திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

வலி அற்றவர்களோடு
வலி மிக்கவர்களோடு
வாசி அறக் காப்பவனான நீ
நாங்கள் வாழும்படி கண் எதிரே ஒரு நாள் இருக்க வேண்டும் -என்கிறார் –

———————————————————————————————————————————————————————–

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே
இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து
நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள்
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே

————————————————————————————————————————————————————————–

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே-
எங்கள் உடைய பிறவி காரணமாக வந்த எல்லா துக்கங்களையும் போக்கி –
பகவானுடைய ஞானத்துக்கு அடைவு இல்லாத இந்த உலகத்திலே என்னை அடிமை கொள்ளுகின்றவனே –

இமையவர் தமக்கும் ஆங்கனையாய்-
ஒரு கைம்முதலும் இல்லாத எங்களுக்கு அன்றிக்கே –
ஈச்வரோஹம் –நான் ஈஸ்வரன் -என்று இருக்கின்ற பிரமன் சிவன் முதலாயினோர்கட்கும்
அங்கு அப்படி நிர்வாஹகன் ஆனவனே –

செம்மடல் மலரும் தாமரைப் பழனத்-
சிவந்த மடல் மலரா நின்றுள்ள தாமரைகள் பொருந்திய நீர் நிலங்களை உடைய

தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய் –
சிரமத்தை போக்குகிற திருப் புளிங்குடியில் திருக் கண் வளர்கின்றவனே -என்றது
உள்ளும் புறம்பும் தாமரையாகவே இருக்கின்றன -என்றபடி –
கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே
ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே
அரவம் சுமப்பதே ஓர் அஞ்சன மலையே
அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளதே

உவப்புடன் ஒரு கால் நோக்கிப்
பவக்கடல் கடக்கும் பரிசு பண்ணினவே -திருவரங்கக் கலம்பகம் -73

நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து –
உன் அடியார் உன்னை அனுபவிக்கிற ஆரவாரத்தை கண்டு நாங்கள் உகந்து –

நாம் களித்துள நலம் கூர –
நாம் களித்து உளம் நலம் கூர –
அந்த உகப்பு தலை மண்டை இட்டு –
மனத்திலே சினேகமானது மேன்மேலும் என மிக்கு வர –

இம்மட வுலகர் காண –
இந்த உலகத்தில் அறிவு கேடராய்
இடக்கை வலக்கை அறியாதே மனிதர்களும் கண்களாலே காணும்படியாக –

நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே –
எங்கள் கண் வட்டத்திலே ஒரு நாள் இருந்து அருள வேண்டும் -என்றது –
நித்ய சூரிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமான நீ
ஒரு நாள் எங்கள் கண்ணுக்கும் விஷயமாய் இருந்தால் ஆகாதோ -என்கிறார் என்றபடி
உன்னுடைய காட்சி அதிகாரத்தை உடைய ஒரு சிலர்க்கேயாய் இருக்க வேண்டுமோ -என்பார்
எங்கள் கண் முகப்பே -என்கிறார் –

அனைவருக்கும் ரஷகன்
துர்பலர் பலம் உள்ளார் அனைவருக்கும்
இருந்திடாய்
கீழே நடை அழகு இங்கு இருந்த அழகு
எங்கள் இமையோர் இடர் கெடுப்பவன்
சம்சார துக்கம் போக்கி எங்களை ஆள்பவன் -நீ
இமையோர் தமக்கும் -ஈச்வரோஹம் ப்ரஹ்மாதி நிர்வாஹகன்
உள்ளும் வெளியில் தாமாரை -தடாகம் -இவன் அவயவம்
அடியார் -அனுபவிக்கும் ஆராவாரம் கவ்வை
நம்முடிய அடியவர் கவ்வை கண்டு உகந்து நாம் களித்து
உகப்பு தலை மண்டை இட்டு
உலகர் காண -இடக்கை வலக்கை அறியாத மட உலகம்
இருந்து அருள வேணும்
நித்ய சூரி சதா தர்சனம்
எங்களுக்கு ஒரு நாள்
அதி கிருதா அதிகாரம் உன்னுடைய தர்சனம் ஆக வேண்டுமோ

 

—————————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading