திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?

பொ-ரை :- யுகங்கள்தோறும் பூலோகத்திலே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் மிகப் பலநாட்களாக உயிர்களைப் காப்பாற்றுகின்றவனே! அழகிய பிராட்டியாரோடு சேர்ந்திருக்கின்ற உன்னை அடியேன் அடையாமல் மிகப் பலநாள் இன்னம் தளர்வேனோ?

வி-கு :- ஞாலத்தூடு – பூமியிலே. அடியேன் உன்னைக் கூடாதே இன்னும் தளர்வேனோ? என்க, சால : மிகுதியைக் காட்டும் உரிச்சொல்.

ஈடு :- மூன்றாம்பாட்டு. 3உலகமே உருவமாக இருக்கிற வடிவு காட்டினது போராது; அசாதாரணமான விக்கிரஹத்தைக் கொடு வந்து காட்டவேணும் என்றார் முதற்பாசுரத்தில்; அது உமக்குக்காட்டுவது ஒரு தேசவிசேடத்தே கொடுபோய்க் காணும் என்ன, அது தன்னை இங்கே கொடுவந்து இதர சஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ என்றார் இரண்டாம் பாசுரத்தில்; அது ஒரு நாள் சற்றுப்போது காட்டாறு பெருகினாற்போலே செய்தோம் என்ன, ‘அது ஒரு காலத்திலே நிகழ்வது’ என்ன ஒண்ணாதபடி யுகந்தோறும் இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்து காப்பாற்றுதல் உன்னுடைய சுபாவமாக இருக்க, நான் நோவுபடக் கடவேனோ என்கிறார்.

ஞாலத்தூடே நடந்தும் – 1எப்பொழுதும் காணக்கூடியவர்கள் முன்னே நடக்கக்கடவ நடையை, யாதானும் ஒரு காலத்தில் வந்தாலும் பாராதவர்கள் முன்னே காணும் நடப்பது; குருடர்களுக்கு முன்னே நடக்குமாறு போலே. 2“ஸ்ரீராமபிரான் முன்னே நடந்து சென்றார்” “அக்ரத: ப்ரயயௌராம:” என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 1.
-என்றும், 3“பின்னர் விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு சக்கரவர்த்தித் திருமகனாய் வீரராய் மஹாபல முள்ளவராய் இராமன் என்ற பிரசித்தியுடையவராக இந்தப் பூமியில் சஞ்சரித்தார்” என்றும் சொல்லுகிறபடியே, நடந்தும். 4வடதேசத்தினின்றும் போரப் பாடவல்லவராயிருப்பார் ஒருத்தர் ‘பெருமாளைத் திருவடிதொழ வேணும்’ என்று வர, ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் ஒரு தீர்த்தத்தின் அன்று இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்து, பெருமாளை ஒரு மத்த கஜத்தைக் கைவசப்படுத்துமாறு போலேஏத்தி வசமாக்கிக் கணிசம்கொண்டு, “நாயன்தே! தேவரீர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருவன் தேவரைத் திருவடிதொழ நெடுந்தூரமுண்டு வந்திருக்கிறது; இவனை அழைத்துக்கொண்டு சம்பாவனை பண்ணி யருளவேணும்” என்ன, அவரைப் பெருமாள் அருளப்பாடிட்டு, திருப்புன்னைக்கீழ் நின்றும் அவர் நின்றவிடத்தே திருக்கைத்தலத்தே எழுந்தருளி, விண்ணப்பஞ்செய்வார்களை அருளப்பாடிட்டு, “வாரீர்கோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம் போருமோ செய்த தரம்?” என்று திருவுள்ளமானார்; 1அப்படியே அன்றோ நம் இழவுகளும் திருவுள்ளத்தேபட்டு, அவை எல்லாம் ஆறும்படி முகம் தந்தருளும் படியும்.

நின்றும் – 2“கம்பீரமான வில்லைப் பிடித்துக்கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும் தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ – “அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.

தன் கணவனைக் கொன்ற பெருமாளைத் ‘தப்பச்செய்தீரே’ என்கையன்றிக்கே, இவரது குற்றமுண்டோ? தம்மை யடைந்தவர்களுடைய பகையைப் போக்கத் தவிர்வர்களோ? இவனும் அநுகூலித்தானாகில் ரக்ஷியாரோ? தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து சாவாரைப்போலே தன் குற்றத்தால் கெட்டானத்தனை காண் வாலி என்றாள் அன்றோ! இப்படி உகவாதாருடைய பெண்களுக்கும் கவர்ச்சி கரமாம்படியன்றோ கையும் வில்லுமாய் நிற்கும் நிலை இருப்பது. கிடந்தும் – 3“பாம்பின் உடல்போலே இருக்கிறதிருக்கையைத் தலைக்கு அணையாகக்கொண்டு பகைவர்களை அழிக்கும் பெருமாள் கிழக்குமுகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு சமுத்திரத்திற்கு நேர்முகமாகப் படுத்தார்” என்கிறபடியே, கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடைதானே இலங்கை குடிவாங்க வேண்டும்படி இருக்கை. “பிரதிசிஸ்யே-எதிராகப் படுத்தார்” என்கிறதாயிற்று, கடல்தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று, அதற்காக, ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை; “கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி” என்னும்படி அன்றோ. இருந்தும் –

அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹு ம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந:”-  என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 1.

1“அலங்காரஞ்செய்து உட்கார்ந்திருக்கிறவரை” உபவிஷ்டம் ஸ்வலங்கிருதம்” என்பது, ஸ்ரீராமா. அயோத்.
16 : 8.
-என்றும், 2“பர்ண சாலையில் எழுந்தருளியிருக்கிற சடையோடு கூடிய இராமனை” என்றும் சொல்லுகிறபடியே இருக்கை. 2“திருவயோத்தியி லிருக்கும் பேரோலக்கம் சிறியது” என்னும் படியன்றோ தனியிடத்தில் ஓலக்கம் இருந்தபடி. உடஜேராமமாஸீநம் ஜடாமண்டலதாரிணம்
க்ருஷ்ணாஜிநதரம் தம்து சீரவல்கலவாஸஸம்
ததர்ஸ ராம மாஸீநம் அபித: பாவகோபமம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 25.

அந்த ஓலக்கத்தில் கிட்டும் தம்பிக்கும் கிட்ட ஒண்ணாதபடி அன்றோ இந்த ஓலக்கம் இருந்தபடி: “சுற்றிலும் நெருப்புப்போல் இருக்கிறவரை” என்கிறபடியே, நெருப்பு எரியா நின்றால் கிட்டப்போகாதவாறு போலே கிட்டுதற்கு அரியராயிருந்த இருப்பு.சாலப்பலநாள் – 1உன்னுடைய ரக்ஷணம் அநாதி அன்றோ? அன்றிக்கே, நூறு ஆண்டு பதினோராயிரம் ஆண்டு என்றுமாம். உகந்தோறும் – 2“யுகங்கள்தோறும் பிறக்கிறேன்” என்னுமாறு போலே. உயிர்கள் – 3ஒரு திருவடி, திருவனந்தாழ்வான், பிராட்டி இவர்களுக்காக அன்று கண்டீர், எல்லா ஆத்மாக்களையும் ரக்ஷிப்பது அன்றோ உன்னது. காப்பானே – 4இவர்களுக்கு அழித்துக் கொள்ளூகை பணியானாற்போலே அன்றோ அவனுக்கும் நோக்குகை பணியானபடி. 5நான் கைவாங்கினேன், இனிக் காவற் சோர்வு படாமல் வேணுமாகில் நோக்கிக்கொள். 6“இராம்பிரானாலும் இலக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை” “ராமலக்ஷ்மண குப்தா ஸா ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை: அபி ஸுராஸுரை:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.
– கடற்கரையிலே விட்டபோது பெருமாளை நோக்குகைக்கு, தம்பிமார் மஹாராஜர் மைந்தர் துவிவிதர்கள் உள்ளிட்ட முதலிகள் எல்லாரும் இலங்கையிலே கிட்ட, ஆகாசம் எல்லாம் வெளிக் காவல் அடைத்து, நிதி நோக்குவாரைப்போலே பெருமாளை நோக்கிக்கொண்டு கிடக்க, இவர்கள் இத்தனைவரும் கண் சோர்ந்த அளவிலே, பெருமாள், தாம் கையும் வில்லுமாய்க் கொண்டு இவர்களுக்குப் புறம்பே நின்று உலாவினார் அன்றோ. அவன் நோக்குகைக்கு இத்தலை கண்செம்பளிக்குமத்தனை யன்றோ வேண்டுவது. நாம் அவனுக்கு ரக்ஷகராக நினைத்திருக்குமது 1மயக்கம். அன்றோ; உணர்ந்து பார்த்தால் ரக்ஷகனாக வல்லான் அவனே அன்றோ. கோலம் திருமாமகளோடு உன்னைக் கூடாதே – 2தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப்பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும். 3“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.

இன்னும் தளர்வேனோ – 4முன்னம் அநாதிகாலம் இழந்த நான் இன்னம் பலகாலம் இழக்கவோ? அடியேன் – 5அது கிடக்க, “உன்னாலே இழந்தாய்” என்று சொல்லிக் கைவிடலாம் என்று இருக்கிறாயோ? இன்னும் தளர்வேனோ – 6“ஒரு மிதுநம் எனக்குப்பேறு” என்று அறிந்தபின்பும் தளருமத்தனையோ? 1‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல், ‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல், ‘எனக்கு நான் உரியேள்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு; ருசி பிறந்த பின்பு இழக்கவோ?

2இப் பாசுரத்தால், அகாரத்தின் பொருளை முறைப்படி வியாக்கியானம் செய்கிறார்; “அவ-ரக்ஷணே” அன்றோ தாது. ரக்ஷிக்குமிடத்தில், எல்லாவகையாலும் ரக்ஷிக்கவேண்டும்; அதுதான் எல்லாக் காலமும் ரக்ஷிக்கவேண்டும்; அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாகவேண்டும்; இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில், “குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும், “என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று; ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று. “ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே, எல்லாவகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக்காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “உயிர்கள்” என்கையாலே, சர்வரக்ஷகத்வம் சொல்லிற்று; ‘கோலத் திருமாமகளோடு உன்னைக்கூட’ என்கையாலே, திருமகள்கேள்வனே பிராப்யம் என்றது. அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும் சொல்லுகிறது; 3“கோலத் திருமாமகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்மசொரூபம் சொல்லிற்று; “அடியேன்” என்கையாலே, ஜீவாத்மசொரூபம் சொல்லிற்று; ‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று; ‘உன்னைக்கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று, ‘உன்னைக்கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி சொரூபம் சொல்லிற்று.

காட்டாறு பெருகினால் போலே அத்தை செய்தோம்
காதா சித்தம்
யுகம் தோறும் ராம கிரிஷ்ணாதி அவதாரங்கள் செய்து அருளினாயே
நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும்
குருடன் முன் செய்தாயே
நடந்தும் –
அக்ரே ராம -பிரணவம் போலே நடந்து
வட தேச -ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்
நம் பெருமாளை -ஐதீகம் -சம்பாவானை அருளி –
வடக்கில் இருந்து போர பாட வல்லார் -அத்யாபகர் –
திருப்புன்னை கீழ் திருக்கைத்தல சேவை
எல்லாம் போருமோ -அழகைக் காட்டி அருளினார் –
நின்றும் –
-வில்லை ஊன்றி நின்ற நிலை –
பெருமாளும் இளைய பெருமாளையும் –
பர்த்தாவை கொன்றவரை பார்த்து ஆஸ்ரித்த அடியாரை காக்க செய்து அருளி
தண்ணீர் குடிக்க கட்டிய ஏரியிலே தலை குப்புற விழுவாரைப் போலே
உகவதார் ஸ்திரீகளும் கொண்டாடிய கையும் வில்லுமான நின்ற நிலை

கிடந்தும்
கடல் கரையில் கிடந்த அழகு
கடல் தன்னை போர அளவு -கடல் கடலுடன்  ச்பர்சித்து கிடந்தாப் போலே
கரும் கடல் நோக்கி -கருணை என்னும் கடல் கிடந்தான்
இருந்தும் –
வீற்று இருந்து
திரு அயோதியை உள்ள ஓலக்கம் சிறியது என்னும்படி
வானர வீரர்கள் சூழ இருந்து
நெருப்பு எரியா நின்றால் கிட்டப் போகாத படி –
நூறு ஆண்டு
11000 ஆண்டு என்றுமாம்
யுகம் தோறும் அவதரித்து
உயிர் கள்-சர்வரும் உஜ்ஜீவிக்கும் படி
உயிர் அளிப்பான் எண்ணின்ற யோனியுமாய் பிறந்தாய்
நோக்குகை பணி

நான் கை வாங்கினேன் –
காவல் சோறு – நீ காத்து அருள வேண்டும்
வானர வீரர்களை சுற்றி சுற்றி இரவில் காத்தாயே
பெருமாளும் இளைய  பெருமாளும் சேர்ந்து –
நிதியை நோக்குவாரைப் போலே காத்து பின்பு உறங்க
கையும் வில்லுமாக கொண்டு
கை ஓய்ந்தால்
இரு கையும் விட்டு அவனே ரஷகன் என்ற நினைவே வேண்டும்
உணர்ந்து பார்த்தால் ரஷகன்
தாயும் தகப்பனும் கிட்ட இருக்க நான் இப்படி தளர்வேனோ
அனன்யா-மிதுநமே உத்தேச்யம்
அருளப் பெற்ற பின்பும் சாலப் பல நாள் –
அடியேன் -ஞானம் உணர்ந்த பின்பும் –
உன்னாலே இழந்தாய் கை விட முடியாதே
மிதுனம் பிராப்யம் அறிந்த பின்பும் தளர்வேனோ
ரஷகன் அவனே
ஸ்ரீ ய பதி
நான் ரஷகன் அல்லேன்
ருசி பிறந்த பின்பு நான் இலகவோ
அகார அர்த்தம் இப்பாட்டால் விளக்குகிறார்
சர்வபிராகாரம் சர்வ காலத்திலும் சர்வ ராஷனம்
அகாரம் மிதுனத்துக்கு வாசகம்
பிரியாதவள் அவள் முதலி ஆண்டான் வார்த்தை நஞ்சீயர் கேட்டு சங்கரகித்த
கிடாம்பி ஆச்சான் கேட்டு தேசிகன் தான் கேட்டதாக அருளி
திருமந்திர அர்த்தமும் சொல்லி
அர்த்த பஞ்சக்சமும் சொல்லி
ப்ரஹ்ம  ஸ்வரூபம்
அடியேன் ஜீவாத்மா
உயிர் கள் காப்பான் உபாயம் சொல்லிற்று
கூட என்று பலதையும் சொல்லி
தளர்வேனோவிரோதி ஸ்வரூபம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading