Archive for July, 2020

108 திவ்யதேசங்களின் தாயார் பெருமாள்–

July 22, 2020

1-ஸ்ரீரங்கம்
(திருவரங்கம்)
ஸ்ரீரங்க நாச்சியார்
ஸ்ரீ ரங்கநாதன்
நம்பெருமாள்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

2-திருக்கோழி
(உறையூர், நிசுலாபுரி, உரந்தை)
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
ஸ்ரீ அழகிய மணவாளன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

3-திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கடம்ப க்ஷேத்ரம்)
ஸ்ரீ பூர்வ தேவி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

4-திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்)
ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்
ஸ்ரீ புண்டரீகாக்ஷன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

5-திருஅன்பில்
ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்
ஸ்ரீ வடிவழகிய நம்பி
ஸ்ரீ சுந்தரராஜன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

6-திருப்பேர்நகர் ,அப்பக்குடத்தான்
ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)
அப்பலா ரங்கநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

7-திருக்கண்டியூர்
ஸ்ரீ கமலவல்லி
ஹர சாப விமோசன பெருமாள்
கமலநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

8 -திருக்கூடலூர்,
ஆடுதுறை பெருமாள் கோவில்
ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)
வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்)
சோழ நாடு,கும்பகோணம்

9-திரு கவித்தலம் (கபிஸ்தலம்)
ஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)
கஜேந்திர வரதன்
சோழ நாடு,கும்பகோணம்

10-திருப்புள்ளம் (பூதங்குடி)
ஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)
ஸ்ரீ வல்விலி ராமர்
சோழ நாடு,கும்பகோணம்

11-திரு ஆதனூர்
ஸ்ரீ ரங்கநாயகி
ஸ்ரீ ஆண்டளக்குமையன்
சோழ நாடு,கும்பகோணம்

12-திருகுடந்தை
(பாஸ்கர க்ஷேத்ரம்)
ஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி)
ஸ்ரீ சாரங்கபாணி
சோழ நாடு,கும்பகோணம்

13-திருவிண்ணகர்,
ஒப்பிலியப்பன் கோயில்
ஸ்ரீ பூமிதேவி நாச்சியார்
ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்)
சோழ நாடு,கும்பகோணம்

14-திரு நறையூர்,
நாச்சியார் கோயில்
ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்
திருநறையூர் நம்பி
சோழ நாடு,கும்பகோணம்

15-திருச்சேறை
ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)
ஸ்ரீ சாரநாதன்
சோழ நாடு,கும்பகோணம்

16-திரு கண்ணமங்கை
ஸ்ரீ அபிசேக வல்லி
பக்த வத்சல பெருமாள்
சோழ நாடு,கும்பகோணம்

17-திருக்கண்ணபுரம்(கிருஷ்ணாரண்யா, பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்)
ஸ்ரீ கண்ணபுர நாயகி
நீல மேகப் பெருமாள்
சௌரிராஜ பெருமாள்
சோழ நாடு,நாகப்பட்டினம்

18-திரு கண்ணங்குடி
ஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி)
ஸ்ரீ லோகநாதன் (சியாமளமேணிப் பெருமாள்)
தாமோதர நாராயணன்
சோழ நாடு,கும்பகோணம்

19-திரு நாகை,
நாகப்பட்டினம்
ஸ்ரீ சௌந்தர்ய வல்லி
நீலமேகப் பெருமாள்
சௌந்தர்யராஜன்
சோழ நாடு,நாகப்பட்டினம்

20-தஞ்சைமாமணி கோயில்
ஸ்ரீ செங்கமல வல்லி
நீலமேகப் பெருமாள்
சோழ நாடு,தஞ்சாவூர்

21-திரு நந்திபுர விண்ணகரம்,
நாதன் கோயில், தக்ஷின ஜகன்னாத்
ஸ்ரீ செண்பக வல்லி தாயார்
ஸ்ரீ ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகர பெருமாள்)
சோழ நாடு,கும்பகோணம்

22-திரு வெள்ளியங்குடி
ஸ்ரீ மரகத வல்லி
கோலவல்வில்லி ராமன்
ஸ்ருங்கார சுந்தரன்
சோழ நாடு,சீர்காழி

23-திருவழுந்தூர்
(தேரழுந்தூர்)
ஸ்ரீ செங்கமல வல்லி
தேவாதிராஜன்
ஆமருவியப்பன்
சோழ நாடு,மயிலாடுதுறை

24-திரு சிறுபுலியூர்
ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்
அருள்மாக்கடல் (ஜலசயனப் பெருமாள்)
க்ருபா சமுத்ரப் பெருமாள்
சோழ நாடு,மயிலாடுதுறை

25-திரு தலைச் சங்க நாண்மதியம்(தலைச்சங்காடு)
ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்
நாண்மதியப் பெருமாள் (வெண்சுடர் பெருமாள்)
வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான், லோகநாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

26-திரு இந்தளூர்
ஸ்ரீ பரிமள ரங்க நாயகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி)
பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

27-திருக் காவளம்பாடி,
திரு நாங்கூர்
ஸ்ரீ மடவரல் மங்கை
ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)
சோழ நாடு,சீர்காழி

28-திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம்,சிர்காழி
ஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி)
திரு விக்ரமன் (தாடாளன்)
த்ரிவிக்ரம நாராயணன்
சோழ நாடு,சீர்காழி

29-திரு அரிமேய விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அம்ருதகட வல்லி
குடமாடுகூத்தன்
சதுர்புஜங்களுடன் கோபாலன்
சோழ நாடு,சீர்காழி

30-திருவண் புருடோத்தமம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புருஷோத்தம நாயகி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,சீர்காழி

31-திரு செம்பொன்செய் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்
ஸ்ரீ பேரருளாளன்
ஹேமரங்கர் (செம்பொன்னரங்கர்)
சோழ நாடு,சீர்காழி

32-திருமணிமாடக் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு)
நாராயணன், அளத்தற்கரியான்
சோழ நாடு,சீர்காழி

33-திரு வைகுந்த விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ வைகுந்த வல்லி
ஸ்ரீ வைகுந்த நாதன்
சோழ நாடு,சீர்காழி

34-திருவாலி மற்றும் திருநகரி
திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி
திருவாலி: ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), திருநகரி: ஸ்ரீ வேதராஜன்
திருவாலி: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
சோழ நாடு,சீர்காழி

35-திரு தேவனார் தொகை,
திரு நாங்கூர்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி
தெய்வநாயகன்
மாதவப் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

36-திருத்தெற்றி அம்பலம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ செங்கமல வல்லி
செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்)
சோழ நாடு,சீர்காழி

37-திருமணிக்கூடம் ,
திரு நாங்கூர்
ஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி
வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்)
சோழ நாடு,சீர்காழி

38-அண்ணன் கோயில்(திருவெள்ளக்குளம்), திரு நாங்கூர்
ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

39-திரு பார்த்தன் பள்ளி,
திரு நாங்கூர்
ஸ்ரீ தாமரை நாயகி
ஸ்ரீ தாமரையாள் கேள்வன்
ஸ்ரீ பார்த்தசாரதி
சோழ நாடு,சீர்காழி

40-திருச்சித்திரக் கூடம் ,
சிதம்பரம்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
கோவிந்தராஜன்
தேவாதி தேவன் (பார்த்தசாரதி)
சோழ நாடு, சிதம்பரம்

41-திரு அஹீந்த்ரபுரம்,
ஆயிந்தை
ஸ்ரீ ஹேமாமபுஜ வல்லி தாயார் (வைகுண்ட நாயகி)
ஸ்ரீ தெய்வநாயகன்
ஸ்ரீ மூவராகிய ஒருவன், தேவநாதன்
நடு நாடு,கடலூர்

42-திருக்கோவலூர்
ஸ்ரீ பூங்கோவை நாச்சியார்
த்ரிவிக்ரமன்
ஆயனார், கோவலன் (கோபாலன்)
நடு நாடு,கடலூர்

43-திருக்கச்சி,
அத்திகிரி (அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத க்ஷேத்ரம்)
ஸ்ரீ பெருந்தேவி (மகாதேவி) தாயார்
ஸ்ரீ பேரருளாள வரதராஜன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

44-அஷ்டபுயகரம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அலர்மேல் மங்கை, பத்மாசனித் தாயார்
ஆதி கேசவ பெருமாள் (சக்ரதரர், கஜேந்திர வரதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

45-திருத்தண்கா,
தூப்புல், காஞ்சிபுரம்
ஸ்ரீ மரகத வல்லி
ஸ்ரீ தீபப் பிரகாசன் (விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

46-திரு வேளுக்கை,
காஞ்சிபுரம்
ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி)
அழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீ முகுந்த நாயகன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

47-திரு நீரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ நிலமங்கை வல்லி
ஸ்ரீ ஜகதீச்வரர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

48-திருப் பாடகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ ருக்மிணி, சத்ய பாமா
பாண்டவ தூதர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

49-திரு நிலா திங்கள் துண்டம்,காஞ்சிபுரம்
நேர் ஒருவர் இல்லா வல்லி (நிலாத்திங்கள் துண்ட தாயார்)
சந்திர சூட பெருமாள் (நிலாத்திங்கள் துண்டத்தான்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

50-திரு ஊரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அமுத வல்லி நாச்சியார் (அம்ருதவல்லி)
ஸ்ரீ த்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

51-திரு வெஃகா,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
ஸ்ரீ யதோக்தகாரி (வேகாசேது, சொன்னவண்ணம் செய்த பெருமாள்)
தொண்டை நாடு.காஞ்சிபுரம்

52-திருக் காரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் (ரமாமணி நாச்சியார்)
ஸ்ரீ கருணாகர பெருமாள்
தொண்டை நாடு, காஞ்சிபுரம்

53-திருக் கார்வானம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கமல வல்லி (தாமரையாள்)
ஸ்ரீ கள்வன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

54-திருக் கள்வனூர்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அஞ்சில வல்லி நாச்சியார்
ஆதி வராஹப் பெருமாள்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

55-திருப் பவளவண்ணம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பவள வல்லி
ஸ்ரீ பவளவண்ணன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

56-திருப் பரமேஸ்வர விண்ணகரம்,காஞ்சிபுரம்
ஸ்ரீ வைகுண்ட வல்லி
ஸ்ரீ பரமபதநாதன் (வைகுந்தநாதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

57-திருப்புட்குழி
ஸ்ரீ மரகத வல்லி தாயார்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
காஞ்சிபுரம்

58-திரு நின்றவூர்
(தின்னனூர்)
ஸ்ரீ சுதா வல்லி (என்னைப் பெற்ற தாயார்)
ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்)
தொண்டை நாடு
சென்னை

59-திரு எவ்வுள்
(புண்யாவ்ருத, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்), திருவள்ளூர்
ஸ்ரீ கனக வல்லி (வசுமதி)
வைத்ய வீர ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை

60-திரு அல்லிக் கேணி(திருவல்லிக்கேணி, ப்ரிந்தாரண்ய க்ஷேத்ரம்)
ஸ்ரீ ருக்மிணித் தாயார்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
ஸ்ரீ பார்த்தசாரதி
தொண்டை நாடு
சென்னை

61-திரு நீர்மலை
ஸ்ரீ அணிமாமலர் மங்கை
நீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்)
தொண்டை நாடு
சென்னை

62-திரு இட வெந்தை
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
லக்ஷ்மி வராஹப் பெருமாள்
நித்ய கல்யாணப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை

63-திருக் கடல் மல்லை,
மஹாபலிபுரம்
ஸ்ரீ நில மங்கை நாயகி
ஸ்தல சயனப் பெருமாள்
ஸ்தலசயனதுரைவார் (உலகுய்ய நின்றான்)
தொண்டை நாடு
சென்னை

64-திருக்கடிகை,
சோளிங்கர்
ஸ்ரீ அம்ருத வல்லி
யோக ந்ருஸிம்ஹன்
அக்காரக்கனி
தொண்டை நாடு
சென்னை

65-திரு அயோத்தி,
அயோத்யா
ஸ்ரீ சீதாப் பிராட்டி
ஸ்ரீ ராமன் (சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

66-திரு நைமிசாரண்யம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி (ஸ்ரீ புண்டரீகவல்லி)
ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

67-திருப் ப்ரிதி (நந்தப் பிரயாக்,
(ஜோஷி மடம்)
ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
பரம புருஷன்
வட நாடு
உத்தராஞ்சல்

68-திருக் கண்டமென்னும் கடிநகர்(தேவப்ரயாகை)
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நீலமேக பெருமாள் (ஸ்ரீ புருஷோத்தமன்)
வட நாடு
உத்தராஞ்சல்

69-திரு வதரி ஆசிரமம்
(பத்ரிநாத்)
ஸ்ரீ அரவிந்த வல்லி
ஸ்ரீ பத்ரி நாராயணன்
வட நாடு
உத்தராஞ்சல்

70-திரு சாளக்ராமம்
(முக்திநாத்)
ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார்
ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி
வட நாடு
நேபால்

71-திரு வட மதுரை
(மதுரா)
ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

72-திருவாய்ப்பாடி,
கோகுலம்
ஸ்ரீ ருக்மிணி மற்றும் சத்ய பாமா
ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன்
வட நாடு
உத்தர் பிரதேஷ்

73-திரு த்வாரகை
(துவரை, துவராபதி)
ஸ்ரீ கல்யாண நாச்சியார் (ஸ்ரீ லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி)
கல்யாண நாராயணன் (த்வாரகாதீசன், த்வாரகாநாத்ஜி)
வட நாடு
குஜராத்

74-திரு சிங்கவேழ்குன்றம்,அஹோபிலம்
ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி (ஸ்ரீ அம்ருத வல்லி)
ப்ரஹலாதவரதன் (லக்ஷ்மிந்ருசிம்ஹன்)
வட நாடு
ஆந்திரம்

75-திருவேங்கடம்
(திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)
அலர்மேல் மங்கை (பத்மாவதி)
ஸ்ரீ திருவேங்கமுடையான் (வெங்கடாசலபதி, பாலாஜி)
ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி, மலைகுனியன் நின்ற பெருமாள்)
வட நாடு
ஆந்திரம்

76-திரு நாவாய்
ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் (சிறுதேவி)
நாவாய் முகுந்தன் (நாராயணன்)
மலை நாடு
கேரளம்

77-திரு வித்துவக்கோடு(திருவிசிக்கோடு, திருவஞ்சிக்கோடு)
ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி (பத்மபாணி நாச்சியார்)
உய்ய வந்த பெருமாள் (அபயப்ரதன்)
மலை நாடு
கேரளம்

78-திருக்காட்கரை
ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி (ஸ்ரீ வாத்சல்ய வல்லி நாச்சியார்)
காட்கரையப்பன்
மலை நாடு
கேரளம்

79-திரு மூழிக்களம்
ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்
திரு மூழிக்களத்தான் (ஸ்ரீ சூக்தி நாத பெருமாள், அப்பன்)
மலை நாடு
கேரளம்

80-திரு வல்ல வாழ்
(திருவல்லா, ஸ்ரீ வல்லபா க்ஷேத்ரம்)
ஸ்ரீ வாத்சல்ய தேவி (ஸ்ரீ செல்வ திருக்கொழுந்து) நாச்சியார்
ஸ்ரீ கோலப்பிரான் (திருவல்லமார்பன் , ஸ்ரீவல்லபன்)
மலை நாடு
கேரளம்

81-திருக்கடித்தானம்
ஸ்ரீ கற்பக வல்லி
ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்
மலை நாடு
கேரளம்

82-திருச்செங்குன்றூர்
(திருசிற்றாறு)
ஸ்ரீ செங்கமல வல்லி
இமயவரப்பன்
மலை நாடு
கேரளம்

83-திருப்புலியூர்
(குட்டநாடு)
ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்
மாயப்பிரான்
மலை நாடு
கேரளம்

84-திருவாறன்விளை
(ஆறன்முளா)
ஸ்ரீ பத்மாஸநி நாச்சியார்
திருக்குறளப்பன் (செஷாசனா )
மலை நாடு
கேரளம்

85-திருவண் வண்டுர்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
பாம்பணை அப்பன்
மலை நாடு
கேரளம்

86-திருவனந்தபுரம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி
அனந்தபத்மநாபன்
மலை நாடு
கேரளம்

87-திரு வட்டாறு
ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்
ஆதி கேசவ பெருமாள்
மலை நாடு
கேரளம்

88-திருவண்பரிசாரம்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
ஸ்ரீ திருக்குறளப்பன் (திருவாழ்மார்பன்)
மலை நாடு,கேரளம்

89-திருக்குறுங்குடி
ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்
சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி)
பாண்டியநாடு,திருநெல்வேலி

90-திரு சிரீவர மங்கை(வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம்,திருசிரீவரமங்கள நகர், நாங்குநேரி)
ஸ்ரீ சிரீவரமங்கை நாச்சியார்
ஸ்ரீ தோதாத்ரிநாதன் (வானமாமலை)
ஸ்ரீ தெய்வநாயகன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

91-ஸ்ரீவைகுண்டம்,
நவதிருப்பதி
ஸ்ரீ வைகுந்தவல்லி
ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

92-திருவரகுணமங்கை,
நவதிருப்பதி
ஸ்ரீ வரகுண வல்லி தாயார் (ஸ்ரீ வரகுணமங்கை தாயார்)
விஜயாசனப் பெருமாள்
பாண்டியநாடு,திருநெல்வேலி

93-திருப்புளிங்குடி,
நவதிருப்பதி
ஸ்ரீ மலர்மகள் நாச்சியார், ஸ்ரீ புளிங்குடி வல்லி
ஸ்ரீ காய்சினவேந்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

94-திரு தொலைவில்லிமங்கலம்(ரெட்டைத் திருப்பதி), நவதிருப்பதி
ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்
ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

95-திருக்குளந்தை (பெருங்குளம்), நவதிருப்பதி
ஸ்ரீ அலமேலுமங்கை தாயார், ஸ்ரீ குளந்தை வல்லி
ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
ஸ்ரீ மாயக்கூத்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

96-திருக்கோளூர், நவதிருப்பதி
ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளூர் வல்லி நாச்சியார்
ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் (நிக்ஷேபவிதன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

97-திருப்பேரை
(தென் திருப்பேரை), நவதிருப்பதி
ஸ்ரீ குழைக்காது வல்லி, ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
ஸ்ரீ மகர நெடும் குழைக்காதன் (ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

98-திருக்குருகூர்
(ஆழ்வார் திருநகரி), நவதிருப்பதி
ஸ்ரீ ஆதிநாத வல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி
ஸ்ரீ ஆதிநாதன் (ஸ்ரீ ஆதிப்பிரான்)
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
பாண்டியநாடு,திருநெல்வேலி

99-ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)
ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)
பாண்டியநாடு,விருதுநகர்

100-திருதண்கால் (திருதண்காலூர்)
ஸ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)
ஸ்ரீ நின்ற நாராயணன்
பாண்டியநாடு,விருதுநகர்

101-திருக்கூடல்,
மதுரை
ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)
கூடல் அழகர்
பாண்டியநாடு,மதுரை

102-திருமாலிரும் சோலை
(அழகர் கோயில்)
ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி)
திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்)
பாண்டியநாடு,மதுரை

103-திரு மோகூர்
ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி)
ஸ்ரீ காளமேக பெருமாள்
ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்
பாண்டியநாடு,மதுரை

104-திருக்கோஷ்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்)
திருமாமகள் நாச்சியார்
ஸ்ரீ உரகமெல்லணையான்
ஸ்ரீ சௌம்யநாராயணன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

105-திருப்புல்லாணி, ராமநாதபுரம்
ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி த் தாயார்
ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்)
பாண்டியநாடு,ராமநாதபுரம்

106-திருமெய்யம்
ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்
ஸ்ரீ சத்ய கிரிநாதன் (ஸ்ரீ சத்யமூர்த்தி)
ஸ்ரீ மெய்யப்பன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

107-திருப்பாற்கடல்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் (ஸ்ரீ பூதேவி)
ஸ்ரீ க்ஷீராப்தி நாதன்
விண்ணுலகம்

108-பரமபதம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார்
ஸ்ரீ பரமபத நாதன்
விண்ணுலகம்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.-

ஶ்ரீ ஸீதா அஷ்டோத்தர ஶத நாமாவளி:

July 22, 2020

ஶ்ரீமதாநந்த ராமாயணாந்தர்கத ஶ்ரீ ஸீதா அஷ்டோத்தர ஶத நாமாவளி–

ௐம் ஸீதாயை நம: ।
ௐம் ஜாநக்யை நம: ।
ௐம் தேவ்யை நம: ।
ௐம் வைதேஹ்யை நம: ।
ௐம் ராகவ ப்ரியாயை நம: ।

ௐம் ரமாயை நம: ।
ௐம் அவநி ஸுதாயை நம: ।
ௐம் ராமாயை நம: ।
ௐம் ராக்ஷஸாந்த ப்ரகாரிண்யை நம: ।
ௐம் ரத்ந குப்தாயை நம: । 10

ௐம் மாது லிங்க்யை நமஹ் ।
ௐம் மைதில்யை நம: ।
ௐம் பக்த தோஷதாயை நம: ।
ௐம் பத்மாக்ஷஜாயை நம: ।
ௐம் கஞ்ஜநேத்ராயை நம: ।

ௐம் ஸ்மிதாஸ்யாயை நம: ।
ௐம் நூபுரஸ்வநாயை நம: ।
ௐம் வைகுண்ட நிலயாயை நம: ।
ௐம் மாயை நம: ।
ௐம் ஶ்ரியை நம: । 20

ௐம் முக்திதாயை நம: ।
ௐம் காமபூரண்யை நம: ।
ௐம் ந்ருபாத்மஜாயை நம: ।
ௐம் ஹேம வர்ணாயை நம: ।
ௐம் ம்ருது லாங்க்யை நம: ।

ௐம் ஸுபாஷிண்யை நம: ।
ௐம் குஶாம்பிகாயை நம: ।
ௐம் திவ்யதாயை நம: ।
ௐம் லவமாத்ரே நம: ।
ௐம் மநோஹராயை நம: । 30

ௐம் ஹநுமத் வந்திதபதாயை நம: ।
ௐம் முக்தாயை நம: ।
ௐம் கேயூர தாரிண்யை நம: ।
ௐம் அஶோகவநமத்யஸ்தாயை நம: ।
ௐம் ராவணாதிகமோஹிண்யை நம: ।

ௐம் விமாந ஸம்ஸ்திதாயை நம: ।
ௐம் ஸுப்ருவே நம: ।
ௐம் ஸுகேஶ்யை நம: ।
ௐம் ரஶநாந்விதாயை நம: ।
ௐம் ரஜோரூபாயை நம: । 40

ௐம் ஸத்வ ரூபாயை நம: ।
ௐம் தாமஸ்யை நம: ।
ௐம் வஹ்நிவாஸிந்யை நம: ।
ௐம் ஹேமம்ருகாஸக்த சித்தயை நம: ।
ௐம் வால்மீகாஶ்ரம வாஸிந்யை நம: ।

ௐம் பதி வ்ரதாயை நம: ।
ௐம் மஹா மாயாயை நம: ।
ௐம் பீதகௌஶேய வாஸிந்யை நம: ।
ௐம் ம்ருகநேத்ராயை நம: ।
ௐம் பிம்போஷ்ட்யை நம: । 50

ௐம் தநுர்வித்யா விஶாரதாயை நம: ।
ௐம் ஸௌம்ய ரூபாயை நம:
ௐம் தஶரதஸ்தநுஷாய நம: ।
ௐம் சாமர வீஜிதாயை நம: ।
ௐம் ஸுமேதா துஹித்ரே நம: ।

ௐம் திவ்ய ரூபாயை நம: ।
ௐம் த்ரைலோக்ய பாலிந்யை நம: ।
ௐம் அந்ந பூர்ணாயை நம: ।
ௐம் மஹா லக்ஷ்ம்யை நம: ।
ௐம் தியே நம: । 60

ௐம் லஜ்ஜாயை நம: ।
ௐம் ஸரஸ்வத்யை நம: ।
ௐம் ஶாந்த்யை நம: ।
ௐம் புஷ்ட்யை நம: ।
ௐம் ஶமாயை நம: ।

ௐம் கௌர்யை நம: ।
ௐம் ப்ரபாயை நம: ।
ௐம் அயோத்யா நிவாஸிந்யை நம: ।
ௐம் வஸந்தஶீதலாயை நம: ।
ௐம் கௌர்யை நம: । 70

ௐம் ஸ்நாந ஸந்துஷ்ட மாநஸாயை நம: ।
ௐம் ரமாநாம பத்ரஸம்ஸ்தாயை நம: ।
ௐம் ஹேம கும்ப பயோ தராயை நம: ।
ௐம் ஸுரார்சிதாயை நம: ।
ௐம் த்ருத்யை நம: ।

ௐ காந்த்யை நம: ।
ௐம் ஸ்ம்ருத்யை நம: ।
ௐம் மேதாயை நம: ।
ௐம் விபாவர்யை நம: ।
ௐம் லகூதராயை நம: । 80

ௐம் வாராரோஹாயை நம: ।
ௐம் ஹேம கங்கண மண்திதாயை நம: ।
ௐம் த்விஜ பத்ந்யர்பித நிஜ பூஷாயை நம: ।
ௐம் ரகவதோஷிண்யை நம: ।
ௐம் ஶ்ரீராமஸேவநரதாயை நம: ।

ௐம் ரத்ந தாடங்க தாரிண்யை நம: ।
ௐம் ராமவாமாங்கஸம்ஸ்தாயை நம: ।
ௐம் ராமசந்த்ரைக ரஞ்ஜிந்யை நம: ।
ௐம் ஸரயூஜல ஸங்க்ரீடா காரிண்யை நம: ।
ௐம் ராமமோஹிண்யை நம: । 90

ௐம் ஸுவர்ண துலிதாயை நம: ।
ௐம் புண்யாயை நம: ।
ௐம் புண்யகீர்தயே நம: ।
ௐம் கலாவத்யை நம: ।
ௐம் கலகண்டாயை நம: ।

ௐம் கம்புகண்டாயை நம: ।
ௐம் ரம்போரவே நம: ।
ௐம் கஜகாமிந்யை நம: ।
ௐம் ராமார்பித மநஸே நம: ।
ௐம் ராம வந்திதாயை நம: । 100

ௐம் ராம வல்லபாயை நம: ।
ௐம் ஶ்ரீராம பத சிஹ்நாங்காயை நம: ।
ௐம் ராம ராமேதி பாஷிண்யை நம: ।
ௐம் ராமபர்யங்கஶயநாயை நம: ।
ௐம் ராமாங்க்ரிக்ஷாலிண்யை நம: ।

ௐம் வராயை நம: ।
ௐம் காமதேந்வந்ந ஸந்துஷ்டாயை நம: ।
ௐம் மாது லிங்க கராத்ருதாயை நம: ।
ௐம் திவ்யசந்தந ஸம்ஸ்தாயை நம: ।
ௐம் மூலகாஸுரமர்திந்யை நம: । 110

॥ ஶ்ரீஸீதாஷ்டோத்தர ஶத நாமாவளி: ஸமப்தா ॥

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஶ்ரீ ரங்கநாதாஷ்டகம் /ஶ்ரீ பாண்டுரங்காஷ்டகம் /ஏக ஸ்லோக ஶ்ரீ இராமாயணம்–

July 22, 2020

ஶ்ரீ ரங்கநாதாஷ்டகம்

ஆநந்தரூபே நிஜபோதரூபே
ப்ரஹ்மஸ்வரூபே ஶ்ருதிமூர்திரூபே ।
ஶஶாங்கரூபே ரமணீயரூபே
ஶ்ரீரங்கரூபே ரமதாம் மநோ மே ॥1॥

காவேரிதீரே கருணாவிலோலே
மந்தாரமூலே த்ருதசாருசேலே ।
தைத்யாந்தகாலேऽகிலலோகலீலே
ஶ்ரீரங்கலீலே ரமதாம் மநோ மே ॥2॥

லக்ஷ்மீநிவாஸே ஜகதாம் நிவாஸே
ஹ்ருத்பத்மவாஸே ரவிபிம்பவாஸே ।
க்ருபாநிவாஸே குணப்ருந்தவாஸே
ஶ்ரீரங்கவாஸே ரமதாம் மநோ மே ॥3॥

ப்ரஹ்மாதிவந்த்யே ஜகதேகவந்த்யே
முகுந்தவந்த்யே ஸுரநாதவந்த்யே ।
வ்யாஸாதிவந்த்யே ஸநகாதிவந்த்யே
ஶ்ரீரங்கவந்த்யே ரமதாம் மநோ மே ॥4॥

ப்ரஹ்மாதிராஜே கருடாதிராஜே
வைகுண்டராஜே ஸுரராஜராஜே ।
த்ரைலோக்யராஜேऽகிலலோகராஜே
ஶ்ரீரங்கராஜே ரமதாம் மநோ மே ॥5॥

அமோகமுத்ரே பரிபூர்ணநித்ரே
ஶ்ரீயோகநித்ரே ஸஸமுத்ரநித்ரே ।
ஶ்ரிதைகபத்ரே ஜகதேகநித்ரே
ஶ்ரீரங்கபத்ரே ரமதாம் மநோ மே ॥6॥

ஸ சித்ரஶாயீ புஜகேந்த்ரஶாயீ
நந்தாங்கஶாயீ கமலாங்கஶாயீ ।
க்ஷீராப்திஶாயீ வடபத்ரஶாயீ
ஶ்ரீரங்கஶாயீ ரமதாம் மநோ மே ॥7॥

இதம் ஹி ரங்கம் த்யஜதாமிஹாங்கம்
புநர்நசாங்கம் யதி சாங்கமேதி ।
பாணௌ ரதாங்கம் சரணேம்பு காங்கம்
யாநே விஹங்கம் ஶயநே புஜங்கம் ॥8॥

ரங்கநாதாஷ்டகம் புண்யம்
ப்ராதருத்தாய ய: படேத் ।
ஸர்வாந் காமாநவாப்நோதி
ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத் ॥

॥ இதி ஶ்ரீமச் சங்கராசார்யவிரசிதம் ஶ்ரீ ரங்கநாதாஷ்டகம் ஸம்பூர்ணம்॥

—————

ஶ்ரீ பாண்டுரங்காஷ்டகம்

மஹாயோகபீடேதடே பீமரத்யா
வரம் புண்டரீகாய தாதும் முநீந்த்ரை: ।
ஸமாகத்ய நிஷ்டந்தமாநந்தகந்தம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் ॥ 1॥

தடித்வாஸஸம் நீலமேகாவபாஸம்
ரமாமந்திரம் ஸுந்தரம் சித்ப்ரகாஶம் ।
வரம் த்விஷ்டகாயாம் ஸமந்யஸ்தபாதம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் ॥ 2॥

ப்ரமாணம் பவாப்தேரிதம் மாமகாநாம்
நிதம்ப: கராப்யாம் த்ருʼதோ யேந தஸ்மாத் ।
விதாதுர்வஸத்யை த்ருʼதோ நாபிகோஶ:
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் ॥ 3॥

ஸ்புரத்கௌஸ்துபாலங்க்ருʼதம் கண்டதேஶே
ஶ்ரியா ஜுஷ்டகேயூரகம் ஶ்ரீநிவாஸம் ।
ஶிவம் ஶாந்தமீட்யம் வரம் லோகபாலம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் ॥ 4॥

ஶரச்சந்த்ரபிம்பாநநம் சாருஹாஸம்
லஸத்குண்டலாக்ராந்தகண்டஸ்தலாந்தம் ।
ஜபாராகபிம்பாதரம் கঽஜநேத்ரம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்॥ 5॥

கிரீடோஜ்வலத்ஸர்வதிக்ப்ராந்தபாகம்
ஸுரைரர்சிதம் திவ்யரத்நைரநர்கை: ।
த்ரிபங்காக்ருʼதிம் பர்ஹமால்யாவதம்ஸம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்॥ 6॥

விபும் வேணுநாதம் சரந்தம் துரந்தம்
ஸ்வயம் லீலயா கோபவேஷம் ததாநம் ।
கவாம் ப்ருʼந்தகாநந்ததம் சாருஹாஸம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் ॥ 7॥

அஜம் ருக்மிணீப்ராணஸஞ்ஜீவநம் தம்
பரம் தாம கைவல்யமேகம் துரீயம் ।
ப்ரஸந்நம் ப்ரபந்நார்திஹம் தேவதேவம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் ॥ 8॥

ஸ்தவம் பாண்டுரங்கஸ்ய வை புண்யதம் யே
படந்த்யேகசித்தேந பக்த்யா ச நித்யம் ।
பவாம்போநிதிம் தே விதீர்த்வாந்தகாலே
ஹரேராலயம் ஶாஶ்வதம் ப்ராப்நுவந்தி ॥

॥ இதி ஶ்ரீமச்சங்கரபகவத: க்ருதௌ ஶ்ரீ பாண்டுரங்காஷ்டகம் ஸம்பூர்ணம் ॥

———-

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவ தனுசா க்ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோ கரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.–ஏக ஸ்லோக ஶ்ரீ இராமாயணம்-ஶ்ரீ காஞ்சி மகாபெரியவர் அருளியது

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த–ஶ்ரீ கருட தண்டகம்–

July 22, 2020

ஶ்ரீமதே நிகமாந்தமஹாதேஶிகாய நம: ।
ஶ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்கிககேஸரீ ।
வேதாந்தசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ॥

நம: பந்நகநத்தாய வைகுண்டவஶவர்திநே ।
ஶ்ருதிஸிந்து ஸுதோத்பாதமந்தராய கருத்மதே ॥ 1॥

கருடமகிலவேதநீடாதிரூடம் த்விஷத்பீடநோத்கண்டிதாகுண்டவைகுண்டபீடீக்ருத
ஸ்கந்தமீடே ஸ்வநீடாகதிப்ரீதருத்ராஸுகீர்திஸ்தநாபோககாடோபகூட ஸ்புரத்கண்டகவ்ராத
வேதவ்யதாவேபமாந த்விஜிஹ்வாதிபாகல்பவிஷ்பார்யமாண ஸ்படாவாடிகா
ரத்நரோசிஶ்சடா ராஜிநீராஜிதம் காந்திகல்லோலிநீராஜிதம் ॥ 2॥

ஜயகருட ஸுபர்ண தர்வீகராஹார தேவாதிபாஹாரஹாரிந்
திவௌகஸ்பதிக்ஷிப்ததம்போளிதாராகிணாகல்ப கல்பாந்தவாதூல கல்போதயாநல்ப
வீராயிதோத்யச்சமத்கார தைத்யாரி ஜைத்ரத்வஜாரோஹநிர்தாரிதோத்கர்ஷ
ஸங்கர்ஷணாத்மந் கருத்மந் மருத்பஞ்ச காதீஶ ஸத்யாதிமூர்தே ந கஶ்சித்
ஸமஸ்தே நமஸ்தே புநஸ்தே நம: ॥ 3॥

நம இதமஜஹத்ஸபர்யாய பர்யாயநிர்யாதபக்ஷாநிலாஸ்பாலநோத்வேலபாதோதி
வீசீசபேடாஹதாகாதபாதாளபாங்காரஸங்க்ருத்தநாகேந்த்ரபீடாஸ்ருணீபாவபாஸ்வந்நகஶ்ரேணயே
சண்டதுண்டாய ந்ருத்யத்புஜங்கப்ருவே வஜ்ரிணே தம்ஷ்ட்ரய துப்யமத்யாத்மவித்யா
விதேயா விதேயா பவத்தாஸ்யமாபாதயேதா தயேதாஶ்ச மே ॥ 4॥

மநுரநுகத பக்ஷிவக்த்ர ஸ்புரத்தாரகஸ்தாவகஶ்சித்ரபாநுப்ரியாஶேகரஸ்த்ராயதாம்
நஸ்த்ரிவர்காபவர்கப்ரஸூதி: பரவ்யோமதாமந்
வலத்வேஷிதர்பஜ்வலத்வாலகில்யப்ரதிஜ்ஞாவதீர்ண ஸ்திராம் தத்த்வபுத்திம் பராம்
பக்திதேநும் ஜகந்மூலகந்தே முகுந்தே ம்ஹாநந்ததோக்த்ரீம் ததீதா
முதாகாமஹீநாமஹீநாமஹீநாந்தக ॥ 5॥

ஷட்த்ரிம்ஶத்கணசரணோ நரபரிபாடீநவீநகும்பகண: ।
விஷ்ணுரததண்டகோঽயம் விகடயது விபக்ஷவாஹிநீவ்யூஹம் ॥ 6॥

விசித்ரஸித்தித: ஸோঽயம் வேங்கடேஶவிபஶ்சிதா ।
கருடத்வஜதோஷாய கீதோ கருடதண்டக: ॥ 7॥

கவிதார்கிகஸிம்ஹாய கல்யணகுணஶாலிநே ।
ஶ்ரீமதே வேங்கடேஶாய வேதாந்தகுரவே நம: ॥

ஶ்ரீமதே நிகமாந்தமஹாதேஶிகாய நம: ॥

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -41-50–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 22, 2020

திரு வுலகு அளந்து அருளின இடம் ப்ராப்தமாய்த் திரியட்டும் அவ்விடம் தன்னிலே அந்த
அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ ———41-

ஒருக்கால் திருவடிகளை யிட்டு ஜகத்தை மறைத்தான் –ஒருக்கால் மலையை இட்டுத் தன்னை மறைத்தான் –
பிறந்தவன்றே செய்த காரியமும் ஏழு பிராயத்தே செய்த காரியமும் லோகத்தையும் ஒரு ஊரையும் நோக்கின படி –

————-

ஒரு நாடாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டு நோக்கினான் என்கிற பிரசங்கத்தாலே
ஒரூருக்காக வந்த விரோதங்களைப் போக்கி அங்கு உள்ளாரை நோக்கின படி சொல்லுகிறார் –

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரியுகிரால் கீண்டான் சினம் —-42–

விரோதியைப் போக்குகையாலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்க் கொண்டு நின்றவன் –அப்போதை அழகு –
அருள் அன்று நமக்கு உத்தேஸ்யம்-ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு உண்டான சினம் உத்தேஸ்யம் –
அச்சினத்தை அனுசந்தி –

———-

ஆஸ்ரிதரான ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் ஒருவனையும் நோக்கின அளவேயோ
ஆபத்து கரை புரண்டால் எல்லாரையும் தன் பக்கலிலே வைத்து நோக்குவான் ஒருவன் கிடீர் என்கிறார் –
அவன் சங்கல்பத்திலே யன்றோ லோகம் கிடக்கிறது என்கிறார் –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-

தன்னுடைமை யானது ரஷிக்கப்பட்டது என்ற ஹர்ஷத்தாலே ஒருபடி ஆபரணம் பூண்டால் போலே இருக்கிறபடி –
அத்விதீயமாய் அபரிச்சேத்யமான சங்கல்பத்து உள்ளது ஜகத்து –
சங்கல்ப்பத்தாலே ரஷிக்க வல்லனாய் இருக்கச் செய்தே கை தொட்டு செய்கிறது ஆஸ்ரித வாத்சல்யம் –

————

நெஞ்சே உபய விபூதி யுக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆச்ரயிக்கப் பார் என்கிறார் –

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—

நூறாயிரம் ஆதித்யர்கள் உடைய ஒளியை யுடைத்தாய் அநேகம் கிரணங்களைப் புறப்பட விடா நின்றுள்ள
ஸ்ப்ருஹநீயமான திரு வபிஷேகத்தை யுடையவனுடைய –பைம் பொன் முடி-திவி சூர்ய-என்றதுவும்
போந்து இருந்தது இல்லை –ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பூர்ணமாய் அபிமுகமாய்க் கொண்டு ஆஸ்ரயி –

———-

பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் -என்று பரம பதத்தைக் கலவிருக்கையாக உடையவன் என்று
ப்ரஸ்துதமான வாறே அவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே கண்டு கொள்ள வேணும் –
அவன் நமக்கு ஸூ லபனோ என்னில் – அக்குறைகள் தீர நமக்காக வன்றோ
திருமலையிலே வந்து சந்நிஹிதனாய் ஸூலபன் ஆயத்து -என்கிறார் –

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

முன்னொரு நாள் பூமி அடங்கலும் தன் திரு எயிற்றிலே அடக்கினவன் வர்த்திக்கிற திருமலை
ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவன் உடைய மலை
திரு மலையில் ஆனைகளுக்குச் சேரும் இறே ஸ்ரீ வராஹமான வடிவு
இந்த மத்த கஜத்தின் உடைய ஸ்வரூபமானது ஸ்ரீ வராஹ ரூபியானவனுடைய செருக்கை ஸ்மரிப்பித்த தாய்த்து

———

திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவன் பிரயோஜனாந்தர பரர் உடைய அபேஷிதமும்
செய்து தலைக் கட்டுமவன் கிடீர் என்கிறார் –

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் – ——46–

கார்யமான இவை அழிந்து தானே யான அன்று இவற்றுக்கு அடங்க ஹிதம் பார்க்கும் உபகாரகன்
ஜகத் காரண பூதனான பரிவன் -பெற்ற பாவிக்கு ஜீவனம் தேடி விட வேண்டாவோ
சங்கல்ப்பத்தாலே ரஷிக்கலாய் இருக்க உடம்பு நோவக் கடல் கடைவதே என்ன சௌலப்யம் தான் –

————

தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர் நம்முடைய விரோதிகளைப் போக்கி
நம்மை அடிமை கொள்ளுவான் என்கிறார் –

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-

சேஷித்வம் தோன்றும்படி நின்றவனே –ஜகத் அடங்கலும் தானே யாம்படி அளந்து கொண்டான் ஆய்த்து
உடையவன் என்று தோன்றும்படி நின்றவனே-எங்கள் உடைய சம்சாரத்தின் வாயைக் கிழித்துப் பொகட்டவன் அன்றோ –
விலஷணர்க்கு சம்சாரம் இறே நரகம் –நிரயோ யஸ்த்வயா விநா -ஆரண்யம் -30-18-
உன்னைப் பிரிந்து இருப்பது அன்றோ நரகம் -சீதைப் பிராட்டி –
ஒரு கேசி வாயைக் கிழித்தது ஆச்சர்யமோ -எங்கள் நரகத்தின் வாயைக் கிழித்த யுனக்கு –

———

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ-என்ன 0பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-

ஜ்ஞான ஹீனமான அசேதனங்களைப் போக்கின அதுவேயோ-சேதனரான விரோதி களையும் போக்கிற்று இலையோ
தேவாசூர சம்ப்ரமத்திலே அசூர வர்க்கத்தை முடித்துப் பொருதாய் நீ அன்றோ
திரிபுர தஹனம் பண்ணின ருத்ரனை இவருக்கு தோற்றுகிறது இல்லை

———–

இன்னும் இவ்வளவேயோ-அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரம் என்கிறார் –

செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-

பின்னைக்காய் –ரசிகத்வத்தாலே தன்னை அழிய மாறின படி –

———————-

அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணின வியாபாரங்களுக்கு ஓர் அவதி இல்லை என்றதே -கீழே –
அது எங்கே கண்டோம் -என்னில் ஓர் ஆனைக்காக பீஷ்மாதிகள் பக்கலிலும் சீறாத சீற்றத்தை
ஒரு நீர்ப் புழுவின் மேலே பண்ணிற்றிலனோ -என்று ஆஸ்ரித பஷபாதத்தை யருளிச் செய்கிறார் –

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

அணி நீல வண்ணத்தவன்-இத்தை முடித்துப் பின்னை தன்னிறம் பெறுகிறான் ஆய்த்து –
ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்றது என்று ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –
அணி நீல வண்ணத்தவன் –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விடாய் தீர்த்த படி –
மா முதலை கொன்றான் –தன் விடாய் தீர்ந்தான் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -31-40–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 21, 2020

இவ்வோ இடங்களிலே நிற்கிறவன் தான் ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணுமவனுமாய் ஸூசீலனுமாய்
இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார்-கீழ்ச் சொன்ன திருப்பதிகள் நெஞ்சை அனுவர்த்திக்கிற படி –
இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலாவான் கிடீர் -என்கிறார்-

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான் —–31–

நற வென்று பொல்லாத மதுவாய்-தண்ணிதான மதுவைக் கையிலே ஏற்றுள்ள ருத்ரனுக்குத் தன் திரு மேனியிலே
இடம் கொடுக்கும் ஸ்வ பாவனாய் உள்ள சீலவான் –

————

இப்படி சீலவானான இவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –என்கிறார் –

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

விரோதி நிரசன சீலனான கிருஷ்ணன் ஆவான் இப்படி இருக்கிற இவன் கிடீர் எனக்கு எளியன் ஆனான் –
இவனுடைய உண்மை எல்லாம் பரார்த்தம்-

———

இப்படி இருக்கிறவன் அபேஷித்தார் அபேஷித்தது எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –
இவனுடைய உடைமை எல்லாம் பரார்த்தம் என்கிறது

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தாக்கு ஈந்தாய் நீ யன்று —33–

ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கக் கடவரான தேவர்களுக்கு அன்று கொடுத்தாய்
சம்சாரத்தைப் பூண் கட்டி நடுவில் பரணிலே இருக்கிறவர்கள் –

–——-

காஞ்சி புரத்திலே பல திருப்பதிகளிலே நிற்பது இருப்பது கிடப்பதான இவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்து
இதுக்கடி பண்டு திரு உலகு அளந்து அருளின ஸ்ரமத்தாலே வந்தது ஓன்று அன்றோ என்று கொண்டு அஞ்சுகிறார் –
அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் என்று தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்கிறார் –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்—-34-

உனக்கு இது ஒழிய வேறு அந்ய பரதை என்-நமக்காகத் தன்னை அழிய மாறினவனை அனுசந்தியாது இருக்க வேணுமோ
பூமியை அடங்கலும் அளந்த வருத்தத் தாலேயோ-திரு வேளுக்கையில் இருக்கிறதுவும்
திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளுகிறதுவும் என்று வயிறு எரிச்சலாலே நெஞ்சே அனுசந்திக்கப் பார்-

———–

நெஞ்சமே காண் என்று உபதேசித்தாரே கீழே – அதடியாக மற்றைக் கரணங்கள்-இவர் தம்மை ப்ரேரிக்கத் தொடங்கிற்றன-
மனஸ் சஹ காரத்தோடேயாய் இருக்கும் இறே -அல்லாத இந்த்ரியங்களுக்கும் அனுபவம் –
இந்த்ரியங்கள் தான் முற்பட்டு இவர் மூட்டும் அளவாய்த்து –

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

காண வேணும் காண வேணும் என்று விரும்பி நின்றன கண்கள் ஷாம காலத்தில் பசல்கள் சோறுசோறு -என்னுமா போலே –
வண்டுகள் மீட்கில் இறே என் இந்த்ரியங்களை மீட்கலாவது –
நமக்கு இவற்றின் கீழ் குடி இருப்பு அரிதான பின்பு இனி நாமும் அவனுடைய ஸ்லாக்யமான திருவடிகளை
வாயாரப் பாடி கையாலே தொழுவோம் –

—————-

யாம் தொழுதும் என்றாரே –மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ் சுடர் வாள் -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

செய்ய படை என்கிறது-ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு விதேயமாய் இருக்கை-
ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது –
அப்போது அவனுக்கு என் புகுகிருறதோ என்று அஞ்ச வேண்டா
அவை தனக்கு -திசை வாழி எழ -என்று மங்களா சாசனம் பண்ண அமையும்

———-

இப்படிப் பட்டவன் திருவடிகளிலே நான் ஒரு வழியாலே அடிமை புக்கேன்-இங்கனே இருந்துள்ள நான்
அவனை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணுகை அன்றிக்கே அவன் தானே என்னை ஸ்ப்ருஹநீயனாக
புத்தி பண்ணா நின்றான் என்கிறார் –

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–

அஹ்ருதயமாக அடிமை புக்கேன்-அடிமையிலே அந்வயித்த மாத்ரத்திலே உள்ளும் புறமும் ஒக்கக்
கை விட மாட்டாதே சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு பூஜியா நின்றான் -விட சக்தன் ஆகிறிலன்-
அகத்தான் புறத்தான் ஆகைக்கு அடி அவள் முறுவல் பெறுகைக்கு-
ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படியே என்று ஈடுபடுகிறார் –

————

இப்படி என்னை வந்து விரும்பினவன் தான் சால எளியான் ஒருவனோ-சர்வேஸ்வரன் கிடீர் என்கிறார் –

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-

உபமான ராஹித்யத்துவக்கு அடி-சகல பதார்த்தங்களும் தனக்குப் பிரகாரமாய்த் தான் ப்ரகாரியாய்
தனக்கு ஒரு ப்ரகார்யந்தரம் இன்றிக்கே இருக்கை -சகல ஜந்துக்களும் தனக்கு சரீரம் என்றபடி-
எல்லாம் தான் இட்ட வழக்கு-இவை எல்லாமாய் நின்ற சர்வேஸ்வரன் தனக்கு ஒப்பாகச் சொல்லலாவானும் தானே-

————-

இப்படி ஜகதாகாரனான சர்வேஸ்வரன் திரு மலையிலே புகுந்து சந்நிஹிதனாய்ப் பின்பு
என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் என்கிறார் –

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-

திருமலையில் நின்று என்னுடைய ஹிருதயத்தில் புகுர அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு வந்து புகுந்தான் –
அங்குத்தை இருப்பானது என் பக்கலிலே வருகைக்குக் காலம் பார்த்து இருந்தான் என்று தோற்றி இரா நின்றது –
என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே நித்ய சந்நிஹிதனாய் இரா நின்றான் –

———–

இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே
இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

பண்டு உளன் அன்றிக்கே-இன்று உளன் ஆனான் என்கிறார் -தம்மைப் பெற்றவாறே –
அவன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கைக்கு உளன் ஆனபடி – அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது
நம்மை உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டு தான் உளனாக இருக்கின்றான் –
நாம் வேண்டாத காலமும் நம்மை வேண்டி இருக்குமவன் –சத்தா ஹேது அவன் என்று நினைத்து இரா அன்றும் –
புகுரப் புக்கால் விலக்காதார் ஹிருதயத்திலே உளன் –
மன்-உடையவன் –இந்த்ரன் இழந்தது பெறுகையாலும்-மகாபலியைப் பறித்து வாங்குகையாலும்
இவனே உடையவன் -என்று தோற்றா நின்றது –
தன்னுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு பயத்தோடு வ்யாப்தம்-அவனுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு அபயத்தோடே வ்யாப்தம்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -21-30–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 21, 2020

அவனை ஒருவரால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –
கீழ்த் திரு வுலகு அளந்த அருளின இடம் ப்ரஸ்திதமான வாறே அப்படி வரையாதே பரிமாறும்
கிருஷ்ணாவ தாரத்தைச் சொல்லுகிறார் –

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-

பரிச்சேதித்துப் பேச ஒண்ணாமைக்கு தனித் தனியே ஹேதுக்களை அருளிச் செய்து –வடிவு பிரகாரம்
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே –உள்ளபடி கண்டு பேச ஒண்ணாது-

—————

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றாரே –
அநந்தரம் திரு வுள்ளத்தைக் குறித்து நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே
ஸ்ரத்தை பண்ணு கிடாய் என்கிறார் –

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு ——22-

நாம் ஒரு நாளைக்கு ஒரு நாள் உண்ணுமோ பாதி எப்பொழுதும் தொழுமவர்கள் –சதா பஸ்யந்தி -இறே –
செம்மையால்–அவன் சேஷி நாம் சேஷ பூதர் என்னும் புத்தி பண்ணி ஹ்ருதயம் சிதிலமாய் –
செவ்வனே –நீ ஓன்று கொண்டு அவனைக் காண இருக்கை அன்றிக்கே-ஒரு யத்னம் செய்யாது இருக்கத்
தானே தன்னைக் கொடு வந்து காட்டுவதாகக் கொண்டு –
மெய்ம்மையே –மனஸ்ஸே ஒரு குண ஆவிஷ் கார மாத்திரத்திலே தெகுட்டி விடாதே
அவனைப் பத்தும் பத்தாக சாஷாத் கரிக்கையிலே யாதரி-
பிரயோஜன நிரபேஷமாக ஆசைப்படு–பிரயோஜனமும் அவனே-பிரயோஜனமும் அவனே -என்றபடி
முதல் தன்னிலே இவர் சாஷாத் கரித்தன்றோ அனுபவிக்கிறது -என்னில்-ஒருக்கால் கண்டோம் இறே என்றால்
அவ்வளவால் பர்யவசிக்கும் விஷயம் அல்லாமையாலும்
இவர் இருந்து கண்டது சம்சாரத்தே ஆகையாலும் ஆறி இருக்க விரகு இல்லையே –

——————

மெய்ம்மையைக் காண விரும்பு -என்றாரே – அந்த உபதேசம் கடுகப் பலித்துக் கொடு நின்றதாய் இருந்தது –
தான் சொன்னபடியே திருவுள்ளம் விரும்புகிற படி-இவருடைய நெஞ்சாகில் இங்கனே இருக்க வேண்டாவோ –

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

மனஸ்ஸானது முன்னாடி தோன்றாமல் நின்ற நிலம் துழாவிப் கொண்டு பிச்சேறி வாரா நிற்கும் –
ஹ்ருதயமான துழாய் கலங்கிக் கொண்டு பிச்சேறா நிற்கும்-
வ்யாமோஹத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது –வண்டுகள் பட்டது படா நின்றது –

————–

அபி நிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று ஏறி மறிந்து இராதே -நெஞ்சே
அவனை மேலே விழுந்து ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –
ஆசை பிறந்த பின்பு இனி விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார் என்கிறார் –

வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீருருவு மானான் -பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது —-24-

அவ்வோ பதார்த்தங்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கையாலே லீலா விபூதி விசிஷ்டனாய் –
தேஜோ ரூபமான திரு வாழியை யுடையனாகையாலே நித்ய விபூதி யுக்தனாய் யுள்ளான்-
தொழு வித்துக் கொள்ளப் பரிகரம் உண்டு-
சூழ் கழலே – ஆஸ்ரிதரை அகப்படுத்துக் கொள்ளுகிற திருவடிகளையே
புறம்பு போகாமல் சூழ்த்துக் கொள்ளும் திருவடிகளையே -என்னுதல்
இத்தால் அவன் எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால் அத்தை அறிந்த இன்றாகிலும் நீ தொடராயோ
கீழ் விச்சேதித்துப் பட்டது போரும் இனி மேல் உள்ள காலம் முறையாலே இடைவிடாதே தொடர்ந்து ஆஸ்ரயி-

———-

இவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் திரு உள்ளமானது திமிர்த்துத் தன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து
இருந்தாப் போலே இருந்தது -அத்தைப் பார்த்து நீ இங்கே கிட்டி ஆஸ்ரயித்தால்
உனக்கு வருவதொரு குறை இல்லை காண் என்கிறார் –

தொழுதால் பழுதுண்டே தூ நீருலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து ——-25–

ஜகத்துக்கு அவன் வயிறு தாரகமானால் போலேயும் நெய் அவனுக்கு தாரகமானால் போலேயும்
அடிமை உனக்கு தாரகம் அன்றோ –நான் சொல்லுகிற வேப்பங்குடி நீர் இது வன்றோ என்கிறார் –
வெண்ணெய் உண்ணா விடில் அவனுக்கு பிரளயம் வந்தது போலே –
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளத் த்ரவ்யத்தாலே அங்கு வயிறு நிறையாமையாலே வந்த குறை தீர்ந்தானாய் இருக்கிறவன் –
தனக்கு அசாதாரண பரிகரத்துக்குத் தானே விரோதியைப் போக்கும்-
ப்ரஹ்மாதிகளுக்கும் கூட அவ்வருகாய் இருப்பான் ஒருவன் ஆன பின்பு
இனி அவன் காலிலே விழுந்து பிழைக்கில் பிழைக்கும் அத்தனை-
நெஞ்சே -சம்பந்தத்தை நினைத்து அங்குத்தைக்குத் தகுதியாய்க் கொண்டு ஆஸ்ரயித்ததால்
உனக்கு வருவதொரு தப்பு உண்டோ –

———-

இப்படிக் கிட்டி ஆஸ்ரயிக்கத் தம் திரு உள்ளத்தை அவன் உகந்து அருளின நிலங்களில் காட்டில் விரும்பின படியை
அருளிச் செய்கிறார் –கோயில்களில் இருக்கிறது இசைந்தார் நெஞ்சிலே புகவிறே –
அங்கன் இன்றிக்கே-யசோதை பிராட்டி வெண்ணெயை விழுங்கும் காட்டில் நாம் பெற்றது என் என்னில்
உகந்து அருளின தேசங்களிலே நமக்காக வந்து ஸூலபனானான் என்கிறார் -என்னவுமாம்
தொழுதால் பழுதுண்டே என்றாரே-இவர் இப்படிச் சொல்ல அவன் பேசாது இரானே –

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

அவனுடைய ஆதரத்துக்கு இவை இரண்டும் ஒரு கோவையாய் இருக்கிறது –
உகந்த படுக்கையான திரு வநந்த வாழ்வானோபாதி என்னுடைய நெஞ்சும் –
திரு வநந்த ஆழ்வானையும்-என்னுடைய நெஞ்சையும் தன்னதாக அபிமானித்து இருப்பது –
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியும்-இத்தையும் தாங்கடவார்-சாதரமாக யுறைந்து -அதிக்ரமியார்-
திருக் கச்சி முதலான திருப்பதிகளிலும் ஸூரிகளில் பிரதானனான திரு வனந்த ஆழ்வானில் காட்டிலும்
தம் திரு உள்ளத்தை மிகவும் விரும்புகையாலே முந்துற திரு உள்ளத்தை அருளிச் செய்தார் –

————–

பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் ஆரானும் ஒருவர் பாபபலம் புஜித்தார் உண்டு என்று இதுக்கு
முன்பு எங்கேனும் கேட்டு அறிவதுண்டோ என்கிறது –

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27-

அக்னி நா சிஞ்சேத்-நெருப்பினால் நனைத்தல் போல இருப்பது ஓன்று இறே
பகவத் பஜனம் பண்ணியும் பாப பலானுபவம் பண்ணுகை யாகிறதும் –
கடலுக்கு தொடுத்த அம்பு அவன் மேல் விடாமையே அன்றிக்கே அவன் சத்ருக்கள் மேலே விட்டது இல்லையோ
அனுக்ரஹ பலம் காணுதலே இறே உள்ளது –ஆஸ்ரித கார்யம் செய்கைக்காகக் கிட்டக் கிடக்கிற படி –
எக்காலத்தில் எத்தேசத்தில் யார் அவனைப் பற்று துஷ்கர்ம பலத்தை அனுபவித்தார் –

————-

இவர்கள் பண்ணின பாப பலம் இவர்களுக்கு புஜிக்க வேண்டுவது
பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களை தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –
கீழ் வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியும் -என்ற பிரசங்கத்தாலே
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –

அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால் உண்ட பிரான் ——28-

உகந்தாருக்கு தன உடம்பைக் கொடுக்கும் –-ஆஸ்ரிதர்க்காகத் தன் உடம்பை அழிய மாறியும் நோக்கும்
இவன் அஞ்சாததும் பீஷ்மாதிகளுக்கே –அஞ்சுவதும் யசோதைப் பிராட்டிக்கே-
அம்மனே –இது ஒரு எத்திறம் இருக்கிறபடி –கெட்டேன் இவனால்

————

யசோதைப் பிராட்டி ப்ரஸ்துதை யானவாறே அவளுடைய ஸ்நேஹத்தையும் குணங்களையும் சொல்லி
அவளும் ஒருத்தியே -என்று கொண்டாடுகிறார் –
கீழே உடைத்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கு-என்றாரே அச்சத்துக்கு இவன் பால் ஒப்பு இல்லாதாப் போலே
ஸ்நேஹத்துக்கும் யசோதைப் பிராட்டிக்கு ஒப்பில்லை – என்கிறது –
கீழே மிடைந்தது பாரத வெம்போர் -என்று ஆஸ்ரிதர்க்காக அவன் தன்னை அழிய மாறின படியைச் சொன்னாரே
இதில் அவனுக்காக இவள் தன்னை அழிய மாறின படி சொல்லுகிறது –
அச்சம் கெடுகை ஸ்த்ரீத்வம் அழிய மாறுகை -ஸ்த்ரீத்வ பிரயுக்தம் இறே அச்சம் –
அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -வாய்த்த
இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து —-29–

ஸ்த்ரீத்வ பிரயுக்தமான பயத்தைப் பொகட்டு கடுக வந்து எடுத்து ப்ரத்யௌஷதம் பண்ணுகையிலே ஒருப்பட்டாள் ஆய்த்து
கேட்ட விடத்தே மோஹித்து விழுகை அன்றிக்கே கால் நடை தந்து–வந்து— எடுத்து-பிரதிகிரியை பண்ண தொடங்கினாள் ஆய்த்து
மோஹித்து விழுமதுவும் பிரேம கார்யமே யாகிலும் -அவனைப் பெறும் படியும் கார்யம் பார்க்க வேணும் இறே
மயர்வற மதி நலம் பெற்றும் -யாம் மடலூர்ந்தும் -என்னப் பண்ணும் விஷயம் இறே –

——————

அவன் சந்நிஹிதன் ஆகையாலே அவள் ஸ்நேஹித்தாள் –இப்போது நமக்கு அவன் சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்களைச் சொல்லுகிறார் –
ஒரு கால விசேஷத்திலே ஒருத்திக்கு எளியனான இந்நிலை எல்லார்க்கும் உண்டாம்படி கோயில்கள் எங்கும்
வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

நேர்ந்த வென் சிந்தை – என்கையாலே இத் திருப்பதிகளிலே வந்து நின்றது எல்லாம் என் ஹிருதயத்திலே
புகுந்து இருக்கைக்கு – என்கிறது –
வேதத்தில் நின்றதோடு கண்ணால் காணப் படுகிற திருப்பதிகளோடு வாசி அற இவருக்கு பிரகாசமாய் இருக்கிறபடி
இறைபாடி யாய இவை–ஸ்ரீ யபதி அத்யபி நிவிஷ்டனாய் சேர்ந்து வர்த்திக்கிற ராஜ தானி

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -11-20–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 20, 2020

கூரிதான அறிவை  உடையார்க்கு அல்லது போக்கி அவனை அறிந்ததாய்த்தலைக் கட்ட ஒண்ணாது கிடீர் -என்கிறார்
அவன் திருநாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை –அல்லாதார்க்கு துர்ஜ்ஞேயன் –என்கிறார் –

நன்கோது நால் வேதத் துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன் -சங்கோதப்
பாற் கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —-11-

அந்த நீர் உறுத்தாத படி திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின் படி
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவனாய்-தர்ம வீர்ய ஞானத்தால் வேதார்த்தங்களை உத்தர உத்தரம் அவகாஹித்து –
தரிசித்து –லோக உபகாரகமாகச் சொல்லிப் போரும் மன்வாதி பரம ரிஷிகளால் நிர்மிதங்களான
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் ஆகிற சாஸ்திர வர்க்கங்களாலே ப்ரதிபாதிக்கப்படும் ஸ்வ பாவனாய்-
ஸூஷ்ம அர்த்த அவகாஹியான விலக்ஷண ஞானத்தால் அறியப்படும் ஸ்வபாவனாய் இருக்கும்-
பரிசலான அறிவால் அறியப்படுமவன் அல்லன் என்று கருத்து

————-

ஆகில் இவனை ஒருவராலும் அறிந்து கண்டதாய் விட ஒண்ணாதோ என்னில் நான் சொல்லுகிற வழியாலே
காண்பாருக்குக் காணலாம் -என்கிறார் – இப்பாட்டிலும் அறிய வரிது என்னுமத்தை உபபாதிக்கிறார் –

அறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி ——12-

உபாசனம் -த்ருவ அநு ஸ்ம்ருதி-தர்சன-சாமானாகார ப்ரத்யக்ஷதாபத்தி -இவ்வளவாக நன்கு உணர்ந்தவர்கள் –
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனுடைய படி நாள் தோறும் காண்பார்கள் –

—————

கீழ் இரண்டு பாட்டாலும் அருமை சொல்லிற்று –
இதில் அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை என்கிறார் –
அன்றிக்கே
இப்படி அரியனாய் இருந்து உள்ளவனுடைய சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-

இத்தால் இவன் வளரக் கோலித்தது இவ்வளவு அன்று இடம் போராமை நின்றான் இத்தனை என்று தோற்ற நின்றது ஆய்த்து-
வடிவில் பெருமை –பெருக்காறு சுழித்தால் போலே சுழித்துக் கிளருகிற ஒளி வெள்ளத்தை யுடைத்தாய் முசிவற வளர்ந்த
திரு வபிஷேகமானது அந்த்ரிஷாதிகளான ஊர்த்வ லோகங்களை ஊடுருவிக் கொண்டு போய்
அண்ட கடாஹத்து அளவும் செல்ல வளர்ந்ததே -இது என்ன ஆச்சர்யம் என்று அனுபவிக்கிறார் –

————

எம்பெருமானை அகற்றுகைக்கு விஷயங்கள் உண்டாய்த்து
விஷயங்களை அகற்றுகைக்கு உகந்து அருளின நிலங்கள் உண்டாய்த்து –

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-

வ்யாமுதனாய் இருக்கிறவன் பக்கலிலே நெஞ்சு மண்டும்படி பண்ணி–அவன் பிச்சுக் கண்டு பிச்சேறி –
அல்ப மாதரம் அவன் பக்கலிலே நெஞ்சை வைக்க அந்த ஆஸ்ரயம் தான் எளிதாம்-
சகல வேதத்துக்கும் சார பூதமான திரு மந்த்ரத்தை அனுசந்திக்கவே சால எளிதாம் –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி திருமலையிலே வந்து நிற்கிறவன் –நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹநீயன் ஆனவன்
நித்ய ஸூரிகள் வந்து ஆஸ்ரயிக்கும் படிக்கு ஈடான திருவடிகளை யுடையவன் தாழ நின்ற இடத்திலும் மேன்மை குறைவற்று இருக்கிறபடி
அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூலபன் ஆனான் –
ஆன பின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம்

——–

இப்படிப் பெரியனான சர்வேஸ்வரனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளர்ந்து அருளக் கண்டேன் இத்தனை என்கிறார்
அவன் தன்னாலே ஸ்வயம் வரிக்கப் பட்ட எனக்கு இத்துக்கம் ஒன்றும் இல்லை இறே என்கிறது –
இவருக்கு அவன் தானே யோகாப்யாசம் பண்ணி வந்தபடி-

பணிந்து உயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்த -அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —–15-

பரியவும் அறியாதே –படுக்கை வாய்ப்பும் இன்றிக்கே -இருக்க வந்து என் மனசிலே தங்கா நின்றான் –
பரிவாரைக் கை விட்டுப் பரிய வறியா விடிலும் -முறை யுணர்ந்தாரை தானே வந்து உகக்கும் –
அங்கு வகுத்தது என்று கிடக்கும் இங்கு உகந்து கிடக்கும்-எங்கே தங்குமவன் எங்கே வந்து தங்குகிறான்
கிடைக்கைக்கு ஒரு படுக்கை இல்லாதவன் படுக்கை உள்ள இடம் தேடி வருமா போலே தானே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு வந்து உகக்கும்-

————

திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் –
மனம் தன் அணைக் கிடக்கும் -என்றாரே-இப்படி வந்து கிடைக்கைக்கு அடி பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று —-16–

கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை
அவன் புருஷோத்தமன் ஆனாப் போலே இவள் நாரீணாம் உத்தமை –
மலர்மகள் விரும்புகையாலே சர்வாதிகத்வம் ஆகை-
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெருமாள் கடாஷம் பெற்றுப் பின்பு பிராட்டி கடாஷம் பெற்றான் திருவடி-
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் முந்துற பிராட்டி கடாஷம் பெற்றுப் பின்னைப் பெருமாள் கடாஷம் பெற்றான்-
ஸ்ரீ குஹப் பெருமாள் இரண்டும் ஒருக்காலே பெற்றார்-

————-

இப்படிப் பட்ட சர்வேஸ்வரன் நம் பக்கல் வ்யாமுக்தன் என்று அறிவதொரு நாள் உண்டானால்
அதுக்கு முன்பு உள்ள காலத்தோடு மேல் வரக் கடவ காலத்தோடு வாசி அற எல்லாம்
ஸ பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —-17-

புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் அவளோடே கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டில்லை –
இனி என்னுடைய வாக்கானது அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக என்கிறது
எம்பெருமான் படி இதுவான பின்பு நாம் க்ருதக்ஞராய் இருக்கும் அத்தனை வேண்டும் –என்கிறார்
இந்நாள் மருவுகைக்கு யுடலாய்க் கொண்டு
கழிந்த நாள்களும் இப்பேற்றை அனுபவித்து இருக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு
மேல் வரக் கடவ எல்லா நாள்களும் அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற நல்ல நாளாகத் தலைக் கட்டும் –
இத்தை அசையிடும் நாள் இறே –

———–

கால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு உன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே யாத்ரையாய்
இதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி பண்ணி யருள வேணும் -என்கிறார் –
உன் உடைமை யொன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –என்கிறார் –
மறவாது என்றும் நான் நினைத்தால் லாபம் உண்டோ –நீ அஞ்சாது இருக்க அருள் என்கிறார் –

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

சர்வேஸ்வரனே உன்னது அல்லாததை அளந்து கொண்டாயோ-என்னுடைமையை நான் விடுவேனோ
மீட்டுக் கொண்ட பின்பு நீ அஞ்ச வேண்டா -என்று அருளிச் செய்ய வேணும்-
இந்த்ரன் அபேஷிதம் செய்து தலைக் கட்டினாப் போலே நானும் இதொன்றும் பெறும்படி பண்ணி யருள வேணும்
ஒரு ஔஷதத்தை சேவித்தான் ஒருத்தன் பயம் இன்றிக்கே சர்ப்பத்தின் வாயிலே கையைக் கொடா நின்றான் இறே
அவனுடைய அருள் பெற்றவன்று சம்சாரத்திலே இருந்து பயம் கெட்டு இருக்கத் தட்டில்லை இறே –

—————

அஞ்சாது இருக்க அருள் என்றார்
அநந்தரம்- திரு உள்ளமானது நாம் அவனை இப்படி அருள் என்று நிர்பந்தித்தால்
அவன் முன் நின்று அருளுகைக்கு வேண்டும் யோக்யதை நம் பக்கலிலே உண்டாயோ –
அன்றிக்கே –
அவன் தான் செய்ய வல்லானோ -என்று நெஞ்சு பிற்காலிக்க-அவை ஒன்றும் இல்லை காண்-
யோக்யராய் இருப்பாருக்கு முன்னே அயோக்யரான நமக்குத் தன் அகடிதகட நா சாமர்த்யத்தாலே அருளும்
நீ பயப்பட வேண்டா என்கிறார் –

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

அவனுக்கு அருள ஒண்ணாதது இல்லை -அஞ்சாது இருக்க அருள் -என்று அபேஷிக்கவும் அறியாதார்க்கும்
அருளுமவன் நமக்கு அருளானோ-
தம்தாமுக்கு என்ன ஒரு கைம்முதல் உடையார் பக்கல் காணும் அவன் தாழ்ப்பது –
யோக்கியருக்கு முன்னே அயோக்யரான நமக்கு தன் அக்கடிகடனா சாமர்த்தியத்தால் அருளும் –
நீ பயப்பட வேண்டா என்று திரு உள்ளத்தைக் குறித்து மாஸூச -என்று தேறி அருளுகிறார்-

————-

அவன் தன்னை அபேஷித்தார்க்குத் தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது என்கிறார் –
சம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இறே –
உன் படியை நீயே சொல்ல வேணும் என்று எம்பெருமானைக் கேட்கிறார் –

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு ——-20-

இப்படி உனக்கு இஷ்ட சேஷ்டா விஷயமாய்ப் பருத்தி பட்ட பன்னிரண்டும் பட வந்த லோகம்
தன்னையே பின்பொரு நாளிலே மூன்றடியை இரந்து அளந்து கொண்ட விது பெரியதொரு செயலாகச் செய்தாயோ
அவனுக்கு மறுக்க மாட்டாத வ்யாமோஹம் இறே
இந்திரன் பல் காட்டின்து பொறுக்க மாட்டாமல் உன் வியாமோஹத்தால் செய்த செயல் அத்தனை இறே –
என்னே இது என்ன ஆச்சர்யம் என்று வித்தாராகிறார் –
இச் செயல்களைச் செய்யும் இத்தனையோ–சொன்னால் ஆகாதோ
இவர் பேச்சுக் கேட்டு இனியனாய் இருந்தான் அவன்
அவன் பேச்சுக் கேட்டு வாழ நினைக்கிறார் இவர்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆத்மாக்களின் ஸாம்யம் -உபநிஷத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரங்களில் மூலம் கர்மவினைகளைப் போக்கிக் கொண்டு -ஸ்ரீ கீதை மூலம் ஞான பக்திகளினால் அவனை அடையும் முறை விளக்கம்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்ரீ ரெங்கநாதன் ஸ்வாமிகள் —

July 20, 2020

வாக் அநு வாக் சாம நிஷத் உபநிஷத் -ஐந்தும் ப்ரஹ்மத்தை ச் சொல்லும்
நிஷத் -ப்ரஹ்மத்தை இந்திராதி அந்தர்யாமியாக சொல்ல உப நிஷத் நேராகவே சொல்லும்
உப ப்ரஹ்மணங்கள்
உபநிஷத் -வேதாந்தம்-இறுதி முடிவு
ஸ்ரீ பகவத் கீதை -ஸர்வ உபநிஷத் -பசுக்கள் -கோபால நந்தன் -பார்த்தன் வத்சம் -ஸூகீகி போக்தா கீதாம்ருதம்
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -பாராசர்ய வாச ஸூதாம் -உபநிஷத் கடலைக் கடைந்து –
த்ரி பிரஸ்தானம் -படிக்கட்டுக்கள் -அனைத்து தர்சனங்களுக்கும் இவை மூன்றுமே அடிப்படை

ஸமோஹம் உபநிஷத் -பிரஸ்தானம்
கர்மம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பிரஸ்தானம் –
ஞானம் பக்தி -ஸ்ரீ கீதா -பிரஸ்தானம்

ஆத்மாக்கள் -சமம் -பரமாத்வா உடன் சாம்யம்
என் உடம்பு -தேகம் வேறே -தோன்றும்
விஞ்ஞான மயம் -உப்பு நிறைந்து இருப்பது போலே
ஞானத்துக்கு இருப்பிடமாயும் இருக்குமே
தீபம் -பிரபா -சார்ந்தே இருக்கும் –
தர்ம பூத ஞானம்
நான் குடத்தைப் பார்க்கிறேன்
நான் -தர்மி ஞானம்-
பார்ப்பது தர்ம பூத ஞானம்

தேகம் இந்திரியம் மனஸ் பிராணன் இவை எல்லாம் ஆத்மா இல்லையே
ஆத்ம சித்தி ஸ்ரீ ஆளவந்தார்
வித்யா விநயா சம்பந்தனே ப்ராஹ்மணே -கவி ஹஸ்தி -சுனி சைவ சூபாகேச-நாயும் நாய் மாமிசம் உண்ணும் வேடன் —
பண்டித சம தர்சனி ஸ்ரீ கீதை -ஞான மயம் என்பதால் சமம்
கர்மம் அடியாக வேறுபாடு
இதுவே ஆத்ம சாஷாத்காரம் -ஞான ஏக ஆகாரம் -இஹ ஏவ முக்தர் -ஸாம்யம் அறிந்தவர் -நிர்தோஷம் -ஹி சமம் ப்ரஹ்மம் –

ப்ரஹ்மமே அனைத்து ஆத்மாக்குள்ளும் இருக்கும் ஆத்மா
சரீராத்ம பாவம் -நமக்கும் ப்ரஹ்மத்துக்கும் –
ப்ரஹ்மாத்கத்வம்-இதுவும் பொது
ந இஹ நாநா அஸ்தி -இதனாலே
ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம தத் ஜலான் சாந்த உபாஸ்தேய -அறிந்து சாந்தி அடையலாம்
அந்தர்யாமி அந்தராத்மா

மூன்றாவது சாம்யம்-கோப உபநிஷத் -தனியன்
சேஷத்வம் அனைவருக்கும் பொது
பாரார்த்யம் ஸ்வம் –ஸ்ருதி சத சிரஸ் சித்தம்
ஒரே ஸ்வாமி நாம் எல்லாம் சேஷ பூதர்கள்-
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் –நீராடப் போதுவீர் போதுமினோ -அனைவரும் சமம் -ஆசை ஒன்றே வேணும் –

——–

ஸர்வஞ்ஞன்-இரண்டு பறவைகள்-ஸஹாய -சேர்ந்தே இருக்கும் -சமானம் வ்ருஷம் -பரிக்ஷஸ்வஜாய – -சயூக் -ஸாம்யம்
ஓன்று ஸூக துக்கங்கள் உண்டு கர்ம வஸம் -ஓன்று கர்ம பலம் தட்டாமல் –

அபஹத பாப்மா -விஜர -விம்ருத்யு – விஸோக -விஜிகித்சக -அபிபாஷா- சத்ய காம- ஸத்ய ஸங்கல்ப -எட்டிலும் ஸாம்யம்
ஸ்வரூப ஆவிர்பாவம் —பஸ் யதே ருக்ம வர்ணம் கர்த்தாராம் ஈசன் புருஷ —
ததா வித்வான் புண்ய பாபே விதூய -நிரஞ்சனம் -பரமம் ஸாம்யம் உபைதி –
ஸ்வேந ரூபேண அபிநிஷ்பந்த்யதே –

ஆனந்தத்திலும் ஸாம்யம் உண்டே பரமாத்மாவுடன்

நித்யோ நித்யானாம் –ஏகோ சேதன -நித்யானாம் பஹு நாம் –
ஸமோஹம் ஸர்வ பூதேஷு நமே த்வேஷ ந ப்ரிய -ஆஸ்ரயணத்தவே சமம்

அவன் பார்வையிலும் ஸாம்யம்
ஸூ ஹ்ருதம் ஸர்வ பூதாநாம் –
ஸ்ரீ நிதிம் – -ஸர்வ பூத ஸூ ஹ்ருதம் தயா நிதிம் -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்
மின்னு மா மழை தவழும் மேக வண்ணன் -வஸிஷ்டர் பாமரர் விபாகம் பார்க்காமல் அருள் மழை பொழிபவன்
அ நா லோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-கத்யம்
சர்வ லோக சரண்ய ராகவாய-ஸ்ரீ விபீஷணன்
யதிவா ராவண ஸ்வயம் -அவன் பிழையையும் பொறுத்து அருளுபவன்
பத்ரம் பலம் தோயம் –பக்தி ஒன்றே உபஹ்ருதம்

பிரியோ –ஞானி ஆத்மைவ மே மதம் –அவனுக்கும் ஆத்மாவாகக் கொள்பவன் -அவன் தரிப்பே இவர்களாலே –
உதாராஸ் ஸர்வ
ஏ பஜந்தி மாம் -அநந்யார்ஹ -தன்னை விட மேலாகக் கொள்பவன்
மிலேச்ச–ச பூஜ்யா யதாக்யஹம்–என் அளவாவது பூஜிக்கத் தக்கவன் –

———-

ஸாம்யம் காட்டி அருளவே -மூன்று த்வாரங்கள் -நித்ய ஸூரிகள் -ப்ரமாதிகள் -நம் போல்வார்-
அமரராய் திரிகின்றார்க்கு ஆதி
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர்

———–

ஸாம்யம் –குள்ளன் உயரமானவன் -ஞானம் குறைவு -மிக்கு -உள்ளவன் –fairness–equity -சங்கீர்த்திய கேசவன் கலியுகம்
க்ருதயுகம் த்யானம் -த்ரேதா யாகாதிகள் -த்வாபர அர்ச்சாயாம் –
உபாயம் எளிதாக்கி அதே பலனைப் பெற வைக்கிறான்
அன்று அங்கு அப்பறை கொண்ட வாற்றை -கோபிகள் அனுஷ்டித்துப் பெற —
பட்டர்பிரான் கோதை ஆண்டாள் அநு கரித்துப் பெற –
சங்கத் தமிழ் மாலை இங்கு அனுசந்தானத்தால் நாமும் பெற –
செல்வத் திருமாலால் எங்கும் என்றும் திருவருள் பெற்று இன்புறுவர்

————-

தன்மயம் -ப்ரஹ்ம -சாம்யா பத்தி —
பிரணவ தனு -ப்ரஹ்மம் லஷ்யம் –
ஸம்யக் ஞான கலாபம் ப்ரஹ்ம ஸூத்ரம் –
சமன்வய அவிவிரோத சாதன பல அத்தியாயங்கள்-

கர்மம்–அஹம் அர்த்தம் ஜீவாத்மா
ந ஆத்மா -ஸ்ருதே-
வேதம் சொல்லுமே -ந ஜாயதே -ந மிரியதே –
வேதம் ஆத்மா நித்யம் என்றும் சொல்லும் அஜ நித்ய சாஸ்வத புராண ந அந்நியதே அன்யமானம் சரீரம்

அவிநாஸது தத் வித்தி-ஆத்மா அணு -வாலாக்ரா இத்யாதி -நைனம் -நனைக்கவோ வெட்டவோ முடியாதே
அந்த அந்த இதம் தேஹ–அவயவங்களின் சேர்க்கை –
ஆத்மா நிரவயவி –
அநித்யமாக இருந்தால் இன்னும் ஒரு தோஷம் வரும் அக்ருத அப்யாகமம்–பிரசங்கமும் க்ருத விப்ரநாச மும் வரும்
மூன்று காரணங்களால் ஆத்மா நித்யம்

வைஷம்யம் நைர் க்ருண்யம் இல்லாத ப்ரஹ்மம் -ந சாபேஷ்வாத் -கர்மம் அடியாகவே ஸ்ருஷ்ட்டி–
வேதம் க்ருத்ய அக்ருத்ய ஸாஸனம் -விதிகளும் நிஷேதங்களும் சொல்லும்
நிமித்த மாத்திரம் -பிரதான காரணம் கர்மம்
ஸத்கார்யம் சாது பவதி-பாப கார்யம் பாபி பவதி
கரணம் அகரணம் -விதி நிஷேதம் –
பாப புண்யங்கள் இவை பொறுத்தே விஹித அகரணம் -நிஷித கரணம் பாபம் -விஹித கரணம் -புண்யம்
தர்மம் அதர்மம் ஸூஹ்ருதம் அ ஸூஹ்ருதம் -பர்யாயம்
அநாதி -கர்மங்களும் –பிறவி சுழலும் அநாதி –சூர்யா சந்த்ரம் யதா ஸ்ருஷ்ட்டி தாதா -ப்ரஹ்மம் –
அனந்தங்கள் இல்லை—ஆதி இல்லாவிடில் இவற்றுக்கு முடிவு உண்டே –

அநாதி அவித்யா சஞ்சித பாப புண்ய ரூப கர்மா பிரவாஹம் -ப்ரஹ்மாதி சதுர்வித பிறவிகள் -தேக பிரவேசம் –
இதிலும் அவித்யா -இப்படியே சுழல்
அவித்யாவும் அநாதி
அவித்யா -அநாத்மனி ஆத்ம புத்தி -ஆத்மா இல்லாத ஒன்றை ஆத்மா என்று எண்ணுவதே அஹங்காரம் இதுவே -கர்வம் இல்லை
அஸ்வேத் -ஸ்மதியா மதி -நம்முடையது இல்லாத ஒன்றை நம்மது என்பது மமகாராம்
யானே என்னை அறியகில்லாதே யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீ
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து

புண்யமும் இவற்றாலே -யாகாதிகள் பண்ணி சுவர்க்கம் -ஆத்மா அறிந்தே பண்ணுகிறான் –
அஹங்காரம் -ஸ்வதந்த்ர புத்தி -சேஷத்வ ஞானம் இல்லாமல் செய்வதும் -இதனாலே
ஆத்மா அவன் சொத்து என்று அறிய வேண்டுமே
யா ஆத்ம திஷ்டன் -அவனே செய்பவன் நான் அவன் கையில் பொம்மையாக இருக்க பாபம் புண்ணியம் எப்படி வரும்
நடக்கப் போவது மூன்றே முடிவானால் எப்படி
கர்த்தா ஜீவாத்மாவே சாஸ்த்ரார்த்வத்வாத் –அர்த்த = பிரயோஜனம்
கர்மம் அடியாக பிறவி -சுகம் துக்கம் அனுபவம் புண்ய பாபங்கள் குறையும் –

பரார்த்த து தத் ஸ்ருதே-அவன் உள்ளே புகுந்து நிர்வகிக்கிறான்
ஆட்டு வாணியன் இல்லையே
க்ருத ப்ரயத்ன அபேஷ்தத் து — விகித நிஷித்த –உதாஸீன -பிரதம ப்ரவ்ருத்வம்–
அநுமந்த்ருத்வம் அடுத்து -அவன் தானே நிர்வாகன்
ஜீவ ஸ் வா தந்தர்யம் கொடுத்துள்ளான் –

மநோ வாக் காயை –சூர்ணிகை-அநாதிகால ப்ரவ்ருத்த -அக்ருத்ய கரண -க்ருத்ய அகரண –
பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்யா அபசார -சிசுபாலன்-ராவணன் -ஹிரண்யன் -இம் மூன்றுக்கும் த்ருஷ்டாந்தம்
சஞ்சித கர்மம்–பிராரப்த கர்மம் –ப்ரம்மகல்ப ந்யூத அனுபவம் ஒரு க்ஷணத்தில் செய்த கர்மங்கள் –
க்ருதான் கரிஷ்யமான -முக்காலங்களிலும் சேர்க்கிறோம்

ஞானம் -அக்னி -சர்வ கர்மானி பஸ்மம் -ஆக்கும் ஒரே வழி
அனுபவித்து மாளாதே –
பிராயச்சித்தம் செய்தும் ஓயாதே -உபசாரம் செய்ய இழிந்து -அபசாரங்கள் செய்வதற்கு க்ஷமை வேண்டிக் கொள்கிறோம்

ஞான கார்ய -த்யானம் உபாசனம் ஸ்னேஹா பூர்வக அநு த்யானம் தைலதாராவத்
வர்ணாஸ்ரம தர்மங்கள் -வித்யா ஞானம் அவித்யா -சப்தத்தால் வர்ணாஸ்ரம தர்மம்
அவித்யையால் கடந்து வித்யையால் அம்ருதம் -பக்தி ஆரம்ப விரோதி -ம்ருத்யு -இவற்றால் -கழித்து முக்தர் ஆக வேண்டும்
வித்யையால் அம்ருதம் அஸ்நுதே –
ஹ்ருதய கிரந்தி -சம்சயம் போக்கி -கர்மங்களைக் கழித்து தஸ்மிந் த்ருஷ்டே பராவரே
தரிசன சமானாகாரம் த்யானம் மூலம் இங்கே -காணலாம்

அஸ்வை ரோமானி குதிரை மயிர் விதூய -சந்திரன் ராகு பிடியில் இருந்து விடுவது போல் –
ஷமிஸ்யாமி என்று சங்கல்பித்து –ஷமாமி -செய்து போக்கி அருளுகிறார்
தத் அதிகமே –உத்தர பூர்வ ஆகம் அஸ்லேஷம் விநாசம்
அனுதாபம் வேண்டுமே
புத்ரம் தாயம் உபயந்தி –ஸூஹ்ருதம் சாது க்ருத்யாம் –துஷாந்த பாப க்ருத்யாம்
பக்தி யோகம் பார்த்தோம்
பிரபன்னர் -சேஷபூதருக்கு ஸ்வரூபம் –
தாமே அன்றோ தந்தையும் தாயும் ஆவார் -திருமாலை
ஷத்ரபந்தும் அன்றோ பராங்கதி கண்டு கொண்டான் மூன்று எழுத்துடைய பேரால்
பித்தனைப் பெற்றும் அன்றோ பிறவியுள் துளங்குகிறோம் –

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதமும் சாரா -இதுவே பூர்வ உத்தர ஆக நிவ்ருத்தி
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவித் தொழுது போக்கிக் கொள்ளலாமே
கர்மமும் கிருபையும் பார்த்தோம்

———-

ந சோர கார்யம் ந ராஜ கார்யம் -ந பார காரி –ஞானம் பகுந்தால் வளருமே -வர்த்ததே ஏவ நித்யம் –
வித்யா தனம் சர்வ தான பிரதானம்
ஞான ஹீனன் பசு சமானன்
விவேக ஞானம் -வித்யா ததாதி விநயம்–பாத்ரதாம் -தனம் ஆப்நோதி –தனம் கொண்டு தர்மம் செய்து ஸூகம் அடைகிறோம்
தத் கர்ம -என்ன பந்தாயா -சா வித்யா யா வி முக்தயே–
ஸூ கீதா கர்தவ்ய –ஸாஸ்த்ர ஸங்க்ரஹம் -ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மாத்–
வேதங்களில் புருஷ ஸூ க் தம் -மனு தர்ம சாஸ்திரம் -விஷ்ணு புராணம் -ஸ்ரீ கீதை
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞான மூர்த்தி
ஆயன் துவரைக்கோன் மாயன் அன்று ஓதிய வாக்கு மெய் ஞானம்-
கீதையின் செம்மைப்பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன் ஸ்ரீ கீதா பாஷ்யம்

தத்வ விவேகம் –
தேகாந்தர ப்ராப்திக்கு தீரர் கவலைப்பட மாட்டார்களே
தத்வ த்ரயம் அறிந்து –
நித்யத்வம் -அநித்யத்வம் -சரீரீ நித்யம் -சரீரம் மாறும் –அழியாது அவஸ்தா பேதம்
ஹர்த்தும் தமஸ் -மானம் ப்ரதீப இவ ததாமி -பட்டர்
த்ரை குண்ய விஷய வேதம் -ஸஹஸ்ர மாதா இவ –
நித்ய ஸத்வ -யோகம் -க்ஷேமம் -பரி ரக்ஷணம் –
சாத்விக விளக்கம் –
வர்ணாஸ்ரம தர்மம் படி கர்மம் -பல த்யாகத்துடன் -த்ரிவித த்யாகம் -கர்த்ருத்வ புத்தி தியாகம்-பல சங்கத் தியாகம் –

வர்ணாஸ்ரம தர்மங்களை விடாமல் செய்ய வேண்டும் –
திரு ஆராதனமும் ஆச்சார்யர் கையாகவே கொண்டு செய்கிறோம்
யஜமான சம்ஹயம் -கூர்மம் போல் இந்திரியங்களை உள்ளே அடக்கி –
அடுத்து மனஸ் அடக்கி -ஏகேந்த்ரிய சம்ஹா -வஸீகார்ய சம்ஹா –ஆத்மாவை நினைத்து ஸ்தித ப்ரஞ்ஞன்-ஆவோம் –
இப்படி நான்கு படிக்கட்டுக்கள் ஞான யோகம்
ஆகமாபாயி -வந்தேறி என்று அறிந்து –ஆத்ம சாஷாத்காரம் அடைந்து –
ஞானம் பிறந்து கர்ம யோகம் அனுஷ்ட்டித்து ஞான யோகத்தில் இழிந்து -சாஷாத் காரம்
சாம்யம் அறிகிறான் -ஆதித்யவத் ஞானம் பிரகாசம் ஆகும் -spirutual enlightenment-

முக்தன் ஆக இதுக்கு மேல் பக்தி செய்து -ப்ரஹ்மம் -ஸூ யாதாத்ம்யம் -காரணந்து த்யேயா –அவனே சிரேஷ்டா அறிந்து –
ஸூ மஹாத்ம்யம் அறிவித்து -யோகம் ஐஸ்வர்யம் -தத்தம் இதம் சர்வம் -வியாபித்து -நியமித்து –
ஸூ வ கல்யாண குண ஆனந்த்வத்வம் –
இவற்றை அறிந்தே பக்தி -ஸ்நேக பூர்வம் அநு த்யானம் -பிரிய தமராக ஆக வேண்டும் –
ஞானம் த்ரஷ்ட்டும் பிரவேஷ்டும் -ஞானம் தர்சனம் பிராப்தி மூன்றுக்கும் பக்தி வேண்டும்
பக்தியால் ஸூத் த மனஸ் ஸூ கொண்டு அறிந்து
பக்தியால் தரிசன சமானாகார த்யானம்
பக்தியால் அவனை அடைந்து ஸ்வரூப ஆவிர்பாவம்

தேஷாம் ஞானி நித்ய யுக்தா ஏக பக்தி -விசிஷ்யதே -பிரியதோ -சச மம பிரியா —
என் அளவல்லவே அத்யந்த -அவனைப் போலே இருக்க முயல்கிறேன் என்று கண்ணனே சொல்லிக் கொள்கிறான்
சததம் கீர்த்தயந்த மாம் –திருட விரத யத்னம் செய்கிறார்கள் –நமஸ்யந்த–தொழுது எழுகிறார்கள் -நித்ய யுக்தா உபாஸ்யதே
யோக க்ஷேமம் வஹாம் அஹம் -நானே அவர்களது யோகத்தையும் ஷேமத்தையும் அருளுகிறேன்
மம சாதாரம்யம் -ந ச புன ஆவர்த்ததே
மத பக்தா மந் மநா பவ -மத் யாஜி –இத்யாதி

பக்தி வளர்ந்து -ப்ரேமம் மிக்கு -இருவரையும் மாலாக்கும் -வாஸூதேவம் சர்வம் ஸூ துர்லபம் -என்பான் அவன்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –தாரகம் போஷகம் போக்யம் -நம்மாழ்வார் போலே ஆவோம்
விதுரர் -மாலா காரர் போலே-கண்கள் நீர் மல்கி -அவா மிக்கு -அவா அறச் சூழ்ந்து–பிறந்தார் உயர்ந்தே
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
ஞானி து ஆத்மைவ மே மதம்-அறிவார் உயிரானாய் என்று அவனும் கொள்வான்
ஆகார ஸூ த் தி -ஸத்வம் வளர
ததீய பர்யந்தம் -அடியார் அடியார்

ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸ -அகில புவன இத்யாதி -ஸமோஹம் ஸர்வ பூதேஷூ -ரக்ஷை ஏக தீஷை -விவித சேதனர்களையும் –
ரக்ஷணம் அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் -கர்மம் கிருபையும் பார்த்தோம்
ஸ்ருதி சிரஸ் -உபநிஷத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த் ரம் -ஸ்ரீ கீதை
ஷேமுஷீ பக்தி ரூபம் -இன்று பார்த்தோம்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே –ஸ்ரீ திருமலையே அருளும்
மா மலர் நீர் தூபம் கொண்டு அமர்ந்து -சேவை பண்ணுவோம் –
வேம் கடங்கள் மேல் வினை முற்றவும் வேம்–பூர்வ உத்தர ஆகங்கள் போகுமே போகுமே –

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கோதா ஸ்லோகங்கள் —

July 20, 2020

“ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே ||” [“கோதாஸ்துதி” _ஸ்லோ.1) வேதாந்த தேசிகர் அருளியது.]

(ஶ்ரீவிஷ்ணுசித்தர் என்னும் வேயர் குலக்கொடியாம், நந்தவனத்தில் வளர்ந்த அழகு மிக்க கற்பகத்தருவினைச் சுற்றிப்
படர்கின்ற பெண்கொடியாகவும், திருவரங்கநாதனான அரிச்சந்தன மரத்தைத் தழுவும் அழகு மிக்க பொறுமையுடன் கூடிய
பூமிப் பிராட்டியாகவும், இனிமையான மற்றுமொரு ஸ்ரீதேவியாகவும் விளங்கும் கோதையை அல்லாமல்,
மற்றொரு தெய்வம் சரணடையாது அவளையே அடைந்தேன்.)

———–

ஏகாரச் செல்வியாகிய ஶ்ரீ கோதை ஆண்டாள் புகழ் பாடும் நூல்கள் கீழ்வருமாறு:
கோதா சதுஸ் ஸ்லோகி – ஶ்ரீஅனந்தாழ்வான்;
கோதா ஸ்துதி – ஶ்ரீவேதாந்த தேசிகர்;
ஶ்ரீகோதா உபமான அஷ்டகம் − ஶ்ரீ வேதப்பிரான் பட்டர்;

கோதை வெண்பா,ஶ்ரீஆண்டாள் அந்தாதி, சூடிக்கொடுத்த நாச்சியார் மாலை (கோதா ஸ்துதி தமிழ்ப்பனுவல்),
ஶ்ரீஆண்டாள் அஞ்சுமணிமாலை – மதுரகவி ஶ்ரீநிவாசஐயங்கார்;

ஆமுக்த மால்யதா (தெலுங்கு) − ஶ்ரீகிருஷ்ணதேவராயர்;
ஶ்ரீநாச்சாரு பரிணயம் (தெலுங்கு) − பாஷ்கர சேஷாசலம்;
ஶ்ரீஆண்டாள் சந்திரகலா மாலை, ஶ்ரீஆண்டாள் பிள்ளைத் தமிழ் – வில்லி;
அபிநவ கோதா ஸ்துதி − காஞ்சீபுரம் மகாவித்வான் பி.ப.அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமி;

ஶ்ரீஆண்டாள் கும்மி – அழகிய சொக்கநாத பிள்ளை;
கோதை மாலை, திருப்பாவை மாலை – ரெ.திருமலை ஐயங்கார்;
மார்கழி நோன்பு (அ) ஶ்ரீஆண்டாள் திருமணம் – திருமலை நல்லான்;
கோதா வைபவம் – எக்கிராள கிருஷ்ணமாச்சார்யா;
புதுவைச் சிலேடை வெண்பா,ஶ்ரீவில்லிபுத்தூர் தல புராணம் – கூத்திப் பாறை முத்து கிருஷ்ண ராமாநுச தாஸர்;

சூடிக்கொடுத்த நாச்சியார் பிரபந்தம் – வடிவழகிய நம்பி தாஸர்;
கோதா பரிணய சம்பு, ஶ்ரீஆண்டாள் அஷ்டோத்திர சத நாமாவளி – கேசவாச்சாரியார்;

சூடிக்கொடுத்த நாச்சியார் மாலை (கோதா ஸ்துதி தமிழ்ப்பனுவல்), ஶ்ரீஆண்டாள் குறவஞ்சி நாடகம்,
ஶ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல புராணம், ஶ்ரீவரமங்கை சதகம் – வரகவி அப்புவய்யங்கார்(எ) ஶ்ரீநரசிம்மாச்சாரியர்;

ஶ்ரீகோதா நக்ஷத்ர மாலிகை – சடகோப இராமாநுசர்;
ஶ்ரீஆண்டாள் ஆடி உத்ஸவ நாடகம் − கணபதி ஐயர்;
ஶ்ரீவில்லிபுத்தூர் மான்மியம் − ஶ்ரீஅலங்கார தேவராஜ ஸ்வாமி;
கோதா சுப்ரபாதம், கோதா ஸ்தவம் − கிடாம்பி கோவிந்த ஐயங்கார்;
கோதா பஞ்ச ரத்னம், கோதா அஷ்டகம்,கோதா மதுர ஸ்தோத்திரம்,கோதா கோபால ஸ்தோத்திரம் − திருவேங்கடத்தம்மாள்;

———–

தேடிக் கிடையாத் திரவியத்தைத்
தெவிட்டாத அமுதைத் திருமாலைப்
பாடிப் பரவும் பசுங்கிளியைப்
பவ வெம்பிணி தீர்த்திடும் மருந்தை
ஆடிப்பூரத் தவதரித்த அகில
நிகமாகம விளக்கைச்
சூடிக் கொடுத்த சுடர் கொடியைத்
தொழுது வினைக்கு விடை கொடுப்போம்!” –வரகவி அப்புவைய்யங்கார் என்கிற ஶ்ரீநரசிம்மாச்சாரியார்-

———-

ஆண்டாள் பாட்டு-01 :: அழகெல்லாம் ஆண்டாளின்-ராகம் – புன்னகவராளி-தாளம் – ஆதி

அழகெல்லாம் ஆண்டாளின் அழகாகுமா…அவள்
அசைந்து வரும் நடைக்கு இணையகுமா (அழகெல்லாம்)
அடியார் துயரன்றோ அவள் ஏக்கம்
அதை துடைப்பதன்றொ அவள் நோக்கம் (அழகெல்லாம்)
பால்வடியும் முகத்தைப் பார்க்க பசிதீரும்
பக்கத்தில் மன்னாருடன் பரவசத்தைக் கொடுக்கும்
வேதம் நிறைந்த வில்லிபுத்தூரில்
விஷ்ணுசித்தன் மகளாய் விளையாடி வளர்ந்தவள் (அழகெல்லாம்)
தினமும் ஒரு கோலம் [மார்கழியில்] உள்ளத்தை உருக்கும்
கைதனில் வண்ணக்கிளி வடிவழகைப் பெருக்கும்
அல்லும் பகலும் அவளை நினைந்தால்
அல்லல்கள் யாவும் இல்லையென்றே ஆகும் (அழகெல்லாம்)

————-

ஆண்டாள் பாட்டு-02 :: அனைவரும் கூடி
அனைவரும் கூடி ஆண்டாள் தேவிக்கு மங்களம் பாடி மகிழ்ந்திடுவோம்
மங்கள கோதை ரெங்கமன்னாருடன் அன்பு பொங்கிடும் மங்களமே
பல்லாண்டு பாடி பக்தியினாலே உள்ளமே பரவசமாகாதா
தேவர்கள் புகழ ஆழ்வார் மகிழ ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தாள்
மங்கள தீபங்கள் அலங்காரமாகவே ஜோதிப் பிரகாசமாய் விளங்கிய
சூடிக் கொடுத்த ஆண்டாள் தேவிக்கு ஜெய ஜெய ஆரத்தி எடுப்போமே (அனைவரும்)

—————–

ஆண்டாள் பாட்டு-03 :: பார் பார் பார்–ராகம் – மாண்டு–தாளம் – ஆதி

பார் பார் பார் இந்த ஆண்டாளைப் பார்
பக்கத்தில் மன்னார் கருடனைப்பார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வார் மகளாம் கோதையைப் பார் (பார்)
கையினில் கிளியாம் கருணையின் முகமாம் காதினில் வைரம் ஜொலிப்பதைப் பார்
கோதை முகத்தைப் பார் பூமாதேவியை பார் ஆனந்தமாம் பரமானந்தமாம் (பார்)

ஆடிப்பூரத்தில் உதித்தவளாம் இங்கு அனைவரும் வந்து சேவிக்கலாம்
வடபத்ர சயனரை சேவிப்போமே வாழ்வில் இன்பம் பெறுவோமே (பார்)

—————-

ஆண்டாள் பாட்டு-04 :: மார்கழி மாதம்–ராகம்: அமீர் கல்யாணி

மார்கழி மாதத் திருப்பாவை ஊரெங்கும் மால் மணப் புகழோசை (2)
பாரளந்த மன்னன் ஏற்றமிகு புகழ்பாடி
பாருக்கெல்லாம் தந்த அருள்மாலை (மார்கழி)
பறையென்னும் கைங்கர்யம் பெறுவதற்கு
பண்ணவேண்டும் வழிகள் இன்னதென்று
பெரியோர் வகுத்த முறை கொண்டு கோதை தந்த
பேரின்ப வீடையும் பேற்றினைத் தருமே (மார்கழி)

————

ஆண்டாள் பாட்டு-05 :: ஆண்டாள் கல்யாண
ஆண்டாள் கல்யாண காட்சியைக் காணவே அந்தணர் பலரும் வந்தார்
ஆசையுடன் பல தேசங்கள் வாழ்ந்திடும் அரசரும் பார்க்க வந்தார்
வேங்கடமாமலை வாசனும் வேகமாய் வில்லிபுத்தூரில் வந்தார்
வேதியர் போலே வேஷம் பூண்டார் விரும்பியே மனமுவந்தார்
மாவிருஞ்சோலை வாழ் மாயனும் கேட்டுடன் மையலாய் மனம் தளர்ந்தார்
மாது கோதையை மணம் புரிவேனென்று மகிழ்வுடன் வந்திருந்தார்
திருத்தங்கலப்பனும் கேட்டுடன் கோதை மேல் தீரா மையல் கொண்டார்
தேவி கோதையைக் கல்யாணம் செய்வேனென்று திருவுள்ள்ந்தனில் நினைந்தார்
வாடா மலரை பூவைச் சூடிக் கொடுத்த திருவடபத்திரர் நினைந்தார்
ஆடி பூரத்தில் உதித்தவள் தனக்கென்று ஆசையாய்ப் படுத்திருந்தார்
பகிரங்கமாகவே பணீயரங்கேசனை பாராமலே கோதை
பரபரப்பாகவே தோழியர் கூட்டுடன் பகர்ந்தனளப்போதே

—————-

ஆண்டாள் பாட்டு-06 :: மல்லி வளர்னாடியாய்
மல்லி வளர்னாடியாய் வா வா வா
மலர் துழவில் தோன்றினாய் வா வா வா
பாடக மெல்லடியினாய் வா வா வா
பாதரசத் தாளினாய் வா வா வா
பட்டணிந்த இடையினாய் வா வா வா
மட்ட விழும் குழலினாய் வா வா வா
பக்தி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
முத்து மணி மாலையாய் வா வா வா
குவளை மலர் கண்ணினாய் வா வா வா
தவளை மலர் நகையினாய் வா வா வா
ஒளி படைத்த உடலினாய் வா வா வா
கிளி பிடித்த கையினாய் வா வா வா
கோதை என்னும் பெயரினாய் வா வா வா
கோவிந்தன் உயிரினாய் வா வா வா
வடிவெடுத்து அருளினாய் வா வா வா
அடியார்களை காக்கவே வா வா வா

—————

ஆண்டாள் பாட்டு-07 :: கோதை பிறந்த
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
ஜோதி மணிமாடம் தோன்றிடும் ஊர்
நீதியால் நல்ல பக்தர்கள் வாழ்ந்திடும்
வேதக்கோன் நித்தம் வசித்திடும் ஊர்

பாதகம் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும்
கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாதவரை
வையம் சுமப்பதும் வம்பன்றோ

மென்னடையன்னம் பறந்து விளையாடும் வில்லிபுத்தூரின் மகிமை சொல்ல
பன்னகமாய் பல நாவு படைத்துள்ள அன்னவனாலேயும் ஆகாது

வண்டுகள் பாடும் பொழிலழகும் – நல்ல தொண்டர்கள் வாழும் எழில் மிகவும்
கெண்டைகள் ஓடும் வயலழகும் – அதைக் கண்டு வணங்கித் துதிப்போமடி

மின்னார் தட மதில் சூழ்ந்தழகைச் சொல்லி மேனகையார் பலர் சேர்ந்தழகாய்
பொன்னார் மணிகள் அணிந்த கோதை முன்பு நன்றாக கும்மியடிங்கோடி

——————-

ஆண்டாள் பாட்டு-08 :: மங்களம் கோதையார்க்கும் மன்னார்க்கும்
மங்களம் கோதையார்க்கும் மன்னார்க்கும் மங்களம்
வங்கக்கடல் உலகில் வளரும் திவ்ய ஸ்தலங்களுக்கும் மங்களம்
மலர்யது பூமிகட்கும் வடபத்ரசயனருக்கும் மங்களம்
பாரிஜாத விரஜயர்க்கும் பட்டர்பிரான் மாமுனிக்கும் மங்களம்
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஆத்மகுரு பரம்பரைக்கும் மங்களம்
திருவேங்கட தாசன் சொல்லும் செந்தமிழ் கீர்த்தனங்களுக்கும் மங்களம்

—————

ஆண்டாள் பாட்டு-09 :: லாலி ஆடினாள்
லாலி ஆடினாள் லட்சுமி லாலி ஆடினாள்
ஸ்ரீ ஆண்டாள் இன்று இங்கு லாலி ஆடினாள்
ஸ்ரீரங்கபதியில் ஆதிசேஷனரவணையில்
ரெங்கநாதன் சகிதமாக மந்தகாச வதன்மோடு (லாலி)
வ்ருஷபாத்ரி திருப்பதியில் வேங்கடேசன் சகிதமாக
அபய ஹஸ்த அலங்கார அலமேலு மங்கையாக (லாலி)
ப்ரஹலாதனின் முறையை கேட்டு தூணைப்பிளந்து
காட்சி தந்த நரசிம்ம ரூபனான லட்சுமி நரசிம்மரோடு (லாலி)
காஞ்சி மாநகரிலே கருட வாகனத்திலே
வரதராஜ பெருமாளுடன் பெருந்தேவி தாயாராக (லாலி)
சரயு நதிக் கரையினிலே அயோத்தி மாநகரிலே
ஸ்ரீராம சந்திரனோடு சீதா தேவியாக (லாலி)
திருவிண்னகர திருத்தலத்தில் கல்யாண உற்சவத்தில்
ஒப்பில்லா அப்பனோடு பூமிதேவி தாயார் (லாலி)
திருவள்ளூர் திருத்தலத்தில் வீக்ஷாரண்ய க்ஷேத்தரத்தில்
வீரராகவ பெருமாளுடன் கனகவல்லி தாயாராக (லாலி)
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் திருமகளாய்
சூடிக் கொடுத்த சுடர் கொடியாய் ரங்கமன்னார் சகிதமாக லாலி ஆடினாள்…

—————–

ஆண்டாள் பாட்டு-10 :: வில்லிபுத்தூர் வளர் கோதை
வில்லிபுத்தூர் வளர் கோதை

விஷ்ணுசித்தன் மகள் பாவை (இரண்டு முறை)
துளப திருமண் மீதிலே பூ மகளாய் வந்துதித்தாய் (வில்லி)

மாந்தர்கள் பேதமை நீங்கவே இந்த மாநிலத்தில் வந்துமே
மாதவன் தன்னையே மனதினில் எண்ணியே மணமுடித்தாள் மாதரசி (வில்லி)

மானிடவர்க்கென்று பேசிடில் நானும் மாள்வேன் என்று சொல்லியே
நாரணன் தன்னையே நாடியே பாடியே நற்றமிழ்கோர் ஒப்புமுண்டோ (வில்லி)

கோவிந்தன் தன்னையே நாடியே கோபிமார்கள் யமுனை ஆடியே
பாவனை தன்னையே பாமாலை பாடியே பக்தி செய்தாள் பைங்கிளியே..(வில்லி)

—————

ஆண்டாள் பாட்டு-11 :: கனவிலும் நினைவிலும்–ராகம்: பிலஹரி–தாளம்: ஆதி

பல்லவி
கனவிலும் நினைவிலும் பஜனை செய்ய
கருணை செய்தருள் ஸ்ரீ கோதா தேவியே (கனவிலும்)
அனுபல்லவி
கண்ணணை நினைந்து நோன்பிருந்தாயே (இரண்டு முறை)
சூடிக் கொடுத்தவளே சுடர்க் கொடியே (சேர்த்து இரண்டு முறை) (கனவிலும்)
சரணம்
பெரியாழ்வார் பெற்ற திருமகளே
பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாயே (சேர்த்து இரண்டு முறை)
வில்லிபுத்தூர் நகரம் செழிக்க வந்தாயே (இரண்டு முறை)
ஒரு நூற்றூ நாற்பத்து மூன்றும் உரைத்தாயே (கனவிலும்)

—————-

ஆண்டாள் பாட்டு-12 :: தேவி நீயே துணை–ராகம்: கீரவாணி–தாளம்: ஆதி
பல்லவி
தேவி நீயே துணை – ஸ்ரீ சுடர்கொடியே
வில்லிபுத்தூர் வாழ் கோத தேவியே (தேவி…)
அனுபல்லவி
தேவாதி தேவன் ஸ்ரீ ரெங்கநாதன்
சித்தம்கவர் புவன சுந்தரி ஸ்ரீ (தேவி…)
சரணம்
பெரியாழ்வாரின் மாதவமே – திருப்பாவை முப்பதும் எமக்குரைத்தாயே
வாரணமாயிரம் பாடிய கோதையே – நல்ல வரமளிக்கும் திவ்ய மங்களச் செல்வியே (தேவி…)

————

ஆண்டாள் பாட்டு-13 :: (கோலாட்டம்) உறியில் வெண்ணெய் திருடி
உறியில் வெண்ணெய் திருடி, உரலோடு கட்டுண்டு
மரமாகி நின்றவர்க்கு முக்த்தியும்/வதமும் கொடுத்து
கோவர்த்தனமதனை, குடையாய் பிடித்த
கோபால கிருஷ்ணனுக்கு ஜெய மங்களம்
நித்ய சுப மங்களம்

பட்டு ரவிக்கையும் பவளதவளமும்
பதிமுத்துமாலையும், மூக்குத்தியும் சார்த்தி
நடனமாய் ஆண்டாள், மார்கழி நீராடி
நளினம் பெருகியே, திருவீதி தன்னில் வாராள் (வருகிறாள்)
மங்களம் மங்களம், மன்னார் கோதை உனக்கு மங்களம் மங்களம்

நாடு நகரிலுள்ள ஜீவன்களை தேடி
பாடி அழகில் திருப்பாவைதனைப் பாடி
ஆடிப்பூரமதனில் வந்து அரங்கர்க்கு மாலை
சூடிக் கொடுத்த தாயே கோதா உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம் மங்களம் மங்களம்

—————–

ஆண்டாள் பாட்டு-14 :: ஆண்டாள் கோதை வந்தாளே
ஆண்டாள் கோதை வந்தாளே அனைவருக்கும் அருள் தந்தாளே
ரெங்கமன்னாரை மணந்தாளே ராஜாங்க கோலம் கொண்டாளே (ஆண்டாள்)
ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தாளே சிறப்புடன் நாளும் வளர்ந்தாளே
பெரியாழ்வாரும் மகிழ்ந்தாரே பல்லாண்டு பாடி துதித்தாரே (ஆண்டாள்)
துளபம் மாலை அணிந்தாளே கண்ணனும் கண்டு மகிழ்ந்தாரே
திவ்ய தரிசனம் கண்டாளே ஜகமெங்கும் ஒளியாய் நின்றாளே (ஆண்டாள்)
அன்பே அமுதே ஆரணங்கே அடியார்க்கிரங்கி அருள்புரிவாய்
துன்பங்கள் அனைத்தும் தீர்ப்பவளே திருவே அருளே பூமகளே (ஆண்டாள்)

——————

ஆண்டாள் பாட்டு-15 :: கோதை நாயகியே–ராகம்: பிலஹரி–தாளம்: ஆதி
பல்லவி
கோதை நாயகியே – அம்மா கோதை நாயகியே
அனுபல்லவி
திருவில்லிபுத்தூர் தனில் பெரியாழ்வார் கண்டெடுத்த
திருமகளே ஸ்ரீ மகாலட்சுமியே (கோதை நாயகியே…)
சரணம்
நீ சூடிய மாலை தன்னை கண்ணனும் சூடிக்கொண்டான் (இரண்டு முறை)
பாடிய பாவைக்கு நாயகனாய் ஆகி நின்றான் – உன்
கனவிலே தோன்றி திருக்கரம் பற்றினான் – கருடாழ்வார்
துணையோடு ரங்கமன்னார் மாலை சூட்ட (கோதை நாயகியே…)

————–

ஆண்டாள் பாட்டு-16 :: பச்சைக் கிளியே
பச்சைக் கிளியே பச்சைக் கிளியே பறந்துமே ஓடி அந்த
பணி அரங்கராஜனை நீ அழைத்துமே வாடி
தென்னரங்கேசனுடைய திருவடி போற்றி
தேவி கோதை அழைத்தாள் என்று திடமுடன் பேசி…(பச்சைக் கிளியே)
தேன் பெருகும் சோலை சூழ்ந்த தென்னரங்கனை…
தேவி கோதை அழைத்தாள் என்று திகழ்ந்து நீ பேசி…(பச்சைக் கிளியே)
வண்டாடும் மாலையணிந்த மாலரங்கனை
வல்லி கோதை அழைத்தாள் என்று வணங்கிட நீ பேசி…(பச்சைக் கிளியே)
பாம்பணை மேல் பள்ளி கொண்ட பணியரங்கனை
பாவை கோதை அழைத்தாள் என்று பணிந்து நீ பேசி…(பச்சைக் கிளியே)

—————

ஆண்டாள் பாட்டு-17 :: ஸ்ரீவில்லிபுத்தூர் விஷேஷம்
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
ஜோதி மணிமாடம் தோன்றிடும் ஊர்
நீதியால் நல்ல பக்தர்கள் வாழ்ந்திடும்
வேதக்கோன் நித்தம் வசித்திடும் ஊர்

பாதகம் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும்
கோதைத்தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாதவரை
வையம் சுமப்பது வம்பன்றோ

மென்னடையன்னம் பறந்து விளையாடும் வில்லிபுத்தூரின் மகிமை சொல்ல
பன்னகமாய் பல நாவு படைத்துள்ள அன்னவனாலேயும் ஆகாது
வண்டுகள் பாடும் பொழிலழகும் நல்ல தொண்டர்கள் வாழும் எழில் மிகவும்
கெண்டைகள் ஓடும் வயலழகும் – அதைக் கண்டு வணங்கித் துதிப்போமடி
மின்னார் தடமதில் சூழ்ந்தழகைச் சொல்லி மேனகையார் பலர் சேர்ந்தழகாய்
பொன்னார் மணிகள் அணிந்த கோதை முன்பு நன்றாக கும்மியடியுங்க்கோடி

—————

ஆண்டாள் பாட்டு-18 :: சுட்டிச்சுழி நெற்றிச்சரம்
சுட்டிச்சுழி நெற்றிச்சரம் ஜடை அலங்காரத்தோடு
அம்மா உந்தன் தரிசனம் காண வேண்டும்
கட்டித் தங்க காசுமாலை கருநீல கல்ஹாரம்
அணிந்தவளே உன்னைக் காண வேண்டும் (சுட்டிச்சுழி)

பச்சை பசுங்கிளியேந்தி சந்திர ப்ரபைதனில்
வரும் பவனியை நானும் காண வேண்டும்
அச்சமெல்லாம் தீர்த்து வைத்து ஆனந்தம்
நல்கிடும் அன்னையே உன்னை நான் காண வேண்டும் (சுட்டிச்சுழி)

நித்தம் மாலை சூடித்தந்து நீலவண்ணக் கரங்களை
அடைந்தவளே உன்னைக் காண வேண்டும்
சித்தம் கவர் பாவை தந்த செங்கமல நாயகி – உன்
சேவை தன்னை நானும் காண வேண்டும் (சுட்டிச்சுழி)

சொல்லிலே வெள்ளமென நல்வாக்கு பெறுகிட
சௌந்தர்ய அன்னை உன்னை காண வேண்டும்
வில்லிபுத்தூர் விளங்கிட வேதங்கள் துலங்கிட
விளங்கிடும் அன்னை உன்னைக் காண வேண்டும் (சுட்டிச்சுழி)

————–

ஆண்டாள் பாட்டு-19 :: கிளி கண்ணி
இன்பமளிப்பவளே எழிலூறும் கோதை வள்ளி
என்னரும் தெய்வமடி – கிளியே எண்ணி துதிப்போமடி
பட்டர்பிரான் பெற்றெடுத்த பாவை அழகுடைய பெண்ணாகி நின்றாளடி – பேதையே
பேசும் நல் தெய்வமடி
ஜோதி மதி முகமும் சொர்ண மணி முடியும்
காதில் அணி துலங்க – சகியே காட்சி அளிப்பாளடி
பூங்குயில் பண்ணிசைக்க புதுவை அணிபுரத்து வேங்கடம் கண்டேனடி – கோதையே
வேண்டியதை தருவாளடி

—————–

ஆண்டாள் பாட்டு-20 :: லக்ஷ்மி கல்யாண
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
வசுதேவ தவபாலா அசுரர்குல காலா
சசிவதன ருக்மணி சத்யபாமா லோலா… (லக்ஷ்மி)
சாரங்கராஜன் உம்மை சரணமென்று பணிந்து
பார் புகழும் க்ருப சரித்திரம் பாட உமை நினைந்து… (லக்ஷ்மி)
கொப்போடு வாழைமரம் கொண்டு வந்து நிறுத்தி
சோப்புடைய பந்தலில் மேல்கட்டு கட்டி (லக்ஷ்மி)
மேல்கட்டு கட்டியதில் வெடிபூக்கள் சிதற
தெடில் பூக்கள் தொங்கவிட்டு தோரணங்கள் ஆட (லக்ஷ்மி)
தங்கவளை தளதளவென சரிகைபட்டு மின்ன
முன் முகத்தில் சுட்டி மின்ன மூக்குத்திகள் அசைய (லக்ஷ்மி)
முத்து முத்தாய் கோலமிட்டு குத்து விளக்கேற்றி
தவழ்ந்த கிருஷ்ணன் விளையாட, தங்கப்பாய் விரித்து (லக்ஷ்மி)
ராமாயணக் கதையை நாடி நான் கூற
நான்முகனும் சரஸ்வதியும் மகிழ்ந்து வரம் தார (லக்ஷ்மி)

—————-

ஆண்டாள் பாட்டு-21 :: வரம் தருவாய் ஸ்ரீ வர மங்கையே–ராகம்: கல்யாணி–தாளம்: ஆதி

பல்லவி

வரம் தருவாய் ஸ்ரீவரமங்கையே
என் வாழ்வெல்லாம் உன்னையே வாழ்த்தி வணங்கிடவே (வரம்)

அனுபல்லவி

மறந்தும் நான் தீவினை கறைபடாதிருக்கவும்
(உன்) மலர்பதம் தொழுதே
மகிழ்ச்சியில் திளைக்கவும் (வரம்)

சரணம்

திருமலையில் நீ அலர்மேல் மங்கையாக
திருத்தங்காலில் நீ செங்கமலத்தாயாராக (இரண்டு வரிகளும் இரண்டு முறை)
திருவில்லிபுத்தூரில் நீ ஆண்டாளக
திருவரங்கத்தில் நீ ரெங்க நாயகியாக (வரம்)

———-

ஆண்டாள் பாட்டு-22 :: ரங்கமன்னார் கிருபை வேண்டும்
ரங்கமன்னார் கிருபை வேண்டும்… அவன் திருவருள் பெற வேண்டும்
வேறென்ன வேண்டும்… (ரங்கமன்னார்…)

அவலப் பிறப்பொழிய வேண்டும் – அதற்கு வித்தம்? அவமாயை? அகல வேண்டும்
வேறென்ன வேண்டும்… (ரங்கமன்னார்…)
தொல்லுககில் நரரும் எல்லா உயிரும் சுகவாழ்வு வாழ வேண்டும்
வேறென்ன வேண்டும்… (ரங்கமன்னார்…)

காமம் முதல் பகையும் குரங்கு மனமும் செத்து?
உலகிலெல்லோரும் உய்ய வேண்டும் வேறென்ன வேண்டும்… (ரங்கமன்னார்…)

———–

ஆண்டாள் பாட்டு-23 :: ஆண்டாள் சரித்திரம்-ராகம்: ஆரபி

சூடிக் கொடுத்த எங்கள் சுடர் கொடி திருமண சோபன வைபவம் காண்போம் – அவள்
பாடிக் கொடுத்த திருப்பாவை தனையும் அந்த பரமன் திருவடிகள் பாடுவோம்.. (இரண்டு முறை…இரண்டாவது முறை மெதுவாக)

ராகம்: குந்தலவராளி

நீலத்திருமேனியன் நெடுமாலை அடைந்திட நிலமடந்தை உள்ளம் கொண்டாள்
சீலத்திலே சிறந்த ஸ்ரீவிஷ்ணுசித்தரின்
செல்வ திருமகளாய் வந்தாள்..அ..ஆ (இரண்டு முறை…இரண்டாவது முறை மெதுவாக)

ராகம்: ஆனந்த பைரவி

ஸ்ரீவில்லிபுத்தூரில்…வடபத்ரஸயனனின் சேவகராம் பெரியாழ்வார்…
கோவில் அருகிலிலே துளஸிவனம் தனிலே
குழந்தை என அவளை கண்டார் (இரண்டு முறை…இரண்டாவது முறை மெதுவாக)

ராகம்: ஸாமா

சீதையை கண்டெடுத்த ஜனகனை போலவே சிந்தையிலே நிறைவு கொண்டார்
கோதை என பெயர் சூட்டியே அவளையும் கொள்ளை யன்புடன் வளர்த்து வந்தார் (இரண்டு முறை)

ஹம்ஸாநந்தி

பாமாலை கொடுத்தவள்..பரிமளரங்கனை பாடி பரவசமடைந்தாள்
பூமாலைகள் சூட்டு பூகணனங்கள்? போற்றி வழிபடவும் செய்தாள் (இரண்டு முறை)

ராகம்: ரஞ்சனி

தந்தை தொடுக்கும் மலர் மாலைகள் அனைத்தையும்
தான் முதலில் சூடிக் கொண்டாள்
அந்த மாலைகளை ஆலயத்திறைவனாம்
அரங்கனுக்கே அர்ப்பணம் செய்தாள் (இரண்டு முறை)

பாகேஸ்வரி

ஓங்கி உலகளந்த உத்தமனை பாடி
உள்ளன்புடன் வழிபட்டாள்
“வேங்கடவற்கென்னை விதி” என்ன இறைவனை
வேண்டியவள் துதி செய்தாள் (இரண்டு முறை)

ராகம்: ஸிந்து பைரவி

சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமல்
சாற்றியவண் புகழ்பாடி, வங்கக் கடல் கடைந்த வேங்கட நாதனை
வாய் மணக்க துதி செய்தாள் (இரண்டு முறை)

ராகம்: ஸாரங்கா

அனவரதமும் அந்த அரங்கனை அன்பினாலே அவனை ஆண்டாள்
கனவிலும் நினைவிலும் காவேரி ரங்கனே கணவன் என உறுதி கொண்டாள் (இரண்டு முறை)

ராகம்: காபி

ஆயனும் தனக்காக அவதரித்த கோதையின் அன்பினுக்கே அடிமை ஆனார்
நேயமுடன் அவளை நேரில் வதுவை கொள்ள நீலமாலவன் உள்ளம் கொண்டார் (இரண்டு முறை)

ராகம்: கல்யாண வஸந்தம்

வாரணங்கள் சூழி வரிசங்கம் முழங்க வாஸுதேவன் அவனும் வந்தான்
தோரண பந்தலில் தோழியருடன் கூட்க் தோகை மயில் அவளும் வந்தாள்

ராகம்: ரேவதி

மறையவர்கள் ஓத மற்றையோர் மகிழ்ந்து மங்கள மடந்தையர் பாடிட…ஆ
குறையொன்றுமில்லாத கோவிந்த ரங்கனும் கோதையின் கைத்தலம் கொண்டான் (இரண்டு முறை, இரண்டாவது முறை உயர்த்தி)

ராகம்: மத்யமாவதி

தேவரும் முனிவரும் திருமண வைபவம் தரிசனம் செய்து மகிழ்ந்தார்
பாவை நோன்பிருந்து பூமிதேவி ரங்கனை பதியென அடைந்து மகிழ்தாள்…அ..ஆ (இரண்டு முறை(

உடனே…

திருவாடிப் பூரத்து ஜகத்துதிதாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளாய் வாழியே
பெரும்புதூர் மாமனுக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயிரரங்கற்கே கன்னியுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே
வண் புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே..

—————-

ஆண்டாள் பாட்டு-24 :: ஆண்டாள் பாத சரம்
ஆண்டாள் பாத சரம் விலை மதிக்க பரமனால் முடியாது
அதைப் பணித்திடப்பவுன் ஏது?
பாருலகில் அதன் பெருமை பகர்வார் இப்போது
திருக்கை வளையல் அழகு செய்ய முடியாது
இந்த ஜெகத்தினிலேயது
அருள் கொடுக்கும் ஹஸ்தமது ஜொலிக்கும் சேவிக்கும் போது
கூந்தல் அழகைச் சொல்ல குவலயத்தில் முடியாது
அதைக் குறிப்பிடப்படாது
பின்னல் சடை வண்ணம் போலே பூலோகத்தினில் ஏது?

ஆண்டாளருளிச் செய்த திருமொழியைக் கேளும்
அந்தத் திருப்பாவையை நாளும் பாடிப் பறை கொள்வதற்கும் பாருலகில் எல்லோரும்
அந்தணர்கள் வேதியர்கள் அரம்பையர்கள் சூழ இந்த அகிலமெல்லாம் வாழ
ஆண்டாள் நீராடினாளே அடியார்கள் சூழ

நீராடும் நாள் முதலாய் முக்காலம் உனைத்தேடி முக்காலம் உன் பதம் பாடி
உன் முன்னழகை பார்த்தோம் அம்மா முச்சந்தினில் கூடி முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் கூடி
ஆண்டாள் சன்னதியை நாடி சேவிக்கக் காத்திருக்கிறார் சேதனர்கள் கோடி
வானுலகத் தேவரெல்லாம் வாசலில் காத்திருக்க ஆண்டாள் – கருணையுள்ளம் பெருக்க
சேவை காட்ட வேண்டுமென்று சிந்தை அதிகரிக்க
கண்ணன் போலும் ராமன் போலும் கள்ளழகர் போலும்
ஆண்டாள் – வடபத்திரர் போலும் வந்து சேவை காட்டினாலே வானுலகர் எல்லோர்க்கும்

———–

ஆண்டாள் பாட்டு-25 :: கோதாய் உனக்கு மங்களம்
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
நாடி நரையிலுள்ள ஜீவன்களைத் தேடி(இரண்டு முறை)
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
பாடிய அழகியதோர் திருப்பாவை தனைப்பாடி
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்

ஆடி உத்ஸவத்தில் கார்த்திகை கொடியற
தம்பதி இருவரும் பதினார் வண்டி ரதம்தனில் வர
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
ஆடிப்பூரம் தனிலே வந்தரங்கர்க்கு மாலை
சூடிக் கொடுத்த தாயே சொன்னேன் உன் புகழை

கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
ஆழ்வார் குமரி? நாச்சியார் உனக்கு மங்களம்
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்

—————–

ஆண்டாள் பாட்டு-26 :: கோதாதேவியே! அநந்த கல்யாண
ராகம்: கல்யாணி
பல்லவி
கோதாதேவியே! அநந்த கல்யாண குணநிதியே அருளமுதவாநிதியே
மத்யமகாலம்
கோதிலா உன் திருவாக்கில் ப்ரவாஹம்
கலைவாணி எனவரும் கவிதா ரஸம் தந்த (கோதாதேவியே)
அநுபல்லவி
சேதநர் உய்ந்திடவே ஜகந்தனில் அவதரித்த
தேனமுதத் திருமொழி தீந்தமிழ்ச் சுவைதந்த (கோதாதேவியே)
சரணம்
சோபிதமாம் உனது சிவந்த அதராம்ருதம்
சோனை எனும் நதி தாண்டிவா?
தேவி! உன் அங்க சௌந்தர்ய குசதடமோ?
துங்கபத்ரை எனும் நதி தடமோ?

மத்யகோலம்

அப்ராக்ருதாநந்த விரஜை நதியோ – உன் அருளிச்செயல் (தந்த) கற்கண்டிதுவோ?
இப்புவியிற் தானும் ஸுபநர்மசைவியனும் அத்புத வெள்ளமது அச்சுத ——- அதுவோ? (கோதாதேவியே)

————–

ஆண்டாள் பாட்டு-27 :: வெள்ளிக் கிழமையில் ஆண்டாள் வைபோகம்
ராகம்: ஆனந்த பைரவி
பல்லவி
வெள்ளிக் கிழமையில் ஆண்டாள் வைபோகம்
வேடிக்கை என்ன சொல்வேன் (இரண்டு முறை)
அனுபல்லவி
திருவாடிப்பூரத்திலே திருத்துழாய் வனத்திலே – ஸ்ரீ விஷ்ணுசித்த்ர் குலத்திலே
வில்லிபுத்தூர் ஸ்தலத்திலே…. (வெள்ளி..)
சரணம்
தங்க குறட்டிலே ரெங்கமன்னாருடன்
பெண்கள் இருபுறமும் மங்களம் பாட
எங்குமுள்ள அடியார்கள் இன்புற்றிருக்கவே
இங்கு வந்தவதரித்த கோதை நாயகியே

————–

ஆண்டாள் பாட்டு-28 :: கோதா! உன் மஹிமை
ராகம்: அடானா
தாளம்: ஆதி
பல்லவி
கோதா! உன் மஹிமை பேசவும் தரமா ரங்க நாதப்ரியே ! தேவி ! க்ருபாநிதியே
அனுபல்லவி
மாதா, உன் திருமொழியாம் ப்ரேம பக்தியினால்
மாதவன் கண்ணனையே காதற்கவி பாடும்

மத்யம காலம்
மதுரவசனாம்ருத கானரஸம் தந்த
மங்கையே! ஜகம் உய்ய அவதரித்த (கோதா!)
சரணம்
ஆயகலை அறிந்துணர்ந்த உன் தாதை நல்லாழ்வார்கள்
நாயகனை நினைத்துருகும் நாயகி பாவம் கொண்டார்
ஆராய்ந்துணரவும் முடியுமோ! ஆணினம் ஆனதாலே
நாயகியே நீயுணர்ந்த ப்ரேம ரஸம்

மத்யம காலம்
பக்தி பெருகும் ஸார பேரின்ப காதற் பாவனை ப்ரணய ஊடற் கூடலும்
யுக்தியாய் மடலூறும் தன்மையும்
பாவையே! நீ அறிந்த ப்ரேம ரஸாநுபவம் (கோதா!)

————

ஆண்டாள் பாட்டு-29 :: அன்னை கோதாதேவி அருள் பெற்ற வெங்கட குரு
அன்னை கோதா தேவி அருள் பெற்ற வெங்கட குரு
அருளின கோதாஸ்துதி வைபவமதனை
பன்னிசை பாடிய பரமானந்தம் பெருகும்
பாரினில் புகழ் ஓங்கும் பவபிணி நீங்கும்
தென்னரங்கேசரும், தேவி ரெங்கநாயகியும்
திருவுள்ளம் உகந்து தரும் திருவருள் பெருகும்
இன்னல் அகன்றிடும் அரங்கன் இணையடி பணிந்திட
இகபரசுகமே… எங்கும் நிறை சுப மங்களமே..
மங்களம், மங்களம், மங்களம்…
மன்னார் கோதைக்கு மங்களம் மங்களம்….

————-

ஸ்ரீ கோதா கோபால ஸ்தோத்ரம் –ஸ்ரீ மதி திருவேங்கடம் அம்மாள்

யது வம்ச ஸமுத்பூதம் த்விஜ வம்ச
வஸூ தேவ ச ஸத்புத்ரம் விஷ்ணுசித்தர் ச புத்ரீ
தேவகி கர்ப்ப ஸம்பூதம் துளஸீ கர்ப்ப ஸம்பூதம் காண உத்பவம்
யதுநாம் குலதீபம் பட்டார்ய குல தீபிகாம்
கார்க்காச்சார்யா விஷ்ணு சித்த மதம் அவரோ ரிஷி இவர் ஆழ்வார் வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் எல்லாம் கண்ணன்
நீல ஜீமுத இந்திர நீல மணிப்ரபாம் இவள் யுவா குமார ரூபஞ்ச யுவதிசய குமாரிணி
மஞ்சு மஞ்சீரா பாதாம் நூபுரம் ஸ்நிக்த பீதாம்பரம் ரத்னா சிகப்பு வஸ்திரம்
சிங்க நடை அன்ன நடை
ஹரிசந்தன குங்குமப்பூ
மணிரத்ன விபூஷணம் திவ்ய மங்கல்ய பூஷணம்
யாஷிடி சாட்டை இவள் கிளி கையில்
சந்த்ர சூர்யா முகாம்புஜாம் சந்த்ர இவ
இந்தீவர கரு விழியாள் -அவனுக்கு செங்கண் சினந்து
கிரீடம் -பின்னல் இவளுக்கு
த்ரிபங்கி லலிதா இருவருக்கும்
சர்வ லோக விதாதா -அவனையும் சேர்ந்து தாங்குபவள் இவள் விஸ்வம் பரா இவள்
சரணாகத கோப்தா அவன் -வத்சலாம் இவள்
திவ்ய ஸிம்ஹாஸனம் ஆரூடம் திவ்ய அலங்கார சோபினாம் அன்யோன்ய காஷினாம்
த்ரைலோக்ய திவ்விய தம்பதி அன்யோன்யா சத்ருசம்
ஏகாசனம் அடியேனுடன் அருளி -திருவடி பண்ணாங்க மூவரையும் வணங்கி
வழு விலா அடிமை செய்ய நாமும் பிரார்த்தனை செய்வோம்

————-

ஸ்ரீ கோதா பஞ்ச ரத்னம் ஸ்ரீ
கமலாதாய நயனாம் -நத கரணாம்-வைகுந்தம் என்னும் தோனி
சசி வதனாம் மம சரணாம்
பய ஹரணாம்
வர பூஸூர தனயாம் -நிலத்தேவர் விஷ்ணு சித்தர் திருமகள்
நூதன நகரம் பஜ
நானே தான் ஆயிடுக -சேஷ பூதர் ஹ்ருதய தாமரை

இரண்டாம் ரத்னம் யதி சேகர ஸஹஜாம் சகோதரி
பர உபகார தூய்மை
ப்ரஹ்மாதிகள் தொழும் -பர்ஜன்ய தேவதைக்கு ஆணை ஆழி மழை பாசுரம்
கிளியையும் வணங்கி கோதாவையும் வணங்குவோம்

ரெங்க மன்னர் -ஸூ மணி நீல -கருணை ரசம் பொங்கும்
கண்கள் கடாக்ஷம் இது என்ன மாய மயக்குகள்
ஜன போஷணம்

சரணாகத ஜன ரக்ஷணம்
பிருந்தாவனம் -அயோத்யை இருக்க ஆசைப்படுகிறீர்
யமுனைக்கரையில் ஆசை
அநு காரம்
கழலாத வளைகள்
பந்தார்விரலி -சீரார் வளை
நீங்காத செல்வம் நிறைய

அத்புத சரிதாம் -கேசவ நம்பியைக் கால் பிடித்து

———-

திருப்பாவையில்
மார்கழி ( 3 முறை ), திங்கள் ( 4 முறை )
பறை (11 முறை ) நீராட்டம் (6 முறை )
திருவடி (6 முறை), பாடி (18 முறை )
நாராயணன் (3 முறை ),ஓங்கி உலகளந்த (3 முறை), கோவிந்தன் (3 முறை),
கேசவன் (2 முறை ), மாதவன் (2 முறை ),
மாயன் (2 முறை ), மணிவண்ணன் ( 2 முறை ),
நப்பின்னை (4 முறை ) ,நந்தகோபன் (5 முறை ),
யசோதை (2 முறை ),செல்வம் (7 முறை ),
ஆராய்ந்து (2 முறை), செங்கண் (3 முறை),
புள் (4 முறை ), முலை ( 4 முறை),
மாரி ( 2 முறை), மழை ( 2 முறை),
பால் (6 முறை ), கோயில் ( 4 முறை),
விளக்கு ( 5 முறை ), தாமரை ( 3 முறை ),
மலர் ( 3 முறை ), தூயோமாய் (3 முறை),
கண்ணி ( 3 முறை ), கறவை (3 முறை ),
போற்றி ( 7 முறை ), பிள்ளாய் ( 2 முறை ),
பிள்ளை ( 3 முறை ), எழுந்திராய் (19 முறை), எம்பாவாய் (30 முறை ) பிரயோகங்கள் செய்யப்பட்டுள்ளன.
திருமாலின் இடக்கைச் சங்கு ( 5 முறை ),
திருமாலின் திருக்கண் ( 4 முறை ),
திருமாலின் திருவாய்
( 3 முறை ), திருமாலின் திருவடி
( 3 முறை ), திருமால் அவதரித்த ஆயர்குலம் ( 5 முறை ) பிரயோகங்கள் செய்யப்பட்டுள்ளன.

செந்தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்தாக அமைவது “ழ”கரமாகும்.
இந்த ழ கரத்தை தனது திருப்பாவை மூன்றாம் பாசுரமான “ஆழி மழைக் கண்ணா” எனும்
ஒரே பாசுரத்தில் 11முறை பயன்படுத்தியுள்ள பான்மை “பாடவல்ல நாச்சியார்” ஶ்ரீகோதை ஆண்டாளுக்கே பொருந்தும்.

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.