Archive for August, 2013

ஸ்ரீ பெரிய திருமொழி-2-5-8-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 11, 2013

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்
தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி
எண்ணானை எண்ணிறந்த புகழினானை
இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-

மெய்யம் என்னும் தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி-குடைவரைக்கோயில்
நின்ற பெருமாள் சத்யமூர்த்தி -கிடந்த திருக்கோலம்
எண்ணானை-அனைவராலும் எண்ணப்படுபவன் -ஆச்சர்ய பூதன்

———————————————-

சர்வேஸ்வரன் ஆகிறான் தன்னை ஆஸ்ரயித்தார்க்கு
தன்னோடு ஒத்த வரிசையை கொடுப்பன் ஒருவன் என்று
கொண்டு அவனுடைய நீர்மையை சொல்லுகைகாக –
(த்ரயோ தேவா துல்யம் என்று பேசும் படி வைக்கிறான் )
அல்லாதார்க்கு உத்கர்ஷத்தை சொல்லா நிற்கும் பிரமாணங்கள்
அவர்கள் தாங்களும் புழுக் குறித்த எழுத்துமா போலே –
சிலவற்றைத் தோற்றச் செய்யும் –
அவற்றைக் கண்டு இவர்கள் பக்கலிலேயும்
குவால் உண்டு -என்று நாட்டார் பிரமிக்கைக்கு
உடலாய் இருக்கும் –
ஆக பிரமாண கதி இருந்தபடியாலும்
சேதனர் மந்த மதிகளாய் இருந்தபடியாலும்
இவற்றின் தாத்பர்யம் அறியாதே
சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜனம் -என்று சொல்லுகிற கடலிலே
புக்குப் போம் இத்தனை இறே –
அவற்றை அனுசந்தித்துச் சொன்ன
இவ் வாழ்வார்கள் ஈரச் சொல் இன்றாகில் –
என்று பட்டர் அருளிச் செய்தார்-

வியாக்யானம் –

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் –
தனக்கு சேராத செயலைச் செய்தும்
ஆஸ்ரித கார்யம் செய்யுமவனை –
புருஷ சப்தத்தாலும்
புருஷோத்தம சப்தத்தாலும்
சொல்லப் படுகிறவன் இறே
தன் படிக்கு சேராத ஸ்திரீ வேஷத்தைக் கொண்டு –
இனிய வஸ்து ஆசூர பிரகிருதிகள் பக்கல் சேர  ஒண்ணாது –
என்று வஞ்சித்தவனை –

பிறை எயிற்று அன்று –
முரட்டு ஹிரண்யனால்
சிறுக்கன் நோவு படுகிற அன்று –
பிறை போலே இருக்கிற எயிற்றை உடைய –

அடல் அரியாய்ப்
யுத்தம் என்றால் பணைக்கும் படியான
நரசிம்ஹமாய்க் கொண்டு –

பெருகினானை —
அவனுடைய பிரதிஜ்ஞா சம காலத்திலேயே தோற்றா விடில்
சுருங்கிக் கை அற்றவன் ஆயிற்று
தன்னுடைய ரஷகத்வம் இழந்து கையிலான் ஆவானே–

தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி –
பித்ராதிகள் ரஷகர் ஆகை  தவிர்ந்து
பாதகராகப் புக்க பின்பு
இனி அவர்கள் கையில் காட்டிக் கொடுப்போம் அல்லோம்
என்று ரஷகன்  தான் வந்து சாய்ந்தான் ஆயிற்று –

வத்சலராய்
உபகாரகராய்
நோக்குகைக்கு பித்ராதிகள் என்று சிலரைச் சொல்லி விட்டோம் –
அவர்கள் தாங்களே பாதகராய் நின்ற பின்பு
நாம் அசந்னிஹிதர் ஆவோம் அல்லோம்
என்று நேரே பிதாவானவன் வந்து சாய்ந்து அருளினான் ஆயிற்று-
( கர்மாதீனம் அவர்கள் -கிருபாதீனம் கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத பிதா அன்றோ )

ஸ்ரமஹரதை மிக்கு ஒழுகா நின்றுள்ள புனலை உடைத்தான
திரு மெய்யத்திலெ திரு வனந்த ஆழ்வான் மேலே
வந்து சாய்ந்து அருளினவனை-

எண்ணானை –
அப்படுக்கையில் சாய்ந்து அருளினால் பண்ணும்
ஜகத் ரக்ஷண சிந்தையைச் சொல்லுதல் –
அன்றிக்கே
ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய ஸூரிகள் பரிய இருக்கிறவன்
இங்கே வந்து சாய்ந்து அருளுவதே –
இது என்ன நீர்மை -என்று எப்போதும்
எண்ணப் படுமவன் என்னுதல்-

எண்ணிறந்த புகழினானை-
ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுகையால் வந்த புகழுக்கு
எல்லை இல்லை என்னுதல் –
குண அனுசந்தானம் பண்ணுவாருக்கு அனுசந்தித்தித்
தலைக் கட்ட ஒண்ணாத குண பிராசுர்யத்தைச் சொல்லுதல் –

இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை –
அக் குணங்களை ஒழியவே
விட ஒண்ணாத படியாய் இருக்குமாயிற்று வடிவு அழகு –
மிக்க ஒளியை உடைத்தாய்
விகாசாதிகளுக்கு தாமரையை ஒப்பாகச் சொல்லலாய் ஆயிற்று –
அது வட்டணித்து இறக்கும் இறே
அங்கன் அன்றிக்கே
ஒழுகு நீண்டு இருக்குமாயிற்று
அன்றிக்கே
போக்யதை அளவிறந்து இருக்கும் என்னுதல் –

(நீண்ட அப்பெரியவாய கண்கள் –
தீர்க்கம் -ப்ரேமம் கொட்டும் -அது க்ஷணம் உஜ்ஜ்வலம் -மனஸைத் திருடாதே –
வனாத்ரி நாதா விசால உன் திருக்கண்கள் கூரத்தாழ்வான் )

கண்ணாரக் கண்டு கொண்டேன் -கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –
படபாமுகாக்னி ( கடலுக்குள் உள்ள அக்னி ) நிறைந்தால் போலே காண வேணும் என்று
உறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய  உறாவுதல் தீர காணப் பெற்றேன் –

விலஷண சரீரத்தைப் பரிக்ரகித்து
ஒரு தேச விசேஷத்தே போய் காண்கை யாகிறது
ஆரேனும் பசிக்க ஆரேனும் ஜீவித்தாப் போலே
இருப்பது ஓன்று இறே
காண வேணும் என்று உறாவின கண்களோடு காணப் பெற்றேன்-

(புருஷ வியாக்ரம் -சோகத்தால் வற்றி வாடி இருக்கும் இந்த சரீரத்துடன் பார்க்க
திருவடி நீர் அருளுவீரா சீதா பிராட்டி )

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-5-7-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 11, 2013

பேணாத வலி யரக்கர் மெலியவன்று
பெரு வரைத் தோளிற நெரித்தன்ற வுணர்கோனை
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனைப்
பொரு கடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் தன்னை
உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே-2-5-7-

பெரு வரைத் தோள் இற நெரித்து –ராமர் சேனை கொண்டு என்றும்
நரஸிம்ஹர் தானே நெரித்தார் என்றுமாம் –
உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை–பூதநா நிரசனத்தில் ஈடுபட்டு பரிந்து உள்ளார்
திரு உள்ளத்தில் பொருந்தி உள்ளவன் -நாம் என்றாவது பரிகிறோமோ -நாமும் அந்த பாவம் உள்ள
பக்தனானால் நம் உள்ளத்திலும் பொருந்தி வாஸம் செய்வானே –
இதே விஷயங்களை ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்களில் வெளியிடுகிறார்கள் -அஸ்தானே பய சங்கிகள் –

—————————————-

வியாக்யானம் –

பேணாத வலி யரக்கர் மெலியவன்று-
சர்வேஸ்வரன் என்று கொண்டு பேண அறியாதே –
முன் கை மிடுக்காலே தோற்றின படி நடந்து திரிகிற
ராஷச ஜாதியானது மெலியும் படியாக –

எங்கனே உய்வர் தானவர்  நினைந்தால்-5-7- -என்கிறபடியே
அச் சிறுக்கனைப் போலே சீற்றம் இன்றிக்கே இருப்பார்
பிழைக்கும் இத்தனை அல்லது
ஆசூர பிரக்ருதிகள் எங்கனே உஜ்ஜீவிக்கும் படி –
என்னக் கடவது  இறே –

அப்படியே ராஷச ஜாதியானது
மெலியும்படியாகப்  பண்ணி –

பெரு வரைத் தோளிற நெரித்தன்ற வுணர்கோனை பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனைப் –
அன்று பெரிய வரை போலே இருக்கிற
தோள்கள் ஆனவை இறும்படியாக கட்டிக் கொண்டு
ஆசூர வர்க்கத்துக்கு நிர்வாஹகன்  ஆனவனை ஆபரணங்களாலே
அலங்க்ருதமான சரீரம் இரு பிளவாம் படி
கிழித்துப் பொகட்டு யுத்தத்திலே சமர்த்தனாவனை-

பொரு கடலுள் துயிலமர்ந்த
அதுக்கு உறுப்பாக திருப் பாற் கடலிலே வந்து
கண் வளர்ந்து அருளினவனை –

புள்ளூர்தியை-
ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்டு
அங்கு நின்றும் பெரிய திருவடி தோளிலே ஏறி
அவர்களுக்கு காட்சி கொடுக்கும் படி சொல்லுகிறது –

ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் தன்னை –
பூதனை தாய் வடிவு கொண்டு வந்து
முலை கொடுக்க –
அவள் முலை கொடா விடில் தரியாதாளாய்
கொடுத்தால் போலே
தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய்
முலை உண்டபடி சொல்லுகிறது –

உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை-
செவ்வியாருக்கு தான் செவ்வியனாய் பரிமாறும்படியும்
துஷ்டர்க்குத் தானும் அப்படி இருக்கும் படியும் சொல்லுகிறது –

பருவம் நிரம்பா இருக்கச் செய்தேயும்
பூதனை கையிலே அகப்பட்டு -அத்தைத் தப்பிப் போகப் பெற்ற
அது ஒன்றுமே ஆயிற்று இவர்கள் நெஞ்சிலே கிடப்பது –
(பேய்ச்சி முலை பருக வித்தகன் இத்யாதி– முக்காலும் இந்த பதிகத்தில் உண்டே )

காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன் –
யாதனா சரீரம் போலே காண வேணும் என்று
தட்டித் திரிகிற நான்
பசித்தவன் ஜீவிக்கப் பெற்ரார் போலே
காணப் பெற்றேன் –

கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –
சாஸ்தரங்களிலே கேட்டு
ஒரு தேச விசேஷத்தால் சென்றால்
காண இருக்கை அன்றிக்கே
விடாய்த்த இந் நிலத்திலே
காணப் பெற்றேன்-
(ஸ்ரீ வைகுண்டம் கண்டு கொண்டேன் சொல்ல முடியாதே கேட்டு தான் இருக்க வேண்டும் )

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-5-6-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 11, 2013

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக்
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு
பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி
இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

பணங்கள் மேவிக்-லக்ஷணையால் திரு அனந்தாழ்வானைக் குறிக்கும் –
பின்-என்னாமல் -பின்னே–நெடு தூரம் சீதாப் பிராட்டியை இழக்கும் படி சென்றமை –
அநேக அவதாரங்கள் அனுபவம் –

———————————————————–

வியாக்யானம் –

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக் –
கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான
பரப்பை உடைத்தான கடலிலே
திருவநந்த ஆழ்வான் மேலே –
மேவி
பிராட்டிமார் திருமுலைத் தடத்தாலும்
கிளப்ப ஒண்ணாத படி கண் வளர்ந்து அருளினவனை –

கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே படர்ந்தானை-
கிளர்ந்து -நாநா வர்ணமான பொறியை உடைத்தான
மான் குட்டியை பிராட்டி பிடித்துத் தர வேணும் -என்ன
துஷ்ட ம்ருகமாகையாலே அது அங்கே இங்கே சஞ்சரிக்க
அதின் பின்னே அடி தீயப் போனவனை –
பிராட்டி பிரிவு விளையும்  படியாக இறே
கை கழியப் போன படி –

படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப் –
பெரிய மத்தகத்தின் உடைய கொம்பைக் குப்பைக் கீரை போலே –
அநாயேசேன பிடுங்கினவனை-

பாரிடத்தை எயிறு கீற விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி –
வளைந்த கொம்பை உடைய மஹா வராஹமாய் -( பெரும் கேழலார் )
பரப்பை உடைத்தான பூமியைத்
திரு எயிற்றாலே கிழியும் படி இடந்தவனை –
உடம்பு நோவ வ்யாபரித்த படி சொல்லுகிறது –

இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை –
பூமி அந்தரிஷ்யாதிகள் போராதபடி யாக வளர்ந்து
லோகத்தை அளந்து கொண்டவனை –

எம்மானைக்-
எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த
நீர்மையாலே என்னை எழுதிக் கொண்டவனை –

கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –
அவன் தானே திருவடிகளை கொண்டு வந்த வைத்த அன்று தப்பின நான்
இன்று
இங்கே
காணப் பெற்றேன்
என்கிறார் –

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-5-5-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 11, 2013

பாய்ந்தானைத்  திரி சகடம்  பாரி வீழப்
பாலகனாய் ஆலிலையில் பள்ளி யின்ப
மேய்ந்தானை இலங்கொளி சேர் மணிக் குன்றன்ன
ஈரிரண்டு மால் வரைத் தோள் அம்மான் தன்னை
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதிற் சென்று
அப்பொய்யறை வாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-5-

பள்ளி யின்ப மேய்ந்தானை-நித்ரா ஸூகம் அனுபவிப்பவன்
ஈரிரண்டு மால் வரைத் தோள்-இது திருமங்கை ஆழ்வார் -அங்கு ஆண்டாள் –

——————————————————

வியாக்யானம் –

பாய்ந்தானைத்  திரி சகடம்  பாரி வீழப் –
பிள்ளையைத் தொட்டிலிலே வளர்த்தி
சகடத்தை வர விழுத்து வைத்துப் போனார்கள் –
அதிலிலே அசுரர்கள் ஆவேசித்து வந்து நலியப் புக –
ஸ்தன்யார்த்தீ ப்ரருரோதஹ-என்கிறபடியே
முலை வரவு தாழ்த்துச் சீறி திருவடிகளாலே பாய்ந்தான் –
அதுக்கு இலக்காய் முடிந்து போனார்கள் –
ஊருகிற சகடமானது பாறிப் போம்படியாக பாய்ந்தவனை –

பாலகனாய் ஆலிலையில் பள்ளி யின்ப மேய்ந்தானை –
அத்யந்த முக்தனாய்
ஒரு பவனனான ஆலிலையிலே
விழுக்காடு பாராதே
நித்ரா ஸூகம் அனுபவித்தானை –

இலங்கொளி சேர் மணிக் குன்றன்ன ஈரிரண்டு மால் வரைத் தோள் –
மிக ஒளியை உடைய நீல கிரி போலே இருக்கிற
திருத் தோள்கள் நாளையும் உடையவனை –

அம்மான் தன்னை –
அந்த சதுர் புஜன் இறே
சர்வேஸ்வரன் ஆனான் -(நால் தோள் அமுதே சர்வேஸ்வரன் )

தோய்ந்தானை நிலமகள் தோள் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி திருத் தோள்களிலே அவஹாகித்தவனை –

தூதிற் சென்று –
பாண்டவர்களுக்கு தூதனாய் சென்று –

அப்பொய்யறை வாய்ப்புகப் பெய்த மல்லர் மங்கக் காய்ந்தானை-
நிலவறையிலே பிரவேசிப்பித்து நலிய வேணும் என்று –
பதிபடை கிடந்த மல்லர் முடிந்து போம் படி சீறினவனை-
(பாண்டவ தூதன் சந்நிதி நிலவறையில் இன்றும் சேவிக்கிறோமே )

எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –
அந்த க்ருத்ரிமத்தைத் தப்பி
என்னை எழுதிக் கொண்டவனை-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-5-4-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 11, 2013

பேய்த் தாயை முலை யுண்ட  பிள்ளை தன்னைப்
பிணை மருப்பில் கரும் களிற்றைப் பிணை மானோக்கின்
ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை
அந்தணர் தமமுதத்தைக் குரவை முன்னே
கோத்தானை குடமாடு கூத்தன் தன்னைக்
கோ குலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-4-

மானோக்கின்-போதரிக் கண்ணினாய்

—————————————————–

வியாக்யானம் –

பேய்த் தாயை முலை யுண்ட  பிள்ளை தன்னை-
பேயானவள் தாய் வடிவு கொண்டு வரத்
தாய் பக்கல் பண்ணக் கடவ விருப்பத்தை
அவள் பக்கலிலே பண்ணி –
அவள் முலையை உண்ட மௌக்யத்தை உடையவனே –
(பிள்ளை என்னாமல் பிள்ளை தன்னை -தானான தன்மையில் )

பிணை மருப்பில் கரும் களிற்றை-
பிணைத்த மருப்பை உடைய கரும் களிறு போலே
இனிய சேஷ்டிதங்களை உடையவனை –
பிணை மருப்பு -என்கிற இத்தால்
செருக்காலே மிகைத்து திரியும் படியை சொல்லுகிறது –

பிணை மானோக்கின் –
மான் பேடை போலே இருக்கிற நோக்கை  உடைய
ஆய்த் தாயார் உண்டு -இடைத்தாயார் -யசோதை பிராட்டி –

ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை –
அவள் ஸ்பர்சித்த வெண்ணெயும் தயிரையும்
அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சமுடைய த்ரவ்யமே
தனக்கு தாரகமாக-(அமர்ந்த) இருந்த செயலாலே
லோகத்தை அடைய எழுதிக் கொண்டவனை –

அந்தணர் தமமுதத்தை-
அச் செயலாலே ப்ராஹ்மண ஜாதிக்கு
தாரகமானவனே –

குரவை முன்னே கோத்தானை-
சிலர் காணக் கடவது அன்றிக்கே இருக்கிற இத்தை
எல்லார் கண் முகப்பே திருக் குரவை கோத்தவனை-

குடமாடு கூத்தன் தன்னை –
இப்படி சிலர் கண்டு போகை அன்றிக்கே
கண்டு காணாதாரும் காணும்படியாக காட்டினவனை –

கோ குலங்கள் தளராமல் குன்றமேந்திக் காத்தானை –
பசுத் திரள்கள் ஆனவை வர்ஷத்தில் நோவு படாதபடி
தோற்றிற்று ஒரு மலையை பிடுங்கி நோக்கினவனை-

எம்மானை –
தன்னுடைய ரஷணத்தைக் காட்டி என்னை
அனன்யார்ஹனாக எழுதிக் கொண்டவனை –

கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –
அவனை ரஷகன் என்று அறியப் பெற்றேன் –
எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார்-

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 11, 2013

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?

பொ-ரை :- யுகங்கள்தோறும் பூலோகத்திலே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் மிகப் பலநாட்களாக உயிர்களைப் காப்பாற்றுகின்றவனே! அழகிய பிராட்டியாரோடு சேர்ந்திருக்கின்ற உன்னை அடியேன் அடையாமல் மிகப் பலநாள் இன்னம் தளர்வேனோ?

வி-கு :- ஞாலத்தூடு – பூமியிலே. அடியேன் உன்னைக் கூடாதே இன்னும் தளர்வேனோ? என்க, சால : மிகுதியைக் காட்டும் உரிச்சொல்.

ஈடு :- மூன்றாம்பாட்டு. 3உலகமே உருவமாக இருக்கிற வடிவு காட்டினது போராது; அசாதாரணமான விக்கிரஹத்தைக் கொடு வந்து காட்டவேணும் என்றார் முதற்பாசுரத்தில்; அது உமக்குக்காட்டுவது ஒரு தேசவிசேடத்தே கொடுபோய்க் காணும் என்ன, அது தன்னை இங்கே கொடுவந்து இதர சஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ என்றார் இரண்டாம் பாசுரத்தில்; அது ஒரு நாள் சற்றுப்போது காட்டாறு பெருகினாற்போலே செய்தோம் என்ன, ‘அது ஒரு காலத்திலே நிகழ்வது’ என்ன ஒண்ணாதபடி யுகந்தோறும் இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்து காப்பாற்றுதல் உன்னுடைய சுபாவமாக இருக்க, நான் நோவுபடக் கடவேனோ என்கிறார்.

ஞாலத்தூடே நடந்தும் – 1எப்பொழுதும் காணக்கூடியவர்கள் முன்னே நடக்கக்கடவ நடையை, யாதானும் ஒரு காலத்தில் வந்தாலும் பாராதவர்கள் முன்னே காணும் நடப்பது; குருடர்களுக்கு முன்னே நடக்குமாறு போலே. 2“ஸ்ரீராமபிரான் முன்னே நடந்து சென்றார்” “அக்ரத: ப்ரயயௌராம:” என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 1.
-என்றும், 3“பின்னர் விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு சக்கரவர்த்தித் திருமகனாய் வீரராய் மஹாபல முள்ளவராய் இராமன் என்ற பிரசித்தியுடையவராக இந்தப் பூமியில் சஞ்சரித்தார்” என்றும் சொல்லுகிறபடியே, நடந்தும். 4வடதேசத்தினின்றும் போரப் பாடவல்லவராயிருப்பார் ஒருத்தர் ‘பெருமாளைத் திருவடிதொழ வேணும்’ என்று வர, ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் ஒரு தீர்த்தத்தின் அன்று இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்து, பெருமாளை ஒரு மத்த கஜத்தைக் கைவசப்படுத்துமாறு போலேஏத்தி வசமாக்கிக் கணிசம்கொண்டு, “நாயன்தே! தேவரீர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருவன் தேவரைத் திருவடிதொழ நெடுந்தூரமுண்டு வந்திருக்கிறது; இவனை அழைத்துக்கொண்டு சம்பாவனை பண்ணி யருளவேணும்” என்ன, அவரைப் பெருமாள் அருளப்பாடிட்டு, திருப்புன்னைக்கீழ் நின்றும் அவர் நின்றவிடத்தே திருக்கைத்தலத்தே எழுந்தருளி, விண்ணப்பஞ்செய்வார்களை அருளப்பாடிட்டு, “வாரீர்கோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம் போருமோ செய்த தரம்?” என்று திருவுள்ளமானார்; 1அப்படியே அன்றோ நம் இழவுகளும் திருவுள்ளத்தேபட்டு, அவை எல்லாம் ஆறும்படி முகம் தந்தருளும் படியும்.

நின்றும் – 2“கம்பீரமான வில்லைப் பிடித்துக்கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும் தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ – “அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.

தன் கணவனைக் கொன்ற பெருமாளைத் ‘தப்பச்செய்தீரே’ என்கையன்றிக்கே, இவரது குற்றமுண்டோ? தம்மை யடைந்தவர்களுடைய பகையைப் போக்கத் தவிர்வர்களோ? இவனும் அநுகூலித்தானாகில் ரக்ஷியாரோ? தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து சாவாரைப்போலே தன் குற்றத்தால் கெட்டானத்தனை காண் வாலி என்றாள் அன்றோ! இப்படி உகவாதாருடைய பெண்களுக்கும் கவர்ச்சி கரமாம்படியன்றோ கையும் வில்லுமாய் நிற்கும் நிலை இருப்பது. கிடந்தும் – 3“பாம்பின் உடல்போலே இருக்கிறதிருக்கையைத் தலைக்கு அணையாகக்கொண்டு பகைவர்களை அழிக்கும் பெருமாள் கிழக்குமுகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு சமுத்திரத்திற்கு நேர்முகமாகப் படுத்தார்” என்கிறபடியே, கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடைதானே இலங்கை குடிவாங்க வேண்டும்படி இருக்கை. “பிரதிசிஸ்யே-எதிராகப் படுத்தார்” என்கிறதாயிற்று, கடல்தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று, அதற்காக, ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை; “கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி” என்னும்படி அன்றோ. இருந்தும் –

அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹு ம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந:”-  என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 1.

1“அலங்காரஞ்செய்து உட்கார்ந்திருக்கிறவரை” உபவிஷ்டம் ஸ்வலங்கிருதம்” என்பது, ஸ்ரீராமா. அயோத்.
16 : 8.
-என்றும், 2“பர்ண சாலையில் எழுந்தருளியிருக்கிற சடையோடு கூடிய இராமனை” என்றும் சொல்லுகிறபடியே இருக்கை. 2“திருவயோத்தியி லிருக்கும் பேரோலக்கம் சிறியது” என்னும் படியன்றோ தனியிடத்தில் ஓலக்கம் இருந்தபடி. உடஜேராமமாஸீநம் ஜடாமண்டலதாரிணம்
க்ருஷ்ணாஜிநதரம் தம்து சீரவல்கலவாஸஸம்
ததர்ஸ ராம மாஸீநம் அபித: பாவகோபமம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 25.

அந்த ஓலக்கத்தில் கிட்டும் தம்பிக்கும் கிட்ட ஒண்ணாதபடி அன்றோ இந்த ஓலக்கம் இருந்தபடி: “சுற்றிலும் நெருப்புப்போல் இருக்கிறவரை” என்கிறபடியே, நெருப்பு எரியா நின்றால் கிட்டப்போகாதவாறு போலே கிட்டுதற்கு அரியராயிருந்த இருப்பு.சாலப்பலநாள் – 1உன்னுடைய ரக்ஷணம் அநாதி அன்றோ? அன்றிக்கே, நூறு ஆண்டு பதினோராயிரம் ஆண்டு என்றுமாம். உகந்தோறும் – 2“யுகங்கள்தோறும் பிறக்கிறேன்” என்னுமாறு போலே. உயிர்கள் – 3ஒரு திருவடி, திருவனந்தாழ்வான், பிராட்டி இவர்களுக்காக அன்று கண்டீர், எல்லா ஆத்மாக்களையும் ரக்ஷிப்பது அன்றோ உன்னது. காப்பானே – 4இவர்களுக்கு அழித்துக் கொள்ளூகை பணியானாற்போலே அன்றோ அவனுக்கும் நோக்குகை பணியானபடி. 5நான் கைவாங்கினேன், இனிக் காவற் சோர்வு படாமல் வேணுமாகில் நோக்கிக்கொள். 6“இராம்பிரானாலும் இலக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை” “ராமலக்ஷ்மண குப்தா ஸா ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை: அபி ஸுராஸுரை:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.
– கடற்கரையிலே விட்டபோது பெருமாளை நோக்குகைக்கு, தம்பிமார் மஹாராஜர் மைந்தர் துவிவிதர்கள் உள்ளிட்ட முதலிகள் எல்லாரும் இலங்கையிலே கிட்ட, ஆகாசம் எல்லாம் வெளிக் காவல் அடைத்து, நிதி நோக்குவாரைப்போலே பெருமாளை நோக்கிக்கொண்டு கிடக்க, இவர்கள் இத்தனைவரும் கண் சோர்ந்த அளவிலே, பெருமாள், தாம் கையும் வில்லுமாய்க் கொண்டு இவர்களுக்குப் புறம்பே நின்று உலாவினார் அன்றோ. அவன் நோக்குகைக்கு இத்தலை கண்செம்பளிக்குமத்தனை யன்றோ வேண்டுவது. நாம் அவனுக்கு ரக்ஷகராக நினைத்திருக்குமது 1மயக்கம். அன்றோ; உணர்ந்து பார்த்தால் ரக்ஷகனாக வல்லான் அவனே அன்றோ. கோலம் திருமாமகளோடு உன்னைக் கூடாதே – 2தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப்பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும். 3“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.

இன்னும் தளர்வேனோ – 4முன்னம் அநாதிகாலம் இழந்த நான் இன்னம் பலகாலம் இழக்கவோ? அடியேன் – 5அது கிடக்க, “உன்னாலே இழந்தாய்” என்று சொல்லிக் கைவிடலாம் என்று இருக்கிறாயோ? இன்னும் தளர்வேனோ – 6“ஒரு மிதுநம் எனக்குப்பேறு” என்று அறிந்தபின்பும் தளருமத்தனையோ? 1‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல், ‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல், ‘எனக்கு நான் உரியேள்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு; ருசி பிறந்த பின்பு இழக்கவோ?

2இப் பாசுரத்தால், அகாரத்தின் பொருளை முறைப்படி வியாக்கியானம் செய்கிறார்; “அவ-ரக்ஷணே” அன்றோ தாது. ரக்ஷிக்குமிடத்தில், எல்லாவகையாலும் ரக்ஷிக்கவேண்டும்; அதுதான் எல்லாக் காலமும் ரக்ஷிக்கவேண்டும்; அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாகவேண்டும்; இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில், “குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும், “என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று; ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று. “ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே, எல்லாவகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக்காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “உயிர்கள்” என்கையாலே, சர்வரக்ஷகத்வம் சொல்லிற்று; ‘கோலத் திருமாமகளோடு உன்னைக்கூட’ என்கையாலே, திருமகள்கேள்வனே பிராப்யம் என்றது. அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும் சொல்லுகிறது; 3“கோலத் திருமாமகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்மசொரூபம் சொல்லிற்று; “அடியேன்” என்கையாலே, ஜீவாத்மசொரூபம் சொல்லிற்று; ‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று; ‘உன்னைக்கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று, ‘உன்னைக்கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி சொரூபம் சொல்லிற்று.

காட்டாறு பெருகினால் போலே அத்தை செய்தோம்
காதா சித்தம்
யுகம் தோறும் ராம கிரிஷ்ணாதி அவதாரங்கள் செய்து அருளினாயே
நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும்
குருடன் முன் செய்தாயே
நடந்தும் –
அக்ரே ராம -பிரணவம் போலே நடந்து
வட தேச -ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்
நம் பெருமாளை -ஐதீகம் -சம்பாவானை அருளி –
வடக்கில் இருந்து போர பாட வல்லார் -அத்யாபகர் –
திருப்புன்னை கீழ் திருக்கைத்தல சேவை
எல்லாம் போருமோ -அழகைக் காட்டி அருளினார் –
நின்றும் –
-வில்லை ஊன்றி நின்ற நிலை –
பெருமாளும் இளைய பெருமாளையும் –
பர்த்தாவை கொன்றவரை பார்த்து ஆஸ்ரித்த அடியாரை காக்க செய்து அருளி
தண்ணீர் குடிக்க கட்டிய ஏரியிலே தலை குப்புற விழுவாரைப் போலே
உகவதார் ஸ்திரீகளும் கொண்டாடிய கையும் வில்லுமான நின்ற நிலை

கிடந்தும்
கடல் கரையில் கிடந்த அழகு
கடல் தன்னை போர அளவு -கடல் கடலுடன்  ச்பர்சித்து கிடந்தாப் போலே
கரும் கடல் நோக்கி -கருணை என்னும் கடல் கிடந்தான்
இருந்தும் –
வீற்று இருந்து
திரு அயோதியை உள்ள ஓலக்கம் சிறியது என்னும்படி
வானர வீரர்கள் சூழ இருந்து
நெருப்பு எரியா நின்றால் கிட்டப் போகாத படி –
நூறு ஆண்டு
11000 ஆண்டு என்றுமாம்
யுகம் தோறும் அவதரித்து
உயிர் கள்-சர்வரும் உஜ்ஜீவிக்கும் படி
உயிர் அளிப்பான் எண்ணின்ற யோனியுமாய் பிறந்தாய்
நோக்குகை பணி

நான் கை வாங்கினேன் –
காவல் சோறு – நீ காத்து அருள வேண்டும்
வானர வீரர்களை சுற்றி சுற்றி இரவில் காத்தாயே
பெருமாளும் இளைய  பெருமாளும் சேர்ந்து –
நிதியை நோக்குவாரைப் போலே காத்து பின்பு உறங்க
கையும் வில்லுமாக கொண்டு
கை ஓய்ந்தால்
இரு கையும் விட்டு அவனே ரஷகன் என்ற நினைவே வேண்டும்
உணர்ந்து பார்த்தால் ரஷகன்
தாயும் தகப்பனும் கிட்ட இருக்க நான் இப்படி தளர்வேனோ
அனன்யா-மிதுநமே உத்தேச்யம்
அருளப் பெற்ற பின்பும் சாலப் பல நாள் –
அடியேன் -ஞானம் உணர்ந்த பின்பும் –
உன்னாலே இழந்தாய் கை விட முடியாதே
மிதுனம் பிராப்யம் அறிந்த பின்பும் தளர்வேனோ
ரஷகன் அவனே
ஸ்ரீ ய பதி
நான் ரஷகன் அல்லேன்
ருசி பிறந்த பின்பு நான் இலகவோ
அகார அர்த்தம் இப்பாட்டால் விளக்குகிறார்
சர்வபிராகாரம் சர்வ காலத்திலும் சர்வ ராஷனம்
அகாரம் மிதுனத்துக்கு வாசகம்
பிரியாதவள் அவள் முதலி ஆண்டான் வார்த்தை நஞ்சீயர் கேட்டு சங்கரகித்த
கிடாம்பி ஆச்சான் கேட்டு தேசிகன் தான் கேட்டதாக அருளி
திருமந்திர அர்த்தமும் சொல்லி
அர்த்த பஞ்சக்சமும் சொல்லி
ப்ரஹ்ம  ஸ்வரூபம்
அடியேன் ஜீவாத்மா
உயிர் கள் காப்பான் உபாயம் சொல்லிற்று
கூட என்று பலதையும் சொல்லி
தளர்வேனோவிரோதி ஸ்வரூபம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 11, 2013

  மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனைநான் கண்டு உகந்துகூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே.

பொ-ரை :- மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும்படியாக வாமனாவதாரமாகி வலியைக் காட்டி மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அளந்துகொண்ட ஆச்சரியத்தையுடைய அம்மானே! நான் உன்னை அடைந்து கண்டு மகிழ்ந்து கூத்தாடும்படியாக நீ தானே வந்து கிட்டி இந்தப் பூமியிலே ஒருநாள் நடந்துவரல் வேண்டும்.

வி-கு :- மகிழக் குறளாய்க் காட்டிக் கொண்ட அம்மான் என்க. நான் கூத்தாட நடவாய் என்க, நடவாய்: விதிவினை; நடக்கவேண்டும் என்பது பொருள்.

ஈடு :- இரண்டாம்பாட்டு. 4“வாராய் என்று நிர்ப்பந்தித்து அன்று காணும் நம்மைக் காண்பது; உம்மை ஒரு தேச விசேடத்தே அழைத்துக்காணும் காட்டுவது” என்ன, அவ்வடிவு தன்னையே இங்கே கொடுவந்து இதர சஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ? என்கிறார்.

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் – 1இவ்வளவில் ஸ்ரீ வாமனனாய் வந்து தோற்றிற்றிலையாகில், உபய விபூதியும் அழியுமாகாதே. ஒரு பாட்டம் மழை விழுந்தால் பொருள்களெல்லாம் செவ்வி பெறுமாறு போலே. அன்றிக்கே, உகவாதாரும் மகிழும்படி யன்றோ வந்து தோற்றிற்று என்னுதல். வலம் காட்டி – 2கொடை என்ற குணம் சிறிது கிடக்கையாலே இராவணன் முதலியோர்களைப் போலே அம்பாலே அழிக்கப்போகாதே; அழகாகிற பலத்தைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடி. 3சுக்கிரன் முதலானோருடைய தடை உண்டாயிருக்கச்செய்தே அன்றோ, அழகுக்குத் தோற்றுக் கொடுத்துக்கொண்டு நின்றபடி. குறளாய் –

  கண்ட திறத்திது கைதவம் ஐய!
கொண்டல் நிறக்குறள் என்பது கொள்ளேல்
அண்டமு முற்றும் அகண்டமு மேனாள்
உண்டவ னாமிது ணர்ந்துகொள் என்றான்.- என்பது, கம்பராமாயணம், வேள்விப் பட. 26.

4கோடியைக் காணி ஆக்கினாற்போலே முகந்து கொள்ளலாயிருக்கை. மண்ணும் விண்ணும் கொண்ட – பூமி ஆகாசம் முதலானவற்றைக் காற்கீழே இட்டுக்கொண்ட. இந்திரனுக்குக் கொடுத்த என்னாமல், ‘கொண்ட’ என்கிறது, அவன் அசுரத்தன்மை வாய்ந்தவனாகையாலே அவன் பக்கல் தானே கொண்டானாகக் கொண்டபடியும், தன்னையடைந்தவனான இந்திரனுடைய வேறுபாடில்லாத ரசத்தாலும் என்க.

மாய அம்மானே – 1திருமகள் கேள்வனானவன் இரப்பவனானபடியும், வடிவழகைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடியும், “கொள்வன் நான் மாவலி” என்றாற் போலே சில மழலைச் சொற்களைப் பேசினபடியும், சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்த படியும் தொடக்கமான ஆச்சரியங்களைச் சொல்லுகிறது. 2“தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்” –“தேவாநாம் தானவாநாஞ் ச ஸாமாந்யம் அதிதைவதம்”

என்பது, ஜிதந்தா. -என்கிற ஸ்வாமித்வமன்றோ அங்ஙன் செய்யவேண்டிற்று என்பார் ‘அம்மானே’ என்கிறார். நான் உனை நண்ணி உகந்து கூத்தாட இந்திரன் 3முதலானோர்களைப் போன்று எனக்கு இராஜ்ய அபேக்ஷை இல்லை காண்; நீ செய்து தந்த ஞானத்தாலே நிறைவு பெற்றவன் ஆகிறிலேன். நான் உன்னைக் கிட்டிக் கண்டு உகந்து கூத்தாடும்படி வரவேணும். வருகைக்கு உண்டான வியாபாரம் அவன் தலையது; வந்தால் உகக்கைதான் இவரது செயல். நான் கண்டு உகந்து கூத்தாட – 4மஹாபலியைப்போலே ஒன்று கொடுக்க இருக்கிறேன் அல்லேன்; இந்திரனைப்போலே ஒன்று கொள்ள இருக்கிறேன் அல்லேன்; ‘எனக்கு’ என்று இருப்பாரோடும், ‘என்னது’ என்று இருப்பாரோடுமோ நீ கொடுத்துக்கொண்டு பரிமாறுவது? உன்னையே கண்டு உகப்பார்க்கு உன்னைக் காட்டலாகாதோ? 5“கிருஷ்ணா!எங்களுடைய பரபரப்பினால் மாத்திரம் சந்தோஷமடையும்; இதுதான் எங்களுக்குப் பெரிய செல்வம்” என்கிற இதிலே அன்றோ இவர்க்குச் சம்பந்தம். நண்ணி-நான் இருந்த இடத்தே நீ வந்து கிட்டி. ஒருநாள் – பின்பு ஒருநாள் 1அச் செயல் செய்யலாகாதோ? மண்ணும் விண்ணும் மகிழ நடக்கலாவது அசுரன் முன்பேயோ? வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்கள் முன்பு நடக்கலாகாதோ? ஞாலத்தூடே நடவாய்-நடை அழகில் வாசிகண்டு அதிலே ஈடுபடாதே கொடையைக் கொண்டாடி இருக்கும் அவன் முன்னேயோ நடக்கலாவது? 2நடை அழகில் உள்மானம் புறமானம் கண்டு அதுவே ஜீவனமாயிருக்கிற என்முன்னே நடக்கலாகாதோ?

உம்மை ஒரு தேச விசேஷத்தில் கொண்டு காட்டுவேன்
ஜீவாத்மா தான் பரம பதம் போக வேண்டும்
வாராய் நிர்பந்திக்கலாமா
விபவ அவதாரங்கள் நடந்து வந்தாயே
குறளாய் வலம் காட்டி மண்ணும் விண்ணும் மகிழ
வாமனன் -உபய விபூதியும் நிலைத்து இருக்க
பாட்டம் மழை பொழிந்து-நெல்லுக்கும் களைகளுக்கும்
உகவாதாரும் மகிழும் படி வந்து தோன்றி
அம்பாலே அழிக்க போகாமல் –
அழகாகிய பலம் காட்டி
சுக்ராதிகள் தடுத்தும் அழகுக்கு தோற்றி செய்தானே –
சுக்ரன் சத்யம் சொல்லி  கண் போனது -தானம் தடுத்து
ஆசார்யர் சொன்னதை கேட்காமல் ராஜ்ஜியம் போனது இவனுக்கு
கோணியை காணி சுருக்கி –
மண்ணும் விண்ணும் கொண்ட கால் கீழே
இந்தரனுக்கு கொடுக்காமல் தானே கொண்டான் நினைக்கும் படி
இந்த்ரன் பெற்றதை தான் பெற்றதாக கொண்டான்

கொள்வன் நான் மாவலி மூவடி தா கள்வன்
மாயச் செயல்கள் –
மாய அம்மானே ஸ்வாமி-
தேவர்களுக்கும் தானவர்களுக்கும்  பொதுவான ஸ்வாமி–

இந்தரனுக்கு கார்யம் கொடுத்து இவன் கட்டளை நடத்த விடாமல் இருந்தால்
அவன் தலை இட்டு கார்யம் செய்யத்தானே வேண்டுமே –
பொதுவான ஸ்வாமித்வம் அம்மான்
நண்ணி -நாம் கண்டு கூத்தாட
இந்த்ராதிகள் போலே ராஜ்ஜியம் அபேஷை இல்லை
திருப்தன் -நீ அருளிய
கிட்டி கண்டு கூத்தாட
வருகிற வியாபாரம் அவனது -அவனே உபாயம்
வந்தால் உகப்பது இவர் கார்யம் உபேயம் ஆகுமே
நான் -மகா பலி போலே ஓன்று கொடுக்க இருக்கிறேன் அல்லேன்
இந்த்ரன் போலே கொள்ளக் கொடுக்க இருக்கிறேன் அல்லேன்
நானே நீ எனது உடைமையும் நீ
எனக்கு என்றவர் என்னது என்றவர் உடன் பரிமாறி
உன்னையே கண்டு உகப்பாருக்கு உன்னைக் காட்டல் ஆகாதோ
மகா தனம் -உன்னுடன் கூடி இருந்து அனுபவிப்பதே
ஒரு நாள் –
பின்பு ஒரு நாள் செய்தால் ஆகாதோ முன்பு செய்தது போலே
அசுரர் முன் நடந்தாயே
நான் தான் கொடுத்தான் அஹங்காரம் கொண்டவர் முன்னே நடந்து
நடவாயே இன்னாப்பு தோற்ற அருளுகிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 11, 2013

ஒன்பதாந் திருவாய்மொழி – “நீராய்”

முன்னுரை

    ஈடு :- 1“எங்குச் சென்றாகிலும் கண்டு” என்றும், “வானவர் கோனைக் கண்டு” என்றும் தூதுபோகச்சொன்னார்; அவை போக மாட்டாதபடி தம்முடைய துயர ஒலியாலே அழித்தார்; 2“மரங்களும் இரங்கும்வகை” திருவாய். 6. 5 : 9.-என்று அறிவில் பொருள்கள் இரங்காநின்றால், சிறிது அறிவையுடைய பறவைகள் அழியக் கேட்க வேண்டா அன்றே, 3“ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகா நிற்பர் நீராய்” திருவாய்.
6. 8 : 11.
-என்றது, தூதரை ஒழிய அல்லவே. ஆகையாலே, தம் பக்கத்திலே கால் நடை தந்து போவார் இல்லையே. 4“அறிவில் பொருள்களுங்கூட அழிகிற இடத்தில், பரம சேதனனானவனுக்குச் சொல்லவேணுமோ?” என்று பார்த்து, தம் மிடற்று ஓசையை இட்டு அழைத்துக் கொள்ளப் பார்க்கிறார். 5தம்முடைய துயரத்தைக் காட்டுகின்ற ஓசை கிடக்க, வேறு ஒருவர் போகவேண்டும்படியாய் இருந்ததோ? கலங்காப் பெருநகரமான ஸ்ரீ வைகுண்டத்திலும் தரிக்க ஒண்ணாத படி, கால்குலைந்து வரும்படி பெருமிடறுசெய்து கூப்பிடுகிறார். 7இனித்தான், தூதுபோவார்க்குக் காலாலேயாதல் சிறகாலேயாதல்போகவேண்டுகையாலே தடை உண்டு; இவர் மிடற்று ஓசைக்குத் தடை இல்லை அன்றோ. 1இவர் படுகிற வியசனத்துக்குக் காரணம் சொல்லப்போகாது, பிராட்டி சிறை இருந்தமைக்குக் காரணம் சொல்லப்போகாதவாறு போலே. 2அவள் இருப்பு பிறர்மேல் வைத்த திருவருளாலே ஆனாற்போலே, இவருடைய வியசனமும் பிறர்மேல் வைத்த திருவருளுக்குக் காரணமாய் இருக்கிறபடி. 3அவள் சிறையிருந்தபடியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதிவைக்க இன்று நாடு எல்லாம் வாழுமாறு போலே, அன்று இவர்தாம் வியசனப் பட்டாரேயாகிலும் இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள் உலகத்திற்குத் தண்ணீர்ப்பந்தலாயிற்றது. 4திருக்குழல் ஓசையாலே திருவாய்ப் பாடியில் பெண்கள் எல்லாம் பட்டனவற்றைத் தம்மிடற்று ஓசையாலே அவன் படும்படி பண்ணுகிறார்.

5“வாரீர்! நீர் நம்மை இருந்த இடத்தே இருக்க ஒட்டாமல் இங்ஙன் படுத்துகிறது என்? நாம் உம்மை விட்டுத் தூரப்போனோமோ? ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் அது நம்மைப் பற்றிற்று என்று சொல்லலாம்படி இருக்கிற உலகமே உருவமாக இருக்கும்தன்மையைக் காட்டினோமே” என்று அவன் திருவுள்ளமாக; அதில் குறை என்? நீ உலகமே உருவமாய்க் கொண்டிருக்கிற இந்த ஞானம் எனக்கு இல்லையோ? இந்த ஞானந்தானே அன்றோ “அசாதாரண ஆகாரத்தையும் காணவேணும்” என்னப் பண்ணுகிறது; ஆதலால், எனக்குப் பேறானது கிடக்க, அல்லாதனவற்றைக் காட்டினால் பிரயோஜனம் இல்லை என்கிறார். 1அதுவும் உன் ஐசுவரியத்திற்குப் புறம்பு அல்லாமையாலே வேணுமாகில் அறிதல் செய்கிறேன்; அதனால் வந்தது உன்னதானவற்றை ‘என்னது’ என்று இருக்கிற மயக்கம் நீங்குகிறது. 2அருச்சுனனும் ஸ்ரீ விசுவரூபம் கண்ட உடனே “உம்மைக் கிரீடத்தையுடையவராயும் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்; பல கைகளையுடையவரே, விசுவரூபத்தையுடையவரே, நான்கு கைகளுடன் கூடின அந்த உருவமாக ஆகக்கடவீர்”“கிரீடினம் கதினம் சக்ரஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ருஷ்டும் அஹம்ததைவ
தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பவ விஸ்வமூர்த்தே”-என்பது, ஸ்ரீ கீதை, 11 : 46.

என்கிறபடியே, அசாதாரணமான வடிவை எனக்குக் காட்டவேணும் என்றான் அன்றோ. 3என்னுடைய துயர ஒலியைக் கேட்டு இரங்கி வந்திலையாகிலும், உன்னுடைய விபூதி அழியாமல் நோக்கவேணுமாகில் வா என்கிறார் என்றுமாம். 4இவருடைய துயர ஒலிதான் அவனுக்கு உபய விபூதியிலும் குடி இருப்பு அரிதாய்க்காணும் இருக்கிறது.-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.

பொ-ரை :- தண்ணீராகிப் பூமியாகி நெருப்பாகிக் காற்றாகி நீண்ட ஆகாசமாகிச் சிறப்புப் பொருந்திய சூரிய சந்திரர்களாகிச் சிவனாகிப் பிரமன் ஆனாய்; மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும்படியாகக் கொடியேனாகிய அடியேனிடத்து, கூர்மைபொருந்திய சக்கரத்தையும் வெண்மை பொருந்திய சங்கையும் கைகளிலே ஏந்திக்கொண்டு ஒருநாள் வரவேண்டும்.

வி-கு :- உலகமே உருவமாக இருக்கும் தன்மை, முதல் இரண்டு அடிகளில் கூறப்பட்டது. மகிழ ஏந்தி வாராய் என்க. வாராய் – வர வேண்டும்; விதிவினை. இத் திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

ஈடு :- முதற்பாட்டு 1“உலகமே உருவமாயிருக்கும் தன்மையைக் காட்டித் தந்தோம் அன்றோ” என்ன, அது போராது; அசாதாரணமான வடிவைக் காணவேண்டும் என்கிறார்.

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீர் ஆர் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய் – 2“இது அறியாமல் அவ் வருகே ஆசைப்படுகிறார் என்று கொள்ள ஒண்ணாதபடி, தாம் அறிந்தமை தோற்ற விண்ணப்பம் செய்கிறார். நீராய் – 3நாராயணன் ஆவது பண்டே அறிவன் என்கிறார். “நீர்தோறும்பரந்துளன்” –திருவாய். 1. 1 : 10. “ஆபோ நாரா
இதிப்ரோக்தா:, நீர்கள் நாரம் என்று சொல்லப்பட்டன” என்பது ஈண்டுஅநுசந்தேயம்.

 என்றாரே யன்றோ மேல். 1“அந்தப் பரமாத்மா முதலில் தண்ணீரையே படைத்தார்” என்கிறபடியே, முதல் முதல் தண்ணீரைப் படைத்துப் பின்னர் மண் முதலான பூதங்களை உண்டாக்கி, 2இவற்றைக்கொண்டு காரியம் கொள்ளுமிடத்தில் ஒன்றில் ஒன்று அதிகமாக வேண்டி இருக்குமன்றோ; 3“ஐம்பெரும் பூதங்களும் ஒன்றில் ஒன்று கலத்தல் பெற்றன; ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் பெற்றுள்ளன” என்றே அன்றோ படைக்கும் முறைதான் இருப்பது;ஒன்றில் ஒன்று அதிகமாக’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘ஐம்பெரும் பூதங்களும்’ என்று தொடங்கி.-“ஸமேத்ய அந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாஸ்ரய:”-  என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 2 : 54.

    இந்தச் சுலோகத்தில் “பரஸ்பர ஸமாஸ்ரய:” என்றதனால், ஆஸ்ரய
ஆஸ்ரயி பாவத்தாலும், ஆதார ஆதேய பாவத்தாலும் ஒன்றில் ஒன்று
அதிகமாக இருக்கவேண்டும் என்பது போதரும்.

இவைதாம் ஒருபொருளும் அன்றே; பல பொருள்களாக இருக்கச் செய்தே ஒரே பொருளாக்கி ஒரு காரியம் கொள்ளவேணும் அன்றோ: 2அது செய்யும்போது, குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகும் கூட்டிச் சேரத் துகைத்துக் குடம் முதலான பொருள்களாய்க்கொண்டு தோற்றுவிக்குமாறுபோலே, தண்ணீரை உண்டாக்கி, 3அது நீர்ப்பண்டமாகையாலே அதனோடு கடினமான பொருளைக் கூட்டி, பின்னையும் நெகிழ்ந்திருக்கையாலே அதனைச் சிறிது வலிக்கைக்காக ஒளிப்பொருளை உண்டாக்கி, அதுதான் மிகைத்துத் தீயுமளவானவாறே அதனை ஆற்றுகைக்குக் காற்றினை உண்டாக்கி, அது தனக்குச் சஞ்சரிக்கைக்காக இடத்தைக்கொடுக்கின்ற ஆகாசத்தை உண்டாக்கி. இவ்வளவும் முதலில் சங்கல்பந்தன்னையே கொண்டு அண்டசிருஷ்டியைப் பண்ணி நின்றது. 4இனி, பெரியதொரு மாளிகையைச் சமைத்து இருள் உறைய விட்டுவைக்க ஒண்ணாதே அன்றோ; அதற்கு இரண்டு விளக்குகள் இட்டாற்போலே சந்திர சூரியர்களை உண்டாக்கி. 5நீர்க்களிப்பு அறுகைக்கும் வளர்ச்சி பெறுகைக்குமாக இருவரையும் உண்டாக்கினபடி. அண்டங்களுக்குள்ளே வாழ்கின்றவர்களாய்க்கொண்டு நின்று, ஒருவன் மனைந்து கொண்டுவர ஒருவன் அழித்துக்கொடு வரும்படி பிரம ருத்திரர்களை உண்டாக்கி. ஆயின், சிவனை முறைபடச்சொல்லுவான் என்? என்னில், அழித்தலை முன்னாகக் கொண்டேயன்றோ படைத்தல்தான் இருப்பது. 1‘நீராய் நிலனாய்’ என்றதனோடு ஒக்க, சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்கையாலே, 2“யாதொருவனுக்கு ஆத்மாக்கள் எல்லாம் சரீரமோ, யாதொருவனுக்கு மண் முதலியவை சரீரமோ” என்கிறபடியே, சேதன அசேதனங்கள் இரண்டும் அவனுக்குச் சரீரத்தைப் போன்று பரதந்திரப்பட்டவை என்னுமிடம் சொல்லுகிறது. ‘சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்றும், ‘சிவனாய் அயனானாய்’ என்றும் ஒற்றுமைப்படுத்திச் சொல்லுகையாலே, 3நியமிக்கப்படுகின்ற பொருளோடு நியமிக்கின்றவர்களாக அபிமானித்திருக்கிறவர்களோடு வாசி அற அவனுக்குப் பரதந்திரப்பட்டவர்கள் என்னுமிடம் சொல்லிற்று. 4உலகத்தைப் படைத்தது உன்னை அடைவதற்காக அன்றோ? உன்னை அடைதலைப் பண்ணித் தந்தால் அன்றோ நீ ஒரு காரியம் செய்தாயாவது? படைப்புக்குப் பிரயோஜனமாவது, எப்பொழுதும் துக்கத்தை அடைந்துகொண்டிருக்கிற ஒருவனை அந்தமில் பேரின்பத்தே கொடுபோய் வைக்கை அன்றோ. அது கிடக்க, இதனை உண்டாக்கியதற்குப் பிரயோஜனத்தை நீ பெறவேண்டாவோ? 5‘நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’என்று, இவர் தமக்கு ஈசுவர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப்போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.

கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி – 1ஸ்ரீ பாஞ்சஜன்யத்தில் வெண்மைபோன்று திருவாழியில் கூர்மையும் இவர்க்குக் கவர்ச்சியாயிருக்கிறபடி 2பகைவர்களைத் துணிக்கத் துணிக்கச் சாணையில் ஏறிட்டாற்போலே கூர்மை மிக்கிருத்தலின் ‘கூர்ஆர் ஆழி’ என்கிறது. 3அசாதாரண விக்கிரஹத்துக்கு லக்ஷணமோ தான் கையும் திருவாழியுமாயிருக்கை. கொடியேன்பால் – 4எனக்கு இங்ஙனே ஒரு நிர்ப்பந்தம் உண்டாவதே! என் சொரூபத்திற்கு விரோதங்காண் நான் பண்ணுகிறது. 5ஸ்ரீ பரதாழ்வானைப்போலே பொகட்ட இடத்தே கிடக்க வல்ல தன்மையனாகப் பெற்றிலேன்; இளையபெருமாளைப்போலே, ‘நில்’ என்ன, “என்னை அடியவனாகக் கொள்” “குருஷ்வமாம்” என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 22.– என்று நிர்பந்திக்கும் தன்மையனாவதே! வாராய் – 6ஆசைப்பட்டாலும் நடக்கவல்லார் வருமித்தனை அன்றோ. ‘வாராய்’ என்ற அளவிலே வந்து கொடு திரியப்போமோ? என்னில், ஒருநாள்-விடாயர் ‘ஒரு கால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர்’ என்னுமாறு போலே ‘ஒருநாள்’ என்கிறார். மண்ணும் விண்ணும் மகிழவே –7எனக்காக வந்திலையாகிலும் உன் விபூதி அழியாமைக்கு வா என்கிறார். 8‘மானாவிச்சோலைபோலே ஆவது-மானாவிச்சோலை – மஹா நவமியில் செய்யும் அலங்காரம்.-அழிவதான இதுபோனால் என்செய்யவேணும்?’ என்று இருக்கிறாயாகில், அவ்விபூதியும் அழியுங்காண்; இது அழியவே 1அதுவும் அழிந்ததாமன்றோ. அதுவும் இருக்கச்செய்தே அன்றோ, இது அழிய 2“அந்தப் பரமாத்மா தனித்து இருக்கும்போது சந்தோஷத்தை அடைய இல்லை” என்றது. 3இனித்தான், பிரளயத்துக்கு அழியாது என்ற அளவில், துன்பத்துக்கும் அழியாது என்றதாகாதே! மகிழவே -அழிகை தவிர்ந்து தரிக்கைக்காக.

கதறுகிறார் ஆழ்வார்
பெரும் மிடறு -பரம பதம் வரை கேட்கும் படி
அவை போக முடியாதபடி
பதிகம் கேட்பார் நீராய் உருகுவார் நிகமத்தில்
பறவைகளும் நீர் பண்டமாக உருக
ஆர்த்த்க த்வனியால்
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ கூவுமால் –
பரிசரத்தில் கால் நடை தந்து போவார் யாரும் இல்லையே
அசேதனமே உருக பரம சேதனன் கூப்பிட  -ஆற்ற த்வனி கிடக்க
வேறு தூது வேண்டுமோ –
ஸ்ரீ வைகுண்டத்திலும் தரிக்க ஒண்ணாத படி
தெளி விசும்பு திரு நாடு
கலக்குவார் இல்லை
கால் பொருந்தி இருக்க முடியாதபடி
காலால் நடக்க காலோ சிறகோ நன்றாக இருக்க வேண்டுமே
மிடற்று ஓசைக்கு தடை இல்லையே
பிராட்டி சிறை இருந்த ஹேது சொல்ல முடியாதது போலே
இவள் விசனமும்
அவள் விசனம் பிறர் துக்கம் தீர்க்க
சிறை இருந்தவள் ஏற்றம் அது
இவளும் அதே போலே
துக்க துக்க பட பாசுரம் வந்து உலகம் திருந்த
பரன் அனுக்ரகதுக்கும் இலக்கா ஆகுமே –
வால்மீகி ஸ்ரீ ராமாயணம் கொண்டு நாடு எல்லாம் வாழ்வது போலே
மதுர கவி ஆழ்வார் பட்டோலை கொண்டது தண்ணீர் பந்தல் ஆயிற்று –
இவர் துக்கம் கேட்டு அவனும் துக்கம்
குழல் ஓசை கேட்டு கோபிகள் துக்கம் பட்டது போலே
குழலின் மலிய சொன்ன ஆயிரம்  கேட்டு அவனும் வருந்துவானே
வாரீர் நீர் நம்மை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாது படுத்துகிறீர்
நாம் உம்மை விட்டு தூரப் போனோமோ
ஜகதாகாரம் காட்டினேன் என்றான்
அதில் குறை என்
இந்த ஞானம் எனக்கு உண்டு
அந்த ஞானமே அசாதாரண ஆகாரம் காண -தனிப்பட்ட திவ்ய மங்கள விக்ரக சேவை
இதுவே எனக்கு பிராப்யம்
இதை காட்டாமல் –
அல்லாதவை காட்டுவது அப்ரயோஜனம்
என்னுடைய வஸ்து ஒன்றும் இல்லை என்கிற ஞானம் ஏற்படுகிறது
எல்லாம் உனது ஐஸ்வர்யம் நினைக்க இவை உதவும்
நீராக சேவிக்க ஆசடை உண்டே
பெரிய பணக்காரர் குடும்பத்தார்
அவரை நேராக பார்த்து கலக்க ஆசைப்பட்டது போலே –
அசாதாராண தனிப்பட்ட திவ்ய மங்கள விக்ரஹ சேவை வேண்டும்
கோயிலிலே சென்று இதனால் தான் சேவிக்கிறோம்-
சிந்தனை ஒருங்கி அனுபவிக்க –
பரார்ச்சை -திருக் கோயிலில்
சுயார்ச்சை கிரகத்தில் –
ஆழ்வார்கள் அர்ச்சாவதார சேவை ஈடுபட்டு
அத்யாந்த கிரந்த  நிர்மாணம் -அவபோதனம்
அவபோதனம் பிறர்க்கு சொல்லி
அர்ச்சாவதார சேவை பலன்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் குண அனுபவம் கைங்கர்யத்தில் ஈடு பட்டு போக்குவதே –
உன் அனுபவம் திருப்தி அடைய  நேராக வர வேண்டும் –
விஸ்வரூபம் சேவித்த அர்ஜுனன்
தேனைய ரூபேண-சதுர புஜம் சங்கு சக்கரம் உடன் காட்ட பிரார்த்தித்தான் -சக்ர ஹஸ்தம் கிரீடம் உடன் சேவை –

கொடியேன் பால் வாராய்
வருகிறது இல்லை
வா வர வேண்டும்
இரண்டையும்
சொல்லி –
ஆற்ற த்வனி கேட்டு உன்னுடைய விபூதி அழியாமல் அறுக்க வா
ஆற்ற த்வனியால் உன்னுடைய உபய விபூதியும் அழிக்க
போகிறது
இதற்காகவாவது வர வேண்டும்
குடி இருப்பு அரியதாக இருக்குமே த்வனி
பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்
நீராய்
நிலமாய்
தீயாய்
காலாய்
நெடு வானாய்
சிவனாய்
அயனாய்
பிரகாரியாய் இருக்கும் தன்மை காட்டி
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி
இது அறியாமல் அவ்வருகு ஆசைப்பட வில்லை
அறிந்தது எல்லாம் தெரிவிக்கிறார்
நீராய் -நாராயணன் ஆவது பண்டே அறிந்தேன்
நீர்-ஜலம் -ஆபோ-நரத்தில் உள்ளவன் நாராயணன்
நீர் தோறும் பரந்துளன் மயர்வற மதி நலம் அருளி அறிந்து வைத்தாரே
பஞ்ச பூதங்கள்
முதலில் நீர் பிரத்வ்யாதி -ஓன்று ஓன்று அதிகமாக கலசி
பஞ்சீகரணம் பண்ணி –
சிருஷ்டி க்ரமம்-ஒன்றுக்கு ஓன்று தொடர்பு படுத்து –
ஏக த்ரவ்யம் இல்லை இவை
அநேக த்ரவ்யமாக இருந்தும் –
அனந்த பட்டாச்சார்யர் -உரலில் காகிதம் அரைத்து கூழாக்கி வாகனம் செய்வாராம் –
செருகு மண் நீர் சேர துகத்தி கடாகாதிகள் கொண்டு
ஆற்ற காற்றை உண்டாக்கி
சஞ்சரிக்க ஆகாசம் உண்டாக்கி
தத்வம் சிருஷ்டிக்க இந்த க்ரமம்
ஞான வேளை க்ரமம் வேற அனுஷ்டான வேளை க்ரமம் வேற போலே –
அண்ட சிருஷ்டியை பண்ணா நின்றது
மாளிகை சமைத்து இரண்டு விளக்கு போலே சந்திர சூர்யர்களை உண்டாக்கி
நீர்க்கடுக்கை அறுக்க -தேஜோ கார்யம் வேண்டுமே
சிவனாய் அயனாய்

அழித்தும் படைத்தும்
ருத்ரனை முற்பட சொல்லி
அழிந்த வஸ்து அப்புறம் உண்டாகிறது –
ஏற்கனவே இருந்து அழிந்தது –
சிருஷ்டியில் ஆரம்பித்தால் முதல் சிருஷ்டி தப்பான அர்த்தம் உண்டாக்கலாமே
புரம் ஒரு மூன்று எரித்து -முதலில் சொல்லி
இவனுக்கு சமம் இல்லை
நீராய் -என்றதுடன் ஒக்க –
சேதன அசேதனங்கள் எல்லாம் சரீரம்
சுடர்கள் இரண்டாய் நியமிக்கப்படுபவர்கள் -அவர்கள் போலே சிவனும் பிரமனும்
ஈசிதவ்யங்கள் ஈஸ்வர அபிமானிகளும் -வேறு பாடி இன்றி பரர்தந்த்ரம்
சாமான அதிகாரம் –
ஜகத் சிருஷ்டி -ஸு ப்ராப்தி
பிரயோஜனம் -நித்ய துக்கிகளை அந்தமில் பேர் இன்பம் பெற வைக்க தானே –

பிராட்டி ஜீவாத்மா -தப்பாக சொல்லி
பிரளய காலத்தில் அழிய மாட்டாள் –
அடிப்படை அறியாமல்
ஜீவாத்மாவும் நித்யம்
ஸ்வரூபம்  ஸ்வாபம் விகாரம் அறியாமல்
நித்ய விபூதி அறியாமல் வேதாந்த விசாரம் செய்து –
ஒன்றும் யாதும் இல்லாத அன்று ஒன்றி இருக்க
அங்கெ அசித் அவிசிஷேதம்
அதிலே அவனுக்கு பிரீதி இல்லை
கைங்கர்யமே உகந்த அடிமையே புருஷார்த்தம்
ஞானம் பெற்று வர வேண்டும்
கோமா உடன் கூடி இருக்குமா போலே கூடாதே
ஈஸ்வர வியாபாரம் எல்லாம் மனை அடைவே எண்ணிக் காட்டுக் காட்டுகிறார் –
பிரத்யஷ ஞானம்
திரு ஆழிக்கு கூர்மையும்
சங்குக்கு வெண்மையும் இவருக்கு ஆகர்ஷம்
பிரதி பஷம் துணிக்க துணிக்க சாணை ஏறிட்டால் போலே கூர்மை மிகுந்து
கொடியேன் -வாராய் கூப்பிடுவதே பாவம்
அவனே வர இருக்க பரதனை போலே பொகட்ட இடத்தில் இல்லாமல்
ஆசை பட்டாலும் என்னால் நடக்க முடியாது
நீ வரலாமே -சக்தி உண்டே
வந்து கொடு திரியப் போமோ என்றானாம்
ஒரு நாள் -ஒழியாமல் என்ன கார்யம்
உளன் ஆக
விடாயார் சொட்டு நீர் கேட்பது போலே
எனக்காக வந்திலை என்றாலும் உபய விபூதி அழியாமல் இருக்க வா
மண்ணும் விண்ணும் மகிழ –
அழியாமல்
லீலா விபூதி அழியட்டுமே
மாநாவிச் சோலை மகா நவமி கொண்டாட்டம்
நவராத்திரி போலே ஆக்கி அழித்து-
அலங்காரம் போலே லீலா விபூதி
மண்ணும் மட்டும் இல்லை
விண்ணும் நித்ய விபூதியும் அழியும்

அதுவும் இருக்க செய்தே -இது அழிந்தால்
ச ஏகாகி ந நமீதா சந்தோஷம் இன்றி இருப்பையே
அது தரிக்க நீ வர வேண்டும்-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருமொழி-2-5-3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 11, 2013

உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில்  சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே —-2-5-3-

கண்டு கொண்டேன் -ஒவ் ஒன்றிலும் சேர்த்து
உலகுய்ய நின்றானை கண்டு கொண்டேன்
விளையாட வல்லானை கண்டு கொண்டேன்
தடம்பருகு கருமுகிலை கண்டு கொண்டேன்
தஞ்சைக் கோயில் தவ நெறிக்கோர் பெரு நெறியை கண்டு கொண்டேன்
வையம் காக்கும் கடும்பரி மேல் கற்கியை கண்டு கொண்டேன்

——————————————————-

வியாக்யானம் –

உடம்புருவில் மூன்று ஒன்றாய் –
உடம்பினுடைய படியில் –
உடம்பினுடைய பிரகாரத்தில் –
மூன்றும் ஒன்றாம் படியை உடைத்தாய் –
ஸ்வேந ரூபேண நின்றும்
ப்ரஹ்மாதிகளுக்கு அந்தராத்மாவாய் நின்றும்
இப்படிகளால் இதுவே சரீரமாம் இடத்தில்
ஒருபடிப் பட்டு இருக்கும் –

மூர்த்தி வேறாய் –
ஆனால் மூன்றும் ஒக்கும் இறே –
யேஷாம் சாம்யே ஸ்த்திதம் மன-
முன்பு ஐக்கியம் சொலி வைத்து பின்னை சாம்யம் சொன்னான் இறே –

(வித்யா விநய சம்பன்ன–பண்டிதன் சம தர்சன -இஹைவ -சம்சாரம் வெல்லுகிறான்
ஐக்கியம் சாம்யம் இரண்டும் -சரீராத்ம -பாவம் கொண்டு ஐக்கியம் -ப்ரஹ்மாத்மகம் ஆகாரம் –
சாம்யாபத்தி அங்கும் உண்டே -)

(முதலாம் உருவம் மூன்று என்பர் ஒன்றே முதலாம் –நின் அகத்தே அன்றோ நாபி கமலம் –
நீ கொடுத்த சாம்யம் -இருவருக்கும் நடுவில் -விஷ்ணு -உபேந்த்ரன் தேவர்களுக்குப் போலே
தன்னுடைய திருமேனி தனக்கு விதேயம் போல் ப்ரஹ்மாதிகளும் விதேயம்
ஜனார்த்தன் தானே மூன்று வடிவம் உடம்பு உருவில் ஒன்றாய் -ஐக்கியம்
த்ரி மூர்த்தி ஐக்கியம் போக்க மூர்த்தி வேறாய் -மூர்த்தி -சப்தம் ஸ்வரூப பரம்
ஆத்மா வேறே வேறே -ப்ரஹ்மாதிகள் ஜீவா ஸ்வரூபம் ப்ரஹ்மத்தின் திவ்யாத்ம ஸ்வரூபம் வேறே வேறே
சரீர பூ தர்கள் இவர்கள் சரீராத்மா பாவம் சொன்னது –ஏஷாம் ஸ்லோகம் பிரமாணம் –
ஸ்வரூப பேதமும் –சாம்யம் சம தரிசன -ப்ரஹ்மத்திடம் நிலை பெறுகிறான் இரண்டும் கீதையில் உண்டே
பேத ஸ்ருதி -அபேத ஸ்ருதி -இரண்டையும் கடக ஸ்ருதி கொண்டு சமன்வயப்படுத்த -ஒருங்க விட -வேண்டும்
தர்சனம் பேத ஏவச -கேவல சாம்ய வாதம் நிரசனம்–முதல்வனாம் ஆதி –இணைவனாம் எப்பொருள்களுக்கும் )

இப்படி நிற்கிறது தான் எதுக்காகா என் என்னில் –

உலகுய்ய நின்றானை –
ஸ்ருஷ்டி ஸ்திதி சம்காரங்களாலே
ஜகத் ரஷணத்துக்காக வாயிற்று -இப்படி நிற்கிறது –

அன்று பேய்ச்சி விடம்பருகு வித்தகனைக் –
ஸ்ருஷ்டமான ஜகத்திலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
பூதனை உடைய விஷத்தை பருகின
விஸ்மய நீநன் ஆனவனை –

இங்கு விஸ்மயம் என் என்றால்
முலை வழியே பிராணனும் மாளும்படியாக விஷத்தை
பருகின படியைச் சொல்லுதல்
அன்றிக்கே
அவள் தாய் வடிவு கொண்டு வரச் செய்தேயும்
முலைப்பால் விசேஷத்தால் வேற்று முலை என்று அறிந்து
புஜித்த படியைச் சொல்லுதல் –

கன்று மேய்த்து விளையாட வல்லானை-
சர்வஸ்ய ஜகத பாலௌ  த்ஸபாலௌ பபூவது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
வரை மீ கானில் -தடம்பருகு கருமுகிலை-

இவ்விடத்துக்கு பட்டர் அருளிச் செய்தார் என்று பிரசித்தம் இறே
இவ்விடத்துக்கு ஜீயர் அருளிச் செய்யா நிற்க
பிள்ளை அழகிய மணவாள பெருமாள் அரையர் ஸ்மரிப்பித்து அருளின வார்த்தை யாயிற்று
மலை மேல்
காட்டிலே உண்டான தடாகங்களிலே கன்றுகள் பின்னே போய்
இளைத்து வந்து தண்ணீர் குடிக்கப் புக்கால்
இளம் கன்றுகள் ஆகையாலே நீரிலே முன்னே இறங்கி குடிக்கப் பயப்படுமே –
அத்தை நீரூட்டுக்கைகாக  தான் பின்னே கையைக் கட்டி
கவிழ்ந்து நின்று தண்ணீர் அமுது செய்யும் ஆயிற்று –
ஜாதி பிரயுக்தமான ஸ்வபாவத்தை சொன்னபடி –
(இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி-கன்று மேய்த்து இனிது உகந்த காளை அன்றோ )

தஞ்சைக் கோயில் –
ஜகத்தை அடைய நோக்குகைகாக
பெரிய ஏற்றதை உடைய
தஞ்சை மா மணிக் கோயிலிலே நிற்கிற –

தவ நெறிக்கோர் பெரு நெறியை –
ஸ்வ ப்ராப்தி உபாயங்களில்
பெரு நெறியாய் உள்ளவனை –
வழி தப்பி –
சிறு காநெறியே போனாலும் தன் பக்கலிலே கூடி
பிரவேசிக்கும் படி இருக்கை
வியபிசரியாத சாதனம் என்றபடி –
(அதி ரிக்த -உயர்ந்த -தபஸ் -நியாசம்-பிரபத்தி அன்றோ )

வையம் காக்கும் கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன் –
ஜகத்தை அடைய நோக்குகைகாக
பெரிய வேகத்தை உடைய குதிரையின் மேலே ஏறி
அந்த குதிரை காலிலே பிரதிபஷத்தை துகைத்து
பொகடும் வடிவை உடையவனை ( விஷ்ணு யஸஸ் பிள்ளையாக சம்பளம் அவதாரம் )
பரி செலவு
கடிதான  செலவை உடைத்தாய் -மேலான பரியை –

கடி பொழில்  சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –
ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய
ரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்

—————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-5-2-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 10, 2013

அப்ராப்த விஷயங்களில் சம்சாரிகள் மண்டி இருக்க
பரம போக்யமாக அவன் இருக்க வும் அவர்களை
விட மாட்டாத பரம காருண்யத்தால்
இப்பாசுரம் =

பூண்ட வத்தம் பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப்
பொய் நூலை மெய் நூல் என்று என்றும்  ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின்
எந்தை என் வணங்கப் படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்ற வூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கன லெரி வாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-2-

நீண்ட வத்தக் கருமுகிலை-அபரிச்சேதய அவ்வஸ்துவை -காள மேக ஸ்யாமளன்
நித்திலம் -முத்துத் திரள்

—————————————————

வியாக்யானம் –

பூண்ட வத்தம் –
பூண்ட அவத்தம் -அவத்தம் பூண்டு –
வ்யர்த்தமான கார்யங்களை ஏறிட்டுக் கொண்டு –
சாத்விகரோட்டை சஹ வாசமும்
வைதிக புருஷார்த்தங்களைப் பெற வேணும் என்னும் அதுவும் -தவிர்ந்து
வ்யர்த்தமான வற்றை   ஏறிட்டுக் கொண்டு –

பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப் –
பிறர்க்கு அடைந்து-பிறர்க்கு தொண்டு பட்டு –
அப்ராப்த விஷயங்களிலே
ப்ராப்த விஷயத்தில் போலே
இருக்கத் தாழ்வு செய்து –
அசேவ்யரை சேவித்து –

பொய் நூலை மெய் நூல் என்று என்றும்  ஓதி  மாண்டு –
விப்ரலம்ப கரராயும் ப்ராந்தராயும் உள்ளவர்கள்
தம்தாமுடைய புத்தியாலே வரைந்த சாஸ்த்ரங்களை
வைதிக சாஸ்திரம் போலே இருக்க
ஆதரித்து அப்யசித்து பின்னை அவற்றின் உடைய ஸ்வரூபம் இருந்தபடியை ஆராய்ந்து
மீளுகைக்கு அவகாசம் இல்லாதபடி முடிந்து-

அவத்தம் போகாதே-
இஹ லோகம் பர லோகங்கள் இரண்டிலும்
வ்யர்த்தமே போகாதே –

வம்மின் –
கெடுவிகாள்
கடுக வந்து நில்லுங்கோள் –

எந்தை என் வணங்கப் படுவானை –
எனக்கு ஜனகனாய்
எனக்கு சென்று ஆஸ்ரயிக்கலாம் படி
சீலவானாய் உள்ளவனை –

கணங்கள் ஏத்தும் -நீண்ட வத்தக் கருமுகிலை-
அறிவுடையார் திரள நின்றேத்துகிற
அபரிச்சேத்யமான அந்த வஸ்துவை –
அன்றிக்கே –
நீண்ட வத்தக் கருமுகிலை-
என்றாய் நீண்ட ஹஸ்தகத்தை உடைய -என்னுதல்
(கால தேச வஸ்து அபரிச்சேத்யன் –அத்தை -ஹஸ்தத்தை )

எம்மான் தன்னை –
திருவடி தோற்ற துறையில் ஆயிற்று
இவரும் தோற்றது –
சர்வ பூஷண பூஷணார்ஹ கிமர்த்தம் நவி பூஷிதா –

நின்ற வூர் நித்திலத்தைத்-
திரு நின்ற ஊரில்  நிற்கிற ஸ்ரமஹரமான
முத்துத் திரள் போலே இருக்கிறவனை –

தொத்தார் சோலை காண்டவத்தைக் கன லெரி வாய்ப்பெய்வித்தானைக் –
தொத்தார்ந்து இருந்துள்ள சோலையை உடைத்தான
காண்டாவனத்தை கனன்று கொண்டு வருகிற
அக்நியின் வாயிலே பிரவேசிப்பித்தவனை –
அர்ஜுனனும் கிருஷ்ணனுமாய் பூம் பந்து யேறிட்டு
விளையாடா நிற்க -அக்னி பகவான் பசித்தேன் என்ன-பின்னை –
அக்காட்டை அவனுக்கு விருந்தாக விட்டு கூட நின்று
புஜிப்பித்தான் இறே –
இந்த்ரன் கோபத்தாலே வர்ஷிப்பிக்க
அர்ஜுனன் சர கூட்டமாக கட்ட -மேலே வழிந்து போயிற்று இறே –

கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே –
காட்டுத் தீயில் வர்ஷித்தாற் போலே
நோவு படுகிற சம்சாரத்திலே
காணப் பெற்றேனே
(காட்டுத்தீயை விளைவித்தவன் தானே இப்பொழுது சம்சார காட்டுத்தீயை அவிக்க உள்ளான்
கரு முகில் அன்றோ -வர்ஷிப்பித்து ரக்ஷித்து அருளுவான் )

—————————————————————— .

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்