Archive for December, 2020

ஸ்ரீ உபநிஷத்தும் ஸ்ரீ திருக்குறளும் —

December 25, 2020

திருக்குறள் வேத கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நூல்.
அவரது நூலைப் படிக்கும்போது, அவர் நிச்சயமாக வேத தர்மத்தைப் பின்பற்றியவர் என்பதை அறியலாம். வேதங்களின்படி மனித வாழ்வின் பக்குவநிலையானது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்காக எடுத்துரைக்கப்படுகிறது. அதனை அடிப்படையாக வைத்தே திருவள்ளுவர் தனது திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்றாகப் பிரித்துள்ளார். வீடுபேறு குறித்து திருக்குறளில் தனிப்பட்ட பகுதி இல்லை என்றாலும், அறத்துப்பாலில் இருக்கும் ஒரு பகுதி வீடுபேற்றினை எடுத்துரைக்கின்றது. எனவே, திருக்குறள் வேத நெறியான புருஷார்தத்தை (அறம், பொருள், இன்பம், வீடு) எடுத்துரைக்கும் நூல் என்பதில் ஐயமில்லை.
திருக்குறளில் கூறப்பட்டுள்ள மறுபிறவி, வீடுபேறு அடைதல் முதலிய தத்துவங்கள்

முதல் குறளானது ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்லோகமான ஜன்மாத்யஸ்ய யத: என்பதைத் தழுவி இயற்றப்பட்டுள்ளது

ஒவ்வொரு குறளிற்கும், அதற்கு சமமான ஸ்லோகத்தினை மஹாபாரதம், உபநிஷதங்கள், மனு ஸ்மிருதி
ஆகியவற்றிலிருந்து எடுத்துரைத்து திருக்குறளிற்கும் அதற்குமுள்ள சிறந்த ஒற்றுமைகளை பறைசாற்றியுள்ளார்.
முதல் பகுதி (அறத்துப்பால்) ரிக் வேதம், இராமாயணம், மஹாபாரதம், பராசர சம்ஹிதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றிலிருந்தும்,
இரண்டாம் பகுதி (பொருட்பால்) கமந்தக நீதி, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், சுக்ர நீதி, போத்யாயன ஸ்மிருதி ஆகியவற்றிலிருந்தும்,
மூன்றாம் பகுதி (காமத்துப்பால்) காம சூத்திரத்திலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது.
திருவாய்மொழியையும் திருக்குறளையும் ஒப்பிட்டு பல நூல்களும் கட்டுரைகளும்கூட பலரால் வடிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் ஆழ்வார்களின் பாசுரங்களை உபயோகித்துள்ளார் என்பதற்கும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
எப்படிப் பார்த்தாலும், திருக்குறள் வேத எண்ணங்களைத் தழுவியது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”

ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்”

ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:

தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் –
கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்.

இதில் ‘தேவர் குறள்’ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திருநான்மறை, ஏனையவைகளும்
‘ஒரு வாசகம்’ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலை தொடர்கிறது.
திருநான்மறை – நான்கு வேதங்கள்; மூவர் தமிழ் – அப்பர், சம்பந்தர், சுந்தரர் இயற்றியவை;
முனிமொழி – அகத்தியர் அருளிய அகத்தியம்; திருமூலர் அருளிய திருமந்திரம்;
இவை அனைத்தும், சமூக நலன் கருத்துக்களை உணர்த்துவன.

அன்னமாய் அரு மறையை வெளிப்படுத்திய அம்மான் -வேதம் அருளியதே பறவை தானே
ஜான ஸ்ருதி -ப்ரஹ்ம ஞானம் கொடுப்பதும் பறவை

தைத்திரிய உபநிடதம் ,நான்கு வேதங்களுள் ஸ்ரீகிருஷ்ண யஜூர்வேதத்தில்
தைத்திரீய ஆரண்யகத்தின் 7,8 மற்றும் 9வது ப்ரபாடகமாக வருவதாகும்.
தித்திரீ என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் கௌதாரி பறவை எனப் பொருள்.
முனி யாஞவல்க்யரை அவரது குருவான ஸ்ரீ வைசம்பாயணர், படித்த வேதத்தையெல்லாம் திருப்பித்தரச் சொல்ல,
யாஞவல்க்யரும் செரித்த உணவாகத் திருப்பித்தருகையில்,மற்ற சீடர்கள் திருப்பித்தரப்பட்ட செரித்த உணவை,
வேதத்தை கௌதாரி பறவைகள் வடிவங்கொண்டு விழுங்கினர் என்பதாகச் சொல்லப்படுகிறது.
வேதங்களும், அறிவும் என்றும் அழியாதது என்பதை ஸூசகமாக அறிவிப்பதே இக்கதை.

முக்கிய அறிவுரையான உண்மையைப் பேசு, அறநெறியைப் பின்பற்று எனப் பொருள்படும்
ஸத்யம் வத,தர்மம் சர எனும் வாசகமும்,
தாயை ,தந்தையை, ஆசிர்யனை, விருந்தாளியை தெய்வமாகப் போற்று எனப் பொருளுடைய,
“மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ “ எனும் வாசகங்கள் இதில் தான் உள்ளது.
ஆசார்யர்கள் பலரும் வேதாந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்ல இவ்வுபநிடதத்திலிருந்து தான்
பல மேற்கோள்களை எடுத்து விளக்கியுள்ளனர்.

இரண்டாவது அத்தியாயமான பிரம்ஹானந்தவல்லியின் முதல் செய்யுளில் வரும்
“ஸத்யம் க்ஞானம் அனந்தம் பிரம்ஹா “ என்பதையே
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் மும்மணிக் கோவையில் நந்துதலில்லா நல்விளக்கு எனவும் ,
அந்தமில் அமுதம் எனவும் மொழிந்துள்ளார்.

இனி தைத்திரிய உபநிடதத்தின் அந்த இரு சொற்றொடர்களை முதலில் அறிவோம்

அஸந்நேவ ச பவதி ; அஸத் ப்ரம்ஹேதி வேத சேத்
அஸ்தி ப்ரம்ஹேதி சேத்வேத ; ஸந்தமேனம் ததோ விது:ருதி
பரமனை இல்லை என்று அறிபவன் தன்னையே இல்லை என்பவன் ஆகிறான்.
பரமனை உண்டு என்று அறிந்தவனை கற்றுணர்ந்தவன் என அறிஞர்கள் போற்றுகின்றனர்.

இதனை குறள் 850 வுடன் ஒப்பு நோக்குவோம்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
உலகத்தார் – அறிஞர்கள்
உண்டென்பது- உண்டு எனச் சொல்லியதை
இல்லென்பான்- இல்லை என மறுப்பவனை
வையத்து – (அவ்வறிஞர்களைப் பின்பற்றும்) வையத்து மக்கள்
அலகையா வைக்கப் படும்- (கண்ணால் காணாத) பேய்க்கு நிகராய் கருதப்படுவான்.

எவ்வாறு கண்ணால் காணாத பேயை, தீமை எனக் கருதி விலக்குகிறோமோ., அவ்வாறே
அறிஞர்களைப் பின்பற்றும் வையத்து மக்கள், அவ்வறிஞர்கள் ( பரமன் எனும் மெய்ப்பொருள் ) உண்டு
எனச் சொல்லியதை ஏற்காதவனையும் பேய் போன்ற தீமை எனக் கருதுவார்கள்.
உண்டு“ என்ற சொல் பரமனெனும் மெய்ப்பொருள் அல்லாது வேறு எதைக் குறிக்க முடியும்?
திருவள்ளுவர் “மெய்யுணர்தல் “ என்ற தனி அதிகாரம் முழுவதிலும் மெய்ப்பொருளையே எடுத்து விளக்கியுள்ளார்.
குறள் 357ல் “உள்ளது உணரின்“ எனக் கூறியது இதைக் காட்டும்.

உபநிடதங்களிலும் பரமனை விளக்கும் மூன்று அறிகுறிச் சொற்களான
“ஸத், சித்,ஆனந்த“ என்பதில் ஸத் என்பதற்கு உண்டு என்ற பொருள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
மெய்யுணர்தல் என்பதோ இருமை கடந்து, மெய்ப்பொருள் கண்ட நிலை அல்லது
மெய்ப்பொருள் உணர்ந்த நிலையைக் குறிக்கும்.
மெய்ப்பொருளின் தன்மை,மெய்யுணர்ந்தோரிடம் மட்டுமே புலனாகும்.
மருள் எனும் மாயையை நீக்கப் புலனாவது,புலன்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மெய்யான இப் பரம்பொருளே.
மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு,இருள்நீங்கி இன்பம் பயக்கும் என்றுரைத்த முறையே,
மாசறு காட்சியவர்களுள் ஒருவராகவன்றோ வள்ளுவனார் ஒளிர்கிறார்!!
”கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி” எனவுரைத்ததனால்,
வள்ளுவனாரும் மெய்ப்பொருள் கண்டார் ஆவார் அன்றோ!

—————-

பிற பெயர்கள்
உத்தரவேதம்
பொய்யாமொழி
வாயுரை வாழ்த்து
தெய்வநூல்
பொதுமறை
முப்பால்
தமிழ் மறை
ஈரடி நூல்
வான்மறை
உலகப் பொதுமறை

———

நூற் பிரிவுகள்
திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது.
முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது.
ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.

அறத்துப்பால்
திருக்குறளின் அறத்துப்பாலில் “பாயிரவியல்” 4 அதிகாரங்களும்,
பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் “இல்லறவியல்”,
அடுத்து 13 அதிகாரங்கள் கொண்ட துறவறவியல்,
இறுதியில் “ஊழ்” என்னும் ஒரே அதிகாரம் கொண்ட “ஊழியல்”, என வகைபடுத்தப்பட்டுள்ளது.
திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் “ஊழியல்” மட்டுமே.
முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்.

பொருட்பால்
அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன.
அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன.
அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும்,
ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக
மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.

இன்பத்துப்பால்
கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலில்” களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள்.
களவியலில் 7 அதிகாரங்களும்,
கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன.

ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 14000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.

பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள்
கடவுள் வாழ்த்து, அறம் வலியுறுத்தல், நீத்தார் பெருமை என்பவை மக்களின் முழுக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும்,
வான் சிறப்பு மட்டும் மக்களின் முழுக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது.

————-

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.” (திருக்குறள் – 423)
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.” (திருக்குறள் – 392)
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.” (திருக்குறள் – 788)

புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான்.

தருமர் மணக்கும் தாமத்தார் நச்சர்
பரிதி பரிமே லழகர்-மல்லர்
பரிப்பெருமாள் காலிங்கர், வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தா ரிவர்.—என்கிறது பழைய வெண்பா .

———

முதலாவது அதிகாரமான ”கடவுள் வாழ்த்து”
இந்த அதிகாரத்தில் போற்றப்பட்டிருப்பவன் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான்,
வேண்டுதல் வேண்டாமையிலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான்,
அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்பவைகளால் விபரிக்கப்பட்டுள்ளான்

———

சுவையான தகவல்கள்
திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812.
திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133.
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380.
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700.
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250.
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330.

திருக்குறள், அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களைக் கொண்டது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000.
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194.
திருக்குறளில், தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை.
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி.
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள.

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்.

திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்.
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஓரெழுத்து-னி.
திருக்குறளில், ஒரு சொல், அதிக அளவில், அதே குறளில் வருவது “பற்று” – ஆறு முறை.
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங.

திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
( அகர முதல என தொடங்கும் முதல் குறள், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது;
இதில் ஆதி பகவன் – என்பது கடவுளைக் குறிக்கிறது).

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்.
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்- ஜி.யு.போப்.
திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்.
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.
திருக்குறள், நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

——————

“எழுத்துமுதல இலக்கண வகையும்
வழுத்து வேதாகம வகையதன் பயனும்
தங்கிய குறட்பா தமிழ்மனுநூல்…”
(பெருந்தொகை – 1543 )

———-

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

பரிமேலழகர் உரை:
ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தின் முன்னுரையிலேயே பரிமேலழகர் சொல்வது:
அஃதாவது தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதல்.
(அதாவது அவரவர் வர்ணாஸ்ரம தர்மப்படி ஒழுகுவது)

ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின்,
பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்;
பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.

மறந்தவழி இழிகுலத்தனாம் ஆதலின் மறக்கலாகாது என்னும் கருத்தான், மறப்பினும் என்றார்.
சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.

பரிதியார் உரை:

பிராமணன் வேதம் ஓதி மறந்தாலும் பின்பு சந்தத்தை விட்டு ஓதிக்கொள்ளலாம்.
ஒழுக்கம் கெட்டால் பிராயச்சித்தம் பண்ணினாலும் போகாது; செய்த தோஷம் அநுபவிக்க வேண்டும்.

———–

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

பரிமேலழகர் உரை:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது – அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும்
அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது;
மன்னவன் கோல் – அரசனால் செலுத்தப்படுகின்ற செங்கோல்.

(வேதமானது) அரசர், வணிகர் என்னும் ஏனையோர்க்கும் உரித்தாயினும், தலைமை பற்றி, அந்தணர் நூல் என்றார்.
‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்’ (மணிமேகலை 22: 208,9) அன்றித் தம் காவலான் ஆகலின்,
ஈண்டு அறம் என்பது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் (சநாதன தர்மம் என்று படிக்க)
செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு ஆதி என்றும்,
அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிது இல்லை என்பார் நின்றது என்றும் கூறினார்.

————-

தமிழ் என்ற சொல்லையே ஓரிடத்திலும் பயன்படுத்தாமல் கவனமுடன் தவிர்த்திருக்கும் வள்ளுவர்
அதே நேரத்தில் குறள் நெடுகிலும் ஏராளமான வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.
எகா:அமரர், அமிழ்து, அவி, ஆசாரம், ஆசை, ஆதி, இந்திரன், இலக்கம், கணம், கருமம், காமம், காமன், காரணம்,
காலம், சலம், சூது, சூதர், தண்டம், தவம், தானம், தூது, தேவர், நாகரிகம், நாமம், பகவன், பண்டம், பாக்கியம்,
பாகம், பாவம், பாவி, பூசனை, பூதம், மங்கலம், மந்திரி, மாயம், மனம், மானம், வரன், வாணிகம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதிலே பலவற்றிற்கும் இணையான தமிழ்ச்சொற்கள் இருந்தும் வலிந்து வடமொழியைப் பயன்படுத்தியிருப்பது
வள்ளுவரின் வடமொழிப்பற்றைத் தெள்ளென விளக்கும்.

————-

வள்ளுவர் குறளினூடே அடுக்கிப்போகும் ஆரியவழித் தெய்வங்களின் தொகுப்பு:

விஷ்ணுவும் ஸ்ரீதேவியும்: 84, 167, 179, 519, 617, 920, 1103
பூதேவி: 1040
ஸ்ரீதேவிக்கு மூத்தவள்: 167, 617, 936
இந்திரன்: 25, 899
பிரும்மா: 1062
மக்கள் உள்ளத்தே காமத்தை ஊட்டும் மன்மதன்: 1197
கூற்றுவன்: 269, 326, 765, 894, 1050, 1083, 1085

மேலும் லஜ்ஜா, தரா என்று வடமொழியார் பாணியில்
நாணெணும் நல்லாள் (924) என்பதும் நிலமெனும் நல்லாள் (1040) என்பதும் குறிப்பிடத்தக்கன.

———–

வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.– செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந் திதனின்இது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்துத் தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து– வண்ணக்கஞ் சாத்தனார்

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்து அருளிய நூல்கள்–

December 25, 2020

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
கி. பி. 1228 ஆண்டு பிறந்தவர். பூர்வசிகை அந்தணர் குலம். ஊர் செங்கநல்லூர் (சேய்ஞலூர், சேங்கனூர்)
இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ண பாதர். அபயப்ரயராசர்’ என்னும் சொல்லை ‘ஆச்சான்’ என வைணவப் பரம்பரையினர் வழங்குவர்.
ஆச்சான் என்னும் பெயரோடு இருந்தமையால் பிரித்துக் காட்ட இவரை ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை எனக் குறிப்பிட்டனர்.
இவர் பெயரிலுள்ள ‘பிள்ளை’ என்னும் வழங்கு ‘பெருமாளின் பிள்ளை’ என்னும் பொதுவழக்கு.
இவருக்கு முன் வாழ்ந்த கிருஷ்ணசூரி என்பவரை ஸ்ரீ சிறியவாச்சான் பிள்ளை என வழங்கினர்.
தந்தை ஸ்ரீ யாமுன தேசிகர். தாயார் ஸ்ரீ நாச்சியார் அம்மை.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்து அருளிய நூல்கள்
இவரது விரிவுரைகளை ‘வியாக்கியானம்’ என்பர். யாவும் மணிப்பிரவாள நடையில் அமைந்தவை.

1-ஸ்ரீ அபய ப்ரதான வியாக்கியானம்
2-ஸ்ரீ அனுசந்தான ரஹஸ்யம்
3-ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்து அருளிய ஸ்ரீ ஸ்தோத்திர ரத்ந வ்யாக்யானம்
4-ஸ்ரீ உபகார ரத்னம்
5-ஸ்ரீ கத்ய த்ரய வ்யாக்யானம்
6-ஸ்ரீ கலியன் அருள்பாடு
7-ஸ்ரீ சகல ப்ரமான தாத்பரியம்
8-ஸ்ரீ சரம ரகசியம்
9-ஸ்ரீ தனி ஸ்வோகி வ்யாக்யானம்
10-ஸ்ரீ திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
11-ஸ்ரீ நவரத்னமாலை
12-ஸ்ரீ நிகமனப் படி
13-ஸ்ரீ பரந்த படி
14-ஸ்ரீ பரந்த ரகசிய விவரணம்
15-ஸ்ரீ பாசுரப்படி இராமாயணம்
16-ஸ்ரீ மாணிக்கமாலை

இந்த விரிவுரை நூல்களுடன்
17-ஸ்ரீ பிரபந்த ரகசியம் என்னும் தனி நூலும் இவர் எழுதியுள்ளார்.

1. ஸ்ரீ ரகஸ்யத்ரய விவரணம்
2. ஸ்ரீ திருப்பல்லாண்டு வ்யாக்யாநம்
3. ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யாநம்
4. ஸ்ரீ திருப்பாவை மூவாரயிரப்படி வ்யாக்யாநம்
5. ஸ்ரீ நாச்சியார் திருமொழி வ்யாக்யாநம்
6. ஸ்ரீ பெருமாள் திருமொழி வ்யாக்யாநம்
7. ஸ்ரீ திருச் சந்த விருத்தம் வ்யாக்யாநம்
8. ஸ்ரீ திரு மாலை வ்யாக்யாநம்
9. ஸ்ரீ திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யாநம்
10 ஸ்ரீ அமலனாதிபிரான் வ்யாக்யாநம்
11.ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு வ்யாக்யாநம்
12.ஸ்ரீ பெரியதிருமொழி வ்யாக்யாநம்
13.ஸ்ரீ திருக்குறுந்தாண்டகம் வ்யாக்யாநம்
14.ஸ்ரீ திருநெடுந்தாண்டம் வ்யாக்யாநம்
15.ஸ்ரீ முதல் திருவந்தாதி வ்யாக்யாநம்
16.ஸ்ரீ இரண்டாந்திருவந்தாதி வ்யாக்யாநம்
17.ஸ்ரீ மூன்றாந்திருவந்தாதி வ்யாக்யாநம்
18.ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி வ்யாக்யாநம்
19.ஸ்ரீ திருவிருத்தம் வ்யாக்யாநம்
20.ஸ்ரீ திருவாசிரியம் வ்யாக்யாநம்
21.ஸ்ரீ பெரிய திருவந்தாதி வ்யாக்யாநம்
22.ஸ்ரீ திருவெழுகூற்றிருக்கை வ்யாக்யாநம்
23.ஸ்ரீ சிறிய திருமடல் வ்யாக்யாநம்
24.ஸ்ரீ பெரிய திருமடல் வ்யாக்யாநம்
25.ஸ்ரீ திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி வ்யாக்யாநம்
26.ஸ்ரீ பரந்த ரஹஸ்ய விவரணம்
27.ஸ்ரீ மாணிக்கமாலை
28.ஸ்ரீ நவரத்னமாலை
29.ஸ்ரீ ஸகல ப்ரமாண தாத்பர்யம்
30.ஸ்ரீ உபகார ரத்னம்
31.ஸ்ரீ கத்ய த்ரய வ்யாக்யானம்
32.ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம்
33.ஸ்ரீ சதுஸ்லோகி வ்யாக்யானம்
34.ஸ்ரீ சரம ரஹஸ்யம்
35.ஸ்ரீ அநுஸந்தான ரஹஸ்யம்
36.ஸ்ரீ நிகமனப்படி
37. ஸ்ரீ ராமாயண தனிஸ்லோகி
38.ஸ்ரீ பாரதாதி தனி ஸ்லோகம்
39.ஸ்ரீ அபய ப்ரதான சாரம்
40.ஸ்ரீ ரகஸ்ய தீபிகை
41.ஸ்ரீ பரந்தபடி
42.ஸ்ரீ திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
43.ஸ்ரீ கலியனருள்பாடு
44.ஸ்ரீ திவ்ய ப்பரபந்த பாசுரப்படி ராமாயணம்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை 60 க்ரந்தங்கள் செய்துள்ளதாக அறியப்படுகிறது.

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சப்த ரிஷி ஸ்ரீ ராமாயணம்-

December 24, 2020

ஸ்ரீ காச்யப ரிஷி – ஸ்ரீ பாலகாண்டம்

ஜாதஸ்ரீ ரகு நாயகோ தசரதான், முனியாஸ்ரய தாடகாம்,
ஹத்வா ரக்ஷித கெளசிக க்ருதுவர: க்ருத்வாப்யஹல்யாம் ஷுபம் I
புங்க்த்வ்வா ருத்ர ஸராஸ ஜனகஜாம் பாணௌ க்ருஹித்வா
ததோ ஜித்வார்தாத்வனி பார்கவம் புனரகாத் சீதாசமேத: புரிம் ॥ 1 ॥

புத்திர பாக்கியம் வேண்டிய தசரதரின் புத்திர காமேஷ்டி யாகத்தில் உதித்து ரவி குல திலகமாக ஸ்ரீ ராமர் அவதரித்தார்.
சகல வித்தைகளையும் முதலில் ராஜரிஷி பின்னர் பிரம்ம ரிஷியாகிய விச்வாமித்ரரிடம் கற்றார்.
சகல அச்த்ரங்களையும் பிரயோகம் பண்ணுவதற்கு அவரிடம் பெற்றார்.
முதல் ராக்ஷச வதமாக தாடகையைக் கொன்று முனிவர்களை காப்பாற்றினார்.
விஸ்வாமித்திரர் நடத்திய யாகத்துக்கு ராக்ஷசர்களின் தடங்கல் எதுவும் வராமல் காத்தார்.
பின்னர் அவர் பாணங்களில் மாண்ட அரக்கர்கள் சுபாகுவும் மாரிச்சனும். பல நூறு வருஷங்கள் தவமிருந்த கல்லாக
சமைந்த அகலிகா அவர் பாதம் பட்டது முதல் மீண்டு ரிஷி பத்னியானாள் . விச்வாமித்ரரோடு மிதிலை விஜயம் செய்தார்.
எவராலும் அசைக்க முடியாத சிவ தனுசுவை நொடியில் எடுத்து நிறுத்தி எல்லோரும் ”எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்”
பூமாதேவி அம்சமான ஸ்ரீ சீதா தேவியை மணம் புரிந்தார். ஜானகி ராமனாய் அவர்கள் நடக்கையில் வழியில்
பரசுராமர் கர்வ பங்கம் நடந்தது. அயோத்தி திரும்பினார்கள் . நலமாக பல்லாண்டு வாழ்ந்தார்.

———

ஸ்ரீ அத்ரி மகரிஷி – ஸ்ரீ அயோத்யா காண்டம்

தாஸ்யா மந்தரய தயா ரஹிதயா துர்போதிதா கைகயி
ஸ்ரீ ராமப்ரதமாபிஷேக சமயே மாதாப்ய யாச த்வரௌ I
பர்த்தாரம் பரத: ப்ரஷாஸ்து தரணீம் ராமோ வனம் கச்சதா:
தித்யாகர்ண்ய ஸ சோதரம் ந ஹி ததௌ துக்கேன மூர்ச்சா கத: ॥ 2 ॥

ஒரு சேடி , பணியாள், மந்தரை இதமாகப் பேசி கைகேயியின் மனத்தைக் கல்லாக்கி, ராமனுக்கு பட்டாபிஷேக
சந்தோஷ சமயத்தில் பழைய நினைவூட்டி தசரன் வாக்களித்த இரு வரங்களை கேட்க வைத்தாள் பரதன் நாடாள, ராமன் காடாள .
ஒரு நாளோ மாதமோ வருஷமோ அல்ல, பன்னிரண்டு வருஷங்கள். ராஜாவாக அல்ல, மரவுரி தரித்து ரிஷியாக.
தாங்கமுடியாத பேரிடியாக சத்யத்தை நிலைநிறுத்த, கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மயங்கி விழுந்தான் தசரதன்.

————

ஸ்ரீ பாரத்வாஜ மகரிஷி – ஸ்ரீ ஆரண்ய காண்டம்

ஸ்ரீ ராம: பித்ருசாசனாத் வனமகாத் சௌமித்ரி சீதான்விதோ
கங்காம் ப்ராப்ய சதாம் நிபத்யா சகுஹ: சச்சித்ரகூடே வஸன் :
க்ருத்வா தத்ர பித்ருக்ரியாம் சபரதொ தத்வாஅபயம் தண்டகே :
ப்ராப்யா அகஸ்திய முனீஸ்வரம் ததுதிதம் த்ருத்வா தனுஸ்சாக்ஷ்யம் : ॥ 3 ॥

அப்பா கூட சொல்லவில்லை. அப்பா சொன்னதாக சிற்றன்னை சொன்னதையே வேத வாக்காகக் கொண்டு
ஸ்ரீ ராமன் ஸ்ரீ சீதா ஸ்ரீ லக்ஷ்மணர்களோடு வனவாசம் சென்றான். கங்கை அடைந்தான். ஜடாமுடி தரித்தான். குஹன் உதவ,
ஸ்ரீ சித்ரகூடம் அடைந்தான். ஸ்ரீ பரதன் வந்து தந்தை ஸ்ரீ விஷ்ணுபதம் சேர்ந்தார் என்றறிந்து ஈமக்ரியைகள் செய்தபின்
ஸ்ரீ தண்டகாரண்யத்தில் ரிஷிகளுக்கு பாதுகாப்பு அளித்தான். ஸ்ரீ அகஸ்தியரை சந்தித்து ஆசி பெற்றான்.
ஸ்ரீ கோதண்டம் வலுப்பெற்றது. தோளில் அமர்ந்தது.

——-

ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் – ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்

கதவா பஞ்சவடி அகஸ்த்ய வச்சனா திருத்வா அபயம் மௌநீனாம்;
சித்வா சூற்பனகச்ய கர்ண யுகளம் த்ராதும் சமஸ்தான் முனின் :
ஹத்வா தம் ச கரம் சுவர்ண ஹரிணபித்வா ததா வாலினம்;
தாரா ரத்ன மவைரி ராஜ்ய மகரோத் சர்வ ச சுக்ரீவஸாத்:. ॥ 4 ॥

ஸ்ரீ அகஸ்தியர் காட்டிய வழியில் பஞ்சவரி அடைந்தார்கள். காட்டில் முனிவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது.
சூர்பனகையை மூக்கு, காதுகளை வெட்டி பங்கப்படுத்தினர். கர தூஷணர்கள், மாயமானாக வந்த மாரீசன், வாலி
அனைவருமே வதம் செய்யப்பட்டனர். ஸ்ரீ சுக்ரீவனுக்கு ஸ்ரீ கிஷ்கிந்தா ராஜ்ய பட்டாபிஷேகம் நடத்தி
தாரையின் அறிவுரைப்படி ஆள்வாய் என்று ஆசிர்வதித்தார்.

———-

ஸ்ரீ கௌதம ரிஷி – ஸ்ரீ சுந்தர காண்டம்

தூதோ தசரதே: சலில முததிம் தீர்த்வாம் ஹனுமான் மகான் :
த்ருஷ்ட்வா அசோகவனே ஸ்திதாம் ஜனகஜாம் தத்வா அங்குலேர் முத்ரிகாம்
அக்ஷாதீன அசுறான் நிஹத்ய மஹதீம் லங்காம் ச தக்த்வா புன:
ஸ்ரீ ராமம் ச சமேத்ய தேவ ஜனனி த்ருஷ்டா மயேத்ய ப்ரவீத்.: ॥ 5 ॥

ஸ்ரீ ராம தூதனாக ஸ்ரீ ஹனுமான் கடலைத் தாண்டி இலங்கையில் பிரவேசித்து அசோகவனத்தில்
ஸ்ரீ சீதா தேவியைத் தரிசித்தான். முத்ரை ஸ்ரீ கணையாழியை அளித்தான். அசுரர்களையும் ராவணன் புத்திரன்
அக்ஷயகுமாரனையும் கொன்றான். தீவுக்கு தீ வைத்தான். ஸ்ரீ ராமனிடம் திரும்பி தாயைக் கண்டேன் என்றான்.

————

ஸ்ரீ ஜமதக்னி ரிஷி – ஸ்ரீ யுத்த காண்டம்

ராமோ பத பயோ நிதி: கபி வரை வீரைர்ன லாதயைர் வ்ருதோ
லங்காம் ப்ராப்ய ஸ கும்பகர்ண தனுஜம் ஹத்வா ரணே ராவணம்:
த்ஸ்யாம் ந்யஸ்ய விபீஷணம் புனரசௌ சீதாபதி புஷ்பகா:
ரூட: ஸன் புரமாகத : ச பரத: சிம்ஹாசனச்தோ பபௌ: ॥ 6 ॥

ஸ்ரீ ராமர் ஸ்ரீ சேது பந்தனத்தை வானர சைன்யங்களை வைத்துக்கொண்டு நளனின் மேற்பார்வையில் கட்டி முடித்தார்.
இலங்கையை அடைந்தார். கும்பகர்ணன் ராவணன் ஆகியோரை யுத்தத்தில் வதம் செய்தார்
ஸ்ரீ விபீஷணனை லங்காதிபதியாக்கினார். ஸ்ரீ சீதா தேவியோடு புஷ்பக விமானத்தில் ஆரோகணித்து
ஸ்ரீ நந்தி க்ராமத்தில் ஸ்ரீ பரதனைச் சந்தித்து பொறுப்பேற்று ஸ்ரீ அயோத்தி மன்னனாக அவருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

———

ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி – ஸ்ரீ உத்தர காண்டம்

ஸ்ரீ ராமோ ஹயமேத முக்ய மச்வா க்ருத் சமயக் பிரஜா பாலயன்;
க்ருத்வா ராஜ்ய மதான்னு ஜைஸ்ச சுசிரம் பூரிச்வ தர்மான்விதௌ ; புத்ரௌ
பிராத்ரு சமன்விதௌ குச லவௌ சம்ஸ்தாப்ய பூ மண்டலே;
ஸோ அயோத்யா புர வாஸி பிஸ்ச சரயுஸ் ஸ்நாத: ப்ரபேதே திவம்: ॥ 7 ॥

ராஜ்யத்தை பல்லாயிரம் ஆண்டு ஆட்சிசெய்து அஸ்வமேத யாகம் நடத்தி, குடிமக்களை சந்தோஷமாக வைத்து,
ஸ்ரீ ராம ராஜ்யம் என்ற மேன்மை பெற்ற பெயர் பெற்று, சகோதரர்களோடு தர்ம பரிபாலனம் செய்து இந்த
பூமண்டலத்தை சகோதரர்களுக்கும், அவர்கள் மக்களுக்கும்,லவ குசர்களுக்கும் அளித்து
ஸ்ரீ ராமர் தனது அவதாரத்தை ஸ்ரீ சரயு நதியில் முடித்தார்.

————

ஏழு ரிஷிகளும் சேர்ந்து :

ஸ்ரீ ராமஸ்ய கதா சுதாதி மதுரான் ச்லோகாநிமான் உத்தமான்;
யே ஸ்ருண் வந்தி படந்தி ச பிரதிதினம் தே;தௌதவித்வாம்ஸின
ஸ்ரீமந்தோ பஹு புத்திர பௌத்ர சாஹிதா புக்த்வேஹ போகாஸ்சிரம்;
போகாந்தே து சதார்ச்சிதம் சுரகணைர் விஷ்ணோர் லபந்தே பதம்:

ஒவ்வோர் காண்டத்துக்கும் ஒரு ஸ்லோகமாக 7 ரிஷிகளும் (ஸ்ரீ சப்த ரிஷிகள்) வழங்கிய ஸ்ரீ ராமாயணம் தான்
ஸ்ரீ சப்தரிஷி ராமாயணம். இது ஒரு ஈடிணையற்ற பூந்தேன். இதை தினமும் செவி மடுத்தாலும், படித்தாலும்,
சகல சாஸ்திரவானாக ஒருவன் மாறலாம்.சர்வ சம்பத்தும் பெருகும். புத்திர பௌத்ராதிகள் மகிழ்ச்சியில் ஆழ்த்துவர்.
உலக வாழ்க்கை எல்லாம் இன்பமயம் என்பதாகும். ஸ்ரீ விஷ்ணுபதம் சாஸ்வதமாகும்.

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை சாரம் – ஸ்ரீ. உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி உபன்யாசத்தில் முத்துக்கள்.-

December 24, 2020

பேடிகா விபாகம்.
ஐந்தினோடு பத்துமொரு மூன்றும் பதியொன்றும்
தந்தநம் கோதை திருப்பாவை– அந்தமோடு
ஒன்றுமாய முப்பதும் எப்போதும் செப்பவே
ஒன்றுமவள் பேறு நமக்கு.

முதல் பாசுரம் – ஆண்டாள் பஞ்ச நாராயண பிரதிஷ்டை :
ஸ்வாமி எம்பெருமானார் , கிருமிகண்ட சோழன் உபத்தரவம் பொறுக்க மாட்டாமல் மேல்நாட்டில் எழுந்தருளி
இருந்த காலத்தில் பிட்டிதேவன் என்கிற விஷ்ணுவர்த்தனான ஹொய்சள மன்னரின் உதவியோடு
1-தலக்காடு கீர்த்தி நாராயணன்
2-தொண்டனூர் நம்பி நாராயணன்
3-மேலகோட்டை திரு நாராயணன்
4-பேலூர் கேசவ நாராயணன்
5-கடக வீர நாராயணன்
என்பதான பஞ்ச நாராயண க்ஷேத்ரங்களை பிரதிஷ்டாபித்தார் என்பது வரலாறு.
கோயில் அண்ணரான இராமானுஜர் எவ்வழி அவ்வழியில் தங்கையான ஆண்டாளும் இந்த பாசுரத்தில்
1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் நாராயணன்
2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன்
3-கார்மேனி நாராயணன்
4-செங்கண் நாராயணன்
5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன்
ஆகிய பஞ்ச நாராயணர்களை பிரதிஷ்டாபனம் பண்ணுகிறாள் என்பதை யுக்தி ரசத்தோடு பார்க்கலாம்.

1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் -;
திருமந்திரார்த்த பிரதனான ஆச்சாரியனைச் சொல்லும். எப்படி என்றால் தனக்கு விதேயனாக இருக்கிற
கண்ணனெம்பெருமானை ரக்ஷிக்க வேண்டி , கூரிய வேலை பிடித்தவன் நந்தகோபன். ஆசாரியனும்,
பகவத் ரக்ஷண தத்பரர் ஆகையால், பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர். இவருடைய மங்களாஸாசன தத்பரத்தையே இவர்கைவேல்.
திருமந்திரம் இவருக்கு விதேயமாய் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் காரியம் செய்கையாலும்,
நந்தித்தவமும் கோப்திருத்வமும் இவருக்கும் உண்டு ஆகையால் நந்தகோபன் குமரன் நாராயணன் என்றபடி.

2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன் -;
என்பது கண்ணியாக உள்ள துவய மந்திர பிரதிபாத்யன் நாராயணன் என்றபடி. கண்ணனுடைய பிரதாபங்கள் எல்லாம்
யசோதை இடத்திலாய், அவள் கண்வட்டத்துள் நின்று அகலாது முந்தாணையில் முடியாலாம்பட்டி இருக்கிற தன்மைகொண்டு –
ஆசாரியன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கை புகுரும் என்ற கணக்கிலே மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவான
நாராயணனைச் சொல்லுகிறது இத்தால்.

3-கார்மேனி நாராயணன் -;
என்றது மேகத்தைப்போல் இன்னார் இனையார் என்று பார்க்காது , அவர்கள் இருக்கிற இடம் சென்று வர்ஷிக்கிற
வர்ஷாகால மேகத்தைப்போலேயான ஒளதார்யமும், சௌலப்யமும் சொல்லிற்று.
நீர் அந்த்ரேண சம்ஸ்லேய : என்று மழைநீர் அது விழுகிற இடத்தின் தன்மையை –
செம்மண் பூமியானால் செந்நிறமும், பால்நிற பூமியானால் பால் நிறமும் பெறுவதுபோல –
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது உம்பி எம்பி என்று தோழமை கொண்டதும்,
மாடு கன்றுகளோடும், இடையர்களோடும் பொறையற கலக்கின்ற சௌசீல்யகுணத்தையும் சொல்லிற்று எனலாம்.

4-செங்கண் நாராயணன் -;
என்றது செவ்வரியோடிய நீண்டவப் பெரியவாய கண்கள் என்று ஸ்வாமித்வ, ஸ்ரீமத்வ சூசகங்கள். மையகண்ணாள் என்று பிராட்டியையும்,
செய்யக்கோல தடங்கண்ணன் என்று ஸ்ரீயப்பதித்தவமும், ஸ்ரீமத்வமும் இறே இவனுக்கு நிரூபணங்கள்.
இந்த ஸ்வாமித்வ, சௌலப்ய, சௌசீல்யாதிகள் அல்லவோ ஆஸ்ருத ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்?

5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன் -;
என்றது தண்ணளியும், பிரகாசமும் ஒருங்கேயான ஸ்வாமித்வ, சக்தி சாமர்த்தியாதி களுக்கு உப லக்ஷணம்.
இவை ஆஸ்ருத காரிய ஆபாதக குணங்களாய் நாராயண ஸப்தார்த்த குண போக்யதைகளையும் சொல்லிற்று.

அப்படிப்பட்ட நாராயணனே
மந்திரத்திலும், மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்திர பிரதனான ஆசாரியன் பாக்கலிலும் பிரேமம்
கனக்க உண்டான நமக்கே ஸ்வரூபனுரூபமான கைங்கர்யமாகிற பறை தருவான் என்கிறது இப்பாசுரத்தில்.

———-

4-ஊழி முதல்வன் :
பொன்னை மெழுகொற்றி தேற்றுமா போலேயாய்
தன்னைக் கொடு தரணி எல்லாமும் — முன்னை போல்
தான் தோற்று மஃது சம நோக்கே! ஊன் உயிர்
கண்ஏற்றல் ஆம்தனி நோக்கு.

நாராயணனே நமக்கே பறை – தண்டுழாய் நமகன்றி நல்கான் – தனி நோக்கு – (விஷம) வியஷ்டி ஸ்ருஷ்டி
நாமும்-நாங்கள்-நாங்களும் மார்கழி நீராட – பொது நோக்கு – ஸமஷ்டி ஸ்ருஷ்டி.

———-

5-தூயோமாய் வந்து தூய பெருநீர் தூமலர் தூய் :

தன் கை கால் மெய் வாயும் கொடு அளைந்த காளிந்தி
போன்கரணம் மூன்றும் கொடு கண்ணன் — தன் நினைவால்
எண்ணம் மொழி செய்கை ஒன்றிச் செய் கிரியை
வண்ணம் அழகிய பூ நாறு.

———-

6. பிள்ளாய் :
கற்றதன்றி உற்றத வன்னடியார்க் காள் எற்றோ ?
பெற்ற பரமன் நமை உடைத்தாய் — மற்றையார்
விற்கவும் பாற்றென போக்க இசைந்தது
ஏற்கை நம என்பார் சாற்று.

———

7. கலந்து பேசின பேச்சரவம் :
வதரிவான் வைகுந்தம் பார்த்தன்தேர் முன்னாய்
கதிரொளி மால் கண்ணன் கேசவனன் — றோதிய
மெய்மைப் பெரு வார்த்தை ஒவ்வொன்றும் மால் மாறன்
வாய் மொழிக் குள்ளாதல் கொள்ளு.

———

8. வந்து நின்றோம் :
காசை இழந்தவன் பொன்னை இழந்தவன்
ஆசை மணியை இழந்தவன் — பேச நின்ற
மால் நிற்க பத்தர் பரவுவார், வீடணன் போல்
கோல் கொழுந்த தற்றே அவர்.

———-

9. பாகவத ஸம்பந்தம் ஸ்வதந்திரோபாயம்:
இருகால் விலங்கு இறகுடை பட்சி
ஒருகால் திருமால் அடியார் — அருள் நோக்
கிலக்கதேல் ஞான மநுட்டான மில்லா
நிலையரேனும் சேரும்மால் வீடு.

——–

9. மாமன் மக்களே :உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று தொடங்கி
உனக்கும் உனதடிய ராவார் — தமக்குமாய் பின்
மாலே! உனதடியார் பாலேயாய் கோலுமது
ஏலுவதும் என்கொள் குறிப்பு?

ஆசார்ய ருசி பரி கிருஹீத பகவத் சேஷத்வத்திலே இழிந்தவாரே பகவத் பாகவத கைங்கர்யமாகிற
ஈரஅரசு படுதல் தேட்டமேலும் அதுக்கு எல்லை நிலமான ததீயத்வேக சேஷனாகை எம்பிரார்க்கு இனியவாறே.

———-

10. ஆற்ற அனந்தல் :
ஆறும் அடைவும் அவன் தாள் எனவாகக்
கூறும் நினைவும் உறுதியும் — பேறெனத்
தேறி அதன் வழி வாழு நற் சோம்பர்
உறவும் முறையும் விழைவு.

———-

11. பொற்கொடி :
தனக்கும் பிறர்க்குமாய் அன்றி உறவு
எனக்கு நீயே அன்றோ? எனவாய் — புனக்காயா
மேனி புனிதன் புணர்தியில் ஆம் உணர்த்திக்
கானகூட்டு மாலடியார் மாட்டு.

————

12. மனத்துக் கினியானை அனைத்தில்லத்தாரும் அறிந்து :
பெண்ணுக்கும், பேதைக்கும் ஞான பக்தி கார்மிகர்க்கும்
நண்ணித் தொழுவார்க்கும் நண்ணல் — விழையார்க்கும்
அண்ணல் இராமா நுசனை இராமனும் போல்
எண்ண இனிக்கும் உளம்.

மண்டோதரி, தாரை, சூர்பணகை ஆகிய பெண்களின் மனத்துக்கு இனியர் பெருமாள் .
திரிபுராதேவி, கொங்கில் பிராட்டி, திருக்கோளூர் பெண்பிள்ளை ஆகிய பெண்சிஷ்யைகள் மனத்துக்கு இனியர் ராமாநுசர்.
பேதையர்களான வானர ஜாதிக்கும், பட்சி ஜாதியான ஜடாயுவுக்கும், திர்யக்கான அணிலுக்கும் மனத்துக்கு இனியர் பெருமாள்.
பேதையான ஒரு ஊமையின் தலையில் தன்திருவடி ஸ்பர்சம் செய்வித்து இனியரானார் ராமாநுசர்.
சத்யேந லோகாந் ஜயதி, தானேந தீன : என்று சகல மநுஜ மனோஹாரி பெருமாள்.
ஞானிகளை ஶ்ரீபாஷ்யம் கொண்டும், பக்தர்களை சரணாகதி சாஸ்திரம் கொண்டும், அநுஷ்டான பிரதராய் கர்மயோகிகளுக்கும் ஸ்வஜன பிரியர் ராமாநுசர்.
அன்னு சராசரங்களை வைகுந்தத்து ஏத்தி என்று சாமான்யர்களுக்கு இனியர் பெருமாள்.
ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று வரம்பறுத்த பெருமாளாய் ஜகதாசார்யர் ஆனார் ராமாநுசர்.
சத்ரு சைன்ய பிரதாபர் என்கிற விருது பெற்ற பெருமாள் ராவண, மாரீசாதிகளின் புகழ்சிக்கு விஷயமானவர் பெருமாள்.
அப்பொழுது ஒரு சிந்தை செய்து- யாதவபரகாசன், யஞ்ஞமூர்தி போன்ற பரபக்ஷ வாதிகளை சிஷ்ய பிரந்தமாக்கிய மனத்துக்கு இனியர் ராமாநுசர்.

இப்படி அனைத்து கொத்துக்கும் இனிய நற்செல்வன் ராமாநுசர்.
அவர் தங்கையான ஆண்டாள் கோயில் அண்ணர் பிரபாவம் பேசினபடி இது.

———-

13. கீர்த்திமை பாடிப் போய் :
ஆறும் பயனுமாய் தேறாது பாடிப்போம்
பேறு அதுவேயாய் கந்தல் — கழிந்தமை
கூறு மொரு நாலும் மூன்றும் இரண்டும் வான்
ஏற பரமனைப் போய்ப் பாடு.

அறம், பொருள், இன்பம், வீடு என்கிற புருஷார்த்த சதுஷ்டய கோஷ்டிக்கும்;
அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு , ஞானிகளாகிய கோஷ்டி திரயத்துக்கும்;
முனிவர்களும், யோகிகளுமாகிற நித்ய, முக்த உபய கோஷ்டிக்கும்;
உண்ணும் சோறு பருகு நீர் எல்லாம் கண்ணன் – என்று ஆழ்வாருக்கு
திருக்கோளூர் எம்பெருமானும் என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினானான் என்று
காட்கரையப்பனுக்கு ஆழ்வாருமாக அனன்ய சாபீஷ்ட்டா கோஷ்டிக்கும் உத்தேஸ்யம் இதுவேயாய்
இங்குத்தையார்க்கு பகவத் ஸன்னதிக்கு (திருப்பாவை ) பாடிப் போகையே பிரயோஜனம்.
அங்குத்தையார்க்கு பகவத் முக்கோலாசகர கைங்கர்யனுவர்தனமாகிற – போய்ப் (சாமகானம்) பாடுகையே பிரயோஜனம்.

————-

16. நென்னலே வாய் நேர்ந்தான் :
கூடி இருந்ததாம் காலத்து கண்ணன் தான்
தேடி உரைத்தவையே கொண்டு யாம் — நாடி வந்தோம்
நாயகநீ! கை நீட்டி ஆகாதென் ஓவாதே
நேய நிலைக் கதவம் நீக்கு.

பூ வராஹன் வார்த்தை – அஹம் ஸ்மராமி மத் பக்தம் – நாராயணனே நமக்க பறை என்கிற உபேய புத்தி அத்யவசாயத்தோடே வந்தோம்.
பெருமாள் வார்த்தை – தவாஸ்மி இதீச யாசதே ததாம் ஏதத் விரதம் – பரமனடிப் பாடி பாகவதேக உபாய புத்தியோடே வந்தோம்.
கீதாசார்யன் வார்த்தை – அஹம் துவா மோக்ஷ இஷ்யாமி மாஸுச : – நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று உபாயாந்தரங்களை விட்டு வந்தோம்.
இப்படி பேற்றுக்கு துவரிக்கையும், உபய உபேய நிஷ்டையாகிற தூய்மையோடே வந்தோம் என்றவாறு.

விபவாவதார எம்பெருமான்கள் மட்டுமல்லாது, அர்ச்சாவதார பெருமாள்கள் மொழிந்தமை கேட்ட வந்தோம் என்பதை
நம்பெருமாள் வார்த்தை – அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ –
நீராட என்று பகவத் ஸம்ஸ்லேஷத்தையும்,
பாடி என்று மங்களாசாஸன தத்பரதையோடே ஸாலோக, ஸாமீப்ய ஸாயுஜ்யத்தை ஆஸாசித்து வந்தோம்.
மலையப்பன் வார்த்தை – தொண்டை மன்னவன் திண்திறல் ஒருவருக்கு வளங்கொள் மந்திரம் அருளிச் செய்தவாறு –
திருமந்திரத்தில் உள்ள நம பதத்தை பூர்வ உத்தர ஸ்தானாதிகளில் வைத்து பார்க்கிற வகையில்
ஓம் நம :
நமோந் நம :
நாராயணாய நம :
என்ற கணக்கிலே
நாராயணனே நமக்கே (1) என்றும்
நாராயணன் மூர்த்தி (7) என்றும்
நாற்றத்துழாய்முடி நாராயணன் (10) என்றும்
ஸ்வ சேஷத்வம் , அன்ய சேஷத்வம் கழிந்தவர்களாய் பகவத்தேக சேஷர்களாய் பாடிக்கொண்டு வந்தோம்.

தேவப் பெருமாள் ஆறு வார்த்தை – நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறுமானிட்டவர் நாம் செய்வதென்
வில்லிபுத்தூர் கோன் விட்டுசித்தன் வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே – என்ற கணக்கில்
பகவத் வசனங்களே யானாலும், கபிலாவதாரம், புத்தாவதாரம் போன்ற ஆழ்வார் ஆசார்யர்கள் கைக்கொள்ளாத
உபதேசங்களை கழித்து, எம்பெருமானார் மதித்த வார்த்தை என்று கொண்டு – உய்யுமாறு எண்ணி வந்தோம்.

இன்னும் திருமாலிருஞ்சோலை மலை அழகர் வார்த்தை – ராமானுஜ சம்பந்திகள் அகதிகள் அல்லர் என்றும்,
அவருடைய திருவடி சம்பந்தம் போலே திருமுடி சம்பந்தமும் உத்தாரகம் என்பதை வெளியிட்ட படியே
ராமானுஜ அனுயாயிகளாக – தனித்த தேட்டமாக அல்லாது, துணைத் தேட்டமாக வந்தோம்.

நாதமுனிகள் யோக சாஸ்திரத்தை குருகை காவலப்பனிடம் வைத்துப் போக்கி,
பிரபன்னாம்ருதமான திருவாய்மொழி மற்றும் ஏனைய ஆழ்வார்கள் பாசுரங்கள் 4000மும் அர்த்தத்தோடே
நம்மாழ்வாரிடம் பெற்றபடி உய்யக் கொண்டார் பக்கலில் கொடுத்து மணக்கால் நம்பி, ஆளவந்தார் வழி 74 மதகுகளைக் கொண்ட
வீராணம் ஏரியைப் போன்ற எம்பெருமானார் வரை சேர்த்த கணக்கிலே சாதன பக்தியைக் கழித்து, சித்தோபாயமான கண்ணனையே நாடி
விபவத்திலும், அர்ச்சையிலும் கண்ணன் தான் வாயமலர்ந்தருளிய படிக்கும்.
ஆழ்வார் ஆச்சார்யர்கள் காட்டிக் கொடுத்த படிக்குமாய் வந்தோம் வந்தோம் .

தூமலர் தூவித் தொழுது என்று உபாய புத்தி தியாகமும்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் என்று உபேயத்தில் களை அறுக்கையுமாக
நீராடம் – பாஹ்ய கரண சுத்தி
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – ஆந்தர சுத்தி
ஆகிற தூய்மையோடே வந்தோம்.

நீ நேய நிலைக் கதவம் நீக்கு – என்று துவார சேஷிகள் காலில் விழுகிறாள் ஆண்டாள்.

————-

17. அறம் :

அம்பரமே தண்ணீரே சோறே அறம் கண்ணன்
எம்பெருமான் தம்மின் இரக்கமும் — அம்மனோய்!
செம்மை சேர் நற் தருமம் என்றாக செய்த வேள்வி
தன்மையார் நற் பேறும் அஃது.
வஸ்திர தானம், தீர்த்த தானம், அன்ன தானம் என்று வேண்டியவர்களுக்கு அத்தை கொடுத்ததைப் போல்
தாரக போஷக போக்கியம் எம்பெருமான் கண்ணன் என்றிருக்கிற எங்களுக்கு அவனைத் தந்தால் ஆகாதோ?-என்கிறார்கள்.
சாதன தர்மங்களைக் கொண்டு கண்ணனை அடைகையிலும், சித்த தர்மமான கண்ணனைக் கொண்டே அவனை அடைகை உத்தேச்யம்.
அவனைக் கொண்டு அவனை அடையாகிறது, அவனுடைய கிருபை வாத்சல்யத்துக்கு இலக்காகை.
ந சமஸ்ய கஸ்ச்சிது அப் அதிக குதோந்யோ? என்கிற ரீதியில், தனக்குத்தானே பிரதிபந்தியாய்,
தன்னை ஆஸ்ரயித்துள்ள குணங்களுக்கு இடையில் போட்டி இருந்தால், வெல்லுகிற குணம் தயையும், இரக்கமும் ஆம்.

ரக்ஷிக்கும் போது அதற்கு பிரதி பந்தகங்களான புண்ய பாபங்களைத் தொலைத்தே ஸ்வீகரிக்கிறான்
எம்பெருமான் என்பது புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபயிது – என்பதிலிருந்து தெரிகிறது.
அப்படி புண்ய பாபங்களை கழித்தலாவது
ஈஸ்வரன் அவைகளை தன் அஜ்ஞானத்துக்கு விஷயமாக்குகையும் காணாக் கண் வைகையும் என்பர்.
இப்படி கிருபை உயர்ந்து, அவனுடய ஞானத்துக்கு – அஜ்ஞானமாகிற கொத்தை தோஷமன்றோ என்னில்
அநிருஸம்சயமடியாக வருகிற எதுவும் அடிக்கழஞ்சு பெறும் .

ஆக , அதுவே பற்றாசாக சரணாகதியை அனுட்டித்தவர்கள் – செய்த வேள்வியராய், சித்த தர்மம் கை புந்தவாறே,
சாதன தர்மங்கள் பார்த்தியாஜ்யமோ என்றால்? அன்று.
பகவத் ப்ரீதிகாரித்த முக்கோலாச கார்யம் கைங்கர்யம் என்று பகவத் ஆநிருஸம்சயத்துக்கு விஷயமாய்
வர்ண தர்மம்,புருஷ தர்மம் புத்ர தர்மம் ஆகிய
சாமான்ய விசேஷத்தர விசேஷதம தர்மங்களை விடாதே பாலாபிஸந்தி இன்றி, கிருஷ்ணார்ப்பணம் என்கிற அளவிலே
அனுஷ்டித்துப் போர வேண்டுவது அவஸ்யாபேக்ஷித்தம் என்பதே இப்பாசுர ஸ்வாபதேசம்.

எம்பெருமான் நந்த கோபாலன் :

சுள்ளிக்கால் அன்ன அடியார் அவர் தலைவர்
உள்ளம் பெரியதன் போதமுடன் — எள்ளி நமைத்
தள்ளாதே கொள்ளும் தகைமை கொழு கொம்பாய்
வள்ளி மேய பந்தல் கிடத்து.

———

18-உந்து மத களிற்றன் பாசுரம்
பிராட்டியின் புருஷகார வைபவம் சொல்ல வந்தது. நாயகனாய் நின்ற பாசுரத்தில் துவார சேஷிகளின்
அனுமதியை பெறுவதன் மூலம் ஸ்தாநீகர்களை முன்னிட்டார்களாய் , பின் அம்பரமே தண்ணீரே பாசுரத்தில்
நந்தகோபன், யசோதை, நம்பி மூத்த பிரான் இவர்களை வேதம் வல்லார்கள் என்ற கணக்கிலே
அவர்களையும் முன்னிட்டுக் கொண்டு கண்ணனை துயிலெழுப்ப பார்க்க,
அது பிராட்டி புருஷகார வனந்தரம் மாகவேண்டி, அவனும் வாளா கிடந்தான் .

தூதோஹம் என்று சொன்ன திருவடி, பிராட்டி தரிசனவனந்தரம் தாசோஹம் என்றதும் அவள் ராவணன் விஷயமாக
செய்த மித்ர ஒளபயிதம் கர்த்தும் ஸ்தாநம் பரீப்ஸதா என்கிற உபதேசங்கள் அவனுக்கு பலித்ததாக கண்டில்லையாயினும் –
கண்ணனெம்பெருமான் தேர்த்தட்டில் சொன்ன வார்த்தை அருச்சனர்க்கு பலிக்காமல் –
மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு (நான்முகன் திருவந்தாதி-50) என்று திருமழிசை ஆழ்வாருக்கு
எப்படி காரியகரமாயித்தோ – அதுபோல ஹநூமானுக்கு சேஷத்வ ஸ்வரூபத்தை உண்டாக்கி
பரீஷ்வங்கோ ஹநூமத : என்று ராம ஆலிங்கன பல பர்யந்தமாயிற்று.
பிராட்டி சன்னதியாலே காகம் தலை பெற்றது. அதில்லாமையால் ராவணன் மாண்டான் – இத்யாதி பிரபத்தி தர்மங்களை
மீறியதான தங்கள் தவற்றை ஆண்டாளும் கோபியர்களும் உணர்ந்து ,
கிருஷ்ணாவதாரத்தில் புருஷகார பூதையாக விளங்குகிற நப்பின்னை பிராட்டியைத் துயில் உணர்த்துகிறார்கள் இதில்.

இப்படி இந்த மூன்று பாசுரங்களுக்குமான சங்கதி அமைத்திருக்க, மூன்றிலுமே நந்த கோபனை பிரஸ்தாபித்தாளாய்
நாயகனாய் நின்ற நந்த கோபன் (16)
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்த கோபாலன் (17)
உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் (18)-என்பதாக அழைக்கிறாள் ஆண்டாள்.
எம்பெருமான் கண்ணன் வகுத்த சேஷியாய் இருக்க, நந்த கோபனை எம்பெருமான் என்றது,
பகவத் சமாஸ்ரயணசாலியான ஆசார்ய கிருதயத்தைக் பண்ணுவிப்பதைக் கொண்டு.
தேவு மற்று அறியேன் என்று இருக்கிற மதுரகவி, வடுக நம்பி நிலையில் நின்றவர்களுக்கு ஆச்சர்யனே பிரதம சேஷி அன்றோ?

நந்தன் என்றால் ஆனந்த வர்த்தகன். பகவத் குணானுபவ கைங்கர்யங்களில் எப்போதும் ஆழ்ந்தவர்களுக்கு
ஆனந்தத்தில் குறைவு இல்லையாய் நந்திதர் ஆவர் இவர்.
கோபன் ரக்ஷகன். தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய ஆத்ம க்ஷேமத்தில் ஊன்றி இருப்பவராய்,
மங்களாஸாசனத்துக்கு அவர்களை ஆளாக்கும் இவருக்கு ரக்ஷகத்வம் ஸ்வாபாவிகம்.
அடுத்து , அம்பரமே, தண்ணீரே,சோறே அறம் செய்யும் நந்த கோபாலன் என்றது
அஹமன்னம் அஹமன்னம் என்பதான ஆத்ம வஸ்துவை சோறாக பகவானுக்கு சமைக்குமவர். அப்படி
எனக்காராவமுதாய் எந்தவியை இன்னுயிரை
மணக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்
என்று போக்கிய உண்ணும்போது விக்கித் தடுமாறினால் தண்ணீர் குடிப்பது போல, பிராப்பியத்திலே வந்தால்,
என்னுடைய ஆனந்தத்துக்காக என்கிற ஸ்வபோக்த்ருத்வ புத்தியை விலக்குமவர்.
உண்டு பசியாறி அடைக்காய் திருத்துவது போலே , தேக விலக்ஷண சின்னங்களான ஆடை அலங்கார மேனிமினுக்கம் அம்பரம் –
அவையும் பகவானோட்டை உண்டான ராஜகுல மாஹாத்மியத்துக்காக என்னப் பாந்தம்.

இன்னும், உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன் என்றது
அகங்கார செருக்காகிற மதம் கொண்டு வாதிட வரும் பரபக்ஷ வாதிகளுக்கு சளைக்காத ஞானாதிகர் ஆசாரியன் என்பதாக
கிருஷ்ணனோடு தங்களை சேர விடுதலாகிற கடக்க கிருத்யம் செய்ய வேண்டி நந்த கோபரை, ஆச்சாரியனாகவே ஆண்டாள் காட்டினபடி இவை.

————

19. குத்து விளக்கு :

தன்னையும் காட்டிபுறச் சூழலும் காட்டுவதாம்
மின்னனய நல் விளக்கு போல் ஆசான் — துன்னிருள்
நம்மின் துறத்துவனேல் அன்னை அவளுணர்த்த
தம்மின் வழி நடத்தும் மால்.

உன்னுடைய மைத்துனனை எங்கள் மணாளன் ஆக வேண்டும் படியாய் விசிறி கண்ணாடி அத்தோடு தந்து
எம்மை நீராட்ட வேண்டும் என்று நப்பின்னை பிராட்டியை பிரார்த்திப்பதாக அமைந்த பாசுரம்.
மாஸுச : என்றிருக்கிற பவனுடைய அபய ஹஸ்தம் தாமரைக் கை என்றால்
அவன் ஸ்வாதந்திரனாய் வந்தாய்ப் போல் வாராதான் ஆனபடியால் அதற்கு அஞ்ச வேண்டா என்கிற
பிராட்டியினுடைய கை செந்தாமரைக் கை ஆனபடி.
கேசவன் தமர் பதிகத்தில் ஆழ்வார் – மாசதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்கின்றவா – என்றதும்
ஸ்வ பிரயத்னத்தால் பகவானைக் கிட்டுவது இளிம்பு.
பாகவதேக உபாய நிஷ்டராய் அவனுடைய கிருபாதிசயத்தாலே அவனைக் கிட்டுவது சதிர்.
மா – பிராட்டி. அவள் கொடுக்கப் பெறுவது மா சதிர்
என்று காட்டினபடி உக்கமும் தட்டொளியும் தந்து உன்மணாளனையம் தந்து இப்போதே எம்மை நீராட்டு என்று
பிராட்டி பரிகாரமாய் நின்று பேசுகிறாள் ஆண்டாள்.

கோதா கீதையான திருப்பாவையும் – ஸ்ரீ கிருஷ்ண கீதையாம் பகவத் கீதையைப் போன்ற
அமைப்பைக் கொண்டு இருப்பது அதற்கான சிறப்பு. அதுதான் எங்கனே என்னில்?
குத்துவிளக்கு எரிய – ஞானம் பிரஜ்வலிக்கிறது என்ற பொருளில் ஒளி இருந்தால் இருட்டு போய்விடும்.
இங்கு சொல்லப்பட்ட இருட்டுதான் – அகவிருளும், புறவிருளும் . இத்தை போக்க
பொய்கையாழ்வார் ஏற்றிய விளக்கு – வருத்தும் புறவிருள் மாற்ற
பூதத்தாழ்வார் – இறைவனைக் காணும் இதயத்திருள் கெட
பேயாழ்வார் – கோவலூள் மாமலராள் கண்டமை காட்டும்
மூவர் ஏற்றிய ஜ்ஞான விளக்கு.

கீதாசார்யன் காட்டும் சோபான படிக்கட்டில்
படிக்கட்டு – 1
பகவத் ஸாட்சாத்காரத்துக்கு பிரதிபந்தகமாக உள்ள இதயத்திருள் கெட
நியதம் குரு கர்மத்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண : – கீதை 3.8.
அப்படி கர்மாநுஷ்டானங்களை விடாது செய்யச்செய்ய கர்ம யோகத்தில் வருவதற்கான –
தேஹ அதிரிக்த ஆத்ம ஞானம் மாகிற ஓடம் அநாதிகால பாபமாகிற கடலை தாண்டுவிக்கும்.
ஜ்ஞான ப்லவேநைவ வ்ரிஜினம் ஸந்தர்ஷயஸி – கீதை 4.36.
ஓடம் மறுகரைக்கு மீண்டுவிடுமோ என்று பயந்தாயே ஆகில்
ஞாநாக்னி ஸர்வ கர்மாணி பஸ்ம ஸாத் குருதே ததா – கீதை 4.37.
இல்லை அர்ஜுனா – அதே ஜ்ஞானம், அக்கினியைப்போலே பாபா கூட்டத்தைப் பஸ்மமாக்கிவிடும்.
எல்லா பாபங்களையும் என்றால், பக்தியை ஆரம்பிக்க தடையாய் யாயா பாபங்கள் உள்ளனவோ
அவை அனைத்தும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
படிக்கட்டு – 2
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந : – கீதை 6.19.
எப்படி காற்று வீசாத இடத்தில் தீபமானது அசையாது நின்று ஒளிவிடுமோ அதுபோல
விஷயாந்தர சுகத்தில் மனது லயிக்காத படிக்கு ஆத்ம விஷயத்தில் மனதை உறுதிபடுத்த வேண்டும்.
படிக்கட்டு – 3
ஜ்ஞாநாஞ்சன சலாகையா ஸக்ஷுர் உன்மீலனம் – ஆசார்ய உபதேசம்.
அதற்கு ஆத்ம சிந்தனம் மட்டும் போதாது. ஆத்ம ஜ்ஞானம் பகவத் ஜ்ஞானமளவாக வளர
ஆசார்ய உபதேசங்களாகிற திறவுகோல் கொண்டு ஜ்ஞானக்கண்ணை திறந்து கொள்ள வேண்டும்.
அதற்கு ஆச்சார்ய ஸந்நிதி அவசியம்.
அடுத்து பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் மேன்மேலும் வளர ஆசார்யா அநுவர்த்தனம் பண்ணக் கடவதாய்
தத்வித்தி பிரணி பாதேந பரி பிரச்நேன சேவையா
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானிந : தத்வ தர்ஸிந : – கீதை – 4.34.

என்கிற கீதையின் வழியிலேயே ஆண்டாளும்
செய்யும் கிரிசைகள் கேளீரோ என்று
நாட்காலே நீராடி
செய்யாதன செய்யோம்
தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
என்பதாக கீதையில் சொல்லப்பட்ட நியதம் குரு கர்மத்வம் என்பதை பேசினாள்.
அதை ஆத்ம வித்தையோடு செய்ய வேண்டும் என்பதையும்
நாராயணனே நமக்கே பறை – என்கிற உபாய-உபேய அத்யாவசாயம் சொன்னபடி.
கர்மாநுஷ்டானங்களால் அநாதிகால கர்ம வாசனா ரூபமான பாபங்கள் கழியும் என்பதை
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்றாள்.
இனி ஜ்ஞானம் பகவத் விஷயமளாவாக வளர
அஜ்ஞானம் குறைந்து ஜ்ஞானம் வளர வேண்டும் என்பதை வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்றும் ,
பாபம் குறைந்து புண்யம் வளர வேண்டும் என்பதை செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்
என்று பேசினாள் ஆண்டாள் .
தவிரவும், பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் மென்மேலும் வளர ஆசார்யா அநுவர்த்தனம் பண்ணக் கடவதாய்
பாசுரம் 16-17-18 களில் கடக கிருத்யரான நந்தகோபரைப் பற்றி பிரஸ்தாபித்தாள்.
பாசுரம் 18-19-20 களில்
நப்பின்னையை புருஷகாரமாக பற்றி கண்ணனோடு சேர்ப்பிக்க பிரார்திக்கிறாள். இங்கு உள்ள சுவாரஸ்யம் என்ன வென்றால்,
பாசுரம் 18-ல் ஆசார்ய சம்பந்தமும், புருஷகார பிரபத்தியும் சேர்த்து சொன்னதுக்கு தாத்பர்யம்
ஆசார்யன் ஆஸ்ருதரான நமக்கு ஆத்ம-பரமாத்மா விஷயமான ஜ்ஞானத்தை கிளப்பி விடுவதை போலே,
புருஷகார பூதையான பிராட்டி பகவன் நிக்ரகத்தை அனாஸ்ருந்தார்கள் விஷயத்தில் மடை மாற்றி,
ஆஸ்ருதர்கள் விஷயத்தில் ஸ்வாதந்திரியம் தலை சாய்ந்தால் தலை எடுக்கும் குணங்களை கிளப்பி விடுகிறாள் –
என்பதான கிருபை இருவருக்கும் பொதுவானதாய்க் கொண்டு.

மேலும்
தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத – அந்த நாராயணனையே சரணமாக பற்று என்று கண்ணன் சொல்ல ,
அர்ஜுணன் – கண்ணன் இவன் தானே நாராயணன், அந்த நாராயணனை பற்று என்கிறானே – என்று குழம்ப அதை விலக்கவே பின்பகுதியில்
மாமேகம் சரணம் விரஜ – என்று பேசினான்.

ஆனால் ஆண்டாளோ – நாராயணனே நமக்கே பறை தருவான் என்றும்
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் – உனக்கே நாமாட் செய்வோம் என்றும் ஸு ஸ்பஷ்டமாக பேசினாள்.

இங்கு சாந்தோக்யம் 4வது பிரபாடகத்தில் உள்ள உபகோஸல விதை பிரகரணத்தில் சொல்லப் பட்ட
ஜாபால – உபகோஸல விருத்தாந்தம் ஸ்மரிக்கத்தக்கது .
ஆசாரியரான ஜாபாலர் சிஷ்யனான உபகோஸலனுக்கு பிரஹ்ம வித்யை பூர்ணமாக உபதேசிக்காமல் காலம் தாழ்த்த ,
பிள்ளைக்கு ஆசார்யானுகிரகம் ஏற்படவேயில்லையே என்று ஏக்கம் பிறந்து தவிக்க, இடையில் ஆசாரியன் காரியாந்தரமாக
வெளியூர் சொல்ல வேண்டி வந்தது. எனவே சிஷ்யனிடத்தில் அக்நி சந்தானத்தை ஆராதித்துக் கொண்டு காத்திரு என்று சொல்லி
பயணத்தில் உத்தியுக்தரானார். சிஷ்யப்பிள்ளைக்கு சோறு தண்ணீர் செல்லாமல் , ஆசார்யன் நியமித்த கைங்கர்யத்தை நடத்திப் போர ,
ஆச்சார்ய பத்நி விசாரித்தும் நிலைமை சீர்படாது போக, நித்ய ஆராத்ய அக்நி தேவதை மூவரும்,
பிள்ளைக்கு இரங்கி தாங்கள் சில அர்த்தங்களை உபதேசித்தனர்.
பிராணன் தான் பிரஹ்மம்.
அந்த பிரஹ்மத்துக்கான ஸ்தானம், அதை அடைய உண்டான கதி இது விஷயமாக அக்நி தேவதைகள்
க(1)ம் பிரஹ்ம – சுகம் = பிரஹ்ம ஸ்வரூபம் ஆனந்தம்.
க(2)ம் பிரஹ்ம – ஆகாசம் = பிரஹ்மம் அபரிச்சின்னம் .
யதேவஹ க(1)ம் ததேவ க(2)ம்.
யதேவ க(2)ம் ததேஹ க(1)ம்
என்று பிரஹ்ம ஸ்வரூபத்தைச் அக்நி தேவதைகள் சொல்லி நிற்க,
அந்த பிரஹ்மத்தை அடைய அவன் ஸ்தானத்தை உபாஸிக்க உபயுக்தமான அவன் குணத்தை அவனை அடைவிக்கும் கதி
இவை பற்றி சொல்ல வேண்டும் என்று பிள்ளை கேட்க
ஸம்யக் வாமநத்தவம்
வாமநீத்தவம்
பாமநீத்வம்
அக்ஷி புருஷன் பிரஹ்மம் என்பதாக முதல் இரண்டுக்கு விளக்கம் ஓரளவு சொல்லி
ஆச்சார்ய ஸ்துதே கதிம் வக்தா – என்று மார்க்கத்தை ஆச்சர்யனிடம் உபதேசமாய் பெற்றுக்கொள் என்று சொல்லி நிறுத்தினர்.
திரும்பி வந்த ஆச்சர்யனிடம் நடந்தத்தைக் கூறி, மார்க்கமான அர்ச்சிராதி கதியை உபதேசமாகப் பெற்றான் உபகோஸலன் என்பது சாந்தோக்யம்.

கீதை 1-6 அத்யாயம் ஆத்மோபாசனம்
7- 12 அத்யாயம் கர்மத்தால் வளர்ந்த ஜ்ஞானத்தால் வந்த பக்தி உபாசனம்.
அந்த பக்தி வளர்வதற்கான பகவத் ரூப, குண, ஒளதார்யங்களைப் பற்றி
தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்
ததாமி பக்தி யோகம் யேந மாம் உபயாந்தி தே – கீதை 10.10.
தேஷாமேவ அநுகம்பார்த்தம் அஹம் அஜ்ஞான ஜந்தமஹ
நாசயாமி ஆத்ம பாவஸ்த : ஜ்ஞான தீபேன பாஸ்வதா – கீதை 10.11.
என்னுடைய அழகான திருமேனியை அவர்கள் உள்ளத்துக்கு விஷயமாக்கி குணாநுபவத்தை வர்த்திப்பித்து, கர்ம வினை பாசம் கழற்றுகிறேன்.

ஸ்தானம், குணம், கதி என்று மூன்று விஷயங்கள் போலே ஆண்டாளும்
அம்பரம், தண்ணீர், சோறு என்பதாக சொல்லி உபகோசலனுக்கு அருளிய மூன்று அக்நி போலே இவர்களுக்கு அருள
நந்தகோபனை மூன்று முறை பிரஸ்தாபித்து, கீழே சொன்ன விளக்குகளைக் காட்டிலும் பிரஜ்வலமான விளக்கு,
பகவத் ஸ்வாதந்திரியமாகிற இருட்டு களைய , நப்பின்னை பிராட்டியாகிற விளக்கு என்பதாக இந்த பாசுர ஸ்வாபதேசம்.

——–

20. உன்மணாளனைத் தந்து :

மைத்துணன் உன் மணாளன் மாலோலன் மாலரையன்
மைய கண்ணி நாதன் திருவுக்கும் — ஐய
திருவான செல்வன் மலராள் தனத்தன்
ஒருவன் அவன்தா எமக்கு!

———

21. ஏற்ற கலங்கள்:

ஏதிலார் எம்மனோர் ஆதரித்து ஆசரியன்
ஈதானாய் அல்பா வதிஆயுள் — போதில்
பொழுதறிந்து போற்றி அலகில் தருமம்
விழைந்து கேட்ப்பார் ஏற்ற கலம்.

சிஷ்யன் தன் சரீரம் வஸு விஞ்ஞானம் அனைத்தையும் அதாவது
சரீரம் அர்த்தம் பிராணம் ச ஸத்குருப்யோ நிவேதயேத் என்று ஆசாரியனுக்கு சமர்ப்பித்து அவர் கைகாட்டிகிற இடத்தில்
அவருக்கு பிரதிநிதியாய் இருந்து அவருக்கு அளித்த மிச்சத்தில் ஜீவனம் நடத்துவதாக பாவிக்க வேண்டும்.
அங்கனே ஆசார்யன் தானும் சிஷ்யனுடைய ஆத்ம உஜ்ஜீவனத்தில் உத்யோகிக்கும் போது
தன்னை ஸ்வ-ஆசாரிய சிஷ்யனாய் , தன்சிஷ்யனை ஸபிரம்மசாரியாய் நினைத்து பரிமாற வேண்டும் .
இதுவே சத் பாத்ர சத் வினியோக ஏற்ற கலத்துக்கான லக்ஷணம். மாறாடி நினைகை அவத்யமாம்.

இப்படி குறைந்த ஆயுசில் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற பேராசையோடே
ஸுக பிரம்மத்திடம் பரீக்ஷித்து ஸ்ரீமத் பாகவதமும் ;
வைசம்பாயனரிடம் ஜனமேஜயன் மஹா பாரதமும் ;
ஸ்ருத்வா தர்மான் அஸேஷேண என்று தர்மங்களை கேட்பதில் விருப்பம் உடையவனாய்
பீஷ்ம பிதாமஹரிடம் யுதிஷ்டிரர் விஷ்ணு ஸகஸ்ரநாம அத்தியாயமும் ;
மைத்ரேயர் கேள்விகள் கேட்க கேட்க விஷ்ணு புராணம் விரிந்தார்ப்போல்,
ஒருத்தருக்காய் சொன்னது ஊருக்கய் பராச மஹரிஷியிரிடம் மைத்ரேயர் விஷ்ணு புராணமும்;
தான் கிருபணன். சிஷ்யஸ்தேஹம் சாதிமாம் பிரபும் என்று கீதாரியனிடம் அர்ஜுணன் பகவத் கீதையும்;

ஆழ்வாருடைய மைத்ரேய பகவான் ஆயிற்று அவருடைய அவா என்று
பரபக்தி, பரஜ்ஞான, பரம பக்தி இன்னும் சாதன பக்தி, சாத்திய பக்தி, சகஜ பக்தி கொண்டு
அவருடைய பிரபந்தம் வளரக் காரணம் அவருடைய பகவத் பிரேமமாகிற காதல் –
பயன் அன்றாகிலும் பாங்கல்லர் ஆயினும் – நெஞ்சில் நிற்கப்பாட்டி – முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கு அன்பையே
என்கிற கிருதஜ்ஞதை யோடே நம்மாழ்வாரிடம் மதுரகவி ஆழ்வார் பெற்ற திருவாய் மொழியும் ;

நின்றனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே – என்று பேசிய திருமங்கை ஆழ்வாரிடம் ,
தான் பெரியவாச்சான் பிள்ளையாகவும் , ஆழ்வார் கலிகன்றிதாஸர் என்கிற நம்பிள்ளையாகவும் பிறக்க –
அவரிடம் சிஷ்ய விருத்தி பண்ணி பிரபந்தங்கள் நாலாயிரத்துக்கும் பொருள் கேட்டு உபகரித்த
திருக்கண்ணமங்கை பத்தராவி பெருமாள் போலேயும்

கேட்டவர்கள் அனைவரும் ஏற்ற கலங்கள் என்றாலும்
ராமனுக்கு விஸ்வாமித்திரரும், கிருஷ்ணனுக்கு சாந்தீபினியும் ஆசார்யனாக கிடைத்த போது அடைந்த அபூர்த்தி
பெரிய பெருமாள், நம்பெருமாள் இருவரும் கண்ணனும், ராமனுமாய் மணவாள மாமுனி பக்கல்
துவயார்த்த விவரணியும் தீர்க்க சரணாகதி பிரபந்தமாயும் இருக்கிற திருவாய்மொழி ஈடு காலக்ஷேபம் பண்ணினார்களாய்,
தாம் அவருக்கு சிஷ்யனான தன்மைக்குச் சேர பகுமானமாக தன்னுடைய
சேஷாபீடத்தையும்
ஸ்ரீசைலேச தனியனும் ஸமர்ப்பித்து
அவருடைய திருவத்யயன உற்சவாதிகளை நடத்திப் போருவர்களாய்
எதிர் பொங்கி மீதளித்த பிரபாவம் மேல் சொன்ன மற்ற யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம்.

பதரியிலே தானே ஆச்சாரியனுமாய், சிஷ்யனுமாய் திருமந்திரத்தை வெளியிட்டருளினது போக ,
மாமுனிகள் பக்கல் ஆசார்ய பிரதிபத்தியோடே , சிஷ்யன் இருக்கும் இருப்பை நாட்டாருக்கு காட்டிய –
ஏற்ற கலத்துக்கு – ஸத்தான திருஷ்டாந்தம் பெரிய பெருமாளே எனலாம்.

————-

22. செங்கண் :

கழிவிரக்கம் காட்டி கழித்தன போக்கி
அழல விழித்து அகல்விப்பான் — பாழே
பலபல செய்து புகல்அயல் இல்லா
புலையனேர்க்கு அங்கண் அருள்.

அ-கார வாச்ய சமாகமத்துக்கு ஆறு படிக்கட்டு :
ஈஸ்வரஸ்ய ஸௌஹார்த்தம்
எதுர்ச்சா ஸுக்ருதம்
விஷ்ணோர் கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபிமுக்யம்
சாது சமாகமம்
அதில் நடுவாக உள்ளது விஷ்ணோர் கடாக்ஷம்.
கதிர் மதியம் போல் முகத்தான் என்று தொடங்கி செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாயாவோ என்று
கடாக்ஷ வீக்ஷண்யத்தை பிரார்த்திக்கிற படி இது.
தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு
நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி
”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள். அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்து
என்று பிராப்பிய விரோதி கழிக்கையும்
இனி மேலில் பாட்டுகளில் வெப்பம் கழிந்து கூடி இருந்து குளிர்தலும் சொல்லுகிற படி.
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து என்று இருப்பதால் இது ஒரு புகழ் மாலை.

கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ – என்பதாக
எம்பெருமான் செங்கண்ணுக்கு உபமானமாக தாமரையை சொல்லுகிறது சாந்தோக்யம் ;
அவனுடைய கண்ணுக்கு உபமானம் இட்டுச் சொல்லுகை என்பது அதனை அழகாக்குமத்தனை.
உபமானம் நேர் நில்லாமையாலே உபமேயம் தன்னை விசேஷிக்கிறது.
தன்னுடை பூர்வபக்ஷ கிரந்த வாசிப்பின் போது இந்த வாக்யத்திற்கு யாதவ பிரகாசர் சொன்ன அபார்தத்தைக்க கேட்டு
கலங்கி , பகவத் ராமானுஜர் காட்டுகிற விசேஷார்த்தம் இங்கு நோக்கத்தக்கது :

கப்யாஸம் = கபி + ஆஸம் = சூரிய மண்டலத்தை இருப்பிடமாக உள்ள பிரஹ்மத்தை உபாஸ்யமாக சொல்வது போல,
புண்டரீகம் போலேயான அக்ஷிணியை இருப்பிடமாக உள்ள பிரஹ்மம் உபாஸ்யம் என்கிறது .
கப்யாஸம் என்பதற்கு உபாசன ஸ்தானம் அர்த்தம் என்கிற முதல் யோஜனை இங்கு சேராது.
கபி + ஆஸம் – கபி = குரங்கு பிருஷ்டம் , புண்டரீகம் என்று உபமான துவயமும்;
உயர்ந்த பிரஹ்மத்துடைய திருக்கண்களுக்கு தீன உபமானமும் கூடாது ஆகையால் இந்த இரண்டாவது யோசனையும் தள்ளுபடி.
ஈஷத் விகசித = சிறிதளவு மலர்ந்த என்று பொருளும் சரிப்படாது. அவன் மலங்க விழித்தால் நம்மால் தரிக்கப் போகாது.
அத்தாலேயே ஆண்டாள் செங்கண் சிறுச்சிறிதே சாத்மிக்க சாத்மிக்க எம்மேல் விழியாவோ என்கிறாள்.

ஸ்வாமி எம்பெருமானார் காட்டுகிற அர்த்தமோ ஆழ்வார்கள் திருவாக்கை அடி யொற்றித் தந்த விளக்கமாகும்.
கம்பீரம்பு சமத்பூத (1) ஸுவிருஷ்ட நாள அஸ (2) ரவி கர விகசித (3) புண்டரீக தள அமலஆயத ஈக்ஷணம்
என்பதாக சொல்லுகிற அழகு – ஈதோர் அற்புதம் கேளீர் என்று வாய் வெறுவத் தகும்.

————-

23. சீரிய சிங்காசனத்து இருந்து :
நடுவிலாச்சிக் கீத்த படுக்கை அறை வார்த்தை
காடேற வாயித்தால் கண்ணா! — அடிசியோம்
காண நடந்து அரி ஆசனத்தே வீற்றிருந்து
வேணுமவை ஆய்ந்து அருள்.

ஸவ்யம் பாதம் பிரசரித துரித ஹரம் தக்ஷிணம் குஞ்சையித்வா
ஜாநூன் ஆதாய ஸ்வே இதர புஜம் நாக போகே நிதாய
பஸ்சாத் பாகுத்துவயேன பிரதிபட ஸமநே தாரயந் சங்கசக்ரே
தேவி பூஷாது ஜூஷ்டோ விதரது ஜகதாம் சர்ம வைகுண்ட நாத :-என்று பரமபதத்திலான அமருகை காண
அங்குற்றோம் அல்லோம்

வைதேஹி ஸகிதம் ஸுரத்ரு முதலே ஹைமே மஹா மன்டபே
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.–என்று பட்டாபி ராமனாய் இருந்தமை
அப்போதுற்றோம் அல்லோம்
எனவே இப்போது எமக்காக நாலெட்டு நடை நடந்து வந்து உன் நடை அழகையும்
சீரிய சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அழகையும்
நம்பெருமாள் நமக்கு திருமாமணி மண்டபத்தில் சேர-பாண்டியன் ஒலகத்தில்
அமர்ந்தமை காட்டி, யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் என்கிறார்கள்.

———–

24. அஞ்சும் குடி :

அன்புடை ஆழ்வார்கள் போற்றி என ஏற்றி
நன்குடனே நாளும் வழுத்துலும் — இன்னும்
பெரியாழ்வார் அஞ்சாமைக் காட்டியதுக் கஞ்சும்
பெருமை ஆண்டாளுக்கும் உண்டு.

பிறர் நன்பொருளான ஆத்மபகரம் திருட்டு. பொருள் சரீம். நன்பொருள் ஆத்மா. பிறர் நன் பொருள் பகவானுடைய சொத்தான ஆத்மா.
இந்திரனுடைய சொத்தான மூன்று லோகங்களை மஹாபலி தன் சொந்தமாக்கினான். அதை மீட்க அன்று
திருவிக்கிரமனாய் மூன்றடி மண் கேட்டு, இரண்டடியால் அளந்து கொண்டதோடு, மூன்றாவது அடியால்
துரபிமானகள் தலையில் கால் வைத்து அவர்களையும் தனதாக்கிக் கொண்டு
தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே என்று அபிமானம் களைந்தான்.

அடிபாடி என்று தொடங்கி, அடிபோற்றி என்று இடையில் இந்த பாசுரமும்,
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் என்று முடிவிலுமாய் ஆண்டாள் மங்களாசாசனம்.
அளந்து தன்னதாக்கிக் கொண்டதால் ஸ்வாமித்வம் பிரகாசிக்கிறது. ஸ்வம் = சொத்து.
தளிர் புரையும் திருவடி தலை மேலவே என்றதால் சேஷித்வம் பிரகாசிக்கிறது.
உலகமளத்த பொன்னடியே அடந்துய்ந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே என்றதால் சரண்யத்வம் பிரகாசிக்கிறது.
உழலை இன்ப பேய்ச்சி முலையூடவள் உயிருண்டவன் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட என்றும்
நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் என்று நாடொறும் ஏக சிந்தையனாகி என்றும்
தன்னைத் தவிர்ந்த வேறு ஒன்றையும் சகியாத நிரபேட்சோபாயத்வம் சொல்லிற்று.
தாவி வையம் கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? என்று ஆர்த்தித்தவம் பிரகாசிக்கிறது.
தடந்தாமரை தாள் என்று சொல்லாமல் தடந்தாமரைகட்கே என்று உபமானத்தை சொல்லி
உபமேயத்தை சொல்லாமல் விட்டது முற்றுவமை என்கிற ஸ்வாரஸ்யம் இங்கு நோக்கத் தக்கது.

சதுமுகன் கையில் சதுப்புஜன் தாளில் சங்கரன் சாடையினில் தங்கி வருகிற – விஷ்ணு பாதோதகமாகிற
கங்கை கங்கை என்ற வாசகம் கொண்டு கடுவினை காளையலாமே –
கண்டமென்னும் கடிநகர்-தேவபிரயாகை பாசுரம் இதில் பாவனத்வம் பிரகாசிக்கிறது.
உன்வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து முகப்பே கூவிப் பணிகொள்ளாய் என்று பரிச்சர்யம் பிரார்த்திக்கிறது .
தாளால் அளந்த அசைவேகொல் ? பின்னும் தன்வாய் திறவான் நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்
ஐந்தலைவாய் நாகத் தணை – என்று சிரமிஸித திருவடிகளை ஆஸ்வாஸ படுத்த அலை அடிப்பதாக ஆழ்வார்.
தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூதாமம் சேர்த்து அவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்ததொழிந்த பைந்துழாயான் பெருமை – என்று பரத்வ சூசகம் .

மாமுதல் அடிப்போது ஒன்று கவிழ்த்தலர்த்தி மண்முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடிப்போது ஒன்று
விண்செலீஇ நான்முகப் புத்தேள் நாடு வியந்துவப்ப வானவர் முறை முறை வழிபட நெறீஇ தாமரை காடு
மலர்க்கண்னொடு மலர்க் கனிவாய் உடையது போல் இரு ஞாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பக காவு பற்பல வன்ன முடிதோள் ஆயிரம் தழைத்த நெடியோர்க்கல்லதும் அடியதோ உலகே? – என்கிற மாதுர்யம், அழகு பேசப்பட்டது.

இப்படியான உன் விக்கிரமங்களுக்கு அன்று பல்லாண்டு பாடாத குறை தீர, இன்று யாம் வந்தோம்.
அறுசுவை அபதானங்களுக்கு ஆறு முறை போற்றி சொல்லி வந்த எங்களுக்கு நீ இரங்க வேண்டும் என்கிறார்கள்.
அதவா
அவனுடைய இரக்கத்துக்கு விருத்தமாய்
உறங்குமவனை எச்சரப் படுத்துவது,
நாலடி நடக்கும் படியாய் விக்ஞாபிப்பது–இத்யாதி காரியங்கள் – அதிபிரவ்ருத்தியாய் முடியாது இருக்க, ’இரங்கு’ என்கிறார்கள்,

————-

25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கரும வினை
கூற பிரிவினை இங்காகல் — மாறமால்
தானும் பிறந்து இருமை வினை தீர்த்துப்
பேணும் கருணை பெரிது.

ஜன்ம கர்மச மே திவ்யம் யோ வேத்தி தத்வத : என்றும்
அப்யுக்தானம் அதர்மசஸ்ச ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் என்றும்
தேவகி பூர்வஸந்தியாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா என்றும்
தாஸாம் ஆவீரபூத் பூமௌ ஸ்வயமான முகாம்புஜ : என்றும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாரத்தை உயர்வான வார்த்தைகளால் ஸ்ரீ கிருஷ்ணன் தானும், ரிஷிகளும் பேசி இருக்க,
ஆண்டாள் அவன் பிறந்தமையை மநுஷ்யர்கள் பிறப்பைப் போலே கூறல் தகுமோ? என்னில்
ஆவிர் பூதம்
பிராதுர் பூதம்
என்பதற்கு மறைந்து இருந்தவன் வெளிப்பட்டானாக, தோற்றினதாக பொருள் படும்.
இல்லாதது உண்டாகாது. இருப்பதுதான் புலன்களுக்குத் தோற்ற புலப்படும்.
பூ = ஸத்தாயாம் என்று இருப்பைச் சொல்லி, ஆவிர்பூதம், பிராத்துர்பூதம் என்று வெளிப்படுதலைச் சொல்லுகிறது.

மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்பது ஜனி = ஜாயதி என்ற பொருளில் பிறப்பு என்றாகிறது.
எனவே அர்த்தத்தை வைத்துப் பார்க்கில், இருவருடைய பிறப்பும் வெளிப்படுகை அன்றி உண்டாகுகை இல்லை.
என்றானால் நம்முடையது பிறப்பு, அவனுடையது அவதாரம் என்பது ஏன்?
இருப்பு இருவருக்கும் பொது. எப்படி இருக்கிறார் என்று கேட்டுக் கொண்டால் இருவருமே ஜ்ஞான, ஆனந்த ஸ்வரூபத்தோடே
இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இதுவரை ஸாம்யாப்பத்தி போல தோன்றினாலும் ,
ஆத்ம பரமாத்ம ஸ்வரூபத்தில் தாரதம்யம், மற்றும் ஆத்ம தத்வங்களிடையே தாரதமயத்துக்கும் ஹேது
இன்னும் வேறு சில குணங்கள் காரணம்.
அவற்றில் இருவர் பிறக்கைக்கும் பிரதான காரணம் பகவானுடையது கிருபை. நம்முடையது கர்மம்.

பூ ஸத்தாயாம் என்று இருக்கும் நாம் கர்மத்தால் பாதிக்கப் பட்டு வெளிப்படுவது பிறப்பு.
பூ ஸத்தாயாம் என்று இருக்கும் அவன் கிருபையால் உந்தப்பட்டு கண்களுக்கு புலப்படும்படியாக வெளிப்படுவது
அவதாரம் (அ)ஆவிர்பூதம் . இப்படி இருவர் வெளிப்படுகைக்கும் பிரயோஜனம் ,
நம்முடையது சேர்த்து வைத்த, சேர்த்துக் கொள்கிற புண்ய, பாபங்களை அனுபவிக்க (அ) நஷ்டமாக்கை .
அவனுடையது நம்மை தன் கிருபைக்கு இஷ்டமாக்கை .

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் கடலை கழிமினே .

ஜனனோ ஜன ஜன்மாதிஹி பீமா பீம பராக்கிரம :
இருவரும் ஜன என்பது பொதுவானாலும்,
அவர் ஜனன : கர்ம பாரவஸ்யத்தால் நமக்கு சரீரத்தை கொடுத்து பிறப்பிக்குமவர். தவிர
ஜன -; ஜனங்களின்
ஜன்மம் -; பிறப்புக்கு
ஆதி -; நிமித்தம் (அ) பிரயோஜனம்
பகவான் – அவர் தான். ஆக, நம்முடைய பிறப்புக்கு பிரயோஜனம் அவரை அடைவது .
அவருடைய பிறப்புக்கு பிரயோஜனம் ஜனங்களைத் திருத்திப் பணிக் கொள்வது.

இப்படி கர்மா கழிந்தபின் உண்டாகிற ஜ்ஞான ஆவிர்பாவத்தை உபநிஷத்
ஸதா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்றும்
அஸ்மாது சரீராய ஸமுத்தாய பரம்ஜியோதிர் உபஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே – என்றும்
கர்மம் தொலைந்து ஜ்ஞானம் விகசித்து பக்குவமான சக்கரைப் பொங்கல் பிரசாதம் போலே இவன் விளங்க
அத்தை அவன் ஆனந்தமாக விநியோகம் கொண்டு களிப்பிக்கிறான்.
இது நடத்தவே ஒருத்தி மகனாய் அவன் பிறந்து என்கிறாள் ஆண்டாள்.

———–

26. மாலே : ஆர்த்தி பூர்த்தி :

சரணமானால் வைகுந்தம் சேர் வழக்கு கொண்டு
மரணமானால் மேவப் பெறுவதூம் — ஆரணமால்
ஊழ் வினை நம் போக்க மற்ற பற்று அற்றராய்
சூழ் வினை அவனடியார் காத்து.

ஆலின் இல்லையாய் – பரத்வம்.
மாலே – சௌலப்யம்.
மணிவண்ணா – சௌந்தர்யம்.
ஸ்ரீ ராமாயணத்தில் எப்படி சரணாகத வத்சலத்வம் ராமனுடைய பிரதான குணமோ, அதுபோல
மஹா பாரதத்தில் கிருஷ்ணனுக்கு பிரதான குணம் ஆஸ்ருத வியாமோகம் என்பது .
நாராயணன்
ஓங்கி உலகளந்த உத்தமன்
தேவாதி தேவன்
என்று கீழே பரத்வத்தை பிரஸ்தாபித்த ஆண்டாள், 25 வது பாசுரம் வந்த வாறே
வந்து தலைப் பெய்த்தோம் ;
வந்து நின்றோம்;
இன்று யாம் வந்தோம்;
யாம் வந்த காரியம் – என்று இவர்கள் தாங்கள் வந்தமைக்கு இரங்கு என்று சஹேதுகமாய் சொல்லி வந்தவர்கள்,

அத்தை மாறி
ஆலின் இலையாய் அருள் – என்று நிர்ஹேதுக மாக்கினர்.
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்
ஈண்டு அன்றன்னை புலம்பப்போய் ஓர் ஆய்க்குலம் புக்கதும்
காண்டலின்றி வளர்ந்து –என்கிற படியே – க்ஷீராப்தியிலிருந்து மதுரைப்போந்து, அங்கிருந்து
திருவாய்ப்பாடிக்கு தான் வந்த வரத்தை கணிசித்தார்கள் இல்லையோ என்று கண்ணன் வாய் திறவாமல் இருக்க
நாராயணனே நமக்கே பறைதருவான் என்று ஸ்வயத்ன ராஹித்யம் சொன்னவர்கள்
தாங்கள் வந்தமை உபாயமாக நினைப்பிட்டனரோ என்று உதாசீனனாகவும் இருந்தமை போக்கி
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் என்று
அனன்ய பிரயோஜனர்களாக வந்தார்களே என்று வியாமுக்தனாய் அது மணியின் நீரோட்டம் புறம்
பொசிந்து காட்டுமா போலே அவனில் வெளிக்காட்ட ,
மாலே! மணிவண்ணா என்கிறார்கள்.

இதம் ஸ்ரீரங்கம் தியஜதாம் இஹாங்கம்
புனர்நசாங்கம் யதிஸாங்கமேதி
பானொவ் ரதாங்கம் சரணேச காங்கம்
யாநேச விஹங்கம் ஸயநேச புஜங்கம் — ஆதி சங்கரர்.

ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்கிற ஸாம்யப்பத்தி மோக்ஷம் சொல்லுகிற பாசுரம்.
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறை
பல்லாண்டு இசைப்பார்
கோல விளக்கு
கொடி
விதானம்
உக்கம்
தட்டொளி
என்கிற 8 விஷயங்களை பிரார்த்தித்து அஷ்டவித ஆவிர்பாவத்தை
ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே – என்கிற முக்த போகத்தை கேட்கிறாள்.

ததா வித்வான் -; தியானம், வேதனம், நிதித்யாசனம் இவை ஒருபொருள் பன் மொழியாய்,
ஜ்ஞான யோக அதிகாரி தம் முயற்சியால் பக்தி செய்து புண்யபாபங்களைத் தொலைத்து
சாம்யாபத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான். அதேபோல
ததா வித்வான் -; சரணாகதனான ஒருவன் – பகவான் அவனே உபாயம் என்று பிரபத்தி பண்ணின அதிகாரி –
தன் முயற்சி ஏதும் இன்றி பகவத் சங்கல்பத்தாலே புண்ய பாபங்களை உதரி சாம்யாபத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான்.
வித்யாசம் என்னவென்றால் இருவருடைய சஞ்சித கர்மங்களையம் பகவான் போக்கிக் கொடுத்தாலும் , உபாசகனான
பக்தி யோக நிஷ்டன் தன்னுடைய பிராரப்த கர்மங்களை
(இந்த ஜன்மத்தில் கழிக்க வேண்டியுள்ள புண்ய+பாபங்களின் கூட்டறவு) தானே போக்கிக் கொள்ள வேண்டும்.
யாவந்ன விமோக்ஷே அசஸம்பத்ச்யே தஸ்ய தாவதேவ சிரம் – என்பதாக இவர்களுக்கு ஜன்மாந்தரத்திலே மோக்ஷம்.

ஆனால் பிரபன்னாதிகாரியினுடைய சஞ்சித + ஆரப்த கர்மங்கள் இரண்டையும் பகவான் தானே –
அஹம் துவா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – என்று காணாக் கண்ணிட்டு தள்ளி விடுகிறான்.
என்றாலும் பிரபன்னாதிகாரி விஷயத்திலும்
1. விஷயாந்தர ஸம்பந்தம்
2. தேவதாந்தர ஸம்பந்தம்
3. பாகவத அபசாரம்
மூன்றின் சம்பந்தமும் இல்லாத பக்ஷத்தில் மட்டும் – அஸ்மாத் சரீராது ஸமுத்தாய பரஞ்சோதிர் உபஸம்பத்ய – என்று
தேஹாவசானே மோக்ஷம் என்ற படி .

———–

27. பாலேபோல் சீர் :

தே மதுர பாலே போல் சீர் தன்னால் தன் பால்
நமவெனலார் தாம் தோற்ப தன் குணம் காட்டி
சமன் கொள் நல் வீடு செய் மாலுக்கு தொண்டு
அமைந்தோமாய் கூடிக் களித்து .

கீழ் பாசுரத்தில் நோன்புக்கு உபகரணமாக
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
கோலா விளக்கே
கொடியே
விதானமே
என்று தன்னதேயான
பாஞ்சஜன்யம்
பேரிகை
நம்மாழ்வார், பெரியாழ்வார்,
நப்பின்னை
கருடன்
ஆதிசேஷன்
ஆன கேட்டவை அனைத்தும்
நதே ரூபம் நசாகாரம் நஆயுதாநி . . . பக்கத்தானாம் துவாம் பிரகசாஸசே என்பதாக கொடுத்தாகி விட்டது.
அது ஸாரூப மோக்ஷம் என்றால்,
மாரி மலை முழைஞ்சில் பாசுரத்தில் இங்கனே போந்தருளி என்று ஸாலோக , ஸாமீப்ய மோக்ஷத்தைப் பெற்றாள்.
இப்போது இந்த பாசுரத்தில், நோன்பு நோற்றதற்கான சன்மானம் என்ற பெயரில் ஸாயுஜ்ய மோக்ஷத்தைப் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.

பேற்றுக்கு வேண்டியது விலக்காமையும், இரப்பும் என்ற கணக்கில் -2 ஆம் பாட்டில் நெய் உண்ணோம், பாலுண்ணோம்,
மலரிட்டு நாம் முடியோம் என்று தாங்கள் விலகினதை இப்போது இந்த பாட்டில்
சூடகமே, தோள்வளையே, தோடே , செவிப்பூவே என்று பல்கலனும் யாம் அணிவோம் .
அத்தை நீ கொடுக்கும் போது விலக்க மாட்டோம் என்பதான அப்பிரதிசேஷத்தை சூசிப்பிக்கிறாள்.

சரணாகதி கத்யமும் கோத கீதையும் :
பகவத் விஷயத்தில் செய்யப் போகிற சரணாகதி பலிக்க வேண்டி முதலில் புருஷகார பிரபத்தி.
அடுத்து பகவத் குணாநுசந்தானம்.
அடுத்து அவனுடைய பூஷணங்கள்.
அதை அடுத்து பத்னி பரிவாரங்கள் பற்றி அநுசந்தித்து
ஶ்ரீமந் நாராயண! துவத் பாதரவிந்த சரணமஹம் பிரபத்யே என்று சரணாகதியை அநுட்டித்தார்.

இதுவரை துவய பூர்வகண்டார்த்த அநுசந்தானமாயித்து.

மேலே கீதா ஸ்லோகங்கள் மூன்றை உதாகரித்து ஸ்லோக த்ரியோஜித, ஸ்தான த்ரியோஜித ஞானமாகிற –
பரபக்தி, பரஞான, பரமபக்தியைக் கொடு என்கிறார் ஸ்வாமி எம்பெருமானார்.
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும், விஸ்லேஷத்தில் தரியாமையும் பரபக்தி. ஆர்த்தி தலை எடுத்து
வழியல்லா வழியிலாவது அவனை அடைய நினைப்பது , தர்சன ஸமாகார ஸாட்சாத்கரம் இரண்டும் பரஞானம்.
பிரியாதே கூடி அநுபவிக்ககை பரமபக்தி.
பகவத் குணானுப கைங்கரயத்துக்கு பசி போலே இந்த பரபக்தி, பரஞான, பரம்பக்தி.

ஆண்டாள்
இந்த பாசுரத்தில் சொல்லப்பட்ட பாலே போல் சீர்குணங்களை அனுபவிக்க வேண்டிய அவளுடைய அவாதான் பசி. அத்தால்
அவனை
வாயினால் பாட , மனத்தினால் சிந்திக்க,
முகில் வண்ணன் பேர்பாட,
மனத்துக்கினியானைப் பாட
என்ற இவையே பரபக்தி, பரஞான, பரமபக்தியாய் பசி வளர வளர பகவத் குணானுபவம் சிறக்கும் படியாய்
ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிது – என்று
பரம பதத்தில் பெரும் களிப்பாய் கூடி இருந்து குளிர்வதையே ஆண்டாளும்
பால் சோறு மூடநெய் பெய்து கூடி இருந்து குளிர்ந்து என்கிறாள் .

இங்கு முழங்கை வழி வார கூடி இருந்து குளிர்ந்து என்பதின் ஸ்வாரஸ்யம், முக்தபோக அனுபவத்தில் ,
அன்நாதனாக அவனிருக்க, அன்னமாய் இவர்கள் நின்று, அவனானந்தம் கண்டு
இவர்கள் ஆனந்திப்பதையே முழங்கை வழிவார என்கிறாள் .
அனுபவம் நித்யமாய், எப்போதும் நடவா நிற்பதை முழங்கை வழிவார என்று continuous tense ல் அமைத்தமை நோக்கத்தக்கது.
பாலே போல் சீரை அனுபவிக்க முதல் நிலை பசி பர பக்தி. அது இன்னும் அதிகமாக அதிகமாக
பரஞான பரம பக்தியாக பழுக்கிறது. அதுபோல அனபவாதிசயமும் விசத, விசத தர, விசத தமமாக
பரார்த்த ஆனந்தம்; பரார்த்த கைங்கர்யம்; குணானுபவமே புருஷார்த்தமாக கனிவது சொல்லப்பட்டது.

————-

28. கறவைகள் :

புறம்புண்டாம் வேத நெறி யாவும் விட்டு
திறம் காட்டும் என் ஒருவன் தாள்கிட்டல் — தேறுமென்
உரைத்த மொழி வழியே கை முதல் வேட்டா
குறையில்லா கோவிந்தன் நாட்டு.

திருமந்திரத்தில் பிறந்து, கிருஷ்ண சரம ஸ்லோகத்தில் வளர்ந்து துவாயார்த்த நிரதராய் வர்த்திக்கை ஸ்வரூபம்.
திருமந்திரம் ஜ்ஞான பிரதானமான மந்திரம் என்றால், சரம ஸ்லோகம் விதி ரஹஸ்யம். துவய மஹாமந்திரம் அனுஷ்டான பரமான மந்திரம்.
திருமந்திரத்தில் ஆத்மாவாலே பேறு என்கிறது.
சர்ம ஸ்லோகத்தில் ஈஸ்வரனாலே பேறு என்கிறது.
துவயத்தில் பிராட்டியாலே பேறுஎன்கிறது.
ஆசார்ய சம்பந்தம் பெற்று ரஹஸ்ய த்ரிய உபதேசமும் பெற்று அனுஷ்டாதாவாய் போருகைக்கு
துவயார்த்தம் நன்றாக நெஞ்சில் பட வேண்டும். அதில் பூர்வகண்ட வாக்கியம் உபாயத்தையும்,
உத்தர கண்ட வாக்கியம் பலம்-புருஷார்த்தத்தையும் சொல்லுகிறது.
இதன் விளக்கமாக அவதரித்த ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் 27, 28 இரண்டும்.
ஆக , கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் பாசுரம் உபாய சுவீகாரமும், 29ம் பாசுரம்
சிற்றம் சிறுகாலை கைங்கர்ய பிரார்த்தனையையும் சொல்லுகின்றன.

அனன்ய ஸாத்யே ஸாபீஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம்
ததேக உபாயதா யாஞ்சா –இதி பிரார்த்தனா மதி : சரணாகதி : என்ற கணக்கில்
உபாய ஸ்வீகாரம் தானும் விதி வாக்கியத்தில் சொன்னபடி
மற்ற எல்லா தர்மங்களை விடுகையும்
பகவதாஸ்ரயணமுமாக விட்டவை எல்லாம் அவனேயாகப் பற்றுகையும்
சொல்வதே – கறவைகள் பாசுரம்.

1. கறவைகள் பின் சென்று – ஜாத்யுச்சித கருமம் செய்தீர்களாய் பிராபாந்தரங்களை விடீர்கள் இல்லீகோள் என்ன
கானம் சேர்ந்துண்போம் – கோ ரக்ஷணமாக சென்றோம் அல்லோம். உண்கையே பிரதானமாக சென்றோம்.
எங்கள் ஆசாரியன் மாடு கன்றுகள். பகவானுக்கு கண்டருளப்பண்ணி உண்டீர்கள் போலும் என்ன – அதுவும் இல்லை –
சென்று உண்போம் அத்தால் கர்மாநுஷ்டானம் இல்லை – நீ பரமபதம் விட்டு திருவாய்ப்பாடிக்கு வந்தாயால்,
நாங்கள் விமுக்த்தர்கள் போலே அங்கிருந்து கானம் சென்றமை கண்டீயே என்கிறாள்.

2. அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் – இதுவரை இல்லையாகிலும், இன்னும் முன்னே சம்பாதிக்க வழியும் இல்லை.
வலக்கை இடக்கை அறியா ஆய்க்குல மாதலால் அறிவில்லாத – ஜ்ஞான யோகம் இல்லாத – அறிவொன்றுமில்லாத –
பக்தி யோகமும் இல்லாத பிள்ளைகளோம். ஆத்தால் ஆர்ஜித ஸுக்ருதம் எதுவும் இல்லை.

3. குறை ஒன்றில்லாத கோவிந்தா! உன்தன்னைப் பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாமுடையோம் –
அயத்ன சுக்ருதமாக உன்னையே சித்த புண்யமாக உடையோம். நீயோ நிறைவாளன். நாங்கள் ஜ்ஞான பக்திகளில் குறைவாளர்கள்.

4. உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது – இருவருக்குமான சம்பந்தம் தானும் அங்கு ஒழிக்க முடியாது வாஸ்தவம்.
இங்கு ஒழிக்கலாமோ என்னில் நித்யம். அநிவாரியம் .

5. அறியாத பிள்ளைகளும் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே – பூர்வாபதாரங்களுக்கு க்ஷமணம் வேண்டி

6. இறைவா நீ தாராய் பறை – நீ கொடுத்தன்றி எங்களுக்கு நிறக்க வழியில்லை என்கிறாள்.

அஹம் , மத் ரக்ஷண பரம், மத் ரக்ஷண பலம் ஈஸ்வராதீனம் – ஸ்வாமி தேசிகன்.
பிராப்தாவும், பிராப்யமும், பிராப்திக்கு உகப்பானும் அவரே இனி ஆவாரே – ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யார்.
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்றது தாழ்குலம், கர்ம ஜ்ஞான பக்கத்தி நெறிக்கு விலக்கான குலம் என்பதல்ல.
இயலாத குலம் என்று பொருள். பிராம்மணர்களாக பிறந்தவர்கள் இயன்றவர்களோ என்னில் ?
அவர்களும் விட்டே பற்றுகைக்கு அசக்தி காரணம் அன்று. ஸ்வரூப பிரயுக்தமே பிரதான ஹேது.
அறிவொன்றுமில்லாத என்பது ஜ்ஞான அனுதயமன்று . சாட்சாத் தர்மமான கோவிந்தா நீயே உபாயாம் என்கிற
வேதாந்த விழுப்பொருள் அறிவு ஆண்டாளுக்கு உண்டான படியாலே .
ந வேதாந்தாது சாஸ்திரம்
ந மதுமதனாது தத்வம் அகிலம்
ந ஸத்வாது ஆரோக்கியம்
ந துவயவசனத : க்ஷேமகரம் — ஸ்வாமி தேசிகன்.
பரித்யஜ்ய என்று விடுகை சொன்னவிடத்து ஆண்டாள் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்று
கர்ம ஜ்ஞான பக்தி யோகங்களை செய்ய பிரசக்தியே இல்லை. விடுகை என் வந்தது என்று சொல்லி விட்டாள்.அடுத்து
மாம் ஏகம் சரணம் விரஜ – ஸ்ரீமந் நாராயண சரணநௌ சரணம் பிரபத்யே என்று பற்றுகையைச் சொன்ன விடத்து –
உன் தன்னைப் பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாமுடையோம் – என்றது ஸ்வீகாரம் தானும் பரகதமான படிக்கு.
மாம் சரணம் விரஜ அல்ல. மாம் ஏகம் சரணம் விரஜ என்ற விதி வழி கண்ணன் தானே நடத்தி கொடுத்த படியுமன்றோ விது.

———

29. மற்றை நம் காமங்கள் மாற்று :

அடிமைக் கண் அன்பு செய் ஆர்வத் தறிவு
உடைமைக் கண் தேடும் மகிழ்ச்சித் — தடையாம்
அடைந்து அனுபவிக்க புக்கால் நில் என்ன
மிடையாது நிற்றல் தலை.

சிற்றம் சிறுகாலை வந்துன்னை சேவித்து – பிராபியத்தில் த்வரை
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் – அதில் கலக்கம்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாதே போகாது – ஆர்த்தியை ஆவிஷ்கரித்தல்.
இற்றைப்பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா – உபேக்ஷையைச் சொன்னது.
எற்றைக்கும் ஏழழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் – கைங்கர்ய அபேக்ஷை.
மற்றைநம் காமங்கள் மாற்று – கைங்கர்யத்தில் காளையாகிற வைராக்கியத்தை – ஸ்வபோக்த்ருத்வ புத்தியை விலக்குகிறாள்.

நாராயணனே நமக்கே தருவான் – என்றது முதல் பாசுரம்.
உனக்கே நாமாட்ச் செய்வோம் – 29 ஆம் பாசுரம். இத்தால்
நாராயணனே நமக்கே – உனக்கே நாம் = நாராயணனே உனக்கே நாம் என்றாகிறது.
நாம் என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்.
எப்படிப்பட்ட நாம் என்று விசாரித்தால் – சுவாமி பிள்ளைலோகாசார்யர் காட்டுவது
அஹமர்த்தத்துக்கு ஜ்ஞானந்தங்கள் தடஸ்தமானால் தாஸ்யமிறே அந்தரங்க நிரூபகம் – என்பதாக.
ஜ்ஞானம் உடையவன் என்பதால் கர்த்ருத்வ- போக்த்ருத்வங்கள் முன் நிற்கும். ஆனால்
கர்த்ருத்வத்துக்கு தடைக்கல் பாரதந்திரியம்.
போக்த்ருத்வத்துக்கு தடைக்கல் சேஷத்வம்.
சேஷத்வம் பர-அதிசயத்துக்கே இருப்பது
பாரதந்த்ரியம் பர-வசப்பட்டு செயல் படுவது.
ஆக ஜ்ஞாத்ருத்வத்தால் வந்த கர்த்ருத்வம் பரனான பகவத் ஆதீனப்பட்டுதானே இருக்க வேண்டும்.
அதாவது ஸ்வபிரயர்த்தன நிவிர்த்தி பாரதந்த்ரியத்துக்குப் பலம். பிரவிருத்தியே கூடாதோ என்னில் அன்று.
பாரதந்த்ரியத்துக்கு குந்தகமில்லாத கர்த்ருத்வமும்
அதேபோல சேஷத்வத்துக்கு விரோதமில்லாத போக்த்ருத்வமும் நோக்கிக் கொள்ள வேண்டும்.

ஜ்ஞான காரியமான பிரயத்னமும் பலமும்
ஸ்வரூப தர்மமான பாரதந்த்ரியமும், சேஷத்வத்வத்தையும் அனுசரித்தே ஆற்றக்கடவது.
பகவான் ஸ்வதந்திரன். நாம் பரதந்திரர். எனவே பகவத் பிரயோஜனமாக செய்கிற கர்த்ருத்வம் பாரதந்திரியம் – உனக்கே நாமாட் செய்வோம்.
எனக்கு, எனக்கும் உனக்கும் என்றல்லாமல் உனக்கே என்பதான வழுவிலா அடிமை.
பகவான் சேஷி. நாம் சேஷப்பட்டவர்கள். எனவே தத் விஷய ப்ரீதி சைதன்ய பலம். பிரகர்ஷயிஷ்யாமி என்பதாக
பகவத் ஆனந்த அநுயாக போக்த்ருத்வம் சேஷத்வம் – மற்றை நம் காமங்கள் மாற்று .

ம – என்பது தாயம் என்றால்
நம – என்பது இலக்கம் 2.
பரமபத சோபனா படத்தில் (அஹம்) – ம என்கிற 1 போட்டு விளையாட ஆரம்பித்து , கடைசீ பாம்பு வாயில் விழாமல்
தப்பிக்க, நம – என்று 2 போட்டு பரமபதம் சேருவர். ம – என்கிற 1 போட்டால் பெரிய பாம்பு வாயில் விழுவர்.
அதேபோல பிரணவத்தில் உள்ள மகாரம் அவுக்கு சேஷப்பட்டவன் என்று சொல்வதோடு , இடையில் உள்ள நம பதத்தால்
பாரதந்த்ரியத்தைச் சொல்கிறது. அந்த நம பதத்தின் அர்த்தமான ”பாரார்த்யம் ஸ்வம் ” என்பதை சொல்ல
வந்ததுதான் திருப்பாவை என்கிற பட்டர் திருவாக்கு பிறந்ததும் இது கொண்டு.

———-

30. வங்க கடல் : ஆண்டாள் அரங்கக்குப் பன்னு திருப்பாவை :

அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பான்னு திருப்பாவை பல்பதியம் – பராசர பட்டர் திருவாக்குப்படி
திருப்பாவை 30 ம் திருவரங்கன் விஷயமானவை . எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
1. நாராயணன் – ஸக பத்நியா விசாலாக்ஷியா நாராயண உபாகமது – வால்மீகி வாக்குப்படி
ரங்கநாதன் தான் ஜகந்நாதன் – பெருமாள் ஆராதித்த பெரிய பெருமாள்.
2. பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் – கார்ய வைகுண்டத்திலுள்ள க்ஷீராப்தி நாதன்தனான வியூக வாசுதேவன்தான்
ஸ்ரீ ரங்கத்துக்கு பிரதானம் – பிரத்யக்ஷ பரமம் பதம் ஸ்ரீரங்கம்.
3. திங்கள் மும் மாரி – லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் என்று குருபரம்பரையில் பிரதம குருவாய் நின்று
ரஹஸ்ய த்ரியங்களை ஸ்ரீரங்க நாச்சியாருக்கு உபதேசிக்க, அவள் வழி விஸ்வக்ஷேனர் , நம்மாழ்வார் உபதேசித்த கிரமம் – மும்மாரி
4. ஆழி மழை – சார்ங்கம் உதைத்த சரமழைபோல் என்று சார்ங்கவில் சேவகனாக இராமபிரானைப் பற்றி பிரஸ்தாவம் இதில். –
ராமோ த்விர் நாவிபாஷதே என்று கத்யத்தில் நம்பெருமாள் தன்னை ராமனாகக் கொண்டு சொன்ன வார்த்தை .
5. மாயனை – அரவின் அணைமிசை மேயமாயனார் என்று திருப்பாணாழ்வார் சொன்ன தாமோதரன் பெரிய பெருமாள்தானே.

6. முனிவர்களும் யோகிகளும் ஹரி என்று – சிற்றெயிற்று முற்ற மூங்கில் அற்ற பற்றர் வாழும் அந்தணீர் அரங்கன் –
விமானத் தூண் ஹ + ரி என்ற வாசகத்தோடே ஆனது .
7. கீச்சு கீசு – கிளிச் சோழன் கிளி மண்டபம் இங்குதான் உண்டு.
8. தேவாதி தேவன் – தேவரையும் அசுரனையும் திசைகளும் படைத்தவனே யாவரும் வந்து அடி வணங்க
அரங்கநகர் துயின்றவனே என்று குலசேகர ஆழ்வார். தேவாதி பிரம்மா அவன் ஆராதனம் செய்த பெரிய பெருமாள்.
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் – ஆண்டாளுக்கு.
9. மாமாயன் மாதவன் வைகுந்தன் – அரங்கன் அழகிய மணவாளன் நம்பெருமாள் என்ற மூன்றும்
பரத்வம் ஸ்ரீயப்பதித்வம் சௌலப்யத்துக்கான திருநாமங்கள் தானே.
10. மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் – லோகாசாரங்க முனி திருப்பாணாழ்வார் விஷயமாக அபசாரப்பட,
பின் அவர் திருவாராதனத்துக்கு வந்த போது அரங்கன் சன்னதி கதவு திறக்காமல் மௌனியாய் காலம் தாழ்த்தி,
பிறகு ஆழ்வாரை எழுந்தருள பண்ணி அவருக்கு அதுவரை திறவாத வாசலை திறந்துவிட்டவன் அரங்கன்.

11. முற்றம் புகுந்து – அரங்கன் முற்றம் சேறு செய்யும் தொண்டர் – சுற்றத்து தோழிமார் எல்லாரும் 105 திவ்யதேச
எம்பெருமான்களும் பள்ளி கொள்ளுமிடம் திருவரங்கம்.
12. அனைத்தில்லத்தாரும் அறிந்து – சாத்தின சாத்தாத 10கொத்து பரிவாரங்களை நியமித்து
எம்பெருமானார் திருவரங்கத்தை நிர்வகித்து போந்த படி இங்குதான்.
13. பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் – பிள்ளைகள் திருவரங்கம் காவிரிக் கரையில் அன்ன கூட உற்சவம் விளையாடும்
போது ஜீயோ! என்று அழைக்க , எம்பெருமானார் மணல்சோற்றை
தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் என்பதாக அதை
பிரசாதமாகவே நினைத்து பெற்றறுக் கொண்ட சரித்திர சங்கேத்யம்.
14. வாய் பேசும் நங்காய் நாணாதாய் நாவுடையாய் – வாயழகர் என்னரங்கத்து இன்னமுதர்; திருவரங்கர் தாம் பணித்த
மெய்மை பெரு வார்த்தை ; பேசி இருப்பனவைகள் பேர்க்கவும் பேறாவே ; ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ என்று
எம்பெருமானாருக்கு அருளிய வார்த்தைகள் எல்லாம் அரங்கன் நாவுடைமைக்கு சான்று.
15. எல்லாரும் போந்தாரோ ? – அத்யயன உற்சவத்தில் ஆழ்வார்கள் எல்லாரும் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி
இருந்து 21 நாட்கள் தமிழ்மறை திருநாள் கண்டருளுவதில் திருவரங்கம் திருப்பதி பிரதானம்,
காரணம் இவரே பதின்மர் பாடும் பெருமாள் . பாசுரங்களின் எண்ணிக்கை 247 போலே தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் தொகையும் 247.

16. வாசல் காப்பான், கோயில் காப்பான் – உத்தர வீதி, சித்தரை வீதி, நான்முகன் கோட்டை வாசல் (ரங்கா ரங்கா கோபுரம்)
கார்த்திகை கோபுர வாசல், ஆரிய படாள் வாசல் (கருட மண்டபம்), நாழி கேட்டான் வாசல் (துவஜ ஸ்தம்பம்),
ஜெய விஜயாள் வாசல், திருமணத்தூண் திருவாசல் களில் உள்ள துவார பாலர், க்ஷேத்ர பாலர்கள் எழுப்பினது.
17. அம்பரமே தண்ணீரே சோறே அறம் – அரங்கனுலா சென்ற காலத்து ஆழ்வாருக்கு வஸ்திரமும்,
ஸ்ரீவைஷ்ணவ வெள்ளத்தானுக்கு ஈரவாடை தீர்த்தமும், ஆழ்வான் திருகுமாரர்கள் அவதரிக்க ஹேதுவாய்
பிரசாதம் அனுப்பிய விருத்தாந்தங்கள் இந்த வகை கணக்கு.
18. உன் மைத்துனன் பேர்பாட(வசவு பாட) – ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரமுதல் நாள் நடக்கிற பிரணய கலக்கத்தன்று
அனைவரும் நாச்சியார் பரிகரமாக நின்று, அரங்கனை ஏசினபடிக்கு .
19. மைத்தடம் கண்ணினாய் – உல்லாச பலவித (பட்டர்) , சேதனனை அருளாலே திருத்தும். ஈஸ்வரனை அழகாலே திருத்தும்
தத் இங்கித பராதீன : நம்பெருமாள். (ஆழ்வான்) என்று ஸ்ரீரங்க நாச்சியார் வைபவம் .
20. செப்ப முடையாய், திறலுடையாய் – நம்பி இராமானுசனை முதலில் அரையர்மூலம் நேர்மையாக கேட்டு பெறாது போக,
இரண்டாம் முறை காஞ்சி தேவப்பெருமாளை பாட்டுக்கு போர இசைய வைத்து ,
ஸ்ரீரங்கம் அழைத்துக் கொண்ட திறல் = சாமர்த்தியம் அரங்கனுக்கே அன்றோ?

21. ஏற்ற காலங்கள் எதிர் போங்க – முதலில் ஆழ்வாரைக் கொடுத்தார். அவர் பவிஷ்யத் ஆச்சாரியரைக் கொடுக்க,
அந்த ராமானுசர் எதி புனராவதாரமான மாமுனிகள் எதிர் பொங்கி மீதளித்த பிரபாவம், முதலில் கொடுத்த அரங்கனுக்கே ஆச்சாரியனான படி இது.
22. செங்கண் சிறுச்சிறிதே – திருப்பாணாழ்வார் – காரியவாகி புடை பரந்து என்று பாடிய படி.
உய்யக் கொண்டார் வழி ஆளவந்தாருக்கு ராஜ்ய வியாபாரத்தை விட்டு சம்பிரதாயத்துக்கு ஆக்கின படி;
பிள்ளை உறங்காவில்லி தாஸர் பொன்னாச்சியோடு அரங்கனுக்கு ஆட்பட்டது ராமாநுசர் சொல்லிக் காட்டிய அக் கண்ணழகுதானே.
23. சீரிய சிங்கம் போதருமா போலே – நடைக்கு கோயில். குடைக்கு பெருமாள் கோயில். வடைக்கு திருமலை. முடிக்கு யாதவாத்ரி பிரசித்த மிறே.
24. அன்றிவ் உலகம் அளந்தாய் – எல்லை மண்டபம், ஜீபயர்புரம், உறையூர் என்று எல்லை நடந்து அளந்தது
திருவானைக் காவல் கோஷ்டியாரிடம் இருந்து மீட்டது.
25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர – ராமானுசர் கைப்பிள்ளையாய் பிறந்து
பிள்ளை லோகாச்சார்யார் மகனாய் ஜோதிஷ்குடியில் ஒளித்து வளர்ந்தது.

26.மார்கழி நீராடுவான், மேலையார் செய்வனகள் – மார்கழி நீராட்டமாகிற அத்யயன உற்சவமான திருவாய்மொழித் திருநாளாக
நம்பெருமாளிடம் பிரார்த்தித்து திருமங்கை ஆழ்வார் தொடங்கி வைக்க , நாதமுனிகள் காலத்தில் பகல் பத்து நாளும் சேர்த்து
அது 21 நாள் உற்சவமாக ஆயித்து. அதுவே நமக்கு மேலையார் செய்வனகள் ஆயிற்று.
27. நாடு புகழும் பரிசு – ஸ்ரீரங்க விமானத்தோடு பெரிய பெருமாளை , பெருமாள் விபீஷணனுக்கு கொடுத்தது.
உபய விபூதியையும் எம்பெருமானார் இட்ட வழக்காக்கி அவரை உடையவர் என்று நியமித்தது இவை பார் புகழும் பரிசு.
28. சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே – முதலியாண்டான் – வாங்கீபுரத்து நம்பி பேச்சு –
பெருமாள் உற்சவமாக எழுத்தருளும்போது என்ன பாடினீர் என்ன, ஜெய விஜயீ பவ ஸ்ரீரங்க விபோ ஜெய ஜெய என்றேன் என்ன –
நெய் உண்பீர் , பாலுண்பீர், பட்டுடுப்பீர், நூறு பிராயம் புகுவீர் என்று இன்னொருவர் சொல்ல,
முரட்டு சமஸ்கிருத பெரிய பேர்கள் இங்கு எதற்கு என்று, வர்த்திக்கிற தேசத்தைக் கொண்டு அத்தை சிறுபேறாக அவர்கள் கணிசத்தபடி.
29. பொற்றாமரை அடியே போற்றும் பொருள் – ரங்கமணி பாதுகா பிரபாவம் பற்றி ஸ்வாமி நிகமாந்த தேசிகன் 1000 ஸ்லோகம்
பண்ணக் கூடிய மகிமை. ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடி அவன் கைவிட்டாலும், அவன் பாதுகையான
நம்மாழ்வார் இல்லை மாறன் அடிபணிந்துய்ந்த எம்பெருமானார் கைவிட மாட்டார் என்கிற பெருமையும் கொண்ட திருவடி அரங்கனுடையது.
30. ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திருமுகத்து சொல்வது திருமாலால் – பட்டர்- அனந்தாழ்வான் ஸம்வாதம்.
ஸ்ரீ வைஷ்ணவ திவயதேசங்கள் பலதும் இருக்க பட்டரோ ஸ்ரீரங்கநாத பக்ஷபாதி. எப்படி என்றால்
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி ஆயிரமும் வான்திகழும் சோலை மதிள் அரங்கர் வான் புகழ்மேல் ஆன்ற
தமிழ்மறை ஆயிரம் என்று அங்கு சொன்னது போல திருப்பாவை முப்பதும்
அன்ன புகழ் புகழ்புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு பான்னு திருப்பாவை என்று ஸ்ரீரங்கநாதன் விஷயமாக்கி தனியன்கள் சாதித்தார்.
அவரைப் பார்த்து அனந்தாழ்வான் ஒருமுறை, நீர் வைகுந்தம் சென்றால் அங்கு பராமநாதன் த்விபுஜனாக இருந்தால் சேவிப்பீரா,
சதுர் புஜனாக இருந்தால் சேவிப்பீரா என்று வினவ, அதற்கு பட்டர் சதுர் புஜனாக இருந்தால் நம்பெருமாள் என்று நினைப்பேன்.
த்விபுஜனாக இருந்தால் பெரிய பெருமாள் என்று நினைத்து சேவிப்பேன். பெரிய பெருமாளாகவோ, நம்பெருமாளாகவோ
சேவை தரவில்லை என்றால், கூரயைப் பிய்த்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்கே குதித்து விடுவேன் என்றாராம்.
அதை நிரூபிக்கும் வகையில் ஆண்டாளும் நான்கு திருத்தோள் என்று சொல்லாமல்
ஈரிரண்டு மால்வரைத் தோள் மாதவன், கேசவன் என்றது நம்பெருமாள், பெரிய பெருமாளாக நினைத்து அவள் பாடினாளாகக் கூறலாம்.
அந்த மாதவன், கேசவன்தான் – ஆண்டாளை திருக்கல்யாணம் பண்ணி அங்கப் பறை கொண்ட மன்னாரும் அரங்கன் தாமே.

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே -தாசரதி தாஸன், கிடாம்பி ஶ்ரீநிவாஸ ரங்கன் ஶ்ரீநிவாஸ தாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ. உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ குண ரத்ன கோஸம்–ஸ்ரீபராசரபட்டர்-

December 22, 2020

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ ரங்கநாயகி ஸமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரஹ்மணே நம:
ஸ்ரீபராசரபட்டர் திருவடிகளே சரணம்

இந்த ஸ்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியான
ஸ்ரீரங்கநாச்சியார் விஷயமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ஸ்லோகமாகும்.

தனியன்

ஸ்ரீ பராசர பட்டார்ய : ஸ்ரீரங்கேச புரோஹித:
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மே அஸ்து பூயஸே

ஸ்ரீரங்கநாதனுக்கு முன்பாக வேத விண்ணப்பங்கள் செய்தல் போன்ற புரோஹிதங்களைச் செய்பவரும்,
கூரத்தாழ்வானின் திருக்குமாரரும் ஆகியவர் ஸ்ரீ பராசரபட்டர் ஆவார். ஸ்ரீரங்கநாயகி என்னும் உயர்ந்த செல்வத்தினை
உடைய அந்தப் பராசரபட்டரின் திருவடிகளை அடைந்து நான் அதிகமான நம்மைகளை பெறுவேனாக!

——-

ஸ்ரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–ஸ்லோகம் – 1-

ஸர்வேஸ்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும்
படைத்து வருகிறான். அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள்.
(அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்தயந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.
பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால்
பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).
இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!
(இங்கு கூறப்படும் உட்பொருள் – பெரியபெருமாளின் படைப்புகளாகவே இருந்தாலும்,
மஹாலக்ஷ்மியாகிய பெரியபிராட்டியார் பார்வைபட்டால் மட்டுமே அவை பயன் பெறும் என்றார்).

———–

கடந்த ஸ்லோகத்தில் அவன் படைப்பதை இவள் ஏற்பதாகக் கூறுகிறார்.
இங்கு, ஏற்பது மாத்திரம் அல்ல, படைப்பிற்கான காரணமும் இவளே என்றார்.

உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோரகித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்ய தல மங்கள தீப ரேகாம்
ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:–ஸ்லோகம் – 2-

இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக்கண்களைத் திறந்து பார்க்கிறாள்.
அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன
(கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன).
இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல.
இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள்
(ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன? தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று,
தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித்தருகிறாள்.
இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார்.
பெரியபெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .
மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.

இங்கு பல்லவித என்னும் பதம் உலகமானது துளிர்கிறது என்று நேரடியாகப் பொருள் தரவில்லை.
பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பது போன்று எனக் கருத்து. இவள் தனது திருக்கண்களைத் திறந்து பார்ப்பதை,
பெரிய பெருமாள் கவனித்தவுடன் இந்த உலகைப் படைக்கிறான். இவள் தனது கண்களை மூடிக்கொண்டால்,
இந்த உலகத்தைப் ப்ரளயத்தில் ஆழ்த்திவிடுகிறான்.
பரம்பொருளே உலகின் காரணம் என்று வேதங்களும் வேதாந்தங்களும் முழங்க,
இவர் பெரியபிராட்டியைக் காரணமாகக் கூறுவது எப்படி? அவனே அதற்குக் காரணம் என்பது உண்மை,
ஆனால் இவளது துணையின்றி அது இயலாது. இந்த உலகம் என்னும் இல்லறம் நடக்க,
மனைவியாகிய இவள் துணை மிகவும் அவசியமானது என்று கருத்து.
இவளே பெரியபெருமாளை நமக்குக் காண்பித்துத் தருகிறாள். அவனிடம் செல்ல இவளது சிபாரிசு (புருஷகாரம்) தேவை.
ஆனால், இவளை அடைவதற்கு எந்த ஒரு சிபாரிசும் தேவை இல்லை. தானே தனக்குச் சிபாரிசாக உள்ளாள்.

————-

தன் மீது ஸ்ரீரங்கநாச்சியார் அவளது கடாக்ஷத்தைச் செலுத்தவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.

அநுகல தநுகாண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந் -ஸ்லோகம் – 3-

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.
அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,
அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன. இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள்,
அந்தக் கொடியில் உள்ள மலர்க்கொத்துக்கள் போன்று உள்ளன. அந்த மலர்ச்செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற
கண்களைக் கொண்டு அவள் உள்ளாள். இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்பவல்லீ – என்றார்.
அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள். அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும்
(ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

இங்கு ஸ்ரீரங்கநாதனை, ஸ்ரீஸக என்று கூறியது காண்க – ஸ்ரீயின் நாதன் என்னும்படி, அவள் இல்லாமல்
இவனை அடையாளம் காண இயலாது என்பதைக் காட்டுகிறார். அவள் இல்லாமல் இவனது
திருக்கல்யாண குணங்கள் வெளிப்படாமல் உள்ளதோடு, தேயவும் செய்துவிடும்.

———–

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷத்தின் பெருமையைக் கூறுகிறார்.-

யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தாரதம்யே முராரே:
வேதாந்தா: தத்வசிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:—ஸ்லோகம் – 4-

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இவற்றுக்குக் காரணமாக உள்ளது
இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும். இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான். யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி
அடையாளம் உள்ளனவோ அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக்கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் – ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும்
அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

வேதம் இல்லாமல் ப்ரம்மனால் படைக்க இயலாதது போல,
இவளது புருவ நெறிப்பு இல்லாமல் ஸ்ரீரங்கநாதனும் ஏதும் செய்வதில்லை.
இங்கு முராரி என்று நம்பெருமாளைக் கூறியது காண்க. படைத்தல் குறித்துக் கூறும்போது
ஏன் “அழித்தவன்” என்னும் திருநாமம் கொண்டு (முரன் என்ற அசுரனை அழித்தவன்) கூறவேண்டும்?
அழிக்கும் வல்லமை இருந்தாலும், படைக்கும்போது மிகவும் எளியவனாக இவள் வசப்பட்டு நிற்பதை உணர்த்துகிறார்.

—————

யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா
ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச
அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம்
காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.—-ஸ்லோகம் – 5-

அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை, அதற்கு அளவு ஏதும் உள்ளதா,
அது எத்தன்மை உடையது என்று உணர்ந்து, அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது?
பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர்,
உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர். ஆயினும் அவர்கள்,
“இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம்மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர்.
இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன.
இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான்,
முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்.
ஸ்ரீரங்கநாச்சியார், “யாரும் செய்யத் துணியாத செயலை இந்தக் குழந்தை செய்கிறது.
நாம் ஆதரிப்போம்”, என்று எண்ணி, தன்னைக் கடாக்ஷிப்பாள் என்றார்.

———-

ஸ்தோதாரம் உசந்தி தேவி கவய: யோவிஸ்த்ருணீதே குணாந்
ஸ்தோதவ்யஸ்ய ததச்ச தே ஸ்துதிதுரா மய்யேவ விச்ராம்யதி
யஸ்மாத் அஸ்மத் அமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: தே குணா:
க்ஷாந்தி ஔதார்ய தயா ஆதய: பகவதி ஸ்வாம் ப்ரஸ்துவீரந் ப்ரதாம்.–ஸ்லோகம் – 6-

ஸ்ரீரங்கநாயகியே! தேவி! பகவானாகிய நம்பெருமாளுக்கு ஏற்றவளே! இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும்,
யார் ஒருவனை விரும்புவார்கள் என்றால் – எந்த ஒரு பொருள் துதிக்கத்தக்கதாக உள்ளதோ, ஆனால்
அந்தப் பொருளின் குணங்களை முழுவதுமாக யாராலும் விவரிக்க இயலாமல் உள்ளதோ, அந்தப் பொருளை
ஒருவன் அதன் குணங்களுடன் விவரித்தான் என்றால் – அவனையே பெரிதும் மதிப்பார்கள் .
இப்படிப்பட்ட அபூர்வமான பொருளாக இருக்கும் உன்னையும் , உனது குணங்களையும் வர்ணித்துத் துதிபாடும்
முழுத்தகுதியும் எனக்கே வந்து விட்டது, இது எப்படி என்றால் – நான் உன்னைத் துதிக்கும்போது எனது தாழ்மையான
வாய் மூலமாக, பொருத்தம் இல்லாத சொற்கள் வந்து நிற்கும் . ஆயினும் அதனை நீ மிகவும் மனம் மகிழ்ந்து கேட்டு நிற்பாய்.
இதன் மூலம் உனது உன்னதமான குணங்களான – குற்றங்களைப் பொறுத்தல், அந்தக் குற்றங்களையும் பெருந்தன்மையுடன் ஏற்பது,
எனக்குச் சரியாகத் துதித்துக் கூற சொற்கள் அமையவில்லையே என்று நான் துன்பப்படுவதைக் கண்டு
என் மீது வருத்தம் கொண்டு எனக்கு அருளுதல் (தயை) – ஆகியவை தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது அல்லவோ?

தாழ்ந்த சொற்களால் புகழப்படும் ஸ்ரீரங்கநாச்சியார், அந்தத் தாழ்ந்த சொற்களையும் பொறுத்துக் கொள்கிறாள் அல்லவா?
இதன் மூலம் அவளது க்ஷாந்தி குணம் – குற்றங்களைப் பொறுத்தல் – வெளிப்படுகிறது.
“இந்தக் குழந்தை தனது தாழ்ந்த சொற்கள் கொண்டு என்னைத் துதித்துவிட்டது என்று இதனை உலகம் பழிக்கக்கூடாது,
என்னைத் துதிக்க இது மிகவும் தடுமாறுகிறதே”, என்று தனது மனதில் என் மீது இரக்கம் கொள்கிறாள்.
இதன் மூலம் அவளது தயை வெளிப்படுகிறது.
அந்தச் சொற்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவளது வாத்ஸல்யம் – குற்றத்தையும் குணமாகக் கொள்ளுதல் – வெளிப்படுகிறது.
இதனால் எனது சொற்களுக்கு அதிகமான மேன்மையை அளித்துவிடுகிறாள். இதனால் அவளது ஔதார்யம் வெளிப்படுகிறது.
ஆக, எனது சொற்கள் கொண்டு அவளது குணங்களை நான் புகழ வேண்டிய அவசியம் இல்லை.
எனது துதிகள், அவளது குணங்கள் தாமாகவே வெளிப்படக் காரணமாக உள்ளனவே – என்றார்.

———

ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ணகுண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–ஸ்லோகம் – 7-

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்தச் ச்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக்கூடும்.
ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்தவிதமான முயற்சியும் செய்யவில்லை. அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான
ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள். இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும்,
குளிர்ந்த அவள் அருள்பார்வை பொழிந்து நிற்கும். இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும்
அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை, இனிமையான பதங்கள் போன்றவை
தாமாகவே ஏற்பட்டு விடும். இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத்
தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.
ஸ்ரீரங்கநாச்சியார் இதனைக் குழந்தையின் மழலைச் சொல்லாக ஏற்று மகிழ்வாள் என்றார்-
இவரே பிழை உள்ளது என்று கூறிவிட்டு, இப்போது நல்ல சொல் என்பது எப்படி?
இந்தச் சொற்கள் தாயாரைப் புகழ்வதால் நல்வாக்கு ஆனது.

மதுரை: கடாக்ஷை: – என்பது காண்க. இவளது பார்வை மிகவும் குளிர்ந்தது. இதனைக் கூறுவதற்கு முன்னால்,
இவளை ஸ்ரீரங்கராஜனின் மஹிஷி என்றது காண்க. இவ்விதம் கூறக் காரணம் –
அரங்கனின் பார்வையானது சரிசமமானதாகும் – தண்டனை அளிப்பதாகவும், கருணை பொழிவதாகவும் அவனது பார்வை உள்ளது.
ஆனால் இவள் பார்வை அப்படிப்பட்டது அல்ல என்று சுட்டிக் காட்டவே, அவனது மஹிஷி என்றார்.
இவள் பார்வையானது கருணையை மட்டுமே பொழியவல்லது.

———–

அநாக்ராத அவத்யம் பஹுகுண பரீணாஹி மநஸ:
துஹாநம் ஸௌஹார்த்தம் பரிசிதம் இவ அதாபி கஹநம்
பதாநாம் ஸௌப்ராத்ராத் அநிமிஷ நிஷேவ்யம் ச்ரவணயோ:
த்வம் ஏவ ஸ்ரீ: மஹ்யம் பஹுமுகய வாணீவிலஸிதம்.–ஸ்லோகம் – 8-

மஹாலக்ஷ்மி! ஸ்ரீரங்கநாயகி! எனக்கு உன்னைக் குறித்துத் துதிகளை இயற்றத் தேவையான வாக்கு வன்மையை,
பல வழிகளில் நீ அளிக்கவேண்டும். அப்படி எனக்கு அளித்த வரம் மூலமாக உண்டான துதிகள்
எப்படி இருக்கவேண்டும் என்றால் – குற்றம் என்பதன் வாசனையே அவற்றில் இருத்தல் கூடாது;
பலவகையான இலக்கண குணங்கள் (நடை, பொருள் போன்றவை) அதில் காணப்படவேண்டும்;
அதன் பொருளானது முன்பே கேள்விப்பட்டது போன்று எளிதில் விளங்குவதாக இருக்க வேண்டும்;
இனிமையான சொற்கள் கோர்வையாக இணைந்து, அந்தத் துதிகளைக் கேட்பவர்களின் காதுகளை மூடாமல் விளங்க வேண்டும்.

ஸரஸ்வதி இவளது அடிமையாக உள்ளதால், அவளிடம் வேண்டுவதையும் ஸ்ரீரங்கநாச்சியாரிடமே வேண்டுகிறார்.
ஸரஸ்வதி இவளது அடிமை என்பதை, இவரது தந்தையான கூரத்தாழ்வான் – பாரதீ பகவதீ து யதீயதாஸி – என்றார்.

———

ஸ்ரிய: ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவச ஹ்ருத்யாம் பகவதீம்
ஸ்ரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம: ஸ்ருணுதராம்
த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ஸ்ரவணத:
புந: ஹர்ஷ உத்கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுகசதம்–ஸ்லோகம் – 9-

உன்னை அடைய எங்களால் பற்றப்படுகின்ற ஸ்ரீரங்கநாயகியின் பதியே! ஸ்ரீரங்கநாதா! எங்கள் மனதிற்கு மட்டும் அல்ல,
உனது மனதிற்கும் பிடித்த பல திருக்கல்யாண குணங்கள் கொண்டவளாக ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
அவளது திருக்கல்யாண குணங்கள் காரணமாக உன்னை விட அவள் உயர்ந்தவள் என்று உன் முன்பாகவே கூறப்போகிறேன்.
இதனை உனது காதுகள் குளிர நீ கேட்க வேண்டும் . நீ கேட்பதன் காரணமாக உனது கண்களில் மகிழ்ச்சி நிலை நின்று,
அதனால் உனது பெரிய கண்கள் மின்னியபடி காணப்படும். இவற்றைக் கேட்பதன் மூலம் உனது
அகண்ட திரண்ட தோள்கள் மகிழ்ச்சியின் காரணமாக மேலும் வளர வேண்டும்.
இதனால் அந்தத் தோள்களில் அணிவிக்கப்படும் பல அங்கிகளும் வெடித்துக் கிழிந்து போக வேண்டும்.

பட்டர் கூறக்கூற அரங்கனின் திருக்கண்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன, அவனது திரண்ட புஜங்கள் மேலும் வளர்ந்தன.
அவன் அணிந்திருந்த அங்கிகள் கிழிந்தன.

————

தேவி ச்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத்த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி–ஸ்லோகம் –10 –

தாயே! ஸ்ரீரங்கநாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக்கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர். இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவுகோலாக (சாவி)
உள்ளவை எவை என்றால் – இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்),
மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.

வேதங்கள் என்பவை இவளது குணங்களைக் காக்கும் பேழைகள் என்றார். ஆக மேலோட்டமாகப் பார்த்தால்
வேதங்கள் பெரியபெருமாளைப் புகழ்வது போலத் தோன்றினாலும், ஆழ்பொருளில் இவளையே துதிக்கின்றன எனலாம்.
இவளது குணங்களை – ஒக – என்றார். இதன் பொருள் – கூட்டம் கூட்டமாக – என்பதாகும்.
அந்தக் குணங்களால் இவளுக்கு எந்தவிதமான புதிய ஏற்றம் வரப்போவதில்லை. ஆபரணங்களாலா தங்கத்திற்கு மதிப்பு?
தங்கத்தால் அல்லவோ ஆபரணங்களுக்கு மதிப்பு? அது போல, இவளால் குணங்களுக்குப் பெருமை என்றார்.

————–

ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விச்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈசம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்–ஸ்லோகம் –11 –

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பலவிதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.
அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம்பொருளைக் காண்பிக்கவில்லை என்றனர்
(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்);
இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை);
நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்);
சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம்பொருள் உள்ள போதிலும்
அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்);
மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவமதம்) –
இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது உண்மை.

இவளது பார்வை ஒரு நொடிப் பொழுது பட்டிருந்தாலும், அவர்கள் மிக்க பண்டிதர்களாகி இருப்பார்கள் என்று கருத்து.
ஆக இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே உண்மையான அறிவு பெற்று, பரம்பொருளான பெரியபெருமாளை அறிய இயலும்.

———

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–ஸ்லோகம் –12 –

பகவானுடைய திருக்கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே!
உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி?
புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று , உனது பக்தி என்னும்
கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும்.
இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர். அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம்
பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா? அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

புதையலை எடுத்த பின்னர், அதனைக் கொண்டு ஆபரணம் செய்வது முதலான செயல்களைச் செய்து
புதையலைப் பயனுள்ளதாக்குகிறோம். இது போன்று ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றிய ஞானம் உண்டான பின்னர்,
அவள் மூலமாக நம்பெருமாள் என்ற ஆபரணத்தைப் பெற்று விடுகிறோம்.

———

அஸ்ய ஈசாநா ஜகத: இதி அதீமஹே யாம் ஸம்ருத்திம்
ஸ்ரீ: ஸ்ரீஸூக்தம் பஹு முகயதே தாம் ச சாகாநுசாகம்
ஈஷ்டே கச்சித் ஜகத இதி ய: பௌருஷே ஸூக்த உக்த:
தம் ச த்வத்கம் பதிம் அதிஜகௌ உத்தர: ச அநுவாக:–ஸ்லோகம் –13 –

ஹே ஸ்ரீரங்கநாயகி! மஹாலக்ஷ்மீ! இந்த உலகத்தின் ஈச்வரி, நாயகி என்று உன்னை வேதங்கள் சில இடங்களில் ஓதியுள்ளன.
இப்படிப்பட்ட பெரும் செல்வமான உன்னை, ஸ்ரீஸூக்தம் என்ற உயர்ந்த க்ரந்தம் தனது ஒவ்வொரு மந்திரத்திலும்
பலவாகப் புகழ்ந்து கூறுகிறது. புருஷஸூக்தத்தில் இந்த உலகம் முழுமைக்கும் நாயகன் என்றும், புருஷன் என்றும்
ஸ்ரீரங்கநாதன் வர்ணிக்கப்படுகிறான். இப்படிப்பட்ட நம்பெருமாளை அநுவாகமும் விவரித்துக் கூறுகின்றது.
அந்தக் க்ரந்தங்கள் அவனை உனது கணவனாக அல்லவா ஓதின?

புருஷஸூக்தம் தனது நாயகனைக் கூறுவதாகவும், ஸ்ரீஸூக்தம் தன்னையே கூறுவதாகவும் மஹாலக்ஷ்மி,
பாஞ்சராத்ர ஆகம நூலான லக்ஷ்மி தந்த்ரத்தில் கூறினாள். அந்த வரிகள்:
1. தத்ர பும்லக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
புருஷர்களின் லக்ஷணம் கூறப்பட்டதால் அதனைத் தான் (திருவரங்கன்) கைக்கொண்டான்.
2. தத்ர ஸ்த்ரீலக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
பெண்களின் பெருமைகள் பேசப்பட்டதால் அதனை நான் (ஸ்ரீரங்கநாச்சியார்) கைக்கொண்டேன்.

————

உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத்ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.–ஸ்லோகம் –14 –

நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை. ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால் தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல,
பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட – புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப்
பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.

வால்மீகி முனிவரே – ஸீதாயாச் சரிதம் மஹத் – ஸீதையின் சரிதமே இதில் ப்ரதானம் –

—————

ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ:–ஸ்லோகம் –15 –

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக,
அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம்.
அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் –
இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது?
எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?

ஒருவனுக்குப் பல பொருள்கள் திருவரங்கன் அருளால் கிட்டினாலும் – அவற்றை அனுபவிக்கக் கூடிய
தகுதியையும், திறனையும், ஞானத்தையும் இவளே ஏற்படுத்துகிறாள்.

————–

ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–ஸ்லோகம் –16 –

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மணிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு ,
முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான்.
அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது.
அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக
அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும்,
அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

———-

ரதிர்மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய:
ஸுதாஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா
ததோ முகம் மதி இந்திரே பஹுமுகீம் அஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:–ஸ்லோகம் –17 –

ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது புருவங்கள் கொடி போன்றும்,
வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது. அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ,
அந்த மனிதனின் நிலை என்ன? அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச்செழிப்பு,
நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம் ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன.
அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை – ஒவ்வொன்றும்,
“நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று போட்டி போட்டுக் கொண்டு வந்து சேர்கின்றன.
இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.

இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) –
யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே –
எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று,
“நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன – என்றார்.

————

ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்–ஸ்லோகம் –18 –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?
இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?

———-

காலே சம்ஸதி யோக்யதாம் சித் அசிதோ: அந்யோந்யம் ஆலிங்கதோ:
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தி இந்த்ரியை:
அண்டாந் ஆவரணை: ஸஹஸ்ரம் அகரோத் தாந் பூர்புவஸ் ஸ்வர்வத:
ஸ்ரீரங்கேச்வரதேவி தே விஹ்ருதயே ஸங்கல்பமாந: ப்ரிய:–ஸ்லோகம் –19 –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன.
கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற படியைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை
அடைந்துவிடக் கூடாது என்று நம்பெருமாள் எண்ணினான். ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.
அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது.
உடனே உனது ப்ரியமானவனான அழகியமணவாளன், அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு?
உன்னை மகிழ்விக்க அன்றோ? அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து,
மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான்.
அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான். மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.

————-

சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம்
வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந்
பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந்
ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–ஸ்லோகம் -20-

ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன? இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு,
அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான். அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான்.
மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்?
இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண்வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று,
மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மனமகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

தூர்த்தர் என்னும் பதம் காண்க. இதன் பொருள் தனது மனைவியை விடுத்து, தன்னை நாடாத பெண்களின் பின்னே
செல்பவன் என்பதாகும். இவ்விதம் திசை தெரியாமல் நடமாடும் நம்மைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியார் நகைத்துக் கொள்கிறாளாம்.

———-

யத் தூரே மநஸ: யத் ஏவ தமஸ: பாரே யத் அதயத்புதம்
யத் காலாத் அபசேளிமம் ஸுரபுரீ யத் கச்சத: துர்கதி:
ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம்நாஸிஷு:–ஸ்லோகம் -21-

தாயே! ஸ்ரீரங்கநாயகி! அந்த இடம் மனத்தால் கூட நினைக்க இயலாத தொலைவில் உள்ளது;
அந்த இடம் மிகுந்த வியப்பை அளிக்க வல்லது; அந்த இடம் காலத்தினால் கட்டப்பட்டு முதுமை என்பதையே அடையாமல் என்றும் உள்ளது;
அந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோக்ஷம் பெற்ற ஒருவனுக்கு, உயர்ந்த தேவர்களின் நகரமான அமராவதி நகர் கூட நரகமாகக் காட்சி அளிக்கும்;
அந்த இடம் முக்தி என்ற உன்னதமான நிலையின் இருப்பிடம் ஆகும்; அந்த இடம் எனது கவிதைச் சொற்களால் எட்ட முடியாததாக உள்ளது;
அந்த இடம் ஸ்ரீமந்நாராயணனின் இருப்பிடமாகவும் உள்ளது – இப்படிப்பட்ட உயர்ந்ததான பரமபதத்தை
உனக்குரிய இடமாக அல்லவா பெரியவர்கள் கூறினார்கள்?

இந்தச் ச்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார். இவளது பதியாக உள்ளதால்,
இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.

———

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசாரகர்மணி ஸதா பச்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேச்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–ஸ்லோகம் -22-

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம்
உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது. என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி
நின்றுள்ள, புண்ணியம் பல செய்தவர்களான நித்யசூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்) உனது கட்டளைக்காகவே
காத்துக் கிடக்கின்றனர். உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும்
என்பதற்காகவே இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம். உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

ஒருவன் வேலைக்காரர்களைத் தனக்கு அடிமைகள் என்று ஓலை எழுதி வாங்கிக் கொள்ளும்போது, அந்த ஓலையில்
அவர்கள் தனது மனைவிக்கும் அடிமைகள் என்று தனியாக எழுதுவதில்லை.
ஆனால் அவர்கள் அவனது மனைவிக்கும் தொண்டு செய்கின்றனர்.-முமுக்ஷுப்படி- 44
இது போல நாம் அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்றால், இவளுக்கும் அடிமை என்றே கருத்து.

————

ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல பூரி பாலா பலம் போஜுஷாம்
யா அயோத்த்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா
பாவை: அத்புத போக பூம கஹநை: ஸாந்த்ரா ஸுதா ஸ்யந்திபி:
ஸ்ரீரங்கேச்வர கேஹலக்ஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:–ஸ்லோகம் –23-

ஸ்ரீரங்கநாதனுடைய பெரியகோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே! ஸ்ரீரங்கநாயகி! நீயும், உனது கணவனான
நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும் பெயர் கொண்ட நகரத்தை
உங்கள் தலைநகரமாகக் கொண்டுள்ளீர்கள். (அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள்,
அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்). அந்த நகரம் எங்கு உள்ளது என்றால் –
ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது. அங்கு உனது ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும்,
உனது இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர்.
அந்த இடம் உனது அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல பல பொருள்களையும் கொண்டதாக உள்ளது.
இதனை உங்கள் தலைநகராகப் பெரியவர்கள் அறிவர்.

———-

தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி ஜநதா விச்ரம் அர்ஹ அவகாசம்
ஸங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை: பும்பி: ஆநந்த நிக்நை:
ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:
ஆநந்தை கார்ணவம் ஸ்ரீ: பகவதி யுவயோ: ஆஹு: ஆஸ்தாந ரத்நம்–ஸ்லோகம் –24-

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக உள்ள உனது அந்த நாட்டில், உனது கருணையானது எப்படி
ஒரு எல்லையில்லாமல் உள்ளதோ அதே போன்று கணக்கில்லாமல் உனது அடியார்கள் கூட்டம் இளைப்பாற வந்த வண்ணம் உள்ளது.
அந்த இடம் அத்தனை அடியார்களையும் தாங்கும் வண்ணம் பரந்த இடம் உள்ளதாக விளங்குகிறது.
உனக்கு அடிமைத்தனம் பூண்டு விளக்கும் அடியார்களின் கூட்டம், சாமரம் முதலானவற்றைக் கொண்டு, ஆனந்தமே உருவாக உள்ளது.
உன்னையோ அல்லது உனது கணவனான நம்பெருமாளையோ, அந்த நாட்டில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இருந்த போதிலும், உன் மீது உள்ள மாறாத அன்பு காரணமாக பகவானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில், சுதர்சன சக்ரம், நந்தகம்
என்ற வாள் போன்றவை உள்ளன. இவை உள்ளதால் பயம் என்பதே இல்லாத இடமாகவும், ஆனந்தக் கடலாகவும்
உனது அந்தத் திருநாடு உள்ளதாகப் பெரியவர்கள் கூறுவார்கள்.

———–

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்தபோகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்–ஸ்லோகம் –25-

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் – அவனது உடலானது
மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது; அவனது படத்துடன் கூடிய தலைகளில்
ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது –
இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன.
இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்? இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த
நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய். நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

ஓர் ஆஸனத்திற்கு வேண்டிய தன்மைகளாவன மென்மை, நறுமணம், குளிர்ச்சி, பரப்பு, உயர்த்தி என்பதாகும்.
இவை அனைத்தும் ஆத்சேஷனிடம் உள்ளதாகக் கூறுகிறார்.
ஒன்றை ஒன்று பிரியாமல் உள்ள நிலைக்கு அத்வைத நிஷ்டை என்று பெயர். இதனை இங்கு கூறுவது காண்க.
ஆக, நம்பெருமாள் இந்த உலகத்தைக் காத்து நிற்க, இவள் அவனுக்குத் துணையாக நிற்பதாகக் கூறினார்.

———-

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–ஸ்லோகம் –26-

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர். ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை
வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே இவர்கள்
அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ? அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும்,
கண்கள் போன்றும் விளங்க – இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?
இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார்-

———–

தே ஸாத்யா: ஸந்தி தேவா ஜநநி குண வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷா: ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ: ஸ்ரீரங்கபர்த்து: தவச பத பரீசாரவ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவ ஆவில ஹ்ருதய ஹாடாத் கார கைங்கர்ய போகா:–ஸ்லோகம் –27-

அனைவருக்கும் தாயானவளே! ஹே மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! ஸாத்யர் என்று வேதங்களில் கூறப்படும்
நித்யசூரிகள் – உனது குணங்களில் இருந்து மாறுபடாமல் உள்ளவர்கள்;
மேலும் அவர்கள் உனது வடிவத்திலும் மனம் ஒத்து நிற்பவர்கள்; தங்கள் கோலங்களாலும் செயல்களாலும்
உனக்குப் பொருந்தி உள்ளவர்கள்; அவர்கள் உங்கள் இருவருக்கும் நண்பர்களாக உள்ளனர்; குற்றம் இல்லாமல் உள்ளனர்;
என்றும் உங்கள் மீது உள்ள அன்பு மாறாமல், அந்த அன்பு காரணமாகக் கலங்கிய உள்ளத்துடன் இருப்பவர்கள்;
உனக்குப் பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் – இப்படிப்பட்ட இவர்கள்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிலும் உனது திருவடிகளிலும் என்றும் தொண்டு புரியவே உள்ளனர்.

கோலத்தில் பொருத்தமாக இருத்தல் என்றால் நம்பெருமாளைப் போன்றே நான்கு திருக்கரங்களுடன் இருத்தல்.
செயல்களில் பொருத்தம் என்றால் இவர்களைப் போன்றே நித்யசூரிகளும் கர்மவசப்படாமல் இருத்தல்.

———–

ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ரவதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதிகலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம்த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி–ஸ்லோகம் –28-

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள்
போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது? இப்படியாக உனது கணவனுடைய
ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய். வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன.
அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன.
ஆகவே தான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் முமுக்ஷுப்படியில் – பிரித்து நிலையில்லை (45) என்றும்,
ப்ரபையையும் ப்ரபாவானையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே (46) என்றும் அருளிச் செய்தார்.
இதே கருத்தை ஸ்வாமி தேசிகன் –
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன் – என்றார்.

————

தவ ஸ்பர்சாத் ஈசம் ஸ்ப்ருசதி கமலே மங்களபதம்
தவ இதம் ந உபாதே: உபநிபதிதம் ஸ்ரீ: அஸி யத:
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷு:
ந ச ஏவந்த்வாத் ஏவம் ஸ்வததே இதி கச்சித் கவயதே–ஸ்லோகம் -29-

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுக்கு “ஸ்ரீ” என்னும்
மங்களச் சொல் அடைமொழியாக உள்ளது எப்படி? உனது தொடர்பு அவனுடன் உள்ளதால் அல்லவா?
அந்த மங்களச் சொல் உனக்கும் அடைமொழியாக உள்ளது. ஆனால் அவ்வாறு அந்தச் சொல் உனது
அடைமொழியாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லை – ஏனெனில்
நீயே மங்களகரமான பொருளாகவே அல்லவா உள்ளாய்? ஒரு மலருக்கு நறுமணம் என்பது பெருமை அளிக்கிறது.
ஆனால் அந்த நறுமணத்திற்கு வேறு எதனாலாவது பெருமை உண்டாகுகிறதா என்ன? எதனாலும் அல்ல.
யாராவது ஒருவன் இந்த காரணத்தினால் நறுமணம் இப்படி உள்ளது என்று கூறுகிறானா?

——

அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.–ஸ்லோகம் –30-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ,
அந்தப்பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது. அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ,
அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தைவிடத் தாழ்வான பொருள்களாக ஆனது.
எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே
மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின்
செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற
பல தன்மைகள் நித்யமாக உள்ளன. இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் அபி – சீதையைப் பிரிந்து என்னால்
ஒரு நொடி கூட வாழ இயலாது – என்றான் அல்லவா?
நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர்.
ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.

————

ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்–ஸ்லோகம் –31-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.
இதனால் தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.
ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.
ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு, இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது
இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே. ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?

அவனை ஒளிர வைப்பது இவளே என்றார். அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம்
நமக்கு, “இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.

————

ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குண ராசய:–ஸ்லோகம் — 32–

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது;
அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி –
ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

1.பலம் = தன்னுடைய ஸங்கல்பம் மூலம் அனைத்தையும் தாங்குதல்
2.தேஜஸ் = எதற்கும் துணையை எதிர்பாராமல், அவர்களைத் தன்வயப்படுத்தும் திறன்
3.ஞானம் = அனைத்தையும் முன்கூட்டியே அறிவது
4.ஐச்வர்யம் = அனைத்தையும் தன் விருப்பப்படி நியமித்தல்
5.வீர்யம் = புருவம் கூட வியர்க்காமல் எளிதில் வெல்லும் திறன்
6.ப்ரதா = தன்னையே அடியார்களுக்குக் கொடுத்தல்
7.ப்ரணதவரணம் = குற்றத்தையும் குணமாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல்
8.ப்ரேமம் = அடியார்களை விட்டு நீங்கினால் துன்பம் கொள்ளுதல்
9.க்ஷேமங்கரத்வம் = நன்மைகளை அளித்தல்

————

அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே–ஸ்லோகம் — 33–

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! என்றும் இளமையாக உள்ளது
போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது.
இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக்கல்யாண குணங்களை
நீயும் கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.

உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!
ஆண்டாளும் – குழலகர், கண்ணழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூ அழகர் – என்றாளே

———-

யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதிபாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–ஸ்லோகம் —34 —

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும்
ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன –
அபரவசதா)-மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல், அடியார்களின் பகைவர்களை அழித்தல்,
என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு.
உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் – இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல்-நம்பெருமாளுக்கு வசப்படுதல்,- விரோதியாயினும் இரக்கம் கொள்ளுதல் (காகாசுரன் முதலான உதாரணம்)
கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன.-
இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

————-

கந கநக யுவதசாம் அபி முக்ததசாம்
யுவ தருணத்வயோ: உசிதம் ஆபரணாதி பரம்
த்ருவம் அஸமாந் தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயி ச குசேசய உதர விஹாரிணி நிர்விசஸி–ஸ்லோகம் —35 —

தாமரை மலரில் பிறந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம், உனது திருமேனியின் நிறமானது பொன் போன்ற ஒளி வீசியபடி உள்ளது;
ஸ்ரீஸூக்தம் – ஹிரண்ய வர்ணாம்-உனது கணவனான ஸ்ரீரங்கநாதனிடம் மேகம் போன்ற நிறம் வீசியபடி உள்ளது.
உன்னிடம் பால்யப் பருவமும், யௌவநப் பருவமும் சந்திக்கின்ற பருவம் நிறைந்துள்ளது;
உனது கணவனோ காளைப் பருவத்தில் உள்ளான். உங்கள் இருவரின் மீதும், உங்கள் பருவத்திற்கும் இளமைக்கும்
ஏற்றது போன்ற அழகான ஆபரணங்கள் காணப்படுகின்றன.
அவற்றைக் காண்பவர்களின் கண்களுக்கு அவை பெரும் ஆனந்தம் அளிக்கின்றன.

————

அங்கம் தே ம்ருது சீத முக்த மதுர உதாரை: குணை: கும்பத:
க்ஷீராப்தே கிம் ருஜீஷதாம் உபகதா: மந்யே மஹார்கா: தத:
இந்து: கல்பலதா ஸுதா மதுமுகா இதி ஆவிலாம் வர்ணநாம்
ஸ்ரீரங்கேச்வரி சாந்த க்ருத்ரிமகதம் திவ்யம் வபு: ந அர்ஹதி–ஸ்லோகம் —36 —

ஸ்ரீரங்கநாயகீ! திருப்பாற்கடலின் அரசன் என்ன செய்தான் என்றால் –
சந்திரனின் அழகு மற்றும் குளிர்ச்சியை உனக்கு அளித்தான்;
சந்திரனின் மென்மையையும் உனக்கு அளித்தான்; கற்பக மரத்தின் ஈகைத் தன்மையை உனக்கு அளித்தான்;
அமிர்தத்தின் இனிமையை உனக்கு அளித்தான். இதனால்தான் சந்திரன், கற்பகம், அம்ருதம் முதலானவை
சாறு பிழியப்பட்ட வெறும் சக்கை போன்று உள்ளன என்று நான் நினைக்கிறேன்.
இப்படி இருந்தாலும் இந்த உலகினரால் அவை பெரிதும் போற்றப்படுகின்றன. இப்படியான முரண்பாடுகள் நிறைந்த
கவிஞர்கள் மூலமாக உனது திருமேனியை வர்ணிக்க இயலுமா? அந்த வர்ணனைகள் உனது திருமேனிக்குப் பொருந்துமா?

இதற்கு மற்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்வோரும் உண்டு.
சந்த்ரன் முதலானவைகள் ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தங்கள் சிறப்புகளை அளித்த காரணத்தினால்தான்
அவை இந்த உலகிலனரால் பெரிதும் போற்றப்படுகின்றன – என்பதாகும். இவ்விதம் பொருள் கொண்டால் –
இயற்கையாகவே இந்தத் தன்மைகள் இல்லாதவள் ஸ்ரீரங்கநாச்சியார் – என்றாகி விடும் அல்லவா?
இதனை உணர்ந்த பட்டர், இறுதி வரியில் –
சாந்த க்ருத்ரிம கதம் திவ்யம் – செயற்கை என்பதே இல்லாத தெய்வீகமான திருமேனி – என்று முடித்தார்.
ஆக – அந்தப் பொருள்கள் மேன்மை பெற்றாலும், அவை உனக்கு அளிப்பதாகக் கூறப்படும் தன்மைகள்,
தெய்வீகமான உனது திருமேனிக்கு ஏற்கவல்லது அல்ல – என்பதாகும்.

————-

ப்ரணமத் அநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–ஸ்லோகம் —37 —

ஸ்ரீரங்கநாயகீ! உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று நீயும்
பதில் வணக்கம் செய்கிறாய். இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி
பட்டவுடன் எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர்மாலை போன்றும்
உனது திருமேனியின் பேரழகு உள்ளது. இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

———-

ஏகம் ந்யஞ்ச்ய நதிக்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–ஸ்லோகம் —38 —

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக ஒரு திருவடித் தாமரையை
தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய். மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக்கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய். இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் – கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள்,
கடைப்பார்வை வீசியபடி உள்ளன; இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?

————

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–ஸ்லோகம் —39 —

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது. இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும்
வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன. தாமரை மலர் போன்றுள்ள
உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவ விடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

————

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–ஸ்லோகம் —40 —

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக இந்த உலகில் உள்ள அரசர்கள்
மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர். அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை
(அத்தனை கர்வம் உள்ளது). உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று
உன்னைத் தேனாக நினைத்து எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன.
இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன. இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை
செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக் கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

———–

ஆநந்தாத்மபி: ஈச மஜ்ஜந மத க்ஷீப அலஸை: ஆகல
ப்ரேம ஆர்த்ரை: அபி கூலவஹ க்ருபா ஸம்ப்லாவித அஸ்மாத்ருசை:
பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை:
ஐஸ்வர்ய உத்கம கத்கதை: அசரணம் மாம் பாலய ஆலோகிதை:–ஸ்லோகம் —41 —

தாமரையில் அமர்ந்தவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகி! உனது கடாக்ஷம் என்பது எப்படிப்பட்டது என்றால் –
ஆனந்தம் கொண்டது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடியது;
அப்படி, அவனை ழூழ்கடித்து விட்டு மகிழ்வு காரணமாகக் களிப்புடன் கூடியது; கழுத்துவரை ழூழ்கடிக்க வல்லது;
கரை புரண்டு ஓடும் வெள்ளம் போன்றது; கர்மவசப்பட்டுக் கிடக்கும் என் போன்றோரைத் தூய்மையாக்க வல்லது;
வீசி எறியும் ஒவ்வொரு அலையும் (கடாக்ஷம் அலைபோல் வீசுகிறது என்றார்) ப்ரம்மன் முதலியவர்களைப் படைக்கவல்லது;
இவ்வாறு தோன்றிய ப்ரம்மன் முதலானோர், “இந்த கடாக்ஷம் எனக்கு உனக்கு”, என்று போட்டியிடச் செய்வதாகும்;
தடுமாறியபடிப் பெருகுவதாகும் –
தாயே! வேறு கதியில்லாமல் நான் நிற்கிறேன். என்னை உனது கடாக்ஷம் மூலம் காத்து அருள்வாயாக.

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் என்பது, “இன்னார் மீது விழவேண்டும், இன்னார் மீது விழக்கூடாது”, என்று
பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆறு எவ்வாறு அனைவருக்கும் பொதுவாக ஓடுகிறதோ, அது போன்று உள்ளது.
அளவற்ற ஐச்வர்யம் காரணமாப் பெருகி ஓட வழியில்லாமல் தட்டுத் தடுமாறி ஓடுகிறது.
தன்னைக் காக்க நம்பெருமாள் போன்று ஓடி வரவேண்டிய அவசியம் இல்லை; அமர்ந்த இடத்திலிருந்தே கடாக்ஷித்தால்,
அதுவே அவன் செய்யும் செயல்களையும் செய்து விடும் என்றார்.

———

பாதாருந்துதமேவ பங்கஜ ரஜ: சேடீ ப்ருசா லோகிதை:
அங்கம்லாநி: அத அம்ப ஸாஹஸ விதௌ லீலாரவிந்தக்ரஹ:
டோலாதே வநமாலயா ஹரிபுஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ: அதிகோமலா தநு: இயம் வாசாம் விமர்தக்ஷமா–ஸ்லோகம் —42 —

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ தோன்றிய தாமரை மலரின் மகரந்தத் துகள்கள், உனது திருவடிகளை
உறுத்தக்கூடிய வகையில் மென்மையான பாதங்கள் கொண்டுள்ளாய். உனது தோழிகள் உன்னை உற்றுப் பார்த்தால்,
உனது மென்மையான திருமேனி, அவர்கள் கண்பட்ட இடங்களில் எல்லாம் வாடிவிடுகிறது.
நீ விளையாட்டாக கைகளில் தாமரை மலரை எடுத்தால் உனது கைத்தலம் நோக ஆரம்பிக்கிறது (தாமரை மலரின் பாரம் தாங்காமல்).
உனது நாயகனான நம்பெருமாளின் திருமார்பில் உள்ள வைஜயந்தி மாலையில் அமர்ந்து நீ ஊஞ்சல் போன்று ஆடினால்,
“ஆஹா! இதனால் இவளுக்கு என்ன துன்பம் விளையுமோ! இவள் திருமேனி அந்த மாலையால் வருந்துமோ?”, என்று சிலர் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட மென்மையான உனது திருமேனி என் போன்றவர்கள் உன்னைப் புகழும் சொற்களால் கூட வாடிவிடக்கூடும் அல்லவோ?

நம்பெருமாளின் திருமேனியில் உள்ள மாலையில் அமர்ந்து இவள் ஆடினால், அதனால் இவள் திருமேனி எவ்விதம் வாடும்?
அவன் எதிரிகளின் பாணங்கள் தாக்கப்பட்ட திருமார்பை உடையவனாக உள்ளான்.
அந்தக் காயங்கள் இவளது திருமேனியில் படும்போது உறுத்தக்கூடும் அல்லவா?

————–

ஆமர்யாதம் அகண்டகம் ஸ்தநயுகம் ந அத்யாபி ந ஆலோகித
ப்ரூபேத ஸ்மித விப்ரமா ஜஹதி வா நைஸர்கிகத்வ அயச:
ஸூதே சைசவ யௌவந வ்யதிகர: காத்ரேஷு தே ஸௌரபம்
போகஸ்ரோதஸி காந்த தேசிக கர க்ராஹேண காஹ க்ஷம:–ஸ்லோகம் —43 —

ஸ்ரீரங்கநாயகீ! உனது ஸ்தனங்கள் அதன் வளர்ச்சியை இப்போதும் தொடர்கின்றன. இதன் மூலம் நீ உனது
யௌவனப் பருவத்தின் முதிர்ச்சியை அடையவில்லை எனத் தெரிகிறது. ஆனால் உனது திருக்கண்களின் பார்வை,
புருவத்தின் நெறிப்பு, உனது கணவனான ஸ்ரீரங்கநாதனைக் கண்டு வீசும் புன்னகை ஆகியவற்றைக் காணும்போது
நீ பூர்ண யௌவநம் அடைந்துவிட்டாய் எனத் தெரிகிறது. இப்படியாக நீ குமரிப் பருவத்திற்கும், யௌவநப் பருவத்திற்கும்
இடைப்பட்ட பருவத்தில் மிகுந்த அழகுடன் அமர்ந்துள்ளாய். ஆனால் யௌவநம் முழுவதும் நிரம்பாமலேயே
உன்னிடம் காணப்படும் புருவ நெறிப்புகள் முதலானவை உனக்கு ஒரு பழி போன்று ஆகிவிடும் அல்லவா (வயதிற்கு மீறிய செயலாக)?
இப்படி உள்ள நீ, அந்தப் பருவதிற்கு ஏற்ப எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை உனக்கு ஆசிரியனாக,
உனது கையைப் பிடித்து, ஆனந்தமாக உள்ள நேரங்களில் உனது கணவனான நம்பெருமாளே போதிப்பான் போலும்.
இப்படியாக குமரிப்பருவமும், யௌவநப்பருவமும் இணைந்த உனது அற்புதமான அழகு,
மிகுந்த நறுமணத்தை உனது திருமேனியில் உண்டாக்குகிறது.

இங்கு நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆசானாக, குருபரம்பரையை ஒட்டி இருப்பதைக் கூறுகிறார்.
அவனுக்கு ஏற்ற இளமையுடன் இவள் உள்ளாள், இவளுக்கு ஏற்ற ஆண்மையுடன் அவன் உள்ளான்.

————–

ஆமோத அத்புத சாலி யௌவந தசா வ்யாகோசம் அம்லாநிமத்
ஸௌந்தர்ய அம்ருத ஸேக சீதலம் இதம் லாவண்ய ஸூத்ர அர்ப்பிதம்
ஸ்ரீரங்கேச்வரி கோமல அங்க ஸுமந: ஸந்தர்பணம் தேவி தே
காந்தோர: ப்ரதியத்நம் அர்ஹதி கவிம் திக் மாம் அகாண்ட ஆகுலம்–ஸ்லோகம் —44 —

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது திருமேனி ஒரு அழகிய மலர் மாலையாகவே உள்ளது. எப்படி என்றால் –
உனது திருமேனி இயற்கையாகவே நறுமணம் வீசியபடி உள்ளது; என்றும் மாறாத யௌவனத்துடன் நீ உள்ளாய்;
இதனால் நீ வாடாத மலர்கள் போன்று காட்சி அளிக்கின்றாய்; உனது அழகு என்பது பன்னீர் போன்று குளிர்ந்ததாக உள்ளது;
உனது ஒளி என்பது மாலை கோர்க்கும் நூலாக உள்ளது; உனது திருமேனியில் உள்ள அழகான உறுப்புகள்
அந்த மாலையின் மலர்கள் போன்று உள்ளன – ஆக நீ ஒரு மலர் மாலையாகவே உள்ளாய்.
இத்தகைய மலர்மாலை, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருமார்பை அலங்கரிக்க ஏற்றது.
ஆஹா! தவறு செய்தேனே! அசுரர்களின் ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் கடினமான நம்பெருமாளின் திருமார்பிற்கு,
மென்மையான உன்னை ஏற்றவள் என்று எப்படிக் கூறினேன்?

இங்கு ஸ்வாமி பராசரபட்டர் இறுதியில் தன்னையே சாடிக் கொள்கிறார். காரணம் என்ன? ச்லோகம் 42ல்,
மலரின் மகரந்தப்பொடிகள் கூட இவளது திருவடிகளை உறுத்துகின்றன என்றார்.
அதே ச்லோகத்தில் தனது திருக்கரத்தில் வைத்துள்ள தாமரை மலரின் பாரம் தாங்காமல், திருக்கரம் துன்பப்படுவதாகக் கூறினார்.
இவ்விதம் மென்மையான இவளைப் பற்றிக் கூறிவிட்டு, இவள் கடினமான திருமார்பு உடைய நம்பெருமாளுக்கு ஏற்றவள் –
என்று கூறிவிட்டேனே என வருந்துகிறார்.

————–

மர்ம ஸ்ப்ருச: ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை:
காந்த உபபோக லலிதை: லுலித அங்க யஷ்டி:
புஷ்ப ஆவளீ இவ ரஸிக ப்ரமர உபபுக்தா
த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்–ஸ்லோகம் —45 —

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுடன் இன்பமான அனுபவங்களில் நீ திளைத்தபடி உள்ளாய்.
இதன் காரணமாக உனது திருமேனியில் உள்ள, இன்பம் அளிக்கும் நாடி நரம்புகள் தூண்டப்படுகின்றன.
ஆகையால் உனது திருமேனி சற்றே துவள்கிறது. இப்படியாக உயர்ந்த மலர் மாலையாக உள்ள நீ,
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் என்னும் வண்டால் அனுபவிக்கப்பட்டவளாக உள்ளாய்.
இப்படியாக நீ உனது ஸ்ரீரங்கநாதனை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறாய்.

புஷ்ப ஆவளி என்றால் மலர்களை வரிசையாக வைத்துள்ள மாலை என்று பொருளாகும்.
இதனை நம்பெருமாள் என்னும் வண்டு அனுபவித்து மகிழ்கிறது.
தன்னால் நியமிக்கப்பட்ட கைங்கர்யத்தை ஒருவன் தொடர்ந்து செய்வது கண்டு நம்பெருமாள் மிகவும் மகிழ்வு அடைகிறான்.
இது போன்றே தனக்கு ஏற்றபடி ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

———-

கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணிஸர துலாகோடி ப்ராயை: ஜநார்தந ஜீவிகே
ப்ரக்ருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை:
வலய சகலை: துக்தம் புஷ்பை: ச கல்பலதா யதா–ஸ்லோகம் —46 —

ஸ்ரீரங்கநாதனின் உயிருக்கு மருந்து போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அழகான திருமேனியில் பல ஆபரணங்கள் –
தங்க ஒட்டியாணம், முத்துத் தோடுகள், முத்து மாலைகள், நெற்றிச் சுட்டி, நவரத்ன மணிகளால் ஆன மாலைகள்,
அழகிய திருவடிகளில் சிலம்புகள் – என்று பல உள்ளன. அவை பால் போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற
சர்க்கரைத் துண்டுகளாகவும், கற்பகக் கொடி போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற மலர்கள் போலவும் உள்ளன.

இங்கு நம்பெருமாளின் உயிராக இவளைக் கூறியது காண்க. இதனை இராமாயணத்தில் இராமன் –
ந ஜீவேயம் க்ஷணம் – அவளைப் பிரிந்து ஒரு நொடியும் நான் இருக்கமாட்டேன் – என்பதன் மூலம் உணரலாம்.

——-

ஸாமாந்ய போக்யம் அபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுத ஆதி ரமண: ஸ்வயம் ஏவ பிப்ரத்
தத் பார கேதம் இவ தே பரிஹர்த்து காம:
ஸ்ரீரங்கதாம மணி மஞ்ஜரீ காஹதே த்வாம்–ஸ்லோகம் —47 —

ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற இரத்தின மணி போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன்
சாற்றிக் கொண்டிருக்கும் கௌஸ்துபம் என்ற இரத்தினமணி, வைஜயந்தி என்ற மாலை,
ஐந்து ஆயுதங்கள் (ஸுதர்சன சக்கரம், பாஞ்சஜந்யம் என்ற சங்கு , நந்தகம் என்ற கத்தி, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீ என்ற கதை)
ஆகியவை உங்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும். ஆனால் அவற்றை உனக்குக் கொடுத்தால்,
உனது மென்மையான திருமேனி அவற்றின் சுமையை ஏற்க இயலாது என்று கருதினான் போலும்.
அதனால் அவற்றைத்தான் மட்டுமே சுமந்து நின்று அனுபவிக்கிறான்.

தனது சுமையையும் சேர்த்து அவன் சுமக்கிறானே என்று ஸ்ரீரங்கநாயகி நினைத்து, அவன் தன் மீது கொண்ட
அன்பில் மனம் உருகி நின்றாள். அதனைக் கண்ட அரங்கன் அவள் காதலை அனுபவிக்கிறான் – என்று கருத்து.

———-

யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி–ஸ்லோகம் –48- —

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன் தனது விருப்பம் காரணமாக
அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான். நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

ஸீதை இல்லையென்றால் இராமாவதாரம் சுவைக்காது. ருக்மிணி இல்லையென்றால் க்ருஷ்ணாவதாரம் சுவைக்காது.
வாமனனாக வந்தபோதும் தன்னுடைய திருமார்பில் மஹாலக்ஷ்மியைத் தரித்தே வந்தான்.
வராஹனாக வந்தபோதும் அப்படியே ஆகும்.ராமக்ருஷ்ணாதிகளாக அவதரிக்கும்போது மட்டும் அல்ல,
அர்ச்சாவதாரத்திலும் பெரியபிராட்டியைத் தரித்தே உள்ளான்

————-

ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–ஸ்லோகம் —49 —

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்தபோது எம்பெருமானின்
திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன்,
தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான். இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக
எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?
உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.
இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.

—————

மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–ஸ்லோகம் —50 —

தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன் தன்னைச் சரணம் என்று
புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான். ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை,
அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய்.
இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது. ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும்
உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: –
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல்,
அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

————-

மாத: லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேந அத்வநா தே வயம்
த்வத் தாஸ்ய ஏகரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச
ஜாமாதா தயித: தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பச்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேமச–ஸ்லோகம் —51 —

தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம்.
உனக்கு என்றும் அடிமைத்தனம் பூண்டு நிற்போம். எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில்
மட்டும் அல்லாமல் பரமபதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை, “உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”,
என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம். அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை
இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம். இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.

சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள் ஸ்ரீரங்கநாயகியான
உன் மீது அன்புடன் உள்ளோம் – என்றார். அந்த மக்கள் இராமனைக் கண்டதுபோல்
நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் – என்றார். இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி,
அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.

———-

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–ஸ்லோகம் —52 —

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன்,
குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல்,
அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்?
இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய்.
இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய்.
இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) – தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்கு மேல்
என்னடியார் அது செய்யார் – என்பது காண்க. இதன் பொருள் – இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன்,
அதனை பெரியபிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்துவிடுவான்.
அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார்.
அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால், அவனே
வராக புராணத்தில் – ந க்ஷமாமி – மன்னிக்கமாட்டேன் – என்றும்,
கீதையில் – மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் – என்று கூறியதையும் காண்க.

————-

நேது: நித்ய ஸஹாயிநீ ஜநநி ந: த்ராதும் த்வம் அத்ர ஆகதா
லோகே த்வம் மஹிம அவபோத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹு
க்லிஷ்டம் க்ராவஸு மாலதீ ம்ருது பதம் விச்லிஷ்ய வாஸா: வநே
ஜாத: திக் கருணாம் திக் அஸ்து யுவயோ: ஸ்வாதந்த்ர்யம் அத்யங்குசம்–ஸ்லோகம் —53 —

தாயே ஸ்ரீரங்கநாயகீ! உனது மகிமைகளையும் பெருமைகளையும் எப்படிக் கூறினாலும், இந்த உலகத்தில்
உள்ளவர்கள் காதுகளில் அவை ஏறாது. இப்படிப்பட்ட (கொடிய) உலகத்தில் நீ இராமனின் துணைவியாக திருஅவதாரம் செய்தாய்.
எங்களைக் காப்பாற்றவே நீ தோன்றினாய். ஆனால் நடந்தது என்ன? நீ மிகுந்த துன்பங்களை அடைந்தாய் அல்லவா?
மிகவும் மென்மையான மாலதி மலர்கள் போன்ற உனது திருப்பாதங்கள் நோகும்படியாகப் பாறைகளில் (காட்டில்) நடந்து சென்றாய்.
உனது கணவனைப் பிரித்து வாழ்தல் என்பது அந்தக் காட்டில் நடந்தது. இது அனைத்தும் எங்கள் மீது உனக்கு உள்ள
கருணையால் அல்லவா நடைபெற்றது. போதும் தாயே! இப்படி எங்களுக்காக உனக்குத் துன்பங்கள் உண்டாகும்படி
இருக்கும் உனது அந்தக் கருணையை நான் வெறுக்கிறேன்.

———-

அதிசயிதவாந் ந அப்திம் நாத: மமந்த பபந்த தம்
ஹர தநு: அஸௌ வல்லீ பஞ்சம் பபஞ்ஜ ச மைதிலி
அபி தசமுகீம் லூத்வா ரக்ஷ:கபந்தம் அநர்த்தயந்
கிம் இவ ந பதி: கர்த்தா த்வத் சாடு சுஞ்சு மநோரத:–ஸ்லோகம் —54 —

தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும்,
உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத்தான் செய்யாமல் இருந்தான்? உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக
நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான்.
உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான். அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான்.
ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான்.
பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.

ஸ்ரீரங்கநாச்சியார், “குழந்தாய்! நீ கூறுவது அனைத்தையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.
எனக்காக அவன் இவை அனைத்தையும் செய்தான் என்பது உண்மை. ஆனால் இவை அவன் என் மீது கொண்ட அன்பால் ஆகும்.
உங்களுக்காக அவன் என்ன செய்தான்? நீங்கள் அனைவரும் கரையேறினால் அல்லவோ எனக்கு மகிழ்ச்சி?
இதன் பொருட்டு அவன் என்ன செய்தான்?”, என்று கேட்டாள்.
உடனே பட்டர், “தாயே! அவன் எங்களுக்காக அல்லவோ, எங்களைக் கரையேற்ற, எங்கள் இராமானுசனைப் படைத்தான்.
ஆக, உன்னுடைய விருப்பத்தை அவன் புரிந்துதானே இவ்விதம் செய்தான்?”, என்று ஸாமர்த்தியமாகக் கூறினார்

——–

தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே–ஸ்லோகம் —55 —

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள ஆயிரம் திருக்கைகள் என்ன,
அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன, இவற்றைத் தவிர அவனிடம்
பொருந்தியுள்ள பல திருக்கல்யாண குணங்கள் என்ன? இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும்,
பல அவதாரங்கள் எடுத்த போதிலும் உனது காதல் என்னும் பெருவெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?

இவன் எத்தனை ஸ்வரூப-ரூப-குணங்கள் கொண்டவனாக இருந்தாலும், அவளிடம் வசப்பட்டு அல்லவோ நிற்கிறான்?
அவளது கடைக்கண் பார்வையில் சிக்கியே நிற்கிறான்.

————

ஜநநபவந ப்ரீத்யா துக்த அர்ணவம் பஹுமந்யஸே
ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண
க்ஷமம் இதி தியா பூய: ஸ்ரீரங்கதாமநி மோதஸே–ஸ்லோகம் —56 —

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய்.
நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும்,
அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய். ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்!
அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு,
நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும் .

——————

ஔதார்ய காருணிகதா ஆச்ரித வத்ஸலத்வ
பூர்வேஷு ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத:
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி
ஸீதா அவதாரமுகம் ஏதத் அமுஷ்ய யோக்யா–ஸ்லோகம் —57 —

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்),
மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா),
அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்) ஆகிய பல சிறந்த குணங்கள்
ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே! நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும்
திரு அவதாரம் செய்தபோதும் அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர்.
அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.

அர்ச்சாவதாரத்தில் இந்தக் குணங்கள் கொள்ளவேண்டும் என்று எண்ணி, முன்பு எடுத்த பல திருஅவதாரங்களில்
இவள் பயிற்சி எடுத்துக் கொண்டாள் போலும். பட்டை தீட்டத்தீட்ட அல்லவோ வைரம் ஒளிர்கிறது?

—————–

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–ஸ்லோகம் —58 —

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி
வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும்,
அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும்,
உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?
நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி, நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே
தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய். இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

———-

ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
ஆகாம்ஸி தேவி யுவயோ: அபி துஸ்ஸஹாநி
பத்த்நாமி மூர்க்கசரித: தவ துர்பர: அஸ்மி–ஸ்லோகம் —59 —

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடையவேண்டும் என்ற உயர்ந்த ஆசையும், அந்தப் பதவியை அடைய வேண்டியதற்காக
இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை. இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான்
இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை. “சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று
எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை!
இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன்.
மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன்.
இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.

————

இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–ஸ்லோகம் —60 —

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து, நூற்றுக்கணக்கான தவறுகள்
உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும், உண்மையை கூறுபவர்களும் ஆகிய
ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன் (இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.

————-

ஸ்ரீரங்கே சரத: சதம் ஸஹ ஸுஹ்ருத்வர்கேண நிஷ்கண்டகம்
நிர்துக்கம் ஸுஸுகஞ்ச தாஸ்யரஸிகாம் புக்த்வா ஸம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத ஸரோருஹ அந்தர ரஜ: ஸ்யாம த்வம் அம்பா பிதா
ஸர்வம் தர்மம் அபி த்வம் ஏவ பவ ந: ஸ்வீகுரு அகஸ்மாத் க்ருபாம்–ஸ்லோகம் —61 —

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும்.
அப்படி உள்ளபோது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல்,
இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும். உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன் நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும்.
நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும்.
நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய்.
இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.

கத்யத்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று வாழ்த்திக் கூறியது போன்று,
தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார்-
சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று,
இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண்கொள்ளாக் காட்சி

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசரபட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கம்ப ராமாயணம்/கிட்கிந்தா காண்டம்/மிகைப் பாடல்கள்-

December 21, 2020

2. அனுமப் படலம்

312. அன்ன ஆம் என வெருவி,
அங்கண் நில்லாது, அருகு
துன்னு வானரர்களொடு தோம்
இலா மேரு நிகர்
என்னும் மாமலை முழையில்
எய்தினார்; எய்தியபின்,
நல் நலம் தெரி மனதின்
நாடி மாருதி மொழியும்:
முழை -குகை 2-1

313. தாரன், நீலனை, மருவு
தாம மாருதியை, முதல்
வீரரோடு, இரவிசுதன், மேரு
மால் வரையை நிகர்
பார மா மலையின் ஒரு
பாகம் ஓடுதல் புரிய,
ஆர மார்பரும், அதனின்
ஆகுமாறு உறல் கருதி,
இரவி சுதன் -சூரியன் மகனாகிய சுக்கிரீவன் 2-2

314. மானை நாடுதல் புரிஞர் –
‘வாலி ஏவலின் வருதல்
ஆனவாறு’ என மறுகி, ஆவி
சோர் நிலையர், தொடர்
ஏனைவானரர் சிலரும் ஏக,
மா முழையில், முழு
ஞான நாதரை, அறிவின்
நாடி, மாருதி மொழியும்:
மான் – மான்போல்வாளாகிய சீதை; நாடுதல் புரிஞர் – தேடுதலாகிய
பணியைச் செய்வோர். 2-3

315. உலகு தங்கிய பல தொல்
உயிர்கள் உயர்ந்திடு பரிசில்
இலகும் இங்கிதம் உடையர்;
இசையின் இன்புறு சுருதி
அலகு இல் விஞ்சைகள் உடையர்;
அகிலமும் தொழு கழலர்;
விலகு திண் கொடு வினைகள்
வெகுளிகொண்டு அடு விறலர்.
இங்கிதம் – குறிப்பு; விஞ்சைகள் – வித்தைகள் 8-1

316. சிவனும் அம்புய மலரில்
அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி
எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு
தொடரு செங்கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன்
உலகில் வந்ததுகொல் என.
அம்புய மலர் – தாமரை மலர்; இந்திரை – திருமகள்; கொழுநன் –
கணவன். 8-2

317. ‘மற்றும் இவ் உலகத்து உள்ள
முனிவர், வானவர்கள், ஆர், இச்
சொல் திறம் உடையார்? மற்று
எச் சுருதியின் தொகுதி யாவும்
முற்று அறிதரும் இம் மாணி
மொழிக்கு எதிர், முதல்வர் ஆய
பெற்றியர் மூவர்க்கேயும், பேர்
ஆற்றல் அரிது மன்னோ.’
சுருதி – வேதம் (கேட்கப்படுவது); மாணி – பிரமசாரி 19-1

318. இருக்கண் மா மைந்தரான
வாலியும், இளவல்தானும்,
செருக்கினோடு இருக்கும்காலை, செறுநரின்
சீறி வாலி
நெருக்குற, வெருவி, இந்த நெடுங்
குவட்டு இறுத்தான் தன்பால் –
மருக் குலாம் தாரீர்! – வந்தது
அவன் செய் மா தவத்தின் அன்றோ?
இருக்கண் – பிரமன்; நெடுங்குவடு – பெரிய மலை. 21-1

3. நட்புக் கோட் படலம்

319. ‘பிரிவு இல் கான்
அதுதனில், பெரிய சூர்ப்பணகைதன்
கரிய மா நகிலொடும்,
காதொடும், நாசியை
அரியினார்; அவள்
சொல, திரிசிராஅவனொடும்,
கரனொடும், அவுணரும், காலன்
வாய் ஆயினார்.
அரியினார் – அறுத்தனர 10-1

320. கடுத்து எழு தமத்தைச் சீறும்
கதிர்ச் சுடர்க் கடவுள் ஆய்ந்து
வடித்த நூல் முழுதும் தான்
ஓர்வைகலின், வரம்பு தோன்றப்
படித்தவன் வணங்கி, வாழ்த்தி,
பருமணிக் கனகத் தோள் மேல்
எடுத்தனன், இரண்டுபாலும்
இருவரை; ஏகலுற்றான்.
நமம் – இருள். 29-1

321. ‘இவன், உலைந்து உலைந்து,
எழு கடல் புறத்து
அவனியும் கடந்து,
எயில் அடைந்தனன்;
கவனம் ஒன்று இலான்,
கால் கடாயென,
அவனி வேலை ஏழ்,
அரியின் வாவினான்.
உலைந்து – தோற்று; எயில் – மதில் (இங்கே புற அண்டத்து
எல்லையிலுள்ள மதில்); கவனம் – கலக்கம்; கால் – காற்று; வாவினான் –
தாவினான். 64-1

322. ‘என்று கால்மகன்
இயம்ப, ஈசனும்,
”நன்று நன்று” எனா,
நனி தொடர்ந்து பின்
சென்ற வாலிமுன்
சென்ற செம்மல்தான்
அன்று வாவுதற்கு
அறிந்தனன்கொலாம்?’
கால்மகன் – வாயு தேவனின் மகன் (அனுமன்); ஈசன் – (இங்கே)
இராமபிரான். 64-2

323. இனையவா வியந்து
இளவல் தன்னொடும்,
வனையும் வார் கழல்
கருணை வள்ளல், பின்பு,
‘இனைய வீரர் செய்தமை
இயம்பு’ என,
புனையும் வாகையான்
புகறல் மேயினான்:
இனையவா(று) – இவ்வாறு 64-3

324. ‘நக்கரக் கடல் புறத்து நண்ணும் நாள்,
செக்கர் மெய்த் தனிச் சோதி சேர்கலாச்
சக்கரப் பொருப்பின் தலைக்கும் அப்
பக்கம் உற்று, அவன் கடிது பற்றினான்.
நக்கரம் – முதலை. 64-4

325. ‘திறத்து மா மறை அயனொடு
ஐம்முகன், பிறர், தேடிப்
புறத்து அகத்து உணர் அரிய
தன் பொலன் அடிக் கமலம்
உறச் சிவப்ப இத் தரைமிசை
உறல், அறம் ஆக்கல்,
மறத்தை வீட்டுதல், அன்றியே,
பிறிது மற்று உண்டோ?’
ஐம்முகன் – சிவபிரான். 70-1

326. ‘நீலகண்டனும், நேமியும்,
குலிசனும், மலரின்-
மேல் உளானும், வந்து, அவன்
உயிர்க்கு உதவினும், வீட்டி
ஆலும் உன் அரசு
உரிமையோடு அளிக்குவென்; அனலோன்
சாலும், இன்று எனது உரைக்கு
அருஞ்சான்று’ எனச் சமைந்தான்.
நீலகண்டன் – சிவபிரான்; நேமி – திருமால்; குலிசன் – (வச்சிரப்
படையான்)இந்திரன். 71-1

327. ‘மண்ணுள் ஓர் அரா முதுகிடை
முளைத்த மா மரங்கள்
எண்ணில் ஏழ் உள; அவற்றில்
ஒன்று உருவ எய்திடுவோன்,
விண்ணுள் வாலிதன் ஆர் உயிர்
விடுக்கும்’ என்ற உலகின்-
மண் உளோர்கள்தாம் கழறிடும்
கட்டுரை உளதால்.
அரா – பாம்பு (ஏழு மராமரங்களில் ஒன்றைத் தன் கணையால்
துளைப்பவனால் வாலி இறப்பான் என்று உலகில் ஒரு பேச்சு உண்டு என்கிறது
செய்யுள்).

5. துந்துபிப் படலம்

328. புயலும் வானகமும், அப்
புணரியும், புணரி சூழ்
அயலும் வீழ் தூளியால்
அறிவு அருந்தகையவாம்
மயனின் மாமகனும் வாலியும்
மறத்து உடலினார்.
இயலும் மா மதியம் ஈர்
ஆறும் வந்து எய்தவே.’
புயல் – மேகம்; புணரி – கடல். 9-1

7. வாலி வதைப் படலம்

329. பேர்வுற வலிக்கவும் மிடுக்கு
இல் பெற்றியார்
நோவுற உலந்தனர்; அதனை
நோக்கி, யான்
ஆர்கலிதனைக் கடைந்து,
அமுது கொண்டனென்;
போர் வலி அழிந்து போய்,
புறம் தந்து ஓடலேன்.
பேர்வுற – அசைந்திட; வலிக்க – இழுக்க; மிடுக்கு – வலிமை;
ஆர்கலி – கடல். 27-1

330. ஆற்றலன் வாலிக்கு ஆகி, அருங்
கதிர்ப் புதல்வன் மீண்டும்
ஏற்றிய சிலை இராமன் இணை
அடி இறைஞ்சி வீழ்ந்து,
‘தோற்றுமுன், ஆவி கொண்டு, இத்தொல்
உறை இருந்தேன்; உந்தன்
மாற்றமேவலி ஆய்ச் சென்றேன்;
உடல்வலி மாய்ந்தது’ என்றான்.
வாலிக்கு ஆற்றலன் ஆகி – வாலியின் வலிமைக்கு எதிரே
தாங்கமுடியாதவனாகி; கதிர்ப்புதல்வன் – கதிரவன் மகன் (சுக்கிரீவன்).61-1

331. என்றலும், இராமன், ‘நீங்கள்
இருவரும் எதிர்ந்த போரில்,
ஒன்றிடும் உடலினாலே உருத்தெரிவு
அரியது ஆகி,
கொன்றிடு பாணம் ஏவக்
குறித்தலேன்; குறியால் செய்த
மன்றலர் மாலை சூட்டி
ஏவுதும், மறித்தும்’ என்றான்.
61-2

332. இராமன் அஃது உரைப்பக் கேட்டே,
இரவி சேய் ஏழது ஆகும்
தராதலத்து அதிர ஆர்த்து, தம்
முனோன் முன்னர்ச் செல்ல,
பராபரம் ஆய மேருப்
பருப்பதம் தோற்றிற்று என்ன
கராதலம் மடித்து வாலி கனல்-
துகள் சிவந்து காட்ட.
பருப்பதம் – மலை (பர்வதம்); கராதலம் – கை. 61-3

333. சிவந்த கண்ணுடை வாலியும்,
செங்கதிர்ச் சேயும்,
வெவந்தபோது, அவர் இருவரும்
நோக்கின்ற வேலை,
கவந்த தம்பியைக் கையினால்
எடுத்து, அவன் உயிரை
அவந்த மற்றவன் ஆர்
உயிர் அந்தகற்கு அளிப்போன்.
வெவந்தபோது – பகை வெம்மையால் மோதிய போது; அந்தகன் –
இயமன். 62-1

334. வெற்றி வீரனது அடு கணை,
அவன் மிடல் உரத்தூடு
உற்றது; அப்புறத்து உறாதமுன்,
உறு வலிக் கரத்தால்
பற்றி, வாலினும் காலினும்
பிணித்து, அகப்படுத்தான்;
கொற்ற வெங் கொடு
மறலியும், சிரதலம் குலைந்தான்.
மிடல் உரம் – வலிமையான மார்பு; உறு வலி – மிகுந்த வலிமை.
66-1

335. ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை;
உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை;
வென்று ஆள்வதே என்னில், வேறு ஒன்றம் இல்லை;
வீணே பிடித்து; என்தன்மேல் அம்பு விட்டாய்;

தன்தாதை மாதா உடன் கூடி உண்ணத்
தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான்,
நின் தாதை; அன்றேயும், நீயும் பிடித்தாய்;
நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே!
செற்றம் – பகைமை; தாதை – தந்தை. 89-1

336. மா வலச் சூலியார்
வாழ்த்துநர்க்கு உயர் வரம்
ஓவல் அற்று உதவல், நின்
ஒரு தனி்ப் பெயர் இயம்பு
ஆவலிப்பு உடைமையால் ஆகும்;
அப் பொருளை ஆம்
தேவ! நிற் கண்ட எற்கு
அரிது எனோ, தேரினே?
ஆவலிப்பு -பெருமிதம். 128-1

337. இடைக்கலம் அல்லன்; ஏவியது
ஓர் பணி
கிடைத்த போது, அது
செய்யும் இக் கேண்மையன்;
படைக்கலக் கைப்பழம் பேர்
அருளே! நினது
அடைக்கலம் – அடியேன்
பெற்ற ஐயனே.
இடைக்கலம் -இடையே வந்தவன். 158-1

8. அரசியற் படலம்

338. வள்ளலும், அவண் நின்று ஏகி,
மதங்கனது இருக்கை ஆன
வெள்ள வான் குடுமிக் குன்றத்து
ஒருசிறை மேவி, மெய்ம்மை
அள்ளுறு காதல் தம்பி,
அன்பினால் அமைக்கப்பட்ட
எள்ளல் இல் சாலை எய்தி,
இனிதினின் இருந்த காலை,
வெள்ள வான் குடுமி -நீர்வளம் மிகுந்ததும் உயர்ந்ததுமான சிகரம்;
ஒரு சிறை -ஒருபக்கம்

10. கிட்கிந்தைப் படலம்

339. சென்று மாருதிதன்னிடம் சேர்ந்து, அவண்
நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும்,
வென்றி வீரன் வியப்பொடு மேல்வினை
ஒன்றுவான் அவன்தன்னை உசாவினான்.
வென்றி வீரன் -வெற்றி கொள்ளும் வீரன்; இங்கே (அனுமன்); மேல்
வினை -இனிமேல் செய்ய வேண்டிய செயல்கள்; அவன் தன்னை –
அவனை (அங்கதனை). 25-1

340. நீளும் மால் வரையின் நெறிதான் கடந்து,
ஊழி காலத்து ஒருமுதல் ஆகிய
ஆழிநாதனுக்கு அன்புடைத் தம்பியாம்
மீளிதான் வரும் வேகத்துக்க அஞ்சியே.
ஆழிநாதன் -சக்கரப் படை ஏந்திய தலைவன், திருமால் (இங்கே
இராமபிரான்);மீளி -வலிமையுடையவன். 32-1

341. மேவினான் கடை சேமித்த மென்மை கண்டு
ஓவு இலா மனத்து உன்னினன் -எங்கள்பால்
பாவியார்கள்தம் பற்று இதுவோ எனாத்
தேவரானும் சினத்தொடு நோக்கியே.
சேமித்த மென்மை -அடைந்து வைத்த சிறுமை;தேவரான் –
தேவனாகிய இலக்குவன். 34-1

342. அன்னை போன பின், அங்கதக் காளையை,
தன்னை நேர் இல் அச் சமீரணன் காதலன்,
‘இன்னம் நீ சென்று, இருந் துயில் நீக்கு’ என,
மன்னன் வைகு இடத்து ஏகினன், மாசு இலான்.
அன்னை -தாயாகிய தாரை;மாசு இலான் -குற்றம் இல்லாத
அங்கதன். 77-1

343. சேய்உயர் கீர்த்தியான்,
‘கதிரின் செம்மல்பால்
போயதும் அவ் வயின்
புகுந்த யாவையும்,
‘ஓய்வுறாது உணர்த்து’ என,
உணர்த்தினான் அரோ,
வாய்மையா – உணர்வுறு
வலி கொள் மொய்ம்பினோன்.

சேய் உயர் கீர்த்தியான் -நெடிதுயர்ந்த புகழ் கொண்ட இலக்குவன்.
137-1

11. தானை காண் படலம்

344. அன்று அவண் வானரச் சேனை யாவையும்,
வென்றி கொள் தலைவரும், எண்கின் வீரரும்,
குன்றுகள் ஒரு வழிக் கூடினாலென,
வன் திறல் இராமனை வாழ்த்தி, வந்தவே.
எண்கின் வீரர் -கரடி வீரர்கள். 1-1

345. இன்னது ஆகிய திறத்து அவர்
இருக்க, முன் போகச்
சொன்ன ஆயிர கோடியில்
தூதம் தம் திறத்தால்,
பன்ன ஆறு – இரு வெள்ளம் ஆம்
கவிப் படை பயில, –
பொன்னின் வார் கழல் இடபன் –
அக் கிட்கிந்தை புகுந்தான்.
அவர் இருக்க -இராம இலக்குவர்கள் காத்திருக்க;ஆறு இரு
வெள்ளம் -பன்னிரண்டு வெள்ளம்; கவிப் படை -குரங்குப் படை. 1-2

346. ‘தாமரை பெருந் தவிசு
உறை சதுமுகக் கடவுள்
ஓம அடஙகியில் உதித்தன,
உலப்பு இல கோடி
ஆம்’ எனப் புகல் வானரத்
தானை அங்கு அணித்தா, –
மா வயப் புயத்து எறுழ் வலி
மயிந்தன் – வந்து அடைந்தான்.
தவிசு -இருக்கை (ஆசனம்); சதுமுகக் கடவுள் -நான்கு முகங்
கொண்ட பிரமதேவன்;ஓம அங்கி -வேள்வித் தீ;தனை -சேனை. 1-3

347. கங்கைசூடிதன் கருணை பெற்றுடைய
முன் வாலி
பொங்கும் ஆணையின் எண்திசைப்
பொருப்பினும் பொலியத்
தங்கி வாழ் கவித் தானை
அங்கு ஆறு-ஐந்து கோடி
வங்க வேலையின் பரந்திட, –
வசந்தன் – வந்து அடைந்தான்.
கங்கை சூடி -சிவபெருமான்; வங்க வேலை -கப்பல்கள் இயங்கும்
கடல். 1-4

348. வட்ட விண்ணையும் மண்ணையும்
எடுக்குறும் வலிய,
நெட்டு அராவினைச் சினத்தொடு
பிடுங்குவ நிமிர்வ,
அட்ட திக்கையும் மறைப்பன,
ஆயிரம் கோடி
துட்ட எண்கு வெம்
படையொடு தூமிரன் வந்தான்.
நெட்டு அரா -நீண்ட பாம்பு (ஆதிசேடன்). 19-1

349. ஓங்கு மேருவை வேருடன்
பறித்து, ஒரு கையால்
வாங்கும் எண் அருங் கோடி
மேல் மந்தியின் சேனை
பாங்கு சூழ்தர, பரவை அது
ஆம் எனப் படியில்
ஆங்கு உயர்ந்திடு கபாடனும்
அக் கணத்து உற்றான்.
பரவை -கடல்;படி – உலகம். 19-2

350. வீரை ஏழையும் கலக்குறு
மிடுக்கினர், விரிந்த
பாரை வேரொடும் பறித்திட
வேண்டினும் பறிப்பர்,
ஈர் – ஐஞ்ஞூற்று எழு கோடி
வானரப் படை ஈண்ட,
தாரையைத் தந்த ததிமுகன்
நொடியினில் சார்ந்தான்.
வீரை -கடல்;தாரையைத் தந்த ததிமுகன் -தாரையின்
தந்தையாகியததிமுகன் 19-3

12. நாட விட்ட படலம்

351. சாரும் வீரர் சதவலி தம்மொடும்
கூரும் வீரர்கள் யாவரும் கூடியே,
நீரும் நும் பெருஞ் சேனையும் நின்றிடாப்
பேரும், பேதையைத் தேடுறும் பெற்றியால்.
சதவலி சாரும் வீரர் தம்மொடும் -சதவலி என்ற தலைவனைச்
சார்ந்துள்ள வீரர்களோடும்;கூரும் -(வலிமையால்) மிகும். 9-1

352. குட திசைப் படு பூமி, குபேரன் வாழ்
வட திரைப் படு மா நிலம் ஆறும் ஏற்று,
இடு திசைப் பரப்பு எங்கணும் ஓர் மதி
தொடர உற்றுத் துருவி இங்கு உற்றிரால்.
ஓர் மதி தொடர -ஒருமைப்பட்ட அறிவு உடன் தொழிற்பட 10-1

353. குடதிசைக் கண்
இடபன் குணதிசைக்
கடலின் மிக்க
பனசன் சதவலி
வடதிசைக்கண் அன்று ஏவினன் –
மான மாப்
படையின் வெள்ளத்துடன்
செலப் பான்மையால்.
மான மாப் படை -தன்னிலையில் தாழாத பெரும்படை 10-2

354. என்று கூறி, ஆங்கு ஏவினன்; யாவரும்
நின்று வாழ்த்தி விடை கொடு நீங்கினார்
அன்று மாருதிஆம் முதல் வீரர்க்குத்
துன்று செங்கதிரோன் மகன் சொல்லுவான்:
கதிரோன் மகன் -சுக்கிரீவன் 10-3

13. பிலம் புக்கு நீங்கு படலம்

355. ‘இந் நெடுங் கிரிகொலோ, எதுகொலோ?’ என
அந் நெடு மேருவோடு அயிர்க்கலாவது;
தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய
பொன் நெடு முடி எனப் பொலியும் பொற்பது;
அயிர்க்கலாவது -ஐயப்படுதற்கு உரியது;அயிர்த்தல் -சந்தேகித்தல்.
12-1

356. வச்சிரமுடைக் குரிசில் வாள்
அமரின் மேல் நாள்,
மெச்சு அவுணர்
யாவரும் விளிந்தனர்களாக,
அச்சம் உறு தானவர்கள்
கம்மியனும் அஞ்சி,
வைச்ச பிலமூடிதன் மறைந்து
அயல் இருந்தான்.
வச்சிரமுடைக் குரிசில் -இந்திரன்;தானவர் தச்சன் -அசுரத்
தச்சனானமயன். 57-1

357. மாதுஅவள் உயிர்த்த மகவோர்
இருவர்; வாசப்
போது உறை நறைக் குழல் ஒருத்தி; –
புகழ் மேலோய்! –
ஏதம் உறு மைந்தர் தவம்
எய்த அயல் போனார்;
சீதள முலைச் சிறுமி
தாதையொடு சென்றாள்.
மாது -சுயம்பிரபையுடன் இருந்த தேவ மாது;போது -விரியும்
பக்குவத்திலுள்ள பூ;நறைக் குழல் -மணமுள்ள கூந்தல். 61-1

358. மத்த நெடு மா களிறு
வைத்த குலிசி வன் தாள்
சித்தமொடு மான்முகன் வணங்கி,
அயல் சென்றான்;
வித்தகனும், ஆயிர
விலோசனனும், மேன்மேல்,
முத்த நகையாளை நனி
நோக்கினன், முனிந்தான்.
களிறு -யானை (இங்கே இந்திரனின் ஐராவதம்);குலிசி –
வச்சிராயுதமுடைய இந்திரன்;ஆயிர விலோசனன் -இந்திரன். 61-2

359. மேருசவ் வருணி எனும்
மென்சொலினள், விஞ்சும்
ஏர் உறு மடந்தை, யுகம்
எண்ண அரு தவத்தாள்,
சீர் உறு சுயம்பிரபை,
ஏமை செறிவு எய்தும்
தாருவளர் பொற்றலமிசைக்
கடிது சார்ந்தாள்.
ஏர் -அழகு. 71-1

360. மேரு வரை மா முலையள்,
மென்சொலினள், – விஞ்சு
மாருதியினைப் பல உவந்து,
மகிழ்வுற்றே, –
ஏர் உறு சுயம்பிரபை,
ஏமை நெறி எய்த,
தாரு வளர் பொன் – தலனிடைக்
கடிது சார்ந்தாள்.
‘மேரு சவ்வருணி’ என்று தொடங்கும் முந்தைய பாடலும் இப்பாடலும்
ஒரே செய்தியைச் சொல்லும் மிகைப்பாடல்கள். சொற்களிலே சில மாற்றம்.
72-2

14. ஆறு செல் படலம்

361. இருவரும் கதம் எய்தி அங்கையில்
செரு மலைந்திடும் பொழுது, திண் திறல்
நிருதன் வெஞ்சினம் கதுவ, நின்றது ஓர்
பரு மராமரம் பறித்து வீசினான்.
இருவரும் -அங்கதனும் அசுரனும்;நிருதன் -அசுரன்;கதுவ –
சேர்ந்திட 7-1

362. வீசு மா மரம் சிந்த, வென்றி சேர்
ஆசு இல் அங்கதன் அங்கையால் மலைந்து,
ஓசை கொண்டு உறக் குத்தினான் உடல்;
கூசுறாத வன் குன்று ஒன்று ஏந்தினான்.
ஆசு இல் -குற்றம் இல்லாத 7-2

363. குன்று கையிடைக் கொண்டு எழுந்த, முன்
நின்ற அங்கதன், நெடு மராமரம்
ஒன்று வாங்கி மற்றவன் ஒடிந்திடச்
சென்று தாக்கினான், தேவர் வாழ்த்தவே.

364. ஆகையால் அங்கு அடைந்தவர் யாவர்க்கும்
ஓகையால் அமுது ஊட்டினர்; உண்டு உரம்
சோகம் மாறி, பின் தோகையை, அவ் வழி,
சேகு சேறு உறத் தேடினர், காண்கிலார்.
ஓகை -உவகை;சேகு -திண்மை (இங்கே வலிய நிலம்) 45-1

365. இனைய தண்டக நாட்டினுள் எய்தினார்;
அனைய நாட்டின் அருந் தவர் யாவரும்
நனி விரும்பி நயந்தனர், நான்மறைப்
புனிதர் என்று கொண்டு உள்ளுறும் புந்தியார்.
புந்தியார் -அறிவுடையார் 45-2

366. ‘செல்வர்’ என்றும், ‘வடகலை,
தென் தமிழ்ச்
சொல், வரம்பினர்’
என்றும், ‘சுமடரைக்
கொல்வர்’ என்றும், ‘கொடுப்பவர்’
என்றும், – அவ்
இல் வரம்பினர்க்கு ஈ
தேனும் ஈட்டதே.
சுமடர் -கீழ்மக்கள் 45-3

15. சம்பாதிப் படலம்

367. யாவரும் அவ் வயின்நின்றும், ‘மன் இயல்
பூ வரும், அருந்ததி பொருவும் கற்புடைத்
தேவியை எங்கணும் தேடிக் கண்டிலம்;
மேவினம்’ என்பது விளம்பினார்அரோ.
பூவரும் -தாமரை மலரின் வைகும்;அருந்ததி பொருவும் –
அருந்ததியைப் போன்ற 3-1

368. அன்னதோர் அளவையின் அங்க
நாடு ஒரீஇ,
தென் மலைநாட்டினைத் தேடிச்
சென்று, உடன்
இன் இசைத் தலைவரோடு
இரண்டு வெள்ளமும்
மன்று மா மயேந்திரத்
தலத்து வந்ததால்.
இசை -புகழ் 3-2

369. தாழந்த மா தவத்து
உலோகசாரங்கன் உறையும் சாரல்
வீழ்ந்தனென்; சிறைகள் தீய,
வெவ்வுயிர்த்து, உளமும் மெய்யும்
போழ்ந்தன துன்பம் ஊன்ற,
உயிர்ப்பொறை போற்றகில்லாது,
ஆழ்ந்தனென்; ஆழ்ந்த என்னை அருந்
தவன் எதிர்ந்து தேற்றி;
போழ்ந்தன துன்பம் -பிளப்பனவாகிய துன்பம்; உயிர்ப்பொறை –
உயிர்ச்சுமை. 56-1

370. ‘ ”கற்றிலார் போல உள்ளக்
களிப்பினால் அமரர் காப்பூடு
உற்றிடக் கருதி, மீப் போய்,
ஆதபத்து உனது மேனி முற்று
அழல் முருங்க, மண்ணை முயங்கினை;
இனி என்? சில் நாள்
மற்று நின் உயிரை ஓம்பாது
இகழ்வது மாலைத்து அன்றால்.
மீ -மேலே;ஆதபம் -வெயில்;முருங்க -எரிய;மாலைத்து
அன்று-இயல்பு அன்று 56-2

371. ”களித்தவர் கெடுதல் திண்ணம்; சனகியைக்
கபடன் வவ்வி, அன்று
ஒளித்த வாய் துருவி உற்ற
வானரர், இராம நாமம்
விளித்திட, சிறை வந்து ஓங்கும்;
வெவ்வுயிர்த்து அயரல்” என்று,
அளித்தனன்; அதனால் ஆவி
ஆற்றினேன் – ஆற்றல் மொய்ம்பீர்!
அயரல் -தளராதே;அளித்தனன் -அருளினான். 56-3

372. ‘அன்றியும், அலருள் வைகும்
அயனைநேர் முனிவர், வாய்மை
நன்றிகொள் ஈசற் காண்பான்
நணுகலும், வினையேன் உற்றது
ஒன்று ஒழிவுறாமல் கேட்டு, அது
யோகத்தின் உணர்ச்சி பேணி,
”பொன்றுதல் ஒழிமின்; யானே
புகல்வது கேண்மின்” என்றான்.
அயனை நேர் முனிவன் -நான்முகனை ஒத்த உலோக சாரங்க
முனிவன் 56-4

373. ‘ ”தசரத ராமன் தேவர் தவத்தினால்,
தாய் சொல் தாங்கி,
கச ரத துரகம் இன்றிக்
கானிடை இறுத்த காலை,
வசை தரும் இலங்கை வேந்தன்
வவ்விய திருவை நாடித்
திசை திரி கவிகள் உற்றால்,
சிறகு பெற்று எழுதி” என்ன,
கச, ரத, துரகம் -யானை, தேர், குதிரை;கவிகள் -குரங்குகள் 56-5

374. ‘எனக்கு உணவு இயற்றும் காதல்
என் மகன் சுபார்சுபன் பேர்
சினக் கொலை அரக்கன்
மூதூர் வடதிசைநின்று செல்வான்,
நினைக்கு முன் திருவோடு அந்த
நீசனை நோக்கி, ”எந்தை –
மனககு இரை எய்திற்று” என்னா,
சிறகினால் தகைந்து கொண்டான்.
தகைந்து -மோதி 58-1

375. காமத்தால் நலியப்பட்டு,
கனங்குழைதன்னைக் கொண்டு
போம்மத்தா! போகல்; எந்தை புன்
பசிக்கு அமைந்தாய்” என்று,
தாமத் தார் மௌலி மைந்தன்
தடுத்து இடை விலக்க, நீசன்

நாமத்தால் விரலைக் கவ்வ, நாணி
மீண்டு, எனக்குச் சொன்னான்.’
மத்தா -உன்மத்தனே;போகல் -போகாதே;நாமத்தால் –
அச்சத்தால் 58-2

376. முன்னர் அந் நிசாகர
முனி மொழிந்ததும்,
பின்னர் அச் சுபார்சுபன்
பெலத்து இராவணன் –
தன்னொடும் அமர் பொரச்
சமைந்து நின்றதும்,
கொன் இயல் சனகியைக்
கொண்டு போனதும்,
பெலத்து -வலிமையுடைய (பலம்);கொன் இயல் -பெருமைப் பண்பு
58-3

377. நினைந்து சம்பாதியும், நீதி யாவையும்
இனைந்தனன், வானரர் எவரும் கேட்கவே;
நினைந்து, கண்ணீர் விழ, நெடிது உயிர்த்தனர்;
வினைந்தனர், புரண்டனர்; விதியை நொந்தனர்.
இனைந்தனன் -வருந்தினான் 58-4

16. மயேந்திரப் படலம்

378. புள்ளரசு இன்ன வாய்மை சொல்லி
விண் போந்த பின்னர்,
தெள்ளிதின் உணர்ந்தார் யாரும்; அங்கு
அது சாம்பன் சிந்தித்து,
உள்ளவர் தன்னில் வல்லார் யார்
என உன்னி, யாண்டும்
தள்ளரும் புகழோன் வாயுத்
தனையனை நோக்கிச் செப்பும்:
புள்ளரசு -பறவைகளுக்கு அரசனான சம்பாதி;வாயுத் தனையன் –
வாயுவின் மகனாகிய அனுமன்.

379. ஆயவன் அங்குப் போகிய
பின்னர், அகமீதே
நோய் உறு தன்மைத்து
ஆகிய வீரர்தமை நோக்கி,
தூய மனத்தன் ஆகிய
வாலி தரு தொன்மைச்
சேயும் அவர்க்கே செப்பினன்,
நாடும் செயல் ஓர்வான்.
சேய் -மகன் (இங்கே அங்கதன்) (இப் படலத்தின் முதற் பாடலாக ஓர்
ஏட்டில் ‘புள்ளரசு’ எனத் தொடங்கும் பாடலும், பிறிதோர் ஏட்டில் ‘ஆயவன்’
எனத் தொடங்கும் பாடலும் காணப்பட்டது.)

380. ‘ஆரியன் மின்னி்ன் பேர்
எழில்கூறும் அமைவாலும்,
”காரியம் உன்னால் முற்றும்”
எனச் சொல் கடனாலும்,
மாருதி ஒப்பார் வேறு இலை
என்னா, மனம் எண்ணி,
சீரியன் மல் தோள் ஆண்மை
உரைத்தால் செயும், என்றே’
மின்னின் -மின்னல் போல்வளாகிய சீதை. 8-1

381. நாலு மறைக்கும் வேலியும்
ஆகி, நடு நிற்கும்
சீலம் மிகுந்தீர்! திங்கள்
மிலைச்சித் திகழ் வேணி,
ஆல மிடற்றான்மேலும் உதித்தீர்!
அது போதில்
காலின் நிறைக்கோ காலனும்
ஆகக் கடிது உற்றீர்.
திங்கள் மிலைச்சி -சந்திரன் சூடி;வேணி – சடை;
ஆலமிடற்றான் -நஞ்சினைக் கழுத்திலே கொண்ட சிவபிரான் 18-1

382. ஆதியர் இப் புத்தேள்
அடிப்பாரித்து அணவு ஆதற்கு
ஓது கருத்தில் சால
நினைத்திட்டு, ஒழிவு இல்லாப்
போது தளத்தில் புக்கிய
செய்கைத் திறனாலே
சாதல் கெடுத்துத் தான்
அழியாதீர் அதனாலே.
பாரித்து -விரும்பி;அணவு ஆதற்கு -அணுகுவதற்கு 18-2

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவரங்கன் போற்றி திரு நாமங்கள் –

December 19, 2020

1 ஸ்ரீ அரங்கனே போற்றி
2 ஸ்ரீ நடை அழகனே போற்றி
3 ஸ்ரீ கௌஸ்துப மணியனே போற்றி
4 ஸ்ரீ காவிரி ஸ்னானனே போற்றி
5 ஸ்ரீ முக்கொடவர் காத்தவனே போற்றி

6 ஸ்ரீ ஒருகொடவர் சுமந்தவனேப் போற்றி
7 ஸ்ரீ உலகாச்சாரியார் துதித்தவனே போற்றி
8 ஸ்ரீ ஒய்யரனே போற்றி
9 ஸ்ரீ நம் பெருமாளே போற்றி
10 ஸ்ரீ என் பெருமாளே போற்றி

11 ஸ்ரீ நன் மதி அருள்பவனே போற்றி
12 ஸ்ரீ அழகனே போற்றி
13 ஸ்ரீ அலங்கார ரூபனே போற்றி
14 ஸ்ரீ புன்னகைத்தவனே போற்றி
15 ஸ்ரீ ஆழ்வார் பன்னிருவரால் பாடப் பட்டவனே போற்றி

16 ஸ்ரீ காவிரி தாண்டி சென்றவனே போற்றி
17 ஸ்ரீ வன வாசம் சென்றவனே போற்றி
18 ஸ்ரீ அமலனாதி பிரானே போற்றி
19 ஸ்ரீ பன்னிரு மாதம் உற்சவனே போற்றி
20 ஸ்ரீ தங்க விமானம் கொண்டவனே போற்றி

21 ஸ்ரீ திரு வரங்கத்தானே போற்றி
22 ஸ்ரீ ஐயனே போற்றி
23 ஸ்ரீ அரசனே போற்றி
24 ஸ்ரீ முன்னோர்களால் ஸ்துதிக்கப்பட்டவனே போற்றி
25 ஸ்ரீ உறையூர் நாச்சியார் மணாளனே போற்றி

26 ஸ்ரீ பள்ளி கொண்டவனே போற்றி
27 ஸ்ரீ சுய மூர்த்தியே போற்றி
28 ஸ்ரீ அடியவர்களை ஆட் கொண்டவனே போற்றி
29 ஸ்ரீ மன்மத மன்மதனே போற்றி
30 ஸ்ரீ ராம பிரான் ஸ்துதித்த பெருமாளே போற்றி

31 ஸ்ரீ திருவரங்க அரசனே போற்றி
32 ஸ்ரீ பெரிய பெருமாளே போற்றி
33 ஸ்ரீ சினம் இல்லாதவனே போற்றி
34 ஸ்ரீ தாமரை கண்ணானே போற்றி
35 ஸ்ரீ கண்களால் அருள்பவனே போற்றி

36 ஸ்ரீ அவதாரனே போற்றி
37 ஸ்ரீ திவ்ய தேசத்தில் முதலானவனே போற்றி
38 ஸ்ரீ பெரிய கோபுரதனே போற்றி
39 ஸ்ரீ அகண்ட காவிரியனே போற்றி
40 ஸ்ரீ அருள் பாலிப்பவனே போற்றி

41 ஸ்ரீ ரங்கநாதனே போற்றி
42 ஸ்ரீ சோழ நாட்டானே போற்றி
43 ஸ்ரீ ராமானுசர் போற்றியவரே போற்றி
44 ஸ்ரீ மாமுனிவன் போற்றியவரே போற்றி
45 ஸ்ரீ தேசிகர் போற்றியவரே போற்றி

46 ஸ்ரீ பிரம்மனை தாங்கியவனே போற்றி
47 ஸ்ரீ பாமரரை கவர்ந்தவனே போற்றி
48 ஸ்ரீ நீதியை காப்பவனே போற்றி
49 ஸ்ரீ கேட்ட வரம் தருபவனே போற்றி
50 ஸ்ரீ துலுக்க நாச்சியார் மணாளனே போற்றி

51 ஸ்ரீ உபய நாச்சியார் மணாளனே போற்றி
52 ஸ்ரீ மாயவனே போற்றி
53 ஸ்ரீ சாதுவனே போற்றி
54 ஸ்ரீ பெரிய நம்பியை ஆட் கொண்டவனே போற்றி
55 ஸ்ரீ தொண்டரடிப் பொடியை ஆட் கொண்டவனே போற்றி

56 ஸ்ரீ வேடு பரியானே போற்றி
57 ஸ்ரீ வைரமே போற்றி
58 ஸ்ரீ வைர முடியானே போற்றி
59 ஸ்ரீ முத்து பந்தலே போற்றி
60 ஸ்ரீ ஸப்த ப்ராகாரனே போற்றி

61 ஸ்ரீ ஆதி ப்ரமோத்ஸவமே போற்றி
62 ஸ்ரீ அரங்க நாயகியின் மணாளனே போற்றி
63 ஸ்ரீ ஈரேழு லோகத்தை ஆள்கின்றவனே போற்றி
64 ஸ்ரீ மாம்பகியே போற்றி
65 ஸ்ரீ அதிமூலமே போற்றி

66 ஸ்ரீ மூலப் பொருளே போற்றி
67 ஸ்ரீ கஜேந்த்ராழ்வான் துதித்தவனே போற்றி
68 ஸ்ரீ தென் திசை நோக்கியவனே போற்றி
69 ஸ்ரீ கீழ் திசை பாதம் நீட்டியவனே போற்றி
70 ஸ்ரீ பச்சை மாமலையே போற்றி

71 ஸ்ரீ அச்சுதனே போற்றி
72 ஸ்ரீ பெரிய பிராட்டியார் மணாளனே போற்றி
73 ஸ்ரீ பூ லோக வைகுந்தனே போற்றி
77 ஸ்ரீ திருப் பள்ளி எழுச்சி நாயகனே போற்றி
75 ஸ்ரீ அரங்க மா நகர நாயகனே போற்றி

76 ஸ்ரீ சதுர் யுகத்தானே போற்றி
77 ஸ்ரீ ஏகமுகத்தானே போற்றி
78 ஸ்ரீ நலம் தருபவனே போற்றி
79 ஸ்ரீ பரம் பொருளே போற்றி
80 ஸ்ரீ தீங்கு தராதவனே போற்றி

81 ஸ்ரீ சேர குல வல்லி மணாளனே போற்றி
82 ஸ்ரீ என் தெய்வமே போற்றி
83 ஸ்ரீ கல்பக விருட்சமே போற்றி
84 ஸ்ரீ மும் மூர்த்தியில் நடு நாயகமே போற்றி
85 ஸ்ரீ நிர்மலனே போற்றி

86 ஸ்ரீ கஸ்தூரி திலகனே போற்றி
87 ஸ்ரீ அடியார்களை படைத்தவனே போற்றி
88 ஸ்ரீ மா முனிவனுக்கு தனியன் அருளியவனே போற்றி
89 ஸ்ரீ கோயில் பெருமாளே போற்றி
90 ஸ்ரீ சேஷன் மீது பள்ளி கொண்டவனே போற்றி

91 ஸ்ரீ பிரம்மனின் படப்பை காப்பவனே போற்றி
92 ஸ்ரீ நடைக்கு எடுத்துக் காட்டே போற்றி
93 ஸ்ரீ எழுச்சியே போற்றி
94 ஸ்ரீ எழுச்சியின் சின்னமே போற்றி
95 ஸ்ரீ வல்லவனே போற்றி

96 ஸ்ரீ பிரம்மோட்ஸவமே போற்றி
97 ஸ்ரீ வஸந்தோத்ஸவமே போற்றி
98 ஸ்ரீ ஆழ்வார்களை ஆட் கொண்டவனே போற்றி
99 ஸ்ரீ முன்னோர்களை ஆட் கொண்டவனே போற்றி
100 ஸ்ரீ பெரிய கருடனை உடையவனே போற்றி

101 ஸ்ரீ சுடரே போற்றி
102 ஸ்ரீ இரங்கி அருள் தருபவனே போற்றி
103 ஸ்ரீ ஈர்ப்பு சக்தி உடையவனே போற்றி
104 ஸ்ரீ ஒளஷதமே போற்றி
105 ஸ்ரீ பக்தர்களை கவர்பவனே போற்றி

106 ஸ்ரீ பரந்த உள்ளமே போற்றி
107 ஸ்ரீ அடியாளை ஆட் கொண்டவனே போற்றி
108 ஸ்ரீ பெரிய பிராட்டியார் சமேத ஸ்ரீ அழகிய மணவாளனே போற்றி போற்றி-

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆண்டாள் வைபவம் –மாலை கட்டிய மாலை– ஸ்ரீ உ வே இளையவல்லி பூவராகாச்சார்யார் ஸ்வாமிகள்–

December 19, 2020

ஸ்ரீ பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் ஸ்ரீ துளசி மடியில் கிடந்த பெண் குழந்தை
கலியுகத்தின்-98- ஒரு நள வருஷத்தில் ஸ்ரீ ஆடி மாதம் சுக்ல செவ்வாய் கிழமை கூடிய ஸ்ரீ பூர நட்சத்திரத்தில்
சதுர்த்தசி-அவர் பிறந்தது கி.பி. 885 நவம்பர் 25 அல்லது அல்லது 886 டிசம்பர் 24.

கர்க்கடே பூர்வ பல்குந் யாம் துளஸீ காந நோத் பவாம்
பாண்ட் யே விஸ்வம் பராம் கோதாம் வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம்

ஸ்ரீ ஆண்டாள் அவதார காலம் அவள் இயற்றிய திருப்பாவையில் வரும் ”புள்ளின் வாய் கீண்டானை“ என்று
தொடங்கும் பாடலில் வரும் ”வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று“ என்று சொற்றொடரை
ஆராய்ச்சி செய்து அறுதியிடப் பட்டுள்ளது.
(ஆழ்வார்கள் கால நிலை பக் 123-128 ஆரய்ச்சிப் பேரறிஞர் ஸ்ரீ திரு.மு.இராகவைய்யங்கார்)

இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில்
பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது.
”நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை“ என்று நற்றிணையில் உள்ளது.
அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள் தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள்.
‘தைந்நீராடல்’ என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால்
இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது.
அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று ஸ்ரீ இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.

————

ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் இடக்கையில் கிளி இருக்கிறது.
இது தினமும் புதியதாக இன்றளவும் செய்யப்படுகிறது. இந்த கிளியைச் செய்வதற்கு தோராயமாக நான்கிலிருந்து
நாலரை மணி நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இக் கிளியைச் செய்வதற்கு, மாதுளம் மரத்தின் பூக்கள் கிளியின்
அலகு மற்றும் வாய்ப்பகுதி செய்வதற்கும், மூங்கில் குச்சிகள் கிளியின் கால் பகுதிக்கும்,
வாழை மரத்தின் இலைகள் மற்றும் நந்தியாவட்டை மரத்தின் இலைகள் உடல் பகுதி செய்வதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.

———–

ஸ்ரீ வில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஸ்ரீ கவுசிக ஏகாதசியை முன்னிட்டு
ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்க மன்னார், ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ பூதேவி, ஸ்ரீ தேவி மற்றும் ஸ்ரீ ஆழ்வார்களுக்கு 108 பட்டுப்புடவை
அணிவிக்கும் வைபவம் விடிய, விடிய நடந்து- மேள தாளங்கள் முழங்க ஸ்ரீ பெரிய பெருமாள் சன்னதி பகல் பத்து மண்டபத்திற்கு
கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து- நள்ளிரவு 12 மணி முதல் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரங்க மன்னார் உள்ளிட்ட
தெய்வங்களுக்கு 108 பட்டுப்புடவைகள் அணிவிக்கும் வைபவம் துவங்கி அதிகாலை வரை நடக்கிறது –

—————-

ஸ்ரீ ஆண்டாள் தநுர் மாச பிறப்பு அன்று திருப்பாவை புடவை சாத்தி சேவை –
ஒரே புடவையில் முப்பது பாசுர முதல் அடிகளை வைத்து பக்தர் ஒருவர் ஐம்பது வருஷங்கள் முன்பு சமர்ப்பிக்க
வருஷம் தோறும் இத்தை சாத்தி சேவை சாதித்து அருளுகிறாள் –

—-

பகல் பத்து முதல் நாளான அன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்
பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடைபெறும். ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னாருடன் மூல ஸ்தானத்திலிருந்து
ஸ்ரீ பெரியாழ்வாரின் வம்சா வழியை சேர்ந்த ஸ்ரீ வேத பிரான் பட்டர் திருமாளிகைக்கு சென்று அங்கு பரப்பி வைக்கப்பட்ட
காய்கறிகளை சந்தோஷமாக பார்க்கும் வைபவமே பச்சை பரப்புதல் நிகழ்ச்சி என்று அழைக்கப்படும்

———–

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன் –

நீளா துங்கஸ்தன கிரி தடீ ஸுப்தம் முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்தயம் ஸ்வம் ச்ருதி சக சிரஸ் ஸித்தம் அத்யாப யந்தீ
ஸ்வேர்ச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாவாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இத மிதம் பூய ஏவாஸ்து பூய:

ஸ்ரீ நப்பின்னையினுடைய உயர்ந்த மலை போன்ற முலைகளின் தடத்திலே தலை சாய்த்து உறங்கினவனான
ஸ்ரீ கண்ணனை எழுப்பி அடிமை செய்யும் விஷயத்தில் தனக்குள்ள ஆவலை அறிவித்துத்
தன்னால் சூடிக் களையபெற்ற பூமாலையிலே விலங்கிடப்பட்ட அவனை அனுபவித்த ஸ்ரீ ஆண்டாளைத் திருவடி தொழுகின்றேன்

ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்த தனியன் –

அன்ன வயற் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப் பாவைப் பல் பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

அன்னங்கள் உலவுகின்ற வயல்களை உடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஸ்ரீ ஆண்டாள்.
ஸ்ரீ அரங்கனுக்கு பல (முப்பது) பாசுரங்களை ஆராய்ந்தருளிய ஸ்ரீ திருப்பாவையை இனிய இசையோடு கூட்டி
நல்ல பாமாலையாக (பாட்டுக்கலான மாலையாக), பாடிக் கொடுத்தவளும்,
பூக்களாலான மாலையைத், தான் சூடிக் களைந்து கொடுத்தவளுமான ஸ்ரீ ஆண்டாளின் புகழைச் சொல்லு!

சூடிக் கொடுத்த சுடர்க் கொடுயே தொல் பாவை
பாடி யருள வல்ல பல் வளையாய்! – நாடி நீ
“வேங்டவற்கு என்னை விதி” யென்ற இம் மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு

பூமாலையை சூடிக்கொடுத்த சுடர்கொடியே பழமையான பாவை நோன்பை (ஸ்ரீ திருப்பாவை மூலமாக) பாடி
எல்லோருக்கும் அருளவல்ல பல வளையல்களை அணிந்திருப்பவளே. நீ மன்மதனை நாடி
“காமதேவா திருவேங்கட பெருமானுக்கு வாழ்க்கைப் படுத்த வேணும்” என்று (காமனைக் குறித்து) சொன்ன
இவ் வார்த்தையை, நாங்களும் தப்பாமல் பின்பற்றும்படி அருள் புரிவாயாக.
(* …வேங்கடவற் கென்ன விதிக்கிற்றியே., நாச்சியார் திருமொழி 504 (1:1) )

————

1.நாராயணனே நமக்கே– பாரோர் புகழ்மாலை
2.வையத்து வாழ்வீர்காள்- உஜ்ஜீவன மாலை
3.ஓங்கி உலகளந்த- நீங்காத நிறைந்த செல்வ மாலை
4.ஆழிமழைக்கண்ணா- மார்கழி நீராட்ட மாலை
5.மாயனை மன்னு வட- பாபநாச மாலை
6.புள்ளும் சிலம்பின காண்- உள்ளங்குளிர் மாலை
7.கீசுகீ சென்றெங்கும்- தேஜோ மாலை
8.கீழ்வானம் வெள்ளென்- ஆராய்ச்சியருள் மாலை
9.தூமணி மாடத்து- ஸஹஸ்ர நாம மாலை
10.நோற்றுச் சுவர்கம்- தேற்ற மாலை
11.கற்றுக் கறவை- பொருள் மாலை
12.கனைத்திளங் கற்றெருமை- மான மாலை
13.புள்ளின் வாய் கீண்டானை- கள்ளம் தவிர் மாலை
14.உங்கள் புழக்கடை- பங்கயக் கண்ணான் மாலை
15.எல்லே இளங்கிளியே- மாயன் மாலை
16.நாயகனாய் நின்ற- நேய மாலை
17.அம்பரமே தண்ணீரே- உறங்கா மாலை
18.உந்து மதகளிற்றன்- திறப்பு மாலை
19.குத்து விளக்கெரிய- தகவு மாலை
20.முப்பத்து மூவர்- விளம்பாஸஹத்வ மாலை
21.ஏற்ற கலங்கள்- போற்றும் மாலை
22.அங்கன் மா ஞாலத்து- கடாக்ஷ மாலை
23.மாரி மலைமுழஞ்சில்- பகவந் நியமன மாலை
24.அன்றிவ்வுலகம்- பகவத் க்ருபா மாலை
25.ஒருத்தி மகனாய்ப் பிறந்து- துக்க நிவாரண மாலை
26.மாலே மணிவண்ணா- பகவதநுக்ரஹ மாலை
27.கூடாரை வெல்லும்- பகவத்ஸம்ச்லேஷ மாலை
28.கறவைகள்- புருஷார்த்த மாலை
29.சிற்றம் சிறுகாலே- பாரமைகாந்த்ய மாலை
30.வங்கக் கடல் கடைந்த- ப்ரம்மானந்த மாலை

————-

மாலை கட்டிய மாலை–
ஸ்ரீ உ வே இளையவல்லி பூவராகாச்சார்யார் ஸ்வாமிகள் உபன்யாச சுருக்கம் –
தொகுத்து அருளியவர் –ஸ்ரீ உ வே -தாசரதி தாஸன், கிடாம்பி ஶ்ரீநிவாஸ ரங்கன் ஶ்ரீநிவாஸ தாஸன்.

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள், பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் அவதரித்து, அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய்
ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் வளரப்பெற்றாள்.
வட பெரும் கோயிலுடையானோடே தழுவி முழுசி பரிமாறவும் பாரித்தாள். அர்ச்சா சமாதியில் இருந்த அவன்
முகம் காட்டாதே ஒழிய, இன்னாப்படைந்தவளாய், அவனோடு கலந்து பரிமாறின திருவாய்ப்பாடிப் பெண்கள்
விருத்தாந்தம் கேட்டு தானும் அநுகரித்து தரிக்கப் பெற்றாள் என்கிறதான அவளுடைய சரித்திரத்தை பலரும் அறிவர் .
மடலெடுக்காதே, அவள் நோன்பிலே கை வைத்தது கிருஷ்ணனுடைய உபாயாந்தர அஸஹிஷ்ணுத்வத்தை கருத்திலே கொண்டு என்பர்.

பெரியாழ்வார் பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்டிருந்தார். ஆண்டாளோ பாகவத ஸம்ருத்தியை ஆசைபட்டாள்.
ஆண்டாள் பாடிய திருப்பாவை இதுக்கு ப்ரதீகம். பெரியாழ்வார் பிரதம பர்வத்திலே நிற்க,
இவளோ சரம பர்வத்திலே ஊன்றினளாய்- சத்ருக்நாழ்வான் படியிலே நிற்கப்பெற்றாள்.
”விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேலது காண்டும்”என்கிற
நாச்சியார் திருமொழி பாசுரம் (10-10) இதுக்கு விஷயம்.

அந்த வகையிலே அவள் பாடிய பாசுரங்கள் ஒவ்வொன்றுமே ஒரு புஷ்ப குஞ்ஜா (ஹாரம்) என்று சொல்லலாம்.
பாசுரங்களின் ஈற்றடியிலே வருகிற சொற்றொடர் களைக் கொண்டே அந்தந்த மாலைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது இங்கு.
இதற்கு முன்னால் இப்படி மாலை மலையால் கட்டியவர்கள் உண்டோ என்னில், ஆம் ! உண்டு என்றே சொல்லலாம் .

இலங்கைக்குத் தூது சென்ற திருவடி பிராட்டியைக் கண்டு சக்ரவர்த்தித் திருமகன் கூறியதாக சில அடையளங்களை
பெரியாழ்வார் ”நெறிந்த கருங்குழல் மடவாய்…” (3-10-1) என்கிற பதிகத்திலே
‘எல்லியம் போதினி திருத்தல் இருந்ததோர் இடவகையில் மல்லிகை மாமாலை கொண்டு அங்கார்த்தும் ஓரடையாளம் ‘
என்று பாசுரம் இட்டருளினார். அதன்படி சீதாபிராட்டி ராமனை மல்லிகை மாலையால் விளையாட்டாக கட்டியது ராமாயண பிரசித்தம்.
பெரியழ்வாரோ நந்தவனம் அமைத்து மாலை கட்டி சமர்ப்பித்த தோடு ஆண்டாளை ரங்கமன்னாருக்கு மணாட்டியாய்க் கட்டிக் கொடுத்து
மாமனாராகவும் ஆனார். ஆக, ‘மாலை மாலையால் கட்டிய மாலை’ என்றே ஆண்டாள் பற்றி ஒரு வழக்கு உண்டு.
அதாவது – திருமாலை பாமாலை கொண்டு கட்டிய கோதையாகிற மாலை – என்பதே அதன் பொருள்.

1. பாரோர் புகழ் மாலை :

அதாவது முதல் பாட்டின் ஈற்றடியில் ’பாரோர் புகழ படிந்து ஏலோரெம் பாவாய்’ என்று வருவதால்
இந்த பாசுரம் ’பாரோர் புகழ் மாலை’ ஆகிறது. அநந்யப் பிரயோஜன பரர்க்கு, புகழ்சி புருஷார்த்தமாகக் கூடுமா?
கியாதி, லாப, பூஜையில் கண்வைத்து பாசுரம் பாடலாமா? என்னில் ஸ்வவிஷயத்தில் அல்லாமல் பரார்த்தமான கியாதி உத்தேஸ்யமே.

மகிழ்சி ஒருவர் புகழ்தல் காரணமாக வருமது. ஆக காரணத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் கார்யத்தைச் சொன்னதாகப்
பார்க்கில், ’பாரோர் மகிழ படிந்து ஏலோரெம்பாவாய்’ என்று கொள்ள இடமுண்டு.
ஸ்வயம் பிரயோஜனமாகாதே பாரோர் மகிழ்வதைத்தான் ஆண்டாள் இங்கே பேசுகிறாள்.
’படிந்து’ என்பதில் உள்ள ஸ்வாரஸ்யம் ’விதேயனாய்’ இருந்து நாரயணன் நமக்கு கிருபை செய்வான்
என்பதை விசேஷித்து நோக்கத்தக்கது.
’நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான்’ என்று அன்வயித்துக் கொள்ள வேண்டும்.

கிருபை செய்யுமிடத்து எம்பெருமான் ஆஸ்ருத பரதந்திரனாய் இருந்து கார்யம் செய்யும் என்பதை ஆழ்வார்
’அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான்,
அது நமது விதிவகையே’ (திருவா.10-7-1) என்று முன்மொழிந்ததை, வழிமொழிகிறாள் ஆண்டாள்.
அதாவது, பிராப்ய-பிராபக விவேக ஞானம் உடைய பிரபன்னாதிகரிகள் விஷயத்தில்
எம்பெருமான் இப்படி கார்யம் செய்யும் என்பதிலே நோக்கு.
இப்படி பர ஸமிர்த்தியால் இவர்களுக்கு வந்த புகழ் என்பதால் இது ஏற்புடைத்து அல்லவே?

————–

2. இரண்டாம் பாட்டு -’உய்வு மாலை’ :

இப்பாட்டின் ஈற்றடி ’உய்யுமாறெண்ணி உகந்து’ என்பது. நோன்பில் ஒருப்பட்ட ஆண்டாள்
தத்விஷயமாய் விடவேண்டியவை இன்னது, அநுஷ்ட்டிக்க வேண்டியவை இன்னது என்கிற
கிருத்யாகிருத்ய விவேகம் பண்ணி யருளுகிறாள்.
அந்த வகையில் ஆண்டாள் சாதித்த ஆறு நியமங்களும்,
காஞ்சி தேவப்பெருமள் ஆறு வார்தைகளும்,
ஆழ்வார்கள் ஆறு வார்த்தைகளும் போல
நமக்கு உஜ்ஜீவன ஹேது என்றால் மிகையாகாது.

தேவப்பெருமாள் ஆறு வார்த்தைகளாவன :
௧. அஹமேவ பரம் தத்வம்;
௨. தர்சனம் பேதயேவச;
௩. உபாயேஷு பிரபத்திஸ்யாத்;
௪. அந்திம ஸ்மிருதி வர்ஜனம்;
௫. தேஹாவஸாநே மோக்ஷம்ச
௬. பூர்ணாசார்யம் (பெரிய நம்பி) ஸ்மாஸ்ரயேத் – என எம்பெருமானாரோடு மிக்குள்ள நம்மையும்
விஷயீகரிக்க திருக்கச்சி நம்பிகள் மூலம் அருளிச் செய்த வார்த்தைகளாகும்.

ஆழ்வாரகள் ஆறு வார்த்தைகளாவன :
௧. வதுவை வார்த்தை(திருவா.௫-௧0-௨);
௨. நெய்யூண் வார்த்தை(திருவா.௫-௧0-௩);
௩. வெண்ணை வார்த்தை(திருவா.௬-௨-௧௧);
௪. நடந்த நல்வார்த்தை(-“-௭-0௫-௯);
௫. மெய்மைப் பெருவார்த்தை (நாச்.௧௧-௧0);
௬. விடுத்ததோர் வார்த்தை (பெரி.௨-௮-௬).

1-வதுவை வார்த்தையாவது – எருதுகள் ஏழையும் நிரசித்தார்க்கு நப்பின்னையை மணமுடிப்போம் என்கிற வார்த்தை.
அது பிறந்தவளவிலே ஏறுகள் ஏழின்மேல் விழுந்து கண்ணன் கொன்ற விருத்தாந்தமும் ,

2-நெய்யூண் வார்த்தையாவது – நெய்களவு கண்டான் என்னும் வார்த்தை பிரஸ்துதமாக, தாய் யசோதை கையில்
கோல்கொள்ளவும் தன் தாமரைப்பூ போன்ற கண்களில் அச்சத்தோடே நீர்மல்க நின்ற கண்ணனின் எளிவரவும் ,

3-வெண்ணை வார்த்தையாவது – வெண்ணை களவு போயிற்று என்கிற வார்த்தையிலே ’கண்ணனே களவு செய்தான்’ என
தாயார் வைக்கோல் கொண்டு புடைத்தாளாக, கண்ணும் கண்ணீருமாய் நிற்கிற அவன் நிலை எதைப்போன்றது என்றால் –
ஒரு சத்திரத்தில் வழிப்போக்காக தங்க வந்த யாத்ரிகர்களிலே ஒருவர், மடம் இவ்வளவு பெரியதாக உள்ளதே,
இதனை மெழுகி கோலமிடுவார் யாரே? (அதி சிரமமான காரியமாகவிருக்கும் என்கிற அர்த்தத்தில்) வினவ,
யாரோ ஒரு அஸ்ரோத்ரியன் என்று இன்னொருவர் பதில் இறுத்தார்.
’இவ்வளவு பெரிய மடத்தை தன்னாலே மெழுகப்போகாது’ என்றானாம் அவர்களிலே ஒருத்தன்.
இப்படி அவன் தன்னை அஸ்ரோத்திரியன் என்று வெளிப்படுத்தினாப் போலே, வெண்ணை களவு போயிற்று
என்கிற வார்த்தையிலே தன்னைத்தான் சொல்கிறார்கள் என்று கண்ணன் அழத் தொடங்கினது, என்னே அவன் மௌடியம்.

4-நடந்த நல் வார்த்தையாவது – கண்ணனெம்பெருமான் தன்மேன்மையை அழித்துக் கொண்டு தாழவிட்ட நீர்மை
குணத்தை உணரலாகா தண்ணிய பூமியினின்றும் விடைப்பெற்று தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளிய போது
திரௌபதி விஷயமாய் ’தன்னைக் கடன்பட்டவனாக’ அதிருப்தியோடே மொழிந்த சீரிய வார்த்தைகள்.

5-மெய்மைப் பெரு வார்த்தையாவது – மாயன் அன்றைவர் தெய்வத் தேரினிற் செப்பிய கீதா-சரம ஸ்லோகத்தின்
செழும்பொருளை விட்டுசித்தர் கேட்டு அதன்படி இருப்பர் என்கிற ஆண்டாள் நாச்சியாரின் பெருமிதமான வார்த்தை.

6-விடுத்ததோர் வார்த்தையாவது – கஞ்சன் வஞ்சிப்பதற்கு விடுத்த வார்த்தைகளாகும். அஸரீரி வாக்கியம் கேட்டவன்று
தொடங்கி, தீயபுத்தி கஞ்சன் இருள்தான் ஒருவடிவு கொண்டாப்போலே கறுத்த நிறத்தையும், அக்நிஜ்வாலை போலே
சிவந்த தலைமயிரையும் உடையளான பேய்சியை, நேர்கொடு நேர்சென்றால் சாதிக்கலாகாது, வஞ்சத்தால் சாதிப்பாய் என்று
ஏவிவிட்ட வார்த்தை, கண்ணன் பிறந்தபோதே உண்டு என்ற இப்பெரியாழ்வார் வார்த்தையும் நமக்கு ஸ்மாரகம்.

எம்பெருமானார் ஆறு வார்த்தை :
1-பிரஸ்தான திரியங்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
2-ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
3-அருளிச் செயல்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
4-ரஹஸ்ய திரியங்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
5-இவை அறிந்த ஸ்ரீவைஷ்ணவனோடே சகவாசம் பண்ணுகை, மாட்டிற்றாகில்
6-திருநாராயண புரத்திலே ஒரு குடில் கட்டி நித்யவாஸம் செய்வது.

”அநந்யசாத்யா சாபீஷ்டா… ” என்ற பிரமாண வசனத்தின்படி சரணாகதிக்கு நம்பக்கல் இருக்க வேண்டிய
ஆறும் உத்கிருஷ்ட உஜ்ஜீவனோபாயம் என்பதில் விசம்வாதம் உண்டோ? இல்லை.

௧. பரமனடி பாடுகை,
௨. (நோன்புக் கனுகுணமாக) நெய், பால் உண்ணாமை, மை தீட்டல், மலர் சூடுகை இவை தாமாக செய்து கொள்ளாமை,
௩. (மேலையார்) செயாதவைகளை தவிர்கை,
௪. தீகுறளை (பகவத், ஆசார்ய சன்னிதியில்) விண்ணப்பிக்காமை,
௫. ஐயம் (சாஸ்திர விஹித) தானங்களையும்,
௬. பிச்சை (ஆஸ்ரம விஹித) தானங்களையும்,
ஆம்தனையும் அநுஷ்டித்துப் போருகை, ஆண்டாள் நமக்கிட்ட கட்டளை களாகும்.

’அது, இது, வுது என்னலாது, ”உன்செய்கை” என்னை நைவிக்கும்’ என்கிறபடியே பகவானால்,
பகவானுக்காக, பவானை குறித்து சொல்லப்பட்ட இவை அனத்துமே நமக்கு உஜ்ஜீவன ஹேது.

————–

7. ஏழாம் பாட்டு – தேச மாலை :

’தேசுடையாய் திற’ என்பது ஈற்றடி. இங்கு தேசு என்பது தேஜஸ் என்ற பொருளிலும், தேசம் என்ற பொருளிலும் வந்துள்ளது.
அதாவது, பிரஹ்ம ஞானமாகிற தேஜஸால் வந்த புகரை உடையவள் இந்த பெண்பிள்ளை என்பது.

’பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு (திருவாய்.௯-௨-௧) என்று ஆழ்வார்
தமக்கு எல்லா உறவின் காரியமும் குறைவில்லாமல் அருளப் பிரார்த்திதுப் பெற்ற சேஷத்வமே இங்கு தேஜஸ்.
அத்தையே இவர்களும் கண்ணனுக்கே உற்றோமாய் இருப்பதை ’பறை’ என்று இலை மறைவு காய் மறைவாய் வெளியிட்டார்களிறே.

எம்பெருமானார் மாறனேர்நம்பி போல்வார் ஹஸ்த ஸ்பர்சம் கொண்டு காவிரியில் ஸ்நானம் முடித்து கரைக்கு மீண்டவராய்
ஸன்னதி ஏற புறப்படுவார் என்றால் அது ஐஸ்வர்ய, ஆபிஜாத்யத்தால் வந்த அங்கீகாரம் அன்றி, ஆசார்ய பிரதிபத்தியால் வந்ததொன்று.

தேசம் என்ற பொருளில், பகவத் சன்னதி, இவள் இட்ட வழ்க்காய் கண்ணன் ஆக்கி இருக்கிறபடி.
எம்பெருமானார் ’உபய விபூதி’ ஸம்பன்னராய் இருந்தாப்போலே ஒரு பெண்பிள்ளை இவள் எனலாம்.

’பொன்னுலகு ஆளீரோ? புவனமுழுதாளீரோ? (திருவா.௬-௮-௧) என்று எம்பெருமானுக்கே சொந்தமான
பரமபதத்தை ஆழ்வார் பக்ஷிகளுக்கு அளிப்பதும் இவருக்கு விதேயமாய் அதனை பகவான் ஆக்கிவைத்த படியாலே.

நம்பிள்ளை காலக்ஷேப கூடம் விரியடைய வேண்டி, அருகிருந்த மனையும் கேட்டுப் பெற அதுக்கு ஈடாக
பரமபத்ததுக்கு சீட்டு எழுதிப் பெற்றாள், மனைக்குறிய ஒரு பெண்பிள்ளை என்பதிலே இது த்ருடீக்ருதமாகிறது அல்லவா?

———

8. எட்டாம் பாட்டு – அருள் மாலை :

ஆவா வென்றருள்! என்பது ஹ! ஹ!! என்கிற சந்தோஷ சூசகம் அன்றி வருத்தக் குறியும் ஆகக்கூடும்.
ஸந்தோஷமாக பேசினதுக்கு இடம் திருப்பாணாழ்வாரின் ’நீலமேனி ஐயோ! என்னை சிந்தை கவர்ந்ததுவே’ என்பதனைக் காட்டலாம்.
’தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் ஆவவென்று ஆராய்ந்து அருள்’ என்று முடிகிறது பாசுரம்.
கண்ணன் தான்சென்று அருள வேண்டி இருக்க, இவர்கள் நம் திருமாளிகை தேடி வந்ததோடு பிரார்த்திக்கும்படியும்
ஆனதே என்று வருத்தம் இரட்டிப்பாக, ஆ! ஆ!! என்று ஆவர்த்தி சொல்லிற்று.

சபரி, குகன், வீடணன் இவர்கள் விஷயத்தில் பரகதமான பகவத் ஸ்வீகாரம் தானும் இவர்கள் விஷயத்தில்,
ஸ்வகதமாகக் கடவதே? என்கிற வருத்தம் அவனது.

ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம்போல், ரத்னதுக்கு பலகரையும் பகவத் கிருபைக்கு பிரபத்தி அஸதுர்சம். அல்ப்பம்.
அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்பம். அவத்யக்ரம், என்று ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் திருவாக்கு.

மர்கட கிஷோரம் போல் ஸ்வகத ஸ்வீகாரம். மார்ஜால கிஷோரம் போல் பரகத ஸ்வீகாரம்.

அருள் பெறுகை அடியார்க்கு லக்ஷணம். அவர்களுக்கு விதேயனாய் இருந்து அத்தை பண்ணுவிக்கை,
’ஆராதனைக்கு எளியவன்’ என்கிற அவனுடைய ஸௌலப்யம் பிழைக்கவும் ஒரே வழி பரகத ஸ்வீகாரத்தாலேயே அன்றோ?.

———–

9. ஒன்பதாம் பாட்டு – திருமாம மாலை :

மாயா வயூனம் ஞானம் என்கிற நிகண்டு படி, எம்பெருமான் தன் இச்சா சக்தி-சங்கல்ப ஞானத்தைக் கொண்டு
பிறக்கிறான் என்பதை தானே கீதா ஶாஸ்திரத்தில் – பிரக்ருதி ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா என்றானிறே.
அத்தை ஆழ்வாரும் ”ஆதியம் சோதி” உருவை அங்கு வைத்து இங்கு பிறப்பதாக பேசியருளினார்.
தைவீக்யேஷா குணமயி மம மாயா துரத்யயா என்று ஆத்மாக்களை பந்திப்பதும்,
மாமேவ ஏதாம் தரந்திதே என்று விடுவிப்பதும் தானே என்றும் பேசினபடியை நோக்கலாம்.
இது தவிற அவனுடைய ஆஸ்சர்யகரமான சேஷ்டிதங்கள், மநுஷ்யத்வே பரத்வத்துக்கு விவக்ஷிதங்கள் என்றால் மிகையாகாது.

மாதவன் : என்றால் பெரிய பிராட்டிக்குத் தவன் – கேள்வன் என்றும்,
”மற்றவரை சார்த்தி இருப்பார் தவம்” என்கிற நான்முகன் திருவந்தாதி (௧௮) பாசுர கணக்கில்,
தவமாவது சேதன லாபத்துக்காக அவன் உத்யோகிக்குமது தொடக்கமானவை.
அன்றிலே.
தவமாவது ஈஶ்வரனை ஆஶ்ரயிப்பது. மாதவமாவது அவன் அடியார்களை ஆஶ்ரயிப்பது என்று கொண்டால்
அவர்களுக்கு பரதந்ரனாய் கார்யம் செய்து தலைக்கட்டுவது, அவன் மாதவனாக இருந்தமைக்குப் பிரயோஜனம் எனலாம்.

வைகுந்தன் : ’வேர் முதல் வித்து’ என்று தன் பரத்வே பரத்வம் தோற்ற பரமபதத்தில் இருக்கும் இருப்பு.

பகவத் விஷயத்தில் சொன்ன இவை தமயே ஆசார்ய பரமாக பார்ப்போமாகில் –

மாமாயன் என்பதை ”பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப, இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு,
புன்மையினோரிடைத்தான் புகுந்து தீர்த்தான் இருவினையும் தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான்,
இவை எம்பி இராமாநுசன் செய்யும் அற்புதமே” (௫௨) என்கிற இராமானுச நூற்றந்தாதிப் பாசுரத்தைக் கொண்டு பார்க்கில்,
எம்பெருமானைப் போலவே, எம்பெருமானாரும் புற மதத்தவர்களை ஒருபாடு நடுங்கச்செய்தது;
ஆஶ்ரயித்திருக்கு மவர்களை தன்னைப் போலவே ஆத்ம குண ஸ்ம்பன்நர்களாக்கி பாபங்களையும் கட்டோடு கழித்து,
நம்பெருமாள் திருவடிகளுக்காக்கும் இவர் செயல்களும் ஆச்சரிய்மானவையே அன்றோ?

மாதவன்: என்பது ஸ்வாத்யாய நிரதம். இதுவும் ஒருவகையில் தபஶுதான்.
பரபக்ஷ நிரஸனுத்துக்காக வேத, வேதாந்தங்களிலே அந்வயித்தவராய்,
அருளிச்செயல்களே பொழுது போக்காய் தலை நின்றவர் எம்பெருமானார்.

வைகுந்தன்: என்பது இவர் விஷயத்தில் வைகுண்ட பிரதத்வமாகிற ”உபாய” கிருத்யமாகும்.
’வைகுண்ட மணிமண்டப மார்கதாயி’ என்று இவர் ஸம்பந்தம் உண்டாமால் மோக்ஷம் என்பது ஸம்பிரதாயம்.

ஆக, எம்பெருமான் விஷயமாகவும், ஆசார்ய விஷயமாகவும் பல நாமங்களைச் சொன்னோம் –
நாமம் பலவும் நவின்று – என்று பூங்கண்ணி புநைதமையைப் பேசினாள் ஆண்டாள்.
இதுவே அவள் கட்டிய ”திரு நாம மாலை”.

———

10. பத்தாம் பாட்டு – தேற்ற மாலை :

தேற்றமாய் வந்து திற. நீயும் தேறி, எங்களையும் தேறும்படியாக வந்து திற என்பது பொருள்.

தேற்றம் தெளிவு. அதாவது, ஞானத்தில் தெளிவு.
திருநெடுந்தாண்டகப் பாசுரம் (௨௧) ’இருவராய் வந்தார் என்முன்னே நின்றார்’ என்றவிடத்தில் வியாகியானம்
இருவராம்படி வந்தார் என்று காட்டியுள்ள படியால், தேற்றமாய் வந்து என்ற இந்த இடத்திலேயும்
தெளிவு ஏற்படும் படி என்கிற அர்த்தத்தை தருவித்துக் கொண்டால், இந்த பாசுரத்தில் எழுப்பப் படும் பெண்பிள்ளை
இவள் வாயைத் திறக்க, கலங்கிய பிறர் புத்தி தெளியும் என்றபடி.

பகவத் விஷயத்தில் பேற்றுக்கு உபாயமாக ஒன்றை செய்ய முற்படுகை கலக்கம்.
’மாம் ஏகம் சரணம் விரஜ’ என்ற கீதாசாரியன், உபாயாந்தர்ங்களை விட்டே தன்னைப் பற்ற வேண்டும் என்றருளிச் செய்தான்.
திருவேங்கட மலையிலே அத்தை அபிநயித்து காட்டியும் நிற்கிறான்.
இதையே, பகவத் பிரவ்ருத்திக்குத் தடையான ஸ்வப்பிரவ்ருத்தி நிவிர்த்தி சரணாகதி என்பர் .
’சித்த வேண்டா, சிந்திப்பே அமையும்’என்று பேசினார் ஆழ்வாரும்.

சாஸ்த்ரிகள் தெப்பக் கையரைப் போலே சாஸ்த்ர விஹிதமான கர்மாக்களையும், எம்பெருமான் ஆகிய இரண்டையும் பற்றி
பிறவிக் கடல் நீந்துவர். ஸாரக்ஞர்கள் விட்டத்தில் இருப்பாரைப் போலே இருகையும் விட்டு கரைகுறுகும் காலம் பார்த்திருப்பர்.
இப்படி செய்த வேள்வியராய் பர ஸமர்பணம் செய்து விஸ்வசித்து இருக்க, மார்பிலே கைவைத்து உறங்கலாம்.

கலக்கமும், அதன் பரிஹாரமும் :

தேஹாத்மபுத்தி கழிய வேண்டுவது மகார வாச்யனான ஆத்மா ஞாநானத்தால் தேஹ வியதிரிக்தன் என்கிற அறிவு.

ஸ்வாதந்ரிய புத்தி கழிய வேன்டுவது பகவத் சேஷ வஸ்து ஜீவாத்மா என்கிற அறிவு.
அகாரத்திலே ஏறிக்கழிந்த லுப்த சதுர்த்தி இதைத் தெளிவிக்கும்.

அன்ய சேஷத்வ புத்தி கழிவது உகாரத்தால். ஏவ என்ற பொருளில், பகவானுக்கே சேஷப்பட்டவன் ஜீவாத்மா என்ற இத்தால்.

ஸ்வ ரக்ஷணே ஸ்வான்வய புத்தி கழிவதும் நம: பதத்தாலே. ம: ந என்று, பகவதேக ரக்ஷணத்வம் காட்டப்பட்டது இதிலே.

ஆபாச பந்துக்கள் பக்கல் புத்தி விலகுவதும் நாரயணனே ஸர்வவித பந்து என்று விஸ்வசித்த போது.

விஷய சபல புத்தி கழிகையும், ஆய என்கிற வியக்த சதுர்தி அநந்யப் ப்ரயோஜனதையை விளைவித்து.

பிராப்திக்கு வேண்டுவது ருசியும் விலக்காமையும். திரௌபதியும், கஜேந்திர ஆழ்வானும், ஸ்வயத்னத்தை விட்டவளவிலே –
நம: பதார்த்தம் தெரிந்து அநுஷ்டான பர்யந்தம் ஆனவளவிலே – ரக்ஷணம் பிறந்தது.
’சசால சாபஞ்ச விமோச வீர: என்று ரக்ஷணதுக்காக பிடித்திருந்த வில் விலகின அளவிலே,
’இன்றுபோய் போர்க்கு நாளை வா’ என்கிற வார்த்தை பிறந்தது. தலை வணக்கி அப்போதே வாழ்ந்து போயிருக்கலாம்.
அதற்கு அவகாசம் கொடாதே, தாக சாந்திக்காக உண்டான தடாகத்திலே கழுத்திலே கல்லைக் கட்டி விழுந்து
சாவாரைப்போலே, மாண்டு போனான் ராவணன்.

நீயும் தேறி, எங்களையும் தேறும்படியாக வந்து திற என்பதிலே உண்டான தெளிவு இவையே.

———-

11. பதினோறாம் பாட்டு – பொருள் மாலை :

நீ எற்றுக்குறங்கும் பொருள் ஏல் என பிரச்னம் இடுகிறாள் ஆண்டாள். இதுபோன்ற பிரச்னங்கள்தாம்
ஞாத பிரிச்னம் என்றும், அஞாத பிரச்னம் என்று இரண்டு வகை.
தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ளவே பிரச்னங்கள் எழுகின்றன.

பொருள் = அர்த்தம், பிரயோஜனம் ஏது என்று வினவுகிறாள் ஆண்டாள்.

எம்பெருமான், ஒரு ’வெள்ள வெள்ளத்தின் மேல் யோக நித்திரை’ செய்வது வைதிக உறக்கமாகும்.
நம்மவர்கள் உறக்கம் தமோ குண கார்யம். பகவான் கிருஷ்ணன் கீதை ௨-௬௬ ஸ்லோகத்தில்,
’யா நிஷா ஸர்வ பூதாநாம்’, ’யஸ்யாம் ஜாக்ருதி பூதாநி’ எது என்று விளக்க மளிக்கிறான்.
இதர விஷயங்களில் வைராக்யம் உறக்கம். பகவத் விஷயத்தில் ஈடுபாடு உணர்த்தி என்று பொருள் படும் இதற்கு.

’ஸுப்ரபாதாஸ்ச மே நிஷா’ என்று அக்ரூரரும்
’அன்று நான் பிறந்திலேன், பிறந்தபின் மறந்திலேன்’ என்று திருமழிசை ஆழ்வாரும்
பகவானின் முகத்தில் விழித்தலையே விடியலாக, ஸத்தா பிரயுக்தமாக நோக்க, மற்றது அதற்கு எதிர் தட்டான,
இரவு (அ) அசத்கல்பம் என்னவும் வேண்டுமோ?

——-

12. பன்னிரண்டாம் பாட்டு – அறிவு மாலை :

அனைத்தில்லத்தாரும் அறிந்து ஏலோரெம்பாவாய்.
அதாவது இவள் ஸகாசத்திலே எல்லோருக்கும் உணர்த்தி ஏற்பட்டது என்கிறாள்.
எம்பெருமானார் பிறந்தாற் போலே ஆயித்து, இவள் சேர்த்தியிலே எல்லோரும் பகவத் விஷயமறிந்தது.

ஓராண் வழியாச் சென்ற உபதேசம் தான் ’ஆசையுடையோர்க் கெல்லாம் ஆரியர்காள்! கூறுமின்’ என்று
பேசி வரம்பறுத்தார் எம்பெருமானார்.

’போதுவீர் போதுமினோ’ என்று இச்சையே அதிகார மாக்கினதும் இவளைக் கூடினபோதிறே.
எல்லோரும் அறிய வேண்டும் என்கிற விசாலமான திருவுள்ளம் படைத்த எம்பெருமானார் போல்வாள் ஒருத்தி யல்லளோ இவள்?

’மனத்துக் கினியான்’ என்று திருவாய்ப் பாடியிலே கண்ணனைத் தவிற வேறு ஒருத்தரைப் பாடுவதா?
ராமன் மனத்துக்கு இனியான் ஆகில், கண்ணன் இன்னாப்புக்கு விஷயமா என சில பெண்கள் கிளர்சி செய்ய,
இவள் ஒருத்தி ’இருவரும் ஒரே வியக்திதான்’ என்று சமாதனப் படுத்தி, எல்லோரும் அத்தை உணரும்படிச் செய்தாள்.
அதுக்குச் சேர, கிருஷ்ண விருத்தாந்தமும், ராம விருத்தாந்தமும் மாறி மாறி பேசும்படியான
’புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை’ பாசுரம் பிறந்தது அடுத்தது என்று அந்வயம்.

————–

13. கள்ளம் தவிர் மாலை :

போதரிக் கண்ணினாய் :
போது = போதம் என்பது போது என்று ஆகியுள்ளது.
அரிதலாவது அந்த ஞானத்தை சேகரிப்பதாகும்.
ஆசாரியனானவன் எப்போதும் ஞானத்தை சேகரிப்பதிலே கண்ணும், கருத்தாய் இருப்பர்.
பாவாய் : ஸ்த்ரீத்வம் அல்லது பாரதந்த்ரியத்துக்கு உடல்.
பரதாழ்வானைப் போலே வைத்த இடத்தில் இருக்கும் இருப்பு. இங்கே ஒரு ஐதிஹ்யம் காணலாம்.

ஒரு சமயம் பாஹ்யர்களால் ஸ்ரீரங்கத்துக்கு ஆபத்து வர, பெரிய நம்பிகள் எம்பெருமானாரிடத்தில் வந்து விண்ணப்பித்தார்.
பகவத் விஷயத்தில் ஆபத்தை போக்க அவனிடத்திலேயே பிரார்த்திக்க வேணுமாய்
”சூழ வலம் செய்ய கடுவினை களையலாமே” என்கிறபடி திருவரங்க வீதிகளிலே பிரதக்ஷணமாய் வர ஆபத்து விலகும்,
அதற்கு பெரிய நம்பிகள் தன்பின்னே நிழல் போல் வருவாரைப் பிரார்த்தித்து வேண்ட,
உடையவரும் கூரத்தாழ்வானை அனுப்பி வைத்தார் என்பது குருபரம்பரை சரித்திரம்.
முக்குறும்பு அறுத்தவரான ஆழ்வானும் ப்ராசாரியரின் பின்னே செல்ல தயங்குவாரோ?
ஆனபோது எம்பெருமானாருக்கு பரதந்திரராய் மாற்றுப் பேச்சு உண்டோதான்?

ஸ்ரீமத் ராமானுஜ சரனௌ சரணம் பிரபத்யே |
ஸ்ரீ மதே ராமானுஜாய நாம: ||
என்ற ஜகதாசாரியர் விஷயமான துவய மஹா மந்திரத்தில் ”மதுப்பு” பிரத்யாத்தல் பகவத் விஷயமான
துவயத்தில் பிராட்டிகீடாக இங்கே பேசப் படுமவர் கூரத்தாழ்வான் என்றால் அவருக்குண்டான
ஸ்த்ரீத்வ பூர்த்தி யோடேயான ஆசாரியனைச் சொல்லுகிறது இங்கு.

கள்ளம் தவிர்கையாவது ”ஓராண் வழியாய்ப்” மற்றையோர்க்கு ஒளித்துப் போந்ததை
”ஆசை உடையோர்க்கு” எல்லாம் ஆக்கின கிருபாமாத்ர பிரசன்னா சாரியர் இருந்தபடி.

ஸ்வயம் பாகத்திலே வயிறு வளர்க்காமல் ”சாது கோஷ்டியில் உட்கொள்ளப் படுவாரே” என்கிறபடி
எம்மையும் அங்கீகரித்து அனுபவத்தை பகுமுகமாக்கப் பிரார்த்தனை.

——————–

14. பதினாலாம் பாட்டு – பாடல் மாலை :

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு.

’ராமம் மாநுஷம் மந்யே’ என்று ராமன் தன்னை மநுஷ்யனாகவே காட்டிக்கொள்ள ஆசைப்பட்டான்.
அதற்காகவே, சதுர் புஜங்களை மறைத்து, த்விபுஜனாகவே அவதாரத்தை நடத்தி முடித்தான். என்றாலும்
ஹநூமான், மண்டோதரி போல்வாருக்கு தன் நான்கு தோள்களை காட்டினான் என்பதை ருஷி வெளியிட்டுள்ளார்.

மண்டோதரி வியக்தமாக கண்டதுபோல் ஹநூமான் காணவில்லை ஆனாலும், ’ஆயதாஸ்ச, ஸுவ்ருதாஸ்ச’ என்கிற
பகு வசன சப்தங்களால் இதனை ஊகிக்கமுடிகிறது. ராம லக்ஷ்மணர்களைச் சேர்த்து பகுவசனப் ப்ரயோகம் என்று
மறுக்க வழியுண்டானாலும், வால்மீகி, த்விவசன இலக்கணம் கொண்டே அதனை ஸ்லோகமாக்கி யிருக்கலாம்.
அப்படியல்லாமல், பகுவசனமாகவே ஸ்லோகம் அமைத்ததுக்குத் தாத்பர்யம், ராமன் ஹனூமானுக்கு
நான்கு தோள்களோடே தன்னைக் காட்ட ஹனுமான் அவனக் கண்டார் என்பது உறுதியாகிறது.

எம்பெருமான் திருக்கண்கள் காதுவரை நீண்டதின் தாத்பர்யத்தை பராசர பட்டர்,
ராஜாக்கள் நாடு பிடிக்கும் ஆசையில் பக்கத்து தேசங்கள்மேல் படை எடுத்து வசமாக்குவது போல்,
அவனுடைய கண்களும் அருகிருந்த காதுவரை நீண்டு பாய்ந்தாக் கிரமித்ததாய் அருளிச் செய்தார்.

உய்ந்த பிள்ளை என்கிற அரையர், பெரியாழ்வார் திருமொழியில் உள்ள, ’அப்பூச்சி’ காட்டும் பிரகரணத்துக்கு
அபிநயம் பண்ணா நிற்க, எம்பார் உள்ளீரோ? என்று கேட்டதான, எம்பெருமானார் விஷயமான ஐதிஹ்யம் இங்கு நோக்கத்தக்கது.

————

15. பதினைந்தாம் பாட்டு – மாயனைப் பாடு ஏலோரெம்பாவாய்.

’நானே தான் ஆயிடுக’ என்று பாகவத விஷயத்தில் இருக்கும் இருப்பு சொல்லப்பட்டது இதிலே.

கந்தாடை தோழப்பர் நம்பிள்ளை விஷயத்திலே இல்லாத குற்றங்களை ஏறிட, அதற்கு பிள்ளயும் இசைந்தித்டார்,
”என்ன உலகாரியனோ?” என்று அவரால் அழைக்கப்பட, அப்பேர் அவருக்கு விலகாமல் வந்து பரந்தது.

செய்யாத குற்றத்தை ஏறிட்டாலும், இசைந்து, அதற்கு க்ஷமாபணம் வேண்டுவது உத்தம ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணம்.

இப்படிபட்ட ஆத்ம குணம் உடைய பெண் பிள்ளையை எழுப்புகிறாள் ஆண்டாள்.
எழுந்திருந்து செய்ய வேண்டிய காரியம் தான் என்ன, என்று வினவ, மாயனை பாட வேண்டும் என்கிறாள்.

கண்ணன் மாயங்களாவன வல்லானை கொன்றது, மாற்றார்களை அதாவது சாணூர-முஷ்டிகர்களை அழித்தது இத்யாதி.
தொண்டரடிப் பொடியாழ்வார் ’கவளமால் யானை கொன்ற கண்ணன்’ என்றும்,
நம்மாழ்வார் ’வார்கடா வருவி யானை மாமலையின் மருப்பினைக் குவடிறுதுருட்டி(திருவா. ௮-௪-௧)என்றும் பாடி விஸ்மயித்தனர்.

ராக்ஷசர்களில் ஒருத்தனான ஹிரண்யனனைக் கொன்று, ப்ரஹ்லாதனை ரக்ஷித்தான்.
ராவணனைக் கொன்று, விபீஷணனை ஏற்றான். பக்ஷிகளில் ஒன்றான காகாசுரனை நிக்ரஹித்து ஜடாயுவை வானேற்றினான்.
நாகங்களின் ஒன்றான காளியனை விரட்டி, கருடனின்று காத்து தக்ஷனுக்கு அடைகலம் கொடுத்தான். இதுவல்லவா அவன் மாயம்.

முதல் ’பாடல் மாலைக்கு’, பகவத் அநேக குணங்கள் விஷயம்.
இரண்டாவது ’பாடல் மாலைக்கு’ அவனுடய வீர தீர பிரதாபங்கள் விஷயம்.

————

16. பதினாறாம் பாட்டு – நீ நேய நிலைக் கதவம் நீக்கு என்றபடியாலே இது ஒரு ”நேச மாலை” :

இதிலே உள்ள வெஞ்சார்த்தம், ஸ்வாமி எம்பெருமானார் விஷயமான ஸ்வாபதேசம் எனலாம்.

நந்த கோபன் குமரன் – எதிராஜ சம்பத் குமாரர்க்கு பிதாவான இவர்,
நந்த கோபனுடைய கோயில் – தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்த கோயில் சாவியை
திருவரங்கத்து அமுதனார் கையினின்றும் ஒரு உபாயத்தால் பெற்றார்,
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்போன் – ’கொடியணி நெடுமதில் கோபுரம்’ (திருவா. ௧0-௯-௮)
பரமபதமாகிற விஷ்ணுலோக மணிமண்டப மார்க்க தாயியாகிற நீர்,
மணிக்கதவம் – நவ ரத்னங்கள் போன்ற கிரந்தங்கள் வாயிலாக, வேதாந்த விழுப்பொருள்களை,
தாள் திறவாய் – காலக்ஷேபம் ஸாதித்தருள வேண்டும்.
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் – ’பவிஷ்யத்’ புராணதிலேயும், ஆழ்வருமாக
’பொலிக, பொலிக பொலிக’ பதிகத்திலே இவர் அவதாரத்தை சூசிப்பித்ததோடு
’பவிஷ்யத்’ ஆசார்ய விக்ரகத்தையும் உபகரித்த படியால்,

தூயோமாய் வந்தோம் – உபாய, உபேயங்களில் சுத்தியோடே வந்த எங்கள்,
துயிலெழப் – ’அநாதி மாயயா ஶுப்த’ என்கிற அக்ஞான அந்தகாரத்தை விலக்கக் கடவீர்.
பாடுவம் – ’கலியும் கெடும் கண்டு கொள்மின்’ என்கிற பாட்டு பிரஸ்துதமாகக் கடவது.
நீ நேச நிலைக் கதவம் நீக்கு –

கதவு இரண்டு கபாடங்களாக விருக்கும். நிலைக்கதவம் நிலைத்த ரக்ஷண லாபத்துக்காக நேசத்தோடே
ஒன்றொடு ஒன்று கவ்வி இணந்திருக்கும். அந்த வகையில்
மந்த்ரம், மந்த்ர சேஷம் என்று இரண்டு பாகமாய் இருக்கும் திருமந்த்ரம்;
நிலை நின்ற ரக்ஷண ஆஸ்வாசகர பகவத் வசனமாகிற சரம ஸ்லோகமும்;
பூர்வார்த்தம்-உத்தரார்தம் என்று இரண்டு பகுதியாய்;
அதுபோலே பூர்வ கண்டம், உத்தர கண்டம் என்று இரண்டு கண்டங்களோடே கூடியதுமான துவய மஹ மந்த்ரம் –
நேர்த்தியான பிராட்டி ஸம்பந்தத்தோடே கூடியதாய்,
மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவை கோயில் கதவம் போலே ரக்ஷிகின்றன.
இவைகளின் விசேஷார்த்தங்களை ஸ்வாமி, உம்முடைய நிர்ஹேதுக கிருபை கொண்டு
உபகரிக்க வேண்டும் என்கிறாள் இந்த ’நேச மாலை’ கொண்டு ஆண்டாள்.

————-

17. பதினேழாம் பாட்டு – உறங்கா மாலை :

உம்பியும் நீயும் உறங்கேல் எம்பாவாய்.

இதிலே சொல்லப் பட்ட ஸ்வாபதேசார்த்தம் ஆசாரியன், திருமந்திரம், திருமந்திரார்த்தம் மற்றும்
மந்திர ஸாரம், முறையே நந்தகோபன், யசோதை, கிருஷ்ண, பலராமர் இவர்களைக் கொண்டு சூசிப்பிக்கப் படுகின்றன.

நந்தகோபன் என்கிற பதம் ஆனந்தம் அளிப்பவர், ஶ்ரீசூக்திகளை ஸம்ரக்ஷிபவர் என்கிற
தத் விந்யாசத்தின்படி, ஆசாரியனைக் காட்டும்.
பர்தாவினுடைய படுக்கையும், ப்ரஜையையினுடைய தொட்டிலையும் விடாதே இருக்கும் யசோதை,
பிரதம சரம பதங்களை விடாதே பற்றி இருக்கும் மத்யம பதம் (’உ’ காரம்) போலே அமைந்தது, இவர்கள் மூவரின் கிடக்கை

அம்பரம் ஊடறுத்தது ஓங்கி உலகளந்த வியாபாரம் வியாப்திக்கு விஷயமாகையாலே, நாராயண பதார்தமுமாக, திருமந்திரம்,
அடுத்ததான, கிருஷ்ண, பலராமர்களின் ஸ்நிக்த்த பாவம் திருமந்திர சாரத்தையும் உபன்யஸிக் கின்றன..
ஆசாரியன் அம்பரம், தண்ணீர், சோறு என்று அவர் செய்யும், தானம்-உபகாரம்தான், பரமபதம், விரஜை ஸ்நானம்,
மற்றும் அஹமன்னம், அஹமன்னம் என்கிற ஆத்ம ஸமர்பணத்துக்கான வழி.

மந்திர ஸாரமாவது, ’நின் திருவெட்டெழுத்தும் கற்று, உற்றதும் உன் அடியார்க்கடிமை’ என்கிறபடியே
ததீயத்வத்தை ஸ்தாபிப்பது, பலராமனுக்குத் தம்பியாக பிறந்திருக்கிற படியாலே, அவதாரத்துக்குச் சேர
சேஷத்வமும், அண்ணனானாலும் பலராமன் ஸ்வரூபத்துக்க்ச் சேர சேஷத்வம் பாராட்டி உணர்த்தி மறுக்கில் நாம் இழந்தே போம் அத்தனை.

ஆசார்ய ருசிபரிக்ரஹீதமான பகவத் பிரேமம், பகவத் ருசிபரிக்ரஹீதமான ஆசார்ய அபினிவேசம் இவைதானும்,
ஒன்றை மற்றொன்றிலே மூட்ட, ’பெரிய வண்குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் திரிதந்தாகிலும் தேவபிரானுடை
கரிய கோல திருவுருக் காண்பன் நான்’ என்னக் கடவதிறே. ஆதிநாதன்-தேவபிரான் தண்ணளி பெறுகையும் இதுகொண்டு.

ஆழ்வாருக்கு ’நெடுமாற்கடிமை’ பதிகம் பாட, கீழில் ௮-பத்து வரை செல்ல வேண்டியிருந்தது.
இவ்விடத்தில் ஒரு ஐதிஹ்யம் காட்டப் படுகிறது. ஸ்வந்திரனாய் இருந்து ஒருவன் மீண்டு பகவத் சேஷத்வத்துக்கு இசைந்தவனாய்,
பின் பாகவத சேஷத்வத்துக்கு வரக் காணில், பகவான்தானும் முகம் சுளிக்குமோ? என்று பட்டர் வினவ,
’அல்லிக் கமல கண்ணனாய்’ இருக்கும் என்று அவர் சிஷ்யர் நஞ்சீயர் பதில் அளித்தார் என்று காட்டப் பட்டுள்ளது.
அதாவது ’ஈஸ்வர சேஷம்’ என்று அறிந்த வன்று பிரமித்து மிளலாம். ததீய சேஷத்வ பர்யந்தமாக உணர்ந்தால் மீள வேண்டாவிறே.

————-

18. பதினெட்டாம் பாட்டு – வந்து திறவாய் மகிழ்ந்து – மகிழ் காலை :

நப்பிந்னை நங்காய் என்று ஸ்திரீத்வ பூர்த்தியும், புருஷகர பூர்த்தியும் உடையவள். எங்கனே என்னில்,
ஈஸ்வரனை அழகாலே திருத்துமவள், சேதனனை அருளாலே திருத்தும்.
கிருஷ்ணா வதாரத்திலே புருஷகார பூதை நப்பிந்னை பிராட்டியாதலால், திருவாகிறாள்.

கந்தம் கமழ் குழலி, செந்தாமரைக் கை, சீரார் வளை ஒலி என்று மூக்கு, கண், காது இவை பட்டினி போகாதே
தளிர்க்கும்படி வந்து திறவாய் மகிழ்ந்து, என்பது ஆண்டாள் விண்ணப்பம். ஆசாரியனுக்கும் உபாய வைபவம் உண்டாகையால்,
அவனைக் காட்டுவதாகவும் தொன்யர்த்தால் விளங்கிக் கொள்ளலாம்.

பந்து – சிஷ்ய வர்கத்துக்கு உபலக்ஷணம். செந்தாமரைக் கை அவருடைய உபதேச முத்திரைக்கும்,
வளை ஒலிப்ப என்பது பாசுரங்களின் தொன்யர்த்த விளக்கங்களுக்குமாய்,
வந்து திறவாய் மகிழ்ந்து – திருமாளிகை கதவை திறந்து, வாயைத் திறந்து, பட்டினி கிடந்து அறிய வேண்டிய
அர்த்தங்களை ’ஆசையுடையோர்கெல்லாம் ஆரியர்காள் கூறும்’ என்ற வகையிலே,
’கூடு மனமுடையீர்கள் வந்து கூடுமின்’ என்றிவைகளிலே சொன்ன மர்ம சிரத்தை உடைய அதிகாரிகளாகிய எங்களுக்கு,
’நனும் சொன்னேன், நமரும் உரைமின்’ என்று அத்தை ஸர்வாதிகர மாக்கி உபதேசிக்க வேண்டும்.
இத்தால் பயன் எமக்காய், மகிழ்சி உம்மதாக வேண்டும் என்கிறாள். இதுவே ஆண்டாள் காட்டிய ’மகிழ் மாலை’.

————

19. பத்தொன்பதாம் பாட்டு – தத்துவமன்று, தகவன்று ஏலோரெம் பாவாய் – தகவு மாலை :

மைத்தடங் கண்ணி – பக்தி சித்தாஞ்சனம் ஆகிற பகவத் விஷயத்தில் ஈடுபாடு.
நீ, உன் மணாளனை – ஈஸ்வராய நிவேதிதும் என்றும்,
நாரீணாம் உத்தமை என்றும் சிஷ்யனை ஈஸ்வர சேஷமாக்குகை.
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் – ஆத்மாக்கள் எல்லாம் அவனுக்கு மஹிஷி பிராயரே ஆயினும்,
ஆசாரியன் அபிமத மஹிஷியாகிறர். பிராட்டி பரிகரங்களாய் இருக்கிற நம்மை, தன்பரிகரமாக்கி
முந்துர காரியம் செய்ய வேண்டி ஸ்வகதமாக தான் விழைபவன்.

தத்துவ மன்று – ”தது+த்வம்” அன்று.
’தத்வமஶி’ ஸ்வேதகேதோ! என்கிற வேத வாக்யத்துக்கு சொல்லப்பட்ட அத்வைத பரமான அர்த்தம் தவறு என்று காட்டி மீட்காவிடில்,
தகவன்று – உம்முடைய கிருபைக்குச் சேராது. இதுவே ’தகவு மலை’.

—————–

20. இருபதாம் பாட்டு – இப்போதே எம்மை நீராட்டு – நீராட்ட மாலை :

’இஹிபஸ்யதி ஶரீராணி’ என்று தண்டகாரண்ய ருஷிகள் ராமனிடம் காட்டியது போல,
விரஹம் தின்ற தங்கள் உடம்பைக் காட்டி ’எம்மை நீராட்டு’ என்கிறார்கள்.

உன் மணாளனையும் தந்து – விசிரி, கண்ணாடி அத்தோடு உன்மணாளனையும் தர வேண்டும்.
’எம் தமை விற்கவும் படுவார்களே’ என்கிற ரீதியில், அசேதன வஸ்துக்களுக் கீடாக எடுத்தாளும்படி
பகவானும் தன்னை ஆக்கி வைதிருக்கிற ஸௌலப்யம்.

இப்போதே எம்மை நீராட்டு – கைங்கர்யம் கொள்ளாமை அவனுக்கு தாபம் என்றால் அதை இழக்கை எமக்கு வெக்கை.
’க்ரீஷ்மே ஸீதமிவக்ருதம்’ என்கிறபடியும், ’த்வதீக்ஷண ஸுதாஶிந்து வீஶிவிக்ஷேப ஸீகரைஹி’ என்கிறபடியும்
உன் திருக் கண்நோக்காகிற தீர்த்தம் கொண்டு நீராட்டு என்றபடி.

’ஒருபகல் ஓர் ஊழியாலோ’ என்று பேசினபடி பிரியில் தரியாமை யாகிற வாற்றாமை,
விலகும்படியாக இப்போதே எம்மை நீராட்டு என்று த்வரிக்கிறார்கள்.

——————-

21. இருபத்தோராம் பாட்டு – போற்றியாம் வந்தோம் புகழ்ந்து – புகழ் மாலை :

துயிலுணர்ந்தவாறே வந்த வரத்துக்குக் காரணம் போற்றிப் புகழ்தல் என்கிறார்கள்.
குணத்துக்குத் தோற்று வந்தவர்களாதலால், அவைதம்மையே விஷயமாக்கிப் பாடுகிறார்கள்.

ஊற்றமுடையாய் – ’ஶாஸ்த்திர யோனித்வாத்’ என்கிறபடியே, ஶாஸ்த்திர வாக்கியங்களைக் கொண்டே ”ப்ரஹ்மம் ” அறியத்தக்கது .

பெரியாய் – யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஶாஸஹ’ என்கிறபடியே, வேதத்தாலேயே அறியப்படுமவனாகிலும், ’வேதாதிகன்’

உலகினில் தோற்றமாய் நின்ற – வேதாதிக்னாய் இருந்து வைத்தும், ஸகல மனுஜ நயன விஷயமாம்படி பிறந்து, அத்தால்

சுடரே – பிரகாசிக்கிறான். ’ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந:’ என்று பெருமை அடைகிறான்.
இதிலே ’உ’ என்பது ’ஏவ’ என்கிற பொருள்பட, பிறந்தே பெருமை அடைகிறான் என்றும்,
பிறந்து பெருமையே அடைகிறான் என்றும், பிறந்து பெருமை அடைந்தவனாகவே ஆகிறான் என,
புரத: பஶ்சாதபி ஸ்தாந: என்பதாக ஸ்தானத்ரயத்திலும் அந்வயம்.

அன்றியே,
ஊற்றமுடையாய் – ஆஶ்ருதர்களை ரக்ஷிப்பதில் சுதி இல்லாதவன்.
வானர முதலிகள் விபீஷணனை ’கெட்டவன்’ சேர்கக்கூடாது என்ன,
ஹநூமான் ’நல்லவன்’ சேர்த்துக் கொள்ளலாம் என்ன, இருவரையும் ஒப்புவித்து,
’கெட்டவன் அதனால் சேர்த்துக் கொள்ளலாம்’ என்று அங்கீகரிக்கிற விரத்ததை உடையவன்.

பெரியாய் – மறுதலித்த ஸுக்ரீவன் தானும், ராமனை இதற்காக கொண்டாடும் படியாக அமைந்த பிரபாவத்தை உடையவன்.

தோற்றமாய் நின்ற – தன்னுடைய ஆஶ்ருத பக்ஷபாதம் பிரகாசிக்கும் படியாகவும், அத்தை ’தன் பேறாகவும்’ செய்து முடிப்பவன்.
’பீஷ்ம, த்ரோண அதிக்ரம்ய, மாம்ஸ்ச மதுஸூதந. கிமர்த்தம் புக்தம் விருஷட போஜனம்’ என்று கேட்கும்படியாய் அமைந்த பக்ஷபாதம்.

சுடரே – ’ஐவர்க்கு அருள் செய்து, பார்மல்கு சேனை அவித்த, பரம் சுடர்!’ என்றும்,
’இன்னார் தூதன் என நின்றான், எவுள் கிடந்தானே’ என்றும் அவனுடைய, நீர்மை, எளிவரவால் வந்த ஔஜல்யம்.

இப்புடைகளிலே போற்றிப்-புகழ்ந்து வந்தோம் என்பதான ’புகழ் மாலை’.

—————

22. இருபத்திரண்டாம் பாட்டு – எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து – சாப நிவர்த்த மாலை :

நம்முடைய அபராதங்கள் எம்பெருமான் கண்களை செம்பளிக்கப் (மூடப்) பண்ணும்.
அவனுடைய அபராத ஸஹத்வம் (க்ஷமை) திருக்கண்களை அலரப்பண்ணும். கோடை ஓடிய பயிரிலே ஒருபாட்டம்
மழை பெய்தாப் போலே, ஸாத்மிக்க, ஸாத்மிக்க அவனுடைய அருள் நோக்கை வேண்டுகிறாள், இப்பாசுரத்தில் ஆண்டாள்.

’இவையும், அவையும் உவையும்’ (திருவா. ௧-௯-௧) – பதிகத்திலே ஆழ்வாருக்கு பகவான்
தன்னுடைய ’ஸாத்மிய போக பிரதத்வமாகிற’ குணத்தைக் காட்டி கொடுத்தான்.

போக மண்டபமாகிற ஶ்ரீரங்கத்தில், திருமணத் தூண்களைப் பற்றியன்றி பெரிய பெருமாளின்
திருக்கண் நோக்காகிற பிரவாகத்திற்கு எதிர்விழி கொடுக்கப் போகாது.

’அற்றார்க்கு’ சீற்றத்துடனும், மற்றயோர்க்கு அருள் கொண்டும் நோக்க வேண்டி,
திங்களும், ஆதித்யனுமாய் இருக்கிற கண்கள் என்றாள். பின்னை தவறு என்றுணர்ந்து,
தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு
நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி ”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள்.

இவர்கள் சாபம் விஸ்லேஷ ஜனித விரக தாபமாகும். அதுக்கு வழி, அவன் சன்னதி யேற வந்து
தலைப் பெய்தலாகிற யாதிருச்சிக சங்கதிகளை ஆண்டாள் இயம்புகிறாள். எவை என்னில் –

தேஹாத்மாபிமானத்தை தொலைத்து – ஆசார்ய ஸஹாசத்திலே -; ஈஸ்வர சேஷத்வத்துக்கு இசைந்தனாய் -;
பகவாதேகே உபாயத்தின் மூலம் -; அவர்களின் கைங்கர்யமே பிராப்யம் என்பது வரையிலான
யாதிருச்சிக, ஆநுஷங்கிக, பிராசங்கிக ஸுக்ருதங் களாகும்.

அகல்யை திருவடியாலும், தூர்வாசர் திருகரங்களாலும், நள-கூபர்கள் முழந் தாள்களாலும்,
மது-கைடபர்கள் தொடையினாலும், ருத்ரன் மார்பு வேர்வையினாலும் சாபம் விலகப் பெற்றனர்.
அவனுடைய ஜாயமான கடாக்ஷத்தால் வந்த ஞானம், அவன் திருவடிகளிலே விழப்பண்ணும்.
விழுந்தவனை அஞ்சேல் என்று கைகவித்து ரக்ஷிக்கும்.
ஆக, அவனுடைய, கண், கால், கை மூன்றும் உத்தேஸ்யம் நமக்கு.

பகவத் பிரபாவம் இதுவானால், ஆசாரியனின் ஒருகண் (உட்கண்) நோக்கு -திருஷ்டி யதிசயம்-
முக்கண்ணன், எண்கண்ணன், ஆயிரம் கண்ணர்களாகிற ஹரி, பிரம்மா, சிவன் இவர்கள் யாருக்கும் சமன் செய்யப் போகாது.

ஆளவந்தார், ’ஆமுதல்வன்’ என்று இளையாழ்வாரை கடாக்ஷித்த படியாலேயே அன்றோ
ஸம்பிரதாயத்துக்கும், ஸம்சாரிகளுக்கும் வாழ்சி வானளவாயிற்று?.

————-

23. இருபத்து மூன்றாம் பாட்டு – யாம் வந்த காரியம் ஆராய்ந்தருள் – அருள் மாலை(௨) :

’ஆவா வென்றருள்’ என்கிற திருப்பாவை ௮-ஆம் பாட்டில் ஒரு ’அருள் மாலை’ புனையப்பட்டது.
இங்கே ௨௩ ஆம் பாட்டிலும் ஒரு ’அருள் மாலை’ பிரஸ்துதமாகிறது.
அங்கே சொன்னது ’அருள்வான்’ என்று பவிஷ்யத் வசனமாக.
தாங்கள் சொல் பாவினை ’வினவி அருள்’ என்கிற பொருளிலே இங்கே இப்பாட்டு பிரஸ்துதமாகிறது எனலாம்.

அகதிகளாக வந்தோம். ஆற்றாமையால் குண ஜிதர்களாக வந்தோம். மற்றையோர்களுக்கு ஆகாதபடி வந்த
எங்களை பெற்றாலும் பெறு! இழந்தாலும் இழ!! என்று வந்த சிறுமிகள் விண்ணப்பித் தார்களாக,
தன்னைப் பெற்றும் அகதிகள் என்று சொல்லப் போமோ? உங்கள் காரியம் செய்ய சித்தமாய் இருகிற என்னிடம்,
வந்த காரணத்தை சொல்லுங்கோள் என்ன, கண்ணன் கிடந்த கிடக்கையும், ஸுப்ரபதாமும் சேவித்த தங்களுக்கு
நடை அழகும், வீற்றிருந்த கோலமும் காட்டியருள வேண்டும் என்பதாக இப்பாசுரம்.

நடை, கொடை, வடை, முடி என்று கோயில், பெருமாள் கோயில், திருமலை, திருநாராயண புரம் பிரசிதமாய்
நம்பெருமள் நடை அழகு லோகவிஸ்ருதம். சிம்ம கதி, மத்த கதி, வியாகிர கதி, ஸர்ப்பகதி என்று சதுர்கதி பிரசித்தி அவருக்கு.

பெருமாள் நடையழகு காவ்ய பிரசித்தம் என்பதற்கு, சுமித்ரை வசனம் ஓர் எடுத்துக்காட்டு.
’ராமே பிரமாதம் மாகார்ஷி’ என்று லக்ஷ்மணனுக்கு அவள் செய்த உபதேச வார்த்தை இங்கு நினைவு கூறத்தக்கது.

’அக்ருதப் பிரயயௌ ராம, சீதா மத்யே, ஸுமத்யம’ என்கிற வால்மீகி வாக்குப் படி,
சீதை ராகவ சிம்மத்தின் பின் நடந்தது, அவன் நடை அழகை பின் இருந்து காண ஆசைப்பட்டாப் போலே.
யாதவ சிம்மமாகிற கண்ணனெம் பெருமானுடைய நடையழகை அனுபவிக்க ஆசைப்படுகிறாள் ஆண்டாள் இங்கு.

தாங்கள் வேண்டி வந்ததை கொடுக்கும்போது, படுக்கை அறை வார்த்தை ஆகாதபடி, கொலுமண்டபத்தில்
சேர-பாண்டியன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆராய்ந்தருள வேண்டும் என்கிறாள்.
எம்பெருமானார் கத்யம் விண்ணப்பித்த போது, ”அஸ்துதே|| தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே||” என்றருளிச் செய்தாப் போலே
’சீரிய சிங்காசனத் திருந்து’ வாக்தானம் பண்ண பிரார்த்திக்கிறாள்.

’முனிவேழம்’ (இரா.நூ-௬௪) என்றும், ’மறைவாதியராம் புலிமிக்கது’ (இரா.னூ-௮௮) என்கிற அமுதனார்
வாக்குப்படி சடங்கர் வாயடங்க த்ரிவேதியாம் பத்ரவேதியிலே அமர்ந்து ’இரமானுச தர்சனத்தை’ நிர்வகித்தார், எம்பெருமானார்.

த்ரயீ வேத: என்று பொருள் படாமல், பேத ஸ்ருதிகளை நீக்கி அபேத ஸ்ருதிகளையே அவலம்பித்த சங்கரர்,
மற்றும் அபேத ஸ்ருதிகளை விலக்கி, பேத ஸ்ருதிகளையே கணிசித்த ஆநந்த தீர்த்தர் இவர்களைப்போல் அல்லாமல்,
கடக ஸ்ருதியோடு, பேத-அபேத ஸ்ருதிகள் வாசியற வேதம் முழுவதுமாக பிரமாண சித்தமாக்கின மதம்
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் அல்லது இராமானுஜ தர்சனம் என்று இதற்குப் பெயர்.
ஆராய்ந்து அருள் – திருச்செவி சாத்தியருள் என்பதாய் அமைந்த மாலை ’அருள் மாலை’ (௨).

————–

24. இருபத்துநாலாம் பாட்டு – இன்று யாம் வந்தோம் இரங்கு – இரக்க மாலை:

’சேனையோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மே அச்சுதா!’ என்ற அர்ஜுணன் வார்த்தைப்டி நடந்த
கண்ணனெம் பெருமான், அவனைவிட அதிக பக்தி யுக்தையளான ஆண்டாள் சொல்ல கேட்க மேட்டானோ?
’மே ரதயம் ஸ்தாபய அச்சுதா’ என்றதை ’மே அச்சுதா’ என்று கொண்டான் கண்ணன்.
அப்படியானால், அனன்ய ப்ரயோஜனை களான இவர்களுக்கு உகந்து கார்யம் செய்யத் தடை என்?

பிரேமத்தால் வந்த கலக்கத்தால், அஸ்தானே பயசங்கிகளாய், ரக்ஷகனான அவனை
ரக்ஷ்ய வஸ்துவாய் நினைப்பிட்டு ’போற்றி’ பாடுகிறார்கள். மங்களாசாசனம் ஸ்வரூப விருத்தமன்றோ? என்று கேட்டுக் கொண்டு,
ஸ்வரூப பிரயுக்தமே என்கிறார் முடிவில் ஸ்வாமி பிள்ளை லோகாசாரியர்.
கதே-ஜல சேது பந்தனம் போலே, அதீதகால விருத்தாந்தங் களுக்கு, காலோத்தரத்திலே மங்களாசாசனம் செய்யப் புகுவது இவளுக்கும்,
இவள் தந்தையான பெரியாழ்வாருக்கும் தொழில் எனலாம்.
அன்றிவ்வுலகம் என்று முன் அவதாரங்களில் நடந்தவைக் எல்லாம், கண்ணன் இந்த அவரத்தில் செய்தானக்கக் கொண்டு
’உன்சேவகமே ஏத்திப்பறை கொள்வான் இன்றுயாம் வந்தோம்’ என்கிறார்கள்.
பூர்வாவதார அபதானங்கள் என்றாலும் அத்தை இந்த அவரத்தில், பூர்வாவஸ்தோசித கார்யம் என்றே நினைப்பு இவர்களுக்கு.

கிருபையினால் கிட்டுமவை களுக்கு பிரார்த்திக்கவும் வேண்டுமா? என்னில்,
போஜனத்துக்கு க்ஷுத்துப் போலே இச்சையை ஆவிஷ்கரிக்கை உத்தேஸ்யம். இவன் நினைவு அவன் அறியானோ? என்னில்,
இவன் பாசுரம் கேட்டவாறே அவன் உகக்கும், என்பது ஸ்வாமி பிள்ளை லோகாசாரியர் திருவாக்கு..

இன்று யாம் வந்தோம் என்பதை ’இன்றியாம்’ வந்தோம் என்பதாக பார்க்குமிடத்து –
கர்ம-ஞான-பக்தி யோகங்கள் லவலேசமும் இல்லாதபடிக்கு – ஆகிஞ்சின்யத்தோடு வந்தமையைச் சொல்கிறது.

அவனுடைய இரக்கத்துக்கு விருத்தமாய்-உறங்குமவனை ,நாலடி நடக்கும் படியாய் விக்ஞாபிப்பது
இத்யாதி காரியங்கள் – அதிபிரவ்ருத்தியாய் முடியாது இருக்க, ’இரங்கு’ என்கிறார்கள், இந்த ’இரக்க மாலை’யில்.

———————

25. இருபத்தஞ்சாம் பாட்டு – வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து – வருத்தம் தீர் மாலை :

வந்ததும், பல்லாண்டு பாடினதும் ஒன்றை பெற்றுப் போகவோ?
என்னையும் வேண்டி, பறை என்றும் இதில் எதை உத்தேசித்து வந்தீகோள்? என்ன
பிரயோஜனாந்தர பரர்கள் போல் அல்லாமல், உன்னையே அருத்தித்து வந்தோம்.
பரமபதத்தினின்றும் எங்கள் இடம்தேடி வந்த உன்னை நாடி நாங்கள் வருவதில் என்ன குறை?
’துல்ய சீல வயோவிருத்த’ என்றபடி திருவுக்குத் தக்க உன் சீர்மையும், மூவாறு மாசம் மோகிக்கப் பண்ணும்
உன் விக்ரமங்களையும் பாடுவதையே பிரயோஜனமாகக் கொண்டு வந்தோம்.
பறை தருதியாகில் – நோன்பை வியாஜமாக வைத்து வந்தோம். நாட்டாருக்காக பறை என்று சொன்ன எங்கள்
காரியம் செய்ய திருவுள்ளமாகில் இசைந்து செய் என்கிறார்கள் இப்பாட்டில்.

’தம்சேயம் அஶிதேக்ஷணா’ என்று இருவருக்கும் ஸாம்யம் பலபடி இருந்தாலும், கண்ணழகில் வந்தால்,
பிராட்டிக்கே உன்னதி. ’நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதிறே’ என்பது பட்டர் திருவாக்கு.

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி – ’நாரீணாம் உத்தமை’ யினுடைய அவஸ்தை வரக்கடவதான
பரம பத பிராப்தியும், இருவருமான சேர்த்தியிலே செய்கிற கைங்கர்யம் இரண்டையும் பிரார்த்தித்து வந்தோம் என்றுமாகக் கடவது.

வருத்தம் தீர்கையாவது – நித்ய கைங்கர்யத்துக்கு தடையான சரீரம் விலகுகை, சம்ஶாரம் கழிகை
அதன்றியும் மகிழ்வாவது, அவ்விருவரின் ஆனந்தத்தைக் கண்டு இவன் ஆனந்திக்கை.

”ஆத்யந்த துக்கத் துவம்ச: மோக்ஷம்” என்பது கைவல்யர்களுடைய ஸித்தாந்தம். ஶ்ரீவைஷ்ணவ ஸ்ம்பிரதயத்தில்,
ஶ்ரீ வைகுண்டப் பிராப்தியோடு, நித்யசூரிகளோடே கூடி இருந்து பகவத், பாகவத கைங்கர்யத்திலே திளைக்கை,
மோக்ஷம். அத்தை ஆண்டாள் பிரதிபாதிக்கிறள் இந்த ”வருத்தம் தீர்” மாலையில்.

—————

26. இருபத்து ஆறாம் பாட்டு – ஆலின் இலையாய் அருள் – அருள் மாலை (௨) :

ஒருத்தி மகனாய் பிறந்த போது, தன் மேன்மை தோற்ற வந்து ’பிறந்தான்’. தோன்றினான் என்பதைக் காட்டிலும்,
பிறந்தான் என்று சொல்வதிலே அவனுக்கு ஆனந்தம். ஒருத்தி மகனாய் வளர்ந்தபோது,
தன் நீர்மை, எளிமை எல்லாம் பிரகாசிக்கும்படி வளர்ந்தான் என்கிற மர்மம் அறிந்து பேசுகிறாள் ஆண்டாள் இதிலே.

”பிரம்மஸூத்திராதி” களிலே அவன் பிறந்ததாக பிரஸ்தாபமில்லை. பராசர மஹரிஷியும் ’தேவகி பூர்வசந்தியா ஆவிர்பாகம்’
என்று அவன் அலௌகிக கர்பவாசம் செய்த்தாகவேப் பேசினார்.
’ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை’ என்று ஆண்டாளும் கீழில் சொல்லி இருக்க,
அத்தை மாற்றி ’ஒருத்தி மகனாய்ப் பிறந்து’ என்றபோதே கண்ணன் முகம் முகிழ்ந்ததாக வாயித்து.
’பிறந்தவாறும், வளர்ந்த்வாறும்…’ என்று ஆழ்வார் சாதித்தபடி இவளும் பேசலுற்றது அவனுக்கு மகிழ்வே.

ஆனால் கம்சனுக்கு பயந்து நந்தகோபருடைய திருமாளிகைக்கு ’காரிருள் எல்லில் பிழைத்து’ வந்தேனாக சொன்னது தவறு.
உண்மையில் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தது ’ஜாத் யிடயனுக்குத்’ தான், கும்பக் கோனார் தன் பெண்ணான,
நப்பினையை மணம் முடிது வைப்பதாக அறிவித்திருந்தார். முடியுடை யதுகுல பிறப்பால் அது சாத்தியம் அகாதென்பதற்குச் சேர,
குழந்தை அழுது, பால்குடிப்பது போன்ற வியாபாரங்களை திருவாய்ப் பாடிக்கு வந்தபிறகே வைத்துக் கொண்டானானான்.
அன்றி கம்ச பயம் தனுக்கில்லை என விவரித்து பின் நீங்கள் வேண்டி வந்த பறைதான் ஏது என்ன,
நோன்புக்கு வேண்டிய உபகரணங்களை தர பிரார்த்திக்கிறார்கள்.

என்னையே வேண்டி சாதனாந்தரத்திலே கைவைப்பதே? என்று அவன் வினவ, உன் சன்னிதி கிடைக்கும் என்று
இசைந்தோம் அன்றி. இப்படி அனுமதிப்ரதானம் பண்ணினவர் பக்கல் கிருதக்ஞதா ஆசக்தியாலே
அவற்றை தந்தருள வேண்டும் என்கிறார்கள்.

மாலே என்று தொடங்கி, ஆலின் இலை என்று முடித்த படியால், இப்பாட்டுக்கு விஷயம் ’மால்’.
அதாவது, மாலே-விலுள்ள ’மா’ மற்றும் ’ஆல்’-லிலுள்ள ’ல்’ இரண்டுமாக, ’மால்’ எனவாயித்து.
மால் என்பது அவனுக்குண்டான ஆஸ்ருத வியாமோகத்தைச் சொல்லும். தூத-சாரத்தியம் பண்ணின ஸௌலபியம்,
அருச்சுணன் தேர்த்தட்டிலே ’மாம்’ என்று தன்னை தொட்டுக் காட்டின ’ஸர்வசக்தி யோகம் ’ இரண்டும் இதுக்கு விஷயம்.

சரணாகதையளான திரௌபதிக்காக எல்லாம் செய்து, ஒன்றும் செய்யப் பெற்றிலேன் என வியசனிப்பதும்,
இத்தனை எளியனானாலும் ’கொல்லாமாக் கோல் கொண்டு, பாரதத்துள் எல்லா சேனையை அவித்ததும்’
அவனுடைய ’அகடித-கடனா’ சாமர்தியத்தாலே அன்றோ?

பல்லாண்டு பாடுகைக்கு பெரியாழ்வாரையும், மங்கல தீபத்துக்கு நப்பின்னை பிராட்டியயும், கொடிக்கு பெரிய திருவடியும்,
விதானத்துக்கு திருவநந்தாழ்வானையு மாக நித்திய விபூதி பரிகரங்கள் எல்லாரையும் கொடுத்து
ஸ்வரூபம் நிறம்பெற செய்தவனுடைய ’அருள் மாலை’ இதுவாகும்.

————

27. இருபத்து ஏழாம் பாட்டு – கூடியிருந்து குளிர்ந்து – குளிர் மாலை :

கூடமாட்டேன் என்கிறவர்களை சௌரிய பராக்கிரமங்களாலும்,
அபிமுகர்களை சௌசீல்யாதி ஆத்மகுணங்களாலும்,
உதாசீனர்களை சௌந்தர்யாதி சரீரகுணங்களும் கொண்டு ஜெயித்தவனாகிறான் கண்ணனெம் பெருமான்.

ராமனுக்கு பட்டாபிஷேகம் என்று முடிவு செய்த தசரதன், அவனை அழைத்துவரக் கூற,
சுமந்திரன் ராமனை திருமனையில் கண்டு செய்தி தெரிவித்தான். அந்தப்புர வாயில் வரை வந்த சீதையின்
காலைத் தொட்டு ராமன் அவளை அங்கேயே நிற்கச் சொல்ல, பதிஸந்மாநிதையளான சீதை கறுமுகை மாலைபோல்
தன் இருகண்ணாலே இராகவனுக்கு மாலையிட்டாள். அஶிதேக்ஷணை அல்லவா அவள்.
அப்படியான சன்மானம் தங்களுக்கு வேண்டும் என்கிறார்கள்.

ராவணவதம் ஆனபின்பு, அபிஷிக்தனாய் இருக்குகிற ராமன் கையில், தன் குடியிருப்பை பெற்றுத் தந்த
உபகார ஸ்மிருதியோடே இந்திரன் ஓர்முத்து மாலையை பரிசளிக்க, அதனை அவன் தன் பாமினியான
சீதையின் கையில் கொடுத்தான். அவளும் இங்கிதத்தால் புரிந்து கொண்டு, ஹிருஷ்ட மனத்தளாய் ஹநுமனுக்கு வழங்கினாள்.
அப்படிப்பட்ட பரிசு தங்களுக்கு வேண்டும் என்றும் விண்ணப்பிக்கிறாள் ஆண்டாள்.

அத்தைக் கொடுக்கும்போது, பாரோர்புகழம்படி அவை இருக்க வேண்டும் என்கிறார்கள் மேல்.
சுக-சாரணர்கள் ராமனின் வானர சேனையின் பிரபாவத்தை ராவணனிடம் ஒற்றர் வார்த்தையாக புகழ்ந்து சொன்னது போலேயும்,
தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணனை அண்டைகொண்ட பலத்தால் பாண்டவகளுக்கே ஜெயம் என்பதை
சஞ்சயன், திருதராஷ்டனுக்கு படிந்து சொன்னாப் போலேயும், நாடுபுகழும் பரிசு தங்களுக்கு வேண்டும் என்கிறார்கள்.

’மாறாளன் கவராத மணிமாமைக் குறைவிலமே’ (திருவா.௪-௮-௧) என்று ஆழ்வார் இரந்தது போல,
கண்ணனைப் பிரிந்த காலத்திலே ’மலரிட்டு நாம் முடியோம்’ என்ற ஆண்டாளும்,
அவனை கூடியபோது பெற வேண்டிய பரிசுகள் இன்னவை என்று பட்டியல் இடுகிறாள் அடுத்து.
சூடகம், தோள் வளை, தோடு, செவிப்பூ என்று கண்ணன் பிடித்த கைக்கும், அணைந்த தோளுக்கும்,
குழல் கொண்டு தூது விட்ட காதுக்குமாக அலங்கார அணிகலனும், பால் சோறு, கூறை இவையோடு
கூடி இருந்து குளிர வேண்டும் என்கிறாள்.

இவர்கள் நீராட்டம் கூடி இருந்து குளிர்வதே. அன்றி திருமுக்குளத்தில் சென்று குளிப்பதோ,
பால்சோறு உண்கையோ அல்ல.
”த்வதீக்ஷண ஸுதாஸிந்து வீசிவிக்ஷேப ஶீகரை:| காருண்ய மாருதாநீதை: ஶீதலை ரபிஷிஞமாம்||” என்பதே இவர்கள் நீராட்டம்.
அத்தை ’துணைத் தேட்டமாக’ அமையப் பிரார்த்தித்தாள். க்ஷுத்ர விஷயத்துக்குத் தனித்தேட்டம் போல்,
பகவத் விஷயத்துக்கு துணைத்தேட்டம் உத்தேஸ்யமே.
’அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை’(திருவா.௧0-௯-௧௧) போலேயாம் மிது.

———————-

28. இருபத்து எட்டாம் பாட்டு – சித்த சாதன நிஷ்டை (துவய பூர்வ கண்டார்த்தம்) : ’ஸ்வ நிகர்ஷ மாலை’ :

௧. பேற்றுக்கு உபயமக நல்லது ஏதும் எம்மிடம் இல்லை.
௨. அத்தை சம்பாதிப்பதற் கீடான ஞானமும் இல்லை என்கிற உபாயத்தில் சுத்தியுடையோம்.
௩. ஆர்ஜித ஸுக்ருதமில்லை ஆனாலும் அயத்ன-சித்த ஸுக்ருதமான கண்ணனே நீ! உள்ளாய்.
௪. எங்களாலோ, உன்னாலோ அல்லது இருவரும் கூட்டாகவோ ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தமும் உள்ளபடியால்,
௫. பூர்வபராதங்களை, தட்டியில் வார்த்தைகளான நாராயண நாம ஸ்வீகாரத்துக்கும், ஸ்வாராத்யனை துராராத்யனாக
காட்டினமைக்கும் மாகச் சேர்த்து க்ஷாமணம் வேண்டுகிற எங்களுடைய
௬. உபாய கிருத்யத்தை, புருஷகார பூதையான நப்பின்னையின் பேரில் ஏறிடாதே இறைவா! நீ தாராய் பறை என்று அர்த்திக்கிறாள்.

யக்ஞசிஷ்டாசநி என்கிற கர்ம யோகம்,
சாஸ்திர வஸ்யதை என்கிற ஞான யோகம் இரண்டும் இல்லை ஆனாலும்,
பும்ஸாம் நயதீயிதி புண்ய: என்கிற சாக்ஷாத் புண்யம் எங்களிடம் உண்டு.

கர்ம, ஞான யோகங்கள் கார்ய வேளையில் புருஷனையும்,
பல வேளையில் ஈஸ்வரனாகிய உன்னையும் எதிர்பார்த்து இருக்கும்.
நீயோ ஸ்வீகார வேளையில் புருஷனையும், புருஷகார பூதையான பிராட்டியையும் அபேக்ஷித்தாலும்,
கார்ய வேளையில் உபய-நிரபேக்ஷனாய் தானே கார்யம் செய்யக் கடவாய் – என்கிற சித்த சுத்தியும்,
கார்ய சுத்தியும் உடைய எங்கள் கார்யம் செய்துமுடிப்பாய் என்கிற ’ஸ்வநிகர்ஷ மாலை’ இதுவாகும்.

—————-

29. இருபத்து ஒன்பதாம் பாட்டு -கைங்கர்யப் பிரார்த்தனை (துவய உத்தர கண்டார்த்தம்)- பிராப்ய மாலை :

’பறை’, ’பறை’ என்று ஒன்பது முறை சொன்னதின் தாத்பர்யம் இதில் விளக்கப்படுகிறது .

௧. பிராப்ய ருசி இருக்க ஒட்டாதே விடியோரை வந்தோம்.
௨. பிராப்யமான திருவடியை பிராபகமாகவும் கொண்டோம்.
௩. கைங்கர்ய பிரதிசம்பந்தியான உனக்கு அத்யாபகை களானோம்.
௪. எங்கள் கண்ணிலும், முலையிலும், இடையிலும் அன்யபரதையை விலக்கி அதாவது
ஞான, பக்தி, வைராக்கியங்களிலே தப்தனாகாதே, பிரியில் மூச்சடங்கும் படியான
தரதன் போன்ற உறவும், சீதை, லக்ஷ்மணன் போல ’நாங்களும் அக்குளத்தில்’ மீனாக வேண்டும்.
௫. பரமபதத்தில் இருந்து எங்களைத் தேடி வந்த கண்ணனான உனக்கே நாம் ஆட்செய்வோம்.
௬. கைங்கர்யத்தில் களையாகிற ஸ்வபோக்த்ருத்வ புத்தியாகிற காமத்தைக் களைந்து
எங்கள் சேஷத்வம் நிறம்பெறச் செய்வாய் என்றும் நியமிக்கிறபடி இதுவாகும்.

உபேயத்தில் சுத்தியாகிற பரார்த்த-கைங்கர்யம் இவர்களுக்கு உத்தேஸ்யம். எம்முடைய ஆனந்தம்,
எமக்கும் உனக்குமான ஆனந்தம் என்றல்லாமல், உனக்கேயான ஆனந்தம் ஏற்படும்படியாக குற்றேவல்லளைக்,
ஏவிட்டு பணிகொள்ள வேணும் என்கிறாள் என்னவுமாம்.

”தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே” என்று ஆழ்வார் ’எம்மாவீட்டில்’ புருஷார்த்த நிஷ்கர்ஷம் பண்ணினபடியும் இதுவாகும்.

அடுத்து :

கோவிந்தா – அகாரம்.
உனக்கே – ஏவகார சப்தத்தால் உகாரம்.
நாம் – மகாரம்.
பொற்றாமரை அடி – உபாய வாச்யமாய் ’நமஸின்’ அர்த்தம்.
உற்றோமேயாவோம், உனக்கே நாமாட்செய்வோம் – நாராயண பதம்.
மற்றைநம் காமங்கள் மாற்று – ஆய பதார்த்தம் என்கிற வின்யாசத்தாலே

பெரிய திருமந்ரார்த்தமும் இதுக்குள்ளே உண்டு என்பர்.

முதற் பாட்டில் ’நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ஸங்க்ரஹேண சொன்ன
’ப்ராப்ய-ப்ராபகங்கள்’ விவரிக்கப் பட்டன இந்த இரண்டு பாடல்களால்.
’தூயோமாய் வந்து நாம்’ என்கற ௫ஆம் பாட்டு உபாயத்தில் சுத்தியும்,
’தூயோமாய் வந்தோம்’ என்கிற ௧௬ஆம் பாட்டு உபேயத்தில் சுத்தியுமாக சொல்லப்பட்டவை,
இங்கு மேலும் விளக்கப் பட்டன என்பதும் நோக்கத்தக்கன.

—————-

30. இனி பலஸ்ருதியான முப்பதாம் பாட்டு ’திருவருள் மாலை’ எனலாம்.

பலம், பிராப்யம் நமக்கு மிதுன சேஷத்வமாகையாலே, பிராட்டி ஸம்பந்தத்தையிட்டே உபஸம்ஹரிகிறாள் ஆண்டாள்.
பட்டர்பிரான் கோதை என்று தன்னை ஆசார்ய சம்பந்தத்தையிட்டும் நிரூபிக்கிறாள்.
ஈஸ்வரன் புருஷகாரமானால் அல்லது காரியம் செய்யான்.
ஆசார்ய சம்பந்தமோ நேரே பிராப்யத்தைப் பெற்றுத் தரும் என்பதற்கு ஆண்டாள் அவதார முடிவே நமக்கு நிதர்சனம்.

’செங்கண் திருமுகம்’ – பகவத் அனுக்ரஹம் தானும் ஸ்வாதந்ரியம் கலசினபடியாலே பயஹேது.
பிராட்டி அனுக்ரஹம் கேவலம் கிருபை மட்டுமே.

செல்வத் திருமால் – திருமந்திரம், சரம ஸ்லோகம் இரண்டிலும் ஶ்ரீசம்மந்தத்தை ஸ்தான விசேஷத்தாலும்,
அர்த்த பலத்தாலும் தருவித்துக் கொள்ள வேண்டும்.
அப்படியல்லாமல் துவய பூர்வ, உத்தர கண்டங்களில் சொன்னபடியே இதில் பிராட்டி ஸம்பந்தம் சுஸ்பஷ்டம்.

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் – பெரிய பிராட்டியாலே பேறாகையாலே-
இவள் புருஷகாரமானால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான், ஆகையால், அவளுடைய வருளாலே
ஸம்சாரதிலும், பரம பதத்திலுமாய் – பகவத் ஸாந்நித்யத்தைப் பெற்று இன்புறுவர் என்கிறாள்.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாமாலையானது –
பூமாலையும் ஆகக்கடவது என்று உபகிரமித்தது அர்த்த புஷ்டியோடே முற்றிற்று.

————-

வேயர் புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிக விளங்க விட்டு சித்தன்
தூய திரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய் மாலை முடி சூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும்
நீ யுரைத்த தை யொரு திங்கட் பா மாலை
ஆய புகழ் நூற்று நாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்கு கருள் செய் நீயே–ஸ்ரீ தேசிகன் பிரபந்தம் –

கோதை பிறந்தவூர் கோவிந்தன வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றுமூர் – நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகளோ துமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதை தமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.–ஸ்ரீ வேதப் பிரான் பட்டர் அருளியவை

இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய். (22)

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோ மனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு (23)

அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து (24)

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும் புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண் புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே -தாசரதி தாஸன், கிடாம்பி ஶ்ரீநிவாஸ ரங்கன் ஶ்ரீநிவாஸ தாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே இளையவல்லி பூவராகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழியும் அர்த்த பஞ்சகமும் —

December 19, 2020

ஸ்ரீயப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள்.
இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள்.
இதன் ஏற்றத்தை பரமாசார்யரான ஸ்ரீ நம்பிள்ளை ஈட்டிலே
“ஆழ்வாருக்குப் பின்பு நூறாயிரம் கவிகள் போறும் உண்டாய்த்து. அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியற
அவற்றை விட்டு இவற்றைப் பற்றி துவளுக்கைக்கு அடி, இவருடைய பக்தி அபிநிவேஶம் வழிந்து புறப்பட்ட சொல் ஆகையிறே!”
என்று கொண்டாடியருளுகிறார்.

ஸ்ரீ கம்பர் தம்முடைய ஸ்ரீ சடகோபர் அந்தாதியில் குறிக்கும் பொழுது –
அந்தமிலா மறையாயிரத்தாழ்ந்தவரும் பொருளைச்
செந்தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களுந்
தந்தம் விழாவும் அழகும் என்னாம்? (சடகோபர் அந்தாதி – 14)
[அழிவில்லாதனவும் அநேக ஆயிரம் சாகைகளாக உள்ளனவுமான வேதங்களின் சாரார்த்தத்தை
தமிழ்த் திவ்ய ப்ரபந்தங்களாகச் சீர்திருத்தி அருளிச் செய்யாதிருந்தாரானால் அந்தணர்களும்
அவர்கள் கொண்டாடும் உத்ஸவங்களும் எங்ஙனம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயும் யாதாய் முடியும்] என்று குறித்தருளுகிறார்.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில் இவ்வாழ்வாரின் திருவாய்மொழி அனுபவத்திற்குத் தடையாக எழுந்தருளினார்
என்று கோஷ்டி கலைக்கும் பெருமாள் வந்தார் என்று செல்வர் புறப்பாடினை நிறுத்திக் கொண்டார்கள் என்றால் –
அதன் மூலம் திருவாய்மொழியின் ஏற்றம் நன்கு விளங்கும்.

“வேத சதுஷ்டய அங்கோபாங்கங்கள் பதினாலும் போலே இந்நாலுக்கும் இருந்தமிழ் நூற்புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன்மாலைகளும்” (43) என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை கொண்டு உணரத்தக்கது.

இவருடைய அருளிச் செயலான திருவாய்மொழிக்கு, கல்பந்தோறும் சதுர்முக ப்ரஹ்மாவிற்கு வேதத்தினைக் கொடுத்தவனான
ஸ்ரீரங்கநாதன் வேத ஸாம்யத்தைப் ப்ரஸாதித்தருளினான்.
இது தன்னை ஸ்ரீ கோயில் ஒழுகிலும்,
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த கலியன் அருள்பாடு என்னும் க்ரந்தத்திலும் காணலாம்.

இதனை த்ராவிட வேத ஸாகரம் என்றார் ஸ்ரீமந் நாதமுனிகள்.
வேதத்தின் லக்ஷணங்கள் அனைத்தும் இத்திருவாய்மொழிக்கு உண்டு என்பதை வேத நூல்,
இருந்தமிழ்நூல் (45) என்னும்
சூர்ணிகையினால் காண்பித்தருளுகிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
இந்த திவ்ய ப்ரபந்தத்திற்கு வேதத்தோடுள்ள ஸாம்யமானது ஆசார்ய ஹ்ருதயத்தில்
ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரால் நன்கு நிலை நாட்டப்பட்டது குறிக்கொள்ளத் தக்கது.
இதற்கு ஸ்ரீ த்ரமிடோபநிஷத் என்றே திருநாமம்.

இத்தகைய பெருமை வாய்ந்த திருவாய்மொழியின் ப்ரமேயம் (திருவாய்மொழியினால் அறிந்து கொள்வது) அர்த்த பஞ்சகம் ஆகும்.
மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர்,
ஸ்ரீ திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்–என்கிற தனியனினால் அருளிச் செய்கிறார்.

ஆக (1) பரமாத்ம ஸ்வரூபம் , (2) ஜீவாத்ம ஸ்வரூபம் , (3) உபாயஸ்வரூபம், (4) விரோதி ஸ்வரூபம்,
(5) புருஷார்த்த ஸ்வரூபம் ஆகிய ஐந்து ஞானமே அர்த்த பஞ்சகம் என்பதாகும்.

இது தன்னை ஹாரீத ஸ்ம்ருதியில்
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]என்ற ஶ்லோகம் தெரிவிக்கிறது.

இந்த ஶ்லோகம் முமுக்ஷுப்படியில் வ்யாக்யானம் அருளிச் செய்யுமிடத்து ஸ்ரீ பெரிய ஜீயர் காண்பித்தருளுகிறார்.
அதற்கு அரும்பதம் அருளிச் செய்த ஸ்ரீ எம்பாவய்யங்கார் ஸ்வாமி
முநயஶ்ச மஹாத்மந: என்பதற்கு
மஹாத்மாக்களான முநிகள் என்பதால் – வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா என்று கீதாசார்யன் அருளிச் செய்தபடி
இங்கு ஆழ்வார்களே குறிக்கப்படுகிறார்கள் என்று காட்டியுள்ளார் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது.

ஸ்ரீ பாஷ்யத்திலும் இவ்வர்த்த பஞ்சகம் சொல்லுகிறது என்று கொள்ள இடமுண்டு.
முதல் இரண்டு அத்யாயங்களான ஸமந்வயம் மற்றும் அவிரோத அத்யாயாங்களாலே
எம்பெருமானே ஜகத் காரணன் என்பதை சொல்வதினால் பர ஸ்வரூபமும்,
ஆத்மாதிகரணம் முதலானவற்றில் ஜீவாத்மாவின் ஸ்வரூபமும்,
மூன்றாவது அத்யாயத்தில் முதல் பாதமான வைராக்ய பாதத்தினால் விரோதி ஸ்வரூபமும்,
அதற்கு மேல் உபாஸநம் சொல்லுவதால் உபாய ஸ்வரூபமும்,
அதற்கு மேல் புருஷார்த்தமான ப்ரஹ்ம ப்ராப்தியையும் சொல்லுவதால் அர்த்த பஞ்சகம் சொல்லியாயிற்று.

“அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதற்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்” என்கிறார் ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர்.
இதனை “ஞாதவ்ய பஞ்சக ஜ்ஞானம்” என்கிறார் ஸ்ரீ ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
அதாவது அறிந்து கொள்ள வேண்டிய அர்த்தம் அர்த்த பஞ்சகம் என்கிறார்.
ஸப்த காதையில் இதனை “அஞ்சு பொருள்” என்கிறார்.

இனி திருவாய்மொழியில் அர்த்த பஞ்சகம் அமைந்திருக்கும் படியை பார்க்கலாம்.
திருவாய்மொழி மொத்தம் 100 பதிகங்களால் ஆனது.
அதில் இவ்வர்த்தத்தை மொத்தம் 20 பதிகங்களில் விசதமாக்கி
மற்ற 80 பதிகங்களில் இது தன்னையே பரக்க அருளிச் செய்துள்ளார் ஸ்ரீ ஆழ்வார்.
இப்பொழுது முக்கியமான 20 பதிகங்கள் (ஒவ்வொரு ஜ்ஞானத்திற்கும் 5 பதிகங்கள் ) – அவற்றைப் பார்க்கலாம்.

பர ஸ்வரூபம்:
பர ஸ்வரூபம் என்றால் ஸகல கல்யாண குணநிதியாய், அகில ஹேயப்ரத்யநீகநான (தோஷங்களுக்கு எதிர்த்தட்டான)
பராத்பரனான ஸ்ரீமந் நாராயணனுடைய ஸ்வரூபம். அதனைப் ப்ரதிபாதிக்கும் (சொல்லும்) திருவாய்மொழிகள்,

உயர்வற உயர் நலம்
திண்ணன் வீடு
அணைவதரவணை
ஒன்றுந்தேவும்

“உயர்வற யுயர் நலம் உடையவன்“ என்று தொடங்கும் 1ம் பத்து முதல் திருவாய்மொழி பரத்வத்தில்
பரத்வம் சொல்லுகிறது என்பர் ஆசார்யர்கள்.
இதில் எம்பெருமான் “தம் ஈஶ்வராணாம் பரமேஶ்வரம்” (ஶ்வேதாஶ்வரோபநிஷத் ) என்கிறபடியே
பரர்களுக்கு எல்லாம் பரனாய் ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்.

முதல் பாசுரம் உயர்வற வுயர் நலம்
*உயர்வற வுயர் நலம் உடையவன்* என்பதினால் கல்யாண குண யோகத்தையும்,
*அயர்வறும் அமரர்கள் அதிபதி* என்பதினால் நித்ய விபூதி யோகத்தையும்,
*சுடரடி* என்பதினால் திவ்ய விக்ரஹத்தையும் அருளிச் செய்கிறார்.
திருவடியைச் சொன்னது திருமேனிக்கு உபலக்ஷணம்.

ஸர்வாதிகமான (எல்லாவற்றைக் காட்டிலும் மேலான) பரப்ரஹ்மத்திற்கு லக்ஷணம் (அஸாதாரணமான பண்பு)
கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாயும் தோஷங்களுக்கு எதிர்த்தட்டாயும் இருக்கை.
இதுவே உபயலிங்கம் எனும் அடையாளங்கள்.
இதனை அஸங்கேய (கணக்கற்ற)
அநவதிக (அவதி – எல்லை – அநவதிக – எல்லையில்லாததான) திருக்கல்யாண குணங்களை உடையவன்
என்பதை – உயர்வறவுயர்நலம் உடையவன் என்றார்.

இரண்டாம் பாசுரம் –மனனகமலமற
எல்லாவித தாழ்வுகளுக்கும் எதிர்த் தட்டாகவும் எல்லை யில்லாத திருக் குணங்களையும் உடையவனாய் இருக்கும் எம்பெருமான் –
சேதனம் எனப்படும் அறிவுள்ள சித் மற்றும் அசேதனம் எனப்படும் அறிவில்லாத அசித் ஆகிய
இரண்டு வஸ்துக்களைக் காட்டிலும் அத்யந்த விலக்ஷணன் என அவனது மேன்மையை அருளிச் செய்கிறார்

மூன்றாம் பாசுரம் இலனது நித்ய விபூதி (விபூதி என்பது ஐஶ்வர்யத்தைக் குறிக்கும்) போலே
லீலா விபூதியும் அவனுக்கு சேஷம் – அவனுக்கு உரியது என்கிறார்

நான்காம் பாசுரம் ஆய் நின்ற அவரே
இந்த லீலா விபூதியுனுடைய ஸ்வரூபம் பரமாத்மாவிற்கு அதீனம் என்கிறார். எப்படியென்னில்,
(1) ஸ்ருஷ்டியில் இதை உண்டாக்குவது பரமாத்மா தான்,
(2) வஸ்துக்கள் வஸ்துக்களாகும்படி அநு ப்ரவேஶித்ததும் அவன் தான்,
(3) இது அழியும் பொழுது ஸூக்ஷ்மமாகத் தன்னிடம் ஒடுங்கும்படி செய்வதும் அவன் தான்.

ஐந்தாம் பாசுரம் அவரவர் -இனி ஸ்திதியும் (இருப்பு) அவனது அதீனம் என்கிறார்.
அதாவது ஸர்வர்க்கும் அந்தர்யாமியாய் நின்று ரக்ஷிப்பது எம்பெருமான் என்கிறார்.

ஆறாம் பாசுரம் நின்றனர் இருந்தனர் கிடந்தனர் இங்கு ஶப்தங்கள் பன்மையாகப் படிக்கப்பட்டுள்ளன.
அதனால் எம்பெருமானைத் தவிர்ந்த அனைத்தின் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி அவனது அதீனம் என்பது இங்கு தெளிவு.

ஏழாம் பாசுரம்
உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே
ஏழாம் பாட்டில் ஜகத்துக்கும் ஈஶ்வரனுக்கும் உள்ள ஶரீராத்மபாவத்தை அருளிச் செய்கிறார்.
*சுடர் மிகு சுருதியுள் உளன்” என்பதினால் வேதத்தினால் சொல்லப்படும் பரம்பொருள் எம்பெருமான் என்கிறார்.
இங்கு “* சுடர்மிகு சுருதியுள் * என்கையாலே நாராயணாநுவாகாதிகளில் சொல்லுகிற பரத்வம்
லக்ஷ்மீ ஸம்பந்தம் இவையெல்லாம் அங்கீகரித்தாகிறார் *” என்னும் ஈட்டு ஸ்ரீ ஸூக்தி அனுஸந்திக்கத்தக்கது.

எட்டாம் பாசுரம் பர பரன்
பரபரன் என்பதே உயிரான பதம்.
ஸர்வ ஸம்ஹர்த்தாவாய் (உலகில் ஸம்ஹரிக்கிறவன் என்று பெயரெடுத்தவர்களையும் மஹாப்ரளயத்தில் ஸம்ஹரிக்கிறவனாய்),
ஸர்வ ஸ்ரஷ்டாவாய் (ஸர்வத்தையும் படைப்பவனாய்)
ஸர்வாந்தர்யாமியான (அனைவருக்கும் அந்தர்யாமியான),
ஸர்வேஶ்வரனே பரபரன் என்கிறார்.

பரபரன் –
பர:பராணாம் பரம: பரமாத்மாத்ம ஸம்ஸ்தித: | ரூபவர்ணாதி நிர்தேஶ விஶேஷண விவர்ஜித: || (ஸ்ரீ விஷ்ணுபுராணம் 1-2-10)
(மேலானவற்றைக் காட்டிலும் மேலானவனும் தன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லாதவனும்
தனக்குத்தானே ஆதாரமாய் இருப்பனுமான பரமாத்மா ரூபம் நிறம் முதலியவை, நாமம் ஆகிய ப்ராக்ருத விஶேஷணங்கள் அற்றவன்)
என்கிறபடியே ப்ரஹ்மாதிகளுக்கும் பரனாகையாலே பராத்பரன் என்றபடி.

பத்தாம் பாசுரம் கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே
* அணோரணீயாந் மஹதோ மஹீயாந் * என்று ஶ்ருதி ஓதியபடியே பர தத்த்வமானது அணுக்களிலும் அந்தர்யாமியாய்
எங்கும் பரந்துளன் என்றருளிச் செய்தார். இதனால் அவனது வ்யாப்தியை அருளிச் செய்தாராயிற்று

பதினொன்றாம் பாட்டு. வரனவில் திறல்வலி அளிபொறையாய் நின்ற பரன்
பஞ்ச பூதங்களுக்கும் அஸாதாரணமான ஶப்தாதி குணங்களுக்கு நிர்வாஹகனாய் பரனாய் நிற்பவன் ஸர்வேஶ்வரன்

இப்படிப் பரக்க எம்பெருமானின் பரத்வத்தை பேசினார் நம்மாழ்வார் “உயர்வற உயர்நலம் உடையவன்” பதிகத்தில்.
அதிலும் அவற்றைத் தான் மயர்வற மதிநலம் அருளப்பெற்றதால் நேரே அனுபவித்துப் பின்பு அவற்றைப் பேசினார்.
அதுவும் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்கிறார்.
இவ்வளவு அர்த்தங்களையும் சுருக்கி ஸ்ரீமத் வரவரமுனிகள் தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு
மயர்வேத நேர்கொண்டுரைத்து – மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு. (திரு. நூ. 1) என்றருளினார்.

உயர்வே பரன்படியை என்பதினால் பரத்வே பரத்வமும்,
உள்ளதெல்லாம் தான் கண்டு என்பதினால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று ஆழ்வார் அவை அனைத்தையும் கண்டதையும்,
மயர் வேத நேர் கொண்டு உரைத்து என்பதினால் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்ததையும்
இப் பாசுரத்தில் அருளினார் ஆயிற்று.

———–

திண்ணன் வீடு என்னும் பதிகத்திலும் ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தை அருளினார் ஆழ்வார்.
முதலில் உயர்வற உயர்நலம் பதிகத்தில் ஶ்ருதியைக் கொண்டு பரத்வம் சொன்னாற்போலே,
இந்தப் பதிகத்தில் இதிஹாஸ புராணங்களைக் கொண்டு அவனது பரத்வத்தைப் ப்ரதிபாதிக்கிறார் (சொல்லுகிறார்)
இந்தப் பதிகத்தில். அப்படி அருளிச்செய்தவைகளாவன

மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய் * கோபாலகோளரி ஏறன்றியே. (2-2-2)
தேவனெம்பெருமானுக் கல்லால் * பூவும் பூசனையும் தகுமே (2-2-4)
தகுங்கோலத் தாமரைக் கண்ணனெம்மான் (2-2-5)
புள்ளூர்தி கழல் பணிந்தேத்துவரே (2-2-10)
இப்பதிகந்தன்னில் ஈட்டில் சில மேற் கோள்கள் இதிஹாஸத்தில் இருந்து காட்டப்பட்டுள்ளன.

க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய: |
க்ருஷ்ணஸயஹி க்ருதே பூதமிதம் விச்வம்சராசரம் || (மஹாபாரதம் பீஷ்ம பர்வம்)
உலகங்களுடைய உத்பத்தியும் க்ருஷ்ணன் தான்; ப்ரளயமும் க்ருஷ்ணன் தான் என்பது ப்ரஸித்தம்.
ஜங்கம ஸ்தாவரமாயிருக்கிற ஸகலமான இந்த ப்ராணி ஸமூஹமானது க்ருஷ்ண நிமித்தமாக இருக்கிறது.

யச்ச கிஞ்சிந்மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவரஜங்கமம் |
தத் பச்யமஹம் ஸர்வம் தஸ்ய குக்ஷௌ மஹாத்மந: || (மஹாபாரதம் ஆரண்யம்)
உலகத்தில் சராசராத்மகமான யாதொன்று என்னால் பார்க்கப்பட்டதோ
அவை எல்லாவற்றையும் நான் ஈச்வரனுடைய வயிற்றில் பார்த்தேன்

இதனை உட்கொண்டே ஸ்ரீமத் வரவரமுனிகள்
* திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை – நண்ணி அவதாரத்தே நன்குரைத்த * என்றருளினார்.

———-

*அணைவது அரவணை மேல்* என்பது இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி ஆகும்.
ஈட்டில் இதன் அவதாரிகையில் பரத்வம் சொல்லுகிறது என்பதற்கு இரண்டு யோஜனைகள் காட்டப்பட்டுள்ளன.
முதலாவது “தீர்த்தன் உலகளந்த சேவடி மேல்” என்கிற 6வது பாசுரத்தில் உள்ள
* பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை” என்பது கொண்டு இங்கு பரத்வம் பேசப்படுகிறது என்பது ஒரு நிர்வாஹம்.

இனி பராஶர பட்டர் – முதல் பாசுரமான * அணைவது அரவணை மேல் * என்பதினால் எம்பெருமான்
நித்ய சூரிகள் அனுபவிப்பது போன்று மோக்ஷம் அருளக் கூடியவன் என்று கொண்டு –
அதனால் பரத்வம் சொல்லுகிறது என்று நிச்சயித்தார்.

ஆழ்வார் இப்படி மோஷ ப்ரதத்வத்தை (மோக்ஷம் கொடுக்க வல்லவனாயிருக்கை) தனியாக அருளிச் செய்ததை
அடியொற்றியே யாமுந முனியான ஆளவந்தாரும் தம்முடைய ஸ்தோத்ர ரத்னத்தில் – “த்வாதாஶ்ரிதாநாம்” என்கிற ஶ்லோகத்தில்
மோக்ஷ ப்ரதத்வத்தையும் சேர்த்து அனுபவித்தார். இப்படி பட்டர் நிர்வாஹத்தையே முக்கியமாகக் கொண்டார்கள் நம் பூர்வர்கள்.

———–

அடுத்ததாக 4ம் பத்து கடைசி தஶகம் –
* ஒன்றுந்தேவுமுலகுமுயிரும் * என்கிற பதிகத்தால் அர்ச்சையில் பரத்வம் சொல்லுகிறது.
* ஸதேவ ஸௌம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம் * – என்று ஶ்ருதி சொன்னபடியே
ஶ்ருஷ்டிக்கு முன்பு வேறு ஒருவரும் இல்லாத நிலைமையில், அனைத்தையும் தன்னுடன் ஒட்டி வைத்துக் காப்பாற்றி,
அனு ப்ரவேஶம் பண்ணியருளி அனைவரையும் படைத்ததைக் கொண்டு இங்கு அர்ச்சையில் பரத்தவத்தை ஸாதித்தருளுகிறார்

நான்முகன் தன்னோடு தேவருலகோடுயிர் படைத்தான்- ஆதிப்பிரான்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் – புகழாதிப்பிரான்
ஈட்டில் இந்த பதிகத்தின் ப்ரவேஶத்தில் அத்புதமாக எம்பெருமானின் பரத்வம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இங்கு ராமானுஜ பதாச்சாயரான ஸ்வாமி எம்பார் வார்த்தையாக ஒன்று ஈட்டில் காட்டப்பட்டுள்ளது –
“ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை அடுப்பிடு கல்லாக பாவிப்பர்கள்”.
ஆழ்வார் இத்திருவாய்மொழி அருளிச் செய்த பின்பு, அதை உணர்ந்ததனால் எம்பெருமானின் பரத்வத்தை அறிந்து கொண்டு –
மற்றைய தேவர்கள் அடுப்பில் வைக்கும் கல் போன்று கொள்வர்கள் என்று – அதாவது
மோக்ஷம் பராத் பரனாலேயே கொடுக்க முடியும்.
எனவே மற்றவர்களால் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆவது ஒன்றுமில்லை என்றபடி.

———–

ஜீவாத்ம ஸ்வரூபம்:

ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லும் திருவாய்மொழிகள்

பயிலுஞ் சுடரொளி (3-7)
ஏறாளும் இறையோனும் (4-8)
கண்கள் சிவந்து (8-8)
கருமாணிக்க மலைமேல் (8-9)

ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்தில் ஆசார்ய அக்ரேஸரரான ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர்
* அஹங்காரமாகிற ஆர்ப்பைத் ஆத்மாவிற்கு அழியாத பேர் அடியான் என்றிரே * என்றருளுகிறார்.
அதாவது தேஹமே ஆத்மா, மற்றும் நான் ஸ்வதந்த்ரன் என்னும் இரு வகையான அஹங்காரம், மமகாரம் என்னும் அழுக்கு –
ஆசார்ய உபதேசத்தால் நீங்கும் போது – ஆத்மா உள்ளவரை இருக்குமது தாஸத்வம் என்பதாகும்.
ஆத்மா நித்யமாகையாலே தாஸத்வமும் நித்யம் என்பது கருத்து.
அந்த தாஸத்வமும் ஹரியின் அடியார்கள் வரை செல்லும் என்பதை * உற்றதும் உன்னடியார்க்கடிமை * என்பதாக,
அடியார்களுக்கு அடியவனாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபத்தை
* பயிலுஞ் சுடரொளி * திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார். இத்திருவாய்மொழியில்

எம்மையாளும் பரமர் (3-7-1)
எம்மையாளுடை நாதரே (3-7-2)
எம்மையாளுடையார்களே(3-7-3)
சன்மசன்மாந்தரம் காப்பரே (3-7-6)
எம்தொழுகுலம் தாங்களே (3-7-8)
என்றும் அருளிச்செய்து, முடிவில் * இவைபத்து அவன் தொண்டர்மேல் முடிவு * என்றது குறிக்கொள்ளத் தக்கது.
இந்தப் பதிகத்தில் உள்ள பத்து பாசுரங்களுக்கும் விஷயம் அவன் தொண்டர்கள் என்றாராயிற்று.

———–

இனி * ஏறாளும் இறையோனும் * பதிகத்தில்,
அவனது திருவுள்ளத்திற்கு வேறுபடில் ஆத்மாவும் வேண்டா என்பது தேறிய கருத்தாகும்.
இங்கு ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு வேண்டா எனில் எனக்கும் வேண்டா என்றருளிச் செய்கிறார்.

ஆத்மீயம் என்றால் – ஆத்மாவுடையது என்றபடி. இதனால் தேறுவது என் என்னில் –
எம்பெருமானுக்காக என்றால் தான் ஆத்மாவும் கைக்கொள்ளத் தக்கது என்பதை எதிர்மறையாக உணர்த்தியருளுகிறார் ஆழ்வார்.

இதனை அடியொற்றியே ஸ்ரீ ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ர ரத்னத்தில் * ந தேஹம் ந ப்ராணாந் *
[ஆத்மா என்று அபிமானம் கொள்ளாம்படி இருக்கும் தேஹம், ப்ராணன், தேவர்களும் ஆசைப்படும் ஸுகம்,
பிள்ளைகள், நண்பர்கள், ஆத்மா – இவையனைத்தும் உனக்கு புறம்பாகில் ஒரு க்ஷணகாலமும் ஸகிக்கமாட்டேன்.
இதைப் பொய்யாக விண்ணப்பித்தேனாகில் – உன்னிடத்தில் மது என்னும் அரக்கன் பட்டது படுகிறேன்]
என்கிற ஶ்லோகத்தில் இவ்விஷயத்தையே அருளினார்.

இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகளும்
* ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்கவுயிர் –
தேறுங்கால் என்றனக்கும் வேண்டாவெனுமாறன்றாளை * என்றருளினார். –

இதன் தேறின அர்த்தம் – “பெரிய பிராட்டியாரை தன் திருமார்பில் கொண்ட ஈசன் திருவுள்ளவுகப்புக்கு
வேறுபட்டால் உடைமையும், ஆத்மாவும் ஆராயுங்கால் எனக்கு வேண்டியதில்லை” என்பதாகும்.

————

அடுத்து *கண்கள் சிவந்து* என்னும் பதிகத்தினால்
ஆத்ம வஸ்து எம்பெருமானுக்கு சேஷம் என்றும்,
ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறாய் (தேஹாதிகளைக் காட்டிலும் வேறாய்) ஜ்ஞாநம் ஆநந்தங்கள் இரண்டையும் கொண்டிருப்பது
என்று ஆத்ம தத்வத்தினைத் தெரிவித்தருளுகிறார்.

அதாவது * அடியேனுள்ளான் உடலுள்ளான் * என்று ஆத்ம தத்த்வத்தை தெரிவித்தருளும் பொழுது
அடியேன் என்று அது பரமாத்மாவிற்கு தாஸன் என்பதை அறிவிக்கும் முகமாக அடியேன் என்ற
சப்தத்தை உபயோகப்படுத்தியருளினார்.

இது * தாஸ பூதா ஸ்வதஸ் ஸர்வே ஆத்மாஹி பரமாத்மந:
* (இயற்கையாகவே ஆத்மாவானது பரமாத்விற்கு அடிமைப்பட்டவன் ) என்பது முதலான ப்ரமாண வசனங்கள் இங்கு விவக்ஷிதம்.

* சென்று சென்று பரம்பரமாய் * என்பதினால் தேஹம், ப்ராணன், மனஸ் ஆகியவை ஒன்றுக்கொன்று மேம்பட்டதாய்
அவைகளில் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்) ஆத்மா என்று ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறானவன் என்று தெரிவித்தருளினார்.

* நன்றாய் ஜ்ஞாநம் கடந்ததே * – ஆத்ம ஸ்வரூபமானது ஜ்ஞாநம் மற்றும் ஆநந்தம் இவை கொண்டே அறிய வேண்டியது;
நன்றாய் ஜ்ஞாநம் என்றதால் ஆநந்தமாயிருப்பதும் – ஆநந்தமென்பது அநுகூல ஜ்ஞாநமாகையாலே அதனால் ஜ்ஞாநம் சொன்னதாயிற்று.
இதனால் ஆத்மா ஜ்ஞாந ஆநந்தங்கள் உடையவன் என்பதாயிற்று.

———

ஆத்மாவானது பகவானுக்கு அடிமைப்பட்டிருக்கும் என்பது கீழேயே சொல்லப்பட்டது.
அந்த விலக்ஷணமான ஆத்ம ஸ்வரூபம் தானும் தனக்கு என்றில்லாமல் எம்பெருமானுக்கே அநந்யார்ஹ சேஷமாயிருக்கும் (
பிறர்க்கு அர்ஹமாகாமல் அவனுக்கே சேஷமாயிருக்கும்) என்பதனை *கருமாணிக்க மலை மேல் * (8-9) என்னும்
திருவாய்மொழியில் தோழிப் பேச்சாக ஆழ்வார் அருளிச் செய்கிறார்.

இது தானும் அறிதியிடுவது
* படவரவணையான் நாமமல்லால் பரவாளிவள் *,
* திருப்புலியூர் புகழன்றிமற்று – பரவாளிவள் *
*திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே –
அன்றி மற்றோருபாயம் என் இவளந்தண்டுழாய் கமழ்தல் * இவை கொண்டு .

ஸ்ரீமத் வரவரமுனிகள் இதனை –
* திரமாக அந்நியருக்காகாது அவன்றனக்கேயாகுமுயிர் அந்நிலையையோரு நெடிதா * (திரு. நூ – 79) என்றருளிச் செய்தார் –

ஸ்ரீ க்ருஷ்ண பகவான் விஷயத்தில் ஒரு கன்னிகையின் அவஸ்தையை அடைந்து – அத்விதீயமாய் விலக்ஷணமான
ஸம்ஸ்லேஷ லக்ஷணங்களைத் தோழிப் பேச்சாலே அருளிச் செய்யப் புகுகையாலே ஸ்திரமாக ப்ராப்த ஶேஷி
(ஶேஷி – கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்பவன்; ப்ராப்த ஶேஷி – ஒரு காரணமன்றிக்கே இயல்பாக அமைந்த ஶேஷி)
சேஷமாகிற ஆத்ம ஸ்வரூபம் பிறருக்கு சேஷமாகாமல் அவனுக்கே சேஷமாகும் நிலைமையை தீர்க்கமாக ஆராயுங்கோள் –
என்பது அந்தப் பாசுரத்தின் தேறின அர்த்தம்.

———-

விரோதி ஸ்வரூபம்:

விரோதியானது – கீழ்ச்சொன்னபடி பகவானுக்கே அடிமையான ஆத்ம வஸ்து அவனைக் கிட்டி வாழ்ச்சி பெறாது
தடை செய்யுமவையாம். இந்த விரோதி வர்க்கத்தைச் சொல்லும் திருவாய்மொழிகள்

வீடுமின் முற்றவும் (1-2)
சொன்னால் விரோதம் (3-9)
ஒருநாயகமாய் (4-1)
கொண்ட பெண்டிர் (9-1)

இவற்றுள் * வீடுமின் * பதிகத்தில்
எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களின் தோஷங்களை அறிவித்து அதை விட,
நாடு நலத்தால் அடைய நன்கு உரைக்கிறார் ஆழ்வார்.

மேலும் அவற்றைப் பற்றுவதற்கு அஹங்காரம் (நான் நான் என்று நினைப்பது), மமகாரம் (என்னுடையது என்று நினைப்பது)
ஆகிய இரண்டுமே ப்ரதான காரணம் ஆதலால் அவற்றை * நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து * என
அவற்றை அடியோடு விடச் சொல்கிறார் இத்திருவாய்மொழியில்.

இங்கு
* அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யா மதி: |
அவித்யா தருஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் * (6-7-11)
என்கிற ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் நினைக்கத்தக்கது.
[தான் அல்லாத தேஹத்தில் தான் என்கிற நினைவும், தன்னுடையதல்லாத பொருள்களில் தன்னுடையது
என்கிற நினைவும் ஸம்ஸாரத்தில் அவித்யையாகிற காம்ய கர்மங்களெனும் மரம் வளர்வதற்குறுப்பான விதைகளாகும்] .

————-

இனி ஸேவை செய்வது எம்பெருமானுக்கே என்றும் –
மற்றவர்களுக்கு ஸேவை செய்வது அஸேவ்ய ஸேவையாகும்
(செய்யத் தகாததாகும்) என்பதனை * சொன்னால் விரோதமிது * என்னும் திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார்.

* என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள் * – முதலான இப்பதிகத்தில் உள்ள பாசுரங்கள் இதனைத் தெரிவிப்பன.
இப்படி அஸேவ்ய ஸேவை செய்தால் த்ருஷ்டமும் (கண்ணால் தெரியும் பலனும்),
அத்ருஷ்டமும் (ஐஹிஹ லோக பலங்களும்) கிடைக்காது –
மாறாக அநர்த்தமே ஸித்திக்கும் என்பது இப்பதிகத்தில் அறிய வேண்டியது.

இதனை * மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே இனிதாம் * என்று மாமுனிகள் அருளிச் செய்கிறார்.
அதனையும் * ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் * என்பதால் இவ்வுலகம் அனைத்தையும்
தன் ஆட்சியின் கீழ் என்னும்படி வாழ்ந்தாலும், அது நிரந்தரமில்லை –
* பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் * என்றுரைத்தார்.
இனி ஸ்வர்க்க லோகாநுபவமோ என்னில் * க்ஷீணே புண்யேமர்த்த்யலோகம் விஶந்தி *
(புண்யம் அழிந்தவாறே அங்கிருந்து விழுகிறார்கள்) என்பதை * குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தி மீள்வர்கள் * என்றார்.
இது ப்ரஹ்மலோகானுபவம் வரை உபலக்ஷணம்.
இவை போல் அஸ்திரமாக இல்லாமல் இருந்தாலும்
தன்னைத் தான் அனுபவிப்பதாகிற கைவல்யம் – * இறுகலிறப்பு * என பகவதனுபவத்தைப் பார்த்தால் தோஷமாயிருக்கும்.

————–

ஆர்க்கும் ஹிதம் தன்னையே பார்க்கும் கீர்த்தியுடைய மாறன் * கொண்ட பெண்டிர் * பதிகந் தன்னில்
சரீர ஸம்பந்தத்தினால் வரும் அனைத்தும் த்யாஜ்யம் (விட வேண்டும்) என்பதை தெளிவாக உரைத்தருளினார்.
சரீர ஸம்பந்தங்கள் அனைத்தும் கர்மமடியாக வருபவை.
* கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை * என்கிறார் ஆழ்வார்.
நிருபாதிக (ஒரு காரணம் பற்றி இல்லாமல்) ஸம்பந்தியான ஈஶ்வரனைப் பற்றினால் அவன்
* அடியார்க்கென்னை ஆட்படுத்தும் * என்றபடி அவனது அடியவர்களுடன் சேர்த்து விடுகிறான். அதுவே ஆத்மவிற்கு ஹிதம்.

————–

உபாய ஸ்வரூபம்:இது தெரிவிக்கும் திருவாய்மொழிகள்

நோற்ற நோன்பிலேன் (5-7)
ஆராவமுதே (5-8)
மானேய் நோக்கு நல்லீர் (5-9)
பிறந்தவாறும் (5-10)

நோற்ற நோன்பிலேன்
கைமுதலில்லாமை – பேறு பெற்றுத் தருவதற்கு – வேறு உபாயங்கள் ஒன்றும் செய்யாமை.
ஶரணாகதி அநுஷ்டிக்கும் பொழுது வேறு உபாயங்கள் ஒன்றும் நம் கைகளில் இல்லை என்றும் –
நமது தீய வ்ருத்தங்களையும் சொல்லிக் கொண்டே அநுஷ்டிக்க வேணும்,
இதனை * நோற்ற நோன்பிலேன் * என்றார்.
சரி பேற்றுக்கு என்ன உபாயம் என்னில் – * ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * என
எம்பெருமானே உபாயம் என்றபடி.
மற்றைய உபாயங்கள் ஸாத்யோபாயங்கள் (சேதனனுடைய செயலாலே ஸாதிக்க வேண்டுபவை).
எம்பெருமானோ என்னில் ஸித்தோபாயம் (ஸித்தமாக இருக்கிறான்)

———–

ஆராவமுதே

கீழே ஆகிஞ்சன்யம் அருளிச் செய்தார்.
இங்கு எம்பெருமானை விட்டால் வேறு கதியில்லை என்பது தோன்றும்படி

* களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன் *
(எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி, களையாவிட்டாலும் சரி வேறு சரணமுடையேனல்லேன்)
என அநந்ய கதித்வத்தை அருளிச் செய்கிறார். ப்ரபந்நர்களுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக வேண்டும்
1) ஆகிஞ்சன்யம் – எம்பெருமானைத் தவிந்தவை உபாயாந்தரங்கள் எனப்படும் – கர்ம ஜ்ஞான பக்தியோகங்கள்.
இவைகளில் கை வைக்காமல் இருக்கை ஆகிஞ்சன்யம் ஆகும்.
2) அநந்ய கதித்வம் – உன் காரியமாகிற மோக்ஷம் அளிப்பதில் நீ எப்படியிருந்தாலும், என் காரியத்தில்
நான் என்னுடைய * நம் மேல் வினை கடிவான்- எப்போதும் கை கழலா நேமியான் * என்னும் நிஷ்டை (இருப்பு) குலைய மாட்டேன்.
இப்படி அநந்யகதிவம் முன்னாக * கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன் * –
கண்ணபிரானுடைய திருவடிகளையே தஞ்சமாகக் கொள்ளுகை என்பதை இந்தப் பதிகத்தால் வெளியிட்டார்.

———-

மானேய் நோக்கு நல்லீர்

* நாமங்களாயிரமுடைய நம்பெருமானடி மேல் சேமங்கொள் * என்னும்படி ஆயிரம் திருநாமங்களை யுடைய
ஸர்வேச்வரன் திருடிகளிலேயே தம்முடைய க்ஷேம பாரங்களையெல்லாம் வைக்கையும்,
அவைகளின் மேல் அத்யவஸாயம் உடையவராய் இருக்கையும்.

——

பிறந்த வாறும் வளர்ந்த வாறும்

* நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று, * , எம்பெருமான் திருக்குணங்கள்
*எனதாவியை நின்றுநின்று உருக்கியுண்கின்ற*,
*என்னையுன் செய்கை நைவிக்கும்*
*வந்தென்னெஞ்சையுருக்குங்களே* என சிதிலப் பண்ணினாலும், சரணம் புகுந்தவர்களை எம்பெருமான்
கைகொள்ள வேண்டாம் என நினைத்தாலும் அப்படி உபேக்ஷிக்க விடாதே
கைகொள்ளப்பண்ணும் இயல்வினன் திருவனந்தாழ்வான்; அவர்மீது கண் வளர்ந்து அடியார்களுக்கு உபகாரகனாயிருக்கும்
எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று இடையறாத அத்யவஸாயம் கொள்ளுகை
ஆழ்வார் இத்திருவாய்மொழியில் உபதேஸிக்கும் அர்த்தம் ஆகும்.

————–

புருஷார்த்த ஸ்வரூபம்:–இதனை நிருபித்த திருவாய்மொழிகள்

எம்மாவீட்டுத் திறமும் செப்பம் (2 – 9)
ஒழிவில் காலமெல்லாம் (3 – 1)
நெடுமாற்கடிமை (8-10)
வேய்மருதோளிணை (10 – 3)

* எம்மா வீட்டுத் திறமும் * என்கிற திருவாய்மொழி அருளும் அர்த்தம் மிகவும் சீர்மையானது.
நம் பூர்வாசார்யர்கள் மிகவும் சீர்மையான அர்த்தங்களை * எம்மா வீடு * என்றே குறிப்பிடுவர்கள்.
இனி இதில் இருக்கும் அர்த்தத்தைப் பார்க்கலாம். ஆழ்வார் அனைவருக்கும் எம்பெருமான் மோஷ ப்ரதன்
(மோக்ஷத்தை அளிக்க வல்லவன்) என்று உபதேசித்ததைப் பார்த்த எம்பெருமான் –
ஆழ்வாருக்கு மோக்ஷத்தில் ஆசையுள்ளது என்று கொண்டு, ஆழ்வாருக்கு மோக்ஷத்தைப் ப்ரஸாதிக்க திருவுள்ளமானான்.
அதைப் பார்த்த ஆழ்வார் – ” எம்பெருமானே! எனக்காகக் கொடுப்பதனால் மோக்ஷமும் புருஷார்த்தம் அன்று
என்று நிர்த்தாரணம் பண்ணியருளி, எம்பெருமானே! நீ பரமபதத்தில் என்னை வைக்கவுமாம்,
அல்லது ஸம்ஸாரமாகிற மருகாந்தாரத்திலே வைக்கவுமாம் – எனக்கு ஒன்றுமில்லை.
உனக்கு திருவுள்ளமே எனக்கு வேண்டுவது ” என்று புருஷார்த்த ஸ்வரூபத்தை அருளிச் செய்தார்.
கைங்கர்யத்தில் தனக்காகப் பண்ணுவது என்பது ஸ்வார்த்தமாகும். அதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

———-

இந்த கைங்கர்யமும் ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் செய்ய வேண்டும் என்பதை
* ஒழிவில் காலமெல்லாம் * என்ற திருவாய்மொழியினால் உண்ர்த்துகிறார்.

* சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து* (3-3-2) அதாவது –
“எம்பெருமானுடைய ஸௌசீல்ய குணத்திலே ஈடுபட்டவர்களாய் ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமான
நித்தியஸூரிகள் அனைவரும் *சென்னியோங்கு தண் * திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி
திவ்யபுஷ்பங்களை எடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்;
அந்தப் புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பூவார் கழல்களில் யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க முடியாதவர்களாய்
சீல குணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றன;”
என்பதினால் உடம்பினால் செய்யும் கைங்கர்யத்தையும்,
* தெண்ணிறைச்சுனை நீர்த்திருவேங்கடத்து * (3-3-3) என்பதினால் தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர்
பொருந்திய மனஸ்ஸு இருக்கும்படியையும் அதனால் செய்யும் கைங்கர்யத்தையும்,
* ஈசன் வானவர்க்கென்பன் * (3-3-4) என்பதினால் நித்யர்களைச் சொல்லி அவர்கள் இருக்கும்படியான
* நம இத்யேவ வாதிந* என்று அவர்கள் எம்பெருமானால் போகம் அனுபவிப்பர்களாய்
அந்த போகத்தினால் வரும் ஆனந்தமும் எங்களதன்று என்பதற்காக நம: நம: என்று உரைத்துக் கொண்டிருக்கிறார்கள்
என்பதினால் வாசிகமான கைங்கர்யத்தையும் காட்டியருளினாராயிற்று,
இதனால் அனைத்து வகையான கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் என்பதை அருளிச் செய்தாராயிற்று.

இதனையும் * வேங்கடத்துறைவார்க்கு நம*
(ஸ்ரீவைகுண்ட வாஸத்தை விட்டு திருமலையிலே நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு நம:) என்பதினால்
தன் போகத்திற்காக என்னும் புத்தி நிவ்ருத்தியும்,

* சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே * (பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை அளிக்கும்) என்பதினால்
அக்கைங்கர்யத்தை அளிப்பதும் திருமலையாழ்வாரே என்றதாயிற்று.

இதனால் அந்த கைங்கர்யம் தானும் * வழுவிலா அடிமையாயிருக்கும் * என்பதனை அருளிச் செய்தாராயிற்று.

————

இந்த கைங்கர்யம் தானும் எம்பெருமானோடு மட்டும் இல்லாமல்,
அவனது அடியார்கள் வரை போக வேண்டும் என்பதை * நெடுமாற்க்கடிமை * (8-10) பதிகத்தால் அருளிச் செய்தார்.
இதுவே பரம புருஷார்த்தம். அதிலும் இப்பதிகந்தன்னில் அவனது
* தனிமாத் தெய்வமான * எம்பெருமானின் அடியார்கள் திறத்தில் அடிமையாம் அளவன்றிக்கே
அவ்வடிமை நிலையில் எல்லை நிலம் என்று அனுஸந்தித்துக் காட்டுகிறார்.

*சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் *
(ஸ்வயம் பிரயோஜநமாக கைங்கர்யத்தின் எல்லையிலே நிலை நின்ற அடியவர்களுடைய திருத்தாள்கள் வணங்கி)

* அவனடியார் நனிமாக்கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே *
(ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சேர்க்கையே எப்பொழுதும் வாய்க்க வேண்டும்)

* கோதில் அடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே!
* (கோதற்ற அடியார்க்கு அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே அடியேனுக்கு வாய்க்க வேணும்) இங்கு குறிக்கொள்ளத் தக்கது.

————-

இறுதியாக * வேய்மருதோளிணை * பதிகத்தில் புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லப்படுகிறது.
இதனை “ பரஸம்ருத்த்யேக ப்ரயோஜனத்வத்தைச் சொன்ன ”
(அவனுடைய திருமுக மலர்த்தியே பேறாக) என்கிறார் ஸ்ரீமத் வரவரமுனிகள். இப்பதிகந்தன்னில்
* உகக்கு நல்லவரொடுமுழிதந்து உன்தன் திருவுள்ளமிடர் கெடுந்தொறும் நாங்கள்
வியக்கவின்புறுதும் எம்பெண்மையாற்றோரும் * என்கிற பாசுரம் தன்னில் இவ்வர்த்தம் சொல்லப்பட்டது.

ஆழ்வார் இப்பதிகந்தன்னில் கண்ணன் எம்பெருமான் நம்மை விட்டு பசு மேய்க்கப் போனான் என்று
இடைப் பெண்கள் பேசும் பேச்சாகப் பேசினார். க்ருஷ்ணனை என்னை விட்டுவிட்டு பசு மேய்க்கிறேன் என்று போகாதே
எனப் பல காரணங்களைச் சொன்னார். அதில் இப்பாசுரத்தின் முந்தைய பாசுரத்தில்
* நீ உகக்குநல்லவரொடும் உழிதராயே * (உனக்குப் பிடித்த ஸ்த்ரீகளுடன் இங்கேயே இரு) என்றார்.
இதனைக் கேட்ட கண்ணபிரான் “இப்படி நீங்கள் சொல்லுகிறது உண்மை தானோ? நான் போகாமைக்காகச் சொல்லுகிற
வார்த்தையே தவிர, உங்களருகே நான் வேறு சில பெண்களோடே இருந்தல் அதை நீங்கள் பொறுத்துக் கொள்வீகளோ?” என்று கேட்டான்.

அதற்கு பதில் கூறுவதாக இருந்து கொண்டு நம் ஸ்வரூபத்திற்குத் தக்க புருஷார்த்தத்தைத் தெரிவிப்பது இப்பாசுரம்;
உன்னோடு நாங்கள் இருப்பதைக் காட்டிலும், நீ உன் திருவுள்ளத்தில் உகப்பாக இருப்பவர்களோடு இரு,
அதனால் நாங்களடையும் உகப்பே எங்களுக்கு உயர்ந்தது என்கிறார் இப்பாட்டில்.
* எம் பெண்மையாற்றோம்* – உன் சந்தோஷத்திற்கு வேறாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு வேண்டோம்;
உன் சந்தோஷமே முக்கியம் எனும் ஸ்வரூபஜ்ஞானமில்லாத பெண்களின் படி எங்களுக்கில்லை என்றபடி.

———–

ஆக இதுவரையில்,
கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாய், அனைத்து தோஷங்களுக்கும் எதிர்த்தட்டாய், ஸர்வஶேஷியாய்,
அனைவரையும் ரக்ஷிக்கிறவனாய், இருக்கும் பரமாத்ம ஸ்வரூபம் (1),
தேஹம் இந்திரியம் முதலானவற்றைக் காட்டிலும் வேறாய் ஜ்ஞானானந்தங்களை லக்ஷணமாக உடையவனாய்,
பகவானுக்கே ஶேஷமாய் இருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபம் (2),
அஹங்கார மமகாரங்களை விளைக்கடவதாயும், ஜீவனுடைய ஸ்வரூபத்தை மறைக்கக் கடவதாய் இருக்கும் ப்ரக்ருதி ஸம்பந்தம்,
எம்பெருமானைத் தவிர மற்ற பலன்களில் ஆசை வைக்கை, எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்குச் செய்யும் சேவை,
எம்பெருமானைத் தவிர மற்றவர்களை பந்துக்கள் என நினைத்தல் ஆகிற விரோதி ஸ்வரூபமும் (3),
ஜீவாத்மாவின் ஸ்வரூபத்திற்குத் தக்கதான உபாய ஸ்வரூபமும் (4),
* ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித: * என்று அவனுடைய முக மலர்த்தியே பேறான புருஷார்த்த ஸ்வருபமும் (5)
ஆகிய ஐந்தினையும் விரிவாகத் தெரிவிக்கும் திருவாய்மொழிகளைப் பார்த்தோம்.

மற்றுமுள்ள 80 பதிகங்களிலே இவ்வர்த்தமே கிடக்கிறது.

பணவாளரவணைப் பள்ளி பயில்பவர்க்கு எவ்வுயிரும்
குணபோகம் என்று குருகைக்கதிபன் உரைத்தது உய்ய தவத்தோர் தவப்பயனாய் வந்த
முடும்பை மணவாளரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் –
இவ்வர்த்தங்கள் அனைத்தையும் ஒரு சூர்ணிகையிலே அடக்கி அருளியுள்ளார்.

“மூன்றில் சுருக்கிய ஐந்தினையும்
உயர் திண் அணை ஒன்று
பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒருக்கொண்ட
நோற்ற நாலும்
எம்மா வொழிவில் நெடுவேய் என்கிற இருபதிலே விசதமாக்கி
எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (211)

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சிறை இருந்தவளின் இரண்டாம் மூன்றாம் பிரிவு–

December 19, 2020

ஸ்ரீ வசன பூஷணம்–சூரணை-8-

பிராட்டி முற்பட பிரிந்ததுதன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –

இந்த க்ருபாதி த்ரயத்தையும் எல்லாரும் அறியும் படி தானே வெளி இட்டு அருளின வைபவத்தை
ஸ்ரீ ராமாயணத்தில் இவளுக்கு சொல்லப் பட்ட விஸ்லேஷ த்ரயத்தாலும் தர்சிப்பிக்கிறார் மேல் –

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வேச மானுஷீ
விஷ்ணோர் தேஹானு ரூபாம் வை கரோத்யே ஷாத்மனஸ் தானும் -என்கிறபடியே –
நாயகனான சர்வேஸ்வரனுடைய தத் தத் அவதார சஜாதீயமான விஹ்ரஹ பரிக்ரகம்
பண்ணி வந்து அவதரிக்கும் அவள் ஆகையாலே –
ராகவத்வேபவத் சீதா -என்கிறபடியே –
அவன் சக்கரவர்த்தி திரு மகன் ஆனவாறே தத் அநு ரூபமாக தானும் ஜனக ராஜன் திரு மகளான
பிராட்டி -தண்ட காரண்யத்திலே எழுந்து அருளி இருக்க செய்தே -ராவணன் பிரித்தான் என்ற ஒரு
வியாஜ்யத்தாலே –
பிரதமம் பெருமாளை பிரிந்து -இலங்கைக்கு எழுந்து அருளிற்று –

தேவ்யா காருண்யா ரூபாயா -என்று தத் குண சாரத்வத்தாலே –
காருண்யம் தானாக சொல்லும்படியான
தன்னுடைய பரம கிருபையை பிரகாசிப்பைக்காக -என்கை -எங்கனே என்னில் –

தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிகைக்காக தான் சிறை இருக்கையாலும் –
அவ் இருப்பில் தன்னை அல்லும் பகலும் தர்ஜன பர்ஜநம் பண்ணி அருவி தின்ற க்ரூர ராஷசிகள் -ராவணன் பராஜிதனாகவும்
பெருமாள் விஜயீகளாகவும்-திரிஜடை சொபனம் கண்டத்தாலே பீத பீதைகளாய் நடுங்குகிற தசையில் –
பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள் நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் –
நீங்கள் அஞ்ச வேண்டா என்று – அபய பிரதானம் பண்ணுகையாலும்-

அது உக்தி மாத்ரமாய் போகாமே -ராவண வாத அநந்தரம்
தனக்கு சோபனம் சொல்ல வந்த திருவடி அவர்களை சித்ர வதம் பண்ணும்படி காட்டித் தர வேணும் என்ன –
அவனோடே மன்றாடி ராஜ சம்ஸ்ரைய வச்யானாம்-இத்யாதியாலே அவர்கள் குற்றத்தை குணமாக உபபாதித்தும் –
மர்ஷயா மீஹா துர்பலா -என்று பிறர் நோவு கண்டு பொறுத்து இருக்க தக்க நெஞ்சுரம்
தனக்கு இல்ல்லாமையை முன்னிட்டும் -கார்யம் கருண மார்யென ந கச்சின் நா பராத்யதி -என்று
அவனுக்கு இரங்கி அல்லது நிற்க ஒண்ணாதபடி உபதேசித்தும் –
இப்படி ஒரு நிலை நின்று தான் அடியில் பண்ணின பிரதிக்ஜை அநு குணமாக
ஆர்த்ரா பராதரைகளை ரஷிக்கையாலும் -தன்னுடைய கிருபையை வெளி இட்டாள் இறே-

நடுவில் இத்யாதி -நடுவில் பிரிவாவது –
மீண்டு பெருமாளுடன் கூடி திரு அயோத்தியிலே எழுந்து அருளி திரு வயிறு வாய்த்து இருக்கிற காலத்தில் –
அபத்ய லாபோ வைதேஹி மமாயம் சமுபஸ்தித கிமிச்சசி சகாமா த்வம் ப்ரூஹி சர்வம் வரானனே -என்று
உனக்கு அபேஷை ஏது என்று கேட்டு அருள –
தபோ வனா நி புண்யா நி த்ருஷ்டும் இச்சாமி ராகவ-
கங்கா தீர நிவிஷடானி ருஷீணாம் புண்ய கர்மாணாம்
பல மூலாசினாம் வீர பாதமூலேஷூ வர்த்திதும்
ஏஷமே பரம காமோயன் மூல பல போகிஷூ
அப்யே கராத்ரம் காகுத்ச்த வசேயம் புண்ய கீர்த்திஷூ-என்று
தனக்கு உண்டான வன வாச ரஸ வாஞ்சையை விண்ணப்பம் செய்ய –

அத்தை பற்ற போக விடுவாரை போலே -லோக அபவாத பரிகார்த்தமாக –
பெருமாள் காட்டிலே போக விட போனது –
இப் பிரிவுக்கு பிரயோஜனம் -பெருமாள் கட்டிலே வைத்த போதொடு காட்டிலே விட்ட
போதொடு வாசியற -அவருடைய நினைவையே பின் செல்ல வேண்டும் படியான
தன்னுடையபத்நீத்வ பிரயுக்தமான -பாரதந்த்ர்யத்தை பிரகாசிப்பிக்கை-

கங்கை கரை ஏறின அநந்தரம் இளைய பெருமாள் கனக்க கிலேசப் பட்டு கொண்டு
பெருமாள் திரு உள்ளமாய் விட்ட கார்யத்தை விண்ணப்பம் செய்ய -அத்தை கேட்டு மிகவும் பிரலாபித்து –
ந கல்வத்யைவ ஸௌ மித்ரே -ஜீவிதம் ஜாஹ்ன வீஜலே
த்யஜேயம் ராகவம் வம்சே பரத்துர் மா பரிஹாச்யாதி -என்றாள் இறே –
இத்தால் ஆற்றாமையின் கனத்தாலே முடிந்து பிழைக்க தேட்டமாக நிற்க்கச் செய்தேயும் –
அது செய்ய மாட்டாதே
பெருமாள் நினைவை பின் சென்று தன பிராணனை நோக்கி கொண்டு இருக்க
வேண்டும் படியான -பாரதந்த்ர்யத்தை இறே பிரகாசிப்பித்தது –

பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பரதந்தருக்கு முடிவு தேட்டமானாலும் முடிய போகாதே –
மாயும் வகை அறியேன் வல்வினையே பெண் பிறந்தே –திரு வாய் மொழி -5 -4 -3 – என்றார் இறே ஆழ்வார் –
பிரதம விச்லேஷத்தில் பத்து மாசத்துக்கு உள்ளே படுவது எல்லாம் பட்டவள் –
பதிர்ஹி தைவதம் நாரா பதிர்பந்து பதிர்கதி ப்ரானைரபி
ப்ரியம் தஸ்மாத் பார்த்து கார்யம் விசேஷத-என்று தான் அருளி செய்தபடியே
பதி சித்த அநு விதானமே நமக்கு ஸ்வரூபம் என்னும் பாரதந்திர புத்தியாலே இறே
அநேக சம்வத்சரம் பாடாற்று இருந்தது –
ஆக இப்படி இப் பிரிவிலே தன்னுடைய பாரதந்த்ர்யத்தை வெளி இட்டாள் இறே

அநந்தரம் -இத்யாதி –
அனந்தரத்தில் பிரிவாவது -மீண்டு பெருமாள் சன்னதியிலே வந்து இருக்க செய்தே பிரிந்து
பிறந்தகத்திலே புக்கு விட்டது –இப் பிரிவுக்கு பிரயோஜனம் –

அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அன்யாஹி மயா சீதா -என்று
உபய சம்மதமான தன்னுடைய அனந்யத்வ பிரயுக்தமான அனந்யார்ஹத்வத்தை
சர்வ சம்மதமாம் படி பிரகாசிப்பிக்கை -எங்கனே என்னில்

பெருமாள் அஸ்வமேதம் பண்ணி அருளா நிற்க செய்தே -ஸ்ரீ வால்மீகி பகவானுடைய
நியோகத்தாலே குசலவர்கள் வந்து ஸ்ரீ ராமாயணத்தை பாடிக் கொண்டு திரியா நிற்க –
அத்தை பெருமாள் திரு செவி சாத்தி சன்னதியிலே அவர்களை அழைத்து விசெஷஞர் எல்லாரையும் கூட்டி
அவர்கள் பாட்டு கேளா நிற்கிற நாளிலே –
அவர்களை பிராட்டி உடைய பிள்ளைகள் என்று அறிந்த அநந்தரம்
பிராட்டி அளவிலே திரு உள்ளம் சென்று தனக்கேற சுத்தை ஆகில் கடுக-இத்திரளிலே நாளை வந்து
ப்ரத்யய முகத்தாலே தன சுத்தியை பிரகாசிப்பாளாக என்று தூத முகேன பெருமாள்
மகரிஷிக்கும் பிராட்டிக்கும் அறிவித்து விட –

அப்படியே ஸ்ரீ வால்மீகி பகவானை முன்னிட்டு கொண்டு
அந்த மகா பர்ஷத்திலே -பெருமாள் சன்னதியிலே -வந்து ஒடுங்கி நிற்க செய்தே -ஸ்ரீ வால்மீகி பகவான்
இவள் சுத்தை என்னும் இடத்தை பல முகத்தாலும் சொல்ல-பெருமாள் இவள் சுத்தை என்னும் இடம் நானும் அறிவன் –
மகரிஷி சொன்னதுவே போரும் -ஆனாலும் லோக அபவாத பரிகர்த்தமாக ஒரு ப்ரத்யயம் இத் திரளிலே
பண்ண வண்டும் என்று திரு உள்ளம் ஆன படியாலே –
சர்வான் சமாகதான் த்ருஷ்ட்வா சீதா காஷாய வாசி நீ
அப்ரவீத் ப்ராஞ்சலீர் வாக்கியம் அதோ திருஷ்டி ராவான்முகீ –என்கிறபடியே
கையும் அஞ்சலியுமா கவிழ தலை இட்டு கொண்டு நின்று –

யதாஹம் ராகவாதந்யம் மனசாபி ந சிந்தையே
ததா மே மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி
மனசா கர்மணா வாசா யதா ராமம் சமர்த்தையே
ததா மே மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி
யதைதத் சத்ய முக்தம் மே வேத்மி ராமாத் பரம் நச ததாமே
மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி -என்று சபதம் பண்ண –

ததா சபந்த்யாம் வைதேஹ்யாம் ப்ராதுராசீன் மகாத்புதம் பூதலா
துத்திதம் திவ்யம் சிம்ஹாசன மனுத்தமம் த்ரியமாணம் சிரோபிச்து நாகைரமிதவிக்ரமை
திவ்யம் திவ்யேன வபுஷா சர்வ ரத்ன விபூஷிதம்
தச்மிம்ச்து தரணீ தேவீ பாஹூப்யாம் க்ருஹ்ய மைதலீம்
ச்வாகதே நாபி நன் யை நா மாசனே சோபவேசயத்
தாமாச நகதாம் த்ருஷ்ட்வா பிரவீ சந்தீம் ரசாதலம் புஷ்ப
வ்ருஷ்டிர விச்ச்சின திவ்யா சீதா மவாகிரத் -என்று

அவ்வளவிலே பூமியில் நின்றும் ஒரு திவ்ய சிம்ஹாசனம் வந்து தோன்ற –
அதிலே பூமி பிராட்டி இவளை ஸ்வாகத ப்ரசன பூர்வகமாக -இரண்டு கையாலும்
எடுத்து கொண்டு போய் வைக்க –
ஆசன கதையாய் கொண்டு ரஸா தலத்தை பிரவேசியா
நிற்க இவளைக் கண்டு திவ்ய புஷ்ப வ்ருஷ்டி இடைவிடாமல் இவள் மேல் விழுந்தது என்கையாலே –
இப் பிரிவிலே தன்னுடைய அனந்யார்ஹத்வத்தை பிரகாசித்தாள் இறே –

ஆக –
இவ் அவதாரத்தில் இவளுக்கு சொல்லப் பட்ட விஸ்லேஷ த்ரயத்துக்கும் ஹேது
இக் குணங்களை இப்படி வெளி இடுகைக்கு ஆய்த்து-
இங்கன் அன்றாகில் -அநபாயி நியாய்-அகர்மவச்யையாய் –
இருக்கிற இவளுக்கு கர்ம வச்யருக்கு போலே -இப்படி பிரிவு வருகைக்கு யோக்யதை இல்லை இறே —

தன்னுடைய புருஷகாரத்வ உபயோகியான குணங்களையும் –
புருஷகாரத்வத்தையும் பிரகாசிப்பைக்காக -வந்த அவதாரம் இறே இது –
ஆகை இறே யது தான்யதுதா ஹரந்தி சீத அவதார முகமேத தமுஷ்ய யோக்யா -என்று பட்டர் அருளி செய்தது –

இப்படி சேதனர் பக்கல் அனுக்ரஹத்துக்கு உடலான கிருபையும் –
ஈஸ்வரன் பக்கல் அணுகி வசீகரிக்கைக்கு உடலான பாரதந்த்ர்யாதிகளையும் -தானே வெளி இட்டது –

சாஸ்த்ரங்களில் கேட்கிற மாதரம் அன்றிக்கே -அனுஷ்டான பர்யந்தமாக காண்கையாலே –
தன்னை புருஷகாரமாக பற்றுவாருக்கு ருசி விச்வாசங்கள் உறைக்கைக்கு உறுப்பாக-

——————

உத்தர காண்டத்தை வாசிப்பு வசதிக்காக இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

முதற் பகுதியில் பட்டாபிஷேகத்திற்குப் பிறகு பல முனிவர்கள் ராமனை சந்திக்கின்றனர்.
அப்போது ராவணன், வாலி மற்றும் அனுமனின் தனி வரலாறுகள் நம்முன் வருகின்றன.

இரண்டாம் பகுதி யுத்த காண்டத்தின் முடிவில் சீதை அக்கினிப் பிரவேசம் செய்த சூழலின் தொடர்ச்சியாக வருகிறது.
லவ குசர்களின் பிறப்பு வளர்ப்பு, மற்றும் ராமனின் அசுவமேத யாகம் வழி தந்தை மகன்கள் சந்திப்பு ,
பிறகு சீதை பூமித்தாயின் மடியில் மறைதல், இறுதியாக ராமன் மற்றும் சகோதரர்களின் முடிவு ஆகியவை வருகின்றன.

சீதை மீண்டும் வனவாசம் சென்றது மிகவும் விவாதிக்கப்பட்ட ஒரு வரலாறாகும்.

முதலில் ஒட்டக்கூத்தரின் சொற்களில் காண்போம்:

வாளணி விசயன் பத்திரன் தந்தவக்கிரன்
காளியன் முதலோர் சொற் பரிகாசக் கதைகள் கேட்டினிது கொண்டாடி–(பாடல் 724 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஆங்கவரிவ்வாறு உரைத்திடக் கேட்ட அரசர் கோன் அவர்களை நோக்கி
நாங்கள் இந் நகரில் நாட்டினில் பிறக்கும் நன்மையுந் தீமையுங் கேட்டுத்
தீங்கவை அகற்றிச் சிறந்தன செய்ததும் செய்யும் இவ் விரண்டும் நீர் கேட்ட
நீங்கள் ஒன்றுக்கும் கூசலீர் என்ன நின் பல கேட்டி என்றுரைப்பார்–(பாடல் 729 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

மன்னவன் ராமன் மான பங்கத்தை மனத்தினால் நினைக்கிலன் வானோர்க்
கின்னல் செய்தொழுகும் இராவணன் கொடு போய் இடைவிடாது ஈராறு திங்கள்
நன்கெடு நகரில் தனிச்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு
பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கு என்று பேசுவர் பெரு நிலத்தோர்-(பாடல் 728 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஓத நீர் வேலையுலகு உளோர் இல்லது உளது எனில் உள்ளது ஆம் உள்ளது
யாதொரு பொருளை இல்லை யென்று உரைக்கில் இல்லையாம் ஈது உலகியற்கை
ஆதலால் அவளை அருந் தவத்தோர்கள் ஆசிரமத்து அயல் விடுத்தும்
ஈது நான் துணிந்த காரியம் இனி வேறு எண்ணுவதொரு பொருளில்லை (பாடல் 732 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ராமனின் நம்பிக்கைக்குரிய படை வீரரான விசயன், தந்தவக்கிரன், காளியன் ஆகியோர் கூறிய நாட்டு நடப்பு பற்றிய
சுவையான நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்ந்த ராமன்
”நீங்கள் நல்லதும் கெட்டதுமானவற்றைப் பார்த்துச் சொல்லுவதில் தள்ள வேண்டியவற்றைத் தள்ளி மீதியைச் சொன்னீர்கள்.
நடப்பு எதுவோ அதைக் கூசாமற் கூறுவீராக” என்றான்.

பிறகு அவர்கள் “ராமன் மானக்கேட்டான ஒரு விஷயத்தை நினைக்கவும் மாட்டார். வானவர்களுக்குத் தீங்கிழைத்த
ராவணனின் சிறையில் பன்னிரண்டு மாதம் இருந்தவளை மனைவியாக வாழ்க்கை நடத்துவது பேரிழுக்கே”
என மக்கள் பேசுகின்றனர் என்றார்கள்.

கடலால் சூழப்பட்ட உலகில் வாழும் மக்கள் மனதில் என்ன இருக்கிறதோ அதுவே உண்மை.
அவர்கள் இது இல்லை என்று கூறினால் இருக்காது என்று பொருள். இதுவே உலக இயற்கை.
எனவே அவளைத் தவம் புரியும் முனிவர்களது ஆசிரமத்துக்கு அருகே விடுவோம்.
இதுவே என் தீர்க்கமான முடிவு. இதில் மாற்றமில்லை.

இதைத் தொடர்ந்து லட்சுமணன் வால்மீகி ஆசிரமம் அருகே சீதையை விடும் போது கூறுகிறான்.

நன்னெறி நகரும் நாடும் கடந்து போய் அடவி நன்னித்
தன்னுயிர் தன்னை விட்டுத் தடம் புகழ் கொண்ட ஐயன்
இன்னுயிர்த் தோழனாய் வெழில் கொள் வான்மீகி வைகும்
பங்கை சாலையின் பாற் பாவையை விடுதி என்றான்

என்றவனியம்ப அண்ணல் ஏவலை மறுக்க அஞ்சி
இன்றுனைக் கொன்று போந்தேன் என்றிவை இளையோன் சொல்ல
கன்றிய கனலினூடு காய்ந்த நாராசம் சீதை
தன் துணைச் செவியில் ஏறத் தரணியில் தளர்ந்து வீழ்ந்தாள்–(பாடல் 752, 753 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

நன்னெறியில் வாழும் நாட்டின் மன்னரான தசரதன் நகர் நாடும் தாண்டிப் புகழ் பெற்றவர்.
அவது உயிர்த் தோழரான வால்மீகியின் ஆசிரமத்திற்கு அருகே அவளை விடுக என்றான்.

அண்ணல் ராமனின் ஏவலை மறுக்க அஞ்சி இன்று உன்னைக் கொண்டு வந்தேன் என்று லட்சுமணன் கூறியது
பழுக்கக் காய்ச்சிய இரும்பு செவியில் நுழைந்தது போல மனத் துயருற்றுத் தரையில் வீழ்ந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
பௌராபவாதஹ சுமஹா(ம்) ஸ்த்தா ஜன்பதஸ்ய ச
வர்த்ததே மயி பீபத்ஸா மே மர்மாணி க்ருந்ததி- (பாடல் 3, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

தற்சமயம் பொது மக்களிடையே என்னைப் பற்றியும் சீதையைப் பற்றியும் மிகவும் தவறான அபிப்ராயம் பரவி உள்ளது.
என் மீது அவர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். அவர்களது வெறுப்பு என் இதயத்தைப் பிளக்கிறது.

அப்யஹம் ஜீவிதம் ஜஹா(ன்) யுஷ்மான் வா புஷர்விபாஹா
அபவாத பயாத் பீதஹ கிம் புனர்ஜங்காத்மஜம்–(பாடல் 14, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

(ராமன் தன் சகோதரர்களைப் பார்த்துச் சொல்வது) மனிதருள் உயர்ந்த என் உறவுகளே ! மக்களின் நிந்தனைக்கு அஞ்சி
என் உயிரையும் உங்களையும் கூடத் தியாகம் செய்யத் தயார். சீதையைத் தியாகம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

கங்கா வாஸ்து பரே பாரே வால்மீகேஸ்து மவாத்மனஹ
ஆஷ்ரமோ திவ்யாஸ்ன்ஷஸ்தம்ஸாதிரமார்ஷிதஹ
தத்ரைதாம் விஜனே தேஷே விஸ்ருஜ்ய ரகுநந்தன
சீக்ரமாகச்ச சௌமித்ரே குருஷ்ய வசனம் மம
தஸ்மாத் த்வாம் க்ச்ச சௌமித்ரே நாத்ர கார்யோ விசாரணா
அப்ரீதர்ஹி பரா மஹ்யம் த்வயைதத் ப்ரதிவாரிதே–(பாடல் 17,18,19,20 ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

கங்கையின் அந்தக் கரையில் மகாத்மா வால்மீகி முனிவரின் திவ்ய ஆசிரமம் உள்ளது. நீ சீதையை அந்த ஆசிரமத்தின்
அருகில் விட்டு விடு. சீதை விஷயத்தில் நீ வேறு எந்த விஷயத்தையும் என்னிடம் கூறாதே

எனவே லட்சுமணா ! நீ இப்போது போ. இவ்விஷயத்தில் எதையும் யோசிக்காதே.
நீ எனது இந்த முடிவில் தடை ஏற்படுத்தினால் எனக்கு மிகவும் கஷ்டம்.

ஸாத்வம் த்யத்வா நிருபதினா நிர்தோஷா மம சன்னிதௌ
பௌராபவாத்பீதேன க்ராஹாம் தேவி ந தேஅன்யதா
அஷ்ரமாந்தேஹு ச் மயா த்ய்க்த்வ்யா த்வம் பவிஷ்யஸி
ராக்ஞஹ ஷாஸ்ன்மாதாய ததைவ சில தௌர்வாதம்–(பாடல் 13,14 ஸர்க்கம் 47 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

நீங்கள் என் முன்னே குற்றமற்றவராய் நிரூபித்துள்ளீர்கள். இருந்தாலும் மக்களின் அபவாத்திற்குப் பயந்து
மகாராஜா தங்களைத் துறந்து விட்டார். நான் அவரின் ஆணையாகவும் அதுவே தங்களின் விருப்பம் என்றும்
நினைத்துத் தங்களை ஆசிரமத்துக்கு அருகே விட்டு விடுவேன்.

லக்ஷ்மணஸ்ய வசஹ ஸ்ருத்வா தாருணம் ஜனகாத்மஜா
பரம் விவிதமாகம்ய வைதேஹி நிப பாத ஹ–(பாடல் 1, ஸர்க்கம் 48 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

லட்சுமணனின் இந்தக் கடுமையான் சொற்களைக் கேட்ட சனகன் மகள் சீதை மனமுடைந்தாள்.
மூர்ச்சையுற்று தரையில் விழுந்தாள்.

மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி என்பதே ராமனின் தீர்க்கமான முடிவாயிருந்தது.
இதன் மூலம் மக்களுக்கு வழிகாட்டுவதை, மறுமலர்ச்சியை மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதை
மக்கள் பின்பற்றும் ஆன்மீகவாதிகளிடம் சிந்தனையாளர்களிடமிருந்தே மன்னன் எதிர்பார்க்கிறான். இது ராமனின் தரப்பு.

சீதையைத் தனியே காட்டுக்கு அனுப்பியது இதே சூழலில் தான்.
அதுவும் அவள் கருவுற்றிருந்தாள் என்பது கவனிக்கப் படவேண்டிய ஒன்று.
அந்த நிலையிலும் அவள் காட்டுக்கு அனுப்பப் பட்டாள்.

பிறகு வால்மீகி என்னும் முனிவரின் பராமரிப்பில் மகன்களை வளர்த்து அம்மகன்கள் அசுவமேத யாகத்தின் போது
வந்த குதிரையைப் கைப்பற்றி சித்தப்பாக்களுடன் சண்டையிட
இறுதியில் அப்பாவை நோக்கி அம்பு எய்யும் முன் சீதை வந்து தடுக்கிறாள்.
மறுபடி அயோத்தி வந்த அவளைத் தன் தூய்மையை நிரூபிக்கும் படி ராமன் ஆணையிட
பூமித்தாயின் மடியில் ஐக்கியமாகிறாள்.

ஒட்டக்கூத்தரின் பாடல்களில் :

வால்மீகி முனிவரை நோக்கி ராமன் கூறுவான்:
முனிவ நீ அறுளிய மொழியை வானவர்
அனைவரும் யானும் முன்னறிவம் ஆயினும்
கனை கடல் உலகு உளோர் காணல் வேண்டும் என்று
இனையன இராகவன் எடுத்து இயம்பினான்-(பாடல் 1257 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

‘முனிவரே ! தாங்கள் கூறுவதை நானும் வானோரும் ஏற்கனவே நன்கு அறிவோம். ஆயினும் கடலால் சூழப்பட்ட
இவ்வுலகிலுள்ள மக்கள் சீதையின் கற்பின் சிறப்பை அறிய வேண்டும்.

விசைப் பாசத்தை அறுத்த முனி வேள்வி காத்து மிதிலை புகுந்து
எனக்கா ஈசன் வில்லிறுத்து அன்று எனக்கைப் பிடித்த எழிலாரும்
புனக்காயம் பூ நிறத்தானையன்று ம்ற்றொரு பூ மனலான்
மனத்தால் வாக்கால் நினையேனேல் வழிதா எனக்கு மண்மகளே-.(பாடல் 1264 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

பாசம் நீக்கிய பற்றற்ற விசுவாமித்திரரின் வேள்வியைக் காத்துப் பிறகு வில்லை ஒடித்து என்னைக் கைப் பிடித்த
ராமனை அன்றி வேறு ஒரு மன்னனை நான் மனதாலோ வாக்காலோ நினையாதும் சொல்லாதும் இருந்தது
உண்மை என்றால் மண்மகளே எனக்குப் பிளந்து வழி விடு.

சேணுலாவிய தலமடந்தை சீதை தன்
பூணுலாவிய புலம் பொருந்தப் புல்லுறுஇ
வாள் நிலாவிய கதிர் வழங்கல் செல்கலாக்
கீணிலைப் படலமும் கிழியப் போயினாள்

நகைகளால் அலங்கரிக்கப்பட்ட சீதையின் தோள்களைப் பற்றி தேவ லோகத்திலிருந்து வந்தவளான பூமாதேவி
சூரியனின் ஒளிகூட நுழைய முடியாத பூமியைப் பிளந்து உள்ளே சென்று மறைந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
ஷீவஹ ப்ரபாதே து ஷபர்த் மைதிலி ஜனகாத்மஜா
கரோது பரிஷன் மத்யே ஷோதனர்த்தே மமைவ ச-(பாடல் 6 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

நாளை காலை மிதிலை மன்னரின் மகள் நிறைந்த சபையில் வந்து எனது களங்கத்தைப் போக்கும் சபதம் செய்வாராக.

யனன தத் சத்யமுக்தம் மே வேம்தி ராமாத் பரம் ந ச
ததா மே மாதவி தேவி விவ்ரம் தாதுர்மஹதி (பாடல் 16 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

தஸ்மின்ஸ்து தரணி தேவி பாஹூப்யாம் க்ருஹ்ய மைதிலீம்
ஸ்வாகதேனாபி நந்த்யைநாமாசனே கோபவேஷயத் (பாடல் 19 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

சிம்மாசனத்துடன் பூமாதேவி அழகிய வடிவுடன் வந்தாள். அவள் மிதிலாகுமாரி சீதையைத் தனது இரு கரங்களால்
எடுத்து மடியில் வைத்து வரவேற்கும் விதமாக அவளை வணங்கி சிம்மாசனத்தின் மீது அமர்த்தினாள்.
(பாடல் 19 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஒட்டக்கூத்தர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-