Archive for November, 2015

ஸ்ரீ யபதித்வம் – மூன்று தேவிமார் சகிதம் -அருளிச் செயல் பாசுரங்கள் –

November 10, 2015

பெரிய திருமொழி –

இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன்
தன துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோருக்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக் கேணி கண்டேனே –2-3-5-

புலமனு மலர்மிசை மலர் மகள் புணரிய
நிலமகள் என இன மகளிர்கள் இவரோடும்
வலமனு படையுடை மணி வணர் நிதி குவை
கலமனு கண புரம் அடிகள் தம் இடமே –8-7-9-

———————————————————————————————-

முதல் திருவந்தாதி –

திரு மகளும் மண் மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திரு மகட்கே தீர்ந்தவாறு என் கொல்– திரு மகள்
மேல் பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் –42-

————————————————————————————–

திரு விருத்தம்

குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழல் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண் அம துழாய்
அழல் போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர்
தொழக் கடவும் தழல் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே –3

——————————————————————————————

திருவாய்மொழி –

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4-

பின்னை கொல் நிலா மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே –6-5-10-

என் திரு மகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய யாவியே என்னும்
நின் திரு வெயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே என்னும்
அன்று உரு வேழும் தழுவி நீ கொண்ட ஆய மகள் அன்பனே என்னும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே தெளிகிலேன் முடிவிவள் தனக்கே –7-2-9-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட செய்வார்
மேவிய யுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணனது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலைகடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் –8-1-1-

——————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
   ஆழ்வார்கள் திரு வடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -வியாக்யான அமுத சாரம் —

November 10, 2015

ஸ்ரீ இராமாயண சாரம் ஆகிய பெருமாள் திருமொழி –
திரு வஞ்சி களம் -ஆறாவது  ஆழ்வார்/திருவிடவிரதன் -திருத் தகப்பனார்

கலி பிறந்த 28 ஆம் ஆண்டு -பராபவ ஆண்டு -மாசி மாத சுக்கில பஷத்து துவாதசி -வியாழக் கிழமை -புனர் வ ஸூ நஷத்ரம் -திரு வஞ்சிக்களம் –
முதல் மூன்று பதிகத்தால் திரு அரங்கம் –திரு வேங்கடம் 4th –அடுத்தது- திரு வித்துவ கோடு // அடுத்த ஐந்தும் விபவம்/
பத்தாம் பதிகம் மட்டும் விபவம் அர்ச்சை கலந்து அவனே இவன் என்று காட்ட  -ராமாயணம் திரு சித்ர  கூடம்-சேர்த்து அருளினார் /
-ஆறு பதிகங்களில் 11 பாசுரம்/i பதிகம் —9 பாசுரங்கள் ஆக 105 பாசுரங்கள்//
தேட்டரும் திறல்–தரு துயரம் தடாயேல் -ஏர் மலர்ப் பூம் குழல் -மூன்றும் 10 பாசுர பதிகங்கள் –மெய்யில் வாழ்க்கையை -9 பாசுர பதிகம்

அடைவே அமைத்தார்-சரண் அடைய ஷட் விதம்-கடாஷம் முதல் தேவை -முதல் பதிகம்-கண் இணைகள் என்று கொலோ களிக்கும்
2 பதிகம் ஆநு கூல்ய சங்கல்பம் –மால் கொள் சிந்தையராய் அடியார்கள் உடன் சேர
3 பதிகம் – வேண்டாதவர் இடம் விலகி-வையம் தன் உடன் கூடுவது இல்லை பிரதி கூல்யச்ய வர்ஜனம்/
சரண் அடைந்ததும் கைங்கர்யம் பிரார்த்திக்க திரு வேங்கடத்தான் இடம்-ஏதேனும் ஆக பாரிகிறார்/
அனுக்ரகம் கிட்ட வில்லை/உபயாந்தரம் சம்பந்தால் இல்லை என்று காட்ட -கதறுவது உபாயம் இல்லை சொரூபம் ஆக கொள்ள வேண்டும்
5th  பதிகம்- ஈன்ற தாய் அகற்றிடினும் ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வம் புகல் இடம் போக்கிடம் இல்லை-  திரு வித்துவ கோடு பதிகம்-
சேவை கிட்ட வில்லை–அடுத்து ஊடல்  திறத்தில்–காதில் கடிப்பிட்டு திரு மங்கை ஆழ்வார் போல  மின் இடை மடவார் ஆழ்வார் போல –
-பரம பக்தி  தோன்ற பராங்குச நாயகி ஊடல்/மிடுக்கு  தோன்ற பர கால நாயகி ஊடல்//ராஜ குல மாகாத்ம்யம் தோன்ற இவர் வூடல் /
அனுபவம் கிட்ட வில்லை- பெண் ஆன தன்மை  மறக்காமல்- தெய்வ தேவகி இழந்தாள்-புலம்பி தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
தாலேலோ பாட வில்லையே ஆசை -உடன்-கௌசலை பாவத்தில் -திரு கண்ண புரத்துக்கும்-ராமனுக்கும்-
நடை அழகை காட்ட விபீஷணன்-பெரிய பெருமாள் இடம் கிடந்த அழகை கண்டு கேட்டானாம்- கீழ  வீட்டுக்கு அனுப்ப ஆசை அவனை –திரு கைதல சேவை-தனி சந்நிதி உண்டு
மேலே வீடிலும் கீழ வீடிலும் –அனுபவித்து இழந்தாள் திரும்பி வந்ததும் சேர்ந்து இருந்தாள்– தசரதன் தானே இழந்தான் அதை பாடுகிறார்/

–ராமனை நன்றாக அனுபவித்து முடிக்க— கிடந்த சேவை –தில்லை நகர் திரு சித்ர கூடத்தில் -அனுபவித்து அருளுகிறார் -பிறந்தது முதலா தன் வுலகம் புக்கது ஈறாக பாடி அருளினார்-
-ராம பக்தரான குல சேகரர் ராமன் திரு நாமத்தை அவற்றுக்குக் கற்ப்பித்துக் கேட்குமா போலே –
குலசேகர பக்தரானவர்களும் அவர் திரு நாமங்களை அவற்றின் வாயாலே கேட்க இச்சிக்கிற படியை சொல்லுகிறதாகவுமாம்
அன்றிக்கே -ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன்என்றும்
பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசன் என்றும் இ றே
ஸ்ரீ ராமாயணத்திலும் ஸ்ரீ ரெங்க தாமத்திலும் எம்பெருமானார் மண்டி இருப்பது –
ஸ்ரீ குலசேகரப் பெருமாளும் -எல்லையில் சீர்த் தயரதன் தன மகனாய்த் தோன்றிற்று முதலா தன்னுலகம் புக்கதீறா -என்றும்
எம்பெருமான் தன சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் இன்றே -என்றும்
ரங்க யாத்ரா தி நே தி நே -என்றும் -அணியரங்கன் திரு முற்றம் -என்றும்
அரங்கன் அடியிணைத் தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம் –என்றும் இரண்டையும் ஆதரித்துக் கொண்டு இ றே போருவது
இன்னமுத மூட்டுகேன்
இன்னடிசிலொடு பாலமதூட்டி எடுத்த என் கோலக் கிளியை -என்னக் கடவது இ றே –
இங்கு -தேனும் பாலும் அமுதுமாகிய திருமால் திரு நாமத்தை இ றே ஊட்டி வளர்த்தது –
அது தோன்ற ஆழ்வான் வலத் திருச் செவியிலே முன்பு பிரசாதித்த த்வயத்தை மீளவும் பிரசாதித்து அருளிற்று –

தென்னரங்கம் பாட வல்ல சீர் பெருமாளாவது –
இருளிரிய -தேட்டரும் திறல் தேன் –மேயில் வாழ்க்கை -என்கிற மூன்று திருமொழியிலும் பாடி
முடிவிலும் -யாவரும் வந்து அடி வணங்க வரங்க நகரத் துயின்றவனே -என்றும்
மற்றும் திருமலை முதலாய் இருக்கிற ஆராமங்களான திருப்பதிகளையும்
காகுத்தா கண்ணனே -என்றும் அர்ச்சாவதாரத்துக்கு அடியான அவதாரங்களையும் அருளிச் செய்து தலைக் கட்டுகையாலும்
அவர் தாம் -செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் ஆகையாலும்
வெண்ணெய் உண்ட வாயனாகையாலும் -எல்லாம் திருவரங்கத் திருப்பதி விஷயம் ஆகலாம் இ றே

—————————————–

அவன் தானே காட்டக் காண்கிறவர் ஆகையாலே அப்போதே காண வேண்டும் -படி விடாய் பிறந்தது –
பரமபதத்திலும் அனுபவிப்பது குண அனுபவம் ஆகையாலே -அந்த சீலாதி குணங்கள் பூரணமான கோயிலிலே அனுபவிக்கப் பிரார்த்திக்கிறார்
இங்கே அனுபவிக்கக் குறை என்-பிரார்த்தனை என் என்னில் –
ஸ்வா தந்த்ர்யம் பிறப்பே உடையராகையாலே -மனுஷ்யர் நிரோதிப்பார் பலர் உண்டாகையாலே –

அனந்தனை மடியில் அடக்கி வைத்து இருக்கும் அனந்தன்
யான் பெரியன்–நீ பெரியைஎன்பதை யார் அறிவர் – புவியும் இரு விசும்பும் நின் அகத்து-நேமியாய் இடம் கேட்டாலும் சொல்வானே  -பெரிய திருவந்தாதி
-பராங்குச மனோ நிவாசி-பாதுகை உன்னை தாங்குவதால் அதுவே பெரியது -பாதுகா சகஸ்ரநாமம்-தேசிகன்
-மாறனில் மிக்கு ஓர் தேவும் உளதே- மால் தனில்-தேவு மற்று அறியேன்-
கரு மணியை கோமளத்தை- பெயரை சொல்ல வில்லை/இதுவே பாட்டு உடை தலைவன்-மிருதுவான பரம சுகுமாரன்-கண்டாலே கன்னி போகும்/
கோமளம்-கூசி பிடிக்கும் மெல் அடி/ஆபரணம் சாத்த பார்த்த இடங்களே சிவந்ததாம் அவளுக்கு-கண்டு கொண்டு
பசியன் -சோற்றை மேல் கொண்டால் போல-கண்டு சொல்லி நிறுத்த முடியாமல் கண்டு கொண்டு
/அஹம் அன்னம்- களிப்பை இங்கு பட -அஹம் அன்னாதாக -என்னை சோறாக கொண்டு உண்டான்-களித்தான்
அந்த களிப்பை நாம் உண்டோம்/சேவை மட்டும் இல்லை/வந்தது கண்டு அவன் மகிழ அது கண்டு இவர் மகிழ ஆசை படுகிறார்-

கண்களால்  காண பாரித்தார் கீழே -இதில் வாயாலே வாழ்த்த பாரிகிறார்-கண்டால் கொள்வது வேறொரு பிரயோஜனம் இல்லை இறே
பல்லாண்டு பல்லாண்டு என்னும் இத்தனை இ றே –
வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த-ஓர் ஆயிரம் வாய்களிலே-ஸ்தோத்ர வாக்யங்கள் நிறைந்து-இருக்கப் பெற்றவனாய்
சர்வ கந்த -எல்லாம் மணங்களையும்-கடைந்து எடுத்து  சேர்த்து மண தூண்கள்-திருமேனியின் பரிமளம் இரண்டு தூணாக
பரிணமித்து உரு எடுத்து நிற்பதால் திரு மணத் தூண் -எனப்படும்

அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே—அடியவர்கள் உடன் சேர்ந்து -அலர்கள் இட்டு–கைகள் வேலை
நாபி கமலம் பிரம்மா ஸ்தோத்ரம்-முன்பு நித்யர் -நம் போல்வாரும் பண்ண-அவன் காட்ட கண்டு நாபி கமலத்தில் பிரம்மாவை சேவித்து இருக்கலாம்
தொழுது ஏத்தி இறைஞ்சுதல் மூன்றும் செய்கிறான்

மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே-அரசாட்ச்சிக்கு ஏற்ப பூ மாலை அணிந்த தலையானது-அவன் திருவடிகளிலே நமஸ்கரிப்பது-என்றைக்கோ –

உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-புலன்களை முன்பு சொல்லி/உள்ளம் மிக உருகும் நாள் என்று கொலோ என்கிறார் இதில்/

நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7-

திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?–1-8-
-பஞ்ச ஆயுதம்-ராமானுஜர்- தென் அரங்கம் செல்வம் திருத்தி வைத்தாரே சூசுகமாய் இதை சொல்கிறார் /

திரு வரங்கத்து  அரவணையில் பள்ளி கொள்ளும் போராழி அம்மானை கண்டு துள்ளி பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?—-1-9-
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே-சிம்ஹாசனத்திலே இறுமாந்து இருக்கும் இருப்பு ஒழிந்து ஹ்ர்ஷ்டனாய் பூமியிலே புரளுவது என்று கொலோ –

அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-
என்னைச் சிலர் சேவிக்க நான் நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே சேவித்து இருப்பது என்றோ –

நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-
சீலாதி குண பூரணராய் -சர்வ ஸ்வாமி களாய்-வத்சலராய் இருக்கும் -பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே யனுபவிக்க
ஆசைப் பட்டால் போலே கிட்டப் பெறுவார்கள் –
மணல் திட்டு நடுவில்/நான்கு கரைகள் நான்கு புருஷார்த்தங்கள்/திரு வரங்கம் பக்கம்-வட திரு காவேரி-தர்மம் /தெற்கு மோட்ஷம்/ வெளி அர்த்தமும் காமமும்
——-
பகவத் விஷயத்தில் பிறந்த ஆநு கூல்யம் சொன்னார் -கீழில் திரு மொழியில்
ததீய விஷயத்தில் ஆநு கூல்யம் பிறந்தபடி சொல்லுகிறார் இத் திரு மொழியில் –
ராமன் கிருஷ்ணனுக்கும்-சபரி விதுரன் அழுவதை பார்த்து கொண்டே இருந்தார்களே-புலவர் நெருக்கு உகந்த பெருமாள்
ஆயனை கண்டமை காட்டும் தமிழ் தலைவன் -திருஷ்ட பிரயோஜனம்-இது  தான் -அடியார்களின் ஈட்டம்- 
அதிர்ஷ்ட பிரயோஜனம்-மோட்ஷம்- இருக்குமா இருக்காதா- ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதோ –
தேட்டரும் திறல் தேனினை -ய ஆத்ம தாபலதா-என்னுமா போலே -தன்னையும் கொடுத்து -தன்னை அனுபவிக்கைக்கு ஈடான
பலத்தையும் கொடுக்கும் தேன்- தேனினை தென் அரங்கனை -திரு மாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை ஸ்பர்ஹணீயமான
திருவரங்கத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்-திரு மேனியின் ஸ்பர்சத்தாலே-

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு உண்டிராக் கிடக்கும் போது உடலுக்கே கரைந்து நைந்து -என்ற
லௌகிகர் படி இல்லாமல் எம்பெருமான் திவ்ய சரிதங்களை அனுசந்தித்து ப்ரீதி அடைந்து அந்த ஹர்ஷத்தால் ஆடியும் பாடியும்
பகவத் திரு நாமங்களை வாய் விட்டுக் கதறுகின்ற -ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாத தூளி ஒன்றாலே குளிக்கப் பெறுவோம்-
சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே – அமங்கலமான புழுகு நெய்யாலே அலங்கரித்து உள்ள தோஷம் தீர
மங்களார்த்தமான ஸ்ரீ வைஷ்ணவர்களின் திருவடிகளில் அழகிய சேற்றை யணிவன்-
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-இச் செயலுக்கு இவர்கள் நிலவராவதே -என்று ஸ்தோத்ரத்தை பண்ணி
-இது நித்யமாக வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் என் நெஞ்சு –
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே -2-5-பெரிய பெருமாளை அனுபவித்து அவர்கள் உடம்பு படும் பாட்டை
-அவர்களை அனுபவித்து என் நெஞ்சு படா நின்றது -ஸ்பர்ச த்ரவ்யம் பட்டது எல்லாம் படா நின்றது அமூர்த்த த்ரவ்யம் –

எத்திறம் உரலினோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவே -மயக்கவல்ல கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ட அபதானத்தை அனுசந்தித்து
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –அணி அரங்கன் -என்றபடி ஸ்ரீ ரெங்க நாதனை கண்ணபிரானாக பாவித்து
பணி செய்யும்-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்டு இருப்பேன்-
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-அரங்கன் எம்மான்-வேறு யாருக்கும் இன்றி அவனுக்கே
ஆக்கி கொடுத்தான் அரங்கன் /அநேக ஜன்மம் பிறந்து அடிமை செய்ய வேண்டும்–அவர்களுக்கு அடுத்த பிறவி இலையே அரங்கனை பாடுவதால்/
நான் பலஜன்மம் எடுத்து அவர்கள் உபகாரத்தை நினைந்து அடிமை செய்ய ஆசை படுகிறார்/பாரிப்பு/
அத்வேஷம் என்னும் பக்தி இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மான-நின் ஆணை திரு ஆணை என்று 
ஆணை இட்டு  விலகாமல் இருந்தால் போதும் பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு/ இவன் நினைவு மாறும் பொழுது கிட்டும்
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே
பித்தேறி திரிகின்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ க்கு என் மனம் மயங்கி கிடக்கின்றது அப்படிப் பட்ட நிலைமை எனக்கும் வாய்க்குமா –
பித்தேறித் திரிவார்க்கு ஒரு நீர் பித்தேறுவது என்ன -பிராப்த விஷயத்தில் பித்தேறுமவர்கள் பித்தர் அன்று என்கிறார் –
தொண்டர் தொண்டர்கள் ஆவரே –
இவர் ஆசைப் பட்டுப் போந்த பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆகிற புருஷார்த்தத்தை லபிப்பார்கள் –
————-
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேன் -என்று -பகவத் பிராவண்யம் ததீய சேஷத்வ பர்யந்தமாய்
-அவர்கள் அல்லது செல்லாமை பிறக்கும் அளவும் உண்டு –அது சொல்லிற்று கீழில் திரு மொழியில்
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே -என்றும்
மானிடவர் அல்லர் என்று மனத்தே வைத்தேனே -என்றும் -பித்தர் என்றே பிறர் கூற -என்றும் -பிறக்கும் அவஸ்தை உண்டு
பகவத் பிராவண்யத்தாலே முன்பில் அதுக்கு சங்கல்பமே யாய்த்து வேண்டுவது -அடிமை அவர்கள் கொள்ளக் கொள்ள விறே செய்வது
ப்ராதி கூல்யத்தில் வர்ஜித்தே நிற்க வேணும்
ப்ராதி கூல்யமாகிறது -தேஹாத்மா அபிமானிகள் ஆகையும்-விஷய பிரவணராய் இருக்கையும் -தேஹாத் வ்யதிரிக்த வேறொரு
வஸ்து உண்டு என்று அறியாது இருக்கையும் இறே -இப்படி இருப்பாரோடு எனக்குப் பொருந்தாது என்கிறார் இத் திருமொழியில் –
ரெங்கேசன்/அரங்கம் ஆளி என் ஆளி ஸ்ரீ ரெங்க நாத மம நாத ஐயனே அரங்கனே -பரம சுலபன்-கூப்பிடுவதே என் வேலை
ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை பேதை மா மணவாளன் தன் பித்தனே– 3-5துவயம் -அர்த்தம் -இதில் சொல்கிறார்
மிளகு ஆழ்வான்-ஆத்மா குண சம்பத்து உண்டு -அபாகவாத சதஸ்-மேல் உத்தரியம் போட்டு குதித்தார்/
/கூரத் ஆழ்வான் கோவிலில் போக வில்லை-ஆத்ம குண்ம் பார்த்து ராமானுஜர் சம்பந்தம்
பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே அவன் என்னை ஒரு தடவை குளிரக் கடாஷித்த மாத்ரத்திலே
அபாகவதர் சஹவாசம் வெறுக்கும் இந்த பாக்கியம் வாய்த்தது என்பதை காட்டி அருள செங்கன் மால் என்கிறார்-
வன் பேய் முலை உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே– இங்கே வந்து அவதரித்து பிரதி பந்தங்களைத் தானே
போக்குமவனுக்குப் பித்தன் நான் –தன் உன்மத்தன் காண்மினே– ஔஷத சேவை பண்ணினாரையும் இழக்க ஒண்ணாதாப் போலே –
அவனுடைய குண சேஷ்டிதங்களிலே அகப்பட்டு பித்தனான என்னைக் கேவல சரீர பரவசரோடேசேர விட ஒண்ணுமோ –

———–
தமக்கு க்ரம பிராப்தி பொறாமைதோன்ற –ஒன்றியாக்கை புகாமல் உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் -என்றும்
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றும்
கீழே அனுபவித்த பெரிய பெருமாள் தாமே சம்சார சம்பந்தம் அறுத்துக் கொடுக்கைக்கும் -கைங்கர்யம் கொள்ளுகைக்கும் திருமலையிலே நிற்கிறார்
ஆகையாலே திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து விரோதியில் அருசியும் கைங்கர்யத்தில் ருசியும் பிறந்த த்வரையையும் அவிஷ்கரிக்கிறார் –
வாழும்- கோவில் வாசம் போல -குருகு வாழும்/கோனேரி இருக்கும் போன்ற சொல் இன்றி வாழும் என்கிறார் அங்குத்தை வாசம் தானே போகமாய் இருக்கும் இருந்தாலே வாழ்ச்சி –
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே – விரஜையைப் பற்றி அமாநவ வசத்திலே வர்த்திக்குமா போலே -கோனேரி யைப் பற்றி வர்த்திக்கும் குருகாய் பிறப்பேன் -என்கிறார் -வாழும் -கோயில் வாஸம் போலே காணும் திருக் கோனேரி யிலே-
வர்த்திக்கும் என்கிற இடத்துக்கு வேறே வாசக சப்தங்கள் உண்டாய் இருக்கச் செய்தே -வாழும் -என்கிற சப்தத்தை இட்டபடியாலே
அங்குத்தை வாஸம் தானே போக ரூபமாய் இருக்கும் என்கை-
தொழுது எழு தொழுவதே எழுகை//நாரையாய் பிறப்பேன்-புண்ய சரீரம் ஷத்ரிய மனுஷ சரீரம் வேண்டாம் அகங்காரத்துக்கும் அபிமானத்துக்கும் வேண்டாம் -பய ஜனகம்-தேவை அற்ற அகங்காரம்-திரு வேங்கடத்தில் கைங்கர்யத்துக்கு வேண்டுகிறார்
திரு வேங்கட மலையில் தமக்கு உள்ள ஆதர அதிசயத்தை வெளியிடுபவராய் திருமலையோடு சம்பந்தம் உள்ள ஒரு பிறப்பை பிரார்த்திக்கிறார்
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே
திருமலையிலே செண்பகமாய் நிற்கும் சம்பத்து உண்டாக வேணும் -அதாவது -பகவத் பிரத்யாசத்தி இ றே பிராப்யம்
-அது கிட்டுமான பின்பு ஸ்தாவரமாய் நிற்கவும் அமையும்-மேலே ஏறின சைதன்யத்தாலே கார்யகரம் இல்லை –என்கிறார் –
பாங்காய பத்தர்களே –
இங்கேயே இருந்து -அது வர வேணும் இது வர வேணும் என்னாதே அவனுக்கு இஷ்ட விநியோஹ அர்ஹம் ஆவார்கள் –
இந்த திரு மொழியை அடி ஒற்றி
மாடாக நிழற்று செழுமரனாகத் தவச் சிறிய பூடாகக் குழைத்த நறும் புதலாக வளிப்படுமோ ரோடாகப் பெறுவம் எனில்
உயிர் காள் நற்கதி பெறலாம் வீடாகத் திரு நெறி மால் வீற்று இருக்கும் வேங்கடத்தே-என்று திரு வேங்கடக் கலம்பகத்தில் அருளிச் செய்து உள்ளார்-

—————————————————
எனக்கு நானும் இல்லை -பிறரும் இல்லை -பேற்றில் த்வரையால் துடிக்கிறேன் அத்தனை அல்லது சாதன அனுஷ்டான ஷமனும் அல்லேன்
என்னும் இடத்தை அநந்ய கதிகளாய் இருக்கும் பதார்த்தங்களை நிதர்சனமாக இட்டு தம்முடைய அநந்ய கதித்வத்தை
திரு வித்துவக்கோட்டு நாயனார் திருவடிகளிலே விண்ணப்பம் செய்கிறார்-
தாய்-குழவி/பர்தா-பதி விரத்தை/ராஜா பிரஜை/மருத்துவன்-நோயாளி/வங்கத்தின் கொடி-பறவை/சூர்யன்-தாமரை/மழை-பயிர்கள்/நதி-கடல்
/பிர பன்னன்-செல்வம் /-ஒன்பது விதமாக சொல்லி அநந்ய கதித்வம் விளக்கி -அருளினார்-
ஈன்ற தாய் -0வளர்த்த தாய் -என்னாதே-ஈன்ற தாய் -என்றத்தாலே பிராப்தம் சொல்லிற்று
வித்துவ கோட்டு அம்மா ! உன் புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே -5-8– புண்ணியனே-பிரதம ஸூ க்ர்தம் நீ யாகையாலே –

————————————————————————————

பகவத் விஷயத்தில் பாவ பந்தத்தில் ஊற்றம் இருந்தபடி -பிராட்டிமார் தசையை பிராப்தராய் கூடுவது பிரிவது ஊடுவதாம் படி யானார் –
நம்மாழ்வாருக்கு -மின்னிடை மடவாரும் -திரு மங்கை ஆழ்வாருக்கு -காதில் கடிப்பும் போலே இருக்கிறதாய்த்து பெருமாளுக்கு இத் திருமொழி –
நம்மாழ்வார் பகவத் விஷயத்தில் நின்ற ஊற்றம் எல்லாம் தோற்ற வன்மை உடைத்தாய் இருக்கும் -மின்னிடை மடவார் –
திரு மங்கை ஆழ்வார் -தம் மார்த்த்வம் எல்லாம் தோற்றி -மென்மையை உடைத்தாய் இருக்கும் -காதில் கடிப்பு –
இவர் தம்முடைய ராஜ குலம் எல்லாம் தோற்றி இருக்கும் இத்திருமொழி
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் தோள் தீண்டி யாகையாலே -ஒரு செவ்வாய் கிழமை முற்படப் பெற்றிலோம் -பல்லிலே பட்டுத் தெறித்தது -என்று
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கு கிருஷ்ணன் பக்கல் உள்ள விடாய் எல்லாம் தமக்கு ஒருவருக்கு உண்டாகையாலே
திருவாய்ப்பாடியிலே பெண்கள் பேச்சாலே பேசுகிறார் –
அர்ச்சையையும் விபவமும் சேர்ந்தே /ராமனும் கண்ணனும் அரங்கத்தில்-விபவ அனுபவ ஆசை மிகுந்தது /தோள் தீண்டிய கிருஷ்ண அவதாரத்தை அனுபவிகிறார்/கிருஷ்ண அவதாரத்தை அனுபவித்தவர்களின் பாசுரங்கள்-கோபிமார்கள்-சொல் கொண்டு அனுபவிகிறார்
மல்லர்களோடு யுத்தம் செய்யக் கற்றாய்–என்னோடு ஸ்ருங்கார ரசம் அனுபவம் பண்ணக் கற்றிலை காண் –
வாசுதேவா ! நீ அங்கே நிற்கிறது என் என்னில் -உன்னை விஸ்வசித்தன்று-உன் பிதாவை விஸ்வசித்து-ஒரு வார்த்தை அல்லது அறியாத
ஸ்ரீ வாஸூதேவர் -பிள்ளை என்னுமத்தை விஸ்வசித்து நின்றேன் – வுன் தன வரவு பார்த்தே—உன்னுடைய அழகு காண வேணும் என்னும் நசையாலே –
தாமோதரா! மெய் அறிவன் நானே –உன் உடம்பில் தழும்பை மறைக்கலாமாகில் அன்றோ உன் செயல்களை மறைக்கலாவது –
உன் வளர்த்தி யோடே வளர்கின்றதால் உன் தன் மாயை தானே –உன்னுடைய வஞ்சனமும் நீ பிராயம் புக அதுவும் ஒக்கப் பிராயம் புகா நின்றது இறே –
செய்ய உடையும் திரு முகமும்-செங்கனி வாயும் குழலும் கண்டு-பொய் ஒரு நாள் பட்டதே அமையும்-திருப் பரியட்டத்தைப் பேணுவது
-இவர்கள் முகங்களிலே முகத்தைக் காட்டுவது -ஸ்மிதம் பண்ணுவது -திருக் குழலிலே பேணுவது ஆனான் –
இப்படி செய்தவாறே இறாய்த்தாள் -அதாவது கண்ணைச் செம்பளித்தாள் –
கண் படைத்த லாபம் காணாதே கண்ணைச் செம்பளிக்கிறது என் என்று சொல்லக் கண்டு -பொய் ஒரு நாள் பட்டதே அமையும்
உன்னுடைய செயல்கள் எல்லாம் மெய்யென்று ஒரு நாள் பட்டதே யமையும் காண் என்கிறாள் அடியேன் குடியேன் -என்று தாழ வார்த்தைகளைச் சொல்ல
புள்ளுவம் பேசாதே போகு நம்பி !—-

———————————

அவனே உபாயம் அவனையே அனுபவத்தில் அவனாலே நியமனம் /இதை தெரிந்து கொண்டு – உரிமை உடன் கிலாய்த்தார்–
அநாதி காலம் இழந்தோம் என்ற இழவு வந்து தலை எடுத்தது- – பிராப்தி உள்ளதை இழந்தோமே –
அது போல இழந்த தேவகி பிராட்டி நினைவு வர-பெற்றும் பேறு  இழந்தாளே –
கேசவா ! கெடுவேன் கெடுவேனே– அப்போதைத் திருக் குழல் அழகை அனுபவிக்கவும் பெற்றிலேன் -முன்பு மலடு நின்று இழந்தேன்
பின்பு பெற்று வைத்தே அனுபவிக்கப் பெறாது ஒழிந்தேன் -இரண்டாலும் மஹா பாபி இ றே நான் –
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே–பரமானந்தத்தின் உடைய எல்லையை காணப் பெற்றாள்
தொல்லை இன்பம் கண்ணனையே சொல்லிற்றாய்-அபரிச்சின்னனான அவனை பரிச்சின்னன் ஆக்கி விட்டாளே-என்றுமாம்
அழுகையும் தொழுகையும் பரிச்சின்னர்கள் உடைய கிருத்தியம் இ றே-
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே–
இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே
உபய விபூதி நாயகனை பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

—————————————————–

கடற்கரை வெளியில் ரட்ஷித்தானே வானர சைன்யங்களை /விபீஷணனும் ஜாம்பவானும் பார்த்து ஆச்சர்யம்/
இப் படி பட்ட ஸ்வாமி பெற்ற நமக்கு என்ன குறை என்பார் ராமானுஜர்

தாடகை வதம்-அவதரித்த அதே சர்க்கம்-விஸ்வாமித்ரர் 15 நாள் மிதிலை அடுத்து 3 நாள் உத்தரம் கல்யாணம்/
/3 பாசுரம் பால காண்டம்-பவித்ரானம்-சம்பவாமி- விநாசாய துஷ்க்ருதாம் சொல்லி ஜனகன் திரு மருகா -தர்மம் நிலை நாட்ட
4 தசரதன் குமாரன் மீண்டும் -குலத்துக்கு உயர்த்தி பார்த்தோம்-பட்டாபிஷேகம்-அயோத்ய காண்டம்/
/அடுத்து பரதனுக்கு அருளி-ராமன் கொடுத்தாரே -கைகேயி இதற்க்கு தானே வரம் கேட்டாள்
/6th ஆரண்ய காண்டம்-தொல் கானம் அற்றவர்கள்-மக ரிஷிகள்/
/7th வாலி கிஷ்கிந்தா காண்டம் /நடுவில் சுந்தர காண்டம் இல்லை/அணை கட்டிய கதை
/கடைசி பதிகத்தில்  சுந்தர காண்டம் நிதானமாக அருள வைத்தார்
/10th -விபீஷணனுக்கு கொடுக்க யாவரும் அடி வணங்க அரங்கன் சயனம்  சொல்லி முடித்தார் /
சோழ தேசம் தர்ம வர்மா இஷ்வாகு வம்சம் என்பர்-உத்தர காண்டம் என்றும் கொள்ளலாம்
/த்வய அர்த்தம் எல்லாம் ஆறு காண்டம் என்பர் முன்னோர்
வேலை பிடிக்கும் அழகிலே குலசேகர பெருமாள் வீரமும் ராஜ மகாத்ம்யமும்
-ஷத்ரிய வர்ண ஆஸ்ரம  தர்மம்-ஐஸ்வர்யமும் -லஷணத்தால் குறை அற்ற பத்து பாசுரங்கள்
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—ராஜ வம்சத்துக்காக போகய பூதன் ஆனவனே –
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– -ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மீட்டும்
ஸ்ரீ சார்ங்கத்தை உன் நினைவிலே வரும் படி செலுத்த வல்லவனே –
அயோத்தி நகர்க்கு அதிபதியே!-பரமபதம் போலே அயோத்யை இ றே -இதுக்குப் பெயர் -அப்படிப் பட்ட படைவீட்டுக்கு அதிபதியானவனே
கற்பது ஒரு தேசத்திலே இருந்து ஒரு காலத்திலேயாய்-பிராப்ய வஸ்துவைக் கிட்டி அனுபவிப்பது ஒரு தேச விசேஷத்திலேயாகாமே
-பிராப்ய வஸ்து தெற்கு திக்கிலே காணலாம் படி திருக்கண்ண புரத்திலே நின்றவனே
இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ– தம்பிமார்க்கு உறுப்பாகாத போது-என் பிராண்ன்களும் எனக்கு வேண்டா என்னுமவர் இ றே-
-தாயார் அடியார் போல -ராமனையும் சௌரி பெருமாளையும் கைங்கர்ய ஸ்ரீ பெற்று பக்தர்கள் ஆவார்கள்-

———————————————
பால்ய அவஸ்தை எல்லாம் அனுபவித்து பிராப்த யௌவனர் ஆனவாறே -அனுபவிக்கப் பெறாதே இழந்த
சக்கரவர்த்தியோ பாதியும் தமக்கு பிராப்தி ஒத்து இருக்கையாலே அனுபவிக்கப் பெறாதே இழந்தேன் என்று
அவன் சொல்லுகிற பாசுரத்தாலே தம் இழவைப் பேசுகிறார் —
காகுத்தா! கரிய கோவே!-இச் செயல்கள் உம்முடைய குடிப்பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –
நெடும் தோள் வேந்தே -ரஷ்ய வர்க்கத்தின் அளவில்லாத காவல் துடிப்புடைய தோளை உடையவனே –

—————————————————————————–

இத் திருமொழி யிலே-கீழ்ப் பிறந்த இழவுகள் எல்லாம் தீர -சக்கரவர்த்தி திரு மகன் நித்ய வாஸம் பண்ணுகிற
திருச் சித்ரகூடமாகிற திருப்பதியிலே திரு வவதாரம் தொடங்கி-அந்த திருவவதார வ்ருத்தாந்தத்தை
ஸ்ரீ வால்மீகி பகவான் பேசி அனுபவித்தால் போலே தன்னுடைய ஜ்ஞான வைச்யத்தாலே சமகாலத்தில் போலே அனுபவிக்கிறார்
-இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே–வணங்குகிற அடியார்களுடைய–இரண்டு திருவடிகளையே
வணங்கினேன்–சத்ருக்னன் போலே பாகவத தாசனனாக ஆசைப்படுத்துக்கிறார்
சொரூப நிரூபக தர்மம்-அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசே-பரதன் ஆனந்தமாக தேரில் ஏறினான் பாதுகை சூடி கொண்டதும்-அனர்த்தம்
தீர்ந்து சொரூபம் நிறைவேறியதும் இளையவர்க்கு அளித்த மௌலி-விபீஷணனும் கேட்டு பெற்றான்/நமன் தமரால்
ஆராய பட மாட்டார்கள் தாள் சேர்ந்தவர்கள்
காணப் பெற்ற-
கேட்டே போகை அன்றிக்கே கண்டு அனுபவிக்கப் பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே—
உகந்து அருளின தேசங்களை உடைய ஸ்லாக்கியமான பூமியில் உள்ளார்க்கு சதா பஸ்யந்தி-பண்ணி இருக்கையே-
ஸ்வ பாவமான நித்ய ஸூ ரிகளும் ஒவ்வார் -இங்கு கண்ணுக்கு விஷயம் புறம்பே உண்டாய் இருக்கச் செய்தே
அத்தை த்யஜித்து காண்கிறவர்கள் -அவர்கள் அதுவே ஆசையாக இருக்கிறவர்கள் இ றே –
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
பிராட்டியோடு கூட பிரிந்த பிரிவு எல்லாம் மறக்கும் படி இனிது அமர்ந்து அருளிய ஐஸ்வர்யம் உடையவன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே—
ராஜ்ஜியம் பண்ணி இருக்கிறவன் திருவடிகளைக் கொடுக்கை யாகிற ராஜ்ஜியம் ஒழிய அதற்கு எதிர்த்தட்டாக
ஸ்வ தந்த்ர்யத்தைப் பார்க்கும் ராஜ்யத்தை ராஜ்யமாக வேண்டேன் –
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே—
என்னுடைய நாதனுடைய வ்ருத்தாந்தத்தை திருவடியைப் போலே சர்வ இந்த்ரியங்களாலும் அனுபவிக்கப் பெற்ற நாம்
தேவ ஜாதி அனுபவிக்கிற அமிர்தத்தை ஒன்றாக மதியோமே –

——————————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரிய வாச்சான்  பிள்ளை  திரு வடிகளே சரணம்.
குலேசேகரர்    ஆழ்வார் திரு வடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -10–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

பிரவேசம் –

அநாதி காலம் இழந்த இழவை-ஸ்ரீ தேவகி தேவகியார் பெற்று வைத்து ஸ்ரீ கிருஷ்ணனுடைய பால சேஷ்டிதங்களை
யனுபவிக்கப் பெறாதே இழந்தவள் பாசுரத்தாலே பேசினார் -ஆல நீள் கரும்பில் –
மன்னு புகழில்-ஸ்ரீ கௌசலையையார் பெற்ற பேற்றை அனுபவித்தார் –
பால்ய அவஸ்தையிலே எல்லாம் அனுபவித்து ப்ராப்த யௌவனம் ஆனவாறே அனுபவிக்கப் பெறாதே இழந்த
ஸ்ரீ சக்கரவர்த்தியோபாதி தமக்கு ப்ராப்தி உண்டாகையாலே அவன் பாசுரத்தாலே தம் இழவைப் பேசினார் -வன் தாளில் –
இத் திருமொழி யிலே-கீழ்ப் பிறந்த இழவுகள் எல்லாம் தீர –
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் நித்ய வாஸம் பண்ணுகிற
ஸ்ரீ திருச் சித்ரகூடமாகிற திருப்பதியிலே திரு வவதாரம் தொடங்கி-அந்த திருவவதார வ்ருத்தாந்தத்தை
ஸ்ரீ வால்மீகி பகவான் பேசி அனுபவித்தால் போலே தன்னுடைய ஜ்ஞான வைச்யத்தாலே
சம காலத்தில் போலே அனுபவிக்கிறார் –

—————-

அவதாரிகை –

முதல் பாட்டு -தேவர்கள் எம்மாரும் க்ருத்தார்த்தராம் படி வந்து திருவவதாரம் பண்ணின படி சொல்கிறது –

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

பதவுரை

அம் கண்–அழகிய இடத்தை யுடையதும்
நெடு மதிள்–உயர்ந்த மதிள்களினால்
புடை சூழ்–நாற்புறமும் சூழப்பட்டதும்
அயோத்தி என்னும்–அயோத்யா என்று ப்ரஸித்தமுமான
அணி நகரத்து–அழகிய நகரத்திலே
உலகு அனைத்தும்–ஸகல லோகங்களையும்
விளக்கும் சோதி–விளங்கச் செய்கிற தனது ஒளியின் அம்சத்தாலே
வெம் கதிரோன் குலத்துக்கு–ஸூர்ய வம்சத்துக்கு (விளக்க முண்டாம்படி)
ஓர் விளக்கு ஆய் தோன்றி–ஒப்பற்தொரு விளக்கு போல (அதில்) வந்து அவதரித்து
விண் முழுதும்–தேவர்களெல்லாரையும்
உயக் கொண்ட–துன்பந்தீர்ந்து வாழச்செய்த
வீரன் தன்னை–மஹாவீரனும்
செம் கண்–சிவந்த திருக்கண்களையுடைய
நெடு கரு முகிலை–பெரிய காளமேகம் போன்ற வடிவ முடையவனும்
இராமன் தன்னை–ஸ்ரீராமனென்னும் திருநாமமுடையவனும்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்–தில்லை நகரத்திலுள்ள திருச்சித்திர கூடத்தில் (எழுந்தருளியிருக்கிற)
எங்கள் தனி முதல்வனை–எமக்கு ஒப்பற்ற காரணமாகிறவனும்
எம் பெருமான் தன்னை–எமக்குத் தலைவனுமான பரமனை
கண் குளிர காணும் நாள்–கண்கள் குளிரும்படி ஸேவிக்கும் நாள்
என்று கொல் ஓ–எந்நாளோ!

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்
ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை-
அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –
ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –

அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது

வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே
இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –

விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் தன்னை
தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை

செம் கண் நெடும் கரு முகிலை –
தேவ ஜாதி யன்றிக்கே ஜகத்தை அடைய ரஷிப்பதாக-கடலிலே மணலே சேஷமாக பருகின காளமேகத்தினுடைய வடிவையும்
ஸ்ரீ சர்வேஸ்வரத்வ லஷணமான புண்டரீகாஷத்வங்களையும் உடையவன்

ராமன் தன்னை-
வடிவு அழகாலும் கண் அழகாலும் அபிராமத்தாலும் அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே தோற்ப்பிக்குமவனை –
கீழில் -வீரன் -என்கிறதும் -இங்கும் அன்வயிக்கக் கடவது -சத்யேதியாதிவத் –

தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
அவதாரத்தில் சமகாலத்தில் அனுபவிக்கப் பெறாத இழவு தீர பிற்பட்ட காலத்தில் உள்ளாருக்கும்
உதவலாம் படி சந்நிஹிதனானவனை

எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
அக்காலத்தில் அனுபவிக்கப் பெறாத எங்களை உஜ்ஜீவிப்பைக்கு ஒப்பில்லாத காரண பூதனானவனை –
வகுத்த சேஷியானவனை

என்று கொலோ? கண் குளிர காணும் நாளே—
இந்த ராஜ்ய துரந்தரையிலே அகப்பட்டு இருக்கிற நான் அன்றோ -அவனைக் காணப் பெறாதே விடாய்த்த கண்களானவை கண்டு
விடாய் தீர்ந்து கண் படைத்த பிரயோஜனம் பெறலாவது என்றோ என்கிறார் –
என்று கொலோ என்று கால தத்வத்துக்கு ஒரு அவதி பெற்றானாகில்-இன்று கண்டதோடு ஒக்கும் கிடீர் –

—————————————————————————-

அவதாரிகை –

இரண்டாம் பாட்டு —
ராஷச வதத்துக்கு எல்லாம் அடியாகவும் -ரிஷியுடைய அபிமதம் தலைக் கட்டுகைக்கும்
தாடகா தாடகேயரை நிரசித்த படி சொல்லுகிறது —

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

பதவுரை

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி–செருக்கிவந்து எதிரிட்ட தாடகையினுடைய மார்பைப் பிளந்து
வரு குருதி பொழிதர–ரத்தம் வெளிவந்து சொரியம் படி
வல் கணை ஒன்று ஏவி–வலிய ஒப்பற்றதோர் அம்பைச் செலுத்தி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து–எல்லா மந்திரங்களையும் தம்மிடத்திலே கொண்ட
வேதங்களின் வழியே விச்வாமித்ர மஹாமுநி செய்த யாகத்தைப் பாதுகாத்து
வல் அரக்கர்–(அந்த யாகத்துக்கு இடையூறு செய்த ஸுபாஹூ முதலிய) வலிய ராக்ஷஸர்களுடைய
உயிர் கண்ட–உயிரைக் கொள்ளை கொண்ட
மைந்தன்–மிடுக்கை யுடையவன் (யாரென்னில்)
செம் தளிர்வாய் மலர்–சிவந்த தளிர்களின் நடுவே மலர்ந்த புஷ்பங்களை யுடையதும்
நகை சேர்–(காண்பவர்) மகிழும்படியான அழகு பொருந்தினதும்
செழு–செழுமையை யுடையதுமான
தண்–குளிர்ந்த
சோலை–சோலைகளை யுடைய
தில்லை நகர் திருச்சித்ர கூடம் தன்னுள்;
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த–ப்ரர்மணர் மூவராயிரம் பேர் (திரண்டு துதிக்க)
அணி மணி ஆசனத்து இருந்த–அழகிய ரத்நஸிம்ஹாஸநத்திலே வீற்றிருந்த
அம்மான் தானே–ஸர்வேச்வரனே யாவன்;
காண்மின்–அறியுங்கள்.

வந்து எதிர்ந்த தாடகை
தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் –
தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –

தன் உரத்தை கீறி-
ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து

வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி

வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை-தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
சிவந்த தளிர்கள் நடுவே விகசியா நின்றுள்ள புஷ்பங்களை உடைத்தாய் -தர்ச நீயமான ஸ்ரமஹரமான
சோலையாலே அலங்க்ருதமான ஊரிலே

அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அநந்ய பிரயோஜனரான பிராமணர் மூவாயிரம் பேர் -திரண்டு மங்களா சாசனம் பண்ண

அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே–
கோப்புடைய சீரிய சிங்காசனம் என்னும்படியே மஹார்கங்களான ரத்னங்களை யுடைத்தான-சிம்ஹாசனத்திலே
தன் மேன்மை தோற்ற வீற்று இருந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

————————————————————————

அவதாரிகை –

மூன்றாம் பாட்டு –
பிராட்டியோட்டை கலவிக்கு விரோதியைப் போக்கின படி சொல்லுகிறது

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

பதவுரை

செவ்வரி நல் கரு நெடு கண்–(உத்தம லக்ஷ்ணமான) சிவந்த ரேகைகள் படர்ந்த அழகிய கருமையான நீண்ட கண்களை யுடைய
சீதைக்கு ஆக–வநிதையை மணம் புரிதற் பொருட்டு
சினம் விடையோன்–கோபத்தை யுடைய ரிஷபத்தை வாஹநமாக வுடையனான சிவபிரானுடைய
சிலை இறுத்து–வில்லை முறித்து (பின்பு மிதிலா புரியினின்று மீளும் வழியில்)
மழுவாள் ஏந்தி–கோடாலியாகிய ஆயுதத்தை ஏந்தியவனான பரசுராமனுடைய
வெவ் வரி நல் சிலை–பயங்கரமான கட்டமைந்த சிறந்த வில்லை
வாங்கி– கையிற்கொண்டு (வளைத்து)
வென்றி கொண்டு–(அவனை) வென்று
வேல் வேந்தர் பகை தடித்த–(தான் அவதரித்த ஜாதியிற்பிறந்த) வேற்படையை யுடைய க்ஷத்ரியர்களுக்குப் பகையைத் தீர்த்த
வீரன் தன்னை–மஹா வீரனான
தெவ்வர்–பகைவர்கள்
அஞ்சு–(கண்டமாத்திரத்திலே, கடக்க வொண்ணா தென்று) அஞ்சும் படியான
நெடு புரிசை–உயர்ந்த மதிளையும்
உயர்ந்த பாங்கர்–ஓங்கிய (அட்டாலை யென்னும்) மதிற்பக்கத் திடத்தையுமுடைய
தில்லை நகர் திருச்சித்ர கூடம் தன்னுள்
(எழுந்தருளியிருக்கிற)
எவ்வரு வெம் சிலை தடகை இராமன் தன்னை–(வேறொருவரால்) அடக்கியாளுதற்கு அரியதும் (பகைவர்க்குப்)
பயங்கரமுமான வில்லை ஏந்திய பெரிய கையையுடைய இராமபிரானை
இறைஞ்சுவார்–வணங்குகிற அடியார்களுடைய
இணை அடியே–இரண்டு திருவடிகளையே
இறைஞ்சினேன்–வணங்கினேன்.

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி-சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
அஸி தேஷணா -என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை
தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை
ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து
எழுந்து அருளா நிற்க வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய
ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-

செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின
ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை

தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த் தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்-எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
ஷத்ருக்கள் அஞ்சும் படியான உயர்ந்த மதிளையும்-அட்டாலைகளையும் உடைத்தான ஊரிலே வர்த்திக்கிற
அவஷ்டப்யம் அஹத்தநு -என்று வேறு ஒரு ஒருத்தரால் அடக்கியாள ஒண்ணாதே காணவே பிரதிபஷம் முடியும்படியான
ஸ்ரீ சார்ங்கத்தை உடைய சக்கரவர்த்தி திருமகனை

இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய வீரத்துக்கும் அழகுக்கும் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தோற்று
அவர்கள் திருவடிகளிலே – இறைஞ்சினேனே—-
ஸ்ரீ பரத ஆழ்வானுக்குத் தோற்ற ஸ்ரீ சத்ருகன ஆழ்வான் போலே –

————————————————————-

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

பதவுரை

தொத்து அலர் பூ சுரி குழல்–கொத்துக் கொத்தாக மலர்ந்த புஷ்பங்களைச் சூடிய நுனி சுருண்ட கூந்தலை யுடைய
கைகேசி–கைகேயியினது
சொல்லால்–சொல்லின்படி
தொல் நகரம் துறந்து–தொன்று தொட்டுப் பரம்பரையாய் வருகிற ராஜ்யத்தைக் கை விட்டு
துறை கங்கை தன்னை–கங்கையின் துறையை
பத்தி உடை குகன் கடத்த–மஹா பக்தனான குஹப் பெருமான் புணை செலுத்தி யுதவ; (கடந்து)
வனம் போய் புக்கு–காட்டிற்போய்ச் சேர்ந்து
பரதனுக்கு–(அங்கு வந்த) பரதாழ்வானுக்கு
பாதுகமும் அரசும் ஈந்து–(தனது) மரவடியையும் ராஜ்யத்தையுங் கொடுத்து
சித்திர கூடத்து இருந்தான் தன்னை–சித்ரகூட பர்வதத்தி லெழுந்தருளி யிருந்த ஸ்ரீராமபிராணை
இன்று–இப்பொழுது (பிற்காலத்தில்)
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
கண் குளிர காண பெற்ற–கண் குளிரும்படி ஸேவிக்கப் பெற்ற
இரு நிலத்தார்க்கு–பெரிய (சிறந்த) பூலோகத்திலுள்ளவர்களுக்கு
இமையவர்–நித்யஸூரிகளும்
எத்தனையும் நேர் ஒவ்வார்–சிறிதும் ஸமமாக மாட்டார்கள்.
(தாம் ஏ–ஈற்றசைகள், தோற்றமுமாம்)

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
கொத்துக் கொத்தாக அலருகிற பூக்களை உடைய -சுருண்டு அழகியதான குழலை உடைய கைகேயி –
இத்தால் தன் ஒப்பனையாலும் அழகாலும் ஸ்ரீ சக்கரவர்த்தியைத் தானிட்ட வழக்காம் படி
பண்ணிப் பிரமிக்க வல்லளான கைகேசி சொல்லால்-
ஸ்ரீ சக்கரவர்த்தி வாய் திறக்க மாட்டாதே இருக்க -பிள்ளாய் -உங்கள் ஐயர் உன்னைக் காடேறப் போகச் சொல்லா நின்றார் –
என்று கைகேயி சொன்ன வார்த்தையாலே –

தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
குல க்ரமா கதமதாய் வருகிற படை வீட்டை சந்யசித்து -இவள் சொன்னாள் என்று போகைக்கு
பிராப்தி இல்லாமையைக் காட்டுகிறது

கங்கையின் துறை தன்னை பத்தி உடை குகன் கடத்த
தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய்
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த

வனம் போய் புக்கு-
மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –

பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்ர கூடத்து இருந்தான் தன்னை -இன்று தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
ஸ்ரீ சித்ரகூடத்திலே எழுந்தி அருளி இருக்கிற இருப்பு தான் பெறாதே பிற்பட்டார்க்கும் இழவு தீர சர்வ காலத்திலும்
அனுபவிக்கைக்காக திருச் சித்ரகூடத்திலே வர்த்திக்கிறவனை

எத்தனையும் கண் குளிர காணப் பெற்ற
இவனைக் காணப் பெறாதே விடாய்த்த கண் குளிரும்படி –
காணப் பெற்ற-
கேட்டே போகை அன்றிக்கே கண்டு அனுபவிக்கப் பெற்ற

இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே—
உகந்து அருளின தேசங்களை உடைய ஸ்லாக்கியமான பூமியில் உள்ளார்க்கு சதா பஸ்யந்தி-பண்ணி இருக்கையே-
ஸ்வ பாவமான நித்ய ஸூரிகளும் ஒவ்வார் –
இங்கு கண்ணுக்கு விஷயம் புறம்பே உண்டாய் இருக்கச் செய்தே
அத்தை த்யஜித்து காண்கிறவர்கள் -அவர்கள் அதுவே ஆசையாக இருக்கிறவர்கள் இறே –

———————————————————————————–

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–

பதவுரை

வலி வணக்கு–(எதிரிகளுடைய) வலிமையைத் தோற்பிக்கின்ற
வரை நெடு தோள்–மலை போன்ற பெரிய தோள்களை யுடைய
விராதை–விராதனென்னும் இராக்ஷஸனை
கொன்று–கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த–சிறந்த தமிழ்ப பாஷைக்கு உரியவரான அகஸ்திய முனிவர் கொடுத்த
வரி வில் வாங்கி–கட்டமைந்த வில்லை பெற்று
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி–மானின் பார்வையைத் தோற்பிக்கும் யடியான பார்வை யழகை
யுடையவளாய் வந்த சூர்ப்பணகை யென்னும் ராக்ஷஸியின் மூக்கை அறுத்து
கானோடு தூடணன் தன் உயிரை வாங்கி–கரன் தூஷணன் என்னும் அரக்கர்களின் உயிரை (அவர்களுடம்பினின்று) கவர்ந்து
மான்–மாரீசனாகிய மாயா ம்ருகமானது
மறிய–அழியும்படி
சிலை வணக்கி எய்தான் தன்னை–தனது வில்லை வளைத்து அம்புகளை எய்தவனான இராமபிரானை
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
தலை வணங்கி கை கூப்பி ஏத்த வல்லார்–தலை வணங்கி அஞ்ஜலி பண்ணித் துதிக்கவல்ல அடியார்கள்
திரிதலால்–(தன்மீது) ஸஞ்சரிக்கப் பெறுதலால்
தரணி–பூமியானது
தவம் உடைத்து–பாக்கியமுடையது
(தான், ஏ -ஈற்றசைகள், தேற்றமுமாம்)

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் கடவதாய்-மலை போலே திண்ணியதான தோள்களையும் உடைய
விராதனைக் கொன்று

வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
ஸ்ரீ அகஸ்த்யன் கொடுத்த தர்ச நீயமான வில்லை வாங்கி

கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கலை நோக்கைத் தோற்பிக்கும் படியான நோக்கை உடைய ஸூர்ப்பணகி யுடைய மூக்கை வாங்கி

கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி
இவளுடைய ரூப வைரூப்யம் கண்டு பொறுக்க மாட்டாத வந்த கர தூஷணர்களை ப்ராணன்களை ஹரித்து

சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
அது கேட்டுப் பொறாதே-ராவணனாலே ப்ரேரிதனாய் வந்த மாரீசனான மாயா ம்ருகத்ததை எய்து கொன்றவனை

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்-தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
அக்காலத்திலே காணப் பெறாத இழவு எல்லாம் தீரத் தலை யுண்டான பிரயோஜனம் பெற வணங்கி -கை யுண்டான
பிரயோஜனம் பெறத் தொழுது -வாயுண்டான பிரயோஜனம் பெற பெற ஏத்த வல்லார்

திரிதலால் தவமுடைத்து தரணி தானே –
இவர்களுடைய சஞ்சாரத்துக்கு விஷயமாகையாலே பூமியானது பாக்யத்தை உடையது –

——————————————————-

தன மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –10-6–

பதவுரை

தனம் மருவு–(தான் விரும்புஞ்) செல்வமாகப் பொருந்திய
வைதேகி பிரியல் உற்று–பிராட்டி பிரியப் பெற்று
தளர்வு எய்தி–(அதனால்) வருத்தமடைந்து
சடாயுவை–ஜடாயுவென்னும் கழுகரசை
வைகுந்தத்து ஏற்றி–பரமபதத்திற் செலுத்தி
வனம் மருவு–(வாலிக்கு அஞ்சிக்) காட்டில் மறைந்து வசிக்கிற
கவி அரசன்–வாநர ராஜனான சுக்ரீவனுடன்
காதல் கொண்டு–ஸ்நேஹஞ் செய்து கொண்டு
வாலியை கொன்று==(அவனது விருப்பத்தின்படி அவன் தமையனான) வாலியை வதைத்து
இலங்கை நகர்–இலங்காபுரியை
அரக்கர் கோமான் சினம் அடங்க–(அதற்குத் தலைவனாகிய) ராக்ஷஸராஜானான ராவணனுடைய செருக்கு ஒழியும்படி
மாருதியால் சுடுவித்தானை–அனுமானைக் கொண்டு எரிப்பித்தவனும்
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
இனிது அமர்ந்த–இனிமையாய் எழுந்தருளியிருக்கிற
அம்மானை–ஸர்வேச்வரனுமான
இராமன் தன்னை–இராமபிரானை
ஏத்துவார்–துதிக்கின்ற அடியார்களுடைய
இணை அடியே–உபய பாதத்தையே
எத்தினேன்–துதிக்குந் தன்மையேன் (யான்.)

தன மருவு வைதேகி பிரியல் உற்று தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
திரு முலைத் தடத்தின் அழகாலும் -ஆபிஜாத்யத்தாலும் -பிரியத் தகாத ஸ்ரீ பிராட்டி பிரிவாலே –
ஸ்ரீ பெருமாள் தம்மளவிலே நோவு பட்டு
ஸ்ரீ பிராட்டிக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி -பிராணனை விட்ட ஸ்ரீ பெரிய உடையாரை
ஸ்ரீ பரம பதத்து ஏறப் போக விட்டு –
தனமருவு வைதேகி -என்று
விஷ்ணோ ஸ்ரீ -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளுக்குத் தனமான ஸ்ரீ பிராட்டி என்றுமாம் –

வன மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று
வாலிக்கு அஞ்சி காட்டிலே மறைந்து கிடக்கிற குரங்குகளுக்கு ராஜாவான ஸ்ரீ ஸூக்ரீவனை
சிநேக பூர்வகமாகக் கட்சி கொண்டு –அதற்காக அதிபல பராக்ரமான வாலியை நிரசித்து

இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
இலங்கைக்கு நிர்வாஹகன் என்றும் ராஷேச்வரன் என்றும் மோஹித்து இருக்கிறவனுடைய அபிமானமும் சீற்றமும் அடங்கும் படி
ஸ்ரீ திருவடி வாலிலே நெருப்பை இட்டு சுடுவித்தவனை

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
அக்காலத்தில் அனுபவிக்கப் பெற்றிலோம் என்னும் இழவு தீரே இங்கே நித்ய சந்நிஹிதனாக இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரனான ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை

ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –
அவனுடைய வடிவு அழகிலும் சௌலப்யத்திலும் ஈடுபட்டு ஏத்துமவர்கள் திருவடிகளிலே ஏத்தினேனே –

———————————————————————-

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-

பதவுரை

குரை கடலை–கோஷிக்கின்ற கடலை
அடல் அம்பால்–தீக்ஷ்ணமான அம்பைக் கொண்டு
மறுக எய்து–கலங்கும்படி எய்யத் தொடங்கி
குலை கட்டி–(அதில்) அணை கட்டி
அதனால்–அந்த அணை வழியாக
மறு கரையை ஏறி–(கடல் கடந்து) அக்கரை சேர்ந்து
எரி நெடு வேல் அரக்கரொடும்– (சத்துருக்களை) எரிக்கின்ற நீண்ட வேற்படையை யுடைய இராக்கதர்களும்
இலங்கை வேந்தன்–இலங்கைக்கு அரசனான இராவணனும் ஆகிய அனைவர்களுடைய
இன் உயிர் கொண்டு–இனிய உயிரைக் கவர்ந்து (கொன்று)
அவன் தம்பிக்கு–அவ்விராவணனது தம்பியான விபீஷணனுக்கு
அரசும் இந்து–ராஜ்யத்தைக் கொடுத்து
திருமகளோடு–லக்ஷ்மியின் அவதாரமான பிராட்டியுடனே
இனிது அமர்ந்த–இனிமையாகச் சேர்ந்த
செல்வன் தன்னை–எல்லா வகைச் செல்வங்களுமுடையவனும்
தில்லை நகர் திருச் சித்ரகூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான்–தனது மேன்மை தோன்ற எழுந்தருளி யிருப்பவனுமான
அடி சூடும்–இராமபிரானது திருவடிகளைத் தலைமேற் கொள்ளுதலாகிற
அரசை அல்லால்–அரசாட்சியைப் பெற விரும்புவேனே யன்றி
மற்று அரசு–அதற்கு மாறாக ஸ்வாதந்திரியம் பாராட்டுகிற அரசாட்சியை
அரசு ஆக எண்ணேன்–ஒரு பொருளாக மதிக்க மாட்டேன்.

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
கோஷத்தை உடைத்தான கடலை -சத்ருக்கள் என்றால் எப்போதோ என்று மேல் விழக் கடவதான
அம்பை விட்டு மருகும்படியாக செய்து

குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
அஞ்சின கடலானது என் மேலே தூர்த்துக் கொள்ளீர் என்ன அதன் மேலே மலைகளை இட்டுத்
தூரத்து வழி செய்து அந்தக் கரையிலே போய்

எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்-இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
சத்ருக்களை எரிக்கக் கடவதாய் நெடிதான வேலை உடைய ராஷசரோடே-லங்காதிபதியான ராவணனை
அவன் உகந்த பிராணனை ஹரித்து -அவன் தம்பிக்கு ராஜ்யத்தையும் கொடுத்து

திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
ஸ்ரீ பிராட்டியோடு கூட பிரிந்த பிரிவு எல்லாம் மறக்கும் படி இனிது அமர்ந்து அருளிய
ஐஸ்வர்யம் உடையவன் தன்னை

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே—
ராஜ்ஜியம் பண்ணி இருக்கிறவன் திருவடிகளைக் கொடுக்கை யாகிற ராஜ்ஜியம் ஒழிய அதற்கு எதிர்த்தட்டாக
ஸ்வ தந்த்ர்யத்தைப் பார்க்கும் ராஜ்யத்தை ராஜ்யமாக வேண்டேன் –

————————————————————-

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான்
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–

பதவுரை

அம் நெடு பொன் மணி மாடம்–அழகிய உயர்ந்த பொன்னையும் இரத்தினங்களையுங் கொண்டு
அமைக்கப்பட்ட உபரிகை வீடுகளையுடைய
அயோத்தி–அயோத்யா நகரத்துக்கு
எய்தி–மீண்டு வந்து
அரசு எய்தி–அரசாட்சியை அடைந்து
தான் முன் கொன்றான் தன்–தன்னால் முன்பு கொல்லப்பட்டவனான இராவணனுடைய
பெரு தொல் கதை–பெரிய பூர்வ வ்ருத்தாந்தங்களை யெல்லாம்
அகத்தியன் வாய் கேட்டு–அகஸ்திய மகாமுனிவன் வாயாற் சொல்லக் கேட்டு
மிதிலை செல்வி–மிதிலா நகரத்தில் தோன்றிய பிராட்டி
உலகு உய்ய–உலக முழுவதும் வாழும்படி
திரு வயிறு வாய்த்த–பெற்ற
மக்கள்–தன் பிள்ளைகளான குசலவர்களுடைய
செம் பவளம் திரள் வாய்–சிவந்த பவழத்துண்டு போன்ற வாயினால்
தன் சரிதை–தனது சரித்திரமான ஸ்ரீராமாயணத்தை
கேட்டான்–கேட்டருளினவனான
தில்லைநகர் திருச்சித்ரக்கூடம் தன்னுள்
(எழுந்தருளியிருக்கிற)
எம் பெருமான் தன்–எமது தலைவனுடைய
சரிதை–சரித்திரத்தை
செவியால் கண்ணால், பருகுவோம்–காதினாற்கேட்டு (அப்பெருமானைக்) கண்ணால் ஸேவிக்கப் பெறுவோம்யாம்
(அதுவேயன்றி)
இன் அமுதம்–இனிய தேவாம்ருதத்தையும்
மதியோம்–ஒரு பொருளாக நன்கு மதிக்க மாட்டோம்
அன்றே–அல்லவா! (ஈற்றசை, தோற்றமுமாம்)

அம்பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட
மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி மீண்டு எழுந்து அருளிப் புகுந்து

அரசு எய்தி
ராஜ்யம் புநரவாப்தவான் -என்னும்படியாக ஜகத்தை எல்லாம் வாழும்படியாக சாம்ராஜ்யத்திலே அதிகரித்து

அகத்தியன் வாய் தான் முன் கொன்றான் தன் பெரும் தொல் கதை கேட்டு –
வேறு க்ர்த்யம்சம் இல்லாமையாலே பொது போக்காக தான் முன் கொன்ற ராவணனுடைய பூர்வ வ்ருத்தாந்தங்களை அடைய
ஸ்ரீ அகஸ்த்ய பகவான் விண்ணப்பம் செய்யக் கேட்டு

மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான்
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஜகம் அடைய உஜ்ஜீவிக்கும் படி பெற்ற ஸ்ரீ குசலவர்கள் பேச தம்முடைய வ்ருத்தாந்தமான
ஸ்ரீ இராமாயண கதையை கேட்டு அருளினவர் நித்ய வாஸம் பண்ணுகிற

தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே—
என்னுடைய நாதனுடைய வ்ருத்தாந்தத்தை ஸ்ரீ திருவடியைப் போலே சர்வ இந்த்ரியங்களாலும் அனுபவிக்கப் பெற்ற நாம்
தேவ ஜாதி அனுபவிக்கிற அமிர்தத்தை ஒன்றாக மதியோமே –

——————————————————————————-

செறி தவ சம்புகன் தன்னை சென்று கொன்று
செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட
திறல் விளங்கும் இலகுமனை பிரிந்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
உறைவானை மறவாத வுள்ளம் தன்னை
வுடையோம் மற்று உறு துயர் அடையோம் அன்றே —10-9–

பதவுரை

செறி தவம்–மிக்க தபஸ்ஸை யுடையனான
சம்புகன் தன்னை–(சூத்ரசாதியனான) சம்புகனை
சென்று, கொன்று–(அவனிருக்கு மிடந்தேடிச்) சென்று தலையறுத்து
செழுமறை யோன் உயிர் மீட்டு–சிறந்த ப்ராஹ்மண குமாரனுடைய உயிரை மீட்டுக் கொடுத்து
தவத்தோன் ஈந்த–அகஸ்திய மா முனிவன் கொடுத்த
நிறைமணி பூண் அணியும் கொண்டு–பெருவிலையுள்ள ரத்நஹாரமான ஆபரணத்தையும் சாத்தியருளி
இலவணன் தன்னை–லவணாஸுரனை
தம்பியால்–சத்ருக்நனைக் கொண்டு
வான் ஏற்றி–வீர ஸ்வர்க்கத்திற் குடியேற்று வித்து
முனிவன் வேண்ட–துர்வாஸமுனிவனது சாபத்தால்
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான் தன்னை–பலபராக்கிரமம் விளங்கப் பெற்ற லக்ஷ்மணனை துறந்தவனும்
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
உறைவானை–நித்யவாஸம் பண்ணுகிறவனுமான இராமபிரானை
மறவாத உள்ளம் தன்னை உடையோம்–மறவாமல் எப்பொழுதும் தியானிக்கிற மனத்தையுடைய நாம்
மற்று உறு துயரம் அடையோம்–இனி (எம்பெருமானை அநுபவிக்கப் பெற்றிலோ மென்று வருந்துன்பத்தை அடையமாட்டோம்)
(அன்று, எ – ஈற்றசை)

செறி தவ சம்புகன் தன்னை சென்று கொன்று
மிக்க தபஸ்சை உடையனாய் -ஷூத்ரனான ஜம்புகனைத் தலை யறுத்து

செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை தம்பியால் வான் ஏற்றி –
விலஷணனான பிராமணனுடைய புத்திரன் பிராணனை மீட்டு –
ஸ்ரீ அஹஸ்த்ய பகவான் கொடுத்த பெரு விலையனான ஹாரத்தையும் சாத்தி யருளி
ஸ்ரீ திரு வயோத்யையிலே புகுந்து லவணா ஸூரனை ஸ்ரீ சத்ருகன ஆழ்வானை விடுவித்து வீர ஸ்வர்க்கத்திலே குடியேற்றுவித்து

முனிவன் வேண்ட திறல் விளங்கும் இலகுமனை பிரிந்தான் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் உறைவானை –
ஸ்ரீ துர்வாசவினுடைய சாபத்தாலே -த்விதீயம் மேந்த்ராந்தமா நம் -என்கிறபடியே தம்முடைய
பிராண பூதரான ஸ்ரீ இளைய பெருமாளுக்கு விடை கொடுத்து
அப்படிப்பட்ட தன்னைப் பின்புள்ளார் காணப் பெறாத இழவு தீர ஸ்ரீ திருச் சித்ர கூடத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை

மறவாத வுள்ளம் தன்னை வுடையோம் மற்று உறு துயர் அடையோம் அன்றே —
இப்படிப்பட்ட சௌலப்யத்தை அநவரத பாவனை பண்ணி இருக்கிற நமக்கு –
ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு இனி இல்லை –

————————————————————————

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும்
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே —10-10–

பதவுரை

அன்று–(தன்னடிச்சோதிக்கு எழுந்தருள்கிற) அந்நாளில்
சர அசரங்களை–(அயோத்யாபுரியிலுள்ள) ஜங்கமும் தாவரமுமான எல்லா வுயிர்களையும்
வைகுந்தத்து ஏற்றி–பரமபதத்துக்குப் போகச் செய்து
அடல் அரவம் பகை ஏறி–வலிமையை யுடைய பாம்புகளுக்குப் பகையான கருடன் மேல் ஏறிக் கொண்டு
அசுரர் தம்மை வென்று–அசுரர்களை ஜயித்து
இலங்கும் அணி நெடு தோள் நான்கும் தோன்ற–(அந்த ஜயலக்ஷ்மி) விளங்கப் பெற்ற அழகிய
நீண்ட (தனது) திருக்கைகள் நான்கும் விளங்க
விண் முழுதும்–பரமபதத்திலுள்ளாரெல்லாரும்
எதிர் வர–எதிர் கொண்டு உபசரிக்கும்படி
தன் தாமம் மேவி சென்று–தமது ஸ்தாநமான அப் பரம பதத்திலே போய்ப் புக்கு
இனிது வீற்றிருந்த-(தன் மேன்மை யெல்லாம் தோன்றும்படி) இனிமையாகத் (திவ்ய ஸிம்ஹாஸநத்தில்) எழுந்தருளியிருந்த
அம்மான் தன்னை தில்லை நகர் திரு சித்ரகூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி–ஸர்வேச்வரனை
(அந்த இருப்பில் ஒன்றுங் குறையாமல் அவ்வாறே) தில்லைச் சித்ரக்கூடத்தில் எந்நாளும் (நமக்காக)
நித்யவாஸம் பண்ணுகிற அப்பெருமான் இவ்விராமபிரானே யென்றறிந்து துதித்து
தொண்டீர் நீர்–அவனுக்கு அடியவர்களான நீங்கள்
நாளும் எப்பொழுதும்–தினந்தோறும் எப்பொழுதும்
இறைஞ்சு மின்–வணங்கி உஜ்ஜீவியுங்கள்
(ஏ – இசைநிறை.)

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அபிவ்ர்ஷா பரிம்லா நா -என்று வ்யதிரேகத்திலே அவை பட்டது அறிந்து அருளுகையாலே –
நோசா சாக்தம் அயோத்யாயாம் ஸூ ஷூமம் அபித்ர்ச்யதே-திர்யக்யோநி கதாச்சான்யே சர்வே ராம அநு வ்ரதா-என்கிறபடியே
ஸ்ரீ இளைய பெருமாளோபாதி ஸ்ரீ பரம பதத்துக்கு போக விட்டு

அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை-வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
சர்ப்ப ஜாதிக்கு ஜன்ம சத்ருவான ஸ்ரீ பெரிய திருவடியை மேற்கொண்டு அசூர வர்க்கத்தை வென்று –
அந்த வீர ஸ்ரீ விளங்குகிற திருத் தோள்கள் நாலோடும் கூட -அங்குள்ளார் உகக்கும் படி எழுந்து அருளி

விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
ஸ்ரீ பரம பதத்திலே போய்ப் புக்கு தன் மேன்மை எல்லாம் தோற்றும்படியான ஸ்ரீ ஈஸ்வரனை

தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே —
அவ்விருப்பில் ஒன்றும் குறையாமே காலதத்வம் உள்ளதனையும் இங்கே நமக்காக நித்ய வாஸம் பண்ணுமவனை
அநந்ய பிரயோஜனரான நீங்கள் அவனை ஆஸ்ரயித்து க்ருத்தார்த்தர் ஆகுங்கோள் –

—————————————————————————————–

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

பதவுரை

தில்லைநகர் திரு சித்ரகூடம் தன்னுள்
திறல் விளங்கும்–பல பராக்கிரமம் விளங்கப் பெற்ற
மாருதியோடு–அனுமானுடனே
அமர்ந்தான் தன்னை–நித்யவாஸம் பண்ணுகிற எம் பெருமானைக் குறித்து
எல்லை இல்சீர் தயரதன் தன் மகன் ஆய் தோன்றிற்று அது முதல் ஆ தன் உலகம் புக்கது ஈறு ஆ–அழிவில்லாத
புகழையுடைய தசரதசக்ரவர்த்தியின் குமாரனாய் பிறந்தது முதல் பரமபதம் புக்கது இறுதியாக
(ஸ்ரீராமாயணத்தை முழுதையும் ஸங்க்ரஹமாக அமைத்து)
கொல் இயலும் படை தானை கொற்றம் ஒள்வாள் கோழியர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த–(பகைவர்களைக்) கொல்லுதல்
பொருந்திய ஆயுதங்களுடைய சேனையையும் வெற்றியையும் ஒளியையுமுடைய வாளாயுதத்தையுடைய வரும்
உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும் வெண் கொற்றக்குடையை யுடையவருமான குலசேகராழ்வார் அருளிச்செய்த
நல் இயல்–சிறந்த இயற்றமிழிலக் கணத்துக்கு இசைந்த
இன் தமிழ் மாலை பத்தும்–இனிய தமிழ்ப் பிரபந்த ரூபமான இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்று வல்லவர்கள்
நலம் திகழ–பரமபதத்தில் விளங்குகிற
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
அடிகீழ் நண்ணுவார்–திருவடிகளிற் சேரப் பெறுவார்கள்.

நிகமத்தில் –
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து
நித்ய வாஸம் பண்ணுகிறவனை

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
கொலையை முயலா நின்றுள்ள வேலையை யுடையராய் –
வெற்றியையும் அழகையும் உடைய வாளையும் உடைய
கோழியர்க்குக் கோன்-கோழி -ஸ்ரீ உறையூர் -சோழ ராஜாவானவன் –
வெண் கொற்றக் குடையை உடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த

நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–
அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –
ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர் ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -9–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

பிரவேசம் –

ஸ்ரீ கௌசலையார் பெற்ற பேற்றை அனுபவித்தார் கீழில் திரு மொழியில் –
பால்ய அவஸ்தை எல்லாம் அனுபவித்து பிராப்த யௌவனர் ஆனவாறே -அனுபவிக்கப் பெறாதே இழந்த
ஸ்ரீ சக்கரவர்த்தியோ பாதியும் தமக்கு பிராப்தி ஒத்து இருக்கையாலே அனுபவிக்கப் பெறாதே இழந்தேன் என்று
அவன் சொல்லுகிற பாசுரத்தாலே தம் இழவைப் பேசுகிறார் —

வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை
நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–

பதவுரை

எம் இராமாவோ–ஓ எமது இராமனே!
வளம் நகரம்–அழகிய அயோத்தி மாநகரத்துப் பிரஜைகள் அனைவரும்
வல் தாளின் இணை வணங்கி தொழுது ஏத்த–(சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும்)
வலிமையையுடைய (உனது) இரண்டு திருவடிகளிலும் (விழுந்து) நமஸ்கரித்து (எழுந்து) கைகூப்பி நின்று துதிக்க
மன்னன் ஆவான் நின்றாயை–அரசனாகப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளுதற்கு ஸித்தனாய் நின்றவனும்
அரி அணை மேல் இருந்தாயை–சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க ஸித்தனாயிருந்தவனுமான உன்னை
நெடுங்கானம் படர போகு என்றாள்–பெரிய காட்டிற்கு செல்லுதற்கு (இந்நகர் விட்டு நீங்கிப்) போ என்று (கைகேயி) கூறினாள்
நல் மகனே–நல்ல குமாரனே!
நான்–நான்
உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு–உன்னைப் பெற்று வளர்த்த தாயான கைகேயியின் வார்த்தையைக் கேட்டு
நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன்–நன்றாக! உன்னை நிலவுலகத்தை ஆளும்படி செய்தேன்

வன் தாள் இணை வணங்கி
தானும் ராஜ்ய பரப்பை எல்லாம் ஆண்டானாய் இருக்கச் செய்தே-அவ்வளவன்றியே –
வண் புகழ் நாரணன் திண் கழல்-என்னுமா போலே
ஆஸ்ரிதரை எல்லா அவஸ்தையிலும் விடேன் என்னும் திருவடிகளை வழி பட்டு

வள நகரம் தொழுது ஏத்த
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற -ஸ்ரீ திரு நகரியிலே
அப்படி இருக்கிற ஸ்ரீ திரு நகரி தொழுது ஏத்த

மன்னனாவான் நின்றாயை –
திரு அபிஷேகத்துக்கு முன்புள்ள கர்த்தவ்யங்கள் எல்லாம் தலைக் கட்டி திரு அபிஷேகம் பண்ணுகைக்கு
திருக் காப்பு நாண் சாத்தி நிற்கிற யுன்னை

அரி அணை மேல் இருந்தாயை
சிம்ஹாசனத்திலே பதஸ்தனாய் இருந்தான் என்னும் படி தோற்றச் சமைந்து இருக்கிற யுன்னை

நெடும் கானம் படர போகு வென்றாள்
இப்படி ராஜாக்கள் அல்லாதாரும் புக மாட்டாத காட்டை -தேவ நேந வனம் கத்வா -என்னுமா போலே
இவ் ஊரில் நின்றும் புறப்பட்டு
வழியே போய்க் காட்டிலே புகுமது அன்றியே காட்டிலே போம்படியாய்-
நெடிய காட்டிலே இறே போகச் சொல்லிற்று

எம்மி ராமாவோ!
நினைக்கவும் -சொல்லவும் -காணவும் -தாபம் போம்படியான உம்மை இறே போகச் சொல்லிற்று

உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
திரு அபிஷேக கல்யாண வார்த்தை -ஸ்ரீ கௌசல்யையாரிலும் காட்டில் தனக்கு நான் சென்று சொல்லி
ப்ரீதி காண வேணும் என்னும்படி பெற்ற தாயாய்ப் போந்த கைகேயி வார்த்தை கேட்டு

நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
வஞ்சன பரை என்று அறியாதே தாய் என்று இவளுக்கு வார்த்தை சொல்லப் புகுந்து –
அவள் வார்த்தையிலே அகப்பட்டு
பூமிப் பரப்பை எல்லாம் அழகிதாக உன்னை ஆள்வித்தேன்

நன் மகனே! உன்னை நானே—-
நான் இப்படி செய்த இடத்திலும் நீர் குணாதிகராம் படி நின்றீர் –
நான் நானாம் படி செய்தேன் –

—————————————————————————————

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

பதவுரை

எம் இராமாவோ!
வெவ் வாயேன் வெவ் உரை கேட்டு–கொடிய வாயை யுடையேனை என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டு
இரு நிலத்தை வேண்டாதே–பெரிய நிலவுலகத்து அரசாட்சியை விரும்பாமலே விட்டிட்டு
விரைந்து–சீக்கிரமாக
வென்றி மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து–வெற்றியை விளைப்பதான
மைம் மலை போன்ற வடிவத்தையுடைய யானையும் தேரும் குதிரையுமாகிய வாஹநங்களை யொழிய விட்டு
வனமே மேவி–காட்டையே சேர்ந்து
நெய் வாய வேல் நெடு கண் நேரிழையும்–நெய்ப்பூசிய நுனியையுடைய வேலாயுதம் போன்ற
நீண்ட கண்களையும் தகுதியான ஆபணரங்களை யுமுடையளான பிராட்டியும்
இளங்கோவும்–இளைய பெருமாளும்
பின்பு போக–உடன் தொடர்ந்து வர
எவ்வாறு நடந்தனை–எங்ஙனம் நடந்து சென்றாயோ!
எம் பெருமான்–எமது ஐயனே!
என் செய்கேன்–நான் என் செய்வேன்!

வெவ் வாயேன் வெவ் வுரை கேட்டு
அநலாஸ்யனான என்னுடைய -காடு ஏறப் போம் -ராஜ்யத்தைத் தவிரும் -என்ற
என் வார்த்தையைக் கேட்டு

இரு நிலத்தை வேண்டாதே –
உம்மைப் பிரியில் முடிவோம் -என்று வளைப்புக் கிடக்கிற நகர ஜனங்களை எல்லாம் ஒளித்து-
அவர்களைக் கை விட்டு

விரைந்து –
போகிறோம் -என்று விளம்பிப் போமாகில் -ராஜ்யத்தில் நசையாலே நின்றோம் என்று
கைகேயி நினைக்கும் -என்று விரைந்து

வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து-மா ஒழிந்து –
வென்றியை விளைப்பதாய்-அஞ்சன கிரி போலே
பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற ஆனை என்ன -தேர் என்ன -குதிரை என்ன -இவற்றை ஒழிந்து

வனமே மேவி
இவற்றை ஒழிந்தால் இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி

நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு

எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?–
கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –
என்னாயனே நான் என் செய்கேன் –

———————————————————————————–

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன்
குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன்
மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய்
இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
காகுத்தா! கரிய கோவே! —–9-3–

பதவுரை

கொல் அணை–கொலைத் தொழில் பொருந்தின
வேல்–வேலாயுதம் போன்ற
வரி நெடுங்கண்–செவ்வரி பரந்த நீண்ட கண்களையுடைய
கௌசலை தன்–கௌஸல்யையினது
குலம்–குலத்தில் தோன்றிய
மதலாய்–குமாரனே!
குனி வில் ஏந்தும்–வளைந்த வில்லைத் தரித்த
மல் அணைந்த வரை தோளா–வலிமை பொருந்திய மலைகள் போன்ற தோள்களை யுடையவனே!
வல் வினையேன்–மஹா பாபியான என்னுடைய
மனம் உருக்கும் வகையே கற்றாய்–மனதை உருகச் செய்வதற்கே வல்லவனே!
காகுத்தா–ககுத்ஸ்தனென்னும் அரசனது குலத்தில் தோன்றியவனே!
கரிய கோவே–கருநிறமுடைய ஐயனே!
மெல் அணை மேல் முன் துயின்றாய்–மென்மையான பஞ்சனை மெத்தையின் மேல் முன்பெல்லாம் படுத்து உறங்கிப் பழகினவனான நீ
இனி இன்று போய்–இனிமேற் புதிதாக இன்றைக்குச் சென்று
வியன் கானம் மரத்தின் நீழல்–பெரிய காட்டிலுள்ள மரத்தின் நிழலிலே
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ–கருங்கற் பாறைகளையே படுக்கையாகக் கொண்டு அதன் மேற்படுத்துத் துயிலப் பழகின்றாயோ

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! –
கொலையிலே அணைந்த வேல் போலே புகரை உடைத்தாய் –
செவ்வரி கருவரியையும் உடைத்தாய் பரப்பையும் உடைத்தான கண்ணை யுடைய
ஸ்ரீ கௌசலையாருடைய உத்தாரகர் ஆனவனே –

குனி வில்லேந்தும் மல்லணைந்த வரை தோளா!
வீரர்கள் வில் ஒருக்கால் நாணி இறங்கிடாமையாலே வளைந்த படியே இருக்கும் இறே –
அந்த வில் தானும் மிகை என்னும் படி
மலை போலே பெரிய மிடுக்கை உடைய தோளையும் உடையவனே

வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்-
ஆயுத அழகாலும் தோள் அழகாலும் என் நெஞ்சை அழிக்கவே கற்றவனே

மெல்லணை மேல் முன் துயின்றாய்-
அழகிய படுக்கையிலே முற்காலம் எல்லாம் கண் வளர்ந்த நீர் –

இன்று இனி போய் –
பல மாளிகைகளிலே பல படுக்கைகளிலே கண் வளர்ந்த நீர் இன்றாக இனிப் போய்

வியன் கான மரத்தின் நீழல்-
காட்டில் வர்த்திப்பார் தாங்களும் வெருவும்படி-காட்டிலே -இலை இல்லாத மரத்தின் நிழலின் கீழே

கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
பாறைகளை யணையாகக் கண் வளரும் படி கற்றீரோ

காகுத்தா! கரிய கோவே!-
இச் செயல்கள் உம்முடைய குடிப்பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –

———————————————————————

வா போகு வா இன்னம் வந்து
ஒருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா
விடையோன் தன் வில்லை செற்றாய்!
மா போகு நெடும் கானம் வல் வினையேன்
மனம் உருக்கும் மகனே! இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப்
போகாதே நிற்க்குமாறே! —9-4–

பதவுரை

வா–(சற்று இங்கே) வா
போகு–இனிச் செல்வாய்
வா–மறுபடியும் இங்கு வா
இன்னம் வந்து ஒருகால் கண்டு போ–(போம்போது) பின்னையும் ஒரு தரம் வந்து என்னைப் பார்த்து விட்டுப் போ
மலர் ஆள் கூந்தல்–பூக்களை எப்பொழுதும் தரிக்கிற மயிர் முடியை யுடையவளும்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டு ஆ–மூங்கில் போன்ற அழகிய தோள்களை யுடையளுமான பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக
விடையோன் தன் வில்லை செற்றாய்–சிவனுடைய வில்லை முறித்தவனே!
வல் வினையேன் மனம் உருக்கும் மகனே–மஹா பாபியான எனது மனதை உருகச் செய்கிற மைந்தனே!
இன்று–இப்பொழுது
நீ–நீ
மா போகு நெடுங்கானம் போக–யானைகள் ஸஞ்சரிக்கிற பெரிய காட்டுக்குப் போக
என் நெஞ்சம்–எனது மனமானது
இரு பிளவு ஆய் போகாதே நிற்கும் ஆறே–இரண்டு பிளப்பாகப் பிளந்து போகாமலே வலியதாய் நிற்கும் தன்மை என்னோ?

வா போகு வா –
சற்றுப் போது காணா விட்ட வாறே வரும்படி காண்கைக்காக ஸூமந்த்ரனை விட்டு அழைப்பிக்கும்-
பிறகு பின்பும் பிறகு அழகையும் காண்கைக்காகப் போ என்னும் –
பின்னையும் கண் மறையப் போனவாறே வா வென்னும் –

இன்னம் வந்து ஒருகால் கண்டு போ –
வந்தவாறே இன்னம் போம் போது ஒருக்கால் கண்டு போம் என்னும் –
இப்படி யாகும் இவன் யாத்ரை தான் இருப்பது –

மலராள் கூந்தல்
பூ மாறாதே யாளும் மயிர் முடியையும்

வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் ஒழுகு நீட்சிக்கும் வேய் போலே இருக்கிற அழகிய தோளை
உடையாளாய் இருக்கிற ஸ்ரீ பிராட்டி நிமித்தமாக –

விடையோன் தன் வில்லை செற்றாய்!
பெரு மிடுக்கனான ருத்ரனுடைய வில்லை முறித்தவனே

மா போகு நெடும் கானம் –
ஆனைகள் சஞ்சரிக்கிற காடு

வல் வினையேன் மனம் உருக்கும் மகனே! –
பால்ய அவஸ்தை தொடங்கி பதினாலாண்டு உன் சௌந்தர்யாதி சேஷ்டிதங்களாலே மஹா போகங்களை
என்னை அனுபவிப்பித்த உன்னை முடிய அனுபவிக்கப் பெறாதே மஹா பாபத்தைப் பண்ணி
என்னுடைய ஹ்ருதயத்தை சிதிலம் ஆக்குமவனே

இன்று நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! —
உன் சந்நிதியில் இருக்கிற என் நெஞ்சமானது நீ போனவாறே சிதிலமாகாதே வலித்திரா நின்றதீ –
இதுக்கு ஹேது அறிகிறிலேன்-

——————————————————————————————–

பொருந்தார் கை வேல் நுதி போல்
பரல் பாய மெல் அடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம்பசி நோய் கூர இன்று
பெரும் பாவியேன் மகனே! போகின்றாய்
கேகயர் கோன் மகளாய் பெற்ற
அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன்
என் செய்கேன்? அந்தோ! யானே— 9-5–

பதவுரை

பொருந்தார் கை வேல் நுதி போல்–பகைவர்கள் கையிலேந்தும் கூர்மையான வேலாயுதத்தின் நுனி போன்ற
பரல்–பருக்கைக் கற்கள்
பாய–(காலில் தைத்து அழுத்தவும்)
மெல் அடிக்கள் குருதி சோர–மென்மையான (உனது) பாதங்களினின்று ரத்தம் பெருகவும்
வெயில் உறைப்ப–(மேலே) வெயிலுறைக்கவும்
வெம் பசி நோய் கூர–(வேண்டிய போது உணவு கிடையாமலே) வெவ்விய பசியாகிய நோய் மிகவும்
பெரும் பாவி யேன் மகனே–மஹா பாபியான எனது மைந்தனே!
இன்று–இப்பொழுது
விரும்பாத கான் விரும்பி போகின்றாய்–(எவரும்) விரும்பாத காட்டை
(நான் போகச் சொன்னேனென்பதனாலே) விரும்பி (அவ்விடத்துக்குச் செல்கிறாய்)
கேகயர்கோன் மகள் ஆய்பெற்ற அரும்பாவி–கேகயராஜன் பெற்ற மகளான கொடிய பாவியாகிய கைகேயியினுடைய
சொல் கேட்ட அரு வினையேன் யான்–வார்த்தையைக் கேட்ட கொடியேனாகிய நான்
அந்தோ! என் செய்கேன்–ஐயோ! என்ன செய்வேன்!

பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய
சத்ருக்கள் கையில் வேல் முனையை இட்டிருந்தால் போல் பரற்களானவை பாய

மெல் அடிகள் குருதி சோர
இங்குத்தையில் மிதிக்க சஹியாத ஸூகுமாரரான திருவடிகள் பாறைகள் மேலே மிதிக்கையாலே ரதத்தைப் புறப்பட விட

விரும்பாத கான் விரும்பி –
ஸூகுமாரர் அல்லாதாரும் விரும்பாத காட்டை நான் போகச் சொன்னேன் என்னுமத்தாலே விரும்பி

வெயில் உறைப்ப வெம்பசி நோய் கூர -மிக
மேலே வெய்யிலானது உறைப்ப-நினைத்த போது அமுது செய்யக் கிடையாமையாலே வெவ்விய பசியான நோய்

இன்று- பெரும் பாவியேன் மகனே! போகின்றாய்
மஹா பாபியான என் வயிற்றிலே பிறக்கையாலே இறே ஸூ குமாரரான நீர் காடு ஏறப் போகிறது

கேகயர் கோன் மகளாய் பெற்ற அரும் பாவி சொல் கேட்ட –
கேகேய ராஜன் மகளாய் பெற்றது ஒரு மஹா பாபத்தை யாய்த்து -அவள் வார்த்தையிலே அகப்பட்ட

அரு வினையேன் என் செய்கேன்? அந்தோ! யானே—
பிரதிகிரியை அல்லாத செயலைச் செய்த என்னால் செய்யலாம் பரிஹாரம் இல்லை –

—————————————————————————–

அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல்
கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத் திடை அழுந்த தழுவாதே
முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
இழி தகையேன் இருகின்றேனே– 9-6–

பதவுரை

அம்மா என்று உகந்து அழைக்கும்–ஐயா! என்று மகிழ்ச்சி கொண்டு (என்னை) அழைக்கின்ற
ஆர்வம் சொல் கேளாதே–ப்ரீதி விளங்குஞ்சொல்லை (நான்) கேட்கப் பெறாமலும்
அணி சேர் மார்வம்–ஆபரணங்கள் பொருந்திய (என் மகனது) மார்பு
என் மார்வத்திடை அழுந்த–என் மார்பிலே அழுந்தும்படி
தழுவாதே–(நான் அவனை) இறுக அணைத்துக் கொள்ளாமலும்
முழுசாதே–(அந்த ஆலிங்கந போகக் கடலில்) முழுகாமலும்
உச்சி மோவாது–உச்சியை மோந்திடாமலும்
கைம்மாவின் நடை அன்ன மெல் நடையும்–யானையினது நடை போன்ற (கம்பீரமான அம்மகனது) மென்மையான நடையின் அழகையும்
கமலம் போல் முகமும் காணாது–தாமரை மலர்போன்ற (அவனது) முகப் பொலிவையும் காணமாலும்
எம்மானை என் மகனை இழந்திட்ட–எமது ஐயனான என் மகனைக் (காடேறப் போக்கி) இழந்து விட்ட
இழி தகையேன்–இழிவான செயலைச் செய்தவனான நான்
இருக்கின்றேனே–(இன்னமும் அழிந்திடாமல்) உயிர் வாழ்ந்திருக்கின்றேனே.

அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே-
வேறு ஒன்றைக் கணிசியாதே -காரியப் பாடு அற-ஐயர் -என்று அழைக்கும் ப்ரேமம் வழிந்து
புறப்பட்ட சொல்லைக் கேளாதே –

அணி சேர் மார்வம் என் மார்வத் திடை அழுந்த தழுவாதே முழுசாதே மோவாது உச்சி
ஆபரணங்களாலே அலங்க்ர்தமான திரு மார்வைக் கொண்டு-ஸூ காடம் பரிஷச்வஜே -என்னும்படி
ஏக தத்வம் என்னும் படி தழுவி முழுசாதே –
முழுசி அநந்தரம் உச்சியை மோந்து கொள்ளாதே

கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
மத்த மாதங்க காமி நம் -என்னும் படி அமைந்து இருக்கிற நடை அழகும்

கமலம் போல் முகமும் காணாது
விகாசம் செவ்விக்கு தாமரை ஒரு போலியான திரு முகத்தைக் காணாது

எம்மானை என் மகனை –
நடை அழகாலே என்னை எழுதிக் கொண்ட என்மகனை

இழந்திட்ட இழி தகையேன் இருகின்றேனே–
இப்படித் தண்ணிய செயலை செய்தக்கால் முடியவும் ஆகாதே இருக்கவும் வேணுமோ நான் –

——————————————————————————–

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

பதவுரை

தூ மறையீர்–நித்ய நிர்த் தோஷமான வேதத்ததை ஓதி யிருக்கிற பிராமணர்களே!
சுமந்திரனே–(ராஜ தர்மத்தை நன் கறிந்து நடத்திப் போந்த ஸுமந்த்ரரே!)
வசிட்டனே–ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற) வஸிஷ்ட மஹர்ஷியே
(உங்களை ஒரு விஷயம் கேட்கிறேன்)
பூ மருவும் நறு குஞ்சி–புஷ்பம் மாறாதே யிருப்பதாய் மணம் கமழா நின்ற திருக் குழலை
புன் சடை ஆ புனைந்து–விகாரமான ஜடையாகத் திரித்து
பூ துகில் சேர் அல்குல்–நல்ல பட்டுப் பீதாம்பரங்கள் சாத்த வேண்டிய திருவரையிலே
காமர் எழில் விழல் உடுத்து–காண்கைக்கு ஆசைப்படத்தக்க அழகிய விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி
கலன் அணி யாது–திருவாபரணங்கள் அணியாமல்
அங்கங்கள் அழகு மாறி–இயற்கை யழகுக்கு மேல் திருவாபரணங்களால் உண்டாகக்கூடிய செயற்கை யழகின்றியிலே
ஏமரு தோள் என் புதல்வன் தான்–ஸுரக்ஷிதமான தோள்களை யுடையனான எனது குமாரனானவன்
யான் இன்று செல தக்க வனம் சேர்தல்–நான் இப்போது போகவேண்டிய காட்டுக்குத் தான் போவது
தகவோ–தகுதி தானோ!
நீரே சொல்லீர்–(தர்மஜ்ஞரான) நீங்களே (ஆராய்ந்து) சொல்லுங்கள்

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூ மாறாதே இருப்பதாய் பரிமளத்தைப் புறப்பட விடா நிற்கும் திருக் குழலை –
மனுஷ்யர்க்குப் பார்க்க ஒண்ணாத படி ஜடையாக்கி

பூம் துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்து –
அறுபதினாயிரம் ஆண்டு தேடின திருப் பரியட்டங்களில் நல்லவை எல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே –
கண்டார் விரும்பும் படி விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி

கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஸ்வா பாவிகமான அழகு ஒழியத் திரு ஆபரணங்கள் சாத்தாமையாலே அத்தாலே வரும் அழகு இன்றியே

ஏமரு தோள் என் புதல்வன் –
விக்நம் பண்ணினாரை அழியச் செய்து அபிஷேகம் பண்ண வல்ல என் மகன்

யான் இன்று செல தக்க வனம் தான் சேர்த்தல்
அறுபதினாயிரம் ஆண்டு போகங்களை புஜித்து-வீத ராகனான நான் போகக் கடவ காட்டிலே
ஸூகுமாரராய்-போக யோக்யரான தாம் போகை

தூ மறையீர்! இது தகவோ?
பதிம் விஸ்வஸ்ய -என்று ஓதி இருக்கிற பிராமணரே -நீங்கள் இது சொல்லி கோள்-இது தர்மமோ

சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே
ராஜ தர்மத்தை பழக அறிந்து நடத்திப் போந்த ஸ்ரீ ஸூமந்த்ரனே -சொல்லாய்
இவ்வம்ச த்துக்கு குருவாய் ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற ஸ்ரீ வசிஷ்ட பகவானே சொல்லாய் –

‘பூணார் அணியும், முடியும், பொன்னா சனமும், குடையும்,
சேணார் மார்பும், திருவும், தெரியக் காணக் கடவேன்,
மாணா மரவற் கலையும், மானின் தோலும் அவைநான்
காணாது ஒழிந்தேன் என்றால், நன்று ஆய்த்து அன்றோ கருமம்? –ஸ்ரீ கம்ப ராமாயணம்/அயோத்தியா காண்டம்/4-நகர் நீங்கு படலம்-65-1670

‘பூண் ஆர் அணியும் – அணிதற்குப் பொருந்திய அணிகலன்களும்;
பொன் ஆசனமும்- பொன்மயமான சிங்காதனமும்;
குடையும் -வெண்கொற்றக் குடையும்;
சேண் ஆர்மார்பும் – அகன்று பொருந்திய மார்பும்;
திருவும் – அங்கே வீற்றிருக்கும்திருமகளும்;
தெரியக் காணக் கடவேன் நான் – விளங்கப் பார்த்தற்குக் கடமைப்பட்ட யான்;
மாணா மர வற்கலையும் – மாட்சிமை இல்லாத மரவுரியும்;
மானின் தோலும் – மேனியில் போர்த்துக்கொள்ள மான் தோலும்;
அவை – ஆகிய அவற்றை;
காணாது ஒழிந்தேன் என்றால் – பாராமல் (விண்ணுலகு) சென்றுவிட்டேன் என்றால்;
கருமம் நன்றுஆய்த்து அன்றோ? – என் செயல் நல்லதாக ஆய்விடும் அல்லவா?

————————————————————-

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும்
தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என்
மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில்
இனிதாக இருக்கின்றாயே– 9-8-

பதவுரை

கைகேசீ–கைகேயியே
பொன் பெற்றார் எழில் வேதம் புதல்வனையும்–கல்விச் செல்வத்தைப் பெற்றவர்களான உபாத்தியாயரின்
கீழே யிருந்து அழகிய வேதங்களை ஓதியிருக்கிற மூத்த மகனான இராமனையும்
தம்பியையும்–(அவனது) தம்பியான லக்ஷ்மணனையும்
பூவை போலும்–(பேச்சின் இனிமையிற் கொஞ்சுகிற) கிளி போன்றவளும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல்என் மருகியையும்–மின்னலும் ஈடாகமாட்டாத நுண்ணிய இடையையும்
மென்மையான தன்மைனையு முடையவளுமான என் மருமகளாகிய ஸீதையையும்
வனத்தில் போக்கி –காட்டுக்குப் போகச்செய்து
நின் பற்று ஆம் நின் மகன் மேல் பழி விளைத்திட்டு–உனது அன்புக்கு இடமான உன் மகனான பரதன்
மேற் பழியுண்டாம்படி செய்து (இவ்வளவு செய்துவிட்டு நீ)
என்னையும் நீள் வானில் போக்க–(புத்ர விரஹத்தால்) என்னையும் தூரத்திலுள்ள மேலுலகத்திற்குச் செலுத்துதலினால்
என் பெற்றாய்–நீ என்ன பயனடைந்தாய்!
இரு நிலத்தில்–பெரிய இவ்வுலகத்தில்
இனிது ஆக–சுகமாக
இருக்கின்றாயே–வாழ்கின்றாயே

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும்
தந்யர் என்று எல்லாரும் சொல்லும் படி இருக்கிற உபாயாத்யர்கள் கீழே இருந்து அழகிய சகல வேத சாஸ்திரங்களையும்
ஓதி இருக்கிற ஸ்ரீ பெருமாளையும் -அவரை அல்லாது அறியாத தம்பியாரையும்

பூவை போலும் மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் –
பூவை போலே இருப்பாளுமாய் -மின்னுக்கு ஒப்பான இடையை யுடையாளுமாய் ம்ருது ஸ்வபாவையுமான
என் மருமகளான பிராட்டியையும்

வனத்தில் போக்கி
காட்டிலே போக விட்டு

நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
உன்னை அல்லது வேறு ஒருவரை தாய் என்று இராத ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீ இளைய பெருமாளையும்
வனத்திலே போக விட்டு

என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி!
இச் செயல்கள் எல்லாம் செய்து நீ பெற்ற பிரயோஜனம் என்

இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–
சம்சார ஸூகம் ஆகிறது -புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கை யாய்த்து –
உனக்கு புத்ரரான ஸ்ரீ பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே
போக்குகையாலே சம்சார ஸூகம் அழகியதாக அனுபவிக்கக் கடவை இறே –

————————————-

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின்
வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன்
ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-

பதவுரை

முன் ஒருநாள்–முன்பு ஒரு நாளிலே
மழு ஆளி சிலை வாங்கி–பரசுராமனிடத்திலிருந்து அவன் கை வில்லை வாங்கி
அவன் தவத்தை முற்றும் பெற்றாய்–அவனியற்றிய தபஸ்ஸின் பயனை முழுதும் (அம்புக்கு இலக்காக்கி) அழித்திட்டவனே!
உன்னையும் உன் அருமையையும்–உன்னுடைய மேன்மையையும் (நான் பெருந்தவஞ் செய்து) உன்னை அருமை மகனாகப் பெற்ற தன்மையையும்
உன் மோயின் வருத்தமும்–உனது பெற்ற தாயான கௌசல்யை (உன்னை பிரியில் தரியேன் என்று) உன் பின் தொடர்ந்த வருத்தத்தையும்
ஒன்று ஆக கொள்ளாது–ஒரு பொருளாகக் கொள்ளாமல்
என்னையும்–என்னையும்
என் மெய் உரையும்–எனது ஸத்ய வாக்கையும்
மெய் ஆக கொண்டு–பொருளாகக் கருதி
வனம் புக்க எந்தாய்–காடேறச் சென்ற எமது ஐயனே!
நெடுந்தோள் வேந்தே–பெரிய தோள்களை யுடைய அரசனே!
ஏழ் பிறப்பும்–இனி அனேக ஜன்மங்கள் பிறந்து பிறந்த ஜன்மந்தோறும்
நின்னையே மகன் ஆக பெற பெறுவேன்–நீ எனக்குப் பிள்ளையாய்ப் பிறக்கும்படி பேறு பெறக் கடவேன்.

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி

அவன் தவத்தை முற்றும் செற்றாய்
அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்

உன்னையும் உன் அருமையையும் –
உன் ஸ்லாக்கியதையும்-மஹதாதபசாராம –என்று நான் உன்னைப் பெறப்பட்ட அருமையையும்

உன் நோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
உன்னைப் பிரியில் தரியேன் -என்று பின் தொடர்ந்த ஸ்ரீ கௌசல்யையார் வ்யசநத்தையும் ஒன்றாக கொள்ளாது

என்னையும் என் மெய் உரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய்!
உன்பக்கல் எனக்கு உண்டான பாவ பந்தத்தை மெய்யாக அறியாதே என்னைப் பிதா என்றே நினைத்து
நெடு நாள் சத்யம் சொல்லிப் போந்தவனை நான் தோன்றி அசத்திய பிரதிஜ்ஞன் ஆக்க ஒண்ணாதே
எனக்கு சத்தியத்தை சத்யமாக்க வேணும் என்று நெஞ்சிலே கொண்டு காடு ஏறப் போன என்னாயனே

நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —
அநேக ஜன்மங்கள் பிறந்து – பிறந்த ஜன்மம் தோறும் நீ எனக்குப் பிள்ளையாய்ப் பிறக்கும் படி
பேறு உடையேன் ஆவேன்
நெடும் தோள் வேந்தே
ரஷ்ய வர்க்கத்தின் அளவில்லாத காவல் துடிப்புடைய தோளை உடையவனே –

—————————————————

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

பதவுரை

மனுகுலத்தார் தங்கள் கோவே–மநுகுலத்திற் பிறந்த அரசர்களிற் சிறந்தவனே!
தேன் நகு மா மலர் கூந்தல்–தேனைப் புறப்பட விடுகிற சிறந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய
கௌசலையும்–கௌஸல்யையும்
சுமித்திரையும்–ஸுமித்ரையும்
சிந்தை நோவ–மனம் வருந்த
கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன்சொல் கொண்டு–வக்ரமான வடிவம் போலவே
மனமுங் கோணலாகப் பெற்ற வேலைக்காரியான கூனியினது வார்த்தையைக் கேட்ட
கொடியவளான கைகேயியின் சொல்லை ஏற்றுக்கொண்டு
கானகமே மிக விரும்பி இன்று நீ துறந்த–காட்டையே மிகவும் விரும்பி இப்பொழுது நீ கைவிட்ட
வளம் நகரை–(உன் பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை
நானும் துறந்து–நானும் விட்டிட்டு
வானகமே மிக விரும்பி போகின்றேன்–மேலுலகத்தையே மிகவும் விரும்பி (அவ்விடத்திற்குச்) செல்கின்றேன்.

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ-
தேனைப் புறப்பட்டு விக்கிற மலரோடு கூடின மயிர் முடியை உடைய ஸ்ரீ கௌசலையாரும்-
ஸ்ரீ ஸூமத்ரையாரும் நெஞ்சு நோவ

கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
வடிவிலே வக்ரம் போலே நெஞ்சம் வக்கிரமாய் திண்ணிதான கூனியை யுடைய வார்த்தையைக் கேட்ட
கைகேயியுடைய வார்த்தையிலே அகப்பட்டு

கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து
நான் போகச் சொன்னேன் -என்னுமத்தையே கொண்டு ஒருவர்க்கும் சஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி –
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற ஊரை நீ கை விட்டாய் என்று நானும் ஸ்ரீ திரு அயோதயையைத் துறந்து

நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன்-
நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்

மனு குலத்தார் தங்கள் கோவே! –
மநு குலோத்பவனானவனே-

————————————————————————————

ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய்
வனம் புக்க வதனுக்கு ஆற்றா
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான்
புலம்பிய அப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன்
குடை குலசேகரன் சொல் செய்த
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார்
தீ நெறி கண் செல்லார் தாமே–9-11-

பதவுரை

ஏர் ஆர்ந்த–அழகு நிறைந்த
கரு–கரு நிறமுடைய
நெடுமால்–மஹா விஷ்ணு
இராமன் ஆய்–ஸ்ரீ ராமனாகத் திருவவதரித்து
வனம் புக்க–காட்டுக்குச் சென்றதான
அதனுக்கு–அச் செயலை
ஆற்றா–பொறுக்க மாட்டாமல்
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் புலம்பிய–வெற்றி மாலை பொருந்திய பெரிய மாலை போன்ற
தோள்களை யுடைய தசரத சக்ரவர்த்தி கதறின
அப் புலம்பல் தன்னை–அக் கதறல்களை,
கூர் ஆர்ந்த–கூர்மை மிக்க
வேல் வலவன்–வேற்படையின் தொழிலில் வல்லவரும
கோழியர் கோன்–உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும்
குடை–கொற்றக்குடையை உடையவருமான
குலசேகரன்–குலசேகராழ்வார்
சொல் செய்த–அருளிச் செய்த
சீர் ஆர்ந்த–சிறப்பு மிக்க
தமிழ் மாலை இவை– தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்க வல்லவர்கள்
தீ நெறிக்கண்–கொடிய வழி யொன்றிலும்
செல்லார்–சென்று சேர மாட்டார்கள்.
(தான், தாம்–அசைகள்)

நிகமத்தில் –
ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா-
எல்லா பிரகாரத்தாலும் பூர்ணனாய் -சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் கர்ம வஸ்யரோடே-
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து –
கர்மவஸ்யரும் போகத் தகாத காட்டில் புக்கான் -என்றதுக்கு ஆற்ற மாட்டாதே

தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல் தன்னை
அறுபதினாயிரம் ஆண்டு ராஜ்ஜியம் பண்ணுகையாலே மாலை மாறாத திண்ணியதான மலை போலே
தோளை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி பிரலாபித்த பாசுரத்தை –

கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த-
கூர்மை மிக்க வேலையையும் உடையராய் -ஸ்ரீ உறையூருக்கு நியாமகருமாய் -ஐஸ்வர்ய பிரகாசகமுமான
வெண் கொற்றக் குடையும் உடையருமான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த –

சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி கண் செல்லார் தாமே–
பாட்யேகேயேச மதுரம் -என்று இவை பூரணமான தமிழ் தொடை வல்லவர்கள் –
பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு விஷய பிரவணர் ஆகார்கள் –

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர் ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -8–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

பிரவேசம் –

ஸ்ரீ தேவகியார் இழந்த இழவு மாத்ரமேயோ –
ஸ்ரீ கௌசல்யைத் தான் காணப் பெற்றேனோ -என்று அச்சம காலத்திலே
தாம் இழக்கையாலே -அவள் அனுபவத்தை ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே அனுபவிக்கிறார் –

————

மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–

பதவுரை

மன்னு புகழ்–நிலை நின்ற புகழை யுடைய
கௌசலை தன்–கௌஸல்யையினுடைய்
மணி வயிறு–அழகிய வயிற்றிலே
வாய்த்தவனே–பிள்ளையாகத் திருவவதரித்தவனே!
தென் இலங்கை கோன்–தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய
முடிகள்–பத்துத் தலைகளையும்
சிந்துவித்தாய்–சிதறப் பண்ணினவனே!
செம் பொன் சேர்–செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய்
கன்னி–அழிவில்லாததாய்
நல்–விலக்ஷணமாய்
மா–பெரிதான
மதில்–திருமதிளாலே
புடை சூழ்–நாற் புறமும் சூழப்பட்ட
கணபுரத்து–திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே–நீல ரத்நம் போன்ற எம்பெருமானே!
என்னுடைய இன் அமுதே–எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே!
இராகவனே!–ஸ்ரீராமனே!
தாலேலோ–(உனக்குத்) தாலாட்டு

மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பிள்ளையாகப் பெற்றாள் -என்ற நிலை நின்ற புகழை உடைய –
ஸ்ரீ கௌசலையாருடைய
அழகிய வயிற்றிலே அவளுக்குப் பிள்ளையாகப் பெற்றவனே

தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! –
இத் திரு மொழி இறே ஸ்ரீ ராமாவதாரத்தில் மிகை -ஆகையாலே இச் சந்தை

செம்பொன் சேர் கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
அழிவில்லாத மதிளாலே சூழ்ந்த ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே
எனக்கு திருஷ்டிக்கு நிர்வாஹகனாய் நிற்கிறவனே

என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ—
தேவர்கள் அமிர்தம் போல் அன்றிக்கே எனக்கு அமிர்தமானவனே-
தேவர்களுடைய அமிர்தம் உப்புச் சாறு இறே –
அது அன்று இறே இவருடைய அமிர்தம் இருந்த படி –

——————————————————————————–

புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே!
திண் திற லாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரத்து என் கருமணியே !
எண் திசையும் ஆள் உடையாய்! ராகவனே! தாலேலோ –8-2–

பதவுரை

புண்டரிகம் மலர் அதன் மேல்–(திருநாபியில் அலர்ந்த) தாமரைப் பூவின் மேல் (பிரமனைத் தோற்றுவித்து அவன் முகமாக)
புவனி எல்லாம் படைத்தவனே–உலகங்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தவனே!
திண் திறலாள் தாடகை தன்–த்ருடமான பலத்தை யுடையளான தாடகையினுடைய
உரம் உருவ–மார்வைத் துளைக்கும் படியாக
சிலை வளைத்தாய்–வில்லை வளைத்து அம்புகளை எய்தவனே!
கண்டவர்–ஸேவித்தவர்கள்
தம் மனம் வழங்கும்–தங்கள் மனத்தைத் தாங்களே இசைந்து கொடுப்பதற்குத் தகுந்த
கணபுரத்து என் கருமணியே;
எண் திசையும்–எட்டுத் திக்கிலுள்ளவர்களையும்
ஆள் உடையாய்–அடிமை கொண்டருளுபவனே!
இராகவனே! தாலேலோ–ஸ்ரீராமனே! (உனக்குத்) தாலாட்டு

புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே!
திரு நாபீ கமலத்திலே லோகம் எல்லாம் ஸ்ருஷ்டித்தவனே

திண் திறலாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!
ஸ்ருஷ்டிக்குமது அன்றியே -பயிரைச் செய்து களை பிடுங்குமா போலே
ஆசூர வர்க்கத்தைப் போக்கின படி
திண்ணிய திறலை உடையளான தாடகை உரத்தை மாறுபாடு உருவ வில்லை வளைத்தவனே

கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரத்து என் கருமணியே !
கண்டவர்கள் நெஞ்சுகளை தாங்களும் இசைந்து கொடுக்கும் படி
ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நிற்கிறவனே

எண் திசையும் ஆள் உடையாய்! ராகவனே! தாலேலோ –
அவதாரத்தில் பிற்பாடரான எட்டு திக்கிலும் உள்ளாறும் வந்து வாழும் படி நின்றவனே –

—————————————————————-

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—8-3–

பதவுரை

கொங்குமலி கரு குழலாள்–பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலை யுடையளான
கௌசலை தன்–கௌஸல்யையினுடைய
குலம் மதலாய்– சிறந்த பிள்ளையானவனே!
தங்கு பெருபுகழ் சனகன்–பொருந்திய மஹா கீர்த்தியை யுடைய ஜநக மஹாராஜனுக்கு
திரு மருகா–மாப்பிள்ளை யானவனே!
தாசரதீ–சக்ரவர்த்தி திருமகனே!
கங்கையிலும்–கங்கா நதியிற் காட்டிலும்
மலி தீர்த்தம்–சிறப்பு மிக்க தீர்த்தங்களை யுடைய
கண புரத்து–திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
என் கரு மணியே
எங்கள் குலம்–எங்கள் ராஜ வம்சத்துக் கெல்லாம்
இன் அமுதே–போக்யமான அமுதம் போன்றவனே!
இராகவனே! தாலேலோ

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே

தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா !
புகழ் என்று பிறந்தவை எல்லாம் தங்கும் படி பெரிய புகழை உடைய
ஸ்ரீ ஜனக ராஜனுக்கு மருமகன் ஆனவனே

தாசரதீ !
அவனோடு சத்ர்ச சம்பந்தம் பண்ணலாம் படியான பிறப்பை உடையவனே

கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
காதசித்க சம்பந்தத்தால் வரும் ஸூ த்தி யோகம் இறே கங்கைக்கு உள்ளது
சம்பந்தம் நித்யமாகையாலே அதிலும் ஸூத்தி மிக்கு இருக்கிற ஸ்ரீ திருப் பொய்கையை உடைய
ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே ஸூலபன் ஆனவனே

எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—
ராஜ வம்சத்துக்காக போகய பூதன் ஆனவனே –

————————————————————————————

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

பதவுரை

தாமரை மேல்–(திருநாபிக்) கமலத்திலே
அயன் அவனை படைத்தவனே–பிரமனை உண்டாக்கினவனே!
தயரதன் தன் மாமதலாய்–தசரதனுடைய மூத்த குமாரனே!
மைதிலி தன் மணவாளா–பிராட்டிக்கு வல்லபனே!
வண்டு இனங்கள்–வண்டுகளின் கூட்டங்கள்
காமரங்கள் இசை பாடும்–காமரமென்னும் இசையைப் பாடப் பெற்ற
கண புரத்து–திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
என் கருமணியே
ஏ மருவும் சிலை வலவா–அம்புகள் பொருந்திய (ஸ்ரீசார்ங்கமென்னும்) வில்லை ஆள வல்லவனே
இராகவனே! தாலேலோ

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே!
கீழ்ச் சொன்ன சிருஷ்டி பின்னாட்டின படி

தயரதன் தன் மா முதலாய்!
அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தியினுடைய மலடு தீரப் பிறந்தவனே –

மைதிலி தன் மணவாளா –
பிள்ளை பெற்றத்தின் மேலும் பிறப்பில் வந்த ஏற்றத்துக்கு மேலே —
யச்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ பிராட்டியை
உனக்கு என்று இட்டுப் பிறந்த மேன்மையை உடையவனே

வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
வண்டினங்கள்-காமரம் -என்கிற பண்ணிலே -இசை பாடுகிற ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே

ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ–
ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மீட்டும் ஸ்ரீ சார்ங்கத்தை உன் நினைவிலே வரும் படி செலுத்த வல்லவனே –

——————————————————————————–

பாராளும் படர் செல்வம் பாரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ—– 8-5-

பதவுரை

பார் ஆளும் படர் செல்வம்–பூமி முழுவதையும் ஆட்சி புரிகையாகிற பெரிய ராஜ்ய ஸம்பத்தை
பரதன் நம்பிக்கே–ஸ்ரீ பரதாழ்வானுக்கே
அருளி–நியமித்து விட்டு
ஆரா அன்பு இளையவனோடு–பரிபூர்ணமான பக்திப் பெருங்காதலை யுடைய இளைய பெருமாளுடன் கூட
அரு கானம் அடைந்தவனே–(புகுவதற்கு) அருமையான காட்டைக் குறித்து எழுந்தருளினவனே!
சீர் ஆளும் வரை மார்பா–வீர லெக்ஷ்மிக்கு இருப்பிடமாய் மலை போன்ற திரு மார்பை யுடையவனே!
திருக்கண்ணபுரத்து அரசே-
தார் ஆளும் நீள் முடி–மாலையோடு கூடின சிறந்த திரு முடியை யுடையவனே!
என் தாசரதீ! தாலேலோ

பாராளும் படர் செல்வம் பாரத நம்பிக்கே அருளி
பூமிப் பரப்படைய ஆளக் கடவதான பெரிய சம்பத்தை -பாரதந்த்ர்ய குணங்களாலே
பூர்ணனாய் இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு அருளி

ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
அவனைப் போலவே நியமித்த இடத்திலே பிரிந்து இருக்க மாட்டாதே –
குருஷ்வ மாம் -என்னும் ஸ்ரீ இளைய பெருமாளோடு கூடி
ஒருவராலும் இயங்க ஒண்ணாத துஷ்ட சத்வ பிரசுரமான காட்டிலே பிரவேசித்தவனே

சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
வீர ஸ்ரீ க்கு நிர்வாஹகன் ஆனதுவும்

தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ—–
ஆதி ராஜ்ய ஸூசகமான மாலையோடு கூடின முடியை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனே –

————————————————————————-

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்க்கு அரு மருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ –8-6–

பதவுரை

சுற்றம் எல்லாம் பின் தொடர–எல்லா உறவினரும் பின்னே தொடர்ந்து வர
தொல் கானம் அடைந்தவனே–புராதநமான தண்டகாரண்யத்துக் கெழுந்தருளினவனே!
அற்றவர்கட்கு–உனக்கே அற்றுத் தீர்ந்த பரம பக்தர்களுக்கு
அரு மருந்தே–ஸம்ஸார ரோகத்தைத் (தணிக்க) அருமையான மருந்து போன்றவனே!
அயோத்தி நகர்க்கு அதிபதியே–அயோத்யா நகரத்திற்கு அரசனே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து–ஞானிகள் வாழ்தற்கு இடமான திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே–நீலமணி போலழகிய எம்பெருமானே!
சிற்றவை தன்–சிறிய தாயாராகிய கைகேயியினுடைய
சொல் கொண்ட சீராமா–சொல்லை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமமே!
தாலேலோ –

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!
எல்லாரும் போனார்களோ -சிறிதிடம் போய் மீண்டது என்று அன்றோ சொல்லிற்றாய்த்து –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று சொன்ன எல்லா அடிமையும் செய்யும் ஸ்ரீ இளைய பெருமாள்
கூடப் போகையாலே-எல்லா பந்துக்களும் கூடப் போனார்கள் யாய்த்து இறே -என்று
ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்து அருளினார்

அற்றவர்கட்க்கு அரு மருந்தே! –
கர்ப்ப பூதாஸ்த போதநா –என்று இருக்குமவர்களுக்கு -அரு மருந்தே —
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்-என்று இருக்கும் மருந்து ஆனவனே

அயோத்தி நகர்க்கு அதிபதியே!
ஸ்ரீ பரமபதம் போலே அயோத்யை இறே -இதுக்குப் பெயர் –
அப்படிப் பட்ட படைவீட்டுக்கு அதிபதியானவனே

கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
கற்பது ஒரு தேசத்திலே இருந்து ஒரு காலத்திலேயாய்-பிராப்ய வஸ்துவைக் கிட்டி
அனுபவிப்பது ஒரு தேச விசேஷத்திலேயாகாமே
பிராப்ய வஸ்து தெற்கு திக்கிலே காணலாம் படி ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நின்றவனே

சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ –
பெற்ற தாயான நான் உம்மைப் பிரியில் தரியேன் என்று ஸ்ரீ கௌசலையார் பின் தொடரச் செய்தேயும்
மாற்றுத் தாயான கைகேசி சொல்லு மாறாதே வனத்தே போந்தவனே –

—————————————————————————–

ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே!
ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ— 8-7–

பதவுரை

அன்று–முன்பு மஹாப்ரளயம் வந்த போது
ஆலின் இலை–ஓர் ஆலந்தளிரிலே
பாலகன் ஆய்–குழந்தை வடிவாய்க் கொண்டு
உலகம் உண்டவனே–லோகங்களை யெல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கினவனே!
வாலியை கொன்று–வாலியைக் கொலை செய்து
இளைய வானரத்துக்கு–அவனது தம்பியான ஸுகரீவனுக்கு
அரசு அளித்தவனே–ராஜ்யத்தைக் கொடுத்தவனே!
காலில் மணி–கால்வாய்களிலுள்ள ரத்நங்களை
கரை அலைக்கும்–கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற
கண புரத்து–திருக் கண்ணபுரத்தில் எழுந்தளி யிருக்கிற
என் கருமணியே
ஆலி நகர்க்கு–திருவாலி திருநகரிக்கு
அதிபதியே–தலைவனே!
அயோத்திமனே–அயோத்தி நகர்க்கு அரசனே!
தாலேலோ

ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
லோகத்தை எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ஒரு பாவனான ஆலிலையிலே-அது தான் விஞ்சும் என்னும் படி
கண் வளர்ந்து அருளின அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவனே

வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
வாலி ஆரைத் துணையாக நீ விஜயம் பண்ணின ராவணனை வாலிலே கட்டி வைத்தான்
அவ் வாலியைக் கொன்று அவனுக் கிடைந்து பர்வத குஹைகளிலே கிடக்கிற
ஸ்ரீ மஹா ராஜற்கு வானர ராஜ்யத்தைக் கொடுத்தவனே

காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே!
காற்றாலே உள்ளுக் கிடக்கிற ரத்னங்களை கரையிலே ஏறிடும் என்னுதல்
கால் வாய்களில் மணிகளைக் கொடு வந்து கரையிலே ஏறிடும் என்னுதல்

ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ—
ஸ்ரீ திரு வாலிக்கு நிர்வாஹகன் ஆனவனே –
வாலியைக் கொன்று ஊரில் தன்னைத் துணையாகக் கொள்ளப் பெற்றதே –
(ஒரு வாலியைக் கொன்று ஒரு வாலி தன்னைத் துணையாகக் கொள்ளப் பெற்றதே என்று
சாடூக்தி அருளிச் செய்கிறார் )

————————————————————————–

மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ– 8-8-

பதவுரை

மலை அதனால் அணை கட்டி–மலைகளைக் கொண்டு ஸேது பந்தனம் பண்ணி
மதிள் இலங்கை அழித்தவனே–அரணை யுடைத்தான லங்காபுரியைப் பாழ்படுத்தினவனே
அலை கடலை கடைந்து–அலை யெறிகின்ற திருப்பாற்கடலைக் கடைந்து
அமரர்க்கு–தேவர்களுக்கு
அமுது–அம்ருதத்தை
அருளிச் செய்தவனே–கொடுத்தருளினவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து–ஸகல சாஸ்த்ரங்களையும் அறிந்தவர்கள் வாழ்கிற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே
சிலைவலவா–(ஸ்ரீ சார்ங்கமென்னும்) வில்லைச் செலுத்த வல்லவனே!
சேவகனே–வீரனே!
சீராமா! தாலேலோ

மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
நிலத்திலே வர மலையைக் கொண்டு -அரணான மலையை -அணையாகக் கட்டி
நீர் தானே மிகை என்னும் படியான
அரணையும் உடைத்தான இலங்கையை மூலையடியெ வழி போக்கினவனே

அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே!
அகாதமான சமுத்ரத்தைக் கடைந்து அமிர்தத்தை வாங்கி அசுரர்கள் கையிலே தேவர்கள்
சாவாத படி அவர்களுக்குக் கொடுத்தவனே

கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சகல வித்யா ஸ்தலங்களும் கை வந்து இருக்குமவர்கள் உன்னை அனுபவிக்கும்
ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே

சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ–
ஸ்ரீ சார்ங்கம் கை வைத்து இருக்குமவனே –
அது தான் மிகை என்னும் படியான வீரப் பாட்டை உடையவனே –

—————————————————————————————

தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன் தன் குல முதலாய்!
வளைய வொரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கலரும் கண புரத்து என் கரு மணியே!
இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ– 8-9-

பதவுரை

தளை அவிழும் நறு குஞ்சி-கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர்முடியை யுடையனான
தயரதன் தன்–தசரத சக்ரவாத்தியினுடைய
குலம் மதலாய்–சிறந்த திருக்குமாரனே!
ஒரு சிலை வளைய–ஒப்பற்ற வில்லானது வளைய
அதனால்–அந்த வில்லாலே
மதிள் இலங்கை அழித்தவனே
களை கழுநீர்–களையாகப் பறிக்கப்பட்ட செங்கழுநீர்கள்
மருங்கு அலரும் கணபுரத்து–சுற்றிலும் மலரப் பெற்ற திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
என் கருமணியே
இளையவர்கட்கு–இளையவர்கள் விஷயத்திலே
அருள் உடையாய்–கருணை பொருந்தியவனே!
இராகவனே! தாலேலோ

தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன் தன் குல முதலாய்!
கட்டவிழும்படியான நறு நாற்றத்தை உடைய மயிர் முடியை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி குலத்துக்கு
உத்தாரகன் ஆனவனே

வளைய வொரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவனே!
ப்ரஹ்மாஸ்த்ராதிகள் வாய் மடியுமூரை மனுஷ்யத்வத்துக்கு ஏகாந்தமான வில்லாலே
அவனுடைய ஊரை அழியச் செய்தவனே

களை கழுநீர் மருங்கலரும் கண புரத்து என் கரு மணியே!
களையாகப் பறித்து கரையிலே பொகட்ட செங்கழு நீர்கள் பொகட்ட இடங்களிலே கிடந்தது தன்னிலத்திலே
அலருமா போலே செவ்வி பெற்று அலரும் ஸ்ரீ திருக்கண்ண புரம்

இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ–
தம்பிமார்க்கு உறுப்பாகாத போது-என் பிராண்ன்களும் எனக்கு வேண்டா என்னுமவர் இறே-

——————————————————————————-

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ— 8-10-

பதவுரை

தேவரையும்–தேவர்களையும்
அசுரரையும்–அஸுரர்களையும்
திசைகளையும்–திக்குக்களையும் (அதாவது எல்லா ப்ரதேசங்களையும்)
படைத்தவனே–ஸ்ருஷ்டித்தவனே
யாவரும் வந்து அடி வணங்க–ஸகல சேதநரும் வந்து திருவடிகளில் ஸேவிக்கும்படியாக
அரங்கம் நகர்–ஸ்ரீரங்கத்திலே
துயின்றவனே–பள்ளி கொண்டிருப்பவனே!
காவிரி நல் நதி–காவேரி யென்கிற சிறந்த நதி யானது
பாயும்–ப்ரவஹிக்கப் பெற்ற
கண புரத்து–திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளி யிருக்கிற
என் கரு மணியே
ஏ வரி வெம் சிலை வலவா–அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (ச் சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆள வல்லவனே
இராகவனே! தாலேலோ

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
சஹஜ சத்ருக்களான-தேவாஸூரர் முதலான பதார்த்தங்களையும் –
இவர்களுக்கு அவகாச பிரகாசம் பண்ணும் தேசங்களையும் ஸ்ருஷ்டித்தவனே

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
ஸ்ருஷ்டி பிரயோஜனம் எல்லாம் தன்னை ஆஸ்ரயிக்கை இறே –
இதுக்காக ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளினவனே

காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஒருவர் ஏற்றிப் பாய்ச்ச வேண்டாத படி தானே வந்து எங்கும் பரக்கும் காவேரியை யுடைய
ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே ஸூலபன் ஆனவனே

ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ—
ஏவிலே மூட்டக் கடவதாய் தர்ச நீயமாய் பிடித்த பிடியிலே சத்ருக்கள் மண் உண்ணும் படியான
ஸ்ரீ சார்ங்கத்தை உன் கருத்திலே நடத்த வல்லவனே –

————————————————————-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே— 8-11-

பதவுரை

என் காகுத்தன் தன் அடி மேல்–என் ஸ்வாமியான இராமபிரான் விஷயமாக
தாலேலோ என்று உரைத்த–(கௌஸல்யை) தாலாட்டிச் சொன்ன பாசுரங்களை (உட்கொண்டு)
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன்–கொலைத் தொழில் புரிகின்ற வேலாயுதத்தைச் செலுத்த
வல்லவரும் குடையை யுடையவருமான குலசேகராழ்வார்
கன்னி நல் மா மதிள் புடை சூழ் கண புரத்து–சாச்வதமான சிறந்த அழகிய மதிள்கள் நாற்புறமும் சூழப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே
சொன்ன–அருளிச் செய்த
பன்னிய நூல் தமிழ் மாலை பத்தும்–பரம்பியதாய் ஸலக்ஷணமாய்த் தமிழ்ப் பாமாலை ஆகிய இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–அதிகரிக்க வல்லவர்கள்
பாங்கு ஆய பத்தர்கள்==அமைந்த பக்திமான்களாகப் பெறுவர்

நிகமத்தில் –
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
அழியாத பெரு மதிள் சூழ்ந்த ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே நின்று அருளின
ஸ்ரீ கிருஷ்ணனை அன்றியிலே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை யாய்த்து கவி பாடிற்று –

தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய பால்ய அவஸ்தையில் ஸ்ரீ கௌசல்யார் சொன்ன பாசுரத்தை
ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே சொன்ன தமிழ் தொடை

கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
வேலைப் பிடித்த பிடியிலே எல்லாரும் -வேலின் கொடுமையே -என்று சொல்லா நின்ற வேலையும்
ஐஸ்வர்ய பிரகாசகமான வெண் கொற்றக் கொடையையும் உடைய ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த

பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே—
பரம்பி -லஷணத்தால் குறைவற்ற இப்பத்தும் வல்லார்கள்
ஸ்ரீ திருத் தாயாராயும் அடியாராயும் அனுபவிக்கப் பெறுவார்கள் –

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -7–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

பிரவேசம் –

ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திருவடியைக் கண்டவாறே -பிரணய ரோஷம் தலையெடுத்து —
பிதுர் வசன பரிபாலனம் பண்ணப் போந்தார் என்று இறே
ஸ்ரீ பெருமாள் உங்கள் கோஷ்டியில் பிரசித்தராய் இருப்பது –
இப்பது அங்கன் அன்று காண்-
தம்மை விச்வசித்துக் கை கொடுத்த என்னை கை விடுகைக்காக காண் —
ரஷிதா ஜீவ லோகஸ்ய -என்கிறதையும் விட்டார் இறே என்று கிலாய்த்தால் போலே
கிலாய்த்தார் இவரும் கீழில் திரு மொழியில் –

சர்வாத்மாக்களுக்கும் ஸ்ரீ பிராட்டிமாரோபாதி பிராப்தி உண்டு என்னும் படி
ஸ்ரீ பகவத் விஷயத்தில் அவஹாகித்தவர் ஆகையால் இவர் கிலாய்த்தார் –
இப்படி கிலாய்த்தத்தைக்கு பிராப்தி உண்டாய் இருக்கிற விஷயத்தை அநாதி காலம் இழந்தோம்
என்கிற இழவு வந்து தலை எடுத்து
முன்பு ஸ்ரீ கிருஷ்ணனைப் பெற்று வைத்து பால்ய அவஸ்தையிலே அவன் செயல்களை அனுபவிக்கப் பெறாதே இழந்திருந்து –
கம்ச வத பர்யந்தமாக முன்புள்ள விரோதிகளை எல்லாம் போக்கி தங்கள் முகத்தில் விழித்த ஸ்ரீ கிருஷ்ணனைக் கண்ட போது
கீழ் அனுபவிக்கப் பெறாத இழவுகளைச் சொல்லிக் கூப்பிட்ட ஸ்ரீ தேவகியார் பாசுரத்தாலே
அநாதி காலம் தாம் இழந்த இழவுகளைச் சொல்லுகிறார் -இத் திரு மொழியிலே –

——————–

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ
வேழ போதக மன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ
என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய
தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத
தாயிற் கடை யாயின தாயே –7-1-

பதவுரை

ஆலை நீள் கரும்பு அன்னவன்–ஆலையிலிட்டு ஆடத் தகுந்த நீண்ட கரும்பு போன்ற கண்ணனே!
தாலோ –(உனக்குத்) தாலாட்டு
அம்புயம் தட கண்ணினன்–தாமரை போன்று விசாலமான திருக் கண்களை உடையவனே!
தாலோ – தாலேலோ;-
வேலை நீர் நிறத்து அன்னவன்–கடலின் நிறம் போன்ற நிறத்தை யுடையவனே!.
தாலோ -தாலேலோ
வேழம் போதகம் அன்னவள்–யானைக் குட்டி போன்றவனே!
தாலோ–தாலேலோ;
ஏலம் வார் குழல்–பரிமளம் மிக்கு நீண்ட திருக் குழலை யுடைய!
என் மகன்–என் மகனே!
தாலோ -தாலேலோ;
என்று என்று–இப்படி பலகாலுஞ்சொல்லி
என் வாயிடை நிறைய–என் வாய் திருப்தி யடையும்படி
உன்னை தால் ஒலித்திடும் திருவினை இல்லா தாயரில்–உன்னை தாலாட்டுகையாகிற ஸம்பத்து இல்லாத தாய்மார்களில்
கடை ஆயின தாய்–கடையான தாயாயிரா நின்றேன் நான் (என்கிறாள் தேவகி.)

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
சமைய வளர்ந்த ஆலைக் கரும்பு போலே ரசேந்த்ரியத்துக்கு இனியனானவனே

அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
விகாசம் செவ்வி குளிர்த்தி மென்மை யுடைய தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களைக் கொண்டு
என்னை குளிர நோக்குகிறவனே-என்று
சஷூர் இந்த்ரியத்துக்கு இனிதாய் இருக்கிற படி சொல்லுகிறார்

வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ
அவயவங்களை பிரித்துச் சொல்ல வேணுமோ –
அவயவியான மேனி ஸ்ரமஹரமான கடல் போலே இருக்கிறவனே –

வேழ போதக மன்னவன் தாலோ
ஆனைக் கன்று போலே வைத்த கண் வாங்காதே பார்த்த படியே இருக்கும் படியான சரிதங்களை உடையவனே –

ஏலவார் குழல் என் மகன் தாலோ
இப்படி உபமானங்களால் சொல்ல ஒண்ணாமையாலே –
என் மகன் -என்னும் அத்தனை அல்லது

என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத
இப்படி பல காலும் சொல்லி வாயாரத் தாலாட்டும் சம்பத்து இல்லாத –

தாயிற் கடை யாயின தாயே –
பெறுகைக்கு நோன்பு நோற்று பெற்று வைத்து அனுபவத்தில் குறைய நிற்கையாலே
பிள்ளைகளைப் பெற்று அனுபவிக்கும் தாய் மார் எல்லாரிலும் கடையானேன் இறே நான் –

———————————————————————

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும்
அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
கேசவா ! கெடுவேன் கெடுவேனே– 7-2-

பதவுரை

வடி கொள்–கூர்மையை யுடைத்தாய்
அஞ்சனம் எழுது–மையிடப் பெற்றதாய்
செம் மலர்–செந்தாமரை மலரை ஒத்ததான
கண்–கண்களாலே
மேல் ஒன்றினை–மேற்கட்டியிலே தொங்க விட்டிருக்கும் கிளி முதலியவற்றில் ஒரு வஸ்துவை
இனிது–இனிதாக
மருவி நோக்கி–பொருந்தப் பார்த்துக் கொண்டும்
கரு தாள்–கறுத்த புறந்தாளை யுடையதும்
மலர்–செந்தாமரை மலரை யொத்து
சிறு–சிறுத்த
சே அடி–சிவந்த அகவாயை உடையதுமான திருவடிகளை
முடக்கி–முடக்கிக் கொண்டும்
நீர் பொலியும்–(கழுத்தளவும் பருகின) நீர் விளங்கப் பெற்ற
முகில் குழவி போல–மேகக் குட்டிப் போல,
செம்சிறு விரல் அனைத்தும்–அழகிய சிறுத்த திரு விரல்களெல்லாவற்றையும்
அம் கையோடு–உள்ளங்கையிலே
அடக்கி ஆர–அடங்கும் படி
அணைந்து–முடக்கிப் பிடித்துக் கொண்டும்
ஆனையின் கிடந்த கிடக்கை–ஆனை கிடக்குமா போலே பள்ளி கொண்டருளுமழகை.
கண்டிட பெற்றிலேன்–கண்டு அநுபவிக்கப் பெறாத பாவியானேன்;
அந்தோ–ஐயோ!
கேசவா–கண்ண பிரானே!
கெடுவேன் கெடுவேன்–ஒன்று மநுபவிக்கப்பெறாத பெரும் பாவியானேன்.

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
கூர்மையை உடைய செம்மலர்க் கண் என்னுதல்-
திருக் கண்ணுக்கு ஈடாக வடிக்கப்பட்ட அஞ்சனத்தை உடைய கண்ணன் -என்னுதல்
செம்மலர் -சிவந்த தாமரை போலே இருந்துள்ள

மேல் இனிது ஒன்றினை நோக்கி
பிள்ளையைத் தொட்டிலே வளர்த்தி -அநந்ய பரனாய் பார்த்து கிடக்கைக்காக
மேலே ஒன்றைத் தூக்கி வைப்பார்கள் இறே –
அத்தை இனியனாய்க் கொண்டு சதா தர்சனம் பண்ணிக் கிடக்கும் இறே

முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
அங்குக் கிடக்கும் படி சொல்லுகிறது மேல் –
புறவாய் கறுத்து-அகவாய் சிவந்த திருவடிகளை முடக்கி –

பொலியும் நீர் முகில் குழவியே போலே
கழுத்தே கட்டளையாக நீரைப் பருகிற்று ஒரு மேகக் கன்று போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும் அம் கை யோடு அணைந்து –
செறிந்து அழகிதான திரு விறர்களை உள்ளங்கையிலே அடக்கும் படி மடித்துப் பிடித்து

ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
ஆனை தன அவயவங்களை பொகட்டுக் கொண்டு ஸ்வைரகமாக கிடந்தால் போலே
தொட்டிலிலே கிடக்கும் போது அனுபவிக்கப் பெற்றிலேன் என்று ஐயோ -என்கிறாள்

கேசவா ! கெடுவேன் கெடுவேனே–
அப்போதைத் திருக் குழல் அழகை அனுபவிக்கவும் பெற்றிலேன்
முன்பு மலடு நின்று இழந்தேன்
பின்பு பெற்று வைத்தே அனுபவிக்கப் பெறாது ஒழிந்தேன்
இரண்டாலும் மஹா பாபி இறே நான் –

———————————————————————

முந்தை நன் முறை அன்புடை மகளிர்
முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
எந்தையே ! என் தன் குல பெரும் சுடரே !
எழு முகில் கணத்து எழில் கவரேறே!
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ்
விரலினும் கடை கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா
நாங்கள் கோன் வாசுதேவன் பெற்றிலனே– 7-3-

பதவுரை

அன்பு உடை–ப்ரீதியை யுடையவர்களான
முந்தை நல் முறை மகளிர்–பரம்பரையாக வருகிற நல்ல உறவு முறையை யுடைய பெண்கள்
தம் தம் குறங்கிடை–தங்கள் தங்கள் துடைகளிலே
முறை முறை–க்ரமம் க்ரமமாக
இருத்தி–வைத்துக் கொண்டு
எந்தையே–“என் அப்பனே!
என் தன் குலம் பெருசுடரே–எங்கள் குலத்துக்குப் பெருத்ததொரு விளக்கானவனே!
எழு முகில் கணத்து–(கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய
எழில் கவர்–அழகைக் கவர்ந்து கொண்ட
ஏறே–“ காளை போன்றவனே!”
(என்றிப்படி பலவாறாகத் துதித்து)
உந்தையாவன் என்று உரைப்ப–உன் தகப்பனார் யார்? (காட்டு,) என்றவளவிலே
நின்–உன்னுடைய
செம் கேழ் விரலினும்–சிவந்து சிறந்த விரலினாலும்
கடை கண்ணினும்–கடைக் கண்ணாலும்
காட்ட–(இன்னார் என் தகப்பனார் என்று) காட்ட
(அந்தப் பாக்கியத்தை)
நந்தன் பெற்றனன்–நந்தகோபர் பெற்றார்;
நல் வினை இல்லா நங்கள் கோன்–பாக்யஹீநையான என்னுடைய பர்த்தாவான
வசுதேவன்–வஸுதேவர்
பெற்றிலன்–(நந்தகோபர் பெற்ற பாக்கியத்தைப்) பெறவில்லை.

முந்தை நன் முறை அன்புடை மகளிர்
தாய்மார் -அவர்களுடைய தாய்மார் -பாட்டிமார் எல்லாரும்

முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
அவ்வோ அடைவுகளிலே குறங்குகளிலே வைத்துக் கொண்டு

எந்தையே ! என் தன் குல பெரும் சுடரே ! எழு முகில் கணத்து எழில் கவரேறே!
என் தன தமப்பனே -எங்கள் குலத்துக்கு விளக்கானவனே
ஏழு வகைப் பட்ட மேக சமூஹங்களினுடைய அழகைக் கவர்ந்த சிம்ஹம் போலே இருக்கிறவனே

உந்தை யாவன் என்று உரைப்ப
இப்படி ஸ்தோத்ரங்களைப் பண்ணி உங்கள் தமப்பனார் ஆர் என்று கேட்க

நின் செங்கேழ் விரலினும் கடை கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன்
சிவந்த விரலாலும் கண்ணாலும் காட்ட ஸ்ரீ நந்த கோபர் பெற்றார்

நல்வினை இல்லா நாங்கள் கோன் வாசுதேவன் பெற்றிலனே–
பாஹ்ய ஹீனையான என்னை கைப்பிடிக்கையாலே ஸ்ரீ ஸ்ரீ வஸூ தேவரும் இழந்தாரே –

—————————————————————————

களி நிலா எழில் மதி புரைமுகமும்
கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும்
தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால்
பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த
பாவியேன் எனது ஆவி நில்லாதே– 7-4-

பதவுரை

கண்ணனே களி நிலா–ஸ்ரீ கிருஷ்ணனே! ஆநந்தத்தை விளைவிக்கும் நிலாவை யுடைய
எழில் மதி புரை முகமும் திண் கை–பூர்ண சந்திரனை ஒத்த திருமுகமும் திண்ணிதான திருக் கைகளும்
மார்வும்–திரு மார்பும்
திண் தோளும்–வலிமை பொருந்திய திருத் தோள்களும்
தளிர் மலர் கரு குழல்–தளிரையும் மலரையும் முடைத்தாய்க் கறுத்த திருக் குழற்கற்றையும்
பிறை அதுவும் தடங்கொள்–அஷ்டமீ சந்திரன் போன்ற திருநெற்றியும் விசாலமான
தாமரை கண்களும்–தாமரை போன்ற திருக் கண்களும் (ஆகிய இவை)
பொலிந்த இளமை இன்பத்தை–அழகு பெற்று விளங்கும்படியான யௌவநாவஸ்தையின் போக்யதையை
இன்று–இப்போது
என் தன் கண்ணால்–என்னுடைய கண்ணாலே
பருகுவேற்கு–நான் அநுபவியா நின்றாலும்
இவள் தாய் என நினைந்த–(இவள் என்னுடைய) தாய் என்று நினைப்பதற்குத் தகுதியான
பிள்ளைமை–சைசவப் பருவத்திலுண்டான
அளவு இல் இன்பத்தை–அளவில்லாத ஆநந்தத்தை
இழந்த–அநுபவிக்கப் பெறாமல் இழந்த
பாவியேன் எனது–பாவியான என்னுடைய
ஆவி நில்லாது–உயிரானது தரித்து நிற்க வழி யில்லையே!.

களி நிலா எழில் மதி புரைமுகமும்
செறிந்த நிலாவை வுடைய பூர்ண சந்தரனைப் போலே இருக்கிற திரு முகமும்

கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
ஸ்ரீ கிருஷ்ணனே -சொல்லுகிற -விலஷணமான திண்ணிதாய் இருக்கிற
திருக்கையும் திரு மார்வும் திருத் தோளும்

தளி மலர் கரும் குழல் பிறை யதுவும்
தளிரையும் மலரையும் உடைத்தாய் இருண்டு இருக்கிற திருக் குழலின் கீழே
உன்நேயமான பிறை போலே விளங்குகிற திரு நெற்றியும்

தடம் கொள் தாமரை கண்களும்-
ஒரு தாமரைப் பூவே தடாகம் எல்லாம் விழுங்கும் படி அலர்ந்தாப் போலே
திரு மேனி எல்லாம் பரப்பு மாறும் படி அலர்ந்த திருக் கண்களும்

பொலிந்த இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால் பருகுவேற்க்கு –
இவ்வவயவ சோபைகளால் விளங்கா நின்றுள்ள யௌவன அவஸ்தையில் அழகை
என் கண்ணாலே அனுபவிக்கிற எனக்கு

இவள் தாய் என நினைந்த அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் –
தாய் ஒருத்தியையும் அல்லது வேறு ஒருத்தியையும் அறியாத அதி சைசவமாய் இருக்கிற
பருவத்தை அனுபவிக்கப் பெறாமையாலே
இப்போது கிட்டி அனுபவிக்கச் செய்தேயும் இழவே தலை எடுக்கும் படியான
மஹா பாபத்தைப் பண்ணினேன்

எனது ஆவி நில்லாதே–
என் பிராணன் தரிக்கிறது இல்லை –

———————————————————————–

மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர
மணி வாய் இடை முத்தம்
தருதலும் உன் தன் தாதையை போலும்
வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து
வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –7-5-

பதவுரை

நின் திரு நெற்றியில் மருவும் சுட்டி அசை தர–உன்னுடைய திரு நெற்றியிலே பொருந்தியிருக்கிற சுட்டியானது அசையும்படி
மணிவாயிடை முத்தம் தருதலும் உன்தன் தாதையை போலும்–அழகிய வாயிலுண்டான
முத்தத்தை கொடுப்ப தென்ன உன்னுடைய தகப்பானரைப் போன்ற
வடிவு–(உன்) வடிவழகை
கண்டு கொண்டு–(நான்) பார்த்து
உள்ளம் டீள் குளிர–(கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய
செம் சிறு வாயிடை–சிவந்த சிறிய திருவாயிலே
விரலை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும்–விரல்களை வைத்துக் கொண்டு (நீ) சீற்றத்தோடே
சொல்லுகிற மழலைச் சொற்க ளென்ன (ஆகிய இவற்றிலே)
ஒன்றும் திரு இலேன் பெற்றிலேன் –ஒன்றையும் பாக்யமற்றவளான நான் அநுபவிக்கப்பெறவில்லை.
தெய்வ நங்கை எசோதை–‘தெய்வமாது’ என்று சொல்ல லாம்படியான யசோதைப் பிராட்டி
எல்லாம் பெற்றாளே–அந்த பால்யசேஷ்டிதங்கள் எல்லாவற்றையும் அநுபவிக்கப் பெற்றாளே!.

மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர
திரு நெற்றியிலே கூடப் பிறந்தால் போலே இருக்கும் திருச் சுட்டியானது அசையும் படி

மணி வாய் இடை முத்தம்-தருதலும் உன் தன் தாதையை போலும்
அழகிய வாயில் முத்தம் -அதர முத்தம் கொடுத்தாலும் உன் தமப்பனைப் போலே

வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
வடிவு அழகைக் கண்டு நெஞ்சமானது குளிர

விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
சிவந்து குவிந்து இருந்துள்ள திருப் பவளத்திலே திரு விரலைச் சேர்த்துச் சீற்றத்தோடு நின்று
சொல்லுகிற மழலைச் சொல்களும்

திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –
பால்ய அவஸ்தையிலே அனுபவங்களை அனுபவிக்க பாஹ்ய ஹீனையான நான் இழந்தேன்
இழக்கைக்கு நான் ஒருத்தி உண்டானாப் போலே
அனுபவிக்கைக்கு இட்டுப் பிறந்த ஸ்ரீ யசோதைப் பிராட்டி எல்லாம் பெற்றாள் இறே –

———————————————————————————-

தண் தாமரை கண்ணனே! கண்ணா !
தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன்
மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும்
வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன்
என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6-

பதவுரை

தண் அம் தாமரை கண்ணனனே–குளிர்ந்த அழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனே
கண்ணா தவழ்ந்து எழுந்து–கண்ணபிரானே (நீ) தவழ்ந்து கொண்டுஎழுந்திருந்து
தளர்ந்தது ஓர் நடையால்–தட்டுத்தடுமாறி நடப்பதாகிற ஒரு நடையினால்
செம்மண் பொடியில்–சிவந்த புழதி மண்ணிலே
ஆடி வந்து–விளையாடி (அக்கோலத்தோடே) வந்து
என் தன் மார்வில்–என்னுடைய மார்விலே
மன்னிட பெற்றிலேன் அந்தோ–நீ அணையும் படியான பாக்கியத்தை பெற்றிலேன்; இஃது என்ன தெளர்ப்பாக்கியம்!
வண்ணம் செம்–அழகு பெற்றுச் சிவந்து
சிறு–சிறிதான
கை விரல் அனைத்தும்–கைவிரல்களெல்லா வற்றாலும்
வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சல் உண்ணப் பெற்றிலேன்–வாரிக் கொண்டு அமுது செய்த ப்ரஸாதத்தினுடைய
சேஷத்தை (நான்) உண்ணப் பெறவில்லை;
கொடுவினையேன்–(இவற்றை யெல்லாம் நான் இழக்கும் படியாக) மஹா பாபத்தைப் பண்ணினேன்;
ஓ எம்மோய் என்னை என் செய்ய பெற்றது–ஐயோ! என் தாயானவள் என்னை எதுக்காக பெற்றாளோ!

தண் தாமரை கண்ணனே! கண்ணா !
குளிர்ந்து அழகிதான தாமரைப் பூப் போலே அலர்ந்த திருக்கண்களை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே

தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
தவழ்ந்து எழுந்து இருந்து நடக்கப் புகுவது தள்ளம்பாறுவதான தளர் நடையாலே

மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
நிலப் பண்பாலே சிவந்த புழுதியை யாடி வந்து அக்கோலத்தோடே என் மார்விலே வந்து
கட்டிக் கொண்டு கிடக்கப் பெற்றிலேன் –

வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன் ஓ! கொடு வினையேன்
அழகியதாய் சிவந்த திரு மார்வில் அணைத்தாலும்-வாரி அமுது செய்து சேஷத்தை உண்ணப் பெறாத
மஹா பாபத்தைப் பண்ணினேன்

என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –
ராஜ மஹிஷியாய்-பிள்ளைகள் அலைந்த எச்சில் உண்ணாமைக்கோ-எங்கள் தாயார் என்னைப் பெற்றது –
அமுதிலும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ் –
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்றவர் தம் சொற் கேட்டல் இன்பம் செவிக்கு –

—————————————————————–

குழகனே !என் தன் கோமள பிள்ளாய்
கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி
ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல்
ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா
மழலை மென் நகை இடை இடை அருளா
வாயிலே முலை இருக்க வென் முகத்தே
எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம்
தன்னையும் இழந்தேன் இழந்தேனே– 7-7-

பதவுரை

குழகனே–எல்லாரோடும் கலக்கும் ஸ்வபாவமுடையவனே!
என் தன் கோமளம் பிள்ளாய்–என் வயிற்றிற் பிறந்த அழகிய குமாரனே!
கோவிந்தா–கோவிந்தனே!
என் குடங்கை யில் மன்னி ஓழுகு பேர்–என்னுடைய குடங்கையிலே பொருந்தியிருந்து வெள்ளமிடாநின்ற மிக்க
எழில் இள சிறு தளிர் போல்–அழகை யுடைத்தாயும் மிகவும் இளைசான தளிர் போன்றதுமான
ஒரு கையால் ஒரு முலை முகம்–ஒரு திருக் கையாலே (என்னுடைய) ஒரு முலைக் காம்பை
நெருடா–நெருடிக் கொண்டு
முலை வாயிலே இருக்க–மற்றொரு முலையானது (உன்) வாயில் இருக்க
இடை இடை–நடு நடுவே
என் முகத்தை மழலை மெல் நகை அருளா–என் முகத்தை நோக்கி புன் சிரிப்பைச் செய்து கொண்டு
எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம் தன்னையும்–அழகிய உன் இரண்டு கண்களாலும் பார்க்கிற பார்வையையும்
இழந்தேன் இழந்தேன்–ஐயோ! இழந்தேனே!

குழகனே !என் தன் கோமள பிள்ளாய்
லோக யாத்ரையிலே -அந்ய பரையாய்-தனக்கு முகம் கொடுத்து இருந்தால் –
லோக யாத்ரையைக் கை விட்டு உன்னையே
பார்க்க வல்லேனாம் படி கலைக்க வல்லை யாய்த்து -காணப் பெறாத சௌகுமார்யத்தை உடையவனே –

கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி
கோ ஸம்ர்த்தியை உடையவனே -என் கையிலே இருந்து –

ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா
அழகு வெள்ளம் பரந்து ஒடும்படியான தளிர் போலே இருக்கிற ஒரு திருக்கையாலே
இவள் இரங்கி முலை கொடுக்கும் படி

ஒரு முலைக் கண்ணை நெருடிக் கொண்டு மழலை மென் நகை இடை இடை அருளா வாயிலே முலை இருக்க வென் முகத்தே
வாயிலே முலை இருக்கச் செய்தே முலை சுரக்கும் படியாக தன் முகத்திலே
இடை இடையே மழலைச் சிரிப்பாக சிரியா

எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே–
அதுக்கும் இரங்காரும் இரங்கும்படி அழகிய திருக் கண்களாலே பார்க்கிற பார்வையும் –
பெற்ற வன்றே போக விட்டதுக்கு மேலே
இவ் வவஸ்தையிலே சேஷ்டிதங்களையும் அனுபவிக்கப் பெற்றிலேன் –

——————————————————–

அவதாரிகை –

எட்டாம் பாட்டு -நான் இழந்த இழவு எல்லாம் ஸ்ரீ யசோதை பிராட்டி பெற்றாள் என்கிறாள் –

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-

பதவுரை

வெண்ணெய் முழுதும் அளைந்து–வெண்ணெய் குடத்திலுள்ளவளவும கையை விட்டு (அளைந்து)
தொட்டு உண்ணும்–எடுத்து உண்கிற
இள முகிழ் தாமரை சிறுகையும்–இளந்தளிரையும் தாமரையையும் போன்ற சிறிய திருக் கைகளும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு–அழகிய தாம்பாலே அடிக்க (அதற்கு)
எள்கு நிலையும்–அஞ்சி நிற்கும் நிலையும்
வெண் தயிர் தோய்ந்த செம் வாயும்–வெளுத்த தயிர் பூசிய சிவந்த வாயும்,
அழுகையும்–அழுவதும்,
அஞ்சி நோக்கும் அ நோக்கும்–பயந்து பார்க்கிற அப்பார்வையும்
அணி கொள் செம் சிறு வாய் நெளிப்பதுவும்–அழகிய சிவந்த சிறிய வாய் துடிப்பதும்
தொழுகையும்–அஞ்ஜலி பண்ணுகையும் (ஆகிற
இவை–இவற்றையெல்லாம்
கண்ட–நேரில் கண்ணாற்கண்டு அநுபவித்த
அசோதை–யசோதை யானவள்
தொல்லை இன்பத்து–பரமானந்தத்தினுடைய
இறுதி–எல்லையை
கண்டாள்-காணப் பெற்றாள்

முழுதும் வெண்ணெய் அளைந்து –
வெண்ணெயில் உண்டான ஆதராதிசயத்தாலே திருக் கண்களை வெண்ணெய் குடத்திலே
இட்டு அளையுமாய்த்து-

தொட்டு உண்ணும்
அதி சாபலத்தாலே -மாளும் -என்று -விரலோடு வாய் தோய்ந்த -என்றும் சொல்லுமா போலே
தொட்டு உண்ணுமாய்த்து

முகிழ் இளம் சிறு தாமரை கையும்
இளம் தளிர் போலேயும் நிறத்துக்கு -விகாசம் -செவ்விக்கு தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கைகளும் –

எழில் கொள் தாம்பு
ஸ்பர்சிக்கைக்கு ஆசைப்பட்டு இருக்கும் திருமேனியை ஸ்பர்சித்தது இறே என்று –
எழில் கொள் தாம்பு -என்கிறார் –
ராஜ ஜன்மம் வேண்டா –அசேதனமாகவே அமையும் அங்குத்தை ஸ்பர்சம் பெறில்-என்று இருக்குமவர் இறே

கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் –
இவர் அங்குத்தை ஸ்பர்சத்தை நினைத்து -எழில் கொள் தாம்பு -என்கிறார் –
ஆகிலும் கைக்கு எட்டிற்று ஒன்றை இட்டு அவள் -அடிக்க அதுக்கு ஈடுபட்டு பையாந்து நிற்கும் நிலையும்

வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
தயிர் களவு கண்டாய் -என்று அடிக்கப் புக்கவாறே -இல்லை செய்கைக்காக முகத்திலே பூசிக் கொள்ளுமே –
வெளுத்த தயிரும் சிவந்த திருப் பவளமுமான பரபாகம் இருக்கிற படி –

அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
இல்லை -என்று இருக்கச் செய்தே களவை நாடுவதே நம் அழுகையும்
அழப் புக்கவாறே -வாய் வாய் -என்னும் இறே –
அத்தாலே பயப்பட்டு அச்சம் எல்லாம் தன்னோக்கிலே தோற்றும்படி பார்த்து கொடு நிற்கும் நிலையும்

அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
பின்னையும் அழாது இருக்கவும் மாட்டான் -அழவும் மாட்டான் —
அழகிய திருப் பவளத்தை நெளிக்கும் இத்தனை இறே

தொழுகையும் இவை கண்ட வசோதை
போக்கற்றார் செய்யும் செயல் இறே தொழுகையும் –
சாபராதாரானருக்கு அபராதம் பொறுக்குமது அஞ்சலி என்னும் இடம் தான் அறிந்து இருக்குமது
யாகையாலே அஞ்சலியைப் பண்ணுமதாய்த்து

இவை கண்ட யசோதை –
இவற்றை இங்கே சாஷாத் கரிக்க கண்ட ஸ்ரீ யசோதைப் பிராட்டி

தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே–
ஸ்ரீ பரம பதத்தில் நிரவதியான அனுபவத்தை சாவதி யாக்கினவாறே –
அங்கே சென்று எல்லாரும் தொழ இருக்குமவன் தான்
தொழுகையாலே அபரிச்சின்னமான அனுபவம் பரிச்சின்னமாய்த்து இறே –

———————————————————————————-

குன்றினால் குடை கவித்ததும் கோல
குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விள வெறிந்ததும் காலால்
காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என் உள்ளம் குளிர
ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி வுண்டேனில் அருளே— 7-9–

பதவுரை

குன்றினால் குடை கவித்ததும்–கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி நின்றதும்
கோலம் குரவை கோத்ததும்–அழகாக ராஸ க்ரீடை செய்ததும்
குடம் ஆட்டும்–குடக் கூத்தாடினதும்
கன்றினால் விள எறிந்ததும்–கன்றாய் வந்த ஒரு அசுரனைக் கொண்டு (அஸுராவேசமுடைய) விளங்காய்களை உதிர்த்ததும்
காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா–திருவடிகளாலே காளிய நாகத்தின் தலையை மர்த்தித்ததும் (ஆகிய இவை) முதலாகவுள்ள
வென்றி சேர்–வெற்றி பொருந்திய
நல் பிள்ளை விளையாட்டம் அனைத்திலும்–விலக்ஷணமான பால்ய சேஷ்டிதங்க ளெல்லா வற்றினுள்ளும்
ஒன்றும்–ஒரு சேஷ்டிதத்தையும்
என் உள்ளம் உள் குளிர–என் நெஞ்சு குளிரும்படி
அடியேன்–நான்
அங்கு கண்டிட பெற்றிலேன்–அச்சேஷ்டிதங்களை நீ செய்தவிடத்தில் கண்ணாரக் கண்டு களிக்க பெற்றிலேன்;-
இனி–இப்போது
காணும் ஆறு–(அவற்றை நான்) காணத் தக்க உபாயம்
உண்டு எனில்–இருக்குமாகில்
அருள்00கிருபை செய்தருள வேணும்.

குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததும்
இடையரும் பசுக்களும் தொலையும் படியாக இந்த்ரன் கல் வர்ஷம் வர்ஷித்த படியாலே
மலையை எடுத்து குடையாக தரித்ததும் –
தர்ச நீயமான குரவைக் கூத்திலே கோபிகாரோடு ஒக்கத் தன்னையும் கோத்ததும்

குடமாட்டும் கன்றினால் விள வெறிந்ததும்
ஒருவன் கன்றாய் ஒருவன் விளாவாய் வந்த இருவரையும் சேர முடித்ததும்

காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா
நான் ஆசைப்பட்டு பெறாத திருவடிகளைக் கொண்டு ஆசூர பிரக்ருதியான காளியன்
தலையிலே மிதித்தது முதலாக

வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்
வீரப் பாட்டுக்கும் மௌக்யத்துக்கும் சேர்ந்து இருக்கிற அதி மநோஹரமான
அனைத்திலும் அங்கு என் உள்ளம் குளிர ஒன்றும் கண்டிட பெற்றிலேன் –

அடியேன்
இவை காண்கையே பிரயோஜனமாக இருக்கிற நான்

ஒன்றும் காணப் பெற்றிலேன் – காணுமாறு இனி வுண்டேனில் அருளே—
நீ நினைத்தக்கால் செய்ய ஒண்ணாதது இல்லை -நான் இவை காணும் படி அருள வேணும் –

—————————————————————————–

வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க
நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ !
சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் !
கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து
தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன்
தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே— 7-10-

பதவுரை

வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி–வஞ்சனை பொருந்திய நெஞ்சை யுடையளான பூதனை யானவள்
வரண்டு–உடம்பு சோஷித்து
எழ–(உள்ளுள்ள ரத்தமாம்ஸங்கள) வெளியிற் கொழிக்கும் படியாகவும்
நார் நரம்பு கரிந்து உக்க–நார் போன்ற நரம்புகள் கருகி உதிரும் படியாகவும (அவளுடைய)
நஞ்சம் ஆர் தரு சுழி முலை–விஷந்தீற்றிய கள்ள முலையை
நீ சுவைத்து–நீ ஆஸ்வாதநம் பண்ணியும்
அருள் செய்து–(என் மேல்) கிருபையினாலே
வளர்ந்தாய்–உயிருடன் வளரப் பெற்றாய்
அந்தோ–ஆச்சரியம்!
கஞ்சன் நாள் கவர்–கம்ஸனுடைய ஆயுஸ்ஸை அபஹரித்த
கரு முகில் எந்தாய்–காளமேகம் போன்ற நாயனே!
முலை வெறிதே சுமந்து–(நான்) முலையை வியர்த்தமாகச் சுமந்து
கடைப்பட்டேன்–கெட்டவரிலும் கடைகெட்டவளானேன்;
தஞ்சம் ஒன்று இலேன்–(உன்னையொழிய வேற) புகலற்றிராநின்றேன்;
உய்ந்திருந்தேன்–(என்றைக்காகிலு முன்னைக் கண்ணால் காண்போமென்று)பிராணனைப் பிடித்துக் கொண்டு ஜீவிக்கிறேன்;
தக்கது–உனக்குத் தகுதியான
நல்ல தாயை–நல்ல தாயாரை
பெற்றாய்–ஸம்பாதித்துக் கொண்டாய்.

வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
இவனைக் கண்டால் செவ்வியராக இருக்க விறே கடவது —
கண்டு வைத்து வஞ்சனத்திலே பொருந்தின பூதனை –

வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க
மாம்சமும் உள்ளுண்டான உதிரமும் -முலைப் பாலோடு கொழித்துக் கொண்ட புறப்பட –
சேஷித்த உடம்பு நார் நரம்பும் தோலுமாம் படி கரிந்துக்க

நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ ! சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்
கிடந்த ஆஸ்ரயத்தையும்-இழக்க வற்றாய்-மிக்க நஞ்சை உடைத்தாய் -கோபத்தையும் உடைத்தாய் இருக்கிற
முலையாலே தாரகமாக வுண்டு அருளி வளர்ந்தாய்

கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் !
கம்சனுடைய ஆயுஸை-அபஹரித்து அத்தாலே ஏறின புகரை யுடைய வடிவை யுடையையாய்
அச் செயலாலும் வடிவு அழகாலும் என்னை எழுதிக் கொண்டவனே

கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து
முலை நெரித்த போது உண்பான் ஒரு பிள்ளையைப் பெற்று வைத்து பெறாதே வ்யர்த்தமாய் இருக்கையாலே
எத்தனையேலும் தண்ணியராலும் தாழ்ந்தேன்

தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன்
வேறு தாரகர் இல்லாமையாலே பிராணன்களை வருந்தி தரித்து இருந்தேன்

தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே—
முலைப்பால் அபேஷிதமான போது உனக்கு நல்ல தாயைப் பெற்றாயே –

——————————————————————————–

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-

பதவுரை

மல்லை மா நகர்க்கு–செல்வம் நிரம்பிய பெரிய நகரமாகிய வட மதுரைக்கு
இறையவன் தன்னை–தலைவனாயிருந்த கம்ஸனை
வான் செலுத்தி–வீர ஸ்வர்க்கத்திற்கு அனுப்பி
ஈங்கு வந்து அணை–(தேவகீ ஸமீபமாகிய) இங்கே வந்து சேர்ந்த
பிள்ளை–கண்ண பிரானுடைய
மாயத்து எல்லை இல் செய்வன–அற்புதத்தில் எல்லை யில்லாத சேஷடிதங்களை
காணா–(நடந்த போது) காணப் பெறாத
தெய்வத் தேவகி–தெய்வத் தன்மை பொருந்திய தேவகி யானவள்
புலம்பிய புலம்பல்–புலம்பிக் கொண்டு சொன்ன பாசுரங்களை
கொல்லி காவலன்–கொல்லி நகர்க்கு அரசராய்
மால் அடி முடி மேல் கோலம் ஆம்–ஸர்வேச்வரனுடைய திருவடிகளைத் தம் திருமுடிக்கு அலங்காரமாக வுடையரான
குலசேகரன்–குலசேகராழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
நல் இசை தமிழ் மாலை–நல்ல இசையையுடைய தமிழினாலாகிய சொல் மாலையை
வல்லார்கள்–ஓத வல்லவர்கள்
ஒல்லை–விரைவாக
நாரணன் உலகு–ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவார்–சேரப் பெறுவர்-

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை-வான் செலுத்தி
மிக்க சம்பத்தை உடைய ஸ்ரீ மதுரைக்கு நிர்வாஹகனான கம்சனை தானே கை தொட்டு முடிக்கையாலே
வீர ஸ்வர்க்கத்திலே பொகட்டு

வந்து ஈங்கு அணை மாயத்து எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
கம்ச வதம் பண்ணி இங்கே வந்து கிட்டின ஆச்சர்ய சேஷ்டிதங்களுக்கு அவதி இன்றியிலே
இருக்கிற ஸ்ரீ கிருஷ்ணனுடைய பால சேஷ்டிதங்களை காணாமையாலே

தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
இவன் சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெறாத இழவையும் உடையாளாய்-
இவனைப் பிள்ளையாகப் பெறுகைக்கு ஈடான பாக்யத்தைப் பண்ணின ஸ்ரீ தேவகியார்
புலம்பிய பாசுரத்தை

கொல்லி காவலன்
கொல்லி என்கிற படை வீட்டுக்கு நிர்வாஹகரானவர்

மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை தமக்கு முடி மேல் மாலையாக உடைய ஸ்ரீ பெருமாள்

நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
அழகிய இசையோடு கூடின தமிழ்த் தொடை வல்லவர்கள்

நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே–
இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே
உபய விபூதி நாயகனை ஸ்ரீ பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -6–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

பிரவேசம் –

உகந்து அருளின தேசத்தை அனுபவித்தார் கீழ் –
அவ்வனுபவம் அவதாரங்களில் அனுபவ அபேஷையைப் பிறப்பித்தது –
அதில் தோள் தீண்டியான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவித்தவர்களுடைய பாசுரத்தாலே அனுபவிக்கிறார் –

இத்தலையால் வேறு செய்வது இல்லாமையாலே கிலாய்க்கத் தொடங்கினார் –
ஸ்ரீ பகவத் விஷயத்தில் பாவ பந்தத்தில் ஊற்றம் இருந்தபடி –
ஸ்ரீ பிராட்டிமார் தசையை பிராப்தராய் கூடுவது பிரிவது ஊடுவதாம் படி யானார் –
ஸ்ரீ நம்மாழ்வாருக்கு -மின்னிடை மடவாரும் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருக்கு -காதில் கடிப்பும் போலே இருக்கிறதாய்த்து
ஸ்ரீ பெருமாளுக்கு இத் திருமொழி –

ஸ்ரீ நம்மாழ்வார் பகவத் விஷயத்தில் நின்ற ஊற்றம் எல்லாம் தோற்ற வன்மை உடைத்தாய் இருக்கும் -மின்னிடை மடவார் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -தம் மார்த்த்வம் எல்லாம் தோற்றி -மென்மையை உடைத்தாய் இருக்கும் -காதில் கடிப்பு –
இவர் தம்முடைய ராஜ குலம் எல்லாம் தோற்றி இருக்கும் இத்திருமொழி
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் தோள் தீண்டி யாகையாலே -ஒரு செவ்வாய் கிழமை முற்படப் பெற்றிலோம் –
பல்லிலே பட்டுத் தெறித்தது -என்று
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் பக்கல் உள்ள விடாய் எல்லாம்
தமக்கு ஒருவருக்கு உண்டாகையாலே
ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே பெண்கள் பேச்சாலே பேசுகிறார் –

—————–

அவதாரிகை –

ஸ்ரீ ஒரு பிராட்டி முநையில் மணலில் போய் நில்லு -நான் அங்கே வருகிறேன் என்று சொல்லி விட –
அவள் அங்கே போய் விடியும் அளவும் நின்று –
அவன் வரக் காணாமையாலே -அவனைக் கண்ட போதே ஊடிச் சொல்லுகிற வார்த்தையாய் இருக்கிறது –

ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர்
எனை பலர் உள்ள இவ் ஊரில் உன் தன்
மார்வு தழு வதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே
உன் தன் பொய்யை கேட்டு
கூர் மழை போல் பனி கூதல் எய்தி
கூசி நடுங்கி யமுனை ஆற்றில்
வார் மணல் குன்றில் புலர நின்றேன்
வாசுதேவா ! வுன் தன வரவு பார்த்தே— 6-1-

பதவுரை

வாசுதேவா–கண்ணபிரானே!
ஏர் மலர் பூ குழல் ஆயர் மாதர்–அழகிய புஷ்பங்களை அணிந்த பரிமளம் மிக்க கூந்தலை யுடைய இடைப் பெண்கள்
எனை பலர் உள்ள–எத்தனையோ பேர்களிருக்கப் பெற்ற
இ ஊரில்–இந்தத் திருவாய்ப்பாடியில்
உன் தன் மார்வு தழுவுதற்கு–உன்னுடைய மார்வோடு அணைவதற்கு
ஆசை இன்மை அறிந்து அறிந்தே–ஆசை யில்லாமையை நன்றாக அறிந்து வைத்தும்
உன் தன்–உன்னுடைய
பொய்யை கேட்டு–பொய்யான வார்த்தைகளைக் கேட்டு
(அவற்றை மெய்யென மயங்கி)
கூர் மழை போல் பனிக்கு ஊதல் எய்தி== மிக்க மழை போல் பெய்கிற பனியாலுண்டான குளிரிலே அகப்பட்டு
கூசி–(யார் பார்த்து விடுகிறார்களோ வென்று) கூச்சமடைந்து
நடுங்கி–நடுங்கிக் கொண்டு
யமுனை ஆற்றில்–யமுநா நதியில்
வார் மணல் குன்றில்–பெரியதொரு மணற் குன்றிலே
உன் வரவு பார்த்து–உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு
புலர நின்றேன்–போது விடியுமளவும் (அங்கேயே) காத்து நின்றேன்.

ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர்
அழகிய மலரை உடைத்தாய் -மலருக்கும் கூட நாற்றத்தைக் கொடுக்கும்
மயிர் முடியை உடைய இடைப் பெண்கள்

எனை பலர் உள்ள இவ் ஊரில் –
அநேகம் பேர் திரளான இவ் ஊரில் -ஸ்ரீ திருவாய்ப்பாடியில் –

உன் தன் மார்வு தழுவதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே-
அநேகம் பெண்கள் உள்ள ஊருமாய் -நீயும் சர்வ சாதாரணனுமானால் –
உன் மார்வை யாசைப் படக் கடவதன்று என்று அறிந்து வைத்து

உன் தன் பொய்யை கேட்டு
உன் ஸ்வரூபத்தை உணர ஒட்டாது இறே-உன் வார்த்தை –
நீ யல்லது புகல் உண்டோ –
உன்னை யல்லது நான் அறிவேனோ –
என்று தாழ்ச்சி தோன்ற நீ சொல்லும் வார்த்தையைக் கேட்டு –

கூர் மழை போல் பனி கூதல் எய்தி
மிக்க மழை போலே பெய்கிற பனியால் வந்த குளிரிலே யகப்பட்டு

கூசி
யார் காண்கிறார் என்று கூசி

நடுங்கி
அச்சத்தாலும் குளிராலும் நடுங்கி

யமுனை ஆற்றில்
அது தான் ஏகாந்த-ஸ்தலத்திலேயோ –
சர்வ சாதாரணமான தேசத்திலே அன்றோ –

வார் மணல் குன்றில் புலர நின்றேன்
நின்றது தான் தனியே நிற்கலாம் தேசத்திலே தான் நின்றேனோ –
போகத்துக்கு ஏகாந்த ஸ்தலத்திலே யன்றோ
எல்லாரும் வந்து சஞ்சரித்துக் காணும் போது-சர்வ சாதாரணமான தேசத்திலே வந்தாள் என்று இராமே
போகத்துக்கு ஏகாந்தமான மணல் குன்றிலே விடியும் அளவும் நின்றாள் என்னும்படி தோற்ற நின்றேன்

வாசுதேவா !
நீ அங்கே நிற்கிறது என் என்னில் -உன்னை விஸ்வசித்தன்று-
உன் பிதாவை விஸ்வசித்து-ஒரு வார்த்தை அல்லது அறியாத ஸ்ரீ வாஸூதேவர் பிள்ளை
என்னுமத்தை விஸ்வசித்து நின்றேன் –

வுன் தன வரவு பார்த்தே—
உன்னுடைய அழகு காண வேணும் என்னும் நசையாலே –

——————————————————-

அவதாரிகை –

வேறு ஒரு ஸ்ரீ பிராட்டி வார்த்தை

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி
கீழை அகத்து தயிர் கடைய
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று
கள்ள விழியை விழித்து புக்கு
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ
வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் கடைந்திட்ட வண்ணம்
தாமோதரா! மெய் அறிவன் நானே 6-2-

பதவுரை

தமோதரா–கண்ணபிரானே!
கீழை அகத்து–(என் வீட்டுக்குக்) கீழண்டை வீட்டில்
கெண்டை ஒண் கண்–கயல் போன்று அழகிய கண்களை யுடையளான
மடவாள் ஒருத்தி–ஒரு பெண்ணானவள்
தயிர் கடைய கண்டு–(தனியே) தயிர் கடையா நிற்பதைக் கண்டு
நானும்–நானும் (உன்னோடு கூட)
ஒல்லை கடைவன் என்று–சீக்கிரமாக (இத்தயிரைக்) கடைகிறேன்’ என்று (வாயாற் சொல்லி)
கள்ளம் விழியை விழித்து–திருட்டுப் பார்வை பார்த்து
புக்கு–(அவளருகே) சென்று சேர்ந்து
வண்டு அமர் பூ குழல்–வண்டுகள் படிந்த புஷ்பங்களை அணிந்த மயிர் முடியானது
தாழ்ந்து உலாவ–அவிழ்ந்து அசையும் படியாகவும்
வாள் முகம்–ஒளி பொருந்திய முகமானது
வேர்ப்ப–வேர்க்கும் படியாகவும்
செம் வாய் துடிப்ப–சிவந்த அதரமானது துடிக்கும் படியாகவும்
தண் தயிர்–குளிர்ந்த தயிரை
நீ கடைந்திட்ட வண்ணம்–நீ கடைந்த படியை
நான் மெய் அறிவன்–நான் மெய்யே அறிவேன்.

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி
முக்தமான நோக்கை உடையளாய்-சொல்லிற்று எல்லாம் மெய் என்று இருக்கும் பருவத்தை உடையாள் ஒருத்தி –

கீழை அகத்து –
பாவன பிரகர்ஷத்தாலே -ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே -ஒரு அகமும் உண்டாய் —
அதுக்கு கீழை அகமுமாய்ச் செல்லுகிறது காணும் இவர்க்கு –
நீ தான் மூலையடியே நடந்தது வேறு ஒரு இடத்தேயோ –என்னகத்துக்கு கீழை அகத்தன்றோ

தயிர் கடையக் கண்டு –
ஊர் எங்கும் அடி ஒத்தித் திரியும் இறே -தனியே நின்று தயிர் கடைவார் உண்டோ என்று –
ஒருத்தி தனியே நின்று தயிர் கடையக் கண்டவாறே அலாப்ய லாபம் பெற்றானாய்-ஓடிச் சென்று புக்கான் –

ஒல்லை நானும் கடைவன் என்று
நீ தனியே நின்று தயிர் கடையில் -ஒருக்காலும் வெண்ணெய் பட்டதாகப் படாது —
சடக்கென வெண்ணெய் படுவது நானும் ஒருதலைப் பற்றி கடையில் யாய்த்து என்று
அன்று தேவரசுரர் வாங்க -என்று பிறர் கை விட்டால் கடிவது பிறர் கார்யம் ஆகில் இறே
இங்கும் இவளும் ஒரு தலைப் பற்றில் இறே தன பிரயோஜனம் ஆவது –

கள்ள விழியை விழித்து புக்கு
இவன் கள்ள விழி –
அவள் கெண்டை ஒன கண் மடவாள்
நோக்கும் நினைவும் செயலும் -சொல்லும் ஒருபடிப் பட்டு இருக்கும் அவளுக்கு
இவனுக்கு நோக்கு ஒரு படியும் நினைவு ஒரு படியும் சொல்லு ஒரு படியும் செயலும் வேறு ஒரு படியுமாய் இருக்கும் –
இவன் நோக்காலே எல்லாம் மெய் என்று அவள் விஸ்வசித்தாள் யாய்த்து

வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ
மேல் பண்ணின வியாபாரங்கள் ஒரு மஹா பாரதம் இறே
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ
உன் குழலை விச்வசித்த வண்டுகள் என் பட்டனவோ –

வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
ஒளியை உடைய முகம் வேர்ப்ப -அதரஸ் புரணம் பிறக்க -இவை எல்லாம் புணர்ச்சி குறி இறே –
தமிழர் சுனையாடல் என்று ஒரு கலவியைச் சொல்லுமா போலே

தண் தயிர் கடைந்திட்ட வண்ணம்
உன் நெஞ்சுக்கு பொருந்தின தயிர் கடைந்த படி –
இவள் சொன்னவாறே இங்கனே இருப்பன சில எனக்கு வேண்டா என்ன

தாமோதரா! மெய் அறிவன் நானே –
உன் உடம்பில் தழும்பை மறைக்கலாமாகில் அன்றோ உன் செயல்களை மறைக்கலாவது –

———————————————————-

அவதாரிகை –

மூன்றாம் பாட்டு -வேறு ஒரு ஸ்ரீ பிராட்டி வார்த்தை

கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை
கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால்
மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்கு பொய் குறித்து
புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை
புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் ! உன் வளர்த்தி யோடே
வளர்கின்றதால் உன் தன் மாயை தானே –6-3-

பதவுரை

மலர் கரு கூந்தல்–புஷ்பங்களை அணிந்துள்ள கறுத்த மயிர் முடியை யுடையவளான
ஒருத்தி தன்னை–ஒரு பெண் பிள்ளையை
கடைக் கணித்து–கடைக் கண்ணால் பார்த்து விட்டு
ஆங்கே –அப்படியிருக்கச் செய்தே.
ஒருத்தி தன் பால் மனம் மருவி வைத்து–வேறொரு பெண் பிள்ளை யிடத்தில் மனதைப் பொருந்தச் செய்து,
(அவளையும் விட்டு)
மற்று ஒருத்திக்கு–வேறொரு பெண்ணிடத்தில்
உரைத்து–உனக்கு நான் அடியேன் என்று சொல்லி வைத்து
ஒரு பேதைக்கு–வேறொரு பெண்ணுக்கு
பொய் குறித்து–(ஸம்ச்லேஷத்துக்காகப்) பொய்யாகவே (ஒரு ஏகாந்தஸ்தலத்தைக்) குறிப்பிட்டு வைத்து,
ஆக இத்தனை பேரையும் ஏமாத்தி விட்டு)
புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை–கடை குழன்று சுருண்ட கூந்தலை யுடையவளான ஒரு இளம் பெண்ணோடு
புணர்தி–கலவி செய்யா நின்றாய்;
அவளுக்கும்–அந்தப் பெண்ணுக்கும்
மெய்யன் அல்லை–பொய்யனாயிரா நின்றாய்;
மருது இறுத்தாய்–இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளினவனே!
உன் வளர்த்தியோடே–நீ வளர்வதோடு கூடவே
உன் தன் மாயை–உன்னுடைய கள்ளங் கவடுகளும்
வளர்கின்றது–வளர்ந்து வாரா நின்றன;
ஆல்–அந்தோ!.

இங்கே “மருதிறுத்தாய்! ” என விளித்ததனால், நீ பருவம் நிரம்புவதற்கு முன்னமே
தீண்டினாரைக் கொன்றவனாதலால் உன்னைத் தீண்ட நான் அஞ்சா நின்றேன் காண் –என்று குறிப்பிட்டவாறு

கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை கடை கணித்து –
நெய்தது இருண்டு பூவை உடைத்தாய் இருக்கிற மயிர் முடியை உடையாள் ஒருத்தியை –
தான் அவள் மயிர் முடியில் தோற்றமை தோற்றச் சிறாங்கணித்துப் பார்த்து —
நேராக பார்த்தான் ஆகில் இறே போது நோக்கு என்று இருக்கலாவது –

ஆங்கே ஒருத்தி தன் பால் மருவி மனம் வைத்து –
இவள் பக்கலிலே கண் செல்லா நிற்க வேர் ஒருத்தி பக்கலிலே –
அவளை அல்லது அறியோன் என்னும் படி மனஸை அங்கே வைத்து –

மற்று ஒருத்திக்கு உரைத்து
மனஸ் ஸூ அவள் பக்கலிலே இருக்கச் செய்தே வேறே ஒருத்திக்கு அடியேன் -என்று சொல்லி –

ஒரு பேதைக்கு பொய் குறித்து
சொன்ன வார்த்தையை விஸ்வசித்து -அகவாய் அறியாதாள் ஒரு முக்தைக்கு இன்ன இடத்திலே போய் நில்லு –
நான் அங்கே வருகிறேன் என்று இடம் குறித்து

புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி –
மயிர்முடி அலைதிகுலைதியாய் பேணாதே போக யோக்யதையாய் இருப்பாள் ஒருத்தி யோடு சம்ச்லேஷித்து

அவளுக்கும் மெய்யன் அல்லை
அதுவும் மித்யா பரி ரம்பணம் -அதாவது -பொய்யே தழுவுகை –

மருது இறுத்தாய் !
பருவம் நிரம்புவதற்கு முன்னே தீண்டினாரை கொல்லப் புக்காய்

உன் வளர்த்தி யோடே வளர்கின்றதால் உன் தன் மாயை தானே –
உன்னுடைய வஞ்சனமும் நீ பிராயம் புக அதுவும் ஒக்கப் பிராயம் புகா நின்றது இறே –

———————————————————————–

அவதாரிகை –

நாலாம் பாட்டு -உகந்து அருளின தேசத்தை அனுபவித்தார் கீழ் –
அவ்வனுபவம் அவதாரங்களில் அனுபவ அபேஷையைப் பிறப்பித்தது –
அதில் தோள் தீண்டியான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவித்தவர்களுடைய பாசுரத்தாலே அனுபவிக்கிறார் –

தாய் முலை பாலில் அமுது இருக்க
தவழ்ந்து தளர் நடை இட்டு சென்று
பேய் முலை வாய் வைத்து நஞ்சை வுண்டு
பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ஆய மிகு காதலோடு யான் இருப்ப
யான் விட வந்த என் தூதி யோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்
அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே– 6-4-

தாய் முலையில்–தாயாகிய யசோதைப் பிராட்டியினுடைய முலைகளில்
பால் அமுது இருக்க–போக்யமான பால் இருக்கச் செய்தேயும் (அதனை விரும்பாமல்)
தவழ்ந்து–தவழ்ந்து கொண்டு
தளர் நடை இட்டு சென்று–தட்டுத் தடுமாறி நடந்து சென்று
பேய் முலை வாய் வைத்து–பூதனையினுடைய முலையிலே வாயை வைத்து
நஞ்சை உண்டு–(அம்முலை மீது தடவிக் கிடந்த) விஷத்தை உறிஞ்சி அமுது செய்து
பித்தன் என்று–(இப்படி செய்தது காரணமாக) ‘பைத்தியக்காரன்’ என்று
பிறர் ஏச நின்றாய்–அயலாரெல்லாரும் பரிஹஸிக்கும்படி நின்ற பிரானே!
யான்–நான்
ஆய் மிகு காதலொடு இருப்ப நீ–மிகவும் அதிகமான ஆசையோடு எதிர்பார்த்திருக்கையில் , நீ
யான் விட வந்த என் தூதியோடே–என்னால் தூதனுப்பப்பட்டு (உன்னிடம்) வந்த என் வேலைக்காரியோடே
மிகு போகத்தை–நல்ல போக ரஸங்களை
நன்கு உகந்தாய்–நன்றாக அனுபவித்தாய்
அதுவும்–அந்தச் செய்கையும்
உன் கோரம்புக்கு–உனது தீம்புக்கு
ஏற்கும் அன்றே–தகுந்திருக்குமாய்த்து

தாய் முலை பாலில் அமுது இருக்க
உன்னைப் பெறுகைக்கு நோன்பு நோற்று -பத்து மாசம் சுமந்து –
நீ முலை உண்ணில் தரித்தும் -முலை உண்ணா விடில் நெறித்து-
ஆற்றாளாய் இருக்கிறவளுடைய-உனக்கு தாரகமாய் இருந்த முலைப்பால் இருக்க

தவழ்ந்து தளர் நடை இட்டு சென்று
தவழ்ந்து நடக்கப் புக மாட்டாதே தள்ளம் பற்றிச் சென்று

பேய் முலை வாய் வைத்து நஞ்சை வுண்டு
உன் பக்கல் பாவ பந்தம் இல்லாத பூதனை உடைய முலையிலே வாய் வைத்து –
விநாசத்தை விளைப்பதான நஞ்சை உண்டு

பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ராக த்வேஷங்களுக்கு விஷய பாகம் பண்ண மாட்டாதே அடைவு கெட நின்று நாட்டார் ஏசும் படி நின்றாய்
நான் இப்போது விழுக்காடு அறியாதே செய்தது என் என்ன

ஆய மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதி யோடே
என் தூத வாக்கியம் கொண்டு வந்தவளோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்

ஆய -ஆய பொன் –
உன்னை ஆசைப் பட்டு வை வர்ண்யத்தை உடைய நான் இருக்க –
ஆய என்று கடைக் குறைச்சலாய்க் கிடக்கிறது

என்னோடு பரிமாறும் பரிமாற்றத்துக்கு அவ்வருகே என் நினைவும் கொண்டு பரிமாற நினைத்தாலும் அவளுக்கு
அந்நினைவு இல்லாமையாலே மாந்துமவன் இறே அவன்

அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே–
கோரம்பமாவது -தீம்பு -அதாவது
உன் தீம்புக்கு ஏற்கும் இத்தனை இறே என்கை –

—————————————————————————-

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு
வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே
பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
இன்னம் அங்கே நட நம்பி ! நீயே— 6-5-

பதவுரை

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு–மின்னல் போன்று ஸூக்ஷ்மமான இடையையுடைய ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டு
வீங்கு இருள்வாய்–நிபிடமான (மிக்க) இருள் வேளையிலே
பொன் ஒத்த ஆடை–பீதாம்பரத்தாலே
குக்கூடல் இட்டு–முட்டாக்கிட்டுக் கொண்டு
என்தன் வீதி ஊடே–என் வீதி வழியே
போகின்ற போது–(அவளும் நீயுமாகப்) போகும் போது
நான் கண்டு நின்றேன்–நான் பார்த்துக் கொண்டிருந்தேன்:
(அன்றியும்:) நீ
கண்ணுற்றவளை–கண்ணில் தென்பட்ட (வேறொருத்தியை)
கண்ணால் இட்டு–(உனக்கே அற்றுத் தீரும்படி ) கடாக்ஷித்து
கை விளிக்கின்றதும்–(இன்னவிடத்தே வாவென்று) கையாலே அழைத்து ஸம்ஜ்ஞை பண்ணினதையும்
கண்டே நின்றேன்–பார்த்துக் கொண்டு தானிருந்தேன்;
அவளை விட்டு–அந்தப் பெண் மணியை விட்டு
இங்கு–என்னிடத்திற்கு
என்னுக்கு வந்தாய்–ஏதுக்காக வந்தாய்!
நம்பி–ஸ்வாமிந்!
இன்னம் அங்கே நட–இனி மேலும் நீ அவர்களிடத்திற்கே நடப்பாயாக.

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு
மின் போலே நுண்ணிய இடையை உடையாள் ஒருத்தியை –
அவ் விடை நுடங்காதபடி யணைத்துக் கொண்டு

வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே
உன்னுடைய முன்னடி தோற்றாதே-போகைக்கு ஈடான மிக்க இருளும் உண்டாய்த்து இறே –
கொண்டு போகிறது தான் வேறு ஒரு தெருவே அன்றே கொண்டு போவது –
இது ஆர் தெரு என்று இருந்தாய் -இது என்ன அஞ்சாமை தான் –

பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு
மறைத்துக் கொண்டு போகிறது தான் இருளுக்கு பிரகாசத்தை இட்டு அன்றோ தான்
போகிறது போகிறாய் தான் –
இன்னாளைக் கொண்டு போகா நின்றோம் –
இன்னாள் தெருவே போகா நின்றோம்
இன்ன காலத்திலே போகா நின்றோம் என்னும் துணுக்கும் இன்றியிலே யன்றோ போய்த்து

போகின்ற போது நான் கண்டு நின்றேன்
உன்னைப் போலே அந்ய பரை யன்றோ நான் –
நீ போன விடமெங்கும் அடி ஒத்துமவள் ஆகையாலே கண்டு நின்றேன்

கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு
இவளை அணைத்துக் கொண்டு போகா நிற்கச் செய்தே வேறு ஒருத்தி கண்ணுக்கு இலக்கானாள்
நீ கண்ணாலிட்டு -கண்ணாலே அனந்யார்ஹை யாம்படி நோக்கினாய் –

கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
இவளை ஒரு கையாலே அணைத்து-மற்றக் கையாலே எதிர்ப்பட்டவளை இன்னவிடத்தே வா என்று அழைத்துக் கொண்டு
போகிறபடியையும் பார்த்துக் கொண்டு நின்றேன் –

என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
அப்பாவி உன்னை -அறியாதவள் ஆகையாலே மெய் என்று இருக்கிறவள் வெறுக்கும் படி
அவளை விட்டு இங்கு என் செய்ய வந்தாய்
அங்கனே சில யுண்டோ எனக்கு -அநந்ய கதி யன்றோ என்று அவன் சொல்ல

இன்னம் அங்கே நட நம்பி ! நீயே—
குறைவாளரைப் போலே சில வார்த்தை சொல்லக் கடவீரோ –
நீர் பூர்ணர் அல்லீரோ –
அங்கே நடவீர் –

———————————————————————————-

மற்பொரு தோள் உடை வாசுதேவா !
வல்வினையேன் துயில் கொண்டவாறே
இற்றை இரவிடை ஏமத்து என்னை
இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய்
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்
அரிவையரோடும் அணைந்து வந்தாய்
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்?
எம்பெருமான்! நீ எழுந்து அருளே– 6-6–

பதவுரை

மல் பொரு தோள் உடை வாசுதேவா–மல்லரோடு போர் செய்த தோள்களை யுடைய, கண்ணபிரானே!
வல் வினையேன்–மஹாபாவியான நான்
துயில் கொண்டவாறே–தூங்குவதற்கு ஆரம்பித்தவுடனே
இற்றை இரவு இடை ஏமத்து–அன்றிரவு நடுச் சாமத்திலே
இன் அணைமேல்–இனிய படுக்கையிலே
என்னை இட்டு–என்னைப் படுக்க விட்டு
நீ அகன்று போய்–நீ விலகிப் போய்
அற்றை இரவும் (அகன்று போன)–அன்றிரவும்
ஓர் பிற்றை நாளும்–அதற்கு மறுநாளும்
அரிவையரோடும்–(எல்லாப் ) பெண்களோடும்
அணைந்து வந்தாய்–கலவி செய்து வந்தாய்;
நீ–இப்படிப்பட்ட நீ,
என் மருங்கில் எற்றுக்கு வந்தாய்–என்னருகில் ஏதுக்காக வந்தாய்!
எம்பெருமான்–என் நாயகனே!
நீ எழுந்தருள்–நீ (அவர்களிடமே) போகக் கடவை.

மற்பொரு தோள் உடை வாசுதேவா !
உன் செயல்கள் நீ மூலையடி நடந்தாய் என்ன ஒண்ணாத படி நிவாரகர் இல்லாத பிறப்பு

வல்வினையேன் துயில் கொண்டவாறே
அப்போது உறங்காது இருக்கப் பெற்றிலேன் –உன் மிகைச் செயல்கள் எல்லாம் காணும்படி –
நித்ரையும் என்னைப் பகை மீளும்படி பாபத்தைப் பண்ணினேன் –

இற்றை இரவிடை ஏமத்து என்னை
அற்றை இரவில் நடுச் சாமத்தில் -போக யோக்யமான காலத்திலே யன்றோ என்னை விட்டுப் போய்த்து –

இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய்
போக யோக்யமான காலத்திலே -படுக்கை வாய்ப்பாலே இவள் உறங்கும் –
உறங்கினவாறே போவோம் என்று -அகன்று நீ போய்

அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்
இங்கு நின்று நினைத்துப் போனாப் போலே செய்ய ஒண்ணாது இறே அங்கு –
அகன்ற அன்றிரவும் பிற்றை நாளும்

அரிவையரோடும் அணைந்து வந்தாய்
பஞ்ச லஷம் குடியில் பெண்கள் எல்லாரோடும் சம்ச்லேஷித்து வந்தாய் –
அரிவையரோடும் அணைந்து வந்தாய்-என்றவாறே
இவளை ஆற்றும் போது அணைத்து ஆற்ற வேணும் -என்று அவன் கிட்டப் புக –

எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்-
ஆரைத் தீண்டி வந்தாய் என்று தெரியாது -என்னைத் தீண்டாதே கடக்க நில்லு

எம்பெருமான்! நீ எழுந்து அருளே–
பூர்வ வாசனையாலே வந்தாய் என்ற இடம் தப்பச் சொன்னேன் –
அத்தைப் பொறுத்து நீர் முதலிகள் அன்றோ -நீர் எழுந்து அருளும் –

—————————————————————————-

பைய அரவின் அணை பள்ளியினாய் !
பண்டேயோம் அல்லோம் நாம் நீ வுகக்கும்
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம்
வைகி எம் சேரி வர ஒழி நீ
செய்ய உடையும் திரு முகமும்
செங்கனி வாயும் குழலும் கண்டு
பொய் ஒரு நாள் பட்டதே அமையும்
புள்ளுவம் பேசாதே போகு நம்பி !—- 6-7–

பதவுரை

பை அரவு இன் அணை பள்ளியினாய்–பாடங்களையுடைய இனிய சேஷ சயனத்திலே பள்ளி கொள்பவனே!
நம்பி–பூர்ணனானவனே!
நாம்–நாங்கள்
பண்டையோம் அல்லோம்–உன் மாயைப் பேச்சு வலையில் அகப்படுகைக்கு பழைய படி ஏமாந்தவர்களல்ல
நீ உகக்கும்–நீ விரும்பத் தக்கவர்களாய்
மை–மையணிந்து
அரி ஒண்–மான் போலழகிய
கண்ணினாரும் அல்லோம்–கண் படைத்தவர்களான பெண்களுமல்லோம்;
வைகி–கால விளம்பஞ் செய்து
எம் சேரி–எமது அகத்துக்கு
வரவு ஒழி நீ–வருவதை இனி நீ விட்டிடு;
செய்ய உடையும்–அழகிய பீதாம்பரத்தையும்
திரு முகமும்–திரு முக மண்டலத்தையும்
செம் கனி வாயும்–சிவந்த கோவைக்கனி போன்ற அதரத்தையும்
குழலும்–கூந்தல் முடியையும்
கண்டு–பார்த்து (அவற்றில் ஈடுபட்டு)
பொய்–உன் பொய் வார்த்தைகளில்
ஒரு நாள் பட்டதே அமையும்–ஒரு நாள் பட்டபாடு போதுமே;
புள்ளுவம்–க்ருத்ரிமமான வார்த்தைகளை
பேசாதே–(மறுபடியும்) சொல்லாமல்
போகு–(உன் தேவிமார்களிடத்தே) போய்ச் சேர்.

பைய அரவின் அணை பள்ளியினாய் !
நீ எனக்கு நல்லை யாகிலும் -நான் உனக்கு நல்லேன் –ஆசைப்பட்டார்க்கு உடம்பு கொடுக்குமவன் –
எதிர்த் தலையினுடைய ரஷண சிந்தை பண்ணுமவன் நான் என்று அவன் சொல்ல –
பைய அரவின் அணை பள்ளியினாய் !-என்கிறாள்

பண்டேயோம் அல்லோம் நாம் நீ வுகக்கும்
அகப்படுதுகைக்கு நீ முன்பு செய்யும் செயல்கள் அறிந்தவர்கள் ஆகையால் பழையவர்கள் அல்லோம் காண் நாங்கள்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று இருக்கும் நிலை தவிர்ந்தோம் காண் நாங்கள் –
தஞ்சமாக நினைத்து இருக்கும் அதிலேயும் அதி சங்கை பண்ணும் படி அவகாஹித்தார் காணும் இவர் –
நீங்கள் பண்டையவர்கள் அன்றாகிலும் நான் தான் பழையவன் ஆகையாலே உகப்பன் உங்களை என்று அவன் சொல்ல

நீ உகக்கும் மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம்
நீ இப்போது உகக்கிறவர்களும் அல்லோம் காண் நாங்கள் –
முன்னடி தோற்றாதே உன்னை மூலையடியே நடக்கப் பண்ணுகிற அவயவ சோபை யுடையவர்கள் அல்லோம் காண் நாங்கள்
ஆனால் என்னைச் செய்யச் சொல்லுகிறது என் என்ன

வைகி எம் சேரி வர ஒழி நீ-
எங்களுடைய இருப்பிடங்கள் எங்களுக்கே ஆஜ்ஞை செல்லுவது -எங்கள் இருப்பிடத்தில் வார்த்தைகள் கேள் –
எல்லாரும் பரிமாறுகிற உங்கள் இடத்தில் நான் வாராது ஒழிகிறது என் என்ன

எம் சேரி வர ஒழி நீ
எல்லாரும் வரும் போதில் வர வேண்டாம் என்கிறோம் என்று ஆளற்ற போதாக போகா நின்றான் –
இவனுக்கு ஒரு நினைவு உண்டு என்று சங்கிக்கும் போது வர வேண்டாம் என்கிறோம் அத்தனை அல்லது
சர்வ சாதாரணமான போது வர வேண்டா என்றிலோமே என்ன –

இவர்கள் வர வேண்டா என்னாத படி ஆசிலே கை வைத்தான் –
இவர்கள் வார்த்தையிலே தான் செயல் அற்ற படியாலே இவர்கள் வாய் மாளும்படி
ப்ரஹ்மாஸ்த்ரப் பிரயோகம் பண்ணப் பார்த்தான்

செய்ய உடையும் திரு முகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு-
திருப் பரியட்டத்தைப் பேணுவது -இவர்கள் முகங்களிலே முகத்தைக் காட்டுவது -ஸ்மிதம் பண்ணுவது –
திருக் குழலிலே பேணுவது ஆனான் –
இப்படி செய்தவாறே இறாய்த்தாள் -அதாவது கண்ணைச் செம்பளித்தாள் –
கண் படைத்த லாபம் காணாதே கண்ணைச் செம்பளிக்கிறது என் என்று சொல்லக் கண்டு

பொய் ஒரு நாள் பட்டதே அமையும்
உன்னுடைய செயல்கள் எல்லாம் மெய்யென்று ஒரு நாள் பட்டதே யமையும் காண் என்கிறாள்
அடியேன் குடியேன் -என்று தாழ வார்த்தைகளைச் சொல்ல

புள்ளுவம் பேசாதே போகு நம்பி !—-
தாழ்ச்சிக்கு முன்னே காண் ஸ்ரவணமும் -அதுவும் எல்லாம் பண்டே செய்தற்றதே காண் –
இனி நீ சொல்லுகிறவற்றுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை

புள்ளுவமாவது-
வஞ்சனம் -வஞ்சனங்கள் எல்லாம் அறிந்த எங்கள் பக்கல் பிரயோகியாதே போ
என்னை போ என்கிறது என் உங்களை ஒழியப் புகலிடம் உண்டோ என்ன

நம்பீ
பூரணராய் இருக்கிற நீர் குறைவாளரைப் போலே சொல்லக் கடவீரோ
சொலவுக்கும் செயலுக்கும் அடியில்லை என்னும் படி நிரபேஷர் என்று அறிந்த பின்பு
சில சாபேஷரைப் போலே சொல்லக் கடவீரோ நடவீர் –

——————————————–

என்னை வருக என குறித்திட்டு
இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளை புணர புக்கு
மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன் நிற ஆடையை கையில் தாங்கி
பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல்
என் சினம் தீர்வன் நானே– 6-8-

பதவுரை

என்னை–என்னை
வருக என–(இன்னவிடத்திற்கு) வாவென்று
குறித்திட்டு–ஸந்கேதம் பண்ணி வைத்து விட்டு
இனம் மலர் முல்லையின் பந்தர் நீழல்–நிறைந்த மலர்களை யுடைய முல்லைப் பந்தலின் நிழலிலே
மன்னியவளை–(வெகு காலமாய்ப்) பதுங்கி நின்ற ஒருத்தியை
புணர புக்கு–ஸம்ச்லேஷிக்கப் போய்
மற்று என்னை கண்டு-பிறகு என்னைப் பார்த்து
உழறா–கலங்கி
நெகிழ்ந்தாய்–அப்பாலே நழுவினாய்;
பொன் நிறம் ஆடையை–பீதாம்பரத்தை
கையில் தாங்கி–கையிலே தாங்கிக் கொண்டு
பொய்–பொய்யாக
அச்சம் காட்டி–நீ எனக்கு அஞ்சினமாக நான் பாவிக்கும்படி செய்து கொண்டு
நீ போதி ஏலும்–நீ (என் கைக்கு அகப்படாமல்) ஓடிப் போன போதிலும்
இன்னம்–இனி
ஈங்கு–இங்கே
என் கை அகத்து–என்னிடத்திற்கு
ஒரு நாள் வருதிஏல்–ஒரு நாளாகிலும் வருவாயாகில்
( அப்போது)
நான் என் சினம் தீர்வன்–நான் என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன்.

என்னை வருக என குறித்திட்டு
பிரணயித்வத்தாலே ஒருத்தியை அனந்யார்ஹை ஆக்கினாய் –
அவளை இன்ன இடத்தில் வா வென்று இடம் குறித்து விட்டாய்

இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
பரப்பு மாறப் பூத்த முல்லைப் பந்தலின் கீழே

மன்னி அவளை புணர புக்கு
எக்காலத்தில் இடம் குறித்து விட்டான் என்று தெரியாது –
அவள் அங்கே குடில் கட்டி காத்துக் கிடக்கிறது -அவளோடு சம்ச்லேஷிக்கப் புக்கு

மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
ஒரு மஹா பாரதத்தை பாரித்துக் கொண்டு புக்கு இவளைக் கண்டவாறே கலங்கி எழுந்து இருந்தான் –

பொன் நிற ஆடையை கையில் தாங்கி
திருப் பரியட்டத்தை கையிலே தாங்கி

பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இவளைக் கை கழியப் போய் மெய்யச்சம் செய்ததை பொய்யாக்கிச் செய்தான் போய் நின்று
மெய்யே அஞ்சினானாகில் களவும் மெய்யாம் இறே
களவு பொய்யாகைக்காக பொய்யே அஞ்சினானாகப் பாவித்தான் போதியேலும்
அப்போதைக்கு இவளைத் தப்பப் போமது இறே உத்தேச்யம் -அப்படியே கை கழல போனான்

இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல்
நீ நியத ஸ்வ பாவன் அல்லாமையாலே என் கையிலேயும் ஒரு நாள் வந்து அகப்படக் கூடும் இறே –
அகப்பட்டாயாகில்

என் சினம் தீர்வன் நானே–
ஸ்ரீ உஞ்சப் பிள்ளை பாடா நிற்க ஸ்ரீ எம்பார் பார்த்து எழுந்து அருளி இருக்க இவ்விடத்துக்கு
அபி நயிக்கிறார்-காலாலே பாய்ந்து தள்ளுவதாகக் காட்ட -அது கைக் கொண்டு அருளி –
கெடுவாய் அங்கனே செய்தாள் ஆகில் அவனுக்குப் பொல்லாதோ –
அவனுக்கு அது அன்றோ தேட்டம் -அங்கன் அன்று காணும் -என்று
கையை இட்டு முகத்தை மறைத்து திரிய வைத்து அருளக் காட்டினார் –

—————————————————————

அவதாரிகை –

ஒன்பதாம் பாட்டு -தோல்வி தோற்றச் சொல்லுகிறார்கள் –

மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க
மயில் தழை பீலி சூடி
பொங்கிள வாடை அரையில் சாத்தி
பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு
குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத
உன் குழலின் இன் இசை போதராதே– 6-9-

பதவுரை

மங்கலம்–மங்களகரமாய்
நல்–விலகூஷணமான
வனமாலை–வனமாலையானது
மார்பில்–மார்விலே
இலங்க–பிரகாசிக்க
மயில் தழைப்பீலி–மயிலிறகுகளே
சூடி–சூடிக் கொண்டும்
பொங்கு இள ஆடை–பளபளவென்ற மெல்லிய ஆடையை
அரையில் சாத்தி–அரையிலே சாத்திக் கொண்டும்
பூ கொத்து–பூங்கொத்துக்களை
காதில்–காதிலே
புணரப் பெய்து–மிகவும் பொருந்த அணிந்து கொண்டும்
கொங்கு நறு குழலார்களோடு–தேன் மணம் கமழ்கின்ற கூந்தலை யுடைய பெண்களோடு
குழைந்து–ஸம்ச்லெஷித்து (அத்தாலுண்டான ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாக)
குழல்–புல்லாங் குழலை
இனிது ஊதி வந்தாய்–போக்யமாக ஊதிக் கொண்டு வந்தாய்;
ஒரு நாள்–ஒரு நாளாகிலும்
எங்களுக்கே–எங்களுக்காக
வந்து ஊத–வந்து ஊதும்படி
உன் குழலின் இசை–உனது குழலின் இசையானது
போதராது–வர மாட்டாது காண்.

மங்கல நல் வன மாலை மார்வில் இலங்க
மங்களம் என்று சொல்லப் பட்டவை எல்லாம் உடைத்தாய் –
தர்ச நீயமுமாய் இருக்கிற வனமாலை
மை போல் நெடு வரைவாய் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னுமா போலே
திரு மார்விலே விளங்க

மயில் தழை பீலி சூடி
தழைத்த பீலியை திரு முடியிலே சுற்றி

பொங்கிள வாடை அரையில் சாத்தி
மிகவும் மெல்லிய ஆடையைத் திரு வரையிலே சாத்தி

பூம் கொத்து காதில் புணர பெய்து கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து –
பூம் கொத்தை காதிலே மிகவும் பொருந்த விட்டுத் தேனையும்
நறு நாற்றத்தையும் உடைய குழலை
உடையவர்களோடு குழைந்து-கலந்து

குழல் இனிது ஊதி வந்தாய்
நெகிழ்ந்தவர்களோடே ஒரு நீராகக் கலந்து –
அக்கலவியால் பிறந்த ஹர்ஷம் எல்லாம் தோற்றும்படியாக
இனிதாக குழலூதி வந்தாய்

எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழலின் இன் இசை போதராதே–
நீ சர்வ சாதாரணனான பின்பு உன் குழலும் சர்வ சாதாரணமாய் இருக்க ஒரோ இடங்களிலேயாய்
நாங்கள் கேட்க யூத வேணும் என்றால்
நீ யூதிலும் இசை புறப்படாத படியாய்த்து இறே உன் குழலின் ஸ்வபாவம்
குழலோசை என்றும் சம்ச்லேஷம் என்றும் பர்யாயம் இறே –
எங்களோடு சம்ச்லேஷம் உனக்குப் பொருந்தாது என்கிறார்கள் –

—————————————————————————-

அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை
நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்தூடி
எள்கி வுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான்
குலசேகரன் இன் இசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே– 6-10-

பதவுரை

இள ஆய்ச்சிமார்கள்–இளமை தங்கிய இடைப் பெண்கள்
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து–தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்குக் கொழுநனான கண்ண பிரானை ஆசைப்பட்டு,
எல்லி ஏமப் பொழுதினில்–ராத்ரியின் நடுச் சாமத்திலே
ஊடி–ப்ரணய கலஹம் பண்ணி
எள்கி–ஈடுபட்டு
உரைத்த–சொன்ன
உரை அதனை–பாசுரங்களை (உட்கொண்டு)
கொல்லி நகர்க்கு இறை–கொல்லி என்னும் நகருக்குத் தலைவரும்
கூடல் கோமான்–மதுரைக்கு அரசருமான
குல சேகரன்–குலசேராழ்வார்
இன் இசையில் மேவி–இனிய பண்ணிலே பொருந்த
சொல்லிய–அருளிச் செய்த
இன் தமிழ்–பரம போக்யமான தமிழிலாகிய
மாலை–மாலாரூபமான
பத்தும்–இப் பத்துப் பாட்டையும்
சொல்ல வல்லார்க்கு-ஒத வல்லவர்களுக்கு
துன்பம் இல்லை–ஸம்ஸார துக்கம் அணுகாது.

நிகமத்தில்
அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
பரம பிரணயியான ஸ்ரீ கிருஷ்ணனை யாசைப் பட்டு அவனைப் போலே எறிமறிந்த பருவம் அன்றியே
பாடாற்ற மாட்டாத இளவாய்ச்சிமார்கள்

எல்லி பொழுதினில் ஏமத்தூடி-எள்கி வுரைத்த வுரையதனை
விலக்குவார் இல்லாத மத்திய ராத்ரியிலே ஊடி அத்தாலே ஈடுபட்டு –
அவ்வீடுபாடு தான் சொல்லாய் வழிந்து
புறப்பட்டது என்னலாம் படியான பாசுரத்தை

கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான்-குலசேகரன்
கொல்லி -என்று சோழன் படை வீடு
கூடல் என்று பாண்டியன் படை வீடு
கோழிக் கோன் என்று முன்பே சொல்லி வைத்தார்
மூன்று ராஜ்யத்துக்கும் கடவரான ஸ்ரீ குலசேகர பெருமாள்
ஸ்ரீ கோபிமார் தங்கள் ஸ்த்ரீத்வ அபிமானம் எல்லாம் அறுத்து சொன்னாப் போலே
இவரும் தம் பெரிய அபிமானம் எல்லாம் அறுத்த படி

இன் இசையில் மேவி-சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
பாட்யே கே யே ச மதுரம் –என்னும்படியான தமித் தொடை பத்தும்

சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே–
இவருடைய பாவ பந்தம் இல்லை யாகிலும் இவை கற்றவர்களுக்கு பகவத் அனுபவத்துக்கு விச்சேத
சங்கை பிறவாதே நிரந்தர அனுபவமாகச் செல்லப் பெறுவார்கள்
சம்போக மத்யே பிறக்குமது இறே ஊடல் ஆவது
உன் தலை பத்து என் தலை பத்து என்று முடிய உடலாய்ச் செல்லும் அனுபவத்தை பெறுவார்கள் –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -5–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

அவதாரிகை –

திரு மந்தரத்தால் சொல்லிற்று யாய்த்து அனந்யார்ஹ சேஷத்வம் இறே –
இந்த அனந்யார்ஹ சேஷத்வ பிரதிபத்திக்கு விரோதி தான்
நான் என்னது -என்று இருக்கும் அஹங்கார மமகாரம் இறே –
அநாத்மன்யாத்ம புத்தியும் அச்வேஸ்வத்ய புத்தியும் இறே
சம்சாரம் ஆகிற வர்ஷத்துக்கு பீஜம் என்று பிரமாணங்கள் சொல்லுகிறது -அது சேதனர்க்குப் பொதுவானது இறே
அப்படி இன்றிக்கே ராஜாக்கள் ஆகையாலே அஹங்கார மமகார வச்யராய் இறே இருப்பது
நிலா தென்றல் சந்தனம் என்று சொல்லுகிற இவை பதார்த்தம் ஆகாத போது ஸ்வரூப சித்தி இல்லையாம் இறே
அப்படியே இறே பரார்த்தமான வஸ்துவுக்கும் அஹங்கார மாமாகாரத்தாலே ஸ்வரூப சித்தி அழியும் இறே

இப்படி பரார்த்தம் என்னும் படிக்கு பிரமாணம் உண்டோ என்னில்
இவனை -யஸயாஸ்மி -என்றும் ஓதி -பதிம் விஸ்வஸ்ய -என்றும் அவனை ஒதுகையாலே
இவன் ஒன்றுக்கும் கடவன் அல்லன் -உடையவனானவன் எல்லா வற்றுக்கும் கடவன் என்றது இறே
அப்படி பிரமாணங்களால் சொன்ன சேஷத்வ பிரதிபத்தியாவது -ததீய சேஷத்வ பர்யந்தமான அனந்யார்ஹ சேஷத்வம் இறே –

அப்படி தமக்குப் பிறந்து இருக்கச் செய்தே அது பல பிரதமாகக் கண்டிலர்
தான் தன் கருமம் செய்கிறான் என்றாதல் –
நாம் க்ரமத்தால் செய்கிறோம் என்று ஆறி இருந்தானாதல் –
நம்முடைய த்வரைக்கு அடியான ருசியும் அறியுமவன் ஆகையால் ருசி பாகமானால் செய்கிறோம்
என்று ஆறி இருந்தானாம் அத்தனை –

நம்மைப் போல் அன்றியே செய்தது அறிந்து இருக்கும் சர்வஜ்ஞனாகையும் –
நினைத்தது தலைக் கட்ட வல்ல சர்வ சக்தனாய் இருந்து வைத்து ஆறி இருக்கும் போது
சில ஹேதுக்கள் உண்டாக வேணும் இறே என்று பார்த்து
எனக்கு நானும் இல்லை –
பிறரும் இல்லை –
பேற்றில் த்வரையால் துடிக்கிறேன் அத்தனை அல்லது சாதன அனுஷ்டான ஷமனும் அல்லேன்-என்னும் இடத்தை
அநந்ய கதிகளாய் இருக்கும் பதார்த்தங்களை நிதர்சனமாக இட்டு தம்முடைய அநந்ய கதித்வத்தை
ஸ்ரீ திரு வித்துவக்கோட்டு நாயனார் திருவடிகளிலே விண்ணப்பம் செய்கிறார்-

—————

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-

பதவுரை

விரை குழுவும்–பரிமளம் விஞ்சிய
மலர்–புஷ்பங்களை யுடைய
பொழில் சூழ்–சோலைகளாலே சூழப்பட்ட
வித்துவக்கோடு– திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கிற
அம்மானே–ஸ்வாமியே!
தரு துயரம்–(நீயே எனக்குத்) தந்த இத் துன்பத்தை
தடாய் ஏல்–நீயே களைந்திடா விட்டாலும்
உன் சரண் அல்லால் சரண் இல்லை–உனது திருவடிகளை யன்றி (எனக்கு) வேறு புகலில்லை;
ஈன்ற தாய்–பெற்ற தாயானவள்
அரி சினத்தால்–மிக்க கோபங்கொண்டு அதனால்
அகற்றிடினும்–(தனது குழந்தையை) வெறுத்துத் தள்ளினாலும்
மற்று–பின்பும்
அவள் தன் அருள் ஏ நினைந்து அழும்–அத்தாயினுடைய கருணையையே கருதி அழுகின்ற
குழவி யதுவே–இளங்குழந்தையையே
போன்று இருந்தேன்–ஒத்திரா நின்றேன்.

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
நீயே தருகிற துக்கத்தை நீயே மாற்றாயாகில்-
தன்னாலே தனக்கு விரோதி வந்தது என்றும்
தானே சாதன -அனுஷ்டானத்தாலே அது போக்கிக் கொள்வான் என்றும்
சாஸ்திரங்கள் சொல்லிக் கிடக்கச் செய்தே
இவர் அவனே துயர் தந்தான் என்பான் என் என்னில்
பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆகையாலே சொல்லுகிறார் –

தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் பண்ணித் தவிர்த்துக் கொள்ளுகிறான் என்று
நம்மைப் பழியிட்டு தள்ள நினைத்தான் ஆகிலும்
நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் –
நான் செய்த கர்மமும் பரதந்த்ரம் –
நான் பண்ணும் சாதன அனுஷ்டானத்துக்கு பலபிரதன் ஆகையாலே
அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் ஆகையாலே -தரு துயரம் -என்கிறார் –

ஸ்ரீ முதலிகள் எல்லாரும் கூட ஸ்ரீ பெரிய திரு மண்டபத்துக்கு கீழாக இருந்து ரகஸ்யார்த்தங்கள்
விசாரித்து எழுந்து இருப்பார்களாய்த்து-
ஒரு நாள் நித்ய சம்சாரியாய்ப் போந்தவனுக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என்
என்று விசாரிக்கச் செய்தே –
யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் என்னப் பிறந்தது –

அவ்வளவிலே ஸ்ரீ கிடாம்பி பெருமாள் இருந்தவன் நமக்கு ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் போலே
ஸ்ரீ ஸூக்ருத தேவர் என்று ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயன் என்றான் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிற நீர் தாம் நினைத்து எத்தைக் காண் என்றார் —

அதாவது
ஒன்றை ஆராயப் புக்கால் அதுக்கு அவ்வருகு வேறு ஓன்று இன்றி இருப்பது இறே -அடியாவது –
யாதொன்று பல பிரதமானது இறே உபாயமாவது -அல்லது நடுவே அநேக அவஸ்தை பிறந்தால்
அவற்றின் அளவில் பர்யவசியாது இறே
இளைப்பாறுவது இதிலே சென்று இறே -நடுவு இளைப்பாறாது இறே -தரு துயரம் -என்னலாம் -இறே –

தடாயேல் –
நீ விளைத்த துக்கம் நீயே போக்காயாகில் –
மம மாயா துரத்யயா -என்றும் –
மா மேவயே ப்ரபத்யந்தே மாயா மேதான் தரந்திதே -என்றும் –
நம்முடைய மாயை ஒருவரால் கடக்க ஒண்ணாது காண் என்றும் –
இது கடக்க வேண்டி இருப்பவன் நம்மைப் பற்றி கழித்துக் கொள்வான் என்றும்
நீயே சொல்லி வைக்கையாலே நீயே துயர் தந்தாய் என்னும் படி தோற்றப் படுகிறது இறே –
துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இறே இருப்பது –
பண்ணினவன் தானே போக்கும் இத்தனை இறே

ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் –
ஒரு -குருவி பிணைத்த பிணையல் ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை
ஒரு சர்வ சக்தி பிணைத்த பிணையை எலி எலும்பனான இவன் அவிழ்க்க என்று ஒரு கார்யம் இல்லை இறே –
அவன் தன்னையே கால் கட்டி போக்கும் அத்தனை இறே -என்றார்

உன் சரண் அல்லால் சரண் இல்லை –
இவ்வளவாக விளைத்துக் கொண்ட நான் எனக்கு இல்லை
பிறர் ரஷகர் உண்டாகிலும் நான் அவர்களை ரஷகராக கொள்ள மாட்டாமையாலே அவர்களும் இல்லை –
நான் பண்ணும் சாதன அனுஷ்டானமும் எனக்கு கழுத்துக் கட்டி யாகையாலே
தேவரீர் திருவடிகள் அல்லது வேறு ஒரு உபாயம் இல்லை

விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே-
பரிமள பிரசுரமான சோலையை உடைத்தான ஸ்ரீ திரு வித்துவக் கோட்டிலே எழுந்து அருளி
இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனே –

விரை குழுவும் மலர் பொழில் சூழ்-
சர்வ கந்த -என்கிற பிராப்ய வஸ்து வந்து கிட்டின இடம் என்று தோற்றி இருக்குமாய்த்து –

வித்துவ கோட்டு அம்மானே–
உபாயமாம் போது ஸூலபமாக வேணும் இறே –

அம்மானே –
பிரஜை உறங்குகிற தொட்டில் கீழே கிடக்கும் தாயைப் போலே இங்கே வந்து கிட்டினவனே-
தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே தம்முடைய ரஷணத்துக்கு தமக்கு ஆனவையும் சொன்னார் –
சேஷியாகையாலே தம்முடைய ரஷணத்துக்கு ப்ராப்தன் -அவன் என்கிறார் -இப்போது –
ஒருவன் பேற்றுக்கு ஒருவன் சாதனமாம் போது இத்தனை பிராப்தி உண்டானால் அல்லது ஆகாது இறே
பிரஜை உடைய நோய்க்கு தாய் இறே குடி நீர் குடிப்பாள்
மேல் தாயை நிதர்சனமாகச் சொல்லப் புகுகிறவர் ஆகையால் இப்போது
அம்மான் என்று பிராப்தி தோன்றச் சொல்லுகிறார் –

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அவனே ரஷகன் என்னும் அத்யவசாயம் உண்டானாலும் -பேறு தாழ்த்தால் அவனை
வெறுக்க வேண்டும் பிராப்தி உண்டு இறே சேதனன் ஆகையாலே –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று அசித் சாமானமாக பாரதந்த்ர்யத்தைச் சொல்லி வைத்து
எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –என்கிறது புருஷார்த்த சித்தி சேதனனுக்கு ஆக வேண்டி இறே –
அவனைக் குறித்து சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் பாரதந்த்ர்யம் அவிசிஷ்டமாய் இருக்கச் செய்தே
புருஷார்த்த சித்தி இவனுக்கு உண்டாகிறது சேதனன் ஆகையால் இறே

அரி சினத்தால் –
அரிந்து போக வேண்டும் சினத்தை யுடையாளாய்க் கொண்டு

ஈன்ற தாய் –
வளர்த்த தாய் -என்னாதே-ஈன்ற தாய் -என்றத்தாலே பிராப்தம் சொல்லிற்று

அகற்றிடினும் –
அகற்றிடினும் என்கையாலே அகற்றுகை அசம்பாவிதம் -என்கிறது

ஈன்ற தாய் -என்கையாலே
பெறுகைக்கு நோன்பு நோற்கையும்-பத்து மாசம் சுமக்கையும் -பிரவச வேதனை படுகையும்
என்கிற இவை எல்லாம் உடையவள் -என்கை-

அகற்றிடினும் –
இப்படி பெறுவதுக்கு முன்புள்ள வெல்லாம் துக்கமும் பட்டவள் ஆகையாலே
வருகிறதை நினைக்குமது ஒழிய அகற்ற நினையாள் இறே
அவள் தான் அகல விடினும் –
இத்தால் சொல்லிற்று யாய்த்து -நிருபாதிக தேவரீர் கை விடிலும் வேறு எனக்கு புகழ் இல்லை என்கிறார் –

மற்று அவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி –
இவள் கோபித்து விட்டாலும் வேறு ஒருவருடைய அருளை அபேஷியாது இறே பிரஜை –
அதுக்கு அடியான பிரேமத்துக்கு அவதி உண்டாகில் இறே கோபத்துக்கு அவதி உள்ளது –
ஸ்நேஹம் இல்லாமையாலே கோபமும் இல்லை இறே பிறருக்கு –

ஸ்ரீ நம்பி திரு வழுதி வள நாடு தாசரை ஸ்ரீ முதலியாண்டான் கோபித்து கையாலும் காலாலும் துகைத்து
இழுத்தவாறே திண்ணையிலே பட்டினியே ஒரு நாள் போகாதே கிடந்தார் –
ஸ்ரீ ஆண்டான் மற்றை நாள் அமுது செய்யப் புகுகிறார் -அவன் செய்தது என் என்று கேட்ட வாறே
பட்டினியே வாசலிலே கிடந்தான் என்று கேட்டு அழைத்து -நீ போகாதே கிடந்தது என் -என்ன –
ஒரு நாள் ஒரு பிடி சோறிட்டவன் எல்லா படியாலும் நிந்தித்தாலும் வாசல் விட்டுப் போகிறது இல்லை –
ஸ்ரீ நாத நான் எங்கே போவது -என்றார்

அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே –
வேறு சிலரால் ஆற்ற ஒண்ணாது இறே
முன்னாள் முலை கொடுத்த உபகாரத்தை நினைத்து இருக்குமதாகையாலே -அவள் தானே ஆற்ற வேணுமே
ஸிஸூஸ்தநந்தய -என்றும் –
அளவில் பிள்ளைமை -என்றும் சொல்லுகிறபடியே
அதாவது –
ரக்த ஸ்பர்சம் உடையார் எல்லாரையும் அறியாதே மாதா ஒருத்தியையுமே அறியும் அளவே யாய்த்து அதி பால்யம்
அப்படியே ஸ்ரீ எம்பெருமானைக் குறித்து இவ்வாத்ம வஸ்து நித்ய ஸ்தநந்த்யமாய்த்து இருப்பது
ஆகையால் இறே இவன் பேற்றுக்கு அவன் உபாயம் ஆகிறது –

————————————————————————–

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-

பதவுரை

விண் தோய் மதில்–ஆகாயத்தை அளாவிய மதில்கள்
புடை சூழ்–எப்புறத்தும் சூழப் பெற்ற
வித்துவக்கோடு அம்மா–திருவித்துவக் கோட்டில் எழுந்தருவியிருக்கிற ஸ்வாமிந்!
காதலன் தான்–கணவனானவன்
கண்டார் இதழ்வனவே செய்திடினும்–பார்ப்பவர்களனைவரும் இகழத் தக்க செயல்களையே செய்தாலும்
கொண்டானை அல்லால் அறியா–(தன்னை) மணஞ் செய்து கொண்டவனான அக் கணவனையே யன்றி
வேறொரு புருஷனை நினைப்பதுஞ் செய்யாத
குலம் மகள் போல்–உயர்நத குலத்துப் பிறந்த கற்புடைய மகள் போல்
நீ கொண்டு ஆளாய் ஆகிலும்–என்னை அடிமை கொண்டவனான நீ குறையும் தலைக் கட்டாமல் உபேக்ஷித்தாயாகிலும்
உன் குரை கழலே–ஒலிக்கின்ற வீரக்கழலை யுடைய உனது திருவடிகளையே
கூறுவன்–சரணமாகக் குறிக் கொள்வேன்

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும்
பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே-
அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான
அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்

காதலன் –
பிரேமத்தை யிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்

கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல-
இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே
நினைத்து இருக்குமவளைப் போலே

கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல-
அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே

கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே -பாதி வ்ரத்யம் சொல்லிற்று
குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று

விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா!
ஸ்ரீ பிராட்டி ஸ்வயம்வரத்துக்கு ஸ்ரீ மிதுலையிலே புறச் சோலையிலே விட்டிருந்தால் போலே
இவரை
ஸ்வயம் வரிக்கைக்காக விறே ஸ்ரீ திரு வித்துவக் கோட்டிலே நிற்கிறது –

நீ கொண்டு ஆளாய் ஆகிலும் –
இவ்வளவாக உபகாரகனான நீ குறையும் தலைக் கட்டாதே உபேஷித்தாலும் –

உன் குரை கழலே கூறுவனே-
உன் திருவடிகள் அல்லது எனக்கு வேறு புகல் இல்லை –
உபகாரகனான நீ உபேஷித்தாய் என்று கை வாங்குபவன் அன்று நான் –
என தாவியார் யானார் -என்று நீ பண்ணின உபகாரத்துக்கு
தலை சீய்க்குமவன் நான் -என்கிறார் –

——————————————————————-

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என்
பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே— 5-3-

பதவுரை

மீன் நோக்கும்–மீன்களெல்லாம் (தாம் வஸிப்பதற்கு மிகவும் தகுதியான இடமென்று)
ஆசையோடு பார்க்கிற (நீர் வளம் மிக்க)
நீள் வழல் சூழ்–விசாலமான கழனிகள் சூழ்ந்த
வித்துவக்கோடு–திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியுள்ள
அம்மா–பெருமானே!
என் பால்–அடியேன் மீது
நோக்காய் ஆகிலும்–நீ அருள் நோக்கம் செய்யாதிருந்தாலும்
உன் பற்று அல்லால் பற்று இலேன்–உன்னைச் சரணமாகப் பற்றுதலை விட்டு வேறொருவரைச் சரணம் புக மாட்டேன்;
தார் வேந்தன்–(குடிகளைக் காப்பதற்கென்று) மாலை யணிந்துள்ள அரசன்
தான் நோக்காது–(அதற்கு ஏற்றபடி) தான் கவனித்துப் பாதுகாவாமல்
எத் துயரம் செய்திடினும்–எப்படிப்பட்ட துன்பங்களைச் செய்தாலும்
கோல் நோக்கி வாழும்–அவனுடைய செங்கோலையே எதிர் பார்த்து வாழ்கிற
குடி போன்று இருந்தேன்–ஒத்திருக்கின்றேன்

மீன் நோக்கும் நீள் வயல் சூழ்
மத்ஸ்யம் என்று பேர் பெற்றவை யடையக் கடாஷிக்கும் தேசமாய்த்து —
கடலில் மத்ஸ்யம் -கடல் வற்றினால் நமக்குப் புகலிடம் -என்று
நினைத்திருக்கும் தேசமாய்த்து –

வித்துவ கோட்டு அம்மா ! –
பரமபதத்தில் உள்ளாறும் சீல குணம் அனுபவிக்கும் தேசமாய்த்து –
தரமி பிரயுக்தம் என்று பிரமாணத்தாலே நாம் கேட்டு அறியுமா போலே
சீலாதிகள் தரமி பிரயுக்தம் என்று இருக்கும் அத்தனை இறே பரம பதத்தில்–
கண்டு அனுபவிக்கலாவது இங்கே இறே –

வித்துவ கோட்டு அம்மா ! -என் பால் நோக்காய் ஆகிலும்
பரமபதம் ஆகிற ஒரு நாடாக நீ நோக்குகிற நோக்கை -என்னை ஒருவனையுமே நோக்கி வந்து
இப்போது என்னை கடாஷியாது இருந்தாயே யாகிலும்

உன் பற்று அல்லால் பற்றி இலேன்
என்னுடைய ரஷையில் உத்யுக்தனான உன்னை விட்டு பாதகராக சம்ப்ரதி பன்னரானவரை பற்றுவேனோ
நித்ய சம்சாரியாக இவ்வளவாக சூழ்த்துக் கொண்ட என்னைப் பற்றவோ-
என்னுடைய ரஷணத்தில் என்னோபாதியும் பிராப்தி இல்லாத பிறரைப் பற்றவோ

தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
பிரஜைகளுடைய ரஷணத்திலே தீஷித்து தனி மாலை இட்டு இருக்கிற ராஜாவானவன்
ரஷணத்தில் நெகிழ நிற்கும் அளவன்றிக்கே –
எல்லா துக்கங்களையும் விளைக்கிலும்

தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே—
ரஷகனாய் இருந்து வைத்து பாதகன் ஆனாலும்
அவனுடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் பண்ணும் குடி போலே இருந்தேன்-
சிறியத்தை பெரியது தின்னாமல் காக்கத் தான் மாட்டான் —
செங்கற்சீரை கட்டி ரஷிப்பித்துக் கொள்ளும் முறை அவனுக்கு உண்டு
என் ரஷணத்தில் எனக்கு அந்வயம் அல்லாதாப் போலே சம்பந்தம் உடைய நீயே ரஷிக்கும் அத்தனை –
நான் செய்யலாவதும் இல்லை -நீ மாட்டாததும் இல்லை –

—————————————————————————————

அவதாரிகை —

ஒருவனாலே ஹிதம் என்றும் -பலத்திலே அந்வயம் ஒருத்தனுக்கே -என்றும் -அத்யவசித்தால்
ஹிதங்களையே பிரவர்த்தியா நின்றான் என்று தோற்றினாலும்-அவனே ரஷகன் என்று கிடக்க இறே கடவது –

ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையரை -பிள்ளைகள் புகை சூழ்ந்த படி -சஹிக்கப் போகிறது இல்லை -என்ன –
சற்றுப் போதன்றோ வ்யசனப் படுவது –
ஸ்ரீ வைகுண்ட நாதன் திருவடிகளிலே ஸூகமாய் இருக்க வன்றோ புகுகிறது -என்றார் இறே

தான் தஞ்சமாகப் பற்றின விஷயத்துக்கு அந்யதா சித்தி பிறந்ததோ வென்று மீளும்படி இருக்கிற தசையிலே
ஹேத்வந்த்ரமது -அவ்வருகில் பேற்றில் குறையில்லை என்னும் அத்யவசாயம் இருந்த படி இறே
இதிலே மஹா விஸ்வாசம் ஆகிறது -தோற்றுகிற ஆபாத பிரதிபத்தியைக் கண்டு மீளாதே இருக்குமது இறே

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே— 5-4-

பதவுரை

வித்துவக்கோடு அம்மா!;
வாளால் அறுத்து –(வைத்தியன்) கத்தியைக் கொண்டு அறுத்தலும்,
(ஊசியைக் காய்ச்சிச்)
சுடினும்–சூடு போடுதலுஞ் செய்தாலும்
மருத்துவன் பால் மாளாத காதல்–அவ்வைத்தியனிடத்து நீங்காத அன்புடைய
நோயாளன் போல்–நோயாளியைப் போல
மாயத்தால்–(உன்) மாயையினால்
நீ மீளா துயர் தரினும்–நீ நீங்காத துன்பத்தை (எனக்கு) விளைத்தாலும்
அடியேன்–உனது அடியவனான நான்
ஆள் ஆக–அவ்வடிமை ஸித்திப்பதற்காக
உனது அருளே பார்ப்பன்–உன்னுடைய கருணையையே நோக்கி யிரா நின்றேன்

வாளால் அறுத்து சுடினும் –
ஹிம்சகர் சாதனத்தைக் கொண்டு அறுப்பது -சுடுவதானாலும்

மருத்துவன் பல் மாளாத காதல் நோயாளன் போல் –
அஹிதங்களை மேல் மேல் என பிரவர்த்திப்பிக்க செய்தேயும்
பிஷக்கு –அவன் நமக்கு ஹித காமன் -என்று அவனுக்கு
தனது சர்வஸ்தையும் கொடுத்து
அவன் பக்கலிலே ஸ்நேஹத்தைப் பண்ணும் வ்யாதியாளரைப் போலே

மாயத்தால் மீளா துயர் தரினும் –
மம மாயா -என்னும்படி உன்னுடையதான பிரகிருதி சம்பந்தத்தாலே
அபுநராவர்த்தி லஷணமே துக்கத்தை விளைக்கிலும்

வித்துவ கோட்டு அம்மா ! நீ-மீளா துயர் தரினும் –
எனக்கு த்யாஜ்யமான சம்சாரத்திலே என்னுடைய ரஷணத்துக்காக குடி ஏறி இருக்கிற நீ
நித்ய துக்கத்தை விளைக்கிலும் –
பெற்ற தாய் பிரஜைக்கு அஹிதம் செய்யில் இறே நீ செய்வது -அப்படி இருக்கிற நீ செய்யிலும் –

ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே—
ஆளா -ஸ்வரூப அனுரூபமான வர்த்தியைப் பெறுகைக்காக

வுன தருளே பார்ப்பன் –
இப்போது தோற்றுகிற வ்யசனங்களை புத்தி பண்ணாதே உன் க்ருபையையே புத்தி பண்ணி இருப்பன் –
இப்படி இருக்கைக்கு நிபந்தனம் என் என்னில்

அடியேனே—
அடியேன் ஆகையாலே –
என் ஸ்வரூபத்தையும் உன் ஸ்வரூபத்தையும் நேராக அறிந்தவன் ஆகையாலே –
அன்று கண்டாப் போலே கையும் வில்லுமாக நிற்பன் –
அவனுக்கு-ராவணனுக்கு- அச்சத்தாலே தனக்கு உருவு வெளிப்பாட்டாலே முன்னே நிற்பர்

தீரக் கழிய அபராதம் செய்த எனக்கு அவர் க்ருபை பண்ணுவாரோ என்று அவனுக்கு நினைவாகக் கொண்டு
புருஷர் ஷப–நீ அநு கூலனாய் ஓரடி வர நின்றால்-அத்தையே நினைத்து
நீ பண்ணின அபகாரம் எல்லாம் புத்தி பண்ணுவாரோ
அவர் ஸ்ரீ புருஷோத்தமன் காண் –முன்பூழி காணான்-குற்றத்தை மறக்கும் –
அன்றியே –
குற்றம் செய்த நாளை நினைக்கில் குற்றம் என்று ஸ்ரீ பிராட்டி ராவணனுக்கு அருளிச் செய்த படியே
இனி நீர் அல்லது புகல் இல்லை என்கிறார் —

————————————————————-

வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே— 5-5-

பதவுரை

வெம் கண்–பயங்கரமான கண்களை யுடைய
திண் களிறு–வலிய (குவலயாபீடமென்னும்) யானையை
அடர்த்தாய்–கொன்றவனே!
வித்துவக்கோடு அம்மானே!;
உன் இணை அடியே அடையல் அல்லால்–உனது உபய பாதங்களையே (நான்) சரணமடைவ தல்லாமல்
எங்கு போய் உய்கேன்–வேறு யாரிடத்திற் போய் உஜ்ஜிவிப்பேன்?
எறி–அலை யெறிகிற
கடல் வாய்–கடலினிடையிலே
எங்கும் போய் கரை காணாது–நான்கு திக்கிலும் போய்ப் பார்த்து எங்கும் கரையைக் காணாமல்
மீண்டு–திரும்பி வந்து
ஏயும்–(தான் முன்பு) பொருந்திய
வங்கத்தின்–மரக் கலத்தினுடைய
கூம்பு ஏறும்–பாய் மரத்தின் மீது சேர்கிற
மா பறவை போன்றேன்–பெரியதொரு பக்ஷியை ஒத்திரா நின்றேன்

வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
வெவ்விய கண்ணையும் திண்ணிய நெஞ்சையும் உடைத்தான குவலயா பீடத்தை கொன்றவனே
பிரபல பிரதிபந்தகங்கள் உண்டு என்று இருக்க வேணுமோ தேவரீர் உள்ளீராய் இருக்க –

வித்துவ கோட்டு அம்மானே !–
அது தீர்த்தம் பிரசாதித்தது இறே என்று பிற்பாடற்கு இழக்க வேண்டாத படி
திரு வித்துவக் கோட்டிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே
பரமபதம் கலவிருக்கையாக ஸ்வாம்யத்வத்தை நிர்வஹிக்கைக்காக வன்றோ
இங்கே வந்து எழுந்து அருளி இருக்கிறது

வித்துவ கோட்டு அம்மானே ! எங்கு போய் வுய்கேன் ?-
பிராப்தனுமாய் பசியனுமானவன் வாசலிலே வந்து சோறு சோறு என்னா நிற்க
அந்யராய்-நிரபேஷர் ஆனவர்களை உண்ண அழைப்பாரைப் போலே
உன்னை விட்டு பரம பதத்திலே இருக்கிற அவாப்த சமஸ்த காமனைப் பற்றவோ –

எங்கு போய் வுய்கேன் –
உஜ்ஜீவன ஹேதுவாக போமிடம் இல்லை –
விநாச ஹேதுவாக போமில் போம் இத்தனை இறே –
உகந்து அருளின தேசங்களை விட்டு தேவதாந்தரங்களைப் பற்றுகை யாவது -விநாச பர்யாயம் இறே

உன் இணை அடியே அடையல் அல்லால்
அத்யவாச்யமாவது -புத்த்யர்த்தம் இறே –
அவன் தானே வந்து கிட்டச் செய்தே இழக்கிறார்
இழக்கிறதும் பெறுகிறார் பெறுகிறதும்-அப்ரதிபத்தியாலும் விப்ரதிபத்தியாலும் இறே

எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
பெரிய ஷோபத்தை உடைய கடலிலே ஒரு மரக்கலமாவது
அதின் கொம்பிலே இருந்ததொரு பஷி நாலு திக்கிலும் போக்கிடம் தேடித் பறந்தாலும் கரை காண ஒண்ணாது இறே
மீண்டு வந்து கால் பாவலாவது இம் மரக் கலத்திலே இறே

அப்படியே சம்சார சாகரத்தைக் கடக்கும் போது உகந்து அருளின தேசமான
திரு வித்துவக் கோட்டை பற்றி அல்லது கடக்கலாம் அத்தனை அல்லது
வேறு உபாயம் இல்லை இறே
கடக்கைக்கு உகந்து அருளின தேசத்தை ஒழிந்தது எல்லாம் அக் கடல் போலே இறே

வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே—
தானே ஏறிட்டுக் கொண்ட அகலம் எல்லாம் நீரிலே ஆழுகைக்கு உடலாம் அத்தனை இறே –
அவன் கை நெகிழ்ந்தான் என்று தோற்ற அடி மட்டையை உரக்கப் பற்றும் அத்தனை இறே –

——————————————————————————

செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா ! உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே—5-6-

பதவுரை

வித்துவக்கோடு அம்மா!;

செம் தழலே வந்து–செந்நிறமுடைய நெருப்பு (தானாக) அருகில் வந்து
அழலை செய்திடினும்–வெப்பத்தைச் செய்தாலும்
செம் கமலம் அந்தரம் சேர் வெம்–செந்தாமரைகள் வானத்தில் தோன்றுகிற வெவ்விய
கதிரோற்கு அல்லால்–கிரணங்களை யுடைய ஸூர்யனுக்கு மலருமே யல்லது.
அலரா–(நெருப்புக்கு) மலர மாட்டா;
வெம் துயர்–அநுபவித்தே தீர வேண்டியவையான கொடிய (என்) பாவங்களை
வீட்டா விடினும்–தீர்த்தருளா தொழிந்தாலும்
உன் அந்தம் இல் சீர்க்கு அல்லால்–உனது எல்லையில்லாத உத்தம குணங்களுக்கே யல்லாமல்
அகம் குழைய மாட்டேன்–(வேறொன்றுக்கு நான்) நெஞ்சுருக மாட்டேன்.

செந் தழலே வந்து அழலை செய்திடினும் –
தாஹகமான அக்னி கிட்டி உஷ்ணத்தைப் பண்ணினாலும்

செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் -அலராவால்
தாமரையானது ஆதித்யன் தூரஸ்தன் ஆனானே யாகிலும்
அவனுடைய கிரணத்துக்கு அலரும் அத்தனை யல்லது
அக்னி கிட்டிட்டு என்று அதினுடைய உஷ்ணுத்துக்கு அலராது

வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா !
அனுபவ விநாச்யமான பாபங்களைப் போக்கி –
அதுக்கு விகாசத்தை விளைப்பிக்க வந்திருக்கிற நீ உபேஷித்தாயே யாகிலும்

உன் அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே
கல்யாண உக்தமான உன் குணங்களுக்கு அல்லது என் நெஞ்சு நெகிழாது –

————————————————————————

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —5-7-

பதவுரை

வித்துவக்கோடு அம்மா!;
வான்–மேகமானது
எத்தனையும் வறந்த காலத்தும்–எவ்வளவு காலம் மழை பெய்யாமல் உபேக்ஷித்தாலும்
பைங் கூழ்கள்–பசுமை தங்கிய பயிர்கள்
மைத்து எழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும்–கருநிறங் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களையே எதிர்பார்த்திருக்கும்;
அவை போல்–அப் பயிர்கள் போல.
மெய் துயர் வீட்டா விடினும்–தவறாது அனுபவிக்கப்படுகிற என் துன்பங்களை நீ போக்காமல் உபேக்ஷித்தாலும்
அடியேன்–உனக்கு தாஸனாகிய நான்
என் சித்தம் உன் பாலே மிக வைப்பன்–என் மநஸ்ஸை உன்னிடத்திலேயே மிகவும் செலுத்துவேன்.

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
கார் காலத்திலே வர்ஷியாதே மேகங்கள் மறுத்த காலத்திலும் –

பைம் கூழ்கள்-உண்டு -பயிர்கள் –

மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
ஆகாசத்திலே கறுத்த மேகங்களைப் பார்த்து இருக்கும் அத்தனை அல்லது
நீர் நிலம் தேடித் போக வறியாதாப் போலே

மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா!
அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபத்தைப் போக்கி
சம்சார சம்பந்தம் அறுத்துக் கொடுக்க வந்து இருக்கிற நீ
அது செய்திலை யாகிலும்

என் சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —
என் ரஷணத்திலே நெகிழ்ந்தாய் என்று தோற்ற ஒருகாலுக்கு ஒருக்கால்
உன் பக்கலிலே நெஞ்சு பிரவணமாகா நின்றது –

——————————————————————-

தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா ! உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே ! —5-8-

பதவுரை

மிக்கு இலங்கு–மிகுதியாய் விளங்குகிற
முகில்–காளமேகம் போன்ற
நிறத்தாய்–கரிய திருநிற முடையவனே!
வித்துவக்கோடு அம்மா!
புண்ணியனே–புண்ய ஸ்வரூபியா யுள்ளவனே!
தொக்கு இலங்குயாறு எல்லாம்–(ஜல ப்ரவாஹம்) திரண்டு விளங்குகிற நதிகளெல்லாம்
பரந்து ஓடி–(கண்டவிடமெங்கும்) பரவியோடி (முடிவில்)
தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத–ஆழ்ந்த கடலிலே சென்று சேர்ந்தல்லது மற்றோரிடத்தே புகுந்து நிற்க மாட்டா;
அவை போல்–அவ்வாறுகள் போல,
புக்கு இலங்கு–(என் நெஞ்சினுள்ளே) புகுந்து விளங்குகிற
சீர் அல்லால்–(உனது) கல்யாண குணங்கள் தவிர (மற்றோரிடத்தில்)
புக்கிலன்–ஆழ்ந்திடேன்.

தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி –
ஜல ராசி எல்லாம் திரண்டு ஒளியை உடைத்தாய் -பார்த்த இடம் எங்கும் பரந்தோடி

தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்-
ஆழ்ந்த கடலிலே சென்று புக்கு அல்லது புறம்பு நிற்க மாட்டாத ஆறுகள் போலே –
சமுத்திர இவ சிந்துபி என்னுமா போலே
இவை புக்கால் கடல் நிறையும் இல்லையாகில் குறைப்படுகிறதும் அன்று இறே-
இவற்றுக்கு புறம்பு தரிப்பது அரிதாய் இறே புகுகிறன

மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா !
மிக்க உஜ்ஜ்வலமான காள மேகம் போலே இருக்கிற நிறத்தை உடையவனே –

வித்துவ கோட்டு அம்மா !
அம்மேகம் படிந்த மலை

உன் புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே ! –
உள் புக உள் புக உஜ்ஜ்வலமான கல்யாண குணங்களிலே யல்லது உள் புக உள் புக
ம்ஸ்ர்ணமாய் இருக்கும் குணங்களிலே அவகாஹித்திலேன் காண்
இதுக்கு நிபந்தனம் என் என்னில்
புண்ணியனே -பிரதம ஸூஹ்ருதம் நீ யாகையாலே –

———————————————————————–

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்  வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா !
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே–5-9-

பதவுரை

மின்னையே சேர் திகிரி==மிக்க ஒளியையே கொண்டுள்ள சக்கராயுதத்தை யுடைய
வித்துவக்கோடு அம்மா!-;
நின்னையே வேண்டி–உன்னையே விரும்பி
நீள் செல்வம் வேண்டா தான் தன்னையே–மிக்க ஸம்பத்தை விரும்பாதவனையே
தான் வேண்டும்–தானாகவே வந்து சேர விரும்புகிற
செல்வம் போல்–அந்த ஐச்வரியம் போல,
மாயத்தால்–(உன்) மாயையினால்
(நீ என்னை உபேக்ஷித்தாயாகிலும்)
அடியேன்–உனது அடியவனான நான்
நின்னையே வேண்டி நிற்பன்–உன்னையே அடைய விரும்பி நிற்பேன்.

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான்  வேண்டும் செல்வம் போல் –
உன்னையே வேண்டி -நிரவதிக சம்பத்தை காற்கடைக் கொண்டவன் தன்னையே
அவசர பிரதீஷமாய் பார்த்து நிற்கும் ஐஸ்வர்யம் போலே என்னுதல் –
மோஷ லஷ்மியைப் போலே என்னுதல்

மாயத்தால் மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா !
மின் போலே பளபளத்து இருந்துள்ள திரு வாழியை-
எப்போதும் கை கழலா நேமியனாய் ஆசிலே வைத்த கையும் நீயுமாய்
என்னுடைய ரஷணத்துக்காக இங்கே வந்திருந்து வைத்து
காற்கடைக் கொண்டாயே யாகிலும்

நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே–
தன்னைக் காற்கடைக் கொண்டவனை ஐஸ்வர்யம் விடாதே போலே
நீ என்னை உபேஷிக்க உபேஷிக்க-உன்னையே பற்றி நின்றேன் –

——————————————————————

வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல்  தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே– 5-10-

பதவுரை

‘வித்துவக்கோடு அம்மா!
நீ வேண்டாயே ஆயிடினும்–நீ (என்னை) உபேக்ஷித்தாயாகிலும்
மற்று ஆரும் பற்றிலேன் என்று–வேறு எவரையும் நான் சரணடைய மாட்டேன்’
என்று–என்று (அத்யவஸாயத்தை வெளியிட்டு)
அவனை தாள் நயந்து–அவ்வெம்பெருமானது திருவடிகளிலேயே ஆசை கொண்டு
கொற்றம் வேல் தானை குலசேகரன் சொன்ன–வெற்றியைத் தரும் வேலாயுதத்தையும்
சேனையையுமுடையவரான குலசேகரர் அருளிச் செய்த
நல் தமிழ் பத்தும்–நல்ல தமிழ்ப்பாடல்கள் பத்தையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
நரகம் நண்ணார்–(கொடிய பாவங்கள் செய்திருந்தாலும்) நரகத்திற் சேர மாட்டார்கள்.

வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்-
இதுக்கு என்று வந்திருக்கிற நீ என்னை உபேஷித்தாயே யாகிலும்

மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
வேறு ஒரு புகலில்லை-நான் அநந்ய கதி என்று -அவன் திருவடிகளை ஆசைப்பட்டு

கொற்ற வேல்  தானை குலசேகரன் சொன்ன
பிரதிபஷத்தை பக்க வேரோடு வாங்க வற்றான வென்றியை உடைய வேலையையும் சேனையையும் உடைய
ஸ்ரீ பெருமாள் சொன்னவை –
பிரதிபஷத்தை வெல்லுகைக்கு ஈடான பரிகரம் உடையரானார் போலே யாய்த்து –
ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பரிகரமாக-இவருடைய அநந்ய கதித்வத்வமும்

நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே–
கடல் பேர் ஆழமாய் இருக்கச் செய்தே -உள்ளுள்ள பதார்த்தங்கள் தோற்றும்படியாய் இருக்குமா போலே
அர்த்தம் மிக்கு இருக்குமாய்த்து இத் திருமொழி –

இவை வல்லவர்கள் -நண்ணார் நரகமே –
சம்சார சம்பந்தத்துக்கு அடியான பாபத்தை பண்ணினார்களே யாகிலும்
இஸ் சம்சாரத்திலே வந்து பிரவேசியார்கள் –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -4–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

அவதாரிகை –

பகவத் ஜ்ஞானமும் பிறந்து –இதர விஷய த்யாகமும் பிறந்து –
குணாதிக விஷயத்தை அனுபவிக்க வேணும் என்னும் ருசியும் பிறந்து
அந்த குணம் பூரணமாக அனுபவிக்கலாம் இடத்தே அனுபவிக்க வேணும் என்னும் ஆசையும் பிறந்து –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்னுமா போலே
அடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -என்னும் அதுவும் பிறந்து
இப்படி பகவத் விஷயத்திலும் பாகவத் விஷயத்திலும் ஆநு கூல்யமும் –
இதர விஷய த்யாக பூர்வகமாக கண் அழிவறப் பிறக்கச் செய்தே
விரோதியும் போய்-அநந்தரம் பகவல் லாபமாகவும் காணாமையாலே

யதிவாராவணஸ் ஸ்வயம் – என்றும் –
ஆள் பார்த்துழி தருவாய் -என்றும் மேல் விழக் கடவவன் பக்கல் குறையில்லை

இதுக்கு வேறு ஒரு ஹ்ருதயம் உண்டாக வேணும் என்று பார்த்து —
சரீர சமனந்தரம் பகவல்லாபமாகில் பரிக்ரஹித்த சரீரம் ஷத்ரிய சரீரமாய்
போகங்களில் குறை வற்று இருந்த பின்பு சரீர அவசா நத்தளவும் போகங்களை புஜித்து
பின்னை க்ரமத்தாலே பகவத் பிராப்தி பண்ணுகிறோம் என்று நினைத்து இருக்கிறேன் என்று
நினைத்து ஆறி இருந்தேனாக வேணும் என்னுமத்தை திரு உள்ளத்திலே கொண்டு
தமக்கு க்ரம பிராப்தி பொறாமை தோன்ற —
ஒன்றியாக்கை புகாமல் உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் -என்றும்
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றும்
கீழே அனுபவித்த ஸ்ரீ பெரிய பெருமாள் தாமே சம்சார சம்பந்தம் அறுத்துக் கொடுக்கைக்கும் –
கைங்கர்யம் கொள்ளுகைக்கும் திருமலையிலே நிற்கிறார்

ஆகையாலே ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து
விரோதியில் அருசியும்
கைங்கர்யத்தில் ருசியும்
பிறந்த த்வரையையும் ஆவிஷ்கரிக்கிறார் –

—————-

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –4-1-

பதவுரை

ஆன் ஏறு ஏழ் வென்றான்–நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளை ஜயித்தவனான எம்பெருமானுக்கு
அடிமை திறம் அல்லால்–கைங்கரியம் செய்வதையே நான் வேண்டுவதல்லாமல்
ஊன் ஏறு செல்வத்து உடல் பிறவி–நாளுக்கு நாள் மாம்சம் வளர்ந்து தடிப்பதாகிற செல்வத்தை யுடைய இம் மனிதவுடம்பெடுத்துப் பிறத்தலை
யான் வேண்டேன்–(விவேகம் பெற்ற) நான் (இனி) விரும்ப மாட்டேன்;
(அன்றியும்,)
கூன் ஏறு சங்கம்–வளைந்திருக்கிற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை
இடத்தான் தன்–இடத் திருக் கையிலே யுடையனான எம்பெருமானுடைய
வேங்கடத்து–திருவேங்கட மலையில்
கோனேரி வாழும்–திருக் கோனேரி என்கிற ஸ்வாமி புஷ்கரிணியில் வாழ்கிற
குருகு ஆய் பிறப்பேன்–நாரை யாகவாவது பிறக்கக் கடவேன்.

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
இந்த சரீரத்துக்கு சொல்லுகிற குற்றம் என் என்ன –
நாள் செல்ல நாள் செல்ல மாம்ஸ பிரசுரமாய் வருகையாலே
சரீரம் தடித்து -ஆத்மாதிகளுக்கு -அத்தனை -அத்தாலே வேண்டேன் என்கிறார் –

தம்முடைய ஸ்வரூபமும் -நித்தியமாய் இருக்கச் செய்தேயும் –
அசந்நேவ -என்கிறது ஜ்ஞான சங்கோசத்தை பற்ற விறே –
அப்படியே ஜ்ஞான சங்கோ சத்தை பிறப்பிக்குமது வாகையாலே வேண்டேன் என்கிறார் –

யான் வேண்டேன் –
தலை யறுத்துக் கொள்ளுமவர்கள் சந்தனம் பூசித் திரியுமா போலே
விழுக்காடு அறியாதான் வேணுமே என்று இருந்தானாம் அத்தனை –
விவேக ஜ்ஞானம் உடைய நான் வேண்டேன் –

சரீரத்தினுடைய ஹேயத்தையும்-
ஆத்மாவினுடைய வைலஷண்யத்தையும்
இது தான் தனக்கே சேஷம் என்னும் இடத்தையும்
அவன் தானே அறிவிக்க அறிந்த நான் வேண்டேன் –

ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
அவன் தானே விரோதியைப் போக்கி –
கைங்கர்யத்திலே -அன்வயிப்பிக்குமவன் –

ஸ்ரீ நப்பின்னை பிராட்டியோட்டை சம்ஸ்லேஷத்துக்கு இடைச் சுவரான ரிஷபங்கள் ஏழையும் வென்றவன் –
மாதாவின் பக்கலிலே ஸ்நேஹத்தைப் பண்ணின பிதாவை அனுவர்த்திக்கும் புத்ரனைப் போலே

அடிமைத் திறம் அல்லால் –
அடிமையிடையாட்டம் -என்னுதல்
அஹம் சர்வம் -என்றும் –
வழு விலா அடிமை -என்றும் சொல்லுகிறபடியே
அடிமைத் திறம் என்னுதல் –

கூனேறு சங்கம் இடத்தான் –
கைங்கர்ய ருசி உடையாரை நித்ய கைங்கர்யம் கொள்ளுமவன் –
ப்ராஞ்ஜலீம் ப்ரஹ்மா ஸீ நம் -என்னுமா போலே
ஸ்ரீ பகவத் அனுபவ செருக்காலே ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே
காட்சிக்கு நோக்காய் இருக்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யாழ்வான்-

சங்கம் இடத்தான் –
இடக்கையிலே காணில்-சங்கம் இடத்தான் -என்கிறார் –
வலக்கையிலே ஸ்ரீ திரு வாழி யாழ்வானைக் கண்டவர் ஆகையாலே -வலக்கை யாழி -என்கிறார்
திரு மார்வில் ஸ்ரீ பிராட்டியைக் கண்டவாறே -நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை -என்கிறார் –
இவர் படி இது இறே

தன் வேங்கடத்து –
அங்கே அடிமை கொள்ளுகைக்கு பாங்கான தேசமாகையாலே என்னது என்று
இவன் விரும்பின ஸ்ரீ திருமலையில் –

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –
விரஜையைப் பற்றி அமாநவ வசத்திலே வர்த்திக்குமா போலே –
கோனேரியைப் பற்றி வர்த்திக்கும் குருகாய் பிறப்பேன் -என்கிறார் –

வாழும் –
ஸ்ரீ கோயில் வாஸம் போலே காணும் ஸ்ரீ திருக் கோனேரி யிலே-
வர்த்திக்கும் என்கிற இடத்துக்கு வேறே வாசக சப்தங்கள் உண்டாய் இருக்கச் செய்தே –
வாழும் -என்கிற சப்தத்தை இட்டபடியாலே
அங்குத்தை வாஸம் தானே போக ரூபமாய் இருக்கும் என்கை-

குருகாய் பிறப்பேனே –
பிரகிருதி புருஷ விவேகம் பண்ணுகைக்கு உறுப்பான -மனுஷ்ய ஜன்மமுமாய் –
அதிலே பர ரஷணத்துக்கு உறுப்பும் ஆகையாலே
புண்ய சரீரமான ஷத்ரிய ஜன்மமும் வேண்டாம் -என்கிறார் –

அது துர்மான ஹேதுவாகையாலே பிரகிருதி புருஷ விவேகம் பண்ணவும் மாட்டாதே –
பர ரஷணத்துக்கும் உறுப்பும் இன்றிக்கே
பாப யோநியுமாய் இருக்கிற திர்யக்காய் பிறக்க யமையும் –

ஸ்ரீ திருமலை எல்லைக்குள் பிறக்கப் பெறில் -என்கிறார் —
உடல் பிறவி யான் வேண்டேன் -என்கிறார் -குருகாய் பிறப்பேனே -என்கிறார் –
பிறவி அன்றே போலே காணும் அங்கே பிறக்கை –

—————————————————————————

அவதாரிகை –

இங்குத்தை போகங்களில் காட்டில் நிலை நின்ற போகங்களுமாய் இது போலே சாவதி யன்றியே
நிரவதியுமாய் இருக்கும் இறே ஸ்வர்க்கத்தில் போகம்
அவை பெற்றால் செய்வது என்னீர் என்ன –
அவையும் கீழில் கழித்த பூமியில் போகமும் இரண்டும் கூடக் கிடக்கிலும் வேண்டா என்கிறார் –

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-

பதவுரை

ஆனாத செல்வத்து–அழியாத (யௌவநமாகிய) ஸம்பத்தை யுடைய
அரம்பையர்கள்–அப்ஸரஸ் ஸ்த்ரீகள்
தன் சூழ–தன்னைச் சூழ்ந்து நிற்க
வான் ஆளும் செல்வமும–மேலுலகத்தை அரசாளுகின்ற ஐச்வர்யத்தையும்
மண் அரசும்–இப் பூலோகத்தை அரசாளும் ஆட்சியையும்
யான் வேண்டேன்–(வருத்தமின்றிக் கிடைப்பதாயினும்) யான் விரும்ப மாட்டேன்
தேன் ஆர் பூ சோலை–தேன் மிக்க மலர்களுள்ள சோலைகளை யுடைய
திருவேங்கடம்–திருவேங்கட மலையிலிருக்கின்ற
சுனையில்–சுனைகளிலே
மீன் ஆய் பிறக்கும்–ஒரு மீனாகப் பிறக்கத் தக்க
விதி–வாக்கியத்தை
உடையேன் ஆவேன்–உடையவனாகக் கடவேன்.

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் –
கெடாத சம்பத்து -அதாவது அழியாத யௌவன ஸ்ரீயை யுடைய அப்சரஸ் ஸூக்கள்

தற் சூழ
இவன் தான் தப்ப நினைத்தாலும் தப்ப ஒண்ணாத படி அவர்கள் மேல் விழ –

வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
ஸ்வர்க்காதிகள் அனுபவிக்கும் சம்பத்தோடு கூட
கீழில் கழிந்த ராஜ்ய ஸ்ரீ யையும் கூட்டினாலும் வேண்டேன் –

வேண்டேன் -என்கிறது –
இவற்றுக்கு குறை உண்டாய் அன்று –
நான் நினைத்த புருஷார்த்தம் அல்லாமையாலே வேண்டேன் என்கிறார் –
நீர் வேண்டி இருப்பது என் என்ன –

தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
தேன் மிக்கு இருந்துள்ள பொழில் என்னுதல் –
வண்டுகள் மிக்க பொழில் என்னுதல் –
பொழில் சூழப் பட்டு இருக்கிற ஸ்ரீ திருமலையில் சுனைகளில்

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே—
கீழ்ச் சொன்ன குருகாய் பிறக்கில் அதுக்கு சிறகு உண்டாகையாலே ஸ்ரீ திருமலையில் அல்லனாய்
கழியப் பறக்கைக்கு யோக்யதை யுண்டு இறே
அப்படியும் ஓன்று அன்றியே
உத்பத்தி ஸ்திதி லயங்களுக்கு ஸ்ரீ திருமலையிலேயாய் மீனாய்ப் பிறப்பேன் -என்கிறார் –

பிறக்கும் விதியுடையேன் ஆவேனே –
இப்போது மீனாய் பிறக்கவும் வேண்டா
ஒரு ஸூஹ்ருதத்தாலே அந்த ஜன்மம் மேல் வரும் என்று திண்மை பெறவும் அமையும் என்கிறார் —

——————————————————————————–

அவதாரிகை –

பார தந்த்ர்யத்துக்கு உறுப்பாகப் பெறில் கீழில் கழிந்த மனுஷ்ய ஜன்மமே யாகிலும் அமையும் என்கிறார் –

பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3-

பதவுரை

பின்னிட்ட சடையானும்–திரித்து விட்ட சடையை யுடையவனான சிவனும்
பிரமனும்–சதுர்முகனும்
இந்திரனும்–தேவேந்திரனும்
துன்னிட்டு–நெருக்கி
புகல் அரிய–உள்ளே புகுவதற்கு ஸாத்யமில்லாமலிருக்கின்ற
வைகுந்தம் நீள் வாசல்–பூலோக வைகுண்டமாகிய திருமலையிலுள்ள திருக்கோயிலின் நீண்ட திருவாசலிலே
மின் வட்டம் சுடர் ஆழி–மின்னலை வளைத்தாற்போல சோதி மயமாய் விளங்குகின்ற வட்ட வடிவமான சக்ராயுதத்தை யுடைய
வேங்கடம் கோன் தான்–திருவேங்கடமுடையான்
உமிழும்–வாய்நீருமிழ்கின்ற
பொன் வட்டில்–தங்க வட்டிலை
பிடித்து–கையிலேந்திக் கொண்டு
உடனே புக பெறுவேன் ஆவேனே–அந்தரங்க பரிஜநங்களுடனே நானும் உள்ளே புகும் பாக்கியத்தைப் பெறக் கடவேன்

பின் இட்ட சடையானும் –
பின்னப் பட்ட சடையான் என்னுதல் –
பின்னே நாலப்பட்ட சடையான் -என்னுதல்
பின்னே வர்த்திக்கக் கடவன் இறே புத்ரன்-அப்படியே ப்ரஹ்மாவின் பின்னே நிற்கும் சடையான் என்னுதல் –

பிரமனும் –
இவனுக்கு ஜனகனான ப்ரஹ்மாவும்

இந்த்ரனும்
ச ப்ரஹ்ம ச சிவ -என்றால் இவர்களோடு ஒக்க –
சேந்திர-என்னும்படியான இந்த்ரனும்

துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
ஒருவருக்கு ஒருவர் முன்பு போக வேண்டி இருக்கையாலே புக வரிதாய் இருக்கிற
வைகுந்த நீள் வாசலிலே –

மின் வட்ட சுடர் ஆழி –
மின்னை வளைத்தால் போலே ஜ்யோதிச்சையும் உடைத்தாய் –
சுற்றும் வாயையும் உடைத்தாய் இருக்கிற
ஸ்ரீ திரு வாழி யாழ்வானை யுடைய

வேம்கட கோன் தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே–
ப்ரஹ்ம ருத்ராதிகள் நெருக்கிப் புகப் பெறாதே நிற்க –
பணிக்குக் கடவன் -இவனைப் புகுர விடு -என்று
உள்ளே அந்தரங்க வர்த்திக்கக் கடவர்களோடே நானும் சஜாதீயனாகப் புக வேணும் –

—————————————————————————–

அவதாரிகை –

மனுஷ்ய சரீரம் ராஜாவாகைக்கும் பொதுவாகையாலே-அது வேண்டா —
ஸ்ரீ திரு வேங்கடமுடையானுக்கு உறுப்பாம் படி
ஸ்ரீ திருமலையிலே நிற்பதொரு ஸ்தாவரமாக வமையும் நான் என்கிறார்

ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

பதவுரை

ஒண் பவளம் வேலை உலவு–ஒளியுள்ள பவழக் கொடிகளைக் கரையிலே கொணர்ந்து கொழித்து (அலைகள்) உலாவுகிற
தண் பாற்கடலுள்–குளிர்ந்த திருப்பாற்கடலிலே
கண் துயிலும்–யோக நித்திரை செய்தருள்கின்ற
மாயோன்–ஆச்சரிய சக்தி யுக்தனான எம் பெருமானுடைய
கழல் இணைகள்–இரண்டு திருவடிகளை
காண்பதற்கு–ஸேவிக்கும் படியாக
பண் பகரும் வண்டு இனங்கள்–இசையையே பேசுகிற வண்டுகளின் கூட்டங்கள்
பண் பாடும் வேங்கடத்து–பண்ணிசை பாடப் பெற்ற திருமலையிலே
செண்பகம் ஆய் நிற்கும் திரு உடையேன் ஆவேன்–சண்பக மரமாய் நிற்கும் பாக்கிய முடையேனாகக் கடவேன்.

ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்-
ஒள்ளிய பவளத்தை கரையிலே கொடு வந்து கொழிக்கிற பாற் கடல் -என்னுதல்
ஒள்ளிய பவளங்களை கொண்டு உலாவுகிற திரைகளை உடைய
ஸ்ரமஹரமான திருப் பாற் கடலிலே என்னுதல்

கண் துயிலும் மாயோன்-
ஸ்ரீ திருப் பாற் கடலிலே -கிடந்ததோர் கிடக்கை -என்று சொல்லும்படி
கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனானவன் –

கழல் இணைகள் காண்பதற்கு
அங்குச் சென்று கிட்டிக் காண ஒண்ணாத அருமை தீரக் காணலாம் தேசத்திலே காண்கைக்காக-

பண் பகரும் –
இயலைக் கற்று சிஷா பலத்தாலே இசை வரும் தனைய வார்த்தை சொல்லும் போதும் பண்ணாய் இருக்கை

வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
தாங்கள் பாடுகிற பாட்டுக்கு இசைந்து வண்டினங்களானவை பண் பாடுகிற ஸ்ரீ திரு மலையிலே

செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே
ஸ்ரீ திருமலையிலே செண்பகமாய் நிற்கும் சம்பத்து உண்டாக வேணும் –
அதாவது -பகவத் பிரத்யாசத்தி இறே பிராப்யம்
அது கிட்டுமான பின்பு ஸ்தாவரமாய் நிற்கவும் அமையும்-
மேலே ஏறின சைதன்யத்தாலே கார்ய கரம் இல்லை –என்கிறார் –

————————————————————– –

அவதாரிகை –

செண்பகமானால் பரிமளத்துக்காக உள்ளே கொண்டு புகுவார்கள் என்று
ஒரு பிரயோஜனத்தை கணிசித்ததாம் இறே –
அப்படியும் ஒன்றும் இல்லாத தம்பகமாகவும் அமையும் என்கிறார் –

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –4-5-

பதவுரை

கம்பம்–தன்னைக் கண்டவர்கட்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற
மதம் யானை–மதங்கொண்ட யானையினது
கழுத்து அகத்தின் மேல் இருந்து–கழுத்தின் மீது வீற்றிருந்து
இன்பு அமரும்–நாநாவித ஸுகங்களைப் பொருந்தி அனுபவிக்கும்படியான
செல்வமும்–ஐசுவர்யத்தையும்
இவ் அரசம்–அதற்குக் காரணமான இந்த அரசாட்சியையும்
யான் வேண்டேன்–நான் விரும்ப மாட்டேன்:
எம்பெருமான்–எமது தலைவனும்
ஈசன்–(எல்லாவுலகுக்கும்) தலைவனுமான பெருமானுடைய
எழில் வேங்கடம் மலை மேல்–அழகிய திருமலையிலே
தம்பகம் ஆய் நிற்கும்–புதராய் நிற்கும்படியான
எழில் வேங்கடம்
தவம் பாக்கியத்தை
உடையேன் ஆவேன் -உடையவனாகக் கடவேன்.

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
கண்டார் எல்லாம் நடுங்கும்படி மதிப்பை உடையவனை என்னுதல் –
மதத்தாலே கம்பத்தின் நின்றும் விட ஒண்ணாத படி நிற்கும் யானை என்னுதல் –
ஒருவராலும் மேற் கொள்ள ஒண்ணாதாகிலும் ராஜாக்களை மேற்கொள்ள ஓட்டும் இறே யானைகள்
எல்லார்க்கும் பயாவஹமான யானையை மேற் கொண்டு தன் கருத்திலே நடத்தி

இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
அங்கே இருந்து எல்லா போகங்களும் புஜிக்கும் சம்பத்தும் அதுக்கு அடியான ராஜ தர்மமும் யான் வேண்டேன் –
நீர் வேண்டுவது என் என்னில்

எம்பெருமான் ஈசன் –
அகில ஜகத் ஸ்வாமி அஸ்மத் ஸ்வாமி

எழில் வேம்கட மலை மேல்
எல்லார்க்கும் ஸ்வாமி யாய் இருந்து வைத்து என் பக்கலிலே விசேஷ கடாஷத்தை பண்ணின என்னதான
எழிலை யுடைய ஸ்ரீ திருமலையிலே –

தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனோ –
ஒரு பிரயோஜனத்துக்கு காகாதே அங்கே மூத்தற்று தீய்ந்து போவதொரு ஸ்தாவரமாம் தவம் உடையன் ஆவேனே –
அநேக ஜன்ம தப பலம் என்று இருக்கிறார் காணும் இது தன்னை –

——————————————————————————-

அவதாரிகை –

ஸ்தாவரமானால் ஒரு நாள் உண்டாய் ஒரு நாள் இன்றியே போம் இறே -அங்கன் இன்றியே
என்றும் ஒக்க உண்டாய் இருந்த திருமலையிலே ஏக தேசமாக வேணும் நான் -என்கிறார்

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –4-6-

பதவுரை

மின் அனைய நுண் இடையார்–மின்னல் போல் ஸூக்ஷ்மமான இடையே உடையவர்களாகிய
உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம்–ஊர்வசியும் மேனகையும் போலழகியவர்களான ஸ்த்ரீகளின்
பாடலொடும் ஆடல் அவை–பாட்டும் ஆட்டமுமாகிய அவற்றை
ஆதரியேன்–யான் விரும்ப வில்லை
வண்டு இனங்கள்–வண்டுகளின் கூட்டம்
தென்ன என பண் பாடும்–” தென தென ” என்று ஆளத்தி வைத்து இசை பாடப் பெற்ற
வேங்கடத்துள்–திருமலையிலே
அன்னனைய பொன் குவடு ஆம்–அப்படிப்பட்ட பொன் மயமான சிகரமாவதற்கு உரிய
அரு தவத்தன் ஆவேன்–அருமையான தவத்தை யுடையவனாகக் கடவேன்.

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்-அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்-
மின் போலே நுண்ணிய இடையை உடையரான தேவ ஸ்திரீகளைப் போலே அழகியராய் இருக்கிற
ஸ்திரீகளுடைய ஆடல் பாடல்களில் எனக்கு ஆதரம் இல்லை

தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
தென் தென் என்று ஆளத்தி வைத்து வண்டினங்கள் பண் பாடுகிற ஸ்ரீ திருமலையிலே

அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –
அப்படிப்பட்ட பொற்குவடம் என்னும் அத்தனை -வேறு உபமானம் இல்லை –

அரும் தவததேன் ஆவேனே –
ஸ்ரீ திருவேங்கடமுடையானுக்கு அவ்வருகு இருக்கில் இறே –
ஆகையால் அரும் தவத்தன்-என்னக் குறை இல்லை இறே –

———————————————————–

அவதாரிகை –

ஸ்ரீ திருமலையில் அதிகாரமானால் ஏற வல்லார் அனுபவித்து –
மாட்டாதார் இழக்குமதாய் இருக்கும் இறே
அப்படி இன்றியே எல்லார்க்கும் அனுபவ யோக்யமாய் இருக்கும்
கானாறாக வேணும் நான் என்கிறார் –

வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே– 4-7-

பதவுரை

பிறை ஏறு சடையானும்–இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையை யுடைய சிவனும்
பிரமனும்–ப்ரஹ்மாவும்
இந்திரனும்–தேவேந்திரனும்
முறை ஆய–தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற
பெரு வேள்வி–பெரிய பாகங்களின் பயனாக
குறை முடிப்பான்–(அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும்
மறை ஆனான்–வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய
வெறி ஆர் தண் சோலை–பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளை யுடைய
திருவேங்கடம் மலை மேல்
நெறி ஆய் கிடக்கும்–(போகிற) வழியாய்க் கிடக்கின்ற
நிலை–நிலையை
உடையேன் ஆவேன்–உடையவனாகக் கடவேன்.

வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் –
ஆகாசப் பரப்புக்கு எல்லாம் சந்தரன் ஒருவனுமே யானாப் போலே லோகம் எல்லாம் தன்
வெண் கொற்றக் குடைக்கீழே ஒதுங்கும் படியாக

மன்னவர் தம் கோனாகி –
நஷத்ர தாரா கணங்கள் சந்த்ரனை சேவித்து இருக்குமா போலே ராஜாக்கள் எல்லாம் வந்து
சேவித்து இருக்கும் படி ராஜராஜனாய்

வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
வேறு பட இருந்து கொண்டாடும் சம்பத்து எனக்கு பிரதிபத்தி விஷயமாய் இருக்கிறது இல்லை

தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
தேன் மிக்கு இருந்துள்ள சோலையை உடைய ஸ்ரீ திருமலை மேல்

கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே–
சஹ்யம் பற்றினதாகில் கீழே போம் இறே –
அங்கே சுவறிப் போம் காட்டாறுகள் அபிசந்தியை யுடையேனாக வேணும் –

—————————————————————

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை யானான்
வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே– 4-8-

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
சாதக வேஷம் தோற்றும் படி ஜடையோடு இருக்கச் செய்தே ஸூ க பிரதானன் என்று தோற்றும்படி

பிறையை தரித்துக் கொண்டு இருக்கிற ஹரனும் –
அவனுக்கு ஜனகனான ப்ரஹ்மாவும் -சேந்திர -என்னும் படியான இந்த்ரனும் –

முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் –
தந்தாமுடைய அதிகார அனுகுணமாகப் பண்ணும் யஜ்ஞ பலமான அதிகாரங்களைக் கொடுக்குமவன் –

மறை யானான்
ப்ரஹ்மாதிகளுக்கு-ஆஸ்ரயணீயம் என்னும் வேதைக சமதி கம்யனானவன்

வெறியார் தண் சோலை திருவேங்கட மலை மேல் நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே–
பரிமளம் மிக்கு குளிர்த்தியை உடைய ஸ்ரீ திருமலை மேலே ஆறானாலும் ஒருக்கால் பெருகினால் விநியோகப்பட்டு
வற்றினால் விநியோகப்படாது இறே
அங்கன் இன்றியே எப்போதும் ஒக்க வைஷ்ணவர்கள் சஞ்சரிக்கையாலே அவர்கள் பாத ரேணு படும்படி வழியாய்க் கிடக்கும்
துணிவு உடையேன் ஆவேனே –
தொண்டர் அடிப்பொடி யாட நாம் பெறில் -என்று இருக்குமவர் இறே –

——————————————————

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

பதவுரை

செடி ஆய–செடி போல் அடர்ந்துள்ள
வல் வினைகள்-கொடிய கருமங்களை
தீர்க்கும்–(ஆச்ரிதர்க்குப்) போக்கி யருள்கிற
திருமாலே–ஸ்ரீய:பதியான பெருமானே!
நெடியானே–பெரியோனே!
வேங்கடவா–திருவேங்கட முடையானே!
நின் கோயிலின் வாசல்–உனது ஸந்நிதியின் உள் வாசலிலே
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்படி ஆய் கிடந்து–பாகவதர்களும் மற்றைத் தேவர்களும்
அப்ஸரஸ் ஸ்த்ரீகளும் இடைவிடாது ஸஞ்சரிக்கப் பெற்ற படியாய்ப் பொருந்தி
உன் பவளம் வாய் காண்பேன்–உனது பவழம் போன்ற திருவதரத்தைக் காண்பேனாகக் கடவேன்.

செடியாய வல் வினைகள் தீர்க்கும் –
தன திருவடிகளிலே தலை சாய்த்தாருடைய பாப பலமான சம்சார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்குமவன் யாய்த்து –
செடி -பாபம் –

திரு மாலே!
அதுக்கு நிபந்தனம் கூட இருந்து செய்விப்பார் உண்டாகை

நெடியானே!
அவளாலும் -என்னாலும் பொறுக்கப் போகாது -என்ற போது –
என்னடியார் அது செய்யார் -என்று ஆஸ்ரித விஷயத்தில்
ஓரம் எல்லை காண ஒண்ணாதவன் –

வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
தேவரீருடைய திரு வாசலிலே

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும் படியாய் கிடந்தது –
அநந்ய பிரயோஜனரும் –
பிரயோஜனாந்தர பரரும்-
அந்ய பரரும் கிடந்தது சஞ்சரியா நின்றால்
ஒரு நினைவுற்று அசேதனவத் கிடக்க வேணும்

உன் பவள வாய் காண்பேன –
பார தந்த்ர்யத்துக்கு அசேதன சமாதியாகவும் வேணும் –
அது புருஷார்த்தமாகைக்கு காணவும் வேணும் –

—————————————————————————–

அவதாரிகை –

கிட்டும் அளவும் வேண்டா என்கிறீர் –
கிட்டின வாறே அனுபவிக்கிறீர் என்ன -அவை கிட்டினாலும் வேண்டா என்கிறார் –

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–

பதவுரை

உம்பரு உலகு–மேலுலகங்களை யெல்லாம்
ஒரு குடை கீழ்–ஒரு கொற்றக் குடையின் நிழலிலே
ஆண்டு–அரசாண்டு
உருப்பசி தன்–ஊர்வசியினுடைய
அம்–அழகிய
பொன் கலை அல் குல்–பீதாம்பர மணிந்த அல்குலை
பெற்றாலும்–அடையப் பெறினும்
ஆதரியேன்–(அதனை) விரும்ப மாட்டேன்;
செம் பவளம் வாயான்–சிவந்த பவழம் போன்ற வாயை யுடையனான
எம்பெருமான்–எனது அப்பனுடைய
திருவேங்கடம் என்னும் பொன் மலை மேல்–திருவேங்கட மென்ற பெயரை யுடைய அழகிய திருமலையின் மேல்
ஏதேனும் ஆவேன்–ஏதேனுமொரு பதார்த்தமாகப் பிறக்கக் கடவேன்

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் –
உபரிதன லோகங்கள் எல்லாம் தன் ஒரு முத்தின் குடைக் கீழே செலுத்தி

உருப்பசி தன் அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
அவற்றைக் கிட்டுவித்தாலும் எனக்கு ஆதரம் பிறவாது

செம் பவள வாயான்
உருப்பசியைக் கண்டால் அநாதரிக்கும் படி யாய்த்து உள்ளு நிற்கிற விஷயத்தின் படி –

திரு வேம்கடம் என்னும் எம்பெருமான் பொன் மலை மேல் –
என்னாயனுடைய மலை மேல்
என்னாயனுடைய ஸ்லாக்யமான ஸ்ரீ திருமலையிலே

ஏதேனும் ஆவேனே –
ஸ்ரீ அனந்தாழ்வான் இவ்விடத்துக்கு -ஸ்ரீ திருவேங்கடமுடையான் தானாகவே அமையும் -என்னும்
அது என் என்னில் –
சேஷ பூதர் திரளுக்கு புறம்பான சேஷியாகிலும் அமையும் என்கை

அங்கன் அன்றிக்கே ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –
நாம் அறிய வேண்டா
திரு வேங்கட முடையானும் அறிய வேண்டா –
கண்டாரும் அறிந்து ஸ்லாகிக்கவும் வேண்டா
ஸ்ரீ திருமலை மேலே உள்ள தொரு பதார்த்தமாக அமையும் -என்றார் –

——————————————————————–

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11-

பதவுரை

கொல் நவிலும்–(பகைவர்களைக்) கொல்லுதலைப் பயின்ற
கூர் வேல்–கூர்மையான வேலாயுதத்தை யுடைய
குல சேகரன்-குல சேகராழ்வார்
மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன்– நிலை பெற்ற குளிர்ச்சி யுள்ள சாரல்களை யுடைய
வட வேங்கட மலையில் எழுந்தருளி யிருக்கிற பெருமானது
பொன் இயலும் சே அடிகள்–பொன்போற் சிறந்த சிவந்த திருவடிகளை
காண்பான்–ஸேவிப்பதற்கு
புரிந்து–ஆசைப்பட்டு
இறைஞ்சி–வணங்கி
சொன்ன–அருளிச் செய்த
பன்னிய நூல் தமிழ்–ஆராய்ந்த நூல்களிற் கூறிய இலக்கணத்துக்கு இசைந்த தமிழ்ப் பதிகத்தை
வல்லார்–கற்று வல்லவர்
பாங்கு ஆய பத்தர்கள்–அப்பெருமான் திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர்

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன் பொன் இயலும் சேவடிகள் காண்பான்-
கண்டால் கால் வாங்க மாட்டாதே பிணிப்ப்படும்படி
ஸ்ரமஹரமான பர்யந்தத்தை உடைய தமிழுக்கு எல்லையான
ஸ்ரீ திருமலையை உடையவனுடைய ஸ்லாக்யமான திருவடிகளைக் காண்கைக்காக

புரிந்து இறைஞ்சி
காண வேண்டும்படி பக்தியை உடையரேத் தலையாலே வணங்கி கவி பாடினாராய்த்து

கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பிரதி பஷத்தை வெல்ல வல்லார் போலே யாய்த்து கவி பாடி இருக்கும் படியும்

பன்னிய நூல் தமிழ் வல்லார்
பரம்பின லஷணோபேதமான தமிழ்த் தொடையை வல்லவர்கள்

பாங்காய பத்தர்களே –
இங்கேயே இருந்து -அது வர வேணும் இது வர வேணும் என்னாதே
அவனுக்கு இஷ்ட விநியோஹ அர்ஹம் ஆவார்கள் –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -3–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

அவதாரிகை –

பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேன் -என்று –
பகவத் பிராவண்யம் ததீய சேஷத்வ பர்யந்தமாய்
அவர்கள் அல்லது செல்லாமை பிறக்கும் அளவும் உண்டு –அது சொல்லிற்று கீழில் திரு மொழியில்

எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே -என்றும்
மானிடவர் அல்லர் என்று மனத்தே வைத்தேனே -என்றும் –
பித்தர் என்றே பிறர் கூற -என்றும் -பிறக்கும் அவஸ்தை உண்டு
பகவத் பிராவண்யத்தாலே முன்பில் அதுக்கு சங்கல்பமே யாய்த்து வேண்டுவது –
அடிமை அவர்கள் கொள்ளக் கொள்ள விறே செய்வது
ப்ராதி கூல்யத்தில் வர்ஜித்தே நிற்க வேணும்
பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரத்தாலே அநு பாவ்யம் சொன்ன சாஸ்திரம்
தானே இறே இத்தை த்யாஜ்யம் என்றதும்
ஜ்ஞான கார்யமாய் இறே ததீயர் உத்தேச்யம் ஆகிறதும்
தமோ குண பிரசுரரோடு சஹவாசம் பொருந்திற்றாகில் அஜ்ஞான கார்யம் இறே –

மத்தஸ் சர்வமஹம் -என்று சாமான்ய புத்தி பண்ணின ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான்-
பூர்வ அவஸ்தையில் மத்பிது என்று அவனை
ரஷிக்கப் பார்த்தவன் ப்ராதிகூல்யத்தில் விஞ்சின வாறே அவனை விட்டுக் காட்டிக் கொடுத்தான் இறே

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஆந்தனையும் ஹிதம் சொல்லிப் பார்த்து தன் ஹிதத்துக்கு மீளாத வவஸ்தை வானவாறே
நெருப்புப் பட்ட விடத்திலே விலக்க ஒண்ணாத போது தன்னைக் கொண்டு
தான் தப்புவாரைப் போலே -ப்ராதிகூல்யம் அசலிட்டு
தன்னளவும் வரும் என்று தன்னைக் கொண்டு தான் தப்பினான் இறே

ப்ராதி கூல்யமாகிறது –
தேஹாத்மா அபிமானிகள் ஆகையும்-
விஷய பிரவணராய் இருக்கையும் –
தேஹாத் வ்யதிரிக்த வேறொரு வஸ்து உண்டு என்று அறியாது இருக்கையும் இறே –
இப்படி இருப்பாரோடு எனக்குப் பொருந்தாது என்கிறார் இத் திருமொழியில் –

—————-

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்
வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-1-

பதவுரை

மெய்யில் வாழ்க்கையை–ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு பொருந்தி வாழ்வதையே
மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.
மெய் என கொள்ளும்–பாரமார்த்திகமாகக் கருதுகின்ற
இவ் வையம் தன்னோடும் –இவ்வுலகத்தாரோடு
யான் கூடுவது இல்லை–(இனி) நான் சேர்வதில்லை
ஐயனே–‘ஸ்வாமீ’
அரங்கா–‘ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன்–என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) அழையா நின்றேன்;
என் தன் மாலுக்கே–என்னிடத்தில் வாத்ஸல்யமுடைய எம்பெருமான் பக்கலிலேயே
மையல் கொண்டொழிந்தேன்–வ்யாமோஹடைந்திட்டேன்.
மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும்
மெய் என்றும் -பொய் எனபது நில்லாமையும் -நிலை நிற்குமத்தையும் சொல்லுகிறது –
நிலை நில்லாததிலே -நித்யமான ஆத்ம வஸ்துவைப் பண்ணும் பிரதிபத்தியைப் பண்ணும் என்னுதல் –
மெய்யிலே உண்டான வாழ்க்கை – என்னுதல் –
அதாகிறது பிரகிருதியைப் பற்றி வரும் ப்ராக்ருத போகங்கள் இறே

இவ் வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
தேஹாத்ம அபிமாநிகளாய் இருப்பாரோடு எனக்கு ஒரு சேர்த்தி இல்லை –

ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
தேஹாத்ம வ்யதிரிக்தம் வேறு ஒருவர் உண்டு -என்று அறிந்தவன் -என்கிறார்

ஐயனே –
நிருபாதிக பந்துவே

அரங்கா –
அனுஷ்டான பர்யந்தம் ஆக்கின முதலித்தாப் போலே ஸ்ரீ கோயிலிலே வந்து ஸூலபனானவனே-

என்று அழைக்கின்றேன் –
கார்யப் பாடறக் கூப்பிடா நின்றேன்

மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே –
அவன் எனக்குப் பித்தேறின படியைக் கண்டு நானும் அவனுக்கு பித்தனானேன் –

——————————————————————————–

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..

பதவுரை

நூலின் நேர்–நூல் போன்று (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய பெண்டிர் விஷயத்திலேயே பொருந்தி யிருக்கிற
ஞாலம் தன்னொடும்–(இந்த) ப்ராக்ருத மனிதரோடு
யான் கூடுவது இல்லை;-
ஆலியா–(காதலுக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடி
அரங்கா என்று–‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று கூப்பிட்டு
அழையா–கூப்பிட்டு
என் தன் மாலுக்கே–என் மேல் வ்யாமோஹமுடையனான எம்பெருமான் திறத்தினாலேயே
மால் எழுந்தொழிந்தேன் – மோஹமுற்றேன்.

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
நூல் போலே நுண்ணிய இடையை யுடையராய் இருக்கும் ஸ்திரீகள் திறத்திலே நிற்கும் –
ஒரு அவயவத்தை அனுபவிக்கப் புக்கால் மற்ற அவயவத்தில் போக மாட்டாதே நிற்கும்

ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
பிராப்த விஷயத்தில் இருக்கக் கடவ இருப்பை அப்ராப்த விஷயத்தே இருக்கும் அவர்களோடு
எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை

ஆலியா அழையா அரங்கா! என்று
இவர்கள் அப்ராப்த விஷயத்திலே படும் பாடெல்லாம் ப்ராப்த விஷயத்தே படுமவன் நான் என்கிறார் –

ஆலியா அழையா அரங்கா! என்று-
ப்ரீதி பிரகர்ஷத்தாலே இருக்க மாட்டாதே –
ஆலியா –
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி அடைவு கெடக் கூப்பிட்டு

மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே –
தேநத்தேதம நு வ்ரதா-என்னுமா போலே
அவன் என் பக்கல் வ்யாமுக்தன் ஆன படி கண்டு நானும் பித்தேறினேன் –

—————————————————————-

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3-

பதவுரை

மாரனார்–மன்மதனுடைய
வரி வெம் சிலைக்கு–அழகிய கொடிய வில்லுக்கு
ஆள் செய்யும்–ஆட் பட்டு (விஷய ப்ரவணராய்த்) திரிகிற
பாரினாரொடும்–(இப்) பூமியிலுள்ள ப்ராக்ருதர்களோடு
யான் கூடுவது இல்லை-:
ஆரம் மார்வன்–முக்தாஹாரத்தைத் திரு மார்பிலே அணிந்துள்ளவனாய்
அனந்தன்–அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வ பாவங்களை யுடையவனாய்
நல் நாரணன்–ஸர்வ ஸ்வாமியாய்
நரக அந்தகன்–அடியவர்களை நரகத்தில் சேராதபடி காத்தருள்பவனான
நரகாந்தகன்-நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம்.
அரங்கன்–ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
பித்தன்–மோஹமுடையனாயிரா நின்றேன்.

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்-பாரினாரோடும் கூடுவதில்லை யான்-
காமனுடைய -தர்ச நீயமாய் தப்ப ஒண்ணாத படியாய் கொடிதாய் இருக்கிற
வில்லுக்கு குடிமகனாய்த் திரியும் பாரினாரோடும் கூடுவதில்லை யான்-என்னுதல் –
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தனக்கு ஆட் செய்யுமவன் நான்

ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் நாரணன் நர காந்தகன் பித்தனே –
ஆர மார்வன் அரங்கன்-
ஆகர்ஷகமான ஒப்பனையை உடைய ஸ்ரீ பெரிய பெருமாள்

அனந்தன் –
மனுஷ்யத்வே பரத்வம் போலே இங்கே வந்து ஸூலபராய்க் கிடக்கச் செய்தே
பரிச்சேதிக்க ஒண்ணாத படி இருக்கிறவர் –

நல் நாரணன் –
தன் உடமையை விட மாட்டாமையாலே அழுக்கை விரும்புமவன்

நர காந்தகன் பித்தனே –
அவன் தன் வாத்சல்யத்தாலே மேல் விழா நிற்க
நடுவே விரோதியும் போய்க் கொடு நிற்கும் இறே –
இப்படி இருக்கிறவர்க்குப் பித்தனே –

—————————————————————————

உண்டியே வுடையே உகந்து ஓடும் இம்
மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்
அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை
உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே–3-4-

பதவுரை

உண்டியே–ஆஹாரத்தையும்
உடையே–வஸ்திரத்தையுமே
உகந்து ஓடும்–விரும்பி (க் கண்ட விட மெங்கும்) ஓடித் திரிகிற
இ மண்டலத்தொடும்–இந்தப் பூமண்டலத்திலுள்ள பிராகிருதர்களோடு
யான் கூடுவது இல்லை
அண்டம் வாணன்–பரம பதத்திலே வாழ்பவனும்
வல் பேய் முலை உண்ட வாயன்–கல் நெஞ்சை யுடைய பூதனையின் முலையை அமுது செய்த வாயை யுடையனுமான
அரங்கன் தன்–ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில்
உன்மத்தன்–பைத்தியம் பிடித்தவனா யிரா நின்றேன்

உண்டியே வுடையே உகந்து ஓடும்
உபாசனத்துக்கு சரீரம் வேண்டுகையாலே -அது தரிக்க வேண்டும் அளவன்றியிலே
எல்லாவற்றையும் அழிய மாறி உண்டியும் உடையும் ஆக்கும்

இம் மண்டலத்தோடும் கூடுவதில்லை யான்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்று இருக்க –
ஒரு விபூதி உண்டானாப் போலே
ப்ராக்ருத போகங்களை விரும்புகைக்கு ஒரு விபூதி இறே இதுவும்

அண்ட வாணன் அரங்கன்
அண்டாந்த வர்த்திகளுக்கு நிர்வாஹகன் –
இதுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் இருப்பு ஒழிய இதினுள்ளே புகுந்து ஸூலபனாய்
ஸ்ரீ கோயிலிலே சந்நிஹிதன் ஆனவன் –

வன் பேய் முலை உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே–
இங்கே வந்து அவதரித்து பிரதி பந்தங்களைத் தானே போக்குமவனுக்குப் பித்தன் நான் –

தன் உன்மத்தன் காண்மினே–
ஔஷத சேவை பண்ணினாரையும் இழக்க ஒண்ணாதாப் போலே –
அவனுடைய குண சேஷ்டிதங்களிலே
அகப்பட்டு பித்தனான என்னைக் கேவல சரீர பரவசரோடே சேர விட ஒண்ணுமோ –

—————————————————–

தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்
நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை
பேதை மா மணவாளன் தன் பித்தனே– 3-5-

பதவுரை

தீது இல் நல் நெறி நிற்க–குற்றமற்ற நல் வழி இருக்கச் செய்தே
(அவ்வழியில் போகாமல்)
அல்லாது செய் நீதியாரொடும்–நல் வழிக்கு எதிர்த்தட்டான வற்றைச் செய்வதை விரதமாகக் கொண்டுள்ள பிராகிருதர்களோடு
யான் கூடுவது இல்லை
ஆதி–(உலகங்கட்கு) முதல்வனாய்
ஆயன்–ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்து ஸர்வ ஸூலபனாய்
அம் தாமரை பேதை மா மணவாளன்–அழகிய தாமரைப் பூவில் அவதரித்த பிராட்டியின் வல்லபவனான
அரங்கன் தன்–ஸ்ரீரங்கநாதன் திறத்தில்
பித்தன்–மோஹங் கொண்டிரா நின்றேன்.

தீதில் நல் நெறி நிற்க
தீமையோடு பிறவாத நல் வழி நிற்க -இவனை ஒழிந்த பலங்களுக்கு-
சாதன அனுஷ்டானம் பண்ணிப் பெரும் பேற்றில்
இழவே நன்று என்னும்படி இறே இருப்பது

அல்லாது செய் நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
இதர புருஷார்த்தங்களை யாசைப்படுகையே யாத்ரையாய் இருப்பாரோடும்
கூடுவது இல்லை யான்

ஆதி ஆயன் அரங்கன்
ஆதி –
பிரமாணங்கள் உபாஸ்ய வஸ்து என்று சொல்லப் படுகிறவன்

ஆயன் –
உபாஸ்ய வஸ்து தான் அரிது என்ன ஒண்ணாதபடி யவதரித்து ஸூ லபனானவன்

அரங்கன் –
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்து பிற்பாடர் இழவாமே-
ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதர் ஆனவர்

அம் தாமரை பேதை மா மணவாளன் தன் பித்தனே–
அழகிய தாமரைப் பூவைத் தனக்கு இருப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபர்
ஆனவருக்கு பித்தனானேன் நான்
ஓரடி இவன் புகுரா நின்றால்-அத்தைக் குவாலாக்கி -அவன் நெஞ்சிலே புண்படும்படி
இவன் பண்ணின அபராதத்தை அவன் காணாத படி இருக்கிற புருஷகார பூதை-

மா மணவாளன் –
அப்ரமேயம் ஹி தத்தேஜ-இவளுக்கு வல்லபனாகையாலே வந்த பெருமை உடையவன்
பித்தன் நான் –

——————————————————————

எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே–3-6-

பதவுரை

எம் பரத்தர் அல்லா ரொடும்–என்னைப் போலே அநந்ய ப்ரயோஜநரா யிராதவர்களோடு;
கூடலன்–(நான்) கூட மாட்டேன்;
உம்பர் வாழ்வை–தேவதைகளின் ஸ்வர்க்கம் முதலிய போகங்களையும்
ஒன்று ஆக–ஒரு புருஷார்த்தமாக
கருதலன்–எண்ண மாட்டேன்;
அமரர்க்கு–நித்ய ஸூரிகளுக்கு
தம்பிரான்–ஸ்வாமியாய்
அரங்கம் நகர்–கோயிலிலே எழுந்தருளி யிருக்கிற
எம் பிரானுக்கு–பெரிய பெருமாள் விஷயத்தில்
த்ழுமையும்–எப்போதும்
பித்தன்–பித்தனாகா நின்றேன்.

எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
என் யாத்ரையே யாத்ரையாய் இராதாரை நாக்கு வளைத்து இருப்பன்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றும் –
வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்றும் இராதாரோடு சம்பந்தம் இல்லை

உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
சம்சாரத்தில் அருசியும் கைங்கர்யத்தில் ருசியும் இல்லையாகில் –
ப்ரஹ்மாதிகள் சம்பத்தே யாகிலும் த்ர்ணவத் கரிப்பன்

தம் பிரான் அமரர்க்கு –
அயர்வறும் அமரர்கள் அதிபதி

அரங்க நகர் எம்பிரானுக்கு –
நித்ய ஸூரிகள் எல்லாம் அனுபவிக்குமா போலே சம்சாரிகள் எல்லாம் இழவாதபடி-
ஸ்ரீ கோயிலிலே வந்து ஸூலபரானவர்

எழுமையும் பித்தனே–
இச் செயலுக்கு என்றுமே பித்தனாய் திரியுமவன் –

—————————————————————————-

எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்
அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே—3-7-

பதவுரை

செம் கண் மால்–புண்டரீகாக்ஷனான எம்பெருமான்
எத் திறத்திலும்–எந்த விஷயத்திலும்
யாரொடும்–கண்ட பேர்களோடே
கூடும் அச் சித்தம் தன்னை–சேர்ந்து கெட்டுப் போவதற்கு உறுப்பான நெஞ்சை
தவிர்த்தனன்–நீக்கி யருளினான்; (ஆதலால்)
அத்தனே–ஸ்வாமியே!
அரங்கா–ஸ்ரீரங்கநாதனே!
என்று அழைக்கின்றேன்–என்று கூவா நின்றேன்;
எம்பிரானுக்கே பித்தனாய் ஒழிந்தேன்-.

எத் திறத்திலும் யாரொடும் கூடும் –
அபாகவதனோடு சம்பாஷிக்க அபிமத புருஷார்த்தங்களை எல்லாம் லபிக்கலாம் என்னிலும்
அத்தையும் கால் கடைக் கொள்ளும் படி யானேன் –

அச் சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்
கண்ணாலே குளிர நோக்கி -தன வ்யாமோஹத்தைக் காட்டி பிறரோடு மனஸ்ஸூ
பொருந்தாத படி பண்ணினான்

அத்தனே!
எனக்கு ஸ்வாமி யானவனே

அரங்கா! என்று அழைகின்றேன்
அந்த ஸ்வாமித்வத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக ஸ்ரீ கோயிலிலே வந்து
ஸூ லபன் ஆனவன் என்று கூப்பிடா நின்றேன்

பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே—
இதர விஷய பிராவண்யத்தோடு பொருந்தாதபடி பண்ணின உபகாரகனுக்கு பித்தனானேன் –

——————————————————————-

பேயரே எனக்கு யாவரும் யானுமோர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்?
ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே —3-8-

பதவுரை

யாவரும்–இவ் வுலகத்தாரடங்கலும்
எனக்கு–என் வரைக்கும்
பேயரே–பைத்தியக்காரர்கள் தான்;
யானும்–(அவர்களிற் காட்டில் விலக்ஷணனான) நானும்
எவர்க்கும்–எவர்களுக்கும்
ஓர் பேயனே–ஒரு பைத்தியக்காரன் தான்;
இது–இவ் விஷயத்தை
பேசி-(விரிவாகச்) சொல்வதனால்
என்–என்ன ப்ரயோஜநமுண்டு?
ஆயனே–‘ஸ்ரீகிருஷ்ணனே!
அரங்கா–ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன்–என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) கூவா நின்றேன்;
எம்பிரானுக்கே பேயனாய் ஒழிந்தேன்-.

பேயரே எனக்கு யாவரும் –
நிலை நின்ற புருஷார்த்தை விட்டு அஸ்திரமான பிராக்ருத போகங்களை விரும்புவதே —
பேயராய் இருந்தார்கள் என்று விட்டேன் நான் –

யானுமோர் பேயனே எவர்க்கும் –
கண்ணால் காண்கிறது ஒழிய வேறு ஓன்று உண்டு என்று பிரமியா நின்றான் –
பித்தனாய் இருந்தான்
என்று விட்டார்கள் இவர்களும் என்னை

இது பேசி என்?
இத்தைப் பரக்கச் சொல்லுகிறது என்

ஆயனே
கண்ணால் காண்கிறது பொய் என்று இராத படி வந்து அவதரித்து
தான் படுத்தின படிகளை எனக்குக் காட்டினவன்

அரங்கா என்று அழைகின்றேன்
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவோடே தலைக் கட்டாத படி ஸ்
ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளின
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி அடைவு கெடக் கூப்பிடா நின்றேன்

பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே —
ஒரு விஷயத்திலே பித்தேறினவன்-நமக்கு இனி யாகான் காண்-விடாய் என்று
இதரர் என்னை உபேஷிக்கும் படி யானேன் –

——————————————————————

அங்கை ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்
கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-

பதவுரை

அம் கை ஆழி–அழகிய திருக்கையிலே திருவாழி யாழ்வானை ஏந்தி யுள்ள
அரங்கன்-ஸ்ரீரங்கநாதனுடைய
அடி இணை–திருவடிகளில்
தங்கு சிந்தை–பொருந்திய மனமுடையவராய்
தனி பெரு பித்தன் ஆம்–லோக விலக்ஷணரான பெரிய பித்தராய்
கொங்கர் கோன்–சேர தேசத்தவர்களுக்குத் தலைவரான
குல சேகரன்–குலசேகராழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சொல்–இப் பாசுரங்களை
இங்கு–இவ் விபூதியிலே
வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
ஏதம் ஒன்று இல்லை–(பகவதநுபவத்திற்கு) ஒருவிதமான இடையூறும் உண்டாக மாட்டாது.

அங்கை ஆழி அரங்கன் அடியிணை-
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளிலே

தங்கு சிந்தைத்
ஸ்ரீ பெருமாள் திருவடிகளுக்கு அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லாமையாலே
அங்கே தங்கு சிந்தையை உடைய

தனிப் பெரும் பித்தனாம்
பகவத் விஷயத்திலே இவர்களோபாதி பித்தேறினார் வேறு ஒருவர் இல்லாமையும் –
சிலவரால் மீட்க ஒண்ணாமையுமான பித்தனாம்

கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
மேலைத் திக்குக்கு நிர்வாஹகரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்தது

இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–
இவற்றில் வல்லவர்களுக்கு இங்கே ஏதம் ஓன்று இல்லையே

ஏதமாவது-
அபாகவாத ஸ்பர்சமாதல்-
பகவத் பிராவண்யத்தில் குறையாதல் –

வரும் துக்கம் போம் என்றும்
இஸ் சம்சாரத்தில் இருக்கும் நாளில்லை –
இத் துக்க பிரசங்கம் உள்ளத்து இவ் விடத்தே இறே –
இவை கற்றவர்களுக்கு இப்பிரசங்கம் உள்ள இத்தேசத்திலே இல்லை –

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்