Archive for September, 2014

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-31-40–திவ்யார்த்த தீபிகை —

September 23, 2014

புரியொரு கை பற்றி யோர் பொன்னாழி யேந்தி
அரியுருபும் ஆளுருவுமாகி –எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணதான் ஆமோ இமை –31-

——————————————————————————————————–

புரியொரு கை பற்றி யோர் பொன்னாழி யேந்தி
வலம்புரி -சங்கு ஒரு கை
சத்தியபாமை -பாமை போலே
எல்லா அவதாரங்களிலும் திவ்யாயுதங்கள் உண்டே
சில அவதாரங்களில் மறைந்தும்
சில அவதாரங்களில் வெளித் தோன்றியும்
காரணார்த்த மாகவாம்

அரியுருபும் ஆளுருவுமாகி —
எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த
நெருப்பு நிறமாய் இருக்கும் ஆதலால் ஹிரண்யன் –
மாலடியை யல்லால் மற்று
எண்ணதான் ஆமோ இமை
இதை ஆராய்ந்து பார் நெஞ்சே –
பிரஹ்லாதன் இடத்தில் உள்ள வாத்சல்யத்தாலே
செய்து அருளின செயல்
இத்தை அனுசந்தித்தால் இவனை விட்டு வேறு ஒரு விஷயத்தை
ஒரு நொடிப் பொழுதாகிலும் நினைக்க வழி உண்டோ-

———————————————————————————————————————————

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் -நமையாமல்
ஆகத்து அணைப்பார் அணைவரே ஆயிரவாய்
நாகத்தணையான் நகர்–32-

—————————————————————————————

இமையாத கண்ணால்
ஞானத்தில் குறைவில்லாத நெஞ்சு என்னும்
உட் கண்ணாலே

இருள் அகல
அஞ்ஞானம் ஆகிற அந்தகாரம் நீங்கும் படியாக

நோக்கி
தன் ஸ்வரூபத்தையும்
பர ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும்
உள்ளபடி கண்டு

அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் -நமையாமல்
அமையா -திருப்தி பெற்று அடங்கி இராதே
பொறிகள் ஐந்தும் புலன் ஐந்தும்
செவி வாய் கண் மூக்கு உடல் பஞ்ச இந்த்ரியங்களையும்
சப்தம் ரூபம் ரசம் கந்தம் ஸ்பர்சம் பஞ்ச விஷயங்களுக்கும்
பட்டி மேய்க்க விடாமல் அடக்கி ஆளாதே
நமையாமல் -அடக்காமல்

ஆகத்து அணைப்பார்
மாதர்கள் தேகத்தை அனைத்துக் கொண்டு
கண்டபடி திரிபவர்கள்

ஆயிரவாய் நாகத்தணையான் நகர்
எம்பெருமானது ஸ்ரீ வைகுண்டம்

அணைவரே
அணைவர் அணைவரா-இரண்டு வகையிலும் பொருள்
எம்பெருமான் தானாகவே கடாஷிக்கும் பொழுது
அவனை விலக்காதவர்களுக்கு
உஜ்ஜீவிக்க வழி உண்டு
இதில் ஆகத்து அணைப்பார் -எம்பெருமானாலே அந்தரங்கமாக விஷயீ கரிப்பப் பெற்றால்
கிருபா வைபவ உக்தி -இதுவே ஆழ்வார்களுக்கும் ஆச்சார்யர்களுக்கும் அபிமதமாய் இருக்கும் –

————————————————————————————————————————————————————-

நகரம் அருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறைப்பயந்த பண்பன் -பெயரினையே
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்
அந்தியாலாம் பயன் அங்கு என் –33-

———————————————————————

நகரம் அருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
திரு நாபி கமலத்திலே
பிரமனுக்கு இருப்பிடத்தை ஏற்படுத்தி அருளையும்
அந்தரங்கருக்கு அருகிலே மாளிகை அமைக்குமா போலே

பகர மறைப்பயந்த பண்பன் –
யோக்யர்கள் எல்லாம் ஓதும்படி
வேதத்தை உபகரித்த குணசாலியான எம்பெருமானுடைய
மத்ஸ்ய ஹம்ச அவதார முகேன

-பெயரினையே
திரு நாமங்களையே

புந்தியால் சிந்தியாது
மனத்தினால் எண்ணாமல்

ஓதி உரு எண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என் –
ஜபம் செய்வதும்
உரு சொல்வதும் மான
சந்தா வந்தனம் போன்ற கர்மானுஷ்டன்களால்
உண்டாக போகிற பிரயோஜனம் என்ன –
ஒன்றும் இல்லையே
எம்பெருமானை உள்ளீடகக் கொள்ளாத இவற்றால் –
அந்தரங்க பகவத் பக்தியே முக்கியம் –

—————————————————————————————————————————————————————–

என்னொருவர் மெய்யன்பர் ஏழு உலகுண்டு ஆலிலையில்
முன்னொருவனாகிய முகில் வண்ணா -நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறு–34-

————————————————-

என்னொருவர் மெய்யன்பர்
ஏழு உலகுண்டு ஆலிலையில் முன்னொருவனாகிய முகில் வண்ணா –
நின்னுருகிப்பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால்
ஒருத்தி வந்து முலை தந்து
பட்ட பாடு கண் எதிரே காணா நிற்கச் செய்தே

பேரமர்க்கண்-
கண்ணபிரானை கொள்ளக் கருதி அதற்கு முயன்ற இடம்

பேரமர்க்கண் ஆய்த்தாய் முலை தந்தவாறு –
ஒன்றுடன் சண்டை செய்யும் பெரிய கண்களை உடைய யசோதை என்றுமாம்
இன்னும் ஒருத்தி கிட்ட தான் வர முடியுமா
அஞ்சாமல் கிட்டி வந்து முலை கொடுக்கத் தான் முடியுமோ
இதை எங்கனே மெய் என்னக் கொள்ளலாம்
விஷத்துக்கு மாற்றாக அமுதம் போன்ற ஸ்தநயம் கொடுத்தவள்
அவள் போன்ற மெய்யான பக்தர்களுக்கு விஸ்வாசம் இருக்கும்-

———————————————————————————————————————————————————–

ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ -தேறி
நெடியோய் அடியடைதற்கு அன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண்–35-

————————————————————————

ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
நிரம்பின பக்தி இல்லாதவர்களாய்
சேஷத்வ ஞானத்தை மாத்ரம் உடையவராய்
தங்கள் உடைய ச்நேஹத்தால்

கூறிய குற்றமாக் கொள்ளல் நீ –
சொல்லும் வார்த்தைகளை
நீ குற்றமாக கொள்ளாதே

-தேறி -நெடியோய் அடியடைதற்கு அன்றே-
பெருமை பொருந்திய உன்னுடைய திருவடிகளை
தேறி -தெளிந்து வந்து –
சிசுபாலனுக்கு
கிட்டுகைக்கு காரணமாக விட்டதன்றோ

ஈரைந்து முடியான் படைத்த முரண்
இராவணன் புத்தி பூர்வகமாக
பண்ணிய தப்புக் கார்யம்
நம் போல்வாரின் போலியான ஆனுகூல்யமே
அவன் திருவடி அடைய தடை உண்டோ -என்றவாறு
ஹிரண்யன் ஹிரண்யாஷன்
இராவணன் சிசுபாலன்
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த
சுரி குழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன்

ஆறிய அன்பு இல் அடியார் -தம்மை சொல்லிக் கொள்கிறார் நைச்சாயனுசந்தானம்
தன்மையில் வந்த படர்க்கை-

—————————————————————————————————————————————————–

முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே -இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரார் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை–35-

—————————————————————————–

முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே
சம்சாரிகளின் மிடுக்கை தொலைக்கலாம்
என்று அல்லவோ

முன்னம் தரணி தனதாகத் தானே -இரணியனைப்
முற்காலத்தில்
பூமி எல்லாம் தன்னுடையது என்று
அஹங்காரம் கொண்டு இருந்த ஹிரண்யா ஸூரனை

புண்ணிரந்த வள்ளுகிரார் பொன்னாழிக் கையால் நீ
புண்படுத்திப் பிளந்த
கூர்மையான நகங்கள் பொருந்திய
அழகிய திருவாழியைக் கொண்ட
திருக்கையினால் நீ

மண்ணிரந்து கொண்ட வகை
மாவலியிடத்தில்
பூமியை யாசித்து பெற்றதானது –
கொல்லாமல் -விட்டு பங்கமும் படுத்தாமல் -யாசித்து பெற்றது
தன்னுடைய இந்த -சௌலப்யம் உணர்ந்து
சம்சாரிகள் அஹங்காரம் விட்டு ஒழிந்து ஆட்படக் கூடும் எண்ணும் திரு உள்ளத்தாலோ –

——————————————————————————————————————————————————————-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி-திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மாலுகந்த ஊர்–37-

——————————————————————————————-

மூன்று பாசுரங்களாலே திரு மலையை அனுபவிக்கிறார்
வகையறு –
அல்ப பலன்களையும்
பரம புருஷார்த்தத்தையும்
உட்புகுந்து இன்னவகை இன்னவகை என்று அறிதி இடுவதற்கு உறுப்பான –

நுண் கேள்வி வாய்வார்கள்-
ஸூ ஷ்மார்த்த
ஸ்ரவணம்
உடையவர்களான

நாளும்
நித்யமும்

புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி-
தூப தீபங்களையும்
புஷ்பங்களையும்
தீரத்தையும்
தரித்துக் கொண்டு –

திசை திசையின்
பல திக்குகளில் நின்றும்

வேதியர்கள்
வைதிகர்கள்

சென்று இறைஞ்சும்
வந்து சேர்ந்து வணங்கும் இடமான

வேங்கடமே
திரு வேங்கட மலையானது

வெண் சங்கம் ஊதிய வாய் மாலுகந்த ஊர்
பாரத போரிலே
வெளுத்த பாஞ்ச ஜன்யம் ஊதிய
வயாமோகமே வடிவு கொண்டவனே
உகந்து அருளின திவ்ய தேசமாம்-

——————————————————————————————————————————-

ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை
பேர எறிந்த பெரு மணியை -காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம் என்னும் மாலதிடம்–38-

————————————————————————————–

திருவேங்கட மலையே அமரர்கள் அதிபதி
திரு உள்ளம் உகந்து எழுந்து அருளி இருக்கும் இடம் என்கிறார் –
ஊரும் வரி அரவம்
மலைப்பாம்புகள்
இயற்கையாக திரிகின்ற பாம்புகள் என்றும்
யானைகளை விழுங்கும் பாம்புகள்
கரிய மா முகில் படலங்கள் கிடந்தது அவை முழங்கிட
களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி -திருமங்கை ஆழ்வார்
நஞ்சீயர் நம்பிள்ளை சம்வாதம் அனுசந்தேயம்
இடி கொள் வேழத்தை எயிற்றோடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என வடங்கிச்
சடை கொள் சென்னியர் தாழ்விலர் தாமித்து ஏற
படிகடாமெனப் தாழ்வரை கிடப்பான பாராய் -கம்பர் சித்ரகூடபடலம் -34-
ஒண் குறவர் மால் யானை
ஒண் குறவர் -இவைகள் உடைய பாட்டன் பாட்டனில்
ஒருத்தன் பூமியில் இறங்கினான் என்னும்
பழி இன்றிக்கே இருக்கை-வம்ச பரம்பரையாக திருமலையிலே நித்ய வாசம் பண்ணுபவர்கள்
பட்டி மேயும் யானைகளின் மீது

பேர எறிந்த பெரு மணியை –
பெரிய மாணிக்கக் கட்டியை எறிய
நமக்கு கல் போலே அங்கு குறவர்களுக்கு மாணிக்கங்கள்
காருடைய மின்னென்று புற்றடையும்
யானையை மேகமாகவும்
ரத்னத்தை மின்னலாகவும் பிரமித்து
பின்னால் வரப் போகும் இடிக்கு அஞ்சி
புற்றினுள்ளே புகா நிற்கும்
பாம்புகள் மேகம் கண்டு யானையாக பிரமித்தது மேலே திருமொழி பாசுரத்தில்

வேங்கடமே
மேலசுரர் -மேல் சுரர் -நித்ய சூரிகள்
எம் என்னும் மாலதிடம்
எம்மது என்று மேல் விழுந்து ஆஸ்ரியத் தக்க பெருமையான இடம்
ஆஸ்ரியத் தக்கவனான அவன் இடம் என்றுமாம்

திவ்ய தேசத்தில் உள்ள சராசரங்கள் எல்லாம் மெய்யன்பருக்கு உத்தேச்யமாய் இருக்குமே
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –
வேங்கடக் கோன் தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேன் ஆவேனே –
செண்பகமாய் பிறக்கும் திரு உடையேன் ஆவேனே
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே
பொற்குடவாம் அரும் தவத்தேன் ஆவேனே
கானாறாய்ப் பாயும் கருத்துடையன் ஆவேனே
நெறியாய் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே
பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே –

பாம்பாகவும்
குறவராகவும்
யானையாகவும்
புற்றாகவும் -இருக்கலாமே-

—————————————————————————————————————————————————————————————

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச -கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது–39-

—————————————————————————-

எம்பெருமான் உடைய பல
சேஷ்டிதங்களை அனுசந்தித்து இனியராகிறார்

இடந்தது பூமி –
மகா வராஹமாக உத்தரித்து

எடுத்தது குன்றம்
கோவர்த்தன மலையை குடையாக எடுத்து

கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச
கஞ்சனை கொன்று ஒழித்து

-கிடந்ததுவும் நீரோத மா கடலே
திருப் பாற் கடலிலே
திருக் கண் வளர்ந்து அருளி

நின்றதுவும் வேங்கடமே பேரோத வண்ணர் பெரிது –
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பாக
தனது பெருமை பொலிய நின்றான்
பிறர் கார்யமே பொழுது போக்காக செய்து அருளுபவன் நீர்மைவருணிக்க முடியாதே
நாமோ
பெருமாளை உகந்தோம் என்று சோற்றை உகப்புதோம்
சோற்றை உகந்தோம் என்று நாளும் பத்தும் பட்டினி விடுவுதோம்
ஸ்திரீகளை உகந்தோம் என்று சூது சதுரங்கம் பொருதல் உறங்குதல் செய்வுதோம்
ஒன்றிலும் ச்நேஹம் இல்லை
பல பல கார்யங்களில் நெஞ்சு செலுத்திக் கிடக்கிறோம் -என்றபடி

மெய்யடியார்கள் பகவத் விஷயத்தில் ஒரு நொடிப் பொழுதும் விடாமல்
அது தன்னிலே தோள் கீழ் இறங்கார்-கொக்குக்கு ஒன்றே மதி போல் –

———————————————————————————————————————————————————————————–

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று–40-

————————————————————————————-

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
பெரிய வில்லையும்
அம்புகளையும் உடையரான
குறவர்களின் உடைய கையில் பிடித்து இருந்த
சிவந்த நெருப்புக்கு

வெருவிப் புனம் துறந்த வேழம்
பயப்பட்டு கொல்லையை விட்டு
நீங்கின யானையானது

இரு விசும்பில் மீன் வீழக்
பரந்த ஆகாசத்தில் நின்றும்
நஷத்ரம் விழ

கண்டு அஞ்சும்
அதனைப் பார்த்து
நாம் அப்பால் போக முடியாதபடி கைக் கொள்ளியை
குரவர்கள் எறிந்தார்கள் என்று பிரமித்து
பயப்படும்படியான

வேங்கடமே
திருவேங்கடமானது

மேலசுரர் கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று
முன்பு ஒரு கால் ஹிரண்யா ஸூ ரனை முடித்து
ப்ரஹ்லாதன் விரோதி ஒழிந்தான் என்று உகந்த
பெருமாள் உடைய திருமலையாம்

அஸ்தானே பய சங்கை பண்ணி
எம்பெருமானுக்கு மங்களா சாசனம்
பண்ணும் மகான்களின் இருப்பை நினைவுஊட்டும் செயல் —

———————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-21-30–திவ்யார்த்த தீபிகை —

September 23, 2014

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு -என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே யறி–21-

——————————————————————-

தம்முடைய திரு உள்ளத்தை நோக்கி
எம்பெருமான் உடைய சௌசீல்ய திருக் குணத்தை
அருளிச் செய்கிறார்
உலகளந்த சரித்ரம் சொல்லி
இப்படிப்பட்ட அவனுடைய மேன்மையைப் பார்த்து
நெஞ்சே நீ பின் வாங்க வேண்டா என்கிறார்
நம்முடைய விரோதிகளை போக்கி அருள
திருக்கையிலே திரு ஆழி உண்டே
நம் கூக்குரல் கேட்டு சடக்கென ஓடி வந்து காத்தருள
வாகனமும் உண்டே -என்கிறார்-

—————————————————————————————————————–

அறியும் உலகெல்லாம் யானேயு மல்லேன்
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் -வெறி கமழும்
காம்பேய் மென்தோளி கடை வெண்ணெய் உண்டாயை
தாம்பே கொண்டார்த்த தழும்பு -22-

————————————————————————————–

அறியும் உலகெல்லாம் யானேயு மல்லேன்
உனது சௌலப்ய திருக் குணத்தை அறியாதார் யார்

பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் –
பல நிறங்களையும் கொண்ட
சிறகுகளை உடைய
கருடாழ்வானை
ஏறி நடத்தும் பெருமானே

காம்பேய் மென்தோளி
மூங்கிலை ஒத்த -பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் –
மெல்லிய தோள்களை உடைய யசோதையினாலே

வெறி கமழும் கடை வெண்ணெய் உண்டாயை
கடையப் பட்டு
பரிமளம் வீசப் பெற்ற வெண்ணெயை
களவிலே அமுது செய்து அருளிய உன்னை

சீரார் கலை யல்குல் சீரடிச் செந்துவர்வாய்
வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு
எராரிடை நோவ எத்தனையோர் போதுமே
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு
நாராருறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்
ஒராதவன் போல் உறங்கி யறிவுற்று
தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே
ஒராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும்
வாராத்தான் வைத்தது காணாள் வயிறடித்து இங்கு
ஆரார புகுத்துவார் ஐயர் இவரல்லால்
நீராமிது செய்தீர் என்றோர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண வுரலோடே
தீரா வெகுளியாய்ச் சிக்கென வார்த்தடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் -சிறிய திருமடல்

தாம்பே கொண்டார்த்த தழும்பு
கையிலே கிடைத்த தொரு தாம்பைக் கொண்டு

சௌலப்யம் பரத்வம் உள்ள இடத்தில் தான் பாராட்டத் தகும்
மேரு பரத்வம் உண்டு இங்கு  சௌலப்யம் இல்லையே
இரண்டும் அவன் இடம் ஸ்வா தினம் என்று காட்டி அருள பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் -என்கிறார்
செந்தாமரைக் கண் பரதவ லஷணம் இதுவும்

வெறி கமழும் -விசேஷணம் -வெண்ணெய்க்கும்- காம்பேய் மென்தோளி யசோதைக்கும்-

———————————————————————————————————————————————————————————–

தழும்பிருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடித் -தழும்பிருந்த
பூங்கோதை யாள்வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் –23-

—————————————————————————————–

ஒரு தழும்பு இருந்தால்
மறைக்க முடியும்
கையிலும்
காலிலும்
விரலிலும் ஆக உடம்பு முழுவதும்
ஆஸ்ரியர்க்காக செய்து அருளிய சேஷ்டிதங்கள்
ஸ்ரீ ராம
ஸ்ரீ கிருஷ்ண
ஸ்ரீ நரசிம்ஹ
அவதாரங்களில் ஏற்பட்ட தழும்புகள் உண்டே –
சகாதசம் ஜ்யாகிண கர்க்கசைச் சபை சதுர்ப்பி ராஜா நுவிலம்பி பிர்ப்பிஜை –ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம்

தழும்பிருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
ஸ்ரீ ராமபிரான் -தர்மோ விக்ரஹவான் அதர்ம விதரம் தன்வீ ஸ தந்வீத ந -தசாவதார ஸ்தோத்ரம் தேசிகன்
புணரா நின்ற மரம் ஏழு அன்று எய்த ஒரு வில் வலைவா –
நாண் தழும்பு ஸ்ரீ ராமாவதாரம்

தழும்பிருந்த தாள் சகடம் சாடித் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் தழும்பு

தழும்பிருந்த பூங்கோதை யாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
பெரிய பிராட்டியார் அகலகில்லே இறையும்என்று உறையுமவள்
ஜகத்துக்கு பிரளயமோ என்று அஞ்சி நடுங்கும்படி

வீங்கோத வண்ணர் விரல்
கை தாள் விரல் மூன்றினோடும்
அன்வயிக்கத் தக்கது
கடல் வண்ணன் உடைய கை
கடல் வண்ணன் உடைய தாள்
கடல் வண்ணன் உடைய விரல்
கை தாள் விரல் இவற்றை எழுவாயாகக் கொண்டு
தழும்பை சுமந்து இருக்கின்றன என்றுமாம்-

———————————————————————————————————————————————————————————

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரல் ஓவாது
ஏங்கி நினைந்து அயலார் காண விருந்திலையே
ஒண்கோத வண்ணா வுரை –24-

———————————————————————————

மூன்று தழும்புகள் -சாரங்க நாண்
சகடம் உதைத்த -இரணியன் மார்பிடந்த -வீரச் செயல்களை விளக்கும்
தாம்பால் உண்டான தழும்போ பரிஹாசாஸ்பதமாய் இருக்கும் இ றே
வெண்ணெய் திருடினதும் இல்லை
ஆய்ச்சி பிடித்ததும் இல்லை கட்டினதும் இல்லை அடித்ததும் இல்லை
தழும்பு உண்டானதும் இல்லை என்று
முழு பூசணியை மறைக்கப் பார்த்தான்
அவாப்த சமஸ்த காமனாய்
சர்வஞ்ஞனாய்
சர்வசக்தனாய்
உள்ள நீ குறையாளன் போலே களவு செய்து தண்டிக்கப் பட்டு
கட்டை அவிழ்க்க உபாயம் அறியாதவனாய் இருந்தாயே
என்ன ஆச்சர்யம்
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு
ஆய்ச்சி உரலோடு உறப் பிணித்த நான்று –
குரல் ஓவாது ஏங்கி நினைந்து
அயலார் காண விருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை
இவனைக் கட்டி வைத்தது ஒரு கடலை தேக்கி வைத்தால் போலே காணும்-

————————————————————————————————————————————

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலத்– திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
யிடந்தானை ஏத்தி எழும்–25-

——————————————————————————-

கிருஷ்ணன் ஓயாமல் ஏங்கி அழுதது போலே
தாமும் கிருஷ்ணன் உடைய சீலகுணத்தை
ஓயாமல் பேச உத்சாகம் கொண்டு அருளிச் செய்கிறார் இதில்

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்ஏத்தி எழும்
நெஞ்சு சிந்தனை உடன் நில்லாமல்
வாக்கின் தொழிலையும் ஏற்றுக் கொண்டதே
முடியானே மூ வுலகும் தொழுது ஏத்த -திருவாய்மொழி -3-8-1-

மேல் உரை கொண்டு -மேலான சொற்களைக் கொண்டு என்றுமாம்
வரை மேல் மரகதமே போல திரை மேல்கிடந்தானை-
திருப் பாற் கடலிலே பள்ளி கொண்டு இருப்பது
வெண் நிறமான தொரு மலையிலே
மரகதக் கல்லைப் பதித்தால் போலே
அபூத உவமை

கீண்டானைக் –
இரணியன் மார்பையும்
கேசியின் வாயையும் கீண்டானே
அன்றிக்கே
கேழலாய் கீண்டானை இடந்தானை
அண்டபித்தியில் ஒட்டின பூமி கீண்டு இடந்தவன் என்றுமாம்

திரை மேல் கிடந்தானை கீண்டானை
உறங்குவான் போல் யோகு செய்து
ரஷிப்பதில் நோக்கு
அப்படி ரஷிப்பவனை நெஞ்சு இடைவிடாது துதித்து உஜ்ஜீவிக்கிறது-

———————————————————————————————————————————————————————————–

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் -தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரை தூண்டும் மலை–26-

———————————————————————————–

விபவம் அனுபவித்தார் இதுவரை
பின்னானார் வணங்கும் சோதியாக
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையாக வடிவமைந்த -என்று
சொல்லப் படுகிற திருவேங்கட மலை யை அனுபவிக்கிறார்
அவனை விட அவன் சம்பந்தம் பெற்ற திருமலையே உத்தேச்யம்
பிரயோஜனாந்தர பரர்களையும் அநந்ய பிரயஜோனரையும் வாசி அற வினைகளைப் போக்கி
பலனைப் பெறுவிக்குமது என்கிறார் –

எழுவார்-
எழுந்து போவாரையும்
மேன்மேலும் ஆசைப் பெருக்கம் உடையவர்களையும் சொல்லும்
ஐஸ்வர் யத்தை தர வேணும் பிரார்த்தித்து பெற்று போவாரையும்
மேலும் ஐஸ்வர்யம் கேட்பாரையும்
வினைச் சுடரை நந்துகை -ஐஸ்வர்ய பிராப்திக்கு விரோதியான பாபங்களைத் தொலைத்து
ஐஸ்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை

விடை கொள்வார்-
விட்டு நீங்குகிறவர்கள்
ஆத்மானுபவதுக்கு விரோதியான பாவங்களை தொலைத்து
கைவல்ய அனுபவத்தை நிறைவேற்றுகை –

ஈன் துழாயானைவழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
பரமைகாந்திகளான பகவத் பக்தர்கள்
இவர்கள் வினைச் சுடரை நந்துவிக்கையாவது
மாறி மாறி பல பிறப்பும் பிறக்கும்படியான தீ வினைகள் தொலைத்து முக்தராக்கை

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே-
வேண்டுவார் வேண்டிய படி
அநிஷ்ட நிவ்ருதிக்கும்
இஷ்ட பிராப்திக்கும்
செய்விக்க வல்ல திருவேங்கடம்
பாவங்களை நெருப்பாக ரூபிவித்து -நந்துவிக்கும் -நெருப்பை அணைக்கும் என்கிறார்

வானோர் மனச் சுடரை தூண்டும் மலை –
ஒரு நெருப்பை அணிவிக்கும்
ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும் என்கிறார்
மனச் சுடரை –
நித்யர்களை இங்கே வந்து சௌலப்ய குணம் அனுபவிக்க தூண்டும் -என்றவாறு-

——————————————————————————————————————————————————————————————-

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று-கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை –27-

கார்க்கோடு -கம்பீரமாக முழங்குவதில் மேகத்தை ஒத்த சங்கு

————————————————————————————–

திருமலையை அனுசந்திதவர்
திருவேம்கடமுடையானையும்
அவன் விபவத்தில் செய்து அருளின வீரச் செயல்களையும் அனுபவிக்கிறார்
மலையால் குடை கவித்து
மாவாய் பிளந்து -கேசி குதிரை வாயை பிளந்ததுவும்
சிலையால் மராமரம் ஏழ் செற்று
கொலையானைப்போர்க்கோடு ஒசித்தனவும்
பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை
இந்த திருக்கைகளே பழைய வீரச் செயல்களை செய்து அருளின என்கிறார்-

———————————————————————————————————————————————————————————————–

கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து
ஐய மலர்மகள் நின்னாகத்தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத்து இறை–28-

——————————————————————————-

திருவேங்கடமுடையானை குறித்து
உனது திருமேனியில்
அழகும்
ஐஸ்வர் யமும்
சீலமும்
நிழல் இட்டுத் தோன்றுகின்றன -என்கிறார்

கைய வலம்புரியும் நேமியும் –
இத்தால் ஈச்வரத்வம்

கார் வண்ணத்து ஐய
இத்தால் அழகையும்

மலர்மகள் நின்னாகத்தாள்-
இத்தாலும் ஈச்வரத்வம்
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் இ றே

செய்ய மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத்து இறை
இத்தால் சீலாதி குணங்கள்
வேதங்களே தனக்கு சிறந்த செல்வமாக கொண்டதால் செய்ய மறையான்
தாரகாசுரன் புத்ரர்கள் வித்யுன்மாலி -தாரகாஷன் -கமலாஷன் –
பிரம்ம வரத்தால் வானில் பறந்து -துன்புறுத்த சிவன்
பூமியை தேராக கொண்டு
சந்திர சூர்யர் தேர் சக்கரம்
நான்கு வேதங்கள் நான்கு குதிரைகள்
பிரமன் சாரதி
மகா மேரு வில்
ஆதி சேஷன் வில் நாண்
திரிபுரம் எரித்த விருத்தாந்தம்

நின்னாகத்து இறை –
அல்பம் -அல்ப பாகம் என்றவாறு
ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறாளும் தனிவுடம்பன் -திருவாய்மொழி -4-8-1-
ஸ்வ பார்ஸ்வே தஷினே சம்போ நிவாஸ பரிகல்பித –
சிவன் தாபத்தால் திரு உள்ளம் உகந்து வலப்பக்கம் இடம் கற்பித்து தந்து அருளினான் –

———————————————————————————————————————————————————————————————————

நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயுமாவான் -பிறை மருப்பின்
பைங்கண் மால் யானைப் படுந்துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி–29-

—————————————————————————–

எம்பெருமான் மேன்மையும் நீர்மையையும்
வெளியிடுகிறார்
இறையும் –
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் –
சர்வ ஸ்வாமித்வம் தோன்றுமாறு எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வைகுண்ட நாதத்வம் இங்கே விவஷிதம்
இறை என்று நித்ய விபூதி நாதத்வம் சொல்லும்

நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயுமாவான்-
லீலா விபூதி நாதத்வம் சொல்லிற்று
பஞ்ச பூதங்களினால் ஆகிய பதார்த்தங்கள் நிறைந்த இடம்
இறையும் போலே ஆவானும் -சேர்த்துக் கொள்ள வேண்டும்

மேலே இவற்றுக்கு அடியான நீர்மை அருளிச் செய்கிறார்
பிறை மருப்பின் பைங்கண் மால் யானைப் படுந்துயரம் காத்தளித்த செங்கண் மால் கண்டாய் தெளி
யானைக்கு வெளுத்த தந்தம்
பசுமை தாங்கிய கண்கள்
சாதாரணம் தானே
குழந்தை கிணற்றில் விழ
இது ஒரு கால் அழகும்
கை அழகும்
தலை அழகும்
முக அழகும்
என்னே -சொல்லி மாய்ந்து போவது போலே
எம்பெருமான் யானை அவயவ அழகில் கரைந்தமை தோற்ற
அந்த பகவத் சமாதியாலே ஆழ்வார் அருளிச் செய்கிறார்
நெஞ்சமே -விளி  வருவித்துக் கொள்ள வேண்டும்

————————————————————————————————————————————————————————————————-

தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை -எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய்நாடிக் கொள்ளும் புரிந்து —30-

—————————————————————————-

ஆழ்வார் திரு உள்ளம் போலே நமது உள்ளம் ஈடுபட
அருளுகிறார்
தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை –
பட்டிமேய ஒண்ணாத படி மனத்தை அடக்கி
எம்பெருமானோடு தமக்கு உள்ள உறவை
அறிந்து இருப்பவர்களின் மனமானது
மற்று எவரையும் பற்றாமல்
ஐம் புலன்களிலும் செல்லாமலும் அவ்வெம்பெருமானையே
பதறிக் கொண்டே மிக்க ஆவலுடன் சென்று கிட்டும் –

எளிதாகத் தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய்நாடிக் கொள்ளும் புரிந்து
ஒரு கன்றுக் குட்டியானது பல்லாயிரம்
பசுக்களின் பசுக்களின் திரளின் உள்ளே
தனது தாயை கண்டு பிடித்துக் கொள்வது எப்படியோ அப்படியே இதுவும்
இதற்கு சம்பந்த உணர்ச்சியே காரணம்
சம்பந்த ஞானம் இல்லாதவர்களுக்கு ஒரு நாளும் எம்பெருமானைக் கிட்டுதல் சாத்தியம் அன்று
அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும் ஸூ லபம் என்றார் ஆயிற்று
அடிக்கே -அடியே- இரண்டும் பாட பேதம்-

——————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-11-20–திவ்யார்த்த தீபிகை —

September 23, 2014

வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை யல்லது தான் தொழா -பேய்முலை நஞ்சு
ஊணாக வுண்டான் உருவோடு பேரல்லால்
காணா கண் கேளா செவி–11-

——————————————————————————————-

உலகம் தாயவன் -ஆஸ்ரித ரஷிப்பதில் தீஷை
முலை நஞ்சு உண்டது -துஷ்ட நிரசன தீஷை
ஜிஹ்வே கீர்த்தய கேசவம்
தம்முடைய இந்த்ரியங்கள் அவன் இடம் அவஹாஹித்த படிகளை பேசி ஹ்ருஷ்டர் ஆகிறார்-

—————————————————————————————————————————————————

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு–12

——————————————————————————————

தானே வந்து ரஷிக்குமவன் அன்றோ
மாசுடம்பில் நீர் வாரா மானிமிலாப் பன்றி யாய் திருவவதரித்து –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையாலே செய்து அருளுபவன்
விலக்காமை ஒன்றே வேண்டும்
அத்தையே பற்றாசக் கொண்டு
என் ஊரைச் சொன்னாய்
பேரைச் சொன்னாய்
அடியாரை நோக்கினாய்
அவர்கள் விடாயைத் தீர்த்தாய்
ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்
மடி மாங்காய் இட்டு
பொன் வாணியன் பொன்னை உரைகல்லிலே உரைத்து மெழுகாலே எடுத்து
கால் பொன்னாயிற்று கழஞ்சு பொன்னாயிற்று போலே
யாத்ருச்சிகம்
ப்ராசங்கிகம்
ஆநு ஷங்கிகம்
ஸூ க்ருத விசேஷங்களை கற்பித்துக் கொண்டு
ஒன்றை பத்தாக்கி நடத்திக் கொண்டு நன்மைகளை அருளுபவன்
வேறு ஒரு உபாயாதையும் அறியாதே
ஆறேனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
இது அறியாமல்
தைலதாரை போலே இடைவிடாத த்யான பக்தி செய்து அடையலாம்
என்றும் சொல்கிறார்களே என்று நிந்திக்கிறார்
ரத்னம் ஸ்வல்ப விலைக்கு மாற்றும் செம்பட்டவன்
உள்ள விலைக்கு மாற்றும் வியாபாரி
ஸ்வயம் போக்யமாக கொள்ளும் அரசன்
செம்படவன் -பக்தி கொண்டு அல்ப அஸ்த்ர பலன்கள் பெற்று போருமவர்கள்
வியாபாரி -பக்தியை மோஷ சாதனமாக கொள்பவர்கள்
அரசன் -பக்தியை ஸ்வயம் போக்யமாக கொள்ளுமவர்கள்
அதையே பலமாகக் கொள்ளாமல் அந்த பக்தியை உபாயமாக கொண்டு
கீழ் வகுப்பில் புகுவாரை ஆர் கொல் விலக்குவார்
வானத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றுமது அல்லால்
மாரியார் பெய்கிற்பார் மற்று -இரண்டாம் திருவந்தாதி
அருள் வெள்ளம் புகப் புக்கால் தாங்கிக் கொள்ளவே
நமது நற்கிரிசைகள் உறுப்பு -என்றபடி
இந்த்ரியங்களையும்
பஞ்ச பூதங்களாலான சரீரத்தையும் சொல்லி
பக்தி உபாயத்வம் கழிக்கப் படுகிறது
என்பரே
ஏகாரத்தை அசையாகக் கொண்டு
பகவத் பிராப்திக்கு பக்தியை உபாயம் என்பர்
என்பாரும் உண்டு
இயல்வு -உபாயம்-

——————————————————————————————————————————————————————————————————

இயல்வாக ஈன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வாக
நீதியாலோதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றாரவர்–13-

————————————————————-

நித்யர்கள் அன்றோ நித்ய கைங்கர்யம் செய்ய யோக்யதை படைத்தவர்கள்
நம் போல்வார் பணிந்து உய்ய விரகு உண்டோ
வேதங்களை ஓதி
படிப்படியாக திருந்தி கிட்டும்படி
அவனே மூல ஸூ க்ருதமாக இரா நின்றான்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் எம்மான் திரிவிக்ரமனையே –
ஆதியாய் நின்றார் அவர் -இப்படி கிருஷிகள் பண்ணிக் கொண்டு
நிதானம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுணா -ரகஸ்ய த்ரய சாரம்-

——————————————————————————————————————————————————————-

அவரவர் தாம்தாம் அறிந்த வாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று -சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி உருவே முதல் —14-

—————————————————————–

ஆதியாய் நின்றார் அவர் -என்றத்தை
விவரித்து அருளுகிறார்
ஸ்ரீ மன் நாராயண மூர்த்தியே பிரதானம்
உலகளந்த மூர்த்தி என்றது
சம்சாரிகளோடு
சூத்திர தேவதைகளோடு
வாசி அற எல்லாரும் தன்னுடைய
திருவடிகளின் கீழே துகை உண்ணுமாறு
வ்யாபித்தவன் –
இவனே முழு முதல் கடவுள் என்று மூதலித்தார் ஆய்த்து

அவரவர் -செய்து குணக்குறைவைக் காட்டும்

தாம்தாம் அறிந்த வாறு-
சாஸ்திரங்களையும்
சிஷ்டாசாரமும் அறியாமல்
ராஜச தாமஸபுத்திகளுக்கு எட்டியவாறு-

———————————————————————————————————————————————————————————

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி வண்ணன் முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து
பல்லார் அருளும் பழுது –15-

———————————————

முதலாவார் மூவர் -பாட பேதம்
தளை தட்டும்
மூவரே சரியான பாடம்
மூவர் -அம்மூவரினுள்ளும் -என்று மாற்றுவர்
ஆழ்வார் பாசுரங்களை நம்முடைய ஸ்வாதந்த்ர்யம் கொண்டு மாற்றுதல் கூடாதே

மூரி -பெருமையும் வலிமையையும்

நாமநீர் –பெரிய நீர் -கடல் சூழ்ந்த
சகல ஜகத் காரண பூதன் திருமால் திருவருளே நன்மையை பயக்கும்
முதலாய நல்லான் அருளே நன்று
பல்லார் அருளும் பழுது-

——————————————————————————————————————————————————————————————

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி–16-

———————————————————————–

கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி
அரவணை மேல் கண்டு
இன்று தொழுதேன் -நிகழ கால பகவத் சேவை கிடைக்க பெற்ற ஹர்ஷம்

பழுதே பலபகலும் போயினவென்று அழுதேன்
என்கையால் இறந்த கால இழவை அனுசந்திக்கிறார்

அஞ்சி அழுதேன் -என்கையாலே
எதிர்கால மும் கழிந்த காலம் போலே வீணாகுமோ என்ற அச்சம் தெரியுமே
கண்டு தொழுதேன் என்ற பின்பு அஞ்ச வேண்டுவது என் என்னில்
இருப்பது இருள் தரும் மா ஞாலம் ஆகையாலே
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா –
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்

கீழ் ஆறாம்பாட்டில்
ஓன்று மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான் -என்றும்
அன்று கருவரங்கத்துட் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் -என்றும்
அருளினவர்
பழுதே பலகாலும் போயின வென்று அழுவதாக சொல்லுவான் என் என்னில்
இப்பிறவிக்கு முன்பே மாறி மாறி பல பிறப்பும் பிறந்து போந்த காலங்களின் நாள்கள்

பேயாழ்வார் -சென்ற நாள் செல்லாத செங்கண் மால் –எந்நாளும் நாளாகும்
எல்லா காலமும் நல்ல காலம் இறந்த எதிர் காலம் நினைவு இன்று நிகழ கால ஆனந்தத்தால்
அஃது ஒரு சொல் சமத்காரம்

அடலோத வண்ணர் ஓதம்
திருமேனியில் பரவுகின்ற லாவண்யா தரங்கங்கள்
அனுபவிக்க வருமவர்களை அடர்த்து தள்ளக் கூடியது

அஞ்சி அழுதேன் -என்கையாலே
எதிர்கால மும் கழிந்த காலம் போலே வீணாகுமோ என்ற அச்சம் தெரியுமே

————————————————————————————————————————————————————————————————————————————————

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் -வடிவுகிரால்
ஈரந்தான் இரணியனது ஆகம் இருஞ்சிறைப் புள்
ஊர்ந்தான் உலகளந்த நான்று–16

—————————————————————————

பழுதே பலபகலும் போயின -என்றத்தை விவரிக்கிறார்
உலகு அளந்த திவ்ய சரித்ரத்தில் ஈடுபட்டு இருந்தேன் ஆகில்
முக்தனாய் இருப்பேனே
என்பர் -என்பதால் பிறர் சொல்லிக் கேள்விப் பட்டேனே ஒழிய
நேரிலே சேவிக்கப் பெற்றேன் இல்லையே என்கிறார்

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
கோலமாம் என் சென்னிக்கு கமலம் அன்ன குரை கழலே –
அடியவர்களுக்கு சிரோ பூஷணமாக அமைய வேண்டிய திருவடிகளைக் கொண்டு
கல்லும் காடும் மேடுமான உலகங்களை அளப்பதே -என்கிற வருத்தம் தோன்ற

முடியும் விசும்பு அளந்தது என்பர்
எங்கள் கண் முன்னே விளங்கி
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -என்று
பாசுரம் பேசும்படியான திரு முடியை
அஹங்காரிகளும் பகவத் விஷய சுவடு அறியாதவர்களுமான தேவதைகள் உள்ள இடத்தில் நிமிர்ப்பதே

-வடிவுகிரால்ஈரந்தான் இரணியனது ஆகம் இருஞ்சிறைப் புள்  ஊர்ந்தான் உலகளந்த நான்று –
ஹிரண்யனைப் பிளந்துஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கு அருள் செய்த காலத்திலும்
ஸ்ரீ கஜேந்த்ர ஆழ்வானைக் காத்தருள பெரிய திருவடி மீது
அரை குலைய தலை குலைய விரைந்தோடி வந்த காலத்திலும்
நேரில் சேவித்து வாழாது ஒழிந்தேனே -என்கிற அனுதாபம் தோன்ற அருளிச் செய்கிறார்-

——————————————————————————————————————————————————————————————————

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை -ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால்–17

———————————————————————-

இங்கும்
இழந்த நாளைக்கு அனுதாபம் பட அருளிச் செய்கிறார்
இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும்படி
இடைக்குலத்தில் வந்து பிறந்த இடத்திலும்
இழந்தேன் இ றே என்று சோகிக்கிறார்

கிருஷ்ணாவதார சரிதங்களை பேசி
ஆனந்தமாக கால ஷேபம் செய்கிறார் என்னவுமாம்

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு
உறி வெண்ணெய்தோன்ற வுண்டான்
வென்றி சூழ் களிற்றை -ஊன்றிப் பொருதுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும்
மருதிடை போய்
மண்ணளந்த மால்
மருதிடை போனது ஒரு காலத்திலும்
மண் அளந்தது ஒரு காலத்திலும் ஆகிலும்
ஆழ்வார் உடைய ஞான வைச்யத்தாலே அனுசந்தான தோரணியில்
முன் பின் என்கிற வாசி இன்றியே
எல்லாம் ஓன்று சேர விளங்குகிற படியே
ஒருங்கொத்த இணை மருதம் உன்னிய –
பொய்ம்மாயமருதான வசுரரை-

புள்ளின் வாய் கீண்டானும் -வெண்டளை பிறழும் பாடம்-

———————————————————————————————————————————————————————————

மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையம் உண்டு
ஆலினிலைத் துயின்ற வாழியான்-கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று–19-

——————————————————————————–

தம்மைப் போலே இழவாமல்
நொடிப் பொழுதும் விடாது அனுபவிக்கப் அனுபவிக்கப் பெற்றவர்கள் உண்டோ
என்று ஆராய்ந்து பார்க்க
மா கடல் நீருள்ளான்-சமுத்திர ராஜனுடைய பாக்யமே பாக்கியம்
நீ நோற்ற நோன்பைச் சொல்லி அருள்
நானும் நோற்று அந்த பேறு பெற்று உஜ்ஜீவிக்க -என்கிறார்
உறங்குவான் போலே யோகு செய்து அருளுகின்றானே

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -ஸ்ரீ ரெங்க விமானம்
அபி பணிபதி பாவாத் சுப்ரம் அந்தச் சயாயோ மாகத ஸூ குமாரை ரங்க பர்த்துர் மயூகை
சகல ஜகதிபா நச்யா மஜீ மூத ஜைத்ரம் புளகயதி விமானம் பாவனம் லோசநே ந

மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையம் உண்டு
திருப்பாற்கடல் வெள்ளை நிறமாயினும்
எம்பெருமான் உடைய நிழலீட்டாலே கரும் கடல் ஆயிற்று
நான் விரஹத்தால் வெளுத்து இருக்க நீ நித்ய ஹர்ஷா பீடு தோற்ற மாமை பெற்று விளங்குகிறாயே
உவர்க்கும் கரும்கடல் நீருள்ளான் -உப்புக் கடலிலும் உள்ளவன் ஆகியே அத்தை விளித்ததாகவுமாம்

ஆலினிலைத் துயின்ற வாழியான்
-கோலக் கருமேனிச் செங்கண் மால்
கண்படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று
கண்படை -கண் வளர்ந்து அருளுகிற நிலை -யோகத் துயில் நிலை-

—————————————————————————————————————————————————————————————————

பெற்றார் தழை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால் -நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று –20-

———————————————————————-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலும்
ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரத்திலும்
எம்பெருமான் திருவடிகளை ஏத்தி இறைஞ்சப் பெற்ற பாக்ய சாலிகள் இருந்தனரே
அடியேன் இழந்தேனே

பெற்றார் தழை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
வசு தேவ தேவகிகள் கால் விலங்கு கழன்ற
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் -திருமங்கை
வாமனன் என்று கொண்டால்
பெற்றார் -தன்னை ஆஸ்ரயிக்க்க பெற்றவர்கள் என்னுமாம்
தழை -கரும பந்தம்
அது நீங்கும்படி பரம பதத்தில் நின்றும் வந்ததைச் சொல்லிற்று ஆகவுமாம்

செற்றார் படி கடந்த செங்கண் மால்
செற்றார் -சத்ருக்கள்
படி -பூமி
மகாபலி போல்வார் தங்களது என்று அபிமானித்து இருந்த பூமி –

நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று
ஏத்துவராம் நின்று -ஏத்துவரால் நின்று -பாட பேதங்கள்
பிரயோஜனாந்த பரர்களும்
ஏத்தி இறைஞ்சும் படி ஆச்சர்யம் தொனிக்க அருளிச் செய்கிறார்-

———————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-1-10–திவ்யார்த்த தீபிகை —

September 23, 2014

ஸ்ரீ யதோத்த காரி சந்நிதியில் -திரு வெக்கா திவ்ய தேசத்தின்
வலப்புறத்தில்
பொற்றாமரைப் பொய்கையிலே
ஐப்பசி திருவோணம்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் அம்சமாக திருவவதரித்து அருளினார்
திரு பொய்கை ஆழ்வார்
தெண்ணீர் வயல் தொண்டை நாடு சான்றோர் உடைத்து
முக்தி தரும் நகர் எழில் முக்யமாம் காஞ்சி
காசி முதலிய நன்னகரி எல்லாம் கார் மேனி அருளாளர் கச்சிக்கு ஒவ்வாது
ஆரோடு ஈரெட்டு தொண்டை -22 திருப்பதிகள் கொண்டது தொண்டை நாடு
வைஷ்ணவோ வைஷ்ணவம் த்ருஷ்ட்வா தண்டவத் பிரணமேத் புவி –
ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம் தேஹளீசன்
யோக பலத்தால் ஆயிரக்கணக்கான வருஷங்கள் வாழ்ந்து இருந்து வையகத்தை வாழ்வித்து அருளினார்-

இன்கவி பாடும் பரம கவிகள்
செஞ்சொல் கவிகாள்
செந்தமிழ் பாடுவார்

—————————————————

எண் வகை வனப்பு சொல்லும்
தொல்காப்பியம் செய்யுளில்
அம்மை அழகு தொன்மை தோல்
விருந்து இயைபு புலன் இழைபு –
விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே -என்ற தொல்காப்பிய சூத்திர உரையில்
விருந்து தானும் பழங்கதை மேலதன்றி புதிதாக தாம் வேண்டியவாற்றால்
பல செய்யுளும் தொடர்ந்து வரத் தொடுத்துச் செய்யப்படும் தொடர் நிலை மேலது -என்றும்
அது முத் தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளும் என உணர்க
கலம்பகம் முதலாயினவும் சொல்லுப -என்று உரைத்துள்ளமை காண்க
திரு அந்தாதி மேன்கையாகிய அந்தாதி மேன்மையை உடைய அந்தாதி-

————————————————————-

முதலி ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு -வையத்
தடியவர்கள் வாழ வருந்தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து-

கைதை சேர் பூம் பொழில்
தாழைகள் மிகுதியாக சேர்ந்து இருக்கப் பெற்ற அழகிய சோலைகள்-கேதகீ -வடசொல்-

படி விளங்கச்
இப்பூமி யானது இருள் நீங்கி ஞான ஒளி பெற்று விளங்கும்படியாக

படி -உபமானத்துக்கும் திருமேனிக்கும் வாசகம்

வருத்தும் புறவிருள் மாற்ற என் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன திரு வுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமானுசன் எம்மிறையவனே

பரிந்து -எம்பெருமான் மேல் காதல் கொண்டு

கவிஞர் போரேறு -புருஷ சிம்ஹ -புருஷ வயாக்ர-புருஷ புங்கவ -புருஷர்ஷப
சிங்கம் புலி எருது -மிடுக்குக்கு வாசகம்
அருந்தமிழ் அந்தாதி -பாட பேதம்

இன்கவி பாடும் பரம கவிகள் என்றும்
செந்தமிழ் பாடுவார் என்றும்
இவர்கள் திரு வவதரித்தது ஒரோ தேசங்களிலே யாகிலும்
காலப் பழைமையாலே-அச்சுப் பிழை இது –
ஞானப் பெருமையாலே-இருந்து இருக்க வேண்டும் – – இன்னவிடம் என்று நிச்சயிக்கப் போகாது -பெரியவாச்சான் பிள்ளை
யுகாந்திரத்தில் திருவவதாரம்
ஆழ்வார்கள் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான
அவகாஹனத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும் நித்ய சூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் -என்று
அருளிச் செய்து இருப்பதால்
அடியார்கள் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே -என்கிற சங்கை என்னவுமாம்
அத்ரி ஜமதக்னி பங்க்த்ரித வஸூ நந்த ஸூ நுவானுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ
வ்யாசாதிவத் ஆவேசமோ
மூதுவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ என்று
சங்கிப்பர்கள் -ஆச்சார்ய ஹிருதயம் நம் ஆழ்வார் விஷயம் போலே இங்கும் சங்கை

கால பழைமையால் பெரியவாச்சான் பிள்ளை இன்னவிடம் தெரியாது எனபது திரு உள்ளமாகில்
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை -என்றும்
பொய்யில்லாத மணவாள மா முனிகள் அருளிச் செய்து இருக்க மாட்டாரே-

—————————————————————————————————————————————————————————————–

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று–1-

——————————

வையம் தகளியா
தகளியாவது நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாய் இருக்கும் அகல்
வார் கடலே நெய்யாக

பிரபஞ்சத்தை நிருமிக்க வல்ல ஞான சக்தியாதிகளை உடையவன்
திவ்ய மங்கள விக்ராஹத்தோடு கூடியவன்
சர்வேஸ்வரன் என்றும்
அவனுக்கே அடிமை செய்வது புருஷார்த்தம் என்றும் விளக்கப்பட்டது
வாசிக கைங்கர்யம் இவர் செய்து அருளுகிறார்
இடையூறாக இருந்த சம்சார துன்பத் திரள்கள் இன்றோடு ஒழிந்திடுக என்கிறார்

அனுமானத்தால் சாதிக்கிறார் இல்லை
சாஸ்திர யோநித்வாத்
வேதத்துக்கு விருத்தம் இல்லாத அனுமானம் சாஸ்திர சம்மதம்

இடராழி நீங்குகவே யென்று
எம்பெருமானை துதியாமல் இருந்த வருத்தம் தீர
துதிக்க ஒட்டாமல் பிரதிபந்தகமாக இருந்த பாபங்கள் தொலைய
இப்பிரபந்தம் கற்று சம்சாரிகளும் துயர் தீர்ந்து வாழ
மூன்று படியாக உரைக்கலாம்

———————————————————————————————————————————————————————

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை உணரேன் நான் -அன்று அது
அடைத்து உடைத்து கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் –2-

———————————–

அனுமானம் கொண்டுஅவனை சாதிக்க வேண்டிய வருத்தம் இல்லை
எல்லை அற்ற அதி மானுஷங்களான செயல்களே சாதித்துக் கொடுக்கக் கூடியவை என்கிறார் இதில்

த்வாம் சீலரூப சரிதை -ஆளவந்தார்
சித்ரைச்ச கைச்சிது சிதை பவதச் சரித்ரை -கூரத் ஆழ்வான்-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
கேள்வி கேட்பதில் நோக்குடையது அல்ல
கடல் கடையும் போது திரையும் நுரையும் மாறாமல் இப்பொழுது தான் கடல் கடைந்தால் போலே தோற்றுகிறதே
உலகு அளக்கும் போது வைத்த அடி சுவடு மாறாமல்
வாமனன் மண் இது -என்னும்படி
இதோ தோன்றுகிறதே -என்று
பிரத்யஷமாக காட்டி அருளுகிறார்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றமையால் ஸ்பஷ்டமாக தோற்றக் குறை இல்லையே ஆழ்வாருக்கு-

நேரிலே கண்டு மங்களா சாசனம் செய்யப் பெற்றிலோமே
திருவடிகளின் கீழே தலையை மடுக்கப் பெற்றிலோமே
இழவு விளங்க
ஒன்றும் அதனை உணரேன் நான்-என்கிறார்
நம் ஆழ்வார்
மத்துறு கடை வெண்ணெய்அற களவினில் உரலிடை ஆப்புண்ட
சரிதையை
அனுசந்தித்ததும் –
எத்திறம் என்று மோஹித்தால் போலே
இவரும் -ஒன்றும் அதனை உணரேன் நான்-என்கிறார்
கடலை கடைந்ததும் உலகை அளந்ததும் அனுசந்திக்க
எம்பெருமான் கடல் உலக சம்பந்தம் நினைவுக்கு வர
அன்று அது அடைத்து உடைத்து கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் -என்கிறார்
மறிகடல் நெறிபட மலையால் அரிகுலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் -பெரிய திருமொழி -5-7-7-
சேது பந்தனம் பண்ணி அருளி
பிராட்டியை கைக் கொண்டு மீண்ட பொழுது உடைத்தருளி
வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல்
கள்ள நித்தரை கொள்ளுகின்ற -என்றபடி
தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி பள்ளி கொண்டு அருளிய கார்யங்கள்
உலகுக்காக செய்த செயல்கள்
ஆதியில் படைத்தருளி
ஸ்ரீ வராஹமாய் இடந்தருளி
பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்தருளி
பின்பு வெளிப்பட உமிழ்ந்தருளி
செய்த செயல்கள் அனுசந்திக்கப் பட்டன
இப்படி அதிமாநுஷ சேஷ்டிதங்களை செய்து அருளினவன் ஸ்ரீ மன் நாராயணனே என்றும் ‘
இந்த செயல்களே அவனுடைய உண்மையை சாதித்து தர வல்லன -என்கிறார்-

——————————————————————————————————————————————————————————————————-

பாரளவும் ஓரடியை வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே -சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீ யளவு கண்ட நெறி –3

———————————

பாரளவும் ஓரடியை வைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –
உலகளந்த சரிதையில் ஈடுபட்டு அருளுகிறார்

அறிகிலேன் நீ யளவு கண்ட நெறி
அளப்பது -மாறி காலிடுதல்
ஓர் இடத்திலே நின்று கொண்டு இருப்பது அளத்தல் ஆகாதே
மாறி இடுவதற்கு அவகாசம் இல்லையே
சமத்காரமாக
நீ யளவு கண்ட நெறிஅறிகிலேன்-என்கிறார்

கழல் தலம் ஒன்றே நிலம் முழுதாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்கு அளக்கின்றதே -திரு விருத்தம் -58

அளக்கைக்கு ஒரு அவகாசம் காண்கிறிலோம்
நின்ற நிலையில் நின்றாரை அளந்தார் என்ன ஒண்ணாது இ றே
அடி மாறிலிடில் அன்றே அளந்ததாவது
இவன் இங்கே அளந்தானாக ஒன்றும் காண்கிறி லோமீ-பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் அவ்விடத்தில்

சூருருவின் பேயளவு கண்ட பெருமான்
சம்போதனம் -விளி
சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர் நிகண்டு
தெய்வ நங்கை -யசோதை உருவில் வந்தவள்
அவள் ஆயுளின் அளவைக் கண்டுவிடுதல் முடித்தல்
தனது வல்லமையால் அளவிட்டு காண நினைப்பவர்கள் பூதனை பட்ட பாடு படுவார்கள்-

——————————————————————————————————————————————————————————-

நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சாத்தி -அறிவானாம்
ஆலமர நீழலறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலமமர் கண்டத் தரன் –4-

—————————————————————–
அகஸ்த்யர்
புலஸ்தியர்
தஷர்
மார்கண்டேயர் -நான்கு சிஷ்யர்களுக்கும்
தர்மோபதேசம் செய்த சிவன்
ஆல நிழல் கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் -ஞால
மளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்குமாறு -நான் முகன் திருவந்தாதி -17-

அறிவானாம்
அறிந்து விட்டதாக செருக்கு உற்று இருக்கிறானே
இது என்ன அறிவு கேடு -என்கிறார்
அரன் -நெறி வாசல் தானேயாய் நின்றானை-அறிவானாம் -என்று அந்வயம்

நெறி -உபாயம்
வாசல் -உபேயம்
அன்றிக்கே நெறி வாசல் -ஸ்வரூபத்துக்கு ஏற்ற உபாயம் என்றுமாம்

ஆலமமர் கண்டத் தரன்
தமோ குணத்துக்கு தக்க செயலைச் செய்பவன் அன்றி
சாத்விகர் செய்யும் செயலை செய்ய வல்லவன் அன்றே-

———————————————————————————————————————————————————————

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரைநூல் மறை யுறையும் கோயில் -வரைநீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று –5-

—————————————————

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரைநூல் மறை யுறையும் கோயில் -வரைநீர்
கருமம் அழிப்பு அழிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று
இருவர் உடைய
நாமம்
ரூபம்
வாஹனம்
தொழில்
முதலியவற்றால் நன்கு விளங்கும்

சர்வ ரஷகன் இவன் சர்வ பஷன் அவன்

அட மாடே நிந்திக்கும் ரிஷபம் அவனுக்கு வாஹனம்
இவனுக்கு ஸூ பர்ணோசி கருத்மான் -வேதாத்மா விஹகேச்வர –
வேத ஸ்வரூபி பெரிய திருவடி

வேதம் இவனை பிரதிபாதிக்கும் ஆகம நூல் அவனுக்கு

அருளார் திருச் சக்கரம் இவன் திருக்கையில் சூலம் அவனது கையில்

ரூபமேவாச்ய ஏதன் மஹிமா நம் வ்யாசஷ்டே
உருவம் எரி கார் மேனி ஓன்று
காலாக்னி போலே அவன் உருவம்
காளமேகம் போல் செல்வ நாரணன் திரு உருவம்
ஓன்று செந்தீ ஓன்று மா கடலுருவம் -திரு நெடும் தாண்டகம்

உபநிஷத் -அங்கான் யன்யா தேவதா -நாராயணன் அங்கி அரன் -அங்கம் -அதனால் மேனி ஓன்று என்கிறார்
ஓன்று சரீரம் என்றால் மற்று ஓன்று சரீரி தானே
அந்தர்யாமி ப்ராஹ்மணம்-ஸ்ரீ மன் நாராயணனே சர்வ சரீரி-

———————————————————————————————————————————————————————————-

ஓன்று மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள் அன்று
கருவரங்கத்துள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருவரங்கமே யான் திசை–6-

திசை -தன்மை பொருளில் இங்கே

——————————————

அரன் அறிவானாம் என்றீர்
நீர் பிரபந்தம் அருளிச் செய்து சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது எங்கனே என்ன
எம்பெருமான் திருவருளால் -அவனே காட்டக் கண்டு
ஜாயமானம் ஹி புருஷம்யம் பச்யேத் மது ஸூ தன
சாத்விகஸ் ஸ து விஜ்ஞேய ஸ வை மோஷார்த்த சிந்தக –

ஓத நீர் வண்ணனை -வடிவு அழகு நெஞ்சிலே ஊறப் பெற்றவர்
மறக்க சம்பாவிதம் அல்ல –
எப்போதும் கடாஷித்து விஷயீ கரிக்க அவனே திருவரங்கம் மேயான் -என்கிறார்-

கருவரங்கத்துள் கிடந்தது கை தொழுதேன்-
அயோ நிஜார் கர்ப்ப வாசம் உண்டோ என்றால்
சீயும் நரம்பும் –நாற்றமும் மிக்கு இருக்கிற
கர்ப்பத் தும்பையில் நின்றும் ஆழ்வார் பிறக்க வில்லை
எங்கு நின்றும் ஆவிர்பவித்தாரோ அதுவே கர்ப்ப ஸ்தானம்
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே-என்னக் கடவது இ றே
இருள் தரும் மா ஞாலதுக்குள் வரும் முன்பே அவன் கடாஷித்தான்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்-

————————————————————————————————————————————————————————–

திசையும் திசை யுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு–7-

—————————————————————–

பரம விலஷணமான அவனை அனுபவிக்க மாட்டாத
சூத்திர ஜனங்களை மயக்க
இவை எல்லாம் ஏற்படுத்தப் பட்டன -என்கிறார்
ஒவ்வொரு ஸ்தானத்திலும் ஒவ்வொரு தேவதையை ஏற்படுத்தி
தெய்வத்துக்கு இசையும் கருமங்களையும் ஏற்படுத்தி
நான் முகன் -படைக்க
சிவன் -சம்ஹாரம் -காம தஹனம் -திரிபுரம் மூன்று எரித்தல்
இந்த்ரன் -மெய் காட்டிக் கொள்ளும் தொழில்
யமன் -உயிர் நீக்கும் தொழில்
மோகினி உருவம் கொண்டு மயக்கினால் போலே
அமுதம் விஷம் யானை சந்தரன் கல்பவ்ருஷம் அப்சரஸ் போன்ற
விசித்திர பொருள்களை படைத்தருள வல்லவன்
இவற்றையும் உண்டாக்கி மயக்கி -என்றவாறு-

————————————————————————————————————————————————————————————

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து
இயங்கும்  எரி கதிரோன் தன்னை -முயங்கு அமருள்
தேராழியால் மறைத்தது என் நீ திருமால்
போராழி க் கையால் பொருது –8-

———————————————

ஆஸ்ரித பஷ பாதி -என்கிறார்
நாழிகை கூறிட்டுக் காத்து -அரசர்கள் தம் முகப்பே நாழிகை போக படை பொருத–தேவகி தன் சிறுவன் -பெரியாழ்வார்
திருவாழி பிரகாசம் மழுங்கிப் போக கடவ ஒரு சாபம் ஏற்பட்டு இருந்தது என்றும்
அதனால் மறைத்தான் என்பர்

போராழி க் கையால் பொருது
பீஷ்மரை தேரில் இருந்து இறங்கி துரத்திக் கொன்ற

முயங்கு அமர் -பலர் திரண்டு நெருங்கி-

——————————————————————————————————————————————————————————————

பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவில் நீ யளந்த மண்–9-

——————————————–
விரிதோட்ட-ஒளி விரிகின்ற திருக் குண்டலங்கள் அணிந்து இருந்தவனே

மகர நெடும் குழைக் காதனே விரி தோட -விகாரம் பெற்று விரி தோட்ட –
மலர்ந்த இதழ்களை உடைய தாமரை போன்ற சேவடி என்றுமாம்-
பாராருலகம் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏராருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மான் -திருமங்கை ஆழ்வார்-பெரிய திருமொழி -8-8-3-
தன்னை அழிய மாறியும் ரஷித்து அருளுபவன்
ஆபத்து வந்தால் தலையாலே சுமந்து நோக்குதல்
தலையிலே காலை வைத்து நோக்குதல் செய்யுமவன் அன்றோ நீ
ரஷ்ய வர்க்கத்தை நோக்கும் அளவில் உனக்கு ஒரு நியதி உண்டோ
என்று உகந்து அனுபவிக்கிறார்
உதாரனாய் இருப்பான் ஒருவன் நாலு பேருக்கு சோறிட நினைத்து
நாற்பது பேருக்கும் இட்டு
மிகும்படி சோறு உண்டாக்குவான் போலே
ரஷ்யத்தின் அளவன்று இ றே ரஷகனின் பாரிப்பு
இந்த பிரபந்தத்தில்
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராய் உலகளந்த ஞான்று வராகத்
தெயிற்று அளவு போதாவாறு என் கொலோ எந்தை
அடிக்களவு போந்தபடி –84

——————————————————————————————————————————————————————————————–

மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் -எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்கு அன்று இவ்
வுலகளவும் உண்டோ உன் வாய்-10-

—————————————————–

சிறிய வாயினால் பெரிய உலகங்களை எல்லாம் விழுங்க வல்ல
அகடிகடநா சாமர்தம் உள்ளவன் நீ

அலகு அளவு கண்ட சீர்
அலகு -நூறு ஆயிரம் பதினாறாயிரம் லஷம் கோடி சங்கம் மகா சங்கம் பத்மம்
அளவு காண்கை எண்களின் எல்லைக்கு மேல் பட்டு போதல்
அசங்க்யேய கல்யாண குணகனௌ மகார்ணவ -ஸ்ரீ பாஷ்யகாரர்
சீர் ஆழியாய்க்கு ஆழியான்
சமுத்ரம் போன்ற கல்யாண குணங்கள்
கல்யாண குணக்கடலும் சக்ராயுதத்தையும் உடையவன் –

————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

கண்ணி நுண் சிறுத் தாம்பு -திவ்யார்த்த தீபிகை ..

September 22, 2014

ஸ்ரீ மன் நாத முனிகள் அருளிச் செய்த தனியன் –
அவிதித விஷயாந்தரஸ் சடாரே ரூப நிஷதாமுபகா நமாத்ர போக
அபிச குணவசாத் ததேக சேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து

நம் ஆழ்வார் உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன்
மதுரகவி ஆழ்வாரும் தேவு  மற்று அறியாமல்
பாவின் இன்னிசையே பாடித் திரிந்து
மா முனிகளும் மதுரகவி நிலை பெற்றோம் என்று களிக்கும் படி

சடாரே
நடுநிலைத் தீபமாகக் கொண்டு கீழும் மேலும் அன்வயிக்கக் கடவது
பஞ்சமி விபக்தி -நம் ஆழ்வாரை தவிர வேறு இல்லாமை
சஷ்டி விபக்தி நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளை விட வேறு அறியாதவராய்

விஷயாந்தராஸ் –
சப்தாதி விஷயங்களை அல்ல பகவத் விஷயத்தையே
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேர் உண்டு இறே
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது
அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே
அவர் பாசுரம் கொண்டு இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம்
ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி

உபநிஷதாம் பஹு வசனம்
ஆழ்வார் உடைய நான்கு பிரபந்தங்களையும் சொல்லிற்று

அபிச –
ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம்
குணவசாத் குண க்ருத தாஸ்யம்

———————————————————–

வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்

வேறு ஒன்றும் நான் அறியேன் –வாழ்வாம் -என்னும் அளவும்
மதுரகவி ஆழ்வார் அனுசந்தானத்தின் அனுவாதம்

அன்றிக்கே
வேறு ஒன்றும் நான் அறியேன் -நாத முனிகள் சொல்லாக உரைக்கக் கூடுமாயினும்
முந்திய தனியன் -அவிதித விஷயாந்தராஸ் -என்னுமதுக்கு
மொழி பெயர்ப்பாக அருளிச் செய்த இதுக்கு
முந்தின பொருளே பொருந்தும் –

வேதம் தமிழ் செய்த
ஆற்றில் பொதிந்த மணலின் தொகை அரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள்கள் எல்லாம் விழுமாக்கமலம்
சேற்றில் பொதியவிழ்க்கும் குருகூரர் செஞ்சொல் பதிக
நூற்றில் பொதிந்த பொருளொரு கூறு நுவல்கிலவே -கம்பர் சடகோபர் அந்தாதி

வடமொழி மறைகளை ஹம்ச ரூபியாக தானே வெளியிட்டு அருளினாலும்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள் -பெரிய திருமடல்
போலேயும்
உபநிஷத் ஒருவர் பெயர் இட்டு வழங்குவது போலேயும்
எம்பெருமான் திரு அருளால் உணர்ந்த ஆழ்வார்கள்
திவ்ய பிரபந்தத்தை உணர்ந்த மாத்ரத்தைக் கொண்டு
அவர்கள் அருளிச் செய்ததாக கூறுதல் உபசார வழக்காகும்

மாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
திரு நா வீறுடைய பிரான்
திருக் குருகூர் நம்பி
குருகைப் பிரான்
வழுதி நாடன்

வண் குருகூர் ஏறு
வண்மை குருகூருக்கும் குருகூர் ஏற்றில் அன்வயிக்கலாம்
அடியாருக்கு அமுத வெள்ளமாக உபகரித்து அருளிய உதார சிகாமணி

முதல் அடியில் நான் அறியேன் ஒருமையிலும்
இறுதியில் எங்கள் பன்மையிலும்
தம்முடன் சம்பந்தம்பெற்ற பிரபன்னர் அனைவரையும்

திரு விருத்தம்
இனி யாம் உறாமை பன்மை
அடியேன் செய்யும் வின்ன்பப்பம் ஒருமை போலே

அவரே சரண் -என்றும் பாடமாம்-

—————————————————————

குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை
சிறு முனிவன் வாய் மொழியின் சேய்–வள்ளுவர்

ஐம் பொருளும் நாற்பொருளும் முப்பொருளில் பெய்தமைத்த
செம்பொருளை எம்மறைக்கும் சேட்பொருளை தண் குருகூர்ச்
சேய் மொழியது என்பர் சிலர் யான் இவ்வுலகின்
தாய் மொழியது என்பேன் தகைந்து –ஔவையார்

சேய் மொழியோ தாய் மொழியோ செப்பில் இரண்டும் ஓன்று அவ்
வாய் மொழியை யாரும் மறை என்பர் வாய் மொழி போல்
யாய் மொழிகள் சால வுள வெனினும் அம் மொழியின்
சாய் மொழி என்பேன் தகைந்து -இடைக்காடர்

வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாரி உண்ட
நாய்க்கும் பரம பதம் அளித்தாய் அந்த நாயோடு இந்த
பேய்க்கும் இடம் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்கு கவி சொல்லு ஞானத் தமிழ் கடலே

சேமம் குருகையோ செய்ய திருப் பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ -தாமம்
துளவமோ வகுளமோ தோள் இரண்டோ நான்கும்
உளவோ பெருமான் உனக்கு

ஈய் ஆடுவதோ கருடற்கு எதிரே இரவிக்கு எதிர் மின்மினி யாடுவதோ
நாய் ஆடுவதோ உறும் இப்புலி முன் நரி கேசரி முன் நடை யாடுவதோ
பேய் ஆடுவதோ அழகூர்வசி முன் பெருமான் வகுளாபரணன் அருள் கூர்ந்து
ஓவாது உரை ஆயிரம் மா மறையின் ஒரு சொல் பொருமோ உலகில் கவியே-

——————————————————————–

வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமமாம் பதம் போலே
சீர்த்த மதுரகவி செய்கலையை –ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து –மா முனிகள்

இது தான் பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை தொடக்கமானவற்றின் அர்த்தத்தை பிரதிபாதிக்கையாலே
இதன் அர்த்த கௌரவத்தை விசாரித்து
நன்றாய் இருப்பதொரு ஹாரத்தை சமைத்து அது ஒளி பெறும்படி
ஸ்லாக்கியமாய் இருப்பதொரு நாயகக் கல்லை அதன் நடுவே பதித்தால் போலே
அருளிச் செயல்கள் தான் நிறம் பெறும் படி அவற்றின் நடுவே
இத்தைச் சேர்த்தார்கள்
சேர்த்த சேர்க்கையின் சாதுர்யத்தாலே இறே முத்து மாலை தொடக்கமான ஆபரணாதிகள் நிறம் பெறுவது
அது போலே யாய்த்து இது –பிள்ளை லோகம் ஜீயர்

மண்டல அந்தாதி இதுவும்

கம்பர் சடகோபர் அந்தாதி இது வழிகாட்டியாக கொண்டே அமைத்ததை தாமே
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளலை மாறனை முன்
சென்றே மதுர கவி பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன்னடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகமதாக இசைத்தனனே -என்று வெளியிட்டு உரைக்கிறார்

——————————————————————

தேறிய மா ஞானமுடன் திருக் கோளூரில் சித்திரையில் சித்திரை நாள் வந்து தோன்றி
ஆறிய நல் அன்புடனே குருகூர் நம்பிக்கு அநவரதம் அந்தரங்க அடிமை செய்து
மாறனை யல்லால் என்றும் மறந்தும் தேவு மற்று அறியேன் என்னும் மதுர கவியே நீ முன்
கூறிய கண்ணி நுண் சிறுத் தாம்பு அதனில் பாட்டுக் குலவு பதினொன்றும் எனக்கு உதவு நீயே –தேசிகன் -பிரபந்த சாரம்

இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில் இகழாத பல்லுருவில் இராகமாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில் தத்துவத்தை யுணர்த்துதலில் தன்மையாக்கில்
அன்பர்க்கே யவதரிக்கும் மாயன் நிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தானே கொண்டு
துன்புற்ற மதுர கவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே—தேசிகன் -அதிகார சங்க்ரஹம்-

இன்பத்தில்–அண்ணிக்கும் அமுதூரும் -இன்பம் எய்தினேன்
இறைஞ்சுதலில்-மேவினேன் அவன் பொன்னடி
இசையும் பேற்றில் -திரிதந்தாகிலும்
இகழாத பல்லுருவில்-அன்னையாய் அத்தனாய்
இராகமாற்றில் -முன்னெலாம் நம்பினேன் -இன்று சதிர்த்தேன்
தன் பற்றில் -இன்று தொட்டும் தன் புகழ் ஏத்த அருளினான்
வினை விலக்கில்-பண்டை வல்வினை பாற்றி யருளினான்
தகவோக்கத்தில் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
தத்துவத்தை யுணர்த்துதலில்-வேதத்தின் உட்பொருளை நிற்கப் பாடி
தன்மையாக்கில் -செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்

இந்த பத்து விஷயங்களும் தோன்றக் காட்டும்

அன்பர்க்கே யவதரிக்கும் மாயன் நிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தானே கொண்டு
துன்புற்ற மதுர கவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–

முமுஷுகளுக்கு உபாதேயமான மார்க்கம் மதுரகவி நிஷ்டையே
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் -என்றபடி-

————————————————————————-

ஆழ்வாருடைய ஒப்பற்ற போக்யதையையும், அந்த போக்யதையின் ரஸமறிந்தவர், தாமொருவரே என்பதையும்
இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.

கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.

பதவுரை

கண்ணி–(உடம்பிலே உறுத்தும்படி பல) முடிகளையுடைத்தாய்
நுண்-(உடம்பிலே அழுந்தும்படி) நுட்பமாய்
சிறு–(எட்டம்போராதபடி) சிறிதாயிருக்கிற
தாம்பினால்–கயிற்றினால்
கட்டுண்ண பண்ணிய–யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட
பெருமாயன்–விசேஷ ஆச்சரிய சக்தியுக்தனாய்
என் அப்பனில்–எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனைவிட்டு,
நண்ணி-(ஆழ்வாரைக்) கிட்டி ஆச்ரயித்து
தென் குருகூர் நம்பி என்றக்கால்-தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு
நிர்வாஹகாரன ஆழ்வார் என்று (அவரது திரு நாமத்தைச்) சொன்னால்.
அண்ணிக்கும்–பரமபோக்யமாயிருக்கும்;
என் நாவுக்கே–என் ஒருவனுடைய நாவுக்கே
அமுது ஊறும்–அம்ருதம் ஊறா நிற்கும்.

நம்மாழ்வர், மற்றுள்ள அவதாரங்களிற் காட்டில் க்ருஷ்ணாவதாரத்திலே,
அது தன்னிலும் நவநீத செளர்யம் பண்ணி ஆய்ச்சியர் தாம்பினால் உரலினிடை ஆப்புண்டிருந்த அபதாநத்தில்
‘எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!” என்று ஆறு மாதம் மோஹித்திருந்தவராதலால்.
அந்த அபதாநத்தை முன்னிட்டுக் கண்ணபிரானைக் கூறுகின்றார்.

தேவுமற்றறியாதே ஆழ்வாரைப்பற்றின இவர் முதலடியிலே பகவத் விஷயத்தில் இறங்குவானேன்?
அதிலும் என் அப்பன் என்று பரமோத்தேச்யதை தோற்றச் சொல்லுவானேன்? என்னில்;
ஆழ்வார் ஆழங்காற்பட்ட துறை என்பது பற்றியும்,
ஆழ்வார் உகத்த விஷயத்தைப் பேசினால் அவர்க்கு முக மலர்த்தி உண்டாகுமென்பது பற்றியும் பேசுகிறார்.

மேலும் சரம பர்வ நிஷ்டர்க்கு பகவத் விஷயம் ஸர்வாத்மநா அநுத்தேஸயமுமன்று;
தாமாக ஸாக்ஷாத் பகவத் விஷயத்தைப் பற்றக்கூடாதேயொழிய,
தமது ஆசிரியர் உகந்த விஷயமென்று அவ்வழியாலே பற்றுகை விருத்தமன்று.

மேலும் இப்பாட்டில் எம்பெருமானைவிட்டு ஆழ்வாரைப்பற்றி மகிழ்ந்தவாறு கூறுகின்றதேயன்றி,
பகவத் விஷயத்தைப் பற்றுவதாகக் கூறப்படவுமில்லை.
முதலடியிலே எம்பெருமானைப் பேசியதனாலும்,
அதிலும் எம்பெருமானுக்கு இட்ட விசேஷணங்களின் வைலக்ஷண்யத்தாலும்
ஆபாதத: தோற்றக்கூடிய ஸங்கையை அநுவதித்துப் பரிஹரித்ததித்தனை.

என் அப்பனில் –
என் அப்பனை விட்டு என்றபடி.
வடநூலார் ‘ல்யப்லோபே பஞ்சமீ’ என்பர்;
“வ்ருக்ஷாத்பர்ணம் பததி” என்றவிடத்து ‘வ்ருக்ஷாத்’ என்ற பஞ்சமியானது
‘வ்ருக்ஷம் விஹாய என்ற ஸ்தாநத்திலேயாமென்று உதாஹரணமுங் காட்டுவர்;
அதுபோல் இங்குக் கொள்க.

கண்ணி
கண்ணபிரான், வெண்ணெய் களவு செய்கிற தன்னை யசோதைப் பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி
வருத்துகின்றாளென்று வீட்டிலுள்ள கயிறுகளைத் துண்டுதுண்டாக அறுத்து வைத்திடுவான்;
அவற்றை அவள் ஒன்றோடொன்று முடிபோட்டு ஒரு கயிறு வடிவமாக்கி அது கொண்டு கண்ண பிரானைக் கட்டுவள்;
ஆனது பற்றித் தாம்புக்குக் கண்ணி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.

நுண் சிறு என்ற அடைமொழிகள்
தாம்பின் சுற்றளவிலும் நீட்டளவிலுமுள்ள சிறுமையைக் கூறும்;
மெல்லிதாய்க் குறுகிய என்றபடி.

கட்டுண்ணப் பண்ணிய-
இப்படிப்பட்ட தாம்பினால் கட்டும்போது, தன் உடம்புக்கு எட்டம் போராதபடி மிகச் சிறிதான அத் தாம்பினால்
கட்ட முடியாதபடி எளிதில் தன்னைத் தப்புவித்துக் கொள்ள வல்லவனாயினும்,
தனது ஸௌஸீல்யம் ஸௌலப்யம் ஆஸ்ரித பாரதந்திரியம் முதலிய சீலங்களை
வெளியிடுவதற்கென்றே பரத்வ நிலையைத் தவிர்ந்து
மநுஷ்ய ஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான் உரலோடு கட்டுண்டிருக்கை முதலிய இவ்வகைகளால்
தான் அக் குணங்களை விளங்கச் செய்து கொள்ளவேணுமென்று கொண்டு,
ஒரு சுற்றுக்குப் போராத தாம்பு இரண்டு மூன்று சுற்றுக்குப் போரும்படி உடம்பைச் சுருக்கி அமைத்துக் கொண்ட அற்புதம்
கட்டுண்ணப் பண்ணிய என்ற சொல் நயத்தாற் போதரும்

“கட்டுண்ட” என்னாது கட்டுண்ணப்பண்ணிய என்றது –
தன்னைக் கட்டுவதற்குத் தானே இசைந்து போந்தமையை நன்கு காட்டவற்றென்க.

இங்கு நஞ்ஜீயரருளிச் செயல்-
ஆஸ்ரிதர் கையாலே கட்டுண்ணாவிடில் சீலத்துக்குப் போராது.
அநாஸ்ரிதரைக் கட்டாவிடில் ப்ரபாவத்துக்குப் போராது.
ராஜாவானவன் எதிரிகளைக் கட்டி வைக்கையும் பும்ஸ்த்வம்;
தன் மஹிஷியின் கையில் பூமாலையாலே கட்டுண்டு கிடக்கையும் பும்ஸ்தவம்.”

பெரு மாயன்
பரம்புருடன் கர்மவஹஸ நம்போலியரைப் போற் பிறந்தவாறும்,
பசியுண்டாகி நவநீதம் முதலியவற்றை விரும்பியவாறும்;
அவற்றை இடுவாரில்லாமல் களவுவழியிலே பெறுகையும்,
அவற்றைச் சடக்கென விழுங்கி விட்டு மறைத்துக் கொள்ள மாட்டாமல் வாயது கையதாக அகப்பட்டுக்கொள்கையும்
இடக்கை வலக்கை யறியாதவர்கள் கையாலே கட்டுண்கையும்,
ஸம்ஸார பந்தங்களையெல்லாம் தவிர்க்க வல்லவனான தான் இந்த பந்தகத்தைத் தவிர்த்துக் கொள்ள மாட்டாதவனாகி
ஏங்கியேங்கி அழுகையுமாகிற இவையெல்லாம் என்ன ஆச்சரியம்! என்பார் பெரு மாயன் என்கிறார்.

இவனுடைய மேன்மைக்கு எல்லை காண முடியுமாயினும்
நீர்மைக்கு எல்லைகாண முடியாதென்ப.

(என் அப்பனில்.)
நஞ்சீயருரை:-
“கீழ் ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமாகையாலே க்ருஷ்ண வ்ருத்தாந்தம் சொல்லிற்று;
மேல் உத்தேஸ்யமான (ஆழ்வார்) விஷயத்தைச் சொல்லாதே அவனை என்னப்பனென்பானென்? என்னில்;
தம்மை ஆழ்வார் அங்கீகரிக்கைக்காக எம்பெருமானோடு தமக்கொரு ஸம்பந்தம் சொல்லிக் கொள்ளுகிறார்.
ஒரூருக்குப் போம்போது வழியிடையிலே ‘நீரும் நிழலும் நன்றாயிருந்தது’ என்று ஒதுங்கினால் உத்தேஸ்யமாக வேணுமோ?”.

என்றக்கால்
பகவத் விஷயத்தை விட்டு ஆழ்வாரைப் பற்ற வேண்டியதுமில்லை;
ஆழ்வார்! என்று ஒரு கால் வாயினாற்சொன்னாலும் போதும் என்பார் என்றக்கால் என்கிறார்.

அண்ணிக்கும் – தித்திக்கும் என்றபடி.
ஆழ்வார்க்கு நிரந்தர பகவத் விஷயாநுபவத்தாலே பிறந்த ஆநந்தாதிசயமடங்கலும்
இவர்க்கு ஆழ்வாரை ஒரு கால் சொன்ன மாத்திரத்திலே உண்டானபடி.

“அண்ணிக்கும் அமுதூறும்”
{ என்று இவர் சொன்னவுடனே,
கருவிலே திருவிலாதார் சிலர் ‘எங்களுக்கு ஆழ்வார் ரஸிக்கவில்லையே’ என்ன;

என் நாவுக்கே என்கிறார்;
முதலடியான பகவத்விஷயமுங்கூட ரஸியாதிருக்கிற உங்களுக்கு,
சரமாவதியான ஆழ்வாரளவும் ரஸிக்கும்படியான எனக்கு ரஸிக்குமாபோலே ரஸிக்குமோ? என்கை.

அன்றியே
என் நாவுக்கே என்றது-
அநாதிகாலமாக விஷயாந்தரங்கள் ரஸித்துக்கிடந்த என்னுடைய நாவுக்கே இன்று
ஆழ்வாரென்றால் ரஸித்திருக்கும்படி என்ன பாக்கியம்! என ஈடுபடுகிற படியுமாம்.

கண்ணி
ஆஸ்ரிதர் கையால் கட்டுண்ணா விடில் சீலத்துக்குப் போராது
அநாஸ்ரிதரைக் கட்டா விடில் பிரபாவத்துக்குப் போராது
ராஜாவானவன் எதிரிகளைக் கட்டி வைக்கவும் பும்ஸ்த்வம்
தன் மகிஷி யின் கையில் பூ மாலையாலே கட்டுண்டு கிடக்கையும் பும்ஸ்த்வம் –நஞ்சீயர்

பெரு மாயன்
பிறந்தவாறும்
நவநீதம் விரும்பியவாறும்
களவு வழியில் பெறுகையும்
வாயது கையதுவாக அகப்பட்டு கொள்கையும்
இடக்கை வலக்கை அறியாதவர்கள் கையால் கட்டுண்கையும்
ஏங்கி ஏங்கி அழுகையும்
நீர்மைக்கு எல்லை காண முடியாதே

என் அப்பனில்
கீழ் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தம் ஆகையாலே கிருஷ்ண வ்ருத்தாந்தம் சொல்லிற்று
மேலே உத்தேச்யமான -ஆழ்வார் -விஷயத்தை சொல்லாதே
அவனை என் அப்பன் என்பான் என் என்னில்
தம்மை ஆழ்வார் அங்கீ கரிக்கைக்காக எம்பெருமான் உடன் தமக்கு ஒரு சம்பந்தம் சொல்லிக் கொள்கிறார்
ஓர் ஊருக்கு போம்போது வலியிடையில் நீரும் நிழலும் நன்றாய் இருந்தது
என்று ஒதுங்கினால் உத்தேச்யம் ஆகவேணுமோ –நஞ்சீயர்

என்றக்கால்
ஒரு தடவை சொன்னாலே ஆழ்வாருக்கு நிரந்தர பகவத் விஷய அனுபவத்தாலே
பிறந்த ஆனந்த அதிசயம் அடங்கலும் உண்டான படி

—————

தம்முடைய மநோ வாக் காயங்களென்ற மூன்று கரணங்களும் ஆழ்வார் விஷயத்திலேயே ஏகாக்ரமாக
ஈடுபட்டபடியை அருளிச் செய்கிறார் இதில்.
நான் என்னுடைய நாக்கைக்கொண்டு அப்ராப்தமான பகவத் விஷயத்திலே செலுத்தாமல்
ப்ராப்த சேஷியான ஆழ்வாரைத் துதிப்பதிலே செலுத்திப் பரமாநந்த மடைந்தேன்;
என் தலை படைத்த ப்ரயோஜநம் பெறும்படி தலையை ஆழ்வார் திருவடிகளிலே மடுத்தேன்; இது ஸத்யம்.

நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி
பாவி னின்னிசை பாடித் திரிவனே.

பதவுரை

நாவினால்–நாக்கினால்
நவிற்றி–(ஆழ்வாரை) ஸ்தோத்திரம் பண்ணி
இன்பம் எய்தினேன்–ஆநத்தத்தைப் பெற்றேன்;
அவன்–அவ்வாழ்வாருடைய
பொன் அடி-அழகிய திருவடிகளை
மேவினேன்-ஆச்ரயிக்கப்பெற்றேன்;
மெய்ம்மையே-இது ஸத்தியமே;
மற்று தேவு அறியேன்–(ஆழ்வாரையொழிய) வேறொரு தெய்வத்தை அறியமாட்டேன்;
குருகூர் நம்பி–திருநகரிக்கு நிர்வாஹகரான அவ்வாழ்வாருடைய
பாலின்-அருளிச்செயல்களின்
இன் இசை-இனிய இசையையே
பாடி-பாடிக்கொண்டு
திரிவன்–திரியககடவேன்.

தேவுமற்றறியேன்
என்பதனால் நெஞ்சின் காரியஞ் சொல்லுகிறார்; நம்மாழ்வாரையொழிய தெய்வமாக நினைக்கமாட்டாது என் மனம்;
நம்மாழ்வாரையே பர தேவதையாகக் கொண்டேன் என்கிறார்.
முதலடியிலே சொன்ன நாவின் காரியத்தை மீண்டும் விசேஷித்துக் கூறுகிறார். குருகூர் நம்பி இத்தியாதியால்.
எப்போதும் நம்மாழ்வாருடைய திவ்ய ப்ரபந்தங்களையே இனிய இசையுடன் பாடிக்கொண்டு திரிவேனேயன்றி,
அவ்வருளிச் செயலைத் தவிர்த்து ஸந்த்யாவந்தந மந்த்ரத்தையும் இந்த நாக்கினால் உச்சரிக்க மாட்டேன் என்கிறாராகக்கொள்க.

இங்கே ஒரு சங்கை பிறக்கக்கூடும்;
அதாவது-“தேவுமற்றறியேன்;” என்று இவர் எம்பெருமானை
ஒதுக்கித் தள்ளுகிறபடியானால் அவ்வெம்பெருமானே தெய்வமென்று கொண்டாடுகிற
அருளிச்செயல் மாத்திரம் இவர்க்கு உபாதேயமாகலாமோ?
பகவத்விஷயத்தை உதறிவிட்டு ஆழ்வாரையே பற்றின விவர் அந்த ஆழ்வாருடைய பெருமையைப் பேசவல்ல
பிரபந்தத்தையே யன்றோ பாடிக்கொண்டு திரியவேணும் – என்று.

இச்சங்கைக்கு முதற்பாட்டின் உரைத்தொடக்கத்திலேயே ஸமாதாநங் கூறப்பட்டுள்ளமை காண்க.
சரமபர்வ நிஷ்டர்க்கு பகவத் விஷயம் ஸர்வாத்மநா ஹேயமன்று;
தம் ஆசிரியர் உகந்த விஷயமென்று அவ்வழியாலே பற்றுகை
ஸ்வரூபாநுரூபமென்றும் ஸ்வேச்சையாலே பற்றுகை விருத்தமென்றும் இவ்வளவேயுள்ளது.

இங்கு, “குருகூர்நம்பி பாவைப் பாடித் திரிவன்” என்னாமல், ‘பாவின் இன்னிசை பாடித் திரிவன்’ என்றதற்கு
ரஸோக்தியாக நஞ்சீயரருளிச் செய்யும் படி:-
ஐஸ்வர்யத்தை அல்பாஸ்திரமென்று கழித்து
ஸ்திரமான ஆத்ம ப்ராப்தியை அபுருஷார்த்தமென்று கழித்து,
ஸ்திரமுமாய்ப் பரம போக்யமுமான பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் ப்ரதமாவதியென்று கழித்து,
இதில் சரமாவதியான ஆழ்வாரையும் உத்தேச்யரன்றென்று கழித்து,
அவரோடு ஸம்பந்தித்த விஷயத்தையும் ரஸாச்ரயமன்றென்று கழித்து,
அத்தோடு ஸம்பந்தித்த இசையே தமக்கு உத்தேச்யமென்கிறார்.

‘தெய்வத் தண்ணந் துழாய்த்தாராயினுந் தழையாயினும் தண்கொம்பதாயினும் கீழ்வேராயினும் நின்ற
மண்ணாயினுங்கொண்டு வீசுமினே’ இத்தியாதியிற்படியே
பகவத் ஸம்பந்தம் கழியக் கழிய நிறம் பெறுகிறபடி.”

பாடித் திரிவனே என்ற சொல் நயத்தால்,
ஆழ்வாரருளிச்செயலைப் பாடவே தான் எனக்கு உடம்பில் வலிவு உண்டாகி ஸஞ்சரிக்க வல்ல சக்தி உண்டாகிறது
என்னுங்கருத்துத் தோன்றும்.
“ரஸாயநஸேவை பண்ணித்திரிவாரைப்போலே;
இது காணும் இவர்க்கு தாரகமாய் இவரை ஸஞ்சரிக்கப் பண்ணுகிறது”

“நாவாயிலுண்டே நமோ நாரணாவென்று ஒவா துரைக்கு முரையுண்டே” என்றும்,
“என்நாவிலின்கனி யானொருவர்க்குங் கொடுக்ககிலேன்” என்றும் மற்றையாழ்வார்கள்
பகவத் விஷய ஸ்துதியையே தமது நாவுக்குப் பயனாக நினைத்திருப்பர்;

“அடியையடைந் துள்ளந்தேறி, ஈறிலின் பத் திருவெள்ளம் யான் மூழ்கினன்” என்று
பகவத் விஷயாவகாஹநத்தையே -தமக்குப் பேரின்பமாக நினைத்திருப்பர்;
“கோலமாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே” என்று
பகவத் பாத ஸேவையையே தமது தலைக்குப் பேறாக நினைத்திருப்பர்;
“கண்ணனல்லால் தெய்வமில்லை” என்று அவனையே தெய்வமாக நினைத்திருப்பர்;
இந்த ப்ரதிபத்திகளெல்லாம் மதுரகவிகளுக்கு ஆழ்வார் திறத்திலே யாமென்பதை இப்பாட்டில் உய்த்துணர்க.

நம்பிள்ளை யீடு:-
“குருகூர்நம்பிபா’ என்றது -கண்ணி நுண் சிறுத்தாம் பென்னுதல்;
திருவாய்மொழி என்னுதல்.
திருவாய்மொழி தன்னில் பலகாலும் ‘குருகூர்ச் சடகோபன்’ என்றாரிறே;
அவ்வழியாலே யாய்த்துத் திருவாய்மொழி தன்னையும் இவர் ஆதரிப்பது.”

மெய்மையே=
‘ஆழ்வார் நீச ஜாதியிற் பிறந்தவராதலால் அர்ச்சையில் அவர் ஆதரிக்கத் தக்கவரே யன்றி விபவத்தில் ஆதரிக்கத்தக்கவரல்லர்;
மாதா புத்திரனுக்கு நமஸ்கரணீயையாயினும் பஹிஷ்டையாயிருக்குங் காலத்திலே அவள் எப்படி நமஸ்கரிக்கத்தகாதவளோ
அப்படி தான் நீசஜாதீயரான ஆழ்வார்கள் விபவத்திலே அநாதரணீயர்’ என்று பிதற்றும் த்ரமிடோபநிஷக் குத்ருஷ்டிகளின்
மிடற்றைப் பிடித்தாற்போலே அருளிச் செய்கிறபடி பாரீர்.
மதுரகவிகள் ப்ராஹ்மணோத்தமராயிருந்து வைத்து, ஆழ்வாருடைய விபவ தசையிலே அவர்க்கு நான்
ஸகலவித பரிசர்யையும் செய்தேன் காண் என்று ஸத்யம்பண்ணிச் சொல்லுகின்றார் காண்மின்.

‘நவிற்றின்பம்” என்று பெரும்பாலும் ஓதப்பட்டாலும்
“நவிற்றியின்பம்” என்ற பிராசீந பாடத்தை ஆதரிப்பதே அழகு;

கலிவிருத்தத்தால் அமைந்த இப்பிரபந்தம்-
நேரசை முதலாகத் தொடங்கப்பட்ட பாட்டுகள் ஒற்றொழித்துப் பதினோரெழுத்துக் கொண்ட
அடியையுடையனவாகவும்,
நிரையசை முதலாகத் தொடங்கப்பட்ட பாட்டுக்கள் ஒற்றொழித்துப் பன்னிரண்டெழுத்துக்கள் கொண்ட
அடிமையுடையனவாகவும் அமைந்திருக்கும் முறைமைக்கிணங்க நவிற்றி என்றிருக்கவேணுமென்க.

நவிற்று என்றால் பத்தெழுத்தாய்விடுமன்றோ ‘நவிற்று’ என்ற பாடத்தில், நவில் பகுதி;
‘நவிற்றி’ என்ற பாடத்தில், நவிற்று பகுதி: பொருள் ஒன்றே.

நாவினால் நவிற்று–பாவின் இன்னிசை பாடித் திரிவேன் -வாக் இந்த்ரியம்
மேவினேன் அவன் பொன்னடி– காயிக
தேவு மற்று அறியேன் –மானஸ
பாவின் இன்னிசை பாடித் திரிவனே –

ஐஸ்வர் யத்தை அல்பம் அஸ்தரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்ம பிராப்தியை அபுருஷார்த்தம் என்று கழித்து
ஸ்திரமாயும் பரம போக்யமுமான பகவத் பிராப்தியை பிராப்யத்தில் பிரதமாவதி என்று கழித்து
இதில் சரமாவதி யான ஆழ்வாரையும் உத்தேச்யர் அன்று என்று கழித்து
அவரோடு சம்பந்தித்த விஷயத்தையும் ரசாஸ்ர்யம் அன்று என்று கழித்து
அத்தோடு சம்பந்தித்த இசையே தமக்கு உத்தேச்யம் -என்கிறார்

தெய்வம் தண் அம் துழாய் தாராயினும்
தழையாயினும்
தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும்
நின்ற மண்ணாயினும்
கொண்டு வீசுமினே
இத்யாதிப் படியே பகவத் சம்பந்தம் கழிய கழிய நிறம் பெறுகிற படி

பாடித் திரிவனே
பாடுவதாலேயே சஞ்சரிக்க வல்ல சக்தி பெற்றேன்
ரசாயன சேவை பண்ணித் திரிவாரைப் போலே
இது காணும் இவருக்கு தாரகமாய் இவரை சஞ்சரிக்கப் பண்ணுகிறது
நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -என்றும்
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்றும்
நாக்குக்கு பயன் என்பர் மற்றையர்

அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் -என்றும்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
கண்ணன் அல்லால் தெய்வம் அல்ல –
இந்த பிரபத்திகள் எல்லாம் மதுர கவிகளுக்கு ஆழ்வார் திறத்தில்

குருகூர் நம்பி பா -என்றது
கண்ணி நுண் சிறுத் தாம்பு -என்னுதல்
திருவாய் மொழி -என்னுதல்
திருவாய் மொழி தன்னிலும் பலகாலும் குருகூர் சடகோபன் என்றார் இறே
அவ்வழியாலே யாய்த்து திருவாய் மொழியையும் இவர் ஆதரிப்பது

மெய்மையே
ஆழ்வார் நீச ஜாதி -அர்ச்சையில் தான் ஆதரணீயர் விபவத்தில் இல்லை -என்று
பிதற்றும் திராவிட உபநிஷத் குத்ருஷ்டிகள் மிடற்றை பிடிக்குமாறு அருளுகிறார்
சத்யம் பண்ணிச் சொல்கிறார்

———————————————————————————-

“தேவுமற்றறியேன” என்றார் கீழ்ப்பாட்டில்; இதில் தேவுமற்று அறிவேன் என்கிறார்.
ஆழ்வார் பற்றின விஷயமென்று அவ்வழியாலே பற்றலாகும் என்கிற ஸாஸ்த்ரார்த்தத்தை விளக்குகிறபடி.
“விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்றாளிறே ஆண்டாளும்.
ஆணையின்மேலே ஏற நினைப்பார். தாமாக ஏறப் புக்கால் உதைபடுவர்;
விரகறிந்த பாகன் மூலமாக ஏறினால் அது முறைமையாகும்; அப்படியே யாய்த்து பகவத் விஷயப் பற்றும்.

திரிதந் தாகிலும் தேவ பிரானுடை
கரிய கோலத் திரு வுருக் காண்பன்நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்காள்
உரியனாய் அடி யேன் பெற்ற நன்மையே.

பதவுரை

திரிதந்தாகிலும்–(பகவத் விஷயத்தோடு ஒட்டற்றுத்) திரிந்தேனாகிலும்.
தேவ பிரானுடை–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய
கரிய–(நீலமேகம்போற்) கறுத்ததாய்
கோலம்–அழகியதான
திரு உரு–பிராட்டியோடு கூடிய திவ்ய ரூபத்தை
நான் காண்பன்–நான் ஸேவிப்பேன்;
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு–பெருமையையும் ஒளதார்யமுமுடைய ஆழ்வார்க்கு
உரிய ஆள் ஆய்–அந்ந்யார்ஹ சேஷ பூதனாயிருந்து வைத்து
அடியேன் பெற்ற நன்மை–அடியேன் பெற்றபேறு இது காணீர்.

“திரிதந்தாதிலும்” என்றதைத் “திரிதந்தேனாகிலும்” என்பதன் மரூஉ மொழியாகக் கொண்டு உரைக்கப்பட்டது.
அன்றி, வினையெச்சமாகவே கொண்டு உரைத்தலுமொன்று.
திரிதருதலாவது திரும்பி வருதலாய், எம்பெருமானை விட்டு ஆழ்வாரளவும் போன நான் திரும்பி
எம்பெருமானளவிலே வந்தாகிலும் என்றாம் திருவாய் மொழிப் பாவை விட்டு இசைகளை விட்டு ஆழ்வாரையும் விட்டு
‘அவருகந்த விஷயம்’ என்று ப்ரதம பர்வத்திலே திரும்பி வந்தாகிலும் என்றபடி.

“திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக் காண்பன் நான்” என்றவாறே,
சிலர் மதுரகவிகளை நோக்கி “என்சொன்னீர்! என் சொன்னீர்? விட்டொழிந்த படுகுழியில் மீண்டும் விழுந்தீரே” என்று கூற,
பின்னடிகளால் அவர்கட்கு உத்தரம் அருளிச் செய்கிறார்.

தேவபிரானுருவை நான் காண்பதானது என்னுடைய முயற்சி மூலமாக நேர்ந்ததாகில் எனக்கு இது தீமையேயாகும்;
ஆழ்வார் திருவடிகளிலே நான் அடியனாயிருந்து வைத்து அவர் வழியாலே பெற்றதாகையால் இது நன்மையேயாம் என்றவாறு.

“தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருவைத் திரிதந்து நான் காண்பனாகிலும் (அது)
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு அடியேன் ஆளுரியனாய்ப் பெற்ற நன்மையாகுமே யன்றித் தீமையாகாது” என்றுமாம்.

——————————————————————————–

முதற்பாட்டில் எம்பெருமானை விட்டு ஆழ்வாரையே பற்றினதாகக் கூறின நீர்
‘ஆழ்வாருகந்த விஷயம்’ என்பது பற்றி பகவத் விஷயத்தை விரும்புவானேன்?
ஆழ்வார் உகந்தால் நீரும் உகக்க வேணுமோ? என்று சிலர் கேட்க;
ஸகல வைதிகர்களாலும் ‘இது அபதார்த்தம்’ என்று கைவிடப் பட்ட அடியேனை யாவரொரு ஆழ்வார்
விசேஷமாகக் கடாக்ஷித்தருளி ஸகலவித பந்துக்களும் செய்யக் கூடிய காரியத்தைத் தாமொருவராகவே
அடியேன் திறத்துச் செய்தருளிப் பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி யருளினாரோ அவ்வாழ்வாரன்றோ எனக்குத் தலைவர்;
அவர் உகந்த விஷயத்தை நான் உகவாதொழிந்தேனாகில் ஆழ்வார் என்னை அங்கீரித்தருள்வதற்கு முன்பு நான் நின்ற நிலைக்கும்
இப்போதைய நிலைமைக்கும் என்ன வாசி உள்ளதாம்? என்ற கருத்துத் தோன்ற அருளிச் செய்கிறார்.

நன்மை யால் மிக்க நான்மறை யாளர்கள்
புன்மை யாகக் கருதுவ ராதலின்
அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
தன்மையான் சடகோபனென் நம்பியே.

பதவுரை

நன்மையால் மிக்க–நற்குணத்தால் மேன்மை பெற்றவர்களாய்
நால்மறை ஆளர்கள்-நான்கு வேதங்களிலும் வல்லவர்களான வைதிகர்கள்
(என்னை)-அடியேனை
புன்மை ஆக கருதுவர் ஆதலில்-ஹேயகுணங்களே ஒரு வடிவு கொண்டதென்றெண்ணி
உபேக்ஷித்திருப்பரென்பதுவே ஹேதுவாக
அன்னை ஆய்-மாதாவாயும்
அத்தன் ஆய்–பிதாவாயும்
என்னை ஆண்டிடும் தன்மையான்–அடியேனைக் கைக்கொண்டருளு மியல்வினரான
சடகோபன்-நம்மாழ்வார்
என் நம்பி–எனக்குத் தலைவர்.

(நன்மையால் மிக்க)
என்னை இகழ்ந்து கைவிட்டவர்கள் ஸாமாந்ய புருஷர்களல்ல;
நன்மையால் மிக்க நான் மறையாளர்களாய்த்துக் கைவிட்டது;
அதாவது-
ஒருவனிடத்தில் சில குணங்களும் சில தோஷங்களுங்கிடந்தால் தோஷாம்ஸங்களைத் தள்ளி விட்டுக்
குண பாகங்களையே நோக்கிக் கைக் கொள்ளுதல்,
ஸ்வல்ப குணமுமில்லாமல் தோஷங்களே கூடு பூரித்துக் கிடந்தாலும் அக் குற்றங்களையே நற்றமாகக் கொண்டு
கைக் கொள்ளுதலாகிற நன்மையிற் சிறந்தவர்களாய்,
இவ்வளவு ஆத்ம குண பூர்த்தி உண்டாவதற்கு ஈடாக நான்கு வேதங்களிலும் வ்யாஸ பதம் செலுத்த வல்லவர்களான
பெரியோர்களுக்கும் தமது நன்மையைக் கொண்டு என்னைக் கைக் கொள்ள முடியாதபடி மஹா பாபியாய்க் கிடந்தேனென்னு
மிவ்வளவையே காரணமாகக் கொண்டு ஆழ்வார் கடாக்ஷித்தருளினார் என்கை.

“நன்மையால் மிக்க நான்மறையாளர்”
என்பதற்குப் பொருந்தியவர் கூரத்தாழ்வான் ஒருவரே என்று நம் முதலிகள் அனைவரும் ஒரு மிடறாக அருளிச் செய்வர்களாம்.
கூரத்தாழ்வான் இகழ்ந்து கைவிடும்படியான ஜந்து உலகத்திலேயே கிடையாது;
அப்படிப்பட்ட கூரத்தாழ்வானும் இம் மதுரகவிகளைக் கண்டால் விலக்கித் தள்ளும்படியாக அத்தனை
ஹேய வஸ்துவாய்த் தாமிருந்ததாக நைச்யாநுஸந்தாநம் பண்ணிக் கொள்ளுகிறபடி.

(புன்மையாகக்கருதுவர்)
புன்மை என்பது பண்புப்பெயர் (தர்மம்); புல்லியன் என்பது பண்பி (தர்மி);
புல்லியன் (-க்ஷூத்ரன்) என்று என்னைக் கருதுவர் என்ன வேண்டியிருக்கப் ‘புன்மையாகக் கருதுவர்’ என்றது-
புன்மை என்று வேறொரு ஆதேய வஸ்நுவும் புல்லியன் என்று வேறொரு ஆதார வஸ்துவும் கிடையாது;
புன்மையே மதுரகவியாக ஒரு உருவை யெடுத்துக் கொண்டு வந்திருக்கின்றதென்று கருதுவர் என்ற பொருள் தோன்றுவதற்காம்.
இவ்விடத்தில் விவக்ஷிதமான புன்மை மேற்பாட்டில் விசதம்.

கருதுவர்= காலவழுவமைதி;
“விரைவினு மிகவினுந் தெளிவினுமியல்பினும், பிறழவும்பெறூஉமுக் காலமுமேற்புழி” என்பது நன்னூல்.

ஆதலில் —
அனைவருங் கைவிட்டதுதானே ஹேதுவாக என்றபடி.
‘இனி இம் மதுரகவிக்கு நாமல்லது ரக்ஷகரில்லை’ என்று தம்முடைய க்ருபா மாத்ர ப்ரஸந்நாசாயத்வத்தை
வெளியிட்டுக் கொண்டு என்னை ஆண்டாரென்கிறார்.
நான் வேறு போக்கடி யற்று ‘ஆழ்வார் திருவடிகளே சரணம்’ என்று அடைக்கலம் புகுந்த பின்பு
ஆழ்வார் என்னை ஆண்டருளினாராகில் அதற்கு நான் அவ்வளவாக உருக மாட்டேன்;
என்னுடைய இசைவு இல்லாதிருக்கவும் தாமே என்னுடைய புகலறுதியைப் பார்த்துக் கைக்கொண்டருளின
க்ருபாதிஸயம் என்னை உருக்கா நின்ற தென்கிறார்.

நெருப்புக்கு உஷ்ணம் போலவும் நீர்க்குச் சீதளம் போலவும் ஆழ்வார்க்கு இக் குணம் இயற்கையானது
என்னுங் கருத்துத் தோன்ற ‘ஆண்டிடுந் தன்மையான் என்ற சொல்லழகு நோக்குமின்.

——————————————————————————–

ஸத்துக்கள் உம்மைக் கைவிடும்படி உம்பக்கல் என்ன புன்மையிருந்ததென்ன;
அநாதி காலமாகப் பர த்ரவ்யாபஹாரமும் பர தாரபரிக்ரஹமும் பண்ணிப் போந்தேன் என்று
முன்னிரண்டடிகளாற் கூறிய பின்னர், ‘
இப்போது எப்படியிருக்கிறீர்?’ என்று கேட்க,
இப்போது ஆழ்வாருடைய அருளுக்கு இலக்காகப் பெற்றுச் சதிரனாய் விட்டேன் என்கிறார் பின்னிரண்டிகளால்.

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மட வாரையும் முன்னெல்லாம்
செம் பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்
கன்பனாய் அடி யேன் சதிர்த் தேனின்றே.

பதவுரை

அடியேன்-(இன்று ‘அடியேன்’ என்று சொல்லும்படி திருந்தின) நான்
முன் எலாம்-(ஆழ்வாருடைய விஷயீகாரம் பெறுவதற்கு) முன்பெல்லாம்
பிறர்-அயலாருடைய
நல் பொருள் தன்னையும்–நல்ல பொருள்களை
நம்பினேன்-ஆசைப் பட்டுக் கிடந்தேன்;
(பிறர்) மடவாரையும்-பிறருடைய ஸ்த்ரீகளையும்
நம்பினேன்-விரும்பிப் போந்தேன்;
இன்று-இப்போதோ வென்றால்
செம் பொன் மாடம்-செவ்விய பொன்னாற் சமைந்த மாடங்களை யுடைய
திரு குருகூர் நம்பிக்கு-திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்கு
அன்பன் ஆய்-பக்தனாகப் பெற்று
சதிர்த்தேன்-சதிரையுடையேனானேன் (சமத்தனாய் விட்டேன்.)

முதலடிக்கு- அயலாருடைய பொருள்களைக் களவு செய்தேன் என்று ஸாமாந்யமாகப் பொருளாயினும்
நன் பொருள் என்ற ஸ்வாரஸ்யத்தால் இங்கு ஆத்மாபஹாரம் பொருளாகக் கடவது.
ஈஸ்வரனுக்கு சேஷ பூதமான விலக்ஷண ஆத்ம வஸ்துவை யென்னுடையதாக அபிமாநித்திருக்கையாகிற
ஆத்மாபஹாரக்களவைச் செய்துபோந்தேன் என்கை.
யோந்யதாஸந்தமாத்மாநம ந்யதா ப்ரதிபத்யதே! கிம்தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாபஹாரிணா’ என்றதை இங்கு அநுஸந்திக்க.

உத்தம: புருஷஸ்த்வந்ய?” என்கிற ப்ரமாணச் சாயையாலே எம்பெருமானைப் பிறர் என்கிறது.
இப்படி ஆத்மாபஹாரம் பண்ணினேனாகையால் அதற்குப் பலமான விஷய ப்ராவண்யப் படு குழியிலே
விழுந்தேனென்கிறார் இரண்டாமடியில்;

பகவத் பாகவத விஷயத்திலே வைக்க வேண்டிய மஹா விஸ்வாஸத்தை
மின்னிடை மடவார் திறத்திலே வைத்தேனென்கிறார்.

நம்பிள்ளை ஈடு:-
“ரத்நாபஹாரம் பண்ண அஞ்சாதவன் விறகும் வைக்கோலும் களவு காண அஞ்சுமோ?
ஈஸ்வரன் ‘என்னுடையது’ என்று அபிமாநித்திருந்த (ஆத்ம) வஸ்துவை அபஹரித்தவன்,
ஸாமாந்யர் ‘என்னது” என்று அபிமாநித்திருக்கும் வஸ்துவை அபஹரிக்கச் சொல்ல வேணுமோ?”

நம்புதல்-விரும்புதல்; “நம்பும் மேவும் நசையாகும்மே.”

இப்படியிருந்த நீர் ஆழ்வாரைக்கிட்டினபடி எங்ஙனே? என்று கேட்க;
மடவார்களை ஆராதிப்பதற்காகப் பொருள் தேடிக் கொள்ளை யடிப்பதற்கு இடம் பார்த்துத் திரியா நிற்கையில்
அச் செம்பொன் மாடத்தைக் களவு காணப் போனேன்;
அங்கே வைத்த மா நிதியைக் கண்டு அகப்பட்டேனென்கிறார்;
இவர்க்கு வைத்தமாநிதி ஆழ்வாரேயாம்.

சதிர்த்தேன்-
க்ருதக்ருத்யனானேன் என்றபடி.
சதுர என்ற வடசொல் சதிர் எனத்திரிந்து அது அடியாகப் பிறந்த வினைமுற்று இது.

———————————————————————————

“சதிர்த்தேனின்றே” என்று பரமாநந்தமாக அருளிச்செய்த மதுரகவிகளை நோக்கி
‘நீர் சதிர்த்தபடி என்?’ என்று கேட்க,
இன்று முதலாக இனி மேலுள்ள காலமெல்லாம் ஆழ்வாருடைய திவ்ய குணங்களையே நான் பாடித் திரியும்படி
அவ்வாழ்வாரால் க்ருபை பண்ணப் பெற்றேன்;
இவ்வளவேயுமின்றி, ஒருகால் நான் ஆழ்வாரை இகழ்ந்தாலும் அவர் என்னை இகழ மாட்டாரென்னும்படி
அவ்வளவு பரம கிருபைக்குப் பாத்திரமாயினேனே! இதற்கு மேற்பட்ட சதிர் உலகத்திலுண்டோ? என்கிறார்.

இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்
நின்று தன் புகழேத்த வருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி என்று
மென்னை யிகழ்விலன் காண்மினே.

பதவுரை

இன்று தொட்டும்–இன்று முதலாக
எழுமையும்–மேலுள்ள காலமெல்லாம்
நின்று–(நான்) அத்யவஸாயம் நிலைக்கப் பெற்று
தன் புகழ்–தம்முடைய (ஆழ்வாருடைய) திருப் புகழ்களை
ஏத்த–துதிக்கும்படி
எம் பிரான் அருளினான்–எம் ஸ்வாமியான ஆழ்வார் க்ருபை பண்ணினார்;
குன்றம் மாடம்–மலை போன்ற மாடங்களை யுடைய
திருகுருகூர் நம்பி–திருநகரிக்குத் தலைவரான அவ் வாழ்வார்
என்றும்–(இனி) எக்காலத்திலும்
என்னை–என் விஷயத்தில்
இகழ்வு இவன்–அநாதரமுடையவராக இருக்க மாட்டார்;
காண்மின்–(இதனை அநுபவத்தில்) கண்டு கொள்ளுங்கள்.

பகவத் விஷயத்தை ஆஸ்ரயிப்பது ஒருகாலமும்,
பலன் கை கூடுவது வேறொரு காலமுமாயிருக்கும்;
அது போலன்றியே ஆழ்வாரை அஸ்ரயித்த இன்று முதலாகவே
எனக்குப் பலன் கை கூடிற்றுக் காண்மின் என்பார்
இன்று தொட்டும் என்கிறார்.

எழுமையும்-
ஏழு ஜந்மங்களிலும் என்றது உபலக்ஷணமாய் மேலுள்ள காலமெல்லாம் என்றபடி.

இகழ்விலன்-
இனி நான் வேறொருவரைத் தேடி ஓடும்படி என்னை
இனி எக்காலத்திலும் ஆழ்வார் கைவிடமாட்டார் என்கை.

காண்மினே-
இது ப்ரத்யக்ஷமாகக் காணக் கூடியதாயிருக்க
ஆழ்வார் பெருமையை நான் சொல்லக் கேட்கை மிகை யன்றோ?

—————————————————————————————

கீழ்ப்பாட்டில் “நன்புகழேத்தவருளினான்” என்றவிடத்துக் கூறிய
புகழேத்துகையாவது இதுதான் என்று இப்பாட்டில் வெளியிடுகிறார்:
ஆழ்வார் திருவாய்மொழி பாட வல்லவர், எம்பெருமானையும் வசப்படுத்த வல்லவர் இத்யாதியாகவுள்ள
அவருடைய புகழ்களை நான் ஏத்துகிறவனல்லன்;
பாவங்கள் கூடு பூரித்துக் கிடந்த அடியேனைப் பரம பரிசுத்தனாக்கி ஆட் கொண்ட பெருமை யாதொன்றுண்டு.
இதற்கு மேல் வேறொரு பெருமை ஆழ்வார்க்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை;
அந்தப் பெருமையையே நாடெங்கு மறியப் பறை யடிக்கின்றேன் என்கிறார்.

கண்டு கொண்டென்னைக் காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண்டிசையு மறிய இயம்புகேன்
ஒண்டமிழ்ச் சட கோப னருளையே.

பதவுரை

பிரான்-பரமோபகாரகராய்
காரி மாறன்–பொற் காரியார் திருக் குமாரரான நம்மாழ்வார்
என்னை–(தமது பெருமையை அறியாத) என்னை
கண்டு–கடாக்ஷித்து
கொண்டு–கைக் கொண்டு
பண்டை வல் வினை–அநாதியாய்ப் பிரபலமாயிருந்த பாவங்களை
பாற்றி அருளினான்–உரு மாய்ந்து போம் படி பறக்கடித் தருளினார்; (ஆதலால்)
ஒண் தமிழ் சடகோபன் அருளையே–அழகிய தமிழ்க் கவிகளுக்கு ஆகரமான அவ் வாழ்வாருடைய க்ருபையையே
எண் திசையும்–எட்டுத் திக்கில் உள்ளவர்களும்
அறிய–அறியும்படி
இயம்புகேன்–சொல்லக் கடவேன்.

கண்டு கொண்டு என்றவிடத்தில் கொண்டு என்பது துணை வினையன்று;
கண்டு என்றும் கொண்டு என்றும் இரண்டும் தனித்தனி வினையெச்சங்கள்.
என்னைக் கடாக்ஷித்து, என்னுடைய துர்க் கதியே பற்றாசாக என்னை அங்கீகரித்தருளி என்றபடி.
“இருந்தான் கண்டு கொண்டு எனதேழை நெஞ்சாளும்” என்று ஆழ்வார் பகவத் விஷயத்திலே
அநுஸக்தித்தவாற்றை இவர் ஆழ்வார் விஷயத்திலே அநுஸந்திக்கிறார்.

காரி மாறன் –
ஆழ்வாருடைய திருத் தகப்பனார்க்குப் பொற்காரியார் என்று திருநாமம்.
ஆழ்வார் உலக நடைக்கு மாறாயிருந்ததால் மாறன் எனத் திருநாமம் பெற்றார்.
மாறன் பிரான், மாறப்பிரான்; “சில விகாரமா முயர்திணை” (நன்னூல்).

பண்டை வல் வினையாவது-
பகவச் சேஷத்வத்துக்கு எல்லை நிலம் பாகவத ஸேஷத்வமென்று அறியப் பெறாமை.
பாகவத விஷயத்தை விலக்கிப் பகவானளவிலே பண்ணும் பக்தியைப் பாபமென்றிறே நம் ஆசாரியர்கள் அருளிச் செய்வது.
பரதேந ததாநக:” என்றவிடத்து அநக: என்பதற்கு வியாக்கியானம் ஸேவிக்க.

பாற்றி –
பாறச்செய்து; பாறுதல் உருமாய்ந்தொழிதல்:
பாறு என்ற வினைப்பகுதி யடியாப் பிறந்து பிற வினையில் வந்த வினையெச்சம்.

அறிய வியம்புகேன் –
“அறியச் சொன்ன வாயிரம்” என்று-ஆழ்வார் உலக மறியத் திருவாய்மொழி சொன்னாப் போலே
நான் உலகமறிய அவரது அருளைச் சொல்லுகிறேன் என்கிறார்.

“தமிழ்ச் சடகோபன்” என்றது
தமிழையே நிரூபகமாகவுடைய ஆழ்வார் என்றபடி.

——————————————————————-

அருள் கொண் டாடு மடியவ ரின்புற
அருளி னானவ் வருமறை யின்பொருள்
அருள் கொண் டாயிரமின் தமிழ் பாடினான்
அருள் கண் டீரிவ் வுலகினில் மிக்கதே.

பதவுரை

அருள் கொண்டாடும்–பகவத் கிருபையைக் கொண்டாடுகின்ற
அடியவர்-பக்தர்கள்
இன்புற-ஆநந்திக்கும்படி
அ அரு மறையின் பொருள்-அந்த அருமையான வேதத்தின் உட்பொருள்களை
அருளினான்-அருளிச் செய்தவராயும்
அருள் கொண்டு–பரம க்ருபையாலே
இன் தமிழ்–இனிய தமிழ்ப் பாஷையிலே அமைந்த
ஆயிரம்–திருவாய்மொழியாயிரத்தை
பாடினான்–பாடினவருமான ஆழ்வாருடைய
அருள் கண்டீர்–க்ருபை ஒன்று மாத்திர மன்றோ
இ உலகினில்–இந்த லோகத்திலே
மிக்கது–அதிசயித்திருக்கிறது.

எம்பெருமானது அருளைக் காட்டிலும் ஆழ்வாரருளே சீரியதென்கிறார்.
“கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமுஞ் சொற்பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினாலருள் செய்தான்” என்றபடி
ஸகல வேத வேதாங்க நூல்களையும் ப்ரஸாதித்தருளின எம்பெருமானுடைய க்ருபைக்கு மேற்பட்ட
உலகில் வேறொரு க்ருபையுண்டோ? என்று
அந்த பகவத் க்ருபையிலேயே ஈடுபட்டிருந்த பாகவதர்கள், ஆழ்வார் திருவாய்மொழி அருளிச் செய்த பின்னர்
‘ஹா! ஹா!! இவ்வளவு இனிமையான திவ்ய ப்ரபந்தம் போன்ற ஒரு நூலையும் இதுவரை ஈச்வரன் நமக்கு உபகரிக்கவில்லை;
இன்றளவும் ஈச்வரனுக்கு மேற்பட்ட க்ருபாளு யாருமில்லையென்று நாம் மயங்கிக் கிடந்தோம்,
*பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரத்தை அருளிச் செய்த ஆழ்வாருடைய திருவருளுக்கு நிகரான
அருளும் இனி உலகிலுண்டோ? என்று வியந்து மகிழ்ந்தனராம்;
அதனை யருளிச்செய்கிறார்- இங்கு முதலடியில்.

திருவாய்மொழியில்,
“எண்ணாதனகளெண்ணும் நன் முனிவரின்பந் தலைச் சிறப்பப், பண்ணார் பாடலின் கவிகள்
யானாய்த் தன்னைத்தான்பாடி” என்ற விடத்து அருளிச்செய்யும் அர்த்த விசேஷத்தை இங்கு அநுஸந்திக்க;
அதாவது –
திருவாய்மொழி அவதரிப்பதற்கு முன்பு முனிவர்களனைவரும் என்ன நினைத்திருந்தார்களென்றால்;
எம்பெருமானுக்கு அபரிச்சிந்நமான ஸ்வரூப ரூப குண விபூதிகள் இருக்கின்றன;
இவற்றையெல்லாம் உள்ளபடி வர்ணிப்பதாகத் தொடங்கின வேதங்கள் வர்ணிக்க முடியாமல்
“யதொவாவொ நிவதஹெ-யதோ வாசோ நிவர்த்தந்தே” என்னும்படி பின் வாங்கி விட்டன;

அக் குறை தீர அந்த பகவத் விபூதிகளை அதி விசதமாக வர்ணிக்க வல்ல ஒரு ப்ரபந்தம் அவதரிக்க வேணும்;
அத்தகைய பிரபந்தத்தை எம்பெருமான் எந்த மஹாநு பாவரைக் கொண்டு அவதரிப்பிக்கப் போகிறானோ’ என்று சிந்தித்திருந்தார்கள்;
திருவாய்மொழி அவதரித்தவுடனே அவர்கள் மீண்டும் நினைத்ததென்னவென்றால்
‘ஐயோ! எம்பெருமானுக்கு இன்னுஞ் சில குணங்களும், இன்னுஞ் சில விபூதிகளும்,
இன்னுஞ் சில அவதாரங்களும் இல்லாமற்போயிற்றே! என்று வருந்தினராம்.

(அருளினான் அவ்வருமறையின் பொருள்.)
வேதார்த்தங்களை ஆழ்வார் அருளிச் செய்தாரென்றால்,
‘வேதத்தை மொழி பெயர்த்தாரா? அல்லது தூக்குத் தொகையாக வேத தாத்பரியங்களை எடுத்துரைத்தாரா?’
என்று விகற்பித்துக் கொண்டு
வேதத்தில் ஒரு பஞ்சாதியினுடைய அர்த்தமும் திருவாய்மொழியின் ஒருபாட்டிலும் ஆநுபூர்வியாகக் காணப்படாமையால்
மொழிபெயர்த்தாரென்ன முடியாது;
இனி, தாற்பரியம் உரைத்தாரென்னில்; அதுவும் பொருந்தாது;
எங்ஙனேயெனில்;

வேதம் கர்மகாண்டம் என்றும் ப்ரஹமகாண்டம் என்றும் இரண்டு பாகமாக வகுக்கப்பட்டுள்ளது;
அவற்றுள் கர்ம காண்டத்தின் தாற்பரியம் ஒரு பாட்டிலும் காண முடியாது;
ப்ரஹ்ம காண்டத்தின் தாற்பரியமும் உபநிஷத்துகளிற் சொல்லுகிற பத்ததி வேறு;
திருவாய்மொழியிற் சொல்லுகிற வழி வேறு; அதற்கும் இதற்கும் யாதொரு ஸம்பந்தமும் இல்லை;
ஆதலால் வேதந் தமிழ் செய்தனரென்கை எவ்வித்திலுங் கூடாது’ என்று சில பாமரர் மறுத்துக் கூறுவர்;

இதைப்பற்றி நாம் “த்ராவிட வேத ரஹஸ்ய ஸர்வஸ்வம்” என்னும் க்ரந்தத்திலே பாக்கச் சொல்லியிருக்கிறோம்.
இங்கே சுருங்கச் சொல்லுகிறோம்.
வேதந் தமிழ் செய்தார் என்பதற்கு வேதத்தின் தாற்பரியங்களை ஐயந்திரிபற அழகாக விளக்கிக் காட்டினார் என்பது கருத்தாம்.

வேதத்தின் உண்மைய் பொருளறியாதார் பலர் –
தத்ரைவ கேபி சபலாச் சலபீபவந்தி” என்றபடி வேத வாக்கியங்களுக்கு அபார்த்தங்கள் பண்ணி,
ப்ரபஞ்சமே முழுப் பொய்’ என்பதும் ‘ஈச்வரனே கிடையாது’ என்பதும்,
‘ஈச்வரன் மாயாதி ரோஹித ஸ்வ ஸ்வரூபனாய்த் தானே ஸம்ஸரிக்கிறான்’ என்பதும்,
‘மூல ப்ரக்ருத்யாதிகளே ஜகத் காரணம்’ என்பதும்,
‘தேவ தாந்தரங்களே பர தைவம்’ என்பதும்,
‘ஸ்ரீமந் நாராயணனுக்கு குணமில்லை, விக்ரஹமில்லை, விபூதியில்லை’ என்பதுமாய்
இப்படி வேதங்களை ரஸாபாஸப்படுத்தி அலைத்து விட்டபடியால் அந்த வேதங்களின் உண்மைப் பொருளைக்
கையிலங்கு நெல்லிக் கனியாகக் காட்ட வல்ல திருவாய்மொழியும் அதற்கு அங்கோபாங்கங்களான
மற்றுமுள்ள திவ்ய ப்ரபந்தங்களும் வேத ரஹஸ்யமாகவும் வேதோபப்ரும்ஹணமாகவும் சொல்லப்படுகின்றன.

ஸ்ரீதேசிகனும்
“பொய்கை முனி….மங்கையர் கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும்,
செய்ய தமிழ்மாலைகள் நாந்தெளிய வோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்ற பாட்டால்
இக்கருத்தை விளக்கியருளினார்.

“பாஷ்யகாரர் இதுகொண்டு ஸுத்ர வாக்யங்களொருங்கவிடுவர்” என்பது ஆசார்ய ஹ்ருதயம்.

அழகிய மணவாள ஜீயர் அருளிச்செய்த ஜக கண்ட்ய க்ரந்தமும் நோக்கத்தக்கது. நிற்க.

அருளினான் என்பதும், பாடினான் என்பதும்-வினையாலனையும் பெயர்கள் ஆறாம் வேற்றுமைத் தொகையும்.

இவ்வுலகினில் என்பதை ஏழாம் வேற்றுமையாகக் கொள்வதிலும் ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு,
ஆழ்வாருடைய அருள் இந்த லோகத்திற் காட்டிலும் பெரிது என்றுரைப்பதும் ஒக்கும்.

பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் செய்த படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமால் அலை கடலிடையில் துயில்வோன்
அலைகடல் குறு முனி கையில் அடக்கம்
குறு முனியோ எனில் கலசப் பிறவியோன்
கலசமோ புவிதனில் கண்டதோர் சிறு மண்
புவியோ அரவினுக்கு ஒரு தலைப் பாரம்
அரவோ உமையவள் சிறு விரல் மோதிரம்
உமையோ சிவபிரான் பாகத்து ஒடுக்கம்
சிவனோ திருமால் திருவடி ஒடுக்கம்
திருமால் தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டருள் பெரியோர் தூய சடகோபர்
சடகோபர் அருள் சகத்தினும் பெரிதே -என்றார் பாகவத கவிவரர்

அன்றி, இவ்வுலகிலே என்று ஏழாம் வேற்றுமையாகவே கொண்டு,
“அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்ற சொல்லமைப்பு நயத்திற்கேற்ப
‘பாசுரம் மிக்கது பரமபதத்திலே, அருள் மிக்கது இவ்வுலகத்திலே’ என்றுரைப்பதும் சிறக்கும்.
அதாவது-
“கேட்டாரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்றபடி-திருவாய்மொழியை
நித்யஸுரிகள் விசேஷமாக ஆதரிப்பதனால் திருவாய்மொழியின் பெருமை பரமபதத்தில் ஓங்குகின்றது;
அத்திருவாய்மொழியை அருளிச்செய்வதற் குறுப்பான ஆழ்வாருடைய அருள் மாத்திரமே இவ்வுலகில் நிலாவுகின்றது என்றபடி.

——————————————————————————-

கருங்கல்லைத் துளைத்துக் குழியாக்கி அதிலே நீரைத் தேக்குவாரைப் போலே அதிமந்தமான என் நெஞ்சிலே
வேதாந்த விழுப்பொருள்கள் நன்கு பதியும்படி திருவாய்மொழியை அருளிச்செய்த ஆழ்வார் திறத்திலே
ஆட்செய்ய வேணுமென்று நான் ஆசைப்பட்டது அந்த க்ஷணத்திலேயே பல பர்யவஸாயியாயிற்று! என்று
தாம் பெற்ற பேற்றின் பெருமையைப் புகழ்கிறார்.

மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்குஆட்
புக்க காத லடிமைப் பயனன்றே.

பதவுரை

மிக்க வேதியர் வேதத்தின்–சிறந்த வைதிகர்களால் ஓதப்படுகின்ற வேதத்தினுடைய
உள் பொருள்–உள்ளுறை பொருளானது
நிற்க-நிலை நிற்கும்படி
பாடி–(திருவாய்மொழியைப் பாடி)
என் நெஞ்சுள்–என்னுடைய ஹ்ருதயத்திலே
நிறுத்தினான்–(அந்த வேதார்த்தங்களை அல்லது திருவாய்மொழியை) ஸூப்ரதிஷ்டிதமாக்கி யருளினார் (ஆழ்வார்);
தக்க சீர்–தகுதியான குணங்களை யுடையராய்
சடகோபன்–சடகோபனென்ற திரு நாமத்தை யுடையரான
என் நம்பிக்கு–(அந்த) ஆழ்வார் விஷயத்திலே
ஆள்புக்க–அடிமை செய்வதற்கு உறுப்பான
காதல்–ஆசையானது
அன்றே–அந்த க்ஷணத்திலேயே
அடிமைப் பயன்–(ஆழ்வார் திருவடிகளில்) கைங்கரியம் செய்வதையே பயனாகவுடைத்தாய்த்து.

ஆழ்வார் பகவத் விஷயத்திலே ஆழங்காற்பட்டு
“இனியாமுறாமை”
நெடுநாள் கழித்தே “உற்றேனுகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன்” என்றும்
“அவாவற்று வீடுபெற்ற” என்றும் சொல்லும்படி மநோரதஸித்தியில் விளம்பமாயிற்று.

இம்மதுரகவிகளுக்கோ அப்படியில்லை.
இவர் ஆழ்வார் திருவடிகளில் சேஷபூதராகப் பெற்ற க்ஷணமும்,
இவ்வாழ்வார்க்கே நித்ய கைங்கரியம் பண்ண வேணுமென்று மநோரதித்த க்ஷணமும்
அந்த மநோ ரதம் ஈடேறப் பெற்று நித்ய கைங்கரியம் வாய்த்த க்ஷணமும் ஆகிய இம்மூன்று க்ஷணமும்
ஒரேக்ஷணமாய்த்து இவர்க்கு:

இடையிற் சிறிது விளம்பமும் இல்லை என்னுமிதனால்,
பகவத் ப்ராவண்யத்திற் காட்டில் பாகவத ப்ராவண்கத்திற்குள்ள
ஏற்றம் சொல்லிற்றாயிற்று.
“கோளரியை வேறாக வேத்தி யிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம்” என்றார் திருமழிசைப்பிரானும்.

மிக்க என்ற அடைமொழி வேதத்துக்குமாகலாம், வேதியர்க்குமாகலாம்.
வேதத்துக்கு ஆகும்போது
“சுடர்மிகு சுருதியுள்” என்ற ப்ரமாணங்களில் தலை நின்ற வேதம் என்றபடி.
வேதியர்க்கு ஆகும் போது,
அல்பச்ருதரன்றிக்கே பஹூச்ருதராய் வேதத்தை வஞ்சிக்க கில்லாத பரமை காந்திகள் என்றபடி.

வேதியர் வேதம் என்றது-
வைதிகர்களால் ஒதப்பட்டு அதுவே காரணமாக சாகா பேதங்களையும்
காடகம் காண்வம் தைத்திரீயம் இத்யாதி நாம பேதங்களையும் அடைந்த வேதமென்றபடி.
வேதியர்களுடைய வேதம் என்று ஆறாம் வேற்றுமைத் தொகை:
“ஓதுவாரோத்தெல்லாம்” என்ற திருவாய்மொழிப் பாசுரத்திற் போல
‘நுட்பொருள்’ என்று பிரித்து, வேதத்தின் ஸூக்ஷ்மமான பொருள் என்றுமுரைப்ப..

“வேதத்தினுட் பொருள் நிற்கப் பாடி” என்பதற்குப் பரம ரஸமாக ஒரர்த்தமுண்டு.
அதாவது “வேதப்பொருளே! என் வேங்கடவா!!” என்றபடி வேதத்தினுட்பொருள்-ஸாக்ஷாத் ஸர்வேச்வரன்;
அவன் நிற்கப்பாடி என்றது சில குதர்க்கிகள் மறை குலையச் சாதுசனங்களடங்க நடுங்கத் தருக்கச் செருக்காலே
எம்பெருமானுடைய பரத்வத்தை இல்லை செய்தவளவிலே,
எம்பெருமான் அது கண்டு “நாஹம் நாஹம் நசாஹம்” என்றாற்போலே ‘நான் பரதத்வமல்லேன்’ என்று பிற்காலித்து ஓடப்புக,
ஆழ்வார் *ஒன்றுந் தேவாகிற மாவட்டியை யிட்டு அவ்வெம்பெருமானாகிற மத்த கஜத்தை ஓடவொட்டாதே
நிலை நிறுத்திப் பரத்வ ஸ்தாபநம் பண்ணினமையைக் கூறியவாறு.

இக்கருத்து ஆழ்வாருடைய “பராங்குசன்” என்ற திருநாமத்திலும் தோற்றும்;
பர-பரமபுருஷனுக்கு, அங்குசன்-மாவட்டி போன்றவன்.
“வலக்கையாழி யிடக்கைச் சங்கமிவையுடை மால்வண்ணனை, மலக்கு நாவுடையேற்கு” என்ற திருவாய்மொழியிலும்
இக்கருத்து உறையுமாறு காண்க.

ஆட்புக்க காதல்–
புக்க என்னும் பெயரெச்சம் காரியப்பொருளதாய்,
ஆள் புகுவதற்குக் காரணமான காதல் என்றதாம்:
‘நோய்தீர்ந்த மருந்து’ ‘நின்னைக் காணும் அவா’ என்ற விடங்களிற்போல.

அடிமைப் பயன் என்றது –
அடிமையைப் பயனாக வுடையதென்று பொருள் படுதலால் அன்மொழித்தொகை.

அன்றே என்றது – “அன்றெனக்கிளவி ஆமெனத்தகுமே” என்றபடி
ஆம் என்னும் பொருளதாக உரைத்தலுமொன்று.

ஆழ்வார் திறத்தில் சேஷத்வம் முற்படக் காதலை (கைங்கர்ய ருசியை) விளைத்து உடனே
கைங்கர்ய ரூப புருஷார்த்த ஸித்தியில் மூட்டிவிடும். என்பது நான்காமடிக்குத் தேர்ந்த பொருள்.

————————————————————————–

ஆசார்யர்கள், அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யரென்றும் க்ருபாமாத்ர ப்ரஸந் நாசார்யரென்றும் இருவகைப்படுவர்.
சிஷ்யன் பலகாலும் அநுவர்த்தித்தால் பின்பு அருள்புரிந்து அந்த ஸிஷ்யனை
அநுக்ரஹிப்பவர்கள் அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யர் எனப்படுவர்;

திருக்கோட்டியூர் நம்பி போல்வார். எம்பெருமானார், கோயிலுக்கும் திருக்கோட்டியூர்க்கும் பதினெட்டு தடவை நடந்து
வருந்தின பின்புதானே திருக்கோட்டியூர் நம்பி ப்ரஸந்நாராயருளினார்.
அங்ஙனன்றியே,
ஒருவன் அநுவர்த்தியாவிடினும் அதற்குமேல் விமுகனுமா யிருந்தாலும் முலைக்கடுப்பாலே
தரையிலே பீச்சுவாரைப்போலே அவனே அநுக்ரஹூப்பதைத் தம் பேறாக நினைத்துத் தாங்களே அவனைப் பலகாலும்
அநுவர்த்தித்துத் திருத்திப் பணிகொள்ளுமாசிரியர் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்ய ரெனப்படுவர்;
எம்பெருமானார், நம்பிள்ளை போல்வார்.

அப்படிப்பட்ட ஆசார்யத்வ பூர்த்தியை மதுரகவிகள் நம்மாழ்வார் திறத்திலே ஸ்வாநுபவத்தாற் கண்டறிந்தவராதலால்
அக்குணத்திலே ஈடுபட்டுப் பேசுகிறார்.

“தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவரடி பணிந்தவர்களுக்குமே இவையுள்ளது”
(ஆச்சர்யஹ்ருதயம்-3-வது ப்ரகரணம்;.) என்ற ஸ்ரீஸூக்தியின் பொருள் இங்கு அநுஸந்திக்கத் தக்கது.
(தாய்-ஸீதை; மகன் -ப்ரஹ்லாதன் தம்பி-விபீஷணன்; இவர்-நம்மாழ்வார்; இவரடிபணிந்தவர் -எம்பெருமானார்.)

பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
செயல்நன் றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி
முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே

பதவுரை

பயன் அன்று ஆகிலும்-(பிறர் திருந்துவதால்) தமக்கொரு பயனில்லாமற் போனாலும்
பாங்கு அலர் ஆகிலும்–(அவர்கள் திருந்துகைக்குப்) பாங்காக அமையாமற் போனாலும்
செயல்–தமது அநுஷ்டாகத்தாலே
நன்றாக திருத்தி–நன்றாக சிக்ஷித்து
பணி கொள்வான்–(அவர்களை) ஆட்கொள்வதற்காக
குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர்–குயில்களானவை நின்று ஆரவாரஞ் செய்யப் பெற்ற
சோலைகளாலே சூழப்பட்ட திருநகரியிலே (எழுந்தருளியிருக்கிற)
நம்பி!-ஆழ்வாரே!
உன் தன்–தேவரீருடைய
மொய் கழற்கு–சிறந்த திருவடிகளில்
அன்பையே–அன்பு உண்டாவதைக் குறித்தே
முயல்கின்றேன்–முயற்சி செய்கின்றேன்.

உலகத்திலே ஸமாக்யமாக ஒருவன் ஒருவனுக்கு ஓருதவி செய்வது ஒரு கைம்மாறு பெறக் கருதியேயாம்;
ஆழ்வார் தம்முடைய அநுக்ரஹத்துக்கு ஒருவனை இலக்காக்குவது அங்ஙன் ஒரு பயனைக் கருதியன்று;
கருதினாலும் அவனால் ஒரு பயனும் பெறுவிக்கவும் முடியாது.
அப்படிப்பட்ட நிஷ்பல ஜந்துவையாய்த்து ஆழ்வார் அநுக்ரஹிப்பது என்கிற அர்த்தம்
பயனன்றாகிலும் என்பதில் அடங்கியுள்ளது.

பாங்கலராகிலும் என்றது- அநதிகாரிகளாகிலும் என்ற படி.
பழுதே பலபகலும் போக்கித்திரியும் ஸம்ஸாரிகளைத் திருத்துவதற்கென்றே திருவவதரித்த ஆழ்வார்
இந்த வணங்காமுடி ஸம்ஸாரிகளோடு மாரடித்துக் கொள்ள இறாய்த்து
“ஆரானுமாதானுஞ் செய்ய, அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே?” (பெரிய திருவந்தாதி) என்று
வெறுத்துக் கை வாங்கினாலும் பின்னையும் அவர்களை விடமாட்டாதே
“சொன்னால் விரோத” மித்யாதிகளாலே பல்லாயிரமுறை உபதேசித்துத் திருத்தப் பார்த்தது
இவருடைய க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வத்தை நன்கு விளக்கவற்றன்றோ.

பணி கொள்வான் என்பதை
வான் விகுதி பெற்ற எதிர்கால வினையெச்சமாகக்கொண்டு,
‘திருத்திப் பணி கொள்வதற்காக’ என்று உரைத்தோம்.
இவ்வினை யெச்சம் எவ்வினையைக் கொண்டு முடிகின்றதென்னில்;
குருகூர் நம்பி என்றதற்குக் ‘குருகூரிலே எழுந்தருளியிருக்கிற நம்பி’ என்று பொருளாதலால்
‘எழுந்தருளியிருக்கிற’ என்று வருவிக்கப்பட்ட பெயரெச்சத்தின் பகுதியான எழுந்தருளும் வினையைக் கொண்டு முடியுமென்க.

அன்றி,
நம்பி என்னும் பெயர், நம்பு என்னும் வினையடியாப் பிறந்ததாதலால் அவ்வினையைக் கொண்டு
முடியுமென்பதும் சாலப்பொருத்தமுடைத்தாம்.
“நம்பும் மேவும் நசையாகும்மே.”
திருத்திப் பணி கொள்வதற்காகத் திருக்குருகூரை மேவியிருப்பவரென்கை.

இனி, ‘பணிகொள்வான்’ என்பதை
வினையாலணையும் பெயராகக் கொண்டு,
பணி கொள்பவனான குருகூர்நம்பி என்று இயைத்தால் குற்றமென்? என்று கேட்பீர்; கேண்மின்:
இங்கு நம்பி! என்பது அண்மை விளி; முதல் வேற்றுமை யன்று: ஆகவே முன்னிலை யாதலால்
அதற்கேற்பப் ‘பணி கொள்வாய்’ என்று இருந்தால் நன்கு பொருந்தும்;
கொள்வான் என்று படர்க்கையாயிருத்தலால் சிறிது வருத்தப்பட்டுப் பொருத்த வேணுமே.

“குயில்நின்று ஆர் பொழில் சூழ்” என்றும் ஓதுவர்.

“அன்பே முயல்கின்றேன்” =
நீர்செய்த மஹோபகாரத்துக்கு நான் அது ரூபமாகச் செய்வதொரு ப்ரத்யுபகார மில்லையாயினும்
தேவரீருடைய திருவடிகளில் பரிபூர்ணமான அன்பையாவது அமைக்கலாம்; அதுவுமில்லை;
‘ஆழ்வார் திருவடிகளில் அன்பு வைக்க வேணும் அன்பு வைக்க வேணும்’ என்கிற
யோசனையும் முயற்சியுமாயே யிருக்கிறதேயன்றி முற்றின அன்பு அமைந்திலது என்றபடி.

————————————————————————-

நம்மாழ்வார் விஷயத்திலே பரமபக்தி பரீவாஹமாக வெளிவந்த இக் கண்ணி நுண் சிறுத்தாம்பை
மஹா விச்வாஸத்துடன் ஒத வல்லவர்கள் பரம பதத்திலே போய் ஆழ்வார் திருவடி நிழலிலே வாழப் பெறுவர்
என்று பல ச்ருதியோடே பிரபந்தத்தை நிகமநஞ் செய்தருளினர்.

அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன் தென்குரு கூர்நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்னசொல்
நம்புவார்ப்பதி வைகுந்தம் காண்மினே.

பதவுரை

அன்பன் தன்னை–ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானை
அடைந்தவர்கட்கு எல்லாம்–ஆச்ரயித்தவர்களான ஸகல பாகவதர் பக்கலிலும்
அன்பன்–பக்தியை யுடையரான
தென் குருகூர் நகர் நம்பிக்கு–நம்மாழ்வர் விஷயத்திலே
அன்பன் ஆய்-பக்தனாயிருந்து கொண்டு
மதுரகவி சொன்ன சொல்-மதுரகவி அருளிச் செய்த இத் திவ்வியப் பிரபந்தத்தை
நம்புவார்-(தங்களுக்குத் தஞ்சமாகக்) விச்வஸித் திருப்பவர்களுக்கு
பதி–வாஸஸ்தாநமாவது
வைகுந்தம் காண்மின்-பரம பதமாம்.

“அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லா மன்பன்” என்னு மிவ் வடை மொழி
ஆழ்வார்க்குமாகலாம், மதுரகவிகளுக்கும் ஆகலாம்.

ஆழ்வார்க்கு ஆகும் போது –
“பயிலுந் திருவுடையார் யவரேலும் அவர் கண்டீர்” என்றபடி சாதி ஒழுக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சியின்றியே
பகவத் பக்தி மாத்திரத்தையே பற்றாசாகக் கொண்டு ஸகல பாகவதரிடத்தும் அன்பு மிக்க ஆழ்வார் என்றதாகிறது.

மதுரகவிகளுக்கு அந்வயித்தால்-
பாகவதர் எல்லாரளவிலும் வைத்திருந்த அன்பை ஆழ்வாரொருவரளவிலே மடுத்த மதுரகவி என்று கருத்தாகக் கடவது.

(வைகுந்தவங் காண்மினே.)
ஆழ்வாரே உத்தேச்யமாகில் ஆழ்வார் திருநகரியன்றே பதியாக வேணும்;
பரம பதத்தைப் பதியாகச் சொல்லுவானேன்? என்னில்; (நம்பிள்ளையீடு)
“திருநகரியில் ஆழ்வாராணையும் பொலிந்து நின்ற பிரானாணையும் இருபுரியா யாய்த்துச் செல்லுவது;
அங்ஙனன்றியே ஆழ்வாராணையே செல்லும் தேசம் பரமபதமேயிறே:
‘அடியார் நிலாகின்ற வைகுந்தம்’ என்றும்,
‘வானவர் நாடு’ என்றுஞ் சொல்லக்கடவதிறே –
இத்தால் ஆழ்வார் ஏகபோக ‘ஸாம்ராஜ்யமாக ஆளுகிற பரம பதமே
ஆழ்வாரடியார்கட்கு வஸ்தவ்ய தேசமாக விதிக்கத்தகு மென்றதாயிற்று.

இங்ஙனன்றியே,
வைகுந்தமென்று தனியே ஒரு தேச விசேஷத்தைச் சொன்னபடியன்று;
ஆழ்வாரெழுந்தருளி யிருக்குமிட மெதுவோ அதுதான் வைகுந்தம் என்பராம் நம்பி திருவழுதிவளநாடு தாஸர்.
“ஒராயிரத்துளிப்பத்தும் உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகுந் தம்மூரல்லாம்” (திருவாய்மொழி.) என்றதிறே.

கூரத்தாழ்வான் திருக்குமாரர் பட்டர் திருவவதரித்த பின்பு விண்ணுலகென்றும் மண்ணுலகென்றும் ஒருவாசியின்றி
இடைச்சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒரு போகியாய்த்து என்று நம்பிள்ளை கோஷ்டியில்
பலகாலும் ப்ரஸக்தமாமென்பது இங்கு அறியத்தக்கது.

(மதுரகவி)
ஆசுகவி, சித்ரகவி, விஸ்தாரகவி, மதுரகவி என்று கவிகள் நால்வகைப்படுவர்;
அவர்களுள் இவர் இனிமையாகப் பாடுபவரென்பது பற்றி மதுரகவி யென்று திருநாமம் பெற்றார்.
இவருடைய பிரபந்தம் ஆழ்வார்கள் அருளிச்செயலோடு சேர்ந்து திவ்ய ப்ரபந்தமென்ற சிறப்புப் பெயரைப் பெற்றாற் போல
இம்மதுரகவிகளும் ஆழ்வார் கோஷ்டியிற் சேர்ந்து மதுரகவியாழ்வார் என்று ஆழ்வார் பட்டம் பெற்றமை
உபதேசரத்தினமாலையில் தோன்றும்.

“ஆழ்வார் திருமகளாராண்டாள் மதுரகவியாழ்வார் எதிராசராமிவர்கள்” என்றும்,
“ பாரில் மதியாருமாண்டாள் மதுரகவியாழ்வார் எதிராசர் தோன்றிய வூரிங்கு” என்றுமுள்ள பாசுரங்களே நோக்குக.

ஆழ்வார்களிற் சிலரைக் குலசேகரப் பெருமாள், பாண் பெருமாள் என்பது போல மதுரகவிப் பெருமாள் என்றாருமுளர்;
“மனறே புகழுந் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்சென்றே மதுரகவிப் பெருமாள்” (சடகோபரந்தாதி) என்றார் கம்பநாடர்.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அமலனாதி பிரான் -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் –

September 22, 2014

ஸ்ரீ வத்சம் அம்சம் கார்த்திகை ரோஹிணி
தென் திருக் காவேரி தென் கரையிலே திரு முகத் துறையிலே
வீணையும்-யாழும்- கையுமாக
நம்பெருமாளை திசை நோக்கி தொழுது
திவ்ய கீதங்களை
கண்டமும் கருவியும் ஒக்க கேட்பவர் செவியும் மனமும் குளிர
எம்பெருமான் திரு உள்ளம் உகக்க
கின்னர கந்தர்வாதியர் வியப்புற பாடிக் கொண்டே இருக்க
பாண குல திலகர்
சில முரட்டு குணர் கல் வீச
இந்த்ரன் ஏக காலத்தில் பொழிவித்த சிலா வர்ஷத்துக்கு சற்றும் பின்னிடாத கோவர்த்தன மலை
போலே சிறிதும் சலியாது இருந்தார்-

அது கண்டு அமரர் கோன் போலே அஞ்சி அகன்றனர்
பக்தர்கள் அந்தரங்கத்தில் அமர்த்து இருக்கும் அரங்கன் திரு உள்ளம் கலங்கி திரு நெற்றியும் இரத்தப் பெருக்குற்றது
பகவத் பக்திக்கு ஜாதி முக்கியம் அன்று பக்தியே அமையும்
சகல சாஸ்திர சாரப் பொருளை காட்டி அருள
திரு லோக சாரங்கர் திரு முதுகில் எழுந்து அருளப் பண்ண நியமிக்க

ஆதி வாஹகர் எழுந்து அருளிவித்துக் கொண்டு திரு மா மணி மண்டபத்துக்கு போவது போலே
இருள் அகற்றும் எரி கதிரோன் மண்டலத்துள் ஏற்றி
வைத்தேணி வாங்கி அருள் கொடுத்திட்டு
அடியவரை ஆள் கொள்வான் அரங்கன்
திவ்ய மங்கள விக்ரஹத்தை பாதாதி கேசம் நேத்திர அந்தமாக சேவித்து
அதிலே ஆழ்ந்து
அதன் அழகை அனுபவித்து

அந்த அனுபவ அதிசயத்தை பின்புள்ளார்க்கும் விசதமாக்கும் பொருட்டு
அமலனாதிபிரான் திவ்ய பிரபந்தத்தை திருவாய் மலர்ந்து அருளி
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே
என்கிற தனது துணிவை வெளியீட்டு
உலகோரை வாழ்வித்து
உகப்போடு நிற்கையில்
பெரிய பெருமாள் அத் திருமேனியுடன் அவரை அங்கீ கரித்து அருள
அனைவரும் காண அரங்கன் திருவடிகளிலே அந்தர்பவித்து
காய்ந்த இரும்பு உண்ட நீரானார்

கோபாலன் குழல் இசையால் கோக்களை மகிழ்வித்தது போலே
அக் கோவிந்தனை யாழ் இசையால் மகிழ்வித்த இவ் வாழ்வார்
இவ்வுலகில் வாழ்ந்தது ஐம்பது வருஷ காலம் என்பர்-

————————————————————

காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுமின்கள்

கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் என்று காசினியீர்
வாய்த்த புகழ் பாணர் வந்துதிப்பால் -ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதி பிரான் கற்றதன் பின்
நன்குடனே கொண்டாடும் நாள்

——————————————-

இந்த திவ்ய பிரபந்தம் திருப் பெயர் -அமலனாதி பிரான் -என்றது
முதல் குறிப்பு இலக்கண முறைப் படி
திருப் பல்லாண்டு -கண்ணி நுண் சிறுத் தாம்பு -போலே
முனி வாகன போஹம் -தேசிகன் அருளிச் செய்தது இந்த ஒரே திவ்ய பிரபந்தத்துக்கு மட்டும் வியாக்யானம்
அருளிய காரணம் சத் சம்ப்ரதாயம் வல்ல பெரியோர் கூறுமாறு
நிஹீன ஜாதி கழியப் பெற்று பாகவத உத்தமர்கள் -அவர்கள் பண்டைக் குலம் நீங்கி -தொண்டக்குலம் அடைவர் –

தமது ரகஸ்ய த்ரய சாரத்தில் 25 – பிரபாவ வ்யவஸ்த அதிகாரத்தில்
அதோ ஜாதேர் நிஷ்க்ருஷ்டாயாஸ் சர்வச்யாவா விசாசத சாஜாத்யம்
விஷ்ணு பக்தா நா மிதி மந்த மிதம் வச வைஷ்ணவத்வே நமான்யத்வம்
சமாநம் முனி சம்மதம் ஜாத்யாதித்வம் சதச் சாம்யம் முக்தி காலே பவிஷ்யதிர் –
ரஜஸ்வலையாய் இருக்கும் காலத்தில் தாய் கூட அணுக தகாதவள் போலே
சரீரத்துடன் இருக்கும் அளவும் உபசர்யைகளுக்கு உரியர் அல்லர்
முக்தி பெற்ற பின்பு தான் விசேஷமாக கௌரவிக்கத் தக்கவர் ஆவார்

இத்தால் மதுரகவி ஆழ்வார் நம் ஆழ்வார் திருவடிகளில் பரிசர்யைகள் செய்து கொண்டிருந்த வாற்றிலும்
லோக சாரங்க முனிகள் திருப் பாண் ஆழ்வாரை தோளில் தூக்கி சந்நிதிக்கு எழுந்து அருளின வாற்றிலும்
சம்சய விபர்யய உணர்ச்சி நெஞ்சிலே குடி கொண்டு இருக்க

எம்பெருமான் இவரை சதாச்சார்யர் திருவடிகளில் ஆஸ்ரயிக்கச் செய்து அருள திரு உள்ளம் கொள்ள
எம்பெருமான் தேசிகன் கனவிலே தோன்றி
பிள்ளாய் உமக்கு இந்த விஸ்வாமித்ர ஸ்ருஷ்டி ஆகாது
நம் பூர்வர்கள் பிர பாவங்களைக் கேட்டு அறியீரோ
பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்திகளில் அஸூயை ஒழித்து
புது வழிகளை விட்டு விடும் என்று நியமிக்க

தேசிகனும் கண் விளித்து
தன்யோஸ்மி க்ருதார்த்தோஸ்மி அனுக்ருஹீதோஸ்மி-என்று
பலவாறாக ஆனந்தித்திக் கொண்டு
கீழ் நின்ற நிலைக்கு நொந்து
கண்ணும் கண்ண நீருமாக
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளில் படுகாடு கிடைக்கையில்

அவரும் திருக் கைகளால் அனைத்து
உமக்கு இப்படி அனுதாபம் பிறந்த போதே சமஸ்த அபராதங்களும் கழிந்தன
இனி அஞ்சாதே கொள்ளும் என்று ஆஸ்வசிப்பிக்க

திரு இலச்சினையும் விசேஷார்த்தங்களையும் பெற்று
கண்ணை மூடி திருவாராதன பெருமாள் ஒருவரை எழுந்து அருள பண்ண நியமிக்க
தூப்புல் பிள்ளையும் அப்படியே செய்ய

கண்ணை திறந்து பார்த்த அளவில்
அவர் எழுந்து அருளப் பண்ணிய பெருமாள் திருப் பாண் ஆழ்வாராக
சேவை சாதிக்க

உம்மை திருத்திப் பணி கொள்ள எம்பெருமான் இவ்வாறு அருள் புரிந்தான்
இவரை ஆராதனை செய்து அமலனாதி பிரானுக்கு வியாக்யானம் இடும்
ஜாதி நிரூபணம் அடியாக வந்த அபசாரம் எல்லாம் தீயினில் தூசாகும் என்று அருளிச் செய்ய
முனி வாஹன போகம் திருவவதரித்தது

பிள்ளை லோகாச்சார்யர் என்பாரும் உண்டு
தேசிகன் அருளிய லோகார்ய பஞ்சசாத் ஸ்தோத்ரம்- சேவிக்கத் தக்கது –

வடகலையார்
அதிகார சங்க்ரஹம் -முதல் பாட்டில் நம் பாண் நாதன் -என்கிற இடத்துக்கு உரையிட்டவர்
திருப் பாண் ஆழ்வார் ஆகிற நம்முடைய நாதன்
முனி வாஹனன்-என்று திருநாமம் ஆம்படியாகவும்
ஸ்ரீ வேதாந்தசார்யர் என்று திரு நாமம் சாத்தி அருளியும்
தங்கள் இருவர் இடத்தில் பெரிய பெருமாள் வ்யாமோஹம் செய்து அருளின
இச் சம்பந்தத்தை இட்டு விசேஷித்து நம்முடைய நாதன் என்று அனுசந்திக்கிறார்
இது காரணமாக முனி வாகன போகம் அருளிச் செய்து இருக்கிறார் என்பர்

பெரியோம் அல்லோம் நாம் நன்றும் தீதும் நமக்கு உரைப்பார் உளர் என்று நாடுவோமே -என்று
அருளிச் செய்து இருப்பதால் உண்மை விஷயம் உள்ளத்தே புகும்-

—————————————————————-

பெரிய பெருமாள் திருவடிகளிலழகு மேல்விழுந்து தம்மைப் பரவசமாக்கியவாறு கூறுகின்றார்,

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——-1-

பதவுரை

அமலன்–பரிசுத்தனாய்
ஆதி–ஜகத்காரபூதனாய்
பிரான்–உபகாரகனாய்
என்னை–(இழி குலத்தவனான) என்னை
அடியார்க்கு–(தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு
ஆள்படுத்த–ஆட்படுத்துகையாலே வந்த
விமலன்–சிறந்த புகரை யுடையனாய்
விண்ணவர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்து வைத்து
(ஆஸ்ரிதர்கட்காக)
விரை ஆர் பொழில்–பரிமளம் மிக்க சோலைகளையுடைய
வேங்கடவன்–திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய்
நிமலன்–ஆஸ்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று, ஆஸ்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய்
நின்மலன்–அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய்
நீதி வானவன்–சேஷசேஷி முறைவழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய்
நீள் மதிள்–உயர்ந்த மதிள்களையுடைய
அரங்கத்து–கோயிலிலே (கண் வளர்ந்தருளுகிற)
அம்மான்–ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய
திருக் கமல பாதம்–திருவடித் தாமரைகளானவை
வந்து–தானே வந்து
என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே–என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே

இதில். அமலன், விமலன், நிமலன், நின்மலன் என்ற நான்கு சப்தங்களுக்கும் பொருள் ஒன்றே :
தாத்பர்ய பேதம் மாத்திரம் கொள்ள வேண்டும்.
பரம நிஹீநரான தாம் ஸந்நிதிக்குள்ளே புகுவதனால் பெருமாளுக்குப் பெருத்த அவத்யம் உண்டாயிடும என்று அஞ்சியிருந்தவர்.
அந்த நங்கை தவிர்ந்தமை தோற்ற அமலன் என்கிறார்.
ஹேய ப்ரதிபடன்-ஹேய வஸ்து ஸம்பந்தத்தால் தனக்கொரு கெடுதி விளையப் பெறாதவன் என்கை.

தமது சிறுமையை நோக்காதே தம்மைப் பாகவதர்க்கு ஆட்படுத்தி ஒரு சீரிய பொருளாக ஆக்குகையாலே
எம்பெருமானது திருமேனியிற்பிறந்த ஒரு விலக்ஷண தேஜஸ்ஸை அநுபவிப்பார் விமலன் என்கிறார்.
தன்னுடைய ஸ்வம்மான ஒரு சரக்கு மிக்க சிறப்புப் பெற்றால் ஸ்வாமியின் மேனி ஒளிபெற்றுத் தோன்றுமன்றோ.

பிரமன் சிவன் முதலானோரும் அஞ்சி அணுக வேண்டும்படியான ஐஸ்வரியம் மிகுந்திருக்கச் செய்தேயும்
குறும்பறுத்த நம்பிக்குக் கூசாதே நித்யஸம் ச்லேஷம் பண்ணலாம்படி தனது ஈச்வரச்சுணையாகிற
ஆஸ்ரயண விரோதி தோஷத்தை மறைத்து
அர்ச்சக பராதீ நாகிலாத்மஸ்திதி:” என்றபடி
அடியார்க்கு எளியனாயிருக்குந் தன்மையை வெளியிட்டு நிற்குமவன் என்பார். நிமலன் என்கிறார்.

நின்மலன் என்றது-அடியார்களுடைய குற்றங்களைக் காண்கையாகிற குற்றமில்லாதவன் என்றபடி.
அடியார் குற்றங்களைக் கண்டாலும் அவற்றை போக்யமாகக் கொள்ளுமவனிறே எம்பெருமான்.

முதலடியில், ஆதி என்றவிடத்துக்கு வியாக்கியான மருளிச்செய்யா நின்ற தேசிகன்,
“இக்காரணத்வமும் மோக்ஷ ப்ரதத்வமும் சத்ர சாமரங்கள் போலே ஸர்வ லோக ஸரண்யனுக்கு விசேஷ சிஹ்நங்கள்”
என்று அருளிச் செய்திருப்பதைக் கண்டு வைத்தும், ஜகத் காரணத்வத்திலும் மோக்ஷ ப்ரதத்வத்திலும்
பிராட்டிக்கும் ஸாக்ஷாத் அந்வயமுண்டென்று சிலர் சொல்லுவர்கள்!.

லோக ஸாரங்கமா முனிவரின் திருத் தோளின் மேல் ஏறின திருப்பாணாழ்வார் ஸேஷித்வத்தைக் கொண்டாடினாரே
யொழிய ஸேஷத்வத்தைப் பாராட்ட வில்லையே;
அப்படியிருக்க “அடியார்க்கென்னை ஆட்படுத்தவிமலன்” என்றது எங்ஙனே? என்று ஸங்கை பிறக்கக்கூடும்;
ஸேஷத்வத்துக்குத் தகுதியாகத் திருவடியிலே யிருக்க வேண்டிய திருத்துழாய் திருமுடி மேலேறியிருந்தால்
அவ்வளவாலே அதன் ஸேஷத்வம் குறைபடாதன்றோ; அதுபோலக் கொள்க

பிள்ளை திருநறை யூரரையரைச் சிலர்
“பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்த இவ் வாழ்வார் திருவேங்கமுடையான் பக்கல் போவானேன்?” என்று கேட்க;
“ஆற்றிலே அழுந்துகிறவன் ஒரு காலைத் தரையிலே ஊன்றினால் பிழைக்கலாமோ என்று கால் தாழ்க்குமா போலே,
இவரும் பெரிய பெருமாளழகிலே அழுந்துகிறவராகையாலே திருமலையிலே கால் தாழ்ந்தார்” என்றாராம்.

“ஒருவனைக் கவிபாடும் போது அவனுடைய வரலாறு சொல்லிக் கவிபாட வேணும்;
பரமபதத்தில் நின்றும் ஸ்ரீமதுரையிலே தங்கித் திருவாய்ப்பாடிக்கு வந்தாப்போலே
ஸ்ரீவைகுண்டத்தில் நின்றும் திருமலையில் தங்கி யாய்த்துக் கோயிலுக்கு வந்தது;
அவ்வரலாற்றைப் பாடுகிறபடி” என்றும் ஒருகால் அருளிச் செய்தாராம்.

அமலன் –
ஹேய பிரதி படன் -நீசனான தம்மை வந்து திருவடி அணுகிற்றே
தம்மை அடியாரவர்க்கு ஆட்படுத்தும் படி சீரிய பொருளாக ஆக்கிமையால்
வந்த புகர் தோற்ற திரு மேனியில் பிறந்த விலஷண தேஜஸ் அனுபவித்து –

விமலன்
ஆஸ்ரயணீய விரோத தோஷத்தை மறைத்து அடியவர்க்கு எளியனாய் சம்ஸ்லேஷித்த படி

நிமலன்
குற்றங்களை போக்யமாக கொள்கையாலே நின்மலன்

ஆதி –
காரணத்வமும் மோஷ பிரதத்வமும் சத்ர சாமரங்கள் போலே
சர்வ லோக சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள் -தேசிகன்

திருவடி திரு முடி மேல் ஏறி இருந்தாலும் சேஷத்வம் குறைபடாது அன்றோ

பிள்ளை திரு நறையூர் அரையரை சிலர்
பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்த இவ்வாழ்வார்
திருவேங்கட முடையான் பக்கல் போவான் என் என்ன

ஆற்றில் அழுந்தினவன் ஒரு காலை தரையிலே ஊன்றினால்
பிழைக்கலாமோ என்று கால் தாழ்க்குமா போலே
இவரும் பெரிய பெருமாள் அழகில் அழுந்துபவர் ஆகையாலே
திருமலையிலே கால் தாழ்ந்தார் -என்றாராம்-

ஒருவனைக் கவி பாடும் போது அவனது வரலாறு சொல்லிக் கவி பாட வேணும்
பரம பதத்தில் நின்றும்
ஸ்ரீ மதுரையில் தங்கி
திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும்
திருமலையிலே தங்கி யாய்த்து
கோயிலுக்கு வந்தது
அவ் வரலாற்றைப் பாடுகிற படி -என்றும் ஒரு கால் அருளிச் செய்தாராம்-

———————————————————–

கீழ்ப்பாட்டில், “திருக்கமலபாதம் வந்து” என்றதும்,
இப்பாட்டில் “ஆடையின்மேற் சென்ற தாமென சிந்தனை” என்றதும் உற்று நோக்கத் தக்கவை.

முதலில் எம்பெருமான் தானாக ஆழ்வாரை அடிமை கொள்ள மேல் விழுந்தபடியும்,
பிறகு ஆழ்வார் ருசி கண்டு தாம் மேல் விழுகிறபடியும் இவற்றால் தோற்றும்.

ஈன்ற நாகானது தன் கன்றுக்கு முதலில் முலைச் சுவை தெரியாமையாலே தானே தன் முலையை அதன் வாயிலே கொடுக்கும்;
பின்பு சுவடறிந்தால் நாகு காற்கடைக் கொண்டாலும் கன்று தானே மேல் விழும்;

அப்படியே, திருவடிகள் தானே வந்து போக்யமானவாறு கூறினர் முதற்பாட்டில்;
இதில், தம்முடைய நெஞ்சு சுவடறிந்து மேல்விழுமாறு கூறுகின்றனரென்க.

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-

பதவுரை

உவந்த உள்ளத்தன் ஆய்–மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை யுடையவனாய்க் கொண்டு
உலகம் அளந்து–மூவுலகங்களையும் அளந்து
அண்டம் உற–அண்ட கடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி
நிவந்த–உயர்த்தியை அடைந்த
நீள் முடியன்–பெரிய திருமுடியை யுடையவனாய்
அன்று–முற்காலத்தில்
நேர்ந்த–எதிர்த்து வந்த
நிசரசரரை–ராக்ஷஸர்களை
கவர்ந்த–உயிர் வாங்கின
வெம் கணை–கொடிய அம்புகளை யுடைய
காகுத்தன்–இராம பிரானாய்,
கடி ஆர்–மணம் மிக்க
பொழில்–சோலைகளை யுடைய
அரங்கத்து-ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான
அம்மான்-எம்பிரானுடைய
அரை-திருவரையில் (சாத்திய)
சிவந்த ஆடையின் மேல்-பீதாம்பரத்தின் மேல்
என சிந்தனை-என்னுடைய நினைவானது
சென்றது ஆம் பதிந்ததாம்

உலகமளந்த வரலாறு:-மஹாபலியென்னும் அஸூரராஜன் தன் வல்லமையால் இந்திரன் முதலிய யாவரையும் வென்று
மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்தி அரசாட்சி செய்துகொண்டு செருக்குற்றிருந்தபொழுது,
அரசிழந்த தேவர்கள் திருமாலைச் சரணமடைந்துவேண்ட, அப்பெருமான் குள்ள வடிவமான வாமநாவதாரங்கொண்டு
காச்யப மா முனிவனுக்கு அதிதி தேவியினிடந் தோன்றிய பிராமண ப்ரஹ்மசாரியாகி, வேள்வியியற்றி
யாவர்க்கும் வேண்டிய அனைத்தையுங் கொடுத்துவந்த அந்த மாவலியிடஞ்சென்று,
தவஞ்செய்ததற்குத் தன் காலடியால் மூவடி மண்வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து அவன் தாரைவார்த்துக்
தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவி வளர்ந்து
ஓரடியால் பூலோகத்தையும் மற்றோரடியால் மேலுலகத்தையுமளந்து, தாநமாகப் பெற்ற மற்றோரடிநிலத்திற்கு இடமில்லாதொழியவே
அதற்காக் அவன் வேண்டுகோளின்படி அவனது முடியில் அடியை வைத்து அவனைப் பாதாளத்தில் அழுத்தி அடக்கினன் என்பதாம்.
பூலோகத்தை அளந்ததில் அதன்கீழுள்ள பாதாளலோகமும் அடங்கிற்று; எனவே எல்லா வுலகங்களையுமளந்ததாம்.

இச்சரித்திரத்தினால், கொடியவரை அடக்குவதற்கும், இயல்பில் அடிமையாகின்ற அனைத்துயிரையும்
அடிமைகொள்வதற்கும் வேண்டிய தந்த்ரம் வல்லவன் என்பது போதரும்.

உலகளக்கும்போது அடியாரோடு அஹங்காரிகளோடு வாசியற எல்லார் தலையிலும் திருவடியை வைத்து
அவர்களை தந்யராக்கப்போகிறோமென்று எம்பெருமான திருவுள்ளத்திற்கொண்ட உகப்பை வெளியிடுகிறார்.
உவந்த உள்ளத்தனாய் என்று.

நிசாசரர், காகுத்தன், சிந்தனை – வடசொற்கள். நிசாசரர்-இரவில் திரியுமர்களிறே ராக்ஷஸர்கள்.
காகுத்தன்-ககுத்ஸ்னென்று ப்ரஸித்தி பெற்ற அரசனது குலத்திற் பிறந்தவன்; (ஸ்ரீராமன்;)
எருதுவடிவங்கொண்ட இந்திரனது முசுப்பின் மேலேறி யுத்தஞ்செய்யச் சென்றதனால்
இவ்வரசனுக்குக் ககுத்ஸ்தனென்று பெயராயிற்று. (ககுத்-முசுப்பு; ஸ்தன்-இருப்பவன்.)

“நிமிர்ந்த நீண்முடியன்” என்பதும் பாடம்.

திருகமல பாதம் வந்ததும்
ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனை –
தானாகவே எம்பெருமான் அடிமை கொள்ள மேல் விழுந்த படியும்
பின்பு ஆழ்வார் ருசி கண்டு
தாம் மேல் விலுகிறபடியும் இவற்றால் தோற்றும்
ஈன்ற நாகு கன்றுக்கு முலைச் சுவை தெரியாமையாலே
தானே முலையை அதன் வாயிலே கொடுக்குமே
அனைத்து உலகையும் அடிமை கொள்ளவன் என்பதைக் காட்ட உலகு அளந்த வரலாறு
அனைவரையும் தந்யராக வாசி அற வைத்து அருளினதால் உகந்தவனும் அவனே -உவந்த உள்ளத்தனாய்
நிமிர்ந்த நீண் முடியன் -என்பதும் பாடம்-

———————————————————-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3-

பதவுரை

மந்தி–குரங்குகளானவை
பாய்-(ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப்பெற்ற
வடவேங்கடம் மா மலை–வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே
வானவர்கள்-நித்ய ஸூரிகள்
சந்தி செய்ய நின்றான்–பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய்
அரங்கத்து–கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையை யுடையனான அழகிய மணவாளனுடைய
அந்தி போல் நிறத்து ஆடையும்–செவ்வானம் போன்ற நிறத்தையுடைய திருப்பீதாம்பரமும்
அதன்மேல்–அப்பீதாம்பரத்தின் மேலே
அயனை படைத்தது ஓர் எழில் உந்திமேலது அன்றோ–பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகையுடைய திருநாபிக் கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ
அடியேன் உள்ளத்து இன் உயிரே-என்னுடைய மனஸ்ஸிலே விளங்குகிற இனிதான ஆத்மஸ்வரூபம்.

“அடியேனுள்ளத்தின்னுயிர் எழிலுந்திமேலதன்றோ” என இயையும்.
இங்கு வாநரங்களைக் கூறியது சபலரான ஸம்ஸாரிகளைக் கூறியவாறாம்.
“நின்றவா நில்லா நெஞ்சினையுடையராய் ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றுகிற
க்ஷுத்ர பல காமிகளான ஸம்ஸாரிகளுக்கு வாநரங்களே ஒத்த நிதர்சநமாம்.

பரமபதத்திலே கைங்கர்ய ஸாம்ராஜ்யத்துக்கு முடிசூடி யிருக்கிற முக்தரும் நித்யரும் தேஸோசிதமான
தேஹங்களைப் பரிக்ரஹித்துக்கொண்டு திருமலையிலே வந்து கைங்கர்யங்கள் பண்ண,
அவற்றைப் பெறுகைக்காக அங்கே நித்ய ஸந்நிஹிதனாயிருக்கும் ஸ்ரீரங்கநாதனுடைய
திருப்பீதாம்பரத்திலும் திருநாபீகமலத்திலும் என் சிந்தை குடிகொண்டதென்கை.

‘வடவேங்கடமாலை நின்றான்’ என்றவுடனே,
வருந்தி ஏற வேண்டும்படியான திருமலையும் நம்போன்றவர்க்குப் பரமபதம்போல் அரிதேயன்றோ என்று சிலர் குறைபட,
உடனே, ‘அரங்கத்தரவினணையான்’ என்று எளிமையை அருளிச்செய்தபடி.

“அந்திபோல்நிறம்” என்பதற்கு-
அடியாருடைய அஜ்ஞான விருளைக் கழிக்கவல்ல நன்ஞானமாகிற ஸூர்யோதயத்துக்குக் கிழக்கு ஸந்த்யை போலவும்,
அவர்களுடைய தாபத்ரயத்தை ஆற்றுதற்கு மேற்கு ஸந்த்யைபோலவும் இராநின்ற, என்று கருத்துரைப்பர் தூப்புற்பிள்ளை.

முதற்பாட்டில் ஆதி என்ற அடைமொழியால் எம்பெருமானுக்குச் சொன்ன
ஜகத் காரணத்வத்தை இப்பாட்டில் மூன்றாமடி நிலைகாட்டுகின்றது போலும்.

த்ரயோதேவா ஸ்துல்யா, த்ரிதயமிதமத்வைதமதிகம்
த்ரிகாதஸ்மாத் த்த்வம் பரமிதி விதர்க்காந் விகடயந்
விபோர்நாபிபத்மோ விதிசிவ நிதாநம் பகவத
த்தந்யத் ப்ரூபங்கீபரவதிதி ஸித்தாந்தயதி ந–என்ற ஸ்ரீ ரங்கராஜஸ்தவ ஸூக்தி இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

“சந்திசெய்யநின்றான்“ என்றவிடத்து,
சந்தி என்பதற்கு ஆராதநம் என்று எப்படி பொருளாயிற்றென்னில்,
சந்தி என்று ஸந்த்யாவந்தனத்துக்குப் பேராய்
அது ஸ்ரீ பகவதாஜ்ஞயா பகவத் கைங்கர்யரூபமாகையாலே லக்ஷிதலக்ஷணை‘ என்னும் முறையால்
பகவதாராதநத்தைச் சொல்லிற்றாகிறதென்று கொள்ளலாம்.

நின்றான் – வினையாலணையும் பெயர்.

அடியேன் உள்ளத்து இன்னுயிர் எழில் உந்தி மேலது அன்றோ
வானரங்கள்
சபலரான சம்சாரிகள்
நின்றவா நில்லா நெஞ்சினை உடையராய்
வடவேங்கடமா மலை நின்றவன் -வருந்தி ஏற வேண்டும்படியான திருமலை
அரங்கத்து அரவின் அணையான் -எளிமையை அருளிச் செய்து
அந்தி போல் நிறம்
அஞ்ஞானம் இருளை கழிக்க வல்ல நல்ல ஞானம் ஆகிற சூர்யோததுக்கு
கிழக்கு சந்தை போலேவும்
தாபத் த்ரயம் ஆற்ற மேற்கு சந்தை போலேயும் இரா நின்ற -தூப்புல் பிள்ளை
அயனைப் படைத்ததோர் எழில் இத்தால் முதல் பாட்டில் –ஆதி -அருளினதை -நிலை நாட்டுகிறது
சந்தி செய்ய நின்றான் -சந்த்யா வந்தனம் -ஸ்ரீ பகவத் ஆஞ்ஞாயா -ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம்
லஷித லஷணை முறையால் பகவத் ஆராதனம்
நின்றான் -வினையால் அணையும் பெயர்-

——————————————————-

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

பதவுரை

சதுரம்–நாற்சதுரமாய்
மா–உயர்ந்திருக்கிற
மதிள்சூழ்–மதிள்களாலே சூழப்பட்ட
இலங்கைக்கு–லங்கா நகரத்திற்கு
இறைவன்–நாதனான இராவணனை
ஓட்டி–(முதல்நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து
(மறுநாட்போரில்)
தலைபத்து–(அவனது) தலைபத்தும்
உதிர–(பனங்காய்போல்) உதிரும்படி
ஓர்–ஒப்பற்ற
வெம் கணை–கூர்மையான அஸ்த்ரத்தை
உய்த்தவன்–ப்ரயோகித்தவனும்
ஓதம் வண்ணன்–கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும்
வண்டு–வண்டுகளானவை
மதுரமா–மதுரமாக
பாட–இசைபாட
(அதற்குத் தகுதியாக)
மா மயில் ஆடு–சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற
அரங்கத்து அம்மான்–திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு வயிறு உதரபந்தம்–திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது
என் உள்ளத்துள் நின்று–என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உலாகின்றது–உலாவுகின்றது

குலபர்வதங்களையெல்லாம திரட்டிக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போல் செறிவும் திண்மையும் உயர்த்தியுமுடைத்தாய்
அஷ்டதிக்பாலகர்களுக்கும் எட்டிப்பார்க்கவொண்ணாத மதிள்களாலே சூழப்பட்டிருந்த இலங்கைக்கு அரசனான
இராவணனை முதல்நாட்போரில் மிகவும் இளைக்கப்பண்ணி “சசால சாபஞ்ச முமோசவீர:” என்றபடி-
அவன் சளைத்துப்போய் வில்லையும் பொகட்டு ஒன்றுஞ் செய்யமாட்டாது நின்றவளவிலே
அவன்மேல் இரக்கமுற்று ‘அப்பா! இன்று மிகவும் இளைத்தாய்; இப்போது உன்னை ஒரு நொடிப்பொழுதில்
உயிர்தொலைக்கக் கூடுமாயினும் அது தர்மமல்லவென்று விட்டிட்டேன்; இன்று போய் நாளை வா’ என்று சொல்லியனுப்பி,
அப்படியே அவன் மறுநாள் மிக வல்லவன் போல வந்து நின்றவாறே ப்ரஹ்மாஸ்த்ரத்தைப் பிரயோகித்து
அவன் தலைகளை அறுத்துத் தள்ளின வரலாற்றை அநுஸந்திக்கிறார முன் இரண்டடிகளில்.

ஓட்டி என்பதற்கு இராவணனையோட்டி என்று பொருள் கொள்ளாமல்,
ஓர் வெங்கணையை ஓட்டி என்று பொருள் கூறுவதும் ஒன்று.

ஓதவண்ணன்-
கண்டவர்களுடைய பாபத்தையும் தாபத்தையும் கழிக்க வல்ல கடல்போன்ற ச்யாமளமான திருமேனியையுடையவன்.
திருவயிறு உதரம் என்று புநருக்தியன்றோவென்று சங்கிக்கவேண்டா;
‘உதரபந்தம்’ என்பது திருவாபரணத்தின் பெயர் ;
அது திருவயிற்றிற் சாத்தப்பட்டுள்ளமையைக் கூறியிருப்பதாக உணர்க.

“திருவயிற்றுதாபந்தனம்” என்றும் பாடமுண்டு.

ஒட்டி
வெங்கணையை ஒட்டி
ராவணனை ஒட்டி என்றுமாம்
ஓத வண்ணன்
பாபம் தாபம் கழிக்க வல்ல கடல் போன்ற ச்யாமளமான திருமேனி
திரு வயிறு உதரம் -புநருக்தி சங்கை வேண்டாம்
உதரபந்தம் -திரு ஆபரணம்
அது திரு வயிற்றில் சாத்தப் பட்டுள்ளமையை அருளிச் செய்கிறார்
சாஸீச ரோஜ சத்ருசாய தேஷண-என்பதும் உண்டே
திரு வயிற்று உதர பந்தனம் -பாட பேதம்-

——————————————————

அடியார்களைப் பரிந்து காத்தருள வல்ல பெரியபிராட்டியாரும்,
ஸர்வ ரக்ஷகத்வத்தை வெளிப்படுத்தவல்ல ஹாரமும் திகழப்பெற்ற திருமார்பின் அழகே
என்னை ஆட்படுத்திக் கொண்டதென்கிறார்.

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

பதவுரை
பாரம் ஆய–பொறுக்கமுடியாத சுமையாயிராநின்ற
பழ வினை–அநாதியான பாபங்களின்
பற்று அறுத்து–சம்பந்தத்தைத் தொலைத்து
என்னை-(அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை
தன் வாரம் ஆக்கி வைத்தான்-தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்);
வைத்தது அன்றி–இப்படி செய்து வைத்ததுமல்லாமல்
என்னுள் புகுந்தான்–என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான்
(இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக, நான்)
கோரம் மா தவம்-உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை
செய்தனன் கொல்–(முற்பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ?
அறியேன்-அறிகிறேனில்லை;
அரங்கத்து அம்மான்-ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு ஆரம்-பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான
மார்பு அது அன்றோ-அத்திருமார்பன்றோ
அடியேனை-தாஸனான என்னை
ஆள் கொண்டது-அடிமைப்படுத்திக் கொண்டது.

காலமுள்ளதனையும் ப்ராயச்சித்தம் பண்ணினாலும் கழிக்க வொண்ணாதபடி வளர்ந்து செல்லுகிற
என் தொல்லைத் தீவினைகளை வாஸனையோடுகூட அடியறுத்து அடியேனை நிஷ்கல்மஷனாக்கித்
தன்னிடத்தில் பக்ஷபாதமுடையவனாக ஆக்கிக்கொண்ட மாத்திரத்தோடு நில்லாமல்,
இத்தனை காலமாய்ப் பாவங்களுக்கு இருப்பிடமாயிருந்த என்னெஞ்சை அப்பாவங்களை யோட்டிவிட்டுத்
தனக்கிருப்பிடமாக்கிக் கொண்டான் ஸ்ரீ ரங்கநாதன் என்கிறார் முன் அடிகளில்.

“கல்லும் கனைகடலும் வைகுந்தவானொடும், புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்-
வெல்ல நெடியான் நிறங்கரியானுள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்” என்ற
பெரிய திருவந்தாதிப் பாசுரம் இங்கு அநுஸந்திக்கத் தகும்.

தன்வீட்டைத் தான் தான் ஆளவொண்ணாதபடி நெடுநாளாக ஆக்ரமித்துப் போந்த குறும்பர்களைச் சீற்றத்தோடு ஓட்டித்
துரத்திவிட்டு மேனாணிப்புடன் தன் வீட்டில் விஜயஞ்செய்கின்ற மஹாராஜன்போல,
அடியேனுடைய நெஞ்சை எம்பெருமான் தன்னதாக அபிமானித்து அரிய பெரிய காரியங்கள் செய்து
வந்து புகும்படிக்கீடாக நான் எந்த ஜந்மத்தில் என்ன தபஸ்ஸூ பண்ணினேனோ தெரியவில்லையே!
என்று தடுமாறுகிறார் மூன்றாமடியில்.

“பெண்ணுலாஞ் சடையினாலும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார் வெள்கிநிற்ப” என்றபடி-
மெய்யே தவம்புரிந்த பெரியோர்களும் இப்போது பெறாமல் வருந்தி நிற்க,
தமக்கு அசிந்திதமாக இப்பேறு வாய்த்தது தீவ்ரமானதொரு அபூர்வ தபஸ்ஸின் பலனாயிருக்கவேணுமென்றும்,
அத்தபஸ்ஸூ தம் முயற்சியால் நிகழ்ந்தல்லவென்றும்,
எம்பெருமானே இதற்கு நோன்புநோற்றவன் என்றும் இவருடைய உட்கருத்தாமென்க.

இனி, செய்தனன் என்பதைத் தன்மை வினைமுற்றாகக் கொள்ளாமல் படர்க்கை வினைமுற்றாகக் கொண்டு,
இப்படி என் நெஞ்சினுள் புகுவதற்கு எம்பெருமான் உபயகாவேரி மத்தியத்திலே நின்று கொண்டு என்ன கடுந்தவம் புரிந்தானோ?
என்பதாக உரைத்தருளின தூப்புற்பிள்ளை வியாக்கியானமும் மிக்க பொருத்தமுடைத்தேயாம்.

அந்த முநிவாஹநபோகத்தில், “இது அதிவாத கர்ப்பமாக உத்ப்ரேக்ஷித்தபடி” என்று ஊடே ஒருவரி வரைந்து
அச்சிட்டிருப்பது ஆது நிகர்களின் கைச் சரக்காயிருக்க வடுக்கும்.
ஓரடியானைப் பெறுதற்கு எம்பெருமான் படுகிற பாடு இப்பிச்சுக்களுக்கு என்ன தெரியும்?
அநாவ்ருத்தி ஸூத்ர ஸ்ரீபாஷ்யத்தில்
நச பரமபுருஷஸ்ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநி நம் ல்ப்த்வா” என்று எம்பெருமானார் அருளிச் செய்த
ஸ்ரீஸூக்தியில் லப்த்வா என்ற பரம ரஸத்தைப். பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளிற் பணிந்து கேட்கப் பெற்ற
நம் தேசிகன் திருந்தி உரைத்த இச் சுவடறிவார் ஆர் கொல்?

பாரம், கோரம், ஆரம் என்பவை வடசொற்களின் விகாரம். வாரம்-பக்ஷபாதம்.

பாரமாய
தொல்லைத் தீ வினைகளை வாசனை உடன் அடி அறுத்து
அடியேனை நிஷ் கல்மஷன் ஆக்கி
தன்னிடத்தில் பஷ பாதம் உடையன் ஆக்கிக் கொண்ட மாத்ரம் நில்லாமல்
தனக்கே இருப்பிடம் ஆக்கிக் கொண்டான்

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து
நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் -பெரிய திருவந்தாதி

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெல்கி நிற்ப –
தமக்கு அசிந்திதமாக இந்த பேறு வாய்த்ததே
எம்பெருமானே இதற்கு நோன்பு நோற்றவன்
செய்தனன் -தன்மை வினை முற்று -படர்க்கை வினைமுற்று
ஒரு அடியானை பெற இவன் படும் பாடு யார் அறிவார்
அநாவ்ருத்தி சூத்திர ஸ்ரீ பாஷ்யம் எம்பெருமானார்
நச பரம புருஷஸ் சத்ய சங்கல்ப அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞானி நம் லப்த்வா –
லப்த்வா -பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளில் பணிந்து கேட்கப் பெற்ற தேசிகன்
திருந்தி உரைத்த சுவடு அறியாமல்
அதிவாத கர்ப்பமாக உத்ப்ரேஷித்த படி -என்று ஊடே வரி
ஆது நிகர்களின் கைச் சரக்காய் இருக்க அடுக்கும்-

வாரம் -பஷ பாதம்

———————————————-

ஒருகாலத்திலே, பரமசிவன், தன்னைப் போலவே பிரமனும் ஐந்து தலையுடையனா யிருப்பது பலரும் பார்த்து
மயங்குவதற்கு இடமாயிருக்கிறதென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட,
அக் கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக் கொள்ளுதலும், அவன் ‘இதற்கு என் செய்வது?’ என்று கவலைப்பட,
தேவர்களும் முனிவர்களும் ‘இப்பாவந்தொலையப் பிச்சை யெடுக்க வேண்டும்;
என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்ட அகலும்’ என்று உரைக்க,
சிவபிரான் பலகாலம் பலதலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக,
பின்பு ஒருநாள் பதரிகாஸ்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயண மூர்த்தியை வணங்கி இரந்தபோது,
அப்பெருமான்: ‘அக்ஷயம்’ என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்பதாம்.

இவ் வரலாற்று முகத்தால், ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தை வெளியிட்டவாறு.
ஈஸ்வரனென்று பெயருடைய ருத்ரன் கர்ம  வச்யனென்பதும்,
தன்னைத் தான் ரக்ஷித்துக் கொள்ள மாட்டாத இவன் வேறொருவர்க்கும நிரபேஷ ரக்ஷகனாக மாட்டானென்பதும்,
ஸ்ரீமந்நாராயணனே ஸர்வாநிஷ்ட நிவர்த்தகன் என்பதும் நன்கு வெளியாகும்–

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-

பதவுரை

துண்டம்–ஒரு துண்டாயிருக்கிற (கலா மாத்ரமான)
வெண்பிறையன்–வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய
துயர்-(பிச்சை யெடுத்துத் திரிந்த) பாதகத்தை
தீர்த்தவன்–போக்கினவனும்
அம் சிறைய வண்டு–அழகிய சிறகையுடைய வண்டுகள்
வாழ்–வாழ்தற்கிடமான
பொழில் சூழ்–சோலைகள் சூழப் பெற்ற
அரங்கம் நகர்-திருவரங்கப் பெரு நகரிலே
மேய-பொருந்தி யிரா நின்ற
அப்பன்-ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய
அண்டர்-அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம்–அண்டங்களையும்
பகிரண்டம்-அண்டாவரணங்களையும்
ஒரு மா நிலம்-ஒப்பற்ற மஹா ப்ருதிவியையும்
எழு மால் வரை-ஏழு குல பர்வதங்களையும்
முற்றும்-சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும்
உண்ட-அமுதுசெய்த
கண்டம் கண்டீர்-திருக்கழுத்துக்கிடீர்
அடியேனை-தாஸனான என்னை
உய்யக் கொண்டது-உஜ்ஜீவிப்பித்தது

அஞ்சிறைய வண்டு என்றது ஞானானுட்டானங்கள் நன்கு அமைந்த ஆச்சார்யர்களை க் கூறியபடி.
பலவகை மலர்களிலு ஞ்சென்று அவற்றின் ஸாரமான தேனை அம்மலர்கள் கெடாதபடி கவர்ந்து
உண்ணுந்தன்மை யனவான வண்டுகளை, பலவகை சாஸ்த்ரங்களிலும் அவகாஹித்து அவற்றின் ஸாரமான
தத்துவப் பொருளை அந் நூல்கள் நலிவுபடாதபடி க்ரஹித்து அநுபவிக்குந் தன்மையரான ஆச்சார்யராகச் சொல்லத் தட்டில்லை.

சிறகுகள் வண்டுகளின் கமநத்துக்கு ஸாதநமாவதுபோல்
ஜ்ஞாநாநுஷ்டா நங்கள் உன்னதகதிக்கு ஸாதநமாமென்க.

காரணாவஸ்தையில் எல்லாக் காரியங்களையும் தன்பக்கலில் உபஸம்ஹரித்துப் பின்பு ஸ்ருஷ்டிக்குமாறு
“வெற்றிப் போர்க் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட” என்றபடி
ஸகல பதார்த்தங்களையும் பிரளயப் பெரு வெள்ளத்தில் நின்றும் தப்ப வைத்துத் தன் திருவயிற்றிலே அடக்கி நோக்கின
பெரு நன்றியையும், இப்போதும் தம்மை ஸம்ஸார ஸாகரம் விழுங்காதபடி ஆட்படுத்திக்கொண்ட உபகாராதிசயத்தையும்
ஆநந்தமாகப் பேசுகிறார் பின்னடிகளில்.

பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில்-
“சந்த்ரனுடைய க்ஷயத்தைப்போக்கினானென்றுமாம்” என்று அர்த்தாந்தரமும் அருளிச் செய்யப்பட்டிருப்பதால்
“துண்டவெண்பிறையின்” என்றும் ஒருபாடமுண்டு போலே.

அண்டம், பஹிரண்டம், கண்டம்-வடசொற்கள்.

துண்டம்
அஞ்சிறைய வண்டு -ஞானம் அனுஷ்டானங்கள் நன்கு அமைந்த ஆரியர்கள்
சாஸ்த்ரங்களில் அவஹாகித்து
சாரமான தத்துவ பொருளை நூல்கள் நலிவு படாத படி க்ரஹித்து
அனுபவிக்கும் தன்மையான ஆச்சார்யர்

வெற்றிப் போர் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட –
பிரளய வெள்ளத்தில் நின்றும் திரு வயிற்றிலே அடக்கி நோக்கி அருளிய
சம்சார சாகரம் விழுங்காதபடி ஆட்படுத்திக் கொண்ட உபகார அதிசயம்

பிறையன் பிறையின்
சந்தரன் உடைய ஷயத்தை போக்கி அருளினவன் என்றுமாம்

————————————————————–

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7–

பதவுரை

கையின்–திருக் கைகளில்
ஆர்-பொருந்தியிருக்கிற
சுரி சங்கு-சுரியையுடைய திருச்சங்கையும்
அனல் ஆழியர்-தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்,
நீள் வரை போல்-பெரியதொரு மலை போன்ற
மெய்யனார்-திருமேனியை யுடையராய்
துளபம் விரை ஆர்-திருத்துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்)
கமழ்-பரிமளியா நின்றுள்ள
நீள்முடி–உயர்ந்த திருவபிஷேகத்தை யுடையராய்
எம் ஐயனார்–எமக்கு ஸ்வாமியாய்
அணி அரங்கனார்-அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண் வளர்ந்தருள்பவராய்
அரவு இன் அணை மிசை மேய–திருவனந்தாழ்வானாகிற இனிய திருப்பள்ளியின் மீது பொருந்திய
மாயனார்–ஆச்சரியச் செய்கைகளை யுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய
செய்ய வாய்–சிவந்த திருப்பவளமானது
என்னை-என்னுடைய
சிந்தை-நெஞ்சை
கவர்ந்தது-கொள்ளை கொண்டது;
ஐயோ–(ஆநந்தாதிசயக் குறிப்பு.)

திருக்கைக்கு ஆயுதமாகவும் ஆபரணமாகவும் விளங்குகின்ற திருவாழி திருச்சங்குகளையுடையனாய்,
மாம்ஸ சக்ஷூஸ்ஸூக்களான நம் போன்றவர்களும் கண்ணாரக் காணும்படியாகப்
பெரிய பச்சைமாமலை போன்ற மேனியையுடையனாய்,
அனைவரையும் ரக்ஷிக்க ஸித்தனாயிருக்கும்படியை விளங்குகின்றனாய்,
திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொள்பவனான அழகிய மணவாளனுடைய
கொவ்வைக் கனி போற் சிவந்த திருவதரமானது என் நெஞ்சைக் கவர்கின்றதே! இதற்கு என் செய்வேன்! என்கிறார்.

எம்பெருமானை முழுக்க அநுபவிக்கப் பார்த்திருக்கையில் இடையிலே நெஞ்சைக் கொள்ளை கொண்டுவிட்டதே அதரம்!
இதற்கென் செய்வேன் என்பார் ஐயோ! என்கிறார்.

“பண்டே நெஞ்சு பறி கொடுத்த வென்னை அநியாயம் செய்வதே! என்று கூப்பிடுகிறார்” என்பர் பெரியவாச்சான்பிள்ளை.

“ஐயோ வென்றது-ஆச்சர்யத்தை யாதல், அநுபவிக்க அரிதான படியையாதல், அநுபவ ரஸத்தையாதல் காட்டுகிறது” என்பர் தூப்புற்பிள்ளை.

சுரி-சங்குக்கு உள்ளதொரு லக்ஷணம்.

கையினார்
சுரி -சங்குக்கு உள்ளதொரு லஷணம்
ஐயோ
பண்டே நெஞ்சு பறி கொடுத்த என்னை அநியாயம் செய்வதே
ஆச்சர்யம்
அனுபவிக்க அரிதான படியை யாதல்
அனுபவ ரசத்தை யாதல்

———————————————————-

எப்போதும் அழகிய மணவாளனுடைய திருக் கண்களின் பெருமையையே தாம் வாய் வெருவி,
பலரும் ‘இவன் பேயன்’ என்று ஏசும்படியான உன்மத்த நிலைமையை அடைந்துவிட்டதாக அருளிச் செய்கிறார்.

“ஏழையராவியு ண்ணுமிணைக் கூற்றங்கொலோவறியேன்,
ஆழியங்கண்ணபிரான் திருக்கண்கள் கொலோவறியேன்,
சூழவுந்தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றுங்கண்டீர்,
தோழியர்காளன்னைமீர்! என்செய்தேன் துயராட்டியேனே” என்று திருக் கண்களில் ஈடுபட்டு
நம்மாழ்வார் பட்டபாடு இவரும் படுகிறார் போலும்–

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–

பதவுரை

பரியன் ஆகி–மிகவும் ஸ்தூலமான வடிவை யுடையனாய்க் கொண்டு
வந்த–(ப்ரஹ்லாதனை நலிய) வந்த
அவுணன்–அஸூரனான இரணியனுடைய
உடல்–சரீரத்தை
கீண்ட-கிழித்துப் பொகட்டவனும்,
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்கட்கும்
அரிய-அணுக முடியாதவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பிரான்-மஹோபகாரகனும்
அரங்கத்து-கோயிலில் எழுந்தருளியிருக்கிற
அமலன்-பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய
முகத்து–திருமுக மண்டலத்தில்
கரிய ஆகி–கறுத்த நிறமுடையவையாய்
புடை பரந்து–விசாலங்களாய்
மிளிர்ந்து–பிரகாசமுடையவையாய்
செவ்வரி ஓடி–செவ்வரி படர்ந்திருப்பனவாய்
நீண்ட–(காதுவரை) நீண்டிருப்பவனாய்
பெரிய ஆய-பெருமை பொருந்தியவையுமான
அக் கண்கள்–அந்தத் திருக்கண்களானவை
என்னை-அடியேனை
பேதைமை செய்தன–உந்மத்தனாகச் செய்துவிட்டன.

அவுணனுடல் கீண்ட வரலாறு:-
தனித்தனி தேவர் விலங்கு முதலிய பிராணிகளாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும்
வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமுண்டாகாதபடி வரம்பெற்ற இரணியன்,
தேவர் முதலியவர்களுக்கும் கொடுமைகள் இயற்றித் தன்னையே கடவுளாக அனைவரும் வணங்கும்படி செய்து வருகையில்,

அவனது மகனான ப்ரஹ்லாதாழ்வான், இளமை தொடங்கி மஹாவிஷ்ணுபக்தனாய் தந்தையின் கட்டளைப்படி
முதலில் அவனது பெயரைச் சொல்லிக் கல்வி கற்காமல் நாராயணநாமஞ் சொல்லி வரவே கடுங்கோபங் கொண்ட இரணியன்
ப்ரஹ்லாதனைத் தன்வழியில் இணக்குவதற்குப் பலவாறு முயன்றவளவிலும் அங்ஙனம் வழிபடாத
அவனைக் கொல்லுவதற்கு என்ன உபாயஞ்செய்தும் அவன் திருமாலருளால் இறவாதொழிய,

ஒருநாள் ஸாயங்காலத்தில் தந்தை மைந்தனை நோக்கி ‘அடா! நீ சொல்லும் நாராயணன் என்பான் எங்கு உளன்? காட்டு’ என்ன;
அப்பிள்ளை ‘தூணிலும் உளன் துரும்பிலும் உளன், எங்கும் உளன்’ என்று உறுதியாய்ச் சொல்ல,
உடனே இரணியன் ‘இங்கு உளனோ?’ என்று சொல்லி எதிரில் நின்ற ஒரு தூணைப் புடைக்க,
அதிலிருந்து திருமால் உடனே மனிதரூபமும் சிங்கவடிவமுங் கலந்த நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து
வாசற்படியில் தன் மடிமீது வைத்துக்கொண்டு தனது திருக்கை நகங்களால் அவன் மார்பைப் பிளந்து அழித்திட்டு
ப்ரஹலாதனுக்கு அருள் செய்தான் என்பதாம்.

எம்பெருமானது அருள் ஒன்றையே நம்பி அவனுடைய சரணமே சரணம் என்ற உறுதியின்றித் தன் முயற்சியாலே
அவனைப் பெறலாம் என்று நினைப்பவர்கள் தேவர்களாயிருப்பினும் அவர்கட்கும் அருமைப்படுவான் எம்பெருமான் என்பார்,
அமரர்க்கு அரிய என்றார்.

திருக்கண்களை வருணிப்பன பின்னடிகள். கறுத்த நிறமுடைத்தாதல், விசாலமாயிருத்தல், ஒளிபொருந்தியிருத்தல்,
செவ்வரிபடர்ந்திருத்தல் (சிறுகொடிபோன்ற சிவந்தரேகை ஒடுதல்,) காதளவும் நீண்டிருத்தல்
இவை கண்களின் சிறப்புகுறிப்பா மென்க.

பேதைமை – அறிவில்லாமையும், உந்மத்தமும்.

திருக் கண்களில் ஈடுபட்டு பேதையேன் என்கிறார்
பேதைமை அறிவில்லாமையும் உன்மத்தமும்

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்கொலோ அறியேன்
ஆழி யம் கண்ணபிரான் திருக் கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோற்றும் கண்டீர்
தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே-போலே –
கறுத்த
விசாலமான
ஒளி பொருந்தி
செவ்வரி படர்ந்து -சிறு கொடி போன்ற சிவந்த ரேகை
காதளவும் நீண்டு இருத்தல்
பல விசேஷணங்கள் கொண்டு அனுபவிக்கிறார்
அமரர்க்கும் அரியவன் –

—————————————————-

தனித்தனி ஒவ்வொரு அவயவத்திலும் ஈடுபட்டுபோந்த ஆழ்வார்,
அவயவியான திருமேனியை அநுபவித்துத் தமது நெஞ்சு பரவசமாகப் பெற்ற பெருமையைப் பேசுகிறார் இதில்.

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

பதவுரை

மா-பெரிதான
ஆல மரத்தின்–ஆல மரத்தினுடைய
இலை மேல்–(சிறிய) இலையிலே
ஒரு பாலகன் ஆய்-ஒரு சிறு பிள்ளையாகி
ஞாலம் ஏழும் உண்டான்–ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும்
அரங்கத்து-கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
கோலம்-அழகிய
மா–சிறந்த
மணி ஆரமும்–ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்
முத்து தாமமும்–முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்)
முடிவு இல்லது–எல்லை காண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்
ஓர் எழில்–ஒப்பற்ற அழகை யுடையதும்
நீலம்–கரு நெய்தல் மலர் போன்றதுமான
மேனி-திருமேனி யானது
எனது நெஞ்சினுடைய
நிறை–அடக்கத்தை
கொண்டது–கொள்ளை கொண்டு போயிற்று;
ஐயோ! இதற்கென் செய்வேன்? என்கிறார்.

ஓர் அவாந்தர ப்ரளயத்தில், ஸாகோபஸகமாக மிகப் பெரியதாய் வளர்ந்திருப்பதொரு ஆலமரத்தின்
ஒரு சிறு பசுந்தளிரிலே, தாயும் தந்தையுமில்லாததொரு தனிக்குழவியாய்ப் பள்ளி கொண்டு ஸகல லோகங்களையும்
திருவயிற்றிலே வைத்து நோக்கியருளின திருவரங்கமானது ஸகல திருவாபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள
கரிய திரு மேனியானது எனக்கு ஸேவை ஸாதித்து என் நெஞ்சினது காம்பீர்யத்தைக் கொள்ளை கொண்டு போயிற்றே! என்கிறார்.

என் நெஞ்சினை
“ஐயோ!-பச்சைச் சட்டை யுடுத்துத் தனக்குள்ளதை யடையக் காட்டி எனக்குள்ளதை யடையக் கொண்டானே!”
என்பர் பெரியவாச்சான் பிள்ளை.

“நான் எல்லாவற்றையும் நின்று நின்று அநுபவிக்க வேணுமென்றிருக்க, அநுபவ பரிகரமான என் நெஞ்சைத்
தன் பக்கலிலே இழுத்துக் கொள்வதே! ஐயோ! என்கிறார்” என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

கோலமா மணி யாரங்களையும்; முத்துத் தாமங்களையும், முடிவு இல்லாத அழகையும்,
நீலநிறமுடைய திருமேனி என்ற உரைத்தலுமாம்.

நெஞ்சை நிறை கொள்வதாவது-மோஹிக்கச் செய்கை என்க.
நெஞ்சினை- உருபு மயக்கம்.

ஆல மா
ஐயோ
பச்சை சட்டை உடுத்துத்
தனக்கு உள்ளதை அடையக் காட்டி
எனக்கு உள்ளதை அடையக் கொண்டானே -பெரியவாச்சான் பிள்ளை

நான் எல்லா வற்றையும் நின்று நின்று
அனுபவிக்க வேணும் என்று இருக்க
அது பவ பரிகரமான என் நெஞ்சை தன் பக்கலிலே
இழுத்துக் கொள்வதே
ஐயோ -என்கிறார் -நாயனார்

கோலமா மணி ஆரங்களையும்
முத்துத் தாமங்களையும்
முடிவு இல்லாத அழகையும்
நீல நிறத்தையும் உடைய திரு மேனி

நெஞ்சினை உருபு மயக்கம்
நெஞ்சை நிறை கொள்வது -மோஹிக்கச் செய்கை

——————————————————

இவ்வாழ்வார் ‘அடியேன்’ என்னுமதொழிய இப்பிரபந்தம் தலைக்கட்டுமளவிலும்
தம்முடைய பேரும் ஊரும் பேச மறக்கும்படி தாம்பெற்ற அநுபவத்துக்கு இனி ஒருவிச்சேதம் (இடையூறு)
வாராதபடி பெரிய பெருமாள் அருள் புரிந்தமையைக் கண்டு வியந்து
அப் பெரிய பெருமாளுடைய திருமேனியிலேயே தாம் ஒரு நீராக லயம் பெற்ற படியைப் பேசித் தலைக் கட்டுகிறார்.

ஸூந்தரபாஹூஸ்தவத்தில்,
-யசோதாங்குள் யக்ரோந்நமித சுபுகாக்ராணமுதிதௌ”
கபோலாவத்யாபி ஹ்யநு பரத தத்தரஷகமகௌ” என்ற ஆழ்வான்,
பண்டு யசோதைப் பிராட்டி முத்தங்கொடுத்த சுவடு இன்றும் அழகர் திவ்ய கபோலங்களில்
திகழா நிற்குமென்று அநுபவித்தாற் போல,
இவரும், பண்டு வெண்ணெயுண்ட முடை நாற்றம் இன்றும் பெரிய பெருமாள்
திருப்பவளத்திலே கமழா நிற்பதாக அநுபவிக்கிறார் –

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–

பதவுரை

கொண்டல் வண்ணனை–காள மேகம்போன்ற வடிவையுடையனும்
கோவலன் ஆய் வெண்ணெய் உண்ட வாயன்–கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும்
என் உள்ளம்–என்னுடைய நெஞ்சை
கவர்ந்தானை–கொள்ளை கொண்டவனும்
அண்டர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனும்
அணி அரங்கன்–(பூமண்டலத்துக்கு) அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும்
என் அமுதினை–எனக்குப் பரம போக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை
கண்ட கண்கள்–ஸேவிக்கப் பெற்ற (பரமபத நாதனையும்)
காணா–காண மாட்டா.

கொண்டல் வண்ணன் –
கடலிலுள்ள நீரை யடங்கலும் முகந்து கொண்டு காவேரீ மத்தியில் வந்து படிந்ததொரு காளமேகம் போன்று
கண்டாருடைய விடாயைத் தீர்க்க வல்ல திருமேனியையுடையன்:
அன்றி,
மேடு பள்ள வாசி யின்றித் தாழ்ந்தார் உயர்ந்தாரனைவரும் உஜ்ஜீவிக்கும்படி
காருண்ய ரஸத்தை வர்ஷிக்குமவன் என்றுமாம்.
கொண்டல்-தொழிலாகு பெயர்.

கோவலனாய் இத்யாதி–
தசரத சக்ரவர்த்தி, தன்னுடைய ராஜைஸ்வர்யத்தைப் புஜிக்கைக்கு ‘எனக்கொரு பிள்ளை வேணும்’ என்று
நோன்பு நோற்றுப் பெருமாளைப் பெற்றாற் போலே,
ஸ்ரீநந்தகோபரும் “ கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன்பெற்ற ஆனாயன்” என்றபடியே
திருவாய்ப்பாடியில் கவிய ஸம்ருத்தி யடங்கலும் பாழ் போக வொண்ணாதென்று இத்தை அமுது செய்கைக்காக
நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளையாய்த்து ஸ்ரீக்ருஷ்ணன்.
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்துபார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறாநிற்குமாம்.

உப்புச்சாறாய் எட்டாநிலத்திலே யிருக்கும் தேவர்களம்ருதம் போலன்றிப்
பரம மதுரமாய்ப் பரம ஸூலபமாயிருக்கும் நான் கண்ட அமுதம் எனபார் என் அமுதினை என்கிறார்.

‘அமுதனை’ என்று சிலர் ஒதுவர்; அப்பாடம் ரஸமற்றதா மென மறுக்க;
ஆழ்வார்க்கு அம்ருததாதாத்மியம் விவக்ஷிதமே யல்லது அம்ருத தாத்ரூப்யம் விவக்ஷிதமன்று காணீர்.
“அளப்பரிய ஆரமுதை” என்றார் திருமங்கையாழ்வாரும்.

மற்றொன்றினைக் காணா –
அம்ருத பாநம் பண்ணினவர்கள் பாலையும் சோற்றையும் கண்ணெடுத்துப் பார்ப்பர்களோ?
பாவோ நாந்யத்ர கச்சதி” என்று திருவடி சொன்னாப்போலே இவரும் மற்றொன்றினை என்கிறார்-
பேர் சொல்லவும் கூசுகிறபடி பர வ்யூஹாதிகள், மற்றுள்ள அர்ச்சாவதாரங்கள் ஒன்றையும் காண மாட்டா என்கை.

“பண்கொள் சோலைவழுதிநாடன் குருகைக்கோன் சடகோபன்” என்றும்,
“அங்கமலத்தடவயல்சூழ் ஆலிநாடன் அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம்,
கொங்குமலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்றவேற் பரகாலன் கலியன்” என்றும்
மற்றுள்ள ஆழ்வார்கள் தம் ஊரையும் பேரையும் பாசுரக் கணக்கையும் பரக்கச் சொல்லிக் கொண்டாற்போலே
இவர் ஒன்றும் சொல்லிக் கொள்ளாதொழிந்ததென்? எனில்;
“மற்றொன்றினைக் காணா” என்ற மற்றொன்றில் இவையும் சேர்ந்து விட்டன போலும்
பர வ்யூஹாதிகளையும் வேறு அர்ச்சாவதார எம்பெருமான்களையும் மறந்தாற்போலே
தம்மையும் தம் ஊரையும் பாட்டையும் எல்லாவற்றையும் மறந்தொழிந்தாரென்ப.

அழகியமணவாளப்பெருமாள் நாயனார் வியாக்கியான ஸ்ரீஸூக்தி-
“அல்லாதார் திருநாமப் பாட்டுப் போலே தம்மைச் சொல்லிற்றிலர் –
‘விஸஸஹ– தஷாதா நா-விஸஸ்மார ததாத்மாநம்’ என்கிறபடியே தாம் போக ப்ரவணராய்த்
தம்மை மறக்கையாலே.
பலம்- ஸதாபச்யந்தி யாகையாலே அது இங்கே ஸித்திக்கையாலே
பலத்துக்குப் பலம் வேணுமோவென்று பலஞ் சொல்லிற்றிலர்.”

இப்பாட்டு அருளிச் செய்தவுடனே
பெரிய பெருமாள் அத் திருமேனியோடு ஆழ்வாரை அங்கீகரித்தருள,
அனைவருக்கான அப் பிரானது திருமேனியிலே அந்தர்ப்பவித்துக்
காய்ந்த இரும்பு உண்ட நீராயினர் என்று-
ஸம்ப்ரதாயம் வல்ல பெரியோர்கள் அருளிச் செய்யக் கேட்டிருக்கை யாயிருக்கும்.

கொண்டல்
அடியேன் என்னுமது ஒழிய
இப் பிரபந்தம் தலைக் கட்டும் அளவும்
தம்முடைய ஊரும் பேரும் பேச மறக்கும் படி
தாம் பெற்ற அனுபவத்துக்கு விச்சேதம் வாராதபடி
பெரிய பெருமாள் அருள் புரிந்தமை கண்டு வியந்து
பெரிய பெருமாள் திரு மேனியிலே நீராக லயம் பெற்ற படியைப் பேசித் தலைக் கட்டுகிறார்

ஆழ்வான் பண்டு யசோதை முத்தம் கொடுத்த சுவடு அழகர்
கபோலங்களில் திகழா நிற்கும்
என்று அனுபவித்தால் போலே
இவரும்
வெண்ணெய் உண்ட முடை நாற்றம் பெரிய பெருமாள் திருப் பவளத்தில் கமழா நிற்பதாக அனுபவிக்கிறார்
சக்கரவர்த்தி -ராஜ ஐஸ்வர்யம் புஜிக்க எனக்கு ஒரு பிள்ளை வேணும் நோற்றுப் பெற்றால் போலே
ஸ்ரீ நந்த கோபரும்
கானாயன் கடிமனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன் -என்றபடி
இதற்கே நோன்பு நோற்று பெற்ற பிள்ளை அன்றோ

பரம மதுரமாய்
பரம சுலபமாய்
இருப்பதால் என்னமுதம் என்கிறார்
உப்புச் சாறு அல்லவே
அமுதனை -ரசம் அற்ற பாடம்
அமுதினை என்பதே சரி -ஆழ்வாருக்கு அம்ருத தாதாமியம் விவஷிதமே அல்லது
அம்ருத தாத்ரூபம் விவஷிதம் அன்று
அளப்பரிய ஆரமுதை -என்றார் திரு மங்கை ஆழ்வாரும் –

மற்று ஒன்றினைக் காணா
அம்ருத பானம் பண்ணினவர்கள்
பாலையும் சோற்றையும் கண் எடுத்துப் பார்ப்பார்களோ
பாவோ நான்யத்ர கச்சதி போலே
பேரையும் சொல்ல கூசி மற்று ஒன்றை என்று அருளுகிறார்
பர வியூஹாதிகள் மற்றைய அர்ச்சா ஸ்தலங்கள் எல்லாவற்றையும்
தம் ஊரையும் பேரையும் பாட்டையும் எல்லா வற்றையும் மறந்து அருளுகிறார்

அல்லாதார் திரு நாம பாட்டுப் போலே தம்மைச் சொல்லிற்றிலர்
விசஸ்மார ததாத்மா நம் -என்கிறபடி
தாம் போக பிரவணராய் தம்மை மறக்கையாலே
பலம் -சதா பஸ்யந்தி -யாகையாலே
அது இங்கே சித்திக்கையாலே
பலத்துக்கு பலம் வேணுமோ என்று பலம் சொல்லிற்றிலர்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -73-87–திவ்யார்த்த தீபிகை –

September 17, 2014

(பூவையுங்காயாவும்) கீழ்ப்பாடில் “நிகரிலகு காருருவா” என்று விலக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை அநுஸந்திக்கவே,
போலிகண்டு மேல்விழும்படியான அளவிறந்த அன்பு அத்திருமேனியிலே தமக்கு விளைந்தபடியை அருளிச்செய்கிறாரிதில்.
முதலடியின் முடிவிலுள்ள ‘பூக்கின்ற’ என்ற விசேக்ஷணம் (அடைமொழி) பூவை காயா நீலம் எல்லாவற்றிலும் அந்வயிக்கம்.
அப்போதுõன் மலர்கின்ற பூவைப்பூ, காயாம்பூ, நீலேற்பலம், கழுநீர்ப்பூ என்னுமிவற்றை நான் எப்போதெப்போது காண்கிறேனோ
அவ்வப்போதிலெல்லாம் எம்பெருமானுருவைக் கண்டதாகவே நினைத்து ஆவியும் உடலும் பூரிக்கப் பெறுகின்றேன் என்றாயிற்று.

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-

பதவுரை

பூவையும்–பூவைப்பூவையும்
காயாவும்–காயாம் பூவையும்
நீலமும்–கரு நெய்தல் பூவையும்
பூக்கின்ற–புஷ்பிக்கின்ற
பிரான்–எம்பெருமானுடைய
உருவே என்று–திருவுருவமே என்ற கொண்டு
பாவியேன்–அடியேனுடைய
காவி மலர்–செங்கழுநீர்ப் பூவையும்
என்றும் காண் தோறும்–பார்க்கிற போதெல்லாம்
அவ் அவை எல்லாம்–அந்தந்த மலர்களெல்லாம்
மெல் ஆவி–மிருதுவான உயிரும்
மெய்–சரீரமும்
மிகவே பூரிக்கும்–மிகவும் பருத்து வளர்கின்றது

பூக்கின்ற பூவையும் காயாவும் நீலமும்–புஷ்ப்பிக்கின்ற
பூவைப் பூவையும் -காயம் பூவில் அவாந்தர பேதம் பூவைப் பூ –
மல்லிகை வனமாலை மௌவல் மாலை -பெரியாழ்வார் போலே
காயாம்பூவையும்-கரு நெய்தல் பூவையும்

பூக்கின்ற காவி மலர்
புஷ்பிக்கின்ற-செங்கழு நீர் பூவையும்

என்றும் காண் தோறும் –
பார்க்கிற போது எல்லாம்-காண் தோறும் என்னாமல்– என்றும் காண் தோறும் என்றது-
இந்த பிரமம் ஒரு கால் இரு கால் அன்று-பிரமிப்பதும் தெளிவதும் மீண்டும் பிரமிப்பதும் நித்யமாக செல்லும்

பாவியேன் மெல்லாவி
அடியேனுடைய-மிருதுவான உயிரும்-பாக்யவான் -விபரீத லஷணை யால்-
இப்படி அன்பு விளைந்த உள்ளம் கொண்டேனே என்றுமாம்

மெய் மிகவே பூரிக்கும்
சரீரமும்-மிகவும் பருத்து ஊருகின்றன

அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று
அந்த அந்த மலர்கள் எல்லாம்-எம்பெருமானுடைய திரு வுருவமே என்று கொண்டு-

பூவை யென்பது காயாம்பூவில் ஒரு அவாந்தரபேதம்; “மல்லிகைவனமாலை மௌவல்மாலை” (பெரியாழ்வார் திருமொழி) என்றாற்போல.
“காண்தோறும் ” என்னுமளவே போதுமாயிருக்க, “என்றும் காண்தொறும்” என்றதென்னென்னில்;
போலிகண்டு பூரித்தலென்கிற இந்த ப்ரமம் ஒருகாலிருகாலன்று; ஒருதடவை அவற்றைக்கண்டு பூரித்த பின்பு
‘ஓ! நாம் ப்ரமித்தோம்; இவை வெறும் புஷ்பங்களே யொழிய எம்பெருமானது திருவுருவமல்ல” என்று தெளிந்து கொண்டாலும்,
அடுத்த க்ஷணத்தில் இது மறந்து போய், பழைய ப்ரமமே அநுவர்த்திக்கும்;
இப்படியே ப்ரமிப்பதும் தெளிவதும், ப்ரமிப்பதும் தெளிவதுமாய் நித்தியம் செல்லுமென்பது தோன்றும்.

“பாவியேன்மெல்லாவி” என்றவிடத்து, “பாவியேன்” என்றது விபரீதலக்ஷணையால் ‘பாக்யசாலியான என்னுடைய’ என்று பொருள்படவுங்கூடும்.
போலியான பொருள்களைக் கண்ட மாத்திரத்திலே ஆவியுமுடனும் பூரிக்கும்படியான பாக்கியம் எனக்கேயிறேயுள்ளது என்றவாறாம்.

“மெல்லாவியும் மெய்யும்” என்னவேண்டுமிடத்து “மெல்லாவிமெய்” என்றது- உம்மைத்தொகை.
பூரிக்கம் வடமொழித் தாதுவடியய்கப் பிறந்த வினைமுற்று.

————————————————————–

(என்றுமொருநான்) கீழப்பாட்டிற் சொன்னபடி போலிகண்டு மேல்விழும்படியான காதலர் கிளர்ந்திருக்கச் செய்தேயும்
அப்பெருமானைக் கண்ணாலே கண்டு அநுபவிக்கப்பெறாமையாலே வருந்தி,
‘பேரருளாளனான அப்பெருமான் தன் திருமேனியை நமக்குக் காட்டுகின்றானில்லையே!’ என்று தளர்ச்சி தோற்றப் பேசுகிறார்.
ஒழிவில் காலம் எல்லாம் அழுது கதறினாலும் -இயற்கையில் அருள் நிறைந்தவர்
ஆ நிரை காத்து அருளிய பிரான் அன்றோ-இது என்ன கொடுமை –

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-

பதவுரை

ஒரு நாள் ஒழியாமை-ஒருநாளும் தப்பாமல்
என்றும்–எந்நாளும்
யான் இரந்தால்–அடியேன் பிரார்த்தித்தால்,
குன்று குடை ஆக ஆ காத்த கோவலனார்–(முன்பு) கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திப் பசுக்களை ரக்ஷித்த கோபாலகிருஷ்ண பகவான்
ஒன்றும் இரங்கார்–சிறிதும் தயவு செய்கிறாரில்லை;
உரு காட்டார்–தன் திருமேனியைக் காட்டுகிறாரில்லை;
நெஞ்சே–ஓ மனமே!
புவி–நாமிருக்கும் இடம்
பெரிதே புடை தான்–(அவருடைய அருள் வெள்ளம் ஏறிப்பாய முடியாத) மிகப் பெரிய மேட்டு நிலமோ?

என்றும் ஒரு நாள் ஒழியாமை
என்று ஒரு நாளும் தப்பாமல்

யான் இரந்தால்
அடியேன் பிரார்த்தித்தால்

ஒன்றும் இரங்கார்-
சிறிதும் தயவு செய்கிறார் இல்லை –

உருக்காட்டார் –
தனது திரு மேனியைக் காட்டுகிறார் இல்லை

குன்று குடையாக ஆ காத்த கோவலனார்
முன்பு-கோவர்த்தன மலையை ஏந்தி-பசுக்களை ரஷித்த-கோபால கிருஷ்ண பகவான்

நெஞ்சே
ஒ மனமே

புடை தான் பெரிதே புவி
அவருடைய அருள் வெள்ளம் ஏறிப் பாய முடியாத-மிகப் பெரிய மேட்டு நிலமோ –

அவருக்கு நீர்மை இல்லை என்னப் போகாது இ றே
அவர் நீர்மை ஏறிப் பாயாத தோர் இடம் தேடி-எங்கே கிடந்தோம்

புடை மேடான இடம்
புடை பெரிது -விசாலமானது-விசாலமான இந்த பூமியிலே அவனது அருள் வெள்ளம் பாய ஒண்ணாத
எந்த மூலையிலே கிடந்தோம்-முந்தின  பொருளே சுவை உடைத்து-

நான் ஒழிவில்காலமெல்லாம் அல்லும் பகலும் கதறிக்கதறி வேண்டிக்கொண்டாலும் அப்பெருமான் சிறிதும் நம்மேல்
இரக்கம் காட்டுகின்றாரில்லையே!; அவர்க்கு இயற்கையாக அருள் கிடையாதென்றுதான் நாம் நினைக்கமுடியுமோ?
இந்திரன் பசிக்கோபத்தினால் ஏழு நாள் விடாமழை பெய்வித்தகாலத்திலே கோவர்த்தனத்தைக் குடையாகவேந்திநின்ற
கோக்களையும் கோவலரையும் பரிந்து காத்தருளின பரமதயாளுவன்றோ அவர்; அப்படிப்பட்ட பேரருளாளன்
நம்மேல் அருள் செய்கின்றிலனென்றால் இஃது என்ன கொடுமை!.

நெஞ்சே! புடைதான் பெரிதே புவி= இந்த வாக்கியத்தின் ஆழ்பொருளைக் கண்டறிந்து பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்யுமழகு பாரீர்; –
“அவர்க்கு நீர்மையில்லையென்னப்போகாதிறே; அவர்நீர்மை ஏறிப்பாயாததோரிடந்தேடி எங்கே, கிடந்தோம்!.’ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
மேடான இடத்தைப் புடையென்று சொல்வதுண்டாகையாலே, புவி புடை பெரிதே= நாமிருக்குமிடம்
(அவருடைய கருணைப் பெருவெள்ளம் ஏறிப்பாயமுடியாத) மேட்டுநிலமோ? என்றதாயிற்று.

இதற்கு மற்றொருபடியாகவும் பொருள் கொள்ளலாம்; “புடைபெரிது” என்றால் ‘விசாலமானது’ என்று ப்ரஸித்தமாகச்
சொல்லுவதுண்டாகையாலே அப்பொருளையே இங்குங்கொண்டு, ‘இந்தப் பூமி விசாலமன்றோ?” என்றதன் கருத்தாவது-
விசாலமான இந்த நிலவுலகத்திலே எம்பெருமா-னுடைய அருள்வெள்ளம் பாயவொண்ணாத எந்த மூலையிலே கிடந்தோம்! என்றதாகலாம்.
முந்தின பொருளே சுவையுடைத்து.

—————————————————————–

(புவியுமிருவிசும்பும்.) கீழ்ப்பாட்டில் “ஒன்றுமிரங்காருருக்காட்டார்” என்று வெறுத்துரைத்த ஆழ்வாரைநோக்கி எம்பெருமான்
“நீர் ஏனிப்படிவருந்துகின்றீர்; உமக்கு நாம் அருளாதிருக்கிறோமோ? உருக்காட்டாதிருக்கிறோமோ?
‘கல்லும் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்-வெல்ல,
நெடியான் நிறங்கரியானுள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்?’ (68) என்று உம்வாயாலே பேசினதும் மறந்தொழிந்ததோ?
உகந்தருளினவிடங்களெல்லாவற்றையும் விட்டிட்டு உம்முடைய நெஞ்சிலேயன்றோ நாம் நித்யஸந்நிதிபண்ணியிருக்கிறது” என்றருளிச்செய்ய,
ஆழ்வார் அது கேட்டுத் தேறி ஆநந்தத்துக்குப் போக்குவீடாக அப்பெருமானோடே போராடுகிறாரிதில்.

ப்ரஹ்மம் நீ -உபய விபூதி நாதன் -எனக்குள்ளே ஒரு மூலையில் அடங்கப் பெற்றதால் நானே ப்ரஹ்மம்-
இதனை நீயே ஆராய்ந்து பார் -என்கிறார்

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75

பதவுரை

ஊன் பருகு நேமியாய்–(அஸுர சரீரத்திலுள்ள) மாம்ஸங்களைக் கவர்கின்ற திருவாழி யாழ்வானைக் கையிலேந்தியுள்ள பெருமானே!,
புவியும்–இவ்வுலகமும்
இரு விசும்பும்–விசாலமான மேலுலகமும்
என் உள்ளாய்–என் பக்கல் இரா நின்றாய்:
யான் பெரியன்–நானே பெரியவன்;
நின் அகத்த–உன்னிடத்தேயுள்ளன;
நீ–உபய விபூதியையும் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற நீ
என் செவியின் வழி புகுந்து–என் காது வழியே புகுந்து
அவிவு இன்றி–ஒருநாளும் விட்டு நீங்காமல்
நீ பெரியை என்பதனை யார் அறிவார்–நீ பெரியனென்று அறிவாருண்டோ?
உள்ளு–இதை நீயே ஆலோசித்துப் பார்.

புவியும்
இவ்வுலகமும்

இருவிசும்பும்
விசாலமான மேல் உலகமும்

நின்னகத்த
உன்னிடத்தே உள்ளன

நீ
உபய விபூதியையும் உள்ளே-அடக்கிக் கொண்டு இருக்கிற நீ

என்செவியின் வழி புகுந்து
எனது காதின் வழியே புகுந்து

என்னுள்ளே –
என் பக்கல் இரா நின்றாய்

அவிவின்றி
அவிவு இன்றி-ஒரு நாளும் விட்டு நீங்காமல்

ஆனபின்பு

யான் பெரியன்-
நானே பெரியவன்

நீ பெரியை என்பதனை யார் அறிவார்
நீ பெரியவன் என்று அறிவார் உண்டோ

ஊன் பருகு நேமியாய்
அசூர ராஷசர்களின் சரீரத்தில் உள்ள-மாம்சங்களை கவர்கின்ற திருவாழி ஆழ்வானை திருக் கையிலே-ஏந்தி உள்ள பெருமானே

உள்ளு
இத்தை நீயே ஆலோசித்துப் பார் –
யான் பெரியன் -தனி வாக்யமாகவும்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் -என்பதனை தனி வாக்யமாகவும்-கொண்டு உரைக்கப் பட்டது
அங்கனம் அன்றிக்கே இரண்டையும் சேர்த்து-நான் பெரியவனோ நீ பெரியவனோ
இதைப் பிறரால் அறியப் போகாது-நீ தான் ஆராய்ந்து அறிய வேணும் -என்கை-

எம்பெருமானே! கீழுலகங்களும் மேலுகங்களுமாகிய வெல்லாம் உன்னிடத்தேயுள்ளன; அப்படி எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிரா
நின்ற நீ என் காது வழியாக என்னுள்ளே புகுந்து பேராமலிருக்கின்றாய்; ஆனாலும் ‘ப்ரஹ்மம்’ என்ற உனக்குப் பேராயிருக்கிறது.
எது எல்லாவற்றிற்காட்டிலும் பெரிதான வஸ்துவோ அது ப்ரஹ்மமென்னத்தகும்;
விபூதிகளைமாத்திரம் வஹித்துக்கொண்டிருக்கிற நீ பெரியவனா? அல்லது, விபூதிகளை வஹிக்கிற வுன்னையுங்கூடச் சேர்த்து
வஹிக்கிற நான் பெரியவனா? என்று ஆராயவேண்டாவோ? இதனை நன்கு ஆராய்ந்தால் நானே மிகப் பெரியவனானவேன்;
என்னுள்ளே ஒரு மூலையிலே அடங்கிக் கிடக்கவல்ல உன்னைப் பெரியவனென்று சொல்ல வொண்ணுமோ?
இதனை நீயே ஆராய்ந்து பார்- என்கிறார்.

“யான் பெரியன்” என்று தனி வாக்கியமாகவும் “நீ பெரியையென்பதனை யாரறிவார்” என்று தனிவாக்கியமாகவும் கொண்டு உரைக்கப்பட்டது.
இங்ஙனன்றியே இரண்டையும் சேர்த்து ஏக வாக்கியமாகவே உரைத்தலுமொக்கும்.
‘நான் பெரியவனோ நீ பெரியவனோ, இதைப் பிறரால் அறியப்போகாது; நீ தான் ஆராய்ந்து அறியவேணும்’ என்கை.

—————————————————————-

(உள்ளிலுமுள்ளந்தடிக்கும்) கீழ்ப்பாட்டிற் கூறியவடி எம்பெருமானை நெஞ்சால் அநுபவிக்கிற வளவிலேயே
நெஞ்சு பூரித்துத் தடிக்கிறபடியைப் பார்த்தால், மெய்யே பரமபதத்திற்சென்ற பரிபூர்ண ப்ரஹ்மாநுபவம் பண்ணப் பெறில்
உலகம் முழுவதையும் வியாபிக்கவல்லேனாம்படி குறைவின்றித் தடித்துவிடுவேன்போலுமென்கிறார்.

உருவற்ற நெஞ்சு தடிக்குமோ-ச்தூலிப்பது-ஒரு திருப் புளிய மரத்தின் பொந்தின் அடியில் இருந்து-
நெஞ்சாலே நினைக்கும் மாத்ரத்திலே-இப்படி பூரித்தோம் ஆகில்
என்னுடைய கரும பாசங்கள் தொலையும்படி-உன்னாலே கடாஷிக்கப் பெற்று
நலமந்தம் இல்லாதோர் நாட்டில் நித்யானுபவம் பண்ணப் பெற்றால்-பின்னை தடிப்பதற்கு இடம் போதாது போலும்-

ஸ்வரூபத்தால் நீ வியாபித்து இருப்பது போலே
நானும்-அப்படியே ஸ்வபாவத்தாலே வியாபித்து இருப்பேன் போலும் என்கிறார்-
உலகம் எல்லாம் பூரிக்க வல்லனாம் படி உடல் தடிக்கும் அளவு பேர் ஆனந்தம் அடைவேன் என்கிறார் இதில்

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப்படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என்கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-

பதவுரை

உலகு அளந்த மூர்த்தி–த்ரிவிக்ரம பகவானே,
உன்னை உள்ளிலும்–உன்னை(நெஞ்சில்) அநுஸந்தித்த மாத்திரத்திலும்
உள்ளம்–எனது நெஞ்சானது
துடிக்கும்–(ஸந்தோஷத்தினால்) பூரிக்கின்றது
வினை படலம் விள்ள–பாவங்களின் கூட்டங்கள் என்னை விட்டு ஒழிந்து போம்படி
விழித்து–உன்னாலே நான் கடாக்ஷிக்கப் பெற்று
உன்னை மெய்யுற்றால்–(பரமபதத்திலே வந்து) உன்னை உள்ளபடியே அடைந்து விட்டேனாகில்
உள்ள உலகு அளவும்–நீ வியாபித்திருக்கிற உலகமெங்கும்
யானும் உளன் ஆவன்–நானும் வியாபித்தவனாவேன்;
என் கொலோ–நான் சொல்லுகிற விது ஸம்பாவிதநதானோ?
உரை–நீயே சொல்லு.

உள்ளிலும் உள்ளம் தடிக்கும்
உன்னை நெஞ்சிலே அனுசந்தித்த-மாத்ரத்திலே-எனது நெஞ்சானது-சந்தோஷத்தினால் பூரிக்கின்றது

வினைப்படலம் விள்ள
பாபக் கூட்டங்கள்-என்னை விட்டு ஒழிந்து போம்படி

விழித்து
உன்னாலே கடாஷிகப் பெற்று

உன்னை மெய்யுற்றால்
பரம பதத்தில் வந்து-உன்னை உள்ளபடியே-அடைந்து விட்டேனாகில்

உள்ள உலகளவும்
நீ வியாபித்து இருக்கிற உலகு எங்கும்

யானும் உளனாவன்
நானும் வ்யாபித்தேன் ஆவேன்

என்கொலோ உலகளந்த மூர்த்தி உரை
த்ரிவிக்ரம பகவானே-நான் சொல்லும் இது சம்பாவிதம் தானோ-நீ சொல்லு-

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் = பகவத் விஷயாநுஸந்தாநத்தினால் தமக்க உண்டாகிற ஆநந்த மிகுதியை அறிவிப்பதான
அதிசயோகதியாமிது. உள்ளம் தடித்தலாவது நெஞ்சு ஸ்தூலிப்பதாம்.
உருவற்ற நெஞ்சுக்கு ஸ்தூலத்வம் அஸம்பாவிதமாபினும் ஸம்பாவிதம் போலப் பேசுவதன் கருத்து ஆநந்தமிகுதியைக் காட்டுவதேயாம்.
இவ் விருள்தருமாஞாலத்தில் ஒரு மூலையிலே திருப்புளியின் பொந்திலே யிருந்துகொண்டு உன்னை நெஞ்சால் நினைக்கம்
மாத்திரத்திலேயே நெஞ்ச இப்படி பூரிக்கமேயானால், என்னுடைய கரும பாசங்களெல்லாம் அடியோடே தொலைந்தொழியும்படி
பரிபூர்ண கடாக்ஷம் செய்தருளப்பெற்று நலமந்த மில்லதோர் நாட்டிலே வந்து நித்யாநுபவம் பண்ணப்பெற்றால்
பின்னைத் தடிப்பதற்கு இடம் போராதுபோலும்.
ஸ்வரூபத்தாலே உலகத்தையெல்லாம் நீ எப்படிவியாபித்து நிற்கிறாயோ அப்படி நானும்
ஸ்வபாவத்தாலே உலகமெங்கும் வியாபித்து நிற்பேன்போலும் என்கிறார்.
உலகத்தையெல்லாம் பூரிக்கவல்லதாம்படி உடல் தடிக்குமளவு ஆநந்தத்தை அடைந்திடுவேனன்றோ என்றவாறு.

—————————————————————-

(உரைக்கிலோர் சுற்றத்தார்.) எம்பெருமான் திருநாமம் செவியில் விழுந்தமாத்திரத்திலே நெஞ்ச குளிரும்படியாக
இப்படி அவன்பண்ணின பேருதவியைச் சிந்தித்து “பிரானே! நீ தவிர வேறுயாரும் எனக்க உறவினரல்லர்;
ஸகலவித பந்துவும் எனக்கு நீயே காண்” என்கிறார்.

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-

பதவுரை

இரைக்கும் கடல்–கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே
கிடந்த–பள்ளிக்கொண்டிரா நின்ற
எந்தாய்–ஸ்வாமீ!
உரைக்கில்–ஆராய்ந்து சொல்லில்,
ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே–(நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ?
எனது உயிர்க்கு–என் ஆத்மாவுக்கு
ஓர் சொல்–‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்கிற சரமச்லோகமாகிற ஒரு சொல்லாலே
நன்றி ஆகும் துணை–உதவி செய்யும் துணையும்
உரைப்பு எல்லாம்–மற்றும் சொல்லப்படுகிற எல்லாவகையான துணையும்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய்–உன்னைத் தவிர வேறொருவரையும் உடையே னல்லேனுகாண்.

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
ஆராய்ந்து சொல்லி-நீ தவிர-தாயாதிகள் என்றும்-பந்துக்கள் என்றும்-சொல்லக் கூடியவர்கள்-எனக்கு ஆரேனும் உண்டோ
வேறு யாரும் இல்லை நானே உளன் என்று உத்தரம் சொல்லி அருளுவான்  போலும்
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய்
கோஷிக்கின்ற திருப் பாற் கடலிலே-பள்ளி கொண்டு இரா நின்ற-ஸ்வாமி

உரைப்பெல்லாம்
மற்றும் சொல்லப் படுகிற-எல்லா வகையான துணையும்

நின்னன்றி மற்றிலேன் கண்டாய்
உன்னைத் தவிர வேறு ஒருவரையும்-உடையோம் அல்லோம் காண்

எனது உயிர்க்கு ஓர் சொல் நன்றி யாகும் துணை
எனது ஆத்மாவுக்கு-சர்வ தரமான் பரித்யஜ்ய-என்கிற சரம ஸ்லோஹம் ஆகிற
ஒரே சொல்லே-உதவி செய்யும் துணையாம்
அர்ஜுனனை நோக்கி அருளிய ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோஹம்
விபீஷணனை நோக்கி அருளிய ஸ்ரீ ராமபிரானின் சரம ஸ்லோஹம்
ஸ்ரீ வராஹ நாயனார் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அருளிச் செய்த-ஸ்ரீ வராஹ சரம ஸ்லோஹம்
இதுவே நமக்கு துணை-

“ஓர் சுற்றத்தாருற்றா ரென்றில்லை” என்ற நிஷ்கர்ஷித்தே சொல்லலாமாயிருக்க அங்ஙனம் சொல்லாது
“உற்றாரென்ற ஆரோ?” என்ற எம்பெருமானைக் கேள்வி கேட்பதன் கருத்துயாதெனில்;
நாம் எம்பெருமானை இப்படி கேள்வி கேட்டால் அதற்கு அவன் சோதிவாய்திறந்து “வேறுயாருமில்லை; நானேயுளேன்” என்று
உத்தரமருளிச் செய்திடுவான் என்ற கருத்துப்போலும்.
இரைக்கும் கடல்= எம்பெருமானுடைய நித்ய ஸந்நிதாநத்தாலே மகிழ்ந்து கொந்தளிக்கின்ற கடல் என்றபடி. எந்தாய்- ‘எந்தை’ என்பதன் விளி.

ஓர் சொல் நன்றியாகுந்துணை= அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு
“ஸர்வதர்மாந் பரித்யஜய் சரணம் வ்ரஜஅஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:” என்று பிரதிஜ்ஞை பண்ணிச்சொன்ன
ஒரு சொல்லாலே எமக்கு நீ துணையாவதுபோல வேறு ஆரேனும் ஆவாருண்டோ என்கை.
ஸ்ரீ விபீஷணாழ்வானை வியாஜமாகக்கொண்டு “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதிச யாசதே –
அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம.” என்று சொன்ன ஒரு சொல்லையும் இங்க அர்த்தமாகக்கொள்ளலாம்.
இவ்வகையாக சாஸ்த்ரங்களில் எம்பெருமான் அடியார்களை நோக்கிப் பிரதிஜ்ஞைபண்ணி எந்தெந்தத் துணையாகத்தான்
ஆவதாக அருளிச் செய்திருக்கிறானோ அவற்றை யெல்லாம் கருதி “உரைப்பெல்லாம்” என்கிறார்.

——————————————————————-

(துணைநாள் பெருங்கிளையும்.) ஸாமாந்யமாக உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பலனை விரும்புவர்;
நல்ல துணையோடு கூடியிருத்தல் நன்று என்று சிலர் நினைப்பர்; ‘நாம் சிரஞ்ஜீவியாக வாழக்கடவோம்’ என்று சிலர் காமுறுவர்; ‘
பிள்ளைகளும் பேரன்களுமாகப் பரந்த ஸந்ததிகளுடனே வாழப்பெறுவோம்’ என்று சிலர் விரும்புவர்;
நற்குலப்பிறவியே நச்சுத்தகுந்தது’ என்று சிலர் நச்சுர்; ‘பந்துக்களோடு கூடி வாழ்தல் சிறப்பு’ என்று சிலர் கருதுவர்;
ஆகவிப்படி அவரவர்கள் விரும்பும் புருஷார்த்தங்கள் இந்த ஸம்ஸார நிலத்திலே அநர்த்தமாகப் பர்யவஸிக்குமேயன்றி இன்பமாகத் தலைக்கட்டாது;
ஒருகால் இவையெல்லாம் இன்பமயமாகவே யிருந்தாலும் நெஞ்சே! நீ இந்த அற்ப பலன்களில் கால்தாழாது
பகவத் குணாநுபவமாகிய நல்ல காலக்ஷேபத்தையே மேற்கொள்ளக்கடவை என்று தம் திருவுள்ளத்திற்கு ஹிதமருளிச் செய்கிறார்.

துணை நாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-

பதவுரை

துணை–ஸ்நேஹிதர்களும்
நாள்–ஆயுஸ்ஸும்
பெரு கிளையும்–பிள்ளைகள் பேரன்கனென்கிற பெரிய ஸந்தானமும்
தொல் குணமும்–பரம்பரையாக வருகிற நற்குலமும்
சுற்றத்து இணை–பந்துக்களோடே சேர்ந்திருப்பதும்
(ஆகிய இவை யெல்லாம்)
நாளும்–நாள்தோறும்
இன்பு உடைத்து ஆம் எனும்–(துக்கத்தை யுண்டு பண்ணாமல்) ஸந்தோஷத்தையுண்டு பண்ணுவனவென்றே வைத்துக்கொண்õடலும்,
நல்நெஞ்சே–நல்மனமே!
(நீ அவற்றில் ஆசை கொள்ளாமல்)
கணை நாணில் ஒவா தொழில்சார்ங்கன்==அம்புகள் நாணில் நின்றும் ஒருகாலும் மாறாதபடி வீரத்தொழில் செய்துகொண்டேயிருக்கிற வில்லையுடையனான இராமபிரானுடைய
தொல் சீரை–இயற்கையான நற்குணங்களையே
ஓவாத ஊண் ஆக உண்–நித்யபோக்யமாக அநுபவிக்கக் கடவாய்.

துணை நாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத் திணை
ச்நேஹிதர்களும்-ஆயுஸ்ஸூ ம்-பிள்ளைகள் பேரன்கள் என்கிற பெரிய சந்தானமும்
பரம்பரையாக சத்குலமும்-பந்துக்களோடு சேர்ந்து இருப்பதும்

நாளும்-
நாள் தோறும் –

இன்புடைத்தா மேலும் –
துக்கத்தை உண்டு பண்ணாமல்-சந்தோஷத்தை உண்டு பண்ணுவன என்று-வைத்துக் கொண்டாலும்

கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன்-அம்புகள் நாணில் நின்றும் ஒரு காலும் மாறாத படி-
வீரத் தொழில் செய்து கொண்டே இருக்கிற-வில்லை உடைய ஸ்ரீ இராமபிரான் உடைய

தொல்சீரை-
இயற்கையான நற் குணங்களை

நல் நெஞ்சே

ஓவாத ஊணாக வுண்
நித்ய போகமாக அனுபவிக்கக் கடவாய்

மகா வீரனான ஸ்ரீ ராமபிரான் உடைய சரித்ரமே நித்ய போக்யமாகக் கடவது
சோத்ரைவ ஹந்த ஹனுமான் பரமாம் விமுக்திம் புத்யாவதூய சரிதம் தவ சேவதேசௌ -அதிமாநுஷ ஸ்தவம்-
பாவோ நான்யத்ர கச்சதி
– திருவடி போலே-

(கணைநாணில் இத்யாதி.) ஆச்ரித விரோதிகளைக் கிழங்கறக் களைவதே காரியமாகக் கொண்ட இராமபிரான்
ஒருநொடிப்பொழுதும் வில்தொழிலை விட்டிருக்கமாட்டான். அப்படிப்பட்ட மஹாவீரனுடைய சரிதமே நித்ய போக்யமாகக்கடவது என்கை.
ஸோத்ரைவ ஹநச்த ஹநுமாந் பரமாம் விமுக்திம் புத்த்யாவதய சரிதம் தவ ஸேவதேஸௌ.” என்று அதிமாநுஸ்தவத்திலே
ஆழ்வானருளிச் செய்தபடி சிறிய திருவடி இன்றைக்கும் ஸ்ரீராம குணாநுபவமே போதுபோக்காக இருப்பதுபோல் ஆழ்வார்தாமும் ஆசைப்படுகிறாராய்ந்து.

ஓவாத- ஒரு க்ஷணகாலமும் விட்டு நீங்காத ஊண்- உணவு “பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தநாம்ருத” இத்யாதிகளை நினைப்பது.

———————————————————————-

(உண்ணாட்டுத்தேசன்றே.) எவ்வகையான இழிகுலத்திற் பிறந்தவர்களானாலும் எவ்வகையான கெட்ட நடத்தைகளை
யுடையவர்களானாலும் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருந்தலாகிற ஒரு குணம் உள்ளதாகில் அப்படிப்பட்டவர்களுடைய
பிறப்பு நித்ய ஸூரிகளின் திருமேனி போலே மிக்க தேஜஸ்ஸையுடையதேயாம்;
எப்படிப்பட்ட பாவங்களை அவர்கள் செய்திருந்தாலும் அவற்றுக்கு அஞ்சவேண்டியதில்லை;
சுவர்க்க லோகத்திலுள்ள தேவர்களின் பிறவியிற்காட்டிலும் அவர்களுடைய பிறவி எவ்வளவோ சீர்மை பொருந்தியதாதலால்
தேவபோனிப்பிறவியையும் இழிவாக நினைக்கவுரியது- என்று,
பகவானுக்குத் தொண்டரயிருப்பாருடைய ஜன்மமே சிறந்த ஜன்மமென்கிறார் இப்பாட்டில்.

ப்ராஹ்மணஜாதியே சிறந்ததென்று பலர் ப்ரமித்திருப்பதுண்டாகையாலே அந்த ப்ரமத்தைப்போக்கித்
தொண்டர்குலமே சிறந்த குலமென்கிறது இப்பாட்டு. பிராமண ஜாதியிற் பிறந்து வைத்தும் எம்பெருமானுக்கு அடிமைப்படாவில்
அக்குலம் சண்டாள குலததிலும் நடை கெட்டதாம்;
சண்டாளகுலத்திற் பிறந்து வைத்தும் வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கு ஆளென்று உள்கலந்தார்களாகில்
அவர்களே விண்ணுளாரிலுஞ் சீரியராவர்; ஆகவே ஜாதி அப்ரேயோஜகம்; பகவத் சேஷத்வமே ப்ரயோஜநம் என்றதாயிற்று.
இவ்வர்த்தம் ஸ்ரீவசந பூஷண்த்திலும் ஆசார்ய ஹ்ருதயத்திலும் நன்கு விசதமாகும்.
“தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில் பிறவி
உண்ணாட்டுத்தேசிறே” என்ற ஆசார்யஹ்ருதய ஸ்ரீஸூக்தி இவ்விடத்தில் அது ஸந்திக்கவுரியது.

எம்பெருமானை கண் எடுத்தும் பாராத பாவிகள் உள்ள இந்த லீலா விபூதி புற நாடு
பகவத் கைங்கர்ய பரர்கள் நெருங்கி உள்ள பரமபதம் உள் நாடு-இழி பிறவியும் சேஷத்வம் இருந்தால் தேஜோ கரம்–
அணைய ஊர புனைய-அடியும் பொடியும் பட -பர்வத பவனங்களிலே-ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெரு மக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பார்கள் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழி விற்றானாலும் ஆழியங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-

பதவுரை

மண் நாட்டில்–இந்த மண்ணுலகத்திலே
ஆர் ஆகி–எப்பிறவியிலே பிறந்தவராயினும்
என் இழிலிற்று ஆனாலும்–எப்படிப்பட்ட இழி தொழில்களையுடையவர்களாயினும்
ஆழி அம் கைபேர் ஆயற்கு ஆன் ஆம் பிறப்பு–திருவாழியை அழகிய கையிலேயுடைய
ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அடிமைப்பட்டவர்களாகப் பிறக்கும் பிறவியானது.
உன் நாடு தேச அன்றே–பரமபதத்திள்ள தேஜஸ்ஸையுடையதன்றோ?
ஊழ் வினையை அஞ்சுமே–அநாதியான பாவங்களைக் குறித்து அஞ்ச வேணுமோ?
விண் நாட்டை–ஸ்வர்க்க லோகத்தை
ஒன்று ஆக–ஒரு பொருளாக
மெச்சுமே–விரும்பக்கூடுமோ?

உண்ணாட்டுத் தேசன்றே
பரம பதத்தில் உள்ளதேஜஸ் உடையது அன்றோ

ஊழ் வினையை யஞ்சுமே
அநாதியான பாபங்களை-குறித்து அஞ்ச வேணுமோ-சேஷத்வமாகிய ராஜ குல மகாத்ம்யத்தினால்-
எவ்வகைப் பட்ட பாவத்துக்கும் அஞ்ச வேண்டியது இல்லை

விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-
ஸ்வர்க்க லோகத்தை ஒரு பொருளாக-விரும்பக் கூடுமோ
ப்ரஹ்ம பட்டம் இந்திர பட்டம் போன்றவை ஓர் பொருளாக நெஞ்சில் படாதே

-மண்ணாட்டில்
இந்த மண் உலகத்தில்

ஆராகி
எப்பிறவியில் பிறந்தவர் ஆயினும்

எவ்விழி விற்றானாலும்
எவ் இழி விற்று ஆனாலும்-எப்படிப் பட்ட இழி தொழில்களை உடையவர்கள் ஆயினும்

ஆழியங்கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு
திரு வாழியை அழகிய திருக் கையிலே உடைய-ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு
அடிமைப் பட்டவர்களாக-பிறக்கும் பிறவியானது –

உண்ணாட்டுத்தேச = எம்பெருமானைக் கண்ணெடுத்தும் பாராத பாவிகள் நிறைந்த இந்த லீலாவிபூதி புறநாடென்னும்,
பகவத் கைங்கர்ய ரஸிகர்கள் நெருங்கி அவனுக்கு அந்தரங்கமாயிருக்கிற நித்யவிபூதி உள்நாடென்றும் கொள்ளத்தகும்.
‘ உள்நாட்டுத்தேக” என்றது – பாமபவத்தில் எம்பெருமானுடைய கைங்கரியத்திற்குத் தகுதியாகக் கொள்ளுகிற
தேஹம்போலே சேஷவஸ்துவான ஆத்மாவுக்கு இழிபிறப்பும் தேஜஸ்கரம் என்றவாறு.

ஊழ்வினையை அஞ்சுகமே?= எம் பெருமானுக்கு அடிமைப்பட்டிருக்கையாகிற ராஜகுல மாஹாத்மியத்தாலே
எவ்வகைப்பட்ட பாவத்திற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்றபடி.

விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே? = இங்கு ‘விண்ணாடு’ என்ற பிரமன் முதலிய தேவர்கள் வாழும் உலகத்தைச் சொல்லுகிறது
ப்ரஹ்மாதி தேவர்கள் வாழும் உலகத்தைச் சொல்லுகிறது. ப்ரஹ்நாதி தேவர்களின் பிறவியிற் காட்டிலும் பகவத் பக்தர்களின் பிறவி சீரியது என்றபடி.
அன்றியே, எம்பெருமானுக்கு அடிமைச்செய்து கொண்டு வாழப்பெறில், ப்ரஹ்ம பட்டம் இந்திர பட்டம் முதலிய எப்படிப்பட்ட பதவிகளும்
ஒரு பொருளாகவே நெஞ்சிற்படாது என்றபடியுமாம். பகவானுக்கு அடிமை செய்துகொண்டு இந்நிலத்தில் கிடந்தாலும்
இதுவே பரமபதத்தினும் சிறந்ததாகையால் தேவலோகமும் நரகமாய்த் தோற்றுமென்கை.

—————————————————————-

(பிறப்பிறப்பு.) ஸம்ஸார நிலத்தில் உண்டாகக்கூடிய எவ்வகைத் துன்பங்களும் தொலைந்து கைவல்ய மென்கிற
ஆத்மாநுபவ மஹாநந்தம் கிடைப்பதானாலும் எம்பெருமானுடைய அநுபவமில்லாமல் அவனை மறந்தொழிந்து
அநுபவிக்கும் அநுபவமெல்லாம் துக்கமயமேயாகும்- என்கிறாரிப்பாட்டில்.
கைங்கர்யம் இல்லாத குறையால் –

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

பதவுரை

பிறப்பு–பிறவியையும்
இறப்பு–மரணத்தையும்
மூப்பு–கிழத்தனத்தையும்
பிணி–வியாதிகளையும்
துறந்து–ஒழிந்து
பின்னும்–அவ்வளவோடு மல்லாமல்
இறக்கவும்–மிகவும்
இன்பு உடைத்து ஆம் ஏலும்–ஆநந்தமுடையதான கைவல்யமோக்ஷம் உண்டாவதானாலும்
மண் அளந்தான் பாதமே ஏத்தா பகல்–உலகளந்த பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தப்பெறாத காலங்களிலுண்டான
மறப்பு எல்லாம்–மறப்புகள் எல்லாம்
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே–துன்பமென்றே எண்ணுவனேயொழிய வேறுவகையாக எண்ணுவனோ?

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
பிறவியையும்
மரணத்தையும்
கிழத்தனத்தையும்
வியாதிகளையும்
ஒழித்து
அவ்வளவோடல்லாமல்

இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் –
மிகவும் ஆனந்தம் உடைத்தான
கைவல்ய மோஷம்
உண்டாவதானாலும்
இறக்கவும் -மிகவும் -அளவில்லாமல் என்கை –

மறப்பெல்லாம்
மறுப்புக்கள் எல்லாம்

ஏதமே என்றல்லால் எண்ணுவனே –
துன்பம் என்றே எண்ணுவனே ஒழிய-வேறு வகையாக எண்ணுவனோ
மண்ணளந்தான் பாதமே ஏத்தாப் பகல் –
உலகு அளந்த பெருமான் உடைய-திருவடிகளை வாழ்த்தப் பெறாத
காலங்களில் உண்டான –ஜரா மரண மோஷாயா மாமாஸ்ரித்ய யதந்தி யே-கீதை -7-29-

மோக்ஷம் இருவகைப்படும்; ஸ்வாத்மாவையே அநுபவிப்பது மற்றொரு மோக்ஷம். இதுவே கைவல்யமோக்ஷ மெனப்படும்.
பகவததுபவமோக்ஷமே ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததென்றும் கைவல்யமோக்ஷம் ஹேயமென்றும்
கைவல்யநிலம் பறைச்சேரிபோலே இகழத்தக்க இடமென்றும் ஆரியர் கொள்வர்.
மறுபடியும் பிறப்பில்லாமை, பிணியில்லாமை, கிழத்தனமில்லாமை, இறப்பில்லாமை என்னுமிவை மேற்சொன்ன,
இருவகை மோக்ஷங்களைப் பெற்றவர்களுக்கும் பொதுவாயினும் கைவல்யமோக்ஷத்தில் பகவத் கைங்கரியமில்லாமையாகிற
பெரியதொரு குறை உண்டாகையாலே இக்கைவல்ய மோக்ஷம் ஹேயமா யொழிகின்றது;
இவ்வர்த்தமே இப்பாட்டில் அருளிச்செய்யப்படுகின்றது.

“ஜராமரணமோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே” என்று பகவத்கீதையில் (7-39) சொல்லியிருப்பதை அடியொற்றி,
“பிறப்பிறப்பு மூப்புப் பணிதுறந்து” எனப்பட்டது. இறக்கவும்- மிகவும்; அளவில்லாமல் என்கை).

———————————————————————

(பகலிரா.) எம்பெருமானுடைய அநுக்ரஹம் தம் மேல் அல்லும்பகலும் அமர்ந்திருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.
எம்பெருமான் என்னுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை நன்கு ஆராய்ந்திருப்பனாகில்
என்னை ஒருபொருளாக நோக்குவதற்கே ப்ரஸந்தியில்லை; அவனுடைய திருவருளுக்கு இலக்காகமாட்டாத நீசன் அடியேன்;
அவ்வளவேயோ? குணாநுபவம் பண்ணுவதற்குத்தக்க ஸஹயமுமில்லாதவனாயிருக்கின்றேன்;
இப்படிப்பட்ட என்படிகளை எம்பெருமான் ஆராய்ந்திருப்பானாகில் என்னைக் கடாக்ஷிக்கவே மாட்டான்;
இப்படிகளை ஆராயாமல், பகலென்று மிரவென்றும் பாராமல் எக்காலும் என்னை வலிகட்டாயப்படுத்தியிழுத்துத்
தன் அநுபவத்தை எனக்குத் தந்தருளி என்னை அநுக்ரஹஞ் செய்கின்றான்- என்கிறார்.

எம்பெருமான் அனுக்ரஹம் அல்லும் பகலும் தம் மேல் விழுந்த படியை-அனுசந்தித்து ஹிருஷ்டர் ஆகிறார் –
உபேஷிக்காமல் நிர்ஹேதுக கிருபையால் செய்து அருளுவதை தெரிவிக்கிறார்–

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவைமே யார் தெரிந்து–81- 

பதவுரை

செழு பரவை மேயார்–அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான்,
இவர் தகவாதொழும்பர்–“இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்;
சீர்க்கும் துணை இலர்–சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்”
என்று தெரிந்து ஓரார்–என்பதை ஊன்றி ஆராயாதவனாய்
பகல் இரா என்பதுவும் பாவியாது இருபொழுதும்–பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும்
இகல் செய்து–வலிகட்டாயப்படுத்தி
எம்மை ஆள்வர்–அடியேனை அநுபவியா நின்றான்.

பகலிரா வென்பதுவும் பாவியாது இரு பொழுதும்
பகல் பொழுது-இராப் பொழுது-என்கிற வாசி இன்றியே எப்போதும்

எம்மை ஆள்வர்
அடியேனை அனுபவியா நின்றான்

இகல் செய்து
வலு கட்டாயப் படுத்தி-
இகல் செய்தல் -யுத்தம் செய்தல்
தம்முடைய குணங்களாலே-எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம் பண்ணி இரண்டு போதும் ஆள்வர்
அம்பு பட்ட புண்ணுக்கு மருந்து உண்டு-குணத்தாலே ஈடுபட்ட புண்ணுக்கு மருந்து இல்லை இ றே

-தகவாத் தொழும்பரிவர்
இவர் தகவாத் தொழும்பர் -இந்த ஆழ்வார் நம்முடைய அருளுக்கு-பாத்ரமாக கடவாத நீசர்-
தொழும்பர்
-அடிமை செய்பவர்-தகவு -தயவுக்கு பெயர்-தயவுக்கு விஷயமாகக் கூடாத நீசர் என்றபடி

சீர்க்கும் துணை இலர்
சீர்மை பொருந்திய துணையை-உடையரும் அல்லர்
மச் சித்தா மத்கதப்ராணா போதயந்த பரஸ்பரம்-கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திச்ச ரமந்திச -கீதை -10-9-

என்று தெரிந்து ஓரார் –
என்பதை ஊன்றி ஆராதவனாய்

செழும் பரவை மேயார் –
அழகிய திரு பாற் கடலிலே-பொருந்திக் கண் வளர்ந்து அருளும் பெருமான்-

இகல் செய்தல்- யுத்தம் பண்ணுதல்; எம்பெருமான் ஆழ்வாரோடு யுத்தம் பண்ணுகையாவது என்னென்னில்;
தன்னுடைய குணங்களை அநுபவிக்குமாறு நிர்பந்தப்படுத்துதலாம். இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தி:-
“தம்முடைய குணங்களாலே எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம் பண்ணி இரண்டு போதும் ஆள்வர்; அம்புபட்ட புண்ணுக்கு மருந்தில்லையிறே.”

இவர் தகவாத் தொழும்பர் தொழும்பர், சீர்க்கும் துணையிலர் என்று ஓரார்- ‘தொழும்பர்’ என்று அடிமை செய்பவர்க்குப் பெயர்;
நீசர்களே அடிமைசெய்ய உரியவராதலால் இங்குத் ‘தொழும்ப’ என்றது நீச ரென்றபடி. தகவு என்று தயவுக்குப் பெயர்;
‘தகவன்’ என்றால் ‘தயவுக்கு விஷயமாகக் கூடியவன்’ என்று பொருளாம்;
‘தகவாத் தொழும்பர்’ என்றது- தயவுக்கு விஷயமாகக் கூடாத நீசர் என்றதாயிற்று.

(சீர்க்கும் துணையிலர்.) ‘சீர்க்கும்’ என்றது துணைக்கு அடைமொழி; ‘சீர்மை பொருந்திய’ என்றபடி
பகவத்கீதையிலே (10-9) மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம்- கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திசரமந்திச.”
(இதன் பொருள்- நெஞ்சை நமக்கென்றே பறிகொடுத்து, அப்படியே நம்மைப் பிரிந்தால் தரித்திருக்கமாட்டாமல்
பிராணனையும் நம் அதீனஞ்செய்து தாம் தாம் அநுபவித்த நம் குணங்களையெடுத்து ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்டு
அப்படியே நாம் செய்த திவ்ய சேஷ்டிதங்களையுமெடுத்துப் பேசிக்கொண்டு ஆநந்திக்கிறார்கள்.) என்றருளிச் செய்திருப்பதில்,
பகவத் குணங்களை ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளுதலும் ஒரு சிறந்த காரியமாகச் சொல்லப்பட்டுள்ளது;
அப்படி பேசிக்கொள்வதற்குத் தாம் (ஆழ்வார்) துணை அற்றவர் என்கிறார். இப்படியிருக்கச் செய்தேயும் எம்பெருமான் என்னை
உபேக்ஷித்திடாமல் தனது நிர்ஹேதுக கருணையினால் குணாநுபவம் செய்விக்கிறானென்றாராயிற்று.

பரவை- ஸமுத்ரம்.

———————————————————–

(தெரிந்துணர்வு.) ஆழ்வார் இப்போது பகவத் குணாநுபவம் பண்ணப் பெற்றதுபோல கீழ்நாள்களிலும் பண்ணப்பெறவில்லையே!
என்று அனுதாபம் அதிகரிக்கப்பெற்று, “பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று
பொய்கையாழ்வார் கதறினதுபோலத் தாமும் கதறுகின்றார்.

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

பதவுரை

தீ வினையேன்–மஹாபாபியான நான்
தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால்–விவேகவுணர்ச்சி சிறிதுமில்லாமையினாலே
அந்நான்று–முன்பொருகாலத்தில்
கரந்த உருவிய அம்மானை பின் தொடர்ந்து–நிஜமான வுருவத்தை மறைத்துக்கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற
ஆழி அம் கை அம்மானை–அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையிலணிந்திருந்த இராமபிரானை
ஏத்தாது–தோத்திரம் செய்யாமல்
அயர்த்து–அறிவுகெட்டு
கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன்–கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன்.

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்-
விவேக உணர்ச்சி-சிறிதும் இல்லாமையினாலே-
1-உணர்வு இன்மையால்
2-உணர்வு ஓன்று இன்மையால்
3-தெரிந்து உணர்வு இன்மையால்
என்று மூன்று படியாக யோஜிக்க வேணும்
தேகாத்மா விவேகம் இல்லாமை -உணர்வு இன்மை
சேஷ வஸ்து ஆத்மா என்று அறியாமை -உணர்வு ஓன்று இன்மை
பாகவத சேஷத்வம் அறியாமை -தெரிந்த உணர்வு இன்மை

தீ வினையேன்
மகா பாபியான நான்

வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம்
கீழ்க் கழிந்த நாள்கள் எல்லாம்-வீணாக இருந்து விட்டேன்

கரந்த உருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த
சிறு மான் உருவத்தை மறைத்து கொண்டு வந்த-அந்த மாரீச மானை பொன் தொடர்ந்து கொன்ற-
அன்பர்கள் ஏவின கார்யத்தை அன்புடன் ஏற்று செய்ய வல்ல பெருமான்
திருக் கல்யாண குணங்களில் ஈடு படாமல்-
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட-நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்த எம்பெருமான்
துதிக்க பெறாமல் காலத்தை வீணாக கழித்தேன்

ஆழியங்கை அம்மானை ஏத்தாது அயர்த்து
அறு காழி மோதிரத்தை-அழகிய திருக் கையில் அணிந்து இருந்த-ஸ்ரீ ராமபிரானை ஸ்தோத்ரம் செய்யாமல்-அறிவு கெட்டு-
கைகேயி வரத்தில் அகப்படா விட்டது பெருமாள் திருக்கையில் அறு காழி ஒன்றுமே இறே –
பெருமான் மாயமானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது-அடிக்கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு-
அதன் மேலே எழுந்து அருளினார் என்று ஒருவன் கவி பாட எம்பெருமானார் கேட்டருளி-
மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை மடுக்கப் பெற்றிலேனே -என்று வித்தராய் அருளினார்-

“உணர்வின்மையால், உணர்வொன்றின்மையால், தெரிந்துணர் வொன்றின்மையால்” என்று மூன்றுபடியாக்கி யோஜிக்கவேணும்.
‘தேஹத்திற் காட்டில் ஆத்மா வேறுபட்டவன்’ என்கிற ஞானமில்லாமையைக் கருதி ‘உணர்வின்மையால்’ என்றார்;
‘ஆத்மா எம்பெருமானுக்கு சேஷப்பட்ட வஸ்து’ என்கிற ஞானமில்லாமையைக் கருதி ‘உணர்வொன்றின்மையால்’ என்றார்;
‘பகவத்சேஷத்வத்துக்கு எல்லைநிலம் பாகவதசேஷத்வம்’ என்கிற ஞானமில்லாமையைக் கருதித் ‘தெரிந்துணர்வோன்றின்மையால்’ என்றார்.
ஆக, இப்படிப்பட்ட விவேகவுணர்ச்சிகளில்லாமையினாலே பாவியேன் வாணான் பலவற்றை வீணாளாகக் கழித்தொழிந்தேன்- என்கிறார்.

(கரந்துருவின் இத்யாதி.) அன்பர்கள் ஏவின காரியத்தை அன்புடன் ஏற்றுச் செய்யவல்ல பெருமானுடைய
திருக்குணங்களிலீடுபட்டுத் துதிந்துவாழமே பாழேபோனேனென்கிறார்
மாரீசன் நிஜ ரூபத்தை மறைத்துப் பொன்மான் வடிவுபூண்டு பஞ்சவடியில் வந்து தோன்றினபோது,
1. “பொன்னொத்தமானொன்று புகுந்தினிதுவிளையாடவு நின்னன்பின் வழிநின்று சிலை பிடித்தெம்பிரானேக” (பெரியாழ்வார் திருமொழி 3-10-7)
என்கிறபடியே, பிராட்டியின் முகம் கன்றாமைக்காக அம்மாயமானைப் பிடித்து வருவதாக அதன்பின்னேயெழுந்தருளினவனும்
அறுகாழி மோதிரத்தைத் திருக்கையிலே அணிந்திருந்தவனுமான இராமபிரானைத் துதிக்கப்பெறாமல்
அறிவு கெட்டுக் காலங்களைப் பாழேகழித்தேன்.

“கைகேயிலரத்தில் அகப்படாவிட்டது பெருமான் திருக்கையில் அறுகாழியொன்றுமெயிறே” என்றும்,
“பெருமாள் மாயமானை எய்து மீண்டெழுந்தருளுகிறபோது அடிக்கொதித்து நடக்கமாட்டாமை தளிர்களை முறித்திட்டு
அதன்மேலே எழுந்தருளினாரென்று ஒருவன் கவிபாட எம்பெருமானார் கேட்டருளி
‘மாறியிடுகிற திருவடிகளிலே என் தலையை மடுக்கப் பெற்றிலேனே.” என்று வித்தராயருளினார்” என்றுமுள்ள
வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் அநுஸந்திக்கத்தக்கன.

“தெரிந்துணர்வு” என்றவிடத்தும் “கரந்துருவின்” என்ற விடத்தும் தொகுத்தல் விகாரம்; தெரிந்த + உணர்வு; காந்த + உருவின்

————————————————————–

(அயர்ப்பாய்.) கீழ்க்கழிந்த காலம்போலே இனிமேல் வரும் காலமும் பாழே போகாதபடி இப்போதுள்ள
பகவத்குணநுபவம் தம்முடைய நெஞ்சுக்கு நிலைத்திருக்கும்படி ஹிதோபதேசம் பண்ணுகிறார்.
யோக்யதை இல்லாத நாம்-நெஞ்சால் நினைப்பதும்-வாயால் துதிப்பதும்-தலையால் வணங்குவதும்-அவத்யம் என்று
அயோக்யானுசந்தானம் பண்ணி பின் வாங்கும் வழக்கம் உண்டே திரு உள்ளத்துக்கு-
அதனால் ஹித உபதேசம் பண்ணி அருளுகிறார்-

அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறியிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வல்வினனை வாழ்த்து –83-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
செயற்பால அல்லவே–செய்யத்தகாதவற்றையே
செய்கிறுதி-செய்ய முயல்வாயென்று
அஞ்சினேன்–(உன்னைப் பற்றிப்) பயப்படுகின்றேன்;
மல்லர் நான் வல்வினளை வாழ்த்து–மல்லர்களின் ஆயுளை முடித்த கண்ணபிரானை மங்களா சாஸநம் பண்ணிக் கொண்டிரு
உயப்போம் நெறி இதுவே கண்டாய்–உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்;
அயர்ப்பாய்–(அப்பெருமானை) மறந்து கெட்டாலும் கெடு;
அயர்ப்பாய்–மறவாமல் நினைந்து வாழ்ந்தாலும் வாழ்;
சொன்னேன்–(உனக்கு நான் சொல்லவேண்டிய ஹிதத்தைச்) சொல்லி வைத்தேன்.

அயர்ப்பாய்
எம்பெருமானை மறந்து கெட்டாலும் கேடு

அயயர்ப்பாய் –
மறவாமல் வாழ்ந்தாலும் வாழ்

நெஞ்சமே சொன்னேன்
ஒ மனமே-நான் உனக்கு சொல்ல வேண்டிய ஹிதத்தைச் சொல்லி வைத்தேன்

உயப்போம் நெறியிதுவே கண்டாய்
உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்

-செயற்பால வல்லவே
செய்யத் தகாத வற்றையே

செய்கிறுதி நெஞ்சமே
செய்ய முயல்வாய் என்று

யஞ்சினேன்
உன்னைப் பற்றிப் பயப்படுகின்றேன்

மல்லர் நாள் வல்வினனை வாழ்த்து
மல்லர்கள் ஆயுளை முடித்த-கண்ணபிரானை-மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு இரு –

யோக்யதை யில்லாத நாம் எம்பெருமானை நெஞ்சால் நினைப்பதும் வாயால் துதிப்பதும் தலையால் வணங்குவதும்
அவனுக்கு அவத்யம் என்று அயோக்யதாநுஸந்தாகம் பண்ணிப் பின்வாங்குதலில் ஆழ்வாருடைய திருவுள்ளம் அடிக்கடி ஊன்றுகிற வழக்கமுண்டே;
அப்படி இன்னமும் உண்டாகப்பெறில் பகவத்குணாது பலம் முட்டுப்படுமேயென்று அஞ்சி நெஞ்சை நோக்கி,
ஓ நெஞ்சே! அயோக்யனென்று பின்வாங்குகையிலே மறுபடியும் நீ இறங்கி விடுவாயோவென்று நான் மிகவும் அஞ்சுகின்றேன்.
இனி நீ அப்படி ஒருகாலும் செய்யலாகாது; இப்போது நாம் பகவத் குணானுபவம் செய்துகொண்டிருப்பதுபோலவே
எப்போதும் செய்தும் கொண்டிருப்பதான் நாம் உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பான வழியாம்.
மல்லர்களை மடித்த கண்ணபிரானை வாழ்த்துவதே நமக்குப் பணி; என்பேச்சை நீ ஆதரித்துக் கேட்பாயென்று நம்பி
நான் இதை உனக்குச் சொன்னேன்; இந்த உபதேசத்தை நீ ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருந்தது வாழ்தியேல் வாழ்ந்திடு;
மறந்தொழிந்து கெட்டுப்போதியேல் போயிடு- என்றாராயிற்று.

செயற்பால- செய்யக்கூடியவை; செயற்பால அல்ல- செய்யக்கூடாதவை; அயோக்யதாநுஸந்தாகட்பண்ணிப் பின்வாங்குதல் முதலியன.
செய்கிறுதி அஞ்சினேன் = செய்வாயென்று பயப்படுகின்றேனென்கை.

———————————————————————-

(வாழ்த்தியவண்டியை.) இனி எப்போதும் அயோக்யபாதையை நினைந்து பின் வாங்கலாகாதென்று
நெஞ்சுக்கு உபதேசித்தார் கீழ்ப்பாட்டில்
அப்படி பின்வாங்கி உயிர்தரித்திருக்க முடியுமாகில் அப்படியே பின்வாங்கிக்கிட என்கிறாரிப்பாட்டில்.
இத்தால்- மனமொழிமெய்களென்னும் மூன்று காணங்களும் பகவத் விஷயத்தில் ஊன்றிக் காரியம் செய்யப்பெறாவிடில்
தாம் தரித்திருக்க முடியாமையைப் பேசினாராகிறார்.
வாய் கை தலை பெற்ற பயனை அனுபவித்து-
எங்கே காண்கிறேன் நம் துழாய் அம்மான் தன்னை யான் என்று அலற்றி-சத்தை பெற்று உயிர் தரிக்கை-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின்தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84-

பதவுரை

அவன் அடியை வாழ்த்தி–“அப்பெருமானுடைய திருவடிகளை மங்களா சாஸநம் பண்ணி
பூ புனைந்து–(அத்திருவடிகளிலே) புஷபங்களைச் சாத்தி
நின் தலையை தாழ்த்து–உன் தலையை வணங்கு;
இரு கை கூப்பு–இரண்டு கையையுங்கொண்டு அஞ்ஜலி பண்ணு”
என்றால்–என்று சொன்னால்
கூப்பாத–அப்படி செய்யாத
பாழ்த்த விதி–பாழும் விதியையுடைய
என் நெஞ்சமே–என்னுடைய மனமே!
அவனை–அந்த ஸர்வேச்வானை
எங்கு உற்றாய் என்று ஏத்தாது–‘எங்கேயிருக்கிறாய்’ என்று சொல்லி யழைத்துத் துதியாமல்
தங்க ஆம் எனில்–தரித்திருக்கக் கூடுமாகில்
தங்கு–தரித்திரு.

வாழ்த்தி யவனடியைப்
அப்பெருமானுடைய-திருவடியை மங்களா சாசனம்  பண்ணி

பூ புனைந்து
அத்திருவடிகளிலே புஷ்பங்களைச் சாத்தி

நின்தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு
உன் தலையை வணக்கு-இரண்டு கையையும் கொண்டு அஞ்சலி பண்ணு

என்றால்
என்று சொன்னால்

கூப்பாத -பாழ்த்த விதி
அப்படி செய்யாத-பாழும் விதியை உடைய
கூப்பாத -நிகழ காலத்து நிலைமையை சொல்லுகிறது அன்று
எதிர் காலத்தில் நேரக் கூடிய நிலைமையை சங்கித்துச் சொல்லுகிறபடி

எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
என்னுடைய மனமே-அந்த சர்வேஸ்வரனை-எங்கே இருக்கிறாய் என்று சொல்லி அழைத்து-துதியாமல் –

தங்க ஆம் ஏலும்
தரித்து இருக்கக் கூடுமாகில்-தங்க தான் ஆம் ஏலும் -தான் -அசைச்சொல்

தங்கு
தரித்திரு –

வாய்ப்படைத்தது பயன்படும்படி அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தியும்,
கைபடைத்தது பயன்படும்படி அந்தத் திருவடிகளிலே பூக்களைப் பணிமாறியும்,
தலை ஸபலமாம்படி அதனை அத்திருவடிகளிலே வணக்கியும் அஞ்ஜலி பண்ணு என்று நன்மையாகச் சொன்னால்
அப்படி செய்யாதேயிருந்தும், “எங்கே காண்கேன் ஈன்துழாயம்மான் தன்னையான்” என்று அலற்றாமலிருந்தும்
உயிர்தரித்திருக்கவல்லையெல், நெஞ்சே! உன் இஷ்டப்படியே இருந்திடு.
ஸத்தை பெற்றிருக்கைக்காக இத்தனையும் செய்து தீர வேண்டியதேயாம் என்று குறிப்பித்தவாறு.

“இருகை கூப்பென்றால் கூப்பாத” என்றது நிகழ் காலத்திய நிலைமையைச் சொல்லுகிறதன்று;
எதிர்காலத்தில் நேரக்கூடிய நிலைமையைச் சங்கித்துச் சொல்லுகிறபடி.
அவனடியை வாழ்த்தாமலும் பூப்புனையாமலும் தலையைத் தாழ்த்தாமலும் இருகை கூப்பாமலும் ஸத்தை பெற்றிருக்க முடியாமையைச் சொன்னபடி.

“தங்கத்தானாமேலும்” என்றவிடத்து, தான்- அசை. தங்கு நல்- ஸத்தைப்பெறுதல்

——————————————————————–

(தங்கா முயற்றியவாய்.) இடைவிடாது பகவத்குணாநுபவம் செய்பவர்கட்கும் உலகத்துப் பொருள்களிலும் கண் செல்லுமே;
சென்றாலும், பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்டு அப்பொருள்கள் அறியப்படுமேயன்றி லௌகிகப்பொருள்களாக
மாத்திரம் அவை அறியப்படமாட்டாவே, அப்படியே மேகங்களிலே கண்செலுத்தின ஆழ்வார்
அவற்றின் உருவத்தை எம்பெருமானுடைய திருநிறமாகவே திருவுள்ளம்பற்றி,
ஆஆ! இந்த மேகங்கள் ஆசாசமடங்கலும் திரிந்து எந்த க்ஷேத்ரத்திலே சென்று என்ன தபஸ்ஸைச் செய்து
இங்ஙனே திருமாலின் திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டனவோ! என்று வியந்து பேசுகிறார்.

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே -ஸ்ரீ திரு விருத்தம்–32—வைகல் பூம் கழிவாய் -6-1-

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -ஸ்ரீ திரு விருத்தம்-38–சொன்னால் விரோதம் இது -3-9-

இப்பாட்டை ஒருபுடை ஒத்தனவாக இங்கு அநுஸந்திக்கத் தக்கன.

தங்கா முயற்றியவாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-

பதவுரை

பொங்கு ஓதம்–கிளர்ந்த அலைகளையுடைத்தாய்
தண் அம்–குளிர்ந்து அழகிய
பால்வேலைவாய்–திருப்பாற்கடலிலே
நல் நிறம் கொள் கார்–நல்ல திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டிருக்கிற மேகங்கள்
தங்கா முயற்சிய ஆய்–மாறாத முயற்சியை யுடையனவாய்க் கொண்டு
தாழ் விசும்பின் மீது பாய்ந்து–விசாலமான ஆகாசத்தின் மேலே ஸஞ்சரித்து
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளுகிற
என்னுடைய கண்ணன் பால்–எமது கண்ண பிரானிடத்திலுள்ள
எங்கே புக்கு–எந்த தேசத்திலே போய்
எத்தவம் செய்திட்டன கொல்–எவ்வகையான தபஸ்ஸைச் செய்தனவோ? (அறியேன்.)

தங்கா முயற்றியவாய்த்
தங்கா முயற்றிய ஆய்-மாறாத முயற்சியை உடையவனாய்க் கொண்டு

தாழ் விசும்பின் மீது பாய்ந்து
விசாலமான ஆகாசத்தின் மேலே-சஞ்சரித்து

எங்கே புக்கு
எந்த தேசத்திலே போய்

எத்தவம் செய்திட்டன கொல் –
எவ்விதமான தபஸை செய்தனவோ-அறியேன் –

பொங்கோதத்
கிளர்ந்த அலைகளை யுடைத்தாய் –

தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும்-
குளிர்ந்த அழகிய திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன –நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம்
அத்தை விட்டு கண்ணபிரானாக வந்து தோன்றினான்

என்னுடைய கண்ணன் பால் நல் திறம் கொள் கார் –
என் கண்ணபிரான் இடத்தில் உள்ள-நல்ல திரு மேனி நிறத்தை கொள்ளை கொண்டு இருக்கிற-மேகங்கள்-

“பால்வேலையாய்” =‘வேலா’ என்ற வடசொல் கடற்கரைக்குப்பெயர்;
அது தமிழில் ‘வேலை’ என ஐயீறாகி ஆகு பெயரால் கடலை உணர்த்திற்கு; ஆகவே, பால்வேலை- க்ஷீரஸாகரம்.
“பால் வேலை நாயகன் வளரு மென்னுடைய கண்ணன்” என்றது-
‘ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ண நிகேதக:- நாகபர்யங்கம் உத் ஸ்ருஜ்ய ஆகதோ மதுராம் புரீம்” என்ற
பிரமாணத்தின்படியே திருப்பாற்கடலில் பள்ளிகொள்ளுதலை விட்டிட்டுக் கண்ணபிரானாக வந்து தோன்றின எம்பெருமானென்றபடி.

——————————————————————–

(கார்கலந்தமேனியான்.) உலகத்தில் எல்லாரும் பகவத் குணாநுபவம் பண்ணியே போது போக்கவேணுமென்கிறார்.
பகவத் குணங்களை அநுஸந்தித்தால் பாவங்களெல்லாம் தொலையுமென்று ஸாமாந்யமாகப் பலரும் சொல்லுவதுண்டு;
அப்படி பாவங்களைத் தொலைத்துக் கொள்வதற்காக பகவத் குணாநுபவம் செய்யாவிடில் செய்ய வேண்டா;
பகவத் குணாநுணுந்தாந முகத்தினால் பாவங்களைத் தொலைத்துக்கொள்ளா தொழியில் ஒழிக;
ஒவ்வொருவனும் போதை போக்கியாக வேண்டுமே; வேறு எந்தக் காரியஞ் செய்தால் போதுபோரும்.
பகவத் குணாநுபவத்தாலன்றி வேறொன்றாலும் போது போக்க முடியாதாகையாலே காலக்ஷே பார்த்தமாகவாது
ஒவ்வொருவனும் பகவத் குணாநுபவம் பண்ணியேயாக வேணுமென்கிறார்.

கால ஷேப அர்த்தமாக-பகவத் குணாநுபவம் பண்ணியே ஆக வேண்டும்
என்கிறார் –

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

பதவுரை

கார் கலந்த மேனியான்–மேகத்தோடொத்த திருமேனியை யுடையவனும்
கை கலந்த ஆழியான்–கையோடு சேர்ந்த திருவாழியை யுடையவனும்.
பார் கலந்த வல் வயிற்றான்–(பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சேரப் பெற்ற வலிய திருவயிற்றையுடையவனும்
பாம்பு அணையான்–திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவனுமான பெருமானுடைய
சீர் கலந்து–திருக்குணங்கள் நிரம்பிய
சொல்–ஸ்ரீஸூக்திகளை
நினைந்து-அநுசந்தித்து
சூழ்வினையின் ஆழ் துயரை போக்கார் –கொடிய பாவங்களினாலுண்டாகும் மிக்க துன்பங்களைப் போக்கிக்கொள்ளார்களாகில் (ஒழியட்டும்)
என் நினைந்து இப்போது போக்குவர்–வேறு எதை அநுஸந்தித்து இந்தப் போதைப் போக்குவார்கள்.

கார் கலந்த மேனியான்
மேகத்தோடு ஒத்த திரு மேனியை-யுடையவனும்

கை கலந்த வாழியான்
திருக் கையோடு சேர்ந்த திரு வாழியை-யுடையவனும்

பாரளந்த வல்வயிற்றான்
பிரளய காலத்தில் உலகம் எல்லாம் வந்து சேரப் பெற்ற-வலிய திரு வயிற்றை  யுடையவனும்

பாம்பணையான் –
திரு வநந்த ஆழ்வானைப்-படுக்கையாக யுடையவனுமான-எம்பெருமானுடைய

சீர் கலந்த சொல்-
திருக் குணங்கள் நிரம்பிய ஸ்ரீ ஸூ க்திகளை-
ஸ்ரீ ராமாயணம்
மகா பாரதம்
ஸ்ரீ மத் பாகவதம்
ஸ்ருதிகள்
ஸ்ம்ருதிகள்
அருளிச் செயல்கள்

நினைந்து
அனுசந்தித்து

சூழ் வினையின் ஆழ் துயரை -போக்காரேல்-
கொடிய பாபங்களினால் யுண்டாகும்-மிக்க துன்பங்களை போக்கிக் கொள்ளார்கள் ஆகில்-ஒழியட்டும்

என்னினைந்து போக்குவார் இப்போது
வேறு எதை அனுசந்தித்து இந்தப் போதை-போக்குவார்கள்

இப்படி ஏன் சொல்ல வேண்டும்? உலகத்தில் ஒவ்வொருவனும் பகவத் குணாநுபவம் பண்ணியோ போதுபோக்குகிறான்?
இல்லை; சூடாடிப் போதுபோக்குவபார் சிலரும், சதுரங்கம் பொதுபோது போக்குவார் சிலரும்,
உண்டியே உடையே உகந்தோடிப் போது போக்குவார் சிலருமாய் இப்படி பலவகைகளாலே போது போக்குவாரைக் காணா நின்றோமே;
குணாநுபவத்தாலே போது போக்குவாராக ஒருவரையுங் கண்டிலோமே; ஆழ்வாரொருவரேயன்றோ அப்படிப்பட்டவர்;
இப்படியிருக்க “என்னினைந்து போக்குவர் இப்போது” என்று குணாநுபவத்தாலன்றிப் போது போக்க முடியாதென்று
இவர் எப்படி சொல்லலாம்?- என்று கேள்வி பிற்கும். இதற்கு நாம் என்ன ஸமாதானம் சொல்வல்லோம்;
உலகத்தில் தம்முடைய ஸ்வபாவத்தையே பிறர்க்கும் ஸ்வபாவமாக நினைத்துக்கொள்ளுதல் பெரியோர்களின் இயல்பு;
பரமைகாந்திகளாய்ப் பரம வைதிகர்ளான அந்தணர்கள் இரவில் சயனிக்கும்போது தம் மனைவியரை விளித்து,
‘அடீ! சொம்பிலே ஜலம் வையாதே. கவிழ்த்துவை’ என்று சொல்லுவார்களாம்; இப்படிச் சொல்லுவதன் கருத்து அறிவீர்களே!
இரவிலே கண்ணன் வந்தால் பொம்மைக் கொள்ள கொள்ள நினைத்து அதனருகே வருந்த அதை யெடுக்கப் பார்க்கும் போது
கையலம்பாமல் சொம்பைத் தொடலாகாததென்று தீர்த்தம் தேடுவானாம்; தீர்த்தம் கிடைத்தால் கையை அலம்பிக் கொண்டு
செம்மை எடுத்துக்கொண்டு போய்விடுவானாம்; தீர்த்தம் கிடையாவிடில் அசுத்தமான கையாலே சொம்பை எப்படி எடுப்பதென்று
ஆசாரம் கொண்டாடி வெறுமனே போய்விடுவானாம்.
இதற்காகவே ‘சொம்பிலே ஜலமின்றிக் கவிழ்த்துவை’ என்று புராதநவைதிகர்கள் திட்டம் செய்வார்களாம்.
தங்களுடை ஆசாரமே கள்ளர்க்கும் உள்ளதாக அவர்கள் நினைப்பதுபோல், ஆல்வாரும் பகவத் குணாநுபவத்தாலன்றி
மற்றொருதனாலும் தமக்குப் போது போக்க அரிதாயிருக்குமியல்வவயே எல்லார்க்கும் உளதாக நினைத்து
மிக அற்புதமாகவும் அழகாகவும் இப்பாசுரம் அருளிச் செய்கிறாரென்றுணர்க.

‘கார்கலந்த மேனியான் சீர்கலந்த சொல், கைகலந்தவாழியான் சீர்கலந்த சொல், பார்கலந்த வல்வயிற்றான் சீர்கலந்து சொல்
பாம்பணையான் சீர்கலந்த சொல்” என்று இங்ஙனே யோஜித்து உபர்யஸித்தல் அழகு;
( கார் கலந்த மேனியான் சீர்கலந்தசொல்.) இராமபிரானைச் சொல்லும்போது** =மேகச்யாமம் மஹாபாஹும்” என்று முன்னே
நீலமேகவடிவுடைபவ னென்கையாலே, கார் கலந்த மேனியானென்று இராமபிரானைச் சொல்லிற்றாய்,
அவனுடைய சீர்கலந்த சொல்- ஸ்ரீராமாயணம் என்றபடி.

(கைலந்தவாழியான் சீர்கலந்த சொல்.) ***- ஜாதோஸி தேவதேவேச சங்கசக்ரகநாதா!” என்று கண்ணபிரான் திருவவதரிக்கும்போது
\கையும் திவ்யாயுதமுமாக திருவவதரித்தனனாதலால் கைகலந்தவாழியனென்று கண்ணபிரானைச் சொல்லிற்றாய்,
அவனுடைய சீர்கலந்த சொல்- ஸ்ரீபாசுவதம், ஸ்ரீமஹாபாரதம், ஹரிவம்சம் முதலியனவென்க.

(பார்கலந்தவல்லவயிற்றான் சீர் கலந்த சொல்.) பிரளயகாலத்திலே எம்பெருமான் உலகங்களையெல்லாம் திருவயிற்றினுள்ளே
வைத்துக் காத்தருளினபடியைப் பேசுகிற புராணங்கள்.

(பாம்பணையான் சீர் கலந்த சொல்.) பாம்பனையாளென்று அரவணைமேற் பள்ளிகொள்ளும் அணியரங்கநாதனைச் சொல்லுகிறது;
அவனுடைய சீர்கலந்த சொல்- திருவாய்மொழி; “வான் திகழுஞ் சோலைமதிளரங்கர் வான்புகழ்லோன்ற தமிழ் மறைகாளியதரமும்”
(திருவாய் மொழியின் தனியன்) என்கிறபடியே திருவாய்மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமென்று
நம் ஆசாரியர்கள் அருளிச் செய்கையாலே பாம்பனையான் சீர்கலந்த சொல்- திருவாய் மொழியாம்;

ஆக, ஸ்ரீராமாயண பாரதாதி இதிஹாஸங்களைக் கொண்டும் ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய புராணங்களைக் கொண்டும்,
திருவாய்மொழி முதலிய அருளிச் செயல்களைக் கொண்டும் பாவத்தைப் போக்கிக் கொள்ளார்களாகில் போகட்டும்;
போதைப் போக்குவதற்கு இவையொழிய வேறொன்றும் ஸாதநமல்ல என்றாராயிற்று.

————————————————————————–

இப்போதும்.) முதற்பாட்டிலே தம்முடைய நெஞ்சை விளித்து அருளிச் செய்ததுபோலவே
முடிவு பாட்டையும் நெஞ்சை நோக்கியுரைத்து முடிக்கிறார்.
பகவத் குணாநுபவத்தால்தான் உலகத்தார் யாவரும் போதுபோக்க வேணுமென்று கீழ்ப்பாட்டில் சொன்னேன்;
அவர்கள் தங்கள் போதை எப்படி போக்கினாலும் போக்கிக் கொள்ளட்டும்; சூதாடியோ, சதுரங்கம் பொருதோ, களவாடியோ,
கண்ணுறங்கியோ எவ்விதமாகவேனும் போரதைப் போக்கிக் கொள்ளட்டும்; அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை? நெஞ்சமே!
உனக்கு நான் சொல்லுவதைச் சிக்கனம் கேளாய்; இன்றைக்கோ நாளைக்கோ; இன்னும் பத்தெட்டு வருஷங்கள் கழித்தோ
மற்றுமெப்போது நான் உனக்கு உரைப்பதானாலும் இந்த ஒருசொல்லையே சொல்லுவேன்; அந்தச் சொல் யாதெனில்-
“நம்மேல்வினைகடிவான் எப்போதும் கைகழலாநேமியான் மொய்கழலே ஏத்த முயல்” என்பதே.
அடியாருடைய விரோதிகளைத் தொலைப்பதற்காகவே “உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடரொழியும் சங்கும்,
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால்” என்றபடி திவ்யாயுதங்களை எப்போதும் தரித்திரா நிற்கும் பெருமானுடைய
பரமபோக்கியமான திருவடிகளை ஏந்துவதற்கு உத்ஸாஹப்பட்டுக் கொண்டிருப்பதே
உனக்கு எப்போதும் காரியமாகக் கடவதென்று நெஞ்சுக்குரைத்துத் தலைகட்டினாராயிற்று.

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
நம்மேல் வினை கடிவான்–நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக
எப்போதும் கை கழலா நேமியான்–ஒருபோதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய
மொய்கழலே–அழகிய திருவடிகளையே
ஏத்த–ஸ்துதிக்க
முயல் உத்ஸாஹப்படு;
இப்போதும்–இக்காலத்திலும்
இன்னம் இனி சிறிது நின்றாலும்–மேலுள்ள காலத்திலும்
எப்போதும்–ஆக எந்தக் காலத்திலும்
ஈதே சொல்–இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும்.

ஸ்ரீபட்டர் “எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்” என்கிறவிதைத் திருவுள்ளம்பற்றி ஸ்ரீரங்கராஜஸ்தலத்தில்
பாது ப்ரணதரக்ஷாயாம் விளம்ப மஸஹந்நிவ- ஸதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸந: ஸ்ரீரங்கநாயக: என்றருளிச் செய்த ச்லோகம் இங்கு அநுஸந்தேயம்.

‘எப்போதும்’ என்பதை நான் காமடியிலே கூட்டி உரைக்கவுமாம் ‘எப்போதும் ஏத்த முயல்’ என்று.

“மொய்கழலே ஏத்து” என்னாதே “ஏத்த முயல்” என்கையாலே, பகவத் விஷயத்தை ஏத்திக் கரை காண்பதென்பது இல்லை,
ஏத்தவேணும் ஏத்தவேணும் என்கிற உத்யோக நிலைமையை எப்போதுமிருக்கும் என்பது காட்டப்பட்டதாம்.
ஆளவந்தாரும் “ஸ்தா ஸ்திதா. நோத்யமதோதிசோதே” என்றருளிச் செய்ததை ஸ்மரிப்பது.

கீழ்ப் பிரபந்தமாகிய திருவாசிரியத்திற் போலவே இப்பிரபந்தத்திலும்
தம் திருநாமிட்டுக் கவிபாடுதல், பிரபந்தாத்யயநத்திற்குப் பலன் சொல்லுதல் முதலியவற்றை விட்டருளினர்; நிர்ப்பந்தமில்லாமையாலே.

சொற்சுவையாலும் பொருட்சுவையாலும் மிகச் சிறந்த இந் திவ்வியப் பிரபந்தம் ஒருவாறு வியாக்கியானித்துத் தலைக்கட்டப்பட்டதாய்த்து.

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -61-72–திவ்யார்த்த தீபிகை –

September 17, 2014

(இறைமுறையான்.) ஆழ்வார் இவ்விருள் தருமாஞாலத்தின் தன்மைகளைச் சிந்திக்கிறபோது ஒன்றுந்தோன்றாமல்
ஆகாசத்தை நோக்கிக் கிடப்பண்டு;
“நலத்தால்மிக்கார் குடத்தைக் கிடந்தாய்! உன்னைக் காப்பான் நானலாப்பாய் ஆகாயத்தை நோக்கியழுவன் தோழுவனே” என்ற
திருவாய்மொழியில் அருளிச்செய்தபடியே ஆகாசத்தை நோக்க நேருவதுமுண்டு;
ஏதோவொரு காரணத்தினால் ஆகாசத்தை நோக்கினார் ஆழ்வார்; ஆகாசமடங்கலும் நக்ஷத்ரமயமாகக் காணப்பட்டது;
உலகத்தில் எந்த வஸ்துவைக் கண்டாலும் பகவத் ஸம்பந்தத்தை முன்னிட்டே அந்த வஸ்துக்கள் ஆழ்வாருடைய திருவுள்ளத்திற்கு
விஷயமாகுமேயன்றி ஸாமாந்யமான லௌகிக வஸ்துவாக விஷயமாகா தாகையாலே இந்த நக்ஷத்ரங்களிலும் பகவத் ஸம்பந்தத்தை
முன்னிட்ட உத்ப்ரேக்ஷை திருவுள்ளத்திற்படவே அந்த அத்ப்ரேக்ஷையை இந்தப் பாசுரத்தினால் வெளியிடுகிறார்.

நஷத்ரங்கள் விஷ்ணு பதம் என்னும் ஆகாசத்தில் நிரம்பி-உலகு அளந்த திருவடிகளிலே தாது நிறைந்த புஷ்பங்களை-
தூவினது போலே
-ஆழ்வார் திரு உலகு அளந்த விருந்தாந்ததிலே ஊறி இருந்த படி –

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61

பதவுரை

தாழ் விசும்பின் மீது–வெளியான ஆகாசத்திலே
இலசி கிடக்கும் மீன்–விளங்காநின்ற நக்ஷத்திரங்களானவை
இறை முறையான்-ஸ்வாமியான முறைமையை யுடைய எம்பெருமான்
மண் அளந்த அந்நாள்–உலகளந்த அக்காலத்திலே
வான் நாடர்–வானுலகத்திலுள்ளாரெல்லாரும்
கூடி–கும்பல் கூடி
சே அடி மேல்–(அப்பெருமானது) செவ்விய திருவடிகளின் மேல்
மறை முறையால்–வேதங்களிற் சொல்லிய விதிப்படி
தாது இலகு பூ–தாதுக்களாலே விளங்கா நின்றுள்ள புஷ்பங்களை
முறை முறையின்–முறை முறையாக
தெளித்தால் ஒவ்வாதே–தெளிந்தாற் போன்றுள்ளன வன்றோ?

இறை முறையான்
ஸ்வாமியான முறைமையை-உடைய எம்பெருமான்

சேவடி மேல் –
செவ்விய திருவடிகளின் மேலே

மண்ணளந்த வந்நாள்
உலகு அளந்த அக்காலத்திலே

மறை முறையால் வானாடர் கூடி –
வேதங்களில் சொல்லிய-விதிப்படி-வானுலகத்தில் உள்ள எல்லாரும் கும்பலாகக் கூடி

-முறை முறையின்
முறை முறையாக

தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே –
தாதுக்களால் விளங்கா நின்றுள்ள-புஷ்பங்களை தெளித்தால் போல்-உள்ளது அன்றோ

தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன்
வெளியான ஆகாசத்திலே-விளங்கா நின்ற நஷத்ரங்கள் ஆனவை –

எம்பெருமான் முன்பு உலகளந்தருளின காலத்திலே மேலுலகத்திலுள்ளறாரெல்லாருங்கூடி அப்பெருமானது திருவடியின் மேல்
புஷ்பங்களைத் தூவினார்களன்றோ; அந்தப்பூகஙகள் போன்றுள்ளன இந்த நக்ஷத்திரங்கள் என்று உத்பரேக்ஷித்தபடி.
நக்ஷத்திரங்கள் சிறமுல்லைப்பூக்கள் போலேயிருத்தலாலும், விஷ்ணு பதமென்னப்படுகிற ஆகாசத்திலே நிரம்பியிருக்கையாலும்,
ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே எப்போதும் உலகளந்தவரலாற ஊன்றிக்கிடக்கையாலும் இங்ஙனே உத்ப்ரேக்ஷிக்கலாயிற்று.

இப்பாட்டின் வியாக்கியானத்திலே –
“லோக யாத்ரையை அநுஸந்திக்கப்புக்காலும் அவனைமுன்னாகவல்லது காணமாட்டாமை சொல்லுகிறது.” என்றும்;
“சிறியாச்சான் ‘சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதாப்போலே ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீளமாட்டார்கள்’
என்று பிள்ளைக்குப் பணித்தான்” என்றும் உள்ள ஸ்ரீஸூக்திகள் அநுஸந்திக்கத்தக்கன.

——————————————————————–

(மீனென்னுங்கம்பின்.) கீழ்ப்பாட்டில் “இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்தவந்தந்நாள்” என்று
உலகளந்த வரலாற்றைச் சிறிது பிரஸங்கிக்கவே, பின்னையும் அதனை ஒருவாறு வருணித்ததுப் பாசுரங்பேச விருப்பமுண்டாகி
ரூபகாலங்கார (உருவகவணி) ரீதியிலே அருளிச்செய்கிறார்.
ஆகாசம் குடையாக அருளிச் செய்ய பொருத்தமான வற்றை அருளிச் செய்கிறார் –

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

பதவுரை

மீன் என்னும் நம்பின்–நக்ஷத்திங்களாகிற நம்புகளையுடையதும்
வெறி என்னும் வெள்ளி வேய்–சந்தினாகிற வெள்ளிக்குழையையுடையதும்
வான் என்னம்–ஆகாசமென்கிற பெயருடையதும்
கேடு இலா–ஒருநாளும் அழிவில்லாததுமான
வான் குடைக்கு–பெரிய குடைக்கு
ஓர் மணி காம்பு போல் நிமிர்ந்து–ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போல வளர்ந்து
மண் அளந்தான் தான்–உலகளந்தவனான பெருமாள்
பின்–மேலுள்ள காலமெல்லாம்
நங்கள் பிணிக்கு–நம்முடைய (ஸம்ஸாரமாகிற) வியாதிக்கு
பெரு மருந்து ஆம்–சிறந்த ஔஷதமாவன்

மீன் என்னும் கம்பில்
நவ ரத்னங்கள் ஆகிற கம்புகளை உடைத்தும்-ஆகாசம் நஷத்ரங்கள் நிறைந்து
முத்துக்கள் அழுத்தின கம்பு போலே நஷத்ர சமூஹம் தோன்றுமே
குடையில் மேல் துணியைத் தாங்கும் கம்பிகள் –

வெறி என்னும் வெள்ளி வேய்
சந்தரன் ஆகிற வெள்ளிக்-குழையை யுடைத்தும்-வெறி என்று வட்ட வடிவத்துக்கு பெயர்
இலக்கணையால் சந்த்ரனைக் குறிக்கிறது
வான் என்னும்-
ஆகாசம் என்னும் பெயரை உடைத்தும்

கேடிலா வான்குடைக்கு
ஒரு நாளும் அழிவில்லாத-பெரிய குடைக்கு

தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து
ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போலே வளர்ந்து

மண்ணளந்தான் –
உலகு அளந்தவனான பெருமான்

நாங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்-
மேல் உள்ள காலம் எல்லாம்-நம்முடைய சம்சாரம் ஆக்கி வியாதிக்கு-சிறந்த ஔ ஷதம் ஆவான் –
ஆகவே, ஆகாசமாகிற குடைக்குத் தனது திருவடியாகிற காம்பைக் கோப்பதென்பகிற வியாஜத்தினால்
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித்-தாரகையின் புறம் தடவி
அப்பால் மிக்கு மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை யானவன்-சம்சாரம் ஒழிக்கவல்ல சிறந்த மருந்தாவான் என்றபடி-

எம்பெருமான் பண்டு உலகளப்பதற்காக ஒரு திருவடியை ஆகாசததேறத் தூக்கினது எங்ஙனே சொல்லலாம்படியிருக்கின்ற தென்றால்
ஆகாசமாகிற ஒரு பெரிய குடைக்கு நீலரத்நமயமான காம்பு கோப்பது போல் போசலாயிருந்ததென்கிறார்.
ஆகாசத்ததைக் குடையாக்க கூறுதற்கு உள்ள பொருத்தங்களை முதலடியிற் கூறுகின்றார்.
மீனென்னும் கம்பின் = உலகத்தில் சிறந்த குடையானது முத்துக்களழுத்தின பல கம்புகளையுடைத்தாயிருக்கும்;
ஆகாசமும் பல பல நக்ஷத்திரங்கள் விளங்கப்பெற்றிருக்கையாலே, தனித்தனி நக்ஷத்ரங்கள் முத்துக்கள் போலவும்.
நக்ஷத்ரஸமுக்ஷங்கள் முத்துக்கள் அழுத்தின கம்புகள் போலவும் காணப்படாநின்றன.
(முத்துக்களுக்கு வாசகமான பதம் மூலத்தில் இல்லை யெனினும், மீன் என்று நக்ஷத்திரங்களைச் சொன்னதற்கிணங்க
உபமேய கோடியில் முத்துக்கள் விவக்ஷிதமென்க.) கம்பாவது – குடையின் மேல் துணியைத் தாங்குவதற்காகப் போடும் கம்பிகள்.

வெறியென்னும் வெள்ளிவேய் = வெறி என்று வட்ட வடிவத்திற்குப் பெயர்; அஃது இங்க இலக்கணையால் சந்திரனைக் குறிக்கின்றது.
குடைக்காம்பின் நுனியில் வெள்ளிக்குழை போடுவதுண்டே; ஆகாசமாகிற இக்கடைக்குச் சந்திரன் வெள்ளிக்குழை போன்றுளனாம்.
ஆக இவ்வகைகளாலே குடையென்று சொல்லத்தக்கதும், சில நாளிருந்து அழிந்துபோகும் குடை போலன்றியே சாச்வதமாயிருக்கக்கூடிய
குடையென்று சொல்லத்தக்கதுமான ஆகாசத்திலே நீலமணி மேனியனான எம்பெருமானுடைய திருவடி நீண்டு சொருகப்பெற்றநது
மணிக்காம்பு கோத்தது போலலாகுமிறே.

—————————————————————

(பின்துரக்கும்காற்றிழந்த) முன்னோர்கள் இப்பாட்டை இரண்டு மூன்றுவகையாக அந்வயிக்கப் பார்த்தார்கள்;
தசரத சக்ரவர்த்திக்குத் திருமகனாகத்திருவவதரித்துக் தங்கையை மூக்கும் தமையனைத் ததலையும்தடிந்து
அவதார காரியங்களைச் செவ்வனே தலைக்கட்டிக் கொண்டு மறுபடியும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்தானென்கிற
விஷயத்திற்கு ஓர் உபமானம் கூறுகின்றார் இப்பாட்டில்.
இதில் பின்னடிகளை உபமேயவாக்கியமாகவும் முன்னடிகளை உபமாக வாக்கியமாகவும் வைத்து வியாக்கியானித்தல் ஒருவகை; –
(அதாவது=) “அன்று திருச்செய்யநேமியான் தீயரக்கிமூக்கம் பரச்செவியுமீர்ந்தபரன்” என்றவளவும் உபமேயலாக்கியம்;
“பின்தூரக்குங் காற்றிழந்த ‘சூழ்கொண்டல் பேர்ந்தும் போய் வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்து”என்றவளவும் உபமானவாக்கியம்.
இதன் கருத்து யாதெனில்;- ஆழியங்கையனான பெருமான் சூர்ப்பணகாபங்கம் முதலான காரியங்களைச் செய்துமுடித்து
மீண்டும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்ததானது எப்படியிருக்கின்றதென்றால்;
கடலில் மேகமானது காற்றுத்தள்ளத்தள்ள மேலே நடந்துகொண்டே சென்று, அந்தக் காற்று எங்கே ஓய்ந்துவிடுகிறதோ
அங்கிருந்து (மேகம்) மேலே செல்லமுடியாமல் அந்தக்கடலிலேயே வந்து விழுந்திடுமே; அதுபோலேயிராநின்றது என்றபடி.
இக்கருத்து செவ்வனே கிடைக்கும்படியான சொல்தொடைகள் மூலத்தில் உளவோ என்று ஆராயவேண்டும்.
பாட்டின் முடிவிலுள்ள பான் என்பதை உபமேயமாகக் கொண்டால் இரண்டாமடியிலுள்ள வாய்மைத்து என்ற குறிப்புவினைமுற்றை
‘வாய்மையன்’ என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘வாய்மைத்து’ என்றிருப்பது பரன் என்ற உயர்திணைக்குச் சேராதிறே.
ஆகையாலே இப்படி யோஜித்து வியாக்கியானிப்பதில் குறையுண்டென்று மற்றொருவகையான யோஜித்து வியாக்கியானிக்கப் பார்த்தார்கள்;
(அதாவது-) பாட்டின் முடிவிலுள்ள பரன் என்றபதத்தோடு ‘படி’ என்கிற ஒரு பதத்தை வருவித்துக் கூட்டிக்கொண்டு
“பரன்படியானது- வாய்மைத்து’ என்று அந்வயித்தால் திணை மாறாட்டம் செய்ய அவசியமில்லையே என்று பார்த்தார்கள்.
ஆனாலும் இந்த யோஜநையில் – மூலத்திலில்லாத “படி” என்கிறவொரு சொல்லை வருவித்துக் கூட்டிக்கொள்ளுதலாகிற
அத்யாஹாரமென்பதம் ஒரு குறைதானே என்று குறையுற்றிருந்தனர்;
இவ்விரண்டு குறைகட்கும் இடமில்லாதபடி நஞ்ஜீயர் ஸந்நிதியிலே நம்பிள்ளை விண்ணப்பம் செய்த போஜநை தான் இங்க நாம் பதவுரையில் காட்டினது.

கீழ்ச்சொன்ன இரண்டு யோஜனைகளில் எம்பெருமானை உபமேயமாகவும் காளமேகத்தை அபமாநமாகவும் நிறுத்தி உரைக்க வேண்டியதாயிற்று.
இப்போது அங்ஙனம் வேண்டா. மூலத்தில் ஸ்வரஸமாக ஏற்படுகிறபடியே, “பின்துரக்கும் காற்றிழந்த சூல் கொண்டல்” என்பதே உபமேயம்.
இப்போது பாசுரத்தின் கருத்தை நெஞ்சிலே விளக்கக் கொள்ளுங்கள்:-

கொண்டல் உபமேயம்-பிரகிருதி மண்டலத்தில் இருப்பதால் இங்கே கண் வைத்தாலும் பகவத் விஷய சம்பந்தம் இட்டே பார்க்கிறார்-
அவதார தூண்டுதல் -வேண்டித் தேவர்கள் இரக்க வந்து பிறந்ததும்-துஷ்ட நிக்ரஹம் இஷ்ட பரிபாலனம் தர்ம சம்ஸ்தாபனம்-
பிரார்த்தனை ஈடேறா நிற்க-தள்ளிக் கொண்டு வந்த காற்றை இழந்த காளமேகம் போலே-சூல் கொண்ட மேகம் -பூர்ண கர்ப்பமுடைய மேகம்-
இப்படி மேகத்தை உபமேயமாக நிறுத்தியே வியாக்யானம் செய்து அருளினார்

பின் துரக்கும் காற்று இலோந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன்திரைக்கண் சந்து அணைக்கும் வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-

பதவுரை

பின் துரத்தும் காற்று இழந்த சூல்கொண்டல்–பின்பற்றித்தள்ளுகிற காற்றையிழந்து கடலிலே போய்ச் சேர்ந்த காளமேகமானது
(எப்படி யிருக்கின்றதென்றால்)
திரு செய்ய நேமியான்–அழகிய சிவந்த சக்கரத்தையுடையவனும்,
தீ அரக்கி–கொடிய ராக்ஷஸியான சூர்ப்பணகையினது
மூக்கும்–மூக்கையும்
பரு செலியும்–பருத்தகாதுகளையும்
அன்று–ஸ்ரீராமாவதாரத்தில்
ஈர்த்த–அறுத்தொழித்தவனுமான
பரன்–ஸ்ரீராமபிரான்
பேர்ந்தும் போய்–(அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து–பெரிய திருப்பாற்கடலிலே வந்து சேர்ந்தபடியை ஒத்திருக்கின்றது.

பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல்
பின்பு பற்றித் தள்ளுகிற காற்றை இழந்து-கடலிலே போய் சேர்ந்த காளமேகமானது
எப்படி இருக்கிறது என்றால்

பேர்ந்தும் போய்
திருவவதார கார்யத்தை முடித்த பின்பு-மறுபடியும் சென்று

வன்திரைக்கண் சந்து அணைக்கும் வாய்மைத்தே
பெரிய திருப்பாற் கடலிலே-வந்து சேர்ந்த படியை-ஒத்து இருக்கின்றது

அன்று
ஸ்ரீ ராமாவதாரத்திலே

திருச் செய்ய நேமியான்
அழகிய சக்கரத்தை உடையவனும்

தீ அரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்ந்த பரன்
கொடிய ராஷசியினுடைய -சூர்பணகையின் மூக்கையும்-பருத்த செவிகளையும்
பரிச் செவி-என்றும் பாடபேதம் குதிரை காத்து போன்ற காதுகள் உடையவள் –
அறுத்து ஒழித்தவனுமான-ஸ்ரீ ராம பிரான்-

ஆழ்வார் எம்பெருமானை அநுபவிக்குந்திறத்தில் நித்ய ஸூரிகளுக்கு மேற்ப்பட்டவராயிருந்தாலும் இவர் தாம் எழுந்தருளியிருப்பது
பிரகிருதி மண்டலத்திலேயாகையாலே பிராகிருத பதார்த்தங்களிலும் கண்வைக்க நேருவதுண்டு;
அவற்றில் கண் வைத்தாலும் பகவத்விஷயத்தை முன்னிட்டுப் பேசும்படியாயிருக்குமேயொழிய, பகவத்விஷய ஸம்பந்தமின்றியே
பிராகிருத பதார்த்தத்தன்மையாக மாத்திரம் பார்ப்பதும் பேசுவதும் இவ்வாழ்வார்க்கு அஸம்பாவிதம் என்பது கீழ் அறுபத்தோராம்பாட்டிலும் நன்கு விளங்கியதே.

அதுபோலவே இப்பாட்டிலும் பிராகிருதபதார்த்தங்களில் ஆழ்வார் தமது திருக்கண் ஒட நேர்ந்தபோது,
ஒரு மேகமானது கடலில் சென்றிறங்கிக் கழுத்தே கட்டனையாக நீரை முகந்து கொண்டு மேலே கிளம்பி, காற்றுத் தள்ளத்தள்ள
ஆகாசத்திலே வந்து கொண்டிருக்கும்போது அந்தக் காற்று ஓய்ந்துவிட்டது; காற்றின் உதவியில்லாமல் மேகம் மேலே
நடைபயிலகில்லாமல் மீண்டும் அக்கடலிலேயே போய்ச்சென்றது; இதனைக் கண்ணுற்ற ஆழ்வார்க்கு நல்ல பொருத்தமான
உபமானம் நினைவுக்க வந்தது. பண்டொருகால், இராமபிரானாகிற காளமேகம் கருணாரஸமாகிற நீரைப் பரிபூர்ணமாக
முகந்து கொண்டு திருப்பாற்கடலினின்றும் புயப்பட்டு, தேவதைகளின் பிரார்த்தனையாகிற காற்று தூண்டத் தூண்ட
நிலவுலகத்தே நடந்து வந்து துஷ்டநிக்ரஹம், சிஷ்ட பரிபாலநம், தர்ம ஸம்ஸ்தாபநம் முதலிவற்றைச் செய்துமுடித்து,
அவ்வளவிலே தேவதைகளின் பிரார்த்தனை ஈடேறிற்றாக, (தூண்டும்காற்று ஓய்ந்தமையாலே) மறுபடியும்
திருப்பாற்கடலிலலே போய்ச் சேர்ந்தான் என்கிற செய்தி பொருத்தமான த்ருஷ்டாந்தமாக நினைவுக்கு வரவே அதனைப் பேசி அநுபவித்தாராயிற்று.

“பின்துரக்குங்காற்றிழந்த சூலு“கொண்டல்” என்ற உபமேயவாக்கியத்தில், மேகம் உபமேயமாக நின்றாலும்,
“பின்துரக்குங் காற்றிழந்த” என்ற விசேஷணத்தின் ஸாமர்த்தியத்தினால், மீண்டும் அம்மேகம் கடலில் போய்ச் சேர்ந்ததுவே
உபமேயமாக அநுஸந்திக்கத் தகும். பின்னாலே தள்ளிக்கொண்டு வந்த காற்றை மேகம் இழந்ததென்றால் –
மேகம் கடலில் போய்ச் சேர்ந்துவிட்டது என்ற தாமத்தனையிறே. (காற்றாடியின் கதியைநினைக்க) சூல் கொண்டல்- பூர்ணகர்ப்பமுடைய மேகம் என்கை.

“தீயரக்கிமூக்கும்பருச்செவியுமீர்ந்த” என்று சூர்ப்பணகாபங்கம் மாத்திரமே சொல்லப் பட்டிருந்தாலும் ராவணவதம் வரையிலுள்ள
ஸகலராக்ஷஸநிரஸநமும் இதில் அடங்கும். ஸகல ராக்ஷஸர்களையும் நிரஸிக்க நேர்ந்ததற்கு சூர்ப்பணகையின் பங்கமே
முதற்கிழங்காதலால் அதனைச் சொல்லவே மேலுள்ளதெல்லாம் சொல்லிற்றாகுமென்று ஆழ்வார் சுருங்கச்சொன்னபடி.
அரக்கி- ‘ராக்ஷஸீ’ என்ற வடசொற்சிதைவு. “பரிச்செவியும்” என்ற பாடமாகில், பரி என்று குதிரைக்குப் பெயராகையாலே,
குதிரையின் காதுபோன்ற காதை’ என்று பொருளாகும்.

நம்பிள்ளை காட்டியருளின இந்த யோஜநையில் மூலம் ஒழுங்காக அந்வயிக்கப்பெறுவது தவிர, மேகத்தை உபமேயமாக நிறுத்தி
யுரைத்தலாகிற ஸவாரஸ்யாதிசயம் போற்றத்தக்கது. ஆழ்வார்க்கு லோக யாத்திரையும் பகவதநுபவத்திலே அந்வயிக்கிறதென்கைக்குப் பாங்கு.

———————————————————————-

(பரனாமவனாதல்.) கீழ்ப்பாட்டில் ஸ்ரீராமாவதார விஷயம் ப்ரஸ்துதமாகவே, எம்பெருமான் நம்மைத் திருத்திப்பணி
கொள்ளவேண்டி ராமக்ருஷ்ணாதிரூபத்தாலே மநுஷ்யஸஜாதீயனாய்ப்பிறந்து “உங்களைப்போலே நானும் ஒரு மநுஷ்யனே”
என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், மராமரமேழெய்தது, புள்ளி ஸ்வாய் கீண்டது முதலிய அருமையான
திவ்ய சேஷ்டிதங்களையும் இடையிடையே காட்டிக் கொண்டிருந்தானாதலால் அவற்றை நோக்கி
‘இவன் நம்மைப்போன்ற ஸமாந்ய மநுஷ்யனல்லன்; இவன் பராத்பரனான பரமபுருஷனேயாவன்’ என்று கொண்டு
அவன் பக்கல் பக்திபண்ண வேண்டியிருந்தும், அவஜாநந்தி மாம் மூடா: மாநுஷ்யம் தநுமாச்ரிதம்”
(நான் மநுஷ்யயோநியிற் பிறந்தேனென்று என்னை மூடர்கள் அவமதிக்கின்றார்கள்) என்று கீதையில் அப்பெருமான் தானே
சொல்லி வருந்தும்படியாக அநியாயமாய் அவமதித்துப் பாவிகளாய்க் கெட்டுப் போனார்களே ஸம்ஸாரிகள்;
அப்படி அவமதியாமல் அவனே பரமபுருஷனென்று பாவித்திருப்பர்களாகில் அவர்களைத் தேவர்களெல்லாரும்
கையெடுத்துக் கும்பிட்டிருப்பர்களன்றோ?- என்று அநுதபிக்கிறார்.

பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனாய் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப்  புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழவே கலந்து–64-

பதவுரை

அன்று–முற்காலத்தில்
மரம் ஏழ் எய்தானை–(ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தஸால வ்ருக்ஷங்களைத் துளைத்த இராமபிரானென்ன,
புள்ளின் வாய் சீண்டானை–பகாஸுரனது வாயைக் கிழித்தெறிந்த கண்ணபிரானென்ன இவர்களை நோக்கி
அவன் பரன் ஆம் ஆதல்–‘அந்த இராமபிரானும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மனுஷ்யரல்லர்;) ஸாக்ஷாத் பரமபுருஷரேயாவர்’ என்கிற விஷயத்தை
உõனால்-தங்களுடைய மனத்தினாலே
பாவிப்பர் ஆகில்–அநுஸந்திப்பர்களேயானால்
(அப்படிப்பட்ட விவேகிகளை)
அமரர் கை-தேவர்களின் கைகளானவை
கலந்து–ஒன்றுசேர்ந்து
ஒரு மூன்று போதும்–எப்போதும்
தொழாவே–ஸேவிக்க மாட்டாவோ.

பரனாம் அவனாதல்
அவன் பரனாம் ஆதல்-அந்த ஸ்ரீ ராமபிரானும் ஸ்ரீ கண்ண பிரானும்-நம்மைப் போன்ற மனுஷ்யர் அல்லர் –
சாஷாத் பரம புருஷரே ஆவார் என்கிற விஷயத்தை-அனுசந்திப்பவர்களை-தேவர்கள் கை எடுத்து தொழுவார்கள்
அன்றிக்கே
தேவர்களே தங்கள் அஹங்காரம் ஒழித்து-கை தொழுவார்கள் என்றுமாம்

பாவிப்பராகில்
அனுசந்திப்பர்களே ஆனால்

உரனாய் ஒரு மூன்று போதும்
தங்களுடைய மனத்தினாலே எப்போதும்
உரஸ் -மார்வுக்கு வாசகம் -நெஞ்சையும் சொல்லும்
உரம் -வலி என்றுமாம் -அத்யாவசாயம் உறுதியாக கொண்டால்

மரம் ஏழு அன்று எய்தானைப்
சுக்ரீவன் உடைய நம்பிக்கைக்காக-சப்த சால வருஷங்களை எய்த ஸ்ரீ ராமபிரான் என்ன

புள்ளின் வாய் கீண்டானையே
பகாசுரன் வாயைக் கிழித்து எறிந்த-ஸ்ரீ கண்ணபிரான் என்ன-இவர்களையே

அமரர் கை தான் தொழவே கலந்து-
தேவர்கள் கைகள் ஓன்று சேர்ந்து-சேவிக்க மாட்டாவோ-

உரனால் = ‘உரஸ்’ என்னும் வடசொல் மார்வுக்கு வாசகமாய் நெஞ்சையும் சொல்லக்கடவது; அச்சொல் உரம் எனத் திரிந்து;
மகானகரப் போலியுண்டாகையாலே உரன் என்று கிடக்கிறதிங்கு எதுகையின்பம் நோக்கி,
இங்ஙனன்றிக்கே உரம் என்று தனியே ஒரு தமிழ்ச் சொல்லுமுண்டு; அதற்கு வலி என்று பொருள்;
இங்கு அத்யவஸாயத்தைச் சொன்னபடி ‘அவன் பரமபுருஷனேயென்று உறுதியாகப் பாவித்திருப்பர்களாகில்’ என்றபடி.

மரமேழன்றெய்தானை என்பதனால் ஸ்ரீராம வதாரத்தையும், புள்ளின்வாய்கீண்டயானை என்பதனால் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தையும் குறித்தது-
மற்றும் இப்படிப்பட்ட பல விபாவாவதாரங்களையுங்காட்டினபடி
“அமரர்கைதான் தொழாவே கலந்து” என்பதற்கு இங்கு நாம் உரைத்த பொருளாவது- ‘மநுஷ்யாவதாரம் பண்ணின எம்பெருமான்
திறத்திலும் பரத்வபுத்தியை யார் வஹிக்கின்றார்களோ அவர்களை அமரர்கள் கையெடுத்துக் கும்பிடுவார்கள்’ என்று உரைத்தோம்.
மூலத்தின் நிலைமைக்கு நன்கு சேரும்படி வேறொருவகையாகவும் உரைக்கலாம்;-
அமரர் என்றது அஹங்காரிகளான தேவதைகளைச் சொன்னபடியாய்; ஸம்ஸாரிகள் விபவாவதாரங்களிலெம்பெருமான்களை
அலக்ஷியம் செய்யாமல் பரத்வத்தையே பாவித்துப் பணிந்திருப்பர்களாகில் அஹங்காரிகளான தேவர்களும் தங்களுடைய
அஹங்காரத்தை யொழித்துவிட்டுக் கூடவே தொழுது உஜ்ஜீவித்திருப்பர்களன்றோ? என்றுரைக்கவுமாம்.

மரமேழன்றெய்த வரலாறு:- ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானஞ் செய்யப்பெற்ற பின்பும் மனம் தெளியாமல் வாலியின்
பேராற்றலைப்பற்றிப் பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத் துளைத்ததையும், துந்துபியின் உடலெலும்பை
ஒரு போஜனை தூரம் தூக்கி யெறிந்ததையும் குறித்துப் பாராட்டிக் கூறி, இவ்வாறு பேராற்றலமைந்தவனைவெல்வது ஸாத்யமாகுமோ?
என்று சொல்ல அது கேட்ட லக்ஷ்மணன் ‘உனக்கு விச்வாஸம் இல்லையாயின் இப்போது என்ன செய்ய வேண்டுவது?’ என்ற, ஸுக்ரீவன்
‘இராமபிரான் நீறுபூத்த நெருப்புபோலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும்போது ஸந்தேஹமுண்டாகின்றது;
எழுமரா மரங்களையும் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இருநூறு விரற்கடை தூரம் தூக்கியெறிந்தால் எனக்கு நம்பிக்கையுண்டாகும்’
என்று சொல்ல; ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாக்காமறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான்
துந்துபியின் உடலெலும்புக்குவியலைத் தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்து போஜனை தூரத்துக்கு அப்பால் எறிய,
அதனைக் கண்ட ஸுக்ரீவன் ‘முன்பு உலரா திருக்கையில். வாலி இதனைத் தூக்கியெறிந்தான்;
இப்போது உலர்நதுபோன இதனைத் தூக்கி யெறிதல் ஒரு சிறப்பன்று’ என்று கூற, பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை
ஏழு மராமரங்களின்மேல் ஏவ,அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலங்கங்களையும் துளைத்துச் சென்று மீண்டும்
அம்புறாத் தூணியை அடைந்தது- (மராமரம்- ஆச்சாமரம்.)

புள்ஸின்வாய் கீண்ட வரலாறு:- ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாயொளித்து வளர்கின்ற கண்ணபிரான் மீது
கறுக்கொண்ட கம்ஸனால் கண்ணனை நலியுமாறு நியமிக்கப்பட்ட ஓரஸுரன் கொக்கின் உருவங்கொண்டு சென்று
யமுனைக்கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போலே எரிக்கவே,
அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்தநினைக்கையில்,
கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றிக் கிழித்திட்டனன் என்பதாம்.

——————————————————————

(கலந்துநலியும்.) இது முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு நன்மை உபதேசித்தருளுகிறார்.
நெஞ்சே; நம்முடன் கூடவேயிருந்து நம்மைத் துன்பப்படுத்துகின்றனவாய், அநுபவித்தே ஒழிக்க வேண்டுமமையான
பாவங்களை முகஞ்சிதறப்புடைத்து, பின் பொருகாலும் நம்மருகே நாடவொட்டாமல் துரத்த வேண்டுமானால்
எம்பெருமான் விஷயத்திலே நல்ல பாசுரங்களை இடைவிடாது பேசிக்கொண்டேயிரு என்கிறார் இப்பாட்டில்.

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல்மாலை எப்பொழுதும் சூட்டு–65-

பதவுரை

நெஞ்சே-வாராய்மனமே!
கலந்து-நம்மோடு கூடவேயிருந்து
நலியும்–ஹிம்ஸிக்கின்ற
கடு துயரை–கடுமையான துக்கங்களை
மலங்க அடித்து மடிப்பான்–முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில்,
விலங்கல் போல்–மலை போன்றவனும்
தொல் மாலை–அநாதி காலமாக நம்மேல் வ்யாமோஹமுடையவனும்
கேசவனை–சிறந்த திருக்குழல் கற்றையை யுடையவனும்
நாரணனை–ஸ்ரீமன் நாராயணனும்
மாதவனை–திருமகள் கேழ்வனுமான பெருமான் விஷயத்திலே
சொல் மாலை–பாசுரங்களாகிற மாலைகளை
எப்பொழுதும்–ஸர்வகாலமும்
குட்டு–ஸமர்ப்பி.

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
வாராய் மனமே -நம்முடன் கூடவே இருந்து-ஹிம்சிக்கின்ற கடுமையான துக்கங்களை
துயர்  – துக்கங்களும் காரணமான பாபங்களும் -சொல்லும்-
மலங்க அடித்தல் அசம்பாவிதம் ஆயினும் தோஷத்தைக் காட்ட-அருளிச் செய்கிறார்

மலங்க வடித்து மடிப்பான்
முகம் சிதறப் புடைத்து துரத்த வேண்டில்

விலங்கல் போல்
மலை போன்றவனும்-பாஹ்ய குத்ருஷ்டிகளால் அசைக்க முடியாத ஸ்திரபிரதிஷ்டையாய் இருப்பவன் –
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா வென்று கூவும்
-திருவாய் மொழி –

தொல்மாலைக்
அநாதி காலமாக நம் மேல் வ்யாமோஹம் உடையவனும்-
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய-
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரு விக்ரமனையே –
திருவாய்மொழி

கேசவனை
சிறந்த குழல் கற்றையை உடையவனும்-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன்
குதிரை வடிவம் கொண்ட அசுரனைக் கொன்றவன்

நாரணனை
ஸ்ரீ மன் நாராயணனும்

மாதவனை
திருமகள் கேள்வனுமான-பெருமான் விஷயத்திலே

சொல்மாலை எப்பொழுதும் சூட்டு
பாசுரங்கள் ஆகிற மாலைகளை-சர்வ காலமும் சமர்ப்பிப்பாய்
அடியவர்கள் வாய்ச் சொல்லை பூ போலே தனது தலையிலே சூட்டிக் கொள்பவன்
தலை துலுக்கிக் கொண்டு கொண்டாடுவான் –
சூட்டு
சூட்டினேன் சொல்மாலை –பொய்கையாழ்வார்-
உலகில் மாதர்களுக்கு மலர்களால் அழகு உண்டாவது போலே-பராத்பரனுக்கு அருளிச் செயல்களால் அழகு உண்டாகுமே

துயர் என்று துக்கங்களையும் துக்கங்களுக்குக் காரணமான பாவங்களையுஞ் சொல்லும்.
அசேதநங்களான பாவங்களை மலங்கவடித்தால் அஸம்பாவிதமாயினும், அவற்றினிடத்துத் தமக்குள்ள
ரோஷத்தைக் காட்டினாராமித்தனை. மடிப்பான்- ஆன்விகுதிபெற்ற வினையெச்சம்.

விலங்கல்போல்தொன்மாலை = ‘விலங்கல்’ என்று மலைக்குப்பெயர்; மலையானது ஒருவராலும் அசைக்க முடியாமல்
ஸ்திரப்ரதிஷ்டையாக இருப்பதுபோல, எம்பெருமான் குத்ருஷ்டிகள் முதலான மாதாந்தரஸ்தர்களுடைய
எப்படிப்பட்ட குத்ஸிதவாதங்களாலும் சலிப்பிக்க முடியாமல் வேதவேதாந்தங்களில் ஸ்திரப்ரதிஷ்டையையுடையனாயிருத்தல் பற்றி
மலையை உவமையாகச் சொல்வார்கள். மற்றும் பல காரணங்களுமுண்டு.
“நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே’ வாவென்றுகூவும்” என்ற திருவாய்மொழியும் இங்கு அநுஸந்திக்கத்தகும்.
மால் என்பதற்கு ‘மோஹமுடையவன்’ என்று பொருள்; ‘தொல் மால்’ என்றது – நெடுநாள் முதற்கொண்டே நம்மேல் மோஹமுடையவன் என்றபடி:
“எதிர் சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கேயருள்கள் செய்ய, விதிசூழ்ந்ததால் எனக்கேலெம்மான் திரிவிக்கிரமனையே.” என்று
திருவாய் மொழியிலருளிச் செய்வது காண்க.

கேசவன் என்பதற்கு- சிறந்த மயிர்முடியையுடையவன் என்றும், பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன் என்றும்,
கேசி யென்னும் பெயரையுடையவனாய்க் குதிரை வடிவங்கொண்டு நலியவந்த அசுரனைக் கொன்றவனென்றும்
மூன்றுவகையாகப் பொருள் கூறுவதுண்டு.

சொல்மாலை சூட்டு = அடியார்களின் வாயில் நின்றும் வருகிற பாசுரம் எம்பெருமானுக்குப் பூமாலைபோன்று பரமபோக்யமாயிருத்தலால் ‘
சொல்மாலை’ என்பது வழக்கம். பூமாலையைத் தலைமேலணிந்து மகிழ்வது போல, இப்படிப்பட்ட அருளிச்செயல்களையும்
எம்பெருமான் தலைதுலுக்கிக்கொண்டாடுவன் என்பது தோன்ற ‘சூட்டு’ எனப்பட்டது.
“சூட்டினேன் சொல்மாலை’ என்றார் பொய்கையாழ்வாரும் உலகில் மாதர்கட்குப் பூமாலையினால் அழகு உண்டாவது போலே
எம்பெருமானுக்கு அருளிச் செயல்களினால் அழகு உண்டாகுமென்க.

————————————————————————–

(சூட்டாய நேமியான்.) நெஞ்சே! நீ ஸாமாந்யமாக மற்றையோருடைய நெஞ்சாக இராமல் என்னுடைய நெஞ்சாக அமைந்தபடியாலும்,
நான் ஒரு வழிபோனால் நீ ஒருவழி போகையன்றியே சாலவும் எனக்கு நீ உடன்பட்டிருக்கையாலும்
உனக்கு ஒருவிசேஷார்த்தம் சொல்லுகிறேன் கேள்;
உலகத்திலே உணர வேண்டும் பொருள்கள் பலவுள்ளனவென்று பலர் நினைத்திருப்பர்களாயினும்,
நினைத்திருப்பதாவது உணரவேண்டும் பொருள் ஒன்றே; அஃதாவது பகவத்விஷயம்.
“ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” என்று பொய்கையாழ்வாரும் அருளிச் செய்தாராகையால்
பகவத்விஷயமொன்றே நமக்கு உணரத்தக்கது; அதனையே நீ உணர்; இதனை நான் மற்றையோர்க்குச் சொன்னால் ஏசுவார்கள்;
ஆகையாலே ஒருவருக்கும் இதை நான் சொல்வதில்லை, உனக்கே சொன்னேன்- என்கிறார்.

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

பதவுரை

நெஞ்சை–ஓ மனமே!
சூடு ஆய நேமியான்–(ஆயுதமாயிருக்கும் மாத்திரமல்லாமல்) அலங்காரமாயுமிருக்கிற திருவாழியையுடையவனும்
மாட்டே–அவன் பக்கத்திலிருந்து கொண்டே
துயர் இழைத்த–துன்பப்படுத்தின
மாயவனை–ஆச்சர்யனும்
ஈட்ட–திரண்ட
வெறிகொண்ட–பரிமளம் மிக்க
தண் துழாய்–குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த
தொல் அரக்கன் இன்உயிரை–வெகு காலமாகத் தீமை செய்து கொண்டிருந்த இராவணனுடைய இனிய உயிரை.
வேதியனை–வைதிகனுமான எம்பெருமானை
அறிகண்டாய்–அநுஸந்தித்திரு;
அது சொன்னேன்–ஒருவர்க்கும் சொல்லவொண்ணாத அப்படிப்பட்ட இவ்விஷயத்தை உனக்குச் சொன்னேன்.

சூட்டாய நேமியான்
சூடு ஆய நேமியான்-திவ்யாயுதமாயும்-திவ்யாபரணமாயும் அலங்காரமாக இருக்கிற
திரு ஆழியை உடையவனும்-வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு

தொல்லரக்கன் இன்னுயிரை
வெகு காலமாக தீமைகளே செய்த-இராவணன் உடைய இனிய உயிரை-

மாட்டே துயர் இழைத்த
அவன் பக்கல் இருந்து கொண்டே துன்பப்படுத்தின-
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே ராஷேச்வர
-வால்மீகி-ஸ்ரீ ராம பாணங்களை நினைந்தே ராவணன் உரு அழிந்தான் –

மாயவனை –
ஆச்சார பூதனும்

ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை
திரண்ட -ஈண்ட எனபது எதுகைக்காக ஈட்ட -வல் ஒற்று
இது பரிமளத்துக்கும்-துழாய்க்கும் விசேஷணம்-பரிமளம் மிக்க-குளிர்ந்த-
திருத் துழாய் மாலை அணிந்த-வைதிகனுமான எம்பெருமானை

நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது
நெஞ்சே – அறி கண்டாய் -அது சொன்னேன் -ஒ மனமே -அனுசந்தித்து இரு
ஒருவருக்கும் சொல்ல ஒண்ணாத இந்த விஷயத்தை உனக்குச் சொன்னேன்
என்னுடைய நெஞ்சு என்பதாலும்-உடன்பட்ட நெஞ்சு என்பதாலும்-இது ஒன்றே உணர வேண்டிய பொருள்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –பொய்கையார்
சொன்னேன் இது என்னாமல் அது -என்றது அர்த்த கௌரவம் தோற்ற அருளிச் செய்கிறார்-

மூன்றடிகளால் பகவத்விஷயத்தை வருணிக்கிறார். சூட்டாய நேமியான் -சூடா” என்றகிற வடசொல் ‘சூடு’ என விகாரப்பட்டு,
அலங்காரமென்று பொருள் பெற்றுக்கிடக்கிறது. எம்பெருமானைக் கொண்டு அஸுரராக்ஷஸ ஸம்ஹாரம் முதலிய காரியங்களைக்
கொள்ள நினைப்பவர்கள் திருவாழியாழ்வானை ஆயுதமாகக் கருதுவார்கள்
அங்ஙனன்றிக்கே அநந்யப்ரயோஜநராய் “வடிவார்சோதி வலத்துறையுஞ்சுடாழியும் பல்லாண்டு” என்று திருப்பல்லாண்டு பாடுமவர்கள்
எம்பெருமானுடைய திவ்யாயுதங்களெல்லாவற்றையுமே திருவாபரணகோடியிலே அநுஸந்திப்பர்களாதலால்
அது தோன்ற இங்கு சூட்டாயநேமியான் என்றார். நேமி- திருவாழியாழ்வான்.

தொல்லாக்கனின்னுயிரை மாட்டே துயரிழைத்த மாயவன்- எம்பெருமான் அடியவர்களுக்கு அநாதிகாலமாகவே
நன்மைகளைச்செய்து வருவது போல, இராவணன் பாகவதர்களுக்கு அநாதிகாலமாகத் தீமைகளியற்றிவருதலால் தொல்லரக்கன் எனப்பட்டான்.
அவனுடைய இன்னுயிர்க்குத் துயருண்டாகின மாயவன் இராம பிரான். மாட்டே என்றது ஸமீபத்திலே யிருந்துகெண்டு என்றபடி.
“மாடு பொன் பக்கம் செல்வம்” என்பது நிகண்டு. =ஸ்மாக் ராகவ பாணாநாம் விவ்யதே ராக்ஷஸேச்வர:” என்று-
இராவணன் இராமபிரானுடைய அம்புகளை நினைந்து நினைந்து உருவழிந்தானென்று ஸ்ரீவால் மீகிபகவான் பேசினபடியை இங்கு நினைப்பது.

“ஈட்ட வெறிகொண்ட” என்றவிடத்து, ‘ஈண்ட’ என்றிருக்கவேண்டுவது எதுகையின்பம் நோக்கி ‘ஈட்ட என்று வல்லொற்றாய்க் கிடக்கிறதென்ப.
திரண்ட என்றபடி. இது வெறி (பரிமளத்து)க்கு விசேஷணமாகவுமாம்; துழாய்க்கு விசேஷணமாகவுமாம்
வேதியன் = ‘வைதிக:’ என்ற வடசொல்லிகாரம். “சொன்னேனிது” என்ன வேண்டியிருக்க, “சொன்னேன் அது” என்றது அர்த்த கௌரவர் தோற்றவாம்.

————————————————————————–

(அதுவோநன்றென்று) உபய விபூதியையும் எளிதில் தந்தருளவல்ல எம்பெருமான் திருவடிகளையே வாழ்த்து நெஞ்சமே! என்கிறார்.
தேவதாங்தரங்கள் தம் தம் அடியவர்களுக்குச் சில அபேக்ஷிதங்களைத் தாக்கடவனவாகிலும் பரமபதத்தைத் தருவது
எந்த தேவதைக்கும் முடியாதகாரியம்; எம் பெருமானுக்கோ அது பரமஸுலபமானது;
ஆகையாலே, நெஞ்சமே! நீ பரமபதந் தவிர மற்றதெல்லாம் தீது என்று விட்டிட்டு,விலக்ஷணமான அப்பரமபதமொன்றையே விரும்புவாயாகிலும்,
அது எம்பெருமானுடைய திருவருளால் எளிதில் கிடைக்கக்கூடியதே; அதனைத் தருவதில் அவனுக்கு அருமையேயில்லை அவனுக்கு
இது ஒரு சரக்கேயன்று காண்;
அங்ஙனல்லாமல் பாவோ நாந்யத்ரா கச்சதி” என்று திருவடிசொன்னாற்போலலே அந்தப் பரமபதத்தையும் உபேக்ஷித்துவிட்டு
இந்த மண்ணுலகத்திலேயே நிலைபெற்று நின்று அநுபவிக்க வேணுமென்று விரும்பினாயாகிலும்
இதுவும் அவனால் எளிதில் தரக்கூடியதே; ஆகையால் ஐஹிகமோ ஆமுஷ்மிகமோ எந்த புருஷார்த்தமும்
எம்பெருமானால் நாம் எளிதில் பெக்கூடியதே; ஆன பின்பு இப்படி ஸர்வேசக்தனான
எம்பெருமானுடைய திருவடிகளையே வாழ்த்தப்பாராய்- என்றாராயிற்று.
(பரமபதாநுபவத்திலும் இஹலோக போகத்திலும் விருப்பம் வைத்திடாமல்
கண்ணன் கழிலிணை வாழ்த்துவதொன்றிலேயே நோக்காக இருக்கக்கடவை என்பது உள்ளுறை.)

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

பதவுரை

மடநெஞ்சே–அறிவுகெட்ட மனமே!
அதுவோ நன்று என்று–(இப்பூபதியிலிருப்பைவிட) அந்தப் பரமபதாநுபவம் சிறந்ததென்று கொண்டு
அங்கு அவர் உலகு வேண்டில்–அந்தப் பரம பதாநுபவத்தை விரும்புகிற பக்ஷத்தில்
மண் நின்று ஆள்வேன் எனினும்–இந்த மண்ணுலகத்தில் நிலை நின்று ஐச்வரியத்தை ஆள வேணுமென்று விரும்பினாயாகிலும்
கூடும்–அதையும் அவன் எளிதில் அருளக்கூடும்;
அது ஓர் பொருள் இல்லை அன்றே–அதனைக் கொடுப்பது (எம்பெருமானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே;
அது ஒழிந்து–அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு
கண்ணன்–ஆகவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வாழ்த்துவதே–மங்களாசாஸநம் பண்ணுவதையே
கல்–அப்பஸிக்கக்கடவாய்.

அதுவோ நன்று என்று
இவ்வுலகம் இருப்பை விட-அந்த பரமபத அனுபவம் சிறந்தது என்று கொண்டு

அங்கு அமருலகோ வேண்டில்
அந்த பரம பதத்தை-விரும்புகிற பஷத்தில்-ஒ காரம் – பரமபத வைலஷண்யம் காட்டும்
ஸ்வர்க்க லோகம் விரும்புகிற பஷத்திலும் என்றும் கொள்ளலாம்

அதுவோர் பொருள் இல்லை அன்றே
அதனைக் கொடுப்பது-எம்பெருமானுக்கு ஒரு அசாத்தியமான-கார்யம் அல்லவே -ஒரு சரக்கே அன்று –
அதுவோ பொருள் பாட பேதம்

அது ஒழிந்து
அந்த பரமபத அனுபவத்தை உபேஷித்து விட்டு

மண்ணின் நின்று ஆள்வேன் எனினும்
இந்த மண்ணின் மேல் நின்று-ஐஸ்வர்யத்தை ஆள வேணும் என்று விரும்பினாய் ஆகிலும்-
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
-மண்ணிலே இருந்து பகவத் விஷயத்தை அனுபவிக்க என்றுமாம்

கூடும்
அதையும் அவன் எளிதிலே அருளக் கூடும்

மட நெஞ்சே

கண்ணன் தாள் –
ஆக-இப்படி உபய விபூதியையும் அளிக்க வல்ல-எம்பெருமானுடைய திருவடிகளை
ஐஹிகமோ ஆமுஷ்மிகமோ எந்த புருஷார்த்தத்தையும் அளிக்க வல்லவன்

வாழ்த்துவதே கல்
மங்களா சாசனம் பண்ணுவதையே-அப்யசிக்கக் கடவாய்-உபய விபூதியையும் அபேஷியாமல்
கண்ணன் கழல் இணை வாழ்த்துவதே
-இது ஒன்றிலேயே –
நோக்காக இருக்கக் கடவை-

“அதுவோநன்று” என்றவிடத்து ஓகாரம் பரமபதத்தின் ஸவலக்ஷண்யத்தைக் காட்டும்.
“அமரருலகு” என்பது ‘அமருலகு’ எனக் குறைந்து கிடக்கிறது.
“அதுவோ பொருளில்லை” ‘அதுவோர் பொருளில்லை” என்பன பாடபேதங்கள்.

மண் நின்று ஆள்வேனெனிலும் = இதற்கு இரண்டுவகையாகப் பொருள்கொள்ளலாம்;
இந்த மண்ணுலகத்திலேயே யிருந்து கொண்டு பகவத்விஷயத்தையநுபவிக்க விரும்பினாலும் என்பது ஒருபொருள்.
“ஒரு நாயகாமய் ஒடவுலகுடனாண்டவர்” (திருவாய்மொழி 4-1-1-) என்கிறபடியே இவ்வுலகத்தில் ஐச்வரியத்தை
யநுபவிக்கவிரும்பினாலும் என்பது மற்றொரு பொருள். விரும்பும் பலன் எதுவாயினும் பகவானுடைய திருவடிகளை வாழ்த்துவதே
யாத்திரையாயிருக்க வேணுமென்று விளக்கியவாறு.
முதலடியில் “அமருலகோ வேண்டில்” என்றதக்கும் ‘ஸ்வர்க்கலோக புருஷார்த்தத்தை விரும்பினாலும் என்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.
திவிவா புவிவா மாமஸ்து வாஸோ நரகேவா நரகாந்தக! ப்ரகாமம்- அவதீரித சாரதாரவிந்தௌ சரணௌ தே மரணேபி சிந்தயாநி” என்ற
முகுந்தமாலையை ஒரு புடையொக்குமிப்பாசுரம்.

கல்- முன்னிலை எவலொருமை வினைமுற்று.

——————————————————————–

(கல்லுங்கனைகடலும்.) கீழ் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு ஹிதம் உபதேசித்தார்.
அந்த உபதேசத்திற்கு நெஞ்சு உடன்பட்டிருந்த தன் பலன் உடனே கைபுகுந்தபடியை
இது முதல் மூன்று பாசுரங்களாலே பேசுகிறார்.
எம்பெருமான் திவ்யமங்கள விக்ரஹத்தோடே தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரப்திஷ்டையாக இருக்கும்படியைப் பேசுகிறாரிதில்.

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்–68-

பதவுரை

வெல்ல நெடியான்–மிகவுயர்ந்தவனும்
நிறம் கரியான்–நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான்
உள் புகுந்து–உள்ளே பிரவேசித்து
அடியேனது உள்ளத் தகம் நீங்கான்–அடியேனது உள்ளத்தைவிட்டு நீங்குகின்றனில்லை;
(ஆகையாலே)
கல்லும்–திருவேங்கடமலையும்
கனை கடலும்–கோஷிக்கின்ற திருப்பாற்கடலும்
வைகுந்தம்–வைகுண்டமென்கிற
வான் நாடும்–வானுலகமும்
புல்லென்று ஒழிந்தன கொல்–அல்பமாய் விட்டன போலும்;
ஏ பாவம்–ஐயோ பாவம்!

கல்லும்
திருவேங்கட மலையும்

கனைகடலும்
கோஷிக்கின்ற திருப்பாற் கடலும்-எம்பெருமான் உறைவதால் வந்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக கோஷிக்குமே

வைகுந்த வானாடும்
ஸ்ரீ வைகுண்டம் என்கிற-வானுலகமும்

புல்லென்று ஒழிந்தன கொல்
அல்பமாய் விட்டன போலும்-போக்கு வரத்து அற்ற படியால் புல் மூடிப் போயின இவ்விடங்கள்

ஏ பாவம்
ஐயோ பாவம்-இரக்கம்  தோற்ற அருளிச் செய்கிறார் –

வெல்ல நெடியான்
மிக உயர்ந்தவனும்-நாம் எவ்வளவு முயன்றாலும் எட்டாமல் இருப்பவன் –

நிறம் கரியான்
நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான்-வந்து புகுந்ததாக தோற்றம் மட்டும் இல்லை
மெய்யே வந்து புகுந்தான்

உள் புகுந்து
உள்ளே பிரவேசித்து

நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
அடியேனுடைய உள்ளத்தை விட்டு நீங்குகிறான் இல்லை –
அகலகில்லேன் இறையும் என்று உருச் சொல்லிக் கொண்டே-ஸ்தாவர பிரதிஷ்டையாக உள்ளான்-

அங்குத்தை வாஸம் உபாயம்-மெய்யடியார் ஹிருதய கமலமே பரம உத்தேச்யம் அவனுக்கு-
கல்லும் கனை கடலும் வைகுந்த வானோடும் புல்லென்று ஒழிந்தன கொல்
என்கிற ஈரச் சொல் பாவியேனுடைய நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்பட பெறுவதே
ஆழ்வார்கள் அனுபவம் எங்கே நம்முடைய அனுபவம் எங்கே-ஏதோ பாக்ய விசேஷத்தால் நாமும் சொல்லப் பெற்றோமே-
இரவில் பள்ளி கொள்ளும் பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுசந்திக்க வேண்டிய பாசுரம்

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு -தடவரைவாய் மிளிந்து மின்னும் –
இரண்டு பாசுரங்களும் இதில் இரண்டாம் அடிக்கு எதிர் நில்லா-என்பர் அழகிய மணவாள சீயர்-

வெல்ல நெடியான் = ‘வெல்ல’ என்றது (மிகவும்) என்றபடி. நாமாக எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்கு எட்டாதிருப்பவன் என்கை.
அவன் தானே தன்னருளாலே எளியனாகில் தடை செய்வாரில்லாமையாலே நிர்ஹேதுக க்ருபையாலே வந்து புகுந்தானென்கிறது.
(வெல்ல- வெல்வதற்கு, நெடியான்- முடியாதவன்; ஒருவராலும் ஜயிக்க முடியாதவன் என்று பொருள் கூறுதல் சிறவாது.)
வந்து புகுந்ததாகத் தோன்றிவிடுதல் மாத்திரமல்ல; மெய்யே வந்து புகுந்தானென்கைக்காக நிறங்கரியான் என்று
திருமேனியையுங்கண்டறிந்து பேசுகிறார் போலும்.
பிராட்டியானவள் எம்பெருமானுடைய திருமார்பிலே வந்து சேர்ந்து “அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று
தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து
“அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே,
எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “நான் இதனைவிட்டு நீங்கேன், நான் இதனைவிட்டு நீங்கேன்”
என்று உருகிச் சொல்லிக் கொண்டு கிடக்கிறானென்பது தோன்ற, “உள்புகுந்து நீங்கான்” என்று அருளிச்செய்யுமழகு காண்மின்.

எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், கோயில் திருமலை பெருமான்கோயில் முதலான
உகந்தருளினவிடங்களிலும் இருப்பதிற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதயகமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும்,
ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகின்றானெற்றும்,
ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும்,
இது ஸித்தித்துவிட்டால் பரமபதம் முதலியவற்றில் வாஸம் செய்வதில் ஆதரம் மட்டமாய் விடுமென்றும்
ஸ்ரீவசநபூஷணத்தில் பிள்ளையுலகாசிரியர் பரமரஸமாக அருளிச்செய்ததெல்லாம்
இப்பாசுரத்தின் முன்னடிகளை மூலமாகக் கொண்டேயென்றுணர்க.
“கல்லும் கனைகடலும் வைகுந்தவனாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்!” என்ற இப்பாசுரத்தின் உருக்கத்தை என்சொல்வோம்?
இப்படிப்பட்ட ஈரச்சொற்கள் பாவியோமான நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்படப் பெறுவதே!
ஆழ்வாருடைய அநுபவம் எங்கே? நாம் எங்கே? அவ்களுடைய அருளிச் செயலுக்கும் நமது நாவுக்கும் எவ்வளவோ தூரமுண்டு.
ஆயினும், ஏதோ பாக்யவிசேஷத்தாலே நமது வாயிலும் இத்தகைய பாசரங்கள் பொருள் தெரிந்தோ தெரியாமலோ
சற்றுப்போது நுழைந்து புறப்படும்படியாக வாய்ப்பது இவ்விருள் தருமாஞாலத்திடைய பெற்றதொரு கனத்த பேறாம்.

ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இரவில் பள்ளிக்கொள்ளும்போது இப்பாசுரத்தைப்
பலகால் அநுஸந்திக்க வேணுமென்பது பெரியோர்களின் உபதேசம்.

கல்லும் = கல் என்று ஸாமாந்யமாக மலையைச் சொல்லிற்றாய், அது இங்கே சிறப்பாய்த் திருவேங்கடமலையைச் சொல்லிற்றாகிறது.
கனைகடல் = எம்பெருமான் எப்போதும் தன்னிடத்து உறைகின்றானென்ற மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்கின்ற கடல் என்கை.
“புல்லென்றொழிந்தனகொல் = புல்லென்று – அற்பத்தனமடைந்து.
எனது நெஞ்சின் முன்னே அவையெல்லாம் அற்பமாய்விட்டன போலும் என்றவாறு.
அவ்விடங்களில் போக்குவரத்து அடியோடு அற்றுப்போனபடியாலே அவை புல்மூடிப்போயினவோ என்கிறார்- என்றரைப்பார் சிலர்.
ஏபாவம்! = சிறந்த ஸ்தலங்களென்று கொண்டாடப்படுகிற அவ்விடங்களுக்கு இப்படிப்பட்ட அவஸ்தையா வந்துவிட்டது!
ஐயோ பாவம்!! என்று இரங்கந் தோற்றப் பேசுகிறபடி.

பெரியாழ்வார் திருமொழியின் முடிவிலுள்ள “பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு” “தடவரைவாய் மிளிர்ந்து மின்னும்”
என்ற இரண்டு பாசுரங்களும் இப்பாசுரத்தின் இரண்டாமடிக்கு எதிர்நில்லா என்று அழகிய மணவாளச்சீய ரருளிச் செய்யும்படி.

——————————————————————-

(அகஞ்சிவந்த கண்ணினராய்) இப்படி என்னுள்ளே மிகவும் அபிநிவேசத்தைப் பண்ணிக் கலந்து வாழ்கின்ற
திருமாலின் திருக்குணங்களை அநுஸந்திக்கப் பெறுகையாகிற ஏற்றமுடைய என்னை ஒருவராலும்
திரஸ்கரிக்க முடியாதென்று மகிழ்ச்சியின் கனத்தாலே மார்பு தட்டிப் பேசுகிறார் போலேயிருக்கிறது இப்பாசுரம்.
எம்பெருமான் ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருப்பதால்-உண்டான ஹர்ஷத்தால் மார்பு தட்டி பேசி அருளுகிறார் இதில்–

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினையாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-

பதவுரை

வல்வினையர் ஆவார்–கடுமையான பாவங்களானவை
(தங்களுடைய குடியிருப்பை யிழந்தமையாலே)
அகம் சிவந்த கண்ணினர் ஆய்–(கோவத்தினால் உள்ளே சிவந்த கண்களையுடையனவாய்
முக்கி–வருந்தி
முகம் சிதைவராம் அன்றே–முகம் வாடியிருக்கின்றனவல்லவோ?
மிகும்–எல்லாரிலும் மேற்பட்டவனான
திருமால்–திருமாலினுடைய
சீர் கடலை–கல்யாண குணங்களாகிற கடலை
உள் பொதிந்த–உள்ளே அடக்கிக் கொண்ட
சிந்தனையேன் தன்னை–சிந்தனையை யுடையேனான என்னை
செவ்வே–செவ்வையாக
அடர்ந்து–நெருக்கி
ஆர்க்கு அடல் ஆம்–யாரால் உபத்ரவிக்க முடியும்? (ஒருவராலும் என்னைத் திரஸ்கரிக்க முடியாது.)

அகம் சிவந்த கண்ணினராய்
கோபத்தினால் உள்ளே சிவந்த-கண்களை யுடையனவாய்-முன்பு போலே தனிக் கொல் செலுத்த முடியாமையினாலே

வல்வினையாராவார்
கடுமையான பாபங்களானவை-உயர் திணை யாகவும் கண்ணும் மூக்கும் உள்ளன போலும் பேசி-அவற்றின் கொடுமையை விளக்குகிறார்

முகம் சிதைவராம் அன்றே
முகம் வாடி இருக்கின்றன அல்லவோ

முக்கி
வருந்தி-வாய் விட்டு சொல்ல முடியாமல்-வெறுமனே இருக்க முடியாமல் முக்கி

மிகும் திரு மால்
எல்லாரிலும் மேம்பட்ட வனான-திருமாலினுடைய-மிகச் சிறியவனான உள்ள என்னுள்ளும் வந்து இருக்கச் செய்தேயும்-
விசாலமான இடங்கள் போலே உடல் பூரிக்கின்ற திருமால்-என்னவுமாம் –
சீர்க்கடலை யுள் பொதிந்த
கல்யாண குணங்கள் ஆகிற-கடலை உள்ளே அடக்க் கொண்ட-அவனது கல்யாண குணங்களை இடைவிடாமல் அனுசந்தித்து

சிந்தனையேன் தன்னை
சிந்தனையை உடையேனான என்னை

ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து
செவ்வையாக நெருக்கி-யாரால் உபத்ரவிக்க முடியும்-ஒருவராலும் என்னை திரஸ்கரிக்க முடியாது-

இதற்கு முன்பு என்னை மிகவும் வருத்தின கொடிய கருமங்கள் இப்போது முன்பு போலே தனிக்கோல் செலுத்தி
நலிய முடியாமையா லுண்டான சீற்றத்தாலே கண்கள் குதறிப்போய்,
“இதற்கு முன்பு செருக்கராய்த் திரிந்தநாமோ இப்போது இப்படி பரிபவப்படநின்றோம்” என்று வாய்விட்டுக் கதறவும்
கதறாதிருக்கவும் மாட்டாமல் ஊமைகள் உளறுமாபோல உளறிக் கொண்டு முகபங்கமடைகிறபடியைக் காணுங்கொள் என்கிறார் முன்னடிகளில்,
அசேதநங்களான கருமங்களை “வல்வினையராவார்” என உயர்திணைபோலக் கூறுவதும்,
அவற்றுக்குக் கண்ணும் முகமும் உள்ளனபோலக் கூறுவதும், ஆழ்வாருடைய தற்போதைய மகிழ்ச்சியினாலாய கற்பனைகளென்க.
முக்குதல்- வாய்விட்டுச் சொல்லமாட்டாமையும் வெறுமனிருக்கமாட்டாமையும்.

இனிமேல் எப்படிப்பட்ட கருமங்களும் தம்மை அடர்க்கமாட்டாவென்பதையும் அதன் காரணத்தையும் பின்னடிகளிற் பேசுகிறார்.
மிகும் திருமால் = மிகச் சிறிய என்னுள்ளே வந்திருக்கச் செய்தேயும் விசாலமான விடங்களிற்போல உடல் பூரிக்கின்ற திருமால் என்னவுமாம்.
சீர்க்கடலை உள்போதித்தலாவது- அப்பெருமானது அளவற்ற திருக்குணங்களை இடைவிடாது அநுஸந்தித்தல்.
பகவத்குணாநுபவம் பண்ணப்பெற்ற யான் இனி யார்க்கும் சளைக்கமாட்டேன்;
ஒன்றையும் பொருட்படுத்தாமல் எனது காரியமே கண்ணாயிருப்பேன் என்றாராயிற்று.

————————————————————–

(அடர்பொன்முடியானை.) வல்வினைகள் இனிமேல் என்னை அடர்க்கதில்லா என்றார் கீழ்ப்பாட்டில்.
இனி அந்த வல்வினைகள் என்னை என்ன செய்தாலும் எனக்கு வருவதொரு கெடுதியில்லையென்கிறாரிதில்.
எம்பெருமானே ஸகலவித பந்துவுமாவன் என்று உறுதியான அத்யவஸாயம் கொண்டேனான பின்பு
இனி எனக்கு என்ன ஸம்பத்து நேர்ந்தாலும் ஸந்தோஷமுமில்லை, என்ன ஆபத்து நேர்ந்தாலும் ஸங்கடமுமில்லை யென்கிறார்.
இப்படிப்பட்ட அத்யவஸாயங்கொண்ட ப்ரஹ்லாதனுக்கு இரணியனும் அவனுடைய ஏவலாளர்களும் எத்தனையோ வகையான
தீங்குகளை யிழைத்தார்களெனினும் அவன் திறத்து ஒன்றும் பயன்படவில்லையே;
பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தார்கள் தீயை வளர்த்தி அதிலே தள்ளினார்கள்; மலைகளில் நின்றும் தலைகீழாக உருட்டினார்கள்;
சிங்கம் புலி யானை முதலிய கொடிய விலங்குகளைக் கொண்டு அச்சமுறுத்தினார்கள்; இன்னமும் எத்தனையோ செய்தார்கள்.
ப்ரஹ்லாதாழ்வான் ஒன்றையேனும் லக்ஷியம் பண்ணினானென்பதுண்டோ? பலபல பட்டுப் பீதாம்பரங்களையும் அணிகலன்களையும்
தந்து மகிழ்வித்து ஸ்வாதீநப்படுத்திக் கொள்ளவும் பார்த்தார்கள்; அவற்றையுந்தான் லக்ஷியம் பண்ணினானோ?
பகவத் குணங்களில் ஈடுபட்டவர்களுக்கு அதற்குப் புறம்பான லாப நஷ்டங்களொன்றும் கணிசிக்கப்பட மாட்டாவாகையாலே ஆழ்வாரும்
“யாதாகில் யாதேயினி” என்று மிடுக்குத் தோற்றமொழிகின்றார்.

சர்வவித பந்துவாக அவனை ப்ரஹ்லாதன் கொண்டது போலே அடியேனும் கொண்டேனே
இனி என் குறை எனக்கு -இல்லை எனக்கு நிகர் -என்கிறார்–

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர்ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதேயினி–70-

பதவுரை

அடர்பொன் முடியானை–அடர்ந்த பொன்மயமான திருவபிஷேகத்தையுடையவனும்
ஆயிரம் பேரானை–ஸஹஸ்ரநாமங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும்
சுடர்கொள் சுடர் ஆழியானை–(சந்திர ஸூர்யன் முதலியன) சுடர்களையெல்லாம் வென்று விளங்குகின்ற திருவாழியையுடையவனுமான எம்பெருமானை.
இடர் கடியும் மாதா பிது ஆக–துக்கங்களைப் போக்கவல்லதாயும் தந்தையுமாக
எனது உள்ளே வைத்தேன்–என்னுடைய ஹ்ருதயத்திலே இருத்தினேன்;
இனி–இனிமேல்
யாது ஆகில் யாதே–(எனக்கு) என்ன நேர்ந்தாலென்ன?

அடர் பொன் முடியானை
அடர்ந்த பொன்மயமான திரு அபிஷேகத்தை உடையவனும்-
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திரு ஆழிகளும் கிண்கிணியும்
அரையில் தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்-
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்
-என்றபடி அனைத்து திவ்ய பூஷணங்களுக்கும் உப லஷணம்
பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே -என்றபடி
அவனுடைய விலஷணமான-திவ்ய ஆயுதங்கள்-திவ்ய ஆபரணங்கள்-திரு நாமங்கள்
இவற்றை சிந்திக்கப் புக்கால்-இதர விஷயங்களைப் பற்றின லாப நஷ்டங்கள் நெஞ்சிலே ஒரு பொருட்டாக படுமோ –

ஆயிரம் பேரானை
சஹச்ர நாமங்களால் பிரதி பாதிக்கப் படுபவனும்

சுடர் கொள் சுடர்ஆழியானை
சந்திர சூர்ய சுடர்களை வென்று-விளங்குகின்ற திரு ஆழியை உடையவனுமான
எம்பெருமானை
திரு ஆழி முன்னால் எல்லா தேஜஸ் பதார்த்தங்களும் இருள் போலே கிடக்குமே
பாநோ பா நோ த்வதீயா ஸ்புரதி-ஸூ தர்சன சதகம் -16- ஸ்லோஹம்

இடர் கடியும் மாதா பிதுவாக எனதுள்ளே வைத்தேன்
துக்கங்களைப் போக்க வல்ல-தாயும் தந்தையுமாக-என்னுடைய ஹிருதயத்திலே நிறுத்தினேன்-
மாதா பிதா-வாக என்று திருத்த வேண்டாம்
பித்ரு -என்பதை பிது என்கிறார்

யாதாகில் யாதேயினி
இனி மேல் எனக்கு-என்ன நேர்ந்தால் என்ன –

அடர்பொன் முடியானை = இங்குத் திருவபிஷேகத்தை மாத்திரம் சொல்லி யிருப்பது
“செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர் திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும்,
தாளநன்மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும், மங்கல வைம்படையுந் தோள்வளையும்
குழையும் மக்கரமும் வாளிகளும் சுட்டியும்” (பெரியாழ்வார் திருமொழி 1-5-10) என்கிற மற்றுமுள்ள திவ்ய பூஷணங்கள்
பலவற்றுக்கும் உபலக்ஷணமென்க. “பலபலவேயாபரணம் பேரும் பலபலவே” என்றபடி எம்பெருமானுடைய விலக்ஷணமான
திருவாபரணங்களையும் திருநாமங்களையும் திவ்யாயுதங்களையும் சிந்திக்கப் புகுந்தால்
இதர விஷயங்களைப் பற்றின லாப நஷ்டங்கள் ஒரு பொருளாக நெஞ்சிற்படுமோ என்பது உள்ளுறை.

சுடர்கொள் சுடராழி = உலகில் சந்திரன் ஸூர்யன் நக்ஷத்திரங்கள் அக்நி முதலிய சுடர்ப் பொருள்கள் எத்தனையுண்டோ
அவையெல்லாவற்றினுடையவும் தேஜஸ்ஸைக் கவர்கின்ற ஆழி;
திருவாழியின் முன்னே அவையெல்லாம் இருள் மூடினாற்போலே கிடக்குமென்றபடி.
பாநோ! பா நோ த்வதீய ஸ்புருதி” என்ற (13) ஸுநர்சநசதக ச்லோகத்தில் இது விரித்துரைக்கப்பட்டது.

மாதாபிதுவாக = “மாதா பிதாவாக” என்றிருக்க வேணுமென்று சிலர் பாடத்தைத் திருத்துவார்கள்;
அதுவேண்டா; வடமொழியில் பிதா என்னும் பதத்தின் பகுதியான பித்ரு என்பதை இங்கே பிது எனப் பிரயோகித்துள்ளார்.

—————————————————————-

(இனி நின்று நின்பெருமை) எம்பெருமானையே எல்லவுறவுமாகப் பற்றினேனென்றார் கீழ்ப்பாட்டில்.
இங்ஙனே பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என்னையே மாதா பிதுவாகக் கொண்டதாகக் சொன்னீரே,
என்னுடைய படிகளெல்லாம் உமக்கு நன்றாய்த் தெரியுமோ? அறிவீராகில் சிறிது சொல்லிக்காணும்’ என்ற;
பிரமனும் சிவனுங்கூட உன்னைப் பற்றி ஸ்தைப் பெற்றார்களென்னாநிற்க உன் பெருமை என்னாலே பேச முடியுமோவென்கிறார்.

ஆழ்வீர் எல்லா உறவாகவும் பற்றினீரே-என்னை பற்றி சொல்லிக் காணும் என்ன
என்னால் உனது பெருமைக்கு ஈடாக சொல்ல முடியுமோ-என்கிறார்-

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-

பதவுரை

தனி நின்ற–தானொருவனுமே காரணமாய் நின்றவனும்
சார்வு இலா–வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான
மூர்த்தி–எம்பெருமானே!
அகத்து பனி நீர் உலவு செம்சடையான்–உள்ளே குளிர்ந்த கங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையையுடையனான சிவன்.
ஆகத்தான்–உன் திருமேனியை ஆச்ரயித்து வாழ்பவன்;
நான்கு முகத்தான்–நான்முகக் கடவுள்
நின் உந்தி முதல்–உனது திருநாபிக் கமலத்தை மூலகாரணமாகவுடையவன்;
இனி–இப்படியான பின்பு
நின் பெருமை–உனது மேன்மையை
யான் நின்று உரைப்பது என்னே-தான் முயன்று சொல்வது எங்ஙனே?
(என்னால் சொல்லப்போகாதென்கை)

இனி நின்று நின் பெருமை
இப்படியான பின்பு-உனது மேன்மையை

யான் உரைப்பது என்னே
நான் முயன்று சொல்வது எங்கனே -என்னால் சொல்லப் போகாது -என்கை –

தனி நின்ற
தான் ஒருவனே காரணமாய் நின்றவனும்

சார்விலா
வேறு ஒருவரை தனக்கு-ஆதாரமாக உடைத்தாகாதவனுமான-ஏகோஹைவ நாராயணா ஆஸீத் –
தனியனாக இருந்தானே-வேறு ஒருவரையும் சாராமல் –

மூர்த்தி –
எம்பெருமான்

பனி நீர் அகத்துலவு செஞ்சடையான்
அகத்து பனி நீர் உல வு செஞ்சடையான் -உள்ளே குளிர்ந்த கங்கை நீர் தங்குகின்ற
சிவந்த ஜடையை உடையனான சிவன்

ஆகத்தான்-
உனது திரு மேனியை ஆச்ரயித்து வாழ்பவன்-ஒரு சமய விசேஷத்தில் இடம் கொடுத்ததைக் கொண்டு-
ஆழ்வார்கள் இதை அடிக்கடி அருளிச் செய்வார்கள்

நான்கு முகத்தான் நின்னுந்தி முதல்
நான் முகக் கடவுள்-உனது திரு நாபி கமலத்தை-மூல காரணமாக உடையவன்
நின் உந்தியை முதல் காரணமாக -அன்மொழித் தொகை-பஹூ வ்ரீஹ சமாசம்
அடங்கியது-உந்தியிலே பிறந்து உலகுக்கு எல்லாம் முதல் காரணம் என்றுமாம்

ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும்-கூறாளும் தனிவுடம்பன் –திருவாய்மொழி -என்றும்
அக்கும் புலியனகளும் உடையாரவர் ஒரு பக்கம் நிற்க நின்ற பண்பர் -பெரிய திருமொழி –என்றும்

தனி நின்ற சார்விலாமூர்த்தி = காரியப் பொருள்கள் யாவும் அழிந்த காலத்து
ஏகோ ஹவை நாராயண ஆஸீத்” (நாராயண னொருவனே இருந்தான்.) என்று உபநிஷத்தில் சொன்னபடியே
தனியனாக இருந்தவனே என்கிறது= தனிநின்ற என்பதனால் அக்காலத்தில் கீழ்ப்பட்ட தெய்வங்களெல்லாம்
மேற்பட்ட தெய்வங்களைச் சரணம்புக, எல்லாருமாக ஸ்ரீமந் நாராயணமூர்த்தியைச் சரணம் புகுந்து ஸத்தைபெற்றார்களென்று
சொல்லிற்றே யொழிய, நாராயணன் மற்றொருவனைப்பற்றி ஸத்தை பெற்றதாகச் சொல்லாமையாலே சார்விலா மூர்த்தி என்றார்;
நான் மற்றொரு தெய்வத்தைச் சாராதமூர்த்தி என்கை. மூர்த்தி-= அண்மைவிளி; ஸ்வாமியே! என்று விளித்தவாறு.

(பனிநீர் இத்யாதி.) கங்கையைச் சடையிலே கொண்ட சிவன் உன்னுடைய திருமேனியில் ஏகதேசத்தை இருப்பிடமாகக் கொண்டு ஸத்தை பெற்றான்;
நான்முகனோ உனது நாபிக் கமலத்தில் நின்றும் பிறந்து ஜகத்ஸ்ருஷ்டி கர்த்தாவானான்;
இப்படியிருக்க உனது பெருமையை புல்லியனான நான் பேசுவதென்று ஒன்றுண்டோ?- என்றாயிற்று.

ஆகத்தான் = ஆகமாவது சரீரம் ஒரு ஸமய விசேஷத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு எம்பெருமான் தனது திருமேனியின்
ஒருபுறத்திலே இடம் கொடுத்து உதவினன் என்கிற இதைப் பெரிய குணமாகக் கொண்டு ஆழ்வார்கள் இதனை அடிக்கடி அருளிச்செய்வார்கள்;
“ஏறாளுமிறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளுந் தனியுடம்பன்” என்பர் திருவாய்மொழியிலும்;
“அக்கும் புலியினதளுமுடையாரவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்றார் பெரிய திருமொழியிலே திருமங்கையாழ்வார்.

நின்னுந்திமுதல் = அன்மொழித்தொகை; (பஹுரீஹிஸமாஸமடங்கியது) நின் உந்தியை முதற்காரணமாக வுடையவன் என்று பொருள்படுதலால்.
நின் உந்தியிலே பிறந்து உலகுக்கெல்லாம் முதற்காரணமாயிருப்பவன் என்றுரைத்தலுமாம்.

————————————————————————–

(முதலாந்திருவுருவம்.) கீழ்ப்பாட்டில் பிரமனுடையவும் சிவனுடையவும் பேச்சு வந்தமையாலே பரத்வ விஷயமாகப்
பிறர் சொல்லுகிற வாதங்கள் நினைவுக்கு வந்து, அவற்றைத் தள்ளி ஸித்தாந்தம் அருளிச் செய்கிறாரிதில்.

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-

பதவுரை

முதல்வா–ஸகலகாரண பூதனான பெருமானே!
மூன்று திரு உருவம் முதல் ஆம் என்பர்–பிரமன் விஷ்ணு சிவன் என்கிற மூன்று திவ்ய மூர்த்திகள் தலைவராவர்’ என்று சிலர் சொல்லுவார்கள்;
மூன்றுக்கும் ஒன்றே முதல் ஆகும் என்பர்–‘மேற்சொன்ன மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கும்’ என்று மற்றுஞ் சிலர் சொல்லுவார்கள்.
நிகர் இலகு கார் உருவா–மேகமொன்று சொல்லலாம்படி அதனோடொத்து விளங்காநின்ற திருமேனியை யுடையவனே!
புகர் இலகு தாமரையின் பூ–தேஜஸ்ஸுமிக்கு விளங்குகின்ற தாமரைப் பூவானது
நின் அகத்தது அன்றே–உன்னிடத்திலுள்ளதன்றோ? (திருநாபிக்கமலமே உனது பரத்வத்தை வெளியிடவல்லது என்றவாறு.)

முதலாம் திருவுருவம் மூன்று என்பர்
ப்ரஹ்ம விஷ்ணு சிவன் என்று-மூன்று திவ்ய மூர்த்திகள்-தலைவராவர் என்பர் சிலர்
அரி அயன் அரன் மூவரும் சமம் என்பர் பிறர்

ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
மூன்றுக்கும் ஒன்றே முதலாகும் என்பர்-மேல் சொன்ன மூவருக்கும்-வேறு ஒரு மூர்த்தி தலையாக
இருக்கும் என்பர் சிலர்-துரீய ப்ரஹ்ம வாதிகள்

முதல்வா
சர்வ காரண பூதனான பெருமானே-ஸ்ரீ மன் நாராயணனே பரத்வம் தோன்ற முதல்வா என்று விளிக்கிறார்

நிகரிலகு காருருவா
மேகம் என்று சொல்லலாம் படி -அதனோடு ஒத்து விளங்கா நின்ற-திருமேனியை உடையவனே -சேவிக்கும் பொழுதே சகல தாபங்களும் ஆறும்படி
ஓருருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ ஓன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவம் கண்ட போதே ஓன்று ஆம் சோதி முகில் உருவம் எம்மடிகள் உருவம் தானே -திரு நெடும் தாண்டகம்

நின்னகத்தன்றே புகரிலகு தாமரையின் பூ
தேஜஸ் மிக்கு நின்ற தாமரைப் பூவானது-உன்னிடத்தில் உள்ளது அன்றோ-
திரு நாபி கமலமே உன்னுடைய பரத்வத்தை வெளியிட வல்லது -என்றபடி
சிவன் பிரமன் இடமும் அந்த பிரமன் உன்னிடமும் இருந்து தோன்றி -நீ அன்றோ பராத்பரன் –

பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம்
த்ரயோ தேவாஸ் துல்யா த்ரியதயமித மத்வைதம் அதிகம் த்ரிகா தஸ்மாத் தத்வம் பரமிதி
விதர்க்கான் விகடயன் -விபோர் நாபீ பத்மா விதி சிவ நிதானம் பகவத்
தத் அந்யத் ப்ருபங்கீ பாவ திதி சித்தாந்தயாதி ந-என்று அருளிச் செய்கிறார்

த்ரயோ தேவாஸ் துல்யா
அரி அயன் அரன் மூன்று தெய்வங்களுக்கும் சாம்யம் சொல்வார்கள் -த்ரி மூர்த்தி சாம்ய வாதம்-
வஸ்துக்களின் பேதம் ஒத்துக் கொண்டு அவற்றுக்கு ஏற்ற தாழ்வு இல்லாததை சொல்வது சாம்ய வாதம்
த்ரியதயமிதம் அத்வைதம்-இம் மூன்று தெய்வங்களும்வேறு வேறு அல்ல
ஒன்றே என்பர் சிலர் –ஐக்ய வாதம்
வஸ்துக்களின் பேதத்தையே ஒத்துக் கொள்ளாமை-அதிகம் த்ரிகாதஸ்மாத் தத்வம் பரம் -இம்மூவரில் மேம்பா துரீய ப்ரஹ்மமே பரதத்வம் என்பர்
இதி விதர்க்கான் விகடயன் -விபோர் நாபீ பத்மா இத்யாதி
நாபி பத்மம் முதல் கிழங்காய் இருந்து கொண்டு-சித்தாந்தம் நமக்கு அறிவிக்கின்றது-

(முதலாந்திருவுருவம் மூன்றென்பர்.) ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்கிற மூன்று மூர்த்திகளும் துல்யமாகவே
உலகுக்குத் தலைவர்கள் என்று கொள்ளுகிற சிலருடைய கொள்கையை இதனால் அநுவதித்தபடி,
அரி அயன் அரன் என்கிற மும்மூர்த்திகளும் பரஸ்பரம் ஏற்றத்தாழ்வின்றியே ஸமாநராயிருப்பரென்று சிலர் சொல்லுவார்கள்-
என்றவிதனால் அது ஸ்வஸித்தாந்தமல்ல, பரபக்ஷம் என்பது விளங்கும்.

(ஒன்றே முதலாகும் மூன்றுக்குமென்பர்.) உத்தீர்ணவாதிகனென்று சிலருண்டு; அவர்களுடைய கொள்கை இது;
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்களிற்காட்டில் வேறுபட்ட நான்காவது தத்துவம் ஒன்றுண்டு;
அதுவே இம்மூன்று தத்துவங்கட்கும் நிர்வாஹகமாகனது என்பராமவர்கள்; அவர்கள் துரீய ப்ரஹ்மவாதிகளெனப்படுவார்கள்.
அவர்களுடைய பக்ஷமும் ஸ்வஸித்தாந்தமல்லவென்று இதனால் காட்டப்பட்டது.
ஸ்ரீமந்நாராயணனொருவனே பரதத்துவமென்பது தோன்ற முதல்வா! என விளிக்கின்றார் காண்மின்.
ஸேவிக்கும்போதே ஸகலதாபங்களும் ஆறும்படியான திருமேனிகொண்ட தெய்வமே பரதத்துவம் என்பது விளங்க நிகரிலகுகாருருவா! என்றும் விளிக்கின்றார்.
“ஒருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்று மாகடலுருவம் ஒத்துநின்ற, மூவுருவுங் கண்டபோது ஒன்று ஆங்சோதி முகிலுருவமெம்மடிகளுருவந்தானே” என்று திருமங்கையாழ்வாரும் திருநெடுந்தாண்டகத்தில் பரதத்துவநிர்ணயம் பண்ணும் பாசுரத்தில் அருளிச் செய்தமை காண்க.

ஸ்ரீமந்நாராயணனே பரத்துவமென்பது நன்கு பொருந்துமாறு விஷயம் காட்டுகிறார்
நின்னகத்ததன்றே புகலிலகு தாமரையின்பூ என்பதனால் சிவன் பிரமனிடத்துத் தோன்றியவனென்றும்;
அந்தப் பிரமன் உனது திருநாபிக் கமலத்தில் தோன்றியவனென்றும் காஸ்த்ரங்களிற் சொல்லியிருக்கும்போது
அந்தத் தாமரையைத் திருநாபியிலேயுடைய நீயேயன்றோ பரதத்துவமாக இருக்கத் தகதியுண்டென்ற காட்டியவாறு.

இந்தப் பாசுரத்தையே பட்டர் ஸ்ரீரங்ராஜஸ்தவ – பூர்வசதகத்தில் பெரியவொரு ச்லோகமாகப் பன்னியுரைத்தார்” அதாவது
த்ரயோ தேவாஸ்துல்யா:, த்ரிதயமிதமத்வைதம், அதிகம் த்ரிகா தஸ்மாத்தத்வம் பாரமிதி விதர்க்காந் விகடயந்-
விபோர் நாபீபத்மோ விதிசிவநிதாநம் பகவத: ததந்யத் ப்ரூபங்கீபரவதிதி ஸித்தாந்தயதி ந: ” என்பதாம்.
இந்த ச்லோகத்தின் பொருளையும் சிறிது விவரிப்போம்;
(த்ரயோ தேவாஸ் துல்யா.) அரி அயன் அரனென்றம் மூன்று தெய்வங்களும் ஸாம்யஞ்சொல்லுவர் சிலர்.
(த்ரிதயமிதம் அத்வைதம்.) இம்மூன்று தெய்வங்களும் வெவ்வேறல்ல; ஒன்றேயென்பர் சிலர். கீழே சொன்னது த்ரிமூர்த்திஸாம்யவாதம்;
இது ஐக்யவாதம். வஸ்துக்களின் பேதத்தை ஒப்புக்கொண்டு அவற்றுக்கு ஏற்றத் தாழ்வுகளில்லாமை சொல்லுவது ஸாம்யவாதமெனப்படும்.
வஸ்துக்களுக்கு பேதத்தையே ஒப்புக்கொள்ளாமை ஐக்யவாதமெனப்படும். இந்த ஐகய்வாதம் இப்பாட்டில் அநுவதிக்கப்படவில்லையாகிலும்
அதனை நிரஸிப்பதும் ஆழ்வார்க்குத் திருவுள்ளமே யென்றணர்ந்த பட்டர் அதனையும் எடுத்துக் கூறினாரென்க.
(அதிகம் த்ரிகாதஸ்மாத் தத்வம் பரம்.) இம்மூன்று தெய்வங்களிற் காட்டிலும் மேற்பட்டதான துரீயப்ரஹ்மமே
பரதத்துவமென்று உத்தீர்யவாதம் பண்ணுவர் சிலர்..
(இதி விதர்க்காந் விகடயந் விபோ: நாபீபத்ம: இத்யாதி.) இப்படிப்பட்ட சங்கைகளை யெல்லாம் அடியறுக்கின்ற
திருநாபிக்கமலமானது ப்ரஹ்மருத்ரர்களுக்கும் முதற்கிழங்காயிருந்துகொண்டு
‘உலகமெல்லாம் எம்பெருமானுடைய புருவநெறிப்புக்குப் பரவசப்பட்டது’ என்கிற ஸித்தாந்தத்தை நமக்கு நன்கு தெரிவிக்கின்றது- என்றாராயிற்று.
ஆகையாலே இப்பாசுரத்தின் மொழிபெயர்ப்பாயிருக்கும் இந்த ச்லோகமென்ற அநுஸந்திக்கக்கடவது.

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -51-60–திவ்யார்த்த தீபிகை –

September 17, 2014

(மனமாளுமோரைவர்.)
கீழ்ப்பாட்டில் “மாவாய் பிளந்தார் மனம்- அந்தோ! வலிதே கொல்” என்று
எம்பெருமானைக் கல் நெஞ்சனாகச் சங்கித்தார்; உடனே தம் ஸ்வரூபத்தை ஆராய்ந்து பார்த்தார்;
சேஷியான எம்பெருமான் விஷயத்திலே சேஷ பூதர். இப்படிச் சொல்லத் தகாதென்று விவேகமுற்று,
எம் பெருமான் திருவுள்ளமானபடியே செய்யக் கடவன்; அவனை நாம் நிர்ப்பந்திப்பதென்பது தகுதியன்று;
நம்முடைய இந்திரியங்களையெல்லாம் அவன் பக்கலில் ஊன்ற வைத்து அவனது திருவடித் தாமரைகளை ஸேவித்துக்
கொண்டிருப்பதேயன்றோ நமக்கு ஸ்வரூபம்” என்று அருளிச் செய்கிறார் இப் பாட்டில்.

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண்டு ழாஞ்சீரார்கு மாண்பு –51-

பதவுரை

மனம் ஆளும்–மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி ஆளுமவையான
ஓர் ஐயர்–ஒப்பற்ற பஞ்சேந்திரியங்கனென்கிற
வன் குறும்பர் தம்மை–பிரபலர்களான துஷ்டர்களை
சினம் மாள்வித்து–கோவமடங்கச் செய்து
ஓர் இடத்தே சேர்த்து–(பகவத் விஷயமாகிற) ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி,
புனம்மேல் தண் துழாயான் அடியை–தன்னிலத்திலே பொருந்திய குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானது திருவடிகளை
தாம் காணும் அஃது அன்றே–ஸேவித்துக் கொண்டிருப்பதன்றோ
வண் துழாம் சீரார்க்கு மாண்பு–அழகிய விசாலமான நற்குணங்களை யுடையவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு.

மனமாளும் ஓர் ஐவர்
மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி-ஆளுமையான-ஒப்பற்ற
பஞ்ச இந்த்ரியங்கள் என்கிற-
எம்பெருமானுக்கு ஆத்மா சேஷப்பட்டது
ஆத்மாவுக்கு மனஸ் சேஷப்பட்டது-
மனசுக்கு இந்த்ரியங்கள் சேஷப்பட்டன

இந்த முறை மாறி மனசை தமக்கு அடிமை ஆக்கிக் கொண்டனவே
கொடுமையை பற்றிய கோபத்தினால் ஐவர் -உயர் திணை யாக அருளிச் செய்கிறார்
கோவாய் ஐவர் என் மெய் குடி யேறி கூறை சோறு இவை தா என்று குமைத்து போகார் நான்-
அவரைப் பொறுக்கிலேன் புனிதா புட் கொடியாய் நெடுமாலே –
திருமங்கை ஆழ்வார்

வன் குறும்பர் தம்மை
பிரபலமான துஷ்டர்களை

சினமாள்வித்து
கோவம் அடையச் செய்து-
காமாத் க்ரோதாத் அபிஜாயதே

விஷயங்கள் அல்பம் என்பதால் ஆசை-அடங்காமல் கோபம் உண்டாகும்
பகவத் விஷயம் அள்ள அள்ள கொள்ளக் குறை யற்ற இன்பம் தருவதால்
இரை போர வில்லையே என்கிற கோபம் மாண்டு போகுமே
பூர்ண திருப்தி உண்டாகும் படி பகவத் விஷயத்தில் பிரவணமாக்கி என்றபடி

ஓர் இடத்தே சேர்த்து –
பகவத் விஷயமாகிய-ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி

புனமேய தண் துழாயான் அடியைத்
தன் நிலத்திலே பொருந்திய-குளிர்ந்த திருத் துழாய் மாலையை அணிந்துள்ள
அப்பெருமானது திருவடிகளை –

தான் காணும் அஃது அன்றே –
சேவித்துக் கொண்டே இருப்பது அன்றோ

வண்டு ழாஞ்சீரார்கு மாண்பு
அழகிய விசாலமான-நற் குணங்களை யுடைய-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு

இங்கன் அன்றி
அவன் மனம் கல் எனபது ஸ்வரூபம் அன்று
துழாம்-என்றது துழாவும் -என்றபடி –
துழாவுகை –பரம்புகை -விசாலமான என்றபடி

அவன் திரு உள்ளம் ஆனபடி ஆயிடுக என்று இருப்பதே தகுதி –
வெறுத்தல் கூடாது என்றவாறு-

(மனமாளும் ஓரைவர்.)
எம்பெருமானுக்கு ஆத்மா சேஷப்பட்டது; ஆத்மாவுக்கு மநஸ்ஸு சேஷப்பட்டது;
மநஸ்ஸுக்கு இந்திரியங்கள் சேஷப்பட்டவை; அதாவது-
மனம் போன வழியே செவி வாய் கண் முதலிய இந்திரியங்கள் போகக் கடவன- என்றிப்படி ஒரு நியதி உண்டு;
இந்த நியமம் குலைந்து, இந்திரியங்களானவை மனத்தைத் தம் வழியிலே இழுக்கின்றனவாம்.

மனத்தையும் தங்கள் வசத்திலே யாக்கி ஆளுகின்ற வன் குறும்பர்களான ஐவருண்டு- பஞ்சேந்திரியங்கள்- செவிவாய் கண் மூக்கு உடல் என்பவை,
அவற்றை வலி யடக்கி பகவத் விஷயத்திலே ஊன்ற வைக்க வேணுமென்கிறார் முன்னடிகளால்.

அசேதனங்களான இந்திரியங்களை ஐவர் என்று உயர்திணையாகக் கூறுதல் அவற்றின் கொடுமையைப்பற்றிய கோபத்தினாலென்க.
“கோவாய் ஐவரென்மெய் குடியேறிக் கூறை சோறியை தாவென்று குமைத்துப் போகார்,
நான் அவரைப் பொறுக்ககிலேன் புனிதா! புட்கொடியாய் நெடுமாலே!” (பெரிய திருமொழி 7-8-9) என்ற திருமங்கையாழ்வார் பாசுரமுங் காண்க.
வன் குறும்பர் என்ற விசேஷணத்தினாலும் இந்திரியங்களின் கொடுமை நன்கு விளக்கப்பட்டது.

சினம் மாள்வித்து-
** காமாத் க்ரோதோபிஜாயதே” (ஒரு பொருளில் ஆசை உண்டாகி அது கைகூடா விடில் பிறகு கோபம் உண்டாகிறது)
என்று கீதையிலே சொல்லியிருக்கிறபடி அந்த இந்திரியங்களுக்கு உண்டான கோபத்தை மாளந்செய்து என்கை;
இதன் கருத்து யாதெனில்
இந்திரியங்கள் விஷயாந்தரங்களை அநுபவித்துப் புகுந்தால் அவ்விஷயங்கள் அற்பமாகையாலே
தங்களுக்கு இதை போரவில்லை யென்று கோபமுண்டாகும்;
அந்த இந்திரியங்களுக்கு பகவத் விஷயாநுபவத்தை இரையாக்கிவிட்டால், அவ்விஷயம் கனத்ததாகையாலே தங்கள் பசி
நன்றாகத் தீருமாதலால் கோபமுண்டாக ப்ரஸக்தியில்லை;
இரை போரவில்லையே என்கிற கோபம் மாண்டு போம்;

ஆகவே “சினம் மாள்வித்து” என்பதை எச்சத் திரிபாகக்கொண்டு,
‘கோபத்தைத் தணிக்க’ என்றுரைத்தல் பொருந்தும்.
பஞ்சேந்திரியங்களுக்கு விஷயாந்தராநுபவத்தில் வயிறு நிறைய வில்லையே யென்கிற கோபம் தீரும்படி (பூர்ணத்ருப்தி உண்டாகும்படி)
அவற்றை பகவத் விஷயத்திலே ப்ரவணமாக்கி- என்றதாயிற்று.

புனமேய தண்துழாயானடியைக் காணுமஃதன்றே =
புனமாவது நிலம்; எந்த வஸ்துவும் தன்னிலத்தை விட்டுப் பிரிந்தால் செவ்வி குன்றுமாதலால்,
அப்படியல்லாமல் தன்னிலத்திலேயே இருக்கிற திருத்துழாயானது எவ்வளவு செழிப்பாக இக்குமோ அவ்வளவு செழிப்பாகத்
தனது திருமேனியிலே அத் துழாய்மாலை விளங்கப்பெற்ற பரமபேரிக்யனான அப்பெருமானுடைய திருவடிகளே
நமக்குத் தஞ்சம் என்று கொண்டு அவற்றை ஸேவித்துக் கொண்டிருப்பதேயன்றோ

வண்துழாம்சீரார்க்கு மாண்பு- பரமவிலிக்ஷணரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீர்மை;
இங்ஙனன்றி ‘எம்பெருமானுடைய மனம் கல்லோ’ என்று சொல்லுதல் தகுதியன்று;
கல்லாகவே யிருந்தாலும் அவனுடைய திருவடிகளே தஞ்சமென்றிருத்தலே ஸ்வரூபம் என்றாராயிற்று.

வண்துழாம் சீரார்க்கு என்றது- ஆத்மகுணங்கள் நிரம்பப் பெற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு என்றபடி.
துழாம் என்றது- துழாவும் என்றபடி; துழாவுகை- பரம்புகை; விசாலமாயிருத்தலைச் சொன்னபடி;
அழகிய விசாலமான நற்குணங்களமைந்த பாகவதர்களுக்கு என்கை.

இப்படிப்பட்ட ஆத்ம குணங்கள் நிறைந்த ஸாதுக்களாயிருந்தால் ‘அவன் திருவுள்ளமானபடியே ஆயிடுக’ என்றிருப்பதே தகுதி;
வெறுத்தல் கூடாது என்றவாறு.

———————————————————–

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–

பதவுரை

அஞ்ஞான்று–முன்னொரு காலத்தில்
மாண்–வாமாவேஷத்தை
பாவித்து–பாவனை செய்துகொண்டு
மண் இரந்தான்–(மாவலியிடத்துச் சென்று) பூமியை யாசித்தவனும்
மாயவன்–பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
நஞ்சு–(முலையிலே தடவியிருந்த) விஷத்தை
ஊண் பாவித்து உண்டானது–உண்பதாகப் பாவனை செய்து அமுது செய்தவனுமான பெருமானுடைய
ஓர் உருவம்–விலக்ஷணமான திருமேனியை
காண்பான்–ஸேவிக்கும் விஷயத்திலே
நம் கண் அவா–நமது ஆண்களுக்கு ஆசை;
மற்று ஒன்று காண உறா–வேறொன்றையும் காண விரும்புகின்றனவில்லை!
வாய்தான்–வாக்கானது
சீர் பரவாது–(அவனது) திருக்குணங்களைப் புகழ்வது தவிர்த்து
ஒன்று–வேறொன்றை (சோற்றை)
உண்ண-உண்பதற்கு
உறுமோ–விரும்புமோ?

(மாண் பாவித்து)
நம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷயத்திலே ஆழ்ந்தபடியைப் பேசுகிறார்.
இந்திரனுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக வாமந வேஷம் பூண்டு கொண்டு மாவலி பக்கலிற் சென்று
மூவடி மண்தரவென்று இரந்தவனும்,
தான் கிருஷ்ண சிசுவாயிருக்கும்போது கம்ஸனுடைய தூண்டுதலால்
தன்னைக் கொல்வதற்காகத் தாய் வடிவு கெணண்டு முலை கொடுக்க வந்த பூதனியினுடைய முலையைச் சுவைத்துண்கிற பாவனையிலே
அவளுயிரை உறிஞ்சியுண்டவனுமான எம்பெருமானுடைய
விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹத்தைக் காணவேணுமென்கிற ஒரு விருப்பமே நமது கண்களுக்குள்ளது;
வேறு எந்த அற்புதமான வஸ்துவையும் இக்கண்கள் காண விரும்புகின்றில.

வாய்தானும் அப்பெருமானுடைய திருக்குணங்களைப் புகழ்ந்து பேசதலொன்றிலேயே ஊற்றமுடையது;
சோறு திண்பதிலும் வாய்க்கு விருப்பமில்லை- என்றாராயிற்று.

மாண்- மாணியின் தன்மை; வாமாநத்வம். பாவித்து – வடமொழியில் ***-
பூ- ஸந்தாயம்” என்ற தாதுவடிவாகப் பிறந்த வினையெச்சம்
அஞ்ஞான்று- அக்காலத்தில்; முன்பொரு காலத்திலென்றபடி.
(ஞான்று- காலம். ‘நான்று’ என்பதுமுண்டு; ஞகரநகரப்போலி.)

————————————————————-

(ஒன்றுண்டு செங்கண்மால்.)
கீழ்ப்பாட்டில், ஆழ்வார் தம்முடைய இந்திரியங்கள் எம்பெருமான் விஷயத்திலே
ஆழ்ந்தபடியைப் பேசி ‘இனிமேல் தமக்கு ஒரு குறையுமில்லை; தாம் க்ருத க்ருத்யாக ஆய்விட்டார்’ என்று தோற்றுமாறு
இருந்ததைக் கண்ட எம்பெருமான், ‘அந்தோ! ஆழ்வார் இவ்விருள் தருமா ஞாலத்தில் இருந்து கொண்டே இப்படி களிக்கிறாரே;
இவ்வநுபவம் இவர்க்கு நித்தியமாய்ச் சொல்லுமோ? ஸ்ரீவைகுண்டம் பெற்றாலன்றோ அநுபவ பூர்த்தியுள்ளது’ என்று
திருவுள்ளம் பற்றி அந்த ஸ்ரீவைகுண்டத்தையும் ஆழ்வார்க்குத் தந்தருள்பவன் போல விளங்கினான்;

அதனைக் கண்ட ஆழ்வார் “இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகாமளுமச்சுவை பெறினும் வேண்டேன்” என்றாற்போல
‘இந்த குணாநுபவத்திற்காட்டிலும் ஸ்ரீவைகுண்டமென்பது போக்யமோ? பிரானே!’ என்கிறார்.

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

பதவுரை

செம்கண் மால்–(அடியார்கள் மீது வாத்ஸ்ல்யத்தாலே) சிவந்த திருக்கண்களையுடைய திருமாலே;
யான் உரைப்பது–அடியேன் விண்ணப்பஞ் செய்வது
ஒன்று உண்டு–ஒரு விஷயமுண்டு;
அவர்க்கு–இப்படி பார்க்கின்ற நீ அடியவர்களுக்கு
வைகுந்தம் என்று அருளுமி வான்–ஸ்ரீவைகுண்டமென்று சிறப்பித்துச் சொல்லி உதவுகின்ற பரம பதமானது.
நீ–நீயோ வென்றால்
உன் அடியார்க்கு–உனது அடியார்களுக்கு
(எத்தனை நன்மை செய்தும் த்ருப்தி பெறாமல்)
என் செயவன் என்றே இருத்தி–இன்னமும் என்ன நன்மை செய்வோமென்றே பாரித்திரா நின்றாய்;
நின் புகழில் வைகுந்தம் சிந்தையிலும் இனிதோ–உனது திருக்குணங்களிலேயே ஊன்றியிருக்கப்பெற்ற தமது சிந்தையிற் காட்டிலும் சிறந்ததோ?

ஓன்று உண்டு
ஒரு விஷயம் உண்டு -கலங்கினவனுக்கு தெளிவிக்க வேண்டுமே-
சர்வஞ்ஞனுக்கும் ஓன்று அறிவிக்க வேண்டும்

செங்கண் மால்
அடியார்கள் மேலே வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை-உடைய திருமாலே
வ்யாமோஹத்தாலே சிவந்து உள்ள திருக் கண்கள்

யான் உரைப்பது-
அடியேன் விண்ணப்பம் செய்வது –

உன் அடியார்க்கு –
உனது அடியவர்களுக்கு

எத்தனை நன்மைகள் செய்து அருளினும் திருப்தி பெறாமல்
நீ
நீயோ வென்றால்

என் செய்வன் என்றே இருத்தி –
இன்னமும் என்ன நன்மைகள் செய்வோம் என்றே-பாரித்து இரா நின்றாய்

நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ
உனது திருக் குணங்களிலே ஊன்றி இருக்கப்-பெற்ற-தமது சிந்தையில் காட்டிலும்
நீ-இப்படிப் பாரிக்கின்ற நீ-யவர்க்கு-அவ்வடியார்களுக்கு

வைகுந்தம் என்று அருளும் வான்
ஸ்ரீ வைகுண்டம் என்று சிறப்பித்துச் சொல்லுகின்ற-பரமபதமானது
நீ ஒருவன் தான் வைகுந்தம் வைகுந்தம் என்று சிறப்பாக சொல்லிக் கொண்டு இருக்கிறாய்-
பாவோ நான்யத்ர கச்சதி
என்று -உள்ளார்கள் இங்கேயே பலர் உண்டே

இப்போது சித்தமான குணாநுபவம்-சித்திக்கப்  போவது ஸ்ரீ வைகுண்டம்
பிரதிபந்தங்கள் மலிந்து கிடக்கும் இங்கே குணாநுபவம்
பிரதி பந்தங்களே இல்லா அங்கே அனுபவிக்கை  ஏற்றமோ

எனக்கு என் செய்வன் என்றே இருத்தி தன்மையில் சொல்லாமல்
அடியார்க்கு அவர்க்கு படர்க்கையாக சொல்லி இருந்தாலும்-தன்மை பொருளே விவஷிதம்
திருப்பாவை -மாற்றமும் தாராயோ வாசல் திறவாதே -முன்னிலையாக சொல்லும் இடத்து படர்க்கை பிரயோகம்

இனி இனி என்று கதறும் ஆழ்வார் இப்படி அருளிச் செய்வது-ஒருவகையான சமத்காரச் சொல்லாகும்-
இடம் எதுவாயினும் பகவத் குணாநுபவம் ஒன்றே முக்கியம் என்றதாயிற்று-

ஆழ்வார் திறத்திலே எதேனுமொன்றைச் செய்ய வேணுமென்று ஸ்யாமோஹத்தினாலே எம்பெருமானுடைய
திருக் கண்கள் செவ்வியவாயிருந்ததால் செங்கண்மால்! என் விளிக்கின்றார்.

யானுரைப்பது ஒன்றுண்டே = நீ ஸர்வஜ்ஞனாயினும், உனக்கும் நான் தெரிவிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு காண் என்கை.
இப்பொழுது நீ வியாமோஹத்தாலே கலங்கி யிருக்கிறாயதலால் ‘கலங்கினவர்களைத் தெளிந்திருப்பவர்கள் தெளிவிக்கக் கடவர்கள்’
என்னும் நீதியிலே உன்னை நான் தெளிவிக்க வேண்டி உனக்கொன்று சொல்லுகிறேன் கேளாய் என்றார் போலும்
எம்பெருமான் தெளிவழிந்து கலங்கி நிற்கும்படியை வெளியிடுகிறார்.
உன்னடியார்க்கு என்செய்வனென்றே இருத்தி நீ
என்பதனால் உன்னடியவர்களுக்கு நீஎவ்வளவு நன்மைகளைச் செய்து வைத்தாலும்
‘ஐயோ! ஒன்றும் செய்யவில்லையே, ஒன்றும் செய்யவில்லையே’ என்றே அமைந்து
‘என்ன நன்மை செய்வோம், என்ன நன்மை செய்வோம்’ என்றே அலைபாயா நின்றாய்;
இஃது உன்னுடைய கலக்கமன்றோ என்கை.

ஆழ்வார் இப்படி சொன்னதைக் கேட்ட எம்பெருமான்
‘நான் இப்படி கலங்கி யிருக்கிறேனென்பதை நீர் எதுகொண்டு தெரிந்து கொண்டீர்?’ என்று கேட்க;

அதற்கு ஆழ்வார்,
‘எப்போதும் உன்னுடைய குணாநுபவமே போது போக்காம்படி என்னை இவ்வளவு அநுக்ரஹித்து வைத்தும் ஒரு நன்மையும்
எனக்குச் செய்யவே யில்லையாக நினைத்துக் கொண்டு, இன்னமும் ஏதோ செய்வதாகப் பாரித்திருக்கிறா யன்றோ,
இதுகொண்டே உன்னுடைய வ்யாமோஹத்தைத் தெரிந்து கொண்டேன்’ என்ன;

அதற்கு எம்பெருமான் ‘ஆழ்வீர்! உண்மையில் உமக்கு நான் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தேனாகிலும்,
பரிபூர்ணாநுபவத்திற்குப் பாங்கான பரமபதத்தைக் கொடுக்காத வளவில் ஒரு நன்மையும் செய்யவில்லையென்று தானே அர்த்தம்;
அந்தப் பரமபதந்தன்னையே உமக்குக் கொடுப்பதாகப் பார்த்திருக்கின்றேன்;
இதனால் என்னைக் கலங்கினவனாகக் கொள்ளலாகுமோ?’
என்றருளிச் செய்ய;

அதன்மேல் ஆழ்வார் நின்புகழில் வைகுந்தம் தம்சிந்தையிலும் நீயவர்க்க வைகுந்தமென்றருளும் வான் இனிதோ? என்கிறார்;
இப்போது ஸித்தமான குணாநுபவத்திற்காட்டிலும்
இனி மேல் ஸித்திக்கக் கடவதான வைகுந்தம் சிறந்ததல்லா கிடாய் என்கை.
பிரதிபந்தகங்கள் மலிந்து கிடக்கிற இவ்விருள் தருமா ஞாலத்திலிருந்துகொண்டு குணாநுபவம் பண்ணுவதிற்காட்டிலும்
பிரதிபந்தகமற்ற தேச விஷேத்திலேயிருந்து கொண்டு அநுபவிக்கை ஏற்றமோ? என்பதும் உள்ளுறை.

“நீ அவர்க்கு அருளும் வைகுந்தம்” என்றாவது, “நீ அவர்க்கு அருளும் வான்” என்றாவது சொல்லலாமாயிருக்க,
அங்ஙனே சொல்லாது
“நீ அவர்க்கு வைகுந்தமென்ற அருளும் வான்” என்று அருளிச் செய்ததன் கருத்து யாதெனில்;
நின்புகழில் வைகும் சிந்தையினோர் வைகுந்தத்தை ஒரு பொருளாகவும் மதிக்க மாட்டார்கள்;
பாவோ நாந்யத்ர கசசதி” என்று திருவடி சொன்னாப்போல சொல்லி விடுவர்கள்;
நீ ஒருவன் தான் ‘வைகுந்தம் வைகுந்தம்’ என்ற வெகு சிறப்பாகச் சொல்லிக் கொண்டு கிடக்கிறாய் என்பதாகக் கருத்து தோன்றும்.

“உன் அடியேற்கு என் செய்வனென்றேயிருத்தி நீ” என்றும்
“நீ எனக்கு வைகுந்தமென்றருளும் வான்” என்றும்
தன்மையாகச் சொல்லிக் கொள்ளாமல்
‘அடியார்க்கு’ என்றும் ‘அவர்க்கு’ என்றும் படர்க்கையைச் சொல்லி யிருந்தாலும்
தன்மைப் பொருளே இங்கு விவக்ஷிதமென்க.
திருப்பாவையில் “மாற்றமும் தாராயோ வாசல் திறவாய்” என்று முன்னிலையாகச் சொல்ல வேண்டுமிடத்துப்
படர்க்கையாகச் சொல்லியிருப்பதுபோல.

“பொய்ந்நின்ற ஞானமுமம் பொல்லாவொழுக்கும் –இந்நின்ற நீர்மை யினியாமுறாமை-
அடியேன் செய்யும் விண்ணப்பமே” (திருவிருத்தம் –முதற்பாட்டு) என்று தொடங்கி அடிக்கடி வைகுந்தத்தையே
பிரார்த்திக்கின்ற ஆழ்வார் இப்பாட்டில் வைகுந்தத்தை வெறுத்துரைப்பது ஒருவகையான சமத்காரச் சொல்லாகும்.
‘இடம் எதுவாயினும் பகவத் குணாநுபவம் முக்கியம்’ என்ற அர்த்தத்தை விளக்கியவாறு.

—————————————————————-

(வானோ மறிகடலோ)
கீழ்ப்பாட்டில் ‘வைகுந்தம் இனிதன்றே’ என்றுரைத்த ஆழ்வாரை நோக்கிச் சிலர்,
‘இவ்வீபூதியில் எவ்வளவுதான் குணாநுபவம் பண்ணினாலும் பிரதீபந்தகங்கள் கூடவே யிருக்கிற நிலமாதலால்
இவ்வநுபவம் நிலைநிற்கக் கூடியதன்றே; பிரதிபந்தகங்களுக்கு அஞ்சி யிருக்க வேண்டியதுதானே’ என்று சொல்ல;
பகவத் விஷயத்தில் நான் இழிந்தவறே பிரதிபந்தகங்கள் போன விடம் தெரியவில்லை என்கிறார்.

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும்  கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-

பதவுரை

ஆன் ஈன்ற கன்று–பசுவினால் பெறப்பட்ட வத்ஸாஸுரனை
உயர எறிந்து–(விளாமரத்தின்) மேலே வீசியெறிந்து
காய் உதிர்த்தார்–(அவ்விளாமரத்தின்) காய்களை உதிர்த்த கண்ணபிரானுடைய
தாள்–திருவடிகளை
பணிந்தோம்–ஆச்ரயித்தோம் (அதன் பிறகு)
வன் துயரை–வலிய (நமது) பாவங்களை
மருங்கு கண்டிலம்–ஸமீபத்தில் காணோம்;
ஒருங்கிற்று–(அப்பாவங்கள்) மறைந்து போனவிடம்
வானோ–ஆகாசமோ?
மறி கடலோ–மடிந்து மடிந்து அலையெறிகிற கடலோ?
மாருதமோ–காற்றோ?
தீயகமோ–நெருப்போ?
கானோ–காடோ?
(இன்னவிடத்தில் மறைந்து போயினவென்று தெரியவில்லை;)
ஆ ஆ ஆல்–ஐயோ பாவம்.

வானோ
ஆகாசமோ-ஆகாசத்தில் மறைந்து போயினவா

மறி கடலோ
மடிந்து மடிந்து அலை எரிகிற-கடலோ-கடலில் ஒளிந்து போயினவா

மாருதமோ
காற்றோ-காற்றில் உரு மாய்ந்து போயினவோ

தீயகமோ
நெருப்போ-நெருப்பிலே விழுந்து நசித்துப் போயினவோ

கானோ
காடோ-வனவாச யாத்ரை போயினவோ-

அவை என்னருகில் இல்லை என்றதாயிற்று-
இன்ன இடத்தில் மறைந்து போயின என்று தெரியவில்லை

ஒருங்கிற்று
அப்பாபங்கள் மறைந்து போன இடம்
ஒருங்கிற்றும் -பாட பேதம்

ஆ ஈன்ற கன்று
பசுவினால் பெறப்பட்ட வத்சாசுரனை

உயரத் தாம் எறிந்து
விளா மரத்தின் மேலே வீசி எறிந்து

காய் உதிர்த்தார் –
அவ விளா மரத்தின் காய்களை உதிர்த்த-கண்ணபிரான் உடைய

தாள்
திருவடிகளை

பணிந்தோம்
ஆஸ்ரயித்தோம்-

அதன் பிறகு-
வன் துயரை
வலிய நம் பாபங்களை

ஆ ஆ ஆல்
ஐயோ பாவம்

மருங்கு கண்டிலம்
சமீபத்தில் காணோம் –

முள்ளைக் கொண்டே முள்ளைக் களைவது போல எம்பெருமான் பிரதிபந்தகங்களைத் தொலைப்பதில் மிக்க நிபுணன் என்று
காட்டுதற்காகக் கன்றினால் விளவெறிந்த கதையை இங்கு அருளிச் செய்கின்றார்;

கம்ஸனாலேவப்பட்ட அசுரர்களில் கபித்தாஸுரன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன் கீழ் வரும்பொழுது மேல் விழுந்து
கொல்லுவதாக எண்ணி வந்து நிற்க;
அதனை யறிந்து கிருஷ்ணபகவான், அவ்வாறே தன்னை முட்டிக் கொல்லும் பொருட்டுக்
கன்றின்வடிவங் கொண்டு வந்த வத்ஸாஸுரனைப்
பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேல் எறிய,
விளவும் கன்றுமாகிய இருவரும் சிதைந்து தமது அசுர வடிவத்துடனே விழுந்து இறந்தனர் என்பது கன்றுயரவெறிந்து காயுதிர்த்த வரலாறு.

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளைப் பணிந்த மாத்திரத்திலே எனது பிரதிபந்தக பாபங்களெனல்லாம் இன்ன விடம்
போயினவென்று தெரியாதபடி பாறிப் பறந்து போயின; ஆகாசத்திலே மறைந்து போயினவோ, கடலில் ஒளிந்து போயினவோ,
காற்றில் உருமாய்ந்து போயினவோ, நெருப்பிலே விழுந்து நசித்ததுப் போயினவோ, அன்றி
வனவாஸ யாத்திரை சென்றனவோ அறிகின்றிலேன்; அவை என்னருகில் இல்லை- என்றாயிற்று.

மறிகடல்= மறிதலாவது- அலைகள் மடிந்தும் மடிந்து வீசப்பெறுதல்.
மாருதம்- வடசொல்.
“ஒருங்கிற்றும்” என்றும் ஓதுவர்.
கண்டிலம்- தன்மைப் பன்மை யெதிர்மறை வினைமுற்று.
ஆல்- அசை; வியப்புக்குறிப்பிடைச் சொல்லுமாம்.
ஆனீன்றி கன்று= ‘பசுவினால் பிரஸவிக்கப்பட்ட கன்று’ என்று சொல்வதன் கருத்து யாதெனில்;
‘வத்ஸாஸுரன்’ என்று ஒருவன் திடீரென்று ஆகாசத்தின் நின்றும் வந்து குதித்து விடவில்லை;
அவ்விடத்திலுள்ள பசுவின் கன்றானவொன்றின் மேலே வந்து ஆவேசித்தனன் என்பதைக் காட்டுதலாம்.
காயுதிர்த்தான் = ஆறாம் வேற்றுமைத் தொகை.
ஆவா- ‘ஹா ஹா!’ என்ற வடமொழி அவ்யயங்களிரண்டு சேர்ந்து ஆவாவெனத் திரிந்தது.

————————————————————————–

(மருங்கோதமோதும்.)
எம்பெருமானைத் தம் முயற்சியாலே பெற நினைப்பார்க்கு அவன் ஒரு நாளும் கிட்ட முடியாதவனேயாகிலும்,
அவன்றானே தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்ததனனாதலால்
எனக்கு அவன் எப்போதும் ஸேவிக்க எளியவனாகவே யிராநின்றானென்கிறார்.

மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால்
மனக் கவலை தீர்ப்பார் வரவு –55-

பதவுரை

வரவு–(தம்முடைய) வருகையினாலே
மனம் கவலை தீர்ப்பார்–(நமது) மனத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும்
மருங்கு ஓதம் மோதும்–ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே)
மணி நாக அணையார்–மாணிக்கத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவருமான பெருமான்.
மருங்கே வர அரியர் எலும்–(ஒருவர்க்கும் ஸ்வப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும்
எமக்கு–நமக்கு
அவரை–அப்பெருமானை
உன்னால்–மனத்தினால்
ஒருங்கே–ஒரே தன்மையாக
எப்பொழுதும் காணலாம்–எப்போதும் கண்டு அநுபவிக்கட்டும்.

மருங்கோத மோதும்-
சமீபத்திலே கடலை மோதும் படியாகவும்-திருப் பாற் கடலிலே

மணி நாகணையார்
மாணிக்கத்தை உடைய-திரு வநந்த ஆழ்வானை படுக்கையாக உடையவருமான பெருமாள்-
தென் திரை வருடத் திருப் பாற் கடலில் திரு வநந்த ஆழ்வான் மேல் திருக் கண் வளருமவர்
என்றபடி

மருங்கே வர அரியரேலும்
ஒருவர்க்கும் ஸ்வ பிரயத்னத்தாலே அணுகி வந்து-கிட்ட முடியாதவராயினும்

ஒருங்கே எமக்கு அவரை உள்ளால் எப்பொழுதும்-
ஒரே தன்மையாக
நமக்கு-அப்பெருமானை-மனத்தினாலே-எப்போதும் கண்டு அனுபவிக்கக் கூடும்

மனக் கவலை தீர்ப்பார்
நமது மனத்தில் உள்ள துன்பங்களை தொலைப்பவரும்

வரவு
தம்முடைய வருகையினாலே-மூன்றாம் வேற்றுமை உருபு தொங்கி கிடக்கிறது
வரவினால் என்றபடி

அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே-எனது நெஞ்சிலே புகுந்து-எப்பொழுதும் சேவிக்க
எளியனாய் இருக்கிறான்-என் உள்ளத்திலே உறையும் அவனைக் காண அருமை உண்டோ –

“வரவு மனக் கவலை தீர்ப்பார்”= ‘வரவு’ என்பதில் மூன்றாம் வேற்றுமையுருபு தொக்கிக் கிடக்கிறது; வாயினாலே என்றபடி.

தானாகவே வந்து மனக் கவலையைத் தீர்க்கும் பெருமான் என்கை

ஓதம் மருங்கு மோதும் மணி நாகணையார்
தெண்திரை வருடத் திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மேல் திருக்கண் வளருமவர் என்றவாறு.

இப்படிப்பட்ட பரமபுருஷன்.
மருங்கே வர அரியரேலும்= ஒருவர்க்கும் தமது முயற்சி கொண்டு அணுக முடியாதவனாயினும்;

உள்ளால் நமக்கு அவரைக் காணலாம்
என்னுள்ளத்துள்ளே உறைகின்றவனைக் காண எனக்கு அருமையுண்டோ? என்கிறாராயிற்று

————————————————————-

(வரவாறொன்றில்லையால்.)
எல்லார்க்கும் அருமைப் படுமவன் உமக்கு எளியனானது எப்படி? என்று சிலர் கேட்க;
அவனுடைய நிர்வேஹதுக க்ருபைக்கு அடி அறிய முடியாதாகையாலே, எந்த வழியாலே இந்த பாக்கியம் வந்ததென்று
என்னாலும் நிரூபிக்க முடியாது.
காரணம் எதுவானாலென்ன? வாழ்ச்சி நன்றாயிருக்கின்றதத்தனை என்கிறார்.

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—

பதவுரை

ஒருவன்–எந்த சேனனும்
ஒரு ஆறு–எந்த உபாயாந்தரத்திலும்
புகா ஆறு–பிரவேசிக்க வேண்டாதபடி
(அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக)
உரு மாறும்–தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற
ஆயவர் தாம்–ஸ்ரீகிருஷ்ணனானவனும்
சேயவர் தாம்–ஆஸுரப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும்
அன்று உலகம் தாயவர் தாம்–முன்பொருநாள் உலகங்களைத் தாவி யளந்தவனும்
மாயவர் தாம்–ஆச்சர்யமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
காட்டும் வழி–காட்டுகிற உபாயம்
வரவு ஆறு ஒன்று–இன்ன வழியாக வந்ததென்று தெரியாது;
வாழ்வு இனிது–பலன் போக்யமாயிரா நின்றது;
ஆல் எல்லே–ஆச்சரியம்

வரவாறு ஓன்று இல்லையால்
இன்ன வழியாக வந்தது என்று தெரியாது

வாழ்வு இனிதால் எல்லே
பலன் போக்யதாய் இரா நின்றது-ஆச்சர்யம்

ஒருவாறு ஒருவன்
எந்த சேதனனும்-எந்த உபாயாந்தரத்திலும்

புகாவாறு
பிரவேசிக்க வேண்டாதபடி

-உருமாறும்
தன்னுடைய ஸ்வரூப ஸ்வபாங்களை மாற்றிக் கொள்ளுகிற

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ-அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச
தானே தலை மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கும் கண்ணபிரான் –

அன்றிக்கே
உருமாறும்-
பரஞ்சோதி உருவை விட்டிட்டு
அழுக்கு மானிட உருவை-ஏற்றுக் கொண்ட
கோபால கிருஷ்ணன் என்றுமாம்

ஆயவர் தாம்
ஸ்ரீ கிருஷ்ணன் ஆனவனும்

சேயவர் தாம் –
ஆசூர பிரக்ருதிகளுக்கு-எட்ட முடியாதவனும்

பாண்டவர்களுக்கு அணியனாயும்
துரியோத நாதிகளுக்கு தூரஸ்தநாயும்
ஒரு கால விசேஷத்திலே அனைவருக்கும் சமீபஸ்ததானாக இருப்பவன் -என்பதை
அன்று உலகம் தாயவர் தாம் – என்கிறது அடுத்து

அன்று உலகம் தாயவர் தாம்
முன்பு ஒரு கால்-உலகங்களைத் தாவி அளந்தவனும்

மாயவர் தாம்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனுமான-எம்பெருமான் –

இப்படி சேயனாயும் அணியனாயும் இருப்பது பற்றி மாயவர் தாம் என்கிறது

காட்டும் வழி
காட்டுகிற உபாயம்-

ஒருவன் ஒரு ஆறு புகாவாறு உருமாறும் ஆயவர் தாம் -ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ;
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யமி மாசுச:” என்ற சரமச்லோகததின் பொருளை அநுஸந்தித்தபடி.

கருமம் ஞானம் முதலிய எந்த உபாயங்களிலும் யாரும் இறங்க வேண்டாதபடி அவரவர்களுடைய காரியங்களைத் தான்
தன் தலை மீது ஏறிட்டுக்கொண்டு நோக்கும் கண்ணபிரான் என்கை.

(“உருமாறும்.”) உலகத்தில் எவன் பலனை அநுபவிக்க வேண்டியவனோ அவன் உபாயாநுஷ்டாகம் பண்ணவேணு மென்றிருக்க,
பலனை, அநுபவிப்பவனான சேதநனை ஒரு உபாயமும் அநுஷ்டிக்க வேண்டாவென்று விலக்கி,
பலனை அநுபவியாத தான்
அவன் செய்ய வேண்டிய காரியங்களைத் தன் மீது ஏறிட்டுக் கொண்டு செய்கை உருமாறுகையிறே.

இனி, உருமாறுமாயவர் என்றது-
பரஞ்சோதி யுருவை விட்டிட்டு அழுக்கு மானிட சாதி யுருவை ஏற்றுக் கொண்ட கோபால க்ருஷ்ணன் என்றபடியாம்.

சேயர்தாம்-
பாண்டவர் போல்வார்க்கு அணியனாயிருக்கச்செய்தேயும், துரியோதநன் போல்வார்க்கு தூரஸ்தனாயிருந்தபடியைச் சொல்லுகிறது.

ஒரு காலவிசேஷத்திலே எல்லார்க்கும் ஸமீபஸ்தனாயிருந்தபடியைச் சொல்லுகிறது அன்று உலகம் தாயவர் தாம் என்று.

இப்படி ஒருகால் அணியனாய்
மற்றொருகால் சேயனாய்,
சிலர்க்கு அணியனாய் சிலர்க்குச் சேயனாய் இருப்பது பற்றி
மாயவர்தாம் என்கிறது.

இப்படிப்பட்ட எம்பெருமான் தன் இன்னருளாலேதானே காட்டும் வழி (உபாயம்) நிர்ஹேதுகமாகையாலே
இன்னமார்க்கமாக வந்ததென்று நமக்குத் தெரியாதாயினும், போக்யமாக அநுபவித்துக் கொண்டு ஆநந்தக் கடலிலே மூழ்கியிராநின்றோம்;
வாழ்ச்சியில் குறையில்லை; எல்லே- ஆச்சரியம்.

உலகத்தில் ஒருவனுக்கு மிகுந்த செல்வம் வந்தால் ‘இஃது நமக்கு எந்த வழியாலே வந்த’தென்று ஆராய்தல் அவசியமன்றோ;
ஆநந்தத்தை அநுபவிப்பதன்றோ ப்ராப்தம்.

அதுபோல ஆழ்வாரும் ‘பகவத்க்ருபை எனக்கு எந்தக் காரணத்தாலே வந்தாலென்ன?
ஆநந்தம் அளவற்றிராநின்றது காண்மின்’ என்கிறார்.

———————————————————————-

(வழித் தங்கு வல் லினையை.)
இவ் விருள் தரு மா ஞாலத்தில் உள்ளவரைக்கும் ப்ரதிபந்தகங்கள் மேலிட்டுக் கொண்டேயிருக்குமே!
என்று ஆழ்வாருடைய நெஞ்சு தளும்ப.
அதனை ஆழ்வார் ஸமாதானப்படுத்துகிறார் இதில்

அவ் வெம்பெருமானுடைய சக்தி எப்படிப்படட்து தெரியுமோ வுனக்கு?
ஆச்ரிதனான ஒரு ப்ரஹ்லாதனுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அவனுடைய ப்ரபல ப்ரதிபந்தகமாயிருந்த இரணியனைக் களைந்தொழித்தவனன்றோ அவன்;

அப்படிப்பட்டவன் நம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தங்களைத் தொலைத்தருளானோ?
தொலைத்தே யருள்வன்;
நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய் நெஞ்சே!; கவலையை விட்டொழிந்து தைரியமாய் இரு- என்றாராயிற்று.

பிரதி பந்தகங்கள் நிறைந்த இடமே என்று நெஞ்சு தளும்ப சமாதானம் படுத்துகிறார் இதில்–

கோளரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் -பெரியாழ்வார்–

வளை யுகிர் ஒளி மொய்ம்பில் மறவோனது ஆகம் மதியாது சென்று ஒரு உகிரால்
பிள எழ விட்ட குட்டமது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே -திரு மங்கை ஆழ்வார்

வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இ க்கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ் விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ் வடங்க மார்விடந்த மால் –57-

பதவுரை

நெஞ்சே–நெஞ்சமே!
போர்–யுத்த பூமியிலே
அவுணன் தன்னை–இரணியாசுரனை
தழீஇக் கொண்டு–அழுந்தக் கட்டிக்கொண்டு,
புலால் வெள்ளம்–ரத்த ப்ரவாஹமானது
தாழ்வு இடங்கள் பற்றி–பள்ள நிலங்கள் பக்கமாக
எங்கும் சுழித்து உகள–கண்டவிடமெங்கும் சுழித்துக் கொண்டு அலையெறிந்து கிளரும்படியாக
வாழ்வு அடங்கா–(அவ்விரணியனுடைய) வாழ்ச்சி முடியும்படி
மார்வு இடந்தமால்–அவனது மார்பைப் பிளந்த பெருமான்,
வழி தங்கு வல்வினையை–இடைவழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற (பிரதிபந்தகமான) வலிய பாவங்களை
மாற்றோனோ–(போக்கியருள மாட்டானோ? (போக்கியேவிடுவன்.)

வழித்தங்கு வல்வினையை
இடை வழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற-பிரதிபந்தகமான வலிய பாபங்களை

மாற்றானோ
போக்கி அருள மாட்டானோ –
போக்கியே விடுவன்

நெஞ்சே
நெஞ்சமே

தழீ இ க்கொண்டு
அழுந்தக் கட்டிக் கொண்டு

பேராவுணன் தன்னை
யுத்த பூமியிலே-ஹிரண்யாசுரனை

சுழித்து எங்கும் உகள
கண்டவிடம் எங்கும் சுழுத்திக் கொண்டு-அலை எறிந்து கிளம்பும்படியாக

தாழ்விடங்கள் பற்றி –
பள்ள நிலங்கள் பக்கமாக

புலால் வெள்ளம்
ரத்த பிரவாஹமானது

வாழ்வடங்க
அந்த இரணியன் உடைய வாழ்ச்சி முடியும்படி

மார்விடந்த மால்
அவனது மார்பை பிளந்த பெருமாள் –

வழித்தங்கு வல்வினை =
பிரதிபந்தகமொன்றுமில்லாவிடில் வழியில் எங்கும் தங்காமல் நேராகச் சென்று நற்கதி காணலாம்;
பிரதிபந்தகமான பாவங்கள் உள்ளவர்கள் இடைவழியிலே தங்க நேர்ந்துவிடும்,
ஆகவே இங்கு, வழியிலே தங்கப் பண்ணுகிற வல்வினையென்று
ப்ராப்தி ப்ரதிபந்தகாமன பாவங்களைச் சொன்னபடி.

மாற்றானோ என்றது- போக்கியே விடுவேன் என்றபடி.

தழீஇக் கொண்டே- தழுவிக்கொண்டு
இரணியனைக் கொன்ற கோரச்செயலை வருணித்துக் கூறுகின்றார் சழித்தெங்கும் என்று தொடங்கி.
இரணியனைக் கொன்ற போது அவனுடம்பிலிருந்து கொழித்துக் கிளர்ந்த ரத்த வெள்ளமானது அங்கே ஸமீபத்திலிருந்த
பள்ள நிலங்கள் யாவும் நிறையும்படி பெருகிற்று என்றவிதனால் அவனுடைய உடல் தடிப்பு சொல்லிற்றாயிற்று.

“கோளரியினுருவங் கொண்டு அவுணனுடலம் குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்” என்றார் பெரியாழ்வார்;
திருமங்கையாழ்வாரும் பெரிய திருமொழியில் (11-4-4.) “வளையுகிராளி மொய்ம்பில் மறவோனதாகம் மதியாது சென்றொருசொல்.
பிளவெழவிட்ட குட்டமது வையமூடு பெருநீரில் மும்மை பெரிதே” என்றருளிச் செய்தார்;

இரணியனைப் பிளந்தபோது உண்டான ரத்த வெள்ளக் குழியானது
மஹா ப்ரளய ஸமுத்ரததிற் காட்டிலும் மூன்று மடங்கு பெரிது என்றாரிறே.

————————————————————

(மாலே படிச்சோதி மாற்றேலினி.)
கீழ்ப் பாட்டில் “அவு ணன்றன்னை மார்விடந்தமால் – வழித்தங்க வல்வினையை மாற்றானோ நெஞ்சே!”
என்று தமது நெஞ்சை நோக்கி ஆழ்வார் சொன்னதை எம்பெருமான் கேட்டருளி
‘ஆழ்வீர்! நான் * வழித்தங்கு வல்வினையை மாற்றுவது மாத்திரமோ செய்வேன், உம்மைப் பரமபதத்திலே கொண்டு
சேர்ப்பதும் செய்வேன் காணும்’ என்றருளிச் செய்ய;

அது கேட்ட ஆழ்வார் ‘பிரானே! அடியேன் பரமபதத்தை விரும்புகின்றேனல்லேன்;
இதுவரை * மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்தது போலவே இன்னமும் பலபிறவிகள் பிறக்கப்பெறினும் வருத்தமில்லை;
அடியேனை இனிப் பிறவாதபடி பண்ணித் திருநாட்டிலே வைத்து
அத்தாணிச் சேவகத்திற்கு ஆளாக்கிக் கொள்ள வேணுமென்று வேண்டுகின்றேனல்லேன்;
நீ என்னை மறவாதிருக்க வேணும், உன்னை நான் மறவாதிருக்கவேணுமென்னு மித்தனையே அடியேன் விரும்புவது.

நீ என்னை மறாவதிருக்கையாவது – உன்னுடைய திவ்யாத்ம குணங்களையும் திவ்ய மங்கள் விக்ரஹ குணங்களையும்
இப்போது நானநுபவிக்குமாறு எங்ஙனே அருள் செய்திருக்கிறாயோ இப்படியே மேலுள்ள காலமும் அருளி செய்கையேயாம்;

உன்னை நான் மறவாதிருக்கையாவது- இப்போது உன்னை அநுபவிப்பது போலவே எந்நாளும்மநுபவிக்கையாம்.

ஆக இவ்வளவே அடியேன் பிரார்த்திக்கும் ஸம்பத்து – என்கிறார்.

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-

பதவுரை

மாலே–திருமாலே!
உனது–உன்னுடைய
பால்போல் சீரில் பழுந்தொழிந்தேன்-பால்போலப் பரம போக்யாமன திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்;
இனி–இனிமேல்
பிறப்பு இன்மை பெற்று–வீடுபெற்று
அடிக் கீழ்–(உனது) திருவடிவாரத்திலே
குற்றவேல்–கைங்கரியம் பண்ணுவது
யான் வேண்டும் மாடு அன்று–அடியேன் அபேஷிக்கிற செல்வமன்று;
படிச் சோதி–(உன்னுடைய) திவ்யமங்கள விக்ரஹ தேஜஸ்வை
மாற்றேல்–எனக்கு ஒரு காலும் மாற்றாமல் நிற்யாநுபவ விஷயமாக்க வேணும் ;
மேலால்–மேலுள்ள காலத்திலே
(உன் திருவடிகளில் கைங்கரியம் பண்ணவேணுமென்று அடியேன் ஆசைப்படவில்லை.)
மறப்பு இன்மை–உன்னை மறவாதிருந்தால் போதுமென்பதே
யான் வேண்டும் மாடு–அடியேன் ஆசைப்படும் செல்வம்.

மாலே
திருமாலே

படிச் சோதி மாற்றேல்-
உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ தேஜசை -எனக்கு ஒரு காலும் மாற்றாமல்
நித்ய அனுபவ விஷயம் ஆக்க வேணும்

படி -என்று திரு மேனிக்கு பெயர்
உனது திருமேனி ஒளியை இப்போது அனுபவித்துக் கொண்டு இருப்பது போலே
என்றைக்கும் மாறாமல் அனுபவித்துக் கொண்டே இருக்கும் படி அருள வேணும் –

இனி –
இனிமேல்

உனது-
உன்னுடைய –

பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன்
பால் போல் பரம போக்யமான-திருக் கல்யாண குணங்களிலே-ஆழ்ந்து விட்டேன் –

இத்தால்
குணானுபவமே
முக்கியமே ஒழிய
கைங்கர்யம்-அவ்வளவு முக்கியம் இல்லை என்றபடி

மேலால் –
மேலுள்ள காலத்தில் –

பிறப்பின்மை பெற்று –
வீடு பெற்று

அடிக்கீழ் குற்றேவல்
உனது திருவடி வாரத்திலே-கைங்கர்யம் பண்ணுவது

யான் வேண்டும் மாடு அன்று
நான் அபேஷிக்கும் செல்வம் அன்று

மறப்பின்மை
உன்னை மறவாது இருத்தலே வேண்டுவது

இது ஒன்றே யான் வேண்டும் மாடு
சமத்காரமாக அருளிச் செய்கிறார்

அவி ச்ம்ருதிஸ் தவச் சரணார விந்தே பாவே பாவே மேஸ்து
பவத் பிரசாதாத் -முகுந்த மாலை ஸ்ரீ ஸூக்தியை போலே –

மாலே! படிச்சோதி மாற்றேலினி = படி என்று திருமேனிக்குப் பெயர்; அதனடைய சோதியை மாற்றவேண்டா என்றது –
உனது திருமேனியின் ஒளியை இப்போது நான் அநுபவித்துக் கொண்டிருப்பது போலவே என்றைக்கும் மாறாமல்
அநுபவித்துக் கொண்டே யிருக்கும்படி அருளி புரிய வேணுமென்றபடி.

உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் = உன்னுடைய பரம போக்யமான திருக்குணங்களிலே நன்றாக ஆழ்ந்துவிட்டேன் என்கை
ஆதலால் எனக்குக் குணாநுபவம் முக்கியமே யொழிய, கைங்கரியம் அவ்வளவு முக்கியமன்று என்று காட்டினவாறு.
பிறப்பின்மை – பிறவாமை; அதாவது ஸம்ஸார நிவ்ருத்தி; பரமபதத்தைச் சொன்னபடி.
அங்கே சென்று குற்றேவல் செய்கையாகிற செல்வத்தை அடியேன் வேண்டவில்லை;
எங்கிருந்தாலும் உன் திருக்குணங்களை மறவாமலிருக்குமத்தனையே வேண்டுவது.

பரமபதம் சென்று அங்கே நித்ய கைங்கரியம்பண்ணவேணுமென்கிற அளவற்ற ஆசையும்
மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்ததில் வருத்தமும் வெறுப்பும் ஆழ்வார்க்குப் பூர்த்தியாக இருக்கச் செய்தேயும்
இப் பாட்டில் இப்படி அருளிச்செய்வது ஒருவகைச் சமத்காரமே யென்க.

இருக்கிறவரையில் எம்பெருமானை மறவாதிருத்தல் நன்று என்கிற சாஸ்த்ரார்த்தத்தை இதனால் வெளியிட்டபடி.
“அவிஸ்ம்ருதிஸ்த்வச் சரணாரவிந்தே பவேபவே மேஸ்து பவத் ப்ராஸாதாத்” என்ற முகுந்தமாலையை இங்கே அநுஸந்திப்பது.

குறுமை+ஏவல்= குற்றேவல்; சிறிய கைங்கரியம்.
மாடு-செல்வம்; “மாடு பொன் பக்கம் செல்வம் ” என்பது நிகண்டு.

———————————————————————

(மாடே வரப்பெறுவர்.)
இவ்விருள் தருமா ஞாலத்திலே எப்படிப்பட்ட ஞானியர்களும் ப்ரக்ருதி ஸ்வபாவங்களை உதறித் தள்ளிவிட்டு
எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுபவித்துக் கொண்டே யிருந்தாலும்,இடையிடையே இந்நிலத்தின் காரியம் நிகழ்ந்தே தீருமிறே.
இல்லாவிடில் இருள் தருமாஞாலமென்று இவ்விபூதியின் பெயர் பொய்யாகுமே; இருள் இடையிடையே கலந்து பரிமாறுமிறே.

கீழே சில பாட்டுக்களாலே ஆச்சரியமாக பகவத்குணாநுபவஞ் செய்து வந்த ஆழ்வார்க்கு
இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய துன்பங்களின் ஸம்பந்தம் தோன்றத் தொடங்கிற்று;
தொடங்கவே, திருவுள்ளம் நொந்து பேசுகிறார்-;

திருப்பாற்கடலிலே அலைகள் துடைகுத்தத் திருக்கண் வளாந்தருளாநின்ற திருமாலின் திருநாமங்களை நாம்
அநுஸந்திக்க வேணுமென்று சிந்தித்த மாத்திரத்திலே யிருக்க
இன்னமும் இவ்விடத்திலேயே சுற்றுக் காலிட்டுக்கொண்டு திரிகின்றனவே,
முன்போல இன்னமும் நம்மிடத்திலேயே தங்கியிருக்கலா மென்று நினைத்திருக்கின்றனவோ? என்கிறார்.

கீழ் ஐம்பத்து நான்காம்பாட்டில் “வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோவொருங்கிற்று” என்று
வல்வினைகள் போனவிடம் தெரியவில்லை யென்றருளிச்செய்த ஆழ்வார் திருவாக்கிலே மீண்டும்
“வல்வினையார் காடானுமாதானும் கைக்கொள்ளார்” என்கிற இப்பாசுரமும் வெளி வரும்படியாயிருக்கிறகிறே
இவ்விருள் தருமாஞாலத்தின் கொடுமை!.

இருள் தரும் மா ஞாலத்திலே இருள் இடை இடையே கலந்து-பரிமாறும் இறே-
பகவத் குணங்களை அனுபவித்த ஆழ்வார்-
சம்சார தண்மை தோன்றத் தொடங்க திரு உள்ளம் நொந்து பேசுகிறார் –

மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-

பதவுரை

பேர் ஓதம்–விசாலமான கடலிலே
சிந்து திரை ஊடேபோய்–சிதறி விழுகின்ற அலைகளினுள்ளே சென்று
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பேராளன்–எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓத–அநுஸந்திக்க வேணுமென்று
சிந்திக்க–நினைத்த மாத்திரத்திலே,
வல்வினையார்–கொடிய பாவங்கள்
பேர்ந்து–நம்மைவிட்டுக் கிளம்பி
காடானும் ஆதானும் கைக்கொள்ளார்–காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது)
மாடு வரப்பெறுவராம் என்றே?–இன்னமும் நம்மிடத்திலே வாழப்பெறலாமென்கிற எண்ணத்தினாலோ?

மாடே வரப் பெறுவாராம் என்றே
இன்னமும் நம்மிடத்திலே-வாழப் பெறலாம் என்ற-எண்ணத்தினாலோ

கீழே மாடு -செல்வம் அர்த்தம்
இங்கே பக்கம்
மாடு -பொன் பக்கம் செல்வம்
-நிகண்டு
என்றே சொல் நயத்தால் வாராமை காட்டி அருளுகிறார்
இனி நம்மிடம் வல் வினைகள் தங்க இடம் இல்லை என்றபடி –

வல் வினையார்
கொடிய பாவங்கள்

காடானும் ஆதானும் கைக் கொள்ளார் –
காடுகளிலோ மற்று ஏதேனும் ஓர் இடத்திலோ-போய்ச் சேராமல் இருக்கின்றனவோ

கீழே வானோ மறி கடலோ –என்று அருளிச் செய்த ஆழ்வார்-இப்பொழுதும்
மீண்டும் இப்படி அருளிச் செய்யும்படி-இருள் தரும் மா ஞாலத்தின் கொடுமை

பேரோதம் –
விசாலமான கடலிலே

சிந்து திரை ஊடே போய்
சிதறி விழுகின்ற-அலைகளின் உள்ளே சென்று

கண் வளரும் –
திருக் கண் வளர்ந்து அருளா நின்றுள்ள –

பேராளன் –
எம்பெருமானுடைய

பேரோதச் சிந்திக்கப் –
திரு நாமங்களை சிந்திக்க வேணும்-என்று நினைத்த மாத்ரத்திலே

பேர்ந்து
நம்மை விட்டு கிளம்பி –

கீழ்ப்பாட்டில் மாடு என்பதற்கு செல்வம் என்று பொருள்;
இப்பாட்டில் அப்பதமே பக்கமென்ற பொருளில் வந்தது.
(“மாடு பொன்பக்கம் செல்வம்” என்பது நிகண்டு.)
வரப்பெறுவராமென்றே? என்ற சொல் நயத்தினால்,
இனி அவ் வாசைக்கு இடமில்லை;
வல்வினைகட்கு இனி நம்மிடத்தில் தங்க முடியாது- என்பது விளக்கப்பட்டதாம்.

—————————————————————-

(பேர்ந்து ஓன்று)
வல்வினைகள் தம்மை அடர்க்க நினைக்கிறபடியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்;
அவை அடர்ந்தாலும் தம்முடைய அத்யவஸாயம் ஒரே உறுதியாயிருக்கும் படியைப் பேசுகிறாரிதில்.

நெஞ்சே! திருத்துழாய் மாலையை அணிந்தள்ள திருமாலின் போக்யதையில் நீ பழகினவனன்றோ?
உனக்கு நான் புதிதாக உபதேசிக்க வேண்டுவதன்றே? அந்த போக்யதையில் நீ யீடுபட்டு வேறு எந்த வஸ்துவிலும் கண் செலுத்தாமல்
அவ்வெம்பெருமானொருவனையே பின்பற்றி நிற்க வேண்டியது உன் கடமை; இந்த ஸ்வரூபம் கெடாதபடி நின்றாலும் நில்லு;
நிற்காமல் லிஷயாந்தாங்களைப்பற்றி முடிந்து போவதானாம் போ; உன்னை நான் நிர்ப்பந்திக்க மாட்டேன்;
ஆனால், நம்மை நரகத்துக்குப் போகாதபடி தடுத்துக் காத்தருளவல்ல கடவுள் அவனைத் தவிர வேறொருவன்
எங்குமில்லை யென்பதை மாத்திரம் உனக்கு உறுதியாய்ச் சொல்லுவேன்;
இதனை விச்வஸித்து நீ அப்பெருமானையே அநுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாயாகில் உகக்கிறேன்;
இல்லையாகில் தான் தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த் தொலையட்டும் என்று வெறுத்திருக்கிறேன் = என்றராயிற்று.

பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
பேர்ந்து ஒன்று நோக்காது–வேறொன்றையும் கணிசியாமல்
ஈன் துழாய் மாயனையே பின்நிற்பாய்–போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி நின்றும் நில்லு;
நில்லாப்பாய்–அப்படி அவனைப் பற்றாதொழியினும் ஒழி;
தொல்லை–அநாதியாய்
மா–பெரிதாய்
வெம்–கடினமான
நரகில்–நரகத்திலே
சேராமல்–போய்ப் புகாமல்
காப்பதற்கு–நம்மை ரக்ஷிப்பதற்கு
பேர்ந்து மற்று ஓர் இறை–வேறொரு ஸ்வாமி
எங்கும் இல்லை காண்–ஓரிடத்திலுமில்லைகிடாய்.

பேர்ந்து ஓன்று நோக்காது-
வேறு ஒன்றையும் கணிசியாமல்

ஈன் துழாய் மாயனையே பின்னிற்பாய்-
போக்யமான திருத் துழாய் மாலையை-அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி-நின்றாலும் நில்லு

நில்லாப்பாய் –
அப்படி அவனைப் பற்றாது ஒழியினும் ஒழி-

என்னெஞ்சே

தொல்லை –
அநாதியாய்-பரமபதம் போலே நரகமும் அநாதியே
சுக்ல கிருஷ்ண கதீ ஹ்யதே ஜகதஸ் சாஸ்வதே மதே-இரண்டுமே நித்யமாக சொல்லப் பட்டதே-

ஸ்தானம் நித்யம் எனபது இரண்டுக்கும் ஒக்கும்
பரம பதம் சென்றார் நச புன ஆவர்த்ததே எனபது மட்டும் வாசி

மா வெந்நரகில்-
பெரிதாய் கடினமான நரகிலே –

சேராமல்
போய்ப் புகாமல்

காப்பதற்கு
நம்மை ரஷிப்பதற்கு –

-பேர்ந்து எங்கும் இல்லை காண் மற்றோர் இறை
பேர்ந்து மற்று ஓர் இறை எங்கும் இல்லை காண்
வேறு ஒரு ஸ்வாமியும் வேறு இடத்தில் இல்லை காண் –

தொல்லைமாவெந்நரகில்= நித்யவிபூதியென்று சொல்லப்படுகிற பரமபதம் மாத்திரமே யன்றோ ஆதியந்தமற்றது;
நரகமும் அப்படிப்பட்டதோ? தொல்லை நரகம் என்னலாமோ? என்று சிலர் சங்கிப்பர்கள்;

பகவத் கீதையில் = சுக்லக்ருஷ்ணகதீ ஹ்யதே ஜகதச் சாச்வதேமதே” என்று இரண்டுமே நித்யமாகச் சொல்லப்பட்டுள்ளமை காண்க.

பரம பதஞ் சென்றவர்கள் திரும்பி வருதலில்லாமையால் அதனை விசேஷித்து நித்யவிபூதி யென்கிறது.
ஸ்தாநம் நித்யமென்பது இரண்டுக்குமொக்கும்.

காப்பதற்கு இல்லை காண் மற்றொரிறை = “எருத்துக் கொடியுடையானும் பிரம்மனுமிந்திரனும் மற்றுமொருத்தரும்
இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை” என்று பெரியாழ்வார் திருமொழியும்,

“நீளரவைச் சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தென்னரகைப் பற்றிக் கடத்தும் படை” என்ற பொய்கையார் பாசுரமும்
இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -41-50–திவ்யார்த்த தீபிகை –

September 16, 2014

(வலியமென நினைந்து)
பூதனையை முடித்த விஷயத்தைக் கீழ்ப் பாட்டில் பேசவே, அத்தோடு ஒரு கோவையான
மல்ல வத சரித்திரமும் நினைவுக்குவர, அதனை இப்பாட்டில் பேசுகிறார்.
முரட்டு மல்லர்களோடு நீ போர் செய்ய நேர்ந்த காலத்து
உனது ஸூ குமாரமான திருக் கைகளாலே அந்த மல்லர்களை நீ புடைக்கும் போது இவ்வுலகில் கண் இருந்த படுபாவி ஜனங்களெல்லாம்
“ஐயோ! நமது சரண்யனுக்கு என்ன தீங்க விளைந்திடுமோ!” என்று சிறிதும் வயிற்றெரிச்சல் படாதே கல்லாகக் கிடந்தவனே!
அந்தோ! என்று இன்று தாம் வயிற்றெரிச்சல் படுகிறார்.

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கி -வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைதிடுதி கீளாதே
பல் நாளும் நிற்குமிப்பார்–41-

பதவுரை

வலியம் என நினைந்து–நாமே பலசாலிகள்’ என்று நினைத்துக் கொண்டு
வலிய முடி–வலிதான தலைகள்
இடிய–சிதறியொழியும்படி
வாங்கி–போக்கடித்து
நின்–உன்னுடைய
வலிய பொன் ஆழி கையால்–வலிதாயும் அழகிய திருவாழியையுடையதாயுமுள்ள திருக்கையாலே
புடைத்திடுதி–(அந்த மல்லர்களை) அடித்துவிட்டாய்;
வந்து எதிர்த்த மல்லர்–எதிரிட்டு வந்த மல்லர்களுடைய
(நீ கை நோவக் காரியம் செய்ததைக் கண்ணால் கண்டு வைத்தும்)
இப்பார்–இவ்வுலகமானது
கீளாதே–வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்
பல் நாளும் நிற்கும்–சிரஞ்ஜீவியாயிருக்கின்றதே! (என்ன கல் நெஞ்சோ!)

வலியம் என நினைந்து-
நாமே பல சாலிகள் என்று நினைத்துக் கொண்டு –

வந்து எதிர்ந்த மல்லர் –
எதிரிட்டு வந்த மல்லர்களுடைய

வலிய முடி யிடிய –
வலிதான தலைகள்-சிதறி ஒழியும்படி –

வாங்கி –
போக்கடித்து

-வலிய நின் பொன்னாழிக் கையால்
உன்னுடைய வலிதாயும்-அழகிய திரு ஆழியையும்-யுடைத்தாய் இருந்துள்ள
திருக் கையாலே

புடைதிடுதி –
அந்த மல்லர்களை அடித்து விட்டாய் –

நீ கை நோவ கார்யம் செய்தததை கண்ணாலே கண்டு வைத்தும்-கீளாதே பல் நாளும் நிற்குமிப்பார்-
இந்த உலகமானது-வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்-சிரஞ்சீவியா இருக்கின்றதே
என்ன நல்ல நெஞ்சே –

அன்றிக்கே
வலிய நின் பொன்னாழிக் கையால் கீளாதே புடைதிடுதி
இரணியனது மார்வைக் கீண்டு எறிந்தது போலும்-
கேசியின் வாயைக் கீண்டு எறிந்தது போலும்
மல்லர்களைக் கீண்டு எறியாமல் மல் போர் செய்யும் முறைமைக்குத் தகுதியாக
திருக் கைகளாலே புடைத்திட்டாய்
அப்படி புடைத்திரா விட்டால் இந்த உலகம் அஸ்தமித்து போயிருக்கும்
அந்த மல்லர்களை புடைத்திடவே நீயும் பிழைத்து-இவ்வுலகமும் நிலை பெற்று -நிற்கிறது-என்றுமாம்-

ஸ்ரீக்ருஷ்ண பலராமர்களை எவ்வகையினாலாவது கொன்றிட வேணுமென்று கறுக் கொண்ட கம்ஸன் வில்விழாவென்கிற
ஒரு வியாஜம் வைத்து அவர்களைத் தனது படைச் சாலைக்கு வரவழைத்தான்; அப்போது அவர்கள் அவனது ஸபையிற் செல்லுகையில்
அவர்களை யெதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவி நிறுத்தப் பட்டிருந்த சாணூரன் முஷ்டிகள் முதலிய பெரு மல்லர்கள்
சிலர் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும் போர் செய்ய, அவர்களை யெல்லாம் அவ் யாதவ வீரரிருவரும் மற்போரினாலேயே
கொன்று வென்றிட்டனர் என்பது மல்லரைப் புடைத்த வரலாறு.

அன்றி, கண்ணன் பாண்டவ தூதனாய்த் துரியோதனனிடஞ் சென்ற பொழுது
துரியோதனன் ரஹஸ்யமாகத் தனது ஸபா மண்டபத்தில் மிகக் பெரிய நிலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அனேக மல்லர்களை
ஆயுத பாணிகளாய் உள்ளே யிருக்க வைத்து அப்படுகுழியைப் பிறர் அறிய வொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலே மூடி
அதன்மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை யமைத்து அவ் வாஸனத்திற் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல,
அங்ஙனமே ஸ்ரீக்ருஷ்ணன் அதன் மேல் ஏறின மாத்திரத்திலே மூங்கிற் பிளப்புக்கள் முறிபட்டு ஆஸனம் உள்ளிறங்கிப் பிலவறையிற்
செல்லுமளவில் அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துக் பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே,
அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர் என்பதொரு கதையும் உண்டு.

நாங்களே மஹா பலசாலிகள் என்ற செருக்குற்று எதிரிட வந்த மல்லர்களுடைய வலிமிக்க முடிகள் சிதறிப்போம்படி நீ
உனது அழகிய திருக்கைகளால் புடைக்கச்செய்தே அதனைக் கண்டு கொண்டிருந்த இவ்வுலகமானது
வயிறுவெடித்து மாய்ந்து போகாமல் சிரஞ்சீவியாயிருந்ததே! என்ன கல் நெஞ்சே! என்றாயிற்று.

பின்னடிகட்கு மற்றொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்;
வலியநின் பொன்னாழிக்கையால் கீளாதே புடைத்திடுதி=
இரணியனது மார்வைக் கீண்டெறிந்தது போலும்
கேசியின் வாயைக் கீண் டெறிந்தது போலும் மல்லர்களையும் கீண்டெறியாமல் மற்போர் செய்யும் முறைமைக்குத் தகுதியாகத்
திருக்கைகளாலே புடைத்திட்டாய்; அப்படி புடைத்திராவிடில் இந்த உலகம் அஸ்தமித்துப் போயிருக்கும்.
அந்த மல்லர்களை நீ புடைத்திடவே (நீயும் பிழைத்து) இவ்வுலகமும் நிலை பெற்று நிற்கிறது என்னவுமாம்.

—————————————————————-

கீழ்ப் பாட்டில் இப் பார் என்ற இவ் வுலகத்தின் ப்ரஸ்தாவம் வரவே உலகிலுள்ள பிராணிகளின் தன்மைகளில்
ஆழ்வார்க்கு ஆராய்ச்சி சென்றது. ஸ்ரீமந்நராயணனையே ஸர்வ ஸ்வாமியென்ற கொண்டு பற்றாமல்
கண்ட தெய்வங்களின் காலிலே விழுந்து அலைந்து திரியும் ராஜஸ தாமஸப் பிராணிகள் விஞ்சி யிருக்கக் கண்டார்.
திருவுள்ளத்திலே பரிதாபம் தோன்றி, ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமைப்பட்டிருக்கை தவிர
வேறொன்றும் தகுதியல்ல என்பதைக் காரணத்துடன் வெளியிடுகிறார்.

வேதங்களும் வைதிகர்களும் பல பல செயல்களை செய்து அருளினவன்-
ஸ்ரீ மன் நாராயணனே என்று சொல்ல-சர்வ பிரகாரங்களாலும் அவனே ரஷகனாய் இருக்க-
மற்று ஒருவருக்கு சேஷப்பட்டு இருக்க வழி இல்லையே –

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-

பதவுரை

(ஸ்ரீமந் நாராயணனே)

பார் உண்டான்–(பிரளய காலத்தில்) பூமியை விழுங்கினான்;
பார் இடந்தான்–(மஹா வராஹமாகிப்) பூமியை ஒட்டுவிடுவித்தெடுத்தான்;
பார் அளந்தான்–(திரிவிக்கிரமனாகிப்) பூமியை அளந்து கொண்டான்;
முன்–முதல்முதலாக
பார் இடம் படைத்தான்–இப்பூமியை யெல்லாம் உண்டாக்கினான்
என்பர்–என்ற சாஸ்த்ர ஞானிகள் சொல்லுகிறார்கள்;
பார் உமிழ்ந்தான்–(பிறகு) அதைப் புறப்படவிட்டான்;
பார் இடம் ஆவானும் தான்–அவனே ஸகல ப்ரபஞ்ச ஸ்வருபியாகவுமிருக்கிறான்;
ஆனால்–ஆனபின்பு (நமக்கு)
இடம் ஆர்–ஆச்ரயமாகக் கூடியவர்கள் வேறு யார்? (ஆருமில்லை)
அவை–இவ்வுலகங்கள்
மற்று ஒருவர்க்கு–ஸ்ரீமந்நாராயணனைத் தவிர மற்றொரு தெய்வத்துக்கு
ஆவான் புகா–சேஷப்பட்டிருக்க மாட்டா.

பாருண்டான்
பிரளய காலத்தில் பூமியை விழுங்கினான்

பாருமிழ்ந்தான் –
பிறகு அதைப் புறப்பட விட்டான் –

பாரிடந்தான்
மகா வராஹமாய்-பூமியை ஓட்டுவித்து எடுத்தான்

பாரளந்தான்
திரு விக்ரமனாய் பூமியை அளந்து கொண்டான்

பாரிடம் முன் படைத்தான்
முதல் முதலாக இப் பூமியை எல்லாம் உண்டாக்கினான்

என்பரால் –
என்று சாஸ்திர ஞானிகள் சொல்லுகிறார்கள்

பாரிடம் ஆவானும் தான்
அவனே சகல பிரபஞ்ச ஸ்வ ரூபியாகவும் இருக்கிறான் –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -உபநிஷத்-எல்லா பொருள்களும்-
ப்ரஹ்மத்தை-
ஆதாரமாகவும்-
ரஷகமாகவும்
சேஷியாகவும்-
தாரகமாகவும் -கொண்டவை -என்றபடி

ஆனால்
ஆன பின்பு –

ஆரிடமே
ஆர் இடம்-நமக்கு ஆச்ரயமாகக் கூடியவர்கள் வேறு ஆர் -யாரும் இல்லை

அவை
இவ்வுலகங்கள்

மற்று ஒருவர்க்கு
ஸ்ரீ மன் நாராயணனைத் தவிர-மற்று ஒரு தெய்வத்துக்கு

ஆவான் புகா
சேஷப்பட்டு இருக்க மாட்டா –

ஆவான் புகுதல்
அடிமைப்பட நேர்தல்-
இவன் அவனுக்கு ஆனான் என்றது இவன் அவனுக்கு அடிமைப் பட்டான் -என்றபடி
புகா -பலவின்பால் எதிர்கால எதிர்மறை வினை முற்று
கீழ்ச் சொன்ன செயல்கள் எம்பெருமான் தவிர மற்று ஒருவர் இடமும் பொருந்த மாட்டா -என்றபடி-

பிரளயங் கொள்ளாதபடி உலகங்களைத் திரு வயிற்றிலே வைத்து நோக்கினவன் நாராயணன்;
அவற்றை மறுபடியும் வெளிப்படுத்தினவனும் அவனே;
பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு போன ஹிரண்யாக்ஷனை
மஹாவராஹமாகிக் கொன்று அப்பூமியை மீட்டுக் கொணர்ந்தவனும் அவனே;
மற்றொருகால் மஹாபலியின் அஹங்காரத்தை அடக்கி அவன் பக்கலில் நின்றும் இவ்வுலகை ஸ்வாதீநப்படுத்திக் கொண்டவனும் அவனே;

இங்ஙனே பல் பல சொல்வதேன்?
இப்புவனி முழுவதையும் உண்டாக்கினவன் அவனே;
இவ்விஷயம் நான் உத்ப்ரேக்ஷித்துச் சொல்லுகிறதல்ல;
வேதங்களும் வைதிகர்களும் சொல்லுவது இதுவே.

ஆக இப்படி எம்பெருமான் இவ்வுலகத்திற்கு ஸர்வ ப்ரகாரங்களாலும் ரக்ஷகனாயிருப்பதுபற்றி சாஸ்திரங்களில்
“எம்பெருமானே இவ்வுலகம், இவ்வுலகமே எம்பெருமான்” என்ற ஒற்றமை நயந் தோன்றச் சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆகையாலே இவ்வுலரகங்கட்கு அப்பெருமாளைத் தவிர்த்து வேறொருவரும் ஆச்ரயமாயிருக்க முடியாது;
இவ்வுலகமும் அவனுக்கன்றி மற்றொருவர்க்கு சேஷப்பட்டிருக்க வழியில்லை என்றாயிற்று.

பாரிடமாவானம் தான் =
உபநிஷத்தில்- ஸர்வம் வல்விதம் பரஹ்ம்” என்று சொல்லிருப்பது இங்கே நினைக்கத் தக்கது.
எல்லாம் பரப்ரஹ்மே யென்றது- எல்லாப் பொருள்களும் ப்ரஹமத்தையே ஆதாரமாகவும் ரக்ஷகமாகவும் சேஷியாகவும்
தாரகமாகவுங் கொண்டவை என்றபடி.

ஆனால் ஆர் இடமே = எல்லாவுலகமும் ஸ்ரீமந்நாராயணனிட்ட வழக்காயிருக்கும்போது
வேறொருவர் புகலிடமாயிருக்கக்கூடுமோ? என்கை.

ஆனால் என்றது ஆனதால் என்றபடி.
இரண்டாமடியிலும் நான்மகாமடியிலும், ஆல்- அசைச்சொல்.

அவை மற்றொருவர்க்கு அவனுக்கு ஆனான்” என்றால் ‘இவன் அவனுக்கு அடிமைப்பட்டான்’ எனப்பொருள்படுதல் காண்க.
புகா -பலவின் பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று.
பாருண்கை, பாருமிழ்கை முதலிய கீழ்ச்சொன்ன செயல்களெல்லாம்
எம்பெருமானிடத்தில் தவிர மற்ற தெய்வங்களிடத்துப் பொருந்தமாட்டா என்னவுமாம்.

——————————————————————-

(அவயமென நினைத்து)
ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை என்று கீழ்ப்பாட்டிற் சொன்னதையே மற்றொரு முகத்தாலும்
ஸ்தாபித்துக் கொண்டு அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்பவர்கட்கன்றி
மற்றையோர்க்குத் துன்பங்கள் நீங்க வழியில்லை யென்கிறார்.
ஸாமாந்யரான உலகர்கள் எந்தத் தெய்வங்களைப் பரதேவதை யென்று கொள்ளுகின்றார்களோ
அந்தத் தெய்வங்களும் தங்கள் தங்களுக்கு ஆபத்து நேருங் காலங்களில் ஸ்ரீமந்நாராயணனையே அடி பணிந்து
உய்ந்து போகின்றன என்பதை முன்னடிகளில் அருளிச்செய்கிறார்.

அவயம் என நினைந்து வந்த சுரர் பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை -கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
மனத்துயரை மாய்க்கும் வகை–43-

பதவுரை

அவயம் என நினைத்து வந்த–அபயம் வேண்டிவந்து சரணமடைந்த
சுரர் பால்–தேவதைகளிடத்திலுள்ள
நவையை–குற்றங்குறைகளை
நளிர்விப்பான் தன்னை–போக்கடிக்கு மெம்பிரானை
சுவை இல் மனத்து–ஒரு படிப்பட்ட மனத்திலே
உயர வைத்து இருந்து–பரிபூர்ணமாக வைத்துக் கொண்டிருந்து
வாழ்த்தா தார்க்கு–மங்களாசாஸனம் பண்ணாதவர்களுக்கு
மனம் துயரை மாய்க்கும் வகையுண்டோ?– தங்கள் மனத்திலேயுள்ள துக்கங்களைப் போக்கிக் கொள்ள வழி ஏது?

அவயம் என நினைந்து வந்த
அபயம் வேண்டி வந்து சரணம் அடைந்த –
சக்ருதேவ பிரபன்னாய தவாச்மீ திச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம-
அபய பிரதானம் தேடி வருகின்ற தேவதைகள்-அபயம் -அவயமாக திரிந்து
அவையம் -அந்தாதிக்கு சேர பாட பேதம் -அப்போது இடைப் போலி

சுரர் பாலே –
தேவதைகள் இடத்திலே

நவையை –
குற்றம் குறைகளை -துக்கமும் நவை

நளிர்விப்பான் தன்னை –
போக்கடிக்கும் எம்பெருமானை-
நளிர்வித்தல்
-நடுங்கச் செய்தல்
பகைவர்களை நடுங்க செய்து அருளி ஒழித்து அருளி -செய்பவன் தன்னை

வேத அபஹார -மது கைடபர்கள் கையிலே பறி கொடுத்த ப்ரஹ்மன் துயரமும்
குரு பாதாக -ப்ரஹ்மஹத்தி தோஷம் பீடித்த ருத்ரன் துயரமும்
தைத்ய பீடா -மகா பலி இடம் பறி கொடுத்த இந்திரன் துயரம் என்ன
மற்றும் பலவற்றையும் தீர்த்து அருளிய பிரான் ஸ்ரீ மன் நாராயணனே –

கவையில் மனத்துயர வைத்திருந்து
ஒருபடிப் பட்ட மனத்திலே-பரிபூர்ணமாக வைத்துக் கொண்டு இருந்து
கவை -இரண்டு பட்டு இருத்தல்

கவை இல்லாமை -ஒருப் படி பட்டு இருத்தல்
அனந்யா சிந்த யந்தோ மாம் -ஸ்ரீ கீதை –
எம்பெருமானையே உபாயமாகவும் உபேயமாகவும் துணிந்து இருக்கை
எவை கொல் அணுகப் பெருநாள் என்று எப்போதும்
கவையில் மனம் இன்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்
நவையில் திரு நாரணன் சேர் திரு நாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே -திருவாய்மொழி-9-8-3-

வாழ்த்தார்க்கு-
மங்களா சாசனம் பண்ணாதவர்களுக்கு

உண்டோ -மனத் துயரை மாய்க்கும் வகை
மனத்துயரை மாய்க்கும் வகை -உண்டோ-தங்கள் மனத்தில் உள்ள துக்கங்களை
போக்கிக் கொள்ள வழி ஏது-

சுரர்பாலே என்றவிடத்து
ஸுரா: என்ற வடசொல் சுரர் எனத் திரிந்து கிடக்கிறது. தேவதைகள் என்று பொருள்.
இங்கே, பிரமன் சிவன் முதலிய ப்ரதாந தேவதைகளை நினைக்கிறது.
வேதங்களை மதுகைடவர் முதலான அசுரர் கையிலே பறிகொடுத்துவிட்டு அழுதுகொண்டே வந்து சரணம்புகுந்து நின்ற பிரமனென்ன,
ப்ரஹ்மஹத்தி சாபத்தால் கண்ட இடமெங்குந் திரிந்து எங்கும் புகலற்று வந்துநின்ற பரமசிவனென்ன,
மாவலிபோல்வார் கையிலே தகர்ப்புண்டு பரிபவப்பட்டு வந்துநின்ற இந்திரனென்ன
இவர்கட்கும் மற்றும்பல தெய்வங்கட்கும் துன்பறந் தவிர்த்த பிரான் ஸ்ரீமந்நாராயணனேயிறே.

அவயமென நினைந்துவந்த =
“ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீ திச யாசதே- அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம.” என்று
கடற்கரையிலே ஸ்ரீவிபீஷணாழ்வாரை நோக்கி அப்யமளித்ததை நெஞ்சிலே கொண்டு
“அஞ்சேலென்ற கைகவியாய்” என்றும்“
அடைக்கலம் புகுந்தவென்னை அஞ்சலென்ன வேண்டுமே” என்றும் அபய ப்ரதானம் வேண்டிவருகின்றனராம் தேவர்கள்.
அப்படிப்பட்டவர்கள் திறத்திலே திருவருள்செய்து அவர்களுடைய நவையை நளிர்விப்பவன் எம்பெருமான்;
நவையாவது குற்றம்; துக்கமுமாம். நளிர்வித்தலாவது நடுங்கச்செய்தல்;
பகைவரை நடுங்கச் செய்கிறானென்றால் பகைவரை ஒழிக்கிறானென்று கருத்தாகுமிறே.

அபயம் என்ற வடசொல் அவயமெனத் திரிந்தது. அந்தாதித் தொடைக்க நன்கு சேரும்படியாக அவையம் எனப் பாடமென்பாருமுண்டு;
அப்போது இடைப்போலி.

இப்படி ஸர்வரக்ஷகனான எம்பெருமானைக் கவை இல் மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு
மனத் துயரை மாய்க்கும்பகை உண்டோ? = கவை என்று இரண்டுபட்டிருக்கைக்குப் பெயர்;
கவையில்லாமையாவது ஒருபடிப்பட்டிருக்கை; “அநந்யாச் சிந்தயந்தோ மாம்” என்று கீதையில் சொல்லுகிற நிலைமை வாய்ந்திருக்கை.
எம்பெருமானையே உபாயமாகவும் உயோகமாகவும் துணிந்திருக்கையைச் சொன்னபடி.
பரமைகாந்திகளாய்க் கொண்டு அவனை வாழ்த்தாதவர்களுக்கு மனத்துன்பங்களை நீக்கிக்கொள்ள வழியில்லை யென்தாயிற்று.

திருவாய்மொழியில் (9-8-3) “எவை கொலணுகப் பெறுநாள்” என்ற பாட்டில்,
நவை, கவை என்ற பதப் பிரயோகம் காண்க.

—————————————————————

(வகைசேர்ந்த நன்னெஞ்சும்)
இப்பாட்டுக்குப் பிள்ளைதிருநறையூரரையர் ஒரு படியாகவும்
பட்டர் ஒருபடியாகவும் நிர்வஹிப்பராம்.
அரையர் நிர்வஹித்தபடி எங்ஙனமே யென்னில்; –
வகை சேர்ந்த நல்நெஞ்சும் = எம்பெருமானுடைய ஏதோ வொரு குணத்திலும் ஏதோவொரு சரித்திரத்திலும் பொருந்தி நின்ற நல்ல மனமும்,
அந்த ஒரு குண சேஷ்டிதத்தையே பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கிற நாவோடு கூடின வாக்கம் அப்பெருமானுடைய
எல்லாக் குணங்களிலும் எல்லாச் சரித்திரங்களிலும் பொருந்தி மேல் விழுந்து அநுபவிக்கமாட்டா திருந்தனவேயாகிலும்,
எப்படியாவது கஷ்டப்பட்டு ஸகல குணங்களிலும் ஸகல சரித்திரங்களிலும் நெஞ்சு பொருந்தும்படி செய்து கொண்டு
ஸர்வேச்வரனை அநுபவித்து மங்களாசாஸநம் பண்ண வேண்டியிருக்க,
அங்ஙனே பண்ணாதிருக்கிறார்கள் ஸம்ஸாரிகள் ;
இஃது ஏன்? என்றால், முற்காலத்தில் அவர்கள் செய்த பாவமே இதற்குக் காரணம் – என்பதாக அரையர் நிர்வாஹம்.

பட்டர் நிர்வாஹமெங்ஙனே யென்னில்; –
ஆத்மாவினுடைய ஞானம் வெளியில் ப்ரஸரிப்பதற்கு வழியாக அமைந்திருக்கின்ற நெஞ்சும், எம்பெருமானைப் பேசுகைக்கு
யோக்யமான நாவோடு கூடினவாயும் ரஜோகுணமும் தமோகுணமும் மிக்க ஸ்வயமாகவே பகவத் விஷயத்திற் படிந்தவில்லையே யாகிலும்,
‘நம்மை ஈச்வரன் படைத்தது ஏதுக்கு? நமக்குக் கை கால் முதலிய கரண களேபரங்களைக் கொடுத்தது ஏதுக்கு?’ என்று
ஆராய்ச்சி செய்து பகவத் விஷயத்திலே பல்லாண்டு பாட இழிய வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாழும் ஸம்ஸாரிகள்
பகவத் விஷயத்தில் அடியோடு இழியாதிருக்கிறார்களே, இதுவரையில் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து ஸம்ஸாரிகளா யொழிந்தது போராதா?
இனி மேலாவது நல்ல வழி போகத் தேடலாகாதா?
மேலுள்ள காலமும் நித்ய ஸம்ஸாரிகளா யிருப்பதற்கே யன்றோ இப்படி பாபிகளாய்த் திரிகிறார்கள்! – என்பதாம்.

வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இதுவன்றே
மேலைத் தாம் செய்த வினை–44-

பதவுரை

வகை சேர்ந்த நல்நெஞ்சும்–(ஞானத்திற்கு) மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும்
மிக வாய்ந்து வீழா எனினும்–(எம்பெருமானை) நன்றாகக்கிட்டி அநுபவிக்காவிட்டாலும்,
தாம்–சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள்
மிக ஆய்ந்து–நன்றாக ஆராய்ச்சி பண்ணி
நா உடைய வாயும்–(எம்பெருமானைப் பேசுவதற்கு உறுப்பான) நாவோடு கூடிய வாக்கும்
மாலை–எம்பெருமானை
வாழ்த்தாது இருப்பர்–வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள்
மேலை தாம் செய்யும் வினை இது அன்றே–மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது.

வகை சேர்ந்த நல் நெஞ்சம்
ஜ்ஞானதிற்கு மார்க்கமாக ஏற்ப்பட்டு இருக்கிற நல்ல நெஞ்சமும்

நாவுடைய வாயும் –
எம்பெருமானை பேசுவதற்கு உறுப்பான-நாவொடு கூடிய வாக்கும்

மிக வாய்ந்து வீழா வெனிலும்-
எம்பெருமானை நன்றாக கிட்டி-அனுபவிக்கா விட்டாலும்

மிக வாய்ந்து மாலைத்-
நன்றாக ஆராய்ச்சி பண்ணி-எம்பெருமானை –

தாம்
சேதனராய் பிறந்து இருக்கிற தாங்கள்

வாழ்த்தாது இருப்பார் –
வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள்

இதுவன்றே மேலைத் தாம் செய்த வினை
மேலைத் தாம் செய்த வினை இது வன்றே-மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காக
தாங்கள் செய்து கொள்ளுகிற-பாபம் அன்றோ இது –

————————————————————

மாறி மாறி பல பிறவிகள் எடுத்து இருந்தாலும்-
இனி மேல் பிறவாமைக்கு வழி தேடிக் கொண்டேன்
என்கிறார் –

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான் –45-

பதவுரை

விளையார்–பாவங்கள்
தர முயலும்–நமக்கு உண்டு பண்ண நினைக்கிற
வெம்மையை அஞ்சி–கொடிய துன்பங்களுக்கு அஞ்சி
தினை ஆம் சிறிது அளவும்–தினையளவு சிறிய அற்ப காலமும்
செல்ல நினையாது–வீணாகக் கழிய விரும்பமாட்டாமையினாலே,
நான்–அடியேன்
வானோர்–நித்யஸூரிகள்
தொழுது இறைஞ்சும் நாயாகத்தான்–தொழுது வணங்கும் பெருமை வாய்ந்த பெருமானுடைய
பொன் அடிகள்–திருவடிகளை
வாசகத்தால் ஏத்தினேன்–சொற்களாலே துதிக்கின்றேன்.

வினையார் தர முயலும்-
பாபங்கள் நமக்கு உண்டு பண்ண நினைக்கிற

வெம்மையை அஞ்சி –
கொடிய துன்பங்களுக்கு அஞ்சி

தினையாம் சிறிது அளவும்
தினை யளவு சிறிய அல்ப காலமும்-அதி அல்ப காலமும்

செல்ல -நினையாது
வீணாகக் கழிய விரும்ப மாட்டாமையினாலே

வாசகத்தால் ஏத்தினேன் –
சொற்களாலே துதிக்கின்றேன்

வானோர் தொழுது இறைஞ்சும் நாயகத்தான்
நித்ய ஸூ ரிகள் தொழுது வணங்கும்-பெருமை வாய்ந்த பெருமானுடைய

பொன்னடிகள்
திருவடிகளை –

நான் –
அடியேன்-

(வினையார் தர முயலும்.)
நானும் மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்தவனேயாகிலும் இனிமேல் பிறவாதபடிக்கு ஒரு வழி தேடிக் கொண்டேனென்கிறார்.
எம்பெருமானோடு இடைவிடாது சேர்ந்திருக்கை புண்ய பலமென்றும் அவனைப் பிரிந்து வருந்துகை பாப பலமென்றும் நூல்கள் கூறும்.
நாம் இனிமேலும் பாவமே செய்வோமாகில் இன்னமும் வெவ்விதான பகவத் விச்லேஷ துக்கமே நமக்கு நேர்ந்திடும் என்று அச்சமுண்டாயிற்று;
அவனைப் பிரிந்து ஒருநொடிப்பொழுதும் தரித்திருக்க மாட்டாமையினாலே,
வானோர் தொழுதிறைஞ்சும் பெருமை வாய்ந்த அப்பெருமானுடைய பொன்னடிகளை நான் வாய்கொண்டு துதித்துப் போருகின்றேன் என்றாராயிற்று.

வினையார் = திணைவழுவமைதி; கோவத்தினால் உயர்த்திக் கூறுகிறபடி. வெம்மை = கடூரமான துக்கம்.
நினையாம் சிறிதளவும் =
தானியங்களுள் தினையாம் சிறிதளவும் =
தானியங்களுள் தினையென்பது மிகச்சிறதாதலால் அதனை உவமையாக எடுத்துக்கொண்டபடி;
அத்யல்ப காலமும் என்றபடி. நாயகம்- பெருமை.

—————————————————————–

உபாய உபேயங்கள் இரண்டும்-எம்பெருமான் ஒருவனே என்னும் உறுதியை
அருளிச் செய்கிறார் –

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங்கண் மால் -நீங்காத
மா கதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –46-

பதவுரை

தேங்கு ஓதம் நீர் உருவன்–ஓடாமல் தேங்குகின்ற கடல் போன்ற திருநிறத்தையுடையவனும்.
செம் கண்-செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவனுமான
மால்–ஸர்வேச்வரன்
நீங்காத–ஒருநாளும் விட்டுப்பிரியக்கூடாத
மா கதி ஆம்–சிறந்த உபேயமாயிரா நின்றான்; (அவ்வளவு மல்லாமல்,)
வெம்நரகில்–கொடியஸம்ஸாரத்திலே
சேராமல்–பொருந்தாமல்
காப்பதற்கு–நம்மை ரக்ஷிப்பதற்கு
கதி ஆம்–உபாயமாகவும் இராநின்றான்;
நெஞ்சே நினை–நெஞ்சே! (இதை) நீ அநுஸந்திக்கக்கடவை;
நாள் நாளும்–நாள்தோறும் (உடனுக்கு) நான்
நான் கூறும் கூற்று ஆவது இத்தனையே–சொல்லும் சொல்லாவது இங்ஙனமே காண்.

கதி -கமன சாதனம்
கதி –கந்தவ்ய ஸ்தலம்

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
நாள் தோறும் நான் உனக்கு சொல்லும் சொல்லாவது-இவ்வளவே காண்
கூற்று– சொல்– கூறப்படுவது- கூற்று

தேங்கோத நீருருவம்-
ஓடாமல் தேங்குகின்ற-கடல் போன்ற திரு நிறத்தை யுடையவனும்

செங்கண் மால் –
செந்தாமரை போன்ற திருக் கண்களை யுடையவனுமான-சர்வேஸ்வரன்

நீங்காத மா கதியாம்-
ஒரு நாளும் விட்டுப் பிரியக் கூடாத-சிறந்த உபேயமாய் இரா நின்றான் –

அவ்வளவும் அல்லாமல்

வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
கொடிய சம்சாரத்திலே பொருந்தாமல்-நம்மை ரஷிப்பதற்கு
சம்சாரம் -வெந்நரகம்

கதியாம்
உபாயமாகவும் இரா நின்றான்

நெஞ்சே-நீ- நினை
நெஞ்சே நீ இத்தை-அனுசந்திக்கக் கடவை –

(நான் கூறும் கூற்றாவது.)
உபாய உபேயங்களிரண்டும் எம்பெருமானே யென்னும் உறுதியை உரைக்கின்றார்.
கடல் வண்ணனாய்ச் செந்தாமரைக் கண்ணனான ஸ்ரீமந்நாராயணனே மீட்சியில்லாதபடி நம்மைச் சேர வொட்டாமல்
செய்தருள வல்ல உபாயமும் அவனே;
ஆகையாலே அவனைத் தவிர்த்து வேறொரு உபாய வஸ்துவும் உபேய வஸ்துவும் நமக்கு இல்லை என்கிற இவ்வுறுதியையே மனமே!
நீ எப்போதும் சிக்கனக் கொண்டிரு. இவ்வளவே உனக்கு நான் உபதேசிக்க வேண்டிய விஷயம்.
இந்த ஒரு வார்த்தையையே நான் உனக்கு நாள் தோறும் சொல்லிக் கொண்டிருப்பேன்- என்று
தம் திருவுள்ளத்தை நோக்கி அருளிச் செய்தாராயிற்று.

கூற்று – சொல்; கூறப்படுவது கூற்று.
நாணாளும் என்பது முதலடியிலேயே சேர்ந்து அந்வயிக்க
வேண்டிய பதமாகையால் அதனை இரண்டாமடியோடு கூட்டி ஓதுவது அஸம்ப்ரதாயமென்க.
இப்பாட்டில் கதி என்ற சொல் மூன்றாமடியிலும் நான்காமடியிலும் உள்ளது.
இது வடசொல் விகாரம் கதி என்ற வடசொல் வ்யுத்பத்தி பேதத்தால்
கமநஸாதநம் என்கிற பொருளையும்
கந்தவ்ய ஸ்தலம் (அடைய வேண்டுமிடம்) என்கிற பொருளையும் தரக்கடவது.
அதாவது- உபாயம் உபேயம் என இரண்டையுஞ் சொல்லக் கடவது.
ஆகவே, இங்கு மூன்றாமடியிலுள்ள கதி சப்தம் உபேயப் பொருளது;
ஈற்றடியிலுள்ள கதி சப்தம் உபாயப்பொருளது
“நீங்காத மாகதியாம் வெந்நரகில்” என்று கூட்டி ஓதுதல் ஒவ்வாது;
‘மாகதி ஆம்’ என்று முற்று;
வெந் நரகுக்கு விசேஷணமல்ல. ஸம்ஸாரத்தை ‘வெந்நரகு’ என்கிறது.

————————————————————————–

(நினைத்திறைஞ்சி மானிடவர்.)
கீழ்ப்பாட்டில் எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்ற உறுதியை வெளியிட்ட
ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“ஆழ்வீர்! இப்படிப்பட்ட உறுதி உமக்கு மாத்திரமே யன்றோவுள்ளது; மற்றையோர்க்கு இல்லையே.
எல்லாரும் என்னை உபாயமாக மாத்திரம் பற்றுகிறார்களே யன்றி உபேயமாகவும் பற்றுகிறார்களில்லையே.
‘ஸம்பத்தைக் கொடு. ஸந்தனத்தைக் கொடு’ என்று சில க்ஷுத்ர புருஷார்த்தங்களை வேண்டிப் பெற்றுக் கொண்டு
ஒழிந்து போகிறார்களே யல்லது ‘நீயே எமக்கு வேணும்’ என்று என்னையே புருஷார்த்தமாக விரும்புவாரைக் கிடைக்க வில்லையே!;
உமக்காவது இதை வுறுதி நிலைத்து நிற்குமா?” என்று கேட்க;
அதற்கு உத்தரமாக அருளிச் செய்கிற பாசுரம் போலும் இது.

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே -நினைத்து இறைஞ்ச
எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு –47

பதவுரை

மாலே–ஸர்வேச்வரனே!
மானிடவர்–“இவ்வுலகத்தவர்கள்
நினைத்து இறைஞ்சி–நம்மை ஒரு பொருளாக நினைத்து வணங்கி
ஒன்று–ஏதாவதொரு அற்ப பலனையாவது
இரப்பர்–நம்மிடத்தில் வேண்டிக் கொள்வர்கள்
என்றேயும்–என்று கூட
நீ நினைத்திட வேண்டா–நீ நினைக்க வேண்டா;
(இப்பாவிகள் அற்ப பலன்களை விரும்பி தேவதாந்தரங்களின் பக்கல் ஓடுமவர்களே யொழிய
அவற்றுக்காகவும் உன்னருகு வரமாட்டார்கள்; இப்படியான பின்பு.)
நேரே நினைத்து இறைஞ்ச–(இவர்கள்) உன்னையே உபாயமாகவும் உபேயமாகவும் நினைத்துத் தொழுவதற்கு
எவ் அளவர்–என்ன அறிவுள்ளவர்கள்?
என் இடத்தோர்–அப்படிப்பட்ட அறிவு உண்டாகக்கூடிய இடத்தில் தானுள்ளவர்களோ? (இருள் தருமாஞானத்திலுள்ளவர்களன்றோ.)
எமக்கு–உன்னுடைய நிர்ஹேதுந கடாஷத்திற்குப் பாத்திராமன அடியோங்களுக்கோவென்றால்
அது தானும்–கீழ்சொன்ன மானிடவர்களுக்குமான துர்ப்புத்தி
எவ்வளவும்–சிறிதேனும்,
உண்டோ–உண்டாகக் கூடியதோ?
(உபாயமும் உபேயமும் நீயேயென்கிற உறுதி எமக்கு நிலை பெற்றதன்றோ.)

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர்-
இவ்வுலகத்தவர்கள் நம்மை-ஒரு பொருளாக நினைத்து வணங்கி-
ஏதாவது ஒரு அல்ப பலனையாவது-நம்மிடத்தில் வேண்டிக் கொள்வார்கள் –

என்றே நினைத்திடவும் வேண்டா
என்று கூட நீ நினைக்க வேண்டா

இப் பாவிகள் அல்ப பலன்களைக் கேட்டு அதுக்கும் உன் இடம் வராமல்
தேவதாந்த்ரங்கள் பக்கல் ஒடுமவர்கள் –
ஆரோக்கியம் தேடி ஆதித்யனை பற்றி
செல்வம் வேண்டி சிவனைத் தொழுது-
ஆயுளை வேண்டி அயனை அடைந்து
இப்படி உன்னை உபாயமாக கூட பற்றாமல் இருக்க –
இப்படியான பின்பு

நீ நேரே -நினைத்து இறைஞ்ச
இவர்கள் உன்னையே உபாயமாகவும்-உபேயமாகவும் நினைத்து-தொழுவதற்கு

எவ் வளவர்-
என்ன அறிவுள்ளவர்கள் –

எவ் விடத்தோர்
அப்படிப் பட்ட அறிவு உடையோர்கள் இடத்தில் தான்-உள்ளார்களா
இருள் தரும் மா ஞாலத்தில் அன்றோ இருக்கிறார்கள்

நேரே நினைத்து இறைஞ்ச
எவ்விடத்தோர் முதலில் சொல்லி-அப்புறம் எவ்வளவர்

மாலே –
சர்வேஸ்வரனே

அது தானும் –
கீழ் சொன்ன மானிடர்கள் போன்ற துர் புத்தி

எவ்வளவும் உண்டோ
சிறிதேனும் உண்டாகக் கூடியதோ-
உபாய உபேயம் நீ தான் என்ற உறுதி
எமக்கு நிலை பெற்றது அன்றோ

எமக்கு
உன்னுடைய நிர்ஹேதுக கடாஷத்துக்கு பாத்ரமான
அடியோங்களுக்கு என்றால்

இத்தால்-
உன்னுடைய நிர்ஹேதுக கடாஷத்துக்கு இலக்காகும்படி அதிகாரம் இருந்தால் கடைத்தேறலாம்
-என்றபடி-

“மாலே!, மானிடவர் நினைத்து இறைஞ்சி ஒன்று இரப்பர் என்றெயும் நீ நினைத்திட வேண்டா” என்று முன்னடிகளை
அந்வயித்துக் கொள்ள உலகிலுள்ள மனிதர்கள் ஐச்வர்யம் ஸந்தானம் முதலிய க்ஷுத்ர புருஷர்த்தங்களையாவது
உன்னிடத்திலே வந்து விரும்பினால், அவர்கள் உன்னிடத்திலே
உபாயத்வ புத்தியையாவது வஹித்திருக்கின்றனர் என்று ஒருவாறு மகிழ்ந்திருக்கலாம்;

அக்கேடுமில்லை. “ஆரோக்கியம் வேண்டி ஆதித்தியனைப் பணிகின்றேன்; செல்வம் வேண்டிச் சிவனைத் தொழுகின்றேன்;
ஆயுள் வேண்டி அயனை யடைகின்றேன்” என்றிப்படி ஒவ்வொரு பலனை வேண்டி ஒவ்வொரு தேவதாந்தரத்தைப் பணிய
ஓடுமவர்களாயிருக்கின்றார்களே யொழிய,
அந்த க்ஷுத்ர பலன்களை விரும்பியாகிலும் உன்னிடத்தில் வருகிறவர்களைக் காணோமே.

ஆகவே மானிடவர் உன்னை உபாயமாகவும் பற்றாதிருக்க,
உபேயமாகப் பற்றுகைக்கு என்ன ப்ரஸக்தியுளது?
அடியோம் அப்படியல்ல;
அவர்களுடைய துர்ப்புத்தி அடியோமுக்குச் சிறிதுமில்லை என்றாராயிற்று.

நேரே நினைத்திறைஞ்ச என்றவிடத்து
நேரே என்றது
உள்ளபடியாக என்றபடி.

உன்னை உபாயமாகவும் கொள்ளாத பாபிகள்
உபாயோபேயங்களிரண்டுமாக உன்னை எப்படி கொள்வார்கள் என்று கைமுதிக நியாயத்தாற் காட்டுகிறபடி.

எவ்வளவரெவ்விடத்தோர் என்றதில், “எவ்விடத்தோர்” என்று முன்னே அந்வயித்து எவ்வளவர்’ என்று பின்னே
அந்வயிருக்கவேணுமென்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம்போலும்.
இது தன்னிலே ஸ்வாரஸ்யமுமுண்டு.
“நேரே நினைத்திறைஞ்ச எவ்விடத்தோர்?” = இவ்விருள்தருமான ஞாலத்திலே பிறந்து வைத்து உன்னை உள்ளபடி
நினைத்திறைஞ்ச எப்படி முடியும்? என்றார் முதலில்.

அதற்கு மேல்,
இவ்விருள் தருமா ஞாலத்திலேயே பிறந்திருக்கிற தமக்கு மாத்திரம் இந்த அத்யவஸாயம் எங்ஙனே உண்டாயிற்று?
என்று பிறர் சங்கிக்கக்கூடுமே யென்றெண்ணி
அந்த சங்கைக்குப் பரிஹாராமக. எவ்வளவர்? என்கிறார்;
இவ்விருள் தருமாஞாலத்திலே பிறந்து வைத்தாலும் உன்னுடைய நிர்ஹேதுக கிருபைக்கு இலக்காகும்படியான
அதிகாரமாவது இருந்தால் கடைந்தேறலாம்;
அதுதானுமுண்டோ என்றவாறு.

அதுதானுமெவ்வளவுமுண்டோ எமக்கு? =
“நேரே நினைத்திறைஞ்ச எவ்வளவரெவ்விடத்தோர்” என்று இகழ்ந்துரைக்க
வேண்டும்படியான நிலைமை அடியேனுக்கு இதுவரையிலுமில்லை,
இனி மேலுமுண்டாகப்போகிறதில்லை என்றபடி.

——————————————————————-

இப்பாட்டிலும் தமது உறுதியை பேசுகிறார் –
பரமபதம் பாரித்து இருந்தோம் என்றும்-வேண்டாம் என்று இருந்தோம்
பாவோ நான் யத்ர கச்சதி –
அச்சுவை பெறினும் வேண்டேன்

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் போலேவும்-

எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அமைத்து இருந்தோம் அஃது அன்றே யாம் ஆறு அமைப்பொலிந்த
மென்தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு –48-

பதவுரை

அமை பொலிந்த மென் தோளி காரணம் ஆ–மூங்கில்போல் பருத்து விளங்குகின்ற
மெல்லிய தோள்களையுடையவளான நப்பின்னைப் பிராட்டிக்காக
வெம்கோடு ஏழ் ஏறு–கொடிய கொம்புகளையுடைய ஏழு நாளைகளை
உடனே–ஒரு நொடிப்பொழுதில்
சொன்றானையே–முடிந்த எம்பெருமானையே
மனத்துகொண்டு–சிந்தையில் தியானித்துக் கொண்டு
யாம்–அடியோம்
விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை–மேலுலகங்களுக்கெல்லாம் மேற்பட்டதான பரமபதத்தை
எமக்கு அமைத்திருந்தோம்–எமக்கு (ப்ராப்யபூமியாகப்) பாரித்துக் கொண்டிருக்கின்றோம்.
அஃது அன்றே ஆம் ஆற–அப்படி யிருப்பதுன்றோ (முழுக்ஷுத்வத்திற்கு) ஏற்றிருப்பது.

யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அடியோம்-மேல் உலகங்களுக்கு எல்லாம் மேலான பரமபதத்தை

எமக்கு அமைத்து இருந்தோம்-
எமக்கு பிராப்ய பூமியாக பாரித்துக் கொண்டு இருந்தோம்

அஃது அன்றேயாம் ஆறு
அப்படி இருப்பது அன்றோ-முமுஷூத்வத்திற்கு ஏற்று இருப்பது

அமைப்பொலிந்த மென்தோளி காரணமா –
மூங்கில் போலே பருத்து விளங்குகின்ற-மெல்லிய தோள்களை உடையளான
நப்பின்னை பிராட்டிக்காக –
அமை -மூங்கில் -திரண்டு உருண்டு இருக்க திருஷ்டாந்தம்

வெம்கோடு ஏறு ஏழுடனே
கொடிய கொம்புகளை உடைய-ஏழு காளைகளை -ஒரு நொடிப் பொழுதிலே –

கொன்றானையே மனத்துக் கொண்டு
முடித்த எம்பெருமானையே-சிந்தையிலே த்யானித்துக் கொண்டு

கண்ணபிரான் குண சேஷ்டிதங்களையே மனத்தில்-த்யானித்து கொண்டு இருக்கும்
அடியேனுக்கு பரமபதம் எதற்கு என்னவுமாம் –

(எமக்கியாம் விண்ணாட்டுக்கு) இப்பாட்டிலும் தம்முடைய உறுதியையே பேசுகிறார்.
இப்பாட்டுக்கு இரண்டுபடியாகப் பொருளுரைக்க இடமுண்டு.
ஸ்ரீக்ருஷ்ணனாய்த் திருவவதரித்து நப்பின்னைப் பிராட்டியைத் திருமணம்
புணர்வதற்காக ஏழு ரிஷபங்களை வலி யடக்கின எம்பெருமானையே நான் எப்போதும் உள்ளத்திற் சிந்தனை செய்து
கொண்டிருக்கிறேனாகையால்
அப்பெருமானுடைய நித்யாநுபவத்திற்குப் பாங்கான பரமபதத்திற் சென்று
அநுபவிக்க வேணுமென்பதையே மநோ ரதித்துக் கொண்டிருக்கிறேன்;
ஸம்ஸாரத்தில் காலூன்றி நிற்க மாட்டாத முமுக்ஷுக்களுக்கு இதுவே யன்றோ தகுதி- என்பது ஓர் அர்த்தம்.

இப்பொருளில், வீட்டை அமைத்திருந்தோம் என்பதற்கு,
பரமபதம் பெறப் பாரித்திருக்கின்றோம் என்று அர்த்தமாகும்;

இனி, அமைத்திருந்தோம் என்பதற்கு ‘
வேண்டாமென்றிருந்தோம்’ என்றும் பொருளுண்டாகையாலே,
கீழ்க்கூறிய கருத்துக்கு நேர் மாறாக மற்றொரு தாத்பர்யமுங் கொள்ளலாம்;
அதாவது-
ஸ்ரீராம குணங்களில் ஈடுபட்ட சிறிய திருவடி
“ஸ்நேஹோ மே பரமோ ராஜத்! த்வயி நித்யம் ப்ரதிஷ்டித: பக்திச்ச நியதா வீர! பாவோ நந்யத்ர கச்சதி” என்று –
இங்குற்ற அநுபவத்தை விட்டுப் பரமபதம் போகவும் என் மனம் விரும்புவதில்லை என்றாற் போலவும்,
“பச்சை மா மலை போல் மேனிப் பவளவாய் கமலச்செங்கண், அச்சுதா அமரரேறே ஆயந்தங்கொழுந்தே யென்னும்,
இச் சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்,அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே.” என்று
தொண்டரடிப் பொடியாழ்வாரருளிச் செய்தாற்போலவும்
ஸ்ரீ கிருஷ்ணகுண சேஷ்டிதங்களின் அநுபவத்திலே மிக்க விருப்பமுடைய
இவ்வாழ்லார் தாமும் பரமபதத்தை வேண்டாவென்கிறார் என்க.
‘எம்மாவீட்டுத் திறமும் செப்பம்.” (2-9-1) என்று திருவாய்மொழியிலும் இங்ஙனே அருளிச்செய்தவரிறே.

அமை என்று மூங்கிலுக்குப் பெயர், மூங்கில்போலே திரண்டு உருண்டு விளங்குகின்ற தோள்களையுடையவளான
நப்பின்னைப் பிராட்டிக்காகக் கொடிய ஏழு ரிஷபங்களை உடனே முடித்தவனான கண்ணபிரானையே நான்
மனத்திற் கொண்டிருப்பதனால் அந்த குண சேஷ்டிதத்தில் ஈடுபட்டிருக்கிற எனக்குப் பரமபதம் எதுக்கு? என்கிறார் காணும்.

எமக்கு + யாம், எமக்கியாம்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல் விண்ணாட்டுக்கு உச்சமதாம்
வீட்டை = இங்கு விண்ணாடென்று பரம பதத்திற்குக் கீழ்ப்பட்ட மேலுலகங்களைச் சொல்லுகிறது.
அவற்றிற் காட்டில் உச்சமதானவீடு- பரமபதம் உச்சம்- வடசொல்.

————————————————————–

இங்கே இருந்து குணாநுபவம் செய்து கொண்டு இருந்தாலும்
திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்க ஆசை உண்டாகுமே
அத்தால் அலமாப்பு அடைகிற படியை அருளிச் செய்கிறார் –

கொண்டல் தான் மால்வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார்
பேருரு என்று எம்மைப் பிரிந்து –49-

பதவுரை

கொண்டல் தான்–மேகங்களையும்
மால் வரை தான்–பெரிய மலைகளையும்
மா கடல்தான்–கருங்கடலையும்
மற்று கார் உருவம்தான்–மற்றுமுள்ள (குவளை, குயில், மயில் முதலிய) கறுத்து உருவங்களையும்
கண்ட நாள்–பார்க்குங் காலத்தில்
காண்தோறும்–பார்க்கும்போதெல்லாம்
கூர் இருள் தான்–செறிந்த இருளையும்
வண்டு அறா பூவைதான்–(தேனில் நசையாலே) வண்டுகள் விட்டு நீங்காத பூவைப் பூவையும்
நெஞ்சு–என் மனமானது
கண்ணனார் பேர் உரு என்று–இவை கண்ணபிரானுடைய அழகிய திருமேனி என்றெண்ணி
எம்மை பிரிந்து–என்னைவிட்டு நீங்கி
ஓடும்–அங்கே ஓடும்.

கொண்டல் தான் மால்வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
மேகங்களையும்-கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் என்றும்-
ஒக்கும் மால் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும்

தொக்க மேக பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் -என்றும்

பெரிய மலைகளையும்-நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலோ வென்று கூவும்-
கரும் கடலையும்-கடல் வண்ணன் என்றே திருநாமம் இறே
செறிந்த இருளையும்-தானோர் இருளன்ன மா மேனி எம்மிறையார்
இருள் விரி சோதிப் பெருமான் -திருவாசிரியம்

வண்டு அறாப் பூவை தான்-
தேனில் நசையாலே வண்டுகள் விட்டு நீங்காத-பூவைப் பூவையும்
பூவைப் பூ வண்ணா -என்னும்

மற்றுத்தான் -காருருவம்-
மற்று கார் உருவம் தான் -மற்றுள்ள-குவளை குயில் மயில் முதலிய
கறுத்த உருவங்களையும் –
பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறுமலர்காள் ஐம் பெரும் பாதகர்காள்
அணி மால் இரும் சோலை நின்ற எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே –நாச்சியார் திரு மொழி -9-4-

கண்ட நாள்
பார்க்கும் காலத்தில்

காண்டோரும்
பார்க்கும் போது எல்லாம்-பிரமம் என்று இல்லாமல் காணும் தோறும் எல்லாம் இப்படியே

நெஞ்சோடும் கண்ணனார் பேருரு என்று எம்மைப் பிரிந்து
என் மனமானது-இவை கண்ணபிரான் உடைய-அழகிய திருமேனி என்று எண்ணி
என்னை விட்டு நீங்கி அங்கே ஓடும்-

கொண்டல்தான் =
(“கருவுடை மேகங்கள் கண்டாலுன்னைக் கண்டா லொக்குங் கண்கள்” (பெரியாழ்வார் திருமொழி 2-7-2.) என்றும்,
“ஒக்குமம்மானுருவமென்று உள்ளங்குழைத்து நாணாளும் தொக்க மேகப்பல்குழாங்கள் காணுந்தோறும் தொலைவன் நான்” (திருவாய்மொழி 8-5-6) என்றும்
சொல்லுகிறபடியே
மேகங்களைக் காணும்போது கண் ஓடுகின்றது.

மால்வரைதான் = “நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலேவாவென்று கூவும்” (திருவாய்மொழி 4-4-4) என்கிறவரிறே இவ்வாழ்வார்.
பெரிய மலையைப் பார்க்கும் போது பெருமாளைக் கண்டாற்போலே ஓடுவர்.

மாகடல்தான் =கடல்வண்ண னென்றே எம்பெருமாலுக்குத் திருநாமமிறே.
கடலைக் கண்டால் எம்பெருமானைக் கண்டாற்போலே விரும்பி ஓடுவர்.

கூரிருள்தான் = “தானோரிருளன்ன மாமேனி எம்மிறையார்” என்று கீழுமருளிச் செய்தாரிறே.
“இருள் விரிசோதிப் பெருமான்” என்றார் திருவிருத்தத்திலும்.
இருளைக் கண்டால் எம்பெருமானைக் கண்டாற்போலே மகிழ்வர்.

வண்டறாப்பூவைதான் = பூவைப்பூவாவது காயம்பூவில் ஒருவகைப் பூ;
“பூவைப்பூவண்ணா வென்னும்”
‘காயாம்பூவண்ணங் கொண்டாய்” என்று எம்பெருமானுடைய நிறத்திற்குப் பூவைப்பூவை ஒப்புச் சொல்வதுண்டிறே.

மற்றுத்தான் என்றது- எம் பெருமான் திருநிறத்திற்குப் போலியாகக் கூடிய
கருநெய்தற்பூ குயில், மயில், கருவிளை, களங்கனி முதலிய பலவற்றைச் சொன்னபடி.
“பைம்பொழில்வாழ் குயில்காள் மயில்காள் ஒண்கருவிளைகாள், வம்பக்களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்கள்,
ஐம்பெரும்பாதகர்காள்! அணிமாலிருஞ்சோலை நின்ற, எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கென் செய்வதே?” என்ற
நாச்சியார் திருமொழிப் (9-4) பாசுரங்காண்க.

ஆகிய இப்பொருள்களைக் காணும்போதெல்லராம் கண்ணபிரானுடைய திருவுருவையே ஸாக்ஷாத்தாகக் கண்டதாக நினைத்து
என்னுடைய நெஞ்சு என்னைப் பிரித்து அவ்வப்பொருள்களினருகே ஓடுகின்றது என்றாராயிற்று.
நெஞ்சானது தம்மைப் பிரிந்து ஓடுவதாகச் சொல்லுகிற விது ஒருவகைக் கவிமரபு.
“கண்ட நாள் நெஞ்சோடும்” என்றதே போதுமாயிருக்க, காண்தோறு என்றது ஏதுக்கென்னில்;
ஒரு நாளிரண்டுநாள் இப்படி பார்த்துவிட்டு ‘இது ப்ரமம்’ என்று பிறகு வெறுமனிருப்பதில்லை;
காருருவங்களைக் காண்கிற போதெல்லாம் இந்த ப்ரமம் உண்டாகியே தீரும் என்பதற்காக.

——————————————————–

(பிரிந்தொன்று நோக்காது.)
எம்பெருமானுடைய திருவுருவத்திற்குப் போலியான பொருள்களைக் கண்ட போதெல்லாம் தாம்
பாவநா ப்ரகர்ஷத்தாலே அவற்றினருகே போய் அநுபவிக்கப் பாரிக்கிற படியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்.

அருகே சென்றவாறே அவை உபமான பதார்த்தங்களாகவே
(அதாவது- மேகமாகவும் கடலாகவும் இருளாகவும் பூவைப் பூவாகவும்)
இருக்குமே யன்றி உபமேயமான எம்பெருமானாக இருக்க மாட்டாவே;

“ஐயோ! நாம் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக ஸேவிக்கப் பெற்றோமென்று களித்திருந்தோமே;
இப்படி அந்யதா ஜ்ஞாநமாகவா முடிந்து விட்டது!” என்று வருத்தமுண்டாகி,

‘எம்பெருமான் நம்மை இப்படியே வருத்தப் படுத்தி வருகிறானே யொழிய ஒரு காலும் அவன் திருவுள்ளத்தில்
இரக்கம் பிறப்பதில்லையே!; என்ன கல் நெஞ்சோ!’ என்று வெறுக்கிறார்.

பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால்
ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
மாவாய் பிளந்தார் மனம்–50-

பதவுரை

பிரிந்து–தம்மைவிட்டுப் பிரிந்து
ஒன்று நோக்காது–வேறொன்றிலும் கண் வையாமல்
தம்முடைய பின்னே–தம்மோடு கூடவே
திரிந்து உழலும்–அலைந்துகொண்டு திரிகிற
சிந்தனையார் தம்மை–என் நெஞ்சினாரை
ஒரு கால்–ஒரு காலாகிலும்
புரிந்து–அன்புகூர்ந்து
ஆ ஆ என இரங்கார்–ஐயோவென்று அருள்புரிகின்றலர் (பகவான்);
அந்தோ–கஷ்டம்!;
மா வாய் பிளந்தார் மனம்–கேசியென்னும் குதிரையின் வாயைக் கிண்டொழித்த அப்பெருமானுடைய நெஞ்சு
வலிதே கொல்–கடினமோ;

பிரிந்து ஓன்று நோக்காது
தம்மை விட்டு பிரிந்து-வேறு ஒன்றில் கண் வையாமல்

தம்முடைய பின்னே திரிந்து உழலும்
தம்மோடு கூடவே அலைந்து கொண்டு திரிகிற

சிந்தனையார் தம்மை
என் நெஞ்சினாரை

புரிந்து ஒரு கால்
ஒரு காலாகிலும் அன்பு கூர்ந்து

ஆவா வென இரங்கார்
ஐயோ என்று அருள் புரிகின்றிலர்-பகவான் –

அந்தோ

வலிதே கொல் மாவாய் பிளந்தார் மனம்
கேசி வாயைப் பிளந்த-அப்பெருமான் உடைய நெஞ்சு கடினமோ
ஆஸ்ரிதர்க்காக கேசி வதம் செய்து அருளின பிரான் திரு உள்ளம்
என் விஷயத்தில் கல் நெஞ்சாக உள்ளதே –

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
இரக்கம் அற்றவன் சொல்லக் கூசி
அந்தோ வலிதே கொல் என்று அருளிச் செய்கிறார்-

ஆவாவென = ‘ஹா ஹா’ என்கிற வடமொழி அவ்யயம் ஆவாயென்று கிடக்கிறது.
இரக்கக் குறிப்பிடைச்சொல்.

மாவாய் பிளந்தவரலாறு :- கம்ஸனாலேவப்பட்ட அஸுரர்களில் கேசி யெனபவன் குதிரையினுருவத்தோடு ஆயர்கள் அஞ்சி
நடுங்கும்படி கனைத்துத் துரத்திக் கெண்டு கண்ணபிரான் மேற் பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி
அதன் வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களை யுதிர்த்து உதட்டைப் பிளந்து அதனுடம்பையும் இருபிளவால் வகிர்ந்து தள்ளினள் என்பதாம்.

ஆச்ரிதர்கட்காகக் கேசிவதம் முதலிய அரிய பெரிய செயல்களைச் செய்து பரம காருணிகள் என்று பேர் பெற்றிருப்பவன்
என் விஷயத்திலே கல் நெஞ்சனாவதே! என்று வெறுக்கிறார்.

“உயர்வற வுயர் நலமுடையவன்” என்று ஸமஸ்த கல்யாண குண பரிபூர்ணனாகத் தம் வாயாலே சொல்லத் தக்க எம்பெருமானை
‘இரக்கமற்றவன்’ என்று உறுதியாகச் சொல்லக்கூசி,
“அந்தோ! வலிதே கொல்?” என்று சங்கிப்பது போலக் கூறினபடி.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்