கண்டார் மனம் கவரும் ஒழுக்கச் செல்வமுடைய ஆச்சார்ய புருஷர்கள் உனது பெருமைக்கு ஏற்கும் தகுதி வாய்ந்த மிகச் சிறந்த பொற்கலசம் குடை ஸாமரம் கண்ணாடி முதலிய மங்களப் பொருள்களைக் கையிலே ஏந்தியவராய் -உனது திருவடித் தாமரை தொழும் தூய தொண்டு விருப்பம் கொண்டு உனது திரு முன்பே கூடியுள்ளனர் -நரஹரி ஆதலால் திருப்பள்ளி எழுந்து அருளாயே
ஆச்சார்ய புருஷ வராஹ் யபிராம வ்ருத்தா அர்ஹாபி பூஜ்ய தர மங்கள வஸ்து ஹஸ்தா த்வத் பாத பங்கஜ சிஷே விஷயே ப்ரபந்நா ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் —17- ப்ரஹ்ம தீர்த்த கரையில் தானே கருட வாஹனத்துடன் தோன்றி அருள் புரிந்த திருக்காஞ்சி புரம் பேர் அருளாளானைத் திருவடி தொழுது திருக்கடிகை தடம் குன்றில் ஏறி உன்னைத் திருவடி தொழ ஸ்ரீ மஹாச்சார்யரும் வந்து விட்டார் -நரஹரி திருப்பள்ளி எழுந்து அருளாயே ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ கிரிசேகர ஸூ ப்ரபாதம் யே மாநவா ப்ரதிதினம் படிதும் ப்ரவ்ருத்தா தேப்ய பிரசன்ன வதன கமலா சஹாய ஸர்வாணி வாஞ்சித பலாநி ததாதி காமம் –18- திருக் கடிகை நரஸிம்ஹப் பிரானின் திருப்பள்ளி எழுச்சியைத் தூய மனத்துடன் நாள் தோறும் ஓதுகின்ற அடியவருக்கு த் திருமகள் கேள்வனாகிய கடிகைப் பிரான் இன் முகம் செய்து அவர்களது அபீஷ்டங்களை எல்லாம் மேல் மேலும் அளித்து பேர் அருளும் செய்து அருளுவது திண்ணம் ————– ஸ்ரீ கடிகாசல ஸ்ருங்காக்ர விமானோதர வாஸிநே–நிகிலாமர சேவ்யாய ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -1- கடிகைத் தடம் குன்றின் மிசை கோயில் கொண்டு நித்ய வாசம் செய்து அருளுபவனே -அனைத்துத் தேவர்களும் தொழும் பெரியவனே -நாரஸிம்ஹப் பெருமானே உனக்கு மங்களம் உண்டாகுக உதீசீரங்க நிவஸத் ஸூமநஸ்தோம ஸூக்திபி -நித்யாபி வ்ருத்த யஸசே ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -2- வட திருவரங்கத்தில் வாழும் நல்லோர்கள் ஸ்துதித்துப் புகழ்வதால் நாள் தோறும் புகழ் ஏறும் செல்வமுடைய நரஸிம்ஹப் பெருமானே உனக்கு மங்களம் உண்டாகுக ஸூதா வல்லீ பரிஷ்வங்க ஸூரபீ க்ருத வஷஸே –கடிகாத்ரி நிவாஸாய ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -3- ஸ்ரீ ஸூதா வல்லித் தாயார் சேர்ந்து இலங்கும் மணம் கமழ் திரு மார்பனே -திருக் கடிகை திரு மலையை திருக் கோயிலாகக் கொண்டவனே உனக்கு மங்களம் சர்வாரிஷ்ட விநாசாய சர்வேஷ்ட பல தாயிநே– கடிகாத்ரி நிவாஸாய ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -4- தீமைகள் அனைத்தையும் அழிப்பவனே -வேண்டுவோர் வேண்டுவன அனைத்தையும் அளித்து அருள்பவனே -திருக் கடிகை திரு மலையை திருக் கோயிலாகக் கொண்ட நரஸிம்ஹப் பெருமானே உனக்கு மங்களம் மஹா குரு மன பத்ம மத்ய நித்ய நிவாஸிநே –பக்தோசிதாய பவதாத் மங்களம் ஸாஸ்வதீ சமா -5– மஹாச்சார்யார் திரு உள்ளத் தாமரை நடுவில் என்றும் நின்று விளங்குபவனே -பக்தோ சிதனாகிய உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு மங்களம் உண்டாகட்டும் ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே –நந்த நந்தன ஸூ ந்தர்யை கோதாயை நித்ய மங்களம் -6- ஸ்ரீ மன் மஹா பூத புரே ஸ்ரீ மன் கேசவ யஜ்வன –காந்தி மத்யாம் ப்ராஸூதாய யதிராஜாய மங்களம் -7- பாதுகே யதி ராஜஸ்ய கதயந்தி யதாக்யயா -தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் அஹம் -8- ஸ்ரீ மதே ரம்யா ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மனே –ஸ்ரீ ரெங்க வாஸிநே பூயாத் நித்ய ஸ்ரீ நித்ய மங்களம் -9- ஸும்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம் புஜ ஷட் பதம் –தேவ ராஜ குரும் வந்தே திவ்யஜ்ஞான ப்ரதம் சுபம் -10- வாதூல ஸ்ரீ நிவாசார்ய தநயம் விநயாதிகம் –ப்ரஜ்ஞா நிதிம் பிரபத்யேஹம் ஸ்ரீ நிவாஸ மஹா குரும் -11- சண்ட மாருத வேதாந்த விஜயாதி ஸ்வ ஸூக்திபி –வேதாந்த ரக்ஷகா யாஸ்து மஹாசார்யாய மங்களம் -12- ——————————– ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ யோக லஷ்மி நரசிம்ம ஸூப்ரபாதம் -மங்களம் –
ஸப்த சப்தேஷு லோகேஷு நாஸ்தி நாஸ்தி சராசரே
நாஸ்தி நாஸ்தி சமம் க்ஷேத்ரம் உத்தமம் கடிகாசலம்
கடிகாத்ரி சமம் ஸ்தானம் ப்ரஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சந
நாரஸிம்ஹ ஸமோ தேவோ ந பதோ ந பவிஷ்யதி
———-
கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர்ஸார் தூல கர்த்தவ்யம் தைவமாநஹிகம்–1-
கோசலை தன் குல மதலாய் -இராமா விடியற் காலை யாயிற்று -வீர மைந்தனே -காலைப் பொழுதிற்கு உரிய தெய்வக் கடைமைகளை இறுக்க நீ துயில் நீங்கி எழுந்து அருள வேண்டும்
உத்திஷ்ட உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்த தரை லோக்யம் மங்களம் குரு –2-
கோவிந்தனே துயில் எழு -கருடக்கொடி உடையவனே துயில் எழு -திருமகள் கேள்வா துயில் எழு – துயில் நீங்கி எழுந்து மூ வுலகங்கட்க்கும் இன்பம் தந்திடு
மாதஸ் ஸூதாபல லதே மஹ நீய சீல வஷோ விஹார ரஸிகே ந்ருஹரேரஜஸ்ரம்
ஷீராம் புராஸி தநயே ஸ்ரித கல்ப வல்லி ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ தயிதே தவ ஸூ ப்ரபாதம் –3-
தாயே ஸூதா வல்லிக் கொடியே -பெருமைக்கு உரியவளே – நரஹரியின் திரு மார்பில் இறைப் பொழுதும் அகலாது விளங்கும் விருப்பம் கொண்டவளே -திருப்பாற் கடல் செல்வி – நரஸிம்ஹப் பெருமானின் இன்பத் துணைவியே -உனக்கு திருப்பள்ளி எழுச்சி கூறுகிறோம்
தவ ஸூப்ரபாத மநவத்ய வைபவே கடி கேச சத் குண நிவாஸ பூதலே
கடிதாகிலார்த்த கடிகாத்ரி சேகரே கடி காத்ரி நாத தயிதே தயா நிதே–4-
தீதில்லாச் செல்வப் பெருக்கே -திருக் கடிகை நாதனின் அருள் பண்புகளுக்கு ஆதாரமான தேவி – எல்லாம் அருள வல்ல கடிகைத் தடம் குன்றின் மீது விளங்கும் கடிகைக் கோனின் அன்பே – அருள் அறம் கொண்ட செல்வி -பள்ளி எழுந்து அருளாய்
அத்ர் யாதிகா முனி கணா விரசய்ய ஸந்த்யாம் திவ்ய ஸ்ரவன் மது ஜரீக சரோருஹாணி
பாதார்ப்பணாய பரிக்ருஹ்ய புர ப்ரபந்நா ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –5-
விடியற் காலைப் பூஜனைக்குத் தேன் வெள்ளம் மிக்கோடும் தெய்வத் தாமரை முதலிய மலர்களைப் பறித்துக் கொண்டு அத்திரி முதலிய முனிவர்கள் கூட்டமாக உன்னைத் திருவடி தொழ வந்துள்ளனர் -நரஹரி உனக்கு வெற்றி உண்டாகுக -பள்ளி எழுந்து அருளாயே
சப்த ரிஷி சங்க க்ருத சம்ஸ்துதி ஸூ பிரசன்ன ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ குண ரூப ரமா மஹிப்யாம் —
சாகம் ந்ருஸிம்ஹ கிரிஸத்வ க்ருதாதிவாஸ ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம்–6-
வாமதேவர் முதலிய ஏழு முனிவர்கள் கூட்டமாகப் புகழ்ந்து பற்றப்படும் பெருமை யுடையவனே –நரஹரி -உருவும் திருவும் வாய்ந்த ஒப்பற்ற திரு மடந்தை மண் மடந்தையாம் தேவிமார்களுடன் திருக்கடிகை திருமலையைக் கோயில் கொண்டவனே -பள்ளி எழுந்து அருளாயே
தேவாரி பஞ்ஜந மருத் ஸூத தத்த சங்க சக்ரதா பத்ரித பணீஸ்வர பத்ரி சேஷின்
தேவேந்திர முக்ய ஸூர பூஜித பாத பத்ம ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –7-
வானவர் தம் பகை அழிக்க வாயுவின் மைந்தனுக்குச் சங்காழி அளித்தவனே -சென்றால் குடையாம் திரு அநந்தாழ்வானைப் பணி கொண்டவனே -அனைவருக்கும் தலைவா -தேவேந்திரன் முதலிய தேவர்கள் போற்றி வணங்கும் திருவடித் தாமரை யுடையவனே -பள்ளி எழுந்து அருளாயே
ஸ்வாமின் ஸூரேச மதுரேச ஸமாஹிதார்த்த த்யான ப்ரவீண விநாதவன ஜாகரூக
சர்வஞ்ஞ சந்தத சமீரித சர்வ வ்ருத்த ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –8-
எம்மை உடைமையாகக் கொண்டவனே -தெய்வ நாயகனே – வடமதுரைத் தலைவனே – நன்மைக் கடலே நின்னையே மனத்துக் கொண்டு நினைந்திடும் தவ மா முனிவர்களைக் காப்பதில் இமையாத திருக்கண்களை யுடையவனே -அனைத்தும் அறிபவனே – என்றும் வேண்டுவோர்க்கு வேண்டுவதை அறிந்து அருள்பவனே பள்ளி எழுந்து அருளாயே
ப்ரஹ்லாத ரக்ஷண நிதான க்ருதாவதார முக்த ஸ்வகீய நகரை ஸ்புடிதாரிவஷ
சர்வாபிவந்த்ய நிஜ வைபவ சந்த்ர காந்த ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –9-
ப்ரஹ்லாதனைக் காத்திட திருவவதாரம் கொண்டவனே -மால் கொண்டு இரணியன் மார்பகலம் கூர் உகிரால் குடைந்து அழித்தவனே -அனைவரும் வணங்கிடும் பெருமை யுடையவன் – அடியவருக்குத் தண் மதி போல் அருள் புரிபவனே பள்ளி எழுந்து அருளாயே
பக்தோசித சரசஸ் ஸூ குணம் ப்ரக்ருஷ்டம் தீர்த்தம் ஸூ வர்ண கட பூரித மாதரேண
த்ருத்வா ஸ்ருதி ப்ரவச நைகபரா லசந்தி ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –10-
அடியவருக்குத் தக்கதும் இன் சுவை மிக்கதும் நன்மையை யுடையதும் – பெருமையும் வாய்ந்ததுமான நன்னீரைப் பொற் குடத்திலே பூரித்துக் கையில் ஏந்தி வேதம் வல்லார்கள் கூட்டமாக உனது கோயிலிலே திரண்டு உள்ளனர் -ஆதலால் விரைந்து பள்ளி எழுந்து அருளாய்
சம்ஸ்லாகநீய பரமோத்தர ரங்க வாசின் ஸூரிஸ்துதி ப்ரதித விக்ரஹ காந்தி காந்த
சத்பிஸ் ஸமர்சித பதாம்புஜ சாது ரஷின் ஸ்ரீமன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –11-
பெரும் புகழ் மிகும் வட திருவரங்கம் கோயில் கொண்டவனே -திவ்ய ஸூரிகளான ஆழ்வார்கள் புகழ்ந்து பாடுவதால் திருமேனி பொலிவு மிகுபவனே -மேலோர் போற்றி வணங்கும் திருவடித் தாமரை யுடையவனே -நல்லோர்களைக் காப்பவனே பள்ளி எழுந்து அருளாய்
தீர்த்தாநி கோமுக கதான்யசிலாநி த்ருத்வா பவ்யானி பவ்ய நிகரா பரிதோ லசந்தி
காயந்தி காநசதுராஸ் தவ திவ்ய வருத்தம் ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் —12-
நால் திசையிலும் விளங்கும் திவ்ய தீர்த்தங்களில் இருந்து நந்நீரைப் பொற் குடத்தில் ஏந்தி அடியார்கள் நின் திரு முன்பே கூட்டமாக வந்துள்ளனர் -நல்லிசை பாடுவார் உனது இனிய புகழைப் பாட்டு இசைத்துப் பாடுகின்றனர் -ஆதலால் திருப் பள்ளி எழுந்து அருளாய்
வாராணஸீ ப்ரதித விஷ்ணு பதீ ப்ரயாக விக்யாத விஸ்வநத சத் கடிகாசலேந்திர
சம் ப்ரார்த்திதார்த்த பரிதான க்ருதைகதீஷ ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –13-
வாரணாசி கயை பிரயாகை முதலிய புகழ் விளங்கும் பதிகளிலும் மிகவும் புகழ் வாய்ந்த கடிகை மலையை -இருப்பிடமாகக் கொண்டவனே – வேண்டுவோர் வேண்டியதை அருள்வதையே கொள்கையாகக் கொண்டவனே -நரஸிம்ஹப் பெருமானே திருப்பள்ளி எழுந்து அருளாயே –
பார்ஸ்வத்வய ஸ்தித ரமாமஹி சோபமான ஸ்ரீ சோள ஸிம்ஹ புர பாக்ய க்ருதாவதார
ஸ்வம்மின் ஸூ சீல ஸூல பாஸ்ரித பாரிஜாத ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் —14-
திரு மகளும் மண் மகளும் இருபால் விளங்க வீற்று இருப்பவனே -சோளஸிம்ஹ புரம் செய்த நல் தவப்பயனாகத் தோன்றியவனே -எம் தலைவா -சீல குணம் மிக்கு இருப்பவனே -அடைந்தவருக்கு அல்லல் நீக்கி அருள் புரியும் கற்பகத் தருவே திருப்பள்ளி எழுந்து அருளாயே
ஸ்ரீ ஸ்ரீநிவாஸ கநதேசிக வர்யா பக்தி சம்வர்த்தித்த ப்ரதிதி நோத்சவ சோபமான
கல்யாணசேல கனக உஜ்வலா பூஷணாட்ய ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் —15-
ஸ்ரீ நிவாஸ தாஸரான தொட்டாச்சார்யர் என்னும் மஹா ஆச்சார்யர் பரமபக்தியுடன் போற்றிட்ட கட்டளையால் நாள் தோறும் விழாச் செல்வம் கொண்டு விளங்குபவனே -மங்களம் தரும் பட்டுத் துகிலும் நவமணிகள் பதித்த போர் கலன்களும் தரித்து அழகேறும் செல்வமுடையவனே திருப்பள்ளி எழுந்து அருளாயே
ஸ்ரீ ப்ரஹ்ம தீர்த்த தடமாகத மஞ்ஜ நாபம் தேவம் ப்ரணம்ய வரதம் கடிகாத்ரி மேத்ய
வாதூல மா நிதி மஹா குருரேஷ ஆஸ்தே ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –16-
October 2, 2020 at 6:44 am |
i never seen full strotram of narasimha like this.thank you very much jai narasimha.