நெடுமாற்கு அடிமை செய்வேன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என் ? அந்தோ ! வியன் மூ வுலகு பெறினுமே–8-10-1
கோள் சொல்லும் இடத்தில்-
அரசன் யார்- கோள் சொன்னான் கேட்டால் சொல்ல மாட்டான்
வஞ்சித்து போவாரை போல் தோஷம் போகும்
கும்ம்ணாதே கை விட்டு ஓடி-சொத்து என்று வைத்து இருந்தது எல்லாம் போகுமே –
எம்மனா என் குல தெய்வமே என்று சொன்னதும்
பாகவத அபசாரம் வேண்டாம்-தோஷம் நினைக்க மாட்டார்-
அனுக்ரகம் செய்து கொண்டே இருப்பார் பாகவதரை ஆச்ரயித்து இருப்பவரை
கோவிந்தா -நாவால் சொன்னாலே -நாவினால் நவின்று-இன்பம் எய்தினேன்
அவரை வஞ்சித்து-அடிமை செய்வன் போல் அவனை வஞ்சித்து கருத –
அவன் பாபம் போக்கினான்
கொடு மா வினையேன்-அஜாமலன் நாராயண ஒரே சொல்லாலே போக்கினான்-
இலவசமாக பரம பதம் கொண்ட இந்த பாபத்துக்கு என்ன பரிகாரம்
வாலி -உம்மை திட்டி- இந்த பாபத்துக்கு என்ன பிராயசித்தம் என்று கேட்டால் போல்
அபயம் சொல்லும்-சரணம் சொல்ல வில்லை
கிட்ட வந்து வஞ்சித்து -கருணையால் பாரா முகம்-ஏமாற்றியாவது பக்தி செய்கிறானே
என்று மகிழ்வானாம்
அசத்தையா தேயம்-
ஸ்ரத்தையா தேயம்-அச்ரதையாவது தானம் கொடு-போல்
கொடு மா வினையேன்-வஞ்சித்த பாவம்
ஒரே வழி அடியார் அடியை கூடுவதே
சத் சங்கத்துக்கு ஈடு இல்லை
ஸ்ரீ வைகுண்டம் கொடுத்தாலும் இதற்க்கு ஈடு இல்லை
வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும்
புயல் மேகம் போல் திரு மேனி யம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே யடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே ? –8-10-2
மூன்று உலகம் ஆளும் ஐஸ்வர்யம்-ராவணன் ஹிரண்ய கசிபு-போல் -ஐஸ்வர்யம்
தான் தானான நிலை-கைவல்யம்
சயமே-சுயமே-கைங்கர்யமே லஷ்யம் என்று இருப்பவரின் திரு அடி -பற்றி-இதற்க்கு ஒப்பு இல்லை
உறுமோ பாவியேனுக்கு ? இவ் உலக மூன்றும் உடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்த்த என் சென் தாமரை கண் திரு குறளன்
நறுமா விரை நாள் மலர் அடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -8-10-3
பாகவத கைங்கர்யம் பெற பெறுவேனோ ?
உலகு அளந்த வாமனன்-திரு குறள் அப்பன்-பிராட்டி விடாமல் இங்கும்-
அவன் திரு அடி ஒன்றே புகுந்த அடியவர்
சிறு மா மனிசர் -பட்டர் ஐதீகம் -ஸிருமைபெருமைஆகிர
விருத்த தர்ம த்வயம்-ஏக தரமி-இடம் சேர்வது-
பகவத் விஷயத்தில் நித்யர் உடன் ஒக்க எம்பார் பிள்ளான் ஆண்டான் போல்வார்-
நம் போல் அன்ன பானாதிகள் தாரக போஷகமாக கொண்டாலும்
பரி பக்குவம்- கூரத் ஆழ்வான் கொண்டாடும்-என்னை போல் சொல்ல வில்லை
பெருமாளும் மனிசர் தன்மை ஈஸ்வர பரதவ தன்மை பீரிட்டு காட்டியது போல்
ஆழ்வான்-கண்ணன் போல்-உரிமை வேண்டியவர்-ஏக வசனம்-கூரத் ஆழ்வான் என்றான்
இங்கே திரிந்தேற்கு இழுகுற்று என் ?இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
சென்கோலத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொன் கேழ் புகழ்கள் வாய வாய்ப் புலன் கொள் வடிவு என் மனத்த தாய்
அங்கேய் மலர்கள்; கையவாய் வழி பாட்டோட அருளிலே –8-10-4
உண்டு உமிழ்ந்த -அழகிய வாயன்
குணம் சொல்ல ஆசை பட்டால் அவனே சொல்லி கொடுப்பான்
வாய்க்கு அழகு அவன் புகழ் சொல்வதே-திரு நாம சங்கீர்த்தனம்
மனசுக்கு அவன் திரு உருவம் -பூஷணம்
கை நிறைய புஷ்பம் கொண்டு கைங்கர்யம்
ஓட-கால ஷேமம்-முக் கரணன்களால் கைங்கர்யம் –
வழி பாட்டோட அருள் பெறறு மாயன் கோல மலர் அடிக் கீழ்
சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டோடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டோடும் கவி யமுதம் நுகர்ச்சி யுறுமோ ? முழுதுமே –8-10-5
அந்த பகவத் அனுபவம் அங்கே கொடுத்தாலும் –அத்துடன் -கீழ் சொன்ன ஐஸ் வர்யாதி அருளினாலும்
அது இங்கே தொண்டர்க்கு அமுது உண்ண/ அடியார்க்கு இன்ப மாரி /கேட்டார் ஆரார வானவர்-
திரு வாய் மொழி பாடும் ரசத்தோடு ஒக்குமோ என்கிறார் –பாகவத ஜீவனம் -அதற்க்கு அருள் தான் சாதனம்
ஜோதி சுழி பட்டு ஓடும்-பேர் இன்ப வெள்ளம் கிட்டினாலும்-
ஆளுக்கு உடம்பு ஜீவனம் அறிந்து செய்தாலும் –
திரு வாய் மொழி பாடி கேட்கும் இன்பம் ஒக்காது –இதை
முகரும் ஆனந்தம் அதை முழுங்கினாலும் ஒக்காது என்கிறார்
நுகர்ச்சி யுறுமோ ? மூ வுலகின் வீடு பேறு தன கேழில்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக் கை ஏன் அம்மான்
நிகரச் செம்பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உழலும் புட் பாகன் பெரிய தனி மா புகழே–8-10-6
சர்வ லோக ஐஸ்வர்யம் பெற்றாலும்
ஒளி வீசும் கண்ணன்-
குவலையா பீடம் ஒழித்த -என் அம்மான் புகழ்
அசுரர் முடித்த -புள் பாகன்-கருட கொடி ஏற்றி-
புகழை சொல்வதற்கு ஒப்பு இல்லை
தனி மா புகழே எஞ்சான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனிமா தெய்வத் தளிர் அடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மா கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே –8-10-7
எப்பொழுதும் புகழ் நிற்கும் படி
முனி-சங்கல்பித்து
கதா சரவணம் பண்ணினால்- சம்சாரமே ஸ்ரீ வைகுண்டம்
வியாசர் வால்மீகி போல்வாரை எழுத வைத்து
ஆழ்வார் பிரபந்தம்
ஆச்சார்யர் வியாக்யானம்
அனைத்தையும் சங்கல்பித்து
முதல் வித்து-மூல காரணம்
பல்லவம் போன்ற திரு அடி-விட
அடியார் உடன் சேர்ந்து இருப்பதே வேண்டும்
உருக்கம் பக்தி தான் வேண்டும்
கல்யாண குண அனுபவம் –
அவர்கள் ஹிருதயத்தில் இருந்து கேட்டு ஆனந்தம் அவனும் படுகிறானாம்
தன்னால் அப்படி இருக்க முடிய வில்லை என்ற வருத்ததுடன்
திரு அடி-ஸ்ரீ வைகுண்டம் வேண்டாம்-ராகவா உன் குணம் அனுபவிக்கும் படி இருகிறதே கூரத் ஆழ்வான்
சத் சங்க ஆனந்தமே வேண்டும்
நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர் கடலைப் படைத்து தன
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி
நீளும் படர் பூம் கற்பகக் காவும் நிறை பன்னாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே –8-10-8
குளிர்ந்த நீண்ட கடலை படைத்து
திவ்ய மங்கள விக்ரகம்-ஒப்பிலாத
பரம் ஜோதி-
பச்சை மா மலை போல் -அடியார் கூட்டமே திரு பாற்கடல் ஸ்ரீ வைகுண்டம்
தமர்கள் கூட்ட வல் வினையை நாசம் செய்யும் சது மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டு ஆதி பல் படையன்
குமரன் கோல வைங்கனை வேல் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர் களாம் சதிரே வாய்க்க தமியேற்கே –8-10-9
வல்வினை அனைத்தையும் நாசம்செய்யும்
கருணை உண்டே சர்வ சக்தன்-வேற-
சாதுர்யம்-சது
பஞ்ச ஆயுதம் தரிப்பதே அடியாரை ரஷிக்க தான்
குமரன்-யுவாகுமரன் -இரண்டு அழகும் கலந்த ரூபம்
மன்மதன் தாதை- -ஜனகன் -கோபி ஜன பிரியன் –
கோதில் -அந்ய சமாச்ரண்யம் தோஷம் இன்றி-
அவன் அபிமானித்து இருக்கும் பாகவதர் அடியார் ஆக
வாய்க்க தமியேற்கு ஊழி தொரூழி யூழி மாகாயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்க மில்லா வடியார் தம் அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள் அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே –8-10-10
வாய்ப்பு -தமியேற்கு-ஏகாந்தம் முக்கியம்
சத் சங்கம் அனுபவம் மட்டும் –
கோ =தலைவன்
குல பத்தி-அடியார் அடியார்-ஆழ்வார் திரு அடி சம்பந்தமே நல்ல கொள்கை
இது ஒன்றே யோக்யதை -அடியேன் ராமானுஜ தாசன் -அவர் அபிமானித்து ஆள் கொண்டு இருக்கிறார்
நல்ல கோட் பாட்டு உலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அம் தன் குருகூர் சடகோபன்
சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே –8-10-11
நல்ல கொள்கை உடன் சேவிப்பார்கள்- நல்ல மனை வாழ்வு பெறுவார்
பலன்-பிறர் சொல்லும் படி
பாகவத கைங்கர்யம் ஆகிய நல்ல பதத்தால் —
கைங்கரத்தில் துணை போக அனுகூலரான மனைவி மக்கள் பெறுவார்
அனுகூலம் இல்லை யானால் இல்லறம் தியாகம்-எதி ராஜர்-உதாரணம்
நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை யுடைய பத்தர் –அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறானது
கொள்ளை நிலமான நிலை கொண்டு –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –80
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply