பகவத் சம்பந்த ரஹிதமான ஜந்மாதிகள் சத் கர்ஹிதம் என்னும் அத்தை தர்சிப்பித்தார் கீழ் –
தத் சம்பந்த சஹிதமான திர்யக் காதி ஜந்மமும் சத் ப்ரார்த்தநீயமாய் என்னும் அத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –
சூரணை-237-
ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள்-திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்டார் –
அதாவது –
த்வதீய வர்ணரான ஏற்றத்தை உடைய ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -திர்யக் ஸ்தாவர ஜன்மங்கள் ஆனவை -வாசிகை பஷி ம்ருகதாம் -இத்யாதிகளாலே பாப யோநிகளாக சொல்லப் படா நிற்கச் செய்தே –
வேம்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே –
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –
செண்பகமாய் இருக்கும் திரு உடையேன் ஆவேனே –
தம்பகமாய் இருக்கும் தவம் உடையேன் ஆவேனே -என்று
திருமலை ஆழ்வாரோடு சம்பந்தமுடைய திர்யக் ஸ்தாவர ஜன்மங்களைப் பெறாப் பேறாக ஆசைப் பட்டார் -என்றபடி-
—————————————————
இப்படி ஆசைப் பட்ட அளவு அன்றிக்கே -தாழ்ந்த ஜென்மத்தை
ஆஸ்தானம் பண்ணினவர்களை அருளிச் செய்கிறார் –
சூரணை -239-
ப்ராஹ்மண உத்தமரான-பெரிய ஆழ்வாரும்-திரு மகளாரும்-
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினார்கள் –
அதாவது –
இனி இதுக்கு மேல் இல்லை -என்னும்படியான வர்ணத்தில் அவதரித்து –
வித்யா மாஹாத்ம்யாதிகளாலே -தஜ் ஜாதீய சகல உத்தமரான பெரிய ஆழ்வாரும் –
வேதப் பயன் கொள்ள அவர் தம்மைப் போலே பேதைப் பருவத்திலே வேத சாரார்த்த வித்தமையாய் இருக்கும் அவர் திரு மகளான ஆண்டாளும்-
ஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவத்தில் -அபிநிவேச அதிசயத்தாலே –
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –
என் மகன் கோவிந்தன் –
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் -இத்யாதியாலும் –
ஆயர்பாடி செல்வச் சிறுமீர்காள் –
நாமும் நம் பாவைக்கு –
ஆய்க் குலத்து உன் தன்னை பிறவி பெரும் தனை புண்ணியம் யாம் உடையோம் -இத்யாதியாலும் –
தான் அவளாகப் பேசும்படி -தாங்கள் அவதரித்த வர்ணத்துக்கு மூன்றாம் வர்ணம் ஆகையால் தண்ணிதாய் இருந்துள்ள –
அறிவு ஒன்றும் இல்லாத கோப ஜென்மத்தைப் புரையற ஏறிட்டுக் கொண்டார்கள் -என்கை-
———————————————————–
இப்படி ஆசைப் படுகையும் -ஆஸ்தானம் பண்ணுகையும் ஒழிய -கந்தல் கழிந்தால்
ஸ்வரூபம் இருக்கும் படி தான் என்ன -என்ன -அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
இப்படி விசிஷ்ட வேஷ பிரயுக்தமான தாரதம்ய அவஸ்தைகள் இன்றிக்கே -கந்தல் கழிந்தால் சகல ஆத்மாக்களுக்கும் வரும் அவஸ்தை தான் எது என்ன -அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-
(நிஸ் க்ருஷ்ட வேஷம் -விஸிஷ்ட வேஷத்துக்கு எதிர்மறை)
சூரணை -239-
கந்தல் கழிந்தால் சர்வருக்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும் –
அதாவது –
ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி பிரகாசியாதபடி அநாதி காலம் அனுபவித்துப் போந்த வந்தேறியான -அவித்யாதி தோஷம் –
பகவத் பிரசாத விசேஷத்தாலே – பின்னாட்டாதபடி சவாசனமாக போனால் -சகல ஆத்மாக்களுக்கும் –
சர்வ லஷண சம்பன்னா நாரீணா முத்தமா வதூ -என்கிறபடியே –
ஸ்த்ரீத்வ லஷணங்கள் எல்லாவற்றிலும் குறைவற்று – ஸ்வ இதர சகல ஸ்த்ரீண உத்தமையாய் இருக்கும் பெரிய பிராட்டியருடைய நிலை தன்னடையே வரக் கடவதாய் இருக்கும் என்கை-
——————————————–
அது எங்கனே என்னும் அபேஷையிலே அத்தை உபபதிக்கிறார் –
சூரணை -240-
ஆறு பிரகாரத்தாலே-பரி ஸூத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும் –
அதாவது –
1-அனந்யார்ஹ சேஷத்வம் –
2-அநந்ய சரணத்வம் –
3-அநந்ய போக்யத்வம் –
4-ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கை –
5-விஸ்லேஷத்தில் தரியாமை-
6-ததேக நிர்வாஹ்யத்வம் -ஆகிற ஆறு பிரகாரத்தாலே –
நிஸ்சேஷ நிவ்ருத்த அவித்யாதி தோஷ தயா பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு
பிரகார ஷட்க பரி பூரணையான பிராட்டியோடு சாம்யம் நைசர்கிகமாக உண்டாய் இருக்கும் என்கை –
இந்த சாம்ய ஷட்கத்தை நினைத்து இறே-
கடி மா மலர் பாவை ஒப்பாள் –பெரிய திருமொழி -3 -7 -9 -என்று ஆழ்வார் அருளிச் செய்தது ஆக இவ் இரண்டு வாக்யமும் ப்ராசங்கிகம்-
———————————————-
இனி அவர்கள் உத்க்ருஷ்டமான ஜன்மங்களை உபேஷித்து –
நிக்ருஷ்டமான ஜன்மங்களை விரும்புவான் என் -என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -241-
த்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்காரத்திலே-
அத்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்கார ராஹித்யத்தாலே –
அதாவது –
ஆபிஜாத்யாதிகளும் -ஐஸ்வர்யமும் ஆகிற த்ருஷ்ட புருஷார்த்தத்தில்-ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –
விஸ்வாமித்ராதிகளைப் போலே தான் நின்ற நிலைக்கு மேலே உத்கர்ஷம் தேடப் பண்ணும் அஹங்காரத்தாலே உண்டாம் –
சேஷத்வாதிகளும்-கைங்கர்ய சம்பத்தும் ஆகிற -அதருஷ்ட புருஷார்த்தத்தில் ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –
இவற்றினுடைய அபிவிருத்தியில் ஆசையாலே நிலைக்கு நிலை தாழப் போம் படியான அஹங்கார ராஹித்யத்தாலே உண்டாம் -என்கை –
——————————————————
இவ் அஹங்கார- தத் ராஹித்யங்கள்- இழவு பேறுகளுக்கு உடலாம் படியை அருளிச் செய்கிறார் –
சூரணை -242-
ப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –
அதாவது –
த்ருஷ்ட உத்கர்ஷ அதிசயத்துக்கு தக்க அஹங்கார அதிகனான ப்ரஹ்மாவாய்-
த்வி பரார்த அவாசனே மாம் பிராப்தும் அர்ஹசி பத்மஜ -என்றும் –
கடிக் கமலத்துக்குள் இருந்தும் காண்கிலான்-கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -மூன்றாம் திரு அந்தாதி -56 -என்றும் சொல்லுகிறபடியே இழந்து போதல் –
அஹங்கார ஹேதுக்கள் ஒன்றும் இலாமையாலே தத் ரஹிதையாய் -இடக்கை வலக்கை அறியாத இடைச்சியான சிந்தயந்தியாய்-
முக்திம் கதான்ய கோப கன்யகா-என்னும்படி-அவன் திருவடிகளைப் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும் இவ் வஹங்கார தத் ராஹித்யங்களின் ஸ்வாபம் என்கை –
இப்படி அஹங்கார தத் ரஹித்யங்கள் அவனை-இழக்கைக்கும் பெருகைக்கும் உடல் ஆகையாலே
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் முதலானவர்கள் அஹங்கார ஹேதுவான ஜன்மங்களை அநாதரித்து தத் ரஹித ஜன்மங்களை ஆதரித்தார்கள் என்று கருத்து —
(ஆக இப் பிரகரணத்தால் -ஒன்பதில் இது 4 என்று கொள்ள வேன்டும்-சித்த உபாய நிஷ்டருடைய வைபவம் முற்றும் -மேல் அவர்களின் தினசரியா சொல்லும் பிரகரணம்
ஆறு பிரகரணத்தில் இன்னும் மூன்றாம் பிரகாரணம் -307-வரை தொடரும்)
(பகவத் அங்கீகாரம் -புருஷகாரம் வேன்டும் என்றும் அங்கீ க்ருத – குண விருத்தி– தூஷக அஹங்காராதி -ஆதி -விஷய ஸ்பர்சம் -181-சூரணை பார்த்தோம் –
தத் கார்ய அபசார கோரத்தையும் – நிரஹங்கார–ததீய பிரசித்த பாகவத வைபவத்தையும் –
சரீர ஜென்ம தோஷத்தையும் -சேஷத்வ ஞான ஜென்ம உத்க்ருஷ்டத்தையும் அருளிச் செய்தாரே)
—————————————————-
தன்னைத் தானே முடிக்கை யாவது -(180)என்று தொடங்கி-இவ்வளவாக அஹங்காராதிகளின் தோஷம் உபபாதிக்க ப் பட்டது –
அநந்தரம் பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்கும் பிரபன்ன அதிகாரி உடைய திநசர்யா விசேஷம் சொல்லப் படுகிறது –
சூரணை-243-
இப்படி சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவான அஹங்காரத்துக்கும்-அதனுடைய கார்யமான
விஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தான் ஆகையாலே –
1–தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டால் போலேயும் –
2–அவற்றுக்கு வர்த்தகரான சம்சாரிகளைக் கண்டால் சர்ப்பத்தைக் கண்டால் போலேயும் –
3–அவற்றுக்கு நிவர்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களைக் கண்டால் போலேயும் –
4–ஈஸ்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டால் போலேயும் –
5–ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலேயும் –
6–சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் நினைத்து –
அஹங்கார -அர்த்த- காமங்கள் மூன்றும்–(த்ரி த்வாரங்கள் இவை நரகத்தில் தள்ள )-அஹங்காரம் அனுகூலர் பக்கல் அநாதாரத்தையும்–அர்த்தம் பிரதிகூலர் பக்கல் பிராவண்யத்தையும்-காமம் உபேஷிக்கும் அவர்கள்(பைய நடமின் என்னா முன்) பக்கல் அபேஷையும் பிறப்பிக்கும் என்று அஞ்சி –
ஆத்ம குணங்கள் நம்மாலும் பிறராலும் பிறப்பித்துக் கொள்ள ஒண்ணாது –
சதாசார்ய பிரசாதம் அடியாக வருகிற பகவத் பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று துணிந்து –
7–தேக யாத்ரையில் உபேஷையும் –
8–ஆத்ம யாத்ரையில் அபேஷையும் –
9–பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தியும் –
10–தேக தாரணம் பரமாத்ம சமாராதன சமாப்தி பிரசாத பிரதிபத்தி என்கிற புத்தி விசேஷமும் -(பிராசாதம் அடியாகவே இந்த தேக தாரணம் இதுக்கு என்ற பிரதிபத்தி உண்டாகும் )
11–தனக்கு ஒரு க்லேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல்-க்ருபா பலம் என்றாதல் பிறக்கும் ப்ரீதியும் (இந்த பூமி கஷ்டம் விலகாத பூமி என்ற எண்ணம் வேண்டுமே -இந்த பூமியில் கஷ்டம் வேண்டாம் என்று நினைக்காமல் -கிருபா பலத்தால் கஷ்டம் கொடுத்து மோக்ஷம் இச்சை பிறப்பிக்கிறான் என்ற எண்ணம் வேண்டுமே )
12–ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தியும் –
13–விலஷணருடைய ஜ்ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் –
14–உகந்து அருளின நிலங்களில் ஆதராதிசயமும் மங்களாசாசனமும் –
15–இதர விஷயங்களில் அருசியும் –
16–ஆர்த்தியும்
17–அனுவர்தன நியதியும் -(45விஷயங்கள் அனுவர்த்த நியதிகள் இதில் மேல் விவரிப்பார் )
18–ஆகார நியதியும் –
19–அனுகூல சஹவாசமும் –
20–பிரதிகூல சஹவாச நிவ்ருத்தியும் –
சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –
இரண்டாம் பிரகரணம் முற்றிற்று-
இப்படி சர்வ பிரகாரத்தாலும் -என்று தொடங்கி -சதாசார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -என்னும் அளவாக —
இப்படி -என்று கீழ் உக்தமான பிரகாரத்தை பரமார்சிக்கிறது –
சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவாகை யாவது -ஸ்வரூபேண முடித்தும் – பாகவத விரோதத்தை விளைத்து முடித்தும் -பகவல் லாப விரோதியையும் -எல்லாப் படியாலும் -அசந்நேவ-என்கிறபடியே -அசத் கல்பமாம் படி ஸ்வரூபத்தை உருவு அழிய பண்ணுமதாய் இருக்கை-
அஹங்காரம் தான் தேக ஆத்ம அபிமான ரூபமாயும் – தேஹாதிரிக்த ஆத்ம விஷயத்தில் -ஸ்வாதந்திர அபிமான ரூபமாயும்-இரண்டு வகைப் பட்டு இறே இருப்பது –
இவ்விடத்தில் இவை இரண்டும் சேர சொல்லப் படுகிறது –
அதனுடைய கார்யமான விஷய பிராவண்யத்துக்கும் -தேக ஆத்ம அபிமானமும் -ஸ்வா தந்திர அபிமானமுமே விஷயங்களை ஸ்வ போக்யத்வேன விரும்புகைக்கு மூலம் ஆகையாலே -விஷய பிராவண்யத்தை அஹங்கார கார்யம் என்கிறது –
விஷய சப்தத்தாலே கீழ் அனுகூலமாகவும் பிரதி கூலமாகவும் சொல்லப்பட்ட -விஹித நிஷித்த தத் ரூப விஷய த்வத்தையும் சொல்லுகிறது –
விளை நிலம் தான் ஆகையாலே -என்றது -இவை இரண்டுக்கும் ஜன்ம பூமி பகவத் ஸ்வரூப திரோதாநாதிகளை பண்ணக் கடவ குண த்ரயாத்மாக -பிரகிருதி பரிணாம ரூபமாய் -ஸ்வ கர்ம விசேஷ ஆரப்தமாய் இருக்கிற -சரீர விசிஷ்டனான தான் ஆகையாலே என்றபடி –
கர்ம அனுகுணமாக ரஜஸ் தமஸ்ஸூகளாலே கலங்க வடிக்கும் சரீர விசிஷ்டைதையாலே –
மதி மயங்கி-தான் அல்லாத தேகத்தைத் தானாகவும் -தனக்கு உரியன் அல்லாத தன்னை ஸ்வதந்த்ரனாகவும் அபிமானித்து தனக்கு அநர்த்த கரமான விஷயங்களிலே அத்ய ஆதரத்தைப் பண்ணுவதாம் அவன் தானே இறே –
தன்னைக் கண்டால் -இத்யாதி -இப்படி அநாதி காலம் போந்தவனாய் -இப்போதும் அதுக்கு யோக்யமான சரீர விசிஷ்டனாய் இருக்கிற தன்னை தர்சித்தால்-கொன்று அல்லது விடேன் என்று – ச ஆயுதராய் பல் கவ்வித் திரியும் சத்ருவைக் கண்டால் போலே -குடல் கரித்து -தனக்கு நாசகனாய் நினைத்தும் -தங்களுடைய உக்தி விருத்திகளாலே -துர் வாசனையைக் கிளப்பி -அஹங்காராதிகளை மேன்மேலும் வளரும்படி பண்ணும் –தத் உபய வஸ்ரான சம்சாரிகளை கண் எதிரே கண்டால்-அணுகில் மேல் விழுந்து அள்ளிக் கொள்ளும் அதிக குரூரமான சர்பத்தைக் கண்டால் போலேயும் அஞ்சி நடுங்கி பிற் காலித்து நமக்கு பாதகர் என்றே நினைத்தும் –
தங்களுடைய உபதேசம் அனுஷ்டானங்கள் இரண்டாலும் -அஹங்காராதிகளின் தோஷ தர்சனத்தைப் பண்ணுவித்து -தத் பிரசங்கத்திலே பீத பீதனாம் படி பண்ணி – சவாசனமாக அவற்றை நிவர்திப்பிக்கும் மத்யம பத (-நமஸ்-உகாரம் என்றுமாம்-) நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காணப் பெற்றால்-தன்னுடைய அநர்த்த ஆப்யுதங்கள்
இரண்டும் தங்களதாய்-தீயது விலக்கி-நல்லத்தில் மூட்டி ரஷிக்கும் ஆப்த பந்துக்களைக் கண்டால் போலே அத்ய ஆதரம் பண்ணி நமக்கு நல் துணை யானவர்கள் என்று நினைத்தும் –
அடியிலே கரண களேபரங்களைத் தந்து -அவற்றைக் கொண்டு வியபிசரியாமல் நல் வழி நடக்கும் படி சாஸ்த்ரங்களைக் காட்டி -அக்ருத்ய கரணாதிகளில் சிஷித்து சர்வ அவஸ்தையிலும் தன்னுடைய ஹிதமே பார்த்து போரும் ஈஸ்வரனை
அர்ச்சா ஸ்தலங்களிலே கண்களாரக் கண்டால் -உத்பாதகனாய் -வித்யா ப்ரதனாய் –
அபேத பிரவர்தகனாதபடி நியமித்து நடத்திக் கொண்டு போரும் ஹிதைஷியான
பிதாவைக் கண்டால் போலே -சிநேக சாத்வச வினயங்களை உடையனாய்க் கொண்டு -நமக்கு ஹித பரன்-என்று நினைத்தும் –
அநாதி காலம் அசந்நேவ என்னும் படி கிடந்த தன்னை -பகவத் சம்பந்தத்தை அறிவித்து –
சத்தானாக்கி மென் மேலும் தன் உபதேசத்தாலே ஞான வைராக்ய பக்திகளை விளைவித்து கையில் கனி என பகவத் விஷயத்தை காட்டித் தரும் -மகா உபகாரகனாய் –
உன் சீரே உயிர்க்கு உயிராய் -என்றும் –
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் -என்றும்
சொல்லும்படி -குண விக்ரஹங்களாலே தனக்கு தாரக போக்யனுமாய் இருக்கும்
சதாச்சார்யனை கண்ணுக்கு இலக்காகும் படி கண்டால் -கண்ணாஞ்சுழலை இடும்
பெரும் பசியன் -தாரகமும் போக்யமுமான சோற்றைக் கண்டால் போலே
அத்ய அபிநிவேசத்தோடே அனுபவித்து -நமக்கு தாரக போக்ய விஷயம் என்றே நினைத்தும்
சாத்யாந்தர நிவ்ருத்தாதி சமஸ்த ஸ்வாபவ சம்பன்னதயா -சம்யக் ஞான பிரேமவானாய்
இருக்கும் சச் சிஷ்யனைக் கண்டால்-தனக்கு ஆனந்த ஆகவமான அபிமத விஷயத்தைக்
கண்டால் போலே -பகவத் குண அனுசந்தான தசையில் -நாம் சொல்லுகிற பகவத் குணங்களை ஆதரித்துக் கேட்ப்பது -அனுபாஷிப்பது -வித்தனாவதாம் ஆகாரங்களாலே நமக்கு ஆனந்த அவஹன் என்று நினைத்தும் –
அஹங்கார அர்த்த காமங்கள் மூன்றும் -இத்யாதி –
இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு -அஹங்காரம் அனுகூலர் பக்கல் அநாதாரத்தை பிறப்பிக்கும் –அதாவது சேஷத்வத்தை தன் சன்னிதியில் ஜீவிக்க ஒட்டாத படி இறே அஹங்காரத்தின் பலம் இருப்பது –
அஹங்காரி யானவன் -ந ந மேயம் கதஞ்சன-என்று இருக்குமது ஒழிய ஒரு விஷயத்திலும் தலை சாய்க்க இசையானே –
ஆகையாலே அஹங்காரம் மேல் இடுமாகில் -ஸ்வரூப வர்த்தகராய்க் கொண்டு அனுகூலராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் –
நம்முடைய சேஷிகள் என்று துடை நடுங்கி எழுந்து இருந்து பிரணாமாதி பூர்வகமாக அனுவர்தகங்களைப் பண்ண ஒட்டாதே -தன்னை
அவர்களில் அதிகனாவாதல் -அவர்களை தன்னோடு சமராகவதால் -புத்தி பண்ணி அநாதாரிக்கும் படி பண்ணும் என்கை –
அர்த்தம் பிரதி கூலர் பக்கல் ப்ராவண்யத்தை பிறப்பிக்கும் -அதாவது –
ஆரையாகிலும் சென்று அநு வர்த்தித்து -ஒரு காசு பெற்றதாய் விட வேணும் என்னும் படி இறே அர்த்த ராகம் இருக்கும் படி –
ஆகையால் அது ஸ்வரூப நாசகத்வேன-பிரதி கூலரான சம்சாரிகளைக் கண்டால் –
வெருவி ஓடிப் போக வேண்டி இருக்க -ஒரு காசை நச்சி அவர்களோடே உறவு பண்ணி –
அவர்கள் இருந்த இடங்களிலே -பல காலம் செல்லுவது -அவர்களை அழைத்து விருந்து இடுவது -அவர்கள் குண கீர்த்தனம் பண்ணுவதாம் படி -அவர்கள் விஷயத்தில் பிராவண்யத்தை உண்டாக்கும் என்கை-
காமம் உபேஷிக்கும் அவர்கள் பக்கல் அபேஷையை பிறப்பிக்கும் -காமயத இதி காம -என்கிறபடி – காம சப்தத்தாலே விஷய சம்போக சுகத்தை சொல்லுகிறது -அது ஈசி போமின் – இத்யாதிப் படியே -தாரித்ர்ய வார்த்தகாதிகள் அடியாக தன்னை முகம் பாராமல் தள்ளி -கதவடைத்து -உபேஷாவாதம் பண்ணும் ஸ்திரீகள் பக்கலிலே -ஏழையர் தாம் இழிப்ப செல்வர் -என்கிறபடியே -அவர்கள் உபேஷாவாதம் முதலானவை தன்னையே உத்தேச்யமாய் கொண்டு செல்லும் படி –விலஷணர் கேட்டால் சிரிக்கும் படியான ஹேய அபேஷையை விளைக்கும் என்கை –
ஆக இப்படி அஹங்காராதிகள் மூன்றும் –
ஸ்வரூப வர்த்தகரை அநாதரிக்கும் படியும் –
ஸ்வரூப நாசகரை ஆதரிக்கும் படியும் –
ஸ்வரூப நாசகதையோடே -உபேஷகருமாய் இருக்கும் அவர்களை அபேஷிக்கும் படியும் –
பண்ணும் என்று அவற்றின் கொடுமைகளை அநு சந்தித்து -என் செய்யத் தேடுகிறதோ -என்று அஞ்சி –
அர்த்த காம அபிமானங்கள் மூன்றும் -என்று பாடம் ஆனாலும்-(கர்வ அபிமான அஹங்காரம் என்றும் உண்டே-) அபிமான சப்தத்தாலே அஹங்காரத்தைச் சொல்லுகிறது ஆகையாலே -அனுகூலர் பக்கல் -இத்யாதியை – நிரை நிரை ஆக்காதே -யதா யோகம் கொண்டு கீழ்ச் சொன்ன பிரகாரத்திலே யோசிக்கக் கடவது –
ஆத்ம குணங்கள் -இத்யாதி -சம தமாதி ஆத்ம குணங்கள் -அநாதி காலம் அஹங்காராதிகளுக்கு விளை நிலமாய் -அநாத்ம குணங்களைக் கூடு பூரித்துக் கொண்டு -கர்ம பரதந்த்ராய் இருக்கிற நம்முடைய யத்னத்தாலும் -ஆத்ம குண உதய விரோதிகளான அஹங்காராதிகளுக்கு வர்த்தகராய்- அநாத்ம குண பரி பூரணராய் -கர்ம வஸ்ரராய் -இருக்கிற பிறருடைய யத்னத்தாலும் -பிறப்பித்துக் கொள்ள ஒண்ணாது -ஆத்ம குணங்களுக்கு எல்லாம் கொள்கலமாய்-அடியிலே தன்னுடைய நிர்கேதுஹ கிருபையாலே நம்மை அங்கீகரித்து அருளி -நமக்கு ஆத்ம குணம் உண்டாவது எப்போதோ என்று பல காலும் கரைவது -பகவானை அர்த்திப்பதாய்க் கொண்டு போரும் சதாச்சார்யன் உடைய பிரசாதம் அடியாக வருகிற நம்முடைய ஆத்ம குண உதய விரோதி பாப ஷயம் பண்ணி -அமலங்களாக விழிக்கும் பகவானுடைய பரிபூர்ண பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று அத்யவசித்து
தேக யாத்ரையில் உபேஷை யாவது -தேக ரஷண அர்த்தமான வியாபாரத்தில் விருப்பமற்று இருக்கை-
ஆத்ம யாத்ரையில் அபேஷை யாவது -சேஷத்வமே வடிவான ஆத்மாவுக்கு தாகரகாதிகளான குண அனுபவ கைங்கர்ய பிரவ்ருத்தியில் -பெற்ற அளவால் த்ருப்தனாய் இராதே -மேன்மேலும் ஆசைப் படுகை-
பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தி யாவது -அசந ஆசாதனங்களுக்கு-(உண்ணவும் உடுக்கவும் )உறுப்பான பிராக்ருத பதார்த்தங்களில் ஆதரத்துக்கு அடியான போக்யத்வ புத்தி தவிருகை –
தேக தாரணம் -இத்யாதி -அதாவது -அந்த பிராக்ருத வஸ்துக்களில் தேகம் தரிக்கைக்கு தக்க அளவு புஜிக்கை– பரமாத்மாவான சர்வேஸ்வரனுடைய சமாராதனத்தின் சமாப்தி ரூபையான பிரசாத பிரதி பத்தி என்கிற -புத்தி விசேஷமும் என்கை –
அன்றிக்கே -பரமாத்ம சமாராதன சமாப்தி -என்கிற புத்தி விசேஷமும் -தத் பிரசாத பிரதி பத்தி என்கிற – புத்தி விசேஷமும் -என்னவுமாம் –
தனக்கு -இத்யாதி -அதாவது -முமுஷுவாய் -பிர பன்னன் ஆனாலும் -பிராரப்த சரீரம் இருக்கும் அளவும் -தாபத் த்ரயம் வருவது தவிராது இறே -ஆகையாலே
இச் சரீரத்தோடு இருக்கிற தனக்கு -தாபத் த்ரயங்களில் -ஏதேனும் ஒரு க்லேசம் உண்டானால் -இது அனுபவ விநாஸ்யமான பிராரப்த கர்ம பலமன்றோ -ஏவம் பூதம் கர்மங்கள் உள்ளவை கழியும் அளவன்றோ இச் சரீரத்தோடு எம்பெருமான் வைக்கிறது-
பிராப்தி பிரதிபந்தங்களில் ஒன்றாகிலும் கழியப் பெற்றோமே என்கிற அநு சந்தானத்தாலே ஆதல் -துர் வாசனையாலே இவ் வுடம்பை விட இசையாமல் பிராக்ருத பதார்த்தங்களையும்
ஜீவித்துக் கொண்டு சம்சாரத்துக்கு உள்ளே பொருந்தி இருக்கிற நம்மை துக்க தர்சனத்தை
பண்ணுவித்து இதில் பற்று அறுத்துக் கொண்டு போக நினைக்கிற சர்வேஸ்வரனுடைய
கிருபையின் பலம் அன்றோ இது என்கிற அநு சந்தானத்தாலே ஆதல் உண்டாகக் கடவ ப்ரீதியும் என்கை –
பூர்வாகம் உத்தராகம் பிராரப்த கண்டம் எல்லாம் கழிக்கிறவனுக்கு வர்த்தமான சரீரத்தில் அனுபாவ்ய கர்மம் இத்தனையும் கழிக்கை அரிதன்று இறே –
கர்ம பலமான துக்க பரம்பரைகளை அனுபவியா நின்றாலும் -இத் தேகத்தை விட என்றால்
இசையாத இவனை -நிர் துக்கனாக்கி வைப்போம் ஆகில் -இச் சரீரத்தோடு நெடும் காலம்
இருக்க இச்சித்தல் -இன்னும் ஒரு சரீரம் தன்னை இச்சிக்குதல் செய்யும் ஆகையால் –
இச் சரீரத்துக்கு உள்ள கர்மம் அனுபவித்தே இருக்கக் கடவன் என்று இறே வைக்கிறது –
ஆன பின்பு மற்று உண்டான கர்மங்கள் எல்லாம் கழித்தது சம்சாரத்தில் நின்றும் இவனை
கடுக திருவடிகளிலே சேர்த்து கொள்ளுகையில் உண்டான கிருபையாலே ஆனாப் போலே –
இத்தனையும் கழியாமல் வைத்ததும் கிருபையாலே இறே –அநாதி காலம் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அனுபவித்த துக்கம் -பகவன் நிக்ரஹ பலம் -இது அவன் அனுக்ரஹ பலம் -யஸ்ய அனுக்ரகம் இச்சாமி -தஸ்ய வித்தம் ஹராம் யஹம் -என்றார் இறே– ஆகையால் இத்தை கிருபா பலம் என்கிறது –
ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தி -யாவது -பிரபன்னனான தன்னுடைய
அதிகார அநு குணமாக அனுஷ்டித்து கொண்டு போரும் நல் ஒழுக்கங்களை-பேற்றுக்கு சாதனமாக நினையாது ஒழிகை —
விலஷணருடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சை யாவது -நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி இருக்கையாலே -நிர்மல ஞான பக்திகராய் இருக்கும் -விலஷணரான பூர்வர்களுடைய விலஷணமான அந்த ஞானமும் அனுஷ்டானமும் நமக்கு உண்டாக வேணும் என்னும் ஆசை –
உகந்து அருளின நிலங்களில் ஆதார அதிசயம் -ஆவது -தான் உகந்த ஊர் -என்கிறபடியே
சர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கிற திவ்ய தேசங்கள் என்றாதல்-
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மலை என்று மண்டினார் -என்றபடியே
மனஸ் அங்கே மண்டி விழும்படி மென்மேலும் பெருகுகிற ஆதரம் –
மங்களா சாசனம் ஆவது -அவ்வோ திவ்ய தேசங்களில் விரும்பி வர்திக்கிறவனுடைய சௌகுமாரதையும் -வாசி அறிந்து நோக்கும் பரிவர் இல்லாமையும் –
பிரதிகூலர் வர்க்கங்களின் அதிசயத்தையும் நினைத்து ஏங்கி -என் செய்யத் தேடுகின்றது என்று வயிறு எரிந்து இரவும் பகலும் திருப் பல்லாண்டு பாடுகை –
இதர விஷயங்களில் அருசி யாவது -பகவத் வியதிரிக்தங்களான ஹேய விஷயங்களில் -தோஷ தர்சநாதிகளாலே விருப்பம் அற்று இருக்கை –
ஆர்த்தி யாவது -இதர விஷய ப்ராவண்ய ஹேதுவான இவ் உடம்போடு இருள் தரும் மா ஞாலத்தில் இருக்கிற இதில் அடிக் கொதிப்பாலும் –பிராப்ய வைலஷண்ய தர்சனத்தால் வந்த பிராப்தி விளம்ப அசஹத்வத்தாலும் படும் கிலேசம் –
அனுவர்தந நியதி யாவது -பகவத் பாகவத விஷயங்களில் -ஸ்வ சேஷத்வ அநு குணமாக –
நீச உக்தி நீச விருத்திகளாலே பண்ணும் அநு வர்த்தநத்தை -பிராக்ருத விஷயங்களில் மறந்தும் செய்யாது ஒழிகை —
ஆகார நியதி யாவது -ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டங்களாய் -சர்வேஸ்வரனுடையவும் ததீயருடையவும் பிரசாதங்களான வஸ்துக்களையே ஆகாரமாகக் கொள்ளும் அது ஒழிய -தத் இதரங்கள் ஆனவை கொள்ளக் கடவோம் அல்லோம் என்று இருக்கை –
அனுகூல சஹவாசம் ஆவது -ஸ்வ சம்சர்க்கத்தாலே ஜ்ஞானாதிகளை வர்திப்பியா நிற்கும் அனுகூலர் ஆனவர்களுடன் ஷண காலமும் பிரியாதே கூடி வர்த்திகை –
பிரதி கூல சஹவாச நிவ்ருத்தி யாவது -ஸ்வ சம்சர்க்கத்தாலே ஜ்ஞான அனுஷ்டானங்களை நசிப்பியா நிற்கும் பிரதிகூலரானவர்களுடன் ஷண காலமும் கூடி வர்த்தியாது ஒழிகை –
இங்குச் சொன்ன அனுகூலரும் பிரதி கூலரும் இன்னார் என்னும் இடம் மேலே தாமே அருளிச் செய்யக் கடவர் இறே —
சதாச்சார்ய பிரசதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -அதாவது –
கீழ்ச் சொன்ன இவை இத்தனையும் – ஜ்ஞான அனுஷ்டான பரிபூர்ணனான சதாச்சார்யன் உடைய சர்வ மங்கள ஆவஹமான பிரசாதத்தாலே தன்னடையே மேன்மேலும் அபிவிருத்தமாம் படி செய்து கொண்டு போரக் கடவன் என்றபடி –
சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் படி இவன் பண்ணிக் கொண்டு போருகை யாவது – தத் பிரசாதகங்களைச் (ப்ரசாதங்களைத் தூண்டுமவை))செய்து கொண்டு போருகை –
தத் பிரசாதகங்கள் ஆவன -இதனுடைய உபபாதன ஸ்தலத்தில் அருளிச் செய்கிறவை –
போரக் கடவன் -என்று விதி ரூபேண அருளிச் செய்தது -இதனுடைய அவஸ்ய அனுஷ்டேத்யத்வம் தோற்றுகைக்காக-
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply