ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -81-90–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

முன்பு இவனைக் காணப் பெற்றவர்கள் என் பட்டார்களோ என்றாரே –
அவன் தன்னைத் தான் காணப் பெற்றுப் படுகிற பாட்டைச் சொல்லுகிறார் –
கீழ் ஸ்ரீ தண்ட காரண்யத்தில் அக்காலத்தில் காணப் பெற்றவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கிறார் என்றுமாம் –
அவர்களுக்கே அல்ல -எனக்கும் விடிந்தது என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

ஓர் இரவும் ஒரு பகலுமே யுள்ளது -எம்பெருமானை அறிவதற்கு முன்பும் பின்பும் -முன்பு பகல் கலவாது -பின்பு இரவு கலவாது –
அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் -உறங்காத என்னையும் கண்டேன் –
கனவில்-இந்த்ரியங்களால் கலக்க ஒண்ணாத படி மானசத்தால் யுள்ள ஜ்ஞானத்தாலே அழகிதாகக் கண்டேன் –

————-

அவ் வடிவு அழகைக் கண்ட மாத்திரமேயோ -அவ் வடிவிற்குத் தகுதியான நாச்சியாரையும் கூட காணப் பெற்றேன் -என்கிறார் –
கீழ் -நாராயணனைக் கண்டார் -என்றார் -இப்போது ஸ்ரீ லஷமீ சநாதானாகக் காணப் பெற்றேன் -என்கிறார் –
வெறும் நாராயணனை அல்ல -திரு நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் -பிரபையோடே காணப் பெற்றேன் –

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

வடிக்கோலம்-கோலம் தனை வடித்து -அதில் நன்றான அம்சம் ஆய்த்து இங்குத்தை அழகாய் இருப்பது –
இதில் ருஷீஷாம்சமான கோலமுடையார் யாரோ -என்று அருளிச் செய்வர் நஞ்சீயர் –
ஜகத்தில் அழகு எல்லாம் கோதாகப் பிறந்தவன் அழகு இங்குத்தைக் கோது –
அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருவனுமே -இவளுக்கு விசிஷ்டமாக அவளோடு கூடினவன் என்று விஷய பூயஸ்தை-
இருவர் கூடினால் பாத்தம் போராத படியான விஷயம் இன்றிக்கே எல்லாரும் திரண்டு வந்து அனுபவியா நின்றாலும்
எல்லை காண ஒண்ணாத படி புக்கார் புக்காரை எல்லாம் கொண்டு முழுகும்படி அழகு குறைவற்று இருக்கும் இறே
கரையிலே நிற்பாரையும் இழுத்துக் கொள்ள வற்றான வடிவு அழகு இருக்கிறபடி-

————

கீழே -74- பெரும் தமிழன் நல்லேன் பெரிது -என்று தம்மை மதித்து அநந்தரம் கவி பாடுவதும் செய்தார் –
இங்கே நாச்சியாரும் அவனுமான சேர்த்தியை அனுசந்தித்துக் கூசி -நாம் இவ் விஷயத்திலேயோ கவி பாட இழிவது –
என்ன சாஹசிகனோ -என்று கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –
அங்கு சர்வ விசஜாதீய வஸ்துவைப் பேசுகையாலே என்னோடு ஒப்பார் உண்டோ என்றார் –
இப்போது அவ் வஸ்து தன்னை ஸ்ரீ லஷமீ ச நாதமாக அனுசந்திக்கையாலே அங்குத்தைக்கு வி சத்ருசமாகச் சொன்னேன் -என்கிறார் –
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் உன்னை என் சொல்லி யான் வாழ்த்துவனே -திருவாய் -3-1-6-
நல்லேன் பெரிது -என்றார் ஐஸ்வர்யத்தைக் கண்டு வெருவித் தீயேன் என்கிறார் –
பேசிற்றும் தப்பாய் பலம் ஆசைப்பட்டதும் தப்பாய்த்து –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பரிபூர்ண விஷயத்தை அபரிபூர்ணமாகச் சொன்னேன் -அதுக்கு மேல் கேட்டார் செவி கன்றும்படி வெட்டிதாகவும் சொன்னேன் –
விசத்ருசமாகச் சொன்ன அளவேயோ –ஓன்று சொன்னேனாய் அதுக்குப் பிரத்யுபகாரமும் வேணும் என்று இருந்தேன் –
இவர் பின்னை ஒரு பிரயோஜனத்துக்காக கவி பாடுவாரோ என்னில்
இக் கவி பாட்டுக்காக அவன் ஒரு கால் ஏறிட்டுக் கடாஷிக்குமாகில் -அதுவும் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பெரிய பேறு
என்று இருப்பார் ஒருத்தர் இறே -அத்தாலே குறை இல்லை –

——————–

மற்றவை எல்லாம் செய்தபடி செய்ய ரசிக்கும் விஷயம் இதுவே கிடி கோள் என்கிறார் –
அவனை விட்டு வர ஒண்ணாமைக்கு ஹேது இருக்கிற படி –
ஒரு ஆஸ்ரிதனுக்குத் தன்னைக் கொடுத்த படி கண்டவாறே வெருவுதல் தீர்ந்து நம்மது என்று அனுபவிக்கிறார் –

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

நரம் கலந்த சிங்கம் – சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் சேர்ந்தாப் போலே இருக்கை –
வெறும் மனிச்சாதல் -சிம்ஹமாதல் காணிலும் உபேஷிக்க வேண்டி இருக்கை –
ஒரு தேச விசேஷத்திலே போனால் புஜிக்கத் தக்க அம்ருதம் சம்சாரத்திலே மிகவும் போக்யம் என்கிறார் –
அங்கண் மா ஞாலம் –திரு அவதாரத்துக்கு ஈடான நிலம் –

———————

அவனுடைய ரச்யதையை அனுசந்தித்தவாறே அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார்-

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

ஆழியான் -போக்யனுமாய் விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் இருக்கை –
எம்பெருமானும் அமுதமும் -கோதாம்படியான சொல்லு -எல்லா போக்யதையும் தன்னுடைய
போக்யதையிலே பொதிந்து இருக்கையாலே அவனை அமுது என்கிறது –
இது அவன் தன்னையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய் இருந்துள்ள
சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து திருவடிகளிலே நிர்மமனாய் விழுந்தேன்-
அறிந்து கவி பாடினேன் அல்லேன் -ஏத்தித் தொழவே எம்பெருமான் அபிசந்தியாலே கவி யாய்த்து –
ஏத்தி நவின்று – மிகவும் ஆதரித்து ஏத்தினேன் -ஆதராதிசயம் தோற்றப் புகழ்ந்து கொண்டு சொல்லி
நன் மாலை ஏத்தித் தொழுதேன் –

———–

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ சாதன அனுஷ்டானம் பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –
சமாதிக தரித்ரமான வஸ்துவை ப்ராபிக்கை -சமாதிக தரித்ரமான உபாயத்தாலே யாக வேண்டாவோ –
பண்டு ஆஸ்ரயித்தவர்கள் ஒன்றும் பெற்றிலர்கள் நான் பெற்ற பேற்றைப் பார்க்க-என்று கருத்து-

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

அதி ஷூத்ரனான நான் நின்று என்ன தபஸ்ஸூ பண்ணிக் கண்டேன் -அவன் காட்ட கண்டேன் இத்தனை இறே
ஒரு தபஸ் ஸூ பண்ணாதே நிர்ஹேதுகமாகப் பெற்றேன் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8-
வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் -4-5-9-
காண்பன் கொல் இன்று –நேற்று நினைக்கில் அன்றோ இன்று அடி அறியலாவது –

—————-

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப காலமே தொடங்கி அடிமைச் சுவடோடு கூட
அவன் படியை அனுபவித்துப் போருகிறேன் -என்கிறார் –இப்பேறு இன்று பெற்றேன் அல்லேன் என்கிறார்-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

இம் மஹா ப்ருதிவியை ஒருவர் இரக்க அன்றியே தானே சென்று அளந்த திருவடியை –
அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ -பூமி கிடந்த இடம் எல்லாம் தான் சென்று அளந்தான் அத்தனை அன்றோ –
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது -என்கை-
திருக் கோட்டி எந்தை –ஸ்ரீ வைகுண்டத்தில் மேன்மை மாத்திரம் கண்டேனோ -முதல் காட்ஷியிலே பூரணமாகக் கண்டேன் –

——————–

அவன் தானே விஷயீ கரித்தாற்கு அவனைக் கிடைக்கும் அத்தனை அல்லது வேறு சிலருக்குக் கிடையாது என்கிறது-

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பெரிய பெருமாள் –மாம் -என்ற சௌலப்யத்திலும்-இங்கு சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –
மாம் -என்ற சௌலப்யத்தை -வென்று ஓட வைத்த -புடம் போட்ட -மாம் –
செம்மை யுடைய திருவரங்கர் -நாச் -11-10-
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -நாச் -11-3-அவ்விடம் பெறுவார்க்கும் இவர் நினைப்பிட வேணும் –
திறம்பா வழி-0ஏக பதத்தால் நிர்ணயித்த வழி – பர வியூஹ விபவங்களுக்கு நித்ய முக்தர் முக்த ப்ராயர் பாக்யவான்கள்
பக்கலிலே கண்ணழிவு சொல்லி ஆஸ்ரயணம் தவிரலாம் –
அர்ச்சாவதாரத்திலே ஆஸ்ரயணத்துக்கு அங்கனே கண் அழிவு இல்லை என்று கருத்து -தேவதாந்த்ரங்கள் என்றுமாம் –
அவனாலே அவனைப் பெறுதல் அவனாலும் தன்னாலுமாக அவனை இழத்தல் -தன்னாலே அவனை இழத்தல் –
பிரதிகூலராய் இழப்பாரும் அனுகூலர் என்று பேரிட்டு கொண்டு பிரதிகூலராய் இழப்பாரும் ஆக இழக்கை இரண்டு விதம் –

———-

நீர் இப்படிச் சொல்ல நம்மையே பற்றினாருக்கு உதவினோமோ என்ன -செய்திலையோ -என்கிறார் –
இசைந்தாருக்குச் கர்மம் செய்யும்படி சொல்லுகிறார் –
பிரதிகூல நிரசனம் பண்ணும் படியையும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும் சொல்லுகிறார் —

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-

ஐஸ்வர்யம் தோற்றக் கொண்டாயோ -அர்த்தித்வம் தோற்ற -மாணியாய் அன்றோ கொண்டது –
மாணியாய் – இரப்பிலே தகண் ஏறின படி -ஸ்ரீ வைகுண்டமே தொடங்கி இரப்பிலே மநோ ரதித்தான் –

———

கம்சனைக் கொன்றோம் -ஆனையைக் கொன்றோம் -பூமியை அளந்தோம் -என்று நம்முடைய செயல்களையே சொல்லும் இத்தனையோ –
உமக்குப் பெற வேண்டுவது சொல்லீர் என்ன -எல்லா புருஷார்த்தங்களையும் அனுபவித்தேன் அன்றோ என்கிறார் –

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

ஸ்ரீ யபதியாய்- வத்சலனாய் -எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டிக் கை தொழுத பின் போக மோஷத்தில்
எனக்கு ஒரு குறை யுண்டோ -ஒன்றிலே எல்லாம் யுண்டான விஷயம்-
எங்கள் பெருமானை- அப்ராப்த விஷயத்தைப் பற்றினேனோ -அஸ்மத் ஸ்வாமின் –
கை தொழுதேன் – உபய விபூதியும் தன்னதாகை தொழுகை யோடு வ்யாப்தம் –
உன்னளவில் அல்ப அனுகூல்யம் பண்ணினால் மண்ணோடு விண்ணும் ஆளுகை பெரிய படியோ என்றபடி –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading