Archive for July, 2020

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -1-10–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 19, 2020

ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து-

மாட மா மயிலையில் அவதரித்து-மஹ்தாஹ்வயர்-என்னும்படி –
செம்மை +வடி -சேவடி போலே –பெருமை +ஆழ்வார் -பேயாழ்வார்
நிரதிசய ப்ரேமத்தை யுடையராய் – அத்தாலே திருக் கண்டேன் என்று உரைத்த
பேயாழ்வார் திருவடிகளிலே நிரந்தர அனுசந்தானத்தை விதிக்கிறது இதில் –
கோவலன் வர்த்திகையாலே அதுவே நிரூபகமான தேசம்-

புற மழைக்கு ஒதுங்கினவர்க்கு உள்ளும் மழை முகில் போல்வான் தன்னை அன்பு கூரும்படியான தாம் அனுபவிக்கப் புக்கு –
அனுசந்தித்து -மனனம் பண்ணி -திருக் கண்டேன் என்று உரைத்த -அவ்வனுப ஜெனித ப்ரீதி யாலே
தாம் சாஷாத் கரித்த படியை – அவர் திருக் கண்டேன் என்று அனுசந்தித்தால் போலே நீயும் அவர் திருவடிகளை
வாக்காலே அனுசந்திக்கப் பார்

———

கண்டு அடைவு கெட்டுப் பேசிற்று ஆகையாலே – ஆகையாலே அன்றோ பேயர் ஆய்த்து-
பர பக்திக்கு அநந்தரம் சாஷாத் காரமாய் இறே இருப்பது
தன்னைக் காட்டிக் கொடுக்கக் கண்டேன் -என்கிறார் இதில் –

ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி –
பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் -வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்
-திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இறே நம்மாழ்வார் )

முதலாமவர் -உபய விபூதி யுக்தன் -என்று அனுசந்தித்தார்
மற்றவர் அவனுக்கு வாசக சப்தம் -நாராயண சப்தம் -என்றார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேணும் -என்கிறார்-

சேஷியுடைய ஸ்வரூபம் சொன்னார் முதல் ஆழ்வார்
சேஷ பூதன் ஸ்வரூபம் சொன்னார் நடுவில் ஆழ்வார்
இரண்டுக்கும் அடியான ஸ்வரூபம் சொல்லுகிறார் இவர்

எம்பெருமான் கடல் கடைய தேவர்கள் நடு நின்றால் போலே முன்புற்றை ஆழ்வார்கள் பிரசாததத்தாலே
கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் –

அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே பகவத் பிரசாதம் அடியாக தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி
அத்தாலே கடலைக் கண்டவன் அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித் தனி கண்டு உகக்குமா போலே
லஷ்மீ சங்க கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தரியாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் பேயார்-

————–

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

இவள் கடாஷம் பெறாத போது-அவனோடு அல்லாதாரோடு வாசி இன்றிக்கே இருக்கும்
இந்த்ரன் தம்பியாய் அவன் பின்னே திரியச் செய்தே அவள் பாராத போது இந்த்ரன் ஐஸ்வர்யம் நஷ்டமாயிற்று
உபாசன வேளையில் இவள் புருஷகாரமாக வேண்டினாப் போலே சாஷாத் கார வேளையிலும் முற்பாடு உடையவள் இவள் –
பேணிக் கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நங்கள் திரு -இரண்டாம் திரு -56-என்று
சாஷாத் காரத்துக்கும் அடி இவள் –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திரு -67-என்று ஞானத்துக்கும் அடி இவள் –
திருக் கண்டேன்–-தர்மம் தன்னைக் கண்டேன் –
பொன் மேனி கண்டேன்–-அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்-
அவளும் தண்ணீர் தண்ணீர் என்று மேல் விழும்படி இருப்பதாய் –
பொன் போலே ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு மேனியைக் கண்டேன்-
புரி சங்கு –கூனல் சங்கம் – என்னுமா போலே சேஷத்வத்தாலே எப்போதும் ப்ரஹ்வீ பாவத்தை உடைத்தாய் இருக்கும்-
என் ஆழி வண்ணன் –இவருடைய கடல் இருக்கிறபடி
கடலின் உள்ளே இறே பிராட்டியும் சங்கும்ரத்னமும் எல்லாம் பிறப்பது –
இன்று –அவன் காட்டக் கண்ட இன்று-இவள் புருஷ்காரமாகக் கண்டேன் இன்று

———–

அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போய்த்து என்கிறார் –கைங்கர்யமே யாத்ரையாம் படி யானேன் –
(கீழே பஞ்ச வர்ணம் -அதில் பச்சை வர்ணம் சேர்ந்து இங்கு )

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —–2-

திருவடிகளைக் காண்கைக்கும் ஜன்மத்துக்கும் சஹாவஸ்தானம் இல்லாமை –
அவள் விரும்புகிற விஷயம் என்றும் ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த பெருமையை நினைத்தும் பிற்காலியாதே மருவிக் கண்டு
கொண்டது என்னுடைய மனஸ்ஸூ –அந்தப்புர பரிகரமான நான் இன்று உன் திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
பிராட்டியோபாதி பரிவு உண்டாய்க் கண்டேனோ – விலக்காமையே உள்ளது –
ஒரு பிரயோஜனத்தை கொண்டு போகை அன்றிக்கே உன் பக்கலிலே மருவிற்று
பிராட்டியோட்டை சம்பந்தம் உறவு அறியாதார்க்கு வெருவுகைக்கு உடலாம்
உறவு அறிந்தார்க்கு அயோக்யன் என்று அகலாமைக்கு உடலாம் –

———-

கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மறுவின படி சொல்லிற்று
அவன் இவருடைய மனசை அல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் –

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——–3-

மனத்துள்ளான் –உத்தேச்யம் அவ்விடமே-மனசைப் படுக்கையாகப் புகுந்தான் –
சம்சார சம்பந்தத்தை அறுப்பானாய்க் கொண்டு மனசிலே புகுந்தான் –
என் நெஞ்சினில் வந்து பேர்க்க முடியாதபடி வாழ்கிறான் –
மலராள் தனத்துள்ளான் –அவனுடைய நல் ஜீவன் இருக்கும் இடம் –
தண் துழாய் மார்வன்-அவளுடைய நல் ஜீவன் இருக்கும் இடம் –

——–

சர்வ ரஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகங்கள் என்கிறார் –
கீழ் – தமக்குச் செய்த படி சொன்னார் –இதில் பொதுவான ரஷையைச் சொல்லுகிறது –
அது ஸ்வஜன ரஷணம் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——–4—

மருந்தும் பொருளும் அமுதமும் தானே-விரோதியைப் போக்குவானும் அபிமதத்தைத் தருவானும் அபிமதம் தானும் அவனே –
சம்சார வியாதியைப் போக்கும் பேஷஜமும்-
இஷ்டமான மோக்ஷ ஸூகத்தைத் தரும் பொருளும் -ஸ்வத இஷ்டமாய் இருக்கிற போக்யமான அம்ருதமும்-
திரு வுலகு அளந்து அருளின எம்பெருமான் திருவடிகளே-சமிதை பாதி சாவித்திரி பாதி யல்ல –
நமுசி பிரக்ருதிகளை பொடிப் படுத்தின படியாலே -மருந்து–அர்த்தியாய் வருகையாலே பொருளானான்
திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அம்ருதமானான்
உண்டு -மருந்தான படி–உமிழ்ந்து -பொருளான படி -செங்கண் மால் -அமுதமான படி

————-

திரு வுலகு அளந்து அருளின படி பிரச்துத்தமானவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –
அவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே இனி அழகை அனுபவிப்போம் என்கை-
அப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது – அலமாப்பாலே இறே-
அழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது-பேச ஒண்ணாது –

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–

கையிலே திரு வாழி பிடித்தால் வேறு ஒரு ஆபரணம் சாத்த வேண்டாது
இருக்கிறவனுடைய அழகு அடி வண்ணம் தாமரை-அவன் அழகிலே ஆழங்கால் பாட்டு அனுபவிக்கிறார் –

————–

கீழ்ச் சொன்ன அழகையும்-அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் –

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல் —–6-

திருவாழி யோபாதி நிறமும் சிறந்து இருக்கும் -இந் நிறம் உடையவனுக்கு வேறொரு ஆபரணம் வேணுமோ –
திருவடிகள் பாவனமானது மாத்ரம் அல்ல போக்யமும் என்றபடி-
ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தன் -என்கிறபடியே வல்லார் ஆடினால் போலே
அழகுக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றோ-

———–

இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து
அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாழும் படி வாராய் என்கிறார் –

கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க் கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள்ளூர்திச் செல்வன் எழில் அளந்தங்கு
எண்ணற்கரியானை எப்பொருட்க்கும் சேயானை
நண்ணற்கரியானை நாம் –7-

எழிலை அளந்து மநோ ரதிக்க ஒண்ணாதவனை–அவர் காட்டக் காண இருக்கிற நாம்
திருவடிகளைத் தொழுவோம் போரு –

—————-

எல்லா இந்த்ரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் ———8–

பிச்சர் வாழைத் தோட்டம் புக்கால் போலே தோற்றின திரு நாமங்களை அடங்கச் சொல்லி –
அவை எல்லாவற்றுக்கும் அடியான பிரதான நாமத்தைச் சொல்லி-
பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து-வெளி நாடு காண உமிழ்ந்து –
நிரதிசய போக்ய பூதனான ஸூலபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண்

——-

காண்க நம் கண் என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார் –

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திருமா மணி வண்ணன் தேசு ——-9-

ஜிதந்தே புண்டரீகாஷா எண்ணப் பண்ணும் கண் –முதலுறவு பண்ணும் திருக் கண்கள் –
ஸ்பர்சத்துக்குத் தோற்று விழும் நிலமாய் – காடும் மோடுமான பூமியை அளந்து கொண்ட திருவடிகளும்
அந்தக் கமலம் போலே இரா நின்றன-
திருமா மணி வண்ணன் – காந்தி மிகுத்ததான பெரு விலையனான ரத்னத்தை உடைய நிறத்தை உடையவன்
ஸ்ரீ மத்தாய் ஸ்லாக்கியமான -ஸ்ரீ மன் நாராயண அர்க்கமான மணி-சர்வதா சாம்யம் காணாமல் கதிர் பொறுக்குகிறார் இறே
புறம்பு உபமேயம் பொய்யாய் இருக்கும் -இங்கு உபமானம் பொய்யாய் இருக்கும் –

———–

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை-அனுபவிக்கும் போது –யோக்யராய்ப் பேச வேணுமே –
ஆனால் சிறிது நன்மை தேடிக் கொண்டு வந்து புகுர வேண்டாவோ என்ன
நீங்கள் மேல் விழுந்து அனுபவிக்க -எல்லா நன்மையையும் தன்னடையே உண்டாம் என்கிறார்
அங்குள்ள நன்மையே பேசிப் போம் இத்தனையோ-நமக்கும் சில பேறு உண்டாவோ -என்ன
நாம் அவனுடைய திருநாமம் சொல்லி உபக்ரமிக்க-எல்லா சம்பத்துக்களும்-தங்கள் ஸ்வரூபம் பெருகைக்குத்
தாமே வந்தடையும் என்கிறார் –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும் மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–

இஸ் சம்பத்துக்கள் எல்லாம் நமக்கு-இவ் வாஸ்ரயத்தை சென்று கிட்டி ஸ்வரூபம் பெற வேணும் என்று கொண்டு
ஸ்நேஹித்துச் சென்று மேல் விழும் தன் பேறாகச் சென்று அடையும்-
இவன் திரு நாமம் சொல்லி அல்லது நிற்க மாட்டாதாப் போலே அவையும் இவனை அடைந்து அல்லது நிற்க மாட்டா –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்தரம்–

July 19, 2020

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்தரம்

ஸ்ரீ கிருஷ்ண
கமலாநாதோ
வாஸுதேவஸ்
ஸநாதந:
வஸுதேவாத்மஜ:

புண்யோ
லீலா மாநுஷ விக்ரஹ:
ஸ்ரீவத்ஸ
கௌஸ்துபதரோ
யஶோதா வத்ஸலோ

ஹரி:
சதுர்புஜாத்த
சக்ராஸி கதா ஶங்காத் யுதாயுத:
தேவகீ நந்தந:
ஸ்ரீஶோ

நந்த கோப ப்ரியாத்மஜ:
யமுனா வேக ஸம்ஹாரீ
பல பத்ர ப்ரியாநுஜ:
பூதநாஜீவிதஹர:
ஶகடாஸுர பஞ்ஜந:

நந்த வ்ரஜ ஜநாநந்தீ
ஸச்சிதாநந்த விக்ரஹ:
நவநீத விலிப்தாங்கோ
நவநீத நடோநக:
நவநீத நவஹாரோ

முசுகுந்த ப்ரஸாதக:
ஷோடஶஸ்த்ரீ ஸஹஸ்ரேஶ:
த்ரிபங்கீ லலிதாக்ருதி:
ஸுகவாகம் ருதாப்தீந்து:
கோவிந்தோ

யோகினாம் பதி:
வத்ஸ வாடசரோ நந்தோ
தேநுகாசுர பஞ்ஜந:
த்ருணீ த்ருத
த்ருணா வர்தோ

யமலார்ஜுந பஞ்ஜந:
உத்தால தால பேத்தா
ச தமால ஶ்யாமலாக்ருதி:
கோப கோபீஶ்வரோ
யோகீ

கோடி ஸூர்ய ஸமப்ரப:
இளாபதி:
பரம்ஜ்யோதிர்
யாதரவேந்த்ரோ
யதூத்வஹ:

வநமாலீ
பீதவாஸா:
பாரிஜாதாபஹாரக:
கோவர்தநாச லோத்தர்த்தா
கோபால:

ஸர்வ பாலக:
அஜோ
நிரஞ்ஜந:
காம:
ஜநக:

கஞ்ச லோசந:
மதுஹா
மதுரா நாதோ
த்வாரகா நாயகா
பலீ

ப்ருந்தாவ நாந்தஸ்
ஸஞ்சாரீ
துலஸீ தாம பூஷண:
ஸ்யமந்தக மணேர் ஹர்தா
நர
நாராயணாத்மக:

குப்ஜா
க்ருஷ்ணாம்பரதரோ
மாயீ
பரம பூருஷ:
முஷ்டிகாஸுர சாணூர மல்ல யுத்த விஶாரத:

ஸம்ஸாரவைரீ
கம்ஸாரி:
முராரிர் நரகாந்தக:
அநாதி
ப்ரஹ்மசாரீ ச

க்ருஷ்ணாவ்யஸந கர்ஶக:
ஶிஶுபால ஶிரஶ் சேத்தா
துர்யோதந குலாந்தக:
விதுராக்ரூர வரதோ
விஶ்வரூப ப்ரதர்ஶக:

ஸத்ய வாக்
ஸத்ய ஸங்கல்ப:
ஸத்ய பாமாரதோ விஜயீ
ஸுபத்ரா பூர்வஜோ
விஷ்ணு:

பீஷ்ம முக்தி ப்ரதாயக:
ஜகத் குருர்
ஜகந் நாதோ
வேணுநாத விஶாரத:
வ்ருஷபாஸுர வித்வம்ஸீ

பாணாஸுர பலாந்தக:
யுதிஷ்டிர ப்ரதிஷ்டாதா
பர்ஹி பர்ஹாவதம்ஸக:
பார்த்தஸாரதி
ரவ்யக்தோ

கீதாம்ருத மஹோததி:
காளீயபண மாணிக்ய ரஞ்ஜித ஸ்ரீபதாம்புஜ:
தாமோதரோ
யஜ்ஞபோக்தா
தாநவேந்த்ர விநாஶக:

நாராயண:
பர ப்ரஹ்ம
பந்நகாஶந வாஹந:
ஜலக்ரீடா ஸமாஸக்த கோபீ வஸ்த்ரா பஹாரக:
புண்ய ஶ்லோக:

தீர்த்தபாதோ
வேத வேத்யோ
தயாநிதி:
ஸர்வ பூதாத்மகஸ்
ஸர்வ க்ரஹ ரூபீ
பராத்பர:

ஏவம் கிருஷ்ணஸ்ய தேவஸ்ய நாம் நாம அஷ்டோத்தரம் ஶதம்

ஸ்ரீ கிருஷ்ண நாமாம்ருதம் நாம பரமாநந்த காரகம்
அத்யுபத்ரவ தோஷக்நம் பரமாயுஷ்ய வர்த்தநம்

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்-

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.-

ஸ்ரீ பூதத்தாழ்வார் தாமே அனுபவிக்கும் இரண்டாம் திருவந்தாதி —

July 18, 2020

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-

இத்தால்
தம்முடைய பக்தி இருந்தபடியையும்
அபி நிவேசம் இருந்த படியையும்
இதுக்கு அடியான விஷயத்தின் உடைய ரச்யத்தை இருந்தபடியையும்
சேஷத்வ ஜ்ஞான அநு சந்தானத்துக்கு யோக்யமாம் படி ஆத்மா போய் தாந்தமான படியையும்
அவன் பக்கல் உண்டான சேஷத்வ பிரதிபத்தி இருந்த படியையும்
இவை எல்லாவற்றையும் சொல்லிற்று ஆகிறது-

——–

இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவன் -ஜகத் ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
விரோதி நிரசனம் பண்ணி -தேவாதி தேவன் என்று பரிச்சேதிக்கப் போகாதபடி பரப்புடைய கோயிலிலே கண் வளர்ந்து அருளிப்
போவது வருவதாக ஒண்ணாது என்று திரு மலையிலே நின்று அருளினவன் என் நெஞ்சு விரும்பிப் போகிறிலன் –
என்னைப் பெறுகைக்காக முன்பு விரும்பின அவ்வவ ஸ்தலங்களை உபேக்ஷித்து -இப்போது
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் மனசிலே நித்ய வாசம் பண்ணா நின்றான் –

————

இவர் இப்படி உபதேசித்த அனந்தரம் -இவர் தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே
பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
இவ்விஷயத்தில் என் மனோ வாக் காயங்கள் பிரவணம் ஆய்த்து-என்கிறார்-

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—————-32-

———–

கீழ் அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று -இதில் அவனை அனுபவிக்கையிலே மனோ வாக் காயங்கள் அவனுடைய
ஸ்வரூப ரூப குணாதிகளான ஸ்வ பாவங்களை சொல்லும் பிரகாரத்தில் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –
மகிழ்ந்த மாத்திரமேயோ -வேறு ஒரு இடத்துக்கு ஆகாதபடி ஆய்த்தின -என்கிறது –
இத்தால் அனந்யார்ஹம் ஆனபடியைச் சொல்லுகிறது –

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–

——————

இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் –
உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-கிருஷி பண்ணினாய் என்கிறது-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி——————34-

தேவர் என் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் ஆகிற பாக்யத்தால் அடிமை செய்யுமவனாய் விட்டேன்
என்னுடைய விலக்காமை யாகிற பாக்யத்தாலே என்னுதல்

————–

எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழு வாரைத் தொழ அமையும் –
அத் தோளைத் தொழுவார்களைத் தொழும் அத்தனை -என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

ராஷசனாக அமையும் -குரங்குகளாக அமையும் -ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் -பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –
அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது -ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –
வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –

————

பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –
இதில் எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் –
கீழே பாகவதர்களை விரும்பினார் -இதிலே அபாகவதர்களை அநாதரிக்கிறார் –

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-

குருவிந்தக் கல்லை -கூழாங்கல்லை -மாணிக்கம் என்று நினைத்து இருந்தால் அது ரத்னமாக மாட்டாது இறே-
ரத்ன பரீஷகன் ரத்னம் என்று அறிந்தது இறே ரத்னம் ஆவது -அப்படியே தம்முடைய நெஞ்சிலே மனிச்சர் என்று
வைக்கப் பட்டவர்களே மனுஷ்யர் ஆவார் என்கிறார் –சர்வேஸ்வரனால் திருத்த ஒண்ணாது என்று கை விட்டவர்களையும்
திருத்தப் பார்க்கும் இவர் கை விட்டால் பின்னைப் புகல் இல்லை இறே-பின்னை மனிச்சராகக் கொள்வார் இல்லையே –
ஸ்ரீ யபதித்வத்துக்கு வாசகமான திரு நாமத்தைச் சொல்லுவதே யாவது த்வயத்தைச் சொல்லுகை –

இத்தை ஒற்றியே –
ஆன் விடை எழ் அன்று அடர்தார்க்கு ஆள் ஆனார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று
என் மனத்தே வைத்தேனே-பெரிய திருமொழி -11-7-9- -என்கிறார் –
நண்ணாத வாள் அவுணர் பதிகத்திலும் –
தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறை பொழுதும் எண்ணோமே –
பூதத்தாழ்வார் அவதார ஸ்தல பாசுரத்திலே அவர் போல அருளி இருக்கிறார் –
தமர் உள்ளும் மா மல்லை -என்று பூதத்தாழ்வார் அருளி இருப்பதால் -பாகவத சேஷத்வத்தை
இந்த பதிகத்தில் வைத்தார்
கடல் மல்லை தல சயனத்து அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் –என்று
கத்தியும் வேலும் வைத்து கொண்டு இருப்பவர் அருளுகிறார் –
கூப்பிய கரங்கள் வுடன் அஞ்சலி ஹஸ்தராய் பாகவத சேஷத்வத்தை காட்டி கொண்டு
எழுந்து அருளி இருக்கிறார் இந்த திவ்ய தேசத்தில் –

————–

திரு உள்ளத்தைக் கூப்பிடு என்றாரே -அநந்தரம்-திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்கள் அவன்
திரு நாமங்களைச் சொல்லப் புகத்
தளர்ந்து தலைக் கட்ட மாட்டாதே சொல்லுமா போலே தாம் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார்-

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

அழைப்பன் திருமாலை-ப்ராஹ்மண பிரஜை பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லும் அத்தனை-
ரிஷிகள் கோஷ்டியில் -ய படேத் ராமசரித்ரம் சர்வ பாபி ப்ரமுச்யதே -பால -1-97- என்று பாவனமாய் இருக்கும்
ஆழ்வார்கள் கோஷ்டியில் அது நச்சுப் பொய்கை –
உயிர்க்கு அது காலன் என்று இரந்தேற்க்கு நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே
குழறிக் கொன்றீர் – திருவாய் -9-5-8-என்னக் கடவது இறே-

—————————

இப்படி மஹா பலி பக்கலும் கூட அனுக்ரஹத்தைப் பண்ணும் ஸ்வ பாவனானவன் கண்ணுக்கு இலக்காம்படி
தன்னை சர்வ ஸ்வதானமாக பண்ணி வந்து வர்த்திக்கிற திருமலை கிடீர் -நான் ஆதரிக்குமது என்கிறார் –

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

இவ் வுடம்பைப் பொகட்டு லோகாந்தரத்தே வேறு ஒரு யுடம்பு கொண்டு அனுபவிக்க நினைக்க –
ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள்
திருமலையே பிராப்யமாகப் பற்றி இருக்கும் மலை-நான் இவ் யுடம்பால் யுள்ள பிரயோஜனம் இங்கே கொள்ளப் பெற்றேன் –

——————

இவனுக்கு எல்லை நிலமான திருமலை அளவும் அவர் விரும்பின வாறே அவனும் தனக்கு வாஸ ஸ்தானமாக
நினைத்து இருக்கும் திருமலைகள் இரண்டிலும் பண்ணக் கடவ ஆதாரத்தை இவர் திரு உள்ளம் ஒன்றிலுமே
பண்ணினானாய் இருக்கிறது –

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

என் பக்கல் வருகைக்கு கிருஷி பண்ணின –பாலாலயமான திருப் பாற் கடலை க்ருதஜ்ஜத்தை தோற்றவும்-
உன் உகப்பைப் பற்றவும் -பிரானே கை விடாது ஒழிய வேணும் -என்று பிரார்த்தித்தேன் –

—————-

நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாயிற்று சர்வேஸ்வரனுடைய கடாஷத்தால் -என்கிறார்-

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

இது வேம்பாகிற பதார்த்தத்தின் யுடைய ஸ்வ பாவத்தை யுடைத்தே யாகிலும் இத்தைப் பாடு என்று –
இனிது என்று இருந்தில்லை யாகிலும் இத்தைச் செய்யப் பார் –
பொன்னாழி பாடு என்று –வேப்பங்குடி நீர் இருக்கிறபடி-
நாம் அலாப்ய லாபமாகப் பெற்ற அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கவி பாடுகை யாகிற இந்த பரம புருஷார்த்தமும்
அருளுகையே ஸ்வா பாவமாக உடையவனானவன் பண்ணின பிரசாதம்- நாம் பெற்ற நன்மைக்கு அடி என்கிறார் –

————–

இந்த லாபத்துக்கு அடியான பிரதம தர்சனம் இருந்தபடியைச் சொல்கிறார்-

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

உன்னுடைய கமலம் போன்றுள்ள திருவடிகளை நினைத்தேன் –
உன் திருவடிகளை நமக்கு பரம ப்ராப்யம் என்று அனுசந்தித்தேன் -ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினேன் -அநந்தரம் –
ஓர்ந்து – நிரூபித்துப் பரதந்த்ரமாய் என்னோடு எனக்கு அடைவில்லாமையையும் அவனுக்கேயாய் இருக்கிறபடியையும்
ஆராய்ந்து -ஆருடையத்தை ஆருடையதாகத் தான் நாம் பிரதிபத்தி பண்ணி இருந்தோம் என்று அனுதபித்து –
என்னையும் அங்கு ஓக்கினேன் –அத்திருவடிகளிலே என்னையும் நிஷேபித்தேன் -உபாயமும் அவனே யாக அத்யவசித்தேன் –
இத்தால்
கிருபா பிரேரித ஹ்ருதயனாய்க் கொண்டு தம்மை அவன் நிர்ஹேதுகமாக கடாஷித்த படியையும்
கடாக்ஷ பலமாக ஸ்வரூப ப்ராப்ய ப்ராபகங்களை உணர்த்தி –
பதற்றம் துணிவுகள் தமக்கு உண்டாக்கின படியையும் சொல்லிற்று யாய்த்து –

————-

இப்படி அனுசந்தித்த இவர் ஐஸ்வர் யத்திலும் ஆஸ்ரித பார தந்திரியமே அவனுக்கு ஸ்வரூபம் என்று அறிவர் கிடீர் –
தனக்கான ஜகத்தை என்றும் ரஷிப்பன் என்று சர்வேஸ்வரன் தன் திறத்து ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60–

உயர்வற உயர்நலம் உடையவனாய் இருக்கை யல்ல ஸ்வரூபம் -எளிவரும் இயல்வினனாகை-
ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம்
பிறக்கப் பிறக்க ஸூத்த சத்வ மயமாகக் கொண்டு நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும் உன் திருமேனி-
ஜகத் காரணாமாய்-எல்லார்க்கும் சத்தை அவன்-ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது-
முறை தப்பாமல் நின்று ஜகத் ரஷணம் பண்ணுகிறார்-
அஜ்ஞானத்தாலே முன்பு கை விட்டாப் போலே இப்போது ஜ்ஞானத்தாலே கைவிடப் பார்க்கிறார் –

—————————

இன்றாக உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீர் காணும் -என்ன –
அந்த லாபத்தை அனுசந்தித்து அதுக்கு அனுரூபமாகப் பரிமாறுகிறார் -பெற்ற அம்சம் உன் பக்கல் ருசி -என்கிறார் –

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

நிர்விசேஷ சின்மாத்ரம் என்றாப் போலே சிலவற்றை உத்தேச்யமாக நினையாதே திரு மேனியே ப்ராப்யம் என்று இருக்கப் பெற்றேன் –
திரு மேனி கண்டேன் -பொன் மேனி கண்டேன் என்னும் சொல்லை சேஷபூதர் ஆகையாலே பணிந்தேன் -என்கிறார்-
அன்பாய்த் துணிந்தேன்-ஞான கார்யம் அல்ல -அபி நிவேசத்தாலே துணிந்தேன் –
பெருமாள் புக்கு அருளினால்-பின்னும் முன்னும் நின்று வைத்த அனைத்தையும் பின்பும் பிறகுவாளியையும் கண்டு யேத்துகையில் துணிந்தேன்
திருமலை நம்பி பக்கலிலே வாசனை பண்ணி இருப்பார் – ஸ்ரீ பராங்குச தாசர் என்று ஒருவர் உண்டு -அவர் நம்பி பணித்தத்தாகச் சொல்லும்படி –
புகலிடம் என்கிறது -அவதரித்துப் போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய் -அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்கிறபடியே அவர்கள்
நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் என்னுமதிலே அத்யவசித்தேன் -என்கிறார் -என்றுமாம் –

————-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

நித்தியமான ஆத்ம வஸ்துவைத் தொற்றிக் கிடக்கிற புண்ய பாப ரூப கர்மங்களைப் போக்குவித்துப் பின்னையும்
மறுவலிட்டு வாராதபடிக்கு ஈடாகப் போக்கும் மிடுக்கை யுடையவனைக் கண்டு கொண்டேன் –
சேதனன் ஆகையாலே இரண்டு இடத்திலும் இவனுக்கு ஸ்வபாவ ஜ்ஞானமே வேண்டுவது -அஞ்சுகைக்கும் அச்சம் கெடுகைக்கும்-
துறக்க ஒண்ணாத படி ஆத்மாவோடு கூடி துக்க அவஹமான புண்ய பாப ரூப கர்மங்கள் இரண்டையும் துரத்தி விட்டுப்
பின்னையும் மறு கிளை கிளர்ந்து வரக் கடவதாய் -துக்க ஹேதுவான வாஸனா ருசிகளையும்
செறுத்து முடிக்குமவன் மிடுக்கையும் காணப் பெற்றேன் –

—————-

அவன் இப்படி சர்வ சமாஸ்ரயணீயனான நிலையை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக வ்யவசிதரான படியை அருளிச் செய்கிறார் –

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

தாய் பேர் சொல்லக் காலமும் தேசமும் பார்க்க வேணுமோ –

————–

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி பாடும்படியான
ஸூஹ்ருதம் பண்ணினேன் நானே -என்கிறார்
நம் ஆழ்வார் வானவர் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் 4-5-9-
என்றாப் போலே யாயத்து இவர்க்கும் இது –

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பெரும் தமிழன்— பெரிய தமிழன் –பெரிது நல்லேன்-மிகவும் நல்லேன்-
பலத்தைக் கொண்டு நிச்சயிக்கிறார் -எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6–
எம்பெருமான் – இதுக்கடி இவன் எனக்கு சேஷி ஆகையாலே –
இவருடைய தபஸ்ஸூம் பலமும் இருக்கிறபடி -போந்தேன் புண்ணியனே -பெரிய திருமொழி -6-3-4–
யானே இரும் தமிழ் நன் மாலை –வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –
என்னாகியே தப்புதல் இன்றி தனிக் கவி தான் சொல்லி -திருவாய் -7-9-4-என்கிற இத்தை நினைத்து அருளிச் செய்கிறார் –
நல்லேன் பெரிது – யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–நித்ய முக்தரும் அடைவு கெட்டுச் சொல்லுவார்கள் –
நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்–என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் –
ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –

—————

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளில் அடிமை எனக்கு ருசித்து நான் ஸ்ம்ருதி மாத்ரத்தாலே அங்கே பிரவணன் ஆனபடியாலே
பண்டு அவன் வடிவைக் காணப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ -என்கிறார்-

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

நேர்ந்தேன் அடிமை –
அவன் பக்கலில் யுண்டான அடிமையிலே நேர்ந்தேன் -ஸ்வரூப அனுரூபமான கைகர்யத்தைக் கிட்டினேன் –
துணிந்தேன் -என்று கீழே -65- பாசுரத்தில் சொன்னபடி -ஷத்ரியனுக்குஅபிஷேகம் நேர்பட்டால் போலே –
அவனுடைய அழகிய திருவடிகளை ஸ்மரித்தேன்-இவருடைய அபிஷேகம் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய் -4-3-7-என்றும்
மாலடி முடிமேல் கோலமாம் -குலசேகரன் -பெருமாள் -7-11-என்றும் சொல்கிறபடி
அடிமை ஆசைப்பட்டால் அடியை நினைத்து இருக்கும் அத்தனை இறே –
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -என்று திருவடிகளிலே ஸ்நேஹத்தை யுடையனாய் அத்தாலே பரி பூர்ணன் ஆனேன்-

————

முன்பு இவனைக் காணப் பெற்றவர்கள் என் பட்டார்களோ என்றாரே –
அவன் தன்னைத் தான் காணப் பெற்றுப் படுகிற பாட்டைச் சொல்லுகிறார் –
கீழ் ஸ்ரீ தண்ட காரண்யத்தில் அக்காலத்தில் காணப் பெற்றவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கிறார் என்றுமாம் –
அவர்களுக்கே அல்ல -எனக்கும் விடிந்தது என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

ஓர் இரவும் ஒரு பகலுமே யுள்ளது -எம்பெருமானை அறிவதற்கு முன்பும் பின்பும் –
முன்பு பகல் கலவாது -பின்பு இரவு கலவாது –
அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் -உறங்காத என்னையும் கண்டேன் –
கனவில்-இந்த்ரியங்களால் கலக்க ஒண்ணாத படி மானசத்தால் யுள்ள ஜ்ஞானத்தாலே அழகிதாகக் கண்டேன் –

————-

அவ் வடிவு அழகைக் கண்ட மாத்திரமேயோ -அவ் வடிவிற்குத் தகுதியான நாச்சியாரையும் கூட காணப் பெற்றேன் -என்கிறார் –
கீழ் -நாராயணனைக் கண்டார் -என்றார் -இப்போது ஸ்ரீ லஷமீ சநாதானாகக் காணப் பெற்றேன் -என்கிறார் –
வெறும் நாராயணனை அல்ல -திரு நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் -பிரபையோடே காணப் பெற்றேன் –

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

வடிக்கோலம்-கோலம் தனை வடித்து -அதில் நன்றான அம்சம் ஆய்த்து இங்குத்தை அழகாய் இருப்பது –
இதில் ருஷீஷாம்சமான கோலமுடையார் யாரோ -என்று அருளிச் செய்வர் நஞ்சீயர் –
ஜகத்தில் அழகு எல்லாம் கோதாகப் பிறந்தவன் அழகு இங்குத்தைக் கோது –
அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருவனுமே -இவளுக்கு விசிஷ்டமாக அவளோடு கூடினவன் என்று விஷய பூயஸ்தை-
இருவர் கூடினால் பாத்தம் போராத படியான விஷயம் இன்றிக்கே எல்லாரும் திரண்டு வந்து அனுபவியா நின்றாலும்
எல்லை காண ஒண்ணாத படி புக்கார் புக்காரை எல்லாம் கொண்டு முழுகும்படி அழகு குறைவற்று இருக்கும் இறே
கரையிலே நிற்பாரையும் இழுத்துக் கொள்ள வற்றான வடிவு அழகு இருக்கிறபடி-

————

அவனுடைய ரச்யதையை அனுசந்தித்தவாறே அமுதன்ன சொன் மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார்-

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

ஆழியான் -போக்யனுமாய் விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் இருக்கை –
எம்பெருமானும் அமுதமும் -கோதாம்படியான சொல்லு -எல்லா போக்யதையும் தன்னுடைய
போக்யதையிலே பொதிந்து இருக்கையாலே அவனை அமுது என்கிறது –
இது அவன் தன்னையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய் இருந்துள்ள
சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து திருவடிகளிலே நிர்மமனாய் விழுந்தேன்-
அறிந்து கவி பாடினேன் அல்லேன் -ஏத்தித் தொழவே எம்பெருமான் அபிசந்தியாலே கவி யாய்த்து –
ஏத்தி நவின்று – மிகவும் ஆதரித்து ஏத்தினேன் -ஆதராதிசயம் தோற்றப் புகழ்ந்து கொண்டு சொல்லி
நன் மாலை ஏத்தித் தொழுதேன் –

———–

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ சாதன அனுஷ்டானம் பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –
சமாதிக தரித்ரமான வஸ்துவை ப்ராபிக்கை -சமாதிக தரித்ரமான உபாயத்தாலே யாக வேண்டாவோ –
பண்டு ஆஸ்ரயித்தவர்கள் ஒன்றும் பெற்றிலர்கள் நான் பெற்ற பேற்றைப் பார்க்க-என்று கருத்து-

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

அதி ஷூத்ரனான நான் நின்று என்ன தபஸ்ஸூ பண்ணிக் கண்டேன் -அவன் காட்ட கண்டேன் இத்தனை இறே
ஒரு தபஸ் ஸூ பண்ணாதே நிர்ஹேதுகமாகப் பெற்றேன் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8-
வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் -4-5-9-
காண்பன் கொல் இன்று –நேற்று நினைக்கில் அன்றோ இன்று அடி அறியலாவது –

————

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப காலமே தொடங்கி அடிமைச் சுவடோடு கூட
அவன் படியை அனுபவித்துப் போருகிறேன் -என்கிறார் –இப்பேறு இன்று பெற்றேன் அல்லேன் என்கிறார்-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

இம் மஹா ப்ருதிவியை ஒருவர் இரக்க அன்றியே தானே சென்று அளந்த திருவடியை –
அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ -பூமி கிடந்த இடம் எல்லாம் தான் சென்று அளந்தான் அத்தனை அன்றோ –
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது -என்கை-
திருக் கோட்டி எந்தை –ஸ்ரீ வைகுண்டத்தில் மேன்மை மாத்திரம் கண்டேனோ -முதல் காட்ஷியிலே பூரணமாகக் கண்டேன் –

————

கம்சனைக் கொன்றோம் -ஆனையைக் கொன்றோம் -பூமியை அளந்தோம் -என்று நம்முடைய
செயல்களையே சொல்லும் இத்தனையோ –
உமக்குப் பெற வேண்டுவது சொல்லீர் என்ன -எல்லா புருஷார்த்தங்களையும் அனுபவித்தேன் அன்றோ என்கிறார் –

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

ஸ்ரீ யபதியாய்- வத்சலனாய் -எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டிக் கை தொழுத பின் போக மோஷத்தில்
எனக்கு ஒரு குறை யுண்டோ -ஒன்றிலே எல்லாம் யுண்டான விஷயம்-
எங்கள் பெருமானை- அப்ராப்த விஷயத்தைப் பற்றினேனோ -அஸ்மத் ஸ்வாமின் –
கை தொழுதேன் – உபய விபூதியும் தன்னதாகை தொழுகை யோடு வ்யாப்தம் –
உன்னளவில் அல்ப அனுகூல்யம் பண்ணினால் மண்ணோடு விண்ணும் ஆளுகை பெரிய படியோ என்றபடி –

—————

ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் திரு வத்தியூரிலே நின்றருளி என்னுடைய
சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் –அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி-

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

அவனை இவருடைய நெஞ்சு விரும்பினவாறே இவருடைய சர்வ அவயவங்களிலும் அவன் இருந்தான் –
இவருடைய ஒரு பரிகரத்தை அங்கே வைக்க அவன் இவருடைய சர்வ பரிகரத்திலும் புகுந்தான் –
சர்வ அவயவங்களுக்கும் உப லஷணம்-
ஸுபரி போகார்த்தமாக பல வடிவு எடுத்தால் போலே என்னை அனுபவிக்கைக்காகப் பல வடிவு எடுத்துக் கொண்டு
நிலை பேரன் என் நெஞ்சத்து -என்னும் படி என்னுடைய ஹிருதயத்திலே பொருந்தி நித்ய வாசம் பண்ணா நின்றான்
தலை மேல் தாளிணைகள் என்னும் படி என்னுடைய உத்தம அங்கத்திலும் விரும்பி வர்த்தியா நின்றான்
ஒருவன் அபிநிவேசம் இருக்கிறபடியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

————

உபய விபூதி யுக்தன் கிடீர் என்கிறது —

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

ஸூரிகளில் தலைவரான திரு வனந்த ஆள்வானைச் சொல்லுகையாலே நித்ய விபூதி யோகம் சொல்லிற்று
சம்சாரிகளில் தலைவனான ருத்ரனைச் சொல்லுகையாலே லீலா விபூதி யோகம் சொல்லிற்று
விபூதியில் பிரசித்தரான ருத்ரனுக்கும் நிர்வாஹகன் ஆனவன் -தேவ ராஜன் -எங்கள் பிரான் –அத்தியூரான் –
அத்தி யூரிலே நின்று அருளின உபகாராகன் -எங்கள் பிரான் ஆகைக்காக அத்தி யூரான் ஆனான் –

—————-

என்னை விஷயீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையிலே ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினான் -என்கிறார் –

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

செங்கண் நெடுமால் – ஸ்ருதி பிரசித்தமான கண்களை யுடையவன் –புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் –
வ்யாமோஹம் எல்லாம் கண்ணிலே தோற்றுகை -அவாப்த சமஸ்த காமன் கிடீர் குறைவாளன் ஆகிறான் –
நீ -எங்களை அங்கீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு
பரமபதம் போலே -குடமூக்கில் கோயிலாகக் கொண்டு எங்கள் பெருமான் ஆனான்

———————-

தம்மை விஷயீ கரித்தவனுடைய அபதாநங்களை அனுபவிக்கிறார் –
தன் சங்கல்ப்பத்தாலே ஜகத்தை நியமிக்கிறவன் சம்சாரியான என்னோடு கலந்து நின்றபடி –
அகடிதகடனத்தோடே ஒக்கும் -என்கிறார்
ஜகத்துக்கு தன்னால் அல்லது செல்லாதாப் போலே என்னால் அல்லது செல்லாதபடி ஆனான் –

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

இடையனாய் ஜாத்யுசிதமான கூத்தை யாடி என் நெஞ்சிலே பொருந்தி இளகப் பண்ணி
நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட ஈஸ்வரன்-அந்தக் குடக் கூத்தாடின சுவடோடே இடைவெளி அறப்
பொருந்திக் கொண்டு என் ஹிருதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட சர்வ ஸ்வாமி

————-

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன
அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்-

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

கன்றையும் விளாவாயும் வந்த அஸூ ரர்கள் ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தவனே –
நம்முடைய விரோதி போக்கின படிக்கு திருஷ்டாந்தம் –
அவனுடைய மால் இவருடைய மாலுக்கு அடி –அன்பை அகம் சுரிப்படுத்த ஒண்கிறது இல்லை –
எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று -இத்தை அமைத்து அருள வேணும்-
தன்னைக் காட்டினான் -அன்பைக் கொண்டு நமக்குக் கிஞ்சித்கரியும் என்ன –
அன்பே தகளி என்று கீழோடு கூட்டி பேசி தரிக்கப் பார்க்கிறார்
அன்றிக்கே –
ப்ரேமம் அளவிறந்தார் சாஷாத் கரிக்கும் இத்தனை இறே –
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று சாஷாத் கரிக்கிறார் –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -91-100–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 18, 2020

பிரகிருதி வச்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒருவகை தப்பாது-
ஆன பின்பு அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கள் என்கிறார் –ஒன்றிலே எல்லாம் உண்டான விஷயம் –
திருவடிகளிலே தலையைச் சாய்த்து யமன் தலையிலே காலை வைத்துத் திரியுங்கள் –

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

பன்னூல் அளந்தான்-எல்லா பிரமாணங்களாலும் அளக்கப் படுபவனை –அஷர ராசியாலே ஜிஜ்ஞாசிக்கப் பட்டவனை –
சாஸ்திரம் தேட வேண்டா -ஆட்சி கொண்டு அறியலாம் –
அளந்தான் –முயல்மினோ என்றவாறே தேவை யுண்டோ என்று இராதே அப்ரதிஷேதமே வேண்டுவது –
சேவடி –பிரஜை ஸ்தனத்திலே வாய் வைக்குமா போலே –முலைப் பாலுக்குக் கூலி கொடுக்க வேணுமோ –
கூலியாவது உண்கை இறே -அல்லாவிடில் சம்பந்தம் பொயயாகாதோ-

————-

அவனை ஆஸ்ரயிக்க உங்களுடைய அபேஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –
நரகம் புகாமையே அல்ல -அபேஷிதம் வேண்டிலும் அவனையே பற்ற வேணும் –

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

அழகிய ஸூ குமாரமான திருவடியாலே கம்சனைப் பாய்ந்து –என் தலையிலே வைக்க வேண்டாவோ –
ஒருகால் திரு நாமம் சொன்னால் -அவர்கள் மறக்கிலும் தான் அவர்களை ஒரு நாளும் மறவாதவனுடைய
திரு நாமங்களையே ஏத்துங்கோள்-வாய் விட்டுப் புகழுங்கோள் -இப்படி புகழ்ந்தால் தம் தாமுக்கு அபேக்ஷிதமான
ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்கள் ஆகிற சகல புருஷார்த்தங்களையும் எத்தின வாய் மூடுவதுக்கு முன்னே
சீக்கிரமாக கைப்படும் படி காட்டித் தரும் –

——————

கொடிய நரகானுபவம் பிரத்யாசன்னம் ஆவதற்கு முன்னே நிரதிசய போக்யனாய்-
பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கள் என்கிறார் –

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

நெஞ்சாலே அனுசந்தித்து -வாயாலே -மேல் எழ அன்றிக்கே ச மனசமாக உறைத்து நின்று
ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்

——————–

என்னுடைய நெஞ்சு கண்டி கோளே-ஏத்து கிறபடி -அப்படியே நீங்களும் ஏத்துங்கள் -என்கிறார் –
ஜகத் ரஷண ஸ்வ பாவனை நிரதிசய போக்யனானவனை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார்
தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாராய்ப் போலே –
சந்த்யா வந்தனாதிகளைப் பண்ணிக் காட்டுமா போலே-

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

பூம் பாடகத்துள் இருந்தானை ––பின்னும் ஆஸ்ரித விரோதிகளைப் போக்க வேணும் என்று போக்யதை யுடைத்தான
திருப் பாடகத்திலே எழுந்து அருளி இருக்கிறவனை –
ஆஸ்ரிதருடைய பிரளயங்களை நீக்கி விரோதிகளுக்கு பிரளயம் யுண்டாககுமவன் வர்த்திக்கிற தேசம் –
ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்காக நிரதிசய போக்யமான திருப் பாடகத்திலே சிறுக்கனுக்கு உதவினபடியை
எல்லாரும் காண வேணும் என்று எழுந்து அருளி இருந்த சர்வேஸ்வரனை என்னுடைய நெஞ்சானது
இவ்வோ ஸ்வ பாவங்களைச் சொல்லி புகழா நிற்கும் -இப்படியே நீங்களும் உங்கள் யோக்யதை நினைத்து பிற்காலியாதே
கிட்டி நின்று பஃன அபிமானராய்த் திருவடிகளிலே விழுந்து அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் –

————-

ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் திரு வத்தியூரிலே நின்றருளி என்னுடைய
சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் –அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி-

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

அவனை இவருடைய நெஞ்சு விரும்பினவாறே இவருடைய சர்வ அவயவங்களிலும் அவன் இருந்தான் –
இவருடைய ஒரு பரிகரத்தை அங்கே வைக்க அவன் இவருடைய சர்வ பரிகரத்திலும் புகுந்தான் –
சர்வ அவயவங்களுக்கும் உப லஷணம்-
ஸுபரி போகார்த்தமாக பல வடிவு எடுத்தால் போலே என்னை அனுபவிக்கைக்காகப் பல வடிவு எடுத்துக் கொண்டு
நிலை பேரன் என் நெஞ்சத்து -என்னும் படி என்னுடைய ஹிருதயத்திலே பொருந்தி நித்ய வாசம் பண்ணா நின்றான்
தலை மேல் தாளிணைகள் என்னும் படி என்னுடைய உத்தம அங்கத்திலும் விரும்பி வர்த்தியா நின்றான்
ஒருவன் அபிநிவேசம் இருக்கிறபடியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

——————–

உபய விபூதி யுக்தன் கிடீர் என்கிறது —

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

ஸூரிகளில் தலைவரான திரு வனந்த ஆள்வானைச் சொல்லுகையாலே நித்ய விபூதி யோகம் சொல்லிற்று
சம்சாரிகளில் தலைவனான ருத்ரனைச் சொல்லுகையாலே லீலா விபூதி யோகம் சொல்லிற்று
விபூதியில் பிரசித்தரான ருத்ரனுக்கும் நிர்வாஹகன் ஆனவன் -தேவ ராஜன் -எங்கள் பிரான் –அத்தியூரான் –
அத்தி யூரிலே நின்று அருளின உபகாராகன் -எங்கள் பிரான் ஆகைக்காக அத்தி யூரான் ஆனான் –

—————-

என்னை விஷயீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையிலே ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினான் -என்கிறார் –

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

செங்கண் நெடுமால் – ஸ்ருதி பிரசித்தமான கண்களை யுடையவன் –புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் –
வ்யாமோஹம் எல்லாம் கண்ணிலே தோற்றுகை -அவாப்த சமஸ்த காமன் கிடீர் குறைவாளன் ஆகிறான் –
நீ -எங்களை அங்கீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு
பரமபதம் போலே -குடமூக்கில் கோயிலாகக் கொண்டு எங்கள் பெருமான் ஆனான்

———————-

தம்மை விஷயீ கரித்தவனுடைய அபதா நங்களை அனுபவிக்கிறார் –
தன் சங்கல்ப்பத்தாலே ஜகத்தை நியமிக்கிறவன் சம்சாரியான என்னோடு கலந்து நின்றபடி –
அகடிதகடனத்தோடே ஒக்கும் -என்கிறார்
ஜகத்துக்கு தன்னால் அல்லது செல்லாதாப் போலே என்னால் அல்லது செல்லாதபடி ஆனான் –

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

இடையனாய் ஜாத்யுசிதமான கூத்தை யாடி என் நெஞ்சிலே பொருந்தி இளகப் பண்ணி
நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட ஈஸ்வரன்-அந்தக் குடக் கூத்தாடின சுவடோடே இடைவெளி அறப்
பொருந்திக் கொண்டு என் ஹிருதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட சர்வ ஸ்வாமி

————-

பிரயோஜனாந்தர பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும்படியைச் சொல்லுகிறார் –

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

மா வடிவில் என்றும் –மா வலியை என்றும்-பாட பேதம்-

ஆஸ்ரித அர்த்தமாக சுருங்கின வடிவை யுடையவனாய் -வடிவு கண்ட போதே பிச்சேறும் படியாய் இருக்கை –
இரந்தார்க்கு இடர் நீக்கிய கோட்டங்கை வாமனன் -திருவாய் -7-5-6-இ றே –
மா வடிவு –பூமி அத்யல்பமாம் படி வளர்ந்தான் –

——————

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன
அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்-

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

கன்றையும் விளாவாயும் வந்த அஸூ ரர்கள் ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தவனே –
நம்முடைய விரோதி போக்கின படிக்கு திருஷ்டாந்தம் –
அவனுடைய மால் இவருடைய மாலுக்கு அடி –அன்பை அகம் சுரிப்படுத்த ஒண்கிறது இல்லை –
எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று -இத்தை அமைத்து அருள வேணும்-
தன்னைக் காட்டினான் -அன்பைக் கொண்டு நமக்குக் கிஞ்சித்கரியும் என்ன –
அன்பே தகளி என்று கீழோடு கூட்டி பேசி தரிக்கப் பார்க்கிறார்
அன்றிக்கே –
ப்ரேமம் அளவிறந்தார் சாஷாத் கரிக்கும் இத்தனை இறே –திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று சாஷாத் கரிக்கிறார் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -81-90–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 18, 2020

முன்பு இவனைக் காணப் பெற்றவர்கள் என் பட்டார்களோ என்றாரே –
அவன் தன்னைத் தான் காணப் பெற்றுப் படுகிற பாட்டைச் சொல்லுகிறார் –
கீழ் ஸ்ரீ தண்ட காரண்யத்தில் அக்காலத்தில் காணப் பெற்றவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கிறார் என்றுமாம் –
அவர்களுக்கே அல்ல -எனக்கும் விடிந்தது என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

ஓர் இரவும் ஒரு பகலுமே யுள்ளது -எம்பெருமானை அறிவதற்கு முன்பும் பின்பும் -முன்பு பகல் கலவாது -பின்பு இரவு கலவாது –
அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் -உறங்காத என்னையும் கண்டேன் –
கனவில்-இந்த்ரியங்களால் கலக்க ஒண்ணாத படி மானசத்தால் யுள்ள ஜ்ஞானத்தாலே அழகிதாகக் கண்டேன் –

————-

அவ் வடிவு அழகைக் கண்ட மாத்திரமேயோ -அவ் வடிவிற்குத் தகுதியான நாச்சியாரையும் கூட காணப் பெற்றேன் -என்கிறார் –
கீழ் -நாராயணனைக் கண்டார் -என்றார் -இப்போது ஸ்ரீ லஷமீ சநாதானாகக் காணப் பெற்றேன் -என்கிறார் –
வெறும் நாராயணனை அல்ல -திரு நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் -பிரபையோடே காணப் பெற்றேன் –

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

வடிக்கோலம்-கோலம் தனை வடித்து -அதில் நன்றான அம்சம் ஆய்த்து இங்குத்தை அழகாய் இருப்பது –
இதில் ருஷீஷாம்சமான கோலமுடையார் யாரோ -என்று அருளிச் செய்வர் நஞ்சீயர் –
ஜகத்தில் அழகு எல்லாம் கோதாகப் பிறந்தவன் அழகு இங்குத்தைக் கோது –
அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருவனுமே -இவளுக்கு விசிஷ்டமாக அவளோடு கூடினவன் என்று விஷய பூயஸ்தை-
இருவர் கூடினால் பாத்தம் போராத படியான விஷயம் இன்றிக்கே எல்லாரும் திரண்டு வந்து அனுபவியா நின்றாலும்
எல்லை காண ஒண்ணாத படி புக்கார் புக்காரை எல்லாம் கொண்டு முழுகும்படி அழகு குறைவற்று இருக்கும் இறே
கரையிலே நிற்பாரையும் இழுத்துக் கொள்ள வற்றான வடிவு அழகு இருக்கிறபடி-

————

கீழே -74- பெரும் தமிழன் நல்லேன் பெரிது -என்று தம்மை மதித்து அநந்தரம் கவி பாடுவதும் செய்தார் –
இங்கே நாச்சியாரும் அவனுமான சேர்த்தியை அனுசந்தித்துக் கூசி -நாம் இவ் விஷயத்திலேயோ கவி பாட இழிவது –
என்ன சாஹசிகனோ -என்று கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –
அங்கு சர்வ விசஜாதீய வஸ்துவைப் பேசுகையாலே என்னோடு ஒப்பார் உண்டோ என்றார் –
இப்போது அவ் வஸ்து தன்னை ஸ்ரீ லஷமீ ச நாதமாக அனுசந்திக்கையாலே அங்குத்தைக்கு வி சத்ருசமாகச் சொன்னேன் -என்கிறார் –
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் உன்னை என் சொல்லி யான் வாழ்த்துவனே -திருவாய் -3-1-6-
நல்லேன் பெரிது -என்றார் ஐஸ்வர்யத்தைக் கண்டு வெருவித் தீயேன் என்கிறார் –
பேசிற்றும் தப்பாய் பலம் ஆசைப்பட்டதும் தப்பாய்த்து –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பரிபூர்ண விஷயத்தை அபரிபூர்ணமாகச் சொன்னேன் -அதுக்கு மேல் கேட்டார் செவி கன்றும்படி வெட்டிதாகவும் சொன்னேன் –
விசத்ருசமாகச் சொன்ன அளவேயோ –ஓன்று சொன்னேனாய் அதுக்குப் பிரத்யுபகாரமும் வேணும் என்று இருந்தேன் –
இவர் பின்னை ஒரு பிரயோஜனத்துக்காக கவி பாடுவாரோ என்னில்
இக் கவி பாட்டுக்காக அவன் ஒரு கால் ஏறிட்டுக் கடாஷிக்குமாகில் -அதுவும் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பெரிய பேறு
என்று இருப்பார் ஒருத்தர் இறே -அத்தாலே குறை இல்லை –

——————–

மற்றவை எல்லாம் செய்தபடி செய்ய ரசிக்கும் விஷயம் இதுவே கிடி கோள் என்கிறார் –
அவனை விட்டு வர ஒண்ணாமைக்கு ஹேது இருக்கிற படி –
ஒரு ஆஸ்ரிதனுக்குத் தன்னைக் கொடுத்த படி கண்டவாறே வெருவுதல் தீர்ந்து நம்மது என்று அனுபவிக்கிறார் –

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

நரம் கலந்த சிங்கம் – சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் சேர்ந்தாப் போலே இருக்கை –
வெறும் மனிச்சாதல் -சிம்ஹமாதல் காணிலும் உபேஷிக்க வேண்டி இருக்கை –
ஒரு தேச விசேஷத்திலே போனால் புஜிக்கத் தக்க அம்ருதம் சம்சாரத்திலே மிகவும் போக்யம் என்கிறார் –
அங்கண் மா ஞாலம் –திரு அவதாரத்துக்கு ஈடான நிலம் –

———————

அவனுடைய ரச்யதையை அனுசந்தித்தவாறே அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார்-

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

ஆழியான் -போக்யனுமாய் விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் இருக்கை –
எம்பெருமானும் அமுதமும் -கோதாம்படியான சொல்லு -எல்லா போக்யதையும் தன்னுடைய
போக்யதையிலே பொதிந்து இருக்கையாலே அவனை அமுது என்கிறது –
இது அவன் தன்னையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய் இருந்துள்ள
சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து திருவடிகளிலே நிர்மமனாய் விழுந்தேன்-
அறிந்து கவி பாடினேன் அல்லேன் -ஏத்தித் தொழவே எம்பெருமான் அபிசந்தியாலே கவி யாய்த்து –
ஏத்தி நவின்று – மிகவும் ஆதரித்து ஏத்தினேன் -ஆதராதிசயம் தோற்றப் புகழ்ந்து கொண்டு சொல்லி
நன் மாலை ஏத்தித் தொழுதேன் –

———–

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ சாதன அனுஷ்டானம் பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –
சமாதிக தரித்ரமான வஸ்துவை ப்ராபிக்கை -சமாதிக தரித்ரமான உபாயத்தாலே யாக வேண்டாவோ –
பண்டு ஆஸ்ரயித்தவர்கள் ஒன்றும் பெற்றிலர்கள் நான் பெற்ற பேற்றைப் பார்க்க-என்று கருத்து-

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

அதி ஷூத்ரனான நான் நின்று என்ன தபஸ்ஸூ பண்ணிக் கண்டேன் -அவன் காட்ட கண்டேன் இத்தனை இறே
ஒரு தபஸ் ஸூ பண்ணாதே நிர்ஹேதுகமாகப் பெற்றேன் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8-
வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் -4-5-9-
காண்பன் கொல் இன்று –நேற்று நினைக்கில் அன்றோ இன்று அடி அறியலாவது –

—————-

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப காலமே தொடங்கி அடிமைச் சுவடோடு கூட
அவன் படியை அனுபவித்துப் போருகிறேன் -என்கிறார் –இப்பேறு இன்று பெற்றேன் அல்லேன் என்கிறார்-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

இம் மஹா ப்ருதிவியை ஒருவர் இரக்க அன்றியே தானே சென்று அளந்த திருவடியை –
அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ -பூமி கிடந்த இடம் எல்லாம் தான் சென்று அளந்தான் அத்தனை அன்றோ –
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது -என்கை-
திருக் கோட்டி எந்தை –ஸ்ரீ வைகுண்டத்தில் மேன்மை மாத்திரம் கண்டேனோ -முதல் காட்ஷியிலே பூரணமாகக் கண்டேன் –

——————–

அவன் தானே விஷயீ கரித்தாற்கு அவனைக் கிடைக்கும் அத்தனை அல்லது வேறு சிலருக்குக் கிடையாது என்கிறது-

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பெரிய பெருமாள் –மாம் -என்ற சௌலப்யத்திலும்-இங்கு சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –
மாம் -என்ற சௌலப்யத்தை -வென்று ஓட வைத்த -புடம் போட்ட -மாம் –
செம்மை யுடைய திருவரங்கர் -நாச் -11-10-
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -நாச் -11-3-அவ்விடம் பெறுவார்க்கும் இவர் நினைப்பிட வேணும் –
திறம்பா வழி-0ஏக பதத்தால் நிர்ணயித்த வழி – பர வியூஹ விபவங்களுக்கு நித்ய முக்தர் முக்த ப்ராயர் பாக்யவான்கள்
பக்கலிலே கண்ணழிவு சொல்லி ஆஸ்ரயணம் தவிரலாம் –
அர்ச்சாவதாரத்திலே ஆஸ்ரயணத்துக்கு அங்கனே கண் அழிவு இல்லை என்று கருத்து -தேவதாந்த்ரங்கள் என்றுமாம் –
அவனாலே அவனைப் பெறுதல் அவனாலும் தன்னாலுமாக அவனை இழத்தல் -தன்னாலே அவனை இழத்தல் –
பிரதிகூலராய் இழப்பாரும் அனுகூலர் என்று பேரிட்டு கொண்டு பிரதிகூலராய் இழப்பாரும் ஆக இழக்கை இரண்டு விதம் –

———-

நீர் இப்படிச் சொல்ல நம்மையே பற்றினாருக்கு உதவினோமோ என்ன -செய்திலையோ -என்கிறார் –
இசைந்தாருக்குச் கர்மம் செய்யும்படி சொல்லுகிறார் –
பிரதிகூல நிரசனம் பண்ணும் படியையும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும் சொல்லுகிறார் —

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-

ஐஸ்வர்யம் தோற்றக் கொண்டாயோ -அர்த்தித்வம் தோற்ற -மாணியாய் அன்றோ கொண்டது –
மாணியாய் – இரப்பிலே தகண் ஏறின படி -ஸ்ரீ வைகுண்டமே தொடங்கி இரப்பிலே மநோ ரதித்தான் –

———

கம்சனைக் கொன்றோம் -ஆனையைக் கொன்றோம் -பூமியை அளந்தோம் -என்று நம்முடைய செயல்களையே சொல்லும் இத்தனையோ –
உமக்குப் பெற வேண்டுவது சொல்லீர் என்ன -எல்லா புருஷார்த்தங்களையும் அனுபவித்தேன் அன்றோ என்கிறார் –

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

ஸ்ரீ யபதியாய்- வத்சலனாய் -எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டிக் கை தொழுத பின் போக மோஷத்தில்
எனக்கு ஒரு குறை யுண்டோ -ஒன்றிலே எல்லாம் யுண்டான விஷயம்-
எங்கள் பெருமானை- அப்ராப்த விஷயத்தைப் பற்றினேனோ -அஸ்மத் ஸ்வாமின் –
கை தொழுதேன் – உபய விபூதியும் தன்னதாகை தொழுகை யோடு வ்யாப்தம் –
உன்னளவில் அல்ப அனுகூல்யம் பண்ணினால் மண்ணோடு விண்ணும் ஆளுகை பெரிய படியோ என்றபடி –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த ஸ்மித ஸ்ரீ ராமாயணம்-அயோத்யா ஸ்கந்தம்- -53-71-ஸ்லோகங்கள் -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் விளக்கம் –

July 18, 2020

மந்தோதரீ தயித மாதி சராட்ய பாணே:
மந்தாகினீ மதுர மௌலி த்ருதாத்ம நாம்ன:
மந்தாக்ஷ மந்தித மநோ பவ விப்ரமஸ்ய
மந்த ஸ்மிதம் மத் அக மர்தனம் அஸ்து நேது:–53-

மந்தோதரீ தயித மாதி சராட்ய பாணே:–ஏழு ஸ்கந்தங்கள் -ஏழு கண்டங்கள் -பிரதீயன ஸ்கந்தம் உத்தர ராமாயணம் –
அயோத்யா ஸ்கந்தம் தொடக்கம் இதில் -அயோத்யா காண்டம் முதல் ஸ்லோகம் அடியாக இதுவும்
மண்டோதரி கணவனான ராவணனை நிரசிக்க கணைகள் திருக்கரத்தில் ஏந்தி
மந்தாகினீ மதுர மௌலி த்ருதாத்ம நாம்ன:-கங்கையை தலையில் சுமந்த சிவபெருமான் ராம நாமம் ஜபித்துக் கொண்டே –
ராம ராம ராம –ரகம் இரண்டும் மகாரம் ஐந்து ம் -இப்படி இதுவே ஆயிரம்
மந்தாக்ஷ மந்தித மநோ பவ விப்ரமஸ்ய-வெட்கம் துளி -மன்மதனையும் மயக்கும் படி -அழகு குணம் வீரம் –
முதல் இரண்டு சர்க்கம் வால்மீகி அருளிச் செய்தது போலவே இங்கும்
மந்த ஸ்மிதம் மத் அக மர்தனம் அஸ்து நேது: -மந்தஸ்மிதம் -அகம் -பாபங்களையும் அழிக்க வல்லதாக உள்ளதே –

————-

ராம த்வயி அதி வத்ஸலா: ப்ரக்ருதயோ மயி ஆயதேயம் ஜரா
ஸாகேத அதிபதிம் ஸமஸ்த ஜகதாம் குர்வே பதிம் த்வாமத:
ஏவம் வாதினி தத்ர நாம ஜனகே ஸ்ரீஜானகீ நாத தே
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் தர்சயஸி அத்ய கிம்?–54-

ராம த்வயி அதி வத்ஸலா: ப்ரக்ருதயோ மயி ஆயதேயம் ஜரா-உன் மேல் அளவு கடந்த அன்பு கொண்ட அயோத்யா -எனக்கும் மூப்பு வந்தது
ஸாகேத அதிபதிம் ஸமஸ்த ஜகதாம் குர்வே பதிம் த்வாமத:–அயோத்யா மக்கள் தலைவனாக வறுத்த பின்பு சக்கரவர்த்தி ஆக வேண்டும்
ஏவம் வாதினி தத்ர நாம ஜனகே ஸ்ரீஜானகீ நாத தே-தந்தை இப்படி பேச மந்தஸ்மிதம்
சீதா மணாளன் முன்பு -பூ தேவி உடன் சேர்க்க ஆசை -மேலும் நக்கலான புன்னகை –
சாகேதம் -அயோத்யாம் -ஸமஸ்த லோகம் -அனைத்து உலகுக்கும் -பதியான அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகனான உன்னை
அயோத்யா மட்டுக்கும்-பதவி இறக்கம் தானே –
மூன்றாவது -பின் நடக்கப் போவது -ராவணன் வதம் நிரசித்து அனைத்து உலகுக்கும் நாயகன் என்பதை நிலை நாட்டப் போகிறாய் –
கைகேயி அறியாமையால் செய்யும் கார்யம் நினைத்தும் புன்னகை
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் தர்சயஸி அத்ய கிம்?– இன்றும் நாம் சேவிக்கிறோம் –

———–

த்யக்த்வா ராம நதீப வஸ்த்ர விபவம் பூமண்டலம் த்வம் வனம்
யாதஸ்த்வாம் அவனே விதாதும் அகரோத் ஸ்ரீமான் வஸிஷ்டோ முனி:
ஏதாம் நூதன வஸ்த்ர வைபவ யுதாம் தீபாவளீம் மாமிகாம்
வாசம் நாம நிசம்ய கிம் விதனுஷே மந்த ஸ்மிதம் மத் ப்ரபோ–55–

த்யக்த்வா ராம நதீப வஸ்த்ர விபவம் பூமண்டலம் த்வம் வனம்–தீபாவளி நல் நாளில் அருளிச் செய்த ஸ்லோகம் –
வனவாசம் மரவுரி தரித்து மனத்தில் காட்சி தர -பூமியில் -ஆடை-நதீப -கடல் -வஸ்திரம் -வேண்டாம் என்று –
ந தீப வஸ்திரம் -இவற்றை விட்டு -வெறும் மரவுரி தரித்து -ஜடாமுடியுடன்
யாதஸ்த்வாம் அவனே விதாதும் அகரோத் ஸ்ரீமான் வஸிஷ்டோ முனி:-பூமியை அவனம் ரக்ஷிக்க வசிஷ்டர் நினைக்க நீ வனம் சென்றாய்
ஏதாம் நூதன வஸ்த்ர வைபவ யுதாம் தீபாவளீம் மாமிகாம்-இந்த காட்சியை இந்த தீபாவளி அன்றோ காட்டி அருள வேணும்
வஸ்திரம் தீபம் பிரசித்த நாள் -தீபாவளி –
வாசம் நாம நிசம்ய கிம் விதனுஷே மந்த ஸ்மிதம் மத் ப்ரபோ -என் ஸ்லோகம் கேட்டு மந்தஸ்மிதம்
வன வாசம் முடித்து திரு அயோத்யையில் வரும் நாளே தீபாவளி வட இந்தியாவில் –
வடுவூர் ராம லீலை -சோக நிகழ்ச்சியே இல்லாமல் இதுவும் மந்தஸ்மிதம் காட்டும் படி லீலை –

—————–

மந்த ஸ்மிதம் வர்ணயிதும் ப்ரவ்ருத்தோ
மமேதி மத்யே விஷயைக லோல:
மந்தேதி மாம் ப்ரேக்ஷ்ய விபோ விதத்ஸே
மந்த ஸ்மிதம் மண்டனம் ஆனனஸ்ய–56-

மந்த ஸ்மிதம் வர்ணயிதும் ப்ரவ்ருத்தோ–புன்னகையே ஸ்வாமியிடம் பேசுகிறது -வர்ணித்து பாட ஆரம்பித்தீர்
மமேதி மத்யே விஷயைக லோல:–நடுவில் விஷயாந்தர லோலராக போனது எதனால்
மந்தேதி மாம் ப்ரேக்ஷ்ய விபோ விதத்ஸே-மந்த புத்தி உடையவராகவே -இருந்தீர் ஆகிலும் -மந்த ஸ்மிதம் –
பொருத்தம் தானே -மேலே பாட தூண்ட
மந்த ஸ்மிதம் மண்டனம் ஆனனஸ்ய–மீண்டும் காவியம் தொடர போவதை நினைத்து செய்து அருளிய புன்னகை
திரு முகத்துக்கு அலங்காரமான மந்தஸ்மிதம்

———-

பிது: வசஸி ந ஸ்தித: பித்ரு மதே அபி நோ வர்தஸே
மஹத்ஸு வினயோ ந தே பரம் அயம் விருத்த: தத:
ப்ரஸக்தி: அபி வாஞ்சிதா மம புன: கவே காமதா
து இதி ஸ்மிதம் அஹோ மிதம் விதனுஷே பரீவாஹத:–57-

பிது: வசஸி ந ஸ்தித: பித்ரு மதே அபி நோ வர்தஸே -ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள-நீ போய் –
புண்ணிய துறைகள் ஆடி -ஏழு இரண்டு ஆண்டில் வாழ் என்று இயம்பினன் அரசன் என்றான் -சக்ரவர்த்தி கட்டளை –
அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றனன் அம்மா -அதே புன்னகை –
தந்தை எண்ணம் படி நடக்கிறீர்களா நம்மைப் பார்த்து கேட்க்கிறதாம்
கயா யாத்திரை -ஸ்ரார்த்தம் -இருக்கும் பொழுது தந்தை சொல் படி நடந்தீர்களா -ரசம் இல்லாதவன் அரசன் –
மஹத்ஸு வினயோ ந தே பரம் அயம் விருத்த: தத: -பெரியோர் இடம் பணிவுடன் இருக்கிறீர்களா
ப்ரஸக்தி: அபி வாஞ்சிதா மம புன: கவே காமதா -ஆசை நிறைவேற்ற தந்தை பேச்சுக்கு விரோதமாகவே நடக்கிறீர்களே
து இதி ஸ்மிதம் அஹோ மிதம் விதனுஷே பரீவாஹத: -இப்படி கேட்டு -நம் அடியார்கள் என்று சொல்லி –
ஏளனம் செய்வது போலே மந்தஸ்மிதம் –

———————

ஸதீம் பரத மாதரம் கலுஷித அந்தராம் குப்ஜயா
விதாதும் அபிராதிதாம் ப்ரிய ஸுதம் விதேனே வனே
இதி ச்ருதிம் உபாகதா புரஜனஸ்ய வாணீ விபோ
மித ஸ்மிதம் அஸௌன்முகே தத் இதம் அஸ்து மன்மானஸே –58 —

ஸதீம் பரத மாதரம் கலுஷித அந்தராம் குப்ஜயா -பரதன் தாய் பெருமாள் இடம் அன்பு மிக்கு இருக்க –
கூனி மனத்தை கலக்கி
விதாதும் அபிராதிதாம் ப்ரிய ஸுதம் விதேனே வனே -தசரதனுக்கு கைகேயியை மகிழச் செய்ய
தவம் இருந்து பெற்ற பிரியமான பிள்ளையை அனுப்ப
இதி ச்ருதிம் உபாகதா புரஜனஸ்ய வாணீ விபோ இவ்வாறு அயோத்யா மக்கள் பேச மந்தஸ்மிதம் –
மித ஸ்மிதம் அஸௌன்முகே தத் இதம் அஸ்து மன்மானஸே -தனி நபர் அபசாரம் விளைவை நினைத்து மந்தஸ்மிதம் –

——-

தாதாத் அஸ்மி கரீயஸீ தவ ஸுத த்வம் ந ப்ரயாயா வனம்
வத்ஸ அத்ர ஸ்தித ஏவ நந்தய மனோ மத்கம் வசஸ் ஸத்குரு
இத்தம் மாதரி லக்ஷ்மணே ச வததி ஸ்நேஹாத் ச கோபாத் அபி
த்வம் மந்த ஸ்மிதம் ஏதத் ஏவ கலயன் தௌ ஸாந்த்வயாமாஸித –59-

தாதாத் அஸ்மி கரீயஸீ தவ ஸுத த்வம் ந ப்ரயாயா வனம் -தாதர் தந்தை -விட தாயான நானே -ஆபஸ்தம்பர் தாயே உயர்ந்தவர்
மகனே வனம் போகாதே -நான் சொல்வதைக் கேள்-
வத்ஸ அத்ர ஸ்தித ஏவ நந்தய மனோ மத்கம் வசஸ் ஸத்குரு -செல்லப்பிள்ளையே இங்கேயே இருந்து மனசை ஆனந்தப்படுத்து –
இத்தம் மாதரி லக்ஷ்மணே ச வததி ஸ்நேஹாத் ச கோபாத் அபி -லஷ்மணன் கோபத்துடன் தடுக்க -தாய் ஸ்னேகத்துடன் தடுக்க
த்வம் மந்த ஸ்மிதம் ஏதத் ஏவ கலயன் தௌ ஸாந்த்வயாமாஸித -புன்னகை கொண்டே பதில் இருவருக்கும் –

————-

ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் மம பிதா விதேஹாதிபோ
பவந்தம் அதிகத்ய மாம் ரகுபதே கரே தே அகரோத்
இதி இதம் அவனீ ஸுதா வசனம் ஆனனே தே ஸ்மிதம்
ததான தத் இதம் ஸ்மிதம் மத் அவனம் விதத்தாம் ப்ரபோ -60-

ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் மம பிதா விதேஹாதிபோ -தாய் இடம் கணவன் இருக்கும் இடத்திலே இருக்க வேண்டும் என்றார்
சீதா பிராட்டியை உடன் வர வேண்டாமே என்றதும் முன் சென்று கல்லையும் முள்ளையும் அகற்றுவேன் என்றாளே-
ஸ்வர்க்கம் ஏது நரகம் ஏது-கேட்டு-அதிகாரி பொறுத்து இவை மாறுமே –
உம்மிடம் சேர்ந்து இருப்பதே ஸ்வர்க்கம் எனக்கு -பிரிந்து தனித்து இருப்பது நரகம்
ஆண் உடை உடுத்திய பெண் என்பார் தந்தை -வால்மீகி ஸ்லோகத்தையே இங்கு காட்டி அருளுகிறார் –
பவந்தம் அதிகத்ய மாம் ரகுபதே கரே தே அகரோத் -உமது வெளி வேஷம் கண்டு
இதி இதம் அவனீ ஸுதா வசனம் ஆனனே தே ஸ்மிதம் -இப்படியாக பூமி மகள் வார்த்தை கேட்டு மந்தஸ்மிதம்
புருஷோத்தமன் ஒருவனே நாம் எல்லாம் ஸ்த்ரீ ப்ராயர் –
மாமியாருக்கு ஒரு நியாயம் மனைவிக்கு ஒரு நியாயமா -கணவனான நீர் உள்ள இடம் தானே நான் இருக்க வேண்டும்
இதற்காகவும் ஆண் உடை தரித்த பெண்
புன்னகை அவளை உடன் கூட்டிச் செல்கிறேன் என்று பதில் சொல்வது போலே
ததான தத் இதம் ஸ்மிதம் மத் அவனம் விதத்தாம் ப்ரபோ -அதே புன்னகையைக் காட்டி எங்களை ரஷிக்கிகிறாயே இன்றும் –

———–

மனாக் இவ மனோ மம த்வயி க்ருதம் த்வயா நீயதே
பரத்ர தத் அபி ப்ரபோ கிம் இதி யுக்தம் ஏதத் தவ
அத த்ரிஜட நீதித: தத் இதி மந்தம் ஏதத் ஸ்மிதம்
ஸுமந்தம் அபிபாது மாம் இஹ தயாநிதே ராகவ —61-

மனாக் இவ மனோ மம த்வயி க்ருதம் த்வயா நீயதே -யாத்ரா தானம் செய்து முடித்த பின்பு பசுக்கள் மட்டுமே இருக்க –
த்ரிஜடன் அந்தணன் -கையில் உள்ள கோலைத் தூக்கி எறியச் சொல்லி –
மன்னிப்பு கேட்டான் பெருமாள் -உமது தப வலிமையைப் பார்க்க -அனைத்து பசுக்களையும் தானமாக கொடுத்தான் –
மனம் உன்னிடமே ஈடுபட்டு இருக்க –
பரத்ர தத் அபி ப்ரபோ கிம் இதி யுக்தம் ஏதத் தவ -வேறு விஷயாந்தரங்களில் போக -நீ தானே நியமிக்க வேண்டும்
அத த்ரிஜட நீதித: தத் இதி மந்தம் ஏதத் ஸ்மிதம் -த்ரிஜடை அந்தணன் -விருத்தாந்தம் நினைத்து புன்னகை கொண்டே
இதுக்கும் பதில் -உன்னையும் ரஷிப்பேன் என்று தெரிவித்து -புன்னகை பார்க்கும் தோறும் விசுவாசம் பிறக்கும்
ஸுமந்தம் அபிபாது மாம் இஹ தயாநிதே ராகவ -கருணைக்கடல் உன்னுடைய மந்தஸ்மிதம் எப்பொழுதும் அடியாரைக் காக்கட்டும்

———

கௌசேய உபரி சீர பந்தன விதௌ ஜாயாவலக்ன ஸ்தலே
கோசாத் ஆஹ்ருத பூஷணே அபி ச ததா வாசா பிது: தத் ஜனே
யத் மந்த ஸ்மிதம் ஆததான வதனம் ரக்தம் தவேதம் ப்ரபோ
தத் யுக்தம் வடுவூர் ஸ்தலே அபி மயி தத் நீசே அவரே அபி உத்தமே –62-

கௌசேய உபரி சீர பந்தன விதௌ ஜாயாவலக்ன ஸ்தலே -பட்டாடைக்கு மேலே மரவுரி அணிய பெருமாள் சீதைக்கு உதவ
வசிஷ்டர் பிராட்டி அணிய வேண்டாமே என்ன
கோசாத் ஆஹ்ருத பூஷணே அபி ச ததா வாசா பிது: தத் ஜனே -ஆபரணங்களை பிராட்டிக்கு தசரதன் வழங்க
யத் மந்த ஸ்மிதம் ஆததான வதனம் ரக்தம் தவேதம் ப்ரபோ -பொன்னகை ஏற்காமல் பிராட்டி -அவனுக்கு ஒத்த அலங்காரம் –
ஆபரணங்களை மறுக்க -பெருமாள் மரவுரி அணிய உதவ -மந்தஸ்மிதம்
தத் யுக்தம் வடுவூர் ஸ்தலே அபி மயி தத் நீசே அவரே அபி உத்தமே -அதே புன்னகை தோற்ற சேவை -நீசரா

———-

த்ரஷ்டா த்வாம் அபிஷிக்தம் இந்து வதனம் சித்ர இந்துனா ஸாம்ப்ரதம்
ச்வோ வத்ஸ இதி ததா ஏவ கைகய ஸுதா வாசா ந யாயா வனம்
இதி ஏவம் பிதரி ப்ருவதி அபி பபௌ மந்த ஸ்மிதம் யத் ஸமம்
தத் மே ஸாதுவத் ஆஸ்திதாய ஸுதராம் துஷ்டாய ச த்யோததே -63–

த்ரஷ்டா த்வாம் அபிஷிக்தம் இந்து வதனம் சித்ர இந்துனா ஸாம்ப்ரதம் -சந்திரகாந்த -முழு மதி திருமுகம்–
சித்திரை பவுர்ணமி -நீ பட்டாபிஷேகம் கண்டு அருள வேணும் –
ச்வோ வத்ஸ இதி ததா ஏவ கைகய ஸுதா வாசா ந யாயா வனம் -தடுத்து சக்ரவர்த்தி வனவாசம் செல்லாதே என்ன
இதி ஏவம் பிதரி ப்ருவதி அபி பபௌ மந்த ஸ்மிதம் யத் ஸமம் -மன்னன் ஆணை மைந்தன்-மேலே சத்யம்
கொடுத்த வரத்தைக் காக்க வேண்டுமே
இப்பொழுது தந்தை சொல்வதை எதிர்த்தும் பேசாமல் மந்தஸ்மிதம் செய்து பதில்
தத் மே ஸாதுவத் ஆஸ்திதாய ஸுதராம் துஷ்டாய ச த்யோததே -அதே புன்னகை உடன் சேவை –
நல்லவன் போலே நடிக்கும் நம் போல்வாருக்கும் –

—–

ஸ்வாமின் தே பவனே பிது: ஸுக மயே ப்ரீதை: ஜனை: ஸம்வ்ருதே
மாத்ரு ப்ரீதி வஹே ததா ஏவ தமஸா தீரே அபி அதஸ்தாத் தரோ:
சோகார்த்தை: ஸ்வஜனை: வ்ருதே அபி பரித: மந்தஸ்மிதம் யத் ஸமம்
வக்த்ரே தே தத் இதம் ததா ஏவ வடுவூர் கேஹே அபி வித்யோததே –64-

ஸ்வாமின் தே பவனே பிது: ஸுக மயே ப்ரீதை: ஜனை: ஸம்வ்ருதே -தந்தை அரண்மனையில் ப்ரீதி உடன் மக்கள்
மாத்ரு ப்ரீதி வஹே ததா ஏவ தமஸா தீரே அபி அதஸ்தாத் தரோ: -ஸ்ரீ கௌசல்யா தேவி மகிழும்படி செய்து அருளிய மந்தஸ்மிதம்
தாமச நதிக்கரையில் வியன் கான மரத்தின் நிழலிலே
சோகார்த்தை: ஸ்வஜனை: வ்ருதே அபி பரித: மந்தஸ்மிதம் யத் ஸமம் -சோகமாக அயோத்யா மக்கள் சூழ்ந்து இருக்க அவர்களுக்கு ஆறுதல்
வக்த்ரே தே தத் இதம் ததா ஏவ வடுவூர் கேஹே அபி வித்யோததே-வாழ்க்கை சக்கரம் ஸூகமும் துக்கமும் கலந்தே இருக்கும்
இரண்டிலும் சம நிலைமையாக இருக்க வேண்டும் -காட்டி அருளவே இந்த மந்தஸ்மிதம்
இறைவன் எப்பொழுதும் ஆனந்த மயன்–பர துக்க அஸஹிஷ்ணுத்வம்–அபி நயம் தானே -வேதாந்த கருத்தைக் காட்டவே இந்த மந்தஸ்மிதம்
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -ஆகாசம் எல்லையில்லாமல் பரவி உள்ளது போலே நிரவதிக ஆனந்த மயன் அன்றோ –

——————————————–

கங்கா தீர ஸமாகதேன ஸுஹ்ருதா ஸாஸ்ரேண, ஸாகேதவத்
தேசோயம் தவ ஸர்வ மானவ மணே ராஜா அத்ர தத்த்வம் பவ
இத்தம் நாம குஹேன பக்தி நிதினா ப்ரோக்தஸ்ய யத் தே முகே
தத் மந்த ஸ்மிதம் ஏவ ஸாம்ப்ரதம் இதம் வித்யோததே ந: புர: –65-

கங்கா தீர ஸமாகதேன ஸுஹ்ருதா ஸாஸ்ரேண, ஸாகேதவத் -கண்ணீர் உடன் குகன் -கங்காதீரம் -ஸ்ருங்க பேரம்
தேசோயம் தவ ஸர்வ மானவ மணே ராஜா அத்ர தத்த்வம் பவ -மனிதர்களில் மாணிக்கம்
உன்னுடைய தேசமாகக் கொண்டு இங்கேயே அரசனாக இரு -நாங்கள் தொண்டு செய்வோம்
இத்தம் நாம குஹேன பக்தி நிதினா ப்ரோக்தஸ்ய யத் தே முகே -பக்திக்கடல் -வெள்ளம் போலே -கங்கை வெள்ளத்தை விஞ்சி –
பக்தி பிரவாகம் எண்ணி மந்தஸ்மிதம்
தத் மந்த ஸ்மிதம் ஏவ ஸாம்ப்ரதம் இதம் வித்யோததே ந: புர:-அதே புன்னகை காவேரி கரையில் நீசரான நமக்கும் சேவை

———-

குஹேன கஹனே ததா பஹு விதம் ஸம் அப்யர்சதா
வஸேஹ தவ தே வயம் ஸதத தாஸ பூதா: ப்ரபோ
இதி ஸ்துதவதா முகே யத் அபவத் ஸுமந்தம் ஸ்மிதம்
தத் ஏதத் அதி ஸுந்தரம் மம ததாது ஸன்மங்கலம் –66-

குஹேன கஹனே ததா பஹு விதம் ஸம் அப்யர்சதா —குகன் பலவித மரியாதை செய்து -குக பரிகரங்கள் அவனுடன் சேர்ந்து
வஸேஹ தவ தே வயம் ஸதத தாஸ பூதா: ப்ரபோ -தாச பூதர்களாக ஏவிப் பணி கொள்ள பிரார்த்திக்க –
இங்கேயே எழுந்து இருக்க பிரார்த்திக்க
இதி ஸ்துதவதா முகே யத் அபவத் ஸுமந்தம் ஸ்மிதம் -நல்லவர் உடன் -பூ உடன் சேர்ந்த நாறும் மணக்குமே-
நல்ல மணம் உள்ளாரை நண்ணி இருப்பார்க்கு இத்யாதி –
தத் ஏதத் அதி ஸுந்தரம் மம ததாது ஸன்மங்கலம் -சத் சங்க மஹிமை நினைத்து மந்தஸ்மிதம் –
அதே இது -அதி ஸூந்தரம் -இன்றும் சேவிக்கலாம் -மங்களங்கள் அருளட்டும்

———

வாஸம் வாஞ்சதி கானனே ந து புன ப்ராந்தே மம த்வம் தத
ஸ்ரீமத் மத் குரு ஸந்நிதௌ வஸ ஸுகம் ஸ்ரீ சித்ரகூடே கிரௌ
ஏவம் நாம முனே ப்ரயாக வஸதே ஹ்ருத்யா கிர ச்ருண்வத
ஸ்வாமின் ராம தவ ஆனனே யத் அபவத் மந்த ஸ்மிதம் கிம் நு இதம் –67-

வாஸம் வாஞ்சதி கானனே ந து புன ப்ராந்தே மம த்வம் தத -பரத்வாஜர் -பிரயாகை -இங்கே இருக்கச் சொல்ல –
அவரையே தண்ட காரண்யம் வசிக்க ஏற்ற இடம்
ஸ்ரீமத் மத் குரு ஸந்நிதௌ வஸ ஸுகம் ஸ்ரீ சித்ரகூடே கிரௌ -ஸ்ரீ சித்ர கூடம்-ஸ்ரீ வால்மீகி ஆஸ்ரமம் –
மத் குரு என்று அவர் பெயரைச் சொல்லாமல் –
ஏவம் நாம முனே ப்ரயாக வஸதே ஹ்ருத்யா கிர ச்ருண்வத -அந்த நாமம் கேட்டு மந்தஸ்மிதம் –
அவர் இருப்பிடம் செல்வதை எண்ணி -பின்பு தான் -எழுதப் போகிறார்
ஸ்வாமின் ராம தவ ஆனனே யத் அபவத் மந்த ஸ்மிதம் கிம் நு இதம் -அதே புன்னகை இங்கு பல மகான்கள் உடன் வசிப்பதால் –

————

வத்யோ மே பரத: ஸமாகத: இத:, மைவம் ஹி நேதும் புரீம்
ஆவாம் ஆகத: இதி அவேஹி, யதி தே ராஜ்ய ஸ்ப்ருஹா தாஸ்யதி
இத்தம் லக்ஷ்மணன் உத்தரேண வசஸா ஸாகூதம் ஆவ்ரீடயன்
யத் மந்த ஸ்மிதம் ஆததான பகவன் தத் த்வத் முகே ஜ்ரும்பதே –68-

வத்யோ மே பரத: ஸமாகத: இத:, மைவம் ஹி நேதும் புரீம் -பெருமாளை மீண்டும் கூட்டி வர
நாலு வகை சேனைகளுடன் பரதன் வர
லஷ்மணன் தப்பாக நினைத்து-கொல்லப்படுபவன் – வார்த்தை சொல்ல –
சாந்தம் -நைவம் -இல்லவே இல்லை
ஆவாம் ஆகத: இதி அவேஹி, யதி தே ராஜ்ய ஸ்ப்ருஹா தாஸ்யதி –ராஜ்ஜியம் சமர்ப்பிக்கவே வந்துள்ளான்
உனக்கு ராஜ்ய ஆசை இருந்தால் அவன் கொடுப்பான் -ஆயிரம் ராமனுக்கு ஓப்பான் –
இத்தம் லக்ஷ்மணன் உத்தரேண வசஸா ஸாகூதம் ஆவ்ரீடயன் -பரதன் பக்தியை மெச்சி லஷ்மணனை சாந்தம் பண்ணிய மந்தஸ்மிதம்
யத் மந்த ஸ்மிதம் ஆததான பகவன் தத் த்வத் முகே ஜ்ரும்பதே–நீசரான நாங்கள் செய்யும் ஆராதனைக்கு உகந்து
அதே புன்னகை எங்களுக்கும் சாந்தி அளிக்கிறதே –

———–

ஸாகேதே வஸ ராஜ்ய பாலன பர:, வாக்யம் பிது: தத் கதம்,
ஸோஹம் தத் விபினே வஸாமி, தத் இதம் யுக்தம் ந, தத் பாதுகாம்
தேஹி, இதி அர்தயதி ப்ரியே து பரதே மந்த ஸ்மிதம் யத் முகே
தத் தே ஸ்ரீ வடுவூர் நிவாஸ ஸுபகம் வித்யோததே ஸாம்ப்ரதம் –69-

ஸாகேதே வஸ ராஜ்ய பாலன பர:, வாக்யம் பிது: தத் கதம், -உரையாடல் வடிவில் உள்ள ஸ்லோகம் –
எல்லே இளங்கிளியே பாசுரம் போலே –
பரதாழ்வானுக்கும் பெருமாளுக்கும்-சாகேதம் -அயோத்யையில் ராஜா ராமனாக இருக்க வேண்டும்
பித்ரு வாக்ய பரிபாலனம் பண்ண வேண்டுமே -பெருமாள்
ஸோஹம் தத் விபினே வஸாமி, தத் இதம் யுக்தம் ந, தத் பாதுகாம் -கைகேயி தந்தைக்கு சத்யம் -மறந்தார்கள் –
இப்பொழுது தான் அறிவேன் வசிஷ்டர் மூலம்
நான் காட்டுக்கு போகிறேன் -பரதன் -புல் கொடுத்து கைங்கர்யம்
அது இங்கே சரிப்படாது -கர்மம் தொடங்கிய பின்பு மாற்ற முடியாதே –
பாதுகை கொடுத்து அருளுவாய் -பட்டாபிஷேகம் பண்ணி அடிமை பண்ணுவேன்
சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்-இரண்டுமே சொத்து -ஒரு சொத்து மற்ற ஒரு சொத்தை பாதுகாக்க முடியாதே
ராஜ்ஜியம் ச அஹம் ச –இத்யாதி –
தேஹி, இதி அர்தயதி ப்ரியே து பரதே மந்த ஸ்மிதம் யத் முகே -இத்தைக் கேட்டு மந்தஸ்மிதம் செய்து பாதுகை கொடுத்து அருளினாய்
ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் ஸ்ரீ பரதாழ்வானால் தானே உருவாகப் போகிறது
தத் தே ஸ்ரீ வடுவூர் நிவாஸ ஸுபகம் வித்யோததே ஸாம்ப்ரதம் -அதே புன்னகையுடன் இன்றும் நாம் சேவித்து அனுபவிக்கும் படி

————

நீதா ஸ்ரீ பரதேன பாத கமல த்ராணே ரதா பாதுகா
தத் கார்யம் கலயாமி ஸாஹம் இதி யா ஸம்ப்ரஸ்திதா ஸ்வாக்ரத:
தாம் ஸீதாம் அவலோக்ய தத்ர தயிதாம் யத் தே முகே ஸம்பபௌ
தத் மந்த ஸ்மிதம் ஏவ ஸாம்ப்ரதம் இதம் தஸ்யா: ஸமீபாவனௌ –70-

நீதா ஸ்ரீ பரதேன பாத கமல த்ராணே ரதா பாதுகா -பாதுகை ஸ்ரீ பரதாழ்வானுக்குக் கொடுத்து அருளிய பின்பு
தத் கார்யம் கலயாமி ஸாஹம் இதி யா ஸம்ப்ரஸ்திதா ஸ்வாக்ரத: -பாதுகா தேவி செய்தவற்றையே நான் –
முன் சென்று கல்லையும் முள்ளையும் அகற்றி
பூமா தேவி இரண்டையும் -கொஞ்சுகிறாள் -இரண்டுக்கும் -இடை சிறுத்து கைங்கர்யம் -இரண்டும்
தாம் ஸீதாம் அவலோக்ய தத்ர தயிதாம் யத் தே முகே ஸம்பபௌ -சீதா வார்த்தை கேட்டு மந்தஸ்மிதம்
தத் மந்த ஸ்மிதம் ஏவ ஸாம்ப்ரதம் இதம் தஸ்யா: ஸமீபாவனௌ -அதே புன்னகையுடன் –
இன்றும் இருவரையும் நாம் சேவிக்கிறோமே

———————-

அத்ரே: ஆச்ரமத: ஸமாகதவதீம் ஆலோக்ய ஸீதாம் ஸதீம்
பத்ன்யா: தஸ்ய முனே: தப: பலமயை: திவ்யாங்கராகாதிபி:
பூயோ பூஷித விக்ரஹாம் பகவதீம் மந்த ஸ்மித அலங்க்ருதாம்
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ–71–

அத்ரே: ஆச்ரமத: ஸமாகதவதீம் ஆலோக்ய ஸீதாம் ஸதீம் -அத்ரி மகரிஷி ஆஸ்ரமத்தில் -சீதா பிராட்டியைப் பார்த்து
பத்ன்யா: தஸ்ய முனே: தப: பலமயை: திவ்யாங்கராகாதிபி:-அநஸூயை -வாசனை த்ரவ்யம் வழங்கி –
ஒரே ஆடை பத்து மாதமும் -பின்பு உதவின
பூயோ பூஷித விக்ரஹாம் பகவதீம் மந்த ஸ்மித அலங்க்ருதாம் -இவற்றைப் பார்த்து -அவளது மந்தஸ்மிதம்
பொன்னகை இவற்றுக்கு சிகரம் என்று காட்ட மந்தஸ்மிதம்
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ-அதே மந்தஸ்மிதம் இங்கும் -இதுவே நம்மை ரஷிக்கும்

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -71-80–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 18, 2020

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாய்ப் போந்து அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களை அனுசந்தித்து
நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கி களாய்க் கொண்டு அவர்கள் படும்பாடு சொல்லுகிறது –
ஆக இப்படிப் பரிவர் இல்லாத இடங்களிலே வந்து சந்நிஹிதனானவன் –அங்கு அப்படிப் பரிவரோடே இருக்குமவன் கிடீர் என்கிறார் –
கீழ் இவன் தான் உகந்தபடி சொல்லிற்று -இதில் இவனையே உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது –
அவன் இங்கு வந்தாலும் அங்கு உள்ளாரே பரியும் அத்தனை -இங்குப் பரிவார் இல்லை -அது யார் அறியப் படுகிறார் என்கிறார் –
சர்வ காலத்திலும் ஸூலபமான படியை அனுசந்தித்தார் கீழ்-சர்வ தேசத்திலும் ஸூலபனான படியை அனுசந்திக்கிறார் இதில்

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம் காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

புஷ்பஹாச ஸூ குமாரமான திருவடிகளைப் பரப்பின போது இடங்கை வலம்புரி நின்றார்ப்ப இப்படிப் பட்டார்கள் என்கிறது –
பூவாரடி – வெருமனிருக்கிலும் வயிறு எரிய வேண்டி இருக்கிற படியாலே பிராட்டிமார் பரியும் திருவடிகள் –
பூவைப் பரப்பினால் போலே இருக்கை –-

—————–

அளவுடையரான நித்ய ஸூரிகளும் கூட இப்படிப் படுகிற விஷயமான பின்பு எனக்குச் சென்று ஆஸ்ரயிக்கைக்கு
யோக்யதை உண்டோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க-அது வேண்டா காண்-
திர்யக்குகளும் கூட ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபன் காண் -ஆனபின்புரியும் அதிலே ஒருப்படு -என்கிறார் –

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

திருவேங்கடமுடையானுடைய திரு நாமங்களை அனுசந்தித்துக் கொண்டு இது என்ன நீர்மை என்று கொண்டு
அவன் திருவடிகளிலே கிட்டும்படி போதை யணிவோம்-பூவைக் கொண்டு ஆஸ்ரயிப்போம்-

———————-

அவன் இப்படி சர்வ சமாஸ்ரயணீயனான நிலையை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக வ்யவசிதரான படியை அருளிச் செய்கிறார் –

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

தாய் பேர் சொல்லக் காலமும் தேசமும் பார்க்க வேணுமோ –
ஐஸ்வர் யாதிகளில் கை வைத்தார்க்கு இ றே நியதி உள்ளது -கைக்கு எட்டித்த ஒரு கண்ட சர்க்கரையை வாயிலுடுமா போலே –
குவலயா பீடத்தை யானபோது ஆஸ்ரயிப்பாருடைய விரோதிகளைப் போக்குகைக்கு உப லஷணம் ஆகிறது –
ஸ்ரீ கஜேந்த ஆழ்வானை யானபோது ஆஸ்ரிதர் விஷயத்தில் அவனுக்கு யுண்டான வாத்சல்யத்தைச் சொல்லுகிறது –

————–

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி பாடும்படியான
ஸூஹ்ருதம் பண்ணினேன் நானே -என்கிறார்
நம் ஆழ்வார் வானவர் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் 4-5-9-
என்றாப் போலே யாயத்து இவர்க்கும் இது –

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பெரும் தமிழன்— பெரிய தமிழன் / –பெரிது நல்லேன்-மிகவும் நல்லேன்-
பலத்தைக் கொண்டு நிச்சயிக்கிறார் -எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6–
எம்பெருமான் – இதுக்கடி இவன் எனக்கு சேஷி ஆகையாலே –
இவருடைய தபஸ்ஸூம் பலமும் இருக்கிறபடி -போந்தேன் புண்ணியனே -பெரிய திருமொழி -6-3-4–
யானே இரும் தமிழ் நன் மாலை –வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –
என்னாகியே தப்புதல் இன்றி தனிக் கவி தான் சொல்லி -திருவாய் -7-9-4-என்கிற இத்தை நினைத்து அருளிச் செய்கிறார் –
நல்லேன் பெரிது – யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–நித்ய முக்தரும் அடைவு கெட்டுச்சொல்லுவார்கள் –
நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்–என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் –
ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –

—————

நான் போர நல்லேன் என்றாரே -ஆகில் நீர் ஒரு கவி சொல்லிக் காணீர் என்ன -அப்போது சொன்ன கவி தான் இருக்கிறபடி –
ஸ்ரீ வால்மீகி பகவானுடைய கவி பாட்டுக்கு உள்ளாக ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் நேர் பட்டாப் போலே யாயத்து –
இவருடைய கவி பாட்டுக்கு உள்ளீடாக திருமலை யிடை யாட்டம் நேர் பட்டபடி-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

மும்மதம் என்ற ஒரு பிரதேச நியமம் இன்றிக்கே கிண்ணகம் போலேயாய் சிம்ஹம் அஞ்ச வேண்டும்படி இருக்கை –
இதினுடைய வியாபாரம் மாப்பிடிக்கு-அதினுடைய புத்யதீனமாய் இருக்கை –
சர்வ நியந்தா வானவன் பாண்டவர்களுக்கு நியாம்யனானாப் போலே –
இதுக்குக் கொடுக்கையே புருஷார்த்தமாய் -அது அநாதரிக்கிறபடியும்-இருக்கிறபடி –
உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்-என்னுமா போலே யாய்த்து அதுக்குக் கருத்து -இரந்து அது கொள்ளும்படி கொடுக்கும் –
மூங்கில் குருத்தும் தேனும் ஏக ரசமாய்க் கொண்டு கலந்தால் போலே யாய்த்து
இங்கும் மேகத்தோடு கலந்து சேர்ந்த வடிவு இருக்கிறபடி –
மேகத்தினுடைய நிறத்துக்கும் அவனுடைய வடிவுக்கும் வாசி அறிந்து சொல்ல ஒண்ணாத படியாய் இருக்கும்-

————–

கவி பாட்டு இனிதானாப் போலே அங்குத்தைக்கு ஈடான சமாராதன உபகரணங்களைச் சமைத்துக் கொண்டு
இப்படி சந்நிஹிதனாய் -வகுத்தவனானவன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார்-

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

ஆதி காலத்திலே நின்றுள்ளவன்-இத்தால் இவை இழந்த வன்று தான் உளனாய் இருப்பானாய்-அதுக்கு மேலே –
இவற்றுக்கு அடங்கத் தான் காரண பூதனாய் யுள்ளவன்
சீரியதாய் – இப்போதும் இனிதாய் -என்றும் இனிதாம் -கருப்புக் கட்டி தின்னக் கண்ட சர்க்கரை கூலி என்கை-
அப்ராக்ருத வஸ்துவை ஆஸ்ரயிக்கும் போது அப்ராக்ருத த்ரவ்யங்கள் வேணும் என்று அஞ்ச வேண்டா கிடி கோள்-என்கிறார்
தன் பக்கல் இவன் பண்ணின அல்ப ஆனுகூல்யத்தை சர்வ காலமும் நினைத்து இருக்கும் சர்வஞ்ஞனானவனுடைய
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளையே வாயார ஸ்தோத்ரம் பண்ணி தலையார வணங்குவது இவ்வாத்மாவுக்கு மிகவும் சீரியது-

———————–

இப்படி ஆஸ்ரயணத்தை அடைவு பட அனுசந்தித்து இவர் தமக்கு அது ரசித்தவாறே -திரு உள்ளத்தைக் குறித்து
அவன் லப்தனானால் பிறக்கும் அனுபவத்தில் காட்டிலும் சாதன தசையில் பிறக்கும் ரசமே அமையும் கிடாய் -என்கிறார்-

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

உத்தமன் –தன் பேறாக வடிவைக் கொள்ளக் கடவ சர்வேஸ்வரன் -நாம் வேண்டாத நாளும் நம்மைத் தொடர்ந்து திரிந்தவன் –
நல் பாதம்-நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும் அவனுக்கும் திருவடிகளுக்கும் –தானே வந்து தலையிலே இருக்கும் திருவடிகள் –-
சாற்றி உரைத்தலான தவம் உறும் கண்டாய் -இத்தைத் தவமாகச் சொல்லுகிறது ஈஸ்வரன் கருத்தாலே–

——————-

இப்படிப்பட்ட தபஸ்சை அனுசந்தித்து சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தம் அற லபிக்கப் பெற்றான்
சதுர்முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார்-

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78–

பூமியை வளர்ந்து அளக்கைக்காக நீட்டின ஸ்லாக்கியமான திருவடிகள் -எட்டாதபடி பரணிட்டு இருக்கக் கிடீர் பலித்தது என்கை-
தன்னுடைய சிவந்த கைகள் அனைத்தும் ஆரும்படி விளக்கினான் –
அநேகம் கை படைத்ததால் உள்ள லாபம் பெற்றான் –அவனுடைய எல்லா திரு நாமங்களையும் சொல்லி –
வாய் படைத்த பிரயோஜனம் பெற்றான் –
சர்வேஸ்வரன் அந்ய அர்த்தமாகச் செய்த செயல் அவனுடைய தபஸ் ஸூ க்குப் பிரயோஜன ரூபமாகக் கொண்டு தலைக் கட்டப் பெற்றது –
யாரேனுக்கும் கார்யம் செய்ய யாரேனுக்கும் பலித்துப் போவதே –

——–

ஜகத்தை அளந்து கொண்ட செயலுடைய ஸ்ரீ வாமனனுடைய வ்ருத்தாந்தமானது -தாயார் அபேஷிக்க மறுத்துக்
காடேறப் போன சக்ரவர்த்தி திருமகனுடைய இத்தன்மைக்கு ஒக்கும் -என்கிறார்-

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79–

இரப்பாள் மொய்ம்மலராள்0பெருமாள் ஆகிற கருமுகை மாலையைச் செவ்வி பெறுத்த வேணும் என்று நெருப்பிலே இடுமா போலே
இந்த அதி ஸூ குமாரமான திருமேனியைக் கொண்டோ காடேறப் போகிறது -என்று
உம்மைப் பிரிந்து இருக்க மாட்டேன் -உமக்கு முன்னே போகக் கடவேன் என்று ப்ரார்த்தியா நிற்க –
பெருமாள் கருமுகை மாலையை வெய்யிலிலே இடவோ என்று இருந்தார் –
அவள் தன்னை மறந்து பெருமாளையே நினைந்து இருந்தாள்-
அவன் அளந்த பூமிப் பரப்பு அடங்கலும் இத்தனைக்கும் நேர் -அவன் அளந்த பூமி அவன் குணம் அத்தனைக்கும் நேர்-

அதாவது மாத்ரு வசனத்தை மறுத்துப் பிராட்டி இரப்பைத் திரஸ்கரித்து -தன் ஸுகுமார்யத்தை புரிந்து பாராமல்-
போகிற காட்டில் மிறுக்கைக் கடைக் கணியாமல் -பித்ரு வசன பரிபாலனத்தையே புரஸ்கரித்து –
மன்னும் வளநாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்கரவர்த்தி திரு மகன் செயல்களுக்கு இடங்கை வலம் புரி நின்றார்ப்ப -இத்யாதிப் படியே
அனுகூல அக்ரேசரரான ஸூரிகள் வயிற்று எரிச்சலையும் தன் திருவடிகள் ஸுகுமார்யத்தையும் -காடுமோடையுமான அளக்கிற
பூமியினுடைய கொடுமையையும் -ஆஸூர ப்ரக்ருதிகளான நமுசி ப்ரப்ருதிகள் அலைச்சலையும் பாராமல் ஆஸ்ரிதரான இந்திரன்
பிரார்த்தனனையைத் தலைக் கட்டுகைக்காகக் கல்லும் கரடுமான வான்மா வையத்தை அளந்து கொண்ட
ஸ்ரீ வாமனனுடைய செயலானது சத்ருசமாம் அத்தனை -என்கை –

——————–

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளில் அடிமை எனக்கு ருசித்து நான் ஸ்ம்ருதி மாத்ரத்தாலே அங்கே பிரவணன் ஆனபடியாலே
பண்டு அவன் வடிவைக் காணப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ -என்கிறார்-

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

நேர்ந்தேன் அடிமை –
அவன் பக்கலில் யுண்டான அடிமையிலே நேர்ந்தேன் -ஸ்வரூப அனுரூபமான கைகர்யத்தைக் கிட்டினேன் –
துணிந்தேன் -என்று கீழே -65- பாசுரத்தில் சொன்னபடி -ஷத்ரியனுக்குஅபிஷேகம் நேர்பட்டால் போலே –
அவனுடைய அழகிய திருவடிகளை ஸ்மரித்தேன்-இவருடைய அபிஷேகம் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய் -4-3-7-என்றும்
மாலடி முடிமேல் கோலமாம் -குலசேகரன் -பெருமாள் -7-11-என்றும் சொல்கிறபடி
அடிமை ஆசைப்பட்டால் அடியை நினைத்து இருக்கும் அத்தனை இறே –
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -என்று திருவடிகளிலே ஸ்நேஹத்தை யுடையனாய் அத்தாலே பரி பூர்ணன் ஆனேன்-

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -61-70–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 17, 2020

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –
வடிவே அன்று அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் -என்கிறது –

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

ஒரு நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே ஒரு திருவடிகளானது நின்றாப் போலே நின்று –
பூமிப் பரப்பை அடங்க மறைத்துக் கொண்டது –
கையிலே நீர் விழுந்தவாறே அலாப்ய லாபம் போலே வளர்ந்த தோளானது திக்குகள் எல்லாம் அளந்தன –
இன்று இத்தைக் கேட்கைக்கு அன்று எங்கே போனேனோ –-
உன் திருவடிகளிலே ந்யஸ்த பரர் ஆனவர்கள் இச் செயலை அனுசந்தித்து -இனி நமக்கு ஒரு கர்த்தவ்யம் இல்லை என்று
கொண்டு நிர்ப்பரராய் -மார்பிலே கை வைத்துக் கொடு கிடந்தது உறங்குகைக்காக செய்த செயல் இறே-
ஒரு சர்வ சக்தி பக்கலிலே தங்கள் பரத்தை ஏறிட்டுத் தாங்கள் நிர்ப்பரராய் இருப்பர்கள்-
அநந்தரம் அவன் தூது போயும் -சாரத்தியம் பண்ணியும் -தான் அர்த்தியாயும் -இப்படி இவர்கள் கார்யம் நிர்வஹியா நிற்கும்
ஆனபின்பு அவர்களுக்கு ஒரு குறை இல்லை-

—————

நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான எருதுகளைப் போக்கி அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே
நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் -என்கிறது-

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

முறை அறிந்து பற்றினேன் அல்லேன் -விரோதி நிரசன சமர்த்தன் என்று பற்றினேன்-நம் பிரதி பஷத்துக்கும்
மாறு என்று சொல்லி வணங்கினேன் –
நப்பின்னைப் பிராட்டி யோட்டைக் கலவிக்கு பிரதிபந்தகமான எருது ஏழையும் அடர்த்தாப் போலே
என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி எனக்குத் தன்னைத் தருவானும் தானாகப் பற்றினேன் –
இதுக்கு முன்பு இப்படி இருப்பது ஒரு புருஷார்த்தம் அறியவும் பெற்றிலேன் -அத்தாலே இப்புருஷார்த்தைப் பெற்று
அனுபவிக்கப் பெறாமல் இழந்து போனேன் -இதுக்கு அடி என் அறிவு கேடு ஐயோ அறிவு கேடு என் படுத்தாது தான் –

——————

இத்தால் எம்பெருமானே -சர்வாதிகன் என்னும் இடமும் -அல்லாத ஈஸ்வரர்கள் பிறர்க்கும் தஞ்சம் அல்லர்கள் –
தங்களுக்கும் தஞ்சம் அல்லர்கள் -என்னும் இடமும் சொல்லுகிறது-

ஏறு எழும் வென்று அடர்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

இவ்விடத்தில் நம் பிள்ளை அருளிச் செய்வதோர் வார்த்தை யுண்டு -அதாகிறது
நஞ்சீயர் ஒரு நாள் என்கையிலே மாம் பழத்தைத் தந்து -இத்தைக் கொடு போய் நம்பி திரு வழுதி நாடு தாசர்க்கு
கொடுத்து வாரும் -என்று போக விட -அப்போது இப் பாட்டு நம்பி பணியா நிற்க கேட்ட வார்த்தை –
ஏழு கோக்களை வதித்தவன் பிராயச் சித்தியாய் ஒருவன் வாசலிலே நின்றான் என்னக் கேட்டிலோம்-
ஒருவன் பிராணன் உடன் இருந்தவன் தலையை அறுத்து -அத்தாலே பாதகியாத் திரிய -அவனுடைய ப்ரஹ்ம ஹத்யையும்
தன்னுடைய ஸ்பர்சத்தாலே போக்கினான் இவன் –இது இறே இவனுக்கும் அவர்களுக்கும் யுண்டான நெடு வாசி இருக்கிறபடி -என்றார்
தலையை அறுத்துப் பாதகியான அவனோ ஈஸ்வரன் -சாபத்தைப் போக்கினவனோ -தலை அறுப்புண்டு சோச்யன் ஆனவனோ
பார்த்துக் கொள்ளும் அத்தனை –

——————-

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கூடக் கார்யம் செய்யக் கடவ நீ -உன்னால் அல்லது செல்லாத நான்
உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் -என்கிறார் –

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையின்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

கதையின் திருமொழி யாய் நின்ற திருமாலே – உபநிஷத் சித்தமான ஏதேனுமாக ஒரு வித்யா விசேஷங்களில் யுண்டான
சப்தங்கள் ஸ்ரீ யப்பதிக்கு வாசகமாயாய்த்து இருப்பது –
அர்த்தத்துக்கு போதகமான சப்தம் -அவனையும் அவளையும் காட்டக் கடவதாய் இருக்கும் –
அர்த்தம் அவனே சப்தம் இவளே யாய்த்து இருப்பது-
இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரும்ஹணங்களாலே பிரதி பாதிக்கப் பட்ட ஸ்ரீ யபதியான உன்னை இப்படி சப்த த்வாரா காண்கை அன்றிக்கே
ஒரு தேச விசேஷத்திலே வந்து பரிபூர்ணமாக -சதா பஸ்யந்தி -என்று அனுபவித்து -அனுபவ ஜெனித ப்ரீதிக்கு போக்கு விட்டு
அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று முழு மிடறு செய்து பேசுகிற பரிபூர்ண சப்தங்களாலே கண்டு
அனுபவிக்கும் படி -திரு உள்ளமாய் அருள வேணும் –

————

இன்றாக உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீர் காணும் -என்ன –
அந்த லாபத்தை அனுசந்தித்து அதுக்கு அனுரூபமாகப் பரிமாறுகிறார் -பெற்ற அம்சம் உன் பக்கல் ருசி -என்கிறார் –

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

நிர்விசேஷ சின்மாத்ரம் என்றாப் போலே சிலவற்றை உத்தேச்யமாக நினையாதே திரு மேனியே ப்ராப்யம் என்று இருக்கப் பெற்றேன் –
திரு மேனி கண்டேன் -பொன் மேனி கண்டேன் என்னும் சொல்லை சேஷபூதர் ஆகையாலே பணிந்தேன் -என்கிறார்-
அன்பாய்த் துணிந்தேன்-ஞான கார்யம் அல்ல -அபி நிவேசத்தாலே துணிந்தேன் –
பெருமாள் புக்கு அருளினால்-பின்னும் முன்னும் நின்று வைத்த அனைத்தையும் பின்பும் பிறகுவாளியையும் கண்டு யேத்துகையில் துணிந்தேன்
திருமலை நம்பி பக்கலிலே வாசனை பண்ணி இருப்பார் – ஸ்ரீ பராங்குச தாசர் என்று ஒருவர் உண்டு -அவர் நம்பி பணித்தத்தாகச் சொல்லும்படி –
புகலிடம் என்கிறது -அவதரித்துப் போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய் -அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்கிறபடியே அவர்கள்
நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் என்னுமதிலே அத்யவசித்தேன் -என்கிறார் -என்றுமாம் –

————-

பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தால் பெற்ற அளவு அமையும் -இதர விஷய ப்ராவண்யத்தால் வரும்
அனர்த்தத்தை அனுசந்தித்து -இதிலே ருசி யுண்டாகாது இருக்கும் அத்தனையே வேண்டுவது என்கிறார் –
ப்ராப்திக்கும் பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் அடி -சம்சார தோஷ தர்சனத்தைப் பண்ணுகை- ஏத்துகையிலே துணிகையே யன்று-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நாகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பகவத் பிரசாதம் யுடையார்க்கு இறே பிரத்யஷிக்கிற தோஷமும் தோஷமாய்த் தோற்றுவது-
தன்னைக் காட்டினவோபாதி இது தன்னையும் தானே காட்ட வேணும் –
எம்பெருமான் தன்னையும் பற்றுவித்து புறம்பையும் விடுவிக்குமா போலே –
இத் தோஷ தர்சனமும் தன்னையும் விடுவித்து எம்பெருமானையும் பற்றுவிக்கும் –
இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அவன் உளனாய் இருக்க -அநிஷ்டத்திலே இவன் இஷ்டம் பண்ண
அத்தைத் தவிர்த்து சாஷாதிஷ்டம் தருவானாய் நின்றான் –
நம்மாழ்வார் இமையோர் தலைவனான படியை முந்துறக் கண்டார்
அதுக்கு எதிர்தட்டான பொய் நின்ற ஞானம் தொடக்கமான வற்றை-பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
விடுவிக்க வேணும் -என்கிறார் –

————-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் வடிவு–67 –என்றும் பாடமாம்

நித்தியமான ஆத்ம வஸ்துவைத் தொற்றிக் கிடக்கிற புண்ய பாப ரூப கர்மங்களைப் போக்குவித்துப் பின்னையும்
மறுவலிட்டு வாராதபடிக்கு ஈடாகப் போக்கும் மிடுக்கை யுடையவனைக் கண்டு கொண்டேன் –
சேதனன் ஆகையாலே இரண்டு இடத்திலும் இவனுக்கு ஸ்வபாவ ஜ்ஞானமே வேண்டுவது -அஞ்சுகைக்கும் அச்சம் கெடுகைக்கும்-
துறக்க ஒண்ணாத படி ஆத்மாவோடு கூடி துக்க அவஹமான புண்ய பாப ரூப கர்மங்கள் இரண்டையும் துரத்தி விட்டுப்
பின்னையும் மறு கிளை கிளர்ந்து வரக் கடவதாய் -துக்க ஹேதுவான வாஸனா ருசிகளையும்
செறுத்து முடிக்குமவன் மிடுக்கையும் காணப் பெற்றேன் –

—————-

இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவியாதே உப்புச் சாறு கொள்ளுமவர்களைச் சொல்லுகிறது –
இத்தால் நின்ற நின்ற நிலைகள் தோறும் இஷ்ட பிராப்தியும் -அநிஷ்ட நிவாரணமும் பண்ணிக் கொடுக்கும் படி சொல்லுகிறது –
தந்தாமாலே இழக்கில் இழக்கும் அத்தனை -அவன் பக்கல் தட்டில்லை –

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலி மிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

நம் வேர்ப் பற்றிலே நலிய நினைத்து வந்த மிடுக்கை யுடைய குவலயா பீடத்தின் யுடைய கொம்பைச் சலித்த சேஷீ-
தன்னுடைய விரோதியைப் போக்கி எழுதிக் கொண்ட படி யாதல் –
நாட்டுக்கு ஒரு சேஷியைத் தந்தான் -என்னுதல் -இச் செயலாலே எல்லாரையும் எழுதிக் கொண்டவன் –
இப்படிப்பட்ட அவன் கிடீர் கடல் கடைந்தான் –

————

அவன் பக்கல் தம்முடைய அபேஷிதம் பெற்றுப் போகிறார் தேவர்களேயோ-
நாம் காண ஜகத்துக்கு ரஷகராய் ஜீவிக்கிற ராஜாக்களும் எல்லாம் ஜகத் காரண பூதனானவன் திருவடிகளை
ஆஸ்ரயித்து அன்றோ தந்தாமுடைய பதங்கள் பெற்றுத் திரிகிறது என்கிறார்-

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பூ வேகும்–பாட பேதம்-பூக்கள் தள்ளும் படியான செவ்வியை யுடைய கமலத்தை நாபியிலே உடையவன்
பூ மேவும் -என்ற பாடமாய்த்தால் போக்யதை பொருந்தி இருக்கிற படி

—————–

ஆஸ்ரித விஷயத்தில் பிச்சிருந்த படி சொல்லுகிறது
அம்ருதம் ஆசைப் பட்டார்க்கு அத்தைக் கொடுக்கும்
ராஜ்யம் ஆசைப் பட்டார்க்கு ராஜ்யத்தைக் கொடுக்கும் –
தன்னை ஆசைப் பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் -என்கிறது-
தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய திரு உள்ளத்தை உகந்து –
அருளின திருப்பதிகள் எல்லாம் ஒரு தட்டும் இது ஒரு தட்டும் என்னும் படி ஓக்க விரும்பி
அவன் பரிமாறும் படியை அருளிச் செய்கிறார் –

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

தமருள்ளும் – இதில் முற்பட்டது ஆஸ்ரிதருடைய ஹ்ருதயம் ஆகையாலே உத்தேச்யம் இது -இத்தால்
அவ்வோ இடங்கள் போலும் அன்றிக்கே இவர்கள் ஹ்ருதயங்களிலே ஒரு வாசி தோற்றப் பரிமாறும் -என்கிறார் –
ஆஸ்ரிதர் யுடைய ஹ்ருதயங்கள் –
தஞ்சை –தஞ்சை மா மணிக் கோயில் –
தலை யரங்கம் –திருப்பதிகளில் பிரதானமாய் -பரமபதத்தோடே ஒக்க எண்ணலாம் படியான பெரிய கோயில் –
தமருள்ளும் தண் பொருப்பு – நின்ற வேங்கடம் நீணிலத்துள்ளது -திருவாய்-9-3-8-என்று தங்களுக்கு வைப்பாக
அனுசந்தித்து இருக்கும் ஸ்ரமஹரமான திருமலை –ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சர்வ ஸ்வமான தேசம் இறே –
வேலை –எல்லா வற்றுக்கும் அடியான திருப் பாற் கடல் –ப்ரஹ்மாதிகளுக்கே யாய் இருக்கையாலே விசேஷணம் இட்டிலர்-
தமருள்ளும் மா மல்லை –ஆஸ்ரிதனுக்காகத் தரைக்கிடை கிடக்கிற திருக் கடல் மலை –
கோவல் –திருக் கோவலூர் எங்கள் மூவரோடும் ஓக்க நெருக்கின இடம் -தங்கள் நெருக்கு உகந்த இடம் இறே –
மதிள் குடந்தை –அரணை யுடைத்தான திருக் குடந்தை -திரு மழிசைப் பிரான் உகந்த இடம் –
என்பரே ஏவல்ல வெந்தைக்கு இடம் -எய்க்கைக்கு வல்லனான என் ஸ்வாமி—தசாரதாத் மஜனுக்கு
சக்கரவர்த்தி திருமகனுக்கு இடம் என்று சொல்லுவார்கள்
மிடுக்காலே பிரதிகூலரை அழியச் செய்தவன் -அனுகூலரை எழுதிக் கொண்ட இடங்கள் –
இப்படி சக்திமானாய் இருக்கிறவன் இவர்களை அனுகூலித்து மீட்கைக்காக வந்து இருக்கிற தேசங்கள் இவை

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -51-60–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 17, 2020

இப்படித் தாம் அடைவு கெட்டபடியை அனுசந்தித்து -நெஞ்சே -நீ முன்னம் என்னைப் போலே கலங்காதே
அவனுடைய சௌந்தர்யாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் -என்கிறார் –
பேச்சே அன்று நினைப்பன்-என்கிறார் –

மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51-

நினைத்து உஜ்ஜீவி –தேவர்களுடைய புன்மையில் போகாது ஒழிகை -அவனையே நினை-
ஆஸ்ரித அபேஷிதம் ஒரு தலையானால் தன் படுக்கை என்றும் பாராதே அங்கு நின்றும் எழுந்து நின்று கார்யம் செய்த படி
பிரயோஜனாந்த பரருக்கு கடல் கடைந்து கொடுத்த படி-அர்த்திப்பாரைப் பெற்றவாறே படுக்கையைக் கடைந்து கொடுத்தான்
ஒரு கருங்கடல் வெண் கடலை நின்று கலக்கினாப் போலே -கடலைக் கடைந்த அழகு யுடையவனை புத்தி பண்ணு கிடாய் –
கிடந்த கடலை நின்ற கடல் கடைந்தாப் போலே -சமுத்ரத்தில் நீர் நிறம் போலே இருந்துள்ள நிறத்தை யுடையவன் –

———

திரு உள்ளத்துக்கும் கூட உபதேசிக்க வல்ல தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய அழகையும்
பிராட்டி சம்பந்தத்தால் வந்த மிக்க கிருபையையும் சொல்ல இது ஒருவர்க்கும் நிலமல்ல கிடீர் -என்கிறார்-

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52-

அவன் கிருபைக்கு ஊற்று இவள் -இவள் ஐஸ்வர் யத்துக்கு ஊற்று அவன்-
ஆர் அது அறிவார் –அந்த ரஹச்யம் பத்தொன்பதாம் பாஷை -ஒருவருக்கும் தெரியாது –
ஆழ்வார்கள் அறிதல் -அவர்களை அடி ஒற்றின நம் முதலிகளில் சிலர் அறிதல் செய்யும் அத்தனை –
அவன் பிராட்டியை அபஹரித்தான் -இவன் பூமியை அபஹரித்தான்-
அவனைப் போலே தலை அறுத்துப் பொகடாதே வைத்தமைக்கு அடி ஔ தார்யம் என்று ஒரு குணலேசம் கிடக்கையாலே –
மேல் இந்திர பதம் செலுத்துவானாக வைத்தவனுடைய ஆன்ரு சம்ச்யத்தை அறிவார் யார் –

————–

இப்படி மஹா பலி பக்கலும் கூட அனுக்ரஹத்தைப் பண்ணும் ஸ்வ பாவனானவன் கண்ணுக்கு இலக்காம்படி
தன்னை சர்வ ஸ்வதானமாக பண்ணி வந்து வர்த்திக்கிற திருமலை கிடீர் -நான் ஆதரிக்குமது என்கிறார் –

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

இவ் வுடம்பைப் பொகட்டு லோகாந்தரத்தே வேறு ஒரு யுடம்பு கொண்டு அனுபவிக்க நினைக்க –
ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள்
திருமலையே பிராப்யமாகப் பற்றி இருக்கும் மலை-நான் இவ் யுடம்பால் யுள்ள பிரயோஜனம் இங்கே கொள்ளப் பெற்றேன் –

——————

இவனுக்கு எல்லை நிலமான திருமலை அளவும் அவர் விரும்பின வாறே அவனும் தனக்கு வாஸ ஸ்தானமாக
நினைத்து இருக்கும் திருமலைகள் இரண்டிலும் பண்ணக் கடவ ஆதாரத்தை இவர் திரு உள்ளம் ஒன்றிலுமே
பண்ணினானாய் இருக்கிறது –

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

என் பக்கல் வருகைக்கு கிருஷி பண்ணின –பாலாலயமான திருப் பாற் கடலை க்ருதஜ்ஜத்தை தோற்றவும்-
உன் உகப்பைப் பற்றவும் -பிரானே கை விடாது ஒழிய வேணும் -என்று பிரார்த்தித்தேன் –

—————-

இப்படி தேவர் என் பக்கலில் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தால் குறை யற்றேன் –
அதனுடைய பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவரே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார்
உன்னை நினைக்காக அரிதான சம்சாரத்திலே உன்னை நினைக்கும் படி பண்ணினாய் –
இனி ப்ராப்தி யளவும் பண்ணாய் -என்கிறார்-

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீயே
பெற்றால் அனுபவிக்கக் கடவதான நிரதிசய ஆனந்தத்தையும் பண்ணித் தந்தருள வேணும்
ஞான சங்கோசம் அறுத்தாப் போலே -யேஷஹ்யேவா நந்தயாதி -தைத் ஆன -7-உன்னுடைய ஆனந்த சமுத்ரத்தையும்
நீ எனக்கு அருளவும் வேணும் –-கண்டால் பிறக்கும் ஸூகத்தையும் பண்ணித் தந்து அருள வேணும்
அரியது செய்தால் எளியது செய்ய ஒண்ணாதோ

——–

சேஷியை இப்படி நிர்பந்திக்கக் கடவதோ என்னில் -அது வைதமான படி இறே –
ஆசை மிக்கால் செய்யலாவது உண்டோ என்கிறார் –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

ஸ்ரீ யப்பதியை நமக்கு ஸ்வாமிநியான பெரிய பிராட்டியார் பேணிக் காட்டும் -ஆதரித்துக் கொடு வந்து காட்டும்
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் -மூன்றாம் -1-என்கிறபடியே அவளைக் கண்டால் இ றே அவ்வடிவு தோற்றுவது-
பிராட்டி சந்நிதி யுண்டாக அயோக்யன் என்று அகலவும் விரகு இல்லை -சாபராதன் என்று மீளவும் போகாது –
முறையில் நிற்கவும் ஒண்ணாது –
பிரபல புருஷ காரம் உண்டான பின்பு -முறைக்குச் சேராது பதறுகை -என்று லஜ்ஜித்து ஆறி இருக்கப் போமோ –

———————-

இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரோடு கூடி யுள்ளவன் கிடி கோள் -சர்வ சமாஸ்ரயணீயன் -என்கிறார்-

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

நாங்கள் அவனுடைய பேரை சேஷபூதர் என்னும் ப்ராப்தியாலே ஏத்தினோம் -முறை யறிந்த நாம் முறை தப்பாமே ஏத்தினோம் –
விபீஷண லஷ்மணாதிகளைப் போலே –சூர்பணகை போலே முறை கெட அல்ல –

————–

நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாயிற்று சர்வேஸ்வரனுடைய கடாஷத்தால் -என்கிறார்-

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

இது வேம்பாகிற பதார்த்தத்தின் யுடைய ஸ்வ பாவத்தை யுடைத்தே யாகிலும் இத்தைப் பாடு என்று –
இனிது என்று இருந்தில்லை யாகிலும் இத்தைச் செய்யப் பார் –
பொன்னாழி பாடு என்று –வேப்பங்குடி நீர் இருக்கிறபடி-
நாம் அலாப்ய லாபமாகப் பெற்ற அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கவி பாடுகை யாகிற இந்த பரம புருஷார்த்தமும்
அருளுகையே ஸ்வா பாவமாக உடையவனானவன் பண்ணின பிரசாதம்- நாம் பெற்ற நன்மைக்கு அடி என்கிறார் –

————–

இந்த லாபத்துக்கு அடியான பிரதம தர்சனம் இருந்தபடியைச் சொல்கிறார்-

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

உன்னுடைய கமலம் போன்றுள்ள திருவடிகளை நினைத்தேன் –
உன் திருவடிகளை நமக்கு பரம ப்ராப்யம் என்று அனுசந்தித்தேன் -ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினேன் -அநந்தரம் –
ஓர்ந்து – நிரூபித்துப் பரதந்த்ரமாய் என்னோடு எனக்கு அடைவில்லாமையையும் அவனுக்கேயாய் இருக்கிறபடியையும்
ஆராய்ந்து -ஆருடையத்தை ஆருடையதாகத் தான் நாம் பிரதிபத்தி பண்ணி இருந்தோம் என்று அனுதபித்து –
என்னையும் அங்கு ஓக்கினேன் –அத்திருவடிகளிலே என்னையும் நிஷேபித்தேன் -உபாயமும் அவனே யாக அத்யவசித்தேன் –
இத்தால் கிருபா பிரேரித ஹ்ருதயனாய்க் கொண்டு தம்மை அவன் நிர்ஹேதுகமாக கடாஷித்த படியையும்
கடாக்ஷ பலமாக ஸ்வரூப ப்ராப்ய ப்ராபகங்களை உணர்த்தி –
பதற்றம் துணிவுகள் தமக்கு உண்டாக்கின படியையும் சொல்லிற்று யாய்த்து –

————-

இப்படி அனுசந்தித்த இவர் ஐஸ்வர் யத்திலும் ஆஸ்ரித பார தந்திரியமே அவனுக்கு ஸ்வரூபம் என்று அறிவர் கிடீர் –
தனக்கான ஜகத்தை என்றும் ரஷிப்பன் என்று சர்வேஸ்வரன் தன் திறத்து ஸூ லபனான படியைச் சொல்லுகிறார் –

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60–

உயர்வற உயர்நலம் உடையவனாய் இருக்கை யல்ல ஸ்வரூபம் -எளிவரும் இயல்வினனாகை-
ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம்
பிறக்கப் பிறக்க ஸூ த்த சத்வ மயமாகக் கொண்டு நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும் உன் திருமேனி-
ஜகத் காரணாமாய்-எல்லார்க்கும் சத்தை அவன்-ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது-
முறை தப்பாமல் நின்று ஜகத் ரஷணம் பண்ணுகிறார்-
அஜ்ஞானத்தாலே முன்பு கை விட்டாப் போலே இப்போது ஜ்ஞானத்தாலே கைவிடப் பார்க்கிறார் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி–

July 17, 2020

ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி –

ஸ்ரீ ஸ்வாமி இராமானுசர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் ஶ்ரீஅனந்தாழ்வான்.
இவர், கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் சிறுப்புத்தூர் (இன்றைய கிரங்கனூர் -மேல்கோட்டை அருகில்) எனும்
அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர்.

தனியன் –

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்|
ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||

ஶ்ரீமத்ராமாநுஜாசார்ய ஶ்ரீபாதாம் போருஹத்வயம்|
ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அனந்தார்யமஹம் பஜே||

சக்ரே கோதா சதுஸ்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம்
ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம நந்தகுரும் பஜே-

வேதப் பொருள்களைத் தன்னுள் கொண்ட “கோதா சதுஸ்லோகி” என்னும் ஸ்துதியை அருளிச் செய்த
குருவாகிய திருமலை அனந்தாண்பிள்ளையைப் போற்றித் தொழுகிறேன்-

———————————————————————

அநிஶம் பஜதாம் அநந்ய பாஜாம்
சரணாம் போருஹ மாதரேண பும்ஸாம் |
விதரந் நியதம் விபூதி மிஷ்டாம்
ஜய ராமானுஜ ரங்க தாம்நி நித்யம் –ஸ்லோகம் -1-

ஶ்ரீ உடையவரே! தேவரீர் திருவடிகளைப் பற்றி வேறு புகல் இல்லாத அடியவர்களுக்கு
கேட்ட விபூதியை அளித்துக் கொண்டு
(அனந்தாழ்வானுக்கு இஷ்டமான ஆச்சார்ய கைங்கர்யம் இங்கே இருந்து தானே உடையவர் அளித்து அருளினார் )
திருவரங்கம் பெரிய கோயிலிலே விஜய ஸ்ரீ யாக விளங்கக் கடவீர் விஷயீ பவ ஸ்ரீ ராமாநுஜ!

——————————————————————————————–

புவி நோ விமதாம்ஸ் த்வதீய ஸூக்தி:
குலிஷீ பூய குத்ருஷ்டி பிஸ் ஸமேதாந் |
ஷகலீ குருதே விபக்ஷ்வி தீட்யா
ஜய ராமாநுஜ ஷேஷ ஷைல ஸ்ருங்கே ||–ஸ்லோகம் -2-

(அப்பனுக்கு சங்காழி அளித்தவரே!) தேவரீருடைய ஸ்ரீ ஸூக்திகள் வஜ்ராயுதம் போலே குத்ருஷ்டிகள் போன்ற
எதிரிகளை பொடி படுத்த “வேதார்த்த சங்க்ரஹம்” தேவரீர் அருளிச் செய்ததால்
(இதுவே இவர் அருளிச் செய்த முதல் கிரந்தம் என்பர் )தேவரீர் திருவேங்கடமா மலை யுச்சியில்
பல்லாண்டுகள் வெற்றித் திருமகளோடு விளங்குவீராக!
விஜயீபவ ஸ்ரீ ராமாநுஜ!

(ஸ்ரீ கீதை -ஸ்ரீ உபநிஷத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -பிரஸ்தான த்ரயம் என்பர் மற்ற சம்ப்ரதாயம்
நம் சம்ப்ரதாயம் ஒரே பாதை -அனைத்தும் ஒரே கருத்து )

(மதம் பெருகு வேழம் மாப்பிடிக்கு முன் நின்று -இரு கண் – இள மூங்கில் வாங்கி
அருகு இருந்த தேன் கலந்து -நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
எங்கள் ராமானுஜர் முனி வேழம் -அனந்தாழ்வானுக்கு கடக சுருதி -கொண்டு
பேத அபேத ஸ்ருதிகளை -ஸர்வம் ஸமஞ்ஜயம் )

——————————————————————————————–

ஸ்ருதிஷூ ஸ்ம்ருதிஷூ பிராமண தத்வம்
க்ருபய ஆலோக்ய விஷுத்தயா ஹி புத்த்யா |
அக்ருதாஸ் ஸ்வத ஏவ ஹி பாஷ்ய ரத்னம்
ஜய ராமாநுஜ ஹஸ்தி தாம்நி நித்யம் ||–ஸ்லோகம் -3–

ஶ்ரீபாஷ்யகாரரே! யதிராசரே! நிர்ஹேதுக கருணையினாலே ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலுள்ள பிரமாணங்களின்
உண்மையை குற்றமற்ற மதியினாலே நடுநிலையாக ஆராய்ந்து ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்தீர். அவ்வாறான தேவரீர்!
ஸ்ரீ ஹஸ்திகிரியில் வெற்றியுடன் “நித்யஸ்ரீ” யாக விளங்க வேணும்
ஜய விஜயீ பவ ஸ்ரீ ராமாநுஜ!

பெருமாள் கோயிலுக்கும் ஸ்ரீ பாஷ்யத்துக்கும் பொருத்தம்
வேடன் வேடுவிச்சியாக கூட்டி வந்ததும் இந்த மிதுனமே
ஆறு வார்த்தை அருளிச் செய்ததும் அறிந்தோமே
அஹம் ஏவ பரதத்வம் –தர்சனம் பேத ஏவ ச —
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்ய பேர் அருளாளன் தானே காரணம்
கப்யாஸம் புண்டரீகாக்ஷ ஸ்ருதி விளக்கம் இவர் அருளாலே
ஆளவந்தார் -ஆ முதல்வன் இவன் என்று மானசீகமாக கடாக்ஷித்து
சரணம் அடைந்து பேர் அருளாளன் தானே இவரை சம்பிரதாயத்துக்கு ஆக்கி அருளினார்
முக்த ஸ்லோகம் -யஸ்ய ப்ரஸாத கலயா -செவிடன் கேட்டும் ஊமை பேசியும் நொண்டியும் நடந்து மலடி பிள்ளைகள் பெற்று -இத்யாதி
யாமுனர் தம் மூன்று விரல்கள் நிமிர்த்து மூன்று குறை விலக்கி மூ ஏழு உலகும் ஏத்த முக்கோல் தரித்து
முக்குறும்பு அறுத்து மும்மறை விளக்கிய தேவன் -கட்டியம் சொல்கிறோம்
பாஷ்ய காரர் இது கொண்டு ஸூத்ர வாக்கியங்களை ஒருங்க விடுவார்
மயர்வற மதிநலம் அருளினவனும் அயர்வறும் அமரர்கள் அதிபதி தானே
கூரத்தாழ்வானை பாஷ்யகார உடன் சேர்ப்பித்து அருளினவனும் இவனே

———————————————————————————————

ஜய மாயி மதாந்தகார பாநோ
ஜய பாஹ்ய பிரமுகாடவீ க்ருஷா நோ |
ஜய ஸம்ஷ்ரித ஸிந்து ஷீத பாநோ
ஜய ராமாநுஜ யாதவாத்ரி ஷ்ருங்கே ||––ஸ்லோகம் –4-

(ஆதிசேஷ அவதாரமான லக்ஷ்மண முநியே!)
மாயாவாதிகளின் மதமாகிற இருளுக்கு சூரியன் போன்றவரே!
பாஹ்ய குத்ருஷ்டிகளாகிற காட்டிற்கு நெருப்புப் போன்றவரே!
உமது அடியார்களாகிற கடலைப் பூரிக்கச் செய்யும் சந்திரனாயிருப்பவரே!
யதிராசரே! திருநாராயணபுரமாகிய (ஶ்ரீபலராமன் ஆண்ட) யாதவாத்ரியில் நித்யஸ்ரீ யை வளரச் செய்து
நீடுழி விளங்க வேணும். ஜய விஜயீ பவ ராமாநுஜ!

தொண்டனூர் வாதம்-ஆதிசேஷனாகவே திரைக்குப் பின் இருந்து ஏக காலத்தில் நிரஸித்து அருளினார் அன்றோ
பலரையும் திருத்திப் பணி கொண்டார்
அடியார்கள் ஆகிய கடலுக்கு சந்திரன் போல் குளிர்ச்சியாக இருந்தார் அன்றோ -12 ஸம்வத்சரம் இருந்து –
தமர் உகந்த திருமேனி -பேசும் எதிராஜர் என்ற திருநாமமும் இங்கு உண்டே
தான் உகந்த தானான திருமேனியும் இதுவே என்பர் அங்குள்ளார்

———————————————————————————————–

ராமாநுஜ சது: ஷ்லோகீம் ய: படேந் நியத: ஸதா |
ப்ராப் நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ ||

பல ஸ்ருதி:− இந்த ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகியை எப்போதும் பாராயணம் செய்பவர்க்கு
ஸ்ரீ யதிராசருடைய திருவடிகளில் பரம பக்தி உண்டாகும்
மேன்மேலும் பக்தி வளரப் பெறுவார்
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்பதால் தக்க பலம் அடைவர் –

————————————————————————————————

ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம–

——————————————————————————————–————————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அனந்தாழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –