2இஃதே யான்உன்னைக் கொள்வதுஎஞ் ஞான்றும்;என்
மய்தோய் சோதி மணிவண்ண! எந்தாய்!
எய்தா நின்கழல் யான்எய்த, ஞானக்
கய்தா; காலக் கழிவுசெய் யேலே.
பொ-ரை : கருமை படிந்த ஒளியையுடைய மாணிக்கம் போன்ற நிறத்தையுடைய என் எந்தையே! எப்பொழுதும் யான் உன்னிடத்தில் கேட்பது இஃதேயாம்; ‘எஃது?’ என்னில், தனது முயற்சி கொண்டு அடைய முடியாத உன் திருவடிகளை யான் அடையும்படி ஞானமாகிய கையைக் கொடு; காலம் நீட்டித்தல் செய்யாதே.
வி-கு : எந்தாய் – விளிப்பெயர். ‘எஞ்ஞான்றும் யான் உன்னைக் கொள்வது இஃதே’ என மாற்றுக. செய்யேல் – எதிர்மறை முற்று.
ஈடு : இரண்டாம் பாட்டு. 1முதற்பாட்டில், உடலால் அமையும் பேற்றை விரும்பினார்; இப்பாட்டில், மானசமான பேற்றை விரும்புகிறார்.
முதற்பாசுரத்தில் ‘இஃதே’ என்று கூறியிருந்தும் 2’ஒரு பொருளையே பலகால் கேட்பின் மற்று ஒன்றிலே தடுமாறிச் செல்லவும் கூடுமாதலின், இதிலே நிலை நின்றமை அறிய வேண்டும்’ என்று நினைத்து ‘இதுவும் இன்னம் எதுவும் வேண்டும்?’ என்றான் ஈஸ்வரன்; ‘இஃதே’ என்கிறார். ‘நீர் இதிலே நிலை நின்றீர் என்னும் இடம் நாம் அறியும்படி யாங்ஙனம்?’ என்ன யான் உன்னைக் கொள்வது – 3இருவருடையவும் தர்மியே இதில் பிரமாணம். அதாவது, 4ஸ்வாமியான உன் பக்கல் அடியவனான நான் கொள்ளுமது. இதுவே ‘நம்முடைய ஸ்வாமித்துவமும் உம்முடைய சேஷத்துவமும் கிடக்கச்செய்தே அன்றோ நெடுநாள் இழந்து போந்தீர்? ஆன பின்னர் நமக்கு இதில் ஐயம் தொடர்கின்றதுகாணும்; 5இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்றான் இறைவன். ‘எஞ்ஞான்றும்’ என்கிறார்; அதாவது, ‘உயிர் உள்ள அளவும் இதுவே எனக்கு வார்த்தை’ என்றபடி. ‘ஆயின் இதிலே நிலை நிற்கும்படி உமக்கு இக்கெட்ட நெறியைக் கற்பித்தவர் யாவர்?’ என்றான் இறைவன்; இப்படிக் கற்பித்தார் யாவர்? மற்றும் உளரோ? தேவர் வடிவழகே அன்றோ!’ என்கிறார் மேல்: என் மை தோய் சோதி மணிவண்ண எந்தாய் – மை தோய்ந்துள்ள ஒளியை உடைத்தான மணியினுடைய நிறம் போன்ற திருநிறத்தைக் காட்டி என்னை உனக்கே உரியவனாக்கி உன் சேஷித்துவத்தை அறிவித்தவனே!
‘அழகிது, உமக்குச் செய்யவேண்டுவதுதான் என்?’ என்ன, எய்தா நின் கழல் யான் எய்த – தன் முயற்சியால் ஒருவர்க்கும் அடைய ஒண்ணாத திருவடிகளை ‘உன்னாலே பேறு’ என்று இருக்கிற நான் அடையும்படி செய். ‘அது, மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அன்றே பெற்றிலீரோ?’ என்ன, ஞானக் கைதா – இது நினைத்திருக்கும் அளவு போதாது; அது நான் ‘பெற்றேன்’ என்று 1தெளியும்படி செய்யவேண்டும். அமிழ்ந்தினார்க்குக் கைகொடுத்தாற்போன்று இருக்கையாலே ஞான லாபத்தை ‘ஞானமான கை’ என்று உருவகப்படுத்துகிறார். இங்கே, ‘ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால், எடுக்கமவர்களுக்கும் எளிதாய், ஏறுமவனுக்கும் எளிதாய் இருக்குமன்றோ? அப்படியேயாகிறது’ என்று 2எம்பார்க்கு ஆண்டான் அருளிச்செய்த வார்த்தையை நினைப்பது. இனி, 3’எய்தா நின் கழல் யான் எய்த’ என்று நீர் கூறுவது, பரபத்தி பரஞான பரமபத்திகளையுடையார் பெறும் பேறு அன்றோ?’ என்ன, ஞானக் கை தா -‘அவற்றையும் தேவரீரே பிறப்பித்து, தேவர் திருவடிகளைப் பெறும்படி செய்யவேண்டும்’ என்கிறார் எனலுமாம். ‘அப்படியே செய்கிறோம்’ என்ன, ‘காலக் கழிவு செய்யேல்’ என்கிறார்; அதாவது, ‘ஒல்லை என்றதுதானே அன்றோ எனக்கு எப்போதும் வார்த்தை’ என்கிறார் என்றபடி.
1. மேற்பாசுரத்தில் ‘தலைசேர்த்து’ என்றதனைக் கடாட்சித்தும், இப்பாசுரத்தில் ‘ஞானக் கை
தா’ என்றதனைக் கடாட்சித்தும் அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. இவ்விடத்தில், வேதத்திற்கூறப்பட்டுள்ள நசிகேதன் கதையைக் குறிப்பிடுவர்
அரும்பதவுரைகாரர்.
3. ‘இருவருடையவும் தர்மியே இதில் பிரமாணம்’ என்றது, சேஷ சேஷித்துவ ரூபமே இதில்
பிரமாணம் என்றபடி.
4. மேல் வாக்கியத்தை விரிக்கிறார், ‘ஸ்வாமியான உன் பக்கல்’ என்று தொடங்கி.
இவ்வாக்கியம் ‘அம்மா அடியேன்’ என்றதனை நோக்கி எழுகின்றது.
5. ‘இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்றது, ‘எத்தனை ஸ்நானத்துக்கு நிற்கும்?’ என்றபடி.
பூசப்படுகின்ற வாசனைத் திரவியங்களின் நறுமணம் நாலு மூன்று ஸ்நானத்துக்குப்
போகாது.
தெளியும்படி செய்யவேண்டும்’ என்றது, ‘மானஸ சர்க்ஷாத்காரம் போராது;
பிரத்யக்ஷமாம்படி செய்யவேண்டும்’ என்றபடி.
2. ஞானத்தைக் கையாகச் சொன்னதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார். ‘ஒரு கிணற்றிலே’ என்று
தொடங்கி. எம்பார்; ஆண்டான் திருவடிகளிலே ஆஸ்ரயித்த ஒருவரை அறியாமல் பகவச்
சம்பந்தத்தைப் பண்ணி, ஆண்டான் திருவடிகளில் ஆஸ்ரயித்தவர் என்று அறிந்த பின்
பயப்பட. அப்போது ஆண்டான் அருளிச்செய்த வார்த்தை என்றபடி.
3. ’ஞானக் கை தா’ என்பதற்கு இரு பொருள் அருளிச் செய்கிறார்; ஒன்று, ‘நான்
பெற்றேன் என்று தெளியும்படி செய்ய வேண்டும்’ என்று முன்னர்க்கூறியது. மற்றொன்று,
‘பரபத்தி பரஞான’ என்று தொடங்கி இங்கு அருளிச்செய்வது. முன்னைய பொருளில்,
‘ஞானம்’ பிரத்யக்ஷரூப ஞானம்; இரண்டாவது பொருளில், பத்திரூப ஞானம்.
இவ்விருபொருள்களினும் சங்கதி பேதம் ஒழிய அர்த்த பேதம் இல்லை.
பிராப்ய நிஷ்கர்ஷம் உறுதி பட அருளுகிறார்
கைங்கர்யம் அவன் ஆனந்தத்துக்கு -த்வய உத்தர கண்ட நம பத அர்த்தம்
திரு மந்திர நம மத்யம பதத்தாலும் -கைங்கர்யத்தில் களை -தனக்கு என்ன பண்ணுவது அறுக்கிறது –
நாலாவது பாசுரம் நிதானம்
நின் பாத பறப்பு தலை சேர்த்து காயிக பேற்றை
இதில் மானச பேற்றை அபேஷிககிறார் –
ஞானக் கை தா –
ஈதே நான் உன்னைக் கொள்வது –
என்நான்றும் என்றும் இதையே கேட்ப்பேன்
காரணம் மை தாய் சோதி கருத்த திருமேனி அனுபவம்
எய்தா நின் கழல் -ஸுய முயற்சியால் எய்த முடியாத –
ஞானக் கை தா கால கழிவு செய்யாமல்
முன்பு ஒல்லை -போலே
கீழில் பாட்டில் ஈதே சொல்லி -மீண்டும் -ஈதே -சொல்வது -பல கால் கேட்டவாறே –
நிலைத்து நின்றமை அறிய வேணும் -இதுவும் இன்னம் என்ன வேண்டும் கேட்டானாம்
இது ஓன்று மட்டுமே வேண்டும் –
நிலை நின்றீர் என்ற இடம் அறிய -யான் உன்னைக் கொள்வது
இரண்டு பேரின் தரமி -ஸ்வரூபம் -பிரமாணம் இதற்க்கு
யான் அடியவன் உன்னை சேஷி இதுவே போராதா –
கொள்வது -இது ஓன்று தான் இருக்க முடியும் –
காலடியில் கொள்வது ஸ்வரூபம் அவனுக்கு கிடப்பது ஸ்வரூபம் இவனுக்கு
அநாதி காலமும் உண்டே இது நிலைத்து நிற்குமா -நெடு நாள் இழந்து போனோமே –
அதி சங்கை வர்த்தியா நிற்க எத்தை குளிக்கைக்கு நிற்கும்
என் நான்றும் -யாவதாத்மபாவி
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் –
ஞானம் ஏற்பட காரணம் -துஸ் சிஷ்யை பண்ணினது யார் வேடிக்கை வார்த்தை –
தேவரீர் வடிவு அழகு இறே -வேறு யார்
மை தோய்ந்த தேஜஸ் -மணி போன்ற திரு நிறத்தைக் காட்டி –
நீல ரத்னம் -கருப்பாக இருக்க பெருமை -நீல நாயகம் -சாத்திக் கொண்டு நம் பெருமாள் –
கரு நீலம் -கார் மேகம் போல் -கார் மேனி -நீல மேனி அன்றோ பச்சை மா மலை போல் மேனி
மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -கரும் பச்சை –
இதை காட்டி என்னை அனந்யார்ஹை ஆக்கி சேஷித்வம் அறிவித்தவன் -எந்தாய் -ஸ்வாமி –
அழகு இது சரி சரி செய்ய வேண்டுவது என்
எய்தா நின் கழல் -ஸு யத்னத்தால் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை
உன்னாலே பேரு என்று இருக்கும் யான் எய்த
மாயவர மதி நலம் அருளிய போதே கொடுத்து விட்டேன்
நின் நினைவு மட்டும் போதாதே நான் அறிய வேண்டுமே –
ஞானக் கை தா –
தபால் போட்டு மறுபடியும் பேசி வந்து சேர்ந்ததா பார்க்க வேண்டாமா
நான் பெற்றேன் என்று நான் தெளியும் படி வேண்டாமா –
மானசா பூதமாக பெற்றார் சாஷாத்காரம்
ஞானக் கை -அமிழ்ந்தாருக்கு கை கொடுத்து தூக்குவது போலே –
ஞான லாபம் ஞானக் கை
ஐ திஹ்யம் ஆண்டான் வார்த்தை எம்பாருக்கு -அருளியது –
முதலி ஆண்டான் திரு நாராயண புரம் எழுந்து அருளி இருக்க கோயிலிலே எம்பார்
இடம் கைங்கர்யம் செய்த ஸ்ரீ வைஷ்ணவர் -ஒரு கிணற்றில் விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால்
வார்த்தை அருளி -இருவருக்கும் லாபம் தானே -ஞானக் கை -தா சொன்னது பொருந்தும் –
அங்கன் அன்றிக்கே –
திருவடிகளை அடைய பர பக்தி பரஞானம் பரம பக்தி வேண்டுமே –
ஞானக் கை தா அவற்றையும் நீயே அருளு -என்கிறார் –
நின் கண் பக்தன் அல்லேன் -அத்தையும் அருளி என்னைக் கொள்ளும் –
தேவரீர் அவற்றையும் பிறப்பித்து திருவடிகளில் சேர்த்து கொள்கிறேன்
காலக் கழிவு செய்யேல் உடனேசெய்து அருள் என்கிறார் –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply