Archive for July, 2020

ஸ்ரீ திரு விருத்தம் -31-40–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 26, 2020

நீலம் உண்ட மின் அன்ன மேனி பெருமான் உலகு—திரு விருத்தம்-29–என்று பரம பதத்தே தூது விட்டாள்-
அது பர பக்தி பர ஞானம் பரம பக்தி யுகதர் ஆனார்க்கு அல்லது புக ஒண்ணாத தேசம் ஆகையாலே-
அவதாரங்களிலே தூது விட பார்த்தாள்–கண்ணன் வைகுந்தன் திரு விருத்தம்-30—
அதுவும் சம காலத்தில் உள்ளார்க்காய் பின்னை இல்லை ஆகையாலே-பிறபாடர்க்கும் அனுபவிக்கலாம் படி
சுலபமான திரு மலையிலே திரு வேம்கடம் உடையான் திரு அடிகளிலே மேகத்தை தூது விடுகிறாள் —

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31- -எம் கானல் அகம் கழிவாய் -9-7-

திரு மலைக்கு போகிற பராக்கிலே பேசாதே போகிற்றவற்றை கண்டு சொல்ல மாட்டிகோள் ஆகில்
உங்கள் திரு அடிகளை என் தலையில் வையும் கோள் என்றால் வைப்புதிகளோ
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின்கள் காண்மின் என் தலை மேலாரே -என்னுமா போலே –பெரிய திருமொழி -7-4-1-
இவர்க்கும் பகவத் விஷயத்திலார் யேனுமாக ஓர் அடி முற்பாடாய் இருப்பவர் திரு அடிகள் உத்தேசம் என்கிறார்-

—————-

கீழில் பாட்டில் -மேகங்களே என்னுடைய தூது வாக்கியத்தை கேட்டுப் போய்ச் சொல்லு கிறிகோள்-உங்கள் திருவடிகளை
என் தலையிலே வைக்கிறிலிகோள் -என்று சொன்ன படியே இவை செய்ய மாட்டி கோளாகில்-இங்கே வந்து ஒரு வார்த்தை
சொல்லிப் போங்கோள் என்ன -எங்களுக்குப் பெருங்கூட்டம் போகா நின்றது -துணை தப்பும் -என்றனவாகக் கொண்டு
அங்கே நின்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லிப் போங்கோள் -என்கிறாள் –

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே –32—வைகல் பூம் கழிவாய் -6-1-

அவை ஒரு வார்த்தை சொல்லுமாகில் சத்தை தரிக்கும் என்று இருக்கிறாள் –
வாய் பேச மாட்டாத அசேதனமும் கூட வாய் பேச வேண்டும்படியான தசையைச் சொல்லுகிறாள் –
நாமும் பிரணயித்தவத்தாலே பெற விராதே சாதன அனுஷ்டானம் பண்ண அமையும் அமையும் அத்தனை இனி -என்கிறாள் –
உங்கள் உடம்பு நோவ வருந்திப் பண்ணினான் தபஸின் பலமோ-இவ்வடிவு எங்கனே யாகப் பெற்றது –

————-

நாலு மூலையும் மேகங்கள் வந்து பரந்து மேக தர்சனத்தாலே பெண் பிள்ளை மோகித்து கிடக்க ,இவள் மோகத்தை கண்ட
திருத் தாயார் -மேகோ தயாஸ் சாகர சந்நிவ்ருத்தி -என்றும் -–பீஷாஸ் மாத்வாத பவதி பீஷோதேதி சூர்யா -என்றும்
என்னும் படியாக பதார்த்தங்கள் தன் கார்யத்துக்கு அவ் அருகு போகாத படி நிர்வகிக்கிறது-தன் ஆஞ்ஜையால் அன்றோ –
இவ் அளவில் இவளை பரிகரிக்கை அரிதோ என்று கூப்பிடுகிறாள்-

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33–ஏறாளும் இறையோனும் -4-8-

பிராட்டி அருள் மறுத்தாலும் ,மாறாதே இறே இருப்பது ஆழ்வான் அருள்-மடு அருகில் ஊற்று போலே-
அம்பரீஷ சக்கரவர்த்திக்கு துர்வாசர் வந்த போது ஜெயித்து கொடுத்ததை நினைத்து இருப்பது-
நீர் பிரபு ஆவைகையும் உம்மை பற்றினவள் பரிபவதுக்கும் ஒரு சேர்த்தி கண்டிலோமீ-
உகப்பார்க்கு உடம்பு கொடோம் என்று பிரதிக்ஜை கண்டிலோம் இறே
இவள் தரை கிடை கிடக்க உமக்கு படுக்கை பொருத்துவதே-படுக்கைக்கு மேல் விரி வேண்டாவோ
படுக்கையில் கிடப்பார்க்கு தனி கிடை அமையுமோ-
இவன் தானே கை தொட்டு அழிக்கிறான் என்னும் படி இவனோட்டை சம்பந்தம் -பிராப்தியை திரு தாயார் அறிந்து-
உணர்ந்து இருந்த படி பிரஜை கினற்றினில் விழுந்தால் வாங்காத தாய் தள்ளினாள் என்னுமோ பாதி
ரஷகன் ஆனவன் ரஷியாது ஒழிந்தால் அவ்வளவும் சொல்லலாம் இறே –

—————

அவதாரிகை-அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலே கூடல் இழைக்க தொடங்கினாள்–
அது தப்பின படியை கண்டு ,நாயகன் தன்னைக் கண்டால் கோபிக்குமோ பாதி கூடலோடே கோபிக்கிறாள்-

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34—மின்னிடை மடவார்கள் -6-2-

முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே-அது சிதறி வருகிற படியை கண்டு-அத்தோடு சீறி அருளா நின்றாள் என்பார்கள்
பட்டர்–இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே சீறி உதையா நின்றாள் -என்று
கூடல் இழைக்க புக்கவாறே கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்க புக்க வாறே அத்தோடு சீறா நின்றாள்-
நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே–
பெறுதற்கு அரிதான திரு அடிகளாலே ,கிடீர் அசேதனமான கூடலை உதைகின்றது
அவன் சர்வேஸ்வரன் ஆவது இவள் காலுக்கு இலக்கான வாறே
இவளை இப்படி பிச்சேற்றி இவள் பிச்சை கண்டு பிச்சேறி இருகிறவன்-
க்ரம பிராப்தியும் இவள் உடைய த்வரையும் சாதனம் இல்லை-அப்ரயோகம் -பலம் அவன் தன்னாலே இருந்த படி-

—————–

கீழ் வந்த வியசன தசைகள் எல்லாம் பிரகிருதி என்னும் படிக்கு ஈடாக மேல் வருகின்ற தசை-இருக்கிற படியை கண்டு –
இது என்னவாய் தலை கட்ட கடவது–என்று திரு தாயார் பயப் படுகிறாள்
இவளுக்கு முன்பு சம்ஸ்லேஷ தசையில் ,அனுபவித்ததை எல்லாம் பாதகமாய் தான் ஈடு பட்ட பின்பு-தன் இழவை பாராதே –
இத் தலைக்கு நலிவாயிரா நின்றது -என்று அவற்றையும் கொண்டு நோவு படுகிறாள்
வாயும் திரை யுகளில் பிராட்டியை போலே வழிப் பகையாய் இருக்கிறது
தன் மகள் துன்பத்தில் ஈடு பட்டு மேற்கு திசை பெண் தன் கணவன் பகல் போனதை கண்டு வருந்துவதை கண்டு வருந்துகிறாள் –
இத் தலை-மேற்கு திசை பெண் –வழிப் பகை -காணும் இடம் எங்கும் பகையாக இருக்கிறதே –

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –35–வாயும் திரையுகளும் -2-1-

சர்வேஸ்வரன் பக்கல் உண்டான திரு துழாய் மாலையிலே பிரவணமான மனசை உடைய இவளுக்கு-
நஞ்சூட்டின வாடை -பிராண அவஸ்தமாய் இருக்கையாலே -பிராணன் நின்ற நிலை எல்லாம் அறிந்து துழாவா நின்றது

ஸ்வா பதேசம் –
பகவத் விஸ்லேஷத்திலும் ,அனுகூல பதார்த்தங்களும் , பாதகம் ஆகிற படியை கண்ட
ஸ்ரீ வைஷ்ணவர்கள்-இவருடைய சத்தை எங்கனே தரிக்க கடவதோ -என்று அஞ்சுகிற படி-

—————

நன்மைகள் உள்ள தத் தலையாலே என்று இருக்கையும் -தீமைகள் உள்ளது நம் தலையாலே என்று இருக்கையும்-
ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கும் நம்மாழ்வாருக்கு ஸ்வரூபம் –
இப்படி அத்தலை அல்லது அறியா இருக்கச் செய்தேயும் இவனுடைய ரக்ஷகத்வத்திலே அதி சங்கை பண்ணும் படிக்கு
ஈடாகப் பிறந்த தசா விபாகத்தைச் சொல்லுகிறது –
ஏஷை வாசம் சதே லங்காம் ஸ்வே நாநீகே நமர்திதும் -என்று முதலிகள் -நான் அழிக்க நான் அழிக்க-என்று
சொல்லுமா போலே -வாடையும் ராத்ரியும்-நான் நான் என்று நலிகிற படி –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36––ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

இருள் என்று -வருகிற போது -சன்யாசியாய் கிட்டினவாறே ராவணன் ஆனால் போலே-
சர்வேஸ்வரன் தயை பண்ணின வாறே -அந்த பிரளயத்துக்கு முடிவு உண்டு
அவன் பக்கல் கிருபை இல்லாமையால் இப்பிரளயத்துக்கு முடிவு இல்லை-
அவர்கள் அங்கு கரண களேபர விதுரராய் இ றே இருப்பது -இங்கு இவள் சத்தையைப் பற்றி நலிகிற படி –
அங்கு பிரகிருதி அளவிலே -இங்கு ஆத்மா அளவிலே -அங்கு நீர் பிரளயம் -இங்கு ராத்திரி பிரளயம்
மூர்த்தமான ஜலம் மூர்த்தமான உடம்பை அழிக்கிறது அங்கு -இங்கு அமூர்த்தமான ராத்திரி அமூர்த்தமான ஆத்மாவை அழியா நின்றது
அங்கு அவற்றினுடைய ஆபத்து தான் அறிந்ததுவே -இங்கு ஆபத்தையும் அறிந்து ரக்ஷக அபேக்ஷையும் உண்டாய் இரா நின்றது-
கர்மம் அனுபவ விநாஸ்யமாய் இருக்கும் -இது அனுபவிக்க அனுபவிக்க வர்த்தியா நிற்கும்-

ஹேய ப்ரத்ய நீகரான தமக்கு தம்மை உகந்தாருடைய ஹே யத்தையும் போக்கிக் கொண்டு அருள வேண்டாவோ
பிரணயித்வம் வேண்டாவாகில் ஸ்வரூபமும் வேண்டாவோ -ஆபத்து நிமித்தமாக தாம் இரங்காது ஒழி கைக்கு பரதந்த்ரரோ
எங்களுக்குப் புறப்படில் குற்றம் -தங்களுக்கு புறப்படாது ஒழி யில் குற்றம் -வரில் எங்கள் சேஷத்வம் அழியும்
வராது ஒழியில் தம்முடைய சேஷித்வம் அழியும் -சேஷியைக் குறித்து சேஷ பூதன் அதிசயத்தை விளைக்கக் கடவன் இறே-
பூர்ண விஷயத்துக்கு அதிசயத்தை நினைக்கையாவது -ஸ்வ ரக்ஷணத்துக்கு புறப்படாது ஒழியுமது

இவளுக்குப் பிறந்த ஸ்வரூப அந்யதா பாவம்-ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதத்ஸ்ஸன-என்று
புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கு அஞ்ச வேண்டாத படி இருக்க -ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவனுக்கு
ப்ரஹ்மம் தன்னையே அறியச் செய்தேயும்-அஞ்ச வேண்டும்படி இறே இவள் தசை

ஒருத்திக்காக கடலை யடைத்து-இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும்
எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டுகே குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய
இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –
இதுவும் அழகியது ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அஸூயையாலே அழித்தான் அத்தனை காண் –
ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –

—————

கலந்து பிரிந்தாள் ஒரு தலைமகள் பிரிவாற்றாமையால் புறப்பட்டு க்ரூரமான காட்டிலே துஷ்ட மிருகங்களும் -மனுஷ்யரும்-
துர்த்துவநிகளும் துர் கதிகளுமான தேசத்திலே போக –திரு தாயார் இவளை படுக்கையில் காணாமையாலே –
எல்லா படிகளாலும் பொல்லாதாய் இருக்கிற தேசத்திலே – புறப்பட்டு போன இவள் -என் செய்கிறாளோ என்று –
இவள் போன வழியை பார்த்து மோஹிக்கிறாள்–
திரு கோளூரில் புகுகிற பெண் பிள்ளை உடைய திருத் தாயாரைப் போலே -ஓர் இடத்தை நிச்சயிக்க ஒண்ணாமையாலே –
எல்லா படிகளாலும் சோகிக்கிறாள்-

கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-மண்ணை யிருந்து துழாவி -4-4-

அவனுக்கு கையும் திரு ஆழியும் நிரூபகமாய் இறே இருப்பது –
அது பிறர்க்கு தாரகமாய் இறே இருப்பது –இது பிறர்க்கு அனர்த்தமாய் இருக்கும் இறே –

————-

யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்—
அது போல் இவரும் பகவத் அனுபவம் சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –
அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக யாத்ரையின் நின்றும் வேத யாத்ரையில் மூட்டும் தனை
அருமை போரும் ஆழ்வார்களை -வேத யாத்ரையில் நின்றும் லோக யாத்ரையிலே மூட்டுகை –
நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும்
ஆழ்வார்கள் – பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து -சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு –
இரண்டும் எம்பார் அருளி செய்தார் –

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -38–சொன்னால் விரோதம் இது -3-9-

இந்திரன் தான் இழந்த பூமியை கொண்டு போக – மகா பலி தன்னது அல்லாததை தன்னது என்று பிரமித்து –
அத்தை கொடுத்தோம் -என்று ஒவ்தார்யத்தை நினைத்து போக – இவர் திரு உலகு அளந்து அருளின போதை
தம் பேறாக அனுபவித்தார்-
இவருக்கு பகவத் விஷயத்தில் லோக யாத்ரை அனுசந்திக்க புக்கால் அதுவும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய்
நலியும் படி இறே பிறந்து ஞான வைசத்யம் —அத்தை சொல்லுகிறது .

——

கீழ் பாட்டில் அனுசந்தித்த நீலங்கள் தனக்கு போலியான திரு மேனியிலே கொண்டு போய் முட்டிற்று –
திரு மேனி தனக்கு பகை தொடையான திரு கண்களிலே போய் முட்டிற்று
திருக் கண்கள் தனக்கு அவ்வருகுபோக ஒட்டாதே நலிகிறபடி சொல்லுகிறது
க்ருஹீத் வாப் ரேஷ மாணா -இத்யாதி சுந்தர காண்டம் -36-4
கணை ஆழி பார்த்த உடன் பெருமாளையே கண்ட படி பிராட்டி மகிழ்ந்தாள்-

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39–ஏழை யாராவி -7-7–

கந்தவ்ய பூமியில் இல்லாத படிக்கு ஈடாக திருக் கண்கள் தொடர்ந்த படி –
கண்ணை செம்பளித்தவாறே கண்ணுக்குள்ளே தோற்றின படி –
புறம்பு எங்கும் தோற்ப்பித்து என்னை தோற்ப்பிக்க வந்தபடி —
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய்மொழி -7-7-1

————–

சர்வாதிகனை கவி பாடின இவளுக்கு ஒரு பகலை கவி பாடும்படி பிறந்த தசையை சொல்லுகிறது-

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் றுழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40–மானேய் நோக்கு -5-9-

நிதி உடையார்
எல்லா விநியோகமும் கொள்ளுகிறோம் என்று அஞ்சாது இருக்குமா போலே இவளுக்கும்-இவள் உண்டு
என்று சொல்லி அஞ்சாது இருக்கலாய் இறே இருப்பது மாதின் மணாளன் –
இவளுடைய போக்யதையாலே பிச்சேறி இறே இருப்பது -இவள் பக்கலில்
இவனுக்கு உண்டான வியாமோகம் இத்தனையும் தனக்கு உறுப்பு என்று இருக்கிறாள் –
அவனும் அவளுமாக துகைத்த மாலையை ஆசை படுகிறாள் -ராஜ குமரன் புழுகு நெய்யிலே பூவை தோய்த்து சூடுமா போலே-
இவன் தான் -சர்வ கந்த சர்வ ரச தத்வம் இறே –
வாசம் செய் பூம் குழலாள் -திருவாய்மொழி -10-10-2-என்று அங்குத்தைக்கும் வாசம் கொடுக்கும் படி இறே இவள் இருப்பது –
அப்படி பட்ட மிதுனமாய் இருக்கும் இருப்பிலே சூடி துகைத்தைதை இறே இவள் ஆசை படுகிறது –

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -தனியன் ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்- வியாக்யானம் –

July 26, 2020

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் அருளிச் செய்த தனியன் –
(ஸ்ரீ ராம பிள்ளை அருளிச் செய்தார் என்றும் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார் என்றும் சொல்வர் )

அவதாரிகை –
இதில் சப்த அவஸ்தாவஸ்திரரான சம்சாரிகளைக் குறித்து –
சம்சார துக்கம் அனுவர்த்தியாமல் ஸூகோத்தரமான திருநாட்டை பிராபிக்கையின் இடையாட்டமாக-
திரு விருத்தம் -என்கிற திவ்ய பிரபந்தத்தில் ஒரு பாதத்தை அப்யசித்து இருங்கோள்  -என்கிறது
அதாவது –
பொய் நின்ற ஜ்ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்  இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றத்தை நினைக்கிறது
பொய் -1-/ யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு –திருமாலை வணங்குவனே -95
அழுந்தார் பிறப்பாம் -100-என்றார் இறே தாத்பர்யம்-
பொய் -யாதானும் -அழுந்தார் -என்று விரோதி நிவ்ருதியையும் என்றார் இறே-ஆச்சார்ய ஹிருதயம்-
எல்லாம் கூட ஏக வாக்கியம் -என்றபடி

அடியேன் செய்யும் விண்ணப்பம் -1-/ மாறன் விண்ணப்பம் செய்த -100-/
பிரபந்தம் எல்லாம் கூட வ்ருத்த விஞ்ஞாபனம் –

கருவிருத்தக்  குழி நீத்த பின் காமக் கடும் குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த
திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் திரு நாட்டகத்தே  –

கருவிருத்தக் குழி–கர்ப்ப ஸ்தானம் ஆகிற ஹேயமான பள்ளத் தில் நின்றும்
நீத்த பின் -நழுவிய பின்
காமக் கடும் குழி வீழ்ந்து-காமம் என்னும் குரூரமான பள்ளத்தில் விழுந்து
ஒரு விருத்தம் புக்கு -ஒரு காரியத்துக்கும் யோக்யதை இல்லாத கிழத்தனத்தை அடைந்து
உழலுருவீர் -திரிகிற பிராணிகளே
உயிரின் பொருள்கட்கு-ஜீவாத்மாவாகிற வஸ்துக்களுக்கு
ஒருவிருத்தம் புகுதாமல் -ஒரு துர் நடத்தையும் சேராமல் படிக்கு
குருகையர் கோன் உரைத்ததிரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் திரு நாட்டகத்தே –ஒரு பாதத்தை அப்யஸித்து
ஸ்ரீ வைகுண்டத்தில் நிஸ் சிந்தையராய் இருங்கோள்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

வியாக்யானம் –
சம்சார தோஷத்தை தர்சிப்பிக்கையாய் இறே முதல் அடி தான் இருப்பது
கருவிருத்தக்  குழி நீத்த பின் –
கர்ப்ப
ஜன்ம
பால்ய
யௌவன
ஜரா
மரண
நரகங்கள்
ஆகிற அவஸ்தா சப்தகங்களில் முந்தின அவஸ்தையைச் சொல்லுகிறது –

கருவிருத்த குழி –என்று
கரு -என்று கர்ப்பமாய்
இருத்தக் குழி என்று இருத்தப் பட்ட குழி -வைக்கப்பட்ட குழி
மாதா பஸ்த் ரா -என்று இட்டு வைக்கும் பையோபாதியாய் இறே மாதா இருப்பது –
மக்கள் தோற்ற குழி -வயிற்ருக் குழி -பெரிய திருமொழி –
அது தான் அத்யந்தம் கர்ஹையாய் இறே இருப்பது –
புறக் கருவாய் விருத்தமான குழி என்றுமாம்
மாதுர் ஜடரக உல்பக –
இதன் தோஷத்தை பஞ்சாக்னி வித்யையில் பரக்க பேசிற்றே –
அங்கன் அன்றிக்கே –
வ்ருத்தமாய் வளைவாய் -சூழ் பிறப்பு வளைய வளைய வருகிற –
கழற்றப் போகாதே இருக்குமே –

குழி நீத்த பின்காமக் கடும் குழி வீழ்ந்துஒரு விருத்தம்புக்கு உழலுருவீர்
-தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
வெம் காமம் கடும் குழி வீழ்ந்து
துயரம் செய் காமம்
சாந்தேந்து மென்முலையார் தடம் தோள் புணர் இன்பம் வெள்ளத்துள்   ஆழ்ந்தேன்
அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
முற்ற மூத்து
அம்மை வயிற்றோடு யமன் கழுவோடு வளைய வளைய உழன்று திரிந்து
ஒரு விருத்தம் புக்கு -பொல்லா ஒழுக்கத்தில் விழுந்து –

உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு –
இப்படி உழலாத படி
அந் நலத்து   ஒண் பொருள் -திருவாய் -1-2-10-என்றபடி
பகவத் அனுபவ யோக்யமான ஆத்மவஸ்து க்களுக்கு –
ஆத்மா பிரயோஜனத்துக்கு –

ஒருவிருத்தம் புகுதாமல் –
ஏவம்விதமான வ்ருத்தங்கள்-ஏக தேசமும் பிரவேசியாமல் –
துர்  வ்ருத்தங்கள் ஒன்றும் சென்று அணுகாமல்
நடாவிய கூற்றம் -திரு விருத்தம் 6-இ றே
இப்பிறப்பு அறுக்கும் -திருவாய் மொழி-10-2-5-
அழித்தாய் யுன் திருவடியால் -திருவாய் -4-2-6-
அடியரை வல்வினைத்துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான்  -திருவாய் -1-7-2-

இப்படி நிவர்த்தங்கள் ஆனவை பிரவர்த்தியாமல்
குருகையர் கோன் உரைத்த
குருகையர் கோன் சடகோபன்
நல்லார் நவில் குருகூர் நகராரான ஆழ்வார் அருளிச் செய்த

திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர்
பிரதம பிரபந்தமான திரு விருத்தத்திலே ஒரு பாதத்தை ஓதி இருங்கோள்
உங்களுக்கு உஜ்ஜீவனத்துக்கு ஓர் அடியே போதும்
கலித்துறை விருத்தம்
தம்முடைய வ்ருத்த விஞ்ஞாபனம்
ஆச்சார்ய உச்சாராண அனுச்சாராண முகத்தாலே ஓர் அடி கற்று தன் நிஷ்டராய் இருங்கோள்
திருமாலவன் கவி யாது கற்றேன் -48-என்றார் இறே

இத்தை அப்யசிக்கிற எதுக்காக என்னில்
திரு நாட்டகத்தே
திருநாட்டு இடையாட்டமாக -அத்தைப் பிராபிக்கைக்காக

இருள் தரும்  மா ஞாலத்தில் அவித்யாதி தோஷங்களை அனுசந்தித்தால் இறே திரு நாடு  சித்திப்பது
உயிர் கட்கு ஒருவிருத்தம் புகுதாமல் திரு நாட்டகத்தே திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் -என்றுமாம்

ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கவில்ல தரம் உடையவர் ஸ்ரீ ஸூக்தி இறே

திருநாடு
திரு நகரியோடு அணித்தான திருவழுதி நாடு -என்றபடி

பவத் விஷய வாஸி ந -என்று இருந்தால் ஒரு விருத்தம் புகுதாது
ந தத்ர சஞ்சரிஷ்யந்தி இதி
திரு அஷ்டாக்ஷர சம்சித்தர் இறே ஆழ்வார்
ஆகையால் சம்சார நிவர்த்தகராய் மோக்ஷ பிரதான தீக்ஷிதருமாய் இருப்பவர்
திரு நாட்டுக்குள்ளே என்னுதல் திரு நாட்டு இடத்திலே என்னுதல் –
இரண்டு இடத்திலும் அவர் விஷய வாசம் உண்டு என்றபடி

ஆழ்வாருக்கு அவஸ்தா சப்தகங்களும் பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
கண்ணன்  நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்றவர் -திரு விருத்தம் -37-இறே
உடைய நங்கையார் திரு வயிற்றிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
அடிமை செய்யலுற்று இருப்பர்
அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன் –பெரியாழ்வார் -5–9
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
ஆழியங்கைப் பேராயர்க்கு ஆளாம் பிறப்பு -திரு அவதரிக்கும் போதே சடகோபராக அவதரித்து
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ ஜென்மமாய்
ஸூ ஜ்ஞான கந பூரணராய்
பின்பு அவன் முகத்தன்றி  விழியேன் -என்று முலைப்பால் அருந்தாதராய்

அருளான் மன்னு குருகூர் சடகோபன் -அருளே தாரகமாய்
அவ் ஊர் திரு நாமம் கற்ற பின்
என்ன வார்த்தையும் கேட்குறாதே
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும்–கைக் கண்டத்தையும் நடுக் கிடந்தத்தையும் சொல்லி
மேவி நைந்து நைந்து விளையாடல் உறாதே
யாவையும் திருமால் திரு நாமங்களேயாய்
ஸ்ரீ கிருஷ்ண கிரீடாம் ய ஆததே -என்று தத் சேஷ்டித அநு சாரியாய்

பதினாறு திரு நஷத்ரம் நிரம்பினவாறே
அமுத மென் மொழியான திரு வாய் மொழி பாடி  அடிமை செய்து
எல்லாம் கண்ணன் -என்று
பின்பு
பால் போல் சீரில் பழுத்து
அநந்தரம்
பாடிப் போய் காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ் புகும் காதலை யுடையராய்
ஐயார் கண்டம் அடக்கிலும்  நின் கழல் எய்யாது  ஏத்த அருள் செய் -என்னும் மநோரதத்தை யுடையராய்
போம் வழியைப் பெற்று
அவா அற்று வீடு பெற்று –
திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிக் கண் கூடி
வழு  விலா அடிமை செய்து வாழுமவர் இறே –

ஆகையால் அல்லாதார் ஸ்ரீ ஸூக்தி பந்த ஹேது
ஆழ்வார் திவ்ய ஸூக்தி முக்தி ஹேது-என்றது ஆயிற்று

இத்தால்
இழக்கிறது ஹேயமான சம்சாரம்
பெறுகிறது விலஷணமான பரம பதம்
இதுக்கு உடலாக சதாச்சார்யன் அருளிச்செய்த ஒரு நல்  வார்த்தையை
சத்துக்கள் இடத்திலே  அப்யசித்து
நிர்ப்பரனாய் இருக்கக் கடவன்-
என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆயிற்று  –

——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திரு விருத்தம் -21-30–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 25, 2020

கீழ் சொன்ன பகவத் பிரபாவம் இருவரும் அறிந்திலர்கள் –
எங்கனே என்னில் சொன்ன உக்தி செவி படுவதற்கு முன்னே உணருகையினாலே
உயர்வற உயர் நலம் உடையவன் என்னா –உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் என்னும் படியாலே-
மோஹித்த போது அறியாதே கிடக்கவும் , உணர்ந்தார் ஆகில் ,தம் உடைய பாழியான கிருஷ்ணா அவதாரத்தில் மண்டும் இத்தனை-

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21—வீற்று இருந்து ஏழு உலகம் -4-5-

இவர் தாம் அங்கும் கூட நின்று இங்கும் கூட போந்தார் போல் காணும்
ஆழ்வாருக்கு பரத்வத் தோடு-அவதாரத்தோடு வாசி அற நிலமாய் இருந்த படி-
பஞ்ச வடிக்கு போகும் வழியில் ஜடாயுவை கண்டால் போல் -வெண்ணெய்க்கு போந்த இடத்தே ஸ்திரீ ரத்னத்தை லபித்த படி –
விறகுக்கு போந்த இடத்தே விற்பிடி மாணிக்கம் பெற்ற படி-உத்தேசம் ஆகையாலே கூத்து -என்கிறார்–-
அம் கொம்போடே பொரலாம் ஆகில் , இக் கொம்புகளோடே பொருதல் என்றே வேணும் என்று பொருதான்-
அக் குலத்தை எல்லாம் உண்டாக்க பிறந்த படி-

————-

உங்களை புனம் காக்க இங்கன் கொண்டு வைத்த தார்மிகரோ என்கிறாள்
அபிமத விஷயம் இருந்த இடத்தே -தண்ணீர் -என்று கொண்டு புகுவாரை போலே
கையிலே தழையை முறித்து பிடித்து இவர்கள் இருந்த இடத்தே சென்று ,-இங்கனே ஓர் யானை போந்ததோ என்று-கேட்க
அவர்கள் நாங்கள் புனம் காக்க இருகிறோமோ உமக்கு மறு மாற்றம் சொல்ல இருகிறோமோ என் சொன்னீர் ஆனீர் என்கிறார்கள்–
தழை கொண்டு போகிறது என் என்னில் ஆச்ரயத்தை இழந்த தளிர் வாடுமா போலே ,காண் உன்னை பிரிந்து-நான் பட்டது என்று
தன் தசையை அவர்களுக்கு அறிவித்து கொண்டு சொல்லுகிறபடி–
இவன் உடைய கர ஸ்பர்சத்தாலே ,இது-சதசாகமாக பணைத்த படியை கண்டு ,உம்முடைய ஆற்றாமை அறிவிக்க வந்தீர் ஆகில் ,
கொம்பிலே நிற்கச் செய்தே காட்டா விட்டது என் என்கிறாள் –
பிறந்த இடத்தை விட்டு உம்முடைய பாடு வந்தாருக்கும் உண்டோ வாட்டம் –
உம்மை பிரிந்து பிறந்த இடத்தே இருப்பார்க்கு அன்றோ வாட்டம் என்கிறாள் –

கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாட்
டம்பார் களிறு வினவுவதையர் ,புள் ளூரும் கள்வர்
தம்பாரகத் தென்று மாடாதனதம் மிற்கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22—நல்குரவும் செல்வமும் -6-3-

தழையை காட்டி ஜெயிக்கும் இடத்தே ,வில்லை காட்டி ஜெயிக்க ஒண்ணாது இறே-
லீலா விபூதியிலும் ,நித்ய விபூதி யிலும் அன்றியே உமக்கு என்ன ஓன்று எங்கனே சம்பாதித்த படி-என்கிறார்கள்

ஸ்வாபதேசம்-
எம்பெருமான் உடைய ஸ்வரூப ரூப குணங்களிலே ஈடு பட்ட ஆழ்வார் உடைய ஸ்வரூப ரூப குணங்களை-கண்ட
ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தைக்கு ஆழ்வார் வார்த்தை-
கொம்பார் தழை கை -ஐம்புலன் ஆசை விடாமல் உள்ளோர்
சிறு நாண் எறிவிலம் -பிரணவ மஹா மந்த்ரம் -வில்லின் -உச்சாரணமும் நாண் ஒலியும் இல்லாதவர்கள்
வேட்டை கொண்டாட்டு -காம க்ரோதங்களை மட்டும் -சம்சார காட்டில் உள்ள கொடிய விலங்குகளை -தொலைத்தோம் என்று இருப்பவர்கள்
அம்பார் களிறு வினவு-இந்திரியம் ஆகிய யானை சப்தாதி விஷயங்களில் போக பின் தொடர்வதே இவர்கள் செயல் –
ஐயர் -இவர்கள் செருக்கை இகழ்ந்த படி
புள்ளூரும் கள்வர்–தம்பாரகத் தென்று மாடாதனதம் மிற்கூடாதன-வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே
வேதமாகிய பிரபல பிரமாணம் எங்கும் பரவச் செய்து -யாவரும் அறியாமல் மறைந்து நின்று ரஷிக்கும் எம்பெருமான்
தத்வ ஞானமும் பிரபத்தி மார்க்கத்தில் இல்லாத போலி யான செருக்கு கொண்ட இவர்களை திருத்துவதற்கே இங்கனம் கூறியவாறு –

——————-

இவனை நோக்கி இவர்கள் சில வசோக்தி -நெஞ்சம் நிறைய அன்பை வைத்து கொண்டு தேவை அற்ற
வினாக்களை எழுப்புதல்–சொல்ல ,இவன் தானும் ,இவர்களை சில வசோக்திகள் சொல்கிறான்

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாட மெரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23—கடல் ஞாலம் செய்தேனும் -5-6-

எங்கேனும் போகிலும் புனத்து அருகு அல்லது வழி இல்லை இறே இவனுக்கு-
இவர்கள் ஒழிந்த இடம் காடு முள்ளுமாய் இருக்கிற படி
பிள்ளை திரு நறையூர் அரையர் -உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க-திரு நகரி அருகே போக வேண்டும் பாபம் உண்டாவதே –
இது பாவம் ஆனால் இதற்க்கு எதிர் தட்டான பகவத் விஷயம் புண்ணியம்-
பகவத் விஷயத்தை சமாஸ்ரீயித்து கொண்டை மேலே காற்று அடிக்க திரியப் பெறாதே மீள ஒண்ணாத பாகவத சம்ச்லேஷத்தில்
இழிவதே-என்று-கொண்டை மேல் காற்று அடிக்க -என்றது தலைக்கு மேல் காற்று அடிக்க -அதாவது கவலை இன்றி இருத்தல்-
என் நெஞ்சை வளைக்கையும் ஜீவனம் இடாது ஒழிகையும்-கிட்டினவரை கீழ் சீரை அறுத்து கொண்டு அவர்களை
அநாதாரிக்குமா போலே நெஞ்சை அபகரித்து முகம்-கொடாதே இருக்கிற படி-

ஸ்வாபதேசம்-
ஆழ்வார் நித்ய விபூதியில் பிரவணராய் இருக்கும் இருப்பை கண்டு இவர் பக்கல் பிரவணராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தை-
நாயகன் ஏங்குவது இவளின் கடை கண் பார்வைக்கு -புனம் ஆகவாது இல்லாமல் போனேனே –
பிருந்தாவனம் செடி கொடி-மண் துகள் ஒன்றாக ஆசை பட்டது போல் இவனும் புவன் ஆக இல்லாமல் போனேனே பாவி என்கிறான்..
இவர்கள் இல்லாத இடம் எல்லாம் முள்ளாக தோற்றுகிறதாம்

—————

இவள் உடைய அதிமாத்ர பிராவண்யத்தை கண்ட திரு தாயார் இது என்னைவாய் முடிகிறதோ என்கிறாள்-

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய்
கொயல்வார் மலர் மேல் மனத்தொடு என் னான்கொல் எம் கோல வளைக்கே –24––கரு மாணிக்க மலை -8-9-

பின்னே புறப்பட்ட பிராட்டிக்கு திரு தோளிலே மாலையை வாங்கி இட்டு ,நாம் வரும் அளவும் விருத்த கீர்த்தனம்-பண்ணி இரு
என்று பழையவர்கள் நிர்வாகம் –மாலையை இட்டு திரு அடிகளை பிடித்து கொண்டு எழுந்து அருளினார்-என்று பட்டர்
அஸி தேஷணா -இவர் தோளில் மாலை இட்டதுக்கு இவள் கண்ணாலே மாலை இட்ட படி-

நம்மாழ்வார் திருவிருத்தத்தில் திருவரங்கம் திருவேங்கடம் திருவெஃகா மூன்றையுமே மங்களா சாசனம்
கோயில் திருமலை பெருமாள் கோயில் -என்று சிறப்பித்து கூறுவார்
எல்லா பாலை நிலங்களால் வந்த வெம்மையையும் போக்கி நமக்கு ரக்ஷகமான தேசம் திரு வெக்கா காண் அது
இந்தப் பாலை நிலம் அன்றிக்கே இன்னம் சில பாலை வனங்களும் கடக்கலாம் இந்நிலம் உண்டாக -என்பர் நம்பிள்ளை
அம் பூம் இளஞ்சோலை அப்பாலது -திருத் தண்கா -விளக்கொளி பெருமாள்
ஸ்ரீ விசுவாமித்திரர் உபதேசித்த பலை அபலை மந்த்ர வித்யைகள் போலே தலைவிக்கு தாபம் தணிக்கும் திருத் தண்கா –

ஸ்வாபதேசம்-
இப் பாட்டில் சம்சாரத்துக்கு இவர் உளர் என்று இருக்க ,இவருக்கு பகவத் விஷயத்தில் உண்டான-அதி மாத்ர பிராவண்யத்தைக்
கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் -இவர் படியும் இப்படி ஆவது இது என்னை முடிய கடவது -என்று இருக்கிறபடி-
ஆழ்வார் சம்சாரம் தவிர்ந்தமையையும் -உகந்து அருளினை நிலங்களின் போக்யதையும்-சொல்வது
கோது -சம்சாரம் -பாலை வானம் போலே -நித்ய ஸூரிகளும் வந்து அனுபவிக்கும் போக்யதை -ஷேமங்கரமான புகலிடம்-

—————-

பகவத் சமாஸ்ரண்யம் பண்ணினாரில் இப் பாடு பட்டார் உண்டோ என்கிறாள்
ஆரே துயர் அழுந்தார் துன்புற்றார் இத்யாதி–மூன்றாம் திரு அந்தாதி -27

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25—மாயக் கூத்தா வாமனா -8-5—

ஸ்வாபதேசம்-
ஆழ்வார் உடைய தசையை கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் சர்வேஸ்வரன் உடைய ரஷகத்வையும் அதி சங்கை
பண்ண வேண்டி இருக்கிற படி சொல்லிற்று-

————

புணர்ந்து உடன் போகிறான் ஒரு தலை மகனை -பாலை நிலத்தை கடந்து குளிர்ந்த நிலத்தே
புகுந்தோம் காண்-என்று ஆஸ்வசிப்பிகிறான்

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26–மாலை நண்ணி -9-10-

வெக்காவுதம்–பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே–திரு வெஃகா திவ்ய தேசம் அருகில்
திருத் தண்கா -ஸ்ரீ தேசிகன் திருவவதாரம் ஸூ சிதம்-இத்தால் என்பர்-

நித்ய ஸூரிகள் ஆனவர்கள் பூமியில்-இழிந்து ,திரு வெக்காவிலே தங்கள் உடைய அபிமத விஷயம் கிடைக்கை யாலே
பிரதஷிண -நமஸ்காராதிகளை பண்ணா நிற்பார்கள்-

ஸ்வாபதேசம்-
இத்தால் சம்சாரம் த்யாஜம் என்னும் இடத்தையும் பகவத் விஷயம் பிராப்யம் என்னும் இடத்தையும் அறிந்த இவர்க்கு
பிராப்தி தசை தாழ்ந்த படியாலே ,வந்த ஆற்றாமையை கண்ட-ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
சம்சாரம் சென்று அற்றதாகில் உகந்து அருளின தேசங்கள் இங்கே ஆகில்-பிராப்திக்கு உள்ளே அன்றோ நீர் நிற்கிறது –
என்று ஆற்ற வேண்டும் படி இருக்கிறது-
சரணா கதி விளக்க வந்த பாசுரம் சம்சார வெக்கை தாங்காமல் சோலைகள்
சூழ்ந்த திரு வெக்கா சேர்ந்து சரண் அடைய அருளுகிறார்-

————–

நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் உடைய கிருபையே இவ் ஆத்மாவுக்கு ரஷை
இவன் கடாஷித்தாலிவ் அருகில் உண்டான பிரதி பந்தங்களும் தானே அனுகூலிக்கும்
ராஜா குமாரன் தட்டியில் இருந்த பொழுது ,பிரதி கூலித்தவர்கள் அபிஷிக்தன் ஆனவாறே-தாங்களே வந்து ,
அனுசரிக்குமா போலேயும் பிராட்டியை தர்ஜன பர்த்சனங்கள் பண்ணின-ராஷசிகள் அனுகூலித்தால் போலேயும் –

சேமம் செம்கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம்பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்களோடு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27—எல்லியும் காலையும்–8-6-

மாமேகம் -என்று தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்
அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே இருப்பது அவன் படி-
தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று-
துயில் அமர்ந்த வேந்தின் பாடே நின்றும் பிரசாதம் வந்தது போலே காணும்-அழகியதாய் ஸ்ரமஹரமான திரு துழாய்
மாலையை ஸ்பர்சிக்க –சர்வாங்க சம்பந்தமாக கலக்க வேண்டா-ஸ்பர்சிக்கவே அமையும்
அவ் வாடை -முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள் –முன்பு அப்படி தடிந்து போன வாடை
ஈதோ வந்து தண் என்றதே –இப்படி வந்து குளிரா நின்றது-.ஈதோ வந்து தண் என்றது வையம் சொல்லும் மெய்யே-

பந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசில் பூண் அகில் சிற்றில் தூதை முதலாவன குண த்ரய
விசித்ர கர்ம ஸூ த்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க விழுந்து எழுந்தும் சுழன்றும் உழன்றும் பறி பட்டும்
அற்ப சாரமாமாவையுமாய் மதீயம் என்னில் விட்டகலவும் ததீயம் என்னில் இகழ்வறவும் முனிவதும் இக்காலம் ஈதோ
என்னப்படும் பொங்கைம் புலனில் போக்யாதி ஸமூஹம் –ஆச்சார்ய ஹிருதயம் -இரண்டாம் பிரகாரணம் இறுதி சூர்ணிகை – -149 –
இதில் ஈதோ-இந்த பாசுரச் சொல் –

—————–

கீழ் உண்டான மானச அனுசந்தானம் விஷய வைலஷண்யத்தாலே அவ் வருகே ருசியை பிறப்பித்து ருசியின் உடைய அதிசயத்தாலே
பாஹ்ய சம்ஸ்லேஷ அபேஷை பிறந்து ,நினைத்த படி பரிமாற பொறாமையாலே விஸ்லேஷமாக தலை கட்டிற்று.
சம்ஸ்லேஷ தசையில் அனுகூலித்த-பதார்த்தங்களும் இப் பொழுது பிரதி கூலிக்க தொடங்கிற்று .
தத் யாவக உபாயதே பிரசாதாய ஜாதயே — என்று யாதோர் அளவிலே நிர்வாகன் ஆனவன் கோபித்தால்
அவன் பரிகரமும் அப்படியே நிற்கும் -திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற போது வாடை காற்று குளிர்ந்து ..
அது தான் இப் பொழுது சுட தொடங்கிற்று –சோறும் கறியும் சமைத்த பின்பு இட பற்றாதால் போலே திரு வெக்காவின் நின்றும்
பிரசாதம் வந்தது என்ற அந்தரத்திலே உள்ளே புக்கு அணைக்க பெறாமையால் வந்த ஆற்றாமை-

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –வாள்வாய அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்ன –28–கங்குலும் பகலும் -7-2-

ராஜாக்கள் முனிந்தால் அவன் பரிகரமும் எதிரி யாம் போலே சர்வேஸ்வரன் நெகிழ்ந்த படியாலே-
அவன் உடைய அசாதாரண திரு துழாயும் நலிகிறது-
வாடையை சொல்லுகையாலே பூதங்களில் பிரதானத்தை எடுத்து ,பிரக்ருதிக்கு உபலஷணமாக சொல்லிற்று-
இவள் உடைய அவசய அதிசயத்தை கண்ட திரு தாயார் பெரிய பெருமாள் திரு அடிகளில் பொகட்டு-
நீ இங்கே கிடக்கிற கிடைக்கைக்கும் இவள் சோகத்துக்கும் சேர்த்தி கண்டிலோம் –

ஒரு ஸ்திரீ குற்றம் செய்தாள் என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்து இவளை ஹிம்சிக்க வேணும் என்ன-
புறம்புள்ள எல்லா வற்றையும் விட்டு , இவ் ஊரிலே உத்தேசய்மாய் இருக்கிற இவளை எத்தை சொல்லி நாம் நசிவது என்று அருளி செய்தார்
வீர சுந்தரனோடே எம்பார் விரோதித்து இருக்க ,அவ் ஊரில் உள்ளான் ஒருவன் அவனுடைய எதிரியாய் அவனுக்கு அஞ்சி ,
எம்பார் திரு அடிகளில் சரணம் புக ,ஸ்ரீ பாதத்திலே வர்திக்கிறவர்கள் அவனுடன் பண்டே விரோதம் உண்டாய் இருக்க செய்தே
இவனையும் கை கொள்ள கடவதோ என்ன-நம்மை -சரணம்-என்று புகுந்தவனை நாம் கை கொண்டால்
சரணா கதி தர்மமே எல்லா வற்றையும் ரஷிக்க வல்லது காண் என்று அருளி செய்தார்-

சுத்த சத்வ மயமான ஆத்மாவை ஜடமான சம்சாரம் நலியாமே நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கு வந்து கிடக்கிறது
பகவத் பிரபாவமும் அறிந்து ,சம்ஸார ஸ்வாபத்தையும் அறிந்து ,சம்ஸார பய பீதனாய் இருப்பான்-ஒருவனை பெற்றால் அன்றோ
சர்வேஸ்வரனுக்கு மாசுசா என்னல் ஆவது –இப்படி மாசுச என்றால் அன்றோ இவனுக்கு ஸ்திதொஸ்மி என்னாலாவது
திரு அரங்கா -நீ இங்கு வந்து கிடக்கிறது உன்னுடைய கர்ம பல அனுபவம் பண்ணவோ –போக பூமி தேடியோ –
ஒரு குறைவாளர் இல்லையாமையோ –ருசி உடையார் இல்லாமையோ –நீ அருளாது ஒழிகிறது என்-
மதி நலம் அருளினன் என்றால் அதன் பயனான துயர் அறு சுடர் அடி தொழுது எழ பண்ண வேண்டாவோ-
அறிவு கலங்கினார்க்கு இப்படி அருளாது ஒழிகை அனாதியோ –இப்போது உண்டானது அத்தனையோ —
ஆர்த்தருக்கு பண்டு உதவினான் –என்னும் இடம் பிரசித்தம் அன்றோ –
திரௌபதிக்கு – கஜேந்த்ரனுக்கு-பிரகலாதனுக்கு ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு-காகத்துக்கு

—————

பொரு நீர் திரு அரங்கா அருளாய் என்ற இடத்தில் ,அருளுகிறேன் என்னுதல் -அருளேன் என்னுதல் சொல்லாதே
பேசாதே இருந்த படியால் -வார்த்தை சொல்லும் இடத்தில் சில அன்னங்களைத் தூது விடுகிறாள் –

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச சீர்மையில் அன்னங்களே –29—பொன்னுலகு ஆளீரோ -6-8-

இப்படி பட்ட தூது -தரித்து இருந்து விடுகிறது அன்று –போகத்துக்கு விடுகிறது அன்று -சத்தா தாரகமாக விடுகின்ற தூது-
அவன் தான் செய்ய கடவத்தை இவள் செய்த படி -அத்தலை இட்டு விட கடவது இது இறே இவள் தான் விடுகிறது-
உங்கள் பாடு குற்றம் உண்டோ ? அவன் ஒரு குடியில் பிறவாதவன் ஆகையாலே கேட்டிலன்-
நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் -பிறர்க்காக உடம்பு படைத்தவன் அன்றோ –நீங்கள் குடி பிறவாதவர் ஆகையாலே
சொல்லிற்று இலி கோள்

ஸ்வாபதேசம்-
பகவத் விச்லேஷத்தில் இவர் உடைய ஆற்றாமை இருந்தபடி-பிராப்திக்கு சக காரிகளாய் இருந்தவர்களையும்
கூட இன்னாதாக வேண்டும் படியான தசையை சொல்லுகிறது –

————

சிலரை தூது போக விட்டால் ,அவர்கள் வரும் அளவு செல்ல ,ஆறி இருந்து ,சூது சதுரங்கம் பொருது போது-போக்கும்
விஷயம் அல்லாமை யாலே கண்ணால் கண்டவர் எல்லாரையும் தூது போக விடுகிறாள்-
யாம் கபிநாம் சகஸ்ராணி ஸுப ஹூன்ய யுதானிச திஷு சர்வாசூ மார்கந்தே சேய மாயாதி தாமயா–சுந்தர காண்டம் -30-3-
என்று முதலிகள் எல்லாரும் கூட புஜித்தாலும் புஜி த்து முடிய ஒண்ணாத ப்ரீதியாலே தனியே அகப் பட்டேன் என்று-முதலிகள்
எல்லோரும் கூட மது வனத்தில் புகுந்த பொழுது ததி முக பிரப்ருதிகள் நலிய –
அஹம் ஆவார் யிஷ்யாமி யுஷ்மா கம்பரி பந்தின -சுந்தர காண்டம் 62-2—என்று உங்களுக்கு விரோதி ஆனவர்களை
நான் போக்குகிறேன் நீங்கள் அமுது செய்யுங்கோள் என்ன –
இப்படி மது வனம் அழிந்த படி யை மகா ராஜர் கேட்டு–இது வெறுமனே ஆக மாட்டாது –பிராட்டியை கண்டார்கள் –
த்ருஷ்டா தேவி -சுந்தர காண்டம் 63-17–என்று நிச்சயித்து ,அப்போது அவ் அருகுக்கு உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே
வாலானது வளர்ந்து ருஷ்ய முக பர்வதத்திலே சென்று அமைந்தது –
அம் மது வனம் இன்றாகில் ராஜ புத்ரர்கள் முதுகோடே போம் -என்று பட்டர் அருளி செய்வார்-

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30—அஞ்சிறைய மட நாராய் -1-4-

தொழுது இரந்தேன்–காயிக வாசிக –மாநஸமும் உப லக்ஷணம் –
ஆற்றாமை மிக்கு அவனை மறந்து இருப்பதே நன்று என்று வெறுத்து நெஞ்சை கூப்பிடுகிறாள்-
ஜந் த்ரவ்யா கரண பண்டித -சிறிய திரு வடி -ஸ்வத சர்வஞ்ஞன் –ஸ்ரீ கிருஷ்ண பகவான்-தூது போக கடவத்தை
உங்களை இரவா நின்றேன்- என் தசை–உத்தியோகமும் மிகை என்று இருக்கும் அளவுக்கு அவ் அருகும் சொன்ன படி–
கிடாம்பி ஆச்சானோடு நம்பி திரு வழுதி நாடு தாசரும் மற்றும் நம் முதலிகளும் இருந்து அந்யத் பூர்ணாத் ஸ்லோஹம்–
அந்யத் பூர்ணதபாம் கும்பாத் தந்யத் பாதாவநேஜனாத் அந்யத் குசல சம்ப்ரசனா அந் நசேச்சதி ஜனார்த்தன– -கேளா நிற்க
அந்யத் என்கிறது ஒரு கால் அமையும் என்கிறதோ என்ன அரை கால் அமையும்-என்று கிடாம்பி ஆச்சான் நியமித்தான்-

பிரியேன் என்ற போதே -பிரிந்தான் ஆய இருக்கிறது காணும் இவளுக்கு-பிரிவை பிரசங்கித்த போதே பிரிந்தானாம் அத்தனை இறே

நீர் இருக்க மட மங்கை மீர் கிளிகள் தாம் இருக்க மதுகரம் எலாம் நிறைந்து இருக்க மடவன்னமும் உன்ன நிரையாய் இருக்க யுரையாமல் யான்
ஆர் இருக்கிலும் என் நெஞ்சம் அல்லதொரு வஞ்சமற்ற துணை இல்லை என்று ஆதரத்தினோடு தூது விட்ட பிழை யார் இடத்து உரை செய்து ஆறுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேட அரிய திரு வரங்கரை வணங்கியே திருத் துழாய் தரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வார் இருக்கும் முலை மலர் மடந்தை யுறை மார்பில் பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -11-20–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 25, 2020

இவனோடு கூட ஒரு படுக்கையிலே இருக்கச் செய்தே பிரிந்தான் என்று நினைத்து
பிரிந்தால் பிறக்கும் காரியமும் பிறந்து – செல்லுகிறது –

அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11–மாலுக்கு வையம் -6-6-

ஆகாரத்தே பட்ட முத்தும் –பசும் பொன்னாய் இருந்த படி-இவை உண்டாய் இருக்கப் போகையாவது என்
இக் கண்களைக் கண்டார் படும்பாட்டை -கண் தான் பட்ட படி

ஸ்வா பதேசம் –
இத்தால் ஆழ்வாருக்கு வைஷ்ணவர்களோடே கூடி இருக்கச் செய்தே பிரிவை அதிசங்கை பண்ணி
நோவு படும்படி பிரிவு பொறாமை -இருந்தபடி –

————-

கீழ் எல்லாம் வைஷ்ணவர்களை தலைமகனாகப் பேசிற்று -இதில் எம்பெருமானைத் தலை மகனாகப் பேசுகிறது –
பகவத் சம்ஸ்லேஷம் பாகவத சம்ஸ்லேஷ பர்யந்தமாய் நிற்கக் கடவதாகையாலும்
இவர்க்குக் கீழ் உண்டான பாகவத சம்ஸ்லேஷம் பகவத் சம்ஸ்லேஷம் பர்யந்தம் ஆக்கின படி –

பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—12-

தலைவன் பிரியப் பெற்ற தலைவி தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல்-

மணி மாமை என்று தன் நிறத்தைத் தானே கொண்டாடுவான் என் என்னில்
ஒரு நிறமே ஒரு எழிலே என்று அவன் கொண்டாடும் படிகளை கேட்டிருந்த படியாலே
தனக்குத் தான் அன்றியிலே அவனுக்குக்காகத் தான் இருக்கையாலும் –

சார்வ பௌமரான ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுருமா போலேயும்
ஸ்ரீ பர்ண சாலையில் நின்றும் இளைய பெருமாள் போக ராவணன் புகுந்தால் போலேயும் –பயலை பரக்கிற படி-
கலப்பதற்கு முன்பு முப்பது நாழிகையாய் இரா நின்றால்-கலந்தவாறே ஒரு ஷணமாய் இரா நின்றது
பிரிந்தவாறே கல்பங்களாய் இரா நின்றது –

ஈர்க்கின்ற சக்கரம் –பிரதிகூல ரைப் போய் ஈரும்-அனுகூலரை கையில் சேர்த்தியாலே ஈரும்
பிரதிகூலரை ஆண்மையாலே கொல்லும்-அனுகூலரை அழகாலே கொல்லும் –

தம்முடைய நெஞ்சை நல் நெஞ்சினார் என்பான் என் என்னில்
பிரஜைகளே யாகிலும் பகவத் விஷயத்தில் முற்பாடானார் ஆனாரை இங்கன் அல்லது சொல்லல் ஆகாது –

ஸ்வா பதேசம் –
மன ஏவ மனுஷ்யாணாம் -என்னும்படியாலே–இவர் நெஞ்சம் அங்கே பிரவணம் ஆனபடி –

————-

ஆசுவாச கரமான காலம் போகையும் ,பிரதி கூலமான காலம் வருகையும் ,அதற்கு சக காரிகள் குவாலாகையும்
ரஷகன் வாராது ஒழிகையும் முடிந்தோம் இறே என்கிறாள்

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
தினி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13—மல்லிகை கமழ தென்றல் -9-9-

ஆழ்வாருக்கு சம்சாரத்தோடு பொருந்தாமை இருந்த படி சொல்கிறது-
மறந்தும் புறம் தொழா அடிமைத் தனத்தை பாதுகாப்பார் யார் –வளை-அநந்யார்ஹ சேஷத்வம்-

————–

ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14-நலம் பாராட்டு துறை–துவளில் மா மணி மாடம் -6-5-

தோல் புரை போகிறதில்லை-அச்சேத்யோயம்-என்று அழிக்காததை அழித்தபடி-
அயர்வறும் அமரர்களுக்கு தாரக போஷகமாம் படி விட்டு இருக்கும் திருமேனி
அம்மான்-அவ் வடிவுக்கு தோற்று ஜிதம் என்று இருக்கும்-
அப்படி விலஷணமான விஷயத்தை காற் கடை கொண்டு ,அதிலும் விலஷணமான இக் கண்களை தேடி வருகிற படி–
அப்பிராக்ருதமாய் இருக்கிற படி –கண் என்று சம்சயித்து ,கயல் என்று நிர்ணயித்த படி-
பரமபதத்தினால் தேடப்படுகின்றன -நித்ய முக்தரும் ஆசைப்படும் கண்கள்-

————–

பிடியை இழந்த தொரு களிறு,தன் ஆற்றாமையாலே,அமாணனை பட்டு திரியுமா போலே ,இவர்களை இழந்து ,
தன் ஆற்றாமை யோடு திரிகிற படியை அன்யாபதேசத்தாலே ,ஆவிஷ்கரிகிறான்-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15—கண்ணன் கழலினை -10-5-

முக்தர் சம்சார யாத்திரையை நினையாதார் போல ,இவனும் இவர்கள் கண்களை கண்ட பின் ,
வேறு ஒன்றை நினைக்க அறியாது இருந்த படி-
அவனுக்கு தன் ஓர் ஆயிரம் பிள்ளைகளோ பாதி , இவளுக்கும் அநேகர் உண்டாய் இருக்கையாலே ,அவனோடு கிட்டினார்க்கு ,
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி-என்னுமா போல இறே இவர்களோடு கூடினாரும் இவளை போலே இறே இருப்பது-
இத்தனை காலம் வழி பார்த்துக் கண் மறைந்தோம்-இப்போது வந்தீரோ உம்முடைய ஆற்றாமை காட்ட –
நாங்கள் இருந்த காலம் எல்லாம் பொகட்டு இன்றோ உமக்கு போது விடிந்தது என்கிறான் –
இத்தால் ஆழ்வாருடைய வை லக்ஷண்யத்தைக் கண்டும் இப்படிப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டும் தாம் ஈடுபடுகிறபடி –

——————

சில காலம் சம்ச்லேஷித்த தலை மகன் பிரிந்தான் ..பிரிந்து முற்றினது என்னவாம் -பிரிந்து பிரதம தசை என்னவுமாம்
தோழி வார்த்தை என்னவுமாம் -தலை மகள் வார்த்தை என்னவுமாம்– அநேக காலம் கலந்து அல்ப காலம் பிரிந்தால்
அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி

பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16—பயிலும் சுடர் ஒளி -3-7-

பிரியில் தாங்கள் உளார் ஆகை என்று ஓன்று உண்டோ ?-
இத்தால் ஆழ்வாருக்கு சம்சாரத்தில் இருப்பு பொருந்தாது இருக்கிற படி-

——————–

சம்ஸ்லேஷித்து செல்லா நிற்க செய்தே முகம் தெரியாமே போக என்று நினைத்து ,இருளிலே நாயகன் தேரிலே ஏறி போக
தன் ஆற்றாமையாலே சக்கரவர்த்தி திரு மகனைப் போலே தேர் காலை மறைத்து போகாதே தெரியும் படி போன தேர் காலைப்
பார்த்து தரித்து இருக்க ,சமுத்ரமானது ,தன் திரையாலே வந்தது இத்தை அழிக்க புக ,கடலை நோக்கி சரணம் புகுகிறாள்
பெருமாள் போலே இவரும் கடலை சரண் அடைகிறார்

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் ஏறி கடலே–17—அணைவது அரவணை மேல் -2-8-

கடலுக்கு நெஞ்சில் சீற்றத்தாலே கருத்து இருந்தது -உள்ளது எல்லா வற்றையும் கொடுத்து உஞ்ச விருத்தி பண்ணி
ஜீவிப்பாரை போலே ,அவரை போக விட்டு வழி பார்த்து கிடந்தோம் –இத்தை அழியாதே கொள் என்கிறாள்-
சம்ச்லேஷம் அறிந்தாய் அத்தனை போக்கி –விச்லேஷம் புதியது உண்டிலை காண் –
அவனைக் கிட்டினார் பர சம்ருத்யைக பிரயோஜனராய் அன்றோ இருப்பது –உன்னைக் குற்றம் கொள்ளுகிறது என் ?
உனக்கும் குருகுல வாஸம் அங்கே அன்றோ ? தம்மையே ஒக்க அருள் செய்வாரே

————

ஏழாம் பாசுரம் போல் கால மயக்கு துறையாகும் இதுவும் ..அது மழை காலம் தொடக்கம் இது முடிவு –
இவன் இவள் ஆகியும் ,அவன் அவனாகையும் ,தசை இதுவாகையும்,இது அல்லது இல்லையே இருந்த படி –
கீழ் காண்கிற பதார்த்தங்களை அபலபித்து கால மயக்கு ஏற்பட -இங்கு பதார்த்தங்களை அபலப்பதும் செய்து
சாஸ்திர சித்த மானவற்றை முன்னிடுவதும் செய்தது -மேகத்துக்கும் கடலுக்கும் அன்யோன்யம் விரோதமாய் பிணங்குகிறது காண்-

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18—சூழ் விசும்பணி முகில் -10-9—

இப் பிரளயத்துக்கு அடி கடல் உடைந்தால் போல் இக் கண்ணில் வெள்ளம் காண்
காரிகையே–இவை எல்லாம் பொறுக்க மாட்டாத அபலை கிடீர்-
இவளை ஜீவிப்பைக்காக காலத்தை மயக்கி ஆசிவசிப்பிக்கிறாள் -நம்பிள்ளை
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -இது காலம் தெளிந்த பாங்கி இரங்கி உரைத்த பாசுரம் என்பர்-

——————–

ஆணை அணி வகுத்தால் போல-மேகம் நாலு மூலையும் கையும் அணியும் வகுத்து வர்ஷிகிற படியை கண்டு இவள் மோஹிக்க-
“எம்மின் முன்னவருக்கு மாய்வர் “-திருவாய் மொழி -1-1-5-என்னும் படி இவள் உடைய மோகத்தை கண்டு தோழியும் மோகிக்க
இவ் அளவிலே உணர்ந்து இருந்த தாயார் இவ் அவசாதம் நீங்கிடுக என்று ரஷா விதாநம் பண்ணுகிறாள்-

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19—பாலனாய் ஏழு உலகு -4-2-

அம் தண் துழாய் -போன உயிரை மீட்க வற்றாய் இருக்கை –சாந்தா கரணி -விசல்யா கரணி-என்னுமா போலே —
இறை கூய் அருளார்–பிரணயித்வம் தவிர்ந்தால் ச்வாமித்வமும் தவிர வேணுமோ ?
தாம் வந்து அணைத்து தம் தோளில் மாலை என் மார்பில் கிடக்க பேரா விட்டால் சத்தா தாரமாக அது தனையும் தந்தால் ஆகாதோ ?
தாமே வரவுமாம் -அழைக்க்கவுமாம்–பேறு அத் தலையாகவே என்று இருந்த படி-
இப்போது இவர் பழி என்கிறது–பகவத் பிராவண்யத்தை இ றே-அத்தை பழி என்பான் என் என்னில்-
அத் தலையால் வரக் கண்டு இருக்கும் அத்தனை ஒழிய இத் தலையால் பெற ப்ரவர்த்திக்குமது பழியாய் இருக்கும் இறே –
ஆன பின்பு பழி என்னத் தட்டில் இறே -நம்பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள்

இத்தால் ஆழ்வாருக்கு பக்தி வியதிரேகத்தில் அங்கே சம்பந்தம் உள்ளதால் ஒன்றாலே ஆகிலும்
தரிக்க வேண்டும் படி ஆற்றாமை மிக்க படி சொல்லிற்று-

——————-

மேஹ சந்தர்சனத்திலே தோழியும் தானும் மோஹித்துக் கிடக்க-இத்தசையைக் கண்டு சோகித்து இருக்கிற
திருத் தாயார் முன்னே தேவதாந்த்ர ஸ்பர்ச முடையார் புகுந்து பரிஹாரத்திலே பிரவ்ருத்தராக-அபிஜாதையுமாய்
இவள் பிரபாவத்தையும் அறிந்து இருப்பாள் ஒரு தோழி கருமுக மாலையை -நீர் கொடுக்க -என்று நெருப்பிலே இடுவாரைப் போலே –
இவளுக்கு பரிஹாரம் என்று தொடங்கி விநாசத்தையே உத்பத்தியா நின்றி கோள்-என்று அத்தை நிஷேதித்திக் கொண்டு –
இவளுடைய நோயையும் இந்நோய்க்கு நிதானத்தையும் இதுக்கு பரிகாரத்தையும் சொல்லுகிறாள் –

சின் மொழி நோயோ கழி பெரும் தெய்வம் ,இந நோய் இனது என்று
இன் மொழி கேட்க்கும் இளம் தெய்வம் அன்று இது வேலன் நில் நீ
என் மொழி கேண்மின் என் அம்மானை ஈர் உலகு ஏழும் உண்டான்
சொன் மொழி மாலை அம் தன் துழாய் கொண்டு சூடுமினே –20–வெறி விலக்கு துறை –தீர்ப்பாரை யாமினி -4-6-

சத்தா மாத்திரம் என்னும் படியான இவளை உண்டாக்கும் போது ஒரு சர்வ சக்தி வேண்டாவோ
இந்நோய் கைக்கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும் நோய் –பகவத் விஸ்லேஷத்திலே தரியாமை ஸ்வரூபமாய் இருந்த படி –
சொல் மொழி என்று உப ஜீவிக்கும் மருந்தும் -தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே -என்று மேல் பூசும் மருந்தும் –
தேவதாந்த்ர ஸ்பர்சமும் தத் சம்பந்தி ஸ்பர்சமும் இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்–
பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறது

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -1-10–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 24, 2020

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் அருளிச் செய்த தனியன் –

கருவிருத்தக் குழி நீத்த பின் காமக் கடும் குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த
திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் திரு நாட்டகத்தே –

இருள் தரும் மா ஞாலத்தில் அவித்யாதி தோஷங்களை அனுசந்தித்தால் இறே திரு நாடு சித்திப்பது
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கவில்ல தரம் உடையவர் ஸ்ரீ ஸூக்தி இறே–
அருளே தாரகமாய்-ஆழ்வாருக்கு அவஸ்தா சப்தகங்களும் பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்-

———–

இந்நின்ற நீர்மை -என்கையாலே முக்தர்
பல நீ காட்டிப் படுப்பாயோ -என்கையாலே -முத்த ப்ராயர் -என்றும்
மாறி மாறி -என்கையாலே -நித்யர் என்றும்
அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்கையாலே எம்பெருமான் என்றும் சங்கை வருமே-
இவர் சம்சாரத்தில் ஒருவராம் இத்தனை –
அராஜகமான தேசத்திலே ஆனையைக் கண்ணைக் கட்டி விட்டால் ஆனை எடுத்தவன் ராஜாவாமா போலே
எம்பெருமான் கடாஷித்தார் ஒருவராம் இத்தனை-

மகாராஜருக்கு பெருமாளைக் கண்ட பிரியமும் வாலிக்கு அஞ்சிப் போந்து இருந்த அப்ரியமும் போலே
இவருக்கும் பிரக்ருதியோடே இருக்கிற அப்ரியமும் எம்பெருமானைக் கண்ட பிரியமும் –
பகவத் விஷயத்தில் அவஹாகிக்கும் போது கடகர் வேண்டுகையாலும்-அனுபவ தசையில் வ்ருத்த கீர்த்தனம்
பண்ணுகைக்கு இவர்கள் வேண்டுகையாலே வைஷ்ணவர்களையும் தலை மகனாகப் பேசுகிறார் –

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றும்–அழுந்தார் பிறப்பாம் -என்றும் உபக்ரமமும் உபசம்ஹாரமும்
ஏகார்த்தம் ஆகையாலே-விரோதியைப் போக்கித் தர வேணும் என்கிறது இப் பிரபந்தத்தால் –

—————-

சர்வேஸ்வரன் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களையும் நித்ய விபூதி யோகத்தையும் லீலா விபூதி யோகத்தையும்
காட்டிக் கொடுக்க கண்டு இவ்வனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று அபேஷிக்கிறார் –

திருமாலால் மயர்வற மதிநலம் பெறும்படி அருளப்பட்ட நம்மாழ்வார்
தம்முடைய அனுபவ பரிவாஹங்களான பிரபந்தங்கள் நாலில் முதல் பிரபந்தமாய் இவர் தம் வ்ருத்தாந்தங்களை
முன்னிடுகையாலே திருவிருத்தம் என்ற பேர் பெற்ற பிரபந்தத்தில் முதல் பாட்டில் பூர்வ உபகார ஸ்ம்ருதியை
முன்னிட்டுக் கொண்டு உத்தர உபகார அபேக்ஷையிலே உபக்ரமிக்கிறார் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1—ஒழிவில் காலம் –3-3-

நின்ற-இது தான் என்றும் ஒக்க நிலை நின்ற படி -அழுந்தின படி –
இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே மூன்று பதத்தாலே பிரகிருதி புருஷ
விவேகம் பண்ணி அருளினார்
இந்நின்ற நீர்மை -ருஷிகள்பெருமாளுக்கு ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே-
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டுகிறார் -ஆளவந்தார்-
ஆழ்வார் பிறர் படியை காட்டுகிறார்-அம்மாள் நிர்வாஹம்-தம் படியைக் காட்டுகிறார் -ஆளவந்தார் நிர்வாஹம்
இது ஒரு வெட்டு -பொய் நின்ற ஞானம்-இது ஒரு வெட்டு – பொல்லா ஒழுக்கம் -இது ஒரு வெட்டு -அழுக்கு உடம்பு

இனி-உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு-
யாம் உறாமை -பரா அநர்த்தம் நெஞ்சிலே படுகையாலே நாட்டுக்காக தாம் மன்றாடுகிறார்-
யாம் -என்கிற இது -பரித்ராணாயா சாதூனாம் -என்கிற சாது பஹுத்வத்தைக் காட்டுகிறது
பசு மனுஷ்யா பஷி வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரய -இத்யாதிகள் படியே சம்பந்திகளையும் கூடக் காட்டுகிறதாகவுமாம்
உன்னுடைய அவதாரத்துக்கு பிரயோஜனம் சொல் என்கிறார் -நீயோ நானோ உபாய அனுஷ்டாம் பண்ணுவது சொல்லு-

மெய் -உன்னுடைய திவ்ய மங்கள விகிரஹத்துடன் சேவை சாதித்து அருள வேணும்
திரௌபதிக்கு வராமல் புடவை சுரந்தது போலே ஆகாதே
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் என்னும்படி என் அழுக்கு உடம்புக்குள்ளே ஜூகுப்ஸை பண்ணாதே அணியனாய் நின்று என்னவுமாம் –
விஞ்ஞாபனம் இதம் சத்யம்-மங்க வொட்டு உன் மா மாயை -என்னும் அளவும் செல்ல-
அறிவித்தால் இத்தலைக்கு செய்ய வேண்டுவது இல்லாமை-

அடியேன் -என்கிறார் இவருடைய நான் -இருக்கிறபடி –
நான் என்றாகில் இ றே -சொன்ன வார்த்தை -எனபது–அடியேன் -என்கையாலே -செய்யும் விண்ணப்பம் -என்கிறார்

பொய் நின்ற ஞானம் இந்நின்ற நீர்மை -என்கையாலே -விரோதி சொல்லிற்று
என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கையாலே -உபாயம் சொல்லிற்று
இமையோர் தலைவா -என்கையாலே பிராப்யம் சொல்லிற்று
அடியேன் -என்கையாலே பிராப்தாவைச் சொல்லிற்று
செய்யும் விண்ணப்பம் -என்கையாலே பிராப்தி பலம் கைங்கர்யம் என்று சொல்லிற்று –

இப்பாட்டில்
சுத்த அசுத்த ரூபங்களான அசித்துக்களுடைய பேதமும்
சித் அசித் பேதமும்
பத்த முக்த நித்ய விபாகத்தை உடையரான ஜீவர்களுடைய அன்யோன்ய பேதமும்
ஜீவ ஈஸ்வர பேதமும்
ஈஸ்வர ஐக்யமும்
ஞான ஞாத்ரு பேதமும்
சத் அசத் ஞான பேதமும்
சத் அசத் அனுஷ்டான பேதமும்
சித்த ஸாத்ய உபாய பேதமும்
பர அவர புருஷார்த்த பேதமும்
கிடக்கிறபடி யதாஸ்தானம் சப்தமாகவும் அர்த்தமாகவும் அனுசந்திப்பது

புருஷோத்தம வித்த்யையில் சொன்ன சர்வாதிக்யத்தை யுடையனான ஸ்ரீ யபதி தன்னுடைய திவ்ய அவதார பிரகாரத்தை
பஹுனி மே வியதீதானி என்று – தொடங்கி தான் அறிவித்தபடியே அறிந்தார்க்கு எல்லாம் அதிகார அனுகுண
உபாய பூர்த்தியைப பண்ணிக் கொடுத்து – இத் தேகம் விட்டால் இனி ஒரு பிறவி வேண்டாதபடி
ஸ்வ ப்ராப்தியைக் கொடுக்கும் என்கிற இவ் வுபகாரம் இப் பாட்டுக்கு பிரதான தாத்பர்ய விஷயம் ஆகிறது –

————

இமையோர் தலைவா -என்று அவனுடைய பரம பும்ஸ்வத்தை முதலிலே அனுசந்தித்து
அப்படி அவனைக் கிட்டப் பெறாமையாலே ஆண் -பெண்ணாம் படி யாயிற்று –
ஒரு பிராட்டி தசையாம்படி எங்கனே என்னில் சம்ச்லேஷத்தில் இனிமையும் விச்லேஷத்தில் தரியாமையும்
ச்வத சித்தமான சம்பந்தமும் –அனந்யார்ஹ சேஷத்வம் -உண்டாகையாலே –
அநந்ய சரணத்வம் அநந்ய போக்யத்வம் ததேக நிர்வாஹ்யத்வம் மூன்றும் உண்டே –

இவருக்கு கீழ்ச் செய்தது ஜ்ஞான லாபம் ஆகையாலே அநந்தரம் பிராப்தி பண்ணித் தர வேண்டும் என்று த்வரிக்கிறார்
ஈஸ்வரனுக்கு இங்கனே இருப்பதொரு புடை உண்டு-பிரஜைகள் பசித்திருக்க விருந்தினரைப் பேணுமா போலே
அசாதாராண பரிகரத்துக்கு தாழ்த்தும்-மகா ராஜர் கார்யம் செய்து பின்னை பிராட்டி கார்யம் செய்கை-

இவளுக்கு சம்ச்லேஷம் வ்ருத்தமாக கழிந்தது என்று அறிந்து இனி நாம் உடன்பட்டு இவள் சத்தையை உண்டாக்கிக் கொள்வோம்
என்று இது ஓர் வடிவு இருந்த படி என் இவ்விருப்பு நித்யமாக வேணும் – என்று தோழி மங்களா சாசனம் பண்ணுகிறாள் –

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2—கோவை வாயாள் -4-3-

அஸி தேஷணை-கண் கிடீர்-பகவத் வ்யதிரேகத்தில் கண்ணும் கண்ணீருமாய் இருக்கும் இது இறே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்
இத்தைக் காணும் அது இறே இவர்களுக்கு உத்தேச்யம்-இவ்விருப்பை இவனும் காணப் பெற்றதில்லை –
அசலிட்டுக் கேட்கும்-தோழி சொல்ல – இத்தனை இறே –
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் இவ்வடிவு உடையானும் தானேயாய் வருவானும் தானேயாய் இருக்கிறபடி –
மேகம் ஜலம் இரண்டாய் இன்றிக்கே ஜலமாகவே இருக்கை –
கண்களுக்கு கயலும் -கண்ண நீருக்கு தடாகமும் –

ஓர் அவயவம் நன்றாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கும்
ஒருவனுக்கு பவ்யமாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு நீர்மை உடையார் இல்லை என்று இருக்கும்
ஒருவனுக்கு நிர்வாஹகனாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு நிர்வாஹகர் இல்லை என்று இருக்கும்
இம்மூன்றும் கண் அழிவு அற உண்டான பசும் கூட்டு இறே பரதத்வம் ஆகிறது-
சந்தன கர்ப்பூர கும்கும கூட்டு போலே-இதுக்கு இறே இவள் ஈடுபட்டது
நீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவாரம் தொழும் -பத த்ரயத்துக்கும் வியாக்யானம்

ஸ்வாபதேசம்-பிரதம தர்சனத்திலே பிரகிருதி பிராக்ருதங்களிலே உபேஷை பிறக்கும்படி தமக்கு பகவத் விஷயத்தில்
பிறந்த ப்ராவண்யத்தைக்-கண்டார் உகந்து பேசும்படியை தாம் அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

————

கீழில் பாட்டில்-பிரிவின் பிரதம அவதி யாகையாலே-தன்னுடைய தசையை ஸ்த்ரீத்வத்தாலே ஒழித்தாள்
அங்கன் அன்றிக்கே தோழிக்கு சொல்லித் தரிக்க வேண்டும்படிக்கு ஈடான தசா விபாகத்தாலே
அவன் பின்னே போன நெஞ்சானது வருமோ -அங்கனே போமோ -என்று தோழியைக் கேட்கிறாள் –

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3—வெள்ளைச் சுரி சங்கு -7-3-

பெரிய பிராட்டியார் – ஆஸ்ரிதர் குற்றத்தை பொறுக்கும் பிராட்டி –
குற்றம் காண்பான் என் பொறுப்பான் என்-என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி
நப்பின்னை பிராட்டி ஷமை தான் ஒரு வடிவாய் இருக்கும் –
பெரிய பிராட்டியார் இவனுக்கு சம்பத்தாய் இருக்கும் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி -அது விளையும் தரை
நப்பின்னை பிராட்டி அதனை அனுபவிக்கும் போக்தா –

நிழற் போல்வனர்-அவனுக்கு நிழல் போலே இருப்பவர்கள் –ஒருவருக்கு ஒருவர் நிழல் போலே இருப்பவர்கள் –
ஆஸ்ரயித்தாருக்கு நிழல் போலே இருப்பவர்கள் –
மிக்க சீர் இத்யாதி-அநந்ய பிரயோஜனர் இட்ட அழகிய திருத் துழாயின் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில்
அநந்ய பிரயோஜனர் என்பான் என் என்னில் -அத்தலைக்கு பரிவார் உண்டு என்று தான் தேறுகைக்காக-

ஸ்வா பதேசம் –
பிராட்டிமாரையும் நித்ய சூரிகளையும் சொல்லுகையாலே சர்வ ஸ்மாத் பரனாய்-ஸ்ரீ வைகுண்ட நாதனாய்
இருக்கிற இருப்பிலே தமக்கு பாவ பந்தம் பிறந்தது என்னும் இடம் சொல்லுகிறது –

———–

இமையோர் தலைவா -என்னும்படியே நித்ய விபூதியைக் காட்டிக் கொடுக்கையாலே
அங்குள்ள பதார்த்தங்கள் ஸ்மாரகமாய் நலிகிற படியைச் சொல்லுகிறது –

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்
கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4—ஓடும் புள்ளேறி -1-8-

தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல்
திருவடி மேலே இருக்கிற இருப்பிலே தோளின் மாலையோடு அணைக்கக் காணும் ஆசைப் படுகிறது –
திருத் துழாயை முடித்து வந்து போலே காணும் பூதனையை முடித்தது –
பனி நஞ்ச மாருதமே -விசஜாதியர் செய்யுமத்தை சஜாதீயமான நீ செய்யக் கடவையோ-

————

மயர்வற மதிநலம் அருளப் பெறுகையாலே பரபக்தி பர ஜ்ஞான பரம பக்திகள் ஏக ஷணத்திலே இவர்க்கு உண்டாகையாலே
இங்கே இருக்கச் செய்தே-ஸ்மாரகமாய் நலியும்படி -இவருக்குப் பிறந்த ஜ்ஞான வைசத்யம் இருந்த படி –

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே —-5—மாயா வாமனனே -7-8-

நலம் பாராட்டு -சௌந்தர்யாதிகளை கொண்டாடுகை கிளவித் துறை –

பதார்த்தங்கள் ஸ்வ பாவ பேதமும் ஸ்வரூப பேதமும் பண்ணிக் கொண்டே யாகிலும் இவளை அழிக்க நினைத்த படி-
அவன் தனக்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் வேறு பட்டால் அவனைப் பின் செல்லுகிறவற்றைச் சொல்ல வேணுமோ

————-

நாயகி உடைய முழு நோக்கிலே அகப்பட்ட நாயகன் தாம் தாம் சத்தைக் கொண்டு தரித்து இருக்க வேண்டுவார்
இச் சந்நிவேசத்திலே செல்லாதே கிடிகோள்-என்கிறான் –

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6—உண்ணும் சோறு -6-7-

அம்பு -என்கிறது ஜாதி பன்மையாலே–சிலைகளும் -என்கிறது இரண்டாகையாலே
அம்பும் சிலைகளும் உபமானமாக சொல்லாதே தானேயாக சொல்லுவான் என் என்னில் -சர்வதா சாத்ருசம் உண்டாகையாலே –
தனக்கு என்ன ஒரு கொள் கொம்பைப் பற்றி அல்லது நிற்க ஒண்ணாத அளவிலும் செயல்கள் இப்படியாய் இருக்கை –
காமனுடைய ஆஞ்ஞையை நிர்வஹிக்கிறவன் –அவனைப் போலே பாணங்களாலே மோஹிக்கப் பண்ணுகை அன்றிக்கே தானே முடிக்கை-

ஸ்வா பதேசம் –
சம்சாரத்திலே குடியும் தடியுமாய் இருக்க நினைத்தார் ஆழ்வார் திருப்புளிக்கு கீழே இருக்கும் இருப்பு காணச்
செல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறது –குடி -க்ருஹம் தடி ஷேத்ரம்-ஆழ்வாரை சேவிக்க சம்சாரம் அடி அறும் –

————

பிரபஞ்சாபலாபம் பண்ணி -ஈஸ்வரனும் ஜகத்தும் இல்லை என்பார்கள் -பாஹ்யர்கள்
இவள் ஜகத்தும் ஈஸ்வரனும் உண்டாகைக்காக செய்கிறாள்-இப்படி கால ஷேபம் பண்ணாது ஒழியில்
நாயகி ஆற்றாளாய் முடியும் -இவள் இல்லையாகில் அவன் இல்லையாம் -பின்னை விபூதியாக இல்லையாம் –

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7–கால மயக்கு–இன்னுயிர்ச் சேவல் -9-5–

அவன் உகப்பாரை கை விடுமவன் அன்றே–இவளுக்கு ஆசை இல்லாமை அன்று -வர வேண்டும் தசை இல்லாமை அன்று
பிராப்தி இல்லாமை அன்று -திருமால் -என்றதால் பிராப்தியும் சித்தம்-
காண்கின்ற என் பாபம் இத்தனை இறே -மத்பாபம் ஏவா துர் நிமித்தம் –

ஸ்வா பதேசம் –
ஆழ்வார் உடைய விஸ்லேஷ தசையைக் கண்ட வைஷ்ணவர்களுக்கு பிரபஞ்ச அலாபம் பண்ணி யாகிலும்-
தரிப்பிக்க வேண்டு இருக்கிற படி –

——————–

இப்படி தோழி இவளை தர்ப்பித்த அளவிலே நாயகன் வந்து இவளோட்டை அதிமாத்ரமாக சம்ச்லேஷம் பண்ணின
படியைக் கண்டு யதா பூர்வமான பரிமாற்றம் அன்றியே கலவியிலே குவால் வகைகள் உண்டாய் இருந்தது
இப்படி செய்கைக்கு அடி பிரிய நினைத்தானாக வேணும் என்று அதி சங்கை பண்ணுகிறாள் –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8––கையார் சக்கரம் -5-1-

காலை எடுத்து தலையிலே வைப்பது கும்பிடுவது -அடியேன் -எனபது வாயது விரல் மார்பத்து எழுத்து என்று
சொல்லுகிற சாடு சதங்கள்-பெறாப் பேறு பெற்றால் போலே செய்கிற இவற்றின் ஹேது அறிந்தோம் –
மகா ராஜர் பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக விட்டுப் போய் உதித்ததும் அஸ்தமித்ததும் அறியாதா போலே
இப்போது எங்கே குருகுல வாசம் பண்ணினீர் –அம் மென்மை எல்லாம் போய் திண்மை எங்கே உண்டாயிற்று-

————–

எம்பெருமானார் திரு மலைக்குப் போவதாய் பிறந்த படி கேட்டு பிள்ளை உறங்கா வல்லி தாசர் தம் அகத்தே போய்
மூடிக் கொண்டு கிடந்து காண்கின்றனகளும் -என்கிற பாட்டை அனுசந்தியா நிற்க
அங்குச் செய்கின்ற அளவு என்ன என்று ஒரு வைஷ்ணவரை போக விட இப் பாட்டை அனுசந்தித்து சோகித்து கிடந்தார் -என்ன
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் -என்று சொல்லி போர மாட்டிற்று இல்லையோ என்று அருளிச் செய்தார்-
தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறுதல் –

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9-பொலிக பொலிக –5-2-

எம்பெருமான் தம் ஒருவருக்குமே மயர்வற மதி நலம் அருள தாம் ஜகத்துக்கு மயர்வற மதி நலம் அருளின படி –
தாமே சொல்லினும் -வண் சடகோபன் -என்று இறே சொல்லுவது-
மணி வல்லி -தனக்குத் தான் ஆபரணமாய் இருக்கிற படி-நாயகன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய கொடி –
கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறபடி – ஒரு கொம்பிலே சேர்க்க வேண்டி இருக்க
நிலக் கிடை கிடக்கிற படி –பிரணயித்வம் இல்லாமை யாகிலும் சைதன்யம் இல்லையோ

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் வைஷ்ணவர்களோடே கூட இருக்கச் செய்தே பிரிவு வரில் செய்வது என்-என்று அதி சங்கை பண்ண –
அத்தைக் கண்ட வைஷ்ணவர்களே பரிஹரிக்க வேண்டி இருக்கிறபடி –

————

துறை -மதி உடன்படுதல் –தலைமகள் தோழி மாரும் தானுமாய் புனத்திலே இருக்க தலைமகன் சென்று
இரண்டாம் காட்சி யாகையாலே -தன் ஆசையை ஆவிஷ்கரிக்கிறான் –
மதி உடன்படுதல் தோழிக்கு உரித்து -என்னும் பஷத்தில் அவள் முகத்தை நோக்கிச் சொன்னான் -ஆகவுமாம் –

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10–நெடுமாற்கு அடிமை -8-10-–

நோய் கொள்வேனும் நானேயாய்-வருவானும் நானேயாய்-சொல்லுவேனும் நானேயாய் யானாலும்
கேட்கை அரிதாக வேணுமோ –அனுஷ்டானம் வேண்டா -கேட்கவே அமையும்
இத்தால் –
ஆழ்வார் உடைய ஆத்மா குணங்களோடு தேக குணங்களோடு அவற்றில் ஏக தேசத்தோடு வாசி அற
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உத்தேச்யமாய் இருக்கிறபடி –
வேங்கட வல்லிக் கொடிகாள் -என்கையாலே
திவ்ய தேச வாசமும் சம்ஸ்லேஷத்தில் தரிக்கையும் விஸ்லேஷத்தில் தரியாமையும் -ஆகிற இவை –
உமது திரு முக மண்டலமும்-திருவாய் மொழியும் -திருவாய் இதழ்களும் -தனித்தனியே வருத்தம் செய்பவன-
இன்னது என்று பகுத்து அறிய கொள்ளோம் நீரே அருளிச் செய்ய வேணும் -என்கிறார்கள் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -91-100–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 23, 2020

எம்பெருமானுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அருளிச் செய்கிறார்
அவனுடைய அபரிச்சேத்யதைக்கு ஓர் அவதி காண ஒண்ணாதா போலே கிடீர்
அவன் சரித்ரம் தானும் ஒருவரால் ஓர் அவதி காண ஒண்ணாத படி என்கிறார் –

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் ———91-

சாமான்யேன ஜகத்தையும் பிரதிகூலருடைய பிராணங்களையும் உண்டும் – அனுகூலர் ஸ்பரசித்த த்ரவ்யத்தை
யுண்டு அல்லது பர்யாப்தம் ஆய்த்து இல்லை –மண் உண்டது முதல்வன – இவற்றின் ஆற்றாமை பரிஹரித்த படி –
இங்கு தன் ஆற்றாமை பரிஹரித்த படி –ஜகத்துக்கு தன வயிறு போலே தனக்கு வெண்ணெய் –
சர்வ நியந்தா வானவன் – சம்சார சம்பந்த ஸ்திதி மோஷ ஹேது வானவன் ஒரு அபலை கையாலே கட்டுண்டு
போக மாட்டாதே இருந்தான் –இவ்விடத்தை இயலைக் கேட்டு ஹர்ஷத்தாலே
பிள்ளை உறங்கா வில்லி தாசர் வயிற்றை அறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ – என்று பணித்தார் –

———–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனான எம்பெருமானை நெஞ்சே பூரணமாக நினை -என்கிறார் –
அவன் சிறைப் பட்டான் ஒருவன் என்று இராதே நம் சிறையை வெட்டி விட வல்லான் ஒருவன் என்று
புத்தி பண்ணு -என்கிறார் –

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-

சர்வர்க்கும் பிதாவானவன் தான் புத்ரனாய் அவதரிக்கும் –சர்வேஸ்வரனுக்கு அலாப்ய லாபம் இறே –
தனக்கு இல்லாத ஒன்றிலே இறே ஸ்நேஹாம் ஜனிப்பது-தன்னாலே ஸ்ருஜ்யமான பதார்த்தங்களின் உடைய
ரஷண ஹேதுவாகத் தான் புத்ரத்வத்தை ஏற்றுக் கொண்டு பித்ருமானாம் –

———-

இப்படி இருக்கிற எம்பெருமான் உடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்திலே ஒருவரும் அறிந்து
ஆஸ்ரயிக்க வல்லார் இல்லை – ஆனாலும் நெஞ்சேநீ யவனை உன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு
புகுந்து வை கிடாய் என்கிறார் –

நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து —–93-

கோஷித்துக் கொண்டு கண்ட இடம் எங்கும் தடையற சஞ்சரிக்கிற பிரளயத்திலே அத்விதீயமான முக்த சிசு
விக்ரஹத்தை யுடையனாய்க் கொண்டு வயிற்றில் புக்க பதார்த்தத்துக்கு ஓர் அலைச்சல் வாராத படி
மெல்லக் கண் வளர்ந்து அருளினவனை –கொடு வந்து வை –
கொடு வருகை யாவது அவன் புகப் புக்கால் விலக்காது ஒழிகை –
நமக்கு இவன் அல்லது தஞ்சம் இல்லை என்று அனுசந்தித்து லோகத்தில் கலங்காமல் அறிய வல்லார் ஒருவரும் இல்லை –
ஆனாலும் நெஞ்சே இப்படி இருக்கிறவனைக் கொடு வந்து உன் ஹிருதயத்திலே வை –
அவன் புகுரப் புக்கால் விலக்காதே கிட்டி அநுஸந்தி

————

இப்படி -வையம் தகளி-தொடங்கி இவ்வளவும் வரத் தாம் பெற்ற பேற்றைச் சொல்லுகிறார் –
கீழில் பாட்டில் நெஞ்சே உள்ளத்தே வை -என்றார் –
இப்பாட்டில் – தாம் அவனை அனுசந்தி என்ற அளவிலே அத்யாபி நிவேசத்தோடே கூட எம்பெருமான் உள்ளே புகுந்து
தம் பக்கல் வ்யாமுக்தன் ஆனபடியை அருளிச் செய்கிறார் –

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து ———-94–

இவனுடைய க்ருஷியே அவனுக்கு வலை –அவனும் இவ்வலையிலே அகப்பட்டு என்னுடைய நெஞ்சிலே வந்து புகுந்து –
மெல்லக் கொள்ளக் கொண்டு கால் பாவி தரித்து –நிற்பது-இருப்பது- கிடப்பதானான் –
நான் நசியாமல் -ஹிருதயத்தில் ஸ்திதி யாதிகளுக்கு விச்சேதம் இன்றிக்கே -இடைவிடாதே புறம்பு போக்கு இல்லை என்று
தோற்ற வாசனை பற்றுண்டாய் இருந்தான்

—————–

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச்
சொல்லுகிறார் – நெஞ்சே இப்படி உபகாரகனான எம்பெருமான் திருவடிகளிலே வணங்கி அவனை வாழ்த்து
என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம் -சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து ——95-

ஆஸ்ரிதன் பக்கல் ஓரத்துக்கு அடி பிராட்டி அருகே இருக்கை -என்கிறது –
அவனை பஜிக்கும் போது அவளுக்கும் பிரியம் செய்து பஜிக்க வேண்டுகையைச் சுட்டி –
வந்திக்கைக்கும் வாழ்த்துக்கைக்கும் விஷயம் அவளோடு கூடினவன் போலே –
ஆசைப் பட்டாருடைய விரோதிகள் ஹிரண்யன் பட்டது படும் அத்தனை

—————

நித்ய ஸூரிகள் உடைய பரிமாற்றமும் பொறாதே சுகுமார்யத்தை உடையவன் -என்கிறது –அன்றிக்கே –
அளவுடையாரான ப்ரஹ்மாதிகளும் அவன் திருவடிகளிலே வணங்கித் தங்கள் அபேஷிதம் பெறுவது -என்கிறார்
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -11 -என்னக் கடவது இறே –

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித்தாமரை யாமலர் ———-96-

இத்தால்-நித்ய ஸூரிகளுக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும் உபாஸ்யம் ஒரு மிதுனம் -என்றபடி –

———-

கீழில் படியாய் ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரரர்கள் அதிபதி யாகையாலே அவனை ஆஸ்ரயித்துப் பெறில்
பெரும் அத்தனை -அல்லது ஸ்வ யத்னத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது -என்கிறார் –
அயர்வறும் அமரரர்கள் பரிமாறும் நிலம் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று என்கிறார் –

அலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை ——-97-

இவர்களுக்கு சிந்திக்கத் தான் போமோ – இவ்வர்த்த ஸ்திதியை இவர்களால் மநோ ரதிக்கவும் முடியாது –

——–

தன்னை ஆச்ரயித்தவர்கள் உடைய விரோதிகளைப் போக்குமவன் என்கிறார் –
நம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சம்சார நிவ்ருத்தியைப் பண்ணித் தருவான் எம்பெருமான் என்றபடி –

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமஞ்சூழ்ந்தற விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-

ஜகதாகாரதையைச் சொல்லுகிறது–ஆஸ்ரித விரோதி என்று கை தொட்டுப் பிளந்து பொகட்டான்
பத்தும் பத்தாக நம்மாலே சூழ்த்துக் கொள்ளப் பட்ட சம்சாரம் ஆகிற நரகம்-துரகம் பட்டது படும் இத்தனை

————-

ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே நமக்கு பரம பிராப்யம்
என்கிறார் –

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அந்நான்று-குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-

சர்வ சக்தியைப் பற்ற வேண்டாவோ -பயம் கெடும் போது –பிரதானமான திருவடிகளே நமக்குப் புகலிடம் –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸ்தோத்ர ரத்னம் -22-என்னும்படியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு -உதவினவன் திருவடிகளே நமக்கு ஸூ பாஸ்ரயம்-
நம்முடைய சஹாயம் வேண்டா-உண்டானவன்று -பலியாமையே யன்று விரோதியேயாம் அத்தனை –
ஒன்றினுடைய விநாசம் ஒன்றுக்கு உத்பத்தி-ஸ்வாதந்த்ர்ய பார தந்த்ர்யங்களுக்கு சஹாவ ஸ்தானம் இல்லை இறே –
ஈரரசு உண்டோ

——–

எம்பெருமான் புகலிடமாவது பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு
என்கிறார் –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

ஆபத்து உள்ள போதும் அல்லாத போதும் என்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –
நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும் அவனுக்கும் பிராட்டிக்கும்
ரஷணத்துக்கு பரிகரமான திரு ஆழியைக் கையிலே யுடையவன்-
சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான திருத்துழாய் மாலையை யுடைத்தாய் மலை போலே இருக்கிற திரு மார்வை யுடையவன்-
அவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –அவளை -அகலகில்லேன் -என்னும் –
ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்கா நின்ற உதாரமான தாமரை போலே இருக்கிற
ஒழுகு நீண்ட கண்ணை யுடைய நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் –
நமக்கு எல்லாக் காலத்துக்கும் அபாஸ்ரயம் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -81-90–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 23, 2020

கீழே சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு பகவத் விஷயத்திலே ப்ரவணமாய்த்து
என்று கொண்டாடினார் –விஷயத்தைப் பார்த்தவாறே முதலடி இட்டிலராய் இருந்தார் –
அவன் துர்ஜ்ஞேயன் ஆகிலும் அவனை அனுசந்தி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து
இவனை இம்மமனஸ் அனுசந்தியா இருக்கைக்கு ஹேது என்னோ -என்கிறார்
இத்தால் தம் நெஞ்சு முயலுகிற முயற்சி போராதது என்னும்படி தமக்கு அவ் விஷயத்தில் உண்டான
ப்ராவண்யம் இருந்தபடி சொல்லுகிறார் –
அவன் பெருமை பார்த்த போது அறிவொன்றும் இல்லையாத் தோன்றும்
புறம்பே பார்த்த போது குவாலாய் இருக்கும் –

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு ——81-

ஓர் உழக்கைக் கொண்டு கடலை யளக்கப் போகாது இறே –அப்படியே
ஷூத்ரமான மனசைக் கொண்டு அபரிச்சேத்யனானவனை பரிச்சேதிக்க ஒண்ணாது இறே
நாம் ஒருக்கால் நினைத்தால் ருணம் ப்ரவ்ருத்தம் -என்று ஒருக்காலும் மறவான் –
நிரந்தரம் நினைத்தாலும் நினையாதாரையோ நினைப்பது –
அவனை நினையாதே மண்ணை முக்கப் பார்க்கிறதோ

———

இது தன்னை நாம் இன்னாதாகிறது என் – அவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய்
நிரதிசய போக்யனுமான பின்பு இனியவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த் தலை கட்ட விரகு உண்டோ என்கிறார் –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

இணர் -பூங்கொத்து-

இவன் தான் காணும் அன்று காண வரிதாய் அவன் தானே காட்டும் அன்றும் காண வரிதானாலும்
இழந்து ஆறி இருக்க ஒண்ணாது போக்யதையும் ஸ்வாமித்வமும் –
லௌகிகர் படியிலும் காண விரகற்று அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும் காண விரகற்ற பின்பு
இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ-கிட்டாது ஒழிய மாட்டேன்-கிட்ட மாட்டேன் –

————

அவன் ஒருக்காலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவனே ஆகிலும் அவன் இருந்தபடி இருக்க –
இப்போது முந்துற முன்னம் ஹ்ருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

புக்க ஆயுச்சுக்கு மரணம் இல்லை இறே-மேல் செய்த படி செய்கிறான்
பெற்ற வம்சத்தை ஒருவரால் இல்லை செய்ய ஒண்ணாது இறே
இப்படி சந்நிஹிதன் என்றதே யாகிலும் கீழ்ச் சொன்ன அபரிச்சேத்யதையே பலித்து விடுகிறது –

———–

வேதைக சமதி கம்யனாய் உள்ளவனை ஒருவரால் கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாது –
கண்டாராகச் சொல்லுகிறவர்கள் அடைய கவிகளைக் கொண்டாடினார்கள் அத்தனை அல்லது
ஒருவரும் கண்டார் இல்லை என்கிறார் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண் மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

ஆஸ்ரிதர்க்கு அனுபவ யோக்யமான விக்ரஹத்தை யுடைய ஆச்சர்ய சக்தி யுக்தனை
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று சுருதி பிரசித்தமான கண் அழகை யுடையவனை
தமக்குக் காட்டின வடிவு ஆர் தான் காணப் பெற்றார்களோ –

———

ஒருத்தரால் அறியப் போகாதாகில் வாழ்த்துவார் பலராக –திருவாய் மொழி -3-1-7-என்னும்படியே
பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினால் அறியப் போமோ-என்னில்
எல்லாரும் அடையத் திரண்டு தந்தாமுடைய கரண சக்திகளைக் கொண்டு அவனை ஸ்தோத்ரம் பண்ண வென்று
புக்கால் பின்னையும் அவர்கள் நின்ற நிலைக்கு இவ்வருகாய் அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-

அவனுடைய மணக் கோலத்தையும் ருஷபங்களை யடர்த்த ஒரு செயலையும் வடிவு அழகையும்
சொல்லப் போமோ –அவனுடைய ஒரு அபதானம் எல்லை காணப் போகாது –
இவர்கள் சொன்னார்கள் என்று அங்குத்தைக்கு முன்பு இல்லாதொரு நன்மை யுண்டாமோ-

————-

ஸ்வரூப ரூப குணங்களைப் பரிச்சேதிக்கப் போகாது – உபமானத்தில் சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –
எம்பெருமான் உடைய அழகை அனுபவிக்க முடியாது என்னிலும் விட ஒண்ணாத படி ஸ்ப்ருஹநீயமாய் இருக்கும்
அது காண வேணும் என்று இருப்பாருக்கு மேகங்களே அவன் வடிவைக் காட்டும் -என்கிறார் –
சம்சாரத்தில் இருப்புக்கு ஒரு பிரயோஜனம் உண்டு – அதாகிறது அவன் வடிவுக்கு போலியான
பதார்த்தம் கண்டு அனுபவிக்கலாம் என்கிறார் –

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார்வானம் காட்டும் கலந்து ——-86-

கலந்து காட்டும் –சேர்ந்து காட்டும் –கேவலம் மேகம் காட்டுகிறதும் அன்று -கேவலம் ஆகாசம் காட்டுகிறதும் அன்று
இப்படி மின்னி முழங்கி வில்லிட்டுக் கொண்டு தோற்றுவது-சஜாதீயமாய் இருப்பதொரு மேகம் யுண்டானால்
அப்போது அத்தை யுடைத்தான ஆகாசம் சர்வேஸ்வரன் உடைய திருமேனிக்குத் தகுதியாய்க் கொண்டு தோற்றுவது

———–

பின்னையும் வடிவு அழகு தன்னை உபமான முகத்தாலே இழிந்து அனுபவிக்கிறார் –
எம்பெருமானுடைய ஸ்வா பாவிகமான வடிவு அழகை மரகத மணி காட்டும் –
ஒப்பனையால் வந்த வடிவு அழகை சந்த்யா காலத்திலேயே மேகம் காட்டும் என்கிறார் –

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

ஸ்ரீ கௌஸ்துபத்தின் உடைய சிவந்த தேஜஸ்ஸூம் ஸ்ரீ வத்ஸத்தின் உடைய கருத்த தேஜஸ்ஸூம்
ஸ்யாமமான திரு நிறத்திலே விரவினவாறே – ஸ்யாமமான திரு நிறத்தைக் கொண்டு பிரகாசிக்கிற
உன்னுடைய திரு மேனியை ஸ்ரமஹரமான மரகதத்தின் உடைய பிரபை விஸ்த்ருதமாய்க் கொண்டு
ஸ்பஷ்டமாகக் காட்டா நின்றது –
திருத் துழாயின் பசுமையும் திவ்ய அவயவங்கள் சிவப்பும் கூடின திருமேனியை அந்தி வான் காட்டும் –
இவை போலி காட்டும்

———–

இப்படி இருக்கிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களில் உண்டான உள்மானம் புறமானத்தை ஆராய்ந்து
சம்சயியாதே சர்வ சமாஸ்ரயநீயனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய சமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

சம்சயம் இல்லாத விஷயம்-மது மாறாதே இருப்பதுமாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை
யுடைத்தான மார்வை யுடையவன் –சர்வாத்மாக்களுக்கும் சம்பந்தம் ஒத்து இருப்பதாய் ஸ்ப்ருஹநீயமாய்
அழகிதான திருவடிகளை தொழப் பாருங்கோள் –தொழுகைக்கு விரோதியான அநாதி கால சஞ்சிதமான பாபங்கள்
நீங்கள் தொழுவதாக் ஸ்மரிப்பதற்கு முன்பே நசிந்து ஓடிப் போம் –

———-

அனுபவிக்கலாவது திருமலையிலே கிடீர் -என்கிறார் –திருமலையில்
குறவரோடு மூங்கிலோடு திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறபடி –

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

பண்டு ஒரு நாள் திருவாய்ப்பாடியிலே இடைச்சிகள் முதலானோரை பிச்சேற்றும்படி அழகிய திருக் குழலை திருப்பவளத்திலே
வைத்து ஊதினவன் -பின்புள்ள சம்சாரிகளையும் வசீகரிக்கைக்காக விரும்பி வர்த்திக்கிற திரு மலை

————-

திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேச்யமான விடத்தில் அதிலே நின்றவன் உத்தேச்யனாகச் சொல்ல வேண்டா விறே –
திருமலையிலே நின்று அருளினவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணும் படியை அருளிச் செய்கிறார் –
இவன் பண்ணினானான அதுக்கோர் அவகாசம் காண்கிறிலீ கோளீ என்கிறார் –

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ————90-

அளக்கைக்கு இடம் போராத படியாய் இருக்க இவன் அளந்து கொண்டானபடி எங்கனயோ என்று
ஆச்சர்யப் படுகிறார் –நின்று அளக்கைக்கு இடம் போராது-என்ன ஆச்சர்யமோ –
அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு அன்றோ அளப்பது –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -71-80–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 23, 2020

இப்படித் திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூ லபமான திருவேங்கடமுடையான் வர்த்திக்கிற
திருமலை வ்ருத்தாந்தாத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

சஹஜ சத்ருக்களை முடித்து விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து நிற்கிறவன் வந்து வர்த்திக்கிற தேசம் –
அந்த ஆனையினுடைய மௌக்த்யம் போலே இருப்பது ஓன்று ஆய்த்து இவனுடைய மௌக்த்யமும்-
திருமலையில் பின்னை ஒன்றுக்கு ஓன்று பாதகமாமோ என்னில் அக்னீஷோமீய ஹிம்சை போலே இருப்பது
ஓன்று இறே அவற்றிற்கு –

———–

அயர்வறும் அமரர்கள் அதிபதியான சர்வேஸ்வரனை கண்டு அனுபவிக்கலாவது திருமலையிலே கிடீர் -என்கிறார் –

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-

ராம பக்தியாலே திருவடி பரம பதத்தை விட்டு சம்சாரத்தைப் பற்றினான் –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராகையாலே நித்ய ஸூரிகள் சம்சாரத்தை விட்டு பரம பதத்தைப் பற்றினார்கள்
குற மகளிர் அவ்விரண்டையும் விட்டுத் திருமலையைப் பற்றி இருப்பார்கள் –
திருப்பதியினின்று இழிகை குடிப் பழி என்று நினைத்துத் திருமலை ஒன்றையுமே உடையராய்க் கொண்டு
வேங்கடத்தைப் பதியாக வாழக் கடவராய் இருப்பார்கள் –
பரம பதத்தில் தன்னோடு ஒக்க எல்லோரும் பஞ்ச விம்சதி வார்ஷ்கராய் இறே இருப்பது
அவர்களுக்கு சேஷியானவன் வர்த்திக்கிற தேசம் –

————-

இவனுடைய திருவடிகளை ஏத்தும் இதுவே கிடீர் வாக் இந்த்ரியத்தால் கொள்ளும் பிரயோஜனம்
என்கிறார் –

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம் ——73-

அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு குடக் கூத்தாடின இளைப்பாலே திருமலையிலே வந்து நின்றான்
குடமாடி நின்றவனுடைய ஆபரண ஒலியை யுடைத்தான திருவடிகளைக் கூறுகை நாவால் படைக்கும் சம்பத்து
நாவால் கொள்ளும் பிரயோஜனம் –

——————-

அவன் பக்கல் ஸ்நேஹம் உடையாரில் யசோதைப் பிராட்டிதனைப் பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –
நமக்கு எம்பெருமான் பக்கலிலே வலியமூட்ட வேண்டி இருக்கும் –
இவருக்கு வெளிச் சிறப்பு கார்யகரமாகாதே கலக்கமே கார்யகரமாய்த்து என்கிறார் –

நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ -சலமே தான்
வெங்கொங்கை யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-

அறிவில் காட்டிலும் பிரேமமானது சால வலிதாய் இருக்கும் ஆகாதே –
ஸ்த்ரீத்வ பிரயிக்தமான அச்சத்தில் காட்டில் ஸ்நேஹமே வலிதாகாதே –
தன்னைப் பேணாதே அவனைப் பேணுகைக்கு உறுப்பான பிரேமமே வலிதாகாதே –
ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார்-

————–

இப்படி விரோதி நிரசன சீலனான கிருஷ்ணன் தனக்கு வாசஸ் ஸ்தானமாக விரும்பி இருக்கும் திருமலை
விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

கிருஷ்ணன் என்னது என்று அபிமானிக்கும் நிலமாய் ஜாதி உசிதமான வேங்கையின் பரிமளத்தை யுடைத்தான திருமலை –
காட்டு வேங்கையின் பரிமளமே யான திரு மலை –ஸ்ரீ கிருஷ்ணன் என்னது என்று அபிமானித்த ஸ்தலமாய்
ஆயன் – காடும் மலையும் உகக்குமவன் – காட்டிலே வர்த்திக்கும் இடையருக்குக் காட்டில்
மரங்களுடைய நாற்றம் சாலப் ப்ரியம் இறே-

———–

உகந்து அருளின நிலங்களில் இங்கே சந்நிஹிதன் ஆனபின்பு இனி -அவ்வோ விடங்களில் முகம் காட்டிப்
பிழைத்துப் போம் இத்தனை -போக்கி தம் தம் உடம்புகளை நோவ வருத்தி துக்கப் பட வேண்டா கிடீர் –
புருஷார்த்த லாபம் வேண்டி இருப்பார்க்கு என்கிறார் –
சர்வேஸ்வரன் சம்சாரத்தில் புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நிற்க
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா என்கிறார் –

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-

வெக்காவே சேர்ந்தானை –இருவர் சாதன அனுஷ்டானம் பண்ண வேணுமோ –
பாபங்கள் ஆனவை நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அறிந்து தப்பாவே பின்பு அவை நிற்கை
என்று ஓன்று உண்டோ –தானே ஆராய்ந்து நமக்கு இவ்விடம் அன்று என்று ஓடிப் போம் –

————–

கீழே சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் உடைய பாபங்கள் எல்லாம் போம் என்றார் –
இதில் அளவில்லாதார்க்கே யன்று – பேரளுவு உடையரானவர்களுக்கும் விழுக்காடு அறியாதே தங்களை முடியச்
சூழ்த்துக் கொள்ளும் அன்று அவர்களுக்கும் எல்லாம் ஹித காமனாய்க் கொண்டு நோக்குவான் அவனே -என்கிறார் –
அவன் அல்லது நாம் ஹிதம் அறியோம் என்றார் கீழ் –
இதில் நாமே யல்ல ப்ரஹ்மாதிகளும் ஹிதம் அறியார்கள் – அவர்களுக்கும் ஹிதம் பார்ப்பான் அவனே -என்கிறார் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–77-

அவனுடைய அபேஷிதம் செய்ய வற்றான திருவடிப்பூ ஆகிஞ்சன்யராய் அநந்ய பிரயோஜனரான நமக்கும் அரண் –
முஃயத்தாலே-மூன்று ஏழு என்று அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி
ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் நமக்கு ரக்ஷை –

———–

நெஞ்சே விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நமக்கு ரஷகனாம் –ஆன பின்பு அவனையே புகலாக அனுசந்திக்கப் பார் என்கிறார் –
அவன் சர்வ ரஷகன் ஆகிலும் நம்முடைய ஜ்ஞான வ்ருத்த ஜன்மங்களில் கொத்தை பார்க்க வேண்டாவோ -என்ன
வேண்டா -என்கிறார் –

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-

இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்–அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –
எது ஞானம் எது வ்ருத்தம் எது ஜன்மம் என்று இவை ஒன்றும் பாராதே ரஷகனாம் –
கதியாக ஸ்ரீ யபதியான அவன் திருவடிகளை அனுசந்தித்துச் சொல்லு –

————

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ என்னில் –
அவனை அனுசந்தித்து – சப்தாதி விஷயங்களிலே அநாதரம் பிறக்கச் சடக்கென்னப் போக்கலாம் -என்கிறார் –
நாட்டார் நான் சொல்லப் போகிற படிகளைச் செய்தார்கள் ஆகில் ஜென்மங்களைப் போக்கலாம் கிடீர் என்கிறார் –

ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-

இது கிடீர் நான் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர்
பச்சை நிறத்தையும் மிக்க பரிமளத்தையும் யுடைத்தான திருத் துழாய் மாலையையும்
தேங்கின கடல் போலே தர்ச நீயமான வடிவு அழகையும் யுடையவன் –
அவனுடைய ஸ்வாபாவிகமான வடிவு அழகையும் ஒப்பனை அழகையும் அனுசந்தித்தால்
சப்தாதி விஷயங்களை நாக்கு வளைத்து உபேக்ஷிக்கலாம்

———–

இவ்விஷயத்தில் தமக்கு முன்னே தம் திரு உள்ளமானது பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
உபதேச நிரபேஷமாக என்னுடைய நெஞ்சானது அவனுடைய விரோதி நிரசன ஸ்வ பாவத்தை அனுசந்தித்து
இந்த்ரிய ஜெயம் பண்ணி சம்சாரத்தைப் போக்கி அனுசந்திக்க முயலா நின்றது –என்கிறார் –

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன் துணிய -வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —80-

இவனே சரண்யன் என்னும் இடமும் அல்லாதார் வ்யர்த்தர் என்னும் இடமும் சொல்லுகிறது –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -61-70–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 23, 2020

பிரதி பந்தகங்கள் போக்கும் அளவேயோ –பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் சம்சாரத்திலே
உகந்து அருளின திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாக கொள்ளுகிறது –
இப்படிப் பட்ட சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலங்களிலும் காட்டில் தம்முடைய திரு உள்ளத்தை மிகவும்
ஆதரியா நின்றான் என்னும் தாத்பர்யம் தோற்ற அருளிச் செய்கிறார் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு திருப்பாற்கடலையும் விட்டு திருப்பதிகளைப் பற்றி இவை இத்தனையோடும்
தம்முடைய திரு உளத்திலே வந்து புகுந்தான் – இன்று என் துரிதத்தைப் போக்கி-என்னை அல்லது அறிகிறிலன்

————

ஆஸ்ரித ரஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் என்கிறார் –
கேவலம் சம்சாரத்தில் வந்து நின்ற மாத்ரமோ –பரமபதத்திருப்பும் மனிச்சுக்கவாய் அத்தாட்சியோடே கூடி இருப்பது
உகந்து அருளின தேசத்திலே அன்றோ என்கிறார் –

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

தன் உடைமையை மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தி யானவன் தன்னது மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தியாய் இருக்கிறபடி –
மகா பலி பக்கலிலே தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தி யானால் போலே உகந்து அருளின தேசங்களிலே
அர்த்தித்வம் தொடரும்படி நின்றான் –
அபேஷித்த சமயத்திலே ஒருக்கால் உதவிப் போகை அன்றிக்கே எப்போதும் உதவும்படி வந்து நிற்கப் பெற்றோமே என்று
திரு உள்ளம் மண்டி இருக்கிற இடங்கள் –
ஆஸ்ரிதர் அபேஷித்த போதாக வந்து அவதரிக்க வேண்டாதபடி கால் தாழ்ந்து வர்த்திக்கிற தேசங்களாய் இருக்கும் –

———————

இந்த தேசங்களிலே வந்து சந்நிஹிதனான அவன் தான் சால சீலவானாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார் –
தாழ்வுக்கு எல்லையான சௌசீல்யம் –சாதக வேஷத்தையும் சித்தமான வேஷத்தையும் ஒக்க தரிப்பதே என்கிறார் –

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-

சிக்குத் தலை என்று அறுவராது ஒழிவதே-ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு வபிஷேக பாதியாக நினைத்து
இருப்பதே தாழ் சடையும் –இவை ஒக்க தோன்றா நின்றது –அவனும் சரீர பூதன் இறே-
விசஜாதீயமான வடிவுகளாய் இருக்கச் செய்தேயும் அசாதாராண விக்ரஹம் போலே இரா நின்றதீ –
கெட்டேன் -இது ஒரு சீலாதிசயம் இருக்கிற படியே-என்று ஆச்சர்யப் படுகிறார் –

———-

இவன் தான் –பிரயோஜனாந்தர பரராய் தேவதாந்தரரான தேவர்களுக்கும் கூடத் தன்னை அழித்துத்
கார்யம் செய்து கொடுப்பான் -என்று அவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்-

இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-

கடைந்த வருத்தமோ-உலாவிக் கடைந்த வருத்தமோ–திருக் கச்சியிலும் திரு வெஃகாவிலும்
கிடப்பது இருப்பது நிற்பது ஆகிறது தனியே கடலைக் கடைந்ததாலே திரு மேனியில் பிறந்த ஆயாசமோ –
இங்கனே நோவு படுகிறான் ஆகாதே -என்று வயிறு எறிகிறார் –

————

அம்ருத மதனம் பண்ணின ஆயாசமே யன்றிக்கே மற்றுள்ள அவதாரங்களிலும் ஆயாச ஹேதுவான
வியாபாரங்களை யருளிச் செய்கிறார் –

அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த அம்மானவனே
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65-

பொங்கி –மகா விஷ்ணும் -என்கிறபடியே -கிளர்ந்து கொண்டு புறப்பட்டு
அரி யுருவமாய்ப் – ஜ்வலந்தம் -என்கிறபடியே நரசிம்ஹ வேஷத்தை உடையனாய் –

————

தானொரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்னுமது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –
உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணுகை ஓர் ஏற்றமோ
அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்கு இறுதி யாங்கு ——-66-

அப்படுக்கையிலே கிட்டினவர்கள்-ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்கிறபடியே
ஸ்வரூப ப்ராப்தி பெற்றுப் போகா நிற்க
இவர்களுக்கு பிரகிருதி தோஷத்தாலே விநாசமே சித்தித்து விட்டதாய்த்து –
சத்தையோடு ஜீவிக்கைக்கு ப்ரதிகோடியுமான விநாசமுமாய் விட்டது –
அதுகேடவர்கு இறுதி யாங்கு —-என்றும் என் பிள்ளைக்குத் தீமை செய்வார்கள் அங்கனம்
ஆவர்களே-பெரியாழ்வார் திரு மொழி -3-3-7-

——————

அங்கு கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபி கமலமானது -ஆழ்வார்கள் -இருவர் உடைய
சேர்த்தியையும் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –
ஹிரண்யனும் பட்டு மதுகைடபர்களும் முடிந்த பின்பு கண் வளர்ந்து அருளுகிற போதை
அழகை அனுபவிக்கிறார் –

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து ——67-

சந்த்ராதித்யர்கள் இருவர் உடைய அவஸ்தையிலும் செய்யக் கடவத்தை
இருவரும் கூட ஏக காலத்திலே தோற்றினாப் போலே இருக்கையாலே
இதுவும் இரண்டு அவஸ்தையிலும் செய்யக் கடவ கார்யத்தை ஓர் அவஸ்தையிலே செய்யா நிற்கும் –
திகிரி மொட்டிக்க ஒட்டாது-வெண் சங்கு மலர ஒட்டாது-நடுவே நிற்கும்
அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1–என்னுமா போலே –

————–

இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவிக்கும் போது திருப்பாற் கடல் ஏறப் போக வேண்டா
திருமலையிலே அனுபவிக்கலாம் கிடீர் என்கிறார் –

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
கள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

இவற்றின் உடைய மௌக்த்யம் போலே யாய்த்து-அவனுடைய மௌக்த்யம் -இருக்கும்படி –
அசூரா வேசத்தாலே வந்தது என்று அறியாதே அவனும் ஏதேனும் ஒன்றைக் கொண்டு பழம் பெறப் பார்க்கிறான் இறே-
இருவர் செயலும் ஓன்று போலே இருக்கை

—————–

இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக இப்பாட்டை அன்யாப தேசமாக நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –
அதாகிறது ஆழ்வாரான அவஸ்தை போய் பகவத் விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து அவளுடைய பாசுரத்தையும் செயல்களையும் திருத் தாயார் சொல்லுகிறாள் –
அன்றிக்கே –
பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாப தேசம் இன்றிக்கே இருக்க இப்பாட்டு ஒன்றும் இப்படி கொள்ளுகிறது என் -என்று
பரோபதேசமாக நிர்வஹிப்பார்கள் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பாடுகை சூடுகை குளிக்கை முதலான லோக யாத்ரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும் –
ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்கால் ஆகிலும் திருமலையைப் பாடா நிற்கும்
திருமலையை ஒழிய வேறு ஒரு மலை அறியாள் –இக் குடிக்கும் மர்யாதையாய்ப் போருவது ஒன்று என்று –
பாதி வ்ரத்ய தர்மம்
பரோபதேசமாக-திருமலையைப் பாடும் கோள்-அவன் உகக்கும் திருத் துழாயைச் சூடும் கோள் –
அவன் சாய்ந்த கடலிலே நாடோறும் அவகாஹிக்கப் பாரும் கோள் –
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-

——————

ஆகில் இப்படி ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை யுண்டாக்கிக் கொள்ள வேண்டாவோ -என்னில்
அது வேண்டா-திர்யக்குகளுக்கும் புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் -என்கிறார் –
இனி ஆஸ்ரயணம் தன்னிலும் ஒரு நியதி இல்லை – செய்தது எல்லாம் நியதியாம் அத்தனை – என்கிறது –
அனுகூலர் உடைய தேக யாத்ரை எல்லாம் தன் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாகக் கொள்ளும் -என்கிறது –

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

திருமலையில் திரியக்குகளும் தன்னை வணங்கும் ஞானத்தைக் கொடுக்க வல்ல சக்தியை யுடையவன் என்கிறது
ஞான கார்யமான சமாஸ்ரயணத்தை தேச வாசத்தாலே பண்ண விருக்கும்
ஓர் ஆனைசென்று ஆஸ்ரயித்தால் போலே யாய்த்து திரு வேங்கடமுடையானை ஆஸ்ரயிக்கலாம் படி –
களிறு –ஆஸ்ரயிப்பாருக்கு ஜன்ம வ்ருத்த ஸ்வ பாவங்கள் அப்ரயோஜகம் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -51-60–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 22, 2020

இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர்
நமக்கும் எல்லாம் உபாய பூதனாவான் என்கிறார் –
ஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ0ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி
பரமபதத்திலே செல்ல நடத்துவான் அவனே என்கிறார் –
சங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷபாதம் தோற்றாது என்று இறே மா முதலை கொன்றது முதலாக விச் செயல்கள் –

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-

மலைக் கீழ் ஒதுங்கோம் என்னாத மாத்ரமே –இவற்றுக்குச் செய்யல் யாவது இல்லை-
எல்லா ரஷைக்கும் தானே கடவனாய் இருக்க அவளுடைய சகாயம் ஒழியவே
தன்னுடைய ரஷையை நடத்தினான் –அவனே -என்று சஹகாரி நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது
கலங்கா பெரு நகரம் –ஒருவர் கூறை எழுவர் உடாத தேசம் –
அறிவில்லாத பசுக்களோடு அறிவுடைய பிராட்டியோடு வாசி இல்லை –
அறிவுக்குப் பிரயோஜனம் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர -39-40-என்கைக்கு உடலாயிற்று
அறியாமைக்கு பிரயோஜனம் -பண்ணுகிற ரக்ஷணத்தை விலக்காமை –

———–

கீழே ப்ரஸ்துதமான ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழங்கால் பட்டுப் பேசுகிறார் –
கீழே கலங்கா பெரு நகரம் காட்டுவான் -என்றாரே -ருசி உடையாருக்குப் பரமபதம் கொடுக்கும் அத்தனையோ
என்னில் –ருசி பிறப்பிப்பானும் அவனே என்கிறது –

எய்தான் மரா மரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——-52-

ருசி இல்லாதாருக்கு ருசியைப் பிறப்பிக்கும் போதும் ருசி யுடையாருக்குச் செய்யுமா போலே செய்யும் –
பிராட்டி சொல்லு மறுக்க மாட்டாமையாலே அந்த மான் புரண்டு விழும்படியாக எய்தான் –
இத்தாலும் அவளுடைய ருசியை வர்த்திப்பித்த படி –
அழகுக்கு இலக்காகாதாரையும் புக்கு இலக்காக்கின படி –
மஹா பலி பக்கலிலே சென்று வடிவு அழகைக் காட்டுவது–முக்த ஜலப்பிதங்களைப் பண்ணுவதாய்க் கொண்டு
மிகவும் உத்தியோகித்து லோகத்தை யடங்கக் கைக் கொண்டான் –

———–

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான வடதள சாயியை அனுபவிக்கிறார் –
எம்பெருமான் படி இதுவான பின்பு மேல் வீழ்ந்து அனுபவி -என்கிறார் –
துர்க்கடங்களை கடிப்பிக்க வல்லவன் என்கிறார் –

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண் அலங்கல் மாலையான் தாள் —–53-

ஆலிலையின் மேல் கண் வளர்ந்து அருளுகிற போது இட்ட தோள் மாலையும் தானுமாய்க் கிடந்த படி –
யசோதைப் பிராட்டி உண்டோ ஒப்பிக்க – எல்லாம் ஆச்சர்யமாய் இருப்பதே –
நெஞ்சே -வரில் பொ கடேன்-கெடில் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே
உத்ஸாஹித்துக் கொண்டு ஆஸ்ரயிக்கப் பார்

—————

வடதள சாயி வ்ருத்தாந்தத் தோடு சேரச் சொல்லலாம் படியான கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை
அனுபவிக்கிறார் –

தாளால் சகட்முதைத்துப் பகடுந்தி
கீளா மருதிடை போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம் காதல் பெரிது —–54-

பெண்ணகலம் காதல் பெரிது –நாரீணாம் உத்தமையான பெரிய பிராட்டியார் இறையும் அகலகில்லேன் என்று
விரும்பும் படியான திரு மார்வை யுடையவனுடையவனுக்கு ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் உண்டான சங்கம்
சாலக் கரை புரண்டு இருந்தது –பெண்ணகலம்-என்கிறது -ஸ்ரீ பூமிப் பிராட்டி உடைய திரு மேனியை –
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை-

———–

ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் இப்படி வத்சலனாய் -பெரும் பிச்சானாவன் -உடைய அழகை -அனுபவிக்கிறார் –

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

திரியுங்கால்–தெரியுங்கால் -பாட பேதம் -அநுஸந்திக்கும் போது -சஞ்சரிக்கும் காலத்தில்-

அவனுடைய மற்றை நீண் நெடும் கண்ணில் உண்டான நிறத்தை –
அவனுடைய பரிச்சேதிக்கப் போகாத கண்ணின் உடைய நிறத்தைக் காட்டா நின்றது –
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் -திரு விருத்தம்-45-

———

இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவித்துப் போமித்தனை போக்கி இன்ன படிப் பட்டு இருக்கும் என்று
கொண்டு நம்மால் பரிச்சேதிக்கப் போகாது கிடீர் என்கிறார் – பிரயோஜனத்திலே சொல்லில் சொல்லும் அத்தனை –

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-

ஸ்ரீ யபதியினுடைய ஸ்வரூப ரூப குணாதிகளால் யுண்டான ஸம்ருத்தியை சிலராலே பேசப் போமோ-
அவனும் அவளுமாய் நிற்கிற இடத்திலே சொல்லலாமோ
அப்ரமேயம் ஹித்த்தேஜ யஸ்ய சா ஜநகத்மஜா -ஆரண்ய -37-18-உயர்வற உயர்நலம் உடையவன் –
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் –அவன் கொண்ட வடிவு ஒன்றுக்கும் இத்தனை –
அவன் கல்யாண குணங்களைப் பேச முடியுமோ

—————

இப்படிப் பட்ட பெருமையை யுடையவனை அனுசந்திக்கும் இதுவே கிடாய் நமக்கு உத்க்ருஷ்டமாகை ஆகிறது
என்கிறார் – கருடத்வஜனுமாய் ஸ்ரீ யபதியும் ஆனவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –
முடியாது என்று பேசாது இராதே அவனை ஆஸ்ரயிக்கில் எல்லாரும் மேலாவது என்கிறார் –

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-

அவளும் தண்ணீர் தண்ணீர் என்று ஆசைப் படா நிற்கும்
மகா மேருவிலே ஓர் அஞ்சன கிரி இருந்தாப் போலே இருக்கை –
திருவடி மேரு போலே – எம்பெருமான் அஞ்சன கிரி போலே-
மேல் கண்டாய் – இது எல்லாவற்றுக்கும் மேலாக அனுசந்தி – இத்தை ஒழிந்தவை அடங்கலும் கீழ் –
இது ஒன்றுமே கிடாய் மேல் – சேஷ பூதன் ஸ்வ ரூபத்துக்கு ஈடான உத்க்ருஷ்டம் இது கிடாய் –
தெருள் -என்று ஞானமாய் -ஞானத்தில் மேலாய் இருக்கிற பக்தியைச் சொல்லுகிறதாய் -ஞான விபாக ரூபையான
பக்தியால் கரியான் கழலைக் கண்டு அனுபவிக்கப் பெற்றாயே-

—————

இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்தை உடையவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே காண வேணுமே -என்ன
காணலாம் படி திரு மலையிலே நின்றான் என்கிறார் –

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

ஸ்படிக மயமான சிலா தளத்திலே பெண் குரங்கு திருச் சித்ர கூட பரிசரத்தில் சிலா தலத்திலே
பிராட்டியும் பெருமாளும் இருந்தாப் போலே இருக்கிறது –
கடுவனையே நோக்கி –ஊடினால் ஒரு கடகர் பொருந்த விட வேண்டாதே தானே பார்த்து வரத்தை சொன்னபடி
இங்கு இளையபெருமாள் இல்லையே –நோக்கி –சர்வ ஸ்வதானம் பண்ணி-
சர்வேஸ்வரன் தனக்கு சர்வ சம்பத்துமாக நினைத்து இருக்கும் தேசம் –

————

கீழ் கரியான் கழலே தெருள் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தார் –
அப்படிப் பட்ட திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவிக்கிறார் –

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று ——59-

பகவத் விஷயத்திலே இவனுடைய இச்சையும் அநிச்சையும் இறே உஜ்ஜீவனத்துக்கும் விநாசத்துக்கும் ஹேது-
எங்கள் பெருமான் –ஒரு மிதுனம் இவருக்கு போக்கியம்-அஸ்மத் ஸ்வாமியாய் உள்ளான் –
போக்ய பூதனாய் மேன்மையை உடையனாய் வகுத்தவனுடைய திருவடிகளைப் பெற்று
ஸ்வரூப அனுரூபமாக வாழும் பிரகாரத்தை அறிந்தேன் –

———–

உமக்கு வாழ்விலே அந்யமாகில் பிரதி பந்தகம் போனால் அன்றோ வாழலாவது –
விரோதி செய்த படி என் என்ன – அது போக்குகை அவனுக்கு பாரமாய் விட்டது என்கிறார் –

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை
விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-இந்த பாசுரம் நிரல் நிறை அணி பாசுரம் –

பருவம் நிரம்புவதற்கு முன்னே ஆசூர வர்க்கத்தை கை தொடானாய் முடித்தான்
பின்பு ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தின் உடைய த்வநியாலே முடித்தான் –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.