Archive for November, 2015

பெருமாள் திருமொழி -2–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

அவதாரிகை

பகவத் விஷயத்தில் கை வைத்தார்க்கு சம்பவிப்பன சில ஸ்வ பாவங்கள் உண்டு —
ஆநு கூல்ய சங்கல்ப -ப்ராதி கூலச்ய வர்ஜனம் –
ஆநு கூல்யமாவது -பாகவத விஷயத்திலும் பகவத் விஷயத்திலும் பண்ணுமவை-
பகவத் விஷயம் பூர்ணம் ஆகையாலே
இவனுக்கு ஆநு கூல்யம் பண்ணுகைக்கு துறை இல்லை இறே –

இப்படி துறை இல்லை என்று இவன் கை வாங்காமைக்காக இறே
இவன் உகந்த த்ரவ்யமே தனக்குத் திரு மேனியாகவும்
இவன் திரு மஞ்சனம் பண்ணின போது அமுது செய்து அல்லாத போது பட்டினியுமாம் படி இறே
அவர்களுக்குத் தன்னை அமைத்து வைப்பது –
இப்படி யாய்த்து இல்லையாகில் பரி பூர்ண விஷயத்தில் இவனுக்கு கிஞ்சித் கரிக்கைக்கு துறை இல்லை இறே

ஜ்ஞாநீத் வாத்மைவமேமதம் -என்றும் –
மம பிராணா ஹி பாண்டவா –என்றும்
பத்தராவி -என்றும்
ததீய விஷயத்தில் பண்ணும் ஆநு கூலயமும் பகவத் விஷயத்திலே பண்ணிற்றாம் இறே
ஆகையால் இவரும் தமக்கு இவை இரண்டும் பிறந்தது என்கிறார் –

பகவத் விஷயத்தில் பிறந்த ஆநு கூல்யம் சொன்னார் -கீழில் திரு மொழியில்
ததீய விஷயத்தில் ஆநு கூல்யம் பிறந்தபடி சொல்லுகிறார் -இத் திரு மொழியில் –

—————————————–

முடிய பாகவத விஷயம் உத்தேச்யம் ஆகிறதும் பகவத் விஷயத்தில் அவகாஹித்தார் -என்னுமது இறே
இன்னான் அர்த்தமுடையன் -ஷேத்ரமுடையன் -என்று ஆஸ்ரயிப்பாரைப் போலே –
பகவத் பிரத்யாசத்தி யுடையார் என்று இறே இவர்களைப் பற்றுகிறது
பகவத் விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ண இழிந்தவர்
ஆசார்ய விஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணப் புக்கு
அவர்க்கு நிறமாகச் சொல்லிற்று பகவத் விஷயத்தில் ஜ்ஞான பக்திகளை இறே
ஜ்ஞான வைராக்ய ராசயே-

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-

பதவுரை

தேட்டரும்–(தன் முயற்சியால்) தேடிப் பெறுதற்கு அருமை யானவனும்
திறல்–(தன்னை முற்ற அநுபவிப்பதற்கு உறுப்பான) வலிவைக் கொடுப்பவனும்
தேனினை–தேன் போல் பரம போக்யனும்
தென் அரங்கனை–தென் திருவரங்கத்தில் வாழ்பவனும்
திரு மாது வாழ் வாட்டம் இல் வன மாலை மார்பனை–பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் செய்தற்கிடமாய்
வாடாமல் செவ்வி பெற்றிருக்கிற வன மாலையை அணிந்துள்ள திரு மார்வை யுடையனுமான ஸ்ரீரங்கநாதனை
மால் கொள் சிந்தையர் ஆய்–(அவன் திறத்தில்) மோஹங்கொண்ட மனதை யுடையராய்
ஆட்டம் மேவி–(அந்த மோஹத்தாலே நின்ற விடத்தில் நிற்க மாட்டாமல்) ஆடுவதிலே ஒருப்பட்டு
அலர்ந்து அழைத்து–(பகவந்நாமங்களை) வாய் விட்டுக் கதறி கூப்பிட்டு
அயர்வு எய்தும்–இளைப்படைகின்ற
மெய் அடியார்கள் தம்–உண்மையான அன்புடைய பாகவதர்களின்
ஈட்டம்–கோஷ்டியை
கண்டிட கூடும் ஏல்–ஸேவிக்கப் பெறுவோமாகில்
அது காணும் கண் பயன் ஆவது -கண் படைத்ததற்குப் பயன் அதுவே யன்றோ!

தேட்டரும் –
தாமே வந்து ஸூலபராம் அத்தனை அல்லது
ஸ்வ யத்னத்தால் காண ஒண்ணாது என்கை-

திறல் தேனினை –
ய ஆத்மதா பலதா-என்னுமா போலே –
தன்னையும் கொடுத்து –
தன்னை அனுபவிக்கைக்கு ஈடான பலத்தையும் கொடுக்கும் தேன்-

தேனினை தென் அரங்கனை -திரு மாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை
ஸ்பர்ஹணீயமான ஸ்ரீ திருவரங்கத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்-
திரு மேனியின் ஸ்பர்சத்தாலே-
ஒருக்காலைக்கு ஒரு காலை செவ்வி செவ்வி பெறுமாய்த்து இட்ட திருமாலை –

வாழ்த்தி –
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறபடியே
அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணி

மால் கொள் சிந்தையராய்
பித்தேறின மனஸை உடையராய்

ஆட்ட மேவி –
ஆட வேணும் என்னும் கார்யா புத்யா யன்றியிலே
ப்ரேமம் ஒட்டாமையாலே ஆட்ட மேவி

அலர்ந்து அழைத்து
அலர்ந்து கார்யப் பாடறக் கூப்பிட்டு

அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
க்ரம பிராப்தி பெறாமையாலே -அறிவு குடி போய் பரவசராய்
அநந்ய பிரயோஜனருடைய

ஈட்டம் –
இப்படி இருப்பார் உமக்கு எத்தனை பேர் வேணும் என்ன –

அடியார்கள் குழாங்களை காணப் பெறில்
கண்டிட கூடு மேல் அது காணும் கண் பயன் ஆவதே–
இது கூடிற்றாகில் பிரயோஜனம் கண்ணுக்கு இது அல்லது இல்லை –
த்ருஷ்ட பிரயோஜனம் இது –

——————————————————————

தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-

பதவுரை

தோடு உலாம் மலர் மங்கை–இதழ்கள் மிக்கிருந்துள்ள தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியினது
தோள் இணை தோய்ந்ததும்–திருத் தோள்களோடு அணைய வமுக்கிக் கட்டிக் கொண்டதும்
சுடர் வாளியால்–புகரை யுடைய அம்பினால்
நீடு மா மரம் செற்றதும்–நீண்ட ஸப்த ஸால வருக்ஷங்களைத் துளை செய்து தள்ளியதும்
நிரை மேய்த்ததும்–இப்படிப் பட்ட பகவச் சரிதங்களையே அநுஸந்தித்து
ஆடி–சரீர விகாரம் பெற்று
பாடி–(காதலுக்குப் போக்கு வீடாக வாய் விட்டுப்) பாடி
ஓ! அரங்க!! என்று–‘ஓ அரங்கனே!’ என்று (அவன் திரு நாமங்களைச் சொல்லி
அழைக்கும்–கூப்பிடுகிற
தொண்டர்–கைங்கரியத்தையே நிரூபகமாக வுடைய பாகவதர்களின்
அடி பொடி–திருவடித் தூள்களிலே
நாம் ஆட பெறில்–நாம் அவகாஹிக்கப் பெற்றால் (பிறகு)
கங்கை நீர்–கங்கா ஜலத்திலே
குடைந்து ஆடும் வேட்கை–அவகாஹித்து நீராட வேணுமென்கிற ஆசையானது
என் ஆவது–ஏதுக்கு?

தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும்
இதழ் மிக்கு இருந்த தாமரைப் பூவை வாசஸ் ஸ்தானமாக உடைய
ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருத் தோள்கள் இரண்டையும் தோய்ந்ததும் –
தனியன் பெரு வெள்ளத்திலே இழிந்து அனுபவிக்கத் தேடினது போலே தோய்ந்ததுவும் –

சுடர் வாளியால்-
புகரை உடைய அம்பாலே –

நீடு மா மரம் செற்றதும்-
ஒக்கத்தை உடைத்தான மரா மராமரங்கள் ஏழையும்-பண்டே துளையான வற்றிலே
ஓட்டினால் போலே யாய்த்து -அந்தமாய் பலவத்தரமான சப்த சாலத்தை நிரசித்ததும் –
ஆஸ்ரிதரை விஸ்வசிப்பிக்கும் செயல் இறே

நிரை மேய்த்ததும் –
உபய விபூதி நாயகனாய் இருந்து வைத்து கையிலே ஒரு கோலையும் கொண்டு பசு மேய்த்ததும்
இவையே நினைந்து
இந்த சீலாதி குணங்களையே நினைந்து இவற்றை நினைக்கும் அது ஒழிய
வேறொரு பிரயோஜனத்தையும் கணிசியாதே –

ஆடி பாடி-
ப்ரீதி பிரகர்ஷத்தாலே இருக்க மாட்டாதே ஆடிப்பாடி

அரங்காவோ! என்று அழைக்கும் –
ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி யாற்ற மாட்டாதே கூப்பிடும்

தொண்டர் அடி பொடி ஆட நாம் பெறில் –
பகவத் குண வித்தரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
பாத ரேணுக்களிலே அவகாஹிக்கப் பெறில்

கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே –
எப்போதும் ஒக்க பகவத் சம்பந்தம் உடையராகையாலே தீர்த்த பாதரான
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாத ரேணுக்களிலே அவகாஹிக்கப் பெறில்
கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே –
காதாசித்க சம்பந்தமேயாய் பல சிக்குத் தலைகளிலே புக்கு
உபகதிப்பட்ட கங்கை யாடினால் என்ன பிரயோஜனம் உண்டு
நலம் திகழ் சடையான் -இத்யாதி –
பொதுவானது இறே அது –

——————————————————————————–

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

ஏறு அடர்த்ததும்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச் சுவரான ரிஷபங்கள் ஏழையும் அடர்த்ததும்

ஏனமாய் நிலம் கீண்டதும் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி யோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச்சுவரான விரோதியாய் –
அவர்களுக்கு பிரகாரமான பூமியை பிரளயம் கொள்ள
உதவிற்றிலன் என்னும் அவத்யம் வாராத படி
மஹா வராஹமாய் அண்ட புத்தியிலே புக்கு
ஒட்டின பூமியை ஒட்டு விடுவித்து

முன்னி ராமனாய் மாறு அடர்ததும் –
பிராட்டியைப் பிரித்த பையலை எதிரியாக்கிக் கொன்றதுவும்

மண் அளந்ததும்-
ஸ்ரீ பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதியை போக்கினாப் போலே
இந்த்ரனோடு விரோதித்த மஹா பலியைக் கைக் கொண்ட பூமியை மீட்டு
எல்லை நடந்து கொடுத்ததும்

சொல்லி பாடி –
இவ் வபதானங்களைச் சொல்லி ப்ரீதி பிரகர்ஷத்தாலே பாடி –

வண் பொன்னி பேர் ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு –
காவேரி பெரு வெள்ளமாய் மலைப் பண்டம் கொண்டு வருமா போலே
அமைக்க நில்லாதே
கடல் குடமாக வெள்ளம் இடுகிற கண்ணீரைக் கொண்டு

அரங்கன் கோவில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் –
அங்குப் பாங்காக திரு அலகு பணி செய்து வைத்தால்
இவர்கள் கண்ண நீராலே சேறாக்குவார்கள் யாய்த்து

சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே –
அமங்கலமான புழுகு நெய்யாலே அலங்கரித்து உள்ள தோஷம் தீர
மங்களார்த்தமான ஸ்ரீ வைஷ்ணவர்களின்
திருவடிகளில் அழகிய சேற்றை யணிவன்-

————————————————————————

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-

பதவுரை

தோய்த்த தண் தயிர்–தோய்த்த தண் தயிர்
வெண்ணெய்–வெண்ணையையும்
பால்–பாலையும்
உடன் உண்டலும்–ஒரே காலத்திலே அமுது செய்தவளவில்
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி யானவள்
கண்டு உடன்று–(அந்த களவு தன்னைப்) பார்த்து கோபித்து
ஆர்த்த–(பிறகு அவளாலே) பிடித்துக் கட்டப்பட்ட
தோள் உடை–தோள்களை யுடைய
எம்பிரான்–எமக்குத் தலைவனான
என் அரங்கனுக்கு–என் ரங்கநாதனுக்கு
அடியார்கள் ஆய்–ஆட்பட்டவர்களாய்
நா தழும்ப எழ–நாக்குத் தடிக்கும்படி
நாரணா என்று அழைத்து–நாராயணா! என்று கூப்பிட்டு
மெய் தழும்ப தொழுது–சரீரம் காய்ப்பேறும்படி ஸேவித்து
ஏத்தி–தோத்திரம் பண்ணி
இன்புறும்–ஆனந்தமடைகின்ற
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
சே அடி–திருவடிகளை
என் நெஞ்சம்–என் மனமானது
ஏத்தி வாழ்த்தும்–துதித்து (அவர்களுக்கே) பல்லாண்டு பாடும்

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் –
கடைந்து பிரித்த வெண்ணெய்-
அதுக்கு உறுப்பாக தோய்த்த தயிர் –
அதுக்கு அடியான பால் –

உடன் உண்டலும் –
இவை அடங்கலும் நிச்சேஷமாக ஒருக்காலே யமுது செய்தவாறே

உடன்று
உடைக்கொணா விட்டவாறே கோபித்தாள்-
தீரா வெகுளியளாய் -ஸ்நேஹத்துக்கு அவதி உண்டாகில் இறே-கோபத்துக்கு அவதி உண்டாவது –

ஆய்ச்சி கண்டு-
வாயது கையதுவாகக் கொண்டு அடியோடு கண்டு பிடித்தாள் யாய்த்து

ஆர்த்த தோள் உடை எம்பிரான் –
கண்டவாறே பிடித்துக் கொண்டு கட்டினாள்

எம்பிரான் –
ஆஸ்ரீத ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது செல்லாமை காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கினான்

என் அரங்கனுக்கு அடியார்களாய்-
அவதார காலத்தில் இழந்தார் இழவு தீர வந்து ஸூலபரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய செயலாலே
எழுதிக் கொடுத்தவர்கள் யாய்த்து –

நா தழும்பு எழ –
நாவானது தழும்பு ஏறும்படி

நாரணா என்று அழைத்து –
அம்மே என்பாரைப் போலே திரு நாமத்தை அடைவு கெடச் சொல்லி

மெய் தழும்ப தொழுது-ஏத்தி-
ப்ரணாமம் பண்ணின படி தோற்ற உடம்பு எல்லாம் தழும்பாக –
ஸ்ரீ சிறியாத்தானைப் போலே ஏத்தி –
இப்படிப்பட்ட செயல்களை சொல்லி ஏத்தி –

இன்புறும் தொண்டர் சேவடி-
மனசிலே வைத்து ஏத்துகையாலே விஷயத்தைக் கிட்டினால் பிறக்கும் நிரதிசய ஆனந்த யுக்தராய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாதங்களை

தொண்டர் சேவடி-ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே-
அவர்கள் தாங்கள் அகப்பட்ட நவ நீத சௌர்யத்தில் போகாது என் நெஞ்சு -அதிலே அகப்பட்டவர்கள்
தங்களை ஏத்தி வாழ்த்தும் அத்தனை –

ஏத்தி வாழ்த்தும் –
இச் செயலுக்கு இவர்கள் நிலவராவதே -என்று ஸ்தோத்ரத்தை பண்ணி –
இது நித்யமாக வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் என் நெஞ்சு –

——————————————————————————————

பொய் சிலை குரல் ஏறு எருத்தம் இறுத்து போர் அரவீர்த்த கோன்
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே -2-5-

பதவுரை

பொய்–க்ருத்ரிமமாய்
சிலை குரல்–கோபத்தை வெளியிடுகின்ற கோஷத்தை யுடைத்தான
ஏறு–(ஏழு) ரிஷபங்களின்
எருத்தம் இறுத்து–முசுப்புகளை முறித்தவனாய்
போர் அரவு ஈர்த்த கோன்–போர் செய்யவந்த காளிய நாகத்தை நிரஸித்த ஸ்வாமியாய்,
சிலை செய்–கல்லினால் செய்யப்பட்டு
சுடர் ஒளி–மிக்க தேஜஸ்ஸை யுடைத்தாய்
திண்ணம்–த்ருடமாயிருக்குந் தன்மையையும் உடைத்தாய்
மா–பெரிதான
மதிள் சூழ்–மதிகளாலே சூழப்பட்ட
தென் அரங்கன் ஆம்–தென்னரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான ரங்கநாதனாகிய
மெய் சிலை கரு மேகம் ஒன்று–சரீரத்தில் வில்லோடு கூடிய ஒரு காள மேகமானது
தன் நெஞ்சுள் நின்று திகழப் போய்–தங்கள் மனதில் நிலைத்து விளங்கப் பெற்ற
மெய் சிலிர்ப்பவர் தம்மையே–மயிர்க் கூச் செறியும் சரீரமுடைய ஸ்ரீவைஷ்ணவர்களையே
என் மனம் நினைந்து–என் நெஞ்சானது அநுஸந்தித்து
மெய் சிலிர்க்கும்–மயிர்க் கூச்செறியப் பெற்றது.

பொய் சிலை குரல் ஏறு -எருத்தம் இறுத்து
பொய் -க்ரித்ரிமம் –சிலை -கோபம் -அஸூரா வேசத்தாலே க்ர்த்ரிமமாய் கோபத்தையும் உடைத்தாய்
இருந்துள்ள ஏறும் உறாயப் பொருது –
ஸ்ரீ நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு விரோதியானவையுமாய் பொருகிறவையுமாய்
சிலை போலே கோரமான த்வனியை உடைத்தாய் இருந்துள்ள ரிஷபங்களைக் கழுத்தை முறித்து –

போர் அரவீர்த்த கோன்-
ஸ்ரீ திருவாய்ப்பாடியில் பசுக்களும் இடையரும் தண்ணீர் குடிக்க ஒண்ணாத படி
ஜலத்தைத் தூஷித்துக் கிடந்த காளியன்
யுத்த உன்முகனாய் புறப்படும்படி கலக்கி பொய்கையில் நின்றும் போக விட்டு –
அத்தாலே ஸ்ரீ திருவாய்ப்பாடியில் உள்ளார்க்கு நாதனானவனை

செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
கல்லாலே செய்யப்பட்டு பிறரால் அபிபவிக்க ஒண்ணாத படியான மதிப்பை உடைத்தான திண்மையையும்
ஒக்கத்தாலும் விஞ்சின திரு மதிள்கள் பலவும் சூழ்ந்து இருக்கிற ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற

மெய் சிலை கரு மேகம் –
உடம்பிலே வில்லை உடைய மேகம் என்னுதல்—
மெய்யே வில்லோடு கூடின மேகம் தான் என்னுதல் –

ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
சோபயன் தண்ட காரண்யம் -என்னுமா போலே
மாணிக்கக் குப்பியிலே உள்ளு நின்ற நிலை புறம்பே தெரியுமா போலே
ஸ்ரீ பெரிய பெருமாளை தங்கள் நெஞ்சிலே எழுந்து அருளிவித்து வைக்கையாலே நிழல் இடா நிற்கும் இறே

மெய் சிலிர்ப்பவர் -தம்மையே நினைந்து
உள்ளே எழுந்து அருளி இருக்கிற படியே அனுசந்தித்து புளகித காத்ரராய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் தம்மை நினைத்து

என் மனம் மெய் சிலிர்க்குமே
ஸ்ரீ பெரிய பெருமாளை அனுபவித்து அவர்கள் உடம்பு படும் பாட்டை –
அவர்களை அனுபவித்து என் நெஞ்சு படா நின்றது
ஸ்பர்ச த்ரவ்யம் பட்டது எல்லாம் படா நின்றது அமூர்த்த த்ரவ்யம் –

——————————————————————————-

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

பதவுரை

ஆதி–ஜகத் காரண பூதனாய்
அந்தம்–ப்ரளய காலத்திலும் வாழ்பவனாய்
அநந்தம்–ஸர்வ வ்யாபியாய்
அற்புதம் ஆன–ஆச்சரிய பூதனாய்
வானவர் தம்பிரான்–அமரர்க்கதிபதியான ரங்கநாதனுடைய
மா மலர் பாதம்–சிறந்த மலர் போன்ற திருவடிகளை
சூடும் பத்தி இலாத–சிரஸா வஹிப்பதற் குறுப்பான அன்பு இல்லாத
பாவிகள் உய்ந்திட–பாபிகளும் உஜ்ஜீவிக்கும்படி
எங்கும் திரிந்து–ஸர்வ தேசங்களிலும் ஸஞ்சாரஞ் செய்து
தீது இல்–குற்றமற்ற
நல் நெறி–நல் வழிகளை
காட்டி–(தமது அநுஷ்டாநமுகத்தாலே) வெளிப்படுத்திக் கொண்டு
எம்மான்–நமக்குத் தலைவனான
அரங்கனுக்கே–ஸ்ரீரங்கநாதனுக்கே
காதல் செய்–பக்தி பூண்டிருக்கின்ற
தொண்டர்க்கு–பாகவதர்கள் விஷயத்தில்
என் நெஞ்சம்–எனது மனமானது
எப் பிறப்பிலும்–எந்த ஜன்மத்திலும்
காதல் செய்யும்–அன்பு பூண்டிருக்கும்.

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
ஆதி –
ஜகத் காரண பூதன் –

அநந்தம் –
காரண அவஸ்தையிலும் கார்ய அவஸ்தையிலும் ஒக்க வியாபித்து நிற்குமவன்

அற்புதம் –
காரண அவஸ்தையோடு சதாவஸ்தனாய் நிற்குமத்தோடு வாசியற நிற்கும் நிலைகள் வேறொரு இடத்தில்
காண ஒண்ணாது என்னும்படி இருக்கும் ஆச்சர்ய பூதன் –

ஆன வானவர் தம்பிரான்-
ஆன போதும் அமர்ந்த போதும் எப்போதும் ஒக்க உளராய் இருக்கும் நித்ய ஸூரிகளுக்கு நாதன் –
உபய விபூதி நாதன் -என்றபடி –

பாத மா மலர் சூடும் பத்தி இலாத –
அவன் திருவடிகளாகிற செவ்வித் தாமரையைச் சூடும் பக்தியை உடையராய் இருக்கை யாய்த்து கர்த்தவ்யம் –
அது இல்லாத –

பாவிகள் உய்ந்திட
பக்தி இல்லாத மஹா பாபத்தைப் பண்ணி –
அசந்நேவ–என்னும்படி இருக்கிற தேசம் எங்கும் புக்கு சஞ்சரித்து
அவர்களை பக்தி உண்டாக்கி யுஜ்ஜீவிப்பைக்காக

தீதில் நல் நெறி காட்டி –
தீமையோடு கூடின நெறி யன்றிக்கே -சேதனர் நல் வழி போம் படி தாங்கள் ஆஸ்ரயித்துக் காட்டி

எங்கும் திரிந்து –
புகக் கடவது அல்லாத தேசம் எங்கும் புக்கு சஞ்சரித்து

அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர்க்கு –
என்னை அனந்யார்ஹம் ஆக்கின ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளிலே பக்தி உண்டாய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு

எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –
அநேக ஜன்மங்கள் பிறந்து அவர்களுக்கு அடிமை செய்ய வேணும் என்று
ஆசைப் படா நின்றது என் நெஞ்சு –

—————————————————————————————-

கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7-

பதவுரை

கார் இனம் புரை–மேகங்களின் திரளை ஒத்த
மேனி–திருமேனியையும்
நல் கதிர்–அழகிய லாவண்யத்தையும்
முத்தம் வெண் நகை செய்ய வாய்– முத்துக்கள் போல் வெளுத்த புன் சிரிப்பை யுடைய சிவந்த திருப் பவளத்தையும்
ஆரம் மார்வன்–முக்தாஹாரமணிந்த மார்வையுமுடையனான
அரங்கன் என்னும்–ஸ்ரீரங்கநாதனாகிற
அரும் பெரும் சுடர் ஒன்றினை–அருமை பெருமை யுள்ள விலக்ஷணமான தொரு தேஜஸ்ஸை
சேரும் நெஞ்சினர் ஆகி–கிட்டி அநுபவிக்க வேணுமென்கிற சிந்தையை யுடையவராய்
சேர்ந்து–(அங்ஙனமே) சேர்ந்து
கசிந்து இழிந்த–(பக்தி பாரவச்யத்தாலே) சுரந்து பெருகின
கண் நீர்கள்–ஆநந்த பாஷ்பங்கள்
வார நிற்பவர்–வெள்ளமிட்டொழுகும்படி நிற்குமவர்களுடைய
தாள் இணைக்கு–இரண்டு திருவடிகள் விஷயத்தில்
என் நெஞ்சம்–என் மனமானது
ஒரு வாரம் ஆகும்–ஒப்பற்ற அன்பையுடையதாகும்.

கார் இனம் புரை மேனி-
தொக்க மேகப் பல் குழாங்கள் -என்றும்
கார்த்திரள் அனைய மேனி -என்றும் -சொல்லுகிறபடியே
அழகிய திருமேனியையும் உடையராய்

நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
கண்டாரைப் போகாமல் துவக்க வல்ல ஒளியை உடை முத்து நிரை போலே இருக்கும் தந்த பந்தியையும் –
இதுக்கு பரபாகமான திருவதரத்தில் பழுப்பையும் உடையவராய்

ஆர மார்வன் –
பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு -என்று
ஐஸ்வர்ய பிரகாசகமாம் படி இட்டுப் பூண வேண்டும்படி உள்ள ஹாரத்தையும்
திரு மார்பிலே உடையராய் இருக்கிற

அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
ஸ்ரீ பெரிய பெருமாள் என்று -உபய விபூதியிலும் பிரசித்தராய்
நிரவதிக தேஜோ ரூபராய் அத்விதீயரானவரை

சேரும் நெஞ்சினராகி –
அவர் வந்து கிட்டும் போது விலக்காமை யடியாகப் -பிறந்த பக்தியை உடையராய்

சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால் வார நிற்ப்பவர் தாள் இணைக்கு –
அவனைக் கிட்டி நிரதிசய பக்தி உக்தராய் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் அவர்களுக்கு பக்தி
பாரவச்யத்தாலே இறே என்று அங்குத்தைக்கும் இவர்களுக்குமாய் நில்லாதே
இவர்களுடைய திருவடிகளுக்கு

ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே –
அநந்ய பிரயோஜனமாய் நில்லா நின்றது என் நெஞ்சு –

—————————————————————————————

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-

பதவுரை

மாலை உற்ற கடல்–(தன் திரு மேனி ஸ்பர்சத்தாலே) அலை யெறிகிற திருப்பாற்கடலில்
கிடந்தவன்–பள்ளிகொள்பவனும்
வண்டு கிண்டு நறு துழாய் மாலை உற்ற–(தேனுக்காக) வண்டுகள் குடையா நின்றுள்ள திருத்துழாய் மாலையை அணிந்த
வரை பெரு திருமார்பினை–மலைபோற் பெருமை தங்கிய திருமார்பை யுடையவனும்
மலர் கண்ணனை–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவனுமான ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில்
மாலை உற்று–வ்யாமோஹத்தை அடைந்து
எழுந்து ஆடி–(இருந்தவிடத்திலிராமல்) எழுந்து கூத்தாடி
பாடி–(வாயாரப்) பாடி
திரிந்து–(திவ்ய தேசங்கள் தோறும்) ஸஞ்சரித்து
அரங்கன் எம்மானுக்கே–எமக்கு ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
மாலை உற்றிடும்–பித்தேறித் திரிகின்ற
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
வாழ்வுக்கு–ஸ்ரீவைஷ்ணவ லஷ்மிக்கு
என் நெஞ்சம் மாலை உற்றது– என் மனம் மயங்கிக் கிடக்கின்றது.

மாலை யுற்ற கடல் கிடந்தவன்-
ஸ்வ ஸ்பர்சத்தாலே அலை எறிகிற திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன்

வண்டு கிண்டு நறும் துழாய் மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை –
வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற
பெரும் திரு மார்வை உடையராய் –
மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே

மலர் கண்ணனை
செவ்வித் தாமரைப் பூ போலே மலர்ந்த திருக் கண்களை உடையவரை

மாலை உற்று எழுந்து ஆடி பாடி திரிந்து –
பக்தியை உடையராய் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் –
ப்ரீதி பிரேரிக்க இருக்க மாட்டாதே சஞ்சரித்து

அரங்கன் எம்மானுக்கே மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு –
ஸ்ரீ கோயிலிலே ஸூலபரான படியைக் காட்டி என்னை எழுதிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே
பக்தி கார்யமான பித்தேறித் திரியும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு

மாலை யுற்றது என் நெஞ்சமே–
பித்தேறா நின்றது -என்கிறார் –

———————————————————————-

அவதாரிகை –

பித்தேறித் திரிவார்க்கு ஒரு நீர் பித்தேறுவது என்ன –
பிராப்த விஷயத்தில் பித்தேறுமவர்கள் பித்தர் அன்று என்கிறார் –

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-

பதவுரை

கண் பனி–ஆநந்த பாஷ்பமானது
மொய்த்து சோர–இடைவிடாமல் சொரியவும்
மெய்கள் சிலிர்ப்ப–உடல் மயிர்க் கூச்செறியவும் உடல்
ஏங்கி இளைத்து நின்று–நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய்
எய்த்து–நிலை தளர்ந்து
கும்பிடு நட்டம் இட்டு–மஹா கோலாஹலத்தோடு கூடிய நர்த்தனத்தைப் பண்ணி
எழுந்து ஆடி பாடி இறைஞ்சி–நின்ற விடத்து நில்லாமல் (பல வித) ஆட்டங்களாடிப் பாட்டுகள் பாடி வணங்கி,
என் அத்தன்–எனக்குத் தந்தையாய்
அச்சன்–ஸ்வாமியான
அரங்கனுக்கு–ஸ்ரீரங்கநாதனுக்கு
அடியார்கள் ஆகி–அடியவர்களாய்
அவனுக்கே–அந்த ரங்கநாதன் விஷயத்திலேயே
பித்தர் ஆமவர்–பித்தேறித் திரிகிறவர்கள்
பித்தர் அல்லர்கள்–பைத்தியக்காரர்களல்லர்;
மற்றயார் முற்றும்–(பத்தி கார்யமான இந்த வ்யா மோஹமில்லாத) மற்ற பேர்களெல்லாம்
பித்தரே–பைத்தியக்காரர்கள் தான்.

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப இளைத்து நின்று
இரண்டு கண்ணாலே வர்ஷ தாரை போலே சொரிய புளகித காத்ரராய்

ஏங்கி எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி –
விஷயத்தை நினைத்து ஏங்கி இளைத்து சிதிலராய் –அவ்வளவு அன்றியிலே ஸ்தப்ராய் நின்று –
அந்நிலையும் நில்லாதே –
கும்பிடு நட்டம் இட்டு -எழுந்து ஆடி பாடி
சசம்பிரம நர்த்தம் பண்ணி

இறைஞ்சி –
தீர்க்க பிரணாமத்தைப் பண்ணி

என் அத்தன் அச்சன் –
எனக்கு ஜனகனுமாய் ஸ்வாமியும் ஆனவனை

அரங்கனுக்கு அடியார்களாகி –
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அநந்ய பிரயோஜனராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடியாராகி

அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள்
அவர்க்கு பக்திமான்களாய் பக்தி கார்யமான பித்தேறித் திரிகிறவர்கள் -பித்தர் அல்லர்கள் –

மற்றையார் முற்றும் பித்தரே–
இந்த பக்தி கார்யமான பித்தர் அல்லாதவர்கள் அடைய பித்தரே –
இக் கலக்கம் இல்லாதே தெளிந்து இருக்கும் ஸ்ரீ சனகாதிகளே யாகிலும் அவர்களே பித்தரே –

———————————————————————-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்–
ஸ்ரீ யபதியான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
அநந்ய பிரயோஜனராய் இருக்கும் ஸ்ரீ-வைஷ்ணவர்களுடைய

எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
ஆத்ம தாச்யத்திலே என்றும் ஒக்கப் பொருந்தின திரு உள்ளத்தை உடையரோம்

கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்-
கொல்லிக்கும் மதுரைக்கும் உறையூருக்கும் -நாயகரான பெருமாள் –
ஸ்ரீ பெரிய உடையாருடைய இழவாலே வந்த வெறுப்பாலே –
வனவா சோம ஹோதயா -என்று போய்-
ராஜ்யாத்பரம்சோ வ நே வாச –என்று வந்ததுக்குப் போந்து அது பிரியமாய் இருந்தவர்
இவ் விழவாலே அடியிலே போந்ததுவும் எல்லாம் தமக்கு வெறுப்புக்கு உடலானாப் போலே
ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் -என்றும்
இவ்வரசும் யான் வேண்டேன்-என்றும்-சொல்லுகிற
இவர்க்குத் ததீய சேஷத்வத்தைத் தந்த ஜன்மம் என்று
ராஜ ஜன்யம் தன்னையும் கொண்டாடுகிறார் இறே

சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் –
இனிய சப்தங்களை உடைய தமித் தொடை வல்லவர்கள்

தொண்டர் தொண்டர்கள் ஆவரே –
இவர் ஆசைப் பட்டுப் போந்த பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆகிற புருஷார்த்தத்தை லபிப்பார்கள் –

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -1–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

அவதாரிகை –

ஸ்ரீ யபதியாய் -ஜ்ஞானானந்தைக ஸ்வரூபனாய்-சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-உபய விபூதி உக்தனாய் —
சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன் அடியாக
ஸ்ரீ பெருமாள் பெற்றது -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆகையாலே
க்ரமத்தாலே காண்கிறோம் என்று ஆறி இருக்கலாவது தம் தலையால் வந்ததாகில் இறே-
அவன் தானே காட்டக் காண்கிறவர் ஆகையாலே அப்போதே காண வேண்டும் -படி விடாய் பிறந்தது –
ஸ்ரீ பரமபதத்திலும் அனுபவிப்பது குண அனுபவம் ஆகையாலே -அந்த சீலாதி குணங்கள் பூரணமான
ஸ்ரீ கோயிலிலே அனுபவிக்கப் பிரார்த்திக்கிறார்
இங்கே அனுபவிக்கக் குறை என்-பிரார்த்தனை என் என்னில் –
ஸ்வா தந்த்ர்யம் பிறப்பே உடையராகையாலே -மனுஷ்யர் நிரோதிப்பார் பலர் உண்டாகையாலே –
இங்கு வந்து அனுபவிக்க மாட்டாதே
அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றும்
ஸ்ரீ நம்மாழ்வார் பிரார்த்தித்துப் பெற்ற பேற்றை இங்கேயே அனுபவிக்க ஆசைப் படுகிறார் –

முதல் பாட்டு –

அவதாரிகை –

பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே இறே முமுஷூ மநோ ரதிப்பது —
அத்தை இங்கே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து கிடக்கிற இடத்திலே அனுபவிக்க மநோ ரதிக்கிறார் –
சம்சாரி முக்தனாய்ச் சென்றால் -பாதே நாத்யா ரோஹதி -இத்யாதிப்படியே எழுந்து அருளி இருக்கிற பர்யங்கத்திலே மிதித்து ஏறினால்
நீ ஆர் என்றால் -நான் ராஜ புத்ரன் என்னுமா போலே -அஹம் பிரஹ்மாஸ்மி -என்று இறே இவன் சொல்வது –

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-

பதவுரை

திரு அரங்கம்–ஸ்ரீரங்கமென்கிற
பெரு நகருள்–பெரிய நகரத்திலே
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும்–இருளானது சிதறி யொழியும் படி ஒளி விடுகின்ற மணிகள் விளங்கா நிற்கப் பெற்ற
நெற்றி–நெற்றியையும்
இனம் துத்தி–சிறந்த புள்ளியையும்
அணி–அழகாக உடைய–
ஆயிரம் பணங்கள் ஆர்ந்த–ஆயிரம் படங்களை உடையவனாய்
அரவு அரசன்–நாகங்களுக்குத் தலைவனாய்
பெரு சோதி–மிக்க தேஜஸ்ஸை யுடையனான
அனந்தன் என்னும்–திருவனந்தாழ்வானாகிற
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை–அழகு மிக்கு உயர்த்தியை யுடைய வெண்ணிறமான திருப் படுக்கையிலே
மேவி–பொருந்தி
தெள் நீர் பொன்னி–தெளிந்த தீர்த்தத்தையுடைய காவிரி யானது
திரை கையால் அடி வருட–அலைகளாகிற கைகளாலே திருவடிகளைப் பிடிக்க
பள்ளி கொள்ளும்–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
கரு மணியை–நீல மணி போன்றவராய்
கோமளத்தை–ளெஸகுமார்யமே வடிவெடுத்தவரான பெரிய பெருமாளை
என் கண் இணைகள்–என் கண்களானவை
கண்டு கொண்டு–ஸேவிக்கப் பெற்று
களிக்கும் நாள்–ஆநந்தடையும் நாள்
என்று கொல்–எந்நாளோ!

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இருள் சிதறிப் போம் படி ஜ்யோதிஸ்சை உடைய மணிகள் விழுக்கிற நெற்றியையும்

இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
இனமான துத்தி -அதாவது இரண்டாய்ச் சேர்ந்த திருவடி நிலை என்று சொல்லுகிறவற்றை உடைத்தான
பணங்கள் ஆயிரத்தையும் பூரணமாக யுடையனாய்

அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
நாகா ராஜா வென்னும் மகா தேஜஸ் சை யுடையனாய்
எல்லா வற்றையும் வியாபித்து நிற்கிற சர்வேஸ்வரனை விளாக்குலை கொள்ளுகிற ஸ்வரூப குணங்களை உடையவன்
ஆகையாலே அனந்தன் என்று சொல்லப்படுகிற –
ஸூ முகன் -வாஸூகி -தஷகன் -என்றும் உண்டு இறே
அவர்களில் காட்டில் பகவத் பிரத்யாசித்தியை உடையது என்னும் பிரசித்தியை உடையவன் –

அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
அழகு மிக்கு ஒக்கத்தை உடைத்தாய் மறுவற்ற வெள்ளப் படுக்கை யாகிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வானை மேவி

திரு அரங்க பெரு நகருள்
வைகுண்டேது பரே லோகே –என்று சொல்லுமது அங்கே காணும்
இவருக்கு திருவரங்கம் ஆகிற மஹா நகரத்திலே

தெண்ணீர் பொன்னி திரை கையால் அடி வருட
தெளிந்த நீரை உடைத்த காவேரி -திரையாகிற கைகளாலே திருவடிகளை வருட

பள்ளி கொள்ளும் கருமணியை –
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே ஒரு நீல ரத்னம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிறவனை

கோமளத்தை
கண்ணார துகைக்க ஒண்ணாத சௌகுமார்யம் உடையவன்

கண்டு கொண்டு –
கலியர் -சோற்றைக் கண்டு கொண்டு -என்னுமா போலே

என் கண் இணைகள்
பட்டினி விட்ட என் கண்கள்

என்று கொலோ களிக்கும் நாளே-
அங்கே கண்டு -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்கும் களிப்பை
இங்கே கண்டு களிப்பது என்றோ –

——————————————————–

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-

பதவுரை

கடி அரங்கத்து-நறு மணம் மிக்க கோயிலிலே
ஓர் ஈர் ஐ நூறு வாய்–ஓராயிரம் வாய்களிலே
துதங்கள் ஆர்ந்த–ஸ்தோத்ர வாக்கியங்கள் நிறைந்திருக்கப் பெற்றவனாய்
வளை உடம்பின்–வெளுத்த உடம்பை யுடையவனாய்
அழல்–(எதிரிக்ள வந்து கிட்ட வொண்ணாதபடி) அழலை உமிழா நிற்பவனான
நாகம்–ஆதி சேக்ஷன்
உமிழ்ந்த–(தன் வாயினின்று) வெளிக் கக்கிய
செம் தீ–செந் நிறமான ஆகநி ஜ்வாலையானது
சென்னி–தலையின் மேலே
வீயாத மலர்–அழிவில்லாத புஷ்பங்களாற் சமைத்த தொரு மேற் கட்டி போல
எங்கும் மேல் மேலும் பரந்து மிக–மேற்புறமெங்கும் விஸ்தரித்து விளங்க
அதன் கீழ்–(ஆதிசேக்ஷன் உமிழ்ந்த அக்நி ஜ்வாலையாகிற) அந்தப் புஷ்ப விதாநத்தின் கீழே)
அரவு அணையில்–சேஷ சயநத்திலே
பள்ளி கொள்ளும்–கண் வளர்ந்தருளா நிற்பவனும்
காயா பூ மலர் பிறங்கல் அன்ன– காயாவின் அழகிய பூக்களாலே தொடுக்கப்பட்ட நீலமாலை போன்றவனாய்
மாலை–பெருமை பொருந்தியவனாய்
மாயோனை–ஆச்சர்யனான ஸ்ரீரங்கநாதனை (அடியேன்)
மனம் தூண் பற்றி நின்று– திருமணத் தூண்களிரண்டையும் அவலம்பாகப் பற்றிக்கொண்டு நின்று
என் வாய் ஆர வாழ்த்தும் நாள் என்று கொல்–என் வாய்த்தினவு தீர ஸ்துதி செய்யுங்காலம் என்றைக்கு வாய்க்குமோ?.

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
யசோதைப் பிராட்டி ஸ்ரீ கிருஷ்ண ஸ்பர்சத்தால் வந்த ஸூகத்துக்கு போக்கு விட்டு ஏத்துமா போலே
பகவத் அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே வந்த ப்ரீதிக்கு போக்கு விட்டு ஏத்துகைக்காக
ஆயிரம் வாயையும்

துதங்கள் ஆவது –
ஸ்தோத்ராதிகளைப் புறப்பட விடுகை -ஸ்துதம் இறே

வளை வுடம்பின் அழல் நாகம்
வெளுத்த நிறத்தை உடையவனுமாய் –
பிரதி பஷத்துக்கு வந்து அணுக ஒண்ணாத படி அநபிபவ நீயனாய்
இருக்கிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான்

உமிழ்ந்த செந்தீ வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
அவன் வாயாலே இடை விடாதே யுமிழ்கிற அக்னி ஜ்வாலைகளின் ஜ்யோதிஸ் ஆகிற மேற்கட்டியின் கீழே

வீயாத மலர்ச் சென்னி
பூ மாறாத திரு முடியை உடையனுமாய்

காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
காயாவின் அழகிய பூவாலே செய்யப்பட மாலை போலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை

கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
அரணாகப் போரும் மதிளை யுடைய ஸ்ரீ கோயிலிலே
அப்படி பரிவனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற

மாயோனை –
சமயோ போதிதஸ் ஸ்ரீ மான் -என்னும் படி கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனை

மணத் தூணே பற்றி நின்று
ஆமோத ஸ்தம்ப த்வயங்களைப் பற்றி நின்று –
அழகிலே அகப்பட்ட ஹர்ஷத்தாலே தள்ளுண்ணாமே இரண்டு ஸ்தம்பங்களைப் பற்றி நின்று

என் வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே
கண்டால் கொள்வது வேறொரு பிரயோஜனம் இல்லை இறே
பல்லாண்டு பல்லாண்டு என்னும் இத்தனை இறே –

—————————————————————-

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–1-3-

பதவுரை

எம் மாண்பின் அயன்–ஸர்வ விதத்தாலுமுண்டான மாட்சிமையை யுடைய நான்முகன்
நான்கு நாவினாலும் (தனது)–நாலு நாக்கினாலும்
எடுத்து–சொற்களை யெடுத்து
ஏத்தி–துதித்து
ஈர் இரண்டு முகமும் கொண்டு–நான்கு முகங்களாலும்
இனிது ஏத்தி–இனிமையாக (வேதங்களாலே) ஸ்தோத்திரம் பண்ணி
எழில் கண்கள் எட்டினோடும்–அழகிய எட்டு கண்களினாலே
எம் மாடும்–எல்லாப் பக்கங்களிலும்
தொழுது இறைஞ்ச நின்ற–நன்றாக ஸேவிக்கும்படி அமைந்த
செம் பொன்–செவ்விய பொன் போல் (விரும்பத்தக்க வடிவுடைய) ஸ்வாமியான தன்னுடைய
கமலம் மலர் கொப்பூழ்–தாமரைப் பூவை யுடைய திருநாபி யானது
தோன்ற–விளங்கும்படி
அணி அரங்கத்து அரவு அணையில்
பள்ளி கொள்ளும்;
அம்மான் தன்–பெரிய பெருமாளுடைய
அடிஇணை கீழ்-திருவடிகளின் கீழே
அலர்கள் இட்டு- புஷ்பங்களை ஸமர்ப்பித்து
அங்கு அடியவரோடு–அங்குள்ள கைங்கர்ய பரர்களோடு கூட
அணுகும் நாள் என்று கொல்-நெருங்கி வாழ்வது என்றைக்கோ?

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எப்படிப் பட்ட மாட்சிமை உடைய ப்ராஹ்மா ஸ்தோத்ராதிகளைப் பண்ணும் தன்மை குறை வற்று இருக்கை-
ஸ்தோத்ராதிகளுக்கு பரிகரமான நாலு நாக்காலும்

எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
தன ஸ்ரத்தைக்குத் தக்கபடி எடுத்தேத்தி –
நாலு வேதத்துக்கு சமைந்த நாலு முகமும் கொண்டு

எம் மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
பின்னும் முன்னும் மட்டங்கள் ஆகிற பர்யந்தங்கள் எங்கும்
அழகை அனுபவிப்பைக்கு பல கண் படைத்த பிரயோஜனம் பெற்றான்

தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற
ப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு தொழுது ஸ்தோத்ராதிகளைப் பண்ணுவது
தண்டன் இடுவதாம் படி நின்ற

செம் பொன் அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
ஸ்பர்ஹணீயமாய் இவ்வருக்கு உண்டான கார்ய வர்க்கத்துக்கு எல்லாம் காரணம் என்னும் மஹத்வம் தோற்றும் படியாய்
இருக்கிற தாமரைப் பூவை உடைய தன் திரு நாபி தோன்ற

அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன்
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோயிலிலே
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய

அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அவன் திருவடிகளின் கீழே புஷ்பாத் உபகரணங்களைப் பணிமாறி

அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–
அங்கு அந்தரங்க வ்ருத்தி செய்யும் அவர்களோடு சஜாதீயனான நானும் கிட்டுவது என்றோ
அடியார்கள் குழாங்கள் –இத்யாதி —

—————————————————–

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-

பதவுரை

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியினுடைய வாயைக் கிழித்து மகிழ்ந்த பெருமானாய்
வேலை வண்ணணை–கடல் போன்ற வடிவை யுடையவனாய்
என் கண்ணணை–என்னுடையவன்’ என்று அபிமானிக்கக் கூடிய (ஸூலபனான) க்ருஷ்ணனாய்’
அன்று–(இந்திரன் கல் மழை பெய்வித்த) அக் காலத்திலே
வன் குன்றம் ஏந்தி–வலிய (கோவர்த்தன) மலையை (க்குடையாக)த் தூக்கி
ஆவினை உய்யக் கொண்ட–பசுக்களைக் காப்பாற்றி யருளின
ஆயர் ஏற்றை–இடையர் தலைவனாய்
அமரர்கள் தம் தலைவனை–நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய்,
அம் தமிழ் இன்ப பாவினை–அழகிய தமிழ்ப் பாஷையாலாகிய ஆநந்த மயமான அருளிச் செயல் போல் யோக்கியனாய்
அ வடமொழியை–அழகிய ஸம்ஸ்க்ருத பாஷையாலாகிய ராமாயணாதிகள் போல் யோக்யனாய்
பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து–ஸம்ஸார பந்தம் அற்றவர்களான விரக்தர்கள் நித்திய வாஸம் செய்கிற கோயிலிலே
அரவு அணையில் பள்ளி கொள்ளும்,
கோவினை–ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனை
நா உற–நாக்குத் தடிக்கும்படி
வழுத்தி–துதித்து
என் தன் கைகள்–என்னுடைய கைகளானவை
கொய் மலர் தூய்–(காலத்தில்) பறிக்கப்பட்ட புஷ்பங்களை பணிமாறி
கூப்பும் நாள் என்று கொல்–அஞ்ஜலி பண்ணும் நாள் எதுவோ!

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை
கேசியை அநாயாசேன பிளந்து –
ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று உகந்த ஆஸ்ரீத-வ்யாமுக்தனை

வேலை வண்ணனை –
ஆஸ்ரித விரோதிகளை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவனை

என் கண்ணனை-
வெறும் வடிவு அழகே அன்றியே எனக்கு பவ்யனானவனை

வன் குன்றம் ஏந்தி
இந்த்ரன் வர்ஷிக்கிற கல் வர்ஷத்திலே வர்ஷிக்கிற கல் வர்ஷத்துக்கு சலியாத மலையை என்னுதல்-
ஸ்ரமஹரமான குன்றம் என்னுதல்

ஆவினை அன்று உய்ய கொண்ட
உபகார ஸ்ம்ர்தியும் இல்லாத பசுக்களை ரஷித்த

ஆயர் ஏற்றை
தன பருவத்தில் பிள்ளைகளைக் காட்டில் தான் மேனாணிப்பு உடையவனை

அமரர்கள் தம் தலைவனை –
தன்னோடு சாம்யா பத்தி பெற்று இருக்கிற நித்ய ஸூரிகளில் காட்டில் தலைவனானவனை –

அம் தமிழ் இன்ப பாவினை –
இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி போலே இனியவனை

அவ் வட மொழியை
ஸ்ரீ மன் நாராயணனைப் போலே இனியவனை

பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும் கோவினை –
தன்னையே பற்றி புறம்புள்ளவற்றை அநந்ய பிரயோஜனர் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ கோயிலிலே
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற நாதனை

நாவுற வழுத்தி
நாத் தழும்பு ஏறும்படி ஸ்தோத்ரங்களைப் பண்ணி

என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-
கை தழும்பு ஏறும்படி புஷ்பாத் யுபகரணங்களைப் பணிமாறி அஞ்சலி பண்ணப் பெறுவது என்றோ –

———————————————————-

இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-

பதவுரை

இன்பம்–(வீணா கானத்தாலே) இன்பந்தருகின்ற
தும்புருவும்–தும்புரு மஹரிஷியும்
நாரதனும்–நாரத முனிவனும்
இணை இல்லா இன் இசை–ஒப்பற்றதும் போக்யமுமான இசையை
யாழ்–வீணையிலே
கெழுமி–நிறைத்து
(வீணா கானத்தைப் பண்ணிக் கொண்டு)
இறைஞ்சி ஏத்த–திருவடிகளிலே விழுந்து) வணங்கித் துதிக்கவும்
தொல் மலர்க் கண் அயன்–நித்யமான நாபீ கமலத்தி லுதித்த நான்முகனானவன்
வணங்கி–நமஸ்கரித்து
துணை இல்லா–ஒப்பு இல்லாததும்
தொல்–அநாதியுமான
மறை நூல் தோத்திரத்தால்–வேதசாஸ்த்ரங்களாகிற ஸ்தோத்ரங்களால்
ஓவாது ஏத்த–இடைவிடாமல் துதிக்கவும்
மணி மாடம் மாளிகைகள்–மணி மயமான மாட மாளிகைகளையும்
மல்கு செல்வம்–பூர்ணமான ஸம்பத்தையும்
மதிள்–ஸப்த ப்ராகாரங்களையுமுடைய
அரங்கத்து–கோயிலிலே
அரவு அணையில் பள்ளிகொள்ளும்;
மணி வண்ணன் அம்மானை–நீல மணி போன்ற திருநிறத்தை யுடையனான எம்பெருமானை
கண்டு கொண்டு–ஸேவித்து
என் மலர் சென்னி–என்னுடைய பூமாலை யணிந்த தலையானது
வணங்கும் நாள் என்று கொல்–(அவன் திருவடிகளில்) நமஸ்கரிப்பது என்றைக்கோ!

இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி –
உபமான ரஹிதமான இனிய இசையை உடைய யாழை நெருங்கி

இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
பாட்டாலே வந்த ஆனந்தத்தை உடைய தும்புருவும் நாரதனும்
திருவடிகளிலே விழுந்து ஸ்தோத்ரங்களைப் பண்ண

துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
ஒப்பில்லாத பழைய வேத சாஸ்திரம் ஆகிற ஸ்தோத்ரத்தாலே

தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
திரு நாபீ கமலத்தின் இடத்திலே இருக்கிற ப்ரஹ்மா திருவடிகளில் பிரமாணம் பண்ணி
விடாதே ஸ்தோத்ரம் பண்ணி

மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மணி மயமான மாடங்களையும் மிக்க ஐஸ்வர்யத்தையும் உடைய

மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மிக்க அரணான பெரிய மதிளை உடைய பெரிய கோயிலிலே
திரு வநந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளும்

மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு –
அழகிய வடிவை உடைய சர்வேஸ்வரனைக் கண்டு கொண்டு

என் மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே-
நான் பூ முடி சூடின தலை என்றோ அவன் திருவடிகளில் வணங்குவது –

————————————

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி
திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-

பதவுரை

அளி மலர் மேல் அயன்–(மதுபானத்துக்காக) வண்டுகள் படிந்திருக்கிற தாமரைப் பூவில் தோன்றிய பிரமனும் சிவனும்
அரன்–சிவனும்
இந்திரனோடு ஏனை அமரர்கள் தம் குழுவும்–இந்திரனோடு கூட மற்றைத் தேவர்களின் திரளும்
அரம்பையரும்–ரம்பை முதலிய தேவ மாதரும்
மற்றும்–மற்றுமுள்ள
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும்–தெளிந்த ஞானத்தை யுடைய (ஸநகாதி) மஹர்ஷிகளின் ஸமூஹமும்
உந்தி–ஒருவர்க்கொருவர் நெருக்கித் தள்ளி
திசை திசையில்–பார்த்த பார்த்தவிடமெங்கும்
மலர் தூவி–புஷ்பங்களை இறைத்துக் கொண்டு
சென்று சேரும்–வந்து சேர்தற்கு இடமான
களிமலர் சேர் பொழில் அரங்கத்து–தேன் மிக்க மலர்களை யுடைய சோலைகளை யுடைத்தான கோயிலிலே
உரகம் ஏறி–திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு
கண் வளரும்–திருக்கண் வளர்ந்தருளா நின்ற
கடல் வண்ணர்–கடல் போன்ற வடிவை யுடையரான பெரிய பெருமாளை யுடைய
கமலம் கண்ணும்–செந்தாமரை போன்ற திருக் கண்களையும்
ஒளி மதி சேர் திரு முகமும்–ஒளியை யுடைய சந்திரன் போன்ற திருமுக மண்டலத்தையும்
கண்டு கொண்டு–ஸேவிக்கப் பெற்று
என் உள்ளம்–என்னுடைய மனமானது
மிக உருகும் நாள் என்று கொல்–மிகவும் உருகுங்காலம் என்றைக்கோ?

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு –
வண்டுகள் படிந்த அரவிந்தத்தின் மேலே இருக்கிற ப்ரஹ்மாவும்-
அவன் மகனான ருத்ரனும் –
அவர்களோடு சஹ படிக்கப்பட்ட இந்த்ரனும் -இவர்களுடனே

ஏனை அமரர்கள் தம் குழுவும் –
அவர்கள் மூவரையும் ஒழிந்த தேவர்கள் திரளும்

அரம்பையரும் –
ரம்பை முதலான அப்சரஸ் ஸூக்களும்

மற்றும் தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் –
ப்ரஹ்ம பாவனையாகச் சொல்லும் சனகாதிகள் திரளும்

உந்தி
ஒருவருக்கு ஒருவர் நெருக்கித் தள்ளி

திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
பார்த்த பார்த்த இடம் எல்லாம் புஷ்ப வர்ஷ்டியைப் பண்ணிக் கொண்டு சென்று கிட்டும்

களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
மது மலரை யுடைத்தான பொழிலை யுடைய அரங்கத்திலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே ஏறி

கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
பள்ளி கொள்கிற நீர் வண்ணர் கமலக் கண்ணும்

ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு –
குளிர்த்து மிக்கு புகரை யுடைய சந்த்ரனை ஒப்புச் சொல்லலான அழகிய திரு முகத்தையும் கண்டு கொண்டு

என் உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே-
என் நெஞ்சு குளிர்ந்து உருகுவது என்றோ –

————————————————

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா
தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை பொன்னி
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7-

பதவுரை

மறம் நிகழும் மனம் ஒழித்து–கொடுமையால் விளங்கா நின்றுள்ள மனத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி–வஞ்சனைகளைப் போக்கி
வல் புலன்கள் அடக்கி–கொடிய இந்திரியங்களை அடக்கி
இடர் பாரம் துன்பம் துறந்து–(மேன் மேலும்) துக்கத்தை விளைப்பனவாய்ப்
பெருஞ்சுமையா யிராநின்ற பழ வினைகளை வேரறுத்து
இரு முப்பொழுது ஏத்தி–பஞ்ச காலங்களிலும் துதித்து
எல்லை இல்லா தொல் நெறிக் கண் நிலை நின்ற–அளவிறந்த பழைய மர்யாதையிலே நிலை நின்ற
தொண்டர் ஆன–தாஸ பூதர்களான
அறம் திகழும் மனத்தவர் தம்–தர்ம சிந்தையே விளங்கும் மனமுடையரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
கதியை–பரம ப்ராப்யனாய்
பொன்னி அணி அரங்கத்து–காவிரியால் அழகு பெற்ற கோயிலிலே
அரவு அணையில் பள்ளி கொள்ளும்:
நிறம் திகழும்–அழகு விளங்கா நின்றுள்ள
மாயோனை–ஆச்சரியனான எம்பெருமானை
என் கண்கள்–எனது கண்களானவை
கண்டு–ஸேவிக்கப் பெற்று
நீர் மல்க நிற்கும் நாள் என்று கொல்–ஆநந்தக் கண்ணீர் ததும்பும்படி நிற்பது என்றைக்கோ?

மறம் திகழும் மனம் ஒழித்து –
மறம்–கொலையும் -சினமும் -கொடுமையும் –
இவற்றால் விளங்கா நின்ற மனஸை வாசனையோடு போக்கி –

வஞ்சம் மாற்றி
பொய்யைப் போக்கி

ஐம்புலன்கள் அடக்கி
வன்புலச் சேக்களை பட்டி புகாமே கட்டி

இடர் பார துன்பம் துறந்து –
மிக்க துக்கத்தை விளைப்பதான –
பாரமாய பழவினை பற்று அறுத்து

இரு முப் பொழுது ஏத்தி
பஞ்ச காலம் -என்னுதல்-
பெரிய முப்பொழுது என்னுதல்
இக் காலங்களிலே ஏத்தி

எல்லை இல்லா தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான-
அளவிறந்த பழைய மரியாதையிலே -சிலவரால் கலக்க ஒண்ணாத படி –
நிலை நின்ற ஸ்ரீ வைஷ்ணவர்களான –

அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை –
ஆன்ருசம்சய பிரதானராய் இருக்கும் அவர்களுக்கு பரம பிராப்யமானவனை

பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்-
பொன்னி சூழ் அரங்கத்திலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளும்
லீலா விபூதிக்கு ஆபரணமான ஸ்ரீ கோயில் –

நிறம் திகழும் மாயோனை கண்டு
அழகு விளங்கா நின்ற ஆச்சர்ய பூதனைக் கண்டு

என் கண்கள் நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே
அவனுடைய வடிவு அழகைக் கண்டு களித்து ஆனந்தாஸ்ரு ப்ரவஹிக்கா நிற்கும் நாள் என்றோ –

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி அளைப்பில் ஐம்புலன் அடக்கி
அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே–திருக்குறும் தாண்டகம் -18–என்கிற
பாட்டில் சொல்லுகிற அடைவிலே –
அவித்யா அஸ்மித ரக த்வேஷா அபிநிவாச பஞ்ச கிலேச–யோக சூத்ரம் –
( அறியாமை செருக்கு ஆசை த்வேஷம் அபிமானம் -என்னும் இவை ஐந்து கிலேசங்கள் ) -என்று சொல்லுகிற
கிலேசங்களின் சஞ்சாரத்தைத் தவிர்த்து ,
நாத்யுச்சரிதம் ..நாதிநீசம்–ஸ்ரீ கீதை –6-11–இத்யாதிகளில் சொல்லுகிற படியே ஓர் ஆசனத்தே இருந்து ,
சம்ப்ரேஷ்ய நாசிகாக்ரம் ஸ்வம் திசச்சா நவ லோகயன்-ஸ்ரீ கீதை -6-13- என்னும் படியே ,
நாசாக்ரன்யச்த ( நாச அக்ர ந்யஸ்த ) லோசனராய் ,ஓர் அளவில் நில்லாத இந்திரியங்களை பிரத்யக்கு ஆக்கி ,
த்யேயமான பகவத் விஷயத்தில் சிநேகத்தை வைத்து ,விடாமல் அனுசந்தித்து ,
சுடர் விட்டு தோன்றுகிற ஞானத்தாலே ,ஸ்வயம் பிரகாசமான ஆத்ம ஸ்வரூபத்தை ,
சாஸ்த்ரோத்ரா பிரகாரத்தாலே சாஷாத் கரித்து ,
சத் கர்ம அனுஷ்டானத்திலே ஷீண பாபனாய்
நிர்மல அந்த கரணனானவனுக்கு பகவத் சாஷாத் கரத்துக்கு உறுப்பாக விளையும்
யோக ஜன்ய ஞானம் தான் பிரதமம் ஆத்ம ஸ்வரூபத்தை தர்சித்து கொண்டிறே மேல் போவது ..விளக்கினை விதியில் காண்பார்-என்கிற இது பகவத் சாஷாத் காரமாக பூர்வர்கள்
வியாக்யானம் பண்ணி வைத்தார்கள் ஆகிலும் ,இவர் ஆத்ம பரமாகவே அருளிச் செய்தார் என்று கொள்ள வேணும் – பகவத் த்யான தர்சனங்களை மேலே சொல்லுகையாலே —
விதியில் காணும் பிரதம மத்திய தசைகளை சூரனை -23–என்று ஆத்ம பரமாகவே இறே கீழும் இவர் அருளிச் செய்தது .. யோஜனா பேதங்களும் உண்டாய் இருக்கும் இறே –
ஆச்சார்ய ஹ்ருதய வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள்

———————————————————-

கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்
கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி
கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?–1-8-

பதவுரை

கோல் ஆர்ந்த–அம்புகளோடு கூடிய
நெடு சார்ங்கம்–பெரியதான ஸ்ரீ சார்ங்க மென்னும் வில்லும்
கூன் நல் சங்கம்–வளைந்து விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்சஜந்யமென்னும சங்கமும்
கொலை ஆழி–(எதிரிகளைக்) கொலை செய்ய வல்ல ஸூதர்சநமும்
கொடும் தண்டு–(பகைவர்களுக்குக்) கொடுந்தொழில் புரிகின்ற கௌமோதகி யென்னும் கதையும்
கொற்றம் ஒள் வாள்–வெற்றி பெற்று ஒளி மிக்க நந்தகமென்னும் வாளும்
கால் ஆர்ந்த கடும் கதி–வாயு வேகம் போன்ற மிகவும் விரைந்த நடையை யுடைய
கருடன் என்னும்–பெரிய திருவடி யென்னும் பேரை யுடைய
வென்றி பறவை இவை அனைத்தும்–ஐய சீலமான பக்ஷிராஜனும் (ஆகிய) இவை யெல்லாம்
புறம் சூழ் காப்ப–நாற் புறமும் சூழ்ந்து கொண்டு ரக்ஷையிட
சேல் ஆர்ந்த நெடு கழனி–(நீர் வளத்தால்) மீன்கள் நிரம்பிய விசாலமான
கழனிகளாலும்
சோலை சூழ்ந்த–சோலைகளாலும் சூழப்பட்ட
திரு அரங்கத்து அரவு அணையில்
பள்ளி கொள்ளும்;
மாலோனை–ஸர்வாதிகனான எம்பெருமானை
வல் வினையேன்–மஹா பாபியான அடியேன்
கண்டு–ஸேவிக்கப் பெற்று
இன்பம் கல்வி எய்தி–ஆநந்த மயமான ஸம்ச்லேஷத்தையும் பெற்று
வாழும் நாள் என்று கொல்–வாழ்வது என்றைக்கோ?

கோலார்ந்த நெடும் சார்ங்கம் –
திருச் சரங்களோடு கூடின ஸ்ரீ சார்ங்கம் –
எப்போதும் கை கழலா நேமியான் -என்னுமா போலே
எப்போது இவனை யுண்டாம் என்று அறியாமையாலே
திருச் சரங்களை தொடுத்த படியே யாய்த்து ஸ்ரீ சார்ங்கம் இருப்பது

கூன் நல் சங்கம்
பகவத் அனுபவ ஜனிதத்தாலே வந்த செருக்காலே
கூனியாய் யாய்த்து ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இருப்பது

கொலை ஆழி –
இவர்கள் அனுபவத்தில் இழியப் போது இன்றியே பிரதிபஷத்தை இரு துண்டமாக விடுகை
பணிப் போருமாய்த்து ஸ்ரீ திரு வாழி ஆழ்வானுக்கு

கொடும் தண்டு –
பிடித்த பிடியிலே உகவாதார் மண் உண்ணும் படி யாய் இருக்கிற கதை –

கொற்ற ஒள் வாள்
ஐஸ்வர்ய பிரகாசகமான திருக் கொற்ற வாள்-கொற்றம் -வெற்றி –

காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை –
காற்றினுடைய மிக்க வேகம் போலே இருக்கிற கதியை உடையனாய்
ஸ்ரீ பெரிய திருவடி என்கிற பேரையும் உடையனாய் இருக்கிற பறவை –

இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
ராம லஷ்மண குப்தாஸா–என்னுமா போலே
கடல் கரை வெளியில் ஸ்ரீ சேனை எல்லாம் குழைச் சரக்காய்-
தாமும் தம்பியாருமாய் காக்குமா போலே
ஸ்ரீ பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகையாலே
ஸ்ரீ பெரிய திருவடி முதலாக ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்கள் சுற்றும் காத்துக் கொண்டாய்த்து நிற்பது

சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் மாலோனை –
சேலாலே நிரம்பின கழனிகளும் சோலைகளும் சூழ்ந்த கோயிலிலே
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிற சர்வாதிகனை

கண்டு இன்ப கலவி எய்தி
கண்டு நிரதிசய ஆனந்த யுக்தனாம் படி சம்ச்லேஷித்து

வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே –
லோகாந்தரத்திலே போய்க் காண வேண்டும் வஸ்து இங்கே சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே
அனுபவிக்க ஒண்ணாத மகா பாபத்தைப் பண்ணின நான்
அனுபவித்து வாழப் பெறுவது என்றோ –
பகவத் அனுபவத்துக்கு விரோதியாய் உள்ளவை எல்லாம் பாபமாய் இருக்கும் இறே-

————————————————————————-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்
திரு வரங்கத்து  அரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி அம்மானை கண்டு துள்ளி
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?—-1-9-

பதவுரை

தூராத காதல் மனம்–ஒரு நாளும் த்ருப்தி பெறாத ஆசை கொண்ட மனத்தை யுடையவரான
தொண்டர் தங்கள் குழாம்–ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டியிலே
குழுமி–கூடி
திரு புகழ்கள் பலவும் பாடி–(எம்பெருமானது) கீர்த்திகளெல்லாவற்றையும் (வாயாரப்) பாடி
ஆராத மனம் களிப்போடு–(அவ்வளவிலும்) த்ருப்தி பெறாத மநஸ்ஸிலுள்ள ஆனந்தத்தோடே
அழுத கண் நீர்–அழுத கண்களிலுண்டான நீர்த் துளிகள்
மழை சோர–மழை போல் பெருகி வர
நினைந்து உருகி ஏந்தி–(எம்பெருமானை) நினைத்து (அத்தாலே) மனமுருகி ஸ்தோத்திரம் பண்ணி,
நாளும்–எப்போதும்
சீர் ஆர்ந்த முழவு ஓசை–நல்ல வாத்யங்களின் கோஷமானது
பரவை காட்டும்–கடலோசை போல் முழங்கப் பெற்ற
திரு அரங்கத்து ஸ்ரீரங்கத்திலே அரவு அணையில் பள்ளி கொள்ளும்
போர் ஆழி–(பகைவரோடு) யுத்தஞ்செய்வதையே தொழிலாக வுடைய
திருவாழி யாழ்வானை யுடையவரான
அம்மானை–எம்பெருமானை
கண்டு–ஸேவிக்கப் பெற்று
துள்ளி–ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகத்) தலை கால் தெரியாமல் கூத்தாடி
பூதலத்திலே–பூமியிலே
புரளும் நாள் என்று கொல்–(உடம்பு தெரியாமல்) புரள்வது என்றைக்கோ!.

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி –
தூராக் குழி தூற்று எனை நாள் அகன்று இருப்பன் -என்று
சம்சாரிகள் சப்தாதி விஷயங்களிலே அனுபவித்தாலும்
இந்த்ரியங்களைத் திருப்தி யாக்கப் போகாதாப் போலே
பகவத் அனுபவம் ஒருக்காலும் ஆராது இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் குழாத்திலே
என்னையும் கூடிக் கலசி –

திரு புகழ்கள் பலவும் பாடி
அவனுடைய கல்யாண குணங்களுக்கு வாசகமான திரு நாமங்கள் பலவற்றையும் பாடி

ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர –
திரு நாமங்களைச் சொன்ன படியாலே மனஸ்ஸூக்கு ஆராமையாலே ஹ்ர்ஷ்டனாய்
அத்தாலே ஆனந்தாச்ரு ப்ரவஹிக்க

நினைந்து உருகி ஏத்தி –
இவர்கள் திரளிலே கூடி திரு நாமத்தைச் சொன்ன படியாலே
திருநாம த்வாரா விஷயத்தை நினைத்து அத்தாலே உருகி –
உருகி வழிந்து புறப்பட்ட சொல் -என்னும் படி ஸ்தோத்ராதிகளைப் பண்ணி

நாளும் சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும் திரு வரங்கத்து  அரவணையில் பள்ளி கொள்ளும் போராழி அம்மானை கண்டு துள்ளி-
ஐஸ்வர்ய பிரகாசகமான வாத்திய கோஷங்கள் சமுத்திர கோஷத்தை காட்டா நிற்கிற ஸ்ரீ கோயிலிலே
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே நித்ய வாசம் பண்ணுகிற
யுத்த உந்முகமான திரு வாழியைக் கையிலே உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –

துள்ளி –
ஸ ஸபிரம நர்த்தம் பண்ணி

பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே-
சிம்ஹாசனத்திலே இறுமாந்து இருக்கும் இருப்பு ஒழிந்து ஹ்ர்ஷ்டனாய்
பூமியிலே புரளுவது என்று கொலோ –

———————————————————-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

பதவுரை

வன்–(நைமித்திக ப்ரளயத்தில்) அழியாதிருக்கக் கடவதும
பெரு–பெருமை தங்கியதுமான
வானகம்–ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்கள்
உய்ய–உஜ்ஜீவிக்கவும்
அமரர்–தேவர்கள்
உய்ய–உஜ்ஜீவிக்கவும்
மண் உய்ய–பூலோகம் உஜ்ஜீவிக்கவும்
மண் உலகில் மனிசர் உய்ய–பூலோகத்திலுள்ள மனிதர்களெல்லாம் உஜ்ஜீவிக்கவும்
மிகு துன்பம் துயர் அகல–மிக்க துக்கத்தை விளைப்பதான பாவங்கள் நீங்கவும்
அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர–துக்கம் கலசாத சுகம் வளரவும்
அகம் மகிழும்–(எப்போதும்) மனதில் ஆனந்தத்தை யுடையரான
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ–உஜ்ஜீவிக்கவும்
அன்போடு–திருவுள்ளத்தில் உகப்போடு
தென் திசை நோக்கி–தெற்குத் திக்குக்கு அபிமுகமாக
பள்ளி கொள்ளும்–பள்ளி கொண்டிரா நின்ற
அணி அரங்கன்–ஸ்ரீரங்கநாதனுடைய
திரு முற்றத்து–ஸந்நிதியுள் திரு முற்றத்திலே
அடியார் தங்கள்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
இன்பம் மிகு பெரு குழுவு கண்டு–ஆநந்தம் நிரம்பிய பெரிய கோஷ்டியை சேவித்து
யானும்–அடியேனும்
இசைந்து–(அவர்களுள் ஒருவனாக) மனம் பொருந்தி
உடனே–அவர்களோடு கூட
இருக்கும் நாள் என்று கொல்–வாழ்ந்திருக்குங்காலம் எப்போது (வாய்க்குமோ?).

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
நைமித்திக பிரளய ஆபத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக
மேலுண்டான லோகங்கள் உய்ய –
அங்குண்டான ப்ரஹ்மாதிகளும் ஜீவிக்க வாய்த்து
ப்ரஹ்ம லோகத்தில் ஸ்ரீ கோயில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்த படி –

மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே
பூமியும்
பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க

துன்பம் மிகு துயர் அகல
நித்ய துக்கத்தை விளைப்பதான பாபங்கள் அகல

அயர் ஒன்றில்லா சுகம் வளர –
துக்கம் விஸ்ரமியாத நித்யமான ஸூகம் வளர

அக மகிழும் தொண்டர் வாழ
பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்த உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ

அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து –
அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே

அடியார் தங்கள் இன்ப மிகு பெரும் குழுவு கண்டு –
நிரதிசய ஆனந்த உக்தராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைக் கண்டு

யானும் இசைந்து-
அபிஷிர்த ஷத்ரியன் -என்று என்னை நினையாதே
அவர்களிலே ஒருவனாக இசைந்து

உடனே என்று கொலோ விருக்கும் நாளே-
என்னைச் சிலர் சேவிக்க நான் நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே சேவித்து இருப்பது என்றோ –

—————————————————–

அவதாரிகை –

திரு நாமப் பாட்டு –
பூவோ பூத்யை பூ புஜாம் பூ ஸூ ராணாம் திவ்யோ குப்தைஸ் ஸ்ரயசே தேவதா நாம்-
ச்ரியை ராஜ்ஞாம் சோளவம் சோத்பவா நாம் ஸ்ரீ மத் ரங்கம் சஹ்ய ஜாமாஜகாம –

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

பதவுரை

திடர் விளங்கு கரை–மணற்குன்றுகள் விளங்கா நின்ற கரையை யுடைத்தான
பொன்னி நடுவு பாடு–காவிரியின் நடுவிடத்து
திரு அரங்கத்து அரவு அணையில் பள்ளி கொள்ளும்:
கடல் விளங்கு–கடல் போல் விளங்குகின்ற
கரு மேனி–கரிய திருமேனியை யுடைய
அம்மான் தன்னை–பெரிய பெருமாளை
கண் ஆர கண்டு உகக்கும் காதல் தன்னால்–கண்கள் த்ருப்தி யடையும்படி
ஸேவித்து ஆநந்திக்க வேணும்’ என்று உண்டான ஆசையினால்
குடை விளங்கு–(அரசாட்சிக்கு ஏற்ப) வெண் கொற்றக் குடையுடன் விளங்கா நிற்பவரும்
விறல் தானை–பராக்கிரமம் மிக்க ஸேஸனைகளை யுடையவரும்
கொற்றம் ஒள் வாள்–வெற்றியும் ஒளியும் பொருந்திய வாளை யுடையவரும்
கூடலர் கோன்–மதுரையிலுள்ளவர்களுக்குத் தலைவரும்
கொடை–ஔதார்யத்தையே இயற்கையாக வுடையவருமான
குலசேகரன்–குலசேகரப் பெருமாள்
சொற்செய்த–அருளிச் செய்த
நடை விளங்கு–தமிழ் நடையானது நன்கு விளங்கா நின்ற
தமிழ் மாலை பத்தும்–தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசரங்களையும்;
வல்லார்–ஓத வல்லார்கள்
நலம் திகழ் நாரணன்–கல்யாண குண சாலியான ஸ்ரீமந் நாராயணனுடைய
அடி கீழ் நண்ணுவார்–திருவடிகளில் சேரப் பெறுவர்.

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
விளங்கா நின்ற திருக் கரையை உடைத்தாய் -காவேரி சூழ்ந்த

திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற –
கடல் போலே ஸ்ரமஹரமான திருமேனியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை

கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் என்னும் ஆசைப் பாட்டோடு

குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர் கோன் –
விளங்குகிற வெண் கொற்றக் கொடையையும்
வெற்றியையும் உடைய சேனையையும் –
ஐஸ்வர்ய பிரகாசகமான ஆனையையும் உடையராய்
மதுரைக்கு நிர்வாஹகருமான

கொடை குலசேகரன் சொல் செய்த
கொடை மாறாதே கொடுக்கும் ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த –

நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
உள்ளில் அர்த்தத்தில் இழிய வேண்டாதே –
பதங்கள் சேர்ந்த சேர்த்திகள் பார்க்க வேண்டாதே –
இது தானே ஆகர்ஷகமாய்
இருக்கிற தமிழ்த் தொடை பத்தும் வல்லார்

நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–
சீலாதி குண பூரணராய் –
சர்வ ஸ்வாமிகளாய்-
வத்சலராய் இருக்கும் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே
யனுபவிக்க ஆசைப் பட்டால் போலே கிட்டப் பெறுவார்கள் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன்கள் வியாக்யானம்–

November 8, 2015

ஸ்ரீ இராமாயண சாரம் ஆகிய பெருமாள் திருமொழி –

ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த தனியன் –

இன்னமுத மூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் –பொன்னஞ்
சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் வியாக்யானம் —

அவதாரிகை –

இதில் -திவ்ய தேசங்களில் வர்த்திக்கும் திர்யக்குகள் தான் திரு நாமங்களைச் சொல்ல வற்றாய் இறே இருப்பது -ஆகையால் –
சகு நா நூதித ப்ர்ஹ்ம கோஷம் -என்றும்
பூ மருவி புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குளறும் புனல் அரங்கமே -பெரிய ஆழ்வார் திரு மொழி  4-9-5–என்றும்
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறுகாலைப் பாடும் -பெரிய ஆழ்வார் திரு மொழி-4-2-8-என்றும்
எல்லியம் போது இரு சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி -பெரிய ஆழ்வார் திரு மொழி  -4-8-8-என்றும்
அள்ளியம் பொழில் வாயிருந்து வாழ் குயில்கள் அரியரி என்று அவை அழைப்ப -என்றும்
செவ்வாய்க் கிளி நான் மறை பாடும் -என்றும் -சொல்லுகையாலே

ஸ்ரீ ராம பக்தரான குல சேகரர் ஸ்ரீ ராமன் திரு நாமத்தை அவற்றுக்குக் கற்ப்பித்துக் கேட்குமா போலே –
ஸ்ரீ குலசேகர பக்தரானவர்களும் அவர் திரு நாமங்களை அவற்றின் வாயாலே கேட்க
இச்சிக்கிற படியை சொல்லுகிறதாகவுமாம்
அன்றிக்கே –
ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் என்றும்
பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசன் என்றும் இறே
ஸ்ரீ ராமாயணத்திலும் ஸ்ரீ ரெங்க தாமத்திலும் எம்பெருமானார் மண்டி இருப்பது –

ஸ்ரீ குலசேகரப் பெருமாளும் –
எல்லையில் சீர்த் தயரதன் தன மகனாய்த் தோன்றிற்று முதலா தன்னுலகம் புக்கதீறா -என்றும்
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் இன்றே -என்றும்
ஸ்ரீ ரங்க யாத்ரா திநே திநே -என்றும் –
ஸ்ரீ அணியரங்கன் திரு முற்றம் -என்றும்
ஸ்ரீ அரங்கன் அடியிணைத் தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம் –என்றும்
இரண்டையும் ஆதரித்துக் கொண்டு இறே போருவது

ஆகையால் -கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் இராமானுசன் -என்னும்படி
ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள் இடத்தில் யதி ராஜரான ஸ்ரீ எம்பெருமானார் மடு விட்டு இருப்பது –
அற்ற பத்தர் அபிமானத்திலே ஒதுங்கிப் போருகிற ஸ்ரீ ஆழ்வான் போல்வரை யாய்த்து –
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே -என்கிறார் ஆகவுமாம் –
கிளியும் கற்ப்பித்ததே சொல்லும் –
இவரும்-கற்பியா வைத்த மாற்றம் இறே சொல்லுவது –
மேல் சொல்லுமவர் அன்றே -சொன்னதைச் சொல்லுமவர் இறே
ஆகையால் ஸ்ரீ கூரத் தாழ்வான் போல்வாரைக் கொண்டு ஸ்ரீ குலசேகர ஆழ்வார் வைபவத்தை கூறுவிக்கிறார்–
இன்னமுத மூட்டுகேன் -கூறு என்கிறார்

இன்னமுத மூட்டுகேன்
இன்னடிசிலொடு பாலமதூட்டி எடுத்த என் கோலக் கிளியை -என்னக் கடவது இறே –
இங்கு -தேனும் பாலும் அமுதுமாகிய திருமால் திரு நாமத்தை இறே ஊட்டி வளர்த்தது –
அது தோன்ற ஆழ்வான் வலத் திருச் செவியிலே முன்பு பிரசாதித்த த்வயத்தை மீளவும் பிரசாதித்து அருளிற்று –

இங்கே வா –
என்று -திரு நாமம் சொல் -என்றத்தால் வடிவில் பிறந்த ஹர்ஷத்தை கண்டு வர அழைக்கிறது

பைங்கிளியே
பசுத்து மரகதம் போலே இருக்கிற மடக் கிளியே
இத்தால் –
என் ஆர் உயிர்க் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசும் சாம நிறத்தனன் –
என்னும் படியான ரூப சௌம்யத்தைச் சொல்லுகிறது
பரமம் சாம்யம் உபைதி இறே
ஏதுக்காக என்னை அழைக்கிறது என்னில்

தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் –பொன்னஞ் சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன்
எங்கள் குலசேகரன் என்றே கூறு -என்கிறது

தென்னரங்கம் பாட வல்ல சீர் பெருமாளாவது –
இருளிரிய -தேட்டரும் திறல் தேன் –மெய்யில் வாழ்க்கை -என்கிற மூன்று திருமொழியிலும் பாடி
முடிவிலும் -யாவரும் வந்து அடி வணங்க வரங்க நகரத் துயின்றவனே -என்றும்
மற்றும் ஸ்ரீ திருமலை முதலாய் இருக்கிற ஆராமங்களான ஸ்ரீ திருப்பதிகளையும்
காகுத்தா கண்ணனே -என்றும் அர்ச்சாவதாரத்துக்கு அடியான ஸ்ரீ அவதாரங்களையும் அருளிச் செய்து தலைக் கட்டுகையாலும்
அவர் தாம் -செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் ஆகையாலும்
வெண்ணெய் உண்ட வாயனாகையாலும் -எல்லாம் திருவரங்கத் திருப்பதி விஷயம் ஆகலாம் இறே

பொன்னஞ் சிலை சேர் நுதலியர் வேள்
பொன்னின் -என்றும் பாடம்
ஸ்பர்ஹணீயமான வில்லுக்கு சதர்சமான புருவத்தை முகத்திலே சேர்ந்துடைய ஸ்திரீகளுக்கு ரஞ்ச நீயராய் இருக்கிறவர் –
வேள் -காமன்
கந்தர்ப்ப இவ மூர்த்திமான் -என்றும் –
காமர் மானேய் நோக்கியர்க்கே –என்னக் கடவது இறே
இத்தால் -ஜ்ஞானத்துக்கு மேலான ஸ்வரூப தாந்தியை உடையவர்களுக்கு தர்ச நீயமாய் இருக்கிறவர் -என்றபடி

சேரலர் கோன் –
சேர வம்சத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் ராஜா -என்றபடி
ராஜாதி ராஜ சர்வேஷாம்
கோன் -ராஜா -குடிக்கு நிர்வாஹகர் -என்றபடி

எங்கள் குலசேகரன்
பிரபன்ன குல சேகரர் என்கை-இராமானுசன் என் குலக் கொழுந்து -என்னுமா போலே

குலசேகரன் என்றே கூறு-
நான் வளர்த்த சிறு கிளி பைதலே இன் குரல் நீ மிழற்றாதே குலசேகரன் என்றே கூறு
கூறின வாய்க்கு அமுதமாய திருமால் திரு நாமமான இன்னமுத மூட்டுகேன் -ஆகையால் குலசேகரன் என்றே கூறு
வக்தவ்யம் ஆச்சார்யா வைபவம் -என்னக் கடவது இறே –

————————————————

ஸ்ரீ மணக்கால் நம்பி அருளிச் செய்த தனியன் –

ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே
வாரங்கொடு குடப்பாம்பிற் கையிட்டவன் மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகா மணியே –

அவதாரிகை –

இதில் அவர் ஸ்ரீ வைஷ்ணவர் திறத்தில் பஷபாதித்து இருக்கிற படியைச் சொல்லுகிறது –

ஆரங்கெடப்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்தில் அவர்க்கு உண்டான பிராவண்யத்தைக் குலைக்க வேணும் என்று
மந்த்ரிகள் அவர் திரு ஆரத்தை எடுத்து மறைய வைத்து அவர்கள் பேரிலே ஆரோபிக்க -அத்தைக் கேட்டு

பரனன்பர் கொள்ளார் என்று –
பர வஸ்துவிலே பக்தி பண்ணுமவர்கள் பர வஸ்துவைக் கொள்ளார் என்று பிரதிஜ்ஞ்ஞை பண்ணி –
பரன் அன்பர் அல்லாதவர்கள் இறே -பிறர் நன் பொருள் தன்னை நம்புவது
இப்படி யாகையாலே

அவர்களுக்கே வாரங்கொடு-
அவ்வளவு அன்றிக்கே அவர்கள் விஷயத்திலே பஷபதித்தது –
குடப்பாம்பிற் கையிட்டவன்
பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி -என்கிறபடியே பாம்புக் குடத்திலே அதின் படத்திலே படக் கையிட்டு
அவர்கள் ஆபரணம் எடார்கள் என்று பணத்திலே கையிட்டவர்
அப்படி செய்தவர் தான் அல்பரோ என்னில்

மாற்றலரை வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன்-
சத்ருக்களை நிரசிக்கும் சார்வ பௌம்யர் -என்கிறது –
சத்ருக்கள் வீர்யத்தை நிர்வீர்யமாகப் பண்ணின இது எத்தாலே என்னில்
செங்கோல் –
ஆஞ்ஞையாலே
இருளார் வினை கெட செங்கோல் நடாவுதிர்
கொல்லி காவலன் –
குருகை காவலன் -என்னுமா போலே -கொல்லி -என்கிற நகரத்துக்கு நிர்வாஹகர் -என்கை

வில்லவர் கோன்
அவாந்தர ராஜாக்களுக்கும் அதி ராஜன் -என்கை
அன்றிக்கே
வில்லவர் கோன் -என்று வில்லவர் -என்று பேர்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் -என்றார் இறே
கோழி -உறையூர் -உறையூருக்கும் இறையவர் என்றபடி -அது சோழன் ராஜ தானி –

சேரன் குலசேகரன்
சேரனுடைய குலத்துக்கு சேகரன் –
குலசேகரர் -திரு நாமம்
இப்படி ராஜாதி ராஜர் ஆகையாலே –

முடி வேந்தர் சிகா மணியே -என்கிறது
முடி வேந்தர் சிகா மணி யாவது –
மணி மகுடம் தாழ துளங்கு நீண் முடி யரசர் -அடியிலே வணங்குகையாலே-
மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் -என்று தமக்கு இருக்குமா போல –
தாமும் அவர்களுக்கு சிகா மணி போலே சேகரிக்குமவராய் அலங்கார வஹராய் இருக்கை –

பெரு மணி வானவர் உச்சி வைத்த —
ஈஸ்வராணாம் ஸ்ரீ மத கிரீட தட பீடிதபாத பீடம் -என்னக் கடவது இறே -இவர் பெருமாளை
குலசேகரப் பெருமாளான இவர் பெருமையும் அப்படியே
இப்படி முடி வேந்தர் சிகாமணியான இவரும் ஒருவரே என்னுதல்
இப்படி பெரிய வேண்டப்பாட்டை உடையவரே குடப் பாம்பில் கையிடுவதே -என்று ஈடுபாடு ஆதல்
இத்தால் -அரங்கன் மெய்யடியார்கள் தம் எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தனனாம் -என்றத்தை
அனுஷ்டான பர்யாவசாயியாம் படி அனுஷ்டித்த பிரகாரத்தை சொல்லிற்றாய்த்து –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ ராமாயணமும் திவ்ய பிரபந்தமும் –ஸ்ரீ உ வே அக்காரக் கனி ஸ்வாமிகள்-

November 8, 2015

சபரி தந்த கனி உவந்து -இந்த ஒன்றே ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூ கதிகளில் இல்லாமல் பாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் –
24000 ஸ்லோகங்களின் சுருக்கம் பெருமாள் திருமொழி –
கங்கை காங்கேய கதைகள் -விஸ்வாமித்ரர் வசிஷ்டர் சண்டைகள் இல்லையே -எச்சில் வாய் -அசத் சங்கீர்த்தனம் இல்லாமல்
எல்லா இழவுகளும் தீர -தேவகி புலம்பல் தசரதர் புலம்பல் தீர -திருச்சித்திர கூடம் -திருப்பதி -ஸ்ரீ கோவிந்தராஜன் -சபா பதி -வேறு தெய்வம் சமானமோ –

போக சயனம் -நடராசன் ஆடும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டு –சித்ரா கூடம் ஆனந்தம் போலே இங்கே கிட்ட –
அம் கண் -அழகிய இடங்கள் -கோப பவனம் -கைகேயி கோபித்து வரம் பெற்ற இடம் –
வகுள பூஷண பாஸ்கர உதயம் ஆனதே -த்வாதசி ஸூ ர்ய உதயத்துக்கு காத்து இருக்க வேண்டாம் –
பெண்களும் பேதையும் தெரிந்து கொள்ளும் பொருட்டே அருளிச் செயல்கள் -வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்
ராம திவாகரன் -அச்யுத பானு –வகுள பூஷண பாஸ்கரர் -லோக திவாகரன் -ராமானுஜ திவாகரன் –
ஜய ஜய மஹா வீர -ரகுவீர கத்யம் -ஸ்ரீ வீர ராகவன் -சூர்பணகை அழகாலே வென்றான் ராவணனை சீலத்தாலும் விபீஷணனை சீலத்தாலும் வென்றான் –
தாசரதியே திருவேங்கடத்தான் –
நடுவில் திரு வீதிப்பிள்ளை -பராசர பட்டர் பேரன் -நம்பிள்ளை இடம் அசூயை -ராமன் சத்ய வாக்யத்தால் லோகங்கள் வென்றான் ஐதிகம் –
சத்யமேவ ஜயதி –
ஜய ஜய ஜன்ப பூமி -பெருமாள் விபீஷணன் இராவண வத அநந்தரம் இலங்கையில் தங்க சொன்ன போது-அருளியதை
நேபால் அரசு சின்னத்தில் இன்றும் கொண்டுள்ளார்கள்
உத்தர ராமாயணம் -நாய் குலைக்க -அந்தணர் -கல்லை எடுத்து -தண்டனைக்கு -உண்மை ஒத்துக் கொண்டார் –
நாய் இடமே கேட்க -ஸ்தாபனத்துக்கு அதிகாரி –
இது தண்டனையா -தர்மாதிகாரியாக இருந்து -ஈன ஜென்மமாக பிறந்தேன் –
ராமன் -தாடகை -கண்ணன் -பூதனை முதலில் பெண்ணை கொன்ற ஒற்றுமை
மந்த்ரம் கொள் மறை முனிவர் -விஸ்வாமித்ரர் காயத்ரி மந்த்ரம் -ருஷி சந்தோ தேவதைகள் சொல்லியே மந்த்ரம் –
மந்தாரம் தாரயதி மந்த்ரம் -உச்சரிப்பவனை தாங்கும் –
இதே அர்த்தம் காயத்ரி —
விடுபட்ட அனுஷ்டானம் காமம் குரோதம் -காமோ காரிஷி மன்யுகாரிஷி -சொல்கிறோம்
பயம் இல்லாமல் அனுஷ்டானம் பண்ணலாம் பய நாசனன் பெருமாள் அருகில் இருப்பதால் -மாரீசனைக் கொன்ற பிள்ளை தனம்
-பின்னை இருந்த இருப்பு மிருக ஸ்தானம் -தானே
திருவடி அருளிய அடையாளங்கள் -வால்மீகி அருளிச் செய்யாதவை -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள்
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹன்தாரம் –தம் -அவரை –பல விளக்கங்கள் -வைதேஹி -சப்தார்த்த ரசம் –கர தூஷ்ணாதி வத அநந்தரம் –
ஜடாயுவுக்கு -பெருமாள் -ஈமச் சடங்கு திருஷ்டாந்தம் -மாறநேர் நம்பிக்கு -பெரிய நம்பி –
லோக நாத சுக்ரீவன் நாதன் இச்சதி –
விபீஷணனுக்கு கடல் கரையிலே பட்டாபிஷேகம் -ராவணன் சீதையை கொடுத்தால் அயோத்யைக்கு அரசனாக்கி இருப்பார் –ஜ்வரம் நீங்கப் பெற்றான் -பிரமோதக -விஜ்வர -பஷி -குரங்குகளை மீட்ப்பித்து இந்த்ரன் -பெருமாள் அழுதான் -ஜடாயுவுக்கு ஈமச் சடங்கு பண்ணாமல் இருந்தால்
உயிர் பிழைப்பித்து இருக்கலாம் -பஷி விஷயமான தாபம் –
ஸ்ரீயஸ்ரீ திருமகளோடு வீற்று இருந்த செல்வன் –கைங்கர்ய ராஜ்யத்தில் அபிஷிக்தனாக ஆசைப் படுவார் -ஸ்ரீ மான் வனஸ்பதி
-பிராட்டி இடம் பெருமாள் -ஸ்ரீ மாதவம் கைங்கர்யம் கொடுத்ததால் –
தன் சரிதை கேட்டான்-அகஸ்த்யர் முதலில் சொல்லி -லவ குசர்கள் சொல்ல -தன்னை விட தன கதையில் மக்கள் மூழ்கி இருக்க
கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பட்ட நாம் -குலசேகர் ஆழ்வார் காட்டிக் கொடுக்க -வேறு இன்னமுதம் மதியோம் நாமே
உத்தர நாராயணம் வால்மீகி அருளியதே ஆசார்யர்கள் பல பிரமாணங்கள் காட்டி –
பகவத் பாகவத சம்பந்தம் உள்ள இடம் என்பதாலே வடமதுரையில் அவதரித்தான் கண்ணன்
சென்றால் குடையாம் -லஷ்மணன் படுக்கை விட்டு பிரியாமல் பெருமாள் -திறல் விலங்கும் இலக்குமணனை பிரிந்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளி –
திரு இந்தளூர் விசாலமான கர்ப்ப க்ருஹம் –அதே போலே தில்லைச் சித்ர கூடம்
நல் பாலுக்கு உய்த்தனன் -சம்ச்லேஷத்தில் சுகமும் விச்லேஷத்தில் துக்கமும் -என்ற அர்த்தம் –
தேவை இடாதவர் -ராமன் –
சர்வ தரமான் பரித்யஜ்ய -எல்லா தர்மங்களையும் நன்றாக விடு -மாம் மாம் ஏக்கம் சரணம் வ்ரஜ -எவ்வளவு தேவைகள் –
தில்லை நகரச் சித்ர கூடம் -கோவிந்தராஜர் -இன்றும் அதே பாசுரங்கள் -அனுசந்தேயம்
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவார் -நிகமத்தில் –
பெரியாழ்வார் -திரு மொழி -ராமன் மேல் பதிகம் -பெரிய ஜீயர் வைபவம் –
மாற்றுத்தாய் -சீற்றம் இலாதானைப் பாடி -கோபம் வசம் -நாம் வசம் கோபம் உத்தேச்யம்
மாறு -பெற்ற தாய்க்கு போலியான சுமுத்ரா தேவி -வனம் போ -சொன்னாள்-நல்லது தான் –
அந்த அகைகேயி அபிமானித்த ராஜ்ஜியம் -உனக்கு வேண்டாம் ஒருவரும் அபிமாநியாத ஒன்றே உனக்கு -வானமே போ என்றாள்
திருப்படை வீடு அலங்கரித்து -காப்புக் கட்டி -திரு அபிஷேகம் மட்டும் செய்ய வேண்டியதே
ஐயர் அழைக்கிறார் –பிராட்டி மங்களா சாசனம் பண்ணி அனுப்ப -திக்குகள் ரஷிக்கட்டும்
பிராட்டிக்கு சன்மானம் பண்ணி -தோள் மாலையை சாத்தி -கூரத் ஆழ்வான்
-பட்டர் -திருவடியை வருடி பிடித்து அனைவரும் பார்க்க செய்தார் பெருமாள் -ராசிக்யம் –
உபநிஷத் பூர்த்தி வியாக்யானம் ஆதி சங்கரர் சொன்னவை நாம் கொள்ளலாம்
-நம் சம்ரதாயம் விரோதமாக வியாக்யானம் மட்டுமே -வேதாந்த சங்கரஹம் -காட்டி -அருளி
எப்பொருள் யார் யார்ர் வாய் கேட்டாலும் மெய்ப் பொருள்
-பட்டர் பகவத் குண தர்ப்பணம் -பரம ரசிகர்
மன்னவன் பணி அன்று ஆகிலும் நும் பணி மறப்பனோ -பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ -அவனும் என்னைப் போலே -ஆவான் –
கூற்றுத் தாய் -கைகேயி -யமன் போன்ற -சௌகுரார்யம் பார்க்காமல் வனம் போகச் சொன்னதால் –
கைகேயி வெறுப்பினால் சுமத்ரை அன்பினால் போகச் சொல்லி
நாலூர் பிள்ளை அருளிய அர்த்தம் –நாலூர் ஆச்சான் பிள்ளை -பகவத் விஷயம் நினைவுடன் வணங்கி திரு நாராயண புரம்
ஆசார்யர் ஸ்பர்சம் பட்ட இடம் கொண்டாட்டப் பட வேண்டியதே –
மாற்றுத்தாய் -கைகேயி -ச பத்னி கௌசல்யை நினைவாக -மாறு -விபரீதம் ஒப்புமை போலி பல அர்த்தங்கள்
-பரத ஆழ்வான் நினைவுக்கு விரோதம் என்பதால் -கூற்று -கூறு பாயசம் -உண்டே -வனம் போ சொன்னதால் -அன்புள்ளார் நினைவால் கூற்றுத் தாய்
வனம் சென்ற பிராட்டி -கருப்பேந்த்ரம்-கண்டு சீதை பிராட்டி பயப்பட வில்லை -கரும்பு ஆலைகள் –
யாளி -மிருகம் துதிக்கையில் யானை மாட்டி -சிம்ஹம் முகம் துதிக்கை உண்டு
திருமங்கை ஆழ்வார் ராமன் அனுபவம் –
ராஷச கோஷ்டியிலும் பாடி அருளி -அவர் பஷத்தில் பேசி பெருமாள் பராக்கிரமம் பேச –
10-2- தடம் பொங்கத்தம் பொங்கோ –தோற்ற வர வார்த்தை –எம் கோன் -ராவணன் செய்த தீமை –இம்மையிலே நாங்கள் பலன் பெற்றோம் –
அயோத்யாவசிகள் பெருமாள் பின்னே போக பாரித்து இருக்க லஷ்மணன் போகிறான் என்றதும் நாம் அனைவரும் செய்யும்
கைங்கர்யம் இவன் செய்வான் என்று அறிந்து மகிழ்ந்தார்கள் -மித்ர நண்பன் –என்பர் வால்மீகி
அர்ச்சா மூர்த்தி ஸ்ரீ வைகுண்ட நாதன் போலே கோயில்களில் அனைத்துமே நித்ய சூரிகள் அம்சம் -என்ற எண்ணம் வேண்டுமே
எம் கோன் பட்டான் -முதல் பாசுரம் -ஸ்பஷ்டமாக தெரிந்ததால் சொல்கிறார்கள் -பெரியவாச்சான் பிள்ளை
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை -நஞ்சீயர் அப்பிள்ளை -ஆடு -ஆடு போலே மே மே காத்த கூட ஆள் இல்லை வெற்றி அர்த்தம்
-அத்தை பேச்சுக்கு கூட சொல்ல ஆள் இல்லை –ஆடு சிம்ஹம் -கதை –
பெருமாள் மடி கிடைத்ததே ராவணனுக்கு ஹிரண்யனுக்கு —அத்தை ஆசைப் படுகிறார் திருமங்கை ஆழ்வார்
எரிகிற வீட்டில் ஏதேனும் உள்ளதா என்று தேடுவர் இருவர் -நம்பிள்ளை விபீஷணன் இராவணனுக்கு உபதேசம் -சீதா பிராட்டி மற்று ஒருவர்
அஹங்காரம் மமகாரம் கொண்டு எறிந்த இராவணன் -உடலையும் உயிரையும் பிரித்த பையல் –
தம்பி சொல் கேளாத கோஷ்டியில் இருந்து தம்பி சொல் கேட்கும் கோஷ்டிக்கு போனான் ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
நெய் உண்ணோம் –சொன்ன பின்பு ஓங்கி உலகளந்த உத்தமன் -என்கிறாள் ஆண்டாள் -கூட்டில் இருந்து கோவிந்தா என்று கூப்பிடும் கிளி
ஊட்டுக் கொடாது -செறுப்பனாகில் -உலகளந்தான் என்று உயரக் கூவும்
-தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்-சீதா பிராட்டி -அதில் என்ன சந்தேகம்-கிளி கதை –
அடியேன் -சொல்லி சமாதானம் -அடியே என்றால் சண்டை மல்லிகை மாலை கொண்டு ஆர்த்ததுவும் ஓர் அடையாளம் -கணையாழி சேர்த்து வைத்த கதை
துணைத்தேடல்
தருமம் அறியா குறும்பன்
எல்லாப் பொய்கள் உரைப்பான்
இந்த திரு நாமங்களுக்கு எதுவுமே ஈடாகாதே –
ரணசோர்–கத்தினால் மகிழ்வானாம்-நந்தன் வீட்டில் நவநீத ஆட்டம் -எளிவரும் இயல்வினன்-
சிறையா வைத்ததே குற்றமாயிற்று -திருமங்கை ஆழ்வார்
மனித கூற்றம் -சாதிப்பேச்சு -மானிடமாக வந்து -சாஷாத் நாராயணன் -இராவணன் வரம் அறிந்தவர்கள் என்பதால் –
பொல்லா வரக்கனை கிள்ளிக் களைந்தான் -அசுரனை -என்று இருந்தால் ஹிரண்யன் என்னலாம் –அரக்கர் நிசாசரர் –
இரட்டை வடம் சாத்த -வடை மாலை ஆஞ்சநேயர் -வடையும் வாயு அவரும் வாயு புத்ரன் –
சிந்தூரம் -ராமன் வென்றதும் –செய்தி கேட்டதும் குங்குமம் பூசிக் கொண்டதும் -வெற்றிச் செல்வம் –
பதிம் விச்வச்ய -எனக்கும் அவன் கணவன் -உடம்பு எல்லாம் பூசிக் கொண்டானாம் –

—————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரிய வாச்சான்  பிள்ளை  திரு வடிகளே சரணம்.
குலேசேகரர்    ஆழ்வார் திரு வடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

–

திருவாய்மொழி – -2-10– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

November 8, 2015

பிரவேசம்

கீழ் எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த ப்ராப்யம் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -2-9-4-பெறுகைக்கு திருமலையை –
திருமால் இரும் சோலையை -ஆஸ்ரயிக்கிறார்—சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் -2-10-5-என்று ஆளவந்தார் என்று
அருளிச் செய்தாராக திருமாலை யாண்டான் பணிக்கும் படி –
எம்பெருமானார் -அங்கன் அல்ல -இவர் பாட்டுத் தோறும் -ஒல்லை 2-9-1–ஒல்லை -2-9-10-என்றும் 2-9-2–காலக் கழிவு செய்யேல்
-என்றும் த்வரிக்கப் புக்கவாறே –நமக்கும் அறிவித்து நாமும் இவர் கார்யம் செய்வதாக அறுதி இட்டால் -சரீர சம நந்தரம் பேறு தப்பாது –
என்று அறுதி இட்டு இருக்கலாய் இருக்க இவர் இப்படி த்வரிக்கிறது -இச் சரீரத்தோடு நாம் அடிமை கொள்ள வேணும் -என்று
போலே இருந்தது -இனி இவருக்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்குஏகாந்தமான தேசம் ஏதோ என்று
ஞாலத்தூடே நடந்து உழக்கி பார்த்து -10-7-4-வரச் செய்தே -இவ்விடம் சால ஏகாந்த ஸ்தலமாய்
இருந்தது என்று – திருமலையிலே சந்நிதி பண்ணி யருளி -நாம் உமக்கு முகம் தருகைக்காக வந்து நிற்கிறோம் -நீர் இங்கே வந்து
நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறி அனுபவியும் என்று தெற்குத் திருமலையில் நிற்கும் நிலையை காட்டிக் கொடுக்க இவரும்
அத்தை அனுசந்தித்து பகவான் பிராப்யனானால் அவன் வர்த்திக்கும் தேசமும் பிராப்யமாகக் கடவது இறே
அத்தாலே திருமலையோடு-
அத்தோடு சேர்ந்த அயன் மலையோடு
புற மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் என்று துணியும் துணிவோடு வாசியற பிராப்ய அந்தர்கதமாய் அனுபவித்து இனியராகிறார் -என்று

—————————————————————————

அவதாரிகை –

திருமலையை பிராபிக்கையே இவ்வாத்மாவுக்கு நிரதிசய புருஷார்த்தம் -என்கிறார் –

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1-

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
திருமலையை ஆஸ்ரயிங்கோள் என்றார் –
செய்கிறோம் என்று ஆறி இருந்தார்கள்
கெடுவிகாள் எத்தை விஸ்வசித்து தான் நீங்கள் ஆறி இருக்கிறது
வயோ அச்யாஹ்யாதி வர்த்ததே -யுத்த -5-5-அன்றோ
வாள்களாகி நாள்கள் செல்ல -திருச்சந்த விருத்தம் -115-வன்றோ நீங்கள் ஆறி இருக்கிறது
கழிந்த பருவத்தை உங்களால் தான் மீட்கப் போமோ
கிளர் ஒளி இளமை -என்றது மானச ஸ்ரத்தையாய் பிறந்த இஸ்ரத்தை -இதில் நின்றும் மாறி விஷயாந்தரத்திலே பிறப்பதற்கு முன்பே
ஒருவனுக்கு ஒரு விஷயத்திலே ஒரு கால் ஸ்ரத்தை பிறக்கும் -அவன் தனக்கே அவ்விஷயத்தில் அஸ்ரத்தை பிறக்கக் கடவதாய் இருக்கும்
ஆக பிறந்த ருசி மாறுவதற்கு முன்னே என்னுதல்
ஒளி ஞானம் என்ற பொருளில் ஒளி கொள் விளக்கு -மூன்றாம் திருவந்தாதி -95-ஞான சுடர் விளக்கு-இரண்டாம் திருவந்தாதி -1-போலே
கிளர் ஒளி இளமை -மனதில் பிறந்த ஆழ்ந்த ஈடுபாடு என்றவாறு
அங்கன் இன்றிக்கே –
பிராப்யம் -என்னும் பிரதிபத்தி பிறந்தாலும் கரணபாடவம் இல்லையே -என்று கை வாங்க வேண்டாதபடி –
கரண பாடவம் உள்ள போதே -என்னுதல்
பால்யே கிரீட நகா சக்தா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -17-94-என்னா –
-தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -17-95-என்னா நின்றது இறே –
வளர் ஒளி –
ஸ்வ வ்ருத்தி ஷயாதிகள் இல்லாதவனுக்கு விகாரத்தை பிறப்பிக்க வற்றதாயிற்று தேச ஸ்வபாவம்
நாட்செல்ல நாட செல்ல வளரா நின்றுள்ள புகரை உடையனாய்
மாயோன் மருவிய கோயில் –
ஆச்சர்ய சக்தி உக்தனான -சர்வேஸ்வரன்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
அடிமை செய்கிறவர்கள் -கிளர் ஒளி இளமையை உடையவர்கள்
அடிமை கொள்ளுகிறவன் வளர் ஒளி மாயோன்
அடிமை செய்கிற தேசம் -வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
ஆக –இப்படி அடிமை செய்யுமவனும் அடிமை கொள்ளுமவனும் அடிமை செய்யும் தேசமும் ஒத்த பருவமாயிற்று இருப்பது
வளர வளர இளகிப் பதித்துச் செல்லா நிற்குமாயிற்று சோலை –
தளர்விலராகில் சார்வது சதிரே-
யன் முஹூர்த்தம் ஷணம் வாபி -இத்யாதி -சர்வ பிரகாரத்தாலும் வரும் அனர்த்தமாகிறது -திருமலையைக் கிட்டாமை -என்கிறார்
திருமலை பிராப்யம் -என்னும் புத்தி பிறந்து லபிக்கைக்கு விரோதியாய் வரும் அனர்த்த பாகிகள் யன்றியே ஒழிய வேண்டில்
சார்வது சதிரே —
திருமலையைக் கிட்டும் இதுவே இவ்வாத்மாவுக்கு சதிர்
அல்லாதவை எல்லாம் இளிம்பு
கண்ணுக்கு இலக்கான விஷயங்களை விட்டு வேறு சிலவற்றைப் பெறுகைக்கு யத்னியா நின்றி கோளீ-என்று நீங்கள் நினைத்து இருக்கும் அதுவே இளிம்பு
இதுவே சதிர் –

————————————————————————-

அவதாரிகை

திருமலையோடு சேர்ந்த ஸ்ரீ யபதியை கிட்டுகையே பரம பிரயோஜனம் என்கிறார் —
அன்றிக்கே – -திருமலை தன்னையே சொல்லுகிறதாதல் -(அன்றிக்கே திருப்பதியை யாதல் )-

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2-

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
சதிரிள மடவார் விஷயமாக நீங்கள் பண்ணும் தாழ்ச்சியை ஒன்றாக புத்தி பண்ணாதே -என்னுதல்
சதிரிள மடவார் தாங்கள் பண்ணும் தாழ்ச்சியை மதியாதே -என்னுதல்
மதித்தால் பிரயோஜனம் இல்லாமையே யன்று -மேல் நரகம் -இங்கு சிஷ்டகர்ஹை
பக்தாநாம் -என்று பரார்த்தமாய் நிரதிசய போக்யமாய் இருக்கும் விஷயம் அன்றே
சதிரை உடையராய் இருப்பார்கள் -பிறரை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஈடான விரகை உடையராய் இருப்பார்கள்
செத்துக் காட்டவும் கூட வல்லராய் இருக்கை
சதிரையும் பருவத்தின் இளமையையும் காட்டி யாயிற்று அகப்படுத்துவது
கீழே கிளர் ஒளி இளமை -என்றதே -அப்பருவம் கண்ட இடத்தே இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள்
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
திருக் கையின் ஸ்பர்சத்தாலே-எப்போதும் ஒக்க முழங்கா நின்றுள்ள ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருக் கையிலே உடையராய்
-அச் சேர்த்தி அழகாலே அது தன்னையே தமக்கு நிரூபகமாக உடையவர் –
ஆஸ்ரித ரஷணத்துக்கு பாங்கான நிலம் என்று திரு உள்ளத்தாலே விரும்பி என்னது என்று ஆதரித்து வர்த்திக்கிற கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை -பதியது-
சூற் பெண்டுகள் சுரம் ஏறுமா போலே சந்தரன் தவழ்ந்து ஏறா நின்றுள்ள சிகரத்தை உடைய திருமலை
மாலிரும் சோலை யாகிற பதி -என்னுதல் -மால் இரும் சோலையில் பதி என்று திருப்பதியைச் சொல்லுதல்
பதியது வேத்தி எழுவது பயனே —
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கும் அதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனம்
அல்லாதவை நிஷ்பிரயோஜனம் -பிரயோஜனம் என்றது பிராப்யம் என்றபடி

————————————————————————-

அவதாரிகை –

உத்தேச்யத்துக்கு இது எல்லாம் வேணுமோ -திருமலையோடு சேர்ந்த அயன்மலையை யடைய யமையும் -என்கிறார்

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
பயன் அல்லவாக நினைத்து இருக்கிறது -பரம பதத்தில் இருப்பையும் -அல்லாத அவதாரங்களையும்
அன்றியே
பிரயோஜன சூன்யமானவற்றை செய்து ஒரு பிரயோஜனமும் இல்லை
செயலும் பலமும் இரண்டும் பிரயோஜனமாயிற்று தாம் பற்றின விஷயம்
ஸூ ஸூகம் கர்த்தும் –ஸ்ரீ கீதை -9-2-என்னக் கடவது இறே
சாதன தசையிலும் துக்க ரூபமாய் பல வேளையிலும் துக்க மிஸ்ரமாய் இருக்கிற ஸ்வர்க்க தத் சாதனங்களை யாயிற்று இவர் நினைத்து இருக்கிறது
நெஞ்சே
விஷயாந்தரத்துக்கும் இவ் விஷயத்துக்கும் உண்டான நெடுவாசி உனக்கு அனுபூதம் இ றே
நெஞ்சே
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இறே நெஞ்சு தான் இருப்பது
இவ்வளவிலும் இவ்விஷயத்தை அகலுகைக்கு கார்யம் பார்த்தாய் நீ இறே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
பயனான விஷயம் தான் இருக்கிறபடி
வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற வடிவு அழகை உடையவர்
அவ் வடிவு அழகை சர்வஸ்தானம் பண்ணி வர்த்திக்கிற கோயில்
வர்ஷூகமான மேகம் போலே ஜல ஸ்த்தல விபாகம் இன்றிக்கே சர்வஸ்தானம் பண்ணி வர்த்திக்கிற தேசம் என்றுமாம்
இத்தால் தமக்கு பிராப்ய பிராபகங்கள் ஒருவனேயாய் இருக்கிறபடி –
மயல் மிகு பொழில் சூழ் –
சோலைச் செறிவாலே புக்கார்க்கு இருண்டு இருக்கும் -என்னுதல்
அன்றியே போக்யதா பிரகர்ஷத்தாலே நெஞ்சை இருளைப் பண்ணும் என்னுதல்
மாலிரும் சோலை அயன்மலை
திருமாலை யோட்டை சம்பந்தத்தையே தனக்கு பேராக உடைத்தான மலை-அகஸ்த்ய ப்ராதா -என்னுமா போலே
யடைவது அது கருமமே –
அது ஒன்றுமே கர்த்தவ்யம்
அல்லாதவை யடைய அகர்த்தவ்யம் என்கிறார் –

———————————————————————————–

அவதாரிகை –

கர்ம பந்தத்தைப் போக்கி ஆஸ்ரிதரானவர்கள் அடிமை செய்து வாழுகைக்கு ஈடாம் படி சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
திருமலையை ஆஸ்ரயிக்கையே சத்ருசம் என்கிறார் –

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
இது நம்மால் செய்து தலைக் கட்டப் போமோ -திருமலையை ஆஸ்ரயிக்கும் அது ஒழிய -என்று இங்கனே ஆழ்வான் ஒரு உருவிலே பணித்தானாம்
அங்கனம் நிர்வஹிக்கக் கடவது
அன்றிக்கே –
கரும வன் பாசம் கழிக்கைக்காகவும் -உழன்று உய்க்கைக்காகவும் என்று இங்கனே எம்பெருமானார் அருளிச் செய்யும் படி
முராசூரன் -நரகாசுரன் அமைச்சன் -அநேக மாயிரம் பாசங்களாலே தன்னை மறைய வரிந்து கொண்டு இருந்தால் போலே
யாயிற்று அவித்யாதிகளால் தன்னை மறைய வரிந்து கொண்டு இருக்கும் படி
கர்மமாகிற வலிய பாசங்களைக் கழிக்கைக்காகவும் -தன பக்கல் கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கைக்காகவும்
பரித்ராணாயா சாதூனாம் -என்கிறபடியே விரோதிகளைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கை இறே அவதாரங்களுக்கு பிரயோஜனம்
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
அரியன செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன்
கோப கோபீ ஜன சங்குலம் அதீவார்த்தம் –என்று இடையரும் இடைச்சிகளும் நோவுபட ஒரு மலையை எடுத்து நோக்கினவன்
அந்த ஐஸ்வர்யத்தோடு நித்ய வாசம் பண்ணுகிற கோயில்
பெரு மலை
பஞ்ச லஷம் குடியும் நிழலிலே ஒதுங்கலாம் படி இறே மலையின் பரப்பு
பீடு -பெருமை -அதாவது ஐஸ்வர்யம் -ஆபத்சகத்வாதிகள்
பசுக்களுக்கும் இடையருக்கும் ரஷகன் ஆகையாலே வந்த ஐஸ்வர்யம் தோற்ற வர்த்திக்கும் கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
சமுத் வஹந்தஸ் சலிலாதி பாரம் பலாகி நோ வாரி தரா நதந்த-மஹத் ஸூ ஸ்ருன்கேஷூ மஹீ தராணாம் விச்ரம்ய விச்ரம்ய புன ப்ரயாந்தி-
என்கிற படியே சூற் பெண்டுகள் சுரம் ஏறுமா போலே யாயிற்று மேகங்கள் சஞ்சரிப்பது
ஊர்க்கு இரண்டாயிற்று மழை-நின்ற இடத்தில் நின்று வர்ஷிப்பதொரு மேகமும் -போவது வருவதுமாய் இருப்பதொரு மேகமும்
புயல் மழை வண்ணர் -என்றது இறே
மாலிரும் சோலை யாகிற திருமலையை ஆஸ்ரயிக்கும் இதுவே திறம்
செய் திறம் -செய்ய அடுப்பது இதுவே
மாலிரும் சோலை யை உடைத்தான திருமலையை -என்னுதல்
மால் -என்று பெருமை இருமை என்றும் பெருமை -ஓன்று ஒக்கத்திலே ஓன்று பரப்பிலே –

——————————————————————————-

அவதாரிகை –

திருமலைக்கு புறம்பான மலையை பிராபிக்கையே நல் விரகு -என்கிறார் –

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
திறம் -சமூஹம் -வலம் -பலம் –
திரண்ட பலத்தாலே பிரயோஜநாந்தர பிராவண்யம் ஆகிற மஹா பாபத்தை கூடு பூரியாதே
அற முயலாழிப் படைய-லஷ்மணச்ய தீமத – சுந்தர -16-4-என்கிறபடியே -சர்வேஸ்வரனிலும் ஆஸ்ரித ரஷணத்திலே முயலா நின்றுள்ள
திரு வாழியை ஆயுதமாக உடையவன் வந்து வர்த்திக்கிற தேசம் –
சர்வேஸ்வரன் கடைக்கணித்து விட அரை ஷணத்திலே வாரணாசியை தஹித்து வந்து நின்றான் இறே –
அறம் + முயல்-தர்மம் முயல் / அற முயல் -மிகுந்த முயல் என்றுமாம்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை புறமலை சாரப் போவது கிறியே –
ரமணீயம் ப்ரசன் நாம்பு சந் மனுஷ்ய மநோ யதோ –என்கிறபடியே -மறுவற்று-ஆழ்வார் திரு உள்ளம் போலே தெளிவை உடைத்தாய்
தர்ச நீயமாய் ஊற்று மாறாத சுனைகளாலே சூழப் பட்ட மாலிரும் சோலை புறமலை சாரப் போமிதுவே
பகவத் பிரத்யாசத்தி வேண்டியிருப்பாருக்கு வருத்தம் அற லபிக்கலாம் நல் விரகு –

——————————————————————————-

அவதாரிகை –

திருமலைக்குப் போம் மார்க்க சிந்தை பண்ணும் இதுவே இவ்வாத்மாவுக்கு நல்லது -என்கிறார்

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பின்னை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10–6-

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
இதை நல் விரகு என்று புத்தி பன்னுங்கோள் –
நான் சொல்லுகிற இது ஒழிய தண்ணிதான வற்றைச் செய்ய நில்லாதே –அதாவது பிரயோஜநாந்தர பராவண்யம்
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
உறிகளிலே சேமித்து கள்ளக் கயிறு உருவி வைத்த வெண்ணெயை தெய்வம் கொண்டதோ -என்னலாம் படி
களவு கண்டு அமுது செய்தவன் வந்து வர்த்திக்கிற தேசம்
இத்தால் அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாதவன் -என்கை-

மறியோடு பின்னை சேர் மாலிரும் சோலை
குட்டியும் தாயும் பிரியாதே வர்த்திக்கிற தேசம்
ரஷ்ய ரஷகங்கள் தம்மில் பிரியாதே வர்த்திக்கும் தேசம் -என்கை
நெறி படவதுவே நினைவது நலமே –
நெஞ்சிலே அடிப்படும்படியாகத் திருமலையை அனுசந்திக்குமதுவே நன்மையாவது என்னுதல்
அன்றிக்கே -நெறி படுகைக்கு நினைக்குமதுவே -மார்க்க சிந்தை பண்ணுமதுவே-இவ்வாத்மாவுக்கு நன்மையாவது -என்னுதல்
அதுவே நினைவது நலம்
இத்தை நினைக்கும் அதுவே விலஷணம்-அது ஒழிந்தவை எல்லாம் பொல்லாதது -என்கை –

————————————————-

அவதாரிகை –

திருமலையை சென்று கிட்டி நிரந்தர வாஸம் பண்ணுகையே இவ்வாத்மாவுக்கு வெற்றி என்கிறார் –

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

நலமென நினைமின் நரகழுந்தாதே
நான் சொல்லுகிற வார்த்தையை நன்மை என்று புத்தி பண்ணுங்கோள் –
விலஷணமான புருஷார்த்தம் என்று புத்தி பண்ணுங்கோள்-
நரகங்களும் இவர்களுக்கு வ்யவஸ்திதமாய் இறே இருப்பது –
யஸ் த்வயா சஹ ச ஸ்வர்க்க -நிரயோ யஸ் த்வயா வி நா –அயோத்யா -30-18-காட்டிலே போமது துக்கம்
-படை வீட்டில் இருக்குமது சுகம் -என்றாயிற்று பெருமாள் அருளிச் செய்தது –
அங்கன் அல்ல ஸூக துக்கங்கள் வ்யக்தி தோறும் வ்யவஸ்திதமாய் காணும் இருப்பது
யாதொன்று உம்மோடு பொருந்துகிறது -அது ஸூகமாகிறது
உம்மை ஒழிய படை வீட்டில் இருக்கும் இருப்பு துக்கமாகிறது
இதி ஜானன்–அயோத்யா -30-18-தம்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணும் காணும்
பராம் ப்ரதீம் -உம்மைப் போலே நிறுத்து அல்ல காணும் என்னுடைய ப்ரீதி இருப்பது
நம்மில் உனக்கு ப்ரீதி பரையாகச் சொன்னாய் -அது நமக்குச் சொல்லுகிறது என் என்ன
கச்ச ராம மயா சஹ —அகர தஸ்தே கமிஷ்யாமி –அயோத்யா -27-16-என்று நான் புறப்பட்ட படியே
என்னை முன்னே போக விட்டு பின்னே வரப் பாரும்
ந ச சீதா த்வயா ஹீ நா -அயோத்யா -55-31–என்றார் இறே இளைய பெருமாள்
நரகழுந்தாதே -பிரிவால் வரும் கிலேச அனுபவம் பண்ணாதே –
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
வராஹ கல்பத்தின் ஆதியிலே மஹா வராஹமாய் அண்ட பித்தியிலே சேர்ந்து உரு மாய்ந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுத்துக் கொண்டு
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
சந்திர பதத்துக்கு அவ்வருகே வளர்ந்து நிற்கையாலே அவன் போம் போது சிகரங்களிலே தேய்ப்புண்டு
சாணையிலே இட்டால் போலே களங்கம் அறா நிற்கும் -என்னுதல்
அன்றிக்கே -திருமலை ஆழ்வார் தாம் ஜ்ஞான லாபத்தை உண்டாக்குவார் -என்று பிள்ளான் வார்த்தை –
வலமுறை எய்தி மருவுதல் வலமே –
காலயவன ஜரா சந்தாதிகளைப் போலே அன்றிக்கே அனுகூலமான முறையிலே கிட்டி
மருவுதல் வலம் என்னுதல் வரம் என்னுதல் பலவத்தரம் என்னுதல் ஸ்ரேஷ்டம் என்னுதல் –

—————————————————————————–
அவதாரிகை

திருமலையை நிரந்தரமாக வலம் செய்வதே வழக்கு என்கிறார் –

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
சர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாக தந்த மனுஷ்ய சரீரத்தைக் கொண்டு பலத்தை உண்டாக்கி பின்னை அவனை
ஆஸ்ரயிக்கை இன்றிக்கே மாயவன் தன்னை வணங்க வைத்த கரணமிவை -இராமானுசன் நூற்றந்தாதி -67-
இதர விஷய பிராவண்யத்துக்கு உடலாக்கி அனர்த்தப் படாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
சித்ர கூட பரிசரத்தில் பிராட்டியும் கூடக் கையைப் பிடித்துக் கொண்டு உலாவினால் போலே பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு
அழகர் ஆதாரத்தோடு சஞ்சரிக்கிற தேசம்
ய ஆத்மாதா பலதா -என்கிறபடியே -தன்னையும் கொடுத்து தன்னை தன்னை அனுபவிக்கைக்கு ஈடான சக்தியையும் கொடுக்கும்
ஆச்சர்ய பூதனான கிருஷ்ணன் வர்த்திக்கிற தேசம்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
கீழே விண்ணோர் வெற்பன் -1-8-3–என்கிறார்
இங்கே வானோர் மாலிரும் சோலை என்கிறார்
இதுக்கு நினைவு என்-உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க -என்னில் பிரஜைக்கு தாயினுடைய அவயவம் எல்லாம் கிடக்க
முலைக் கண்ணிலே இறே வாய் வைக்கலாவது
அப்படியே இங்கு தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும்-என்கிற முலை யாகையாலே அவர்களுக்கேயாய் இருக்கிறது –
வானோர் மாலிரும் சோலை
பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளிகிற போது லஷ்மண பாதர்கள் பின் தொடர்ந்தாள் போலே -சர்வேஸ்வரன் இங்கே போருகையாலே
நித்ய ஸூரிகளும் போந்து வலம் செய்யா நிற்பர்கள்
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே —
நாமும் இவர்களோடு கூட அங்கே அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி –
விஷ்ணோர் ஆயதனம் நித்யம் சாயம் ப்ராதர் திநே திநே ப்ரதஷிண த்வயம் குர்யாத் அஸ்வமேத பலம் லபேத் –
பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டரும் பிரதஷிணம் பண்ணா நிற்க பின்னே சேவித்துக் கொண்டு போனேன் –
அல்லாதார் கடும் குதிரை போலே வாரா நிற்க இவர்கள் திருக் கோபுரங்களையும் திரு மாளிகைகளையும் கண்ணாலே
பருகுவாரைப் போலே பார்த்துக் கொண்டு வந்தார்கள் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
நாளும் மருவுதல் வழக்கே —
நித்ய ஸூ ரிகளுடைய யாத்ரையே தனக்கு யாத்ரையானால் பின்னை மறுவல் இடாது இறே -இதுவே வழக்கு

—————————————————————————-

அவதாரிகை –

திருமலையைத் தொழுவோம் -என்று அத்யவசித்து நினைக்கை அமையும் விஜய ஹேது -என்கிறார்

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
நான் சொல்லுகிற இதுவே முறை என்று புத்தி பண்ணுங்கோள்-
வல் வினை -உங்களால் போக்கிக் கொள்ள ஒண்ணாது -மகா பாபங்களைப் பரிஹரிக்க வேண்டி இருந்தி கோளாகில்
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
அழன்-என்று பேய்க்கு பேர் –
கொடி -என்று பெண்ணுக் பேர் –
பேய்ப் பெண் என்றபடி
அழன்-என்று-பிணமாய் -அத்தால் பேய் என்றபடி -பூதனையை முடித்தவன் –
இங்கன் ஒத்த விரோதிகள் வந்த போதாக நம்மை நெடுங்கை நீட்டாக்கி வைக்க ஒண்ணாது என்று நித்ய வாஸம் பண்ணுகையாலே ஸ்லாக்கியமான கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
அங்கு உண்டான திர்யக்குகளும் அழகரோடு ஓரினமாய் ஆயிற்று இருப்பது
இல வானைக் கன்றுகள் இன இனமாகச் சேரா நின்றுள்ள திருமலையை
லஷண உபேதமாய் இருப்பதொரு ஆனை நின்ற இடத்தே ஆயிரம் ஆனைகள் வந்து சேரா நிற்கும்
அங்கு நிற்கிறது சோலை மலைக் களிறு இறே
தென்னானை இறே
தொழக் கருதுவதே துணிவது சூதே-
திருமலையைத் தொழ வேணும் என்னும் மநோ ரதத்திலே துணிவதே இவ்வாத்மாவுக்கு விஜய ஹேது

——————————————————————-

அவதாரிகை –

பல படியாலும் திருமலையே பர பிராப்யம் என்று உபக்ரமித்த படியே உப சம்ஹரிக்கிறார்
சார்வது சதிரே -என்றத்தையே புகுவது பொருளே என்கிறார்

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-

சூதென்று களவும் சூதும் செய்யாதே
நமக்கு நல்ல வாய்ப்பாய் இருந்தது என்று சூதும் களவும் செய்யாதே –
சாஸ்திரங்கள் இவற்றை நிஷேதிக்கையாலே அவற்றையும் சொல்லவுமாம்
அன்றிக்கே களவாவது -சோரேணாத்மாப ஹாரிணா -என்கிற ஆத்மாபஹாரமாய்
சூதாவது சாத்விகனாய் ப்ராமாணிகனாய் இருப்பான் ஒருவன் சர்வேஸ்வரன் ரஷகன் -என்று விஸ்வசித்து இருந்தால்
காண்கிற தேஹத்துக்கு அவ்வருகே ஒரு ஈஸ்வரன் ஆவது என் ஆத்மா ஆவது என் -என்று காணக் காண அபஹரிக்கை
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
இவை ஒருவருக்கு வாராத படி வேதார்த்தத்தை விசதீ கரித்த கீதோ உபநிஷத் ஆசார்யன் வர்த்திக்கிற கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
மாது -என்று மாதுர்யத்தைச் சொல்-என்னுதல்-பேடையை உற்ற மயில் என்னுதல்
அங்குள்ள சத்வங்கள் எல்லாம் மிதுனமாய் வர்த்திக்கும் என்னுதல்
போதவிழ் மலையே புகுவது பொருளே
கொடியும் தண்டும் சருகும் இடை இடையிலே பூவுமாய் இருக்கை யன்றிக்கே திருமலை தன்னை முட்டாக்கிட பூத்துக் கிடக்கும் அத்தனை
திருமலையைக் கிட்டுமதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனமாக தலைக் கட்டுவது -அல்லாதவை எல்லாம் வ்யர்த்த வ்ருத்திகள் -என்கிறார்

———————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்றாரை இத் திருவாய் மொழி தானே ஜன்மத்தைப் போக்கி அழகர் திருவடிகளிலே சேர்த்து விடும் -என்கிறார்

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

பொருள் என்று இவுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
பிரயோஜனப் படும் என்று இந்த லோகங்களை உண்டாக்கினவனுடைய கல்யாண குண விஷயமாக அஜ்ஞ்ஞான கந்தம் இல்லாத
ஆழ்வார் அருளிச் செய்தது தான் இது தான்
இவற்றை உண்டாக்கி கரண களேபரங்களை கொடுத்து விட்டால் கொடுத்த உபகரணங்களைக் கொண்டு சப்தாதி விஷயங்களிலே
பிரவணராய் கை கழியப் புக்கால் நம் நினைவு தப்பிற்றே என்று நெகிழ்ந்து கை வாங்குகை யன்றிக்கே –
ஒரு நாள் அல்லா ஒரு நாள் ஆகிலும் பிரயோஜனப் படாதோ என்ற பலகாலும் உண்டாக்கா நிற்கும்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே அவனுடைய குண விஷயமாக மருள் இல்லாதவர் ஆயிற்று இவ்வாழ்வார்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
பிரபந்தமோ என்னில் –
மருள் உண்டாய் கழிய வேண்டிற்று ஆழ்வாருக்கு
இவருடைய பிரபந்தம் அப்யசித்தார்க்கு முதலிலே அஜ்ஞ்ஞானம் தான் இல்லை
கேட்டார்க்கு தெளிவைப் பிறக்கும் படி யாயிற்று இவர் அருளிச் செய்தது
தம்முடைய ஜ்ஞானத்துக்கு அடி ஈஸ்வரன் -இவர்களுக்கு தம்மடியாக வந்தது
பிரபந்தம் தான் செய்வது என் என்ன -என்னில்
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே
அருளை இட்டாயிற்று வஸ்துவை நிரூபிப்பது -அருளை உடையவன் திருவடிகளிலே சேர்த்து விடும்
அது செய்யும் இடத்தில்
முடித்தே
சம்சார பந்தத்தை வாசனை யோடு போக்கி திருவடிகளிலே சேர்த்து விடும்
ஒரு ஜ்ஞான லாபத்தைப் பண்ணி விடும் அளவன்றிக்கே
அர்த்த க்ரியா காரியாய் இருக்கும்
கள் அழகருக்கு -அருளுடைய பெருமாள் என்ற திரு நாமம் உண்டே –

முதல் பாட்டில் -கடுகத் திருமலை யாழ்வாரை ஆஸ்ரயிங்கோள் என்றார்
இரண்டாம் பாட்டில் -திருமலையொடு சம்பந்தித்த ஸ்ரீயபதியை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
மூன்றாம் பாட்டில் அத்தோடு சேர்ந்த அயன் மலை அமையும் என்றார்
நாலாம் பாட்டில் திரி தந்தாகிலும் என்கிறபடி திரியவும் திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
அஞ்சாம் பாட்டில் அத்தோடு சேர்த்த புற மலையை ஆஸ்ரயிங்கோள் என்றார்
ஆறாம் பாட்டில் திருமலைக்குப் போம் மார்க்க சிந்தை பண்ண அமையும் என்கிறார்
ஏழாம் பாட்டில் அவ்வழி யோடு சேர்ந்த திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
எட்டாம் பாட்டில் நித்ய ஸூ ரிகளுக்கும் கூட ப்ராப்யம் ஆகையாலே திருமலையே பரம பிராப்யம் என்கிறார்
ஒன்பதாம் பாட்டில் திரு மலையைத் தொழக் கடவோம் என்ற துணிவே வேண்டுவது என்றார்
பத்தாம் பாட்டில் எல்லாப் படியாலும் திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்தம் என்று தலைக் கட்டினார் ‘
நிகமத்தில் இது கற்றாருக்கு பலம் அருளி தலைக் கட்டுகிறார் –

முதல் திருவாய் மொழியாலே மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -என்று விலஷண விஷயம் ஆகையாலே
பிரிந்தார் கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் என்றார்
இரண்டாம் திருவாய் மொழியில் அவ்வோபாதி கூடினாலும் மறப்பிக்கும் என்றார்
மூன்றாம் திருவாய் மொழியாலே கூடின விஷயம் தானே ஸூக ரூபமாய் இருக்கும் என்றார்
நாலாம் திருவாய் மொழியாலே அவ்விஷயத்துக்கு தேசிகரோடே அனுபவிக்கப் பெறாமையாலே மோஹாங்கதரானார்
அஞ்சாம் திருவாய் மொழியிலே தாம் ஆசைப்பட்ட படியே வந்து கலந்தபடி சொன்னார்
ஆறாம் திருவாய் மொழியாலே தம் இழவுக்கும் அவன் அதி சங்கை பண்ணும் என்றார்
ஏழாம் திருவாய் மொழியாலே தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீகரித்தபடி சொன்னார்
எட்டாம் திருவாய் மொழியிலே அவனுடைய மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்தார்
ஒன்பதாம் திருவாய் மொழியாலே பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்
பத்தாம் திருவாய் மொழியாலே நிஷ்கர்ஷித்த பிராப்யத்தை லபிக்கைக்கு திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கச் சொன்னார்

—————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-