Archive for December, 2021

ஸ்ரீ-கடோ²பநிஷத்

December 30, 2021

ஸ்ரீ கடோ²பநிஷத்

॥ அத² கடோ²பநிஷத்³ ॥
ௐ ஸஹ நாவவது । ஸஹ நௌ பு⁴நக்து । ஸஹவீர்யம் கரவாவஹை ।
தேஜஸ்வி நாவதீ⁴தமஸ்து । மா வித்³விஷாவஹை ॥
ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥

ௐ உஶந் ஹ வை வாஜஶ்ரவஸ: ஸர்வவேத³ஸம் த³தௌ³ ।
தஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ ॥ 1॥
தँஹ குமாரँஸந்தம் த³க்ஷிணாஸு
நீயமாநாஸு ஶ்ரத்³தா⁴விவேஶ ஸோऽமந்யத ॥ 2॥
பீதோத³கா ஜக்³த⁴த்ரு’ணா து³க்³த⁴தோ³ஹா நிரிந்த்³ரியா: ।
அநந்தா³ நாம தே லோகாஸ்தாந் ஸ க³ச்ச²தி தா த³த³த் ॥ 3॥
ஸ ஹோவாச பிதரம் தத கஸ்மை மாம் தா³ஸ்யஸீதி ।
த்³விதீயம் த்ரு’தீயம் தँஹோவாச ம்ரு’த்யவே த்வா த³தா³மீதி ॥ 4॥
ப³ஹூநாமேமி ப்ரத²மோ ப³ஹூநாமேமி மத்⁴யம: ।
கிँஸ்வித்³யமஸ்ய கர்தவ்யம் யந்மயாऽத்³ய கரிஷ்யதி ॥ 5॥
அநுபஶ்ய யதா² பூர்வே ப்ரதிபஶ்ய ததா²ऽபரே ।
ஸஸ்யமிவ மர்த்ய: பச்யதே ஸஸ்யமிவாஜாயதே புந: ॥ 6॥
வைஶ்வாநர: ப்ரவிஶத்யதிதி²ர்ப்³ராஹ்மணோ க்³ரு’ஹாந் ।
தஸ்யைதாँஶாந்திம் குர்வந்தி ஹர வைவஸ்வதோத³கம் ॥ 7॥
ஆஶாப்ரதீக்ஷே ஸங்க³தँஸூந்ரு’தாம்
சேஷ்டாபூர்தே புத்ரபஶூँஶ்ச ஸர்வாந் ।
1
கடோ²பநிஷத்
ஏதத்³வ்ரு’ங்க்தே புருஷஸ்யால்பமேத⁴ஸோ
யஸ்யாநஶ்நந்வஸதி ப்³ராஹ்மணோ க்³ரு’ஹே ॥ 8॥
திஸ்ரோ ராத்ரீர்யத³வாத்ஸீர்க்³ரு’ஹே மேऽநஶ்நந் ப்³ரஹ்மந்நதிதி²ர்நமஸ்ய: ।
நமஸ்தேऽஸ்து ப்³ரஹ்மந் ஸ்வஸ்தி மேऽஸ்து
தஸ்மாத்ப்ரதி த்ரீந்வராந்வ்ரு’ணீஷ்வ ॥ 9॥
ஶாந்தஸங்கல்ப: ஸுமநா யதா² ஸ்யாத்³
வீதமந்யுர்கௌ³தமோ மாऽபி⁴ ம்ரு’த்யோ ।
த்வத்ப்ரஸ்ரு’ஷ்டம் மாऽபி⁴வதே³த்ப்ரதீத
ஏதத் த்ரயாணாம் ப்ரத²மம் வரம் வ்ரு’ணே ॥ 10॥
யதா² புரஸ்தாத்³ ப⁴விதா ப்ரதீத
ஔத்³தா³லகிராருணிர்மத்ப்ரஸ்ரு’ஷ்ட: ।
ஸுக²ँராத்ரீ: ஶயிதா வீதமந்யு:
த்வாம் த³த்³ரு’ஶிவாந்ம்ரு’த்யுமுகா²த் ப்ரமுக்தம் ॥ 11॥
ஸ்வர்கே³ லோகே ந ப⁴யம் கிஞ்சநாஸ்தி
ந தத்ர த்வம் ந ஜரயா பி³பே⁴தி ।
உபே⁴ தீர்த்வாऽஶநாயாபிபாஸே
ஶோகாதிகோ³ மோத³தே ஸ்வர்க³லோகே ॥ 12॥
ஸ த்வமக்³நிँஸ்வர்க்³யமத்⁴யேஷி ம்ரு’த்யோ
ப்ரப்³ரூஹி த்வँஶ்ரத்³த³தா⁴நாய மஹ்யம் ।
ஸ்வர்க³லோகா அம்ரு’தத்வம் ப⁴ஜந்த
ஏதத்³ த்³விதீயேந வ்ரு’ணே வரேண ॥ 13॥
ப்ர தே ப்³ரவீமி தது³ மே நிபோ³த⁴
ஸ்வர்க்³யமக்³நிம் நசிகேத: ப்ரஜாநந் ।
அநந்தலோகாப்திமதோ² ப்ரதிஷ்டா²ம்
வித்³தி⁴ த்வமேதம் நிஹிதம் கு³ஹாயாம் ॥ 14॥
லோகாதி³மக்³நிம் தமுவாச தஸ்மை
யா இஷ்டகா யாவதீர்வா யதா² வா ।
ஸ சாபி தத்ப்ரத்யவத³த்³யதோ²க்தம்
அதா²ஸ்ய ம்ரு’த்யு: புநரேவாஹ துஷ்ட: ॥ 15॥

தமப்³ரவீத் ப்ரீயமாணோ மஹாத்மா
வரம் தவேஹாத்³ய த³தா³மி பூ⁴ய: ।
தவைவ நாம்நா ப⁴விதாऽயமக்³நி:
ஸ்ரு’ங்காம் சேமாமநேகரூபாம் க்³ரு’ஹாண ॥ 16॥
த்ரிணாசிகேதஸ்த்ரிபி⁴ரேத்ய ஸந்தி⁴ம்
த்ரிகர்மக்ரு’த்தரதி ஜந்மம்ரு’த்யூ ।
ப்³ரஹ்மஜஜ்ஞம் தே³வமீட்³யம் விதி³த்வா
நிசாய்யேமாँஶாந்திமத்யந்தமேதி ॥ 17॥
த்ரிணாசிகேதஸ்த்ரயமேதத்³விதி³த்வா
ய ஏவம் வித்³வாँஶ்சிநுதே நாசிகேதம் ।
ஸ ம்ரு’த்யுபாஶாந் புரத: ப்ரணோத்³ய
ஶோகாதிகோ³ மோத³தே ஸ்வர்க³லோகே ॥ 18॥
ஏஷ தேऽக்³நிர்நசிகேத: ஸ்வர்க்³யோ
யமவ்ரு’ணீதா² த்³விதீயேந வரேண ।
ஏதமக்³நிம் தவைவ ப்ரவக்ஷ்யந்தி ஜநாஸ:
த்ரு’தீயம் வரம் நசிகேதோ வ்ரு’ணீஷ்வ ॥ 19॥
யேயம் ப்ரேதே விசிகித்ஸா மநுஷ்யேऽஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே ।
ஏதத்³வித்³யாமநுஶிஷ்டஸ்த்வயாऽஹம்
வராணாமேஷ வரஸ்த்ரு’தீய: ॥ 20॥
தே³வைரத்ராபி விசிகித்ஸிதம் புரா
ந ஹி ஸுவிஜ்ஞேயமணுரேஷ த⁴ர்ம: ।
அந்யம் வரம் நசிகேதோ வ்ரு’ணீஷ்வ
மா மோபரோத்ஸீரதி மா ஸ்ரு’ஜைநம் ॥ 21॥
தே³வைரத்ராபி விசிகித்ஸிதம் கில
த்வம் ச ம்ரு’த்யோ யந்ந ஸுஜ்ஞேயமாத்த² ।
வக்தா சாஸ்ய த்வாத்³ரு’க³ந்யோ ந லப்⁴யோ
நாந்யோ வரஸ்துல்ய ஏதஸ்ய கஶ்சித் ॥ 22॥
ஶதாயுஷ: புத்ரபௌத்ராந்வ்ரு’ணீஷ்வா

ப³ஹூந்பஶூந் ஹஸ்திஹிரண்யமஶ்வாந் ।
பூ⁴மேர்மஹதா³யதநம் வ்ரு’ணீஷ்வ
ஸ்வயம் ச ஜீவ ஶரதோ³ யாவதி³ச்ச²ஸி ॥ 23॥
ஏதத்துல்யம் யதி³ மந்யஸே வரம்
வ்ரு’ணீஷ்வ வித்தம் சிரஜீவிகாம் ச ।
மஹாபூ⁴மௌ நசிகேதஸ்த்வமேதி⁴
காமாநாம் த்வா காமபா⁴ஜம் கரோமி ॥ 24॥
யே யே காமா து³ர்லபா⁴ மர்த்யலோகே
ஸர்வாந் காமாँஶ்ச²ந்த³த: ப்ரார்த²யஸ்வ ।
இமா ராமா: ஸரதா:² ஸதூர்யா
ந ஹீத்³ரு’ஶா லம்ப⁴நீயா மநுஷ்யை: ।
ஆபி⁴ர்மத்ப்ரத்தாபி:⁴ பரிசாரயஸ்வ
நசிகேதோ மரணம் மாऽநுப்ராக்ஷீ: ॥ 25॥
ஶ்வோபா⁴வா மர்த்யஸ்ய யத³ந்தகைதத்
ஸர்வேந்த்³ரியாணாம் ஜரயந்தி தேஜ: ।
அபி ஸர்வம் ஜீவிதமல்பமேவ
தவைவ வாஹாஸ்தவ ந்ரு’த்யகீ³தே ॥ 26॥
ந வித்தேந தர்பணீயோ மநுஷ்யோ
லப்ஸ்யாமஹே வித்தமத்³ராக்ஷ்ம சேத்த்வா ।
ஜீவிஷ்யாமோ யாவதீ³ஶிஷ்யஸி த்வம்
வரஸ்து மே வரணீய: ஸ ஏவ ॥ 27॥
அஜீர்யதாமம்ரு’தாநாமுபேத்ய
ஜீர்யந்மர்த்ய: க்வத:⁴ஸ்த:² ப்ரஜாநந் ।
அபி⁴த்⁴யாயந் வர்ணரதிப்ரமோதா³ந்
அதிதீ³ர்கே⁴ ஜீவிதே கோ ரமேத ॥ 28॥
யஸ்மிந்நித³ம் விசிகித்ஸந்தி ம்ரு’த்யோ
யத்ஸாம்பராயே மஹதி ப்³ரூஹி நஸ்தத் ।
யோऽயம் வரோ கூ³ட⁴மநுப்ரவிஷ்டோ
நாந்யம் தஸ்மாந்நசிகேதா வ்ரு’ணீதே ॥ 29॥
॥ இதி காட²கோபநிஷதி³ ப்ரத²மாத்⁴யாயே ப்ரத²மா வல்லீ ॥

————-

அந்யச்ச்²ரேயோऽந்யது³தைவ ப்ரேயஸ்தே உபே⁴ நாநார்தே² புருஷँஸிநீத: ।
தயோ: ஶ்ரேய ஆத³தா³நஸ்ய ஸாது⁴
ப⁴வதி ஹீயதேऽர்தா²த்³ய உ ப்ரேயோ வ்ரு’ணீதே ॥ 1॥
ஶ்ரேயஶ்ச ப்ரேயஶ்ச மநுஷ்யமேத:
தௌ ஸம்பரீத்ய விவிநக்தி தீ⁴ர: ।
ஶ்ரேயோ ஹி தீ⁴ரோऽபி⁴ ப்ரேயஸோ வ்ரு’ணீதே
ப்ரேயோ மந்தோ³ யோக³க்ஷேமாத்³வ்ரு’ணீதே ॥ 2॥
ஸ த்வம் ப்ரியாந்ப்ரியரூபாம்ஶ்ச காமாந்
அபி⁴த்⁴யாயந்நசிகேதோऽத்யஸ்ராக்ஷீ: ।
நைதாம் ஸ்ரு’ங்காம் வித்தமயீமவாப்தோ
யஸ்யாம் மஜ்ஜந்தி ப³ஹவோ மநுஷ்யா: ॥ 3॥
தூ³ரமேதே விபரீதே விஷூசீ
அவித்³யா யா ச வித்³யேதி ஜ்ஞாதா ।
வித்³யாபீ⁴ப்ஸிநம் நசிகேதஸம் மந்யே
ந த்வா காமா ப³ஹவோऽலோலுபந்த ॥ 4॥
அவித்³யாயாமந்தரே வர்தமாநா:
ஸ்வயம் தீ⁴ரா: பண்டி³தம்மந்யமாநா: ।
த³ந்த்³ரம்யமாணா: பரியந்தி மூடா⁴
அந்தே⁴நைவ நீயமாநா யதா²ந்தா:⁴ ॥ 5॥
ந ஸாம்பராய: ப்ரதிபா⁴தி பா³லம்
ப்ரமாத்³யந்தம் வித்தமோஹேந மூட⁴ம் ।
அயம் லோகோ நாஸ்தி பர இதி மாநீ
புந: புநர்வஶமாபத்³யதே மே ॥ 6॥
ஶ்ரவணாயாபி ப³ஹுபி⁴ர்யோ ந லப்⁴ய:
ஶ்ரு’ண்வந்தோऽபி ப³ஹவோ யம் ந வித்³யு: ।

ஆஶ்சர்யோ வக்தா குஶலோऽஸ்ய லப்³தா⁴
ஆஶ்சர்யோ ஜ்ஞாதா குஶலாநுஶிஷ்ட: ॥ 7॥
ந நரேணாவரேண ப்ரோக்த ஏஷ
ஸுவிஜ்ஞேயோ ப³ஹுதா⁴ சிந்த்யமாந: ।
அநந்யப்ரோக்தே க³திரத்ர நாஸ்தி
அணீயாந் ஹ்யதர்க்யமணுப்ரமாணாத் ॥ 8॥
நைஷா தர்கேண மதிராபநேயா
ப்ரோக்தாந்யேநைவ ஸுஜ்ஞாநாய ப்ரேஷ்ட² ।
யாம் த்வமாப: ஸத்யத்⁴ரு’திர்ப³தாஸி
த்வாத்³ரு’ங்நோ பூ⁴யாந்நசிகேத: ப்ரஷ்டா ॥ 9॥
ஜாநாம்யஹம் ஶேவதி⁴ரித்யநித்யம்
ந ஹ்யத்⁴ருவை: ப்ராப்யதே ஹி த்⁴ருவம் தத் ।
ததோ மயா நாசிகேதஶ்சிதோऽக்³நி:
அநித்யைர்த்³ரவ்யை: ப்ராப்தவாநஸ்மி நித்யம் ॥ 10॥
காமஸ்யாப்திம் ஜக³த: ப்ரதிஷ்டா²ம்
க்ரதோராநந்த்யமப⁴யஸ்ய பாரம் ।
ஸ்தோமமஹது³ருகா³யம் ப்ரதிஷ்டா²ம் த்³ரு’ஷ்ட்வா
த்⁴ரு’த்யா தீ⁴ரோ நசிகேதோऽத்யஸ்ராக்ஷீ: ॥ 11॥
தம் து³ர்த³ர்ஶம் கூ³ட⁴மநுப்ரவிஷ்டம்
கு³ஹாஹிதம் க³ஹ்வரேஷ்ட²ம் புராணம் ।
அத்⁴யாத்மயோகா³தி⁴க³மேந தே³வம்
மத்வா தீ⁴ரோ ஹர்ஷஶோகௌ ஜஹாதி ॥ 12॥
ஏதச்ச்²ருத்வா ஸம்பரிக்³ரு’ஹ்ய மர்த்ய:
ப்ரவ்ரு’ஹ்ய த⁴ர்ம்யமணுமேதமாப்ய ।
ஸ மோத³தே மோத³நீயँஹி லப்³த்⁴வா
விவ்ரு’தँஸத்³ம நசிகேதஸம் மந்யே ॥ 13॥
அந்யத்ர த⁴ர்மாத³ந்யத்ராத⁴ர்மாத³ந்யத்ராஸ்மாத்க்ரு’தாக்ரு’தாத் ।
அந்யத்ர பூ⁴தாச்ச ப⁴வ்யாச்ச
யத்தத்பஶ்யஸி தத்³வத³ ॥ 14॥

ஸர்வே வேதா³ யத்பத³மாமநந்தி
தபாꣳஸி ஸர்வாணி ச யத்³வத³ந்தி ।
யதி³ச்ச²ந்தோ ப்³ரஹ்மசர்யம் சரந்தி
தத்தே பத³ꣳ ஸங்க்³ரஹேண ப்³ரவீம்யோமித்யேதத் ॥ 15॥
ஏதத்³த்⁴யேவாக்ஷரம் ப்³ரஹ்ம ஏதத்³த்⁴யேவாக்ஷரம் பரம் ।
ஏதத்³த்⁴யேவாக்ஷரம் ஜ்ஞாத்வா யோ யதி³ச்ச²தி தஸ்ய தத் ॥ 16॥
ஏததா³லம்ப³நँஶ்ரேஷ்ட²மேததா³லம்ப³நம் பரம் ।
ஏததா³லம்ப³நம் ஜ்ஞாத்வா ப்³ரஹ்மலோகே மஹீயதே ॥ 17॥
ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சிந்நாயம் குதஶ்சிந்ந ப³பூ⁴வ கஶ்சித் ।
அஜோ நித்ய: ஶாஶ்வதோऽயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஶரீரே ॥ 18॥
ஹந்தா சேந்மந்யதே ஹந்துँஹதஶ்சேந்மந்யதே ஹதம் ।
உபௌ⁴ தௌ ந விஜாநீதோ நாயँஹந்தி ந ஹந்யதே ॥ 19॥
அணோரணீயாந்மஹதோ மஹீயாநாத்மாऽஸ்ய ஜந்தோர்நிஹிதோ கு³ஹாயாம் ।
தமக்ரது: பஶ்யதி வீதஶோகோ
தா⁴துப்ரஸாதா³ந்மஹிமாநமாத்மந: ॥ 20॥
ஆஸீநோ தூ³ரம் வ்ரஜதி ஶயாநோ யாதி ஸர்வத: ।
கஸ்தம் மதா³மத³ம் தே³வம் மத³ந்யோ ஜ்ஞாதுமர்ஹதி ॥ 21॥
அஶரீரँஶரீரேஷ்வநவஸ்தே²ஷ்வவஸ்தி²தம் ।
மஹாந்தம் விபு⁴மாத்மாநம் மத்வா தீ⁴ரோ ந ஶோசதி ॥ 22॥
நாயமாத்மா ப்ரவசநேந லப்⁴யோ
ந மேத⁴யா ந ப³ஹுநா ஶ்ருதேந ।
யமேவைஷ வ்ரு’ணுதே தேந லப்⁴ய:
தஸ்யைஷ ஆத்மா விவ்ரு’ணுதே தநூꣳ ஸ்வாம் ॥ 23॥
நாவிரதோ து³ஶ்சரிதாந்நாஶாந்தோ நாஸமாஹித: ।
நாஶாந்தமாநஸோ வாऽபி ப்ரஜ்ஞாநேநைநமாப்நுயாத் ॥ 24॥

யஸ்ய ப்³ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே⁴ ப⁴வத ஓத³ந: ।
ம்ரு’த்யுர்யஸ்யோபஸேசநம் க இத்தா² வேத³ யத்ர ஸ: ॥ 25॥
இதி காட²கோபநிஷதி³ ப்ரத²மாத்⁴யாயே த்³விதீயா வல்லீ ॥

————–

ரு’தம் பிப³ந்தௌ ஸுக்ரு’தஸ்ய லோகே
கு³ஹாம் ப்ரவிஷ்டௌ பரமே பரார்தே⁴ ।
சா²யாதபௌ ப்³ரஹ்மவிதோ³ வத³ந்தி
பஞ்சாக்³நயோ யே ச த்ரிணாசிகேதா: ॥ 1॥
ய: ஸேதுரீஜாநாநாமக்ஷரம் ப்³ரஹ்ம யத் பரம் ।
அப⁴யம் திதீர்ஷதாம் பாரம் நாசிகேதँஶகேமஹி ॥ 2॥
ஆத்மாநँரதி²தம் வித்³தி⁴ ஶரீரँரத²மேவ து ।
பு³த்³தி⁴ம் து ஸாரதி²ம் வித்³தி⁴ மந: ப்ரக்³ரஹமேவ ச ॥ 3॥
இந்த்³ரியாணி ஹயாநாஹுர்விஷயாँஸ்தேஷு கோ³சராந் ।
ஆத்மேந்த்³ரியமநோயுக்தம் போ⁴க்தேத்யாஹுர்மநீஷிண: ॥ 4॥
யஸ்த்வவிஜ்ஞாநவாந்ப⁴வத்யயுக்தேந மநஸா ஸதா³ ।
தஸ்யேந்த்³ரியாண்யவஶ்யாநி து³ஷ்டாஶ்வா இவ ஸாரதே:² ॥ 5॥
யஸ்து விஜ்ஞாநவாந்ப⁴வதி யுக்தேந மநஸா ஸதா³ ।
தஸ்யேந்த்³ரியாணி வஶ்யாநி ஸத³ஶ்வா இவ ஸாரதே:² ॥ 6॥
யஸ்த்வவிஜ்ஞாநவாந்ப⁴வத்யமநஸ்க: ஸதா³ऽஶுசி: ।
ந ஸ தத்பத³மாப்நோதி ஸம்ஸாரம் சாதி⁴க³ச்ச²தி ॥ 7॥
யஸ்து விஜ்ஞாநவாந்ப⁴வதி ஸமநஸ்க: ஸதா³ ஶுசி: ।
ஸ து தத்பத³மாப்நோதி யஸ்மாத்³பூ⁴யோ ந ஜாயதே ॥ 8॥
விஜ்ஞாநஸாரதி²ர்யஸ்து மந: ப்ரக்³ரஹவாந்நர: ।
ஸோऽத்⁴வந: பாரமாப்நோதி தத்³விஷ்ணோ: பரமம் பத³ம் ॥ 9॥
இந்த்³ரியேப்⁴ய: பரா ஹ்யர்தா² அர்தே²ப்⁴யஶ்ச பரம் மந: ।
மநஸஸ்து பரா பு³த்³தி⁴ர்பு³த்³தே⁴ராத்மா மஹாந்பர: ॥ 10॥

மஹத: பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷ: பர: ।
புருஷாந்ந பரம் கிஞ்சித்ஸா காஷ்டா² ஸா பரா க³தி: ॥ 11॥
ஏஷ ஸர்வேஷு பூ⁴தேஷு கூ³டோ⁴ऽऽத்மா ந ப்ரகாஶதே ।
த்³ரு’ஶ்யதே த்வக்³ர்யயா பு³த்³த்⁴யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்மத³ர்ஶிபி:⁴ ॥ 12॥
யச்சே²த்³வாங்மநஸீ ப்ராஜ்ஞஸ்தத்³யச்சே²ஜ்ஜ்ஞாந ஆத்மநி ।
ஜ்ஞாநமாத்மநி மஹதி நியச்சே²த்தத்³யச்சே²ச்சா²ந்த ஆத்மநி ॥ 13॥
உத்திஷ்ட²த ஜாக்³ரத
ப்ராப்ய வராந்நிபோ³த⁴த ।
க்ஷுரஸ்ய தா⁴ரா நிஶிதா து³ரத்யயா
து³ர்க³ம் பத²ஸ்தத்கவயோ வத³ந்தி ॥ 14॥
அஶப்³த³மஸ்பர்ஶமரூபமவ்யயம்
ததா²ऽரஸம் நித்யமக³ந்த⁴வச்ச யத் ।
அநாத்³யநந்தம் மஹத: பரம் த்⁴ருவம்
நிசாய்ய தந்ம்ரு’த்யுமுகா²த் ப்ரமுச்யதே ॥ 15॥
நாசிகேதமுபாக்²யாநம் ம்ரு’த்யுப்ரோக்தँஸநாதநம் ।
உக்த்வா ஶ்ருத்வா ச மேதா⁴வீ ப்³ரஹ்மலோகே மஹீயதே ॥ 16॥
ய இமம் பரமம் கு³ஹ்யம் ஶ்ராவயேத்³ ப்³ரஹ்மஸம்ஸதி³ ।
ப்ரயத: ஶ்ராத்³த⁴காலே வா ததா³நந்த்யாய கல்பதே ।
ததா³நந்த்யாய கல்பத இதி ॥ 17॥
இதி காட²கோபநிஷதி³ ப்ரத²மாத்⁴யாயே த்ரு’தீயா வல்லீ ॥

————-

பராஞ்சி கா²நி வ்யத்ரு’ணத் ஸ்வயம்பூ⁴ஸ்தஸ்மாத்பராங்பஶ்யதி நாந்தராத்மந் ।
கஶ்சித்³தீ⁴ர: ப்ரத்யகா³த்மாநமைக்ஷதா³வ்ரு’த்தசக்ஷுரம்ரு’தத்வமிச்ச²ந் ॥ 1॥
பராச: காமாநநுயந்தி பா³லாஸ்தே ம்ரு’த்யோர்யந்தி விததஸ்ய பாஶம் ।

அத² தீ⁴ரா அம்ரு’தத்வம் விதி³த்வா
த்⁴ருவமத்⁴ருவேஷ்விஹ ந ப்ரார்த²யந்தே ॥ 2॥
யேந ரூபம் ரஸம் க³ந்த⁴ம் ஶப்³தா³ந் ஸ்பர்ஶாꣳஶ்ச மைது²நாந் ।
ஏதேநைவ விஜாநாதி கிமத்ர பரிஶிஷ்யதே । ஏதத்³வை தத் ॥ 3॥
ஸ்வப்நாந்தம் ஜாக³ரிதாந்தம் சோபௌ⁴ யேநாநுபஶ்யதி ।
மஹாந்தம் விபு⁴மாத்மாநம் மத்வா தீ⁴ரோ ந ஶோசதி ॥ 4॥
ய இமம் மத்⁴வத³ம் வேத³ ஆத்மாநம் ஜீவமந்திகாத் ।
ஈஶாநம் பூ⁴தப⁴வ்யஸ்ய ந ததோ விஜுகு³ப்ஸதே । ஏதத்³வை தத் ॥ 5॥
ய: பூர்வம் தபஸோ ஜாதமத்³ப்⁴ய: பூர்வமஜாயத ।
கு³ஹாம் ப்ரவிஶ்ய திஷ்ட²ந்தம் யோ பூ⁴தேபி⁴ர்வ்யபஶ்யத । ஏதத்³வை தத் ॥ 6॥
யா ப்ராணேந ஸம்ப⁴வத்யதி³திர்தே³வதாமயீ ।
கு³ஹாம் ப்ரவிஶ்ய திஷ்ட²ந்தீம் யா பூ⁴தேபி⁴ர்வ்யஜாயத । ஏதத்³வை தத் ॥ 7॥
அரண்யோர்நிஹிதோ ஜாதவேதா³ க³ர்ப⁴ இவ ஸுப்⁴ரு’தோ க³ர்பி⁴ணீபி:⁴ ।
தி³வே தி³வே ஈட்³யோ ஜாக்³ரு’வத்³பி⁴ர்ஹவிஷ்மத்³பி⁴ர்மநுஷ்யேபி⁴ரக்³நி: । ஏதத்³வை
தத் ॥ 8॥
யதஶ்சோதே³தி ஸூர்யோऽஸ்தம் யத்ர ச க³ச்ச²தி ।
தம் தே³வா: ஸர்வேऽர்பிதாஸ்தது³ நாத்யேதி கஶ்சந । ஏதத்³வை தத் ॥ 9॥
யதே³வேஹ தத³முத்ர யத³முத்ர தத³ந்விஹ ।
ம்ரு’த்யோ: ஸ ம்ரு’த்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஶ்யதி ॥ 10॥
மநஸைவேத³மாப்தவ்யம் நேஹ நாநாऽஸ்தி கிஞ்சந ।
ம்ரு’த்யோ: ஸ ம்ரு’த்யும் க³ச்ச²தி ய இஹ நாநேவ பஶ்யதி ॥ 11॥
அங்கு³ஷ்ட²மாத்ர: புருஷோ மத்⁴ய ஆத்மநி திஷ்ட²தி ।
ஈஶாநம் பூ⁴தப⁴வ்யஸ்ய ந ததோ விஜுகு³ப்ஸதே । ஏதத்³வை தத் ॥ 12॥
அங்கு³ஷ்ட²மாத்ர: புருஷோ ஜ்யோதிரிவாதூ⁴மக: ।
ஈஶாநோ பூ⁴தப⁴வ்யஸ்ய ஸ ஏவாத்³ய ஸ உ ஶ்வ: । ஏதத்³வை தத் ॥ 13॥
யதோ²த³கம் து³ர்கே³ வ்ரு’ஷ்டம் பர்வதேஷு விதா⁴வதி ।
ஏவம் த⁴ர்மாந் ப்ரு’த²க் பஶ்யம்ஸ்தாநேவாநுவிதா⁴வதி ॥ 14॥
யதோ²த³கம் ஶுத்³தே⁴ ஶுத்³த⁴மாஸிக்தம் தாத்³ரு’கே³வ ப⁴வதி ।

ஏவம் முநேர்விஜாநத ஆத்மா ப⁴வதி கௌ³தம ॥ 15॥
இதி காட²கோபநிஷதி³ த்³விதீயாத்⁴யாயே ப்ரத²மா வல்லீ ॥

—————

புரமேகாத³ஶத்³வாரமஜஸ்யாவக்ரசேதஸ: ।
அநுஷ்டா²ய ந ஶோசதி விமுக்தஶ்ச விமுச்யதே । ஏதத்³வை தத் ॥ 1॥
ஹँஸ: ஶுசிஷத்³வஸுரந்தரிக்ஷஸத்³ஹோதா வேதி³ஷத³திதி²ர்து³ரோணஸத் ।
ந்ரு’ஷத்³வரஸத்³ரு’தஸத்³வ்யோமஸத்³
அப்³ஜா கோ³ஜா ரு’தஜா அத்³ரிஜா ரு’தம் ப்³ரு’ஹத் ॥ 2॥
ஊர்த்⁴வம் ப்ராணமுந்நயத்யபாநம் ப்ரத்யக³ஸ்யதி ।
மத்⁴யே வாமநமாஸீநம் விஶ்வே தே³வா உபாஸதே ॥ 3॥
அஸ்ய விஸ்ரம்ஸமாநஸ்ய ஶரீரஸ்த²ஸ்ய தே³ஹிந: ।
தே³ஹாத்³விமுச்யமாநஸ்ய கிமத்ர பரிஶிஷ்யதே । ஏதத்³வை தத் ॥ 4॥
ந ப்ராணேந நாபாநேந மர்த்யோ ஜீவதி கஶ்சந ।
இதரேண து ஜீவந்தி யஸ்மிந்நேதாவுபாஶ்ரிதௌ ॥ 5॥
ஹந்த த இத³ம் ப்ரவக்ஷ்யாமி கு³ஹ்யம் ப்³ரஹ்ம ஸநாதநம் ।
யதா² ச மரணம் ப்ராப்ய ஆத்மா ப⁴வதி கௌ³தம ॥ 6॥
யோநிமந்யே ப்ரபத்³யந்தே ஶரீரத்வாய தே³ஹிந: ।
ஸ்தா²ணுமந்யேऽநுஸம்யந்தி யதா²கர்ம யதா²ஶ்ருதம் ॥ 7॥
ய ஏஷ ஸுப்தேஷு ஜாக³ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண: ।
ததே³வ ஶுக்ரம் தத்³ப்³ரஹ்ம ததே³வாம்ரு’தமுச்யதே ।
தஸ்மிँல்லோகா: ஶ்ரிதா: ஸர்வே தது³ நாத்யேதி கஶ்சந । ஏதத்³வை தத் ॥ 8॥
அக்³நிர்யதை²கோ பு⁴வநம் ப்ரவிஷ்டோ
ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப³பூ⁴வ ।
ஏகஸ்ததா² ஸர்வபூ⁴தாந்தராத்மா
ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப³ஹிஶ்ச ॥ 9॥

வாயுர்யதை²கோ பு⁴வநம் ப்ரவிஷ்டோ
ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப³பூ⁴வ ।
ஏகஸ்ததா² ஸர்வபூ⁴தாந்தராத்மா
ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப³ஹிஶ்ச ॥ 10॥
ஸூர்யோ யதா² ஸர்வலோகஸ்ய சக்ஷு:
ந லிப்யதே சாக்ஷுஷைர்பா³ஹ்யதோ³ஷை: ।
ஏகஸ்ததா² ஸர்வபூ⁴தாந்தராத்மா
ந லிப்யதே லோகது:³கே²ந பா³ஹ்ய: ॥ 11॥
ஏகோ வஶீ ஸர்வபூ⁴தாந்தராத்மா
ஏகம் ரூபம் ப³ஹுதா⁴ ய: கரோதி ।
தமாத்மஸ்த²ம் யேऽநுபஶ்யந்தி தீ⁴ரா:
தேஷாம் ஸுக²ம் ஶாஶ்வதம் நேதரேஷாம் ॥ 12॥
நித்யோऽநித்யாநாம் சேதநஶ்சேதநாநாம்
ஏகோ ப³ஹூநாம் யோ வித³தா⁴தி காமாந் ।
தமாத்மஸ்த²ம் யேऽநுபஶ்யந்தி தீ⁴ரா:
தேஷாம் ஶாந்தி: ஶாஶ்வதீ நேதரேஷாம் ॥ 13॥
ததே³ததி³தி மந்யந்தேऽநிர்தே³ஶ்யம் பரமம் ஸுக²ம் ।
கத²ம் நு தத்³விஜாநீயாம் கிமு பா⁴தி விபா⁴தி வா ॥ 14॥
ந தத்ர ஸூர்யோ பா⁴தி ந சந்த்³ரதாரகம்
நேமா வித்³யுதோ பா⁴ந்தி குதோऽயமக்³நி: ।
தமேவ பா⁴ந்தமநுபா⁴தி ஸர்வம்
தஸ்ய பா⁴ஸா ஸர்வமித³ம் விபா⁴தி ॥ 15॥
இதி காட²கோபநிஷதி³ த்³விதீயாத்⁴யாயே த்³விதீயா வல்லீ ॥

———

ஊர்த்⁴வமூலோऽவாக்ஶாக² ஏஷோऽஶ்வத்த:² ஸநாதந: ।
ததே³வ ஶுக்ரம் தத்³ப்³ரஹ்ம ததே³வாம்ரு’தமுச்யதே ।
தஸ்மிँல்லோகா: ஶ்ரிதா: ஸர்வே தது³ நாத்யேதி கஶ்சந । ஏதத்³வை தத் ॥ 1॥

யதி³த³ம் கிம் ச ஜக³த் ஸர்வம் ப்ராண ஏஜதி நி:ஸ்ரு’தம் ।
மஹத்³ப⁴யம் வஜ்ரமுத்³யதம் ய ஏதத்³விது³ரம்ரு’தாஸ்தே ப⁴வந்தி ॥ 2॥
ப⁴யாத³ஸ்யாக்³நிஸ்தபதி ப⁴யாத்தபதி ஸூர்ய: ।
ப⁴யாதி³ந்த்³ரஶ்ச வாயுஶ்ச ம்ரு’த்யுர்தா⁴வதி பஞ்சம: ॥ 3॥
இஹ சேத³ஶகத்³போ³த்³து⁴ம் ப்ராக்ஷரீரஸ்ய விஸ்ரஸ: ।
தத: ஸர்கே³ஷு லோகேஷு ஶரீரத்வாய கல்பதே ॥ 4॥
யதா²ऽऽத³ர்ஶே ததா²ऽऽத்மநி யதா² ஸ்வப்நே ததா² பித்ரு’லோகே ।
யதா²ऽப்ஸு பரீவ த³த்³ரு’ஶே ததா² க³ந்த⁴ர்வலோகே
சா²யாதபயோரிவ ப்³ரஹ்மலோகே ॥ 5॥
இந்த்³ரியாணாம் ப்ரு’த²க்³பா⁴வமுத³யாஸ்தமயௌ ச யத் ।
ப்ரு’த²கு³த்பத்³யமாநாநாம் மத்வா தீ⁴ரோ ந ஶோசதி ॥ 6॥
இந்த்³ரியேப்⁴ய: பரம் மநோ மநஸ: ஸத்த்வமுத்தமம் ।
ஸத்த்வாத³தி⁴ மஹாநாத்மா மஹதோऽவ்யக்தமுத்தமம் ॥ 7॥
அவ்யக்தாத்து பர: புருஷோ வ்யாபகோऽலிங்க³ ஏவ ச ।
யம் ஜ்ஞாத்வா முச்யதே ஜந்துரம்ரு’தத்வம் ச க³ச்ச²தி ॥ 8॥
ந ஸந்த்³ரு’ஶே திஷ்ட²தி ரூபமஸ்ய
ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம் ।
ஹ்ரு’தா³ மநீஷா மநஸாऽபி⁴க்ல்ரு’ப்தோ
ய ஏதத்³விது³ரம்ரு’தாஸ்தே ப⁴வந்தி ॥ 9॥
யதா³ பஞ்சாவதிஷ்ட²ந்தே ஜ்ஞாநாநி மநஸா ஸஹ ।
பு³த்³தி⁴ஶ்ச ந விசேஷ்டதே தாமாஹு: பரமாம் க³திம் ॥ 10॥
தாம் யோக³மிதி மந்யந்தே ஸ்தி²ராமிந்த்³ரியதா⁴ரணாம் ।
அப்ரமத்தஸ்ததா³ ப⁴வதி யோகோ³ ஹி ப்ரப⁴வாப்யயௌ ॥ 11॥
நைவ வாசா ந மநஸா ப்ராப்தும் ஶக்யோ ந சக்ஷுஷா ।
அஸ்தீதி ப்³ருவதோऽந்யத்ர கத²ம் தது³பலப்⁴யதே ॥ 12॥
அஸ்தீத்யேவோபலப்³த⁴வ்யஸ்தத்த்வபா⁴வேந சோப⁴யோ: ।
அஸ்தீத்யேவோபலப்³த⁴ஸ்ய தத்த்வபா⁴வ: ப்ரஸீத³தி ॥ 13॥
யதா³ ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேऽஸ்ய ஹ்ரு’தி³ ஶ்ரிதா: ।

அத² மர்த்யோऽம்ரு’தோ ப⁴வத்யத்ர ப்³ரஹ்ம ஸமஶ்நுதே ॥ 14॥
யதா³ ஸர்வே ப்ரபி⁴த்³யந்தே ஹ்ரு’த³யஸ்யேஹ க்³ரந்த²ய: ।
அத² மர்த்யோऽம்ரு’தோ ப⁴வத்யேதாவத்³த்⁴யநுஶாஸநம் ॥ 15॥
ஶதம் சைகா ச ஹ்ரு’த³யஸ்ய நாட்³யஸ்தாஸாம் மூர்தா⁴நமபி⁴நி:ஸ்ரு’தைகா ।
தயோர்த்⁴வமாயந்நம்ரு’தத்வமேதி
விஷ்வங்ஙந்யா உத்க்ரமணே ப⁴வந்தி ॥ 16॥
அங்கு³ஷ்ட²மாத்ர: புருஷோऽந்தராத்மா
ஸதா³ ஜநாநாம் ஹ்ரு’த³யே ஸம்நிவிஷ்ட: ।
தம் ஸ்வாச்ச²ரீராத்ப்ரவ்ரு’ஹேந்முஞ்ஜாதி³வேஷீகாம் தை⁴ர்யேண ।
தம் வித்³யாச்சு²க்ரமம்ரு’தம் தம் வித்³யாச்சு²க்ரமம்ரு’தமிதி ॥ 17॥
ம்ரு’த்யுப்ரோக்தாம் நசிகேதோऽத² லப்³த்⁴வா
வித்³யாமேதாம் யோக³விதி⁴ம் ச க்ரு’த்ஸ்நம் ।
ப்³ரஹ்மப்ராப்தோ விரஜோऽபூ⁴த்³விம்ரு’த்யுரந்யோऽப்யேவம் யோ வித³த்⁴யாத்மமேவ ॥ 18॥
ஸஹ நாவவது । ஸஹ நௌ பு⁴நக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை ।
தேஜஸ்விநாவதீ⁴தமஸ்து மா வித்³விஷாவஹை ॥ 19॥

ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥
இதி காட²கோபநிஷதி³ த்³விதீயாத்⁴யாயே த்ரு’தீயா வல்லீ ॥
ௐ ஸஹ நாவவது । ஸஹ நௌ பு⁴நக்து । ஸஹவீர்யம் கரவாவஹை ।
தேஜஸ்வி நாவதீ⁴தமஸ்து । மா வித்³விஷாவஹை ॥
ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥
ௐ தத் ஸ

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ தைத்திரீயோபநிஷத்

December 30, 2021

தைத்திரீயோபநிஷத்
ௐ ஶ்ரீ கு³ருப்⁴யோ நம: । ஹரி: ௐ ।
ப்ரத²மா ஶீக்ஷாவல்லீ
ௐ ஶம் நோ மித்ர: ஶம் வருண: । ஶம் நோ ப⁴வத்வர்யமா ।
ஶம் ந இந்த்³ரோ ப்³ரு’ஹஸ்பதி: । ஶம் நோ விஷ்ணுருருக்ரம: ।
நமோ ப்³ரஹ்மணே । நமஸ்தே வாயோ । த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்³ரஹ்மாஸி ।
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்³ரஹ்ம வதி³ஷ்யாமி । ரு’தம் வதி³ஷ்யாமி ।
ஸத்யம் வதி³ஷ்யாமி । தந்மாமவது । தத்³வக்தாரமவது ।
அவது மாம் । அவது வக்தாரம் ।
ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥ 1॥ இதி ப்ரத²மோऽநுவாக: ॥
ஶிக்ஷாஶாஸ்த்ரார்த²ஸங்க்³ரஹ:
ௐ ஶீக்ஷாம் வ்யாக்²யாஸ்யாம: । வர்ண: ஸ்வர: । மாத்ரா ப³லம் ।
ஸாம ஸந்தாந: । இத்யுக்த: ஶீக்ஷாத்⁴யாய: ॥ 1॥

இதி த்³விதீயோऽநுவாக: ॥
ஸம்ஹிதோபாஸநம்
ஸஹ நௌ யஶ: । ஸஹ நௌ ப்³ரஹ்மவர்சஸம் ।
அதா²த: ஸꣳஹிதாயா உபநிஷத³ம் வ்யாக்²யாஸ்யாம: ।
பஞ்சஸ்வதி⁴கரணேஷு ।
அதி⁴லோகமதி⁴ஜ்யௌதிஷமதி⁴வித்³யமதி⁴ப்ரஜமத்⁴யாத்மம் ।
தா மஹாஸꣳஹிதா இத்யாசக்ஷதே । அதா²தி⁴லோகம் ।
ப்ரு’தி²வீ பூர்வரூபம் । த்³யௌருத்தரரூபம் ।
ஆகாஶ: ஸந்தி:⁴ ॥ 1॥
வாயு: ஸந்தா⁴நம் । இத்யதி⁴லோகம் । அதா²தி⁴ஜௌதிஷம் ।
அக்³நி: பூர்வரூபம் । ஆதி³த்ய உத்தரரூபம் । ஆப: ஸந்தி:⁴ ।
வைத்³யுத: ஸந்தா⁴நம் । இத்யதி⁴ஜ்யௌதிஷம் । அதா²தி⁴வித்³யம் ।

தைத்திரீயோபநிஷத்
ஆசார்ய: பூர்வரூபம் ॥ 2॥
அந்தேவாஸ்யுத்தரரூபம் । வித்³யா ஸந்தி:⁴ ।
ப்ரவசநꣳஸந்தா⁴நம் ।
இத்யதி⁴வித்³யம் । அதா²தி⁴ப்ரஜம் । மாதா பூர்வரூபம் ।
பிதோத்தரரூபம் । ப்ரஜா ஸந்தி:⁴ । ப்ரஜநநꣳஸந்தா⁴நம் ।
இத்யதி⁴ப்ரஜம் ॥ 3॥
அதா²த்⁴யாத்மம் । அத⁴ராஹநு: பூர்வரூபம் ।
உத்தராஹநூத்தரரூபம் । வாக்ஸந்தி:⁴ । ஜிஹ்வாஸந்தா⁴நம் ।
இத்யத்⁴யாத்மம் । இதீமாமஹாஸꣳஹிதா: ।
ய ஏவமேதா மஹாஸꣳஹிதா வ்யாக்²யாதா வே‘த³ ।
ஸந்தீ⁴யதே ப்ரஜயா பஶுபி:⁴ ।
ப்³ரஹ்மவர்சஸேநாந்நாத்³யேந ஸுவர்க்³யேண லோகேந ॥ 4॥

இதி த்ரு’தீயோऽநுவாக: ॥
மேதா⁴தி³ஸித்³த்⁴யர்தா² ஆவஹந்தீஹோமமந்த்ரா:
யஶ்ச²ந்த³ஸாம்ரு’ஷபோ⁴ விஶ்வரூப: ।
ச²ந்தோ³ப்⁴யோऽத்⁴யம்ரு’தாத்ஸம்ப³பூ⁴வ ।
ஸ மேந்த்³ரோ மேத⁴யா ஸ்ப்ரு’ணோது ।
அம்ரு’தஸ்ய தே³வ தா⁴ரணோ பூ⁴யாஸம் ।
ஶரீரம் மே விசர்ஷணம் । ஜிஹ்வா மே மது⁴மத்தமா ।
கர்ணாப்⁴யாம் பூ⁴ரிவிஶ்ருவம் ।
ப்³ரஹ்மண: கோஶோऽஸி மேத⁴யா பிஹித: ।
ஶ்ருதம் மே கோ³பாய । ஆவஹந்தீ விதந்வாநா ॥ 1॥
குர்வாணாऽசீரமாத்மந: । வாஸாꣳஸி மம கா³வஶ்ச ।
அந்நபாநே ச ஸர்வதா³ । ததோ மே ஶ்ரியமாவஹ ।
லோமஶாம் பஶுபி:⁴ ஸஹ ஸ்வாஹா ।
ஆமாயந்து ப்³ரஹ்மசாரிண: ஸ்வாஹா ।
விமாऽऽயந்து ப்³ரஹ்மசாரிண: ஸ்வாஹா ।
ப்ரமாऽऽயந்து ப்³ரஹ்மசாரிண: ஸ்வாஹா ।
த³மாயந்து ப்³ரஹ்மசாரிண: ஸ்வாஹா ।
ஶமாயந்து ப்³ரஹ்மசாரிண: ஸ்வாஹா ॥ 2॥

தைத்திரீயோபநிஷத்
யஶோ ஜநேऽஸாநி ஸ்வாஹா । ஶ்ரேயாந் வஸ்யஸோऽஸாநி ஸ்வாஹா ।
தம் த்வா ப⁴க³ ப்ரவிஶாநி ஸ்வாஹா ।
ஸ மா ப⁴க³ ப்ரவிஶ ஸ்வாஹா ।
தஸ்மிந் ஸஹஸ்ரஶாகே² । நிப⁴கா³ऽஹம் த்வயி ம்ரு’ஜே ஸ்வாஹா ।
யதா²ऽऽப: ப்ரவதாऽऽயந்தி । யதா² மாஸா அஹர்ஜரம் ।
ஏவம் மாம் ப்³ரஹ்மசாரிண: । தா⁴தராயந்து ஸர்வத: ஸ்வாஹா ।
ப்ரதிவேஶோऽஸி ப்ரமாபா⁴ஹி ப்ரமாபத்³யஸ்வ ॥ 3॥
இதி சதுர்தோ²ऽநுவாக: ॥
வ்யாஹ்ரு’த்யுபாஸநம்
பூ⁴ர்பு⁴வ: ஸுவரிதி வா ஏதாஸ்திஸ்ரோ வ்யாஹ்ரு’தய: ।
தாஸாமுஹஸ்மை தாம் சதுர்தீ²ம் । மாஹாசமஸ்ய: ப்ரவேத³யதே ।
மஹ இதி । தத்³ப்³ரஹ்ம । ஸ ஆத்மா । அங்கா³ந்யந்யா தே³வதா: ।
பூ⁴ரிதி வா அயம் லோக: । பு⁴வ இத்யந்தரிக்ஷம் ।
ஸுவரித்யஸௌ லோக: ॥ 1॥
மஹ இத்யாதி³த்ய: । ஆதி³த்யேந வாவ ஸர்வேலோக மஹீயந்தே ।
பூ⁴ரிதி வா அக்³நி: । பு⁴வ இதி வாயு: । ஸுவரித்யாதி³த்ய: ।
மஹ இதி சந்த்³ரமா: । சந்த்³ரமஸா வாவ
ஸர்வாணி ஜ்யோதீꣳஷி மஹீயந்தே । பூ⁴ரிதி வா ரு’ச: ।
பு⁴வ இதி ஸாமாநி ।
ஸுவரிதி யஜூꣳஷி ॥ 2॥
மஹ இதி ப்³ரஹ்ம । ப்³ரஹ்மணா வாவ ஸர்வேவேதா³ மஹீயந்தே ।
பூ⁴ரிதி வை ப்ராண: । பு⁴வ இத்யபாந: । ஸுவரிதி வ்யாந: ।
மஹ இத்யந்நம் । அந்நேந வாவ ஸர்வே ப்ராண மஹீயந்தே ।
தா வா ஏதாஶ்சதஸ்ரஶ்சதுர்தா⁴ । சதஸ்ரஶ்சதஸ்ரோ வ்யாஹ்ரு’தய: ।
தா யோ வேத³ ।
ஸ வேத³ ப்³ரஹ்ம । ஸர்வேऽஸ்மைதே³வா ப³லிமாவஹந்தி ॥ 3॥
இதி பஞ்சமோऽநுவாக: ॥
மநோமயத்வாதி³கு³ணகப்³ரஹ்மோபாஸநயா ஸ்வாராஜ்யஸித்³தி:⁴
ஸ ய ஏஷோऽந்தஹ்ரு’த³ய ஆகாஶ: ।
தஸ்மிந்நயம் புருஷோ மநோமய: । அம்ரு’தோ ஹிரண்மய: ।

தைத்திரீயோபநிஷத்
அந்தரேண தாலுகே । ய ஏஷஸ்தந இவாவலம்ப³தே । ஸேந்த்³ரயோநி: ।
யத்ராஸௌ கேஶாந்தோ விவர்ததே । வ்யபோஹ்ய ஶீர்ஷகபாலே ।
பூ⁴ரித்யக்³நௌ ப்ரதிதிஷ்ட²தி । பு⁴வ இதி வாயௌ ॥ 1॥
ஸுவரித்யாதி³த்யே । மஹ இதி ப்³ரஹ்மணி । ஆப்நோதி ஸ்வாராஜ்யம் ।
ஆப்நோதி மநஸஸ்பதிம் । வாக்பதிஶ்சக்ஷுஷ்பதி: ।
ஶ்ரோத்ரபதிர்விஜ்ஞாநபதி: । ஏதத்ததோ ப⁴வதி ।
ஆகாஶஶரீரம் ப்³ரஹ்ம ।
ஸத்யாத்ம ப்ராணாராமம் மந ஆநந்த³ம் ।
ஶாந்திஸம்ரு’த்³த⁴மம்ரு’தம் ।
இதி ப்ராசீந யோக்³யோபாஸ்வ ॥ 2॥ இதி ஷஷ்டோ²ऽநுவாக: ॥
ப்ரு’தி²வ்யாத்³யுபாதி⁴கபஞ்சப்³ரஹ்மோபாஸநம்
ப்ரு’தி²வ்யந்தரிக்ஷம் த்³யௌர்தி³ஶோऽவாந்தரதி³ஶா: ।
அக்³நிர்வாயுராதி³த்யஶ்சந்த்³ரமா நக்ஷத்ராணி ।
ஆப ஓஷத⁴யோ வநஸ்பதய ஆகாஶ ஆத்மா । இத்யதி⁴பூ⁴தம் ।
அதா²த்⁴யாத்மம் । ப்ராணோ வ்யாநோऽபாந உதா³ந: ஸமாந: ।
சக்ஷு: ஶ்ரோத்ரம் மநோ வாக் த்வக் ।
சர்மமாꣳஸ ஸ்நாவாஸ்தி² மஜ்ஜா ।
ஏதத³தி⁴விதா⁴ய ரு’ஷிரவோசத் ।
பாங்க்தம் வா இத³ꣳஸர்வம் ।
பாங்க்தேநைவ பாங்க்தக்³ ஸ்ப்ரு’ணோதீதி ॥ 1॥ இதி ஸப்தமோऽநுவாக: ॥
ப்ரணவோபாஸநம்
ஓமிதி ப்³ரஹ்ம । ஓமிதீத³ꣳஸர்வம் ।
ஓமித்யேதத³நுக்ரு’திர்ஹஸ்ம வா அப்யோஶ்ராவயேத்யாஶ்ராவயந்தி ।
ஓமிதி ஸாமாநி கா³யந்தி । ௐꣳஶோமிதி ஶஸ்த்ராணி ஶꣳஸந்தி ।
ஓமித்யத்⁴வர்யு: ப்ரதிக³ரம் ப்ரதிக்³ரு’ணாதி ।
ஓமிதி ப்³ரஹ்மா ப்ரஸௌதி । ஓமித்யக்³நிஹோத்ரமநுஜாநாதி ।
ஓமிதி ப்³ராஹ்மண: ப்ரவக்ஷ்யந்நாஹ ப்³ரஹ்மோபாப்நவாநீதி ।
ப்³ரஹ்மைவோபாப்நோதி ॥ 1॥ இத்யஷ்டமோऽநுவாக: ॥
ஸ்வாத்⁴யாயப்ரஶம்ஸா
ரு’தம் ச ஸ்வாத்⁴யாயப்ரவசநே ச ।
ஸத்யம் ச ஸ்வாத்⁴யாயப்ரவசநே ச ।

தைத்திரீயோபநிஷத்
தபஶ்ச ஸ்வாத்⁴யாயப்ரவசநே ச ।
த³மஶ்ச ஸ்வாத்⁴யாயப்ரவசநே ச ।
ஶமஶ்ச ஸ்வாத்⁴யாயப்ரவசநே ச ।
அக்³நயஶ்ச ஸ்வாத்⁴யாயப்ரவசநே ச ।
அக்³நிஹோத்ரம் ச ஸ்வாத்⁴யாயப்ரவசநே ச ।
அதித²யஶ்ச ஸ்வாத்⁴யாயப்ரவசநே ச ।
மாநுஷம் ச ஸ்வாத்⁴யாயப்ரவசநே ச ।
ப்ரஜா ச ஸ்வாத்⁴யாயப்ரவசநே ச ।
ப்ரஜநஶ்ச ஸ்வாத்⁴யாயப்ரவசநே ச ।
ப்ரஜாதிஶ்ச ஸ்வாத்⁴யாயப்ரவசநே ச ।
ஸத்யமிதி ஸத்யவசா ராதீ² தர: ।
தப இதி தபோநித்ய: பௌருஶிஷ்டி: ।
ஸ்வாத்⁴யாயப்ரவசநே ஏவேதி நாகோ மௌத்³க³ல்ய: ।
தத்³தி⁴ தபஸ்தத்³தி⁴ தப: ॥ 1॥ இதி நவமோऽநுவாக: ॥
ப்³ரஹ்மஜ்ஞ்யாநப்ரகாஶகமந்த்ர:
அஹம் வ்ரு’க்ஷஸ்ய ரேரிவா । கீர்தி: ப்ரு’ஷ்ட²ம் கி³ரேரிவ ।
ஊர்த்⁴வபவித்ரோ வாஜிநீவ ஸ்வம்ரு’தமஸ்மி ।
த்³ரவிணꣳஸவர்சஸம் । ஸுமேத⁴ அம்ரு’தோக்ஷித: ।
இதி த்ரிஶங்கோர்வேதா³நுவசநம் ॥ 1॥ இதி த³ஶமோऽநுவாக: ॥
ஶிஷ்யாநுஶாஸநம்
வேத³மநூச்யாசார்யோந்தேவாஸிநமநுஶாஸ்தி ।
ஸத்யம் வத³ । த⁴ர்மம் சர । ஸ்வாத்⁴யாயாந்மா ப்ரமத:³ ।
ஆசார்யாய ப்ரியம் த⁴நமாஹ்ரு’த்ய ப்ரஜாதந்தும் மா வ்யவச்சே²த்ஸீ: ।
ஸத்யாந்ந ப்ரமதி³தவ்யம் । த⁴ர்மாந்ந ப்ரமதி³தவ்யம் ।
குஶலாந்ந ப்ரமதி³தவ்யம் । பூ⁴த்யை ந ப்ரமதி³தவ்யம் ।
ஸ்வாத்⁴யாயப்ரவசநாப்⁴யாம் ந ப்ரமதி³தவ்யம் ॥ 1॥
தே³வபித்ரு’கார்யாப்⁴யாம் ந ப்ரமதி³தவ்யம் । மாத்ரு’தே³வோ ப⁴வ ।
பித்ரு’தே³வோ ப⁴வ । ஆசார்யதே³வோ ப⁴வ । அதிதி²தே³வோ ப⁴வ ।
யாந்யநவத்³யாநி கர்மாணி । தாநி ஸேவிதவ்யாநி । நோ இதராணி ।
யாந்யஸ்மாகꣳஸுசரிதாநி । தாநி த்வயோபாஸ்யாநி ॥ 2॥

தைத்திரீயோபநிஷத்
நோ இதராணி । யே கே சாருமச்ச்²ரேயாꣳஸோ ப்³ராஹ்மணா: ।
தேஷாம் த்வயாऽऽஸநேந ப்ரஶ்வஸிதவ்யம் । ஶ்ரத்³த⁴யா தே³யம் ।
அஶ்ரத்³த⁴யாऽதே³யம் । ஶ்ரியா தே³யம் । ஹ்ரியா தே³யம் ।
பி⁴யா தே³யம் । ஸம்விதா³ தே³யம் ।
அத² யதி³ தே கர்மவிசிகித்ஸா வா வ்ரு’த்தவிசிகித்ஸா வா ஸ்யாத் ॥ 3॥
யே தத்ர ப்³ராஹ்மணா: ஸம்மர்ஶிந: । யுக்தா ஆயுக்தா: ।
அலூக்ஷா த⁴ர்மகாமா: ஸ்யு: । யதா² தே தத்ர வர்தேரந் ।
ததா² தத்ர வர்தேதா:² । அதா²ப்⁴யாக்²யாதேஷு ।
யே தத்ர ப்³ராஹ்மணா: ஸம்மர்ஶிந: । யுக்தா ஆயுக்தா: ।
அலூக்ஷா த⁴ர்மகாமா: ஸ்யு: । யதா² தே தேஷு வர்தேரந் ।
ததா² தேஷு வர்தேதா:² । ஏஷ ஆதே³ஶ: । ஏஷ உபதே³ஶ: ।
ஏஷா வேதோ³பநிஷத் । ஏதத³நுஶாஸநம் । ஏவமுபாஸிதவ்யம் ।
ஏவமு சைதது³பாஸ்யம் ॥ 4॥ இத்யேகாத³ஶऽநுவாக: ॥
உத்தரஶாந்திபாட:²
ஶம் நோ மித்ர: ஶம் வருண: । ஶம் நோ ப⁴வத்வர்யமா ।
ஶம் ந இந்த்³ரோ ப்³ரு’ஹஸ்பதி: । ஶம் நோ விஷ்ணுருருக்ரம: ।
நமோ ப்³ரஹ்மணே । நமஸ்தே வாயோ । த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்³ரஹ்மாஸி ।
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்³ரஹ்மாவாதி³ஷம் । ரு’தமவாதி³ஷம் ।
ஸத்யமவாதி³ஷம் । தந்மாமாவீத் । தத்³வக்தாரமாவீத் ।
ஆவீந்மாம் । ஆவீத்³வக்தாரம் ।
ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥ 1॥ இதி த்³வாத³ஶோऽநுவாக: ॥
॥ இதி ஶீக்ஷாவல்லீ ஸமாப்தா ॥
த்³விதீயா ப்³ரஹ்மாநந்த³வல்லீ
ௐ ஸஹ நாவவது । ஸஹ நௌ பு⁴நக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை ।
தேஜஸ்விநாவதீ⁴தமஸ்து மா வித்³விஷாவஹை ।
ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥
உபநிஷத்ஸாரஸங்க்³ரஹ:
ௐ ப்³ரஹ்மவிதா³ப்நோதி பரம் । ததே³ஷாऽப்⁴யுக்தா ।
ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்³ரஹ்ம ।

தைத்திரீயோபநிஷத்
யோ வேத³ நிஹிதம் கு³ஹாயாம் பரமே வ்யோமந் ।
ஸோऽஶ்நுதே ஸர்வாந் காமாந்ஸஹ । ப்³ரஹ்மணா விபஶ்சிதேதி ॥
தஸ்மாத்³வா ஏதஸ்மாதா³த்மந ஆகாஶ: ஸம்பூ⁴த: । ஆகாஶாத்³வாயு: ।
வாயோரக்³நி: । அக்³நேராப: । அத்³ப்⁴ய: ப்ரு’தி²வீ ।
ப்ரு’தி²வ்யா ஓஷத⁴ய: । ஓஷதீ⁴ப்⁴யோந்நம் । அந்நாத்புருஷ: ।
ஸ வா ஏஷ புருஷோऽந்நரஸமய: । தஸ்யேத³மேவ ஶிர: ।
அயம் த³க்ஷிண: பக்ஷ: । அயமுத்தர: பக்ஷ: ।
அயமாத்மா । இத³ம் புச்ச²ம் ப்ரதிஷ்டா² ।
தத³ப்யேஷ ஶ்லோகோ ப⁴வதி ॥ 1॥ இதி ப்ரத²மோऽநுவாக: ॥
பஞ்சகோஶோவிவரணம்
அந்நாத்³வை ப்ரஜா: ப்ரஜாயந்தே । யா: காஶ்ச ப்ரு’தி²வீꣳஶ்ரிதா: ।
அதோ² அந்நேநைவ ஜீவந்தி । அதை²நத³பி யந்த்யந்தத: ।
அந்நꣳஹி பூ⁴தாநாம் ஜ்யேஷ்ட²ம் । தஸ்மாத் ஸர்வௌஷத⁴முச்யதே ।
ஸர்வம் வை தேऽந்நமாப்நுவந்தி । யேऽந்நம் ப்³ரஹ்மோபாஸதே ।
அந்நꣳஹி பூ⁴தாநாம் ஜ்யேஷ்ட²ம் । தஸ்மாத் ஸர்வௌஷத⁴முச்யதே ।
அந்நாத்³ பூ⁴தாநி ஜாயந்தே । ஜாதாந்யந்நேந வர்த⁴ந்தே ।
அத்³யதேऽத்தி ச பூ⁴தாநி । தஸ்மாத³ந்நம் தது³ச்யத இதி ।
தஸ்மாத்³வா ஏதஸ்மாத³ந்நரஸமயாத் । அந்யோऽந்தர ஆத்மா ப்ராணமய: ।
தேநைஷ பூர்ண: । ஸ வா ஏஷ புருஷவித⁴ ஏவ ।
தஸ்ய புருஷவித⁴தாம் । அந்வயம் புருஷவித:⁴ ।
தஸ்ய ப்ராண ஏவ ஶிர: । வ்யாநோ த³க்ஷிண: பக்ஷ: ।
அபாந உத்தர: பக்ஷ: । ஆகாஶ ஆத்மா ।
ப்ரு’தி²வீ புச்ச²ம் ப்ரதிஷ்டா² । தத³ப்யேஷ ஶ்லோகோ ப⁴வதி ॥ 1॥
இதி த்³விதீயோऽநுவாக: ॥
ப்ராணம் தே³வா அநு ப்ராணந்தி । மநுஷ்யா: பஶவஶ்ச யே ।
ப்ராணோ ஹி பூ⁴தாநாமாயு: । தஸ்மாத் ஸர்வாயுஷமுச்யதே ।
ஸர்வமேவ த ஆயுர்யந்தி । யே ப்ராணம் ப்³ரஹ்மோபாஸதே ।
ப்ராணோ ஹி பூ⁴தாநாமாயு: । தஸ்மாத் ஸர்வாயுஷமுச்யத இதி ।
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா । ய: பூர்வஸ்ய ।
தஸ்மாத்³வா ஏதஸ்மாத் ப்ராணமயாத் । அந்யோऽந்தர ஆத்மா மநோமய: ।
தேநைஷ பூர்ண: । ஸ வா ஏஷ புருஷவித⁴ ஏவ ।

தைத்திரீயோபநிஷத்
தஸ்ய புருஷவித⁴தாம் । அந்வயம் புருஷவித:⁴ ।
தஸ்ய யஜுரேவ ஶிர: । ரு’க்³த³க்ஷிண: பக்ஷ: । ஸாமோத்தர: பக்ஷ: ।
ஆதே³ஶ ஆத்மா । அத²ர்வாங்கி³ரஸ: புச்ச²ம் ப்ரதிஷ்டா² ।
தத³ப்யேஷ ஶ்லோகோ ப⁴வதி ॥ 1॥ இதி த்ரு’தீயோऽநுவாக: ॥
யதோ வாசோ நிவர்தந்தே । அப்ராப்ய மநஸா ஸஹ ।
ஆநந்த³ம் ப்³ரஹ்மணோ வித்³வாந் । ந பி³பே⁴தி கதா³சநேதி ।
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா । ய: பூர்வஸ்ய ।
தஸ்மாத்³வா ஏதஸ்மாந்மநோமயாத் । அந்யோऽந்தர ஆத்மா விஜ்ஞாநமய: ।
தேநைஷ பூர்ண: । ஸ வா ஏஷ புருஷவித⁴ ஏவ ।
தஸ்ய புருஷவித⁴தாம் ।
அந்வயம் புருஷவித:⁴ । தஸ்ய ஶ்ரத்³தை⁴வ ஶிர: ।
ரு’தம் த³க்ஷிண: பக்ஷ: ।
ஸத்யமுத்தர: பக்ஷ: । யோக³ ஆத்மா । மஹ: புச்ச²ம் ப்ரதிஷ்டா² ।
தத³ப்யேஷ ஶ்லோகோ ப⁴வதி ॥ 1॥ இதி சதுர்தோ²ऽநுவாக: ॥
விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே । கர்மாணி தநுதேऽபி ச ।
விஜ்ஞாநம் தே³வா: ஸர்வே ।
ப்³ரஹ்ம ஜ்யேஷ்ட²முபாஸதே । விஜ்ஞாநம் ப்³ரஹ்ம சேத்³வேத³ ।
தஸ்மாச்சேந்ந ப்ரமாத்³யதி । ஶரீரே பாப்மநோ ஹித்வா ।
ஸர்வாந்காமாந் ஸமஶ்நுத இதி । தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா ।
ய: பூர்வஸ்ய । தஸ்மாத்³வா ஏதஸ்மாத்³விஜ்ஞாநமயாத் ।
அந்யோऽந்தர ஆத்மாऽऽநந்த³மய: । தேநைஷ பூர்ண: ।
ஸ வா ஏஷ புருஷவித⁴ ஏவ । தஸ்ய புருஷவித⁴தாம் ।
அந்வயம் புருஷவித:⁴ । தஸ்ய ப்ரியமேவ ஶிர: ।
மோதோ³ த³க்ஷிண: பக்ஷ: ।
ப்ரமோத³ உத்தர: பக்ஷ: । ஆநந்த³ ஆத்மா । ப்³ரஹ்ம புச்ச²ம் ப்ரதிஷ்டா² ।
தத³ப்யேஷ ஶ்லோகோ ப⁴வதி ॥ 1॥ இதி பஞ்சமோऽநுவாக: ॥
அஸந்நேவ ஸ ப⁴வதி । அஸத்³ப்³ரஹ்மேதி வேத³ சேத் ।
அஸ்தி ப்³ரஹ்மேதி சேத்³வேத³ । ஸந்தமேநம் ததோ விது³ரிதி ।
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா । ய: பூர்வஸ்ய ।
அதா²தோऽநுப்ரஶ்நா: । உதாவித்³வாநமும் லோகம் ப்ரேத்ய ।
கஶ்சந க³ச்ச²தீ
தைத்திரீயோபநிஷத்
ஆஹோ வித்³வாநமும் லோகம் ப்ரேத்ய । கஶ்சித்ஸமஶ்நுதா3 உ ।
ஸோऽகாமயத । ப³ஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி । ஸ தபோऽதப்யத ।
ஸ தபஸ்தப்த்வா । இத³ꣳஸர்வமஸ்ரு’ஜத । யதி³த³ம் கிஞ்ச ।
தத்ஸ்ரு’ஷ்ட்வா । ததே³வாநுப்ராவிஶத் । தத³நு ப்ரவிஶ்ய ।
ஸச்ச த்யச்சாப⁴வத் ।
நிருக்தம் சாநிருக்தம் ச । நிலயநம் சாநிலயநம் ச ।
விஜ்ஞாநம் சாவிஜ்ஞாநம் ச । ஸத்யம் சாந்ரு’தம் ச ஸத்யமப⁴வத் ।
யதி³த³ம் கிஞ்ச । தத்ஸத்யமித்யாசக்ஷதே ।
தத³ப்யேஷ ஶ்லோகோ ப⁴வதி ॥ 1॥ இதி ஷஷ்டோ²ऽநுவாக: ॥
அப⁴யப்ரதிஷ்டா²
அஸத்³வா இத³மக்³ர ஆஸீத் । ததோ வை ஸத³ஜாயத ।
ததா³த்மாந ஸ்வயமகுருத । தஸ்மாத்தத்ஸுக்ரு’தமுச்யத இதி ।
யத்³வை தத் ஸுக்ரு’தம் । ரஸோ வை ஸ: ।
ரஸꣳஹ்யேவாயம் லப்³த்⁴வாऽऽநந்தீ³ ப⁴வதி । கோ ஹ்யேவாந்யாத்க:
ப்ராண்யாத் । யதே³ஷ ஆகாஶ ஆநந்தோ³ ந ஸ்யாத் ।
ஏஷ ஹ்யேவாऽऽநந்த³யாதி ।
யதா³ ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நத்³ரு’ஶ்யேऽநாத்ம்யேऽநிருக்தேऽநிலயநேऽப⁴யம்
ப்ரதிஷ்டா²ம் விந்த³தே । அத² ஸோऽப⁴யம் க³தோ ப⁴வதி ।
யதா³ ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நுத³ரமந்தரம் குருதே ।
அத² தஸ்ய ப⁴யம் ப⁴வதி । தத்வேவ ப⁴யம் விது³ஷோऽமந்வாநஸ்ய ।
தத³ப்யேஷ ஶ்லோகோ ப⁴வதி ॥ 1॥ இதி ஸப்தமோऽநுவாக: ॥
ப்³ரஹ்மாநந்த³மீமாம்ஸா
பீ⁴ஷாऽஸ்மாத்³வாத: பவதே । பீ⁴ஷோதே³தி ஸூர்ய: ।
பீ⁴ஷாऽஸ்மாத³க்³நிஶ்சேந்த்³ரஶ்ச । ம்ரு’த்யுர்தா⁴வதி பஞ்சம இதி ।
ஸைஷாऽऽநந்த³ஸ்ய மீமாꣳஸா ப⁴வதி ।
யுவா ஸ்யாத்ஸாது⁴யுவாऽத்⁴யாயக: ।
ஆஶிஷ்டோ² த்³ரு’டி⁴ஷ்டோ² ப³லிஷ்ட:² ।
தஸ்யேயம் ப்ரு’தி²வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் ।
ஸ ஏகோ மாநுஷ ஆநந்த:³ । தே யே ஶதம் மாநுஷா ஆநந்தா:³ ॥ 1॥
ஸ ஏகோ மநுஷ்யக³ந்த⁴ர்வாணாமாநந்த:³ । ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய ।
தே யே ஶதம் மநுஷ்யக³ந்த⁴ர்வாணாமாநந்தா:³ ।

தைத்திரீயோபநிஷத்
ஸ ஏகோ தே³வக³ந்த⁴ர்வாணாமாநந்த:³ । ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய ।
தே யே ஶதம் தே³வக³ந்த⁴ர்வாணாமாநந்தா:³ ।
ஸ ஏக: பித்ரு’ணாம் சிரலோகலோகாநாமாநந்த:³ ।
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய ।
தே யே ஶதம் பித்ரு’ணாம் சிரலோகலோகாநாமாநந்தா:³ ।
ஸ ஏக ஆஜாநஜாநாம் தே³வாநாமாநந்த:³ ॥ 2॥
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய ।
தே யே ஶதம் ஆஜாநஜாநாம் தே³வாநாமாநந்தா:³ ।
ஸ ஏக: கர்மதே³வாநாம் தே³வாநாமாநந்த:³ ।
யே கர்மணா தே³வாநபியந்தி । ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய ।
தே யே ஶதம் கர்மதே³வாநாம் தே³வாநாமாநந்தா:³ ।
ஸ ஏகோ தே³வாநாமாநந்த:³ । ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய ।
தே யே ஶதம் தே³வாநாமாநந்தா:³ । ஸ ஏக இந்த்³ரஸ்யாऽऽநந்த:³ ॥ 3॥
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய । தே யே ஶதமிந்த்³ரஸ்யாऽऽநந்தா:³ ।
ஸ ஏகோ ப்³ரு’ஹஸ்பதேராநந்த:³ । ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய ।
தே யே ஶதம் ப்³ரு’ஹஸ்பதேராநந்தா:³ । ஸ ஏக: ப்ரஜாபதேராநந்த:³ ।
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய ।
தே யே ஶதம் ப்ரஜாபதேராநந்தா:³ ।
ஸ ஏகோ ப்³ரஹ்மண ஆநந்த:³ । ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய ॥ 4॥
ஸ யஶ்சாயம் புருஷே । யஶ்சாஸாவாதி³த்யே । ஸ ஏக: ।
ஸ ய ஏவம்வித் । அஸ்மால்லோகாத்ப்ரேத்ய ।
ஏதமந்நமயமாத்மாநமுபஸங்க்ராமதி ।
ஏதம் ப்ராணமயமாத்மாநமுபஸங்க்ராமதி ।
ஏதம் மநோமயமாத்மாநமுபஸங்க்ராமதி ।
ஏதம் விஜ்ஞாநமயமாத்மாநமுபஸங்க்ராமதி ।
ஏதமாநந்த³மயமாத்மாநமுபஸங்க்ராமதி ।
தத³ப்யேஷ ஶ்லோகோ ப⁴வதி ॥ 5॥ இத்யஷ்டமோऽநுவாக: ॥
யதோ வாசோ நிவர்தந்தே । அப்ராப்ய மநஸா ஸஹ ।
ஆநந்த³ம் ப்³ரஹ்மணோ வித்³வாந் ।
ந பி³பே⁴தி குதஶ்சநேதி ।
ஏதꣳஹ வாவ ந தபதி ।

தைத்திரீயோபநிஷத்
கிமஹꣳஸாது⁴ நாகரவம் । கிமஹம் பாபமகரவமிதி ।
ஸ ய ஏவம் வித்³வாநேதே ஆத்மாந ஸ்ப்ரு’ணுதே ।
உபே⁴ ஹ்யேவைஷ ஏதே ஆத்மாந ஸ்ப்ரு’ணுதே । ய ஏவம் வேத³ ।
இத்யுபநிஷத் ॥ 1॥ இதி நவமோऽநுவாக: ॥
॥ இதி ப்³ரஹ்மாநந்த³வல்லீ ஸமாப்தா ॥
ௐ ஸஹ நாவவது । ஸஹ நௌ பு⁴நக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை ।
தேஜஸ்விநாவதீ⁴தமஸ்து மா வித்³விஷாவஹை ।
ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥
த்ரு’தீயா ப்⁴ரு’கு³வல்லீ
ௐ ஸஹ நாவவது । ஸஹ நௌ பு⁴நக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை ।
தேஜஸ்விநாவதீ⁴தமஸ்து மா வித்³விஷாவஹை ।
ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥
ப்⁴ரு’கு³ர்வை வாருணி: । வருணம் பிதரமுபஸஸார ।
அதீ⁴ஹி ப⁴க³வோ ப்³ரஹ்மேதி । தஸ்மா ஏதத்ப்ரோவாச ।
அந்நம் ப்ராணம் சக்ஷு: ஶ்ரோத்ரம் மநோ வாசமிதி ।
தꣳஹோவாச । யதோ வா இமாநி பூ⁴தாநி ஜாயந்தே ।
யேந ஜாதாநி ஜீவந்தி ।
யத்ப்ரயந்த்யபி⁴ஸம்விஶந்தி । தத்³விஜிஜ்ஞாஸஸ்வ । தத்³ப்³ரஹ்மேதி ।
ஸ தபோऽதப்யத । ஸ தபஸ்தப்த்வா ॥ 1॥ இதி ப்ரத²மோऽநுவாக: ॥
பஞ்சகோஶாந்த:ஸ்தி²தப்³ரஹ்மநிரூபணம்
அந்நம் ப்³ரஹ்மேதி வ்யஜாநாத் । அந்நாத்³த்⁴யேவ க²ல்விமாநி
பு⁴தாநி ஜாயந்தே । அந்நேந ஜாதாநி ஜீவந்தி ।
அந்நம் ப்ரயந்த்யபி⁴ஸம்விஶந்தீதி । தத்³விஜ்ஞாய ।
புநரேவ வருணம் பிதரமுபஸஸார ।
அதீ⁴ஹி ப⁴க³வோ ப்³ரஹ்மேதி । தꣳஹோவாச ।
தபஸா ப்³ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ । தபோ ப்³ரஹ்மேதி ।
ஸ தபோऽதப்யத । ஸ தபஸ்தப்த்வா ॥ 1॥ இதி த்³விதீயோऽநுவாக: ॥
ப்ராணோ ப்³ரஹ்மேதி வ்யஜாநாத் । ப்ராணாத்³த்⁴யேவ க²ல்விமாநி
பூ⁴தாநி ஜாயந்தே । ப்ராணேந ஜாதாநி ஜீவந்தி ।

தைத்திரீயோபநிஷத்
ப்ராணம் ப்ரயந்த்யபி⁴ஸம்விஶந்தீதி । தத்³விஜ்ஞாய ।
புநரேவ வருணம் பிதரமுபஸஸார ।
அதீ⁴ஹி ப⁴க³வோ ப்³ரஹ்மேதி । தꣳஹோவாச ।
தபஸா ப்³ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ । தபோ ப்³ரஹ்மேதி ।
ஸ தபோऽதப்யத । ஸ தபஸ்தப்த்வா ॥ 1॥ இதி த்ரு’தீயோऽநுவாக: ॥
மநோ ப்³ரஹ்மேதி வ்யஜாநாத் । மநஸோ ஹ்யேவ க²ல்விமாநி
பூ⁴தாநி ஜாயந்தே । மநஸா ஜாதாநி ஜீவந்தி ।
மந: ப்ரயந்த்யபி⁴ஸம்விஶந்தீதி । தத்³விஜ்ஞாய ।
புநரேவ வருணம் பிதரமுபஸஸார ।
அதீ⁴ஹி ப⁴க³வோ ப்³ரஹ்மேதி । தꣳஹோவாச ।
தபஸா ப்³ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ । தபோ ப்³ரஹ்மேதி ।
ஸ தபோऽதப்யத । ஸ தபஸ்தப்த்வா ॥ 1॥ இதி சதுர்தோ²ऽநுவாக: ॥
விஜ்ஞாநம் ப்³ரஹ்மேதி வ்யஜாநாத் । விஜ்ஞாநாத்³த்⁴யேவ க²ல்விமாநி
பூ⁴தாநி ஜாயந்தே । விஜ்ஞாநேந ஜாதாநி ஜீவந்தி ।
விஜ்ஞாநம் ப்ரயந்த்யபி⁴ஸம்விஶந்தீதி । தத்³விஜ்ஞாய ।
புநரேவ வருணம் பிதரமுபஸஸார ।
அதீ⁴ஹி ப⁴க³வோ ப்³ரஹ்மேதி । தꣳஹோவாச ।
தபஸா ப்³ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ । தபோ ப்³ரஹ்மேதி ।
ஸ தபோऽதப்யத । ஸ தபஸ்தப்த்வா ॥ 1॥ இதி பஞ்சமோऽநுவாக: ॥
ஆநந்தோ³ ப்³ரஹ்மேதி வ்யஜாநாத் । ஆநந்தா³த்⁴யேவ க²ல்விமாநி
பூ⁴தாநி ஜாயந்தே । ஆநந்தே³ந ஜாதாநி ஜீவந்தி ।
ஆநந்த³ம் ப்ரயந்த்யபி⁴ஸம்விஶந்தீதி ।
ஸைஷா பா⁴ர்க³வீ வாருணீ வித்³யா । பரமே வ்யோமந்ப்ரதிஷ்டி²தா ।
ஸ ய ஏவம் வேத³ ப்ரதிதிஷ்ட²தி । அந்நவாநந்நாதோ³ ப⁴வதி ।
மஹாந்ப⁴வதி ப்ரஜயா பஶுபி⁴ர்ப்³ரஹ்மவர்சஸேந ।
மஹாந் கீர்த்யா ॥ 1॥ இதி ஷஷ்டோ²ऽநுவாக: ॥
அந்நப்³ரஹ்மோபாஸநம்
அந்நம் ந நிந்த்³யாத் । தத்³வ்ரதம் । ப்ராணோ வா அந்நம் ।
ஶரீரமந்நாத³ம் । ப்ராணே ஶரீரம் ப்ரதிஷ்டி²தம் ।
ஶரீரே ப்ராண: ப்ரதிஷ்டி²த: । ததே³தத³ந்நமந்நே ப்ரதிஷ்டி²தம் ।
ஸ ய ஏதத³ந்நமந்நே ப்ரதிஷ்டி²தம் வேத³ ப்ரதிதிஷ்ட²தி ।

தைத்திரீயோபநிஷத்
அந்நவாநந்நாதோ³ ப⁴வதி । மஹாந்ப⁴வதி ப்ரஜயா
பஶுபி⁴ர்ப்³ரஹ்மவர்சஸேந । மஹாந் கீர்த்யா ॥ 1॥
இதி ஸப்தமோऽநுவாக: ॥
அந்நம் ந பரிசக்ஷீத । தத்³வ்ரதம் । ஆபோ வா அந்நம் ।
ஜ்யோதிரந்நாத³ம் । அப்ஸு ஜ்யோதி: ப்ரதிஷ்டி²தம் ।
ஜ்யோதிஷ்யாப: ப்ரதிஷ்டி²தா: । ததே³தத³ந்நமந்நே ப்ரதிஷ்டி²தம் ।
ஸ ய ஏதத³ந்நமந்நே ப்ரதிஷ்டி²தம் வேத³ ப்ரதிதிஷ்ட²தி ।
அந்நவாநந்நாதோ³ ப⁴வதி । மஹாந்ப⁴வதி ப்ரஜயா
பஶுபி⁴ர்ப்³ரஹ்மவர்சஸேந । மஹாந் கீர்த்யா ॥ 1॥
இத்யஷ்டமோऽநுவாக: ॥
அந்நம் ப³ஹு குர்வீத । தத்³வ்ரதம் । ப்ரு’தி²வீ வா அந்நம் ।
ஆகாஶோऽந்நாத:³ । ப்ரு’தி²வ்யாமாகாஶ: ப்ரதிஷ்டி²த: ।
ஆகாஶே ப்ரு’தி²வீ ப்ரதிஷ்டி²தா ।
ததே³தத³ந்நமந்நே ப்ரதிஷ்டி²தம் ।
ஸ ய ஏதத³ந்நமந்நே ப்ரதிஷ்டி²தம் வேத³ ப்ரதிதிஷ்ட²தி ।
அந்நவாநந்நாதோ³ ப⁴வதி । மஹாந்ப⁴வதி ப்ரஜயா
பஶுபி⁴ர்ப்³ரஹ்மவர்சஸேந । மஹாந் கீர்த்யா ॥ 1॥
இதி நவமோऽநுவாக: ॥
ஸதா³சாரப்ரத³ர்ஶநம் । ப்³ரஹ்மாநந்தா³நுப⁴வ:
ந கஞ்சந வஸதௌ ப்ரத்யாசக்ஷீத । தத்³வ்ரதம் ।
தஸ்மாத்³யயா கயா ச வித⁴யா ப³ஹ்வந்நம் ப்ராப்நுயாத் ।
அராத்⁴யஸ்மா அந்நமித்யாசக்ஷதே ।
ஏதத்³வை முக²தோऽந்நꣳராத்³த⁴ம் ।
முக²தோऽஸ்மா அந்நꣳராத்⁴யதே ।
ஏதத்³வை மத்⁴யதோऽந்நꣳராத்³த⁴ம் ।
மத்⁴யதோऽஸ்மா அந்நꣳராத்⁴யதே ।
ஏத³த்³வா அந்ததோऽந்நꣳராத்³த⁴ம் ।
அந்ததோऽஸ்மா அந்ந ராத்⁴யதே ॥ 1॥
ய ஏவம் வேத³ । க்ஷேம இதி வாசி । யோக³க்ஷேம இதி ப்ராணாபாநயோ: ।
கர்மேதி ஹஸ்தயோ: । க³திரிதி பாத³யோ: । விமுக்திரிதி பாயௌ ।

தைத்திரீயோபநிஷத்
இதி மாநுஷீ: ஸமாஜ்ஞா: । அத² தை³வீ: । த்ரு’ப்திரிதி வ்ரு’ஷ்டௌ ।
ப³லமிதி வித்³யுதி ॥ 2॥
யஶ இதி பஶுஷு । ஜ்யோதிரிதி நக்ஷத்ரேஷு ।
ப்ரஜாதிரம்ரு’தமாநந்த³ இத்யுபஸ்தே² । ஸர்வமித்யாகாஶே ।
தத்ப்ரதிஷ்டே²த்யுபாஸீத । ப்ரதிஷ்டா²வாந் ப⁴வதி ।
தந்மஹ இத்யுபாஸீத । மஹாந்ப⁴வதி । தந்மந இத்யுபாஸீத ।
மாநவாந்ப⁴வதி ॥ 3॥
தந்நம இத்யுபாஸீத । நம்யந்தேऽஸ்மை காமா: ।
தத்³ப்³ரஹ்மேத்யுபாஸீத । ப்³ரஹ்மவாந்ப⁴வதி ।
தத்³ப்³ரஹ்மண: பரிமர இத்யுபாஸீத ।
பர்யேணம் ம்ரியந்தே த்³விஷந்த: ஸபத்நா: ।
பரி யேऽப்ரியா ப்⁴ராத்ரு’வ்யா: ।
ஸ யஶ்சாயம் புருஷே । யஶ்சாஸாவாதி³த்யே । ஸ ஏக: ॥ 4॥
ஸ ய ஏவம்வித் । அஸ்மால்லோகாத்ப்ரேத்ய ।
ஏதமந்நமயமாத்மாநமுபஸங்க்ரம்ய ।
ஏதம் ப்ராணமயமாத்மாநமுபஸங்க்ரம்ய ।
ஏதம் மநோமயமாத்மாநமுபஸங்க்ரம்ய ।
ஏதம் விஜ்ஞாநமயமாத்மாநமுபஸங்க்ரம்ய ।
ஏதமாநந்த³மயமாத்மாநமுபஸங்க்ரம்ய ।
இமாँல்லோகந்காமாந்நீ காமரூப்யநுஸஞ்சரந் ।
ஏதத் ஸாம கா³யந்நாஸ்தே । ஹா 3 வு ஹா 3 வு ஹா 3 வு ॥ 5॥
அஹமந்நமஹமந்நமஹமந்நம் ।
அஹமந்நாதோ³ऽ3ஹமந்நாதோ³ऽ3அஹமந்நாத:³ ।
அஹꣳஶ்லோகக்ரு’த³ஹꣳஶ்லோகக்ரு’த³ஹꣳஶ்லோகக்ரு’த் ।
அஹமஸ்மி ப்ரத²மஜா ரு’தா3ஸ்ய ।
பூர்வம் தே³வேப்⁴யோऽம்ரு’தஸ்ய நா3பா⁴இ ।
யோ மா த³தா³தி ஸ இதே³வ மா3அऽவா: ।
அஹமந்நமந்நமத³ந்தமா3த்³மி ।
அஹம் விஶ்வம் பு⁴வநமப்⁴யப⁴வா3ம் ।
ஸுவர்ந ஜ்யோதீ: । ய ஏவம் வேத³ । இத்யுபநிஷத் ॥ 6॥

தைத்திரீயோபநிஷத்
இதி த³ஶமோऽநுவாக: ॥
॥ இதி ப்⁴ரு’கு³வல்லீ ஸமாப்தா ॥
ௐ ஸஹ நாவவது । ஸஹ நௌ பு⁴நக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை ।
தேஜஸ்வி நாவதீ⁴தமஸ்து மா வித்³விஷாவஹை ।
॥ ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் வைபவம் –ஸ்ரீ சுஜாதா தேசிகன்–ஸ்வாமிகள்

December 30, 2021

ஆயர் குலத்துப் பெண்களை ஆய்ச்சி என்றும்
ஆண்களை ஆச்சான்(அல்லது ஆயத்தான்) என்றும் அழைப்பார்கள்.
இயர் பெயர் ஸ்ரீ கிருஷ்ணன் என்று இருந்தால் பெரும்பாலும் அழைக்கும் பெயர் ஆச்சான்-ஆயத்தான் என்று இருக்கும்.
பெரிய ஆய்த்தான் பிள்ளை என்பதை தான் நாம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்கிறோம்.

———-

ஸ்ரீ எம்பெருமானார் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபதிகளில் ’ஆஸூரிப் பெருமாள்’ ஒருவர்.
இவர் ஸ்ரீராமானுஜரின் ஹாரீத வம்சம். இவருடைய வம்சத்தில் அவதரித்தவர் ஸ்ரீஸாநுதாஸர் என்ற தேவராஜன்.
இவரே ’திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார்’ என்று பெயர் பெற்றார்.
செல்லப்பிள்ளை ‘நம் ஆய்(தாய்)’ எங்கே?’ என்று கேட்க ’ஆய்’ என்றும் ’ஜனந்யாச்சாரியார்’ என்றும் திருநாமம் உண்டாயிற்று.
(ஜனனி என்ற சொல்லிற்கு “பெற்றவள்” என்று பொருள் அதுவே ’ஜனந்யாச்சாரியார்’ ஆகியது).
திருநாராயணபுரத்தில் அவதரித்ததால் ’திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார்’ என்று அழைக்கப்பட்டார்.
எதிராஜர் தம் திருக்கையாலே திருவாராதனம் செய்த எதிராஜ சம்பத் குமாரனான செல்வப்பிள்ளைக்கு
யசோதை போலப் பாலமுதும், பெரியாழ்வார் ஆண்டாள் போல மாலைக் கட்டி புஷ்ப கைங்கரியமும் செய்து வந்தார்.

ஐப்பசி பூராடம் ஆயி ஸ்வாமி திருநட்சத்திரம்.

ஆயிடம் மாமுனிகள் ஆசார்ய ஹ்ருதயகாலசேஷம் கேட்டு மனம் உகந்து, நன்றியாக அவருக்கு ஒரு தனியன் அருளினார்.
ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஆசாரிய ஹ்ருதயத்தின் அர்த்தங்களை எல்லாம் அருளியவராய் ஸ்ரீஸாநுதாஸர், தேவராஜர் என்ற
திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்தாயை ஆச்ரயிக்கிறேன்.

இதைக் கேட்ட ஆயி ஸ்வாமி அதில் தமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறி
மாமுனிகளின் பெருமைகளை ஒரு பாசுரமாக அருளிச் செய்தார்.

பூதூரில் வந்துதித்த புண்ணியனோ?
பூங்கமழும் தாதாருமகிழ்மார்பன் தானிவனோ?
தூதூர வந்த நெடுமாலோ?
மணவாளமாமுனிவன் எந்தையிவர் மூவரிலும் யார்?

திருநாராயணபுரத்தில் ஸ்ரீமணவாள மாமுனிகள் சந்நிதியில் ஆயியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தான் அவர் எழுந்தருளியிருந்தார்.
ஆயியின் திருவரசு திருநாராயண புரத்தில் கல்யாணி புஷ்கரணி அருகில் யோக நரசிம்மர் கோயிலுக்குப் போகும் வழியில் இருக்கிறது.
மேல்கோட்டையில் கொல்ல இடையர்கள், மைசூரில் உள்ளப் பதினெட்டு ஜாதி மக்கள், பல கிராமங்களில்
அறுபது குலங்களைச் சேர்ந்த சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ஆயி வம்சப் பரம்பரை சிஷ்யர்கள்.

————-

நம்பிள்ளை என்றவுடன் நமக்குக் கூடவே நினைவுக்கு வருவது ‘ஈடு’ என்ற வார்த்தை தான்.
’ஈடு’ என்ற வார்த்தை எதனுடனாவது சேர்ந்து தான் வரும்.
உதாரணம் – காப்பீடு, குறியிடு, முறையீடு, முதலீடு, தலையீடு, வெளியீடு, இழப்பீடு.
நம்பிள்ளை ’ஈடு’ பகவத் விஷயமான திருவாய்மொழியுடன் எப்போதும் சேர்ந்தே வரும்.
ஈடு என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கிறது.
திருவாய்மொழிக்கு ஈடான உரை அதனால் ஈடு;
திருவாய்மொழியில் நம்மாழ்வார் ஈடு என்ற வார்த்தையைக் கவசம் என்ற பொருளில் உபயோகிக்கிறார்
அதனால் திருவாய்மொழிக்குக் கவசம் போன்றது என்பது இன்னொன்று விளக்கம்
கடைசியில் பெருமாளிடத்து நம்மை ஈடுபடச் செய்வது அதற்கு ‘ஈடு’
எது எப்படியோ, நம்பிள்ளை ஈட்டுக்கு ’ஈடு இணையில்லை’ !

———–

சிந்தனைக்கினியான்(விக்ரகம்) ஸ்ரீராமானுஜர் காலத்தில் திருக்குறுங்குடியிலிருந்து
திருவாலி-திருநகரியில் எழுந்தருளப்பட்டு, சிந்தனைக்கினியானின் திருவாரதனத்திற்கு நந்தவனமாக இருந்த பகுதி
இப்போதும் சிந்தனைக்கினியான் தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

——-

பிரமாணம், பிரமேயம் பிரமாதா !
பிரமாணம் என்றால் ஆதாரம். பிரமாணப் பத்திரம் என்கிறோம் அது தான் ஆதாரம்.
அதில் சொல்லப்பட்ட இடமோ பொருளோ உங்கள் சொத்து என்பதற்கு இது ஆதாரம்.
பெருமாள் என்ற சொத்தை அறிந்து கொள்ள ஆதாரம் எது? வேதங்கள், ஆழ்வார் அருளிச்செயல்கள், ஸ்ரீபாஷ்யம் முதலானவை.
பிரமேயம் என்றால் சொல்லப்படும் பொருள். அதாவது சொத்து. மற்ற அவதாரங்களில் நாம் அவருக்குச் சொத்து
ஆனால் அர்ச்சாவதாரத்தில் அவர் நம் சொத்து.
பிரமாதா என்பவர் அந்த ஆதாரம் கொண்டு பொருளை அளந்தறிபவன் – பதிவாளர் ( registrar ) என்று வைத்துக்கொள்ளுங்கள்.
நமக்கு நம் சொத்தை ஆதாரம் கொண்டு காட்டிக்கொடுப்பவர்கள் ஆசாரியர்கள்.
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார், ஸ்ரீ வேதாந்த தேசிகன் – பிரமாதாக்கள் !
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் பிரமேயத்தைக் காத்துக் கொடுத்தார்;
ஸ்ரீ வேதாந்த தேசிகன் பிரமாணத்தைக் காத்துக் கொடுத்தார்;

———-

‘எம்பெருமானார் தரிசனம்’ என்று நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்த தரிசனத்தை உலகெங்கும்
பரவிட 74 சிம்மாசனாதிபதிகளை ஏற்படுத்தினார் ஸ்ரீராமானுஜர். அதில் ’திருக்கோவலூர் ஆழ்வான்’ ஸ்வாமிகள் ஒருவர்.
’சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்’ என்று பொய்கையாழ்வார் அருளியபடி
திருக்கோவலூர் சந்நிதி மற்றும் தர்சன நிர்வாகங்களைச் செய்து, பக்தி சிரத்தையுடன் ஆசாரிய பீடமாக விளங்கினார்.

திருக்கோவலூர் திருக்கோயிலில் உள்ளக் கல்வெட்டு இக்கோயிலை நிர்வாகம் செய்து வந்த திருக்கோவலூர் ஆழ்வான்
திருமாளிகை மடத்தைச் சேர்ந்த அடியார்களுக்கு உணவு அளிக்க ஒரு வேலி நிலம் விலைக்கு வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
பிறகு நடந்த சமய கலவரத்தில் பல மடங்கள் இடிக்கப்பட்டன. அதில் திருக்கோவலூர் மடமும் ஒன்று.
அந்தக் காலத்தில் அங்கே வசித்து வந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள் என்ற தகவலும் கல்வெட்டில் இருக்கிறது.

பிறகு திருவரங்கத்தில் பெரும் புகழுடன் விளங்கிய ஸ்ரீ வேத வியாச பட்டரை எழுந்தருளிச் செய்து,
சமயவாதிகளை வாதத்தில் வென்று, கோயிலை மீட்டு அவர் நிர்வாகத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கு நன்றியாகத் திருக்கோவலூர் வைணவர்களும், கோயில் பணியாளர்களும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை
ஸ்ரீரங்கம் அழகிய மணவாளப் பெருமாளுக்கு வழிபாடு நடத்தவும், மாலை அணிவிக்கவும் பூந்தோட்டத்தை நிர்வகிக்கவும்
வழங்கினார்கள் என்று மற்றொரு ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

சில காலம் கழித்து அந்நாட்டை ஆண்ட சோழ மன்னன் சைவ மதத்தை ஸ்தாபிக்கும் பொருட்டு திருவிக்ரமப் பெருமாளின்
சந்நிதியை அபகரித்துக் கர்ப்பக் கிரஹத்தைக் கற்சுவரால் அடைத்தபோது பட்டர் பெரும் துயருற்று உண்ணாது உறங்காது தளர்வுற்று இருந்தார்.

ஒரு நாள் இரவு அவருக்குத் உலகளந்த பெருமாள் கனவில் தோன்றி ‘வருத்தம் வேண்டாம். ஜீயர் அவதரிக்கப் போகின்றார்.
அவரால் இத்தலம் மீண்டும் மேன்மை பெரும்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.
பட்டரும் சந்தோஷத்துடன் திருவரங்கம் அடைந்து அரங்கனை மங்களாசாசனம் செய்து ஜீயருடைய திரு அவதாரத்தை எதிர் நோக்கி இருந்தார்.

திருவேங்கடத்தில் வடக்கே முல்குதிர் என்ற ஒரு கிராமத்தில் ‘கொண்டான் ஐய்யங்கார்’ தம்பதிக்குப் பிறந்த
ஆண் குழந்தைக்கு இராமானுஜன் என்று திருநாமம் சாற்றினார்கள்.
ஆசாரியரிடம் பயின்று வந்த இராமானுஜன் ஒரு நாள் நடுப்பகலில் சூரிய வெப்பம் அதிகமாக இருந்ததால்
ஆசாரியர் திருமாளிகைக்கு அடுத்த இல்லத்தின் இடைகழியில் கொஞ்சம் அயர்ந்துவிட்டார்.
பழைய இல்லம் ஆதலால் அதன் கூறை இடுக்கு வழியாகச் சூரிய ஒளி அவர் முகத்தில் பட
அதை ஒரு பாம்பு படம் எடுத்துத் தடுத்துக் கொண்டிருந்தது.

நெடுநேரமாகியும் இராமானுஜர் காலக்ஷேபம் வராமல் இருக்க ஆசாரியர் சீடர்களை அவரைத் தேடப் பணித்தார்.
சீடர்கள் தாங்கள் கண்ட ஆச்சரியத்தை ஆசாரியரிடம் சொல்ல ஆசாரியர் நேரில் சென்று பார்த்து வியப்புற்றார்.
திருப்பதி ஜீயர் திருநாடு அலங்கரிக்க, இவரை ஜீயராக நியமித்தார்கள்.

ஜீயரான சில வருடங்கள் கழித்து, இவர் கனவில் எம்பெருமான் தோன்றி திருக்கோவலூரை மீட்க வேண்டும் என்று நியமிக்க,
இவர் சைவர்களிடம் வாதாடி வென்றார். ஆனால் அவர்கள் அதற்கு இணங்காமல் இவரைக் கொதிக்கும்
சுண்ணாம்பு காளவாயில் இறங்க வேண்டும் என்று கூற, ஜீயரும் அதில் இறங்க
அது ‘குளிர் அருவி வேங்கடமாக’ அவரை ஒன்றும் செய்யவில்லை.
ஜீயர் பெருமையை உணர்ந்து, கற்திரையை திறந்தால்
திருவிக்கிரமன் காட்சியளிக்க அங்கே இருந்த விளக்கு எரிந்துகொண்டு இருந்தது!.

இவர் வம்சத்தவர் தான் இன்றும் ’எம்பெருமானார் ஜீயர்’ மடாதிபதிகளாக திருக்கோவலூர் கோயிலை நிர்வகிக்கிறார்கள்.

———

ஸ்ரீ ஏக நாதர் அவர்கள் அபங்கம் ஒன்றின் பொருள் இது:

“அணுவிலிருந்து பிரபஞ்சம் வரை நிறைந்துள்ளவனை நான் கண்டது ஒரு செங்கல் மீது ! பண்டரீயில் !
வேதங்களும் புராணங்களும் யாரைப் புகழ்ந்து பாடுகின்றனவே அவன் புண்டலீகனின் பின்புறம் காட்சியளிக்கிறான்.
யாரை அறிய முடியவில்லை என்று ஸ்ருதிகள் செல்கின்றனவோ அவன் எளிமையாக சந்திரபாகா நதிக்கரையில் விட்டலனாக நிற்கிறான்”

’விட்’ என்றால் மராத்திய மொழியில் செங்கல் என்று பொருள். ’விட்டலன்’ பெயர் காரணம் இது தான்.

இந்தக் காலத்தில் வைகுண்டத்தைவிட்டு நமக்காகச் செங்கல் மீது 28 யுகங்களாக இடுப்பில் கை வைத்துக் கொண்டு
காத்துக் கொண்டு இருக்கும் விட்டலன் தான் எத்தனை எளிமையானவன் !

நாமதேவரின் ஒரு அபங்கம் “நவ்ஹே மாஜே காஹீ நேணோ துஜவிண” என்பதற்கு அர்த்தம்
“எனக்கு உன்னைத் தவிர வேறு யாரையும் தெரியாது. நான் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும்
உன் திருப் பாதங்களை எனக்குக் காண்பித்து அருள்வாயாக”
இதையே ஆண்டாள் “எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்* உன் தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்கிறாள்

————

சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் ஆய்ச்சியர் குரவையில் வரும்
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி என்ற பாடலில்

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே

————

பத்ரி, புரி, ஸ்ரீரங்கம், த்வாரகா ஆகிய நான்கு இடங்கள் மிக புனிதமாக போற்றப்படுகிறது..
ஸ்ரீமந் நாராயணன் விடியற்காலை பத்திரியில் நீராடிவிட்டு, த்வாரகாவில் வஸ்திரம் தரித்து,
புரியில் அமுது செய்து, திருவரங்கத்தில் சயனிக்கிறார்.
புரியில் பெருமாள் அறு வேளை அமுது செய்கிறார்.

உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் புரியில் இருப்பது தான்.
ஒரு ஏக்கர் பரப்பில் மொத்தம் 3 x 4 அளவில் 752 மண் அடுப்புகள் கொண்டது.

விரகு, மண் சட்டி பானைகள், எந்த விதமான யந்திரமோ உலோகமோ கிடையாது !
கிணற்றிலிருந்து நீரை இராட்டினம் இல்லாமல் கயிற்றால் 30 பேர் இடைவிடாமல் இழுத்துக் கொட்டுகிறார்கள்.
முழுவதும் ஈக்கோ ஃபிரண்டிலி! மிளகாய், வெங்காயம், பூண்டு, காரட், உருளை, தக்காளி போன்ற காய்கறிகள் உபயோகிப்பதில்லை.

சுமார் 400 பேர் உணவைச் சமைக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக இன்னொரு 400 பேர் வேலை செய்கிறார்கள்.
இதைத் தவிர . காய்கறி திருத்தவும், தேங்காய் திருகவும் சுமார் 100 பேர் உள்ளார்கள்.
தினமும் 7200 கிலோ பிரசாதம் தயாரிக்கிறார்கள். விஷேச நாட்களில் 9200 கிலோ!.
எப்போது சென்றாலும் 1000 பேர் சுலபமாக உணவு அருந்தலாம்.

எல்லாப் பிரசாதமும் பானையில் ஏறப்பட்டு மூங்கில் கம்புகளில் கட்டி சுமந்து சென்று பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது !
இதற்கு மட்டும் 60 பேர் வேலை செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் 56 வகையான பிரசாதங்கள் செய்யப்படுகிறது.
9 சித்ரான்னம், 14 வகை கறியமுது, 9 வகை பால் பாயசம், 11 வகை இனிப்பு. 13 வகை திருப்பணியாரங்கள்..

புரியில் பிரசாதத்தை உண்ண சில முறைகள் இருக்கிறது. பிரசாதத்தைப் பூமியில் அமர்ந்து தான் உண்ண வேண்டும்.
மேசை நாற்காலி கூடாது. விநியோகம் செய்ய கரண்டி முதலானவற்றை உபயோகப்படுத்தக்கூடாது.
உடைந்த சட்டிப்பானை சில்லு, அல்லது இலையை மடித்து வைத்துத் தான் பரிமாறுவார்கள்.

சாப்பிடும் போது ஜகன்ந்நாதரை நினைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்த பின் வாய் கொப்பளிக்கும் போது
முதல் வாய் தண்ணீரை துப்பாமல் விழுங்க வேண்டும். சாப்பிட்ட இடத்தை கைகளால் தான் சுத்தம் செய்ய வேண்டும்.
அந்த ஊரில் கல்யாணம், விழா என்றால் தனியாக சமையல் கிடையாது இங்கே தான் சாப்பாடு.

புரி கோயில் மீது உற்று நோக்கினால் கோயில் விமானத்தில் சக்கரத்தாழ்வாரும் அதன் மீது சில கொடிகளும் இருப்பதைப் பார்க்கலாம்.
இந்தக் கோயிலையும், ஊரையும் விமானத்தின் மீதிருந்து ரக்‌ஷிக்கிறான்.
கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால் கோயில் விமானத்தின் மீது இருக்கும் சக்கரத்தாழ்வாரைத் தரிசித்தால் போது என்பார்கள்.
தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு இந்த வைபவம் நடைபெறும்.
ஜகந்நாதரின் விமானக் கோபுரத்தின் உயரம் 214 அடி.
அதன் மீது நீலச் சக்கரம் என்று பெயர் பெற்ற சுதர்சனச் சக்கரம் எட்டு உலோகங்களால் செய்யப்பட்டது. 36 அடி சுற்றளவு,
அதன் மீது சிகப்பு, வெள்ளை, மஞ்சள் நிறத்தில் கொடிகள் தினமும் ஆற்றப்படுகிறது.
கருட சேவகர்கள் என்று அழைக்கப்படும் கைங்கரியம் செய்பவர்கள் இதைப் பரம்பரையாக செய்து வருகிறார்கள்.
சுமார் 15 நிமிடத்தில் இந்தக் கோபுரத்தை ஏறிவிடுவார்கள். பத்து நிமிடத்தில் கொடிகளை மாற்றி விடுவார்கள்.
என்ன விதமான சூறாவளி அடித்தாலும் கொடி கட்டப்படும். எட்டு வயதிலிருந்து பயிற்சி கொடுக்கப்படுகிறது.

—————-

ஸ்ரீ வேதாந்த தேசிகன், ஆண்டாள் மன்மதனை உபாசிக்கவில்லை, அவள் உபாசித்தது காமன் என்ற
வடிவத்தில் உள்ளக் கண்ணனை. அவன் பெயர் மதனகோபாலன்.

மதுரை கூடலழகர் சந்நிதிக்கு பக்கம் மதனகோபாலின் சந்நிதி இன்றும் இருக்கிறது.
வராக புராணத்தில் கண்ணனை அடைய வேண்டும் என்று விரும்பிய கோபிகைகளுக்கு நாரதர் மதனகோபாலனை உபாசிக்க சொல்லி
ஒரு வழிப்பாட்டைச் சொல்லிக் கொடுத்தார். கண்ணனைப் பெறக் கண்ணனே வழியாக மதனகோபாலனை வழிபட்டார்கள்.
மதன கோபாலனை வழிபட்டால் வேண்டிய பலனை உடனே கொடுத்து விடுவான் என்ற ஆசையினால் கோபியரைப் போல
ஆண்டாளும் மதன கோபாலனை மன்மதனாக எண்ணி வழிபடுகிறாள் என்றும் ஸ்வாமி தேசிகனின் திருவுள்ளம்.

———

மாறனேரி நம்பியின் தொழில் உழுவது. ஒரு நாள் இவர் உழுதுகொண்டு இருக்கும் போது இவருக்குப் பசித்தது.
கீழே இருந்த வயல் மண்ணை எடுத்து அதை நீரில் அலசி அலசி அம்மண்ணை உண்டார். அந்த வழியே
வந்த ஆளவந்தார் இவருடைய இந்தச் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தன் சிஷ்யர்களுடன் அவரிடம் சென்று “ஐயா நீங்கள் செய்யும் செயல் எங்களுக்குப் புரியவில்லையே!
சேற்றில் நின்று கொண்டு சேற்றை உண்ணுகிறீர்களே!” என்றார்.
மாறனேரி நம்பி “சாமி ! மண்ணுக்கு மண்ணை இடுகிறேன்!” என்று பதில் கூறினார்.

இதைக் கேட்ட ஆளவந்தார் இவருடைய ஞானத்தை வியந்து
“இவர் நம் மாறன் குருகூர் நம்பிக்கு ( சடகோபன் ) நிகரானவர்!” என்று இவருக்கு
மாறனுக்கு நிகரான நம்பி ( மாறனேர் நம்பி ) என்று பெயர் சூட்டி “நீர் என்னுடன் வாரும்!” என்றார்.
மாறனேரி நம்பி “தான் தாழ்ந்த குலம், ஒரு சண்டாளன்!” என்றார்.
அதற்கு ஆளவந்தார் “பெருமாள் நினைப்பில் இருக்கும் உன்னைப் போல ஒருவனுக்கு குல பேதம் எதுவும் கிடையாது!” என்று அழைத்தார்.
உடனே மாறனேரி நம்பி தன் தொழிலையும், ஏர்க்கலப்பையும், மாடுகளையும், வீட்டையும், உற்றார் உறவினர்களையும் விட்டு விட்டுக் கிளம்பினார்.

ஆளவந்தார் அவருக்குச் சங்கு சக்கர இலச்சினைகளைத் தோளில் பொறித்துத் தாழ்ந்த குலத்தவரான அவரை ’தொண்டர்குலம்’
என்ற உயர்ந்த வைணவ குலத்தில் சேர்த்துக்கொண்டார்.
ஆளவந்தாருடன் அவர் திருவரங்கத்தில் கோயில் பிராகாரத்திலேயே வாசம் செய்யத் தொடங்கினார்.
ஆளவந்தார் படித்துறை பக்கம் ஒரு சின்ன குடில் அமைத்து இரவு அங்கே உறங்குவார்.
குடிலில் ஆளவந்தாரைப் போல மண்ணில் ஒரு விக்ரகம் செய்து அதைத் தினமும் பூஜித்து வந்தார்.
பகல் வேளையில் ஆளவந்தாரின் காலட்சேப நல் உபதேசங்களைக் கேட்டுக்கொண்டு வந்தார்.
மாறனேரி நம்பி வந்த பிறகு ஆளவந்தார் காலட்சேபம் சொல்லும் போது உரத்த குரலில் தொண்டை புண்படும்படி
காலட்சேபம் செய்ய ஆரம்பித்தார். அருகில் இருந்த சிஷ்யர்கள் “நீங்கள் இப்படிச் சத்தமாகச் சொன்னால் உங்கள் தொண்டை புண்படுமே.
மெதுவாகப் பேசினாலே எங்களுக்குக் கேட்டும். ஏன் கஷ்டப்படுகிறீர்கள் ?” என்றார்கள்.
அதற்கு ஆளவந்தார் “நம் மாறனேரி நம்பி வெளியே நின்று கொண்டு இருக்கிறானே!” என்றார்.

தான் ஒரு தாழ்ந்த குலம் என்பதால் மாறனேரி நம்பி மற்றவர்களோடு சேர்ந்து உட்கார்ந்து கேட்க மாட்டார்.
வாசல் கதவுக்கு வெளியே நின்றுகொண்டு தான் கேட்பார்.

நாளடைவில் பலர் ஆளவந்தார் காலட்சேபங்களைக் கேட்ட தொடங்கினார்கள். காலட்சேபக் கூடம் நிரம்பி வழிந்தது.
இடம் போதவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு மூதாட்டியின் வீட்டைச் சேர்த்தால் பெரிதாக இருக்கும் என்று எண்ணினார்கள்.
அவளிடம் அந்த வீட்டைக் கேட்டுப் பெற்றார்கள். ஆளவந்தாரின் காலட்சேபக் கூடம் விரிவு படுத்தப்பட்டது.
ஆளவந்தார் ஒரு நல்ல நாள் பார்த்து புண்யாவசனம் செய்து புதுமனை புகுவிழா நடத்திட முடிவு செய்தார்கள்.
அவ்வேளையில் மாறனேரி நம்பி அங்கே இருந்த கட்டுமான பணியாளரிடம் “நாளை இங்கே புண்யாவாசனம்.
அந்தச் சடங்கிற்கு முன் இந்தக் கூடத்தை நான் பார்க்க விரும்புகிறேன்! புண்யாவாசனம் செய்த பிறகு
என் தடங்களால் இந்த இடத்தை அசுத்தம் செய்ய விரும்பவில்லை” என்றார்.
அந்தப் பணியாளரும் மாறனேரி நம்பியைக் கூடத்துக்குள் அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார்.
மாறனேரி நம்பியும் மகிழ்ச்சியுடன் திரும்பினார்.
ஆளவந்தார் “மாறனேரி நம்பி காலடிப் பட்ட இடத்துக்கு புண்யாவாசனம் எதற்கு ? மாறனேரி நம்பியே ஒரு புனிதன்.
நம்பி காலடி பட்ட இடம் புனிதம் அடைந்து பிறகு மீண்டும் ஏன் புண்யாவாசனம் செய்ய வேண்டும் ?” என்றார்.
புண்யாவாசனச் சடங்குகள் நிறுத்தப்பட்டு, இப்போதே காலட்சேபத்தை ஆரம்பிக்கலாம். எல்லோரும் கூடத்தில் சென்று அமருங்கள் என்றார் ஆளவந்தார்.

காலப்போக்கில் ஆளவந்தாருக்கு இராஜ பிளவை என்ற நோய் பிடித்தது. அந்த நோயால் அவர் மிகுந்த அவதிப்பட்டார்.
முன் பிறவிகளின் வினைகளால் அவருக்கு வந்திருக்கும் நோயால் அவர் வாடுவதை அறிந்த சீடர்கள் வேதனையுடன் கண்ணீர் வடித்தனர்.
அப்போது மாறனேரி நம்பி ஆளவந்தாரை வணங்கி ”நீங்கள் எனக்கு பிரசாதம் வழங்க வேண்டும் !” என்றார்.
ஆளவந்தார் “என்ன பிரசாதம் வேண்டும்?” என்று கேட்க அதற்கு மாறனேரி நம்பி “உங்களுடைய இராஜ பிளவை நோயை
ஆசாரிய பிரசாதமாக வழங்க வேண்டும்!” என்றார். ஆளவந்தாரும் அருகில் இருந்த சீடர்களும் வெலவெலத்துப் போனார்கள்.
“இப்படியும் ஒரு சீடரா ?” என்று வியந்தார்கள்.

ஆளவந்தார் “மாறனேரி நம்பி இந்நோய் மிகக் கடுமையானது. கொடூரமானது. தாங்கிக்கொள்ள முடியாது!” என்றார்.
ஆனால் மாறனேரி நம்பி பிடிவாதமாக ”எனக்கு இதுவே மகா பிரசாதம் தாங்கிக்கொள்வேன்!” என்றார்.
ஆளவந்தாரும் “தந்தேன்!” என்று கூற மாறனேரி நம்பியை அந்த நோய் மெல்லப் பற்றிக்கொண்டது.

ஆளவந்தாரை விட்டு நோய் நீங்கினாலும், அவர் நாளடைவில் வயதின் காரணமாகத் தளர்ச்சி ஏற்பட்டு
கடைசி நாளை நெருங்கும் சமயம் “மாறனேரி நம்பி என் அபினான சிஷ்யன். அவன் என் நோயால் அவதிப்படுகிறான்.
என்னை எப்படிக் கவனித்துக்கொள்வீர்களோ அது போல அவனைக் கவனித்து பணிவிடை செய்ய வேண்டும்” என்று
வேண்டுகோள் விடுத்து பரமபதம் எய்தினார்.
(இந்தச் சமயத்தில் தான் இளையாழ்வார் என்ற ராமானுஜர் அங்கே வந்து ஆளவந்தாருக்குப் பிறகு வைஷ்ணவ ஆசாரிய பீடத்தை அலங்கரித்தார்)

மாறனேரி நம்பி தனியாக நோயில் வாடினார். தம் இல்லத்தில் அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லாமல் உடலில்
வலு இழந்து சமையல் செய்துகொண்டு இருந்த சமயம் ஒரு நாள் பெரிய நம்பிகள் அங்கே சென்றார்.
இவர் படும் கஷ்டங்களைக் கண்டு மிகவும் மன வேதனை அடைந்தர்.
”இதுவே குரு பக்தி! “ என்று ஸ்தாபித்து மாறனேரி நம்பியின் காலடியில் விழுந்தார்.

மாறனேரி நம்பி “நானோ தாழ்ந்த குலம்! ஆனால் நீங்களோ பிராமணக் குலம் இப்படிச் செய்யலாமா ?
எனக்கு அபசாரம் வருமே!” என்றார். பெரிய நம்பி “அப்படியில்லை! உங்கள் குருபக்தி எனக்கும் வரவேண்டும்!
என்று பிராத்திக்கிறேன்!” என்றார்.

அன்றுமுதல் மாறனேரி நம்பியைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பெரிய நம்பிகள் ஏற்றுக்கொண்டார்.
தினமும் அவர் தங்கியிருக்கும் குடிலுக்குச் சென்று மாறனேரி நம்பியைக் குளிக்கச் செய்து, ஆடைகள் உடுத்தி,
பன்னிரு திருநாமங்கள் சாத்தி, இல்லத்திலிருந்து கொண்டு வந்த உணவை அவருக்கு அளித்து வந்தார்.
இதே போல இரவும் அவருக்கு உணவு எடுத்துச் சென்று உணவு உண்ட பின் மாறனேரி நம்பியைப் படுக்கையில் படுக்க வைப்பார்.

ஒரு நாள் ராமானுஜர் பெரிய நம்பி தினமும் உணவுடன் எங்கே போகிறார், இரவுப் பொழுதில் தன் ஆசாரியனுக்கு
ஏதாவது தீங்கு நேரப் போகிறது என்ற பயத்தில் அவரை பின் தொடர்ந்தார்.
அங்கே அவர் கண்ட காட்சி அவரை மெய்சிலிர்க்க வைத்தது.
பெரிய நம்பி மாறனேரி நம்பிக்கு எல்லா உபகாரங்களையும் செய்து, உணவு அளித்தார்.

ராமானுஜர் இந்தக் காட்சியைக் கண்டு கண்கலங்கினார். தம் குருவான பெரிய நம்பி அவருடைய குருவான ஆளவந்தாரின்
திருவடிகளைத் தியானித்து திருவரங்கனை நோக்கி “மாறனேரி நம்பிக்கு இந்த நோயின் வலியைப் போக்க வேண்டும்!”
என்று வேண்டிக்கொண்ட உடனே மாறனேரி நம்பியிடம் இருந்த நோய் மறைந்து விலகியது.

மாறனேரி நம்பி ஆச்சரியம் அடைந்து “பெரிய நம்பியே! மகா பிரசாதம் நீங்கிப் போய்விட்டது.
நீங்கள் கைங்கரியம் செய்வதால் அந்தப் பிரசாதத்தை அனுபவிக்கும் பாக்கியத்தை இழந்தேன்.
தாழ்ந்த குலத்தில் பிறந்த நான் என்ன அபராதம் செய்தேன்!” என்று புலம்பியவாறு கண்ணீர் விட்டபடி,
அருகில் இருக்கும் கல்லின் மீது தன் தலையை மோதப் போகும் போது,
மறைந்து இருந்த ராமானுஜர் “இதற்குக் காரணம் நான் தான்!” என்று கூறி உள்ளே நுழைந்தார்.
தான் ஆசாரியர்கள், பெரிய பெருமாளிடம் வேண்டிக்கொண்டதைக் கூறினார்.
மாறனேரி நம்பி வருத்தப்படுவதைக் கண்டு மீண்டும் ராமானுஜர் பெருமாளைப் பிராத்தனை செய்தவுடன்
மாறனேரி நம்பிக்கு அந்நோய் மீண்டும் வந்தது. கண்ணிழந்தவன் கண் பெற்றது போல மாறனேரி நம்பி ஆனந்தப்பட்டார்.

ஒரு நாள் பெரிய நம்பிகள் “மாறனேரி நம்பியே! இன்றிலிருந்து மூன்றாம் நாள் நீர் ஆளவந்தாரின் திருவடியை அடைவீர்” என்றார்.
அப்போது மாறனேரி நம்பி ”இந்தத் தேகம் ஆளவந்தார் சங்கு சக்கரம் சாற்றிய தேகம். அவருடைய மகா பிரசாதத்தை
ஏற்றுக்கொண்ட தேகம். அதனால் என்னுடைய இந்த உடலை வைணவர்கள் அல்லாத எனது உறவினர்களிடம் ஒப்படைத்துவிடாதீர்கள்” என்று
பெரியநம்பிகளிடம் வேண்டிக்கொண்டார். பெரிய நம்பிகள் “கவலைப் படாதீர் நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்றார்.

மாறனேரி நம்பி தன் குடிலில் இருக்கும் மண்ணால் ஆன ஆளவந்தாரைத் தியானித்தபடியே ஆசாரியன் திருவடியை அடைந்தார்.

“ஒரு பறவையைக் காட்டிலும் ராமர் எவ்வளவு பெரியவன் அப்படி இருக்க ராமர் செய்துள்ளார்!
நான் என்ன தர்மபுத்திரைகாட்டிலும் உயர்ந்தவனா ? அல்லது மாறனேரி நம்பி விதுரனைவிடத் தாழ்ந்தவனா ?
நான் என்ன ராமனைவிட உயர்ந்தவனா ? அல்லது மாறனேரி நம்பி ஜடாயுவை விடத் தாழ்ந்தவனா ?” என்றார்.

ஐந்து பாண்டவர்களில் மூத்தவனான தருமபுத்திரன் விதுரனுக்குச் செய்தார்.
தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர் ராமர் அவர் ஜடாயுவிற்குச் செய்தார்.
ஆளவந்தாரின் மூன்று முக்கிய நம்பி என்ற பெயர் கொண்ட சிஷ்யர்கள் – பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி,
இந்த மூவரில் மூத்தவர் பெரிய நம்பி அவர் மாறனேரி நம்பிக்குச் செய்தார்!

ஸ்ரீ மாறனேர் நம்பியின் திருநட்சத்திரம் (ஆனி ஆயிலம் )

ஆனிதனில் ஆயிலியம்அவதரித்தான் வாழியே
ஆளவந்தார் திருவடிகள் ஆசிரயித்தோன் வாழியே
மாநிலம் எதிராசர் மனம் வாழ்வித்தோன் வாழியே
மதிளரங்கர் நகரமதில் வாழ்ந்தருள்வோன் வாழியே
தேனமரும் தென்மொழியின் சிறப்பறிந்தோன் வாழியே
திகழ்ஞான பத்திகளால் சேர்ந்திருப்போன் வாழியே
வானவரில் ஒருவரிங்கு மகிழ்ந்துவந்தோன் வாழியே
மாறனேரி நம்பியிணை மலரடிகள் வாழியே.

———–

ஈர் உலகைப் படைக்க எண்ணி இருந்தார் வந்தார்
எழில் மலரோன் தன்னை அன்றே ஈன்றார் வந்தார்
மாருதம் மண் நீர் ஆகும் மாயோர் வந்தார்
வானோடு எரி தாம் ஆகும் மறையோர் வந்தார்
சூரியர் தம்முடன் துலங்கு தூயோர் வந்தார்
சுரர்களுக்கு அன்று அமுது அருள் சுந்தரனார் வந்தார்
வாரிதி சூழ் வையகம் வாழ்வித்தார் வந்தார்
வண்மையுடன் வரம் தருவார் வந்தார்

அருமறையை ஊழி தனில் காத்தார் வந்தார்
அது தன்னை அன்று அயனுக்கு அளித்தார் வந்தார்
தரும வழி அழியாமல் காப்பார் வந்தார்
தாமரையாள் உடன் இலங்கும் தாதை வந்தார்
திரு உரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திரு அருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார்
மருவலர்க்கு மயக்கு உரைக்கும் மாயோர் வந்தார்
வான் ஏற வழி தந்தார் வந்தார்

தாமே. அனைத்து உலகும் காக்கும் அருளாளர் வந்தார்
அனைத்துக்கும் அதிபதியாய் நிற்பார் வந்தார்
தினைத் தனையும் திருமகளை விடாதார் வந்தார்
தேசு ஒத்தார் மிக்காரும் இல்லார் வந்தார்
நினைக்க நமக்கு இன் அறிவு தந்தார் வந்தார்
நிலை நின்ற உயிர் தோன்ற நினைந்தார் வந்தார்
எனக்கு இவர் நான் இவர்க்கு என்ன இனியார் வந்தார்
எழுத்து ஒன்றில் திகழ நின்றார் வந்தார்

தாமே நாம் வணங்கத் தாம் இணங்கா நிற்பார் வந்தார்
நம்மை அடைக்கலம் கொள்ளும் நாதர் வந்தார்
நாம் எமக்கு ஆம் வழக்கு எல்லாம் அறுத்தார் வந்தார்
நமக்கு இது என்று உரையாமல் வைத்தார் வந்தார்
சேமம் எண்ணி எம்மை அன்பர்க்கு அடைத்தார் வந்தார்
செழும் தகவால் திண் சரண் ஆம் ஈசர் வந்தார்
தாம் அனைத்தும் தீவினையைத் தவிர்ப்பார் வந்தார்
தமக்கேயாய் எமைக் கொள்வார் வந்தார் தாமே

உலகு எல்லாம் உள்ளே வைத்து உமிழ்ந்தார் வந்தார்
உலகு உடம்பாய்த் தாம் உயிராய் நின்றார் வந்தார்
அலைகடலாய் ஆனந்தம் அடைந்தார் வந்தார்
அளவு இல்லா அருள் ஆழிப் பெருமாள் வந்தார்
திலகம் எனும் திருமேனிச் செல்வர் வந்தார்
செழும் குணங்கள் இருமூன்று உடையார் வந்தார்
இலகு சுடர் முழு நலம் ஆம் இனியார் வந்தார்
எல்லார்க்கும் கதி ஆனார் வந்தார் தாமே

அருளாலே விலங்கு இரண்டும் அழிப்பார் வந்தார்
அம் சிறையைக் கழித்து அருளும் அன்பர் வந்தார்
மருள் வாரா வகை நம்மைக் காப்பார் வந்தார்
வான் ஏற வழி நடத்தி வைப்பார் வந்தார்
தெருள் ஆரும் தெளி விசும்பு தருவார் வந்தார்
திண் கழல் கீழ் வாழ நமக்கு அருள்வார் வந்தார்
பெரு வானில் அடிமை நமைக் கொள்வார் வந்தார்
பிரியாமல் காத்து அளிப்பார் வந்தார் தாமே

அகலகிலாத் திருமகளார் அன்பர் வந்தார்
அடி இரண்டும் ஆறு ஆகத் தந்தார் வந்தார்
புகல் இல்லார் புகல் ஆகும் புனிதர் வந்தார்
பொன் உலகில் திரு உடனே திகழ்வார் வந்தார்
அகிலம் எலாம் ஆனந்தம் ஆனார் வந்தார்
அடி இணைக் கீழ் வைத்து அடிமை கொள்வார் வந்தார்
பகல் நடுவே இரவு அழைக்க வல்லார் வந்தார்
பகல் ஒன்றாய் இரவு அழித்தார் வந்தார் தாமே

தருமன் விடத் தாம் தூது போனார் வந்தார்
தரணி பொறாத் திண் பாரம் தவிர்த்தார் வந்தார்
அருமறையின் பொருள் அனைத்தும் விரித்தார் வந்தார்
அஞ்சின நீ என்னை அடை என்றார் வந்தார்
தருமம் எலாம் தாம் ஆகி நிற்பார் வந்தார்
தாமே நம் வினை அனைத்தும் தவிர்ப்பார் வந்தார்
பரம் எனது நீ புலம்பல் என்றார் வந்தார்
பார்த்தனுக்குத் தேர் ஊர்ந்தார் வந்தார் தாமே

வஞ்சனை செய் பூதனையை மாய்த்தார் வந்தார்
மல்லர் மதகரி மாள மலைந்தார் வந்தார்
கஞ்சனைப் போர் கடும் சினத்தால் கடிந்தார் வந்தார்
கண் நுதல் முன் வாணன் தோள் கழித்தார் வந்தார்
வெம் சொல் தர வீடு கொடுத்து உகந்தார் வந்தார்
விலக்கு இல்லா வழி நடத்த விரைந்தார் வந்தார்
பஞ்சவரைப் பல வகையும் காத்தார் வந்தார்
பாஞ்சாலி குழல் முடித்தார் வந்தார் தாமே

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில்வண்ணர் வந்தார்
மூலம் என ஓலம் இட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார் தாமே

மறைத்தலையில் இசை எழுத்தில் வணங்கும் வாக்கில்
மந்திரத்தில் நாலு எழுத்தாம் திருநாமத்தில்
நிறைத்து இலகு வேற்றுமையில் இரண்டாம் ஒன்றில்
நெடுமால் தன் கீதை எலாம் நிறைந்த சொல்லில்
உறைத்தவர் கண்டு உரைத்த பொருள் ஆன எல்லாம்
உயர் விரத அருளாளப் பெருமாள் தேசின்
திறத்தில் இயை திருச்சின்னமாலை பத்தும்
செவிக்கு இனிது ஆம் சிற்றின்பம் இசையாதார்க்கே–‘திரு சின்ன மாலை’ ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளியது.
இதற்கு எந்த அகராதியும் தேவை இல்லை !

வரதராஜப் பெருமாள் புறப்பாட்டின் போது இரண்டு திருச்சின்னம் ஊதுவது வழக்கம்,
ஆனால் காஞ்சியில் ஒன்று தான். காஞ்சியில் இந்தத் திருச்சின்னம் ஊதும்போது ஸ்ரீதேசிகனுக்கு
வரதனின் அழகு கண்ணில் தோன்றி திருச்சின்ன மாலை என்று ஒன்றை அருளினார்.
அதைச் செவியுற்ற வரதன், எனக்கு ஒரு திருச் சின்னம் போதும்,
இன்னொன்று தேசிகன் அருளியது இருக்கிறதே என்று சொன்னாராம்.

———

பெருமாளுக்கு ’ஆயிரம்’ திருநாமங்கள்!
திருவாய்மொழியில் ’ஆயிரம்’ ஒட்டிக்கொண்டு இருக்கிறது!
கண்ணிநுண் சிறுத்தாம்பில் ஆயிரம் இருக்கிறது!
நாதமுனிகள் பன்னிரண்டாயிரம் முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு சேவித்த போது அதில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது !
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற வார்த்தையிலும் ஆயிரம் இருக்கிறது!

——–

“’பால் குடத்தை நோக்கிப் படை யெடுக்கும் எறும்புகளாய்
தோல் குடத்தைத் தொத்த வந்த தீவிர வியாதி யெலாம்
மால் படுத்த அரங்கன் மணி வண்ணன் பேர் சொல்ல
வால் சுருட்டிக் கொள்ளுமாமே பெருமாளே சரி தானே’- க்ரேசி மோகன் எழுதிச் சுஜாதாவிற்கு அனுப்பியது, விகடனில் வந்தது

——–

‘உயர்வு அற உயர் நலம் உடையவனாகிய’ ’ திருமகள் கேள்வனாகிய நாராயணனே அறப்பெரிய முதல்வன் முழுமுதல் (இறை நிலை);
‘மூவுலகுக்கும் நாயகன் தன் அடிமை நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்’ என்று
ஆன்மாவிற்குச் சொரூபம் அடியேன் என்பதே (உயிர் நிலை);
‘அலர் மேல் மங்கை உறை மார்பா புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்று
சரணாகதியே இறைவனைப் பெறுதற்குரிய வழி (தக்க நெறி);
‘பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்’ ஆகிய இவையே விரோதிகள்(தடை);
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வதுவே’ குறிக்கோள் என்னும் பேற்றுநிலை-(வாழ்வு).

———–

சீரார்ந்த திருவரங்கம் பெரிய கோயில்
சிறந்த பிரணவமான திருவரங்கா
தாரார்ந்த திருவரங்கச் செல்வி புன்னைத்
திருசந்திர புட்கரிணி தகுந்தென் வாசல்
ஓரார்ந்த வீடணர் கொண்டிட்ட பொட்டத்
தகுந்த ஆனந்த சயனத்தில் இலங்கு சோதி
காரார்ந்த திருவுருவும் கமலக் கண்கள்
கண்டு அனு தினம் உள்ளத்தில் கருதுவேனே– திருப்பதிக்கோவை – (7)

————–

இவருடைய அறிவும் ஆற்றலும் கூரத்தாழ்வனுக்கு நிகராக இருப்பதைக் கண்ட உடையவர் பூரிப்புடன் “எங்கள் ஆழ்வானோ?” என்று
விளிக்க விஷ்ணுசித்தர் ”எங்கள் ஆழ்வான்” ஆனார். எங்கள் ஆழ்வான் உடையவரை விட 80 வயது சிறியவர் ( காலம் 1069-1169 )
உடையவர் இவரை திருகுருகைப்பிரான் பிள்ளானிடம் அனுப்பி அவரையே ஆசாரியராகக் கொள்ள செய்தார்.
“எங்கள் ஆழ்வானை” ”அம்மாள் ஆசாரியன்” என்றும் அழைப்பர்
ஸ்ரீராமானுஜர் நியமித்த முக்கியமான ஆசாரியர் நடாதூர் ஆழ்வான், இவருடைய பேரன் நடாதூர் அம்மாள்.

—————

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு–நம் கோதைக்கு ஆண்டாள் என்று சூட்டிய உய்யக்கொண்டார்–சித்திரை – கார்த்திகை–
நாதமுனிகளின் நேர் சிஷ்யர் உய்யக்கொண்டார் இவருடைய இயற்பெயர் புண்டரீகாக்ஷர் -உய்யக்கொண்டார் (திருவெள்ளறையில் பிறந்தவர்).
திருமங்கை ஆழ்வார் “தாய் இருக்கும் வண்ணமே உம்மை தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்” என்கிறார்.
நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களிலேயே மூழ்கி நாதமுனிகள் மிகவும் மகிழ்ந்து, அவருடைய பெருந்தன்மையை
“இந்த வையம் உய்யக்கொண்டீரோ?” என்றார். இதனால் அவருக்கு உய்யக்கொண்டார் என்ற பெயர்

பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின்-மீது ஓடிப் பெருகு காலம்
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்
போய் இருக்க மற்று இங்கு ஓர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ- மாட்டாத தகவு அற்றீரே?

———-

“திவ்யப் பிர’பந்தம்’” என்ற வார்த்தையின் உள்ளே ‘பந்தம்’ அடங்கியிருக்கிறது. அந்தப் பந்தம் திவ்வியமாக இருக்கிறது.
கோயில் என்றால் ஸ்ரீரங்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போல ’ஊர் எனப்படுவது உறையூர்’ என்பது சொல்வழக்கு.
உறையூர் நாச்சியார் பங்குனி ஆயில்யம். இந்நாளில் நம்பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு
உறையூருக்கு எழுந்தருளி அழகிய மணவாளனாக கமலவல்லி தாயாருடன் சேர்த்தி கண்டருள்வார்.

———-

ஸ்ரீபிள்ளை உறங்கா வில்லி தாஸர் திருநட்சத்திரம் மாசி ஆயில்யம்.
மாசி ஆயில்யத்தில் உதித்த தனுர்தாஸர் வாழியே !
பாண்பெருமாள் கண்ட கண்ணுக்கு மயங்கியோன் வாழியே !
இளையபெருமாள் போல் துயிலாது சேவை செய்தோன் வாழியே !
பண்புடனே அடியார்களைப் போற்றியோன் வாழியே !
மதில் அரங்கர் வீதி உலாவிற்கு வாள் பிடித்தோன் வாழியே !
அன்புடனே எதிராசனுக்கு கை கொடுத்தான் வாழியே !
சங்கிலித்தொடர் சரணாகதி உணர்த்தியோன் வாழியே !
சடகோபன் பொன்னடியை பற்றிய பொற்பதங்கள் வாழியே !

————-

ஸ்ரீரங்கத்தில் முதல் குலோத்துங்கன் ஆட்சியில் ( 1070-1112 ) ஒரு கல்வெட்டு இப்படி இருக்கிறது
”ஐப்பசி தேர்த்திருநாளிலும் பங்குனித் திருநாளிலும் தீர்த்தம் பிரசாதிதருளின அன்று இரா,
திருப்புன்னைக்கீழ் [ ஸ்ரீரங்கநாத பெருமாள் ] எழுந்தருளியிருந்து ‘தேட்டருந்திறல்’ கேட்டருளும்போது” என்று கூறப்பட்டுள்ளது.

——-

பூந்தண்மலி (தண் – குளிர்ந்த, பூ – மலர்கள், மலி – நிறைந்த இடம்) என்ற பெயர்தான் பிற்காலத்தில்
பூவிருந்தவல்லி. பூந்தமல்லி அல்லது பூனமல்லி
முதல் பராந்தகன் (907-954) கல்வெட்டில் ‘புலியூர்கோட்டத்துப் பூந்தண்மலி’ என்ற சொற்றொடர்
இந்த ஊரைத்தான் குறிக்கிறது என்கிறார்கள். 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் நான்கு இந்தக் கோயிலில் இருக்கின்றன.
இந்தக் கல்வெட்டுகளில் செம்பாக்கததைச் சேர்ந்த ஒருவர் விளக்கு எரிய ஒரு பசுவை வழங்கினார் என்றும்,
சேரன் இரவிவர்மன் (1275-1290) மானியம் வழங்கினார் என்றும் இருக்கிறது.
1009 ஆண்டு தோன்றிய திருக்கச்சி நம்பிகள் 91 ஆண்டுகள் வாழ்ந்ததாக குருபரம்பரையில் குறிப்புகள் இருக்கின்றன.
சௌம்ய வருஷம் மாசித் திங்கள் (ஆங்கில மாதம் பிப்ரவரி) மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் வைசிய குலத்தில் (செட்டியார்) பிறந்தார்.
தந்தை பெயர் வீரராகவச் செட்டியார், தாயார் கமலையார். இவர்களுக்கு திருக்கச்சி நம்பிகள் நான்காவது குழந்தை.
இவருக்கு முன் பிறந்தவர்களின் பெயர்கள் – திருவேங்கடவர், அருள்கூரப்பன், மலைகுனிய நின்றார் என்று மூன்று அண்ணன்கள்.
திருக்கச்சி நம்பிகள் கஜேந்த்ரதாஸர் என்று காஞ்சிப் பெருமாள் இவருக்கு கொடுத்த பெயர்.

நம்பிகள் திருக்கோட்டியூர் நம்பியிடம் அவர் மடத்து மாடுகளை மேய்க்கும் கைங்கர்யத்தை மாறுவேடமிட்டுச் செய்கிறார்.
ஒரு நாள் இதைக் கண்டுபிடித்த திருக்கோட்டியூர் நம்பி இவரை ‘நம் பையல்’ என்று தழுவிக்கொண்டார் என்று கதை.
இன்றும் திருக்கச்சி நம்பிகள் உற்சவர் அருகே சில மாடுகள் இருப்பதைக் காணலாம்.

ஸ்ரீரங்கம் கோயியில் இராமானுஜர் காலத்தில் அவருக்கு ஏற்பட்ட இந்தக் குறையைப் போக்க உற்சவத்தின் போது
நம்பெருமாள் (ஸ்ரீரங்கம் பெருமாள்) அமுது செய்தருளியபின் (படைத்த பின்) ஆழ்வார்கள், ஆசார்யர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்.
அப்போது திருக்கச்சி நம்பிகளுக்கு நைவேத்தியம் பண்ணிய அமுது பிறகு இராமானுஜருக்கு சமர்ப்பிக்கப்படும் வழக்கம் இருக்கிறது.
[ ஸ்ரீரங்கத்தில் திருக்கச்சி நம்பிகள் சன்னதி ஆலிநாடன் திருச்சுற்றில் கருட மண்டபத்திற்குக் கிழக்கே உள்ளது. ]

———–

ஸ்ரீராமானுஜர் அவதரித்த அதே வருடம் ( 1017 ) வைகாசிக் கேட்டையில் ஸ்ரீ ஆளவந்தாரின் புத்திரனாகத்
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் அவதரித்தார். ஆளவந்தார் இவரைத் தன் ஆசாரியன் ஸ்ரீ மணக்கால் நம்பியை ஆச்ரயிக்கச் செய்தார்.
ஸ்ரீரங்கம் வந்த ராமானுஜருக்கு ஆளவந்தார் நியமனப்படி அவருக்கு ஆழ்வார்களின் அருளிச்செயல் ரகசியங்களை அருளினார்.
ஸ்ரீ ராமானுஜர் இவரிடம் ஆறு மாதம் கைங்கரியம் செய்து அர்த்தங்களைப் பெற்றார்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ நம்பெருமாளிடம் மோட்சம் அளிக்க வேண்டும் என்று பிராத்தித்தார். பெருமாளும் “தந்தோம்” என்றார்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் தன் இல்லத்துக்குச் செல்லவில்லை. பரஸ்தானமாகத் ஸ்ரீ திருவரங்க பெருமாள் இல்லத்திலேயே தங்கினார்.
அதாவது மோட்சம் போகும் திசையில் இவருடைய இல்லம் இருந்தது என்பதை ஸ்ரீ ஆழ்வான் அறிந்திருந்தார்.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருக்குறளும் ஸநாதன தர்மமும் –ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகள் –/திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம் வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

December 30, 2021

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்று ‘அ’வில் ஆரம்பிக்கிறார் வள்ளுவர். எழுத்துக்கு எல்லாம் எப்படி ’அ’ முதலோ அது போல
நாராயணன் எல்லாவற்றிற்கும் மூலம் என்கிறார். பகவான் என்று தானே கூறுகிறார்
இங்கே நாராயணன் இல்லையே என்று யோசிக்கலாம்.

கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம் மாதிரி பகவான் என்றால் அது ஸ்ரீமந் நாராயணனையே குறிக்கும்.
கீதையில் ‘கிருஷ்ணர் சொன்னார் என்று சொல்லாமல் ‘ஸ்ரீ பகவான் உவாச’ என்று பகவான் சப்தம்
இங்கே கண்ணனான நாராயணனையே குறிக்கிறது. கண்ணன் சம்பந்தப்பட்டதால் ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்று கூறுகிறோம்.
கண்ணின் பக்தர்களை ’பாகவதர்கள்’ என்கிறோம். இன்று பல பகவான்கள் முளைத்துவிட்டபடியால் மக்கள் குழம்பிவிடுவார்கள்
அதனால் ’ஆதி பகவன்’ என்கிறார் வள்ளுவர்.

செய்யக்கூடிய செயல்களைச் செய்வது தான் அறம் என்கிறார் வள்ளுவர்.
பரிமேலழகர் ’இம்மை மறுமை வீடு’ என்னும் மூன்றுக்கும் பயன் தருவது அறன் என்கிறார்.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

ஒருவனுக்குச் செய்யக்கூடிய செயல்களே அறம்; செய்யக் கூடாத செயல்கள் பழியே.
எது செய்யக் கூடிய செயல்கள் நம் முன்னோர்கள் எதைச் செய்தார்களோ அதைக் கடைப்பிடிப்பதே அறம்
( மேலையார் செய்வனகள் என்று ஆண்டாள் 26ஆம் பாசுரத்தில் கூறுகிறாள்).

வள்ளுவர் இந்த அறவழிக்கு அறத்துப்பால் என்ற பகுதியையே ஒதுக்கி,
அதில் ’அறன் வலியுறுத்தல்’ என்று ஓர் அதிகாரமே தந்துள்ளார்.
அதில் அறம் என்றால் என்ன பல விதங்களில் கூறியுள்ளார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற

மனதில் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும் ; அறம் அவ்வளவு தான். மற்றவை ஆரவாரம் என்கிறார்.

இன்னொரு குறளில்

அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும்
இடங்கொடுக்காமல் வாழ்வதே அறமாகும் என்கிறார்.

‘தீக்குறளை சென்று ஓதோம்’ என்பதற்கு வள்ளுவர் ‘புறங்கூறாமை’ என்று ஒரு முழு அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளார்.
ஒருவன் அறநெறியை விட்டுவிட்டு பாவங்களையே செய்துகொண்டு இருந்தாலும்,
அவன் புறம் பேசாமல் இருந்தாலே போதும். புறம் பேசுதல் எல்லாப் பாவங்களைவிடக் கொடியது.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

புறம் பேசாமல் இறந்தால், மறுபிறப்பில் அறநெறியில் வாழ்ந்தவர் பெறும் பலனைப் பெறுவார்.
மாசு படிந்த மனம் தான் கோள் சொல்லும், நண்பர்களை இழப்பார்கள் என்று அடுக்கிக்கொண்டு போகும் வள்ளுவர்

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

புறம் கூறுபவர்களை இந்தப் பூமி ’இவனை எல்லாம் சுமக்க வேண்டியிருக்கிறதே’ என்று
தன் தர்மத்தைக் காக்கவே சுமக்கிறது.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

அதாவது பற்றில்லாதவனாகிய பெருமாளின் பற்றை மட்டுமே பற்றிக் கொள்ள வேண்டும்;
மற்ற பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்.
பற்றற்றான் என்பது பகவானைக் குறிக்கும். நம்மாழ்வார் ‘பற்றிலன் ஈசன்’ என்கிறார்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

இல்லறத்தில் வாழ்பவன் அறவழியில் தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவருக்கும்
அவர்களுக்கு ஏற்ற உதவிகளை செய்து துணையாக இருப்பான்

திருவள்ளுவமாலையில் ‘பரணர்’ என்ற புலவர் பாடிய பாடல் இது.

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுவதும் நயந்தளத்தான் – வாலறிவின்
வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாமளந்தார் ஒர்ந்து.

திருமால் குறளாய் தோன்றி இரு பேரடியால் உலகனைத்தையும் அளந்தான்;
திருவள்ளுவர் தம் குறளின் இரு சிற்றடியால் மக்களின் எண்ணங்கள் எல்லாவற்றையும் அளந்தார் என்கிறார் புலவர்.

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை இடைவிடாது சிந்திப்பவர்களுக்கு
எந்தக் காலத்திலும் துன்பம் இல்லை

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும்
சோம்பல் இல்லாத அரசன் அடைவான் என்கிறார். நல்லாட்சி செய்தால் அவனுக்கு
மூவுலகங்களையும் அளந்த திருமால் போன்ற எல்லாம் கிடைக்கும்.

ஆனால் நல்லாட்சி புரியவில்லை என்றால் ? வள்ளுவர் இப்படி விவரிக்கிறார்

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவ மழை பொய்க்கும்
என்று கூறிவிட்டு இன்னொரு குறளில்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

நாட்டைக் காக்கும் அரசன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் குறையும்.
அந்தணர்கள் அறநூலாகிய வேதங்களை மறந்துவிடுவார்கள் என்கிறார்.

——–

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

மேகம் கடலிலிருந்து முகந்த நீரை மீண்டும் கடலிலே பெய்யாமல் போனால், நீண்ட பெரிய கடலும்
தன் வளம் குன்றிப் போகும் என்கிறார் வள்ளுவர். அதாவது திருப்பதிக்கே லட்டு என்பது போல கடலுக்கே மழை தேவை என்கிறார்.
அதுவும் அந்த மழை ‘தடிந்தெழிலி’ பொழிய வேண்டும் என்கிறார் முனிவர்.

’தடிந்தெழிலி’ – தடிந்து எழிலி என்றால் மேகமானது மின் வெட்டி இடி இடித்துப் பெருமழை பெய்வது குறிக்கும்.
மின்னலும் இடியுமாக ‘cloud-burst’ மழை பெய்ய வேண்டும் என்பதைத் தான் ‘ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து*
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்’ என்கிறாள். வள்ளுவர் இதை ‘தடிந்து எழிலி’ என்கிறார்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு,
பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள் நின்று உடற்றும் பசி.

மழை பெய்யாமல் இருந்தால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று
உயிர்களை வருத்தும் என்கிறார்.

இந்த அதிகாரத்தின் சுருக்கம் – விவசாயம் செய்ய, குடிக்க, பசிக் கொடுமை போக்க மழை அவசியம்.
அதுவே அமுதம். தானம், தவம், கோயில் பூஜை, எல்லாம் மழை இல்லை என்றால் நின்று போகும்.
மழை இல்லை என்றால் பசும் புல்லைக் கூடப் பார்க்க முடியாது
மொத்தத்தில் மழை இல்லை என்றால் உலக வாழ்க்கை நடைபெறாது என்கிறார்.
இதைத் தான் ஆண்டாள் ‘வாழ உலகினில் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்திடாய்’ என்று
‘நல்ல மழையை’ வேண்டும் என்று பிராந்தனைச் செய்கிறாள்..

வள்ளுவர் நல்ல மழை, கெட்ட மழை என்று இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாதும் மிகுதியாகப் பெய்தும் மக்களை கெடுப்பதும், அளவாய்ப் பெய்து வாழ வைக்க செய்ய வல்லமையுடையது மழை.

அந்த ’கெட்ட மழை’ தான் கண்ணன் ‘குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தான்!’

———

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

பார்வைக்கு எளிமை, சொல்லுக்கு இனிமை உடைய மன்னனை நாடு புகழும்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற

அதாவது ஒருவன் தன் மனத்தில் மாசு இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே;
மனத்தூய்மை இல்லாத மற்றவை வெறும் ஆரவாரம் என்கிறார்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல்
அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

புற நிர்ப்பந்தங்களில் உண்டாகும் சுத்தம் கற்பாகாது; தன் உள்ளத் தூய்மையால் அடையும் சுத்தமே கற்பு.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

அறக்கடலாக விளங்கும் பெருமாளின் திருவடியை நினைந்தாலன்றிப் பாவக்கடலைக் கடக்கமுடியாது என்கிறார்.

செவியை ஒரு ஹோமம் செய்யும் குண்டமாக வைத்து அக்கினியில் சொரியும் அவியைப் போன்றது,
பெரியோர் சீடர்களுக்கு அவர்களுடைய செவி மூலம் தரும் அறிவு என்கிறார் வள்ளுவர்

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து

ஆசாரியன் ஒரு பெரிய வேள்வியைச் செய்யும் பயனை அடைவான்;
அவியப் பெற்றுத் திருப்தியடையும் தேவர்களைப் போல் ஆவான் அறிவை பெறும் சீடன்.

தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று

தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன்
பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

தனக்குக் கிடைத்ததை காக்கை மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்;
இப்படிப்பட்ட இயல்புடையவருக்கே செல்வம் பெருகும் என்கிறார்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்

உலகம் கூறும் உண்மையை மறுப்பவன் பேயாகக் கருதப் படுவான் என்கிறார்-

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

கேள்வி அறிவால் துளைக்கப்படாத செவிகள் ஓசையைக் கேட்டு என்ன பிரயோஜனம் ? என்று என்கிறார் வள்ளுவர்.

அருள் என்றால் என்ன ?
வள்ளுவர் அருளுடைமை என்று ஓர் அதிகாரத்தையே இதற்கு ஒதுக்கியுள்ளார்.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள

செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளால் வரும் செல்வம்.
மற்ற செல்வங்கள் சிறப்பு இல்லை என்கிறார் வள்ளுவர்

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்வு இல்லை என்பது போலப் போல அருளில்லாதார்க்கு அவ்வுலகம் இல்லை.

பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து

நோயின்மை, செல்வம், விளைச்சல், இன்பம், காவல் இவை ஐந்தும் நாட்டுக்கு அணிகலங்கள் என்கிறார்.
இங்கே ஏமம் = காவல்.

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம் தனிச்சிறப்புடையது.
ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று என்கிறார்.
இந்தச் செல்வம் அனுமாரிடம் இருந்தால் தான் அனுமாருக்குச் சொல்லின் செல்வர் என்ற திருநாமம்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

உருளும் பெரிய தேர்க்கு அச்சிலிருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர்.
அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது என்கிறார்.

ஸ்ரீராம தூதன் என்ற பெயரும் அனுமாருக்கு உண்டு. ஒரு தூதுவன் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு
இன்றியமையாத மூன்று பண்புகளாகும் என்கிறார் வள்ளுவர்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து

ஏழைகளுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை
எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது. வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், நோக்கம் அதுவே என்கிறார்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று

பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல. சான்றோர்க்கு அகத்தின் இருளைப் போக்கும்
பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார்.

கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்

கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், அதைப் பொறுத்துக் கொள்ளும்
பெண்மையினும் மேம்பட்டது வேறொன்றும் இல்லை என்கிறார்.

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

செருக்கும் சினமும் சிறுமையும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில்
காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும் என்கிறார். இன்னொரு குறளில்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

பணிவும் இன்சொல்லுமே அணிகலனாகும், மற்றைய அணிகலங்கள் ஆகாது என்கிறார்.

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

`எனக்கு அறிவு இருக்கிறது` என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

பணிவுடன் இருந்தால் எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுக்கு மற்றொரு செல்வம் போன்றதாகும்.

உயர்ந்த குலம் என்பதற்கு வள்ளுவர் கூறும் definition கீழே உள்ள குறள்

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

தனக்கு நலம் வேண்டுமானால் தீயன செய்ய அஞ்சவேண்டும்; குலப்பெருமை வேண்டுமானால்
யார்க்கும் பணிவு விரும்புக என்பது குறளின் பொருள். பணிவே ஒருவனுக்கு அணிகலன் என்கிறார்.

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

படை, குடிமக்கள், பொருள், அமைச்சரவை, நட்பு நாடுகள், பாதுகாவல் என்ற
ஆறு உறுப்புக்களையும் உடையவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் என்கிறார்.

ஆண் சிங்கத்தின் நடை அழகை வள்ளுவர் இப்படிக் கூறுகிறார்

புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

அதாவது புகழைக் காக்க விரும்பும் மனைவியைப் பெற்றவருக்கு இகழ்ந்து பேசும் பகைவர் முன்
ஆண்சிங்கம் போல் பெருமிதத்துடன் நடக்க முடியும் என்கிறார்.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு

சிந்தித்துத் தெளிந்து மெய்ப்பொருளை உள்ளம் உணர்ந்து கொண்டால்,
உறுதியாக, மனிதப் பிறப்பின் இயல்பை மீண்டும் ஆராயவேண்டியதில்லை என்கிறார்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

எவ்வகையாலும் ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடையறாது நினைப்பவர்க்கு
மனக்கவலையை இல்லை என்கிறார் வள்ளுவர்.

பெரியவர்கள் யார் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியர்;
அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் சிறியர் என்கிறார்

பெரியர் என்பவர்கள் செயல்களை உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர்கள் என்று
இன்னொரு குறளில் அதற்கு விளக்கம் தருகிறார்.

வள்ளுவர் மேலும் ஒரு குறளில்

சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

பெரியவர்கள் கண்கள் போன்றவர்கள். அரசனும் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்

தப்பு செய்தால் இடித்து அறிவுரை கூறும் பெரியவர்களின் துணை கொண்டவர்களை யாரும் தப்பான வழியில்
போகும்படி கெடுக்க முடியாது என்று கூறிய வள்ளுவர் இன்னொரு குறளில்

முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை

வியாபாரத்தில் முதல் இல்லாமல் லாபம் பார்க்க முடியாது.
அது போலப் பெரியவர்களின் துணை இல்லாமல் நல்ல நிலைக்குச் செல்ல முடியாது என்கிறார்.

நாம் பித்ருக்களுக்கு மறவாமல் சடங்குகள் செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர்

தென் புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

தென் புலத்தார் என்பது பித்ருக்கள். இறந்தவர்களை மறவாமல் சில சடங்குகள் செய்து
நினைவில் வைத்துக்கொள்வது நலம் என்கிறார்.

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை–வள்ளுவர் ஒரு குறளில்–

கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய
கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

இந்தக் குறள் கடவுள் வாழ்த்தில் ஒன்பதாவது குறள்.
இதற்கு முன் எட்டுக் குறளில் வள்ளுவர் கூறும் பெருமாளின் எட்டுக் குணங்கள் இவை.

1. ஆதி பகவன் – அவனே எல்லாவற்றிற்கும் முதலானவன்
2. வாலறிவன் – தூய்மையாகிய அறிவுடையவன்
3. மலர்மிசை ஏகினான் – மலரின் கண்ணே
4. வேண்டுதல் வேண்டாமை இலான் – விருப்பு/வெறுப்பு அற்றவன்
5. இரு வினையும் சேரா இறைவன் – பாவ புண்ணியம் அற்றவன்.
6. பொறி வாயில் ஐந்தவித்தான் – புலன்களை வென்றவன் – இருடிகேசன்
7. தனக்குவமை இல்லாதான் – ஒப்புமை இல்லாதவன்
8. அறவாழி அந்தணன் – அவனே அறக்கடல்

பெருமாளுக்கு உள்ள எட்டுக் குணங்களைக் குலசேகர ஆழ்வார் தனது முகுந்த மாலையில் இப்படிக் கூறுகிறார்.

ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
ப்க்த ப்ரியேதி பவலுண்டன கோவிதேதி
நாதேதி நாக சயனேதி ஜகன் நிவாஸே
த்யாலாபினம் ப்ரதிபதம் குரு மே முகுந்த

1. ஸ்ரீ வல்லபேதி(திருமகள் நாயகனே)
2. வரதேதி ( வரமளிப்பவனே)
3. தயாபரேதி (கருணைமிக்கவனே)
4. பக்த பரியோதி(பக்தர்களின் அன்பனே)
5. பவலுண்டன கோவிதேதி (பிறவித் தொடரை களைந்து காக்கும்)
6. நாதேதி(வல்லவனே)
7. நாக சயனேதி(பாம்பணையில் துயில்பவனே)
8. ஜகன் நிவாஸே( எங்கும் நிறைந்தவனே)

ராமா நீ
1. அளவிடமுடியாத தன்மை உடையவர்.
2. யாராலும் வீழ்த்த முடியாதவன்
3. புலன்களை வென்றவர்
4. நீயே தர்மம்
5. பெருமைமிக்கவன்
6. முக்காலமும் அறிந்தவர்
7. பொறுமைமிக்கவர்
8. செந்தாமரைக் கண்ணழகை உடையவன்.
தாரை கூறும் எட்டுக் குணங்கள் இவை.

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

எனக்கு அறிவு இருக்கிறது` என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும் என்று
கூறிய வள்ளுவர் செருக்கு இல்லாமல் இல்லாமல் இருந்தாலே பெரிய செல்வம் என்கிறார்

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி

தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை
மட்டும் ஆடையால் மறைத்து என்ன பயன் ?

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை

நிலையில்லாதவற்றை நிலையானது என்று நினைப்பது தான் அற்பத்திலும் அற்பம் என்கிறார்.

நம் உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு முட்டை உடைந்து பறவை பறந்து போவது போல என்பதைக்

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு

என்று கூறும் வள்ளுவர் இந்த உடலுக்கு ஏற்ற இடம் பற்றி இப்படிக் கூறுகிறார்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு,
நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ?

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

கடவுளின் திருவடியை இடைவிடாது நினைப்பவர் மோட்சம் பெறுவார். இன்னொரு குறளில்

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

இறைவனுடைய திருவடிகளை நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்;
மற்றவர் கடக்க முடியாது.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.–

இக் குறள் அப்படியே கீதையின் சரம ஸ்லோகம்!
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள;
உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்.

பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொறி வாயில் ஐந்து அவித்தான் – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தையும்
தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் என்று பொருள் –
அதனால் தான் பெருமாளை ‘ரிஷிகேசன்’ என்கிறோம்.. தமிழில் இருடீகேசன்.
பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் -. பொய்த்தல் என்றால் மறைத்தல் என்று பொருள்.
இங்கே ஒரு நெறியை மறைக்காமல் காட்டியிருக்கிறார். அந்த ரிஷிகேசன் ஓர் ஒழுக்க நெறியை மறைக்காமல் காட்டியிருக்கிறான்.
நீடு வாழ்வார் – அந்த நெறியை பின் பற்றியவர்கள் பிறப்பு இன்றி எக்காலத்தும் வாழ்வார் என்கிறார் வள்ளுவர்.
அந்த நெறி தான் சரம ஸ்லோகம்!

வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் வெளியே வலிமையான தோற்றம் பெற்றிருந்தாலும்,
புலித்தோல் போர்த்தி மேயும் பசுக்கள் போல என்கிறார்.

———–

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோ
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான் யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ

“பழைய ஆடைகளைப் புறக்கணித்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே,
பழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.” (பகவத்கீதை 2.22)

பகவத் கீதையின் இதே கருத்து வள்ளுவரால் “நிலையாமை” என்னும் அதிகாரத்தில் உரைக்கப்படுகிறது.
உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவினை முட்டை என்னும் கூட்டினை தனியேவிட்டு விட்டு
வேறிடத்திற்கு பறக்கும் பறவையுடன் வள்ளுவர் ஒப்பிடுகிறார்.

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு–(திருக்குறள் 338)

கீழ்காணும் குறளில், இந்த உயிரானது பல உடம்பினுள் மீண்டும்மீண்டும் புகும் என்பதைச் சுட்டிக்காட்டும் வள்ளுவர்,
துச்சமான அறியாமையாகிய மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள் இருக்கும் உயிருக்கு நிலையான
வீடு அமையவில்லையா என்று கேட்கின்றார்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு–(திருக்குறள் 340)

உடலைக் கண்டு வருத்தம் கூடாது–தான் ஓர் ஆத்மா என்பதை உணர்ந்து நிலையான இடம் தேடுதல் முக்கியம் என்றும்,
நிலையற்ற உடம்பு அழிவதைக் கண்டு வருந்தக்கூடாது என்றும் வள்ளுவர் கீழ்காணும் குறளில் கூறுகிறார்:

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்–(திருக்குறள் 627)

உடம்பு என்பது துன்பத்திற்கு இலக்காகக் கூடியது என்பதை உணர்ந்த அறிவிற் சிறந்த மேலோர் தன் உடலுக்கு
ஏற்படும் துன்பத்தை ஒருபோதும் துன்பமாகக் கருத மாட்டார்கள் என்றுகூறுகின்றார்.

தேஹினோ யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி

“உடல் பெற்ற ஆத்மா சிறுவயதிலிருந்து இளமைக்கும் இளமையிலிருந்து முதுமைக்கும்மாறுவதைப் போலவே,
மரணத்தின்போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னைஉணர்ந்த ஆத்மா (தீரன்)
இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.” (பகவத் கீதை 2.13)

பரமாத்மா நம்முடன் சேர்ந்து, நமது இதயத்தில் இறைவன் பரமாத்மாவாக இருக்கிறார் என்பதை
பகவத் கீதையின் பதிமூன்று, பதினைந்தாவது அத்தியாயங்கள் உறுதி செய்கின்றன.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்–(திருக்குறள் 3)

“இதயமாகிய தாமரை மலரில் இருப்பவனின் மாட்சிமை பொருந்திய அடிகளைச் சேர்ந்தவர் எல்லா உலகிற்கும்
மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்.”
எல்லா உலகங்களுக்கும் அவற்றிலுள்ள உயிர்களுக்கும் காரணமாகத் திகழும் முழுமுதற் கடவுளாகிய ஆதிபகவன்
இதயத்திலிருக்கிறான் என்பதை வள்ளுவர் மூன்றாவது குறளில் உறுதி செய்கின்றார்.
அந்தர்யாமியாக இருக்கும் இறைவனை “பரமாத்மா” என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன.
இங்கே “வீடு” என்பது நிலையான அழிவற்ற உலகமாகிய வைகுண்டத்தைக் குறிக்கிறது.

உபத்ரஷ்டானு மந்தா சபர்தா போக்தா மஹேஷ்வர:
பரமாத்மேதி சாப்யுக்தோதேஹே ’ஸ்மின் புருஷ: பர:–பகவத் கீதை (13.23)

“இந்த உடலில் மற்றொருவரும் இருக்கின்றார், அவர் தெய்வீக அனுபவிப்பாளர். அவரே இறைவன்,
பரம உரிமையாளர். மேற்பார்வையிட்டு அனுமதி வழங்கு பவரும், பரமாத்மா என்று அறியப்படுபவரும் அவரே.”

ஜடத்தளையில் இருக்கும் ஜீவாத்மா, இவ்வுலக நம்பிக்கைகள், இன்பங்களை விடுத்து பரமாத்மாவிடம் திரும்புவானாகில்,
அவன் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க அவர் வழிவகுக்கிறார். இந்த உண்மையை வள்ளுவர் மேலே சொன்ன குறளில் விளக்கியுள்ளார்.
தனிப்பட்ட ஜீவாத்மா மற்றோர் உடலுக்கு மாற்றமடைவது, அவனுடைய எண்ணம், விருப்பம் மற்றும் செயல்களாலும்,
பரமாத்மாவின் கருணையாலும் சாத்தியமாகிறது. கீழ்க்காணும் ஸ்லோகம் அதனை உறுதி செய்கின்றது.

கர்மணா தைவ-நேத்ரேணஜந்துர் தேஹோபபத்தயே
ஸ்த்ரியா: ப்ரவிஷ்ட உதரம்பும்ஸோ-ரேத: கணாஷ்ரய:

“தன்னுடைய செயல்களின் விளைவினாலும் முழுமுதற் கடவுளின் பார்வையாலும், ஜீவனானவன் ஒரு தாயின் கருப்பையில்
அடைக்கப்பட்டு உடம்பெடுக்கிறான். ஓர் ஆணின் விந்துவின் வாயிலாக ஜீவன் கருப்பையை அடைகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 3.31.1)

வேதாந்த சூத்திரத்தில் ஸ்ரீல வியாஸதேவர், ஜன்மாத்யஸ்ய யத:, எவரிடமிருந்து எல்லாம் தோன்றுகின்றனவோ,
அவரே முழுமுதற் கடவுள் என்று கூறுகிறார். மேலும் அதனை அவரே விளக்கமான முறையில்
ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்லோகத்தில் (1.1.1.), வஸுதேவரின் மைந்தனான கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும்
அவர் தனது நிலையான உலகத்தில் வீற்றுள்ளார் என்றும் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்றும் அவரை தான் தியானிக்கிறேன் என்றும் கூறுகின்றார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு–(திருக்குறள் 1)

“எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதைப் போல், உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.”

எல்லாச் செல்வங்களையும் முழுமையாகக் கொண்ட முதல்வனே ஆதிபகவன். இந்த ஆதிபகவன் எப்படிப்பட்டவன் என்பதை வள்ளுவர் ஏழாவது குறளில்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது–(திருக்குறள் 7)

“தனக்கு நிகரில்லாதவனுடைய தாளைச் சேர்ந்தவருக் கல்லாது மற்ற எவருக்கும் மனத்தின்கண் உருவாகும் துன்பங்களை நீக்குதல் அரிது.”
தனக்குவமை இல்லாதான் என்று வள்ளுவர் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது. அவருக்கு மேல் யாரும் இல்லை என்பதே இதன் பொருள்.

இதையே பகவத் கீதையில் (7.7) கிருஷ்ணர்,
மத்த: பரதரம் நான்யத்கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய
மயி ஸர்வம் இதம் ப்ரோக்தம்ஸூத்ரே மணி-கணா இவ

“செல்வத்தை வெல்வோனே, என்னை விட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளது போல,
அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.” என்று கூறுகிறார்.

மேலும், புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்,

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (திருக்குறள் 1103)

“தாமரைக் கண்ணனுடைய உலகம், தான் விரும்பும் காதலியின் தோள்களில் துயிலும் துயிலை விட இனிமையானதோ?”

ஜடவுலகம், இதன் அனுபவங்கள் யாவும் தற்காலிகமானவை, நிலையற்றவை என்று வேத இலக்கியங்களும் திருக்குறளும் கூறுகின்றன.
நிலையாமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்,

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு

“நேற்று இருந்தவன் இன்றில்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையை மட்டுமே
பெருமையாக உடையது இவ்வுலகம்.” (திருக்குறள் 336) எனில், உயிர்வாழியான மனிதனுக்கு என்ன பெருமை?

இதே நிலையாமையை நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் (1.2.2) மிகவும் சுருக்கமாகப் பின்வருமாறு கூறுகிறார்:

மின்னின் நிலையில – மன்னுயிராக்கைகள்,
என்னுமிடத்து, இறை – உன்னுமின் நீரே

பகவத் கீதையில் (8.15) ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:

மாம் உபேத்ய புனர்ஜன்மது:காலயம் அஷாஷ்வதம்
நாப்னுவந்தி மஹாத்மான:ஸம்ஸித்திம் பரமாம் கதா:

வள்ளுவர் ஊழ் எனப்படும் அதிகாரத்தில் பின்வருமாறு கூறுகிறார்:

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

“ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும்.
தமக்கு உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகாது.” (திருக்குறள் 376)

ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்

“ஊழைவிட மிக்க வலிமையுள்ளது வேறு என்ன இருக்க முடியும்? ஊழை விலக்கும்பொருட்டு மற்றொரு வழியை
ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன்வந்து நிற்கும்.” (திருக்குறள் 380)

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்

“ஒருவன் செய்ய வேண்டாதவற்றை செய்வதும் கேடாகும், செய்ய வேண்டியவற்றை செய்யாமல் விடுவதும் கேடாகும்.” (திருக்குறள் 466)

ந கர்மணாம் அனாரம்பான் நைஷ்கர்ம்யம் புருஷோ ‘ஷ்னுதே
ந ச ஸன்ன்யஸனாத் ஏவ ஸித்திம் ஸமதிகச்சதி–(பகவத் கீதை 3.4)

செயலிலிருந்து விலகிக்கொள்வதால் விளைவுகளிலிருந்து விடுதலை பெற முடியாது. துறவால் மட்டும் பக்குவமடைதல் என்பதும் இயலாதது.
அதனால், அறிவில் முதிர்ந்தவர்கள் செயல்களின் விளைவுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு நிற்க விரும்புகின்றனர்.
பிறப்பு, இறப்பு எனும் சுழலிலிருந்து ஒருவனை விடுவிக்கும் செயல்கள் அகர்ம எனப்படும்.
இந்த மூன்று வகையான செயல்களில், அறிவாளிகள், கர்ம பிணைப்பிலிருந்து தன்னை விடுவிக்கும் செயல்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள்.

பகவத் கீதை 3.9 கூறுவதன்படி, “விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படும் செயல்கள் (அகர்ம, உன்னதமான செயல்) நிறைவேற்றப்படலாம்,
மற்ற செயல்கள் (கர்ம, விகர்ம ஆகிய இரண்டும்) இந்த பௌதிக உலகத்தோடு பந்தப்படுத்துபவை.
எனவே, குந்தியின் மகனே, உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அவரது திருப்திக்காகச் செய்.
இவ்விதமாக, நீ எப்பொழுதும் பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வாய்.”

மேலும், ஸ்ரீ பிரம்ம சம்ஹிதை (ஸ்லோகம் 54) கூறுகிறது, கர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி-பாஜாம்,
“பகவான் கோவிந்தர், தனது பக்தர்களின் கர்ம வினைகளைச் சுட்டெரித்து அழிக்கிறார். மற்றவர்கள் அனைவரையும்
(அற்ப பூச்சியிலிருந்து இந்திரன் வரை) தங்கள் வினைகளுக்கேற்ற பலனை அனுபவிக்குமாறு செய்கிறார்.”

இறையருள் அல்லது இறையன்பு என்பதுதான் மனித வாழ்வின் உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும்.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

“செல்வங்களுள் சிறந்த செல்வம் அருளாகிய செல்வமே. பொருளாகிய செல்வங்கள் இழிந்தவர்களிடத்திலும் உள்ளன.” (திருக்குறள் 241)

அருளுடைமையின் முக்கியத்துவத்தை வள்ளுவர்,

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

“அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் வாழும் வாழ்க்கை அருள் பொருந்திய நெஞ்சம் உடையோருக்கு இல்லை.” (திருக்குறள் 243)

இங்கே, “துன்பமான இருள் பொருந்திய உலகம்” என்று வள்ளுவர் குறிப்பிடுவதைக் காண்க.
இதிலிருந்து ஒளிபொருந்திய இன்பமான உலகம் மற்றொன்று இருப்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
பகவான் சைதன்ய மஹாபிரபுவின் நோக்கமும் நம்மை ஒளி மிகுந்த இனிய உலகமான கிருஷ்ண உலகிற்கு அல்லது
கோலோக விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்வதுதான்.

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு

“பிறவித் துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு சிறப்பாகக் கருதப்படுகின்ற செம்பொருளாகிய
உண்மைப் பொருளை (இறைவனை) காண்பதே அறிவாகும்.” (திருக்குறள் 358)

வள்ளுவரின் இந்தக் கூற்றினை, பகவத் கீதையின் (4.9) கீழ்க்காணும் கூற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி ஸோ’ர்ஜுன

“எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட
பின் மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகிறான்.”

மேலும், அறிவு என்பது, இயற்கையையும் அதை அறிபவர்களான ஆத்மாவையும் இறைவனையும் அறிவதே என்று
பகவத் கீதையில் (13.3) கிருஷ்ணர் கூறுகின்றார். இதுவே உண்மையான பகுத்தறிவாகும்.

வள்ளுவர், நிலையாமை என்ற அதிகாரத்தில்,

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

“அறிவில்லாதவர்கள் ஒருபோதும் தாங்கள் எதற்காக வாழ்கிறோம் என்பதை ஆராய்வதே இல்லை,
ஆயினும், அவர்களது இதர ஆய்வுகள் கோடிக்கணக்கில் உள்ளன.” (திருக்குறள் 337)

பகவத் கீதையில் (2.41) கிருஷ்ணர் இதே கருத்தைக் கூறுகிறார்:

வ்யவஸாயாத்மிகா புத்திர்ஏகேஹ குரு-நந்தன
பஹு-ஷாகா ஹ்யனந்தாஷ் சபுத்தயோ

“இவ்வழியில் உள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர். இவர்களது இலட்சியம் ஒன்றே.
குரு வம்சத்தின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக் கொண்டது.”

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

“துச்சமான அறியாமையின் மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள் வாழும் உயிருக்கு நிலையாக குடிகொள்வதற்கு
இன்னும் ஒரு வீடு அமையவில்லையோ.” (திருக்குறள் 340) .
பகவத் கீதையில் (15.7) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இதுபோலவே வருத்தப்படுகின்றார்:

மமைவாம்ஷோ ஜீவ-லோகேஜீவ-பூத ஸனாதன:
மன:-ஷஷ்டானீந்த்ரியாணிப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி

“இந்தக் கட்டுண்ட உலகிலிருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால்,
மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.”

திருவாய்மொழியில் (1.2.1) நம்மாழ்வார் கூறுகிறார்:

வீடுமின் முற்றவும் வீடுசெய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடுசெய்ம்மினே

“எல்லாவற்றையும் விட்டு விடுங்கள், விட்டுவிட்டு உங்கள் உயிரை வீடு தரும் தலைவனிடம் அளித்து விடுங்கள்.”

முழுமுதற் கடவுளான ஆதிபகவானுக்கு அன்புத் தொண்டாற்றவில்லை எனில், அவை எல்லாம் வீண் என்பதை
இரண்டாவது குறளில் வள்ளுவர் காட்டுகின்றார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

எல்லாம் அறிந்தவரான முழுமுதற் கடவுளின் நல்ல பாதங்களைத் தொழுதல் ஒன்பது வகையான பக்தித் தொண்டில் ஒன்றாகும்.
தன்னை உணர்வதும் இறைவனை உணர்வதும் அந்த உணர்வில் இறைவனுக்கு அன்புத் தொண்டாற்றுவதும் முக்கிய போதனைகளாகும்.
இதனை வாழ்வின் குறிக்கோளாக ஒவ்வொரு ஜீவாத்மாவும் ஏற்றுக் கொண்டால், கவலை என்பது இல்லை.

வேத வழி வந்த திருக்குறள்

திருக்குறள் முழுவதும் வர்ணாஷ்ரம நெறிகள், குறிப்பிட்ட வர்ணத்தாருக்கான கடமைகள், கர்ம விதிகள், மறுபிறவி, மறுவுலகம்,
ஸ்வர்கம், நரகம், மோக்ஷம், பஞ்ச-மகா யாகங்கள், பித்ரு கர்மங்கள் முதலிய பல்வேறு விஷயங்கள் காணக்கிடக்கின்றன.
இவை நிச்சயம் வேத புராணங்களின் தாக்கமே. ஸ்வர்க வாழ்வைக் காட்டிலும் வீடுபேறு உயர்ந்தது,
அது மாற்றமில்லா வாழ்க்கை, ஆசையை ஒழித்தவரால் அதனை அடைய முடியும் போன்ற கூற்றுகளும் குறள்களில் ஒலிக்கின்றன.

“என்பர்” என்று முடியும் குறள்கள் ஏராளம். அதாவது, வள்ளுவர் தனது பூர்விக மாமனிதர்களை இங்கே சுட்டிக்காட்டி,
தனது நூல் அவர்களுடைய கூற்றுகளிலிருந்து பெறப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

இதை அடிப்படையாக வைத்து, திருவையாறு கல்லூரியின் முன்னாள் தலைமை பேராசிரியரும் சமஸ்கிருதம், தமிழ் என
இரு மொழியிலும் புலமை பெற்றவருமான திரு சுப்ரமணிய சாஸ்திரிகள், “பாலர் உரை” என்ற தலைப்பில்
திருக்குறளின் அறத்துப்பாலிற்கு விளக்கமளித்துள்ளார்.
அங்கே அவர் ஒவ்வொரு குறளிற்கும், அதற்கு சமமான ஸ்லோகத்தினை மஹாபாரதம், உபநிஷதங்கள், மனு ஸ்மிருதி
ஆகியவற்றிலிருந்து எடுத்துரைத்து திருக்குறளிற்கும் அதற்குமுள்ள சிறந்த ஒற்றுமைகளை பறைசாற்றியுள்ளார்.

திரு இராமசந்திர தீட்சிதர் அவர்கள் எல்லா குறளிற்கும் சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்காட்டி விளக்கமளித்துள்ளார்:
முதல் பகுதி (அறத்துப்பால்) ரிக் வேதம், இராமாயணம், மஹாபாரதம், பராசர சம்ஹிதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றிலிருந்தும்,
இரண்டாம் பகுதி (பொருட்பால்) கமந்தக நீதி, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், சுக்ர நீதி, போத்யாயன ஸ்மிருதி ஆகியவற்றிலிருந்தும்,
மூன்றாம் பகுதி (காமத்துப்பால்) காம சூத்திரத்திலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது.

திருவாய்மொழியையும் திருக்குறளையும் ஒப்பிட்டு பல நூல்களும் கட்டுரைகளும்கூட பலரால் வடிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் ஆழ்வார்களின் பாசுரங்களை உபயோகித்துள்ளார் என்பதற்கும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

வெளிப்புறமாக புலன்களைக் கட்டுப்படுத்துவோரை கிருஷ்ணர் கீதையில் (3.6) பின்வருமாறு கண்டிக்கிறார்:

கர்மேந்திரியாணி ஸம்யம்யய ஆஸ்தே மனஸா ஸ்மரன்
இந்த்ரியார்தான் விமூடாத்மாமித்யாசார: ஸ உச்யதே

புலன்களையும் புலனுறுப்புகளையும் கட்டுப்படுத்தி, அதே சமயம் புலனுகர்ச்சிப் பொருட்களில் மனதைச் செலுத்திக்
கொண்டிருப்பவன் போலி மனிதன் என்று அழைக்கப்படுகிறான்.”

கிருஷ்ணரின் இதே கூற்றினை திருவள்ளுவர் தமது வார்த்தைகளில் பின்வருமாறு கூறுகிறார்:

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்

மனதில் ஆசைகளை நீக்காமல், ஆனால் ஆசைகளே இல்லாத துறவிகளைப் போல வஞ்சித்து வாழ்கின்றவர்களைப் போல்
கொடியவர்கள் வேறு யாரும் இல்லை.” (திருக்குறள் 276)

ஒருவன் தன் மனதில் மாசற்றவனாக இருக்க வேண்டும், அதுவே அறம். மனத் தூய்மை இல்லாதவை அனைத்தும்
ஆரவாரத்தன்மை உடையவை என்ற பொருளில் வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற (திருக்குறள் 34)

மனமாசை அகற்றச் சிறந்த வழி தகுந்த பயிற்சியால் கிருஷ்ண உணர்வைப் பெறுவதே.
கிருஷ்ண உணர்வைப் பெற்றவர்களுக்குப் புலனின்பம் துச்சம், இதற்கான நடைமுறை உதாரணம்,
மிகச் சிறந்த சாதுவும் கிருஷ்ண பக்தருமான ஸ்ரீயாமுனாசாரியர். அவர் பின்வருமாறு கூறுகிறார்:

யத்-அவதி மம சேத: க்ருஷ்ண-பாதாரவிந்தே
நவ-நவ-ரஸ-தாமன்யுத்யதம் ரந்தும் ஆஸீத்
தத்-அவதி பத நாரீ-ஸங்கமே ஸ்மர்யமானே
பவதி முக-விகார: ஸுஷ்டு நிஷ்டீவனம் ச

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதக் கமலங்களின் தொண்டில் என் மனம் ஈடுபட்டிருப்பதால், என்றும் புதுமையாகத் திகழும்
தெய்வீக இன்பத்தை நான் அனுபவித்துக் கொண்டுள்ளேன். பெண்களுடனான பாலுறவு வாழ்வினை நான் எப்போதாவது எண்ணினால்,
உடனே என் முகத்தை அதிலிருந்து திருப்பி, அவ்வெண்ணத்தின் மீது காறி உமிழ்கிறேன்!” :

பச்சைமா மலைபோல் மேனிபவளவாய் கமலச் செங்கண்,
அச்சுதா! அமர ரேறே!ஆயர்தம் கொழுந்தே! என்னும்,
இச்சுவை தவிர யான்போய்இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்அரங்கமா நகரு ளானே!

பக்தியின் இத்தகு நிலையினால் பெறப்படுவதே உண்மையான இன்பம் என்பதை வள்ளுவரும் பின்வருமாறு கூறுகிறார்:

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல (திருக்குறள் 39)

அந்த ஆன்மீக உலகைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் (10.14.58) பின்வருமாறு கூறுகின்றது:

ஸமாஷ்ரிதா யே பத-பல்லவ-ப்லவம்
மஹத்-பதம் புண்ய-யஷோ முராரே:
பவாம்புதிர் வத்ஸ-பதம் பரம் பதம்
பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம்

முக்தியை அளிப்பவரும், முகுந்தன் என்னும் பெயர் பெற்றவரும், பிரபஞ்சத் தோற்றத்தின் அடைக்கலமுமான பகவானின்
பாத கமலங்கள் என்னும் படகை ஏற்றுக் கொண்டவனுக்கு பௌதிக உலகம் என்னும் பெருங்கடல், கன்றின் குளம்பில்
தேங்கிய நீரைப் போன்றதாகும். அவனது நோக்கம் பௌதிகத் துன்பங்களற்ற வைகுண்டமே (பரமபதமே) –
ஒவ்வோர் அடியிலும் அபாயம் இருக்கக்கூடிய இந்த உலகமல்ல.

அங்கு எவ்வாறு செல்வது என்பதைப் பற்றி பகவத் கீதையில் (12.7) ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருக்கிறார்.

தேஷாம் அஹம் ஸமுத்தர்தா
ம்ருத்யு-ஸம்ஸார-ஸாகராத்
பவாமி ந சிராத் பார்த
மய்யாவேஷித-சேதஸாம்

மனதை என்னில் நிறுத்தி எவரெல்லாம் என்னை வழிபடுகிறார்களோ, பிருதாவின் மகனே, அவர்களை பிறப்பு, இறப்பு,
என்னும் கடலிலிருந்து உடனடியாக காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்.”

அந்த ஆன்மீக உலகத்தையும் பௌதிக உலகத்தையும் ஒப்பிட்டு கிருஷ்ணர் மேலும் கூறுகிறார் (பகவத் கீதை 8.16):

ஆப்ரஹ்ம புவனால் லோகா:புனர் ஆவர்தினோ
மாம் உபேத்ய து கௌந்தேயபுனர் ஜன்ம ந வித்யதே

ஜடவுலகின் மிகவுயர்ந்த பிரம்ம லோகத்திலிருந்து தாழ்ந்த லோகம் வரை, அனைத்தும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி
நடைபெறும் துன்பம் நிறைந்த இடங்களே, ஆனால் குந்தியின் மகனே, என்னுடைய இடத்தையடைந்தவர் என்றும் மறுபிறவி எடுப்பதில்லை,”

அந்த மறுபிறவியில்லா உலகிற்குச் செல்வதே வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும், இதை மேலும் பற்பல இடங்களில் பகவத் கீதை எடுத்துரைக்கிறது.

இதே கருத்தினை திருவள்ளுவரும் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்”

இறைவனுடைய திருவடிகளைப் அடைந்தவர்கள் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியும், மற்றவர்களால் அதனைக் கடக்க முடியாது.” (திருக்குறள் 10)

பிறனில் விழையாமை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்களுக்கு அறம் மட்டும் அன்று, நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.” (திருக்குறள் 148)

புலால் மறுத்தல்

துறவறவியலில், அருளுடைமையின் பின் இந்த அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது,

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

தன் உடம்பைப் பெருக்குவதற்காக மற்றோர் உயிரின் உடம்பைத் திண்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?” (திருக்குறள் 251)

சூது

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது

சூது, உள்ள பொருளை அழித்து பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.” (திருக்குறள் 938)

கள்ளுண்ணாமை

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்

கள் (மது) அருந்துதல் கூடாது, சான்றோரிடம் நற்பெயர் பெற விரும்பாதவர் வேண்டுமானால் கள்ளை அருந்தலாம்.”(திருக்குறள் 922)

சான்றோர் என்பவர் அன்பு, நாணம், கண்ணோட்டம் (அருள்), ஒப்புரவு (உலக ஒழுக்கம்), வாய்மை ஆகிய ஐந்தையும்
தாங்கியவர் என்று சான்றாண்மை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்.

பேச்சின் தவங்கள்

அனுத்வேக-கரம் வாக்யம்ஸத்யம் ப்ரிய-ஹிதம் ச யத்
ஸ்வாத்யாயாப்யஸனம் சைவவாங்-மயம் தப உச்யதே

உண்மையான பேச்சு, இனிமையான பேச்சு, நன்மையளிக்கும் பேச்சு, பிறரது மனதை துன்புறுத்தாத பேச்சு,
வேத இலக்கியங்களை முறையாக உச்சரித்தல் ஆகியவை பேச்சின் தவங்களாகும்.” (பகவத் கீதை 17.15)

இதே போன்ற கருத்தினை வள்ளுவர் தமது குறளில் பின்வருமாறு விளக்குகிறார்:

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.” (திருக்குறள் 97)

மனதின் தவங்கள்

ஆன்மீக முன்னேற்றத்திற்கு மனதின் பங்கு முக்கியமானது என்பதை வள்ளுவர், சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்.

மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து

மனதின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.” (திருக்குறள் 459)

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் (உடல்) என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள்
எல்லாம் அவருடைய பெருமையை உணர்ந்து தொழும்.” (திருக்குறள் 268)

தவத்தின் முக்கியத்துவம்

தவத்தின் முக்கியத்துவத்தை பகவத் கீதை (2.58) கூறுகிறது, ஆமை தன் உறுப்புக்களைக் கூட்டிற்குள் இழுத்துக்கொள்வதைப் போல,
புலன்களை அவற்றின் நோக்கப் பொருட்களிலிருந்து விலக்கிக்கொள்பவனே உண்மையான அறிவில் நிலைபெற்றவன்.”

இதனை வள்ளுவரும் உணர்த்துகிறார்:

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

ஒரு பிறப்பில் ஆமையைப் போல ஐந்து பொறிகளையும் அடக்கி வாழ்ந்தால், அஃது அவனுக்கு
ஏழு பிறவிக்கும் சிறந்த பாதுகாப்பாக அமையும்.” (திருக்குறள் 126)

இத்தகைய தவங்களின் மகிமைகளை வள்ளுவர் மேலும் உணர்த்துகிறார்:

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவார். அவர் அல்லாத மற்றவர் பொருள் ஆசை வலையில்
அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.” (திருக்குறள் 266)

ஸ்ரீமத் பாகவதம் (12.3.51) கூறுகின்றது.

கலேர் தோஷ நிதே ராஜன்
அஸ்தி ஹ்யேகோ மஹான் குண:
கீர்த்தனாத் ஏவ கிருஷ்ணஸ்ய
முக்த ஸங்க: பரம் வ்ரஜேத்

கிருஷ்ணருடைய நாமத்தையும் புகழையும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கிருஷ்ண உணர்வில் நிலைபெற்று,
யோகத்தில் பூரணத்துவம் அடைவதால், அவர்களுக்கு பிறப்பு இறப்பென்னும் துன்பம் அகன்று விடுகிறது.
ப்ருஹன்-நாரதீய புராணத்தில் கூறப்பட்டுள்ளது, கலி யுகத்தில் மக்கள் குறைந்த ஆயுளை உடையவர்கள்,
ஆன்மீகத்தில் மந்தம் இருக்கும், எப்பொழுதும் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டு துன்புறுபவர்களாக இருப்பார்கள்.
ஆதலின், இவற்றிற்கு நிவாரணம், ஹரியின் திருநாமத்தைச் சொல்வதுதான்.”

ஹரேர் நாம ஹரேர் நாம
ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ
நாஸ்த்யேவ கதிர் அன்யதா

ஹரி நாம ஸங்கீர்த்தனம் செய்ய எளிய மந்திரம்:

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

இறைவனுடைய திருப்புகழைப் பாடுவதுகுறித்து வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

இறைவனுடைய மெய்மை சேர்ந்த புகழைச் சொல்லிக் கொண்டிருப்பவனிடத்து,
அறியாமையாகிய இருளைச் சேர்க்கின்ற இருவகை வினையும் சேராது.” (திருக்குறள் 5)

அதாவது, ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் நாம் ஈடுபட்டால், நல்வினை, தீவினை என்னும் இரு வினைகளிலிருந்தும்
நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த இருவகையான வினைகளே அறியாமை என்னும் ஜட வாழ்வினை நமக்குக் கொடுக்கின்றன.

———

திருவாய்மொழிப் பேருரையான ஈட்டில் திருக்குறளே பேரளவாக இடம்பெறுகிறது.
ஐந்து இடங்களில் முழுக்குறளையும் காட்டுகிறார். 6 இடங்களில் திருக்குறள் தொடர்களை மேற்கோளாக எடுக்கிறார்;
ஓரிடத்தில் குறட்சொல்லை ஏற்கிறார். ஈரிடங்களில் குறளை உரைநடைப்படுத்தியாளுகிறார் என்கிறார்.

நம்பிள்ளை திருவிருத்தத்தில் ‘இறையருள் வாய்க்கப் பெற்றதும் ’பிறப்பற்றுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகை’ என்று
நிலை ஏற்பட்டது என்பதை விளக்குகிறார். இது திருக்குறள் 345 உடன் அப்படியே ஒத்துப் போகிறது.

திருவள்ளுவர் 542ல் இப்படி சொல்லுகிறார்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய
செங்கோலை நோக்கி வாழ்கின்றனர். இதே கருத்தைக் குலசேகர ஆழ்வார் இப்படிச் சொல்லுகிறார்

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என்
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன்
தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே

மீன்கள் நீர்வளம் சூழ்ந்த இடத்தைப் பார்ப்பதுபோலே, திருவித்துவக்கோட்டு பெருமானே என்மீது நீ அருள் செய்தாலும்,
செய்யாவிட்டாலும், உன்னைச் சரணமாகப் பற்றுதலை விட்டு வேறு ஒருவரைச் சரணம் புகமாட்டேன்.
மோசமான அரசனாக இருந்தாலும் அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து வாழ்கிற குடி மக்கள்போல நான் உன்னையே சரணடைந்து இருப்பேன்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய பாசுரங்களுக்கு ‘திருமாலை’ என்று பெயர்.
வடமொழியில் அமைந்த விஷ்ணு தர்மம் என்ற நூலில் சாரம் திருமாலை என்று கூறுவர்.
அதனால் தான் ‘திருமாலையறியாதவன் பெருமாளையறியாதவன்’ என்பார்கள்.
நந்தவனம் அமைத்து கைங்கரியம் செய்த இந்த ஆழ்வார் பூமாலை மட்டும் இல்லை சொல்மாலையையும் அவனுக்குச் சூட்டினார்.

பெரியாழ்வாரின் ‘மாதவத்தோன்’ என்று தொடங்கும் திருமொழியை ’திருவரங்கத் தமிழ்மாலை’ என்பார்கள்.

கோதை தன் திருப்பாவையை ‘சங்கத் தமிழ்மாலை’ என்று கூறுகிறாள்..

திருக்கோனேரி தாஸ்யை என்பவள், திருவாய்மொழிக்கு இயற்றிய நூலுக்கு ‘திருவாய்மொழி வாசகமாலை’ என்று பெயர் சூட்டினாள்.

இதே போல பின்பழகிய பெருமாள் ஜீயர் வார்த்தா மாலை என்று அளித்துள்ளார்.

ஸ்ரீவேதாந்த தேசிகன் ஆழ்வர் பாசுரங்களை ‘செய்யதமிழ் மாலைகள் நாம்தெளியவோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே’ என்கிறார்.

திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக அமைந்த நூலின் பெயர் ‘நுண்பொருள் வாசகமாலை’ பல வைணவ நூல்கள் மாலை என்ற பெயர் கொண்டவையே.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திரு வள்ளுவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்-பூவின் ஏழு நிலைகள்-பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏழு பருவங்கள் —

December 30, 2021

99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்

1. காந்தள் மலர்
2. ஆம்பல் மலர்
3. அனிச்சம் பூ
4. குவளை மலர்
5. குறிஞ்சிப் பூ
6. வெட்சிப் பூ
7. செங்கோடுவேரி மலர்
8. தேமாம் பூ
9. மணிச்சிகை(செம்மணிப்பூ)
10. உந்தூழ்(மூங்கில் பூ)
11. கூவிளம் பூ
12. எறுழம்பூ
13. சுள்ளி(மராமரப்பூ)
14. கூவிரம் பூ
15. வடவனம் பூ
16. வாகைப் பூ
17. குடசம்(வெட்பாலை)
18. எருவை(கோரைப்பூ)
19. செருவிளை(வெண்காக்கணம்)
20. கருவிளம் பூ
21. பயினிப் பூ
22. வானிப் பூ
23. குரவம் பூ
24. பசும்பிடி(பச்சிலைப்பூ)
25. வகுளம்(மகிழம்பூ)
26. காயா மலர்
27. ஆவிரைப் பூ
28. வேரல்(சிறுமூங்கில்பூ)
29. சூரல் மலர்
30. சிறுபூளைப் பூ
31. குறுநறுங்கண்ணி மலர்
32. குருகிலை(முருக்கிலை)
33. மருதம் பூ
34. கோங்கம் பூ
35. போங்கம் பூ
36. திலகம் பூ
37. பாதிரி மலர்
38. செருந்தி மலர்
39. அதிரல் பூ
40. சண்பகம் மலர்
41. கரந்தை மலர்
42. குளவி(காட்டு மல்லி)
43. மாம்பூ
44. தில்லைப்பூ
45. பாலைப்பூ
46. முல்லைப்பூ
47. கஞ்சங்குல்லை
48. பிடவம் பூ
49. செங்கருங்காலி மலர்
50. வாழைப் பூ
51. வள்ளிப் பூ
52. நெய்தல் மலர்
53. தாழைப் பூ
54. தளவம்(செம்முல்லைப் பூ)
55. தாமரை மலர்
56. ஞாழல் மலர்
57. மௌவல் பூ
58. கொகுடிப் பூ
59. சேடல்(பவளமல்லி பூ)
60. செம்மல்(சாதிப் பூ)
61. சிறுகெங்குரலி(கருந்தாமரைக் கொடிப்பூ)
62. கோடல்(வெண்காந்தள் மலர்)
63. கைதை(தாழம் பூ)
64. வழைப் பூ(சுரபுன்னை)
65. காஞ்சிப் பூ
66. கருங்குவளைப் பூ(மணிக்குலை)
67. பாங்கர் பூ
68. மரவம் பூ
69. தணக்கம் பூ
70. ஈங்கைப் பூ
71. இலவம் பூ
72. கொன்றைப் பூ
73. அடுப்பம் பூ
74. ஆத்திப் பூ
75. அவரைப் பூ
76. பகன்றைப் பூ
77. பலாசம் பூ
78. பிண்டி(அசோகம்பூ)
79. வஞ்சிப் பூ
80. பித்திகம்(பிச்சிப் பூ)
81. சிந்துவாரம்(கருநொச்சிப்பூ)
82. தும்பைப் பூ
83. துழாய்ப் பூ
84. தோன்றிப் பூ
85. நந்திப் பூ
86. நறவம்(நறைக் கொடிப்பூ)
87. புன்னாகம் பூ
88. பாரம்(பருத்திப்பூ)
89. பீரம்(பீர்கம்பூ)
90. குருக்கத்திப் பூ
91. ஆரம்(சந்தனப்பூ)
92. காழ்வைப் பூ
93. புன்னைப் பூ
94. நரந்தம்(நாரத்தம்பூ)
95. நாகப்பூ
96. நள்ளிருநாறி(இருள்வாசிப்பூ)
97. குருந்தம் பூ
98. வேங்கைப் பூ
99. புழகுப் பூ

———

அரும்பு ,
நனை ,
முகை ,
மொக்குள் ,
முகிழ் ,
மொட்டு. ,
போது, மலர் ,
வீ. ,
பொதும்பர் ,
பொம்மல் ,
செம்மல் .
என மலர் தன் மாற்றங்களுக்கு ஏற்ப கொடுத்து வைத்திருக்கும் பெயர்கள் தான் எத்தனை !எத்தனை!

இந்த அரும்பிலும் மூன்று உட்பிரிவுகள் உண்டாம்.
நனை ,
முகை ,
மொக்குள்
என்பன அரும்பின் மூன்று நிலைகளாம்.

அவற்றை எப்படி கண்டறிவது என்ற கேள்வி எழலாம்.

நனை என்பது
உள்ளும் புறமும் ஒருவித ஈர நைப்புள்ள தேன்
நனைப்புடன் காணப்படம் நிலை நனை எனப்படும்.

முகை என்பது முகிழ்த்தல்
அதாவது
சற்று புடைத்தல்.

மொக்குள் என்பது
மணம் பெறும் நிலை.

அரும்புக்கு
துளிர்த்தல்,
முளைத்தல்,
தோன்றுதல் என்ற மூன்று பொருள் உண்டு.
.
இப்போது பூவின் ஏழு நிலைகள் மற்றும் அவற்றின் பெயர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பூவின் ஏழு நிலைகள்
1-பூக்கும் பருவத்தின் முதல் நிலை _அரும்பு
2-மொக்குவிடும் நிலை -மொட்டு
3-முகிழ்க்கும் நிலை- முகை
4-பூவாகும் நிலை – மலர்
5-மலர்ந்த இதழ் விரிந்த நிலை –அலர்
6–வாடும் நிலை 00 வீ
7–வதங்கிக் கிடக்கும் நிலை –செம்மல்

இவை பூவின் ஏழு நிலைகளுக்குமான ஏழு பெயர்களாகும்.

அரும்பு _ அரும்பும் நிலை
நனை _ அரும்பு வெளியில் தலை காட்டும் நிலை
முகை _ தலைகாட்டிய நனை முத்தாக மாறும் நில
மொக்குள் _ பூவுக்குள் பருவமாற்றமான நாற்றம் அதாவது மணம் பெறும் நிலை.

மொக்குள் பருவத்தில் தான் பூவில் மணத்தைக் கொடுக்கும் மாற்றங்கள் நடைபெறும்.

முகிழ் -மணம் கொண்டு முகிழ்தல்
அதாவது விரிந்தும் விரியாமலும் இருக்கும் நிலை முகிழ்.

போது -மொட்டு மலரும் போது ஏற்படும் புடைப்பு நிலை

மலர் –மலரும் பூ அதாவது மலர்ந்த நிலை

பூ –முழு இதழ்களும் விரிந்த நிலையில் பூத்திருக்கும் மலர்

வீ– உதிரும் நிலையில் இருக்கும் பூ

பொதும்பர் –பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கும் நிலை

பொம்மல் –உதிர்ந்து கிடக்கும் பூ

செம்மல் –உதிர்ந்த பழம் பூ–செந்நிற மாற்றம் பெற்று அழுகும் நிலைதான் செம்மல்.

அரும்பு ,நனை ,முகை, மொக்குள், முகில், மொட்டு, போது, மலர் , பூ , வீ ,
பொதும்பர் , பொம்மல் ,செம்மல் என்று பதின்மூன்று பெயர்கள் .

அரும்பு , போது , மலர் என்ற பூவின் மூன்று நிலைகளையும் ஒரே பாடலில் கூறி
அவற்றின் சிறுசிறு வேறுபாடுகளைக் காதலோடு கவினாக பிணைத்து
அறிய வைத்துள்ள பாங்கு திருவள்ளுவரைத் தவிர வேறு யாரால் கூடும்?
திருவள்ளுவர் இயற்கை ஆர்வலராக
இருப்பாரோ?

” முகைமொக்குள் உள்ள நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு “–திருக்குறள் _1274
பூ பருவ மாற்றம் அடைந்து சற்று புடைத்துக் கொண்டு வரும் போது அதற்குள்
மணம் உருவாதல் போல காதலியின் புன்முறுவல் தோற்றத்தில் காதல் மிகும் என்ற ஒரு குறிப்பு உண்டு என்கிறார் வள்ளுவர்.
இங்கே காதலியின் புன்முறுவலுக்கு முகை மொக்குள் பருவத்தை உவமையாகக் கூறியுள்ளது நோக்கத் தக்கது.

முகை, மொக்குள் என்ற பூவின் பருவநிலைகள் மணத்திற்கானது
என்பதை இந்தக் குறள் மூலம் திருவள்ளுவரும் உறுதி செய்துள்ளார்.

இதனை ஒட்டியே ஏழு பருவங்களாக அமைத்தனர் எனக் கொள்ளலாம்.

பெண்களுக்கு
பேதை
பெதும்பை,
மங்கை,
மடந்தை ,
அரிவை ,
தெரிவை ,
பேரிளம் பெண் என்ற ஏழு பருவப் பெயர்கள் உள்ளன.

ஆண்களுக்கு அதற்கு இணையாக
பாலன் ,
மீளி.,
மறலோன் ,
திறலோன்,
காளை ,
விடலை ,
முதுமகன் என்று வயதின் அடிப்படையில்
ஏழு பருவப்பெயர்கள் கொடுக்கப் பட்டுள்ளன.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ சிவவாக்கியர் பாடல்கள்–

December 30, 2021

ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரே ஸ்ரீ சிவவாக்கியர் என்று ஒரு சிலரும்

அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோச தோச பாவமாயை தூர தூர ஓடவே

கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கள் நூற் கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே (1)

அக்ஷர நிலை

ஆன அஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றவே (2)

சரியை விலக்கல்

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (3)

யோக நிலை

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே (4)

தேக நிலை

வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் ந்ததினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே
நடுவன் வந்து அழைத்தபோது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே (5)

ஞானநிலை

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே (6)

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்கு மாற தெங்கனே (7)

மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய் (8)

அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்து நின்ற தூர தூர தூரமே (9)

அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே (10)

கதாவுபஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் இராம ராம ராம என்னும் நாமமே (11)

நானதேது நாயதேது நடுவில் நின்றது ஏதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராம என்ற நாமமே (12)

யோக நிலை
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ
மாத்திரைப்போ தும்முளே மறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்தி முத்தி சித்தியே (13)

நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (14)

வித்தில்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை
தச்சில்லாத மாளிகை சமைந்தவாற தெங்கனே
பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்தில்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே (15)

அஞ்சும் மூன்றும் எட்டாதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்து கொண்டு நூறுருச் செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே (16)

அண்டவாசல் ஆயிரம் ப்ரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடியான வாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழை வாசல் ஏகபோகமான வாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே (17)

சாமநாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதிலும் சிவனை நீர் அறிகிலீர்
காம நோயை விட்டு நீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே (18)

சங்கிரண்டு தாரை ஒன்று சன்ன பின்னல் ஆகையால்
மங்கி மாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டையும் தவிர்த்து தாரை ஊதவல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமோ (19)

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே (20)

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே
பிஞ்சு பிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானது ஒன்றுமே (21)

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேண்டும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்தபோது காயகன்று நிற்பிரே
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே (22)

ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம் உள்ள போதலோ உறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடம்உடைந்தபோதில் ஒப்பிலாத வெளியிலே
ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லை ஆனதே (23)

கிரியை நிலை
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர் கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே (24)

உற்பத்தி நிலை
அண்ணலே அனாதியே அநாதிமுன் அநாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலா நீர்ச் சுக்கிலம் கருதிஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்கனே (25)

அறிவு நிலை
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்து விட்ட மந்ததிரங்கள் எத்தனை
மிண்டனாய்த் திரிந்தபோது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை

அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகள்
ஆண்டறிந்த பான்மைதன்னை யார் அறியவல்லரே
விண்டவேத பொருளை அன்றி வேறு கூற வகாயிலா
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்பது இல்லையே (26)

தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப்பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே (27)

தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தும்முளே
விங்களங்கள் பேசுவீர் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே (28)

யோக நிலை
நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம் ந்ததம் நீரிலே
விருப்பமோடு நீர் குளிக்கும் வேதவாக்யம் கேளுமின்
நெருப்பும் நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே (29)

பாட்டிலாத பரமனைப் பரமலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே (30)
40 வரை

செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே (31)

மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே (32)

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே (33)

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் எனகிறீர்
உம்பதம் நிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே (34)

பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதை காள்
பூசையுன்ன தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே (35)

இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்கநீறு பூசிலும் பிதற்றலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்த உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடலாகுமே (36)

கலத்தின் வார்த்து வைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த நீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கிலே மனத்துளே கரந்ததோ (37)

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38)

வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயில் எச்சில் போக என்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே (39)

ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
போதங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே (40)

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே
பிஞ்சு பிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானது ஒன்றுமே (21)

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேண்டும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்தபோது காயகன்று நிற்பிரே
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே (22)

ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம் உள்ள போதலோ உறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடம்உடைந்தபோதில் ஒப்பிலாத வெளியிலே
ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லை ஆனதே (23)

கிரியை நிலை
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர் கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே (24)

உற்பத்தி நிலை
அண்ணலே அனாதியே அநாதிமுன் அநாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலா நீர்ச் சுக்கிலம் கருதிஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்கனே (25)

அறிவு நிலை
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்து விட்ட மந்ததிரங்கள் எத்தனை
மிண்டனாய்த் திரிந்தபோது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை

அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகள்
ஆண்டறிந்த பான்மைதன்னை யார் அறியவல்லரே
விண்டவேத பொருளை அன்றி வேறு கூற வகாயிலா
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்பது இல்லையே (26)

தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப்பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே (27)

தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தும்முளே
விங்களங்கள் பேசுவீர் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே (28)

யோக நிலை
நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம் ந்ததம் நீரிலே
விருப்பமோடு நீர் குளிக்கும் வேதவாக்யம் கேளுமின்
நெருப்பும் நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே (29)

பாட்டிலாத பரமனைப் பரமலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே (30)
40 வரை

செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே (31)

மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே (32)

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே (33)

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் எனகிறீர்
உம்பதம் நிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே (34)

பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதை காள்
பூசையுன்ன தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே (35)

இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்கநீறு பூசிலும் பிதற்றலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்த உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடலாகுமே (36)

கலத்தின் வார்த்து வைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த நீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கிலே மனத்துளே கரந்ததோ (37)

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38)

வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயில் எச்சில் போக என்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே (39)

ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
போதங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே (40)

பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்கனே
பிறந்து மண்ணிறந்து போய் இருக்குமாறு தெங்கனே
குறித்து நீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால் (41)

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம்பொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (42)

சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே
சத்திஏது சம்புஏது சாதிபேதம் அற்றெது
முத்தி ஏது மூலம் ஏது மூலமந்திரங்கள் ஏது
வித்தில்லாத வித்திலே இன்னதென்று இயம்புமே (43)

ஒடுக்க நிலை
சித்தமற்று சிந்தையற்று சீவன்றறு நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந் திரங்களும்
வித்தை இத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே (44)

கிரியை விலக்கிச் சாதி ஒன்றெனல்
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே (45)

அறிவு நிலை
கறந்தபால் முலைபுகா கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே (46)

அறையினில் கிடந்தபோது அன்று தூமை எனகிறீர்
துறை அறிந்து நீர்குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர்பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்கனே (47)

தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கிவந்து அநேக வேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டிருண்டு சொற்குருக்கள் ஆனதே (48)

சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆவதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே (49)

கைவடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்
பொய் இறந்த சிந்தையைப் பொருந்தி நோக்க வல்லிரேல்
மெய்கடந்தது உம்முளே விரைந்து கூடல் ஆகுமே (50)

ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல்
மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ
கோடு காட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே (51)

இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கை சூல மான்மழு
எடுத்தபாத நீள்முடி எண் திசைக்கும் அப்புறம்
உடல்கலந்து நின்ற மயம் யாவர் காண வல்லரோ (52)

நாழிஉப்பு நாழி உப்பு நாழியான வாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடம்
எருதில் ஏறும் ஈசனும்இயங்கு சக்ரதரனையும்
வேறு வேறு பேசுவார் வீழ்வர் வீண்நரகிலே (53)

தில்லைநாயகன் அவன் திருவரங்கனும் அவன்
எல்லையான புவனமும் ஏக முத்தியும் அவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே (54)

எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
சத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்து வேத கோயிலும் திறந்த பின்
அத்தன் ஆடல் கண்டபின் அடங்கல் ஆடல் காணுமே (55)

உற்ற நூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்திலீர்
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருந்திடில்
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே (56)

போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடா நீ இராமராம ராமவென்னும் நாமமே (57)

அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ
உகாரம் என்ற அக்கரத்தில் உவ்வுவந்து உதித்ததோ
அகாரமும் உகாரமும் சிகாரமன்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே (58)

அறத்திறங்க ளுக்கும்நீ அகண்டம் எண் திசைக்கும் நீ
திறத்திறங் களுக்குநீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே (59)

அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூல மானோன் நீ
கண்டம்நீ கருத்தும் நீ காவியங்கள் ஆனோன் நீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்டகோல மான நேர்மை கூர்மை என்ன கூர்மையே (60)

மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐஇறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்று இருப்பீர்காள்
மெய்அறிந்த சிந்தையாய் விளங்குஞானம் எய்தினால்
உய்யறிந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே (61)

கரு இருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குரு இருந்து சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல்
உரு இலங்கு மேனியாகி உம்பராகி நின்ற நீர்
திரு இலங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே (62)

தீர்த்தம் ஆட வேண்டுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தம் ஆடல் எவ்விடம்தெளிந்து நீர் இயம்பிலீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்தபின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே (63)

கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழுந்து போன பாவம் என்ன பாவமே
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பதோர்
எழுத்திலோ எழுத்திலே இருக்கலாம் இருத்துமே (64)

கண்டு நின்ற மாயையும் கலந்து நின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டை ஆறும் ஒன்றுமாய்ப் பயந்த வேத சுத்தராய்
அண்டைமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் ஆவிரே (65)

ஈன் றவாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவீர் காள்
கான் றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான் றவாசலைத் திறந்து நாடி நோக்க வல்லிரேல்
தோன் றுமாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே (66)

உழலும் வாசலுக்கு இரங்கி ஊசலாடும் ஊமைகாள்
உழலும் வாசலைத் துறந்து உண்மைசேர எண்ணிலீர்
உழலும் வாசலைத் துறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
உழலும் வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே (67)

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலு நாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் ஆனை அம்மை ஆணை உண்மையே (68)

இருக்கவேண்டும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ
மரிக்க வேண்டும் என்றலோ மண்ணுளே படைத்தனர்
சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம் கெடீர் (69)

அம்பத்தொன்றில் அக்கரம் அடக்கம் ஓர் எழுத்துளோ
விண்பரந்த மந்திரம் வேதம் நான்கும் ஒன்றலோ
விண்பரந்த மூல அஞ்செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே (70)

சிவாயம் என்ற அக்ஷரம் சிவன் இருக்கும் அக்ஷரம்
உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அக்ஷரம்
கபாடம் உற்ற வாசலைக் கடந்து போன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாய அஞ் செழுத்துமே (71)

உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே (72)

ஆத்துமா அனாதியோ ஆத்துமா அனாதியோ
மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ
தர்க்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ
வீக்கவந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே (73)

அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர்
உறியிலே தயிர் இருக்க ஊர்புகுந்து வெண்ணெய் தேடும்
அறிவிலா மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே (74)

அன்பு நிலை
இருவர் அரங்க மும்பொருந்தி என் புருகி நோக்கிலீர்
உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர்
கரு அரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்து பின்
திருஅரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லிரே (75)

தன்னைத் தான் அறியவேண்டும் எனல்
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே (76)

சமயவாதிகள் செய்கையை மறுத்தல்
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும்
கண்ணிலே மணி இருக்கக் கண்மறந்த வாறுபோல்
எண்ணில் கோடி தேவரும் இதின் கணார் இழப்பதே (77)

மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும் என்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும் என்றஃ போடுவார்
எண் கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசனே (78)

மிக்க செல்வம் நீர்படைத்த விறகு மேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள் பெண்டீர் சுற்றம் என்று மாயை காணும் இவையெலாம்
மறலிவந்து அழைத்தபோது வந்து கூடலாகுமோ

ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே
ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே
அக்கணிந்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே (79)

மாடுகன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே
மாடமாளிகைப் புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாகவே மோதவே
உடல் கிடந்து உயிர்கழன்ற உண்மை கண்டும் உணர்கிலீர்

பாடுகின்ற உம்பருக்கு ஆடுபாதம் உன்னியே
பழுதிலாத கர்மகூட்டம் இட்ட எங்கள் பரமனே
நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே
நீலகண்ட காளகண்ட நித்திய கல்வியாணனே (80)

கானமற்ற காட்டகத்தில் வேந்தெழுந்த நீறுபோல்
ஞானம் உற்ற நெஞ்சகத்தில் வல்லதே தும் இல்லையே
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால்
தேன் அகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே (81)

பருகி ஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அதாகுமே
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன்னுளே
கருதுவீர் உமக்கு நல்ல காரணம் அதாகுமே (82)

சோதிபாதி ஆகி நின்று சுத்தமும் பலித்துவந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா
வீதியாக ஓடிவந்து விண்ணடியில் ஊடுபோய்
ஆதிநாதன் நாதன் என்று அனந்தகாலம் உள்ளதே (83)

இறைவனால் எடுத்த மாடத் தில்லையம்பலத்திலே
அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமைந்ததே
கருவுநாதம் உண்டுபோய் கழன்ற வாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர்கோடி உள்ளுளே அமர்ந்ததே (84)

நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை
அன்பினால் இருந்துநீர் அருகிருத்த வல்லிரேல்
அன்பர்கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே
தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே (85)

தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவை
எல்லையைக் கடந்து நின்ற ஏகபோக மாய்கையே
எல்லையைக் கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே (86)

உயம்புஉயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்தபோது உருவம் ஏது செப்புவீர்
உடம்புஉயிர் எடுத்தபோது உயிர் இறப்பது இல்லையே
உடம்புமெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே (87)

அவ்வெனும் எழுந்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுந்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (88)

மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மரத்தில் ஊறல் அன்றுகாண்
மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மானம் ஏதும் இல்லையே (89)

என்ன என்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பன்னுகின்ற செந்தமிழ்ப் பதம் கடந்த பண்பென
மின்னகத்தில் மின் ஒடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே (90)

ஆலவித்தில் ஆல் ஒடுங்கி ஆலமான வாறுபோல்
வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர்
ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே
பாரும் இத்தை உம்மிளே பரப்பிரமம் ஆவிரே (91)

அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை
சவ்வுதித்த மந்திரத்தைத் தற்பரத்து இருத்தினால்
அவ்வும் உவ்வும்மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (92)

நவ்விரண்டு காலதாய் நவின்ற மவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்துநின்ற நேர்மையில்
செவ்வை ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே (93)

இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்குபோல் கிடந்த தீ
முரண்டெழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே (94)

கடலிலே திரியும் ஆமை கரையிலே ஏறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
மடலுளே இருக்கும் எங்கள் மணியரங்க சோதியை
உடலுளே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே (95)

மூன்று மண்டலத்தினும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்ற தாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றும் ஓர் எழுத்துளே சொல்ல எங்கும் இல்லையே (96)

மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்றும் அஞ்செழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றும் மண்டலத்திலே சொல்ல எங்கும் இல்லையே (97)

சோருகின்ற பூதம்போல் சுணங்கு போல் கிடந்தநீர்
நாறுகின்ற கும்பியில் நயந்தெழுந்த மூடரே
சீறுகின்ற ஐவரைச் சிணுக்கறுக்க வல்லிரேல்
ஆறுகோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவிரே (98)

வட்ட மென்று உம்முளே மயக்கி விட்ட திவ்வெளி
அட்டரக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும்
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே
எட்டலாம் உதித்தது எம்பிரானை நாம் அறிந்தபின் (99)

பேசுவானும் ஈசனே பிரம ஞானம் உம்முளே
ஆசையான ஐவரும் அலைத்தலைகள் செய்கிறார்
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே
பேசிடாது இருப்பிரேல் நாதன் வந்து பேசுமே (100)

நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராஞமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்கு உரை செய் நாதனே (101)

பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா
கரம் எடுத்து நித்தலும் குவித்திடக் கடவதும்
சிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமச்சிவாயவே (102)

பச்சை மண் பதிப்பிலே புழுப்பதிந்த வேட்டுவன்
நிச்சலும் நினைந்திட நினைந்தவண்ணம் ஆயிடும்
பச்சைமண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும்
பித்தர்காள் அறிந்து கொள்பிரான் இயற்று கோலமே (103)

ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநா தனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமவிந்த நாமமே (104)

விழியினோடு புனல் விளைந்த வில்லவல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே
வெளிபரந்த தேசமும் வெளிக்குள் மூல வித்தையும்
தெளியும் வல்ல ஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே (105)

ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே (106)

அல்லல் வாசல் ஒன்பதும் அடைத்தடைந்த வாசலும்
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மி நின்றது
நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப் பிறப்பது இல்லையே (107)

ஆதியானது ஒன்றுமே அநேக அநேக ரூபமாய்
சாதிபேதமாய் எழுந்து சர்வ ஜீவன் ஆனது
ஆதுயோடு இருந்து மீண்டு எழுந்து ஜென்மம் ஆனபின்
சோதியான ஞானியாகிச் சுத்தமாய் இருப்பனே (108)

மலர்ந்ததாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும்
பலன்கள் ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இலங்கலங்கி நின்ற மாயம் நின்ன மாயம் ஈசனே (109)

பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண்சுடர்
அரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவன் சிவன் தெரிந்த ஞானியே (110)

தல யாத்திரை நீக்கல்
மண்கிடார மேசுமந்து மலையுள் ஏறி மறுகுறீர்
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்
தம்பிரானை நாள் தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே (111)

ஞான நிலை
நாவினூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும்
மேவுதேர் அழிந்ததும் விகாரமும் குறைந்ததும்
பாவிகாள் இதென்ன மாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்குநாளில் ஐவரும் அடங்குவார் (112)

இல்லை இல்லை என்று நீர் இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்றஃ நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ
இல்லை அல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே (113)

காரகார காரகார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்கள் ஏழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே (114)

நீடுபாரிபல பிறந்து நேயமான காயந்தான்
வீடுவேறு இதுஎன்றபோது வேண்டி இன்பம் வேண்டுமே
பாடி நாலுவேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடுராம ராமராம ராம என்னும் நாமமே (115)

உயிரு நன்மையால் உடல்எடுத்துவந்து இருந்திடும்
உயிர் உடம்பு ஒழிந்தபோது ரூபரூபமாயிடும்
உயிர் சிவத்தின் மாயை ஆகி ஒன்றைஒன்று கொன்றிடும்
உயிரும் சத்திமாயை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே (116)

நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தமல்லி யோனியும்
நெட்டெழுத்திர் வட்ட மொன்று நின்றதொன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தின் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே (117)

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்து நின்ற தென்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே (118)

விண் கடந்து நின்ற சோதி மேலை வாசலைத் திறந்து
கண் களிக்க உள்ளுளே கலந்து பிக்கிருந்தபின்
மண் பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே (119)

மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாளுநாளு முன்னிலோரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மைஆணை உண்மையே (120)

மின்எழுந்து மின்பந்து மின் ஒடுங்கும் வாறு போல்
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுளே அடங்குமே
கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால்
என்னுள் நின்ற வென்னியானி நான் அறிந்தது இல்லையே (121)

இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரிக்குமால் பிரமனும் அண்டம் ஏழு அகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிலாத கண்ணிலே
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே (122)

ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே
ஆகிலும் அழிகிலும் அதன் கண்நேயம் ஆனபின்
சாகிலும் பிறக்கிலும் இவை இல்லை இல்லையே (123)

வேதம் நாலும் பூதமாய் விரவும் அங்கி நீரதாய்
பாதமே இலிங்கமாய்ப் பரிந்து பூசைபண்ணினால்
காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்
ஆதி அந்தமும் கடந்து அரிய வீடு அடைவரே (124)

ஞான நிலை
பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்நதரே
துருத்தி நூல் முறுக்கிவிட்டுத் துன்பம் நீங்க வல்லிரேல்
கருத்தில் நூல் கலைபடும் காலநூல் கழிந்திடும்
திருத்தி நூல் கவலறும் சிவாய அஞ்சு எழுத்துமே (125)

சாவதான தத்துவச் சசடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே (126)
காலைமாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கண் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி ஆகுமே (127)

மதவாதம் மறுத்தல்
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய்புழுத்து மாள்வரே (128)

அறிவு நிலை
அறையறை இடைக்கிட அன்று தூமை என்கிறீர்
முறை அறிந்து பிறந்தபோதும் அன்றஃ தூமை என்கிறீர்
துரை அறிந்து நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர்
பொறை இலாத நீசரோடும் பொருந்து மாறது எங்ஙனே (129)

சுத்தம் வந்த வெளியிலே சிலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே
சுத்தம் ஏது கட்டதேது தூய்மைகண்டு நின்றது ஏது
பித்தர்காயம் உற்றதேது பேதம் ஏதுபோதமே (130)

மாதாமாதம் தூமைதான் மறந்து போன தூமைதான்
மாதம் அற்று நின்றலோ வளர்ந்துருபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா (131)

தூமை அற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது
ஆண்மை அற்று நின்றலோ வழக்கமற்று நின்றது
தாண்மை அற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற
தூமைதூமை அற்றகாலம் சொல்லும் அற்று நின்றதே (132)

ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை
வேறு பேசி மூடரே விளைந்தவாறது ஏதடா
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன
சீறுகின்ற மூடனே அத்தூமை நின்ற கோலமே (133)

தூமைகண்டு நின்ற பெண்ணின் தூமைதானும் ஊறியே
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே
தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசமே (134)

வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர்
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின்
வேணும் என்ற அப்பொருள் விரைந்து காணல் ஆகுமே (135)

சிட்டர் ஓது வேதமும் சிறந்து ஆக மங்களும்
நட்ட காரணங்களும் நவின்ற மெய்மை நூல்களும்
கட்டி வைத்த போதகம் கதைக்கு கந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின் (136)

நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள் இருந்தும் ஓதினால் அதன்பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமே (137)

காலைமாலை தம்மிலே கலந்து நின்ற காலனார்
மாலைகாலையாச் சிவந்தமாயம் ஏது செப்பிடீர்
காலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால்
காலைமாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே (138)

எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து
இட்ட மண்டலத்துளே எண்ணி ஆறு மண்டலம்
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்றுமண்டலம்
நட்ட மண்டபத்துளே நாதன் ஆடி நின்றதே (139)

நாலிரண்டு மண்டலத்துள் நாத நின்றது எவ்விடம்
காலிரண்டு மூலநாடி கண்ட தங்கு உருத்திரன்
சேரிரண்டு கண்கலந்து திசைகள் எட்டு மூடியே
மேலிரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே (140)

அம்மை அப்பன் அப்புநீர் அறிந்ததே அறிகிலீர்
அம்மை அப்பன் அப்புநீர் அரிஅயன் அரனுமாய்
அம்மை அப்பன் அப்புநீர் ஆதியாகி ஆனபின்
அம்மை அப்பன் அன்னை அன்றி யாரும் இல்லை ஆனதே (141)

உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே
கருத்தரிப்ப தற்குமுன் காரணங்கள் எங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறது எங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே (142)

ஆதி உண்டு அந்தம் அல்லை அன்றிநாலு வேதம் இல்லை
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல்லிறந்தது ஏதும் இல்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதி அன்று தன்னையும் யார் அறிவது அண்ணலே (143)

புலால் புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுறீர்
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே
புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே (144)

உதிரமான பால்குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்தது ஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாமிசப்புலால் அதென்று
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே (145)

உண்டகல்லை எச்சில் என்று உள்ளெறிந்து போடுறீர்
கண்ட எச்சில் கையலோ பரமனுக்கும் ஏறுமோ
கண்ட எச்சில் கேளடா கலந்தபாணி அப்பிலே
கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே (146)

ஓதிவைத்த நூல்களும் உணர்ந்துகற்ற கல்வியும்
மாதுமக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ எங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்தமாயம் சொல்லடா சுவாமியே (147)

ஈனெருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல்
மூணு நாலு சீலையில் முடிந்த விழ்க்கும் மூடர்காள்
மூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே (148)

சாவல்நாலு குஞ்சது அஞ்சு தாயதீன வாறுபோல்
காயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழநரி கூட்டிலே புகுந்தபின்
சாவல் நாலு குஞ்சது அஞ்சும் தான் இறந்து போனவே (149)

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மைபாதம் உண்மையே (150)

செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே
சீவனுக்கு அழிவுவந்த சேதி ஏது செப்பிடீர்
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட
செம்பினில் களிம்புவிட்ட சேதி ஏது காணுமே(151)

நாடி நாடி தம்முளே நயந்து காண வல்லிரேல்
ஓடி ஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும்
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமும் உகந்து இருந்தவாறது எங்ஙனே (152)

பிணங்குகின்றது ஏதடா பிரஞ்ஞை கெட்ட மூடரே
பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்
பிணங்கும் ஓர் இருவினைப் பிணக்கு அறுக்க வல்லிரேல்
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்க லாகுமே (153)

மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மீன் இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மான் உரித்த தோல்லோ மார்பில் நூல் அணிவதும் (154)

ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது (155)

அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பதும்
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டதும்
மைக்கிடில் பிறந்து இறந்து மாண்டுமாண்டு போவதும்
ஒக்கிடில் உமக்குநான் உணர்த்துவித்தது உண்மையே (156)

ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே (157)

நவ்வுமவ்வையும் கடந்து நாடொணாத சியின் மேல்
வவ்வுயவ்வுளும் சிறந்த வண்மை ஞான போதகம்
ஒவ்வுசுத்தி யுள் நிறைந்து உச்சியூடுருவியே
இவ்வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே (158)

அக்கரம் அனாதியோ ஆத்துமம் அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ (159)

பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ பழிந்திடும்
கூத்ததாய் இருப்பிரேல் குறிப்பில் அச் சிவம் அதாம்
பார்த்த பார்த்த போதெலாம் பார்வையும் இகந்துநீர்
பூத்த பூத்த காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே (160)

நெற்றி பற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்தி ஒத்தி நின்று நின்று பற்றறுத்தது என்பலன்
உற்றிருந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே (161)

நீரை அள்ளி நீரில்விட்டு நீ நினைந்த காரியம்
ஆரை உன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் (162)

நெற்றியில் தியங்குகின்ற நீலமா விளக்கினை
உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர்
அத்தலத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே (163)

கருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர் (164)

கருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது தேயுவில்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்
அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர் (165)

தாதரான தூதரும் தலத்தில் உள்ள சைவரும்
கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த கார்ரியம்
வீதிபோகும் ஞானியை விரைந்து கல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே (166)

ஓடிஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும்
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும்
இழை அறுந்து போனதும் என்ன மாயம் ஈசனே (167)

சதுரம் நாலு மறையும் எட்டு தானதங்கி மூன்றுமே
எதிரதான வாயு ஆறு எண்ணும் வட்ட மேவியே
உதிரந்தான் வரைகள் எட்டும் எண்ணும் என்சிரசின்மேல்
கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே (168)

நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின்
மேலுபத்து மாறுடனூ மேதிரண்ட தொன்றுமே
கோல்அஞ் செழுத்துடே குருவி வந்து கூறிடில்
தோலுமேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே (169)

கோசமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும்
தேசமாய் பிறந்ததும் சிவாயம் அஞ்செழுத்துமே
ஈசனார் இருந்திடம் அனேகனேக மந்திரம்
ஆசனம் நிறைந்து நின்ற ஐம்பத்தோர் எழுத்துமே (170)

அங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும்
பொங்குதா மரையிதும் பொருந்துவார் அகத்தினும்
பங்குகொண்ட சோதியும் பரந்த அஞ்சு எழுத்துமே
சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே (171)

உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்
உவலையாகி அண்டத்தில் உருவி நின்றது எவ்விடம்
தவமதான பரமனார் தரித்து நின்றது எவ்விடம்
தற்பரத்தில் சலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம்

சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம்
சொல்லுகீழு லோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம்
அவளதான மேருவும் அம்மைதானது எவ்விடம்
அவனும் அவளும் ஆடலாம் அருஞ்சீவன் பிறந்ததே (172)

உதிக்கின்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம்
கதிக்குகின்றது எவ்விடம் கன்றுறக்கம் எவ்விடம்
மதிக்க நின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம்
விதிக்கவல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே (173)

திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு
மருங்கிலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு
துரும்பிலாத கோலம் எட்டு சுற்றிவந்த மருளரே
அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே (174)

தானிருந்து மூல அங்கி தணல் எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே
வானிருந்து மதியமூன்று மண்டலம் புகுந்தபின்
ஊனிருந் தளவு கொண்ட யோகி நல்ல யோகியே (175)

முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்டத்து ச்சிமேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார்
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள்
அத்தன் ஆடல் உற்றபோது அடங்கல் ஆடல் உற்றவே (176)

ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றும் இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே (177)

நட்டதாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதமும்
கட்டுவைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே (178)

வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி
சட்டமீ படைத்திலே சங்குசக்கரங்களாய்
விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்தபின்
முட்டையில் எழுந்தசீவன் விட்டவாறது எங்ஙனே (179)

கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே (180)

நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லுநாகம் மூன்றதாக் குலாவு செம்பொன் இரண்டதாய்
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல்
எல்லைஒத்த சோதியானை எட்டுமாற்ற தாகுமே (181)

மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கறுத்த மவுன ஞான யோகிகாள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே (182)

உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே (183)

ஈரெழுத்து உலகெலாம் உதித்தஅட் சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே (184)

ஆதி அந்த மூலவிந்து நாதம் ஐந்து பூதமாம்
ஆதி அந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்
ஆதி அந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்
ஆதி அந்த மூலவிந்து நாதமே சிவாயமே (185)

அன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே
சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம் இட்ட பேரெலாம் வீழ்வர்வெந் நரகிலே
கன்னம் இட்ட பேரெலாம் கடந்துநின்ற திண்ணமே (186)

ஓதொணமல் நின்றநீர் உறக்கம் ஊணும் அற்றநீர்
சாதிபேதம் அற்றநீர் சங்கையின்றி நின்ற நீர்
கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீர்
ஏதும் இன்றி நின்றநீர் இயங்குமாறது எங்ஙனே (187)

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்குநாள் சடங்கெலாம்
மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ
நிலம்பிளந்து வான் இடிந்து நின்றது என்ன வல்லிரே (188)

துருத்தியுண்டு கொல்லன் உண்டு சொர்னமான சோதி யுண்டு
திருத்தமாய் மனத்தில் உன்னித் திகழ ஊத வல்லிரேல்
பெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே (189)

வேடமிட்டு மணிதுலக்கி மிக்க தூபதீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்
தேடிவைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசை என்ன பூசையே (190)

முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிகொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல்
முட்டும் அற்று சுட்டும் அற்று முடியில் நின்ற நாதனை
எட்டுதிக்கும் கையினால் இருந்தவீட தாகுமே (191)

அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே
இருக்கவல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே (192)

மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்சு எழுத்தின் மேல்
கோலவட்டம் மூன்று மாய் குலைந்தலைந்துநின்ற நீர்
ஞானவட்ட மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே (193)

சுக்கிலத் திசையுளே சுரோணிதத் தின் வாசலுள்
முச்சதுரம் எட்டுளே மூலாதார வரையிலே
அச்சமற்ற சவ்வுளே அரி அரன் அயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே (194)

பூவம் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம்
ஆவிஓடி லிங்கமாய் அகண்டம் எங்கும் ஆகினால்
மேவுகின்ற ஐவரும் விளங்கு தூபதீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே (195)

உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது
இருக்கில் என் மறக்கில் ஏன் நினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே (196)

சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்து கொண்ட வான் பொருள்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்து கொள்ளும் உண்மையே (197)

பொய்க் குடத்தில் ஐந்நொ துங்கி போகம் வீசுமாறுபோல்

இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே
அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல்
இச்சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே (198)

பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்து நீ படுமுடிச்சு போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை (199)

அல்லிறந்து பகலிறந்து அகம் பிரமம் இறந்துபோய்
அண்டரண்ட மும்கடந்த அனேகனேக ருபமாய்
சொல்லிறந்து மனமிறந்த சுக சொருப உண்மையைச்
சொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை ஆனதே (200)

ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே (201)

அங்கவிங்க பீடமும் அசவை மூன்று எழுத்தினும்
சங்கு சக்கரத்திலும் சகல வானத்திலும்
பங்கு கொண்ட யோகிகள் பரமவாசல் அஞ்சினும்
சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே (202)

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்கள்
அஞ்செழுத்தும்மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்து நெஞ்சழுத்தி அவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின் வண்ணம் ஆனதே சிவாயமே (203)

ஆதரித்த மந்திரம் அமைந்த ஆக மங்களும்
மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ
சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே (204)

அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ
மிக்க வந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே (205)

ஒன்பதான வாசல் தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே (206)

அள்ளி நீரை இட்டதேது அங்கையில் குழைத்ததேது
மெள்ளவே மிணமிண வென்று விளம்புகிற்கி மூடர்கள்
கள்ள வேடம் இட்ட தேது கண்ணை மூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர் (207)

அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
மின்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே
உன்னிதொக் குளழலும் தூமையுள் அடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே (208)

அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த அவ்விடம் அழுக்கிலாத்து எவ்விடம்
அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சோதியோடு அணுகி வாழலாகுமே (209)

அனுத் திரண்ட கண்டமாய் அனைத்து பல்லி போனியாய்
மனுப்பிறந்து ஓதி வைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய்
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே (210)

ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே (211)

ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே
நாக்கை மூக்கையுள் மடித்து நாதநாடி யூடுபோய்
எக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல்
பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே (212)

அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே (213)

அஞ்செழுத்தின் அனாதியாய் அமர்ந்து நின்றது ஏதடா
நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீ செபிப்பது ஏதடா
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே (214)

உயிரிருந்தது எவ்விடம் உடம்பெடுப்பதின் முனம்
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி சொல்லடா (215)

சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப இன்பமுங் கடந்து சொல்லுமூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆறுபங்கயம் கலந்து அப்புறத் தலத்துளே (216)

உருத்தரிப்ப தற்குமுன் உயிர் புகுந்த நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயம் என்ன சோணிதம்
அருள்தரிப்ப தற்குமுன் அறிவு மூலா தாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே (217)

எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்று அணுகிலார்
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே (218)

அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்றபாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே (219)

வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே (220)

அகார காரணத்திலே அனேகனேக ருபமாய்
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயக்குகின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே (221)

அவ்வெழுத்தில் உவ்வுவந்து அகாரமும் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றைஒன்றி நின்றதோ
செவ்வைஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே (222)

ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொருபம் அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே (223)

வானிலாத்து ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாத்து ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நானிலாத்து ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாத்து ஒன்றுமில்லை தயங்கி ஆடுகின்றதே (224)

சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல்முகந்து இருத்தியே
துன்ப இன்பமுங்கடந்து சொல்லும் நாடி யூடுபோய்
அழுத்தமான வக்கரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறுபங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே

விழித்த கண் குவித்தபோது அடைந்துபோய் எழுத்தெலாம்
விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை நாருமில்லை ஆனதே (225)

நல்லமஞ்சனங்கள் தேடி நாடி நாடி ஓடு றீர்
நல்லமஞ்சனங்களுண்டு நாதன் உண்டு நம்முளே
எல்லை மஞ்சனங்கள் தேடி ஏகபூசை பண்ணினால்
தில்லை மேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே (226)

உயிர் அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்ததற்கு முன்
உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்
உயிரினால் உடம்புதான் எடுப்பவாறு உரைக்கினே (227)

அண்டம் ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே
பண்டைமால் அயனுடன் பரந்து நின்று உழலவே
எண்திசை கடந்து நின்ற இரூண்டசத்தி உழலவே
அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே (228)

உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே
கரியமாலும் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே (229)

பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைந்து வைத்து அளிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே (230)

நாலதான யோனியும் நவின்ற விந்தும் ஒன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே (231)

அருவமாய் இருந்தபோது அன்னை அங்கு அறிந்திலை
உருவமாய் இருந்தபோது உன்னை நான் அறிந்தனன்
குருவினால் தெளிந்து கொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரமம் ஆனதே (232)

பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே (233)

கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே இருப்பனே மேவி அங்கு நிற்பனே
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே (234)

ஆடுநாடு தேடினும் ஆனை சேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடிஇட்ட பிச்சையும் உகந்து நெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல தர்மம் வந்து நிற்குமே (235)

எள இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம்
அள்ளி உண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வஸ்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதானம் ஈதிரால்
மெள்ள வந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே (236)

ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமன தாய்க்கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பை வைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் பிரளிபாரும் பாருமே (237)

மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல்
குருக்கொடுத்த தொண்டரும் குகனொடிந்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டுபாடுதான் படுவரே (238)

அன்னை கர்ப்ப அறை அதற்குள் அங்கியின் பிரகாசமாய்
அந்தறைக்குள் வந்திருந்து அரியவிந்து ரூபமாய்
தன்னை ஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே

உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ
உள்ள மீது உறைந்தெனை மறைப்பிலாத சோதியை
பொன்னைவென்ற பேரெளிப் பொருவிலாத ஈசனே
பொன்னடிப் பிறப்பில்லாமை என்று நல்க வேணுமே (239)

பிடித்ததொண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோலம் அத்தை விட்டு சாதிபே தங்கொண்மினோ
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மை கூற வல்லிரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்று கூடலாகுமே (240)

சத்தி நீ தயவும்நீ தயங்குசங்கின் ஓசை நீ
சித்தி நீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்து நீ
முத்திநீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே (241)

சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொஸ்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே
நிட்டை ஏது ஞானமேது நீரிருந்த அக்ஷரம்
பட்டை ஏது சொல்லிரே பாதகக் கபடரே (242)

உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்து நீரதானதும்
தண்மையான காயமே தரித்து உருவம் ஆனதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே (243)

வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிவிலாத மாந்தர்காள்
வஞ்சகம் பிறவியை வதைத்திடவம் வல்லிரேல்
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்து கொள்ள லாகுமே (244)

காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர்
பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே
வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே (245)

பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின் றபேயர்காள்
பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுதோ
ஆதி பூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுதோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே (246)

மூல மண்டலத்திலே முச்சதுரம் ஆதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம்
கோலி எட்டி தழுமாய் குளிர்ந் தலர்ந்த தீட்டமாய்
மேலும் வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே (247)

ஆதிகூடு நாடிஓடி காலைமாலை நீரிலே
சோதி மூலமான நாடி சொல்லிறந்த தூவெளி
ஆதிகூடி நெற்பறித்த காரமாதி ஆகமம்
பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே (248)

பாங்கினோடு இருந்து கொண்டு பரமன் அஞ்செழுத்துளே
ஓங்கிநாடி மேல் இருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில் வெட்டி நார் உரித்து முச்சில் செய்விதத்தினில்
ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்துணர்ந்து கொள்ளுமே (249)

புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடுமன்னுகின்ற மாயனை
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லிரேல்
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே (250)

அம்பலங்கள சந்தியில் ஆடுகின்ற வம்பனை
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பன் ஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய் நின்ற ஆதி நாயனே
உன்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே (251)

அண்ணலாவது ஏதடா அறிந்துரைத்த மந்திரம்
தண்ணலாக வந்தவன் சகல புராணம் கற்றவன்
கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன்
ஒண்ணதாவது ஏதடா உண்மையான மந்திரம் (252)

உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்
உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாசலைத் திறந்து காணவேணும் அப்பனே (253)

ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்
சேர வெந்து போயிருந்த தேகம் ஏது செப்புமே (254)

என்னகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன்
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னே நான் அறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னை அன்றி யாதுமென்றும் இல்லையே (255)

விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கும் ஆறுபோல்
என்னுள் நின்றும் எண்ணும் ஈசன் என்னகத்து இருக்கையால்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
என்னுள் நின்ற என்னையும் யான்றிந்தது இல்லையே (256)

அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே (257)

மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புனல்சுழல்
விட்டு வீழில் தாகபோக விண்ணில் மண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதலின்பம் ஆகுமே (258)

ஏகமுத்தி மூன்று முத்தி நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்தி அன்றி முத்தாய்
நாகமுற்ற சயனமாய் நலங் கடல் கடந்த தீ
யாகமுற்றி ஆகி நின்ற தென்கொலாதி தேவனே (259)

மூன்று முப்பது ஆறினோடு மூன்று மூன்று மாயமாய்
மூன்று முத்தி ஆகி மூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்
தோன்றுசாதி மூன்றதாய் துலக்கமில் விளக்கதாய்
ஏன்றனாவின் உள்புகுந்த தென்கொலோ நம் ஈசனே (260)

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவற்றுள் ஆயுமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்தும் நின்ற நீ
ஐந்தும் ஐந்தும் ஆயநின்னை யாவர் காண வல்லரே (261)

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறுசீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாமாயம் மாயனே (262)

எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்ற ஆதிதேவனே
எட்டுமாய் பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே (263)

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஒன்பதாய்
பத்து நாற் திசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையா
பத்துமாய் கொத்தமோடும் அத்தலமிக் காதிமால்
பத்தர்கட்க லாதுமுத்தி முத்தி முத்தியாகுமே (264)

வாசியாகி நேசம் ஒன்றி வந்தெதிர்ந்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பவங்களில்
வீசிமேல் நிமிர்ந்த தோளியில்லையாக்கி னாய்கழல்
ஆசையால் மறக்கலாது அமரர் ஆகல் ஆகுமே (265)

எளியதான காயமீதும் எம்பிரான் இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான ஜோதியும் குலாவிநின்றது அவ்விடம்
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே (266)

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே (267)

பொய்யுரைக்க போதமென்று பொய்யருக் கிருக்கையால்
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்
வையகத்தில் உண்மை தன்னை வாய்திறக்க அஞ்சினேன்
நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே (268)

ஒன்றை ஒன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும்
மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்
பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட வல்லிரேல்
அன்றுதேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே (269)

மச்சகத்து ளே இவர்ந்து மாயைபேசும் வாயூவை
அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்தி கொள்விரேல்
அச்சகத்து ளேயிருந்து அறுஉணர்த்தி கொண்டபின்
இச்சை அற்ற எம்பிரான் எங்கும் ஆகி நிற்பனே (270)

வயலிலே முளைத்த நெல் களையதான வாறுபோல்
உலகினோரும் வண்மைகூறில் உய்யுமாறது எங்ஙனே
விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே (271)

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்று நீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடுநாடு வீடுவீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே (272)

ஆடுகின்ற அண்டர் கூடும் அப்புற மதிப்புறம்
தேடுநாலு வேதமும் தேவரான மூவரும்
நீடுவாழி பூதமும் நின்றதோர் நிலைகளும்
ஆடுவாழின் ஒழியலா தனைத்தும் இல்லை இல்லையே (273)

ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானும் அப் பரத்துளே (274)

ஏழுபார் எழுகடல் இடங்கள் எட்டு வெற்புடன்
குழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிர்மாண்டரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே (275)

கயத்துநீர் இறைக்குறீர் கைகள் சோர்ந்து நிற்பதேன்
மனத்துள் ஈரம் ஒன்றில்லாத மதியிலாத மாந்தர்காள்
அகத்துள் ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லிரேல்
நினைத்திருந்த வோதியும் நீயும் நானும் ஒன்றலோ (276)

நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்
ஆரை உன்னிநீரெலாம்அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழும்
சீரை உன்ன வல்லிரேல் சிவபதம் அடைவிரே (277)

பத்தொடுற்ற வாசலில் பரந்து மூல வக்கர
முத்திசித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே
மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே
அத்தியூரர் தம்முளே அமைந்ததே சிவாயமே (278)

அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியை
குணமதாகி உம்முளே குறித்திருக்கில் முத்தியாம்
முணமுணென்று உம்முளே விர லைஒன்றி மீளவும்
தின ந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே (279)

மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடமேது மூடரே
காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால்
ஆதியோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ (280)

முச்சதுர மூலமூகி முடிவுமாகி ஏகமாய்
அச்சதுரம் ஆகியே அடங்கியோர் எழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே (281)

வண்டுலங்கள் போலும்நீர் மனத்துமாசு அறுக்கிலீர்
குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகிறீர்
பண்டும் உங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான்
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே (282)

நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே (283)

பொருந்துநீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம்
எருதிரண்டு கன்றை ஈன்ற வேகமொன்றை ஓர்கிலீர்
அருகிருந்து சாவுகின்ற யாவையும் அறிந்திலீர்
குருவிருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே (284)

அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ
சிம்புளாய் பரந்து நின்ற சிற்பரமும் நீயலோ
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே (285)

ஈரொளிய திங்களே இயங்கி நின்றது அப்புறம்
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர்
காரொளிப் படலமும் கடந்துபோன தற்பரம்
பேரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே (286)

கொள்ளொணாது மெல்லொணாது கோதறக் குதட்டடா
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்
விள்ளொணாத பொருளை நான் விளம்புமாறது எங்ஙனே (287)

வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால்
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கை எங்கள் நோக்குமே (288)

உள்ளினும் புறம்பினும் உலகம் எங்ஙணும் பரந்து
எள்ளில் எண்ணெய் போலநின்று இயங்குகின்ற எம்பிரான்
மெள்ளவந்து என்னுட் புகுந்து மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே (289)

வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால்
போதம் நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்
சோதியுள் ஒளியுமாய்த் துரியமொடு அதீதமாய்
ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே (290)

சாண் இரு மடங்கினால் சரிந்த கொண்டை தன்னுளே
பேணி அப்பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லிரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே (291)

அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால்
நெஞ்சு கூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே
அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்
அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே (292)

அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம்
சக்கரத்து சிவ்வையுண்டு சம்புளத் திருந்ததும்
எள்கரந்த எண்ணெய்போய் எவ்வெழுத்தும் எம்பிரான்
உள்கரந்து நின்ற நேர்மை யாவர் காணவல்லரே (293)

ஆகமதின் உட் பொருள் அகண்டமூலம் ஆதலால்
தாகபோகம் அன்றியே தரித்ததற் பரமும் நீ
ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே (294)

மூலவாசல் மீதுளே முச்சதுரம் ஆகியே
நாலுவாசல் எண்விரல் நடுஉதித்த மந்திரம்
கோலம் ஒன்றும் அஞ்சுமாகுமெ இங்கலைந்து நின்ற நீ
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே (295)

சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே
அக்கரத் தடியுளே அமர்ந்த ஆதிசோதி நீ
உக்கரத் தடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே
அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே (296)

குண்டலத்து ளேயுளே குறித்தகத்து நாயகன்
கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டு கொண்ட மண்டலம் சிவாயம் அல்லது இல்லையே (297)

சுற்றும் ஐந்து கூடமொன்று சொல்லிறந்ததோர்வெளி
சக்தியும் சிவனுமாக நின்றதன்மை ஒக்கிலீர்
சக்தியாவது உம்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்காள் அறிந்திலீர் பிரான் இருந்த கோலமே (298)

மூலம் என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே
நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே
ஆலம்உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால்
ஓலம் என்ற மந்திரம் சிவாயம் அல்லது இல்லையே (299)

தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவிர்காள்
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ
முத்திசீவ னாதமே மூலபாதம் வைத்தபின்
அத்தனாரும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே (300)

மூன்று பத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே
தோன்று சேரஞானிகாள் துய்யபாதம் என் தலை
ஏன் றுவைத்த வைத்தபின் இயம்பும் ஐந்தெழுத்தையும்
தோன்றோத வல்லிரேல் துய்யசோதி காணுமே (301)

உம்பர் வானகத்தினும் உலகபாரம் ஏழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே (302

பூவாலய ஐந்துமாய் புனலில் நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய் சிறந்தகால் இரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறு வேறு தன் மையாய்
நீயலாமல் நின்றநேர்மை யாவர் காண வல்லரே (303)

அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்துவப்பு நான்குமாய்
ஐந்துபாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை
சிந்தையில் தெளிந்தமாயை யாவர்காண வல்லரே (304)

மனவிவகாரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லிரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்
அனைவர் ஓதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல்
கனவுகண்டது உண்மை நீர் தெளிந்ததே சிவாயமே (305)

இட்டகுண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா
சுட்டமண் கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா
முட்டிநின்ற தூணிலே முளைத் தெழுந்த சோதியை
பற்றி நின்றது ஏதடா பட்டநாத பட்டரே (306)

நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை
நீரினோடு கூடி நின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பிரே (307)

உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்
சிறந்தஐம் பலன்களும் திசைத்திசைகள் ஒன்றின் என்
புறம்புமுள்ளும் எங்ஙனும் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே (308)

ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்ற தன்றிது
நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே
ஏதுமன்றி நின்றதொன்றை யான் உணர்ந்த நேர்மையே (309)

பொங்கியே தரித்த அச்சு புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம்
அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க்
கொம்புமேல் வடிவுகொண்டு குரு இருந்த கோலமே (310)

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில்
கண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சு பஞ்சபூதமும்
பண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே (311)

ஒடுக்குகின்ற சோதியும் உந்தி நின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடத்துகாலில் ஏறியே
விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின்று அறிமினோ அனாதி நின்ற ஆதியே (312)

உதித்தமந் திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும்
மதித்த மண்டலத்தினும் மறைந்து நின்ற சோதிநீ
மதித்த மண்டலத்துளே மரித்து நீர் இருந்தபின்
சிரித்தமண்டலத்துளே சிறந்ததே சிவாயமே (313)

திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்
குருக்கொடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ
குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள் வந்த சீடனும்
பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும்பட்டதே (314)

விழித்த கண்துதிக்கவும் விந்துநாத ஓசையும்
மேருவும் கடந்த அண்ட கோலமுங் கடந்துபோய்
எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரஞான வெளியிலே
யானும் நீயு மேகலந்த தென்ன தன்மை ஈசனே (315)

ஓம்நமா என்றுளே பாவையென்று அறிந்தபின்
பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்
நானும் நீயும் உண்டடா நலங்குலம் அது உண்டடா
ஊனும் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடா எனக்குளே (316)

ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதாய்
நல்புலன்க ளாகி நின்ற நாதருக்கது ஏறுமோ
ஐம்புலனை வென்றிடாது அவத்தமே உழன்றிடும்
வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே (317)

ஆணியான ஐம்புலன்கள் அவையும் மொக்குள் ஒக்குமே
யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ
வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்த்திரேல்
ஊன்உறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே (318)

ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்க அஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள் மூன் றெழுத்துமே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே (319)

புவனசிக்க ரத்துளே பூதநாத வெளியிலே
பொங்கு தீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோமர் இருவரும் தாம் இயங்கும் வாசலில்
தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே

மவுன அஞ்செழுத்திலே வாசிஏறி மெள்ளவே
வானளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்தபின்
அவனும் நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே (320)

வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமை என்ன வித்தைகாண்
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே (321)

வலுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான்
கழின்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூயதுபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூக்ஷ சூக்ஷ சூக்ஷமே (322)

ஆகிகூவென் றேஉரைத்த அக்ஷரத்தின் ஆனந்தம்
யோகியோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்குமங்கும் இங்குமாய்
ஏகம்ஏக மாகவே இருப்பர்கோடி கோடியே (323)

கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை
நாடிநாடி நாடி நாடி நாளகன்று வீணதாய்
தேடி தேடி தேடி தேடி தேகமும் கசங்கியே
கூடி கூடி கூடி கூடி நிற்பர் கோடி கோடியே (324)

கருத்திலான் வெளுத்திலான் பரன் இருந்த காரணம்
இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்
கருத்தில்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே (325)

வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான்
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளிமழுங்கி உளறுவான்
வீதி வீதி வீதி வீதி விடைஎருப் பொறுக்குவோன்
சாதி சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான் (326)

ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே
காண்மையான வாதிருபம் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையான நரலை வாயில் நங்குமிங்கும் அங்குமே (327)

மிங்குஎன்ற அட்சரத்தின் மீட்டுவாகி கூவுடன்
துங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியில் ஆகும் ஏகம் ஆகையால்
கங்குலற்றுக் கியானமுற்று காணுவாய் சுடரொளி (328)

சுடரெழும்பும் சூட்சமும் சுழிமுனையின் சூட்சமும்
அடரெழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும்
கடலெழும்பு சூட்சந்தன்னை கண்டறிந்தோன் ஞானியே (329)

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலாத சாகரத்தின் தண்மைகாணா மூடர்கள்
முனிலாமல் கோடி கோடி முன்ன றிந்த தென்பரே (330)

சூக்ஷமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வீயிலே விபுலைதங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடி இருந்த கோவிலே
தீக்ஷையான தீவிலே சிறந்ததே சிவாயமே (331)

பொங்கிநின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும்
தங்குநின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமும்
கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும்
திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே (332)

மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்த செஞ் சுடரிலே
ஞான மானமூலையில் நரலை தங்கும் வாயிலில்
ஒனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே (333)

உதித்தெழுந்த வாலையும் உயங்கிநின்ற வாலையும்
கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்து நின்ற ஞானமும்
கொதித்தெழுந்து கும்பலாகி ஹூவும் ஹீயும் ஆனதே (334)

கூவுமுகியும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித் தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள்போல் பொருந்திநின்ற பூரணம்
ஆவிஆவி ஆவிஆவி அன்பருள்ளம் உற்றதே (335)

ஆண்மைகூறும் மாந்தரே அருக்கினோடும் வீதியை
காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்து நின்ற நாதமே (336)

நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே
கீதமான ஹீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே (337)

ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்துகொம்பின் ஆவியே
மேவி மேவி மேவி மேவி மேதினியில் மானிடர்
வாவிவாவி வாவிவாவி வண்டல்கள் அறிந்திடார்
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே (338)

வித்திலே முளைத்த சோதி வில்வளைவின் மத்தியில்
உத்திலே ஒளிவதாகி யோனமான தீபமே
ந்ததிலோ திரட்சிபோன்ற நாதனை அறிந்திடார்
வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே (339)

மாலையோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே (340)

மோனமான வீதியில் முடிகி நின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகம் என்ன வேகமே
கானமான மூலையில் கனிந்து நின்ற வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே (341)

உச்சி மத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பரந்து நின்றுலவுமே
செச்சியான தீபமே தியானமான மோனமே
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே (342)

அஞ்சு கொம்பில் நின்றநாத மாலைபோல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் சுழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பறந்து நின்ற மோனமே (343)

சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே
அடுதியான ஆவிலே அரன் இருந்த ஹூவிலே
இடுதி என்ற சோலையில் இருந்த முச்சுடரிலே
நடுதி என்று நாதம் ஓடி நன்குற அமைந்ததே (344)

அமையுமால் மோனமும் அரன் இருந்த மோனமும்
சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தை உற்று நோக்கிலார் (345)

பாய்ச்ச லூர் வழியிலே பரன் இருந்த சுழியிலே
காய்ச்ச கொம்பின் நுனியிலே கனி இருந்த மலையிலே
வீச்சமானது ஏதடா விரிவுதங்கும் இங்குமே
மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டிநின்ற சோதியே (346)

சோதி சோதி என்று நாடித் தோற்பவர் சிலவரே
ஆதி ஆதி என்று நாடும் ஆடவர் சிலவரே
வாதி வாதி என்று சொல்லும் வம்பரும் சிலவரே
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர் (347)

சுடரதாகி எழும்பியங்கும் தூபமான காலமே
இடரதாய்ப் புவியும் விண்ணும் ஏகமாய் அமைக்கமுன்
படரதாக நின்ற ஆதிபஞ்சபூதம் ஆகியே
அடரதாக அண்டம் எங்கும் ஆண்மையாக நின்றதே (348)

நின்றிருந்த சோதியை நிலத்தில் உற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேல் முனையின் காட்சி தன்னைக் காணுவார்
நன்றி அற்று நரலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும் (349)

வயங்கு மோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும்
கயங்கள் போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி இன்றியே படர்ந்து நின்ற பான்மையை
நயங்கள் கோவென்றே நடுங்கி நங்கையான தீபமே (350)

தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே
தாபமான மூலையில் சமைந்து நின்ற சூக்ஷமும்
சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே (351)

தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியன் இருந்த மூலையில்
நேச சந்திரோதயம் நிறைந்திருந்த வாரமில்
வீசிவீசி நின்றதேவிரிந்து நின்ற மோனமே (352)

உட்கமல மோனமில் உயங்கிநின்ற நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே (353)

உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தியில்
சந்திரன் ஒளிகிரணம் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம்
கிந்துபோல் கீயில் நின்று கீச்சு மூச்சு என்றதே (354)

செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சையாகி நின்றதே பர வெளியின் பான்மையே
இச்சையான ஹூவிலே இருந்தெழுந்த ஹீயிலே
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே (355)

ஆறுமுலைக் கோணத்தில் அமைந்த ஒன்பதாத்திலே
நாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திட
கூறுமென்று ஐவர் அங்கு கொண்டு நின்ற மோனமே
பாறுகொண்டு நின்றதுபரந்ததே சிவாயமே (356)

பறந்ததே கறந்த போது பாய்ச்சலூர் வழியிலே
பிறந்ததே பிராணன் அன்றிப் பெண்ணும் ஆணும்
துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ
இறந்த போதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே (357)

அருளிருந்த வெளியிலே அருக்கன் நின்ற இருளிலே
பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியங்கி நின்ற வலையிலே
குருவிருந்த வழியினின்று ஹூவும் ஹீயும் ஆனதே (358)

ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே
கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே
தானும் தானும் ஆனதே சமாந்தமாலை காலையில்
வேனலோடும் வாறுபோல் விரிந்ததே சிவாயமே (359)

ஆறுகொண்ட வாரியும் அமைந்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட போனமும் விளங்கும் உள் கமலமும்
மாறுகொண்ட ஊவிலே மடிந்ததே சிவாயமே (360)

வாயில்கண்ட கோணமில் வயங்கும் ஐவர்வைகியே
சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும்
காயவண்டு கண்டதும் கருவூர் அங்கு சென்றதும்
பாயும் என்று சென்றதும் பறந்ததே சிவாயமே (361)

பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையுன் மேவியே
பிறந்ததே இறந்தபோதில் பீடிடாமல் கீயிலே
சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே (362)

வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே
மாதத்தி னால்எழுப்பி வாசல் ஐந்து நாலையும்
முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்
முளரி ஆல யம் கடந்து மூலநாடி ஊடுபோய்

அடிதுலக்கி முடியளவும் ஆறுமா நிலங்கடந்து
அப்புறத்தில் வெளிகடந்த ஆதி எங்கள் சோதியை
உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல யோகியே (363)

மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மரத்திலூறல் அன்றுகாண்
மந்திர்ரங்கள் ஆவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே (364)

மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றநீர் மரித்தபோது சொல்விரோ
மந்திரங்கள் உம்முளே மதித்த நீரும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்து எழுத்துமே (365)

உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினாவ்வேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச லைத்திறந்து காண வேண்டும் மாந்தரே (366)

ஓரெழுத்து லிங்கமாய் ஓதும் அட்சரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாவெழுந்து நாவிளே நவுன்றதே சிவாயமே (367)

முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்று உதித்த அப்புலன்கள் ஆகுமத்தி அப்புலன்
அத்தர் நித்தர் காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே (368)

மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம்
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்
தோன்றும் ஓர் எழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே (369)

வெளியுருக்கி அஞ்செழுத்து விந்து நாத சத்தமும்
தளியுருக்கி நெய்கலந்து சகலசத்தி ஆனதும்
வெளியிலும் அவ்வினையிலும் இருவரை அறிந்த பின்
வெளிகடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே (370)

முப்புறத்தில் அப்புறம் முக்கணன் விளைவிலே
சிற்பரத்துள் உற்பனம் சிவாயம் அஞ்செழுத்துமாம்
தற்பரம் உதித்து நின்று தாணுஎங்கும் ஆனபின்
இப்புறம் ஒடுங்குமோடி எங்கும் லிங்கம் ஆனதே (371)

ஆடிநின்ற சீவன் ஓர் அஞ்சு பஞ்ச பூதமோ
கூடிநின்ற சோதியோ குலாவிநின்ற மூலமோ
நாடுகண்டு நின்றதோ நாவுகற்ற கல்வியோ
வீடுகண்டு விண்டிடின் வெட்டவெளியும் ஆனதே (372)

உருத்தரித்த போது சீவன் ஒக்கநின்ற உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம் அஞ் செழுத்துமாம்
இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம் ஆனபின்
கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே (373)

கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது கரணம் இரண்டு கண்களாய்
கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்து நாதனே (374)

ஆன வன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு எட்டிலே
ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்தது
மானசோதி உண்மையும் அனாதியான உண்மையும்
ஆனதான தானதாய் அவலமாய் மறைந்திடும் (375)

ஈன்றறெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கும் ஆயினான்
மூன்றுமூன்று வளையமாய் முப்புரம் கடந்தபின்
ஈன்றெழுந்த அவ்வினோசை எங்குமாகி நின்றதே (376)

எங்கும் எங்கும் ஒன்றலோ ஈரேழ் லோகம் ஒன்றலோ
அங்கும் இங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ
தங்கு தாபரங்களும் தரித்தவாரது ஒன்றலோ
உங்கள் எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே (377)

அம்பரத்தில் ஆடும் சோதியான வன்னி மூலமாம்
அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்தது
அம்பரக் குளியிலே அங்க மிட்டுருக்கிட
அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே (378)

வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே
ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்தது
மாடிஆடி அங்கமும் அகப்படக் கடந்தபின்
கூடிநின்று உலாவுமே குருவிருந்த கோலமே (379)

விட்டடி விரைத்ததோ வேர் உருக்கி நின்றதோ
எட்டி நின்ற சீவனும் ஈரேழ்லோகம் கண்டதோ
தட்டுவரும் ஆகிநின்ற சதாசிவத்து ஒளியதோ
வட்டவீடு அறிந்த பேர்கள் வானதேவர் ஆவரே (380)

வானவர் நிறைந்த சோதிமானிடக் கருவிலே
வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வாதேனவர்
வானகமும் மண்ணகமும் வட்டவீடு அறிந்தபின்
வானெலாம் நிறைந்த மண்ணு மாணிக்கங்கள் ஆனவே (381)

பன்னிரண்டு கால் நிறுத்தி பஞ்சவர்ணம் உற்றிடின்
மின்னியே வெளிக்குள் நின்று வேறிடத்து அமந்ததும்
சென்னியாம் தலத்திலே சீவன் நின்று இயங்கிடும்
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆனதே (382)

உச்சி கண்டு கண்கள் கட்டி உண்மைக் கண்டது எவ்விடம்
மச்சுமாளி கைக்குளே மானிடம் கலப்பிரேல்
எச்சிலான வாசல்களும் ஏகபோகம் ஆய்விடும்
பச்சைமாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே (383)

வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத்தொலியிலே
கோயிலிட்டு வாவியும் அம்கொம்பிலே உலர்ந்தது
மாயலிட்ட காயமும் அனாதியிட்ட சீவனும்
வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே (384)

அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாம்
அச்சரத்தையும் திறந்து அகோரமிட்டு அலர்ந்தது
மட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே (385)

கோயிலும் குளங்களும் குறியினில் குருக்களாய்
மயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்
ஆயனை அரனையும அறிந்துணர்ந்து கொள்வீரேல்
தாயினும் தகப்பனோடு தான் அமர்ந்த துஒக்குமே (386)

கோயில் எங்கும் ஒன்றலோ குளங்கள் நீர்கள் ஒன்றலோ
தேயு வாயு ஒன்றலோ சிவனும் அங்கே ஒன்றலோ
ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துவாரது ஒன்றலோ
காயம் ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே (387)

காது கண்கள் மூக்கு வாய் கலந்து வாரது ஒன்றலோ
சோதி யிட்டெடுத்ததும் சுகங்கள் அஞ்சும் ஒன்றலோ
ஓதிவைத்த சாத்திரம் உதித்து வாரது ஒன்றலோ
நாதவீடு அறிந்தபேர்கள் நாதர் ஆவர் காணுமே (388)

அவ்வுதித்த அட்சரத்தின் உட் கலந்த அட்சரம்
சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்
உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்தது உண்மையே (389)

அகாரமென்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ
அகாரமென்னும் அக்கரத்தில் அவ்வுவந்து உதித்ததோ
உகாரமும் அகாரமும் ஒன்றி நன்று நின்றதோ
விகாரமற்றி ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே (390)

சத்தியாவது உன்னுடல் தயங்கு சீவன் உட்சிவம்
பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே
சுத்தி ஐந்துகூடம் ஒன்று சொல்லிறந்நதோர் வெளி
சத்தி சிவமும் ஆகி நின்று தண்மையாவது உண்மையே (391)

சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே (392)

அக்கரம் அனாதி அல்ல ஆத்துமா அனாதி அல்ல
புக்கிலுந்த பூதமும் புலன்களும் அனாதி அல்ல
தக்கமிக்க நூல்களும் சாஸ்திரம் அனாதி அல்ல
ஒக்க நின்று உடன்கலந்த உண்மை காண் அனாதியே (393)

மென்மையாகி நின்றது ஏதுவிட்டு நின்ற தொட்டது ஏது
உண்மையாக நீயுரைக்க வேணும் எங்கள் உத்தமா
பெண்மையாகி நின்றதொன்றுவிட்டு நின்ற தொட்டதை
உண்மையாய் உரைக்க முத்தி உட்கலந்து இருந்ததே (394)

அடக்கினால் அடங்குமோ அண்டம் அஞ்செழுத்துளே
உடக்கினால் எடுத்த காயம் உண்மையென்று உணர்ந்து நீ
சடக்கில் ஆறு வேதமும் தரிக்க ஓதிலாமையால்
விடக்கு நாயு மாயவோதி வேறு வேறு பேசுமோ (395)

உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும்
தன்மையான சக்கரம் காயமும் தரித்த ருபம் ஆனதும்
வெண்மையாகி நீறியே வீளைந்து நின்றதானதும்
உண்மையான ஞானிகள் விரித்துரைக்க வேண்டுமே (396)

எள்ளகத்தில் எண்ணெய்போல எங்குமாகி எம்பிரான்
உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடும் மூடர்காள்
கொள்ளை நாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லிரேல்
வள்ளலாகி நின்ற சோதி காணலாகும் மெய்ம்மையே (397)

வேணுமென்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணு உண்டு அங்கு என்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே
காணுமன்றி வேறியாவும் கனாமயக்கம் ஒக்குமே (398)

வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள்
உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள் ஈசன் மன்னுமே (399)

ஆடுகின்ற எம்பிரானை அங்கும்இங்கும் நின்றுநீர்
தேடுகின்ற வீணர்காள் தெளிவதொன்றை ஓர்கிலீர்
நாடிநாடி உம்முளே நவின்று நோக்க வல்லிரேல்
கூடொணாத தற்பரம் குவிந்து கூடல் ஆகுமே (400)

சுற்றி ஐந்து கூடம் ஒன்று சொல்லிறந்த தோர் வெளி
சத்தியும் சிவமுமாகி நின்ற தன்மை ஓர்கிலீர்
சத்தியாவது எம்முடன் தயங்குசீவன் உட்சிவம்
பித்தர்காள் அறிந்துகொள்பிரான் இருந்த கொலமே (401)

அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்
உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்
மகாரமானது அம்பலம் வடிவமானது அம்பலம்
சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே (402)

சக்கரம் பறந்ததோடி சக்கரமேல் பலகாயாய்
செக்கிலாமல் எண்ணெய்போல சிங்குவாயு தேயுவு
முக்கிலே ஒளிகலந்து உகங்களும் கலக்கமாய்
புக்கிலே புகுந்தபோது போனவாறது எங்ஙனே (403)

வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீர்
அருள்கொள்சீவ ராருடம்பு உடைமையாகத் தோர்வீர்காள்
விளங்குஞானம் மேவியே மிக்கோர் சொல்லைக் கேட்பிரேல்
களங்கமற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே (404)

நாலுவேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ
நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய்
ஆலம்உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்
சால உன்னிநெஞ்சுளே தரித்ததே சிவாயமே (405)

சுற்றம் என்று சொல்வதும் சுருதி முடிவில் வைத்திடீர்
அத்தன் நித்தம் ஆடியே அமர்ந்திருந்தது எவ்விடம்
பத்திமுற்றி அன்பர்கள் பரத்தில் ஒன்றுபாழது
பித்தரே இதைக்கருதி பேசலாவது எங்ஙனே (406)

எங்ஙஙனே விளக்கதுக்குள் ஏற்றவாறு நின்றுதான்
எங்ஙனே எழுந்தருளி ஈசன்நேசர் என்பரேல்
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கம் அண்மி யானை போலத் திரிமலங்கள் அற்றவே (407)

அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும்
மெத்ததீபம் இட்டதில் பிற வாதபூசை ஏத்தியே
நற்றவம் புரிந்து ஏக நாதர் பாதம் நாடியே
கற்றிருப்ப தேசரிதை கண்டுகொள்ளும் உம்முளே (408)

பார்த்துநின்றது அம்பலம் பரமன் ஆடும் அம்பலம்
கூத்துநின்றது அம்பலம் கோரமானது அம்பலம்
வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலம்
சீற்றமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே (409)

சென்று சென்று இடந்தோறும்சிறந்த செம்பொன் அம்பலம்
அன்றும் இன்றும் நின்றதோர் அனாதியான அம்பலம்
என்றும் என்றும் இருப்பதோர் உறுதியான அம்பலம்
ஒன்றி ஒன்றி நின்றதுள் ஒழிந்ததே சிவாயமே (410)

தந்தைதாய் தமரும் நீ சகலதே வதையும் நீ
சிந்தைநீ தெளிவும்நீ சித்தி முத்தி தானும்நீ
விந்துநீ விளைவுநீ மேலதாய வேதம் நீ
எந்தைநீ இறைவன்நீ என்னை ஆண்ட ஈசனே (411)

எப்பிறப்பி லும்பிறந்து இறந்து அழிந்த ஏழைகாள்
இப்பிறப்பிலும்பிறந்து என்ன நீறு பூசுறீர்
அப்புடன் மலம் அறுத்து ஆசை நீக்க வல்லிரேல்
செப்புநாத ஓசையில் தெளிந்துகாணல் ஆகுமே (412)

எட்டுயோகம் ஆனதும் இயங்குகின்ற நாதமும்
எட்டு அக்கரத்துளே உகாரமும் மகாரமும்
விட்டலர்ந்த மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய்
அட்ட அக்ஷரத்துளே அமர்ந்ததே சிவாயமே (413)

பிரான்பிரான் என்றுநீர் பினத்துகின்ற மூடரே
பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே
பிரானுமாய் பிரானுமாய் பேருலகு தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல் (414)

ஆதியில்லை அந்தமில்லை ஆனநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழுத்தும் இல்லையே (415)

அம்மையப்பன் அப்ப நீர் அமர்ந்தபோது அறிகிலீர்
அம்மையப்பன் ஆனநீர் ஆதியான பாசமே
அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை ஆனபின்
அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை இல்லையே (416)

நூறுகோடி மந்திரம் நூறு கோடி ஆகமம்
நூறுகோடி நாளிருந்து ஊடாடினாலும் என் பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்ததாய்
சீரை ஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் (417)

முந்த ஓர் எழுத்துளே முளைத்தெழுந்த செஞ்சுடர்
அந்த ஓர் எழுத்துளே பிறந்துகாயம் ஆனதும்
அந்த ஓர் எழுத்துளே ஏகமாகி நின்றதும்
அந்த ஓர் எழுத்தையும் அறிந்துணர்ந்து கொள்ளுமே (418)

கூட்டம் இட்டு நீங்களும் கூடிவேதம் ஓதுறீர்
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பதென் எழுத்துளே
நாட்டம் இட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மை ஆணை உண்மையே (419)

காக்கை மூக்கை ஆமையர் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்
ஏக்கை நோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்தபார்த்த திக்கெல்லாம் பரப்பிரமம் ஆனதே (420)

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே (421)

ஓட்டுவைத்து கட்டி நீர் உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கர்ந்தன் அங்கு வாழுமோ
எட்டும் எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டம் இட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே (422)

இந்த ஊரில் இல்லை என்று எங்குநாடி ஓடுறீர்
அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே
அந்தமான பொந்திலாரில் மேவி நின்ற நாதனை
அந்தமான சீயில் அவ்வில்அறிந்துணர்ந்து கொள்ளுமே (423)

புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்குசட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்ந்திடில்
அக்குமணி கொன்றைசூடி அம்பலத்துள் ஆடுவார்
மிக்க சோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே (424)

பின்னெழுந்த மாங்கிசத்தை பேதையர் கண்பற்றியே
பின்புமாங் கிஷத்தினால் போகமாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள்தான் சூழ்ந்திடும்பின் என்றலோ
அன்பராய் இருந்த பேர்கள் ஆறுநீந்தல் போல்விடே (425)

விட்டிருந்த தும்முளே விதனமற்று இருக்கிறீர்
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசல் ஒன்று
கட்டி வைத்த வாசலும் கதவு தாள் திறந்துபோய்த்
திட்டமான ஈசனைத் தெளியுமாங் கிஷத்துளே (426)

ஆகும்ஆகும் ஆகுமே அனாதியான அப்பொருள்
ஏகர்பாதம் நாடிநாடி ஏத்தி நிற்க வல்லிரேல்
பாகுசேர் மொழி உமைக்குப் பாலனாகி வாழலாம்
வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர் (427)

உண்மையான தொன்ற தொன்றை உற்றுநோக்கி உம்முளே
வண்மையான வாசியுண்டு வாழ்த்தி ஏத்த வல்லிரேல்
தண்மைபெற்று இருக்கலாம் தவமும் வந்து நேரிடும்
கன்மதன்மம் ஆகும் ஈசர் காட்சிதானுங் காணுமே (428)

பாலகனாக வேணும் என்று பத்திமுற்றும் என்பரே
நாலுபாதம் உண்டதில் நனைந்திரண்டு அடுத்ததால்
மூல நாடி தன்னில் வன்னி மூட்டி அந்த நீருண்
ஏலவார் குழலியோடே ஈசர்பாதம் எய்துமே (429)

எய்து நின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்த வல்லிரேல்
எய்தும் உண்மை தன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும்
மைஇலங்கு கண்ணிபங்கன் வாசிவானில் ஏறிமுன்
செய்தவல் வினைகளும் சிதறும் அது திண்ணமே (430)

திண்ணம் என்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணல் அன்புளன்புருகி அறிந்து நோக்கலாயிடும்
மண்ணதிர விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணி எங்கள் ஈசனும் நமதுடலில் இருப்பனே (431)

இருப்பன் எட்டெட் டெண்ணிலே இருந்து வேறது ஆகுவன்
நெருப்புவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவான்
கருப்புகுந்து காலமே கலந்த சோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே (432)

கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள்
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால்
உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே (433)

தெளிந்தநற் சரியை தன்னில் சென்றுசா லோகம்பெறும்
தெளிந்தநற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே
தெளிந்தநல்ல யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்தஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே (434)

சேருவார்கள் ஞானம் என்று செப்புவார் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மை என்றது இல்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டு நாலும் செய்தொழில் திடப்படே (435)

திறமலிக்கு நாலுபாதம் செம்மையும் திடப்படார்
அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே
குறியதனைக் காட்டி உள்குறித்து நோக்கவல்லிரேல்
வெறிகமழ் சடையுடை யோன்மெய்ப்பதம் அடைவரே (436)

அடைவுளோர்கள் முத்தியை அறிந்திடாத மூடரே
படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ
மடைதிறக்க வாரியின் மடையில் ஏறுமாறுபோல்
உடலில் மூலநாடியை உயர ஏற்றி ஊன்றிடே (437)

ஊன்றியேற்றி மண்டலம் உருவிமூன்று தாள் திறந்து
ஆன்றுதந்தி ஏறிடில் அமுர் தம் வந்து இறங்கிடும்
நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர்பரம் பொருந்தி வாழ்வதாகவே (438)

ஆகமூல நாடியில் அனல்எழுப்பி அன்புடன்
மோகமான மாயையில் மியல்வதும் ஒழிந்திடில்
தாகமேரு நாடி ஏகர் ஏகமான வாறுபோல்
ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே (439)

அறிந்து நோக்கி உம்முளே அயன் தியானம் உம்முளே
இருந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரும் உம்முளே (440)

சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல்
சோதிவந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடும்
ஆதிசக் கரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே (441)

திருவுமாய் சிவனுமாய் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கனமவாதனை யெலாம்
ப,உதிமுன் இருளதாய் பறியும் அங்கி பாருமே (442)

பாரும் எந்தை ஈசர் வைத்த பண்பிலே இருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்து தேடி மால் அயன்
பார் இடந்து விண்ணிலே பறந்தும் கண்டது இல்லையே (443)

கண்டிலாது அயன்மால் என்று காட்சியாகச் சொல்லுறீர்
மிண்டினால் அரனுடன் மேவலாய் இருக்குமோ
தொண்டுமட்டும் அன்புடன்தொழுது நோக்க வல்லீரேல்
பண்டுமுப் புரம் எரித்த பத்தி வந்து முற்றுமே (444)

முற்றுமே அவன் ஒழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன்
பற்றிலாத ஒன்று தன்னை பற்றிநிற்க வல்லது
கற்றதாலே ஈசர்பாதம் காண லாயிருக்குமோ
பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே (445)

கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலத்துளே
வாட்டம் உள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்
வீட்டிலே வெளியாகும் விளங்கவந்து நேரிடும்
கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டு எழுப்புமே (446)

எழுப்பி மூல நாடியை இதப்படுத்தலாகுமோ
மழுப்பிலாத சபையை நீர் மலித்துவாங்க வல்லிரேல்
சுழுத்தியும் கடந்துபோய் சொப்பன த்தில் அப்புறம்
அழுத்தி ஓர் எழுத்துளே அமைப்பது உண்மை ஐயனே (447)

அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல்
நல்லஈசர் தாள் இணைக்கு நாதனுக்கும் ஈந்திலை
என்றும்என்னுள் நேசமும் வாசியை வருத்தினால்
தொல்லையாம் வினைவிடென்று தூர தூரம் ஆனதே (448)

ஆனதே பதியது அற்றதே பசுபாசம்
போனதே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ
ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே (449)

உலாவும் உவ்வும் மவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும்
உலாவிஐம் புலன்களும் ஒருதலத்து இருந்திடும்
நிலாவும் அங்கு நேசமாகி நின்றமுர் தம் உண்டுதாம்
குலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே (450)

கும்பிடும் கருத்துளே குகனை ஐங்கரனையும்
நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவணைத்
தும்பிபோல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே (451)

நீங்கும் ஐம்புலன்களும் நிறைந்த வல் வினைகளும்
ஆங்காரமாம் ஆசையும் அருந்தடர்ந்த பாவமும்
ஓங்காரத்தின் உள்ளிருந்த ஒன்பதொழிந் தொன்றிலத்
தூங்கீசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே (452)

கருக்கலந்த காலமேகண்டு நின்ற காரணம்
உருக்கலந்த போதலோ உன்னை நான் உணர்ந்தது
விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கிசைந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ (453)

ஞான நூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள்
ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர்
ஞானம் ஆகி நின்றதோர் நாதனை அறிந்தபின்
ஞானம் அல்லது இல்லை வேறு நாம் உரைத்தது உண்மையே (454)

கருத்தரிப்பதற்கு முன் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருட்பொதிந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடம்
உருப்புணர்ந்த ஞானிகள் விரித்துரைக்க வேணுமே (455)

கருவினில் கருவதாய் எடுத்த ஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்
மருவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்
உருவினைப் பயன் இதென்று உணர்ந்த ஞானி சொல்லுமே (456)

வாயில் எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில் போன வாறதென்ன எவ்விடம்
வாயில் எச்சில் அல்லவோ நீர் உரைத்த மந்திரம்
நாதனை அறிந்தபோது நாடும் எச்சில் ஏது சொல் (457)

தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள்
தொடக்கிருந்தது எவ்விடம் சுத்தியானது எவ்விடம்
தொடக்கிருந்த வாறறிந்து சுத்திபண்ண வல்லிரேல்
தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்து காணலாகுமே (458)

மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபேதமாய் உருத்தரிக்கும் ஆறுபோலவே
வேதம் ஓது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே (459)

வகைக்குலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகைக் குலங்கள் ஆன நேர்மை நாடியே உணர்ந்தபின்
மிகைத்தசுக்கிலம் அன்றியே வேறு ஒன்று கண்டிலீர்(460)

ஓதும் நாலு வேதமும் உரைத்த சாஸ்திரங்களும்
பூததத் துவங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம் ஆகியே பிறந்து உழன்று இருந்ததே (461)

உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்
திறம்பில் என் திகைக்கில் என் சில திசைகள் எட்டில் என்
புறம்பும் உள்ளும் எங்கணும் பொதிந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகள் நினைப்பதும் ஏதும் இல்லையே (462)

அங்கலிங்கம் பூண்டு நீர் அகண்ட பூசை செய்கிறீர்
அங்கலிங்கம் பூண்டு நீ அமர்ந்திருந்த மார்பனே
எங்கும் ஓடி எங்கும் எங்கும் ஆடழிந்து மாய்கிறீர்
செங்கல் செம்பு கல்லெலாம் சிறந்து பார்க்கும் மூடரே (463)

தீட்டம் தீட்டம் என்று நீர் தினம் முழுகும் மூடரே
தீட்டமாகி அல்லவோ திரண்டு காயம் ஆனது
பூட்ட காயம் உம்முளே புகழுகின்ற பேயரே
தீட்டு வந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே (464)

உந்திமேலே நாலுமூன்று ஓம் நம சிவாயமாம்
சந்தி சந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே
முந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்
அந்தி சந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே (465)

வன்னி மூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும்
கன்னியான துள்ளிருக்கக் காதல் கொண்டது எவ்விடம்
சென்னிநாலு கையிரண்டுசிந்தையில் இரண்டில் ஒன்று
உன்னி உன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே (466)

தொண்டு செய்து நீங்களும் சூழ ஓடி மாள்கிறீர்
உண்டு உழன்று நம்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுளாடு சோலை சூழ் வாழும் எங்கள் நாதனும்
பண்டுபோல நம்முளே பகுத்திருப்பன் ஈசனே (467)

பரம் உனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா
கரம் உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே
உரம் எனக்கு நீ அளித்த உண்மை உண்மை உண்மையே (468)

மூலவட்ட மீதிலே முளைத்த ஐந்து எழுத்திலே
கோலவட்டம் மூன்றுமாய்க் குளிர்ந்தலர்ந்து நின்ற தீ
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானி மேலதாய்
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே (469)

முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய்
அச்சதுரம் உம்முளே அடங்கவாசி யோகமாம்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரித்த மந்திரம் ஓம் நமசிவாயமே (470)

இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே
அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும் ஞானம் எவ்விடம்
அடங்குகின் றது எவ்விடம் அறிந்து பூசை செய்யுமே (471)

புத்தகங்களைச் சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்
செத்திடம் பிறந்திடம் அது எங்ஙன் என்றுஅறிகிலீர்
அத்தனைய சித்தனை அறிந்து நோக்க வல்லிரேல்
உத்தமத் தூள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே (472)

அருளிலே பிறந்துதித்து மாயைருபம் ஆகியே
இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ
பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லிரேல்
மருள் அது ஏது வன்னியின் மறைந்ததே சிவாயமே (473)

தன்மசிந்தை ஆம் அளவும் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தமிழ்ந்த கசடரே
சென்ம சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்து காண வேண்டுமே (474)

கள்ளவுள்ள மேயிருக்க கடந்த ஞானம் ஓதுவீர்
கள்ளம்உள் அறுத்தபோது கதி இதன்றிக் காண்கிலீர்
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லிரேல்
தெள்ளுஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே (475)

காண வேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணும் என்றவ் வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்றசீவன் தான்சிவம் அதாகுமே (476)

அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக்
குணமதாக உம்முளே குறித்து நோக்கின் முத்தியாம்
மிணமிணென்று விரலை எண்ணி மீளொணாத மயக்கமாய்
துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர் (477)

எச்சில் எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள்
துச்சில்எச்சில் அல்லவோ தூயகாயம் ஆனதும்
வைத்த எச்சில் தேனலோ வண்டின் எச்சில் பூவலோ
கைச்சுதாவில் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே (478)

தீர்த்தலிங்கமூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே
தீர்த்தலிங்கம் உள்ளில் நின்ற சீவனைத் தெளியுமே
தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லிரேல்
தீர்த்தலிங்கம் தான் அதாய்ச் சிறந்ததே சிவாயமே (479)

ஆடுகொண்டு கூறு செய்து அமர்ந்திருக்கும் ஆறுபோல்
தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடுதர்ப்பபூசை என்ன பூசை என்ன பூசையே (480)

என்னை அற்ப நேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராசராச ராசனே
உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமோ
உனது நாட்டம் எனதுநாவில் உதவி செய்வீர் ஈசனே (481)

எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே
எந்தைபூர ணப்பிரகாசர் ஏகபோகம் ஆகியே
நல்லின்ப மோனசாக ரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தம் உண்டு நான் அழிந்து நின்றநாள் (482)

ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை
ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லிரேல்
ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம்
வான நாடும் ஆளலாம் வண்ண நாடார் ஆணையே (483)

நித்தமும் மணி துலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்
எத்தனை பேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ
அத்தனுக்கு இது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே (484)

எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்துநோக்க வல்லிரேல்
கட்டமான பிறவிஎன் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே (485)

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்து ரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீற தானதே
உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே (486)

பன்னிரண்டு நாள் இருத்திப் பஞ்சவன்னம் ஒத்திட
மின்னி அவ்வெளிக்குள் நின்று வேரெடுத்து அமர்ந்தது
சென்னியான தலத்திலே சீவன் நின்று இயங்கிடும்
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரமம் ஆவரே (487)

தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டு மூண்டெழுந்த தீச்சுடர்
வச்சிரம் அதாகியே வளர்ந்து நின்றது எவ்விடம்
இச்சுடரும் இந்திரியமும் ஏகமானது எங்ஙனே (488)

முத்திசித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்று உதித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி அப்புலன்
அத்தனித்த காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே (489)

வல்லவாசல் ஒன்பதும் மருத்தடைத்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்பது இல்லையே (490)

வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம்
உண்டுளே அடங்கும் வண்ணம் ஓதுலிங்க மூலமாய்க்
கண்டுகண்டு வேரிலே கருத் தொடுங்க வல்லிரேல்
பண்டுகொண்ட வல்லினை பறந்திடும் சிவாயமே (491)

ஓரெழுத்தி லிங்கமாகஓதும் அக் கரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்தும் மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே (482)

தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்
பாரபார பாரம் என்று பரிந்திருந்த பாவிகாள்
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே (493)

குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள் தோறும் மூழ்குறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின்மா சறுக்கிலீர்
மண்டை ஏந்துகையரை மனத்திருத்த வல்லிரேல்
பண்டைமால் அயன் தொழப்பணிந்து வாழ லாகுமே (494)

கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றை ஈன்ற அம்பலத்துள் ஆடுதே
மாடுகொண்டு வெண்ணெய் உண்ணும் மானிடப் பசுக்களே
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே (495)

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ (496)

நானும் அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன்
வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே
நானும் நீயும் ஒத்தபோது நாடிக்காண லாகுமோ
தானதான தத்ததான நாதனான தான்னா (497)

நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான்
நல்லதென்ற போத்து நல்லதாகி நின்றுபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்று நாடிநின்று நாமம் சொல்ல வேண்டுமே (498)

பேய்கள் கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா
நாய்கள்பால் உதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால்
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கிப்பாரும் உம்முளே (499)

உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில் நீ
அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா
தப்பிலிப்பொய் மானம் கெட்ட தடியனாகும் மனமேகேள்
ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே (500)

பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதைமக்கள் தெரிகிலாது
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ
நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே (501)

சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத்
திட்டநெட்டு எழுத்தறியாது ஏங்கிநோக்கு மதவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ
கட்டவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதி உமக்கும் ஏதுகாண் (502)

வேதம் ஓது வேலையோ வீணதாகும் பாரிலே
காதகாத தூரம் ஓடிக் காதல் பூசை வேணுமோ
ஆதிநாதன் வெண்ணெயுண்ட அவனிருக்க நம்முளே
கோது பூசை வேதம் ஏது குறித்து பாரும் உம்முளே (503)

பரம் இலாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம்
அறம் இலாத பாவிகட்குப் பரம் இலை அது உண்மையே
கரம் இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது
பரம் இலாத சூன்யமாகும் பாழ் நரகம் ஆகுமே (504)

மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே
மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர் வாழ் சிறக்குமே
மாதராகுஞ் சத்தியொன்று மாட்டிக் கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே (505)

சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள்
சித்தர் இங்கு இருந்தபோது பித்தன் என்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்தும் என்ன பித்தன் நாட்டிருப்பரே
அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலாமொன்றே (506)

மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே
சாந்தனான ஆவியை சரிப்படுத்த வல்லிரேல்
வேந்தன் ஆகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம்
கூந்தலம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இது உண்மையே (507)

சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்
சருகருந்தி தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே (508)

காடுமேடு குன்றுபள்ளம் கானின் ஆறகற்றியும்
நாடுதேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ
கூடுவிட்டு அகன்று உன் ஆலி கூத்தனூர்க்கே நோக்கலால்
வீடுபெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே (509)

கட்டையால் செய் தேவரும் கல்லினால்செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாடியால்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே (510)

தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே (511)

ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர்
காசினியில் ஏழுநரகைக் காத்திருப்பது உண்மையே (512)

நேசமுற்றுப் பூசை செய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர்தம் இட்டுமே
மோசம் பொய்புனை சுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரிக ளம்புரண்ட வெண்ணீறாகும் மேனியே (513)

வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும்
போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தர வெனச்
சாதனை செய் தெத்திச் சொத்து தந்ததைக் கவர்ந்துமே
காததூரம் ஓடிச் செல்வர் காண்பதும் அருமையே (514)

யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே (515)

காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர்
நேயமாக் கஞ்சா அடித்துநேர் அபினைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே (516)

நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம் என்று
ஊரினில் பறை அடித்து உதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்கு ஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும் கைப்பற்றுவார் (517)

காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம் யோகத் தண்டு கொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம் எங்கும் சுற்றியே
பாவியேன்ன வீடெலாம் பருக்கை கேட்டு அலைவரே (518)

முத்திசேரச் சித்தி இங்கு முன்னளிப்பேன் பாரென
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தயம் வயிறு வளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே (519)

செம்மை சேர்மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடு செய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல்
இம்மளமும் மும்மளமும் எம்மளமும் அல்லவே (520)

எத்திசை எங்கும் எங்கும் ஓடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுகச் சுத்த ஞானி யாவரோ
பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்
முத்தி இன்றி பாழ்நரகில் மூழ்கி நொந்து அலைவரே (521)

கல்லு வெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ருபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லை அற்றிடப்பெரும் சகந்தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே (522)

இச்சகம் சனித்ததுவும் ஈசன் ஐந்து எழுத்திலே
மெச்சவும் சராசரங்கள் மேவம் ஐந்து எழுத்திலே
உச்சிதப் பலுயிர்கள் ஓங்கல் அஞ்சு எழுத்திலே
நிச்சயம் மெய்ஞ் ஞானபோதம் நிற்கும் ஐந்து எழுத்திலே (523)

சாத்திரங்கள் பார்த்துப் பார்த்து தான் குருடு ஆவதால்
நேத்திரம் கெட வெய்யோனை நேர்துதி செய் மூடர்கள்
பாத்திரம் அறிந்து மோன பக்தி செய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே (524)

மனவுறுதி தானிலாத மட்டிப் பிண மாடுகள்
சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர்
இனமதில் பலர்கள் வையும் இன்பம் அற்ற பாவிகள் (525)

சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம் எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்க யாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்க வானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத் தீ ஆகுமே (526)

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சிவவாக்கியர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை சாரம் -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஸ்ரீ உ வே ஸ்ரீ தரன் ஸ்வாமிகள் தொகுத்து அருளியவை –

December 28, 2021

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

முதல் பாசுரம் – ஆண்டாள் பஞ்ச நாராயண பிரதிஷ்டை :

ஸ்வாமி எம்பெருமானார் , கிருமிகண்ட சோழன் உபத்தரவம் பொறுக்க மாட்டாமல் மேல்நாட்டில்
எழுந்தருளி இருந்த காலத்தில் பிட்டிதேவன் என்கிற விஷ்ணுவர்த்தனான ஹொய்சள மன்னரின் உதவியோடு
1-தலக்காடு கீர்த்தி நாராயணன்
2-தொண்டனூர் நம்பி நாராயணன்
3-மேலகோட்டை திரு நாராயணன்
4-பேலூர் கேசவ நாராயணன்
5-கடக வீர நாராயணன்
என்பதான பஞ்ச நாராயண க்ஷேத்ரங்களை பிரதிஷ்டாபித்தார் என்பது வரலாறு.
கோயில் அண்ணரான இராமானுஜர் எவ்வழி அவ்வழியில் தங்கையான ஆண்டாளும் இந்த பாசுரத்தில்
1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் நாராயணன்
2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன்
3-கார்மேனி நாராயணன்
4-செங்கண் நாராயணன்
5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன்
ஆகிய பஞ்ச நாராயணர்களை பிரதிஷ்டாபனம் பண்ணுகிறாள் என்பதை யுக்தி ரசத்தோடு பார்க்கலாம்.

1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் நாராயணன்–
திருமந்திரார்த்த பிரதனான ஆச்சாரியனைச் சொல்லும். எப்படி என்றால்
தனக்கு விதேயனாக இருக்கிற கண்ணனெம்பெருமானை ரக்ஷிக்க வேண்டி ,
கூரிய வேலை பிடித்தவன் நந்தகோபன். ஆசாரியனும், பகவத் ரக்ஷண தத்பரர் ஆகையால்,
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர். இவருடைய மங்களாஸாசன தத்பரத்தையே இவர் கைவேல்.
திருமந்திரம் இவருக்கு விதேயமாய் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் காரியம் செய்கையாலும்,
நந்தித்தவமும் கோப்திருத்வமும் இவருக்கும் உண்டு
ஆகையால் நந்தகோபன் குமரன் நாராயணன் என்றபடி.

2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் நாராயணன் –
என்பது கண்ணியாக உள்ள துவய மந்திர பிரதிபாத்யன் நாராயணன் என்றபடி.
கண்ணனுடைய பிரதாபங்கள் எல்லாம் யசோதை இடத்திலாய், அவள் கண் வட்டத்துள் நின்று அகலாது
முந்தாணையில் முடியாலாம்பட்டி இருக்கிற தன்மை கொண்டு –
ஆசாரியன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கை புகுரும் என்ற கணக்கிலே
மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவான நாராயணனைச் சொல்லுகிறது இத்தால்.

3-கார் மேனி நாராயணன் –
என்றது மேகத்தைப்போல் இன்னார் இனையார் என்று பார்க்காது , அவர்கள் இருக்கிற இடம் சென்று வர்ஷிக்கிற
வர்ஷாகால மேகத்தைப்போலேயான ஒளதார்யமும், சௌலப்யமும் சொல்லிற்று.
நீர் அந்த்ரேண சம்ஸ்லேய : என்று மழைநீர் அது விழுகிற இடத்தின் தன்மையை –
செம்மண் பூமியானால் செந்நிறமும், பால்நிற பூமியானால் பால் நிறமும் பெறுவதுபோல –
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது உம்பி எம்பி என்று தோழமை கொண்டதும்,
மாடு கன்றுகளோடும், இடையர்களோடும் பொறையற கலக்கின்ற சௌசீல்யகுணத்தையும் சொல்லிற்று எனலாம்.

4-செங்கண் நாராயணன் –
என்றது செவ்வரியோடிய நீண்டவப் பெரிய வாய கண்கள் என்று ஸ்வாமிதவ, ஸ்ரீமத்வ ஸூசகங்கள்.
மைய கண்ணாள் என்று பிராட்டியையும், செய்யக் கோல தடங்கண்ணன் என்று ஸ்ரீயப் பதித்தவமும், ஸ்ரீமத்வமும்
இறே இவனுக்கு நிரூபணங்கள்.
இந்த ஸ்வாமித்வ, சௌலப்ய, சௌசீல்யாதிகள் அல்லவோ ஆஸ்ரித ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்-

5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன் –
என்றது தண்ணளியும், பிரகாசமும் ஒருங்கேயான ஸ்வாமிதவ, சக்தி சாமர்த்தியாதி களுக்கு உப லக்ஷணம்.
இவை ஆஸ்ரித காரிய ஆபாதக குணங்களாய் நாராயண ஸப்தார்த்த குண போக்யதைகளையும் சொல்லிற்று.

அப்படிப்பட்ட நாராயணனே
மந்திரத்திலும், மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்திர பிரதனான ஆசாரியன் பக்கலிலும்
பிரேமம் கனக்க உண்டான நமக்கே
ஸ்வரூபனுரூபமான கைங்கர்யமாகிற பறை தருவான் என்கிறது இப் பாசுரத்தில்.

———-

4. ஊழி முதல்வன் –
பொன்னை மெழுகொற்றி தேற்றுமா போலேயாய்
தன்னைக் கொடு தரணி எல்லாமும் — முன்னை போல்
தான் தோற்று மஃது சம நோக்கே! ஊன் உயிர்
கண் ஏற்றல் ஆம் தனி நோக்கு.

நாராயணனே நமக்கே பறை – தண்டுழாய் நமகன்றி நல்கான் – தனி நோக்கு – (விஷம) வியஷ்டி ஸ்ருஷ்டி
நாமும்-நாங்கள்-நாங்களும் மார்கழி நீராட – பொது நோக்கு – ஸமஷ்டி ஸ்ருஷ்டி.

———–

5. தூயோமாய் வந்து தூய பெருநீர் தூமலர் தூய் :

தன் கை கால் மெய் வாயும் கொடு அளைந்த காளிந்தி
போன் கரணம் மூன்றும் கொடு கண்ணன் — தன் நினைவால்
எண்ணம் மொழி செய்கை ஒன்றிச் செய் கிரியை
வண்ணம் அழகிய பூ நாறு.

———-

6. பிள்ளாய் :
கற்றதன்றி உற்றத வன்னடியார்க் காள் எற்றோ ?
பெற்ற பரமன் நமை உடைத்தாய் — மற்றையார்
விற்கவும் பாற்றென போக்க இசைந்தது
ஏற்கை நம என்பார் சாற்று.

—-

7. கலந்து பேசின பேச்சரவம் :
வதரிவான் வைகுந்தம் பார்த்தன் தேர் முன்னாய்
கதிரொளி மால் கண்ணன் கேசவனன் — றோதிய
மெய்மைப் பெரு வார்த்தை ஒவ்வொன்றும்
மால் மாறன் வாய் மொழிக் குள்ளாதல் கொள்ளு.

———–

8. வந்து நின்றோம் :
காசை இழந்தவன் பொன்னை இழந்தவன்
ஆசை மணியை இழந்தவன் — பேச நின்ற
மால் நிற்க பத்தர் பரவுவார், வீடணன் போல்
கோல் கொழுந்த தற்றே அவர்.

———–

9. பாகவத ஸம்பந்தம் ஸ்வதந்திரோபாயம்:
இருகால் விலங்கு இறகுடை பட்சி
ஒருகால் திருமால் அடியார் — அருள் நோக்
கிலக்கதேல் ஞான மநுட்டான மில்லா
நிலையரேனும் சேரும்மால் வீடு.

———-

9. மாமான் மகளே :உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று தொடங்கி
உனக்கும் உனதடிய ராவார் — தமக்குமாய்பின்
மாலே! உனதடியார் பாலேயாய் கோலுமது
ஏலுவதும் என் கொல் குறிப்பு?

ஆசார்ய ருசி பரிகிருஹீத பகவத் சேஷத்வத்திலே இழிந்தவாரே பகவத் பாகவத கைங்கர்யமாகிற
ஈர் அரசு படுதல் தேட்டமேலும் அதுக்கு எல்லை நிலமான ததீயத்வேக சேஷனாகை எம் பிரார்க்கு இனியவாறே.

——-

10. ஆற்ற அனந்தல் :
ஆறும் அடைவும் அவன் தாள் எனவாகக்
கூறும் நினைவும் உறுதியும் — பேறெனத்
தேறி அதன் வழி வாழு நற் சோம்பர்
உறவும் முறையும் விழைவு.

———

11. பொற் கொடி :
தனக்கும் பிறர்க்குமாய் அன்றி உறவு
எனக்கு நீயே அன்றோ? எனவாய் — புனக்காயா
மேனி புனிதன் புணர்தியில் ஆம் உணர்த்திக்
கான கூட்டு மாலடியார் மாட்டு.

———

12. மனத்துக்கினியானை அனைத்தில்லத்தாரும் அறிந்து :
பெண்ணுக்கும், பேதைக்கும் ஞான பக்தி கார்மிகர்க்கும்
நண்ணித் தொழுவார்க்கும் நண்ணல் — விழையார்க்கும்
அண்ணல் இராமா நுசனை இராமனும் போல்
எண்ண இனிக்கும் உளம்.

மண்டோதரி, தாரை, சூர்பணகை ஆகிய பெண்களின் மனத்துக்கு இனியர் பெருமாள் .
திரிபுராதேவி, கொங்கில் பிராட்டி, திருக்கோளூர் பெண்பிள்ளை ஆகிய பெண்சிஷ்யைகள் மனத்துக்கு இனியர் ராமாநுசர்.

பேதையர்களான வானர ஜாதிக்கும், பட்சி ஜாதியான ஜடாயுவுக்கும், திர்யக்கான அணிலுக்கும் மனத்துக்கு இனியர் பெருமாள்.
பேதையான ஒரு ஊமையின் தலையில் தன் திருவடி ஸ்பர்சம் செய்வித்து இனியரானார் ராமாநுசர்.

சத்யேந லோகாந் ஜயதி, தானேந தீன : என்று சகல மநுஜ மனோஹாரி பெருமாள்.
ஞானிகளை ஶ்ரீபாஷ்யம் கொண்டும், பக்தர்களை சரணாகதி சாஸ்திரம் கொண்டும்,
அநுஷ்டான பிரதராய் கர்ம யோகிகளுக்கும் ஸ்வஜன பிரியர் ராமாநுசர்.

அன்னு சராசரங்களை வைகுந்தத்து ஏத்தி என்று சாமான்யர்களுக்கு இனியர் பெருமாள்.
ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று வரம்பறுத்த பெருமாளாய் ஜகதாசார்யர் ஆனார் ராமாநுசர்.

சத்ரு சைன்ய பிரதாபர் என்கிற விருது பெற்ற பெருமாள் ராவண, மாரீசாதிகளின் புகழ்சிக்கு விஷயமானவர் பெருமாள்.
அப்பொழுது ஒரு சிந்தை செய்து- யாதவ பரகாசன், யஞ்ஞ மூர்த்தி போன்ற பரபக்ஷ வாதிகளை சிஷ்ய பிரந்தமாக்கிய மனத்துக்கு இனியர் ராமாநுசர்.

இப்படி அனைத்து கொத்துக்கும் இனிய நற்செல்வன் ராமாநுசர்.
அவர் தங்கையான ஆண்டாள் கோயில் அண்ணர் பிரபாவம் பேசினபடி இது.

———-

13. கீர்த்திமை பாடிப் போய் :
ஆறும் பயனுமாய் தேறாது பாடிப்போம்
பேறு அதுவேயாய் கந்தல் — கழிந்தமை
கூறு மொரு நாலும் மூன்றும் இரண்டும் வான்
ஏற பரமனைப் போய்ப் பாடு.

அறம், பொருள், இன்பம், வீடு என்கிற புருஷார்த்த சதுஷ்டய கோஷ்டிக்கும்;
அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு , ஞானிகளாகிய கோஷ்டி திரயத்துக்கும்;
முனிவர்களும், யோகிகளுமாகிற நித்ய, முக்த உபய கோஷ்டிக்கும்;
உண்ணும் சோறு பருகு நீர் எல்லாம் கண்ணன் – என்று ஆழ்வாருக்கு
திருக்கோளூர் எம்பெருமானும் என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினானான் என்று
காட்கரையப்பனுக்கு ஆழ்வாருமாக அனன்ய சாபீஷ்ட்டா கோஷ்டிக்கும் உத்தேஸ்யம் இதுவேயாய்
இங்குத்தையார்க்கு பகவத் ஸன்னதிக்கு (திருப்பாவை ) பாடிப் போகையே பிரயோஜனம்.
அங்குத்தையார்க்கு பகவத் முக்கோலாசகர கைங்கர்யனுவர்தனமாகிற – போய்ப் (சாமகாயம்) பாடுகையே பிரயோஜனம்.

—————

16. நென்னலே வாய் நேர்ந்தான் :
கூடி இருந்ததாம் காலத்து கண்ணன் தான்
தேடி உரைத்தவையே கொண்டு யாம் — நாடி வந்தோம்
நாயகநீ! கை நீட்டி ஆகாதென் ஓவாதே
நேய நிலைக் கதவம் நீக்கு.

பூ வராஹன் வார்த்தை – அஹம் ஸ்மராமி மத் பக்தம் – நாராயணனே நமக்க பறை என்கிற உபேய புத்தி அத்யவசாயத்தோடே வந்தோம்.
பெருமாள் வார்த்தை – தவாஸ்மி இதீச யாசதே ததாம் ஏதத் விரதம் – பரமனடிப் பாடி பாகவதேக உபாய புத்தியோடே வந்தோம்.
கீதாசார்யன் வார்த்தை – அஹம் துவா மோக்ஷ இஷ்யாமி மாஸுச : – நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று உபாயாந்தரங்களை விட்டு வந்தோம்.
இப்படி பேற்றுக்கு துவரிக்கையும்,
உபய உபேய நிஷ்டையாகிற தூய்மையோடே வந்தோம் என்றவாறு.

விபவாவதார எம்பெருமான்கள் மட்டுமல்லாது, அர்ச்சாவதார பெருமாள்கள் மொழிந்தமை கேட்ட வந்தோம் என்பதை
நம்பெருமாள் வார்த்தை – அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ – நீராட என்று பகவத் ஸம்ஸ்லேஷத்தையும்,
பாடி என்று மங்களாசாஸன தத்பரதையோடே ஸாலோக, ஸாமீப்ய ஸாயுஜ்யத்தை ஆஸாசித்து வந்தோம்.

மலையப்பன் வார்த்தை – தொண்டை மன்னவன் திண்திறல் ஒருவருக்கு வளங்கொள் மந்திரம் அருளிச் செய்தவாறு –
திருமந்திரத்தில் உள்ள நம பதத்தை பூர்வ உத்தர ஸ்தானாதிகளில் வைத்து பார்க்கிற வகையில்
ஓம் நம :
நமோந் நம :
நாராயணாய நம :
என்ற கணக்கிலே
நாராயணனே நமக்கே (1) என்றும்
நாராயணன் மூர்த்தி (7) என்றும்
நாற்றத்துழாய்முடி நாராயணன் (10) என்றும்
ஸ்வ சேஷத்வம் , அன்ய சேஷத்வம் கழிந்தவர்களாய் பகவத்தேக சேஷர்களாய் பாடிக்கொண்டு வந்தோம்.

தேவப் பெருமாள் ஆறு வார்த்தை – நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறுமானிட்டவர் நாம் செய்வதென்
வில்லிபுத்தூர் கோன் விட்டுசித்தன் வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே – என்ற கணக்கில்
பகவத் வசனங்களே யானாலும், கபிலாவதாரம், புத்தாவதாரம் போன்ற
ஆழ்வார் ஆசார்யர்கள் கைக் கொள்ளாத உபதேசங்களை கழித்து,
எம்பெருமானார் மதித்த வார்த்தை என்று கொண்டு – உய்யுமாறு எண்ணி வந்தோம்.

இன்னும் திருமாலிருஞ்சோலை மலை அழகர் வார்த்தை – ராமானுஜ சம்பந்திகள் அகதிகள் அல்லர் என்றும்,
அவருடைய திருவடி சம்பந்தம் போலே திருமுடி சம்பந்தமும் உத்தாரகம் என்பதை வெளியிட்ட படியே
ராமானுஜ அனுயாயிகளாக – தனித் தேட்டமாக அல்லாது, துணைத் தேட்டமாக வந்தோம்.

நாதமுனிகள் யோக சாஸ்திரத்தை குருகை காவலப்பனிடம் வைத்துப் போக்கி,
பிரபன்னாம்ருதமான திருவாய்மொழி மற்றும் ஏனைய ஆழ்வார்கள் பாசுரங்கள் 4000மும் அர்த்தத்தோடே
நம்மாழ்வாரிடம் பெற்றபடி உய்யக் கொண்டார் பக்கலில் கொடுத்து மணக்கால் நம்பி, ஆளவந்தார் வழி 74 மதகுகளைக் கொண்ட
வீராணம் ஏரியைப் போன்ற எம்பெருமானார் வரை சேர்த்த கணக்கிலே
சாதன பக்தியைக் கழித்து, சித்தோபாயமான கண்ணனையே நாடி
விபவத்திலும், அர்ச்சையிலும் கண்ணன் தான் வாயமலர்ந்தருளிய படிக்கும்.
ஆழ்வார் ஆச்சார்யர்கள் காட்டிக் கொடுத்த படிக்குமாய் வந்தோம் வந்தோம் .

தூமலர் தூவித் தொழுது என்று உபாய புத்தி தியாகமும்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் என்று உபேயத்தில் களை அறுக்கையுமாக
நீராடம் – பாஹ்ய கரண சுத்தி
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – ஆந்தர சுத்தி
ஆகிற தூய்மையோடே வந்தோம்.

நீ நேய நிலைக் கதவம் நீக்கு – என்று துவார சேஷிகள் காலில் விழுகிறாள் ஆண்டாள்.

—————

17. அறம் :

அம்பரமே தண்ணீரே சோறே அறம் கண்ணன்
எம்பெருமான் தம்மின் இரக்கமும் — அம்மனோய்!
செம்மை சேர் நற் தருமம் என்றாக செய்த வேள்வி
தன்மையார் நற் பேறும் அஃது.

வஸ்திர தானம், தீர்த்த தானம், அன்ன தானம் என்று வேண்டியவர்களுக்கு அத்தை கொடுத்ததைப் போல்
தாரக போஷக போக்கியம் எம்பெருமான் கண்ணன் என்றிருக்கிற எங்களுக்கு அவனைத் தந்தால் ஆகாதோ?
என்கிறார்கள்.
சாதன தர்மங்களைக் கொண்டு கண்ணனை அடைகையிலும், சித்த தர்மமான கண்ணனைக் கொண்டே
அவனை அடைகை உத்தேச்யம்.
அவனைக் கொண்டு அவனை அடையாகிறது, அவனுடைய கிருபை வாத்சல்யத்துக்கு இலக்காகை.

ந சமஸ்ய கஸ்ச்சிது அப் அதிக குதோந்யோ? என்கிற ரீதியில், தனக்குத்தானே பிரதிபந்தியாய்,
தன்னை ஆஸ்ரயித்துள்ள குணங்களுக்கு இடையில் போட்டி இருந்தால், வெல்லுகிற குணம் தயையும், இரக்கமும் ஆம்.

ரக்ஷிக்கும் போது அதற்கு பிரதி பந்தகங்களான புண்ய பாபங்களைத் தொலைத்தே ஸ்வீகரிக்கிறான் எம்பெருமான் என்பது
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபயிது – என்பதிலிருந்து தெரிகிறது.
அப்படி புண்ய பாபங்களை கழித்தலாவது
ஈஸ்வரன் அவைகளை
தன் அஜ்ஞானத்துக்கு விஷயமாக்குகையும்
காணாக் கண் வைகையும் என்பர்.
இப்படி கிருபை உயர்ந்து, அவனுடய ஞானத்துக்கு – அஜ்ஞானமாகிற கொத்தை தோஷமன்றோ என்னில்
ஆந்ரு ஸம்சயமடியாக வருகிற எதுவும் அடிக் கழஞ்சு பெறும் .

ஆக , அதுவே பற்றாசாக சரணாகதியை அனுட்டித்தவர்கள் – செய்த வேள்வியராய், சித்த தர்மம் கை புந்தவாறே,
சாதன தர்மங்கள் பார்த்தியாஜ்யமோ என்றால்? அன்று.
பகவத் ப்ரீதிகாரித்த முகோலாச கார்யம் கைங்கர்யம் என்று பகவத் ஆந்ரு ஸம்சயத்துக்கு விஷயமாய்
வர்ண தர்மம்,
புருஷ தர்மம்
புத்ர தர்மம் –ஆகிய
சாமான்ய
விசேஷ தர
விசேஷ தம
தர்மங்களை விடாதே பாலாபிஸந்தி இன்றி, கிருஷ்ணார்ப்பணம் என்கிற அளவிலே அனுஷ்டித்துப்
போர வேண்டுவது அவஸ்யாபேக்ஷித்தம் என்பதே இப் பாசுர ஸ்வாபதேசம்.

——–

17. எம்பெருமான் நந்த கோபாலன் :

சுள்ளிக்கால் அன்ன அடியார் அவர் தலைவர்
உள்ளம் பெரியதன் போதமுடன் — எள்ளி நமைத்
தள்ளாதே கொள்ளும் தகைமை கொழு கொம்பாய்
வள்ளி மேய பந்தல் கிடத்து.

——-

உந்து மத களிற்றன் பாசுரம் பிராட்டியின் புருஷகார வைபவம் சொல்ல வந்தது.
நாயகனாய் நின்ற பாசுரத்தில் துவார சேஷிகளின் அனுமதியை பெறுவதன் மூலம் ஸ்தாநீகர்களை முன்னிட்டார்களாய் ,
பின் அம்பரமே தண்ணீரே பாசுரத்தில் நந்தகோபன், யசோதை, நம்பி மூத்த பிரான் இவர்களை
வேதம் வல்லார்கள் என்ற கணக்கிலே அவர்களையும் முன்னிட்டுக் கொண்டு கண்ணனை துயிலெழுப்ப பார்க்க,
அது பிராட்டி புருஷகார வனந்தரம் மாகவேண்டி, அவனும் வாளா கிடந்தான் .

தூதோஹம் என்று சொன்ன திருவடி, பிராட்டி தரிசனவனந்தரம் தாசோஹம் என்றதும்
அவள் ராவணன் விஷயமாக செய்த மித்ர ஒளபயிதம் கர்த்தும் ஸ்தாநம் பரீப்ஸதா என்கிற உபதேசங்கள்
அவனுக்கு பலித்ததாக கண்டில்லையாயினும் –
கண்ணனெம்பெருமான் தேர்த்தட்டில் சொன்ன வார்த்தை அருச்சனர்க்கு பலிக்காமல் –
மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு (நான்முகன் திருவந்தாதி-50) என்று திருமழிசை ஆழ்வாருக்கு
எப்படி காரியகரமாயித்தோ –
அதுபோல ஹநூமானுக்கு சேஷத்வ ஸ்வரூபத்தை உண்டாக்கி
பரீஷ்வங்கோ ஹநூமத : என்று ராம ஆலிங்கன பல பர்யந்தமாயிற்று.

பிராட்டி சன்னதியாலே காகம் தலை பெற்றது. அதில்லாமையால் ராவணன் மாண்டான் – இத்யாதி
பிரபத்தி தர்மங்களை மீறியதான தங்கள் தவற்றை ஆண்டாளும் கோபியர்களும் உணர்ந்து ,
கிருஷ்ணாவதாரத்தில் புருஷகார பூதையாக விளங்குகிற நப்பின்னை பிராட்டியைத் துயில் உணர்த்துகிறார்கள் இதில்.

இப்படி இந்த மூன்று பாசுரங்களுக்குமான சங்கதி அமைத்திருக்க, மூன்றிலுமே நந்த கோபனை பிரஸ்தாபித்தாளாய்

நாயகனாய் நின்ற நந்த கோபன் (16)
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்த கோபாலன் (17)
உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் (18)
என்பதாக அழைக்கிறாள் ஆண்டாள்.

எம்பெருமான் கண்ணன் வகுத்த சேஷியாய் இருக்க, நந்த கோபனை எம்பெருமான் என்றது,
பகவத் சமாஸ்ரயண சாலியான ஆசார்ய கிருதயத்தைக் பண்ணுவிப்பதைக் கொண்டு.
தேவு மற்று அறியேன் என்று இருக்கிற மதுரகவி, வடுக நம்பி நிலையில் நின்றவர்களுக்கு ஆச்சர்யனே பிரதம சேஷி அன்றோ?

நந்தன் என்றால் ஆனந்த வர்த்தகன். பகவத் குணானுபவ கைங்கர்யங்களில் எப்போதும் ஆழ்ந்தவர்களுக்கு
ஆனந்தத்தில் குறைவு இல்லையாய் நந்திதர் ஆவர் இவர்.

கோபன் ரக்ஷகன். தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய ஆத்ம க்ஷேமத்தில் ஊன்றி இருப்பவராய்,
மங்களாஸாசனத்துக்கு அவர்களை ஆளாக்கும் இவருக்கு ரக்ஷகத்வம் ஸ்வாபாவிகம்.

அடுத்து , அம்பரமே, தண்ணீரே,சோறே அறம் செய்யும் நந்த கோபாலன் என்றது

அஹமன்னம் அஹமன்னம் என்பதான ஆத்ம வஸ்துவை சோறாக பகவானுக்கு சமைக்குமவர். அப்படி
எனக்காராவமுதாய் எந்தவியை இன்னுயிரை
மணக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்
என்று போக்கிய உண்ணும்போது விக்கித் தடுமாறினால் தண்ணீர் குடிப்பது போல, பிராப்பியத்திலே வந்தால்,
என்னுடைய ஆனந்தத்துக்காக என்கிற ஸ்வபோக்த்ருத்வ புத்தியை விலக்குமவர்.
உண்டு பசியாறி அடைக்காய் திருத்துவது போலே , தேக விலக்ஷண சின்னங்களான
ஆடை அலங்கார மேனி மினுக்கம் அம்பரம் – அவையும் பகவானோட்டை உண்டான
ராஜகுல மாஹாத்மியத்துக்காக என்னப் பாந்தம்.

இன்னும், உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன் என்றது
அகங்கார செருக்காகிற மதம் கொண்டு வாதிட வரும் பரபக்ஷ வாதிகளுக்கு சளைக்காத ஞானாதிகர் ஆசாரியன்
என்பதாக கிருஷ்ணனோடு தங்களை சேர விடுதலாகிற கடக்க கிருத்யம் செய்ய வேண்டி
நந்த கோபரை, ஆச்சாரியனாகவே ஆண்டாள் காட்டினபடி இவை.

————-

19. குத்து விளக்கு :

தன்னையும் காட்டி புறச் சூழலும் காட்டுவதாம்
மின்னனய நல் விளக்கு போல் ஆசான் — துன்னிருள்
நம்மின் துறத்துவனேல் அன்னை அவளுணர்த்த
தம்மின் வழி நடத்தும் மால்.

உன்னுடைய மைத்துனனை எங்கள் மணாளன் ஆக வேண்டும் படியாய்
விசிறி கண்ணாடி அத்தோடு தந்து எம்மை நீராட்ட வேண்டும் என்று நப்பின்னை பிராட்டியை
பிரார்த்திப்பதாக அமைந்த பாசுரம்.
மாஸுச : என்றிருக்கிற பவனுடைய அபய ஹஸ்தம் தாமரைக் கை என்றால் அவன்
ஸ்வாதந்திரனாய் வந்தாய்ப் போல் வாராதான் ஆனபடியால் அதற்கு அஞ்ச வேண்டா என்கிற
பிராட்டியினுடைய கை செந்தாமரைக் கை ஆனபடி.

கேசவன் தமர் பதிகத்தில் ஆழ்வார் – மாசதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்கின்றவா – என்றதும்
ஸ்வ பிரயத்னத்தால் பகவானைக் கிட்டுவது இளிம்பு.
பாகவதேக உபாய நிஷ்டராய் அவனுடைய கிருபாதிசயத்தாலே அவனைக் கிட்டுவது சதிர்.
மா – பிராட்டி. அவள் கொடுக்கப் பெறுவது மாசதிர்
என்று காட்டினபடி உக்கமும் தட்டொளியும் தந்து உன்மணாளனையம் தந்து இப்போதே எம்மை நீராட்டு என்று
பிராட்டி பரிகாரமாய் நின்று பேசுகிறாள் ஆண்டாள்.

கோதா கீதையான திருப்பாவையும் – ஸ்ரீ கிருஷ்ண கீதையாம் பகவத் கீதையைப் போன்ற அமைப்பைக் கொண்டு
இருப்பது அதற்கான சிறப்பு. அதுதான் எங்கனே என்னில்?

குத்துவிளக்கு எரிய – ஞானம் பிரஜ்வலிக்கிறது என்ற பொருளில் ஒளி இருந்தால் இருட்டு போய்விடும்.
இங்கு சொல்லப்பட்ட இருட்டுதான் – அகவிருளும், புறவிருளும் . இத்தை போக்க

பொய்கையாழ்வார் ஏற்றிய விளக்கு – வருத்தும் புறவிருள் மாற்ற
பூதத்தாழ்வார் – இறைவனைக் காணும் இதயத்திருள் கெட
பேயாழ்வார் – கோவலூள் மாமலராள் கண்டமை காட்டும்
மூவர் ஏற்றிய ஜ்ஞான விளக்கு.

கீதாசார்யன் காட்டும் சோபான படிக்கட்டில்
படிக்கட்டு – 1
பகவத் ஸாட்சாத்காரத்துக்கு பிரதிபந்தகமாக உள்ள இதயத்திருள் கெட
நியதம் குரு கர்மத்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண : – கீதை 3.8.
அப்படி கர்மாநுஷ்டானங்களை விடாது செய்யச் செய்ய
கர்ம யோகத்தில் வருவதற்கான – தேஹ அதிரிக்த ஆத்ம ஞானம் மாகிற ஓடம் அநாதிகால பாபமாகிற கடலை தாண்டுவிக்கும்.

ஜ்ஞான ப்லவேநைவ வ்ரிஜினம் ஸந்தர்ஷயஸி – கீதை 4.36.
ஓடம் மறுகரைக்கு மீண்டுவிடுமோ என்று பயந்தாயே ஆகில்

ஞாநாக்னி ஸர்வ கர்மாணி பஸ்ம ஸாத் குருதே ததா – கீதை 4.37.
இல்லை அர்ஜுனா – அதே ஜ்ஞானம், அக்கினியைப் போலே பாப கூட்டத்தைப் பஸ்மமாக்கி விடும்.
எல்லா பாபங்களையும் என்றால், பக்தியை ஆரம்பிக்க தடையாய் யாவை பாபங்கள் உள்ளனவோ
அவை அனைத்தும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

படிக்கட்டு – 2

யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந : – கீதை 6.19.

எப்படி காற்று வீசாத இடத்தில் தீபமானது அசையாது நின்று ஒளிவிடுமோ அதுபோல
விஷயாந்தர சுகத்தில் மனது லயிக்காத படிக்கு ஆத்ம விஷயத்தில் மனதை உறுதிபடுத்த வேண்டும்.

படிக்கட்டு – 3

ஜ்ஞாநாஞ்சன சலாகையா ஸக்ஷுர் உன்மீலனம் – ஆசார்ய உபதேசம்.

அதற்கு ஆத்ம சிந்தனம் மட்டும் போதாது. ஆத்ம ஜ்ஞானம் பகவத் ஜ்ஞானமளவாக வளர
ஆசார்ய உபதேசங்களாகிற திறவு கோல் கொண்டு ஜ்ஞானக் கண்ணை திறந்து கொள்ள வேண்டும்.
அதற்கு ஆச்சார்ய ஸந்நிதி அவசியம்.
அடுத்து பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் மேன்மேலும் வளர ஆசார்யா அநுவர்த்தனம் பண்ணக் கடவதாய்

தத்வித்தி பிரணி பாதேந பரி பிரச்நேன சேவையா
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானிந : தத்வ தர்ஸிந : – கீதை – 4.34.
என்கிற கீதையின் வழியிலேயே ஆண்டாளும்

செய்யும் கிரிசைகள் கேளீரோ என்று
நாட்காலே நீராடி
செய்யாதன செய்யோம்
தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
என்பதாக கீதையில் சொல்லப்பட்ட நியதம் குரு கர்மத்வம் என்பதை பேசினாள்.

அதை ஆத்ம வித்தையோடு செய்ய வேண்டும் என்பதையும்
நாராயணனே நமக்கே பறை – என்கிற உபாய-உபேய அத்யாவசாயம் சொன்னபடி.

கர்மாநுஷ்டானங்களால் அநாதிகால கர்ம வாசனா ரூபமான பாபங்கள் கழியும் என்பதை
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்றாள்.

இனி ஜ்ஞானம் பகவத் விஷயமளாவாக வளர
அஜ்ஞானம் குறைந்து ஜ்ஞானம் வளர வேண்டும் என்பதை வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்றும் ,
பாபம் குறைந்து புண்யம் வளர வேண்டும் என்பதை செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்
என்று பேசினாள் ஆண்டாள் .

தவிரவும், பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் மென்மேலும் வளர ஆசார்யா அநுவர்த்தனம் பண்ணக் கடவதாய்
பாசுரம் 16-17-18 களில் கடக கிருத்யரான நந்தகோபரைப் பற்றி பிரஸ்தாபித்தாள்.

பாசுரம் 18-19-20 களில்
நப்பின்னையை புருஷகாரமாக பற்றி கண்ணனோடு சேர்ப்பிக்க பிரார்திக்கிறாள்.
இங்கு உள்ள ஸ்வாரஸ்யம் என்ன வென்றால்,
பாசுரம் 18-ல் ஆசார்ய சம்பந்தமும், புருஷகார பிரபத்தியும் சேர்த்து சொன்னதுக்கு தாத்பர்யம்
ஆசார்யன் ஆஸ்ருதரான நமக்கு ஆத்ம-பரமாத்மா விஷயமான ஜ்ஞானத்தை கிளப்பி விடுவதை போலே,
புருஷகார பூதையான பிராட்டி
பகவன் நிக்ரகத்தை அநாஸ்ரிதர்கள் விஷயத்தில் மடை மாற்றி,
ஆஸ்ரிதர்கள் விஷயத்தில் ஸ்வாதந்திரியம் தலை சாய்ந்தால் தலை எடுக்கும் குணங்களை கிளப்பி விடுகிறாள் –
என்பதான கிருபை இருவருக்கும் பொதுவானதாய்க் கொண்டு.

மேலும்
தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத – அந்த நாராயணனையே சரணமாக பற்று என்று கண்ணன் சொல்ல ,
அர்ஜுணன் – கண்ணன் இவன் தானே நாராயணன், அந்த நாராயணனை பற்று என்கிறானே – என்று
குழம்ப அதை விலக்கவே பின்பகுதியில்
மாமேகம் சரணம் விரஜ – என்று பேசினான்.

ஆனால் ஆண்டாளோ – நாராயணனே நமக்கே பறை தருவான் என்றும்
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் – உனக்கே நாமாட் செய்வோம் என்றும் ஸு ஸ்பஷ்டமாக பேசினாள்.

இங்கு சாந்தோக்யம் 4வது பிரபாடகத்தில் உள்ள உபகோஸல விதை பிரகரணத்தில் சொல்லப் பட்ட
ஜாபால – உபகோஸல விருத்தாந்தம் ஸ்மரிக்கத்தக்கது .

ஆசாரியரான ஜாபாலர் சிஷ்யனான உபகோஸலனுக்கு பிரஹ்ம வித்யை பூர்ணமாக உபதேசிக்காமல் காலம் தாழ்த்த ,
பிள்ளைக்கு ஆசார்யானுகிரகம் ஏற்படவேயில்லையே என்று ஏக்கம் பிறந்து தவிக்க,
இடையில் ஆசாரியன் காரியாந்தரமாக வெளியூர் சொல்ல வேண்டி வந்தது.
எனவே சிஷ்யனிடத்தில் அக்நி சந்தானத்தை ஆராதித்துக் கொண்டு காத்திரு என்று சொல்லி பயணத்தில் உத்தியுக்தரானார்.
சிஷ்யப் பிள்ளைக்கு சோறு தண்ணீர் செல்லாமல் , ஆசார்யன் நியமித்த கைங்கர்யத்தை நடத்திப் போர ,
ஆச்சார்ய பத்நி விசாரித்தும் நிலைமை சீர்படாது போக, நித்ய ஆராத்ய அக்நி தேவதை மூவரும்,
பிள்ளைக்கு இரங்கி தாங்கள் சில அர்த்தங்களை உபதேசித்தனர்.

பிராணன் தான் பிரஹ்மம்.
அந்த பிரஹ்மத்துக்கான ஸ்தானம், அதை அடைய உண்டான கதி இது விஷயமாக
அக்நி தேவதைகள்
க(1)ம் பிரஹ்ம – சுகம் = பிரஹ்ம ஸ்வரூபம் ஆனந்தம்.
க(2)ம் பிரஹ்ம – ஆகாசம் = பிரஹ்மம் அபரிச்சின்னம் .
யதேவஹ க(1)ம் ததேவ க(2)ம்.
யதேவ க(2)ம் ததேஹ க(1)ம்
என்று பிரஹ்ம ஸ்வரூபத்தைச் அக்நி தேவதைகள் சொல்லி நிற்க,
அந்த பிரஹ்மத்தை அடைய அவன் ஸ்தானத்தை உபாஸிக்க உபயுக்தமான அவன் குணத்தை அவனை அடைவிக்கும் கதி
இவை பற்றி சொல்ல வேண்டும் என்று பிள்ளை கேட்க
ஸம்யக் வாமநத்தவம்
வாமநீத்தவம்
பாமநீத்வம்
அக்ஷி புருஷன் பிரஹ்மம் என்பதாக
முதல் இரண்டுக்கு விளக்கம் ஓரளவு சொல்லி
ஆச்சார்ய ஸ்துதே கதிம் வக்தா – என்று மார்க்கத்தை ஆச்சர்யனிடம் உபதேசமாய் பெற்றுக்கொள் என்று சொல்லி நிறுத்தினர்.
திரும்பி வந்த ஆச்சர்யனிடம் நடந்தத்தைக் கூறி, மார்க்கமான அர்ச்சிராதி கதியை உபதேசமாகப் பெற்றான் உபகோஸலன் என்பது சாந்தோக்யம்.

கீதை 1-6 அத்யாயம் ஆத்மோபாசனம்
7- 12 அத்யாயம் கர்மத்தால் வளர்ந்த ஜ்ஞானத்தால் வந்த பக்தி உபாசனம்.
அந்த பக்தி வளர்வதற்கான பகவத் ரூப, குண, ஒளதார்யங்களைப் பற்றி
தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்
ததாமி பக்தி யோகம் யேந மாம் உபயாந்தி தே – கீதை 10.10.

தேஷாமேவ அநுகம்பார்த்தம் அஹம் அஜ்ஞான ஜந்தமஹ
நாசயாமி ஆத்ம பாவஸ்த : ஜ்ஞான தீபேன பாஸ்வதா – கீதை 10.11.
என்னுடைய அழகான திருமேனியை அவர்கள் உள்ளத்துக்கு விஷயமாக்கி குணாநுபவத்தை வர்த்திப்பித்து,
கர்ம வினை பாசம் கழற்றுகிறேன்.
ஸ்தானம், குணம், கதி என்று மூன்று விஷயங்கள் போலே ஆண்டாளும் அம்பரம், தண்ணீர், சோறு என்பதாக சொல்லி
உபகோசலனுக்கு அருளிய மூன்று அக்நி போலே இவர்களுக்கு அருள நந்தகோபனை மூன்று முறை பிரஸ்தாபித்து,
கீழே சொன்ன விளக்குகளைக் காட்டிலும் பிரஜ்வலமான விளக்கு, பகவத் ஸ்வாதந்திரியமாகிற இருட்டு களைய ,
நப்பின்னை பிராட்டியாகிற விளக்கு என்பதாக இந்த பாசுர ஸ்வாபதேசம்.

——————

20. உன் மணாளனைத் தந்து :

மைத்துணன் உன் மணாளன் மாலோலன் மாலரையன்
மையகண்ணி நாதன் திருவுக்கும் — ஐய
திருவான செல்வன் மலராள் தனத்தன்
ஒருவன் அவன் தா எமக்கு!

21. ஏற்ற கலங்கள்:

ஏதிலார் எம்மனோர் ஆதரித்து ஆசரியன்
ஈதானாய் அல்பா வதி ஆயுள் — போதில்
பொழுதறிந்து போற்றி அலகில் தருமம்
விழைந்து கேட்ப்பார் ஏற்ற கலம்.

சிஷ்யன் தன் சரீரம் வஸு விஞ்ஞானம் அனைத்தையும் அதாவது
சரீரம் அர்த்தம் பிராணம் ச ஸத்குருப்யோ நிவேதயேத் என்று ஆசாரியனுக்கு சமர்ப்பித்து
அவர் கைகாட்டிகிற இடத்தில் அவருக்கு பிரதிநிதியாய் இருந்து அவருக்கு அளித்த மிச்சத்தில்
ஜீவனம் நடத்துவதாக பாவிக்க வேண்டும்.அங்கனே ஆசார்யன் தானும் சிஷ்யனுடைய ஆத்ம உஜ்ஜீவனத்தில்
உத்யோகிக்கும் போது தன்னை ஸ்வ-ஆசாரிய சிஷ்யனாய் , தன் சிஷ்யனை ஸ பிரம்மசாரியாய் நினைத்து பரிமாற வேண்டும் .

இதுவே சத் பாத்ர சத் வினியோக ஏற்ற கலத்துக்கான லக்ஷணம். மாறாடி நினைகை அவத்யமாம்.
இப்படி குறைந்த ஆயுசில் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற பேராசையோடே
ஸுக பிரம்மத்திடம் பரீக்ஷித்து ஸ்ரீமத் பாகவதமும் ;
வைசம்பாயனரிடம் ஜனமேஜயன் மஹா பாரதமும் ;
ஸ்ருத்வா தர்மான் அஸேஷேண என்று தர்மங்களை கேட்பதில் விருப்பம் உடையவனாய்
பீஷ்ம பிதாமஹரிடம் யுதிஷ்டிரர் விஷ்ணு ஸகஸ்ரநாம அத்தியாயமும் ;
மைத்ரேயர் கேள்விகள் கேட்க கேட்க விஷ்ணு புராணம் விரிந்தார்ப் போல், ஒருத்தருக்காய் சொன்னது ஊருக்கய்
பராச மஹரிஷியிரிடம் மைத்ரேயர் விஷ்ணு புராணமும்;
தான் கிருபணன். சிஷ்ய ஸ்தேஹம் சாதிமாம் பிரபும் என்று கீதாரியனிடம் அர்ஜுணன் பகவத் கீதையும்;
ஆழ்வாருடைய மைத்ரேய பகவான் ஆயிற்று அவருடைய அவா என்று பரபக்தி, பரஜ்ஞான, பரம பக்தி
இன்னும் சாதன பக்தி, சாத்திய பக்தி, சகஜ பக்தி கொண்டு அவருடைய பிரபந்தம் வளரக் காரணம்
அவருடைய பகவத் பிரேமமாகிற காதல் – பயன் அன்றாகிலும் பாங்கல்லர் ஆயினும் – நெஞ்சில் நிற்கப்பாட்டி –
முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கு அன்பையே என்கிற கிருதஜ்ஞதை யோடே
நம்மாழ்வாரிடம் மதுரகவி ஆழ்வார் பெற்ற திருவாய் மொழியும் ;
நின்றனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே – என்று பேசிய திருமங்கை ஆழ்வாரிடம் ,
தான் பெரியவாச்சான் பிள்ளையாகவும் , ஆழ்வார் கலிகன்றிதாஸர் என்கிற நம்பிள்ளையாகவும் பிறக்க –
அவரிடம் சிஷ்ய விருத்தி பண்ணி பிரபந்தங்கள் நாலாயிரத்துக்கும் பொருள் கேட்டு உபகரித்த
திருக்கண்ணமங்கை பத்தராவி பெருமாள் போலேயும்
கேட்டவர்கள் அனைவரும் ஏற்ற கலங்கள் என்றாலும்
ராமனுக்கு விஸ்வாமித்திரரும், கிருஷ்ணனுக்கு சாந்தீபினியும் ஆசார்யனாக கிடைத்தபோது அடைந்த அபூர்த்தி
பெரிய பெருமாள், நம்பெருமாள் இருவரும் கண்ணனும், ராமனுமாய் மணவாள மாமுனி பக்கல்
துவயார்த்த விவரணியும் தீர்க்க சரணாகதி பிரபந்தமாயும் இருக்கிற திருவாய்மொழி ஈடு காலக்ஷேபம் பண்ணினார்களாய்,

தாம் அவருக்கு சிஷ்யனான தன்மைக்குச் சேர பகுமானமாக தன்னுடைய
சேஷாபீடத்தையும்
ஸ்ரீசைலேச தனியனும் ஸமர்ப்பித்து
அவருடைய திருவத்யயன உற்சவாதிகளை நடத்திப் போருவர்களாய்
எதிர் பொங்கி மீதளித்த பிரபாவம் மேல் சொன்ன மற்றய யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம்.

பதரியிலே தானே ஆச்சாரியனுமாய், சிஷ்யனுமாய் திருமந்திரத்தை வெளியிட்டருளினது போக ,
மாமுனிகள் பக்கல் ஆசார்ய பிரதிபத்தியோடே , சிஷ்யன் இருக்கும் இருப்பை நாட்டாருக்கு காட்டிய –
ஏற்ற கலத்துக்கு – ஸத்தான திருஷ்டாந்தம் பெரிய பெருமாளே எனலாம்.

——————

22. செங்கண் :

கழிவிரக்கம் காட்டி கழித்தன போக்கி
அழல விழித்து அகல்விப்பான் — பாழே
பல பல செய்து புகல் அயல் இல்லா
புலையனேர்க்கு அங்கண் அருள்.

அ-கார வாச்ய சமாகமத்துக்கு ஆறு படிக்கட்டு :
ஈஸ்வரஸ்ய ஸௌஹார்த்தம்
எதுர்ச்சா ஸுக்ருதம்
விஷ்ணோர் கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபிமுக்யம்
சாது சமாகமம்

அதில் நடுவாக உள்ளது விஷ்ணோர் கடாக்ஷம்.
கதிர் மதியம் போல் முகத்தான் என்று தொடங்கி செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாயாவோ என்று
கடாக்ஷ வீக்ஷண்யத்தை பிரார்த்திக்கிற படி இது.
தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு
நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி ”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள்.
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்து என்று பிராப்பிய விரோதி கழிக்கையும்
இனி மேலில் பாட்டுகளில் வெப்பம் கழிந்து கூடி இருந்து குளிர்தலும் சொல்லுகிற படி.
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து என்று இருப்பதால் இது ஒரு புகழ் மாலை.

காப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ – என்பதாக
எம்பெருமான் செங்கண்ணுக்கு உபமானமாக தாமரையை சொல்லுகிறது சாந்தோக்யம் ;
அவனுடைய கண்ணுக்கு உபமானம் இட்டுச் சொல்லுகை என்பது அதனை அழகாக்குமத்தனை.
உபமானம் நேர் நில்லாமையாலே உபமேயம் தன்னை விசேஷிக்கிறது.
தன்னுடை பூர்வபக்ஷ கிரந்த வாசிப்பின் போது இந்த வாக்யத்திற்கு யாதவ பிரகாசர் சொன்ன அபார்தத்தைக்க கேட்டு கலங்கி ,
பகவத் ராமானுஜர் காட்டுகிற விசேஷார்த்தம் இங்கு நோக்கத்தக்கது :

கப்யாஸம் = கபி + ஆஸம் = சூரிய மண்டலத்தை இருப்பிடமாக உள்ள பிரஹ்மத்தை உபாஸ்யமாக சொல்வது போல,
புண்டரீகம் போலேயான அக்ஷிணியை இருப்பிடமாக உள்ள பிரஹ்மம் உபாஸ்யம் என்கிறது .
கப்யாஸம் என்பதற்கு உபாசன ஸ்தானம் அர்த்தம் என்கிற முதல் யோஜனை இங்கு சேராது.

கபி + ஆஸம் – கபி = குரங்கு பிருஷ்டம் , புண்டரீகம் என்று உபமான துவயமும்;
உயர்ந்த பிரஹ்மத்துடைய திருக்கண்களுக்கு தீன உபமானமும் கூடாது ஆகையால் இந்த இரண்டாவது யோசனையும் தள்ளுபடி.

ஈஷத் விகசித = சிறிதளவு மலர்ந்த என்று பொருளும் சரிப்படாது. அவன் மலங்க விழித்தால் நம்மால் தரிக்கப் போகாது.
அத்தாலேயே ஆண்டாள் செங்கண் சிறுச்சிறிதே சாத்மிக்க சாத்மிக்க எம்மேல் விழியாவோ என்கிறாள்.

ஸ்வாமி எம்பெருமானார் காட்டுகிற அர்த்தமோ ஆழ்வார்கள் திருவாக்கை அடியொற்றித் தந்த விளக்கமாகும்.

கம்பீரம்பு சமத்பூத (1) ஸுவிருஷ்ட நாள அஸ (2) ரவி கர விகசித (3) புண்டரீக தள அமலஆயத ஈக்ஷணம் என்பதாக
சொல்லுகிற அழகு – ஈதோர் அற்புதம் கேளீர் என்று வாய் வெறுவத் தகும்.

——–

23. சீரிய சிங்காசனத்து இருந்து :
நடுவிலாச்சிக் கீத்த படுக்கை அறை வார்த்தை
காடேற வாயித்தால் கண்ணா! — அடிசியோம்
காண நடந்து அரி ஆசனத்தே வீற்றிருந்து
வேணுமவை ஆய்ந்து அருள்.

ஸவ்யம் பாதம் பிரசரித துரித ஹரம் தக்ஷிணம் குஞ்சையித்வா
ஜாநூன் ஆதாய ஸ்வே இதர புஜம் நாக போகே நிதாய
பஸ்சாத் பாகுத்துவயேன பிரதிபட ஸமநே தாரயந் சங்கசக்ரே
தேவி பூஷாது ஜூஷ்டோ விதரது ஜகதாம் சர்ம வைகுண்ட நாத -என்று பரமபதத்திலான அமரிகை காண அங்குற்றோம் அல்லோம்

வைதேஹி ஸகிதம் ஸுரத்ரு முதலே ஹைமே மஹா மன்டபே
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி–என்று பட்டாபி ராமனாய் இருந்தமை அப்போதுற்றோம் அல்லோம்

எனவே இப்போது எமக்காக நாலெட்டு நடை நடந்து வந்து உன் நடை அழகையும்
சீரிய சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அழகையும்
நம்பெருமாள் நமக்கு திருமாமணி மண்டபத்தில் சேர-பாண்டியன் ஒலகத்தில்
அமர்ந்தமை காட்டி, யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் என்கிறார்கள்.

——-

24. அஞ்சு குடி :

அன்புடை ஆழ்வார்கள் போற்றி என ஏற்றி
நன்குடனே நாளும் வழுத்துலும் — இன்னும்
பெரியாழ்வார் அஞ்சாமைக் காட்டியதுக் கஞ்சும்
பெருமை ஆண் டாளுக்கும் உண்டு.

பிறர் நன்பொருளான ஆத்மபகரம் திருட்டு. பொருள் சரீம். நன்பொருள் ஆத்மா.
பிறர் நன் பொருள் பகவானுடைய சொத்தான ஆத்மா. இந்திரனுடைய சொத்தான மூன்று லோகங்களை
மஹாபலி தன் சொந்தமாக்கினான். அதை மீட்க அன்று திருவிக்கிரமனாய் மூன்றடி மண் கேட்டு,
இரண்டடியால் அளந்து கொண்டதோடு, மூன்றாவது அடியால் துரபிமானகள் தலையில் கால் வைத்து
அவர்களையும் தனதாக்கிக் கொண்டு தளிர் பொறையும் திருவடி என் தலைமேலவே என்று அபிமானம் களைந்தான்.

அடிபாடி என்று தொடங்கி, அடிபோற்றி என்று இடையில் இந்த பாசுரமும்,
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் என்று முடிவிலுமாய் ஆண்டாள் மங்களாசாசனம்.

அளந்து தன்னதாக்கிக் கொண்டதால் ஸ்வாமித்வம் பிரகாசிக்கிறது. ஸ்வம் = சொத்து.
தளிர் திருவடி தலை மேலவே என்றதால் சேஷித்வம் பிரகாசிக்கிறது.
உலகமளத்த பொன்னடியே அடந்துய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே என்றதால் சரண்யத்வம் பிரகாசிக்கிறது.
உழலை இன்ப பேய்ச்சி முலையூடவள் உயிருண்டவன் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் என்று நாடொறும் ஏக சிந்தையனாகி என்றும்
தன்னைத் தவிர்ந்த வேறு ஒன்றையும் சகியாத நிரபேட்சோபாயத்வம் சொல்லிற்று.
தாவி வையம் கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? என்று ஆர்த்தித்தவம் பிரகாசிக்கிறது.
தடந்தாமரை தாள் என்று சொல்லாமல் தடந்தாமரைகட்கே என்று உபமானத்தை சொல்லி உபமேயத்தை சொல்லாமல் விட்டது
முற்றுவமை என்கிற ஸ்வாரஸ்யம் இங்கு நோக்கத் தக்கது.
சதுமுகன் கையில் சதுப்புஜன் தாளில் சங்கரன் சாடையினில் தங்கி வருகிற – விஷ்ணு பாதோதகமாகிற
கங்கை கங்கை என்ற வாசகம் கொண்டு கடுவினை காளையலாமே – கண்டமென்னும் கடிநகர்-தேவபிரயாகை பாசுரம்
இதில் பாவனத்வம் பிரகாசிக்கிறது.
உன் வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து முகப்பே கூவிப் பணிகொள்ளாய் என்று பரிச்சர்யம் பிரார்த்திக்கிறது .

தாளால் அளந்த அசைவேகொல் ? பின்னும் தன்வாய் திறவான் நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்
ஐந்தலைவாய் நாகத் தணை – என்று சிரமிஸித திருவடிகளை ஆஸ்வாஸ படுத்த அலை அடிப்பதாக ஆழ்வார்.
தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூதாமம் சேர்த்து அவையே சிவன் முடிமேல் தான் கண்டு பார்த்தன்
தெளிந்ததொழிந்த பைந்துழாயான் பெருமை – என்று பரத்வ சூசகம் .

மாமுதல் அடிப்போது ஒன்று கவிழ்த்தலர்த்தி மண்முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடிப்போது ஒன்று விண்செலீஇ
நான்முகப் புத்தேள் நாடு வியந்துவப்ப வானவர் முறை முறை வழிபட நெறீஇ தாமரை காடு மலர்க்கண்னொடு
மலர்க் கனிவாய் உடையது போல் இரு ஞாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன கற்பக காவு பற்பல வன்ன முடிதோள்
ஆயிரம் தழைத்த நெடியோர்க்கல்லதும் அடியதோ உலகே? – என்கிற மாதுர்யம், அழகு பேசப்பட்டது.

இப்படியான உன் விக்கிரமங்களுக்கு அன்று பல்லாண்டு பாடாத குறை தீர, இன்று யாம் வந்தோம்.
அறுசுவை அபதானங்களுக்கு ஆறு முறை போற்றி சொல்லி வந்த எங்களுக்கு நீ இரங்க வேண்டும் என்கிறார்கள்.

அதவா

அவனுடைய இரக்கத்துக்கு விருத்தமாய்
உறங்குமவனை எச்சரப் படுத்துவது,
நாலடி நடக்கும் படியாய் விக்ஞாபிப்பது
இத்யாதி காரியங்கள் – அதிபிரவ்ருத்தியாய் முடியாது இருக்க, ’இரங்கு’ என்கிறார்கள்,

————-

25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கரும வினை
கூற பிரிவினை இங்காகல் — மாறமால்
தானும் பிறந்து இருமை வினைத்தீர்துப்
பேணும் கருணை பெரிது.

ஜன்ம கர்மச மே திவ்யம் யோ வேத்தி தத்வத : என்றும்
அப்யுக்தானம் அதர்மசஸ்ச ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் என்றும்
தேவகி பூர்வஸந்தியாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா என்றும்
தாஸாம் ஆவீரபூத் பூமௌ ஸ்வயமான முகாம்புஜ : என்றும்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாரத்தை உயர்வான வார்த்தைகளால் ஸ்ரீ கிருஷ்ணன் தானும்,
ரிஷிகளும் பேசி இருக்க, ஆண்டாள் அவன் பிறந்தமையை மநுஷ்யர்கள் பிறப்பைப் போலே கூறல் தகுமோ? என்னில்

ஆவிர் பூதம்
பிராதுர் பூதம்
என்பதற்கு மறைந்து இருந்தவன் வெளிப்பட்டானாக, தோற்றினதாக பொருள் படும். இல்லாதது உண்டாகாது.
இருப்பதுதான் புலன்களுக்குத் தோற்ற புலப்படும். பூ = ஸத்தாயாம் என்று இருப்பைச் சொல்லி,
ஆவிர்பூதம், பிராத்துர்பூதம் என்று வெளிப்படுதலைச் சொல்லுகிறது.

மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்பது ஜனி = ஜாயதி என்ற பொருளில் பிறப்பு என்றாகிறது.
எனவே அர்த்தத்தை வைத்துப் பார்க்கில், இருவருடைய பிறப்பும் வெளிப்படுகை அன்றி உண்டாகுகை இல்லை.
என்றானால் நம்முடையது பிறப்பு, அவனுடையது அவதாரம் என்பது ஏன்?

இருப்பு இருவருக்கும் பொது. எப்படி இருக்கிறார் என்று கேட்டுக் கொண்டால் இருவருமே
ஜ்ஞான, ஆனந்த ஸ்வரூபத்தோடே இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இதுவரை ஸாம்யாப்பத்தி போல தோன்றினாலும் ,
ஆத்ம பரமாத்ம ஸ்வரூபத்தில் தாரதம்யம், மற்றும் ஆத்ம தத்வங்களிடையே தாரதமயத்துக்கும் ஹேது இன்னும் வேறு சில குணங்கள் காரணம்.
அவற்றில் இருவர் பிறக்கைக்கும் பிரதான காரணம் பகவானுடையது கிருபை. நம்முடையது கர்மம்.

பூ ஸத்தாயாம் என்று இருக்கும் நாம் கர்மத்தால் பாதிக்கப் பட்டு வெளிப்படுவது பிறப்பு.
பூ ஸத்தாயாம் என்று இருக்கும் அவன் கிருபையால் உந்தப்பட்டு கண்களுக்கு புலப்படும்படியாக வெளிப்படுவது அவதாரம் (அ)
ஆவிர்பூதம் . இப்படி இருவர் வெளிப்படுகைக்கும் பிரயோஜனம் ,
நம்முடையது சேர்த்து வைத்த, சேர்த்துக் கொள்கிற புண்ய, பாபங்களை அனுபவிக்க (அ) நஷ்டமாக்கை .
அவனுடையது நம்மை தன் கிருபைக்கு இஷ்டமாக்கை .

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் கடலை கழிமினே .

ஜனனோ ஜன ஜன்மாதிஹி பீமா பீம பராக்கிரம :
இருவரும் ஜன என்பது பொதுவானாலும், அவர் ஜனன= கர்ம பாரவஸ்யத்தால் நமக்கு சரீரத்தை கொடுத்து பிறப்பிக்குமவர். தவிர
ஜன – ஜனங்களின்
ஜன்மம் – பிறப்புக்கு
ஆதி – நிமித்தம் (அ) பிரயோஜனம் பகவான்கிற அவர்தான். ஆக, நம்முடைய பிறப்புக்கு பிரயோஜனம் அவரை அடைவது .
அவருடைய பிறப்புக்கு பிரயோஜனம் ஜனங்களைத் திருத்திப் பணிக்கொள்வது.

இப்படி கர்மா கழிந்தபின் உண்டாகிற ஜ்ஞான ஆவிர்பாவத்தை உபநிஷத்

ஸதா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்றும்
அஸ்மாது சரீராய ஸமுத்தாய பரம்ஜியோதிர் உபஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே – என்றும்
கர்மம் தொலைந்து ஜ்ஞானம் விகசித்து பக்குவமான சக்கரைப் பொங்கல் பிரசாதம் போலே இவன் விளங்க
அத்தை அவன் ஆனந்தமாக விநியோகம் கொண்டு களிப்பிக்கிறான்.

இது நடத்தவே ஒருத்தி மகனாய் அவன் பிறந்து என்கிறாள் ஆண்டாள்.

————

26. மாலே : ஆர்த்தி பூர்த்தி :

சரணமானால் வைகுந்தம் சேர் வழக்கு கொண்டு
மரணமானால் மேவப் பெறுவதூம் — ஆரணமால்
ஊழ் வினை நம் போக்க மற்ற பற்று அற்றராய்
சூழ் வினை அவனடியார் காத்து.

ஆலின் இல்லையாய் – பரத்வம்.
மாலே – சௌலப்யம்.
மணிவண்ணா – சௌந்தர்யம்.

ஸ்ரீ ராமாயணத்தில் எப்படி சரணாகத வத்சலத்வம் ராமனுடைய பிரதான குணமோ, அதுபோல மஹா பாரதத்தில்
கிருஷ்ணனுக்கு பிரதான குணம் ஆஸ்ருத வியாமோகம் என்பது .

நாராயணன்
ஓங்கி உலகளந்த உத்தமன்
தேவாதி தேவன்
என்று கீழே பரத்வத்தை பிரஸ்தாபித்த ஆண்டாள், 25 வது பாசுரம் வந்த வாறே
வந்து தலைப் பெய்த்தோம் ;
வந்து நின்றோம்;
இன்று யாம் வந்தோம்;
யாம் வந்த காரியம் – என்று இவர்கள் தாங்கள் வந்தமைக்கு இரங்கு என்று சஹேதுகமாய் சொல்லி வந்தவர்கள்,

அத்தை மாறி
ஆலின் இலையாய் அருள் – என்று நிர்ஹேதுக மாக்கினர்.

வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்
ஈண்டு அன்றன்னை புலம்பப்போய் ஓர் ஆய்க்குலம் புக்கதும்
காண்டலின்றி வளர்ந்து –என்கிற படியே – க்ஷீராப்தியிலிருந்து மதுரைப்போந்து, அங்கிருந்து திருவாய்ப்பாடிக்கு
தான் வந்த வரத்தை கணிசித்தார்கள் இல்லையோ என்று கண்ணன் வாய் திறவாமல் இருக்க

நாராயணனே நமக்கே பறைதருவான் என்று ஸ்வ யத்ன ராஹித்யம் சொன்னவர்கள்
தாங்கள் வந்தமை உபாயமாக நினைப்பிட்டனரோ என்று உதாசீனனாகவும் இருந்தமை போக்கி

உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் என்று அனன்ய பிரயோஜனர்களாக வந்தார்களே என்று வியாமுக்தனாய்
அது மணியின் நீரோட்டம் புறம் பொசிந்து காட்டுமா போலே அவனில் வெளிக்காட்ட ,
மாலே! மணிவண்ணா என்கிறார்கள்.

————

இதம் ஸ்ரீரங்கம் தியஜதாம் இஹாங்கம்
புனர்நசாங்கம் யதிஸாங்கமேதி
பானொவ் ரதாங்கம் சரணேச காங்கம்
யாநேச விஹங்கம் ஸயநேச புஜங்கம் — ஆதி சங்கரர்.

ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்கிற ஸாம்யப்பத்தி மோக்ஷம் சொல்லுகிற பாசுரம்.

போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறை
பல்லாண்டு இசைப்பார்
கோல விளக்கு
கொடி
விதானம்
உக்கம்
தட்டொளி
என்கிற 8 விஷயங்களை பிரார்த்தித்து அஷ்டவித ஆவிர்பாவத்தை
ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே – என்கிற முக்த போகத்தை கேட்கிறாள்.
ததா வித்வான் – தியானம், வேதனம், நிதித்யாசனம் இவை ஒருபொருள் பன் மொழியாய்,
ஜ்ஞான யோக அதிகாரி தம் முயற்சியால் பக்தி செய்து புண்யபாபங்களைத் தொலைத்து சாம்யாப்பத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான்.
அதேபோல
ததா வித்வான் – சரணாகதனான ஒருவன் – பகவான் அவனே உபாயம் என்று பிரபத்தி பண்ணின அதிகாரி –
தன் முயற்சி ஏதும் இன்றி பகவத் சங்கல்பத்தாலே புண்ய பாபங்களை உதரி சாம்யாப்பத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான்.
வித்யாசம் என்னவென்றால் இருவருடைய சஞ்சித கர்மங்களையம் பகவான் போக்கிக் கொடுத்தாலும் ,
உபாசகனான பக்தியோக நிஷ்டன் தன்னுடைய பிராரப்த கர்மங்களை
(இந்த ஜன்மத்தில் கழிக்க வேண்டியுள்ள புண்ய+பாபங்களின் கூட்டறவு) தானே போக்கிக் கொள்ள வேண்டும்.
யாவந்ன விமோக்ஷே அசஸம்பத்ச்யே தஸ்ய தாவதேவ சிரம் – என்பதாக இவர்களுக்கு ஜன்மாந்தரத்திலே மோக்ஷம்.
ஆனால் பிரபன்னாதிகாரியினுடைய சஞ்சித + ஆரப்த கர்மங்கள் இரண்டையும் பகவான் தானே –
அஹம் துவா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – என்று காணாக் கண்ணிட்டு தள்ளி விடுகிறான் என்றாலும்
பிரபன்னாதிகாரி விஷயத்திலும்
1. விஷயாந்தர ஸம்பந்தம்
2. தேவதாந்தர ஸம்பந்தம்
3. பாகவத அபசாரம்
மூன்றின் சம்பந்தமும் இல்லாத பக்ஷத்தில் மட்டும் –
அஸ்மாத் சரீராது ஸமுத்தாய பரஞ்சோதிர் உபஸம்பத்ய – என்று தேஹாவசானே மோக்ஷம் என்ற படி .

—————-

27. பாலேபோல் சீர் :

தேமதுர பாலே போல் சீர் தன்னால் தன் பால்
நமவெனலார் தாம்தோற்ப தன் குணம் காட்டி
சமன் கொள் நல் வீடு செய் மாலுக்கு தொண்டு
அமைந்தோமாய் கூடிக் களித்து .

கீழ் பாசுரத்தில் நோன்புக்கு உபகரணமாக
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே
கொடியே
விதானமே

என்று தன்னதேயான
பாஞ்சஜன்யம்
பேரிகை
நம்மாழ்வார், பெரியாழ்வார்,
நப்பின்னை
கருடன்
ஆதிசேஷன்
ஆன கேட்டவை அனைத்தும்
நதே ரூபம் நசாகாரம் நஆயுதாநி . . . பக்கத்தானாம் துவாம் பிரகசாஸசே என்பதாக கொடுத்தாகி விட்டது.
அது ஸாரூப மோக்ஷம் என்றால்,
மாரி மலை முழைஞ்சில் பாசுரத்தில் இங்கனே போந்தருளி என்று ஸாலோக , ஸாமீப்ய மோக்ஷத்தைப் பெற்றாள்.
இப்போது இந்த பாசுரத்தில், நோன்பு நோற்றதற்கான சன்மானம் என்ற பெயரில் ஸாயுஜ்ய மோக்ஷத்தைப் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.

பேற்றுக்கு வேண்டியது விலக்காமையும், இரப்பும் என்ற கணக்கில்
2 ஆம் பாட்டில் நெய்உண்ணோம், பாலுண்ணோம், மலரிட்டு நாம் முடியோம் என்று தாங்கள் விலகினதை
இப்போது இந்த பாட்டில் சூடகமே, தோள்வளையே, தோடே , செவிப்பூவே என்று பல்கலனும் யாம் அணிவோம்
அத்தை நீ கொடுக்கும் போது விலக்க மாட்டோம் என்பதான அப்பிரதிசேஷத்தை ஸூசிப்பிக்கிறாள்.

————-

சரணாகதி கத்யமும் கோத கீதையும் :
பகவத் விஷயத்தில் செய்யப் போகிற சரணாகதி பலிக்க வேண்டி முதலில் புருஷகார பிரபத்தி.
அடுத்து பகவத் குணாநுசந்தானம்.
அடுத்து அவனுடைய பூஷணங்கள்.
அதை அடுத்து பத்னி பரிவாரங்கள் பற்றி அநுசந்தித்து
ஶ்ரீமந் நாராயண! துவத் பாதரவிந்த சரணமஹம் பிரபத்யே என்று சரணாகதியை அநுட்டித்தார்.

இதுவரை துவய பூர்வகண்டார்த்த அநுசந்தானமாயித்து.
மேலே கீதா ஸ்லோகங்கள் மூன்றை உதாகரித்து ஸ்லோக த்ரியோஜித, ஸ்தான த்ரியோஜித ஞானமாகிற –
பரபக்தி, பரஞான, பரமபக்தியைக் கொடு என்கிறார் ஸ்வாமி எம்பெருமானார்.
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும், விஸ்லேஷத்தில் தரியாமையும் பரபக்தி.
ஆர்த்தி தலை எடுத்து வழியல்லா வழியிலாவது அவனை அடைய நினைப்பது , தர்சன ஸமாகார ஸாட்சாத்கரம் இரண்டும் பரஞானம்.
பிரியாதே கூடி அநுபவிக்ககை பரமபக்தி.
பகவத் குணானுப கைங்கரயத்துக்கு பசி போலே இந்த பரபக்தி, பரஞான, பரம்பக்தி.

ஆண்டாள்
இந்த பாசுரத்தில் சொல்லப்பட்ட பாலேபோல் சீர் குணங்களை அனுபவிக்க வேண்டிய அவளுடைய அவாதான் பசி.
அத்தால்
அவனை
வாயினால் பாட , மனத்தினால் சிந்திக்க,
முகில் வண்ணன் பேர்பாட,
மனத்துக்கினியானைப் பாட
என்ற இவையே பரபக்தி, பரஞான, பரமபக்தியாய் பசி வளர வளர பகவத் குணானுபவம் சிறக்கும் படியாய்
ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிது – என்று
பரம பதத்தில் பெரும் களிப்பாய் கூடி இருந்து குளிர்வதையே ஆண்டாளும் பால்சோறு மூடநெய் பெய்து கூடி இருந்து குளிர்ந்து என்கிறாள் .

இங்கு முழங்கை வழிவார கூடி இருந்து குளிர்ந்து என்பதின் ஸ்வாரஸ்யம், முக்தபோக அனுபவத்தில் ,
அன்நாதனாக அவனிருக்க, அன்னமாய் இவர்கள் நின்று, அவனானந்தம் கண்டு இவர்கள் ஆனந்திப்பதையே முழங்கை வழிவார என்கிறாள் .
அனுபவம் நித்யமாய், எப்போதும் நடவா நிற்பதை முழங்கை வழிவார என்று continuous tense ல் அமைத்தமை நோக்கத்தக்கது.

பாலேபோல் சீரை அனுபவிக்க முதல்நிலை பசி பரபக்தி.
அது இன்னும் அதிகமாக அதிகமாக பரஞான பரம பக்தியாக பழுக்கிறது.
அதுபோல அனபவாதிசயமும் விசத, விசத தர, விசத தமமாக
பரார்த்த ஆனந்தம்; பரார்த்த கைங்கர்யம்; குணானுபவமே புருஷார்த்தமாக கனிவது சொல்லப்பட்டது.

—————-

28. கறவைகள் :

புறம்புண்டாம் வேத நெறியாவும் விட்டு
திறம் காட்டும் என் ஒருவன் தாள்கிட்டல் — தேறுமென்
உரைத்த மொழி வழியே கை முதல் வேட்டா
குறையில்லா கோவிந்தன் நாட்டு.

திருமந்திரத்தில் பிறந்து, கிருஷ்ண சரம ஸ்லோகத்தில் வளர்ந்து துவாயார்த்த நிரதராய் வர்த்திக்கை ஸ்வரூபம்.
திருமந்திரம் ஜ்ஞான பிரதானமான மந்திரம் என்றால், சரம ஸ்லோகம் விதி ரஹஸ்யம். துவய மஹாமந்திரம் அனுஷ்டான பரமான மந்திரம்.
திருமந்திரத்தில் ஆத்மாவாலே பேறு என்கிறது.
சரம ஸ்லோகத்தில் ஈஸ்வரனாலே பேறு என்கிறது.
துவயத்தில் பிராட்டியாலே பேறு என்கிறது.
ஆசார்ய சம்பந்தம் பெற்று ரஹஸ்ய த்ரய உபதேசமும் பெற்று அனுஷ்டாதாவாய் போருகைக்கு துவயார்த்தம் நன்றாக நெஞ்சில் பட வேண்டும்.
அதில் பூர்வகண்ட வாக்கியம் உபாயத்தையும், உத்தர கண்ட வாக்கியம் பலம்-புருஷார்த்தத்தையும் சொல்லுகிறது.
இதன் விளக்கமாக அவதரித்த ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் 27, 28 இரண்டும்.

ஆக , கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் பாசுரம் உபாய ஸ்வீகாரமும், 29ம் பாசுரம் சிற்றம் சிறுகாலை
கைங்கர்ய பிரார்த்தனையையும் சொல்லுகின்றன.

அனன்ய ஸாத்யே ஸாபீஷ்டே
மஹா விஸ்வாச பூர்வகம்
ததேக உபாயதா யாஞ்சா
இதி பிரார்த்தனா மதி : சரணாகதி : என்ற கணக்கில்

உபாய ஸ்வீகாரம் தானும் விதி வாக்கியத்தில் சொன்னபடி
மற்ற எல்லா தர்மங்களை விடுகையும்
பகவதாஸ்ரயணமுமாக விட்டவை எல்லாம் அவனேயாகப் பற்றுகையும் -சொல்வதே – கறவைகள் பாசுரம்.

1. கறவைகள் பின் சென்று – ஜாத்யுச்சித கருமம் செய்தீர்களாய் பிராபாந்தரங்களை விடீர்கள் இல்லீகோள் என்ன
கானம் சேர்ந்துண்போம் – கோ ரக்ஷணமாக சென்றோம் அல்லோம். உண்கையே பிரதானமாக சென்றோம்.
எங்கள் ஆசாரியன் மாடுகன்றுகள். பகவானுக்கு கண்டருளப்பண்ணி உண்டீர்கள் போலும் என்ன –
அதுவும் இல்லை – சென்று உண்போம் அத்தால் கர்மாநுஷ்டானம் இல்லை –
நீ பரமபதம் விட்டு திருவாய்ப்பாடிக்கு வந்தாயால், நாங்கள் விமுக்த்தர்கள் போலே அங்கிருந்து கானம் சென்றமை கண்டீயே என்கிறாள்.

2. அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் – இதுவரை இல்லையாகிலும், இன்னும் முன்னே சம்பாதிக்க வழியும் இல்லை.
வலக்கை இடக்கை அறியா ஆய்க்குல மாதலால் அறிவில்லாத – ஜ்ஞான யோகம் இல்லாத – அறிவொன்றுமில்லாத –
பக்தி யோகமும் இல்லாத பிள்ளைகளோம். ஆத்தால் ஆர்ஜித ஸுக்ருதம் எதுவும் இல்லை.

3. குறை ஒன்றில்லாத கோவிந்தா! உன் தன்னைப் பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாமுடையோம் –
அயத்ன சுக்ருதமாக உன்னையே சித்த புண்யமாக உடையோம். நீயோ நிறைவாளன். நாங்கள் ஜ்ஞான பக்திகளில் குறைவாளர்கள்.

4. உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது – இருவருக்குமான சம்பந்தம் தானும் அங்கு ஒழிக்க முடியாது வாஸ்தவம்.
இங்கு ஒழிக்கலாமோ என்னில் நித்யம். அநிவாரியம் .

5. அறியாத பிள்ளைகளும் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே – பூர்வாபதாரங்களுக்கு க்ஷமணம் வேண்டி

6. இறைவா நீ தாராய் பறை – நீ கொடுத்தன்றி எங்களுக்கு நிறக்க வழியில்லை என்கிறாள்.

அஹம் , மத் ரக்ஷண பரம், மத் ரக்ஷண பலம் ஈஸ்வராதீனம் – ஸ்வாமி தேசிகன்.

பிராப்தாவும், பிராப்யமும், பிராப்திக்கு உகப்பானும் அவரே இனி ஆவாரே – ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யார்.

அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்றது தாழ்குலம்,
கர்ம ஜ்ஞான பக்கத்தி நெறிக்கு விலக்கான குலம் என்பதல்ல. இயலாத குலம் என்று பொருள்.
பிராம்மணர்களாக பிறந்தவர்கள் இயன்றவர்களோ என்னில் ?
அவர்களும் விட்டே பற்றுகைக்கு அசக்தி காரணம் அன்று. ஸ்வரூப பிரயுக்தமே பிரதான ஹேது.

அறிவொன்றுமில்லாத என்பது ஜ்ஞான அனுதயமன்று . சாட்சாத் தர்மமான கோவிந்தா நீயே உபாயாம் என்கிற
வேதாந்த விழுப்பொருள் அறிவு ஆண்டாளுக்கு உண்டான படியாலே .

ந வேதாந்தாது சாஸ்திரம்
ந மதுமதனாது தத்வம் அகிலம்
ந ஸத்வாது ஆரோக்கியம்
ந துவயவசனத : க்ஷேமகரம் — ஸ்வாமி தேசிகன்.

பரித்யஜ்ய என்று விடுகை சொன்ன விடத்து ஆண்டாள் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்று கர்ம ஜ்ஞான பக்தி யோகங்களை
செய்ய பிரசக்தியே இல்லை. விடுகை என் வந்தது என்று சொல்லி விட்டாள்.அடுத்து
மாம் ஏகம் சரணம் விரஜ – ஸ்ரீமந் நாராயண சரணநௌ சரணம் பிரபத்யே என்று பற்றுகையைச் சொன்ன விடத்து –
உன் தன்னைப் பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாமுடையோம் – என்றது ஸ்வீகாரம் தானும் பரகதமான படிக்கு.

மாம் சரணம் விரஜ அல்ல. மாம் ஏகம் சரணம் விரஜ என்ற விதி வழி கண்ணன் தானே நடத்தி கொடுத்த படியுமன்றோ விது.

————-

29. மற்றை நம் காமங்கள் மாற்று :

அடிமைக் கண் அன்பு செய் ஆர்வத் தறிவு
உடைமைக் கண் தேடும் மகிழ்ச்சித் — தடையாம்
அடைந்து அனுபவிக்க புக்கால் நில் என்ன
மிடையாது நிற்றல் தலை.

சிற்றம் சிறுகாலை வந்துன்னை சேவித்து – பிராபியத்தில் த்வரை
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் – அதில் கலக்கம்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாதே போகாது – ஆர்த்தியை ஆவிஷ்கரித்தல்.
இற்றைப்பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா – உபேக்ஷையைச் சொன்னது.
எற்றைக்கும் ஏழழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் – கைங்கர்ய அபேக்ஷை.
மற்றைநம் காமங்கள் மாற்று – கைங்கர்யத்தில் காளையாகிற வைராக்கியத்தை – ஸ்வபோக்த்ருத்வ புத்தியை விலக்குகிறாள்.

நாராயணனே நமக்கே தருவான் – என்றது முதல் பாசுரம்.
உனக்கே நாமாட்ச் செய்வோம் – 29 ஆம் பாசுரம்.
இத்தால்
நாராயணனே நமக்கே – உனக்கே நாம் = நாராயணனே உனக்கே நாம் என்றாகிறது.

நாம் என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்.
எப்படிப்பட்ட நாம் என்று விசாரித்தால் – சுவாமி பிள்ளைலோகாசார்யர் காட்டுவது
அஹமர்த்தத்துக்கு ஜ்ஞானந்தங்கள் தடஸ்தமானால் தாஸ்யமிறே அந்தரங்க நிரூபகம் – என்பதாக.
ஜ்ஞானம் உடையவன் என்பதால் கர்த்ருத்வ- போக்த்ருத்வங்கள் முன் நிற்கும்.
ஆனால்

கர்த்ருத்வத்துக்கு தடைக்கல் பாரதந்திரியம்.
போக்த்ருத்வத்துக்கு தடைக்கல் சேஷத்வம்.
சேஷத்வம் பர-அதிசயத்துக்கே இருப்பது
பாரதந்த்ரியம் பர-வசப்பட்டு செயல் படுவது.
ஆக ஜ்ஞாத்ருத்வத்தால் வந்த கர்த்ருத்வம் பரனான பகவத் ஆதீனப்பட்டுதானே இருக்க வேண்டும்.
அதாவது ஸ்வபிரயர்த்தன நிவிர்த்தி பாரதந்த்ரியத்துக்குப் பலம்.

பிரவிருத்தியே கூடாதோ என்னில் அன்று.
பாரதந்த்ரியத்துக்கு குந்தகமில்லாத கர்த்ருத்வமும்
அதேபோல சேஷத்வத்துக்கு விரோதமில்லாத போக்த்ருத்வமும் நோக்கிக் கொள்ள வேண்டும்.
ஜ்ஞான காரியமான பிரயத்னமும் பலமும்
ஸ்வரூப தர்மமான பாரதந்த்ரியமும், சேஷத்வத்வத்தையும் அனுசரித்தே ஆற்றக் கடவது.
பகவான் ஸ்வதந்திரன். நாம் பரதந்திரர். எனவே பகவத் பிரயோஜனமாக செய்கிற கர்த்ருத்வம் பாரதந்திரியம் –

உனக்கே நாமாட் செய்வோம்.
எனக்கு, எனக்கும் உனக்கும் என்றல்லாமல் உனக்கே என்பதான வழுவிலா அடிமை.
பகவான் சேஷி. நாம் சேஷப்பட்டவர்கள். எனவே தத் விஷய ப்ரீதி சைதன்ய பலம்.
பிரகர்ஷயிஷ்யாமி என்பதாக பகவத் ஆனந்த அநுயாக போக்த்ருத்வம் சேஷத்வம் – மற்றை நம் காமங்கள் மாற்று .

ம – என்பது தாயம் என்றால்
நம – என்பது இலக்கம் 2.
பரமபத சோபனா படத்தில் (அஹம்) – ம என்கிற 1 போட்டு விளையாட ஆரம்பித்து , கடைசீ பாம்பு வாயில் விழாமல் தப்பிக்க,
நம – என்று 2 போட்டு பரமபதம் சேருவர். ம – என்கிற 1 போட்டால் பெரிய பாம்பு வாயில் விழுவர்.
அதேபோல பிரணவத்தில் உள்ள மகாரம் அவுக்கு சேஷப்பட்டவன் என்று சொல்வதோடு ,
இடையில் உள்ள நம பதத்தால் பாரதந்த்ரியத்தைச் சொல்கிறது.
அந்த நம பதத்தின் அர்த்தமான ”பாரார்த்யம் ஸ்வம் ” என்பதை சொல்ல வந்ததுதான் திருப்பாவை என்கிற
பட்டர் திருவாக்கு பிறந்ததும் இது கொண்டு.

————–

30. வங்கக் கடல் : ஆண்டாள் அரங்கக்குப் பன்னு திருப்பாவை :

அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல் பதியம் – பராசர பட்டர் திருவாக்குப்படி
திருப்பாவை 30 ம் திருவரங்கன் விஷயமானவை . எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவாத்த ப்ரகாசக: ||

1. நாராயணன் – ஸக பத்நியா விசாலாக்ஷியா நாராயண உபாகமது –
வால்மீகி வாக்குப்படி ரங்கநாதன் தான் ஜகந்நாதன் – பெருமாள் ஆராதித்த பெரிய பெருமாள்.

2. பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் – கார்ய வைகுண்டத்திலுள்ள க்ஷீராப்தி நாதன்தனான வியூக வாசுதேவன்தான்
ஸ்ரீ ரங்கத்துக்கு பிரதானம் – பிரத்யக்ஷ பரமம் பதம் ஸ்ரீரங்கம்.

3. திங்கள் மும் மாரி – லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் என்று குருபரம்பரையில் பிரதம குருவாய் நின்று ரஹஸ்ய த்ரயங்களை
ஸ்ரீரங்க நாச்சியாருக்கு உபதேசிக்க, அவள் வழி விஸ்வக்ஷேனர் , நம்மாழ்வார் உபதேசித்த கிரமம் – மும்மாரி

4. ஆழி மழை – சார்ங்கம் உதைத்த சரமழைபோல் என்று சார்ங்கவில் சேவகனாக இராமபிரானைப் பற்றி பிரஸ்தாவம் இதில். –
ராமோ த்விர் நாவிபாஷதே என்று கத்யத்தில் நம்பெருமாள் தன்னை ராமனாகக் கொண்டு சொன்ன வார்த்தை .

5. மாயனை – அரவின் அணை மிசை மேய மாயனார் என்று திருப்பாணாழ்வார் சொன்ன தாமோதரன் பெரிய பெருமாள் தானே.

6. முனிவர்களும் யோகிகளும் ஹரி என்று – சிற்றெயிற்று முற்ற மூங்கில் அற்ற பற்றர் வாழும் அந்தணீர் அரங்கன் –
விமானத் தூண் ஹ + ரி என்ற வாசகத்தோடே ஆனது .

7. கீச்சு கீசு – கிளிச் சோழன் கிளி மண்டபம் இங்குதான் உண்டு.

8. தேவாதி தேவன் – தேவரையும் அசுரனையும் திசைகளும் படைத்தவனே யாவரும் வந்து அடி வணங்க அரங்கநகர் துயின்றவனே
என்று குலசேகர ஆழ்வார். தேவாதி பிரம்மா அவன் ஆராதனம் செய்த பெரிய பெருமாள்.
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் – ஆண்டாளுக்கு.

9. மாமாயன் மாதவன் வைகுந்தன் – அரங்கன் அழகிய மணவாளன் நம்பெருமாள் என்ற மூன்றும்
பரத்வம் ஸ்ரீயப்பதித்வம் சௌலப்யத்துக்கான திருநாமங்கள் தானே.

10. மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் – லோக சாரங்க முனி திருப்பாணாழ்வார் விஷயமாக அபசாரப்பட,
பின் அவர் திருவாராதனத்துக்கு வந்த போது அரங்கன் சன்னதி கதவு திறக்காமல் மௌனியாய் காலம் தாழ்த்தி,
பிறகு ஆழ்வாரை எழுந்தருள பண்ணி அவருக்கு அதுவரை திறவாத வாசலை திறந்துவிட்டவன் அரங்கன்.

11. முற்றம் புகுந்து – அரங்கன் முற்றம் சேறு செய்யும் தொண்டர் – சுற்றத்து தோழிமார் எல்லாரும் 105 திவ்யதேச
எம்பெருமான்கலும் பள்ளி கொள்ளுமிடம் திருவரங்கம்.

12. அனைத்தில்லத்தாரும் அறிந்து – சாத்தின சாத்தாத 10கொத்து பரிவாரங்களை நியமித்து
எம்பெருமானார் திருவரங்கத்தை நிர்வகித்து போந்த படி இங்குதான்.

13. பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் – பிள்ளைகள் திருவரங்கம் காவிரிக்க கரையில் அன்ன கூட உற்சவம் விளையாடும் போது
ஜீயோ! என்று அழைக்க , எம்பெருமானார் மணல்சோற்றை தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தமருகந்தது எப்பேர் மற்றப்பேர்
என்பதாக அதை பிரசாதமாகவே நினைத்து பெற்றறுக் கொண்ட சரித்திர சங்கேத்யம்.

14. வாய் பேசும் நங்காய் நாணாதாய் நாவுடையாய் – வாயழகர் என்னரங்கத்து இன்னமுதர்;
திருவரங்கர் தாம் பணித்த மெய்மை பெரு வார்த்தை ; பேசி இருப்பனவைகள் பேர்க்கவும் பேராவே ;
ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ என்று எம்பெருமானாருக்கு அருளிய வார்த்தைகள் எல்லாம் அரங்கன் நாவுடைமைக்கு சான்று.

15. எல்லாரும் போந்தாரோ ? – அத்யயன உற்சவத்தில் ஆழ்வார்கள் எல்லாரும் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி
இருந்து 21 நாட்கள் தமிழ்மறை திருநாள் கண்டருளுவதில் திருவரங்கம் திருப்பதி பிரதானம்,
காரணம் இவரே பதின்மர் பாடும் பெருமாள் . பாசுரங்களின் எண்ணிக்கை 247 போலே தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் தொகையும் 247.

16. வாசல் காப்பான், கோயில் காப்பான் – உத்தர வீதி, சித்தரை வீதி, நான்முகன் கோட்டை வாசல் (ரங்கா ரங்கா கோபுரம்)
கார்த்திகை கோபுர வாசல், ஆரிய படாள் வாசல் (கருட மண்டபம்), நாழி கேட்டான் வாசல் (துவஜ ஸ்தம்பம்),
ஜெய விஜயாள் வாசல், திருமணத்தூண் திருவாசல் களில் உள்ள துவார பாலர், க்ஷேத்ர பாலர்கள் எழுப்பினது.

17. அம்பரமே தண்ணீரே சோறே அறம் – அரங்கனுலா சென்ற காலத்து ஆழ்வாருக்கு வஸ்திரமும்,
ஸ்ரீவைஷ்ணவ வெள்ளத்தானுக்கு ஈரவாடை தீர்த்தமும்,
ஆழ்வான் திருகுமாரர்கள் அவதரிக்க ஹேதுவாய் பிரசாதம் அனுப்பிய விருத்தாந்தங்கள் இந்த வகை கணக்கு.

18. உன் மைத்துனன் பேர்பாட(வசவு பாட) – ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரமுதல் நாள் நடக்கிற பிரணய கலக்கத்தன்று
அனைவரும் நாச்சியார் பரிகரமாக நின்று, அரங்கனை ஏசினபடிக்கு .

19. மைத்தடம் கண்ணினாய் – உல்லாச பலவித (பட்டர்) , சேதனனை அருளாலே திருத்தும்.
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் தத் இங்கித பராதீன : நம்பெருமாள். (ஆழ்வான்) என்று ஸ்ரீரங்க நாச்சியார் வைபவம் .

20. செப்ப முடையாய், திறலுடையாய் – நம்பி இராமானுசனை முதலில் அரையர் மூலம் நேர்மையாக கேட்டு பெறாது போக,
இரண்டாம் முறை காஞ்சி தேவப்பெருமாளை பாட்டுக்கு போர இசைய வைத்து ,
ஸ்ரீரங்கம் அழைத்துக் கொண்ட திறல் = சாமர்த்தியம் அரங்கனுக்கே அன்றோ?

21. ஏற்ற காலங்கள் எதிர் பொங்க – முதலில் ஆழ்வாரைக் கொடுத்தார். அவர் பவிஷ்யத் ஆச்சாரியரைக் கொடுக்க,
அந்த ராமானுசர் எதி புனராவதாரமான மாமுனிகள் எதிர் பொங்கி மீதளித்த பிரபாவம்,
முதலில் கொடுத்த அரங்கனுக்கே ஆச்சாரியனான படி இது.

22. செங்கண் சிறுச்சிறிதே – திருப்பாணாழ்வார் – காரியவாகி புடை பரந்து என்று பாடிய படி.
உய்யக் கொண்டார் வழி ஆளவந்தாருக்கு ராஜ்ய வியாபாரத்தை விட்டு சம்பிரதாயத்துக்கு ஆக்கின படி;
பிள்ளை உறங்காவில்லி தாஸர் பொன்னாச்சியோடு அரங்கனுக்கு ஆட்பட்டது ராமாநுசர் சொல்லிக் காட்டிய அக் கண்ணழகுதானே.

23. சீரிய சிங்கம் போதருமா போலே – நடைக்கு கோயில். குடைக்கு பெருமாள் கோயில். வடைக்கு திருமலை. முடிக்கு யாதவாத்ரி பிரசித்த மிறே.

24. அன்றிவ் உலகம் அளந்தாய் – எல்லை மண்டபம், ஜீபயர்புரம், உறையூர் என்று எல்லை நடந்து அளந்தது
திருவானைக் காவல் கோஷ்டியாரிடம் இருந்து மீட்டது.

25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர – ராமானுசர் கைப்பிள்ளையாய் பிறந்து
பிள்ளை லோகாச்சார்யார் மகனாய் ஜோதிஷ்குடியில் ஒளித்து வளர்ந்தது.

26.மார்கழி நீராடுவான், மேலையார் செய்வனகள் – மார்கழி நீராட்டமாகிற அத்யயன உற்சவமான திருவாயமொழித் திருநாளாக
நம்பெருமாளிடம் பிரார்த்தித்து திருமங்கை ஆழ்வார் தொடங்கி வைக்க , நாதமுனிகள் காலத்தில் பகல் பத்து நாளும் சேர்த்து
அது 21 நாள் உற்சவமாக ஆயித்து. அதுவே நமக்கு மேலையார் செய்வனகள் ஆயிற்று.

27. நாடு புகழும் பரிசு – ஸ்ரீரங்க விமானத்தோடு பெரிய பெருமாளை , பெருமாள் விபீஷணனுக்கு கொடுத்தது.
உபய விபூதியையும் எம்பெருமானார் இட்ட வழக்காக்கி அவரை உடையவர் என்று நியமித்தது இவை பார் புகழும் பரிசு.

28. சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே – முதலியாண்டான் – வாங்கீபுரத்து நம்பி பேச்சு – பெருமாள் உற்சவமாக எழுத்தருளும்போது
என்ன பாடினீர் என்ன, ஜெய விஜயீ பவ ஸ்ரீரங்க விபோ ஜெய ஜெய என்றேன் என்ன – நெய் உண்பீர் , பாலுண்பீர், பட்டுடுப்பீர்,
நூறு பிராயம் புகுவீர் என்று இன்னொருவர் சொல்ல, முரட்டு சமஸ்கிருத பெரிய பேர்கள் இங்கு எதற்கு என்று,
வர்த்திக்கிற தேசத்தைக் கொண்டு அத்தை சிறுபேறாக அவர்கள் கணிசத்தபடி.

29. பொற்றாமரை அடியே போற்றும் பொருள் – ரங்கமணி பாதுகா பிரபாவம் பற்றி ஸ்வாமி நிகமாந்த தேசிகன் 1000 ஸ்லோகம்
பண்ணக் கூடிய மகிமை. ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடி அவன் கை விட்டாலும்,
அவன் பாதுகையான நம்மாழ்வார் – மாறன் அடிபணிந்துய்ந்த எம்பெருமானார் கைவிட மாட்டார் என்கிற பெருமையும் கொண்ட திருவடி அரங்கனுடையது.

30. ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திருமுகத்து சொல்வது திருமாலால் – பட்டர்- அனந்தாழ்வான் ஸம்வாதம்.
ஸ்ரீ வைஷ்ணவ திவயதேசங்கள் பலதும் இருக்க பட்டரோ ஸ்ரீரங்கநாத பக்ஷபாதி. எப்படி என்றால்
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி ஆயிரமும் வான்திகழும் சோலை மதிள் அரங்கர் வான் புகழ்மேல் ஆன்ற தமிழ்மறை ஆயிரம்
என்று அங்கு சொன்னது போல
திருப்பாவை முப்பதும் அன்ன புகழ் புகழ் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு பன்னு திருப்பாவை என்று ஸ்ரீரங்கநாதன் விஷயமாக்கி தனியன்கள் சாதித்தார்.

அவரைப் பார்த்து அன்னத்தாழ்வார் ஒருமுறை, நீர் வைகுந்தம் சென்றால் அங்கு பரம பத நாதன் த்விபுஜனாக இருந்தால் சேவிப்பீரா,
சதுர் புஜனாக இருந்தால் சேவிப்பீரா என்று வினவ, அதற்கு பட்டர் சதுர் புஜனாக இருந்தால் நம்பெருமாள் என்று நினைப்பேன்.
த்விபுஜனாக இருந்தால் பெரிய பெருமாள் என்று நினைத்து சேவிப்பேன்.
பெரிய பெருமாளாகவோ, நம்பெருமாளாகவோ சேவை தரவில்லை என்றால், கூரயைப் பிய்த்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்கே குதித்து விடுவேன் என்றாராம்.
அதை நிரூபிக்கும் வகையில் ஆண்டாளும் நான்கு திருத்தோள் என்று சொல்லாமல்
ஈரிரண்டு மால்வரைத் தோள் மாதவன், கேசவன் என்றது நம்பெருமாள், பெரிய பெருமாளாக நினைத்து அவள் பாடினாளாகக் கூறலாம்.

அந்த மாதவன், கேசவன் தான் – ஆண்டாளை திருக் கல்யாணம் பண்ணி அங்கப் பறை கொண்ட மன்னாரும் அரங்கன் தாமே.

————————

“கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதிமணிமாடம் தோன்றுமூர் – நீதியாய்
நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.

“பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும்,
வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு”

திருவாடிப்பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்றுநாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவைநகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே.

ஸ்ரீமத்யை விஷ்ணுசித்தார்யை மனோநந்தன ஹேதவே |
நந்தநந்தன ஸுந்தர்யை கோதாயை நித்யமங்களம் ||

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ உ வே ஸ்ரீ தரன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருவெம்பாவை-ஸ்ரீ மாணிக்கவாசகர்–

December 23, 2021

ஸ்ரீ திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்.
இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் மார்கழி மாதத்தில் பாடுவதை
சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். 20 பாடல்களிலும் இறுதியில் எம்பாவாய் என்னும் வார்த்தையில் பாடல் முடிவடைகிறது

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்–1-

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத காணுதற்கு அரிய பெருமையையுடைய
ஒளியானவனை பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ?
மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று,
தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த
படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள்.
(குறிப்பு: பக்குவம் நிறைந்தோர் சிவபெருமானின் திருநாமத்தைக் கேட்டவுடனே தம்மை மறந்து இருப்பர் எனக் கூறப்பட்டது)
இது என்ன நிலை பார். அவள் செயல் அவ்வாறிருக்க, எங்கள் தோழியாகிய விழித்தெழாதிருக்கும் உன் தன்மை இந்நிலையோ?
அது என்ன! எமது கண்பாவை போன்றவளே! சொல்லுவதை ஏற்பாயாக; ஆய்வாயாக.
((குறிப்பு: இவ்வாறு நகையாடிச் சில கூறியபின், உறங்கிக் கிடந்தவள் எழுந்து வந்து அவர்களுடன் கூடினாள்)

————-

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.–2-

சிறந்த அணிகளை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எப்பொழுதும் என் அன்பு,
மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய்.
இப்பொழுது அருமை யாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? பெண்களே!
சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என் னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம் இதுதானோ?
தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்;
தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்?

————

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்–3-

முத்தைப் போன்ற வெண்மையான பற்களை யுடையவளே! நாள்தோறும் எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே வந்து,
எந் தந்தை இன்ப வடிவினன்; அமுதம் போன்றவன் என்று வாழ்த்தி வாய் மிகுதியும் ஊறி, இனிமை பயக்கும்படிப் பேசுவாய்.
எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய். நீங்கள் இறை வனிடத்தில் பேரன்புடையீர்!
இறைவனது பழமையான அடிமை யுடையீர்! ஒழுங்குடையீர்! புதிய அடியவராகிய எங்களது,
சிறுமையை ஒழித்து அடிமை கொண்டால், தீமையாய் முடியுமோ? உன் அன்புடைமை வஞ்சனையோ?
உன் அன்பு உண்மை என்பதை நாங்கள் எல்லாம் அறிய மாட்டோமோ? மனம் செம்மையுடையவர்
நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவும் வேண்டும்..

————-

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.–4-

ஒளியையுடைய முத்துப் போன்ற பல்லினை உடையாய்! இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையா?.
அழகிய கிளியின் சொல்லின் இனிமை போன்ற சொல்லினை உடைய தோழியர், எல்லோரும் வந்து விட்டார்களோ?
எண்ணிக் கொண்டு, உள்ளபடியே சொல்லுவோம்; ஆனால், அத்துணைக் காலமும் நீ கண்ணுறங்கி வீணே காலத்தைக் கழிக்காதே.
தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, அறம், பொருள், இன்பம், வீடு என்கிற தமிழ் வேதத்தில் சொல்லப்படுகின்ற
மேலான பொருளானவனை, கண்ணுக்கு இனிய காட்சி தருவானைப் புகழ்ந்து பாடி, மனம் குழைந்து
உள்ளே நெகிழ்ந்து நின்று உருகுவதன் பொருட்டு நாங்கள் எண்ணிச் சொல்லமாட்டோம்.
நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய்த் தூங்குவாயாக.

—————-

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்–5-

திருமால் அறிய முடியாத `பிரமன் காணமுடியாத அண்ணாமலையை, நாம் அறியக் கூடும் என்று,
உனக்குத் தெரிந்துள்ள பொய்களையே பேசுகின்ற, பால் சுரக்கின்ற, தேன்போல இனிக்கும் வாயினையுடைய,
வஞ்சகீ, வாயிற்கதவைத் திறப்பாயாக. இந்நிலவுல கினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு
அருமை யானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும்
வியந்து பாடிச் சிவனே! சிவனே!! என்று, முறையிடினும் அறியாய், துயில் நீங்காது இருக் கிறாய்.
இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை?

————–

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்–6-

பெண்ணே! நீ, நேற்று, நாளைக்கு வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், வெட்கப்படாமல்,
நீ போன திக்கைச் சொல்வாய். இன்னும் பொழுது விடியவில்லையோ?. வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும்,
பிறவுலகத்தவரும், அறிதற்கு அருமையானவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற
மேலாகிய, நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி, வந்தவர்களாகிய எங்களுக்கு, நீ, உன் வாய் திறவாது இருக் கின்றாய்.
உடலும் உருகப் பெறாது இருக்கின்றாய். இவ்வொழுக்கும் உனக்குத்தான் பொருந்தும்.
எமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப் பவனை எழுந்து வந்து பாடுவாயாக!

———————

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.–7-

தாயே! உன் குணங்களில் இவையும் சிலபோலும். பல தேவர்கள் உன்னற்கு அரியவனும், ஒப்பற்றவனும்,
பெருஞ் சிறப்புடையவனுமாகிய இறைவனைப் பற்றிய, சங்கு முதலியவற்றின் ஒலிகள் கேட்க, சிவசிவ என்று
சொல்லியே வாயைத் திறப்பாய். தென்னவனே என்று சொல்வதற்கு முன்பே, தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய்.
என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமு தானவன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந் தோம்.
நீ கேட்பாயாக. இன்னமும் உறங்குகின்றனையோ? திண்ணிய மனமுடைய அறிவிலார் போல,
சும்மா படுத்திருக்கின்றாயே! தூக்கத் தின் சிறப்புத் தான் என்னென்று உரைப்பது.

—————–

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.–8-

கோழி கூவ, எங்கும் மற்றைய பறவைகள் ஓசையை எழுப்பும்; வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க,
எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்; ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது,
நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா? வாழ்வாயாக;
இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே!
பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான திறமும் இப்படித்தானோ?
பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனையே பாடுவாயாக.

————–

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.–9-

முற்பட்டனவாகிய பழமையானபொருள்களுக்கும் முற்பட்ட பழமையான பொருளே!
பிற்பட்டனவாகிய புதிய பொருள் களுக்கும் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற
உன் சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்;
அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள்.
அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்;
எங்கள் பெருமானே! எங்களுக்கு இம்முறையே கிடைக்குமாறு அருள் புரிவாயாயின்
எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்போம்.

—————

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.–10-

இறைவன் திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்;
மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்;
அவன் ஒரேவகையானவன் அல்லன்; ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; வேதமுதலாக, விண்ணுலகத்தாரும்,
மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும், சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் நடுவுள் இருப்பவன்.
அத்தன்மையனாகிய சிவபெருமானது ஆலயத்திலுள்ள, குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே!
அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது?.

————–

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.–11-

நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடைய வனே! வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே! ஈசனே!
சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே! அழகனே!
வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய அகன்ற தடாகத்தில், முகேர் என்ற ஒலி எழும்படி புகுந்து,
கையால் குடைந்து குடைந்து மூழ்கி, உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம்;
தலைவனே! நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி
இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் படிமுறையில் பெற்று விட்டோம்.
இனி, நாங்கள் பிறவியில் இளைக்காதபடி எங்களைக் காத்தருள்வாயாக.

——–

ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்–12-

நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன்,
அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும்
நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய
இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய
அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள்
விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற
திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.

————

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.–13-

பசுமையான குவளையின் கருமையான மலர் களை உடைமையாலும், செந்தாமரையின் குளிர்ந்த மலர்களை உடைமையாலும்,
கையில் வளையற் கூட்டத்தை உடைமையாலும் பின்னிக் கிடக்கின்ற பாம்பினாலும் தங்கள் மலம் கழுவுவார்
வந்து நீக்கிக் கொள்ள அடைதலாலும், எம்பெருமாட்டியையும் எங்கள் பெருமானையும் போன்று பொருந்திய
நீர் பொங்குகின்ற மடுவை யுடைய பொய்கையில் புகும்படி வீழ்ந்து, மூழ்கி, நம் சங்கு வளையல்கள் கலகலக்கவும்
காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும் தனங்கள் பூரிக்கவும், முழ்குகின்ற நீர் பொங்கவும் தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவாயாக.

———–

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.–14-

காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும்
மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி,
வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி,
இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி,
அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய,
வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.

———–

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.–15-

கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய கொங்கை களை உடையீர்! ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்று சொல்லி
வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினாள் கூறுதலை நீங்காதவளாகிய இவள்
மனம் மகிழ்ச்சி மிக விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காத நீரின் நீண்ட தாரைகள் ஒழுகப் பூமியின்மேல்
ஒருமுறையே வீழ்ந்து எழாது வணங்குவாள். பிற தேவரைத் தான் வணங்கமாட்டாள்.
பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ?
இவ் வாறு பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி,
அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில் நீர் குதித்து ஆடுவீராக.

————

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்–16-

மேகமே! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேல் எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி
போல நீலநிறத்தோடு விளங்கி எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி விளங்கி,
எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து,
அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத,
எங்கள் தலைவனாகிய இறைவனது, அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும்,
அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று பொழிவாயாக

————

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.–17-

மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும்,
பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி,
நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற
அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை,
அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக,
தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.

———–

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.–18-

தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது
முடி யிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண் களுக்கு நிறையும் சூரியன்
தனது கிரணங்களுடன் தோன்றின மையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய
ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலி யாகியும், விளங்குகின்ற
ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற
அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.

————

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.–19-

எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும்
அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக.
எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க;
எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க;
இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க;
இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே!
நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?.

———-

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.–20-

எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம்.
எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்;
எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம்,
எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம்.
எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம்.
திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம்.
நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம்.
இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த ஸ்ரீ திருப்பதிக் கோவை –

December 21, 2021

ஓங்கும் திருவரங்கர் தாம் உகந்த ஒண் பதிகள்
மூங்கில் குடி யமுதன் முத்தமிழால் -நீங்காத
அன்பர் தமர் வாழ அருள் செய்த அந்தணர் கோன்
தன் பதுமத் தாளே சரண் –தனியன்

——

பங்கயத்தோன் இக்குவாகுக்குப் பண்டு அளிப்பப்
பொங்கும் அயோத்திப் புரிசை நகர் –தங்கிச் –1-
சில நாள் இனிது அமர்ந்து தென்னிலங்கைக் கோமான்
குலம் வாழக் கொண்டு ஏகும் வேலை -நவ மார்ந்த –2-
சென்னி வளவன் வள நாட்டுத் தெய்வ நதிப்
பொன்னி நடுவு புளினத்துப் -பன்னரிய –3-
இந்து மடுக்கரைக்கே இன்பமுற வைத்து அருளிச்
சாந்தி செய்யக் கருதிச் சாருங்கால் –முந்து(முந்தி) –4-
மருவார் பொழில் குருகை மாறன் முதலானோர்
திருவாய் மொழிச் (மலர்ச் )சுருதிச் செய்யுட்க்கு உருகா –5–
யிரங்கா என விரங்கா யான் இவனோ வைகல்
வரம் தா என விசைய மாற்றிப் –பரந்தாமன் –6–

(செய்யுள் குருகா அரங்கர் அவன் பாங்காய் இனி அவணே வைக
வரந்தா என இசைய மற்றப் பரந்தாமன் – பாட பேதம் )

கோழி மயிலுடனே கோள் அரவின் மீது ஏறி
யூழி பயிலும் உயோகு துயில் – வாழி –7-
திருவரங்கம் கோயில் திரு வாழ் உறந்தை
தரு வலரும் பூஞ்சோலைத் தஞ்சை –அருள் கலந்த –8-
அன்பில் கரம்பனூர் அம் பொன் மதிள் வெள்ளறை
தென் புள்ளம் பூதங்குடி திருப்பேர் அன்பால் –9–
அரும் தவம் சேர் ஆதனூர் ஆதி அழுந்தூர்
திருந்து சிறு புலியூர் சேறை பொருந்து –10-

தலைச்சங்க நாண் மதியம் தண்டடங்கள் எங்கும்
குலைத்தெங்கு சூழ் தென் (தண்) குடந்தை நலத்த புகழ்க் -11-
கண்டியூர் விண்ணகரம் கண்ணபுரம் கோயில்
எண்டிசையும் ஏத்தும் எழில் ஆலி தெள் திரை சூழ் -12–
நாகை திரு நறையூர் நந்திபுர விண்ணகரம்
ஈகை மறவாத இந்தளூர் யோக மணிச் (மலிச் )–13–
சித்ர கூடம் காழிச் சீ ராம விண்ணகரம்
கொத்தலரும் பூஞ்சோலைக் கூடலூர் முத்தி தரும் –14–
கண்ணங்குடி கண்ண மங்கை கவித்தலம் (மே )
திண்ணம் திரு வெள்ளியங்குடி (யே ) எண்ணரிய -15–

நாங்கூர் மணி மாடக்கோயில் நவையறு சீர்ப்
பூங் காவளம்பாடி வண் புருடை தேங்கு புனல்ச் (புகழ்ச்)–16-
செம் பொன் செய் கோயில் திருத்தெற்றி யம்பலம் மே
வம்புந்தும் வைகுந்த விண்ணகரம் உம்பர் –17-
அரிமேய விண்ணகரம் அம் பொன் மணிக்கூடம்
பரன் மேவிய பார்த்தன் பள்ளி தரு மாய்கை (திரு முட்டம் )–18–
(விள்ளும் )வெல்லும் திருத்தேவைனார் தொகை வெள்ளக் குளம் (மே )
வள்ளல் வழுதி வள நாட்டில் (நாட்டுத் )தெய்வத் (செல்வத் )–19–
திருமாலிருஞ்சோலை தென் கோட்டி மெய்யம்
தருவாரும் புல்லாணி தண் கால் திரு மோகூர் –20-

கூடல் அணி வில்லி புத்தூர் (கோதில் )கோலத் திருக் குருகூர்
தோடார் தொலை வில்லி மங்கலம் (மே ) மாடலருஞ் –21–
சீ வர மங்கைப்பதி தென் திருப்பேர் (சீ ) வைகுந்தம்
பூவில் அயன் ஏத்தும் புளிங்குடி (யே) நாவில் –22-
வளர்ந்த புகழ் சேர் வர குண மங்கை
குளந்தை குறுங்குடி தென் கோளூர் -விளங்கு –23-
மலை நாட்டு அநந்த புரம் வண் பரிசாரம் சொற்
கலை நாட்டு(க்)ங் காட்கரை தென் மூழி சிலை நாட்டும் – 24–
தென் குட்ட (நாட்டில் ) நாட்டுத் திருப்புலியூர் செங்குன்றூர்
பொன் குட்ட வாவிப் புகழ் நாவாய் அன்புற்ற –25-

வல்ல வாழ் மன்னு திரு வண் வண்டூர் வாட்டாறு
வில்லி வாழும் புரிசை வித்துவக்கோடு அல்லல் –26-
அறுக்கும் கடித்தானம் ஆறன் விளை சீர்
பொறுக்கும் புகழ்த் தொண்டை நாட்டில் எறிக்கும் –27-

அயிந்திர புரம் கோவலூர் அம் பொன் மதிள் கச்சி
வியன் திரு அத்தியூர் வெக்கா குயின்ற –28-
பரமேச விண்ணகரம் பாடகம் மாடத்
திரண் மேய சீர்த் திருத் தண்கா உரன் மேய –29-

(அயிந்திர புரம் கோவல் அத்தியூர் வெக்கா
துயின்ற பரமே சுர வூர் இயஞ்சேரும் -28
பாடாக மாடகத்தின் பாவை மகிழ்ந்து உறையும்
ஏடலரும் தாமரைகள் எந்நாளும் மாடலரும்-29 )

நீரகம் வேளுக்கை நிலாத் திங்கள் தண்டம் (மே ) சொற்
காரகம் கார்வானம் கள்வனூர் ஊரகமே –30-
மட்டவிழும் சோலை சூழ் எவ்வுள் மறை பயிலும் (பரவும் )
அட்டபுய கர மா மாதி நகர் சிட்டர் தொழ –31-
நின்றவூர் புட் குழி நீடு திரு நீர் மலை
என்றும் அழகார் திருவிட வெந்தை துன்று –32–

கடன்மல்லை யம் பொற் கடிகைச் சிலம்பு (கதிர் இனம் சேரும் )
(தடமார் )திடமாம் திருவல்லிக் கேணி வட வெல்லை–33–
வேங்கடம் சாளக்கிராமம் வியன் புரசை (வியன் சேர் )
நாங்காணி சேர் நயிமி (நாங்கை நமி ) சாரணியம் தெங்கு (புனல் )புகழ்க் –34-
கங்கைக் கரை கண்டம் சீர் பத்ரியாச்சிரமம்
சிங்க வேள் குன்றம் திருப்பிரிதி பொங்கு புகழ் –35-

வைகுந்தம் பாற் கடல் மா நீர் அயோத்தி நகர்
பொய் குன்றச் செய் (குன்று சீர் ) மதுரைப் பொன்னகரம் மொய் (மெய் )குன்றா –36-
அண்டர் திருவாய்ப்பாடி ஆழ் கடல் சூழ் வண்டுவரை
தொண்டர் குழாம் சூழும் இந்தத் தொல் பதிகள் கண்டும் –37-

தொழுதும் வலம் செய்தும் சொல்லித் துதித்தும்
முழுதும் உணர்ந்தும் முறையே எழுது கலை –38-
ஓதியும் வேதம் உரைத்தும் உலகு அறியத்
தாதின் அடிமை தலை நின்றும் வேத –39-
நிழலே சரணம் என நினைந்து வாழ்வார்
கழலே நமக்கு கதி –40–

(தொழுது வலம் செய்து சொல்லித் துதித்து
முழுது உணர்ந்தோர் கூறு முறையே எழுது-38-
கலை ஓதி வேதம் உரைத்துக் கனிந்தும்
உலகு அறிய நாம் அடியோம் என்று தலை நின்று –39-
வாழ நினைவீர்கள் வம்மினோ வம்மின் நம்
மாழ்வார் சரண் இணை நினைவீராம்–40- )

மின்னு திகிரி வலவன் விசும்பு எங்கும்
பன்னு திருப்பதிகள் வா வெல்லாம் துன்னு கலை
கற்றார்கள் தொண்டர் கழல் கமலம் கால் பணியப்
பெற்றார் பெறாதார் பிறப்பு

———-

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்–6-

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற் பாதம் என் தலை மேல் பூ –109-

பதின்மர் உரைத்த பதி ஒரு நூற்று எட்டும்
துதி செய்ய அந்தாதி சொன்னான் அதிக
குணவாள பட்டர் இரு கோகனத் தாள் சேர்
மணவாள தாசன் வகுத்து

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த – ஸ்ரீ ஞான சாரம்–ஸ்ரீ பிரமேய சாரம் -தனியன் வியாக்யானம் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள்

December 19, 2021

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் (அவதரித்தவரும்) தோன்றியவரும்,
துறவிகளுக்குத் தலைவரான ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சம் புகுந்தவரும்,
தமது ஞான ஸார, ப்ரமேய ஸார நூல்களில் ஆசார்ய பெருமை பேசியவருமான
அருளாள மாமுனியைப் பற்றுகின்றேன்.

——–

ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த் தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

ராமாநுஜாச்சார்யருக்கு நல்ல சீடரும் வேதம் முதலிய அனைத்து சாஸ்த்ரங்களில் வல்லுநரும்,
நான்காவது நிலையான துறவறத்தை மேற்கொண்டவருமான அருளாள மாமுனியை வணங்குகிறேன்.

(ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம்)
யக்ஞ மூர்த்தி என்னும் பூர்வாசார பெயருடன் முன்னைய நிலையில்
எம்பெருமானாரோடு பதினெட்டு நாட்கள் நடத்திய வேதாந்த விசாரத்தில் தர்க்கம் செய்து
எம்பெருமானாரைச் சோர்வுறச் செய்கையில்,
பேரருளாளரான அத்திகிரி வரதராஜப் பெருமாள் கனவில் தோன்றி,
“எம்பெருமானாரே! நீர் சோர்வுற வேண்டா, உமக்குத் திறமையுடைய ஒரு நற்சீடனை உண்டாக்கிக் கொடுத்தோம்.
அவனை வெல்வீராக” என்று உரைத்த குருபரம்பரைத் தொடர்களை இங்கு நினைவு கூர்க.

(வேத சாஸ்திரார்த்த ஸம்பதம்) –
உடையவரோடு பதினெட்டு நாட்கள் தர்க்கம் பண்ணின திறமையாலும் ஞானஸார ப்ரமேயஸார நூல்களில்
வேதம் முதலிய சாஸ்திரங்களிலிருந்து சாரமான கருத்துக்களை அழகிய வெண் பாக்களினால்
எடுத்துரைத்தமையாலும், இவரது சாஸ்திர புலமை நன்கு விளங்கும்.

(தேவராஜ முனிம்) –
தேவராஜனான பேரருளாளனுடைய திருவருளால் எம்பெருமானாருக்கு சீடரான பெருமையும்,
ஞான, பக்தி, வைராக்யங்களில் ராமாநுஜ முனிக்கு நிகராக விளங்கிய சிறப்பும் பற்றி
“அருளாள முனி” என்று திருநாமம் பெற்றமையும் உணரப்படுகிறது.

————-

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

நான்கு வேதங்களிலிருந்து உட்பொதிந்த ஆழ் பொருள்களையும், திருமந்திரத்தின் மெய்ப் பொருள்களையும்
ஞான ஸார ப்ரமேய ஸாரம் என்னும் நூல்களைக் கொண்டு அறிவைப் புகட்டியவரும்,
ஞானச் சுடர் விளக்காய் விளங்குபவரும், அருளாள மாமுனி என்னும் திருநாமம் உடையவருமான ஆசார்யருடைய,
அழகியதும், அனைவருக்கும் அடையத் தகுந்ததுமான அவரது திருவடிகளை அடைந்த பிறகு,
ஊழ் வினைகள் அழிவதற்கான வழியை அறிந்து கொண்டேன்.
ஊழ் வினையால் அறிவில் மயக்கம் ஏற்படுகிறது. அவ்வறிவு மயக்கத்தால் பெண்வழிச் சேரலில் துவழ்ச்சி ஏற்படுகிறது.
அத் துவழ்ச்சிக் காரணமாக அவர்களது சுருண்ட கருங்கூந்தலிலும் வேல் போன்ற பார்வையிலும் மனம் நெகிழ்கிறது.
அருளாள மாமுனிகளின் திருவடிகளை அடைந்த பிறகு காமம் முதலிய
இக் குற்றங்களிலிருந்து நீங்குவதற்கு வழி அறிந்து கொண்டேன் என்பது கருத்து.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாராகிற ஆசார்யருடைய திருவடிகளைப் பற்றின பிறகு
அவர் அருளிச் செய்த ஞான ஸார ப்ரமேய ஸார ப்ரபந்தங்களால் அறிவுக்குத் தெளிவு பிறந்தது.
அதனால் பெண்களின் அழகிய கூந்தலிலும் வேல் போன்ற விழியிலும்
மனம் நெகிழும் தீய வினைகளை அழிக்கும் வழிகளை அறியப் பெற்றேன் என்று கருத்து.

பெண்ணாசையைச் சொன்ன இதில் மற்றும் உண்டான கோபம், உலோபம், மோகம், மதம், பொறாமை
முதலிய குற்றங்களும் அடங்கும்.
“காமம், வெகுளி, மயக்கம் இம் மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்” என்ற திருக்குறளின் சொல்படி
மனிதப் பண்பாட்டை அழிக்கும் குற்றங்கள் ஆசார்ய கடாக்ஷத்தால் தீரும் என்பது பாடலின் அருங்கிய கருத்து.
இதனால் இவ்வாசிரியருடைய பெருமை கூறப்பட்டது.

————

நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள் நிலத்தில்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்தளிக்கும்
பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுப் புளி மண்
ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே

பதவுரை

நீள்நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே
பாங்காக – பயனுடயதாக
நல்ல – ஆன்ம நலத்தைத் தரவல்ல
பிரமேசாரம் – திருமந்திரத்தின் சுருக்கத்தை
பரிந்து – அருள் கூர்ந்து
அளிக்கும் – அருளிச் செய்யும்
பூங்கா – அழகான பூஞ்சோலைகளும்
வளம் பொழில் – செழிப்பான தோப்புக்களும்
சூழ் புடை – நாற்புறமும் சூழ்ந்துள்ள
புதுப் புளி – புதுப் புளி என்னும் இடத்தில்
மன் – புலவர் (தலைவராக)
வாழும் – வாழ்ந்தவரும்
ஆங்காரமற்ற – செருக்குச் சிறிதும் இல்லாதவருமான
அருளாள மா முனி – அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் திருநாமமுடைய ஆசார்யரின்
அம்பதமே – அழகிய திருவடிகளையே
என்றும் – எப்பொழுதும்
நீங்காமல் – பிரியாமல்
நினைத்து – எண்ணிக் கொண்டு
தொழுமின்கள் – வணங்குவீராக

நீள்நிலத்தீர்! அருளாளமாமுனி அம்பதமே என்றும் தொழுமின்கள்! என்று கொண்டு கூட்டுக.
“என்றும்” என்ற சொல்லை
“நீங்காமல்” என்றும்
“நினைத்து” என்றும்
இரண்டு இடங்களிலும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

அதாவது
“என்றும் நீங்காமல்” என்றும் என்றும் நினைத்து” என்றும் கூட்டுக.

பொருளை அறிவதற்கு அளவு கோலாயிருப்பது பிரமாணம் அதனால் அறியப்படும் பொருளுக்குப்
பிரமேயம் என்று பெயர்.
அதனுடைய சுருக்கு சாரம். அது பிரமேய சாரம் எனப்படும்.

பிரமாணம் – அளக்கும் கருவி
பிரமேயம் – அளக்கப்பட்ட பொருள்
ஸாரம் – சுருக்கம்
மானம், மேயம் – சாரம் என்பர்

அதாவது பிரமாணம் திரும்ந்திரம்.
அதனுடைய பொருள் பிரமேயம்.
அப்பொருளின் சுருக்கம் பிரமேய சாரம் என்பதாம்.
நல்ல மறை என்பது போல நல்ல பிரமேய சாரம்
அதாவது குறை சொல்ல முடியாத நூல் என்பதாம்.

பாங்காக:
கற்போர் மனம் கொள்ளும்படியாக அதாவது எளிமையாக என்று பொருள்.
ஆகவே இந் நூலில் பத்துப் பாடல்களால் திருமந்திரப் பொருளைச் சுருக்கமாகச் சொல்லப் படுகிறது.
அதனால் இதற்கு பிரமேய சாரம் என்று பெயர்.

பரிந்தளிக்கும்:
அனைத்து உயிர்களும் சேமத்தை அடைய வேண்டும் என்ற கருணையினால் அதனை நூலாக்கிக் கொடுக்கும்
ஓராண் வழியாக உபதேசித்து வந்ததை பாருலகில் ஆசையுடயோர்கெல்லாம் தெரியும் வண்ணம்
நூலாக்கிக் கொடுக்கும் என்பதாம்.

அருளாள மாமுனி: என்பதால்
அனைத்து உயிகளிடத்தைலும் அருளே கொண்டவர் என்றும்,
அது முனிவர்களுக்கு அல்லாது ஏனையோர்க்கு அமையாது.
ஆதலால் “மா முனி” என்றும் அம் முனிவருக்குரிய உயரிய பண்பு.
யான் எனது என்னும் செருக்கு அறுதலே என்பது “ஆங்காரம் அற்ற” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டது.
அத்தகைய ஆசார்யருடைய திருவடிகளையே தொழுமின்கள்.வணங்குவீராக.
வணங்கும் பொழுது அத் திருவடியை மனதில் நினைத்துக் கொன்டே தொழுவீர்களாக.
அத்துடன் நிழலும் உருவும் போல் பிரியாமல் பணிவீர்.

(அம்பதம்) என்ற இடத்தில்
இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கு நின்றது.
ஐயும் கண்ணும் அல்லா பொருள் வையின் மெய் உருபு தொகா -இறுதியான என்ற
தொல்காப்பிய சொல் இலக்கணம் காண்க.

அம்பதத்தை: “அம்” என்றால் அழகு.
பதத்திற்கு அழகாவது தன்னடியில் பணியும் சீடர்களைக் கைவிடாதது.
“ஏ” பிரிநிலை”ஏ”காரம் அவரது திருவடியையே தொழுமின் என்றதால் அதுவே போதும்.
மற்ற இறைவன் திருவடி தொழ வேண்டா என்பதாம்.
இறைவனும் முனியும் ஒன்றானதால்.

புதுப் புளி: என்பது அவர் வாழ்ந்த தலம் இடம்.

மன்: வேத சாஸ்திர விற்பன்னர்கள் பலருக்குத் தலைமையாய் இருந்தவர் என்பது பொருள்.
புதுப் புளி என்ற அத்தலம் பூஞ்சோலைகளாலும் பல மரங்களும் அடர்ந்த தோப்புக்களாலும் சூழப்பட்ட
செழிப்பான இடம் என்றவாறு.
இதனால் அறிவு வளர்ச்சி ஒழுக்கநெறி முதலியவற்றிற்கு ஏற்புடயதான இடம் என்பது புலனாகிறது.

புடை: பக்கம். நாற்புறமும் என்று பொருள்.

பெரிய இவ்வுலகத்தில் வாழும் மக்களே! உயர் வீடு பேறு அடையத்தக்க திருமந்திரப் பொருளை
மிக்க கருணையோடு எளிய தமிழில் “பிரமேய சாரம்” என்னும் இந்நூலில் சுருங்க கூறியவரும்
பூஞ்சோலைகளும் தோப்புக்களும் நாற்புறமும் சூழ்ந்து அழகாயுள்ள புதுப் புளி என்னும் இடத்தில் வாழும்
அறிஞர்களுக்குத் தலைவரும் செருக்கு மில்லாதவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
திருவடியையே எப்பொழுதும் நெஞ்சில் நினைந்து வணங்குவீராக. என்ற கருத்து.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –