Archive for October, 2018

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-5-7-

October 31, 2018

நைவன்’ என்றார்; இவரை நைவிக்க மனம் இல்லாமையாலே வந்து முகங்காட்டினான்;
அவனைப் பார்த்து ‘நம்மால் வரும் குணாதிக்யமும் -குணத்தின் மேன்மையும் -இவனுக்கு வேண்டா,’ என்று அகலுகிறார்.

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

இதனின் மிக்கோர் அயர்வுண்டே -என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
அடியேன் சிறிய ஞானத்தன் -என்று அகலும் போது இப்பாட்டில் அவன் முகம் காட்டினான் ஆக வேணும் என்றபடி –
நம்மால் வரும் குணாதிக்யம் என்றது அயோக்யரான தம்மை விஷயீ கரிக்கையாலே வரும் சர்வாதிகாரத்வ ரூப குணாதிக்யம் என்றபடி

———————-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானைக்
கடிசேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனைச்
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கோர் அயர்வுண்டே!–1-5-7-

அடியேன் சிறிய ஞானத்தன் –
சம்சாரிகளில் அறிவு கேடர் -சர்வஞ்ஞர் -‘முற்றறிவினர்’ என்னும்படியன்றோ என் அறிவு கேடு!
‘அல்லேன்’ என்று அகலும் இவர், ‘அடியேன்’ என்கிறது, வாசனையாலே.
அன்றிக்கே , ‘அடியேன்’ என்கிறது, அடிமைக்கு இசைந்து அன்று;
ஆத்துமாவிற்கு ஞான ஆனந்தங்களைப் போன்று சேஷத்வத்தை -அடிமையையும் நிரூபமாக நினைந்திருக்கையாலே.
‘நான்’ என்பது போன்று ‘அடியேன்’ என்கிறார் எனலுமாம்.

சிறிய ஞானத்தன் –
அத்யல்ப -மிகச் சிறிய அறிவினையுடையவன்.

அறிதல் ஆர்க்கும் அரியானை-
எத்துணை வியக்கத்தக்க அறிவினையுடையராய் இருப்பார்க்கும் அறியப் போகாதவன்-
ஸ்வதஸ் சர்வஞ்ஞனான- இயற்கையிலேயே முற்றறிவினையுடைய தனக்கும் அறியப் போகாதவன்; 
‘தனக்கும் தன் தன்மை அறிவு அரியான்’ அன்றோ?
தாம் இறைவனைச் சேர்தல், தமஸ்- இருளுக்கும்-பிரகாசங்கள் – ஒளிக்கும் உள்ள சேர்த்தியைப் போன்றது என்பார்,
தம்மைச் ‘சிறிய ஞானத்தன்’ என்றும், இறைவனை ‘அறிதல் ஆர்க்கும் அரியானை’ என்றும் அருளிச் செய்கிறார்

கடி சேர் தண் அம்துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னை-
நாள் செல்ல-பரிமளம் – வாசனை ஏறி வருகின்ற திருத்துழாய் மாலை புனைந்தவனை.
அறிய அரிய பொருளுக்கு அடையாளம் திருத்துழாய் மாலை.

கண்ணனை-
அறிய அரியனாயிருந்தும் ஆயர்கட்கும் ஆய்ச்சிகட்கும் தன்னை எளியன் ஆக்கி வைத்தவனை.

செடி ஆர் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை-
செடி -பாபம் /ஆர்தல் -மிகுதி -பாபம் மிக்கு இருக்கிற சரீரம் -நோய் எல்லாம் பெய்ததோர் ஆக்கை இறே
அன்றிக்கே-ஜரா மரண மோஷாய மாம் ஆஸ்ரித்ய யதந்தி யே ( ‘முதுமை மரணம் இவற்றினின்று விடுபடும் பொருட்டு
என்னை அடைந்து வழிபடுகின்றார்கள்’ )என்கிறபடியே,
அவனையே உபாயமாகப் பற்றித் தூறு மண்டின சரீரத்தை அறுத்துக் கொள்ளும் அடியார் உண்டு கேவலர்;
அவர்களுக்கு அதனைத் தவிர்த்துக் கொடுக்கும் ஸ்ரீ மானை – திருமகள் கேள்வனை.
‘ஆயின், அவர்கள் அடியாரோ?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தை விளைக்குமவர்களே அடியார் ஆவர்;
தம்மைப் போன்று கிட்டித் தலைவனுக்குத் தாழ்வினை விளைக்கப் பாராமல், பிறவியாகிற தளையை அறுத்துக்கொண்டு
கடக்க நிற்கின்றவர்கள் அவர்கள் ஆதலின், அவர்களையே அடியவர்கள் என்று இருக்கிறார்.
‘நன்று; உமக்கு இப்போது வந்தது என்?’ என்ன,

அடியேன் காண்பான் அலற்றுவன்-
‘அடியேன்’ என்று அலற்றுவன்,
‘காண வேண்டும்’ என்று அலற்றுவன்.

இதனின் மிக்க ஓர் அயர்வு உண்டே –
உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு சேர்ந்து திரிந்த -சம்சாரியாக இருந்த -நாளில்
அறிவே நன்றாக இருந்தது அன்றே!
‘அது நன்றாயினவாறு என்?’ என்னில், அப்போது கடக்க நின்று பகவத் தத்துவத்தைக் குறி அழியாமை வைத்தேன்;
இப்போது அன்றோ நான் கிட்டி அழிக்கப் பார்த்தது! இதனைக் காட்டிலும் அறிவு கேடு உண்டோ?-

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அகன்று போகிறவர் -அடியேன் -என்பதற்கு இரண்டு வகையான –
வாசனையால் அடிமைக்கு இசையாத திசையிலும் -வாஸ்தவமான ஆகாரம் போகாது இறே-
கடி சேர் -வர்த்தமானம் ப்ரத்யயர்த்தம் நாள் செல்ல நாள் செல்ல -இத்யாதி –
பாபம் மிக்கு இருக்கிற சரீரம் -பாப கார்யமான நோய் மிக்கு –
தூறு மண்டுகை -தூறு போலே மண்டுகை -மாறி மாறிப் பல பிறப்பைச் சொன்ன படி –
சேர்த்தல் தீர்க்கும் என்கையாலே செடியார் ஆக்கை சேர்த்தால் தீர்க்கைக்காக அடிமைப் பட்டவர்கள் என்று சித்திக்கும் இறே –
என்னைப் போலே இல்லாமல் அவத்ய அபாவத்தை விளைக்கிறவர் ஆகையால் அதிசயத்தை விலைக்குமவர்கள் என்று தாத்பர்யம் –
அதிகாரி சதுஷ்ட்யத்துக்கும் புருஷகாரம் அவரஜனீயம் என்பதால் திருமால் -என்கிறார்
என்னுடைய சம்பந்தமே அவனை அழிக்குமதாய் இருக்க அவனுக்கு என்னோடே ஓரு சம்பந்தம் உண்டாக்கச் சொல்லுவன்-
அடியேன் என்று அலற்றுவன் -அதுக்கும் மேலே காண்பான் -காண வேண்டும் என்று அலற்றுவன் –
நான் கண்டால் அவத்யமாம் படி இருக்கிற விஷயத்தை காண வேணும் என்பதாகா நின்றேன் இதில் காட்டில் அறிவு கேடு உண்டோ –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-5-6-

October 31, 2018

இவர்-ஆபிமுக்யம் – எதிர்முகம் செய்தவாறே, இறைவன் அல்பம் சிறிது தாழ்த்தான்;
இவர் ‘என்னை’ இழந்தாய்? கிடாய் ’ என்கிறார்.

—————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழில் பாட்டில் கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறார் என்ற பஷத்தை அவலம்பித்துக் கொண்டு –
நைவன்-என்ற பதத்தைக் கடாக்ஷித்து சங்கதி
இரண்டாம் அவதாரிகையான பக்ஷத்தில் கீழில் பாட்டுக்கு சேஷம் இப்பாட்டு –
நைவன் என்றதைக் கடாக்ஷித்து -என்னை இழந்தாய் -கிடாய் என்கிறார்

—————————-

வினையேன் வினை தீர் மருந்தானாய்! விண்ணோர் தலைவா! கேசவா!
மனை சேர் ஆயர் குல முதலே! மா மாயவனே! மாதவா!
சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

வினையேன் இத்யாதி
‘உன்னைப் பார்த்தல், என்னைப் பார்த்தல் செய்ய வேண்டாவோ?’ என்கிறார்.
வினையேன் வினை –
மற்றை-சேதனர்- மக்கள் எல்லார்க்கும் உள்ள வினைகள் போல அல்லவாயிற்று இவருடைய வினை;
அவர்கள் அனைவரும்-பகவத் சம்ச்லேஷம் – ‘பகவானைச் சேர வேண்டும்’ என்று அன்றே இருப்பது?
அகல நினைக்கிற இது உள்ளது இவர் ஒருவர்க்குமே யாதலின்‘வினையேன்’என்கிறார்.

தீர் மருந்து ஆனாய்-
‘நான் கிட்டுகை அத் தலைக்குத் தாழ்வு என்று அகலுகைக்கு அடியான வினையைப் போக்கும் மருந்து ஆனவனே –
வினையைப் போக்கிற்று எங்கு நின்றும் வந்தது என்னில்

விண்ணோர் தலைவா-
நித்தியானுபவம் பண்ணும்போது ‘நான் அயோக்கியன்’ என்று அகல வேண்டாதார்க்கு-நியாந்தாவாய் – ஏவுகின்றவனாய்
இருக்கும் இருப்பில் நின்று வந்து போக்கினான்.

கேசவா-
அதுக்கு அவ்வருகே ஒரு பயணம் எடுத்து விட்ட படி –
ஆவாம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் ( ‘க என்னும் இது பிரமனுக்குப் பெயராம்; எல்லாரையும் ஏவுகின்றவன் நான்
ஆதலின், எனக்கு ஈசன் என்று பெயராம்; நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், ‘கேசவன்’ என்ற பெயரை அடைந்தீர்’ )என்கிறபடியே-

மனை சேர் ஆயர் குல முதலே-
அந் நிலை -திருப்பாற்கடலினின்றும் இவ்வருகே போந்து கிட்டினபடி
பஞ்ச -ஐந்து லஷம் குடி ஆகையாலே மனையோடு மனை சேர்ந்த ஆயர் பாடிக்குத் தலைவனே;
இனி, இதற்கு, ‘ஆயர்கள் மனைகளிலே வந்து சேர்ந்து, அவர்கள் குலத்துக்கு முதலானவனே’ என்று உரைத்தலுமாம்.
இனி, ‘மனை சேர் ஆயர்’ என்பதற்கு, நான்கு மூங்கில்களைக் கொண்டு போய்,
தங்கும் இடத்தில் வளைத்துத் தங்குகிற ஆயர்,’ என்றுமாம்

மா மாயவனே –
ஆய்க் குலத்திலே வந்து பிறந்து, அவர்கள் ஸ்பர்சித்த – தொட்ட பொருளே தாரகமாய்,
அது தான் களவு கண்டு புஜிக்கும்- உண்ணும் படியாய்,
அது தான் தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதுவாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலை.
இவ் வெளிமைக்கு அடி சொல்லுகிறார் மேல் :

மாதவா –
அவளுடைய சேர்த்தி.

சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் –
சினை என்று பணை-கிளை / ஏய்கை -நெருங்குகை —
பணைகளோடு பணைகள் நெருங்கித் தழைத்து நினைத்தபடி இலக்குக் குறிக்க ஒண்ணாதவாறு நின்ற மரா மரங்கள்
ஏழையும் எய்தவனே! இது, மகா ராஜரை விஸ்வசிப்பித்து -நம்பச் செய்து காரியஞ்செய்தபடி.
இதனால், அடியார்கள் தன்னுடைய காத்தலில் ஐயங்கொள்வார்களாயின், அவ் வையத்தை நீக்கிக் காக்கின்றவன் –
சங்கா நிராகரணம் -என்பதனைத் தெரிவித்தவாறு.

சிரீதரா –
மராமரங்கள் எய்கைக்கு இலக்குக் குறித்து நின்ற போதைய வீர லட்சுமியைக் குறிக்கிறார்.

இனையாய்-
ஏவம்விதமான குண சேஷ்டிதங்கள் -இவ்விதமான குணங்களையும் செயல்களையுமுடையவனே.

இனைய பெயரினாய்-
அவற்றிற்கு வாசகங்களான திருப் பெயர்களை உடையவனே.

என்று நைவன் –
‘காண வேண்டும், கேட்க வேண்டும்’ என்ன மாட்டாதே – உருகுகின்றேன்.

அடியேனே –
யார் உடைமை அழிகிறது?
இவ் வுயிர் ஏதேனும் தனக்குத் தானே உரியதாகி அழிகிறதோ,
பிறர்க்கு உரிமைப்பட்டு அழிகிறதோ?
உடையவர்கள் வேண்டுமாகில் தங்கள்-வஸ்துவை – பொருளை நோக்கிக் கொள்ளுகிறார்கள் என்பார்,அடியேனே’- என்கிறார்,
உன்னால் இரட்சிக்க ஒண்ணாமல் அழிகிறதோ?
என்னால் இரட்சிக்கலாய் அழிகிறதோ?

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

இனைய பெயரினாய் -என்னும் அளவைப் பற்ற உன்னைப் பார்த்தல்
அடியேன் என்றதை பற்ற என்னைப் பார்த்தல்-அதாவது த்வத் ஏக ரஷ்யனான-அநந்ய கத்தி என்றவாறு –
அதவா-விண்ணோர் தலைவா வினையேன் என்ற இரண்டையும் பற்ற என்னவுமாம் –
அப்போது சர்வஞ்ஞனாய்-சர்வ சக்தியான உன்னைப் பார்த்தால் -அஞ்ஞனாய் அசக்தனான என்னைப் பார்த்தல் -என்றபடி
என் வினை என்னாமல் வினையேன் வினை -என்றதுக்கு பாவம் -சீல குணமே இதுக்கு மருந்து என்றவாறு
மனை சேர் -ஊருக்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் இடையருக்கும் விசேஷணம் ஆக்கி வியாக்யானம்
குலம்- ஊருக்கும் வம்சத்துக்கும் –
திரு அவதரித்து என்னாமல் சேர் என்றது திருவவதாரம் ஸ்ரீ வடமதுரையில் என்பதால்
இப்படி இந்த எளிமைக்கும் உபேக்ஷிக்கிறதுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -என்று தாத்பர்யம் –

கேசவா -ஆயர் குல முதலே -மா மாயனே -மாதவா -சிரீதரா இத்யாதிகள் குண வாசகங்கள்
மரா மரம் எய்தாய் -என்றது சேஷடித்த வாசகம்
என்று நைவன் என்கிறதுக்கு பாவம் -இனையாய் இனைய பெயரினாய் -என்ற அனந்தரம் –
குணங்களைக் கேட்க வேணும் -சேஷ்டிதங்களைக் காண வேணும் -என்று சொல்ல ப்ராப்தமாய் இருக்க –
பல ஹானியாலே நைவன் என்றபடி
கேட்க என்றது -கண்டபோதே வினவும் நல் வார்த்தைகளை –
ஆர் உடைமை -இத்யாதி வாக்ய த்வய உக்தமான அந்நிய சேஷத்வ நிவ்ருத்தியையும்
ஸ்வ ஸ்வா தந்த்ர நிவ்ருத்தியையும் வ்யுத்க்ரமேண அருளிச் செய்கிறார்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-5-5-

October 31, 2018

ஆபிமுக்யம் பண்ணின அநந்தரம் – விரும்பி அநுகூலரான பின்னர்,
கிரியாதாமிதி மாம் வத ( ‘இவ்விடத்தில் பர்ண சாலையைக் கட்டு என்று எனக்குக் கட்டளை யிடல் வேண்டும்,’ )என்று
இளைய பெருமாள் பிரார்த்தித்தது போன்று, ஏவி அடிமை கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
அன்றி,
இவர் அநுகூலரான பின்பும் அவன் முகங்காட்டாமல்-அல்பம் விளம்பிக்க – சிறிது நேரந் தாழ்க்க,
அது பற்றாமல், அருளாய்’ என்கிறார் எனலுமாம்.

‘அருளாய்’ என்றது கைங்கரியப் பிரார்த்தனை.-என்றும்
புருஷார்த்த மாகைக்காக பிரார்த்திக்கின்றார் என்றபடி-

‘கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன், உண்டை கொண்டு
அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன்’ (திருச்சந். 49.)

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழ் இரண்டு பாட்டிலும் ஸமாஹிதரானவர் இப்பாட்டில் சேருமாறு அருளாய் என்று பிரார்த்திக்கிறது எது என்ன
த்விதா பரிஹரிக்கிறார்
வினையேன் உன் திருப்பாதம் சேருமாறு அருளாய் -முந்தின அர்த்தத்தில் கைங்கர்ய பிரார்த்தனை
இரண்டாவதில் புருஷார்த்தம் ஆகைக்காக -இவருடைய ஸ்தைர்ய நிமித்தமாக -அவன் தாழ்க்க பிரார்த்திக்கிறார் என்றபடி –
வினை என்கிறது பிரதான அவதாரிகையில் அகலுகையில் உண்டான அபிசந்தியை-தீ வினை
முந்துற கிட்டுகை பாபம் என்று இருந்தார் -இப்போது அகலுகையில் உண்டான அபிசந்தி பாபம் என்கிறார்
இங்கும் அநிஷ்டாவஹத்வமே ஹேது
த்வதீய அவதாரிகையில் பிராப்தி பிரதிபந்தக பாபம் –
ஆபிமுக்யம் பண்ணின அனந்தரம் என்றது கீழில் பாட்டில் எம்பெருமான் -என்றதைப் பற்ற

—————————

மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணி வண்ணா! மது சூதா! நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே–1-5-5-

மான் ஏய் நோக்கி-இத்யாதி
மடவாளை மார்பிற் கொண்டவனா யிருப்பதனால், அருளுவிப்பாரும் அருகே இருக்க
‘எனக்கு அருளாய் என்று வேண்டுவது என்?’
மான் ஏய் நோக்கி
மான் ஏய்ந்த நோக்கு-ஏய்கை -பொருந்துகை –
மடவாளை-
ஆத்தும குணங்களையுடைய பெரிய பிராட்டியாரை.
மானோடு ஒத்த கண்களை யுடையளாய்.
இனி, காரியப்பாடு அறக் கண்ணாலே அவனை ஒருக்கால் நோக்கினால்,
ஒரு பாட்டம் மழை விழுந்தாற் போலே குளிரச் செய்கின்ற கண்கள் என்று கூறலுமாம்.
இனி, மடப்பமாவது துவட்சியாய்,
அவன் தான் கண்ணாலே இவளை நோக்கினால், 
‘தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ’ என்கிறபடியே,
வண்டாலே ஆத்தசாரமான -எடுக்கப்பட்ட சாரத்தையுடைய பூப்போன்று இருக்கின்ற
மென்மையினை யுடையவள் என்று கூறலுமாம்.

மார்பிற் கொண்டாய் மாதவா-
விஷ்ணு வக்ஷஸ்த்தல ஸ்த்தயா (‘விஷ்ணுவினுடைய திருமார்பில் எழுந்தருளி யிருக்கின்ற பெரிய பிராட்டியார்’) என்கிறபடியே,
அவள், திருமார்பில் நித்திய வாசம் செய்கையாலே ‘மாதவன்’ என்னுந் திருநாமத்தை யுடையவனே.
மாம்பழத்தோடு ஒரு வித சம்பந்தம் இல்லாதிருக்கவும் ஒரு வகை வண்டு ‘மாம்பழ உண்ணி’ என்ற பெயரை அடைவதுபோன்று,
‘ஸ்ரீ’யோடு சம்பந்தம் இல்லாதிருக்கவும் ‘ஸ்ரீமான்’ என்ற பெயரைத் தரித்திருக்கின்ற பிறரைப் போல அல்லன்
இறைவன் என்பார், ‘மார்பிற் கொண்டாய் மாதவா’ என்கிறார்.

கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா-
அவள் அருகில் இல்லாது ஒழியினும் உன்னைக் கிட்டினார்க்குத் தாழ்வு வருமோ என்கிறார் இதனால்.
வன வாசத்திற்குக் காரணமான -ஹேதுபூதையான- குப்ஜையைச் சொல்லிற்றாய்,
இளமையில் சுண்டு வில் கொண்டு திரிகிற காலத்தில் பெருமாள் லீலாரசம் அனுபவித்தார் என்பது ஒன்று உண்டு;
அதனை நோக்கிச் சொல்லுகிறார்.
அப்போது ‘கோவிந்தா’ என்றதற்குப் ‘பூமியைக் காப்பவன்’ என்பது பொருள்.
அவளுடைய மற்றை உறுப்புகட்கு ஒரு வாட்டம் வாராதபடி நிமிர்த்தானாதலின், ‘கூனே சிதைய’ என்கிறார்.

அன்றி,
தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே 
‘போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார் என்றலுமாம்
இனி, சாந்து கொடுத்த கூனி தன்னையே சொல்லிற்றாய், வருத்தம் அறச் சுண்டு வில் நிமிர்க்குமாறு போன்று
கூனை நிமிர்த்தவன் என்றலும் ஒன்று.
தெறிக்கை யாகிறது கிரியையாய் ‘தெறித்தாய்,- நிமிர்த்தாய்’ என்றபடி.
‘ஆயின், கிருஷ்ணனுக்கு வில் உண்டோ?’ என்னில், 
வேலிக் கோல் வெட்டி விளையாட்டு வில் ஏற்றித் திரியுமவன் அன்றோ கிருஷ்ணன்? 
‘தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்க மதுவேபோல்’ என்று வில் உண்டாகவே
அருளிச் செய்து வைத்தாள் அன்றே ஸ்ரீ ஆண்டாள்?
கோவிந்தா-
திர்யக்குகள் -விலங்குகளோடும் பொருந்துமவன் அல்லையோ நீ?

வான் ஆர் சோதி மணி வண்ணா-
குப்பியில் மாணிக்கம் போன்று திரிபாத் விபூதியிலும் அடங்காதே விம்மும்படியான புகர் படைத்த வடிவை யுடையவனே!
இதனால், பக்தானாம் ‘அடியார்களுக்காகவே வடிவு படைத்தவன் அல்லையோ நீ?’ என்கிறார்.

மதுசூதா-
மதுவாகிற அசுரனைப் போக்கியது போன்று என் விரோதியைப் போக்கினவனே!
இதனால், ‘அவ் வடிவை அனுபவிப்பார்க்கு வரும் விரோதியைப் போக்குவாயும் நீயன்றோ?’ என்கிறார்.

உன் தேனே மலரும் திருப் பாதம் –
‘இவை ஒன்றும் இல்லையாயினும் அடியில் உன் இனிமையைப் பார்த்தால் தான் விடப் போமோ?’ என்கிறார்.
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ (தேன் போலே இனிமையான திருவடிகள் )என்றபடி.
இனி, இவர் பெரு நிலம் கடந்த நல்லடிப் போதை யன்றோ ஆசைப் பட்டார்? இவர் ஆசைப் பட்டபடியே, 
‘திசைகள் எல்லாந் திருவடியால் தாயோன்’ என்று அத் திருவடிகளையே காட்டிச் சேரவிட்டான்;
‘உன் தேனே மலரும் திருப்பாதம்’ என்று அதனையே விரும்புகிறார் என்று கோடலுமாம்.
அங்ஙனம் கொள்ளுங்கால், தேனே மலரும் திருப்பாதம் என்பதற்கு, 
‘திரிவிக்கிரமாவதாரத்தை எடுத்த இறைவனுடைய திருவடிகளினின்று அமிர்த வெள்ளம் உண்டாகிறது’ என்கிறபடியே,
தேன் போன்று இனிய கங்கையானது தோன்றுகின்ற திருவடிகள் என்று பொருள் கொள்க.

அருளாய் சேருமாறு வினையேன் –
கலத்தில் இட்ட சோற்றை விலக்குவாரைப் போன்று, நீ வந்து கிட்டக் கொள்ள அகலுகைக்கு அடியான
பாவத்தைப் பண்ணின நான் சேருமாறு அருள வேண்டும்.
தாம் இசைந்த பின்பும் கிடையாமையாலே ‘வினையேன்’ என்கிறார்.

————————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

மானோடு ஒத்த கண்ணை யுடையவன் என்றும் பார்வையை உடையவள் -கடாக்ஷ பரம் -என்றுமாம்
மடப்பம் ஸ்த்ரீத்வம் -ஆத்ம குணோபேதை/ துவட்சி -அவனுடைய கடாக்ஷத்தால் வந்த துவட்சி –லாகவம் –
இவன் கார்யம் செய்யும் என்று காட்ட இவள் திருக்கண்ணை வர்ணிக்கிறது -மழைக் கண் மடந்தை -திரு விருத்தம் -52-
தெறித்தாய்-கிரியையாய்- நிமிர்த்தாய் என்றபடி / எய்தாய் என்றுமாம் குப்ஜா பக்ஷத்தில் —
காம் ரஷ்யத்வேந விந்ததி லபதே இதி கோவிந்த -பூமிக்கு ரக்ஷகன்
அமணன் -கள்வன் -ப்ராஹ்மண க்ருஹம் கன்னம் -ஈரச்சுவர் -கூலி ஆள் -தண்ணீர் விடுகிறவன் -பானை –
குயவன் -வேசியை -வண்ணான் -அமணன் -மவ்னி-ராஜா தலையை அறுத்த கதை –
குப்பி ஸ்தானம் -பரமபதம் –
தேன் போலே போக்யமான திருவடிகள் -பரத்வம் –
தேன் போலே போக்யமான கங்கா நீர் ப்ரவஹிக்கிற திருவடிகள் -திரு விக்ரம அபதானம்-
வினையேன் -அவதாரிகை த்வயத்துக்கும் சேர தாத்பர்ய த்வயம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-5-4-

October 31, 2018

‘அவன் படி இதுவாய் இருந்தது; இனி நீர் செய்யப் பார்த்தது என்?’ என்ன,
‘நாம் அகலப் பார்த்தால் உடையவர்கள் விடுவார்களோ?’ என்கிறார்.
அத்யந்த நிரபேஷனாய் இருந்து வைத்து – (‘வேண்டுதல் என்பது மிகச் சிறிதும் இல்லாதவனாய் இருந்தும்,) –
ஸ்ருஷ்ட்டி யாதி அநேக யத்னங்களைப் பண்ணி (படைத்தல் முதலிய அநேக முயற்சிகளைச் செய்து )
என்னைத் தனக்கு ஆக்கிக் கொண்ட குணங்களாலே என்னை-விஷயீகரித்தவன் – அடிமை கொண்டவன்,
இனி, ‘நான் அல்லேன்’ என்னிலும், தன்னுடைய சௌசீல்ய குணத்தால் என்னை விடான்,’ என்று –
ஸமாஹிதராகிறார்- சமாதானத்தை அடைந்தவர் ஆகிறார்-

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

எம்பெருமான் என்றது சம்பந்த அபிப்ராயம் என்னும் கருத்தால் –
உடையவனாகையாலே ஸுசீல்யாதிகளைக் காட்டிச் சேர்த்துக் கொண்டான் என்றபடி
த்விதீய அவதாரிகை -எம்பெருமான் ஸுசீல்ய அபிப்ராயம் -ஸுசீல்யத்தாலே சேர்த்துக் கொண்டு
அத்தாலே பெறாப் பேறு பெற்றவனாக இருக்கிறான்
வானோர் பெருமான் என்றதை பற்ற அத்யந்த நிரபேஷனாய் -என்றது
அவன் படி இதுவாய் இருந்தது -ஸூ சீலனாகையாய் இருந்தது –
நீர் செய்யப் பார்த்தது என் -என்றது அகலப் பார்த்தீரோ -என்றபடி –

——————

தானோர் உருவே தனி வித்தாய்த் தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்த்
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம் பெருமானே–1-5-4-

தான் ஓர் உருவே தனி வித்தாய்-‘
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் (சோம பானம் செய்தற்குரிய சுவதே கேதுவே,
காணப் படுகிற இவ் வுலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்து’ என்று சொல்லக் கூடியதாய்,
நாம ரூபங்கள் இன்மையின் ஒன்றாய், அடையத்தக்க இரண்டாவது பொருள் வேறு இல்லாததாய் இருந்தது,’ )என்கிறபடியே 
இங்கும், இரண்டாவது இன்மையைக் காட்டுகிற ‘தான் ஓர் தனி’ என்னும் பதங்கள் மூன்று உண்டாய் இருந்தன;
‘இச்சொற்களுக்குப் பயன் யாது?’ எனின்,
படைத்தலை அருளிச் செய்வதனால் காரண விஷயமாகக் கிடக்கின்றன. மூன்று காரணங்களும் தானே என்கை. 
‘தான்’ என்கிற இதனால், உபாதானாந்தரம் -முதற்காரணம் வேறு இல்லை என்கை. 
‘ஓர்’ என்கிற இதனால் சஹகார்யாந்தரம் -துணைக் காரணம் வேறு இல்லை என்கை.
‘தனி’ என்கிற இதனால், -நிமித்தாந்தரம் -நிமித்த காரணம் வேறு இல்லை என்கை.
உரு – அழகு, ஆக, ‘அழகிய த்ரிவித மூன்று காரணமும் தானேயாகி’ என்றபடி.

‘சதேவ,’ ‘ஏகமேவ,’ ‘அத்விதீயம்’- இவை முறையே, துணைக்காரணம், முதற்காரணம், நிமித்த காரணம்
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதானம்
சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் -நிமித்தம்
ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம் சஹகாரி
‘உற்று ஒரு தனியே தானே தன் கணே உலகம் எல்லாம், பெற்றவன்’ (கம்ப. வருண. 63.)

தன்னின் மூவர் முதலாய –
விஷ்ணுவாகிற தன்னோடு கூடின மூவர் தொடக்கமான சிவன் இவர்களோடு கூடியிருப்பின் தனக்கும் அவர்கட்கும்
வேற்றுமை இன்றித் தனது உயர்விற்குக் குறைவு வாராதோ?’ என்னில்,
இட்சுவாகு குலத்தினர் நடுவே வந்து அவதரித்து அவர்களோடே ஒக்க எண்ணலாம்படி இருக்குமாறு போன்றும்,
யாதவர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு ஒக்க எண்ணலாம் படி இருக்குமாறு போன்றும்,
பிரமன் சிவன் இவர்கள் நடுவே அவர்களோடு ஒக்கச் சொல்லலாம்படி அவதரித்து, 
ஸ்வேந ரூபேண -தனது உருவமாய்- நின்று -பாலனத்தைப் பண்ணி -அளித்தலைச் செய்து,
அவர்களுக்கு அந்தராத்துமாவாய் நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து போதரலால் உயர்விற்குக் குறை வாராது என்க.
இனி, தன்னின் மூவர் முதலாய-தன்னில் -என்றது தன் பக்கலிலே என்ற படியாய் –
தன் சங்கல்ப ஞான ரூப ஞானத்தால் சேந்த்ர-என்று இந்திரனையும் கூட்டி –
பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய – என்று கூறலும் ஆம்.

வானோர் பலரும் –
ப்ரஹ்மாதிகள் தொடக்கமான தேவர் பலரையும்,
முனிவரும் –
சனகன் முதலானவர்களையும்,
மற்றும் –
ஸ்தாவரங்களையும் -நிலையியற் பொருள்களையும்,
மற்றும் –
ஜங்கமங்களையும்-இயங்கியற் பொருள்களையும்,
முற்றும் ஆய் –
ஆக -அநுக்தமான – சொல்லப்படாத எல்லாப் பொருள்களையும் உண்டாக்குகைக்காக,

தானோர் பெருநீர் தன்னுள்ளே தோன்றி அதனுள் கண்வளரும்-
இப்படி ஸ்ருஷ்ட்டி உன்முகனான – படைத்தலில் நோக்கமுடைய தான்,
தனக்குக் கண் வளர்ந்தருளுகைக்குத் தகுதியாகப் பரப்பை யுடைத்தான ஒரு சமுத்திரத்தை-ஏகார்ணவத்தை –
தன் பக்கல் நின்றும் உண்டாக்கி அதனுட் கண் வளரும்.
‘இப்படிச் சமுத்திரத்தில்-ஏகார்ணவத்தில் – தனியே சாய்ந்தருளுகின்றவன்தான் யார்?’ என்னில்,

வானோர் பெருமான்-
நித்தியசூரிகட்கு நாதன் ஆனவன்;
மாமாயன் –
ஆச்சரியங்களான குணங்களையும் செயல்களையுமுடையவன்;
வைகுந்தன் –
ஸ்ரீவைகுண்டத்தைக் கொலு வீற்றிருக்கும் இடமாக வுடையவன்.

‘முன்னுரு வாயினை நின் திரு நாபியின் முளரியின் வாழ் முனிவன் எம்பெருமானே – அவன் என் நாயனே. 
உடைமை தப்பிப் போகப் புக்கால் உடையவர்கள் ஆறியிருப்பர்களோ?
பெறுகைக்கு ஈடாக முன்னரே நோன்பு நோற்று வருந்திப் புத்திரனைப் பெற்ற தாயானவள்,
அவன் நடக்க வல்லனான சமயத்திலே,-தேசாந்திரம் – ‘வேறு தேசம் போவேன்’ என்றால் விட்டு ஆறி யிராள் அன்றே?
அப்படியே, நெடு நாள் தன் வாசி அறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன்,
தான் தந்த அறிவைக் கொண்டு நான் அகன்று போகப் புக்கால்,
அவன் விட்டு ஆறியிருப்பனோ என்பார்,‘எம்பெருமானே’ என்கிறார்.

தன்னுருவாகி இருந்து படைத்தனை பலசக தண்டமு நீ
நின்னுருவாகி யளித்திடு கின்றனை நித்த விபூதியினால்
என்னுருவாகி யழிக்கவும் நின்றனை ஏதமில் மாதவனே!’என்று சிவபிரான், கண்ணபிரானை நோக்கி-வில்லி பா. 13- 220-

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

தான் ஓர் உருவே தனி வித்தாய் -தான் வித்து -ஓர் வித்து -தனி வித்து -உரு என்று அழகு –
இது மூன்றிலும் அந்வயிக்கக் கடவது -உருவேய் -எய்தல் -பொருந்துதல் –
இங்கே -என்றது ஸ்ருதியிலும் மூலத்திலும் என்றபடி
த்ரிவித காரணமும் தானாகையாவது -ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட வேஷேண உபாதானத்வமும்-
சங்கல்ப விஸிஷ்ட வேஷேண நிமித்தத்வமும் -ஞான சக்த்யாதி விஸிஷ்ட வேஷேண சஹகாரித்வமும் என்றபடி –
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி -என்று-சமஷ்டி – அண்ட ஸ்ருஷ்ட்டியைச் சொல்லி –
அதுக்குள்ளே ஏகார்ணவத்தை ஸ்ருஷ்டித்துக் கண் வளர்ந்த படியைச் சொல்லுகிறது
பெரு நீர் -ஏகார்ணவம் -/ கலவிருக்கை -கொலுச்சாவடி-நெஞ்சு பொருந்தி இருக்கை –
ஓர் பெரு நீர் தோற்றி அதனுள் கண் வளரும் வைகுந்தன் வானோர் பெருமான் மா மாயன் எம்பெருமானே -என்று அன்வயம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-5-3-

October 31, 2018

‘நினைந்தும் பேசியும் நைந்தும் தப்பச் செய்தேன்,’ என்றார் முதற்பாட்டில்;
தப்பச் செய்தேன் என்ற இடம் தப்பச் செய்தேன் என்றார் இரண்டாம் பாட்டில்;
‘நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப் போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும்
சீல குணத்தையும் ஒரு கால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீல குணத்தை காட்டிக் கொடுக்க,
அதனை நினைந்து அகல மாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார்.
‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில், 
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே;
சீல குண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழ் இரண்டு பாட்டில் பிரமேயத்தையும் அனுபாஷியா நின்று கொண்டு –
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் தான் ஒருவன் -என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கதி –
இப் பாட்டிலும் மேல் பாட்டில் போலே தம்மோடு அவனுக்கு விசேஷ சம்பந்தம் தோற்றாமையைப் பற்ற
தான் ஒருவனே என்ற ஈடுபாட்டைப் பற்ற அகல மாட்டாதே அணுகவும் மாட்டாதே -என்றது
அணாவாய்த்து -வினோதம் பண்ணிக்க கொண்டு என்றபடி -சம்சயித்து என்றுமாம் –
அவன் நீர்மையைக் காட்டுகையாலே அகல மாட்டாதே –
அடியேன் சிறிய ஞானத்தன் என்கையாலே அணுகவும் மாட்டாதே அணாவாய்த்து -என்கிறார்
ஆழ்வார் தம்மோடு சேர வேணும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு இருக்கிற ஈஸ்வரனைப் பற்ற இப்போது இவருடைய
அவஸ்தை ஏமாற்றம் போலே இருக்கையாலே அணாவாய்த்து -என்றது –
ஸுந்தர்ய சீலாதி குண சேஷ்டிதங்களோடே பரஸ்பர சாரஸ்யாவஹமாம் படி சேர்ந்து இருக்கிற திரு நாமங்களை சார்த்தமாக அனுசந்தித்து
அனுபவித்து அல்லது தப்ப ஒண்ணாத படி போக்கற வளைந்து கிடக்கிற பாப பலமான தரை காண ஒண்ணாத துக்கத்தைப்
போக்கிக் கொள்ளார்களாமாகில் இந்தக் காலம் தன்னை எத்தை அனுசந்தித்துப் போக்குவார்கள் -என்றபடி –
அது எப்படி என்ன சீல குண இத்யாதி

———————–

மா யோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் தானோர் உருவனே–1-5-3-

மா யோனிகளாய் –
மஹா யோனிகளாய் -விலக்ஷணமான –வேறுபட்ட பிறவிகளை யுடையராய்-

நடை கற்ற வானோர் பலரும் முனிவரும் –
யோனிகளைத் தத்தமது அதிகாரத்துக்குத் தக்கனவான மரியாதைகள் உண்டு, படைத்தல் முதலியவைகள்;
அவற்றில் வந்தால் அறிவித்த சர்வேஸ்வரன் பக்கல் இரு கால் மட்டுச் சென்று கேள்வி கொள்ள வேண்டாதபடி
கற்று இருப்பவரான வானோர் பலரும் முனிவரும் ஆன பிறவிகளை யுடையவர்களை.
அவர்கள், சப்த ரிஷிகள் -தச ப்ரஜாபத்திகள் -ஏகாதச ருத்ரர்கள் துவாதச ஆதித்யர்கள் அஷ்ட வஸூக்கள் இப்படிக் கூறப்படுகிறவர்கள்.

நீ படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன் –
‘நீ படை’ என்று முந்துற நான்கு முகங்களையுடைய பிரமனைப் படைத்தவன்.
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் – ‘முன்னர்ப் பிரமனை எவன் உண்டாக்கினானோ’ என்கிறபடியே,
பிரமனைப் படைத்து, ‘இவ்வருகு உண்டான காரிய வர்க்கத்தை உண்டாக்கு’ என்று விட்டால்,
சர்வேஸ்வரனைக் கேள்வி கொள்ள வேண்டாதபடி துப்புரவு உடையவன் ஆகையால்  பூர்ணனான- நிறை நான்முகனை-

சேயோன் எல்லா அறிவுக்கும்-
அவ்யவதாநேந- நேரே தன் பக்கல் பிறந்து, தான் ஓதுவிக்க ஓதி, அவற்றாலே ஞானத்தில் குறைவு அற்று
இருக்கிற பிரமன் முதலானவர்களுடைய ஞானத்துக்கும் அப்பாற்பட்டவனாய் இருப்பான்.

திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் –
திக்குகளோடே கூடப் பூமிப் பரப்பு முழுவதையும் தாவி அளந்து கொண்டவன்.
இதனால், எத்துணை வியக்கத் தக்க ஞானத்தை யுடையவர்களுடைய ஞானத்துக்கும் அப்பாற்பட்டவனாய் இருந்தும்,
தானே தன்னைக் கொடுவந்து காட்டுமன்று வருத்தம் அறக் கொடு வந்து காட்டுவான் என்பதனைத் தெரிவித்தபடி.
‘நாய்ச்சிமார் தொடும் போதும் பூத் தொடுமாறு போன்று கூசித் தொடும் திருவடிகளைக் கொண்டு அன்றே
காடும் ஓடையும் அளந்து கொண்டான்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
‘நன்மை தீமை பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளைக் கொடு வந்து வைக்கைக்குக் காரணம் என்?’ என்னில்,

எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் –
எல்லா உயிர்கட்கும் தாயினைப் போன்று அன்புடையனாகை
ஈண்டு, ‘எல்லா எவ்வுயிர்’ என்றது, குணாகுணம் நிரூபணம் பண்ணாதே -உயர்வு தாழ்வுகள் பொருந்திய
பிறவிகளையுடைய எல்லா உயிர்களையும்.

தான் ஓர் உருவனே –
ஒருவர்க்கும் நிலம் அல்லாத மேன்மையினையும் நினைந்தார்;
அப்படிப்பட்டவனுடைய நீர்மையினையும் நினைந்தார்;
‘இவனும் ஒரு படியை யுடையவனாய் இருக்கிறானே!’ என்று ஈடுபாடு உடையவர் ஆகிறார். 
கடுநடை யிட்டு ஓடுகிறவர் இவன் சீல குணத்தை நினைந்து கால் தாழ்க்கிறார்.

‘கார் கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்
பார் கலந்த வல்வயிற்றான் பாம்பணையான் – சீர்கலந்த
சொன்னினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவர் இப்போது?(பெரிய திருவந். 86)

‘இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர் எட்டோடு
ஒருநால்வர் ஓரிருவர் அல்லால் – திருமாற்கு
யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே!
நாமா மிகவுடையோம் நாழ்.(பெரிய திருவந். 10) 

‘திதியின் சிறாகும் விதியின் மக்களும்
மாசில் எண்மரும் பதினொரு கபிலரும்
தாமா இருவரும் தருமனும் மடங்கலும்
மூவேழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின்வயிற் பரந்தவை யுரைத்தேம்’

————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நடை என்று -தம் தாமுடைய அதிகார அனுரூபமான மரியாதைகள் உண்டு -ஸ்ருஷ்டியாதிகளைச் சொல்லுகிறது
யோனிகள் -ஏவம் பூதமான ஜந்துக்கள்
நிறை -ஞான பூர்த்தி –
திருவடியால் தாயோன் -திரு என்று அழகாய் -ஸூ குமாரமான -அடி என்றும்
திரு என்று நாய்ச்சியாராய்-அவளும் கூசித் தொடும்-சங்கோஸித்து ஸ்பர்சிக்கும் – திருவடிகள் என்றபடி
தான் ஓர் உருவனே-உரு ஸ்வபாவம் -என்று ஆச்சர்யப் படுகிறார் –
சேயோன் தாயோன் என்றதை பற்ற மேன்மையையும் நீர்மையையும் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-5-2-

October 31, 2018

‘நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், -தப்பச் செய்தேன் ’ என்றார் கீழ் பாசுரத்தில்;
தப்பச் செய்தேன் ‘ என்ற இடம் தப்பச் செய்தேன் என்கிறார் இப் பாசுரத்தில்;
‘யாங்ஙனம்?’ எனின், 
சண்டாளன் ‘ஒத்து -வேதம் போகாது’ என்று தான் சொல்லப் பெறுவனோ?
அவ்வாறே அன்றோ நான் அயோக்கியன் என்று அகலுகையும்?
ப்ரேமார்த்த சித்தரான -அன்பினால் நனைந்த மனத்தையுடைய ப்ரஹ்மாதிகள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்!
‘நான் தப்பச் செய்தேன்- என்று அகலுமதில், கிட்டி நின்று பரிமாறுதல் நன்று அன்றோ?’ என்று,
கீழ் நின்ற நிலையையும் நிந்தித்துக் கொண்டு அகலுகிறார்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

முதல் பாட்டில் ப்ரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு வறுத்த அணுவாக பூர்வகமாக அவதாரிகை –
ப்ரஹ்மாதிகள் வணங்கினால் உன் பெருமைக்கு அவத்யமாகாதோ-என்னுமத்தைப்
பாட்டிலே பிரயோகிக்கிறவருடைய ஹார்த்த பாவத்தை அருளிச் செய்கிறார் -வாக்ய த்வயத்தாலே –

——————-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலிற் சிதையாமே
மனஞ்செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே–1-5-2-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் புனைந்த கண்ணி நீர் சாந்தம்
புகையோடு ஏந்தி வணங்கினால் –
நினைந்து-
ப்ரஹ்மாதிகள் -சமாராதனத்துக்கு -, திருவாராதனத்திற்கு ஒருப்படும் போது திருமாலை தொடக்கமான
உபகரணங்களைச் சமைத்துக் கொண்டாயிற்று இழிவது.
நாம் இவற்றைக் கொண்டு சென்றால் நம்மைக் குளிரக் கடாக்ஷிக்கக் கடவனே
மாமக்ரூரேதி வஷ்யதி ‘ஸ்ரீ கிருஷ்ணர் என்னைப் பார்த்துக் ‘குற்றம் அற்ற அக்குரூரனே’ என்று அழைத்துப் பேசுவார்,’ என்று,
கம்ஸன் ஏவலால் ஸ்ரீ கிருஷ்ணனை அழைக்கச் சென்ற அக்குரூரன் நினைத்துச் சென்றது போன்று,
‘நம்மை வினவக் கடவனே’ என்று இங்ஙனே முந்துற நினைப்பார்கள்;

நைந்து
அநந்தரம் -பின்னர், தரித்திருக்க மாட்டாதே -சிதில அந்தக் கரணராவார்கள் –
கட்டுக் குலைந்த மனமுடையவர்கள் ஆவார்கள்.

உள் கரைந்து உருகி –
நையுமது ஸ்தூலம் என்னும்படி உள் கரைவர்கள்;
பின்னர், ஓர் அவயவியாக்கி எடுக்க ஒண்ணாதபடி மங்குவார்கள். ‘இப்படிப் படுகின்றவர்கள்தாம் யார்?’ என்றால்,

இமையோர் பலரும் முனிவரும் –
ப்ரஹ்மாதிகளும் சனகாதிகளும் –
‘ஆயின், இச் செயல் முனிவர்களுக்குப் பொருந்தும்; செருக்கினைக் கொண்ட தேவர்களுக்குப் பொருந்துமோ?’ எனின்,
ராஜஸ தாமஸ குணங்களால் மேலிடப்பட்ட போது- செருக்குக் கனத்து இருக்குமாறு போன்றே,
சத்துவம் தலை எடுத்த போது பகவானுடைய குணங்களை அனுபவித்துக் கட்டுக் குலைந்து உருகுகிறபடியும் கனத்திருக்கும்.

புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் –
இப்படி அவர்கள் அன்பே மிக்கு இருப்பவர்கள் ஆகையாலே தொடுக்கும் போது தொடங்கி,
‘அவன் இதனைக் கண்டருளக் கடவனே, சாத்தியருளக் கடவனே,’ என்று அன்போடு தொடுத்த மாலை,
ஆராதனஞ்செய்யும் போது தன்மை நோக்குகையால் உண்டாகும் ஸ்ரமம் ஆறுகைக்கு
அர்க்கியம் கொடுக்கைக்காக உண்டாக்கின தண்ணீர்,
பிறகு சாத்தியருளுவதாகச் சமைத்த சந்தனம் முதலியவைகள்,
தூபங்காட்டுவதற்கு உண்டாக்கின அகிற்புகை இவை தொடக்கமானவற்றைத் தரித்துக் கொண்டு வந்து,-
நிர்மமராய் – செருக்கு அற்றுத் திருவடிகளிலே விழுவார்கள்.
அவன் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் ‘சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி’ என்னுமாறு போன்று
‘அவனுக்கு என்று தரிக்குமதுவே’ இவர்களுக்குப் பேறாக இருக்குமாதலானும்,
பாவ பந்தம் இரண்டு தலைக்கும் உண்டு ஆதலின்,
அவன் தானும் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் இவர்கள் தரித்துக் கொண்டு நிற்கக் காணுமதனையே
பேறாக நினைத்திருப்பனாதலானும் 
‘ஏந்தி வணங்கினால்’ என்கிறார்.

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் –
தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்.
‘மேல்  மனம் செய் ஞானம்’ என்று  சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச் செய்வதனால், ஈண்டு, 
‘நினைந்த’என்பறதற்குக் கருத்து என்?’ என்னில்,
காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து 
‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று,
புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின்
தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும்,
வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும்,
இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு;
அதனை அருளிச் செய்கிறார்.
இனி, நினைத்தல் –
கலத்தலும் கூடலும் ஆதலால், நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் என்பதற்கு,
‘சத்’ என்ற நிலையுள்ளதாய்த் தன்னுடனே கூடிக் கிடக்கிற எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்’என்று
பொருள் அருளிச் செய்வர் ஸ்ரீ பிள்ளை யமுதனார். 

முதலில் சிதையாமே –
அவற்றை உண்டாக்குமிடத்துத் தானான தன்மையில் குறை வாராதபடி இருப்பான்.
அதாவது – விசேடணங்களான சேதன அசேதனங்களினுடைய ஸ்வரூப ஸ்வபாவ விகாரங்கள்
விசேடியமான பரம்பொருள் உருவத்தில் இல்லை என்றபடி.
‘ஆயின், அப்படி உளதாமோ?’ எனின்,
மட் பிண்டமானது பானை, அகல் முதலிய பொருள்களாக மாறிய வுடனே அம் மண் உருண்டையான உருவம் அழிந்து விடும்;
இங்கு அது இல்லை.
‘நாட்டில் காரியங்களை உண்டாக்குகிற காரணத்தின் படி அன்று இவன் படி,’ என்கிறார்.

மனம் செய் ஞானத்து உன் பெருமை –
இப்படி இருக்கிற சங்கல்ப ரூப ஞானத்தையுடைய உன் பெருமை உண்டு.
உன் வேறுபட்ட தன்மை அது
‘ஆயின், உலகிற்குக் காரணம், சங்கல்ப ரூப ஞானமோ?’ எனின், அன்று;
‘ஸூஷ்ம சித்து அசித்துகளுடன் கூடின இறைவனே உலகிற்குக் காரணம்;
ஆயினும், இவ் விறைவன் காரணமாகும் போது சங்கல்பம் முன்னாக ஆதல் வேண்டும்.
‘ஆயின் சங்கல்பத்தை யுடைய அவ் விறைவன் -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் காரணமாதல் வேண்டும்,
சங்கல்பம் காரணமாகாதே?’ எனின், பஹுஸ்யாம் ‘நான் பல வகைப் பொருள்களாக விரிகிறேன்,’ என்கிற
சங்கல்பத்தின் முக்கியத்துவத்தாலே 
‘மனஞ்செய் ஞானத்தைக்’ காரணமாக அருளிச் செய்கிறார்.

‘சின்னூல் பலபல வாயால் இழைத்துச் சிலம்பி பின்னும், அந்நூல் அருந்தி
விடுவது போல அரங்க ரண்டம், பன்னூறு கோடி படைத்தவை யாவும்
பழம்படியே, மன்னூழி தன்னில் விழுங்குவர் போத மனமகிழ்ந்தே’ என்றார் -பிள்ளைப்பெருமாளையங்கார்.

ஸ்வரூப விகார மில்லாமலிருந்துகொண்டே சிலவற்றை உண்டாக்குதலும்,
அங்ஙனம் உண்டாக்கினவற்றை உட்கொள்ளுதலும் அற்பச் சத்தியை யுடைய சிலந்திப் பூச்சிக்கு இயல்பாகும் போது,
ஸ்வரூபத்திற்கு விகாரமில்லாமலிருந்து கொண்டே அண்டங்களைப் படைத்தலும் விழுங்குதலுமாகிய இயல்பு சர்வ சத்திகளான
இறைவனுக்குக் கூடுதல் அரிதன்று என்பதாம்.
‘ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் சர்வசத்திக்குக் கூடாதொழியாதிறே,’ என்ற தத்துவத் திரயமும் ஈண்டுக் கருதுதல் தகும்.

மாசு உணாதோ –
இவர்கள் வணங்கினால் மாசு உணாதோ?
‘தன் சங்கல்பத்தாலே எல்லாப் பொருள்களையும் உண்டாக்குகிறவனுக்கு,
அவனாலே படைக்கப்பட்ட நாம் தீண்டிய பொருள் அங்குத்தைக்குத் தக்கதாமோ? என்று தந் தாமுடைய தாழ்மையை நினைந்து,
அகலுகைக்கு அதிகாரமுள்ளது அவர்களுக்கே அன்றோ? அதற்கு நான் யார்?

மாயோனே –
ப்ரஹ்மாதிகளையும் அற்ப நிலையுள்ள மனிதர்கள் நிலையிலே ஆக்க வல்ல உன்னுடைய ஆச்சரியமான
வேறுபட்ட தன்மை இருந்தபடி என்! 

‘மாயோனே, நினைந்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் முதலிற் சிதையாமே மனஞ்செய் ஞானத்து உன் பெருமை,
இமையோர் பலரும் முனிவரும் நினைந்து நைந்து உள்கரைந்து உருகிப் புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு
ஏந்தி வணங்கினால் மாசூணாதோ?’ என்று அந்வயம் –

————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி -என்கிற பத சதுஷ்ட்யத்துக்கும் க்ரமேண அர்த்தம் –
சமர்ப்பித்து வணங்கினால் என்னாமல் ஏத்தி வணங்கினால் என்றதின் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார்
சூட்டு நன் மாலைகள் -கர்த்ருத்வம் மமதை ப்ரயோஜனாந்தரமும் -ஆகிய புழு மயிர் தூரல் இல்லாமை –
பரி ஸூத்தமானவை -பாரதந்தர்யத்தாலே யாவத் அங்கீ காரம் ஏந்திக் கொண்டு நின்று -பாவ பந்தம் –

நினைந்த -நினைக்கப் பட்ட /மனம் செய்கையாவது -பஹு பவன சங்கல்பம்
காரணத்வமும் அவிகாரித்வமும் சங்கல்ப ரூப ஞானத்துக்கே விசேஷணம் என்கிற பக்ஷத்தைத் திரு உள்ளம் பற்றி
அதில் உண்டான சங்கையை அனுவதித்துப் பரிஹரிக்கிறார்
பஹு ஸ்யாம் என்கையாலே சங்கல்ப ஆஸ்ரயமான சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மத்துக்கே உபாதானம் சொல்லக் குறையில்லை என்றபடி –
தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச -என்னுமா போலே என்றபடி –
தன்னுடைய அநதி காரத்தைச் சொல்லி அகலுகிற இவருக்கு பிறருடைய அநதி காரத்தைச் சொல்ல பிரசங்கம் இல்லை இறே –
ஆகையால் இப்பாட்டும் ஸ்வ அநதி காரத்திலே பர்யவசிக்க வேண்டுகையாலே அர்த்தாத சித்திக்கிறது –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-5-1-

October 30, 2018

முதல் திருவாய்மொழியில்
‘சர்வேஸ்வரன் சர்வ ஸ்மாத் பரன் ஆகையாலே அவனைப் பற்றுவார்க்கு ஒரு குறை இல்லை,’ என்றார்;
இரண்டாந்திருவாய்மொழியால்,
அந்த ஆச்ரயணம் தான் புருடோத்தமனைப் பற்றுகிறது ஆகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது,’ என்றார்;
மூன்றாந்திருவாய்மொழியால்,
பஜிப்பார்க்காகத் தான் அவதரித்து ஸூலபனாகையாலே பஜிக்கத் தட்டு இல்லை,’ என்றார்;
நான்காந்திருவாய்மொழியால்
ஸூலபனானவன் ஆனவன் தானே -அபராத சஹனாகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது ,’ என்றார்;
அயோக்ய அநுஸந்தானம் ‘தம் தாழ்வினை நினைந்து அகலுவாரையும் தன் செல்லாமையைக் காட்டிப்
பொருந்த விட்டுக் கொள்ளும் சீலவான்,’ என்கிறார், இத்திருவாய்மொழியால்.

‘ஆயின், காதல் விஞ்சிக் கலங்கி மேல் திருவாய்மொழியில் தூது விட்டவர்,
இங்கு அகலுவான் என்?’ என்னில்,
கீழ் கலங்கித் தூதுவிட்ட இடம்-ப்ரேம- அன்பின் காரியம்;
இங்கு அகலப் பார்க்கிற இடம் ஞான காரியம்.
‘ஆயின், இவ் விரண்டும் இவர்க்கு உண்டோ?’ எனின்,
இவர்க்கு இறைவன் திருவருள் புரிந்தது -பக்தி ரூபா பன்ன ஞானம் – பத்தியின் நிலையினை அடைந்த ஞானத்தை ஆதலின்,
இரண்டும் உண்டு; ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்பது இவருடைய திருவாக்கு.

‘இத் திருவாய்மொழியில் இறைவனுடைய சீலத்தை அருளிச் செய்தவாறு யாங்ஙனம்?’ எனின்,
கீழ் திருவாய்மொழியில் தூது விடுகின்ற வியாஜத்தால் தம்முடைய ஆற்றாமையை அறிவித்த பின்னர்,
‘இவரை இங்ஙனம் நோவு பட விட்டோமே!’ என்று பிற்பாட்டுக்கு நொந்து யானைக்கு உதவ வந்து தோன்றியது போன்று,
அரை குலையத் தலை குலைய வந்து தோன்றினான்;
அவனுடைய-வை லக்ஷண்யத்தையும் – வேறுபட்ட சிறப்பினையும் தம்முடைய -ஸ்வரூபத்தையும் -தன்மையினையும்  கண்டார்;
‘தார்மிகன் வைத்த தண்ணீர்ப் பந்தலை அழிப்பாரைப் போன்று, நித்திய சூரிகளுக்கு-அனுபாவ்யமான வஸ்து –
நுகரப்படும் பொருளாக உள்ள இறைவனை- நாம் கிட்டிக் கெடுக்கப் பார்ப்போம் அல்லோம், அகலும் இத்தனை,’ என்று நினைத்தார்.
‘அகன்றால், பிழைக்க வல்லரோ?’ என்னில், பிழையார்; முடியும் இத்தனையே.
‘ஆயின், அகலுவான் என்?’ என்னில்,-
சேஷிக்கு – தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தம் தாம் விநாசத்தை அழிவினைப் பாரார்கள் அன்றே? 

பெருமாளும் தேவ தூதனும் ஆலோசனை தொடங்கும் சமயத்தில், துர்வாசர் ‘என்னை உள்ளே புக விட வேண்டும்’ என்ன,
இவனைத் தகைந்து பெருமாளுக்கு ஒரு தாழ்வினை விளைப்பதில் நாம் அகன்று முடிய அமையும்’ என்று நினைந்து, அவனைப் புகவிட்டு, 
யதி ப்ரீதிர் மஹா ராஜா யத் அனுக்ராஹ்யதா மயி ஜஹி மாம் நிர்விசங்கஸ்த்வம் ப்ரதிஞ்ஞா அநுபாலய ( ‘அரசர்க்கு அரசரே,
உமக்கு என்னிடத்தில் அன்பு இருக்குமாகில், என்னிடத்து அருள் புரியவேணும் என்னும் கருத்து இருக்குமாகில்,
யாதொரு ஐயமும் இன்றி என்னை விட்டு விடும்; உம்முடைய சூளுறவைக் காப்பாற்றும்,’ )
என்று விடை கொண்டார் அன்றே இளைய பெருமாள்?

த்யஜேயம் ராகவம் வம்சே பர்த்துர் மா பரிஹாஸ்யதி ( இலக்குமணரே, என் நாயகரான இராகவருடைய வமிசத்தில் சந்தானம் இல்லாமல்
இருக்க ஒண்ணாது என்று என் உயிரை இப்பொழுதே இக் கங்கையில் விடாமல் இருக்கிறேன்,’ )என்று விடை கொண்டாள் அன்றே பிராட்டி?

அப்படியே, இவரும்-ஊருணியிலே கள்ளியை வெட்டி எறிவாரைப் போலவும்,
அமிருதத்திலே விஷத்தைக் கலப்பாரைப் போலவும்.
நித்திய சூரிகள் அனுபவிக்கும் பொருளை நாம் புக்கு அழிக்கையாவது என்?’ என்று அகலப் புக்கார்.
அதனைக் கண்ட இறைவன், ‘இவரை இழந்தோமே’ என்று நினைந்து, ‘ஆழ்வீர், அகலப் பார்த்திரோ?’ என்ன,
‘அடியேன் அகலப்பார்த்தேன்,’ என்ன,
‘நீர், எனக்குத் அவத்யம் -தாழ்வு வரும் அன்றே அகலப் பார்த்தீர்?
நீர் அகலவே, ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே யுடைய பெரியவர்களாலேயே அடையத் தக்கவன் நான் என்று நினைத்து
என்னை ஒருவரும் சாரார்-இவ்விஷயம் அதிக்ருதாதிகாரம் ஆகாதே –
இப்படித் தண்ணியராக நினைந்திருக்கிற நீர் ஒருவரும் என்னைக் கிட்டவே,
நான், ‘இன்னார் இனியார் என்னும் வேறுபாடு இன்றி
எல்லாரும் வந்து சேரத்தக்கவன்; என்று தோற்றும்;-சர்வாதிகாரம் ஆகும்
ஆன பின்னர், நீர் அகலுமதுவே எனக்குத் தாழ்வு-அவத்யம் -.

மற்றும், ‘எனக்கு ஆகாதார் இலர் என்னுமிடம் பண்டே அடி பட்டுக் காணுங் கிடப்பது,
நான், நல்லார் தீயார் என்று நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் என் காலை வைத்ததைக் கண்டீரே,’
எனத் தான் திருவுலகு அளந்தருளின எளிமையைக்காட்ட, ‘ஆகில் கிட்டுவோம்’ என்று நினைந்தார்;
உடனே,-ஒரு குணாதிக்யமோ வேண்டுவது ‘நம்மால் வரும் மேன்மையும் இவனுக்கு வேண்டா,’ என்று
‘பின்னையும் அகலப்புக,

‘உம்மால் வரும் மேன்மையேயன்றோ நீர் வேண்டாதது? உம்மால் வரும் நான்தான் வேண்டுமோ, வேண்டாவோ?
நீர் தாழ்ந்தவர் என்று அகலுமதிலும் சேர்கிறது, திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று எனக்குத் தாரகங்காணும்;
இனி, நீர் அகலில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க உலகம் புகுதல் திண்ணம்;
நீர் அகலுமது என்னுடைய இருப்புக்குக் கேடு-சத்தா ஹானி ,’ என்று கூறி, பின்னர்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ‘நட்பு உணர்ச்சியோடு வந்து சேர்ந்த இந்த விபீடணன் -போட்கன்- வஞ்சனையுள்ளவன் ஆகவுமாம்;
நான் இவனை விடில் உளேன் ஆகேன்,’ என்று சேர்த்துக் கொண்டாற்போலவும்,
பந்து வதம் -‘உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்,’ என்ற அருச்சுனனை, 
கரிஷ்யே வசனம் தவ -‘கிருஷ்ணா, உனது அருளால் உண்மை ஞானத்தை அடைந்தேன்; திரிபு உணர்ச்சியானது என்னை விட்டு நீங்கிற்று;
ஐயவுணர்வும் நீங்கினவன் ஆனேன்; ஆதலால், ‘இப்பொழுதே போரினைச் செய்’ என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று
சொல்லப் பண்ணினாற்போலவும்,
வருந்தித் தம்மை இசை வித்து, சேர்தற்கு அவன் தான் விரும்பியவாறே -சம்ச்லேஷ உன்முகனான படியே ஸம்ஸ்லேஷித்து
சேர்த்து- தலைக் கட்டினான்,’ என்கிறார்.-
ஆதலின், சீல குணத்தை அருளிச் செய்தவாறு காணல் தகும்.

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அனுபவ கர்ப்ப பர உபதேச ப்ரக்ரியையாலே -அவனை ஆஸ்ரயிப்பார்க்கு ஓரு குறை இல்லை என்கிறார் –
புருஷோத்தமன் என்றது -பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் என்றதின் தாத்பர்யம் –
பலத்தோடு என்றது பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-என்றதின் தாத்பர்யம் –
பலத்தோடு வ்யாப்தமாய் அல்லது இராது -என்கிறது அளவியன்ற -என்றதின் தாத்பர்யம்
அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகன்ற தம்மை உண்டாய் உலகு ஏழ் முன்னமே என்கிற பாட்டில்
உம்மை ஒழிய தரியோம் -என்று பொருந்த விட்டுக் கொள்ளுகையைப் பற்ற அருளிச் செய்கிறார்
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் என்றதை பற்ற ஸீலவான் -என்றது
ஸ்வரூபம் என்றது ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டராய் இருக்கிற தம்முடைய ஹேயதையை
தண்ணீர் பந்தல் என்றபோதே வைத்தவன் தார்மிகன் என்று சித்திக்கும் இறே-அப்படி இருக்கவும் தார்மிகன் என்றது
அதிக தர்மதிஷ்டன்-என்றபடி இறே
ஊருணி -ஊராக வினியிகம் கொள்ளும் தாக்கம் -இதுக்கு பிரதி கோடித்வேந-வாசத்தடம் -மரகத மணித்தடம் –
அடிபடுகை -சாடு-ப்ரஹதமாஹை -திருவடிகள் பட்டுக் கிடக்கிறது -என்றுமாம் –
சார்ந்த இரு வல்வினை -இத்யாதியைப் பற்ற ஸம்ஸ்லேஷித்துத் தலைக் கட்டினான் –
வீடு நிறுத்துவான் என்கையாலே ஸம்ஸ்லேஷித்த படி –

——————————

‘நித்திய சூரிகட்கு -அனுபாவ்யனானவனை -அனுபவிக்கப்படும் பொருளானவனை, 
மனம் வாக்குக் காயங்களால் தூஷித்தேன் ’ என்கிறார்.

————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

வானோர் இறையை-நினைந்து நைந்து என்பான் -என்ற பத த்ரயங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –

———————-

வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா!’ என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன் நினைந்து நைந்தே–1-5-1-

வளம் ஏழ் உலகின் முதலாய வானோர் இறையை அருவினையேன் களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்-‘
வளவிதானஏழுலகு’ என்று லீலா விபூதியைச் சொல்லிற்றாய்,
‘வானோர் இறை’ என்கையாலே நித்தி யவிபூதியைச் சொல்லிற்றாய்,
‘இப்படி-உபய விபூதி – இரண்டு உலகங்கட்கும் நாதனாய் இருக்கின்றவனை யன்றோ நான் அழிக்கப் பார்த்தேன்!’ என்கிறார்.

வளம் ஏழ் உலகின் முதலாய வானோர் இறையை-
வளவியனாய், ஏழ் உலகுக்கும் முதலாய், வானோர் இறையாய் இருக்குமவனை என்று அவன் தனக்கே விசேஷணம் ஆக்கவுமாம் –
இனி, ‘வளம் ஏழ் உலகின் முதலாய்’ என்பதனை, ‘வளவியராய், ஏழுலகுக்கும் முதலாய் இருக்கிற வானோர்’ என்று,
வானோருக்கு அடைமொழி ஆக்குதலும் ஒன்று.
வானோர் வளவியராகையாவது, பகவானுடைய அனுபவத்தில் ஆற்றலுடையராய் இருத்தல்.
‘ஏழ் உலகுக்கும் முதலாய வானோர், எனின், நித்தியசூரிகள் உலகிற்குக் காரணர் ஆகவேண்டுமே? அங்ஙனம் ஆவரோ?’ எனின்,
அஸ்திர பூஷண அத்தியாயத்தில் -இறைவன், ஸ்ரீகௌஸ்துபத்தால் -ஜீவ சமஷ்டியை -உயிர்களின் கூட்டத்தை தரிக்கின்றான் என்றும்,
ஸ்ரீவத்ஸத்தால் மூலப் பிரகிருதியினையும்-ப்ராக்ருதங்களையும் – அதனின்றும் உண்டான ஏனைய பொருள்களையும் தரிக்கின்றான் என்றும்
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அஸ்திரபூஷண அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதனால், அவர்களும் உலகிற்குக் காரணர் ஆவார்கள் என்க-
புருடன் மணி வரமாகப் பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான் தண் டாகத் தெருள்மருள்வாள் உறையாக
ஆங்காரங்கள் சார்ங்கஞ்சங்காக மனத் திகிரியாக இருடிகங்களீரைந்துஞ் சரங்களாக இரு பூத மாலை வன மாலையாக
கருடனுருவா மறையின் பொருளாங் கண்ணன் கரிகிரி மேனின்றனைத்துங் காக்கின்றானே–ஸ்ரீதேசிகப் பிரபந்தம் – அதிகார சங். 41

வானோர் இறையை’ 
நித்தியசூரிகள் தேசிகர் ஆகையாலே துறை அறிந்தே இழிவர்கள் ஆதலின், வானோர் இறையை’ -என்கிறார். 
ஸ்வாமி  என்றே ஆயிற்று அவர்களுக்கு பிரதிபத்தி -நினைவு.

அருவினையேன்-
‘வானோர் இறையைக் கள்வா என்பன்’ என்று கூற நினைத்தவர், தொடங்கின வாக்கியம் முடிப்பதற்கு முன்னே தம்மை நினைத்து, 
‘அருவினையேன்’ என்கிறார்.
தார்மிகனாய் இருப்பான் ஒருவன், ராக்ஷஸ தாமஸூக்களாலே அபிபூதனாய் – குணங்கள் மேலிடப்பட்டவனாய்-
க்ரஹத்தில் அக்னி ப்ரஷேபத்தைப் பண்ணி – வீட்டில் தீயினை வைத்து, சத்துவம் தலையெடுத்தவாறே-
அநுதபிக்குமா போலே – வருந்துமாறு போன்று -அநு தபிக்கிறார் -வருந்துகிறார்.
இப்போது ‘அருவினை’ என்கிறது-‘கள்வா’ என்கைக்கு அடியான பிரமத்தை –
‘ஆயின், அன்பினை ‘அருவினை’ என்னலாமோ?’ எனின்,
‘பாபம் என்பது, அநிஷ்டாவஹம் -தமக்கு விருப்பம் இல்லாததைக் கொடுப்பது’ என்று இருக்குமவர் ஆகையாலே,
இறைவனை விட்டு அகன்று நீங்கியிருத்தல் தமக்கு விருப்பமாயினும் அதனைச் செய்ய ஒட்டாது தடுக்கின்றமையின்
அன்பினை ‘அருவினை’ என்கிறார்.

களவு ஏழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்-
‘களவு எல்லாரும் அறியும்படி வெண்ணெயைக் களவு கண்டு அமுது செய்த வஞ்சகனே!’ என்பன்.
எழுதல்-எல்லாரும் அறியும்படி வெளிப்படல்.
இனி, ‘களவேழ்’ என்பதற்குக் ‘களவிலே வேட்கையுடையனாய்-அபி நிவிஷ்டனாய்- ஊற்றமுடையனாய்’ என்று கூறலும் ஆம்.
இத்தால், ‘பரிவுடைய யசோதைப்பிராட்டி சொல்லும் பாசுரத்தை அன்றோ சொன்னேன்?’ என்கிறார்.

பின்னையும்-
அதற்குமேல்.

தளவு ஏழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய் இள ஏறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் –
‘பரிவுடைய யசோதைப்பிராட்டிக்கு மறைத்தவற்றையும் வெளியிடும்படி அபிமதையான -அன்பிற்கு உரியவளான
ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி பாசுரத்தையுஞ்சொன்னேன்,’ என்கிறார்.
தளவு ஏழ் முறுவல்-
கவயத்தை – காட்டுப் பசுவினைக் கண்டவாறே-க்ருஹத்தில் – வீட்டிலுள்ள பசு-ஸ்ம்ருதி – நினைவிற்கு வருதல் போன்று,
ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியினுடைய-தந்த பங்க்தியை – பற்களின் வரிசையைக் கண்டவாறே
முல்லை அரும்பு-ஸ்ம்ருதி விஷயமாகை – நினைவிற்கு வருதலின்,‘தளவேழ் முறுவல்’ என்கிறார்.
இனி, ‘தளவு எழும்படியான முறுவல்’ என்னவும் ஆம். அதாவது, எழுகை-போகையாய், தோற்றுப் போகும்படியான முறுவல். 
‘பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை’ என்றார் பிறரும்.

பின்னைக்காய்-
ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியினுடைய புன்சிரிப்பிலே தோற்று அவள் விருப்பின்படி செய்து கோடற்குத் தன்னை அவளுக்கு –
இஷ்ட விநியோக அர்ஹம் -உரிமையாக்கினான்.

வல் ஆன் ஆயர் தலைவனாய்
கிருஷ்ண ஆஸ்ரயா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதச்ச பாண்டவ -( ‘பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடிகளையே
பற்றுக்கோடாக அடைந்தவர்கள்; அவனையே வலிமையாக உடையவர்கள்; அவனையே தலைவனாக உடையவர்கள்,’ )என்பது போன்று,
ஸ்ரீ கிருஷ்ணனைத் துணையாகக்கொண்டு நாட்டினை அழித்துத் திரியும் மிடுக்கைப்பற்ற ‘வல் ஆன் ஆயர்’ என்கிறார்.
இனி, ‘ஆன் ஆயர் வலிய தலைவனாய்’ என்று, வன்மையைத் தலைவனுக்கு-அடைமொழியாக்கலும் ஆம்.
அவ்வன்மையாவது, தலையிருக்க உடம்பு குளித்தும், உடம்பு இருக்கத் தலை குளித்தும் அன்றே அவர்கள் திரிவார்கள்?
எல்லாரும் கார்த்திகை புதியதற்குக் குளித்தார்களாகில் இவன் அதுவும் செய்யாதே இடைத்தனத்தில் ஊன்றி இருத்தல்.
‘இவன் இவ்வாறு இருத்தற்குப் பயன் யாது?’ எனின், இப்படி இருக்கில் அல்லது அவ்வாயர்கள் பெண் கொடார்கள் அன்றே?
ஆதலால், பெண் கோடலே பயன். 
குலேந சத்ருசீ (‘வாரீர் அழகரே, உம்முடைய ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் இரண்டு தாய்மாரையும் இரண்டு தமப்பன்மாரையும்
இரண்டு குலத்தையும் ஒரு கணத்தில் ஏற்றுக் கொண்ட உமக்குப் பலன், குலத்தோடு ஒத்திருக்கிற
ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியும் ஸ்ரீ உருக்குமிணிப் பிராட்டியும்’) என்றார் ஸ்ரீ கூரத்தாழ்வானும்.
இத்தால் – ‘ஆயர் குலத்தினன் ஆகையாலே ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியை ஏற்றாய்;
அரச குலத்தினன் ஆகையாலே ஸ்ரீ உருக்குமிணிப் பிராட்டியை ஏற்றாய்’ என்றபடி
இனி,துல்ய சீல வயோ வ்ருத்தாம்-  ‘தக்க வயதினையும் ஒழுக்கத்தினையும் குலத்தினையும் உடைய
ஸ்ரீ பிராட்டிக்குத் தக்கவர் அந்த ஸ்ரீராமபிரான்;
கறுத்த கண்களையுடைய பிராட்டியும் அந்த ஸ்ரீராமனுக்குத் தக்கவள்,’ என்கிறபடியே,
ஈண்டும், ஸ்ரீ கிருஷ்ணனும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியும் ஒத்தவர்களாய் இருந்தும்,
எருதுகளை முன்னிட்டு அவற்றைத் தழுவச் செய்தனர் ஆதலின், ‘வல் ஆன் ஆயர்’-வல் நெஞ்சர் – என்கிறார்’

இளஏறு ஏழும் தழுவிய –
ம்ருத்யு சமமாய் -யமனுக்கு ஒத்தனவாக இருந்துள்ள இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக ஒருக்காலே தழுவினான்.
பின்னர் அவளை அடைதலால், அவள் முலையிலே அணைந்தது போன்று இருக்கையாலே  ‘தழுவிய’  என்கிறார்.
எந்தாய் என்பன் –
ஏழ் எருதுகளையும் அடர்த்த செயலுக்குத் தோற்று, ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தையும் சொன்னேன்.
யுக்தி மாத்ரமேயோ சொன்ன அளவேயோ!
நினைந்து
நெஞ்சாலும் தூஷித்தேன் – நிந்தித்தேன்.
அவ்வளவேயோ
நைந்தே –
பிறர் அறியும்படி சிதிலனாய்-காயிகத்தாலும் உடலாலும்-தூஷித்தேன் – நிந்தித்தேன்.

இனி, இத் திருப்பாசுரத்திற்கு 
‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றேன்;
‘எத்திறம்’ என்றேன்;
பிராட்டிமார் நிலையை ப்ராப்தனாய் – அடைந்து தூது விட்டேன்’ என்று,
அவற்றுக்கு அநு தபிக்கிறார் வருந்துகிறார் என்று பொருள் கூறலும் .
‘அயர்வறும் அமரர்கள் அதிபதி என்றேன்’ என்றது, வளவேழ் உலகின் முதலாய வானோ ரிறையை’ என்றதனை நோக்கி.
‘எத்திறம் என்றேன்’ என்றது, ‘களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா’ என்றதனை நோக்கி.
‘பிராட்டியார் நிலையையடைந்து தூதுவிட்டேன்’ என்றது, ‘இளவேறேழுந் தழுவிய எந்தாய்’ என்றதனை நோக்கி.
‘வருந்துகிறார்’ என்றது, ‘நைவன்’ என்றதனை நோக்கி.

நினைந்து நைந்து
வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையைக்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா!’ என்பன்
பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன்
அரு வினையேன்-என்று அந்வயம் –

—————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

வளம் -என்றது ஏழு உலகுக்கும் -ஈஸ்வரனுக்கு -ஸூரிகளுக்கும் விசேஷணம்
ததீயத்வ ஆகாரத்தாலே உத்தேச்யம் ஆகுமே -வளம் லோக விசேஷணம் -வளப்பம் -கட்டளைப் பாடு
ஈஸ்வரன் வளவியனாகை -ஸ்வரூபாதி வைலக்ஷண்யம் / ஸூ ரிகளுக்கு வளப்பம் -பகவத் அனுபவ கௌசலம்
முதல் என்றது பிரதானத்வத்தைப் பற்ற –
இந்த திருவாய் மொழி ஞான தசை அன்றோ -கள்வா என்பன் என்னலாமோ-ப்ரேமத்தைப் பாபம் என்னலாமோ என்ன –
அகலுகை இஷ்டமாய் இருக்க ப்ரேமம் அகல ஒட்டாமையாலே அத்தைப் பாபம் என்கிறார் -என்றபடி
களவிலே வேழ்க்கை யுடையவனாய் / களவு எழும்படி -பிரசித்தமாம்படி /தொடு வுண்ட-களவு கண்ட/
முறுவல் என்று ஸ்மிதமாய் -அத்தாலே தந்த பந்தியைச் சொல்லி -எழுகையாவது ஸ்ம்ருதி விஷயமாகை –
ஊட்டியாக-ஊட்டி என்று கழுத்தாய்-ஏழு எருதுகளையும் ஒன்றாகக் கூட்டி ஓரு காலே தழுவினான் என்றபடி -ஒன்றாக –
ஊட்டி -உட் கழுத்து-அது ஆக -அகப்படும்படி -போக்யமாக
அடர்த்து என்னாமல் தழுவி என்றதுக்கு தாத்பர்யம் அருளிச் செய்கிறார் –
அரு வினையேன்-என்றதை பற்ற அனுதபிக்கிறார்

வானோர் இறையை -என்றதுக்கு முதல் திருவாய் மொழயில் நோக்கு
கள்வா -என்றதுக்கு பத்துடை அடியவரிலே நோக்கு
ஏறு ஏழும் தழுவிய எந்தாய் -அஞ்சிறைய மட நாரையில் நோக்கு
வானோர் இறை என்பன் -கள்வா என்பன்-இள வேறும் தழுவிய எந்தாய் என்பன் -என்று பின்ன யோஜனையும் கூட்டியும் வியாக்யானம்

வாரீர் அழகரே-ஸ்ரீ கிருஷ்ண அவதாரமான ஓரு ஜென்மம் தன்னிலே இரண்டு தாய்மாரையும் இரண்டு தகப்பன்மாரையும்
இரண்டு வம்சத்தையும் ஓரு க்ஷண காலத்திலேயே பரிக்ரஹித்த உமக்குப் பலம் -குலத்தோடு ஒத்து இருக்கிற
ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியும் ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டியையும் –
கோப சஜாதீயன் ஆகையால் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியையும் லபித்து அருளிற்று –
ஷத்ரிய சஜாதீயன் ஆகையால் ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டியை லாபித்து அருளிற்று என்றபடி –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-4-11-

October 30, 2018

நிகமத்தில் – இத்திருவாய்மொழியில் சப்த மாத்திரம் அப்யஸிக்கவே -‘சொற்களை மாத்திரம்
கற்றலே அமையும், திருநாட்டினைப் பெருகைக்கு,’ என்கிறார்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளம் பெறலாம் என்றத்தைக் கடாக்ஷித்து
சங்கதி அருளிச் செய்கிறார் –

———————

அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே–1-4-11-

அளவியன்ற –
‘வியந்த’ என்பது ‘வியன்ற’ என விகாரப்பட்டது. –
தவ்வுக்கு றவ்வாய் -வியத்தல் – கடத்தல்-அளவைக் கடந்திருக்கின்ற-என்றபடி –
அபரிச்சேதய மஹிமானாகை – அளவு அற்ற பெருமையினையுடையவன் என்றபடி.
இத்தால், இந்நிலையிலே முகங்காட்டுகைக்கு ஈடான ஞானம் முதலிய குணங்கள் நிறைந்தவன் –
ஞானாதி குண பூர்ணன் -என்கை.

ஏழ் உலகத்தவர் பெருமான் –
நாராயணன் என்ற திருப் பெயர்க்குக் குறைவு வாராதபடி-விகாலமாகதபடி – ஸர்வேஸ்வரன் ஆனான்.
‘ஆயின், ‘ஏழ் உலகத்தவர்’ என்றால், தம்மைச் சொல்லியது ஆகுமோ?’ எனின்,
ஏழ் உலகத்தவர் எனவே, தாமும் அதில் -அந்தர்பூதர் -அடங்கியவரே யாவர்.

கண்ணனை –
இவ் வளவிலே வந்து முகங்காட்டிற்றிலன் என்கிற குற்றந் தீர வந்து முகங்காட்டுகையாலே-
ஆஸ்ரித ஸூலபனானவன் – அடியார்க்கு எளியவன் ஆனான்.
இனி, பத்துடை அடியவர்க்கு’ என்கிற திருவாய்மொழியில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கப் பாரித்து,
அது கிடைக்காமையாலே தூது விட்டவர் ஆகையாலே, இங்கு முகங்காட்டினான் ஸ்ரீ கிருஷ்ணன் என்னவும் ஆம்.
இத்தால், அவனுடைய மேன்மையோடு சௌலப்யமும் நிலை நின்றது இவர்க்கு முகங்காட்டின பின்பு ஆயிற்று என்றபடி.

வளம் வயல் –
அகால பலிநோ வ்ருஷ ( ‘மரங்கள் காலம் அல்லாத காலங்களிலும் பலத்தையுடையனவாய் இருந்தன,’ )என்கிறபடியே,
ஸ்ரீ திரு நகரியும் தளிரும் மொட்டுமாகவே எப்பொழுதும் இருக்குமாயிற்று.

வாய்ந்து உரைத்த –
நெஞ்சு பிணிப்புண்டு சொன்னவையாய் இருக்கை – வாய்கை-கிட்டுகை. அதாவது, பாவ பந்தத்தை யுடையவராகை.

அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின் வள உரையால் –
அபரிச்சேதய வஸ்துக்கு வாசகம் ஆகையால் -எல்லையற்ற பெருமையையுடைய பரம் பொருளுக்கு வாசகமாகையாலே
தாமும் எல்லையற்ற பெருமையை யுடையனவாய், ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாதனவாய் இருக்கிற
ஆயிரத்துள் இப் பத்தினுடைய நன்றான உரையாலே,

வான் ஓங்கு பெரு வளம் பெறலாகும் –
பால் குடிக்க நோய் தீருமாறு போன்று, இத்திருவாய்மொழியில் இனிய சொல்லாலே பெறலாம்.
அதாவது, ஸ்வயம் பிரயோஜனமாக -‘தானே பிரயோஜனமாயிருக்கிற இத்தால்,
சம்சாரத்தில்-சங்குசிதமான- குறைவான நிலை போய், பரமபதத்தில் சென்று, தன் ஸ்வ ரூபத்தைப் பெற்று –
விஸ்த்ருதன் -விரிவையடைந்தவன் ஆகையாகிற எல்லை இல்லாத செல்வத்தைப் பெறலாம், என்றபடி.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அபரிச்சேதய மஹிமானான இத்தால் -நாராயண சப்தத்துக்குப் பொருள் சர்வ சேஷித்வம் இறே-
ஆகையால் ஓன்று குறைந்தாலும் அபூர்ணமாய் இருக்கையாலே இவரை விஷயீ கரித்த பின்பாயிற்று
நாராயணத்வம் விகலமாகாமல் சர்வேஸ்வரனானான் என்றபடி –
கண்ணன் -கண்ணுக்கு விஷயமானவன் -ஸ்ரீ கிருஷ்ணன் -பெரு நிலம் கடந்த நல்லடிப் போது -1-3-10–என்று
அனுபாவயத்வேந பாரிக்கப் பட்ட ஸ்ரீ திரிவிக்ரம அவதாரமும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தோடே தோள் தீண்டி ஆகையால்
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை அனுபவிக்கப் பார்த்து என்னக் குறை இல்லையே –
ஏழு உலகத்தவர் பெருமான் கண்ணன் -பத த்வயத்தாலும் பலித்த அர்த்தங்களை சாதித்து அருளுகிறார்
வள -வயலுக்கு ஊருக்கும் விசேஷணம்
தளிரும் முறியும் -பல்லவமும் மொட்டும் -முறி -இளந்தளிர்
தாம் அவனைக் கிட்டுகை -நெஞ்சு பிணிப்புண்கை-கட்டுண்கை –
வளவுரை -இனிதான உரை –
வான் ஓங்கு பெரு வளம் -வான் -பரம பதத்தில் போய் / ஓங்கு -விஸ்திருதனாகை /பெரு வளம் -நிரவதிக சம்பத்

———————————-

முதற்பாட்டில், ஒரு நாரையைத் தூதுவிட்டாள்;
இரண்டாம் பாட்டில், அங்குப் போனால் சொல்லும் வார்த்தைகளைச் சில குயில்களுக்குச் சொன்னாள்;
மூன்றாம் பாட்டில், ‘நான் செய்த பாபமேயோ மாளாதது என்று சொல்லுங்கள்,’ என்று சில அன்னங்களை இரந்தாள்;
நாலாம் பாட்டில், சில மகன்றில்களைப் பார்த்து, ‘என் நிலையை அங்கே சென்று சொல்லுவீர்களோ, மாட்டீர்களோ?’ என்றாள்;
ஐந்தாம் பாட்டில், சில குயில்களைப் பார்த்து, ‘தன்னுடைய நாராயணன் என்ற பெயர் ஒறுவாய்ப் போகாமே
நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கோள்,’ என்றாள்;
ஆறாம் பாட்டில், ஒரு வண்டைக் குறித்து, ‘தம்முடைய நாராயணன் என்ற பெயருக்கு ஒரு குறைவு வாராமே
எங்கள் சத்தையும் கிடக்கும்படி இத் தெருவே எழுந்தருளச்சொல்,’ என்றாள்;
ஏழாம் பாட்டில், ஒரு கிளியைக் குறித்து, ‘இத் தலையில் குற்றங்களைப் பார்க்கும் அத்தனையோ? தம்முடைய
குற்றங்களைப் பொறுக்குந் தன்மையையும் ஒருகால் பார்க்கச்சொல்,’ என்றாள்;
எட்டாம் பாட்டில், தான் உறாவினவாறே முன் கையிலிருந்த பூவையும் உறாவ, ‘நானோ முடியா நின்றேன்;
நீ உன்னைக் காக்கின்றவரைத் தேடிக்கொள்’ என்றாள்;
ஒன்பதாம் பாட்டில், ஒரு வாடையைக் குறித்து, ‘என் நிலையை அங்கே சென்று அறிவித்தால்,
அவன் ‘அவள் நமக்கு வேண்டா’ என்றானாகில், வந்து என்னை முடிக்க வேண்டும்,’ என்று இரந்தாள்;
பத்தாம் பாட்டில், தன் நெஞ்சைக் குறித்து, ‘நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீஅவனை விடாதேகொள்,’ என்று போக விட்டாள்;
முடிவில், இத் திருவாய்மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினாள்.

முதற்பாட்டில், ஆசாரியனுடைய ஞானத்தின் பெருமையை -வைபவத்தை -அருளிச்செய்தார்;
இரண்டாம் பாட்டில்,மதுர பாஷியாய் – இனிமையாகப் பேசுகின்றவனாக இருப்பான் என்றார்;
மூன்றாம் பாட்டில், ஸாராஸாரங்களைப் பகுத்து அறிகின்றவன்-சாரசார விவேகாஞ்ஞன் – என்றார்;
நான்காம் பாட்டில், திருமேனியின் பேரழகினை-விக்ரஹ ஸுந்தர்யத்தை- அருளிச்செய்தார்;
ஐந்தாம் பாட்டில், ‘நினைத்தது கிட்டும் அளவும் சலியாத தூய தன்மையுடையான்’-சுத்த ஸ்வபாவன் என்றார்.
ஆறாம் பாட்டில், ‘பகவானையே அனுபவிக்கின்றவனாய் இருக்கும் -பகவத் ஏக போகனாய் -ரூபாவானாய் அழகனுமாய்ப்-
கிருபாவானுமாய் -கம்பீர ஸ்வ பாவனாயும் -பெருமிதமுடைவனுமாய் இருப்பான்’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘தான்-சர்வஞ்ஞன் – முற்றறிவினன் ஆகிலும் ஆசாரியர்கள் பக்கல் கேட்ட வார்த்தை அல்லது அருளிச் செய்யான்,’
என்று அவனுடைய ஆப்தியை அருளிச் செய்தார்;
எட்டாம் பாட்டில், ‘ஆசாரியனுடைய தேக யாத்திரையே இவனுக்கு ஆத்தும யாத்திரை’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘ஆசாரியனுடைய சம்பந்த மாத்திரமே-சத்தா – இருப்புக்குத் தாரகம்; இதர ஸ்பர்சம் சத்தா பாதகம்
பத்தாம் பாட்டில்- -இப்படி ஞானவானுமாய் மதுரபாஷியுமாய் சாரசார விகேகஞ்ஞனுமாய் -தர்ச நீயனுமாய் -சுத்த ஸ்வபாவனாய் –
கிருபா கம்பீரயாதிகளை யுடையவனாய் சிரோபாதிஸ சத்வருத்த ஸேவ்யனாய்-
ஸச் சிஷ்யனாகையாலே ஏவம்பூதனான ஆச்சார்யனுடைய தேஹ யாத்திரையே தனக்கு ஆத்ம யாத்ரையாய் –
இதர ஸ்பர்சமும் தனக்கு பாதகமாய் -இப்படி சதாச்சார்ய சேவை பண்ணுகையாலே பகவத் கைங்கர்யத்தில் பிரவணமாய் –
நின்னடையேன் அல்லேன்-என்று நீங்கி ஓர் கோல நீல நன் நெடும் குன்றம் வருவது ஒப்ப
நாண் மலர்ப்பாதம் அடைந்தது தம் திரு உள்ளம் என்று தலைக் கட்டினார் –

ஞானத்தின் பெருமையை அருளிச்செய்தார்’ என்றது, ‘அஞ்சிறைய மடநாராய்’ என்றதில் நோக்கு;
இரண்டு சிறகுகளும் ஞான அநுஷ்டானங்களாகக் கூறப்படும்.
‘இனிமையாகப் பேசுகின்றவன்’ என்றது, குயிலின் ஒலி இனியதாயிருத்தல் நோக்கி,
‘சாராசாரங்களைப் பகுத்தறிகின்றவன்’ என்றது, ‘மென்னடைய அன்னங்காள்’ என்றதனை நோக்கி.
‘திருமேனியின் பேரழகினை’ என்றது –‘நன்னீல மகன்றில்காள்’ என்றதனை நோக்கி.
‘நினைத்தது கிட்டுமளவும் சலியாத நிலையினன்’ என்றது, ‘இரைதேர்’ என்றதனை நோக்கி.
பகவானையே அனுபவிக்கின்றவனாய் இருக்கும் அழகனுமாய்ப் பேரருள் வாய்ந்தவனுமாய்ப் பெருமிதமுடையவனுமாய்’ என்றது –
முறையே ‘வண்டு என்றதனையும்,’ ‘வரி’ என்றதனையும், ‘ஆழி’ என்றதனையும் நோக்கி.
‘வண்டு ஏகபோகமோ?’ எனின், வண்டு தேனையன்றி உண்ணாது; மதுகரம் என்ற பெயரின் பொருளையும் நோக்குக
‘தான் முற்றறிவினனாகிலும் ஆசாரியர்கள் பக்கல் கேட்ட வார்த்தை யல்லது அருளி ச்செய்யான்’ என்றது, ‘இளங்கிளியே’ என்றதனை நோக்கி.
‘ஆசாரியனுடைய தேக யாத்திரையே இவனுக்கு ஆத்தும யாத்திரை,’ என்றது, ‘இன்னடிசில் வைப்பாரை நாடாயே’ என்றதனை நோக்கி.
ஆசாரியனுடைய சம்பந்த மாத்திரமே சத்தாதாரகம், மற்றையோருடைய உறவு சத்தா பாதகம்’ என்றது, காற்றின் ஸ்பரிசம் பாதகம்
என்றதனால், எதிர்மறைப் பொருளில் ஆசாரிய சம்பந்தமே தாரகம் என்பது போதரும்.

இத் திருப்பதிகத்தில் ஏழாம் பாசுரம் முடிய, சதாசாரியனுடைய இலக்கணம்;
மேல் மூன்று பாசுரங்கள் ஸச் சிஷ்யனுடைய மாணாக்கனுடைய இலக்கணம்.

————————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

சேர்ப்பாரை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு என்று –
குயில் மதுர பாஷி
ஹம்ஸோ யதா ஷீரம் இவாம்பு மிஸ்ரம் -சார அசாரே விவேகஞ்சா கரீயாம்சோ விமத்சரா
இறை தேர் -புருஷார்த்தம் சித்திக்கும் அளவும்
ரூபவான் -வரி -கிருபாவன் -கம்பீர ஸ்வ பாவன்-ஆழி
வந்து -பகவத் ஏக போகத்வம்-மதுகரம்
உரைக்கை -சர்வேஸ்வரன் சந்நிதியில் சிஷ்யனுடைய உஜ்ஜீவன அர்த்தமாக விண்ணப்பம் செய்கை
வாடை -பாதகம் -பிரகிருதி ப்ராக்ருதங்கள் -வ்யதிரேகத்தில் ஆச்சார்யன் சந்நிதியே தாரகம்
ஸூத்த ஸ்வ பாவன் -வெண்மையைப் பற்ற
எனக்குப் பவ்யமாய்ப் போந்த நெஞ்சானது -கரணியான என்னை விட்டு அகன்று
திருவாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் இரண்டு திருக்கையிலும் என்திக் கொண்டு பலவாய்ப் பரந்து சூழ்ந்த
சுடரை யுடைத்தான ஆதித்யனோடே கூட -பால் போல் வெளுத்த நிறத்தை யுடைய சந்திரனையும் தன் கொடி முடிகளில் ஏந்தி
அத்விதீயமாய் தர்சனீய ஆகாரமாய்-நீல நிறத்தை யுடைத்தாய் தாதுவை சித்ர்யாதிகளால் உண்டான வைலக்ஷண்யத்தை உடைத்தாய்
உத்துங்கமான மலை நடந்து வருமது ஒத்து ஆஸ்ரிதற்கு வந்து தோற்றுமவனுடைய அபி நவமான தாமரை போலே இருக்கிற
திருவடிகளை அடைந்தது -என்றபடி –

————————-

அஞ்சிறைய புட்கள் தமை ‘ஆழியா னுக்கு நீர்
எஞ் செயலைச் சொல்லும்’ என இரந்து – விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்–திருவாய்மொழி நூற்றந்தாதி -4-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-4-10-

October 30, 2018

‘அல்லாதவற்றை எல்லாம் விட்டு முடிவில் நெஞ்சினைத் தூது விடுகிறாள்,’ என்பாரும் உளர்.
அப்போது ‘விடல்’ என்பவற்கு, ‘அவனை விடாதே கொள்’ என்பது பொருளாம்.
அன்றிக்கே-முந்தின பாசுரத்தின் சேஷம் என்பதாகக் கொண்டு ‘வைக்கவே வகுக்கின்று’ என்று கைங்கர்யம் ப்ரஸ்துதமானவாறே –
தொண்டினைப் பற்றிய வார்த்தை வந்தவாறே’
‘தாய் முலையை நினைந்த கன்று போன்று திருவுள்ளம் பதறிச் சரீரத்தை விட்டுப் போகப் புக்கது;
நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீ என்னை விடாதே கொள்’ என்கிறாள் என்னுதல்;

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

தூத பிரகரணம் ஆகையால் மனசைச் சொல்லுகிறதுக்கு இரண்டு பிரயோஜனம் அருளிச் செய்கிறார்

———————

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே! வினையோம் ஒன்றாமளவே–1-4-10-

உயிர் உடல் ஆழிப் பிறப்பு –
ஆத்மாவினுடைய சகஜமான பிறப்பு –
வீடு முதலா முற்றும் ஆய்-
உயிரானது, சரீரத்தினுடைய வட்டமான பிறப்பினது வீடு உண்டு மோக்ஷம்; அது முதலான-
மோஷாதி புருஷார்த்தங்களை – உறுதிப் பொருள்களைப் பெறுகைக்காக,
அன்றி, ‘ஆழிப் பிறப்பு’ என்பதற்கு,
ஆழி என்று கடலாய், அத்தால் கம்பீர்யமாய், அஸங்கயேயமான ‘எல்லை அற்ற பிறப்பு’ என்று பொருள் கூறலும் ஒன்று.
‘ஆயின், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கனுள், வீட்டினை முன்னர்க் கூறுவான் என்?’ எனின்,
ஸ்ருஷ்டிக்கு -படைத்தலுக்குப் பயன் -பிரயோஜனம் -மோக்ஷம் ஆகையாலே அதனை முன்னர்க் கூறுகின்றாள்.
இனி, ‘உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்’ என்பதற்கு,
‘உடலினுடைய எல்லை இல்லாத பிறப்புகள் தோறும் உண்டாகின்ற தேவர்கள் முதலான சரீரங்களில் தங்கி யிருக்கின்ற
உயிர்கள் முதலான -காரிய ஜாதத்தை -காரியக் கூட்டத்தை உண்டாக்குகைக்காக’ என்று பொருள் கூறலும் ஆம்.

ஆய்
பஹு ஸ்யாம் ‘எல்லாப் பொருளுமாக விரிகின்றேன்’ என்கிறபடியே,
தன் திருமேனியின் மலர்த்தியே உலகம் ஆதலின் ‘ஆக்கி’ என்னாது ‘ஆய்’ என்கிறாள்.

கடல் ஆழி நீர் தோற்றி-
ஆழி நீர் கடல் தோற்றி-
ஆழி நீர் -ஆழிய நீர்-அப ஏவ ச சர்ஜாதவ்- ‘அப் பரம் பொருள் முதன் முதலில் தண்ணீரையே படைத்தார்’ என்கிறபடியே,
மிக்க தண்ணீரை யுடைய ஏகார்ணவத்தை உண்டாக்கி.

அதனுள்ளே கண் வளரும்-
இவ்வருகு உண்டான படைத்தல் முதலியவற்றிற்காக அங்கே வந்து கண் வளர்ந்தருளும்.

அடல் ஆழி அம்மானை-
ஸ்ருஜ்ய பதார்த்தங்களுக்கு -படைத்த உயிர்களுக்கு விரோதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்காக
ஆசிலே வைத்த கையுந்தானுமாக ஆயிற்றுக் கண் வளர்ந்தருளுவது.

கண்டக் கால்-
என்னிலும் உனக்கு அன்றோ பேறு முற்பட்டு இருக்கிறது?
சந்த்ரே த்ருஷ்ட்டி சமாகம் -சீதா பிராட்டியால் பார்க்கப்பட்ட சந்திரனை நான் பார்க்கிறேன்;
ஆதலால், கண்ணின் கலவி உண்டாயிற்று’ என்பது போன்று, கண்டாரைக் காணும் இத்தனை அன்றோ தனக்கு?

இது சொல்லி-
‘வைக்கவே வகுக்கின்று’ என்கிற வார்த்தையைச் சொல்லி.
இனி, ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் -விசித்ரா தேஹ சம்பந்தி ஈஸ்வராய நிவேதிதும்
‘இறைவனை நிவேதிக்கும் பொருட்டே கை கால் முதலிய உறுப்புகளையுடைய விசித்திரமான இச் சரீரமானது
முற்காலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே,
‘தேவர் திருவடிகளிலே எல்லாத் தொண்டுகளையும் செய்வதற்காக அன்றோ இதனை உண்டாக்கினாய்?’ என்னும்
இதனைச் சொல்லி என்று கூறலும் ஆம்.

ஆழி மடம் நெஞ்சே-
ஞானத்தினை யுடையையாய் எனக்கு உரிமைபட்டிருக்கிற மனமே! -அளவுடையையாய் பவ்யமான நெஞ்சே
அன்றி, இதற்கு, ‘சுழன்று வருகிற பேதை நெஞ்சே’ என்று பொருள் கூறலும் ஒன்று.

வினையோம் ஒன்றாம் அளவும் விடல்-
படைப்பிற்குப் பயன் அங்கே அவரைக் கிட்டி அடிமை செய்கையாய் இருக்க,
பிரிகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நாம் அவரோடே சேருமளவும் நீ அவரை விடாதே ஒழிய வேண்டும்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஆத்மாவினுடைய சரீரத்தினுடைய வட்டமான பிறப்பினுடைய வீடு உண்டு -மோக்ஷம்
அது முதலான எல்லாப் புருஷார்த்தங்களையும் பெறுகைக்காக என்றபடி –
சரீரத்தினுடைய அஸங்யாதமான பிறப்புக்கள் தோறும் உண்டான சரீரஸ்தாத்மாக்கள் முதலான
தேவாதி கார்ய ஜாதத்தை உண்டாக்குகைக்காக -என்றபடி –
கடலாழி நீர் தோற்றி -என்று சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -அதிலே சங்கல்ப ரூப வீர்யத்தை விட்டு –
அதிலே அண்டத்தை உண்டாக்கி -அதிலே மஹா ஆர்ணவத்தை ஸ்ருஷ்டித்து -அதிலே கண் வளர்ந்து –
சதுர்முகனை உத்பாதித்து–ஷீரார்ணவத்தில் அநிருத்த ரூபியாக கண் வளர்ந்து அருளுகிறார் அன்றோ –
ஆழி என்று ஆழமாய் அத்தாலே அளவுடைமையைச் சொல்லுகிறது -அளவு ஞானம் -மடப்பம் பவ்யதை/
இரண்டாம் அர்த்தத்தில் ஆழி -சுழலுகை -மடப்பம் அறிவிலித்தனம் -சுழன்று வருகிற பேதை நெஞ்சே என்றபடி

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-4-9-

October 30, 2018

‘சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்’ என்று இருக்கிற சமயத்தில் வாடைக் காற்று வந்து உடம்பிலே பட்டது;
அதனுடைய தோற்றரவு இருந்தபடியால் வெறுமனே அன்று -இத்தைக் கண்ட தலைவி
மகாராஜருடைய மிடற்று ஓசையில் தெளிவைக் கேட்டுத் தாரை, சிறிது நேரத்திற்கு முன் வாலி கையில் நெருக்குண்டு போனவர்
இப்போது இப்படித் தெளிந்து வந்து அறை கூவுகிற இது வெறுமன் அன்று; இதற்கு ஓர் அடி உண்டு, என்றது போல
இவ் வாடைக்கு ஓர் அடி உண்டாக வேண்டும் என்று நினைத்தாள்;
நினைந்து, ‘இராஜாக்கள் இராஜத் துரோகம் செய்தவர்களை நலிகைக்கு வேற்காரரை வர விடுமாறு போன்று,
நம்மை நலிகைக்காக ஸ்ரீ சர்வேஸ்வரன் இவ் வாடையை வரவிட்டானாக வேண்டும்’ என்று பார்த்து,
வேற்காரர் கொடு போம் நலியப் புக்கவாறே ‘நிதி உண்டு’ என்பாரைப் போன்று,
‘நான் சொல்லுகிற வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்தால்,
‘அத் தலையால் வரும் நன்மையும் வேண்டா’ என்று இருந்தானாகில்,
அவசியம் வந்து என்னை முடிக்கவேண்டும்,’ என்று அவ்வாடையை இரக்கிறாள்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

தூதரை -ஈராய் எனதுடல்-என்கையாலே இது பாதகம் என்னும் இடம் தோன்றி இருக்கையாலும்-
அவனுக்குச் சொல்லி என்னை முடி -என்கையாலே அவன் வர விட்டான் என்று தோற்றுகையாலும் –
இவ்விரண்டுக்கும் அனுகுணமாக அருளிச் செய்கிறார் –
ஊடாடு பனி வாடாய்-என்றதைக் கடாக்ஷித்து அருளிச் செய்கிறார் –
தோற்றரவு -ப்ராதுர் பாவம் -இதனுடைய தோற்றரவு இருந்தபடியால் இவ்வாடைக்கு ஓரு அடி-அவஷ்டம்பம் – உண்டு என்று அன்வயம் –
ஈஸ்வரனே வர விட வந்ததாக வேணும் என்றபடி –
வேற்காரரை-ஆயுதவான்களை-
இன்னுயிர் சேவல் -9-5-பிரவேசத்தை படியே பாதக பதார்த்தங்களை முடிக்கச் சொல்லி வரவிட்டானானாக வேணும் –
வைக்கவே வகுக்கின்று -என்றதை பற்ற நிதி யுண்டு என்பாரைப் போலே இரக்கிறாள் -என்று அன்வயம் –
நலிய வந்தவர்கள் தாழ்க்கைக்காக நிதி உண்டு இத்தைக் கொள்ளுங்கோள் என்று இரப்பார்களே-
நிதி போலே இங்கே இரண்டு பிரயோஜனம் -மலர் நாடி சமர்ப்பிக்கையும் அல்லாவாகில் ஈருகையும்-
தார்ஷ்டாந்திக்கே நிதி ஸ்தாநீயம் -கைங்கர்யம் –

———————-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே–1-4-9-

நாடாத மலர் நாடி –
‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’ என்பாரும் உளர்
ஸ்ரீ நஞ்சீயர், ‘எண் திசையும் உள்ள பூக் கொண்டு’ என்கிறபடியே,
‘தேட அரிய மலர்கள் எல்லாம் தேடி’ என்று அருளிச் செய்வர்.

நாடோறும்-
இது தான் ஒரு நாள் தேடி விடுதல் அன்றி இடைவிடாமல் என்றபடி.
கிஞ்சித்கரித்துச் ஸ்வரூபத்தைப் பெறுகின்ற இவ் வாத்துமாவிற்கு, -விச்சேதம் -இடைவிடுதல்
ஸ்வரூபத்திற்கு இழுக்கு ஆதலின், ‘நாடோறும்’ என்கிறாள்.

நாரணன் தன்-
நித்ய பரிசர்யை -இடைவிடாமல் தொண்டுகளைச் செய்யத் தக்கவாறு எல்லாப் பொருள்கட்கும் ஸ்வாமி யானவன்.

வாடாத மலர் அடிக் கீழ்-
செவ்வி மாறாத பூப் போன்று இருக்கிற திருவடிகளின் கீழே.
ஸ்வரூபத்திற்கு ஹானி -இழுக்கு ஆனாலும் விட ஒண்ணாதபடி எல்லையற்ற இனிய பொருளாகவுமிருக்கிற
திருவடிகள் ஆதலின், வாடாத மலரடி’ என்கிறாள்.

வைக்கவே-
சேர்ப்பதற்காகவே.

வகுக்கின்று-
உண்டாக்கிற்று.
ஸ்ருஷ்டத்வம் வனவாசாய -‘நீ காட்டில் வசிப்பதற்காகவே படைக்கப்பட்டாய்,’ என்று இளைய பெருமாளைப் பார்த்துச்
சுமித்திராதேவி கூறியது போன்று, இவளும் ‘வைக்கவே வகுக்கின்று’ என்கிறாள்.
ஆக, இப்படி வகுத்ததுமாய், சுலபமுமாய்-நிரதிசய போக்யமுமான – எல்லை இல்லாத இனிய பொருளுமாய் உள்ள திருவடிகளிலே-
சர்வவித கைங்கர்யங்களையும் – எல்லா வகைத் தொண்டுகளையும் செய்யவாயிற்று இதனை உண்டாக்கினான் என்றபடி.
‘ஆயின், தொண்டு செய்வதால் உயிர்களுக்குச் ஸ்வரூப லாபம் ஒழிய இறைவனுக்கு இத் தொண்டுகளால் பயன் இல்லையாதலின்,
அவதாரிகையில் ‘நிதி உண்டு’ என்ற எடுத்துக் காட்டுச் சேராதே?’ எனின்,
அடியார்கட்குக் கிஞ்சித்கரித்துச் ஸ்வரூப சித்தியாயினாற்போன்று, இறைவனுக்கும் கிஞ்சித்கரிப்பித்துக் கொண்டு அன்றோ ஸ்வரூப சித்தி?
இப்படியிருக்க,

வீடு ஆடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ-
வீடு-விடுகை; அதாவது-விஸ்லேஷிக்கை -, பிரிதல், ஆடுகை-அவகாஹிக்கை -மூழ்கியிருத்தல்.
வீற்றிருக்கையாவது,-விஸ்லேஷத்தில் மூர்த்தா அபிஷிக்தையாய் இருக்கை – பிரிவிலே முடி சூடியிருத்தல்.
வினையறுகை-நல்வினை அறுகை
-இப்படி பாஹ்ய ஹானியாலே -நல்வினை இல்லாத காரணத்தால் -விஸ்லேஷத்தில் அபிஷேகம் பண்ணி –
பிரிவிலே மூழ்கித் தம்மைப் பிரிந்திருக்கிற இப் பொல்லாத இருப்பு உண்டு; இது என் செய்யக் கடவதோ!
அன்றிக்கே இத் தொடர் மொழிக்கு, ‘தம்மையும் பிரிந்து, தம்மோடு ஒரு சம்பந்தத்தை இட்டுச் சுற்றத்தார்களும் கைவிட,
அவர்களையும் விட்டு, வேறுபட்டிருக்கிற இவ் வஸ்து – இவ் வுயிர் என் செய்யக் கடவதோ!’ என்று பொருள் கூறலுமாம்.
‘எமராலும் பழிப்புண்டு இங்கு என்? தம்மால் இழிப்புண்டு, தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே,’ என்பர் மேல்.

ஊடு ஆடு பனி வாடாய்-
வேற்காரர் அங்குத்தை வார்த்தையை இங்கே சொல்லி இங்குத்தை வார்த்தையை அங்கே சொல்லித் திரியுமாறு போன்று,
அங்கோடு இங்கோடாய்த் திரிகின்றதாயிற்று.
இனி, ‘ஊடு’ என்பதற்கு ‘உள்’ என்றும், ‘ஆடுகை’ என்பதற்குச் ‘சஞ்சரிக்கை’ என்றும் பொருள் கொண்டு,
‘அங்கே அந்தரங்கமாகச் சஞ்சரிக்கின்ற நீ’ என்றும்,
சம்ச்லேஷ – புணர்ச்சிக்காலத்தில் என்பால் கிட்டிச் சஞ்சரித்துப் போந்த நீ’ என்றும் பொருள் கோடலுமாம்.

உரைத்து ஈராய் எனது உடலே-
நித்ய கைங்கர்யத்துக்கு -‘நித்தியமான தொண்டினைச் செய்வதற்கு இட்டுப் பிறந்த இவ் வாத்துமா இப்படி யிருக்கக் கடவதோ?’
என்று அறிவித்தால், அத் தலையால் வருங் கைங்கரியமும் நமக்கு வேண்டா,’ என்று இருந்தானாகில்,
‘அவசியம் வந்து அவனுடைய பிரிவிற்குச் சிளையாத என் உடலை முடித்து விட வேண்டும்,’ என்று
காலைப் பிடித்து வேண்டிக் கொள்ளுகிறாள்-
கால் -சாடு -வாடை அன்றோ –

————————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நாடாத மலர் என்று -தேட அரிய ஆத்ம புஷ்பம் –
இத்தை மலர் என்கிறது ஈஸ்வரனுக்கு புஷ்ப சமர்ப்பணம் போலே ஆத்மாவை திருத்துகையும் உகப்பாகையாலே –
அஞ்சலி சாத்தியமான விஷயத்தில் நாடொறும் என்றது விச்சேதியாத படி –
விச்சேதம் ஸ்வரூப-நித்ய பரிசரியைக்கு – ஹானி யாகுமே-
திருவடிகளின் போக்யதையின் உரைப்பை அருளிச் செய்கிறார் மேல்

அயன சப்தம் ப்ராப்ய வாசி -ஸுலப்யம்-பஹு வரீஹி ஸமாஸ அபெக்ஷயா -அந்தர்யாமித்வத்திலே நோக்கு –
கைங்கர்யம் கொள்ளாத போது அவனும் வாடுவானே -ஆகையால் -வாடாத -விசேஷணம் மலரடிக்கு –
வினை அற்று -அத்தாலே -வாதாடி வீற்று இருத்தல் என் செய்வதோ என்று அன்வயித்து அர்த்தம்
இவ்வஸ்து என்றது ஸ்வ ஸ்வரூபத்தை –
ஊடு என்றது நடுவதால் -அந்தரங்கமாதல் -அவனுக்கு அந்தரங்கம் -எனக்கு அந்தரங்கம் –
ஊடு -உள்ளு என்றுமாம் -ஆடுகை -வர்த்திக்கை

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்