திரு உடம்பு வருந்த ஒரு படியே திருக் கண் வளர்ந்து அருளாதே
அடியோமுக்காக
பிராட்டியும் நீயும் எழுந்தருள வேண்டும்
என்கிறார் –
————————————————————————————————————————————————————————–
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே
———————————————————————————————————————————–
கிடந்த நாள் கிடந்தாய் –
கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -23-என்று கிடை அழகை காண வேணும் என்று
ஆசைப் பட்டு இருப்பான் ஒருவனுக்காக
ஆசைப் பட்ட அன்று தொடங்கி கண் வளர்ந்து அருளினாய் –
எத்தனை காலம் கிடத்தி –
இனி ஒருவன் வந்து –
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு -திருச் சந்த விருத்தம் -61-
என்னும் அளவும் கிடக்கும் இத்தனை அன்றோ –
நதே ரூபம் நசாகாரோ நாயுதானி ந சாஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் தவம் பிரகாசசே -ஜிதந்தே -5-
எல்லா செயல்களும் பக்தர்களுக்காக என்ற இருக்கை தவிராது அன்றோ –
உன் திரு உடம்பு அசைய –
மிருது தன்மை உடைய திரு உடம்பு அசையும்படி -என்றது
விரும்புகிற வர்களையே பார்க்கும் இத்தனையோ
உன் தன்மையையும் பார்க்க வேண்டாவோ -என்றபடி –
தொடர்ந்து குற்றேவல் செய்து –
இந்நிலையில் செய்ய அடுப்பது இது
இந்நிலையில் செய்ய அடுப்பது இது -என்று உணர்த்தி
அந்தரங்கமான தொண்டுகளைச் செய்து -என்றது
பெருமாள் தமக்கு வேண்டிய கார்யங்களிலே நோக்கு இல்லாமலே இருந்த போதும்
இவ்வடிமையைக் கொண்டருள வேணும் என்று
அவ்வவ் காலம் தோறும்
என்னை நியமித்து அருள வேணும் என்று வடிம்பு இட்டு அடிமை செய்தாப் போலே
அந்தரங்கமான தொண்டுகளை செய்து -என்றபடி –
பரவாநச்மி காகுஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே
ஸ்வயந்துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -ஆரண்ய -15-7-
தொல் அடிமை –
ஆத்மாவுக்கு இயற்கையாகவே அமைந்த அடிமை ஆகையாலே
பழையதாய் போருகிற அடிமை
அகாரார்த்தா யைவ ஸ்வம் அஹம் அத மஹ்யம் ந நிவஹா
நராணாம் நித்யாநாம் அயநம் இதி நாராயண பதம்
யம் ஆஹ அஸ்மி காலம் சகலம் அபி சர்வத்ர சகலா ஸூ
அவஸ்தா ஸூ ஆவிஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய -அஷ்ட ஸ்லோகி –
எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளுளும்
தானாகவே உண்டாகும் கைங்கர்யங்கள் வெளிப்பட வேண்டும் -என்னக் கடவது அன்றோ –
வழி வரும் தொண்டரோர்கு அருளித் –
அடிமை முறை தப்பாமே போருகிற
வேறு கதி இல்லாத
எங்களுக்கு
திருவருள் செய்து –
இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது –
அது அன்று இங்குச் சொல்லுகிறது
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று
தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் –
தடம் கொள் தாமரைக் கண் விழித்து –
பொய்கையை கண் செறி இட்ட தாமரை போலே
இடமுடைத்தான திருக் கண்களாலே குளிர நோக்கி –
தாமரை -ஒருமையில் அருளியதற்கு வியாக்யானம்
நீ எழுந்து –
நீ எழுந்திருந்து –
சீரிய சிங்கம் அறிவுற்று -என்கிறபடியே
உணர்ந்து அருளும் போதை அலகு காண வேண்டும் —
உன் தாமரை மங்கையும் நீயும் –
பகவத் விஷயத்தில் முதலடி இடுவார் பிராட்டி புருஷகாரமாக பற்ற வேணும் -என்னுமதனாலே
பங்கயத்தாள் திருவருளும் -என்றார் மேல்
அடிமை செய்யும் இடத்திலும் இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்வதாக
சொல்லி போரும் அதனைப் பற்ற சொல்லுகிறார் இங்கு –
இடம்கொள் மூவுலகும்-
இடம் உடையவையான எல்லா உலகில் உள்ளவர்களும் –
தொழ இருந்தருளாய்-
வேறு பிரயோஜனத்தை கருதாதவர்களைப் போலே
முறையிலே தொழ
நீ இருக்கும் இருப்பை நான் கண்டு அனுபவிக்க வேண்டும் –
திருப் புளிங்குடி கிடந்தானே –
நீ சுலபனான பின்பு எல்லாம் செய்து அருள வேண்டும் -என்றது
விரும்பியனவற்றை எல்லாம் செய்து அருளக் கடவதானால்
அவற்றில் ஒரு சில செய்தால்
குறையும் செய்து தலைக் கட்ட வேண்டாவோ –
திருப் புளிங்குடி கிடந்தானே –இருந்தருளாய்
சாய்ந்து அருளின அழகு காட்டினாய்
இருந்து அருளின போதை அழகையும் காட்டி அருளாய்
திரு உடம்பு அசையாதே
அடியோமுக்காக
பிராட்டியும் –
இடம் கொள் மூ உலகம் தொழ இருந்து அருளாய்
கிடந்த நாள் கிடந்தாய்
கிடந்த -ஆசை பட்ட அன்று தொடங்கு
கிடந்தது வாறு எழுந்து இருந்து பேசு சொல்லும் வரை படுத்து இருப்பாயா
பக்தாநாம் -எல்லாம்
ந தேரூபம் ந ஆகாரம்
உன் திரு உடம்பு அசைய
அர்த்திகளையே பார்க்கும் இதுவோ
உன் திரு மேனி பார்க்க வேண்டாமோ
உன்னுடிய ஆர்த்தியும் தீர்க்க வேண்டாவோ
அந்தரங்க கைங்கர்யம்
பெருமாள் -மாம்வேத வடிம்பிட்டு அடிமை செய்ய வேண்டும்
கிரியதாம் இவ மாம்வாத
அந்தரங்க வருத்தி குற்றேவல்
தோல் அடிமை
ஆத்மாவுக்கு தாஸ்யம் ச்வரூஅ அந்தர்கதம்
ச்வதாந்த்ர்யம் வந்தேறி
நானும் உனக்கு பழ அடியேன்
தொல்லையான அடிமை இல்லை தொன்மையான
சஹஜம் கைங்கர்யம் சகா ஜாயதே சஹஜம் இம் மூன்று பாட்டிலும் தம்முடைய யோக்யதை சொல்லி கொண்ட
பெருமையாக குடி கிடந்தது ஆக்கம் தொடர்ந்து தொண்டன்
அஹங்காரம் இல்லை
வேறு ஒருவர் பார்ப்பது இல்லை அநந்ய கதித்வம்
தடம் கொள் தாமரை பொய்கை முழுவதும் நிறைந்த தாமரை
சீரிய சிங்கம் அறிவுற்று
உணர்ந்து அருளும் பொழுது
பங்கயத்தாள் திரு அருள் முனு மூர் கூற்று
அடிமை செய்யும் இடத்தில் இங்கு
தாமரை மங்கையும் நீயும் அடிமை பிற் கூற்று
சகலரும் தொழும்படி இருந்து அருளாய் –
வீற்று இருக்கும் இருப்பு
சர்வ சுலபன் திருப் புளிங்குடி கிடந்தது
அபேஷிதம் ஏக தேசம்
பாதி செய்தாய்
இதுவும் செய்து தலைக் கட்ட வேண்டாவோ
சாய்ந்த அருளின அழகை காட்டி
இருந்த அருளும் அழகை காட்டி அருளாய் -என்கிறார் –
————————————————————————————————————————————————————–
Leave a Reply