Archive for January, 2014

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 26, 2014

பரம பதத்தில் அன்றோ
வீற்று இருத்தலின் அழகு
காட்டலாவது-என்ன –
அவ்விருப்பின் அழகினை நாங்கள் காணத்
திருப் புளிங்குடியில் ஒரு நாள் இருந்து அருள வேண்டும் –
என்கிறார் –

சாய்ந்து அருளின அழகை கண்டவர்
வீற்று இருந்தால் நின்றால் என்ன இருக்கிறதோ
எம்பெருமான் விஷயம்
நம் போல்வார் நரக அனுப்பவ விஷயம்
பரிவின் காரணம்
நமக்கு பிராக்ருத விஷயம் தான் இப்படி இருக்கும்

————————————————————————————————————————————————————————-

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம்
இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்
தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்
திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே

————————————————————————————————————————————————————————–

எங்கள் கண் முகப்பே -இருந்திடாய் –
எங்கள் கண் முகப்பே இருக்க வேண்டும்
அது செய்யும் இடத்து –

யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி –
உலகத்துள்ளார் அடங்க -திருவடிகளில் உண்டான சேர்த்தி அழகு கண்டு
திருவடிகளில் விழுவது எழுவதாய்க் கொண்டு வணங்கி –

தங்கள் அன்பாரத் –
தங்கள் பக்தி மிக்கு வர –

தமது சொல் வலத்தால் –
தமது ஆற்றலுக்கு தகுதியான சொற்களாலே –என்னுதல்
அன்றிக்கே –
தாம் தாம் சொல்ல வல்ல அளவுகளாலே -என்னுதல் –
அந்தப் புராண புருஷனைப் பற்றி நான் அறிந்த அளவு சொல்லுகிறேன் -என்பது ஸ்ரீ நாராயணீயம்
யதாஜ்ஞ்ஞானம் து வஷ்யாமி புருஷம் தம் சனாதனம் -ஸ்ரீ நாராயணீயம் –
அதாவது
நூறு பிராயம் புகுவீர் –
பொன்னாலே பூணூல் இடுவர்
பழம் உண்பீர்
பால் உண்பீர் –
என்பன போன்று சொல்லுகை —
வங்கி புரத்து நம்பி -விஜயஸ்வ -வெற்றி உண்டாக -என்ன
ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது –
அங்கு சென்றாலும் முரட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லீரே
எங்கே இருந்தாலும் நாம் நாமே காணும் இங்கே எழுந்து அருளீர் –

தலைச் தலைச் சிறந்து பூசிப்ப –
ஒருவர்க்கு ஒருவர் மேல் விழுந்து மிகவும் துதித்துக் கொண்டாட –

திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் –
இங்கும் அங்கும் திரிந்து கொண்டே இருக்கிற சந்த்ரனுக்கு
திரிந்து வருகையாலே உண்டான இளைப்பு
எல்லாம் ஆறும் படியாக
இருக்குமாயிற்று மாடங்களின் உடைய ஒக்கம் –
அத் திவ்ய தேசத்தில் எழுந்து அருளி இருக்கிறவனே –

திருவைகுந்தத் துள்ளாய் –
அவ்வளவே இன்றிக்கே
திரு வைகுந்தத்திலே நின்று அருளுகின்றவனே –

தேவா –
தீவு கிரீடா –
பரம பதத்தில் காட்டில் இவ்வுலகத்தில் நிலையால் வந்த புகர் –

இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் –
இந்தப் பெரிய பூமியிலே
திருப் புளிங்குடியிலேயும் ஒரு நாள் இருந்து அருள வேணும் –
இருக்கும் இடத்தில் –

வீற்று இடம் கொண்டே –
பரமபதத்தில் இருக்குமாறு போலே உன்னுடைய வேறுபாடு
தோற்ற இருக்க வேண்டும்
இதனுள்ளும் -என்பதற்கு கருத்து என் என்ன –
சாய்ந்து அருளின அழகு கண்டோமுக்கு
இவன் இருந்தால் எங்கனே இருக்கிறதோ என்றும்
இப்படி இருக்கிறவன் தான் நின்றால் எங்கனே இருக்கிறதோ என்றும்
இங்கனே சில விருப்பங்கள் பிறக்கும் அன்றோ இவர்களுக்கு
அது வேறு ஒரு படி நமக்கு
இவை எல்லாம் நரகத்திற்கு காரணமான விஷயங்களிலே உண்டு
பகவத் விஷயத்தில் தெரியாது
செய்த எல்லாம் பரிதாகையும் அதற்கு மேலே வேறு சில செயல்களிலே
ஆசைப்படுகையும் எல்லாம் நமக்கு இவ் உலக விஷயங்களிலே உண்டாய் இருக்கும் –
இப்படி இருக்குமோ என்று அறியும் இத்தனை-

பரம பதத்தில் இருந்த திருக்கோலம்
நின்றவாறு -திருமலை
கிடந்த வாறு திருப்பாற்கடல்
இங்கே இருந்து காட்ட வேண்டும்
இதனுள்ளும் இருந்திடாய்
எங்கள் கண் முகப்பே
தங்கள் -பிரேமம் மிக்கு
சொல் பலத்தால் -அவர் அவர் தக்க படி
தங்கள் சக்தி அனுரூபமான சொல்
சொல்ல வல்ல அளவு யதா ஜ்ஞானம்
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே
நூறு பிராயம் புகுவார்
விஜய ஸ்ரீ
வங்கி புரத்து நம்பி ஆண்டான் வார்த்தை நினைப்பது
உரி அடி உத்சவம்
அவர்கள் பொன்னாலே பூணூல் இடுவீர் -இரட்டை இடுவீர்
அங்கே போனாலும் முரட்டு சமஸ்க்ருதம் விட்டீர் இல்லையே
மேல் விழுந்து ஆஸ்ரயித்து கொண்டாட
திங்கள் சேர் மாடம் சந்தரன் இளைப்பார ஒக்கம்
திரு வைகுண்டம் திவ்ய தேசம் உள்ளே
தேவா பிரகாசம் இங்கே வந்த தேஜஸ்
இதனுள்ளும் ஒரு நாள் இருந்து காட்டி அருள வேணும் –

————————————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 26, 2014

வலி அற்றவர்களோடு
வலி மிக்கவர்களோடு
வாசி அறக் காப்பவனான நீ
நாங்கள் வாழும்படி கண் எதிரே ஒரு நாள் இருக்க வேண்டும் -என்கிறார் –

———————————————————————————————————————————————————————–

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே
இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து
நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள்
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே

————————————————————————————————————————————————————————–

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே-
எங்கள் உடைய பிறவி காரணமாக வந்த எல்லா துக்கங்களையும் போக்கி –
பகவானுடைய ஞானத்துக்கு அடைவு இல்லாத இந்த உலகத்திலே என்னை அடிமை கொள்ளுகின்றவனே –

இமையவர் தமக்கும் ஆங்கனையாய்-
ஒரு கைம்முதலும் இல்லாத எங்களுக்கு அன்றிக்கே –
ஈச்வரோஹம் –நான் ஈஸ்வரன் -என்று இருக்கின்ற பிரமன் சிவன் முதலாயினோர்கட்கும்
அங்கு அப்படி நிர்வாஹகன் ஆனவனே –

செம்மடல் மலரும் தாமரைப் பழனத்-
சிவந்த மடல் மலரா நின்றுள்ள தாமரைகள் பொருந்திய நீர் நிலங்களை உடைய

தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய் –
சிரமத்தை போக்குகிற திருப் புளிங்குடியில் திருக் கண் வளர்கின்றவனே -என்றது
உள்ளும் புறம்பும் தாமரையாகவே இருக்கின்றன -என்றபடி –
கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே
ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே
அரவம் சுமப்பதே ஓர் அஞ்சன மலையே
அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளதே

உவப்புடன் ஒரு கால் நோக்கிப்
பவக்கடல் கடக்கும் பரிசு பண்ணினவே -திருவரங்கக் கலம்பகம் -73

நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து –
உன் அடியார் உன்னை அனுபவிக்கிற ஆரவாரத்தை கண்டு நாங்கள் உகந்து –

நாம் களித்துள நலம் கூர –
நாம் களித்து உளம் நலம் கூர –
அந்த உகப்பு தலை மண்டை இட்டு –
மனத்திலே சினேகமானது மேன்மேலும் என மிக்கு வர –

இம்மட வுலகர் காண –
இந்த உலகத்தில் அறிவு கேடராய்
இடக்கை வலக்கை அறியாதே மனிதர்களும் கண்களாலே காணும்படியாக –

நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே –
எங்கள் கண் வட்டத்திலே ஒரு நாள் இருந்து அருள வேண்டும் -என்றது –
நித்ய சூரிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமான நீ
ஒரு நாள் எங்கள் கண்ணுக்கும் விஷயமாய் இருந்தால் ஆகாதோ -என்கிறார் என்றபடி
உன்னுடைய காட்சி அதிகாரத்தை உடைய ஒரு சிலர்க்கேயாய் இருக்க வேண்டுமோ -என்பார்
எங்கள் கண் முகப்பே -என்கிறார் –

அனைவருக்கும் ரஷகன்
துர்பலர் பலம் உள்ளார் அனைவருக்கும்
இருந்திடாய்
கீழே நடை அழகு இங்கு இருந்த அழகு
எங்கள் இமையோர் இடர் கெடுப்பவன்
சம்சார துக்கம் போக்கி எங்களை ஆள்பவன் -நீ
இமையோர் தமக்கும் -ஈச்வரோஹம் ப்ரஹ்மாதி நிர்வாஹகன்
உள்ளும் வெளியில் தாமாரை -தடாகம் -இவன் அவயவம்
அடியார் -அனுபவிக்கும் ஆராவாரம் கவ்வை
நம்முடிய அடியவர் கவ்வை கண்டு உகந்து நாம் களித்து
உகப்பு தலை மண்டை இட்டு
உலகர் காண -இடக்கை வலக்கை அறியாத மட உலகம்
இருந்து அருள வேணும்
நித்ய சூரி சதா தர்சனம்
எங்களுக்கு ஒரு நாள்
அதி கிருதா அதிகாரம் உன்னுடைய தர்சனம் ஆக வேண்டுமோ

 

—————————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 26, 2014

நீர் விரும்பினவற்றை செய்ய ஒண்ணாதபடி
தடைகள் பிரபலமாக அன்றோ இருக்கின்றன -என்ன
மாலி சுமாலி மால்யவான் என்னும் இவர்களைக் காட்டிலும்
வலியவோ என் விரோதிகள் -என்கிறார் –

பிரதி பஷம் பிரபலம் அல்லவோ
மாலி சுமாலி போல்வாரை -முடித்தாய்
எம் இடர் கடிவானே
கண் அழிவு அற்று அளிக்கும் பெரிய திருவடி
உனக்கு தயை இருந்தாலும் கண் அற்று அளிக்கும் காய்ச்சின பறவை
காள மேகம் -மேரு போர்த்தி
கருடன் பொன் நிறம் -மேரு –
மலிந்த -கார் வானில் மின்னே போலே
வையம் கண்ட வைகாசி விசாகம் கருட சேவை
மின்னி –
அதுக்கு மேலே கருப்பாக குரங்கு என்னது –
பெரிய திருவடி மேல் இருப்பை காண ஆசை பட்டு
மா சின மாலி மாலிமான் -சுமாலி -இருவரையும்
கனன்று முன் நின்ற சீறி வடிவைக் கண்ட பொழுதே
காய்ச்சின வேந்தே திரு நாமம்
பூ பாலன் -ஆனதே -கொண்ட சீற்றம் உண்டு என்று உளது
haamilton piridge ammayyan pridge aarar pridge ஆனது போலே
கதிர் முடியானே ரஷனம் முடி சூட இழக்கவோ
தூரஸ்தன் இல்லையே -கூப்பிடு தூரம்
சம்ருதமான வயல் இருக்க
சங்கு வில் -பஞ்ச ஆயுதம் தரித்து வர வேண்டும் –
ஆஸ்ரிதர் ஆபத்து விளம்பு அசகன்
எம் இடர் கெட -வர வேண்டும்

 

————————————————————————————————————————————————————————-

காய்ச்சினப் பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே

————————————————————————————————————————————————————————-

காய்ச்சினப் பறவை யூர்ந்து –
பகைவர்கள் இடத்து உனக்கு கண்ணோடிலும்
கண் அற்று அழியச் செய்யும் -பெரிய திருவடியை நடத்தி –

பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல் –
அப்பொழுது இருக்கும்படி –
மேருவைக் கினியக் -கபளீகரிக்க -காளமேகம் படிந்தாப் போலே ஆயிற்று இருப்பது –
இப்பொழுது இது சொல்லுகிறது
பெரிய திருவடி முதுகில் இருப்பை காண்கைக்காக-

மாசின மாலி –
பெரிய சினத்தை உடையனாய்க் கொண்டு வந்த மாலி

மாலிமான் -என்று அங்கவர் படக்
மகானான மாலி சுமாலி -என்றபடி -என்ற அவர் அங்குப்பட
என்கிறவர்கள் -அங்கே முடியும்படியாக
என்று –

கனன்று முன்னின்ற –
சீறி அவர்கள் முன்னே நின்ற
வடிவைக் கண்ட போதே எதிரிகள் முடியும்படியாக அன்றோ வீரம் இருப்பது –
ஆதலின் முன் நின்ற -என்கிறார் –

காய்சின வேந்தே-
திருநாமம் –
காயும்சினத்தை உடைய நிர்வாஹகனே -என்றபடி –

கதிர் முடியானே –
விளங்குகின்ற திருமுடியை உடையவனே -என்றது
நீ பாது காப்பதற்கு முடி சூடி இருக்க -நான் இழக்கவோ -என்கிறார் என்றபடி

கலி வயல் திருப் புளிங்குடியாய்-
நிறைந்த வயல்கள் உடைய திருப் புளியங்குடியில்
திருக் கண் வளர்ந்து அருளுகிறவனே
நீ சேய்மையில் உள்ளவனாய் தான் நான் இழக்கிறேனோ -என்பார்
திருப் புளிங்குடியாய் -என்கிறார் –

காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே –
காயும் சினத்தை உடைய திரு ஆழி முதலான திவ்ய ஆயுதங்களைத் தரித்தது
அடியார்கள் உடைய ஆபய்த்தைப் போக்குகைக்காக அன்றோ –
எம் இடர் கடிவானே -திருக்கண் தாமரை தயங்க நின்று அருளாய் –
என்று மேல் பாசுரத்தோடு கூட்டி வினை முடிக்க –

—————————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 26, 2014

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து தோற்றினாப் போலே
வந்து தோன்றி அருள வேணும்
என்கிறார் –

————————————————————————————————————————————————————————–

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண்
தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை ஊர்ந்தானே

————————————————————————————————————————————————————————

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து –
மௌனமாய் இருக்குமவன் -விருப்பம் இல்லாது இருக்குமவன்
அவாக்ய அநாதர-
ஒன்றுக்கும் உன் தன்மையில் வேறுபடாத நீ –
அனுகூலர்களைக் கண்ட காட்சியாலே
அகவாயில் அன்பு தோற்ற

தன்மைகள் வேறுபட்டவனாய்
புன்முறுவல் செய்து நிற்கும்படியை காண வர வேண்டும் –

நின் பல் நிலா முத்தம் –
ஒளியை உடைய பல் ஆகிற முத்துக்களின் வரிசை –

தவழ் கதிர் முறுவல் செய்து –
கதிர் தவழ் முறுவல் செய்து –
ஒளி உள் அடங்காமல் -புறம்பே தவழும்படி-புன்முறுவல் செய்து
அன்றிக்கே
நின் பல் நிலாக்

கதிர் முத்தம் தவழ் முறுவல் செய்து -என்று பிரித்துக் கூட்டி
நின் பல்லின் உடைய மிக்க ஒளியானது திரு அதரத்திலே
தவழும்படி முறுவல் செய்து -என்னுதல்-என்றது
திரு அதரத்தின் நின்றும் மிக்க ஒளி புறப்படும்படி ஒளி செய்து -என்றபடி
முத்தம் -திரு அதரம்

நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய் –
திருக் கண்கள் உடைய புன் முறுவல் இருக்கிறபடி –
தயங்குகையாவது-அப்போது பிறந்த ஒளி ஆதல்
கடல் சலித்தால் போலே அசைந்து வருகிற படியைச் சொல்லிற்று ஆதல் –

காண வந்து நின்று அருளாய் –
முந்துற நாலடி வந்து -பின்னை அதுவும் மாட்டாதே
செயல் அற்றவனாய் நிற்கும் நிலையைக் காண வேண்டும் –

நல் பவளம் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் புளிங்குடி கிடந்தானே –
நல்ல பவளத் தூறுகளின் கீழே
சங்குகள் கேடு அற்று வசிக்கிற திருப் பொருநலை உடைத்தாய் –
சிரமத்தை நீக்கக் கூடியதான
திருப் புளியங்குடியில் திருக் கண் வளர்கின்றவனே –
படர் -தூறு -என்றது –
அவ் ஊரில் உள்ள பொருள்களுக்கு தீங்கு செய்வாருக்கு அஞ்சி வசிக்குமது அல்லை ஆயிற்று -என்றபடி

அத் தேசத்தின் தன்மை இதுவாக -எனக்கு நீ கிடைப்பாயோ கிடையாயோ -என்று நான்
அஞ்சும்படி இருக்கிறது என் என்கிறார் -என்றபடி –

கவளம் மா களிற்றின் –
கவளம் கொண்டு இருப்பதான பெரிய யானையினது
கவளம் கொண்ட என்றது -மதத்தால் இன்புற்ற யானை -என்றபடி –
இதனால் இதற்கு முன்பு இடர்ப்பட்டு அறியாத யானை என்பதனை தெரிவித்தவாறு –

இடர் கெட –
வாராய் என் ஆர் இடரை நீக்காய் -சிறிய திரு மடல் -50-என்கிறபடியே –
தன் வாயால் -ஆர் இடர் -என்னும்படி அன்றோ இடரின் கனம் –
ஆனையின் துயரம் -பெரிய திருமொழி -2-3-9-என்று நெஞ்சு உளுக்கும் படி அன்றோ பட்டது –

தடத்து –
தன் நிலம் அல்லாத பொய்கையிலே மிகச் சிறிய பொருளின் -முதலையின் -கையில் அகப்பட்டு
மாற்று வினை செய்வதற்கு இடம் இன்றிகே இருக்கும்படியான ஆபத்து போம்படியாக –
தடம் -எனபது
கரைக்கும் பொய்கைக்கும் பெயர் –

காய் சினம் பறவை ஊர்ந்தானே –
பகைவர்களை காயும் சினத்தை உடைய பெரிய திருவடியை –
அவன் வேகம் போராமை அவனை நடத்திக் கொண்டு வந்து தோற்றிலையோ
அவ் யானையின் நிலை காண் – என் நிலை –
அதற்க்கு தோற்றினாப் போலே என் முன்னே வந்து
தோற்றி அருள வேண்டும் –
கருமுகில் தாமரைக் காடு பூத்து நீடு
இருசுடர் இருபுறத்து ஏந்தி ஏடு அலர்த்
திருவொடும் பொலிய ஓர் செம் பொன் குன்றின் மேல்
வருவ போல் கலுழுன் மேல் வந்து தோற்றினான் -கம்பர்

கஜேந்தர ஆழ்வானுக்கு வந்து தோற்றினால் போலே
வந்து அருளுவாய்
தடத்து காய்ச்சின பறவை ஊர்ந்தாய்
அவாக்ய அநாதார -விகிரதானாக இருக்கும் நீ –
சலனம் இல்லாமல்
அகவாயில் பந்தம் தோற்ற
கனிவாய்
முறுவல்
கதிர் தவழும் படி
பவளம் -வாய்
முத்து பல் –
பண்ணிலா முற்றம் கதிர் தவழ
முத்தம் தந்தம்
அர்ச்சிராதி -கண்கள் ஸ்மிதம் இருக்கிற படி
சந்தோஷம் கண்ணில் –
அலை சரிந்து தயங்க வருமா போலே
ஸ்தப்தனாய் நின்ற நிலை காண வேண்டும்
நல்ல பவளம் சங்கு வர்த்திக்கிற திரு பொருநல்
நீர் பட்டு பாறையே பவளம் ஆகுமே –
பதார்த்தங்கள் -சங்கு உறையும் -விரோதம் இல்லாமல்
தேச ஸ்வா அம்
எனக்கு மட்டும் கிடைப்பயோ பயம் இருக்க
அசேதன வஸ்துக்கள் இப்படி இருக்க ஆசைப் பட்ட நான் இழக்கவோ
கவளம் மதம் முதிர்ந்த யானை
இடர் பட்டு அறியாதாயானை
ஆனைக்கு தக்க வாதம் -யானை இடர்
தடத்து -தன்னிலம் இல்லாத பொய்கை
முதலை
தடம் கரை பொய்கைக்கும் பேர்
காய்சின காய்கின்ற சினம் உடைய பெரிய திருவடி
வேகம் பொறாமல் துரத்தி வந்தாய்
கைம்மா துனம் கடிந்த பிரான்
சம்சாரம் -அநாதி -ஐந்து முதலை -ஆஅது எனக்கு தானே

—————————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 26, 2014

திருப்பதிகளிலே எழுந்து அருளி இருப்பவனாய்
என்னை இவ்வளவு ஆக்கினாப் போலே
மேலும் எனது விருப்பத்தை செய்தருள வேண்டும் –
என்கிறார்

————————————————————————————————————————————————————————

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்
சிவப்ப நீ காண வாராயே

————————————————————————————————————————————————————————-

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று –
திருப் புளிங்குடியிலே -கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -என்னும் அழகினைக் காட்டியும்
வர குண மங்கையிலே – பிரான் இருந்தமை காட்டினீர் -திருவாய்மொழி -என்னும் இருப்பின் அழகினைக் காட்டியும்

ஸ்ரீ வைகுண்டத்தில் -நிலையார நின்றான் -திருவாய்மொழி -என்னும் நின்ற நிலையின் அழகினைக் காட்டியும் –
அன்றோ என்னை புகுர நிறுத்தியது
இவை எல்லாம் நான் இரந்த தற்காகவோ நீ செய்தது

தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே –
தெளிந்த சிந்தை -என்னும் இவ்விடத்தில்
பட்டர் -திருநாராயண புரத்திலே வெறுப்பிலே -பிள்ளை திரு நறையூர் அரையரும் திரு நாட்டுக்கு
எழுந்து அருளியதாலும்
எம்பெருமான் திரு மேனிக்கும் அழிவு வந்ததாலும்
தேவர் ஸ்வாதந்தர்யம் எல்லாம் காட்டினாலும் பின்னையும் பண்ணின நம்பிக்கையில்
குலைத்தல் இன்றிக்கே இருக்கும்படி
எலும்பு உரமுடைய எம்பெருமானார் போல்வார் பக்கல் செய்யுமத்தனை
எலி எலும்பனான அடியேன் பக்கலிலும் செய்வதோ -என்றது
மகா விஸ்வாச பூர்வகம் -மிக பெரிய நம்பிக்கை முன்னாக -என்கிறபடியே
ஏதேனும் ஓன்று வந்தாலும்
இங்குத்தைக்கு வருவதாய் வந்தது ஓன்று அன்று
இதற்கு அடி நம்முடைய பாவம் -என்று
பண்ணின நம்பிக்கை குலையாதார் விஷயத்தில் செய்யும் அத்தனை –
இது தானே காரணமாக நெஞ்சு நெகிழும்படி இள நெஞ்சர் பக்கலிலும் அதைச் செய்யக் கடவதோ -என்றாராம் -என்றபடி

அன்றிக்கே
தண்ணியன் -என்று அகலாதபடி
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியிலே என் மனத்தினைத் தெளிவித்தும்
அதனைக் கைவிடாதே எப்பொழுதும் எழுந்தருளி இருந்து -என்னுதல் –

என்னை ஆள்வாய் –
என்னை -தண்ணியன் -என்று அகலவும் ஒட்டாதே
பிரிவாற்றாமையால் -முடியவும் ஒட்டாதே
குண ஞானத்தினாலே தரிப்பித்து கொண்டு போனதாய் –

எனக்கு அருளி –
புறம்பு போகாதபடி வளைத்து
நீயும் காப்பாற்றா விட்டால் எங்கனே தரிக்கும் படி –

நளிர்ந்த சீர் –
நினைத்தவர்கள் மனம் குளிரும்படியான ஷீலா குணத்தை -என்றது
ஆழ்வார் விரும்பியதைச் செய்து அருளினான் -என்ற
கல்யாண குணத்தை -என்றபடி –

உலகம் மூன்றுடன் வியப்ப –
வி லஷணரோடு அல்லாதாரோடு வாசி அற
எல்லாரும் ஒக்க அனுபவித்து ஆச்சர்யம் படும்படியாக –

நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப் –
நாங்கள் ஆச்சர்யப் படும் அளவு அன்றிக்கே
வேறு பட்டவர்கள் ஆகும்படி –
இவர்க்கு ஆச்சர்யப் படக் காலம் இல்லை ஆயிற்று

பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப-
தெளிந்த நீரை முகக்கையாலே காணுதற்கு இனியதான
மேகமானது பவளத்தை பூத்தாப் போலே ஆயிற்று
திரு அதரத்தில் பழுப்பு இருப்பது
இவர் கூத்தாடி நின்று ஆர்த்தலைக் கண்டு
அவன் செய்யும் புன்சிரிப்பு இருக்கும் படி –

நீ காண வாராயே –
என் எதிரே உன் அழகு காண வர வேண்டும் –
அவன் கூத்து இருக்கிறபடி
அவன்மாறி மாறி இடும் அடி வல்லார் ஆடினால் போலே காணும் இருப்பது –
பிள்ளை அழகிய மணவாள அரையரைப் பெருமாள்
ஒரு நாள் அருளப் பாடிட்டு
நாம் இங்கனே நடக்கிறோம் -அதற்கு ஈடாக நீ ஆடிக் காண் -என்ன
கானகம் படி உலாவி உலாவி -பெரியாழ்வார் திருமொழி -3-6-4- என்றபடி
தேவருடைய குழல் ஓசையைக் கேட்டவாறே பாடல் தவிர்ந்தார்கள்
தேவர் இயல்பாகவே நடக்கிற நடைக்கு பயிற்சியின் பலத்தால் உண்டான ஆடல் தவிர்ந்தார்கள்
குரக்குக் கைகொடு கூழ் துழாவி-அடியேன் தேவர் திரு முன்னே
ஆட வல்லேனோ -என்றாராம் –

திருப்பதிகளில் சந்நிகிதனாய் இருந்து அருளின பின்பு
எனக்காக இன்னம் சில அருள வேண்டும்
புளின்குடி கிடந்தது
வரகுணமங்கை -நத்தம் -இருந்து
ஸ்ரீ வைகுண்டம் நின்ற -சிறிய திரு மேனி –
போக பாக்ய த்வரை
ஆழ்வாரை அன்பவிக்க வந்து
படுத்து இருந்து நின்று -இருக்கிறானாம் –
பாகம் ஆகும் வரை பொறுக்க முடியாத
தெளிந்த என் சிந்தை –
அகம் கழியாதே ஆள்கிறான்
பவளம் போலே கனி வாய் சிவப்பா நான் காண வாராய்
நான் இரக்கவோ இது எல்லாம் செய்தாய் –
சந்நிஹிதன் ஆனபின்பு
தெளிந்த என் சிந்தை -பட்டர் திரு நாராயணபுரத்தில் வெறுப்பில்
தொட்டியம் திருநாராயண புரம் -பிள்ளை திரு நறையூர் அரையர் உடம்பை அபெஷித்தார்
தேவர் ஸ்வா தந்த்ரம் –
பெரிய நம்பி கணை அவர்களே பிடுங்க -கூரத் ஆழ்வான் தானே பிடுங்க
தரித்து இருக்க நெஞ்சு உரம்
பண்ணின விஸ்வாசம் குறையாமல் இருக்க
எலும்பும் உறவும் இருக்க
எம்பெருமானார் பக்கல் செய்வதை எலி எலும்பன் இடம் செய்வதோ
மகா விஸ்வாசம் பூர்வகம்
இதுக்கு அடி நம்முடைய பாப்பம் அனுபவிக்க வேண்டும் விஸ்வாசம் இருக்க வேண்டும் பட்டர் -என்றாராம்
தெளிவு அவ்வளவு இல்லையே -பட்டர் சொல்வதாக
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் விஸ்வாசம் குலையாத தெளிவு
உடையவராய் ஆழ்வார் –
கிடந்ததோர் கிடக்கை
பிரான் இருந்தமை
நிலையா நின்றான்
அழகை காட்டி வசீகரித்த
அயோக்யன் அகலாமல் – கண்கள் சிவந்து அப்புறம் ஆத்மா வை லஷ்னண்யம் காட்டிய பின்பு தெளிந்த சிந்தை
நித்ய வாசம் பண்ணி

ஆள்வாய் –
விலகவும் ஒட்டாதே –
பிரிவால் ஆற்றாமை -விஸ்வாசம் -முடியவும் ஒட்டாமல்
குண ஞானத்தால் தரிப்பித்து கொண்டு -என்னை ஆள்வாய்
தெளிந்த சிந்தை -நிரந்தர வாசம் செய்து தரிக்க வைத்தாய்
குணா அனுசந்தானம் -பண்ணின கார்யம் உஅகார சமர்த்தி
காண வாராய்
வெளியில் போகாதே -உள்ளே சோறு கொடுக்காமல் -எப்படி தரிக்க
ஜீவனம் இடா விடில்
அனுசந்த்தார் ஹிருதயம் குளிரும்படி –
உலகம் மூன்று -அனைவரும் வியக்க
விலஷனர் அவிலஷனர் எல்லாரும் அனுபவிக்க
நாங்கள் கூத்தாடி விஸ்மயம் மட்டும் இல்லை -அதுக்கு மேலே விகிதராய் –
விஸ்மயப்பட அவகாசம் இல்லை
பளிங்கு நீர் -தெளிந்த நீர் முகம் கொண்ட மேகம்
பவளம் பதித்தால் போலே
தார்ச நீயம் மேகம் பவளம் பூத்தால் போலே
மேனி மேகம் -ஸ்மிதம் -ஆழ்வாரை துடிப்பைக் கண்டு -அத்தாலே
பவளம் போல் கனி வாய் சிவப்பா
உன் அழகை நான் காண நீ வர வேண்டும்
அவன் கூத்து இருக்கிற படி –
வாராய் -வருகின்ற நடை அழகு -உலாவி மேனகை -வெள்கி மயங்கி –அடல் பாடல் –
வல்லார் ஆடுவது போலே
மாறி மாறி இடும் அடி இருக்குமே
பிள்ளை அழகிய மணவாள அரையர் -அபிநயம்
நம் பெருமாள் என்னுடைய நடை அழகைப் போலே ஈடாக ஆடிக் காண்
தம்பிரானே -என்னால் முடியுமா
கானகம் பாடி உலாவி -அங்கெ அவர்கள் விட்ட
அப்சரஸ் ஆடல் பாடல் தவிர்ந்து
ஸ்வா பாவிக நடை
சிஷா பலத்தால் உண்டான ஆடல் தவிர்ந்து
அடியேன் தேவர் முன் ஆட வல்லேனோ
வாதம் உள்ளார் கை கால் ஆடுவது போலே என்னுடைய நாட்டியம்
குறக்கு வந்தவன் கையால் கூழ் துழாவி –
பண்டை நாள் அம் கண் ஞாலம் பாசுரம்
மாரி மலை பாசுரம் இங்கே
ஆண்டாள் ஆழ்வார் அனோவம் ஒரே போலே

—————————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 26, 2014

திரு உடம்பு வருந்த ஒரு படியே திருக் கண் வளர்ந்து அருளாதே
அடியோமுக்காக
பிராட்டியும் நீயும் எழுந்தருள வேண்டும்
என்கிறார் –

————————————————————————————————————————————————————————–

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே

———————————————————————————————————————————–

கிடந்த நாள் கிடந்தாய் –
கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -23-என்று கிடை அழகை காண வேணும் என்று
ஆசைப் பட்டு இருப்பான் ஒருவனுக்காக
ஆசைப் பட்ட அன்று தொடங்கி கண் வளர்ந்து அருளினாய் –

எத்தனை காலம் கிடத்தி –
இனி ஒருவன் வந்து –
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு -திருச் சந்த விருத்தம் -61-
என்னும் அளவும் கிடக்கும் இத்தனை அன்றோ –
நதே ரூபம் நசாகாரோ நாயுதானி ந சாஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் தவம் பிரகாசசே -ஜிதந்தே -5-
எல்லா செயல்களும் பக்தர்களுக்காக என்ற இருக்கை தவிராது அன்றோ –

உன் திரு உடம்பு அசைய –
மிருது தன்மை உடைய திரு உடம்பு அசையும்படி -என்றது
விரும்புகிற வர்களையே பார்க்கும் இத்தனையோ
உன் தன்மையையும் பார்க்க வேண்டாவோ -என்றபடி –

தொடர்ந்து குற்றேவல் செய்து –
இந்நிலையில் செய்ய அடுப்பது இது
இந்நிலையில் செய்ய அடுப்பது இது -என்று உணர்த்தி
அந்தரங்கமான தொண்டுகளைச் செய்து -என்றது
பெருமாள் தமக்கு வேண்டிய கார்யங்களிலே நோக்கு இல்லாமலே இருந்த போதும்
இவ்வடிமையைக் கொண்டருள வேணும் என்று
அவ்வவ் காலம் தோறும்
என்னை நியமித்து அருள வேணும் என்று வடிம்பு இட்டு அடிமை செய்தாப் போலே
அந்தரங்கமான தொண்டுகளை செய்து -என்றபடி –
பரவாநச்மி காகுஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே
ஸ்வயந்துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -ஆரண்ய -15-7-

தொல் அடிமை –
ஆத்மாவுக்கு இயற்கையாகவே அமைந்த அடிமை ஆகையாலே
பழையதாய் போருகிற அடிமை
அகாரார்த்தா யைவ ஸ்வம் அஹம் அத மஹ்யம் ந நிவஹா
நராணாம் நித்யாநாம் அயநம் இதி நாராயண பதம்
யம் ஆஹ அஸ்மி காலம் சகலம் அபி சர்வத்ர சகலா ஸூ
அவஸ்தா ஸூ ஆவிஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய -அஷ்ட ஸ்லோகி –
எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளுளும்
தானாகவே உண்டாகும் கைங்கர்யங்கள் வெளிப்பட வேண்டும் -என்னக் கடவது அன்றோ –

வழி வரும் தொண்டரோர்கு அருளித் –
அடிமை முறை தப்பாமே போருகிற
வேறு கதி இல்லாத
எங்களுக்கு
திருவருள் செய்து –
இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது –
அது அன்று இங்குச் சொல்லுகிறது
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று
தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் –

தடம் கொள் தாமரைக் கண் விழித்து –
பொய்கையை கண் செறி இட்ட தாமரை போலே
இடமுடைத்தான திருக் கண்களாலே குளிர நோக்கி –
தாமரை -ஒருமையில் அருளியதற்கு வியாக்யானம்

நீ எழுந்து –
நீ எழுந்திருந்து –
சீரிய சிங்கம் அறிவுற்று -என்கிறபடியே
உணர்ந்து அருளும் போதை அலகு காண வேண்டும் —

உன் தாமரை மங்கையும் நீயும் –
பகவத் விஷயத்தில் முதலடி இடுவார் பிராட்டி புருஷகாரமாக பற்ற வேணும் -என்னுமதனாலே
பங்கயத்தாள் திருவருளும் -என்றார் மேல்
அடிமை செய்யும் இடத்திலும் இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்வதாக
சொல்லி போரும் அதனைப் பற்ற சொல்லுகிறார் இங்கு –

இடம்கொள் மூவுலகும்-
இடம் உடையவையான எல்லா உலகில் உள்ளவர்களும் –

தொழ இருந்தருளாய்-
வேறு பிரயோஜனத்தை கருதாதவர்களைப் போலே

முறையிலே தொழ
நீ இருக்கும் இருப்பை நான் கண்டு அனுபவிக்க வேண்டும் –

திருப் புளிங்குடி கிடந்தானே –
நீ சுலபனான பின்பு எல்லாம் செய்து அருள வேண்டும் -என்றது
விரும்பியனவற்றை எல்லாம் செய்து அருளக் கடவதானால்
அவற்றில் ஒரு சில செய்தால்
குறையும் செய்து தலைக் கட்ட வேண்டாவோ –
திருப் புளிங்குடி கிடந்தானே –இருந்தருளாய்
சாய்ந்து அருளின அழகு காட்டினாய்
இருந்து அருளின போதை அழகையும் காட்டி அருளாய்

திரு உடம்பு அசையாதே
அடியோமுக்காக
பிராட்டியும் –
இடம் கொள் மூ உலகம் தொழ இருந்து அருளாய்
கிடந்த நாள் கிடந்தாய்
கிடந்த -ஆசை பட்ட அன்று தொடங்கு
கிடந்தது வாறு எழுந்து இருந்து பேசு சொல்லும் வரை படுத்து இருப்பாயா
பக்தாநாம் -எல்லாம்
ந தேரூபம் ந ஆகாரம்
உன் திரு உடம்பு அசைய
அர்த்திகளையே பார்க்கும் இதுவோ
உன் திரு மேனி பார்க்க வேண்டாமோ
உன்னுடிய ஆர்த்தியும் தீர்க்க வேண்டாவோ
அந்தரங்க கைங்கர்யம்
பெருமாள் -மாம்வேத வடிம்பிட்டு அடிமை செய்ய வேண்டும்
கிரியதாம் இவ மாம்வாத
அந்தரங்க வருத்தி குற்றேவல்
தோல் அடிமை
ஆத்மாவுக்கு தாஸ்யம் ச்வரூஅ அந்தர்கதம்
ச்வதாந்த்ர்யம் வந்தேறி
நானும் உனக்கு பழ அடியேன்
தொல்லையான அடிமை இல்லை தொன்மையான
சஹஜம் கைங்கர்யம் சகா ஜாயதே சஹஜம் இம் மூன்று பாட்டிலும் தம்முடைய யோக்யதை சொல்லி கொண்ட
பெருமையாக குடி கிடந்தது ஆக்கம் தொடர்ந்து தொண்டன்
அஹங்காரம் இல்லை
வேறு ஒருவர் பார்ப்பது இல்லை அநந்ய கதித்வம்
தடம் கொள் தாமரை பொய்கை முழுவதும் நிறைந்த தாமரை
சீரிய சிங்கம் அறிவுற்று
உணர்ந்து அருளும் பொழுது
பங்கயத்தாள் திரு அருள் முனு மூர் கூற்று
அடிமை செய்யும் இடத்தில் இங்கு
தாமரை மங்கையும் நீயும் அடிமை பிற் கூற்று
சகலரும் தொழும்படி இருந்து அருளாய் –
வீற்று இருக்கும் இருப்பு
சர்வ சுலபன் திருப் புளிங்குடி கிடந்தது
அபேஷிதம் ஏக தேசம்
பாதி செய்தாய்
இதுவும் செய்து தலைக் கட்ட வேண்டாவோ
சாய்ந்த அருளின அழகை காட்டி
இருந்த அருளும் அழகை காட்டி அருளாய் -என்கிறார் –

————————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 25, 2014

எல்லார்க்கும் சுலபமான உன் திருவடிகளை
என் தலையிலே வைத்து அருள வேண்டும்
என்கிறார்

————————————————————————————————————————————————————————–

குடிக் கிடந்து ஆக்கம் செய்து
நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த
நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப் புளிங்குடிக் கிடந்தானே

——————————————————————————————————————————————————————————————————–

குடிக் கிடந்து –
குடிக்கு தகுதியாக ஒழுகி -என்றபடி
குல மரியாதை தப்பாதபடி ஒழுகுதலை தெரிவித்தபடி –
இஷ்வாகு குலத்தோரில்-தமையன் இருக்க தம்பிமாரில் முடி சூடி அறிவார் இலர் –
என்றான் அன்றோ ஸ்ரீ பரத ஆழ்வான்
–
ஆக்கம் செய்து –
குடியில் -பண்டு இல்லாத நன்மைகளை உண்டாக்கி –
பங்க திக் தஸ்து ஜடில பரத த்வரம் ப்ரதீஷதே
பாதுகே தே புரஸ் க்ருத்ய சர்வஜ்ஞ ச குசலம் க்ருஹெ-யுத்த -127-5-
பரதன் சடை முடியனாய் -அழுக்கு அடைந்த தேகத்தை உடையனாய்
உன் வரவை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறான்
உன் பாதுகைகளை முன்னிட்டுக் கொண்டு இராச்சிய பாரம் செய்து இருக்கிறான்
எல்லாரும் சௌக்யமாய் இருக்கிறார்கள் -என்றும்
ஜடிலம் சீர வசனம் ப்ராஜ்ஞ்ஞலிம் பதிதம் புவி
ததர்ச ராமோ துர்தர்சம் யுகாந்தே பாஸ்கரம் யதா -அயோத்யா -100-1-
ஜடைகளை அணிந்தவனும் -மரவுரி தரித்தவனும் கை கூப்பினவனும் பூமியில் விழுந்தவனும்
பார்க்க முடியாதவனுமான பரதனை ஸ்ரீ ராமன் எவ்வாறு யுகத்தின் முடிவில் சூர்யனை காண்பார்களோ
அவ்வாறு கண்டான் -என்றும்
நஹிதே ராஜபுத்ரம் தம் காஷாயம் பரதாரிணம்
பரிபோக்தம் வ்யவச்யந்தி பௌராவை தர்ம வத்சலம் -யுத்தம் -70-4-
நஹிதே ராஜபுத்ரம் தம்-
அருகே இருக்கச் செய்தேயும் -இவனை சூழ இருக்கிற நகர மக்கள் இவனை அனுபவிக்கையில் நசை அற்றார்கள் –
அதற்கு அடி என் என்னில் –
ராஜ புத்ரம் -பெருமாள் பேர நின்ற அநந்தரம் முடிந்தவன் மகன் அன்றோ –
இவனோ தான் நமக்காக இருக்கப் புகுகிறான் -என்று இருந்தார்கள் –
தர்ம வத்சலம் –
இதற்கும் அந்த சக்கரவர்த்தியோடு ஒப்பான் –
தர்மத்துக்காக தன்னை அழிய மாறினான் அன்றோ அவன் -என்றும் வருவன காண்

ஏபி ச சஸிவை ஸார்த்தம் சிரஸா யாஸிதோ மயா
பிராது சிஷ்யஷ்ய தாசஷ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹசி – அயோத்யா -101-12
ஏபி ச சஸிவை ஸார்த்தம்-
தான் ஒருவனே போக அமைந்து இருக்க
துன்பம் அற்ற பலரையும் கொண்டு போனான் –
அதற்கு அடி –
நாம் ஒருவனுமே அன்றிக்கே பலர் கண்ண நீரை கண்டால் மீளாரோ -என்னுமத்தனைப் பற்ற –
போர் செய்யப் போவாரைப் போலே யானை குதிரை அகப்பட திரட்டிக் கொடு போனான் ஆயிற்று
பிரிவில் ஆற்றாமைக்கு தன்னில் குறைந்தார் ஒருவரும் இலர் ஆயிற்று அங்குள்ள சேனைகளில் –
சிரஸா யாஸிதோ மயா-
நான் தலையால் இரந்த கார்யத்தையும் மறப்பரோ –
மாம் நிவர்த்தயிதும் ய அசௌ சித்ரகூடம் உபாகதா
சிரஸா யாசத தஸ்ய வசனம் ந க்ருதம் மயா -யுத்தம் -24-19-
தலையாலே வணங்கின அந்த பரத ஆழ்வான் உடைய வார்த்தை
என்னால் நிறைவேற்றப் படவில்லை -என்றார் அன்றோ பெருமாள் -என்றது –
அவனும் தனக்கு அடுக்கும்படி செய்தான் –
நாமும் நமக்கு அடுக்கும்படி செய்தோம் -என்றார் என்றபடி
அவன் தலையாலே இரந்த கார்யத்தை மறுத்துப் போந்தோம்
என்றே அன்றோ அவர் திரு உள்ளம் புண்பட்டது
பிராது –
உடன்பிறந்தவன் தன்னுடைய சரீரம் என்கிறபடியே
ஆச்சார்யோ ப்ரஹ்மனொ மூர்த்தி பிதா மூர்த்தி பிரஜாபதே
மாதா பிருதிவ்யா மூர்திஸ்து பிராத ஸ்வ மூர்த்தி ராத்மன -மனு தர்ம சாஸ்திரம் படி –
அவர் தம் திருமேனியாக அன்றோ என்னை நினைத்து இருப்பது
சிஷ்யஷ்ய தாசஷ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹசி –
இந்த பதங்களுக்கும் முன்பு போலே உரைத்துக் கொள்க
இப்படி இக்குடியில் இல்லாத ஏற்றங்களை செய்து -என்றது
மூத்தார் இருக்க இளையார் முடி சூடக் கடவர் அன்று என்று போந்த இத்தனை முன்பு
ஆற்றாமையும் கண்ணும் கண்ணநீருமாக
சடையும் புனைந்து
வற்கலையும் உடுத்து இருந்தார் இலர் அன்றோ -முன்பு இவனை ஒழிய

நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து –
தன்னுடைய இனிமையாலே மற்றைய பேறுகளிலே நசை அறுக்க வல்ல அடிமைகளில்
அந்தரங்கமான அடிமைகளை செய்து –

உன் பொன் அடிக் கடவாதே –
முன்பு பெரிய ஆற்றாமையோடு
ஸ்ரீ வசிஷ்ட பகவான் தொடக்கமானவரை புருஷகாரமாகக் கொண்டு
மீட்பதாக சென்றவன் –
ததா சிரஸி க்ருத்வா து பாதுகே பரத ததா
ஆருரோஹா ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்னேன சமன்வித -அயோத்யா -112-25
நாம் ஐயர்

சொன்ன கார்யத்தை செய்தோமாய் நிறம் பெறலாவது
நீர் பதினால் ஆண்டு இராச்சியத்திலே
இருக்கில் காணும் -என்ன

தன் ஆசையால் நிர்பந்திக்குமதுவும் இன்றிக்கே
அப்போது ஆனந்தம் அடைந்தவனாய்
சத்ருகன ஆழ்வானோடு கூடினவனாய் தேரில் ஏறினான் -என்கிறபடியே
உவகையையனாய் மீண்டான் அன்றோ –
அப்படியே –
உன்னுடைய ஆணையை மீறாமல் உன் திருவடிகளுக்கு தப்பாமல்
அன்றிக்கே –
உன்னுடைய விரும்பத் தக்கவான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல்
அதாவது வேறு பயன் ஒன்றையும் கருதாவராய் இருத்தல் -என்றபடி –

வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி-
அடிமை முறை தப்பாதே போருகிற-வேறு கதி இல்லாத எங்களுக்கு திருவருள் செய்து –

நீ யொருநாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே –
அங்கனம் திருவருள் புரியும் தன்மை ஒரு நாளிலேயாய்
பின்பு வற்றுமதோ –என்கிறார்
தடை இல்லாமல் இருப்பதற்கு மேற்பட ருசி வேண்டற் பாலதோ -என்பார் -படிக்கு -என்கிறார்

பூமியை விளாக்குலை கொள்ள -பரந்து –விஞ்ச வளரும் அதிலும் அரிது போலே காணும்
பூமிக்கு அளவாக திருவடிகளை -குசை தாங்கின அருமையும் -என்பார் -கடிவாளத்தை இழுத்துப் பிடித்து -என்பார் -படிக்கு அளவாக நிமிர்த்த -என்கிறார்
அன்றிக்கே
உனக்கு அரியது ஒன்றாய் நான் வருந்துகிறேனோ -என்னுதல் –

இத்தனை அன்றோ செய்ய வேண்டுவது என்கிறார் மேல் –
நின் பாத பங்கயம் –
ஒரு செவ்விப் பூவினைக் கொண்டு காணும் காடும் ஓடையும் அளந்து கொண்டது
ஏதேனுமாக கொள்ள நினைத்த கார்யத்துக்கு அளவாக்கும் இத்தனையாய் இருந்ததே அன்றோ
பூமிக்கு அளவாக்கின திருவடிகளை
என் தலைக்கு அளவாக்க லாகாதோ –
கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்று இருப்பார் தலைக்கு வைக்கலாகாதோ -என்றது
தேவரீருடைய -அப்போது அலர்ந்த -செவ்வித் தாமரை போன்ற
இரண்டு திருவடிகளும் என் தலையை எப்போது அலங்காரம் செய்யப் போகின்றன -என்கிறார் –
ஆக
குணா குணம் நிரூபணம் பண்ணாதே
எல்லார் தலைகளிலும் வைத்த திருவடிகளை
ஆசை உடைய என் தலையிலும் வைக்கலாகாதோ –
என்கிறார் என்றபடி –
கதா புன சங்க ராதாங்க கல்பக
த்விஜார விந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம்
மதிய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -ஸ்தோத்ர ரத்னம் -31-

கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே –
அந்த சீதை யானவள் ஸ்ரீ ராம நாமத்தை கேட்டதனால் துன்பம் நீங்கினவளாய்
ஸ்ரீ ராமனுடைய உண்மையில் ஐயத்தால் ஒரு துன்பத்தை உடையவளாய்
சரத் காலத்திலேயே மேகங்களால் மறைக்கப் பட்ட சந்தரன் உடைய

இரவினைப் போலே இருந்தாள்-என்கிறபடியே
சா ராம சங்கீர்த்தன வீத சோகா ராமஸ்ய
சோகேன சமான சோகா
ஸ்ரன்முகே சாம்புத சேஷ சந்த்ரா
நிசேவ வைதேக சுதா பபூவ -சுந்தர -36-17-
பெருமாள் உளரோ இலரோ என்ற ஐயத் தாலேயும் ஒரு சோகம் உண்டு
பிரிவு ஆற்றாமையாலே படுகிறதும் ஒரு சோகம் உண்டு பிராட்டிக்கு
அவற்றுள் திருவடியைக் கண்ட பின்பு ஓன்று தீர்ந்தது அன்றோ
அப்படியே
காவலோடு கூடியதாய்
சிரமத்தை போக்கக் கூடியதான தேசத்தில்
திருக் கண் வளரப் பெற்றதனால்
என் வருகிறதோ என்ற அச்சம் தீர்ந்து
இனி என்னை அங்கீ கரிக்கும் அதுவே குறை
அக்குறையும் தீர்த்து அருள வேண்டும் -என்கிறார்

சர்வ சுலபமான
பொது நின்ற பொன் அம கழல்
என் தலை மிசை வைத்து அருள
பாத பங்கயமே தலைக்கு அணியாய்
குடிக்கு ஈடாக வர்த்தித்து -குல மரியாதை தப்பாமல்
பரத ஆழ்வான் -போலே
மூத்தவன் இருக்க இளையவன் ஆள கூடாதே -இருந்தவர் –
தமையன் இருக்க தம்பி மார் முடி செய்யா
ஆக்கம் செய்து பண்டு இல்லா பெருமை கூட்டி –
குடிக்கிடந்து மேலும் ஆக்கம் செய்து
தானும் போகம் அனுபவிக்காமல்
பரத்வாஜர் –
ஜடிலம்-சீர வசனம் –
ஜடை முடி தரித்து மர உரி அணிந்து –
ந கிதே ராஜ புத்ரானாம் -தர்ம வத்சலம் –
தம் ராஜ புத்ரம் காஷாய அம்பரம்
ந பரிபோக்தம் -பௌவர் அனுபவிக்க முடியாமல்
உடமில் சேறாக இருக்க
கோவிந்தராஜர் யானைக்கும் அடி சறுக்கும் –
தெரியாமல் சேற்றில்
கண்ணா நீர் கைகளால் இறைக்கும்
அரங்கன் திரு முற்றம் சேறாகி
கண்ணா நீர் பங்கயமாய் துளாவி -ஆசார்ய ஹிருதயம்
பாதுகே -சர்வஞ்க்ன குசலம் க்ருஹ
பரதன் இப்படி இருக்க பெருமாள் கட்டாயம் வருவார் என்கிற நினைவால் மற்றவர் களித்து
அனுபவம் சக்தி இல்லாமல் கிட்டே வராமல்
தர்ம வத்சலம்
இதற்கும் சக்கரவர்த்தி உடன் ஒக்கும்
சித்ரா கூடம் அனைவரையும் கூட்டி
யாருக்காவது இரங்க
ஆர்த்தர் பலர் -தம்பி மட்டும் இல்லை
பிரிவாற்றாமையில் தம்மில் குறைந்தார் இல்லை
சிரசா யாசிதா மயா -தலையால் யாசித்தாலும் மறுப்பாரோ
ஆக்கம் செய்த நிலை கள் இவை
அவன் தனக்கு அடுக்கும் படி செய்தான்
நான் எனக்கு அடுக்கும் படி செய்தேன் வருத்தம் பெருமாள் வார்த்தை
தலையால் யாசித கார்யம் செய்யாமல் போன உள்ளம் வருத்தம்
பிராது -சகோதரன் இன்னும் ஒரு சரீரம் போலே
ஆசார்ய பர பிரஹ்மம் மூர்த்தி
பிதா பிரஜா பதி
மாதா பூமி தாயார் மூர்த்தி –
சேஷம் பூர்வ வத்
இப்படி இக்குடியில் இல்லாத ஏற்றம் செய்து
ஆற்றாமை கண்ணும் கண்ணீர் -முன்பு இவனை ஒழிய இல்லை இ றே-ஆக்கம் செய்து
நின் தீர்த்த அடிமை குற்றேவல் செய்து
அந்தரங்க
தீர்ந்த
உனக்கே அற்று தீர்ந்த அடிமை –
இதர புருஷார்த்தம் நசை தீர்த்த அடிமை
பொன் அடி கடவாதே –
திருவடிகளை மீறாதே
திரு உள்ளம் மீறாதே
அடிமை -பிரிந்தால் துனம் மட்டும் இல்லை
அவர் சொன்ன வார்த்தை தட்டாமல் பொன் அடி கடவாதே
ஐயர் செய்த கார்யம் நிறம் பெற 14 வருஷம் ராஜ்ஜியம் இருக்க வேண்டும்
ஆருரோக ரதம் ஹ்ருஷ்ட
பெருமாள் ஆசையை நிறைவேற்ற பெற்றோமே
ஆஞ்ஞை தப்பாதே
பொன் அடி கடவாதே -அடிமை முறை தப்பாமல் அநந்ய கதி
படிக்களவாக நிமிர்த்தபூமிக்கு சரியாக நிமிர்த்த
தலைக்கு அகியாக
குணாகுனாம் நிரூபணம் பண்ணாதே
ஆசை உடைய என் தலையிலும் வைக்க கூடாதோ
பூமி அளக்க ஆசை மிக்கு திருவடி வளர -அடக்கி வைத்தானாம்
படிக்கு அளவாக -ரசோக்தி
விஞ்ச வலருவதிலும் அடக்கி குசை தாங்கிய அருமை
எல்லாம் அறிய செயல்
நின் பாத பங்கயமே செவ்வி பூ காடும் மேடும்
தலைக்கு அணியாய் பூமிக்கு அளவாக்கி
தலைக்கு அளவாக
கோல மாம் என் சென்னிக்கு கமலம் அன்ன செவ்வி திருவடி
கதா புன –சரணாம் புஜ த்வயம் மதியம் மூர்த்தானம்
திருவடி இரண்டும் கேட்டார் ஆளவந்தார்
கொடி-
துக்கம் கொஞ்சம் குறைந்ததாம் இவருக்கு
சீதை பிராட்டி ராம சங்கீர்த்தனம் -சத்பாவத்தால் அதி சங்கை யால் ஒரு சோகம்
பிரிவாற்றாமையால் ஒரு சோகம்
வீத சோகம் ஒரு சோகம் போனது
ராமஸ்ய சமான சோகம் சீதைக்கு அடுத்த சதம்
இரண்டும் எப்படி முடியும்
ராம சந்கீர்தனத்தால் ஓன்று போக
நஜீவேயம் ஷணம் அபி -துக்கம் போனது -ராம சங்கீர்த்தனம் கேட்ட பின்பு
பிரிவாற்றாமை சோகம் தீர வில்லை
ஆழ்வார் -ஆயாசம் எம்பெருமானுக்கு -சோகம்
தன்னுடன் வார்த்தை சொல்ல வில்லை குளிர நோக்க வில்லை
சு ரஷிதமாய் கண் வளரப் பெற்றதால் ஒரு சோகம் தீர
விஷயீ கரிக்க வேண்டும் சோகம் தீர வில்லை –

————————————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 25, 2014

பண்டை நாள் -பிரவேசம் –

மேல் திருவாய் மொழியில் -அவனை ஒழிந்தார் அடங்கலும் -ஔபாதிக -ஒரு காரணம் பற்றி வந்த உறவினர்கள்
அவன் ஒருவனுமே -நிருபாதிக -ஒரு காரணமும் பற்றாமல் இயல்பாகவே அமைந்த உறவினன் -என்றார் –
ஒரு காரணம் பற்றாமல் அமைந்த உறவினன் ஆனால்
பின்னை உறவினருக்கு உரிய கார்யங்களைச்
செய்யாது இருக்க முடியாது அன்றோ –
ஆதலால் ஒரு காரணம் பற்றாமல் இயல்பாகவே அமைந்த
உறவினனான சர்வேஸ்வரன்
திருக் கண் வளர்ந்து அருளுகிற திருப் புளிங்குடியிலே
எல்லா வித கைங்கர்யங்களையும் பெற வேண்டும் என்று ஆசைப் பட்டு இவர் சென்று கிட்டினார் –
கிட்டின இடத்தில் -இவரை
என் -என்னுதல்
திருக் கண்களாலே குளிர நோக்குதல் –
ஒரு வார்த்தை சொல்லுதல்
செய்யக் கண்டிலர் –
காணாமையாலே மிகவும் துன்புற்றவர் ஆனார்
அத்துன்பம் அவன் உளனாக தீரும் அன்றோ –
அதற்கு மேலேயும் ஓன்று உண்டாயிற்று –
அது என் எனின் –

திருமேனி அலசும்படி பலகாலமாக ஒரே தன்மையாக திருக்கண் வளர்கின்றான் -என் வருகிறதோ
என்று ஒரு அச்சம் உண்டாயிற்று -திரு உடம்பு அசைய –எத்தனை காலம் கிடத்தி –
மேலே ஆரா அமுதே -என்கிற திருவாய் மொழியிலே
என் துன்பத்தை தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆனார் –
இங்கே -என் துன்பத்தினையும் தன் துன்பத்தினையும் தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆகிறார் –
ஆக –
கொடியார் மாடம் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே -என்று அதுவே தலை எடுத்து

அங்கும் இங்கும் -திருவாய் மொழியிலும் தன் துன்பங்களை தீர்க்காமை அருளிச் செய்தாரே –
அதனுடைய அனுபாஷனம் -இத் திருவாய் மொழி –அனுபாஷனம் –
பெரிய ஆற்றாமையோடு-மீண்டும் கூறுதல் –
பெரிய ஆற்றாமையோடு என்னுடைய துன்பம் எல்லாம் தீரும்படி
திருக் கண்களாலே நோக்கி அருள வேண்டும் -தாமரைக் கண்களால் நோக்காய் –
என் தலை மேலே திருவடிகளை வைத்து அருள வேண்டும் -பாத பங்கயமே தலைக்கு அணியாய் –
தேவரும் பிராட்டியாரும் கூட எழுந்து அருளி இருக்கும் இருப்பை எனக்கு காட்டி அருள வேணும் –
உன் தாமரை மங்கையும் நீயும் –
யத்ர கிருஷ்னௌ ச கிருஷ்ணச சத்யபாமாச பாமி நீ -பாரதம் -உத்தியோக பர்வம் –
எந்த இடத்தில் கிருஷ்ணனும் திரௌபதியும் அர்ஜுனனும்
கோபத் தன்மை உள்ள சத்ய பாமையும்
இருக்கிறார்களோ -என்று சொல்லுகிறபடி
அவ்விருப்பில் அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது -என்றது
இப்படி சஞ்சயன் வந்தான் என்று அறிவிக்க
நமக்கு நல்லான் ஒருவன்
உகவாதார்க்கும் இவ்விருப்பைப் போய்ச் சொல்லுவான் ஒருவன்
அனுகூலனான இவனுக்கு விழிநீர் அடைத்தோம் ஆகிறோம்
உகவாதார் மண் உண்ணும்படி கார்யம் பார்த்தோம் ஆகிறோம்
புகுர விடும் கோள்
என்று உள்ளே அழைப்பித்து காட்சி கொடுத்தான் -என்றபடி –
சஞ்சயன் பெற்ற பேற்றில் எனக்கு குறைய ஒண்ணாது –
நச அபிமன்யு நயமௌ தம் தேசம் துபிஜக்மது -பாரதம் உத்தியாக பர்வம்
அவர்கள் வீற்று இருந்த அந்த இடத்துக்கு அபிமன்யுவும் சென்றான் இல்லை
இரட்டையர்களான நகுல சகா தேவர்களும் போனார்கள் இல்லை -என்கிறபடியே-

தாயும் தமப்பனும் சேர இருந்த இடத்தில் குழந்தைகளுக்கு சென்று கிட்ட ஒண்ணாமை இல்லை அன்றோ –
அவர்களுக்கும் சென்று கிட்ட ஒண்ணாத படி ஆயிற்று எழுந்து அருளி இருக்கிற இருப்பு
அவ்விருப்பிலே அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது –
அப்படியே
தேவரும் பிராட்டிமாரும் எழுந்தருளி இருக்கும் இருப்பை எனக்குக் காட்ட வேண்டும் –
என்னைக் கண்ட காட்சியிலே வேறுபட்டவனாய் என் முன்னே
நாலடி உலாவி அருள வேண்டும் –
பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராய் –
அனுகூலரைக் கண்டால் பிறக்கும் புன்முறுவல் காண வேண்டும் -தவழ கதிர் முறுவல் செய்து
ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் -கூவுதல் வருதல் செய்யாய் –
என்று இங்கனே
தாமும் அவனும் அறிந்ததாக திருவாசலை திருக் காப்பு கொண்டு தனி இடத்திலே
தம்முடைய எண்ணங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து
இவற்றை இப்போதே பெற வேண்டும் என்று விரைகிறார்
இறைவனுக்கும் உயிர் கட்கும் உள்ள சம்பந்தத்தை அனுபவித்தார் மேல் திருவாய் மொழியில் –
சம்பந்தத்தின் பலத்தை ஆசைப்பட்டு விரும்புகிறார் இத் திருவாய் மொழியில் —

—————————————————————————————————————————————————————-

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே

————————————————————————————————————————————————————————

வேறு கதி இல்லாத
அடியோங்களைக் குறித்து
ஒரு வார்த்தை அருளிச் செய்து
விடாய் கெடும்படி குளிர நோக்கி அருள வேண்டும் -என்கிறார்-

பண்டை நாளாலே நின் திரு வருளும் –
பல நாள்களாக செய்து போந்த உன் திரு வருளையும் -என்றது
நீ நேற்று இன்று செய்து போந்த கிருஷியின் பலமோ -இது –
எதிர் சூழல் புக்கு பல நாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இந்த கைங்கர்யம் -என்றபடி –

நெடுநாள் கிருஷியை செய்து
பல வேளையில் கை விடவோ -என்கிறார்
பங்கயத்தாள் திருவருளும் -கொண்டு –
அவன் அருளுக்கு காரணமான பெரிய பிராட்டியார் திரு வருளையும் கொண்டு
அவனுடைய அருளின் ஸ்வா தந்த்ரியத்தை தவிர்க்கும் அருள் –
காதல் காரணமாக வந்த பாரதந்த்ரியமே அன்றோ ஸ்வா தந்த்ர்யத்தை தவிர்ப்பது -என்றது
அவன் அருளின் ஸ்வா தந்த்ர்யத்தின் வாசனையை தவிர்க்குமவன் அருளும்படியாக அன்றோ வந்தது –
ஆதலால் அவள் அருள் அவன் ஸ்வா தந்த்ர்யத்தை பின் செல்லாதபடி செய்யும் ஆயிற்று -என்றபடி
நன்று -அங்கனமாயின் –
அவனுடைய பாரதந்த்ர்யம் அவள் காதல் காரணமாக வந்தது அன்றோ –
அது நிலை நிற்குமோ –
ஸ்வா தந்த்ர்யமே அன்றோ அவனுக்கு இயற்க்கை –
அதற்கு நாம் அஞ்ச வேண்டாமோ-எனின் -அஞ்ச வேண்டா
அவள் அருகே நிற்க ஸ்வா தந்த்ர்யம் நிலை நிற்காது
ஆகையால் அன்றோ த்வயத்தில் முன் வாக்யத்தில் அவள் புருஷகாரமாக பற்றுகிறது
இனி
பண்டை நாளில் நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் -என்பதற்கு
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்னும் உன் திரு அருளையும் –
பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சின் ந அபராத்யதி -யுத்தம் -116-44 -என்று
குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் அவள் திருவருளையும் பெற்று -என்றலுமாம் –
அன்றிக்கே –
சதம் நிபபதிம் பூமௌ சரண்ய சரணாகதம்
வதார்ஹமாபி காகுஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
கொல்லத் தக்கவனாய் இருந்தும் பேரருளால் அந்த காகாசுரனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-

கிருபைக்கு பரதந்த்ரப் பட்டவனான உன்னுடைய திருவருளையும்
அந்த பரதந்த்ரத்துக்கு காரணமான அவள் திருவருளையும் பெற்று என்றலுமாம் –

நின் கோயில் சீய்த்துப் –
உகந்து அருளின நிலங்களிலே
அவனுக்கே உரிய திரு அலகு இடுதல் -முதலிய தொண்டுகளைச் செய்து
தம்தாமுடைய புண்ய விசெடத்தாலெ பகவானுடைய திருவருளைப் பெற்றவர்கள்
உகந்து அருளின நிலங்களைப் பேணா நிற்பார்கள்
ந கிஞ்சித் அபி குர்வாணா விஷ்ணோ ஆயதனே வசேத்
விஷண் வாலயே வசந் நித்யம் குர்யாத் தத்கர்ம சக்தித -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்றபடியே
ஒரு தொழிலையும் செய்யாதானாய் பகவான் எழுந்து அருளி இருக்கின்ற கோயில்களிலே வசிக்கக் கடவன் –
கோயில்களிலே வாசம் செய்து கொண்டு தினமும் தனது ஆற்றலுக்கு ஏற்பப் பகவானுக்கு பணிகளை செய்யக் கடவன் -என்கிறபடியே
ஒரு துரும்பையும் நறுக்கேன்-என்னுமவர்களையும்
அவன் உகந்து அருளின நிலத்தைப் பற்றிக் கிடக்க வேண்டும்
சரீர சம்பந்தம் அற்றால் பெற வேண்டும் என்று ஆசைப் படுகிற அடிமையை
இச் சரீரத்தோடு இருக்கும் போதே கிடைக்குமாகில் விடானே அன்றோ –
வயல் அணி அனந்தபுரம் கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே -10-2-7-என்றாரே அன்றோ –

பேற்றினை அடையவே பேற்றுக்கு தடைகளான உள்ளனவற்றை போக்கலாம் என்பதாயிற்று –
திருக்கண்ண மங்கை யாண்டான் -திருக் கண்ணமங்கை என்னும் திவ்ய தேசத்தில் ஒரு திரு மகிழ் மரம் அடியில் இருந்து
சருகை திரு அலகு இடா நிற்க
கூட வாசித்து நாஸ்திகனாய் இருப்பான் ஒருவன்
பகவான் உபாயம் -நாம் வேறு பயனைக் கருதாதவர்கள்
இப்போது செய்யும் இப்பணிக்கு பயன் என் என்ன –
திரு அலகு இட்ட இடத்தையும் இடாத இடத்தையும் காட்டி
இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாய்க்கு ஒரு பயன் இல்லை
என்று தோன்றி இருந்ததோ -என்றான் –

பல்படிகால் –
இது தான் இன்று தொடங்கி வந்தது ஒன்றோ –
நீ திருவருள் செய்யப் புக்க அன்று தொடங்கி வந்தது அன்றோ –
குடி குடி-
உற்றார் உறவினர்களோடு –

வழி வந்து –
சாஸ்த்ரங்களில் சொல்லுகிற முறை தப்பாதபடி வந்து –

ஆள் செய்யும் தொண்டரோர்க்கு அருளிச் –
அடிமை செய்கிற அடியோங்கள் பக்கல் திருவருள் செய்து –

சோதி வாய் திறந்து –
பூ அலருமா போலே ஆயிற்று
திருவாய் திறந்து வார்த்தை அருளிச் செய்யும் போது
திரு முகத்தில் பிறக்கும் செவ்வி -என்னைப் பார்த்து
அக்ரூரனே -என்று அருளிச் செய்வர் –
ய அநந்த ப்ருதிவீம் தத்தே சேகர ஸ்திதி சமஸ்திதாம்
ச அவதீர்ண ஜகத்யர்த்தே மாம் அக்ரூர இதி வஷ்யதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-12-என்கிறபடியே
வார்த்தை அளவிலே ஆயிற்று அக்ரூரன் அனுபவித்தது
அந்தக் காலத்தில் திருமுகச் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறது இவர்க்கு –
–

உன் தாமரைக் கண்களால் நோக்காய் –
வார்த்தையிலே தோற்றாத அன்பும்
நோக்கிலே அனுபவிக்கும்படி குளிர நோக்கி அருளவேண்டும் -என்றது
வார்த்தை அருளிச் செய்யப் புக்கு விக்கினால்
குறையும் திருக் கண்களால் தலைக் கட்டி அருள வேண்டும் -என்றபடி
அழியாதவனே -மறுபடியும் காட்சி தருதலால் என்னைக் காப்பாற்றி அருள வேண்டும் –
தேவ பிரபன்னார்த்தி ஹர பிரசாதம் குரு கேசவ
அவலோகேன தானேன பூயோ மாம் பாலய அவ்யய – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-19
இது பிரகலாதன் கூற்று -போலே

பிள்ளை தேவப் பெருமாள் அரையர்
உன் தாமரைக் கண்களால் நோக்காய் நோக்காய் -என்று பல காலும் சொல்ல
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் -எழுந்து இருந்து
பிள்ளாய் நீ இங்கனே எம்பெருமான் திரு உள்ளம் புண்படும்படி பலகாலும்
நிர்பந்திக்கிறது -என் –
அழகிய மிடற்றை தந்தானாகில்-
நல்ல பாட்டை தந்தாராகில் –
பிள்ளையும் செல்வத்தையும் தந்தாராகில் –
என் செய்யாதாராக நீ இங்கனே கிடந்தது படுகிறது –
என்று அருளிச் செய்தாராம் –

தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே –
திருமேனியில் மிருதுத் தன்மைக்கு தகுதியான தண்ணீர் நிறைந்து இருக்கிற
திருப் புளிங்குடியிலே கண் வளர்ந்து அருளப் பெற்றது –
தெளிந்த அலைகளை உடைய திருப் பொருநல் உடன் சேர்ந்து
அழகிய நீர் நிலம் சூழ்ந்த
திருப் புளிங்குடியிலே திருக் கண் வளர்கின்றமை உண்டு
இது செய்த அம்சம் –
உன் தாமரைக் கண்களால் நோக்காய்
செய்த அம்சத்துக்கு நன்றி உள்ளவனாகவும் செய்ய வேண்டும்
அமிசத்துக்கு பிரார்த்திக்கவும் வேண்டும் அன்றோ அதிகாரிக்கு –

சர்வ வித பந்து அவனே -கண்ணன் அல்லால் வேறு சரண் இல்லை –பற்ற உபதேசித்தார்
ஆடாமல் அசையாமல் அர்ச்சையில் கண் வளர்ந்து இருக்க கண்டார் –
கைங்கர்யம் செய்ய பாரிக்கிறார் -இதில்

நிருபாதிக பந்து சர்வேஸ்வரன் ஒருவனே
திருப் புளிங்குடி எம்பெருமான் -பந்து பரிபாலனம் ஆசை பட்டு –
பந்து க்ருத்யம் –அவன் செய்யாமல் கிடக்க
இவரும் பந்து க்ருத்யம் -கைங்கர்யம்
பரிமாற்றம் ஆசைப்பட்டு கிட்டினார்
என் எண்ணுதல்
திருக் கண்ணால் குளிர நோக்குதல்
அவசன்னாதம் துக்கம் -உளன் என்றால் தீரும் –
குறை இல்லாமல் இருக்க
அதுக்கு மேலும் ஆசை
திருமேனி நொவும்படி -அசையாமல் சயனிக்க –
பயம் -ஓட
ஆரா அமுது என் ஆர்த்தி தீர்க்க வில்லை -இன்னாதார் ஆனார்
அந்த திருவாய் மொழியிலும்-இது போலே
இங்கு என் ஆர்த்தியும் தன ஆர்த்தியும் தீர்க்காமல் இருக்க –
அவனுக்கும் துக்கம் தீராமல் சயனம் இங்கு –
கொடியார் -கோளூர் அகத்தும் புளின்குடியும் -மடியாது -அங்கும் இங்கும் திருவாய் மொழியிலே வந்ததே
-அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ
படியால் உலகம் அளந்த -அதுவே இங்கும் தொடர
பெரிய ஆற்றாமை -உடன்
கண்களால் குளிர நோக்க வேண்டும்
சேர்த்தி அழகைக் காட்டி அருள வேண்டும்

விண்ணப்பம் செய்து –
தாமரை கண்களால் நோக்காய்
அடிச்சியோம் தலை மிசைக்கு அணியாய் நின் பாத பங்கயம் –
நீயும் தாமரை கண்ணாளும்
மேலும் சஞ்சயன் பெற்ற பேற்றில் எனக்கு குறைய ஒண்ணாது
அர்ஜுனன் -கிரிஷ்னௌ ச -கிருஷ்ணா தரௌபதி சத்யபாமினி நால்வரும் ஒரே படுக்கை இருப்பில் காட்சி கொடுத்து
சஞ்சயன் -வந்தான் அறிவிக்க
நல்லான் ஒருவன் -உகவாதாருக்கு இவ் இருப்பை சொல்லுவான் ஒருவன்
யத்ர யோகேஸ்வர விஜயோ பவ
அனுகூலர் -விளை நீர அடிக்கக் கூடாதே
உகவாதார் மண் உண்ணும் படி கார்யம் -செவிக்கட்டும்
நச அபிமன்யு ந யமௌ -அபிமன்யுவும் யமனும் உள்ளே புக முடியாமல் –
பிரஜைகள் -கூட புக முடியாத இடம் தாயும் தமப்பனும் -ஏகாந்தமாக இருக்கும் -இருப்பு
அது போலே எனக்கும் காட்டிக் கொடுக்க வேண்டும்
என்னை கட காட்சியில் விக்ருதனாய்
என் முன்னே நால் அடி உலாவி
ஸ்மிதம்
வார்த்தை அருள வேணும்
ஏகாந்தமாக விண்ணப்பம் மனோ ரதம்
இப்பொழுதே பெற துடிக்கிறார்
பிராப்தி நிருபாதிக உறவு அனுசந்தித்தார் கீழே
இதில் பிராப்தி பலம் ஆசைப் பட்டு அபேஷிக்கிறார்-
அநந்ய கதிகள் -தொண்டர ரோ ம் -வார்த்தை அருள –
திருப்பவளம் திறந்து
சோதி வாய் திறந்து
உன் தாமரைக் கண்களால் நோக்காய் –
பண்டை நாளாலே நின் திரு அருளால் பங்கயத்தாள் திரு அருள்
இத்தால் குடி குடியாக அடிமை செய்கிறோம்
கிரிஷி -எதிர் சூழல் -புக்கு நெடு நாள் பண்ணின கிலேசம் பலன்
எனைத்தோர் பிறப்பும் பல நாள்-சிருஷ்டி தொடங்கி
யாரோ ஒருவனுக்கு யாரோ ஒரு நாள் -கொஞ்சம்
பண்டை நாளால் –
இன்று நேற்று செய்து போன கிருஷி இல்லை
பல வேளையிலே கை விடவோ –
பன்கய்யத்தால் திரு அருள் -அதுக்கும் இதுவே காரணம்
புரு பங்கா பிரமாணம்
அருளின் ச்வாதந்த்ர்யம் தவிர்க்கும் அருள் –
வடி கட்டி –
கிருஐ பிரவகிக்கும் பொழுது ச்வாதந்த்ர்யம் தவிர்க்கும்
நின் திருவருள் -சவா தந்த்ர்யம் கலந்த
பிரனயத்தால் வந்த பாரதந்த்ர்யம் கொண்டு
அபிமத விஷயம்
என் அடியார் அது செய்யார் -உன் கடாஷம்
ந கச்சின் ந அபராதி அவன் கடாஷம்
கொண்டு கைங்கர்யம்
கிருபா பரியபாலயது -கிருபா பார தந்த்ர்யம் காரணம் அவள்
ச்வாதந்த்ர்யம் கந்தம் தவிர்க்கும் லவ லேசம் -கந்தம்
அவள் அருள் –
அவன் பார தந்த்ர்யம் நிலை நிற்கும் –
அவள் சொன்ன படி கேட்பாம் பிரணயித்வம் -நடுவில் வந்து சேர்ந்ததால் போகுமோ அஞ்ச வேண்டாம்
அஞ்ச வேண்டாம்
அருகில் இருக்க ஸ்வா தந்த்ர்யம் ஜீவியாது
நித்ய யோகம் மது பிரத்யாயம்
இறையும் அகலகில்லேன் –
இவள் அருகில் இருக்க அது தலை எடுக்காதே –
புருஷகாரம் த்வயம் முன் கூற்றால் பற்ற வேண்டும் த்வயம்
ச்வாதந்த்ர்யம் தலை சாய்ந்தால் நாராயண குணங்கள் தலை எடுக்கும்

கோயில் சீய்த்து
கடைத்தலை சீய்க்க்கப் பெற்றால் கடு வினை தீர்க்கலாமே –
கைங்கர்யம்
உகந்து அருளின நிலங்கள் –
திவ்ய தேசம் -வியாக்யானம் -உகந்து அருளின நிலங்கள்
எமேருமான் உகந்து எழுந்து அருள
ஆழ்வார்கள் உகந்து அருளின நிலங்கள்
மாலை தீம் அர்ச்சை அசாதாரண பரிச்சையை
தம் தாம் கிரகம் பேணுவார் தம்மால் அவனை பெற்றால் –
கடாஷம் இருந்தால் திவ்ய தேசம் கைங்கர்யம் கிட்டும் –
குளம் கட்டி அழுதான் கோயில் கட்டு அழுதான் -வார்த்தை பாட்டு
வில்லி புத்தூர் பகவன் வார்த்தை
வர்ண தரமி அஸ்மாகம் தாச விருத்தி
பிராட்டி புருஷகாரமாக அவன் திரு அருள் செய்தால் திவ்ய தேசம் கைங்கர்யம் கிட்டும்
கிஞ்சித்தும் செய்யாமல் துரும்பு நறுக்க மாட்டேன் -சாஸ்திரம் விஷ்ணு இருக்கும் தேசம் வாசி சாஸ்திரம் விதிக்க
சரீரத்துடன் இந்த கைங்கர்யம் கிடைத்தால் விடானே
அனுஷ்டானம் செய்து சம்சாரம் போக்கி நித்ய கைங்கர்யம் செய்ய
கைங்கர்யம் சாதனம் இல்லை பலன் தான்
பலன் கிட்டிய பின்பு சாதனம் எதுக்கு
வர்ண ஆஸ்ரமம் பிரதானம் கொண்டு கைங்கர்யம் விட கூடாதே
பிராப்யம் லாபிக்க -கடைத்தலை சீயக்க பெற்றால்
கடு வினை போகுமே
திருக் கண்ண மங்கை ஆண்டாள் சு வியாபாரத்தை விட்டான்
waliking நாயை கேட்டேன் –
நாய் சொந்தக் காரன் -எம்பெருமான் பற்றினால் என்ன தான் செய்ய மாட்டான்
துரும்பு நறுக்க பிராப்தி இல்லை
மகிழ மரம் அடியில் திரு அலகு இட -பிரயோஜனம்
அழகிடாத இடம் அலகு இட்ட இடம் பார்த்து -அதுவே பலம்
சருகை திரு அலகு இடா நிற்க கூட வாசித்த நாஸ்திகன் பகவான் உபாயம் -நாம் அநந்ய பிரயொஜனர் இந்த கிலேசம் பலன் என்ன கேட்க –
ஆண்டான் என்றான் -ஆழ்வான் பணித்தான் –
சுத்தப் படுத்துவது -சாதனம் இல்லை –
கைங்கர்யம் பலன் தான்
காம்யார்த்த அனுஷ்டானம் கூடாது
ஆயுஷ் ஹோமம் கூட செய்ய மாட்டார்கள் –
கைங்கர்யம் செய்ய குழந்தை தீர்க்க ஆயுஸ்
புத்திர காமோஷ்டி -எம்பெருமானார் பிறக்க -பண்ணும் நோக்கம் கொண்டே பலன் –
எதனால் செய்தான் என்பதே -காரணம் –
பல்படிகால் -கடாஷிக்க புக்க அன்று
குடி குடி குடும்பமாக
வழி வந்து சாஸ்திரம்
அனுக்ரகம் பண்ண
எந்தை -வழி வழி ஆட செய்கின்றோம் -தற் பெருமை இல்லை –
அநந்ய கதி என்பதால் சொல்லுகிறார்
அருளி சோதி வாய் திறந்து பூ அலறுமா போலே
செவ்வி
மாம் அக்ரூரர் -வார்த்தை அளவில் பாரித்து போனார்
ஆர்த்தி சொல்லும் பொழுது முகம் மலர்ச்சி
நோக்கிலே அனுபவிக்கும் படி
வார்த்தையால் சொல்ல முடியாததை கண்ணாலே காட்டி அருள
அவலோகன தானேன-பிரகலாதன் போலே
வார்த்தை அருள விக்கினாலும் கண்களால் தலைக் கட்டி
பிள்ளை தேவ பெருமாள் அரையர் நோக்காய் நோக்காய் பல காலும் சொல்ல
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் தகப்பனார் -பிள்ளாய்
திரு உள்ளம் புண் படும்படி
அழகிய மிடற்றை தந்தார் ஆகில்
பாட்டை தந்து அருளி -திவ்ய பிரபந்தம் -சந்தை ஆன பின்பு
பிள்ளைகளையும் ஐஸ்வர்யம் தந்தார் ஆகில்
என் செய்யாதாக நோக்காய் நோக்காய் சொல்லி
கைங்கர்யம் தான் பிரதானம் –
ஸ்ரீ ஸ்துதி தாயார் புன் சிரிப்பு -தேசிகன்
மாதா தேவி வாசுதேவன் பிதா
ஏக லஷ்யம் தயா பூதன் அஹம்
கைங்கர்யம் செய்ய ஆச்சார்யர் அருளி வைக்க
இன்னும் என்ன கொடுக்க வேண்டும் என்று புன் சிரிப்பு -செய்கிறாள் -அழகிய ஸ்லோகம்
திருமேனி சௌகுமார்யம் ஏற்க -ஜல சம்ருத்தி உடைய திண் புனல்
தெளிந்த நீர்
அருகில் இருக்க -கிருதஞஞன் செய்த அம்சம் -பள்ளிக் கட்டின் கீழே
செய்ய வேண்டிய அம்சம் -நோக்காய் -செங்கன் சிறு சிறிதே -போலே

————————————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-1-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 24, 2014

நிகமத்தில் –
அற நெறியை விட்டு விலகாததாய் இருக்கிற நம் இருவருவருடைய எவன் படிக்கிறானோ
அவனால் ஞானமான வேள்வியால் நான் ஆராதிக்கப் பட்டவன் ஆகிறேன் -என்வது என் எண்ணம் –
அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் சம்வாதம் ஆவயோ
ஜ்ஞான யஜ்ஞ்ஞென தேன அஹம் இஷ்டா ச்யாம் இதி மே மதி -ஸ்ரீ கீதை -16-70-
என்று அவன் அருளிச் செய்தாப் போலே
இத் திருவாய் மொழியை கற்பவர்கள் எனக்கு பிரியத்தை செய்கின்றவர்கள் ஆவார்கள்
என்கிறார் –

———————————————————————————————————————————————————————————–

ஆதும் இல்லை மற்று அவனில்
என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச்
சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை
ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை
ஆளுடையார்கள் பண்டே-

———————————————————————————————————————————————————————————

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து –
அவனை ஒழிய வேறு அடையப் படும் பொருளும்
அடைதற்கு உரிய வழியும் -இல்லை -என்று துணிந்து –

இவர்க்கு இப்படி இந்த துணிவைக் கடுத்தார் ஆர் -எனின்
வேறு ஒருவர் உளரோ –
அவனுடைய தோலும் தோள் மாலையும் அன்றோ –என்கிறார் மேல் –

தாது சேர் தோள் கண்ணனை –
அவனுடைய பெரு வனப்பு ஆயிற்று -இவரை இப்படி துணியப் பண்ணிற்று –

தீதிலாத-
தீது இல்லாமையாவது
பகவானுடைய சம்பந்தம் இல்லாத சரிதங்கள் இதில் கூறப் படாமல் இருத்தல் –

ஒண் தமிழ்கள் –
ஒண்மையாவது-உள் உண்டான அர்த்த விசேஷங்கள் எல்லாம்
வெளிட்டு கொடுக்க வற்றாய் இருக்கை –
அன்றிக்கே –
குற்றம் இல்லாதவையாய் -பல குணங்களை உடைத்தாய் -இருத்தல் என்றுமாம் –
அகில ஹேய பிரத்யநீக கல்யாண குணங்கள் நிறைந்தவன் போலே –

குருகூர்ச் சடகோபன் சொன்ன இவை ஆயிரத்துள் இப்பத்தும் ஓத வல்ல பிராக்கள்–

இப்பதத்தினை கற்க வல்ல உபகாரகர் –
இவ் உலக வாழ்க்கையின் தண்மையையும்-
சர்வேஸ்வரன் உடைய பிராப்ய பிராபகங்களின் உடைய தன்மையையும் – அன்றோ
இத் திருவாய் மொழியில் சொல்லப் பட்டன –
இதனைக் கற்கவே -தீய வழியைத் தவிர்ந்து -நல வலி போகத் தொடங்குவார்கள் –
இதற்கு மேற்பட இவர்கள் இவருக்கு செய்யும் உபகாரம் இல்லை அன்றோ –

நம்மை ஆளுடையார்கள் பண்டே –
ஒரு பிறவியிலே இதனைக் கற்கைக்கு தகுதியான அதிகாரத்தை
உடையராய் இருப்பார்கள் ஆகில்
அவர்கள் பண்டே நமக்கு தலைவர் –
அத்யேஷ்யதே -எவன் படிப்பானோ -அவன் என்கிறபடியே
இதனைக் கற்பதற்கு தகுதியான தன்மை உள்ளவர்
பிறவி தொடக்கி நமக்கு தலைவர் –
படிக்கிறவன் -நிகல் காலத்தில் சொல்லாமல்
படிப்பவன் -எதிர் காலத்தில் சொன்னது போலே –
படிக்க தகுதி யானவர்கள் -என்கிற பொருளில்
இங்கும் ஓத வல்ல பிராக்கள் -ஓதுவதற்கு தகுதி உள்ளவர்கள் -என்று அருளிச் செய்கிறார்-

நிகமத்தில்
இந்த
அத்யேஷ்யதே யதா கீதா அப்யசித்தால் தனக்கு பிரியம்
சம்யோகம் -இஷ்டம் ஆகி என்னை அடைகிறான்
ஆழ்வார் அப்படியே நிகமத்தில்
ஓத வல்ல
நம்மை ஆளுடைய
பிராப்ய பிராபகங்கள் இல்லை
தோளும் தோள் மாலையும்
சௌந்த்ர்யம் இவற்றை இப்படி விச்வசிக்க
தீது கதாந்தர
அசத் கீர்த்தனம் -பூசல் பட்டோலை
திருமால் அவன் கவி பூர்த்தி இதில்
தீத்லா -குற்றம் இல்லாமை
ஒண் தமிழ் குணங்கள் மிக்க
பத்தை அதிகரிக்க வல்ல
பிராக்கள்
சம்சாரம் தாழ்ந்து
ஈஸ்வரன் அடைவார்
இதுக்கு மேல் பட்ட உபகாரம் ஆழ்வாருக்கு இல்லை
பண்டே ஆள் ஆவார்கள்
ஒரு ஜன்மத்தில் செய்தாலும் பண்டே நாத பூதர்

————————————————————————————————————————————————————————–

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரை விட்டுத் -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்கும் இதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு

சாரம் -பாசுரம் -மா முனிகள்
கூறும் உற்றார்
கன்மத்தால் அண்டினவர்
விட்டு
தொண்டர் உடன் சேரும் திருமாலை சேரும்
ஹிதம் பார்க்கும் ஆழ்வார் அடியே துணை

————————————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-1-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 24, 2014

தானே புகலிடம் -என்னும் உண்மையை
நிலை நிறுத்துவதற்காக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன்
திருவடிகளைப் பற்றுமினோ –
என்கிறார்

————————————————————————————————————————————

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே
வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல்
அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும்
அவன் அன்றி மற்று இல்லையே

————————————————————————————————————————————-

கண்ணன் அல்லால்-சரண் – இல்லை கண்டீர்
கிருஷ்ணன் ஒழிய புகலிடம் ஆவார் வேறு இலர்

அது நிற்க –
இந்த உண்மை பொருள் நிலை நிற்கைக்காகவும் –

மண்ணின் பாரம் நீக்குதற்கே –
அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்குகைக்காகவும் –

-வந்து-வடமதுரைப் பிறந்தான் –
வடமதுரையில் திரு வவதாரம் செய்தான் –

நும் உடைமை உண்டேல் –
ஆனபின்பு
நீங்களும்
உங்கள் உடைமை என நினைத்தன உண்டாகில் –
உண்டேல் -என்றது
தம் நினைவால் இல்லை
அவர்கள் உடைய அன்யதா ஞானத்தால் உண்டான நினைவால் வந்தன உண்டாகில் -என்றபடி –

அவன் அடி -திண்ண மா -சேர்த்து உய்ம்மினோ –
அவன் திருவடிகளில்
அடிமை என்ற நினைவோடு
கடுக
திண்ணமாக
சேர்ந்து கொள்ளுங்கோள் –

எண்ண வேண்டா –
இது தான் அவனதோ நம்மதோ விசாரிக்க வேண்டா –

நும்மது ஆதும் அவன் –
உங்களோடு
உங்கள் உடைமையோடு வாசி அற
அவனுக்கே உரிமை –

அன்றி மற்று இல்லையே
வேறு இல்லை
அன்றிக்கே
ஈற்று அடிக்கு
உங்களுடைய பாரத்தில் நீங்கள் செய்ய வேண்டுமவை அனைத்தும்
உங்கள்தலையில் கிடக்கின்றன அல்ல –
எல்லாம் அவன் பக்கலிலே கிடக்கின்றன
என்று பொருள் கூறுதலும் உண்டு
பலன் கிடைப்பதற்க்கு தகுந்த சாதனங்களும் அவனை ஒழிய இல்லை ஆதலின்
மற்று இல்லை -என்கிறார்
சமிதி பாதி சாவித்திரி பாதி யாக நீங்களும் ஒரு தலை
கூட்டுப் பட வேண்டுவது இல்லை
என்பதனை உணர்த்துதலின் –
இல்லையே -என்பதன் கண் ஏ காரம்
பிரி நிலையின் கண் வந்தது –

சரணம் என்னும் அர்த்தம்
காட்டிய திருவடிகள்
அவன் அடி சேர்ந்து உய்மினோ
கண்ணன் அல்லால் -நிலைத்து நிற்க
தானே மாம் -காட்டி அருளி
அது நிற்க வந்து பிறந்தான்
உடைமை அவன் அடி சேர்த்து உய்ய வேண்டும்
அவனை தவிர வேறு இல்லை
இந்த அர்த்தம் நிலை நிற்க ஸ்தாபிக்க
உறுப்பாக மண்ணின் பாரம் பூ பாரம் நிரசனம்
உடைமை உண்டேல் -உண்டு என்று நினைத்து இருப்பீர்கள் ஆகில்
ததிபாண்டன் கூட பாண்டம் அவனது நினைத்தானே
உண்டேல் ஆழ்வார் நினைவால் இல்லை
அந்யதா ஜ்ஞாநத்தால் பிரதிபத்தி
என்ன வேண்டாம்
உம்மது யாதும் இல்லை
யானே நீ என் உடைமையும் நீயே
உங்கள் பரத்தில் ஒன்றும் இல்லை
எல்லாம் அவன் பக்கல்
மற்று இல்லை
சமித் பாதி சாவித்திரி பாதி இல்லை
அவனே ரஷகன்
மந்த்ராதாயெ
அவன் அடி சேர்த்து
நிதான பாசுரம் இது –

————————————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-