Archive for January, 2017

திருப்பாவை –கற்றுக் கறவைக் கணங்கள் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -மூவாயிரப்படி

January 5, 2017

அவதாரிகை –
எல்லாவற்றாலும் அபிஜாதையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
–ஆபி ஜாத்யத்தால் கிருஷ்ணனோடு ஒப்பாள் ஒருத்தி இவள் –

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–

கற்றுக் கறவைக்
எல்லாம் தலை நாகுகளாய் இருக்கை -இதுக்கு ஹேது நித்ய ஸூரிகள் பகவத் ஸ்பர்சத்தால் பஞ்ச விம்சதி வார்ஷிகராய் இருக்குமா போலே
இப்பசுக்களும் கிருஷ்ண ஸ்பர்சத்தாலே கீழ் நோக்கிப் பிராயம் புகுகை –
பவாமித் ருஷ்ட்வாச புநர் யுவவே -என்று பகவத் ஸ்பர்சம் இளகிப் பதிக்கப் பண்ணும் இ றே
கணங்கள் பல-
தனித் தனியே எண்ணி முடியாமை அன்றிக்கே -சமூகங்களும் எண்ணி முடியாது
ரத குஞ்சர வாஜிமான்- என்னுமா போலே -பல என்னும் அத்தனை -ஆத்மாக்களுக்கு தொகை உண்டானால் இ றே பசுக்களுக்குத் தொகை உள்ளது –
கறந்து
ஈஸ்வரன் ஒருவனுமே-சர்வாத்மாக்களுக்கும் நியமனாதிகளைப் பண்ணுமா போலே –
இடைச்சாதியில் மெய்ப்பாட்டாலே அடங்க கறக்க வல்ல சாமர்த்தியம் –
பாலும் நெய்யும் கொண்டு விநியோகம் இல்லாத படி சம்ருத்தம் ஆகையால் முலைக்கடுப்பு கெடக்கறந்து -என்றுமாம் –
செற்றார்
இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார்கள் கிருஷ்ணனுடைய பெருமை பெறாதவர்கள்
திறலழியச்
தேவர்களும் எனக்கு எதிர் அன்று என்று இருக்கும் கம்சாதிகளுக்கும் புகுரா ஒண்ணாத மிடுக்கை யுடையவர்கள் –
சென்று செருச் செய்யும்
எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –
அபியாதா ப்ரஹர்த்தாச்சா -என்று சக்கரவர்த்தி திரு மகனை போலே இவர்கள் வீரம் –
குற்றமொன்றில்லாத –
எடுத்து வர பார்த்து இருக்கும் குற்றம் இல்லை -கையில் ஆயுதம் பொகட்டவர்களை எதிர்க்கும் குற்றம் இல்லை என்றுமாம் –
அழியச் செய்ய நின்றார்கள் என்று கிருஷ்ணனுக்கு முறைப்பட்டால் -செய்தாரேல் நன்று செய்தார் -என்னும் படி பிறந்தவர்கள் என்றுமாம் –
சாது ரேவ சமந்தவ்ய -என்று இ றே அவன் படி –
கோவலர் தம் பொற் கொடியே
ஜனகா நாம் குலே கீர்த்தி மஹாரிஷ்யதி மே ஸூ தா -என்னும் படியே ஊருக்காக ஒரு பெண் பிள்ளை
பொற் கொடியே
தர்ச நீயமாய் இருக்கையும் -பதி சம்யோக ஸூ லபம்வய-என்கிறபடியே பர்த்தா வாகிற கொழு கொம்பை ஒழியவும் ஜீவியாமையும் –
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான் என்று இ றே இருப்பது -புற்றரவல்குல்
தன் நிலத்தில் சர்ப்பம் போலே ஓசிவையும் அகலத்தையும் யுடைய அல்குலை யுடையையாய்
இவர்கள் இத்தனை சொல்லுவான் என் எண்ணில் -யாஸ்த்ரியோ த்ருஷ்ட வத்யஸ்தா -பும்பாவம் மனஸா

புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்

முற்றம் புகுந்து
உத்தரம் தீர மாஸாத்ய -என்கிறபடியே எங்களுக்கு ப்ராப்யமான முற்றத்திலே புகுந்து –
இவர்களுக்கு ப்ராப்யமானபடி என் என்னில் -முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்-என்றும் –
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டி என்றும்
சேஷியானவனுக்கும் ப்ராப்யமான முற்றம் ஆகையால் -சேஷ பூதர்களான எங்களுக்கு சொல்ல வேணுமோ –
புகுந்து கொள்ளப் புகு கிற கார்யம் என் என்ன-
முகில் வண்ணன் பேர் பாடச்
நீ உகக்கும் அவன் அழகிலும் உதார குணத்திலும் ஈடுபட்டு அவன் திரு நாமத்தைப் பாடச் செய்தேயும்
சிற்றாதே பேசாதே
முகில் வண்ணன் என்றவாறே அவ்வடிவை நினைத்து பேசாதே கிடந்தாள்
சிற்றாதே -சிற்றுதல்-உணர்ந்தமைக்கு அடையாளமான சேஷ்டையைப் பண்ணாதே
இவள் சேஷ்டிதமும் வார்த்தையும் தங்கள் கண்ணுக்கும் செவிக்கும் பாக்யம் ஆகையால் இன்னாதாகிறார்கள்
செல்வப் பெண்டாட்டி நீ
உன்னோடே கூடுமது எங்களுக்கு எல்லாம் ஐஸ்வர்யமுமான நீ –
கிருஷ்ண குண அனுசந்தானத்தாலே புஷ்கலையான நீ என்னவுமாம் –
இங்கு கூடு பூரித்துக் கிடந்ததோ என்ன -இல்லையாகில்
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்
எங்கள் பாடே புறப்படாதே உறங்குகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ
அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று திரளோடே அனுபவிக்கும் அனுபவத்தை விட்டு
கைவல்யம் போலே கிடக்கிற கார்யம் என் என்னவுமாம் –
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்
உன்னுடைய உத்தேச்யத்தை பாராதே -எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே
-கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே எதுக்காக கிடக்கிறாய்

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை –நோற்றுச் சுவர்க்கம் -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

January 5, 2017

ஒரு கிடையிலே பல பிள்ளைகள் ஓதா நின்றால் –
ஒருவனுக்கு ஒத்துப் போய் சமர்த்தனும் ஆனால் அவனே
அவர்களுக்கு எல்லாம் நிர்வாஹகன் ஆமா போலே –

இவ்வூரில் பெண் பிள்ளைகள் எல்லாரிலும் கிருஷ்ண சம்ஸ்லேஷத்தில் விதக்தையாய்
எல்லாப் பெண்களையும் கிருஷ்ணன் படுத்துமத்தை கிருஷ்ணன் தன்னைப் படுத்துவாள் ஒருத்தியாய்
அவன் தான் தண்ணீர் தண்ணீர் என்னும் படியாய் வீறுடையாள் ஒருத்தியாய் –
இவர்கள் தாழ்த்ததுக்கு அவளை இட்டு பொறுப்பிக்கும் படி அவன் பக்கலில் பேர் முகமுடையாளுமாய்
கிருஷ்ணன் திரு மாளிகைக்கு அசல் திரு மாளிகையுமாய்
நடுவு இடைச் சுவர் தள்ளி -தண்ணீர் துரும்பு -பிரதிபந்தகம் – பொகட்டு-ஒரு போகியாக தண்ணீர் துரும்பும் அற்று
ஒரு படுக்கையில் அவனும் தானுமாக எப்போதும் அனுபவிப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -என்னாதே-
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்று
அவன் ஆனந்திப்பிக்க இருப்பாள் ஒருத்தி –

(ஸ்வ கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -அறிதல் வித்வான் வேதனம் முக்கியம்
தியானித்து ஆனந்தமயன் என்று அறிந்து பேறு
இதுக்கே மேல் படி ஏஷஹ்யேவா நந்தயாதி-பர கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மம் ஊட்டுகிறது -இதில் ப்ரஹ்மமே காரணம் )

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்
ந பிபேதி கதாசனேதி தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய
“ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி கதாசனேதி” – ப்ரம்ஹத்தின் ஆனந்தத்தை உணர்ந்தவருக்கு பயம் ஏது?

ஏஷ ஹ்யேவாऽऽநந்த³யாதி ।
யதா³ ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நத்³ரு’ஶ்யேऽநாத்ம்யேऽநிருக்தேऽநிலயநேऽப⁴யம்
ப்ரதிஷ்டா²ம் விந்த³தே । அத² ஸோऽப⁴யம் க³தோ ப⁴வதி ।

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற வனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்–அரும் கலனே-பாட பேதம்

பதவுரை

நோற்று–நோன்பு நோற்று
சுவர்க்கம் புகுகின்ற–ஸுகாநுபவம் பண்ணா நின்ற
அம்மனாய்–அம்மே!
வாசல் திறவாதார்–வாசற்கதவைத் திறவாதவர்கள்
மாற்றமும் தாராரோ–ஒரு வாய்ச் சொல்லுங் கொடுக்க மாட்டாரோ?
நாற்றத் துழாய் முடி–நறு நாற்றம் வீசா நின்றுள்ள திருத் துழாய் மாலையை அணிந்துள்ள திரு முடியையுடைய
நாராயணன்–நாராயணனும்,
நம்மால் போற்ற பறை தரும்–நம்மால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றுப் புருஷார்த்தங்களைத் தந்தருள்பவனும்
புண்ணியனால்–தர்மமே வடிவு கொண்டு வந்தாற் போன்றவனுமான இராமபிரானால்
பண்டு ஒரு நாள்–முன் ஒரு காலத்திலே
கூற்றத்தின் வாய் வீழ்ந்த–யமன் வாயில் (இரையாக) விழுந்தொழிந்த
கும்பகரணனும்–கும்பகர்ணனும்
தோற்று–தோல்வி யடைந்து
பெருந்துயில்–(தனது) பேருறக்கத்தை
உனக்கே தான் தந்தானோ–உனக்கே தான் கொடுத்து விட்டானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்–மிகவும் உறக்கமுடையவளே!
அரும் கலமே–பெறுதற்கரிய பாத்ரம் ஆபரணம் போன்றவளே!
அரும் கலனே -அணிகலன் பெறுதற்கரிய பாத்ரம் ஆபரணம் போன்றவளே!-பாட பேதம்
தேற்றம் ஆய் வந்து திற–தெளிந்து வந்து, (கதவைத்) திறந்திடு;
ஏல் ஓர் எம் பாவாய்,

நோற்றுச்
கிருஷ்ணனைப் பிரிந்த போதே பிடித்துக் குளிப்பது நோற்பதாகா நிற்க –
இவள் படி பத்தொன்பதாம் பாஷையாய் இருப்பாள் ஒருத்தி
(செப்பு மொழி 18 உடையாள் -இல்லாத ஒன்றை 19 பாஷை)
ஓக்க நோற்கக் கடவோம் –
ஒக்கக் குளிக்கக் கடவோம் –
கிருஷனோடே ஓக்க அனுபவிக்கக் கடவோம் என்று சொல்லி
நோன்பின் பலம் கை புகுந்து
கிருஷ்ண அனுபவம் பண்ணிக் கரச்சல் அற்று கிடந்து
உறங்க அமையுமோ –

சித்த சாதனையாள் இருப்பாள் ஒருத்தி –
சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்த்தா–ஸர்வ வேத ஸர்வ ஸாஸ்த்ர -எல்லாமே கண்ணன்
யோமா மேவம சம்மூடோஜா நாதி புருஷோத்தமம்-
ச சர்வவித் பஜதிமாம் சர்வ பாவே நபாரதே —
க்ருத க்ருத்யாச்ச பாரத -க்ருத க்ருத்யா பிரதீஷந்தே –
செய்த வேள்வியர் -என்றும்

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெய் வத்து ளாயுமாய் நின்று,
கைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே,
செய்த வேள்வியர் வையத் தேவரறாச் சிரீவர மங்கலநகர்,
கைத்தொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே–5-7-5-

பிரமாணங்கள் சொல்லுகிறபடியே
சித்த சாதனை யாகையாலே உபாயாம்சத்திலே நிர்ப்பரையாய் இருந்தாள்
சித்த சாதனராய் இருப்பிற்கு கர்த்தவ்யம் ஒன்றும் இன்றிக்கே ஒழிகிறபடி
எங்கனே என்னில் –

அவனுடைய ரக்ஷகத்வத்தை யுணர்ந்தால் தனக்கு யத்னம் பண்ணப் பிராப்தி இல்லை –
தன் சேஷத்வத்தை யுணர்ந்தாலும் பிராப்தி இல்லை –
விரோதி பிராபல்யத்தை யுணர்ந்தாலும் ஒன்றும் செய்ய பிராப்தி இல்லை –
இதர உபாயங்களுக்கும் அவன் பிரசாதம் வேண்டி இருக்கையாலே ஒன்றும் செய்யப் பிராப்தி இல்லை

ஆன பின்பு நாராயணனே என்று அவனுடைய உபாய பாவத்தை அனுசந்தித்து வைத்து
விடிவாறே எழுந்து இருந்து குளிக்கக் கடவதோ என்று இருக்கிறாள்-

புறம்பு நின்று எழுப்புகிறவர்களுக்கும் இப்படி இருக்கை அன்றோ ஸ்வரூபம்
என்னில்
அவர்களுக்கு நினைவு உபாயம் என்னும் சப்தத்தை விஸ்வஸித்து இருக்கவோ –
உபேயத்துக்காக வன்றோ உபாய ஸ்வீகாரம் –
சித்த உபாய நிஷ்டருக்கும் ப்ராப்யத்தில் த்வரை இல்லை யாகில் சேதனன் இன்றிக்கே ஒழியும் அத்தனை என்று –
விளம்ப ஹேது இல்லாமையாலே ப்ராப்யத்தில் த்வரையால் பதறுகிறார்கள் –

(சம்பந்தம் உணர்ச்சி தோழி
உபாய துணிவு தாய் நாராயணனே நமக்கே பறை தருவான்
புருஷார்த்த நாராயணா-தலைவி பதற்றம் -இங்கு போற்றப் பறை தருவான் – பதற்றம் –
உபேயத்துக்காகவே தான் உபாயம் பற்றுகிறோம்
உபாயம் அவனே என்று இருந்தாலும் விளம்பம் பொறுக்க மாட்டாமல் பதற்றம் வருமே
அதுக்கும் மேல் உபேயம் நினைக்க பதற்றம் மிக்கு இருக்குமே )

சித்த உபாய நிஷ்டருக்கும் கர்மா ஞான பக்திகள் உண்டு –
இவர்களுடைய க்ரியாகலாபம் கைங்கர்யத்தில் அன்விதமாய் இருக்கும்-
ஞானம் ஸ்வரூபத்திலே அன்விதம்-
பக்தி ப்ராப்ய ருசியில் புகும் –

ஆன பின்பு
பிராப்யத்தில் த்வரை இல்லை யாகில்
அசித்தோடு ஒக்கும் அத்தனை என்கிறார்கள்

சுவர்க்கம் புகுகின்ற-
ஸூகத்தை விடாதே அனுபவிக்கிற -ஸ்வர்க்கம் -என்று ஸூகத்தைச் சொல்கிறது
சாஷாத் ஸூக சப்த வாச்யனாகையாலே கிருஷ்ணனை சுவர்க்கம் என்கிறது –

யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா -என்னக் கடவது இறே
(நின் பிரிவினும் சுடுமோ காடு கம்பர் )

ஆனந்த ரூபனாய் –
ஆனந்த குணகனாய்
ஆனந்தாவாஹனாய இருக்கிற கிருஷ்ணனுடைய அனுபவம் இறே சாஷாத் ஸூகமாகிறது –
(ஸ்வரூபமும் ஆனந்தம் குணமும் ஆனந்தம் -இரண்டையும் கொண்டால் அத்வைதம் போகுமே )

புகுகின்ற-
(வர்த்தமானம் நிகழ் கால வினை )அனுபவத்தில் விச்சேதம் இல்லாமை சொல்லுகிறது –
உபாசன வேளையில் ஸ்மர்த்தவ்ய விஷயத்தினுடைய அனுசந்தானத்தாலே வருவதொரு சாரஸ்யம் உண்டு –
அது தான் காதா சித்கம் ஆகையால் ஹேய சம்பந்தம் அற்று அவ்வருகே போனால்
அவிச்சின்னமாக அனுபவிப்பதொரு அனுபவம் உண்டு –
அது இங்கேயே கை புகுந்து இருக்கை

வம்மனாய்
அழகிதாக இது திரளுக்கு ரஷகை யானாய் –
நீ ரக்ஷகை யாக நாங்கள் குழைச் சரக்கான படி என் —
எங்களை கிருஷ்ணனோடு அனுபவிப்பித்து –
அவ்வனுபவம் உன் முலையோடும் தோளொடும் அணைத்தால் போலே இருக்க வேண்டாவோ

1-ஸம்ஸரவே மதுரம் வாக்கியம் -என்கிறபடியே
இவர்கள் பேச்சில் இனிமையாலும் –

2-ப்ரகர்ஷேண அவ்ருத்தாச என்று
இவர்களைக் கண்ட ஹர்ஷத்தாலே விக்கி வார்த்தை சொல்ல மாட்டாமையாலும்

3-தங்கள் அடியேனான என்னை –
தாய் -என்று பழி விடுவதே -என்று ஸ்வரூபத்தை அனுசந்திக்கையாலும்

4-இவர்கள் கிருஷ்ண அனுபவம் பண்ணுகிறோம் என்று பழி இடா நின்றார்கள் –
இவ்வளவிலே ஓன்று சொல்லுவோமாகில் –
இவர்கள் சொன்னதுக்கு இசைந்து மதியாமல் உத்தரம் சொன்னோம் ஆவுதோம் என்று பேசாதே கிடந்தாள் –

இவள் நினைவு அறியாதே
தாங்கள் புறம்பே நின்று துவழுகிற துவட்சி பொறுக்க மாட்டாமையாலே

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்-
என்கிறார்கள் –

வாசலைச் செம்மினால் வாயையும் செம்ம வேணுமோ –
கண்ணைப் பட்டினி கொண்டாவோ பாதி செவியையும் பட்டினி கொள்ள வேணுமோ –
ஐஸ்வர்யம் விஞ்சினால் பந்துக்கள் ஆர்த்தர் ஆனால் ஏன் என்னலாகாதோ-
படு குலை அடித்தால் தண்ணீர் வார்த்தால் ஆகாதோ
போகத்தைத் தடுத்தால் எங்கள் சத்தையையும் அழிக்க வேணுமோ –

மாற்றமும் தாராரோ-
உன் உடம்பைக் கிருஷ்ணனுக்கு கொடுத்தால்
எங்களுக்கு பேச்சாகிலும் தந்தால் ஆகாதோ –
கிருஷ்ணனை அருக்கினால் உன்னையும் அருக்க வேணுமோ

உன் சரக்குத் தரப் பார்த்திலை யாகில் எங்கள் சரக்கு தந்தால் ஆகாதோ
உன்னுடைய கிருஷ்ணனைத் தாரா விட்டால் எங்களுடைய உன்னைத் தந்தால் ஆகாதோ

(திருக்கோளூருக்கு தனது ஜீவனம் தேடிப் போன பராங்குச நாயகி என் ஜீவனம் பரிக்க வேண்டுமோ
ராமனை அன்றி மற்று ஓன்று அறியாத பரதனை அன்று மற்று ஓன்று அறியாத
சத்ருக்கனன் நிலை தானே இவர்களது )

மாற்றமும்
மதுரா மதுரா லாபா -என்று
இவள் பேச்சுக்கு அவனும் தோற்று இறே இருப்பது –
இப்படி இவர்கள் பழி இடா நின்றால் ஒரு உத்தரம் சொல்லி யாகிலும் பிழைப்போம் என்று
நீங்கள் சொல்லுகிற பழிக்கு அவன் இங்கு உண்டோ என்ன

நாற்றத் துழாய் முடி
நீயும் மறைத்து உன் களவுக்கு அவனும் பெரு நிலை நின்றால்
கோயில் சாந்தை உன்னால் ஒளிக்கப் போமோ –
அன்றி மற்றோர் உபாயம் என் (குட்ட நாட்டுத் திருப்புலியூர் மேல் இவள் நேர் பட்டதே )-என்னும் படி
மாளிகைச் சாந்தை மறைக்கப் போமோ –

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-

இப்போது அவன் உண்டாக வேணுமோ -அவன் ஒருக்கால் அணைத்து விட்டால் நூறு குளிக்கு நிற்கும்
நாம் எல்லாரும் ஓக்க இப்போதே எழுந்து இருந்து போந்த பின்பு படுக்கையிலே சாய்ந்தேன்
அந்தியம் போதே பிடித்து வாசலைப் பற்றிக் கொண்டு நின்றி கோளே-
கட்டும் காவலுமாய் இருக்கிற வாசலிலே புகுரப் போமோ அவனுக்கு என்ன –

நாராயணன்
எங்களை போலே கதவு திறக்கும் தனையும் பார்த்து இருக்க வேணுமோ அவனுக்கு
அவனுக்கு உன் பக்கல் புகுந்தால் புறப்பட வன்றோ வழி அரிது –

நாராயணன்
ஜீவ த்வார வன்றோ அநு பிரவேசம் –
விட்டுப் போகாதார் பேறு வன்றோ இது
உகவாதார்க்கும் சத்தையை நோக்கி உகந்தார்க்கு வத்சலனாய் இருக்குமவன் அன்றோ –
ஆசைப்பட்ட உன்னை விடுமோ –
வியாப்திக்கு பிரயோஜனம் வேண்டிய இடத்தே ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ
(முன்பே எங்கும் வியாபித்து இருந்தாலும்
எங்கும் உளன் கண்ணன் என்றதும் ஸ்புரித்துக் காட்டினான் அன்றோ )

நாற்றத் துழாய் முடி நாராயணன்
ஆசைப் பட்டாரை ரஷிக்கைக்கு தோள் மாலை இட்டு இருக்கிறவன் அன்றோ
(தீஷிதம் விரதம் சம்பன்னம் )

பேசாதே கிடக்கில் வாய் திறந்திலள் -என்னா நின்றாள்
வாய் திறக்கில் உத்தரம் சொல்லிற்று என்பார்கள் என்று சொல்லி
உறங்குவாரைப் போலே கிடந்தாள்

நம்மால்
வெறுமையே பச்சையான இடைச்சிகளுக்கும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற தார்மிகன்
(நம்முடைய மால் பித்தன் )

நம்மால்
அவனுக்கு ஆகாதார் உண்டாய் முடிந்தான் அல்ல கிடீர்-
ஜென்ம விருத்தாதிகள் ஏதேனும் அமையும் கிடீர்

போற்ற
இவர்கள் குடிப் பிறப்பு இருக்கும் படி –
பல்லாண்டு என்று இருக்குமவர்கள் இறே –
இவர்கள் ஆஸ்ரயணம் உபாயம் அன்று

போற்ற
செய்ய வேண்டுவது பெரிதாய் முடிந்தான் அல்லன் (கும்ப கர்ணன் )கிடீர்

பறை தரும்
உக்கமும் தட்டொளியும் உன் மாணாளனையும் தந்து

புண்ணியனால்
தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியில் தலை கீழாக விழுந்து சாவாரைப் போலே

புண்ணியனால்
1-அத்வேஷம் மாத்திரம் உடையோருக்கு தன்னைப் பெறுகைக்கு ஸூஹ்ருதமும்
2-ருசி ஜனகனும்
3-உபாயமும்
4-ப்ராப்யனுமாய் –இருக்கிறவனாலே –

(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ
லாவண்யம் பூர்ணம் —ஆச்சார்ய ஹிருதயம்–162
ருசி விவசர்க்குப் பாதமே சரணம் ஆக்கும் ஒவ்தார்யம்
வானமா மலையிலே கொழுந்து விடும் —ஆச்சார்ய ஹிருதயம்-163
களை கண் அற்றாரை உருக்கும்மாதுர்யம்
குடமூக்கிலே பிரவஹிக்கும்–ஆச்சார்ய ஹிருதயம்-164)

ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்றது புறம்பாம் படி
யதிவா ராவண ஸ்வயம் -என்கிறபடி
ரீபூணாம் அபி வத்சலரானவராலே கிடீர் முடிந்தது

புண்ணியனால்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம்

பண்டொருநாள்
முன்பு உன்னைப் போலே உணராதே நோவு படுத்தினான் ஒருவன் உண்டு காண்

ஒரு நாள்
உணர்ந்திலன் என்று ஒரு கால் கேட்டு இருந்தோம் –
இன்று அனுபவியா நின்றோம்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த
தான் சிறை இட்டு வைத்த ம்ருத்யுவினுடைய ஆஸ்யத்திலே-
வாயிலே விழுந்த புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த
பதார்த்த தரிசனத்துக்காக ஏற்றின விளக்கில் விட்டில் புக்கு முடிந்து போமா போலே
இவன் திரு உள்ளத்தால் அவன் அநர்த்தத்துக்கு நினைவில்லை என்கை –

கும்பகர்ணனும்
உறக்கத்தில் தலையானவனும் உனக்குத் தோற்று தன் உறக்கத்தையும் தானே தந்து போனானோ –
நீயும் அவனுமாக சமயம் பண்ணி உறங்கப் புக்கு நீ ஜெயித்த பின்பு
நான் இதைக் கைக் கொள்ளுவன் அல்லேன் என்று விட்டானோ –
ஸ்ரீ பரசுராம ஆழ்வானை வென்று பெருமாள் அவன் கையில் வில்லை வாங்கினால் போலே –
நீயும் அவனை வென்று நித்திரையைக் கைக் கொண்டாயோ –

பெரும் துயில் –
அவன் அளவோ உன்னுடைய நித்திரை –
அவனதோ துயில் -உன்னதோ பெரும் துயில் –

அவனுக்கு ஆறு மாசம் உறங்குகையும்
ஆறு மாசத்துக்கு ஒருக்கால் உணர்ந்து இருக்கையும் என்று ஒரு வியவஸ்தை யுண்டு இறே

அங்கனம் ஓன்று இல்லையோ உனக்கு –
நீ கால தத்வம் உள்ளதனையும் உறங்குகிறாய் அன்றோ –
இவள் அரை க்ஷணம் புறப்படாது ஒழிய நெடும் காலமாய் தோற்றுகிறது இவர்களுக்கு

அவன் ஒருத்தியினுடைய பிரிவுக்கு ஹேது பூதனனாம் அத்தனை இறே
நீ ஓர் வூராகப் பிரிக்கைக்கு ஹேது பூதையாய் உறங்குகிறாய் இறே

ந ஷமாமி என்கிற அஸஹ்ய அபசாரம் பண்ணினவனை அரை க்ஷணம் உணராதே இருக்கிற
நமக்கு ஒப்பாகச் சொல்லா நின்றார்கள் என்று
இவர்களுக்குச் சென்று முகம் காட்ட வேணும் என்று துணுக் என்று தான் உணர்ந்தமை தோற்ற –
கிருஷ்ண கிருஷ்ண என்றாள்

ஆற்ற வனந்தல் உடையாய்
இது ஒரு உணர்த்தி இருந்த படி என் –
எங்களுக்கு அங்கே (நந்த கோபன் வாசலில் ) போய் துயில் எழப் பாட வேணுமோ –
நீ உணரும் படி காண அமையாதோ –

ஆற்ற அனந்தல்
ஆர்த்த த்வனி கேளாத படி அனந்தலினுடைய மிகுதி –
ஜாலக ரந்தரத்தாலே (ஜன்னல் ஓட்டை வழியே ) இவள் உணர்ந்த படியைப் பார்த்தார்கள்
தங்கள் கோஷ்ட்டிக்கு நாயக ரத்னம் போலே இருந்தாள் –

அருங்கலமே
என்கிறார்கள் –
எங்களுக்கு எல்லாம் ஸீரோ பூஷணம் அல்லையோ நீ –
ஒரு ஹாரத்தைப் பண்ணி அதிலே ஒரு ரத்னத்தை அழுத்தினால்
அந்த ரத்னம் அந்த ஹாரத்தை விளக்குமா போலே
இத் திரளை (ச தனம் )ச நாதம் ஆக்கப் பாராய்

அரும் கலமே
எங்களுக்கு பெறுதற்கு அரியவள் அல்லையோ நீ –
அவள் புறப்பட
அவனும் ஒக்கப் புறப்பட்டு
தங்களைத் தலை மேலே கொள்ளும் என்று இருக்கிறார்கள் –

இவர்கள் ஆர்த்தியைக் கேட்டு துணுக் என்று வர புக்காள்-

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-
பயப்பட்டு மேல் நிலங்களில் நின்று தடுமாறாதே வந்து இழிஞ்சி திற

அங்கன் அன்றிக்கே
வூராகத் திரண்டு கிடக்கிறது –
அவர்களில் உன்னையும் நியமிக்க வல்லார் உண்டு —
அவர்கள் முன்னே படுக்கையில் சாய்ந்த படியே வராதே –

உன்னைப் பேணிக் கொண்டு ஸதஸ்யையாய் வந்து திற –

சாப்ரஸ் கலந்தீ –ஜகமா தாரா லஷ்மண சன்னிதானம் -என்னும் படி வராதே கொள்-

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -தூ மணி மாடத்து -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

January 4, 2017

(பேறு தப்பாது என்று துணிந்து உறங்கும் கோபிகை இவள்
ததஸ்த ஸத்ருசம் பவத் -என்று இருப்பவள்
ஆகவே தூக்கம் விரித்து பாதி பாசுரம் -இதில்
பேற்றுக்குத் த்வரிக்கும் கோபிகள் வெளியில்
லோக நாத மாதவ பக்த வத்சலன் -அங்கு
மா மாயன் மாதவன் வைகுந்தன் இங்கு
ஸ்ரீ யபதித்தவமே பரத்வத்துக்கும் ஸுலபயத்துக்கும் நிதானம்
எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே -ஆனந்த மயனான ப்ரஹ்மத்தைச் சொல்வதால் )

பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் எல்லாரும் திரண்டு –
உன்னை ஒழிந்தார் அடங்கலும் இங்கனம் வந்து கிடக்க –
கிடந்து உறங்குவதே என்று பழி இட்டு எழுப்புகிறார்கள்

புறம்பு நிற்கிறவர்கள்
இளைய பெருமாளை போலேயும் –
முமுஷுக்களைப் போலேயும்

உள்ளுக் கிடக்கிறவள் –
நித்ய சித்தரைப் போலேயுமாய் –
மைத்துனமை முறைமை யுடையாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-

பதவுரை

தூ மணி மாடத்து–பரிசுத்தமான மாணிக்கங்கள் அழுத்திச் சமைத்த மாளிகையில்
சுற்றும்–நாற் புறமும்
விளக்கு எரிய–விளக்குகள் எரியவும்-மங்கள தீபங்கள் ஒளி விடவும் –
தூபம் கமழ–(அகில் முதலியவற்றின்) வாசனைப் புகைகள் மணம் வீசவும்,
துயில் அணை மேல் – படுத்தாரைத் தூங்கப் பண்ணும் மென்மையான படுக்கையின் மீது
கண் வளரும்–நித்திரை செய்யா நின்ற,
மாமான் மகளே–அம்மான் பெண்ணே!
மணிக் கதவம்–மாணிக்கக் கதவினுடைய
தாள்–தாழ்ப்பாளை
திறவாய்–திறந்திடுவாயாக,
மாமீர்–அம்மாமீ!
அவளை–(உள்ளே உறங்குகிற) உன் மகளை
எழுப்பீரோ–எழுப்ப மாட்டீரோ?
உன் மகள்;–உன் மகளானவள்
ஊமையோ–வாய்ப் புலன் இல்லாதவளோ?
அன்றி–அல்லாமற் போனால்
செவிடோ–செவிப் புலன் இல்லாதவனோ? (அன்றி)
அனந்தலோ–பேருறக்க முடையவளாயிருக்கின்றாளோ? (அன்றி)
பெரு துயில்-பெரிய படுக்கையில்
ஏமம் -இரவு –அதிரடியான இன்பம் -தியானத்தால் -பெரிய தூக்கம் -கலக்கம் -மயக்கம் -பைத்தியம் போல் -பல பொருள்கள்
ஏமப் பட்டாளோ–காவலிடப்பட்டாளோ? (அன்றி)
மந்திரம் பட்டாளோ–மந்திர வாதத்தினால் கட்டுப் படுத்தப் பட்டானோ?
மா மாயன்–‘அளவிறந்த ஆச்சரியச் செய்கைகளை யுடையவனே!’
மாதவன்–‘திருமகள் கேள்வனே!’
வைகுந்தன்–‘ஸ்ரீ வைகுண்ட நாதனே!’
என்று என்று–என்று பலகால் சொல்லி
நாமம் பலவும்–(எம்பெருமானுடைய) திரு நாமங்கள் பலவற்றையும்
நவின்று–(வாயாரக்) கற்றோம்;
(இனியாகிலும் உன் மகள் உணரலாகாதா?)
ஏல் ஓர் எம் பாவாய்!

தூ மணி மாடம்
நிர் தோஷங்களான ரத்னங்களாலே செய்த மாடம் —
இவர்கள் விரஹ தாபம் தீர சுபாஸ்ரயமாக அனுசந்திக்கிறார்கள் –

ஆழ்வான் -ஹிதாம்சத்துக்கு ஒரு வைஷ்ணவனுடைய க்ருஹ யாத்திரையை
அனுசந்திக்க அமையும் -என்றால் போலே
இவர்களும் இவளுடைய மாளிகையின் அழகை அனுபவிக்கிறார்கள்

துவளில் மா மணி மாடம் -என்று எடுத்துக் கழிக்க வேண்டாம் —
அது ஜீவாத்மாவினுடைய அபஹத பாப்மாதிகளைப் போலே –
இது பரமாத்வானுடைய அபஹத பாப்மாதிகளைப் போலே –

(அபஹத பாப்மா
விஜர:
விம்ருத்திஹு
விசோ:
விதி விஸ்ச்ச:
அதி பாஸ:
ஸத்யகாம:
ஸத்ய ஸங்கல்ப:)

அங்கு ப்ரத்வம்ஸா பாவம் –
இங்கு ப்ராக பாவம் –

(ப்ராக் அபாவம் -ப்ரத்வம்ச அபாவம் அத்யந்த அபாயம் அந்யோன்ய அபாவம் -நான்கும் உண்டே )

அபஹத பாப்மாத்வாதிகள் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கு உண்டாய் இருக்கச் செய்தே
ஹேய சம்பந்தார்ஹமாய் இறே இவன் வடிவு இருப்பது –
ஹேய பிரதிபடம் ஆகையால் அநர்ஹமாயே இருக்குமவன் –

இவ்வூரில் கழிந்த ரத்தினங்கள் கொண்டு போலே காணும்
திருத் துலை வில்லி மங்கலத்தில் மாளிகைகள் செய்தது –
ராஜாக்கள் அந்தப்புரத்தில் கழித்தவை கொண்டு இறே தங்களுக்கு மாளிகைகள் செய்வது
ஸ்தந் அந்தபுரத்வாரம் –

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி நாடி –
உகந்து அருளினை நிலம் எல்லாம் ஒரு குடியிருப்பு உண்டு இவளுக்கு –
மாலாகாரர் அகம் தன்னது இறே –
பிரசாத பரமவ் நாத மம கேஹம் உபாகதவ் –

உபய விபூதி உக்தனாகையாலே ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் –
அத்தையும் மேலிடும்படியாய் இருக்கும் தண்ணளி (பிரசாதம்)-
ஆஸ்ரயம் அதுவாகையாலே கழிக்க உண்ணாமல் கிடக்கிறது நாதத்வம்

சுற்றும் விளக்கெரியத்
இது ஒரு சம்பத்தே -ஒரு கோடி விளக்கு இறே புறம்பே நின்று புகைகிறது –
புறம்பு நிற்கிற நம்முடைய ஹிருத்யங்கள் இருண்டு கிடக்க
உள்ளுக்கு விளக்கு எரிகிறது வெறுமனே அன்று இறே
கிருஷ்ணன் சன்னிஹிதனாக வேணும் இறே –
திருச் சித்ர கூட பரிசரத்திலே-பிராட்டியைக் கைப் பிடித்துக் கொண்டு
பெருமாள் உலாவினால் போலே
இவள் கையைப் பிடித்துக் கொண்டு கிருஷ்ணன் உலாவும் இடம் இறே –
அவ்வோபாதி இடம் எங்கும் படுக்கைகளும் விளக்குமாய் கிடக்கிற படி

எரிய
ப்ரகாசாவஹம் அன்று -மங்களாவாஹம்-
இவர்கள் புறம்பே நின்று மணிக் கதவம் தாள் திறவாய் -என்கிறவர்கள்
உள்ளே எரிகிற விளக்கு அறிந்த படி என் என்னில் –
மாணிக்கக் குப்பியில் அகவாயில் உள்ளது நிழலிட்டுத் தோற்றுமா போலே
தூ மணி மாடம் ஆகையால் உள்ளே எரிகிற விளக்கு தோற்றும் இறே

தூபம் கமழத்
பரிமளம் ஸஹித்து இருந்தது வெறுமனே அன்று இறே –
விரஹ தாபம் இல்லாதார்க்கு பரிமளம் பொறுக்கும் ஆகாதே –
சீரூற்ற அகில் புகை(திருவாய் -9-9 ) -என்னும் படி இறே இவர்கள் தசை –

கமழ
கண்ணுக்கு புகை இன்றிக்கே பரிமளமேயாய் இருக்கிறபடி

கமழ -கண் வளரும் –
பரிமளம் சிறிது குறையில் கண் உறங்காது ஆகாதே

துயில் அணை மேல் கண் வளரும்
நம்முடைய நெருப்பு சிலர்க்குப் படுக்கை யாவதே –
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி -(திருவாய்-9-9-4)
இருவருக்குப் படுத்த படுக்கையில் ஒருத்திக்குப் பொருந்தும் போது அவனும் அங்கே உண்டாக வேணும் இறே

துயில் அணை
படுக்கை தான் விரஹார்த்தரையும் உறக்க வற்றாய் இருக்கை –
நஞ்சரவில் துயில் அமர்ந்த(திருநெடும் -12 )என்னுமா போலே

கண் வளரும் –
இளைய பெருமாளை போலே உறங்காமைக்கு நாங்களும்-

அபிமத லாபம் அவனால் செய்யலாகில்-இவள் பதறுகிறது என் என்று இருந்தாள் அவள் –
உபேயம் அவனே யாகில் இவள் கிடந்து உறங்குகிறது என் என்று இருந்தார்கள் இவர்கள் –

கண் வளரும்
உறங்குவார்க்கு பாத சம்வாஹிநிகள் வேண்டாவோ –
உள்ளுக்குப் புக்காலும் இதாகாதே செய்யப் பார்க்கிறது
ஆத்மாவுக்கு ஞானானந்தங்கள் அன்று நிரூபகம் சேஷத்வமே –

கண் வளரும் –
பகவத் விஷயத்தில் அவகாஹித்தால் கௌரவதை தோற்றச் சொல்ல வேணும் இறே
பட்டருக்கு சிலர் -தொண்டனூர் நம்பி திருவடி சார்ந்தார் என்று விண்ணப்பம் செய்ய –
அவர் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்து போந்த படிக்கு –
திரு நாட்டுக்கு நடந்தார் என்று சொல்ல வேண்டாவோ -என்று அருளிச் செய்தார் –
நம்பி ஏறு திரு உடையார் தாசர் இடையாட்டமாகவும் நஞ்சீயர் இப்படியே அருளிச் செய்தார்-

மாமன் மகளே
ஸ்வாமிநியாயும் –
தோழியாயும் -அனுபவித்தது ஒழிய
ப்ரக்ருதி சம்பந்த்தாலும் அனுபவிக்கிறார்கள்

மாமன் மகளே -என்று
இட்டீடு கொள்ளுகைக்கு விட ஒண்ணாத முறை கட்டிக் கொண்டு சொல்கிறார்கள் –
திருவாய்ப்பாடியிலே ஒரு பிரகிருதி சம்பந்தம் தனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக ஆண்டாள் ஆசைப்பட்ட படி –
பகவத் சம்பந்திகளுக்கு எல்லாம் அடிக் கழஞ்சு பெற்று இருக்கிற படி

(பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பை விட இந்த உறவில் ஆசை கொள்வது
தனக்கு உஜ்ஜீவன ஹேது என்பதாலேயே )

அது தானும் ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே ஸகா என்று
பொறுப்பேத்திக் கொள்வதொரு சம்பந்தம் ஆக வேணும் –
(கண்ணன் அர்ஜுனன் விஷயத்தில் கண்டோமே இந்த உறவின் ஏற்றம் )

நீங்கள் ஆர்த்தைகளாய் பதறி வருவுதி கோள் என்னும் இடம் அறிந்து
எந்திரத்தாலே திறக்கலாம் படி பண்ணிக் கொண்டு கிடந்தேன்
திறந்து கொண்டு புகுருங்கோள் என்ன

மணிக் கதவம் தாள் திறவாய்
மணி மாட மாளிகை யாகையாலும் –
மணிக் கதவாகையாலும்-
சுவருக்கும் கதவுக்கு வாசி தெரிகிறது இல்லை –
நீயே திறவாய் என்கிறார்கள்
இவர்கள் தான் திறந்து நின்றாலும் சிலர் புகுர இடவல்லது புகுரார்கள் காணும்

மணிக் கதவம் தாள் திறவாய் –
துரியோதனன் நீருக்கும் ஸ்படிக மண்டபத்துக்கு வாசி அறியாதே தடுமாற
திரௌபதி சிரித்தால் போலே மைத்துனமை கொண்டாடி சிரிக்க ஒண்ணாது –

புறம்பு உள்ளார்க்கு உள்ளுக்கு உள்ளவை பிரகாசிப்பது போலே
உள் உள்ளார்க்கு புறம்புள்ளார் ஆர்த்தி தெரியாமை இல்லை இறே
இவர்கள் ஆர்த்திகளாய் வாசலில் நின்று துவள –
இவள் வாய் பேசாதே கிடந்து உறங்குவதே -என்று ஹிருதயத்தில் இரக்கம் முகத்திலே தோற்றும்படியாய்
நீ ஸ்வ பிரயோஜன பரையாய்க் கிடப்பதே என்று மகளை சொல்ல உபக்ரமித்தமை தோற்ற இருந்தாள் தாயார் –

மாமீர்-
என்கிறார்கள் –
அவள் திருத் தாயார் என்று சம்பந்தி சம்பந்திகளும் இவர்களுக்கு உத்தேச்யராய் இருக்கிற படி –
உள்ளுக் கிடக்கிறவள் உகப்பு தாயார் அளவும் சென்றபடி —

அடிகளையே நினையும் அடியவர்கள் தம் அடியான்(பெரிய திருமொழி ) -என்றும்
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்(திருவாய்) என்றும் –
சொன்னபடியே
அன்னையும் அத்தனும்-(பெரிய திருமொழி -3-7 -கள்வன் கொல் )என்று இறே இவள் இருப்பது –

அவளை எழுப்பீரோ
எங்கள் ஆர்த்திக்கு உணராதவன்
உம்முடைய இரப்புக்கோ உணரப் புகுகிறது –
இவ்வளவிலும் உணரக் காணாமையாலே -சிவிட்கிட்டு

உன் மகள் தான்
என்கிறார்கள் –
பிராட்டி பிரணய கோபம் சக்கரவர்த்தி அளவும் மேலிட்டு பிது நிவேசம் என்றால் போலே
அவள் பக்கல் சீற்றம் இவ்வளவும் வர அசலிட்டு-
உன் மகள் -என்கிறார்கள் –

(பிது நிவேசம் -அப்பா ஆணை நிறைவேற்றி திரும்பி அப்பா போல் அழகிய பெண்களை மணம் புரிந்து வாழட்டும் –
என்று ப்ரணய கோபத்தால் திருவடி இடம் – மாமனார் என்று சொல்லாமல் -பிரித்து அருளிச் செய்தது போல் )

ஊமையோ
வாக்ய வ்யவஹார யோக்யதை இல்லையோ –
ஆர்த்தரை ஐயோ -என்ன ஒண்ணாத படியோ செல்லுகிறது

அன்றிச் செவிடோ
ஊமைக்கும் கேட்டு வந்து திறக்கலாம் –
அதுக்கு மேலே செவியில் துளை இல்லையோ
ஆர்த்தைகளான எங்களுடைய சொல் கேளாத படி அந்நிய பரையோ-
அதுக்கும் அங்கேயோ விஷயம் –

(காதுக்கும் வாயுக்கும் -ராமன் பின்னே போனதே சக்ரவர்த்தி கண்கள் அதே போல் )

வனந்தலோ
கிருஷ்ணனுக்கு நெடும் போது ஆடல் கொடுத்து படுக்கையிலே சாய்ந்தது இப்போதோ –
நெஞ்சுக்கும் விஷயம் அங்கேயோ –

ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
எங்களை உறங்காத படி பண்ணினால் போலே இவளையும் உணராத படி காவல் இட்டார் உண்டோ —
நாங்கள் புக்கு உணர்த்த ஒட்டாத வேளையிலே நெடும் போது உறங்கும் படி மந்த்ர பத்தை யானாளோ-
உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ(2-4) என்று
அவனுடைய அம்மான் பொடி பிரசித்தம் இறே –

நீங்கள் இவள் பிரகிருதி அறிந்தால் இங்கண் அல்ல காணும் கோள் உணர்த்துவது
தென்றலும் சிறு துளியும் போலே இவளுக்கு திரு நாமங்கள் சொல்லி கோள் -என்று
திருத் தாயார் சொல்ல

(தீர்ப்பாரை -வண் துவாரபதி மன்னனை ஏத்துமின் –
ஏத்தாமலே எழுந்தாள் அன்றோ -அந்த சப்தம் காதில் விழுந்ததும் )

பல் பன்னிரண்டும் காட்டினோம் காண் என்கிறார்கள் –
நீங்கள் சொன்ன திரு நாமங்கள் எவை என்ன –

மா மாயன்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டு
அவர்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம் படி பவ்யனாய் இருக்குமவன்-

மாதவன்
அந்த ஸுலப்யத்துக்கு குருகுல வசம் பண்ணின இடம்

(சுவையன் திருவின் மணாளன் –
அவள் இடம் கற்ற சுவை ராஸிக்யம் -குருகுல வாஸம் )

வைகுந்தன்
பெண்களையே அன்றிக்கே ஆண்களையும் அடிமை கொண்டு ஒரு நாட்டுக்காக கையாளாய் இருக்குமவன்
ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த மேன்மைக்குத் தகுதியான தேச விசேஷத்தை உடையவன் –

ஸ்ரீ வைகுண்டத்தை கலவிருக்கையாக உடையவனாய் –
பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் இருந்து வைத்து
நமக்கு கையாளான ஆச்சர்ய தமன் என்னவுமாம்

என்றென்று
மேன்மைக்கும்
நீர்மைக்கும் –
இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீ யபதித்வத்துக்கும் வாசகங்களான
திருநாமங்களை ஒருக்கால் இருக்காலோ சொல்லிற்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-
சஹஸ்ர நாமம் உட்படச் சொன்னோம் –

நாமம் பலவும் நவின்று மாமீர் அவளை எழுப்பீரோ என்றுமாம் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – கீழ்வானம் வெள்ளென்று -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

January 4, 2017

இதுக்கு முன்பு உணர்ந்த பெண்கள் எல்லாம் திரண்டு தங்கள்
அபிமத லாபம் யாவள் ஒருத்தி முன்னாகப் பெறலாய் இருக்கிறது –
அதுக்கு ஈடாகக் கிருஷ்ணன் கொண்டாடும் படி செல்வக் கிடப்புடையாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

சம்சாரிகளில் ராத்திரியில்
பர ஹிம்சாதி சிந்தனமும்-
நரக அவஹமான விஷய அனுபவமும்
தமோ குண அபிபவத்தால் வந்த நித்ரையுமாய்ச் செல்லுகையாலே
ராத்திரி தண்ணியது என்று புருஷார்த்த உபயோகியான பகல் விருப்பத்துக்கு உடலாய் இருக்கும்

இவர்கள் கிருஷ்ண அனுபவம் பண்ணப் பெறுகையாலே
ராத்திரி அடிக் கழஞ்சு
பெற்று விடியில் கோப வ்ருத்தர்கள் விரோதிப்பார்கள் என்று
விடியப் புகா நின்றது என்று பயப்பட்டு
கிருஷ்ணனையும் நம்மையும் சேர ஒட்டாதவர்கள் உணரும் காலம் வந்து தோற்றச் செய்தே
நீ கிடந்து உறங்குகையாவது என் என்ன

அவள் உள்ளே கிடந்து அக்காலம் வருகை யாவது என் என்ன –

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து -உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-8-

பதவுரை

கோதுகலம் உடைய பாவாய்–கிருஷ்ணனாலே மிகவும் விரும்பத் தக்க பதுமை போன்றவளே!
கீழ் வானம்–கீழ் திசைப் பக்கத்து ஆகாசமானது
வெள்ளென்று–வெளுத்தது ;
(அன்றியும்)
எருமை-எருமைகளானவை
மேய்வான்–(பனிப் புல்) மேய்கைக்காக
சிறுவீடு–சிறு தோட்டங்களில்
பரந்தன–சென்று புக்கன
போவான் போகின்றார்-(திருவேங்கட யாத்திரை போலே) போகையையே பிரயோஜனமாகக் கொண்டு போகின்ற
மிக்குள்ள பிள்ளைகளும்–மற்றமுள்ள எல்லாப் பெண் பிள்ளைகளையும்
போகாமல் காத்து–போக ஒட்டாமல் தடுத்து
உன்னை கூவுவான்–உன்னை அழைத்தர் பொருட்டு
வந்து நின்றோம்–(உன் மாளிகை வாசலில் வந்திரா நின்றோம்)
எழுந்திராய்–(எங்களுடன் கூடுவதற்காக) எழுந்திரு;
பாடி-(கண்ண பிரானுடைய குணங்களைப்); பாடி
பறை கொண்டு–(அவனிடத்துப்) பறையைப் பெற்று,
மா வாய் பிளந்தானை–குதிரை யுருவமெடுத்து வந்த கேசி யென்னுமசுரனுடய வாயைக் கீண்டெறிந்தவனும்
மல்லரை மாட்டிய–மல்லர்களை மாளச் செய்தவனுமான
தேவாதி தேவனை–அத் தேவ தேவனை
நாம் சென்று சேவித்தால்–நாம் அணுகி அடி பணிந்தால் (அவன்,)
ஆராய்ந்து–(நமது குறைகளை) ஆராய்ந்து
ஆ ஆ என்று அருளும்–ஐயோ! என்று இரங்கி யருள்வன்;
ஏல் ஓர் எம் பாவாய் !

கீழ்வானம் வெள்ளென்று–
இதுக்கு முன்பு விடிவுக்கு உடலாகச் சொன்னது போல் அன்று –
கிழக்கு வெளுத்தது காண் -என்கிறார்கள் –

அஞ்சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால் (திருவாய் -5-4-9) -என்று
போது புக்க போதே பிடித்து கீழைத் திக்கை பார்த்துக் கொண்டு இருப்புதிகோள் –

(வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்,
அஞ்சுடர வெய் யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்,
செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,
நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே.
இங்கு கோதுகலம் -கிருஷ்ண அனுபவம் இருக்கும் பொழுது இரவு
அந்த பாசுரத்தில் -இரவு வந்ததே கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாரானால் துன்புற்று இருக்க
அந்த துன்பம் பார்க்க சகியாமல் ஆதித்யனும் வரவில்லை )

திங்கள் திரு முகத்து சேயிழையாரான உங்களுடைய முகத்து தேஜஸ்
கீழைத் திக்கில் சென்று தட்டி உங்கள் முகத்திலே வந்து
ப்ரதி பிம்பிக்கையாலே கிழக்கு வெளுத்தது போல் தோற்றுகிறது அத்தனை –
கிழக்கு வெளுத்தது அன்று –
இது உங்களுடைய அந்யதா ஞானம்-
இத்தை ஒழிய விடிவுக்கு வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன –

எருமை சிறுவீடு-
எருமைகள் பனிப் புல் மேய்க்கைக்காக வயல் எங்கும் பரந்தன-
இது விடிவுக்கு அடையாளம் அன்றோ என்கிறார்கள் –

மேட்டிள மேதிகள் தளை விடுமாயர் (திருப்பள்ளி எழுச்சி -4)-என்று
(விஷ்ணு சித்தர் போல் – துளஸீ ப்ருத்தர் -இவரும் புஷ்ப கைங்கர்யம் )
பெரிய பெருமாளை இவள் தமப்பன்மாரில் ஒருவர் எழுப்பினார் –
இவர்கள் இவளை எழுப்புகிறார்கள் –
இதில் ஆழ்வார்களும் இவளுக்கும் வாசி –

சிறு வீடு -மேய்வான்-
பெரியாழ்வார் மகளாய் அக்னி ஹோத்ர ஹோமங்களுக்கு
உள் மானம் புற மானம் ஆராய்க்கை தவிர்ந்து
இடைச்சியாய் எருமையினுடைய சிறு வீடு பெரு வீடு என்னும்
இவற்றில் வாசி அறிகை யாத்ரையான படி

பரந்தன காண்-
பட அடிப் பட்டாலும் உறங்கும் அத்தனையோ –
நம்முடைய உத்தேச்ய வஸ்து அவற்றின் பின் கை கழியப் போனால் என் படக் கடவோம்

ஸ்ரீ நந்த கோபருக்கு முத்திறமும் -ஆடு பசு எருமை -கிருஷ்ணன் அவற்றின் பின்னே போம் –
(வாரணம் ஆயிரம் யானையும் உண்டு வஸூ தேவர் சொத்தும் கண்ணனுக்கு உண்டே )
பின்னை நாம் ஆரைக் காணப் போகிறது –
கெடுவாய் எழுந்திராய் –

எருமை பனிப்புல் மேய்க்கைக்கு வயல் எங்கும் பரந்தன வென்று சொன்ன இது
விடிவுக்கு அடையாளம் அன்றோ என்ன

உங்களுடைய முக ஜ்யோதிஸ் யோஜனையாலே சிதறிப் போகிற இருள் அத்தனை இவை –
அல்லது எருமைகள் அன்று –
இது உங்களுடைய விபரீத ஞானம் இருக்கிற படி -விடிவுக்கு உடல் அல்ல என்ன –

கீழ்ச் சொன்னவை எங்களுடைய அந்யதா ஞானமும் விபரீத ஞானமும் ஆகிறது –
விடிந்தது இல்லை என்கைக்கு அடையாளம் நீ சொல்லாய் என்ன

அஞ்சு லக்ஷம் குடியில் உள்ள பெண்களுக்கு எல்லாம் அவதி இல்லை –
இங்கு எல்லாமாக ஆயிரம் பேர் போராது காண் வந்தது –
அல்லாதாரும் உணர்ந்து வர வேண்டாவோ –
அவர்கள் உணர்ந்து வாராது ஒழிந்தது விடியாததுக்கு அடையாளம் என்ன

மிக்குள்ள பிள்ளைகளும்-
உன்னை ஒழிந்தார் அடைய போனார் காண் என்ன

அவர்கள் ஓத வந்தவர்கள் மறுத்து ஓதுகிறார்கள்
அவர்கள் என்னை அழையாதே போனார்கள் என்ன –

பெரும் திரள் ஆகையால் நீ போய்த்த்தில்லை என்று அறியாமையாலும்
போகிறவர்கள் உடன் கூடப் போகை தானும் பிரயோஜனம் ஆகையாலும் போனார்கள் அத்தனை
உன்னை ஆராயாதே போனார்கள் அல்ல என்ன –

என்ன கார்யத்துக்குத் தான் அவர் போய்த்து என்ன

போவான் போகின்றாரை-
வழி போக்கையே உத்தேச்யமாகப் போனார்கள்
தேச பிராப்தியிலும் அர்ச்சிராதி மார்க்கமே போக ரூபமாய் இருக்கக் கடவது இறே

கை கழியப் போனார்கள் ஆகில் இனி நான் என் –
என்னை ஒழியவும் போக வல்லார்கள் ஆனார்கள் என்ன

அது செய்த படி கேட்டிலையோ –
நீ வாராமை அறிந்தவாறே இன்னாள் வந்திலள் -என்றோம் –
பின்னை போக மாட்டிற்று இலர்கள்

போகாமல் காத்து –
அவர்களைத் தலைக் காவலிட்டோ செய்தது –

திருவாணை நின்னாணை (10-10-2 )-என்று ஆணை இட வேணுமோ
நீ போந்திலை என்று ஒரு வார்த்தை சொல்லும் காட்டில் திடுக்கிட்டாரைப் போலே கால் நடை தாராமல் நின்றார்கள் –
போவாருக்கு காலை ஒழிய போகப் போமோ

மாயம்செய் யேலென்னை உன்திரு மார்வத்து மாலைநங்கை
வாசம்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்
நேசம்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம்செய் யாதுகொண் டாயென்னைக் கூவிச்கொள் ளாய்வந்தந்தோ–(திருவாய்-10-10-2 )

வளைத்துவைத்தேன் இனிப்போகலொட்டேன்* உன்தன் இந்திரஞாலங்களால்*
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்* நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை*
அளித்தெங்கும் நாடும்நகரமும்* தம்முடைத் தீவினைதீர்க்கலுற்று*
தெளித்துவலஞ்செய்யும் தீர்த்தமுடைத்* திருமாலிருஞ்சோலை எந்தாய்!–பெரியாழ்வார்

அவர்களை அங்கே நிறுத்தினீ கோள் ஆகில் –
நீங்கள் இங்கே வந்தது என் என்ன –

உன்னைக்-கூவுவான்-
போகை தானே உத்தேச்யமாகப் போனால் போலே
உன்னைக் கூவுகை தானே பிரயோஜனமாக வந்தோம்-

வந்து நின்றோம் –
உத்தரம் தீர மாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டித்த -என்னும் படியே
உன் பக்கலிலே வந்து
நின்றோம் –
கால்கள் தரையிலே பாவி நிற்கப் பெற்றோம்

ராவண பவனத்தை விட்டு பெருமாள் எல்லையில் புகுந்த பின்பு இறே
அவன் தரித்து நின்றது

நீ போந்திலை என்ற போதை துணுக்குத் தீர
உன் வாசலிலே வந்து நல் தரிக்கப் பெற்றோம் –

அப்பெண்கள் திரள் எல்லாம் கிடக்க என் வாசலிலே வந்து கால் பாவுகைக்கு
ஏற்றம் என் என்ன

நீங்கள் என்னை ஒழிய தரியாது இருக்க –
நான் உங்களுக்கு புறப்பட்டு முகம் காட்டாது இருந்தேன் என்று போர வெறுத்தி கோள் இறே என்ன

கோதுகலமுடைய-பாவாய் –
உன் வாசலிலே புகுந்து போகவே கிருஷ்ணன் பக்கல் முகம் பெறலாம் படி அன்றோ உன் மதிப்பு –
எங்களுக்கு வெறுப்பு என்
உன் வாசலிலே வந்து உன் பேரைச் சொல்லி அழைக்கைக்கு மேற்பட்ட ஏற்றம் உண்டோ எங்களுக்கு –
அவனாலும் சிரஸா வஹிக்கப் படுபவளாய் –
எங்களுக்கு உன்னை ஒழியச் செல்லாத படி இருப்பாயாய்
எங்களுக்கு கிருஷ்ணன் பக்கல் புருஷகார பூதையாய் இருப்பாள் ஒருத்தி அன்றோ –

பாவாய்
நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை யுடையவளுக்கு எங்கள் ஆற்றாமை தெரியாமை இல்லை இறே
பெண்ணின் வருத்தம் அறியாதவன் படி யாகவோ நீயும் –
முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்கு தெரியாது இறே -என்று பட்டர் –
ஒரு பிறவி பிறந்து அறிய வேணுமே அதுக்கு
(மணிவல்லிப் பேச்சு வந்தேறி அல்ல என்று சொல்லி
சமாதானம் கொள்ள வேண்டாத படி ஸ்த்ரீத்வம் ஜென்ம சித்தம் )

எழுந்திராய்
புறப்பட்டு எங்கள் திரளில் வந்து கலக்க வேண்டா
அங்க ப்ரத் யங்கங்களினுடைய பரிஸ் புரணங்களே அமையும்

எழுந்திராய் –
நாங்கள் உன் வாசலிலே வந்து எழுப்ப நீ எழுந்து இருந்தாய் என்னும் ஏற்றம்
எங்களுக்குத் தாராய்

எழுந்து இருந்து நாம் எல்லாம் கூடி பெறப் புகுகிற பிரயோஜனம் என் என்ன

பாடிப்-
கிருஷ்ணன் பெண்கள் கிருஷ்ணன் -என்று வாய்க் காவல் இட்டுக் கிடக்கிற வூரிலே
இவ்விரண்டு நாளும் கழிந்தால் அவனை நமக்குத் பாடக் கிடைக்குமோ

ஆஸூர ப்ரக்ருதிகளான ஹிரண்யாதிகள் படை வீடுகள் போலே
திரு நாமம் சொல்லப் பொறார்கள் யாய்த்து
பெண்கள் பிரசங்கத்தில் மோஹிப்பர்கள் என்று அவ் விழவு தீர
கிருஷ்ண நாம புன புன என்கிறபடி வாயாரத் திரு நாமத்தைப் பாடி

பறை கொண்டு
நாட்டுக்குப் பறை –
தங்களுக்கு கைங்கர்யம் -கிட்டின வாறே -உன் தன்னோடு உற்றோமே ஆவோம் என்னக் கடவர்கள் இறே
இவை பின்னை அவன் நமக்குத் தரப் புகா நின்றானோ என்ன

மாவாய் பிளந்தானை
நம் விரோதிகளை போக்கி நம் அச்சம் தவிர்த்த உபகாரகன் அன்றோ தாரானோ

மாவாய் –
ஸ்ரீ நாரத பகவான் நாம் முடிந்தோம் என்று கதறிக் கொண்டு வந்து விழும் படி இறே வந்து தோன்றின படி –
நமக்காக கேசியைக் கொன்று
திருவாய்ப்பாடியிலும் ஸ்ரீ ப்ருந்தாவனத்திலும் உண்டான வன்னியம் அறுத்து
பெண்ணும் பேதையும் சகடச் சாத்தாகப் போம்படி பண்ணினவன்
நம் கார்யம் செய்யானோ

அது பண்டு இறே –
இப்போது அவன் அல்லனே –
மதுராம் ப்ராப்ய கோவிந்த கதம் கோகுல மேஷ்யதி நகர ஸ்த்ரீ கலா லாப மது ஸ்ரோத்ரேண பாஸ்யதி-என்கிறபடியே
பெரிய நாகரீகனாய் படை வீட்டிலே ஏறி
நகர ஸ்த்ரீகளும் தானுமாய் போனவன் நம்மைப் பார்க்குமோ –
நம் கார்யம் செய்யுமோ என்ன

மல்லரை மாட்டிய
அங்கும் ந சமம் யுத்தம் இத்யாஹு-
அங்கு போயும் நம்மோட்டை பெண்கள் கார்யம் அன்றோ செய்தது –
அதுவும் நேம் பேறு அன்றோ என்ன –

தேவாதி தேவனைச்-
இப்போது அவனை ப்ராஹ்மணர் சர்வேஸ்வரன் என்று காணும் சொல்வது –

தேவாதி தேவனை –
விது கிருஷ்ணம் சர்வ தேவ தேவகீ புத்ர ஏவ —கிருஷ்ண ஏவஹீ என்றும் –
யதோவா இமானி -இத்யாதிகளின் படியே
காரண பூதன் என்று உபாஸ்யனாகக் காணும் சொல்கிறது
அப்படி பெருமை யுடையவன் அபலைகளான நம்மைப் பார்க்குமோ என்ன –

அது நம் பேறு அன்றோ
அவன் இருந்தபடியே உத்தேச்யன் அன்றோ நமக்கு –
நாம் போய் சேவிக்கிறோம் –

சென்று நாம் சேவித்தால்-
அத்தலை இத்தலையாய் –
அவன் வருகையும் சேவிக்கையும் தவிர்த்தால்
நாம் சென்று சேவிக்கை அத்தனை அன்றோ
அப்படி செய்தால் நம் கார்யம் செய்யாது ஒழியுமோ –

செய்திலன் ஆகில் ஸ்ரீ பரத ஆழ்வான் பட்டது படுகிறோம் -(படுத்தின பாடு படுத்துவோம் என்றபடி )
சிரஸா யா சதஸ் தஸ்ய வசனம் நக்ருதம் மயா-என்னும் படியே
அவன் நெஞ்சில் புண் படுத்துகிறோம் –

ஏபிச்ச சசிவைஸ் சார்த்தம் -கீழ்ச் சொன்னவை எல்லாம்
நமக்கு இல்லையே யாகிலும் (சிஷ்யன் தாசன் பிராதா மூன்றுமே நமக்கு இல்லையே )
ஆர்த்தி கண்டால் காகத்துக்கு இரங்கின மாத்திரம் நமக்கு இரங்கானோ

ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-
கிருபயா பர்ய பாலயத் என்று உகவாதார் பெறுவது உகந்தார்க்குக் கிடையாதோ –
முறை கெட நாம் சென்று சேவித்தால்
வந்தேறியான பிரணயித்தவம் அன்றோ போகலாவது –
ஆர்த்தர் பக்கல் பண்ணும் கிருபையும் போமோ
தான் உளன் ஆனால் உண்டானது போமோ

பாடிப் பறை கொள்கிறோம் -போய் சேவிக்கிறோம் –
அத்தலைக்கு பிரியமாக கைங்கர்யம் பண்ணுகிறோம்
இப்படிகளாலே அத்தலையை உகப்பிக்கை இறே ஸ்வரூபம் –
ப்ரகர்ஷயிஷ்யாமியிலே இறே அந்வயம்
பிரியதே சததம் ராம -பலம் கொடுக்க அவசரம் பெறான் என்கிறது –
ஆன பின்பு எழுந்திராய் என்கிறார்கள் –

(அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

மத் வ்ருத்தம் –என்னுடைய நடவடிக்கையை
அசிந்தயித்வா–கணிசியாமல்
அக்ருத்ரிம த்வச் சரணார விந்த ப்ரேம ப்ரகர்ஷ அவதிதம் -உனது திருவடித் தாமரையில் உண்மையாக
உண்டான பரம பக்திக்கு எல்லை நிலமாய் இருப்பவரும்
ஆத்மவந்தம்–ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்தவரும் -ஜிதேந்த்ரியர் -சத்தை பெற்றவர்
பிதாமஹம் நாத முநிம் -எனக்குப் பாட்டனாருமாகிய ஸ்ரீ மந் நாத முனிகளை–
ஸ்ரீ ஈஸ்வர பட்டரது திருக்குமாரர் நம் ஆளவந்தார்
விலோக்ய–கடாக்ஷித்து
ப்ரஸீத –அடியேனை அனுக்ரஹித்து அருளாய்)

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை – கீசுகீசு என்று எங்கும் – -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

January 4, 2017

ஆறாம் பாட்டில் –
பகவத் விஷயத்தில் புதியவள் ஒருத்தியை எழுப்பிற்று –
இதில்
பழையவளாய் இருந்து வைத்து புதுமை பாவிக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
சிலரை எழுப்பினால் எழுந்து இருக்கிறவர்களைக் கொண்டு
கிருஷ்ணன் பாடு போகிறோம் -என்னுமவர்கள் அன்று இறே –
எல்லார்க்கும் நன்மை வேண்டும் என்று இருக்குமவர்கள் இறே

பகவத் சம்பந்தம் மெய்யாகில் தன் வயிற்றில் பிறந்த பிரஜையினுடைய ஸம்ருத்திக்கு உகக்குமா போலே
எல்லாருடைய ஸம்ருத்திக்கும் உகக்க வேணும் இறே

அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -(2-3-10)–என்றும் –
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை-(10-9-10) என்றும் சொல்லுகிறபடியே
இக் குழாத்தில் இனிமை யுண்டானால் இறே அங்கும் இனிமை யுண்டாவது –

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணிமூப்பு இறப்பு அற்று
ஒளிகொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10-

வந்துஅவர் எதிர் கொள்ள* மாமணி மண்டபத்து*
அந்தம் இல் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்து அலர் பொழில்* குருகூர்ச் சடகோபன்* சொல்-
சந்தங்கள் ஆயிரத்து* இவைவல்லார் முனிவரே-10-9-10-

ஆட் கொண்ட வில்லி ஜீயர் எழுந்து அருளா நிற்கச் செய்தே-
நஞ்சீயர் தெண்டன் இட்டு நிற்க –
பகவத் விஷயத்தில் நமக்கு ருசி மெய்யாகப் பிறந்தது இல்லை காணும் -என்று அருளிச் செய்ய –
உம்மைப் போலே ஆச்சர்யவான்கள் யுண்டோ -இங்கனே அருளிச் செய்வான் என் என்ன –
பகவத் விஷயத்திலே மெய்யே ருசி உண்டு என்று இருக்கையாவது –
பாகவதர்களைக் கண்டால் உகக்கும் அன்று காணும் -என்று அருளிச் செய்தார் –

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

பதவுரை

பேய் பெண்ணே–மதி கெட்ட பெண்ணே!
எங்கும்–எல்லா விடங்களிலும்
ஆனைச் சாத்தன்–பரத்வாஜ பக்ஷிகளானவை
கலந்து–(ஒன்றோடொன்று) ஸம்ஸ்லேக்ஷித்து
கீசுகீசு என்று–கீச்சு கீச்சு என்று
பேசின–பேசிய
பேச்சு அரவம்–பேச்சினுடைய ஆரவாரத்தை
கேட்டிலையோ–(இன்னும் நீ) கேட்கவில்லையோ?
வாசம்–பரிமள வஸ்துக்களினால்
நறு–மணம் கமழா நின்றுள்ள
குழல்–கூந்தலை யுடைய
ஆய்ச்சியர்–இடைப் பெண்கள்
காசும்–(கழுத்தில் அணிந்துள்ள) அச்சுத் தாலியும்
பிறப்பும்–ஆமைத் தாலியும்
கலகலப்பு–கலகலவென்று சப்திக்கும் படியாக
கை பேர்த்து–கைகளை அசைத்து
மத்தினால்–மத்தாலே
ஓசை படுத்த–ஓசை படுத்தின
தயிர் அரவம்–தயிரின் ஒலியையும்
கேட்டிலையோ–கேட்க வில்லையோ?
நாயகப் பெண் பிள்ளாய்–பெண்களுக்கெல்லாம் தலைமையாயிருப்பவளே
நாராயணன் மூர்த்தி கேசவனை–ஸ்ரீமந் நாராயண அவதாரமான கண்ண பிரானை
பாடவும்–(நாங்கள்) பாடா நிற்கச் செய்தேயும்
நீ–நீ
கேட்டே–(அப் பாட்டைக்) கேட்டு வைத்தும்
கிடத்தியோ–(இங்ஙனே) உறங்குவாயோ?
தேசம் உடையாய்–மிக்க தேஜஸ்ஸை யுடையவளே!
திற–(நீயே எழுந்து வந்து கதவைத்) திற
ஏல் ஓர் எம் பாவாய்!

இப்படி எல்லார்க்கும் ஓக்க இனிமை யுண்டாக வேணும் என்று எல்லாரையும் கூட்டிக் கொண்டு
ஒருத்தி வாசலிலே சென்று -போது விடிந்தது காண் எழுந்திராய் என்ன –
விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன –
ஆனைச் சாத்தானுடைய த்வனி அடையாளம் அன்றோ -என்கிறார்கள் –

கீழ்ச் சொன்ன
முனிவர்களும் யோகிகளும் -என்றதோடு –
ஆனைச் சாத்தான் -என்றதோடு –

அவர்கள்
ஹரிர்ஹரி -என்றதோடு
இவை
கீசு கீசு என்றதோடு வாசி அற எல்லாமே உத்தேச்யமாய் இருக்கிற படி –

கீசு கீசு –
இது அநக்ஷர ரசமாய் இருக்கிற படி –
ஆனைச் சாத்தானுடைய த்வனி விடிவுக்கு அடையாளம் அன்றோ என்ன –
ஒரு ஆனைச் சாத்தான் உணர்ந்த இது விடிவுக்கு அடையாளமாகப் போருமோ என்ன

எங்கும் -என்று இவர்கள் சொல்ல –
எங்கும் நீங்கள் இல்லையோ அவற்றை உணர்த்துகைக்கு என்ன

நாங்கள் உணர்த்த உணர்ந்தது அன்று –
கலந்து பேசின பேச்சுக் காண் என்ன –

இரவு எல்லாம் உறங்கிப் போது விடிந்தவாறேயோ கலப்பது -என்று
அவள் சொல்ல –

இரவு எல்லாம் கலந்து மரக்கலம் ஏற்றுமவன் மீண்டு வரும் அளவும்
ஜீவனம் ஏற்றுக் கொண்டு போமா போலே
பகல் முப்பது நாழிகைக்கும் விளை நீர் அடைத்துக் கொண்டு
பிரிவு வருகிறது என்னும் தளர்த்தி தோற்ற பேசுகிற பேச்சு
விடிவுக்கு உடல் அன்றோ என்கிறார்கள் –

கேட்டிலையோ–
இந்த த்வனி கேளாத படியோ -அங்கு ஓடுகிறது என் என்கிறார்கள் –
நிஸ்வனம் சக்ர வாகா நாம் நிஸம்ய –
(கிஷ்கிந்தா -பெருமாள் வார்த்தை -பிராட்டி இந்த ஒலி கேட்டு என்ன பாடு படுவாளோ )என்கிறபடியே –
இவற்றின் த்வனியைக் கேட்டால்-கடுக
கிருஷ்ணன் பக்கல் சென்று நிற்க வேண்டாவோ என்ன

மாளிகைகளிலே ஏத்தாளிகள் வம்சாவளி சொல்லக் கேட்டு எழுந்து இருக்குமவர்கள்
பக்ஷிகளினுடைய பேச்சுக் கேட்டு எழுந்து இருக்கும் படி யாவதே
இது என்ன தர்ம ஹானி என்று அவள் வெறுத்துக் கிடக்க

பேய்ப் பெண்ணே –
என்கிறார்கள் –
உன்னுடைய அந்யதா ஞானம் இருந்தபடி என் –
பகவத் சம்ஸ்லேஷம் பாகவத சம்ஸ்லேஷ பர்யந்தம் என்று
அறிந்து வைத்து ஆறி இருப்பதே -என்று க்ஷேபிக்க-

போது விடியாதே இருக்கச் செய்தே-
விடிந்தது என்று சொல்லுகிற நீங்கள் அன்றோ பேய்ப் பெண்கள் என்ன

போது விடியச் செய்தே விடிந்ததில்லை என்று
சொல்லுகிற நீ அன்றோ பேய்ப் பெண் என்ன

இது போதாது
வேறு ஒரு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன

இவ் வூரில் தயிர் கடைகிற ஓசை விடிவுக்கு அடையாளம் அன்றோ -என்கிறார்கள் –
காம்யத்தில் பல ஸ்ரத்தை இல்லையாகில் தவிரலாம் –
நித்ய கர்மம் அவசியம் அனுஷ்டித்தே அற வேணும் –
அனுஷ்டானத்துக்கு பலம் இல்லை -அகரேண ப்ரத்யவாயம் உண்டு –
அப்படியே
ஜாதி உசிதமான நித்ய அனுஷ்டானம் அன்றோ
இவர்களுக்கு தயிர் கடைகை-இது விடிவுக்கு அடையாளம் போராதோ என்கிறார்கள் –

காசும் பிறப்பும் –
அச்சுத் தாலியும் ஆமைத் தாலியும் –

கல கலப்ப-
ஆபரண த்வனியும் இவர்களுக்கு உத்தேச்யமாய் இருக்கை –

கை பேர்த்து-
தயிர் ஸம்ருத்தியாலும் –
தங்களுடைய ஸுகுமார்யத்தாலும் –
கிருஷ்ணனுடைய அசந்நிதியாலே கை சோருகையாலும்
சந்நிதியில் தயிரை மோராக்க ஓட்டேன் என்று பிடித்து வலிக்கையாலே
கடைகையில் யுண்டான அருமையைச் சொல்லுகிறது –

வாச நாறும் குழல்
கடைகிற ஆயாசத்தாலே மயிர் முடி கட்டு நெகிழ்ந்து முடை நாற்றத்தை மறைக்கும் படி யாய்த்து
பரிமளம் வெள்ளம் இடுகின்ற படி –
(சர்வ ரஸ ஸர்வ கந்த வஸ்துவை தங்கள் கொய்சகத்திலே வைக்குமவர்கள் அன்றோ )
தெருவெல்லாம் காவி கமழ் திருக் காட் கரை -என்னக் கடவது இறே

உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி,
பெருகுமால் வேட்கையும் எஞ்செய்கேன் தொண்டனேன்,
தெருவெல்லாம் காவி கமழ்திருக் காட்கரை,
மருவிய மாயன்தன் மாயம் நினைதொறே. 6.1

ஆய்ச்சியர் –
ஒருத்தி யன்றோ என்று சொல்ல ஒண்ணாத படி இருந்ததே குடியாக –

மத்தினால் ஓசைப் படுத்த தயிர் அரவம்-
மந்திரத்தால் கடலைக் கடைகிற போது -அரவூரு சுலாய் மலை தேய்க்கும் ஒலி-என்றபடி –

ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி —
அரவூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி —
கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி,
அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே

உத்காய தீனாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நாநாம் திவமஸ்பர்ச்ச த்வனி
தத் நசச நிர்மந்தந ச சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேன திஸாம் அமங்களம் –

கிருஷ்ணனுடைய கண் அழகுக்கு தோற்றுப் பாடுகிற இடைப் பெண்களுடைய த்வனி –
தயிர் கடைகிற ஓசையோடு கலசி பரம பதத்தில் சென்று த்வனித்தது-
அப்போது
கிருஷ்ண குணங்கள் பூமியிலே நடையாடா நிற்க –
மலையிலே இருப்பாரைப் போலே உயர இருப்பதே என்று
அவர்களை வசை பாடினால் போலே இருந்ததே

விக்ரீது காமா கில கோப கன்யா முராரி பாதார்ப்பித சித்த வ்ருத்தி –
தத்யாதிகம் மோஹ வசாத் அவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி-

முரனைக் கொன்ற வீரத்தில் தோற்று கிருஷ்ணன் பக்கலிலே பக்த பாவைகளாக இருக்க
இதனின்றும் இவளை மீட்க்கும் விரகு ஏதோ என்று பார்த்து –
தாயார் பாலையையும் தயிரையும் நெய்யையும் கொடுத்து
இத்தை விற்றுக் கொண்டு வா என்று சொல்ல –

விற்கப் போன இடத்திலும் நினைவு இங்கேயே –
கோவிந்தனைக் கொள்ளுங்கோள் -கிருஷ்ணனைக் கொள்ளுங்கோள் –
ஸ்ரீ யபதியைக் கொள்ளுங்கோள் -என்று கூறிக் கொண்டு திரிந்தாள்

ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
இது கேளாத படி உள்ளேயும் ஒரு தயிர் உண்டோ கடைகிறது-

கெண்டை இத்யாதி –
தாமோதரா மெய் அறிவன் நானே —

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி* கீழை அகத்துத் தயிர் கடையக்
கண்டு* ஒல்லை நானும் கடைவன் என்று* கள்ள-விழியை விழித்துப் புக்கு*
வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ* வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப*
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்* தாமோதரா மெய் அறிவன் நானே –ராஜகுல மஹாத்ம்யம் தோன்ற ஊடுகிறாள்

பண்டு போலேயோ-கிருஷ்ணன் பிறந்த பின்பு
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களாகையாலே
அறுபது நாழிகையும் கறப்பது கடைவதாய் செல்லுமத்தனை அன்றோ
இது விடிவுக்கு உடலாமோ வென்று அவர்கள் நிருத்தராம் படி சொல்ல

நாயகப் பெண் பிள்ளாய் –
என்கிறார்கள் –

(நாயகப் பெண் பிள்ளாய் )ஆகையால் சொன்னதுக்கு எல்லாம் மறுமாற்றம் சொல்லிக் கிடக்கிறது
உன் செல்வக்  கிடப்பு இறே

பேய்ப் பெண்ணே -என்றதோடு –
நாயகப் பெண் பிள்ளாய் -என்றதோடு வாசி அற்று இருக்கிறது –

ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால்-
தாழச் சொன்ன போதும்
உயரச் சொன்ன போதுமாய் இறே இருப்பது

நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை -(ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்)
சேஷ பூதர் சேஷி பக்கல் சொல்வது ஓன்று உண்டோ
இதுக்கு எல்லாம் அழகியதாய் நிர்வாஹகை யானாய் என்று இவர்கள் பேசாது இருக்க –

நான் உங்களுக்கு அடிமை யன்றோ –
திறக்கிறேன் என்ன –
இவள் துணுக் என்று எழுந்து இருந்து கடுகத் திறக்கைக்காக
கேசி வத விருத்தாந்தத்தை ஸ்மரிப்போம் என்று அத்தை பிரசங்கிக்கிறார்கள் –
பெரியாழ்வார் பெண் பிள்ளை யாகையாலே துணுக் என்று உணரும் என்று

நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் –
கன்னுக்குத் தோற்றாதே நின்று ரஷிக்கும் சர்வேஸ்வரன் –
ஆஸ்ரித வத்சலனாய் இங்கே வந்து அவதீரணன் ஆனான்
அங்கே கேசி வந்து கிட்டினான் காண் என்கிறார்கள்

அது தன்னை விஜயாந்தமாக அனுசந்தித்து பேசாதே கிடந்தாள்

நீ கேட்டே கிடத்தியோ
அழகிதாக உன்னை எழுப்ப வழி பார்த்தோம் –
தொடை குத்தி உறக்கினோம் ஆகாதே
கேசி பட்ட அநந்தரம்-கர வதத்தின் அன்று
பிராட்டி -பர்த்தாராம் பரிஷஸ்வஜே -என்று
பெருமாளை அணைத்தால் போலே கிருஷ்ணனை எழுந்து அணைக்கப் பாராய்-

பேச்சின் இனிமையைக் கேட்டு இவள் வாய் திறவாதே கிடந்த வாறே
ஜாலக த்வாரத்தாலே பார்த்தார்கள் –
அவனுடைய விஜயத்தை அனுசந்திக்கையாலே வந்த புகரை யடைய வடிவிலே காணும் படி கிடந்தாள்

தேசமுடையாய் திற-
கிண்ணகத்துக்கு அணை செய்யாதே வெட்டி விடாய் -நாங்கள் வாழ்ந்து போக
எங்களுடைய ஹிருதயத்தில் அந்தகாரம் போகும் படி
உன் வடிவைக் காட்டி எங்களை அனுபவிக்கப் பாராய் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை – புள்ளும் சிலம்பின காண் – -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

January 4, 2017

மூவாயிரப்படி அவதாரிகை –

முதல் பாட்டில் –
பகவத் சம்ஸ்லேஷமே பிராப்யம் -அநந்ய சாத்தியமான இதுக்கு சாதனமும் அவனே –
அந்த சாதனத்தில் அன்வயிக்கைக்கு அதிகாரிகளும் அந்த பிராப்யத்தில் இச்சை உடையவர்களே -என்று
சாத்ய ஸ்வரூபத்தையும்-சாதன ஸ்வரூபத்தையும்-அதிகாரி ஸ்வரூபத்தையும் சாதித்து —

இரண்டாம் பாட்டில் –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஈஸ்வரனே என்று இருக்கும்-இச்சா திகாரிகளுக்கு சம்பாவிதமாய்
குர்வத் ரூபமான கரணங்களுக்கு-வகுத்த வ்யாபாரங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய படியாலும்-
கால ஷேபத்துக்காகவும்-ராக ப்ரேரிதமாக அனுஷ்டேயமான கர்தவ்யாம்சத்தை சொல்லிற்று

மூன்றாம் பாட்டில் –
பகவத் அனுபவ சஹகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே-
அவர்களுக்கு யாவை யாவை சில அபேஷிதங்கள்-அந்த சம்ருதிகள் அடைய அபேஷிக்கக் கடவது -என்றது-

நாலாம் பாட்டில்
தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்-
பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு
அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று

ஐந்தாம் பாட்டில்
இப்படியே பகவத் அனுபவத்தில் இழிந்தவருக்கு வரும் அனுபவ விரோதிகளை
அவ் வநுபவம் தானே நிரோதிக்கும் என்னும் இடம் சொல்லிற்று

ஆக-இப்படி கீழ் ஐஞ்சு பாட்டாலே –
பிராப்யமான கிருஷ்ண அனுபவத்துக்கு-ஏகாந்தமான உபகரணங்களைச் சொல்லி

அநந்தரம் –
மேல் பத்து பாட்டாலே-
அந்த உபகரணங்களைக் கொண்டு-அனுபவிக்குமவர்களை-எழுப்புகிறது-

தம்தாமுக்கே அவ்வனுபவத்துக்கு பிரதான உபகரணமான ப்ரேமமும்-
கர்தவ்யதயா உக்தமான உபகரணங்களும்-
அனுபாவ்யனான கிருஷ்ணனும்-
அதுக்கு ஏகாந்தமான காலமும்-
ஊரிலே கோப வ்ருத்தர் உடைய இசைவும் உண்டான பின்பு-
தனித்தனியே அனுபவிக்க அமைந்து இருக்க-
ஒருவரை ஒருவர் எழுப்ப வேண்டுகிறது என் என்னில்-

பெருக்காற்றில் இழிவாருக்கு துணை தேட்டமாம் போலே
காலாலும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்றும் –
உயிர் காத்து ஆட செய்யுமின் -என்றும்
ஆழியொடு பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்றும்-
இழிந்தாரை குமிழி நீரூட்டக் கடவதான விஷயத்தில் இழிகிறவர்கள் ஆகையாலே
துணை தேட்டமாய் ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று சொல்லுகிறபடியே
பர அவஸ்தையிலே புருஷோத்தமனை அனுபவிக்கும் போதும்
விஸ்ருங்கல ஜ்ஞான பலங்களை உடையரான நித்ய ஸூரிகளுக்கும் துணை தேட்டமாய் இருக்க –
இமையோர் தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல் -என்று
1-அந்த நித்ய ஸூரிகளுக்கும் அனுபவிக்க ஒண்ணாத படி
மேன்மைக்கும்
நீர்மைக்கும்
அழகுக்கும்
நிரவதிக ஆகாரமான கிருஷ்ணனை அனுபவிக்கு இடத்தில்-
இடக்கையும் வலக்கையும் அறியாத இடைச்சிகளுக்கு-துணை தேட்டம் என்னுமிடம் சொல்ல வேணுமோ-

அதுக்கு மேலே
2-நிரதிசய போக்யமான அவ்விஷயத்தை தனியே-
அனுபவிக்க மாட்டாத-பிரக்ருதிகள் ஆகையாலும் எழுப்புகிறார்கள் –

அதுக்கு மேலே
3-இவ் வஸ்துவை அனுபவிக்கைக்கு ருசி உடையராய் இருக்குமவர்கள் இழக்க ஒண்ணாது
என்னும் நினைவாலும் எழுப்புகிறார்கள் –

அதுக்கு மேலே
4-பகவத் விஷயத்தை அனுபவிக்கும் போது ததீயரை முன்னிட்டு அல்லது
அனுபவிக்க மாட்டாதவர்கள் ஆகையாலும் எழுப்பு கிறார்கள் –

5-விஷயம் தனியே அனுபவிக்க அரியது ஆகையாலும்-
6-இவர்கள் தனி அனுபவிக்கும் பிரக்ருதிகள் அல்லாமையாலும் –
7-ருசி உடையார் இழக்கை நெடும் தட்டு என்று இருக்கையாலும் –
8-ததீயரை ஒழிய அனுபவிக்க மாட்டாமையாலும் ‘-
முந்துற உணர்ந்தவர்கள் உறங்குகிறவர்களை எழுப்பத் தட்டில்லை –

எல்லாருக்கும் ஒக்க கிருஷ்ண அனுபவத்தில் கௌதுகம்-அவிசிஷ்டமாய் இருக்கையாலும்-
சிலர் எழுப்ப
சிலர் உறங்குகை கௌதுகத்துக்கு குறை யன்றோ என்னில்-

அனுபாவ்யமான கிருஷ்ண குணங்கள்-நஞ்சுண்டாரைப் போலே சிலரை மயங்கப் பண்ணுகையாலும்-
சிலரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாதே துடிக்கப் பண்ணுகையாலும்-
அவர்கள் கௌதுகத்துக்கு குறை இல்லாமையாலே
சிலரை சிலர் எழுப்பத் தட்டில்லை –

இதில்-இப்பாட்டுக்கு வாக்யார்த்தம்-
பகவத் விஷயத்தில் புதியவள் ஆகையாலே இந் நோன்பின் சுவடு அறியாதாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-

—–

மூவாயிரப்படி அவதாரிகையை அப்படியே கொண்டு
மேலும் கீழ் வருவனவற்றை அருளிச் செய்கிறார் –
செய்யாதன செய்யோம் -என்று அடியிலே பண்ணின ப்ரதிஞ்ஜையைத் தலைக் கட்டுகிறார்கள் –

பெருமாள் நத்யஜேயம் என்ற ப்ரதிஞ்ஜையை –
ஏதத் விரதம் மம -என்று தலைக் கட்டினால் போலேயும்
அர்ஜுனன் பண்ணின ப்ரதிஞ்ஜையை கிருஷ்ணன் செய்து தலைக் கட்டினால் போலேயும்

பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் வந்து திரண்டு நாம் நீராடவே நம் விரோதிகளும் போம் -என்று புறப்பட
சிலர் வாராது ஒழிய போக மாட்டிற்று இலர்-

உறங்குகிறவர்களை எழுப்பிக் கொண்டு போகவே
1-அத் தலைக்கும் நமக்கும் புருஷகாரம் ஆவார்கள் என்றும்
2-போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்காகவும்
3-இவர்கள் இழவு பொறுக்க மாட்டாமையாலும்
4-ஏகஸ் ஸ்வாது நபுஞ்சீத-என்கிறபடியே ஒருவரை ஒழிய ஒருவர் புஜிக்க மாட்டாமையாலும் –
5-கிருஷ்ணரைக் காட்டிலும் இவர்கள் உத்தேசியர் ஆகையாலும் –
6-தனி அனுபவிக்கும் விஷயம் இல்லாமையாலும்
உணராதவர்களை உணர்ந்தவர்கள் எழுப்புகிறார்களாகச் செல்லுகிறது-

பரம பதத்துக்கு அகப்பட அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ
என்று கூட்டுத் தேடா நின்றது
கிருஷ்ண அனுபவத்துக்கு கூட்டுத் தேட சொல்ல வேணுமோ

இமையோர் தமக்கும் -செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல் -என்று
நித்ய ஸூரிகளுடைய எத்திறம் இருக்கும் படி
இத்தை அனுபவித்த ஆழ்வார் எத்திறம் என்கிறார் –
தன்னையும் ஜென்ம கர்ம ச மே திவ்யம் -என்னப் பண்ணிற்று இறே

ஒரு விடாய் ஆற்றி இருக்க வேண்டும் மனுசர் போரத் திரண்டு இவ்வூருக்காக
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தில் புதியவள் ஒருத்தியை –
போது விடிந்தது காண்-என்று எழுப்புவார்கள் –
உத்திஷ்ட நரசார்த்தூல-என்று விச்வாமித்ரன் போது விடிந்தது என்று எழுப்பினால் போலே-

(விடை ஆற்றி உத்சவம் திருவரங்கத்தில் இல்லை
ப்ரஹ்மாஸ்த் வங்களே மீண்டும் மீண்டும் வருவதால் இருக்கலாம் )

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-

பதவுரை

புள்ளும்-பறவைகளும்
சிலம்பின காண்–(இரை தேடுகைக்காக எழுந்து) ஆரவாரங்கள் செய்யா நின்றன காண்;
புள் அரையன்-பறவைத் தலைவனான பெரிய திருவடிக்கு
கோ–ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய
இல்லில்–ஸந்நிதியிலே
வெள்ளை–வெண்மை நிறமுடையதும்
விளி-(அனைவரையும்) அழையா நிற்பதுமான
சங்கின்–சங்கினுடைய
பேர் அரவம்–பேரொலியையும்
கேட்டிலையோ–செவிப்படுத்துகின்றலையோ?
பிள்ளாய்–(பகவத் விஷய ரஸ மறியப் பெறாத) பெண்ணெ!
எழுந்திராய்–(சடக்கென) எழுந்திரு;
பேய் முலை நஞ்சு–பூனையின் முலையில் (தடவிக் கிடந்த) விஷத்தை
உண்டு-(அவளது ஆவியுடன் அமுது செய்து
கள்ளம் சகடம்–வஞ்சனை பொருந்திய (அஸுரா விஷ்டமான) சகடமானது
கலக்கு அழிய–கட்டுக் குலையும்படி
கால்–திருவடியை
ஒச்சி–ஓங்கச் செய்தவனும்
வெள்ளத்து–திருப்பாற்கடலில்
அரவில்–திருவனந்தாழ்வான் மீது
துயில் அமர்ந்த–திருக்கண் வளர்ந்தருளின
வித்தினை-ஐகத் காரண பூதனுமான எம்பெருமானை
முனிவர்களும்–மநந சீலரான ரிஷிகளும்
யோகிகளும்–யோகப் பயிற்சியில் ஊன்றினவர்களும்
உள்ளத்து கொண்டு–(தமது) ஹ்ருதயத்தில் அமர்த்திக் கொண்டு
மெள்ள எழுந்து-(ஹ்ருதயஸ்தனான அவ்வெம்பெருமான் அசையாதபடி) ஸாவதாநமாக எழுந்து
அரி என்ற–‘ஹரிர் ஹரிர் என்ற
பேர் அரவம்-பேரொலியானது
உள்ளம் புகுந்து-(எமது) நெஞ்சிற் புகுந்து
குளிர்ந்து–குளிர்ந்தது;
ஏல் ஓர் எம் பாவாய்
(இனியாகிலும் எழுந்திரு என்று ஒருத்தியை உணர்த்துகின்ற படி)

புள்ளும் சிலம்பின காண்-
இப் பெண்களை போதொடு வாசலில் உணரத்தக்க கடவதாக சங்கல்பித்து
போது விடியச் செய்தே-கிடந்தது உறங்குவதே -என்று
சிஷ்ட கர்ஹை பண்ணினவாறே –

போது விடிய வேண்டாவோ எழுந்து இருக்க –
போது விடிந்தமைக்கு அடையாளம் என் என்று அவள் கேட்க –

நாங்கள் உணர்ந்து வந்தது அடையாளமாகப் போராதோ என்ன –

உறங்குவார் உணர்ந்தால் அன்றோ விடிவுக்கு அடையாளம் ஆவது –
உண்டோ கண்கள் துஞ்சுதல் என்ற படி -உங்களுக்கு உறக்கம் உண்டோ
உங்களுடைய உணர்த்தி விடிந்தமைக்கு அடையாளம் அன்று –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன –

புள்ளும் சிலம்பின காண்–
மார்கழி நீராட வேணும் என்னும் த்வரையும் இன்றிக்கே-
வைகி (காலம் தாழ்ந்து )எழுந்து இருக்கில் ப்ரத்யவாயமும் இன்றிக்கே
காலம் உணர்த்த உணருமவை அன்றோ புட்கள் –

நாழிகை வட்டில் நீர் நிரம்பினவாறே கீழே விழுமா போலே
இரை யறுதியிலே உணரும் திர்யக்குகளும் கூட உணர்ந்தன

சிலம்பின் காண்-
தலையிலே இடி விழுந்ததும் அறியாமே உறங்கும் அத்தனையோ என்ன -உங்கள் உணர்த்தி –
விடிவுக்கு அடையாளம் இல்லாதா போலே
நீங்கள் இருந்த வூரில் பக்ஷிகள் உணர்த்தியும் விடிவுக்கு உடல் அன்று –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்று –
காலை எழுந்து இருந்து (9-8 )-ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் எழுந்து இருந்து
கரிய குருவிக் கணங்கள் – கிருஷ்ணனுடைய வடிவை ஸ்மரிக்குமவை
மாலின் வரவு சொல்லி -அவன் வியாமுக்தனாய் வரும் படியைச் சொல்லி –
மருள் (இந்தளம் என்னும் பண் ) பாடக் கடவதாம் படி இறே-பண்ணி வைப்பது –

பஷினோ அபிப்பிராயா சந்தோ (பக்ஷிகளும் பிரார்தித்தனவே பெருமாளை )–என்று
நீங்கள் இருந்த வூரில் பக்ஷிகளுடைய உணர்த்தியும் விடிவுக்கு உடல் அன்று
மற்றை அடையாளங்கள் உண்டாகில் சொல்லுங்கோள் என்று கிடந்தாள் –

அது கிடக் கிடாய் —
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ-
இதுவும் உன் செவியில் பட்டது இல்லையோ –
திருப் பள்ளி எழுச்சிக்கு ஊதின
சங்கத் த்வனியும் விடிவுக்கு உடல் அன்றோ என்கிறார்கள்

புள்ளரையன் கோயிலில்-
கிருஷ்ணனுடைய குணங்களில் ஈடுபட்டு இருக்கும் திருவாய்ப்பாடியிலும்
ஒரு திரு முற்றம் திருவடி தொழுவாருமாய் செல்லுமோ என்னில்

(பரத்வாதி ஐந்து நிலைகளும் எப்பொழுதுமே உண்டே –
சர்வான் தேவான் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே யசஸ்வினி
திருநாராயணன் பெருமாளும் ஆய்ப்பாடியில் இருந்த பெருமாள் தானே )

ராமோ ராமோ ராம இதி பிரஜா நாம பவான் கதா -என்றும் –
பாலா அபிகிரீடா மானா-என்றும்
சிறு பிரஜைகளும் அகப்பட பெருமாளுடைய குணங்களில் தோற்றுச் செல்லா நிற்கச் செய்தே-
திரு அயோத்யையில் –
ஸஹ பத்நயா விசாலாஷா நாராயணம் உபாகமத் -என்று
பெருமாள் பிராட்டியோடே கூட பெரிய பெருமாளை உபாசிப்பர் என்றது இறே –
அப்படியிலே திருவாய்ப்பாடியிலும் ஒரு திரு முற்றம் உண்டு போலே

(நூனம் ச கால மிருக ரூபம் -காலரூபத்தால் மாரீசன் வர —
ராமானுஜம் லஷ்மண பூர்வஜ-சேஷியை இட்டே சேஷனையும் சேஷனை இட்டே சேஷியையும் )

புள் அரையன் –
என்று கிருஷ்ணனைச் சொல்லிற்று ஆகவுமாம்

புள் அரையன் –
லஷ்மண பூர்வஜம் -என்று இளைய பெருமாளை இட்டு பெருமாளை நிரூபிக்குமா போலே –
திருவடியை நிரூபகமாக யுடையவன் –
அவர்களை இட்டுத் தன்னை நிரூபிக்க வேண்டு
தங்கள் இருந்த இடத்தே கொடு வருமவன் ஆகையால் -புள்ளரையன்-என்றதாகவுமாம் –
புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்று இருக்குமவர்கள் இறே-

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ-
சங்கினுடைய வெளுப்பு போது விடிவுக்கு அடையாளம் இல்லாமையால் வியர்த்த விசேஷணம்

(வெளுப்பான சங்கு சொல்வதால் விடிந்தமைக்கு அடையாளம் ஆகுமோ –
இதுவும் வெட்டிப் பேச உறுப்பானதே )

விளி சங்கு –
சாமங்களிலே -பணிக்கு கடவாரை அழைக்கைக்கு உறுப்பாகையாலே அநைகாந்திகம்

(அனைவரயும் ஓர் இடத்தில் அழைக்க சங்கம் ஒலிப்பது உண்டே –
இது விடிந்ததும் அடையாளம் இல்லை )

பேர் அரவம் -ஏகார்த்த அபி லாஷை யுண்டு
எனக்கும் ஒக்கக் கேளாமையாலே அப்ரஸித்தம் -ஆகையால்
போது விடிவுக்கு அடையாளம் அன்று என்கிறாள்
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் (நாச்சியார் )-என்று
உங்கள் பாவனா பிரகர்ஷத்தாலே சொல்லுகிறி கோள்-
இது போது விடிவுக்கு உடல் அல்ல என்ன

பேரரவம் கேட்டிலையோ-
இந்த த்வனி கேளாத படி உள்ளூச் செய்கிற அந்நிய பரத்தை ஏதோ

பேரரவம் கேட்டிலையோ
நாங்கள் சொல்லுகிற இவற்றுக்கு அனுபவத்தி சொல்லுகிற உனக்கும் அகப்பட
கேட்க்கும் படி அன்றோ த்வனியின் பெருமை –

பிள்ளாய் எழுந்திராய்
பகவத் விஷயத்தில் அவகாஹிக்கை யாவது பாகவத சம்ச்லேஷ பர்யந்தமாகை-
அவ்வளவு அன்றிக்கே  
கிருஷ்ண சம்ஸ்லேஷத்து அளவிலே பர்யவசிக்கிறது உன்னுடைய முஃத்யம் இறே என்ன

கிருஷ்ண சம்ஸ்லேஷ அளவிலேயோ நான் நிற்கிறது
உங்களுடைய பேச்சே தாரகமாக கேட்டுக் கிடக்கிற என்னை
பிள்ளாய் -என்கிற நீங்கள் அன்றோ பிள்ளைகள் என்ன –

பேச்சுக்கு கேட்டுக் கிடக்க அமையுமோ
அடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல்(பெருமாள் ) என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ(திருவாய் -2-3-) என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்(பெரிய திருமொழி -7-4-) என்றும்
அன்றோ நம்முடைய பூர்வர்கள் வார்த்தை –
அப்படியே உன் வடிவை நாங்கள் கண்டு -எங்கள் வடிவை நீ கண்டு அனுபவிக்க ஆசைப்படாதே இருக்கிற நீ அன்றோ பிள்ளை
நாங்கள் சொல்லிற்றை எல்லாம் அழிக்கைக்கு அடி உன் பால்யம் இறே

பட்டர் திருவாய்ப்பாடியில் உள்ளாரில் சிந்தையந்தியோபாதி கிருஷ்ண சம்ச்லேஷித்தில் புதியார் இல்லை -என்று
அருளிச் செய்வார் -என் செய்ய என்னில்
குரு தர்சனம் பண்ணக் கண் உண்டாய்த்தே-
தச்சித்த விமலாஹ்லாத-இத்யாதி –
யயவ் ச காசித் ப்ரேமாந்தா என்று
ஒருத்திக்கு ப்ரேமமானது இருளை பண்ணுகையாலே காவல் கிடந்தாரைக் காணாமைக்கு உடலாய்த்து –
அது தான் வழி போகைக்கு உடலாய்த்து
குரவ கிங்கரிஷ்யந்தி–குருக்கள் கிடாய் என்ன -அவர்கள் விரஹ அக்நிக்கு ஒரு குட நீர் சொரிய வல்லார்களோ
அன்றியே வழித் துணை ஆவார்களோ என்றார்கள் –

(ஒருத்தி-திருக்கோளூருக்கு போன பராங்குச நாயகி தீர்க்க சிந்தயந்தி )

நீங்கள் சொன்ன படியே நானே பிள்ளை யாகிறேன் –
உங்கள் உணர்த்திக்கு அடி ஏது என்ன

தாங்கள் உணர்ந்தமைக்கு ஹேது சொல்கிறார்கள்

பேய் முலை நஞ்சுண்டு
தாய் வடிவு கொண்டு வந்த பூதனையுடைய ஸ்தன்ய பானத்தைப் பண்ணி –
இது சொல்லுகிறது என் என்னில்
இவள் பயப்பட்டுக் கடுக எழுந்து இருக்கைக்காக-

(பேய் முலை நஞ்சு இது வெளியில் உள்ளார் வார்த்தை –
உண்டு-இது உள்ளே இருப்பவள் வார்த்தை )

சர்வேஸ்வரனை துக்க நிவர்த்தகன் என்று இருப்பார் அல்லாதார் இறே -பெரியாழ்வார் சம்பந்திகள்
அங்குத்தைக்கு என் புகுகிறதோ என்று வயிறு பிடிக்குமவர்கள் இறே
அவள் பய நிவ்ருத்தி அளவும் அனுசந்தித்து பயம் கெட்டுக் கிடக்கிறாள்

கள்ளச் சகடம்
கிருத்ரிம சகடம் ஆனது

கலக்கழிய காலோச்சி
கட்டு அழிந்து சிதறும்படியாக திருவடிகளை நிமிர்த்து

(இங்கும் கள்ளச் சகடம் வெளியில் உள்ளார் வார்த்தை –
கலக்கழிய காலோச்சி உள்ளே இருப்பவள் வார்த்தை )

கள்ளச் சகடம்
நம்மை முடிக்க வந்த சகடம் -பூதனை தாய் வடிவு கொண்டாகிலும் வந்தாள்-
அப்படி அன்றிக்கே காவலாக வைத்த சகடம் தானே
அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புக-தன் நினைவு இன்றிக்கே முலை வரவு தாழ்த்து
ஸ்தன்யார்த்தியாயத் தொட்டிலை உதைத்த திருவடிகள் புறப்பட்டு முடித்த அத்தனை இறே –

(அஸ்மான் ஹந்தும் -சுக்ரீவன் சொன்னது போல் இங்கு நம்மைக் கொல்ல வந்தான் )

ஊர்ந்த சகடமுதைத்த பாதத்தன் ( 5-3-3 ) -ப்ரேமத்தாலே பயப்படுகைக்கு உடலாய் அச்சம் கெடுகைக்கும் உடலாய் இருக்கும்
பாதத்தன் -இவன் முஃயத்தாலே உறங்கத் திருவடிகளாலே பெற்றோம் -(திண் கழல் இறே )
அவனுடைய ஆபத்துக்கும் சேஷ பூதனுடைய ஆபத்துக்கும் ரக்ஷகமான திருவடிகள் –
திருக் காலாண்ட பெருமான் (6-9-)
ராமாவதாரத்துக்கு இளைய பெருமாளைப் போல

வெள்ளத் தரவில் –
விரோதி பிரசங்கம் இல்லாத தொரு தேசமும் ஒரு பரிவனையும் பெறுவதே –
நீர் உறுத்தாத படி -நாற்றம் மென்மை குளிர்த்தி தொடக்கமான ஸ்வபாவங்களை யுடைய திரு வனந்த ஆழ்வான் மேலே –

துயில் அமர்ந்த –
பிராட்டிமார் திரு முலைத் தடத்தாலும் நெருக்கி எழுப்பினாலும் கிளம்பாத படியாய் இருக்கை

வித்தினை
(ஜகத்துக்குக் காரணமானவனை )
கிருஷிகர் விரையை நீரிலே சேர்க்குமா போலே –
பிறந்தது நினையாது இருக்கையும் –
பிறந்தது எல்லாம் கிடக்க இன்னமும் பிறக்கைக்கு அடியாய் இருக்கையும் –
இவ் வருகு உண்டான கார்ய வர்க்கத்துக்கு எல்லாம் காரணமாய் இருக்கிறவனை

உள்ளத்துக் கொண்டு
திருப் பாற் கடலிலே திரு அனந்த ஆழ்வான் மேலே அவதார கந்தமாய்
அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனை
அரவத்தமளியினோடும் (பெரியாழ்வார் )-என்கிறபடியே
தங்கள் நெஞ்சு ஆகிற நாடுகளிலே ( 8-6-4)-குடி கொள்ளும் படி பண்ணி

முனிவர்களும் யோகிகளும்
ஒரு பிரவ்ருத்திக்கு ஷமர் இன்றிக்கே இருக்கிற குண நிஷ்டரும் -கைங்கர்ய நிஷ்டரும் –
லஷ்மண பரதர்களைப் போலே இருக்குமவர்கள் –
பரமபதத்திலும் வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்று இரண்டு கோடியாய் இறே இருப்பது

திருவாய்ப்பாடியில் அவர்கள் உண்டோ என்னில் –
கிருஷ்ணன் இங்கே அவதரிக்கையாலே ஊரில் பசு நிரைக் கொட்டில்களிலே படுகாடு கிடப்பார்கள் –
பாண்டவர்கள் வர்த்திக்கிற பணிக் கொட்டில்களிலும் இடைச் சேரியிலும் கிருஷ்ணன் படுகாடு கிடக்குமா போலே-
(அணைய–பெருமக்கள் பாரித்து –எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே )

மெள்ள எழுந்து
கர்ப்பிணிகள் பிள்ளைக்கு நோவு வாராத படி மெள்ள எழுந்து இருக்குமா போலே
ஹ்ருதயேந உத்வஹன் ஹரீம்-என்று
ப்ரஹ்லாத ஆழ்வான் தான் மலையில் நின்றும் விழா நிற்கச் செய்தேயும்
பார்த்து அருள் பார்த்து அருள் -என்று சர்வேஸ்வரனைப் பிடித்துக் கொண்டால் போலேயும்
ஹ்ருதயத்தில் இருக்கிற சர்வேஸ்வரன் தளும்பாத படி எழுந்து இருந்து –

அரி என்ற
ரக்ஷதுத்வாம் அசேஷாணாம் -என்னுமா போலே
நீயே உன்னை நோக்கிக் கொள்ள வேணும் என்று மங்களா சாசனம் பண்ணின
அத ஸ அபயங்கதோ பவதி-தம் பயம் கெட்டால்-அங்குத்தைக்கு பரிகை இறே உள்ளது

பேரரவம்
ஒருத்தன் அரி என்றது கேட்டு
ஒருவர் இருவராய் ஊராக ஹரி -என்கையாலே ப்ராதேசிகம் அன்றிக்கே
திருவாய்ப்பாடி எல்லாம் இந்த மஹா த்வனியே யாய்த்து –

உள்ளம் புகுந்து
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்து கிடந்த ஹிருதயமானது ஒரு நீர்ப் பாய்ச்சினால் போலே பதம் செய்து

குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–
மறு நீர் பாய்ந்தால் போலே குளிர்ந்தது-
அத்தாலே நாங்களும் உணர்ந்தோம் –
பிள்ளாய் எழுந்திராய் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – மாயனை மன்னு வடமதுரை மைந்தனை – -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

January 3, 2017

முதல் பாட்டிலே -நாராயணனே -என்று உபய விபூதி யோகத்தை சொல்லிற்று –
(கார் மேனி செங்கண் -நித்ய விபூதி
கதிர் மதியம் போல் முகத்தான் லீலா விபூதி )

அநந்தரம் -பாற் கடலில் பையத் துயின்ற பரமன் -என்று
அவதாரார்த்தமாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியைச் சொல்லிற்று –

அநந்தரம் இந்திரன் குறை தீர ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து –
ஒரு நாடாக வாசி வையாதே திருவடிகளைக் கொண்டு தீண்டின படியைச் சொல்லிற்று –

அநந்தரம் யோக்யராய் ஆச்சார பிரதானரான வசிஷ்டாதிகள் நியமிக்கும் படி
சக்கரவர்த்தி திரு மகனாய் வந்து அவதரித்து வாசி வைத்து உடம்பு கொடுத்த படி சொல்லிற்று –

இப் பாட்டில் வரையாதே எல்லார்க்கும் கட்டவும் அடிக்கவுமாம் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
ஒரு ஊருக்காக தன்னை முற்றூட்டாக கொடுத்த படி சொல்லுகிறது –

நோற்கின்ற பெண்களில் ஒருத்தி நாம் அனுபவிக்க இலை யகலப் படா நின்றோம் –
ஸ்ரேயாம்சி பஹு விக்நாநி என்று
பெரியவர்களுக்கும் ஸ்ரேயஸ்ஸூக்கு விக்நம் உண்டாம் என்று சொல்லிற்று

பெருமாள் திரு அபிஷேகத்துக்கு ஸம்ப்ராந்தகனான தசரதன் பாரிக்கிறான்-
ராஜரிஷியை ப்ரஹ்ம ரிஷியாக்கிய வசிஷ்டன் முஹூர்த்த விதாநம் பண்ணுகிறான் –
ராமோ விக்ரஹவான் தர்ம -என்று பாக்யாதிகரான பெருமாள் முடி சூட்டுகிறார் –
சக பத்ந்யா விசாலாட்ஷயா நாராயணம் உபாகமத் -என்று
பெருமாள் பிராட்டியாரோடே கூட பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்கிறது –
இச்சாம என்று நாடு அடங்க அபிஷேக மங்களத்தை பிரார்த்தித்து இதுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறது –
இப்படி இருக்க இதுக்கும் அன்றோ விக்நம் வந்தது –

நாம் அநாதி காலம் பண்ணின பாபம் கிடக்க இது கூடுமோ என்று கேட்க —

நாம் அவனுடைய அனுபவத்தில் இழியவே-
உத்தர பூர்வாகங்களுக்கு
அஸ்லேஷ
விநாசம் உண்டு என்று பரிஹரிக்கிறார்கள் –

ஈஸ்வரன் தான் சங்கல்ப்பித்தது குலைந்தாலும்
ததீயர் சங்கல்பம் தன்னை
தன்னை அழிய மாறியும் தலைக் கட்டிக் கொடுக்கும் –

அவர் தாமும் முடி தவிர்ந்து –
மஹா ராஜர்க்கும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் முடி சூட்டுக்கைக்கு இறே –

அர்ஜுனன் ஜெயத்ரனை அஸ்தமிக்கைக்கு முன்னே கொல்லக் கடவேன் -என்று சங்கல்ப்பிக்க-
ஆயுதம் எடேன் என்றவன் ஆயுதம் எடுத்தும் –
பொய் சொல்லியும் –
பகலை இரவாக்கியும் –
அர்ஜுனன் சங்கல்பத்தை இறே தலைக் கட்டிக் கொடுத்தது –

பற்றப் புகுகிற விஷயத்தினுடைய நன்மை ஏது –
பற்றப் புகுகிற நாம் எவ்வளவிலோம் –
பற்றுகையாவது தான் ஏது என்று
அயோக்யதா அநு சந்தானம் பண்ண

நோவு மிக்கதனையும் நாலைந்து குடி நீர் எழக் குடிக்குமா போலே
நாம் திரு நாம சங்கீர்த்தனத்திலே அதிகரிக்கவே இதுக்கு
விரோதி கர்மங்கள் அடைய நசிக்கும் என்கிறார்கள் –

மாயனைத் தாமோதரனைச் செப்பு –
1-மாயனைச் செப்பு –
2-மன்னு வட மதுரை மைந்தனைச் செப்பு
3-தூய பெருநீர் யமுனைத் துறைவனைச் செப்பு
4-ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைச் செப்பு
5-தாயைக் குடல் விளக்கம் செய்தவனைச் செப்பு
6-தாமோதரனைச் செப்பு
குடிக்கிற குடி நீர்கள் (ஓவ்ஷதம் ) இவை –

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-

பதவுரை

மாயனை–மாயச் செயல்களை யுடையவனும்
மன்னு வட மதுரை மைந்தனை-(பகவத் ஸம்பந்தம்) நித்யமாகப் பெற்றுள்ள வட மதுரைக்குத் தலைவனும்,
தூய பெரு நீர்–பரிசுத்தமாய் ஆழம் மிக்கிருக்கிற தீர்த்தத்தை யுடைய
யமுனை துறைவனை–யமுனை யாற்றங்கரையை நிரூபகமாக வுடையவனும்,
ஆயர் குலத்தினில் தோன்றும்–இடைக் குலத்தில் விளங்கா நின்றுள்ள
அணி விளக்கை–மங்கள தீபம் போன்றவனும்
தாயை குடல் விளக்கஞ்செய்த–தாயாகிய தேவகி பிராட்டியின் வயிற்றை விளங்கச் செய்தவனுமான
என்ன நோன்பு நோற்றாள் கொலோ என்று கொண்டாடும்படி யசோதை பிராட்டியின் வயிற்றை விளங்கச் செய்தவனுமான -என்றுமாம்
தாமோதரனை–கண்ண பிரானை,
நாம்–(அடிச்சியோமாகிய) நாம்
தூயோம் ஆய் வந்து–பரி சுத்தி யுள்ளவர்களாய்க் கிட்டி
தூ மலர்கள் தூய்–நல்ல மலர்களைத் தூவி
தொழுது–வணங்கி
வாயினால் பாடி–வாயாரப் பாடி
மனத்தினால் சிந்திக்க–நெஞ்சார தியானம் பண்ண (அதன் பிறகு)
போய பிழையும்–(சேஷ சேஷி பாவ ஜ்ஞான முண்டாவதற்கு) முன்பு கழிந்த பாவங்களும்,
புகு தருவான் நின்றனவும்–பின்பு (தன்னை அறியாமல்) வரக் கூடிய பாவங்களும்
தீயினில் தூசு ஆகும்–நெருப்பிலிட்ட பஞ்சு போலே உருமாய்ந்து போம்; (ஆன பின்பு)
செப்பு–அவ் வெம்பெருமான் திரு நாமங்களைச் சொல்;
ஏல் ஓர் எம் பாவாய்!

மாயனை –
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் –
உபய விபூதி உக்தனாய் –
ஸ்ரீ யபதியாய்
ஏகார்ணவம் போலே -நித்ய விபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

யாதோ வாசோ நிவர்த்தந்தே–
யஸ்ய அமதம் தஸ்ய மதம்-
அவ்விஞ்ஞாதம் விஜா நதாம்–
பண் கடந்த தேசம் (திருச்சந்த-25 ) -என்றும்
வேதங்கள் மனசோடு வாக்குக்கு நிலம் அன்று என்று மீண்ட பரத்வம் –
இவளுக்குப் பேசலாம் படி கை வந்த படி –

(மலக்கு நாவுடையேர்க்கு மாறு உளதோ இம்மண்ணின் மிசையே -என்று
சொல்லிக் கொள்பவர்கள் அன்றோ
அவாக்ய அநாதரனாக இருப்பவனை தென்னா தென்னா என்னப் பண்ணுவார்கள் அன்றோ )

வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -என்று இவ் விடத்திலும் அவ் விடம்
தனக்கு நிலமாய் இருக்கிறது என்னும் இடத்தைத் தானே அருளிச் செய்தாள் இறே

தோணி என்றது –
தன்னுடைய அபி நிவேசத்துக்கு ஒரு தோணி ஸ்தாநீயனாய் ஸ்ரீ வைகுண்ட நாதன் இருந்தபடி –

ஞானம் விசதம் ஆனால்-
அவ்விடம் அணித்தாய் –
இவ்விடம் தூரமாய் இருக்குமே –
உன் பேர் அருளால் இக்கரை ஏறி என்றார் இறே தமப்பனாரும் –

அவன் அபிமானத்திலே கிடக்கும் பேரே அங்குள்ளார் –
மனை அடைவே ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் அவர்கள் இறே இங்குள்ளார் –

மாயனை –
கிருஷ்ணாவதாரத்தில் அனுபவித்து -எத்திறம் -என்ற நம்மாழ்வாரைப் போலே
அங்குத்தை குணத்தை அனுசந்தித்து -எத்திறம் -என்கிறாள் –
இங்கு ஒரு ஊராக உடம்பு கொடுத்தமையைச் சொல்ல நினையா –
ஒரு நாட்டுக்காக உடம்பு கொடுத்தமையைச் சொல்லுகிறாள் –

(அங்கே இருந்து இங்கு இறங்க வந்த குணம் –
நதி மூலம் ரிஷி மூலம் -திரு நாட்டுக்காக -அங்கு -கோகுலத்துக்காக இங்கு
அவர்களுக்கும் எட்டாத மேன்மை உண்டே -ஆகவே அங்கும் ஸுலப்யம் உண்டே )

இங்குள்ளாருக்கு தன்னை அமைத்துக் கொடுக்குமா போலே காணும்
அங்குள்ளார்க்குத் தன்னை அமைத்துக் கொடுக்கும் படி –

அவனுடைய ஸ்வரூப வை லக்ஷண்யத்தைப் பார்த்தால்
இங்குள்ளாரோடு அங்குள்ளோரோடு வாசி இல்லை இறே
இவ் வெளிமைக்கு அடியான இடம் இறே இவ்விடம் –
ஒருத்தி தாம்பாலே பந்தித்த படியை சொல்ல நினையா
சதா பஸ்யந்தி -என்று ஒரு நாடாக த்ருஷ்டிகளாலே பந்திக்கும் படியைச் சொல்லுகிறது

மாயனை
அப்படி பெரிய ஸர்வேஸ்வரன் –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
இடையர்களுக்கும் பசுக்களுக்கும் தன்னை அணையலாம் படி நியமித்து
நவ நீத ஸுர்ய நகர ஷோபாதிகளால் உண்டான ஆச்சர்யத்தை நினைத்து
எத்திறம் என்கிறது ஆகவுமாம் –
சூட்டு நன் மாலைகள் இத்யாதி –

(சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே -திரு விருத்தம்–21-
அங்கு உள்ள நிலைக்கும் இங்கு கூத்து அடித்ததுக்கும் சரியான பாசுரம் அன்றோ இது
மாயையினால் அங்கு நம்மாழ்வார் -இங்கு மாயனை -ஆண்டாள்
ஆயன் ஆகி ஆயர்-மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய்?
மாய மாய மாயை கொல்? அது அன்றி நீ வகுத்தலும்
மாய மாயம் ஆக்கினாய் உன் மாயம் முற்றும் மாயமே -திருச்சந்த விருத்தம் (41)
எல்லா தசைகளிலும் மாயம் உண்டே )

மன்னு வட மதுரை மைந்தனை –
சதைக ரூப ரூபாய என்கிறபடியே –
அங்கு ஏக ரூபனாய் நின்று உடம்பு கொடுத்த படியைச் சொல்லிற்று
இங்கு ப்ரவாஹ ரூபேண உடம்பு கொடுக்கும் படி சொல்லுகிறது –

மன்னு வட மதுரை –
ஆனை படும் ஆகரம் போலே அவதாரம் மாறாத வூர் –
சித்தாஸ்ரமத்தில் ஸ்ரீ வாமனனாய் தபஸ்ஸூ பண்ணி வர்த்தித்ததும்
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் வன்னியம் அறுத்து தனக்கு படைவீடாகப் பெற்று நெடு நாள் இருந்து ராஜ்ஜியம் பண்ணியும்
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும் –
இப்படி பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –

வடமதுரை –
மல்லை மூதூர் வடமதுரை (9-10-6 )என்று நம்மாழ்வார் ஈடுபட்ட தேசம் இறே –
அப்படி இறே மஹரிஷிகள் ஈடுபட்டது –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ சுபா யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத-
(மதுரையார் மன்னன் என்பதில் ஆசை மிக்கவன் அன்றோ )

மதுரா நாம –
பரமபதத்திலும் காட்டில் இவ்வூர் பிரசித்தம் போலே –
கலங்கா பெரு  நகரம் ஆகையால் கலங்காது இருக்கிறது அங்கு –
கலங்கும் தேசத்திலே கலங்காதே இருக்கிறது இங்கு –

நகரீ -விட்டுப் போந்த இடமோ -பிறந்து படைத்து விரும்பின விடமோ படை வீடாவது –
புண்யா -அபிமத லாபத்தை யுண்டாக்க வற்றாய் இருக்கை-அவனைப் பெறுகைக்கு உபாயமும் தானே –
பாப ஹரீ-அப்பேற்றுக்கு பிரதிபந்தக நிரசனமும் பண்ண வற்றாய் இருக்கை –
சுபா -ஒன்றைப் போக்கவும் ஒன்றைத் தரவும் வேண்டா -பரம பதம் போலே ப்ராப்யமும் தானேயாய் இருக்கும் –
யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத -யாதொன்றிலே ஜகந்நாதன் ஆனவன் ஜாதனானான் –
சம்சாரிகளுடைய குறை தீர்க்கைக்காக நியாந்தாவானவன் நியாம்ய கோடியிலே பிறந்தான் –
(செங்கோலும் சிறுகோலும் )

சாஷாத் -ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்றும் –
பிரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாயா -என்னும் படியே
மாயை -என்று ஞானமாய் -தன்னுடைய இச்சையால் அவதரித்தான் என்கிறது
விஷ்ணு -வியாபக வஸ்து -வியாப்பிய ஏக தேசத்திலே வந்து பிறந்தான் என்கை
எங்கும் உளனானவன் ஓர் இடத்திலே தோன்றின படி
சனாதன -என்றும் உளனானவன் ஒரு நாளிலே தோன்றின படி –

மைந்தனை -தந்தை காலில் பெரு விலங்கு தாழ் அவிழ-என்று பிறந்த போதே
ஸ்ரீ வாஸூ தேவர் காலில் விலங்கு தானே விடும்படியான மிடுக்கைச் சொல்கிறது –
பருவம் நிரப்புவதற்கு முன்னே கம்சனை கொன்ற மிடுக்கைச் சொல்லிற்று ஆகவுமாம்

மைந்தன் -என்று
பிள்ளையாகவுமுமாம் –
ராஜா வாகவுமுமாம் –
வடமதுரையார் மன்னன் என்றாள் இறே –

தூய பெரு நீர் யமுனை –
விட்ட வற்றை (நாட்டை -பரமபதத்தை -நதியை -விரஜையை ) மறக்கும் படியான ஆறு –
பரம பதத்தில் நின்றும் வந்து அவதரிக்கைக்கு இவ் வூர் உண்டானால் போலே
பரம பதத்துக்கு விரஜை போலே இவ்வூருக்கு இவ்வாறு –

அடி அறிவார் கூடப் போந்து கருத்து அறிந்து கார்யம் நடத்துமா போலே –
திருவடி திருவனந்த ஆழ்வான் போலே கருத்து அறிந்து
அவ்விருளிலே கிருஷ்ணனை எழுந்து அருளுவித்துக் கொண்டு போக
முழங்கால் மட்டாக வெற்றிக்கு கொடுத்த சுத்தியைச் சொல்கிறது

யமுனாஞ்சாதி கம்பீராம் நானாவர்த்த சஷாகுலாம் வஸூ தேவோ வஹான் கிருஷ்ணம் ஜானு மாத்ரோத கோயயவ்
பிராட்டி சரணம் புகவும் ராவண பயத்தால் அஞ்சி இருந்த கோதாவரி போல் அன்றிக்கே
கம்சன் மாளிகை நிழல் கீழே வற்றிக் கொடுத்த படி

தூய்மை யாகிறது
பகவத் ஸ்பர்சம் இறே (கீழே கைங்கர்யம் )
வல்லவீ வதன உச்சிஷ்ட பவித்ர அதர வித்ரும -என்னுமா போலே
(இதனால் அவனுக்கே ஆனந்தம் பாவானத்வமாம் -இந்த பிரமாணம் ஆகாரம் தெரியவில்லை _
கிருஷ்ணனும் பெண்களுமாக ஜலக்ரீடை பண்ணி
ஒருவருக்கு ஒருவர் கொப்பளித்ததால் வந்த சுத்தி யாகவுமாம் –

தூய
பிரசாதம் நிம் நகா யாதா -என்று நீர் தெளிவைச் சொல்லிற்று ஆகவுமாம் –
(ரமணீயம் ப்ரஸானந்தம் -தமஸா நதி தெளிவு –
அதே போல் கறுமையாக இருந்தாலும் தெளிவு உண்டே இங்கு )

பெரு நீர் –
கிருஷ்ணனும் பெண்களும் ஜலக்ரீடை பண்ணுகைக்கு போரும் படி –
சம்ருத்தமான ஜலம்-பெண்களுடைய விரஹ தாபம் கெட குளிக்கப் போரும் நீர் என்றுமாம் –
அன்றியே
நீரினுடைய ஸ்லாக்யதையை சொல்லிற்று ஆகவுமாம் –

யமுனைத் துறைவனை –
கவி பாடுவாருக்கு
ஊரும்
பேரும்
ஆறும் வேண்டக் கடவது இறே

யமுனைத் துறைவனை-
முத்துப் படும் துறை என்பாரைப் போலேயும் –
சங்கணித் துறை என்னுமா போலேயும் –
கிருஷ்ணனுக்கு பெண்கள் படும் துறை –

நற்சரக்கு படுவது நீரிலே யாகாதே –
அமுதில் வரும் பெண்ணமுது என்னுமா போலே

துறைவன்
கம்ச பயத்துக்கு அஞ்சி ஒளிக்க வந்து சேர்ந்தாரை சொல்லுமா போலே சொன்னபடி பாரீர் -என்பர் பட்டர்

ஆயர் குலத்தினில் தோன்றும் –
பிறவாத பரம பதத்தோ பாதி ஸ்ரீ மதுரையில் பிறப்பும் –
முலைப்பால் குடித்து அழுத இடம் இறே பிறந்த இடமாவது

தோன்றும் –
ஆவீர் பூதம் மஹாத்மநா –
கிழக்கே உதிக்கிற ஆதித்யனுக்கு ஸ்பர்சம் உண்டாகில் இவள் வயிற்றில் ஸ்பர்சம் உண்டாவது என்றான் ரிஷி –
பிறந்தது குணமாகைக்காக -பிறந்தவாறு -என்று ஈடுபட்டார் ஆழ்வார்

அணி விளக்கை –
ஸ்ரீ வைகுண்டத்திலும்
ஸ்ரீ மதுரையிலும் அனுஜ்ஜ்வலனாய் போலே இருப்பது –

ஆயர் பாடிக்கு அணி விளக்கு -என்கிறபடியே
இவர்களுக்கு கண் காட்டியாய் இருக்கை –
அந்தகாரத்தில் தீபம் போலே தாழ்ந்தார் பக்கலில் இறே குணம் பிரகாசிப்பது –
பிறப்பாய் ஒளி வரு முழு நலம் ( 1-3-2 )இறே
(ஸு ஸ்ரேயான் பவதி ஜாயமான )

மணி விளக்கு என்ற போது –
இங்கே புகுந்த பின்பு பரமபதத்தில் அழுக்கற்ற படி
(மாயன் அங்கு இங்கு வந்து விளக்கு ஆனான் அவன் அழுக்கு போந்ததாம் )

தாயைக் குடல் விளக்கம் செய்த
வயிற்றிலே கட்டின தழும்பாலே ஒருத்திக்கு ஒரு பிள்ளை கட்டலாம் படி பவ்யனாவதே என்று
யசோதை பிராட்டியை விளங்கப் பண்ணினவனை –
கௌசல்யா சுசுபே-
இவனைப் பெற்ற வயிறுடையாள்-என்ன நோன்பு நோற்றாள் கொலோ -(பெரியாழ்வார் -2-2)

தாமோதரனை-
நம்முடைய பந்தம் நம்மால் அறுக்க ஒண்ணாதாப் போலே –
அவனுடைய பந்தமும் அனுக்ரஹத்தாலே யாகையாலே அவனாலும் அறுக்க ஒண்ணாது –
நம்முடைய பந்தம் அவன் காலிலே விழத் தீரும் –
அவனுடைய அனுக்ரஹ கார்யம் ஆகையால் அனுபவித்தே அற வேணும் –
அவனுடைய பந்தத்தை அனுசந்திக்க சம்சார பந்தம் அறும் -என்னா நின்றது இறே
இவன் வயிற்றில் தழும்பைக் கொண்டாடுகை —
அவள் வயிற்றுக்குப் பட்டம் கட்டுகை –

பணைகளிலே தாவினவாறே உடை நழுவ தழும்பைக் கண்டு இடைச்சிகள் சிரித்தார்கள் –
அத் தழும்பு தோன்றாமைக்கு இறே
நம் பெருமாள் கணையம் மேல் சாத்து சாத்துகிறது -என்பர் நஞ்சீயர்

தூயோமாய்
இடைச்சிகள் தூய்மை இறே –
தலை  இருக்க உடம்பு கழுவியும் -உடம்பு இருக்க தலை  கழுவியும் போருவர்கள் இறே
பகவத் சம்பந்தம் ஒழிய தனக்கு ஒரு சுத்தி சம்பதிக்கையாவது அசுத்தனாய் விடுகை இறே –
அவனுடைய சம்பந்தத்தை அனுசந்திக்கை ஒழிய தனக்கு ஒரு சுத்தி இல்லையே –
(தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப்பால் போல் அன்றோ )
விபீஷணன் கடலிலே ஒரு முழுக்கு இட்டு இன்று இறே வந்தது –
அர்ஜுனன் யுத்தத்தின் நடுவே முழுக்கு இட்டு இன்று இறே சரம ஸ்லோகம் கேட்டது –
திரௌபதி முழுகி யன்றே பிரபத்தி பண்ணிற்று

ஆகையால் பிரபத்திக்கு ஒரு சுத்தியும் தேட வேண்டா –
அசத்தி சம்பாதிக்கவும் வேண்டா –
நின்ற நிலையில் அதிகாரம் அமையும் –

மமஸாபி-கடல் கலங்கித் தெளித்தால் போலே ராம பக்தியால் கலங்கின என் நெஞ்சும் தெளிந்தது –
சம்சார பந்தத்தால் வந்த கலக்கம் தெளிகைக்கு பகவத் குணங்கள் உண்டு –
அந்த குணங்களால் வந்த கலக்கத்தை எத்தாலே தெளிய பண்ணுவது
(சுக்ரீவன் பொங்கும் பரிவால் கலங்கி என்ன ஆகுமோ என்று அன்றோ தடுத்தான்)

சுத்தம் வேத்தி விபீஷணம்-
வந்தவனுடைய சுத்தி அடங்கலும் வடிவிலே தெரியா நின்றது —
அவனுக்கு சுத்தியாக நினைக்கிறது ராம சம்பந்தத்தை இறே –
பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன
(பூதராக்கும் நெடும் நோக்கு அன்றோ )

தூயோமாய்
அநந்ய பிரயோஜனத்தை சொல்லிற்று ஆகவுமாம்

வந்து –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்று
அவன் வரவை நாம் செய்யக் கடவோம் –
உபஸ்தேயை ரூபஸ்தித-என்றும் –
பத்ம்யாமபி கமாச்சைவ-என்றும்
இட்ட நாலடிக்கும் புண் பட்டு இருக்குமவன் இறே

உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாது –
உபேயத்தில் துணிவு புறப்படாது இருக்க ஒட்டாது

நாம்
க்ரம பிராப்தி பற்றாத நாம்

தூ மலர்
பிரயோஜனத்தை கணிசியாது இட்ட மலர்
மிக்க சீர் தொண்டர் இட்ட பூ –
கள்ளார் துழாயும் -கணவலர்-அலரி விஜாதீயங்களையும் சொல்லுகிறது
அநந்ய பிரயோஜனர் தொட்டது ஏதேனுமாம்

புள்ளாய் ஓர் ஏனமாய்
இவன் ஏதேனும் இடிலும் கொள்ளுகைக்கு தன்னை அமைத்த படி –
ஸ்ரீ வராஹ கல்பத்தில் முத்தக்காசை அமுது செய்விக்கச் சொல்லிற்று

பத்ரம் புஷ்ப்பம்-த்ரவ்ய தார தம்யம் பார்ப்பது இல்லை –
இடுகிறவன் நெஞ்சிலே ஈரமே பார்ப்பது –
எல்லாம் கூட அஸ்நாமி இறே

தூவி
யதா ததா வாபி-என்கிறபடியே –
க்ரம விவிஷை அன்றிக்கே அடைவு கெட்டு இருக்கை

தொழுது –
விரோதிகள் கண்டால் முறை தப்பாமைக்கு —
கை படைத்த பிரயோஜனம் பெறுகை-

வாயினால் பாடி –
வாக்குப் படைத்த பிரயோஜனம் பெறுகை —

உவாச ச மஹா ப்ரஞ்ஞா -என்று
வருகைக்கு மேலே வார்த்தையும் சொல்லுவதே -என்று
அவனை நோவு படுத்துகை –

மனத்தினால் சிந்திக்கை –
மனசாதி கச்சதி -வாக்குத்தர என்கிற நிலை குலைந்து-
மனஸ்ஸூக்கு முன்பே தொழுகையும்
பாடுகையும்
முற்படுகையாலே ஆற்றாமையின் மிகுதி சொல்லிற்று –

மநோ வாக் காயங்கள் மூன்றும் அங்கே பிரவணமாம் படி –
உபாயம் ஆகில் இறே ஒன்றே அமைவது –

போய பிழையும் புகு தருவான் நின்றனவும்
உத்தர பூர்வாகக்ங்கள்-பால் குடித்து வியாதி போக்குமா போலே –
இனியது அனுபவிக்க இன்னாதது குலையும்

பூர்வமாகிறது –
ஞானம் பிறப்பதற்கு முன்பு புத்தி பூர்வகமாக பண்ணின பாவம்

உத்தாரகம் ஆவது –
பகவத் ஸமாஸ்ரயணத்துக்கு பின்பு பிரகிருதி வாசனையால் பிராமாதிகமாகச் செய்யுமது –

தீயினில் தூசாகும்
நெருப்பில் பட்ட பஞ்சு போலேயாம் –
இஷீக தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத-என்ற வேதத்தில் சொன்ன அர்த்தம்
பெரியாழ்வார் மகள் ஆகையால்
இடைச்சியான பின்பும் பின்னாட்டுகிற படி –

செப்பு –
வாக்கு மனஸ் காயங்களால் அனுபவிக்க வேணும் என்கிறது மிகை –
விரோதி போகைக்கு உக்திக்கு மேலே வேண்டா என்கை
அவன் இவன் அனுகூலித்த வாறே பூர்வாகத்தை விஸ்மரிக்கும் –
உத்தராகத்துக்கு அவ்விஞ்ஞாதாவாம் –
இனி யார் அனுபவிப்பார்
புண்ய பாபங்கள் ஆகின்றன அவனுடைய அனுக்ரஹ நிக்ரஹங்கள் இறே –
அவன் பொறுத்தேன் என்ன அனைத்தும் போம் –

தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது-வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்-
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –
மாயனை –
மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த
தாமோதரனை –
செப்பு –
என்று அந்வயம் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -ஆழி மழைக் கண்ணா – -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

January 3, 2017

பெண்பிள்ளைகள் மார்கழி நீராடினால் வரும் ஸம்ருத்தியை மநோ ரதியா நிற்க –
பர்ஜன்யனும் –
பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகிறவர்களுக்கு
சிறிது கிஞ்சித் காரம் பண்ணி நாமும் நம்முடைய ஸ்வரூப லாபம் பெற வேணும் என்று –
நான் இங்குத்தைக்குச் செய்யும் படியை நியமிக்க வேணும் -என்ன –

பெண் பிள்ளைகள் நோற்ற படியே –
வர்ஷம் பெய்த படியே -என்று எங்களை எல்லாரும் கொண்டாடும் படியே வர்ஷிக்க வேணும்
அவன் செய்யும் அடிமைகளை கையோலை செய்து கொடுக்கிறார்கள் –

த்ரவந்தி தைத்யா பிரணமந்தி தேவதா -என்கிறபடியே
பகவத் ஸமாச்ரயணம் பண்ணுவார்க்கு தேவதைகள் வந்து குட நீர் வார்க்கக் கடவது இறே
அவை தான் ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுவர்த்தியாது ஒழிவது என் -என்று கேளாய் -என்று ஆழ்வான் –

(ஸ்வ புருஷம்- அபீவீஷ்ய-பாச ஹஸ்தம்-வததியம் அகில யமகில தஸ்ய கர்ண மூலே
பரிகர மது ஸூதன ப்ரபந்நான் -ப்ரபுரஹம் அந்நிய நிரூணாம் ந வைஷ்ணவா நாம்-ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் –3-7-15-
அஜாமிளோ வ்யாக்யானம் )

ஸ்வ புருஷம்-ஓலக்கத்திலே சொல்லுகை அன்றிக்கே தன் மனிசராய் தனக்கு பரிவரானவர்களுக்கு –

அபீவீஷ்ய-தன்னது நாலைந்து சிறு முறி மறுக்கும் படி அவர்களுக்குத் தரம் செய்து கொடுத்து வைக்கும் படி –
மெய்யே அழைக்கிறான் -என்று தோற்றும்படி சாதரமாகப் பார்க்கிறான் –

பாச ஹஸ்தம் -அவன் முன்பு கொண்ட கோலம் குலையாதே நின்றபடி

வததியம் அகில -நீங்கள் இப்படியே அவர்கள் முன் செல்லில் என் தலையும் இவ் விருப்பும் நிலை நில்லாது –

யமகில-ஸர்வேஸ்வரன் அவன் என்று தோற்றும் படி கூறாக விட்டவன்

தஸ்ய கர்ண மூலே-ராஜ தார ப்ராவண்ய நிஷேதமும் பிறர் அறியில் பொல்லாதே-

பரிகர மது ஸூதன ப்ரபந்நான் –ஆஸ்ரித விரோதிகளைக் கண்டால் தன்னைப் பேணாதே மேல் விழுமவன் பக்கலிலே
ந்யஸ்த பரராய் இருக்கும் அவர்கள் இறே -நான் அவன் கையில் மது பட்டது படாமே கிடிகோள்

ப்ரபுரஹம் அந்நிய நிரூணாம் ந வைஷ்ணவா நாம் -நீயோ பிரபு என்று இருந்தோம் -உன்னை ஒழியவும் சிலர் உண்டோ என்ன
சோறும் தண்ணீரும் தாரகம் என்று இருப்பார்க்கு நான் பிரபு –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் தான் எனக்கு பிரபுக்கள் –என்கிறான்

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–-நான்முகன் திருவந்தாதி -68-

திறம்பேல் மின் கண்டீர் -திறம்பவும் தானே கொடுத்து வைத்தான் போலே –
திருவடி தன் நாமம் மறந்தும் -வகுத்தவனுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் –பவ சரணம் -என்கிறதுவும் கழியுண்கிறது
(தாத பாத -அப்பாவைச் சொல்லுவது போல் திருவடி என்றது ஸ்வாமி என்றவாறு )
மறந்தும் புறம் தொழா மாந்தர் -தேவதாந்த்ர ஸ்பர்சம் இன்றிக்கே இருக்குமவர்களை -பர்த்தாவோடு பார்யைக்கு
பொருத்தம் இல்லையே யாகிலும் ருசி உண்டானவன்று கூடலாம் –
பர்த்தந்த்ர சம்ஸ்லேஷம் உண்டானால் யோக்கியதையும் கெடும் இறே

(பகவத் சேஷத்வத்திலும் அந்நிய சேஷத்வம் கழிகையே பிரதானம் என்றவாறு )

இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் -வணங்கி அநு கூல வேஷத்தோடு போருங்கோள்-
நமனும் தன் தூதுவரை கூவிச் செவிக்கு-ஸ்வ புருஷம் என்றால் போலேயும் -கர்ண மூலே -என்றால் போலேயும்

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——முதல் திருவந்தாதி–55-

அவன் தமர் எவ் வினையர்-இத்யாதி –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட் பட்டார் பேர் ஆராயப் பட்டு அறியார் கண்டீர்-
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது அவனையும் எமன் கோஷ்ட்டியில் பட்டோலை பார்க்கப் பெறாது

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-116-

மாறு செய்த வாள் அரக்கன் -கண்டால் ஜிதம் -என்று விழ இறே அடுப்பது
வாள் அரக்கன் நாள் உலப்ப-கொண்ட வரமும் ஆயுஸ் ஸூம் கூட முடிய

அன்று இத்யாதி -வர பல புஜ பலங்களாலே பூண் கட்டின வூரை வர பொர இருக்கை அன்றிக்கே –
அவர்கள் இருந்த இடங்களிலே சென்று முடித்து

வென்றி கொண்ட -சக்கரவர்த்தி திரு மகனோடு ஒரு பேரிலே இருப்பான பின்பு இனி
அவர் குற்றம் உண்டாகில் பார்க்கும் அத்தனை என்கிறார்

வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே—-ஸ்ரீ பெரிய திருமொழி-8-10-7-

வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -என்னும் படி இறே
தேவதைகள் அஞ்சி வர்த்திக்கும் படி

ஆகையால் பர்ஜன்யனும் நான் செய்ய வேண்டும் அடிமை என் என்று கேட்க
அவனை நியமிக்கிறார்களாய் இருக்கிறது –

(இப்பாசுரம் நமஸ்ஸூ பதார்த்தம்
ஊழி முதல்வன்-அத்வாரக ஸ்ருஷ்டி
பற்பநாபன்-சத்வாரக ஸ்ருஷ்டி
இரண்டுமே இப்பாசுரத்தில்
ஆழி போல் மின்னி-வலம்புரி போல் நின்று அதிர்ந்து–-ஒளியும் ஒலியும் – இரண்டுமே இப்பாசுரத்தில் )

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4-

பதவுரை

ஆழி மழை கண்ணா–மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான பர்ஜந்யனே !
நீ–நீ
கை-(உன்னுடைய) கொடையில்
ஒன்றும்-ஒன்றையும்
கரவேல்–ஒளியா தொழியவேணும்; (நீ செய்ய வேண்டிய பணி என்ன வென்றால்)
ஆழியுள் புக்கு–கடலினுட் புகுந்து
முகந்து கொடு–(அங்குள்ள நீரை) மொண்டு கொடு
ஆர்த்து–கர்ஜனை பண்ணி (பேரொலி செய்து)
ஏறி–(ஆகாயத்தே) ஏறி,
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து–காலம் முதலிய ஸகல பதார்தத்ங்களுக்குங் காரண பூதனான
எம் பெருமானுடைய திருமேனி போல் (உனது) உடம்பிற் கருமை பெற்று
பாழி அம் தோள் உடை பற்பநாபன் கையில்–பெருமையும் அழகும் கொருந்திய தோள்களை யுடையவனும்,
நாபிக் கமல முடையனுமான எம் பெருமானுடைய கையில் (வலப் பக்கத்திலுள்ள)
ஆழி போல் மின்னி–திருவாழி யாழ்வானைப் போல் ஒளி மல்கி,
வலம்புரி போல் நின்று அதிர்ந்து–(இடப் பக்கத்திலுள்ள) பாஞ்ச ஜந்யாழ்வானைப் போல் நிலை நின்று முழங்கி,
சார்ங்கம் உதைத்த–ஸ்ரீ சார்ங்கத்தாலே தவளப்பட்ட
சரம் மழை போல்–பாண வர்ஷம் போல்,
வாழ (உலகத்தாரனைவரும்) வாழும்படியாகவும்
நாங்களும்–(கண்ண பிரானோட்டைக் கலவிக்கு நோன்பு நோற்கிற) நாங்களும்
மகிழ்ந்து–ஸந்தோஷித்து
மார்கழி நீராட–மார்கழி நீராட்டம் செய்யும் படியாகவும்
உலகினில்–இல் வுலகத்தில்
தாழாதே–தாமதம் செய்யாமல் (சடக்கென)
பெய்திடாய்–மழை பொழியக் கடவை.
ஏல் ஓர் எம் பாவாய் !.

ஆழி மழைக் கண்ணா –
ஆழி -என்று சமுத்திரமாய் -அத்தால் -நினைக்கிறது –
காம்பீர்யத்தையும் –
இடமுடைமையுமாய் –
ஸர்வேஸ்வரன் தன் கார்யம் செய்கைக்கு அளவுடையவன் இவன் என்று
திரு உள்ளத்திலே தோற்றி நியமிக்கும் படி பிறந்தவன் அன்றோ நீ –
சமுத்திர இவ காம்பீர்யே-என்னக் கடவது இறே –

ஆழி -என்று வட்டமாய் -அத்தாலே நினைக்கிறது -மண்டலத்தையாய் –
ஒரோ இடங்களில் சுழித்து வர்ஷிக்கையும்
மண்டல வருஷத்துக்கு நிர்வாஹகன் ஆனவன் என்றுமாம் –

ஆழி மழைக் கண்ணா —
மழைக்கு த்ருஷ்டியாய் நிர்வஹிக்குமவன் ஆகையால் –
மழைக் கண்ணன் என்று அதிகரித்த காரியத்தை
இட்டுச் சொல்கிறார்கள் என்றுமாம் -இன்னது பிடித்தான் என்பது போலே –

இவர்கள் தான் யாரேயேனும் அழைக்கையிலும்
கண்ணா என்று ஒழிய அழையார்கள் கிருஷ்ணனோட்டை வாசனையால்

பீஷாஸ்மாத் வாத பவத-
நெற்றி பெற்ற கண்ணன் -என்று தேவதைகள் அநு வர்த்திப்பதாக சொல்லப்படுகிற ஸர்வேஸ்வரன்
அவதரித்து நோன்புக்கு சொல்லிற்று செய்யக் கடவனான பின்பு
பர்ஜன்யன் கிஞ்சித் கரித்து சத்தை பெறக் கடவன் இறே

(நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –திருச்சந்த–87- )

ஈஸ்வரன் பக்கல் கிஞ்சித் கரித்தவர்களுக்கு பல சித்தி இவர்களாலே யானால்
இங்கு கிஞ்சித் கரித்தவர்களுக்கு சொல்ல வேண்டா விறே

ஆழி -என்று கடலாய் –சமுத்திர இவ காம்பீர்ய -என்கிறபடியே
கம்பீர ஸ்வபாவனாய் வர்ஷத்துக்கு நிர்வாஹகானானவனே –
பிராட்டி பிலவங்கம்-என்னுமா போலே –

(அதே போல் இங்கும் குத்திப்பேசும் சொல்
பாகவத சேஷத்வம் சொல்லாமல் அதிகாரி தேவனே என்பது )

ஈஸ்வரன் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களை ப்ரஹ்ம ருத்ரர்களை தலையிலே வைத்து
தான் பாலனத்தை அதிகரித்தால் போலே

தஹ பேச -என்னும் காரியத்தை யமாதிகள் தலையிலே வைத்து –
ப்ரக்ருத்யா உன்னுடைய நீர்மையைக் கண்டு
எல்லாரையும் குளிர நோக்கும் கார்யத்திலே அவனாலே நியமிக்கப் பட்டவன் அல்லையோ

ஓன்று நீ கை கரவேல்
அர்த்திகள்-கொடுக்குமவனை -கை பெரியன் என்று சொல்லுகையாலே
உன் கொடையில் ஒன்றும் வஞ்சியாது ஒழிய வேணும் –

புண்ணியம் பண்ணினார் இருந்த இடத்தே வர்ஷிக்கவும் –
பாபம் பண்ணினார் இருந்த இடத்தே வர்ஷியாது ஒழியவும் அன்றோ
ஈஸ்வரன் எங்களை நியமித்து விட்டது என்ன

ஈஸ்வரன் அதிகரித்த கார்யத்திலே அன்றோ புதைத்து விடுவது –
நல்லாரைக் கைக் கொண்டு தீயாரைக் கழித்தும் இருக்கும் ராம கோஷ்ட்டியில் பழக்கத்தை விட்டு –
மித்ர மௌபயிகம் கர்த்தும்-என்றும்
தேன மைத்ரீ பவது -என்றும்
பாபாநாம் வா சுபாநாம் வா -என்றும் நசை அற்ற
ராக்ஷஸிகளுக்கும் ஹிதம் சொல்ல அதிகரித்த எங்கள் கோஷ்ட்டியில் பரிமாறுமா போலே பரிமாற வேணும் –
(சீதா பிராட்டி கோஷ்டி தானே இவர்கள் )

கை கரக்கை யாவது -கொடை மாறுகை

ஆழி யுட் புக்கு –
கண்ட ஜலா சயங்களிலும் ஒண்ணாது –
சகரர் கல்லின குழியிலும் ஒண்ணாது –
மஹார்ணவத்திலே புக்கு –
அதிலும்
வாய் கரையிலும் ஒண்ணாது –
உள்ளே புக வேணும்-

முகந்து கொடு
அங்குத்தை நீரை மணல் பற்றோடு வாங்கி –
இலங்கு ஒலி நீர் பெரும் பவ்வம் மண்டி யுண்ட -என்கிறபடியே –
மேல் எழ ஒண்ணாது –
அடி மண் அடியோடு தட்டப் பருகி

இரு கையில் சங் கிவைநில்லா எல்லே பாவம் இலங்கொலி நீர் பெரும் பெளவம் மண்டி யுண்ட,
பெரு வயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங் கொரு கை மற் றாழி யேந்தி உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து, என்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனலரங்க மூர் என்று போயினாரே–திரு நெடும் தாண்டகம்–24

ஆர்த்து
நாட்டார் விடாயும் எங்கள் விடாயும் கெடும்படி மின்னி முழங்கி
வில் விட்டுத் துளித்துக் கொடு வர வேணும்

அநசனத்திலே தீஷித்த முதலிகள் தளிர்க்கும் படி திருவடி பிராட்டியைக் கண்ட ஹர்ஷத்தாலே
சப்த்தித்துக் கொண்டு வந்தால் போலேயும்
ஓக மேகஸ் வன க்ருஷ்ண -என்று
கிருஷ்ணன் முழங்கின வார்த்தை கேட்டு நாங்கள் தரிக்குமா போலேயும் –
நாடு தளிர்க்கும் படியாக

ஏறி –
ஈஸ்வரனைப் போலே முகம் தோற்றாதே நின்று கார்யம் செய்ய ஒண்ணாது –
விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே -என்கிறபடியே
ஆகாச அவகாசம் எல்லாம் வெளியடையும் படி உங்கள் வடிவைப் பாரித்து காட்ட வேணும்

காட்டேல் மின் நும் உரு (திருவாய் -9-5-7)என்றும் –
காணும் தோறும் தொலைவன் நான் -என்றும்
இவற்றின் த்வனியும் வடிவும் பாதகம் ஆவது அநபேஷ தசையில் இறே

ஏறி
விஸ்ரம்ய விஸ்ரம்ய புன ப்ரயாந்தி-என்னுமா போலே
கர்ப்பிணிகள் சுரம் ஏறுமாப் போலே மெள்ள மெள்ள ஏறி

ஊழி முதல்வன் உருவம் போல்-
கால உபலஷித சகல பதார்த்தங்களும் நிர்வாஹகனாய்
ஸ்ருஷ்ட்டி உன்முகனான சர்வேஸ்வரனுடைய திரு மேனி போலே –
அதாவது
இவர்கள் புண்ய பாப அனுகுணமாக அன்றிக்கே –
தன்னுடைய கேவல கிருபையால் இவற்றுக்கு உபகரணங்களைக் கொடுத்து –
நாமும் இவர்களுமாய்க் கலக்க வேணும் என்று திரு உள்ளத்திலே நினைக்கையாலே
தன் பேறாக இவற்றை உண்டாக்கும் போது
அவன் திரு நிறம் புகர் பெற்று இருக்குமாய்த்து -சிருஷ்ட்டியில்

யவ்க பத்யம் அனுக்ரஹ கார்யம் என்று இறே ஆழ்வார்கள் ஈடுபட்டு –
முந்நீர் ஞாலம் படைத்த -என்றும்
பாமரு மூ உலகம் படைத்த – என்றும் குணமாகக் கொண்டாடிற்று –

ஊழி முதல்வன்-
சகல பதார்த்தங்களையும் உண்டாக்க வேணும் -என்று
திரு உள்ளத்திலே நினைக்கையாலே கருவடைந்த பயிர் போலே
திரு மேனியும் கறுத்து இருக்கும் –
அப்படியே இருக்க வேணும் உன்னுடைய நிறமும்

உருவம் போல் மெய் கறுத்துப்-
அவன் அகவாயில் தண்ணளி இதுக்குத் தேட ஒண்ணாதே –
இதினுடைய அகவாயும் நீர் அன்றோ என்னில்
அவன் நீர்மையைப் பார்த்தால் இது நெருப்பு என்னலாம் படி யன்றோ இருப்பது –

உருவம் போல் –
நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதாப் போலே
அவனுடைய அகவாயில் நீர்மையை உங்களால் உண்டாக்கப் போகாது இறே
தன் நோயாசையாலே அவ் வடிவுக்கு போலி கண்டு தரிக்கப் பார்க்கிறாள் இறே

சர்வேஸ்வரனுடைய வியாவ்ருத்தி அறியச் செய்தேயும் அன்னலும் துன்னலும் நீரும் நெருப்புமான இத்தை
ஒக்கும் அம்மான் உருவம் (8-5-8)-என்றார்கள் இறே -ஆற்றாமை இருந்த படி

ஒக்கும் அம்மான் உருவம்என்று* உள்ளம் குழைந்து நாள்நாளும்*
தொக்க மேகப் பல்குழாங்கள்* காணும்தோறும் தொலைவன்நான்*
தக்க ஐவர் தமக்காய் அன்று* ஈர்ஐம்பதின்மர் தாள் சாயப்*
புக்க நல் தேர்த் தனிப்பாகா!* வாராய் இதுவோ பொருத்தமே?-திருவாய் 8-5-8-

உள்ளம் குழைந்து தோல் புரையே போம் அன்றிக்கே அகவாய் சிதிலமாய்
நாள் நாளும் -நாள் தோறும்
தொக்க மேக்கப் பல் குழாங்கள் -திரண்ட மேகங்களினுடைய பல திரள்களை காணக் காண சோகியா நிற்பன்
தக்க ஐவர் -உன்னைக் கடகாக விட்டு மார்பிலே அம்பேற்கப் பார்ப்பார் விரோதியோ போக்கலாவது-
நூற்றுவராய் அளவுபடிலோ உதவலாவது –
இத்தனை திரள் உண்டானால் உதவலாகாதோ

ஈரைம்பதின்மர் தாள் சாய-
நூற்றுவர் கால் சந்ததி –அறும் படி பிரவேசித்த இம்மேகத்திலே ஒரு மயிர் மானத்துக்கு வாட்டம் வரில் ஆகாதோ –

புக்க -பீஷ்மாதிகள் சர வர்ஷத்தாலே நூக்க மதியாதே தேரை நடத்தின படி –

நல் தேர் தனிப் பாகா -ரதியைக் காண்கிறிலர் –
வாராய் -அத்தேரை இம்மேகத் திரளில் திரிய விட்டாலாகாதோ –
இதுவோ பொருத்தமே -அவர்களுக்கு கார்யம் செய்த படியும் இதுவோ —
ரிஷிகளுக்குக் கைக்கூலி கொடுத்து எழுது வித்துக் கொண்ட இத்தனை யாகாதே

பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்-
பாழி-
இடமுடைமை என்னுதல்-
வலி என்னுதல் –

பஹுச்சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மன
ரஷ்ய வர்க்கம் அடையத் தோள் நிழலிலே ஒதுங்கினாலும் -ஆள் சுருங்கி நிழல் பெருத்து இருக்கை –

அம் தோள் –
நோக்காதே படு குலை யடிக்கிலும் விடப் போகாதே தோள் –
உழுது பால் -ரக்ஷகமானது தான் போக்யமாய் இருக்கை –
சுந்தரத் தோளுடையான் இறே

பற்ப நாபன் –
கொப்பூழில் எழு கமலப் பூ வழகர் -என்று தான் தோற்று இருக்கும் துறை
பற்ப நாபா ஓ -நம்மாழ்வாரைக் கூப்பிடப் பண்ணிற்று இறே

பற்ப நாபன் கையில் ஆழி போல் மின்னி-
புத்ரஸ் தே ஜாத -என்று பிதாவானவன் அளவுடைமையாலே பேசாது இருந்தாலும்
உரிய அடியார் பக்கலிலே இறே உகப்புக் காணலாவது –

அங்கைத் தலத்திடை யாழி கொண்டான் -என்று
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான அழகிய கையிலே பிடித்த திருவாழி போலே மின்னி –

ஆழி யோடும் -என்று
வெளிச் சிறப்பிக்கைக்கும் –
மதி கெடுக்கைக்கும் பரிகரம் அதுவே இறே

வலம் புரி போல் -நின்று அதிர்ந்து-
சுடர் ஆழியும் பல்லாண்டு -என்னா –
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு -என்னுமவர்கள் இறே –
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும்-என்று செவி மடுத்துக் கிடக்குமது இறே –
உண்பது சொல்லில் ஒண்ணாது மாறாதே நின்று அதிர வேணும்

தாழாதே –
நோன்பிலே நின்று உபக்ரமித்து உபவாச க்ருசைகளாய் இருந்த –
பொதுவாக உண்பதனை -என்று தான் சீறு பாறு என்னுமவர்கள் இறே –

நின்று அதிர்ந்து –
பாரத சமரத்தில் போலே ஒருகால் அதிர்ந்து விட ஒண்ணாது –
ஹர்தயா நிவ்யதாரயத்–என்று எதிரிகள் நெஞ்சு பிளக்கும் படி சப்திக்க ஒண்ணாது –
நாங்கள் வாழும்படி நின்று முழங்க வேணும் –

ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து –
இவளுடைய ஸ்த்ரீத்வத்துக்கு முலைகள் போலே இறே அவனுடைய பும்ஸத்வத்துக்கு திவ்யாயுதங்கள் –

தாழாதே –
தம் தாமை ஆஸ்ரயித்தார் நோவு பட ஆறி இருக்கும் தேவதாந்த்ரங்களைப் போல் அன்றிக்கே –
மித்ர பாவமே அமையும்-விளம்பம் பொறேன்-என்ற சக்கரவர்த்தி திரு மகனைப் போலே யாக வேணும் –

(கீழே உலகு அளந்த உத்தமன் ஸ்பஷ்டம் -இதில் சக்ரவர்த்தி திருமகன் ஸூ சகம் -அடுத்து மதுரை மைந்தன் )

தேவதாந்த்ர பஜனம் பண்ணினாரைப் போலே அன்றிக்கே
பகவத் ஸமாச்ரயணம் பண்ணினாரைப் போலே பெற வேணும் –

கர்ம அனுகுணமாக வரும் பலத்துக்கு இறே தேவமாத்ருகம் போலே விளம்பம் உள்ளது –
பகவத் ஸமாச்ரயணீயம் நதீ மாத்ருகம் போலே
சரதமுமாய்
நிச்சயமுமாய் – தாழ்ப்பதும் செய்யாதே ஒழியும் இறே

சார்ங்கம் உதைத்த –
இரை பெறாத பாம்பு போலே -இலக்கு காணாமையாலே பேசாதே கிடக்கும்
ஸ்ரீ சார்ங்கம் பெருமாள் கடாக்ஷம் பெற்றவாறே
தானே சர வ்ருஷ்டியைப் பண்ணா நிற்கும் –
அவர் கடைக் கணித்து விட்டால் பின்னை அவராலும் மீட்கப் போகாது –
அகம்படியர் கோபித்தால் பின்னை அரசனால் மீட்கப் போகாது இறே
அவஷ்டப்யமஹத் தநு -பெருமாளால் அமைக்கப் போகாமை பற்றிக் கொண்டு நின்றார் அத்தனை –
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னக் கடவது இறே

சர மழை போல்
சர வர்ஷம் வவர்ஷ ஹ

வாழ உலகினில் பெய்திடாய்
சரம் போலே முடிக்க ஒண்ணாது –
அங்கு எதிரிகளான ராக்ஷசர் மேல் விட்டால் போலே அன்றிக்கே ஜகத்தடைய வாழ வேணும் –

ஈஸ்வரனாலே வர்ஷார்த்தமாக நியமிக்கப் பட்ட எனக்கு அடைத்த பணி யன்றோ நடத்துகிறது –
நீங்கள் இப்போது இரக்கிறது என் என்ன

நாங்களும்-மார்கழி நீராட -மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-என்கிறார்கள் –
நாங்களும் கிருஷ்ணனும் சேரக் குளிக்கை உனக்கு கிடைப்பது ஒன்றோ –
நாங்கள் உன் வடிவைக் கண்டு த்வனியைக் கேட்டு எங்களுடைய தாபத்தை ஆற்றி
ப்ரீதிகளாய்க் கொண்டு மார்கழி நீராடுகிறோம் –
இவர்களை யுகப்பிக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம்
ப்ரகர்ஷ இஷ்யாமி யிலே இறே அந்வயம்
என்னுயிர்க்கு அது காலன்-என்ன வேண்டாவே கிருஷ்ணன் கூட நீராடுகையாலே –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -ஓங்கி உலகளந்த – -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

January 2, 2017

சேதனர் ஜ்யோதிஷ்டோமேன ஸ்வர்க்க காமோ யஜேதே-என்று
பிரதான பலம் ஸ்வர்க்கம் என்று இருப்பார்கள் –
இனி ஆயுராசாஸ்தே -என்று
தம் தாமுக்கு நன்மை வேண்டி இருக்கையாலே அவாந்தர பலம்
புத்திரர்கள் க்ருஹ ஷேத்ரங்கள் த்ருஷ்டாதிகள் என்று இருப்பர்கள் –

இவர்களுக்கு இரண்டுமே த்யாஜ்யம் இறே –
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னுமிதே இவர்கள்
பிரதான பலமாக நினைத்து இருப்பது-

இனி அவாந்தர பலமாக நினைத்து இருப்பது தான்
தங்கள் இருந்த நாடு சம்ருத்தமாய் இருக்கை –
ஆகையால் இனி அதுக்கு அனுமதி பண்ணினார்க்கு ஆசைப்படும் அத்தனை இறே

ப்ரவஷ்யாம் யநஸூயவே (9-1)என்றான் இறே –
அதிர்ந்து இருந்திராத மாத்திரமே இறே வேண்டுவது
அவன் உகப்பை பின் செல்லுகை ஸ்வரூபம் என்று இருக்குமவர்களே இவர்களும் –
அவனும் பர சம்ருத்தயேக ப்ரயோஜனனே –

(அதே போலும் தடுக்காமல் ஆபி முக்யம் செய்யாமல் இருந்தார்களே )

(இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸுபாத்–9-1-

ஸ்ரீபகவாநுவாச-கடவுள் சொல்லுகிறான்,
யத் ஜ்ஞாத்வா து-எதை தெரிந்து கொள்வதாலேயே,
அஸுபாத் மோக்ஷ்யஸே-தீமையில் இருந்து (துக்கவடிவமான உலகியலில் இருந்து) விடுபடுவாயோ,
குஹ்ய தமம்-ரகசியமான விஞ்ஞானத்துடன் கூடிய,
இதம் ஜ்ஞாநம்-இந்த ஞானத்தை,
அநஸூயவே தே-அசூயை யற்றவனாகிய உனக்கு,
விஜ்ஞாநஸஹிதம் ப்ரவக்ஷ்யாமி-விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன்.

கடவுள் சொல்லுகிறான்: அசூயை யற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை
விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து விடுபடுவாய்.

ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம்
ப்ரத்யக்ஷõவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம்

இதம்-இது,
ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரம் உத்தமம்-ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது,
ப்ரத்யக்ஷõவகமம்-கண்ணெதிரே காண்டற்குரியது,
தர்ம்யம்-அறத்துக் கிசைந்தது,
ஸுஸுகம் கர்தும்= செய்தற்கு மிக எளிது, அவ்யயம்-அழிவற்றது.

ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது. கண்ணெதிரே காண்டற்குரியது.
அறத்துக் கிசைந்தது. செய்தற்கு மிக எளிது. அழிவற்றது.)

(யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும் -நோய் பஞ்சம் திருடர் -மூன்றுமே இருக்காதே
ஓம் அர்த்தம் புரிந்தால் திருட்டு போகும் -அநந்யார்ஹ சேஷ பூதன் அறிந்தால் பிறர் நன் பொருளை அபகரிக்க மாட்டோம்
நமஸ் அர்த்தம் புரிந்தால் பஞ்சம் தொலையும் -அநந்ய சரண்யத்வம்
நாராயாணாயா அர்த்தம் புரிந்தால் வியாதி தொலையும் -அநந்ய போக்யத்வம்
மூன்று பத அர்த்தங்களை ஸூ சகம் -மூன்று அடிகள் -திரிவிக்ரமன் –
முதலில் ஏஷ நாராயணன் -அடுத்து ஷீராப்தி நிகேதன் -பின்பு தானே ஆகதோ மதுரா நிலையன் –
நேராக சொல்லாமல் த்ரிவிக்ரமன் -ராமன் -கிருஷ்ணன் -இப்படி மூன்று பாசுரங்கள் –
இது முதல் பேர் பாடுதல் தொடக்கம் -)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-

பதவுரை

ஓங்கி–(மஹாபலி வார்த்த நீர் கையில் விழுந்தவாறே) ஆகாசத்தளவும் வளர்ந்து
உலகு-(மூன்று) லோகங்களையும்
அளந்த-(திருவடிகளாலே தாவி) அளந்து கொண்ட
உத்தமன்–புருஷோத்தமனுடைய
பேர்–திருநாமங்களை
நாங்கள்–(பிரயோஜநாந்தரத்தை விரும்பாத) நாங்கள்
பாடி–(ப்ரீதிக்குப் போக்கு வீடாகப்) பாடி
நம் பாவைக்கு சாற்றி–நம் நோன்புக்கென்று சங்கற்பித்துக் கொண்டு
நீர் ஆடினால்–நீராடினால்
நாடு எல்லாம்–தேசமெங்கும்
தீங்கு இன்றி–(அதி விருஷ்டி, அநா வ்ருஷ்டி ஆகிற) தீங்கு ஒன்றுமுமில்லாமல்
திங்கள் மும்மாரி பெய்து–மாதந்தோறும் மூன்று தரம் மழை பெய்ய (அதனால்)
ஓங்கு பெரு செந் நெல் ஊடு–ஆகாசத்தளவும் வளர்ந்து பெருத்துள்ள செந்நெற் பயிர்களின் நடுவே
கயல் உகள–மீன்கள் துள்ள
பூ–அழகிய
குவளை போதில்-நெய்தல் மலரில்
பொறி வண்டு–மிக்க புகரை யுடைய வண்டுகளானவை
கண் படுப்ப–உறங்க,
புக்கு–(மாட்டுத்தொழுவிற); புகுந்து
தேங்காதே இருந்து–சலியாமல் பொருந்தி யிருந்து
சீர்த்த முலை பற்றி வாங்க-(பசுக்களின்) பருத்த முலைகளை (இரு கையாலும்) பிடித்து வலிக்க.
வள்ளல்–(எல்லார்க்கும் கட்டி அடிக்கலாம்படி விதேயமா யிருக்கை யாகிற) உதார ஸ்வபாவமுடைய
பெரும் பசுக்கள்–பெரிய பசுக்களானவை
நீங்காத செல்வம் நிறைந்து–நீங்காத ஸம்பத்து நிறையும்படி
குடம் நிறைக்கும்–(பால் வெள்ளத்தாலே) குடங்களை நிறைக்கும்.
ஏல் ஓர; எம் பாவாய் !

ஓங்கி –
கீழில் பாட்டாலே –பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றார்கள் –
ஆர்த்த ரக்ஷணத்துக்காக இறே இக்கிடை
இந்த்ராதிகள் ஆர்த்த த்வனி கேட்டு ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து அவர்கள் கார்யம் செய்த படி

ஓங்கி –
என்கையாலே இவ் வளர்த்திக்கு பூர்வ தசையில் வாமனத்வம் தோற்றுகிறது-
(தசாவதாரங்களில் வாமனன் சொல்வதால் திரி விக்ரம அவதாரமும் ஸூசகம் ஆவது போல் இங்கும் )

இந்திரன் கண்ணீர் கொண்டு சிறாம்பின படியும்
மஹா பலி நீர் வார்த்தவாறே வளர்ந்த படியும் –
பனி பட்டுச் சாய்ந்த மூங்கில் ஆதித்ய கிரணம் பட்டவாறே வளருமா போலே அபேக்ஷிதம் பெற்று வளர்ந்த படி-

சதைக ரூப ரூபாய -என்கிற தத்வம் இறே
சிறுப்பது பெருப்பதாகிறது

சம்சாரிகளுடைய வ்ருத்தி ஹ்ராசாதிகள் கர்ம அனுகுணம் ஆகையாலும்-
ஸ்வார்த்தமாகையாலும் –
தோஷாய ஆகா நிற்கும் –

ஸர்வேஸ்வரன் செயல் பரார்த்தமாகையாலும்
கிருபையால் யாகையாலும் குணாயாவாம் அத்தனை இறே –

ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் போது சம்சாரிகளுடைய இழவுக்கு திரு உள்ளம் நொந்து இருக்கும் -என்று
பட்டர் அருளிச் செய்ய –
சிலர் அத்தைக்கு கேட்டு
அவாப்த ஸமஸ்த காமனாய் –
நிரதிசய ஆனந்த யுக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனுக்கு ஓர் இழவு உண்டோ திரு உள்ளத்தில் என்ன
வியசநேஷூ மனுஷ்யாணாம்-என்கிறது குண பிரகரணமோ -தோஷ பிரகரணமோ -என்று அருளிச் செய்தார் –

துக்கித-என்னா நிற்கச் செய்தே குணம் ஆகிறது இறே-
ப்ருசம்-இவர்கள் அளவல்ல திரு உள்ளம் நொந்து இருக்கிற படி –
இவன் தன் காவல் சோர்வாலே அன்றே படுகிறது
பவத் விஷய வாஸின -என்று எல்லைக்கு உள்ளே கிடக்கும் அத்தனை இறே இவனுக்கு வேண்டுவது –

இவன் இடரைக் காண்கையாலும்
தன் காவல் சோர்வாலே வந்தது என்று இருக்கையாலும் துக்கம் இரட்டித்து இருக்கும்

பவதி -இவன் வியஸனம் கழிந்த வாறே உண்டு புடைவை உடுத்தி வெற்றிலையும் தின்று ஸூகித்துப் போம் –
ரிணம் ப்ரவ்ருத்தம் இவம் மே -என்று உள்ளதனையும் இழவு பட்டு இருக்கும் அவன் –
இங்கனம் இருப்பது திவ்ய அந்தப்புரத்துக்கோ என்னில்

மனுஷ்யாணாம்-
ஜெனிதர்மாக்கள் எல்லார்க்கும் –

மாறனேரியில் -ராமானுஜ தாஸன் என்பார் ஒருவர் –
அவன் வருகிற படியைக் கண்டு கடக்கப் போ என்பதே –
நாலடி விலங்கிப் போதல் -இல்லையாகில் ஒரு முழுக்கு இட்டுக் கொள்ளுதல் செய்ய நன்றி அடுப்பது என்ன
சண்டாளனானே யாகிலும் ஆர்த்தனான சமயத்தில் ( த்விஜர்) அல்லாதார் விலங்கிப் போவார் –
த்விஜனாகில் அவன் விலங்குவான் -என்று
விதி விசேஷித்த அம்சம் அழிந்ததே-என்று அவர்கள் சொல்ல –
கெடுவிகாள்-விதி பூர்வகமாயோ கிருபை இருப்பது -என்று அருளிச் செய்தார் –

பாபா நாம் வா சுபா நாம் வா -என்றாள் இறே பிராட்டி –
இவர்களுடைய பூர்வ வ்ருத்தம் கிடக் கிடாய் –
உன் கையிலே அகப்பட்டு வத ப்ராப்த்தைகளாய் நிற்கிறமை மெய்யே என்கிறார்கள் –
ஆகையால் ஸர்வேஸ்வரன் செயல்களுக்கு எல்லாம் குணாதிக்யம் உண்டு அத்தனை இறே
ஏகதா பவதி -த்விதா பாவதி -என்று முக்தரும் பரார்த்தமாக பல வடிவு கொள்ளா நின்றார்கள் இறே –
அதுவும் குணத்திலே செருகா நின்றது இறே –

உலகளந்த-
எதிர்த்தலை அறிந்து அபேக்ஷிக்கப் பெற்றது இல்லை கிடீர் –
என்னிது மாயம் -என்னப்பன் அறிந்திலேன் -என்ற நமுசிப் பிரப்ருதிகளைப் போலே
விலக்குகை இல்லாமையே பற்றாசாக செய்தது அத்தனை கிடீர் –

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்-என்று ஆசைப்பட்டு மடல் எடுக்க வேண்டும் படியான
அத் திருவடிகளைக் கொண்டு கிடீர் காடும் மோடையும் அளந்தது –

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையில் நீர் ஏற்று -என்றும் –
நீ அணியாய் -என்றும்
இரந்து பெற வேண்டும் கையைக் கொண்டு கிடீர் இரந்தது –

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்–
ஈஸ்வரன் உடைமையை -என்னது என்று இருந்தவன் பக்கலிலே குணம் கொண்டு –
தன்னுடைமையை -தன்னது என்று எல்லை நடந்து கொண்டவன் பக்கலிலே குற்றம் கொள்வதே –

நீள்வான் குறள் உருவாய் (திருமங்கை )-வளருகைக்கு நரிப் (கள்ளப் ) பூணூல் இட்டது அத்தனை –

தக்கணைக்கும் மிக்கானை -பூஜ்ய தமன் ஆனவனை -கேளாச் செவிகள் செவியல்ல கேட்டோமே-(பெரிய திருமொழி -7-2 )
எறும்புப் புற்றிலும் பாம்பு புற்றிலும் துளை போல் இவை –
பிலேபதோ ருக்ரம-சர்ப்பங்கள் புகும் பிலத்தோடு-அச் செவிகளோடு வாசி இல்லை –

இருக்க ஸ்ரீ வாமனாவதாரம் பிரசங்கிப்பான் என் என்னில்
செய்யும் ஆனைத் தொழில்களும் —
ஆஸ்ரித பக்ஷ பாதமும் –
வடிவு அழகும் –
வாத்சல்யமும் –
அவன் ஒரு வூருக்குக் கை யாளானால் போலே
இவன் ஒரு நாட்டுக்காக எளியனான படியாலுமாக-அணைந்து இருக்கையாலே சொல்லுகிறார்கள் –

உத்தமன் –
பர ஹிம்சை பண்ணியும் தம் தாம் வயிறு வளர்ப்பர் அதமர்-
பிறர் ஜீவனத்தை அனுமதி பண்ணி இருப்பர் -அவனலும் உத்க்ருஷ்டர் –
பிறரும் ஜீவிக்க வேணும் ஜீவிக்க வேணும் -என்று இருப்பார் மத்யமர் –
உதாரனானவன் பக்கலிலே தன்னை அழிய மாறியும் பிறரை ஜீவிப்பிக்குமவன் –

உத்தமன் ஆகிறான் —
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் -என்கிறபடியே
என்னையும் என்னுடைமையையும் நேர்ந்தாகிலும்
ஆஸ்ரிதற்கு ஓரம் கொடுத்துச் செய்யக் கடவோம் -என்று இருக்குமவனே –

அன்று கரு மாணியாய்(இரந்த கள்வனை -இரண்டாம் திரு )-உனக்கு வேண்டிச் செய்தாயோ –
உன்னுடையார்க்கு வைத்த சந்தான சாபம் இறே

பேர் பாடி –
கழஞ்சு மண் பெறுவாரும்-
இழப்பாருமாய்-
அதில் லாபம் அலாபம் இறே அவர்களுக்கு உள்ளது –

அங்கன் இன்றிக்கே
பேர் பாடுகையே எங்களுக்கு உத்தேச்யம் என்கிறார்கள் –

கட்டிப் பொன் போலே அவன் –
பணிப் பொன் போலே திரு நாமம்

வாஸ்ய பூதனானவன் சத்தியை உண்டாக்கும் –
அவனுக்கு வாசகமான திரு நாமங்களாலே இறே அனுபவிப்பது –

திரு நாமம் சொல்லுகைக்கு அதிகார ஸம்பத்தி வேண்டாவோ -என்று நஞ்சீயர் பட்டரை கேட்டருள-
யோக்யனாகில் இருந்தபடியே சொல்கிறான்
அயோக்யனாகில் யோக்யதை சம்பாதிக்க வேண்டா -என்று அருளிச் செய்தார் —
எங்கனே என்ன

மேல் உள்ள நன்மைகளை தாரக காட்டுவதாக விஸ்வசித்தவனுக்கு
கீழ் உள்ள விரோதிகளையும் போக்கா மாட்டாதோ-என்று அருளிச் செய்தார் –

கங்கையாடப் போமவனுக்கு வேறொரு குழியிலே முழுகிப் போக வேணுமோ –
மாத்ருகாதனுக்கும் கை நொந்தால் அம்மே -என்ன -பிராப்தி உள்ளவோபாதி
பகவத் விஷயத்தில் விரோதித்தார்க்கும் திருநாமம் சொல்லப் பிராப்தி உண்டு –

திரு நாமம் தான் எல்லா அதிகாரிகளுக்கும் வேணும் –
கர்மயோக நிஷ்டனுக்கும் பாப ஷயத்துக்கு திரு நாமம் வேணும் –
ஞான யோக நிஷ்டனுக்கும் ஞான வைசித்தியத்தைப் பண்ணிக்க கொடுக்கும் –
பக்தி யோக நிஷ்டனுக்கும் பக்தி விருத்திக்கும் வேணும் –
பிரபன்னனுக்கு தேஹ யாத்ரைக்கும் வேணும் –

விரோதியைப் போக்கி திரு நாமம் சொல்ல வேணும் என்னும் விளம்பம் பொறாதவன் இறே இதுக்கு அதிகாரி –
கிருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -கிருஷ்ணனுக்குத் தன்னை தநுவாக ஸ்மரிப்பான்-
பிரகாரமாக ஸ்மரிப்பான் -என்றபடி –

பரம் –
அவனில் மேற்பட்டார் ஒரு சேஷி உண்டாகில் இறே
தனக்கு பிராயச்சித்தம் பண்ண வேண்டுவது –

பேர் பாடி –
ப்ரீதி பூர்வகமாகப் பாடுகை -ஆர்வத்தால் பாடாதார் (11-7-4)-என்னுமா போலே –
(ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே -நம்மாழ்வார் )

நாங்கள்
பாடி மடி கோலாதே-
இது தானே பிரயோஜனமாக யுடைய நாங்கள் –

பாடி நெய் உண்ணோம் -என்றவர்கள் பாட்டு இறே
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-என்று இருக்குமவர்கள் இறே
என்னையும் கொடுத்து என்னுடைமையும் கொடுத்து என்கிறார்கள்

நம் பாவைக்குச் சாற்றி
நாட்டார்க்கு நோன்பு என்று ஓர் பேரை இட்டு

நீராடினால்
விரஹ தாபம் போகக் குளித்தால்

தீங்கின்றி நாடு எல்லாம்
யத்ர அஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ-மஹாபாகோ -மஹீயதே -ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா –
அவித்யாதி சகல துரிதங்களும் போய்-
இவர்கள் தாங்களும் முதல் தன்னிலே நாராயணனே -என்று துணிந்து இறே இழிந்து –

நாடு எல்லாம் –
இத் திரளிலே உண்டாய்ப் போகிறது அன்றே பகவத் சம்பந்தம் –
அசல் தாக்கும் இறே
தேவப் பிள்ளைக்கு -லோக ஹிதார்த்தமாகக் காண் நீ போகிறது -என்று அருளிச் செய்த வார்த்தை
(ஸ்ரீ முதலியாண்டான் வம்சத்தவரான ஸ்ரீ குமார அண்ணாவிலப்பன் ஸ்வாமிகளை
ஸ்ரீ மா முனிகள் ஆச்சார்யரான தமது திரு விக்ரஹம் கொடுத்து அருளி தம்மை விட்டுப் பிரிந்து
ஸ்ரீ காஞ்சிபுரம் சென்று லோக ஷேம அர்த்தமாக இருக்க நியமித்து அருளினார் அன்றோ )

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே ஆக்கிக் கொண்டே இறே இருப்பது
தீதில் நன்னெறி காட்டித் (பெருமாள் திருமொழி )
தீர்த்த கரராமின் திரிந்து (இரண்டாம் )இறே
கலியும் கெடும் -என்னும் படி இறே –

தீங்கின்றி நாடு எல்லாம் –
ராமே ராஜ்ஜியம் பிரசாஸதி -என்கிற நாடு போலே –
நகராணி ச ராஷ்ட்ராணி தநதான்ய யுதா நிச
தம் தாம் புண்ய பாப அநு குணமாக அன்றிக்கே பெருமாள் சென்ற நிலையால் நாடு வாழ்தல் போலே –

திங்கள் மும்மாரி பெய்து –
வறட்சி கேடு போலே வெள்ளக் கேடு ஆக ஒண்ணாதே –
ஊற எண்ணெய் விட்டால் போலே அபேக்ஷிதா சமயங்களில் வர்ஷிக்கை
ஒன்பது நாள் வெய்யிலும் ஒரு நாள் மழையுமாவது காணும் –

ஓங்கு பெரும் செந்நெல்
குனிந்து நின்று முதலிட்டு மேலே நோக்கிப் பார்த்தால் ஆகாசத்தை வெளியடைப்பது காணும் –
ஆகாசத்தில் வரம்பில்லையே –
திரு உலகு அளந்து அருளினவனைப் போலே

பெரும் செந்நெல் –
சுற்றிலே பணைக்கை-செய் கொள் செந்நெல் உயர் -என்னுமா போலே

ஊடு கயலுகளப்
வைரத் தூண் போலே நெல் நிற்கையாலே நேரே சஞ்சரிக்கப் பெறாது –
ஒருக்கடித்து உலாவும் அத்தனை யாய்த்து –
ஜல சர தத்துவங்களும் நீரிலும் நிழலிலும் கிடந்து வளர்ந்த செருக்கால் களித்து
மேல் நோக்கிப் பாயா நிற்குமாய்த்து

பள்ளச் செருவில் கயல் உகள (புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் )-என்னுமா போலே –
சலம் கொண்டு மலர் சொரியும் (பெரிய திருமொழி -மூன்றாம் பத்து )-இத்யாதி

பூங்குவளைப் போதில்
அழகிய குவளைப் பூவிலே –
குவளைப் பூ அலர்ந்த போதிலே -என்று கால பரமாகவுமாம்

பொறி வண்டு-
மது பானத்தாலே இளகிப் பதித்து இறே வண்டு இருப்பது –

கண் படுப்ப-
அலருகிற செவ்வியில் -மது பானம் பண்ண என்று இழிந்து -படுக்கை வாய்ப்பாலே மயங்கிக் கிடந்து –
நீ எழுப்பிற்றிலை நீ எழுப்பிற்றிலை என்று பெடையும் தானும் விடிவோறே -சீறு பாறு -என்னுமாய்த்து –

வயலில் ஸம்ருத்தி சொல்லி ஊரில் ஸம்ருத்தி சொல்கிறது

தேங்காதே புக்கிருந்து-
பால் வெள்ளம் தான் -கறக்கப் புக்கவர்கள் அஞ்சி பிற்காலிக்கும் படி இறே இருப்பது
திருவடி சமுத்திர தரணத்துக்கு அஞ்சாதே இழிந்தால் போலே இழிய வேணுமாய்த்து –
முத்துக்கு முக்குமவர் கடலுக்கு அஞ்சாதாப் போலே –
நனைத்தில்லம் சேறாக்கும் இறே

இருந்து –
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக

தீர்த்த முலை –
பால் விம்மி இரண்டு கையாலும் பற்ற வேண்டும் படி இருக்கை

பற்றி-வாங்கக் குடம் நிறைக்கும்
பற்றி வலிக்க -தொட்டு விட குடங்களை நிறையா நிற்குமாய்த்து –
பற்றிப் பற்றி வாங்கக் குடங்களை நிறைக்கும் என்றுமாம் –

வள்ளல்
கீழே பால் போரும்படி சொல்லிற்று ஆகில் –
இனி வள்ளல் தனமாவது -கழுத்திலே ஓலை கட்டி தூது போ என்னலாம் படியான
கிருஷ்ணனைப் போலே சிறு பிள்ளைகளும் கழுத்தைக் கட்டலாம் படி தன்னைக் கொடுத்துக் கொடு நிற்கை

பெரும் பசுக்கள்
ஸ்ரீ சத்ருஞ்சயனைப் போலே இருக்கை -புல்லாலே வளருகை அன்றே –
தீம் குழல் ஓசை அசை இட்டு இறே வளருவது –

கானகம் படி இத்யாதி –

அவன் கணிசியாதே நடக்க –
அவர்கள் கருதி ஆடுகிற கூத்தை மறந்தார்கள் –
நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே நடப்பது –

அவன் குழலூத இவர்கள் பாட்டு மறந்தார்கள்
சிறு விரல்கள் தடவிப் பரிமாற-இவருக்கு சிறு விரலில் கண் செல்லுகிற படி
செங்கண் கோட -துளை தோறும் கண் ஓடுகிற படி
செய்ய வாய் கொப்பளிப்ப -ஸுகுமார்யத்தாலே திருப் பவளம் கொப்பளிப்ப
குறு வியர்ப் புருவம் கூடலிப்ப -வேர்த்துப் புருவம் வளைய
கோவிந்தன் குழல் கொடு ஊதின போது -பசுக்கள் மேய்த்து அவற்றின் வயிறு நிறைந்த ஹர்ஷத்தாலே
தான் குழலூதா நிற்குமாய்த்து

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்
ந கச்சின் ந பராத்யதி -என்னும்
அவள் அடியாக வந்த சம்பத் ஆகையால் ஊற்று மாறாத சம்பத்து இறே –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை -வையத்து வாழ்வீர்காள் – -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

January 1, 2017

அவதாரிகை –
முதல் பாட்டு ப்ராப்ய ப்ராபக ( தருவான் பறை)சங்க்ரஹம்
இரண்டாம் பாட்டில் க்ருத்ய அக்ருத்ய விவேகம் பண்ணுகிறார்கள்
மூன்றாம் பாட்டு ப்ராபக சங்க்ரஹம் –

இதர விஷயங்களில் விடுமவற்றோடு பற்றுமவற்றோடு வாசி இல்லை –
துல்ய பலமாய் இருக்கும் –
ஆயாசத்தாலே பெறுமதாகையாலும் –
நிலை இல்லாமையாலும் –

இங்கு
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு(மூன்றாம் திருவந்தாதி -14) இறே
(பற்ற வேண்டியதுக்கு முக்கியம் -பற்றவே விட வேண்டியவை தன்னடையே கை நழுவிப் போகுமே )

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்–2-

பதவுரை

வையத்து–இப் பூமண்டலத்தில்
வாழ்வீர்காள்–வாழ்ந்திரா நின்றுள்ளவர்களே!
நாமும்–(எம்பெருமானாலேயே பேறு என்ற அத்யவஸாய முடைய) நாமும்
உய்யும் ஆறு எண்ணி–உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து,
பால் கடலுள் பைய துயின்ற பரமன் அடி பாடி–திருப்பாற்கடலில் அவதாநத்துடன் கண் வளர்ந்தருளா நின்ற
பரமபுருஷனுடைய திருவடிகட்கு மங்களாசாஸணம் பண்ணி
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி–(ஆசார்யாதிகளுக்கு இடு கையாகிற) ஐயத்தையும்,
(ஆர்த்தர்கட்கு இடுகையாகிற) பிக்ஷையையும் சக்தியுள்ளவளவும் இட்டு
உகந்து–மகிழ்ந்து
ஈம் பாவைக்கு செய்யும்–நமது நோன்புக்கு (அங்கமாகச்) செய்ய வேண்டிய
கிரிசைகள்–க்ரியைகளை
கேளீர்–காது கொடுத்துக் கேளுங்கள்
நாம்–நோன்பு நோற்கத் தொடங்கின நாம்
நெய் உண்ணோம்–நெய் உண்ணக் கடவோமல்லோம்;
பால் உண்ணோம்–பாலை உண்ணக் கடவோமல்லோம்;
நாட்காலே நீர் ஆடி–விடியற் காலத்திலேயே ஸ்நாநஞ்செய்து விட்டு
மை இட்டு எழுதோம்–(கண்ணில்) மையிட்டு அலங்காரம் பண்ணக் கடவோமல்லோம்;
மலர் இட்டு முடியோம்–(குழலிற்) பூ வைத்து முடிக்கக் கடவோமல்லோம்;
செய்யாதன–(மேலைத் தலைவர்கள்) செய்யாதவற்றை
செய்யோம்–செய்யக் கடவோமல்லோம்;
தீ குறளை–கொடிய கோட் சொற்களை
சென்று ஓதோம்–(எம்பெருமானிடத்துச்) சென்று கூறக் கடவோமல்லோம்;
ஏல் ஓர் எம்பாவாய்

வியாக்யானம் –
வையத்து வாழ்வீர்காள்-
புத்தி நாஸாத் ப்ரணச்யதி (சங்கம் காமம் காமம் படிக்கட்டுகள் ஸ்ரீ கீதை )-என்கிறபடியே
இதர விஷயத்தில் மண்டி முடியும் நிலத்திலே
வகுத்த விஷயமே அனுபவிக்கப் பெற்றவர்கள் அன்றோ –

பல நீ காட்டிப் படுப்பாயோ -என்றும் –
இன்னம் கெடுப்பாயோ -என்றும் –
உணர்ந்தவர்கள் கூப்பிடும் நிலம் இறே –
நாட்டார் பெறா விடில் முடியும்படியான விஷயங்களினுடைய தர்சனத்திலே முடிக்கிறார்கள் இறே இவர்கள் –

வையத்து வாழ்வீர்காள்-
(இந் நிலத்திலே )-இந்தளத்திலே -தாமரை போலே –

வையத்து வாழ்வீர்காள்-
கிருஷி பூமியிலே பலம் புஜிப்பதே-
வானிலே போல் சிறை இராதே –
கிருஷ்ண குணங்கள் திருவாய்ப்பாடியிலே ஆழி மூழையாய் பரிமாறா நிற்க
வானில் இருப்பாகிறது –
பெருமாள் காடேற எழுந்து அருள திரு அயோத்யையில் இருப்பு போலவும்
கிருஷ்ணன் திருவாய்ப்பாடியிலே வளர்ந்து அருளா நிற்க
ஸ்ரீ மதுரையில் இருப்பு போலவும் இறே

அயோத்யா மடவீம் வித்தி என்று திரு அயோத்தியை பட்டது பட்டு இறே அங்கு கிடக்கிறது
அங்கே மேன்மை —
இங்கு நீர்மை –
குணாதிக்யத்தாலே இறே வஸ்துவுக்கு ஏற்றம்

ந ச புனரா வர்த்ததே–மீட்சி இன்றி -ஏற்றி வைத்து ஏணி வாங்கி -என்றும் சொல்லுகிறபடி –
அங்கு உள்ளார்க்கு இங்கே வர ஒண்ணாதே
இங்கு உள்ளார்க்கு மேன்மையும் காணலாம் –
ஆகை இறே விண்ணுளாரிலும் சீரியரே (திரு விருத்தம் -79 )என்கிறது –
முழுதும் இத்யாதி இறுதி கண்டாளே –
நித்ய அஞ்சலி புடா –என்று நாம் தொழும் அத்தனை இறே அங்கு –
சீல குணத்துக்கு அகப்பட்டார் மற்றொரு குணத்துக்கு ஆளாகார் இறே

ஸ்நேஹோமே பரம -அங்குப் போரும் அளவுள்ள காணும் என்னது ஸ்நேஹம் என் படுத்தாது தான் –
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு(இரண்டாம் -100) -என்கிறது –
ஆஸ்ரயத்தின் அளவுள்ள காணும் ஸ்நேஹம் –

ராஜந் த்வயி-இது தான் பரத்வத்திலோ என்னில் –
பிரதிகூலரானவர்களும் ரஞ்ஜநீயஸ் விக்ரமை -என்று மடல் எடுக்கும் உம்முடைய பக்கலிலே –
இப்போது தவறி இருந்தோம் ஆகில் இனி ஒருக்கால் அங்கு கொள்ளுகிறோம் என்றார்

நித்யம் ப்ரதிஷ்டித-காதா சித்கம் அன்று காணும் -ஸ்வரூப அந்தர்கதம் காணும்

பக்திஸ்ஸ
ஸ்நேஹம் ஆகிறது ஏது -பக்தி ஆகிறது ஏது என்னில் –
நில் என்ன -முடிந்தேன் -என்று முறை அழிய பரிமாறின இளைய பெருமாள் படி பக்தி –
ஸ்நேஹம் ஆகிறது -ஓன்று அறிந்து அன்றிக்கே வ்யதிரேகத்தில் மூச்சு அடங்கும் படியான சக்கரவர்த்தி படி

இப்படி வியதிரேகத்தில் முடியும்படியானவன் மோக்ஷ பலம் பெறாது ஒழிவான் என்
என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
இவனுக்கு உள்ளது நரகமே –
பெருமாள் ஆன்ரு சம்சயத்தாலே ஸ்வர்க்கஸ்தன் ஆனான் -என்று அருளிச் செய்தார் –

ச சத்ய வஸனாத் -ராமோ விக்ரஹவான் தர்ம -என்று
பர தர்மத்தை விட்டு வசனத்தைப் பற்றினான் ஆகையால்

வீர -இவர் தாம் தோற்ற துறை இருக்கிற படி –

பாவோ நான்யத்ர கச்சதி -அந்யத்ர-என்கிறான் –
பேரும் கூட அஸஹ்யமாம் படி
(கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ போல் )

வாழ்வீர் காள்-
பெருமாள் ஏகாம் தரணிம் ஆஸ்ரிதவ் -என்றால் போலே
ஒரு பூமியிலே ஆகப் பெறுவதாம்-
சம காலத்திலே பிறக்கப் பெறுவதாம் –
ஒரு ஊரிலே ஆவதாம்-
அதிலும்
அவன் காண வேண்டாத ஆண்களாகவும் -பருவம் கழிந்த பெண்களாகவும் அன்றிக்கே –
ஒத்த பருவமாக பெறுவதாம் –
திரு அயோத்யையில் உள்ளார்க்கு போலே விஸ்லேஷ வியஸனம் இல்லாதாவையாகப் பெறுவதாம் –
இது ஒரு வாழ்ச்சி இருந்தபடி என் தான் -என்கிறார்கள் –

வாழ்வீர்காள் –
என்ற பன்மைக்குக் கருத்து –
அதொரு விபூதியாக பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்குமா போலே
இதுவும் ஒரூராக இதுவே யாத்திரையாக பெறுவதே –
ஓரூருக்கு ஒருவனை இறே பெற்றது –
(நவ திருப்பதிக்கும் ஒரே நம்மாழ்வார் போல் )
விபீஷணஸ் து தர்மாத்மா -என்று
வக்தாஸ்ரோதா ச துர்லப-என்று சொல்லுவான் ஓருவனேயாய்க் கேட்ப்பார் இல்லாத இலங்கை போல் அன்றிக்கே
த்ரிபாத் விபூதி ஒரு நாடாகச் சமைந்தால் போலே
இது ஒரு ஊராகச் சமையப் பெறுவதே

நாமும் –
நம்மில் நாம் வக்தாக்களும்-ஸ்ரோத்தாக்களுமாக -இருந்தோமே யாகிலும் –
லாப அலாபங்களில்-சம துக்க ஸூகராம் படி இருக்கிற
(நப்பின்னைப் பிராட்டியும் கோபிகளில் ஒருத்தியாகவே தன்னை எண்ணிக் கொள்கிறாள் அன்றோ
நாம் அனைவரும் -கண்ணனும் இங்கே )

நாமும் –
நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் –
ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று அறுதியிட்ட பின்பு செய்யுமவை ப்ராப்யத்தில் புகுரும் அத்தனை இறே –
இனி பேற்றுக்கு உடலாகச் செய்வது ஓன்று இல்லை —
அச்சம் உறுத்திக் கார்யம் கொள்ளப் பார்க்கிறார்கள் இறே –
(அவனை அச்சம் உறுத்தவே இந்த வார்த்தைகள் -மடல் எடுப்பதாக சொல்வது போல்வன ஓதி நாமம் குளிப்பது இத்யாதி
ஸ்ரீ மதே நாராயண நம என்றே சொல்லும் கூட்டம் -ஸ்ரீ மத் நாராயண சரண சரணம் பரபத்யே சொல்வது நமக்காகவே )
த்வரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே -ப்ராப்ய பிரதிபத்தி பண்ணியே ப்ராபக ஸ்வீகாரம் பண்ணுகிறது –
ஆறி இருந்தான் ஆகில் பிரதிபத்தி பண்ணிற்று இலனாம் அத்தனை இறே –

அதிகாரி தான் முமுஷுவே -ஞானம் பலம் உண்டாக வேணும் –
தியாக மாத்ரத்தையே ஸ்வீகரித்து -ப்ராப்யத்திலே ருசி இன்றிக்கே தான் நினைத்த படி நடக்கில்
நாஸ்திகத்வமே பலித்து விடும் அத்தனை இறே

ஷூத்ர விஷயத்தில் பிறந்த ஸ்ரத்தை செயல் அளவும் பலியா நின்றது –
அது பகவத் விஷயத்தில் வேண்டா தன்று இறே

செய்யும் கிரிசைகள்
என்கையாலே அவனும் அவனுடையாரும் வாழும் படியாய் இருக்கை –

கேளீரோ –
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் -என்கிற வூரிலே
கோப வ்ருத்தர்கள் அனுமதி பெற்று கிருஷ்ணனோடு கூட அனுபவிக்கப் பெறுவதே –
என்கிற ப்ரீதி அதிசயத்தாலே பரவச காத்ரைகளாய்க் கிடக்க-கேளீரோ -என்கிறார்கள் –

மேய்ச்சல் தலையிலே அசையிடுவார் உண்டோ –
பெற்ற அம்சத்துக்கு த்ருப்தராம் எத்தனையோ –
மேன்மேல் என பரகு பரகு -என்று வர வேண்டாவோ –
கேட்க்கையே உத்தேஸ்யமாய் இருந்தபடி –

நாங்களும் வாய் படைத்த லாபம் பெற்று நீங்களும் செவி படைத்த லாபம் பெற வேண்டாவோ –
புருஷார்த்ததோயம் ஏவை கோயத்கதா ஸ்ரவணம் ஹரே —
ச பாத லக்ஷ க்ரந்தத்தாலே தர்மார்த்த காம மோக்ஷங்களைச் சொல்லி
இவற்றில் உன் நெஞ்சில் பட்டது என் என்ன –
நாலிலும் ஓன்று அன்று –
பகவத் குண வித்தராய் இருக்கும் உன் போல்வாரைப் பேச விட்டு –
தென்றலும் சிறு துளியும் பட்டாப் போலே
குளிரச் செவி மடுத்துக் கேட்டுக் கிடக்க அமையும் என்று பட்டது -என்றான் –

ஸம்ஸ்ரவே மதுரம் -ஞான பிரசார த்வாரா இந்திரியங்கள் புறப்பட்டு பாஹ்ய விஷயங்களை கிரஹித்து பின்பு இறே ரசிப்பது
அங்கன் இன்றிக்கே தென்றலும் சிறு துளியும் பட்டால் போலே பட்ட இடமே பிடித்து ரசிக்கை-
கேட்டாரார் -என்னுமா போலே –
மதுரம் -அறிவு கொடுத்து ரசிப்பிக்க வற்றாய் இருக்கை
வாக்யம்-பூர்வாபர சங்கதி வேண்டாதே தனியே இனிதாய் இருக்கை –
வைதேஹ்யா-குடி பிறப்பு வாசி தோற்ற உடம்பு பேணாதே இருந்த படி
வ்யாஜஹார -உடம்பு இல்லாதார்க்கு செவி இல்லை இறே –
செவி கொடுத்து வார்த்தை சொன்னான் என்கிறது

கேளீரோ
செவி படைத்த லாபம் பெற வேண்டாவோ

பாற் கடலுள்
சொல்லுகிற படி தான் -கீழே நாராயணன் -என்றார்களே –
அந்த நாராயண சப்த வாச்யனான ஸர்வேஸ்வரன் திருப் பாற் கடலிலே
ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்க்கும் படி குடில் கட்டிப் பயிர் நோக்கும் கிருஷிகனைப் போலே
தோள் தீண்டியாக வந்து கண் வளர்ந்து அருளுகிறான் என்கிறார்கள் –

மன்னு வடமதுரை மைந்தன் -என்று மேலே சொல்லப் புகுகிறார்கள் ஆகையால் –
நாராயணன் -என்பது –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் என்பதாகா நின்றார்கள் –

ஸ்ரீ பீஷ்மர் பரத்வமே பிடித்து உபபாதித்திக் கொண்டு வாரா நிற்க –
ச ஏஷ ப்ருது தீர்க்கா ஷஸ் சம்மந்தீ தே ஜனார்த்தன -என்று
மூதலித்துக் காட்டினால் போலே –

அபரம் பவதோ ஜென்ம பரம் ஜென்ம விவஸ்தத-என்று
அர்ஜுனனுக்குத் தானும் அருளிச் செய்தான்

பைய –
(கள்ள நித்ரை )மெள்ளத் துயின்றானை(மூன்றாம் திரு ) என்னுமா போலே
ஆர்த்த நாதம் கேட்க்கும் படி அசங்காதே கிடக்கிற படி

துயின்ற –
தமோ குண அபிபவத்தாலே வந்த உறக்கம் அன்றே –
ஆர்த்த நாதம் கேளாத போது காணும்
பிராட்டிமார் போகமும்
மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —
ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது –

பரமன் –
இருந்து அருளின போதையிலும்
சாய்ந்து அருளின போது காணும் அங்க ப்ரத்யங்கங்களில் புக்கு அநுபவிக்கலாவது-
நாட்டார்க்கு மற்றப்படியே –
இங்கு கிடந்ததோர் கிடக்கை -என்றும் –
கோலம் திகழக் கிடந்தாய் என்றும் சொல்லலாம் படி இருக்கும் –
சர்வாதிகன் என்று -தோற்றுமாய்த்து கண் வளர்ந்து அருளும் போதை –அழகில் பிரசித்தி –

மயா போதித-காகம் என்று ஒரு வியாஜ்யம் இடுகிறேன் அத்தனை -என்னாலே கெட்டேன்
ஸ்ரீ மான் -கண் வளர்ந்து அருளுகிற போதை காந்தி பிராசர்யம்
ஸூக ஸூப்த -படுக்கைக்கு ஈடாய் இறே உறக்கம் இருப்பது
பரந்தப -எழுப்பிக் -கொள்ள நினைத்த காரியத்துக்கும்- உறக்கமே அமையும் கிடீர்
(போதித ஸ்ரீ மான் –துயின்ற பரமன் )

சிம்மம் உறங்கும் போதும் துஷ்ட மிருகங்கள் அணைய மாட்டாதே –

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம —
உண்ணப் புக்கு வாயை மறப்பாரை போலே -வந்த காரியத்தை மறந்தான் –
ஒரு திருவாட்டி பிள்ளை பெறும் படியே என்கிறான் –

படுத்த பைந்நாகணை (பெரியாழ்வார் )–

பரமன்
கிட்ட வந்து கிடக்கிற குணாதிக்யத்தாலே வந்த ஏற்றம் ஆகவுமாம்

அடி பாடி –
பரமன் என்கிறார்களே –
அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் நடுவு தங்குமவர்கள் அல்லாமை திருவடிகளில் விழுகிறார்கள்
அவன் உறக்கம் புருஷோத்தமத்வத்துக்கு ஸூ சகமானால் போலே
இவர்களும் நாரீணாம் உத்தமைகள் ஆனமைக்கு ஸூசகம் திருவடிகளைப் பாடுகை-
அவன் சேஷித்வத்துக்கு சமைந்தால் போலே இவர்கள் சேஷத்வத்துக்கு சமைந்த படி
ஸ்தநந்த்ய பிரஜை முலையிலே இறே வாய் வைப்பது -செவ்வடி செவ்வி திருக்காப்பு என்னுமவர்கள் இறே

அடி பாடி நெய் உண்ணோம்
அடி பாடுவதுக்கு முன்பு போலே அவை தாரகமாவது
எல்லாம் கண்ணன் என்று இறே பின்னை இருப்பது –
வாஸூ தேவஸ் சர்வம் இறே -எல்லாம் அவனே என்று இருக்கையாலே
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை என்றார் தமப்பனார் –
இவள் அவரிலும் உள் புக்கு -இடைச்சியான முறுக்கத்தாலே-
நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்கிறாள் –

அடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம் –
உண்டார்க்கு உண்ண வேண்டாவே –
குடிக்கக் கடவது உண்ணக் கடவது -என்று அறிகிறிலள்
முதல் தன்னிலே வ்யுத்புத்தி இல்லாமையால்
இவர்கள் ஸுகுமார்யம் தான் திருவடிகளை பாடுதல் நெய்யும் பாலும் குடித்தால் போலே

நெய் உண்ணோம்
அவன் ஜீவனம் வாங்கோம் என்கிறார்கள்

நெய் உண்ணோம்
இவர்கள் ஆரைத் தான் பட்டினி கொள்ளப் பார்க்கிறது –
இவர்கள் உண்டால் பசி கெடுவது அவனுக்குப் போலே
சரீரத்துக்கு வரும் நன்மை சரீரிக்கு இறே -யஸ்யாத்மா சரீரம் –

நாட் காலே நீராடி
ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே குளிக்கக் கடவோம் –
அவன் திருப் பாற் கடலிலே கிடந்த கிடக்கை என்னாச்சு தான் –
மஹிஷியானவள் குளித்து விரல் முடக்குமதில் காட்டிலும் மடல் உண்டோ –
ஓதி நாமம் –
அவனை அழிப்பார் வார்த்தைகள் இறே

நாட் காலே நீராடி –
அதிலே அவனை பிற்பாடானாக ஆக்கக் கடவோம் –
(அமரர்க்கு முன் செல்வான்
இதில் அவனை பிற்பாடு ஆக்குவோம் )

நமே ஸ்நானம் -பர்த்தாவின் அசந்நிதியிலே குளிக்க இறாய்க்கும் பார்யைப் போலே –
(பரதன் இல்லாமல் குளிக்க இறாய்க்கும் ராமனுக்கு இது த்ருஷ்டாந்தம் )
வஸ்திராண்யா பரணா நிச-உடம்பு தானே மிகையாய் இருக்க –
அதுக்கு மேலே அந்தரமானவற்றைச் செய்யவோ
உடம்பினால் குறைவிலமே என்று ஆகாதே இருக்கிறது

தம்விநா -குளிப்பார்க்கு பிரதான உபகரணம் வேண்டாவோ
கைகயீ புத்ரம் -நடுவில் ஆய்ச்சி பிள்ளையை நலிந்தாள் என்னா நாமும் அவனை நலியவோ
கைகயீ புத்ரம் -ரிஷிகளோடே சம்பாஷிக்கவும் -அவர்கள் விரோதிகளை போக்கவும் -அத்தால் வந்த புகழும்
அவளால் வந்தது அன்றோ -அவள் பெற்ற பிள்ளை அன்றோ –
பரதம் -அவள் சம்பந்தம் மிகை என்னும் படி அன்றோ அவன் தன் படி
தர்ம சாரிணம்-நம்மை பிரிந்தால் அவன் இருக்கும் படி இருந்தால் –
அவனைப் பிரிந்தால் நாம் இருக்கும் படி இருக்க வேண்டாவோ
இப்படி சேஷ பூதர் அசந்நிதிகளிலே சேஷிகள் குளிக்கு இறாய்ப்பர்கள் இறே –
அத்தைப் பொய்யாக்கி அவனை ஒழிய நாங்கள் குளிக்கக் கடவோம் என்கிறார்கள்

நாட் காலே நீராடி
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே -அத்யந்த ஸூக சம்வ்ருத்த -இத்யாதி
சேதே சீதே மஹீதலே பரதஸ்ய வதே தோஷம் என்றவன் வார்த்தை -இறே –
அநு கூலன் என்று அறிந்தவாறே நாம் தழை முறித்திட்டாகிலும் கிடப்புதோம்-
அவன் தறைக் கிடை கிடக்கிறான் என்கிறார் –

மை இட்டு எழுதும் –
மைய கண்ணாள் இறே -இனி அது தனக்கு நிறம் கொடுக்கை இறே உள்ளது –
அவனைக் கெடுக்கிறாள் காணும் –
(அவனுக்கு விருப்பமானது இது அன்றோ -அபிமதமம் கொடுக்காமல் கெடுக்கப் பார்க்கிறார்கள் )
இவர்கள் தொடங்கினால் இறே அவன் குறையும் கற்ப்பிப்பது-
(ஆசை -இச்சை ஒன்றே வேண்டுவது -இசைவித்து தனது தாளிணை வைத்து மகிழ்பவன் அவனே )
அவன் கிஞ்சித் காரத்துக்கு அவகாச பிரதானம் பண்ணோம் என்கிறார்கள் –
சேஷிக்கு கிஞ்சித் கரியாத போது சேஷத்வம் இல்லை —
அவன் நிரபேஷன் ஆகையால் கிஞ்சித் காரத்துக்கு இடம் இல்லை
இவன் ஸ்வரூப லாபத்துக்காகவே அவன் சாபேஷரைப் போலே இவர்கள் கிஞித்காரம் கொள்ளக் கடவன்
இவன் சேஷத்வம் தன்னுடைய சேஷித்வத்திலே சேருகையாலே இது ஸ்வரூப அந்தர்கதம்-

மலரிட்டு நாம் முடியோம் –
சுரும்பார் குழல் கோதை இறே –
அப்போது அலர்ந்த செவ்விப் பூவினின்றும் வண்டுகள் கால் வாங்கி
இவள் குழலிலே படியும் படி இறே திருக் குழலில் செவ்வி இருப்பது –
தான் மாலை சூட என்று தொடங்கினால் -குறையும் அவன் வந்து சூட்டி அலங்கரிக்கும் இறே –
அதுக்கு அவனுக்கு அவகாசம் வையோம் என்கை –

நாம் முடியோம் –
அவன் தானே வந்து சூட்டில் செய்யலாவது இல்லையே

செய்யாதன செய்யோம் –
வசன சித்தமே யாகிலும் பூர்வர்கள் அனுஷ்டானமே ஒழிய வேறு செய்யக் கடவோம் அல்லோம் –
ப்ரசக்த்துக்கு இறே ப்ரதிஷேதம்(வாசனை இருந்தால் தானே தடுக்க வேண்டும் ) உள்ளது –
இது இப்போது என் என்னில் ஸ்வரூப கதனம்-

ஆழ்வான் -எங்கள் பூர்வர்கள் தேவதாந்த்ர பஜனம் பண்ணாமையாலே என்றானாம் –
பிரதிபுத்தா நசே வந்தே இறே

ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே யாகிலும்
அநாத்ம குணங்கள் தவிருகையும்
ஆத்ம குணங்கள் உண்டாகையும் தவிராதே -சேதனன் ஆகையால் –

சர்வ பூதாத்ம கேதாத-கார்ய காரணங்களினுடைய அநந்யத்வத்தைச் சொல்லுகிறது
ஜெகன்நாதே-ஜகத்துக்கும் அவனுக்கும் சம்பந்தம் -சேஷ சேஷி பாவத்தால் என்கிறது –
ஜெகன் மயே -சரீர சரீரீ பாவத்தால் இஸ் சம்பந்தம் என்கிறது –
பரமாத்மனி-இவற்றுக்கு தானே வியாபகனானால் போலே தனக்கு வியாபகாந்தரம் இல்லை என்கிறது
கோவிந்த்தே – – இவ் வைச்வர்யத்தைக் கொண்டு -கடக்க இராதே கிட்ட நிற்குமவன் -என்கிறது
மித்ர அமித்ர கதா குத-சம்பந்தம் இதுவான பின்பு மித்ரத்வ மித்ரத்வ பிரதிசம்பந்தியான அமித்ரத்வமும் இல்லை என்கிறது –

முக்தனுக்கு ததீய ஆகாரத்துவத்தாலே லீலா விபூதி உத்தேச்யம் ஆகா நிற்கச் செய்தே த்யாஜ்யமும் ஆகிறது இறே –
விபூதி மாத்திரமே உத்தேச்யமாம் அன்று –
அவனுக்கு தனுபூதரான ப்ரஹ்மாதிகளோடு ஓக்க நீராய் நிலனாய் என்கிறதுவும் உத்தேச்யமாம் இறே
இவை ஆஸ்ரயணீயம் ஆனாலும் ஈஸ்வர அபிமானிகள் த்யாஜ்யர் இறே
அக்னி ஹோத்ர அக்னிக்கும் ச்மசா அக்னிக்கும் அக்னி சாம்யம் உண்டாய் இருக்கச் செய்தும்
விதி தந்ரங்களிலே ஓன்று நிஷித்தமாகவும் ஓன்று சுத்தமாகவும் சொல்லா நின்றது இறே

இப்படி பூர்வர்கள் அனுஷ்டானமும் உண்டு இறே –
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிறபடியே பிராப்தி உண்டாகிலும்
ஒருவர் ஒருவரை எழுப்பி எல்லாரும் திரள வல்லது அவன் முன்பு நிற்க்க கடவோம் அல்லோம் –
நாம் தனியே சென்று நிற்கில் வைரூப்பிய அவஹமாம் –
(விரூப்யை ஆக வாய்ப்பு -சூர்ப்பணகை தனியே சென்று பட்ட பாடு அறிவோம் )

செய்யாதன செய்யோம் –
சர்வாத்மான அபர்ய நுநீயமாக -என்ற இளைய பெருமாளை போலேயும்
சக்கரவர்த்தியும் பெருமாளும் கொடுக்கையாலே
ராஜ்ஜியம் பண்ணுகை சாஸ்த்ரார்த்தமாக இருக்க
இவ்வம்சத்தில் முறை தப்புவார் இல்லை என்று ஸ்ரீ பரதாழ்வான் முடிக்கு இறாய்த்தால் போலேயும்

தீக் குறளை சென்றோதோம்
பேய்ப் பெண்ணே -என்று வையவும் கடவோம் –
நாயகப் பெண் பிள்ளாய் -என்று காலிலே விழவும் கடவோம் –
அவன் செவிப் படுத்தோம் –
பத்து மாசம் சுற்றி இருந்து ராக்ஷஸிகள் பண்ணின தர்ஜன பத்சநா திகளை ஏகாந்தத்திலும்-
பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யாத பிராட்டியைப் போலே –

சென்று ஓதோம்
அவன் தான் கலந்து நின்று அறியுமாகில் செய்யலாவது இல்லை –

சென்று ஓதோம் –
பிறர் செய்யுமவை அறிவிக்கச் சென்றாலும் அவன் முகத்தில் தண்ணளி கண்டால் அறிவிக்க ஒண்ணாத படி இருக்குமே
சச நித்யம் ப்ரசாந்த்தாத்மா -என்று இறே இருப்பது –

ஐயமும் பிச்சையும்
ப்ராப்த காலங்களில்
ஆர்த்தரையும்
யோக்யரையும் பார்த்து இடுமவை

ஆந்தனையும்
அவர்கள் கொள்ள வல்லராந்தனையும் கொடுத்து

கை காட்டி
எல்லாம் கொடுத்தாலும் கொடுத்தது உண்டோ என்று இருக்கை –
அதாவது –
ஒருவரை ஒருவர் எழுப்புகையும் –
அவர்களுக்கு சர்வ ஸ்வதானமாக தங்களைக் கொடுக்கையும்
எல்லாரையும் கொண்டு போகையும்-
கிருஷ்ண அனுபவம் பண்ணி வைகையும் இவை எல்லாம் செய்தாலும்
ஒன்றையும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கையும் –

உய்யுமாறு எண்ணி –
அசன்னேவ ச பவதி -என்று இறே முன்பு கிடந்தது –
சந்த மேனம் ததோ வித்து என்கிறபடி யாகை

எண்ணி உகந்து
மநோ ரதமே பிடித்து நித்தியா நிற்கும் போலே –
நின் புகழ் இத்யாதி (பெரிய திருவந்தாதி )-உன்னுடைய கல்யாண குணங்களை அநுஸந்திக்கும்
அனுசந்தானத்தோடு ஒக்குமோ நீ போரப் பொலியக் கொடுக்கும் பரம பதம்
மாலே படிச் சோதி மாற்றேல் இனி –மறப்பின்மை யான் வேண்டும் மாடு –
உகந்து செய்யும் கிரிசைகள் கேளீர் -என்கிறார்கள் –
விதி பூர்வகமாகச் செய்கை அன்றிக்கே ப்ரீதி பூர்வகமாகச் செய்கை –

(உய்யுமாறு எண்ணி உகந்து –உத்தர வாக்கியம் -இது முன்னாக வைத்து
செய்யும் கிரிசைகள் -பூர்வ வாக்கியம் -இது அன்றோ இவர்கள் நிஷ்டை
எம்பெருமானார் -உபேயத்திலே எப்பொழுதும் கண் வைத்து
உபாயத்தில் ஸக்ருத் தானே –
கரு முகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம் அன்றோ )

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.