனை ஒதுக்கி விட்டு மதில் எழுப்பலானார். மகிழ்ந்த தொண்டரடியார் தனது மலர் கொய்யும் ஆயுதத்திற்கு,
திருமங்கையின் பெயர்களில் ஒன்றான “அருள்மாரி” எனப் பெயரிட்டு நன்றி கூர்ந்தார்

பெரியாழ்வார் அரங்கனுக்கு தன் பெண்ணையே கொடுத்தார். திருமங்கையார் திருமதில் கொடுத்தார்.
தொண்டரடிப்பொடியாரோ தினம் தினம் மலர் கொடுத்தார். திருப்பாணர் அவன்தன் திருவடி கலந்தார்.
மதுரகவியார், அரங்கனுக்காக அவன் விரும்பியவாறு நம்மாழ்வாரை இவ்விடம் கொணர்ந்தார்.
நம்மாழ்வார் பெருமானுக்கும், பிராட்டிக்கும் ஆண்டுதோறும் சமாதானம் செய்கின்றார்.
என்னே அரங்கனின் மாண்பும், ஆழ்வார்களின் பிணைப்பும்.

திருவரங்கத்தில் அனைத்தும் பெரியவைகளே – திருக்கோவில் மிகப் பெரிது.
அதனாலேயே பெரியகோவில் ஆயிற்று. 20 அடி உயர கருடாழ்வார் மிகப் பிரம்மாண்டம். 7 மதில்களும் சுற்றி அமைந்துள்ள தூண்களும் பெரியன.
அரங்கன் பெரிய பெருமாள். தாயார் பெரிய பிராட்டி. இங்கிருந்த நம்பிகள் பெரிய நம்பி.
இங்கு சமர்ப்பிக்கும் தளிகை பெரிய தளிகை. வாத்யம் பெரிய மேளம். பக்ஷசணங்கள் பெரிய திருப்பணியாரங்கள்.
பெண் கொடுத்தவர் பெரியாழ்வார்.

இரு புறம் ஓடும் நதிகளான காவிரியும், கொள்ளிடமும் பெரிய நதிகள்.
ஆழ்வார்களின் மங்களாசாசனங்கள் பெரிய மங்களாசாசனங்கள். 11 ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற பாசுரங்கள் 247.
ராயர் கோபுரம் எனும் தெற்கு கோபுரம் 13 நிலைகள், 13 கலசங்கள் கொண்ட 236 அடி உயர ஆசியாவின் மிக உயரமான கோபுரம்.
மூலவரை தரிசித்து வெளி வந்த பின்னர் தரிசிக்க வேண்டிய “ப்ரணவாக்ருதி விமானமும்”
அதில் தெற்கில் அமைந்துள்ள “பரவாஸுதேவர் விக்ரஹமும்” ஸ்ரீரங்கத்தின் தனிப் பெறும் சிறப்புகள்

————-

அருள் குலசேரன் தொழா விவன் மன் முன்னர்ச் சித்துய்ந்த
பெருக்க மதாம் புஷ்கரணி நதியும் பிறங்கு மணி
வருக்கங் கொள் சோபன மானத் தவ்வூர் வல்லி மன் வடக்காயத்
திருப்பாணர் தொன்று உறையூர் நின்ற நம்பி என் சிந்தையனே –2-திரு உறையூர் -திருக்கோழியூர்

பேறு பெற்றோர் -ரவி தர்மராசன்
குடமுருட்டி நதி புஷ்கரணி
பிறங்கு மணி வருக்கங் கொள் சோபன மானம் -பிரகாசிக்கின்ற மணிகள் பொருந்திய கல்யாண விமானம்
பிராட்டி -அவ்வூர் வல்லி -உறையூர் வல்லி
கோலம் -நின்ற திருக்கோலம்
எம்பெருமான் -நின்ற நம்பி
திருப்பாண் ஆழ்வார் திரு அவதார ஸ்தலம் –

————-

சிந்தை செய்து இன்பம் பராசரன் மார்கண்டன் றேர்ந்து இரவி
விந்தை செய் தீர்த்தத்தன் வேதாலையவன் விமானத்தினில்
இந்து நுதல் செங்கமலையோடு தெற்கு இருந்து அருளும்
எந்தை நல் தஞ்சை அழகிய சிங்கரை எண்ணு நெஞ்சே –3-திருத் தஞ்சை மா மணித்தலம்

பராசர முனிவரும் மார்கண்டேயரும் பேறு பெற்ற இடம்
தீர்த்தம் -ஸூர்ய புஷ்கரணி
விமானம் -வேத சுந்தர விமானம்
இந்து நுதல் செங்கமலை -செங்கமல வல்லி பிராட்டி
தெற்கு
வீற்று இருந்த திருக்கோலம்
நரஸிம்ஹன் -அழகிய சிங்கர்
தஞ்சாசுரனைக் கொன்ற இடம் –

——–

எண்ணம் பல என் கொல் வான்மீகர் மெய்த்தவம் எய்து அன்பு
வண்ண மெய்த்தீர்த்தம் படிந்துயர் கேத்தி மானத்து எழில்
நண்ணும் அழகிய வல்லியுடன் குண திக்கில் துயில்
அண்ணலை அன்பில் வடி வழகா எனிலாம் கதியே –4-திரு அன்பில்

வால்மீகி முனிவருக்கு அருள் பாலித்தது
அன்பு வண்ண மெய்த்தீர்த்தம்
தாரக விமானம்
அழகிய வல்லி நாச்சியார்
கிழக்கு
சயனத் திருக்கோலம்
வடிவு அழகிய நம்பி –

————

கதி பெறுவான் முன் கதம்ப முனிவன் கதம்பத் தரு
விதியப் பெயர் புனலாடி யுத்தியோக விமானம் தனில்
துதி செய் யொரு வரம் தேவியோடு கிழக்கில் துயிலும்
நிதியக் கரம்பையில் உத்தம என்பவர் நின்மலரே –5- திருக் கரம்பனூர்-உத்தமர் கோயில்

கதம்ப மகரிஷிக்கு அருள் புரிந்த ஸ்தலம்
உத்தமர் கோயில் என்றும் வளக்கப் படும்
தல விருட்ஷம் -கதம்ப தரு
கதம்ப தீர்த்தம்
உத்யோக விமானம்
அழகிய தேவி பிராட்டி
கிழக்கு
சயனத் திருக்கோலம்
நிதியக் கரம்பை -செல்வ வளம் பொருந்திய தேசம்
எம்பெருமான் -புருஷோத்தமன் –

————–

நின்மல மாற்க்ண்டேயன் புவி மங்கை நிமிக்கு அருளும்
மன் மேய் குசலவ தீர்த்தன் பதும விமானத்து ஒளிர்
பொன் மலர்ச் செல்வியுடன் கீழ்த் திசை நின்ற புண்டரீக
நன் மலர்க் கண்ணனை வெள்ளறையில் கண்டு நாடுமினே –6- திரு வெள்ளறை

வெண்மையான பாறைகளால் இயன்ற மலை -ஸ்வேதாத்ரி
மார்க்கண்டேயர் பூ தேவி நிமி -சிபி சக்ரவர்த்தி
குசலவ தீர்த்தம் -இங்கு குச சக்ர புஷ்கல பத்ம வராஹ மணி கர்ணிகா தீர்த்தங்கள் உள்ளன என்பர்
பதும விமானம்
பங்கயச் செல்வி பிராட்டி
கிழக்கே நின்ற திருக்கோலம்
புண்டரீக நன் மலர்க் கண்ணன்- புண்டரீகாக்ஷப் பெருமாள் –

————-

நாடிய சீதை மணாளன் உயர் கழு நாதற்கு அருள்
நீடு கிருத தீர வாவியன் சோபன நேர் இருப்பில்
ஏடலராளோடு மண்டங்குடி கிழக்கே ஏய்ந்து துயில்
கூடும் வல் வில் ராமன் புள்ளம் பூதங்குடிக்கு அரசே –7-திரு புள்ளம் பூதங்குடி

ஜடாயு மோக்ஷ ஸ்தலம்
கிருத–கிருத்ர – தீர்த்தம்
சோபன விமானம் -நேர் இருப்பு விமானம்
பொற்றாமரையாள் பிராட்டி
கிழக்கு திசை
சயனத் திருக்கோலம்
கோல வல் வில் ராமன்

———–

அரைசனு பரிசர வசனி கொள் பராசரனும்
திரை செறி யிந்த்ர நீராடி யிந்த்ரச் சின கரத்தில்
உரை செய் கமலையுடன் மேல் திசைக் கண் உறங்கு அரங்கன்
விரை செய் பொழில் திருப்பேரினுள் உற்றார் அதை மேவு நெஞ்சே –8-திருப்பேர் நகர் -அப்பக் குடத்தான் -கோயிலடி

கல்லணைக்கு கிழக்கே 5 மைல் தொலைவில் காவேரி வடகரையில் உள்ளது
பேறு பெற்றவர்கள் -இந்திரனும் பராசரரும்
இந்த்ர தீர்த்தம்
இந்த்ர விமானம்
கமலவல்லி பிராட்டியார்
மேற்கு திசை
சயனக் கோலம்
அப்பால ரெங்கன்
உபரிசரன் -ஆகாய சஞ்சாரிகள்
அரைசனு பரிசர வசனி கொள் -உபரிசர அரசனி கொள் அரசன் -ஆகாசத்தில் சஞ்சரிக்கும் மேகத்தை
வாகனமாகக் கொண்ட அரசன் இந்த்ரன்
திரு மழிசைப் பிரான் நம்மாழ்வார் பெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார் நால்வரால் மங்களா சாசனம் –

——————-

மேவித் தொழும் புவி மங்கைக்கு அருள் முகில் வெங்கதிரோன்
வாவிப் புனலிடை மூழ்கிப் பிரணவ மானம் தனில்
வூறிற்று வரங்கத்தான் கிழக்கில் பொருந்தத் துயில்
ஆவிக்கு அமுதம் தொல் ஆதனூர் ஆண்டு அளப்பான் தன்னையே -9-ஆதனூர்

ஆ -காமதேனுக்கு ப்ரத்யக்ஷம்-ஆகவே ஆதன் ஊர் –
பேறு பெற்றவர் -பூமா தேவி காமதேனு
தீர்த்தான் -வெங்கதிரோன் வாவி
ஸூர்ய புஷ்கரணி
பிரணவ விமானம்
ஸ்ரீ ரெங்க நாயகி பிராட்டி
கிழக்கு
சயன திருக்கோலம்
ஆண்டு அளக்கும் ஐயன் -பூமியை ஆண்டு பூமியை அளக்கும் பிரான்

————-

தன்னைத் தனக்கு இணையாம் பிரகலாதன் தனக்கு அருள்வோன்
மன்னப் புனிதன் பெயர் நீர்க் கருட விமானம் தனில்
மின்னில் பொலி செங்கமலையன் கீழ்த் திசை மேவி நின்றான்
உன்னிப் பன்னா மருவி யப்பன் தேரழுந்தூர் அப்பனே —-10–திரு அழுந்தூர்

பேறு பெற்றோர் -பிரகலாதன்
அப் புனிதன் பெயர் நீர் -பிரகலாதன் தீர்த்தம்
கருட விமானம்
செங்கமல வல்லி பிராட்டியார்
ஆ மருவி அப்பன்
உபரி சரவஸூ தேர் அழுந்தியதால் வந்த பெயர்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
ஆ மருவி மேய்த்த அரண்கள் என்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
திருமங்கை ஆழ்வார் -அடியார்க்கு ஆ ஆ என்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற தேவாதி தேவன் –
கம்ப நாட்டாழ்வார் அவதார ஸ்தலம் –

———–

ஊரும் வியாக்ர முனி கல்விய முனிக்கு உண்மை தந்தோன்
வாரும் அநந்தப் புனலொடு நந்தன் வர்த்தகத்தில்
சேரும் திரு மா மகளோடு தெற்கு வாழ் நன் புயங்கண்
ணாருஞ் சிறு புலியூர் அருள் மா கடலாம் சரணே –11–திருச் சிறு புலியூர்

கொல்லுமாங்குடிக்கு அருகில் ஒரு மைல் தூரம்
பேறு பெற்றோர் -வ்யாக்ர பாதர் -புலிக்கால் முனிவரும் -வியமுனி என்னும் வியாச முனிவரும்
அநந்த ஸரஸ்
நந்த வர்த்தன விமானம்
திரு மா மகள் நாச்சியார்
தெற்கு
சயனத் திருக்கோலம்
அருள் மாக்கடல் பெருமாள்
புயம் கண் ஆகும்-புஜத்தில் கையில் தலையை வைத்துக் கண் வளரும் –

————-

சரண் புகு காவிரிக்கு இன்பம் தரு மெய்யன் சார நதி
யரண் பெரும் சார விமானத்தில் சார வணங்கினொடு
நிரந்தரம் கீழ்த் திசை நின்று ஒளிர் சாரப்பிரான் மதலைப்
பரம்பரனைத் திருச் சேறையில் கண்டு பணிந்து உய்மினே –12–திருச்சேறை –

பஞ்ச சார க்ஷேத்ரம் -பெருமாள் நாச்சியார் விமானம் தீர்த்தம் நிலம் –
சார நாதன் -சார நாயகி -சார விமானம் -சார புஷ்கரணி-சார க்ஷேத்ரம்
கிழக்கு
நின்ற திருக்கோலம் –
காவேரி தவம் செய்து உயர்ந்த ஸ்தலம்

———

உய்ய நினைவுடையீர் சந்த்ரன் பணிந்து உய்ந்தவவன்
துய்ய பெயர்ப் புனலாடிச் சுடர் மணி மானத்தருள்
செய்யும் தலைச் சங்க நாயகியான் குண திக்கில் நின்ற
வையன் தலைச் சங்க நாண் மதியத்தின் அடைமின்களே –13– திருச்சங்க நாண் மதியம் -தலைச்சங்காடு

ஆக்கூர் -2 மைல் தூரம்
பேறு பெற்றோர் -சந்த்ரன்
சந்த்ர புஷ்கரணி
சந்த்ர விமானம்
தலைச்சங்க நாச்சியார் -செங்கமல பிராட்டியார்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
நாண் மதியப் பெருமாள் -வெண் சுடர்ப் பெருமாள்
மதியானம் -நண் பகல் கதிரோன்
பாஞ்ச ஜன்யத்தை ஏந்திய நாண் மதியப் பெருமாள் ஆதலால் தலைச் சங்க நாண் மதியம் -திருப்பெயர் அமைந்தது –

—————-

அடைந்த ஐம்புலந் தவஞ் செய் யேம மா முனி யன்றருளே
கிடைத்துய்யு மேமப் புனலோன் வைதீகக் கிழக்கு இருப்பை ப்
படைத்திடும் கோமள வல்லியன் சாரங்க பாணி துயில்
உடைத் தண் குடந்தையில் ஆராவமுதனை உன்னு நெஞ்சே –14-

அடைந்த ஐம்புலந் தவஞ் செய் யேம மா முனி-ஐம்புலன் அடைத்து தவஞ் செய் யேம மா முனி–ஹேம மகரிஷி
தீர்த்தம் -காவேரி நதி
ஏமம் -பொன் -ஏமப் புனலோன்-பொற்றாமரைக் குளம்
வைதிக விமானம்
கோமள வல்லித்தாயார்
சாரங்க பாணிப் பெருமாள்
ஆராவமுதன்
கிழக்கு நோக்கி சந்நிதி
சயனத் திருக்கோலம்
பூதத்தாழ்வார் -பேயாழ்வார் -திரு மழிசைப்பிரான்-நம்மாழ்வார் – -பெரியாழ்வார் -ஆண்டாள் –
திருமங்கை ஆழ்வார் -எழுவராலும் -51- பாசுரங்கள் மங்களா சாசனம்

———

நெஞ்சம் குளிர்ந்து அரவங் கைக் கபாலத்தை நீக்கும் எழில்
செஞ்சுங் கபாலப் புனலோன் தன் சந்த்ரச் சினகரத்தில்
எஞ்சிற் செழும் கமலையுடன் கிழக்கே எய்ந்து இருந்தான்
உஞ்சரன் சாபம் அறுத்தான் திருக்கண்டியூர் முகிலே –15–திருக்கண்டியூர்

ருத்ரன் பூஜித்து கபாலம் நீங்கப் பெற்றான்
கபால தீர்த்தம்
சந்த்ர விமானம்
எஞ்சில் -குறைவற்ற -கமல வல்லி பிராட்டியார்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
ஹர சாப விமோசனப் பெருமாள்
உஞ்சு -அரன் -உய்யும் படி –

———-

முகிலே அருள் எனும் மார்கண்டயன் பிருகுக்கு முன்னாள்
மகிழ்வோடு அருளும் அகோராத்ரிப் புனல் விட்டுவத்தின்
திகழ்வாய பூ மகளாரக் குண திசை சேர்ந்து நின்றான்
புகழாரும் விண்ணகர் ஒப்பிலி யப்பன் என் புந்தியனே –16-

உருவத்திலும் வள்ளன்மையிலும் முகில் போன்றவன்
மார்க்கண்டேயர் பிருகு மஹரிஷிகள்
அகோராத்ரி புஷ்கரணி
வட்டுவத்தின் -வட்ட வடிவமான விமானம்
பூமி தேவி
ஒப்பிலி அப்பன்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
திருவேங்கடமாகவே பிரார்த்தனா ஸ்தலம் –

———

புந்தி மிகும் துண்டக முனிவன் கண்வன் போற்று நித்திய
கந்த நல் நீரன் உயர் உட்பலா வதகத்தினிடைச்
சுந்தர வப்புர வல்லியன் கீழ்த் திசை தோய்ந்து நின்ற
எந்தை கணபுரம் சேர் ஸுவ்ரி ராயரை ஏத்து நெஞ்சே –17–திருக்கண்ண புரம்

நன்னிலத்தில் இருந்து 4.5 மைல் தூரம்
துண்டக முனிவரும் கண்வ முனிவரும் பேறு பெற்றனர்
நன்னீர் -நித்ய புஷ்கரணி
கந்த நன்னீரான் -வாசனை பொருந்திய தடாகத்தான்
உட்பலா வதக –உத்பலா வதக -விமானம்
அப்புர வல்லி -திருக்கண புர வல்லி நாச்சியார்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
சவுரி ராஜப்பெருமாள்
நம்மாழ்வார் குலசேகரப்பெருமாள் பெரியாழ்வார் ஆண்டாள் திருமங்கை ஆழ்வார் -மங்களா சாசனம் –

———–

ஏற்றிப் பணிமின் கலியன் யாரும் தமிழ்க்கு இன்பமருள்
சாற்ற லிலாக் கனி வாவி விமான ஒண் சஞ்சனத்தின்
மேல் திசை அங்கு அமுதில் பிறந்தாளோடும் வீற்று இருந்து அங்கு
ஆற்றலருள் மணவாளனே கன் வயலாலியானே — 19-திருவாலி —

திருமகள் எம்பெருமானை ஆலிங்கனம் செய்ததால்-திரு ஆலி
அருகில் வேத ராஜ புரம் -வாள் வழியால் மந்த்ரம் பெற்றார் -வேடு பறி உத்சவம் பிரசித்தம்
அலாதனி புஷ்கரணி
எண் சஞ்சன விமானம் -அஷ்டாக்ஷர விமானம்
அம்ருதத்தில் பிறந்த அம்ருத கூட வல்லித் தாயார்
மேற்கு
வீற்று இருந்த திருக்கோலம்
வயலாலி மணவாளப் பெருமாள்
குலசேகரப்பெருமாள் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம்

——————–

ஆல மருவுமொரு நாகராசனுக்கு அன்று அருளும்
மால் உயர் சாந்த தடத்தோன் பொற் சுந்தர மானம் தன்னில்
நூலிடைச் சுந்தர வல்லியன் கீழ் கடனோக்கி நின்ற
காலழகன் திரு நாகை அழகனைக் கண்டு உய்மினே –19–திரு நாகை

சார புஷ்கரணி
ஸுந்தர்ய விமானம்
சுந்தர வல்லித் தாயார்
கிழக்கே உள்ள கடலை நோக்கி சந்நிதி
நின்ற திருக்கோலம்
ஸுந்தர்ய ராஜப்பெருமாள்

———–

மின்னிடை மேதமுனிகனிக் கூமை விளம்பச் செய்தோன்
மன்னெழில் வாவி யதுஞ் சீனிவாச விமானஞ்சிளக்
கன்ன வடிவழகி வாசுதேவனை யாதியவாந்
துன்ன நின்றான் நறையூர் வடிவார் நம்பி தொன்மையனே –20- திரு நறையூர் -நாச்சியார் கோயில்

நறு மணம் மிக்க ஸ்தலம் -ஸூ கந்த கிரி
மேதாளி முனிவரின் கன்னிகையை பலி கவர்ந்து செல்ல -அவனை சபித்து அருள் செய்தமை
எழில் வானி தீர்த்தம்
ஸ்ரீ நிவாஸ விமானம்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
அன்ன வடிவழகி நாச்சியார் – வஞ்சுள வல்லித் தாயார்
வடிவார் நம்பி பெருமாள்

———

தொன்மை பிரானிமி நந்திக்கு முன் வரும் தூய நந்தி
மென்மைத் தடத்தன் அநந்த விமானத்தன் மேல் திசையாய்
மின்மைக்கண் சங்க வல்லிக்கு ஈசன் விண்ணகர் ஈசன் துயில்
புன்மைத் தவிர்க்கும் சகந்நாத நந்தி புரப்பரனே –21- ஸ்ரீ நந்தி புர விண்ணகரம் –நாதன் கோயில்

நிமி என்னும் ஸூர்ய குலத்தரசனும் நந்தி தேவனும்
நந்தி மென்மைத் தடத்தன் – நந்தி தீர்த்தம் –
அநந்த விமானம் -மந்தார விமானம் என்பர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
திசை -மேற்கு
சயனத் திருக்கோலம்
சங்கவல்லி நாச்சியார் -செண்பக வல்லி நாச்சியார்
மின் -ஒளி பொருந்திய -மைக்கண் -மை யுண்ட கண நாதன் -ஜெகந்நாதப்பெருமாள் -நாத நாதன் –

————-

புரந்து ஆள் எனும் இந்து முன் உய்ந்திடும் இந்து புஷ்கரணி
வரம் தான் அருளும் வேதாமோத மானத்தின் வன் குண பால்
சரம் தாழ் குழல் புண்டரீகயன் வீர சயனமுற்ற
திரந்தான் மருவினிய மைந்தன் இந்தளூர்ச் சின்மயனே –22-திரு இந்தளூர்

சந்திரன் பூசித்து சாபம் தீரப் பெற்றான்
ஸூ கந்த வனம்
இந்து -சந்த்ர -புஷ்கரணி
வேத ஆமோத விமானம்
புண்டரீக வல்லி நாச்சியார்
கிழக்கு
சயனத் திருக்கோலம்
மருவினிய மைந்தன் -பரிமள ரங்கன்

————

மயங்காத கண்ணுவர் உம்பர்க்கும் இன்பம் வழங்க வையோன்
வியன் காணும் புண்டரீகத் தடம் சாற்று விகவிருப்பின்
நயம் காண் எழில் புண்டரீக ஐயன் கீழ்த் திசை நண்ணித் துயில்
அயன் கோவிந்தன் தில்லைச் சித்ரகூடத்து அரும் பொருளே –23

கண்ணுவ மகரிஷியும் தேவர்களும்
புண்டரீக தீர்த்தம்
சாத்விக விமானம்
புண்டரீக வல்லித்தாயார்
கிழக்கு
சயனத்திருக்கோலம்
தில்லை -எள்ளுக்காடு – வனத்தின் நடுவில் –
கோவிந்த ராஜப்பெருமாள்
குலசேகரர் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் –

———-

அரும் தவம் செய்யப்பட கோண முனிக்கு அருளை யன் சங்கம்
வரும் சக்கரத் தடத்தோன் புட்கலா வத்தம் வன் கிழக்காய்
பெரும் திரு மட்ட விழும் குழலாள் உரம் பெற்று நின்று
விரும்பும் தாடாளன் தன் சீ ராம விண்ணகர் மெய்ப்பொருளே –24-

அட்ட கோணி முனிக்கு அருள் செய்த இடம்
அவ்வப்போது சங்கம் வெளித் தோன்றும் சக்கர புஷ்கரணி
புஷ்கலா வர்த்தக விமானம்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
பெரும் மட்டவிழும் குழலாள் நாச்சியார்

————

மெய்த்தவம் செய் நந்தகற்கு ஒரு மூன்று எனும் வீடு தந்தோன்
மொய்த்து ஒளிர் சக்கர நீர் சுத்த சத்துவ மூதிருப்பில்
செய்த்தடம் தாமரை மேல் இருந்தான் குண திக்கு நின்றான்
கொய்த்துளவோன் வையம் காத்த பெம்மான் திருக்கூடல் மன்னே –25–திருக்கூடல் –ஆடுதுறைப்பெருமாள் கோயில்

நந்தக முனிக்கு அருள்
சக்கர தீர்த்தம்
சுத்த சத்துவ விமானம்
பத்மாஸநித் தாயார்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
துளவ மாலை அணிந்த வையம் காத்த பெருமாள்
பஞ்சாயுதம் ஏந்திய திருக்கோலம் என்பர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் –

————-

கூடல் அழிக்கும் விழியாளைக் கூடும் கொல் கோதமற்கு
வீடு அருளும் தண் சவுனத் தடமும் விமானம் கிழக்
காடு அருள் சீரூப் பலா வதகத்தின் அரவிந்தை பால்
நீடு அருளா நின்ற மேகர் கணங்குடி நித்தர் அன்றே –26– திருக்கண்ணங்குடி

கூடல் அழிக்கும் விழியாள் -தான் இழைத்த கூடலைத் தனது கண்ணீரைக் கொண்டே அழிக்கும் விழியாள் –

கௌதம முனிவருக்கு அருள்
சவுனத்தடம் தீர்த்தம்
உத்பல விமானம்
கிழக்கு நோக்கி சந்நிதி
நின்ற திருக்கோலம்
அரவிந்த வல்லித்தாயார்
மேக ஸ்யாமள மேனிப்பெருமாள்
கூடல் அழித்த அகத்துறைப்பாடல் இது –
உறங்காப்புளி –ஊராக்கிணறு–காயா மகிழ் -தீரா வழக்கு -திருக் கண்ணங்குடி

———

நித்தன் வருண நெறி மார்கண்டேயனும் ரோமசனும்
கத்தும் தெரிசைப் புனல் உப்பலா வதகத்தில் உயர்
புத்தமுதே அன்ன அபிஷேக வல்லி மன் பூர்வ நின்ற
பத்தர்களாவிப் பெம்மான் கணமங்கை பரஞ்சுடரே –27– திருக்கண்ண மங்கை

வருணன் மார்க்கண்டேயன் ரோமேசன்
கத்தும் நித்தன் -இவர்கள் ஸ்துதிக்கும் நித்தன்
தெரிசைப்புனல் – தர்சன புஷ்கரணி
உத்பல விமானம்
அபிஷேக வல்லித்தாயார்
கிழக்கு நோக்கி சந்நிதி
நின்ற திருக்கோலம்
பக்தராவிப்பெருமாள் -பக்த வத்சலன்
தாயார் சந்நிதியில் தேவர்கள் தேன் கூடு வடிவில் நித்தியமாக சேவித்துக் கொண்டு இருக்கிறார்கள் –

—————

சுடரைக் கனி என்று பாய்ந்தவன் முன் வரும் தூயன் துயர்
விடவ கெசேந்த்ர தீர்த்தன வேதாங்க விமானம் தன்னில்
கடன் மின்னொடு குண பால் பொன்னி ஆற்றங்கரைக் கிடக்கும்
படரக் கவித்தலத் தானையைக் காத்த பராபரனே –28–திருக்கவித்தலம்

திருவடிக்கு அருளியதால் இப்பெயர்
கஜேந்திர புஷ்கரணி
வேதாங்க விமானம்
கடல் மின்னொடு -திருப்பாற்கடல் -அமுத்தினில் தோன்றிய பெண்ணமுதம்
கிழக்கு நோக்கி சயன திருக்கோலம்
ரமாமணி வல்லித்தாயார்
கஜேந்திர வரதப் பெருமாள்
திருமழிசைப் பிரான் மங்களா சாசனம் –

—————–

பராசரன் இந்திரன் சுக்கிரன் வேதன் பணிய வரும்
கிரேத யுகன் சுக்கிர தீர்த்தன் புட் பலத்தில் கிழக்காய்
விராவு மரகத வல்லியுடன் துயில் கோல வில்லின்
ராமன் தனை வெள்ளியங்குடியில் கண்டு இறைஞ்சுமினே –29–திருவெள்ளியங்குடி

பராசரர் இந்திரன் சுக்ரன் ப்ரம்மா
சுக்கிர தீர்த்தம்
புருகலா வர்த்தக விமானம்
கிழக்கு
சயனத் திருக்கோலம்
மரகத வல்லித் தாயார்
கோல வில்லி ராமன்
பார்க்கவ புரி -சுக்ராச்சார்யருக்கு ப்ரத்யக்ஷம் –

————–

இறைஞ்சிக் கசேந்திரன் இந்திரன் ஏகாதச ருத்ரிரர்
திறம் செப்பு ருத்திர வாவி விமானம் திகழ் ப்ரணவத்து
அறம் செய் கொழும் புண்டரீகையன் கீழ் நின்றான் அக்கரியான்
நறும் செய்த தண்ணாம்கை மணி மாடக் கோயில் நந்தா விளக்கே — 30–திரு மணி மாடக் கோயில் –

திரு மணி மாடக் கோயில் -அழகிய உபரிகை திருமாளிகைகள் நிறைந்த திருக்கோயில் என்றவாறு
ருத்ர புஷ்கரணி
பிரணவ விமானம்
புண்டரீக வல்லித்தாயார்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
நந்தா விளக்குப் பெருமாள் –

————

விளங்குத் தவம் செய் மதங்கனும் சேது நல வேந்தனும் உய்
வளம் கொள் இலக்குமி வாவியன் சத்தியா வர்த்தகத்தின்
கிளர்ந்து ஒளிர் வைகுந்த வல்லி தன்னூடு கிழக்கு இருந்த
களங்கமில் வைகுண்ட விண்ணகர் தாமரைக்கண்ணன் எந்தையே –31–திரு வைகுந்த விண்ணகர்

இலக்குமி தீர்த்தம்
சத்தியா வர்த்திக விமானம்
வைகுந்த வல்லித்தாயார்
ஸ்ரீ வைகுண்டம் போலவே -கிழக்கு நோக்கி வீற்று இருந்த திருக்கோலம்
வைகுந்த நாதப் பெருமாள் -தாமரைக் கண்ணுடைய பிரான்

—————

எந்தை எனக்குக் குரு தெய்வம் நீ என்று எழில் மதங்கன்
சிந்தை செய் தேற்று மமுதப் புனலுச்ச சிங்கத்து எழில்
விந்தை யமுத கடவல்லி மேல் திசை வீற்று இருக்க
வந்த அரிமேய விண்ணூர்க் குடமாடும் வன் கூத்தன் என்றே –32– ஸ்ரீ அரிமேய விண்ணகரம்

நீயே என் நற் குரு தெய்வம் என்று தியானித்து வழி பட்ட மதங்கன்
அமுதப்புனல் தீர்த்தம்
உச்ச ஸ்ருங்க விமானம் –சிங்கம் ஸ்ருங்கம் மருவி
அமுத கட வல்லித் தாயார்
மேல் திசை நோக்கி வீற்று இருந்த திருக்கோலம்
குடமாடு கூத்த பெருமாள் –

—————-

என்றும் அழிவில் மறை இந்து உவணனுக்கு இன்பு அளித்தோன்
மன்று இந்து வாவிப் பிரசவ நாப விமானத்து ஒளிர்
துன்றும் திரு மா மகளுடன் கீழ்த்திசை தோய்ந்து நின்றான்
நல் இன்பர் உள் எம்பிரான் மணிக்கூடத்து நாயகனே –33– திருமணிக்கூடம்

மன்று இந்து வாவிப் பிரசவ-பொருந்திய தேன் சிந்தும் சந்த்ர புஷ்கரணி
நாப விமானம் -சாம்பூ நதம் என்னும் பொன்னால் செய்த கனக விமானம்
திருமா மகள் நாச்சியார்
கீழ்த் திசை நின்ற திருக்கோலம்
மணிக்கூட நாயகப்பெருமாள் –

————

நாய் அடியேன் உய்யக் கொண்டான் வசிட்டர்க்கு நன்கு அளித்தோன்
தூய் அத்தி வாவி யுடையோன் விமான சுப கரத்தில்
ஏய பைந்தோகை யுடன் மேல் திசையில் இசைந்து நின்றோன்
மாய மணாள திருத் தேவனார் தொகை மாதவனே –34–திருத்தேவனார் தொகை

தூய அத்தி தீர்த்தம்
சோபன விமானம்
பைந் தோகைப் பிராட்டியார்
மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
மாதவப்பெருமாள்

இந்நூலின் ஆசிரியர் தம்மையும் உய்யக் கொண்ட தெய்வ நாயகப் பெருமாள் இவரே என்கிறார் –

————

மாதவம் செய் யுபமன்ய முனிக்கு அருள் மாரி செழும்
சீத நற் பாற் கடல் வாவி விமானச் சஞ்சீவனத்தின்
தீதறு தேவி தன்னூர் பேர் ஒன்றால் அக்குண திக்கில் நின்றான்
ஒதரன் சாபம் தவிர்ந்து அருள் வண் புருடோத்தமனே –35–திரு வண் புருஷோத்தமம்

தீர்த்தம் -திருப்பாற் கடல்
சஞ்சீவி விமானம்
தேவி புருஷோத்தம நாயகி
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
புருஷோத்தமப் பெருமாள்
அரன் சாபம் தீர்த்த பெருமாள்

திருவரங்கம் திருவேங்கடம் திருக்குடந்தை திருமாலிருஞ்சோலை திருத்துவாரகை போல்
முக்கியமான திவ்ய க்ஷேத்ரம் என்பார் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் –

————-

உத்தமனாம் த்ரி நேத்ரிரற்கி ராகவன் ஒண் மகத்தில்
சித்திய தாம்பரன் நித்ய வாவி திகழ் கனகச்
சுத்த விமானம் மலராள் குண திசை தோய்ந்து நின்ற
அத்தன் உயர் செம் பொன் செய் கோயில் பேர் அருளாளன் அன்றே –36–திருச் செம் பொன் செய் கோயில்

சிவன் யாகம் செய்து பேறு பெற்றான்
நித்ய புஷ்கரணி
கனக விமானம்
அல்லி மா மலர் நாச்சியார் -மலராள்
கிழக்கு சந்நிதி -நின்ற திருக்கோலம்
பேர் அருளாளப் பெருமாள்

—————

ஆளும் பிரான் திரு மாதோடு அனந்தற்கு அருள் புரிந்தோன்
நீளும் அனந்த சரஸ் ஒன்றேய் அப்பெயர் நேர் இருப்பில்
நாளும் கிழக்கு முகம் செங்கமலையை நண்ணித் துயில்
தாள் உந்தி கைச் செங்கண் மால் தெற்றி யம்பலத்து தற் பரனே –37-

அநந்த புஷ்கரணி
செங்கண் மால் விமானம்
கிழக்கு
சயனத் திருக்கோலம்
தாள் உந்தி கை கண் அனைத்தும் சிகப்பு நிறம்
தெற்றி -திண்ணை -மேட்டிடமாக அமைந்த மன்றம்

————-

தற் பரனே என்று அரி மித்ரன் சேனைத் தலைவர் தொழும்
சிற் பரன் ஏமப் புனலோன் உத்துங்கச் சினகரத்தின்
அற்பின் மடவரன் மங்கையுடன் கிழக்கு ஆர்ந்து நின்ற
பொற் புயர் காவளம் பாடி நம் கண்ணல் புராதனனே –38- திருக் கவளம்பாடி

அரிமித்ரன் -சிவன் -ருத்ரனுக்கும் சேனைமுதலியாருக்கும் ப்ரத்யக்ஷம்
ஏமப் பொய்கை
உத்துங்க விமானம்
மடவர மங்கை நாச்சியார்
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
கண்ணன் பெருமாள்

———–

தனது எனாப் பாகும் சுவேத மன்னற் கவச் சாவகலத்
துனி யறுத்தாளும் ஸ்வேதத் தடந்தத்து வச்சோதி தனில்
இனி திருமா மகள் இன்புறக் கீழ் திசை ஏய்த்து நின்ற
நனி திரு வெள்ளக்குளத்து அண்ணல் நீடருள் நாரணனே –39- திரு வெள்ளக்குளம் -அண்ணன் கோவில் –

தனதன் -குபேரன் -குபேட்டானுக்கு ஒப்பான சுவேத மன்னனுக்கு அருள்
அவச்சாவு அகல வழி பட்டான்
துனி -துன்பம்
ஸ்வேதத் தடம் -திரு வெள்ளக்குள தீர்த்தம்
தத்துவ விமானம்
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
நாராயணப் பெருமாள்

—————

நாரணன் ஆரணம் பற் குணன் பன்னொரு நம்பருக்கு அருள
பூரணன் கங்கைப்புனல் நாரணாக்கிய புகழ் இருப்பின்
காரணன் தாமரையாள் கேள்வன் மேற்கில் களித்து இருந்தான்
பார் அணங்கில் புகழ் சேர் பார்த்தன் பள்ளிப் பரம் பரனே –40-

சங்க தீர்த்தம்
நாராயண விமானம்
தாமரை நாயகி நாச்சியார்
நாராயணப் பெருமாள்
மேற்கு -நின்ற திருக்கோலம் –

——————————————–

பர மன்னிய யமனொடு மலயத்துவச பாண்டியனும்
வரமுற நூபுர நன்னதி சந்த்ர விமானம் ஸுந்
தர வல்லி ஸூந்தரத்தோன் கீழ்த் திசை நின்ற தாள் அழகன்
சுரர் பரவும் சந்தனத்தரு மாலிருஞ்சோலை மன்னே –41- திருமாலிருஞ்சோலை –

சிலம்பாறு தீர்த்தம்
சந்த்ர விமானம்
ஸுந்தர்ய வல்லித் தாயார்
சுந்தரர் -அழகர்
கிழக்கு -நின்ற திருக்கோலம் –
பெரியாழ்வார் திருப்பல்லாண்டு அருளிச் செய்த ஸ்தலம் கூடல் அழகருக்கும் இங்குள்ள அழகருக்கும் –

———-

இருக்கோர் கதம்ப முனிக்கு தெய்வ வீர்ந் தடத்தோன்
மருக்கேழ் அட்டாங்க விமானம் தனில் திரு மா மகளோடு
அருள் கீழ் திசை துயில் வைகுந்த நாதன் அரவணையான்
திருக்கோட்டியூர் சொக்க நாரணன் என் சச்சி தாநந்தனே –42- திருக்கோட்டியூர்

கதம்ப முனிக்கு அருள்
தெய்வ புஷ்கரணி
அஷ்டாங்க விமானம்
திரு மா மகள் நாச்சியார்
கிழக்கு
சயனத் திருக்கோலம்
சொக்க நாராயணப் பெருமாள்
நான்கு தளங்கள் -கீழ் சயனம் -அடுத்து நின்றும் இருந்தும் நடனம் ஆடியும் – கிருஷ்ணன் சேவை –
தேவர்கள் கோஷ்டியாக வந்து ஆலோசனை பண்ணிய ஸ்தலம்
திருக் கோஷ்ட்டியூர் நம்பிக்கும் ராமானுஜருக்கு சந்நிதி உண்டே –

——–

ஆனந்தமாம் சத்திய தேவதைக்கு அநந்தற்கும் அருள்
ஈனம் தவிர சத்தியப் புனல் சத்திய வோர் இருப்பில்
வானம் தனில் உய்ய வந்தாளுடன் தென் திசைக் கண் வளர்
கானம் பலாத் திரு மெய்ய மெய்யன் மெய்க்கதி நமக்கே –43-திரு மெய்யம் —

சத்திய தீர்த்தம்
சத்திய கிரி விமானம்
உய்ய வந்த நாச்சியார்
பலா விருட்ச்சம்
தெற்கு நோக்கி சயனம்
மெய்யப்பன் -சத்ய மூர்த்திப் பெருமாள் –

—————-

மெய்யன் சமுத்ரன் புல்லவனுக்கு அருள் வேந்த சுவம்
மையறு சக்கர நீர் புண்டரீக விமானத்து அருள்
செய்ய ஒண் பூவில் இருந்தாளுடன் குண திக்கு இருந்த
தெய்வச் சிலையனைப் புல்லாணி நாதனைச் சேர்ந்து உய்மினே–44 –திருப்புல்லாணி

புல்லவன் -புல்லாரண்ய ரிஷிக்கும் சமுத்திர ராஜனுக்கும் அஸ்வத்த நாராயணனுக்கும் பேறு
சக்கர தீர்த்தம் -மையறு -குற்றம் தீர்க்கும் –
புண்டரீக விமானம்
பூவில் இருந்த நாச்சியார்
கிழக்கு
இருந்த திருக்கோலம்
தெய்வச் சிலையன் பெருமாள்
தர்ப்ப சயனப் பெருமாள்

———–

சேர்ந்து ஓதும் தேவர் எவர்க்கும் திருவருள் செய்து இலங்கும்
ஈர்ந்தாள் நல் தாமரைப் பாற்கடல் வாவியோடு ஒண் கிழக்காய்
ஆர்ந்து ஓங்கி கேதகி மானத்த வூர் வல்லி யார நின்ற
தேர்ந்தோர் உறை திரு மோகூர் மை மேகர் தம் சேவடியே –45–திரு மோகூர் –ஸ்ரீ மோஹன புரம்

அயன் ருத்ரன் தேவர்கள் அனைவருக்கும் பேறு
திரு மோகூர் வல்லித் தாயார்
ஷீராப்தி புஷ்கரணி -பாற்கடல் வாவி
கேதகி விமானம்
கிழக்கு நின்ற திருக்கோலம்
மை மேகர்-காள மேகப்பெருமாள்
மோகம் பக்தியை அருளுமூர்

—————

சேவடி நண்ணும் புலிச் சந்த்ர வல்லவன் சித்தி பெற்ற
பாவ விநாசத் தடம் தேவ சந்திரப் பம்பிருப்பில்
நால்வர் மின்னார் குண நின்ற தண் கால் எந்தை நன்கு அறியார்
தேவரும் தேவர் பிரானும் அயனும் சிவனும் அன்றே –46– திருத் தண்கால் —

பேறு பெற்றோர் -பலி -ஸ்ரீ வல்லபன் -சந்திரன்
பாவ விநாசத் தடம்
தேவ சந்த்ர விமானம்
நான்கு பிராட்டிமார்கள் -அன்ன நாயகி -அநந்த நாயகி -அம்ருத நாயகி -ஜாம்ப வல்லித் தாயார்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
திருத்தண் கால் அப்பன் –
பூதத்தாழ்வார் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் –

————–

சிவ வாக்கியற்குப் பரத்வம் தேற்றிய செல்வ நம்பி
தவ வம்பரீடன் சனகாதியார்க்கு அருள் சக்கர நீர்
திவன் குண பாலில் அட்டாங்க விமானம் திகழ் மதுரை
யவளோடு இருந்த மதுரை யம் கூடல் அழகு அண்ணலே –47– திருக்கூடல்

சக்கர தீர்த்தம்
அஷ்டாங்க விமானம்
மதுர வல்லித் தாயார்
கூடல் அழகர்
கிழக்கு
வீற்று இருந்த திருக்கோலம்
திவன் -பரமபதத்தன்
தாழ்விலாப் பாடல் அழகார் புதுவை பட்டர் பிரான் கொண்டாடும் கூடல் அழகர்
அஷ்டாங்க விமானம் மேல் எழுந்து அருளி இருக்கும் வையந் தாய பெருமாள் -பெரியாழ்வாரும் அருளியவர் –

————

அண்ணல் எனும் பட்டர் கோன் தவ மண்டூகற்க்கு ஆர்ந்து அருள்வோன்
வண்ண மகிழ் முக்குளத்தோன் பொற் சஞ்சன மானம் தன்னில்
தண்ணலர் கோதையுடன் பூர்வம் ஆலில் சயனம் உற்று
நண்ணும் அரங்க மன் வில்லி புத்தூர்த் திரு நாட்டு அரசே –48- ஸ்ரீ வில்லிபுத்தூர்

தீர்த்தம் -திரு முக்குளம்
சஞ்சன விமானம்

—————

நாதமுனி மதுரக்கவி மாறன் மன்னற் சக்கரன்
வேதன் புவிக்கு அருள்வோன் பிரமத்தடம் விண்ணவர் சூழ்
கோதகல் கோவிந்தராதி கிழக்கில் குருகை மின்னோ
டோத நின்றான் குருகூர் ஆதி நாதன் ஒரு பொருளே –49–

பிரமத்தடத் தீர்த்தம்
கோது அகல் -குற்றம் நீங்கிய -கோவிந்த விமானம் –
குருகூர் வல்லித்தாயார்
ஆதி நாதப் பெருமாள்
ஓத நின்றான் -பக்தர்கள் புகழ் பாடும் படி நின்றான் –

———–

ஒரு பொருளாய் வருணன் கோ சிகற்கின் புதவுமிடம்
வருணச் செழும் தடமோடுயர் கற்ப விமானம் தனில்
திரு ஒண் கரும் தடம் கண்ணியுடன் குண திக்கு நின்ற
மருவும் கரும் கடல் வண்ணன் தொலை வில்லி மங்கலமே –50–திருத்தொலை வில்லி மங்கலம் –

வருணன் கோசிகன் -இருவருக்கும் அருள் –
வருண தீர்த்தம்
கற்ப விமானம்
கரும் தடம் கண்ணிப் பிராட்டியார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
கரும் கடல் வண்ணன் பெருமாள் –

————

கலங்கா பெரு நகர் எம்மான் உரோம மகா முனிவன்
நலங்காமல் உய் இந்திர வாவியும் தன் வர்த்தகத்தின்
இலங்கா இழைப்பதி மங்கையனன் கிழக்கே ஏய்ந்த இருந்த
புலம் காணும் தேவபிரான் சீ வர மங்கைப் புண்ணியனே —-51- ஸ்ரீ நாங்குநேரி

இந்த்ர புஷ்கரணி
நந்த வர்த்தகம்
ஸ்ரீ வர மங்கைத்தாயார்
கிழக்கு
இருந்த திருக்கோலம்
தெய்வ நாயகம்

——-

புண்ணியன் வேதன் சிவன் உம்பர் யாவரும் போற்ற வந்தோன்
திண்ணம் அருள் சுக்ர வாவி ஒளிர் பத்திர இருப்பில்
ஒண் நிதியார் குழைக்காதாளோடு கிழக்கு உற்று இருந்த
கண்ணன் முகில் வண்ணன் தென் திருப்பேரை நம் கண் மணியே –52-

சுக்கிர புஷ்கரணி
பத்திர விமானம்
குழைக்காது வல்லித்தாயார்
கிழக்கு
வீற்று இருந்த திருக்கோலம்
நிகரில் முகில் வண்ணன் மகர நெடும் குழைக்காதர்

————–

மணி வண்ணன் நான் மறையோடு நிருதி முன் வந்து அருள்வோன்
பிணி கொய் நிருதித் தடம் வேத சாரப் பிறங்கு இருப்பில்
அணி கொள் அவ்வூர் வல்லி மன் கீழ்த் திசை புவியார்ந்து துயில்
நணியன் புளியங்குடி காய்ச்சின வேந்தன் நமர்களுக்கே –53-

நிருதித்தடம்
வேத சார விமானம்
திருப்புளிங்குடி வல்லித்தாயார்
கிழக்கு
சயனத்திருக்கோலம்
காய்ச்சின வேந்தப் பெருமாள் –

—————-

நமனுக்கு அஞ்சா ரக்கினிக்கு அருளக் கினி நற் புனலில்
சம தமம் செய்து விசய விமானம் தனை வலம் செய்து
அமரப்பதி மங்கை கீழ் பாலுறு விசை யாசனனார்
தமது இருப்பைத் தண் வர குண மங்கையில் ஆழ்ந்தவரே –54-ஸ்ரீ வரகுண மங்கை

அக்னி தேவதைக்கு அருள்
அக்னி தீர்த்தம்
விஜய விமானம்
பிராட்டி பதி மங்கை வரகுண வல்லித்தாயார்
கிழக்கு வீற்று இருந்த திருக்கோலம்
விசயாசனப் பெருமாள் –

—————

தாழாத செல்வப் பிருது மன் இந்த்ரன் தன் முன் வந்தோன்
நீழாசரு தண் பிருதுப் புனல் இந்த்ர நீள் இருப்பில்
காழார் வைகுந்தையுடன் கீழ் திசை நின்ற கள்ளப்பிரான்
வாழாரு தாம்பர வன்னி யினாத்தர் தம் வைகுந்தமே –55-ஸ்ரீ வைகுண்டம்

பிருது சக்கரவர்த்திக்கு அருள்
இந்திர விமானம்
ஸ்ரீ வைகுந்தவல்லித்தாயார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
ஸ்ரீ கள்ளபிரான் ஸ்ரீ வைகுண்ட நாதன்
நதி தாமிரபரணி
தாழ் ஆர் -மன உறுதி பொருந்திய
ஆத்தர் -ஆப்தர் –

—————–

வையம் புகழ் பற் குணன் பொன்னியமற்கும் வாய்ந்து அருள்வோன்
மெய்யிந்த்ரத் தடம் ஆநந்தம் என்னும் விமானம் தனில்
செய்யம் புயக்குளந்தை மின் பிரான் குண திக்கு நின்றான்
பொய்யில் குளந்தையன் வாழ் மாயக்கூத்தன் பொற் கோசிகனே –56-ஸ்ரீ திருக்குளந்தை -ஸ்ரீ பெரும் குளம்

அருள் பெற்றோர் -அர்ஜுனன் யமன் பிரகஸ்பதி
சுக்ரனை வெள்ளி என்பது போல் பிரு உறஸ்பதியை-பொன் -என்கிறார்
தானே முன் வந்த பொற் கோசிகன் -பீத அம்பரன்
தீர்த்தம் -இந்த்ரத்தடம்
ஆனந்த விமானம்
செய் அம்புய -செந்தாமரை -போன்ற ஸ்ரீ திருக்குளந்தை வல்லித்தாயார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
மாயக்கூத்தன்

————–

கோசிகன் நூறு அந்தணர்கள் ருத்ரர்கள் கோடி க்கு அருள்
வாச நற் பாற்கடல் வாவி ஒண் சீகர மானம் தன்னில்
ஆசில் பாற் கடலாள் பூர்வ நின்ற வழக நம்பி
ஈசன் குறுங்குடி வாழ் பஞ்ச நம்பி இறையவனே –57–

திருப்பாற் கடல் தீர்த்தம்
ஸ்ரீ கர விமானம்
ஸ்ரீ லஷ்மி தாயார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
அழக நம்பி-ஸ்ரீ வைஷ்ணவ நம்பி -நின்ற நம்பி -இருந்த நம்பி -திருப்பாற் கடல் நம்பி -மலை மேல் நம்பி –
இவரே நம்மாழ்வாராக திரு அவதாரம்
திருமங்கை ஆழ்வார் திரு வைரசு இங்கே
பெரியாழ்வார் திரு மழிசைப் பிரான் நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் –

————–

இறைவன் மதுரகவிக்கும் தனதருக்கும் பின்பு அருள்வோன்
நிறையும் குபேரத்தடம் திரு மானத்தின் நேர் கிழக்கு ஆர்ந்து
உறையப் பதி வல்லி தன்னோடு பூங்கண்ணன் உறையும் பிரான்
மறை முழங்கும் திருக்கோளூர் வளர் வைத்த மா நிதியே –58–

தனதன் -குபேரன்
நவநிதிகள் இங்கு ஒளிந்து இருப்பதைக் குபேரனுக்கு கோள் சொல்லியதால் திருக்கோளூர்
மதுரகவி ஆழ்வார் திரு அவதாரம்
குபேர தீர்த்தம்
ஸ்ரீ கர விமானம்
கிழக்கு சயனத் திருக் கோலம்
அப்பதித்தாயார் -ஸ்ரீ திருக்கோளூர் வல்லித்தாயார்
ஸ்ரீ வைத்த மா நிதிப்பெருமாள்

—————-

மா நிதி இந்த்ரனுக்கு இந்துக்கு அருள் மச்ச வாவி யுளோன்
கானல ராதி இலக்குமிக்கு ஒண் கனக சபை
மானமதில் குண பால் துயிற்று என் மலை நாட்டு அரசன்
ஆன அநந்தபுரம் பத்ம நாபன் அகளங்கனே –59- திரு அநந்தபுரம் –

மச்ச வாவி தீர்த்தம்
கனகசபை விமானம்
ஸ்ரீ ஆதி லஷ்மித்தாயார்
கிழக்கு சயனத் திருக்கோலம்
கேளார் சினந்த புரம் சுட்டான் திசை முகத்தான் போற்றும் அநந்தபுரம் -ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் –

————–

அகளங்கராகிய காரி யுடைய நங்கைக்கு அருள்வோன்
நிகழும் திருப்புனல் ஒண் கல்யாண நிலை இருப்பில்
திகழும் திரு மார்பு அணங்கோடு கீழ் திசை சேர்ந்து இருந்த
புகழ் திரு மார்பு அண்ணல் வண் பரிசாரப் புனிதன் அன்றே –60– திரு வண் பரிசாரம் –ஸ்ரீ திருப்பதி சாரம் –

தீர்த்தம் -இலக்குமி தீர்த்தம்
கல்யாண விமானம்
திரு மார்பு அணங்கு நாச்சியார் -ஸ்ரீ இலக்குமி தெவித்தாயார்
கிழக்கு வீற்று இருந்த திருக்கோலம்
திரு ஆர் மார்பன் பெருமாள் –

————-

புனிதன் கபிலன் புவிக்கு அருளும் கபிலப் புனலோன்
நனி ஒளிரும் புட் கல மானம் தன்னில் நன்னீர் வன சந்
தனில் உறையும் பெரும் செல்வி யுடன்றக் கணத்தின் நின்றான்
இனியன் எனவற்கும் தென் காட்கரை மேவிய என் அப்பனே –61-திருக்காட்கரை

கபில முனிவனுக்கு அருள்
புவி மடந்தை
கபில தீர்த்தம்
புட்கல விமானம்
நீர் வனசம் -தாமரை
பெரும் செல்வ நாயகித்தாயார்
தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
ஸ்ரீ காட்கரை அப்பன் பெருமாள்

————-

அப்பெங்கு மாகிய வேனன் மருத முனிவனுக்காய்
செப்பும் பதியில் வராதான் விசாலச் செழும் புனலோன்
மற் பங்கை யையோடு கீழ்த் திசை சந்த்ர மானம் நின்றான்
ஒப்பொன்றின் மூழிக் களப் பூந்துழாய் முடி ஒண் மயனே –62– திரு மூழிக்களம்

வேனன் மருத முனி ஹரீத மஹா முனிவர்
விசால தீர்த்தம் -பெரும் குள தீர்த்தம்
சந்த்ர விமானம்
மல் பங்கையை -திண்மையை யுடைய வளப்பமான தாமரை மலரில் இருப்பவள்
கிழக்கு -நின்ற திருக்கோலம்
அப்பு எங்குமாகிய -நீரால் சூழப்பட்ட -ஒப்பில்லாத திவ்ய தேசம்
நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம்
துழாய் முடி -திருத்துழாய் தளத்தால் ஆகிய கண்ணி -புனத்துழாய் கண்ணி வேந்து –

————–

ஒண் மகம் செய்த மூ வாயிரர் சங்கற்கு உண்மை தந்தோன்
வண்மை அஞ்சங்கத் தடம் செகச் சோதி விமானம் தனில்
தண்மை யஞ் செங்கமலை யுடன் மேல் திசை சார்ந்து நின்றான்
திண்மைத் திருச் செங்குன்றூர் இமையோர் அப்பன் சின்மயனே –63- திருச் செங்குன்றூர்

சங்க தீர்த்தம்
ஜக ஜ்யோதி விமானம்
செங்கமலத்தாயார்
மேற்கு நின்ற திருக்கோலம்
இமையோர் அப்பன்

—————-

சின் மயன் ஏழ் முனி யோர் அவுணற்கு அருள் செய்த பிரான்
புன் மயல் நீக்கும் தளர் பூதன் வாவிப் புருட நிலைப்
பொன் மய மானத்தில் பொற் கொடியாளோடு பூர்வ நின்றான்
கன்மய மாயப்பிரான் தன் திருப்புலியூர்த் தலமே–64- –ஸ்ரீ குட்ட நாட்டுத் திரு புலியூர் –

சப்த ரிஷிகளுக்கும் பெரிய திருவடிக்கும் அருள் -உவணன் -கருடன்
தீர்த்தம் -பூதன் வாவி
புருஷோத்தம விமானம்
பொற் கொடி நாச்சியார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
மாயப்பிரான்
நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் –

———–

தலம் தாழ்ந்து இறைஞ்சும் கசேந்திரர்க்கும் சவரிக்கும் அருள்
மலந்தாழ் கமலத் தடத் தோன்றோல் வேத விமானம் தனில்
பொலந் தாமரை மலர் மங்கையுடன் திசை பூர்வ நின்றான்
நலந்தாவிய திரு நாவாய் நெடும் திரு நாரணனே –65–திரு நாவாய்

மலம் தாழ் -மும்மலங்களையும் போக்கி அருளும் -கமல சரசு தீர்த்தம்
வேத விமானம்
மலர் மங்கை நாச்சியார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
நலம் தாவிய -நலம் பொங்கும்
திரு நாராயணப்பெருமாள்
நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் மங்களா ஸாஸனம் –

———————

திருமால் கண்டா கர்ணனாகாய வாணி மண்டேவிக்கு அருள்
அருமால் உயர் செங்கழு நீர்த் தடம் சதுரானனமாய்
வருமானம் செல்லக் கொழுந்தொடு கீழ்த்திசை மன்னி நிற்கும்
பெரு மாயக் கோலப் பிரான் வல்லை வாழ் எம்பிரான் அடியே –66-திருவல்ல வாழ் –

கண்டா கர்ணனுக்கு அருள்
செங்கழு நீர்த்தடம்
சதுரங்க கோல விமானம்
செல்வத் திருக் கொழுந்துப் பிராட்டியார்
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
கோலப் பிரான் பெருமாள் –

————-

அடியேன் சரணம் எனும் நாரதன் சம்சாரம் அறும்
படியே புரிந்து அருள்வோன் பம்பை உத்தரப் பைந்தடம் தோள்
வெடி சேர் கமலையுடன் தேவ கூட்டத்தின் மேற்கு நின்ற
வடிவார் திரு வண் வண்டூர் கடல் மேனிப்பிரான் வள்ளலே –67–திரு வண் வண்டூர்–

நாரதர் அருள் பெற்றவர்
தீர்த்தம் -பம்பா நதியின் வடகரையில் உள்ள பைந்தடம்
வெடி -வாசனை
வேதாலய விமானம்
கமலவல்லிப் பிராட்டியார்
மேற்கு
நின்ற திருக்கோலம்
கடல்மேனிப்பெருமாள் –

———

வள்ளல் பரசுடை ராமன் இந்த்ரன் வாழ்த்தும் பிரான்
தெள்ளிய ராமப்புனல் அராட்டாக்கரச் சேண் இருப்பின்
ஒள்ளயில் கட்டிரு மங்கையன் மேற்கில் உவந்து துயில்
கொள்ளும் அம் கேசவன் வாட்டாறு மேய கொழும் புயலே –68– திருவட்டாறு

பரசுராமர் சந்திரன் இந்திரன் அருள் பெற்றவர்கள்
ராமப்புனல் தீர்த்தம்
அஷ்டாக்கர விமானம்
ஒள்ளயில் கண் ஒளி பொருந்திய வேல் போன்ற கண்
திரு மங்கை பிராட்டி
மேற்கு
சயனத் திருக் கோலம்
ஆதி கேசவப்பெருமாள்

————

கொழும் செல்வமார் அம்பரீடனுக்கு இன்பம் கொடுத்த பிரான்
செழும் சுதர்சன வாவி சந்தோடச் சினகரத்தில்
தொழும் செய்ய தாமரைக் கையாளுடன் தென் துயில் அமர்ந்தான்
எழும் சொல் அபயப் பிரதானன் வித்துவக் கோட்டு எந்தையே –69-திரு வித்துவக்கோடு –

சுதர்சன வாவி -சக்கர தீர்த்தம்
விமானம் -சந்தோடச் சினகரம்
தாமரைக் கையாள் பிராட்டியார்
தெற்கு நோக்கி வீற்று இருந்த திருக்கோலம்
அபய பிரதானப் பெருமாள் –

—————

எந்தை என் உருக்கு மங்காத வேந்தற்கு இயைந்து அருள்வோன்
வந்த வினை யறும் பூமித்தடம் புண்ணிய மானம் தன்னில்
கொந்தலர் கற்பக வல்லிக்கு இன்பு ஏந்து குணக்கில் நின்றான்
நந்தித் திருக்கடித் தானத்தில் அற்புத நாரணனே –70- திருக்கடித்தானம் –

பூமி தீர்த்தம்
புண்ய கோடி விமானம்
கற்பக வல்லி நாச்சியார்
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
நந்தி -உகந்து நின்றான்
அற்புத நாராயணப் பெருமாள்
கொத்து -எதுகை நோக்கி கொந்து -என விகாரம் –

————–

அற்புதம் அற்புத வேந்தனுக்கு இன்பம் அளித்த பிரான்
நற்புனல் வாமன வாவியன் வாமன நல்லிருப்பின்
உற்பலக் கட் பதுமாசனையோடு உத்தரத்து நின்ற
மற் பெரும் பாம்பணை யப்பன் தொல் ஆறன் விளை தொழலே –71–திருவாறன் விளை –

வேதன் -நான்முகன் -வேத வியாசர்
தீர்த்தம் -வாமன வாவி
விமானம் -வாமன நல்லிருப்பு
உற்பலக் கண் -கருங்குவளைக் கண்
பத்மாஸன நாச்சியார்
வடக்கு சந்நிதி
நின்ற திருக்கோலம் –
பாம்பணை அப்பன் பெருமாள் –

————

வளை மதி முக்குவணன் கண்ணன் ராமன் மருவு மன்பு
விளையஞ் சுமேத சரிமேத ஸூஷ்ம வியன்றருமால்
தளை கல்யாணத் தட மாந்ந் தக்கண திக்கில் நின்ற
அள கிரி வல்லி செல்வன் திரு நாரணார் புரமே –72-திரு நாராயண புரம்

நாராயணாத்ரி -வேதாத்ரி -யாதவாத்ரி -யதி சைலம்
செல்லப்பிள்ளை செல்வப்பிள்ளை சம்பத்குமாரர்
கல்யாண தீர்த்தம்
கல்யாண விமானம்
தெற்கு -நின்ற திருக்கோலம்
அழகிரி வல்லித் தாயார்

———-

புரந்தர நம்பன் அயன் மார்க்கண்டேயன் புலி பிருகு
நிரந்தரமும் விரசைப்புனல் சந்த்ர நீடிருப்பில்
தரங்க முகுந்த தனி பூருவ மூ வுருவும் தன்னின் நின்று
வரந்தரு நன்னாடு நாட்டயிந்தரத்த தெய்வ நாயகனே –73-திரு வயிந்திர புரம்

புலி -வியாக்ரபாத முனிவர்
நம்பன் -சிவன்
அஹீந்த்ரன் -அனந்தாழ்வான் பெயரால் திவ்ய தேசம்
தீர்த்தம் -விரசைப்புனல்
விரசை -தர்ப்பை
சந்த்ர விமானம்
கிழக்கு -நின்ற -திருக்கோலம்
ஸ்ரீ வைகுண்ட நாயகித் தாயார்
ஸ்ரீ தெய்வ நாயகப் பெருமாள்

—————-

அக நெகிழ்வா முதல் ஆழ்வார்கள் அம்மிரு கண்டன் பலி
மகிழ வந்தோன் புங்க வாவியும் சீகரமானமும் சீர்
திகழ அம் போருகப் பூங்கோவிலாள் குண திக்கில் நின்றான்
மிகவும் இடை கழி அம் கோவலூர்த் திரி விக்ரமனே –74–திருக்கோவலூர்

தீர்த்தம் -புங்க வாவி
விமானம் -சீகர விமானம்
பூங்கோவில் நாச்சியார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
ஆயன் -திரிவிக்ரமன்

————–

விக்கிரமத்தை ஐம் புலம் அறுத்து ஏற்றுதி வேந்தற்கு அருள்
வைக்கும் அநந்த சரசோன் குகை ஒண் விமானத்து எழில்
மிக்கரி தேவியுடன் அத்தியூர்க் கச்சி மேற்கு இருந்த
மைக்கடல் சூழ் தொண்ட மண்டலச் சிங்கப்பிரான் நெஞ்சே –75– திரு அத்திகிரி -பெருமாள் கோயில்

அநந்த ஸரஸ்
குகை போன்ற விமானம்
பிராட்டி -அரி தேவி நாச்சியார்
மேற்கு வீற்று இருந்த திருக்கோலம்
அழகிய சிங்கப்பிரான்

————–

நெஞ்சேக சேந்த்ரனுக்கு அருளப் பெயர் நேர் தடத்தோன்
மஞ்சே யுலவும் ககனாக்ருத விமானம் தனில்
செஞ்சேல் விழி அலர் மேல் மங்கையான் பச்சிமத்தில் நின்றான்
அஞ்சே அருள் சக்கர பாணி அட்டபுய மேகரனே —-76- திரு அட்டபுயகரம் —

கஜேந்திர புஷ்கரணி
ககனாக்ருத விமானம்
அலர் மேல் மங்கைப் பிராட்டியார்
மேற்கு -நோக்கி -நின்ற திருக்கோலம்
அட்டபுய சக்ரபாணிப் பெருமாள் –

————-

கரவிற் சனகர் முதலோர் பிருகும் களிக்க வந்தோன்
இரணிய வாவியுடனே விமானம் இரண்ணியத்தில்
அரவிந்த லக்குமி தன்னொடு கீழ்த் திசை யார்ந்து நின்றான்
பரன் முகுந்தன் திரு வேளுக்கை ஆளரிப் பைம் பொருளே –77–திரு வேளுக்கை –

கரவில் சனகன் -ஒளித்தல் இல்லாத தூய்மையான
தீர்த்தம் -ஹிரண்ய வாவி -கனக ஸரஸ்
விமானம் -ஹிரண்ய விமானம் -கனக விமானம்
அரவிந்த லஷ்மித் தாயார்
கிழக்கு -நின்ற திருக்கோலம்
திரு வேளுக்கை யாளரிப் பெருமாள் -முகுந்த நாயகன்

————-

பொருவரும் கோகுல மா முனிக்கு இன்பம் புரிந்த பிரான்
துரிசில ரித்திர வாவியும் பாண்டவ தூத பத்திரம்
திரு சத்திய பாமை யுருக்குமிணி குண திக்கு இருந்தே
யருள் திருப்பாடகப் பாண்டவ தூதன் எம் அச்சுதனே –78–திருப்பாடகம் –

துரிசு -துன்பம்
தீர்த்தம் -அரித்ர வாவி
பாண்டவ தூத பத்ர விமானம்
ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ சத்ய பாமா பிராட்டிமார்
கிழக்கு நோக்கி வீற்று இருந்த கோலம்
பாண்டவ தூதப்பெருமாள்
கல்வெட்டுகளில் தூத ஹரி என்ற பெயர் உண்டே
பூதத்தாழ்வார் -பேயாழ்வார் -திருமழிசை பிரான் -திருமங்கை ஆழ்வார் –

————

அச்சுதன் கண்ணன் என்று ஏத்திய காந்தினியாள் மகனுக்கு
இச்சை தந்தோன் அக்ரூரப் புனலும் இரவி தனில்
உச்சித நீரக வல்லி யுடன் கிழக்கு உற்று நின்றான்
பச்சை வடம் துயிலும் திரு நீரகப் பண்ணவனே –79–திரு நீரகம்

காந்தினியாள் மகன் -அக்ரூரர்
தீர்த்தம் -அக்ரூரப்புனல்
விமானம் -இரவி -ஸூர்யப் புனல்
நீரக வல்லித்தாயார்
கிழக்கு நோக்கி நின்ற கோலம்
மார்கண்டேயருக்கு சேவை தந்த பச்சை ஆலிலை துயின்ற பிரான் –

————-

நீர் அணியும் செஞ்சடை அரனார்க்கு அருள் நித்தன் உயர்
பேரணியும் சந்திரத் தடம் அஞ்சனப் பேர் இருப்பில்
காரணி கூந்தலுறை வல்லி மேற்கில் கலந்து நின்றான்
தேரணி சேரும் நிலாத் திங்கள் துண்டச் செழும் பொருளே –80-நிலாத் திங்கள் துண்டம்

சந்த்ர புஷ்கரணி
விமானம் -சஞ்சனப் பேர் இருப்பு
மேற்கு -நின்ற திருக்கோலம்
13 நாள் அர்ஜுனன் கைலாச யாத்திரையில் தான் கண்ணன் இட்ட பூக்களை சிவன் மேலே கண்டு அறிந்தானே
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல்
தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் –

————–

துண்டப்பிறை எயிற்றார் சேடனுக்கு அருள் துய்யன் மலர்
வண் தண் பொனார் ஊரகத்தடம் சீகர மானத்து அருள்
கொண்டல் அருண வல்லிக்கு அன்பன் மேற்கில் உலாவி நின்றான்
அண்டர்க்கு உலகு அளந்தான் ஊரகத்தின் அருள் கடலே –81-திரு ஊரகம்

தீர்த்தம் -ஊரக-நாக -தீர்த்தம் –
ஸ்ரீ கர விமானம்
அருண வல்லித் தாயார்
மேற்கு நின்ற திருக்கோலம்
உலகு அளந்த பெருமாள்

————–

கடல் வைய நெய் தகளா யிட்ட வன் கணி கண்ணற்க்கு அருள்
தட நெடும் பொய்கைத் தடம் வேத சார தனியிருப்பில்
மிட்டல் எழில் கச்சி இலக்குமி யாளன் கண் மேற்கில் துயில்
சுடர் தன் வெஃகாவினில் சொன்ன வண்ணம் செய்த சுந்தரனே –82–திரு வெக்கா

வேகவதி நதிக்கு அணையாக வெக்கணை -வெக்கா
மிடன் -சந்திரன் –
பொய்கையாழ்வார் திரு அவதாரம் –
கணி கண்ணன்
பொய்கை புஷ்கரணி
விமானம் -வேத சார மானம்
கச்சி இலக்குமிப் பிராட்டியார்
மேற்கு -சயனத் திருக் கோலம்
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -யதோத்த காரி பெருமாள்

——————

செய்த மலரணி பிருகுவின் முன்பு திகழ்ந்து அருள்வோன்
மெய் தவ ஞானத் தடத்தோன் விசுத்த விமானம் தன்னில்
நெய் தலம் கண்ணி ராமா மணி கீழ்த்திசை நேர்ந்து துயில்
எய்த பிரான் கருணாகரன் காரகத்து என் அப்பனே –83- திருக்காரகம்

கார்ஹ ருசிக்கு ப்ரத்யக்ஷம்
ஞானத்தடம்
விசுத்த விமானம்
ரமா மா மணிப்பிராட்டியார்
கிழக்கு
சயனத் திருக்கோலம்

————–

என்னப்பன் அம்பிகைக்கு பின்பு அருள் அப்பன் எவருக்கு அருளும்
முன்னப்பன் மொய் கவுரித்தடம் ஊரிக் கருடன் வெற்பில்
மின்னப்பன் ஒண் கமலத்து இருப்ப பங்கின் வடக்கு இருந்த
பன்னப்பன் கள்வன் தன் கார்வானம் வாழ் பரந்தாம அப்பனே –84- திருக் கார்வானம்

மூரி -வலிமை யுள்ள –
கௌரி தீர்த்தம்
கருட விமானம்
கமலவல்லித் தாயார்
வடக்கு நோக்கி இருந்த திருக்கோலம்
பரந்தாம அப்பன் பெருமாள்

————

பரந்த விண்ணோர் முனிவோர் மாற்று எவரும் பணியும் பிரான்
திருந்த அரும் பாவன வாவி அட்டாங்க சிகரத்தில்
புரந்தருள் தேவியுடன் இருந்தே நின்ற பூர்வனிந்த
தரம் பச்சை வண்ணன் பவள வண்ணன் கச்சித் தாமத்தனே –85–

பாவன புனித வாவி தீர்த்தம்
அட்டாங்க விமானம்
கிழக்கு
நின்ற திருக்கோலம்
பவள வண்ணன் பெருமாள் பச்சை வண்ணன் பெருமாள்

————-

தாம மணி நித்திலம் பூண்ட வாணி தனக்கு அருள்வோன்
வாமச் சரசுவதித் தடத்தோன் பிரபை மானம் தன்னில்
காமர் மரகதவல்லி மன் மேல் திசை காண நின்றான்
வீம தண் கா ஒண் விளக்கு ஒளி மேய விளக்கு ஒளியே –86- திருத் தண் கா

குளிர்ந்த சோலைகள் உடைத்தான் திவ்ய தேசம்
சரஸ்வதிக்கு அருள் -முத்து மாலையை அணிந்த வாணி -நித்திலம் -முத்து
தாமம் மணி வடம்
தீர்த்தம் -சரஸ்வதி தீர்த்தம்
விமானம் பிரபை மானம்
மரகத வல்லித் தாயார்
மேற்கு -நின்ற திருக்கோலம்
விளக்கு ஒளிப் பெருமாள் -தீபப் பிரகாசப்பெருமாள் -திவ்யப் பிரகாசப் பெருமாள்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் திரு அவதார ஸ்தலம் –

——–

விளக்கு ஒளி அன்பர் உள்ளத்தின் முன் பல்லவ வேந்தற்கு அருள்
வளக்குடி யைரம்மதி நீர் அட்டாங்க விமானம் தனில்
துளக்கிய வைகுந்த வல்லியன் மேற் கிற்று தைந்திருந்தான்
அளக்கரும் சீர்ப் பரமேச்சுர விண்ணகர் அவ்வண்ணலே –87- திருப்பரமேஸ்வர விண்ணகரம்

தீர்த்தம் -ஐரம்மதி
அஷ்டாங்க விமானம்
வைகுந்த வல்லிப் பிராட்டியார்
மேற்கு -வீற்று இருந்த திருக்கோலம்
மேல் தளத்தில் சயனத் திருக்கோலமும்
அதுக்கும் மேல் நின்ற திருக்கோலமும் உண்டே
பரமபத நாதப் பெருமாள்

——————-

அவ்விய நீத்த சடாயு மயற்கு இன்பு அளித்த பிரான்
ஒவ்விற் கிருத்திர நீர் வீர கோடி உயர் இருப்பில்
செவ்வி மரகத வல்லிக்கு அன்பன் குண திக்கு இருந்த
எவ்வமில் புட் குழியில் வாழ் விஜய ராகவனே –88- திருப் புட் குழி

அவ்வியம் -வஞ்சகம்
கிருத்திர புஷ்கரணி
விஜய கோடி விமானம்
மரகத வல்லித் தாயார்
கிழக்கு இருந்த திருக்கோலம்
விஜய ராகவப் பெருமாள்

—————

கவன மகன்றிட முன் சாலி கோத்திரன் கண்டு உய் வள்ளல்
தவமிக்கு அளிக்கும் இருத்தாப நாசத் தடம் புனலோன்
செவி சய கோடியில் செங்கமலை குண திக்கு உகந்து
திவளத் துயில் எவ்வுளூர் வீர ராகவன் சிற் பரனே –89–திரு எவ்வுளூர்

கவனம் அகன்றிட -கலக்கம் நீங்குமாறு
ஹ்ருத்தாப நாச தீர்த்தம்
விஜய கோடி விமானம்
செங்கமலை நாச்சியார்
கிழக்கு நோக்கி துயில்
வீர ராகவப் பெருமாள்

————–

சிற் பரன் எம் குரவன் வருணன் தர்ம சேனற்க்கு அருள்
அற்புதன் தண் வருண தடமோடும் பலாவதகப்
பொற் புயமானத்து எனைப்பெற்ற தாயோடு பூர்வ நின்றான்
மற் புகழாரும் திரு நின்ற வூர்ப் பக்த வத்சலனே –90–

வருண தீர்த்தம்
உத்பலா வதக விமானம்
என்னைப்பெற்ற தாயார்
கிழக்கே நின்ற திருக்கோலம்
பக்தவத்சலப்பெருமாள்
இந்நூல் ஆசிரியர் இந்த திவ்ய சேதத்தைச் சேர்ந்தவர்

——

பக்தி செயும் தொண்டை மான் முனிவோர் உம்பருக்கும் அருள்
வைத்த மணி கர்ணிக நீர் அரங்க மணி இருப்பில்
கொத்தலர் மா மணி மாலிகைக்கு அன்பன் குணக்கில் துயில்
அத்தன் பொன் மாணிக்க மெல்லணை நீர் மலை அம் கணனே–91– திருநீர் மலை

மணி கர்ணிகா தீர்த்தம்
அரங்க மணி விமானம்
கொத்தலர் மா மணி மாலிகைப் பிராட்டியார்
கிழக்கு
அறி துயில்
பொன் மாணிக்கப்பெருமாள்

———-

அம் கணன் முப்பத்து நாலாயிரத்து அறு பான் முனிவர்
புங்கவர் மார்கண்டேயற்கு அருள் பூர்வ முகன் தடமும்
கொங்குறை மானமும் கல்யாண கோடியில் கோமள மின்
தங்க நின்றான் இட வெந்தை வராகத் தயா நிதியே –92- திருவிடவெந்தை

காலவ மஹரிஷியின் 360 பெண்களை
நித்ய கல்யாணப் பெருமாள்
கிழக்கு நின்ற திருக்கோலம்
வராக தீர்த்தம் -பூர்வமுகன் -வராஹம் –
கல்யாண விமானம்
கோமள வல்லி நாச்சியார்

———–

தயா நிதி புண்டரீகன் பூதன் மட்டவிசன் கண் வைத்தாய்
மயாலறு தீர்த்தமும் மானமும் வல்லி யும் மன்னிய பேர்
இயாதினும் புண்டரீகந்தோய் குண திசை ஏய்ந்து உறைந்தாய்
சயா கடல் மல்லைத் தல சயனா யுன் சரணே சரண் –93-திருக்கடல் மல்லை

ஸ்ரீ பூதத்தாழ்வார் திரு அவதார ஸ்தலம்
புண்டரீக மகரிஷி
மண் தவிசன் -பூ மேல் உறை பிரமன்
புண்டரீக தீர்த்தம்
புண்டரீக விமானம்
புண்டரீக வல்லித்தாயார்
மாயல் அறு -மயக்கத்தைப் போக்கிஅருளும் -மயலின் விகாரம்
கிழக்கு சயனத் திருக்கோலம்
தலசயனப்பெருமாள்
சயா -ஜெயம் வெற்றியை யுடையவன்
கடற்கரைக்கோயில் ஜல சயனம்

—————–

சரணம் புகும் காண்டீவப் பெயரோன் தொண்டைமான் சக்கிரி
வரம் கொள் கயிரவ வாவியன் பாற்கர மானம் பரி
புர வேத வல்லிக ஒண் கண் பார்த்த சாரதி பூர்வ நின்றான்
திரம் செய் திருவல்லிக்கேணியில் தெள்ளிய சிங்கர் அன்றே –94-

ஸ்ரீ கண்ணபிரான் குடும்ப சகிதமாக சேவை
கயிரவ புஷ்கரணி -கயிரவம் -செவ்வாம்பல் அல்லி
பாஸ்கர விமானம்
வேதவல்லித்தாயார் சமேத மந்நாதப்பெருமாள்
ருக்மினித்தாயார் சமேத பார்த்தசாரதிப்பெருமாள்
கிழக்கே நின்ற திருக்கோலம்
மேற்கே வீற்று இருந்த திருக்கோலம் தெள்ளிய சிங்கப்பெருமாள் –
திருமழிசைப்பிரான் முதல் ஆழ்வார்கள் சந்தித்த திவ்ய தேசம் –

——–

அன்று ஏழு மா முனிவருக்கும் அநுமாற்க்கும் அருள் புரிந்தோன்
மன்றல் அமுதத் தடத்தோன் அட்டாங்க விமானம் தனில்
ஒன்றும் அமுதப்பிராட்டி மன் கீழ்த்திசை யோக நரசிங்கர்
கன்றில் கடிகை இருந்த அக்காரக் கனி அமுதே –95-திருக்கடிகை

அமுதக்கடம் தீர்த்தம்
அஷ்டாங்க விமானம்
அமுதவல்லித்தாயார்
கிழக்கு வீற்று இருந்த திருக்கோலம்
அக்காரக்கனி எம்பெருமான்
கீழ்த்திசை யோக நரஸிம்ஹன்

———-

கனிந்தயில் வேலனொடு தொண்டைமானுக்கு காட்சி தந்தோன்
நினைந்து எண் வராகத் தடத்தோன் ஆனந்த நிலையம் தன்னில்
வனைந்தலர் மேல் மங்கையான் பூர்வ நின்ற வடமலையான்
முனிந்து ஐம்புலன் வென்ற யோக அருள் சோதி முழு முதலே –96–திருவேங்கடம்

வேலன் -முருகன்
அயில் -எக்கு
ஸ்ரீ வராகத்தடம் -ஸ்வாமி புஷ்கரணி
ஆனந்த நிலைய விமானம்
அலர்மேல் மங்கைப்பிராட்டியார் -பத்மாவதித் தாயார்
கிழக்கு நின்ற திருக்கோலம்
சோதி முழு முதலை நினைந்து எண் -என்று கூட்டுக –

——-

முதல் அரியே எனும் பாலகன் உய்ந்திட முன் வந்து அருள்
மதமறும் சோணித வாவிக் ககன விமானம் தனில்
இத குண பால் எம் அழகிய வல்லிக்கு இன்பு ஈந்து நின்று
உன்னத சிங்க வேள் குன்றம் வாழும் ஜ்வால நரஸிம்ஹனே –97- ஸ்ரீ சிங்க வேள் குன்றம் -ஸ்ரீ அஹோபிலம்

சோணித வாவி
ககன விமானம்
கிழக்கு -நின்ற திருக்கோலம்
அழகிய வல்லித்தாயார்
ஜ்வாலா நரஸிம்ஹன்

—————-

வாழும் படியும் பரியார்க்கும் பரதற்கும் வாய்க்கும் பெம்மான்
தாழுச் சரயு யமுனை நதி அநுஷ்டானத் தடம்
நீழும் தன் புட்பகச் சீதை யொடு உத்தர நேர்ந்து இருந்தான்
ஆழும் கருணையன் பட்டாபி ராமன் அயோத்தி மன்னே –98- திரு அயோத்யை

பெரு பெற்றோர் எல்லாத்தேவர்களும் பரதனும்
சரயு -யமுனை -அனுஷ்டானத்தடம் –
புஷ்பக விமானம்
சீதாப்பிராட்டியார்
வடக்கு
வீற்று இருந்த திருக்கோலம்
பட்டாபி ராமன்
முக்தி தரும் ஏழு க்ஷேத்ரங்களில் ஓன்று –

———–

மன்னே சவுனகராதியர் இந்திரன் வாழ வந்தோன்
பொன் ஏய்ந்த விச்சுர வாவி பரி எனப் போற்றி இருப்பில்
மின்னேரரி வல்லி கீழ்த்திசை சக்கரம் மேவி நின்றாய்
நன்னேயர் வாழ் நைமி சாரணியத்துறை நாரணனே –99– திரு நைமிசாரண்யம்

விச்சுர வாவி -விஸ்ரான் தீர்த்தம்
ஸ்ரீ ஹரி லஷ்மி
கிழக்கு நின்ற திருக்கோலம்
நன்னேயர் வாழ் -ஸூத பவ்ராணிகர் –18- புராணங்கள் போதித்த ஸ்தலம்
ஸ்ரீ நாராயணப்பெருமாள் –

———-

உறை மலரோன் அரன் கண்டகிக்கும் முறை யோகை தந்தான்
மறை தொழும் சக்கர வாவிக் கனக விமானம் தனில்
நறை பூ விலக்குமி யூடு உத்திர திகை நண்ணி நின்றான்
பொறை சாளக்கிராமத் திரு மூர்த்தி நந்தம் புயற் கொழுந்தே —100–திரு சாளக்கிராமம்

பேறு பெற்றோர் -அரன் -கண்டகி நதி
சக்கர தீர்த்தம்
ககன விமானம்
பூ இலக்குமி -ஸ்ரீ தேவிப்பிராட்டியார்
வடக்கு நின்ற திருக்கோலம்
திரு மூர்த்திப் பெருமாள்

————

புயல் வண்ணன் நாரதனுக்கு உபதேசம் புரிந்து அருள்வோன்
மயலறும் தத்வ வாவி வதரி விமானம் தனில்
கயலங் கணி தய மாதுடன் பூர்வங் களித்து இருந்தான்
நயனுறும் தண் வதரிப்பெருமாள் நர நாரணனே -101-திரு வதரியாஸ்ரமம்

பதரி -இலந்தை மரம்
தத்துவ வாவி
கயல் அம் கண் இதய மாது பிராட்டியார்
கிழக்கு சந்நிதி -இருந்த திருக்கோலம்

————-

மான் படு கண்ணியர் மாலாரப் பாரத்து வாசற்கு அருள்
வான் புகழ் மங்கல வாவியன் மங்கல மானம் தனில்
தேன் புண்டரீகை யம் சீ ராமன் பூர்வம் சிறந்து நின்ற
கான் வெறும் கங்கைக் கரை கண்டம் நார சிங்கன் சரணே –102–திரு கங்கைக் கரைக் கண்டம் -ஸ்ரீ தேவப்ரயாகை

பாரத்வாஜ மஹ்ரிஹிக்கு அருள்
மங்கள புஷ்கரணி
மங்கல விமானம்
புண்டரீக வல்லித்தாயார்
கிழக்கே நின்ற திருக்கோலம்
நாரஸிம்ஹப் பெருமாள்

————-

நாரங்களுக்கு இறைவன் பார்வதிக்கு நயந்து அருள்வோன்
வாரம் செய் மானச வாவி அனந்தன வர்த்தனத்தில்
பாரம் பரிமள வல்லிக்கு இன்பாகத் தென் பால் துயிலும்
ஆரம் செறி யிமையப்பால் திருப் பிரிதிக்கு அரசே –103– திருப்பிருதி -ஜோஷி மட் -நந்தப்ரயாகை –

மானஸ ஸரஸ்
நந்தன வர்த்தனம் விமானம்
பரிமள வல்லிப் பிராட்டி
தெற்கு
துயிலும் திருக்கோலம்
ஆரம் செறி-சந்தன மரங்கள் நிறைந்த பொழில்

————–

பிரிவில் துருவன் வசுதேவன் தேவகி பேண அருள்
மருவார் துருவத் தடத்தோன் வயிட்டுவ மானம் தனில்
இர மா மணி வல்லி தன்னொடு கீழ்த்திசை ஏய்ந்து இருந்தான்
பரவு மதுரையில் கேசவராய் பசும் கொண்டலே–104—ஸ்ரீ வடமதுரை

துருவத்தடம் தீர்த்தம்
வைஷ்ணவ விமானம்
இர
கிழக்கு
வீற்று இருந்த திருக்கோலம்
மா மணி வல்லித்தாயார்
கேசவப் பெருமாள் –

————

கொண்டை முடிக்ககிலாப் பெண்டுகிற்கு அவை கூவ வந்தோன்
விண்டரும் கவ்வத் தடமேம கூட விமானம் தனில்
எண்டரும் எட்டு மனையாரொடு பச்சிவத்து இருந்தான்
தெண் திசை சூழும் துவரைக் கல்யாணச் செழும் கண்ணனே –105–திருத்துவாரகை

தீர்த்தம் -கவ்வத்தடம் -கோமதி நதி
விமானம் -ஏம கூட விமானம்
அஷ்ட திவ்ய மஹிஷிகள் -ருக்மிணிப் பிராட்டி -சத்ய பாமை -இலக்கணை -சாம்பவதி -காளிந்தி -மித்திரவிந்தை -சக்தியை -பத்ரை
சக்தியை நப்பின்னைப் பிராட்டியை
மேற்கு -இருந்த திருக்கோலம்
கல்யாண நாராயணப்பெருமாள்
முக்தி தரும் ஏழு க்ஷேத்ரங்களில் ஓன்று –

———–

கண்ணே கருணைக் கடலே அயன் அரன்களுக்கு அருள்வாய்
தண்ணேர் தடவத் திரபாரம் பூபோ தல இருப்பும்
நண்ணேன் படிந்து வலமாகச் சூழ்கிலன் எனக்கு அருள்வாய்
மண்ணோர் குண விருந்தாவன ராதைக்கு வல்லபனே –106-திரு விருந்தாவனம் –

தீர்த்தம் -கோபியர் துயில் கவர்ந்த பொய்கை
வத்திரபாரம் -வஸ்திர அபஹரணம்
விமானம் -பூ போதல இருப்பு
மண் ஓர் குண -பூமியை உருண்டை ஆக்கி உதரத்தில் அடக்கியவனே
கிழக்கு நோக்கி வீற்று இருந்த திருக்கோலம்
ராதா தேவிப்பிராட்டி
ராதா வல்லபப் பெருமாள்

———-

வல் இந்திரன் பல யாதவற்கு முன்னம் வந்து அருள்வோன்
மல்லயன் ராதைத் தடத்தோன் பருவத மானம் தன்னில்
புல்லு நற் பின்னைத் திருவுடன் நாள் தோறும் பூர்வ நின்றான்
வில்லுயர் கோவர்த்தன வரை ராச விரோசனனே –107-திரு கோவர்த்தன கிரி

ராதைத் தடத் தீர்த்தம்
பர்வத விமானம்
கிழக்கு நின்ற திருக்கோலம்
கோவர்த்தன தாரி
ராச விரோசனன்–அரசர்களுள் ஸூர்யன்
வில் உயர் -ஒளி பொருந்திய கோவர்த்தன கிரி

————–

சனக சநந்தற்க்கு எட்டான் கோபிகை நந்தனுக்கு அருள்வோன்
எனகங்கொய் காளிய னீரேம கூட எழில் இருப்பில்
இனமுயர் ஆய மகளொடு கீழ்த்திசை ஏய்ந்து தவழ்
தினகரன் றண்டு திருவாய்ப்பாடிக் கண்ணன் எனும் சீதரனே –108–திருவாய்ப்பாடி –கோகுலம்

தீர்த்தம் -யமுனையில் காளியத்தடம்
விமானம் -ஏம கூட விமானம்
கீழ்த்திசை இருந்த திருக்கோலம்
திரு ஆய்ப்பாடிக்கண்ணன்
தவழ் தினகரன் -தவழ்ந்து மருதம் முறித்த பிரான் –

——–

வரும் சோழ மண்டலத்து எண் ஐந்து பாண்டிய மண்டலத்தின்
திரு பதினெட்டு ஈர் ஏழாம் மலை நாட்டினில் சார் நடு
இருபதி யோர் இரண்டாம் தொண்டை நாட்டு இருபத்து இரண்டு
திருப்பதி ஆறு இரண்டு உத்தரம் நூற்று எட்டுமாம் தொகையே -109-

———

வரு மலை யத்தங்கிரி நேர் சனன மரணம் எனும்
பொரு மலை யத்தங் கிரகமில் சயெனும் புன்மை யச்சார்
செரு மலை யத்தங் கிரு டீர்த்து அருளும் திரு நின்ற ஊர்த்
திருமலை யத்தங்கி தாதாரியர் தொண்டன் செப்பியதே –110-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு நின்றவூர் திருமலை அத்தங்கி தாதாச்சார்யர் தொண்டன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading