Archive for October, 2018

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-3-9-

October 29, 2018

கீழ் – ஆறு, ஏழாம் பாசுரங்களால் பிரமன் சிவன் இவர்களுடைய -அபரத்வமும் -தலைமை இன்மையினையும்,
சர்வேஸ்வரனுடைய பரத்வமும் அருளிச் செய்தார்:
இப் பாசுரத்தில் அவர்கள் இருவரும் இவனைப் பற்றி-லப்த ஸ்வரூபராய் – ஸ்வரூபத்தை அடைந்தவர்களாய்
இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்.
‘ஆயின், பிரமன் முதலியோர்கட்கும் உத்பாதகனாய் காரணனாய் -அவர்களுக்கும் ரக்ஷகனான சர்வேஸ்வரன்,
அவர்களும் காலிட மாட்டாத பூமியிலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் யாது?’ எனின்,
ஆஸ்ரியிக்குமவர்களுக்கு த்வரை பிறக்கைக்காகவும் –
பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், –
ருசி ஜனகன் ஆகைக்காகவும்-
ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும் வந்து பிறப்பன்,’ என்று-
பரித்ராணாம் ஸாதூ நாம் – அவன்தான் அருளிச்செய்து வைத்ததுவே காரணம்.
‘ஆயின் துஷ்க்ருதர் விநாசம் -, பொல்லாரைப் பொன்று நெறி போக்கல் யாது பற்றி?’ எனின்,
‘பொல்லாரைப் பொன்று நெறி போக்கல் அதனுடைய பலமாய் வருமதுவே,’ என்று அவன் தானே அருளிச் செய்தான்-

————————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

இப் பாட்டுக்கு அர்த்த த்வய அனுகுணமாக சங்கதி த்வயமாதல் –
அன்றிக்கே ஏக சங்கதியாய் கீழ் வாக்ய விவரணமாய் அவர்கள் லப்த ஸ்வரூபராய் இருக்கிற படியையும்
அவதாரத்துக்கு ஹேதுவையும் அருளிச் செய்கிறார் என்றுமாம்

——————–

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெறத் துந்தித்
தலத்து எழு திசை முகன் படைத்தநல் உலகமுந் தானும்
புலப்படப் பின்னும் தன் உலகத்தில் அகத்தனன் தானே
சொலப் புகில் இவை பின்னும் வயிற்றுள இவை அவன் துயக்கே–1-3-9-

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் –
ஆறு ஏழாம் பாசுரங்களில் கூறிய பொருளைத் தொடர்ந்து பேசுகிறார்-அநு பாஷிக்கிறார் –
முப் புரங்களையும் எரித்ததால் அபிமானங்கொண்டுள்ள சிவன், திரு மேனியில் வலப் பாகத்தைப் பெற்று
ஸ்வரூபத்தை அடைந்தவனாய் இருப்பன்.
பஸ்ய ச ஏகாதச மே ருத்ரன் தக்ஷிணம் பார்ஸ்வ ஆஸ்ரிதன் ( ‘எனது வலப் பாகத்தில் தங்கியிருக்கின்ற உருத்திரர்
பதினொருவரையும் பார்ப்பாய்,’ )என்பது மோஷ தர்மம்.

எழு திசைமுகன் படைத்த நல் உலகமும் தானும் இடம்பெறத் துந்தித்தலத்து –
இடம் பெற -அத்து -உந்தித்தலம் -என்றாய் -அத்து சாரியைச் சொல்லாய் -பொருள் இன்றியே போய் –
இடம் பெற உந்தித்தலம் என்கிறது –பூ தலம்-என்னுமா போலே
எழுச்சியையுடைய திசைமுகன் படைத்த உலகமும் தானும் இடத்தாற் குறைவு இன்றித்-அசங்குசித்தமாக –
திருநாபிக் கமலத்தில் இருப்பான்.
‘உந்தி’ என்பதும், ‘துந்தி’ என்பதும் திருநாபிக்குப் பெயர்.
ப்ராஹ்மாணம் ஈசம் கமலாசனஸ்த்தம் ( ‘கமலமாகிய ஆசனத்தில் தங்கியிருக்கின்ற தலைவனாகிய பிரமனையும் பார்க்கிறேன்,’ )
என்பது ஸ்ரீ கீதையில் அருச்சுனன் கூற்று.
இங்குக் கூறிய இவை, இவர்களுடைய எல்லா வகையான-ரக்ஷணத்துக்கும் – காத்தலுக்கும் உபலக்ஷணம்.

எழுச்சியாவது,
பதினான்கு உலகங்கட்கும் நிர்வாகனான – தலைவனாய் இருக்கிற செல்வம்.
இறைவன் விரும்பி வந்து அவதரிக்கையாலே ‘நல்லுலகம்’ என்கிறார்.
‘ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளுந் தனிஉடம்பன்’ என்கிறபடியே,
பிராட்டிக்கும் பிரமன் முதலியோர்க்கும் சமமாகத் திருமேனியில் இடங்கொடுத்து வைத்தால்,
அந்தப்புரத்தில் உள்ளவர்கள் என்று அவர்கள் இருப்பிடத்தில் இவர்களுக்கு நலிய ஒண்ணாதபடி
கூறாகக் கொடுத்து வைத்தானாதலின், ‘இடம் பெற’ என்கிறார்.
ச விகாசமாய் இருக்கும் என்பதால் இடம் பெற என்று அருளிச் செய்கிறார்
‘ஆயின், இவர்கட்குத் திருமேனியைக் கூறாகக் கொடுப்பான் என்?’ என்னில், இறைவனுடைய திருமேனி –
சர்வ அபாஸ்ரயமாய் -எல்லார்க்கும் பற்றுக்கோடாய் இருத்தலால் என்க.
பால் குடிக்குங்குழந்தைகள். தாயின் மார்பினை அகலில் நாக்கு வரளுமாறு போன்று,
பிரமனும் திரு நாபிக் கமலத்தை விடின் தன் சத்தை இல்லையாம்படி இருப்பான் ஆதலின், ‘உந்தித் தலத்தனன்’ என்கிறார்.
ஆயின், இவர்கள் எஞ்ஞான்றும் திருமேனியில் இருப்பார்களோ?’ என்னில்,
ஆபத்துகளிலே திருமேனியில் இடங்கொடுப்பான் இறைவன்; அது மகா குணம் ஆகையாலே,
ஆழ்வார்கள் எப்பொழுதும் அருளிச்செய்து கொண்டு செல்வார்கள்.
மற்றும், சாமந்தர்கட்குப் புறம்பே நாடுகள் மிகுதியாய் இருந்தாலும், மாளிகைக்குள்ளே செம்பாலே நாழி அரிசியைத்
தங்களுக்கு மேன்மையாக நினைத்திருப்பார்கள் அன்றோ? அங்ஙனமே,
இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள். ‘எங்ஙனம்?’ எனின்,
வேற்று அரசர்களால் கலகங்கள் உண்டான காலங்களில் அடைய வளைந்தானுக்குள்ளே குடி வாங்கி யிருந்து,
கலகம் நீக்கியவாறே புறம்பே புறப்பட்டாலும் ‘இவ்விடம் இன்னார் பற்று’ என்று, பின்னும் ப்ராப்தியாக –
தம் இடத்தைச் சொல்லி வைக்குமாறு என்க.

பின்னும் –
பிரமன் முதலியோர்க்குத் திருமேனியிலே இடங்கொடுத்ததற்கு மேலே.

தன் உலகத்தில் அகத்தனன் – தான் உண்டாக்கின பிரமனாலே உண்டாக்கப்பட்ட உலகங்களிலே வந்து அவதரிப்பான்.
‘ஆயின், பிரமனும் சிவனும் தன் திருமேனியில் ஒவ்வோர் இடத்தைப் பற்றிப் பெற்ற ஸ்வரூபத்தினை யுடையவர்கள் ஆகும்படி இருக்கிறவன்,
அவர்களுங்கூடக் காலிட அருவருக்கிற சம்சாரத்திலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் என்?’ என்னில், புலப்பட-
‘காண வாராய் என்று என்று கண்ணும் வாயுந் துவர்ந்து’ இருப்பவர்களுக்குத் தன்-சங்கல்பத்தாலே சம்விதானம் – நினைவினாலே
அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்தல் கூடாது ஆதலின்,
அவர்கள் கண் முதலிய கரணங்களுக்குப் புலப்பட வேண்டும் என்று,
‘ஏன்? தன் நினைவினாலே அவர்கள் விரும்பியவற்றைக் கொடுப்பின் என் செய்யும்?’ என்னில்,
‘மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில், தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையும்,’ என்பார்கள்.
‘இப்படிப் பிறப்பது கர்மத்தாலயோ?’ எனின், தானே – ஆத்ம மாயயா ‘என்னுடைய இச்சையே’ என்கிறபடியே,
ஒரு கர்மத்தால் அன்று; இச்சையேயாம்.

சொலப்புகில் இவை பின்னும் வயிற்று உள-
அவன் இப்படி அவதரித்துச் செய்யும் காத்தல்களில்-ஏகதேசம் – ஒரு சிறிது சொல்லில் சொல்லும் அத்தனை;
எல்லாம் சொல்லித் தலைக் கட்டப் போகாது:
சொலப் புகில் உள்ளே உள்ளேயாம் இத்தனை.
இனி, இதற்குத் தன்னாலே படைக்கப் பட்டவர்களாக உள்ளவர்கட்கு ‘என் மகன்’ என்று விரும்பும் படியாக வந்து பிறந்து
‘உனக்கு அரசைத் தந்தேன்; அது தன்னை வாங்கினேன்; போ,’ என்றும்,
கையிலே கோலைக்கொடுத்துப் ‘பசுக்களின் பின்னே போ,’ என்றும் சொல்லலாம்படி எளியனாய் இருக்கிற தான்,
இவர்களுக்கு ஓர் ஆபத்து வந்தால் இவர்களை வயிற்றிலே வைத்து நோக்கும் படியை அருளிச் செய்கிறார் என்று கூறலும் ஆம்.
‘நன்று; இப்படி இதுவே பொருள் என்பது நீர் அருளிச் செய்யும் போது தெரிகின்றது;
அல்லாத போது தெரியாதபடி இராநின்றதே!’ என்ன,

இவை அவன் துயக்கே-
மம மாயா துரத்யயா ‘என்னுடைய மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்கிறபடியே,
அவன் தானே ப்ரக்ருதி -மாயையாகிற விலங்கை வெட்ட புண்ணியம் இல்லாதவர்கள் தன் பக்கல் அணுகாதபடி செய்து,
அவர்கள் அகலப் புக்கால் அவன்தான் அனுமதி கொடுத்து, உதாசீனனாய் இருக்கையாலே தெரியாது ஒழிகிறது என்கிறார்.
துயக்கு–சம்சயம் -ஐயம்.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பரித்ராணாய ஸாதூ நாம் -தன திருவடிகளில் ருசி பிறந்து ஆஸ்ரயித்தவர்களுக்குத் தன் திருவடிகளை சீக்கிரமாக
பிராபிக்க வேணும் என்னும் த்வரை பிறைக்காக்காக வந்து பிறப்பன் என்கிறது –
தர்ம சமஸ்தாப நார்த்தாய -என்று தன்னுடைய ஆஸ்ரயணத்தில் ருசி இல்லாதார்க்கும் தன்னுடைய
விக்ரஹ ஸூந்தர்யத்தை பிரகடிப்பித்து-அத்தாலே ருசி ஜனகன் ஆக்கைக்காக வந்து பிறப்பன் என்கிறது
சாது பரித் ராணார்த்த மாகப் பண்ணின அவதாரத்தின் பலமாயிற்று துஷ்க்ருத் விநாசம்-
பூ தலம் என்னுமா போலே உந்தித் தலம்
அடைய வளைந்தான் -ஏழாம் பிரகாரம் –
சொல்லப் புகில் உள்ளே உள்ளே யாம் -வாசா மகோசரம் -அந்த தசையிலும் ரக்ஷிக்குமவன் –
இவை -லோகம் என்றும் தசரத வ ஸூ தேவாதிகள் என்றுமாம்
துரைக்கு மனம் திரிபு -சம்சயமும் விபர்யயமும் -இங்கு பிரகரணத்துக்குச் சேர சம்சயம் விவஷிதம்-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-3-8-

October 29, 2018

‘உடலை விட்டு உயிர் நீங்குவதற்கு ஒரு நாள் முன்னராயினும் இறைவனைப் பற்றும்படி-ஆஸ்ரயிக்கும் படி – கூறுகின்றீர்;
நீண்ட காலமாக நாங்கள் பண்ணி வைத்த பாவங்கள் விலக்காவோ? இனி, அவனைப் பற்றுவதற்குக் காலந்தான் உண்டோ?’ என்ன,
‘நீங்கள்-ஆஸ்ரயணத்திலே – பற்றுவதற்கு ஒருப்படவே பாவங்கள் அடங்கலும் அழிந்து விடும்;
திருமகள் கேள்வனைப் பற்றுவது ஆகையாலே காலங்கழிந்தது என்று இருக்கவும் வேண்டா;
நீங்கள், ‘தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி, நடக்கும்போது-(பெரிய திருமொழி. 1. 3 : 5.)
அக் அக்கோலோடே சாயவும் அமையும்,’ என்கிறார்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நம்முடை நாளே -என்று சீக்கிரமாக ஆஸ்ரயிக்கச் சொன்ன இவருடைய வார்த்தையைக் கேட்ட சம்சாரிகள் –
ஸ்ரேயாம் ஸி பஹு விக்நாநி பவந்திமஹதாமபி -என்கிறபடியே நாங்கள் பாப பூயிஷ்டர்கள் ஆகையால்
எங்கள் விரோதிகள் எங்களை ஆஸ்ரயிக்க ஒட்டாது-நாங்கள் வ்ருத்தர்கள் ஆகையால் பூர்ண உபரசனத்துக்கு அசக்தர் –
இத்தனை காலமும் வ்யர்த்தமே போயிற்று இனி அல்ப காலமே இருக்கப் போகிறது ஆகையால் காலம் தான் உண்டோ -என்று சங்கிக்க –
அவர்களுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
ஆஸ்ரயணத்தில் ஒருப்படவே -என்றது வணங்கி என்றதைப் பற்ற
விரோதிகள் அடங்கலும் நசிக்கும் என்றது -உடனே மாளும்-என்றதை பற்ற –
திருவுடை அடிகள் -என்றதை பற்ற ஸ்ரீ யபதி ஸமாஸ்ரயணம் –
மாளும் ஓர் இடத்திலும் என்றதைக் கடாக்ஷித்து -நீங்கள் தண்டு காலா இத்யாதி -இப்படி தடுமாறி நடப்பதற்கு முன்னே –
தண்டு -அக்கோலோடே சாயாவும் அமையும் -காலால் கொள்ளும் பிரயோஜனத்தை தண்டத்தாலே யாயிற்று கொள்வது –

——————–

நாளும் நின்று அடும் நம பழமை அம் கொடு வினை யுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனகம் மலம் அறக் கழுவி
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலங் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–1-3-8-

நாளும் நின்று அடும்-
நாள் தோறும் இடைவிடாமல் நின்று வருத்துகின்ற;
பரமாணுவைச் சேர்ந்த பாரி மாண்டல்யம் முதலியவைகள் நித்தியமாக இருக்கவும் நித்திய பரதந்திரமாய் இருக்குமாறு போன்றும்,
இறைவனுடைய ஸ்வரூபத்தைப் போன்று அவன் குணங்களும் நித்தியமாக இருக்கவும்
அக் குணங்கள் நித்திய பரதந்திரமாக இருக்குமாறு போன்றும் நித்தியமாயும் நித்திய பரதந்திரமாகவும் இருக்கிற உயிர்கட்கு,
அசித் சம்சர்க்கமும்–உடல்களின் சேர்க்கையும் நித்தியமாகவே வருகின்ற காரணத்தால்,
அவ்வுடலின் சேர்க்கையால் வருகின்ற வினைகளை ‘நாளும் நின்று அடும்’ என்கிறார்.
நம.த்விஷந்த பாபக்ருத்யாம் ( ‘ஒருவர் செய்த வினைகளுள், அன்பர்கள் புண்ணியங்களையும்,
பகைவர்கள் பாபங்களையும் அடைகிறார்கள்’ )என்கிறபடியே. பிறரராதாய் -அசல் பிளந்தேறிட வந்தன அல்ல;
நெஞ்சு உணர நாமே பண்ணி வைத்தவை.
அதாவது, அபூத பூர்வம் மம பாவி கிம் வா -‘எனக்கு முன்பு அனுபவிக்காததாய், மேல் அனுபவிக்கக் கூடியதாய் இருப்பது ஒன்று உண்டோ? –
சர்வம் சஹே எல்லாம் பொறுக்க வல்லேன்;
மே சகஜம் ஹி துக்கம் – தன் காய் பொறாத கொம்பு உண்டோ? என்று கூறலாம்படி நாமே பண்ணி வைத்தவை என்பதாம்.

பழமை-
அவை தாம் இன்று நேற்று அன்றிப் பழையவாய் இருக்கை.
அம்-
கொடுமையை நினைந்து சொல்லுகிறார்.
கொடுவினை-
அனுபவித்தே தீர்க்க வேண்டியவைகள். உடே்ன மாளும்-
பற்றின காலத்திலே அழியும். யதேஷீக தூல மக்னவ் ப்ரோதம் ப்ர தூயே தைவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –
(‘தீயிற்போடப்பட்ட நாணற்பஞ்சானது எப்படி அழிகின்றதோ,அப்படியே அவனுடைய எல்லாப் பாபங்களும் நாசத்தை அடைகின்றன; ஆச்சரியம்,’) என்றும்,
மேரு மந்த்ர மாத்ரோ அபி (பாபத்தின் உருவமான கர்மங்களின் கூட்டம், மேரு மலை மந்தர மலை இவற்றின் அளவாக இருந்தாலும்,
கேசவனாகிய மருத்துவனைக் கிட்டின அளவில், கெட்ட நோய்கள் போன்று நாசத்தை அடைகின்றன,’) என்றும் வருகின்ற பிரமாணங்களை அறிக.

ஓர் குறைவு இல்லை –
‘மேல் ஒரு விரோதங்கள் – குறையும் வாராது. இனி,-சர்வ அபிமதங்களும் – விரும்பியவை அனைத்தும் எய்தும்,’ எனலும் ஆம்
கௌந்தேய பிரதி ஜாநீஹி ந மே பக்த ப்ரணச்யதி ( ‘அருச்சுனா, இவ்வர்த்தத்தில் நம்மை நம்பிச் சூளுறவு செய்வாய்;
நம்மைப் பற்றினவர்களுக்குக் கேடு வாராது காண்; பகவானை அடைவதற்கும் வினை கிடக்கைக்கும்
அக்னி நா சின்ஜேத் ‘தீயால் நனைப்பது’ போன்று, என்ன சேர்த்தி உண்டு? அது பொருத்தம் அற்றது,’ )என்பது பகவான் திருவாக்கு.
துராசாரோ அபி ‘தீய ஒழுக்கமுடைமை,-
சர்வாசீ -அபோஜ்ய போஜ்யங்கள் – உண்ணத் தகாதனவற்றை உண்டல்,
க்ருதக்ன நன்றி செய்தவனுக்குத் தீமை செய்தல்,
நாஸ்திக புரா -வேத நெறியினை இல்லை என்றல் ஆகிய இவற்றைப் பல காலம் செய்து போந்தவனான ஒருவன்
சமாஸ்ரயே தித்யாதி (‘இவன் அனுகூலன் ஆவது எப்போதோ!’ )என்று காலம் பார்த்திருக்கும் இறைவனைச் சென்று பற்றுவானாயின்,
பற்றிய அவனை, பின்னர்க் குற்றம் அற்றவனாக நினைத்தல் வேண்டும்; ‘எதற்காக?’ என்னில்,
பிரபாவாத் பரமாத்மனே – இவனைக் குறைய நினைக்கையாவது, பகவானுடைய பெருமையைக் குறைய நினைக்கையேயாம்,’ என்றும்,
ந வாஸூ தேவ பக்தானாம் அசுபம் க்வசித் ( ‘வாசுதேவனுடைய அடியார்களுக்கு ஒரு பொழுதும் கேடுகள் இல்லை,’ )என்றும்
கூறும் பாரதத்தையும் இங்கு உணர்க.

ஆதலால், இனி, நீங்கள் செய்யவேண்டுவது ஒன்று உண்டு;
மனன் அகம் மலம் அறக் கழுவி –
சர்வேஸ்வரன், பிரமன் சிவன் இவர்களுக்கு நடுவில் கலந்து நின்றால்,
‘இவனோ கடவான், மற்றையவர்களோ!’ என்று ஐயப்படுமது தவிர்ந்து,
‘சர்வேஸ்வரனே கடவான்’ என்கிற-அந்தக்கரணி சுத்தி – மனத்தின் தூய்மை உண்டாக வேண்டும்.
‘ஆயின், ஏனைய தேவர்களை இறையவர்களாக எண்ணுதல் கூடாதோ?’ எனின்,
‘திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர்’ என்கையாலே, அவ்வாறு எண்ணல் பழுதாம்.

நாளும்-
அபர்வணி – பருவம் அல்லாத காலங்களில் கடல் நீண்டலாகாது என்னுமாறு போன்று ஒரு நியதியில்லை.
நம் திருவுடை அடிகள் தம்-
திருமகள் கேள்வனான ஸ்வாமியினுடைய– இதனால், நித்திய யோகத்தை அருளிச் செய்கிறார்.
‘சர்வேஸ்வரனை அடைந்தானாகில், அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று
நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனை அடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து,
அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி,
‘நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி’ என்னா நின்றது கண்டீரே’ என்று அருளிச்செய்தார் பட்டர்.

நலம் கழல்-
அவள் முன்னாகப் பற்றினாருடைய குற்றங்களைப் பாராதே கைக் கொள்ளுந் திருவடிகள்.
வணங்கி-
வணங்க.
‘வணங்க; நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினை உடனே மாளும், ஓர் குறைவு இல்லை,’ என முடிக்க.
‘ஆயினும், இறைவனைப் பற்றுதற்குக் காலம் தப்பி நின்றதே?’ என்ன,

மாளும் ஓரிடத்திலும்-
முடிகின்ற ஒரு கணத்திலும்.

வணக்கொடு மாள்வது வலம்-
த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் ( ‘இரண்டு துண்டுகளாக வெட்டப்படக் கடவேன்; அப்பொழுதும் வணங்கேன்,’ )என்னாது
கிடக்கிற சீரைப்பாயைக் கவ்விக் கவிழ்ந்து கிடந்து சாவவும் அமையும்.
இறைவனையும் பற்றி வேறு சிலர் பக்கலிலும் தலை சாய்க்க இராமல், முடிகிற சமயத்திலே அடையவே பின்னைப் பேற்றோடே தலைக்கட்டும்
ஆதலின்,‘மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலம்’ என்கிறார்.
இதனால், பிறந்தது முதலாக அடைந்தாலும் பலன் இல்லை, இறைவனுக்கு வேறுபட்ட தேவர்கள் பக்கல்;
இறைவன் விஷயத்தில் அடைவதிலே தொடங்கி உடனே முடிந்தாலும் பலன் தப்பாது என்கிறார்.
வலம்-
ஸ்ரேஷ்டம்- சிறப்பு; வரம் என்ற சொல்லின் திரிபு.
இனி, வலம்-வலிமையும் ஆம்.

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நாளும் நின்று அடும்-ஆத்ம வஸ்துவை நாடொறும் இடைவிடாதே நின்று ஹிம்சிக்கக் கடவதான -என்று சப்தார்த்தம் –
நித்ய பரதந்த்ரமாய் –
நம் -புத்தி பூர்வகமாக நம்மாலே அனுஷ்டிதம்-ஸூஹ்ருதஸ் சாது க்ருத்யாம் த்விஷந்த பாப க்ருத்யாம்-
இஷீக தூலம் -நாணல் பஞ்சு-பூர்வாகங்கள் வசிக்கும் உத்தராகங்கள் ஸ்லேஷியாது-
அநிஷ்ட நிவ்ருத்தி மாத்திரம் அன்றிக்கே இஷ்ட பிராப்தியும் உண்டு என்னுதல்-
சர்வ அபிமதங்களும் பூர்ணமாம் என்கிற இடத்தில்
த்வத் அங்க்ரி முத்திஸ்ய -சர்வ மாப் நோதி ஸர்வஸ – சர்வான் காமான் அவாப்நோதி -இத்யாதிகள் அனுசந்தேயம் –
மலம் என்பதற்கு பிரகரண அனுகுணமாக வியாக்யானம் –
நாளும் -ஏதாகிலும் ஒரு காலத்தில் என்றபடி
வணங்க ஒருப்பட்ட மாத்திரத்திலே –
மாளும் ஓர் இடத்திலும் -இடம் என்கிறது காலத்தைச் சொல்லி அத்தாலே க்ஷணத்தைச் சொல்லுகிறது என்றபடி –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-3-7-

October 29, 2018

அப்படியே செய்கிறோம்,’ என்று ஆறியிருந்தார்கள்; ‘ஐயோ! நீங்கள் உங்களுடைய ஆயுளின்-ஸ்தியையும் – நிலையும்,
இழக்கிற விஷயத்தின் நன்மையும் அறியாமையால் அன்றோ ஆறியிருக்கின்றீர்கள்?
நீங்கள் முடிந்து போவதற்கு முன்னே-நிர்ணய உபாயங்களாலே – உறுதி செய்யும் வழிகளால் பொருள் இன்னது என்று உறுதி செய்து,
நிர்ணீதனானவன் உறுதி செய்யப்பட்டவன் பக்கலிலே விரைவில் பத்திபைப் பண்ணப் பாருங்கோள், என்று,
மேல் பாசுரத்திற்குச் சேஷமாய் இருக்கிறது இப் பாசுரம்.
‘நீங்கள் குறைந்த ஆயுளை யுடையவர்கள் ஆகையாலே, விரைவில் செய்து கொடு நின்று, ‘செய்கிறோம்’ என்ன வேண்டும்;

‘செய்கிறோம்’ என்று செய்ய ஒண்ணாது என்கிற இதுவே இப் பாசுரத்தில் விசேஷம்-கீழில் பாட்டில் காட்டில் –

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நம்முடை நாளே என்றத்தை பிரதானம் ஆக்கிக் கொண்டு- நன்று என நலம் செய்தவனிடை -என்னும் அளவும் கடாக்ஷித்து சங்கதி –
நன்று எழில் நாரணன் -என்றதை பற்ற -நன்மையையும் அறியாமை இறே-என்றது –
நலம் செய்வது என்றதை பற்ற -பக்தியைப் பண்ணப் பாருங்கோள் என்றது
கீழ் யுக்த அர்த்தத்தையே சொல்லிற்று ஆகில் இப்பாட்டு வ்யர்த்தம் அன்றோ என்ன விசேஷம் காட்டுகிறார் நீங்கள் இத்யாதி –

————————–

ஒன்று எனப் பல என அறி வரு வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலஞ் செய்வது அவனிடை நம்முடை நாளே–1-3-7-

ஒன்று என பல என அறிவு அருவடிவினுள் நின்ற –
‘மூவர் முதல்வராய் மூவர்க்கும் மூன்று சரீரம் உண்டாய்த் தோற்றுகையாலே, மூன்று சரீரத்திலும் ஒருவனே-
அதிஷ்டித்துக் கொண்டு – நிலை பெற்று நிற்கிறானோ,
அன்றி, மூன்றிலும் மூன்று சேதனர் நிலை பெற்று நிற்கின்றார்களோ?’ என்று அறிய அரிய வடிவுகளை யுடையராய் நிற்கிற.
இனி,ஏகாத்ம அதிஷ்டிதமோ – ‘ஓர் ஆத்துமாவின் நிலை பேறோ,-அநேகாத்மா அதிஷ்டிதமோ – பல ஆத்துமாக்களின் நிலை பேறோ? என்று
அறிய அரிதான தன்மையினை யுடையராய் நின்ற என்னுதல்.

நன்று எழில் நாரணன் –
‘நன்று’ என்பதனால், -அநந்ய பரமான -அவனுக்கே உரிய நாராயண அநுவாகாதிகளை நினைக்கிறார்.
‘எழில்’என்பதனால், அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா -(‘நீங்கின குற்றங்களையுடையவனும்
மோக்ஷத்தையுடையவனும் ஒளி உருவனும் ஒருவனே யானவனும் ஆன நாராயணன்’) என்கிற புகரை நினைக்கிறார்.
இனி, ‘நன்று எழில்’ என்பதற்கு,ரூபஸ்ரீ யை – வடிவின் அழகினைப் பார்த்தவாறே,
‘கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்’ என்கிறபடியே,
சர்வ ரக்ஷகன் -‘அனைத்து உலகும் அனைத்து உயிரும் அளிக்கும் பரமன் இவனே,’ என்னலாம்படி இருக்கும்
நன்றான அழகு என்று கூறலுமாம்.
திருப் பெயரைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தன அனைத்தையும் பிரகாரமாய்க் கொண்டு தான் பிரகாரியாய் இருப்பான்
ஒருவன் என்று தோன்ற இருப்பவனாதலின்,‘நாரணன்’ என்கிறார்.
நான்முகன் –
ஒருவன், படைக்குங் காலம் வந்தால் நான்கு வேதங்களையும் சொல்லுதற்கு நாலு முகத்தை யுடையனாய்ப்
படைக்குந் தொழில் ஒன்றில் மட்டும் சேர்ந்தவன் என்று தோன்ற நிற்பவன்.
அரன் – ஒருவன் அழிக்குந்தொழில் ஒன்றில் மட்டும் சேர்ந்தவன் என்று தோன்ற நிற்பவன்.

என்னும் இவரை –
இப்படி வேறுபட்ட தன்மையராய் இருக்கும் இவர்களை. ஸ்ருஷ்டி ஸ்திதித் அந்தக்கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம்
ச சம்ஞ்ஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன ( ‘படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்கிற பிரமன் விஷ்ணு சிவன்
என்னும் பெயர்களை, பகவான் என்ற பெயரையுடைய ஜனார்த்தனன் ஒருவனே அடைகிறான்,’) என்கிறபடியே,
சமஜ்ஜைகளில் -பெயர்களில் ஒக்க எடுக்கலாய் விஷ்ணு சப்தத்தோடு பரியாயமான ஜனார்த்தன சப்தத்தை இட்டுத்
தலைக் கட்டுகையாலே, தானே முதல்வன் என்று தோன்றும்படி இருப்பவன்.
இப்படி-வி சத்ருச ஸ்வ பாவராய் – வேறுபட்ட தன்மையராய் இருக்கிற இவர்களை;

ஒன்ற நும் மனத்து வைத்து –
அவனை ஒழிந்த இருவரிலே ஒருவனுக்கு உத்கர்ஷம் – உயர்வு வேண்டும் என்றாதல், உறுதிப் படுத்துவதற்கு முன்
இவனுக்கு உயர்வு வேண்டும் என்றாதல் பாராதே ஒரு படிப்பட உங்கள் மனத்திலே வைத்து.
உள்ளி-
சுருதி நியாயங்களால் ஆராய்ந்து அவர்கள் ஸ்வரூப ஸ்வபாவங்களை இப்படி ஆராய்ந்தவாறே ஒரு பொருள் பிரதானமாய்
ஏனைய இரண்டும் உயர்வு இல்லாதனவாய்த் தோன்றும். தோன்றினவாறே,

நும் இரு பசை அறுத்து –
அவ் விரு பொருள்களிலும் நீங்கள் செய்யும் நசையைத் தவிர்ந்து.
அவ் விரு பொருள்களுக்கும்-வஸ்துகதமாய் – இயற்கையாக வருவது
ஓர் உயர்வு இல்லை; நீங்கள் ஏறிடுகின்ற இவையே என்பார், ‘நும் இரு பசை’ என்கிறார்.

நன்று என நலம் செய்வது அவனிடை –
இப்படி உறுதி செய்யப்பட்டவன் பக்கலிலே ‘இவன் நமக்குக் கைப் புகுந்தான்,’ என்று உங்களுக்கு ஏறத் தேற்றம் பிறக்கும்படி
வேறு பலனைக் கருதாத பத்தியைப் பண்ணப் பாருங்கள்.
‘காலக் கிரமத்திலே செய்கிறோம்’ என்று ஆறி இருந்தார்கள்;

நம்முடை நாளே –
கெடுகின்றவர்களே! நம்முடைய வாழ் நாளின் நிலையை அறிவீர்கள் அன்றோ! விரைவில் அடைவதற்குப் பாருங்கள்.
‘நம்முடை நாளே’ என்றதனால் ‘வாழ் நாளின் நிலையினை அறிந்த படி என்?’ என்னில்,
முன்னர், ‘மின்னின் நிலை இல, மன்உயிர் ஆக்கைகள்’ என்றார் அன்றே?
நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்யஸ்மிதே ரவவ் ஆத்மனோ நாவ புத்த்யந்தே மனுஷா ஜீவிதா ஷயம்
( ‘சூரியன் தோன்றுங் காலம் வந்தவாறே பொருள் தேடுங்காலம் வந்தது என்று உகப்பர்; அவன் மறைந்தவுடனே தத்தம்
மனைவி மக்களோடு இன்பம் நுகருங்காலம் வந்தது என்று உகப்பர்; சாலில் எடுத்த நீர் போன்று
தங்கள் ஆயுள் குறைகிறது என்று அறியாதிருக்கின்றார்கள்,’ )என்று ஸ்ரீ ராமாயணமும் கூறும்.
இனி, ‘ஒருவன் இரண்டு கதவுகளையும் அடைத்துக் கொண்டு கிடந்து உறங்கும் போது, நெருப்புப் பற்றி எரியா நின்றால்,
‘அவிக்கிறோம்’ என்று ஆறி இருக்கலாமோ?’ என்பார், ‘நம்முடை நாளே’ என்கிறார் எனலுமாம்.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

வடிவினுள் நின்ற -என்றது கோட்யுத்தாப நார்த்தம் -என்கிறார் –
சரீரம் மூன்றாகையாலே மூவர் என்னலாய் இருக்கும் –
அந்த அந்த சரீரத்தை அதிஷ்டித்து பிரபலமாய் துல்யமாய் இருந்துள்ள மூன்று கார்யங்களை செய்கையாலே
இவனே சர்வ சக்தன் என்று தோற்றுகையாலே ஒருவனே என்னலாய் இருக்கும் –
எழில் -அபஹத பாப்மா–சர்வ அந்தர்யாமியாய் இருக்கச் செய்தேயும் வ்யாப்யா கதமான தோஷங்கள் தட்டாதவன்-
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண
திவ்ய -த்யவ்விலே வர்த்திக்குமவன் என்றாய் பரமபத நிலயன்-என்றபடி –
தேவன் த்யோதமா நத்வாதி குணங்களை யுடையவன் என்றபடி –
அப்படிப்பட்டவன் நாராயணன் ஒருவனும் -என்கிறது –

கண்டவாற்றால் -கண்ட பிரகாரம் -சவ்ந்தர்யம் -ப்ரத்யக்ஷ ஸித்தமான சேஷ்டித பிரகாரங்களாலே –
பதிம் விஸ்வஸ்ய -என்கிற பிராமண நிரபேஷமாக லோகம் தனக்கே சேஷம் என்று நாடாகச் சொல்லும்படி நின்ற சர்வேஸ்வரன் –
ரூபமேவாஸ்யை தந் மஹிமாநம் வ்யாஸஷ்டே -என்று ரூபத்தை ஞாபகமாகச் சொல்லிற்று இறே –
நாரணன் என்றதுக்கு அர்த்தம் -சமஸ்தமும் பிரகாரமாய்த் தான் பிரகாரியுமாய் இருக்கும் என்று சொன்ன போதே
அவனுக்கு பிரதான்யம் தோற்றிற்று இறே-
நன்று எழில் என்கிற விசேஷணத்தாலே அவனே பிரதானன்-என்று தோற்றுகிறது -என்று வாக்ய சேஷம் –

ஸ்ருதி நியாயங்களாலே -ஸ்ருதியாலும் யுக்தியாலும் -என்றபடி –
நம்முடை நாள் என்றதுக்கு அஸ்திரத்வத்தைப் பற்ற அருளிச் செய்கிறார் –
சாலில் எடுத்த-என்றது ஆயுஸ்சினுடைய அல்பதையும்-ஷயத்தினுடைய ப்ரத்யக்ஷதையும் தோற்றுகைக்காக-
சாலில் எடுத்த நீருக்கு ஆள ஆள வற்றுகிறமை காண்பது குளத்து நீருக்குத் தெரியாது இறே-
ஓன்று எனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற -ஏகாத்ம அதிஷ்டிதம் என்றும் அநேக ஆத்ம அதிஷ்டிதம் என்றும்
ஒருவன் பிரதானன் என்றும் தனித்தனியே பிரதான என்றும் அறிய அரிதான வடிவுக்கு உள்ளே வர்த்திக்கிற -என்று சப்தார்த்தம் –
நன்று எழில் நாரணன் -விலக்ஷணமான அபஹத பாப்மத்வாதி குண உஜ்ஜ்வல்யத்தை யுடைய நாரணன் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-3-6-

October 29, 2018

அவதாரத்தில் ஆஸ்ரயியுங்கோள் ‘அவதாரங்களை வணங்குங்கோள் என்று கூறுகின்றீர்;
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார ( ‘‘பிரமனுக்கும் சிவனுக்கும் மத்தியில் முதல் அவதாரம்’ )என்கிறபடியே,
பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தோன்றி நிற்கும் நிலையாய் இருந்தது முதல் அவதாரம்;
அவர்கள் மூவரும் ஒத்த காரியத்தில் அதிகரித்து நின்றார்கள்;
இப்படி நிற்கையாலே, மூவரும் முதல்வரோ? மூவரில் ஒருவன் முதல்வனோ? மூவர்க்கும் அப்பால் ஒருவன் முதல்வனோ?’ என்று
எங்களால் பகுத்து அறியப் போகாமையால் பற்றுவதற்கு அருமையாக இருக்கின்றது;
ஆதலால், நாங்கள் பற்றுவதற்குப் பற்றக் கூடிய பொருளை நிரூபித்துத் தரலாகாதோ?’ என்ன,
‘காண்கிற சரீரமே ஆத்துமா என்னும் நிலை தவிர்ந்து,
சரீரத்திற்கு -வ்யதிரிக்த -வேறுபட்ட ஆன்மா ஒன்று உண்டு என்று அறிதல்தானே அரிது?
வருந்தி அதனை அறிந்தானேயாகிலும், பிரமன் சிவன் முதலியோரைச் சரீரமாகக்கொண்டு
தான் ஆத்துமாவாய் நிற்கிற சர்வேஸ்வரன் நிலையினை அறிதல் முடியாது;
ஆன பின்னர், இவ்வழியே இழிந்து பற்றப் பாருங்கள்,’ என்று,
ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும்-ஆஸ்ரயிக்கும் பிரகாரம் – பற்றுமுறை இன்னது என்றும் அருளிச் செய்கிறார்.

—————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து -என்கிற பதங்களைக்
கடாக்ஷித்து -சங்கா பூர்வகமாக சங்கதி –
மனப்பட்டதொன்றை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் -இத்யாதியைப் பற்ற
ஆஸ்ரயணீய வஸ்து இத்யாதி –
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து -என்றதை பற்ற ஆஸ்ரயிக்கும் பிரகாரம் இன்னது என்றது

———————–

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு அரிது உயிர்காள்!
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே–1-3-6-

உணர்ந்து உணர்ந்து-
உணர்வு என்னாமல் ‘உணர்ந்து’ என்கையாலே.
ஞப்தி – ‘அறிவு மாத்திரமே உள்ளது; -ஞாத்ர அம்சம் -அறிகின்றவன் இலன்’ என்கிற யோகாசாரனை மறுக்கிறார்.
‘உணர்ந்து உணர்ந்து’ என்ற-வீப்சைக்கு – அடுக்குத் தொடரால்,-
சைதன்யம் ஆகந்துகம் – ‘அறிவு இடையிலே வந்தது; –
முக்த அவஸ்தையிலும்- மோக்ஷ நிலையிலும்-பாஷாண கல்பமாய் – கல்லைப் போன்று இருக்கும்’ என்று கூறும்
நையாயிக வைசேடியர்களை மறுத்து,-சைதன்யம் – ஞானம் நித்தியம் என்பதனைத் தெரிவிக்கிறார்.
மேலும், ஞாத்ருத்வம் -அறியுந்தன்மை நித்தியமாகையாலே, ‘ஞான கிரியா கர்த்ருத்வம்-ஞாத்ருத்வம்;
அதுதான் அநித்தியம்,’ என்கிற கிரியாவாதியையும் மறுக்கிறார்.

இழிந்து அகன்று உயர்ந்து-
இச் சேதனன் தான் அணு பரிமாணமாய் அளவினதாய் இருந்தும், ஈஸ்வரன் ஸ்வரூபத்தாலே
எங்கும் வியாபித்து -நிறைந்திருப்பது போன்று, ஞானத்தாலே எங்கும் நிறைந்திருக்கும் என்கிறார்.
இனி,பாதே மே வேதநா சிரஸி மே வேத நா ( ‘எனக்குக் காலில் நோவு; எனக்குத் தலையில் நோவு,’ ) என்று கூறும்படி
இருக்கிற நிலையினைக் கூறுகிறார் எனலுமாம்.

உருவு இயந்த இந்நிலைமை –
உருவிற்காட்டில் வேறு பட்டிருக்கிற இந்நிலைமை. உண்டு – இந்த ஆத்துமாவினுடைய ஸ்வரூபம்.
இனி,உருவு இயந்த என்று பிரிக்கப்படும்போது, இயத்தல் – கடத்தலாய், உருவிற்காட்டில் கடந்திருக்கும் – வேறுபட்டிருக்கும் என்னுதல்.
ஆக, இரண்டாலும் அறிவு இல்லாத சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டிருக்கிற ஆத்துமாவினுடைய ஸ்வரூபம் என்பது பொருளாம்.

உணர்ந்து உணர்ந்து உணரிலும்-
அவ்வாத்துமாவின் ஸ்வரூபத்தைக் கேவலம்-ஸ்ரவண மனனாதிகளால் -கேள்வி மனனம் முதலியவைகளால் -சாஷாத் கரிக்கக் கூடிலும்

இறை நிலை உணர்வு அரிது –
சர்வேஸ்வரன் பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தராத்துமாவாய் அவர்களைச் சரீரமாகக் கொண்டு தான் சரீரியாய் நிற்கிற நிலை அறியப் போகாது.

உயிர்காள் – ‘
சைதன்ய யோக்யம் இன்றிக்கே -அறிவற்ற பிறவிகளில் பிறந்ததனால் இழந்து விட்டீர்களோ?
அறிவுடைய பிறவியில் பிறந்தும் அதன் காரியம் பிறக்கவில்லையே?
அறிவு கேடராய் நீங்கள் இருக்கும் நிலைதான் என்னே!’ என்பார், ‘உயிர்காள்’ என விளிக்கிறார்.

‘எங்கள் அறிவும் அறியாமையும் நிற்க; நாங்கள் பற்றுவதற்கு, அறிந்த நீர் அருளிச் செய்யீர்,’ என்ன, அருளிச் செய்கிறார் மேல்:
அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-
ஒரு உணர்த்தி, ஸ்வரூபத்தைப் பற்றியது; ஒரு உணர்த்தி, ஸ்வபாவத்தைப் பற்றியது
உரைத்து உரைத்து –
ஸ்வரூப பரமான பிரமாணங்களையும்-ஸ்வபாவ பரமான பிரமாணங்களையும்
விரோதி நிரசன சீலனாய் -தீயாரை அழித்து -ரக்ஷகனாய் -நல்லாரைக் காக்கின்றவனாதலின்,
அரி என்னும் பெயரையுடையனாய் இருக்கிறான் ஒருவன்;
ஓருவன் திருநாபிக் கமலத்தில்-அவ்யவதாநேந – நேராகத் தோன்றியவனாதலின்,
அயன் என்னும் பெயரை யுடையனாய் இருக்கிறான்;
ஒருவன் -சம்ஹாரம் அழித்தல் ஒன்றுக்கே உரியவனாய் அரன் என்னும் பெயரை யுடையவனாய் இருக்கிறான்;
இவர்களைப் பற்றிக் கூறுகிற பிரமாணங்களை ஆராய்ந்து பார்த்து, அவை தம்மைப் பல காலும் சொல்லிப் பார்த்து,
மனப்பட்டது ஒன்று-‘இலிங்கத்துக்கே-உத்கர்ஷம் – உயர்வு தோற்றும்படியாய் இருப்பது
ஒரு பிரபந்தம் செய்து தரவேண்டும்’ என்பாரைப் போன்று,-ஒரு வியக்தியிலே பக்ஷபாதிக்கப் பாராதே –
ஓர் உருவத்திலே ஒரு சார்பாகச் சாயாது, இவர்கள் ஸ்வரூபங்களையும் ஸ்வபாவங்களையும் பல காலும் ஆராய்ந்து பார்த்தால்,
கோல் விழுக்காட்டால் ஒருவனே உயர்ந்தவன் என்பது உங்கள் மனத்திலே தோன்றும்.
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்-
தோன்றுகிற அவனைக் கேள்வி மனனம் முதலியவைகளால்-ஸ்ரவண மனனாதிகளால் உணர்ந்து,
அவன் திருப் பெயர்களைப் பலகாலும் உச்சரித்து –
கை புகுந்தது என்று விஸ்வசிக்கலாம் அளவும் -ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் வணங்குங்கோள் என்பதாம்.

—————————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

உணர்ந்து -என்கிற பதத்தால் ஞப்த்தி மாத்திரமே உள்ளது-என்கிற யோகாசார மதம் நிரஸ்தம்
சைதன்யம் ஆகந்துகம் என்கிறவர்கள் நையாயிக வைசேஷிகர்கள்
கிரியாஸ்ரயத்வமான ஞாத்ருத்வமும் அநித்தியம் என்பர் மாயி -இவர்கள் அனைவரையும் நிரசித்து அருளுகிறார் –

இழிந்து அகன்று உயர்ந்து -என்றதுக்கு இரண்டு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
முந்தின அர்த்தத்தில் நிஷ்க்ருஷ்ட ஸ்வரூபத்தைப் பற்ற சார்வத்ரிகமான வியாப்தியைச் சொல்லுகிறது –
த்விதீய அர்த்தத்தில் சரீர வ்யாப்தியைச் சொல்லுகிறது –

உணர்ந்து உணர்ந்து -த்யான ரஹித ஸ்ரவண மனனங்கள் -என்றும் அஷ்டாங்க யோக க்ரமத்தாலே உணரிலும் -என்றுமாம்
இறை நிலை உணர்வு அரிது -அறிந்தால் பரத்வ சங்கை உதியாது என்றபடி –
பரத்வத்தை நிர்ணயிக்கிற இடத்திலே சைதன்ய விசிஷ்டத்தையைச் சொல்லி சம்போதிக்கிறவர் ஹார்த்த பாவத்தை அருளிச் செய்கிறார் –
தத்வ நிஷ்கர்ஷம் பண்ணும் கிரமத்தை சொல்லுகிறது –
வீப்சைகளுக்கு விஷய பேதத்தாலே பேதம் அருளிச் செய்கிறார் -மூன்று வாக்யங்களாலே –
ஸ்வரூப ஸ்வபாவமான பிரமாணங்களை ஆராய்ந்து பலகாலும் சொல்லி –
கோல் விழுக்காட்டாலே என்றது ஸ்வதா ப்ராப்தியாலே -யத்ருச்சையாலே என்னவுமாம் –
ஸ்ரவண மனனாதிகளாலே அனுசந்தித்து வஸ்துக்கு வாசகமான திரு நாமங்களை பல காலும் உச்சரித்து ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் -என்றபடி
கைப்புகுருகை-பல உன்முகமாகை–கைப் புகுந்தது என்று விஸ்வசிக்கலாம் அளவும் இது வீபிஸா தாத்பர்யம்-
முதலில் உணர்ந்து உணர்ந்து என்றதுக்கு ஞாத்ருத்வ ஸ்வ பாவனாகையாலே என்றும் ஓக்க உணருகையே ஸ்வ பாவமாக உடையனாய் இத்யர்த்த –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-3-5-

October 29, 2018

பஜியுங்கோள் ‘வழிபாடு செய்மின் என்று பன்முறையுங் கூறுகின்றீர்;
பஜன உபாயம் -வழிபாடு செய்யும் வழியினை அருளிச் செய்யீர்,’ என்ன,
‘இன்று நான் உபதேசிக்க வேண்டுமோ?
அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

——————–

பிணக்கற அறு வகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி யம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டு
உணக்குமின் பசை அற அவனுடை யுணர்வு கொண்டு உணர்ந்தே–1-3-5-

பிணக்கு அற அறுவகைச் சமயமும் – வைதிக சமயத்துக்கும்-பாஹ்ய ஷட் ஆறு புறச்சமயங்களுக்கும்
தம்மில் தாம் உண்டான பிணக்கு அறும்படியாக.
நெறி உள்ளி உரைத்த-
தான் சொல்லிய அனைத்தும்-வேதார்த்தமாக – வேதப் பொருளாக இருக்கவும், பொருளின் உண்மைத் தன்மை
தெளியப் பெறாத ஒருவன் -ஆராய்ந்து சொல்லுமாறு போன்று விசாரித்து அருளிச் செய்தான்;
‘அதற்கு நினைவு என்?’ என்னில்,-
அஹ்ருதயமாக- மனத்தொடு படாமற்கூறினும் நன்மை தரத் தக்கனவாக இருப்பினும் மக்களுடைய ஹிதத்தில் உண்டான –
ஆதார அதிசயத்தாலே -அன்பின் பெருக்காலே, சடக்கெனச் சொன்னால்
‘நிரூபியாமல் வாய் வந்தபடி சொன்னான்’ என்பர்கள் என்று ஆராய்ந்து சொன்னானாகச் சொன்னபடி.

கணக்கு அறு நலத்தனன்-
எல்லை இல்லாத குணத்தை யுடையவன்;
இனி, எல்லை இல்லாத ஸ்நேஹத்தை வாத்சல்யத்தையுடையவன் எனலுமாம்.
‘யார் இரக்கச் செய்தான்?’ என்னில், தன் வாத்சல்யத்தால் அருளிச் செய்தான் இத்தனையே.
ஆயின், வாத்சல்யத்தால் கூறிய அனைத்தும் உண்மைப் பொருள் ஆகுமோ?’ என்னில்,

அந்தம் இல் ஆதி-
ஆப்த தமன்.
எல்லார்க்கும்-உத்பத்தி விநாசங்களாலே – பிறப்பு இறப்புகளாலே யன்றோ-ஞான சங்கோசம் – ஞானத்திற்குக் குறைவு உண்டாவது?
இவனுக்கு அவை இல்லாமையாலே-அகர்ம வச்யன் – கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவன் அல்லன் ஆதலின்,
இவன் யாங்ஙனும் கூறினும் உண்மைப் பொருளேயாம் என்க.

அம் பகவன் –
ஞானம், சத்தி, செல்வம் முதலியவைகளால்-அல்பம் உத்கர்ஷம் – சிறிது மேன்மையுடையவர்களையும்
பகவான் என்ற பெயரால் கூறும் வழக்கு உண்டாதலின்,
அந்யத்ர ஹ்யுபசாரத (‘பகவான் என்னும் பெயர் முக்கியமாக வசிப்பது இவன் பக்கலிலே:
அல்லாதார் பக்கல் ஒளபசாரிகம்’ )என்பார், ‘அம் பகவன்’ என்கிறார்.

அம் பகவன் வணக்குடைத் தவநெறி வழி நின்று-
வனக்கத்தை யுடைய பத்தி மார்க்கமாகிற வழியிலே நின்று;
ஸ்ரீ பகவத் கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில்
நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா (‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ )என்று கூறி,
பின்னர்,(மாம் நமஸ்குரு )‘என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால்,
இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவ நெறி’ என்கிறார்.
பத்தியானது -அங்கனா பரிஷ்வ்ங்கம் -காதலியோடு கலக்கும் கலவி போன்று போக ரூபமாய் -இன்ப மயமாக இருக்குமாதலின்
‘அம் பகவன் தவநெறி’ என்கிறார்.
பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் பக்தியைச் சொல்லுகிறார்;
யஸ்ய ஞான மயம் தப (‘அவனுக்குத் தவமானது ஞானத்தின் மயமாய் இருக்கிறது,’) என்கிற நியாயத்தாலே யாதல்,
இவனுடைய பிரேம மாத்ரத்தையே -அன்பினையே தவமாக நினைக்கின்ற பகவானுடைய அபிப்பிராயத்தாலே யாதல்.

புறம் நெறி களை கட்டு –
புறநெறியாகிற களையைக் கடிந்து. அதாவது,-கடிந்து – பறித்து. கட்டல் -களைதல்
பத்தி விஷயமான போது வேறு பலன்களிற்செல்லும் விலக்கடிகளைத் தள்ளி’ என்றும்,
பிரபத்தி விஷயமானபோது மற்றைச் சாதனங்களைத் தள்ளி’ என்றும் பொருள் கொள்க

உணக்குமின் பசை அற –
ரஸ வர்ஜம் (‘ருசி வாசனைகளும் நீங்குகின்றன,) என்கிறபடியே, புறம்பான விஷயங்களில் உள்ள ஆசையை
ருசி வாசனையோடே விடுங்கோள். ‘இவை எல்லாம் விடுவது எப்படி?’ என்னில்,

அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து –
அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘பத்தி மார்க்கத்தைக் கொண்டு உணர்ந்து’ என்றபடி.
இனி,தத் யுக்த – அவன் அருளிச் செய்த ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘அவன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று’ என்னுதலுமாம்-

—————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

சாக்ய -உலுக்ய-அஷ பாத-ஷாபனக-கபில -பதஞ்சலி -இத்யாதி மதாநி
அத்வா -லோகாயத ஆர்த்த புத்த மதாநி மூன்றும் – நையாயிக வைசேஷிக ஒன்றும் –
சாங்க்ய யோக மதம் ஒன்றும் -பாஸூ பதம் ஒன்றும் இப்படி ஆறும் –
உயர்வற உயர் நலம் -நலம் என்றது குண வாசகமாகக் கண்டோம்
மயர்வற மதி நலம் -நலம் -ஸ்நேஹ வாசகமாகக் கண்டோம் –
இரண்டையும் பற்ற வாக்ய த்வயம் -சிஷ்யஸ் தேஹம் என்றது வியாச மாத்திரம் –
அஸ்தாந ஸ்நேஹ -வாத்சல்யம் –
பகவான் என்று மட்டும் இல்லாமல் அம் பகவான் -என்றதுக்கு வியாக்யானம்
குணவத் விஷயம் ஆகையால் போக ரூபமாய் இருக்கும்

பகவத் அபிப்ராயத்தாலே யாதல் -என்றது சாதன பக்தி பக்ஷத்தில் அங்குராவஸ்த்தையைப் பற்ற –
சாத்ய பக்தியான போது ஸ்வ ரசம் -அன்றிக்கே யோஜனத்வயமும் பக்தி பிரபத்தி ப்ரயோஜநாத் வயத்தைப் பற்றவாதல் –
தவ நெறி -என்கிற இடத்தில் தபஸ் சப்தம் பிரபத்தி பரம் என்று தாத்பர்யம் —
இந்தப் பக்ஷத்தில் வணக்கம் ப்ரஹ்வீ பாவம்-சேஷத்வ அனுசந்தானம் என்றபடி –
ஆக சேஷத்வ அனுசந்தான பூர்வக அத்யாவசிய ரூப பிரபத்தி -வணக்குடைத் தவ நெறி -என்றதுக்கு அர்த்தம் —
மேலே அவனுடை உணர்வு கொண்டு -என்றத்தோடு புநர் யுக்தமாகாமைக்காக -தவ நெறி வழி நின்று -என்றது அத்யவசித்து -என்றபடி –
கச்சத்வ மேநம் சரணம் -என்று உபதேசிக்க திரௌபதியா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம்-
அனுஷ்டான தசையில் காயிக நமஸ்காரம்
தபாசா மதிரிக்தமா ஹூ -என்று தபஸ் சப்த வாஸ்யமான அத்வேஷ ரூப பிரபத்தியைச் சொல்லுகிறது –

பசை அற உணக்குமின் -பகவத் சாஷாத்காரதாலே ருசி வாசனைகளோடு போக்கிக் கொள்ளுங்கோள் என்றபடி –
வேதாந்தங்கள் பக்தி விதியில் பிரதானங்கள் –
பிரபத்தி விதியில் சரம ஸ்லோகமே பிரதானம் -ஸ்ரீ கீதைக்கு எல்லாம் இதிலே இறே தாத்பர்யம்-
ஆகையால் தத் யுக்த ஞானம் என்கிறது ப்ரபத்தியை –தத் விஷய ஞானம் என்று பக்தியைச் சொல்லுகிறது –

பக்தி பரமான போது -கணக்கறு நலத்தனன் அந்தமில் யாதி யம் பகவன் அறுவகைச் சமயமும் பிணக்கற
நெறி யுள்ளி உரைத்த வணக்குடைத் தவ நெறி வழி நின்று -அதாவது
உபக்ரம தசையில் அத்யவசித்து-அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -அனுஷ்டான தசையில் ஞானத்தை பிராபித்து-
புற நெறி களை கட்டுப் பசை யற உணக்குமின் -என்று அன்வயம் –
பிரபத்தி பாரமான போது -அறுவகைச் சமயமும் பிணக்கற-என்று தொடங்கி -அம் பகவானுடைய உணர்வு கொண்டு
உணர்ந்து வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டுப் பசையற உணக்குமின் என்று அன்வயம்
உணக்குமின் -உலர்த்தி விடுங்கோள்-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-3-4-

October 29, 2018

‘தானாம் அமைவுடை நாரணன்’ உடைய அவதாரத்தின் ஸுலப்யம் – எளிமை ஒருவர்க்கும் அறிய நிலம் அன்றோ? என்னில்,-
ஆஸ்ரிதற்கு அத்யந்த ஸூலபனாய் அநாஸ்ரிதற்கு அத்யந்த துர்லபனாய் என்கிறார்.

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

யஸ்ச ராமம் ந பஸ்யேத்து யஞ்ச ராமோ ந பஸ்யதி -நிந்திதஸ் ச வசேல் லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே-இப்பாட்டுக்கு சம்வாதம்
ய என்கையாலே ஞானாதிகளையும் யம் என்கையாலே ஞான ஹீனனையும் சொல்லுகிறது –
அறிய நிலம் அன்று அறியவும் நிலம் அன்றோ -என்றபடி -அறிய நிலம் அன்று என்று அறிகைக்கு ஸூலபனாய் இருக்குமே

———————

யாரும் ஓர் நிலைமையன் என அநி வரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறி வெளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிறபல உடைய எம் பெருமான்
பேரு மோர் உருவமும் உளது இல்லை இலது இல்லை பிணக்கே–1-3-4-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான்
எத்துணை வியக்கத்தக்க ஞானத்தினை யுடையவர்களே யாகிலும் ஸ்வ யத்னத்தால் – தன் முயற்சியால் காணும் அன்று
‘இன்ன படிப்பட்டு இருப்பது ஒரு ஸ்வபாவத்தை – தன்மையையுடையவன்’ என்று அறிய ஒண்ணாத என் ஸ்வாமியானவன்.

யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்-
இந்த யச் யாரும்’ என்ற உம்மை-சப்தம் -தாழ்ச்சியின் எல்லையில் நிற்கிறது
பிறப்பு ஒழுக்கம் ஞானம் இவைகளில் ஓர் அளவும் இல்லையேயாகிலும் தானே காட்டக் காணுமவர்களுக்குத்
தன் படிகள் எல்லாம் அறியலாம்படி இருப்பன்.
‘எங்கே கண்டோம்?’ என்னில்,
ஒரு குரங்கு, வேடச்சி, ஆய்ச்சி இவர்களுக்கு எளியனாய் இருக்கக் கண்டாமே!
‘எம்பெருமான்’ என்ற சொல்லால்,
ஆஸ்ரிதற்கு- ‘அடியார்க்கு எளியனாய் -அநாஸ்ரிதற்கு – அடியர் அல்லாதார்க்கு அரியனான
என் நாயன்- – நிலை இருந்தபடி என்னே!’ என்று ஈடுபட்டு எழுதிக் கொடுக்கிறார்.
நமோ நமோ வாங் மனசாதி பூமயே -நமோ நமோ வாங் மனசைக பூமயே
(‘மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகாத உனக்கு வணக்கம் வணக்கம்; மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகின்ற
உனக்கு வணக்கம் வணக்கம்’ )என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

பேரும் ஓர் ஆயிரம் –
அநுபவிதாக்களுக்கு -அனுபவிக்கின்ற அடியார்கட்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகும்படி பல திரு நாமங்களை யுடையவனாய் இருக்கை.
குணம் பற்றி வருவனவும், ஸ்வரூபம் பற்றி வருவனவும் ஆன பெயர்களுக்கு ஓர் எல்லை இல்லை ஆதலின், ‘பேரும் ஓர் ஆயிரம்’ என்கிறார்.
தேவோ நாமோ சஹஸ்ரவான் (‘தேவனுடைய பெயர்கள் ஆயிரமாக இருக்கின்றன,’ )எனப் புகலும் பாரதம்.

பிற பல உடைய எம்பெருமான்-
அந் நாம த்வாரா காணும் -அப் பெயர்களின் மூலமாகக் காண்கின்ற -பல திருமேனிகளை யுடையனாய் இருக்கை.
‘பிற’ என்பது ஈண்டுத் திருமேனியைக் காட்டுகிறது.
‘ஆயின், ‘பிற’ என்ற சொல் திருமேனியைக் காட்டுமோ?’ எனின்,
நாம ரூபஞ்ச பூதானாம் (‘உயிர்கட்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டு பண்ணினான்’ )என்றும்.
நாம ரூபே வியாகரவாணி ( பெயர்களையும் உருவங்களையும் உண்டு பண்ணுகிறேன்,’ )என்றும்
பெயரோடு உருவமும் சேரக் கூறப்பட்டிருத்தலின்; ஈண்டுப் ‘பிற’ என்பது திருமேனியைக் காட்டுகிறது.
மற்றும், இவர்தாமும் இதனைப் பின்னர்க் கூறுமிடத்து-அநு பாஷிக்கிற இடத்தில் –
‘பேரும் ஓர் உருவமும்’ என்று அருளிச் செய்தல் காண்க.

பேரும் ஓர் உருவமும் –
இவற்றுள் ஒரு திருப்பெயரும் ஒரு திரு உருவமும்.
உளது இல்லை-
அடியர் அல்லாதார்க்குத் ஸ்தூலமாக நினைப்பதற்கும்-பிரதிபத்தி பண்ணுவதற்கு – அரியனவாய் இருக்கும்.
இலது இல்லை –
அடியார்க்கு எல்லாம் காணலாம் ஆகையாலே இல்லது இல்லை.
பிணக்கே-
இதில் மாறுபாடு உண்டோ? இல்லை என்றபடி.
அடியார்கள் எல்லாம் காண்கையாலே மங்களா சாசனம் பண்ணி நிற்பார்கள் –
அடியர் அல்லாதார் இவை இல்லை என்று இருக்கையாலே முதலிலேயே கிட்டார்கள்; ‘
இவ் விருவர்க்கும் நடுவே பொருள் நித்தியமாகப் பெற்றோமே!’ என்று தாம் இனியர் ஆகிறார்.

இனி, ‘பேரும் ஓர் உருவமும் உளது, இலது இல்லை, இல்லை பிணக்கே’ என்பதற்கு,
பேரும் ஓர் உருவமும் உளது-
திருப்பெயரும் திருபெயருக்குப் பொருளான திருமேனியும் நித்தியம்;
இல்லது இல்லை; இல்லை பிணக்கே;
ஆதலால், இவ் விடையாட்டத்தில் -இவ் விஷயத்தில் விவாதம் வேண்டா என்கிறார் –

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

முந்தின யச் சப்தம் உதகர்ஷ பரம் -ஸ்வ யத்ன பரரை ஒழிய ந நமேயம்-என்கிற ராவணாதிகளைப் போலே இருக்கிற
அநாஸ்ரித்தற்கு இன்னபடிப்பட்டு இருக்கும் என்று அறிய ஒண்ணாத படி இருக்கும் என்று ஓர் அர்த்தம் கூட்டி நிர்வஹிக்கக் கடவது –
ஆஸ்ரிதர் ஆகிறார் அவனே காட்டக் காணுமவர்கள்

கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் –
நேரே கடிக்கமலத்துக்குள்ளிருந்தும் காண்கிலான் –
நீராடி தான் காண மாட்டாத –
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவருக்கும் கட்கரிய கண்ணானை –
யமேவேஷ வ்ருணுதே தேந லப்ய-இத்யாதி அனுசந்தேயம் –

பிற -திரு நாமங்களுக்கு அந்யமாய் இருக்கிற திரு மேனிகள் -என்றபடி –

சஹஸ்ராஸ்ய –சஹஸ்ர சப்தார்த்தம் அநந்தம்

ஓர் பேரும் ஓர் உருவமும் -இங்கு ஓர் அத்விதீயம்-ஸ்லாக்யதை

பிணக்கே -பிணக்கு உண்டோ இல்லை என்று சப்தார்த்தம் -இல்லை என்று உகக்கிறார்
அதவா-ஆஸ்ரிதற்கும் அநாஸ்ரிதற்கும் நித்ய விவாதமாய் இருக்கும் -என்றுமாம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-3-3-

October 28, 2018

‘எளியவன்’ என்றார்;
எளிமையை -ச பிரகாரமாக -வகைப்படுத்தி அருளிச் செய்தார்;
இவனுடைய அவதாரத்தின் ரஹஸ்யம் – மறைபொருள் அறிதல் ஒருவர்க்கும் நிலம் அன்று என்கிறார் இப்பாசுரத்தில்

————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழே இரண்டு பட்டாலும் சொன்ன ப்ரமேயத்தை அனுபாஷித்துக் கொண்டு –
மாயையை அறிபவர் யாரே -என்கிற பதத்தைக் கடாக்ஷித்துக் கொண்டு இப்பாட்டுக்கு
சங்கதி அருளிச் செய்கிறார் -வாக்ய த்ரயத்தாலே –
மாயை என்றதை பற்ற அவதார ரஹஸ்யம் என்றது-

—————–

அமை வுடை அற நெறி முழுவதும் உயர் வற உயர்ந்து
அமை வுடை முதல் கெடல் ஒடி விடை அற நிலம் அதுவாம்
அமை வுடை அமரரும் யாவையும் யாவருந் தானாம்
அமை வுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே?–1-3-3-

அமைவுடை அற நெறி முழுவதும் உயர்வு அற உயர்ந்து-
ஒரு தருமத்தைச் செய்தால் தொடங்கும் போதே பயன் இன்றிக் கழியினும் கழியும்; இடையில் சிற்சில தடைகள் நேரினும் நேரும்;
அங்ஙனம் அன்றி, சக்கரவர்த்தி நான்கு ஆஹூதி பண்ணி நான்கு இரத்தினங்களை எடுத்துக்கொண்டாற்போன்று,
பலத்தோடே சேர்ப்பிக்கின்ற அறத்தின் வழிகள் எல்லாவற்றாலும்
‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று சர்வேஸ்வரன் குணங்களால் உயர்ந்திருக்குமாறு போன்று,
‘இவ்வறத்தில் இவனுக்கு அவ்வருகு ஒருவரும் இலர்,’ என்னும்படி சமைந்திருக்கை.

அமைவுடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அதுவாம் அமைவுடை அமரரும்-
பிரமன் உலகத்தைப் படைத்தால், ‘சர்வேஸ்வரனோ!’ என்று ஐயப்படும்படி இருக்கை.
இப்படிச் சமைவையுடைத்தான முதல்- படைத்தல் என்ன, கெடல் -அப்படி இருந்துள்ள அழித்தல் என்ன,
இடை ஒடிவு -நடுவிலே சம்ஹாரம் -அவாந்தர சம்ஹாரம் என்ன, என்னும் இவற்றைத் தங்களுக்கு நிலையிட்டுக் கொடுத்த
அற நிலம் அதுவாம் அமைவுடை அமரரும்-
சர்வேஸ்வரனையும் மறுத்துக் கேள்வி கொள்ள வேண்டாதவாறு மிகவும் விதேயமாம்படி சமைந்த பிரமன் முதலிய தேவர்களும்.

யாவையும்-
அசேதனங்களும் -அறிவில் பொருள்களும்.

யாவரும்-
சேதனங்களும் -அறிவுடைப் பொருள்களும்.

தானாம் அமைவுடை நாரணன்-
அறிவில் பொருள் அறிவுடைப்பொருள் எல்லாம் தான் என்ற சொல்லுக்குள்ளே பிரகாரங்களாய் அந்வயிக்கும் படியான —
விசேஷணங்களாய்ச் சேரும்படியான சமைவையுடையன் ஆகையாலே நாராயணன் என்னுந் திருநாமத்தையுடையவன்.
இனி, ‘தானாம் அமைவுடை நாரணன்’ என்பதற்கு,
ஒருவன் ஒருவனை ‘உனக்கு ஒரு மாத ஜீவனத்துக்கு என்ன வேண்டும்?’ என்றால், தன் மனைவி மக்களையுங் கூட்டிக்கொண்டு
‘எனக்குக் கலநெல் வேண்டும்’ என்கிறான் அன்றே? அப்படியே, இவை அடங்கலும் தன் ‘அஹம்’ சொல்லுக்குள்ளே அடங்க,
தான் இவற்றுக்கு அபிமாநியாய் இருக்கும்படியை அருளிச்செய்கிறார் என்று பொருள் கோடலுமாம்.

மாயையை அறிபவர் யாரே –
இவனுடைய அவதாரத்தின் மறை பொருள் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று என்கிறார். ‘என்னை?’ எனின்,
பிரகாரியான தான் பிரகாரமான பொருள்களிலே ஒன்று ‘என்மகன்’ என்று அபிமானிக்கும்படி வந்து பிறந்த
இவ்வாச்சரியம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று
ஆதலின். ‘ஏன், ஒருவரும் அறியாரே?’ எனின்,
நித்தியசூரிகள் பரத்வ அனுபவம் பண்ணுகையாலே அறியார்கள்;
சம்சாரிகள் நாஸ்திகர் ஆகையாலே அறியார்கள்;
பிரமன் முதலிய தேவர்கள் தம்தமது அறிவாலே அறிய இருக்கின்றவர்கள் ஆகையாலே அறியார்கள்;
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடப்பார்கள்;
தனக்குத் தானே முற்றறிவினையுடைய இறைவனும்-ஜென்ம கர்ம மே திவ்யம்
(‘என்னுடைய பிறவியும் செயல்களும் தெய்வத் தன்மையன,’) என்கின்றான்;
ஆதலின், ஒருவர்க்கும் நிலம் அன்று என்பதாம்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அமைவு -அவிலம்ப்ய பல பிரதத்வம்-
கர்மா கர்த்ரு சாதனா வைகல்யங்களாலே -அனுஷ்டித்த போதே பலம் கிடையாதே போகிலும் போம் –
கர்மா வைகுண்யமாவது -ஜன்மாந்தரங்களில் செய்த பாபம் –
கர்த்ரு வைகுண்யமாவது-த்ரிபுருஷ விச்சித்தியாலே கர்மா அனுஷ்டானத்துக்கு யோக்கியதை இன்றிக்கே இருக்கை-
சாதனா வைகுண்யமாவது -ஸாஸ்த்ர க்ரமத்திலே அனுஷ்டியாது இருக்கை
முழுவதும் -தர்ம மார்க்கம் எல்லாவற்றாலும் -யஜ்ஜம் தானம் தபஸ்-என்று மூன்று ராசியாகப் பிரித்து –
யஜ்ஜ்ங்கள் ஜ்யோதிஷ்டோமம் -அஸ்வமேதம் -அதிராத்ரம் -இப்படி அநேக விதங்கள் –
தபஸ்ஸூ-க்ருச்சர சாந்தராயணாதி ரூபேண பஹு விதம் –
தானமும் -கோ தானம் பூ தானம் என்று அநேக விதம் –
இரண்டாவது வரியில் அமைவுடை -முதலிலும் கெடலிலும் விசேஷணம் –
அமைவு -ஸூ கடித்வம்
முதல் -மஹா பிரளயாநந்த்ர காலீந ஸ்ருஷ்டியும் நித்ய ஸ்ருஷ்டியும்
கெடல்-மஹா சம்ஹாரமும் நித்ய சம்ஹாரமும்
அவாந்தர சம்ஹாரம் என்ற இது அவாந்தர ஸ்ருஷ்டிக்கும் உப லக்ஷணம் –

த்ருதீய பாத அமைவு -ஞான விபாகஸ் சக்தி விபாகஸ் ச –
நாலாம் பாத அமைவு -பஹுஸ்யாம் என்கிற ஸ்வ விபாக ரூப ஸ்ருதி அர்த்தம்
தானாம் அமைவு -தான் என்கிற சொல்லுக்குள்ளே யாம்படியான பிரகாரித்வம்-பஹு வ்ரீஹி சமாசார்த்தம் –
இவற்றுக்கு அபிமானியாய் இருக்கும் தத்புருஷ சமாசார்த்தம்
அறிபவர் யார் -அவனும் கூட திவ்யம் விலக்ஷணம் என்று சொல்லும் அத்தனை போக்கி இன்னபடி என்று சொல்ல மாட்டான் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-3-2-

October 28, 2018

‘எத்திறம்’ என்ற ஸ்ரீ ஆழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தார் என்பது பிரசித்தம் அன்றோ?
இவர் மோஹித்துக் கிடக்க,
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் பள்ளி கொண்டருளின இடத்தை ஸ்ரீ குகப் பெருமாள் நோக்கிக் கொண்டு கிடந்தாற்போன்று,
ஸ்ரீ மதுரகவி முதலான பெரியோர் அனைவரும்-பலிதமான வ்ருக்ஷத்தை – பழங்கள் நிறைந்த மரத்தைப் –
பஷி ஜாதங்கள் -பறவைக் கூட்டங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமாறு போன்று, இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள்.
பெருமாளும் பிராட்டியும் துயின்று இடத்தை நோக்கி இருந்த ஸ்ரீகுகப் பெருமாள் பசியர்க்குத் தாந்தாம் உண்ணும்
உணவினைப் பகுந்து இடுவாரைப் போன்று, அங்கு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குத் தாம் நோக்கிக் கொண்டிருந்த இடத்தைக் காட்ட,
அவ் விடத்தைக் கண்டவாறே சத்ருனோ அனந்தர ஸ்த்தித ( ‘தொட்டால் முடிந்துவிடுவானோ!’ என்று சத்துருக்கனன் எண்ணும்படி )
என்று மோஹித்துக் கீழே வீழுந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று, மோஹித்துக் கிடந்த இவர்,
சிரேண சம்ஜ்ஞாம் பிரதி லப்ய சைவ விசிந்தயாமாச விசால நேத்ரா ( விசாலமான கண்களையுடைய பிராட்டி
பல நாழிகைகள் கழித்து மூர்ச்சை தெளிந்து, பின்னர்ச் சிந்தித்தாள்,’) என்பது போன்று-
அனுபவிதாக்கள் பாக்யத்தாலே – பெரியோர்களுடைய நல் வினைப் பயனால் காலம் உணர்த்த உணர்ந்து,
‘நான் இங்குச் சொல்லியது என்?’ என்று கேட்டார்.
ஆயின், அங்கு அனுபவிக்கும் பெரியோர் உளரோ?’ எனின்,
‘நல்லார் நவில் குருகூர்’ அன்றே? ஆதலால், அங்குள்ள சத்துக்கள் – பெரியோர் அனைவரும் இவரைப் பற்றிப் படுகாடு கிடந்தனர்.
கேட்டதற்குப் ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ என்று கூறி, அதனை விளக்குவதற்கு அதன் தொடர்ச்சியாக
‘மத்துறு கடைவெண்ணெய்’ என்பது முதலாகச் –ப்ரசக்த அனுபிரசக்தமாக -சிலவற்றைக் கூறி,
‘எத்திறம்’ என்று மோஹித்துக் கிடந்தீர், என்றார்கள்,
‘தப்பச் செய்தோம்;தப்பச் சொன்னோம் அழித்துச் சூளுறவு-ப்ரதிஜ்ஜை – செய்ய வேண்டும்,’ என்கிறார் இரண்டாம் பாட்டில்.
அதாவது,
பிறர்க்கு உபதேசம் பண்ணப்புக்குத் தாம் அனுபவித்தார் முதற்பாட்டில்;
இப் பாட்டுத் தொடங்கிப் பிறர்க்கு உபதேசம் செய்கிறார் என்றபடி.
மேல் பாட்டில் கூறிய எளிமையினை வகைப்படுத்தி அருளிச் செய்கிறார் இப்பாட்டில்.

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பெரியவர்களுடைய ஸ்திதி கமந சயநாத் அவஸ்தைகள் எல்லாம் இவ்வாத்மாவுக்கு பகவத் பக்தி வர்த்தகங்களாய்க் கொண்டு
தஞ்சமாய் இருகையாலும் காமிநிகளுடைய வியாபாரங்கள் எல்லாம் காமுகருக்கு அவர்கள் இடத்தில் அபிநிவேசத்தாலே
போக்யங்களாய் இருக்குமா போலே இவ் வாழ்வார் பக்கல் தமக்கு உண்டான அபிநிவேசத்தாலே அவருடைய
மோஹ அவஸ்தையும் தமக்கு போக்யமாய் இருகையாலும் அதில் தமக்கு உண்டான ஆதார அதிசயம் தோன்றும்படி
அவர் மோஹித்த போது ஞாதாக்கள் எல்லாம் அவரை நோக்கிக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் பிரகாரத்தை
அருளிச் செய்வதாகத் திரு உள்ளம் பற்றி அதிஷ்டிக்கை அருளிச் செய்கிறார் –
இவர் இப்படி மோஹித்துக் கிடந்த ஆறு மாசமும் எறும்புகள் கடியாதபடி ஞாதாக்கள் நோக்கிக் கொண்டு இருந்த பிரகாரத்தை
ச நிதர்சனமாக அருளிச் செய்யா நின்று கொண்டு அதுக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –
பழுத்த மரத்தைப் பழத்தில் ஆசையால் பக்ஷிகள் சூழ்ந்து கிடைக்குமா போலே பகவத் ப்ரேமத்தாலே பரிபக்வமான இவர் பக்கல் நின்றும்
நமக்கு ப்ரேமம் உண்டாய் க்ருதார்த்தராக வேணும் என்று இவரை வளைத்துக் கொண்டு கிடந்தார்கள் என்கை —
ஸ்வ உஜ்ஜீவன அர்த்தமான அர்த்த விசேஷ அனுஷ்டான விசேஷ ஞான பக்தி வைராக்யாதி சித்த்யர்த்தமாக என்றபடி —
ரக்ஷண புருஷார்த்த லிப்சிஸைகளுக்காக இரண்டு த்ருஷ்டாந்தங்கள் —
ஸ்ரீ குகப்பெருமாள் ஆஸ்ரமத்தின் நின்றும் பெருமாள் புறப்பட்டு எழுந்து அருளினதுக்கும் அங்கு ஸ்ரீ பரதாழ்வான் எழுந்து அருளினதுக்கும்
மத்யே இருபத்திரண்டு நாள் வ்யவதானம் உண்டாய் இருக்கச் செய்தேயும்-
தத் சயன சிஹ்னங்களை அனுபவித்த போதே ஸ்ரீ குகப்பெருமாள் இவ்விடத்தை ரஷித்துக் கொண்டு இருந்தமை சித்தம் என்று கருத்து –

நல்லார் நவில் -ஆச்சார்ய விஷயத்தில் சேஷித்வ ரக்ஷகத்வாதிகளை ஏறிட்டு ஈஸ்வரனை
தத் சம்பந்த த்வாரா அனுபவித்துப் போரும் ஸ்ரீ மதுரகவிகள் போல்வார் –
தப்பச் சொன்னோம் -பத்துடை அடியவர்க்கு எளியவன் என்று சோபாதிகம் என்று தோன்றும்படி சொன்னோம் என்றபடி –
அழித்து ப்ரதிஜ்ஜை பண்ணுகையாவது -நிருபாதிகத்வம் தோன்றும்படி சொல்லுகை –
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் சர்வேஸ்வரனாய் இருக்குமவன் அவதரித்து சேதனகத அப்ரதிஷேதாதிகமும் அபேக்ஷியாதே
அபார காருண்யாதிசயத்தாலே எளிவருகையே ஸ்வ பாவமாக யுடையனாகிற பிரகார ஸஹிதமாகஅருளிச் செய்கிறார் இதில் –

—————–

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல வீடாம்
தெளிதரு நிலைமை யது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரு மருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே–1-3-2-

எளிவரும் இயல்வினன் –
எளிமையை ஸ்வ பாவமாக – இயல்பாகவுடையவன்.
‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ என்றார் மேல்;
தன்னிடத்து அன்புடையார் மாட்டுத் தானும் அன்புள்ளவனாய் இருத்தல் ஒரு குணம் அன்று
ஆதலின், அதனை மறுத்து, ஈண்டு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார்.
எல்லார்க்கும் ஒவ்வொரு காலத்தில் எளிமை கூடும்;
இவனுக்கு எளிமை ஸ்வரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார் என்றபடி.

நிலை வரம்பு இல –
இன்ன அவதாரம் இன்ன செயல் என்பது இல்லை;
‘நிலை இல, வரம்பு இல’ என ‘இல’ என்பதனை ‘நிலை’ என்பதுடனும் கூட்டி பூர்வர்கள் நிர்வாகம்
இனி, பட்டர் இவ்விரு பொருளையும் ‘நிலை இல’ என்பதன் பொருளாகவே கொண்டு,
‘வரம்பு இல’ என்பதற்கு, வேறு பொருள் அருளிச்செய்வர்.
அதாவது, ‘அவதரித்து எளியனாய் நின்ற நிலை தன்னிலே பரத்துவம் தோற்ற நிற்கிலும் நிற்கும்,’ என்று.
சாரதியை வேஷத்தோடே தேர்ப் பாகனாய்த் தாழ் நிற்கச் செய்தே ஸ்ரீ விஸ்வரூபத்தைக் காட்டியும்,
தான் புத்திரப் பேற்றின் பொருட்டுப் போகா நிற்கச் செய்தே கண்டா கர்ணனுக்கு மோக்ஷத்தைக் கொடுத்தும்,
ஏழு வயதிலே கோவர்த்தன மலையைத் தரித்துக்கொண்டு நின்றும் செய்தவை.
இத்தாற் பெறப்படுவது, ‘ஒன்றிலும் ஒரு நியதி இன்று; ரக்ஷணத்துக்கு -காப்பதற்கு உறுப்பாம் அத்தனையே வேண்டுவது;
ஏதேனுமாக அமையும் இவனுக்கு,’ என்கை.

பல பிறப்பாய்-
தெளிவுடைய தான் சொல்லும் போதும் பஹு நி ( ‘பல பிறவி’ )என்பன்;
யதா பூத வாதியான -உண்மையினைக் கூறும் -வேதங்கள் கூறும்போதும்-பஹு தா விஜாயதே
( பல வேறுபட்ட சாதிகளில் பிறக்கிறான்’ )என்று கூறும்;
அவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லுவார்,‘பல பிறப்பு’ என்பர்.
பிறப்பாய் –
பரார்த்தமாக -பிறருக்காகத் தாழ நின்றோம் என்ற நினைவு சிறிதும் இன்றி,
அவ்வப் பிறவியின் தன்மைக்குத் தக்கவாறு புரை இன்றிக்கே இருப்பதால் -‘பிறந்து’ என்னாது ‘பிறப்பாய் ’ என்கிறார்.
‘ஆயின், பரத்துவ நினைவு சிறிதும் இன்றி இருந்தான் என்பதனை நாம் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின்,
ஆத்மாநாம் மானுஷம் மன்யே ( ‘என்னை நான் மனிதனாகவே நினைக்கின்றேன்;’ ) என்ற ஸ்ரீ ராமன் வார்த்தையாலும்,
அஹம் வோ பாந்தவ ஜாத ) நான் உங்கட்குச் சுற்றத்தவனாய்ப் பிறந்திருக்கிறேன்,’ என்ற ஸ்ரீகிருஷ்ணன் வார்த்தையாலும் அறிதல் தகும்.

ஒளி வரும் முழு நலம்-
அபஹத பாப்மாத்வாதிகள் -நீங்கின தீவினைகளையுடைத்தாய் இருத்தல் முதலிய தன்மைகள் ஜீவாத்மாவுக்கும் உண்டு இறே,
ஜென்ம நிபந்தமான -பிறவிகள் காரணமாக -திரோதானம் பிறவா நின்றது இறே –
அவற்றிற்கு மறத்தல் முதலிய தன்மைகளும்-விகாராதிகளும் – இன்பத் துன்பங்களும் உளவாம்;
இவன் தன்னைத் தாழ விட்டுப் பிறக்கப் பிறக்க, கல்யாண குணங்கள் புகர் – ஒளி பெற்று வாரா நிற்கும்.
‘ஆயின், இருவர்க்கும் பிறவி ஒத்து இருக்க, இறைவனுக்கு நற்குணங்கள் ஒளி பெறுகைக்குக் காரணம் யாது?’ எனின்,
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான ( ‘அவன் பிறந்தவனாய் நன்மையுடையவனாகவே இருக்கின்றான்,’ )என்கிறபடியே,
கர்மம் காரணமாகப் பிறக்கும் பிறவியாய் இருப்பின், பிறக்கப் பிறக்கப் புகர் அழியும்;
அனுக்ரஹம் -திருவருள் காரணமாக வருகிற பிறவி ஆகையாலே புகர் பெற்று வாரா நிற்கும்.
ச உ ஸ்ரேயான் (அவ் விறைவனே புகழை யுடையான்) என்றபடி.
‘அக் குணங்கள்தாம் இருக்கும்படி என்?’ என்னில்,

முதல் இல கேடு இல-
ஒரு நாள் வரையிலே தோன்றி ஒரு நாள் வரையிலே முடியுமவை அல்ல;
ஸ்வரூபத்தோடு-அந்தர்கதமாய் – சேர்ந்தவைகளாய் இருக்கின்றன.

வீடாம் தெளிதரும் நிலைமையது,
மோக்ஷமாகிற தெளிவு; பரம பதம். அதனைத் தரும் ஸ்வ பாவம் என்றும் ஒத்திருக்குமவன்.
அவன் இங்கே வந்து அவதரிக்கிலும் சோக மோஹங்களைப் பண்ணும் இவ்விடம்;
இவன் அங்கே செல்லினும் தெளிவைப் பண்ணும் அவ்விடம்; ஆதலால், ‘வீடாம் தெளி’ என்கிறார்.
‘தெளி விசும்பு’ என்னகே கடவது இறே
ஆயின், இக்குணம் ‘ஒளிவரும் முழுநலம்’ என்றதிற்புகாதோ?’ எனின்,
மோக்ஷத்தை அளிக்கும் இறைமைக் குணம் தனியே சொல்ல வேண்டுவது ஒரு குணம் ஆகையாலே சொல்லுகிறார்;
மேலும், அவதாரத்துக்குப் பயன் இதுவே அன்றோ?

முழுவதும் ஒழிவிலன்-
மேலே கூறிய இரண்டனையுங் கூட்டிச் சொல்லுகிறார்.
இறையோன்-
மேல் ‘வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன்’ என்றார்;
அவ்வீட்டினை அளித்தல் ஈஸ்வரனுக்கே உள்ளது ஒன்று ஆதலின்,
அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அதனை அடுத்து ‘இறையோன்’ என்கிறார்.
இனி, மேல் ‘பல பிறப்பாய்’ என்றாராதலின்,
அவ்வாறு பிறப்பினும், ஈஸ்வரத் தன்மையில் குறையாதே நிற்பான் என்பதனைத் தெரிவிக்கும் பொருட்டு
‘இறையோன்’ என்கிறார் என்னலும் ஆம்.

அளிவரும் அருளினோடு –
குளிர்ந்து பக்குவமான அருளோடே.
இனி, இதற்கு, ‘அருளால் வரும் அருளோடே’ என்று பொருள் கூறி,
‘அருளால் வரும் அருளாவது,நிர்ஹேதுகம் – காரணம் இன்றியே செய்யும் திருவருள்,’ என்று கூறலுமாம்.
அகத்தனன் –
ஆஸ்ரிதற்கு -அடியார்கட்குக் கழுத்திலே ஓலை கட்டித் ‘தூது போ’ என்னலாம்படி இருப்பான்.
புறத்தனன் –
அநாஸ்ரிதற்கு – அடியார் அல்லாதவருக்கு அந்நிலை தன்னிலே கிட்ட ஒண்ணாதபடி இருப்பான். அமைந்து –
இப்படிச் சமைந்து.

‘இறையோன், அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனனாய் அமைந்து, முதல் இல கேடு இலவாம்
ஒளிவரும் முழுநலம், வீடாம் தெளிதரு நிலைமையது முழுவதும் ஒழிவிலனாய்,
நிலை வரம்பில் பல பிறப்பாய், எளிவரும் இயல்வினன்’ என்று அந்வயம்-

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஈஸ்வரனோடு வேதங்களோடு ஆழ்வார்களோடு வாசி அற முடிவு காண ஒண்ணாமையைப் பற்ற-அருளிச் செய்கிறார் –
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -என்ற பத சேர்க்கையால் ஜீவ வ்யாவ்ருத்தியைக் காட்டுகிறார்
நலம் என்று ஜாதி ஏக வசனம் –
அவதார பிரதான ப்ரயோஜனத்வாதி பாவ மோக்ஷ பிரதத்வம்
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே–விநத விவித பூத வ்ரத ரக்ஷைகதீஷே —
த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகாத் உத்பவ ஸ்திதி பிராணாச சம்சார விமோச நாதய-சம்சார விமோசனம் -மோக்ஷ பிரதத்வம் -என்றபடி
தெளி விசும்பு -தெளிவைத் தரும் பரமாகாசம் -வீடாம் தெளிதரும் இத்யாதியோடே கூட்டித் தாத்பர்யம்
அளி வரும் அருளினோடு -அளி -குளிர்ச்சியும் பக்வதையும்-கிருபை – –
நிர்ஹேதுகமாக பல பர்ய வசாயித்வம்-கிருபையால் வரும் கிருபையோடு -என்றபடி –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-3-1-

October 28, 2018

சர்வ ஸ்மாத் பரன் ‘எல்லாரினும் உயர்வு அற உயர்ந்தவன்’ என்றார் முதல் திருவாய்மொழியில்;
பரனாகையாலே பஜனீயன் ‘உயர்ந்தவன் ஆகையாலே வழிபடத் தக்கவன்’ என்று பல காலும் அருளிச் செய்யா நின்றார்
இரண்டாந்திருவாய்மொழியில்;
இத்திருவாய்மொழியில் அவனது சௌலப்யத்தை அருளிச்செய்கிறார். ‘யாங்ஙனம்?’ எனின்,
‘வழிபாடு செய்யுங்கள் என்று பலகாலும் அருளிச் செய்கின்றீர்;
இருகை முடவனை ‘யானை ஏறு’ என்றால் அவனாலே ஏறப் போமோ?
அப்படியே, சர்வேஸ்வரனாய், அவாப்த ஸமஸ்த காமனாய்- எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய் இருக்கிறவனை
இந்த ஷூத்ரனான- அற்பனான சம்சாரி சேதனனால் பற்றப்போமோ? என்ன,
‘அவ்யானை தானே அவ்விருகை முடவனுக்கும் ஏறலாம்படி படிந்து கொடுக்குமன்று ஏறத் தட்டு இல்லையே?
அப்படியே, இச் சம்சாரி சேதனனுக்கு-பஜிக்கலாம் படி – வழிபடலாம்படி -அவன் தன்னைக் கொண்டு வந்து
தாழ விட்டு எளியனாமாகில், இவனுக்கு வழி படத் தட்டு இல்லையே?’ என்று
கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச் செய்கிறார்.

‘ஆயின், அனைவரும் அவனை வழிபட்டு உய்வு பெறாமைக்குக் காரணம் யாது?’ எனின்,-
பாக்ய ஹீனருக்கு – நல்வினை அற்ற மக்கள் ஸ்ரீ இராமன் ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைத்
தமது பிறவினைப் போன்ற பிறவியாம் என நினைந்து-சஜாதீய பிரதிபத்தி பண்ணி – கேடுறுதற்கும்,
பாக்யாதிகருக்கு- நல்வினை வாய்ந்த பெரியோர்கள், அரியன் எளியனாகப் பெற்றோமே!’ என்று நினைந்து-
ஆஸ்ரயிக்கலாம் படி – அடைந்து உய்வு பெறுதற்கும் பொதுவாக அவதாரங்கள் இருத்தலால் என்க.
சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விளங்க விரித்துச் சொல்லிக் கொண்டு போந்தோம்;
அது தானே ‘இவர்களுக்கு இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடல் ஆயிற்று?
அவ் வெளிமை தானே ஆதரிக்கைக்கு உடல் ஆயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று
ஸ்ரீ எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தாராம் .

தார்மிகர் -அறவோர் சிலர், ஏரி கல்லினால், சேற்றிலே தலையை நொழுந்திப் பட்டுப் போகாநிற்பர் சிலர்;
விடாயர் அதிலே முழ்கி விடாய் தீர்ந்து போகா நிற்பார்கள்;
விளக்கை ஏற்றினால் அதிலே விட்டில் முதலிய சில பொருள்கள் விழுந்து முடிந்து போம்;
சிலர், அதன் ஒளியிலே ஜீவியா நிற்பர்கள்- உய்வு பெறுவார்கள்.
‘ஆயின், இறைவன் தடாகமும் விளக்கும் ஆவனோ?’ எனின்,
‘வாசத் தடம்’,
‘மரகத மணித் தடம்’ என்றும்,
‘வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை’,
‘ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை’,
‘வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி’ என்றும்
இறைவன் தடாகமாகவும் விளக்காகவும் கூறப்படுதல் காண்க.

‘ஆயின், தீ வினையாளர் கேடுற்றதும், நல் வினையாளர் உய்வு பெற்றதும் காணும் இடம் உண்டோ?’ எனின்,
அவன்தான், ‘அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டதும்’-இப்படி வந்து அவதரித்து
எளியனான நிலை தன்னிலே யன்றே?
அப்படியே சிசு பாலன் முதலியோர், பூதனை, சகடாசுரன், இரட்டை மருத மரங்கள் இவர்கள் எதிரிட்டு முடிவுற்றமையும்,
ஸ்ரீ அக்குரூரர் ஸ்ரீ மாலாகாரர் முதலியோர்-அனுகூலித்து உஜ்ஜீவிப்பார்க்கு உஜ்ஜீவிக்கவும் ஆயிற்றே –

‘‘அவனை பஜியுங்கோள் வழிபடுமின்’ என்று பலகாலும் அருளிச் செய்கின்றீர்;
கண்ணாலே கண்டால் அல்லது-பஜிக்க – வழிபட விரகு இல்லை;பஜித்தால் – வழிபட்டால் அல்லது காண விரகு இல்லை;
ஆன பின்னர்,ஆஸ்ரயிக்கும் படி – அவனை அடைதல் எங்ஙனம்?’ எனின்,
தஸ்மிந் த்ருஷ்டே பராவரே (‘நம்மைக்காட்டிலும் உயர்ந்தவர்களான பிரமன் சிவன் இவர்களைத் தனக்கு அடிமையாகவுடைய
இறைவனைப் பர பத்தியால் பார்த்த அளவில் மனத்தில் இருக்கின்ற அவா முதலியன அழிகின்றன,’ )என்றும்,
விசதே தத் அநந்தரம் (‘பரபத்தியால் என்னை உண்மையாக அறிகின்றவன் பிறகு என்னையே அடைகின்றான்,’ )என்றும்
சொல்லுகிறபடியே, சில வருத்தங்களோடே காணக்கூடிய சாதன பத்தியை அன்று இங்குச் சொல்லுகிறது;
காண வேண்டும் என்னும்-ஆகா லேசம் – ஆசை சிறிதுடையார்க்கும் அவன் எளியனாம்படியைச் சொல்லுகிறது.
‘ஆயின், அறப் பெரியவன் ஆசை சிறிது உடையார்க்கு எளியனாகை கூடுமோ?’ எனின்,
சர்வாதிகன் -அறப் பெரியவன் தாழ நிற்கும் அன்று நிவாரகர் -தடை செய்குநர் எவருமிலர்

அறப்பெரிய அவன் இம் மண்ணுலகில் வந்து அவதரித்தான் என்பது பொய்யே அன்றோ?’ எனின்,
பஹு நி மே வியதீதாநி(‘பகைவர்களை அழியச் செய்கின்ற அருச்சுனா, எனக்கும் பல பிறவிகள் கழிந்தன;
உனக்கும் பல பிறவிகள் கழிந்தன; ஆயின், அப்பிறவிகள் பலவற்றையும் யான் அறிகின்றேன்;
அவற்றை நீ அறியாய்,’) என்று அருச்சுனனை நோக்கி, ‘நீ பிறந்தது போன்று, நானும் பிறக்கின்றேன்,’ என்கிறான் ஸ்ரீ கிருஷ்ணன்;
அருச்சுனன் பிறந்தது பொய் அன்று; ஆதலால், இறைவன் அவதரித்ததும் பொய் அன்று.
அவதாரங்களில் புரை இல்லை

‘ஆயின், அருச்சுனன் பிறவிக்குக் காரணம் கர்மம்; இறைவன் பிறவிக்குக் காரணம் யாது?’ எனின், இச்சையே;
இது தன்னை அவதார ரஹஸ்யத்தில் தானும் அருளிச் செய்தான் அன்றே,
ஜென்ம கர்மா ச மே திவ்யம் (‘என்னுடைய பிறவிகளும் பிறவிகளிற் செய்யப்படுகின்ற தொழில்களும்
தெய்வத் தன்மை வாய்ந்தவை,’) என்று?
அதாவது, ‘என்னுடைய பிறவிகள் கர்மம் அடியாக அல்ல; இச்சை அடியாக இருக்கும்.
நாம் பிறவா நிற்கச் செய்தே பிறவாமையும் கிடக்கும்; தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும்;
அப்ராக்கிருத சம்ஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்போம்;
இவற்றுள் ஒன்றை அறிந்தவர்கட்குப் பின்னர்ப் பிறவி இல்லை; நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேண்டுமோ?
ஈர் இறை உண்டோ?’ என்றான் என்றபடி.
ஆக, இறைவன் ஸ்ரீ இராமன், ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் பண்ணிக்கொண்டு எளியனாம்;
ஆன பின்பு, அடைதல் கூடும்; நீங்களும் அவன் ஸ்ரீ கீதையில் நான்காம் அத்தியாயத்தில் அருளிச் செய்தவாறே
உபஜீவித்துக் கொண்டு நின்று, அவற்றை உயர்வதற்கு உரிய சிறந்த நெறியாகக் கொண்டு
அவனை ஆஸ்ரயியுங்கோள் அடைமின்,’ என்கிறார்.

‘நன்று; பிறர்க்கு உபதேசிக்கப் புக்க இவர், தாம் கலங்குதற்குக் காரணம் என்னை?’ எனின்,
அவதாரங்களை முன்னிட்டுக் கொண்டு, அவதாரங்களிலும் நீர்மைக்கு எல்லை நிலமான ஸ்ரீ கிருஷணாவதாரத்திலே இழிந்து,
அது தன்னிலும் பரத்துவத்தோடு ஒக்கச் சொல்லக் கூடிய நிலைகளைக் கழித்து,
நவநீத சௌர்ய நகர க்ஷோபத்திலே அகப்பட்டு, இளமணற்பாய்ந்து ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.
‘ஆயின், பரத்துவத்தைக் காட்டிலும் சௌலப்யம் ஈடுபடுத்துமோ?’ எனின், பரத்துவத்தை நினைந்தார்,
தெளிந்திருந்து பிறர்க்கு உபதேசம் செய்தார்;
எளிமையினை நினைந்தார், ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.

————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

சர்வ ஸ்மாத் பரன் என்று தொடங்கி அனுகூலித்து உஜ்ஜீவிப்பார்க்கு உஜ்ஜீவிக்கவுமாம் ஆயிற்று அவதாரம் தான் இருப்பது
என்னும் அளவும் ஸங்க்ரஹம் -மேல் விஸ்தாரம்-
பல பிறப்பாய் ஒளி வரும் இயல்வினன் -என்றத்தைக் கடாக்ஷித்து சங்கதி –
இரு கை முடவன் என்றது இரு கையாலும் முடவன் -எழுந்து இருக்கவும் மாட்டாதவன் –
பற்றிலன் ஈசனும் என்கிற பாட்டில் -ஆஸ்ரயித்தால் அவன் அவாப்த ஸமஸ்த காணக்காண சர்வேஸ்வரன் -நமக்கு முகம் கொடுத்து
நம்மோடு கலசி இருக்குமோ என்கிற சங்கையிலே அவன் அப்படி இருக்கும் என்றார்
இங்கே சர்வேஸ்வரனாய் இருக்கிறவனை நாம் ஆஸ்ரயிக்கக் கூடாது என்கிற சங்கையிலே
அவன் ஸூலபன்-என்று பரிஹரிக்கிறார் என்று பேதம் –

அவஜா நந்தி மாம் மூடா மானுஷீம் தனுமாஸ்ரிதம் பரம் பாவமஜா நந்த -என்று சிலர் அவமதி பண்ணிக் கொண்டு போகைக்கும்
மஹாத்மா நஸ்து மாம் பார்த்த தேவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா-பஜந்த்ய அநன்ய மனாசோ ஞாத்வா பூதாதி மவ்யயம் என்று சிலர்
அனுகூலித்து உஜ்ஜீவிக்கைக்கும் அடி எது என்கிற சங்கையிலே –
ந மாம் துஷ்க்ருதிநோ மூடா பிரபத்யந்தே நாரதமா-மாயயா அபஹ்ருதா ஞானா ஆஸூரம் பாவம் ஆஸ்ரிதா என்கிறபடியே
அவர்கள் பாக்ய ஹானியும்
யேஷாம் த்வந்தகதம் பாப்பம் நராணாம் புண்ய கர்மணாம் தே த்வந்த்வ மோஹ நிர்முக்தா பஜந்தே மாம் த்ருட வ்ரதா-என்கிறபடியே
அவர்கள் பாக்ய அதிசயமும் அடி என்கிறார் –
இந்த அர்த்தத்தை இரண்டு த்ருஷ்டாந்தங்களாலே தர்சிப்பிக்கிறார்

வேத நல் விளக்கு என்றது வேதங்களுக்கு நிரதிசய பிரகாசகமான தீபம் என்றபடி -திரு வேங்கடமுடையானை சொன்னவாறு –
ஆயர் குலத்திலே ஆவிர்பவித்த மணி தீபம் –குணங்கள் இடைச்சேரியிலே அத்யுஜ்ஜ்வலமான படி —
ஆதித்யனுடைய குலத்துக்கு அத்விதீயமான விளக்கு – ஆதித்யனைப் போலெ இரவு கலாசாதே அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –
பலகாலும் பஜியுங்கோள்-என்றது –
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே என்றும் இறை சேர்மினே -என்றும் அந்நலம் புக்கு -என்றும் இறை பற்றே-இத்யாதிகளைப் பற்ற-

கண்டால் அல்லது என்றது – பயபக்தி ரூப ஞானம் தரிசன சமா நா காரா பண்ணமானால் அல்லது –
காண விரகில்லை -மோக்ஷ தசையில் பகவத் அனுபவ ரூபா பலம் வர விரகில்லை-என்றபடி –
கண்டால் அல்லது பஜிக்க விரகு இல்லை -பஜித்தால் அல்லது காண விரகில்லை-என்றது
தரிசன சமானாகாரமான பக்தி உண்டானால் அல்லாதது இவன் பஜித்தானாக விரகு இல்லை –
இப்படிப்பட்ட பஜனத்தைப் பண்ணினால் அல்லது ப்ராப்ய சித்தி உண்டாகாது என்று தாத்பர்யம் –
தஸ்மிந் த்ருஷ்டே பராவரே -பராவரே -அஸ்மதாதிகளைப் பற்ற பரர்களான ப்ரஹ்மாதிகளைத் தனக்கு சேஷ பூதர்களாக உடையவன்

பர பக்தி யாவது -சாஸ்த்ராதி முகேன அறிந்த விஷயத்தை இப்போதே பெற வேணும் என்கிற இச்சை –
பர ஞானமாவது -ப்ரத்யக்ஷ சாமானாகாரமான மானஸ அனுபவம்
பரம பக்தி யாவது -விஸ்லேஷ அஸஹத்வம் –
பயபக்திர த்ருஷ்டார்த்த ப்ரத்யக்ஷாபி நிவேசனம் -பர ஞானந்து தஸ்யைவ சாஷாத்கார பரிஸ்புட –
புநர் விஸ்லேஷ பீருத்வம் பரமா பக்தி ருச்யதே -என்னக் கடவது இ றே
இனி நித்ய ஸூரிகளுடைய பரபக்தி பர ஞான பரம பக்திகளாவது
உத்தர உத்தரம் அனுபவ இச்சை -பரபக்தி -அனுபவம் பர ஞானம் -அகலகில்லேன் என்கிறபடியே விஸ்லேஷ அஸஹத்வம் பரம பக்தி –
அவதாரம் -இச்சா ஹேது-இச்சா க்ருஹாதீபிமதோரு தேஹ -அஜோ அபிசன்-ஸ்லோகத்தை உட்கொண்டு -அருளிச் செய்கிறார் –
இவனுக்காக தான் பிறந்ததாகையாலே இறை என்கிறது
பரத்வாபேஷயா ஸுலப்யமே ஈடுபடுத்தும் ஆகையால் எத்திறம் என்று மோஹித்தார்

——————

எம்பெருமானுடைய எளிமையினை உபதேசிக்கப் புக்கு, அவன் வெண்ணெய் களவு கண்ட சரித்திரத்தில்-
நவநீத ஸுர்ய சாரித்ரத்திலே – அழுந்துகிறார்.

பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே! —1-3-1-

பத்து-
பக்தி. ‘பத்து என்பது பத்தியைக் காட்டுமோ?’ என்னில்,
‘எட்டினோடு இரண்டு எனுங் கயிற்றினால் மனந்தனைக் கட்டி’ என்னக் கடவது இறே !
ஆகையாலே, பத்து என்று பத்தியைச் சொல்லுகிறதாகும்.
அது தன்னிலும் பரபத்தியை அன்று இங்குச் சொல்லுகிறது; –
பக்தி உபக்ரம மாத்ரத்தையே -பத்தியின் தொடக்கத்தைச் சொல்லுகிறது.
‘பத்தியின் தொடக்கம் என்று இதனை நியமிப்பார் யார்?
அதனுடைய-சரம அவஸ்தையை – முடிவான எல்லையினைக் காட்டினாலோ?’ என்னில்,
அஃது ஒண்ணாது; ‘என்னை?’ எனின்,
இப்போது இங்குச் சொல்லிக் கொண்டு போருகிற இது, குணப் பிரகரணம் ஆகையாலும்,
சர்வேஸ்வரனுக்கு ஓர் -உத்கர்ஷம் -ஏற்றஞ்சொல்லுகை இப்போது இவர்க்கு -அபேக்ஷிதம் -விருப்பம் அல்லாமையாலும்,
தம் தாமை ஒழியச் செல்லாதாருக்கு ஸ்நேஹிக்குமது அல்லாதாருக்கும் உண்டாகையாலும்
(தம்மையே நம்பி வந்து அடைந்தவர்களிடத்தில் தாமும் அன்புடன் இருத்தல் ஏனையோர்க்கும் உண்டு ஆகையாலும்,)
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன -( ‘நண்பன் என்ற பாவனையைக்கொண்டு வந்த
இவ்விபீடணனை நான் ஏற்றுக்கொள்ளாது விடமாட்டேன்,’ )என்னுமவன் ஆதலானும்,-
உபக்ரம மாத்ரத்தையே – பத்தியின் தொடக்கத்தையே சொல்லிற்றாகக் கடவது
மேலும்,ஆஸாலேசம்- ஆசை சிறிது உடையார்க்கும் தன்னைக் கொடுப்பதாக-பகவத் யுக்தியும் யுண்டாயாய் இருந்தே ஆதலானும்,
‘எதிர் சூழல் புக்கு’ என்றும்,
‘என்னின் முன்னம் பாரித்து’ என்றும் விலக்காமை தேடித் திரிவான் ஒருவன் ஆதலானும் மேலதே பொருள்.

உடை-
இந்த அப்ரதிஷேத அத்வேஷ – விலக்காமை பகையாமை மாத்திரத்தையே- கனத்த உடைமையாகச் சொல்லுகிறார்.
(உடைமை – செல்வம்) ‘இவை கனத்த உடைமை ஆகுமோ?’ எனின்,
இவ் வுலகில் இறைவனிடத்தில் பத்தியினைச் செலுத்துகின்றவர்களை‘விண்ணுளாரிலும் சீரியர்’ என்கிறபடியே,
நித்திய சூரிகளைக் காட்டிலும் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார்.
‘இறைவன் நினைத்திருப்பானோ?’ எனின், இவர்கள் பக்கலிலே இவ்வளவு உண்டானால், பின்னை ‘
இவர்களுடைய பாரத்துக்கு எல்லாம் நானே கடவன்,’ என்று இருப்பவன் இறைவன்;
மேலும் இராவண பவனத்தை விட்டு ஆகாசத்தில் கிளம்பின போதே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மி குடி கொண்டபடியினால் அன்றோ,
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மான் (விபீடணனை, ‘ஆகாயத்தை அடைந்த ஸ்ரீமான்’) என்றார்?
லஷ்மனோ லஷமே சம்பன்ன (‘இலக்குமணன் லக்ஷ்மியால் நிறையப் பெற்றவன்’ )என்றார் இளைய பெருமாளை.
இது அன்றோ இவனுக்கு நிலை நின்ற ஐசுவரியம்;
இத்தைப் பற்ற ‘உடை’ என்கிறார். (இது உடைமை என்ற சொல்லின் விகாரம்.)

அடியவர்க்கு –
‘வெறுப்பு – இன்மை மாத்திரம் கொண்டு ‘அடியவர்’ என்னலாமோ?’ எனில்,
இங்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே ‘அடியவர்’ என்கிறார்.
த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம (‘உனக்கு நலிவு சிறிது வந்து இருப்பின்,
சீதையால்தான் எனக்கு என்ன பயன்?’ )என்று, இன்று கிட்டிற்று ஒரு குரங்கை,-
நித்ய ஆஸ்ரிதையான – என்றும் தன்னையே அடைந்திருக்கிற -பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் அன்றோ!
ஆதலால், இறைவனுக்கு-சேஷ பூதராய் – அடியவர்களாய் அதிசயத்தைப் பண்ணுகிறவர்கள்
ஒரு திருவடி, ஒரு திருவனந்தாழ்வான் அல்லர்;
இங்கு, இவ் விலக்காமையினை யுடையவர்களே யாவர். ‘காரணம் என்னே?’ எனின்,
அவர்கள் உள்ள குணத்தை அனுபவித்திருப்பவர்கள், அத்தனையே யாம்;
குணம் நிறம் பெறுவது இவர்கள் பக்கலில் அன்றே!

எளியவன் –
அவர்கள் பாவத்தைப் போக்குதல், புண்ணியத்தைக் கொடுத்தல், தன்னைக் கிட்டலாம்படி இருத்தல் செய்தல் அன்றிக்கே,
அவர்கள் இஷ்ட விநியோக அர்ஹமாய் – விரும்பியவாறு செய்துகொள்ளும்படி தன்னை ஆக்கி வைப்பவன்.
அதாவது, தன்னை ஒழிந்தது ஒன்றைக் கொடுத்தல், தான் இருக்குமிடத்தில் அவர்களை அழைத்துக் கொடுத்தல் செய்யான்;
இமவ் ஸ்ம முனி சார்த்தூல கிங்கரவ் சமுத்பஸ்திதவ் -(‘விஸ்வாமித்திர முனிவரே, உம்மைச் சேர்ந்து சரணம் அடைந்தவர்களாய்
இருக்கிறோம் நாங்கள்; ஆணை இட்ட காரியங்களைச் செய்தோம்; இனி எந்தக் காரியங்களைச் செய்யவேண்டும்?
விரும்பும் காரியத்தைக் கட்டளை இடுங்கள்,’ )என்கிறபடியே,
‘நான் உங்கள் அடியான்; என்னை வேண்டினபடி ஏவிக் காரியங்கொள்ளுங்கள்,’ என்று நிற்பான் என்றபடி மற்றும்,
பரம் பிரம்மா பரம் தாம இத்யாதி (‘மேலான மோக்ஷத்தையுடையவன், பாவங்களை அழிக்கின்றவன், அழிவு அற்றவன்,
ஒளி உருவானவன், பிறப்பு இல்லாதவன், எங்கும் நிறைந்தவன்’ )என்று இவை முதலாக
இறைவனைப் பற்றி பீஷ்மாதிகள் கூறிக்கொண்டிருத்தலைக் கேட்டு அறிவு மிக்கிருந்தான் ஆதலின்-
‘நீ ஒருவன் பத்திக்கு எளியவன் ஆவது என்?’ என்று கேட்க,
பக்த்யா த்வன் அநந்யயா சக்யா-(‘அருச்சுனா! வேறு ஒன்றால் அன்றிப் பத்தியினால் மட்டும் அடையும்படி இவ்விதமாக இருக்கிறேன். )
அதாவது-‘ஒருவன் கறுத்திருக்க ஒருவன் சிவந்திருக்கிறபடி கண்டாயே?
அப்படியே எனக்கும் இது நிலை நின்ற தன்மை,’ என்றான் அன்றே?’ என்றபடி.

‘நன்று; பத்திக்கு எளியன் ஆனாலும், ஸ்வதந்தரன் ஆகையாலே சில சமயங்களில் அரியனாகவும் இருக்கலாமே?’ எனின்,
ஸார்வ பவ்மனான ராஜபுத்ரன் -உலகங்களை எல்லாம் ஆளும் அரசபுத்திரன் ஒருவன்,-
ஷாம காலத்திலேயே அல்ப பொருளுக்காக – ஒரு கால விசேடத்தில் சிறிய பொருளுக்காக – அடிமைப்படுவானாயின்,
பின், தன் செல்வக்கிடப்புக் காட்டி மீள ஒண்ணாதது போன்று,
சர்வேஸ்வரனும்-பக்தி நிஷ்டனுக்கு – பத்தியில் நிலை நின்றவனுக்குத் தன்னை அறவிலை செய்து கொடுத்தால்,
பின்னை, மேன்மை காட்டி அகலமாட்டான்;
கழுத்திலே ஓலைக்கட்டித் ‘தூது போ’ என்னலாம்படி தன்னைக் கையாள் ஆக்கி வைக்கும் .
பக்தி க்ருத்தோ ஜனார்த்தன (‘மக்கள் செய்யும் பத்தியினால், அவர்கட்குத் தன்னை அறவிலை செய்து கொடுக்கின்றான் இறைவன்;
அவ்விறைவனாகிய ஜனார்த்தனனே அவர்கட்கு எப்பொழுதும் கையாளாக இருக்கின்றான்,’) என வருதலும் இங்கு ஓர்தல் தகும்.

‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ எனவே, பத்தி இல்லாதார்க்கும்-உகாவாதாருக்கும் எளியனாக இருப்பனோ?’ எனின்,
இரான் என விளக்குகிறார் மேல்.
பிறர்களுக்கு அரிய வித்தகன்-
பிறர்களாகிறார், ‘இவனைக் கொண்டு காரியம் கொள்ளோம்’ என்று இருக்குமவர்கள்.
வித்தகன்-
ஆச்சரியப்படத் தக்கவன். ‘
இங்கு ஆச்சரியப்பட வேண்டியது என்?’ என்னில்,
யசோதை முதலியவர்கட்கு எளியனாய் இருந்த அந் நிலையில் தானே,
பூதனை சகடாசுரன் இரட்டை மருத மரங்கள் முதலியவர்கட்கு-அநபவீயனாய் -அவமதிக்க முடியாதவனாய் இருத்தல்.
இன்னமும் -பள்ளி கொண்டு அருளா நிற்கச் செய்தே அருச்சுனனும் துரியோதனனும் கூடவர,
அருச்சுனனுக்குத் தன்னைக் கொடுத்து, துரியோதனனுக்குப் பங்களத்தைக் கொடுத்துவிட்டான் அன்றே?
நம் பெரியோர்கள் எம்பெருமானையே உய்வதற்கு உரிய நெறியாகப் பற்ற,
அல்லாதார்-அசேதன க்ரியா கலேபங்களை – தாம் செய்யும் கருமங்களே பயன்களைக் கொடுப்பனவாக நினைந்து,
அக் கருமத் தொகுதிகளை மேற்கோடலைப் போன்றது ஒன்றாகும் -துரியோதனன் நிலை –

ஸ்ரீ ராமாவதாரத்திலும் இராவணன்-ச பரிகரனாய்- படைகளுடன் கூடினவனாய்க் கொண்டு எடுக்கப்புக்க இடத்தில்
நெஞ்சிற் பகையாலே எடுக்க மாட்டிற்றிலன்;
திருவடி தனியனாய் இருந்தும் நெஞ்சில் செவ்வையாலே கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான்;
இங்ஙன் அன்றாகில் ‘இராவணனுக்குக் கனக்க வேண்டும்’ என்றும்,
‘திருவடிக்கு நொய்தாக வேண்டும்’ என்றும் அன்றே? ஆதலால், பொருள் தன்மை இருக்கும்படி இது.
ஹிமவான் மந்தர மேரு (‘இமயமலை மந்தரமலை மேருமலைகளையும், வசிக்கின்ற பொருள்களோடு
மூன்று உலகங்களையும் இரு கைகளால் பெயர்த்து எடுக்க முடியும்;)
போர்க்களத்தில் பரதனுக்கு இளையவன் பெயர்த்து எடுக்கக் கூடாதவன்,’
சத்ரூணாமப்ர கம்ப்யோ அபி லகுத்வ மகமத் கபே (‘இராவணன் முதலிய பகைவர்களால் பெயர்த்து எடுக்கவும் கூடாதவனாக இருந்த
இலக்குமணன், தூய்மையான மனமும் பத்தியும் பொருந்திய அனுமான் குரங்காய் இருந்தும் எளிதாக எடுக்கத் தக்கவன் ஆனான்,’ )

மலர் மகள் விரும்பும் –
இவ் விரண்டுக்கும் அடி இவளுடைய சேர்த்தியே.
புஷ்பத்தில் பரிமளம் – மலரில் மணம் -போலே-மலரை இருப்பிடமாக வுடையளாய்,
அதிலே மணந்தான் ஒருவடிவு கொண்டாற்போலே இருப்பாளாய், நாட்டார் மணத்தை விரும்புவார்களாகில்,
அந்த மணமும் ‘தண்ணீர் தண்ணீர்’ என்னப் பிறந்தவன்,

நம் அரும்பெறல் அடிகள் –
பெறுதற்கு அரிய ஸ்வாமிகள்.
பெரிய பிராட்டியார் விரும்பும்படி இருக்கை போலே காணும் அறப் பெரிய இறைவனுக்கு இலக்கணம்.
ஹ்ரீச்ச தே லஷ்மீச் ச பத்ந்யவ் ( ஸ்ரீதேவியும் என மனைவியர் இருவர்’ )எனக் கூறப்பட்டுள்ளது அன்றே?
அப்ரமேயம் ஹி தத் தேஜ( ‘ஜனகனுடைய குலத்தில் பிறந்த சீதை விரும்பும் கணவனாக எவன் இருக்கிறானோ,
அவனுடைய திறல் வலி அளி முதலிய குணங்கள் அளவிட்டு அறிய முடியாதன,’ )என்பது ஸ்ரீராமாயணம்.
நம் அரும்பெறல் அடிகள் – நாராயண அநுவாகாதிகளோடே சேர, அந்தப் பிரமாணப் பிரசித்தியைப் பற்ற,
‘உளர் சுடர் மிகு சுருதியுள்’ என்றார் முன்னர்;
அந்தச் சுருதியுள் ‘உனக்கு பூதேவியும் அங்குக்கூறிய அந்த இலட்சுமி சம்பந்தத்தைத் தாம் அங்கீகரித்தமை தோன்ற,
‘மலர் மகள் விரும்பும் நம் அடிகள்’ என்கிறார் இங்கு.

இனி, கீழ்ச் சொன்ன எளிமையை உபபாதிக்கிறார் – விளக்குகிறார் மேல்
மத்துறு. . . எத்திறம்
மந்தரத்தைப் பிடுங்கி, கடலில் நடு நெஞ்சிலே நட்டு, நெருக்கிக் கடைந்து, வெளி கொடு வெளியே
தேவர்களுக்கு அமுதைக் கொடுத்து விட்ட பெருந்தோள்களை யுடையவன் அன்றோ
இப்போது ஆயர் சேரியிலே வந்து பிறந்து, வெண்ணெய் களவு காணப் புக்கு, கட்டுண்டு அடியுண்டு நிற்கிறான் என்கிறார்.

மத்துறு கடை வெண்ணெய் –
தயிர்ச் செறிவாலே மத்தாலே நெருக்கிக் கடையப்பட்ட வெண்ணெய்.
கடை வெண்ணெய் என்பது, முக்கால வினைத் தொகை.
‘முக் காலத்திலும் வெண்ணெய் கடைதல் உண்டோ?’ எனின்,
‘முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய்’ என வருதலால் உண்டு என்க.
முக் கால வினைத்தொகை யாயினும், நிகழ் காலத்தில் பொருள் சிறப்புடைத்து;
கடையா நிற்கையில், பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாமல்
‘வெந்தது கொத்தையாக வாயில் இடுமாறு போன்று, கடைவதற்குள் பொறுக்காமல்
நடுவே அள்ளி அமுது செய்த படியைச் சொல்லுகிறார்,’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பார்.

களவினில்-
களவு செய்யும் பராக்கில் நிழலிலே ஒதுங்கிச் சாபலத்தாலே அள்ளி அமுது செய்தான் போலே காணும் –
களவினில்-
களவிடையாட்டத்தில் -சமயத்தில்; களவு செய்யத் தொடங்குஞ்சமயத்திலே அகப்பட்டானாதலின், ‘களவினில்’ என்கிறார்.

உரவிடை யாப்புண்டு –
மார்விடையில் கட்டுண்டு, உரம் – மார்பு; இடை-ஏழனுருபு.
‘பொன் பெயரோன் தனது உரம் பிளந்து’ என்ற இடத்து ‘உரம்’ இப்பொருட்டு ஆதல் காண்க.
‘பெரிய பிராட்டியார் நெருக்கி அணைக்கும் மார்வை யன்றே கயிற்றாலே நெருக்கிக் கட்டக் கட்டுண்டான்?’ என்பார்,
‘உரவிடையாப்புண்டு’ என்கிறார்:
அன்றியே – ‘மிடுக்கையுடைய ரிஷபம் போன்று இருக்கின்றவன் கட்டுண்டான்,’ என்று பொருள் கூறலுமாம்.
உரம் – மிடுக்கு; விடை – ரிஷபம்
உரம் என்பதனை ‘உதரம்’ என்ற சொல்லின் விகாரமாகக் கொண்டு ‘வயிற்றினிடத்தில் கட்டுண்டு’ என்று
பொருள் கூறலும் ஒன்று. உதரம் – வயிறு.
பிள்ளை பெற்றுத் தாமோதரன் என்று பெயரிடும்படி அன்றே கட்டுண்டான்?

தாம் நா சைவோதரே பத்த்வா ப்ரத்யபத்நா துலூகலே ( ‘யசோதையானவள், தான் தாயான பரிவு தோற்ற இவனைக்
களவிலே கண்டுபிடித்து, தாம்பாலே ஓர் உரலோடே அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தினாள்) பொத்தி,
யதி சக்நோ ஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித இத் யுக்த்வாத நிஜம் கர்ம சா சகாரா குடும்பி நீ -என்றும் சொல்லுகிறபடி
‘துரு துருக்கைத் தனம் அடித்துத் திரிந்த நீ வல்லையாகில் போய்க் காணாய்!’ என்று உறுக்கி விட்டால் போக மாட்டாதே இருந்தான் என்றபடி.
‘ஆயின், பராஸ்ய சக்திர் விவிதை ஸ்ரூயதே (இப்படிப்பட்ட இறைவனுடைய சீரிய சக்தி பல படியாகக் கேட்கப்படுகின்றது)-
வரம்பில் ஆற்றலையுடைய இறைவனை ‘வல்லையாகில் போய்க் காணாய்’ என்கைக்கு அடி எது?’ எனின், –
இவளுக்கு எளியதான படியினால் சொல்லுகிறாள்.
எல்லாவற்றுக்கும் காரணமான தான் அன்றோ இப்படிக் கட்டுண்டு இருக்கிறான்?
பிரமன் முதலியோரைத் தன் சங்கற்பத்தாலே கட்டுவதும் விடுவதும் ஆகின்றவன் அன்றோ
இப்போது ஓர் அபலை கையால் கட்டுண்டிருக்கின்றான்? ‘ஆயின், இப்படிக் கட்டுண்கைக்குக் காரணம் யாது?’ எனின்,
த்யக்த்வா தேகம் புனர் ஜென்ம நைதி மாமேதி ‘(எனது அவதாரத்தையும் அவதாரத்தில் நிகழ்த்தும் நிகழ்ச்சிகளையும்
தெய்வத்தன்மை வாய்ந்தவை என்று எவன் அறிகிறானோ அவன் இச் சரீரத்தை விட்டால்
வேறு சரீரத்தை அடைகிறான் இல்லை; என்னையே அடைகிறான்,’) என்கிறபடியே,
நம்முடைய கட்டை அவிழ்க்க இறே தான் கட்டுண்டு இருந்தது –

உரலினொடு இணைந்து இருந்து-
உரலுக்கு ஒரு –வியாபார ஷமதை உண்டாம் அன்று – தொழில் செய்யுந் தன்மை உள்ளதாயின்,
தனக்கு ஒரு தொழில் செய்யுந்தன்மை உள்ளது என்று தோற்ற இருந்தபடி.

ஏங்கிய –
உரலைக் காட்டிலும் வியாவ்ருத்தி – வேற்றுமை- இத்தனையே காணும். அதாவது,
அழப் புக்கவாறே ‘வாய் வாய்’ என்னுமே; பின்னை அழமாட்டாதே ஏங்கி இருக்கும் இத்தனை.

எளிவு-
எளிமை.

எத்திறம்-
பிரானே,
இது என்ன பிரகாரம்? இன்னம் மேன்மை தரை காணலாம்; நீர்மை தரை காண ஒண்ணாதாய் இருந்ததே!
‘உயர்வற உயர்நலம் உடையவன்’ என்கிற மேன்மையிலே போவேன் என்கிறார்.
நியாம்யனாய் -ஏவப்படுகின்றவனாய் இருக்கிற இருப்பில் நியந்தாவாய் ஏவுகின்றவனாய் இருக்கிற இருப்புப்
பேசக் கூடியதாய் இருந்தது என்றபடி.
பேசப் புக்க வேதங்களும் யாதோ வாசோ நிவர்த்தந்தே (‘அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள்
திரும்புகின்றனவோ?’) என்றதும் மேன்மையிலேயே;
‘நிலம் அன்று என்கைக்கும் நிலம் அன்று அன்றே நீர்மை? இவ்வெளிமை ஏனையோர் பக்கலிலும் காணலாமே?’ எனின்,
இத்தனை தாழ நில்லாமையாலே சம்சாரிகள் பக்கல் காண ஒண்ணாது; பரத்துவத்தில் இந்நீர்மை இல்லை.
இது என்ன பிரகாரம் -என்கிறார்
‘ஆயின், உலகத்தில் களவு காண்பாரும் கட்டுண்பாரும் இலரோ? இவன் செயலுக்கு இத்தனை ஈடுபட வேண்டுமோ?’ எனின்,
பெரியவன் தாழ்ச்சி ஆகையாலே பொறுக்க மாட்டுகின்றிலர்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை –

எட்டினோடு இரண்டு -ஸ்ரீ மத் அஷ்டாக்ஷரம் த்வயஞ்ச –
ஏதத் உபய ஜன்ய ஞானம் -விஷய வைலக்ஷண்யாதிந ப்ராவண்ய ரூபமேவ ஹி பவதி -பக்தி உபக்ரமம் என்று
அப்ரதிஷேத அத்வேஷ மாத்ரங்களைச் சொல்லுகிறது-
எதிர் சூழல் -எனக்கு அபிமுகனாகைக்கு ஈடான சூழ்ச்சியோடே அவதாரம் –
என்னில் முன்னம் பாரித்து -எனக்கு முன்னே தான் உள்ள அன்றே தொடங்கிப் பாரித்து-
ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மி -ஞான பல வைராக்யங்கள் –
உத்பபாத கதா பாணிஸ் சதுர்பிஸ் சசிவைஸ் ஸஹ-அப்ரவீச்ச ததா வாக்கியம் ஜாதக்ரோதோ விபீஷண
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மான் பிராதா வை ராக்ஷஸாதிபம -யுத்த -16-
சர்வ பிரியா கரஸ் தஸ்ய ராம்ஸ்யாபி சரீரித லஷ்மனோ லஷ்மி சம்பன்நோ பஹி பிராண இவாபர -பாலா -18-
அவஸ்துப்ரஸ்தா வேஷ்வ சரம பூத் வஸ்து யதஹம் ச ஏவாஹம் சத்சூ வ்யகணிஷி யதீயைர் வர குணை-
நமஸ் தஸ்மை ராமாவரஜமுநயே மஹ்யமதவா மயா யஸ்மாத் தஸ்யா ப்ரதிக்ஷத தயாத்யா வர குணா -என்று
ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த ஸ்லோகத்தை ப்ரசாதிப்பர் –
பிறர் என்றது -கீழ்ச் சொன்ன அத்வேஷம் இல்லாத ஸ்வ யத்ன பரரை-

இரண்டுக்கும் என்றது -எளிமைக்கும் அருமைக்கும்
இவளோட்டைச் சேர்த்தியே எளிமைக்கு அடி
மலர்மகள் -மகள் என்று உத்பத்தி தோன்றுகையாலே -பரிமளத்தின் உடைய பரிணாமம் போலே இருக்கிறாள் என்று விவஷிதம் –
பரிமளம் தான் தண்ணீர் தண்ணீர் என்னப் பிறந்தவள் -என்று சர்வ கந்தனான சர்வேஸ்வரனைச் சொல்லுகிறது என்றுமாம்
ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டனே சர்வாதிகன் என்பதற்கு பிரமாணங்களை அருளிச் செய்கிறார்
கடை வெண்ணெய் -வர்த்தமான நிர்த்தேசத்தால் என்றபடி
முப்போதும் -சிறு காலையும் உச்சியும் அந்தியும்
உரவிடை ஆப்புண்டு -மூன்று அர்த்தங்கள் -நெஞ்சு -மிடுக்கு -உதரம் இடைக்குறை
இணைந்து இருந்து -அசேதனமான உரலோடே சமமாய் இருந்தது என்றபடி –
லோக விலக்ஷணனான இவன் தாழ நிற்கை சம்சாரிகளுடைய உஜ்ஜீவன அர்த்தமாய் இருக்கும் என்கை –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-2-11-

October 28, 2018

நிகமத்தில்
முதல்பாட்டில் -வ்யதிரிக்த விஷயங்களை -வேறுபட்ட பொருள்களை விட்டு, சர்வேஸ்வரன் பக்கல்
ஆத்துமாவைச் சமர்ப்பிக்க இசைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘வ்யதிரிக்த விஷயங்களினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில்,-த்யாஜ்ய அம்சத்தை – விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில் பற்றப் படுகிற விஷயத்தினுடைய நன்மையினை அருளிச் செய்தார்;
ஐந்தாம் பாட்டில், பற்றுமிடத்தில், வரும்-அந்தராய பரிக்ரஹத்தை – தடைகளை நீக்கும் வழியினை அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், அவன்-சங்க ஸ்வ பாவன்- அன்பே உருவமானவன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘சம்பந்த ஞானம் உண்டாகவே பொருந்தலாம்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘வேறு உபகரணம் தேட வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்,’ என்றார்:
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படிச் செய்யவே, -பஜன விரோதிகள்– வழிபாட்டிற்குத் தடையாக உள்ளவை எல்லாம்
தன்னடையே விட்டுப் போம் ’ என்றார்;
பத்தாம் பாட்டில்,-பாசனத்துக்கு ஆலம்பமான மந்திரம் இன்னது என்றார்;
முடிவில், ‘இவைதாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய -ஹிதத்துக்கு ஈடாக -நன்மைக்குத் தக
ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார்.
அன்றி, ‘இவை தாம் ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப் படுவன,’ என்கிறார் என்னலுமாம் -.

—————————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

இது தான் -என்றது கீழ்ச் சொல்லப்பட்ட அர்த்தம் –
வாய் வந்தபடி கை வந்தபடி -இதி கேஷுசித் ஸ்ரீ கோசேஷூ வர்த்ததே -தத் லேகக தோஷா கதம்

————————————–

சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து, ஓர்த்த இப் பத்தே–1-2-11-

சேர்த்தடம் இத்யாதி –
சேர்த்தடம் -என்பத்தை சேர் தடமாக்கி பொய்கைகளோடு பொய்கைகள் சேர்ந்திருக்கின்ற,
அன்றிக்கே தென் குருகூர் என்று ஊர் ப்ரஸ்த்துதம் ஆகையால் -பொய்கைகள் சேர்ந்திருக்கின்ற குருகூர் என்று
‘சேர்’ என்பதனை ஊருக்கு அடைமொழி ஆக்கினுமாம்.
அன்றிக்கே ‘சேர்’ என்பதனை-கிரியா பதமாக – வினை முற்றாகக் கொண்டு,
‘இப் பத்தையும் சேர்’ என்று பயனிலையாகக் கோடலுமாம்.

தென் குருகூர்ச் சடகோபன் சொல் –
ஹிதம் -நன்மை சொல்ல என்று இழிந்து அ ஹிதத்தை -தீமையைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று;
ஆப்த தமரானவர் வார்த்தை என்கை.

சீர்த் தொடையாயிரம் –
‘எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை’ பா இனம் – என்று கவிக்கு உறுப்பாக இருப்பன சில உள; அவற்றைச் சொல்லுதல்;
அன்றிக்கே , உபாசகன் அனுக்ரஹத்தாலே – உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த ஆயிரம் என்னுதல்.

ஆயிரத்து ஓர்த்த இப் பத்தே –
ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்து, சேதனர்க்கு ஹிதமாவது – நன்மையாவது ஏது என்று நிரூபித்துச் சொல்லப்பட்டவை;
அன்றிக்கே ,
சேதனர்க்கு-ஹித தமமாய் – மிக்க நன்மையை அளிக்க வல்லது ஒன்று ஆகையாலே எப்போதும் ஓரப்படுவது எனலுமாம்.
ஒர்த்த இப்பத்தை நெஞ்சிலே சேர் -அநுஸந்தி -என்றவாறு
உபதேசம் பலரைக் குறித்து-உபக்ரமிகையாலே – தொடங்குகையால்,
‘சேர்’ என்பது போன்ற-ஏக வசனங்கள் – ஒருமை இடங்களை எல்லாம்-ஜாதி அபிப்ராயம் –
கூட்டத்தைக் குறித்த ஒருமையாகக் கொள்க.

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஆப்ததமரானவர் -ஸ்ரீ திரு நகரியில் பிறப்பும் ஆப்ததா ஹேது
குற்று எழுத்து நெட்டு எழுத்து முதலான -13-எழுத்தும் / நேர் அசை நிரை அசை -2-அசைகளும் /
ஆசிரிய யுரிச்சீர் நான்கும்- வெண்பா யுரிச்சீர் நான்கும் -வஞ்சி யுரிச்சீர் நான்கும் -பொதுச்சீர் -16-யும் –
ஓர் அசைச் சீர் இரண்டும் -ஆக -30-சீரும்
பந்தம் எனிலும் தளை எனிலும் ஒக்கும் என்றபடி நேர் ஓன்று ஆசிரிய பந்தம் நிரை ஓன்று ஆசிரிய பந்தம் என்கிற ஏழு பந்தங்களும் –
குறளடி சிந்தடி முதலான அடி ஐந்தும் -மோனை இயல்வு எதுகை முரண் அளபெடை என்ற ஐந்திலும்
அடி மோனை முதலாக ஓர் ஒன்றிலே இவ்வெட்டுத் தொடையாக -40-வும்
அந்தாதித் தொடை இரட்டைத் தொடை செந்தொடை என்கிற மூன்றுமாக -43-தொடையும்
பா வானது வெண்பா ஆசிரியப்பா முதலான பாக்கள்
இனமாவது தாழிசை துறை விருத்தம் என்கிற பாக்களின் இனம் மூன்றும் என்று கண்டு கொள்வது

உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த ஆயிரம்
ஆயிரத்து இப்பத்து ஓர்ந்து ஆராய்ந்து சொல்லப்பட்டது -எப்போதும் ஓக்க அனுசந்திக்கப் படுவது-
ஓத்த இப்பத்தை நெஞ்சிலே சேர் -இவ்வர்த்த த்ரயத்தையும் அடைவே அருளிச் செய்கிறார்
சேதன ஹித அர்த்தமாகச் சொல்லப்பட்டது என்று இப்பாட்டு பிரமேயம் –

———————

திருவாய்மொழி நூற்றந்தாதி

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து.-2-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –