திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

எல்லார்க்கும் சுலபமான உன் திருவடிகளை
என் தலையிலே வைத்து அருள வேண்டும்
என்கிறார்

————————————————————————————————————————————————————————–

குடிக் கிடந்து ஆக்கம் செய்து
நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த
நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப் புளிங்குடிக் கிடந்தானே

——————————————————————————————————————————————————————————————————–

குடிக் கிடந்து –
குடிக்கு தகுதியாக ஒழுகி -என்றபடி
குல மரியாதை தப்பாதபடி ஒழுகுதலை தெரிவித்தபடி –
இஷ்வாகு குலத்தோரில்-தமையன் இருக்க தம்பிமாரில் முடி சூடி அறிவார் இலர் –
என்றான் அன்றோ ஸ்ரீ பரத ஆழ்வான்
–
ஆக்கம் செய்து –
குடியில் -பண்டு இல்லாத நன்மைகளை உண்டாக்கி –
பங்க திக் தஸ்து ஜடில பரத த்வரம் ப்ரதீஷதே
பாதுகே தே புரஸ் க்ருத்ய சர்வஜ்ஞ ச குசலம் க்ருஹெ-யுத்த -127-5-
பரதன் சடை முடியனாய் -அழுக்கு அடைந்த தேகத்தை உடையனாய்
உன் வரவை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறான்
உன் பாதுகைகளை முன்னிட்டுக் கொண்டு இராச்சிய பாரம் செய்து இருக்கிறான்
எல்லாரும் சௌக்யமாய் இருக்கிறார்கள் -என்றும்
ஜடிலம் சீர வசனம் ப்ராஜ்ஞ்ஞலிம் பதிதம் புவி
ததர்ச ராமோ துர்தர்சம் யுகாந்தே பாஸ்கரம் யதா -அயோத்யா -100-1-
ஜடைகளை அணிந்தவனும் -மரவுரி தரித்தவனும் கை கூப்பினவனும் பூமியில் விழுந்தவனும்
பார்க்க முடியாதவனுமான பரதனை ஸ்ரீ ராமன் எவ்வாறு யுகத்தின் முடிவில் சூர்யனை காண்பார்களோ
அவ்வாறு கண்டான் -என்றும்
நஹிதே ராஜபுத்ரம் தம் காஷாயம் பரதாரிணம்
பரிபோக்தம் வ்யவச்யந்தி பௌராவை தர்ம வத்சலம் -யுத்தம் -70-4-
நஹிதே ராஜபுத்ரம் தம்-
அருகே இருக்கச் செய்தேயும் -இவனை சூழ இருக்கிற நகர மக்கள் இவனை அனுபவிக்கையில் நசை அற்றார்கள் –
அதற்கு அடி என் என்னில் –
ராஜ புத்ரம் -பெருமாள் பேர நின்ற அநந்தரம் முடிந்தவன் மகன் அன்றோ –
இவனோ தான் நமக்காக இருக்கப் புகுகிறான் -என்று இருந்தார்கள் –
தர்ம வத்சலம் –
இதற்கும் அந்த சக்கரவர்த்தியோடு ஒப்பான் –
தர்மத்துக்காக தன்னை அழிய மாறினான் அன்றோ அவன் -என்றும் வருவன காண்

ஏபி ச சஸிவை ஸார்த்தம் சிரஸா யாஸிதோ மயா
பிராது சிஷ்யஷ்ய தாசஷ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹசி – அயோத்யா -101-12
ஏபி ச சஸிவை ஸார்த்தம்-
தான் ஒருவனே போக அமைந்து இருக்க
துன்பம் அற்ற பலரையும் கொண்டு போனான் –
அதற்கு அடி –
நாம் ஒருவனுமே அன்றிக்கே பலர் கண்ண நீரை கண்டால் மீளாரோ -என்னுமத்தனைப் பற்ற –
போர் செய்யப் போவாரைப் போலே யானை குதிரை அகப்பட திரட்டிக் கொடு போனான் ஆயிற்று
பிரிவில் ஆற்றாமைக்கு தன்னில் குறைந்தார் ஒருவரும் இலர் ஆயிற்று அங்குள்ள சேனைகளில் –
சிரஸா யாஸிதோ மயா-
நான் தலையால் இரந்த கார்யத்தையும் மறப்பரோ –
மாம் நிவர்த்தயிதும் ய அசௌ சித்ரகூடம் உபாகதா
சிரஸா யாசத தஸ்ய வசனம் ந க்ருதம் மயா -யுத்தம் -24-19-
தலையாலே வணங்கின அந்த பரத ஆழ்வான் உடைய வார்த்தை
என்னால் நிறைவேற்றப் படவில்லை -என்றார் அன்றோ பெருமாள் -என்றது –
அவனும் தனக்கு அடுக்கும்படி செய்தான் –
நாமும் நமக்கு அடுக்கும்படி செய்தோம் -என்றார் என்றபடி
அவன் தலையாலே இரந்த கார்யத்தை மறுத்துப் போந்தோம்
என்றே அன்றோ அவர் திரு உள்ளம் புண்பட்டது
பிராது –
உடன்பிறந்தவன் தன்னுடைய சரீரம் என்கிறபடியே
ஆச்சார்யோ ப்ரஹ்மனொ மூர்த்தி பிதா மூர்த்தி பிரஜாபதே
மாதா பிருதிவ்யா மூர்திஸ்து பிராத ஸ்வ மூர்த்தி ராத்மன -மனு தர்ம சாஸ்திரம் படி –
அவர் தம் திருமேனியாக அன்றோ என்னை நினைத்து இருப்பது
சிஷ்யஷ்ய தாசஷ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹசி –
இந்த பதங்களுக்கும் முன்பு போலே உரைத்துக் கொள்க
இப்படி இக்குடியில் இல்லாத ஏற்றங்களை செய்து -என்றது
மூத்தார் இருக்க இளையார் முடி சூடக் கடவர் அன்று என்று போந்த இத்தனை முன்பு
ஆற்றாமையும் கண்ணும் கண்ணநீருமாக
சடையும் புனைந்து
வற்கலையும் உடுத்து இருந்தார் இலர் அன்றோ -முன்பு இவனை ஒழிய

நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து –
தன்னுடைய இனிமையாலே மற்றைய பேறுகளிலே நசை அறுக்க வல்ல அடிமைகளில்
அந்தரங்கமான அடிமைகளை செய்து –

உன் பொன் அடிக் கடவாதே –
முன்பு பெரிய ஆற்றாமையோடு
ஸ்ரீ வசிஷ்ட பகவான் தொடக்கமானவரை புருஷகாரமாகக் கொண்டு
மீட்பதாக சென்றவன் –
ததா சிரஸி க்ருத்வா து பாதுகே பரத ததா
ஆருரோஹா ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்னேன சமன்வித -அயோத்யா -112-25
நாம் ஐயர்

சொன்ன கார்யத்தை செய்தோமாய் நிறம் பெறலாவது
நீர் பதினால் ஆண்டு இராச்சியத்திலே
இருக்கில் காணும் -என்ன

தன் ஆசையால் நிர்பந்திக்குமதுவும் இன்றிக்கே
அப்போது ஆனந்தம் அடைந்தவனாய்
சத்ருகன ஆழ்வானோடு கூடினவனாய் தேரில் ஏறினான் -என்கிறபடியே
உவகையையனாய் மீண்டான் அன்றோ –
அப்படியே –
உன்னுடைய ஆணையை மீறாமல் உன் திருவடிகளுக்கு தப்பாமல்
அன்றிக்கே –
உன்னுடைய விரும்பத் தக்கவான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல்
அதாவது வேறு பயன் ஒன்றையும் கருதாவராய் இருத்தல் -என்றபடி –

வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி-
அடிமை முறை தப்பாதே போருகிற-வேறு கதி இல்லாத எங்களுக்கு திருவருள் செய்து –

நீ யொருநாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே –
அங்கனம் திருவருள் புரியும் தன்மை ஒரு நாளிலேயாய்
பின்பு வற்றுமதோ –என்கிறார்
தடை இல்லாமல் இருப்பதற்கு மேற்பட ருசி வேண்டற் பாலதோ -என்பார் -படிக்கு -என்கிறார்

பூமியை விளாக்குலை கொள்ள -பரந்து –விஞ்ச வளரும் அதிலும் அரிது போலே காணும்
பூமிக்கு அளவாக திருவடிகளை -குசை தாங்கின அருமையும் -என்பார் -கடிவாளத்தை இழுத்துப் பிடித்து -என்பார் -படிக்கு அளவாக நிமிர்த்த -என்கிறார்
அன்றிக்கே
உனக்கு அரியது ஒன்றாய் நான் வருந்துகிறேனோ -என்னுதல் –

இத்தனை அன்றோ செய்ய வேண்டுவது என்கிறார் மேல் –
நின் பாத பங்கயம் –
ஒரு செவ்விப் பூவினைக் கொண்டு காணும் காடும் ஓடையும் அளந்து கொண்டது
ஏதேனுமாக கொள்ள நினைத்த கார்யத்துக்கு அளவாக்கும் இத்தனையாய் இருந்ததே அன்றோ
பூமிக்கு அளவாக்கின திருவடிகளை
என் தலைக்கு அளவாக்க லாகாதோ –
கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்று இருப்பார் தலைக்கு வைக்கலாகாதோ -என்றது
தேவரீருடைய -அப்போது அலர்ந்த -செவ்வித் தாமரை போன்ற
இரண்டு திருவடிகளும் என் தலையை எப்போது அலங்காரம் செய்யப் போகின்றன -என்கிறார் –
ஆக
குணா குணம் நிரூபணம் பண்ணாதே
எல்லார் தலைகளிலும் வைத்த திருவடிகளை
ஆசை உடைய என் தலையிலும் வைக்கலாகாதோ –
என்கிறார் என்றபடி –
கதா புன சங்க ராதாங்க கல்பக
த்விஜார விந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம்
மதிய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -ஸ்தோத்ர ரத்னம் -31-

கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே –
அந்த சீதை யானவள் ஸ்ரீ ராம நாமத்தை கேட்டதனால் துன்பம் நீங்கினவளாய்
ஸ்ரீ ராமனுடைய உண்மையில் ஐயத்தால் ஒரு துன்பத்தை உடையவளாய்
சரத் காலத்திலேயே மேகங்களால் மறைக்கப் பட்ட சந்தரன் உடைய

இரவினைப் போலே இருந்தாள்-என்கிறபடியே
சா ராம சங்கீர்த்தன வீத சோகா ராமஸ்ய
சோகேன சமான சோகா
ஸ்ரன்முகே சாம்புத சேஷ சந்த்ரா
நிசேவ வைதேக சுதா பபூவ -சுந்தர -36-17-
பெருமாள் உளரோ இலரோ என்ற ஐயத் தாலேயும் ஒரு சோகம் உண்டு
பிரிவு ஆற்றாமையாலே படுகிறதும் ஒரு சோகம் உண்டு பிராட்டிக்கு
அவற்றுள் திருவடியைக் கண்ட பின்பு ஓன்று தீர்ந்தது அன்றோ
அப்படியே
காவலோடு கூடியதாய்
சிரமத்தை போக்கக் கூடியதான தேசத்தில்
திருக் கண் வளரப் பெற்றதனால்
என் வருகிறதோ என்ற அச்சம் தீர்ந்து
இனி என்னை அங்கீ கரிக்கும் அதுவே குறை
அக்குறையும் தீர்த்து அருள வேண்டும் -என்கிறார்

சர்வ சுலபமான
பொது நின்ற பொன் அம கழல்
என் தலை மிசை வைத்து அருள
பாத பங்கயமே தலைக்கு அணியாய்
குடிக்கு ஈடாக வர்த்தித்து -குல மரியாதை தப்பாமல்
பரத ஆழ்வான் -போலே
மூத்தவன் இருக்க இளையவன் ஆள கூடாதே -இருந்தவர் –
தமையன் இருக்க தம்பி மார் முடி செய்யா
ஆக்கம் செய்து பண்டு இல்லா பெருமை கூட்டி –
குடிக்கிடந்து மேலும் ஆக்கம் செய்து
தானும் போகம் அனுபவிக்காமல்
பரத்வாஜர் –
ஜடிலம்-சீர வசனம் –
ஜடை முடி தரித்து மர உரி அணிந்து –
ந கிதே ராஜ புத்ரானாம் -தர்ம வத்சலம் –
தம் ராஜ புத்ரம் காஷாய அம்பரம்
ந பரிபோக்தம் -பௌவர் அனுபவிக்க முடியாமல்
உடமில் சேறாக இருக்க
கோவிந்தராஜர் யானைக்கும் அடி சறுக்கும் –
தெரியாமல் சேற்றில்
கண்ணா நீர் கைகளால் இறைக்கும்
அரங்கன் திரு முற்றம் சேறாகி
கண்ணா நீர் பங்கயமாய் துளாவி -ஆசார்ய ஹிருதயம்
பாதுகே -சர்வஞ்க்ன குசலம் க்ருஹ
பரதன் இப்படி இருக்க பெருமாள் கட்டாயம் வருவார் என்கிற நினைவால் மற்றவர் களித்து
அனுபவம் சக்தி இல்லாமல் கிட்டே வராமல்
தர்ம வத்சலம்
இதற்கும் சக்கரவர்த்தி உடன் ஒக்கும்
சித்ரா கூடம் அனைவரையும் கூட்டி
யாருக்காவது இரங்க
ஆர்த்தர் பலர் -தம்பி மட்டும் இல்லை
பிரிவாற்றாமையில் தம்மில் குறைந்தார் இல்லை
சிரசா யாசிதா மயா -தலையால் யாசித்தாலும் மறுப்பாரோ
ஆக்கம் செய்த நிலை கள் இவை
அவன் தனக்கு அடுக்கும் படி செய்தான்
நான் எனக்கு அடுக்கும் படி செய்தேன் வருத்தம் பெருமாள் வார்த்தை
தலையால் யாசித கார்யம் செய்யாமல் போன உள்ளம் வருத்தம்
பிராது -சகோதரன் இன்னும் ஒரு சரீரம் போலே
ஆசார்ய பர பிரஹ்மம் மூர்த்தி
பிதா பிரஜா பதி
மாதா பூமி தாயார் மூர்த்தி –
சேஷம் பூர்வ வத்
இப்படி இக்குடியில் இல்லாத ஏற்றம் செய்து
ஆற்றாமை கண்ணும் கண்ணீர் -முன்பு இவனை ஒழிய இல்லை இ றே-ஆக்கம் செய்து
நின் தீர்த்த அடிமை குற்றேவல் செய்து
அந்தரங்க
தீர்ந்த
உனக்கே அற்று தீர்ந்த அடிமை –
இதர புருஷார்த்தம் நசை தீர்த்த அடிமை
பொன் அடி கடவாதே –
திருவடிகளை மீறாதே
திரு உள்ளம் மீறாதே
அடிமை -பிரிந்தால் துனம் மட்டும் இல்லை
அவர் சொன்ன வார்த்தை தட்டாமல் பொன் அடி கடவாதே
ஐயர் செய்த கார்யம் நிறம் பெற 14 வருஷம் ராஜ்ஜியம் இருக்க வேண்டும்
ஆருரோக ரதம் ஹ்ருஷ்ட
பெருமாள் ஆசையை நிறைவேற்ற பெற்றோமே
ஆஞ்ஞை தப்பாதே
பொன் அடி கடவாதே -அடிமை முறை தப்பாமல் அநந்ய கதி
படிக்களவாக நிமிர்த்தபூமிக்கு சரியாக நிமிர்த்த
தலைக்கு அகியாக
குணாகுனாம் நிரூபணம் பண்ணாதே
ஆசை உடைய என் தலையிலும் வைக்க கூடாதோ
பூமி அளக்க ஆசை மிக்கு திருவடி வளர -அடக்கி வைத்தானாம்
படிக்கு அளவாக -ரசோக்தி
விஞ்ச வலருவதிலும் அடக்கி குசை தாங்கிய அருமை
எல்லாம் அறிய செயல்
நின் பாத பங்கயமே செவ்வி பூ காடும் மேடும்
தலைக்கு அணியாய் பூமிக்கு அளவாக்கி
தலைக்கு அளவாக
கோல மாம் என் சென்னிக்கு கமலம் அன்ன செவ்வி திருவடி
கதா புன –சரணாம் புஜ த்வயம் மதியம் மூர்த்தானம்
திருவடி இரண்டும் கேட்டார் ஆளவந்தார்
கொடி-
துக்கம் கொஞ்சம் குறைந்ததாம் இவருக்கு
சீதை பிராட்டி ராம சங்கீர்த்தனம் -சத்பாவத்தால் அதி சங்கை யால் ஒரு சோகம்
பிரிவாற்றாமையால் ஒரு சோகம்
வீத சோகம் ஒரு சோகம் போனது
ராமஸ்ய சமான சோகம் சீதைக்கு அடுத்த சதம்
இரண்டும் எப்படி முடியும்
ராம சந்கீர்தனத்தால் ஓன்று போக
நஜீவேயம் ஷணம் அபி -துக்கம் போனது -ராம சங்கீர்த்தனம் கேட்ட பின்பு
பிரிவாற்றாமை சோகம் தீர வில்லை
ஆழ்வார் -ஆயாசம் எம்பெருமானுக்கு -சோகம்
தன்னுடன் வார்த்தை சொல்ல வில்லை குளிர நோக்க வில்லை
சு ரஷிதமாய் கண் வளரப் பெற்றதால் ஒரு சோகம் தீர
விஷயீ கரிக்க வேண்டும் சோகம் தீர வில்லை –

————————————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading