ஸ்ரீ பெரிய திருமொழி-2-5-8-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்
தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி
எண்ணானை எண்ணிறந்த புகழினானை
இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-

மெய்யம் என்னும் தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி-குடைவரைக்கோயில்
நின்ற பெருமாள் சத்யமூர்த்தி -கிடந்த திருக்கோலம்
எண்ணானை-அனைவராலும் எண்ணப்படுபவன் -ஆச்சர்ய பூதன்

———————————————-

சர்வேஸ்வரன் ஆகிறான் தன்னை ஆஸ்ரயித்தார்க்கு
தன்னோடு ஒத்த வரிசையை கொடுப்பன் ஒருவன் என்று
கொண்டு அவனுடைய நீர்மையை சொல்லுகைகாக –
(த்ரயோ தேவா துல்யம் என்று பேசும் படி வைக்கிறான் )
அல்லாதார்க்கு உத்கர்ஷத்தை சொல்லா நிற்கும் பிரமாணங்கள்
அவர்கள் தாங்களும் புழுக் குறித்த எழுத்துமா போலே –
சிலவற்றைத் தோற்றச் செய்யும் –
அவற்றைக் கண்டு இவர்கள் பக்கலிலேயும்
குவால் உண்டு -என்று நாட்டார் பிரமிக்கைக்கு
உடலாய் இருக்கும் –
ஆக பிரமாண கதி இருந்தபடியாலும்
சேதனர் மந்த மதிகளாய் இருந்தபடியாலும்
இவற்றின் தாத்பர்யம் அறியாதே
சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜனம் -என்று சொல்லுகிற கடலிலே
புக்குப் போம் இத்தனை இறே –
அவற்றை அனுசந்தித்துச் சொன்ன
இவ் வாழ்வார்கள் ஈரச் சொல் இன்றாகில் –
என்று பட்டர் அருளிச் செய்தார்-

வியாக்யானம் –

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் –
தனக்கு சேராத செயலைச் செய்தும்
ஆஸ்ரித கார்யம் செய்யுமவனை –
புருஷ சப்தத்தாலும்
புருஷோத்தம சப்தத்தாலும்
சொல்லப் படுகிறவன் இறே
தன் படிக்கு சேராத ஸ்திரீ வேஷத்தைக் கொண்டு –
இனிய வஸ்து ஆசூர பிரகிருதிகள் பக்கல் சேர  ஒண்ணாது –
என்று வஞ்சித்தவனை –

பிறை எயிற்று அன்று –
முரட்டு ஹிரண்யனால்
சிறுக்கன் நோவு படுகிற அன்று –
பிறை போலே இருக்கிற எயிற்றை உடைய –

அடல் அரியாய்ப்
யுத்தம் என்றால் பணைக்கும் படியான
நரசிம்ஹமாய்க் கொண்டு –

பெருகினானை —
அவனுடைய பிரதிஜ்ஞா சம காலத்திலேயே தோற்றா விடில்
சுருங்கிக் கை அற்றவன் ஆயிற்று
தன்னுடைய ரஷகத்வம் இழந்து கையிலான் ஆவானே–

தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி –
பித்ராதிகள் ரஷகர் ஆகை  தவிர்ந்து
பாதகராகப் புக்க பின்பு
இனி அவர்கள் கையில் காட்டிக் கொடுப்போம் அல்லோம்
என்று ரஷகன்  தான் வந்து சாய்ந்தான் ஆயிற்று –

வத்சலராய்
உபகாரகராய்
நோக்குகைக்கு பித்ராதிகள் என்று சிலரைச் சொல்லி விட்டோம் –
அவர்கள் தாங்களே பாதகராய் நின்ற பின்பு
நாம் அசந்னிஹிதர் ஆவோம் அல்லோம்
என்று நேரே பிதாவானவன் வந்து சாய்ந்து அருளினான் ஆயிற்று-
( கர்மாதீனம் அவர்கள் -கிருபாதீனம் கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத பிதா அன்றோ )

ஸ்ரமஹரதை மிக்கு ஒழுகா நின்றுள்ள புனலை உடைத்தான
திரு மெய்யத்திலெ திரு வனந்த ஆழ்வான் மேலே
வந்து சாய்ந்து அருளினவனை-

எண்ணானை –
அப்படுக்கையில் சாய்ந்து அருளினால் பண்ணும்
ஜகத் ரக்ஷண சிந்தையைச் சொல்லுதல் –
அன்றிக்கே
ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய ஸூரிகள் பரிய இருக்கிறவன்
இங்கே வந்து சாய்ந்து அருளுவதே –
இது என்ன நீர்மை -என்று எப்போதும்
எண்ணப் படுமவன் என்னுதல்-

எண்ணிறந்த புகழினானை-
ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுகையால் வந்த புகழுக்கு
எல்லை இல்லை என்னுதல் –
குண அனுசந்தானம் பண்ணுவாருக்கு அனுசந்தித்தித்
தலைக் கட்ட ஒண்ணாத குண பிராசுர்யத்தைச் சொல்லுதல் –

இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை –
அக் குணங்களை ஒழியவே
விட ஒண்ணாத படியாய் இருக்குமாயிற்று வடிவு அழகு –
மிக்க ஒளியை உடைத்தாய்
விகாசாதிகளுக்கு தாமரையை ஒப்பாகச் சொல்லலாய் ஆயிற்று –
அது வட்டணித்து இறக்கும் இறே
அங்கன் அன்றிக்கே
ஒழுகு நீண்டு இருக்குமாயிற்று
அன்றிக்கே
போக்யதை அளவிறந்து இருக்கும் என்னுதல் –

(நீண்ட அப்பெரியவாய கண்கள் –
தீர்க்கம் -ப்ரேமம் கொட்டும் -அது க்ஷணம் உஜ்ஜ்வலம் -மனஸைத் திருடாதே –
வனாத்ரி நாதா விசால உன் திருக்கண்கள் கூரத்தாழ்வான் )

கண்ணாரக் கண்டு கொண்டேன் -கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –
படபாமுகாக்னி ( கடலுக்குள் உள்ள அக்னி ) நிறைந்தால் போலே காண வேணும் என்று
உறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய  உறாவுதல் தீர காணப் பெற்றேன் –

விலஷண சரீரத்தைப் பரிக்ரகித்து
ஒரு தேச விசேஷத்தே போய் காண்கை யாகிறது
ஆரேனும் பசிக்க ஆரேனும் ஜீவித்தாப் போலே
இருப்பது ஓன்று இறே
காண வேணும் என்று உறாவின கண்களோடு காணப் பெற்றேன்-

(புருஷ வியாக்ரம் -சோகத்தால் வற்றி வாடி இருக்கும் இந்த சரீரத்துடன் பார்க்க
திருவடி நீர் அருளுவீரா சீதா பிராட்டி )

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading