Archive for October, 2018

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-4-8-

October 30, 2018

முன்பு இவள் வார்த்தை சொல்லிக் கொண்டாடுகையாலே தரித்திரிந்த பூவையானது,
இவள் உறாவப் புக்கவாறே தானும் உறாவப் புக்கது; அத்தைப் பார்த்து,
‘முன்னரே என் நிலையை அறிவி என்னச் செருக்கு அடித்திருந்தாய்;
நானோ, முடியா நின்றேன்; இனி, உன்னைக் காப்பாரைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.
பூவை என்பது நாகணை வாய்ப் புள் -அதாவது ஒரு பஷி விசேஷம்-

——————

நீ யலையே சிறு பூவாய்! நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி உன்து
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

நீ அலையே –
‘என் நிலையை அறிவிக்க வேண்டும் என்ன, அறிவியாதே இருந்த உன்னாலே வந்தது அன்றோ இது!
என்னாலே என்கிறது என்? வாராது இருந்த குற்றம் அவனது அன்றோ?’ என்ன,
அறிவித்தால் வாராதிருந்தானாகில் அன்றோ அவனுக்குக் குறையாம்?
நேரே சம்பந்தம் எம்பெருமானோடேயாய் இருக்கவும்,
ஆததீத யதோ ஞானம் தம் பூர்வம் அபிவாதயேத் ( ‘ஞானத்தை எந்த ஆசாரியனிடமிருந்து பெறுகிறானோ அவனை
முதலில் வணங்கக் கடவன்,’ )என்கிறபடியே, செய்த உபகாரத்தை நினைந்து ஆசாரியனை விரும்புவது போன்று,
இவளும் பூவையைப் பார்த்து, ‘நீ அலையே’ என்கிறாள்.
இதனால், ‘பகவல் லாபம் சேர்ப்பாராலே’ என்று இருக்கிறாள் என்பது போதரும்.

சிறு பூவாய்-
உன் பருவம் நிரம்பாமை அன்றோ நம் காரியத்தைக் கெடுத்தது?

நெடு மாலார்க்கு –
அவர்க்குக் காதலை-வ்யாமோஹத்தை – உண்டாக்கிக் கொடு வரவேண்டும் என்று இருந்தாய் அல்லையே?

என் தூதாய்-
எனக்கு அவர் பக்கல்-வ்யாமோஹம் தான் – காதல் இல்லாமை இருந்தாயும் அன்றே!
வயிற்றில் பிறந்த உங்களைக் கொண்டு அபிமதம் சேர்க்க வேண்டும்படி அன்றோ எனக்கு உண்டான ஆசை –

நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய் –
‘எனது நிலையை அங்கே சென்று சொல்,’ என்ன, சொல்லாதே இருந்தொழிந்தாய்;
நோய் எனது
‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் சாதுர்த்திகமாய் இராதது போன்று,
இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள்.
ஜடிலம் –
நல்ல மாலை வந்தால் பிள்ளை பரதன் மயிருக்காய் இருந்தது -என்றாயிற்று சக்கரவர்த்தி வாய் இடுவது
அவனாயிற்று சடை புனைந்து இருக்கிறான்
சீர வசனம் –
நல்ல பரிவட்டம் கண்டால் இது பிள்ளைக்கு ஆகும் என்று வாய் விடுவார்கள் -அவன் அன்றோ மரவுரி உடுத்து இருக்கிறான் –
ப்ராஞ்சலீம் –
அவர்கள் இரந்து கொடுக்கப் பெறுமவன்-தன் அபிமதத்துக்கு தான் இரப்பாளானாக இருந்தான்
பதிதம் புவி –
அங்கே பாரதம் ஆரோப்ய -என்னும் நிலை பெற்றது இல்லை -படுக்கை உறுத்தும் என்று மடியிலே
கண் வளருமவன் ஆயிற்று தரை கிடை கிடக்கிறான் –
ததர்ச ராமோ துர்த்தர்சம்-
வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டு இருக்கும் பெருமாளுக்கும் கண் வைக்க ஒண்ணாத படி இருக்கிறவனை
யுகாந்தே பாஸ்கரம் யதா –
பெருமாள் ஒருவருக்கும் கண் வைக்க ஒண்ணாமை அன்றிக்கே-
ஜகத் உப சம்ஹாரம் பிறக்கப் புகுகிறதோ என்னும்படி இருந்தான் –

நுவலாதே இருந்தொழிந்தாய்
நுவலாதே இருந்தாய் -நுவலாதே ஒழிந்தாய்-என்று சொல்லாமல் இரட்டித்து சொல்லுவான் என் என்னில்
‘வந்தொழிந்தான், போயொழிந்தான்’ என்பன போன்று, ‘இருந்தொழிந்தாய்’ என்பதும் ஒரு சொல்.
இரண்டு தர்மியையும் ஒரு யுக்தி மாத்திரத்தாலே -தானும் நாயகனும் சேர இருத்தலை
ஒரு வார்த்தையினாலே நோக்கலாய் இருக்கவும்,
அது செய்யாது ஆறியிருந்தது ஆதலின், ‘இருந்தொழிந்தாய்’ என்கிறாள்.
‘அதற்கு இப்பொழுது வந்தது என்?’ என்ன,

சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் –
சமுதாய சோபையோடு நிறத்தில்-புஷ்கல்யமும் – நிறைவையும் இழந்தேன்.
‘இனிச் சென்று அறிவிக்கிறேன்,’ என்று விரைந்தது;
கதே ஜலே சேது பந்தம் -‘தண்ணீர் சென்ற பின் அணை கட்டுவாரைப் போன்று,
இனி அறிவித்தால் என்ன இலாபம் உண்டு?’

இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-
‘இனி, உன்னைக் காப்பாற்றுகின்றவர்களைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.
இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள்.
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்;
தம்முடைய அந்திம தசையில் -அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி,
‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நீ யலையே -முன்பு இவள் வார்த்தை சொல்லிக் கொண்டாடுகையாலே -என்றது
நோயெனது நுவல் என்ற அனுவாத ஸித்தமான புரோவாதத்தைக் கடாக்ஷித்து –
நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்-என்று இப்போது சொல்லுகையாலே –
என் தசையை அறிவி -என்று சொன்னது சித்தம் –
இது -தளருகை
இதுக்கு ஸ்வாப தேசம் -பகவல் லாபம் இத்யாதி –
வயிற்றில் பிறந்த உன்னைத் தூது விடும்படி அன்றோ என் வ்யாமோஹம்
நெடுமால் -மிக்க வ்யாமோஹம் –
உன்னுடைய நோய் என்றால் விஸ்லேஷ வியசனம் என்று தெரியும்படி எங்கனே என்ன ஸ்ரீ பரதாழ்வான் இத்யாதி-
அங்கெ பெருமாள் விஸ்லேஷ வியசனமாம் போலே என்றவாறு
ஜகத் உப சம்ஹாரம் -பிறக்கை யாவது -இவன் தசையைக் கண்டால் பெருமாளும் கிடையாது –
பின்னை விபூதியும் இல்லையாம் என்றபடி –
நுவலாதே இருந்து ஒழிந்தாய்-வழக்கச் சொல்
இரண்டு தர்மியையும் -என்றது நெடுமாலார்க்கு -எனது -என்ற பதங்களைக் கடாக்ஷித்து-
மேலே வாய் அலகில் இன்னடிசில் -என்கையாலே பூவையைக் கூட்டிச் சொல்லவுமாம்
சாயல் -சாயை -சமுதாய சோபை / மாமை நிறம் அவயவ சோபை -மணி ஸ்லாக்யதை-புஷ்கல்யம்/
மணிமாமை -உயிருக்கும் உப லக்ஷணம் என்று தாத்பர்யம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-4-7-

October 30, 2018

தம்தாமுடைய குற்றங்களைப் பாராமல், ‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி’ என்று சொல்லும் இத்தனையோ
வேண்டுவது என்று அவர்க்குக் கருத்தாக,
‘எங்கள் குற்றம் ஒன்றுமேயோ பார்ப்பது?
தம்முடைய அபராத சஹத்வம் பார்த்தல் வேண்டாவோ என்று சொல்,’ என்று தன் கிளியை இரக்கிறாள்.

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழ்ப் பாட்டில் யாமும் என் பிழைத்தோமே என்று அதப்யுபகத வாதத்தால் அருளிச் செய்து
இப்பாட்டில் அப்யுபகத வாதத்தாலே அருளிச் செய்கிறார் என்று அருளிச் செய்வர்-
குற்றம் -பூர்வாகம் -கீழ்ப் பாட்டிலே அபராதம் உத்தராகம் -என்று விவஷிதம் என்று கருத்து –

———————–

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந் தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென்று ஒரு வாய் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே! யான் வளர்த்த நீ யலையே?–1-4-7-

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்க்கின்ற-
எலும்பினைத் தொளைத்து அதிலே -மூர்த்தமாய்- கடினமானது ஒரு கயிற்றினைக் கோத்தது போன்று
நஞ்சு ஊட்டின வாடையானது அறுக்கின்றது.
எலும்பும் நரம்புமேயாம்படி-சரீரம் தான் – போர க்ருசமாய் மிகவும் இளைத்தது ஆதலின், சரீரம் என்னாது ‘என்பு’ என்கிறாள்.
பம்போ பவன மாருதம் -‘பம்பா நதிக் கரையின் சோலையிலிருந்து வருங்காற்று’ நாயகனுக்கு இருந்தது போன்று,
இருக்கிறது காணும் இவ்வாடை இவளுக்கு.

பத்ம ஸுகந்திக வஹம் –
கலம்பகம் சூடுவாரைப் போலே தாமரையோடை செங்கழுநீரோடைகளிலே சென்று புக்கு
பூவில் இழியில் அதில் வெக்கை தட்டும் என்று மேல் எழ நின்று அரிமிதியன பரிமளத்தை கொய்து கொண்டு வாரா நின்றது
சிவம் –
கலப்பற்றுப் பசும் தென்றலாய் இருந்தது -அதாவது புறம்பே சிலருக்கு உடம்பு கொடுத்துச்
சுணங்கு அழியாதே தாய்த் தென்றலாய் இருக்கை
சோக விநாசனம் –
நம்மை இனி பிராணனோடு வைத்து நலியாதது போலே இருந்தது
தன்யா –
காற்று வாரா நின்றது என்றால் ஏகாந்த ஸ்தலம் தேடிப் படுக்கை படுகிறவர்களும் சிலரே
லஷ்மண சேவந்தே-
இது எப்போதோ வருவது என்று இருப்பார்கள்
பாம்போ பவன மாருதம் –
ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே
நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிரிந்தவாறே, அந்தர ஜாதி காலிலே துகை உண்பதே இப்படி.
அந்தரத்தில் ஜாதமானது -அந்தர ஜாதி -ஆகாசாத் வாயு இறே -கால் காற்று
‘மனைவியானவள் இப்படி வாடைக்கு இடைந்து நோவு படாநிற்க, இதனை நீக்குதற்கு,
அவர் கடல் அடைத்தல், படை திரட்டல் ஆகிறபடி என்?’ என்னில்,

என் பிழையே நினைந்தருளி-
நான் படுகிற துன்பம் போராது என்று கீழாண்டைச் சிகை வாசியா நின்றார்.
அதாவது,-அவ்விஞ்ஞாதா வாகை – அடியார்களுடைய குற்றங்களை அறியாதவராய் இருந்தமை- தவிர்ந்து,
சஹஸ்ராம்ஸூ -‘கணக்கு அற்ற ஞானங்களை யுடையவர்’ என்கிறபடியே,
இப்போது குற்றங்களை அறிவதில் -சர்வஞ்ஞராய் -முற்றறிவினராய் இருக்கிறார் என்றபடி,

அருளாத திருமாலார்க்கு-
இதற்கு- ந கச்சின் ந அபராத்யதி -‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க,
எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர்.
‘நான் இப்படி நோவுபடுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகையால் அன்றோ
என்று இன்னாதாகிறாள்,’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்.
‘ஆயின், பிராட்டியின் மேல் வெறுப்பாக, ஸ்ரீ பிள்ளான் இங்ஙனம் பணித்தல் தகுமோ?’ எனின்,
உறவு உள்ள இடத்திலே யன்றோ வெறுப்பும் உண்டாகும்? ஆதலால் தகும்.

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு –
‘தத்தம் குற்றம் பாராமல் அருளச் சொல்லும் இத்தனையோ வேண்டுவது?’ என்று சொல்ல நினைந்தாராகில்,
‘ஸ்வாமியினுடைய திருவருளுக்கு என்ன குற்றத்தைச் செய்தாள்?’ என்று நீங்கள் சொல்லுங்கள்.
இனி, இதற்கு, என் குற்றத்தைப் பார்த்துத் -தமிக்க நினைந்தாராகில், தம் பொறையாகிற நேர்தரவைக் காட்டுங்கள் என்னுதல்.
அதாவது, ‘ஸ்வாமியான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றஞ்செய்யப் போமோ?’ என்று சொல்லுங்கள் என்றபடி.
‘ஏன் செய்யப் போகாதோ?’ என்னில், ஆஸ்ரயத்துக்குத் தக்கபடி அன்றோ எல்லாம்?
நாங்கள் குற்றம் செய்வதும் எங்கள் அளவிலே; தாம் பொறுப்பதும் தம் அளவிலே யன்றோ? ஆதலால், செய்யப் போகாது.
இனி, இதற்கு ‘தேவரீர் திருவருளுக்குத் தண்ணீர் துரும்பாக-ப்ரதக்ஷிண – வலம் வருதல்,-நமஸ்காராதிகள் -வணங்குதல்
முதலியன எவையேனும் செய்தன உளவோ?’ என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்யும் படி –

தகவினுக்கு
ஆந்ரு சம்சயம் பரோ தர்ம -‘பிறருடைய குற்றத்தைப் பொறுத்திருத்தலாகிய பெரிய தர்மமானது தேவரீரிடமிருந்தே
என்னால் கேட்கப்பட்டது,’ என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு
என் பிழைத்தாள்-என்ன தப்புச் செய்தாள் – என்பாள், ‘திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்’ என்கிறாள்.
கிம் கோப மூலம் -‘கோபத்திற்குக் காரணம் யாது?’ என்கிறாள் தாரை; அதாவது,
‘இராஜ புத்திரர்களை நான்கு மாதம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் இன்பத்திலே கருத்து
ஊன்றினவர்களாய் இருந்தும், இருந்தனவற்றுள் ஒன்றையும் நினையாது,
அவர்கள் பொறையை நினைந்திருந்த கனத்தாலே உம்முடைய கோபத்திற்கு அடி என்?’ என்கிறாள்.–.
மனுஜேந்த்ர புத்ர -அறுபதினாயிரம் ஆண்டு செய்தார் செய்த குற்றங்களைப் பொறுத்துச் சேரவிட்டு ஆண்டு கொண்டு போந்தான்
உங்கள் தமப்பனார் -அவன் வயிற்றிலே பிறந்து குற்றம் செய்தோம் என்று தலை அறுக்க வந்து நின்றீர் நீர் –
அழகியதாய் இருந்தது உம்முடைய போக்கு
கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேசே -சாஸ்த்ர வஸ்யம் இன்றிக்கே கண்டத்தில் கடுக்கச் சாபல்யத்தைப் பண்ணி
மீளமாட்டாத திர்யக்குகளே நீரே இழந்த போகங்களை புஜிப்பது -என்று சேர்த்து விட்டு
நீர் சொல்லிற்றுச் செய்தன என்று தலை அறுக்க வந்து நின்றீர் –
இப்படிச் சொல்லலாம் படி இறே இவர் பொறை இருப்பது –

ஒரு வாய் சொல் –
ஒரு வாய் -ஒரு வார்த்தை/ சொல் – சொல்லு.-ஒரு வார்த்தை சொல்லு -என்றபடி

என்பு இழைக்கும் இளங்கிளியே –
முஃதயத்தாலும் -இளமையாலும், ஸ்நிக்தமான பிணிதியாலும் – அன்புடன் கூடிய சொற்களாலும், வடிவில் பசுமையாலும்,
வாயில் பழுப்பாலும் தலைவனுடைய நினைவை உண்டு பண்ணுவதனால், எலும்பைச் சிதைக்கின்ற கிளியே!
இனி, ‘என்பு இழைக்கும்’ என்று பிரிக்காமல், என் பிழைக்கும் என்று கொண்டு,
‘என் நிலையை அறிவித்தால் என்ன தவறு உண்டாம்?’ என்று கோடலுமாம்.

யான் வளர்த்த நீ அலையே –
திருமகள் கேள்வனாய்த் தான் தோன்றியாய் இருப்பார் செய்வனவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வரோ?
இனி, இதற்குக் ‘கலந்து பிரிந்தார் செய்வனவற்றை வளர்த்தவர்களும் செய்வர்களோ?’ எனலுமாம்.
இனி, ‘அவன் தான் இப்படிச் செய்யவேண்டும் என்று செய்தானோ?
என்னுடைய சம்பந்தம் அன்றோ அவன் இப்படிச் செய்தான்?
அப்படி, என்னுடைய சம்பந்தம் உனக்கும் உண்டான பின்பு, நீ நலியச் சொல்ல வேண்டுமோ?’ என்பாள்,
‘யான் வளர்த்த நீயலையே’ என்கிறாள் என்று கூறலுமாம்.
இனி, ‘எனக்குத் தகுந்தாற்போலே அன்றோ நீயும் இருப்பாய்’
உன் மேல் குறையுண்டோ?’ என்பாள், அங்ஙனங் கூறுகின்றாள் என்றலும் ஒன்று.

————————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

உடம்பு என்னாதே என்பு என்றத்துக்கு பாவம் அருளிச் செய்கிறார் –
இழை என்று கர்க்க சரஜ்ஜவாதிகளுக்கும் உப லக்ஷணம் -என்றபடி -வ்யாபரிக்கை -குத்துகை-
வாடை என்னாதே பனி வாடை – என்றத்துக்கு தாத்பர்யம் -நஞ்சூட்டின இத்யாதி –அதுக்கு த்ருஷ்டாந்தகம் -பம்போபவ நேத்யாதி –
கலம்பகன் – நாநா புஷ்ப க்ரதித நாநா வர்ண மாலா –
அரி மிதியான -அரி -வண்டு -வந்தாலே மிதிக்கப்பட்ட -கிளப்பப்பட்ட பரிமளம்
தாய்த் தலைத் தென்றல் -பிரதமத்திலே உண்டாய் ஸ்லாக்யமான தென்றல் -என்றபடி –

ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிரிந்தவாறே
அந்தர ஜாதி காலிலே துகை யுண்பதே இப்படி -என்று அருளிச் செய்வர்-
அந்தர ஜாதி காலிலே -ஆகாசத்தில் ஜென்மத்தை யுடைய காற்றாலே -என்றபடி -ஆகாசாத் வாயு –
கீழாண்டைச் சிகையாவது -பழம் கணக்கிலே நிற்கிற நிலுவை விசாரிக்கை –

அவ்விஞ்ஞாதா சஹஸ்ராம்ஸூர் விதாதா க்ருத லக்ஷண-பூர்வம் ஆஸ்ரித தோஷ விஷயத்திலே அவிஞ்ஞாதவாய் –
குண விஷயத்தில் சஹஸ்ராம்ஸூவாய் -சர்வஞ்ஞராய்ப் போந்தவர் –
இப்போது அந்த ஆகாரத்தை விட்டு தோஷ ஏகத்ருக்கானார்-என்றபடி –
அருளாத திரு மாலார்க்கு -என்றத்துக்கு இரண்டு பொருள் –
அவள் முகம் கொடாள் என்றும் -அவள் சம்பந்த வ்யாமோஹ விஷய பூதனானான் -என்றபடி –
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் -8-8-11-அன்றோ

தகவு -பொறையாதல் கிருபை யாதல் -இரண்டு அர்த்தங்கள் -தத் கார்யமான ஷமையை லஷிக்கிறது
நேர்த்தரவு -செல்லுச் சீட்டு-விஸூத்தி ஓலை –
என்பிழைக்கும் -என்புகளை இழைக்கும்-சிதைக்கும் / என்ன பிழையாம் தப்பாம் என்றுமாம் –
கீழே யாமும் என் பிழைத்தோம் என்று தன மேல் குற்றம் இல்லையாகச் சொல்லி வைத்து
இதில் என் பிழையே பார்ப்பது என்று அபராதம் இசைவான் என் என்ன –
அநப்யுபகத வாதமும் அப்யுகம்ய வாதமும் உண்டாகையாலே விரோதம் இல்லை –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-4-6-

October 30, 2018

எங்கள் ஆற்றாமை நீக்கிலராயினும், தம்முடைய நாராயணன் என்ற பெயர் குறைந்து போகாதபடி,
நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கள்,’ என்றாள் முன்,
‘தாம் அல்லாதாருடன் கலந்து வரும் தாழ்வினைக் காட்டிலும் நம்முடைய நாராயணன் என்ற பெயர் அழியினும் அமையும்’
என்பதனை இறைவன் திருவுள்ளமாகக் கொண்டு, மேல் செய்யத் தக்க செயலைக் கூறுகிறாள் இப் பாசுரத்தில்.
அதாவது, தமக்கும் தாழ்வு வாராமல் எங்கள் சத்தையும் கிடக்கைக்கு ஒருவழி உண்டு.
தாம் அழகு செண்டு ஏறப் புறப்படுதல், யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன போல்வன சில உளவே அன்றே?
அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கும் ஒரு தாழ்வு வாராது;
நாங்களும் சாளரத்தின் வழியால் கண்டு பிழைத்துக் கிடப்போம்;
இப்படி அவிருத்தமாக- மாறுபாடு இல்லாதனவாகச் செய்யலான பின்பு,
அதனைச் செய்யச் சொல்,’ என்று ஒரு வண்டை இரக்கிறாள்.

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழ்ப் பாட்டில் பிரமேயத்தை அனுபாஷித்து சங்கதி -ஒறுவாய்-விகலமாய் –
அவர் வீதி ஓரு நாள் அருளாழிப் புட் கடவீர்-என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கதி –
அழகு செண்டு ஏறுகை -தான் அலங்கரித்துக் கொண்டு புறப்பட்டால் அந்த அழகு ஆஸ்ரிதர் நெஞ்சில் படும்படி புறப்படுகை –
விளையாட்டுச் சரிகை புறப்படுகை -செண்டு என்று பந்தாய் அது அடித்து விளையாடுகைக்காக ராஜாக்கள்
அழகியதாகக் குதிரை ஏறிப் புறப்படுவதைச் சொன்னவாறு-

———————-

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழிப் புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
யருள் ஆழி வரி வண்டே! யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

அருளாத நீர்-
ஏதத் விரதம் மம ( ‘என்னை வணங்குகின்றவனை நான் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு,’ )
என்று திருவருள் புரிவதற்குச் சங்கற்பித்திருக்குமாறு போன்று, அருளாமைக்குச் சங்கற்பித்திருக்கிற நீர்.
‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேஷம் என்று அறிகிலோம்;
அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள்.
இனி,‘அருளாத நீர் அருளி’ என்பதற்கு, ‘திருவருள் செய்வதற்குப் பரிபக்குவமுள்ள உயிர்கள் கிடைக்காமையாலே
அருள் குமரியிருந்து அருள் செய்யாதிருக்கிற நீர், அருள் செய்தற்குச் சமயம் வருமிடத்தில் அருள் செய்து’ என்று உரைத்தலுமாம்.

நீர் அருளி
அருளைக்கொண்டே நிரூபிக்க வேண்டும் தன்மை உம்மது;
அருள் இல்லாதவர்க்கும் ‘அய்யோ’ என்ன வேண்டும் நிலை இவளது;
அங்ஙனம் இருக்க, அருளாது ஒழிவது எங்ஙனே!’ என்பாள், ‘நீர் அருளி’ என்கிறாள்.

அவர் ஆவி துவரா முன்
அவளுடைய பிராணன் – உயிர் பசை அற உலர்வதற்கு முன் அருளப் பாரும்.
இனி, ‘பின்னையும் அருள் செய்தற்குத் தவிரீர் அன்றே! ஆதலால்,
அவள்,அசத் சமமாக – உயிர் அற்ற பொருளுக்குச் சமம் ஆவதற்கு முன்னர் அருளப் பாரும்,’ என்று பொருள் கூறலுமாம்.
ஜீவந்தீம் மாம் யதா ராமஸ் சம்பாவயதி கீர்த்திமான் ( ‘கீர்த்தியையுடைய இராமன் என்னைப் பிழைத்து
இருப்பவளாக எப்படிக் கௌரவிப்பாரோ, அப்படி உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது,’) என்றாள் பிராட்டியும்.
‘நாங்கள் சொல்லும் அத்தனையேயோ வேண்டுவது?
அவன் அருள் செய்யப் போகின்றானோ?’ என்ன,
‘நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது:

கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள்.
அருள் ஆழிப்புள்-
அருட்கடலான பறவை.
‘வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே;
இப்போது வரவுக்குக் காரணமாகையாலே -உடல் ஆகையால் -‘அருளாழிப்புள்’ என்கிறாள்.

கடவீர் –
அனுகூலர் -‘அன்புள்ளவர்கள் கண்டு வாழுகைக்கும்-ஸூக ஸ்பர்சத்தாலும் -தான் ஊற்றின்பம் உறுகைக்குமாகப்
போகாதே பிசுகிச் சுழியா நிற்கும்
ஆதலின்,அசேதனமான – அஃறிணைப் பொருளான தேரினைப் போன்று, வடிம்பாலே தாக்கி நடத்த வேண்டும்’ என்பாள்,
‘கடவீர்’ என்கிறாள். ‘எங்கே?’ என்னில்,

அவர்வீதி –
அவள் தெருவிலே.‘அங்ஙனம் ஒண்ணுமோ? ஒரு தெருவில் பலகால் போகப் புக்கவாறே
‘இவ்வரவு ஒரு காரணமுடைத்து என்று கூறார்களோ?’ என்னில்,
ஒரு நாள்-
நாங்கள் பிழைத்து கிடப்பதற்கு ஒரு நாள்-போக அமையும்.

அருள் ஆழி அம்மானை –
‘தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார்,’ என்னும்படி அருட் கடலானவன்.
இதனால், பெரிய திருவடியும் மிகை என்கிறாள்,
இனி அருளை இறைவனுக்கு அடைமொழியாக்காது, ஆழிக்கு அடைமொழியாக்கி,
ஆழி என்பதற்குச் சக்கரம் என்று கொண்டு,
அருளை நிரூபகமாகவுடைய திருவாழியைக் கையிலேயுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.
‘ஆயின், ஆழி அருளை நிரூபகமாக வுடையதாய் இருக்குமோ?’ எனின்,
அருளார் திருச்சக்கரம்’ என்ப ஆதலின், சர்வேஸ்வரனுக்கும் ‘கைக்குறியாப்பை வாங்குவது இங்கே யன்றோ!
சர்வேஸ்வரன் பக்கல் அருள் மறுத்தாலும் அருள் கூடு கட்டி நிற்கும் இடமன்றோ இது?
இப்பொருளால், ‘பெரிய திருவடி ஒருவனுமேயோ!
அங்குக் கையாளாக உள்ளார் அடைய நம் பரிகரம் அன்றோ?’ என்று தெரிவிக்கிறாள்.

இது சொல்லி யருள்-
இத்தனையும் சொல்லியருளல் வேண்டும். ‘எது?’ என்னில்,
‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாள்’ என்கிற வார்த்தையைச் சொல்லி யருளல் வேண்டும்.

ஆழி வரி வண்டே-
ஸ்ரமஹரமாய் -வருத்தத்தை நீக்கக் கூடியதாய் அழகியதாய் இருக்கிற வண்டே.
இனி, இதற்கு ‘வடிவு சிறுத்திருக்கவும் காமபீர்யம் பெருத்திருக்கிற வண்டே’ என்றும்,
‘சுழலப் பறக்கிற வண்டே’ என்றும் பொருள் கூறலுமாம்.
இதனால், கடகருடைய -இறைவனோடு சேர்க்கின்ற ஆசாரியனுடைய ஆத்தும குணத்தைப் போன்றே,
ரூப உருவத்தின் குணமும்-உத்தேச்யம் – உட்கோள் என்கை,

யாமும் என் பிழைத்தோம் – ‘
நாங்கள் என்ன தப்புச் செய்தோம்?
தாம் பிரிந்து துவளவிட்டு வைத்தது போன்று, நாங்களும் கிரமத்திலே பெறுகிறோம் என்று ஆறியிருந்தோமோ?
திர்யக்கின் -விலங்கின் காலில் விழுவாரும், தூது விடுவாரும் தாமாக இருக்க, –
அத்தலை இத்தலையாகியும் வாராது இருக்கிற தம்மதோ, எங்களதோ குற்றம்?’ என்பாள்,
‘யாமும் என் பிழைத்தோம்?’என்கிறாள்.

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அருளாத நீர் அருளி -முந்தின அர்த்தத்தில் சங்கல்பத்தில் லக்ஷணை-
குமரிருந்து -அனுபவ யோக்யம் அன்றிக்கே இருந்து-நீர் -தயா நிரூபகத்வம் தோற்றுகிறது –
தேர் கடவி -என்னுமா போலே அசேதன சமாதியால் கடவீர் -என்கிறார் –
பிசிகிச் சுழிகை -மந்தமாக வளைய வருகை -அருளாழி அம்மானை -கிருபா சமுத்ரமான ஸ்வாமியை –
கையாளாய் உள்ளார் -பரிகரமாய் உள்ளார் -கையிலே இருக்கிறவர்கள் என்றுமாம் –
கைக் குறி- ஆப்பைக் குறி -லௌகிக பரிபாஷை -குறி -அளவு –
ஆழி -சமுத்திரம் என்று விவஷித்து -ஸ்ரமஹரமாய்-
ஆழம் -காம்பீர்யம் –
ஆழி வட்டம் -அத்தாலே-சுழலுதலைச் சொன்னவாறே —
மூன்று பொருளுக்கும் வரி -அழகு –
திர்யக்கின் காலிலே -ஸூக்ரீவம் நாதம் இச்சதி –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-4-5-

October 30, 2018

‘முடிவார்க்கு வேண்டா அன்றே? ஆதலால், எங்களை விடீர்;
ஜீவிக்க நினையும் தமக்கு தாம் வேண்டாவோ?’ என்கிறாள்.
அதாவது,
‘தம்முடைய நாராயணன் என்னும் பெயர் ஒறுவாய்ப் போகாமல் நோக்கிக்கொள்ளச் சொல்,’ என்கிறாள்.

—————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழ்ப் பாட்டிலே நான் முடிவதற்கு முன்னே வந்து உதவ வேணும் என்ற அளவிலே முகம் காட்டக் காணாமையாலே
நம்முடைய சத்தை போனாலும் போகிறது-தம்முடைய சத்தைக்கு ஒரு ஹானி வராமல் பரிஹரிக்கச் சொல்
என்று போக விடுகிறாள் என்கிறார் -வாக்ய த்வயத்தாலே –
என் சத்தையில் அபேக்ஷை இல்லையே யாகிலும் தன் சத்தையில் அபேக்ஷை இல்லையோ -என்று தாத்பர்யம் –
ஒறுவாய்ப் போகாமே-விகலமாய்ப் போகாமே -என்றபடி

———————-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே!
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டருளாயே–1-4-5-

நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-
நல்கி
உலகங்களைக் காப்பாற்றும்போது, கார்த்த்வயா புத்தி இன்றிக்கே -செய்து தீர வேண்டுமே என்ற எண்ணத்தோடு அன்றிப்
பேறு தன்னதாகக் காக்கின்றானாதலின், ‘நல்கி’ என்கிறாள்.
அதாவது, ‘எனக்குத் தன் பக்கல் உண்டான காதல், தனக்கு உலகத்திலே உண்டாய்க் காக்கின்றான்,’ என்றபடி.
தான்-
அபேக்ஷிப்பார் இன்றிக்கே -விரும்புவார் இல்லாதிருக்கவும், தானே காக்கின்றானாதலின், ‘தான்’ என்கிறாள்.
காத்தளித்தல் என்பது–விருப்பமில்லாதனவற்றை நீக்கி விரும்புகின்ற வற்றைக் கொடுத்தல்.
பொழிலேழும்
உலகம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டிருத்தலின், ‘பொழிலேழும்’ என்கிறாள்.
அன்றி, இவ்வுலகம், கீழ் உலகம் என்னும் இவ்விரண்டனையும் ஒன்றாகக் கொண்டு
அதனோடு மேலே உள்ள ஆறு உலகங்களையும் சேர்த்து ஏழாகக் கோடலும் அமையும்.
ஆக, தன் சரீரத்தைப் பாதுகாத்துக் கோடல் அன்பினாலே ஆதலின்,
‘தான் நல்கிக்காத்து அளிக்கும் பொழிலேழும் நாரணன்’ என்கிறாள்.

வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ-
‘தம் மக்களைப் பாதுகாத்தல் ஆகாதோ?’ நாட்டுக்கு இட்ட நினைப்பு அந்தப்புரத்துக்கு அரிதாக வேண்டுமோ?’ என்றபடி.
வினையேன்
‘கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம் படியான பாவத்தைப் பண்ணுவேனே?’ என்பாள், ‘வினையேன்’ என்கிறாள்.

இனி, ‘நல்கித் தான் காத்து அளிக்கும் பொழிலேழும்’ என்பதற்கு,
‘பெயர் வேறாகவும் உருவம் வேறாகவும் பிரிப்பதற்குத் தகுதி இன்றிக் கிடந்த அன்று,
யார் இருந்து விரும்ப, இதனை உண்டாக்கினான்?
நீறு பூத்த நெருப்புப் போன்று, தான் என்ற சொல்லுக்குள்ளேயாய், தன்னை இட்டுப் பேச வேண்டி இருந்த அன்று,
தன் மேலே, ஏறிட்டுக் கொண்டு நோக்கி அளிப்பவன்’ என்றும்,
‘வினையேற்கே நல்கத் தான் ஆகாதோ?’ என்பதற்கு,
‘இல்லாத அன்று உண்டாக்கினான்; உண்டாக்கியதற்குப் பலன் கருமத்தை ஏறிட்டுக் கைவிடுகையோ!’ என்று பொருள் கூறலுமாம்.

நாரணனைக் கண்டக்கால்-
உயிரக் கூட்டங்களினுடைய ஸ்வரூபம் நிலைபேறு முதலியவைகள் தனக்கு அதீநமாய்,
இவை பிரகாரமாகத் தான் பிரகாரியாய், இவற்றிலே ஒன்று குறையிலும் தன் இழவாம்படி இருக்கையாலே
நாராயணன் என்று விருது ஊதிக் கொண்டு திரிகிறவரைக் கண்டால்,
இங்கு, ‘இப் பெயர் காரண இடுகுறியோ!’ என்றிருந்தோம்;
‘கள்ளிச் செடிக்கு மஹா விருக்ஷம் என்று பெயர் இருப்பதைப் போன்றது ஒன்றோ!’ என்று கேளுங்கள்
என்ற தொனிப் பொருளும் தோன்றும்.

மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே-
பெருகா நின்றுள்ள நீரை யுடைத்தான கொடித் தோட்டங்களிலே பேடையின் வாக்கு அடங்குவது தேடுகின்ற குருகே!
கயல் உகளா நிற்கவும் பேடையின் வாய்க்கு அடங்குவது தேடுகின்றது ஆதலின்,’ ‘இரை தேர்’ என்கிறாள்.
‘புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே’ என்றார் திருமங்கை மன்னனும்.
இதனால், அதன் செயல் தனக்கு என வாழாமையாய் இருந்தது என்கிறாள்.
வண் குருகே
கைப்பட்ட இரையினைத் தன் மிடற்றுக்குக் கீழே இழித்தாது; ஆதலின், ‘வண் குருகே’ என்கிறாள்.
வண்மை-கொடுத்தல்; அழகுமாம்.
‘நான் உண்ணா விரதத்தோடு இங்கே தங்கியிருக்க, நினையாமல் இருக்கின்ற அவனைப் போல அல்லை நீ’ என்பது குறிப்பு.
‘காரிய காலத்தில் பூனையின் தன்மையினை அடைதல் வேண்டா;
தூது போகையில் பயின்று இருப்பாரைப் போன்று இருக்கின்றாய்’ என்பாள், ‘சிறு குருகே’ என்கிறாள்.

மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டு அருளாய்-
‘இதுவும் ஒரு நீர் நிலம் இருக்கிறபடி பாராய்’ என்பாள்,‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள்.
‘ஆயின், குருகு இரை தேடுவதனை விட்டு இதனைப் பார்க்குமோ!’ எனின்,
இங்கும் சேலும் கயலும் உண்டாகையாலே பார்க்கும்.
இனி, தன்னைக் கண்ண நீரைக் கொண்டே நிரூபிக்க வேண்டி யிருத்தலின் ‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள் எனினும் அமையும்.
ஆயின், நிரூபிப்பதற்குக் கண்ண நீர் எப்பொழுதும் இருக்குமோ?’ எனின் கலவியில் ஆனந்தக் கண்ணீரும்,
பிரிவில் சோகக் கண்ணீரும் மாறி மாறி இருக்கும்.
‘மறுப்பரோ! என்னும் அச்சத்தால், நேரே உடம்பைத் தரவேண்டும் என்று சொல்லாளாகி, ‘வாசகங்கொண்டு’ என்கிறாள்.
மறுக்கும் வார்த்தையும் அமையும்; அவர் பக்கல் உள்ளது ஒன்றே வேண்டுவது என்னும்
நினைவினள் ஆதலின், ‘ஓர் வாசகம்’ என்கிறாள்.
‘ஆயின், மறுக்கும் வார்த்தை இவளுக்கு உத்தேஸ்யம் ஆமோ?’ எனின்,
‘தாரான் தரும் என்ற இடத்தில் ஒன்றதனை, ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்’ என்றார் பரகால நாயகியார்.
‘செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று, மெய்ம்மை சொல்லி முகம்
நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே!’ என்றார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியார்.
‘கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால், பாவி நீ என்று ஒன்று சொல்லாய்
பாவியேன் காண வந்தே’ என்றார் இவ்வாழ்வார் நாயகியும்.
தான் ஜனக குல சுந்தரியாயிருந்தும், பறவைகளைப் பார்த்து, ‘அருளாய்’ என்கிறாள்;
அப் பறவைகளால் தனக்குக் கிடைப்பது பகவத் விஷயம் ஆகையாலே.
‘நம்பி யேறு திருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய,
பட்டர் துணுக்கு என்று எழுந்து நின்று, ‘அவர் ஸ்ரீ வைஷ்ணவர்களுடன் பரிமாறும் படிக்குத்
திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்று அருளிச் செய்தார் என்ற ஐதிஹ்யம் இங்கு ஓர்தல் தகும்.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பொழில் ஏழையும் தான் நல்கிக் காத்து அளிக்கும் -இதி பிரதமஸ் யன்வய –
தான் -அபேஷா நிர பேஷதயா ஸ்வயம் ப்ரயோஜனத்வேன ஸ்வயம் ஏவ –
நல்கி -ஸ்நேஹம் க்ருத்வா -காத்து -அநிஷ்ட நிவ்ருத்திம் க்ருத்வா -அளிக்கும் -சர்வ அபீஷ்ட பிரதம் நாராயணன்
பொழில் ஏழும் காத்துத் தான் நல்கி அளிக்கும் இதி த்வதீயஸ் அன்வய –
ஸ்ருஷ்டோப்யய பூர்வகத்வாத்-காத்து -ஸம்ஹ்ருதி ஸமயே-தமஸ் பரே தேவ ஏகி பவதி -இதி ரஷித்வா-
தான் நல்கி -ஸ்ருஷ்ட்டி காலே சாதி அபேஷா நிரபேஷம் ஸ்வயம் ஏவ கரண களேபராணி தத்வா –
அளிக்கும் -விரோதி நிவர்த்தன பூர்வகம் சர்வ அபீஷ்ட ப்ரதம் நாராயணன் இதி –
நல்கி -பேறு தன்னதாக –பொழில் என்று லோகங்களைச் சொல்லுகிறது – நல்கி ஸ்நேஹமும் ஸ்ருஷ்டியும் –
வினையேன் –
சர்வ ரக்ஷகனைப் பற்றி வைத்து என் அபிமதம் கிடையாதபடியான பாபத்தைப் பண்ணினேன் -என்னும் இடத்தை
ச நிதர்சனமாக -கடலில் இத்யாதி -தண்ணீர் ஸ்தாநீயம் -ஜீவனம் –
நாராஜ்ஜாதாநி தத்வாநி நாராணி-என்றதை பற்ற ஸ்ருஷ்ட்டி அவன் அதீனம்-என்கிறது –
பஹு வ்ரீஹியாலே-அந்தரவ்யாப்தி சொல்லி ஸ்திதி அவன் அதீனம் என்கிறது -அசாதாரண பேராய் இருக்குமே –
புனல் படைப்பை -நீர் நிலம் -அதாவது கொடித் தோட்டம்
சேலும் கயலும் -சாடு-சேலேய் கண்ணியரும்-கயலோ நும் கண்கள் –
ஜனக குல ஸூந்தரி திர்யக்குகளைப் பார்த்து அருளாய் -என்னும்படியான தசை –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் பரஸ்பர நீச பாவம் -உத்தேச்யதா பிரதிபத்தி பண்ணி தம்முடைய தாழ்ச்சி தோற்ற இருந்தபடி –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-4-4-

October 30, 2018

‘அனுபவித்தாலும் மாளாதது நான் பண்ணின பாபமேயோ!’ என்றாள் கீழே –
‘இவள் அனுபவித்தாளோ பின்னை?’ எனில் ஆம்; அனுபவித்தாள்;
அவன் அரைக் கணம் தாழ்ந்து முகம் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தாள் அன்றே?
இவ் வளவிலே சில மகன்றில்கள்,-நாம் கிஞ்சித்கரிக்க நல்ல அளவு –
நாம் உதவி சிறிதாயினும் செய்வதற்கு நல்ல சமயம்’ என்று நினைந்து,
‘நாங்கள் இவ் விடத்திற்குச் செய்ய வேண்டுவது என்ன?’ என்று வந்து முகங் காட்டினவாகக் கொண்டு,
அவற்றைப் பார்த்து, ‘என் நிலையைக் கண்டும் இரங்காதே போனவருக்கு நான் எத்தைச் சொல்லுவது? என்று –
நிராசையாய் -ஆசையற்றவளாய், பின்னரும் -சாபலத்தாலே -ஆசைப் பெருக்காலே,
பலகால் சொல் மறுத்தார்க்குச் சொல்லுவாரைப் போன்று,
இத்தனையுஞ் சொல்ல வல்லீர்களோ, மாட்டீர்களோ? என்கிறாள்

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

மகன்றில்காள் -சக்ரவாகங்கள்
நன்னீல மகன்றில்காள் என்றத்தையும் என் சொல்லி யான் சொல்லுகேனோ என்றதையும் கடாக்ஷித்து அவதாரிகை –
நல்லளவு -நல்ல சமயம்
அவன் பக்கலில் உள்ள கோபம் இவற்றின் பக்கலிலும் ஏறி நல்குதிரோ நல்கீரோ என்கிறாள் –
சொல்லு மறுத்தற்கு -கேளாதவர்க்கு

———————

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனி யவர் கண் தங்காது என் றொரு வாய் சொல்
நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?–1-4-4-

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத-
என் நீர்மை கண்டு-என் ஸ்வபாவம் -மார்த்த்வம் – மென்மைதனைக் கண்டு அருள் செய்து,
நாம் பிரியுமது தகாது’ என்னாதே பொகட்டுப் போனவர்க்கு.
ஸ்ரீ பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன,
‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார்.
கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன,
‘புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’
‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற
தமிழ்ப் பாக்களை நீ அறியாயோ?’ என்று அருளிச்செய்தார்.

என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ –
இந் நிலையிலும் ‘என்னுடையவன்’ என்னும்படி கலந்த போது முகங்கொடுத்தவன் ஆதலின்,
‘என் நீல முகில் வண்ணர்க்கு என்கிறாள்.
திரு முகம் மறுத்துப் போனவர்க்கு எத்தைச் சொல்லுவது என்னும் நினைவாலே,
‘அவர்க்கு நான் சொல்லி விடுவது எத்தை?’ என்கிறாள்.
‘இங்ஙனம் சொல்லுவான் என்?’ என்னில் ‘கண்டு இரங்காதவரோ கேட்டு இரங்கப் போகின்றார்?’ என்னுமதனாலே.
‘ஆயின், கண்டானோ?’ என்னில்,
ஏன்? கண்டிலனோ? கலக்கிற சமயத்தில் கை நெகிழ்த்த இடமெல்லாம் வெளுத்தபடி கண்டிருப்பானே.
இனி, ‘என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத என் நீல முகில் வண்ணா’ என்பதற்கு,
‘இவ்வளவிலே என்னை வந்து அணைந்தவராய் என் நிலையைக் கண்டு இதற்கு ஒரு போக்கடி பாராமல்,
உங்கள் பக்கல் கேட்டு அறிய இருக்கிறவர்க்கு’ என்று உரைத்தலுமாம்.

என் நீர்மை
அவனை அனுபவிக்குமதிலும், அவனைப் பிரிந்து நோவுபடுகின்ற தன் தன்மையைக் கட்டிக் கொண்டு கிடத்தல்
அமைந்ததாக இருத்தலின், ‘என் நீர்மை’ என்கிறான்.

இது
தன் நிலை தானும் தனக்கும் பேச்சுக்கு நிலம் அல்லாமல் இருத்தலின், ‘இது’ என்கிறாள்.

என் நீல வண்ணர்க்கு
‘முதன் முதலில் வடிவைக் காட்டியே என்னைத் தமக்கே உரிமையாக்கினார்;
அவ் வடிவிற் புகர் இப்பொழுது அகவாயிலும் சிறிது உண்டாகப் பெற்றது இல்லையே’ என்பாள், ‘என் நீல வண்ணர்க்கு’ என்கிறாள்.
‘ஆயின், மனத்தில் தண்ணளி இல்லையோ?’ எனின், ‘யாமுடை ஆயன் தன் மனங் கல்லாலோ’ என்று இவள் தானே மேல் கூறுவள்.

என் சொல்லி யான் சொல்லுகேனோ-
‘என்ன பாசுரத்தை இட்டு எத்தை நான் உங்களுக்குச் சொல்லி விடுவேன்’ என்பாள், ‘என் சொல்லி யான் சொல்லுகேனோ?’ என்கிறாள்.
‘ஆயினும், நாங்கள் சென்று கூறின் வாராது இரான்;’ என்ன,
‘நான் சொல்லி விட இருக்கிறவர், நீங்கள் சொல்லும் அளவையோ பார்த்திருக்கிறார்?
‘திருமுகம் மறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப் போகின்றானோ?’
கண்டு இரங்காதவர்க்கு நான் எத்தைச் சொல்லுவது என்று ஆசை அற்றவளாய்,
பின்னையும் ஆசையின் மிகுதியினாலே,
அதவா கிம் ததா லாபை (‘இக்கிருஷ்ணன் பிதற்று ஒழிய வேறு ஒன்று இல்லையோ!’) என்று கூறிய ஆய்ப் பெண்கள்,
அப்யசவ் மாதரம் த்ரஷ்டும் சக்ருத்யப்யா கமிஷ்யதி (‘கலந்த நம்மை அன்றோ வேண்டான் அவன்? பெற்ற தாயைக் காணவாகிலும்
இங்ஙனே ஒருக்கால் போதானோ?’ )என்று கூறியது போன்று கூறுகின்றாள் மேல்:

நல் நீர்மை-நல் உயிர்.

இனி-
ஆன அளவும் கால் கட்டிப் பார்த்தாளாதலின், ‘இனி’ என்கிறாள்.

அவர் கண் தங்காது-
சேஷியான உம்முடைய பக்கலில் தங்கில் தங்கும் அத்தனை. அதாவது,
பிராட்டி, பெருமாள் பக்கல் குறையேயாய், தன் பக்கல் குறை தோற்றாதபடி வார்த்தை அருளிச் செய்தவாறே
‘நாமோ தாம் இங்கு நன்றாகச் செய்தோம், பெருமாளைப் பிரிந்த பின்னர் முடிந்தது என்னும் வார்த்தை கேட்கப் பெற்றது இல்லையே!’ என்ன
‘மாதா என்றும் பிதா என்றும் பலர் பக்கலிலும் பாலி பாயக் கூடியதான ஸ்நேஹத்தை -அன்பை, பெருமாள்,
என் ஒருத்தி பக்கலிலும் ஒரு மடை செய்து போந்தார்;
அவர் இவ் வாற்றாமையாலே உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்துக் கொண்டு வர,
விடாயர் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று ஆக ஒண்ணாது என்று நோக்கியிட்டு வைத்தேன், அத்தனை;
அவரைக் கண்ட பிற்றை நாள் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது,’ என்று கூறியது போன்று,
‘தலைவராகிய உம் பொருட்டுத் தங்கின் தங்கலாம்,’ என்ற படி

ஒரு வாய்ச் சொல்-
ஒரு யுக்தி – சொல் சொல்ல அமையும்.-வாசா தர்மம் அவாப்னுஹி-

நன்னீலம் மகன்றில்காள் இத்யாதி –
அவர் நீலமுகில் வண்ணராய் இருந்தார்; நீங்களும் நீல மகன்றில்களாய் இருந்தீர்கள்;
செயலும் அவரைப் போன்று இருப்பீர்களோ?’ என்றபடி

நல்குதிரோ நல்கீரோ-
செய்வீர்களோ, மாட்டீர்களோ?
முதல் வார்த்தையிலேயே பதின்கால் சொல் மறுத்தாரைச் சொல்லுமாறு போன்று,
ஆற்றாமையின் கனத்தாலே ‘நல்குதிரோ நல்கீரோ!’ என்கிறாள்.

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நீர்மை -மார்தவம்-இது விஸ்லேஷம் என்று பிரதம நிர்வாகம் -த்விதீய நிர்வாஹே-துக்க அனுபவ தசை –
திருமுகம் -மாயோன் திறத்தனளே இத்திருவே –
திருவினுடைய முகம் -பிராட்டியான தன்னுடைய முகம் -மறுத்து -நிஷேதித்து -அநாதரித்து –
என் நீர்மை -மமகாராம் த்யாஜ்யமாய் இருக்க பகவத் விஷயத்தில் தமக்குச் சிறிது பிராவண்யம் உண்டானாதாகச் சொல்லுகிறது –
அவனை அனுபவிக்குமதிலும் ஸ்வ விஸ்லேஷத்திலே ஊற்றம் தோன்றி இருக்கிற படி –
நீர்மை விஸ்லேஷ அஸஹ மார்த்வம் -விரக வியசனம் -பேச்சுக்கு நிலம் இல்லாமையால் இது என்று சாமான்ய நிர்த்தேசம்
பிரதானனான ராஜாவின் ஓலை மறுத்தவன் அப்ரதானனான கணக்கன் ஓலை கேட்கப் புகுகிறானோ –
பாலி பாய்கை -பிரிந்து போகை –
அவர் கண்ட பிற்றை நாள் -என்றும் அவரைக் கண்டா பிற்றை நாள் -ஏதேந பகவத் அத்யந்த பரதந்த்ராயா பரங்குசார்ய நாயகியா –
ஏதாவத்காலம் பிராண தாரண ரூப ஸ்வ ரக்ஷனே ஸ்வ அன்வய யுஜ்யதே கிம் இதி சங்கா
சேஷத்வ பாரதந்தர்ய கார்யத்வாத தோஷ இதி பரிக்ருதா
நல்குதல் -கொடுத்தலாய் -யுக்தி பிரதானம் -என்றபடி –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-4-3-

October 29, 2018

‘அகல்வதுவோ’ என்பது போன்று சொல்லுகிற பக்தி வாதங்கள் நமக்குத் தெரியா;
அவஸ்யம் அனுபோக்தவ்யம் (‘செய்த வினைகள் அவசியம் அனுபவித்தற்கு உரியவை’ )என்கிறபடியே,
அனுபவித்தே அற வேண்டும் என்று இறைவனுடைய திருவுள்ளக் கருத்தாகக் கொண்டு,
‘நான் செய்த பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று சொல்லுங்கள்’ என்று சில அன்னங்களை இரக்கிறாள்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

விதியினால் -அகிஞ்சனோ அநந்ய கதி -த்வத் ஏக சரணஸ் சாஹம்-போன்ற பக்தி க்ருத உபசார யுக்திகள் –
நான் பண்ணின -சிந்தையந்தி யுடைய வினை அனுபவித்தாள் மாளலாமோ என்று தாத்பர்யம் –
மதியிலேன் வல்வினையோ -என்று அன்வயத்தி வியாக்யானம்

—————–

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்!
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே–1-4-3-

விதியினால் பெடை மணக்கும்-
‘நீங்கள் சாஸ்திரங்கள் – நூல்கள் சொல்லுகிறபடியே கலக்கையாலே பிரிவின்றி இருந்தீர்கள்;
இவன் அடைவு கெடக் கலக்கையாலே எனக்குப் பிரிவு வந்தது,’ என்கிறாள்.
இனி, விதி-புண்ணியம்;
அதாவது, ‘உங்களுடைய புண்ணியத்தால்’ என்று கூறலுமாம்;
அபிமத சம்ச்லேஷம் புண்ய பலம் -காதலர்களோடு கலந்திருத்தல் புண்ணியத்தின் பலன்; –
அபிமத விஸ்லேஷம் அவர்களைப் பிரிந்திருத்தல் பாவத்தின் பலன்; ஆதலின், ‘விதியினால் மணக்கும்’ என்கிறாள்.
இனி, ‘என்னுடைய புண்ணியத்தால்’ என்றலும் ஒன்று.
‘ஆயின், இவளுடைய புண்ணியத்தால் அவை மணத்தலாமாறு யாங்ஙனம்?’ எனின்,
பெருமாள், பிராட்டியைப் பிரிந்து கடலும் மலையும்-அரித்திக் கொண்டு – தேடிக் கொண்டு வருகையில்,
இராச்சியம் மனைவி முதலியவைகளை இழந்த மகாராசரைக் கண்டு, அவர் குறை தீர்த்த பின்பே யன்றோ
தம் இழவில் நெஞ்சு சென்றது பெருமாளுக்கு?
ஆதலின், இவை குறைவற்று இருக்கிற இதுதான் இவள் காரியமாக இருக்கும் அன்றே?
ஆயின், மகாராசர் குறையை முற்படத் தீர்ப்பான் என்?’ என்னில்,
நீர்மையுடையார்க்குத் தத்தமது இழவிலும் பிறருடைய இழவே நெஞ்சில் முற்படப்படுவதாம்.

பெடை மணக்கும்
பெடையினுடைய கருத்து அறிந்து அதனை உகப்பிக்கின்றது’ என்பாள், ‘பெடை மணக்கும்’ என்கிறாள்.

மென்னடைய அன்னங்காள்
இவ் வன்ன நடை கொண்டோ என் காரியம் செய்யப்போகிறது!’ என்பதாம்.
இனி, இளைய பெருமாளுடைய வில்லின் நாண் ஒலி செவிப்பட்ட பின்னர்,
மது அருந்தியதால் உண்டான கலக்கமும் தெளிந்து, கழுத்தில் மாலையையும் அறுத்துப் போகட்டு,
‘இச் சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது’ என்று தாரையைப் புறப்பட விட,
அவள்,சா ப்ர்ஸ்க்கலந்தீ -கலவியால் உண்டான பரவசத் தன்மை யடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாற் போன்று
இரா நின்றது இவற்றின் நடையழகும் என்பாள்,–பெடை மணக்கும், மென்னடைய அன்னங்காள்’ என்கிறாள் எனினும், அமையும்.
ஆயின், பட்டத்துத் தேவியை முன்னிடலாமோ?’ எனின்,
இளைய பெருமாளுடைய திருவுள்ளத்தில் சிவிட்குத் தாரையையிட்டு ஆற்ற வேண்டிற்றுக் காணும் இருந்தது.
சா -ஒரு கலவியும் பிரிவும் வேண்டாதபடியான நடையழகை யுடையவள்
ப்ர்ஸ்க்கலந்தீ-சம்ச்லேஷத்தால் உண்டான துவட்சியாலே தடுமாறி அடிமேல் அடியாக இட்டு வந்தாள்
மதவிஹ்வலாஷி -மதுபானாதிகளால் தழு தழுத்த நோக்கை யுடையவளாய் இருந்தாள்
ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம ஸூத்ரா-அரைநூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையில் கிடந்தபடியே பேணாதே வந்தாள்
ச லக்ஷணா -சம்போக சிஹ்னங்கள் காணலாம் படி வந்தாள்
லஷ்மண ஸந்நிதானம் ஜகாம-தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்
தாரா -தாரையானவள்
நமிதாங்கயஷ்ட்டி -உருகு பதத்தில் வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதது போலே
இத் துவட்சி இவளுக்கு நிரூபகம் என்று தோற்றும்படி இருந்தாள்

மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு –
இராவணனைப் போலே தலை அறுத்து விட ஒண்ணாதபடி கொடை என்ற ஒரு குணத்தை
ஏறிட்டுக் கொண்டிருந்தான் மாவலி.
இந்திரன் அரசை யிழந்து நின்றான்; இரண்டிற்கும்-அவிருத்தமாக – மாறு இல்லாமல் செய்யலாவது என்?’ என்று,
கோ சஹஸ்ர ப்ரதாதாரம் -‘ஆயிரம் பசுக்களைக் கொடுத்த கைகள்’ என்கிறபடியே,
கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு நீர் ஏற்று அவனுக்குக் கொடுத்த விரகர்க்கு.
இதனால், தலைவர் சால தூர தர்சி என்பதனைத் தெரிவிக்கிறாள்.
குறள்-
கோடியைக் காணி யாக்கினாற் போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி
சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள்.
மாணாய்-
‘உண்டு’ என்று இட்ட போதொடு‘இல்லை’ என்று தள்ளிக் கதவு அடைத்த போதோடு வேற்றுமை அற முக மலர்ந்து போம்படி
இரப்பிலே தழும்பு ஏறின வடிவை யுடையனானான் ஆதலின், ‘மாணாய்’ என்கிறாள்.
உலகு இரந்த கள்வர் என்பதற்குத்
தன் சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் ‘கொள்வன் மாவலி மூவடி’ என்று இரந்த வஞ்சகர் என்று
பொருள் அருளிச் செய்வர் ஸ்ரீ திருமாலை யாண்டான்.
ஸ்ரீ எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச் செய்வர்.
அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக,’ என்றபடி,
ஆயின், இவள் அச் செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின்,
‘பெருநிலம் கடந்த நல் அடிப் போது’ என்று அன்றோ இவள் ஆசைப் பட்டாள்?
மேலும்,‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்’ என்றும்,
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று, ஒன்று ஒரு கால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது?
ஸ்ரீ திருமங்கையாழ்வாரும், ‘முன்னங் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ என்றார்.
ஆக, இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச் செயலுக்கேயாம்.

மதியிலேன்-
‘பிரிகிற சமயத்திலே, ‘போகாதே கொள்’ என்றேனாகில் இப்பாடு படாது ஒழியலாம் அன்றோ?
அது செய்திலேன்; ஆதலால், அறிவுகேடி யானேன்,’ என்கிறாள்.

வல்வினையே மாளாதோ-
இவள் ஒரு தீர்க்க சிந்தயந்தி யாவள்.
மதியிலேன் வல்வினையே மாளாதோ’ என்றதனால் மதியினை யுடைய ஒருத்தியின் வல்வினை மாண்டது என்பது உட்கோள்.
அதாவது, சிந்தயந்தி என்பாள்-எல்லைக் சதிரியாய் குரு தர்சனத்திலே முடியும்படி
அதாவது – சதுரப்பாட்டினை யுடையளாய் மாமியார் முதலானாருடைய முன்னிலையிலேயே இரு ஸ்ரீவினைகளையும் நீக்கி
மோக்ஷத்தினை அடைந்தாள் என்னும் சரிதம் ஈண்டு நினைத்தல் தகும்.
ஆயின், அவள் இருவினைகளையும் நீக்கியவாறு யாங்ஙனம்?’ எனின்,
தத் சித்த விமலாஹ்லாத இத்யாதி -ஸ்ரீ கிருஷ்ணன் பக்கலில் நெஞ்சை வைக்கையாலே புண்ணியத்தின் பலம் அனுபவித்தாள்;
அந்நினைவின் படி அனுபவிக்கப் பெறாமையால் பாப பலம் அனுபவித்தாள்;
ஆகையாலே, நல்வினை தீவினைகள் இரண்டனையும் அரைக்கணத்தில் அனுபவித்தால்,’ என்று விஷ்ணு புராணம் கூறுகின்றது.
ஒருத்தி-
‘ஒருத்தி எனப் பொதுவிற்கூறின், அறியுமாறு யாங்ஙனம்’ எனின் எய்தவன் கை உணராதோ?
அதாவது,’ இன்ன காட்டிலே மான் பேடை ஏவுடனே கிடந்து உழையா நின்றது’ என்று ஊரில்
வார்த்தை யானால் எய்தவன் கை உணராதோ?
‘நீயன்றோ எய்தாய்?’ என்று சொல்ல வேண்டா அன்றே?
அவ்வாறே ஒருத்தி என்ற அளவில் பிரிந்த தலைவன் உணர்வான் என்பது
மேலும் சம்சார விபூதியிலுள்ளாள் இவள் ஒருத்தியுமே யாவள். ‘ஏன்?
அவனுடைய பிரிவால் வருந்துமவர் வேறு ஒருவர் இலரோ?’ எனின்,
சம்சாரிகள் -புறம்பே அந்ய பரர் -புறப்பொருள்களில் நோக்குள்ளவர்கள்;
நித்திய சூரிகளுக்குப் பிரிவு-விஸ்லேஷம் – இல்லை;
மற்றைய ஆழ்வார்கள் இவளுக்கு-அவயவமாய் – உறுப்புகளாய் இருப்பவர்கள்.

மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே-
மதி கலங்கி,
அறிவு அழிந்தாள் என்மின்.
தன் அறிவு அழிந்தாளாகிலும் நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பர்;
அதாவது, நாம் கொடுத்த அறிவு கொண்டு தத் தஸ்ய சத்ருசம் பவேத் ‘
என்னை அழைத்துக்கொண்டு செல்லும் அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று பிராட்டி இருந்தது போன்று இருப்பாள் என்றபடி.
மதி எல்லாங் கலங்கி-
தாம் மயர்வு அறுத்துத் தந்த ஞானப் பரப்பெல்லாம் கலங்குகைக்கு உடலாயிற்று என்மின்;
அறிவு தந்தார் தாம் அன்றோ என்று அறிவிப்பீர்’ என்றபடி.
மேல் எழச் சிறிது கலங்கிற்றாகிலும் பின்பும் நாம் கொடுத்த அறிவு அன்றோ?அப்படிக் கலங்குமோ!’ என்பார்;
மதி எல்லாம் உள் கலங்கி-
தாம் தந்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கின என்மின்;
அத்தனையோ! நாம் இருந்தோமே! பின்பு நாம் போனவாறே அறிவு கொடுத்துக் கொள்ளுகிறோம்’ என்று இராமல்,

மயங்குமால் –
முடியுந் தசையாயிற்று என்மின். ‘மயங்கினாள்’ என்னில், ‘இனிப் போனால் செய்வது என்?’ என்று இருப்பர்;
ஆதலால், ‘மயங்குமால் என்மின்’ என்கிறாள்.
என்னீரே
‘உங்கள் தலையில் பழியைத் துடைக்கப் பார்மின்;
அறிவித்த பின்பு வாராது ஒழியின், அவனது அன்றோ பழிச்சொல்!’ என்பாள், ‘என்னீரே’ என்கிறாள்,
இனி, ‘துன்பக் குரல் கேட்பின். பொறுக்க மாட்டான், அறிவிப்பீர்,’ என்பாள், ‘என்னீர்’ என்கிறாள் எனலுமாம்.
அருளாழி அம்மான் ஆகையாலே வருவர் என்றபடி.
இனி, உங்களுக்கு ஸ்வரூபம், அவனுக்குக் குணம், எனக்குச் சத்தை, உங்களுக்கு யுக்தி – ஒரு வார்த்தை என்பாள்,
‘என்னீரே’ என்கிறாள்-

—————————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ப்ராஹ்மணாதிகளுக்கு நியமங்கள் வேணும் -திர்யக்க்காதி களுக்கு அவை வேண்டா என்று ஸாஸ்த்ர தாத்பர்யம்
பெடை மணக்கும் -மணம் -சம்ச்லேஷம் -தன் அபிநிவேச அனுகுணமாகக் கலக்கை அன்றிக்கே
அதனுடைய அபிநிவேசம் அறிந்து தத் அனுகுணமாகப் பரிமாறும்-
அரை நூல் வடம் -காஞ்சீ குணம் –
கொள்வன் நான் -முக்த ஜலப்பிதங்களாலே அவனை வாய் மாளப் பண்ணுகையும் –
சிற்றடியைக் காட்டிப் பேர் அடியைக் கொண்டு அளக்கையும்-வஞ்சனை ஆகுமே –
லோகம் அடங்க தன்னதே யாம்படி எதிர்த்தலைக்கு ஒன்றும் எட்டாமல் அநந்யார்ஹமாக்கிக் காற்கடைக் கொள்ளும் வஞ்சகனாய் –
ஸ்வச்சன் க்ருத்ரிமன் என்று விவேகிக்க அரிதாம் படி அழகாலே மயக்கும் ஆச்சர்யத்தை யுடையவன் யாகிலும்
லோக மரியாதை யான்றியே குற்றம் சொல்லி மீட்க அரிதாம்படி கொடிய என் நெஞ்சானது
கீழ்ச் சொன்ன ஸ்வ பாவ விசேஷங்களை யுடையவன் தஞ்சம் என்று கிடவா நிற்கும்
முன்னம் -கால விப்கர்ஷம் போக்கி தேச விப்கர்ஷம் இல்லை கிடீர் இழக்கைக்கு-
எல்லைச் சதுரி -சாதுர்ய சீமா பூமி
மதி கலங்கி –எல்லாம் கலங்கி -உள் கலங்கி என்று விவஷித்து அருளிச் செய்கிறார் –
எல்லாம் என்றது ஸ்வரூப குண விக்ரஹ விபூதி விஷயமாக
மயங்கும் -மயங்கா நிற்கும் –வர்த்தமானம் -முடியும் தசை –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-4-2-

October 29, 2018

சில நாரைகளைத் தூது போகல் வேண்டும் என்று இரந்தாள் கீழ் ;
அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைக் குயில்களுக்குச் சொல்லுகின்றாள் இங்கு:
அந்யா துபக்ராந்த மன்யதா பதிதம் (‘தொடங்கியது ஒன்று, முடிந்தது வேறு ஒன்று,’ )என்கிறபடியே வந்து விழுந்தது.
‘இப்படிக் கலங்கலாமோ?’ எனின், இத்தனையும் கலங்கிற்றிலளாகில் இவள் பிரிந்த பொருளுக்கும்
நாட்டார் பிரிந்த பொருளுக்கும் வேற்றுமை யின்றி ஒழியுமே,
இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணங்களால் குணாதிக விஷயத்துக்கு நமஸ்காரமாமித்தனை அன்றோ?

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

இவள் கலங்கிற்றிலள் ஆகில் இவள் ப்ரேமத்துக்கும் விஷய வைலக்ஷண்யத்தைக்கும் கொத்தையாகும் –
அவன் ஸூந்தர்யத்துக்குக் கொத்தை -அவன் குணாதிக்யதைக்கும் கொத்தை –
நமஸ்காரமாம் அத்தனை -என்றது தேசாய் தஸ்மை நம-என்கிற இடத்தில் போலே
பரித்யாகமே யாய் விடும் அத்தனை -என்றபடி –

——————————

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள்! நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?–1-4-2-

என் பெருமான்-
என் -பிரிந்த சமயத்திலும் ‘என்னுடையவன்’ என்று கூறலாம்படி காணும்
கலக்கிற சமயத்தில் அவன் இவள் இட்ட வழக்காய் இருந்தபடி.
அன்றி, பிரிகிற காலத்தில் தான் வருமளவும் இவள் தரிக்கைக்காக
‘இது எங்கே இருக்கில் என், எங்கே போகில் என்? உன்-சரக்கு அன்றோ பொருள் அன்றோ?’ என்று கூறிப் பிரிவானாதலின்,
அதனை நோக்கி, ‘என்பெருமான்’ என்கிறாள் ஆகவுமாம்.

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு –
‘பிரிவில் திருக் கண்கள் சிவந்திருக்குமோ?’ என்னில், ஸ்வாபாவிகமான ஐஸ்வர்யத்தாலும் சிவந்திருக்கும்;
ஸ்வகீய வஸ்துக்கள் – தனக்குரிய பொருள்கள் பக்கலுள்ள-வாத்சல்யத்தாலும் – அன்பினாலும் சிவந்திருக்கும்;
மது பான மத்தரைப் போலே -கட் குடியர்களைப் போன்று இவளோடு கலந்த கலவியாலும் சிவந்திருக்கும்;
அன்றி, பிரிவாலே அரையாறுபட்டுச் சிவந்திருக்கும்.
‘ஆயின், இவற்றை எல்லாம் பிரிந்திருக்கும் இவள் கண்டாளோ?’ எனின்,
இவற்றை எல்லாம் இவள் அனுபவித்தவள் அன்றோ?
எங்கே அனுபவித்தாள்?’ எனின்,
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வரியம்,
மூன்றாந் திருவாய்மொழியிலே வாத்ஸல்யம்,
இத் திருவாய்மொழியில் கலவியும் பிரிவும்.

பெருமானார்க்கு-
பிரிகிற போது கண்ணாலே நோக்கி இவளைத் தனக்கே உரிமை யாக்கிப் போன-அநந்யார்ஹையாக்கி-படி.
(இங்கே இச் சொல்லுக்குத் தலைவன் என்பது பொருள்.)
அன்றி, தலைவன் தனக்கு இயற்கையில் அமைந்த ஐஸ்வரியத்தோடு இவள் இடத்துள்ள குணங்களாகிய செல்வத்தையும்
உடன் கொண்டு சென்றவனாதலின், இரட்டித்த செல்வத்தினையுடையவன் என்பாள், ‘பெருமான்’ என்கிறாள் எனலும் அமையும்.
(இங்கே ‘பெருமான்’ என்பதற்குச் ‘செல்வத்தாலே பெரியவன்’ என்பது பொருள்; அதாவது, இரட்டித்த செல்வத்தையுடையவன் என்பதாம்.)

என் தூதாய் –
அவனோடே கலந்து பிரிந்து வெறுந்தரையாய் இருக்கின்ற எனக்குத் தூதாய்.
அதாவது, ‘கடலேறி வடிந்தாற் போலே காணும் கிடக்கிறேன்,’ என்றபடி,

உரைத்தக்கால் என் செய்யும்-
உரைத்தால் என்ன தீமை உண்டாம்?
‘அவனைக் கொடுவந்து சேர்க்கச் சொல்லுகிறேனோ? ஒரு வார்த்தையைக் கூறின் என் செய்யும்?’ என்பாள்,
‘உரைத்தக்கால் என் செய்யும்?’ என்கிறாள்.
இத் தொடரில், சென்று கூறின்,
அதற்குக் கைம்மாறாக அவன் உபய விபூதிகளையுந் தரினும் தருவான் என்ற குறிப்புப் பொருளும் தோன்றும்.

இனம் குயில்காள் –
என்னைப் போன்று தனித்திருக்கின்றீர்கள் அன்றே?

நீர் அலிரே –
நீர்மைக்கு நீங்கள் அன்றோ? (இங்கு நீர் என்பது, நீர்மை என்ற சொல்லின் விகாரம்; நீர்மை-தன்மை)
அன்றி, இதற்கு, ‘யானும் தலைவனும் சேர்ந்திருக்கும் போது கேட்டவற்றிற்கு எல்லாம் விடை பகர்ந்து வந்த நீங்கள்,
அவன் பிரிந்தவாறே வேறு சிலர் ஆனீர்களோ?’ என்று கூறலுமாம். (இங்கு ‘நீர்’ என்பது, முன்னிலைப் பெயர்.)

முன் –
நான் பாபம் பண்ணிப் போந்த காலம் ஓர் எல்லையுடன் கூடியதோ?-சாவதியோ – ‘அன்று’ என்றபடி.
இதனால், சென்ற காலம் அனைத்தையும் குறிக்கிறாள்.

செய்த –
சங்கற்பித்துவிட்ட அளவேயோ? அன்று; சரீரத்தால் செய்தது என்றபடி.

முழு வினையால்-
அவற்றுள் ஏதேனும் அகஞ்சுரிப்பட்டது உண்டோ? ‘இன்று’ என்றபடி,
அதாவது, ‘காலம் ஒரு வரையறைக்குட் பட்டிருந்து, அக்காலங்களில் நான் செய்து போந்த பாவங்களும்
ஒரு வரையறைக்குட் பட்டிருப்பின் அன்றோ என்னால் போக்கிக் கொள்ள முடியும்?’ என்பதாம்.
‘ஆயின், அத்தகைய தீவினைகளை யுடைய நீர் இறைவனைச் சார்தல் எவ்வாறு முடியும்?’ எனின்,
இறைவனால் அத் தீவினைகளைப் போக்க ஒண்ணாது ஒழியின் அன்றோ நான் இழக்க வேண்டுவது?
இங்கே ‘ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாது காண்-
தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை அறுத்துக் கொண்டு போகில் அத்தனை ஒழிய,
ஒன்று இரண்டு முழுக்கால் போகாது காண் நான் பண்ணின பாபம்,’ என்று
ஸ்ரீ திருக்கோட்டியூரிலே ஸ்ரீ தெற்காழ்வான் ஸ்ரீ கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத் துறையிற் சொன்ன
வார்த்தையை நினைவு கூர்வது.

திருவடிக்கீழ் குற்றேவல் –
திருவடிகளிலே கிட்டி அந்தரங்கத் தொண்டுகளைச் செய்வதற்கு,
‘தலைவி பிரிந்து வருந்துகிறவள் ஆதலின், ‘அவனைச் சேர்வதற்கு’ என்னாது
‘திருவடிக்கீழ்க் குற்றேவல்’ என்கிறது என்னை?’ எனின்,
அந்தணர் பிச்சு ஏறினாலும் ஒத்துச் சொல்லுமாறு போன்று, இவர் பிராட்டியானாலும் மார்பால் அணைக்க நினையார்;
திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை.

முன் செய்ய முயலாதேன்-
முற் பிறவிகளிலே நோலாத நான்.
இனி இதற்கு,’‘இந்தக் காரியத்தைச் செய் என்று என்னை நியமிக்க வேண்டும்,’ என்று இளைய பெருமாள் கூறியது போன்று,
க்ரியதாம் இதி மாம் வத (‘இன்னதைச் செய்’ ) என்று ஏவத் திருமுன்பே அடிமை செய்ய முயலாத நான் என்று பொருள் கூறலுமாம்.

முன் செய்ய முயலாதேன் இனம் அகல்வதுவோ விதி-
திருவடிகளிலே அடிமை செய்கைக்குத் தக்கது ஒரு சாதனத்தை என தலையால் பண்ணாத நான் அகன்றே போம் இத்தனையோ?
இனம்-‘இன்னம்’ என்பதன் விகாரம்./ விதி-நியாயம்.
‘எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும் இத்தனையோ?’ என்கிறாள் என்று
ஸ்ரீ பிள்ளை திருநறையூர் அரையர் பணிப்பர்.

இனி, ‘அகல்வதுவோ விதியினமே? என்பதனை,
‘விதியினம் அகல்வதுவோ?’ என்று மாறிக் கூட்டி, முதல் இல்லாதார் அன்றோ பலிசை இழப்பார்!
அவன் தானே முதலாக இருக்கும் கோஷ்டி -கூட்டமன்றோ இவர்கள் கூட்டம்?’ என்று பொருள் கூறலுமாம்;

விதியினம்
புண்ணியத்தை யுடையோம்.
‘களை கண் மற்று இலேன்’ என்றும்,
‘உன் சரண் அல்லால் சரண் இல்லை’ என்றும்,
மைத்து எழுந்த மாமுகிலே பார்த்திருக்கு மற்றவை’ என்றும்,
‘நெறிவாசல் தானேயாய் நின்றானை’ என்றும்,
‘விழிக்குங் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்’ என்றும்,
‘வாழுஞ் சோம்பர்’ என்றும்
இப்படிகளிலே அன்றோ இவர்கள் கோஷ்டியில் வார்த்தைகளும் இருக்கும்படி?

இனி ‘விதியினம்’ என்பதனை ‘விதியினன்’ என்றதன் திரிபாகக் கொண்டு,
அதற்கு, ‘பாபத்தையுடையேனான நான்’ என்று பொருள் கூறி,
நான் அகல்வதுவோ – ‘பாவத்தையுடைய நான் அகன்றே போமதுவோ?’ என்று கூறலும் ஒன்று.
விதி – பாபம். ‘
ஆயின், மூன்றாமடியில் ‘முழுவினையேன்’ என்றவள் ஈண்டும் ‘பாவியேன்’ என்று கூறல்,
கூறியது கூறலாகாதோ?’ எனின் ஆகாது;
‘தீய வினைகளைச் செய்த தீ வினையேன்’ என்கிறாள்.
‘பாவமே செய்து பாவியானேன் என்றார் ஸ்ரீ மங்கை மன்னனும்.

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

எங்கனே அனுபவித்தாள் -கணக்கறு நலத்தனன் -வாத்சல்யம் –
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவேன் -ப்ரத்யக்ஷ சாமானாகார மானஸ சாஷாத்கார ரூப சம்ஸ்லேஷம்-
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு -சேர்த்தியலே ராஜ்ய கார்யம் எல்லாம் கிடக்க ஓர் அபலை பக்கலிலே இப்படி சக்தனாய்
இருக்கலாமோ என்று எடுத்துக் கொண்டு போனானே –
பிரிவாற்றாமையாலே புரிந்து பார்த்ததால் கண்கள் சிவந்து இரட்டிப்பாய் இருக்குமே –
பெருமானார்க்கு -இரண்டு அர்த்தங்கள் -கண்ணாலே நோக்கி அநந்யார்ஹய் ஆக்கி –
சர்வ ஸ்வ அபகாரம் பண்ணிக் கொண்டு போகையால் வந்த பெருமை
ஒடுக்கு மாட்டாவது-மாட்டை ஒடுக்குகையாய் -மாடாவது தனமாய் -அத்தை முட்டுக்கு கோல் கொள்ளுகை
அதவா- நிமித்த தனம் ஸ்த்ரீ தனம் -நாண் மடம் அச்சம் முதலானவற்றைக் கொண்டு அன்றோ போகிறது –

என் செய்யும் -உபய விபூதியும் தங்களுக்கு கிஞ்சித் கரிக்க என்று இருக்கின்றமை -பொன்னுலகு ஆளீரோ-இத்யாதி –
நீர்மை -கிருபை -நீர்மையால் பிரசித்தர் அன்றோ –
முழு வினை -சாகல்யமும் மஹத்வமும் விவஷிதம்
முன் -ஏற்கவே -சந்நிதியில் -/ விதி -சங்கல்பம் -நியாயம் -புண்ணியம் –
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியனை உடையோமாய் வைத்தும் அகல்வதோ
உன் கடைத்தலை வாழும் சோம்பர் அன்றோ
இருந்து வாழும் -அவ்விருப்பே வாழ்ச்சி -உன் பக்கலிலே ந்யஸ்த பரராய் ஸ்வ ஹிதத்திலே சோம்பினவர்கள் –
உபாயம் சர்வேஸ்வரன் யானால் பின்பு போகமே உள்ளதாகையால் ஸ்வ ஹிதத்தில் சோம்பி இருக்கும் இருப்பு
தானே வாழ்ச்சியான இருப்பாய் இருக்கும் என்றபடி -நெடும் சோம்பரை வ்யாவர்த்திக்கிறது –
இழந்த கால விஷய சோகமும் -த்வரையும்-ததேக ரஷ்யத்வ அத்யாவசாயமும் -ஆகிஞ்சன்ய அநந்ய காதவங்களும் ஸூசிதம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-4-1-

October 29, 2018

பிரவேசம்
அஞ்சிறைய மடநாராய்- பிரவேசம்
கீழ் மூன்று திருவாய்மொழிகளால், பரத்வத்தையும் -பஜனீயத்வத்தையும் -ஸுலபயத்தையும் -அனுபவித்து மகிழ்ந்தவராய்த்
தாமான தன்மையில் நின்று பேசினார்;
இத் திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய்,
ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது.
அயம பர ஆகாரக நியம (‘இது மற்றொரு காரகம்’ ) என்னுமாறு போன்று, மேல் போந்த நெறி வேறு;
இங்குச் செல்லும் நெறி வேறு.
முற்காலத்தில்-அல்பம் விவஷிதனாய்- சிற்றறிஞன் ஒருவன், வீதராகராய் –
‘பற்று அற்ற பரம ஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன;-தத்வ பரமாக – உண்மைப் பொருளை
உள்ளவாறு கூறுகின்றன,’ என்று
இத் திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இந்தத் திருவாய்மொழி வந்த அளவில்,
‘இது காமுகர் வார்த்தையாய் இருந்ததே!’ என்று கை விட்டுப் போனானாம்;
ஸ்ரவணம்- மனனம்- நிதித்யாசித்வய சாஷாத்காரம் (‘இறைவன் கேட்கத் தக்கவன், நினைக்கத் தக்கவன், தியானம் செய்யத் தக்கவன்,
பார்க்கத் தக்கவன்’ )என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவன் ஆதலாலே.
கீழே ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே,’ என்பதற்கு
‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பாரிக்கிறார்,’ என்று நஞ்சீயர் அருளிச் செய்த பொருள்
அதற்கு அடுத்த இத் திருவாய்மொழிக்கு மிகப் பொருந்தும்.
‘அனுபவிக்கிறார்’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த பொருள்,
இவ் வாழ்வாருக்கு ‘முனியே நான்முகனே’ என்னும் திருவாய்மொழி முடிய உள்ளது
மானச அநுபவமாகையாலே அதற்குப் பொருந்துவதாம்.
‘ஆயின், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாகச் சொல்லுவதற்குக் காரணம் யாது?’ எனின்,
கீழே திரு உலகு அளந்தவனுடைய திருவடிகளை அனுபவிப்பதாக ஒருப் பட்டுக் கட்டிக் கொண்டார்;
அது ஒரு கால விசேடத்திலேயாய், தாம் பிற்பாடராய்த் தோற்றுகையாலே, துணுக்கு என்று தாமான தன்மை அழிந்து
ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியினால் சொல்லும் பாசுரம் போய், ஆற்றாமையால் சொல்லும் பாசுரமாய் விட்டது.

‘ஆயின், ஆர்த்தோ வா யதிவா த்ருப்த (‘சரணம் அடைந்த பகைவன் ஆர்த்தனாயினும் சரி, திருப்தனாயினும் சரி,
அவன் இரட்சிக்கத் தக்கவன்,’) என்று கூறிய இறைவனை அனுபவித்த இவர்க்குப்
பிரிவாலாய துன்பம் வருகைக்குக் காரணம் என்?’ என்னில்,
ஆமத்தில்-‘பசி இல்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம்,’ எனப்படுதலால்,
நிதானஞ்ஞரான நோயின் மூலத்தை அறியும் -பிஷக்கக்குள்- மருத்துவர்கள் ‘உணவு உண்ணலாகாது,’ என்று விலக்குவது போன்று,
மேல் வரும் அனுபவங்களை இவர் பொறுப்பதற்காக, இப்பொழுது நுகரும் இன்பம் நீங்கும்படி நாலடி பெயர நின்றான்;
பெயர நிற்கவே, இவர் கலங்கினார்.
‘ஆயின், இறைவன் மருத்துவனோ?’ எனின், ‘மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன்’ எனப்படுதலால் மருத்துவனேயாம்.
‘நன்று; ஞான தேசிகரான இவர் கலங்கலாமோ?’ எனின், ஞானத்தை மட்டும் உடையவராய் இருப்பின் கலங்கார்;
‘மயர்வற மதிநலம் அருளப்’ பெற்றவர் ஆகையாலே கலங்குகிறார்.
மற்றும், அவன் தானே கொடுத்த அறிவும்-விஸ்லேஷத்தில் – பிரிவில் அகிஞ்சித்கரமாம்படி அன்றோ அவனுடைய வைலக்ஷண்யம் இருப்பது?
தத் தஸ்ய சத்ருசம் பவேத் ( ‘அவர் வந்து என்னை மீட்டுச் செல்வராகில், செல்லும் அச் செயல் அவ் விராமனுக்குத் தக்கதாம்,’ ) என்று
கூறிய பிராட்டியே பிரிவுத் துன்பத்தைப் பொறுக்கிலளாகித் -வேண்யுத்க்ரத நாதிகளிலே- தன் சடையினைக் கொண்டு தூக்கிட்டு இறப்பதற்கு
நினைந்தமையும் ஈண்டு நினைத்தல் தகும்.

‘ஆயின், பறவை முதலானவைகளைத் தூதுவிடல் பண்டைய மரபு ஆமோ?’ எனின்,
ஹம்ஸ காரண்ட வா கீர்ணம் வந்தே கோதாவரீம் நதீம் ( ‘அன்னங்களும் நீர்க்காகங்களும் நிறைந்திருக்கின்ற
கோதாவிரி நதியே, உன்னை வணங்குகிறேன்;) என்றும்
‘சீதையை இராவணன் தேரில் ஏற்றுக்கொண்டு செல்கிறான்,’ என்று நீ இராமனிடம் சென்று விரைவிற்கூறு,’ என்று பிராட்டியும்,
அசோக சோகாபநுத சோகோ பஹத சேதசம் (சோகத்தினை நீக்குதலையே இயல்பாகவுடைய அசோக மரமே, கலங்கி இருக்கும்
எனக்குப் பிராட்டி இருக்கும் இடத்தினைத் தெரிவித்து, என்னையும் விரைவில் உன் பெயரைப் போலவே செய்,’ )என்று
பெருமாளும் கூறுதலால், தூது விடல் பண்டைய மரபேயாம்.

‘ஆயின், பிராட்டியின் நிலை உண்டாகிறபடி எங்ஙனே?’ என்னில்,
அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், அன்வயத்தில் -கூடி இருக்கும் போது தரிக்கை,
விஸ்லேஷத்தில் -பிரிந்திருக்கும் போது தரியாதொழிகை, -ததேக போகராகையாலும் -அவனுக்கே இன்பத்தை அளிக்கை,
அவன் நிர்வாஹகனாக- காப்பாற்றுகின்றவனாகத் தாம் நிர்வாஹ்யமாகையாலும்- காப்பாற்றப்படும் பொருளாக இருக்கை
ஆகிய இவ்வாறு குணங்களும் ஆழ்வார்க்கும் உள ஆதலின், பிராட்டியின் நிலை உண்டாகத் தட்டு இல்லை.

‘ஆயின், பிராட்டி தானாகப் பேசுவான் என்?’ என்னில், தாமரை திருவடிகளுக்குப் போலியாக இருக்க,
‘வையங்கொண்ட தடந்தாமரை’ என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போன்று,
இங்குப் பிராட்டியாகவே பேசப்படுகிறது; முற்றுவமை இருக்கிறபடி.
‘ஆயினும், இவர் ஆடவர் ஆகையாலே ஆண் தன்மை பின் நாடாதோ?’ எனின்,
இராஜ ருஷி பிரம ருஷி யான பின்னர்-ஷத்ரியத்வம் – அரசருடைய தன்மை பின் நாட்டிற்றில்லை அன்றே?
எதிர்த்தலையில் -பும்ஸத்வத்தை -ஆண் தன்மையை அழித்துப் பெண்ணுடை உடுத்தும்படியன்றோ
அவனுடைய புருஷோத்தமனாந்தன்மை இருப்பது? ஆதலால், பின் நாடாது என்றபடி –

‘நன்று; அந்தப்புரத்தில் வசிக்கும் இப்பெண்ணிற்குத் தூது விடுகைக்குப் பறவைகள் உளவோ?’ எனின்,
கூடும் இடம் குறிஞ்சி; அதற்குப் பூதம் ஆகாயம்.
பிரியும் இடம் பாலை; அதற்குப் பூதம் நெருப்பு.
ஊடும் இடம் மருதம்; அதற்குப் பூதம் வாயு.
இரங்கும் இடம் நெய்தல்; அதற்குப் பூதம் தண்ணீர்.
இவ் வகையில், பிரிந்தார் இரங்குவது நெய்தல் ஆகையாலே, பிராட்டி, தானும் தன் தோழிகளுமாக விளையாடும்
பூஞ்சோலைக்குப் புறப்பட்டுச் செல்ல, சென்றதும் தோழிமார் பூக் கொய்கையில் கருத்தூன்றினவர்களாய்த் தனித்தனியே பிரிய,
தலைவனும் தன் நேராயிரம் பிள்ளைகளும் தானுமாக வேட்டைக்குப் புறப்பட்டு வர,
ஏவுண்ட விலங்கு இவனை இப் பூஞ்சோலையில் தனியே கொண்டு வந்து மூட்டி மறைய,
முற்பிறவியிற் செய்த நல்வினைப் பயனால் இருவருக்கும் புணர்ச்சி உண்டாக,
பின்னர், கூட்டின தெய்வம் பிரிக்கப் பிரிந்து,
‘இனி, இரண்டு தலையையும் அழித்தாகிலும் கிட்ட வேண்டும்,’ என்னும் ஆற்றாமை பிறந்து,
தன் அருகிலுள்ள தோழிகள் ‘எம்மின் முன் அவனுக்கு மாய்வர்’ என்கிறபடியே தளர்ந்தவர்கள் ஆதலின்,
கால்நடை தருவார் இல்லாமையாலே, அப் பக்கத்தில் வசிக்கின்ற விலங்குகள் சிலவற்றைப் பார்த்து,
‘இவை வார்த்தை சொல்ல மாட்டா,’ என்னுமது அறியாதே, ‘இவற்றுக்குப் பக் ஷபாதம் உண்டாய் இருந்தது ஆகையாலே,
இவை கடுகப்போய் நங்காரியம் செய்யவல்லன்,’ என்று பறப்பதற்குச் சாதனமான பக்ஷபாதமே பற்றாசாக,
இராவண மாயையால் வரும் ஐயமும் இல்லாமையாலே கண்ணாலே கண்டவற்றை எல்லாம் தூது விடுகிறாள்.
இவ்விடத்தில் ‘சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர சாதி வீறு பெற்றாற்போலே காணும்,
ஆழ்வார்கள் திருவவதரித்துத் திரியக்குச் சாதி வீறு பெற்றபடி’ என்று பட்டர் ரஸோக்தியாக அருளிச்செய்வர்.

‘பிரிந்தவன் மீண்டு வருவான் என்று நினைந்து தூது விடுதற்குக் காரணம் யாது?’ எனின்,
தன் மேன்மையாலே இத்தலையில் தன்மை பாராதே வந்து கலந்தான்;
கலந்த பின்னர் இவளிடத்துள்ள குற்றங்களைக் கண்டான்; கண்டு பிரிந்தான்;
பிரிந்த அளவிலே ‘இது அன்றோ இருந்தபடி’ என்று அநாதரித்தான்.
கண்ட தலைவி, ‘குற்றங்களைப் பார்த்தல் மட்டுமே அன்றிச் செய்தார் செய்த குற்றங்களைப் பொறுத்துக்கோடல் என்ற
குணவிசேடம் தம் ஒருவருக்கே அடையாளமாக இருப்பது ஒன்று உண்டு; அதனை அறிவிக்க வருவான்,’ என்று
அந்த அபராத ஸஹத்வத்தையே பற்றாசாகக் கொண்டு தூது விடுகிறாள்.

அநாதி காலம் இவ்வாழ்வாரைத் தன்னோடே சேர விடுகைக்குக் காலம் பார்த்து இருந்த-அவசர பிரதீஷனாய்ப் போந்தவன் –
இவர் பக்கல் அப்ரதிஷேதம் -வெறுப்பின்மை உண்டான சமயம் பார்த்து,
இவருக்கு மயர்வற மதிநலம் அருளல் ஈண்டுப் புணர்ச்சி-யாதிருச்சிக்க சம்ச்லேஷம் – எனப்படும்.
அவன் கொடுத்த அந்த ஞானம் பேற்றோடே தலைக் கட்டப் பெறாமை-விஸ்லேஷம் – பிரிவு எனப்படும்.

————————————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பக்தி கார்யமான யுக்தியை காமுக வாக்ய ரூபேண அருளிச் செய்தது -புருஷனை புருஷன் ஸ்நேஹிக்கும் அதிலும்
காம மஷ்ட குணம் பவேத் -என்கிறபடியே ஸ்த்ரீக்கு புருஷ விஷய ஸ்நேஹம் பள்ளமடையாகையாலே
தாத்ருசமான அதி மாத்ர ப்ராவண்ய ஸூசகம் ஆகையால் –
குட ஜிஹ்விகா ந்யாயத்தாலே -மருந்தை நாவுக்கு இனிய வெள்ளத்தில் வைத்துக் கொடுப்பது –
விஷய ப்ரவணரான சம்சாரிகள் பரிக்ரஹித்து உஜ்ஜீவிப்பார்கள் என்னுமத்தாலும் அருளிச் செய்வர்
மேலே விஸ்தார சங்கதி – திரு உலகு அளந்து அருளினவன் இத்யாதியால் –
ஸ்ரீ பிள்ளான் கீழே அயர்ப்பிலன் இத்யாதி மானஸ அனுபவத்துக்கும் ஸ்ரீ நஞ்சீயர் நிர்வாகத்துக்கும் சேர வியாக்யானம் –

மருத்துவனாய் நின்ற -ஆச்சார்யாதி ரூபேண சம்சார ரோக பிஷக்காய் நின்ற நீல மணி போலே கறுத்த நிறத்தை யுடையவன்
பாஹ்ய சம்ச்லேஷம் கிடையாமையாலே -ஸித்தமான ஸ்வ அனுபவம் அசத் கல்பமாய் தோன்றி கலக்கம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்று இருக்கிற இவரை அவ்வறிவு அகார்யகரமாம் படி கலங்கப் பண்ணும் வைலக்ஷண்யம் –
ஸ்வ யத்ன சாத்தியமான ஞான பக்திகளால் வந்த கலக்கமாகில் இறே அளவு பட்டு இருக்கும் –
விலக்ஷண விஷயத்தைப் பிரிந்து பொறுக்க மாட்டாமல் வேண் யுத்க்ரதநத்திலே ஒருப்படடாள்-
கோதாவரி நதிக்குப் பக்ஷிகளைக் கொண்டு தேசாந்தரத்தே யாகிலும் அறிவிப்பிக்கைக்கு சக்தி உண்டு
என்று இருக்கிறாள் கலக்கத்தாலே –

அநந்யார்ஹ சேஷத்வம் -அனன்யா ராகவேணாகம் /
யஸ் த்வயா ஸஹ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா -என்றும் ந ச சீதா த்வயா ஹீநா -என்றும்
விஸ்லேஷத்தில் தரியாமையும் சம்ஸ்லேஷத்தில் தரிக்கையும்-
நைஷா பஸ்யதி–தந்யா பஸ்யந்தி மே நாதம் -இத்யாதிட்டாலே தத் ஏக போகத்வமும்-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா -என்கையாலே தத் ஏக நிர்வாஹயத்வமும் –
தத் தஸ்ய சத்ருசம் பவேத் –தபஸஸ் ச அநுபாவ நாத்-என்கையாலே அநந்ய சரண்யத்வமும்-
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியாய் அப்ராக்ருதமான வடிவழகு பண்ணும் என்று சொல்ல வேண்டா இறே –

போக்கு எல்லாம் பாலை புணர்தல் நறும் குறிஞ்சி ஆக்கம் சேர் ஊடல் அணி மருதம் நோக்குங்கால்
இல்லிருக்கை முல்லை இரங்கல் நறு நெய்தல் சொல்லிருக்கும் ஐம்பால் தொகை
போக்கு -தனிப்போக்கு -புணர்ந்து உடன் போக்கு இரு வகை -கொடும் காற் சிலையா -திரு விருத்தம் -37-தனிப் போக்கு
நானிலம் வாய்க்க கொண்டு –திரு விருத்தம் -26-புணர்ந்து உடன் போக்கு
காடு சார்ந்த நிலம் முல்லை /நாடு சார்ந்த நிலம் மருதம் /மலைச்சார்வு -குறிஞ்சி நிலம் /
கடல் சார்வு நெய்தல் நிலம் -நீர் இன்றி வேனில் தெறு நிலம் பாலை -தெறு சம்ஹரிக்கிற

ப்ராஹ்மம் தைவம் ப்ராஜாபத்யம் ஆஸூரம் ஆர்ஷம் காந்தர்வம் ராக்ஷஸம் பைசாயம் -8-வகை விவாஹம்
உத்யானம் என்றது பின்னை யம் பொழில் சூழ் / திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பெய்த காவு /
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவான் /

யாத்ருச்சிக சம்ஸ்லேஷத்துக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்கிறார் –
மேன்மையாலே ஸ்வாதந்தர்யத்தாலே இத்தலையில் தண்மை பாராமல் கலந்தான் –
தோஷ தர்சனத்தைப் பண்ணவே பிரிந்தான் –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்றதை பற்ற அபராத சஹத்வம் –

——————

தன் பக்கத்திலே தங்கி இருப்பது ஒரு நாரையைப் பார்த்து,
என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னாகக் காரியங்கொள்ள வேண்டும்’ என்று இருக்கும்
தம் வாசனையாலே பேடையை முன்னிட்டுச் சேவலைப் பற்றி
‘நீ என் நிலையை அறிவித்து என்னையும் அவனையும் சேர்க்க வேண்டும்,’ என்கிறாள்

—————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

மட நாராய் என்று பேடையை முன்னிடுகிறதுக்கு பாவம் –
இத்தால் பகவத் விஷயத்தில் போலே ஆச்சார்ய விஷயத்திலும் புருஷகாரம் வேணும் என்றபடி –
சேவல் -பும்பஷி / பேடை -ஸ்த்ரீ பஷி

—————–

அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆ ஆ என்று எனக்கு அருளி
வெஞ் சிறைப் புள் உயர்த்தாற்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ–1-4-1-

அம் சிறைய-
குழந்தை தாயின் உறுப்புகள் எல்லாங்கிடக்க, மார்பிலே வாய் வைக்குமாறு போன்று,
பறப்பதற்குச் சாதனமான சிறகிலே முற்படக் கண வைக்கிறாள்,
நீர் பாய்ந்த பயிர் போன்று, ஒன்றற்கு ஒன்று கலவியால் பிறந்த மகிழ்ச்சி வடிவிலே தொடை கொள்ளலாம்படி
இருக்கின்றதாதலின், ‘அம் சிறை’ என்கிறாள்.
ஆசாரியனுடைய ஞானத்தை -அநுமித்து -உத்தேசித்துச் சிஷ்யன-உபசத்தி – வணங்குவது போன்று,
இவளும் சிறகிலே கண் வைக்கிறாள்.

மடம்-
ஏவிக் காரியங் கொள்ளலாம்படி பணிவு தோன்ற இருந்தது.
இனி, சம்ச்லேஷத்தாலே -‘புணர்ச்சியாலே துவண்டு தூது போகைக்கு யோக்கியமாம்படி இருக்கை,’ எனலுமாம்.
இனி, ‘நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் மகளிர்க்குள்ள நான்கு குணங்களுள் ஒன்றான மடப்பத்தையே கூறுகிறாள்
என்று கொண்டு, பிரிவில் துன்பத்தை அறியும் தன் இனமான பேடையைப் பார்த்துச் சொல்லுகிறாள்,’ என்றலும் ஒன்று.

நாராய்-
‘அம்மே!’ என்னுமாறு போன்று இவளும் ‘நாராய்’ என்கிறாள்.

அளியத்தாய்-
அவன் பொகட்டுப் போன சமயத்திலே ஆற்றாமை அறிவிக்கலாம்படி வந்து முகங்காட்டின உன் அருளின் தன்மை இருந்தபடி என்!
அளி-அருள்; கிருபை -‘அருள் பண்ணத் தக்காய்’ என்றபடி.
‘இச் சமயத்தில் இவள் நாரையைப் பார்த்தது யாங்ஙனம் இருந்தது?’ எனின்,
பிராட்டியைப் பிரிந்த ஸ்ரீராமன், பம்பா தீரே ஹனுமதா சங்கதா (‘பம்பை நதிக்கரையில் அனுமானைச் சந்தித்தது போன்று இருந்தது’ )என்பதாம்.
அச் சந்திப்பு வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்கத் தாய் முகத்திலே விழித்தாற்போன்று இருந்தது என்றபடி.

நீயும்-
ச ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன சீதனம் உவாச (‘இளையபெருமாள், தன் தமையனுடைய இரண்டு திருவடிகளையும்
இறுகப் பிடித்தவராய், பிராட்டியை முன்னாகக் கொண்டு பேசினார்,’) என்கிறபடியே,
என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப் போலே காணும் காரியங்கொள்வது.

நின் அம் சிறைய சேவலுமாய்-
அது இட்ட வழக்கான நீயும் நீ இட்ட வழக்கான சேவலுமாகி. ‘திருமகள் கேள்வன்’ என்பது போன்று,
சேவலிடத்துத் தான் அன்பு செலுத்துவதற்குக் காரணம் பேடையே என்பாள், ‘நின் சேவல்’ என்கிறாள்.
பெண்ணை அணைந்து பெற்ற அழகு வடிவிலே தோன்றுகின்றதாதலின், அதனை‘அஞ்சிறை’ என்கிறாள்,

ஆஆ என்று-
‘ஐயோ ஐயோ!’ என்று,
இரண்டும் சேர்ந்திருப்பது தன் துன்பம் நீக்குகைக்கு என்று இருக்கிறாள் ஆதலின், ‘நீயும் நின் சேவலும்’ என்கிறாள்.
எனக்கு- ஏஹீ பஸ்யா சரீராணி (‘முனிவர்கள் இராக்கதர்களால் துன்புறுத்தப்பட்ட தங்களுடைய சரீரங்களை
ஸ்ரீராமபிரானுக்குக் காட்டியது’ )போன்று, இவளும் ‘எனக்கு’ என்று, விரகம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள்.
இனி, ‘அவனோடே கலந்து பிரிந்து, ‘கண்ணாலே காணப்பெறுவது என்று காண்’ என்னும் –
அபேஷையோடே- விருப்பத்தோடே இருக்கிற எனக்கு,’ என்று பொருள் கூறலுமாம்.

அருளி –
இரப்புக்குச் செய்தது ஆகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி.
அருள் பண்ணுகைக்கு அத்தலை குறைவு அற்றாற்போலே அன்றோ அருளுக்கு விஷயமான இத்தலை குறைவு அற்றபடி?
இறைவன் விஷயத்தில் உதவி செய்கின்றவர்கள் கைம்மாறு கருதியன்று உதவி செய்வது; தங்கள் பேரருளாலேயாம்.
‘என்னை?’ எனின், உபய விபூதியாளனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு ஒப்பாகக் கொடுக்கத் தக்க
பொருள் இல்லையே இவனுக்கு? ஆதலால், ‘அருளி’ என்கிறாள்.

இவள் நாரையைப் புகழ்ந்து கொண்டாடியது,
விக்ராந்தஸ்தம் சமாத்தஸ்த்வம் ப்ராஞ்ஞஸ்த்வம் வானர உத்தம (“வானர உத்தமனே, நீ மிக்க பலமுடையவன்;
நீ மிக்க ஆற்றல் வாய்ந்தவன்; நீ மிக்க அறிவு நிறைந்தவன்,” )என்று பிராட்டி புகழ்ந்தது போன்று இருந்தது.
கேட்ட நாரை, ‘எங்களை இங்ஙனம் கொண்டாகிறது என்? உன் நிலையைக் கண்டு பொகட்டுப் போனவன்
எங்கள் வார்த்தையைக் கேட்கப் போகின்றானோ?
மேலும், நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி (“பிரகிருதி சம்பந்தம் இல்லாதவனாய்ப் பரம சாம்யத்தையடைகிறான்” )என்கிறபடியே,
பரமபதத்தில் இருப்பவர்கள் எல்லாவற்றாலும் இறைவனை ஒத்தவர்களாய் அன்றோ இருப்பார்கள்?
நாங்கள் அவனுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை அறிவது யாங்ஙனம்?’ என்று அன்றோ நாங்கள் இருக்கிறோம்
என்பது அவற்றுக்குக் கருத்தாகக் கொண்டு மேல் வார்த்தை சொல்லுகிறாள்:

வெஞ்சிறைப்புள் உயர்த்தாற்கு –
அவர்கள் -பரம சாம்யா பன்னராய் -எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும்
அறிகுறியாகப்-வ்யாவர்த்தக விசேஷணமாய் – பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான்.
விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள்.
அன்றி, தன்னை விட்டு-நிர்த்தயமாக – அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே,
அக்ரூர க்ரூர ஹ்ருதய ‘தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று
ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று.

புள் உயர்த்தான்-
புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்;
அன்றி, புள்ளைக் கொடியிலே உயர்த்தியவன் என்னுதல்.

என் விடு தூதாய் –
அவன் ஆள் வரவிட இருக்கக்கடவ எனக்குத் தூதாகி.
இனி, ‘பெருமிடுக்கரான பாண்டவர்களுக்குக் கிருஷ்ணன் தூது சென்றது போன்றது அன்று,
அபலையாய்-அத்யார்த்தையான – மிக்க துன்பத்தையுடையளாய் இருக்கிற எனக்குத் தூதாகச் செல்லுதல்’ என்பாள்
‘என் தூதாய்’ என்கிறாள் எனினும் அமையும்.
க்ரியதாம்- ‘இதனைச் செய் என்று நியமிக்கவேண்டும்’ -என்று இளைய பெருமாள் கூறியது போன்று,
‘நான் ஏவ அன்றே, நீங்கள் போகின்றீர்கள்?’ என்பாள் ‘விடு தூதாய்’ என்றாள்.

சென்றக்கால்
பரார்த்தமாக -‘பிறருக்காகத் தூது போகை கிடைப்பது ஒன்றோ? சென்றால், எனக்கு முன்னே உங்களுக்கு அன்றோ
பலன் சித்திக்கப் புகுகிறது? என்பாள், ‘சென்றக்கால்’ என்கிறாள்.
இனி, ‘பிறர்க்காகத் தூது போதலால் உங்கள் போக்கு அடிக் கழஞ்சு பெறாதோ?’ என்பாள், அங்ஙனம் கூறுகிறாள் எனலுமாம்.

வன் சிறையில்-
காதலி பக்கல் நின்றும் வந்தவர்களைச் சிறையிடுவான் ஒரு மூர்க்கன் உளனோ? இரான் ஆதலால்,
ஈண்டுச் சிறையாவது – இவர்களுக்கு முகங் கொடாதே வேறு ஒன்றிலே நோக்குடையவனாய் இருத்தல்.
‘ஆயின், இவ்வாறு இருத்தலைச் சிறை என்னலாமோ?’ எனின்,
அரசகுமாரர்கட்கு உரிய அவ்வக்காலங்களில் வெள்ளிலை இடாதபோது அவர்கள் வருந்துவார்கள் :
அது போன்று, இவை கட்கும் முகங் கொடுத்து அவன் கேளாமையே துன்பத்தினை விளைப்பதாம்;
அதனையே ஈண்டுச் சிறை என்றாள்.
அவன் வைக்கில், வ்யாஸனேஷூ மனுஷ்யானாம் ‘மனிதர்களுக்குத் துன்பம் வந்த போது அவர்கள் அடையும் துன்பத்தைக் காட்டிலும்
இரண்டு மடங்கு அதிகத் துன்பத்தைத் தான் அடைகின்றவன், சிறையில் வைப்பானோ? வையான்’ என்பாள் ‘வைக்கில்’என்கிறாள்.
தலை மேற் கொள்ளுவான் என்பது குறிப்பு.

வைப்பு உண்டால் என் செயுமோ-
‘கிடைக்குமாகில் அது பொல்லாதோ? சிறை இருத்தல் துன்பத்தைத் தருவது ஒன்று அன்றோ?’ எனின்,
பிறருக்காகச் சிறை இருக்கை கிடைப்பது ஒன்றோ?
‘ஆயின், அவ்வாறு இருத்தல் தனக்கு உத்தேஸ்யமாமோ?’ எனின்,
இராவணன் தெய்வப் பெண்களைச் சிறையிட்டு வைக்க,
தான் அவர்கள் காலில் விலங்கைத் தன் காலிலே கோத்துச் சிறை மீட்டவள் அன்றோ?

‘என் விடுதூதாய்ச் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில்’ என்பதற்கு,
நீங்கள் ஏதேனும் அவனுக்குத் தூது போகின்றீர்களோ?
சிறை கட்டுதல், சிங்க விளக்கெரித்தல் செய்யில் செய்வது என்?’ என்று கூசுகைக்கு;
எனக்காகத் தூது போனாரை பரிஷ் வங்கோ ஹனுமதா (‘அனுமானுக்கு என்னாற்செய்யப்படும் இவ்வாலிங்கனமானது’)
என்னுமாறு போன்று, மார்பிலே அணைக்கும் காணுங்கோள்.
நான் அணைய ஆசைப்படுகிற மார்பு அன்றோ உங்களுக்குப் பரிசிலாகக் கிடைக்கப் போகின்றது?’

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஆச்சார்யஸ்ய ஞானவத் தாம் அநுமாய தத் உபசத்தி க்ரியதே -ஸ்ரீ பாஷ்ய வசனம்
சிறகு -ஞான கர்மங்கள் / மட -தாயாதி குணங்கள் /நாராய் ஸூத்த ஸ்வ பாவம் /
அது மத்ஸ்யாதிகளை த்யானம் பண்ணிக்க கொண்டு இருக்குமா போலே ஆச்சார்யனுடைய பகவத் த்யான பரதை –
அலை கடல் நீர் குழம்ப அகடாடவோடி அகல் வான் உறிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு
வரு மீனை மறவாமையும் தோற்றுகிறது
மடம் -மூன்று பொருள் -பவ்யத்தை -துவட்சி-ஸ்த்ரீத்வம்
நாராய் -அம்மே -அநிதர சாதாரணமான பரிவும் பிரிய பரத்வமும் உள்ள தாய்-இடம் உள்ள
சங்க விஸ்வாசங்கள் உச்சாரணத்திலே தோற்றும்
பொகட்டுப் போன சமயத்தில் வந்து முகம் காட்டினத்துக்கு த்ருஷ்டாந்தம்

வழி பறிப்பார் -பிராட்டியுடைய கண்ணுக்கும் முகத்துக்கும் போலியான தாமரைப் பூவும் செங்கழு நீரும் –
அம் -என்றதுக்கு தாத்பர்யம் பெண் அணைந்த இத்யாதி
அது இட்ட வழக்கான -மட என்றதின் தாத்பர்யம் இட்ட வழக்கான -நின் என்றதின் தாத்பர்யம்
மிதுனமாய் -சமபி வ்யாஹார லப்யம்
ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க நிராசிகீர்ஷா தயா -இறப்புக்குச் செய்யில் ஆன்ரு சம்சயம் சித்திக்கும் இறே-
அளியத்தாய் எனக்கு -கூட்டித் தாத்பர்யம்
தயை பண்ணுகைக்கு குறை அறுகை மிதுனம் அன்றோ -மிதுனத்வேன அவஸ்தாநம்
விக்ரமம் -பராபிபாவன சாமர்த்தியம் / சாமர்த்தியம் –கார்ய கரண சக்தி
ப்ராஞ்ஞதை-இக் குணங்களை யுடையவனுக்குப் பிரிந்து நோவு படுகிற அபலையை உபேக்ஷிக்கை கொத்தை என்கிற ஞானம்

வெஞ்சிறை -புல்லை த்வஜமாக -அடையாளம் -வெம் -நிரசன உபயுக்த க்ரூர்யமும் சொல்லுகையாலே –
வெம் சிறகுக்கும் புள்ளுக்கும் விசேஷணம் -விரோதியைப் போக்குகைக்கும் ஆளுண்டு
என் வீடு-அபிமதையான தான் -அபலையான தான் -இரண்டு அர்த்தம்
சென்றக்கால் –இரண்டு அர்த்தம் -பரார்த்தமாகவும் -எனக்கு முன்னே என்றும்
சிறை கட்டுதல் -ப்ரஹ்மாஸ்திரத்தாலே கட்டுதல்
சிங்க விளக்கு எரிக்கை -வாலிலே சீலையைக் கட்டி எரிக்கை -ஸிம்ஹ ஆகாரமான ப்ரதிமையிலே விளக்கு எரிக்கை –
லோகத்தில் சிங்க விளக்காவது பத்து விரலிலும் சீரையைச் சுற்றி எண்ணெயை விட்டுக் கொளுத்துகை-
தலையிலே சாணியை வைத்து விளக்கு யேற்றுகை -சரீரம் எங்கும் பந்தம் கட்டி தஹிக்கை-
எல்லாவற்றாலும் அவமதி பண்ணுவது தாத்பர்யம்
பரிசிலாவது -சந்தோஷ அதிசயத்தால் கொடுக்கும் உசிதம்
ஸூந்தரீ ரகு நாதஸ்ய ஸூரஸ்த்ரீ துக்க சாந்தயே தசா நநஸ்யா பவநே தச மாசாநுவாச ஹா -என்பதால்
பரார்த்தமாக சிறை இருக்கை நல்லது -தன் ஸ்வ பாவத்தைக் கொண்டு அருளிச் செய்கிறாள்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-3-11-

October 29, 2018

நிகமத்தில் , இத் திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள்.
முற்பட நித்திய சூரிகள் வரிசையைப் பெற்று,
பின்னை சம்சாரமாகிற அறவைச் சிறை வெட்டிவிடப் பெறுவர்கள் என்கிறார்.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றதைக் கடாக்ஷித்து சங்கதி –
அறவைச் சிறையாவது -அறவைக்குத் தெய்வம் துணை என்னுமா போலே -அறவை என்று தனியாய் –
அதில் அத்விதீயமான சிறையாய் துக்க ஏக ரூபமான சிறை -என்றபடி -தயநீயமான சிறை என்றுமாம்

—————–

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே–1-3-11-

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை –
கவிழ்ந்து ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று கிடக்கிற தேவ ஜாதி யானது எழுத்து வாங்கும்படியாக ஆயிற்று,
தோளுந்தோள் மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமாறு போன்று கடைந்த படி.
குணங்களுக்குத் தோற்றுத் ‘தொழுது எழு’ என்கிற தம் பாசுரமே யாய்விட்டது
அழகுக்குத் தோற்ற அவர்களுக்கும் ஆதலின், ‘அமரர்கள் தொழுது எழ’ என்கிறார்.

அமர் பொழில் –
சேர்ந்த பொழில்.

வளங்குருகூர் –
வளப்பத்தை யுடைத்தான திருநகரி. சடகோபன் குற்றேவல்கள் –
இத் திரு நகரிக்குத் தலைவரான ஆழ்வார் சொற்களைக் கொண்டு அடிமை-வாசிக கைங்கர்யம் – செய்தபடி யாயிற்று இவை தாம்.
ஆயின், சொல் அடிமை மாத்திரம் போதியதாமோ?’ எனின்,
எல்லாம் நிறைந்த இறைவன் விஷயத்தில் -பூர்ண விஷயத்தில் வாசிகமான விருத்திக்கு –சொற்களைக் கொண்டு செய்யும் அடிமைக்கு
மேற்படச் செய்யலாவன இல்லையே!
தத் விப்ராசோ விபன்யவ- (‘அப் பரமபதத்தில் இருக்கிற நித்திய சூரிகளும் துதி செய்துகொண்டே யிருக்கின்றார்கள்’ )என்கிறபடியே,
நித்திய சூரிகளுக்கும் தொழில் இதுவே அன்றோ?

அமர் சுவை ஆயிரம் –
ரசகனமாயிற்று -சுவை நிறைந்தனவாய் இருக்கிற ஆயிரம்.
‘இதனால், சொற்களைக் கொண்டு செய்யும் அடிமை ‘முறை’ என்று காரிய புத்தியாகச் செய்ய வேண்டா என்றபடி.

அவற்றினுள் இவை பத்தும் –
‘விண்ணவர் அமுது உண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட’ என்னுமாறு போன்று,
அவ் வாயிரத்துள் இத் திருவாய்மொழி-ரசகனமாயிற்று – சுவை நிறைந்ததாயிருக்கும்.

வல்லார் அமரரோடு உயர்விற்சென்று தம் பிறவி அம் சிறை அறுவர்-
இவற்றைக் கற்க வல்லவர்கள் நித்திய சூரிகளோடு ஒத்த உயர்வினையுடையராய்த்
தங்களுடைய பிறவியாகிற விலங்கு அறப் பெறுவர்கள்.
‘ஆயின், ‘பிறவி அற்று அமரரோடு உயர்விற்சென்று’ என்ன வேண்டாவோ?’ எனின்,
இப் பத்தைக் கற்ற போதே இவனை நித்திய சூரிகளில் ஒருவனாக நினைப்பன்;
பின்னைச் சரீரத்தின் பிரிவு பிறந்தால் போய்ப் புகுவான் இத்தனை.
அதாவது, சிறையிலே இராஜ குமாரன் தலையிலே முடியை வைத்துப் பின்னைச் சிறையை வெட்டி விடுவாரைப் போன்று,
நித்திய சூரிகள் வரிசையைக் கொடுத்துப் பின்னைச் சம்சாரமாகிற அஞ்சிறையைக் கழிப்பான் இறைவன் என்றபடி.
‘ஏன்? சரீரத்தின் பிரிவை உடனே உண்டாக்க ஒண்ணாதோ?’ எனின், ஒண்ணாது;
அரசன் ஒருவனுக்கு நாடு கொடுத்தால், முறைப்படி சென்று அந்நாட்டை அவன் அடைவது போன்று,
இவனும் விதிப்படியே செல்ல வேண்டும்.

இனி, ‘அமரரோடு உயர்விற்சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே,’ என்பதற்கு,
ஆதி வாஹிகரோடே விரஜையிலே சென்று ஸூஷ்ம சரீரமும் விதூநம் -நீங்கப் பெறுவர்,’ என்று கூறலுமாம்.
த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி-( அருச்சுனா என்னுடைய அவதாரத்தையும் செயல்களையும்
தெய்வத்தன்மை பொருந்தியவை என்று எவன் ஒருவன் உண்மையாக அறிகிறானோ,அவன் இச் சரீரத்தை விட்டால்
பின் வேறு சரீரத்தை அடையான்; என்னையே அடைகிறான்,’ )என்று ஸ்ரீகீதையிற்கூறியது போன்று,
இவரும் அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப் பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’ என்கிறார்.

முதற்பாட்டில்,ஸூலபன் -‘எளியவன்’ என்றார்;
இரண்டாம் பாட்டில்,-ப்ரஸ்துதமான ஸுலப்யத்தை – சொன்ன அவ்வெளிமையை வகைப்படுத்தி -ச பிரகாரமாக -அருளிச்செய்தார்;
மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘அத்தன்மைகள் தாம் அடியார்க்கு அறியலாம்; அல்லாதார்க்கு அறியப்போகா,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘இப்படிப்பட்டவனை அவன் அருளிச்செய்த பத்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயியுங்கோள் – அடைமின்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ஆஸ்ரயணீய வஸ்து -அடையத்தக்க பொருள் இன்னது’ என்றும், ஆஸ்ரயிக்கும் பிரகாரம் -அடையும் விதம் இன்னது என்றும் அருளிச் செய்தார்;
ஏழாம் பாட்டில், ‘நீங்கள் சில் வாழ் நாள் பல் பிணிச் சிற்றறிவினிர் ஆகையாலே, விளம்பிக்க ஒண்ணாது; கடுக அடைமின,’ என்றார்:
எட்டாம் பாட்டில், ‘பற்றிய அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், பிரமன் சிவன் முதலியோர்கட்கும் காரணமானவன் வந்து அவதரிக்கைக்குக் காரணம் அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், இப்படி எளியவனானவனை முக் கரணங்களாலும் அனுபவிக்கப் பாரித்தார்;
முடிவில், இதனைக் கற்றார்க்குப்-அப்யசித்தார்க்கு – பலன் அருளிச்செய்தார்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அம்ருதாத் ப்ராஸனாத் மரண ராஹித்யார்த்தித்த -அமரர் -சாகாமைக்கு அம்ருதத்தில் அபிநிவேசம் உள்ளாரையும்
தனக்கு அடிமை ஆக்கிக் கொள்ள வல்லவனுடைய ஸுந்தர்ய அதிசயம் –
தோளும் தோள் மாலையும் –மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்
குற்றேவல் -குறுகின ஏவல் -அந்தரங்க கைங்கர்யம் / நெட்டேவல் -பகிரங்க கைங்கர்யம்
தத் விப்ராஸ -மேதாவிந -ஸ்துதி ஸீலா-வாசிக கைங்கர்ய பரம்/ ஜாக்ருவாம்ச -எப்போதும் ஓக்க விளங்கி நிற்பவர் /
சதா பஸ்யந்தி -போக்யதையே இழியப் பண்ணும் கார்ய புத்யா செய்ய வேண்டாம்
இத்திருவாய் மொழி ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த அவதார ரஹஸ்ய பிரகாரத்தை வெளியிடுகையாலே
அதுக்குச் சொன்ன பலமே இதுக்கும் பலம் -தேஹம் த்யக்த்வா மாமேதி புநர் ஜென்ம நைதி –
ஸ்ரோத்ரு புத்தி சமாதானார்த்தம் பாட்டுக்கள் தோறும் ப்ரமேயம் அருளிச் செய்கிறார் –

——————————–

‘பத்துடை யோர்க்கு என்றும் பரன் எளியனாம் பிறப்பால்;
முத்தி தரும் மா நிலத்தீர்! மூண்டு அவன் பால்-பத்தி செயும்’
என்று ரைத்த மாறன் றன் இன் சொல்லாற் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ் சிறை–3–

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-3-10-

October 29, 2018

இறைவன் விமுகர் பக்கல் பண்ணுமவை நிற்க;
அவன் காட்டின வழியே காணப்புக்க நாம்,
மனம் வாக்குக் காயங்களால் நம் விடாய் கெடத் திருவுலகு அளந்த திருவடிகளை அனுபவிப்போம்,’
என்று பாரிக்கிறார்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழ் எல்லாம் பரோபதேசம் பண்ணிப் போந்தவர்
இங்கே தாம் அனுபவிக்கக் கடவேன் என்று சொல்லுகிறது -அவர்கள் திருந்தாமையாலே –
இதுக்கு ஹேது அவன் பண்ணி வைத்த மயக்கம் என்று அனுசந்தித்து அருளி ஸ்வ அனுபவத்தில் இழிகிறார் என்கிறார் –
அவன் காட்டின வழி என்றது அவதரித்து வடிவழகைக் காட்டின வழி என்றபடி –

———————

துயக்கறு மதியில் நன் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலங் கடந்த நல் அடிப்போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே–1-3-10-

துயக்கு அறு மதியில்-
துயக்கற்ற மதியை யுடைய -சம்சய விபர்யய -ஐயம் திரிபுகள் இல்லாத மதியை யுடையவர் ஆகையாலே,
நன் ஞானத்து உள் அமரர்-
மேலான அமரர்.
‘உள்’ என்பது ‘மனம், இடம், மேல்’ என்னும் பல பொருளைக் காட்டும் ஒரு சொல்;
அது இங்கு, மேல் என்னும் பொருளில் வந்தது. நன்றான ஞானத்தையுடையரான அமரரையுங்கூட என்றபடி,
துயக்கும் மயக்குடை மாயைகள்-
அறிவு கெடும்படி தெரியாமையைப் பண்ணுகின்ற குணங்களோடும் செயல்களோடும் கூடின அவதாரங்கள்.
துயக்கு-மனந்திரிவு

வானிலும் பெரியன வல்லன்-
ஆகாயத்தை அளவிட்டு அறியிலும் அளவிட்டு அறியப் போகாது.
அமரர்-
இந்திரன் முதலிய தேவர்கள்.
‘இராஜச தாமத குணங்கள் மிக்கிருக்கும் தேவர்களை ‘நன்ஞானத்துள் அமரர்’ என்னலாமோ?’ எனின்
இரஜோ குண தமோ குணங்கள் மிக்கிருந்தாலும், சத்துவ குணம் தலை எடுத்தாலும் அப்படியே
அதற்குரிய குணங்கள் மிக்கிருக்குமே அவர்கள் தங்களுக்கு; அதை நோக்கி அருளிச் செய்கிறார்.
சத்துவ குணம் தலை எடுத்தபோது, ‘நம் காரியம் நம்மாற் செய்யப்போகாது; அவனே நம் காரியத்திற்குக் கடவன்,’ என்று இருப்பர்;
அடுத்த கணத்திலேயே எதிரிடா நிற்பர். ‘அப்படி எதிர்த்த இடம் உண்டோ?’ எனின்,
தங்கள் இருப்பிடமும் இழந்து, பெண்களும் பிடி உண்டு, எளிமைப்பட்ட அளவிலே அதனைப் போக்கித் தர வேண்டும் என்று இரக்க,
பின்னை இவனும் சென்று, நரகனைக்கொன்று, சிறை கிடந்த பெண்களையும் மீட்டுக் கொடுத்துக் காத்த காலத்தில்
புழைக்கடைக்கே நின்றது ஒரு பூண்டைப் பிடுங்கிக் கொண்டு வர,
இந்திரன் வச்சிரப்படையைக் கொண்டு தொடர்ந்தான் அன்றோ! அச்சரிதம் இங்கு நினைவு கூர்க.
இனி, ஒருகால விசேடத்தில், ஞானத்தால் மேற்பட்ட பெரிய திருவடியும்,
‘தேவரீரையும் நாய்ச்சிமாரையும் தாங்கினேன் நான் அன்றோ?’ என்பது போன்று,
சிவிகையார் சொல்லும் வார்த்தையைச் சொன்னான் ஆதலின், ‘நன் ஞானத்துள் அமரர்’ என்றதற்கு நித்திய சூரிகளை
என்று பொருள்கோடலும் அமையும்.
ஆதலால், அவனுடைய ஆச்சரியங்கள் நம்மால் அளவிட்டு அறியப்போமோ? அது நிற்க.
அவன் திருவருளால் காட்டின வடிவழகை அனுபவிப்போம் நாம் என்கிறார்:

புயல் கரு நிறத்தனன்-
வர்ஷுக வலாஹகம்- மழை பெய்யும் நீனிற முகிலைப் போன்று திருமேனியை யுடையவன்.

பெருநிலம் கடந்த நல் அடிப்போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே –
இதற்கு ‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பெற்றேன்,’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பார்.
‘இவற்றால் அனுபவிக்கப் பார்க்கிறார்’ என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்.
பெருநிலம் கடந்த
பரப்பை யுடைத்தான பூமியை அளக்கிற இடத்தில் வசிஷ்டர் என்றும், சண்டாளர் என்றும் சொல்லுகிற வேற்றுமை அற
எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்தான்.
இவர்கள் நன்மை தீமை பாராமல் தன்னுடைய தூய்மையே இவர்களுக்கும் ஆகும் படி செய்தான் என்றபடி.
‘படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட வேண்டும்படி இருத்தலின்,
‘நல்லடிப் போது’ என்கிறார்.
கதா புன இத்யாதி -‘திருவிக்கிரமனே, உத்தம ரேகைகள் பொருந்திய தாமரை போன்ற உனது
இரண்டு திருவடிகள் என் தலையினை அலங்காரம் செய்வது எப்போதோ?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.
செவ்விப் பூச் சூட ஆசைப்படுகின்றவர்களைப் போன்று ஆசைப்படுகிறார்கள் என்க.

அயர்ப்பிலன்-
மறக்கக் கடவேன் அல்லேன்
அலற்றுவன்-
முறை இன்றிப் பேசுவேன்.
தழுவுவன்-
ஸூ காடம் பரிஷஸ்வஜே ( ‘மிகவும் கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்’)என்பது போன்று, தழுவுவேன்.
வணங்குவன் –
நிர்மமனாய் -செருக்கு அற்றுத் திருவடிகளிலே விழுவேன்.
அமர்ந்து –
அநந்ய பிரயோஜனனாய் -வேறு ஒரு பயனையும் கருதாது இப்படிச் செய்வேன்.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

மதி -அந்தக்கரணம் ஆகவுமாம்-தர்ம பூத ஞானம் ஆகவுமாம் –
துயக்கறு மதியில் என்றது ஹேது கர்ப்ப விசேஷணம் –
துயக்கும் –மயக்குடை என்கிற புநர் உக்திக்கு -துயக்கும் உண்டாகும் படி மயக்கத்தைப் பண்ணக் கடவதான
குண சேஷ்டிதங்களோடே கூடின அவதாரங்கள்-
வானிலும் பெரியன் என்றத்தை அவதாரத்துக்கு விசேஷணம் ஆக்கி அருளிச் செய்கிறார் –
சிவியார் -கை வர்த்தகர் -தண்டிகை முதலானவை சுமப்பார் –
அயர்ப்பிலன் இத்யாதி -பவிஷ்யத் அர்த்தத்தில் வர்த்தமானத்திலும் -சொல்லாய் இருக்கையாலே
ஸ்ரீ பிள்ளான் வர்த்தமான அர்த்தம் பணிப்பர்
தன்னுடைய ஸூத்தியே –கங்கா பிரவாஹாதிகள் த்ருஷ்டாந்தத்வேன த்ரஷ்டவ்யங்கள்
மயக்குடை -பிராமகத்வ சக்தியை யுடைய என்றுமாம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்