வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-
திரை -அலைகள்
மணி –தெளிந்த
வரம் செய்த-பகவத் பிரசாதத்தால் அருளிச் செய்த
——————————————-
வியாக்யானம் –
வரும் -இத்யாதி –
பெரிய வேகத்தோடே வருகிற திரளை உடைத்தாய் –
தெளிந்த ஜலத்தை உடைத்தான –
கங்கையின் கரை மேலே
ஸ்ரீ பதரி காஸ்ரமத்திலே இருக்கிற
சர்வேஸ்வரனை கவி -பாடிற்று-
கரும் கடல் முந்நீர்–இத்யாதி –
முந்நீரான கரும் கடல் –
ஆற்று நீர் -ஊற்று நீர் -வேற்று நீர் -வர்ஜ ஜலமான -மூன்று வகை நீரை உடைத்தாய்
கறுத்த நிறத்தை உடைய கடல் போலே இருக்கிற நிறத்தை உடையவனை அனுசந்தித்து
ஆழ்வார் அருளிச் செய்த பாட்டுக்கள்-
இவை தாம்
வரம் செய்த –
பகவத் பிரசாத லப்தமான பத்துப் பாட்டையும் வல்லவர்கள்
அன்றியே –
வரிஷ்டமான பத்துப் பாட்டையும் -என்னுதல்-
வானவர்—இத்யாதி —
பெரிய கடல் சூழ்ந்த பூமியை ஏகாதபத்ரமாக நடத்தி
பின்பு
ப்ரஹ்ம பதத்தை நிர்வஹித்து
அநந்தரம்
நித்ய சூரிகளோடு ஒரு கோர்வையாக பெறுவர் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று
இவன் அபிசந்தி பண்ணின எல்லாவற்றையும் தரும் என்றபடி-
அறிவுடையார் அபுருஷார்தம் என்று காற் கடைக் கொண்ட ஐஸ்வர்யத்தை
வேண்டேன் மனை வாழ்க்கை –என்றும்
போந்தேன் -என்றும்
வீத ராகராய்–விரக்தராய் போன இவர்
இப்போது ஐஸ்வர்யத்தை பலமாக சொல்லுவான் என் -என்று
ஜீயர் பட்டரைக் -கேட்க
திருமங்கை ஆழ்வார் அவதரித்த பின்பு த்யாஜ்யமான
ஐஸ்வர்யமும் பரம புருஷார்த்துக்கு உள்ளே புக்கு போயிற்று காணும் –
ஈஸ்வரனோ ஆகவுமாம்
நித்ய சூரிகளோ ஆகவுமாம்
ராஜா ஆகவுமாம்
பறித்து -கொள்ளை அடித்து- பாகவத சேஷத்வம் பெறலாம் ஆகலாம் ஆகில் -என்றாம் இவர் இருப்பது
என்று அருளிச் -செய்தாராம்
ஓர் ஆகாரத்தால் த்யாஜ்யம்
வேறே ஓர் ஆகாரத்தால் உபாதேயம்
ததீயாருக்கு விநியோகம் ஆக்கினால்
ஈஸ்வர பதார்த்தம் ததீயாருக்கு ஆக்கினால் அவனுக்கு உகப்பு -பக்தானாம் -என்று இருப்பானே
ராஜா த்ரவ்யம் -ததீயருக்கு ஆக்கினால் -அவன் செய்யாததை செய்தபடி -ஸ்வரூப அனுரூபம்
பாகவத ஐஸ்வர்யம் பறித்து பாகவதருக்கு கொடுத்தால் -பாகவதர் விஷயத்தில் விநோயோகம் ஆனால் தப்பு இல்லை
சம்பன்னராக சிலர் இருக்க -இல்லாதவர்களுக்கு கொடுக்க -அவர்களும் உகப்பார்கள் –
ப்ரமபதம் -ஐஸ்வர்ய மேல் எல்லை
————–
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
ஏனமானான் உய்ய நர நாராயணனாய் எட்டு எழுத்தின்
ஞானம் ஈந்து கங்கை வதரி யுள்ளானவனை
நெஞ்சை வணங்க பரகாலன் தான் பணிக்கும்
செஞ்சொல் நாம் உய்யும் கலை–4-
ஞானப் பிரான் உலகை இடந்து -/ நர நாராயணனாய் சிங்காமை விரித்தவனும் ஞானம் அளித்து -தர்மி ஐக்கியம்
விரோதி நிரசனத்வம் -ஆஸ்ரித ரக்ஷணத்வம் -கங்கை கங்கை வாசகம் என்று கங்கையின் பெருமை பாட்டுக்கள் தோறும் உள்ள பதிகம்-
————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply