கண்டார் மனம் கவரும் ஒழுக்கச் செல்வமுடைய ஆச்சார்ய புருஷர்கள் உனது பெருமைக்கு ஏற்கும் தகுதி வாய்ந்த மிகச் சிறந்த பொற்கலசம் குடை ஸாமரம் கண்ணாடி முதலிய மங்களப் பொருள்களைக் கையிலே ஏந்தியவராய் -உனது திருவடித் தாமரை தொழும் தூய தொண்டு விருப்பம் கொண்டு உனது திரு முன்பே கூடியுள்ளனர் -நரஹரி ஆதலால் திருப்பள்ளி எழுந்து அருளாயே
ஆச்சார்ய புருஷ வராஹ் யபிராம வ்ருத்தா அர்ஹாபி பூஜ்ய தர மங்கள வஸ்து ஹஸ்தா த்வத் பாத பங்கஜ சிஷே விஷயே ப்ரபந்நா ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் —17- ப்ரஹ்ம தீர்த்த கரையில் தானே கருட வாஹனத்துடன் தோன்றி அருள் புரிந்த திருக்காஞ்சி புரம் பேர் அருளாளானைத் திருவடி தொழுது திருக்கடிகை தடம் குன்றில் ஏறி உன்னைத் திருவடி தொழ ஸ்ரீ மஹாச்சார்யரும் வந்து விட்டார் -நரஹரி திருப்பள்ளி எழுந்து அருளாயே ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ கிரிசேகர ஸூ ப்ரபாதம் யே மாநவா ப்ரதிதினம் படிதும் ப்ரவ்ருத்தா தேப்ய பிரசன்ன வதன கமலா சஹாய ஸர்வாணி வாஞ்சித பலாநி ததாதி காமம் –18- திருக் கடிகை நரஸிம்ஹப் பிரானின் திருப்பள்ளி எழுச்சியைத் தூய மனத்துடன் நாள் தோறும் ஓதுகின்ற அடியவருக்கு த் திருமகள் கேள்வனாகிய கடிகைப் பிரான் இன் முகம் செய்து அவர்களது அபீஷ்டங்களை எல்லாம் மேல் மேலும் அளித்து பேர் அருளும் செய்து அருளுவது திண்ணம் ————– ஸ்ரீ கடிகாசல ஸ்ருங்காக்ர விமானோதர வாஸிநே–நிகிலாமர சேவ்யாய ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -1- கடிகைத் தடம் குன்றின் மிசை கோயில் கொண்டு நித்ய வாசம் செய்து அருளுபவனே -அனைத்துத் தேவர்களும் தொழும் பெரியவனே -நாரஸிம்ஹப் பெருமானே உனக்கு மங்களம் உண்டாகுக உதீசீரங்க நிவஸத் ஸூமநஸ்தோம ஸூக்திபி -நித்யாபி வ்ருத்த யஸசே ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -2- வட திருவரங்கத்தில் வாழும் நல்லோர்கள் ஸ்துதித்துப் புகழ்வதால் நாள் தோறும் புகழ் ஏறும் செல்வமுடைய நரஸிம்ஹப் பெருமானே உனக்கு மங்களம் உண்டாகுக ஸூதா வல்லீ பரிஷ்வங்க ஸூரபீ க்ருத வஷஸே –கடிகாத்ரி நிவாஸாய ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -3- ஸ்ரீ ஸூதா வல்லித் தாயார் சேர்ந்து இலங்கும் மணம் கமழ் திரு மார்பனே -திருக் கடிகை திரு மலையை திருக் கோயிலாகக் கொண்டவனே உனக்கு மங்களம் சர்வாரிஷ்ட விநாசாய சர்வேஷ்ட பல தாயிநே– கடிகாத்ரி நிவாஸாய ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -4- தீமைகள் அனைத்தையும் அழிப்பவனே -வேண்டுவோர் வேண்டுவன அனைத்தையும் அளித்து அருள்பவனே -திருக் கடிகை திரு மலையை திருக் கோயிலாகக் கொண்ட நரஸிம்ஹப் பெருமானே உனக்கு மங்களம் மஹா குரு மன பத்ம மத்ய நித்ய நிவாஸிநே –பக்தோசிதாய பவதாத் மங்களம் ஸாஸ்வதீ சமா -5– மஹாச்சார்யார் திரு உள்ளத் தாமரை நடுவில் என்றும் நின்று விளங்குபவனே -பக்தோ சிதனாகிய உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு மங்களம் உண்டாகட்டும் ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே –நந்த நந்தன ஸூ ந்தர்யை கோதாயை நித்ய மங்களம் -6- ஸ்ரீ மன் மஹா பூத புரே ஸ்ரீ மன் கேசவ யஜ்வன –காந்தி மத்யாம் ப்ராஸூதாய யதிராஜாய மங்களம் -7- பாதுகே யதி ராஜஸ்ய கதயந்தி யதாக்யயா -தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் அஹம் -8- ஸ்ரீ மதே ரம்யா ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மனே –ஸ்ரீ ரெங்க வாஸிநே பூயாத் நித்ய ஸ்ரீ நித்ய மங்களம் -9- ஸும்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம் புஜ ஷட் பதம் –தேவ ராஜ குரும் வந்தே திவ்யஜ்ஞான ப்ரதம் சுபம் -10- வாதூல ஸ்ரீ நிவாசார்ய தநயம் விநயாதிகம் –ப்ரஜ்ஞா நிதிம் பிரபத்யேஹம் ஸ்ரீ நிவாஸ மஹா குரும் -11- சண்ட மாருத வேதாந்த விஜயாதி ஸ்வ ஸூக்திபி –வேதாந்த ரக்ஷகா யாஸ்து மஹாசார்யாய மங்களம் -12- ——————————– ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .Archive for the ‘Narasimhar’ Category
ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ யோக லஷ்மி நரசிம்ம ஸூப்ரபாதம் -மங்களம் –
March 15, 2017ஸ்ரீ நரசிம்ஹ திரு அவதார பரமான அருளிச் செயல்கள் —
August 9, 2015திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத் தண்டு என்று பாடுதுமே
——————————-
கோபால கோளரி அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
கோளரியின் இன்னுருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூருகிரால் குடைவாய்
மீள வவன் மகனை மெய்ம்மை கொளக்கருதி மேலை யமரர் பதி மிக்கு-
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும் அமையும் ஆனவனே -ஆயர்கள் நாயகனே –
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி
முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான்
பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் –ஏதம் ஒன்றுமிலாத வண் கையினார்கள் வாழ திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்கள் உழக்கிய பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே
கொம்பினார் பொழில்வாய்க் குயிலனம் கோவிந்தன் குணம் பாடும் சீர் -செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி யுடைத் திருக் கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் –எம்பிரான் தன சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே
வல்லெயிற்றுக் கேழலுமாய் வாள் எயிற்றுச் சீயமுமாய் எல்லையில்லாத்
தரணியையும் அவுணனையும் இடந்தானூர் –மதிள் அரங்கம் என்பதுவே
உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க ஊன்றி
சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க வாயலரத் தெழித்தான் கோயில் –தண் அரங்கமே
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனல் அரங்கமே
நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய் உம்பர் கோன் உலகேழும் அளந்தாய்
மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர் –இங்குப்புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர் –பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே –
——————————————————————–
யசோதை இளம் சிங்கம் –நந்தகோபன் குமரன் –சிங்க குமரன்
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்தது உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து-
-வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா உன் கோயில் நின்று இங்கனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
———————————————
குண்டு நீருறை கோளரீ மதயானை கோள் விடுத்தாய் உன்னைக் கண்டுமாலுரு வோங்களைக் கடைக் கண்களாலிட்டு வாதியேல் –
———————————————
வால் நிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்-ஊன் நிறத் துகிர்த்தலம் அழுத்தினாய்-உலாயசீர்
நால் திறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு பால் நிறக் கடல் கிடந்த பற்ப நாபன் அல்லையே —
சிங்கமாய தேவ தேவ
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் யேயிற்று மற்றவன் உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தலத்தை ஊன்றினாய்
—————————————————-
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு அரிய வாதிப் பிரான் அரங்கத்தமலன் –
——————-
மறம் கொள் ஆளரி யுருவென வெருவர ஒருவனது அகல் மார்வம் திறந்து வானவர் மணி முடி பணி தர
இருந்த நலிமயத்துள் –பிருதி சென்றடை நெஞ்சே
பொன்னிறத்து உரவோன் ஊன் முனிந்து அவனதுடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து
அயன் அரனைத் தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் –வதரியாச்சிராமத்துள்ளானே
தூய அரியுருவில்–காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே
ஏனோர் அஞ் வெஞ்சமத்துள் அரியாய் பரிய இரணியனை ஊனாரகலம் பிளவெடுத்த ஒருவன் தானே இரு சுடராய் வானாய்த்
தீயாய் மாருதமாய்
மலையாய் அலை நீர் உலகனைத்தும் தானே -தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே
அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்ச் செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றமே
அலைத்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளன் இடம் –சிங்க வேள் குன்றமே
ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் வாய்ந்த ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம் –சிங்க வேள் குன்றமே
எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம் –சிங்க வேள் குன்றமே
மென்ற பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் போன்ற ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம் —-சிங்க வேள் குன்றமே
எரிந்த பைங்கண் இலங்கு பேழ்வாய் எயிற்றோடு இது எவ்வுரு வென்று இருந்து வானோர் கலங்கியோட இருந்த அம்மானதிடம் –சிங்க வேள் குன்றமே
முளைத்த சீற்றம் விண் சுடப் போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச ஆளரியாய் இருந்த அம்மானதிடம் –சிங்க வேள் குன்றமே
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த அம்மானதிடம் –சிங்க வேள் குன்றமே
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான் அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளனிடம்– சிங்க வேள் குன்றமே
செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை -இரும் தமிழ் நூல் புலவன் -செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய கோணாகணையாய் குறிக் கொள் எனை நீயே
பள்ளியில் ஓதி வந்ததன் சிறுவன் வாயில் ஓராயிர நாமம் ஒள்ளிய வாகிப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திரு வல்லிக் கேணி கண்டேனே
அவுணர்க்கு என்தானும் இரக்கம் இலாதவனுக்கு உறையுமிடமாவது –நீர் மலையே
தாங்காததோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்து –இடம் நீர் மலையே
அன்று அடல் அரியாய்ப் பெருகினானை –கண்டு கொண்டேன் கடல் மல்லைத் தல சயனத்தே
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம்மாயனே அருளாய்
எரியன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா அரி யுருவாம் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே
திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள் புண் படப் போழ்ந்த பிரானது இடம் –பரமேச்சுர விண்ணகர மதுவே
பொங்கி அமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ அங்கவனாகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்தாட
பைங்கண் இரண்டு எரிகான்ற நீண்ட எயிற்றோடு பேழ்வாய் சிங்க வுருவின் வருவான் சித்திர கூடத்துள்ளானே
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடம் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை
ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி
வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழும் இடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம்
ஓடாத வளரியின் உருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலதிடம் –நாங்கூர் தன்னுள் –திருத் தேவனார் தொகையே
உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும் வெஞ்சினத்து அரி பரி கீறிய அப்பன்
வந்துறை கோயில் –நாங்கூர் வண் புருடோத்தமே
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா வாற்றலும் ஆய எந்தை –நாங்கூர்த் திரு மணி கூடத்தானே
அன்று அரியாய் மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில் –திரு வெள்ளியங்குடி யதுவே
தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை –யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே
எங்கனே உய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம் -பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்திழிய
வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது அங்கனே ஒக்க அரி யுருவாளன் அரங்க மா நகர் அமர்ந்தானே
முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம் புனை வாளுகிரால் போழ் பட ஈர்ந்த புனிதனூர்–நறையூரே
பைங்கண் ஆளரி யுருவாய் வெருவ நோக்கிப் பருவரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி -அங்கை வாள் உகிர் நுதியால்
அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே
அரியுருவாய் இரணியனதாகம் கீண்டு வென்றவனை விண்ணுலகில் செல உய்த்தாற்கு விருந்தாவீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே
ஓடா அரியாய் இரணியனை ஊனிடந்த சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை நாள் தோறும் நாடி நறையூரில் கண்டேனே
ஓடா வளரியின் உருவாய் மருவி ஏன் தன் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா –நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பியோ
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானை
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னி நின்ற அங்கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே
விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய்ப் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து –அண்டா நின்னடி யன்றி மற்று அறியேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
சினமேவும் அடலரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியனதாகம் கீண்டு –எம் மாயோன் –அணி யழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப் படைத்துக் காத்துண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
ஆமையாகி அரியாகி அன்னமாகி –முன் காமற் பயந்தான் கருதுமூர் கணபுரம் நாம் தொழுதுமே
உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றொன் அகலம்
வெஞ்சமத்து பிளந்து வளைந்த உகிரானைப் — கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானே பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை
வாள் அவுணன் பூநாகம் கீண்டதுவும் ஈண்டு நினைத்து இருந்தேன் பேணாத வல்வினையேன் இடர் அத்தனையும் காணேன் நான் கண்ணபுரத் துறை யம்மானே
பரிய இரணியனது ஆகம் அணி யுகரால் அரி யுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த பங்கய மா மலர்க் கண் பரனை எம் பரஞ்சுடரை
திங்கள் நன் மா முகில் சேர் திருமாலிரும் சோலை நின்ற நங்கள் பிரானை இன்று நணுகும் கொல் என் நன்னுதலே
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால் பிளந்டிட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால்
பொருந்தலன் ஆகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்து அன்று –முனிந்த பெருமை கொலோ
கரும் கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே
அங்கு ஓர் ஆளரி யாய் அவுணனை பங்கமா இரு கூறு செய்தவன்
தளையவிழ் கோதை மாலை இருபால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண்
அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன் சினங்களவிழ
வளை யுகிராளி மொய்ம்பின் மறவோனதாகம் மதியாது சென்று ஒருகிரால்
பிள வெழவிட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே
கூடா இரணியனைக் கூருகிரால் மார்விடந்த ஓடா அடலரியை உம்பரார் கோமானை
தோடார் நறும் துழாய் மார்வனை ஆர்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமே
————————————————
பூங்கோதயாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்
புரியொருகை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி அரியுருவும் ஆளுருவுமாகி எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலதியை
யல்லால் மற்று எண்ணத் தான் ஆமோ இமை
முரணவலி தொலைதற்காம் என்றே முன்னம் தரணி தனதாகத் தானே இரணியனைப் புண் நிரந்த வள்ளுகிரால்
பொன்னாழிக் கையால் நீ மண்ணிரந்து கொண்ட வகை
எளிதில் இரண்டடியும் காண்பதற்கு என்னுள்ளம் தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே களியில் பொருந்தாதவனைப்
பொரலுற்று அரியா இருந்தான் திரு நாமம் எண்
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே
உரத்தினால் ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை ஒரரியாய் நீ இடந்த தூன்
வயிரழல வாளுருவி வந்தானை யஞ்ச எயிறிலக வாய் மடித்தது என் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக் கையா நின் சேவடிமேல் ஈட ழியச் செற்று
——————————-
கொண்டது உலகம் குறளுருவாய் க கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிலர் வைத்தது
உண்டதுவும்
தான் கடந்த வேழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள் வான் கடந்தான் செய்த வழக்கு
உற்று வணங்கித் தொழுமின் உலகு எழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள் இருந்தானை ஏத்தும் என் நெஞ்சே
———————————-
இவையவன் கோயில் இரணியனதாகம் அவை செய்தரி யுருவமானான் -செவி தெரியா நாகத்தான் நால் வேதத்து உள்ளான்
நறவேற்றான் பாகத்தான் பாற் கடலுளான்-
கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம் தெரியுகிரால் கீண்டான் சினம்
செற்றதுவும் சேரா விரணியனை சென்று எற்றுப் பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய்
முற்றல் முரி ஏற்றின் முன்னின்று மொய்ம்பொழித்தாய் மூரிச் சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து
அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து மங்க விரணியனதாகத்தை பொங்கி அரியுருவமாய் பிளந்த அம்மானவனே
கரியுருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து
புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் இகழ்ந்த விரணியனதாகம் சுகிர்ந்து எங்கும் சிந்தப் பிளந்த திருமால்
திருவடியே வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து
———————————————————-
தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம் வகிர்த்த வளை யுகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ யுயர்த்தி உள் பாங்கி நீ யே அரு நான்கும் ஆனாய் அறி
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு கூறாகக் கீறிய கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை
வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியான் அன்றே –
உவந்து எம்மைக் காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த மீப்பாயும் எவ்வுயிர்க்கும் நீ
இவையா பில வாய் திறந்து எரிகான்ற இவையா எரி வட்டக் கண்கள் இவையா எரி பொங்கிக் காட்டும்
இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு
அழகியான் தானே அரியுருவான் தானே பழகியான் தாளே பணிமின் குழவியாய்த்
தானேழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே மீனாய் உயிர் அளிக்கும் வித்து
—————————————————–
நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும் ஒன்றும் ஓவா வாற்றான் என் நெஞ்சகலான் அன்று அங்கை
வன்புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான் அன்புடையான் அன்றே யவன்
வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே தழீ இக்கொண்டு போரவுணன் தன்னை கழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால் வெள்ளம் தானுகள வாழ்வடங்க மார்விடந்த மால்
————————————————–
போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்பின் மேல்கட்டி செங்குருதி சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி ஆரா வெழுந்தான் அரியுருவாய்
———————–
தன்னுடைய தோள் வலியால் கைக் கொண்ட தானவனை பின்னோர் அரியுருவமாகி எரி விழித்து கொல் நவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே
வல்லாளன் மன்னு மணிக் குஞ்சி பற்றி வர வீர்த்து தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த மின்னிலங்கும் ஆழிப்படைத் தடக்கை வீரனை
அன்னத்தை மீனை அரியை அருமறையை
கோட்டியூர் அன்ன வுருவின் அரியை
வேளுக்கை ஆளரியை
—————————————————–
ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ்வாணுதலே
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையா வென்று இரணியன் துண் புடைப்ப அங்கு
அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே
கிளர் ஒளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்து எழுந்து கிளர் ஒளி இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன் மணி நீல வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறைவிலமே
அரி ஏறே என்னம் பொற் சுடரே —
போழ்து மெலிந்த புன்செக்கரில் வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா மலை கீழது பிளந்த சிங்கம் ஒத்ததால்
அப்பன் ஆழ துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே
செல்ல வுணர்ந்தவர் செல்வன் தன சீரன்றிக் கற்பரோ -எல்லையிலாத பெரும் தவத்தால் பல செய்ம்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் இரணியனாகத்தை மல்லரி யுருவாய்ச் செய்த மாயம் அறிந்துமே
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை மாக வைகுந்தம் காண்பதற்கு
என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே
என்நெஞ்சத்துள் இருந்து இங்கு இருந்த தமிழ் நூலிவை மொழிந்து வன்னெஞ்சுத்து இரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்காப்படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே
பிரியாது ஆட்சி என்று பிறப்பு அறுத்து ஆள அறக் கொண்டான் -அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள் வாய் அரவணை மேல் வாட்டாற்றான் காட்டினனே
———————-
பண் தரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை கொண்ட
நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே மண்டு வந்து என்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே
வளர்ந்த வெங்கோபம் அடங்கல் ஒன்றாய் அன்று வாள் அவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிர் எழுந்து
விளைந்திடும் சிந்தை இராமானுசன் என் தன மெய் வினை நோய் களைந்து நன் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே
————————————————————————————————
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹனும் ஸ்ரீ ராமானுஜரும் -ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள் —
July 23, 2015ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹன் ஆராத்ய தெய்வம் எல்லா ஆச்சார்யர்களும்
ஆராதனத்தால் கிட்டுவது –
பிரயோஜனாந்தரர்கள் இல்லை
தன்னாலே கிட்டும்
உபய லிங்க விசிஷ்டன் -அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக தானாக -அழிகியான் தானே அரியுருவன் -நாரசிம்ஹ வஹுபு ஸ்ரீ மான் –கைங்கர்ய ஸ்ரீ மான் போலே நாரசிம்ஹ உருவத்தாலே ஸ்ரீ மான் –
ச மயா போதித்தா ஸ்ரீ மான் -என்னால் எழுப்பப்பட்டவன் தூக்கம் என்னும் ஸ்ரீ மத்வம் உடையவனை –பையத் துயின்ற பரமன் -துயிலும் பொழுதே பரமன் போலே
கிடந்த நாள் கிடத்தி நீ எத்தனை நாள் கிடத்தி உன் திரு உடம்பு அசைய
வாக்மி ஸ்ரீ மான் -வாக் சாமர்த்யம் ஸ்ரீ மத்வம் -கிளர் ஒளியால் குறைவில்லா கிளருகின்ற ஒளி உதய சூர்யன் போலே ஒளி கூடி அரி உருவாய் கிளர்ந்து எழுந்து
கிளர் ஒழிய ஹிரண்யன் தேஜஸ் குறைய –அகல் மார்வம் கிழித்து உகந்த –
சங்கு சக்கரம் உள்ளது போன்ற ஆழ்வார் அருளி -கனல் ஆழி வலக்கை -இதனால் தான் சங்கு சக்கரம்
மாரி–முழங்கிப் புறப்பட்டு -பூவைப் பூ வண்ணா -தேஜஸ் -மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு சீரிய சிங்கம் அறிவுற்று தீ விளித்து
வேரி மயிர் பொங்க – –எப்பாடும் பேர்ந்து -முன் கால்களை தள்ளி பின் கால்களையும் தள்ளி –சோம்பல் விட உதறி மூரி நிமிர்ந்து -கீழும் மேலும் -அசைந்து -நரசிம்ஹன் திருக்கரங்களில் –
பூவைப் பூ வண்ண -புஷ்பம் போலே –சேராதவற்றை சேர்த்து அருளி -நீ -நடுவில் -அருளி –சிங்கத்தின் தேஜஸ் புஷ்பத்தின் மார்த்வம் நடுவில் சொல் வைக்க –
இரண்டுக்கும் இருப்பிடம் நீ –
புஷ்பம் போலே சூடிக் கொள்ளவும் முகந்து அனுபவிக்கவும் ஆபத்தில் ரஷிக்க சிங்க உருவம் –அகடிதகட நா சாமர்த்தியம் -கோப பிரசாதங்கள் -இரண்டையும் காட்டி அருளி
கடக ஸ்ருதிகள் கொண்டு ஒருங்க விட்டார் பேத அபேத ஸ்ருதிகளை -ஸ்ரீ பாஷ்யத்தில்
இதி சர்வம் சமஞ்சம் முரண் பாடு இல்லாமல் ஒருங்க விடப்பட்டன –
அஜாயமானாக பஹூதா விஜாயதே – பிறக்காதவன் பல தடவை பிறக்கிறான்
பிறப்பில் பல் பிறவி பெருமான் –எண்ணிறந்த திருவவதாரங்கள் –
-கர்மாதீனம் இல்லை இச்சா கிருபையால் -அருமையால் திருவவதாரங்கள்
போக்தா போக்யம் ப்ரேரிதா-மூவர் உண்டு -பேத ஸ்ருதி-ஷரம் பிரதானாம் –அம்ருதம் ஷராத்மணா ஈஸ்வரம்
நேக நாநாதவம் கிஞ்சின இஹ நாநா ந அஸ்தி —எல்லாமே ஓன்று என்று சொல்லும் அபேத ஸ்ருதி –
ஸ்வேத கேது சதேவ -ஏக மேவ ஆஸீத் –த்விதீயம் –ஒன்றாகவே இருந்தது
தத்வமஸி ச்வேதகேது நீயே ப்ரஹ்மம் –ப்ரஹ்மம் தவிர்ந்த நான் அல்ல -இவைகள் அபேத ஸ்ருதிகள்
வேதம் சொல்பவை எல்லாம் சத்யம் –
சேர்க்க -கடக ஸ்ருதிகள் -மூன்றாவது வகை –
யஸ்ய ஆத்மா சரீரம் –பிருத்வி சரீரம் –
அந்த பிரவிஷ்டா பரமாத்மா –
சேதன அசேதனங்கள் சரீரம்
சரீரம் போலே விட்டுப் பிரியாமல் சேதன அசேதனங்கள் இருக்கும் -பின்னிப் பிணைந்து -சரீராத்மா பாவம் விளக்கி அருளினார் –
ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொள்ளாத ஒன்றுமே இல்லையே –
மயில் தோகை மயில் போலே ஜகமும் ப்ரஹ்மமும்-
கடல் அலை -கடல் -போலே ஜகமும் ப்ரஹ்மமும் –
சிலந்தி பூச்சி நூல் -போலே
அசத் -அந்தராத்மாவாக கொள்ளாத பொருள்கள் இல்லை –
உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -நம் ஆழ்வார் ஜகத்தை சரீரமாகக் கொண்டு ப்ரஹ்மம்-தத் த்வம் அஸி –ஐத ஆத்ம்யம் இதம் சர்வம் –கரந்த பாலுள் நெய்யே போல் –
உரை குத்தி தயிர் மோர் வெண்ணெய் நெய் நான்கு வேலை
த்ரஷ்டவ்யோ கேட்டு மனனம் த்யானம் அநவரத நித்யாசந்தனம் நான்கு வேலைகள்
எங்கும் உளன் கண்ணன் –சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே —
நின்றனர் நின்றிலர் -எல்லாம் அவனது ஆதீனம் ஆகுமே -என்பர் -எங்கும் உளன் -வ்யாபகத்வம் -இங்கு உள்ளான் அந்தர்யாமித்வம்
உருவும் அருவுமானான் இதி சர்வம் சமஞ்சயம் –
தத் த்வம் -இரண்டு ப்ரஹ்மமும் ஓன்று -சேதன அசேதனம் அந்தராத்மாவும் ஸ்வேதா கேது உனக்குள்ளே உள்ள அந்தராத்மாவும் ஒரே ப்ரஹ்மமே
சாமா பத்தி -ஆனந்தத்தில் சாம்யம் –
அவன் கைங்கர்யம் பெற்று நாம் கைங்கர்யம் செய்து ஆனந்தம் –இந்த ஆனந்தத்தில் தான் சாம்யம் –
உபநிஷத் என்னும் அமுதக் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தால் போலே பராசரர் திருக் குமாரர் பாராசர்யர் வேத வியாசர் -அருளிச் செய்த ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம்-
பூர்வாச்சார்யர் ஸூ ரஷிதாம் -காத்து வர
தூரஸ்திதாம் பஹூ மதி –
நடு முற்றத்துக்கு கொண்டு வந்து அனைவரும் பருகும் படி ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளினார்
ஸ்ரீ பாஷ்யம்-சரஸ்வதி தேவி கிடாம்பி ஆச்சான் கட்டியதும் -ஸ்ரீ பாஷ்யகாரர் என்ற திரு நாமமும் கொடுத்து -சாரதா தேவி -என்னும் சரஸ்வதி தேவி அருளி –
–சுதர்சன சூரி திருக் குமாரர் சுதபிரகாசர் தான் விசிஷ்டாத்வைதம் பெயர் கொடுத்தார்
ஸ்ரீ பாஷ்யகாரர் திருமலையில் பிரசித்தம் உடையவருக்கு –
உபய வேதாந்தாந்தம் கொண்டு ஒருங்க விட்டு அருளினார்
வருத்தும் புற இருள் -மாற்ற –மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் செந்தமிழ் தன்னையும் கூட்டி –
அன்று எரித்த திரு விளக்கை தன் இதயத்துள் இருத்தும் ராமானுசன் -பொய்கை ஆழ்வார் திருவடி சம்பந்தம் ராமானுஜருக்கு –
இரண்டு கண் போலே – ஒரே வஸ்துவை பார்ப்பது போலே –
உபய வேதாந்தம் கொண்டு ஒரே ப்ரஹ்மம் பார்த்து இரட்டை மாட்டு வண்டி ஒரு லஷ்யம் நோக்கி கூட்டிச் செல்வது போலே –
கலி மிக்க –வலி மிக்க சீயம் இராமானுசன் -சாஸ்திர விரோதம் பேசுவாரை வாதங்களை தவிடு பொடியாக்கி –
தோற்றாரையும் தனது அடியவராக்கி கொண்டு அருளி –
பகவான் சொத்து வீணாக்கக் கூடாதே சௌஹார்த்தம் -ஆர்த்த்ரா நனைந்து இருக்கும் தன்மை –
உஞ்ச விருத்தி மாதுகரம் அருளிச் செயல் அனுசந்தானம் செய்து கொண்டே -உப்பு புளி காரம் இல்லாமல் சுத்த அன்னம் ஒன்றே உட்கொண்டு
உந்து மத களிற்றன் அத்துழாய் விருத்தாந்தம் –
ஆழ்வார் கிருபை தான் தேஜஸ் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -இராமானுச முனி வேழம்
–உலகம் ஏத்தும் தென்னானாய் -மத்த மாதங்கம் பெருமிதம் தோன்ற நடை உண்டே
ஞானம் பக்தி இரண்டும் சேர்ந்த கலப்பே ஸ்ரீ ராமானுஜர்
ஞானம் முதிர்ந்து பக்தி -சங்கரர் ஞான யோகம் ராமானுஜர் பக்தி யோகம் தப்பாக சிலர் சொல்வார்கள்
பக்தி ஞானம் முதிர்ந்து சிநேக பூர்வகமாக -அறிவு -ஸ்மரணம் த்யானம் நித்யாசானம் அன்பு பக்தி –
ஆழ்வார்கள் –
வேதாந்தி வரட்டுத் தனம் -கல்லணை மேல் –கண் துயிலக் கற்றனையோ காகுத்தா கரிய கோவே தசரதன் புலம்பல் –
காதல் -மென்மை- பார்த்து –மங்களா சாசனம் -பொங்கும் பரிவால் -பெரியாழ்வார் -திண்ணிய தோளைக் காட்ட மேலும் பயம் அதிகரிக்க –
ப்ரேமம் மிக்கு நாயகி பாவங்களில் ஆழ்வார்கள் –
கேவல வாக்யார்த்த ஜன்யமான ஞானத்தால் முக்தி அல்ல –விதுரச்ய மகா மதி -பழத்தை கீழே போட்டு கண்ணன் உண்ண தோலைக் கொடுக்கும் கலக்கம்
திருப்பாவை ஜீயர் –ஆழம் கால் பட்டு பக்தி ததும்பிய திருப்பாவை – மூழ்கி –
நாச்சியார் திருமொழி -நாறு நறும் பொழில் –திருமால் இரும் சோலை –அண்ணா –அபிமானிக்கப் பட்டவர் திருமலையில் திருமஞ்சனம்
வேதாந்தம் மறைத்து -மரம் இரண்டு பறவைகள் -சரீரம் பரமாத்மா ஜீவாத்மா -நூறு தடா -கொடுத்து -அபகத பாப்மாதி அஷ்ட குணங்கள் அறிந்து இருந்தும் –
விஸ்வாசம் இருந்து -செய்து அருளி –பாசுரம் அன்று பெற்றோம் போனகம் இன்று பெற்றோம் அழகர் மகிழ்ந்து -கபோலம் பருத்து -வெண்ணெய் பால் உண்டு —
யசோதை முகவாய் தொட்டு யசோதை கேட்டு -பதில் சொல்லமால் வெண்ணெய் வாயில் இருப்பதால் கபோலம் முகவாய் பருத்து இருக்கும் –
-வாரீர் –கோயில் அண்ணரே வாரும் கோதாக்ராஜர்-பட்டம் பெற்றார் –
பெரிய பெருமாள் திரு முகம் ஜூரம் -நாவல் பழம் தத்த்யோன்னம் சேர்த்து அமுது செய்த -முதலியாண்டான் -கருட வாகன பண்டிதர் -கஷாயம் காய்ச்சி சரிப்படுத்தினார் –
பஞ்ச காலம் யோகம் -ப்ரஹ்ம த்யானம் –பிடித்தேன் –-மடித்தேன் -மனை வாழ்க்கையுள் நிற்கும் மாயையை -பாசுரம் –நடை அழகை சேவிக்கும் சிஷ்யர் -பற்பம் எனத் திகழ்-எம்பார் –
வேர் முதலாய் வித்தாய் -கொண்டு ஸ்ரீ பாஷ்யகாரர் முக்காரணங்கள்-
விச்வச்ய விஸ்வத காரணம் அச்யுத -ஸ்ரீ கூரத் ஆழ்வான்-த்ரிவித காரணங்களும் –நீயே
சரீராத்மா பாவம் கொண்டு அவிகாராயா விகாராயா-நிர்வகிக்கலாம்
நீராய் நிலனாய்-சாமானாதிகரணம் -தேவரீர் நீராய் உள்ளீர் சொல்லாமல் ப்ரஹ்மமே நீர் -சேதனாசேதனங்கள் அவ்வளவு இரண்டற ஒட்டிக் கொண்டு இருப்பதால் -சரீரவத் –
நீலம் மண்ணால் செய்யப்பட வாயும் வயிறுமாய் வேலைப்பாடுகள் கூடிய குடம் போலே
நீராய் நிலனாய்–பண்புகள் உடன் கூடிய ப்ரஹ்மம் –
இதி சர்வம் சமஞ்சயம்-உபாதான காரணம் -அவிகாராயா நிர்விகாராய இரண்டையும் சேர்த்து
திருமாலை ஆண்டான் -ஆளவந்தார் திருக்குமாரர் -திருவாய்மொழி அர்த்தங்கள் சாதிக்க -விஸ்வாமித்ரர் சிருஷ்டி -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -க்யாதி லாப பூஜா அபேஷை இல்லாமல்
எக்காலத்து எந்தை யாய் என்னுள் மன்னில் -மற்று யாதொன்றும் வேண்டேன் -மிக்கானை –அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போவேனே சக்கரைப் பழம் -அபூத உவமை –
சக்கரை விதை தேனை நீராக பாய்ச்சி மரம் -அதில் பழுத்த பழம் –
எக்காலத்து -எந்தையாய் என்னுள் மன்னில் -ஒரு நிமிஷம் வந்து ஹிருதயத்தில் வந்தால் -பின்பு தொந்தரவு செய்ய மாட்டேன் -திருமாலை ஆண்டான்
உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருப்பவர் -ஒரு நிமிஷம் திருப்தி அடைய மாட்டார்
மற்று -யாதொன்றும் வேண்டேன் -இது தவிர வேறு கேட்க மாட்டேன் -மற்று என்பதை எக்காலத்திலும் மற்று யாதொன்றும் வேண்டேன் -மாற்றி –
ஊனில் வாழ் உயிரே எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தேன் -தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -இதற்கும் -விஸ்வாமித்ரர் சிருஷ்டி –
தேனும் தேனும் கலந்தால் ஒரு ரசம்
ஏக ரசம் இல்லை –பஞ்ச ரசம் -எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -எல்லாம் இருப்பதால்
திருக் கோஷ்டியூர் நம்பி -இத்தை ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு இருக்கிறேன் –
சாந்தீபன் வசிசிஷ்டர் போலே அறிந்ததை மீண்டும் கேட்டு அருளுகிறான் -ஆசார்யர் சிஷ்யர் பந்தத்தி பாதுகாக்க –
—————————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் பெரிய பெருமாள் ஆண்டாள் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நரசிம்ஹாஷ்டகம் –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள சீயர் அருளிச் செய்த ஸ்லோஹம் –
August 25, 2014ஸ்ரீ ஸூந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம் –
பிறவிக் கடலுள் நின்று துளங்கும் பிராணிகளைக் கரை மரம் சேர்ப்பதற்கு
உரிய தோணி போன்றதான அழகிய மணவாள சீயர் உடைய
திருவடித் தாமரைகளை
தஞ்சமாக பற்றுகிறேன்
என்றவாறே –
பெருமாள் கோயில் கரிகிரியின் கீழ்க் காட்சி தந்து அருளா நிற்கும்
அழகிய சிங்கர் விஷயம் என்றும்
திரு வல்லிக் கேணி தெள்ளிய சிங்கர் விஷயமாகவும்
பணித்து அருளிய ஸ்லோகம் –
———————————————————————————————————————————————
ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி
ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த
பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம்
தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ—————1-
—————————————-
ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி -ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த
அழகியவாயும்
களங்கம் அற்றவையுமாயும் உள்ள
பல வாயிரம் பௌர்னமி சந்திரர்களின்
சோபையைத் தாங்குகின்ற
மநோ ஹரமான
உளை மயிர் திரள்களினால் -சடாபடலம் -உளை மயிர்க் கற்றை – களாலே
அழகியவரே -அழகியான் தானே அரி யுருவன் தானே –
பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம் தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ –
கருணைக்கு இருப்பிடமானவரே
ஆசூர வர்க்கங்களுக்கு யமன் போன்ற
அழகிய சிங்கப் பெருமாளே –
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ் புக நின்ற செங்கண்மால் -திருவாய் மொழி -3-6-6-
தைத்யவர் -இரணியன் போன்ற ஆசூர பிரக்ருதிகள்
காலன் -மிருத்யு
சம்சாரக் கடலில் வீழ்ந்த
அடியேனை ரஷித்து அருள வேணும் –
நரசிம்ஹ நரசிம்ஹ -இரட்டிடித்துச் சொல்லுகிறது
ஆதார அதிசயத்தினால் –
பிறவிக் கடலுள் நின்று துளங்கும் அடியேனுக்கு
தேவரீர் உடைய திருவருள் அல்லது
வேறு புகல் இல்லை
என்றார் -ஆயிற்று-
———————————————————————————————————————————————————————————————-
பாத கமல அவந்த பாதகி ஜநா நாம்
பாதக தவா நல பதத்ரிவரகேதோ
பாவந பராயண பவார்த்தி ஹரயா மாம்
பாஹி க்ருபயைவ நரசிம்ஹ நரசிம்ஹ–2
—————————————-
பாத கமல அவந்த பாதகி ஜநா நாம் –
தனது திருவடித் தாமரைகளில்
வணங்கின பாபிஷ்ட ஜனங்களின் உடைய
பாபங்களுக்கு
பாதக தவா நல –
காட்டுத் தீ போன்றவனே
பதத்ரிவரகேதோ –
பஷி ராஜனான பெரிய திருவடியைக்
கொடியாக யுடையவனே –
பாவந பராயண –
தன்னைச் சிந்திப்பார்க்கு
பரகதியாய் யுள்ளவனே -உபாயமும் உபேயமுமாக இருப்பவனே
பவார்த்தி ஹரயா மாம் -பாஹி க்ருபயைவ –
சம்சாரத் துன்பங்களைப்
போக்க வல்ல
உனது
கருணையினாலேயே அடியேனைக் காத்தருள வேணும்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
க்ருபயைவ -என்பதால்
ஏவ காரத்தால்
என் பக்கலில் ஒரு கைம்முதல் எதிர் பார்க்கலாகாது
என்கிறது –
நரசிம்ஹ நரசிம்ஹ
அழகிய சிங்கப் பெருமானே-
——————————————————————————————————————————————————————-
துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக்
பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர
பண்டித நிதான கமலாலய நமஸ் தே
பங்கஜ நிஷண்ண நரசிம்ஹ நரசிம்ஹ——3-
———————————
துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக் பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர –
நீண்ட திரு வுகிற் வரிசைகளினால் பிளக்கப் பட்டவனான
ஹிரன்யாசூரனுடைய
உதிரக் குழம்பாகிற
புதுமை மாறாத
கும்குமச் சாறு தன்னால் வ்யாப்தமாய் இருக்கிற
அகன்ற திரு மார்பை
யுடையவரே –
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன்
போன்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் -என்றும் –
போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்பின் மேல் கட்டிச் செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா வெழுந்தான் அரி யுருவாய் -என்றும் சொல்லுகிறபடியே
பண்டித நிதான
அறிஞர்கட்கு நிதி போன்றவரே
வைத்த மா நிதி இ றே
நிதியானது உள்ளே பத்தி கிடந்தது
ஒரு கால விசேஷத்திலே
பாக்யவாங்களுக்கு வெளிப்படுமா போலே –
கமலாலய –
பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமானவரே –
கமலை கேழ்வனே-
நரசிங்க வுருக் கொண்ட போது மூவுலகும் அஞ்சிக் கலங்கிப்
போகும்படியான சீற்றம் உண்டானது கண்டு
அதனைத் தணிக்க
ஸ்ரீ மகா லஷ்மி வந்து குடி கொள்ள
லஷ்மி நருசிம்ஹான் ஆண்மை இங்கு நினைக்கத் தக்கது
பங்கஜ நிஷண்ண –
ஆசன பத்மத்திலே எழுந்து அருளி இருப்பவரே –
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான் -என்றபடி –
நரசிம்ஹ நரசிம்ஹா –
நமஸ் தே
உமக்கு வணக்கமாகுக –
————————————————————————————————————————————————————————–
மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்
யோகி ஹ்ருதயேஷூ ச சிரஸ் ஸூ நிகமா நாம்
ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே
தேஹி மம மூர்த்நி நரசிம்ஹ நரசிம்ஹ—————–4-
————————————————————————————————-
மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்-
அமரவராணாம் மௌலிஷூ விபூஷண –
சிறந்த தேவர்களின் முடிகளின் மீதும்
அமரர்கள் சென்னிப் பூ இ றே
யோகி ஹ்ருதயேஷூ –
யோகிகளின் உள்ளத்திலும் –
ச சிரஸ் ஸூ நிகமா நாம் –
வேதாந்தங்களிலும் –
வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கு
மௌலிஷூ விபூஷண
சிறந்த தொரு பூஷணம் போன்று விளங்குகின்ற –
விபூஷணம் எனபது சப்தம் எந்த பதங்கள் எல்லாவற்றிலும் அந்வயிக்கக் கடவது
ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே தேஹி மம மூர்த்நி –
தாமரை போல் அழகிய
தேவரீருடைய திருவடி இணையை
என் சென்னி மீது
வைத்து அருள வேணும் –
கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் யாழி யம் கண்ணா வுன் கோலப் பாதம் -என்றும்
நரசிம்ஹ நரசிம்ஹ-
——————————————————————————————————————————————————————
வாரிஜ விலோசன மதநதி மதசாயம்
க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா சஹ சரண்ய விஹகா நாம்
நாதமதி ருஹ்ய நரசிம்ஹ நரசிம்ஹ———————5-
————————————————
வாரிஜ விலோசன –
செந்தாமரைக் கண்ணரே –
கிண் கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுத் சிறிதே எம்மேல் விழித்து அருள வேணும்
சரண்ய-
அடியேன் போல்வார்க்குத் தஞ்சமானவரே –
மதநதி மதசாயம் –
என்னுடைய சரம அவஸ்தையிலே
க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம் –
சமஸ்த கரணங்களையும் -செவி வாய் -கண் -முதலான –
க்லேசத்துக்கு வசப்படுதுமதான
அந்த சரம அவஸ்தையிலே –
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்றும்
மேல் எழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை யுள் எழ வாங்கி
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் கண் உறக்கமதாவது -என்றும்
வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்றத்
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற -என்றும் –
காஷ்ட பாஷான சந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்றும்
ஏஹி ரமயா சஹ விஹகா நாம் நாதமதி ருஹ்ய –
ரமயா சஹ விஹகாநாம் நாதம் அதிருஹ்ய ஏஹி
பிராட்டியோடு கூடப் பெரிய திருவடி மேல் எரிக் கொண்டு
அடியேன் பால் வந்து அருள வேணும் –
பறவை ஏறு பரம் புருடனாய்ப் பிராட்டியோடும் கூட எழுந்தருளி
பாவியேனைக் கை கொண்டு அருள வேணும்
என்று பிரார்த்திக்கிறார்
ஆயிற்று
நரசிம்ஹ நரசிம்ஹ-
————————————————————————————————————————————————————————-
ஹாடக கிரீட வரஹார வநமாலா
தார ரசநா மகர குண்டல ம ணீந்த்ரை
பூஷிதம சேஷ நிலயம் தவ வபுர் மே
சேதசி சகாஸ்து நரசிம்ஹ நரசிம்ஹ–6-
——————————
ஹாடக கிரீட –
பொன்மயமான சிறந்த மகுடம் என்ன
வரஹார வநமாலா –
வைஜயந்தி என்னும் வனமாலை என்ன
தார ரசநா –
முத்து மயமான அரை நாண் என்ன –
தாரம் -என்று முத்துக்குப் பெயர்
நஷத்ரவடம் என்கிற திரு ஆபரணத்தை சொல்லிற்றாகவுமாம்
மகர குண்டல ம ணீந்த்ரை –
திரு மகரக் குழைகள் என்ன –
மணீந்த்ரை –
ரத்னா வாசகமான இந்த சப்தம் லஷண்யா ரத்ன பிரசுர பூஷண வாசகம் ஆகலாம் –
பூஷிதம –
ஆகிய இத் திரு ஆபரணங்களினால்
அலங்கரிக்கப் பட்டதும் –
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ ஆழிகளும் கிண் கிணியும்
அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல வைம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியுமான
திரு வாபரனங்கள் அணிந்த திரு மேனியே தமது திரு உள்ளத்தில் திகழ வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –
அசேஷ நிலயம் –
எங்கும் வ்யாபித்ததுமான
அசெஷத்தையும் நிலையமாக வுடைத்தான -என்கை
நிலய சப்தம் நித்ய பும்லிங்கம் ஆகையாலே இங்கு பஹூ ரீவ்ஹியாகக் கடவது
தவ வபுர்-
தேவரீர் உடைய திரு மேனி
மே சேதசி சகாஸ்து –
என் நெஞ்சின் உள்ளே விளங்க வேணும்
நரசிம்ஹ நரசிம்ஹ –
அழகிய சிங்கப் பெருமாளே-
———————————————————————————————————————————————————————————–
இந்து ரவி பாவக விலோசன ரமாயா
மந்திர மஹா புஜ லசத்வர ரதாங்க
ஸூந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
நந்திதித ஸூரேச நரசிம்ஹ நரசிம்ஹ—7-
————————————————
இந்து ரவி பாவக விலோசன –
சந்தரன் சூர்யன் அக்னி
இவர்களை திருக் கண்ணாக
யுடையவரே –
தீப் பொறி பறக்கும் நெற்றிக்கண் உண்டே -அதனால் அக்னியை சேர்த்து அருளுகிறார்
ரமாயா மந்திர –
பெரிய பிராட்டியாருக்கு
திருக் கோயிலாக இருப்பவரே –
அந்த நெற்றிக் கண்ணை அவிப்பதற்காக
பிராட்டி வந்து திரு மேனியில் வீற்று இருந்த படியாலே
ரமாயா மந்திர -என்றார் –
மஹா புஜ லசத்வர ரதாங்க
தடக்கையிலே விளங்கும்
சிறந்த திரு ஆழி ஆழ்வானை யுடையவரே –
மஹா புஜ லசத் தரரதாங்க -என்றும்பாடபேதம்
தரம் -என்று சங்குக்குப் பெயர் ஆதலால்
சங்கு சக்கரம் இரண்டையும் சேரச் சொன்னபடி ஆகவுமாம்
ஸூந்தர –
அழகு பொலிந்தவரே-
சிராய ரமதாம் த்வயி மநோ மே-
அடியேனுடைய மனமானது
தேவரீர் இடத்தில்
நெடும்காலம் உகப்பு கொண்டு இருக்க வேணும்
நந்திதித ஸூரேச –
அமரர் கோணத்த துயர் தீர்த்தவரே –
நரசிம்ஹ நரசிம்ஹ-
———————————————————————————————————————————————————–
மாதவ முகுந்த மது ஸூதன முராரே
வாமன நருசிம்ஹ சரணம் பவ நதா நாம்
காமத கருணின் நிகில காரண நயேயம்
காலமமரேச நரசிம்ஹ நரசிம்ஹ——8-
——————————————————————————————————–
மாதவ –
திருமாலே –
முகுந்த –
முக்தி அளிக்கும் பெருமானே –
மது ஸூதன –
மது கைடபர்களை மாய்த்தவனே
முராரே –
நரகா ஸூ ரவதத்தில் -முரணைக் கொன்றவனே
வாமன-
குறள் கோலப் பெருமானே
நருசிம்ஹ –
நரம் கலந்த சிங்கமே –
சரணம் பவ நதா நாம் –
அடி பணிந்தவர்களுக்குத் தஞ்சமாவாய் –
காமத
அபேஷிதங்களை எல்லாம் அளிப்பவனே –
கருணின் –
தயாளுவே –
நிகில காரண –
சகல காரண பூதனே
காலம் நயேயம் –
யமனையும் அடக்கி யாளக் கடவேன் -பொருள் சிறவாது
உன்னை வாழ்த்தியே வாழ் நாளைப் போக்கக் கடவேன் –
அமரேச –
அமரர் பெருமானே
நரசிம்ஹ நரசிம்ஹ –
இங்கனே உன் திரு நாமங்களை வாயார வாழ்த்திக் கொண்டே
என் வாழ் நாளைப் போக்கக் கடவேன்
க்ரோசன் மதுமதன நாராயண ஹரே முராரே கோவிந்தேதி
அனிசமப நேஷ்யாமி திவசான் -பட்டர்
——————————————————————————————————————————————————–
அஷ்டகமிதம் சகல பாதக பயக்தம்
காம தம சேஷ துரி தாம யரி புக்நம்
ய படதி சந்ததம சேஷ நிலயம் தே
கச்சதி பதம் ஸ நரசிம்ஹ நரசிம்ஹ–9-
——————————————————–
அஷ்டகமிதம் –
எட்டு ஸ்லோகங்களினால் அமைந்த
இந்த ஸ்தோத்ரத்தை –
சகல பாதக பயக்தம் –
சகல பாபங்களையும்
சகல பயன்களையும்
போக்கடிப்பதும்
பாதகம் -மஹா பாதகங்களை -குறிக்கும்
காம தம –
சகல அபேஷிதங்களையும் அளிப்பதும்
சேஷ துரி தாம யரி புக்நம் –
சகல விதமான பாபங்களையும்
பிணிகளையும்
பகைவர்களையும்
நிரசிப்பதுமான –
துரிதம் -உபபாதகன்களை
ய படதி சந்ததம சேஷ நிலயம் தே கச்சதி பதம் ஸ –
யாவன் ஒருவன் கற்கின்றானோ
அவ்வதிகாரி
அனைவருக்கும் ப்ராப்யமான
தேவரீர் உடைய திவ்ய ஸ்தானத்தை
அடைந்திடுவான்
நரசிம்ஹ நரசிம்ஹ –
இதனால் இந்த ஸ்தோத்ரம் கற்றாருக்கு பலன்சொல்லித் தலைக் கட்டுகிறார்
அநிஷ்ட நிவாரணம்
இஷ்ட ப்ராபணம் ஆகிற இரண்டுக்கும்
கடவதான இந்த ஸ்தோத்ரத்தை
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வர்
என்று பேறு கூறித் தலைக் கட்டினார் ஆயிற்று
தெள்ளிய சிங்க பெருமாள் அக்காராகனி திருவடிகளே சரணம்
————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாளச் சீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்மாழ்வாரது ஸ்ரீ நரஸிம்ஹன் அனுபவம் ..
November 12, 2011ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Lakshmi Narasimha pirabaavam-Shri Vellukudi Swami..
November 24, 2009..Moontru seyalkallaiyum seytha avathaaram-Parithraanaaya saathoonaam/thushda nigraham/darma sthaabanam..muzukka porunthiya-pirakalaadan aazvaana/hiranya kasibu/ kuzanthai kooppitta kuralukkum/ yengum neekkamara nirainthu vullaan yentru kaatta..mun-miruha/pin-manushya-sernthu erukira avathaaram ethu thaan..thani anubavam ellai–paalum chakaraiyum serthaar pola..thenum paalum kannalum amuthum othey kalanthu ozinthom..vaanarar-va=narar..madsayam/koorma/varaaha/narasimha/vaamana-vazarchi..
.konja naazi erunthu niraiya anubavam thanthaan nara simhan-swathy-peri aazvaarum-aani-swathy..pushba kainkaryam-para deivam yaaru yentru vithvath koshtti-seraathathai serthathu entha nadshathirathaal.. swami Emberumaanaarin aaraadana perumaall..kadaha sruthy-serppathu erandaiyum korthu sollum /betha sruthy-brahmam-sadyam gjaanam anantham svaroobam-jeevaathma seshan,adimai kainkaryam pannubavan yenbathu betha vaakyam/abetha sruthy-jeevanum paranum ontru pirivu ellai yenbathu abetha sruthy..thrushdaantham-mann vurundai kaaranam therinthu kaariya vasthukkal anaithaiyum therinthu kondathu pola-svetha kethu-antha parama brahmam neeyaavey erukiraay-abetham..vudambu-kai/kaal thani.. sernthu vanthom-ontraa palavaa..aduthu-kai thaan adithathu naan adikka villai..endariyangal ontrukum oru anubavam venum.. avanukku sareeram yentru paarthaal ontru.. veru varu yenbathaal pala..paalam aaha serppathu kadaha sruthy..yettram solla nara sinmham..nara ontru simham ontru erandum -seraatha erandai serthu kaattiyavar..sri baashya kadaisiyil kaattu hiuaar..
..neeyaaha muyantraal mudiyaathu..avanaaha kaattinaal mudiyum..ajaha-piravaathavan..11 thiru naamam narasimhanukku -naduvil ajaha..pirappil-pal piravi perumaan..ajaayamaanaha-pirakkathavan.. sthambathil thontriyathaal –nammai pola piraka villai..
..endran/devar pontror- nadakka vaiukiraar-angum yengum alarthy-sathaa panchaayutham tharithu sevai..thontriya edathiley-nadakkaamal -seythaan nara simhan..eruntha edathiley velai seythavan..ahobilathil sthambam..nanda gobaala ezunthiraay/yasodaa arivuraay–avall arivu vuttraal pothum..kannai thiranthaal pothum..paliyil vothi–pillaiyai seeri vehundu..thiru valli kenni kanndeney..pillai pera raama manthram/eisvaryam vennumaanaal gobaala manthram..1000 varusham pin lava kusar-60000 varusham ellai dasaradan pola..pasu maadu paal venney moru-evanukku..vukram veeram mahaa vishnum juvalantham sarvatho muham /mirthyu amirthyu amamyaham -mirthuvukku mirthyu..deha aarokyam..vun sempotha krythy thekki-hiranyan pillaiyai paarthu solhiraan..
..kobam kuraikka-pirakalaadan kitta ponaan..sarabesvaran-yenbar-periya kathai-raahu kaala poojai-athai veruthu-pirathyangara devi srushtithu..puram kaal veekkam kadaikkum thedi thedi ponaal ethu pola..
..anthiyam pothil ari vuruvaahi-sekkar vaanathil -sihappaa/dejas sihappaa/ratham sihapaa..pillantha vallaintha vuhiraan–villaintha seettram vinn vethumba-aho-balam/oru kallil 7 maangaay-veda vaarthai/adiyavar vaarthai sadyam-sarva vyaabi/thoonukkul/kuzanthai koottaalum varuvaan-aazvaar vaakyam/brahma varam poy aakka koodaathu-vaarannam tholaitha kaarannam–naaraayanna manni vanna aar edarai theeraay..enghu ellaiyaal yentru ..kidantha-manaathan/nintra-paarthan than ther mun nintra / amarntha-thelliya singam.nadanthum-thiru neermalaiyil-thiru vikraman..yengum vullan yengum vullan–thirumba thirumba ethey pathil-veeraa raaghavayam-srimath baagavatha vyaakyaanam.. enghu erukiraan yentra pathil solla villai..vyaa bnahathvam solla avathaaram..veera raagathvayam-srimath baagavathathin vyaakyaanam..nyanthruthvam-raaja ninaithathai kedppom-vyaabikka mudiyaathu../vyaabahathvam-aahaasam vyaabikkum..svathara samasthu vasthu vilakshannan-parantha thann paravaiyul neer thorum paranthullan..thoon-utharam pola thaangubavan ellai…vullum velliyilum vyaabahakiraan.. yengum vullan kannan yentra mahanai kaaynthu-kannanaa/ narasimhanaa..krishnan edathil aaraa anbudan-engal aazvaan–krishna/kannan pothuvaaha radshahan yentra..singa vuruvaay vanthavanai kannan yenkiraan..
..naara simhaha vabuhu/srimaan-vadivazahey sri mathvam..payamaana vadivu ellai.. namathu yennam pola sevai.. lakshmananai thookka -raavannanaal mudiya villai/kurangu lahuvaaha thookinathaam-vaalmihi..bakthy/anukoolyathudan sevithaal abayam..sanghu chakaram paarthupaya paduvar asurar..-neeraay neelaay..saamaanathikaranna pira kaaram..gjaanam vantha pinbu divya aaythangal ellai divya aabarannangal.. kooraar aazi venn sangam yenthi oru naal kaanna vaaraay mannum vinnum mahizavey..nahamey chakarathin amsam..sukiran kannai thurambinaal killariya chakara kaiyaney-acho acho-Peri aazvaar..chaka raayutham vamanarukku-thurumbey..ethai vubayohithaalum chakarathin amsamey..
..kizikka thontranum..yengey..pillaikallai visaarikanum/nanbanai sollu nee yaar.. asurar mithrar.. aanaalum pira kalaadan anai varukkum vuba desithaan.. smarannam keerthanam ..onbathu vithamana bakthy/kaathaal kedpathu mudalil-adi padai ethu thaan..aacharyan solla sishyan kedkkanum..santhai solvathu pola..kaathu padaitha payan ethu thaan..santheham kettu vudan therinthu kollalaam..selvathull selvam sevi selvam..raamanum-virutharkalin thiru adiyil vizunthu erunthu kedpaanaam..keerthanam-paaduvathu..kellaa seviyo/ paadaatha vaayo-ellaathavai pola..paambu puttrilum vottai erukku..naama sangeerthanam mukkyam….thalaikku mel kai vaithu aadi/paadi thozuthu-kumbidu nattam ettu aadi..thalaiyinodu aathanam thatta-kai thattaley thaazamaaha-vaithu aadanum..vishnuho smaranam-ninaivu mukkyam..manasu orungi kettu/paadi..paatha sevanam-aduthu..lakshmi thaayaarai amarthy-avan thiru adi pattra evallai pattru yenkiraan..pushbangal kondu archithu/aala vattam kain karyam/nir thoshamaana kainkaryam-pushba kainkaryam-peri aazvaar/thondar adi podi aazvaar/ ananthaazvaan pola..pon svarannam vurukki voduvathu pola –thiru muham..paada sevanam/archanam/vandanam/daasyam/sakyam/aathma samarppanam.. — namathu sampraa yathil peyarai solli-pithaa mun ari muham venumaa..varuvaamo yentru kaathu erukiraan.. swaami avan..108 thiru naama archanai-shedra mahaathm yam erukkum..vandanam-yethanai thadavai panninaalum thahum-oru thadavai panninaalum avanukku athiham..athmo jeevanathukku thaan vazi–vurulla/puralla sareeram ellai/avanukku vuba yoha padanum.. adimai-daasyam rasam therinthu /preethy vudan pannanum/beethy vudan ellai..
..anaithum thahappan edam sonnaan..narayanna naamam solla thoondu bavan yaar-entha kellvi kedkka sonna avan thaan-sarva booda -saasthaa vishnu oruvaney..saasanam pannubavan/nyamikiravan..huruthaya kamalathil sevai saathikiraan..yengum vullan kannan yentra mahanai kaaynthu-ethu vaayittru evan seytha kuttram..num aazvaar thanakku mahanaaha sveekaaram seythu kondaar..edai pennai -maaman mahaley-yenbathu pola..eranniyan thoon pudaippa-anghu appozuthey thontriya-allan thitta thoonnai avan thatta..avan vaitha thoonn/vaithu kattiyathu ellai.. thattinathu avan-maraithu vaithu veru yaarum thatta villai..yellaa thoon kallilum thontri/paatti aanathaam yellaam..sthambam-nahu punsa lingam sthoonaa-sthee lingam.-pirasava pira karannathil desihan vuba yohithaar…sollukku thaan lingam–daaraaha-pul lingam/padni-sthree/pola.. brahmaavukku paatti thoon..pozthu melintha pun sekkaril-pain kannaar ari vuruvaay veruva nokki-yer ettu konnda seettram..adiyaar edathil aba chaarathaal -vizaintha seettram vinn vethumba-pariyanaaha vantha- kozuka vaitha aadu pola..devarkallin varathaal paliyan aahi erunthaan..
..varathinil siratha mikka–srathai vaithaan..vaal yettru mattravan vurathinil karathai vaithu..anthi am pothil ari vuruvaahi..malai keezathu otha singa vuruvaahi-malai thalai keeza vaithaar pola roobam..athey kaalathil pirasaatham thontriya thiru kannkal pira kalaadan edam..pozntha punithan–am kann gjaalam ancha anghu oer aall ariyaay..kontraalum thosham thattaamal–punithan..vullam thottu-thuzaavi-manasil moolaiyuil lava lesam thulli pirithy erukka yentru thedinaan..nahathaiyum-varathin padi-piraannan erukavum koodaathu/erukkavum venum.vettinaal valika villai-piraannan ellai..valaruhirathu athanaal erukirathu..vuhir thalathai vuoontrinaan-azahiyaan thaaney ari vuruvam thaaney-nara sinha vahubu srimaan yenbathai thamiz padithinaar. hari-paapangallai aba harikiravan ariyaaha vanthaan..
..kuttai rathathil pirathy pimbam paarthu kobam athiharithathaam. baktha vaadsalyam avan thiru kannkallai maraitha thaam..sajama piriyaha-bakthanukku samamaaha priyam kaatta mudiya villai vubadesam pannina krishnan vaarthaiku evar kaattinaar..appan aaz thuyar seythu-chitravathai panni–palliyil..aayira naamam-kuzanthai ontru sonnaal aayiram/naarayana naamam aayirathu samam..thellintha singa poiraan–thellivu adiyaarukku ethaiyum seybavan. than edathil kalakkam..
..lakshmi kooda aruhil pohaamal/pira kalaadan aruhil sella/varam tharanum.. vudallai pillainthu arala-bakthan nee thaan..naangal kolvaan antru-koduppom-kainkaryam..varam -virotham vittu shamikka-thalai murai yellaam-mahaa baliyai kollaamal paathaallam anupiyathu. vunakku yentru oru varam kedka-varam eppothum -yentha janmathilum- kedkkaatha varam kettaan..kai yenthaamal erukum bakthaney vunmai bakthan–yenbilaa vuru yeduthaalum nin kann anbu maaraamai vendum..sowmya robathudan aaha-lakshmi madiyil yeri sevai saathikkiraar..