Archive for November, 2016

திரு விருத்தம் -20-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

November 24, 2016

(மூன்று தோழி பதிகங்கள் -ஏழு தாயார்
தீர்ப்பாரை யாம் இனி தோழிப்பதிகம் -இப்பாசுர விவரணம்
பரகால நாயகிக்கு –வந்த கட்டுவிச்சி -ஸ்ரீ வைஷ்ணவத் தன்மை
இவளோ கள்ளும் இறைச்சியும் -கரும் சோறு செஞ்சொற் கொண்டு வந்தாள்
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் –வண் துவாரா பதி மன்னனை ஏத்துமின்
மா முனிகள் சமர்ப்பித்த பாசுரம்
ஸஹி வெறி விளக்கும் துறை
தோழிப்பாசுரம்
வேல நில் என்கிறாள்
சொல்லி ஏத்துமின் என்றதுமே உணர்ந்து
அடுத்த பாசுரம் சூட்டு நன் மாலைகள் -தானான தன்மையில் தனது பாழியான
கிருஷ்ண அவதார சாரா அனுபவம் )

அவதாரிகை –
வெறி விலக்கு துறை –
மேஹ சந்தர்சனத்திலே தோழியும் தானும் மோஹித்துக் கிடக்க-
இத் தசையைக் கண்டு சோகித்து இருக்கிற திருத் தாயார் முன்னே
தேவதாந்த்ர ஸ்பர்ச முடையார் புகுந்து பரிஹாரத்திலே பிரவ்ருத்தராக-
அபிஜாதையுமாய் இவள் பிரபாவத்தையும் அறிந்து இருப்பாள் ஒரு தோழி
கருமுக மாலையை (செவ்வி பெருக்க ) நீர் கொடுக்க -என்று நெருப்பிலே இடுவாரைப் போலே –
இவளுக்கு பரிஹாரம் என்று தொடங்கி விநாசத்தையே உத்பத்தியா நின்றி கோள்-என்று
அத்தை நிஷேதித்திக் கொண்டு –
இவளுடைய நோயையும் (பக்தியையும்)
இந் நோய்க்கு நிதானத்தையும்
இதுக்கு பரிகாரத்தையும் சொல்லுகிறாள் –

(நம்பியை –என் சொல்லி மறப்பனோ என்று இருக்கும் இவளை
எத்தால் மறக்க பண்ணுவீர்கள் )

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20

பாசுரம் -20-சின்மொழி நோயோ கழி பெரும் தெய்வம்-துறையடைவு -வெறி விலக்கு -தீர்ப்பாரை யாமினி -4-6-

பதவுரை

சில் மொழி நோயோ–சில பேச்சுக்களே பேசவல்ல இவளுடைய நோயோவென்றால்
இ நோய் இனது என்று இல்மொழி கேட்கும் இன தெய்வம் அன்று இது–இந்த நோய் இப்படிப்பட்ட தென்று வரையறுத்து
இல்லாத மொழிகளைப் படைத்துச்சொல்லக் கேட்கத்தக்க க்ஷுத்ரதெய்வத்தின் விஷயமாக வந்ததன்று இது;
பேச நின்ற தெய்வங்கள் -பேசியே நிறுத்தி வைக்க வேண்டும்
வேல–வெறியாட்டாளனே!
நீ நில்–நீ விலகி நிற்பாயாக;
எம் அம்மனைமீர் எனது தாய்மார்களே–
என் மொழி கேண்மின்–(இவள் தன்மையை உண்மையாக அறிந்த) எனது வார்த்தையைக் கேளுங்கள்;
கழிபெருந் தெய்வம்– மிகப் பெரிய தெய்வமான எம்பெருமான் விஷயமாக உண்டானது.
ஏழு உலகும்–எல்லா வுலகங்களையும்
உண்டான்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிற்கொண்டு காத்தருளிய பெருமானது.
சொல் மொழி கொண்டு–திருநாமத்தைச் சொல்லுதலைச் செய்து கொண்டு
மாலை அம் தண்ணம் துழாய்–(அவனது) மாலையாகவுள்ள அழகிய குளிர்ந்த திருத்துழாயை
சூட்டுமின்–(இவளுக்குச்) சூட்டுங்கள்

வியாக்யானம் –

சின்மொழி –
சொல்லிற்று சொல்ல மாட்டாத அளவு –
சப்த அவசேஷை -என்னவுமாம் –
பேசும் பருவமே இல்லாத போது பெற்ற ஸஹஜ பக்தி தானே இவரது

அங்கனே யாகில்
இத்தசை கூடினபடி எங்கனே என்னில்-
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூஸ்நிக்த -போலே –

(இளையவள் மொழி இதுவரை
மேல் இளைத்து -சிதிலமான இவள் மொழி)

சின் மொழி -என்றது முக்தை-
இம் முக்த்யையை
விதக்தை யாக்கும் போது
ஒரு விதக்தன் வேண்டாவோ என்கிறது
சத்தா மாத்திரம் என்னும் படியான இவளை உண்டாக்கும் போது
ஒரு சர்வ சக்தி வேண்டாவோ –

நோயோ –நோய் ஓ –
பரிஹாரத்துக்கு புகுந்தவள் -நோயைக் கொண்டு கிடக்கப் பெறாதே
இந் நோய்க்கு பரிஹாரம் சொல்ல இருப்பதே என்கிறாள் –
இவள் பருவம் அளவு அன்று –
கிட்டி இந்நோய் கைக்கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும் நோய் –
பகவத் விஸ்லேஷத்திலே தரியாமை ஸ்வரூபமாய் இருந்த படி –

கழி பெருந்தெய்வம்–
கழிய மிக்க பெரும் தெய்வம் –
அவ் வருகு இல்லாத தெய்வம் –
பதிம் விஸ்வஸ்ய-என்றும்-
பதிம் பதீனம் -என்றும்
தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்-என்றும் –
அவ்விஞ்ஞாதம் விஜா நதாம்-என்றும்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும் –
உபபாதிக்கிற பிரமாணங்களுக்கும் அவ்வருகாய் இருக்கை-

இன்ன-
இந் நோய் இது என்று –
இந்நோயும்
இந்நோய்க்கு நிதானமும் இன்னது என்று

இன் மொழி –
1-அர்த்த ரஹிதமான மொழி –

2-கேட்கும் இளந்தெய்வம் அன்று இது –
தனக்கு இல்லாததை யுண்டாக்கிக் செல்லப் புக்கால்
கேட்டுக் கொண்டாடும் தெய்வம் அன்று இது
கைக்கூலி கொடுத்து கவி பாடுவித்திக் கொள்ளும் தேவதைகள் அன்று

3-இன் மொழி –
வாசகத்துக்கு வாஸ்யம் போராது-புறம்பு –
பகவத் விஷயத்தில் வந்தால் வாஸ்யத்துக்குத் தக்க வாசக சப்தம் போராது –

வேல! நில் நீ –
தன் காரியத்தை நிஷேதிக்கப் புக்கவாறே-பெற்றது உடலாக க்ரஹிப்போம் என்று பதறினான் –
இங்கே புகுராதே கொள்-
எங்கள் குழுவினால் புகுதல் ஓட்டோம் -என்கிறாள் –

கூராழி வெண் சங்கு ஏந்தி -என்று
சொல்லுகிறபடியே கையும் திருவாழியுமாக
காண வேண்டி இருக்கிற இடத்தே நீ கையும் வேலுமாகத் தோற்றுவதே

என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் !–
அம்மனைமீர் என்று சம்போதித்து
நான் சொல்லுகிற வார்த்தையை கேளுங்கோள் என்கிறாள்

புத்ரகா இதி ஹோவாச –
(சுக்ரன் பிரம சாபம்தீர்க்க வந்த பித்ருக்களை -வயது மூத்து இருந்தாலும் -சிஷ்யர் என்றால் போல் )
சிஷ்யர்களை புத்திரர்களை சொல்லுமா போல் அன்றியே
அம்மனைமீர் என்பான் என் என்னில்
இவ்வர்த்தம்
இவர்களுக்கு அபூர்வம் இல்லாமை –
(பகவத் பிரபாவம் ஆழ்வார் பிரபாவம் அறிந்தவர்கள் தானே
அறிந்தவர்களே யானாலும்
இவளது ஆற்றாமை விஞ்சி இருக்கும் காலத்திலேயே கலங்கி அன்றோ இருப்பார்கள் )
தாங்களே இவ் வர்த்தத்திலே தேசிகராய் இருக்கச் செய்தே-
வியதிரேகத்திலே இவள் கலங்கின கலக்கம் கண்டு கலங்கின படி

உலகு ஏழும் உண்டான் -சொல் மொழி-
பிரளயம் முதலிய ஆபத்து வந்தால் ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கும்
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தைச் சொல்லு –
ஜகத்துக்காக வரும் நோயைப் பரிஹரிக்குமவன் –
இவளுடைய நோயைப் பரிஹரிக்கவே -ஜகத்தை அடைய பரிஹரித்தாம் இறே
ஜகத்துக்காக உண்டான நோய் இவள் ஒருத்திக்குமே உண்டான படியால்

மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –
அவன் தோளில் இட்ட அழகிய திருத் துழாயைக் கொண்டு இவள் மேல் ஸ்பர்சிப்பது

சொல் மொழி என்று
உப ஜீவிக்கும் மருந்தும் –

தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே -என்று
மேல் பூசும் மருந்தும் –

தேவதாந்த்ர ஸ்பர்சமும்
தத் சம்பந்தி ஸ்பர்சமும்
இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்–
பகவத் ஸ்பர்சமும்
பாகவத ஸ்பர்சமும்
சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறது

தாத்பர்யம் –

நாயகியினுடைய வேதனை சமிப்பிக்கைக்காக
சில தேவதாந்த்ர பஜனம் பண்ணத் தொடங்க
மோகம் தெளிந்த தோழி ஒருத்தி நிஷேதிக்கிறாள்
ஓ தாய்மாரே
இப்பெண்ணுக்கு வந்த நோய் இன்னது இதுக்கு நிதானம் இன்னது இதுக்கு பரிஹாரம் இன்னது
இதுக்கு ஏறிட்டுச் சொல்லும் ஸ்தோத்ரம் பெறும் வேலன் போன்ற ஷுத்ர தெய்வம்
அவனை நிறுத்தி -அவனது பூஜையையும் நிறுத்தி –
தாய் மாறே நான் சொல்லுமுபாயம் கேளுங்கோள்
சர்வேஸ்வரனுடைய திரு நாமம் அனுசந்தித்து
அவனது திருத்துழாயையும் சூட்டுங்கோள் -என்கிறாள்

————————————————————————–—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -85-96–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

எம்பெருமான் திரு நாம சங்கீர்த்தனம் எனக்கு நித்ய கர்ம அனுஷ்டானம் -மாற்று வேறு ஒன்றில் நெஞ்சு
செலுத்த ஒண்ணாதபடி -எம்பெருமான் என் நெஞ்சுக்குள்ளே உறைகின்றான் காண்மின் -என்கிறார்

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85-

பதவுரை

கழி சினத்த–மிகக் கோபத்தை யுடையவனும்
வல்லாளன்–மிக்க வலிமை யுடையவனும்
வானார் கோன்–குரங்குகட்கு அரசனுமாகிய
வாலி–வாலியினுடைய
மதன்–மதத்தை (கொழுப்பை
அழித்த–தொலைத்த
வில் ஆளன்–சார்ங்க வில்லை ஆள்பவனான இராமபிரான்
நெஞ்சத்து–எனது நெஞசிடத்து
உளன்–எழுந்தருளி யிருக்கின்றான்
எனக்கு–(அந்த இராம பிரானுடைய திருக் குணங்களில் அகப்பட்ட) எனக்கு
தொழில்–நித்ய கருமம்
தொல்லை மால் தன் நாமம் ஏத்த–புராணனான அந்த ஸர்வேச்வரனுடைய திருநாமங்களை வாயாரப் புகழ்வதாம்
எனக்கு–(உலகத்தாரில் வேறு பட்டவனான) எனக்கு
மற்றதுவே–கீழ்ச் சொன்ன ஸ்ரீராமநாம ஸங்கீர்த்தனத்தினாலேயே
பொழுது போதும்–போது போகும்.

வானரக் கோன் — -வெள்ளி மலை பறித்த பெரு வீரனான இராவணனையும் வாலிலே கொண்டு திரிந்த வாலி –
கழி சினத்த வல்லாளன் -மிக்க கோபத்தை யுடைய -மிக்க வலிமை யுடைய -மதன் -மதத்தை -கொழுப்பை –

சூது சதுரங்கமாடியே போதைப் போக்கும் சில லௌகிகர்கள் ‘ஆழ்வாரே! எங்களோடே ஒருகை ஆடவருவீரோ?! என்றழைக்க,
அவர்கட்கு மறுமொழிகூறும் பாசுரமிது என்று விநோதமாகப் பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்வது காண்மின், –
“எதிரிகள் சதுரங்கம் பொரப் போருவீரோ என்றழைக்க இவர் சொல்லும்படி“ என்று.

எம்பெருமானுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணுவதே எனக்கு நித்யகர்மாநுஷ்டாநம்,
என்போதெல்லாம் அதிலே போகின்றது, அதற்கே போது போராதிருக்க வேறொன்றுக்குப் போதுகிடைக்குமோ?
வேறொன்றிலே நெஞ்சைச் செலுத்தவுமொட்டாதபடி.. எம்பெருமான் என்னெஞ்சினுள் உறைகின்றான் காண்மின் என்றாராயிற்று.

வானார் + கோன், வானரக்கோன். மதன் –மதம், மகரனகரப்போலி.
வெள்ளிமலை பறித்த பெருவீரனான இராவணனையும் வாலிலே கொண்டு திரிந்தவனான வாலிக்கு
‘கழிசினத்த, வல்லாளன்‘ என்ற அடைமொழிகள் பொருந்தும். (வாலி மதனழித்த வரலாறு, கீழ் இருபத்தெட்டாம் பாட்டினுரையிற் காண்க.)

இராமபிரான் வாலியைக் கொன்றவிதனில் ஸாமாந்யர் சில ஆக்ஷேபங்கள் கூறுவதுண்டு, அவையும் அவற்றுக்கு ஸமாதானங்களும் வருமாறு. –
‘இராவணவதத்திற்கு உதவி தேடுகிற இராமன் இராவணை எளிதில் வெல்லவல்ல வாலியைக் கொன்று விட்டு,
பயங்கொள்ளியான ஸுக்ரீவனை உதவிசெய்து கொண்டது என்ன புத்திசாலித்தனம்!‘ என்பர் சிலர், கேண்மின் –
வாலி முன்னமே இராவணனுடன் அக்நிஸாக்ஷிகமாக ஸ்நேஹங் கொண்டிருந்தமைபற்றி அவனைத்தான் உதவிகொண்டால்
இராவணன் முதலிய துஷ்டர்களைத் தொலைக்க வகையில்லாமையால் இராமன் ஸுக்ரீவனை நண்பனாகக் கொண்டு
அவன் வேண்டுகோளின்படி வாலியை வதைத்திட்டனன். இனிச் செய்ய வேண்டிய ராவண ஸம்ஹாரமாகிற தேவகாரியத்திற்கு
இவ்வாலி வதம் அங்கமெனக் கருதத்தக்கது, எவ்வகைப் பெருந்தீங்கு செய்திருந்தாலும் சரணமடைந்தால்
அவர்களைப் பாதுகாப்பதென்ற சிறந்த தருமத்தை மேற்கொண்டு நடப்பவனான இராமபிரான், அத்தருமத்தை முழுதும் விட்டவனும்
ஸுக்ரீவன் சரணமடைந்த பின்னரும் அவனை மிக வருந்திக் கொல்லத் தொடங்கி அந்தத் தருமத்திற்கு
எதிரானவனுமான வாலியைக் கொன்றது பொருந்தும். அன்றியும், பிறர் மனைவியைக் காதலித்துக் கவர்தலும்,
தம்பியிடம் பகை பாராட்டுதலும், வலியழிந்து முதுகுகாட்டி ஓடுகின்றவனைத் துரத்தி துரத்திக் கொல்லத் தொடங்குதலும்
முதலிய தீச்செயல்கள் வாலியினிடம் இருந்ததனாலும் பரமதார்மிகனான இராமன் வாலியை அழிக்கலானான்.
இராமபிரான் தான் ஏகபத்நீ விரதமுடையனாய், தம்பியரைத் தன்னுயிர்போலக் கொள்பவனாய், வலியிழந்த பகைவனை
‘இன்றுபோய் நாளைவா‘ என்று அன்போடு சொல்லி விடுத்தருளும் மஹாவீரனாவான்.

இஃதெல்லாமிருக்கட்டும், மறைந்து நின்று அம்பு எய்தது கூடுமோ? எனின், இது அரசர் கொடிய விலங்குகளைப் பதுங்கி
நின்று அழிக்கும் வேட்டைமுறையா லென்பர். “***“ என்று அதிமாநுஷஸ்வத்தில் ஆழ்வானருளிச் செய்ததுங்காண்க.
வேறு வகையான ஸமாதானங்களும் உள்ளன. முதலில் சரணமடைந்த ஸுக்ரீவனுக்கு அபயமளித்து வாலியைக் கொல்வதாக
வாக்குதத்தஞ் செய்துவிட்ட பெருமாள் பின்னர் வாலியினெதிரில் நின்று போர்செய்தால் இப்பெருமானது திறத்தைக் கண்டு
அஞ்சி வாலியும் இவனைச் சரணமடைந்திருவனாயின் தஞ்சமடைந்தவனைக் கொலை செய்யக்கூடாமை பற்றி
அவனைக் கொல்லாதுவிட நேர்ந்தால் முன்னைய வாக்கு (ஸுக்ரீவனுக்கு அளித்த வாக்கு)த் தவறி விடுமேயென்ற நோக்கம் முக்கிய காரணமாம்.
அன்றியும், எதிர்ந்தார் வலிமையிற் பாதி தன்னிடம் வந்து கூடும்படி வாலி சிவபிரானிடத்துப் பெற்றிருக்கின்ற வரம்
பழுது படாமலிக்குமாறு மறைந்து நின்று அம்பெய்தனன் என்றலு மொன்று. அவரவர்கள் தேவதாந்தரங்களிடத்துப் பெற்ற வரங்கள்
பழுதுபடாதபடியன்றோ எம்பெருமான் காரியஞ்செய்வது. இங்ஙனம் பல காரணங்களுள. இங்கு விரிப்பிற் பெருகும்.
ஸ்ரீராமாயணம் அதன் வியாக்கியானங்கள் வல்லார்வாய்க் கேட்டுணர்க.
கடவுளரது நியாயம் நுட்பமனாதும் அறிதற்கு அரியதுமாதலால் அது மனிதரது நியாயத்தோடு ஒப்பு நோக்கி
ஆராய்தற்கு உரியதன்றென்பது உணரத்தக்கது நிற்க.

————————————————————————————-

ஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார் 

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-86-

பதவுரை

நல் நெஞ்சை–எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்
தன் ஒப்பான்–(தனக்குப் பிறரொருவரும் ஒப்பில்லாமையாலே) தனக்குத்தானே ஒத்திருப்பவனான அந்த எம்பெருமான்
தமியேற்கு–ஒரு கைம்முதலுமற்றவனான எனக்கும்
என்றும் உளன் கண்டாய்–எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்க.
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்யவாஸம் பண்ணுமவன் காண்
என் ஒப்பார்க்கு–என்னைப் போலே உபாய சூந்யராயிருப்பவர்கட்கும்
தான் ஈசன் ஆய் உளன் காண்–தானே நிர்வாகனாயிருக்கிறான் காண்
இமை–இதனை அறி.

உத்தமன் உளன் கண்டாய் -ரக்ஷிப்பதாலேயே சத்தை பெற்று இருக்கும் புருஷோத்தமன்
உள்ளூர் உள்ளத்து உளன் கண்டாய் -ஆஸ்ரிதர் மனசிலே நித்ய வாசம் பண்ணி அருளுபவர் காண் –
என்றும் உளன் கண்டாய் -எக்காலத்திலும் ரக்ஷிப்பதற்கு தீக்ஷை கொண்டு இருக்கிறான் காண் –
என்னொப்பார்க்கு தான் ஈசனாய் உளன் காண் இமை–என்னைப் போல் உபாய ஸூன்யராய் இருப்பாற்கடக்கும் தானே
நிர்வாஹகானாய் இருக்கிறான் என்பதை புத்தி பண்ணு –
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் -என்றபடி கைம்முதல் இல்லாதார்க்கு கைமுதலும் அவனே
என்னொப்பார்க்கு–மற்றுள்ள ஆழ்வார்களைக் கூட்டிக் கொள்ளுகிறபடி –

————————————————————————–

சர்வ ரக்ஷகன் அவனே என்பதை மூதலிக்கிறார் —

இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்-87-

பதவுரை

இமயம் பெரு மலை போல்-பெரிய இமயமலை போன்றிருக்கும்படி
இந்திரனார்க்கு இட்ட–இந்திரனுக்காகச் சமைத்து வைத்த
சமயம் விருந்து–வழக்கமான ஆராதனையை
உண்டு–உட் கொண்ட போது (நேர்ந்த கல்மழையாலாகிய ஆபத்தில் நின்றும்)
கார்க்கண்டன் நான்முகனோடு காப்பான் ஆர்–சிவனையும் பிரமனையும் (பெரிய ஆபத்துக்களில் நின்றும்) ரக்ஷிப்பவன் யார்?
ஆர் காப்பார்–காப்பாற்றினது யார்?
சமயங்கள்–வைதிக மதங்களை
கண்டான்–பிரவர்த்திப்பித்தவன்
ஆர்–யார்?
அவை காப்பான்–அவற்றை (நிலை குலையாதபடி) ரக்ஷிப்பவன்
ஆர்–யார்?
உலகோடு உயிர் உண்டான் ஆர்–
உலகங்களையும் (உலகங்களிலுள்ள ஜீவராசிகளையும் (பிரளயத்தில்) உண்டு ரக்ஷித்தவன் யார்?
(எல்லாம் எம்பெருமானே யன்றோ)

ஸர்வரக்ஷகன் எம்பெருமானே யென்பதை மூதலிக்கிறார். பண்டு திருவாய்ப்பாடியில் கண்ணபிரானுடைய
அதிமாநுஷ சீலவ்ருத்த வேஷங்களைக் கண்டு ஆயர்களனைவரும் ‘இவனே நம் குலக்கொழுந்து,
இவன் கட்டளைப்படியே நாம் நடக்கவேண்டும்‘ என்று நிச்சயித்திருந்தனர். இங்ஙனமிருக்கையில் சரத்காலம் வந்தது,
அப்போது இடையர்கள் வருஷந்தோறும் நடத்துவதுபோல் வழக்கபடி இந்திரனுக்குப் பூஜைசெய்யப் பற்பல வண்டிகளில்
சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றுமுள்ள பூஜாத்ரவ்யங்களுமாகிய இவற்றைச் சேகரிப்பதைக் கண்டு
கிருஷ்ணன் ‘ஓ பெரியோர்களே! நாமும் நம்முடைய பசுக்களும் எதனால் ஜீவிக்கிறோமோ அதற்குப் பூஜை செய்வதன்றோ தகுதி,
இக் கோவர்தனகிரியே பசுக்களுக்குப் புல்லுந் தண்ணீருங் கொடுத்துக் காப்பாற்றுகின்றது, இந்திரனால் நமக்கு என்ன பயணுன்டு?
ஒன்றுமில்லை, ஆகையால் நீங்கள் இப்பூசனை யனைத்தையும் இம்மலைக்கே இடுங்கள்‘ என்ன,
இடையர்கள் இதைக்கேட்டு அங்ஙனமே செய், கண்ணபிரான் தானே ஒரு தேவதாரூபங்கொண்டு அவற்றைமுற்றும் அமுது செய்தருள,
அவ்விந்திரன் மிகக்கோபத்தோடு புஷ்கலாவர்த்தம் முதலிய பல மேகங்களை ஏவி, கண்ணன் விரும்பியமேய்க்கிற
கன்று கட்கும் பசுக்கட்கும் இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்குதரும் படி கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது,
கண்ணபிரான் கோவர்த்தனமலையை யெடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லாவுயிர்களைங் காத்தருளினன்
என்ற வரலாறு முன்னடிகட்கு அறியதக்கது.

இடையர் இந்திரனுக்கு இட்ட பூஜை “அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர்வாவியும் நெய்யளறும்“ என்னும்படியாகப்
பெரியமலை போன்றிருந்ததனால் ‘இமய பெருமலைபோல்‘ என்றார்.

சமயவிருந்து – ‘ஸமயம்‘ என்னும் வடசொல்லுக்குள்ள பல பொருள்களில் ‘ஸங்கேதம்‘ என்கிற பொருள் இங்கு விவக்ஷிதம்,
வினாச்சுட்டு மேல் ஒவ்வொரு வினையிலும் அந்வயிக்கவுரியது.

வைதிகமதங்களை ஏற்படுத்தினவன் யார்?
பாஹ்யகுத்ருஷ்டி மதங்களாலே அவற்றுக்குக் குலைதல் வாராதபடி அவற்றைப் பரிபாலனம் செய்தருள்பவன் யார்?
சிவனுக்கு நேர்ந்திருந்த பிரமஹத்தியாகிற ஆபத்தை நீக்கிக் காத்தவன் யார்?
வேதங்களை அசுரர்க்குப் பறி கொடுத்துக் கண்கெட்டு நின்று தவித்த பிரமன் துயரைத் தீர்த்தது யார்?
உலகங்களைப் பிரளங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் யார்?
எல்லாவகை ரக்ஷணங்களுஞ் செய்தவன் எம்பெருமானே யென்று தெளிவித்தபடி.
ஆளவந்தார் இப்பாசுரத்தையே திருவுள்ளம்பற்றி ஸ்தோத்ரத்நத்தில் மூன்று ச்லோகங்களருளிச் செய்தன ரென்னலாம்.

கார்கண்டன் நான்முகனோடு-காப்பான் ஆர் – உண்டான் உலகோடு உயிர்-உண்டான் ஆர் -தனியாகவும்
-கார்கண்டன் நான்முகனோடு- உலகோடு உயிர்-உண்டான் ஆர் -என்று ஒரே வாக்யமாகவும் யோஜிக்கவுமாம் –
அன்று எல்லாரும் அறியாரோ-எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் –பெரிய திருமொழி -11 -6 -2 –
இந்த பாசுரம் கொண்டே ஆளவந்தார் -க ஸ்ரீ –தொடங்கி மூன்று ஸ்லோகங்கள் -அருளிச் செய்தார் –

—————————————————————————————-

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-

பதவுரை

உடல் ஒழிய–சரீரத்தைப் போட்டு விட்டு
உயிர் கொண்டு–ஆத்மாவைப் பிடித்துக் கொண்டு
ஓடும்போது–(யமபடர்கள்) ஓடும்போது
ஓடி–(எம்பெருமானாகிய தானே) ஓடிச் சென்று
செயல் தீர–பேற்றுக்காக நாம் செய்ய வேண்டிய செயல் (ப்ரவ்ருத்தி) ஒன்றுமில்லை யென்று
சிந்தித்து–ஸ்வரூபத்தை யுணர்ந்து
வாழ்வாரே–வாழ நினைப்பவர்களே
வாழ்வார்–வாழ்ச்சி பெறுவர்
அயர்வு என்ற–கஷ்ட மென்று சொல்லப் படுகிற எல்லாவற்றையும்
தீர்ப்பான்–தீர்க்குமவனான எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
பாடி–வாய்விட்டுப் பாடி
சிறு சமயம் பந்தனையார்–அற்பங்களாய் பல நியமங்களோடு கூடினவையாய் ஸம்ஸார பந்தத்திற்கே
காரணமாக வுள்ளவையான உபாயங்களைப் பற்றினவர்களுடைய
வாழ்வு ஏல்–வாழ்ச்சியோ வென்றால்
பழுது–உபயோகமற்றது.

உபாடாந்தரங்களை அனுஷ்ட்டிக்கும் ப்ரவ்ருத்தி தர்ம நிஷ்டர்கள் போல் அன்றிக்கே -ஸ்வரூப உசிதங்களான-திரு விளக்கு எரிக்கை
திருமாலை எடுக்கை போன்ற பிரவ்ருத்திகளையும் உபாய புத்தி இன்றிக்கே ஸ்வயம் புருஷார்த்த புத்தியுடன் அனுஷ்ட்டித்து
அவன் நிர்ஹேதுக கிருபை அன்றி பேற்றுக்கு உபாயம் இல்லை என்று அத்யவசித்து
-காம்பறத் தலை சிரைத்து அவன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்-
அகிஞ்சனராய் இருக்கும் நிவ்ருத்தி தர்ம நிஷ்டர் -இவர்களுக்கு தானே நேரில் சென்று அயர்வுகளை தீர்க்கும் எம்பெருமான்
திரு நாமங்களையே மகிழ்ந்து பாடி வாழ்வதே வாழ்வு
தீர்ப்பான் பெயர் பாடி -பாட பேதம் -வெண்டளை பிறழும் –பேர் பாடி ப்ராசீன பாடமே பொருந்தும்
பந்தனையாய் -பந்தம் உடையவர் -கால் கட்டுக்களை யுடையவர் என்றவாறு –
சிறு சமய பந்தனையார் -அல்ப மாயும் நியமங்கள் உடன் கூடிய தாயும் –
சம்சார பந்தத்தத்துக்கு காரணமாயும் உள்ள உபாயாந்தரங்களை பற்றினவர் –

—————————————————————————————————

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பதவுரை

பழுது ஆகாது ஒன்று–பழுதுபடாத (சிறந்த) ஒரு உபாயத்தை
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன் (அது என்னவென்றால் கேண்மின்)
பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
வாழுவா வகை நினைத்து–தப்பாதபடி அநுஸந்தித்து
வைகல் தொழுவாரை–எப்போதும் வணங்குமவர்களை
கண்டு இறைஞ்சி–கண்டு வணங்கி
வாழ்வார்–வாழ்பவர்கள் (பாகவத பக்தர்கள்)
கலந்த வினைகெடுத்து–ஆத்மாவோடு சேர்ந்த தீவினைகளைத் தொலைத்து
விண் திறந்து–பரமபத வாசலைத் திறந்து
மிக்கு–சிறப்புடனே
வீற்றிருப்பார்–எழுந்தருளி யிருக்கப் பெறுவர்

கலந்த வினை கெடுத்து--ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
-நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –
என்று அருளிச் செய்வது அறிக

—————————————————————————————————-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

பதவுரை

விண்–பரமபதத்தில்
வீற்றிருந்து–பெருமை பொலிய இருந்து
ஆள வேண்டுவார்–ஆட்சி செய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள்
வேங்கடத்தான் பால்–திருவேங்கட முடையான் பக்கலில்
பல் மலர்கள்–பலவகைப்பட்ட மலர்களை
திருந்த–நன்றாக
வைத்தாரே–ஸமர்ப்பித்தவர்களே யாவர் (பகவானை ஆராதித்தவர்களே விண் ஆள்வர் என்கை)
வரும் மதி பார்த்து–(எம்பெருமானுடைய திருவுள்ளத்தில்) ஓடுகின்ற கருத்தை யறிந்து
அன்பினர் ஆய்–பக்தியை யுடையவர்களாய்
மற்றவற்கே–அந்த எம்பெருமானுக்கே
தாழ்வு ஆய் இருப்பார்–அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு
தமர்–அடிமைப்பட்டவர்கள்
மேல் திருந்த வாழ்வார்–முன்னடிகளிற் சொல்லப்பட்டவர்களிற் காட்டிலும் விலக்ஷணராக வாழ்பவராம்.

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் பன் மலர்கள் திறந்து வைத்தாரே -பரம பதத்தில் பெருமை பொலிய இருந்து ஆட் செய்ய விரும்பி அப்படியே
பேறு பெற்றவர்கள் திருவேங்கடமுடையான் பக்கலிலே பல வகைப்பட்ட மலர்களை நன்றாக சமர்ப்பித்தவர்களே யாவர் –
பகவானை ஆராதித்தவர்கள் வின் ஆழ்வார் -என்றபடி
வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-மேல் திருந்து வாழ்வார் -எம்பெருமான் திரு உள்ளத்திலே
ஓடுகிற கருத்தை அறிந்து -பக்தி யுடையவர்களாய் -அந்த எம்பெருமானுக்கே அடிமைப் பட்டு இருப்பவர்களுக்கு அடிமை பட்டவர்கள் –
முன்பு சொல்லப் பட்டவர்களில் காட்டிலும் விலக்ஷணராக வாழ்வார்
பாகவத அங்கீ காரமே உத்க்ருஷ்டம் -என்றவாறு
திருந்த -பாடமே ஏற்கும் –திருந்து பாட பேதம் ஒவ்வாது –

——————————————————————————————–

எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயங்கள் என்று உறுதி கொண்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
உபய விபூதில் உள்ளார்க்கும் நிர்வாஹகராகும் படியான பெருமையை யுடையவர்கள் -என்கிறார் –

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-

பதவுரை

மால் வண்ணன்–கரியமேனியனான எம்பெருமானுடைய
தாள் தாமரை–திருவடித் தாமரைகளில்
மலர்கள் இட்டு–புஷ்பங்களை ஸமர்ப்பித்து
இறைஞ்சி–வணங்கி
தாள் தாமரை அடைவோம் என்று–அத்திருவடித் தாமரைகளை யடைவோமென்று
தமர் ஆவார்–பக்தராயிருக்குமவர்கள்
தாமரை மேலாற்கும்–திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும்
ஆடு அரவு ஆர்த்தாற்கும்–ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும்
அமரர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
யாவர்க்கும்–மற்றுமெல்லார்க்கும்
அமரர்கள்–மேற்பட்டவராவர்

ஆடு அரவு ஆர்த்தார்க்கும் -ஆடரவத்தார்க்கும்–ஆடுகின்ற சர்ப்பங்களை ஆபரணமாக உடம்பில் கட்டிக் கொண்டு இருக்கும் சிவனுக்கும் –
தாருக வன முனிவர் தன்னை மதியாமல் இருக்க -அவர்கள் கர்வத்தை பங்கம் செய்யவும் -அவர்கள் மனைவிகளின் கற்பைப் பரிசோதிக்கவும்
ஒரு காமுகன் வடிவைக் கொண்டு பிஷாடணம் செய்து தன் மேல் காதல் கொண்ட முனி பத்தினிகள் கற்பு நிலையைக் கெடச் செய்ய
கோபம் கொண்ட முனிகள் அபிசார யாகம் செய்து ஹோமத்தீயில் இருந்து எழுந்த நாகங்கள் -பூதங்கள் மான் புலி முயலகன் வெண்டலை
-முதலவற்றை சிவனை கொல்ல ஏவ -சிவபெருமான் நாகங்களை ஆபரணங்களாகவும் -பூதங்களை கணங்களாகவும்
-மானைக் கையில் ஏந்தி புலி தோல் உடுத்து முயலகன் முதுகில் காலூன்றி
வெண்டலையைக் கையால் பற்றி சிரம் மேல் அணிந்து அவற்றை பயன் இல்லாதனவாகச் செய்தான் என்பர் –

——————————————————————————–

நான் கர்ப்ப வாசம் பண்ணும் போதே தொடங்கி எம்பெருமான் என்னை ரஷித்திக் கொண்டு
வருகையால் ஒரு காலும் அவனை மறந்து அறியேன் என்கிறார் –

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

பதவுரை

கரு இருந்த நாள் முதலா–(நான்) கர்ப்பத்திலிருந்த நாள் தொடங்கி
காப்பு–(எம்பெருமானாலே) ரக்ஷை பெற்றவனாகையாலே
திரு என்றும் இருந்த மார்வன் சிரீதரனுக்கு–பிராட்டி நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வை யுடைய அந்தத்திருமாலுக்கு
ஆள் ஆய்–ஆட்பட்டவனாய்
நெடு மாலை–(அந்த) ஸர்வேச்வரனை
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
வைத்து–ஸ்தாபித்து
நின்றும் இருந்தும் என்றும்–நிற்றல் இருத்தல் முதலிய எல்லா நிலைமைகளிலும்
மறந்தறியேன்–மறவாமல் (அவனையே) சிந்திப்பவனா யிருக்கின்றேன்.

நான் கர்ப்பவாஸம் பண்ணும்போதே தொடங்கி எம்பெருமான் என்னை ரக்ஷித்துக் கொண்டு வருகையாலே
ஒரு காலும் நான் அவனை மறந்தறியேனென்கிறார்.

இவ்வாழ்வார் கீழ்க்கழிந்த காலங்களில் பல சமயங்களிலும் புகுந்து பல தெய்வங்களையும் வழிப்பட்டவரா யிருந்து வைத்து,
திருமாலை ஒரு நாளும் மறந்தறியேனென்று சொல்வது பொருந்துமோ? என்று சங்கிப்பர் சிலர் உண்மை கேண்மின்,
எம்பெருமானுக்கு ஆட்பட்டிருக்குந் தன்மையானது ஸகல ஆத்மாக்களுக்கும் இயற்கையாகவே யுள்ளது,

ஆட்பட்டு இருப்பது அனைவருக்கும் இயற்க்கை அன்றோ -அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்
அபிமான துங்கன் செல்வனைப் போலே நானும் உனக்கு பழ வடியேன் –
மாணிக்கத்தின் ஒளி அழுக்கினால் மழுங்கி இருந்து ஒரு நாள் அளவில் அழுக்கு நீங்கி விளங்கினாலும் அவ்வொளி இயற்க்கை என்னத் தட்டில்லை —
இடையில் அடிமையை இழந்தால் -வயிறு எரிந்து -பொழுதே பல காலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும்
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள் –என்றும் அன்று நான் பிறந்திலேன் -என்பர்
நிற்கும் இருந்தும் –எல்லா நிலைகளிலும் என்றபடி —
நிற்கும் போதும் இருக்கும் போதும் நடக்கும் போதும் படுக்கும் போதும்

நாராயணா என்றால் உங்கள் தலையில் இடி விழுமோ -என்றானே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் –

—————————————————————————————–

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-93-

பதவுரை

அங்கு–அந்தப் பிரளய காலத்தில்
பல் உயிர்க்கும்–எல்லா ஆத்மாக்களுக்கும்
ஆப்பு ஒழியவும்–சரீரங்கள் அழிந்து போயிருந்தாலும் (மறுபடியும்)
ஆக்கை கொடுத்து–சரீரங்களைக் கொடுத்து
அளித்த–அருள்செய்த
கோனே–ஸ்வாமிந்!
காப்பு–(நீ செய்தருளும்) ரக்ஷைணை
மறந்தறியேன்–ஒருநாளும் மறக்கமாட்டேன்
கண்ணனே என்று இருப்பன்–எல்லாம் கண்ணனே என்று உறுதிகொண்டிருப்பேன்
குணம்–திருக்குணங்களினால்
பரனே–சிறந்த பெருமானே!
மெய் தெளிந்தார் தாம்–உள்ளபடி (ஸ்வரூபத்தைத்) தெளிவாக அறிந்தவர்கள்
உன்னைவிட துணியார்–உன்னை விட மாட்டார்கள்.

ஆப்பு ஒழியவும் -சரீரங்கள் அழிந்து போய் இருந்தாலும்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே-பிரளய தசையில் இறகு ஒடிந்த பறவை போலே இருக்க கரண களேபரங்களை
இழந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் கொடுத்தமை சொல்லிற்று
கண்ணனே என்று இருப்பன் –எல்லாம் கண்ணனே என்று உறுதி கொண்டு இருப்பேன்
குணம் பரனே -திருக் குணங்களால் சிறந்த பெருமானே
மெய் தெளிந்தார் -உள்ளபடி ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் –
உன் சம்பந்தத்தையும் உன் அரிய பெரிய திருக் குணங்களையும் உணருமவர்கள்
காப்பு மறந்தறியேன்–எம்பெருமான் ரக்ஷித்து அருளியதை மறந்தறியேன் என்றும் நான் எம்பெருமானுக்கு
மங்களா சாசனம் பண்ணுவதை மறந்தறியேன் -என்றுமாம் –

இவ்வாழ்வார் வாழ்ந்தகாலத்தில் குணபரன் என்னுமோரரசன் இருந்ததாகவும்,
எம்பெருமானுக்கே ஏற்றிருக்கத்தக்கதான அந்த நாமத்தை அவ்வரசன் தரித்திருப்பது பொருந்தாதென்று அதில் வெறுப்புக்கொண்டு,
“அஃது அனந்த கல்யாணகுண பரிபூர்ணனான எம்பெருமானுக்கெ உரியதாம்“ என்ற திருவுள்ளத்தை வெளியிட வெண்டி
இப்பாசுரத்தில் “கோனே குணபரனே“ என்று எம்பெருமானை இவர் அழைத்திருப்பதாகவும் இக்காலத்துச் சில ஆராய்ச்சிக்காரர். கூறுகின்றனர்.
இக்கூற்றின் பொருத்தமின்மையைத் தனிப் புத்தகத்தில் விரித்துரைப்போம் நிற்க.

மெய்தெளிந்தார்தாம் உன்னை விடத் துணியார் – உன்னோடுண்டான உறவையும் உனது அரிய பெரிய திருக்குணங்களையும்
உள்ளபடி உணருமவர்கள் உன்னை விடமாட்டார்கள் என்றவிதனால் தாம் எம்பெருமானை விடமாட்டாமையைத் தெரிவித்தாராவர்.

———————————————————————————————–

மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-94-

பதவுரை

வேறு ஆனார்–வேறுபட்டவர்களான (பகைவர்களான) துரியோதநாதிகள்
நீறு ஆக–சாம்பலாய் ஒழிந்து போம்படியாக
தெளிந்து–(ஆச்ரித விரோதிகளைக் கொல்லுதல் தருமமே என்று) தேறி
தெளிந்த பை பாம்பு இன்அணையாய்–விளங்குகின்ற படங்களை யுடைய ஆதிசேஷனாகிற இனிமையான படுக்கையைச் சென்று சேர்ந்த பிரானே!
அடியேற்கு–அடியேனுக்கு
அருளாய்–அருள் புரிய வேணும்
என்று–வேணுமென்று விரும்பினால்
கைகாட்டி–(பாண்டவர்களுக்கு) வேண்டிய உதவிகளைச் செய்து
களம படுத்து–(அந்த எதிரிகளைப் போர்களத்தில் கொன்றொழித்து) (இவ்வகையாலே மண்ணின் பாரம் நீக்கி)
வேம்பும் கறி ஆகும்–வேப்பிலையும் கறியாகச் சமைத்துக் கொள்ள கூடியதே
மெய் தெளிந்தார்–உள்ளதை உள்ளபடியறியுமவர்கள்
என் செய்யார்–எதுதான் செய்யமுடியாதவர்கள் (எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே)

வேறானார் நீறாக தெளிந்து –பகைவர்களாக துர்யோதனாதிகள் சாம்பலாய் ஒழிந்து போம் படியாக
-ஆஸ்ரித விரோதிகளை கொல்லுவது தர்மமே என்று தேறி
ஆஸ்ரித விரோதிகள் என்பதால் எம்பெருமான் தனக்கு விரோதிகள் என்று கொள்வான் அன்றோ –
கை காட்டிக்–பாண்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து –
களப்படுத்து -அந்த எதிரிகளை போர் களத்திலே கொன்று ஒழித்து -இவ்வகையாலே மண்ணின் பாரம் நீக்கி –
-பை தெளித்த-பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-சீலமில்லாச் சிறியேனாயினும் அடியேன் பக்கல் அருள் செய்ய வேண்டும் –
குற்றமே வடிவாக உள்ளவர்களை இகழ்ந்து ஒழிய வேண்டுமே அன்றி கைக் கொள்வது தகாது என்று திரு உள்ளம் பற்றலாகாது –
வேப்பிலை கைக்கும் என்றாலும் இத்தை கறியாகச் சமைத்து உட் கொள்ள வேணும் என்னும் விருப்புடையார்க்கு
அது கறி யாகும் அன்றோ -அப்படியே தெரிந்தவர்கள் என்னைக் கைக் கொள்ளுவார்கள் –
மெய் தெளிந்தார் என் செய்யார் –எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே
அடியேனுடைய குற்றங்களை நற்றமாகவே கொண்டோ -அல்லது அவற்றில் திருக் கண் செலுத்தாமலோ
அடியேனை விஷயீ கரித்து அருள வேணும் –

—————————————————————————————-

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

பதவுரை

அடிமை–அடிமையை
என்றேன்–ஏற்றுக் கொண்டேன்
பிறப்பு இடும்பை–ஸம்ஸார துக்கங்களில் நின்றும்
இழிந்தேன்–நீங்கினேன்
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்களுக்கும்
அமராமை–என் அருகு நாடாவெண்ணாதபடி
ஆன்றேன்–(ஞானம் பக்தி முதலிய வற்றால்) நிரம்பினேன்
கடன்நாடும்–ஸ்வர்க்கம் முதலிய லோகங்களையும்
மண் நாடும்–இப் பூலோகத்தையும்
கை விட்டு–உபேக்ஷித்து
மேலே–எல்லாவற்றுக்கும் மேற்பட்டுள்ளதாய்
இடம்–(அடியார்கள் குழாங்களுக்குத் தகுதியாக) இட முடைத்தான்
நாடு–திருநாட்டை
காண–கண்டு அநுபவிக்கலாம்படி
இனி–இப்போது
ஆன்றேன்–(பரம பக்தி) நிரம்பப் பெற்றேன்

ஏன்றேன் அடிமை-அடிமையை ஏற்றுக் கொண்டேன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளை போலே உத்ஸாஹம் கொண்டு பாரித்தேன்
இழிந்தேன் பிறப்பு இடும்பை-சம்சார துக்கங்களில் நின்றும் நீங்கினேன்-தாபத்த்ரயத்தில் நின்றும் விட்டு நீங்கப் பெற்றேன்
ஆன்றேன் அமரர்க்கு அமராமை -ப்ரஹ்மாதி தேவர்கள் என் அருகில் நாட ஒண்ணாத படி ஞான பக்தாதிகளாலே நிரம்பினேன்
அவர்கள் கூசி அகல வேண்டும் படி பெரும் பதம் பெற்றேன் –
கடனாடும் மண்ணாடும் கை விட்டு–ஸ்வர்க்காதி லோகங்களையும் பூ லோகத்தையும் உபேக்ஷித்து –
பண்ணிய புண்யங்களுக்கு பலம் அனுபவித்தே தீர்க்க வேண்டும் பட்ட -கடனை தீர்ப்பது போலே
புண்ய பலன் அனுபவிக்கும் ஸ்வர்க்கத்தையும் -புண்ணியம் திரட்டும் இடமான பூ லோகத்தையும் வெறுத்து
மேலை-இடநாடு காண வினி–எல்லாவற்றுக்கும் மேல் பட்டுள்ளதாய் -அடியார் குழாங்களுக்குத் தகுதியான இடமுடைத்தான
திரு நாட்டை கண்டு அனுபவிக்கலாம் படி இப்போது –
ஆன்றேன்– – -திரு நாட்டில் சேருவதற்கு பாங்காக-பரம பக்தி நிரம்பப் பெற்றேன்-
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்றால் போலே –
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்றுமாம் –

—————————————————————————————-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

பதவுரை

எம்பெருமான்–எம்பெருமானே!
உன்னை–உன்னை
ஈசற்கும்–ருத்ரனுக்கும்
நான் முகற்கும்–பிரமனுக்கும்
தெய்வம்–தெய்வமாக
இனி அறிந்தேன் இனி அறிந்தேன்–இப்போது திடமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ–ஸகல ஜகத்துக்கும் காரண பூதன் நீ
கற்றவை நீ–இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ
கற்பவை நீ–இனிமேலறியப்படும் பொருள்களும் நீ (என்கிற இதனையும்)
நல் கிரிசை–நிர்ஹேதுகரக்ஷண மாகிற நல்ல வ்யாபாரத்தை யுடையனான
நாரணன் நீ–நாராயணன் நீ
நான் நன்கு அறிந்தேன்–நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன்

எம்பெருமான் உன்னை – ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்-இனி அறிந்தேன்-இனி அறிந்தேன்-எம்பெருமானே உன்னை இப்போது
ருத்ரனுக்கும் பிரமனுக்கும் தெய்வமாக திடமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ –சகல ஜகத்துக்கும் காரண புதன் நீ –
கற்றவை நீ-இதற்கு முன்பு அறியப் பட்ட பொருள்கள் எல்லாம் நீ
கற்பவை நீ -இனி மேல் அறியப் படும் பொருள்களும் நீ
இனி அறிந்தேன்-என்பனவற்றை எல்லாம் அறிந்தேன்
நற்கிரிசை-நிர்ஹேதுக ரக்ஷணம் ஆகிய நல்ல வியாபாரத்தை யுடைய
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –நாராயணன் நீ -நன்றாகத் தெரிந்து கொண்டேன்

சகல பிரபஞ்சத்துக்கும் காரணனான நாராயணனே பர தெய்வம் என்று முதல் பாட்டிலே ப்ரதிஜ்ஜை பண்ணி
சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் நியாயம் இவற்றாலும் -ஸ்ரீ யபதித்தவாதி சின்னங்களாலும் அத்தையே நெடுக உபபாதித்திக் கொண்டு வந்து
அடியில் பண்ணின ப்ரதிஜ்ஜைக்குத் தகுதியாக ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை நிலை நாட்டித் தலைக் கட்டுகிறார்
தேவதாந்த்ர பரத்வப்ரமத்தை தவிர்த்து ஸ்ரீ மன் நாராயணன் இடத்திலே பரத்வத்தை ஸ்தாபிப்பதிலேயே இப்பிரபந்தத்தின் முழு நோக்கு –

————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -73-84–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73–

பதவுரை

அனைத்து உலகும்–எல்லா வுலகங்களையும்
உண்டு உமிழ்ந்த–(பிரளயத்தில்) உண்பதும் (பிறகு) உமிழ்வதும் செய்தவனும்
பேர் ஆழியான் தன்–பெருமை தங்கிய திருவாழி யாழ்வானைத் திருக்கையிலுயைவனுமான எம்பெருமானுடைய
பெருமையை–மஹிமையை
அறிவார் ஆரே–அறியக் கூடியவர் யார்? (ஒருவருமில்லை)
அவன் வைத்த–அப்பெருமான் (முன்பே) ஸாதித்து வைத்த
பண்டைத் தானத்தின் பதி–பரமபத மார்க்க மென்னத் தகுந்த சரம ச்லோகத்தை
கார் செறிந்த கண்டத்தான்–நீலகண்டனான சிவனும்
எண் கண்ணான்–நான் முகனும்
காணான்–அறியமாட்டார்கள்.
(அவர்களே அறிய மாட்டாத போது மற்ற பேர்கள் அறிய மாட்டார்களென்பது சொல்ல வேணுமோ?)

அவன் வைத்த-பண்டைத் தானத்தின் பதி–அப்பெருமான் முன்பே சாதித்து வைத்த பரமபத மார்க்கம்
என்னத் தகுந்த சரம ஸ்லோகத்தை —பண்டத்தானத்தின் -நித்ய விபூதி
அவன் உபாயமாகும் இடத்து வேறு ஒரு உபாயத்தையும் எதிர்பாராமல் தானே பூரணமாய் இருந்து
கார்யம் தலைக் கட்ட வல்லனாகும் பெருமை -என்று பட்டர் அருளிச் செய்வாராம்
அவன் உண்ட போதும் உமிழ்ந்த போதும் நிரபேஷனாக செய்து அருளியததால் நிரபேஷத்வ உபாயத்வம் அறியாலாமே
நீல கண்டனும் நான் முகனும் பேர் ஆழியான் தன் பெருமை அறிவார்களா –
சர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக அவனையே உபாயமாக பற்றினவர்களுக்கே நித்ய விபூதி ஸூ லபமாகும் –
சிவனும் பிரமனும் சரம ச்லோகத்தையறியார்கள் என்றதற்குக் கருத்து யாதெனில்,
புறம் புண்டானவற்றை விட்டு அவனையே தஞ்சமாகப் பற்றுகைக் குட்லான ஸ்வரூப வுண்மையை உணரார்கள் என்பதாம்.

———————————————————————————————–

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

பதவுரை

பதி பகைஞற்கு ஆற்றாது–ஸஹஜ சத்ருவான பெரிய திருவடிக்கு அஞ்சி,
பாய் திரை நீர்பாழி–பாம்பின அலைகளோடே கூடின நீரை யுடைத்தான கடல் போலே குளிர்ந்த திருப் படுக்கையை
மதித்து–புகலிடமாக நம்பி
அடைந்த–வந்து பற்றின
வாள் அரவம் தன்னை–ஒளி பொருந்திய ஸர்ப்பமாகிய ஸுமுகனை
மதித்து–ஆதரித்து
அவன் தன்–அந்த (சத்ருவான) கருடனுடைய
வல் ஆகத்து ஏற்றிய–வலிமை தங்கிய சரீரத்திலே ஏற விட்டவனும்
மாமேனி மாயவனை அல்லாது–சிறந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான ஸர்வேச்சரனை யன்றி
ஒன்று வேறொன்றை
என் நா–எனது நாவானது
ஏத்தாது–தோத்திரம் செய்யாது.

அஞ்சி வந்து அடி பணிந்த ஸூ முகனுக்கு அபயம் அளித்த வரலாற்றை அருளிச் செய்கிறார் –
தேவேந்திரன் சாரதி மாதலி புத்ரி-குணகேசி க்கு வரனாக -ஸூ முகன் – பிதாமகன் -ஆர்யகன் –தன் புத்ரனை
பெரிய திருவடி பஷித்து ஸூமுகனையும் ஒரு மாதத்தில் பஷிப்பதாக சொல்லி போந்ததை சொல்லி –பெரிய திருவடியையே
தோளிலே அடைக்கலமாக கொள்ளச் செய்து அருளினான் –

தேவந்திரனுக்குப் பரம ஆப்தனும் ஸாரதியுமான மாதலியென்பவன் தனது புத்திரியான குணகேசி யென்னுங் கன்னிகைக்குத்
தகுந்த வரனைத் தேட நாரத மஹர்ஷியோடு புறப்பட்டுப் பலவுலகங்களிலுஞ் சென்று கடைசியாகப் பாதாளலோகத்தில்
போகவதி யென்னுஞ் சிறந்த நகரத்தை யடைந்து ஸுமுக னென்னும் நாக்குமாரனைக் கண்டு
அவனது அழகு குணம் முதலியவற்றிலீடுபட்டு அவனுக்குத் தன்மகளை மணம் புரிவிக்க வுத்தேசித்து அவனது
பிதாமஹனான ஆர்யகனைக் கண்டு தன் உத்தேசத்தைத் தெரிவிக்க, ஆர்யகன் ஆநந்தத்தையும் ஸங்கடத்தையும்
ஏககாலத்தில் கொண்டவனாகி ‘இவனது தந்தையைக் கருடன் பக்ஷித்து இவனையும் ஒரு மாதத்திற்குள் பக்ஷிப்பேனென்று
சொல்லியிருக்கிறானாதலால் இவனுக்கு இப்போது துவிவாஹம் நடத்துவது உசிதமன்று‘ என்று தெரிவித்தான்.

அதற்கு மாதலி ‘இவன் என்னோடு வநது தேவேநதிரனைக் காணட்டும், இவனுக்கு ஆயுளைத் தந்து கருடனால்
கேடுவராமல் தடுக்க முயல்வேன்‘ என்று சொல்லி அச்சுமுகனை உடனழைத்துக் கொண்டு சென்று
உபேந்திர மூர்த்தியோடிருந்த தேவேந்திரனைக் கண்டு நாரதர்மூலமாகச் செய்தியைத் தெரிவிக்க,
அதுகேட்ட உபேந்திரனான ஸ்ரீமஹாவிஷ்ணு ‘இவனுக்கு அம்ருத்தைத் தரலாம், அதனால் இஷ்டஸித்தி உண்டாகும்‘ என்று சொல்ல,
இந்திரன் கருடனுடைய பராக்ரமத்தை நினைத்து சிறிது அச்சத்துடனே அம்ருத முண்பியாமல் அந்த ஸுமுகனுக்கு
நீண்ட ஆயுளை மாத்திரம் வரமாக அளிக்க, உடனே மாதலி அச்சுமுகனுக்குத் தன் மகளை மணஞ்செய்வித்தான்,

இச்செய்தியைக் கேள்வியுற்ற கருடன் இந்திரனோடு மாறுபட்டுத்தன் இரையைத் தடுத்ததற்காக நிஷ்டூரமாகப் பேசுகையில்,
ஸுமுகன் தான் நீண்ட ஆயுளை வரம் பெற்றிருந்தாலும் கருடனுடைய கறுவுதலைக் கண்டஞ்சிப் பாம்பு வடிவமாயத் திருமாலினருகிற் சேர்ந்து
அப்பெருமானது கட்டிலின் காலைக் கட்டிக்கொண்டு சரண்புக, பின்பு கருடன் திருமாலை நோக்கி
‘ஸகலதேவர்களினுள்ளும் மஹா பலசாலான வுன்னைச் சிறிதும் சிரமமின்றி இறகு முனையால் சுமக்கின்ற
என்னைவிட வலிமையுடையார் யார்? இதனை சற்று ஆலோசியும்‘ என்று கருவங்கொண்டு பேச
கடூரமான அந்த வார்த்தையைக் கேட்ட எம்பெருமான் கருடனை நோக்கி ‘மிகவும் துர்ப்பலனான நீ தன்னை
மஹாபலசாலியாக எண்ணி என்முன்னே ஆத்மஸ்துதி செய்து கொண்டது போதும்,
மூன்று லோகமும் எனது உடம்பை வஹிக்க முடியாதே, யானே எனது சக்தியால் என்னையும் வஹித்துக் கொண்டு
உன்னையுமல்லவோ வஹிக்கிறேன் எனது இந்த வலக்கையொன்றை மாத்திரமாவது நீ தாங்குவையா? என்று சொல்லித்
தமது வலக்கையைக் கருடனது தோளில் வைத்த மாத்திரத்தில் அவன் அந்தத் திருக்கையின் அதிபாரத்தைத் தாங்கமாட்டாமல் வருந்தி
வலியழிந்து மூர்ச்சித்து விழுந்து பின்பு அரிதில் தெளிந்து எம்பெருமானை வணங்கித் துதித்து அபராதக்ஷாமணஞ்செய்து கொள்ள,

திருமால் திருவுள்ளமிரங்கி அவனுக்கு ஸமாதானஞ் சொல்லித் தனது திருவடியின் பெருவிரலால் ஸுமுகனென்ற நாகத்தை யெடுத்துக்
கருடன் தோளிலிட்டு ‘இவனை நீ உனது அடைக்கலமாகக் கொண்டு பாதுகாக்கக் கடவை‘ என்று குறிப்பிக்க அது முதலாக
ஸுமுகனோடு கருடன் ஸநேஹங் கொண்டு அவனைத் தோளில் தரிக்க, அவனும் அச்சமின்றி ‘கருடா! ஸுகமா? என்று
க்ஷேமம் விசாரிப்பவனாயினன் என்ற உபாக்கியானம் இங்கு அறியத்தக்கது.

அடுத்த கடும் பகைஞ்ஞாற்கு ஆற்றேன் என்றோதி படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்தரவை
வல்லாளன் கைக் கொடுத்த மா மேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள் -பொய்கையார் -80 –

நஞ்சு சோர்வதோர் வெஞ்சினவரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணா
நெஞ்சில் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –அடியேன் –நின்னடி
இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -4 -8 -4 –

பாய்த்திரை நீர்ப்பாழி – இந்த உபாக்கியானம் ஸ்ரீமஹாபாரதத்தில் உத்யோகபர்வத்தில் நூறாவது அத்யாயந் தொடங்கி
ஐந்து அத்யாயங்களில் பரக்கக் கூறப்பட்டுள்ளது. ஸுமுகன் எம்பெருமானைச் சரணமடைந்தது இந்திரனருகில் என்பதாக
அங்குக் கூறப்பட்டுள்ளதனால் ‘பாய்திரை நீர்ப்பாழி‘ என்ற விதற்கு ‘கடல் போலே குளிர்ந்த திருப்படுக்கை‘ எனப் பொருளுரைக்கப்பட்டது.

இனி, பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் –“ஓரோயுகத்திலே ஓரோவிடங்களிலே எல்லாம் பிறக்கக் கூடுகையாலே
திருப்பாற்கடல் தன்னிலேயாகவுமாம்“ என்று இரண்டாவது நிர்வாஹமாக அருளிச் செய்துள்ளபடி
திருப்பாற்கடலையே பொருளாகக் கொள்ளவுமாம். கல்பபேதத்ததாலே இது கூடுமென்க.

ஆஸ்ரித விரோதிகளை க்ஷமிக்க மாட்டேன் -அடியார்களைக் கை விட்டேன் -இரண்டையும் காட்டி அருளிய செயல் அன்றோ-
-இதையே அவன் –தன்-வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனுக்கு என்கிறார்
பாய் திரை நீர்ப் பாழி--கடல் போன்ற குளிர்ந்த படுக்கை என்றும் திருப் பாற் கடல் என்றுமாம் –

—————————————————————————————————-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

பதவுரை

தீக் கொண்ட செம் சடையான்–நெருப்புப் போலே சிவந்த சடையை யுடையனான ருத்ரன்
நலம் ஆக–தகுதியாக
என்றும்–எந்நாளும்
பூ கொண்டு–புஷ்பங்களைக் கையிற்கொண்டு
பின் சென்று–அநுஸித்து
வல்ல ஆறு–தன் சக்தியுள்ள வளவும்
ஏத்த–துதிக்க
மகிழாத–(இதைத் தனக்கொரு பெருமையாக நினைத்து) மேனாணிப்புக் கொள்ளாத
வைகுந்தம் செல்வனார்–ஸ்ரீவைகுண்ட நாதனுடைய
சே அடி மேல் பாட்டு–திருவடிகளுக்கு உரிய பாசுரங்களை (ச் சொல்ல வல்ல)
நாக் கொண்டு–நாவினால்
மானிடம்–மனிதர்களை
பாடேன்–பாட மாட்டேன்

மகிழாத -பெருமையாகக் கொண்டு மேனாணிப்பு கொள்ளாத என்றபடி

எம்பெருமானொருவனையே துதிப்பதற்கென்று படைக்கப்பட்ட நாவைக் கொண்டு அற்ப மனிதர்களைக் கவிபாட மாட்டேனென்று
தமது உறுதியை வெளியிடுகின்றார். சடைமுடியனானவற்றைக் கொண்டு ஆராதித்து அநுவர்த்தித்தாலும்
நித்யஸூரிஸேவ்யனான தனக்கு இது ஒரு பெருமையன்றாகையாலே இதனால் சிறிதும் மகிழ்ச்சி கொள்ளாத
ஸ்ரீவைகுண்ட நாதனுடைய திருவடிகள் மேல் கவிபாடுதற்கே ஏற்றநாவைக் கொண்டு மானிசரைப் பாடுதல் தகாது என்றதாயிற்று.

இவ்வாழ்வார் காலத்தில் வாழ்ந்த இவரது சிஷ்யரான கணிகண்ணன் வாக்கினால் தான் ஒரு பாடல் பெறக்கருதிப்
பெருமுயற்சி செய்தும் பெற்றிலனென்பத இவ்வாழ்வார்வைபவத்தில் விரியும்.
சிஷ்யருடைய உறுதியே அங்ஙனிருக்கும்போது ஆசாரியரான இவரது உறுதியைப் பற்றிச் சொல்லவேணுமோ?

——————————————————————————————

கீழ்ப்பாட்டில் “வைகுந்தச்செல்வனார் சேவடிமேல் பாட்டு –நாக்கொண்டு மானிடம்பாடேன்“ என்றார்,
எம்பெருமானொருவனையே கவிபாடும்படியான உறுதி தமக்கு உண்டானபடி யெங்ஙனேயென்ன,
உலகத்திலுள்ள வாச்யங்கள் வாசகங்கள் எல்லாம் அப்பெருமானுடைய திவ்யஸங்கல்பத்தாலே உண்டாயினவென்று
இப்பாட்டால் அருளிச்செய்யும் முகத்தால் தமது உறுதிக்கு அடிகூறினாராயிற்று

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

பதவுரை

பாட்டும் முறையும்–இயலும் இசையும்
படு கதையும்–பழைய சரிதங்களைக் கூறவந்த இதிஹாஸங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை யறிவிக்கிற புராணங்களும்
ஈட்டிய தீயும்–(பஞ்சீகரணத்தாலே பலகுணங்களும் தன்னிலே அமையும்படி) சேர்க்கப்பட்ட அக்நியும்
இரு விசும்பும்–பரந்த ஆகாசமும் (முதலான பஞ்ச பூதங்களும்)
கேட்ட மனுவும்–வேதத்திலும் ஓதப்பட்ட மநு மஹர்ஷியின் தர்ம சாஸ்த்ரமும்
கருதி–அநாதியாக உச்சாரண அநூச்சாரண ச்ரமத்தாலே ஓதப்பட்டு வருகிற
மறை நான்கும்–நான்கு வேதங்களும் (ஆகிய இவை யெல்லாம்)
மாயன் தன்–ஆச்சர்ய சக்தியுத்தனான எம்பெருமானுடைய
மாயையில் பட்ட–ஸங்கல்பத்தினாலுண்டான
தற்பு–தத்துவங்களாம்.

பாட்டும் முறையும் –இயலும் இசையும்
படுகதையும் –பழைய சரித்ரங்களைக் கூற வந்த -இதிஹாசங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை அறிவிக்கும் புராணங்களும்
ஈட்டிய தீயும் -பஞ்சீ கரணத்தால் பல குணங்களும் தன்னிலே அமையும் படி சேர்க்கப் பட்ட அக்னியும் –
இரு விசும்பும் –பரந்த ஆகாசம் முதலான பஞ்ச பூதங்களும் –
-கேட்ட-மனுவும் -வேதங்களில் ஓதப்பட்ட மனு பகவான் அருளிச் செய்த தர்ம சாஸ்திரமும் —
மனு சொல்வது எல்லாம் மருந்தாய் இருக்குமே -என்பர்
சுருதி மறை நான்கும் மாயன்-தனமாயையில் பட்டதற்பு-சங்கல்பத்தால் உண்டான தத்வங்களாகும் –

———————————————————————————————–

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-

பதவுரை

தட கடலை–பரந்த தெற்கு சமுத்ரத்தை
கல் கொண்டு–மலைகளினால்
தூர்த்த–அணை செய்து அடைத்தவனும்
கடல் வண்ணன் தான்–கடல் போன்ற கருநிற முடையனுமான எம்பெருமான்
என்னை–(தோஷமு வடிவெடுத்தவனான) என்னை
தற்பு–உள்ளபடியே
அறியான் ஏலும்–அறிந்திலனாயினும்,
எற் கொண்ட–என்னைக் கொள்ளை கொண்டிருக்கிற
வெம் வினையும்–கொடிய பாவங்கள் யாவும்
நீங்க–என்னை விட்டு நீங்கும்படியாக
கண்டு–அழகிய திருக் கண்களாலே குளிரக் கடாக்ஷித்து
மனம்–தனது திருவுள்ளத்தை
விலங்கா வேறு எங்கும் விலகிப் போகாதபடி
வைத்தான்–(என்மீதே ஒரு மடைப்படுத்தி) வைத்தருளினன் (ஆகையாலே)
ஏ வினையும்–பாபமென்று பேர் பெற்றவை யடங்கலும்
மாயும்–உரு வழிந்து போம்

எனது குற்ற மிகுதியைக் கண்டு இகழாமல் -என்னுடைய ஸமஸ்த கருமங்களை உரு மாய்ந்து போம்படி
திரு உள்ளத்தை என் பக்கலில் வைத்து அருளினான் -என்கிறார்

கடல்வண்ணன் தான் என்னைத் தற்பு அறியானேலும் – ஆழ்வாராகிய தம்மை எம்பெருமான் உள்ளபடி யறிந்திலனென்கிற
இதன் கருத்து யாதெனில், இவர் குற்றங்களுக்குக் கொள்கலமாயிருப்பவர், இவிடத்தில் ஒருவகைக்குணமும் கிடையாது“ என்று
அறிந்து கொள்ள வேண்டியிருக்க அப்படியறிந்து கொண்டிலன் என்கிறார் நைச்யா நுஸநதாந நிஷ்டையினால்.

(எம்பெருமானை நாம் உள்ளபடி அறிகையாவது –ஒருவகைக் குற்றங்குறையுமற்ற குணநிதி என்று அறிவதாம்.
அப்பெருமான் நம்மை உள்ளபடி யறிகையாவது ‘ஒருவகைக்குணமுமற்ற தோஷநிதி‘ என்று அறிவதாம்.
அவனை நாம் உள்ளபடியறியப் பெற்றால் அவனிடத்தில் நமக்கு அன்பு கரைபுரளும்,
நம்மை அவன் உள்ளபடியறிந்து கொண்டால் நம்மிடத்தில் அவனுக்கு இகழ்ச்சியுண்டாகும்.)
இங்கு ஆழ்வார்தம்மிடத்தில் எம்பெருமானுக்கு இகழ்ச்சி பிறவாமல் விருப்பமே பெருகிச் செல்கின்றமைக்குக் காரணம்
இவருடைய ஞானபக்தி முதலிய குணங்களைக் கண்டே, அப்படியிருந்தும் ஆழ்வார் நைச்யாநுஸந்தான வுறைப்பினால்
‘என் ற்றங்குளைகளை எம்பெருமான் தெரிந்துகொள்ளாமையினால் மேல்விழுகிறான்‘ என்கிறார்.

தடங்கடலைக் கற்கொண்டு தூர்த்தது ஸ்ரீராமாவதாரத்தில்.

எற் கொண்ட எவ்வினையும் -எற் கொண்ட-வெவ்வினையும் -பாட பேதங்கள் –
வெவ்வினையும் மோனை இன்பத்துக்கு ஒக்கும் –

———————————————————————————–

எம்பெருமான் திருநாமத்தை யாதிருச்சிகமாக கேட்கப் பெற்ற பரமசிவன் விகாரம் அடைந்ததே வாசா மகோசரம்
என்றால் சாஷாத் கரிக்கப் பட்டவர்கள் படும் பாடு சொல்லக் கூடியதோ-

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78–

பதவுரை

காமன்–மன்மதனுடைய
உடல்–சரீரத்தை
கொண்ட–நீறாக்கின
தவத்தாற்கு–தபஸ்வியான பரம சிவனுக்கு
உமை–(மனைவியான) பார்வதி யானவள்
உணர்த்த–தெரிவிக்க,
அங்கு–அப்போதே
ஆர் அலங்கல் ஆனமை–மிகவும் அசைந்து போனமையை
ஆய்ந்தால்–ஆராய்ந்து பார்க்கில்,
வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள்முடியான தன் பெயர்கேட்டிருந்தே–வண்டுகள் ஒலிக்கப் பெற்ற பூமாலயை
நீண்ட திருவபிஷேகத்திலுடையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே
கண்டு வணங்கினார்க்கு–நேரே கண்டு வணங்குமவர்கட்கு
என் ஆம் கொல்–எப்படிப்பட்ட விகாரமுண்டாகுமோ (என்பது சொல்ல முடியாது)

திருவாய்மொழியில், (6-7-3) உண்ணுஞசோறு பருகு நீரில் மூன்றாம்பாட்டில்
“கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ“ என்றவிடத்து
ஈடு முப்பத்தாறாயிரப்படி திவ்யஸூக்திகள் உற்று நோக்கத்தக்கன, (அவற்றை இங்கு அநுவதிப்போம்.)
“(என்செய்யுங்கொலோ). சொல்லமாட்டாள், தவிரமாட்டாள், அழாடிதாழியமாட்டாள், எங்ஙனே படுகிறாளோ!.
நம்மையும் பிறரையும்விட்டு அவன் திருநாமங்களை யநுபவிக்கிற போதையழகு காணப்பெற்றோம்,
அவன்றன்னையே கண்டு அநுபவிக்கிற போதையழகு காணப்பெற்றிலோமே! அநுஸந்தாத வேளையிற்போலன்றிறே கண்டால்
பிறக்கும் விகாரங்கள் ‘காமனுடல்கொண்ட தவத்தாற்கு உமையுணர்த்த வண்டலம்புந் தாரலங்கள் நீண்முடியான்றன் பெயரே
கேட்டிருந்து அங்காரலங்கலானமையால் –கண்டு வணங்கினார்க்கு என்னாங்கொல்! என்றிறே யிருப்பது“.

பரமசிவனுக்குப் பார்வதி பகவந்நாமத்தை யுணர்த்தினவிதம் அவ்விடத்து அடையவளைந்தா னரும்பதவுரையிற் காணப்படுகின்றது. –
ஒருகால் ருத்ரன் த்யாநபரனாயிருக்கக்கண்ட பார்வதி யானவள் ‘எல்லாரும் உம்மை உபாஸநைபண்ணாநிற்க நீர் யாரை உபாஸிக்கின்றீர்?
உமக்கும் உபாஸ்ய விஷயம் ஒன்றுண்டோ? என்று கேட்டாளாம் இப்படி இவள் கேட்டதற்குப் பரமசிவன்
“ஸ்ரீமந்நாராயணனை உபாஸிக்கிறேன்“ என்று மறுமொழி கூறவேண்டி அத்திருநாமத்தை ஸ்மரித்தமாத்திரத்திலேயே
‘காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்‘ என்றும்
‘உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்தேனுடம்பெலாங் கண்ணநீர்சோர‘ என்றுஞ் சொல்லலாம்படி விகாரமடைந்தானாம்.

உமை உணர்த்த –‘நீர் யாரை உபாஸிக்கிறீர்? என்கிற கேள்வி வியாஜத்தாலே பகவந்நாமங்களைச்
சிவபிரானுக்குப் பார்வதி உணர்த்தினளென்க. இந்த ப்ரஸங்கத்தால் பகவந்நாமங்களை ஸ்மரிக்கப்பெற்ற சிவபிரான்
செங்கண்மால் நாமங்களைச் செவிக்கின்பமாகக் கேட்க விரும்பி அப்பார்வதியையே பாடச்சொல்ல,
அப்படியே அவள்பாட, தென்றலும் சிறுதுளியும் பாட்டாற்போலே இனிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது உள்குழைந்தானென்ப.

-என் செய்யுங்கோலோ –சொல்ல மாட்டாள் –தவிர மாட்டாள் –அழாது ஒழிய மாட்டாள் –எங்கனே படுகிறாளோ –
-நம்மையும் பிறரையும் விட்டு அவன் திரு நாமங்களை அனுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றோம்
-அவன் தன்னையே கண்டு அனுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றிலோமே
-அனுசந்தான வேளையில் போல் அன்று இறே கண்டால் பிறக்கும் விகாரங்கள் –
காமன் உடல்-கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த -வண்டலம்பும்-தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து
அங்கு-ஆர் அலங்கல் ஆனமையால் –ஆய்ந்தால் -மிகவும் அசைந்து போனமையை ஆராய்ந்து பார்த்தால் —
கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல்-
உண்மை உணர்த்த -நீர் யாரை உபாசிக்கிறீர் -என்ற கேள்வி வியாஜத்தாலே-பகவான் நாமங்களை சிவபெருமானுக்கு உணர்த்த
–ஸ்மரித்த மாத்திரத்திலே -கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்றும் உள்ளம் எல்லாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன்
உடம்பு எல்லாம் கண்ண நீர் சோர-என்றபடி உள் குழைந்தான்-
ஆர் அலங்கல் ஆனமை–அலங்கல் மாலைக்கும் அசைவுக்கும் பெயர் -பூ மாலை போலே துவண்டு விழுந்தான் என்கை
ஆனமையால் -ஆல்-என்பதை ஆய்ந்து என்பதுடன் கூட்டி ஆய்ந்தால் -என்ற படி

————————————————————————————————

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்
மெய்குந்த மாக விரும்புவரே தாமுந்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து-79-

பதவுரை

ஆதி–ஜகத் காரண பூதனான
பெருமானை–ஸர்வேச்வரனை
அன்பினால்–ப்ரேமத்துடன்
ஆய்ந்து கொண்டு–அநுஸந்தித்துக் கொண்டு
வாய்ந்த மனத்து–(தமது) பாங்கான நெஞ்சிலே
இருத்த வல்லார்கள் தாமும்–நிலை நிறுத்திக்கொள்ள சக்தரானவர்கள்
தம் வைகுந்தம்–தங்களுக்கென்று ஏற்பட்டுள்ள பரமபத்ததை
விரைந்து–சீக்கிரமாக
காண்பார்–காண விரும்பமுடையராய்
ஏய்ந்த–ஆத்மாவோடு செறிந்த
தம் மெய்–தங்களுடைய உடம்பை
குந்தம் ஆக–வியாதியாக
விரும்புவர்-எண்ணுவர்

தம்-மெய்குந்த மாக விரும்புவரே–தங்கள் உடம்பை வியாதியாக எண்ணுவர் –
ஆதிப்பெருமானை அன்பினால் ஆய்ந்து கொண்டு -தங்களுடைய வாய்ந்த மனத்திலே அவனை இருத்த வேணும் என்னும்
விருப்பம் யுடையவர்கள் -தங்களுக்கு என்று இருப்பட்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை பெற்ற போது பெறுகிறோம்
என்று ஆறி இருக்கை அன்றிக்கே -கூவிக் கொள்ளும் காலம் குறுகாதோ-என்று விரைந்தவராய்க் கொண்டு
-அதற்கு இடையூறாய் இருக்கிற இவ் உடல் என்று தொலையும் -என்று இருப்பார்கள் –
வடுக பாஷையில் –குந்தம் என்று வியாதிக்குப் பெயர் -என்பர் பூர்வர்கள் –

————————————————————————————————–

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

பதவுரை

உலகம்–சிறந்த பாகவதர்கள்
பரந்து–எங்குத் திரிந்து
பாடின–பாடின பாடல்களையும்
ஆடின–ஆடின ஆட்டங்களையும்
கேட்டு–கேட்டதனால்
படு நரகம் வாசல்–க்ரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த
கதவு–கதவுகள்
வீடின–விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின)
மேல் ஒருநாள்–முன்னொரு காலத்தில்
வெள்ளம் பரக்க–பிரளய வெள்ளம் பரவின போது
உலகம்–உலகங்களை யெல்லாம்
கரந்து–(திருவயிற்றில்) மறைத்து வைத்து
காத்து அளித்த-துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த
கண்ணன்–கண்ண பிரானை
விரைந்து அடைமின்–சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள்

– உலகம்-பரந்து—பாடின வாடின கேட்டு –சிறந்த பாகவதர்கள் எங்கும் திரிந்து பாடின பாட்டுக்களையும்
ஆடின ஆட்டங்களையும் கேட்டதனால் –
உலகம் உயர்ந்தோர் மாட்டே -சிறந்த பாகவதர்கள் -என்றபடி
படு நரகம்– வாசற் கதவு-வீடின–குரூரமான நரகங்கள் வாசல் கதவுகள் விட்டு ஒழிந்தன -நரகங்கள் புல் மூடிப்போனவே
ஆனபின்பு –
அறிவிலா மனுஷர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில் பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒலியும் அன்றே –
மேலொருநாள் வெள்ளம் பரக்க–முன்னொரு காலத்தில் பிரளய வெள்ளம் பரவின போது
உலகம் கரந்து காத்து அளித்த கண்ணன் -உலகங்களை எல்லாம் திரு வயிற்றிலே மறைத்து வைத்து
துன்பங்களைப் போக்கி ரஷித்த -கண்ணன் விரைந்து அடைமின் –

————————————————————————————————–

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81-

பதவுரை

நீ–(ஞானம் சக்தி முதலியவற்றால் குறைவற்றவனான) நீ
கற்ற மொழி ஆகி–நான் கற்ற சொற்களுக்குப் பொருளாக இருந்து கொண்டு
கலந்து–என்னோடு ஒரு நீராகக் கலந்து
நல் தமிழை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய இப்பிரபந்தத்தை
விதை ஆக வித்தி–(பக்தியாகிற பயிர்க்கு) விதையாக விதைத்து
என் உள்ளத்தை–எனது ஹ்ருதயத்தை
விளைத்தாய்–விளையும்படி க்ருஷி பண்ணினாய்
மனம்–மனமானது
கதவு என்றும்–எம்பெருமானை யடைவதற்குப் பிரதிபந்தகம் என்று (சில மையங்களில்) நினைத்தும்
(மனம்) காணல் ஆம் என்றும்–(மனமானது) எம்பெருமானைக் காண்பதற்கு உறுப்பாகும் என்று (சில சமயங்களில்) நினைத்தும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன்–(ஆக விப்படி ஒரு நிலை நில்லாமல் மாறி மாறி) பிரமிப்பதையே தொழிலாக வுடைத்தான நெஞ்சைத் தவிர்த்தேன்.

நீ -ஞானம் சக்திகளில் குறைவற்ற நீ
கற்ற மொழியாகிக் கலந்து -நான் கற்ற சொற்களுக்கு பொருளாக இருந்து கொண்டு -என்னோடு ஒரு நீராகக் கலந்து –
நற்றமிழை விதையாக வித்தி–இப்பிரபந்தத்தை பக்தியாகிய பயிருக்கு விதையாக விதைத்து
என்னுள்ளத்தை – விளைத்தாய்-என் இருதயத்தை விளையும் படி கிருஷி பண்ணினாய்
மனம் கதவு –என்றும் மனம் -காணலாம் என்றும்–மனமே எம்பெருமானை அடைய பிரதிபந்தகம் என்றும்-
-காண்பதற்கு உறுப்பாகும் என்றும் வெவேறு சமயங்களில் நினைத்து
குதையும் வினையாவி தீர்ந்தேன் -பிரமிப்பதையே தொழிலாகக் கொண்ட நெஞ்சைத் தவிர்ந்தேன் –
மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோஷயா -நெஞ்சினால் நினைக்க முடியாத ஞான சக்திகளை யுடையனான நீ
என் வாக்கில் வரும் சொற்களுக்கு பொருளாய் இருந்து கொண்டு என்னுடைய நெஞ்சம் ஆகிற நிலத்திலே
தமிழாகிற விதையை வித்தை பக்தியாகிற பயிர் செழித்து விளையும்படி செய்தாய் யாகையாலே
நிலைபெற்ற நெஞ்சுடையேன் ஆனேன் என்கிறார் –

சாஸ்த்ரங்களில் = மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ“ என்று சொல்லப்பட்டுள்ளது.
அதாவது – ஸம்ஸார பந்தங்களைப் பூண்கட்டிக் கொண்டு எம்பெருமானை மறந்தொழிவதற்கும் மனமே காரணம்,
வீண்பாசங்களை விட்டொழிந்து அப்பெருமானைக் கண்டுகளிக்கப் பெறுதற்கும் மனமே காரணம் என்கை.
இவ்விரண்டு வகையான ஸங்கதியும் ஸம்ஸாரிகளின் அநுபவத்தில் மாறி மாறி வந்துகொண்டேயிருக்கும்,
ஊழ்வினையின் கனத்தால் விஷய ப்ராவண்யம் மேலிடுகிற காலங்களில் மனமானது ஸம்ஸாரபந்தத்திற்குக் காரணம் என்று அறுதியிடப்பெறும்,
பகவத் பாகவத கடாக்ஷலேசத்தால் பகவத் விஷயத்தில் பற்று உண்டாகுங் காலங்களில் மனமானது மோக்ஷத்திற்குக் காரணம் என்று அறுதியிடப் பெறும்.
ஆகவே, இவ்விபூதியிலுள்ள நம்போல்வார்க்கு விஷயாந்தரப் பற்றும் நிலைத்திராது, பகவத் விஷயப் பற்றும் நிலைத்திராது,
இரண்டும் மாறிமாறி வந்துகொண்டே யிருக்குமாதலால் ஒரு மையத்தில் ‘மனம் பந்தஹேது‘ என்கிற உணர்ச்சியும்
பின்னுமோர் ஸமயத்தில் ‘மனம் மோக்ஷஹேது‘ என்கிற உணர்ச்சியுமாயிருக்கும்.
நம்மைப் போலன்றிக்கே ஆழ்வார் எப்போதும் எம்பெருமானையே அநுபவிக்கும்படியான உறைப்புப் பெற்றவராதலால்
‘மனம் பந்தஹேதுவோ மோக்ஷஹேதுவோ‘ என்கிற குழப்பம் இவர்க்கு நேர ப்ரஸக்தியில்லை,
‘மனம் மோக்ஷஹேதுதான்‘ என்கிற நிச்சய வுணர்ச்சியே இவர்க்குள்ளது, இதைத்தான் இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.

கதவுமனமென்றும் காணலாமென்றும் குதையும் வினையாவி தீர்ந்தேன் –ஒரு வாசலுக்குக் கதவு இருட்டிருந்தால்
உள்ளே புகுவதற்கு அது தடையாயிருக்குமாதலாலே கதவு என்கிற சொல் பிரதிபந்தகத்தைச் சொல்லுகிறது
இங்கு, மனம் (பகவத் ப்ராப்திக்குப்) பிரதிப்பந்தகமோ அல்லது (பகவானைக்) காண்கைக்கு உறுப்போ என்று
அலைபாய்வது தவிர்ந்தேன் என்றவாறு. அவர்ந்தமைக்குக் காரணங் கூறுவன பின்னடிகள்.

நெஞ்சினால் நினைக்கவும் முடியாத ஜ்ஞாநகக்திகளையுடையனான நீ என்னுடைய வாக்கில் வரும் சொற்களுக்குப் பொருளாயிருந்து
கொண்டு என்னுடைய நெஞ்சமாகிற நிலத்திலே தமிழாகிற விதையை விதைத்துப் பக்தியாகிற பயிர் செழித்து
விளையும்படி செய்தாயாகையாலே நிலை நின்ற நெஞ்சுடையேனாயினேன் என்றாராயிற்று.

—————————————————————————-

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –82-

பதவுரை

காம வேள் தாதை–மன்மதனுக்குத் தந்தையானவனும்
அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும்–மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன
வேந்து–தேவாதிதேவன்
என் உள்ளத்து–எனது நெஞ்சிலே
கலந்தான்–சேர்ந்து கொண்டான்
நான்முகனும்–பிரமனென்ன
என்ற இவர்கள்–என்கிற (சிறந்த) தேவர்களும்
விட்டு ஏத்த மாட்டாத–நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான
ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர்–இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை)

விட்டு ஏத்த மாட்டாத வேந்து –நன்றாக ஸ்துதிக்க மாட்டாத இந்திரனும் –
என் உள்ளத்தோடு நீராக கலந்து கொண்ட நன்மைக்கு ஈடுண்டோ –

நான் பெற்ற நன்மை வேறு யாரும் பெறமுடியாது, இதுவரையில் நான் பெற்ற நன்மைகளுள் இப்போது பெற்ற நன்மைக்கு
ஈடானதும் வேறொன்றில்லை, அரன் அயன் என்னும் படியான மேம்பட்ட தெய்வங்களாலும் துதித்துத் தலைக்கட்டப் போகாத
பெரும்புகழ் படைத்த பெருமான் என் உள்ளத்தோடு ஒரு நீராகக் கலந்து கொண்டானே! இஃது என்ன நன்மை! என வியக்கிறார்.

காமவேள் தாதை – மன்மதனுடைய அம்ஸமாகிய பிரத்யும்நனுக்கு கண்ணபிரான் தந்தையாதல் அறிக.
‘காமன்‘ என்பது வடசொல் ‘வேள்‘ என்பது தமிழ்ச் சொல், இரண்டையும் சேரப் பிரயோகித்த விடத்து
ஒரு சொல்லை விசேஷணமாகவும் மற்றொன்றை விசேஷ்யமாகவுங் கொள்ளலாம்,
ஆசையை விளைக்குமவனான மன்மதன் என்க
தாதை –தாத அலர்ந்த + அலர்கள், அலந்தலர்கள், தொகுத்தல், ‘என்றிவர்கள்‘ என்றிவிடத்து மிதுவே.

——————————————————————————————

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் 
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83–

பதவுரை

நேமியான்–திருவாழி யாழ்வானை யுடையவனும்
மால் வண்ணன்–வியாமோஹமே வடிவெடுத்தவனுமான எம்பெருமான்
சார்ந்தவர்க்கு–தன்னை யடைந்தவர்கள் விஷயத்தில்
வேந்தர் ஆய்–அரசர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
விண்ணவர் ஆய்–தேவர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
மாது ஆய்–தாய் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்
மற்று எல்லாம் ஆய்–மற்றுமுள்ள எல்லா வகை நன்மைகளையும் செய்பவனாய் (எவ்வளவு நன்மைகள் செய்தாலும்)
ஆற்றான்–ஆறுதல் இல்லாதவனாய்க் கொண்டு (திருப்தி பெறாதவனாய்)
விண் ஆகி–ஸ்வர்க்க போகத்தைக் கொடுக்குமவனாய்
தண்ணளி ஆய்–அருள் செய்பவனாய்
மாந்தர் ஆய்–மனிசர்களான உறவினர் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்
பின்னால்–இவ்வளவுக்கு மேலும்
தன் கொடுக்கும்–தன்னை (முற்றூட்டாகக் கொடுத்தருள்வன்
தான் செய்யும் பிதிர்–(இவை) எம்பெருமான் செய்யும் அதிசயங்களாம்

ஆஸ்ரிதர் விஷயத்தில் எம்பெருமான் செய்து அருளும் உபகார பரம்பரைகளையும்- எத்தனை செய்தாலும்
திருப்தி அடையாமல் அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன்
வேந்தராய்-விஷ்ணுவின் அம்சம் இன்றி அரசராய் இருக்க முடியாதே –
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் –திருவாய் -4-4-8-
விண்ணவராய்-வருணாதி தேவர்களையும் இருப்பவன்
விண்ணாகி-ஸ்வர்க்காதி அனுபவங்களை அளிப்பவனும் அவனே
தண்ணளி –கிருபை -அருள் சேதுபவனுமாய் -/ மால் வண்ணன்-வியாமோஹமே வடிவு எடுத்தவன்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய்–எல்லா நன்மைகளும் செய்யும் -உறவினர் -தாய் மற்றும் எல்லாருமாய்
பின்னால் தான் கொடுக்கும்-இவ்வளவுக்கும் மேலே தன்னை முற்றூட்டாகக் கொடுத்து அருள்வான் –
தான் செய்யும் பிதிர்-இவை எம்பெருமான் செய்யும் அதிசயங்கள் –

———————————————————————————————

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பதவுரை

அதிரும் கழல் கால–ஒலிக்கின்ற வீரக்கழலைத் திருவடிகளிலே அணிந்துள்ள
மன்னனை–ராஜாதிராஜனான
கண்ணனையே–கண்ண பிரானையே
நாளும்–எந்நாளும்
தொழ–தொழும் படியாக
காதல்–ஆசைப்படுவதையே
தொழில்–நித்ய கருமமாக
பூண்டேன்–ஏற்றுக் கொண்டிருக்கிற நான்
பிதிரும் மனம் இலேன்–(விஷயாந்தரங்களிற் புகுந்து) விகாரப்படும் நெஞ்சுடையேனல்லேன்
பிஞ்ஞகன் தன்னோடு எதிரவன்–(ஞானத்தில்) பரமசிவனோடு ஒத்திருப்பேன் (என்னலாமாயினும்)
அவன் எனக்கு நேரான்–அந்த ருத்ரன் (நித்ய தாஸனான) என்னோடு ஒவ்வான்.

பிதிரும் மனம் இலேன் -விஷயாந்தரங்களில் புகுந்து விகாரப்படும் நெஞ்சுடையேன் அல்லேன்
பிஞ்ஞகன் தன்னோடுஎதிர்வன்–ஞானத்தில் பரமசிவனொடு ஒத்து இருப்பான் -என்னலாமாயினும்
அவன் எனக்கு நேரான் –ஈஸ்வரோஹம் என்னும் -அந்த ருத்ரன் நித்ய தாசனான -என்னோடு ஒவ்வான்

சாஸ்த்ரங்களில் (சிவனிடத்திலிருந்து அறிவைப் பெற்றுக் கொள்க) என்று விதித்திருக்கையாலே
உலகுக்கெல்லாம் உணர்வையிளக்க வல்லனாம்படி மஹாஜ்ஞாநியாக ருத்ரன் ப்ரஸித்தி பெற்றிருப்பதனால்
அங்ஙனே மஹாஜ்ஞாதாவான ஆழ்வாரோடு அவனுக்கு ஒப்புச் சொல்ல ப்ரஸக்தியுண்டு, ப்ரஸக்தமான அது கழிகப்படுகிறது.
இரண்டாமடிமுதலாக. ருத்ரன் ஸ்தவகுணம் தலையெடுத்தபோது ‘எம்பெருமானே ரக்ஷகன்‘ என்றிருப்பதும்,
ரஜஸ்தமோகுணங்க்ள தலையெடுத்தபோது ‘நானே ஈச்வரன்‘ என்று மார்பு நெறித்திருப்பதுமா யிருக்கையாலே,
ஸர்வகாலத்திலும் பகவத் ப்ராவண்யமே யாத்ரையாயிருக்கு மிவர்க்கு ஒப்பாகமாட்டானென்க.

-அதிரும்-கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –ஒலிக்கும் வீரக் கழலை அணிந்துள்ள ராஜாதி ராஜனான கண்ணபிரானையே
எந்நாளும் தொழும் படியாக ஆசைப்படுவதையே நித்ய கர்மயமாக ஏற்றுக் கொண்டு இருக்கிற அடியேன் –

——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -61-72–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு -61-

பதவுரை

மதுசூதன் தன்னை–மதுவென்னும் அசுரனைக் கொன்றொழித்த பெருமானை
மனம் கேதம்–மன வருத்தங்கள்
சாரா–வந்து சேராவாம்
ஒன்றி நின்று–பொருந்தி நின்று
ஏழ் உலகை–ஸப்த லோகங்களிலும்
ஆணை ஒட்டினான்–(தன்னுடைய) செங்கோலைச் செலுத்துமவனான) எம்பெருமான்
இன்று–இப்போது
தனக்கே தஞ்சம் ஆ தான் கொள்ளில்–தனக்கே ரக்ஷகனென்று ஒருவன் கொண்டால்
சென்று–(நிர்ஹேதுகமாக என்னிடம்) வந்து
ஒன்றி நின்ற திரு–(என்னிடத்தில்) பொருந்தி நிற்பதாகிய செல்வமானது
எனக்கே தான்–என்னொருவனுக்கொழிய வேறொருவற்குமில்லை.

எம்பெருமான் நிர்ஹேதுக விஷயீ காரம் பெற்ற பாக்யம் தன்னத்தே என்கிறார் –
மதுவை அளித்த எம்பெருமானை மனசில் கொண்டால் துக்கம் வாராது –
அப்படி செய்ய வேண்டி இல்லாமல் தானே தம்மை விஷயீ கரித்தான் என்கிறார்-

நீர் மதுசூதனையே தஞ்சமாகக் கொண்டிருக்கிறீரோ? என்று சிலர் கேட்க, அப்பெருமானை நான் தஞ்சமாகக்
கொள்ளவேண்டும்படி அவன் எனக்கு ஒரு காரியம் வைக்கவில்லை அவன்றானே என்னெஞ்சில் வந்து குடிகொண்டான்,
இப்படிப்பட்ட பாக்கியம் எனக்கே அஸாதாரணமாக அமைந்தது என்றார் பின்னடிகளில்.

நின்று ஒன்றி நின்று உலகை ஏழ்–இன்று ஒன்றி நின்று உலகை –
சமஸ்த லோகத்தையும் விடாதே நின்று-தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்
தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –

மூன்றாமடியின் முதற்பதம் ‘நின்று‘ என்பதாகவே பலரும் ஓதுவர்கள், பல அச்சுப்பிரதிகளிற் பாடமுமிதுவே.
இஃது இடையில் மாறுபட்ட பாடமாகும். “இன்றொன்றி நின்றுலகை“ என்றே பூர்வவ்யாக்யான பாடம்
“ஸமஸ்த லோகத்தையும் விடாதே நின்று தன் ஆஜ்ஞை செல்லும்படி கடத்தினவன் தானேவந்து
அபிநிவிஷ்டனான ஸம்பத்து எனக்கேயுள்ளது, அது தானும் இன்று“ என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்.
மோனையின்பமும் பொருட்பொருத்தமும் இப்பாடத்திற்கே இணங்கும்.
பாசுரத்தை யெழுதும்போது அடிகளில் நிறுத்தாமல் மேலடியோடு ஸந்திசெய்தே யெழுதுகிற வழக்கப்படி
பழைய எட்டுப் பிரதிகளில் “எனக்கேதானின்றொன்றிநின்றுலகை“ என்றெழுதி யிருந்த்தன்பயனாக
“நின்றொன்றி நின்றுலகை“ என்றபாடம் நிகழ்ந்தது போலும்.

“ஏழுலகை ஒன்றிநின்று ஆணையோட்டினான் சென்று ஒன்றி நின்ற திரு இன்று எனக்கேதான்“ என்று அந்வயிப்பது.
எவ்வுலகத்தும் தன்னுடைய செங்கோலே செல்லும்படியாகத் தனியாக புரிகின்ற திருமால் தானே யெழுந்தருளிப் பொருந்தி
நெஞ்சிலே வாழும்படியான செல்வம் இன்று எனக்கே வாய்த்தது என்றவாறு.

—————————————————————————–

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62–

பதவுரை

திரு இருந்த மார்வன்–பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமார்வை யுடையனாய் (அதனாலே)
சிரீதரன் தன்–‘ஸ்ரீதரன்‘ என்று திருநாமம் பெற்றவானான எம்பெருமானுடைய
வண்டு உலவு தண் துழாய் தார் தன்னை–வண்டுகளுலாவப் பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை
சூடி–தலைக்கு அலங்காரமாக அணிந்து
தரித்து–அதனால் ஸத்தை பெற்று,
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்–‘பிராட்டி பொருந்தி யிருக்கப் பெற்ற வலப் பக்கத்தை யுடைய
வஸ்துவே பரதத்துவம்!‘ என்று துணிந்தறிய மாட்டாதவர்கள்.
கரு நின்ற–(தங்களைப் போலே) கர்ப்ப வாஸம் பண்ணிப் பிறக்கின்ற சிலரை
கல்லாக்கு உரைப்பர்–(பரதெய்வமாக) மூடர்களுக்கு உபதேசிப்பர்கள்.

திருமாலின் தேன் மிக்க திருத் துழாய் மாலையை அணிந்து கொள்ளப் பெற்றால் -ஸ்ரீ யபதியே சிறந்த தெய்வம் -என்று அறியலாகும் –
திருவிருந்த-மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடிப் பெறாமையாலே
திரு நின்ற பக்கம் திறவிது என்று -உணரப்பெற்றிலர்-என்ற கருத்தை உய்த்து உணர வேண்டும்
அபாங்க பூயாம் சோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்-பிராட்டி உடைய நிரம்பிய கடாக்ஷம் பட்ட வஸ்துவே பரப்ரஹ்மம் ஆனது -பட்டர் –
(பிராட்டியின் நிரம்பிய கடாக்ஷம் பட்ட வஸ்து பரப்ரஹ்மமாய் விட்டது என்பது இதன் கருத்து.)

கரு நின்ற -கரு நின்றவர்களை -கர்ப்பப் பையில் தாங்கிப் பிறப்பது இறப்பது -இப்படிப் பட்டவர்களை
பரதெய்வம் என்று கற்றார் இடம் சொன்னால் முகம் சிதறப் புடைப்பார்கள் ஆதலால் அன்னவர்கள் இடம்
வாய் திறவாமல் கல்லார்க்கு உரைப்பாராம் -கல்லார் -கல்வி பயிலாத மூடர் –

——————————————————————————————-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-

பதவுரை

தாராகணம்–நக்ஷத்ரகணங்களினுடைய
போர்–(சுபாசுப நிமித்தமான) ஸஞசாரத்தை
விரித்து உரைத்த–(ஜ்யோதிச்சாஸ்தர முகத்தாலே) விஸ்தாரமாக வெளியிட்டவனும்
வெம் நாகத்து உன்னை–(பிரதிகூலர்க்குத் தீக்ஷ்ணனுமான திருவனந் தாழ்வாரனுக்கு அந்தராத்மாவாகிய உன்னை
தெரித்து–அநுஸந்தித்தும்
எழுதி–எழுதியும்
வாசித்தும்–(எழுதினவற்றைப் படித்தும்)
கேட்டும்–(ஆங் காங்கு) ச்ரவணம் பண்ணியும்
வணங்கி–நமஸ்காரம்பண்ணியும்
வழிபட்டும்–உபசாரங்களைச் செய்தும்
பூசித்தும்–பூஜித்தும்
போது போக்கினேன்–காலத்தைக் கழத்துக் கொண்டிருக்கிறேன் (இப்படி செய்வது எதுக்காக வென்னில்)
தரித்திருந்தேன் ஆகவே–ஸத்தை பெறுவதற்காக.

தாரா கணப் போர்-நக்ஷத்ரங்களுடைய சுப அசுப நிமித்தமான சஞ்சாரத்தை
விரித்துரைத்த -ஜ்யோதிஸ் சாஸ்த்ர முகத்தால் வெளியிட்டு அருளினவனும்
வென்னாகத்துன்னை-பிரதிகூலருக்கு தீக்ஷணமான திருவனந்த ஆழ்வானுக்கு அந்தராத்மா ஆகிய உன்னை –
தெரித்து -அனுசந்தித்து –
எழுதி-வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்-பூசித்தும் போக்கினேன் போது–எதுக்கு என்னில்
தரித்து இருந்தேனாகவே–சத்தை பெறுவதற்காக -சாதன அனுஷ்டான ரூபமாக அல்ல –

தம்முடைய போதுபோக்கைப் பேசுகிறார். எம்பெருமானை அநுஸந்திக்கை, அவனது திருப்புகழைப் புத்தகமாக எழுதுகை,
அவற்றை வாசிக்கை, செவித்தினவுகெடச் சொல்லுவார் பக்கல் கேட்கை, வணங்குகை, தம்மாலியன்ற உபசாரங்களைப் பண்ணுகை,
அர்ச்சிக்கை முதலிய தொழில்களால் தம்முடைய போதுபோவதாக அருளிச் செய்தாராயிற்று.
இப்படி செய்வனவெல்லாம் ஸாதநாநுஷ்டாந ரூபமாக அல்ல,
ஆத்மா ஸத்தை பெறுவதற்காக ஸ்வயம் புருஷார்த்தமாய்ச் செய்வன என்பதை வெளியிடுகிறார் “தரித்திருந்தேனாகவே“ என்பதனால்.

(“தாராகணப்போர் விரித்துரைத்த வெந்நாகத்துன்னை“) இக்காலத்துப் புதிய ஆராய்ச்சிக்காரர் சிலர் வெளியிட்டுள்ள
‘ஆழ்வார்கள் காலநிலை‘ என்னுமோர் புத்தகத்தில் இப்பாசுரத்தை ஆராய்ச்சி செய்யப் புகுந்து.

“இதன் முதலிரண்ட்டிகட்கு –‘நக்ஷத்ரகதியாயிருக்கிற ஜ்யோதிஸ் –சாஸ்திரத்தைச்சொன்ன திருவனந்தாழ்வானுக்கு
ஆத்மா வாயிருக்கிற உன்னை‘ என்பது பூர்வவியாக்கியானம்.
இதன்படி ‘தாராகணப்போர் விரித்துரைத்த‘ என்ற விசேடணம் ஆதிசேடனுக்கு உரியதாகும்.
ஆனால் அவனை இவ்வாறு விசேடிப்பதற்குரிய நேரான பொருத்தமொன்றுங் காணப்படவில்லை.
ஆதிசேடன் செய்த சோதிடநூல் இன்னதென்பதுந் தெரிந்திலது.
அதனால், ‘வெந்நாகத்துன்னை‘ என்றுள்ள பாடம்
‘விரித்துரைத்த வென்னாகத்துன்னை‘ என்றிருந்த பழம் பாடத்தினின்றும் மாறியதோ என்று கருத இடந்தருகின்றது.
‘(சோதிட நூலை) விரித்துரைத்த (என்-ஆகத்து) எனது நெஞ்சிடமாகவுள்ள, உன்னை‘ என்பது இப்பாடப்படி பொருளாகும்-

இங்ஙனம் ‘தாராகணப்போர் விரித்துரைத்த‘ என்பது ஆழ்வார்க்குரிய விசேடணமாயின், தம்மாற் செய்யப்பெற்ற
சோதிடநூலொன்றைப்பற்றி அவர் குறிப்பிட்டனராவர். அத்தகைய நூல் யாது என்பது ஆராய்ந்து அறிதற்குரியது. என்று எழுதியுள்ளார்.

இதனாற் சொல்லிற்றாகிறதென்னென்னில், பகவத் கிருபையாலும் ஸதாசார்ய கடாக்ஷத்தாலும் ஆழ்வார்களருளிச் செயல்களின்
உண்மைப் பொருள்களை நன்குணர்ந்து அருளிச் செய்தவரும், இற்றைக்குச் சற்றேறக் குறையத் தொள்ளாயிரம் ஆண்டுகட்கு முன்பு
ஸர்வஜ்ஞராயப் புகழ்பெற்று விளங்கின வருமான பெரியவாச்சான் பிள்ளை பிழையான பாடமொன்றைக் கொண்டனரென்றும்,
அப்பாடப்படி உரைக்கும் பொருள் பொருத்தமற்றதென்றும் சொல்லிற்றாகிறது.
“வெம் நாகத்து“ என்பது பெரிய வாச்சான் பிள்ளை உரைசெய்தருளின பாடம்.
“என் ஆகத்து“ என்பது இப்புதிய புலவர் கற்பிக்கும் பாடம்.
பழைய பாடத்திற் பொருத்தமின்மை கூறப்புகுமவர் தாங்கூறும் பாடத்தில் ஒரு பொருத்தம்காட்டித் தீரவேண்டும்.
ஆதிசேஷன் செய்த சோதிட நூல் இன்னதென்று தெரியவில்லை யென்னுமிவர்
திருமழிசைப்பிரான் செய்த சோதிட நூல் இன்னதென்று தெரிந்து கொண்டவராதல்வேண்டும்.

“பார்க்கவம் பிருகு சூத்திர முதலிய கணித சோதிட கிரந்தங்கள் உள்ளன,
இவை போன்றதொன்றே பிருகு வமிசத்தவரான ஆழ்வார் அருளிச்செய்ததாக வேண்டும்.“ என்று அநுமானங் கூறுகின்றார்.
இத்தகைய அநுமானம் ஆதி சேஷன் பக்கல் கூடாமைக்குக் காரணமறிகின்றிலோம்.
வேதாங்கங்களுள் ஒன்றான ஜ்யோதிக்ஷத்திற்கு ஆதிசேஷன் ப்ரவர்த்தகன் என்னுமிடத்தை பல பிரமாணங்களினால், நன்கறிந்தே
பூருவர்கள் மிகப் பொருத்தமாக வியாக்கியானஞ் செய்தருளினர்.
இவ்விஷயமாகச் சில வாண்டுகட்கு முன்னர் நாம் பலவிடங்களிலும் பல பெரியோர்களை விசாரித்து வருகையில்,
மலை நாட்டில் திருவனந்தசயனத்தில் மலையாளிச் சோதிட நிபுணரொருவர் எடுத்துரைத்த ச்லோகம் மேற்குறித்தது.
புராதநமான சோதிடநூலொன்றின் வியாக்கியானத்தில் மங்களச்லோகமாக அமைந்ததாமிது.
இன்னமும் ஊன்றி ஆராயப்புகில் இத்தகைய ஆதாரங்கள் ஆகரத்துடன் பல கிடைக்கக் குறையில்லை. இது நிற்க.

திருமழிசைப்பிரான் பல மதங்களிலும் புகுந்து அந்தந்த மதங்கட்குச் சார்பாகப் பல நூல்களும் இயற்றினரென்னும்
ப்ரஸித்தியிருந்தாலும் சோதிட நூல் இயற்றியருளினராக எங்குங்கூறப்படவில்லை.
அங்ஙனே ஏதேனுமொருநூல் தாம் செய்தருளியிருந்தாலும் அதனை இங்கு அநுவதித்தருளிச் செய்தற்கு ப்ரஸக்தியொன்றுமில்லை.
இவ்வண்ண மருளிச்செய்யும் வழக்கம் ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களி லொன்றிலுமில்லை.
ஆகவே ‘என் ஆகத்து‘ என்று பாடத்தை மாறுபடுத்தல் பயனற்றது. ஸர்வஜ்ஞர்களான பூர்வாசார்யர்களின் வியாக்கியான ஸ்ரீஸூக்திகளில்
அல்பஜ்ஞரான நாம் குறைகூறுதற்குச் சிறிது மதிகாரமுடையோமல்லோம்.
பூருவர்கள் ப்ரமித்தார்களெனினும் அந்த ப்ரமமே நமக்கும் தஞ்சமகாத்தக்கது.

ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீமணவாளமாமுனிகள் வரையிலுள்ள ஸதாசார்யர்களின் ஸ்ரீஸூக்திகள் வேதவாக்கினுஞ் சிறந்து
பிரமாணமாவனவென்று திண்ணிதாகக் கொள்வாரது திருவடிகளே சரணம். பூருவர்களருளிச்செய்த பொருள் கட்கு முரண்படாமல்
விசேஷார்த்தங்களை விவேகித்துக்கூறின் குறையொன்றுமில்லை. இதுவே கலையறக்கற்ற மாந்தர்பணியாம்.

தாராகணப்போர் –‘தாராகணம்‘ என்னும் வடசொல் தொடர் நக்ஷத்ரஸமுஹமெனப் பொருள்படும்.
அவற்றின் ஸஞ்சாரத்தை ஜ்யோதிச் சாஸ்த்ரமுகத்தால் விரித்துரைத்தவரான திருவனந்தாழ்வானுக்கு அந்தாரத்மாவாயிருக்கிற வுன்னை.
வேதம், பஞ்சராத்ரம், இதிஹாஸ புராணம் முதலிய வேதோபப்ரும்ஹணங்கள் முதலானவற்றை, தன் முகமாகவும்
பிரமன் முகமாகவும் சில முனிவர்க்குத் தான் அந்தராத்மாவாயிருந்து அவர்கள் முகமாகவும் வெளியிட்டதுபோல்
ஆதிசேஷனுக்கு அந்தராத்மாவாயிருந்து ஜ்யோதிஸ் சாஸ்த்ரத்தை வெளியிட்டருளினன் என்னும் உண்மையை
வெளியிடுதலே இவ்விசேஷணத்திற்குப் பிரயோஜன மென்க.

நாகம் – வடசொல் திரிபு, ஸர்ப்பம் ‘வெம்‘ என்ற அடைமொழி இயற்கை பற்றியது.

———————————————————————————————–

தம் கால ஷேப க்ரமத்தை அருளிச் செய்தார் கீழ் இதில் பிறர் கால ஷேப க்ரமம் உபதேசிக்கிறார்
அவன் திருவடிகளில் புஷபங்களை பரிமாறி திரு நாமங்களை சொல்லி ஏத்தி இறைஞ்சுவதே வேண்டும் என்கிறார்

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

பதவுரை

பொன் மகரம் காதானை–அழகிய மகர குண்டலங்களைத் திருக்காதுகளில் அணிந்துள்ளவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பெருமானை–பெருமை பொருந்தியவனும்
நாதனை–(அனைவர்க்கும்) நாதனாயிருப்பனும்
நல்லானை–(ஆச்ரிதர் பக்கல்) வாத்ஸல்ய முடையவனும்
நாரணனை–நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும்
நம் ஏழ்பிறப்பு அறுக்கும் சொல்லானை–நம்முடைய ஜன்ம பரம்பரைகளை அறுக்க வல்ல திருநாமங்களை யுடையவனுமான ஸர்வேச்வரனைக் குறித்து
போது ஆன இட்டு இறைஞ்சி ஏத்துமின்–புஷ்பமென்று பேர் பெற்றவற்றை ஸமர்ப்பித்து வணங்கித் துதி செய்யுங்கள்
சொல்லுவதே–(அவனுடைய திருநாமங்களை வாயாரச்) சொல்லித் துதிப்பதே
சூது–நல்ல வாய்ப்பு

‘போதுகளை யிட்டிறைஞ்சி‘ என்னாமல் ‘போதான விட்டிறைஞ்சி‘ என்றதன் கருத்து யாதெனில்,
எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேணுமென்கிற சுத்தபாவத்துடனே கொள்ளுகிற புஷ்பம் எதுவாயினுங் குற்றமில்லை,
‘செண்பக மல்லிகைமொரு பூவாயிருக்கலாம் என்பதாம்.
பெரியவாச்சான் பிள்ளையும் இவ்விடத்து வியாக்கியானத்தில் – “இன்ன புஷ்பமென்று நியதியில்லை,
பூவானதை யெல்லாவற்றையுங்கொண்டு திருவடிகளிலே ஸமர்ப்பித்து வணங்கி ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்“ என்றருளிச்செய்தது காண்க.
இதனால், இன்ன பூ என்று நிர்ப்பந்த மில்லாமையால் பூவென்று பேர்பெற்றிருக்கு மத்தனையே வேண்டுமென்றதாயிற்று.

திருவாய்மொழியில் (1-6-1) “பரிவதிலீசனைப் பாடி விரிவது மேவலுறுவீர், பிரிவகையின்றி நன்னீர்தூய்ப் புரிவதுவும் மேவலுறுவீர்,
பிரிவகையின்றி நன்னீர்தூயப் புரிவதும் புகைபூவே“ என்ற பாசுரத்தை ஸ்ரீபட்டர் உபந்யஸிக்கும் போது
“புரிவதுவும் புகைபூவே“ என்ற சப்த ஸ்வாரஸ்யத்தைத் திருவுள்ளம்பற்றி
‘இவ்விடத்தில் அகில்புகையென்றாவது, கருமுகைப்பூ என்றாவது சிறப்பித்துச் சொல்லாமையாலே
ஏதேனும் ஒரு புகையும் ஏதேனுமொருபூவும் எம்பெருமானுக்கு அமையும், செதுயிட்டுப் புகைக்கலாம்,
கண்ட காலிப்பூவும் சூட்டலாம்‘ என்று உபந்யஸித்தருளினராம்,

அதை நஞ்சீயர் கேட்டு “ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத்“ (கண்டகாலிப்பூவை எம்பெருமானுக்குச் சாத்தலாகாது)
என்று சாஸ்த்ரம் மறுத்திருக்க, இப்படி அருளிச்செய்த ரஸோக்தி – ‘சாஸ்த்ரம் மறுத்தது மெய்தான், கண்டகாலிப்பூ
எம்பெருமானுக்கு ஆகாதென்று மறுக்கவில்லை, அடியார்கள் அப்பூவைப்பறித்தால் கையில் நிஷேதித்ததேயன்றி
எம்பெருமானுக்கு ஆகாத பூ எதுவுமில்லை, என்றாம். திருவாய்மொழிக்குப் பதினெண்ணாயிரமுரைத்த பரகால ஸ்வாமி
இந்த ஸம்வாதத்தைக் கொண்டு ரஸியாமல் திரஸ்கரித்துரைத்தது கிடக்க.

(பக்தி எல்லை கடந்தால் நூல்வரம்பில்லை) என்றதையும் அருளிச்செயல் தொடையழகையும் நோக்கி
ரஸப் பொருளுரைத்தவற்றில் குதர்க்கவாதஞ்செய்கை விவேகிகட்குப் பணியன்று.
பொன்மகரக் காதானை – மகரமென்றது மரக்குழைக்கு ஆகுபெயர்.
சுறாமீன் வடிவமாகச் செய்யப்படுவதோர் காதணி மகரகுண்டல மெனப்படும்.

நாதானை…. ‘நாதனை‘ என்பதன் நீட்டல். * செய்யுள் வேண்டுழி வந்த விகாரம்.

நம்மேழ்பிறப்பறுக்குஞ் சொல்லானை – ஒன்றின்பின் ஒன்றாக இடையறாது நிகழ்ந்து செல்கின்ற நமது ஜன்மங்களைப்
போக்கவல்ல திருநாமங்களையுடையவன் எம்பெருமான்.

‘ஏழ்பிறப்பு‘ என்பதற்குப் பலவகையாகப் பொருள்கூறுவதுண்டு.
கர்ப்பவாஸஞ் செய்யும் கஷ்டம், கர்ப்பத்தினின்று வெளிப்படுங் கஷ்டம், பல பிணிகளை யநுபவிக்குங் கஷ்டம்,
கிழத்தன மநுபவிக்குங்கஷ்டம், மரண வேதனைகள் படுங்கஷ்டம், மரணமடையுங் கஷ்டம்,
நரகயாதனைகளை யநுபவிக்குங் கஷ்டம் ஆகிய ஏழுவகைக் கஷ்டங்களுக்குக் காரணமாகிய பிறப்பு என்பர் சிலர்
1. “பெருங்களிற்று வட்டம், பெருமணல் வட்டம், ஏரியின் வட்டம் புகையின் வட்டம், இருளின் வட்டம் பெருங்கீழ் வட்டம்,
அரிபடை வட்டமென்றெழுவகை நரகம்“ என்னப்பட்ட ஏழு நரகங்களிலும் புகுவதற்கு ஏதுவான பிறப்பு என்பர் சிலர்.
‘ஏழு‘ என்றது உபலக்ஷணமாய்ப் பலவகைப் பிறப்புகளென்றபடி என்பர் சிலர்.
மற்றும் பல வகைகளுங் காண்க.
ஏழுவகைத் தோற்றத் தின்னாப்பிறப்பின்“ “ஏழுபிறப்பி லடியவரை யெழுதாப் பெரியபெருமானை“ (திருவரங்கக்கலம்பகம்)
என்றவையுங் காண்க. சூது – உற்றது.

——————————————————————————–

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

பதவுரை

மாது ஆய–அழகுதான் ஒரு வடிவகொண்டாற்போலே யிருப்பனும்
மாலவனை–(ஆச்ரிதர் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
மாதவனை–திருமாலைக் குறித்து
சொல் மாலை–இச்சொல் தொடைகளை (சொல்லி)
யாதானும் வல்ல ஆ சிந்தித்து இருப்பேற்கு–ஏதோ சக்தியுள்ள வளவு அநுஸந்தித்திருக்கிற எனக்கு
வைகுந்தத்து இடம் இல்லையோ சொல்லீர்–ஸ்ரீவைகுண்டத்தில் இடம் இல்லையோ?
சொல்லீர்–சொல்லுங்கள்
சூது ஆவது–இதுவே நமக்கு நல்லவாய்ப்பு என்று
என் நெஞ்சத்து எண்ணினேன்–என்மனத்தில் உறுதி கொண்டேன்.

எம்பெருமான் விஷயமாக இப்படிப்பட்ட சொல் மாலைகளை சிந்தித்து இருப்பதுவே நமக்கு உற்றது என்ற அத்யவசாயம் கொண்டேன் –
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் 9 -1 -7 –கண்டீர்கள் அந்தோ —-குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே —
மாதவனை சொல்மாலைகள் கொண்டு யாதேனும் வல்லவா சிந்தித்து இருக்கிற தமக்கே வைகுந்தம் உண்டு -மற்றையோர்க்கு இல்லை –
மாதாயா--மாது -அழகுக்குப் பெயர் -தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார்
தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே-
மாதா -தாய் போலே அளிப்பவன் என்றுமாம் -/ மாலவனை-மாயவனை -பாட பேதம் –

———————————————————————————————

கீழே -யாதானும்-வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து-இல்லையோ சொல்லீர் இடம்–என்றதுமே எம்பருமான்
நம் இருப்பிடத்தை இவர் ஆசைப்படுவது என் -இவர் நெஞ்சு அன்றோ நமக்கு உத்தேச்யம் -என்று
இவர் திரு உள்ளத்தே புகுந்து அருள -அத்தை அருளிச் செய்கிறார் –

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட்செய்யேன் வலம்–66–

பதவுரை

பண்டு–என்னைத் திருத்திப் பணி கொள்வதற்கு முன்பு
படம் நாக அணை நெடிய மாற்கு–படங்களை யுடைய சேஷ சயனத்தில் பள்ளி கொண்டருள்பவனாயிருந்த ஸர்வேஸ்வரனுக்கு
இன்று–இப்போது முதலாக
எல்லாம்–மேலுள்ள காலமெல்லாம்
இடம் ஆவது–வாஸ ஸ்தானமாவது
என் நெஞ்சம்–எனது நெஞ்சமாகும்
மதி சூடி தன்னோடு–பிறைச் சந்திரனத் தலையிலே சூடியிருக்கிற ருத்ரனையும்
அயனை–பிரமனையும்
திடம் ஆக–பரம் பொருளாக
வையேன்–மனத்திற்கொள்ள மாட்டேன்
வையேன் நான்–(தத்துவமின்னதென்று கண்டறியத்தக்க) ஸூக்ஷ்ம புத்தியுடையேனான நான்
ஆள் செய்யேன்–(அந்த தேவதாந்தரங்களுக்குத்) தொண்டு செய்யவும் மாட்டேன்
(இப்படி நான் சொல்லுவதற்குக் காரணமென்னவெனில்)
வலம்–(திருமாலின் பரிக்ஹமாயிருக்கப் பெற்ற) மிடுக்கேயாம்.

இதற்கு முன்னே சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -சகல வித கைங்கர்யங்களுக்கும் உரிய திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி
இன்று முதலாக மேலுள்ள காலம் எல்லாம் எனது நெஞ்சையே தனக்கு இடமாக அமைத்துக் கொண்டான் ஆயிற்று –
இப்படி அவன் தானே வந்து விரும்பப் பெற்ற பாக்யத்தால் -அடியேன் நளிர் மதிச் சடையனாவது நான் முகக் கடவுளையோ
நெஞ்சில் கொள்ளவோ வாங்கவோ இனி பிராப்தி எது -எம்பெருமானை அண்டை கொண்ட மிடுக்கு எனக்கே அன்றோ

திடமாக வையேன்-பரம் பொருளாக மனத்தில் கொள்ள மாட்டேன் / வையேன் நான் ஆள் செய்யேன் –-பரதத்வம் இன்னது என்று
கண்டு அறியத்தக்க ஸூஷ்ம புத்தி யுடையேனான நான் அந்த தேவதாந்தரங்களுக்கு தொண்டு செய்யவும் மாட்டேன் —வை -கூர்மை -என்றவாறு –
இப்படி சொல்வதற்கு காரணம் – வலம் -திருமாலின் பரிக்ரஹமாய் இருக்கப் பெற்ற மிடுக்கே யாம் –

மதிசூடி –தக்ஷமுனிவனது சாபத்தால் க்ஷயமடைபவனாய்க் கலைகுறைந்து வந்து சரணடந்த சந்திரனை முடியின்மீது
கொண்டு வரமளித்துப் பாதுகாத்தமையால் சிவன் மதிசூடியாயினன்.

இப்பாட்டில் ‘வையேன்‘ என்பது இரண்டிடத்து வந்துள்ளது, ஒன்று எதிர்மறை வினைமுற்று,
மற்றொன்று உடன்பாட்டு வினையாலணையம் பெயர்
வை-கூர்மை, கூர்மை தங்கிய மதியுடையேன் என்றவாறு.
தேவதாந்தரப் பற்றையொழித்து ஸ்ரீமந்நாராயணனையே பரதெய்வமாகக் கடைப்பிடித்த தமது மதியைத் தாம் சிறப்பித்துக் கூறுதல் ஏற்குமென்க.

ஆட்செய்யேன் வலம் –ஆட்செய்யேன், வலஞ்செய்யேன் என்று யோஜித்து, (அவர்களைப்) பிரதக்ஷிணம் செய்யமாட்டேன் என்றுரைக்கவுமாம்.

————————————————————————————-

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச்
சீரணனை ஏத்தும் திறம்-67–

பதவுரை

நாரணைனை–ஸ்ரீமந் நாராயணனாய்
நாபதியை–(என்னுடைய) நாவுக்கு ப்ரவர்த்தகனாய்
ஞானம் பெருமானை–அறிவிற்பெயரியவனாய்
வைகல் நலம் ஆக ஏத்தும் திறம்–எப்போதும் நன்றாகத் துதி செய்கையாகிற இந்த
வலம் ஆக–நன்மை தருவதாகிலுமாகுக
சீர்அணனை–நற் குணங்களை பொருந்தி யிருக்கப் பெற்றவனான ஸர்வேச்வரனை
மாட்டாமை தான் ஆக–நன்மை தர மாட்டாதாகிலுமாகுக,
குலம் ஆக–நற் குலத்தைத் தருவதாகிலுமாகுக
குற்றம் தான் ஆக–கெடுதலை யுண்டாக்குவதாகிலுமாகுக (எத்துவதை நான் தவிரமாட்டேன்)

எம்பெருமானை ஸ்துதிப்பதே நன்மை -நல் குலம் தரும் என்று நான் விஸ்வஸித்து இருக்கிறேன் -இதற்கு விபரீதமாக
கெடுதலை விளைத்தலும் ஆனாலும் -எம்பெருமானை எத்தகையே உத்தேச்யம் –
வலமாக -குலமாக-அன்றிக்கே மாட்டாமை தானாக -இருந்தாலும்
ஸ்வயம் புருஷார்த்தமாக எம்பெருமானை ஸ்துதிப்பேன் -என்கிறார் –
குலம் தரும் செல்வம் தந்திடும் –வலம் தரும் மற்றும் தந்திடும் –நாராயணா என்னும் நாமம் —

—————————————————————————————

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-

பதவுரை

நமனும்–யமனும்
தன் தூதுவரை–தனது சேவகர்களை
கூவி–அழைத்து
செவிக்கு–(அவர்களுடைய) காதில் (என்ன சொன்னானென்றால்)
திருவடி தன்–ஸர்வேச்வரனுடைய
நாமம்–திருநாமத்தை
மறந்தும்–மறந்தொழிந்தாலும்
புறம் தொழாமாந்தர்–தேவதாந்தர பஜநம் பண்ணாத மனிசர்களைக் (கண்டால்)
திறம்பேல் மின் கண்டீர்–(ஓ சேவகர்களே!) (இப்போது நான் உங்களுக்கு இடும் ஆணையைத்) தவறவேண்டா
இறைஞ்சி–வணங்கி
சாதுவர் ஆய் போதுமின்கள் என்றான்–(கொடுமை தவிர்ந்து) ஸாதுக்களாய் வர்த்திக்களாய் வர்த்திக்க கடவீர்கள் என்று சொன்னான்.

யமனுடைய தூதர்கள் பாசங்களைக் கையிற்கொண்டு தங்கள் கடமையைச் செலுத்தப் புறப்படும்போது
யமன் அத்தூதர்களை யழைத்து, ரஹஸ்யங்கள் சொல்லுமாபோலே காதோடே ஒரு வார்த்தை சொன்னான்,
அஃதென்னென்னில், ‘ஓ தூதர்களே! நீங்கள் பாகவதர்களிடத்தில் சிறிதும் அதிகாரஞ் செலுத்த வேண்டா,
அவர்களருகில் நீங்கள் செல்லவே கூடாது, ஒருகால் அவர்கள் நேர்பட்டால் வணங்கி வலஞ்செய்து
பரம ஸாத்விகர்களாய் விலகுங்கோள்‘ என்றானாம். இதனால் பாகவதர்கட்கு யமபய ப்ரஸக்தியே யில்லையென்றதாம்.

ஸ்வ புருஷ மபீ வீஷ்யே பாச ஹஸ்தம் வததி யம-கில தஸ்ய கர்ண மூல –பரிஹர மது ஸூதன ப்ரபந்நான்
பிரபுரஹம் அந்நிய ந்ரூணாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –3 -7 -14 –

அவன் தமர் எவ்வினையாராகிலும் எம் கோன் அவன் தமர் என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால் ஆராயப்பட்டு
அறியார் கண்டீர் -அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் -பொய்கையார் –

கெடுமிடராய வெல்லாம் கேசவா என்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்–நம்மாழ்வார்

மூவுலகு யுண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் -நாவலிட்டுழி தருகின்றோம்
நமன் தமர் தலைகள் மீதே -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்

ஏத்தியுன் சேவடி எண்ணி இருப்பாரைப் பார்த்திருந்து அங்கு நமன் தமர் பற்றாமல் சோத்தம் நாம் அஞ்சுதம் என்று
தொடாமை நீ காத்தி போய்க் கண்ண புரத்துறை யம்மானே-திரு மங்கை ஆழ்வார் –

திறம்பேல்மின் கண்டீர் -ஞாபகப் பிசகினால் அந்த தூதர்கள் அதிகாரம் செலுத்தினால் அனர்த்தம் விளையும்
திருவடி தன் நாமம்-மறந்தும் புறம் தொழா மாந்தரை –திருவடி -அடி -அடிகள் –ஸ்வாமிக்கு வாசகம் –
தேவதாந்த்ர பற்று இல்லாமையே முக்கியம் -அந்நிய சேஷத்வம் ஒழிவதே பிரதானம் -தேவர்களுக்கு சேஷமான
புரோடாசத்தை நாய்க்கு இடுமா போலே ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை சம்சாரிகளுக்கு சேஷமாக்குகை –
மாந்தரை-பாட பேதம் -தப்பாகும் வெண்டளை பிறழும்
ராஜ மஹிஷியிடம் காதல் கொள்ளாதே என்பதை ரகசியமாக சொல்லுவது போலே இங்கும்
காதில் சொல்ல வேணும் -பிறர் அறிந்தால் பொல்லாது ஆகுமே –

முமுக்ஷுப்படியில் உகாரார்த்தம் விவரிக்குமிடத்து “அந்யசேஷத்வம் கழிகையே ப்ரதாநம், தேவர்களுக்கு சேஷமான புரோடாசத்தை
நாய்க்கிடுமாபோலே ஈச்வரசேஷமான ஆத்ம வஸ்துவை ஸம்ஸாரிகளுக்கு சேஷமாக்குகை.
பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிகையே ப்ரதாநம், ‘மறந்தும் புற்தொழா மாந்தர்‘ என்கையாலே“ என்றருளிச் செய்த
ஸ்ரீஸூக்திகள் இங்குக் குறிக் கொள்ளத் தக்கன.

————————————————————————–

கீழே எம்பெருமான் திருநாம பாவானத்வம் அருளிச் செய்து இதில் அதன் போக்யத்தை அருளிச் செய்கிறார் –
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானைக் கேளாச் செவிகள் செவியல்ல கேட்டோம் –பெரிய திரு -11 -7 -2 –

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69-

பதவுரை

செவிக்கு இன்பம் ஆவதுவும்–கர்ணாமிருதமாயிருப்பதும்
செம் கண்மால் நாமம்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே
புவிக்கு–பூமியிலுள்ள ரெல்லார்க்கும்
புவியும் அதுவே–(நிழல்பெற ஒதுங்குவதற்கு) இடமாவதும் அத் திருநாமமே
கவிக்கு நிறை பொருள் ஆய் நின்றானே–பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருக்குமெம் பெருமானை
நேர் பட்டேன்–தெய்வாதீனமாக அடையப் பெற்றேன்,
பார்க்கில்–ஆராய்ந்து பார்த்தால்
மறை பொருளும் அத்தனையே தான்–வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே.

புவிக்கும் புவி யதுவே கண்டீர் -பூமியில் உள்ளவர்க்கு எல்லாம் நிழல் ஒதுங்க இடம் ஆவதும் புண்டரீகாக்ஷன் திரு நாமமே –
கவிக்கும்-நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன்–எம்பெருமானை யாதிருச்சிகமாகக் கிட்டப் பெற்றேன்
-நான் கிருஷி பண்ணி பெற்றேன் அல்லேன் -விதி வாய்த்தது
வேதார்த்த ரகஸ்ய சாரார்த்தமும் இதுவே
கவிக்கும்-நிறை பொருளாய் நின்றானை –மற்றவர்களை பாட நினைத்தால் சொற்களையும் பொருள்களையும் திருட வேண்டும் –
-இவனே ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் -அன்றோ –

——————————————————————————————–

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

பதவுரை

தான் ஒருவன் ஆகி–(விஷ்ணுவாகிய) தான் ஒப்பற்ற ஸர்வேச்வரனாயிருந்து
சென்று–(மஹாபலியி னிடத்தில் யாசகனாய்ச்) சென்று
ஆங்கு–அந்த மாவலியின் யாக பூமியிலே
இரு நிலத்தை–விசாலமான இந்நிலத்தை
அடிப்படுத்த–திருவடியினளவாக ஆக்கிக் கொண்ட (அளந்து கொண்ட)
சேய்–சிறு பிள்ளையானவன்
ஏன் ஒருவன் ஆய்–விலக்ஷண வராஹ ரூபியாய்
தரணி–பூமியை
இடந்து அடுத்து–(அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித்தெடுத்து
எயிற்றில்–(தனது) கோரைப் பல்லின்மீது
தாங்கியது–தரித்தமையை
யான் ஒருவன்–நானொருவன் மாத்திரம்
இன்றா–இன்றாக
அறிகின்றேன் அல்லேன்–அறிகிறேனில்லை. (நெடுநாளாகவே அனைவருமறிவர்)
லோக பிரசித்தம் அன்றோ –

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து–தான் ஒருவனாகி—ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும்–
தான் ஒருவனாகி—இரு நிலத்தைச்-சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்–மூன்று இடங்களிலும் அன்வயம் –
யானொருவன்- வறிகின்றேன் அல்லேன் –உலகம் எல்லாம் அறியும் -அன்றோ –

————————————————————————————————-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

பதவுரை

சிறியன்–(ஸ்ரீகிருஷ்ணனென்கிற) சிறு பிள்ளையாய்க் கொண்டு
அணியன்–ஸுலபனாயும்
மிக பெரியன்–(அந்நிலையிலேயே) மிகவும் பெரியவனாய்க் கொண்டு
சேயன்–எட்டாதவனாயும் (இவ்விரண்டு படிகளுக்கும் உதாரணமாக)
ஆயன் ஆய் நின்ற–இடைப்பிள்ளையாய்ப் பிறந்த சிறுமையை யுடையனாயும்
துவரை கோன் ஆய் நின்ற–த்வாரகாபுரிக்குத் தலைவனாய் நின்ற பெரு மேன்மையை யுடையவனாயு மிருந்த
மாயன்–எம்பெருமான்
அன்று–(பாரத யுத்தம் நடந்த) அக் காலத்தில்
ஓதிய–(திருத் தேர்த் தட்டில் அர்ஜுநனைக் குறித்து) அருளிச் செய்த
வாக்கு அதனை–(சரம ச்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை
கல்லார்–அதிகரிக்கப் பெறாதவர்கள்
மெய் ஞானம் இல்–தத்துவ வுணர்ச்சி யற்ற
ஏதிலர் ஆம்–பகவத் விரோதிகளாவர்.

துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று-ஓதிய வாக்கதனை கல்லார்–சரம ஸ்லோகத்தையும்-அதன்-பொருளையும்
-அறியப் பெறாதவர்கள் -தத்வ ஞானம் பெறாதவர்கள் –

பாரதயுத்தத்து முதனாட்போரில் “உற்றாரையெல்லாம்“ என்றெண்ணி, ஸவதர்மத்தில் அதர்மபுத்தியால் போர்புரியேனென்று
காண்டீவம் கைநெகிழத் தேர்த்தட்டின் மீதேதிகைத்து நின்ற அர்ஜுநனுக்கு ஸ்ரீகிருஷ்ணன் தத்வோபதேசஞ் செய்து
அவனது கலக்கத்தைப்போக்க உபதேசித்ததாதலால் கீதை சிறந்தது. அதில் முதலிலே அர்ஜுநனுக்கு சேஹாத்ம விவேகத்தைப் போதித்து
அதன் மூலமாக கர்மயோகம் புருஷோத்தமவித்யை அவதார ரஹஸ்ய்ஜ்ஞானம் முதலியவற்றை உபதேசிக்க,
அர்ஜுநன் அந்த எம்பெருமான் உபதேசித்த உபாய விசேஷங்களைக்கட்டு அவை செயற்கரியனவென்றும்
ஸ்வரூப விரோதிகளென்றும் வுயாயாங்களீலும் மேபட்ட பிரபத்தியுபாயத்தை யுபதேசிப்பத்து
(நீ என்னையே சரணமாகப் பற்றினால் நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிப்பேன், கலங்கவேண்டா) என்று
அவனது கலக்கத்தைப் போக்கினது சரமச்லோகத்தினாலென்க

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத் தொரு மூர்த்தி –
-உபநிஷத் சாரம் -இதுவே -இத்தை அறியாதவர் -மெய்ஞ்ஞானம் இல்ல்லாத ஏதிலாராம்
சம்பந்தம் இல்லாதவர் -பகைவர் என்றபடி -த்விஷத-என்றபடி –

‘ஏதலர்‘ என்றாலும் ‘ஏதிலர்‘ என்றாலும் பகைவர், ஏது இலர் – யாதொரு ஸம்பந்தமுமில்லாதவர் என்கை.
ஆகவே பகைவரைக் குறிக்கும். பகவத்கீதையில் (16-19) ச்லோகத்தில் ‘த்விஷத‘ என்று அப்பெருமான்றனே சொன்னதைத்
திருவுள்ளம்பற்றி இங்கு ‘எதிலராம்‘ என்றனரென்னலாம்

இப்பாட்டில் சேயன் என்பது மிகப் பெரியன் என்பதோடு அந்வயிக்கும்,
அணியன் என்பது சிறியன் என்பதோடு அந்வயிக்கும்,
எம்பெருமான் எளியனாயு மிருப்பன் அரியனாயு மிருப்பன் என்றவாறு.

சேயன்–மிகப் பெரியன் –அணியன் -சிறியன்–அரியனாயும் எளியனாயும் இருப்பான் என்றவாறு –

———————————————————————————-

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

பதவுரை

(முக்திமார்க்கம் தெரியாமல் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களுக்கு)
இல்லறம் என்னும் சொல்லும்–க்ருஹஸ்த தர்மமாக சாஸ்த்ரஜித்தமான கர்ம யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனன்றிக்கே,
துறவறம் என்னும் சொல்லும்–ஜ்ஞாந யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனுமன்றிக்கே
அல்லன அறம் என்னும் சொல்–(பக்தி யோகம் தேச வாஸம் திருநாம ஸங்கீர்த்தனம் முதலான) மற்ற உபாயங்கள்
தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
நல் அறம் ஆவனவும்–நல்ல தருமங்களாகிய திருநாம ஸங்கீர்த்தநாதிகளும்
நால் வேதம் மா தவமும்–நான்கு வேதங்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்களுமெல்லாம்
நாரணனே ஆவது–ஸ்ரீமந்நாராயணனுடைய அநுக்ரஹத்தாலே பயனளிப்பனவாகின்றன.
ஈது–இவ்வுண்மையை
அன்று என்பார் அது–மறுப்பாருண்டோ? (இவ்வுலகம் அனைராலும் அங்கீகரிக்கத் தக்கது.

‘இல்லறம் என்னும் சொல்லும் சொல் அல்ல. இல்லேல் துறவறம் என்னும் சொல்லும் சொல் அல்ல,
இல்லேல் அல்லன அறம் என்னும் சொல்லும் சொல் அல்ல‘ என்று இங்ஙனே மூன்று வாக்யார்த்தமாக முன்னடிகளை அந்வயித்துக்கொள்க.
‘அல்லன்வும்‘ என்றவிடத்துள்ள உம்மை இரண்டாமடியின் முதலிலுள்ள ‘சொல்‘ என்ற சொல்லோடு கூட்டிக்கொள்ளப்பட்டது.
கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகம் ஒன்றும் தஞ்சமல்ல என்பன முன்னடிகள். எந்த யோகமும் எம்பெருமானடியாகவே
பயன் தருவனவாதலால் ஸாக்ஷாத்தாக அவனையே உபாயமாகக் கொள்ளுதல் சிறக்கும் என்பன பின்னடிகள்.

இல்லறம் என்னும் சொல்லும் சொல் அல்ல –க்ருஹஸ்தனாயிருந்துகொண்டு அநுஷ்டிக்கவுரிய தருமங்களாகிய யஜ்ஞதாநதப,
ப்ரப்ருதிகளான கர்மயோகம் இங்கு இல்லற மெனப்படுகிறது. “ஸ்ர்வதர்மாந் பரித்யஜய“ இத்யாதி சரமச்லோகாதிகாரிக்குக்
கர்மயோக விதாயகங்களான சாஸ்த்ரங்கள் தஞ்சமல்ல என்கை.

இல்லேல் துறவறம் என்னுஞ் சொல்லும் சொல்லல்ல – ‘துறவறம்‘ என்று ஸந்ந்யாஸத்தைச் சொல்வது ப்ரஸித்தம்,
கீதையில் ஸந்ந்யாஸ சப்தத்தால் ஜ்ஞாநயோகத்தை வ்யவஹரிப்பது காண்க.
(ஐந்தாவது அத்யாயத்தில் ஒன்று, இரண்டு, ஆறு முதலிய ச்லோகங்களிற் காணலாம்)
கர்மத்தைவிட பற்ற வேண்டியதான ஞானயோகம் ஸந்ந்யாஸமென்றும் தறவறமென்றும் பெயர் பெற்றதாகும் என்றதுணர்க.
சரமச்லோகதிகாரிக்கு இந்த ஜ்ஞாநயோக விதாயக சாஸ்த்ரங்களும் தஞ்சமல்ல என்கை.

அல்லன அறம் என்னும் சொல்லும் சொல் அல்ல – கீழ்ச்சொன்ன கர்மயோக ஜ்ஞாநயோகங்களையொழிந்த பக்தியோகமும்,
அவதாரரஹஸ்யஜ்ஞாநம் புருஷோத்தம வித்யை தேசவாஸம் திருநாமஸங்கீர்த்தநம் திருவிளக்கெரிக்கை திருமாலையெடுக்கை முதலான
(உபாயபுத்தியோடு செய்யும) வையும் இங்கு ‘அல்லன அறம்‘ என்றதனால் கொள்ளத்தக்கன.
ஆக இவை யொன்றும் தஞ்சமல்ல என்கையாலே எம்பெருமானையே உபாயமாக வரிப்பதாகிற ப்ரபத்தி யோகமே தஞ்சமென்னுமிடம் பெறப்பட்டதாகும்.
ஆளவந்தார் ஸ்தோத்ர ஸூக்தி இதற்குச் சார்பாக இங்கு அநுஸந்தேயம்.
(வரதராஜஸ்தவம் – 93) ஆழ்வான் ஸ்ரீஸூக்தி அநுந்தேயம். எந்த யோகத்தைப் பற்றினாலும் முடிவில் அந்நதந்த யோகங்களினால்
திருவுற்றமுவக்கும் எம்பெருமானே பலன் பெறுவிக்கவல்லவன் ஆதலால் அவனது திருவருளையே தஞ்சமாகக் கொள்ளுதல் ஏற்குமென்றவாறு.

ஈது அன்று என்பாரார்? – இவ்வர்த்தம் ஸகல சாஸ்த்ரங்களிலும் பொதிந்து கிடக்கையாலே இது ஸர்வஸம்மதமாகவற்று என்கை.

முத்தி மார்க்கம் தெரியாமல் சம்சாரத்தில் உழலும் ஆத்மாக்களுக்கு
இல்லறம் -என்னும்-சொல்லறம்--க்ருஹஸ்த விஹித தரமமாக -கர்மா யோகம் தஞ்சம் என்று சாஸ்திரம் சொல்வதும்
சொல் அல்ல -பிரமாணம் அல்ல
இல்லேல் துறவறம் இல் என்னும் சொல்லும் -அன்றிக்கே ஞான யோகம் தஞ்சம் என்று சொல்லும் பிரமாணங்களை
சொல் அல்ல -பிரமாணம் அல்ல -ஞான யோகம் சன்யாசம் என்றும் துறவறம் எண்டும் சொல்லக் கடவது இ றே –
இல்லேல் அல்லற அறம் என்னும் சொல்லும் -பக்தி யோகம் -தேச வாசம் திரு நாம சங்கீர்த்தனம்
-இவை உபாயங்கள் தஞ்சம் என்று சொல்லும் பிரமாணங்களும்
சொல் அல்ல -பிரமாணம் அல்ல –
-நல்லறம் ஆவனவும் -நல்ல தர்மங்களான திரு நாம சங்கீர்த்தநாதிகளும்
நால் வேத மாத்தவமும் –நான்கு வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்கள் எல்லாம் –
நாரணனே-ஆவது-ஸ்ரீ மன் நாராயணன் உடைய அனுக்ரஹத்தாலே பயன் அளிப்பன ஆகின்றன –
ஈதன்று என்பார் ஆர்-இவ்வுண்மையை மறுப்பார் யுண்டோ -அனைவராலும் அங்கீகரிக்கத் தக்கதே –
எந்த யோகத்தைப் பற்றினாலும் -முடிவில் அந்த அந்த யோகங்களினால் திரு உள்ளம் உகக்கும்
எம்பெருமானே பலன் பெறுவிக்க வல்லவன் -என்பதால் -அவன் திருவருளையே தஞ்சமாக கொள்ளுதல் ஏற்கும்
-இவ்வர்த்தம் சகல சாஸ்த்ர சித்தம்-சர்வ சம்மதம் -என்பதை –ஈதன்று என்பார் ஆர்–என்கிறார்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -49-60–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்
பீறக்கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று —49-

பதவுரை

மலை–மந்தர பர்வதத்தை
ஆமை மேல் வைத்து–கூர்ம ரூபியான தன் மேல் வைத்து
வாசுகியை–வாஸுகி நாகத்தை
சுற்றி–(கடை கயிறாகச்) சுற்றி
அலையாமல்–நீர் வெளியில் புரளாமல்
பீற–(அமுதம்) புறப்படும்படியாக
கடைந்த–(கடலைக்) கடைந்தருளின
பெருமான்–எம்பெருமானுடைய
ஆமை–கூர்ம ரூபியாகத் திருவவதரித்த தானே
ஒரு கை பற்றி–(மலையினுச்சியை) ஒருகையாலே பிடித்தமுக்கி
திருநாமம்–திருநாமங்களை
கூறுவதே–வாய்விட்டுச் சொல்லுவதே
யாவர்க்கும்–அனைவர்க்கும்
கூற்று–வாய்ப் பேச்சாகக் கடவது

கீழே வானவரைக்காப்பான் மலை -என்றார் -அப்படி ரஷித்த ஒரு சேஷ்டிதத்தை அருளிச் செய்கிறார்
தலையாமைதான் ஒரு கை பற்றி -ஆமையான தான் இரு கை தலைப் பற்றி -என்றபடி
மேலே கொந்தளியாத படி மந்திரத்தின் உச்சியை ஒரு கையால் அமுக்கின படி –
இப்படி பரோபகாரமே போது போக்கானவன் திரு நாமங்களை வாயாராகி கூறுவதே வாய் பெற்ற பிரயோஜனம் –

துர்வாஸ மாமுனிவர் தேவேந்திரனுக்கு அன்புடன் அளித்திட்ட பூமாலையை அவன் அலக்ஷியஞ் செய்ததுகண்டு
‘இப்படி செல்வச்செருக்குற்ற உன்னுடைய செல்வமெல்லாம் கடலில் ஒளிந்து போகக்கடவன‘ என்று சபிக்கவே,
அப்படியே போய்விட, அசுரர் வந்து பொருது அமரை வென்றுவிட்டனர். பிறகு தேவர்களெல்லாரும் திரண்டுவந்து
எம்பெருமானைச் சரணமடைய, திருமால் திருவருள்கூர்ந்து கடல்கடைந்து அமுதமளித்து வாழ்வித்தனன் என்பது பிரஸித்தம்.

அப்போது மந்தரமலையை பூட்டிக் கடைந்தனன். மந்தாகிய மந்தரமலை கடவிலுள்ளே அழுந்தி விட,
தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமை வடிவமெடுத்து அம்மலையின்கீழே சென்று
அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்திவிடாமற் கடைதற்கு உபயோகமாம்படி
அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தனன் என்பத்தும் அறியத்தக்கது.

“தலையாமை தானொருகைபற்றி“ என்ற இரண்டாமடியை ‘ஆமை (யான) தான் ஒருகை தலைபற்றி‘ என்று அந்வயித்து உரைப்ப.
முதலில் கடல் கடையும்போது வாஸுகியின் வாலைப்பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக்கொண்ட
அசுரர்களும் ஆகிய இருதிறத்தாரும் அதனை வலியப் பிடித்திழுத்துக்கடைய வல்லமையில்லாதவராய்நிற்க,
அது நோக்கி அத்திருமால் தான் ஒரு திருமேனியைத்தரித்துத் தேவர்கள் பக்கத்திலும் வேறொரு திருமேனியைத் தரித்து
அசுரர் பக்கத்திலும் நின்று கடைந்தருளினமை கூறப்படுகின்றதென்க.
மேலே கொந்தளியாதபடி மலையினுச்சியை ஒரு கையா லமுக்கினபடியைக் கூறுகின்ற தென்றலுமாம்.

ஆக விப்படி பரோபகாரமே போது போக்கான பெருமானுடைய திருநாமங்களை வாயாரக் கூறுவதே
வாய் படைத்த பலனாகுமென்றாராயிற்று.

————————————————————————

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

பதவுரை

கடல்–திருப்பாற் கடலிலே
கிடக்கும்–(பிரமன் முதலியோர்க்கு ஆச்ரயணீயனாய்க் கொண்டு) திருக்கண் வளர்ந்தருள்கிற
மாயன்–ஆச்சரியபூதனாய்
ஆறு கரை–திருக் காவேரிக் கரையான கபிஸ்தலத்திலே
கிடக்கும்–திருக்கண் வளர்ந்தருள்கிற
கண்ணன்–எம்பெருமானுடைய
உரை–ஸ்ரீஸூக்தியாகிய சரமச்லோகம்
எனக்கு–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
கிடக்கும்–பதிந்திருக்கின்றது
(ஆனபின்பு)
கூற்றமும் சாரா–மிருத்யு பயம் அணுகாமலும்
கொடு வினையும் சாரா–கொடிய பாவங்கள் அணுகாமலும்
தீ மாற்றமும் சாரா வகை–கெட்ட விஷயங்களொன்றும் அணுகாமலுமிருக்கத் தக்க உபாயத்தை
அறிந்தேன்–அறிந்தவனானேன்.

திரு கபிஸ்தலம் பள்ளி கொண்ட பெருமாளை மங்களா சாசனம் அருளிச் செய்கிறார்
காணியும் இல்லமும் கைப்பொருளும் ஈன்றோரும் பேணிய வாழ்க்கையும் பேர் உறவும் -சேணில் புவித்தலத்து இன்பமும்
-பொங்கு அரவம் ஏறிக் கவித்தலத்தில் கண் துயில்வோன் கால் –பிள்ளை பெருமாள் ஐயங்கார் -நூற்று எட்டு திருப்பதி அந்தாதி
இந்த ஆற்றம் கரைக் கிடக்கும் கண்ணன் அருளிச் செய்த சரம ஸ்லோகமே நெஞ்சில் பதிந்து இருப்பதால் ஒரு வகைக் கெடுதலும் வராதே –

“ஆற்றங்கரை கிடக்குங்கண்ணன்“ என்று திருக்காவேரியின் கரையிலுள்ள கபிஸ்தல மென்னுந் திருப்பதியிற்
பள்ளி கொண்ட திருக்கோலமான எம்பெருமானை மங்களாசாஸநஞ் செய்வதாகப் பூர்வாசாரியர்கள் அருளிச்செய்வர்.
அத்திருப்பதிக்குப் பாடலான பாசுரம் நாலாயிரத் திவ்யப்ரபந்தங்களுள் இஃதொன்றேயாம்.
இப்பாசுரத்தில் கபிஸ்தலமென்கிற திருநாமம் ஸ்பஷ்டமாக இல்லையாயினும் ஆழ்வார் திருவுள்ளக் கருத்தைக் கண்டறிந்து கூறும்
பேராற்றலுடைய ஸ்ரீமந்நாதமுனிகள் ஆளவந்தார். எம்பெருமானார் பட்டர் முதலான ஆசாரியர்கள்
இது திருக்கவித்தலத்தை நோக்கின பாசுரமேயாகுமென்று நிர்வஹித்து வந்தார்களென்பது பெரியவாச்சான் பிள்ளைக்கு
முற்பட்டவரான பிள்ளைப் பெருமாளையங்காராலும் தமது நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காணியு மில்லமுங் கைப்பொருளுமீன்றோரும், பேணிய வாழ்க்கையும் பேருறவும் –
சேணிற், புவித்தலத்திலின்பமும் பொங்கரவமேறிக், கவித்தலத்திற்கண்டுயில்வோன் கால்“ என்கிற செய்யுள் அவ்வந்தாதியிலுள்ளது. *
பதின்மருரைத்த பதியொரு நூற்றெட்டுக் துதிசெய்யப் பிறந்த அவ்வந்தாதியில் கவிஸ்தல விஷயமான இப்பாசுரம் சேர்ந்துள்ளதனால்
“ஆற்றங்கரை கிடக்குங் கண்ணன்“ என்கிற இத்திருமழிசைப்பிரான் பாடல்கொண்டே அது கூறினர் என்பது விளங்கிற்றாம்.

பிரமன் முதலிய தேவர்களுக்கு ஆச்ரயணீயனாய்க் கொண்டு திருப்பாற்கடலில திருக்கண் வளர்ந்தருள்பவனே
திருக் கவித்தலத்தில் ஸந்நிதிபண்ணியிரா நின்றான், இப்பெருமானே பண்டொருகால் பாரதப்போரில் தேர்த்தட்டில் நின்று
அர்ஜுநனை வியாஜஸமாகக் கொண்டு அனைவர்க்கும் உஜ்ஜீவநமாக சரமச்லோகத்தை யருளிச்செய்தன்,
அந்த திவ்யஸூக்தி எனது நெஞ்சிற்பதிந்திருப்பதனால் இனி நான் ஒருவகையான கெடுதலையும் அடையவழியில்லை என்றாராயிற்று.

கண்ணபிரான் சரமச்லோகத்தில் நியமித்தபடியே ஸர்வ தர்மபரித்யாக பூர்வகமாய்ச் சரணாகதி பண்ணினவர் பக்கலில்
‘ஸர்வபா பேப்யா மோக்ஷயிஷ்யாமி‘ என்கிற தன்னுடைய பிரதிஜ்ஞை தவறமாட்டாதவனாகையாலும்,
அப்படியே நான் நிவ்ருத்தி தர்ம நிஷ்டனாயிருப்பதாலும் இனி ஒரு பாபமும் என்ன யணுக ப்ராப்தியில்லை யென்றாவது.

———————————————————————————————–

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

பதவுரை

புனம்–தன்னிலத்திலே வளர்கிற
காயா–காயாம்பூவினுடைய
வண்ணனே–நிறம் போன்ற நிறமுடைய பெருமானே!
எனக்கு–(உன்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்ர பூதனான) எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்? (எவருமில்லை)
எம்பெருமான்–ஸர்வேச்வரனாகிய நீயும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தனக்குத் தானே ஒப்பாயிருப்பவனே யன்றி
மற்று–எனக்கு ஒப்பாக வல்லையோ?
உன்னை பிறர் அறியார்–நான் தவிர வேறொருவரும் உன்னை யறிய மாட்டார்கள்,
என் மதிக்கு–(உன்னை நன்றாக அறிந்திருக்கிற) என்னுடைய புத்திக்கு
விண் எல்லாம் விலை உண்டோ–மேலுலக மெல்லாம் கூடினாலும் ஒப்பாகப் போருமோ?

நிர்ஹேதுக கடாக்ஷ பூதனான எனக்கு ஒப்பார் உண்டோ -நீ அருளிச் செய்த மயர்வற மதி நலத்துக்கும் ஒப்பு உண்டோ –
சரம ஸ்லோகத்தின் படியே புறம்புள்ள உபாயங்களை ருசி வாசனைகளோடே விட்டு ஒழிந்து  உன்னையே பற்றி
நிர்ப்பரனாயும் நிர்ப்பயனாயும் உள்ளேனே
அநந்ய உபாயத்வ அத்யவசாயம் உடைய எனக்கு –ஸ்வ பிரயத்தனம் கொண்டு உன்னை
அடையப் பார்ர்க்கும் உலகோர் ஒப்பில்லை
சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டையில் நிற்கும் எனக்கு சேஷித்வ ரக்ஷகத்தில் நிற்கும் நீயும் ஒப்பில்லை
அடிமைச் சுவடு அசாதாரணம் என்றவாறு
உன்னையே சகல புருஷார்த்தமாக கொண்டு உன் வடிவு அழகிலே ஈடுபட்ட
நீ அருளிய மயர்வற மதி நலம் பெற்ற நான் விலஷணன் அன்றோ -என்றவாறு –

எம்பெருமானும் ‘நானே ஸர்வரக்ஷகன்‘ என்றிருப்பதனால் அவனைப்போன்ற ரக்ஷகன் வேறொருவனு மில்லாமையால்
ரக்ஷகத்வத்தில் தனக்குத் தானே ஒப்பாகுமவனேயன்றி, சேஷத்வபாரதந்திரிய காஷ்டையில் நிற்குமெனக்கு ஒப்பாவானல்லன்.
சேஷியாயிருக்குந் தன்மையிற்காட்டிலும் சேஷபூதனா யிருக்குந்தன்மை சிறந்ததாதலால் அப்படிப்பட்ட அடிமைச்சுவடு எனக்கே
அஸாதாரணமாயிருப்பதால் எம்பெருமானிலும் நான் மேற்பட்டவன் என்றவாறு. இப்படி எம்பெருமானது அடிமையிலீடுபட்டு
தன் மூலமான செருக்கைக் கொள்ளுதல் அடிக்கழஞ்சு பெறுதலால்தான் “எனக்கினியார் நிகர் நீணிலத்தே“ என்றும்
“எனக்காரும் நிகரில்லையே“ என்றும் மற்றையோரு மருளிச்செய்வது.
இவ்வஹங்காரம் ஹேயமன்று, உபாதேயமாம். ஸாத்விகாஹங்காரமெனப்படும்.

தனக்குரிய நிலத்தில் தோன்றி காயாம்பூவின் நிறம்போன்றழகிய நிறங்கொண்ட பெருமானே!
நான் தவிர உன்னை உள்ளபடியறிவாரார்? எல்லாரும் உன்னைக்கொண்டு வேறு புருஷார்த்தங்களை
ஸாதித்துக் கொள்ளப் பார்ப்பவர்களேயன்றி உன்னையே ஸகல புருஷார்த்தமுமாகக்கொள்வாராருமில்லையே,
உனது வடிவழகிலீடுபடுவாருமில்லையே, உலகத்தாருடைய புத்தியைப் போன்றதோ என்னுடைய புத்தி?
மேலுலகத்திலுள்ளார்க்கும் அரிதான புத்தியன்றோ என்னுடையது இப்படி விலக்ஷணமான புத்தியைப் பெற்ற
நான் ஒப்பற்றவன் என்னத் தட்டுண்டோ?

இந்நிலத்திலுள்ளவர்கள் உன்னையே பரமபிரயோஜநமாகக் கொள்ளாமல் அற்ப்பலன்களை நச்சி
அவற்றுக்கு உபாயமாக உன்னைப்பற்றுமவர்களாகையாலே இவர்கள் உன்னுடைய உபேயத்வாகாரத்தை அறிந்திலர்
அங்குள்ள நித்யஸூரிகளோவென்னில் பலன் கைபுகுந்தவர்களாகையாலே உன்னுடைய உபேயத்வாகாரத்தை அறிந்தவர்களேயன்றி
உபாயத்வாகாரத்தைச் சிறிது மறிந்தவர்களல்லர்,
நானோவென்னில், உன்னையே பரமபுருஷார்த்தமாகக் கொண்டவனாகையாலும் உன்னுடைய உபாயோபேய
த்வாகாரங்களிரண்டையும் நன்கறிந்தவனாகிறேன்,
ஆகையாலே எனக்கு உபயவிபூதியிலும் நிகரில்லை – என்றது நன்கு பொருந்தும்.

——————————————————————————————–

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்
விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர்–52-

பதவுரை

தக்கோர்–அறிவு முதலியவற்றால் பெருமை பெருந்தியவராகத் தங்களை அபிமானித்திருக்கும் நீசர்கள்
விலைக்கு ஆள்படுவர்–ஜீவனத்திற்காகப் பிறர்க்கு அடிமைப் பட்டிருப்பர்கள்
விசாதி ஏற்று உண்பர்–(மிகுதி தானங்கள் வாங்கும் முகத்தால் பிறருடைய) வியாதிகளைத் தாம் வாங்கி அநுபவிப்பர்கள்
தலைக்கு ஆள்பலி திரிவர்–ஒருவன் தலைக்காகத் தம் தலைமை அறுப்பதாகச் சொல்லி நரபலியாகத் திரிவர்கள்
முலைக்கால்விடம் உண்ட வேந்தனையே–(பூதனையின்) முலையிடத் துண்டான விஷத்தை உட்கொண்ட பெருமானையே
வேறுஆ எத்தாதார்–விலக்ஷணமாகத் துதிக்கமாட்டாதவர்களாய்
கல்லாதவர்–அறிவு கெட்டவர்களாய்க் கொண்டு
கடம் உண்டார்–பாபங்களை யநுபவிப்பவர்களாயிரா நின்றார்கள்.

இவ்வுலகத்தோர் படியை விரித்து அருளிச் செய்கிறார்
பரம நீசர்கள் என்பதை -தக்கோர் -என்று இழிவு சிறப்பு -ஷேப யுக்தி -மஹா வியாபர்களாக நினைத்து இருக்கும் சம்சாரிகள்
-விலைக்காட்படுவர்-திருமந்திரத்தின் பொருளுக்கு எதிர்த்தடையாக வயிற்று பிழைப்புக்கு பிறர்க்கு அடிமை பட்டு
-காசுக்கும் கூறைக்கும் கற்றை நெல்லுக்கும் தங்களை விற்று இருப்பர்
விசாதி ஏற்று உண்பர்-தங்கள் வியாதி நோய் மட்டும் இன்றி பிறர் நோய் வியாதி தீர எருமைக்கடா தானம் செய்ய
அத்தை நாலு நாள் ஜீவனத்துக்கு என்று வேறே ஏற்பார்கள் -அவ்வழியால் அவர்கள் வியாதியையும் அனுபவிப்பார்கள் –
தலைக்காட் பலி திரிவர் –பிழைத்தால் பிரஜை தலை அறுத்துக் கொடுப்பதாக ஷூத்ர தேவதைகளுக்கு பிரார்த்தித்து
அப்படியே அறுத்துக் கொடுத்து ஒழிவர்-
அபிராப்த விஷயங்களில் சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்-ப்ராப்த விஷய
ப்ரவணனுக்குச் சொல்ல வேண்டா இறே -ஸ்ரீ வசன பூஷணம்
இதற்கு மா முனிகள் -கொடுத்த கதை உண்டே –
அதாவது – ஒரு தாஸியினிடத்தில் ஒருவன் மிக்க அன்புடையவனாயிருக்கையில் அவளுக்குக் கடுமையான நோய்
தலையை அரிந்து தருகிறேன்‘ என்று ஒரு தேவதைக்குப் பிரார்த்தனை பண்ணிக்கொண்டு பின்பு
அப்படியே தன் தலைமை அறுத்துக் கொடுத்த கதை உண்டே –

முலைக் கால்–முலை வழியே
முலைக்கால் விடமுண்ட வரலாறு. –ஸ்ரீகிருஷ்ணனைப்பெற்ற தாயான தேவகியினது உடன் பிறந்தவனாய்
அக் கண்ண புத்திரன் ஒளித்து வளர்கின்றான்பதை யறிந்து அக் குழந்தையை நாடி யுணர்ந்து கொல்லும் பொருட்டுப்
பல அசுரர்களையேவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே
திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணசிசுவை யெடுத்துத் தனது விஷந்தடவினமுலையை
உண்ணக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப்
பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவள் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி
விழுந்து இறங்கும்படி செய்தனன் என்பதாம். இப்படிப்பட்ட விரோதி நிரஸநசீலனான எம்பெருமானை விலக்ஷணமாக
ஸ்துதி செய்ய மாட்டாத அறிவு கேடர்கள் பாப்பலன்களை அநுபவிப்பதற்கென்றே ஜன்மமெடுத்தவர்க ளென்றவாறு.

விடமுண்ட வேந்தனையே வேறாக -மற்றப் பேர் ஸ்துதிப்பதில் காட்டிலும் விலக்ஷணமாக
-வேறாக -பாட பேகம் ஒவ்வாது -தளை கெடுவதால் –

——————————————————————————————

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53-

பதவுரை

கல்லாதவர் இலங்கை–அறிவு கெட்ட ராக்ஷஸருடையதான இலங்கா புரியை
கட்டு அழித்த–அரணழித்த
காகுத்தன் அல்லால்–இராமபிரானை யல்லது
ஒரு தெய்வம்–வேறொரு தெய்வத்தை
யான் இலேன்–நான் தெய்வமாகக் கொள்வேனல்லேன்
பொல்லாத தேவரை–கண் கொண்டு காணக் கூடாத தேவதைகளையும்
தேவர் அல்லாரை–(உண்மையில்) தெய்வத் தன்மை யற்றவர்களாயும்
திரு இல்லா தேவரை–பிராட்டியின் ஸம்பந்த மல்லாமலே தேவரென்று பேர் சுமப்பவர்களாயும் வுள்ள சிலரை
தேவு–தெய்வங்களாக
தேறேல்மின்–நீங்கள் நினைக்க வேண்டா.

கல்லாதவர் இலங்கை
இலங்கையிலிருந்த அரக்கர்களனைவரும் தங்களுடைய கெட்ட நடத்தைகளினாலேயே தமது அறிவின்மையை
வெளிப்படுத்திக் கொண்டவர்களாதலால் “கல்லாதவரிலங்கை“ என்றார்.
கற்றுணர்ந்த மஹாநுபாவன் ஒருவன் (விபீஷணாழ்வான்) இருந்தானே யென்னில், அவனை யடித்துத்துரத்தினார்களிறே

பொல்லாத-தேவரைத் -அமங்களுக்கு கொள்கலம் –ச்மாசானமே இருப்பிடம் –எலும்பு மாலை -விருபாக்ஷன் –
கண் கொண்டு காணக்-அமங்களங்களை ஸஹித்துக் கொண்டாலும் ஸ்வ தந்திரமாக
கார்யம் செல்ல வல்லமை இல்லாதவர்கள் அன்றோ

திரு இல்லாத்-தேவரைத் தேறேல்மின் தேவு—ஸ்ரீ யபதித்தவம் இல்லாதவர்கள் -இவர்களைத் தெய்வங்களாக நினைக்க வேண்டாம்
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் -பேணிலும் வரம் தர மிடுக்கிலாத தேவரை -ஆணம் என்று
அடைந்து வாழும் மாதர்கள் -எம்மாதி பால் -பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்க கிற்றிரே –திருச் சந்த விருத்தம்

———————————————————————————

தேவராய் நிற்கும் அத்தேவும் அத்தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

பதவுரை

தேவர் ஆய் நிற்கும் அத்தேவும்–(அக்நி இந்திரன் முதலிய) தேவதைகளாய்க் கொண்டு நிற்கிற தெய்வமும்,
முது புணர்ப்பும்–அநாதியான நிலைமையும்
யாவர் ஆய் நிற்கின்றது எல்லாம்– மற்றும் மனிதர் முதலியனவாய்க்கொண்டு நிற்கிற ஸகல பதார்த்தங்களும் (ஆகிய எல்லாம்)
அத் தேவரில்–அந்த தேவர்களுக்குள்ளே
மூவர் ஆய் நிற்கும்–த்ரிமூர்த்தியாய் நிற்பதாகிற
நெடுமால் என்று ஓராதார்–ஸர்வேச்வர ப்ரகாரமே என்று ஆராய்ந் துணர மாட்டாதவர்கள்
கற்கின்றது எல்லாம் கடை–பேசும் பேச்செல்லாம் உபயோகமற்றது.

சகல தெய்வங்களும் சகல பதார்த்தங்களும் எம்பெருமானுக்கு சேஷ பூதம் என்று
அறிய மாட்டாதார்கள் எவ்வளுவு கற்றாலும் பயன் இல்லையே
தேவராய் நிற்கும் அத்தேவும் -நெடுமால் —
அத்தேவரில்-மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் நெடுமால்
–யவராய்-நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்று அறியவாருடைய கல்வியே பயன் பெற்றதாம்
அனைத்துக்கும் அந்தர்யாமி அவன் அன்றோ -த்ரி மூர்த்தி அவதாரம் எடுத்ததும் திருமாலே
இப்படி பிரித்து பிரித்து சொல்லுவான் என் –சர்வம் அவனே என்ற
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் நிலையே கற்று உணர்ந்தார் நிலை என்றவாறு –

———————————————————————————————

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-

பதவுரை

அமரர் கடை நின்று–(இவ்வுலகத்தவர்கள்) தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும்-நெடுங்காலம் வரையில்
கழல் தொழுது–(அவர்களுடைய) காலில் விழுந்து (பரம புருஷார்த்தம் பெற மாட்டாமல்)
இடை நின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்
குடை நின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ் வுலகத்தைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே!
நின் அடியை–உனது திருவடிகளை
ஓத வல்லாரவர் ஆர்–அநுஸந்திக்க வல்லார் ஆரேனுமுண்டோ? (யாருமில்லையே!)

தேவதாந்தர பஜனம் செய்து அல்ப அஸ்திர பயன்களை பெற்று போவார் மலிந்து உன்னை உணர்ந்து
ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்பார் இல்லையே என்று வருந்தி அருளிச் செய்கிறார் –
அமரர் கடை -மனை வாசல் -நின்று கழல் தொழுகிறார்கள் –
கடை நின்ற அமரர் -தாழ்ந்த தெய்வங்கள் என்றுமாம் –
இடை நின்ற இன்பத்தராவார் -அல்ப அஸ்திரத்தவாதி -இன்பம் என்றது பிரமித்தவர்களின் கருத்தால்
இடை -சம்சார ஸூகமும் இன்றி –நிரதிசய மோக்ஷ ஸூகமும் இன்றிக்கே
ஸ்வர்க்க ஸூ கத்தை யுடையவர் -என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.

——————————————————————————–

அற்ப பலன்களைத் தருமவர்களான ருத்ரன் முதலியோர் தங்களைப் பற்றினவர்களுக்கு ஒரு ஆபத்து வந்தால்
அப்போது முதுகு காட்டி ஓடுமவர்களேயன்றி நிலைநின்று ரக்ஷிக்கவல்ல திறமையரல்லர்
என்று முதலித்துக் காட்டுகிறார்.

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு-56

பதவுரை

அவர் இவர் என்று இல்லை–பெரியார் சிறியார் என்று ஒருவாசி யில்லை
அனங்கவேள் தாதைக்கு–காமனுக்குத் தந்தையான் கண்ண பிரானுக்கு
எவரும்–ஒருவரும்
எதிர் இல்லை கண்டீர்–எதிர் நிற்க வல்லாரில்லை காண்மின்
உவரிக் கடல் நஞ்சம் உண்டான்–கடலில் தோன்றின விஷத்தை உட் கொண்டவனான சிவன்
வாணற்கு–பாணாஸுரனுக்கு
கடன் என்று–‘உன்னை ரக்ஷிக்க நான் கடமைப் பட்டவன்‘ என்று சொல்லி
உடன் நின்று–அவனோடு கூடவே யிருந்து
ஒருங்கு தோற்றான்– குடும்பத்தோடே தோற்று ஓடிப்போனான்.

அல்ப பலன் தருமவர்களே ஆகிலும் ரக்ஷிக்க வல்லவர்கள் இல்லை என்பதை பாணாஸூர விருத்தாந்தத்தால் காட்டி அருளுகிறார்
அவர் இவர் என்று இல்லை -உயர்ந்தவர்கள் – தாழ்ந்தவர்கள் என்றவாறு
தாழ்ந்தவர்களான நம்போலியர் எம்பெருமானுக்கு எப்படி எதிராக முடியாதோ, அப்படியே,
உயர்ந்தவர்களென்று கருதப்படுகின்ற ருத்ராதிகளும் எம்பெருமானுக்கு எதிராக முடியாததென்றுணர்த்தியவாறு.

அநங்க வேள் தாதை -மன்மதன் -ப்ரத்யும்னனுக்கு ஜனகன் –
கண்ணபிரான் மன்மதனுடைய அம்சமாகிய ப்ரத்யும்நனுக்கு ஜநகனாதல் அறிக.
மன்மதன் ஒருகால் பரமசிவனது தவநிலையைக் குலைக்கமுயன்றபோது அவனுடைய நெற்றிக் கண்ணால்
கொளுத்தப்பட்டு உடலிழந்ததனால் அனங்கனென்று பெயர் பெற்றான்.

ருத்ர தாண்டவத்துக்கு பாணன் மத்தளம் தட்ட மகிழ்ந்து ஆயிரம் கைகளையும் நெருப்பு மதிலையும் வலிமை செல்வம் அருளி
ச பரிவாரனாய்க் கொண்டு வாசலில் காவலும் செய்தான் -பரிவாரங்களோடு தோற்றதால் —ஒருங்கு தோற்றான் -என்கிறார் –

கடல்நஞ்சமுண்டான் வாணற்குடனின்று தோற்ற வரலாறு வலி சக்ரவர்த்தியின் ஸந்ததியிற் பிறந்த பாணாஸுரனுடைய
பெண்னாகிய உஷையென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியிருந்ததாகக் கனாக்கண்டு,
முன் பார்வதி அருளியிருந்தபடி அவனிடத்தில் மிகுந்த ஆசைபற்றியவளாய்த் தன் உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு
அச் செய்தியைத் தெரிவித்து அவள் மூலமாய் அந்தப்புருஷன் கிருஷ்ணனுடைய பௌத்திரனும்
ப்ரத்யும்நனுடைய புத்திரனுமாகிய அநிருத்தனென்று அறிந்துகொண்டு ‘அவனைப் பெறுதற்கு உபாயஞ்செய்யவேண்டும்‘ என்று
அத் தோழியையே வேண்ட, அவள் தன் யோகவித்தை மகிகையினால் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டு வந்து
அந்த புரத்திலேவிட, உஷை அவனோடு போகங்களை அநுபவித்துவர, இச்செய்தியைக் காவலாளராலறிந்த அந்தப்பாணன்
தன் ஸேனையுடன் அநிருத்தனை யெதிர்த்து மாயையினாலே பொருது நாகாஸ்த்ரத்தினால் கட்டிப்போட்டிருக்க,
துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாருங் கலங்கியிருந்தபோது,
நடந்த வரலாறு நாரதமுனிவனால் சொல்லப்பெற்ற ஸ்ரீகிருஷ்ணபகவான், பெரிய திருவடியை நினைதருளி,
உடனே வந்து நின்ற அக்கருடாழ்வானது தோள்மேலேறிக்கொண்டு பலராமன் முதலானாரோடு கூடப் பாணபுரமாகிய
சோணிதபுரத்துக்கு எழுந்தருளும்போதே அப்பட்டணத்தின் ஸமீபத்தில் காவல் காத்துக்கொண்டிருந்த சிவபிரானது
பிரமதகணங்கள் எதிர்த்துவர அவர்களையெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானால் ஏவப்பட்டதொரு ஜ்வரதேவதை
மூன்றுகால்களும் மூன்று தலைகளுமுள்ளதாய் வந்து பாணனைக் (ஒரு காலத்தில் பரமசிவன் கூத்தாடுகையில்
பாணாஸுரன் அந்த நடனத்தைக்கண்டு அதற்குத் தகுதியாகத் தன் இரண்டு கைகளால் மத்தளம் தட்ட,
சிவன் மகிழ்ந்து அவனுக்கு ஆயிரம் கைகளையும் நெருப்பு மதிளையும் அளவிறந்த வலிமையையும் மிக்க செல்வத்தையும்,
தான் ஸபரிவாரனாய்க்யும் தந்தருளி அப்படியே சிவன் தனது குடும்பத்தோடு
அவன் மாளிகை வாசலிற் காத்துக் கொண்டிருந்தனன் என்பது இங்கு அறியத்தக்கது.)

காப்பாற்றும் பொருட்டுத் தன்னோடு யுத்தஞ்செய்ய, தானும் ஒரு ஜ்வரத்தை யுண்டாக்கி அதன் சக்தியினாலே அதனைத் துரத்திவிட்ட
பின்பு, சிவபிரானது அநுவரர்களாய்ப் பணாஸுரனது கோட்டையைச் சூழ்ந்துகொண்டு காத்திருந்த அக்நிதேவர் ஐவரும்
தன்னோடு எதிர்த்துவர அவர்களையும் நாசஞ்செய்து பாணாஸுரனோடு போர் செய்யத்தொடங்க,
அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும் ஸுப்ரஹ்மண்யன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப்போரிட,
கண்ணன் தான் ஜ்ரும்பணாஸ்த்ரத்தைப் பிரயோகித்துச் சிவன் ஒன்றுஞ் செய்யமாட்டாமல் கொட்டாவி விட்டுக்கொண்டு
சோர்வடைந்து போம்படிசெய்து ஸுப்ரஹ்மண்யனையும் கணபதியையும் உங்காரங்களால் ஒறுத்தி ஒட்டி, பின்னர்,
அனேகமாயிரஞ்கித்து அப்பாணனது ஆயிரந் தோள்களையும் தாரைதாரையாய் உதிரமொழுக அறுத்து
அவனுயிரையும் சிதைப்பதாக விருக்கையில் பரமசிவன் அருகில் வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்ததனால்
அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளி, பின்பு அவன் தன்னைத் தொழுது
அநிருத்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம்புரிவிக்க, அதன்பின் கண்ணபிரான் துவாரகைக்கு சிறப்பாக மணம்புரிவிக்க,
அதன் பின் கண்ணபிரான் துவாரகைக்கு மீண்டெழுந்தருளினன்.
இவ்வரலாற்றினால் அனங்கவேள்தாதைக்கு எவருமெதிரில்லை யென்னுமிடம் நன்கு விளக்கப்பட்டதாம்.

பாணாஸுரயுத்தத்தில் சிவன் தனது பாரிவாரங்களோடு தோற்றனனாதலால் “ஒருங்கு தோற்றான்“ என்றார்.

திருப் பாற் கடலை உவரிக் கடல் என்றது -சமுத்திர சாம்யத்தைப் பற்ற -என்பது
பூருவர்களின் வியாக்கியான வாக்கியம்.
பாற்கடல் கடையும்போது அதில் நின்றும் விஷம் உண்டாக, அதனை
எம்பெருமானுடைய நியமனத்தினால் பரமசிவன் உட்கொண்டானென்க.

—————————————————————————————-

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

பதவுரை

பேசில்–உண்மை பேசப் புகுந்தால்
பெரு குருந்தம் சாய்த்தவனே–பெரிய குருந்தமரத்தை வேர் பறியத் தள்ளி முறித்த கண்ணபிரானே
ஒருங்கு இருந்த நல் நினையும் தீ வினையும் ஆவான்–உடன் நிற்கும் புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகன்,
மருங்கு இருந்த–ஸமீபத்திலுள்ள (அந்தரங்கரான)
வானவர் தாம்–தேவர்களும்
தானவர் தாம்–அசுரர்களும்
தாரகை தான்–இப் பூமியும் (ஆகிய இவையெல்லாம்)
என் நெஞ்சம் ஆனவர் தாம்–என் நெஞ்சினுள் உறைகின்ற ஸர்வேச்வரனேயாம்
அல்லாத்து என்–அந்த ஸர்வேச்வரனல்லாத வஸ்து என்ன இருக்கிறது

புண்ணியம் பாவம் முதலான ஸகல பதார்த்தங்களும் எம்பெருமானிட்ட வழக்காயிருக்கும்,
அவனிட்ட வழக்காகாத வஸ்து ஒன்றுமேயில்லை யென்கிறார்.
நல்வினையும் தீவினையும் அவனேயாவான் என்கிற விதன் கருத்து யாதெனில், சுருதியின்படியே தன்னுடைய அநுக்ரஹத்துக்கு
இலக்காக வேண்டினாரைக் கொண்டு நல்வினைகளைச் செய்வித்தும், தன்னுடைய நிக்ரஹத்துக்கு இலக்காக
வேண்டினாரைக்கொண்டு தீவினைகளைச் செய்வித்தும் போருகிறவன் என்கை.

நலவினைகளின்பயனாகத் தேவயோநியிற் விறப்பதும், தீவினைகளின் பயனாக அஸுரயோநியிற் பிறப்பதும்
இவ்விருவினைகளினுடையவும் பயனாக இப்பூமியிற் பிறப்பது மெல்லாம் பகவத் ஸங்கல்பாதீன மென்கிறது பின்னடிகளால்.

குருந்தம் சாய்ந்த வரலாறு – கண்ணபிரான் யமுனையில் நீராடும் ஆயர் மங்கைகளின் துகிலையெடுத்துக் கொண்டு
அதன் கரையிலுள்ள குருந்த மரத்தின் மேலேறுகிற வழக்கத்தைக் கண்டிருந்தவனும் கம்ஸனா ஏவப்பட்டவனுமான
ஓர் அஸுரன் கண்ணனை நலிவதற்காக அக் குருந்த மரத்தை ஆவேசித்துக் கிடந்தான்,
அதையறிந்த கண்ணபிரான் அந்த மரத்தை முறித்தொழித்தனன் என்பதாம்.

எம்பெருமானுக்குப் பல திருநாமங்கள் இருப்பதுபோல் “என்னெஞ்ச மானவர்“ என்பதும்
ஒரு திருநாமம் போலும் ஆழ்வார் திருவுள்ளத்தால். என்னெஞ்சத்திலே ஸத்தை பெற்றிருப்பவர் என்றபடி.
அன்றியே அஃறிணையான நெஞ்சையே கௌரவந்தோற்ற “நெஞ்சினார்“ என்பதுபோல இங்கு “நெஞ்சமானவர்“ என்று
சொல்லியிருப்பதாகக்கொண்டு தம் திருவுள்ளத்தையே குறிப்பதாகவும் உரைக்கலாம்,
அப்போது, வானவர் தானவர் தாரகை என்னெஞ்சு (ஆகிய எல்லாம்) பெருங்குருந்தம் சாய்ந்தவனே என்றவறாம்.

————————————————————————

என் நெஞ்சமேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்னெஞ்சு
மேயானை இல்லா விடையேற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு –58 –

பதவுரை

என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே நித்ய வாஸம் செய்பவனும்
இருள் நீக்கி எம்பிரான்–(நெஞ்சிலுள்ள) அஜ்ஞான விருளைப் போக்குமவனான உபகாரகனும்
முன் ஒருநாள்–முன்பொரு காலத்தில்
மன் அஞ்ச–மஹாபலி சக்ரவர்த்தி பயப்படும் படியாக
மண் அளந்தான்–பூமியை அளந்து கொண்டவனும்
என் நெஞ்சம் மேயானை–(அந்த திருக் கோலத்துடனே) என்னெஞ்சை விடாமலிருப்பவனுமான எம்பெருமானை
இல்லா–நெஞ்சில் உடையனாகாத
விடை ஏற்றான்–ரிஷப வாஹநனான ருத்ரனுடைய
வெம் வினை–மஹா பாதகத்தை
தீர்த்து–தொலைத்து
ஆயானுக்கு–(அதனால்) ஸத்தை பெற்றவனான பெருமானுக்கு
அன்பு ஆக்கினேன்–என் அன்பைச் செலுத்தினேன்.

“என்னெஞ்சமேயான்“ என்பது இரண்டிடத்தில் வந்துள்ளது.
பொருள் ஒன்றேயாயினும் கருத்தில் வாசியுண்டு, முதலடியில் என்னெஞ்சமேயான் என்றது பொதுவான வ்யாப்தியைச் சொன்னபடி.
இரண்டாமடியில் “மண்ணளந்தானென்னெஞ்ச மேயான்“ என்றது உலகளந்த திருக்கோலம் தம் நெஞ்சிலே பொலியும்படி
காட்சி தந்தருள்கின்றமையைச் சொன்னவாறு.

“இருள் நீக்கி“ என்றது வினையெச்சமன்று, பெயர்ச்சொல், இருளை நீக்குகின்றவன் என்கை.
விளையெச்சமாக்கொண்டால், இருனை நீங்கச் செய்து அதனால் எம்பிரான் – எனக்கு உபகாரகனானவ் என்க.
தன் நெஞ்சத்தில் அஞ்ஞானம் போக்கி அங்கே நிரந்தர வாசம் பண்ணி அருளும் ஆபத் ரக்ஷகன் –
பக்கல் அன்பு விளைந்தமையை அருளிச் செய்கிறார்

இருள் நீக்கி -வினை எச்சம் அன்று -பெயர்ச் சொல் -இருளை நீக்குகின்றவன் என்றபடி –
அத்தாலே எம்பிரான் -உபகாரகன் -ஆனான் –

இப்படிப்பட்ட எம்பெருமான் நெஞ்சிற்கொள்ளமாட்டாத (துர்மாநியான) ரிஷபவாஹநனாகிய ருத்ரனுடைய
வெவ்வினையுண்டு ப்ரஹ்மஹத்யாரூபமான பாபம், அதனைத்தீர்த்து, தன் காரியம் ஆனதுபோல்
உவந்தவனான எம்பெருமானுக்கு என்னுடைய அன்பைச் செலுத்தினேன் என்றாராயிற்று.

———————————————————————————

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

பதவுரை

அன்பு ஆவாய்–(என் பக்கல்) ப்ரீதியே வடிவெடுத்தவன் போலிருப்பவனே!
ஆர் அமுதம் ஆவாய்–பரம போக்யனாயிருப்பவனே!
அடியேனுக்கு இன்பு ஆவாய்–(உன்னுடைய அநுபவமாகிய) ஸுகத்தை அடியேனுக்கு உண்டாக்கினவனே!
என் கேசவனே–எம்பெருமானே!
கேடு இன்றி–ஒரு குறையுமில்லாமல்
ஆள்வாய்க்கு–ரக்ஷிக்க வல்லவுனுக்கு
எல்லாமும் நீ ஆவாய்–மற்றுமுள்ள ஸுகங்களு மெல்லாம் எனக்கு நீயே யாயிருப்பவனே!
பொன் பாவை கேள்வா–திருமகள் நாதனே!
கிளர் ஒளி–(அத் திருமகளின் சேர்த்தியினால்) கொழுந்து விட்டு வளர்கின்ற காந்தியையுடைய
நான் அடியேன்–நான் அடிமைப் பட்டவனா யிருக்கிறேன்
ஆள்–(அடியேனைக் காத்தருள்)

அன்பு ஆவாய் – “அன்பு“ என்பது வேறொன்றாய், அதை நீ உடையவனாயிருக்கின்றாய் எனறு சொல்லவேண்டாமல்,
நீயே அன்புதானாக வடிவெடுத்திருக்கின்றாய் என்கை.
என்பக்கல் அளவற்ற அன்புவைத்திருக்கின்றாயென்றவாறு.
ஆரமுதமாவாய் அடியேனுக்கு-இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய்–தாய் தந்தை மக்கள் மனைவி மற்றும் அனைவராலும்
உண்டான ஆனந்தம் உன்னை அடைந்து பெற்றேன் –இப்படியெல்லாமும் ஆவதற்கு ஆதி ஸ்ரீ யபதி–

லக்ஷமீபதித்வமே யென்கைக்காகப் பொன்பாவை கேள்வா! என விளித்தார்.
பிராட்டியைக் கைப்பிடித்ததனால் ஒரு விலக்ஷணமான தேஜஸ்ஸு விளைகின்றதென்பது தோன்ற
“பொன்பாவை கேள்வா கிளரொளி“ என்றார்.
அப்ரமேய ஜனகாத்மஜாயா–மாரீசவசநமும் காண்க.
என் கேசவனே கேடின்றி-ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள்
ஆள் என்பதை முன்னிலை வினைமுற்றாக கொள்ளாமல், அடியேனான நான் ஆள்பட்டேன் -காத்து அருள்வாய் -என்கிறார் –

—————————————————————————

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60–

பதவுரை

கேட்பார்க்கு–ஸ்வ யத்நத்தாலே கேட்டறிய விரும்புவர்களுக்கு
அரு பொருள் ஆய் நின்றி அரங்கனே–அறிய வொண்ணாத பரம் பொருளான அரங்க நாதனே!
ஆள் பார்த்து உழிதருவாய்–நமக்கு ஆட்படுமவன் யாரேனும் கிடைக்கக் கூடுமோ என்று தேடித் திரிகிறவனே!
நின் தாள் பார்த்து உழி தருவேன்–உனது திருவடிகளின் ஸேவைக்காக அலைந்து திரிகின்ற என்னுடைய
தன்மையை–இந்த ஸ்வபாவத்தை
என்றும்–என்றைக்கும் நிலைத்திருக்கும் படியாகக் கடாக்ஷித் தருள வேணும்
உன்னை விரும்புவதே–நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை
மனம்–நெஞ்சில்
விள்ளேன்–தவிராதவனா யிருக்கின்றேன்.

ஆட் பார்த்து உழி தருவாய்-நம்மைத் தேடிப்பிடிக்க அலைந்து திரிகின்றானே –
ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே

-ஞாஎம்பெருமானை நோக்கி “ஆள்பார்த்து உழிதருவாய்!“ என்று விளிக்கிற விளியின் அழகை என் சொல்லுவோம்.
வேதாந்தங்கள் எம்பெருமானை நாம் தேடிப் பிடிக்கவேணுமென்று ஓதுகின்றன,
அப்படியிருந்தும் எம்பெருமான் நம்மைத் தேடிப் பிடிப்பதற்கு அலைந்து திரிகின்றானென்கிறார் காண்மின்.
எம்பெருமான் ஸர்வ ஸ்வாமி யென்பதும் சேதநாசேதநங்களடங்கலும் அவனுடைய ஸொத்து என்பதும் தேர்ந்த விஷயம்.
ஸொத்து தவறிப் போனால் அதனைத் ஸ்வாமியான தன்னுடைய திருவடிகளில் நின்றும் தவறிப்போன தானேயாகையால்
இந்த விளி மிகப் பொருந்தும். ஸ்ரீவசநபூஷணத்தில் “ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்குகப்பானுமவனே“ என்றருளிச் செய்த்தும்
இதுபோன்ற அருளிச் செயல்களை அடியொற்றியேயாம்.

ஞானம் லப்தவா –பரமார்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார்
நம் வலையில் சிக்குவார் என்று நீ திரிய -யாதிருச்சிகமாக சிக்கிக் கொண்ட என்னை விட்டு விடலாகாது -என்கிறார்
கண்டு கொள் என்றும் நின்-தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை
இப்போது உன் திருவடிகளையே நோக்கிக் கொண்டு
இருக்கும் நிலைமையை என்றுமே இருப்பதாக நீ கடாக்ஷித்து அருள வேணும்

கேட்பார்க்கு-அரும் பொருளாய் நின்ற–நீயே காட்டக் கண்டு -உன் திருவருளால் அறியும் அத்தனை –
வரங்கனே உன்னை-விரும்புவதே விள்ளேன் மனம்
இத்தை கண்டு கொள் –என்று கூட்டிப் பொருள் கொள்க –

நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை நெஞ்சில் தவிராதவனா யிருக்கும்படியாக
நீயே கடாக்ஷித் தருளவேணும் என்பதாம். இது தாத்பர்ய வ்ருத்தியாகும்.

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -37-48–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

வானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு –37-

பதவுரை

வான்–ஆகாசமும்
தீ–அக்நியும்
உலவு வளி–உலாவுகின்ற வாயுவும்
மா கடல்–பெரிய கடலும்
மா பொருப்பு–பெரிய குலபர்வதங்களும்
உலவு–திரிகின்ற
வெம் கதிர்தானும்–உஷ்ணகிரணனான ஸூர்யனும்
தண்மதியும்–குளிர்ந்த சந்திரனும்
மேல் நிலவு–மேலே நிலாவுகின்ற
கொண்டல்–மேகங்களும்
பெயரும்–சேதநவர்க்கமும்
திசை எட்டும்–எட்டுத் திசைகளும்
சூழ்ச்சியும்–ஆவரணங்களும்
அண்டம்–ஆகிய இவையெல்லாவற்றோடுங் கூடின அண்டமும்
திருமால்–ஸர்வேச்வரனுடைய
அகைப்பு–ஸங்கல்பத்தினாலாயது.

பஞ்ச பூதங்களும் -சந்த்ர ஸூ ர்யர்களும் -மேக மண்டலங்களும் -ஜீவ ராசியும் -எண் திசையும்
-ஆவரணங்களும் -அண்டம் எல்லாம் -எம்பெருமானுடைய விபூதிகள் -என்கிறார்
கொண்டல் பெயரும் -மேகங்களும் -சேதன வர்க்கமும் -/ மேகம் என்று பெயர் பெற்றவையும் -என்றுமாம்
அகைப்பு -எழுச்சி -முயற்சி -திரு உள்ளத்தில் சங்கல்பம் என்றபடி –

——————————————————————-

அகைப்பில் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு-38-

பதவுரை

அகைப்பு இல் மனிசரை–உஜ்ஜீவிக்க மாட்டாத மனிசர்களை
ஆறு சமயம்–(நீ சங்களான) ஆறு மதங்களில்
புகைத்தான்–புகும்படி செய்தவனும்
பொரு கடல் நீர் வண்ணன்–அலையெறிகின்ற கடல் நீர்போன்ற திருநிறத்தை யுடையவனுமான ஸர்வேச்வரன்
உகைக்கும் ஏல்–உதாஸீநனா யிருந்து விடும் பக்ஷத்தில்
அப்போது–அப்போதே
எத் தேவர் வாலாட்டும்–எந்த தேவர்களுடையவும் அஹங்காரமும்
எவ்வாறு செய்கையும்–எவ்விதமான (யஜ்ஞம் முதலிய) காரியங்களும்
அழைப்பு–(தேவதைகளின்) ஆஹ்வாகமும்
ஒழியும்–ஒழிந்து போய்விடும்

அகைப்பில் மனிசரை -உஜ்ஜீவிக்க மாட்டாத மனிசர்களை

உகைக்குமேல் -உதாசீனாய் இருந்து விடும் பக்ஷத்தில் -உபேக்ஷித்தல் -தேவதாந்த்ரங்கள் இடத்தில் ஆவேசியாத பக்ஷத்தில்
அஹங்காரப்படுகிறவர்களை லோக வழக்கில் வாலாட்டும் என்பார்களே

எத்தேவர் வாலட்டும் – பிரமன் உலகங்களைப் படைத்தானென்றும், சிவன் திரிபுரடிமரித்தானென்றும்,
இந்திரன் வ்ருத்ராஸுரவதம் பண்ணினானென்றும் இப்படி பல தெய்வங்களைக் குறித்துப் பேசுவமெல்லாம் தெரியுமே,
எம்பெருமான் அநுப்ர வேசித்திராவிடில் ஒரு தெய்வமாவது ஒரு காரியமாவது செய்திருக்கமுடியுமோ? என்றவாறு.
‘வாலாட்டும்‘ என்றது உலக வழுக்கச்சொல்லின் அநுகாரம் அஹங்காரப்படுகிறவனே ‘வாலாட்டுகிறான்‘ என்பது வழக்கம்.

எவ்வாறு செய்கையும் – அந்தணர்கள் யஜ்ஞயாகங்களை அநுஷ்டித்து ஹவிஸ்ஸை யளிப்பதெல்லாம் அந்தர்யாமித்வேந
எம்பெருமானை உத்தேசித்தேயன்றோ, அந்த இந்திரன் முதலிய தெய்வங்களில் எம்பெருமான் உள்ளுறைகின்றிலனாயின்
அத்தெய்வங்களை நோக்கி ‘ஸ்வாஹா ஸ்வாஹா‘ என்று சொல்லி செய்வது ஒன்றுமில்லையாகும் என்கை.
அழைப்பு -தேவதைகளின் ஆஹ்வாநமும்

அவரவர் தமது தமது அறிவகை வகை அவரவர் இறையவர் என வடி யடையவர்கள் -அவரவர் இறையவர் குறைவலர்
இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே-திருவாயமொழி -பாசுரத்தில் அன்வய முகத்தால் -சொல்வதையே
வியதிரேக முகத்தில் சொல்லிஎம்பெருமான் ஆவேசியா விட்டால் ஒரு தெய்வமும் ஒரு பலனும்
அளிக்க வல்லதாக மாட்டாது
-என்கிறார் –
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் உலகில்லை என்றே –4 -10 -6 –

அப்பாசுரத்தின் கருத்தாவது – பலவகைப் பயன்களை விரும்புகின்ற உலகத்தவர்கள் தங்கள் தங்கள் ருசிக்குத் தக்கபடி
பிரமன் சிவன் இந்திரன் என்றுள்ள பலபல தெய்வங்களை ஆச்ரயிக்கின்றனர், அத்தெய்வங்கள் இவர்கள் விரும்பிய
பலன்களைக் கொடுக்கக் குறையில்லை, ஏனென்றால், ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயணன் அத்தெய்வங்களுக்கு
அந்தர்யாமியாயிருப்பதனாலே அந்த மாஹத்மியத்தினால் அத்தெய்வங்கள் பலன்கொடுக்கும் சக்தியுடையனவாக ஆய்விடுகின்றன. என்கை.
ஆகவே எம்பெருமானுடைய ஆவேசத்தினால் தான் ஸாமாந்ய தெய்வங்களெல்லாம் தங்களைப் பற்றின அபேக்ஷகர்களுக்கு
அந்தந்த ப்ரயோஜனங்களை யளிக்கின்றன வென்றதாயிற்று.

ஒரு அர்த்தத்தை அந்வயமுகத்தால் சொல்லுவதென்றும் வ்யதிரேகமுகத்தால் சொல்லுவதென்றும் இரண்டு படிகளுண்டு.
‘அரசன் கொடுத்தால் நாம் உண்ணலாம்‘ என்றாற்போலே சொல்லுவது அந்வய முகத்தால் சொல்லுவதாம்,
‘அரசன் கொடாவிடில் நாம் உண்ணமுடியாது‘ என்றாற்போலே சொல்லுவது வயதிரேக முகத்தாற் சொல்லுவதாம்.
கீழெடுத்துக்காட்டிய திருவாய்மொழிப் பாசுரத்திற் சொன்ன கட்டளை அந்வயமுகமாகும்.
இப்பாட்டிற் சொல்லுகிற கட்டளை வ்யதிரேகமுகமாகும்.
எம்பெருமானுடைய ஆவேசத்தினால்தான் தேவதாந்தரங்கள் பலனளிக்கின்றன. என்று திருவாய்மொழிப் பாசுரத்திற்சொல்லிற்று,
எம்பெருமான் ஆவேசியாவிடில் ஒரு தெய்வமும் ஒரு பலனையும் அளிக்கவல்லதாகமாட்டாது என்கிறது இப்பாட்டில்.

ஆறுசமயங்களாவன – சாக்யர் உலூக்யர் அக்ஷபாதர் க்ஷபணர் கபிலர் பதஞ்ஜலி என்னும் அறுவரால் பிரவர்த்திப்பிக்கப்பட்ட மதங்கள்.
இவை அவைதிகங்க ளெனப்படும். உஜ்ஜீவிக்கமாட்டாத மனிசர்களை இந்த பாஹ்ய குத்ருஷ்டி மதங்களில் புகுவித்தானாம் எம்பெருமான்.

———————————————————————–

உலகோர் எக்கேடு பெற்றாலும் பெறட்டும் -என்னுடைய பொழுது போக்கு நல்லதாக இருக்கப் பெற்றேன் –
திருவேங்கடமுடையானை சேவிக்க வேணும் என்றும் திரு வேங்கடத்திலே நித்யவாஸம்

பண்ண வேணும் என்றும் ஆசைப்படா நின்றேன் -என்கிறார்

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39-

பதவுரை

திருவேங்கடத்தானை–திருவேங்கடமுடையானை
காண–கண்ணால் ஸேவிக்க
அழைப்பன்–வாய்விட்டுக் கூப்பிடா நின்றேன்
வரண்டி வந்து இழிய–திரட்டிக்கொண்டு வந்து இழிய (அச்சு ரத்னங்களின் ஒளியைக்கண்டு அக்நிஜ்வாலைகளாக ப்ரமித்து)
யானை–யானைகளானவை
வெருவி–பயப்பட்டு நிற்கவும்
அரவு–மலைப் பாம்புகளானவை
மழை–மழை போல் சொரிகின்ற
பேர் அருவி–பெரிய அருவிகளானவை
மணி–அங்குமிங்குங் கிடக்கிற) ரத்னங்களை
ஒடுங்கும்–(அந்த ரத்னங்களை மின்னலாக மயங்கி) புற்றிலே சென்று மறையவும் பெற்ற
வெற்பு–திருமலையை
கூட–சென்று கூடவேணுமென்று
திருக்கூடல் இழைப்பன்–கூடலிழைக்கின்றேன்

இழைப்பன் திருக்கூடல் – கூடலிழைத்தலாவது – வட்டமாகக் கோடுகீறி அதற்குள்ளே சுழிசுழியாகச் சுற்றும் சுழித்து
இரண்டிரண்டு சுழியாகக் கூட்டிப் பார்க்கும்போது இரட்டைக்கணக்காக முடிவுபெற்றால் கூடுகை,
ஒற்றைக்கணக்காக முடிவுபெற்றால் கூடாமை என்று ஒரு ஸங்கேதம் ஏற்படுத்திக்கொண்டு குறிபார்க்கையாம்.
சகுனம் பார்க்கும் வகையில் இஃது ஒருவகை, இது கூடல், கூடலிழைத்தல், கூடல்வளைத்தல், கூடற்குறி இத்யாதி
நாமங்களால் வழங்கப்பெறுமென்ப. நாச்சியார் திருமொழியில் நான்காந்திருமொழியில் (தெள்ளியார் பலர்) ஆண்டாளனுட்டித்ததாமிது.
பகவத் ஸம்ச்லேஷத்திலே ஆவலுள்ளபடியைக்கூறும் முறைகளிலே இதுவொருமுறை என்னுமிவ்வளவே உணரத்தக்கது.

கூடலிழைத்தல் பெண்டிர்க்கே உரியதென்றும், இங்கு “இழைப்பன் திருக்கூடல்“ என்று ஆழ்வாரருளிச்செய்தது
நாயகீ ஸமாதியில் என்றும் அழகிய மணவாளச்சீயர் அருளிச்செய்வர்.

வரண்டி வந்திழிய–திரட்டிக்  கொண்டு வந்து இழிய-வரண்டி–பாட பேதம்

மணிகளை கண்டு இவை கொள்ளி வட்டம் என்று அஸ்தானே பய சங்கை பண்ணுமா யானைகளும் -மலைப் பாம்புகளும்
-யானைகள் ஓடி மலைப் பாம்புகளின் வாயிலே விழும் படி என்றுமாம் –
யானை வெருவவும் அரவு ஒடுக்குகவும் -என்றும் யானை வருவி அரவின் வாயிலே ஒடுங்கவும் என்றுமாம் –

பின்னடிகட்கு இரண்டுவகையாகக் கருத்துரைக்கலாம்,
மலையருவிகளில் மணிகள் பளபளவென்று ஜ்வலித்துக்கொண்டு உடன் விழுகின்றவனவாம்,
அவற்றை யானைகள் கண்டு ‘இவை கொள்ளிவட்டம்‘ என்று ப்ரமித்து அஞ்சிச்சிதறுகின்றனவாம்.
பாம்புகளோவென்னில், அந்த ரத்னங்களை மின்னலாக ப்ரமித்து அஞ்சிப் புற்றிலேசென்று ஒடுங்குகின்றனவாம்,
ஆக இப்படி அஸ்தாநே பயசங்கை பண்ணுதற்கு இடமான திருமலையைக்கூடக் கூடலிழைப்பன் என்கை.
அன்றியே,
அருவிகளில் விழுந்த ரத்னங்களைக்கண்ட யானைகள் “இவை கொள்ளிவட்டம்“ என்று ப்ரமித்து ஒடப்புக்கவாறே
மலைப்பாம்பின் வாயிலே விழும்படியாயின என்னவுமாம்.

சில மலைப்பாம்புகள் யானையைப்பார்த்து அஞ்சி நடுங்கி ஓடிப் போய்விடுமென்றும்,
பல மலைப்பாம்புகள் யானையை அணுகி விழுங்கிவிடுமென்றும் தமிழ்நூல்களால் தெரிகின்றது.
“திரையன்பாட்டு“ என்ற ஓர் பழையநூலில் –
“கடுங்கண்யானை நெடுங்கை சேர்த்தி, திடங்கொண்டறைதல் திண்ணமென்றஞ்சிப்,
படங்கொள் பாம்பும் விடாகம்புகூஉம், தடங்கொள் உச்சித்தாழ்வரை யடுக்கத்து“
மலைப்பாம்பு யானையைக்கண்டு அஞ்சி யொளிக்குமென்பது தெரிகின்றது.

“ஞால்வாய்க்களிறு பாந்தட்பட்டெனத், துஞ்சாத்துயரத்தஞ்சுபிடிப்பூசல்,
நெடுவரை விடரகத்தியம்பும், கடுமான் புல்லிய காடிறந்தோரே“ என்று சங்க நூல்களுள் ஒன்றான நற்றிணையிலும்,
“பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த, கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே“ என்று தேவாரத்திலும்,
“இடிகொள் வேழத்தை எயிற்றொடு மெடுத்துடன் விழுங்கும், கடியமாசுணங் கற்றறிந்தவரென வடங்கிச்
சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாமிதித்தேற்ப,- படிகடாமெனத்தாழ்வரை கிடப்பனபாராய்“ என்று கம்பராமாயணத்திலும்
உள்ள பாட்டுக்களால் மலைப்பாம்பு யானையை விழுங்குமென்பது தெரிகின்றது.
அஞ்சியோசித்தல் சிறுபான்மையும், விழுங்குதல் பெரும்பான்மையுமோ யிருக்குமென்ப.
யானை வெருவவும், அரவு ஒடுங்கவும் பெற்ற மலை, என்பது முதல் யோஜனை பதவுரை,
யானையானது வெருவி அரவின் யிலே ஒடுங்கப்பெற்ற மலை என்ப்து இரண்டாவது யோஜனையின் பதவுரை.

—————————————————————————-

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

பதவுரை

வெற்பு என்று–பலமலைகளையும் சொல்லிவருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘ என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
காண் – முன்னிலையசை

வெற்பென்று வேங்கடம் பாடினேன் – ‘மலை‘ என்று வருகிற பெயர்களையெல்லாம் அடுக்காகச் சொல்லுவோமென்று
விநோதமாக முயற்சிசெய்து ‘பசுமலை, அடைவிலே பறங்கிமலை‘ என்று பலவற்றையும் சொல்லிவருகிற அடைவிலே
என்னையுமறியாமல் ‘திருவேங்கடமலை‘ என்று என்வாயில் வந்துவிட்டது,
இவ்வளவையே கொண்டு எம்பெருமான் என்னைத் திருவேங்கடம் பாடினவனாகக் கணக்குசெய்து கொண்டானென்பது இதன் கருத்து.

வீடாக்கி நிற்கின்றேன் – யாத்ருச்சிகமான இந்த உத்திமாத்திரத்தில் “மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றதுகையதுவே“ என்னும்படியாகப்
பரமபதமும் ஸித்தமென்னப் பேறுபெற்றயனாயினேன் என்கை.

நின்று நினைக்கிறேன் – நாம் புத்திபூர்வமாக ஒரு நல்ல சொல்லும் சொல்லாதிருக்கவும் எம்பெருமான்றாளே ம
டிமாங்காயிட்டு திருவுள்ளம் பற்றுகிறவிது என்ன ஆச்சரியம்! என்று இதனையே அநுஸந்தித்து ஈடுபடா நின்றேனென்கை.

கற்கின்ற நூல்வலையிற்பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையிற் பட்டிருந்தேன் – எம்பெருமான் ஸகலசாஸ்த்ரங்களாலும்
பிரதிபாதிக்கப்படுபவனாதலால் அவனுக்கு ‘நூலாளன்‘ என்று பெயர் இப்பெயர்க்குப் பெண்பால் ‘நூலாட்டி‘ என்பதாம்.
(பெரிய பிராட்டியாரே! வேதங்களும் வேதாங்கங்களும் எல்லாங்கூடி உமது திருக்கல்யாண குணங்களையே
பிரதிபாதிப்பனவாகப் பெரியோர் கூறுவர்) என்று பட்டர் அருளிச்செய்தபடியே எல்லா நூல்களையும் தனக்குப்
பிரதிபாதகமாகவுடையவள் என்ற காரணத்தினாலும் ‘நூலாட்டி‘ என்று பெயர் பெறுவள் பிராட்டி,
அவளுடைய கேள்வனார் – எம்பெருமான், அவன் எப்படிப்பட்டவனென்றால் கற்கின்ற நூல்வலையிற் பட்டிருந்தவன்,
(அதாவது) பரம்பரையாக அஸ்மதாதிகளால் ஓதப்பட்டுவருகின்ற சாஸ்த்ரங்களாகிற வலையிலே பாஹ்யகுத்ருஷ்டிகளால்
அசைக்க வொண்ணாதபடி அகப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளாகிய வலையிலே நான் சிக்கிக் கொண்டிருக்கின்றேன் என்கை.

மூன்றாமடியில் சாஸ்த்ரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்,
ஈற்றடியில் அவ்வெம்பெருமான் திருவடிகளைத் தமக்கு வலையாகவும் அருளிச்செய்தார்,
எம்பெருமானை சாஸ்த்ரங்களில் நின்றும் எப்படி பிரிக்கமுடியாதோ அப்படியே
என்னை அப்பெருமான் திருவடிகளில் நின்றும் பிரிக்கமுடியாது என்றவாறு, எம்பெருமான் ஒருவலையிலே அகப்பட்டான்,
நானொருவலையிலே அகப்பட்டேன் என்று சமத்காரமாகச் சொல்லுகிறபடி.

நான் அஹ்ருதயமாகச் சொன்ன சொல்லையும் அவன் ஸஹ்ருதயமாகக் கொண்டு மடிமாங்காயிட்டு என்னை
விஷயீகரித்தருளாகிறானாகையாலே நான் அவனுடைய திருவடிகட்கே அற்றுத் தீர்ந்தே னென்றாராயிற்று.

வேதைக சமய-மிதுனமே -நூலாளன்-நூலாட்டி -அசமதாதிகளால் பரம்பரையாக ஓதப்படும் நூல்களாலே
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அசைக்க முடியாத ஸ்திரமாக உள்ள எம்பெருமான் திருவடிகளில் அகப்பட்டேன்
அவனை சாஸ்திரங்களில் நின்றும் பிரிக்க ஒண்ணாதா போலே அடியேனையும் அவன் திருவடிகளில் நின்றும் பிரிக்க முடியாதே
நான் அஸஹ்ருதயமாக சொன்ன சொல்லையும் சஹ்ருதயமாகக் கொண்டு மாடி மாங்காயிட்டு விஷயீ கரித்து
அருளியதால் அவன் திருவடிகளுக்கே அற்றுத் தீர்ந்தேன் –

—————————————————————————————-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

பதவுரை

கல் அருவி–ஒலிக்கின்ற அருவிகளின் மூலமாக
முத்து உதிர–முத்துக்கள் உதிரப் பெற்றதாய்,
ஒணம் விழவில்–திருவோணத்திருநாளில்
ஒலி அதிர–(திருப்பல்லாண்டு பாடுகை வேத்பாராயணம் செய்கை ஆடுகை பாடுகை முதலானவற்றாலுண்டான) த்வநி அதிரப் பெற்றதாய்
பேணி வரு–(பக்தர்கள்) விரும்பி வந்து சேரப் பெற்றதான
வேங்கடவா–திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடையவனே!
என் உள்ளம் புகுந்தாய்–நீ என் நெஞ்சிலே புகுந்துவிட்டாய் (நீ திருமலையைவிட்டு என்னுள்ளத்திலே வந்துவிட்டாலும்)
திருவேங்கடம் அதனை சென்று காணல் உறுகின்றேன்–நான் அத்திருமலையிற் சென்று ஸேவிக்க விருப்பங்கொண்டிருக்கிறேன்.

நீ திருவேங்கடமலையை விட்டு என் உள்ளத்தே வந்தாயாயேயாயினும் -நீ வருவதற்கு சாதனமான அந்த திரு மலையை
சேவிக்க காதல் கொண்டுள்ளேன் -நீ உகந்து வாழ்ந்த இடம் என்றே எனக்கும் உத்தேச்யம் -திருவோண திரு உத்சவத்தில்
மங்களா சாசன ஒலியும்-பேரொலி செய்து மாணிக்கங்களை உதிரும் அருவி ஒலியும் நிறைந்த திரு வேங்கடம் –
நான் உன்னை திருவேங்கடத்தில் சேவிக்க விரும்ப நீயோ அங்கு நின்றும் என் உள்ளத்தே வந்து உறைகின்றாயே -என்றுமாம் –

எம்பெருமானே!, நீ திருவேங்கடமலையைவிட்டு என்னுள்ளத்தே குடி கொண்டாயாயினும்,
நீ இங்குவந்து சேர்வதற்கு ஸாதநமாயிருந்த அந்தத் திருலை தன்னையும் சென்று ஸேவிக்க வேணுமென்று
நான் காதல் கொண்டிருக்கின்றே னென்கிறார்.

“கல்லருவி முத்துதிர“ என்பதும் “ஓணவிழவி லொலியதிர“ கடத்தில் விசேஷணமாக அந்வயிக்கக்கடவன.
‘உதிர‘ ‘அதிர‘ என்பவை வினையைச் சங்களாயினும் பெயரிலே அந்வயிருக்குமென்க,
எப்போதும் பேரொலி செய்துகொண்டு வீழ்கின்ற அருவிகளிலே முத்துக்கள் உதிரப்பெற்றதும்
(திருவேங்கட முடையானுடைய திருவ்வதார நக்ஷத்திரமான) திருவோணத் திருவிழவில்
மங்களா சாஸந த்வநிகள் மிகப்பெற்றதுமான திருவேங்கடம் என்கை. “பேணி வரு“ என்பதும் திருவேங்கடத்திற்கு விசேஷணம்,
பல திசைகளில் நின்றும் பலர் விரும்பி வந்து பணியப்பெற்ற தென்கை. இப்படிப்பட்ட திருமலையிலெழுந்தருளி யிருக்கும் பிரானே!
நீ அத்திருமலையை விட்டு என்னுள்ளம் புகுந்தாய், இனி நீ திருமலையில் இல்லையாயினும்
‘நீ உகந்து வாழ்ந்தவிடம்‘ என்கிற காரணத்தினால் அத்திருமலை தன்னைச் சென்று காணவே நான் விரும்புகின்றேனென்றவாறு.

நானோ திருமலையில் வந்து உன்னைக் காண விரும்பியிருக்கின்றேன்.
நீயோ அங்கு நின்றும் என்னுள்ளத்தே வந்து உறைகின்றாய், இனி நான் என்செய்வேன்! என்கிறாராகவுமாம்.

————————————————————————————-

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மை யால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42–

பதவுரை

சேண் உயர் வேங்கடத்தை–மிகவும் ஓங்கின (சிகரத்தையுடைய) திருமலையை
சென்று வணங்குமின்–சென்று வணங்குங்கோள் (அத்திருமலையானது)
நீர்மையால்–தன் ஸ்வபாவத்தினால்
நின்று வினைகெடுக்கும்–பாவங்களைப் போக்குவதில் நிலை நின்றிருக்கும்
அங்கு–அத்திருமலையில்,
கடி கமலம் நான்முகனும்–பரிமளம் மிக்க தாமரையிற் பிறந்தவனான பிரமனும்
கண் மூன்றத்தானும்–முக்கண்ணனான சிவபிரானும்
என்றும்–எக்காலத்தும்
அடி–(எம்பெருமானது) திருவடிகளிலே
கமலம்–தாமரைப் புஷ்பங்களை
இட்டு–ஸமர்ப்பித்து
ஏத்தும்–துதித்துக்கொண்டிருப்பார்கள்.

சென்னியோங்கு தண் திருவேங்கடத்தை சென்று வணங்குமின் என்று உபதேசிக்கிறார் –சேண் உயர் –மீமிசைச் சொல்
நீர்மையால் -பாபங்களை போக்குவதே அன்றோ ஸ்வபாவம் திரு வேங்கடத்துக்கு
வெம் கொடும் பாவங்கள் எல்லாம் வெந்திடச் செய்வதால் நல் மங்கலம் பொருந்தும் சீர் வேங்கடமலை யான தொன்று -புராணச் செய்யுள் –

——————————————————————————

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-

பதவுரை

மங்குல் தோய் சென்னி–மேகமண்டலத்தளவுஞ் சென்று கிட்டியிருக்கிற சிகரத்தை யுடைத்தான
வடவேங் கடத்தானை–வட திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு
காப்பு அணிவான்–திருவந்திக் காப்பிடுவதற்காக
திங்கள் சடை ஏற வைத்தானும்–சந்திரனைச் சடையிலே ஏற வைத்துக் கொண்டுள்ள சிவனும்
தாமரை மேலானும்–தாமரைப் பூவிற் பிறந்த பிரமனும்
தாம்–ஆகிய இவர்கள்
குடை ஏற குவித்துக் கொண்டு–திருமுத்துக் குடை முதலான உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு
கங்குல்–ஸந்த்யா காலந்தோறும்
புகுந்தார்கள்–திருமலைக்குச் செல்லுவர்கள்

அந்தி தோறும் வந்து திருவந்திக் காப்பிடுவார்கள் -கங்குல் இரவுக்கு வாசகமாயினும் இங்கு அந்திப் பொழுதை குறிக்கும் –
நளிர் மதிச் சடையன் -சந்த்ர மௌலி -திங்கள் சடை ஏற வைத்தான் -என்கிறார்
குடை -சத்ர சமராதி உபகரணங்களும் உப லக்ஷணம்
புகுந்தார்கள் -புகுந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றவாறு
அணிவான் -வான் விகுதி பெற்ற வினை எச்சம் –

————————————————————————————-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டிவிட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்–ஆசைகொண்டு செல்லுங்கோள்

கிளர் ஒளி இளமை கெடாமல் இருக்கப் பெற்ற குமரர்களே-தண்டு காலா வூன்றி வூன்றி தள்ளி நடக்கும் முதுமையில்
திருமலையை நினைக்கவும் முடியாதலால் -இப்பொழுதே திருமலைக்கே போவீர் -என்கிறார்

ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க -தாமே யறிகிற்போம் நல் நெஞ்சே -பூ மேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை பாதமத்தாலே எண்ணினான் பண்பு –பொய்கையார் -45 –
ஆய்ந்த வருமறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண் —பேயார் -77
புராணங்களில் இல்லாமல் ஆழ்வார்கள் மட்டுமே சாஷாத்கரித்த விருத்தாந்தம் —

இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டிருக்கும் பகவத்கதை முதல் திருவந்தாதியில், “ஆமேயமரக்கறிய“ என்ற நாற்பத்தைந்தாம் பாட்டிலும்,
முன்றாந்திருவந்தாதியில் “ஆய்ந்தவருமறையோன்“ என்ற எழுபத்தேழாயம் பாட்டிலும்
பொய்கையாழ்வாராலும் பேயாழ்வாராலும் அநுஸந்திக்கப்பட்டுள்ளது.
முன்பு இராவணன் தனது பத்துத் தலைகளை மறைத்துக்கொண்டு நான்முகனிடஞ்சென்று வரம் வேண்டிக் கொள்ளுமளவில்
எம்பெருமான் ஒரு சிறு குழந்தைவடிவாய் அப்பிரமனுடைய மடியிலே உறங்குவான் போலே கிடந்து
“இவன் பத்துத் தலைகளையுடைய இராவணன் காண், ஸ்வஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உன்னை வஞ்சித்து
வரம் வேண்டிக் கொள்ள வந்திருக்கிறான். இவனுக்கு நீ வரமளித்தால் பெருந்தீங்காக முடியும்“ என்று தெரிவிப்பவன் போன்று
தன் திருவடியால் அவ்விராவண்ணுடைய பத்துத் தலைகளையும் எண்ணிக் காட்டினன் – என்பதாக இவ்வரலாறு விளங்குகின்றது.

இக்கதை இதிஹாஸ புராணங்களில் உள்ளவிடம் தெரியவில்லை;
பெரியாழ்வார் திருமொழியில் “சீமாலிகனவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ யெண்ணிச்
சக்கரத்தால் தலை கொண்டாய்“ (2-7-8) என்றும்,
“எல்லியம் போதினி திருத்தலிருந்த தோரிடவகையில், மல்லிகைமாமாலை கொண்டங்கார்த்தது மேரடையாளம்“ (3-10-2) என்றும்
அருளிச்செய்த கதைகள் வ்யாஸர் வால்மீகி முதலிய முனிவர்களால் ஸாக்ஷாத்கரிக்கப்படாமல்
ஆழ்வாரால் மாத்திரம் நிர்ஹேதுக கடாக்ஷமடியாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்டவை யென்று நம் பூருவாசாரியர்கள்
நிர்வஹித் திருப்பது போலவே இக்கதையும் ஆழ்வார்களால் மாத்திரம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்ட தென்று பெரியோர் கூறுவர்.
இனி இதற்கு இதிஹாஸ புராணங்களில் ஆகா முண்டேல் கண்டு கொள்க விரிவும் வல்லார் வாய்க் கேட்டுணர்க.

இப்படிப்பட்ட எம்பெருமான் நின்றருளும் திருவேங்கடமலைக்கே விரும்பிச் சென்று சேருங்கள் என்றாராயிற்று.
வயது முதிர்ந்த பின்பு * தண்டுகாலா யூன்றித் தள்ளிநடக்கும் முதுமையில் திருமலையை நெஞ்சால் நினைக்கவும்
முடியாதாதலால் கிளரொளியிளமை கெடுவதன் முன்ன திருமலைக்குப் போகவேணுமென்கிறார் ‘குமர்ருள்ளீர்!‘ என்ற விளியால்.

——————————————————————————————-

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-

பதவுரை

புண்டரீகம் பாதம்–திருவடித் தாமரைகளில்
புரிந்து–அன்பு பூண்டு
மலர் இட்டு–புஷ்பங்களைப் பணிமாறி
பரிந்து–மங்களாசாஸநம் பண்ணி
படுகாடு நிற்ப–வெட்டி வீழ்த்த மரங்கள் போலே கால்பேராமல் நிற்கும்படியாக
எங்கும்–ஸகல ப்ரதேசங்களிலும்
தெரிந்து–விளங்கி
தான் ஓங்கி நிற்கின்றான்–குணங்களால் பெருமை பெற்று எழுந்தருளியிருக்கும் பெருமானுடையதாய்
தண் அருவி வேங்கடமே–குளிர்ந்த அருவிகளை யுடைத்தான திருமலையே
வானோர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
மண்ணோர்க்கும்–நிலத் தேவரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்
வைப்பு–நிதியாயிருக்கும்.

ஆதாரத்துடன் திருவடித் தாமரைகளில் புஷ்பங்களைப் பணிமாறி ‘ பல்லாண்டு பல்லாண்டு‘ என்றும்
‘ஜிதம்தே புண்டரீகாக்ஷ!‘ என்றும் மங்களாசலாஸநம் பண்ணி, கால்பெயர்ந்து வெளியில் போக மாட்டாமல்
அவ்விடத்திலேயே அன்பர் குடிகொண்டிருக்கும்படியாகக் கடாக்ஷித்தருள்கின்ற ஸ்ரீநிவாஸன் நித்யவாஸம் பண்ணுமிடமாய்,
குளிர்ந்த அருவிகள் பாய்ந்து போக்யமான திருவேங்கடங்மலை நித்யஸூகனோடு ஸம்ஸாரிகளோடு வாசியற
அனைவர்க்கும் புகலிடமாயிருக்கின்றது என்றதாயிற்கு.

பரிந்து – பரிவாவது பயசங்கை பண்ணுதற்கு இடமல்லாதவிடத்தில் பயசங்கை பண்ணி
அன்பு பாராட்டுதல் காப்பிடுதலைச் சொன்னபடி.

படுகாடுநிற்ப – படுகாடுபோல் நிற்கும்படியாக என்றபடி, உவமவுருபு தொக்கிக்கிடக்கிறது,
வெட்டித்தள்ளப்பட்ட மரங்களைப் படுகாடு என்கிறது. அதுபோல் நிற்கும்படியாக வென்றது. – அம்மரங்கள் ஆடாது அசையாது
அவ்விடத்திலேயே கிடப்பதுபோல் கிடக்கும்படியாக என்றவாறு
வைப்பு – நிதி பூமிக்குள் புதைத்து வைக்கப்படுவது காரணக்குறி நிதிபோல் விரும்பத்தகுமென்கை.

———————————————————————————-

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -46-

பதவுரை

மா மதியை–‘சிறந்த (இந்த) சந்திரனை
மணி விளக்கு ஆ–மங்கள தீபமாக
வைப்பன் என்று–(திருமுன்பே) வைக்கப்படவேன் என்றெண்ணி (அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக)
கை நீட்டும்–உயரத் தூக்கின கை தூக்கினபடியே யிருக்கிற
யானையை–ஒருயானையை (பிடிப்பதற்காக)
எப்பாடும்–நாற்புறமும்
வேடு வளைக்க–வேடர் சூழ்ந்து கொள்ள
குறவர்–(அங்குள்ள) குறவர்கள்
வில் எடுக்கும்–(அவ்யானையின் மேல் பிரயோகிக்க) வில்லை எடுத்துக்கொண்டு போகுமிடமான
வேங்கடமே–திருமலையையே
நாடு–நாட்டிலுள்ளாரனைவரும்
வளைத்து–பிரதக்ஷிணம் பண்ணி
ஆடுதும் ஏல்–(மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக) நர்த்தனம் பண்ணப் பெற்றால்
நன்று–நல்லது

திருமலையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை வருணிக்கின்றாரிதில். ஆகாயத்திலே அழகிய விளக்குப்போல் தோன்றும்
சந்திரனைக் கண்ட ஒரு யானையானது ‘இதனை நமது துதிக்கையினால் பிடித் தெடுத்து ஸ்ரீநிவாஸன் ஸந்நிதியில்
நந்தாவிளக்காக வைத்திட்டால் நன்றாயிருக்கும்‘ என்று கருதி அச்சநதிரனைப் பிடிப்பதற்காக
நீட்டின கை நீட்டினபடியே யிருக்கையில் அவ்யானையின் நோக்கமெல்லாம் சந்திரனைப் பிடிப்பதாகிற
அக்காரிய மென்றிலேயே ஊன்றியிருந்ததனால் அந்த அந்யபரத்வத்தையே பற்றாசாகக் கொண்டு வேடர்கள் மெல்ல
அருகில் வந்து வளைத்துக்கொள்ள குறவர் அம்பு தொடுக்கின்றனராம்,
ஆக இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இடமான திருமலையை நாமெல்லாரும் வலம் வந்து மகிழ்ந்து கூத்தாடுவோமாயின்
இதுவே நமக்கு ஸ்வருபம் என்றாராயிற்று.

திருமலை சந்திரமண்டலத்தை எட்டியிருக்கின்றதென்று அதன் ஒக்கம் வெளியிடப்பட்டதாமிதனால்,
மலைகளில் சந்திரனை மிக்க ஸமீபத்திலிருப்பதாகக் காணும் மலைப்பிராணிகள்
அவனைக் கைக்கொள்ள விரும்பிப் பல முயற்சிகள் செய்வது இயல்பு,
1.“நஞ்சுமிழ் நாகமெழுந் தணவி நளிர்மாமதியைச் செஞ்சுடர் நாவளைக்குந் திருமாலிருஞ்சோலையதே“ என்றதுங்காண்க.

மாமதியை மாலுக்கு மணிவிளக்கா வைப்பன் என்று கை நீட்டும் யானையை என்கிறாரே ஆழ்வார்,
யானை சந்திரனைப்பிடிக்க முயற்சிசெய்வது வெளிக்குத் தெரியுமேயன்றி
இன்ன காரியத்திற்காக அதனைப் பிடிக்க முயல்கிறது என்பது தெரியமாட்டாதே,
திருமலையப்பனுக்கு நந்தாவிளக்காக வைப்பதற்குப் பிடிக்க முயல்கின்றதென்று ஆழ்வார் எங்ஙனே அறிந்தார்? என்று சிலர் கேட்கக் கூடும்
திருமலையில் பிறக்கப்பெற்ற பெருமையினால் அவ்யானைக்கு இப்படிப்பட்ட நற்கருத்தே இருக்கத்தகும் என்று திருவுள்ளம் பற்றினரென்க.
அன்றியும், 2. “வாயுந்திரையுகளும்“ என்கிற திருவாய்மொழியிற்படியே பிறர் செய்யும் காரியங்களையெல்லாம்
தாம் செய்யுங் காரியங்கள்போல் பகவத் விஷய ப்ராவண்யத்தால் செய்வனவாகவே கொள்வதும் மெய்யன்பர்களின் வழக்கமாகும்.

ஆழ்வார் சந்திரனைப் பார்க்கும்போது “இவன் திருவேங்கடமுடையானுக்கு நந்தாவிளக்காக அமையத்தரும்“ என்று தோற்றவே,
இத்தோற்றமே அவ்விடத்து யானைக்கும் இருந்த்தாகக் கொண்டு கூறுதல் பொருந்தியதே

ஈற்றடியில் “ஆடுதுமேல்“ “ஆடுதிரேல்“ என்பன பாட பேதங்கள்.

—————————————————————————————–

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-

பதவுரை

ஆளியும்–யாளிகளும்
கோள் அரியும்–வலிமை தங்கிய சிங்கங்களும்
பொன்–பொன்களும்
மணியும்–மாணிக்கங்களும்
முத்தமும்–முத்துக்களும்
பூ மரமும்–பூத்த மரங்களும்
பல மணி நீரோடு பொருது உருளும் கானமும்–பலவகைப்பட்ட ரத்னங்கள் அருவிகளோடே கலந்து உருண்டு விழப்பெற்ற காடுகளும்
வானரமும்–குரங்குகளும்
வேடும்–வேடச்சாதியுமாகிற இவற்றை
உடை–உடையதான
வேங்கடம்–திருமலையானது
நல் மணி வண்ணன் ஊர்–நல்ல நீலரத்னம் போன்ற வடிவை யுடையனான அப்பனுடைய வாஸஸ்தானமாம்

அவனைப் போலே இங்கு உள்ள அனைத்தும் உத்தேச்யம் -யாளிகள் – சிங்கங்கள் -நவ ரத்தினங்கள் -புஷ்ப்ப வ்ருக்ஷங்கள்
-நவ மணிகள் கொழித்து கொண்டு வரும் அருவிகள் -காடுகள் -குரங்குகள் -வேடர்கள்
-இவை எல்லாம் யுடைத்தான திரு மலை மணி வண்ணனுடைய திருப்பதி –

—————————————————————————————–

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-48-

பதவுரை

விண்ணோர்–நித்யஸூரிகளால்
மெய்ம்மையால்–உண்மையான பக்தியுடனே
தொழுவதுவும்—ஆச்ரயிக்கப்படுவதும்
வேங்கடமே–திருமலையே
வினை–பாவங்களையும்
மெய் நோய்–உடம்பைப் பற்றின நோய்களையும்
தீர்ப்பதுவும்–போக்கடிக்க வல்லதும்
வேங்கடமே–திருமலையே
தானவர் வீழ–அசுரர்கள் மாளும்படி
தன் ஆழிபடை தொட்டு–தனது சக்ராயுதத்தைப் பிடித்து
வானவரை–தேவர்களை
காப்பான்–காத்தருளுமெம் பெருமானுடைய
மலை–திருமலை
வேங்கடமே–திருவேங்கடமேயாம்

அசுர ஜாதியால் வரும் துன்பங்களை தேவர்களுக்கு போக்கி அருளியது போலே ஆஸ்ரிதர் துன்பங்களை
தொலைத்து அருள எழுந்து அருளி இருப்பவன் திருவேங்கடத்தான் என்றவாறு –
விண்ணோர் மெய்மையால் -நித்ய ஸூரிகள் உண்மையான பக்தியால் –
ஸுலப்யம் கண்டு அனுபவிக்க ஆஸ்ரயிப்பதும் இவனே –

நித்யஸூரிகள் பரமபதத்திலே எம்பெருமானை இடைவிடாது அநுபவீக்கப்பெற்றாலும் அங்கே பரத்வத்திற்கு உரிய
மேன்மைக் குணங்களை அநுபவிகலாயிருக்குமேயன்றி ஸௌலப்ய ஸௌசீலயங்களுக் குப்பாங்கான எளிமைக் குணங்களை
இந் நிலத்திலே வந்து அநுபவிக்க வேண்டியிருப்பதால் அந்த சீலாதி குணங்களை யநுபவிப்பதற்காகத்
திருமலையில் வந்து தொழும்படியைக் கூறுவது முதலடி.

‘வேங்கடம்‘ என்ற திருநாமத்தின் அவயவார்த்தத்தைத் திருவுள்ளம்பற்றி இரண்டாமடி அருளிச் செய்யப்பட்டது.
வேங்கட பதத்திற்கு ஸம்ஸ்க்ருத ரீதியில் பொருள் விவரிக்குமிடத்து,
வேம்பாவம், கடம் – எரித்தல், பாவங்களை எரிப்பதனால் வேங்கடமென்று பெயர் பெற்றது என்று நிருக்தியுள்ளது.
“வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திடச் செய்வதால் நல், மங்கலம் பொருந்துஞ்சீர் வேங்கடமலை யாதென்று“
என்னும் புராணச் செய்யுளுமுணர்க.

திருமலையின் மேற்கிலுள்ள நந்தநபுரமென்னும் ஊரில் புரந்தரனென்னும் ப்ராஹ்மணோத்தமனது குமாரனாகிய
மாதவனென்பவன் தன் மனைவியாகிய சந்தர்ரேகையென்பவளோடு பூஞ்சோலையிற் சென்று விளையாடிக் கொண்டிருக்கையில்
மாலிநியென்பாளொரு சண்டாள கன்னிகையின் கட்டழகைக்கண்டு காமுற்று அவளைக்கூடி மனையாளைத் துறந்து
அப்புலைமங்கையுடனே சென்று புலால் நுகர்ந்தும் கட்குடித்தும் கைப்பொருள் முழுவதையும் இழந்து
பின்பு வழிபறித்தல் உயிர்கொலை முதலிய கொடுந்தொழில்புரிந்து பொருள்சேர்த்து அவளுக்குக் கொடுத்துவந்து
முடிவில் தரித்ரனாகிப் பலநோய்களை யுமடைந்து அவளால் அகற்றப்பட்டவனாய்ப் பல பாவமுந்தொடரப் பித்தன்போல
அலைந்து திரிந்து இத்திருமலையை அடைந்தமாத்திரத்தில் தனது தீவினையெல்லாம் சாம்பலாகப்பெற்று
முன்னைய ப்ரஹ்மதேஜஸ்ஸைப் பொருந்தி நல்லறிவுகொண்டு திருமாலைச் சேவித்து வழிபட்டுப் பரமபதமடைந்ததனால்
இதற்கு ‘வேங்கடாசலம்‘ என்னும் பெயர் நிகழ்ந்ததென்று வடமொழியில்
ப்ரஹ்மாண்ட புராணத்திலும் பவிஷ்யோத்தர புராணத்திலும் கூறப்படுதல் காண்க.
இங்ஙனே பல இதிஹாஸங்களுண்டு. திருமலை நோய் தீர்க்கும் விஷயம் இப்போதும் பிரத்யக்ஷமாக அனைவருங் காணத்தக்கதாம்.

தேவஜாதிக்கு அஸுரஜாதியால் நேருந் துன்பங்களைத் திருவாழியால் தொலைத்துக் காத்தருளுமெம்பெருமான்
அப்படியே நம்போன்ற ஆச்ரிதர்களினுடையவும் துன்பங்களைத் தொலைத்தருள எழுந்தருளியிருக்குமிடம் திருமலை என்பன பின்னடிகள்.

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -25-36–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

அவன் செய்து அருளும் கார்யங்கள் எல்லாம் ஆஸ்ரிதற்காகவே -ஸ்வயம் பிரயோஜனத்துக்கு அன்று -என்கிறார்

வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஓன்று உண்டே -வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று —25-

பதவுரை

மதியாது–உன் மேன்மையைச் சிறிதும் நினையாமல்
வகையால்–நல்ல உபாயங்களாலே
மண் கொண்டாய்–(மாவலியிடத்தில் இரந்து) பூமியை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டாய்
மற்றும்-அதற்கு மேலும்,
வயிரம்–வயிரமாகிற ரத்னத்தை
வகையால்–ஔஷதாதி உபாயங்களாலே
குழைத்து–இளகச் செய்து
உண்ணும்–உண்பவனும்
தான் என்னும்–தனக்கு மேற்பட்ட பலிஷ்டா ஆருமில்லையென்று அஹங்காரங் கொண்டிருப்பவனுமான
மாவலி–மஹாபலியினுடைய
வயிரம் வழக்கு–சத்ருத்வமுறையை
ஒழித்தாய்–போக்கினாய்
வகையால்–இப்படிப்பட்ட உனது காரியங்களினால்
வருவது ஒன்று உண்டே–உனக்கு ஸித்திப்பதொருபலன் உண்டோ? (எல்லாம் ஆச்ரிதர்க்காகச் செய்கிறாயித்தனை.

எம்பெருமான் செய்தருளுங் காரியங்களெல்லாம் அடியார்களுடைய பிரயோஜனத்திற்காகவே யன்றி
ஸ்வப்ரயோஜநத்திற்காக ஒரு காரியமும் செய்வதில்லை யென்பதை வெளியிடும் பாசுரம்.

மதியாது வகையால் மண்கொண்டாய் – “உபய விபூதிநாதனாயிருக்கிற நாம் யாசகனாகப் போகலாமோ“ என்று
தன் மேன்மையைச் சிறிதும் பாராமல் “ஆச்ரிதனான இந்திரனுக்குக் காரியம் தலைக்கட்டுமளவே வேண்டியது“ என்று
அதனையே பார்த்து யாசகனாயச் செல்லுகையாகிற உபாயத்தினால் பூமியையெல்லாம் ஸ்வாதீநப்படுத்திக் கொண்டாய்.

இரண்டாமடியை முடிவில் அந்வயித்துக் கொள்க.

(வகையால் வயிரங்குழைத்துண்ணும் இத்யாதி) நவரத்னங்களுள் ஒன்றான வஜ்ர்தை இளகுவித்து உண்பர்களாம் உடல் புஷ்டியடைவதற்காக,
மாவலியும் அப்படியே உண்ட ஊன்மல்கிமோடு பருத்திருந்தானும், அப்படிப்பட்ட அவனுடைய அஹங்கார ப்ரயுக்தமான
வயிரவழக்கைப் போக்கினாய். ஈற்றடியிலுள்ள “வயிரம்“ என்ற சொல் “***“ என்ற வடசொல் விகாரம்.

மற்றும் வகையால் வருவதோன்றுண்டே? இவற்றால் உனக்கு வரும் ப்ரயோஜனம் ஏதேனுமுண்டோ?
ஒன்றுமில்லை, பரார்த்தமாகச் செய்தாயித்தனை.

எல்லாம் ஆஸ்ரிதனான இந்திரனுக்காக் செய்தது அன்றோ -அனைத்தும் பரார்த்தமே –

————————————————————————-

அநந்ய பக்த்த்ய நிஷ்டையை அருளிச் செய்து -அடியேனுக்கு இந்நிலைமை நீடித்து இருக்கும் படி
கிருபை பண்ணி அருளிச் செய்ய வேணும் என்கிறார்

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக்கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை
கண்டுகொள் கிற்குமாறு–26-

பதவுரை

கடல் வண்ணா-கடல் போன்ற திருநிறமுடைய பெருமானை!
யான் தொழுவார் மற்று ஒருவரையும் இன்மை–அடியேனால் ஆச்ரயிக்கப்படும் தெய்வம் (நீதவிர) வேறு எதுவுமில்லையென்னும் விஷயத்தில்
கற்றை சடையான்–சேர்த்துக் கட்டின ஜடையை யுடையனான ருத்ரன்
கரி கண்டாய்–ஸாக்ஷிகாண்
யான்–இப்படி அநந்ய பக்தனை அடியேன்
உன்னை–உன்னை
எற்றைக்கும்–எந்நாளும்
கண்டு கொள்கிற்கும் ஆறு–ஸேவித்துக் கொண்டேயிருக்க வல்லேனாம்படி
கண்டு கொள்–கடாக்ஷித்தருள வேணும்.

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா வூழி வூழி த்வம் செய்தார் என்கிறபடியே
-சாதன அனுஷ்டான நிஷ்டன் – ஜடாதரனே சாக்ஷி –அவனே சடை புனைந்து உன்னை உபாசியா நிற்க
-நான் உன்னை ஒழிய ஒரு ஷூத்ர தேவதையைப் பணிவேனோ என்கை
–ஊசியின் பின் நூல் வரும் படி செய்ய -ஐதிக்யம் -வலது திருவடி பெரு விரலில் கண்ணில் -பெரும் ஊழி கனல் —
பக்தி சாரார் -என்றானே ருத்ரன் –இவையெல்லாம் திரு உள்ளம் பற்றி ருத்ரனே சாக்ஷி என்கிறார் –
சாக்கியம் கற்றோம் சமண் கற்றோம் சங்கரன் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம் —விட்டு ஒழிந்து-
அநந்ய பிரயோஜன ஸ்ரீ வைஷ்ணவ நிஷ்டை பெற்று -அத்தை நிலையாக கொள்ள கடாக்ஷித்து அருள பிரார்த்திக்கிறார் –

இவ்வாழ்வார் திருமழிசையில் யோகநிலையில் நின்று திருமகள் கொழுநனை த்யானித்துக் கொண்டிருக்கையில்,
ஒருநாள் ஆகாச மார்க்கத்தில் எருதின்மீது ஏறிக்கொண்டு பார்வதீ பரமேச்வரர் செல்லுகையில்,
பார்வதியானவள் இவரது தவவொழுக்கத்தைக் கண்டு கொண்டாடித் தன் கணவனை நோக்கி “இவன் ஆரோ?“ என வினவ,
“இம்மஹாநுபாவன் நம்மைவிட்டு நாராயணனுக்கு அடிமைப்பட்டவன்“ என்று ருத்ரன் சொன்னவளவிலே அம்பிகை,
“இப்பெரியவனுக்கு நாமும் தரிசனம் தந்து ஏதேனும் வரமளித்துப்போவோம்“ என்றுகூற,
அவளது விருப்பத்தின்படிசெய்ய ஸம்மதித்துச் சிவபிரான் இவரெதிரேவந்து தோன்றினன்,

இவர் அச்சிவனைப் பார்த்தும் பாராதவர்போல உபேக்ஷித்து ஒரு கந்தைத் துணியைத் தைத்துக்கொண்டு கார்யாந்தர பர்ராய் விமுகராயிருக்க,
அதுகண்ட சங்கரன் “உனக்கு அருள்செய்ய வந்த நம்மை நீ அநாதரஞ்செய்தல் தகுதியா?“ என்ன,
ஆழ்வார் “உன்னால் ஆக வேண்டிய எனக்கு ஒன்றுமில்லை, ஆதலின் நான் உதாஸீநனாயிருந்தேன்“
உனக்கு அபீஷ்டமான வரம்வேண்டிப் பெற்றுப்போவாய்“ என்று நிர்ப்பந்திக்க,
அநந்தரம் ஆழ்வார் “பரமபதம் அருளவல்லீராயின் அருள்வீர்“ என வேண்டினார்.
அதற்கு அக்கடவுள் “அது நம்மால் தரத்தக்கதன்று, அது தருதற்கு உரியதேவன் ஸ்ரீமந்நாராயணனே,
ஆதலின் வேறுவரம் வேண்டுதி“ என்ன ஆழ்வார் புன்முறுவல் செய்து “அம்முக்தியைப் பெறும் பொருட்டுப் பலகாலம்
இவ்வுலகில் உயிர்த்திருந்து பெருந்தவம் புரிதற்கு உபயோகமாக நீண்ட ஆயுளையேனும் அடியேற்கு அளித்தருள்“ என்று பிரார்த்தித்தார்.

அதுகேட்டுக் கைலாஸபதி “அது கருமா நுஸாரமாக நடப்பதேயன்றி வளர்த்தத்தக்கதன்று, வேறு வேண்டுவதை விளம்புவாய்“ எனலும்,
திருமழிசைப்பிரான் குறுமறுவலோடு இகழ்ச்சியாய் “இவ்வூசியின் பின்னே நூல் வரும்படி வரம் தந்தருளீர்“ என்று விநோதமாகச் சொல்ல,
அப்பரிஹாஸ வார்த்தை செவிப்பட்டவுடனே கடுஞ்சினங்கொண்ட நெற்றிக்கண்ணன் “இச்செருக்குடையானை இப்பொழுதே
அநங்களைப் போலாக்கிடுவிடுகிறேன்“ என்று தனது நெற்றியிலுள்ள நெருப்புக் கண்ணைத்திறந்து விட்டார்,
அதில் நின்றும் புகையும் பொறியுமாகக் கிளர்ந்தெழுந்த காலக்நியைக்கண்டு திருமழிசைப் பிரான் சிறிதும் கலங்காமல்
“இந்திரன்போல உடம்பு முழுதும் கண்காட்டினாலும் அஞ்சுவேனல்லேன்“ என்று சொல்லித் தம்மு வலத்திருவடியின் பெருவிரலிலுள்ளதொரு
கண்ணைத்திறந்துவிட, அதில் நின்றும் ஒரு பெருந்தீ எழுந்து ஊழித்தீயினும் பன்மடங்கு மேலிட்டு அவ்வனலை அடக்கத்தொடங்கிற்று.
அவ்வளவில் அரன் அக்கடுநெருப்பை அவிக்கும்படி தனது சடையிலுள்ள பல மேகங்களை ஏவிவிட,
அவையும் அங்ஙனமே கல்பரந்த காலத்திற்போலச் சோனைமழை பொழிந்து பெருவெள்ளங்கோக்கவும் ஆழ்வார் சிறிதும் சலியாமல்
பகவத் பத்தியிலே ஊன்றியிருந்தார், அதுகண்டு முக்கணமூர்த்தி மிக வியந்து இவர்க்கு “பக்திஸாரர்“ என்று திருநாமஞ்சாத்தி
இவரது வைபவத்தைக் கொண்டாடித் தன்னிடத்திற்குத் திரும்பிப்போயினன் என்ற வரலாறு
இவ்விடத்தில் ஸ்மரிக்கத்தக்கது இவ்வளவையும் திருவுள்ளம் பற்றியே ஆழ்வார் இங்கு
“கற்றைச்சடையான் கரிக்கண்டாய்“ என்கிறார் என்று கொள்ளலாம். கரி – ஸாக்ஷி, நேரில் கண்ணால் பார்த்தவன் என்கை.

இவ்வாழ்வார் “சாக்கியங்கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூ லாராய்ந்தோம்“ என்றபடியே பல மதங்களினுள்ளும் புகுந்து
அந்தந்த மதஸ்தராகவே இருந்தவராதலால், இப்படி பல மதங்களிலும் புகுந்து அவையெல்லாம் அஸாரமென்று விட்டொழிந்து
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்கு வந்து சேர்ந்ததுபோல், இந்த ஸத்ஸம்ப்ரதாயத்தையும் விட்டு வேறொரு தீயமதத்தில் போய்ச்
சேரும்படியான தௌர்ப்பாக்கியம் இவ்விருள் தருமாஞாலத்தின் காரியமாக நமக்கு நேர்ந்துவிடுமோ என்னவோ! அஞ்சி,
இந்த நிஷ்டையே நிலைத்திருக்குமாறு கடாக்ஷித்தருள வேணுமென்று பின்னடிகளால் எம்பெருமான் தன்னையே பிரார்த்தித்தாராயிற்று.

————————————————————————

தம்முடைய அத்யாவச்யத்தையும் -அதுக்கு அடியையும் அருளிச் செய்கிறார் –

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-

பதவுரை

பேதை காள்–மூடர்களை!,
மால்–எம்பெருமான்
தான் புகுந்த–தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற
மட நெஞ்சம்–(எனது) விதேயமான நெஞ்சிலே
மற்றதுவும்–வேறொன்றை
பேறு ஆக–புருஷார்த்தமாக
கொள்வனோ–நான் கொள்வனோ? (கொள்ள மாட்டேன்)
நீறாடி தான்–நீறு பூசின உடம்பை யுடையனான ருத்ரனும்
காண மாட்டாத–ஸேவிக்க முடியாததும்
தார்–புஷ்பங்களினால் அர்ச்சிக்கப்பட்டதும்
அகலம்–போக்யதையில் அளவிறந்ததுமான
சே அடியை–திருவடியை
யான் காண வல்லேற்கு–ஸேவிக்கும்படியான பாக்கியம் பெற்ற எனக்கு
இது–இப்படிப்பட்ட அத்யவஸாய முண்டாயிற்று.

தம்முடைய அத்யவாஸாயத்தையும் அதன் அடியையும் அருளிச் செய்கிறார்.
உலகத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றைப் புருஷார்த்தமாகப் பேணுவர்,
ஐச்வர்யத்தை நச்சுவர் சிலர், ஸ்வரைக்கலோக போகங்களை அபேக்ஷிப்பர் சிலர், கைவல்யத்தைக் காதலிப்பர் சிலர்.
இப்படி ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்று பேறாக இருக்கும், எனக்கோவென்னில், இவையொன்றும் விருப்பமல்ல.
எம்பெருமான்றானே “இவ்வாழ்வாருடைய நெஞ்சகம் நமக்கு இருப்பிடமாகக் கிடைக்குமா!“ என்று காதலித்துத் தன்பேறாக வந்து
சேரப்பெற்ற எனது நெஞ்சில் அப்பெருமானுடைய நித்ய வாஸமொன்று தவிர மற்றெதுவும் புருஷார்த்தமாகக் கருதப்பட மாட்டாது,
என்று தமது அத்யவாஸாயம் தமக்கு உண்டானபடியைப் பேசுகிறார் பின்னடிகளில்,

நீறாடிதான் இத்யாதியால். 1. “பெண்ணுலாஞ்சடையினாலும் பிரமனு முன்னைக்காண்பான்,
எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார் வெள்கிநிற்ப“ என்கிறபடியே சடையன் தானும் நெடுங்காலம் தவம்புரிந்தும்
எந்தத் திருவடிகளை ஸேவிக்கப் பெற்றிலனோ அந்தத் திருவடிகள் என்க்கு ஸ்வயமாகவே வந்து ஸேவை ஸாதிக்கப் பெற்றதனால்
“இத்திருவடி தவிர வேறொன்றும் நமக்கு ப்ராப்யமல்ல“ என்கிற இந்த அத்யவஸாயம் உண்டாயிற்று என்றவாறு.

“காணவல்ல எனக்கு“ எனப் பிரயோகிக்க வேண்டுமிடத்து “யான் காண வல்லேற்கு“ எனப் பிரயோகிக்கப்பட்டது.

——————————————————————————–

இராமபிரானுடைய வீரச் செயல்களை அனுபவிக்கிறார் -உகப்பு -லீலையான வியாபாரம் –

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-

பதவுரை

இலங்கை–லங்காபுரியானது
ஈடு அழிய–சீர்குலையும் படியாக
கட்டிய–(வானர சேனையைத் துணை கொண்டு) கட்டின
சேது–திருவணை
இது–இது காண்மின்,
விலங்கு–திர்யக் யோநியிற் பிறந்தவனான
வாலியை–வாலியை
வீழ்த்தது–முடித்தது
எய்தான்–அம்புகளைச் செலுத்தின இராமபிரானுடைய
இது–இப்போது நடந்த செயல் காண்மின்,
இலங்கை தான்–லங்காபுரியானது
ஒடுங்க–அழியும்படியாகவும்
வில் நுடங்க–சார்ங்கலில் வளையும் படியாகவும்,
தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க–(அலங்காரமாகக்) குளிர்ந்த பூமாலையணிந்து கொண்டிருந்த
இராவணனுடைய உடல் ஒழியும்படியாகவும்
உகப்பு–விலையான வியாபாரம்
இது–இது காண்மின்

ஆழ்வார் அகக் கண்களுக்கு ஸ்பஷ்டமாக தோற்றி விளங்குவதால் –கட்டிய சேது இது -என்று
கண் முன்னால் கண்டது போலே பேசுகிறார் –
அதே போலே ஸூ க்ரீவன் இடம் பஷபத்தித்துச் செய்து அருளின காரியமும் இப்போதே செய்து அருளியது போலே ஆழ்வாருக்குத் தோன்றுகிறது
வீழ்த்ததுவும் -பாட பேதம் -வெண் தளை பிறழும்
திரு சேது அணை காட்டியதும் வாலியை வதைத்ததும் இராவணனைக் கொன்றதுவும் அவலீலையாயச் செய்தவை என்கிறார் –

இராமபிரானுடைய சில வீரச்செயல்களைப் பேசியநுபவிக்கிறார்.

இலங்கை ஈடழியக்கட்டிய சேது இது-விபீஷணாழ்வான் இராமபிரான் பக்கல் வந்து சேர்ந்து உயந்தபின் பெருமாளைப் பார்த்து
“ஸ்வாமிந்! இந்த நம்முடைய ஸேனைகள் கடலைக்கடந்து அப்பாற் செல்ல வேண்டுமாதலால்
அதற்காகக் கடலாசனை நீர் சரணம்புகவேணும்“ என்ன,
இராமபிரான் “கடலைக் கடக்க உபாயம் சொல்லவேண்டும்“ என்று கடலரசனாகிய வருணைனைப் பிரார்த்தித்துத் த
ர்ப்பசயனத்தில் படுத்து மூன்று நாளளவும் ப்ராயோபவேசமாகக் கிடக்க, ஸமுத்ரராஜன் அப்பெருமானது மஹிமையைக் கருதாமல்
உபேகைஷயாயிருந்து விடவே ஸ்ரீராமன் அதுகண்டு கோபங்கொண்டு “அனைவரும் நடந்தே செல்லும்படி கடலை வற்றசெய்வேன்“ என்று
ஆக்நேயாஸ்த்ரத்தைத் தொடுக்கத்தொடங்கிய வளவிலே வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து
கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு, நளன் கையினால் நீரில்போட்ட கற்களும் மிதக்குமென்று
அவனுக்கு அவன் தகப்பனால் வரமளித்திருக்கிறாரார்,
ஆகையால் அவனைக் கொண்டு ஸேது கட்டவேணுமென்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான்,
இராகவனும் அப்படியே மற்ற வானரங்கள் சுற்றுமுள்ள மலைகளைப் பிடுங்கிக்கொண்டு வந்து நளன் கையில் கொடுக்கச் செய்து
நளன் கையினால் அம்மலைகளை நீரில் போகவிடுத்து ஸேதுகட்டுவித்தான் – என்பது திருவணைகட்டின வரலாறு.
இது என்றைக்கோ நிகழ்ந்ததாயினும் மயர்வற மதிநலதோற்றி விளங்குதலால் “கட்டிய சேது இது“ என்று கண் முன்னே கண்டது போலப் பேசுகிறார்.

இது விலங்கு வாலியை வீழ்த்தது – ஸுக்ரீவன் இராமபிரானோடு ஸ்நேஹஞ்செய்துகொண்டு அவனது நியமனத்தினால்
கிஷ்கிந்தைக்குச் சென்று வீரநாதஞ்செய்ய, அதைகேட்டு வாலி பொறுக்க மாட்டாதவனாய் வெளிக் கிளம்பிவந்து
ஸுக்ரீவனோடு யுத்தஞசெய்யத்தொடங்க, அப்போது இராமன் அவ்விருவரில் இன்னான் ஸுக்ரீவன் இன்னான் வாலியென்று வாசி
கண்டறியாமையால் அம்பு எய்யாதொழியவே, ஸுக்ரீவன் வாலியிடத்துப் பராஜயப்பட்டு வேதனை பொறுக்கமாட்டாமல்
ரிச்யமூகபர்வத்ததுக்கே மீண்டு ஓடிவந்து சேர, இராமன் அம்பு எய்யாத காரணங்கூறி “இப்போது உனக்கு ஒர் அடையாளம் இடுகிறேன்,
மறுபடியும் வாலியை யுத்தத்துக்கு அழை“ என்று சொல்லி அவன் கழுத்தில் ஒரு பூமாலையைச் சுற்றிக் கிஷ்கிந்தைக்குப் போகவிட,
ஸுக்ரீவன் சென்று முன்போலவே வீரநாதஞ்செய்ய, அதைக்கேட்டு வாலி போருக்குப்புறப்பட,
அப்போது அவன் மனைவியாகிய தாரை “ஓ பிராணநாதா! சற்று முன்பு அடிபட்டு ஓடினவன் திரும்பி இப்போதே
சண்டைக்கு அழைக்கின்றமையால் இது வெறுமனன்று, ஏதோ ஒரு பெருத்த ஸஹாயத்தை அண்டைகொண்டு வந்திருக்கவேணும்,
நீ இப்போது திடீரென்று போர்க்குப் புறப்படுவது தகுதியன்று“ என்று சொல்லித் தடுத்தவளவிலும் அவள் வார்த்தையைச் செவியிலும்
கொள்ளாமல் சடக்கெனப் புறப்பட்டுந்து ஸுக்ரீவனுடன் பிணங்கினான், அந்த வாலி ஸுக்ரீவரிருவரும் ஒருவர்க்கொருவர்
கீழே தள்ளுவது மேலே பாய்வது கட்டிக்கொண்டு நெருக்குவது கடிப்பது குத்துவது அடிப்பதாய் வலிதான யுத்தஞ் செய்யுங்காலத்தில்
இராகவன் ஒரு மரத்தடியில் மறைந்திருந்து வாலியைப் பாணத்தினாலடித்தார்,
அந்த பாணத்தினால் வாலி மார்பு பிளந்து கீழே விழுந்துவிட்டான், இதைத் தாரை கேள்விப்பட்டு அங்கதனென்னும் புத்திரனுடன் கூட
ஓடிவந்து வாலியைத் தழுவிக்கொண்டு பலவாறு புலம்பி, பிறகு எதிரில் நின்ற இராமனைப் பார்த்து,
அவருடைய மஹா புருஷலக்ஷணங்களைக் கண்டு இவர் ஸாக்ஷாத் பரமாத்மாவென்று நிச்சயித்துத் துகித்தனள்.
இராமனும் வாலியோடு வாதாடிப் பல ஸமாதானங்கள் சொல்லக் கேட்டு நன்மதிபெற்றுக் கைகூப்பி இராகவனைத் தொழுது
“ஸுக்ரீவனைப்போல் அங்கதனையும் நோக்கிக் கொள்ளவேணும்“ என்று பிரார்த்தித்துவிட்டு ப்ராணனையும் விட்டான் – என்ற வரலாறு அறிக.
ஆச்ரிதனான ஸுக்ரீவனிடத்தில் பக்ஷபாதத்தால் எம்பெருமான் செய்தருளின காரியம் இப்போதுதான் நடந்ததுபோல் ஆழ்வார்க்குத் தோற்றிற்றென்க.

“வீழ்த்ததுவும்“ என்று சிலர்க்குப் பாடமாம், அப்பாடத்தில் வெண்டளை பிறழும்.

திருவணை கட்டினதும் வாலியை வதைத்ததும் இராவணனைக் கொன்றதும் எம்பிரான்
அவலீலையாகச் செய்த செயல்கள் என்றதாயிற்று இப்பாட்டால்.

———————————————————————-

உகப்புருவம் தானே யொளியுருவம் தானே
மகப்புருவம் தானே மதிக்கில் –மிகப்புருவம்
ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால்
அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-

பதவுரை

மிக–மிகவும்
புருவம் ஒன்றுக் கொன்று ஓசனையான்–ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் காதவழி நீளமிருக்கப் பெற்ற கும்பகாணன்
வீழ–ஒழியும்படியாக
அன்றிக் கொண்டு–சீறிக் கொண்டு
ஒரு கணையால்–ஒரு பாணத்தினால்
எய்தானவன்–அடித்து முடித்தவனான இராமபிரானை
மதிக்கில்–சிந்தித்தால்
உகப்பு உருவன் தானே–மநோஹரமான திருமேனியை யுடையவன் அவனே
ஒளி உருவன் தானே–தேஜோ மயமான திருமேனியை யுடையவனும் அவனே,
மகப்பு உருவன் தானே–மிகவும் ஆச்சரியமான வடிவையுடையவனும் அவனே.

எம்பெருமானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தின் வைலக்ஷண்யத்தைப் பேசி அநுபவிக்கிறார்.
உகப்புருவன்தானே கண்டவர்கள் எல்லாரும் உகக்கும்படியான திருவுருவத்தை உடையவன் என்கை.
“தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற்கமலமன்ன
தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கை கண்டாரு மஃதே“ (கம்பராமாயணம்.) என்றது காண்க.
அன்றியே, நம்மைப்போல் கருமங்காரமாக சரீரங்களைப் பரிக்ரஹிக்கையன்றியே
தானே திருவுற்றமுகந்து பரிக்ரஹித்துக் கொள்ளப்பட்ட வடிவையுடையவன் என்றுமாம்.

ஒளியுருவன் தானே – “குழுமித்தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு“ என்கிற படியே
தேஜஸ்புஞஜமே வடிவெடுத்த தென்னலாம்படியான உருவையுடையவன்.

மகப்புருவன் –(மஹாத்புதம்) என்ற வடசொல் “மகப்பு“ எனச் சிதைந்தது, மிகவும் அற்புதமான உருவத்தை யுடையவன் என்றபடி.
இப்படிப்பட்டவன் யாவனென்னில், இராமபிரானென்கிறது பின்னடிகளால்.
கும்பகர்ணனுடைய புருவங்களின் இடைவெளி ஒரு காதவழி யுள்ளதுபற்றி “புருவ மொன்றுக்கொண்றோசனையான்“ என்று
அவனுக்குப் பெயரிடப்பட்டது. “யோஜநா“ என்னும் வடசொல் ஓசனை எனத் திரிந்தது.

——————————————————————————————————

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

பதவுரை

என்னை ஆளி–என்னை ஆட்கொண்டருள்பவனான
அரங்கத்து அவன்–ஸ்ரீரங்கநாதன்
என்னை–என்னை
அரங்கில்–ஸம்ஸாரமாகிற நாடகசாலையில்
எய்தாமல்–பிரவேசிக்க வொட்டாமல்
காப்பான்–காத்தருள்வன்,
அவன்–அப்பெருமான்
என்னது–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
நின்றான் இருந்தான்–நிற்பதும் இருப்பதும் செய்கிறான்,
(ஆன பின்பு இனி)
அவன்–அப்பெருமான்
வெள்ளத்து–திருப்பாற்கடலில்
அரவு–அப்பெருமான்
வெள்ளத்து–திருப்பாற்கடலில்
அரவு அணையின் மேல்–சேக்ஷ சயனத்திலே
கிடக்குமே–பொருந்துவனோ? (பொருந்தமாட்டான்.)

அவன் என்னை எய்தாமல் காப்பான்–சம்சாரம் ஆகிற நாடக சாலையில் பிரவேசிக்க ஒட்டாமல் காத்து அருள்வான் –
திருப் பாற் கடல் போன்ற உகந்து அருளின ஸ்தலங்களை விட்டு என் நெஞ்சில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் ஆகா நின்றான்
குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி துயில் கொள்ளும் அழகைக் காட்டி
என்னை ஆட்படுத்திக் கொண்ட எம்பெருமான் இங்கனம் செய்து அருளி வேறு எங்கும் பொருந்தப்படி இருக்கிறான்
நாடக சாலையில் பல வேஷம் பூண்டு கொண்டு வருவது போலே அநேக சரீரங்களை ஆத்மா பரிஹரித்து வருவதால்
சம்சாரத்தை அரங்கு என்கிறார் -பிறவி மா மாயக் கூத்து -திருவாய் மொழி -8-4-1-

——————————————————————————–

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

பதவுரை

மேல்–முன்பொருகால்
நான்முகன்–பிரமன்
அரனை–ருத்ரனைக் குறித்து
இட்ட–கொடுத்த
விடு சாபம்–சாபத்தை
தாரகையுள்–இந் நிலவுலகத்தில் (உள்ளாரெல்லாரு மறிய)
நாராயணன் தான்–எம்பெருமானே
ஒழித்தான்–போக்கி யருளினன், (அப்படிப்பட்ட)
வானோர் பெருமானை–நித்ய ஸூரி நாதனான ஸ்ரீமந்நாராயணனை
ஏத்தாத–வாய் கொண்டு வாழ்த்த மாட்டாத
பேய்காள்–அறிவு கேடர்களே!
பிறக்கும் கரு–பிறப்பதற்கு அடியான கர்ப்ப ஸ்தானத்தில் (நீங்கள் அநுபவிக்கக்கூடிய)
மாயம்–ஆச்சரியமான துக்கங்களை
பேசில்–சொல்லப் புகுந்தால்
கதை–ஒரு மஹாபாரதம் போலே பரந்திருக்கும்.

எம்பெருமானுடைய பெருமை நாடு நகரமும் நன்கு அறிந்ததாயிருந்தும் அவனை ஏத்தமாட்டாத பாவிகள்
எவ்வளவோ கஷ்டங்களை அநுபவிக்க வுரியவர்கள் என்கிறார்.

ஒரு காலத்தில் பரமசிவன் தன்னைப் போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு
இடமாயிருக்கின்றதென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளி யொடுத்துவிட, அக் கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக் கொள்ளுதலும்,
அவன் “இதற்கு என் செய்வது?“ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும்
“இப்பாவந் தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும், என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்“ என்று உரைக்க,
சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ்சென்று பிச்சையேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நிறையாது நீங்காதாக பின்பு
ஒருநாள் பதரிகாச்ரம்தை யடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது
அப்பெருமான் “அக்ஷயம்“ என்று பிகைஷயிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது – என்பதே
நான் முகனரனையிட்ட விடு சாபம் நாரணணொழித்த வரலாறு.
குரு பாதகத்தைப் போக்கிச் சிவனையும் உய்யக்கொள்ளவல்ல பரதேவதை ஸ்ரீமந்நாராயணன் என்பதை
அறிகின்றிலவே இப்பேய்கள் என்று வருந்துகிறார்.

பிறக்குங் கருமாயம் பேசில் கதை – எம்பெருமானுடைய பெருமையறிந்து அவனை ஏத்தினீர்களாகில் உஜ்ஜீவித்துப் போவீர்கள்,
இல்லையேல், மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து கர்ப்பப்பைகளில் நீங்கள் படநேரும் துன்பங்கள் மஹாபாரதம்போலே
பெரிய கதைப்புத்தகமாக எழுதிவைக்கத் தக்கதாகும் என்றவாறு.

முதலடியில், விடுசாபம் என்றது முழுச்சொல், “விடு“ என்பதற்குத் தனியே பொருளில்லை,
அதை ஒரு உபஸர்க்கம் பொலுக் கொள்க. சாபம் – அநுபவித்தே தீரவேண்டிய பாவம்.

தாரகையுள்–இந்நிலை உலகில் உள்ளார் எல்லாரும் அறிய –
எம்பெருமான் பெருமை நாடு நாற்றமும் நன்கு அறிந்ததாய் இருந்தும் –
அவனை ஏத்த மாட்டாத பாவிகள் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்க உரியவர்கள் -என்கிறார்
அவன் பெருமை அறிந்து ஏத்தினால் உஜ்ஜீவனம்-இல்லையேல் மாறி மாறி பல பிறப்பும் அடைந்து கர்ப்பப் பைகளில்
அடையும் துன்பங்களை பேசப் புக்கால் மஹா பாரதம் ஆகுமே
தாராணியும் -பாட பேதம் –
விடு சாபம் -விடு -உபசர்க்கம் -சாபத்தை -என்றவாறு –

———————————————————————————-

எம்பெருமானுடைய பெருமை நாடு நகரமும் நன்கு அறிந்ததாயிருந்தும் அவனை ஏத்தமாட்டாத பாவிகள்
எவ்வளவோ கஷ்டங்களை அநுபவிக்க வுரியவர்கள் என்கிறார்.

தன்னுடைய ஸங்கல்ப மாத்ரத்தினால் ஸகல பதார்த்தங்களுக்கும் ஸத்தையை விளைக்கின்ற எம்பெருமானுடைய
குணங்களில் ஈடுபட மாட்டாதவர்கள் அஸத்துக்களாவர்,
அங்ஙனாகாமே நீங்கள் அக்குணநிதியின் திருவடிகளைச் சார்ந்து வாழ்மின் என்று சிலரை நோக்கி உபதேசிக்கும் பாசுரம் இது.

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி-32-

பதவுரை

கதை பொருள்தான்–(உலகத்தில்) உயவஹரிக்கப்டுகின்ற பொருள்கள் யாவும்
உதைப்பு அளவு போது போக்கு இன்றி–ஒரு நிமிஷ காலமும் ஓயாமல் (எப்போதும்)
கண்ணன்–எம்பெருமானுடைய
திரு வயிற்றின் உள்ள–ஸங்கல்பத்தில் ஸத்தை பெற்றிருக்கின்றன,
(அப்படிப்பட்ட எம்பெருமானுடைய)
வாய்ந்த குணத்து–திருக்கல்யாண குணங்களில்
படாதது–ஈடுபடாத வஸ்து
வதை பொருள் தான்–அபதார்த்தமே யாகும்,
(ஆகையாலே)
ஆய்ந்த குணத்தான்–சிறந்த திருக் குணங்களை யுடையவனான அப்பெருமானுடைய
அடி–திருவடிகளை
அடைமின்–ஆச்ரயியுங்கோள்

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள-நம்மால் வியவஹிக்கப்படுகின்ற
பதார்த்தங்கள் எல்லாம் அவன் சங்கல்ப அதீனம்
திரு வயிற்றின் உள்ள-சங்கல்பத்தில் சத்தை பெற்று இருக்கின்றன
உதைப்பளவு போது போக்கின்றி-ஒரு நிமிஷ காலமும் ஓயாமல் -எப்போதும் -கண் அமைப்பதும் கை நொடிப்பதும் உதைத்து என்றபடி
அடைமினோ -ஒரு நிமிஷ காலமும் தாமதியாமல் விரைந்தோடி சேர்மினோ என்றபடி
வதைப் பொருள்-தானே – அபார்த்தம் ஆகும்
சங்கல்ப மாத்திரத்தாலே சத்தையை விளைக்கும் எம்பருமான் குணங்களில் ஈடுபடாதவர்கள் அசத்துக்கள் ஆவார்
-குணத்துப் படாதவர் என்னாமல் படாதது -என்றது வெறுப்பினால் குட்டிச் சுவர் என்னுமா போலே
நீயும் அசத்தாகாமல் ஆய்ந்த குணத்தான் -சிறந்த திருக் கல்யாண குணங்களை யுடைய எம்பெருமான் -திருவடிகளை
ஆஸ்ரயிங்கோள் என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

—————————————————————————————–

எம்பெருமானுக்கு ஏற்கனவே ஈச்வரத்வம் இருந்தாலும் அவதரித்துப் பண்ணின சில ஆனைத் தொழில்களால்
அந்த ஈச்வரத்வம் நன்னர் நிலைநிறுத்திக் கொள்ளப்பட்டதென்று சில சேஷ்டிதங்களைப் பேசியநுபவிக்கிறார்.

அடிச் சகடம் சாடி அரவாட்டி ஆணை
பிடுத்து ஒசிதுப் பேய் முலை நஞ்சுண்டு -வடிப்பவள
வாய்பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்து இருத்து
கோப்பின்னும் ஆனான் குறிப்பு-33-

பதவுரை

(எம்பெருமான்)
குறிப்பு–(அடியாரைக் காத்தருள வேணுமென்கிற) திருவுள்ளத்தினால்
அடி–திருவடியாலே
சகடம்–சகடாஸுரனை
சாடி–ஒழித்தும்
அரவு-காளிய நாகத்தை
ஆட்டி–வாலைப் பிடித்து ஆட்டிக் கொழுப்படக்கியும்
யானை–குவலயாபீட மென்னும் யானையை
பிடித்து–பற்றிக்கொண்டு
பின்னைக்கா–நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் ஏறு–கொடிய ரிஷபங்களினுடைய
எருத்து–முசுப்பை
ஒசித்து–கொம்பை முறித்தொழித்தும்
பேய்–பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
முலை–முலையில் தடவியிருந்த
நஞ்சு–விஷத்தை
உண்டு–அமுது செய்து அவளாயிரை மாய்த்தும்
வடி பவளம் வாய் தோளி–அழகிய பவளம் போன்ற வாயையும் தோளையும் வுடையளான
இறுத்து–முறித்தொழித்தும்
பின்னும் கோ ஆனான்–தன்னுடைய சேக்ஷித்வத்தை நிலைநிறுத்திக் கொண்டான்.

அடிச்சகடம்சாடி – நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீ கிருஷ்ணசிசுவை ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிலிட்டு
கண் வளர்த்திய சோதை யமுனை நீராடப் போயிருந்த காலத்து, கம்ஷனாலேவப்பட்ட அஸுரனொருவன் அச்சகடத்தில் வந்து
ஆவேசித்துத் தன்மேல் விழுந்து தன்னைக் கொல்ல முயன்றதையறிந்த திருவடிகளை மேலே தூக்கி யுதைத்து
அச்சகடத்தைச் சிந்நபிந்த மாக்கினனென்க.

அரவாட்டி – ஒருநாள் கிருஷ்ணன் கன்றுகளை ஒட்டிக்கொண்டு ஒருவரும் ஸஞ்சரியாத வழியே போகத் தொடங்க,
மற்றுள்ள இடைப்பிள்ளைகள் அழைத்து “க்ருஷ்ணா! அவ்வழி நோக்க வேண்டா, அவ்வழியிற் சென்றால் யமுநாநதியில்
ஓர் மடுவில் இருந்துகொண்டு அம்மடு முழுவதையும் தன் விஷாக்நியினாற் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப் பானத்துக்கு
அநர்ஹமாம்படி செய்த காளியனென்னுங் கொடிய ஐந்தலை நாகம் குடும்பத்தோடு வாஸஞ்செய்துகொண்டு
அணுகினவர்களனைவரையும் பிணமாக்கி விடுவதால் நாங்கள் அஞ்சுகின்றோம்“ என்ன,
அதைக்கேட்ட கண்ணபிரான் உடனே அக்காளிய நாகத்தைத் தண்டிக்க வேண்டுமென்று திருவுள்ளங்கொண்டு
அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ளதொரு கடம்பமரத்தின்மேலேறித் துவைத்து நர்த்தனஞ் செய்து நசுக்கி வலியடக்குகையில்,
மாங்கலிய பிக்ஷையிட்டருள வேண்டுமென்று தன்னை வணங்கி பிரார்த்தித்த நாக கன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி
அந்தக் காளியனை உயிரோடு கடலிற்சென்று வாழும்படி விட்டருளினன் என்க.

அரவு ஆட்டி எனப் பதம் பிரித்ததுபோல “அர வாட்டி“ எனவும் பிரிக்கலாம்,
“குறியதன்கீழ் ஆக்குறுகலும் அதனோடு, உகரமேற்றலும் இயல்வுமாம் தூக்கின்“ என்ற நன்னூற் சூத்திரமுணர்க.)
அர-காளியநாகத்தை, வாட்டி – வலியடக்கி, என்கை.

யானை பிடித்தொசித்து – வில்விழவுக்கென்று கம்ஸனால் அழைக்கப்பட்டு மதுரைக்கு எழுந்தருளின கண்ணபிரான்
கம்ஸன் அரண்மனையை நோக்கிச் செல்லுகையில் அவ்வரண்மனை வாயில் வழியில் தன்னைக் கொல்லும்படி
அவனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த குவலயாபீடமென்னும் மதயானை சீறிவர, கண்ணபிரான் அதனை யெதிர்த்து
அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை எடுப்பதுபோல எளிதிற்பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு
அடித்து அவ்யானையையும் யானைப்பாகனையும் உயிர் தொலைத்திட்டன்னென்க.

பேய்முலை நஞசுண்டு – பூதனை யென்னும் ராக்ஷஸி கம்ஸனேவுதலால் நல்ல “பெண்ணுருவத்தோடு இரவிலே
திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையை
உண்ணக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப்
பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவள் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின்
கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தன்னென்க.

வல்லேற்றெருத்திறுத்து – நப்பின்னைப் பிராட்டியை மணம் புணர்வதற்காக அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி
யார்க்கும் அடங்காத அஸுராவேசம்பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக்கொண்டு சென்று
வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டன்னென்க.

ஆக இப்படிப்பட்ட விரோதி நிரஸநத் தொழில்கள் செய்து தன்னுடைய ஈச்வரத்வத்தை
ஸ்திரப்படுத்திக்கொண்டா னெம் பெருமான் என்றாராயிற்று.

கோப்பின்னும் ஆனான்-பின்னும் கோ வானான் -தன்னுடைய சேஷித்வத்தை நிலை நிறுத்திக் கொண்டான் –
குறிப்பு-–அடியாரைக் காத்து அருள வேணும் என்கிற திரு உள்ளத்தினால் –
ஈஸ்வரன் பண்ணி அருளிய ஆனைத் தொழில்கள் எல்லாம் தன்னுடைய சேஷித்வம் நிலை பெறவே -என்கிறார்
அரவு ஆட்டி -அரவாட்டி -காளியனை கடலில் விட்டு வாழும் படி -என்றும் வாட்டி -வலி அடக்கி என்றுமாம்

——————————————————————————————-

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

பதவுரை

கோட்டியூர் மேயானை–திருக்கோட்டியூரில் நித்யவாஸம் பண்ணுமவனும்
வேங்கடத்து மேயானை–திருமலையில் நித்ய வாஸம்பண்ணுமவனுமான பெருமானை
ஏத்த–துதிப்பதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு ஆசை
நன்மை பயக்க–(எம்பெருமானை இடைவிடாது அநுபவிப்பதனாலுண்டாகும்) பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு குதூஹலம்,
மெய் வினை–சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும்
நோய்–வியாதிகளும்
எய்தாமல்–வந்து சேராதபடி
தான் கடத்தும் தன்மையான்–தானே அவற்றைப் போக்கியருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வெறுப்பனோ–மறந்திருப்பனோ.

ஏத்த-குறிப்பு எனக்கு -ஸ்திதிக்க எனக்கு ஆசை / நன்மை பயக்க -குறிப்பு எனக்கு -இடைவிடாமல்
நித்ய அனுபவம் செய்வதால் உண்டாகும் பெருமை உண்டாக்கிக் கொள்ள எனக்கு குதூஹலம்
உகந்து அருளின ஸ்தலங்களில் வந்து எழுத்து அருளி என்ன அடிமைக் கொள்ள ஸூ லபனாய் இருக்கும்
எம்பருமான் திருவடிகளை மறந்திருக்க என்னால் முடியுமோ
உகந்து அருளின தேசங்களில் சென்று மங்களா சாசனம் பண்ணி இடைவிடாமல் அனுபவித்து ஆத்மாவுக்கு
நன்மை விளைவித்துக் கொள்ள ஆசை கொண்டு இருக்கிறேன்
எவ்வித கருமங்களும் துக்கங்களும் அணுகாத படி ரக்ஷித்து அருளும் எம்பெருமானுடைய திருவடிகளை
எவ்வாறு உபேக்ஷித்து இருக்கும் இருக்க முடியும் என்கிறார்
வெவ்வினை நோய் –பாட பேதம் –

———————————————————————————————

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

பதவுரை

நீளோதம்–பெரிய அலைகள்
வந்து அலைக்கும்–கரையிலே வந்து வீசப் பெற்ற
மா மயிலை–மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்–திருவல்லிக்கேணியில் நித்யவாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை–ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும்டையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா–வெறுமனே
கிடந்தருளும்–சயனித்திரா நின்றான்
வாய் திறவான்–வாய்திறந்து ஒன்று மருளிச்செய்வதில்லை
(இப்படியிருப்பதற்குக் காரணம்)
தாளால்–திருவடியாலே
உலகம் அளந்த அசவே கொல்–உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?

அர்ச்சாவதாரத்தில் ஒருபடிப்பட -நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் -செய்து ஒரு நாளும் சோதி வாய் திறந்து பேசாமல்
இருப்பான் என்று அறிந்து வைத்தும் -பிரேமத்தின் கனத்தால் -அர்ச்சாவதார சமாதியையும்
குலைத்து பரிமாறப் பாரிப்பார்களே ஆழ்வார்கள் –
கொடியார் மடக் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியால் அல்லல் தவிர்த்த அசைவோ -அன்றேல் இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே–திருவாய் -8-3-5-என்றும்
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசையத் தொடர்ந்து குற்றேவல் செய்து
தொல்லடிமை வழி வரும் தொண்டர்க்கு அருளித் தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் திருப் புளிங்குடி கிடந்தானே–9 -2-3-
இவரே -நடந்த கால்கள் நொந்தவோ –காவிரிக் கரைக் குடைந்தையுள் கிடந்தவாறு எழுந்து இருந்து பேசி வாழி கேசனே-என்கிறார்
அசைவு -அசவு -அயர்வு -பர்யாயம் /-

திருவல்லிகேணி யென்பது, தொண்டைமான் சக்ரவர்த்தியின் பிரார்த்தனையின்படியே திருவேங்கடமுடையான் கண்ணனாகத்
தனது குடும்பத்தோடு ஸேவைஸாதித்த தலம். இத்தலத்துப் புஷ்கரிணி அல்லிப்பூக்கள் நிறையப் பெற்றதனால்
கைரவிணியென்று வடமொழியிலும் திருவல்லிக்கேணி யென்று தென்மொழியிலும் பெயர்பெறும்.
இந்தப் புண்ணிய தீர்த்தத்தின் பெயரை இத்தலத்திற்குப் பெயராயிற்றென்றுணர்க.
இது மயிலையை அடுத்திருக்கிறபடியால் “மாமயிலை மாவல்லிக்கேணி“ எனப்பட்டது.
மா மயிலை மா வல்லிக்கேணியான் -என்றே ஆழ்வார்கள் ஈடுபடுவார்கள்

————————————————————————————

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

பதவுரை

நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
குடந்தை–திருக்குடந்தையிலும்
வெஃகா–திருவெஃகாவிலும்
திரு எவ்வுள்–திருவெவ்வுளுரிலும் (அப்படியே)
நாகத்து அணை–சேஷசயனத்தின் மீது
பால் கடல்–திருப்பாற்கடலிலும்
ஆதி நெடுமால்–ஜகத் காரண பூதனான ஸர்வேச்வரன்
நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
அரங்கம்–திருவரங்கத்திலும்
பேர்–திருப்பேர் நகரிலும்
அன்பில்–அன்பில் என்னுந் திருப்பதியிலும்
கிடக்கும்–பள்ளி கொண்டிருக்கின்றான்
(எதுக்காக வென்னில்)
அணைப்பார் கருத்தன் ஆவான்–அன்பருடைய நெஞ்சில் புகுந்தவனாக ஆவதற்காக.

கீழ்பாட்டில் “ஐந்தலைவாய் நாகத்தணை – கிடந்தருளும்“ என்று சேஷசயநம் ப்ரஸ்துதமாகையாலே
இங்ஙனே திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொண்டு ஸேவைஸாதிக்கப் பெற்ற திருப்பதிகளுள் சிலவற்றைப் பேசியநுபவிக்கிறார்.
அன்பருடைய அந்தரங்கத்திலே புகுவதற்கு ஸமயம் எதிர்பார்த்துக் கொண்டு
திவ்யதேசங்களிலே தங்கியிருக்கிறானென்பதும் இதில் அநுஸந்திக்கப்படுகிறது.

திருக்குடந்தைத் திருவெஃகா, திருவெவ்வுளுர், தென்திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் ஆகிய ஏழு தலங்களில்
நாகத்தணையிலே கிடந்தருள்வது அன்பருடைய ஹ்ருதயத்திலே புகுருகைக்கு அவஸர ப்ரதீக்ஷையாலே யென்கை.

வெஃகா – கச்சித்திருப்பதியில் ஸ்ரீயதோக்தகாரிஸந்நிதி.
திரு எவ்வுள் – எம்பெருமான் சாலிஹோத்ர மாமுனிவனுக்குப் பிரத்ய க்ஷமாகி ‘வஸிப்பதற்கு உரிய உள் எவ்வுள்?‘ என
வினாவியதனால் இத்தலத்திற்குத் திருவெவ்வுளூர் என்று திருநாம்மாயிற்றென்பர்.
“கிம்க்ருஹம்“ என்பது ஸம்ஸ்க்ருதவ்யவஹாரம்.
பேர் – அப்பக்குடத்தான் ஸந்நிதி.
அடிதோறும் ‘நாகத்தணை‘ என்றது போக்யதாசிசயம் தோற்ற.

அணைப்பார் கருத்தனாவான் – நித்ய யுக்த கீதையிற் சொல்லுகிறபடியே எப்போதும் எம்பெருமானோடு
அணைந்தே யிருக்கவேணு மென்று ஆசையுடையார் ‘அணைப்பார்‘ என்ப்படுவர்,
அவர்களுடைய, கருத்தன் – கருத்திலே (திருவுள்ளத்தில) பொருந்தினவானாக, ஆவான் – ஆவதற்காக என்றபடி.

எம்பெருமானுக்கு, பரமபதம் திருப்பாற்கடல் கோயில் திருமலை பெருமாள்கோயில் முதலான உகந்தருளின விடங்களில்
இருப்பத்திற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதயகமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும்,
ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற விடங்களில் எம்பெருமான் தங்குகிறான் என்றும்,
ஆகவே திவ்யதேசங்களில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில்வாஸமே புருஷார்த்னுக்கு திவ்யதேசவாஸத்தில்
ஆதரம் மட்டமாய்விடு மென்றும் ஸ்ரீவசநபூசணத்தில் பிள்ளையுலகாசிரியர் பரமரஸமாக அருளிச் செய்ததெல்லாம்
இப்பாசுரத்தையும் மூலமாகக் கொண்டதாகும்.
“கல்லுங்கனைகடலும் வைகுந்தவானாடும், புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்! –
வெல்ல, நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்“ என்று நம்மாழ்வார்
பெரிய திருவந்தாதியில் அருளிச்செய்த பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தகும்.

——————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -1-12–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

திருமழிசைப் பிரான் திருவாய் மலர்ந்து அருளிய நான்முகன் திருவந்தாதி –
-மூன்றாவது ஆயிரம் இயற்பாவில் நான்காவது பிரபந்தம்
நாலாம் நான்காம் திருவந்தாதி என்னாமல் நான்முகன் திருவந்தாதி -என்றது
-அமலனாதி பிரான் கண்ணி நுண் சிறுத் தாம்பு போலே —முதல் குறிப்பு இலக்கண வகை –

எம்பெருமானுடைய அனுக்ரஹ விசேஷத்தாலே -மயர்வற மதி நலம் அருள பெற்று -திவ்யாத்மா ஸ்வரூபத்தையும் –
திருக் கல்யாண குணங்களையும் -திவ்ய மங்கள விக்ரஹத்தையும்-இவற்றை இடைவிடாமல் அனுபவிக்கும் பிராட்டிமார்களையும்
-இவர்கள் சேர்த்தியில் கிஞ்சித்க்கரிக்கும் ஸூ ரிகளையும் -இவற்றுக்கு ஏகாந்தமான பரமபதத்தையும் -லீலா விபூதி யோகத்தையும்
உள்ளபடியே சாஷாத்கரித்து அனுபவித்து மார்க்கண்டேயாதிகளைப் போலே நெடும் காலம் சம்சார மண்டலத்தில்
காலம் சென்றது அறியாதே எழுந்து அருளி இருந்து சேதனர் பலரும் ரஜஸ் தமஸ் குணங்களுக்கு வசப்பட்டு
-வசன ஆபாசங்களைக் கொண்டும் தேவதாந்த்ர வழிபாட்டால் வைதிக மார்க்கத்தில் நின்றும் விலகி குத்ருஷ்ட்டி மார்க்கம்
பேணி சம்சாரத்தையே வளர்த்திக் கொண்டு அநர்த்தப் படுகிற படியைக் கண்டு
பொறுக்க மாட்டாத பரம கிருபையினால் தேவதாந்த்ர பரத்வத்தை நிராகரித்து -ஸ்ரீ மன் நாராயண பாராம்யத்தை ஸ்தாபித்து
அனைவரும் பகவத் பிரவணராம் படி திருத்தி அருளுகிறார் இப்பிரபந்தத்தால் –

—————————————–

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –ஸ்ரீ ராமபிள்ளை அருளிச் செய்த தனியன் –

—————————————

ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை அழுத்தமாக அருளிச் செய்கிறார் -இப்பிரபந்தம் தலைக் கட்டும் இடத்தும்
-இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -என்று தலைக் கட்டி
நடுவில் பல பாசுரங்களால் தேவதாந்த அபூர்த்தியையும் ஸ்ரீ மன் நாராயணனின் பூர்த்தியையும் அருளிச் செய்வதால்
பரத்வ ஸ்தாபனத்தில் நோக்காய் இருக்கும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

பதவுரை

நாராயணன்–பரமபுருஷனானவன்
நான்முகனை–பிரமனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
நான்முகனும்–அந்தப் பரமனும்
தான்–தானே
முகம் ஆய்–முக்கியனாயிருந்து
சங்கரனை–சிவனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
ஆழ் பொருளை–(ஆகவே, முழு முதற் கடவுள் ஸ்ரீமந் நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை
யான்–அடியேன்
முகம் ஆய்–முக்கியமாக
அந்தாதி மேல் இட்டு–இத்திருவந்தாதி மூலமாக
அறிவித்தேன்–உங்கட்கு அறிவிக்கத் தொடங்குகின்றேன்
நீர்–நீங்கள்
தேர்ந்து–ஆராய்ந்து
சிந்தாமல் கொள்மின்–(இவ்வர்த்தத்தைக் குறையற நெஞ்சில் தேக்கிக் கொள்ளுங்கள்.

தான்முகமாய் -தானே முக்கியமாய் இருந்து –
ஆழ்பொருளை-(ஆகவே, முழுமுதற் கடவுள் ஸ்ரீமந்நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை

இவ்வாழ்வாருடைய காலத்தில் தேவதாந்தர பரத்துவம் கொள்ளும் மாதாந்தரஸ்தர்கள் மலிந்திருந்ததனால்
அவர்களைத் திருத்தி வழிப்படுத்த வேண்டுவது அவசியமாயமைந்தது,
ஆகவே, தொடங்கும்போதே ஸ்ரீமந்நாராயண பரத்வத்தை அழுத்தமாகப் பேசுகின்றார்,
இப்பிரபந்தம் தலைக்கட்டுமிடத்தும் “இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்குந் தெய்வம், இனியறிந்தேனெம் பெருமானுன்னை” என்று
தலைக்கட்டுவராதலாலும், இடையிலும் பலபல பாசுரங்களினால் தேவதாந்தரங்களின் அபூர்த்தியையும் பரமபுருஷனுடைய பூர்த்தியையுமே
பேசுவராதலாலும் இப்பிரபந்தம் பெரும்பாலும் பரதத்வஸ்தாபநத்தில் நோக்குடைத்தாயிருக்கும்.

நான்முகனை நாராயணன் படைத்தான்-
நாம ரூப அர்ஹம் இன்றி காரிய பொருள்கள் யாவும் தன்னிடமே லயம் அடைந்து -சதேவ சோம்ய ஏக மேவ அத்விதீயம் -என்று இருக்க
தன் சங்கல்பத்தாலே பஹுஸ்யாம் ப்ரஜாயேய -சமஷ்டி பதார்த்தங்களை ஸ்ருஷ்டித்து -நான்முகனைக் கொண்டு வ்யஷ்டி பதார்த்தங்களை ஸ்ருஷ்டிக்க வேண்டி-
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை -என்கிறபடி திரு நாபீ கமலத்தில் நான்முகனை படைத்து அருளினான் –
பிரமன் வேதங்கள் கொண்டே ஸ்ருஷ்டி செய்ய வேண்டி இருப்பதாலும் -அந்த வேதங்கள் நான்கு வகைப் பட்டு இருப்பதாலும்
அவற்றை உச்சரிக்க நான்கு முகங்கள் கொண்டவன் என்பதாலும் நான்முகனை –என்கிறார் -பிரமனை -என்னாதே –
நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்

தானே தலைவனாய் நின்று சம்ஹாரக் கடவுள் சங்கரனைப் படைத்தான் –
புத்ரன் விநயம் அற்று வழி கெட நடந்தால் தந்தை அவனை விலங்கிட்டு வைப்பது போலே உலகோர் வழி கெட நடந்து
அநர்த்தம் விளைவித்துக் கொண்டால் கரண களேபரங்களை விநாசம் செய்து தீர வேண்டுவதால் சங்கரனைப் படைத்தான் –
சங்கரன் என்றசொல் (‘***.’ என்னும் ஸம்ஸ்க்ருத வ்யுத்பத்தியால்) நன்மை செய்பவன் எனப் பொருள்படும்,
மேன்மேலும் கேடுகளை விளைத்துக்கொள்ள வொண்ணாதபடி கரணகளே பரங்களை ஒடித்துவைப்பதாகிற
ஸம்ஹாரம் நன்மையேயாதலால் இதுதோன்ற இங்கு ‘உருத்திரனை’ என்னாது ‘சங்கரனை’ என்றார்.
யான்முகமாய்-அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்-சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து-சர்வ சேஷியான ஸ்ரீ மன் நாராயணனே உத்பாதகன்
-இவனைத்தவிர பிறிது ஒன்றும் பர தெய்வமாக கொண்டாட வழி இல்லை என்ற ஆழ்ந்த பொருளை
கல் வெட்டும் செப்பு வெட்டுமா போலே பிரபந்ததீ கரித்து அறிவிக்கிறேன்
சம்சாரத்தின் பொல்லாங்கையும் நான் சொல்லுகிற அர்த்தத்தை அருமை பெருமைகளையும் ஆராய்ந்து
நெஞ்சில் நின்றும் நழுவி மங்கிப் போகாத படி உள்ளத்தே தேக்கிக் கொள்ளுங்கோள்-என்று துடை தட்டி உணர்த்துகிறார்
தொடங்கும் பொழுதே அறிவித்தேன் -என்று இறந்த காலத்தில் அருளிச் செய்தது –எம்பெருமான் -ஸத்ய சங்கல்பனாகையாலும் தன்னுடைய உறுதியாலும்
இப்பிரபந்தம் தலைக் கட்டி விட்டதாக நினைத்து அருளிச் செய்கிறார் -கால வழுவமைதி -என்பர் –
ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே-தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் —
அவர்கள் சம்சாரத்தை வளர்ச்சி செய்து வைக்க நான் அன்றோ வேர் அறும் படியாக ஆழ் பொருளை அறிவிக்க முற்படுகிறேன் -காண்மின் -என்கிறார் –

————————————————————————————

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2–

பதவுரை

தேருங்கால்–“ஆராயுமிடத்து.
தேவன் ஒருவனே என்று–பரதெய்வமாக வுள்ளவன் ஸ்ரீமந்நாராயணனொருவனே“ என்று
உரைப்பர்–(வியாஸர் முதலிய மஹர்ஷிகள்) சொல்லுவர்,
அவன் பெருமை–அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய பெருமையை
ஆரும் அறியார்–ஒருவரும் அறியமாட்டார்
ஒரும் பொருள் முடிவும் இத்தனையே–(வேத வேதாங்கங்களில்) ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம்
எத் தவம் செய்தார்க்கும் –(எப்படிப்பட்ட ஸாதநாநுஷ்டா நாங்களைப் பண்ணினவர்கட்கும்
முடிவது–முடிவில் பலனையளிப்பது
ஆழியான் பால் அருள்–எம்பெருமானிடத்து உண்டாகும் கிருபையேயாம்.

தேருங்கால் தேவன் ஒருவனே என்று -ஆராயும் இடத்து பர தெய்வமாக உள்ளவன் ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே என்று
உரைப்பர்–வியாஸாதி மஹரிஷிகள் சொல்லுவார்
தத்வம் ஜிஜ்ஞாஸமாநாநாம் ஹேதுபிஸ் ஸ்ர்வதோமுகை – தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயணஸ் ஸ்ம்ருத“ என்ற
பிரமாணத்தைத் திருவுள்ளம் பற்றித் “தேருங்கால் வேனொருவனே யென்றுரைப்பர்“ என்கிறார்.
ஒரும்-பொருள் முடிவும் இத்தனையே –வேத வேதாந்தங்களில் ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம் –
எத்தவம் செய்தார்க்கும்-எப்படிப்பட்ட சாதன அனுஷ்டானங்களை பண்ணினவர்க்கும்
முடிவது ஆழியான் பால் அருள் –முடிவில் பலனை அளிப்பது எம்பெருமான் இடத்து உண்டாகும் கிருபையேயாம் –

மற்றவர்கள் அவனுக்கு அங்க பூதங்களே–அவனது பரத்வம் -ஸுலப்யம் -ஸுசீல்யம் வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -இவற்றால்
அவன் பெருமையை அளவிட வல்லார் யாரும் இல்லை-தாமும் தம் பெருமை அறியார் -பெரிய திரு -5-2-1–என்பர் கலியனும்-
அவனே பெருமையில் சிறந்த பராத் பரன் -அவனது நிர்ஹேதுக கிருபையினாலேயே அவன் ப்ராப்யன் -என்றதாயிற்று –

இப்படிப்பட்ட எம்பெருமானை யடைவதற்கு, கருமம் ஞானம் பக்தி முதலிய உபாயங்கள் சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டிருந்தாலும்
அப்பெருமானுடைய திருவருளின்றி எந்த ஸாதநாநுஷ்டானமும் கார்யகா மல்லாமையாலே
அவனது நிர்ஹேதுக க்ருபைக் கொண்டே அவன் பெறத்தகுந்தவன் என்கிற ஸகலசாஸ்த்ர ஸாரப்பொருளைப் பின்னடிகளில் வெளியிடுகிறார்.
பகவானைப் பெறுகைக்கு உபாயமாக எப்படிப்பட்ட தபஸ்ஸை அநுஷ்டித்தாலும் அது ஸாகஷாத்தாகப் பலன் பெறுவிக்க மாட்டாது,
அப்பகவானுடைய திருவருளே பலனளிக்கவல்லது என்றவாறு.
எந்த சாஸ்த்ரத்தை அவிழ்த்துப் பார்த்தாலும் ஸாரார்த்தம் இதுவே விளங்குமென்கிறார் ஓரும் பொருள்முடிவு மித்தனையே என்பதனால்,
கூரத்தாழ்வா னருளிய வரதராஜஸ்வத்தில் – இவ்வர்த்தம் வெளியிடப்பட்டதென்க.

ஆக இப்பாட்டால் – ஸ்ரீமந்நாராயணனே பெருமையிற்சிறந்த பரதேவதை, அவனுடைய நிர்யேதுக க்ருபையினாலேயே
அவன் ப்ராப்யன் என்கிற இரண்டு அர்த்த விசேஷங்கள் வெளியிடப்பட்டன வாயின.

—————————————————————————————-

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

பதவுரை

(எம்பெருமான்)
பாலில்–திருப்பாற்கடலில்
கிடந்ததுவும்–சயனித்தருளு மழகையும்
அரங்கம்–திருவரங்கம் பெரிய கோயிலில்
மேயதுவும்–பொருந்தி வாழ்வதையும்
பண்டு–முன்பொருகால்
ஆலில்–ஆலந்தளிரில்
துயின்றதுவும்–பள்ளி கொண்ட விதத்தையும்
ஆர் அறிவார்–யார் அறிய வல்லார்?
ஞாலத்து ஒரு பொருளை–இப் பூமியில் வந்தவதரித்த விலக்ஷண புருஷனாயும்
வானவர் தம் மெய் பொருளை–நித்ய ஸூரிகளுக்குப் பிரத்யக்ஷமாக அநுபவிக்கத் தகுந்த வஸ்து வாயும்
அப்பில் அரு பொருளை– (ஸலகலத்துக்கும் காரணமாக முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட) ஜலதத்வத்தினுள்
கண் வளரும் அரும்பொருளாயுமிருக்கின்ற எம்பெருமானை
யான் அறிந்த ஆறு–அடியேன் அறிந்த விதம் என்ன!

ஞாலத்-தொரு பொருளை -பூமியில் திருவவதரித்த விலக்ஷண புருஷன் –துணையற்ற காரண வஸ்து -என்றுமாம்
வானவர் தம் மெய்ப் பொருளை-நித்ய ஸூ ரிகளுக்கு பிரத்யக்ஷமாக அனுபவிக்காத தகுந்த வஸ்து வாயும்
அப்பில்-அரு பொருளை -சகலத்துக்கும் காரணமான முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜல தத்துவத்தில்
கண் வளரும் அறும் பொருளாய் இருக்கும் எம்பெருமானை -நன்மைப் புனல் பண்ணி-திருவாய் -7-5-4-

கீழே ஆரும் அறியார் அவன் பெருமை என்றார் –
தன் தாளும் தோளும் முடிகளும் சமன் இல்லாத பல பரப்பி திருப் பாற் கடலிலே சயனித்து இருக்கும் அழகிலே
நான் ஈடுபட்டு இருக்கும் வண்ணம் யார் ஈடுபடுவார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்கிறபடி அக்கிடை அழகில்
வியாமோஹித்து இருப்பவன் நான் ஒருவனே –
திருவரங்கம் பெரிய கோயிலிலே உபய காவேரீ மத்யத்திலே என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கிற படி
பரம போக்யமாயும் அத்யந்த ஸூலபமாயும் சந்நிதி பன்னி சேவை சாதிக்கும் அருளின் போக்யத்தையும் ஸுலப்யத்தையும் நான் ஒருவனே வாய் வெருவுவேன்
ஆலிலைத் தளிரில் அக்கடிகடனா சாமர்த்தியத்தை மெச்சுகிறவன் நான் ஒருவனே அன்றி வேறு ஒருவர் உண்டோ
நான் அறிந்த வாறு — விதம் ஆச்சர்யம் —ஆர் அறிவார் -என்று கீழோடே சேர்த்து ஏக வாக்யமாகவுமாம் –

——————————————————————————-

ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4-

பதவுரை

ஆறு–கங்கா நதியை
சடை–தனது ஜடா மண்டலத்திலே
கரந்தான்–மறையச் செய்து தாங்கிக் கொண்டிருக்கின்ற ருத்ரன்
அண்டர் கோன் தன்னோடும்–தேவாதி தேவனான ஸர்வேச்வரனோடு
கூறு உடையன் என்பதுவும்–ஸாம்யமுடையவன் என்று (பாமரர்) சொல்லுஞ் சொல்
கொள்கைத்தே–அங்கீகரிக்கத் தகுந்த்தோ? (அல்ல)
வேறு ஒருவர் இல்லாமை நின்றானை–வேறொரு தெய்வமும் தனக்கு ஒப்பாக இல்லாமல் வீறு பெற்றிருப்பவனும்
எப்பொருட்கும் சொல்லானை–எந்தப் பொருளைச் சொல்லுகிற சப்தமும் தனக்கு வாசகமாம்படி (ஸாவ சப்த வாச்யனாய்) உள்ளவனுமான
எம்மானை–எம்பெருமானை
தொகுத்து சொன்னேன்–சுருங்கப் பேசினேனித்தனை.

“ருத்ரனும் ஸ்ரீமந்நாராயணனைப் போலவே பரதேவதை“ என்று சிலர் மயங்கிக்கிடக்கிறார்களே,
இப்படியும் ஒரு ப்ரமம் இருக்குமோ? தேவாதி தேவனான எம்பெருமான் எங்கே?
அவனுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை சிரஸாவஹித்துத் தூய்மை பெற்ற சிவன் எங்கே?
இவ்விருவரையும் ஸமமாகச் சில அவிவேகிகள் சொன்னால் இதனை அறிவுடையார் அங்கீகரிக்கக் கூடுமோ வென்கிறார் முன்னடிகளில்.

கங்கை சிவனுடைய சடையில் மறைந்திருப்பதுபற்றி அவனுக்கு ஆறுசடைக் கரந்தான் என்று பெயரிடப்பட்டது.
கரத்தல் – மறைத்தல். சிவனுக்குப் பல பெயர்களிருக்க இங்கு இந்தப் பெயரையிட்டுச் சொன்னது – கருத்துடன் கூடியது,
எந்த ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீபாததீர்த்தத்தை ருத்ரன் சிரஸாவஹித்துப் புனிதனாயின்னோ,
அந்த ருத்ரனை ஸமனாகச் சொல்வது பொருந்தாதென்பதைக் காட்டினபடி “

கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே–சாம்யம் உடையவன் என்று பாமரர் என்றும் சொல்லும் சொல் அங்கீகரிக்கத் தக்கதோ -அல்லவே –
ஸ்ரீ மானுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தை ருத்ரன் சிரஸா வஹித்து புனிதனாயினவனை சமமாகச் சொல்வதோ –
அண்டர்கோன் -தேவர்க்கும் இடையாருக்கும் தலைவன் -தேவாதி தேவன் கோபால கிருஷ்ணன் என்றுமாம்
அஹம் க்ருத்ஸ் நஸ்ய -ஜகதா பிரபவ ப்ரளயஸ் ததா –மத்த பரதரம் நான்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –ஸ்ரீ கீதை -7-7-
அபாயவச நவ்ருத்தி -சர்வ சப்தங்களுக்கு -சர்வ அந்தர்யாமி -சர்வ சரீரி -பரமாத்மா வரையில் பர்யவசிக்குமே –

எப்பொருட்கும் சொல்லுவதொன்றுண்டு, அதாவது – உலகத்தில் பிரயோகிக்கப்படும் ஸகல சப்தங்களும்
ஸர்வாந்தர்யாமித்வேந ஸர்வசரீரியாயிருக்கின்ற பரமாத்மாவரையில் வாசகங்களாகும் என்பது,
அந்த சக்தியாலே எப்பொருமாளுக்கு வாசகமான சொல்லும் எம்பெருமானைத் தொட்டுத் தீருமாதலால்
‘எப்பொருட்கும் சொல்லானை‘ என்கிறார்.

———————————————————————————

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-

பதவுரை

தொகுத்த வரத்தன் ஆய்–(தவஞ்செய்து) ஸம்பாதிக்கப் பட்ட வரங்களை யுடையனாய்
தோலாதான்–ஒருவரிடத்திலும் தோல்வி யடையாதவனாயிருந்த இரணியனுடைய
மார்வம்–மார்பை
வகிர்த்த–இரு பிளவாகப் பிளந்தொழித்த
வளை உகிர்–வளைந்த நகங்களைக் கொண்ட
தோள்–திருக் கைகளை யுடைய
மாலே-ஸர்வேச்வரனே!,
நீ–நீ,
உகத்தில்–பிரளய காலத்தில்
உள் வாங்கி–(உலகங்களை யெல்லாம்) உபஸம்ஹரித்து உள்ளே யிட்டு வைத்து
ஒரு நான்று–(மீண்டும் ஸ்ருஷ்டி காலமாகிற) ஒரு மையத்தில்
உயர்த்தி–(அவ்வுலகங்களை யெல்லாம்) வெளியிட்டு வளரச்செய்து
நீயே–இப்படிப்பட்ட நீயே
நான்கும்–(தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால்வகைப் பொருள்களிலும்
அரு ஆனாய்–அந்தராத்மாவானாய்
அறி–இதனை அறிவாயாக.

வேறொருவர்-இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்-சொல்லானைச்-என்றத்தை விவரிக்கிறது -இப்பாட்டு –
அனைத்து உலகும் அனைத்து உயிரும் அமைத்து அளித்துத் துடைப்பது -நீ நினைத்த விளையாட்டு –
கருத்தரிய உயரிக்கு உயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் தனி நாயகன் நீ
வர பலம் -ஸுராஸுரர் நரர் கையில் -பாரில் சுடர் வானில் -பகல் இரவில் -உள் புறம்பில் -பெரு படையில் தான் சாகா இரணியன் தன்னை
பிரகலாதன் தர்க்கித்து உண்டு என்ற தூணில் நரஹரியாய் பொழுது புகு நேரம் தன்னில் நாடி உதித்து -உயர் வாசல் படி மீதேறி
-இரணியனைத் தொடை மிசைவைத் துகிரினாலே இரு பிளவாக்கினை யரியே எம்பிரானே-
யுகத்தில் -உகந்த காலத்திலே –
உயர்த்தி -என்பதனால் -ஸ்ருஷ்டி கர்த்ருத்வமும் –
உள் வாங்கி -சம்ஹார கர்த்ருத்வமும் –
நான்கும் அருவானாய் -ஸ்திதி கர்த்ருத்வமும் -கூறப்பட்டன –அரூபி -வடசொல் அரு –வானது
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளேயே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் -என்கிறபடியே
தேவாதி நான்கிலும் அந்தர்யாமியாய் இருந்து நிர்வாஹகானாய் இருக்கிறார் என்கிறதாயிற்று –

கீழ்ப்பாட்டில் “வேறொருவரில்லாமை நின்றானை“ என்றும் “எப்பொருட்கும் சொல்லானை“ என்றும் சொன்னதை விவரிக்கிறது இப்பாட்டு.
அனைத்துலகும் அனைத்துயிரும் அமைத்தளித்துத் துடைப்பது நீ நினைத்த விளையாட்டு, கருதரிய வுயிர்க் குயிராய்க்
கரந்தெங்கும் பரந்துறையும் ஒரு தனி நாயகம் நீ, ஆகவே உனக்குச் சொல்லும் ஏற்றமெல்லாம் பொருந்தும் பிரானே! என்றாராயிற்று.

தொகுத்தவரத்தனாய்த் தோலாதான் –
தேவன் மனிதர் முதலிய எவ்வுயிர்களாலும் பகலிலும் இரவிலும் வானத்திலும் பூமியிலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும்
அஸ்த்ர சாஸ்த்ரங்களொன்றினாலும் ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் தனக்கு மரண முண்டாகாதபடி
இரணியன் பல வரங்கள் பெற்று ஆங்காங்கு வெற்றியே பெற்றுவந்தானென்க.
ப்ரஹ்ம ஸ்ருஷ்டிக்கு உட்பட்ட எந்த பிராணியினாலும் சாகாதபடி அவன் பெற்ற வரம் பழுது படாமைக்காக நரங்கலந்த சிங்கமாய்
ப்ரஹ்ம ஸ்ருஷ்டியினுட்படாமல் தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்டு தோன்றின்னென்பதும் –
அஸ்தர சஸ்த்ரங்களொன்றினாலும் சாகாதபடியும் பெற்றவரம் வீண் போகாமே நகங்களினால் கீண்டு கொன்றன்னென்பதும்,
பகலிலும் இரவிலும் சாகாதபடி. பெற்ற வரம் பொய்படாதபடி அப்பகலிரவுகளின் ஸந்தியாகிய மாலைப்பொழுதிலே கொன்றனனென்பதும்,
பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்ற வரம். மெய்யாம்படி தன் மடிமீது வைத்துக் கொன்றன னென்பதும்,
வீட்டின் அகத்திலும் புறத்திலும் இறவாதிருக்கும்படி பெற்ற வரத்திற்கு விரோதமின்றி வாசற்படிமீது வைத்துக் கொண்டு கொன்றன னென்பதும்
இவை போல்வன பல விசேஷங்களாம்.
“சுரரசுரர் முனிவர் நரர் கையில் பாரில் சுடர்வானில் பகலிரவில் உள்புறம்பில்,
பெருபடையில் தான் சாகா விரண்யன்றன்னைப் பிரகலாதன் தர்க்கித்துண்டென்ற தூணில்,
நர ஹரியாய்ப் பொழுதுபுகுநேரந்தன்னில் நாடியுதித்துயர் வாசற்படி மீதேறி,
இரணியனைத் தொடைமிசைவைத் துகிரினாலே இருபிளவாக்கினை யரியே எம்பிரானே!“ என்றார் பின்னோரும்.

உகத்தில் – யுகர்ந்த காலத்தில் என்றபடி. ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கு நீயே கடவனாயிருக்கின்றாய் என்பது
பின்னடி களிற் சொல்லப்படுகின்றது. “உயர்த்தி“ என்பதனால் ஸ்ருஷ்டி கர்த்ருத்வமும்,
“உள்வாங்கி“ என்பதனால் ஸம்ஹார கர்த்ருத்வமும்
“நான்கும் அரு ஆனாய்“ என்பதனால் ஸ்திதிகர்த்ருத்வமும் வுறப்பட்டனவாயின.
“அரூபி“ என்னும் வடசொல் “அரு“ என்று கிடக்கிறது.
இராமடமூட்டுவாரைப்போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும்“ என்கிறபடியே,
தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால்வகைப் பொருள்களிலும் பதிந்திருந்து
அவற்றின் ஸத்தைக்கு நிர்வாஹகளாயிருக்கின்றாய் என்றவாறு.

——————————————————————————————-

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்-என்கிறபடியே
மாதாந்தஸ்தரர்கள் பாழாக போனார்கள் என்று திரு உள்ளம் நொந்து வயிறு எரிந்து பேசும் பாசுரம் இது –

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று –6–

பதவுரை

சமணர்–ஜைநர்கள்
அறியார்–உண்மையை அறிய மாட்டார்கள்
பவுத்தர்–பௌத்தர்கள்
அயர்த்தார்–பிரமித்தார்கள்
சிவப்பட்டார்–சைவ மதஸ்தர்கள்
சிறியார்–மிகவும் நீசராகி யொழிந்தனர்
செப்பில்–இவர்களுடைய தன்மைகளைச் சொல்லப் புகுந்தால்,
வெறி ஆய–பரிமளமே வடி வெடுத்தது போன்றுள்ளவனும்
மாயவனை–ஆச்சரியமான குண சேஷ்டிதங்ளை யுடையவனும்
மால் அவனை–(அடியார் திறத்தில்) வியாமோஹ முள்ளவனும்
மாதவனை–திருமகள் கொழுநனுமான எம்பெருமானை
ஏத்தாதார்–(இவர்கள்) துதிக்க மாட்டாதவர்களா யிரா நின்றார்கள்,
ஆதலால்–ஆகையினாலே
இன்று–இப்போது
ஈனவரே–(இவர்கள்) நீசர்களே யாவர்.

சப்த பங்கியை அங்கீ கரித்து -சத் -அஸத் -ஏகம் -அநேகம் -அநேகாந்தம் -ஒன்றுக்கு ஓன்று பொருந்தாமல்
தோற்றினத்தையே சொல்லும் ஜைனர் -அவிவிகேகிகளாய் ஒழிய
ஞாதா ஜேயம்-எல்லாம் க்ஷணிகம் -ஸ்திரனாய் இருப்பான் ஆத்மா இல்லை என்றும் -க்ஷணிக ஞான சந்ததியே ஆத்மா
-என்று பேய்க்கத்து-கத்தும் புத்தர்கள் பிராமண கதியை மறந்து ஒழிந்தனர்
படைக்கப்படும் பொருளில் ஒன்றான -அநீஸ்வரனான ருத்ரனை பர தெய்வம் உபபாதிக்கும் சைவ மத நிஷ்டர்கள் நீசர்கள்
ஆன் விடை ஏழு அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -பெரிய திருமொழி-11-7-9-
-விமுகராய் ஒழிந்தவர்கள் எல்லாம் மண்ணின் பாரமே
வெறியாய் -சர்வ கந்த -பரிமளம் வடிவெடுத்தவன் –

இப்படி தனித்தனியே பிரித்துச் சொல்லுவானேன்? இவர்களெல்லாரும் திருமாலை ஏத்தமாட்டாத பாவிகளாதலால்
அனைவருமே நீசர் என்று கொள்ளவேணு மென்கிறார் பின்னடிகளில்.

———————————————————————————————–

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-

பதவுரை

நாரணனே–நாராயணனே!,
இன்று ஆக–இன்றைக்காகவுமாம்
நாளையே ஆக–நாளைக்காகவுமாம்
இனி சிறிது நின்று ஆக–இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்)
நின் அருள்–உன்னுடைய கிருபை
என் பாலதே–என்னையே விஷயமாக வுடையதாகும்
நன்று ஆக–நிச்சயமாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்–நான் உன்னை யொழியப் புகலில்லாதவன் காண்
நீ–நீயும்
என்னை அன்றி இலை–என்னை யொழிய வேறொரு ரஷ்யனை உடையை யல்லை காண்.

ஆழ்வீர்! மதாந்தரஸ்தர்களை யெல்லாம் ஈனவரேயென்று இழித்துச் சொன்னீர், உமக்குண்டான ஏற்றம் யாது? என்று
எம்பெருமான் கேட்க, என்னுடைய ஏற்றம் உனக்குத் தெரியாதோ பிரானே! “உன்னை யொழிய எனக்குச் செல்லாது,
என்னை யொழிய உனக்குச் செல்லாது“ என்னும்படியான உறவை யுணர்ந்து ஸர்வ காலமும் உன்னுடைய திருவருளுக்குப்
பரிபூர்ண பாத்ரமாயிருக்கப்பெற்ற வென்னுடைய ஏற்றம் அறியாயோ? என்கிறார் போலும்.

பெருமானே! உன்னுடைய திருவருள் என்மேல் ஏறிப்பாய வேண்டியதேயன்றி வேறொருவயும் விஷயமாக வுடையதன்று,
உன்னுடைய அருளுக்கு நானே இலக்கு, என்னுடைய வேண்டுகோளுக்கு உன்னருளே இலக்கு. இன்றைக்கோ நாளைக்கோ,
அன்றி இன்னமும் சிலகாலம் கடந்தபின்போ என்றைக்கானாலும் உன்னருள் என்மேல் ஏறிப்பாய்ந்தே தீரக்கடவது
என்கிற அத்யவஸாயன் எனக்குத் திடமாகவுள்ளது.

இங்ஙனே நான் சொல்லுவதற்கு யாதுகாரணமென்கிறாயோ? சொல்லுகேன் கேளாய், நான் உன்னை யன்றியிலேன் நீ யென்னை யன்றியிலே –
“நம்முடைய அருளை யாரிடத்து உபயோகிக்கலாம்!“ என்று நீ தயநீயரைத் தேடியிராநின்றாய்,
“நமக்கு எம்பெருமான் அருள்புரிவானோ? என்று நான் உன் தயையைத் தேடியிரா நின்றேன்,
உன்னையொழிய எனக்குப் புகலில்லை, என்னையொழிய உனக்குப் புகலிலே. ஆகவே, நின்னருள் என்பாலதே

நன்றாக–நிச்சயமாக – அத்யாவசாயம் திடமாக உள்ளதே –சம்பந்தம் உணர்ந்து -நானும் உனக்கு பழ வடியேன்-
உனது திரு அருளுக்கு பரிபூர்ண பாத்ரனான பின்பு -என்னுடைய ஏற்றம் அறியாயோ
உன் அருளுக்கு நானே இலக்கு -என் பிரார்த்தனைக்கு நீயே இலக்கு -நீ தயநீயரைத் தேடி இரா நின்றாய்
-உன் தயையைத் தேடி நான் இரா நின்றேன் –
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்க்கும்
அஃதே புகல் -அமுதனார் -இத்தை ஒட்டியே அருளுகிறார்

பின்னடிகட்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்;
நாராயணனே! உன்னை நிரூபிக்கவேண்டில் என்னையிட்டு நிரூபிக்கவேண்டும், என்னை நிருபிக்க வேண்டும், எ
ன்னை நிரூபிக்கவேண்டில் உன்னையிட்டு நிரூபிக்கவேண்டும், (அதாவது) “நாராயணன்“ என்றால் நாரங்களுக்கு அயநம் என்றபடி,
நாரபதார்த்தங்களில் தாம் சேர்ந்தவராகையாலே தம்மையிட்டு நாராயணனை நிரூபிக்க வேண்டியதாகிறது.
தம்மை நிரூபிக்கவேண்டுமானால் பகவச் சேஷத்வத்தையிட்டே அடியானென்று நிரூபிக்கவேண்டியிருப்பதால்
நாராயணனையிட்டுத் தம்மை நிரூபிக்க வேண்டியதாகிறது. சேஷசேஷிகளுடைய நிரூபணம் பரஸ்பர ஸாபேக்ஷமாகவே யிருக்குமன்றோ.
ஆகவே, சேஷியான உன்னையொழிய எனக்கு ஸத்தையில்லை,
சேஷபூதனான என்னையொழிய உனக்கு ஸத்தையில்லை என்றதாயிற்று என்று கொள்ளலாம்.

————————————————————————————————-

விரோதி நிரசனமே ஸ்வாபாவிகமாக உள்ள எம்பெருமானை தவிர்த்து மற்று யாரும் துணை இல்லை என்று
திரு உள்ளத்துக்கு அருளிச் செய்கிறார் –

இலை துணை மற்று என்நெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட
ஈரந் தலையான் இலங்கையை ஈடழித்த
கூரம்பன் அல்லால் குறை--8-

பதவுரை

என் நெஞ்சே-எனது மனமே!
ஈசனை வென்ற–ருத்ரனை ஜயித்த
சிலை கொண்ட–வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீ காக்ஷனாகிய தன்னை
சேரா–பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த
குலை கொண்ட ஈரைந் தலையான்–கொத்துப் போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய
இலங்கையை–லங்காபுரியை
ஈடு அழித்த–சீர் கெடுத்த
கூர் அம்பன் அல்லால்–கூர்மை தாங்கிய அம்புகளை யுடையவனான இராம பிரானைத் தவிர்த்து
குறை–விரும்பத் தகுந்த
மற்ற துணை–வேறொரு துணைவன்
இலை–நமக்கு இல்லை.

விரோதி நிரஸநமே இயற்கையாகவுள்ள எம்பெருமானைத் தவிர்த்து வேறொருவரும்
துணையாக வல்லாரில்லை யென்று தம் திரு வுள்ளத்துக்கு உபதேசிக்கிறாரிதில்.

ஈசனைவென்ற சிலைகொண்ட செங்கண்மால் –
ஒரு ஸமயத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு ருத்ரனை ஒரு சிலையால் வென்றான், அந்த வில் பரசுராமனிடத்தில் வந்து சேர்ந்திருந்தது;
அதனை ஸ்ரீராமவதாரத்தில் மிதிலையில் நின்று மீண்டெழுந்தருளும்போது அப்பரசுராமனிடத்திற் கொண்டான்,
(இவ்வரலாற்றை விரித்துரைப்போம்) முன்னொரு காலத்தில் தேவசில்பியான விச்வகர்மாவினால் நிருமிக்கப்பட்ட
சிறந்த இரண்டு விற்களும் ஒன்றைச் சிவபிரானும் மற்றொன்றைத் திருமாலும் எடுத்துக் கொண்டார்கள்.
பின்பு ஒரு காலத்தில் அவ்விற்களுள் சிறந்தது இன்னதென்பதை அறிய விரும்பிய தேவர்களின் வேண்டுகோளால்
பிரமன் அரனுக்கும் அரிக்கும் போரை மூட்டிவிட, அங்ஙனமே அவர்கள் அவ்விற்களைக்கொண்டு போர்புரிகையில்
சிவபிரானது வில் சிறிது முறிபட்டது, அவ்வாறு இற்றவில்லைச் சிவபிரான் ஜநககுலத்துத் தேவராதனென்னும் அரசனிடம் கொடுத்திட,
அது வம்ச பரம்பரையாம் ஜநகமஹாராஜனளவும் வந்தது, இது நிற்க, இறாத வலிய வில்லை விஷ்ணு ரிசீகமுனிவனிடம் கொடுத்துச்செல்ல,
அது அவன் குமாரனான ஜமதக்நியினிடத்தும் அவன் குமாரனான பரசுராமனிடத்தும் பரம்பரையாய் வந்தது.
முற்கூறிய சிவதநுஸ்ஸை ஸீதைக்குக் கந்யாசுல்கமாக ஜநகன் வைத்திருந்தான், இராமபிரான் அந்த வில்லை முறித்துத்
தன் பேராற்றலை விளங்கச்செய்து பிராட்டியை மணந்துகொண்டு மிதிலாபுரியினின்றும் புறப்பட்டு அயோத்திக்கு வரும்போது
வழியிடையே செருக்கிவந்த பரசுராமனது கையிலிருந்த விஷ்ணுதநுஸ்ஸை வாங்கி எளிதில் வளைத்து நாணேற்றிக் கணைதொடுத்து
“இவ்வம்புக்கு இலக்குஎன்?“ என்று வினாவ, பரசுராமன் அதற்கு இலக்காகத் தனத்து தபோபலம் முழுவதையுங் கொடுக்க,
அவன் க்ஷத்ரியை வம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமாயிருத்தல் பற்றி
அவனைக் கொல்லாமல் அவனது தவத்தைக் கவர்ந்த மாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளினன் என்ற வரலாறுகள் இதிஹாஸப்ரஸித்தம்.
ஆகவே, இப்பாட்டில் “ஈசனை வென்ற சிலை“ என்றது பரசுராமன் கையிலிருந்த விஷ்ணுதநுஸ்ஸை. அதனைக் கொண்ட செங்கண்மால் – ஸ்ரீராமபிரான்.
அப்படிப்பட்ட தன்னை யடிபணிந்து வாழமாட்டாத இராவணனைக் குடும்பத்தோடு கொன்றொழித்த எம்பெருமானைத் தவிர்த்து
நமக்குத் துணையாகவல்லார் ஆருமில்லை என்றாராயிற்று.

ஈசனை வென்ற செங்கண் மால் -பாணாசுரன் -விருத்தாந்தம் -என்று விசேஷணம் சிலைக்கு கொள்ளாமல்
செங்கண் மாலுக்கு
என்னவுமாம் –

ஸ்ரீ வைஷ்ணவர்கள் பேற்றுக்கு அவன் கையையே பார்த்து இருப்பார்கள் -சாதன அனுஷ்டானங்களை அல்ல –
இப்பாட்டில் “கூரம்பனல்லால்“ என்றவிடத்துப் பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் –
“எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் அசேதநமான க்ரியா கலாபத்தினுடைய கூர்மையை விச்வஸித்திருப்பர்கள்,
இவர்கள் சக்ரவர்த்தித் திரு மகன் அம்பின் கூர்மையைத் தஞ்சமாக நினைத்திருப்பர்கள்“ என்று அச்சுப் பிரதிகளிற் காணப்படும் வாக்கியம் பிழை.
ஓலை ஸ்ரீ கொசங்களை ஆராய்ந்ததில் “எம்பெருமானார் ஸ்ரீபாத்ததை ஆச்ரயித்தவர்கள் அசேதநமான
க்ரியா கலாபத்தினுடைய கூர்மையை விச்வஸித்திரர்கள், சக்ரவர்த்தித் திருமகன் அம்பின் கூர்மையே
யாயிற்றுத் தஞ்சமாக நினைத்திருப்பது.“ என்று காண்கிறது. இதுவே பொருத்தமுடைத்து.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பெற்றுக்கு எம்பெருமான் கைபார்த்திருக்கு மத்தனையொழிய
மூக்கைப்பிடித்தல் முதலிய ஸாதநாநுஷ்டாநங்களினால் பேறுபெற நினையார்களென்கை.

———————————————————————————————

ப்ரஹ்மாதிகளும் தாங்கள் வெறுமையை முன்னிட்டு ஸ்ரீ மன் நாராயணனை ஆஸ்ரயித்து அபிமதம் பெறுவார்கள் –
துணையாகும் தெய்வம் இன்னது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாமே -என்கிறார் –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–9-

பதவுரை

பிரமதேவன்
குறை கொண்டு–நைச்யாநுஸந்தானம் செய்து கொண்டு
குண்டிகை நீர்–கமண்டல தீர்த்தத்தை
பெய்து–வார்த்து
மறை கொண்ட–வேதங்களிலுள்ள
மந்திரத்தால்–புருஷ ஸூக்தம் முதலிய மந்த்ரங்களினால்
வாழ்த்தி–மங்களாசாஸநம் பண்ணி
ஆங்கு–(எம்பெருமான் உலகளந்தருளின) அக் காலத்தில்
அண்டத்தான் சே அடியை–அந்த ஸர்வேச்வானுடைய திருவடிகளை
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற–விஷ கண்டனான ருத்ரனுடைய தலையில் (ஸ்ரீபாத தீர்த்தம்) விழும்டியாக
கழுவினான்–விளக்கினான்.

குறை கொண்டு –-நைச்ய அனுஸந்தானம் பண்ணிக் கொண்டு
மறை கொண்ட மந்திரத்தால் -புருஷ ஸூ க்தாதிகளால்
வாழ்த்தி -மங்களா சாசனம் பண்ணி

கீழ்ப்பாட்டில் “இலங்கையையீடழித்த கூரம்பனல்லால் – இலை துணைமற்று“ என்றார். அப்படி சொல்லலாமோ?
பிரமன் சிவன் முதலானவர்களையும் துணையாகப் பற்றுகிறவர்கள் இவ்வுலகில் பலருண்டே! என்ன,
அவர்களும் தங்கள் வெறுமையை முன்னிட்டு ஸ்ரீமந்த நாராயணனையே ஆச்ரயித்து அபிமதம் பெற்றார்கள் காண்மின்
என்று சொல்லவேண்டி, உலகளந்த காலத்துத் திருவடிவிளக்கின இதிஹாலத்தை யெடுத்துரைக்கிறார் இப்பாட்டில்.

உலகளந்த பெருமானுடைய திருவடியைப் பிரமன் தனது கைக்கமண்டல தீர்த்தத்தினால் விளக்கினான்,
அது கங்கையாகப் பெருக அதனை சிரஸாவஹித்துப் பரிசுத்தியடைந்தது காரணமாகச் சிவனென்று பேர்பெற்றானொருவன்,
இனி, துணையாகுந்தெய்வம் இன்னதென்பதை நீங்களே அறிந்து கொள்மின் என்றவாறு.

குறைகொண்டு – “நீசனேன் நிறையொன்றுமிலேன்“ என்னுமாபோலே தன்னுடைய குறையை – நைச்சியத்தை அநுஸந்தித்துக்கொண்டு என்றபடி.
குண்டிகை – வடசொல் விகாரம். அமரர்க்கு அமுதமளிக்கக் கடல்கடைந்த காலத்து அக்கடலினின்று தோன்றின காலகூட விஷத்தைச்
சிவபிரான் உட்கொண்டு கழுத்தளவிலே அடக்கிக் கொண்டது பற்றிக் கறை கொண்ட கண்டத்தான் என்று பெயர் பெற்றனன்.

————————————————————————————-

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10-

பதவுரை

ஆங்கு–பரமபதத்திலே
ஆரவாரம் அது கேட்டு–(நித்ய முக்தர்களுடைய) ஸாம கான கோஷத்தைக் கேட்டு
(அஸுரர்கள் இங்கும் வந்து ஆரவாரம் செய்வதாக ப்ரமித்து)
அழல் உமிழும்–விஷாக்நியைக் கக்குகின்ற
காண–ஸேவிப்பதற்கு
வல்லம் அல்லமே–ஸாமர்த்திய முடையோ மல்லோமோ?
(நாம் ஸமர்த்தரேயாவோம்)
மா மலரான்–சிறந்த பூவிற் பிறந்த பிரமனும்
பூகார் அரவு அணையான்–அழகிய சீற்றத்தை யுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
பொன் மேனி–அழகிய திருமேனியை
யாம்–அநந்ய பக்தரான நாம்
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடைய ருத்ரனும்
வாழ்த்து–(எம்பெருமானை) வாழ்த்துவதில்
வல்லர் அல்லரே–அஸமர்த்தர்களே.

ஆங்கு–இரண்டு நிர்வாகங்கள்
1-பரமபதத்தில் -ஏதத் சாம கானம் -என்று அறியாமல் ப்ரேமம் அடியாக கலங்கி –
அஸ்தானே பயசங்கை-
அங்கும் நம்மால் சேவிக்க முடியாதோ -என்று
அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம்பெற்ற நமக்கு அப்பரமனுடைய திருமேனி ஸேவை எளிதேயாம்;
பின்னையார்க்கு அரிதென்னில்; இறுமாப்புக் கொண்டிருக்கின்ற தேவதாந்தரங்கட்கே அஃது அரிது.

அன்றிக்கே —
2–கீழ் பாட்டில் உலகு அளந்த வ்ருத்தாந்தம் அருளிச் செய்ததால் –அவ்வவதார சமயத்திலே
திசை வாழி எழ -மங்களா சாசன கோலாஹலத்தை சொல்லி அஸ்தானே பயசங்கை என்னவுமாம் –
திசைகள்தோறு முண்டான மங்களாசாஸந கோலா ஹலத்தைக் கேட்டுத் திருவனந்தாழ்வான் தானும் தன்னாலான
ரகைஷ யிட வேண்டி அழலை உமழ்ந்தபடியைச் சொல்லிற்றாகவும் நிர்வஹிப்பதுண்டு.
ஆகவே முதலடியில் மாத்திரம் இரண்டு வகையான யோஜநாபேதம்.

—————————————————————————————

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–11–

பதவுரை

சூழ்ந்த–நிறையச் சாத்திக் கொள்ளப்பட்ட
துழாய்–திருத்துழாய் மாலை
மன்னு–பொருந்தி யிருக்கப் பெற்ற
நீள் முடி–நீண்ட திருவபிஷேகத்தை யுடையனும்
என் தொல்லை மால் தன்னை–என்னிடத்தில் நெடு நாளாக வியா மோஹ முடையவனுமான ஸர்வேச்வரனை
வழா–ஒரு நொடிப் பொழுதும் விடாமல்
வண் கை கூப்பி மதித்து–அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி
மகுடம் தாழ்த்தி–தலையை வணக்கி
தண் மலரால்–குளிர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
வணங்கு மின்கள்–ஆச்ரயியுங்கள்,
வாய்–(உங்களுடைய) வாய்
வாழ்த்துக–(அவனைத்) துதிக்கட்டும்,
கண்–கண்கள்
காண்க–(அவனையே) ஸேவிக்கட்டும்
செவி–காதுகள்
கேட்க–(அவனது சரிதங்களையே) கேட்கட்டும்.

வழா–ஒரு நொடிப் பொழுதும் விடாமல்

செவி வாய் கண் முதலிய உறுப்புகள்யாவும் பகவத் விஷயத்தில் உபயோகப்படுவதற்கென்றே படைக்கப்பட்டன வாதலால்
அவற்றை அவ்விஷயத்திலேயே உபயோகப்படுத்துங்கோள் என்று பரோபதேசம் பண்ணும் பாசுரம் இது.
உங்களுடைய வாயை அவனுக்குப் பல்லாண்டு பாடுவதில் ஊன்ற வையுங்கள்,
கண்களை அவனுடைய திவ்யமங்க விக்ரஹஸேவையில் ஊன்றவையுங்கள்,
செவிகளை அவனுடைய புண்ய கீர்த்திகளைக் கேட்பதில் ஊன்றவையுங்கள்,
தலையை அவனது திருவடிகளில் வணக்குங்கள்,
கைகளை அஞ்ஜலி செய்வதிலும் புஷ்பம் முதலிய உபகரணங்களைக் கொண்டு ஸமர்ப்பிப்பதிலும் உபயோகப்படுத்துங்கள்,

அவன் எப்படிப்பட்டவனென்றால், “எல்லாரையும் ரகஷிக்கக் கடவேன்“ என்று முடி கவித்துத் தனிமாலை யிட்டிருக்குமவன்,
என் போல்வாரிடத்தில் நெடுங்காலமாகவே வியாமோஹம் வைத்து ஆட்படுத்திக் கொள்ள அவஸரம் பார்த்திருக்குமவன்.
இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே உங்களுடைய ஸகல கரணங்களையும் உபயோகப்படுத்தி உய்வு பெறுங்கோள் – என்றாராயிற்று.

மகுடம் – தலைக்கும் கிரீடத்திற்கும் பெயர்.

—————————————————————————————-

ஆழ்வார்கள் போது போக்கு பலவகை –பரோபதேசமாகவும் -தம் திரு உள்ளத்துக்கும் -எம்பெருமானையே நோக்கி
அருளிச் செய்யும் பாசுரங்களாய் இருக்குமே -இது அவனை நோக்கி அருளிச் செய்யும் பாசுரம் –

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் -மதித்தாய்
மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-

பதவுரை

மதியார்–உன்னைச் சிந்தியாதவர்கள்
நான்கில்–நால்வகைப்பட்ட யோனிகளில்
போய் போய் வீழ–சென்று சென்று பலகாலும் விழும்படியாக
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்,
மதி–சந்திரனுடைய
கோள்–துன்பத்தை
விடுத்தாய்–போக்கி யருளினாய்
மடு–ஒரு மடுவிலே
கிடந்த–(சாபத்தினால்) வந்து சேர்ந்திருந்த
மா முதலை–பெரிய முதலையினாலுண்டான
கோள்–(கஜேந்திராழ்வானது) துயரத்தை
விடுப்பான்–நீக்குவதற்காக
ஆழி–திருவாழியை
விடற்கு–(அந்த முதலையின் மேல்) பிரயோகிப்பதற்கு
மதித்தாய்–நினைத்தருளினாய்
இரண்டும்–முதலையும் கஜேந்திராழ்வானு மாகிற இரண்டும்
போய்–ஒன்றையொன்று விட்டுப்போய்
இரண்டின்–அவ்விரண்டு ஜந்துக்களுக்கும்
வீடு-சாப மோக்ஷமும் மோக்ஷஸாம் ராஜ்யமும் உண்டாம்படி
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்.

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ–
மதியார்–நான்கின்–போய் – போய் வீழ-மதித்தாய் -உன்னைச் சிந்தியாதவர்கள் -வீடு பெறாமல் –தேவாதி நான்கு
யோனிகளிலே சென்று பல காலும் விழும்படியாக சங்கல்பித்தாய்
அன்றிக்கே —
நான்கின் மதியார் போய் வீழ–மதித்தாய்
-என்று கொண்டு –நான்கு வேதங்களைக் கொண்டு
உன்னைச் சிந்தியாதார் ஆஸூர யோனிகளில் விழும்படியாக சங்கல்பித்தாய் -என்றுமாம்

இரண்டும் போய் இரண்டின் வீடு -மதித்தாய் –ஒன்றை விட்டு ஓன்று போய்-முதலைக்கு சாப மோக்ஷமும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு மோக்ஷ சாம்ராஜ்யமும் -சங்கல்பித்தாய்
இந்த்ரத்யுத்மன்-அரசன் விஷ்ணு பூஜையில் ஆழ்ந்து அகஸ்தியர் வருவதை லக்ஷணம் பண்ணாமல் சாபம் பெற்று ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்
ஹூ ஹூ கந்தர்வன் தேவலாம் என்னும் முனிவர் நீரில் இருக்க காலைப் பற்றி இழுத்த சாபத்தால் முதலை ஆனான் –

இரண்டும்போய் இரண்டின் வீடு மதித்தாய் – முதலையும் சாபங்கொண்டிருந்தது, கஜேந்திரனும் சாபங்கொண்டிருந்தான்,
எங்ஙனேயென்னில், மஹாவிஷ்ணுபக்தனான இந்த்ரத்யும்நனென்னும் அரசன் வழக்கப்படி ஒருநாள் ஏகாக்ரசித்தனாய்
விஷ்ணு பூஜை செய்துகொண்டிருந்தபோது அகஸ்த்ய மஹாமுனிவன் அவனிடம் எழுந்தருள,
அப்பொழுது அவ்வரசன் தன் கருத்து முழுவதையும் திருமாலைப் பூஜிப்பதில் செலுத்தி யிருந்த்தனால்
அம்முனிவனது வருகையை அறியாதவனாய் அவனுக்கு உபசாரமொன்றும் செய்யாதிருக்க,
அம்முனிவன் இப்பழ நம்மை அரசன் அலகஷியஞ் செய்தானென்று மாறாகக் கருதிக் கோபித்து
“நீயானை போலச் செருக்குற்றிருந்ததனால் யானையாகக் கடவை“ என்ற சபித்தான்.
(அங்ஙனமே அவன் ஒரு காட்டில் யானையாகத் தோன்றின்னாயினும் முன்செய்த விஷ்ணுபக்தியின் மஹிமையினால்
அப்பொழுதும் விடாமல் நாடோறும் ஆயிரந்தாமலை மலர்களைக் கொண்டு திருமாலை அர்ச்சித்துப் பூஜித்து வருகையில்
ஒரு நாள் பெரியதொரு தாமரைத் தடாகத்தில் அர்ச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப் போய் இறங்கி முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்டது.)

முன்பொருகால், தேவலன் என்னும் முனிவன் ஒரு நீர்நிலையில் நின்று தவஞ்செய்து கொண்டிருந்தபோது
ஹூஹூ என்னுங் கந்தர்வன் அம்முனிவனது காலைப்பற்றி யிழுத்தான், அதனால் கோபங்கொண்ட அம்முனிவன்
“நீ ஜலஜந்துபோல் மறைந்து வந்து அபசாரப்பட்டதானல் முதலையாகக் கடவை“ என்று சவித்தான்.
முதலைக்கு சாபமோக்ஷம் உண்டாயிற்று, கஜேந்திரனுக்கு சாபமோக்ஷமும் ஸாகஷாந்மோக்ஷமும் உண்டாயின.

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -13-24–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண
வர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-13-

பதவுரை

வீடு ஆக்கும் பெற்றி அறியாது–மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழியைத் தெரிந்து கொள்ளாமல்
மெய்–சரீரத்தை
வருத்தி–(உபவாஸாதிகளாலே) க்லேசப்படுத்தி
கூடு ஆக்கி–எலும்பே மிகுந்த கூடாக அஸாரமாக்கி
நின்று–இப்படி நெடுங்காலம் தவம் புரிந்தும்
உண்டு கொண்டு–(தேஹம் தரிக்க வேண்டுமளவு ஸ்வல்மாக) புஜித்தும்
உழல்வீர்–திரிகின்றவர்களே!
வீடு ஆக்கும்–மோக்ஷத்தைத் தரக்கூடிய
மெய் பொருள்தான்–மெய்யான உபாயமானயிருப்பவனும்
வேதம் முதல் பொருள் தான்–வேதங்களினால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும்
விண்ணவர்க்கு–நித்ய ஸூரிகளுக்கு
நல் பொருள் தான்–போக்யமான வஸ்துவாயிருப்பவனும்
நாராயணன்–ஸ்ரீமந்நாராயணனே யாவன்.

கூடாக்கி நின்று-எலும்பே மிக்கு இருந்த கூடாக்கி -கூடு கொம்பு சுள்ளிகள் போலே -அஸாரமாக்கி நெடும் காலம் -த்வம் புரிந்து
உண்டு கொண்டு உழல்வீர் -தேகம் தரிக்க வேண்டும் அளவு மட்டும் –ஸ்வல்பம் புஜித்தும் திரிகின்றவர்களே

பிராமணர்கள் யாகஞ்செய்தும் தானஞ் செய்தும் தவம் புரிந்தும் பட்டினி கிடந்தும் பேறுபெறப் பார்க்கிறார்கள் – என்று ஓதப்பட்டுள்ளது)
சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யவேண்டியவையாயும், அப்படி செய்தாலும் “அது தப்பிற்று, இது தப்பிற்று“ என்று
சொல்லிப் பெரும்பாலும் பலனை இழக்க வேண்டியவையாயுமுள்ள அக்கருமங்களில் கைவைத்து அநர்த்தப்பட்டுப் போவதிற்காட்டிலும்,
ஸ்ரீமந்நாராயணனையே ஸாகஷாத்தாக எளிதில் வழிபட்டு வாழ்ந்துபோகலாமே என்னுங் கருத்துடன் அருளிச்செய்யும் பாசுரம் இது.

அருந்தவம் புரிந்து கஷ்டப்படுகின்றவர்களை விளிக்கிறார் முன்னடிகளால். அந்தோ! மோக்ஷமடையவேண்டிய வழி
எளிதாயிருக்கச் செய்தேயும் அந்த மார்க்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் அபாயங்கள் மிக்க கொடுவழியில் செல்லுகின்றீர்களே!
என்கிற இரக்கந்தோன்ற “வீடாக்கும் பெற்றி அறியாது“ என்கிறார்.

பெற்றி-உபாயம். கூடு ஆக்கி-பறவைகளின் கூடு கொம்புகளாலும் கள்ளிகளாலுமே அடர்ந்திருப்பதுபோல,
உடம்பை எலும்பு தவிர வேறொன்றுமில்லையாம்படி உலர்த்தி என்றவாறு. உண்டு-

காயோடு நீடு கனி யுண்டு வீடு கடுங்கால் நுகர்ந்து -பெரிய திரு -3-2-2-என்றும்
வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவை நுகர்ந்து உடலம் தாம் வருந்தி -பெரிய திரு மடல் –
அந்தோ மோக்ஷம் அடைய எளிய வழி இருக்கச் செய் தேயும் அபாயங்கள் மிக்க கொடு வழியிலே செல்லு கின்றீர்களே
ஸ்ரீ மன் நாராயண சரனவ் சரணம் பிரபத்யே –என்று இருங்கள் என்றவாறு –

காயிலை தின்றும் கானில் உறைந்தும் -கதி தேடித் தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிவீர்காள்
தாயிலும் அன்பன் பூ மகள் நண்பன் தட நாகப் பயன் முகுந்தன் கோயில் அரங்கம் பணிவீரே –திரு வரங்க கலம்பகம் –

—————————————————————————————

தேவதாந்தர பக்தர்களும் உபாயாந்தர நிஷ்டர்களுமே மலிந்து உள்ளார்களே என்று வயிறு எரிந்து பேசுகிறார் –

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14–

பதவுரை

நாராயணன்–நாராயணனென்றுந் திருநாம முடையவனும்
என்னை ஆளி–(விசேஷித்து) அடியேனை ஆட் கொள்பவனும்
நரகத்து சேராமல் காக்கும்–(அடியார்களை) நாகம்போக வொட்டாமல் காத்தருள்பவனுமான
திருமால் தன்–திருமாலினது
பேர் ஆன–திருநாமங்களாயுள்ளவற்றை
பேச பெறாத–ஸங்கீர்த்தநம் பண்ணும் பாக்கியமற்றவர்களான
பிணம்–ஜீவச் சவமென்னலாம் படியுள்ள பாஹ்ய குத்தருஷ்டி மதஸ்தர்கள்
பேச–(அபார்த்தங்களைப்) பிதற்ற
கேட்டு-அவற்றைக் கேட்டு
பலர்–பல பேர்கள்
ஆசைப் பட்டு–தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாயொழிய விரும்பி
ஆழ்வார்–அகோ கதியை யடைந்தொழிவர்

பிணச் சமையர் பேசக் -ஜீவ சவம் என்னலாம் படியான பாஹ்ய குத்ருஷ்டிகள் அபார்த்தங்களைப் பிதற்ற –
கேட்டு– ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்—அவற்றைக் கேட்டு பலரும் -தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாக
ஒழிய விரும்பி அதோ கதியை அடைந்து ஒழிவர்

இவ்வுலகில் தேவதாந்தா பக்தர்களும் உபாயாந்தர நிஷ்டர்களுமே மலிந்து கிடக்கிறார்களே! என்று வயிறெரிந்து பேசுகிறார்.
கைல லோகஸம்ரக்ஷகனாய் நரகநாசனான ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணி வாழலாமாயிருக்க,
அப்படி வாழ்வதற்குப் பாக்கியமற்றவர்களாய் “ஜீவச்சவங்கள்“ என்று இகழ்வதற்குத் தகுந்தவர்களாயுள்ள மதாந்தரஸ்தர்கள்
தேவதாந்தரங்களுக்குச் சிறப்பாகவும் உபாயாந்தரங்களுக்கு புகழ்ச்சியாகவும் எதையாவது வாய்வந்தபடி பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்,
பல பாவிகள் அப்பிதற்றல்களைக் கேட்டு “நாமும் இவர்களைப்போலவே தேவதாந்தர பக்தர்களாயும் உபாயாந்தர நிஷ்டர்களாயும் இருக்கலாமே“ என்று
அவர்களுடைய நிலைமையிலே ஆசைகொண்டு இவ்வழியாலே அதோகதியை அடைந்தொழிகின்றதே இவ்வுலகம்!,
நல்ல பேச்சுப் பேசினால் செவிமடுத்துக் கேட்டுகப்பார் ஆரூமில்லையே, ஆத்மநாசத்தை விளைக்கவல்லை பேச்சுக்களே
பொலிவு பெறுகின்றனவே! என்று பரிதபித்துப் பேசினாராயிற்று.

———————————————————————————————–

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

பதவுரை

பல தேவர்–பல தேவர்கள்
ஏத்த–துதிக்கும்படியாக
படி–பூமியை
கடந்தான்–அளந்தவனான ஸர்வேச்வரனுடைய
பாதம்–திருவடிகளிலே
மலர்–புஷ்பங்களை
ஏற இட்டு–ஸமர்ப்பித்து
இறைஞ்சி–வணங்கி
வாழ்த்த வலர் ஆகில்–மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால்,
நீர் கண்டன் கண்ட நிலை–நீலகண்டனாகிய ருத்ரனிடத்தில் காணத்தக்க நிலைமை
மார்க்கண்டன் கண்ட வகையே–மார்க்கண்டேயன் ப்ரத்யக்ஷமாகக் கண்டவிதமாகவே
வரும் கண்டீர்–ஸித்திக்குங்கிடீர்

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்–ப்ரஹ்மாதிகள் ஸ்துதிக்கும் படி -பூமியை அளந்த திரு உலகு அளந்து
அருளியவனுடைய திருப்பாதங்களில்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்-மங்களா சாசனம் பண்ண வல்லவர்கள் ஆனால்
நீர்க்கண்டன் கண்ட நிலை-ருத்ரன் இடம் காணாத தக்க நிலைமை
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்-மார்க்கண்டேயன் பிரத்யக்ஷமாக கண்ட விதமாக சித்திக்கும் கிடீர்
மிருகண்டு மகரிஷி புத்ரன் மார்க்கண்டேயர் –
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்கண்டேயனவனை நக்க பிரான் அன்று உய்யக் கொண்டது
மார்க்கண்டேயன் சிரஞ்சீவியாக இருக்க விரும்பி -அத்தை நீல கண்டன் -ஸ்ரீ மன் நாராயணன் இடம் சென்று பெற்றுக் கொடுத்தார் என்றபடி
நீலார் கண்டத்து அம்மானை -விஷ ஜலத்தை கழுத்தில் கொண்டவன் -என்றபடி –

ம்ருகண்டு மஹர்ஷியன் புத்திரனான மார்க்கண்டேயன் குமாரப்பருவத்தில் வீதியில் விளையாட நிற்கையில்
அவ்விளையாட்டைக் கண்டுகொண்டு மாதா பிதாக்களும் மகிழ்ந்திருக்கும் போது “இப்பிள்ளைக்கு மரணகாலம் குறுகிவிட்டது“ என்று
அசரீரி வாக்கியம் ஒன்று திடீரென்று செவியில் விழப்பெற்ற அத்தாய்தந்தையர் மிகவும் பரிதாபங்கொண்டு நிற்க,
அதைக்கண்ட மார்க்கண்டேயன் “நீங்கள் சிறிதும் வருந்த வேண்டா, ம்ருத்யுவை நானே பரிஹரித்துக் கொள்ளக்கடவேன்“ என்று சொல்லி
அன்று முதலாகப் பரமசிவனை யடிபணிந்து வருகையில், சிவபிரான் “இவனோ நம்மை ரக்ஷகனாக நினைத்து நம்மைத் தொழுது கொண்டு
நம் கை பார்த்திருக்கின்றான், ஸ்ரீமந்நாராயணனே ஸரர்வரக்ஷகன் என்கிற பரமார்த்தம் இவனுக்குத் தெரியவில்லை போலும்,
அதனை இவனுக்கு நாம் தெரிவிப்பது நன்று, தெரிவியா தொழிந்தோமாகில் அநியாயமாய் இவன் மோசம் போய்விடுவான்,
மருத்யுவைத் தப்பவேணுமென்று நம்மை வழிபடுகின்ற இவனுக்கு நாமே ஒரு புகலிடம் காட்டிக் கொடுத்தோமாக வேணும்“ என்றெண்ணி
“மார்க்கண்டேயா! என்னை நீ ரக்ஷகனாக நினைத்துத் தொழுகின்றாய், நானும் நீயும் ஷமந்நாராயணனுடைய ரகஷ்யவர்க்கத்தில்
சேர்ந்தவர்களேயன்றி உனக்கு நான் ரக்ஷகனாக ப்ராப்தனல்லேன், ஸர்வரக்ஷகன் அந்த ஸ்ரீமந்நாராயணனொருவனே,
ஆனபின்பு அவனையே அழ பணிந்து நீ அபிமதம் பெறக்கடவாய்“ என்று சொல்லி அவனை எம்பெருமான் திருவடிகளிலே கொண்டு நிறுத்தி
“இவனை அநுக்ரஹித்தருளவேணும்“ என்று பிரார்த்தித்து, பகவத்கிருபையாலே நீண்ட ஆயுளைப்பெறுவித்தான் பரமசிவன் –
என்பது மார்க்கண்டேயனுடைய வரலாற்றின் சுருக்கம்.

1. “புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை, என்றும்
2. “மார்க்கண்டேயனும் கரியே“ என்றும்,
3. “கண்டுந்தெளிந்துங் கற்றார் கண்ணற்களான்றி யாவரோ, வண்டுண் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்,
இண்டைச்சடைமுடி யீசனுடன் கொண்டு உசாச்செல்லக், கொண்டங்குத் தன்னொடுங் கொண்டுடன்
சென்றதுணர்ந்துமே“ என்றும் திருவாய்மொழியில் நம்மாழ்வாரும்,
4. “மன்னு நான் மறை மாமுனி பெற்றமைந்தனை மதியாத வெங்கூற்றந் தன்னையஞசி, நின்சரணெனச் சரணாய்த்
தகவில் காலைனையுக முனிந்தொழியாப், பின்னையென்றும் நின் திருவடி பிரியாவண்ண மெண்ணிய பொருள்“ என்று
பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரும் அருளிச்செய்தவை காண்க.

சில புராணங்களில் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது பரமசிவனே மார்க்கண்டேயனுக்கு அபயமளித்த்தாகக் காணப்படினும்
மஹாபாரத்தில் ஆரண்யபர்வத்தில் நூற்றுத் தொண்ணூற்றிரண்டா மத்யாயத்தில் மார்க்கண்டேயன் தானே தருமபுத்திரரை நோக்கிச்
சொல்லுமளவில் ஸ்ரீமந்நாராயணனுடைய வார்த்தைகளை அநுவதிக்குமிடத்து
இவன் ஸ்ரீமந்நாராயணனைச் சரணம் புகுந்தவனென்பது நன்கு விளங்கும்.
ஸ்ரீபாகவதத்திலும் பன்னிரண்டாம் ஸ்கந்தத்தில் எட்டாமத்யாயத்தில் – காண்க.

மார்க்கண்டேயனுடைய வரலாறு இப்படிப்பட்டதென்று தெரிந்தபின் இனி இப்பாசுரத்தின் கருத்தை ஆராய்மின் –
“உலகளந்த பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களைப் பணிமாறிப் பல்லாண்டு பாட வல்லரானால்
நீற்கண்டன் கண்டநிலை மாற்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்“ என்றால் இதற்குக் கருத்து யாதெனில், கேண்மின்.
மார்க்கண்டேயன் பரமசிவனிடத்தில் (ஸ்ரீவைகுண்ட ப்ராப்தியாகிற) மோக்ஷத்தை விரும்பிப் பணிந்தானல்லன்,
வாழ்நாளையே விரும்பிப்பணிந்தான், அந்தப் பலனையும் அளிக்க யோக்யதையற்றவனாய் அந்த ருத்ரன் ஸ்ரீமந்நாராயணன்
பக்கலில் அவனை ஆச்ரயிப்பது அப்பெருமான் மூலமாக ரக்ஷணம் செய்வித்தான்,
ஆகவே, “தேவதாந்தரங்கள் பரம்பரயாக ஒருகால் ரக்ஷகங்களாகுமேயன்றி ஸாக்ஷத்தாக ரக்ஷகங்களாக மாட்டா,
ஸ்ரீமந்நாராயணனொருவனே ஸாகஷாத் ரக்ஷகனாவான்“ என்று மார்க்கண்டேயன் கைகண்டறிந்த பரமார்த்தம் தேறினதாகும் என்கை.
நேராக எம்பெருமானையே நீங்கள் ஆராதிக்கும் பக்ஷத்தில் மார்கண்டேயன் ச்ரம்பட்டுத் தெரிந்துவிட்டதாகத் தேறும் என்றவாறு
நீண்டகண்டனாகிய சிவனிடத்துக் காணக் கூடிய நிலைமை (அதாவது-இவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று
தெரிந்துகொள்ளக்கூடிய ஸ்திதி), அதை மார்க்கண்டேயன் பண்டு தெரிந்துகொண்டான்,
நீங்களும் அதை இப்போது தெரிந்து கொண்டீர்களென்னலாம் – ஸாகஷாத்தாக் நீங்கள் எம்பெருமானையே ஆராதிப்பீர்களாகில், என விரிக்க.

இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் “மார்க்கண்டேயன் மஹாதேவனை மோகஷார்த்தமாகச் சென்று ஆச்ரயிக்க,
மோக்ஷப்ரதன் ஈச்வரனேயென்று காட்டுமிதுவே உள்ளதென்று ருத்ரன் காட்டக்கண்டு இதுவே இவனுக்குள்ள தென்று
மார்க்கண்டேயன் கண்டவகையே ஸித்திக்கும், அவ்யவ ஹிதமாக ஸர்வேச்வரன் திருவடிகளை ஆச்ரயிக்க வல்லராகில்
மார்க்கண்டேயன் கண்டவகையே ஸித்திக்கும்,“ என்றிருக்கும் ஸ்ரீஸூக்திகளில் உள்ள மோக்ஷ சப்தம்
பரமபதாநாநுபரூபமான மோக்ஷத்தைக் குறிப்பதன்று–ஒரு தேசவிசேஷத்தைக் குறிக்கொண்டு கீதையிற் சொன்ன கட்டளையிலே,
இந்த தேசத்திலேயே ம்ருத்யு இல்லாமையாகிற மோக்ஷத்தைச் சொல்லுகிறதென்று கொள்க.
மார்க்கண்டேயன் தான் சிரஞ்ஜீவியா யிருக்கவேணுமென்று உபாஸித்தவனாக இதிஹாஸபுராணங்களிற் வுறப்படுகிறானேயன்றி,
புரமபுருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தை விரும்பின்னாகக் வுறப்பட்டிலன்.
பெரிய திருமொழியில் (5-8-6) “மன்னு நான் மறை மாமுனி பெற்ற மைந்தனை….. பின்னையென்றும்
நின் திருவடி பிரியா வண்ண மெண்ணிய பொருள்“ என்றவிடத்து வியாக்கியானத்திலும் இது ஸ்பஷ்டம்.
அந்த வியாக்கியானமருளிய பெரியவாச்சான் பிள்ளை தாமே இவ்விடத்தில்
“மார்க்கண்டேயன் மஹாதேவனை மோக்ஷார்த்தமாகச் சென்று ஆச்ரியிக்க“ என்றது ருத்ரனைப் பற்றின பரிஹாஸோக்தியாக விடுக்கும்.
“ இவன் ஒரு மஹா தேவனாம், இவனிடத்தில் ஒரு பெரிய மோக்ஷத்தை விரும்பி ஒருவன் வந்து பணிந்தானாம், அப்பப்ப!
இந்த மோக்ஷம் நம்மாலாகாது என்று வேற்றுவாசல் காட்டினானாம்“ என்று பரிஹஸித்துச் சொன்னவாறு.

நீற்கண்டன் – “நீலம்“ என்ற வடசொல் “நீல்“ என்று சிதைந்து நீற்கண்டனென்றாயிற்று.
“நீலார் கண்டத்தம்மான்“ என்ற திருவாய்மொழி காண்க. அன்றியே,
“நீர்க்கண்டன்“ என இடையின ரகரப்படாங்கொள்ளில், விஷஜலத்தைக் கழுத்திலே கொண்டவனென்றதாகும்.
மார்க்கண்டன் – “மார்க்கண்டேயன்“ என்ற வடசொற்சிதைவு.

இப்பாட்டின் பின்னடிகட்கு மற்றும் பலவகையாகக் கருத்துக்கூற இடமுண்டு. வல்லார் வாய்க் கேட்டுணர்க.

——————————————————————————-

நிலை மன்னும் என் நெஞ்சம் அந் நான்று தேவர்
தலை மன்னர் தாமே மற்றாக -பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய
தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

பதவுரை

அந்நான்று–பாரத யுத்தம் நடந்த அக்காலத்து
தேவர் தலை மன்னர் தாமே–தேவாதி தேவனான தானே
மாற்று ஆக–எதிரியாயிருந்து கொண்டு
பல மன்னர்–பல அரசர்கள்
போர்–யுத்தக்களத்தில்
மாள–மடிந்து
வெம் கதிரோன்–ஸூர்யன்
மாய–(அகாலத்தில்) அஸ்தமிக்கும்படி யாகவும்
பொழில் மறைய–பூமண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும்
தேர் ஆழியால்–சக்கராயுதத்தினால்
மறைத்தாரால் (ஸூர்யனை) மறைத்த பெருமானாலே
என் நெஞ்சம்–எனது (சஞ்சமான) மனமானது
நிலை மன்னும்–சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது.

அலைபாய்ந்து கொண்டிருந்த என் மனமானது எம்பெருமான் ஆச்ரிதர்க்காக உழைக்குந் தன்மைகளைக் கேட்டறிந்தவாறே
“இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு அடிமைப் பட்டவர்களாக நாம் அமைந்துவிட்டோமான பின்பு இனி நமக்கு யாது கவலை?
என்று தேறி நிலைபெற்று விட்டதென்கிறார்.
“அந்நான்று…தேராழியால் மறைத்தாரால் என்னெஞ்சம் நிலைமன்னும்“ என்று அந்வயம்.

“தேவர் தலைமன்னர்“ என்றது எம்பெருமானை, “***“ என்றும்
“அயர்வறும்மரர்களதிபதி“ என்றும் சொல்லுகிறபடியே.

தாமே மாற்றாக – துர்யோதநாதிகளை எம்பெருமான் பாண்டவர்களின் சத்துருக்களென்று நினைத்திலன்,
தன்னுடைய சத்துருக்களென்றே நினைத்தான், இது எங்ஙனே தெரிகின்றதென்னில்,
தூ து எழுந்தருளினபோது விதுரர் திருமாளிகையிலே அமுது செய்துபோக, அஃதறிந்த துர்யோதனன்
(பிஷ்மாசார்யரையும் த்ரோணாசார்யரையும் என்னையும் விட்டுப் பள்ளிச்சோற்றை ஏன் உண்டாய்?) என்று கண்ணபிரானைக் கேட்க,
அதற்கு உத்தரமருளிச் செய்வது காண்மின் –
(சத்ருவின் சோற்றையும் உண்ணலாகாது, சத்ருவுக்குச் சோறும் இடலாகாது, எனது உயிர்நிலையாகிய பாண்டவர்களை
“நீ த்வேஷிப்பதனால் எனக்கு சத்துருவே, ஆனதுபற்றியே உன்னிடம் நான் உண்ணவரவில்லை) என்றான்.
ஆகவே, ஆச்ரிதர்களுடைய பகைவர்களைத் தன்னுடைய பகைவர்களாகவே கொள்ளும் எம்பெருனுடைய அபிஸந்தியை அறிந்து
இங்கு “தாமே மாற்றாக“ என்றருளிச் செய்தாரென்க.
* மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றம் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்ததன்
சிலைவளையத் திண்டோமேல் முன்னின்றதுபற்றிப் “பலமன்னர் போர்மாள“ என்றருளிச் செய்யப்பட்டது.

வெங்கதிரோன்மாயப் பொழில்மறையத் தேராழியால் மறைத்த வரலாறு வருமாறு –
அர்ஜுநன் பதின்மூன்றாநாட் போரில் தன் மகனான அபிமந்யுவைக் கொன்ற ஜயத்ரதனை மறுநாள் ஸூர்யன்
அஸ்தமிப்பதற்கு முன்னே கொல்வதாகப் பல பிரதிஜ்ஞைகள் செய்ய, அது நிறைவேறக் கூடாதென்று
அந்த ஜயத்ரதனை எதிரிகளால் உட்புக முடியாதபடியாக வ்யூஹத்திலே நிறுத்திக் காப்பாற்றிக் கொண்டிருந்த ராஜாக்கள் முன்னே,
ஸ்ரீகிருஷ்ணன் பகல் நாழிகை முப்பதும் சென்றதாகத் தோன்றும்படி, நினைவறிந்து காரியஞ்செய்யும் தனது சக்கராயுதத்தைக் கொண்டு
ஸூர்யனை மறைக்க, “ஆதித்யன் அஸ்தமித்தான், இனிநமக்குப் பிராணபயமில்லை, அர்ஜுநன் பிரதிஜ்ஞை செய்திருக்கிறபடியே
அக்நி ப்ரவேசம் செய்யப்போவதைக் கண்டு களிப்போம்“ என்றெண்ணி ஜயத்ரதன் வெளிப்பட்டு நின்றவளவிலே
கண்ணபிரான் ஸுதர்ச நாழ்வானை மீட்டுக்கொள்ள, ஸூர்யன் இன்னும் அஸ்தமிக்கவில்லை யென்று உணர்ந்து கொண்ட
அர்ஜுநன் உடனே தனது அம்பைக் கொண்டு அந்த ஜயத்ரதனைத் தலையறுத்துவிட்டனன் என்பதாம்.

கோடிஸூர்ய ப்ரகாசான திருவாழியைக் கொண்டு ஸூர்யனை மறைத்தல் எங்ஙனம் கூடுமெனின்,
ஸூர்யனுடைய ஒளி கண்ணாலே காணலாம்படி அளவுபட்டிருத்தலால் இருட்டைப் போக்கும், அப்படியல்லாமல்
திருச் சக்கரத்தினொளி நேராகக் கண்கொண்டு பார்க்கமுடியாதபடி அளவுபடாத மிக்க பேரொளியைக் கொண்டுள்ளதனால்
பளபளத்துக் கண்களை இருளப் பண்ணுமெனச் சமாதானங் கூறுவர் பெரியார், மற்றுஞ் சில வகையான ஸமாதானங்களும் கூறுவாருளர்.

13 நாள் போரில் தன் மகன் அபிமன்யுவைக் கொன்ற ஜெயத்ரனை ஆழி  கொண்டு ஸூர்யனை மறைத்து அர்ஜுனன் கொன்றானே
கண்ணாலே காண முடியாத பேர் ஒளி கொண்டு பளபளத்து கண்களை இருள பண்ணினான் என்றவாறு-

———————————————————————————-

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

பதவுரை

மெய் தவத்தோன்–மெய்யான தவநெறியை யுடையனான ருத்ரன்,
ஞாலம் அளந்தானை–உலகளந்தவனும்
ஆழிக் கிடந்தானை–க்ஷீராப்திசாயியும்
ஆல் மேல் வளர்ந்தானை–ஆலிலே மேல் கண் வளர்ந்தவனை
தான் வணங்கும் ஆறு–தான் வழிபடும் மார்க்கமாகிய
அறம் நெறியை–நல் வழியை
மேலை யுகத்து–முன் யுகத்திலே
ஆல நிழல்கீழ்–ஓர் ஆல மரத்தின் நிழலிலே
நால்வர்க்கு–நான்கு மஹர்ஷிகளுக்கு
உரைத்தான் உபதேசித்தான்.

எம்பெருமானுடைய பரத்துவம் இன்று நான் சொல்ல வேணுமா? ஸர்வஜ்னான சிவபிரான் தானே ஸ்வ சிஷ்யர்களுக்கு
உபதேசித்த விஷயமன்றோ விது என்கிறார். சிவன் ஒரு காலத்திலே அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் என்கிற
நான்கு முனிவர்களைச் சிஷ்யர்களாக அமைத்துக்கொண்டு ஒரு ஆலமரத்தின் அடியிலே ஸ்ரீமந்நாராயண தத்வோபதேசம்
செய்தானென்று நூல்கள் கூறும்.
“ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த ஆலம்மர் கண்டத்தரன்“ என்ற பொய்கையாழ்வார் பாசுரமுங் காண்க.

தாமஸ ப்ரக்ருதியாய் அஹங்காரிகளில் தலைவனான ருத்ரன் எம்பெருமானுடைய உண்மை நிலையைத் தான் எங்ஙனே அறிதான்?
அறிந்தாலும் பிறர்க்கு அதை உபதேசிக்கும்படியான ஹ்ருதய பரிபாகத்தை எங்ஙனே பெற்றான்? என்று கேள்வி கேட்பார்க்கு ஸமாதாநமாகும்படி
“மெய்த்தவத்தோன்“ என்ற பெயரால் ருத்ரனைக் குறிப்பிடுகின்றார். எம்பெருமானைப் பற்றின தத்துவ்வுணர்ச்சி தனக்கு
ஸித்திக்கவேணுமென்று மெய்யே தவம்புரிந்து அத்தவப்பயனாக பகவத் தத்வஜ்ஞாநம் பெற்றவன் என்றபடி.
அவன் நால்வர்க்கு உரைத்த அர்த்தம் யாதெனில், (தான் வணங்குமாறு.)
“நானும் தலைசாய்க்கப் பெற்ற திருவடித் தாமரைகளையுடையவன் காண்மின் ஸ்ரீமந்நாராயணன்,
அவன் உலகங்களையெல்லாம் தன் திருவடிக்கீழ் அகப்படுத்திக் கொண்டவன், திருப்பாற்கடலிலே உறங்குவான்போல்
யோகு செய்து கொண்டிருந்து ஆர்த்தரக்ஷணம் செய்தருள்பவன், பிரளய வெள்ளத்திலே நானுமுட்பட ஸகல பதார்த்தங்களும்
அழிந்து போவதா யிருக்கையில் எல்லாவற்றையும் வாரிவிழுங்கி ஆலந்தளிரிலே திருக்கண்வளர்ந்த அற்புத சக்திவாய்ந்த்வன்“ என்று
உபதேசிப்பனாம் என்பது பின்னடிகளில் தேறுங்கருத்து.

மெய்த்தவத்தோன் –ப்ரஹ்ம ஞானம் பெற மெய்யே த்வம் புரிந்து அதன் பயனாக தத்வ ஞானம் பெற்றவன் –
மேலை யுகத்து -முந்திய யுகத்தில் –

—————————————————————————————————–

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

பதவுரை

மாறு ஆய–எதிரிட்டு நின்ற
தானவனை–ஹிரண்யாஸுரனுடைய
மார்வு–மார்வை
வள் உகிரால்–கூர்மையான நகங்களினால்
இரண்டு கூறு ஆக சீறிய–இரு பிளவாகப் பிளந்த
கோள் அரியை–பெரு மிடுக்கனான நரசிங்க மூர்த்தியை
வேறு ஆக–விலக்ஷணமாக
ஏத்தி இருப்பாரை–துதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்குமவர்களை,
மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே–அந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஆச்ரயிதிருக்கும் சரமாதிகாரிகளின் நிஷ்டைவென்று விடும்.

பாகவத சேஷத்வ நிஷ்டை சிறந்தது என்பதை அருளிச் செய்கிறார் -பந்த மோக்ஷம் இரண்டுக்கும் இல்லாமல்
மோக்ஷ ஏக ஹேதுவாகவே இருக்குமே –
சங்கை இல்லாமல் மார்பிலே கை வைத்து உறங்கலாம் –
ஏத்தி இருப்பாரை -அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடுதுமே-என்று
மங்களா சாசனம் பண்ணி இருக்கும் பகவத் பக்தர்களை –
மற்று அவரைச்-சாத்தி இருப்பார் தவம் வெல்லும் -பாகவத பக்தர் நிஷ்டை வெல்லும் –
ததீயரை புருஷகாரமாக மாத்திரமே இல்லாமல் அவர்களையே உத்தேசியராக பற்றுதல் சிறந்தது என்றவாறு –

எம்பெருமானிடத்தில் நிஷ்டை யுடையராயிருப்பதற்காட்டிலும் பாகவதர்கள் பக்கலில் நிஷ்டை யுடையராயிருப்பதே சிறந்தது
என்று ஸகல சாஸ்த்ர ஸாரப்பொருள் ஒன்றுண்டு, அதனை வெளியிடும் பாசுரம் இது.
கருமங்களுக்கிணங்க ஸம்ஸாரியாக்கவும் அருளுக்கிணங்க ஸம்ஸார நிவ்ருத்தியைப் பண்ணித்
திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளவுமு வல்ல ஸ்வதந்த்ரனான ஈச்வரனைப் பற்றுகை ஸம்ஸாரபந்தத்திற்கும் மோக்ஷப்ராதிக்கும் பொதுவாயிருக்கும்.
அங்ஙனன்றியே பாகவதரைப் பற்றுகை ஸம்ஸாரபந்தத்திற்கு ஒருகாலும் ஹேதுவாகாதே மோக்ஷப்ராப்திக்கே உறுப்பா யிருக்குமென்பது
(எம்பெருமானைப் பற்றினவர்களுக்குப் பேற்றில் ஸந்தேஹமுண்டு, பாகவதர்களைப் பற்றினவர்கள் ஸந்தேஹப் படாமல்
மார்வில் கைவைத்து உறங்கலாம்) இத்யாதி ப்ரமாண ஸித்தம்.
சத்ருக்நாழ்வான், ஸ்ரீமதுரகவிகள், வடுகநம்பி போல்வார் இவ்வர்த்தத்திற்கு உதாஹரண பூதர்கள்.

“மாறாயதானவனை“ என்று தொடங்கி “ஏத்தியிருப்பாரை“ என்கிறவரையில் பகவத் பக்தர்களைச் சொன்னபடி.
தனக்கு உயிர்நிலையான ப்ரஹ்லாதாழ்வானுக்குப் பகைவனான இரணியனைத் தன் பகைவனாகப் பாவித்து அவனது மார்பைக்
கூர்மையான நகங்களாலே இருபிளவாகப் பிளந்த நரசிங்கமூர்த்தியை
“அந்தியம்போதி லரியுருவாகி யரியை யழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதும்“ என்றுகொண்டு
வாழ்த்தியிருக்கும் பகவத் பக்தர்களை, –
மற்றவரைச் சாத்தி யிருப்பார் தவம் வெல்லும் – பகவத் பக்தர்களின் நிஷ்டையை பாகவத பக்தர்களின் நிஷ்டை தோற்கடித்துவிடும்.
எனவே, பகவத் பக்தியிற் காட்டிலும் பாகவத பக்தியே சிறந்தது என்றதாயிற்று. இங்கு விரித்துரைக்க வேண்டுமவற்றை யெல்லாம்
ஸ்ரீவசநபூஷணஸாரத்தில் சரமப்ரகரணத்திற் பரக்கச் சொன்னோம். அங்கே கண்டு கொள்க.

இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.

————————————————————————————–

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே-19-

பதவுரை

தவம் செய்து–தபஸ்ஸை அநுஷ்டித்து
நான்முகனால்–பிரமனிடத்து
பெற்ற–(ஹிரண்யன் முதலானவர்கள்) பெற்றுக் கொண்ட
வரத்தை–வரங்களை
அவம் செய்த–பழுதாக்கின
ஆழியாய்–திருவாழிக் கையனான பெருமானே!
எம்மை–அடியோங்களை
உவந்து–திருவுள்ளமுகந்து
காப்பாய் நீ அன்றே–காத்தருள்பவன் நீயே யன்றோ,
காப்பதனை ஆவாய் நீ அன்றே–காக்க வேணு மென்கிற ஸங்கல்ப முடையவனும் நீ யன்றோ,
எவ் உயிர்க்கும்–(உன்னை ஆச்ரயித்த) ஸகலாத்மாக்களுக்கும்
வைகுந்தம்–பரம பதத்தை
ஈப்பாயும்–அளிப்பவனும்
நீ அன்றே–நீ யன்றோ.

ஹிரண்யாதிகளுக்கு பிரமன் கொடுத்த வரங்களினால் கொடுமை செய்யும் அஸூர பிரக்ருதிகளை -களைந்து ஒழித்து
வரம் கொடுத்த இவர்கள் குடி இருப்பையும் அளித்து ரக்ஷித்து அருள்பவன் ஸ்ரீ மன் நாராயணனே –
இதற்கு ஸாமக்ரி திரு வாழி ஆழ்வான் -என்கிறார்
திரு உள்ளம் உகந்து ரஷிப்பவன்- -ரக்ஷிக்க சங்கல்பம் யுடையவனும் நீயே –
ஆஸ்ரயித்த சகல ஆத்மாக்களுக்கு பரமபதத்தை அளிப்பவனும் நீயே அன்றோ –

இரணியன் முதலிய ஆஸுரப்க்ருதிகள் பிரமன் முதலிய தேவர்களைக் குறித்து ஸ்வல்பம் ஸ்தோத்ரம் பண்ணிவிட்டால்
தலைகால் தெரியாமல் உவந்து எல்லையில்லாதபடி வரங்களை அளித்துவிட்டுப் பிறகு தங்களுக்கே நேரும் அநர்த்தங்களைப்
பரிஹரித்துக் கொள்ளமாட்டாமல் கண்ணீர் விழவிட்டுக் கையைப் பிசைந்துக்கொண்டு நிற்பர்கள் அந்த ப்ரஹ்மாதி தேவர்கள்.
அன்னவர்களது ஆபத்தை அகற்றியருள்வான் எம்பெரான் – என்பதை முன்னடிகளில் அருளிச்செய்து,
இப்படிப்பட்ட நீயே எனக்கு எல்லாவபேக்ஷிதங்களையும் தலைக்காட்டித் தந்தருளவேணுமென்கிறார் பின்னடிகளில்.

“தவஞ்செய்து நான்முகனால் பெற்றவரத்தை“ என்றவிடத்து “இன்னார் பெற்ற வரம்“ என்பது சொல்லப் படவில்லையாயினும்,
இரணியன் முதலானோர் பெற்ற வரம் எனக்கொள்க.
அவர்கள் பெற்ற வரத்தை அவம் செய்கையாவது – நல்ல உபாயங்களினால் அவ்வஸுரர்களைக் களைந்தொழித்தல்.
வரங்கொடுத்த தாங்களே குடியிருப்பை யிழந்து வருந்தின வளவிலே வரம்பெற்றவர்களையுங் கொன்று
வரமளித்தவர்களையும் காத்தருள்பவனிறே ஸ்ரீமந்நாராயணன். இதற்கு ஸாமக்ரி திருவாழியாழ்வானென்க.

——————————————————————————-

சகலமும் எம்பெருமானாகவே இருக்கும் படியை அருளிச் செய்கிறார் —

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தேவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –20-

பதவுரை

உலகு எல்லாம் நீயே–உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே,
நிற்பனவும்–உலகங்கள் ஸத்தை பெற்று நிற்பதும்
நின் அருளே–உனது கிருபையினாலேயாம்,
தவம் தேர் தேவனும் நீயே–தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே,
எரி சுடரும்–ஜவுலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும்
அண்டத்து–ஆகாசத்திலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
ஆய இவை–ஆகிய இவை யெல்லாம்
நீயே–நீயே காண்.

ஸகலமும் எம்பெருமானாகவே யிருக்கும்படியை யருளிச் செய்கிறாரிதில்.
“உலகெல்லாம் நீயே“ என்றது – உலகமெல்லாம் உன்னுடைய ஆளுகையில் அடங்கியுள்ளது என்றபடி.
நிற்பனவும் நின்னருளே – அவ்வப்பொருள்கள் அழியாதே ஸத்தை பெற்றிருப்பதும் நித்யமாயிருப்பதும் உன்னருளாலே.
தவத் தேவ தேவனும் நீயே – எவ்வளவோ தவங்கள் செய்து ப்ரஜாபதி யென்றும் பசுபதியென்றும் பேர்பெற்றிருக்கும் தேவர்கட்கும் தேவன் நீ;
யாம் கடவுளென்றிருக்கு மெவ்வுலகிற் கடவுளர்க்கும் ஆங்கடவுள் நீ என்றவாறு.

———————————————————————————

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-

பதவுரை

திறந்து–விரிந்து
எரி கான்ற–நெருப்பை உமிழ்ந்த
பிலம் வாய்–பாழி போன்ற பெரியவாய்
இவையா–இதுவோ!
எரி வட்டம்–கொள்ளி வட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற
கண்கள்–திருக் கண்கள்
இவையா–இவையோ!
எரி–அக்நி போலே
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–தோன்றின திருமேனியை யுடையனாய்
இமையோர் பெருமான்–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேச்வரன்
அரி–நரசிங்க மூர்த்தியாய்
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–காட்டின
அழகு-அழகு
இவையா–என்ன விஷயம்!

திறந்து எரி கான்ற–பிலவாய் -இவையா -அளவுகடந்த சீற்றத்தால் திருவாய் விரிந்து அழலை உமிழ்ந்ததை பேசுகிறார் –காலுதல் -வீசுதல் –
எரிவட்டக் கண்கள் -இவையா–தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -என்பது
ஆஸ்ரித அன்பர்களைக் காணும் பொழுது -ஆஸ்ரித விரோதிகளை கண்டால் கொள்ளி வட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்குமே -‘
இன்றைக்கும் சீற்றம் மாறாமல் இருக்கிறானே என்கிறார் –
எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்-அக்னி போல் கிளர்ந்து தோன்றின திருமேனியை யுடையனாய்
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் ஆன சர்வேஸ்வரன்
இமையோர்க்கும் விசேஷணம் ஆக்கவுமாம்-அப்பொழுது ஹோம ஹவிஸ்ஸை வாங்கிக் கொள்ள வரும் இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் என்றவாறு –
அரி பொங்கிக் காட்டும் அழகு-சத்ருக்களுக்கு தான் பயங்கரம் –ஆஸ்ரித அன்பர்களுக்கு பரம போக்யம் -என்றவாறு –

நரஸிம்ஹாவதாரம் என்றைக்கோ நடந்த்தாயினும் பாவநாப்ரகர்ஷத்தாலே அது ப்ரத்யக்ஷம்போல் தோற்றுமே ஆழ்வார்க்கு,
அப்படியே தோற்ற, ஆச்ரிதர்களுக்கு விரோதம் செய்பவர்மேல் எம்பெருமானுக்கு உண்டாகும் சீற்றம் என்ன அற்புதமானது! என்று அநுஸந்தித்து,
“எம்பெருமானுடைய தெளிவைக் காட்டிலும் சீற்றமே பக்தர்கட்குச் சரணம்“ என்னுமர்த்தம் விளங்கும்படியாகப் பேசுகிற பாசுரம் இது.

திறந்து எரிகான்ற பிலவாய் இவையா! – தூணில் நின்றும் தோன்றினவாறே இரணியன் மேலுண்டான அளவுகடந்த சீற்றத்தினால்
திருவாயானது விரிந்து அழலை உமிழ்ந்ததே, அதனைப் பேசுகிறார், நெருப்பைக் கக்கீன திருவாய் இதுதானோ என்கிறார்.
“கான்ற“ என்ற பெயரெச்சத்தில், கால் – வினைப்பகுதி. காலுதல் வீசுதல்.

எரிவட்டக்கண்கள் இவையா – 1. “தூயாய் சுடர் மாமதி போல் உயிர்க்கெல்லாம், தாயாயளிக்கின்ற தண்டாமரைக் கண்ணா!“
என்னும் படி திருக்கண்கள் குளிர்ந்திருப்பது அன்பர்களைக் காணும்போது, அன்பர்க்குத் துன்பம் செய்யுமவர்களைக் காணும்போது
கொள்ளிவட்டம்போல் உருண்டு சிவந்து ஜ்வலிக்குமே, அப்படி ஜ்வலித்த திருக்கண்களோ இவை!,
இத்திருக்கண்களில் இன்றைக்கும் சீற்றம் மாறவில்லையே யென்கிறார்போலும்.

ஆக முன்னடிகளால், திருவாயும் திருக்கண்களாமாகிற அவயவங்களுக்கு உண்டான விக்ருதியைப் பேசினார்.
இனி பின்னடிகளால், அவயவியான நரஸிம்ஹமூர்த்தியின் கிளர்ச்சியைப் பேசுகிறார்.
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான் – “எரிபொங்கிக்காட்டும்“ என்பதை பெருமானுக்கு விசேஷணமாக்கிப் பதவுரை வரையப்பட்டது.
அன்றியே, இமையோர்க்கு விசேஷண மாக்கியும் உரைக்கலாம். ஹோமகாலத்திலே வைதிகர் கொடுத்த ஹவிஸ்ஸை அக்நியானது
ஸ்வீகரித்துக்கொண்டு பெரிய கிளர்த்தியோடே போய் ஸமர்ப்பிக்கும்படி யிருக்கிற
இந்திரன் முதலிய தேவர்களுக்கு நிர்வாஹகன் என்று பொருளாகும்.
(எரி – அக்நி தேவதையானது, பொங்கி – கிளர்ந்து, காட்டும் – ஹவிஸ்ஸைக் கொண்டு கொடுக்கப் பெறுகின்ற, இமையோர் என்கை.)

நரஸிம்ஹமூர்த்தி இவ்வளவு பயங்கரமான வடிவு பெற்றிருந்தாலும் இது சத்துருக்களுக்குப் பயங்கரமேயன்றி
அன்பர்கட்குப் பரம போக்யமேயாதலால் “அரிபொங்கிக் காட்டும் அழகு“ என்று அழகிலே முடிக்கப்பட்டதென்க.

——————————————————————————————

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் -குழவியாய்த்
தான் ஏழுலக்குக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிர் அளிக்கும் வித்து-22-

பதவுரை

தான் ஏழ் உலகுக்கும் வித்து–தானே ஏழுலகங்களுக்கும் உபாதாந காரணமாய்
தன்மையவன்–ஆச்ரயபூதனாய்
குழவி ஆய்–(பிரளய காலத்தில்) சிறு குழந்தையாய்க் கொண்டும்
மீன் ஆய்–(பின்பொருகால்) மத்ஸ்ய ரூபியாய்க் கொண்டும்
உயிர் அளிக்கும்–ஆத்மாக்களை ரக்ஷிக்கின்றவனான
தானே–எம்பெருமான் தானே
தன்மைக்கும்–(ரூபம் ரஸம் கந்தம் முதலிய) குணங்களுக்கும்
அரி உருவன்–நரசிங்கவுருக் கொண்டவன்
தானே அழகியான்–அழகுக்கு எல்லை நிலமாயிருப்பவனும் அவன்றானே
பழகியான்–புராண புருஷனாகிய அப்பெருமானுடைய
தாளே–திருவடிகளையே
பணிமின்–ஆச்ரயியுங்கோள்

தானே காரணமாய் -எல்லா அவஸ்தைகளிலும் அநாதி காலமாக ரக்ஷித்து —
ஸ்ருஷ்டி -அவாந்தர பிரளயத்தில் திரு வயிற்றில்
வைத்து ரக்ஷித்து – ஆலிலை துயின்று -மன்வந்த்ர பிரளயத்தில் மத்ஸ்ய ரூபியாய் தோன்றி ரக்ஷித்து
சிறுக்கனை ரக்ஷிக்க அவன் வீயத் தோன்றி -அருளும் சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்க பரோபதேசம்  பண்ணுகிறார்
அவன் திரு அழகை மீண்டும் வாய் வெருவுகிறார்“அழகியான் தானே அரியுருவன் தானே“ என்று.

நம்முடைய புத்திக்கு எட்டாத அநாதிகாலந் தொடங்கிப் பலவகைகளால் ரக்ஷணம் செய்துகொண்டு வருதல் பற்றி
எம் பெருமானுக்குப் “பழகியான்“ என்று திருநாமமிட்டனர்.

ஒரு த்ரவ்யத்தைப் பற்றியிருக்கும் குணத்திற்குத் “தன்மை“ என்று பெயர்,
அக்குணத்திற்கு ஆச்ரயமான குணிக்குத் தன்மையன் என்று பெயர். புஷ்பம் என்கிற த்ரவ்யத்திற்கு மணம் குணமாயிருக்கின்றது.
அந்த மணத்திற்குப் புஷ்பம் ஆச்ரயமாகையாலே புஷ்பம் குணியெனப்படும். இப்படியே எங்குங் கண்டுகொள்க.
இங்கு “தன்மைக்கு தன்மையன்“ என்றது – நிலம் நீர் தீ கால் முதலிய பூதங்களின் குணங்களாகீய மணம் சுவை
முதலியவற்றுக்கெல்லாம் தானே ஆச்ரயமாயிருப்பவனென்கை.
1. “நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்“ என்கிறபடியே பஞ்சபூதாதிகளும் தானேயாயிருப்பவன் என்றவாறு.

இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “தன் பக்கலிலே வைக்கும்“ என்று ஒரு வாக்கியம் காண்கிறது.
அதனால் “தன் வைக்குந்தன்மையனே“ என்றும் பாடமிருந்ததாகத் தெரிகின்றது.

ஏழு உலகுக்கும் தான் வித்தாய் -அவ் உலகங்களை தன்னுள்ளே -வைக்கும் தன்மையனாய் –
பிரளயத்தில் அழியாத படி அடக்கி வைக்கும் குணம் யுடையவன் -என்றபடி

——————————————————————————————

நாம் அறிந்த நிலையிலும் -அறியாத நிலையிலும் எம்பெருமான் தானே நம் உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணுமவனுமாய் இருக்க
நாமும் சாதன அனுஷ்டானம் பண்ண வேணுமோ -என்கிறார்

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

பதவுரை

விடை அடர்த்த–(நப்பின்னைப் பிராட்டிக்கா) ரிஷபங்களை வலியடக்கினவனும்
பத்தி உழவன்–(தன் விஷயத்தில் சேதநர்கட்கு) பக்தியுண்டாவதற்குத் தானே முயற்சி செய்பவனுமான எம்பெருமானுடைய
பழம் புனத்து–(ஸம்ஸாரமென்கிற) அநாதியான கேஷத்ரத்திலே
வித்தும் இட வேண்டும் கொலோ–(ஸ்வப்ரயத்நமாகிற) விதையை நாம் விதைக்க வேண்டுமோ? (வேண்டா)
(நம் முயற்சியின்றியே தானே பகவத் விஷயத்தில் ருசி விளைந்தால் திருநாட்டுக்குச் செல்லுமாளவும் நாம் எப்படி தரித்திருப்ப தென்றால்)
மொய்த்து எழுந்த–திரண்டு கிளர்ந்த
கார் மேகம் அன்ன–காளமேகம் போன்ற
கரு மால்–கரிய திருமாலினது
திரு மேனி–திருமேனியை
நீர் வானம்–நீர்கொண்டெழுந்த மேகமானது
நிகழ்ந்து–எதிரே நின்று
காட்டும்–காண்பிக்கும்
(போலி கண்டு நாம் தரித்திருக்கலாமென்றபடி.)

நாம் அறிந்த நிலைமையிலும் அறியாத நிலைமையிலும் எம்பெருமான் தானே நம்முடைய உஜ்ஜீவநத்திற்கு
க்ருஷிபண்ணு மவனாயிருக்க, நாமும் ஸாதநாநுஷ்டாநம் பண்ணவேணுமா, வேண்டா என்கிறார்.

ஸ்ரீவைகுண்டத்திலே எம்பெருமான் நித்யர்களோடும் முக்தர்களோடுங் கூடிப் பரிபூர்ணாநுபவம் பெறாநிற்கச் செய்தேயும்
அதனால் அப்பெருமான் சிறிதும் மகிழாது, பல பிள்ளைகளைப் பெற்ற ஒரு தகப்பானார், தனது ஒருமகன் மாத்திரம்
தேசாந்தரத்திலிருக்க மற்ற எல்லாப் புத்திரர்களோடுங் கூடி வாழா நின்றாலும் அதனால் மகிழ்ச்சியடையாமல்
தேசந்தரத்திலுள்ள புத்திரனது பிரிவையே நினைத்துப் பரிதபிக்குமாபோலே எம்பெருமானும் ஸம்ஸாரிகளான
அஸ்மதாதிகளின் பிரிவையே நினைத்துப் பரிதாபமுற்று நம்மோடே கலந்து பரிமாறுவதறகாகக் கரண களே பரங்களை
நமக்குத் தந்தருளி அவற்றைக்கொண்டு நாம் காரியஞ் செய்யும்படியான சக்தி விசேஷங்களையும் நமக்குக் கொடுத்து,
மிகவும் அஹங்காரிகளான நம்மெதிரில் தான் ப்ரத்யக்ஷமாகவந்து நின்றால் நாம் பொறாமைகொண்டு ஆணையிட்டாகிலும்
தன்னைத் துரத்திவிடுவோமென்றெண்ணி ஒருவர் கண்ணுக்குந் தோற்றாதபடி, உறங்குகிற குழந்தையைத் தாயானவள் முதுகிலே
அணைத்துக்கொண்டு கிடக்குமாபோலே எம்பெருமான்றானும் தானறிந்த ஸம்பந்தமே காரணமாக நம்மை விடமாட்டாமல்
அந்தர்யாமியாயிருந்து தொடர்ந்துகொண்டு நம்பை பொருகாலும் கைவிடாமல் ஸத்தையை நோக்கிக் கொண்டு
நமக்குத் துணையாய்ப் போருமளவில், நாம் கெட்ட காரியங்களிலே கை வைத்தோமாகில் நம்மைத்திருப்ப மாட்டாமல்
அநுமதிபண்ணி உதாஸீநரைப்போலேயிருந்து திருப்புகைக்கு இடம் பார்த்துக்கொண்டேயிருந்து,

நாம் செய்கிற தீமைகளில் ஏதேனுமொரு தீமையாவது – விஷயப்ரணனாய் வேசிகளைப் பின்தொடர்ந்து அடிக்கடி
கோவில்களிலே நுழைந்து புறப்படுகை, வயலில் பட்டிமேய்ந்த பசுவை அடிப்பதாகத் துரத்திக்கொண்டு போம்போது
அது ஒரு கோவிலைப்ரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு ஓடுகிறவளவிலே அதைவிடமாட்டாத ஆக்ரஹத்தாலே தானும் அக்கோவிலை வலஞ்செய்க; (
சிசுபாலாதிகளைப்போலே) நிந்தை செய்வதற்காகத் திருநாமங்களைச் சொல்லுகை முதலியன. –
நன்மையென்று பேரிடக்கூடியதா யிருக்குமோவென்று பார்த்துவந்து அப்படிப்பட்ட தீமைகளைக் கண்டுபிடித்து
“என் ஊரைச் சொன்னாய், என்பேரைச் சொன்னாய், என்னடியாரை ரக்ஷித்தாய், அவர்கள் விடையைத் தீர்த்தாய்,
அவர்களுக்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்“ என்றப்படி சில ஸுக்ருதங்களை ஏறிட்டு மடிமாங்காயிட்டு
யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆநுஷங்கிகம் என்கிற ஸுக்ருத விசேஷங்களைத் தானே கல்வித்தும்
அப்படி கல்வித்தவற்றை ஒன்றை அனேகமாக்கியும் நடத்திக்கொண்டு பொருவன் – என்பது சாஸ்த்ரமுகத்தால் நாம் கண்டறிந்த விஷயம்.

யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆநுஷங்கிகம் என்னப்படுகிற ஸுக்ருதங்கள் எவையென்னில்,
அவ்வூர் இவ்வூர் என்று நாம் பல ஊர்களையும் வம்புக்காகச் சொல்லுமாளவிலே
“குருவிமலே, பரங்கிமலை, திருவேங்கடமலை“ என்று வாயில் வந்துவிட்டால்
இவ்வளவே பற்றாசாக “என் ஊரைச் சொன்னான்“ என்று எம்பெருமான் எழுதிக்கொள்வன்,

அவன் இவன் என்று பல பேர்களையும் சொல்லிக்கொண்டு வருமடைவிலே சில பகவந் நாமங்களும் கலந்து வந்துவிட்டால்
“என் பேரைச் சொன்னான்“ என்று கணக்கிடுவன், சில பாகவதர்கள் காட்டிலே வழிபோகா நிற்கையில் அவர்களை
ஹிம்ஸித்துக் கொள்ளையடிக்க வேணுமென்று சில கள்ளர் முயன்றிருக்குமளவிலே, ஏதோ தன் காரியமாக வழிபோகிற ஒரு சேவகன்
அவர்கள் பின்னே தென்பட, அவனை அந்த பாகவதர்களின் ரக்ஷணத்திற்காக வந்தவனாக நினைத்து அக்கள்ளர் அஞ்சி
அப்பால் போய்விட அதுவே பற்றாசாக அந்த சேவனை “என்னடி யாரை நோக்கினவன் இவன்“ என்று எழுதிக்கொள்வன்,
ஒருவன் வேனிற் காலத்திலே தன் வயல் தீய்ந்து போகாநிற்கையில் நீருள்ள விடத்தில் நின்றும் வயலிலே பாய
நெடுந்தூரத்திலே ஏற்றமிட்டு இறையாநிற்க, பாலை நிலத்தில் நடந்து விடாய்த்து இளைத்துவருகிற சில பாகவதர்கள்
அவனறியாமல் அந்த நீரிலே இளைப்பாறிப் போனால் அது காரணமாக “என்னடியாருடைய விடாயைத் தீர்த்தானிவன்“ என்று கணக்கிடுவன்.
ஒருவன் தனக்குச் சூது சதுரங்கமாடுவதற்கும் காறு வேண்டினபோது வந்து உலாவுகைக்கும் புறந்திண்ணை கட்டிவைக்க,
மழையிலோ வெய்யிலிலோ வருந்தின சில பாகவதர்கள் அத்திண்ணையிலே வந்து ஒதுங்கியிருந்து போக,
அதுகொண்டு “என்னடியார்க்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தான்“ என்று கணக்கிடுவன்,
இப்படியாக நாமறியாமல் எம்பெருமானே ஏறிடும் ஸுக்ருதங்களே யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆநுஷங்கிகம் எனப்படும்.

இப்படி அஜ்ஞாத ஸுக்ருதங்களையாகிலும் ஹேதுவாகக் கொண்டு எம்பெருமான் கடாக்ஷிப்பனாகில்
அந்த கடாக்ஷம் ஸஹேதுகமாகாதோவென்னில், ஆகாது, இந்த யாத்ருச்சிகம் முதலிய ஸுக்ருதங்களுமுட்பட நமக்குண்டாம்படி
ஆதியிலே கரணகளே பாங்களைக் கொடுத்து ஸ்ருஷ்டித்தவன் எம்பெருமானாகையாலே, கடாக்ஷஹேதுவாகச் சொன்ன
அஜ்ஞா தஸுக்ருதங்களும் அவனுடைய க்ருஷிபலமேயாம்.

(ஸ்ருஷ்டிப்பது சேதநருடைய கருமங்களுக்குத் தகுதியாகவன்றோவென்னில், ஸ்ருஷ்டிப்பது கருமத்தைக் கடாக்ஷதித்தேயாகிலும்
அவரவர்களுடைய கருமபரிபாகத்துக்குத் தகுந்தபடி வெவ்வேறு காலங்களிலே ஸ்ருஷ்டிக்கவேண்டியிருக்க,
ஏக காலத்திலே ஸ்ருஷ்டித்தது அநுக்ரஹ காரியமென்பர்.)

அசித்தோடு வாசியற்றுக் கிடக்கிற நிலைமையிலே உஜ்ஜீவநத் துக்கு கருவியான கரணகளேபரங்களைப் பேரருளாலே
அவன் தந்தபடியே அநுஸந்தித்தால், நம் உஜ்ஜீவனத்தில் அவன் செய்தபடி பார்த்துக்கொண்டிருப்பது தவிர நாம்
ஒரு முயற்சியும் பண்ணவேண்டாதபடியா யிருக்கும். புதிசாகத் தரிசு திருத்தின தல்லாமல் பழையதாக உழுவது நடுவது
விளைவதாய்க்கொண்டு போருகிற ஒரு கேஷத்ரத்திலே உழவனானவன் அதுக்கென்று ஒரு க்ருஷியும் பண்ணாதிருந்தாலும்
உதிர்ந்த்தானியமே முளைத்து விளைந்து தலைக்கட்டுமா போலே, அஜ்ஞாத ஸுக்ருதங்கள் நம்மிடத்திலே தன்னடையே
விளையும்படியாகவன்றோ பத்தியுழவனென்று சொல்லப்படுகிற ஈச்வரன் அநாதிஸம்ஸாரத்தை ஸ்ருஷ்டித்துத் திருத்தி நட்த்திப் போருவது.

இப்படிப்பட பத்தியுழவன் பழம்புனத்தில் நாமும் வித்து இடவேண்டுமோ? நாமும் உபாயாநுஷ்டாநம் பண்ணவேணுமோ?
எம்பெருமானுடைய ப்ரவ்ருத்திக்கு விரோதியான நம்முடைய ப்ரவ்ருத்தியை நாம் நிறுத்திக் கொள்வதன்றோ நமக்கு நன்மை என்றவாறு.

விடையடர்த்த வரலாறு – கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமாகப் பிறந்த்தனால்
நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை
கந்யாசுல்கமாகக் குறித்தபடி யார்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான்
ஏழு திருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டான்.

ஆழ்வார் எம்பெருமானுக்குப் பத்தியுழவன் என்று திருநாமமிட்ட அழகை என்சொல்வோம்!.
தன் விஷயத்தில் நமக்கு பக்தி யுண்டாவதற்குத் தானே க்ருஷி பண்ணுகிறானாம் எம்பெருமான்.
அந்த க்ருஷியாவது ஸ்ருஷ்டியவதாராதிகள் என்க.

இனி முன்னடிகட்கும் பின்னடிகட்கும் ஸங்கதி (சேர்த்தி) யாதென்னில், –
பத்தியுழவன் பழம்புனத்தில் நாம் வித்து இட வேண்டாவாகில் அப்படியே ஆகுக, எம்பெருமானே க்ருஷி பண்ணட்டும்,
அந்த க்ருஷி பலித்து நாம் பரமபதஞ்சென்று நித்யாநு பவம் பண்ணுவதென்பது விரைவில் நடைபெறக் கூடியதன்றே,
சிறிது காலவிளம்பமாகுமே, அதுவரையில் நமக்குப் போது போக்கு யாதென்ன,
1. பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவி மலரென்றுங் காண்டோறும் – பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும்,
அவ்வவையெல்லாம் பிரானுருவேயென்று“ என்றும்
2. “மேகங்களோ வுரையீர், திருமால் திருமேனியொக்கும் யோகங்கள் உங்களுக்கெவ்வாறு பெற்றீர்?“ என்றும்,
3. “ஒக்கு மம்மானுருவமென்று உள்ளங்குழைந்து நாணாளும், தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந்தோறும்“ என்றும்
சொல்லுகிறபடியே போலிகண்டு போதுபோக்க ஸாமக்ரி உண்டு என்கிறார்.

“ருசி பிறந்தபின்பு ப்ராப்தியளவும் நாம் தரிக்கைக்கு அவன் திருமேனிக்குப் போலியுண்டென்கை“ என்ற
வியாக்கியான ஸ்ரீ ஸூக்தியும் நோக்கத்தக்கது.

இப்பாட்டின் முதலடியின் மூன்று சீர்களாகிய “வித்துமிட வேண்டுங்கொல்லோ“ என்றவளவு திருக்குறளில் எடுத்தாளப்பட்டுள்ளது,
விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் “வித்துமிட வேண்டுங்கொல்லோ விருந்தோம்பி, மிச்சின் மிசையான் புனம்“ என்ற குறள் காண்க.

———————————————————————————

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-

பதவுரை

பால் பொன் பசுப்பு கார் நான்கு வண்ணமும்–வெண்மை சிவப்பு பசுமை கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களையும் உடையனாய்க் கொண்டு
நிகழ்ந்தாய்–(நான்கு யுகங்களிலும்) அவதரித்தாய்
இருவரையும்–மதுகைடபர்களாகிற இரண்டு அசுரர்கள்
வீய–தொலையும்படி
இகழ்ந்தாய்–வெறுத்தாய்
சேனாபதி ஆய்–அர்ஜுநனுடைய ஸேனைக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
மனம்–த்ரௌபதியின் கூந்தலை முடிப்பிக்க வேணுமென்று) மநோரதங் கொண்டிருந்த படியே
போர்–பாரதயுத்தம்
முடிக்கும் வகை–தலைக்கட்டும்படி
சினம் போர் சுவேதனை–சீறிக்கொண்டு யுத்தத்தில் இழியும் ஆண்புலியான அர்ஜுன்னை
புகழ்ந்தாய்–கொண்டாடினாய்

கிருத யுகம் -சத்வ குணம் மிக்கோர் -வெளுத்த பால் நிறம் /
த்ரேதா யுகம் -சிவந்த / த்வாபர -பசுமை / கலி யுகம் -கறுத்த -இயற்கையான நீல நிறம் என்றவாறே
கிருதயுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காக
எம்பெருமான் பால்போன்ற நிறத்தைக் கொள்வன், த்ரேதா யுகத்திலே சிவந்த திருநிறத்தைக் கொள்வன்,
த்வாபரயுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வன்,
கலியுத்தில் எந்த நிறத்தைக் கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீல நிறத்தைக் கொள்வன் என்க
பாலிநீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை -பொற்புடைத் தடுத்து வண்டு விண்டுலாம் நீல நீர்மை என்றி

இருவரையும் வீய இகழ்ந்தாய்–மது கைடவர் -இருவர் -அன்றிக்கே -கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த வெந்தாய்-திருவாய் -3-2-3-என்றபடி இரு வகுப்பில் உள்ள சேனைகள் –
பாரத சமரத்தில் துர்வர்க்கம் அடைய திரண்டது இ றே இரண்டு சேனையிலும் -இங்கே நாலு ஐந்து பேரும் அங்கே
ஓன்று இரண்டு பேரும் ஒழிய முடித்து பொகட்டான் ஆயிற்று –பஞ்ச பாண்டவர் -அஸ்வத்தாமா -க்ருபாச்சார்ய -க்ருத வர்மாக்களையும்
தவிர மற்றவர்களையும் ஒழித்து மண்ணின் பாரம் நீக்கினான் –

உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாள பெற்றாலும் வேண்டேன் பெரும் செல்வம் -என்று சொல்லி போர் ஒழிந்த அர்ஜுனனுக்கு
ஸ்ரீ கீதை அருளி போர் செய்ய உடன்படுத்தி-புகழ்ந்தாய்-சினப் போர் சுவேதனைச் —ஸ்வேத வாஹனன் -வெள்ளைக் குதிரைப் பூண்ட தேர் –
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று -பெரியாழ்வார் திருமொழி –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கருட தண்டகம்–

November 19, 2016

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரி
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

————————————-

28 ஸ்தோத்திரங்கள் அருளிச் செய்து உள்ளார் ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் –வாஹனம் /த்வஜம் –
கருட பஞ்சாசத் -50 ஸ்லோகங்கள் -திருவஹிந்த்ரபுரம்
இது ஸ்ரீ காஞ்சி புரத்திலே அருளிச் செய்தார் -1268 -திருவவதாரம் -சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் -எக்காலத்தில் எங்கு எது நடக்கும் அறிந்தவர் –
-7-பாம்புகளும் -சங்க பாலனை அனுப்பி -7-கட்டங்களையும் தாண்டி வர –
கருட பகவானை பிரார்த்தித்து -அத்தை காலில் கவ்விக் கொண்டு போக -இவரை கெஞ்சி அந்த பாம்பைப் பெற்றான் என்பர் –
ப்ரத்யக்ஷமாக பெற்றார் -பலத்தை -ஆராவமுதன் -அல்லிக் கமலக் கண்ணனாய் இருப்பான் -அவனும் –
காயத்ரி -பாதம் கால் பகுதி- 6 எழுத்து தொடங்கி –12- எழுத்துக்கள் கொண்ட -ஜகதி வரை –ஏழு சந்தஸ் -சூரியன் -புரவி ஏழும் ஒரு காலுடைய தேர் –
கீதா ஸ்லோகம் -8 எழுத்து / உஷ்ணிக் -7 எழுத்து பாதம் /26 எழுத்துக்கள் ஒரு பாதம் வரை போகலாம் –இவற்றுக்கு சந்தஸ் பேர்கள் கொடுத்து உள்ளார்
26 மேலே உள்ளவை தண்டகம் -999 வரை -3 3 மூன்றாக கூட்டி போவார்கள்
27 /30 /33- 3 எழுத்துக்கள் கணம்–கருட தண்டகம் -108 அக்ஷரங்கள் –
ஒரு பாதத்துக்கு -36 கணங்கள் / முதல் இரண்டு கணம் நகணமாக இருக்க வேண்டும்
ஒரே ஸ்லோகம் தான் –
நகணம் –லகு /குரு அக்ஷரம் குறில் நெடில் -மூன்று லகு அக்ஷரம் நகணம் /
முதல் ஆறு எழுத்துக்கள் லகு -வாக இருக்கும் மேலே -ரகணம் — குரு லகு குரு /
அமர கோசம் 9 பெயர்கள் சொல்லும்
1-கருத்மான் –சிறகுகளை யுடையவன் -/ 2-கருட –கருத்துக்களால் -சிறகுகளால் பரப்பவன் -சிறகுகளைக் கொண்டு சர்ப்பங்களை அழிப்பவன்
3-தார்ஷ்யன்-காஸ்யப பிரஜாபதி -விநாதா /கத்ரு பிள்ளைகள் சர்ப்பம் -அருணன் கூடப் பிறந்தவர்
4-வைநதேயதா -வினை குமரன் /5- ககேஸ்வரா -பறவை கம் -ஸூ கம் ஆகாசம் -புள்ளரையன் கோ/வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழே வரும் கண்ணன் –
6- நாகாந்தகா -நாகங்களை முடிப்பவர் /7 விஷ்ணு ரத –ரதாங்க பாணி –சக்கரம் ரத்தத்தில் அங்கம் /
8-ஸூ பர்ண -அழகிய சிறகுகள் -சோபமான பக்ஷம் -/9-பன்னாகாசன் -பண்ணகங்கள் நாககங்கள் அசனம் உணவாக
விஷ்வக்சேனர் -சேஷ அசனம் –பெருமாள் அமுது செய்த –மிச்சம் உண்பவர் –
திரு ஆடி ஸ்வாதி திருமஞ்சனம் –பக்ஷிராஜர் சந்நிதி -மிக பிரசித்தம் -ஆழ்வார் திருநகரியில் /
கருட சேவை -அருளாளி புட் கடவீர்-வையம் கொண்டாடும் வைகாசி கருட சேவை பெருமாள் கோயிலில்
ஆழ்வார் திரு நகரியில் -9-கருட சேவை /திரு வாலி திரு நகரி மங்களாசானம் –11–கருட சேவை -திரு நாச்சியார் கோயில் கல் -கருட சேவை —
5-கருட சேவை ஸ்ரீ வில்லிபுத்தூர் –பிரசித்தம் -/- கருடக் கொடி த்வஜ ஆரோகணம்-அவரோகணம் உத்சவங்களில் –

————————————————————————-

நம: பந்நக நத்தாய வைகுண்ட வஶ வர்த்திநே |

ஶ்ருதி ஸிந்து ஸுதோத்பாத மந்த்ராய கருத்மதே ||

நம-நமஸ்காரம் -தொடங்கி -பர உத்கர்ஷம் /ஜிதந்தே -நமது உத்கர்ஷம் -அடியோம்
1- பந்நக நத்தாய-பாம்பால் சூழப் பட்டு -மந்த்ர பர்வம் போலே –
பாதங்களால் செல்வது இல்லை -பாத நகச்ச -ஊர்ந்து போவதால் -கட் ச்செவி- சஷூர் -கண்ணும் காதும் ஒரே இந்திரியம்
2- வைகுண்ட வஶ வர்த்திநே-அவன் வசத்தில் இருந்து வர்த்திப்பவர் –மந்த்ர பர்வதத்துக்கு இத்தாலும் சாம்யம் உண்டே
3-ஸ்ருதி சிந்து ஸூ தோத்பாத –வேதாந்த கடல் –பாற் கடலை கடைந்து அமிர்தம் போலே -உத்பாத -தோன்ற காரணம் -அம்ருத கலசம் -கொண்ட கருடன்
மந்தராய -மந்த்ர பர்வதத்துக்கு -போலே உள்ள கருடன் -வேத மயன் -அன்றோ –
கண்ணாடி புறத்தில் உன்னைக் கண்டால் அன்றோ பிரிந்தார் வருத்தமும் நீ அறிவாய் –
4-கருத்மதே -மலைகளுக்கும் சிறகு இருந்ததே -வஜ்ராயுதம் -மைனாக பர்வதம் வாய் பகவான் காத்தார் -இத்தாலும் சாம்யம் மந்திரத்துக்கு –
நம:-கருத்மானை வணங்குகிறேன் -சிறகு அடித்துக் கொண்டே -கைங்கர்ய நிஷ்டை பொரு சிறைப் புள் உவந்து ஏறும் –
மம –இரண்டு எழுத்து சொல்லி மிருத்யு வாயில் நம -மூன்று எழுத்து சொல்லி அமிருதம் -பெறலாமே –
நம -பல்லாண்டு -போற்றி -பர்யாயம்
தாச சஹா வாஹனம் ஆசனம் த்வஜ -யஸ்யே விதானம் -வியஜனம் விசிறி- திரையீ வேதமே வடிவாக
மந்த்ர பர்வதம் கூர்மம் வசம் இருந்தது போலே -பெரிய திருவடி வைகுண்ட நாதன் வசம் -என்றபடி

அழகிய சிறகுகளை கொண்ட கருட பகவானுக்கு நமஸ்காரம்.
தங்களுடையத் திருமேனியை தாங்கள் வென்ற நாகங்கள் அழகு செய்கின்றன,
அவை தேவரீருக்கு ஆபரணமாக விளங்குகின்றன.
தாங்கள் ஸ்ரீவைகுந்தத்தில்  பெருமாளுக்கு அந்தரங்க தாசனாக இருந்து அவருக்கு கைங்கர்யம் செய்கின்றீர்கள்.
வேதங்களாகிய பாற்கடலை கடைந்து ப்ரஹ்ம வித்யா என்னும் அமிர்தத்தை அடைவது போல
தங்களை வணங்கி இந்தப் ப்ரஹ்ம வித்யையை அடையலாம்.
கருத்மானாகிய தங்களுக்கு நமஸ்காரம்.

————————————————————–

முதல் ஸ்லோகம் 32 எழுத்துக்களைக் கொண்ட  அநுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்துள்ளதுஇறுதி ஸ்லோகமும் இதே சந்தஸ்ஸில் அமைந்துள்ளது

கருடமகில வேத நீடா திரூடம் த்விஷாத் பீடா நோத் கண்டித ஆகுண்ட
வைகுண்ட பீடீக்ருதஸ் கந்த மீடே ஸ்வ நீடா கதி ப்ரீத ருத்ரா ஸூ கீர்த்தி
ஸ்தா நாபோக காடோப கூட ஸ்புரத் கண்ட கவ்ராத வேத வ்யாத வேப மான
த்வி ஜிஹ்வாதி பா கல்ப விஷ்பார்ய மாணஸ் படா வாடிகா ரத்ன ரோசிஸ் சடா  நீ ராஜிதம் காந்தி கல்லோலி நீ ராஜிதம் –1-

கருடமகில வேத நீடா திரூடம்–ஈடே –ஸ்துதிக்கிறேன் –கருடன் -கருடனை –
அகில வேத -நீடா -வாசஸ் ஸ்தானம் -வேத மயன் -வேதாத்மா -அதிரூடம்-சரீரமாக கொண்டு

முதல் ஆறு எழுத்துக்கள் -இரண்டு கணங்கள் -நகணம் -கருட மகில- எல்லாம் லகு எழுத்துக்கள்
வே தா நீ -குரு லகு குரு -ரகணம் –
த்விஷாத் பீடா நோத் கண்டித–த்விஷாத் பீடன உத் கண்டித -விரோதிகளை அழிப்பதில் ஆர்வம் கொண்டு-அசுரர் நீர் எழ பாய் பறவை ஓன்று ஏறி
அப்படி உத்ஸாகம் கொண்ட ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு –
ஆகுண்ட வைகுண்ட பீடீக்ருதஸ் கந்தம் –தடை அற்ற வீர்யம் கொண்ட விஷ்ணுவுக்கு ஆசனமான திருத் தோள்கள்
ஈடே -ஸ்துதிக்கிறேன்
ஸ்வ நீடா ப்ரீத –தனது இருப்பிடம் ஸ்ரீ வைகுண்டம் மீளவும் வரும் பொழுது
ருத்ரா ஸூ கீர்த்தி -ருத்ரை ஸூ கீர்த்தி இரண்டு மனைவிகள்
அவனும் ஸ்ரீ தேவி பூமா தேவி நீளா தேவி பராங்குச பரகால நாயகிகளை அணைத்துக் கொள்வான் —
ஸ்தா நாபோக காடோபகூட –முலைகளால் அணைத்த போகத்தினால்
ஸ்புரத் கண்டக-முள் எழும்பினால் போலே மயிர்க் கூச்சு
வ்ராத வேத வ்யாத வேப மான—கூட்டத்தினால் துன்பம் -பட்டு -பாம்புகள் பயந்து நடுங்கி தலை தூக்க -சம்சாரம் போகுமே –
த்வி ஜிஹ்வாதி பா கல்ப –இரண்டு நாக்கு கொண்ட உயர்ந்த பாம்புகள் -கல்ப -அணிகள்

யஜ்ஜ ஸூ த்ரம்–பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்-த்விஜா அதிபா
அரையில் அணி: தட்சகன்
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்—சங்க ஸூடன் என்றும் சொல்வர்

விஷ்பார்ய மாண ஸ்படா வாடிகா-விஸ்தரிக்கப் பட்ட ஸ்படா படங்களின் வரிசைகள்
ரத்ன ரோசிஸ் சடா ராஜி-ரத்னம் -ஒளி-கற்றைகள் -இத்தாலே
நீ ராஜிதம் -நீராஞ்சனம் –த்ருஷ்ட்டி தோஷம் -திருவந்திக் காப்பு –
காந்தி கல்லோலி நீ ராஜிதம்— ஸூய திருமேனி இயற்க்கை ஒளி வெள்ளத்தால் நீராஞ்சனம் –

கருட பகவானே  தாங்களே வேத ஸ்வரூபி,
வேதங்கள் தங்களின் புகழைப் பாடுகின்றன.
ஸ்ரீமந் நாராயணன் அசுரர்களை அழிக்க செல்லும் போது த ங்களின் தோளில் அமர்ந்து செல்கின்றார்.
அவ்வாறு தாங்கள் சேவைச் செய்ய செல்லும்  போது தங்களது இரு மனைவியரான ருத்ரையும், ஸுகீர்த்தியும் தங்களை பிரிந்திருக்கின்றனர்.
பெருமாள் அசுரர்களை வென்று வந்த பின்,  தங்களை அவர்கள் ஆரத்தழுவிக் கொள்கின்றனர்.
அந்த புளகாங்கிதத்தில் தங்கள் திருமேனியில் உள்ள சிறகுகள் சிலிர்த்தெழுகின்றன.
அவை தமது திருமேனியில் அணிந்துள்ள நாகங்களை கூர்பார்க்கின்றன.
ஆகவே அவை பயந்து தங்களின் படங்களை விரிக்கின்றன
அப்போது அவற்றின் மாணிக்க கற்கள் மிளிர்கின்றன.
அவ்வொளி தேவரீருக்கு கற்பூர ஆரத்தி போல உள்ளது.

கருடன் வேதஸ்வரூபனாக விளங்குவதையும்,
அவரை வேதங்கள் போற்றுவதையும்
அவர் பெருமாளுக்கு வாகனமாகவும், கொடியாகவும் திகழ்வதையும்,
அவருக்கு ருத்ரை, ஸுகீர்த்தி இன்று இரு மனைவியர்,
மஹா நாகங்கள் அவரின் ஆபரணமாக விளங்குகின்றன
என்பதை இந்த ஸ்லோகத்தில் நிகமாந்த மஹா தேசிகர் அற்புதமாக கூறியுள்ளார்.

கோலார்ந்த—காலார்ந்த கதிக் -வென்றிக் கடும் பறவை -சூழ்ந்து ரக்ஷிக்க –உறகல்-உறகல்
கொற்றப் புள் ஓன்று ஏறி மன்று ஊடே ஏறி வருகின்றான் -அசுரர் நீர் எழ பாய் பறவை ஓன்று ஏறி –
கருத்தை அறிந்து நடப்பதில் தலைவனாய் இருப்பதில் அத்விதீயம் —
ப்ரதி பக்ஷம் -அழிக்க ஒரே வியாபாரம் – பெரிய திருவடி தோளிலே பேராது இருந்ததே –பாய் பறவை ஓன்று ஏறி வீற்று இருந்தாய் -மட்டுமே -போதுமே –
உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் -ஆழ்வார் -மாறி மாறி பிறக்காமல் இருக்க இது ஒன்றுமே வேண்டும்-
வேதாத்மா –மேலே இருக்கக் கண்டு வேதார்த்தம் அறிந்து கொள்வோமே -கற்ற நூல் –மூலம் அறிந்தது போலே கருட வாஹனம் சேவித்து அறிவோம் –
த்ரி வ்ருத்தே சிரஸ் –த்ரி வ்ருத்த சாமம் –சிரஸ் -காயத்ரி சஷூஸ் சாமம் திருமேனி -தத் புருஷா– ஸூ பர்ண பஷாயே தீமஹீ -தன்னோ கருட-
பாடும் குயில்காள்-நல் வேங்கட வாணன் –நமக்கு ஒரு வாழ்வு செய்தால் பாடுமின்
ஆடும் கருடக் கொடி யுடையான் – ஆண்டாள் பிரிந்து ஆற்றாமையால் வருந்தி கருடரும் துடிக்க –
பறவை ஏறும் பரம் புருடா -நீ என்னைக் கைக் கொண்ட பின் –சம்சாரம் போகுமே –பெறும் கடலும் வற்றி பெறும் பதம் ஆகின்றதால் –

—————————————————————————————-

ஜய கருட ஸூ பர்ண தர்வீகரா ஹார தேவாதி பாஹார ஹாரின் திவவ்
கஸ்பதி ஷிப்த தம்போளி தாரா கிணா கல்ப கல்பாந்த வாதூல கல்போ
தயா நல்ப வீராயி தோத் யச்சமத்கார தைத்யாரி ஜைத்ரத்வஜா ரோஹ நிர்த்தாரி தோத் கர்ஷ
சங்கர்ஷணாத்மன் கருத்மன் மருத் பஞ்சகாதீச
ஸத்யாதி மூர்த்தே நகஸ்சித் சமஸ்தே நமஸ்தே புனஸ்தே நம –2-

ஜய கருட ஸூ பர்ண -சம்போதானம் -கூப்பிட்டு நேராக அருளிச் செய்கிறார் —
தர்வீகரா ஹார –சர்ப்பங்களை ஆகாரங்களை -நித்யம் ஒரு பாம்பு உண்ண வந்த கதை -ஸூ முகன் —
தேவாதி பாஹார ஹாரின் –தேவ அதிபதி அமிர்தம் அபகரித்தவரே
திவவ் கஸ்பதி ஷிப்த தம்போளி தாரா –தம்போளி–வஜ்ராயதம் நுனி பட்ட அலங்கரிக்கப் பட்ட –
கிணா கல்ப–தோள்களில்-கொண்ட –ஷிப்த -வீசப்பட்ட –தம்போளி வஜ்ராயுதம் தாரா -நுனி –
கைங்கர்யத்துக்கு அடையாளம் -தோள்களில் -வீரத்துக்கு -இது
கல்பாந்த வாதூல கல்போதய அநல்ப–ஊழிக் காற்றை போலே உத்பத்தி யுடைய குறைவற்ற –அநல்ப
வீராயி தோத் யச்சமத்கார -வீராதி களாலே நிரம்பி
தைத்யாரி ஜைத்ர த்வஜா ரோஹ -வெற்றிக்கு கொடியில் ஆரோஹித்து
நிர்த்தாரி தோத் கர்ஷ சங்கர்ஷணாத்மன் –சங்கர்ஷ ரூபமாக
கருத்மன் மருத் பஞ்சகாதீச -பிராணாதி பஞ்சகம் -அஞ்சு அதிபதி -இவற்றுக்கு
ஸத்யாதி மூர்த்தே-ஸத்யாதி மூர்த்தி ரூபமாக / த்யம் ஸூ பர்ண தாரஷ்ய கருட வியாகேஸ்வர –ஐந்து காற்றுக்களுக்கும் –
நகஸ்சித் சமஸ்தே நமஸ்தே புனஸ்தே நம —-ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்ப அன்றோ
மறு படியும் வணக்கம் –கைங்கர்யம் பண்ணுவதில் -ஒப்பு இல்லையே –

கருடாழ்வாரே! அழகிய சிறகுகளை உடைய சுபர்ணரே!
மஹா நாகங்கள் தங்களுடைய உணவாகின்றன.
தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தேவலோகம் சென்று தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்தீர்!
அப்போது இந்திரன் கோபம் கொண்டு வஜ்ராயுதத்தை தங்கள் மேல் ஏவினான்.
அதன் கூரிய முனை தங்கள் சிறகுகளிலும் திருமேனியிலும் ஏற்படுத்திய  வீரத்தழும்புகள் தற்போது
தங்களுக்கு ஆபரணமாகி தாங்கள் இந்திரனை வென்றதை அறிவிக்கின்றன.
தங்களது வீரச்செயல்கள்  பிரளய காலத்தின் மஹா வாயுவைப்போல உள்ளன.
தாங்கள் பெருமாளின் கொடியில் அமர்ந்து அவரது வெற்றிக்கு அறிகுறியாக விளங்குகின்றீர்கள்.
அதுவே தங்களது பெருமையும் பறை சாற்றுகின்றது.
தாங்களே பெருமாளின் வியூக மூர்த்தமான சங்கர்ஷணரின் அம்சமாக அவதாரம் செய்தீர்கள்.
தாங்களே சத்யர், சுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர், விஹாஹேஸ்வரர் என்ற ஐந்து வடிவாகி
ப்ராணன், அபாநன், சமாநன், உதாநன், வ்யாநன் என்ற ஐந்து வாயுவாகி தேவனாக ஒளிர்கின்றீர்.
அழகிய பொன்னிற சிறகுகளை உடையவரே!
தங்களுக்கு நமஸ்காரம்
மீண்டும் ஒரு  முறை நமஸ்காரம்.

தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்து தாயின் அடிமைத் தளையை நீக்கிய வீரச்செயலையும்,
போர்க்களத்தில் பெருமாளுக்கு முன்னரே சென்று காய்சினப் பறவையாகி அசுரர்களை அழிக்கும் வீரத்தையும்,
பாற்கடலில் பரவாஸுதேவரின் வியூக மூர்த்திகளில் ஒருவரான சங்கர்ஷணரின் அம்சமாக திகழ்வதையும்,
ஐந்து வாயுக்களின் வடிவமாக திகழ்வதையும்
இந்த ஸ்லோகத்தில் தூப்புல் வேதாந்த தேசிகர் பாடியுள்ளார்.

பையுடை நாகப் பகைக் கொடியான் -வ்ருத்த விபூதி நாயகன் அன்றோ -நித்ய மண்டலத்தில் விரோதம் இல்லையே –
உலகத்தில் விரோதம் உண்டால் -இருவரும் அழிப்பார்-பின்பு ஸூகமாக இருக்க இருவரும் என்றபடி –
அஞ்சிறைய புட் கொடியே ஆடும் பாடும் – நஞ்சரவில் துயில் அமர்ந்த நம்பி –என்னும் – வயலாலி -மைந்தா என்னும்
வயல் நன்றாக இருக்க -என் பெண் நலிகிறாளே– அஞ்சிறைய புட் கொடியே ஆடும் பாடும் —ஆடுகிறாள் பாடுகிறாள்
படுக்கை பற்றி பேசி –கருடன் திருக் கல்யாணம் பண்ணுவிக்க வர -ஆடுகிற சிறகுகளைக் கண்டு
அநுகாரம்–ஸ்தோத்ரமும் பண்ணுகிறாள் -பாவனையில் -அவனை போலவே -கண்ணனை பண்ணாமல் –
கோபிகள் -கண்ணன் காளியன் போலே அநுகாரம் பண்ணினார்கள் -ரக்ஷிக்க வரும் அத்தை நினைத்தே ஆறி இருக்கிறாள் –
அணி அரங்கன் ஆடுதுமோ -கருடன் போலே பறந்து போகலாமா என்கிறாள் -என் சிறகுகளின் அடங்கா பெண்ணைப் பெற்றேன் –
ஸ்ரீ ரெங்கத்தில் மதிள்களே- பெரிய திருவடி -முன்னோக்கி வளைந்து இருக்குமே வாசல்கள் –
காந்தஸ்ய–பணிபதி-சய்யா – ஆஸனம் – ஆசனம் வாஹனம் வேதாதாத்மா விஹஹேஸ்வரா
கருடன் பேரில் ஆரோஹித்து -நித்ய கைங்கர்ய நிஷ்டர்கள் ஆதி சேஷன் கருத்மான் –

—————————————————————————————————-

நம இத அஜஹத் சபர்யாய பர்யாய நிர்யாத பஷா நிலாஸ் பால நோத் வேல பாதோதி
வீஸீ சபேடா ஹதா காதா பாதாள பாங்கார சங்க் ருத்த
நாகேந்த்ர பீடாஸ் ருணீ பாவ பாஸ்வன்னக ஸ்ரேணயே சண்ட துண்டாய ந்ருத்யத் புஜங்க ப்ருவே வர்ஜிணே
தம்ஷ்ட்ரயா துப்யம் அத்யாத்மவித்யா -விதேயா விதேயா பவத் தாஸ்ய மாபதயேதா தயே தாஸ்ச மே –3-

நம-இத அஜஹத் சபர்யாய-விட்டு விடாத இடை விடாமல் -ஆராதனம் கொண்டு -குறைவற்று
பர்யாய நிர்யாத-பக்க வாட்டில் பரவும்
பஷா நிலாஸ் பால நோத்-பக்ஷம் -சிறகுகள் -அநில
உத்வேல பாதோதி–கடல் மேலே அலை -கொந்தளிக்க -இவர் பறந்து காற்று வீசுவதால் -பாதாளம் வரை போக
வீஸீ சபேடா-அலைகள் என்னும் கரங்கள்
ஆஹதா அகாதா -அடிக்கப்பட்ட ஆழ்ந்த கடலிலே
பாதாள பாங்கார -பாம் -சப்தம் ஒலித்து-நினைத்து பார்க்க முடியாத ஒலிகள்
சங்க்ருத்த- நாகேந்த்ர -நிறைந்த கோபங்கள் –திக் கஜங்கள் -நாகவரங்கள் -கொண்டு –
பீடாஸ் ருணீ பாவ பாஸ்வ –அங்குசம் போலே விளங்கும்
வன்னக ஸ்ரேணயே சண்ட துண்டாய-திரு நகங்களின் வரிசை -பயங்கர மூக்கும் கொண்டு
ந்ருத்யத் புஜங்க ப்ருவே–ஆட்டமாடும் புருவம் -கொண்டு
வர்ஜிணே தம்ஷ்ட்ரயா துப்யம் -கோரைப் பற்கள் -வஜ்ராயுதம் போலே
அத்யாத்மவித்யா -ஆத்மா பரமாத்மா வித்யைகள் -32 வித்யைகள் நன்றாக இருக்கும் படி-
விதேயா விதேயா-வசப்படும் படி அனுக்ரஹித்து -அடங்கி இருக்கும் படி
பவத் தாஸ்யம் -தேவரீர் அடிமை தனம்
மாபதயேதா தயே தாஸ்ச மே-அடியேனுக்கு பூண்டு -தயை புரிந்து அருள வேணும் –

கருட பகவானே! ஞானிகள் இடைவிடாமல் தங்களை தியானிக்கின்றனர்,
தாங்கள் பறக்கும் போது தங்களின் இறகுகள் உண்டாக்கும்காற்று பெரிய கடல் அலைகளை உண்டாக்குகின்றன.
அதன் சப்தம் பாதாள உலகத்தையும் எட்டுகின்றது.
அந்த ஓசை அங்குள்ளவர்களை அறைவது போல அவர்களுக்கு தோன்றுகின்றது.
பயங்கரமான “பாம்” என்ற சப்தம் அப்போது உருவாகின்றது.
அஷ்ட திக் கஜங்களும் அந்த சப்தத்தைக் கேட்டு அதிர்ந்து தங்களை தாக்க வருகின்றன.
தங்களது கூரிய நகங்கள் அந்த யானைகளை அடக்கும் அங்குசமாகின்றன.
தங்களது கூரிய அலகு தங்களது எதிரிகளின் மனதில் பய பீதியை உண்டாக்குகின்றது.
தாங்கள் புருவத்தை நெரிக்கும் போது அது நாகம் படமெடுப்பது போல உள்ளது.
தங்களது கோரைப்பற்கள் இந்திரனின் வஜ்ராயுதம் போல தங்கள் எதிரிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்குகின்றன.
தங்களுக்கு அந்த அளவில்லா புகழுக்கு  நமஸ்காரம்,
தாங்கள் அடியேனுக்கு ப்ரஹ்ம  வித்யையை அருள்வீர்களாக.
கருணை கூர்ந்து தங்களுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் அருள்வீர்களாக.

ஆச்சார்யனாக இருந்து ப்ரஹ்ம  வித்தையை வழங்கும் பான்மையையும்,
ஞானிகள் சதா சர்வ காலம் கருடபகவானை ஸ்துதிப்பதையும்
இந்த ஸ்லோகத்தில் ஆச்சார்யர் தேசிகர் கூறியுள்ளார்

ஞானம் அனுஷ்டானம் இரண்டும் பிரார்த்திக்கிறார் –சாஸ்திர யோநித்வாத் -ஒன்றே பிரமாணம் –
பாதகேந்த்ர -சாஸ்திரம் -வேதமயன் -என்பதால் முக்கியம் -தாச சஹா வாஹனம் –
ஆசனம் –த்வஜ —விதானம் விசிறி சிறகுகளை கொண்டே 7 கைங்கர்யங்கள் –
த்வத் அங்க்ரி சம்மர்த்த கினாங்க-அடையாளம் உண்டே -நமக்கு சங்கு சக்கர லாஞ்சனம் போலே இவற்றால் சோபிதம்
பொன் மலை மீமிசை கார் முகில் போல் –கறு முகில் தாமரைக் காடு பூத்து -அவயவங்கள் -அங்கங்களும் பங்கயமே –
நீடு இரு சுடர் இரு புரத்து ஏந்தி -சங்கு சக்கரம் -எனது –செம் பொன் குன்றின் மேலே வருவது போலே -அஜகத் பர்யாய –
வைர முடி -வைநதேயன் -கொடுத்த முடி கிரீட மகுட சூடாவதாம்ச -மூன்று -ராஜ முடி கிருஷ்ணராய முடி /கருடாதேறி
விமானம் -ஆ மருவி அப்பன் -கருடன் கூடவே சேவை –
நாக பாசம் -கழற்ற -அஹம் சஹா –தாஸ சஹா –காகுஸ்த -பிராணன் -வெளியில் உள்ள பிராணன் என்று சொல்லிக் கொண்டாரே பெரிய திருவடி –

—————————————————————————–

மநு ரநு கத பக்ஷி வக்த்ர ஸ்புரத்தார கஸ்தா வகஸ் சித்ர பாநு ப்ரியா சேகர
ஸ்த்ராய தாம் நஸ்திரி வர்க்கா பவர்க்க ப்ரஸூதி பர வ்யோம தாமான்
வலத் வேஷி தர்ப்ப ஜ்வலத் வால சில்ய பிரதிஞ்ஞாவதீர்ண ஸ் திராம் தத்துவ
புத்திம் பராம் பக்தி தே நும் ஜகன் மூல கந்தே முகுந்தே மஹா நந்ததோ
க்த்த்ரீம் ததீ தா முதாகா மஹீ நாம் அ ஹீ நாமஹீ நாந்தக –-4-

மநு ரநு கத -மந்த்ரத்தை பின் தொடர்ந்த
பக்ஷி வக்த்ர ஸ்–பா என்னும் எழுத்து ஷி என்னும் எழுத்துக்கள் -பிரணவத்தை –வக்த்ர -வாய் –
ஸ்புரத்தார கஸ்தா-நன்றாக விளங்கும் பிரணவம்
வகஸ் சித்ர பாநு ப்ரியா சேகர -ஸ் வாகா -அக்கினிக்கு பிரிய -ஸ் வாகா பின் தொடர -தலை யாக
ஸ் வாகா— அக்னி மூலம் தேவர்களுக்கு சேர்ப்பாள் யஜ்ஞங்களிலே
ஸ்த்ராய தாம் நஸ்திரி வர்க்கா பவர்க்க ப்ரஸூதி –தர்ம அர்த்த காமம் -அபவர்க்கம் மோஷம்
பர வ்யோம தாமான் –ஸ்ரீ வைகுண்டத்தில்
வலத் வேஷி -இந்திரனுடைய
தர்ப்ப ஜ்வலத் வால சில்ய -செருக்கை அடக்க வாலசிலய ரிஷிகள் –குள்ளமான ரிஷிகள்
இந்திரன் பரிகாசம் பண்ண -தர்ப்ப -செருக்கு -ஜ்வலத் -கோபத்தால் ஜ்வலிக்கும்
பிரதிஞ்ஞாவதீர்ண-ப்ரதிஞ்ஞானி அடியாக பிறந்து
ஸ் திராம் தத்துவ -புத்திம் பராம் பக்தி தே நும் –தத்வ புத்தி ஞானமும் பக்தியையும் கொடுத்து அருளி –காம தேனு-
ஜகன் மூல கந்தே-முதல் முதல் வித்து
முகுந்தே மஹா நந்ததோ–முகுந்த -மோக்ஷம் அருளும் -மு கு தா -முக்தி பூமியை ததாதி -/செய்குந்தா -இத்யாதி -முகுந்தா -வியாக்யானம் –
முக்தி புக்தி -இந்த லோக இன்பம் இரண்டையும் அருளுபவர்
க்த்த்ரீம் ததீ தா முதாகா மஹீ நாம் -முத்தா காம ஹீனாம் -வேறு விஷய ஆசை இல்லாத பராம் பக்தி
அ ஹீ நாமஹீ நாந்தக –கி களான பாம்புகள் -அ ஹீனம் -குறைவற்ற பக்தி என்றுமாம் –
தோக்தா-பெரிய ஆனந்தம் பால் போலே கரக்கும் பசு மாட்டை அடைய செய்ய வேணும் -பக்தி ஆனந்தம் சுரக்கும் காம தேனு

கருடாழ்வாரே! வைகுந்தத்தில் உறைபவரே!
தங்களுடைய மந்திரம் அதை உபாசிப்பவர்களுக்கு நான்கு பேறுகளையும் (அறம், பொருள், இன்பம், வீடு) வழங்குகின்றது.
அந்த மந்திரம் ஐந்து எழுத்துக்களைக் கொண்டது.
ஓம் என்னும் பிரணவம் அதன் முதல் எழுத்து.
அதன் நிறை எழுத்து அக்னியின் மனைவியைக் குறிக்கின்றது.
அந்த மந்திரம் எங்களைக் காக்கட்டும்.

ஒரு சமயம் இந்திரன் ஆணவம் கொண்டு  வாலகில்ய முனிவர்களை அவமதித்தான்.
அதனால் அவர்கள் எதிர்காலத்தில் சங்கர்ஷணரின் அம்சமாக பிறப்பவன் உன்னுடைய ஆணவத்தை அழிப்பான் என்று சாபமளித்தனர்.
தாங்கள் வாலகில்ய முனிவர்களின் வாக்கை காப்பாற்றி இந்திரனின் ஆணவத்தை அழித்தீர்கள்.
தங்களை பகைத்த நாகங்களுக்கு தாங்கள் யமனாக விளங்குகின்றீர்கள்.
உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீர்களாக.
தங்களின் தலைவன் முகுந்தன் ஜகத் காரணர்.
அவருக்கு உண்மையான அன்பு பூண்டு, நிலையற்ற இவ்வுலக மாயையில் அழுந்தாமல், திட மனதுடன்
அவருக்கு பக்தி செய்யும் உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீராக.

கருடாழ்வார் மந்திர மூர்த்தியாக விளங்குவதையும்,
நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குவதையும்,
வாலகில்ய முனிவர்களின் தவத்தின் பயனால் கருடன் அவதாரம் நிகழ்ந்ததையும்,
ப்ரஹ்ம வித்தையை அளிக்கும் ஆச்சார்யனாக கருட பகவான் விளங்குவதையும்
நிகமாந்த தேசிகர் இந்த  ஸ்லோகத்தில் கூறியுள்ளார்.

மந்த்ரம் –வ்யக்தமாக சொல்லாமல் -பிரணவம் -பக்ஷி -ஸ்வாக -மறைத்து -குஹ்யம் —
சரம ஸ்லோகார்த்தம் வெளியிட்டு அருளினார் எம்பெருமானார் -திரு மந்த்ரார்த்தம் வெளியிட்டு அருள வில்லையே –
பேசி வரம்பு அறுத்தார் -ஆசை யுடையார்க்கு-அருளலாம் –
அஷட்கர்ணம் -ஆறாம் காது கேட்க்க கூடாது -என்பர் -அர்த்தம் மறைத்து போவார்கள் திரு மந்த்ரமும் சரம ஸ்லோகமும்
அர்த்தமும் சப்தமும் மறைத்து போவார்கள் த்வயத்தை –க்ஷேமகரம் -த்வய மந்த்ரம்
நம பதில் ஸ் வாகா -கருடன் பற்றி இல்லாமல் பக்ஷி –

அருளாத நீர் –அருளி –அவராவி துவரா முன் -அருளாளி புட் கடவீர் —என் விடு தூதாய் சென்றக்கால்
ஆலிங்கனம் பெற்றார் திருவடி –அனுக்ரஹம் உரு எடுத்த கருத்மான் –ஆழ்வார் அவதாரத்தால் பக்ஷி ஜாதி வீறு பெற்றதே –
புள்ளைக் கடாவுகின்ற -ஓசை ஆழ்வார் திரு உள்ளத்தில் கேட்கலாமே தென் திருப்பேரெயில் -/ ஓடும் புள்ளேறி —சூடும் தண் துழாய்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவர் -கள்வா –என்று ப்ரஹ்மாதிகள் / ஆடு புட் கொடி ஆதி மூர்த்தி அன்றோ

——————————————————————————————

ஷட்த் ரிம் ஸத் கண சரணோ நர பரி பாடீ நவீன கும்ப கண
விஷ்ணு ரத தண்ட கோ அயம் விகடயது விபக்ஷ வாஹி நீ வ்யூஹம்

ஷட்த் ரிம் ஸத் கண சரணோ–பாதம் -36 கணங்கள் 108
நர பரி பாடீ நவீன கும்ப கண — -நகணம்–2 / ரகணம் -34/புதியதான மொழித் தொடர் கூட்டம்
விஷ்ணு ரத தண்ட கோ அயம் விகடயது -கருட -விஷ்ணு ரத -தண்டகம் –
விபக்ஷ வாஹி நீ வ்யூஹம்-எதிரிகள் வரிசை அழிக்கட்டும்

இந்த கருட தண்டகமானது ஒரே ஸ்லோகம்.
இதில் நான்கு பாதங்கள் உள்ளன.
ஒவ்வொரு பாதத்திலும் 36 கணங்கள், ஒரு கணத்தில் மூன்று எழுத்துக்கள் (மொத்தம் 108 எழுத்துக்கள்) இந்த கருட தண்டகம் தண்டக யாப்பில் சரியாக இயற்றப்பட்டுள்ளது.
நாகணங்களும், ராகணங்களும் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.
இந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்களின் எதிரிகளின் வியூகம்  காற்றில் அழிந்து போகும்.

இந்த ஸ்லோகம் தண்டகத்தின் யாப்பை விளக்குகின்றது. இது ஆர்யா ஸந்தஸ்ஸில் அமைந்துள்ளது.

———————————————————————————-

விசித்ர ஸித்தித ஸோ அயம் வேங்கடேச விபஸ்ஸிதா
கருடத்வஜ தோஷாய கீதா கருட தண்டக

விசித்ர ஸித்தித ஸோ அயம்-பல வகைப்பட்ட சித்தியை அளிக்கும்
வேங்கடேச விபஸ்ஸிதா-வேங்கடேச கவி வித்வான்
கருடத்வஜ தோஷாய–கருட கொடி யுடைய திருமால் திரு உள்ளம் மகில
கீதா கருட தண்டக -சொல்லப் பட்டது –

கருடக் கொடியை யுடைய எம்பெருமானை  மகிழ்விக்க
அடியேன் வேங்கடேசன், இயற்றிய இந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்கள்
அவர் அருளால்  சகல மனோபீஷ்டங்களையும்  அடைவர்.

———————————————————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய திருவடி திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –