Archive for the ‘Namm Aazlvaar’ Category

ஸ்ரீ திருவாசிரியம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் தனியன் வியாக்யானம் —ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த அவதாரிகையும் வியாக்யானமும் –முதல் பாசுரம் –

September 26, 2019

ஸ்ரீ நம்மாழ்வார் -நம் குலபதே-நம் சடகோபனை பாடினாயோ –
பாடினார் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
அருள் மாரி–ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -படைத்தான் கவி –திருமாலவன் கவி –வேதம் தமிழ் செய்த மாறன் —
சடாரி உபநிஷதாம் உப காந மாத்ர போக –ஸ்ரீ மன் நாத முனிகள்
யம் சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தை–
குருகூர் சடகோபன் பண்ணிய தமிழ் வேதம் பணிப் பொன் போலே சர்வாதிகாரம் —
ஓ ஒ உலகின் இயல்வே என்று இதர புருஷார்த்தங்களையும் உபாயாந்தரங்களையும் வெறுத்து –
பரம புருஷ ஏக பரமாய் இருக்குமே —
சம்ஸ்க்ருத வேதம் கட்டிப் பொன் போலே-ஸமஸ்த புருஷார்த்தங்களையும் உபாயாந்தரங்களையும் சொல்லுமே –
ஆகவே இவை சுடர் மிகு சுருதி -வேதாந்த பரமாய் இருக்குமே

ஸ்ரீ திரு விருத்தம் ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் விளக்கும் ருக்வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாசிரியம் ஏழு காண்டங்கள் கொண்ட சார நாராயண அநுவாகம் கொண்ட யஜுர் வேத சாரம் என்றும் –
ஸ்ரீ பெரிய திருவந்தாதி முண்டக உபநிஷத் கொண்ட அதர்வண வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாய்மொழி ஆயிரம் சாகைகள் கொண்ட சாந்தோக்யம் உபநிஷத் கொண்ட
சாம வேத சாரமாய் இருக்கும் என்றும் சொல்வர்கள்

ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் பிரணவம் நமஸ் சப்தார்த்த விவரணம் ஸ்ரீ திருவிருத்தம் என்றும் –
ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் நாராயணாய சப்த்தார்த்த விவரணம் திருவாசிரியம் என்றும் –
ஸ்ரீ சரம ஸ்லோக விவரணம் ஸ்ரீ பெரிய திருவந்தாதி என்றும் –
ஸ்ரீ த்வய விவரணம் ஸ்ரீ திருவாய் மொழி என்றும் சொல்வர்கள்

வ்ருஷ பேது து விசாகாயாம் குருகா பூரி காரி ஜம்
பாண்டிய தேசே கலேர் ஆதவ் சடாரிம் ஸைனபம் பஜே —-ஸ்ரீ நம்மாழ்வார் தனியன்

சகல த்ராவிடாம்நாய சாரா வ்யாக்யான காரிணம்
ஸ்ராவணே ரோஹிணீ ஜாதம் க்ருஷ்ண சமஞ்ஞம் அஹம் பஜே –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தனியன்

———————-

அவதாரிகை —
ஸ்ரீ திருவாசிரியமாகிற திவ்ய பிரபந்த தர்சியாய் -தேசிகராய் இருக்கிறவரை -நிர்மலமான ஹ்ருதயத்தில் வைத்து
விஸ்ம்ருதி இன்றிக்கே நிரந்தர மங்களா சாசனம் பண்ணுங்கோள் –என்கிறது

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார்—(ஸ்ரீ யஜ்ஜ மூர்த்தி )- அருளிச் செய்த தனியன்-

காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்து
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ வகுளத் தாரானை
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே-

காசினியோர் தாம் -இப்பூமியில் உள்ள மநுஷ்யர்கள்
வாழ -உய்யும் பொருட்டு
கலி யுகத்தே -கலி யுகத்திலே
வந்து -பரமபதத்தில் நின்றும்
உதித்து-அவதரித்து
ஆசிரியப் பா வதனால் -ஆசிரியப்பா என்னும் பாட்டுக்களாலே
அரு மறை நூல் விரித்தானை-சிறந்த வேதமாகிய ஸாஸ்த்ரத்தை பரப்பியவரும்
தேசிகனை -எல்லாருக்கும் ஆசார்யரும்
திகழ வகுளத் தாரானை-விளங்கா நின்றுள்ள மகிழம் பூ மாலையை அணிந்தவருமான
பராங்குசனை -நம்மாழ்வாரை
மாசடையா மனத்து வைத்து -அழுக்கு அற்ற மனஸ்ஸிலே வீற்று இருக்கச் செய்து
மறவாமல் வாழ்த்துதுமே-மறவாதபடி மங்களா ஸாஸனம் பண்ணக் கடவோம்

காசினியோர் தாம் வாழ –
நேரே கண்டத்துக்கு மேல் ஓன்று அறியாத பூமியில் உண்டான மனுஷ்யர் ஜீவிக்க –
(கண்டதே காட்சி -லோகாயுத மதஸ்தர் மலிந்த )

கலி யுகத்தே வந்து உதித்து–
கலவ் புந பாபரதாபி பூதே பக்தாத்மநா ச உத்பபூத –ஸ உத் பபூவ
(பாபத்திலேயே ஈடுபட்ட மனிதர்கள் நிறைந்த கலி காலத்திலே அந்த பகவான் பக்த ரூபியாகத் தோன்றினார்)–என்கிறபடியே
ஞானத்துக்கு அடைவு இல்லாத கலி காலத்தில் யுக வர்ண க்ரம அவதாரம் என்னலாம் படி
ஸ்ரீ ஆழ்வார் அவதரித்தார் யாயிற்று

(க்ருத யுகம் -ஸ்ரீ தத்தாத்ரேயன் -ஸ்ரீ பரசுராமன் ப்ராஹ்மண வர்ணம்
த்ரேதா யுகம் –ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் -ஷத்ரிய வர்ணம்
த்வாபர யுகம் -முடி உரிமை இல்லா வைஸ்ய பிராயர் ஸ்ரீ வாசுதேவ -சாஷாத் வைஸ்யரான
ஸ்ரீ நந்த கோபன் இளம் குமாரனான ஸ்ரீ கிருஷ்ணனாகவும்
கலி யுகம் -சதுர்த்த வர்ணம் -காரியாருக்கும் உடைய நங்கையாரும் திருக் குமாரராக )

வந்து உதித்து
லோகாந்தரத்தில் நின்றும் இங்கே வந்து திருவவதரித்தார் என்னுமது தோற்றுகிறது –

முன்னம் வந்து உதித்து–(உபதேச ரத்ன -7)-என்கிறபடியும் –
வகுள பூஷண பாஸ்கர ( ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -4-) உதயம் இறே
மேலே வகுளத் தாரானை-என்று இறே இருக்கிறது –

(ஆதித்ய-ராம திவாகர-அச்யுத பானுக்களுக்கு
போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-சூரணை -83-)

(யத் கோ ஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4)

திரு அவதரித்துச் செய்த கார்யம் இன்னது என்கிறது மேல்
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை-
தமிழுக்கு வெண்பா இத்யாதி அநேகம் பாக்கள் உண்டாய் இருக்கவும்
ஆசிரியப்பாவாலே யாயிற்று திருவாசிரியம் செய்து அருளினது

அரு மறை நூல் விரிக்கை யாவது
அரிய வேதம் ஆகிற சாஸ்திரத்தை விஸ்திருதமாக்கி –
அதுவே நிரூபகமாம் படி யானவரை –
அரு மறை நூலை வண் தமிழ் நூல் –திருவாய்-4-5-10-ஆக்கினவரை –

(உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-)

தேசிகனை பராங்குசனை
வேதார்த்த தர்சியான-சாஷாத்கரித்த – ஸ்ரீ பராங்குச தேசிகரை –

திகழ வகுளத் தாரானை
விளங்கா நின்ற திரு மகிழ் மாலையைத் திரு மார்பிலே உடையவரை
தண் துளபத் தாரானை -என்னுமா போலே –
தாமம் துளபமோ வகுளமோ -என்னக் கடவது இறே

சேமம் குருகையோ செய்ய திருப்பாற்கடலோ
நாமாம் பாராங்குசனோ நாரணனோ
தாமம் துளபமோ வகுளமோ
தோள் இரண்டோ நான்கு உளதோ பெருமான் உனக்கு –

மாசடையா மனத்து வைத்து
மாசற்றார் மனத்துளானை –திருமாலை -22-
தெளிந்த என் சிந்தை அகம் கழியாமே–திருவாய் -9-2-4-இத்யாதிகள் படியே
நிர்மலமான மனஸ்ஸிலே வைத்து
வண் குருகைக் கோனாரும் நம்முடைக் குடி வீற்று இருந்தார் -என்னும்படி ச ஹ்ருதயமாக வைத்து –
விஷய வைராக்யமுடைய பரம ஹம்ஸராகையாலே மானஸ பத்மாஸனத்தில் இறே இருப்பது

(பேசிற்றே பேச லல்லால் பெருமை யொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்-திருமாலை -22-)

(புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-)

வகுளத் தாரானை மாசடையா மனத்து வைத்து
நாள் கமழ் மகிழ் மாலை மார்வினன் மாறன் சடகோபன் —திருவாய் -4-10-11-என்னும்படியான நம்மாழ்வாரை
சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -18-என்னும்படி
ஸூபாஸ்ரயமாகக் பாவித்து பக்தி பண்ணி வைத்து

(ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-)

(எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –)

மறவாமல் வாழ்த்துதுமே-
விஸ்ம்ருதி இன்றிக்கே இவ்விருப்புக்கு மங்களா சாசனம் பண்ணுவோம்
அவரும்
ஊழி தொரு ஊழி ஓவாது வாழிய வென்று யாம் தொழ இசையுங்கொல்–ஸ்ரீ திருவாசிரியம் -4-என்றார் இறே

இத்தால்
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமே
ஸூபாஸ்ரயம் என்னுமத்தையும்
மங்களாஸான விஷயம் என்னுமத்தையும் -சொல்லிற்று ஆயிற்று –

—————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த அவதாரிகை

ஸ்ரீ திருவிருத்தத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்கக் கண்டு
(மயர்வற மதி நலம் அருளினான் என்கிறபடியே )
அவனுடைய நித்ய விபூதி யோகத்தையும் லீலா விபூதி யோகத்தையும் அனுசந்தித்து –
நித்ய விபூதியில் உள்ளார் நிரதிசய அனுபவமே யாத்ரையாய் இருக்கிற படியையும்
அது உண்டு அறுக்கைக்கு ஈடான ஆரோக்யத்தை உடையராய் இருக்கிற படியையும்

இவ் வருகு உள்ளார் கர்ம பரதந்த்ரராய் –இதர விஷயங்களில் பிரவணராய் -தண்ணியதான தேஹ
யாத்திரையே போகமாய் இருக்கிறபடியையும் அனுசந்தித்து –

ப்ராதாக்களில் சிலர் ஜீவிக்க ஒருவன் குறைய ஜீவிக்கப் புக்கால் தன் குறையை அனுசந்தித்து வெறுக்குமா போலே
ஸ்ரீ சர்வேஸ்வரனுடன் நித்ய அனுபவம் பண்ணுவார்களோடு ஓக்க தமக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும்
தாம் அத்தை இழந்து இருக்கிறபடியை அனுசந்தித்து –
இதுக்கு அடி தேஹ சம்பந்தம் -என்று பார்த்து
இத்தைக் கழித்துக் கொள்ளலாம் வழி தன் பக்கல் ஒன்றும் காணாமையாலே
இந்த பிரகிருதி ப்ராக்ருதங்களினோட்டை சம்பந்தத்தை அறுத்துத் தர வேண்டும் என்று
அவன் திருவடிகளில் விண்ணப்பம் செய்தார்

இது பின்னை பொய்ந்நின்ற ஞானமும் –இத்யாதி முதல் பாட்டுக்கு கருத்து அன்றோ என்னில்-
முதலிலேயும் இப்பாசுரத்தை அருளிச் செய்து
முடிவிலேயும் -அழுந்தார் பிறப்பாம் பொல்லா அரு வினை -100-என்று
உபக்ரம உபஸம்ஹாரங்கள் ஏக ரூபமாய் இருக்கையாலே
இப்பிரபந்தத்துக்கு தாத்பர்யமும் அதுவே –
தாம் நினைத்த போதே தம்முடைய அபேக்ஷிதம் கிடையாமையால்
பிறந்த ஆற்றாமை ஆவிஷ்கரித்த படி நடுவில் பாட்டுக்கள் அடைய –

ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு இவர் அபேக்ஷிதம் சடக்கெனச் செய்யப் போகாது -அதுக்கு அடி
சர தல்பத்திலே கிடந்த ஸ்ரீ பீஷ்மரைக் கொண்டு நாட்டுக்கு சிறிது வெளிச் சிறப்பைப் பண்ணிக் கொடுத்தால் போலே
இவரை இடுவித்து சில பிரபந்தங்களை பிரவர்த்திப்பித்து சம்சாரத்தைத் திருத்த நினைத்தவன் ஆகையால் –

இங்கே வைக்கலாம் படி அல்லவே இவருடைய த்வரை-
இவர் தாம் நிர்பந்தம் பண்ணுகிறதும்
அவ்வருகே போய் குண அனுபவம் பண்ணுகைக்காக இறே

இவை தன்னை அனுபவிப்போம் என்று பார்த்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
தேஹத்தினுடைய தன்மையை – தண்மையை – அனுசந்திப்பதற்கு முன்பு காட்டிக் கொடுத்தது இவையே யாகிலும்
அவ்வருகே போய்-பரமபதத்தில் சென்று – அனுபவிப்பதும் ஓர் அனுபவம் உண்டு என்று தோற்றாதபடி
ஒரு வைஸ்யத்தைப் பிறப்பிக்க
அவற்றிலே அந்ய பரராய் அனுபவிக்கிறார் –

————————

ஸ்வரூப ரூப குணங்கள் என்று இறே அடைவு –
ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தில் இழிந்து அனுபவிக்க வேணும் என்கிறார் யாயிற்று –
தான் துவக்கு உண்டு இருப்பதும் இதிலே யாகையாலே –
இனி இவ்வஸ்து தான் நேர் கொடு நேரே அனுபவிக்க ஒண்ணாத படி -முகத்திலே அலை எறிகையாலே-
கிண்ணகத்தில் இழிவார் மிதப்பு -ஓடம் -கொண்டு இழிவாரைப் போலே –
இந்த ரூபத்தையும் -உபமான முகத்தால் இழிந்து அனுபவிக்க வேணும் என்று பார்த்தார் –
ஸர்வதா சாம்யம் இல்லாத தொரு வஸ்து யாகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு உபமானமாகச் சொல்லுவது தான் இல்லை –

ஆனாலும் அல்ப ஸாத்ருஸ்யம் உள்ளது ஒன்றைப் பற்றி இழிய வேணும் இறே –
ஒரு மரகத கிரியை யாயிற்று உபமானமாகச் சொல்லுகிறது
அதின் பக்கல் நேர் கொடு நேர் கொள்ளலாவது ஓன்று இல்லாமையால் அது தன்னை சிஷித்திக் கொண்டு இழிகிறார்-

ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தைப் பற்றினவோ பாதி
ரூபம் தன்னையும் விட்டு உபமானத்திலே இழிந்து
அது தனக்கு ஒப்பனை தேடி எடுத்துப் பேசுகிறார் –

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–

செக்கர் மா முகில் உடுத்து -சிவந்த பெரிய மேகத்தை அரையிலே கட்டி
மிக்க செம் சுடர்-மிகவும் சிறந்த கிரணங்களை யுடைய
பரிதி சூடி-சூரியனை தலையிலே தரித்து
அம் சுடர் மதியம் பூண்டு-அழகிய குளிர்ந்த கிரணங்களை யுடைய சந்திரனை அணிந்து
பல சுடர் புனைந்த -நக்ஷத்ரங்களாகிற அநேக தேஜஸ்ஸூக்களைத் தரித்து உள்ளதாய்
பவள செம் வாய்-பவளங்களைப் போன்ற சிவந்த இடங்களை உடையதாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்-விளங்கும்படியான பச்சை நிறத்தை உடைத்தான் மரகத மலையானது
கடலோன் கை மிசை-கடலுக்கு அதிபதியான வருணனுடைய திரைகளாகிற கையின் மேலே –
கண் வளர்வது போல்-நித்திரை செய்வது போலே
பீதக ஆடை முடி பூண் முதலா-பீதாம்பரம் கிரீடம் கண்டிகை முதலான
மேதகு பல் கலன் அணிந்து -பொருந்தி தகுதியாய் இருக்கிற பல ஆபரணங்களையும் அணிந்து
சோதி வாயவும் –ஒளிவிடா நின்றுள்ள திருப்பவளமும்
கண்ணவும்-திருக் கண்களும்
சிவப்ப -சிவந்து இருக்கும்படியாகவும்
மீது இட்டு-போட்டியில் வெற்றி கொண்டு
பச்சை மேனி மிக பகைப்ப-பச்சை நிறமானது மிகவும் விளங்குபடியாகவும்

நச்சு வினை -எதிரிகளை அழிக்கையில்-விஷத்தைப் போன்ற செயல்களை உடையனாய்
கவர் தலை -கவிழ்ந்து இருந்துள்ள தலைகளை உடையனாய்
அரவின் அமளி ஏறி-ஆதி சேஷனாகிற படுக்கையில் ஏறி
எரி கடல் நடுவுள் -அலை எறியும்படியான கடலின் நடுவே
அறி துயில் அமர்ந்து-ஜகத் ரக்ஷண சிந்தை யாகிற யோக நித்திரையை அடைந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வ குழாங்கள்-அனைத்து தேவர்கள் கூட்டங்களும்
கை தொழ கிடந்த-கை கூப்பி வணங்கும் படி பள்ளி கொண்டு இருப்பவனும்
தாமரை வுந்தி -எல்லா உலகத்தின் உத்பத்திக்கும் காரணமான நாபீ கமலத்தை யுடையவனும்
தனி பெரு நாயக-ஒப்பற்ற சர்வாதிகனுமாய் இருப்பவனுமான எம்பெருமானே
மூ வுலகு அளந்த சேவடியோயே –மூன்று உலகங்களையும் அளந்த திருவடிகளை யுடையவனே-

செக்கர் மா முகில் உடுத்து
ஆனையைக் கண்டார் -ஆனை-ஆனை -என்னுமா போலே –
அனுபவ ஜனித ப்ரீதி உள் அடங்காமையாலே ஏத்துகிறார்
ஸ்யாமமான நிறத்துக்குப் பரபாகமான சிவப்பை யுடைத்தாய் -கொடுக்கும் கொய்சகமும் வைத்து உடுக்கலாம்படியான –
மா -தலைப்பும் கொச்சமும் வைத்து உடுக்கலாம் படியான பெரிய அளவு –
அளவை யுடைத்தாய் -ஸுவ் குமார்யத்துக்குச் சேர்ந்து குளிர்ந்து இருக்கிற முகிலை அரையிலே பூத்தால் போலே உடுத்து
படிச்சோதி ஆடையொடும் –கடிச்சோதி கலந்ததுவோ -3-1-1- என்னும்படி –

மிக்க செம் சுடர் பரிதி சூடி –
திவி ஸூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுக பதுத்திதா
யதி பா சத்ருசீ சா ஸ்யாத் பாசஸ் தஸ்ய மஹாத்மந –ஸ்ரீ கீதை –11-2-என்று சொல்லுகிறபடியே
(ஆயிரம் சூர்யர்களுடைய ஒளியானது ஒரே காலத்திலே ஆகாயத்திலே தோன்றிற்றாகில்
அந்தப் புருஷனுடைய ஒளிக்கு அது ஸமானம் ஆகலாம்)
சஹஸ்ர கிரணங்கள் என்றால் போலே ஒரு ஸங்க்யை உண்டு இறே ஆதித்யனுக்கு —
அப்படி பரிச்சின்ன கிரணன் அன்றிக்கே அநேக ஆயிரம் கிரணங்களை யுடையான் ஒரு ஆதித்யன் வந்து
உதித்தாலே போல் ஆயிற்று திரு அபிஷேகம் இருப்பது –
பச்சை மா மலை போல் மேனியை யுடைய எம்பெருமான் -மிகச் சிவந்து இருந்துள்ள
கிரணங்களை யுடைய பரிதியைச் சூடி –

அம் சுடர் மதியம் பூண்டு
தன்னுடைய -ஸ்வா பாவிகமாய் இருந்துள்ள பிரதாபத்தாலே ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத படி இருக்கிற
ஆதித்யனைப் போலே அன்றிக்கே
சீதளமான கிரணங்களை யுடையவனாய் –
குறைதல் -நிறைதல்-மறு உண்டாதல் இன்றிக்கே -வைத்த கண் வாங்காதே கண்டு
இருக்க வேண்டும்படியான அழகை யுடைய சந்திரனைப் பூண்டு
(பச்சை மா மலை போன்ற திரு மேனிக்கு இது கழுத்துக்கு ஆபரணம் -கண்டிக ஆபரணம் )-

பல சுடர் புனைந்த
மற்றும் பல நக்ஷத்ரங்களையும் -( க்ரஹங்களையும் -போன்ற) ஜோதிகளையும்
ஆபரணங்களாகப் )பூண்டு

பவள செவ்வாய்
பவளமாகிய சிறந்த வாயை யுடைத்தாய் –
உபமேயத்தில் வந்தால் பவளம் போல் சிவந்த அதரத்தை யுடையவன் என்கிறது –
இங்கே பவளம் போலே சிவந்த இடங்களை யுடைத்தாய் என்கிறது –

திகழ பசும் சோதி மரகத குன்றம் கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
தனக்கு இவ்வருகு உள்ளவை எல்லாம் -( இதர மலைகள் எல்லாம் )கீழாம் படி மிகைத்து உஜ்ஜவலமாகா நின்றுள்ள
ஸ்யாமமான தேஜஸ்ஸை யுடைத்தான மரகத கிரியானது –
கடலுக்கு அதிபதியான வருணனுடைய திரைக் கையிலே கண் வளர்ந்து அருளுவது போலே

சாய்வது போல் என்ன அமைந்து இருக்க
உபமானத்திலும் கூசி
கண் வளர்வது போல் -என்கிறார் –

திருமலை நம்பி எம்பெருமானார்க்கு ஒருவரை அடையாளம் சொல்லுகிற இடத்தில்–
( மென்மையான காதை உடையவர் என்று சொல்லும் இடத்தில் ) பொன்னாலே தோடு பண்ணினால் இட
ஒண்ணாத படியான காதை யுடையராய் இருக்குமவரை அறிந்து இருக்கை யுண்டோ -என்றாராம் –

(இங்கு உபமானத்தைச் சொல்லும் இடத்தில் உபமேயத்தைப் போலே
அங்கு உபமேயத்தைச் சொல்லும் போது உபமானத்தை இட்டுச் சொன்னார் என்று கருத்து )

பீதக ஆடை –
செக்கர் மா முகில் உடுத்து -என்கிறது
முடி –
செஞ்சுடர் பரிதி சூடி -என்கிறது
பூண் –
அஞ்சுடர் மதியம் பூண்டு -என்கிறது
முதலா மேதகு பல் கலன் அணிந்து –
பல சுடர் புனைந்த என்றத்தை

மேதகு
ஸ்வரூப அனுரூபம் என்னும்படியாய் இருக்கை –
மேன்மைக்குத் தக்கபடி என்றபடி –
மேவித் தகுதியாக என்றுமாம்

கீழ்ச் சொன்னவை முதலாகத் தகுதியாய் இருந்துள்ள பல ஆபரணங்களையும் அணிந்து –
அவன் விபூதியைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாததாய் இருக்கை
பல பலவே ஆபரணம் –திருவாய் -2-5-6-
ஸ்ரீ பாஷ்யகாரர் அநேக பூஷணங்களை அருளிச் செய்து
பின்னையும்–நூபுராத் யபரிமித திவ்ய பூஷண–ஸ்ரீ சரணாகதி கத்யம் –
(நூபுரம் முதலாகிய கணக்கற்ற திவ்ய ஆபரணங்களை யுடையவன் )
ஆதி சப்தத்தால் தலைக் கட்டுமா போலே
இங்கும் பல் கலன்கள்-என்று தலைக் கட்டுகிறார்

சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப
த்ருஷ்டாந்தத்தில் ஒன்றைச் சொல்லி இங்கே இரண்டைச் சொல்லுவான் என் என்னில் –
அதுக்காக இறே -பவளச் செவ்வாய் என்று கீழே
சிவந்த இடங்கள் என்கிறது –

மீது இட்டு பச்சை மேனி மிக பகைப்ப
கீழ்ச் சொன்னவற்றாலும் -அவற்றை நெருக்கிற தன்னாலும் ஒன்றை ஓன்று ஸ்பர்த்தித்து-
ஸ்யாமமான நிறமும் மிகவும் உஜ்ஜவலமாக –
அவற்றை அடைய நெருக்கி உள்ளே இட்டுக் கொள்ளப் பார்த்ததான அத்தையும் அழித்து ப்ரசரிக்க
திருமேனி தேஜஸ் மிகவும் பிரகாசிக்க என்றபடி –
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போலே -என்ற உபமானத்துக்கு இது உபமேயம்

நச்சு வினை
வாய்ந்த மது கைடபரும் வயிறு உருகி மாண்டார் –மூன்றாம் திருவந்தாதி -66-என்கிறபடியே –
தனி இடத்திலும் எதிரிகளாய் வருவாரும் முடியும்படியான நச்சுத் தொழிலை யுடைத்தாய் இருக்கை –

கவர் தலை
பல தலைகளை யுடைத்தாய் ஸ்வ ஸ்பர்சத்தாலே பணைத்து என்றுமாம்
பிரஜையை மடியில் வைத்து இருக்கும் தாயைப் போலே
பெரிய பெருமாளை மடியிலே வைத்து இருக்கும் தாய் தானாம் –

ஸ்ரீ அனந்தாழ்வான் திருக்கோட்டியூருக்கு நடந்த இடத்தில்-( அகளங்கனோடே உண்டான மனஸ்தாபத்தாலே இவர் அங்கு
இருக்க மடியிலே அமர்த்தி ) ஸ்ரீ பட்டரைக் கண்டு அவர் திருமேனியில் இப்படிச் செய்தானாம் –
ஸ்ரீ ஆண்டாளுக்கு முந்துற ஒரு பிள்ளை உண்டாய் அவனை இழக்க –
அங்கனே செய்ய ஒண்ணாது இவன் ஜீவிக்க வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நீராட்டி
அந்த திருமஞ்சநீரைப் பிள்ளைக்குப் புகட்டி -மஞ்ச நீர் கொடுத்த பிள்ளையாய் வளர்க்க வேணும் -என்று
காட்டிக் கொடுத்து அருளினார் ஆயிற்று –
அந்த வாசனையாலேயே ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகன் -என்று தான்
ஸ்ரீ பட்டரை ஸ்ரீ அனந்தாழ்வான் சொல்வானாம் –

அரவின் அமளி ஏறி
நாற்றம் குளிர்த்தி மென்மைகளை உடையனான திரு அனந்தாழ்வானாகிற படுக்கையில் ஏறி
படுக்கையிலே ஏறுகிற இது தான் தம் பேறாக இருக்கையாலே –
ஸ்ரீ நம்பெருமாள் ஆறுகால் சிவிகையை சாதாரமாகப்
பார்த்து ஏறி அருளுமா போலே பெரிய ஆதாரத்தோடு யாயிற்று ஏறி அருளுகை –
அமளி -படுக்கை –

எறி கடல் நடுவுள்
ஸ்வ சந்நிதானத்தாலே அலை எறிகிற கடலிலே

அறி துயில் அமர்ந்து
அறிவே வடிவாக உடைத்தாய் இருந்துள்ள நித்திரையில் பொருந்தி –
அல்லாதார்க்கு முதல் தன்னிலே ஓன்று தோன்றாதே நெஞ்சு இருண்டு இருக்கும்-
சஷுராதி கரணங்களாலே பதார்த்த தர்சனம் பண்ணிப் போது போக்குவார்கள்
அக்கண் தன்னையும் செம்பளித்தால் உள்ளொடு புறமோடு வாசியற இருண்டு இருக்கும்
இவன் தான் திருக்கண் செம்பளித்தால் பிரகாசம் உள்ளே இறைத்து இருக்கும் அத்தனை –

ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுதல் –
த்யேய வஸ்து தனக்கு புறம்பு இல்லாமையால் ஸ்வ அனுசந்தானம் பண்ணுதல் –
திருவானந்தாழ்வான் மேல் சாய்ந்து அருளினால் இருக்கும் படி –

சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கை தொழ
நாட்டுக்கு ஆஸ்ரயணீயராக ப்ரசித்தரானவர்கள் தங்கள் பஃன அபிமானராய்த் தொழா நிற்பார்கள்
ப்ரஹ்மாதிகள் தொடக்கமாக அநேக தேவதா சமூகமானது தங்கள் இறுமாப்பைப் பொகட்டு சாய்ந்து அருளின அழகிலே
தோற்று எழுத்து வாங்கி நிற்பார்கள் –
இவர்கள் இப்படியே தொழா நின்றால் அவன் செய்வது என் என்னில்

கிடந்த
கடலிலே இழிந்த கொக்குத் திரள்கள் விக்ருதமாம் காட்டில் அக்கடலுக்கு ஒரு வாசி பிறவாது இறே-
ஏக ரூபமாய் சாய்ந்து அருளுமாயிற்று –
சில தொழா நிற்கக் கிடந்தோம் என்கிற துணுக்கும் பிறவாதாயிற்று -ஐஸ்வர்யச் செருக்காலே –
இவருக்கு இரண்டும் ஸ்வரூப அந்தர் கதமாயிற்று –
கேழ்த்த சீர் அரன் முதலாகக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்து அமரர் துதித்தால்
உன் தொல் புகழ் மாசூணாதே –திருவாய் -3-1-7-

தாமரை வுந்தி
சகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவனாய்
இப்படி இருப்பார் அவ்வருகு யாரேனும் உண்டோ என்ன

தனி பெரு நாயக
இத்தால் அவ்வருகு இல்லை என்னும் இடத்தைச் சொல்லுகிறது
அவ்வருகு இல்லையாகில் தன்னோடு ஓக்க சொல்லலாவார் உண்டோ என்னில்
தனி
அத்விதீய நாயகன் –
புறம்பேயும் சிலரை நாயகராகச் சொல்லுவது ஓவ்பசாரிகம்
ருத்ரம் ஸமாச்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரித-
ப்ரஹ்மாம் மாம் ஆஸ்ரிதோ ராஜன் நாஹம் கஞ்சித் உபாஸ்ரித-பாரதம் -ஆஸ் –118-37-

(தேவர்கள் ருத்ரனை அண்டி இருக்கின்றனர்
ருத்ரன் தன் தகப்பனாக பிரமனை ஆஸ்ரயித்து இருக்கிறான்
பிரமனோ என்னில் -அவனையும் பிறப்பித்த என்னை அடைந்து இருக்கிறான்
அரசனே நான் ஒருவனையும் பற்றி இருக்க வில்லை ) -என்றால் போலே

ஆபேஷிகமான ஐஸ்வர்யத்தை உடையராய் இறே இவர்கள் இருப்பது –
இவ்வருகு உள்ளார்க்கு எல்லாம் தான் நிர்வாஹகனாய் இருக்கிறாவோபாதி
தனக்கு அவ்வருகு ஒரு நிர்வாஹகனை
உடையான் அல்லாத அத்விதீய பர தேவதை

தாமரை யுந்தி -தனி பெரும் -இவற்றால் –
நிமித்த -உபாதான -ஸஹகாரிகளும் தானே என்கை –

மூ வுலகு அளந்த
தன் பக்கல் வந்து அனுபவிக்க மாட்டாதாருக்கு அவர்கள் இருந்த இடத்திலே சென்று அனுபவிப்பிக்கும்

சேவடியோயே –
இழந்த இழவை மீட்டு ரஷியாதே காதுகனனே யானாலும் விட ஒண்ணாதபடியே யாயிற்று
திருவடிகளின் போக்யதை இருக்கிறபடி-

கண்ணழிவற்ற அழகையும் குணங்களையும் அனுபவித்தார் –

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜர் நியமித்து அருளிய -74-சிம்ஹாசனாதிபதிகள் — ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய அஷ்ட திக் கஜங்கள் –

September 10, 2019

ஸ்ரீ ராமானுஜர் நியமித்து அருளிய -74-சிம்ஹாசனாதிபதிகள்–

1–ஸ்ரீ சொட்டை நம்பி -ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருக்குமாரர் –இவரது திருக்குமாரர் ஸ்ரீ என்னாச்சான்-அவரது திருக்குமாரர் ஸ்ரீ பிள்ளை அப்பன்
2–ஸ்ரீ புண்டரீகர் -ஸ்ரீ பெரிய நம்பி திருக்குமாரர்
3–ஸ்ரீ தெற்கு ஆழ்வான் -ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குமாரர்
4–ஸ்ரீ ஸூந்தரத் தோளுடையான்-ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக்குமாரர்
5–ஸ்ரீ ராமானுஜன் -ஸ்ரீ பெரிய திருமலை நம்பி யுடைய திருக்குமாரர்- ஸ்ரீ திருமலை நம்பி என்ற இவரது திருக்குமாரரும்

6–ஸ்ரீ கூரத்தாழ்வான்-அவரது திருக்குமாரர் -ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ ஸ்ரீ ராம பட்டர்
7–ஸ்ரீ முதலியாண்டான் -அவரது திருக்குமாரர் -ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
8–ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
9–ஸ்ரீ கோ மடத்து ஆழ்வான்
10–ஸ்ரீ திருக் கோவலூர் ஆழ்வான்

11–ஸ்ரீ திரு மோகூர் ஆழ்வான்
12–ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்
13–ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்
14–ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
15–ஸ்ரீ அனந்தாழ்வான்

16–ஸ்ரீ மிளகு ஆழ்வான்
17–ஸ்ரீ நெய்யுண்டாழ்வான்
18–ஸ்ரீ சேட்டலூர் சிறிய ஆழ்வான்
19–ஸ்ரீ வேதாந்தி ஆழ்வான்
20–ஸ்ரீ கோயில் ஆழ்வான்

21–ஸ்ரீ உங்கள் ஆழ்வான்
22–ஸ்ரீ ஆரண புரத்து ஆழ்வான்
23 –ஸ்ரீ எம்பார்
24–ஸ்ரீ கிடாம்பி ஆச்சான்
25–ஸ்ரீ கணியனூர் சிறிய ஆச்சான்

26–ஸ்ரீ ஈச்ச்சம்படி ஆச்சான்
27–ஸ்ரீ கொங்கில் ஆச்சான்
28–ஸ்ரீ ஈச்சம்படி ஜீயர்
29–ஸ்ரீ திருமலை நல்லான்
30–ஸ்ரீ சட்டாம்பள்ளி ஜீயர்

31–ஸ்ரீ திரு வெள்ளறை ஜீயர்
32–ஸ்ரீ ஆட் கொண்ட வல்லி ஜீயர்
33–ஸ்ரீ திரு நகரி பிள்ளான்
34–ஸ்ரீ காராஞ்சி சோமாஜியார்
35–ஸ்ரீ அலங்கார வேங்கடவர்

36–ஸ்ரீ நம்பி கருந்தேவர்
37-ஸ்ரீ சிறு புள்ளி தேவராஜா பட்டர்
38–ஸ்ரீ பிள்ளி உறாந்தை உடையார்
39–ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
40–ஸ்ரீ பெரிய கோவில் வள்ளலார்

41–ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அரையர்
42–ஸ்ரீ ஆசூரிப் பெருமாள்
43–ஸ்ரீ முனிப் பெருமாள்
44–ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள்
45–ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்

46–ஸ்ரீ மாற்று ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான்
47–ஸ்ரீ சோமாசியாண்டான்
48–ஸ்ரீ ஜீயர் ஆண்டான்
49–ஸ்ரீ ஈஸ்வர் ஆண்டான்
50–ஸ்ரீ ஈயுண்ணிப் பிள்ளை ஆண்டான்

51–ஸ்ரீ பெரியாண்டான்
52–ஸ்ரீ சிறியாண்டான்
53–ஸ்ரீ குறிஞ்சியூர் சிறியாண்டான்
54–ஸ்ரீ அம்மங்கி ஆண்டான்
55–ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்

56–ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
57–ஸ்ரீ தொண்டனூர் நம்பி
58–ஸ்ரீ மருதூர் நம்பி
59–ஸ்ரீ மழுவூர் நம்பி
60–ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி

61–ஸ்ரீ குருவை நம்பி
62–ஸ்ரீ முடும்பை நம்பி
63–ஸ்ரீ வடுக நம்பி
64–ஸ்ரீ வங்கீபுரத்து நம்பி
65–ஸ்ரீ பராங்குச நம்பி

66–ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
67–ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்
68–ஸ்ரீ உக்கலம் அம்மாள்
69–ஸ்ரீ சொட்டை அம்மாள்
70–ஸ்ரீ முடும்பை அம்மாள்

71–ஸ்ரீ கொமாண்டூர்ப் பிள்ளை
72–ஸ்ரீ கொமாண்டூர் இளையவல்லி
73–ஸ்ரீ கிடாம்பி பெருமாள்
74–ஸ்ரீ காட்டுப் பிள்ளான் –

———————

ஸ்வாமி ராமாநுஜர் விஷயமாக அருளிச்செய்யப்பட்ட கிரந்தங்கள்

பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம்

கோயில் கந்தாடை நாயன் அருளிய பெரிய திருமுடி அடைவு

குருபரம்பராப்ரபாவ ஸாரமான ப்ரபந்நாம்ருதம்

ஸ்வாமி வடுகநம்பி இயற்றிய யதிராஜ வைபவம்

பிள்ளைலோகஞ்ஜீயர் அருளிச்செய்த ராமாநுஜார்ய திவ்ய சரிதை

ஸ்வாமி மணவாளமாமுனிகள் அருளிச்செய்த யதிராஜ விம்சதி

ஸ்வாமி திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த ராமாநுஜ நூற்றந்தாதி

ஸ்வாமி வேதந்தாச்சார்யர் அருளிச்செய்த யதிராஜ சப்ததி

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் அருளிச்செய்த ஸ்ரீ ராமாநுஜ அதிமாநுஷ ஸ்தவம்

ஸ்ரீ முதலியாண்டான் அருளிச்செய்த தாடீபஞ்சகம்

ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் அருளிச்செய்த ஸ்ரீ ராமாநுஜ சது: ஸ்லோகி

ஸ்ருதப்ரகாஸிகாசார்யர் அருளிச்செய்த ப்ரார்த்தநா பஞ்சகம்

ஸ்ரீ வடுகநம்பி அருளிய ஸ்ரீ ராமாநுஜ அஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் மற்றும் ஸ்ரீ ராமாநுஜ அஷ்டோத்தர ஸத நாமாவளி

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிய ஸ்ரீ ராமாநுஜ ஸுப்ரபாதம் மற்றும் ஸ்ரீபாஷ்யகார மங்களம்

பகவத் ராமாநுஜ அவயவ ப்ரபாவம்

ஸ்ரீ எம்பார் அருளிய உடையவர் வடிவழகு பாசுரம்

பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் அருளிய எம்பெருமானார் வாழி திருநாமங்கள்

—————

ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய அஷ்ட திக் கஜங்கள்

1–ஸ்ரீ வான மா மலை ஜீயர்
2–ஸ்ரீ பட்டர் பிரான் ஜீயர்
3–ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ ஜீயர்
4–ஸ்ரீ கோயில் அண்ணன்
5–ஸ்ரீ பிரதிவர பயங்கர அண்ணா
6–ஸ்ரீ எறும்பு அப்பா
7–ஸ்ரீ அப்பிள்ளை
8–ஸ்ரீ அப்புள்ளார்

——————

என் மூலம் அஸ்வயுஜம் அஸ்யாவதார மூலம் காந்தோ பயந்த்ருயமினா கருணைக ஸிந்தோ
அசிதஸத்சு கணிதஸ்ய மாம் அபி சதாம் மூலம் ததேவ ஜகத் உபயதயைக மூலம்
யதாவதாரண மூலம் முக்தி மூலம் ப்ரஜாநாம் சடாரிபு முனி த்ருஷ்டா ஆம்னாய சாம்ராஜ்ய மூலம்
கலி கலுஷா சமூலோன் மூலாநே மூலமிந்தே ச பவது வரயோகி ந சமஸ்தர்தா மூலம்

மாற்று அற்ற செம்பொன் மணவாள மா முனிவன் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நம்மாழ்வார் திருநாமங்கள் –

September 10, 2019

1-சடகோபன்
2-தொண்டர்பிரான்
3-மாறன்
4-நா வீரர்
5-காரி மாறன்

6-திரு நாவீறு யுடைய பிரான்
7-பராங்குசன்
8-உதய பாஸ்கரர்
9-வகுளா பரணன்
10-வகுள பூஷண பாஸ்கரர்

11-குருகைப்பிரான்
12-ஞானத் தமிழுக்கு அரசு
13-குருகூர் நம்பி
14-ஞானத் தமிழ் கடல்
15-திருவாய்மொழி பெருமாள்

16-மெய் ஞானக் கவி
17-பொருநல் துறைவன்
18-தெய்வ ஞானக்கவி
19-குமரித் துறைவன்
20-தெய்வ ஞான செம்மல்

21-பவரோக பண்டிதன்
22-நாவலர் பெருமான்
23-முநி வேந்து
24-பாவலர் தம்பிரான்
25-பரப் ப்ரஹ்ம யோகி

26-வினவாது உணர்ந்த விரகர்
27-நிகாவலன் பெருமாள்
28-குழந்தை முனி
29-ஞான தேசிகன்
30-ஸ்ரீவைஷ்ணவ குலபதி

31-ஞானப்பிரான்
32-ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
33-மணிவல்லி –
34–இன்ப மாரி
35–நம் பெரியவர்

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

நிகமத்தில் –பரம உதாரமான -மேலான வண்மையை உடைய ஸ்ரீ திரு மோகூருக்கு கொடுத்த
இத் திருவாய் மொழியை அப்யஸிக்க – கற்க வல்லார்க்கு துக்க நிவ்ருத்தி யுண்டாம் என்கிறார்

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-

இப்பத்தினை அப்யஸிக்க -கற்க வல்லார்க்கு-சரீர அவசானத்திலே –உடலை விட்டு உயர் நீங்குகிற காலத்திலேயே
வழித் துணை இல்லை என்று கிலேசப்பட – வருந்த வேண்டாதபடி ஸ்ரீ காளமேகம் வழித் துணையாம்-

—————————-

நிகமத்தில்-இத் திருவாய் மொழி வல்லார் ஸ்ரீ திரு நாட்டில் உள்ளாருக்கு போக்யர் -இனியர் ஆவார் என்கிறார்

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-

ஸ்ரீ வைகுண்டத்து ஏறப் போய்
தம் பஞ்ச சதானி அப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா -கௌஷீதகி உபநிஷத்
நூறு பேர்கள் மாலைகளைக் கையில் உடையவர்களாய்
அந்த முக்தனை எதிர் கொண்டு அழைக்கிறார்கள் -என்பது போன்றவைகளில் சொல்லுகிறபடியே
அங்குத்தை அப்சரஸ் ஸூக்களுடைய ஆதரத்துக்கு விஷய பூதராய் – விருப்பத்துக்குப் பொருளாக இருப்பார் -என்றபடி
முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ள -10-9-10-என்றதனோடு
வேய் மரு தோள் இணை அணைவர் -என்கிற இதனோடு வாசி இல்லை
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -10-9-10-என்னக் கடவது அன்றோ

———————-

நிகமத்தில்
அவனை பசு நிரைமேய்க்க போக வேண்டாம் என்று நிஷேதித்த -விலக்கிய பாசுரமான இத் திருவாய் மொழியும்
மற்றைய திருவாய் மொழியைப் போன்று ஒரு திருவாய் மொழியே -என்று விஸ்மிதராகிறார் – ஈடுபடுகிறாள் –

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11-

இவையும் பத்து அவற்றின் சார்வே –அவை -என்கிறது கீழில் போந்த ஸ்ரீ திருவாய் மொழிகளையாய் –
அவற்றின் அருகே இதுவும் ஒரு ஸ்ரீ திருவாய் மொழியே என்ற ஆச்சர்யத்தில் ஆக்கி
ஆயிற்று ஸ்ரீ சீயர் அருளிச் செய்ததும் -9000 படி வியாக்யானம் செய்ததும்
அன்றிக்கே –
கீழ் ஸ்ரீ திருவாய்மொழிகளுக்கு சொன்ன பலம் இதற்கு பலம் என்கிறது ஆகவுமாம்
அன்றிக்கே
அவை -என்கிறது-மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை -என்கிறவற்றையாய்-இவையும் அவற்றோடு ஒக்கும் என்னுதல் -என்றது
அதனுடைய பலமே இதற்கும் பலம்-அது பலத்தோடு கூடியதாயின் இதற்கு பேறு உண்டாம் -என்றபடியாம் –
அவர்கள் நீ போகாதே கொள் -என்ன-அவன் தவிர்ந்து அவர்கள் உடன் கலந்தால் போலே
இது கற்றாரும் அவனோடு நித்ய சம்ச்லேஷம் -நீங்காத கலவியைப் பெறுவார் -என்றவாறு –

——————–

நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகள் ஸூலபமாம் என்கிறார்-

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-

இந்தப் பத்தும் கற்றார்க்கு –ஸ்ரீ தாமோதரன் தாள்கள் தவ நெறிக்கே சார்வே -என்கிறபடியே ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே –
இனி அவ்வருகு போய் ஓன்று தேடித் பற்ற வேண்டாதபடியான பற்றாகும்-

————————

நிகமத்தில்
இப்பத்தும் அப்யசித்தவர்களை -கற்றவர்களை ஸ்ரீ ஆழ்வார் தம்மைப் போலே பகவான் உடைய
விஷயீகார பாத்ரம் -திருவருளுக்குப் பாத்ரமாக்கும் என்கிறார்-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

இப்பத்து தானே இதனைக் கற்றார்க்கு-அப்யசித்தார்க்கு – நெடியான் அருள் சூடும் படியான் -என்றதுவே பேறாக்கும்
ஸ்ரீ ஈஸ்வரன் கொடுத்த பேறு-சாதர்மயம் – ஸ்ரீ ஆழ்வாரால் கொடுக்க மாட்டாமை இல்லை இறே-

———————

நிகமத்தில் இத் திருவாய் மொழியை கற்க -அனுபவிக்க -உரியவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் ஆவார்கள் என்கிறார்

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

கேட்ட போதே இன்பம் பயப்பது -என்றபடியே
ஏவம் பஹூவிதம் சிந்தாம் சிந்தயித்வா மகா கபி சம்ச்ரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யஜஹார ஹா -சுந்தர-91-1-என்கிறபடியே
செவி வழியே புக்கு நெஞ்சுக்கு இனிதாகை அன்றிக்கே செவியில் பட்ட போதே பிடித்து இனிதாய் இருக்கையாலே
அதற்க்குக் காரணம் என் என்னில் –நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்டு இருக்கையாலே
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே -8-5-11- என்னா செந்தமிழ் பத்தும் -என்றார் அன்றோ இவர் தாமே –

——————–

நிகமத்தில்
மஹான் அஹங்காரம் இவை முதலானவற்றின் விஷயமான இத் திருவாய் மொழி
திரு மால் இரும் சோலை மலையிலே சொல்லிற்று -என்கிறார்

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

மகத்து முதலானவற்றின் உருவமான ப்ரக்ருதி நிரசனமான -இச் சரீரத்தினை
ஒழித்து அருள வேண்டும் என்று சொன்ன இப்பத்தும்
அன்றிக்கே
மான் ஆங்காரத்து இவை பத்து -என்பதற்கு-பெரிய செருக்கோடு சொன்ன இப் பத்தும் -என்னுதல் –
ஸ்ரீ திருமலை விஷயமாய ஆயிற்று சொல்லிற்று –
ஸ்ரீ அழகரைச் சொன்ன இடம் உண்டாகில் அதில் கற்பகத் தருவினை சொன்னதைப் போன்று
ஸ்ரீ திருமலையில் உள்ளன அடங்க உத்தேச்யமாக கடவன அன்றோ
ஸ்ரீ எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 -என்றும் சொன்னார்கள் அன்றோ –

———————

நிகமத்தில்
இத் திருவாய் மொழியினை அப்யஸிக்க -கற்க வல்லவர்கள் இட்ட வழக்கு பரம பதம் -என்கிறார் –

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள் வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

இப் பத்தினை அப்யஸிக்க கற்க வல்லவர்கள்
செஞ்சொற் கவிகாள் 10-7-1- -என்கிறபடியே வாக்காலே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
நிரதிசய -எல்லை இல்லாத தேஜோ மயமான ஸ்ரீ பரம பதத்தை ஆயிற்று ஆளுவது
இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் – கற்றவர்கள் சென்றால்
ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று அங்கு உள்ளார் சொல்லுவது-

——————-

நிகமத்தில்
இத் திருவாய் மொழியைக் கற்றவர்-அப்யசித்தவர்கள் – நித்ய ஸூரிகளோடு ஒப்பர் என்கிறார்-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

இப் பத்தினை அப்யஸிக்க -கற்க வல்லார்
அப் பரம பதத்திலே ஸ்ரீ பகவான் உடைய குணங்களை அனுபவித்து அவற்றிலே வித்தராய் -ஈடுபட்டவராய்
அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்-

——————-

நிகமத்தில்
அகில ஹேய பிரத்யநீகனாய்-கல்யாண குண ஏக நாதனாய்
ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -இவற்றையே வடிவு உடையவனாய்-உயர்வற உயர்நலம் உடையவனாய்
ஸுவ்ந்தர்யாதி விசிஷ்டமான -வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய்
அபரிமித -அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்
ஸ்ரீ லஷ்மீ பூமா நீளா -ஸ்ரீ திருமகள் ஸ்ரீ மணமகள் ஸ்ரீ ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்
அஸ்தானே பயசங்கை செய்யும் ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைனதேயாதிகள் -ஸ்ரீ நித்ய ஸூரிகள் -ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் –
ஸ்ரீ பெரிய திருவடி-அனவரத பரிசர்யமான – எப்பொழுதும் அடிமை செய்யும் –
சரண நளினனாய் -திருவடித் தாமரைகளை உடையவனாய்
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்-ஸ்ரீ வைகுண்ட நிலயனாய்-ஸ்ரீ சர்வேஸ்வரனாய்
ஸ்வ விபூதி பூதரான -தன்னாலே ஏவப்படும் பிரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்
தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற ஆஸ்ரயிக்கும் -அடியவர்கள் விடாய்
தீரக் கலக்கும் தன்மையான எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு
அவனைப் பெற்று நீர்த்துக்கராய் -துக்கம் அற்றவராய்-நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகரான – எல்லா தடைகளும் நீங்கினவராய்
ஸ்ரீ ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த-பக்தி பலாத்கார பூர்வகமாக – ஆயிரம் ஸ்ரீ திருவாய் மொழியும்
அவற்றில் வைத்துக் கொண்டு
கீழ்ச் சொன்னவை போல் அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி
பரம பக்தியால் பிறந்த அந்தாதியான இத் திருவாய்மொழி வல்லார்
சம்சாரத்தில் பிறந்து வைத்தே அயர்வறும் அமரர்களோடு ஒப்பர் என்கிறார்-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–

இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –
ஸ்ரீ பகவானுடைய பிரசாதம் -திருவருள் பாதியும் தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு
சரீரத்தின் அவசானத்திலே -முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே
எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –
கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற -அனுக்ருஹீதையான -பக்தியினுடைய இடத்திலே
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க அது அடியாக பிறந்த
பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –
இதனை அறிந்தவர்கள்-சம்சாரத்திலே -இவ் உலகத்தில் பிறந்து வைத்தே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒப்பர் –
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம் இவர்களுடைய பிறப்பும் –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி எட்டாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

நிகமத்தில் -இத் திருவாய் மொழியில் சொன்ன அர்த்தத்தை ஸங்க்ரஹேண- சுருக்கமாக சொல்லி
இதனை அப்யசிப்பார்க்கு -கற்கின்றவர்கள் ஸ்ரீ சர்வேஸ்வரனை அடைந்து உஜ்ஜீவிக்கலாம் -என்கிறார்

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருதிரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

அநாதி காலம் ஸ்ரீ பகவான் இடம் விமுகராய் -விருப்பு இல்லாதவர்களாய் –
விஷயாந்தர ப்ரவணராய் -வேறு விஷயங்களில் ஈடுபட்டவர்களாய் –
அசந்நேவ ஸ பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத் அசதி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது இதி -தைத்ரியம் -–
அசத் சமராய் -இல்லாதவன் ஆகிறான் என்கிறபடியே
இல்லாதவர்களைப் போலே இருக்கிற நுங்கட்கு – சந்தமேனம் -இருக்கின்றவனாக அறிகிறார்கள் -என்றபடியே உஜ்ஜீவிக்கலாம்-

———————–

நிகமத்தில் ‘இத் திருவாய் மொழி வல்லார் அவித்யாதி சகல தோஷங்களும் –அறிவின்மை முதலிய
எல்லா குற்றங்களும் நீங்கி-இஹ லோக இவ் உலகத்திலும்-பர லோகங்களிலும் மேல் உலகத்திலும்
தாங்களே கிருதக்ருத்யர் ஆவார் -என்கிறார் –

பாத மடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையு மோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

அவித்யாதி தோஷங்களும் -அறிவின்மை முதலான குற்றங்களும் நீங்கப் பெறுவார்
புறம்பு உள்ள நசை அற்று இருக்கச் செய்தே பிரபந்தம் தலைக் கட்டுகைக்காக இருக்குமதுவும்
இவர்களுக்கு இல்லை –
இஹ -இவ் உலகத்தோடு பர -மேல் உலகத்தோடு வாசி அற குறை அற்று இருப்பார்கள் -என்றது
கிருதக்ருத்யா ப்ரதீஷ்ந்தே ம்ருத்யும் ப்ரியம் இவாதிதிம் -பாரதம் –-இவ் உலகத்தில் செய்ய வேண்டியதை
செய்து முடித்தவர்கள்-யமனை எதிர் பார்த்து இருக்கிறார்கள் -என்ற படியே
பர -மேல் உலகத்தில் –
பவாம்ச்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத சவபதஸ் தே – அயோத்யா 31-25
நான் எல்லா அடிமைகளும் செய்வேன் -என்று குறைவு அற்று இருப்பார்கள் –
ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டா-உபய விபூதியிலும் தாங்களே பிரதானர் -முதன்மை பெற்றவர்கள் ஆவார்கள்

————————-

நிகமத்தில்-இத் திருவாய் மொழி அப்யசிப்பார் -கற்பவர்கள்
அவன் தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்தில்-பிறவார் -என்கிறார் –

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

இப் பூமிப் பரப்பை அடைய அனுசந்தித்தால் -நினைத்தால் பரப்பேயாய்
ஸ்ரீ சர்வேஸ்வரன் தனிமைக்கு பரிய ஒருவரைக் கிடைக்காத இத் தேசத்தில் பிறவார்கள்
ஒரு நாடாக மங்களா சாசனம் செய்கிற தேசத்திலே சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

———————

நிகமத்தில்-இத் திருவாய்மொழியை அப்யசிப்பார்க்கு -கற்றவர்கட்கு இது தானே முதலில்
ஸ்ரீ பரம பதத்து ஏறக் கொடுபோய் பின்பு சம்சாரம் ஆகிய மகா நாடகத்தினை அறுக்கும் -என்கிறார்-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப் பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே
இப் பத்து தானே முந்துற ஸ்ரீ பரம பதத்தைக் கொடுத்து-பின்பு சம்சாரம் ஆகிற மகா நாடகத்தை அறுக்கும் –

————————-

நிகமத்தில்-இத் திருவாய் மொழி வல்லார் தாம் பட்ட துக்கம் படாதே
இஹ -இந்த உலகத்தில்-இப் பிறப்பிலே-அவனைப் பெற்று எப்பொழுதும் இன்பத்தை அனுபவிப்பர் – என்கிறார்

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-

இந்த உலகத்திலே இப் பிறப்பிலே திவா ராத்திரி விபாகம் – பகல் இரவு என்ற வேறுபாடு இன்றிக்கே
ஸ்ரீ பகவத் அனுபவம் பண்ணி மகிழப் பெறுவார்
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்-என்று கூப்பிட வந்து முகம் காட்டாத அவத்யத்தை -தாழ்வினை
இப் பத்தினை கற்று வல்லவர்களோடு கடுக வந்து முகம் காட்டி தீருமாயிற்று ஸ்ரீ ஈஸ்வரன் –
மனைவியோடு வெருப்புண்டானால் அவள் பக்கல் முகம் பெறுகைக்காக பிரஜைகளை ஸ்லாகிப்பாரை –
குழந்தைகளைக் கொண்டாடுவாரைப் போலே —

—————————-

நிகமத்தில்-இத் திருவாய் மொழி கற்றவர்களை இது தானே ஸ்ரீ திரு நாட்டில் கொடு போய் விடும் -என்கிறார்

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11-

சம்சாரத்தில் இதனைக் கற்பவன் அப்யசிப்பான் – ஒருவன் உண்டாவதே என்று விஸ்மயப்பட்டு -ஆச்சர்யப் பட்டு-
சர்வாதிகமான -எல்லா உலகங்கட்கும் மேலான ஸ்ரீ பரம பதத்தில் கொடு போய் வைக்கும் -என்றது
மாயக் கூத்தா -என்ற ஸ்ரீ திருவாய் மொழியில் உண்டான விடாய் நடையாடாத தேசத்திலே வைத்து
ஒரு நாளும் பிரியாத அனுபவத்தைக் கொடுக்கும் –

————————–

நிகமத்தில்
இப் பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய பிறவிக்கு த்ருஷ்ட்டி விஷம் என்கிறார் –

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

சன்ம மானது விட்டுப் போம்படியாக நோக்கும்-அது செய்யும் இடத்தில்
தன் கண்கள் சிவந்து நோக்கும் விடம் – அதாவது
இப் பிறவிக்கு இப்பத்தும் த்ருஷ்ட்டி விஷம் என்கை-என்றது
இப் பத்துக்கும் பிறவிக்கும் சஹா நவஸ்தா லக்ஷண -ஒரே இடத்தில் இருக்கக் கூடிய
தன்மையில் விரோதம் உண்டு -என்றபடி –

————————

நிகமத்தில்
இப் பத்தும் கற்றாரை-தம்மை விஷயீகரித்தாப் -அங்கீகரித்தாப் போலே விஷயீகரித்து -அங்கீகரித்து
தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்ளும் -என்கிறார்

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்துள் இப் பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

சர்வ -எல்லா பொருள்கட்கும் நிர்வாஹகனாய்-ஸ்ப்ருஹணீயமான -விரும்பத் தக்க வடிவு அழகையும் குணங்களையும் –
முடிந்து ஆளும் படியும் -உடையவனுமான -ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே அருள் செய்து
தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் –
இத் திருவாய் மொழி அப்யசித்தாருக்கு -கற்றார்க்கு தாம் பெற்ற பேறு என்கிறார் –

———————–

நிகமத்தில்
இப்பத்தைக் கற்றவர் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான -தகுதியான கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவர்

நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

இவர் பாசுரத்தை சொன்னவர்-இவர் செய்ய விரும்பிய வ்ருத்தியிலே -கைங்கர்யத்திலே அந்வயிக்க -சேரப் பெறுவர் –
நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –
ஆக
இப்பாட்டால்
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் வை லக்ஷண்யத்தையும் -சிறப்பினையும்
இதனைக் கற்றவர்கள் அப்யசித்தார்களுடைய ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும் -பெரும் பேற்றின் சிறப்பினையும்
சொல்லிற்று ஆயிற்று —

———————

நிகமத்தில்
இத் திருவாய் மொழி வல்லார் இதில் சொன்ன ஸ்ரீ பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலைப் பெற்று-
ச பரிகரமாக –-பெண்டு பிள்ளைகளோடு வாழப் பெறுவர் என்கிறார்

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-

தாங்கள் ஒன்றனை நினைக்க-பரிகரம்-தம் மனைவி மக்கள் முதலாயினோர் வேறு ஒன்றை நினைக்கை
அன்றிக்கே ச பரிகரமாக குடும்பத்தோடு ஸ்ரீ பாகவதர்களுக்கு உறுப்பாக வாழப் பெறுவர் –

ஸ்ரீ திருவனந்த புரத்துக்கு சாத்தாகப் -கூட்டமாகப் -போகா நிற்கச் செய்தே
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே ஸ்ரீ செல்வ நம்பி திரு மாளிகையிலே போய்ப் புக்கார்களாக
ஸ்ரீ நம்பி தாம் வேற்று ஊருக்காக சென்று இருக்க-ஸ்ரீ நங்கையார் நூறு வித்துவக் கோட்டை கிடக்க
அவற்றைக் குத்தி ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்யப் பண்ணி விட
பிற்றை நாள் ஸ்ரீ நம்பி வந்து -அவை செய்தது என் என்ன –ஸ்ரீ பரம பதத்திலே விளைவதாக வித்தினேன் -என்றாராம் –

ஸ்ரீ தொண்டனூர் நம்பி எச்சான் -என்று மகா புருஷர்கள் சிலர் உளர் அன்றோ
ஸ்ரீ பாகவத சேஷத்வமே யாத்ரையாக போந்தவர்கள்-அவர்கள் படியே யாகப் பெறுவர்கள்-

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஏழாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு இந்திரியங்களால்
ஆத்மாவுக்கு வரும் நலிவு போம்,’ என்கிறார்.

கொண்ட மூர்த்தி ஓர் மூவ ராய்க் குணங்கள் படைத் தளித்துக் கெடுக்கு மப்
புண்டரிகக் கொப் பூழ்ப் புனற் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே–7-1-11-

இவருடைய தசையை -நிலையை -அனுசந்தித்தால் -நினைத்தால் பாடப் போகாதே அன்றோ?
கண்டு –நமக்குத் தஞ்சம் என்று அனுசந்தித்து -நினைத்து.
இரவு பகலில் வினை போம். இராப் பகல் மோதுவித்திட்டு’ என்ற துரிதம் -துயரம் போம்.

——————-

இத் திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல்
ஸ்ரீ திரு நாட்டிலே பேரின்ப வெள்ளத்தினை யுடையவராய், ஸ்ரீ நித்ய ஸூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’ என்கிறார்.

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே–7-2-11-

இவள் மோகித்துக் கிடக்கத் திருத் தாயார் தனியே இருந்து கூப்பிட்ட எளிவரவு தீர,
ஸ்ரீ நித்ய ஸூரிகள் திரள இருக்க, அவர்கள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய் இருந்து அனுபவிக்கப் பெறுவார்கள்.

———————

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார், பகவானுடைய கைங்கரியத்திலே
மிகவும் அவகாஹித்தார் -மூழ்கினாரேயாவர்,’ என்கிறார்.

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7-3-11-

அடிமைக் கூட்டத்தில் திரு வாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;
அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட் புகுவர் என்னுதல்.

——————-

நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் அப்யசித்தவர்களுக்கு இது தானே
விஜயத்தைக் கொடுக்கும் என்கிறார்.

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-

சாதாரமாக -ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு விஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும்.
ஐஸ்வர்யார்த்திக்கு -செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாக வுள்ளனவற்றை வென்று கொடுக்கும்;
கேவலனுக்கு விரோதியைப் போக்கிக் கொடுக்கும்;
ஸ்ரீ பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு
இந்திரிய ஜயாதிகளை -ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;
பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.

(இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்-
ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்கு அவற்றைக்கொடுக்கும்-
கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக்கட்டிக் கொடுக்கும்-
பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும்
போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்’ –முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)

——————

நிகமத்தில் -இத் திருவாய் மொழி அப்யசித்தார் சம்சாரத்துக்குள் இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவர்’ என்கிறார்.

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே–7-5-11-

இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள், இவ் வாழ்வார் தம்மைப் போலே தெளிவுற்ற நெஞ்சினையுடையராவர்.
அப்படித் தெளிவது தேச விசேஷத்திலே போனாலோ?’ என்னில்,
பாபத்தை பா என்று கடைக் குறைத்தலாய்-பாபம் நிறைந்திருக்கிற-பூயிஷ்டமான – தேசத்திலே’ என்றபடி.
அவ்வருகே ஒரு தேச விசேஷத்தே போனால் பெறக் கடவ தெளிவை அதற்கு எதிர்த் தட்டான இங்கே இருந்தே யுடையராவர்;
ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே
குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான ஸ்ரீ பரமாத்மாவையும் தன் வழி ஆக்க வல்ல
இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவராய் இருப்பர்-

—————————–

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பித்
ஸ்ரீ திருப் பல்லாண்டு பாடிச் சிறப்பிப்பர்கள்,’ என்கிறார்.

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டி சைத்துக் கவரி செய்வர் ஏழையரே–7-6-11-

கிண்ணகத்தில் இழிவாரைப்போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு,
பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து,
ஸ்ரீ சர்வேஸ்வரன் பக்கல் செய்யக் கூடிய அசாதாரண பரிசர்யைகளை கைங்கரியங்களை யடைய இப் பத்தை அப்யசித்தவர்கள்
பக்கலிலே செய்யா நிற்பார்கள் மதி முக மடந்தையர்.
நெடு நாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.
தொக்கு -திரண்டு /கவரி -சாமரம் /ஏழையர் -ஸ்ரீ பாகவத கிஞ்சித்கார சபலைகளான மதி முக மடந்தையர் –

————————-

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் பகவத் விஸ்லேஷத்தால் கிலேசப்படாதே
ஸ்ரீ நித்ய ஸூரிகளோடே கூடி நித்யானுபவம் பண்ணப் பெறுவார்கள்,’ என்கிறார்.

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே–7-7-11-

நித்யானுபவம் பண்ணா நின்றாலும் மேன்மேலென ஸ்ரீ பகவத் குணங்களைப் பூர்ணமாக அனுபவிக்கைக்குத் தகுதியான
யோக்கிதையை யுடைய ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாய்
உருவு வெளிப் பாட்டாலே நோவு படாமல் ஸ்ரீ அடியார்கள் குழாங்களை உடன் கூடி நித்யானுபவம் பண்ணப் பெறுவர்.
மாய்கையும் உருவு வெளிப்பாடும் பர்யாயம் என்று இருக்கிறார் காணும்.
அன்றிக்கே,
‘மாயார்’ என்பதற்கு, ‘பிரியார்’ என்னுதல்.
ஸ்ரீ பகவத் அபசாரம் ஸ்ரீ பாகவத அபசாரம் உண்டானால் வருமது போல அன்றே,
ஸ்ரீ பகவானுடைய அங்கீகாரம் உண்டாய் அது நிலை நில்லாமையால் படும் கிலேசம்?
பிரளயம் கோத்தால் போலே, கண்ணைக் கண் கோத்து அன்றோ கிடக்கிறது?

———————–

அங்குத்தைக்குத் தகுதியாக ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளிலும்
இத் திருவாய் மொழியை யதா சக்தி -தங்கள் தகுதிக்குத் தக்கவாறு சொல்ல வல்லார்
என்றைக்கும் கிருத்தியர்,’ என்கிறார்.

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே–7-8-11-

இதனைச் சொல்லுமவர்களுக்கும் மயர்வு அற மதி நலம் அருளப்பெற்று
அவனுக்குத் தகுதியான சொல்லாலே சொல்ல வேணுமோ?’ என்னில்,
அத் தேவை எல்லாம் ஸ்ரீ ஆழ்வார் தம்மோடே; இவர்களுக்குத் தாங்கள் வல்ல அளவும் சொல்ல அமையும்.
அவர்களுக்கு இவ் வாத்மா உள்ளதனையும், ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா;
ஸ்ரீ ஆழ்வார் பரிக்ரஹம் – அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும்.
என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.

————————–

நிகமத்தில் இத் திருவாய் மொழி, ஏதேனும் ஒரு படி சொல்லிலும் ஆனந்தத்தை உண்டாக்கும்,’ என்கிறார்.

இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே–7-9-11-

ஏதேனும் ஒரு படி சொல்லிலும் இன்பம் உண்டாம்.
இவர் தம்முடைய பாசுரத்தைக் கற்றவர்கள் என்றே அன்றோ ஸ்ரீ ஈஸ்வரன் இவர்களைக் கடாஷிப்பது?
இல்லையாகில், இவர் தம்மைப் போலே மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றினுடைய நியதி உண்டாய்
அனுபவிக்கப் பெறில் அழகிது; அது இல்லாத போதும் பலம் தவறாது என்கைக்காகச் சொல்லிற் றத்தனை
ஏஷஹ்யேவ ஆநந்தயாதி’ தைத். ஆன.-இந்த ஸ்ரீ இறைவனே ஆனந்தத்தைக் கொடுக்கிறான்’ என்கிறபடியே,
எப்பொழுதும் ஸ்ரீ பகவானுடைய அனுபவத்தால் பிறக்கும் ஆனந்தமானது உண்டாம்.

—————————-

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்கள் ஸ்ரீ அயர்வறும் அமரர்களுக்குச் ஸ்லாகிக்கத் தக்கவர்கள்,’ என்கிறார்.

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே–7-10-11-

இந்தப் பத்தைக் கற்க வல்லவர்களை–ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வான், ஸ்ரீ சேனை முதலியார் தொடக்கமானார், இவர்களை
நாள் தோறும் பவித்ர பூதர் -தூயர் ஆவார்’ என்று ஆதரித்துக் கொண்டு போந்து.
தங்கள் மஹிஷிகளை -மனைவி மார்களைச் ஸ்னேகித்துக் கொண்டாடும் தசையிலே சொல்லுவார்கள்.
மனைவிமார்களும் தாங்களுமாக ஸ்ரீ வைகுண்டநாதனுக்கு அடிமை செய்து,
மனைவிமார்கள் எடுத்துக் கை நீட்டின பிரீதியின் ப்ரகர்ஷத்தாலே -மிகுதியாலே ஓடம் ஏற்றிக்
கூலி கொள்ளுமளவானவாறே, அவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துக் கனக்கத் தங்கள்
பிரபாவத்தைச் சொல்லும்படியாகப் பெறுவர்.
ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் தசையாகிறது, ஸ்ரீ பகவத் விஷயத்தில் கைங்கரியம் செய்யும் போது
எடுத்துக் கை நீட்டுகை அன்றோ?’
ஸ்ரீ சரம ஸ்லோகம் ரஷித்துக்கொண்ட அளவு போலே இருக்கும் அளவுகளிலே,’ என்றபடி
அதாவது ஸ்ரீ உடையவர் ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பி தமக்கு அத்யந்த ரஹஸ்யமாக உபதேசித்த
ஸ்ரீ சரம ஸ்லோக அர்த்தத்தை ஸ்ரீ தெற்கு ஆழ்வார் திரு முன்பே எடுத்துக் கை நீட்டினவர்களுக்கு
அவர்கள் விஷயத்திலே உகப்பாலே அருளிச் செய்தார் இறே அத்தைச் சொல்கிறது
அபர்வணி ‘பருவம் அல்லாத மற்றைக் காலங்களில் கடல் தீண்டலாகாது,’ என்றால் போலே,
அதற்கு ஒரு நியதி இல்லை ஆதலின், ‘வைகலும் பூசித்து என்கிறார். வைகல் – காலம்.
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி’ –திருவாய். 3. 3 : 1.-என்று அவன் விஷயத்தில் இவர் பிரார்த்தித்ததை
இது கற்ற ஸ்ரீ அடியார் விஷயத்திலே நித்ய ஸூரிகள் அடிமை செய்வார்கள்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஆறாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

நிகமத்தில் -இத் திருவாய்மொழி வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகர் போக்யமாமா –
இனிய பொருளாயிருக்குமாறு – போலே, ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹா விஷயம் –
விரும்பத் தக்க பொருளாவர் என்கிறார்.

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே–6-1-11-

இதற்குப் பலம் சொல்ல வேண்டா காணும்;-இதனையே இனிதாகச் சொல்ல அமையும்.
மின்னிடை மடவார்க்கு மதனர் – காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு,
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர் இதனைக் கற்க-அதிகரிக்க – வல்லவர்கள்.
இங்ஙன் அன்றாகில்,
பல நீ காட்டிப் படுப்பாயோ”-திருவாய். 6. 9 : 9.-,
புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ” -திருவாய். 6. 9 : 8.-என்று சொல்லுகிற இவர்,-பெண்களுக்கு இனியராவர் என்கிறாரன்றே.
ஆதலால், காமினிகளுக்குக் காமுகரைப் போலே அபிமத விஷயத்திற்கு இனியராவர் என்கிறார்.
ஸ்ரீ திருவடியைச் சொல்லப்புக்குத் தாமரையைச் சொல்லா நின்ற தன்றோ. தாவி வையம்கொண்ட தடம் தாமரைகட்கே” (6. 9 : 9.)
ஸர்வதா சத்ருசம் -எல்லாவகையிலும் ஒத்திருப்பனவற்றிற்கு உபமானத்தையே சொல்லக்கடவது.
அதுபோல’ என்றும், ‘அதுதான்’ என்றும் சொல்லக் கடவதாயிருக்கும்.

————————

நிகமத்தில் இத் திருவாய் மொழியை ஆதரத்தோடு சொல்ல வல்லார்க்கு ஸ்ரீ பகவானுடைய
அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறார்.

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர் பத்து இசை யொடும்
நாத் தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே–6-2-11-

ஆதரத்தோடு சொல்லுவார்க்கு.வறுமை இல்லை; ஸ்ரீ பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை. என்றது,
தூது விட்டு, அவன் வரக் கொண்டு ‘புகுர ஓட்டோம்’ என்று பட்ட கிலேசம் பட வேண்டா என்றபடி.
சோறும் புடைவையும் கிடைக்கும் என்கிறது அன்று; ஸ்ரீ பகவானுடைய அநுபவத்தின் வறுமை -தாரித்ரயம் -இல்லை என்கிறது.
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்”-திருவாய்.6. 7 : 1.- என்று
இருக்கிற இவருடைய வறுமை அன்றோ.
ஆகையாலே, அதிகாரிகட்குத் தகுதியாக அன்றோ உண்ணும் உணவு முதலானவைகளும் இருப்பன.
உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்” –பெருமாள் திருமொழி, 3 : 4.-
என்கிறவர்கள் இவற்றைச் செல்வமாக -ஐஸ்வர்யமாக -நினையார்களே.
சென்று ஒன்றி நின்ற திரு” – நான்முகன் திருவந். 61.-என்கிறபடியே
அவன் தானே வந்து மேல் விழ நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்.
அழு கூத்த அப்பன்’ என்கிற இடத்தில்
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்”- பெருமாள் திருமொழி, 7 : 8.– என்கிற
பாசுரத்தை யோஜித்துக் கொள்வது.

———————-

நிகமத்தில் -இத் திருவாய் மொழி வல்லார் ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு நாள் தோறும்
கௌரவிக்கத் தக்கவராவர் என்கிறார்.

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே–6-3-11-

ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குக் காலம் என்னும் தத்வம் – ஒரு பொருள் உள்ள வரையிலும் கௌரவிக்கத் தக்கவராவர்.
இதில் கோணை இல்லை – ஒரு மிறுக்கு இல்லை. என்றது, என் சொல்லியவாறோ? எனின்,
அஸ்ப்ருஷ்ட தோஷ கந்தரான -சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு,
நித்ய சம்சாரியானவன் இதனைக் கற்ற அளவிலே கௌரவிக்கத் தக்கவராதல் எங்ஙனே? என்னில்,
அங்கே இருந்து வைத்தே ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியை நினைத்து உவகையராம் நிலை யுள்ளது
முக்தர்க்கு ஆகையாலே, இங்கே இருந்தே, அவர்கள் அநுசந்தானத்தைச் செய்கிற இவனை,
சம்சாரத்தே இருந்து வைத்தே நம் படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று
கொண்டாடி இருப்பார்கள் என்பதனைத் தெரிவித்தபடி.

ஸ்ரீ தரனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.- திருக்குறள்-

————————–

நிகமத்தில் -ஸ்ரீ கிருஷ்ணனுடைய சேஷ்டிதங்களை -செயல்களைப் பேசின இப் பத்தும் கற்றார்,
தம்மைப் போன்றே ஸ்ரீ கிருஷ்ண பக்தராவர் என்கிறார்.

நாயகன் முழு வேழுல குக்குமாய் முழு வேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே–6-4-11-

இப் பத்தினையும் அப்யசித்தவர்கள் -கற்றவர்கள் ஸ்ரீ ஆழ்வாரைப் போலே ஆவர்.
இப் பத்தினை யுடைத்தாகையாலே தூய்மையை யுடைத்தான ஆயிரம் என்னுதல்;
அன்றிக்கே, ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, ஸ்ரீ கிருஷ்ணனுடைய செயல்களைச் சொல்லுகையாலே
தூய்மையை யுடைத்தான இப்பத்து என்னுதல்.
துவள் – குற்றம். குற்றம் இல்லாமையாவது, அவதாராந்தரங்களில் -வேறு அவதாரங்களில் போகாமல்
ஸ்ரீ கிருஷ்ணனுடைய விருத்தாந்தத்திலே -செயல்களிலே -கால் தாழ்வர்.

————————-

நிகமத்தில் இத் திருவாய் மொழியின் கருத்தை வியக்தமாக்கா நின்று -விளக்கிக் கூறுவதாய்க் -கொண்டு,
இதனைக் கற்றவர்கள் இதற்குத் தகுதியான அனுரூபமான -கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர்கள் என்கிறார்.

சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே–6-5-11-

இதனைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ திருமகள் கேள்வனுக்கு அடிமை செய்யப் பெறுவர்.
ஸ்ரீ திருமாலுக்கு அடிமை செய்வார்-
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் சேர இருக்க ஸ்ரீ இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே,
விசிஷ்ட வேஷத்தில் சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் –

————————–

நிகமத்தில் இத் திருவாய் மொழியினை வல்லவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் அநுபவிக்கின்ற
இன்பத்தினை -போகத்தை புஜிக்க பெறுவர் -அநுபவிப்பார்கள் என்கிறார்.

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்துஇப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே–6-6-11-

நீர்மைக்கு எல்லையான ஸ்ரீ திருமலை ஆஸ்ரயணீய -பற்றுதற்குரிய ஸ்தலம்;
மேன்மைக்கு எல்லையான ஸ்ரீ பரம பதம் -அனுபவ அநுபவத்திற்குரிய ஸ்தானம் .
ஒன்றி ஆக்கை புகாமை உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் அன்றோ.-திருவாய். 9. 3 : 8.

—————–

நிகமத்தில் இப் பத்தும் கற்றார் இட்ட வழக்கு ஸ்ரீ திரு நாடு என்கிறார்.

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-

கடலில் அமுதம் போலே, ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப் பத்து.
அவன் பொருந்தி வாழ்கின்ற ஸ்ரீ திருக் கோளூர்க்கே நெஞ்சை வைத்து.சொல்லுவார்.
ஒருத்தி கூப்பிட, ஒருத்தி தனியே போகை அன்றிக்கே, நித்யாநுபவம் பண்ணலாம் ஸ்ரீ நிலத்திலே புகப் பெறுவர்.
தனி வழி போகாதே, ஸ்ரீ அர்ச்சிராதி கணம் சேவிக்க, விலக்ஷணமான ஸ்ரீ தேசத்தே போய்ப் புகப் பெறுவர்-

———————-

நிகமத்தில் இத் திருவாய்மொழியில் ஸ்ரீ ஆழ்வாருடைய ஆர்த்தியை -துன்பத்தை –
அனுசந்திப்பார் -நினைத்தவர்கள் தாமும் உருகுவர் என்கிறார்.

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே–6-8-11-

இப் பாசுரம் நித்ய மாகையாலே, கேட்டார் தரிக்க மாட்டார்;
உருகுகின்ற அந்தக் கரணராய்- மனத்தை யுடையராய் நீராய் உருகா நிற்பர்.
இதற்குப் பலமாகச் சொல்லப்பட்டது என்? என்னில்,
ஸ்ரீ பகவானுடைய குணங் களிலே ஈடுபட்டவர்கள்-குண வித்தகர் – பாசுரம் கேட்டு அழிகையும்
பேற்றிலே சேர்ந்த தாகையாலே இது தானே பலம் என்கிறது.

———————

நிகமத்தில் இப் பத்தும் கற்றவர்கள் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அந்தரங்கமான கிங்கரர் -தொண்டராவர் என்கிறார்.

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே–6-9-11-

சர்வ ரக்ஷகனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.
சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விட மாட்டாதவர் களாதலின் உரிய தொண்டர்’ என்கிறார்.
குண க்ருத தாஸ்யத்திலும் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே பிரதானம்” -ஸ்ரீ வசன பூஷணம்,

————————

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார், ஸ்ரீ பரம பதத்திலே சென்று தாஸ்யத்தில்
அபி ஷிக்தராய் -அடிமையிலே முடி சூடினவராய் அடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே–6-10-11-

மஹாகம்” என்றும், “பரமா காசம்” என்றும் சொல்லப் படுகிற ஸ்ரீ பரம பதத்திலே வாழப் பெறுவர்கள்.
இந்திரன் முதலானோர் வாழும் இவ் வருகில் வெளியில் அன்று, மேல் வரும் அநுபவம் ஒழியப் ப்ராப்திக்கு -பேற்றுக்கு-
பிரபத்தி – சரணம் புக வேண்டாத தேசத்திலே போய்ப் புகப் பெறுவர்.
இவர் செய்த ப்ரபத்தியே -சரணாகதியே நமக்கும் எல்லாம்; தனித்து வேண்டா;
இத் திருப் பாசுரத்தைச் சொல்லிப் பலத்திலே சேர்தல் அத்தனை.
நற் கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து இப் பத்துங் கற்றார்
பக்கலிலும் ஈஸ்வரன் பிரசந்நனாம்.
ஸ்ரீ விபிஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன் செய்த சரணாகதியே அமைந்ததே அன்றோ.
இவன் உடையவன்’ என்று எதிர்த் தலைக்குத் தோற்ற இருக்கு மத்தனையே வேண்டுவது.

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஐந்தாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள், நிரவதிக -தனக்குமேல் ஒன்று இல்லாததான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய் அவன் திருவடிக் கீழே புகப்பெறுவர் என்கிறார்.

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே–5-1-11-

பூர்ணமாக -நிறைவாக என்னுதல்./ஆர்தல்-பருகுதலாய், தொண்டர்க்கு அமுது உண்ண” என்கிறபடியே,
பருகுவாரைப் போலே என்னுதல். என்றது,அபி நிவிஷ்டராய் -மிக்க ஆசையோடு உரைத்தலைக் குறித்தபடி.
பொலிந்தே அடிக் கீழ்ப் புகுவார் –விஸ்ரம்ப- நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே,
ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து,
பின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப் பெறுவர்.

———————–

நிகமத்தில் இத்திருவாய்மொழி கற்றார்க்கு, தேவதாந்த்ரங்கள் -மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்வ சங்கையும்,
ஸ்ரீ எம்பெருமான் பக்கல் ப்ரயோஜனாந்தர பரதையுமான –வேறு பிரயோஜனங்களை விரும்புகின்ற தன்மையுமான
மனத்தின் தோஷங்கள் எல்லாம் போகும் என்கிறார்.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-

பிரசித்தமான புகழையுடைத்தான ஆயிரத்திலும், இந்தப் பத்தும்,
தேவதாந்த்ரங்கள் -வேறு தேவர்கள் பக்கல் பரத்வ சங்கை பண்ணுதல்,
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீய புத்தி பண்ணுதல்,
அபாகவத ஸஹவாசம் -பாகவதரல்லாதாருடைய சகவாசம் நன்று என்று இருத்தல்,
ப்ரயோஜனாந்தரங்களை அபேக்ஷித்தல் வேறு பிரயோஜனங்களை விரும்புதல்–ஆகிற மானச தோஷங்களைப் போக்கும்.

(இத் திருவாய்மொழியிலுள்ள “கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை”,
“தொழுது தொழுது நின்று ஆர்த்தும்”, “ஊழிபெயர்த்திடும் கொன்றே”,
“சிந்தையைச் செந்நிறுத்தியே” என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து-‘வேறு தேவர்கள் பக்கல்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.)

(கறுத்த மனம் வேண்டா” என்றதனால், ஸ்ரீ பிரணவத்தின் அர்த்தமான அநந்யார்ஹ சேஷத்வத்தையும்,
அவர்களை, “சென்று தொழுது உய்ம்மின்” என்றதனால், நமஸ் சப்தார்த்தமான ததீய சேஷத்வத்தையும்,
“சிந்தையைச் செந்நிறுத்தி” என்றதனால், ஸ்ரீ நாராயண பத சித்தமான ஐச்வர்ய கைவல்ய
வியாவிருத்தமான புருஷார்த்தத்தையும் சொல்லுகையாலே,
‘மாசு அறுக்கும்’ என்ற இடத்தில், மூன்று பதங்களின் பொருள்களும் சொல்லப் படுகின்றன)

————————

நிகமத்தில் இந்தத் திருவாய் மொழி அப்யஸிக்க -கற்க வல்லார்கள் இருந்த தேசத்தே
அவ் வெம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் –எப்பொழுதும் சேர்ந்திருப்பான் என்கிறார்.

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகும் தம் மூரெல்லாம்–5-3-11-

மடல் எடுக்க வேண்டா, இப்பாசுர மாத்திரத்தைச் சொல்ல அமையும்.அவர்களுக்கு உத்தேசிய பூமி ஸ்ரீ பரம பதமாம்.
அன்றிக்கே, நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல்,
இவர்கள் இருந்த இடம் தானே ஸ்ரீ பரம பதமாம் என்னுதல்.
அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ.
இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது;
இப் பாசுரங்களில் சொல்லுகிற ஸ்ரீ பகவானுடைய குணங்களைப் பார்த்தால்,
இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்;
இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்;
இங்ஙன் அன்றாகில், ஸ்ரீ புருஷோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே.

———————-

நிகமத்தில் இவர் பாசுரம் கேட்டார், இவர் தசையை அநுசந்தித்தார் பிழையார்கள் என்கிறார்.
முடிந்தார் புகலிடம் அதுவாகையாலே சொன்ன இத்தனை.

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

இப் பத்தையும் சொன்னவர்களுக்கு ஸ்ரீ பகவானைப் பிரிந்த விரகத்தாலே இவரைப் போன்று,
பேர் என்னை மாயாதால்” என்று முடிவு தேட்டமாய் நோவு படுமது வேண்டா;
இதனைச் சொன்னவர்கள் பிழையார்கள். இப் பாசுரங்களைக் கேட்டு பிழைக்க மாட்டாதவர்கள்
புகும் தேசம் ஸ்ரீ பரம பதம் ஆகையாலே ‘ஸ்ரீ வைகுந்தம் சேராவாறு எங்ஙனயோ’ என்று சொன்ன இத்தனை இவ்விடம்.
இத் திருப்பாசுரத்தால் ஒரு பலம் சொல்லிற்றாகவும் வேணுமே அன்றோ, இது என் சொல்லிற்று? என்னில்,
ஸ்ரீ பகவத் விஷயத்தில் அவகாஹித்தவர்களுடைய- மூழ்கினவர்களுடைய பாசுரம் கேட்டவர்களுக்கு,
பிரகிருதி விஸ்லேஷ அநந்தரம் -சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் ப்ராப்யமாக -பேறாக நினைத்திருக்கும்-
ஸ்ரீ தேச பிராப்தி – தேசத்தின் சம்பந்தம் தப்பாது என்கை.
ஸ்ரீ பகவானிடத்தில் ஈடுபாடுடையவர்களுடைய-பிரவணரானவருடைய – பாசுரம் கேட்டுப் பொறுக்க மாட்டாதே
ஈடுபட்டு பிரகிருதி விஸ்லேஷம் – இந்தச் சரீரம் நீங்கப் பெற்றவர்கள்,
அவர்களுக்கு உத்தேஸ்யமான தேசத்தைக் கிட்டாது ஒழிய விரகு உண்டோ என்பார் ‘எங்ஙனேயோ’ என்கிறார்.
நீள் இரவாய் நீண்டதால்”,
ஒண்சுடரோன் வாராது ஒளித்தான்” என்று
இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல் அஸ்தமியாத -மறைதலில்லாத சூரியனும்
அஸ்தமியாத மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப் பெறுவர் என்பார் ‘ஸ்ரீ வைகுந்தம் சேராவாறு’ என்கிறார்.

————————

நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்தே ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்கிறார்.

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத் துள்ளே–5-5-11-

இதனைக் கற்று அறிய வல்லவர். அறியக் கற்கையாவது, ‘ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ நித்ய ஸூரிகள் நடுவே இருக்கிற
இருப்பைக் காட்டிலும், ஸ்ரீ திருக் குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது என்னுமிடத்தை
அறிந்து கற்க வல்லவர்கள்.
வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உத்கர்ஷம் -உயர்வு; அந்தக் குணாதிக்யம் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம்.
மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள்
ஸ்ரீ உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.

———————–

நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
அடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே–5-6-11-

ஸ்ரீமத் புத்ரர்களை ஆராதிக்கப் பெறுவர்கள்.
ஸ்ரீ யபதி- திருமால் அடியாரை ஆராதிக்கையாவது,
இவர் அநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியகரர் -பிரியமுள்ளவராக ஆனால் போலே,
இது கற்றார்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக் கொடுக்கக் கூடிய வ்ருத்தி –
கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர் என்கை. என்றது,
இவர் அநுகரித்த இப் பாசுரங்களைச் சொல்லுகை.
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்”-திருவாய்மொழி, 9. 4 : 9. என்னக் கடவது இறே-

————————-

நிகமத்தில் -இத் திருவாய் மொழியைப் பொருள் அறிவோடு -சாபிப்ராயமாக –
கற்குமவர்கள் நித்ய ஸூரிகளுக்கு என்றும் போக்யர் -இனிய பொருளாவர் என்கிறார்.

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-

அபிப்பிராயத்தோடு பாட வல்லார். என்றது,இவருடைய உபாய சூந்யதையை அனுசந்தித்து -நினைத்துப் பாடவல்லார் என்றபடி.
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்ய ஸூரிகளுக்கு இனிய பொருளாகப் பெறுவர்.
தேவ ஜாதிகள் அமுதம் பெற்றுக் கிருதார்த்தராமாப் போலே,
ஸ்ரீ நித்ய ஸூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார்.
பிரபாகந்தர நிரபேஷமான -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் ஸ்ரீ பகவத் ருசியையுடைய அவர்கள்,
ப்ரபாகாந்தர -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் ஸ்ரீ பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,
ப்ரபாகாந்தர நிரபேஷராய் -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள்
ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு போக்யராவார் -அமுதாவர்.

—————————–

இப் பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப் போலே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யர் -இனியர் ஆவர் என்கிறார்.

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே–5-8-11-

‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றிக்கே,இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லார்
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் ஆற்றாமை.
மானை ஏய்ந்த நோக்கையுடைய பெண்களுக்குக் காமுகரைப் போலே ஆவர். ஆவது என்? என்னில்,
தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்” என்ற இவர் இது பலமாகச் சொல்லும் போது
மேற்கூறியதோடு முரண்பட்டதாம்; ஆனால், சொல்லிற்றாயிற்று என்? என்றால்,
மேல் கொடிதான நரகம்” என்னா நிற்கச் செய்தேயும், விஷயத்தில் ஈடுபாடுடையவர்கள் அது பாராதே மேல் விழுமாறு போலே,
இது கற்றாரை ஸ்ரீ எம்பெருமானும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள் என்றபடியாம்.
இங்ஙன் அன்றாகில் வஞ்சனை யுள்ளவர் வார்த்தையாமே அன்றோ.-இவர் பிராமாணிகர் அன்றிக்கே ஒழிவரே.
பிரகரணத்துக்குத் தகுதியாக அன்றோ தலைக் கட்டி இருப்பதும்.-
அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே! என்னில், முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி.
திருஷ்டாந்தம் –உவமை புக்க இடத்தே —தார்ஷாட்ந்திகம்-உபமேயமும் வரக்கடவது.-
தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னா நின்றதே அன்றோ.

—————————

நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்து வைத்தே
ஸ்ரீ பகவானுடைய குணாநுபவத்தாலே எல்லாரிலும் சிறந்தவர்கள் என்கிறார்.

நாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–5-9-11-

ஒருவனுக்குப் பிறக்கை போக்கித் தாழ்ச்சி இன்றிக்கே இருக்க, அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே,
இவர்களும் இங்கே ஸ்ரீ பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகையாலே சீரியர்கள்.
பிறந்தே சிறந்தார் என்று அந்வயம்
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்குப் பிறக்கப் பிறக்கக் குணங்கள் புகர் பெற்று வருமாறு போன்று,
இவர்களும் ஸ்ரீ பகவதநுபவம் பண்ணுகையாலே ஸ்லாக்கியராயிருப்பார்கள்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்”- திருவிருத்தம். 79.– என்னக் கடவதன்றோ.
இந்தப் பத்தினைக் கற்க வல்லவர்கள்; என்னைப் போலே அவன் இருந்த தேசத்திலே போகப் புக்கு,
பலக் குறைவின் காரணமாக நடு வழியிலே விழுந்து நோவு படாதே ஸ்ரீ உகந்தருளின தேசத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்கள்.
இவர்களுடைய ஜன்மங்கள் கர்மம் காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகையாலே
முக்தர்களுடைய சரீரத்தைக் காட்டிலும் ஸ்லாக்கியம்.
ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களின் பொருட்டு அவதரித்த ஸ்ரீ பகவானுடைய அவதாரம் போலே ஸ்லாக்கியம் என்கை –

———————-

நிகமத்தில் இப் பத்தும் கற்றார் ஸ்ரீ பரம பதத்திலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர் என்கிறார்.

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே–5-10-11-

ஆயிரத்திலும் இப் பத்தினைக் கற்க வல்லவர்கள்.மஹாகாசம் என்று பேரையுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே.
காலம் என்னும் தத்துவம் -ஒரு பொருள் உள்ளவரையிலும் நித்ய அநுபவம் பண்ணப் பெறுவர்.
அநுசந்தானத்துக்குத் விச்சேதம் -தடை வாராதபடி பண்ணியருள வேண்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும்படியான
சம்சாரத்தைவிட்டு, ஸ்ரீ பகவானுடைய அநுபவத்துக்கு விச்சேதம் -நழுவுதல் ஒரு நாளும் இல்லாத
ஸ்ரீ பரம பதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர் என்றபடி.
மா’ என்றது, மஹத் என்னும் தத்துவத்தினை.
கம்’ என்றது ஆகாசம்.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நாலாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

நிகமத்தில் இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள் ஐஸ்வரியம் கைவல்யம் எனப்படுகின்ற
ஷூத்ர – சிறிய புருஷார்த்தங்களைத் தவிர்ந்து, ஸ்ரீ பகவானுடைய கைங்கரியத்தையே -ஏக போக –
புருஷார்த்தமாகப் பெற்றவர் ஆவர்,’ என்கிறார்.

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே–4-1-11-

கவிக்குச் சொல்லுகிற அலங்காரத்தால் குறைவற்ற ஆயிரம். செய் – செய்த கவி என்னுதல்;
குற்றேவல் செய்’ என்று மேலே கூட்டி, ‘வாசிகமான அடிமை’ என்னுதல்.
அவன் குணங்களைத் தொடுத்துப் பாடின இவற்றில் ஒன்றும் குறையாமல் கற்றவர்கள் ஸ்ரீ பகவானுக்கு-
வ்யதிரிக்த – வேறுபட்ட பலன்களான ஐஸ்வர்ய கைவல்யங்களாகிற-அனர்த்தங்கள் – கேடுகள் நீங்கி
உய்யும் தன்மையர் ஆவர். அஃகல் – சுருங்கல்.
உஜ்ஜீவனமே – ‘உய்தலே தன்மையாக-ஸ்வபாவமாக – உடையர் ஆவர்,’ என்பார், ‘உய்யற்பாலர்’ என்கிறார்.
‘காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று தாம் சொன்னபடியே உடையவர் ஆவர் என்றபடி.

——————–

இத் திருவாய்மொழியைக் கற்க-அப்யசிக்க வல்லவர் ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு சத்ருசர் -ஒத்தவர் ஆவர்,’ என்கிறார்

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நற் கோவையே–4-2-11-

இப்படி இவரை விடாய்ப்பித்தவன் அவ் விடாய் போன இடம் தெரியாதபடி
நீக்க வல்லன் என்கிற கல்யாண குணங்களை-வியக்தமாக – விளக்கமாகச் சொல்லுகிற இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள்.
வானவரோடு நல்ல சேர்த்தி ஆவர்.
‘மலி புகழ் வானவர்’ என்றதனால், இவ்வாழ்வாரோடு ஒப்பர்கள் ஆயிற்று அவர்களும்.
ஸ்ரீ பகவானுடைய பிரிவால் விடாய்க்கைக்கு இடம் இல்லாத சம்சாரத்திலிருந்து இவர் விடாய்க்க வல்லவர் ஆனால் போலே ஆயிற்று,
ஸ்ரீ பகவானோடு நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தே விடாய்க்க வல்லராம்படியும்.

————————

நிகமத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய உபய விபூதியும் திருவாய்மொழியை அப்யசித்தவர்கள்
இட்ட வழக்கு,’ என்கிறார் .

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே–4-3-11-

பூமியிலே ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே பல காலம் இருந்து.
இங்கே இருக்கச் செய்தே ஸ்ரீ பரமபதம் தங்கள் சிறு முறிப்படி செல்லும்படி ஆள்வர்கள். என்றது,
அங்கே போனால் ‘ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர்’ என்கை அன்றிக்கே,
இங்கே இருக்கச் செய்தே தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்’ என்றபடி.
‘வையம் மன்னி வீற்றிருந்து’ என்கிற இடத்தில் ‘நம்மைப் போலே வாய் புகு சோறாகப் பறி கொடாதே,
பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே ‘நாட்டாரோடு இயல்வொழிந்து’ என்கிறபடியே,
தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று ஸ்ரீ சீயர் உருத்தோறும் அருளிச் செய்வர்.
பால்யத்திலே -இளமையிலே ஸ்ரீ பட்டரைப் பறி கொடுத்தவர் அன்றோ அவர்?
(இத்தால் ஸ்ரீ நஞ்சீயருடைய ஆசார்ய பிரதிபத்தி விளங்கும்.
தன்னா ரியனுக்குத் தானடிமை செய்வதுதான்
இந்நாடு தன்னில் இருக்கும்நாள் – அந்நேர்
அறிந்துமதில் ஆசையின்றி ஆசா ரியனைப்
பிரிந்திருப்பார் ஆர்மனமே! பேசு.’- ஸ்ரீ உபதேசரத்தினமாலை, 64. )

—————-

நிகமத்தில் -இத் திருவாய் மொழி கற்றார், சம்சார துரிதமும் போய்,
ஸ்ரீ பகவத் விஸ்லேஷம் கந்தம் இல்லாத திருநாட்டிலே எல்லாரும்-சிரஸா வஹிக்கும் –
தலைமேல் தாங்கும்படி மேன்மையோடே இருக்கப்பெறுவர்,’ என்கிறார்.

வல் வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சட கோபன்
சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல் வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே–4-4-11-

இப்படிப் பிச்சு ஏறின இது எல்லார்க்கும் கூடுவது ஒன்றா? அன்றே அன்றோ?
ஆன பின்னர், இது பாவனம் என்றாகிலும் கற்க வல்லவர்கள்.
அன்றிக்கே, ‘இது விலக்ஷண கிருத்யம் என்று கற்குமவர்கள்’ என்னுதல்.
விஸ்லேஷ கந்தமும் – பிரிவு என்பது சிறிதும் இல்லாத பரமபதத்தைக் கிட்டி.
அநாதியாய் வருகின்ற அவித்தியை முதலானவைகள் தீர்ந்து.
சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான ஸ்ரீ நித்ய ஸூரிகளும் தொழுது ஆதரிக்க. என்றது,
‘பணியா அமரருங்கூட, பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்’ என்கிறபடியே,
அவர்கள் வழிபாடு செய்து ஆதரிக்கும்படி ஆவர்கள்,’ என்றபடி.
‘தொழுது எழு என் மனனே’ என்று, அநாதிகாலம் அசன்நேவ ‘ஸ்ரீ பரம்பொருளைப் பற்றிய அறிவு இல்லாதவன்,
இல்லாதவன் போலே ஆகிறான்,’ என்னும்படி போந்தவர் அவனைத் தொழுது உஜ்ஜீவித்தால் – உய்வு பெற்றால் போலே காணும்,
இவர் பாடின ஸ்ரீ திருவாய் மொழியைக் கற்றவர்களைத் தொழுது ஸ்ரீ நித்ய ஸூரிகள் உய்வு பெறும்படி.
அவன் சேஷித்வத்துக்கு முடிசூடி இருக்குமா போலே இவர்களும் சேஷத்வ சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி இருக்கப் பெறுவர்கள்
ச ஸ்வராட் பவதி ‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது,
‘கர்மம் அற்றவன் ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு.

—————–

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை –
நிரந்தரமாக வர்ஷிக்கையாலே -எப்பொழுதும் மழை பெய்கையாலே -ஸ்ரமஹரமாய்– சிரமத்தைப் போக்கக் கூடியதாய்க்-
தர்ச நீயமான – காட்சிக்கு இனியதான திருமலையையுடைய சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று;
‘நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை’ என்கிறபடியே, நித்ய அநபாயினியான பெரிய பிராட்டியாருக்கு முன்பே
நித்ய சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கும் சீலமுடையவனது தன்மையைச் சொல்லிற்றாகையாலே,
சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையான் ஆயிற்றுக் கவி பாடிற்று.
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய், மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மாமலை’-திருவிருத்தம், 50-
ஆகையாலே, -அறற்றலையாய்-தர்ச நீயமாய் – காட்சிக்கு இனியதாய் இருத்தலின், ‘மாரி மாறாத தண் அம் மலை’ என்கிறது.
(‘அறற்றலை’ என்பது, சிலேடை : ‘தண்ணீரைத் தலையிலேயுடையது’ என்பதும், ‘தர்மத்தைத் தலையிலேயுடையது’ என்பதும் பொருள்.)

வாரி மாறாத பைம்பூம்பொழில் சூழ் குருகூர் நகர் –
அழகியதாய் தர்ச நீயமாய் காட்சிக்கு இனியதாய் இருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட திரு நகரி.
திருநகரிக்கு ஸஹ்யம் திருமலை யாகையாலே, திருமலை மாரி மாறாதாப் போலே
திருநகரியும் வாரி மாறாதே இருக்குமாதலின், ‘வாரி மாறாத நகர்’ என்கிறது.

காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால் ‑
சொன்ன அர்த்தத்தில் -பொருளில்- அதி சங்கை பண்ணாமைக்கு ஆப்தி அதிசயம் சொல்லுகிறது.

வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்கும் – ‘
இத் திருவாய்மொழி கற்றார்க்குப் பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டி,’ என்கிறது.
திருமலை மாரி மாறாதாகையாலே, திருநகரி வாரி மாறாது;
ஆறாக் கயமாகையாலே பிராட்டியுடைய -ஆசன பத்மம் -ஆசனமாகிய தாமரை வேரி மாறாது.
வேரி -பரிமளம் –
இது கற்றார்க்கு இவள் பலம் கொடுக்க வேண்டுவான் என்?’ என்னில்,
தனக்கு முன்பே தான் காட்டிக்கொடுத்த சம்சாரியை விரும்பும் சீல குணத்தை யாயிற்று இதில் சொல்லிற்று;
இந்தச் சீல குணம் ஒருவர்க்கும் நிலம் அன்று;
தான் அறிதல் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் அறிதல், செய்யும் இத்தனையாயிற்று;
‘இந்தப் பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார்,’ என்னும் பிரசாத அதிசயத்தாலே -கருணையின் மிகுதியாலே,
சர்வேஸ்வரன் பலம் கொடுக்கிற நிலையிலே அவனை விலக்கி,
‘நானே இதற்குப் பலம் கொடுக்கவேண்டும்,’ என்று தனக்கே -பரமாக -பொறுப்பாக ஏறிட்டுக் கொண்டு, பலம் கொடுக்கும்.
வினை தீர்க்கும்
இத்திருவாய்மொழி கற்றாருடைய, பகவானுடைய அனுபவத்திற்கு விரோதியான சகல பிரதிபந்தகங்களையும் –
எல்லாத் தடைகளையும் ஈண்டு ‘வினை’ என்கிறது.
தீர்க்கும் –
போக்குவாள். ‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்திலே படியும் நடையும்’ என்கை.

—————–

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாட வல்லார் துக்க சீலம் இலர்களே–4-6-11-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த –
இதற்கு, ‘மோஹித்தவள் அல்பம் ஆஸ்வசித்தவாறே சிறிது தெளிந்தவாறே,
மோர்க்குழம்பு குடித்தாள், தரித்தாள், கண்விழித்தாள், வார்த்தை சொன்னாள்,’ என்பார்களே அன்றோ?’
அது போன்று காணும்,’ என்று அம்மங்கி அம்மாள் பணிப்பர்.
பின்பு பிறந்த மிகுந்த மயக்கத்தாலே பிறந்த உணர்த்தியைக் குவாலாகச் சொல்லுகிறது.
மேல் ‘சீலம் இல்லாச் சிறியன்’ என்னும் திருவாய் மொழியாகையாலே, உணர்ந்து கூப்பிட வேண்டுமளவே பிறந்தது.
இந்தத் தோழி தானும் அறிந்திலள் காணும் பகவானுடையபெருமையை.
அவர்களை ‘ஏத்துங்கோள்’ என்றாளே அன்றோ? அது வேண்டாதே,
தான் ‘ஏத்துங்கோள்’ என்ற இதுதானே அமைந்தது இவள் உணருகைக்கு.
பகவானுடைய பெருமை-பிரபாவம் – புறம்புள்ளார்க்கு அறிய ஒண்ணாததைப் போன்று,
உட்புகுந்தாராய் அறிந்தாராய் உள்ளவர்கட்கும் ‘இவ்வளவு’ என்று அறிய ஒண்ணாததாய்க் காணும் இருப்பது.

வழுவாத தொல்புகழ் –
வழுவாத தொல் புகழாவது, -அஞ்ஞான திசையிலும் -மயங்கிக் கிடக்கிற நிலையிலும்
தேவதாந்த்ர ஸ்பர்சமும் வேறு தெய்வங்களின் சம்பந்தமும் -ததீய ஸ்பர்சமும் -அத்தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தமும் –
சத்தயா அவ்வப்பொருள்களின் தன்மையால் விநாசத்திற்கு ஹேதுவாய்,
அவ்வாறு மயங்கிக் கிடக்கிற நிலையிலும் பகவானுடைய திருப்பெயரும் அவன் அடியார்களுடைய சம்பந்தமும்
பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயிலே நிலைநின்ற புகழ்.
ஒருவன் வைஷ்ணவனாகையாவது, இது.
‘சர்வேஸ்வரன் ரக்ஷகன்’ என்று ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்டு விட்டு,
தேவதாந்த்ர ஸ்பர்சமும் -வேறு தெய்வங்களின் சம்பந்தமும்-அபாகவதர் ஸ்பர்சமும் – பாகவதர் அல்லாதார் சம்பந்தமும் உண்டாகுமேயானால்,
வைஷ்ணவன் ஆவதற்கு விரகு இல்லை கண்டீர்.
பூர்வார்த்தத்தை -முன் பகுதியை அநுசந்தித்தால் இத்தலையால் ஒரு துரும்பு நறுக்கவும்தகுதி இல்லாதபடியாய் இருக்கும்;
உத்தரார்த்தை -பின் பகுதியை நினைத்தால், இளைய பெருமாளைப் போலே கண்ணுறங்கவும் விரகு இல்லையாய் இருக்கும்;

கர்மம் கைங்கரியத்திலே புகும்’ என்பது, ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ ஸூக்தி.

கொடியாடு மணி மாட அயோத்தி மூதூர்
குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட
நெடியானே! அடியேன் நான் முயற்சி யின்றி
நின்னருளே பார்த்திருப்பன் நீசனேனே.’– திவ்விய கவி-

கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்?’-திருவிருத்தம், 97- என்றே அன்றோ இருப்பது?
சொரூபம் இது’ என்று அறிந்தால் சொரூபத்திற்குத் தகுதியான கைங்கரியமும்
அதற்கு விரோதியானவற்றைக் காற்கடைக்கொள்ளுமதுவும் இல்லையாகில்,ஞானம் பிறந்தது இல்லையாமித்தனையே அன்றோ?
இஃது இல்லையாகில், ஆழ்வார்கள் போன வழியிலே சேர்ந்திலனாமித்தனை.
திருவடிதன் நாமம், மறந்தும் புறந்தொழாமாந்தர்’-நான்முகன் திருவந். 68.- என்றும்,
திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’-நான்முகன் திருவந். 53.- என்றும்,
எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே’-பெரிய திருமொழி, 11. 6 : 7- என்றும்,
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்’-பெரிய திருமொழி, 7. 4 : 4.- என்றும் அன்றோ இவர்கள்படி?
அநாதி -பல காலங்களாக இவன் சூழ்த்துக்கொண்ட பாவங்கள் போகையும்,
நித்ய கைங்கரியம் பெறுகையுமாகிற இப்பேற்றுக்கு இவ்வளவாகிலும் செய்யாதிருக்க விரகு உண்டோ?

வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் –
இவ்வாத்மாவுக்கு ஞாதவ்யமான -அறிய வேண்டிய அர்த்தங்களில் ஒன்றும் தப்பாதபடி சொன்ன வெறி விஷயமான இப்பத்தும்.
வெறி விலக்கு’ என்று ஒரு துறை உண்டு; அதாவது,
விரஹ சுரத்தாலே நோவுபடுகிறவளுக்கும் ஆடு அறுப்பது, கள் உகுப்பது, பலியிடுவதாகப் பரிஹரிக்கப் புக,
தோழியானவள்,இது ஒரு விஷயத்தில் பாவபந்தம் அடியாக வந்த நோயாயிற்று; மற்று ஒன்றால் அன்று,’ என்று
அவர்கள் செய்கின்றவற்றை விலக்குவது.

தொழுது அடிப்பாட வல்லார் –
பெண் பிள்ளையினுடைய மோஹம் தீர்ந்தால் பந்துக்களுக்கு உள்ள பிரியம் ‘இது கற்றார்க்கும் உண்டு’
என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.

துக்க சீலம் இலர்களே –
மோஹித்தவிடத்து தேவதாந்த்ர ஸ்பர்சம் -வேறு தெய்வங்களினுடைய சம்பந்தம் உண்டாகையும்,
பாகவத ஸ்பர்சம் -சம்பந்தம் இன்றிக்கே ஒழிகையுமாயிற்றுத் துக்கமாவது.
அஃது இல்லாமையே ஸ்வபாவமாகவே தன்மையாக உடையர் ஆவர். சீலம் – ஸ்வபாவம் -தன்மை.

——————-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப் பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே–4-7-11-

தழுவி நின்ற காதல் தன்னால் –
நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான அதிமாத்ரமான -அளவு கடந்த காதலாலே.
தாமரைக்கண்ணன் தன்னை – இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –நேத்ரபூதரைச் சொல்லுகிறார்.

குழுவு மாடம் தென்குருகூர் –
ஆழ்வார்க்குத் துக்கம்-ஆர்த்தி – மிக மிகச் சர்வேஸ்வரன் வரவு தப்பாது’ என்று
திருநகரி குடி நெருங்கிக் குளிர்ந்து தேறினபடி.
இதனை சரவஞ்ச குசலம் க்ருஹே -ஸ்ரீராமா. யுத். 127 : 5. (ஸ்ரீ பரதாழ்வான் துன்பக்கடலின் மூழ்கினவனாயிருக்கிறபடியைக் கண்டு
பெருமாள் வரவை நிச்சயித்துத் தரித்தபடியாலேயன்றோ ‘எல்லாரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்று
பரத்வாஜ முனிவர் ஸ்ரீ ராமபிரானைப் பார்த்துக் கூறியருளினார்?’ என்றபடி.-)
வீட்டில் எல்லோரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்பது போலே

மாறன் –
சம்சாரத்தை மாற்றினவர்.

சடகோபன் –
பகவானிடத்தில் விருப்பமில்லாதவர்கட்குப் -விமுகருக்கு சத்ரு -பகைவர்.

சொல் வழு இலாத –
பகவானைப் பிரிந்த பிரிவாலே -விஸ்லேஷத்திலே -கூப்பிடுகிற இந் நன்மையில் ஒன்றும் தப்பாதபடி

சொன்ன. ஆயிரத்துள் இப்பத்தும்
ஸூ போதமுமாய் சர்வாதிகாரமுமாம் படி –

தழுவப்பாடி ஆட வல்லார் –
ஆழ்வாருடைய பாவ வ்ருத்தி -மனநலம் ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதே அன்றோ?
அதிலே சிறிது அணைய நின்றாகிலும் இதனைக் கற்க -அப்யஸிக்க வல்லவர்கள்-பாரவசயத்தாலே விக்ருதராய் ஆட வல்லவர்கள் –

வைகுந்தம் ஏறுவரே –
காண ஆசைப்பட்டுக் கூப்பிடுகிற சம்சாரத்தை -இவ் வுலகத்தைக் கழித்து,
எப்பொழுதும் அனுபவிக்கத் தக்க பரமபதத்திலே புகப்பெறுவர்.

குழுவு மாடம் –
நெருங்கின மாடம்.

தென்குருகூர் –
ஆதலால், ஆழகிய திருநகரி.

———————

உயிரினால் குறைஇல்லா உலகுஏழ்தன் உள்ஒடுக்கித்
தயிர்வெண்ணெய் உண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம்சேர் பிறப்புஅறுத்து வைகுந்தம் நண்ணுவரே–4-8-11-

உயிரினால் குறை இல்லா ஏழ் உலகு –
அஸங்யேரான ஆத்மாக்கள் -பூர்ணமாய் -நிறைந்துள்ள ஏழ் உலகங்களையும்.

தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை –
தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிறபோது,
செருப்பு வைத்துத் திருவடி தொழச் செல்லுவாரைப்போலே அந்ய பரதைக்கு- வேறு ஒன்றற்கு உடலாக ஒண்ணாது,’ என்று
எல்லா உலகங்களுக்கும் வேண்டுவன வற்றை -சம்விதானம் -யெல்லாம் தன் சங்கல்பத்தாலே -நினைவாலே செய்து,
பின்னை ஆயிற்று வெண்ணெய் அமுது செய்தது.
அன்றிக்கே, ‘கருவுற்ற மகளிர் வயிற்றிலுள்ள பிள்ளைக்குத் தகுதியாக போஜனாதிகள் -உணவு முதலானவைகளை
உட்கொள்ளுமாறு போன்று உள் விழுங்கின உலகங்கட்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்’ என்னுதல்.
அன்றிக்கே,-ஸர்வஸ்ய ஜகத பாலவ் வத்சா பாலவ் பபூவது – எல்லா உலகங்களையும் பாதுகாக்கின்றவர்களான
அந்தக் கிருஷ்ண பலராமர்கள் கன்றுகளைக் காப்பாற்றுகின்றவர்கள் ஆனார்கள்,’ என்கிறபடியே,
சர்வேஸ்வரனாயிருந்து வைத்து, அடியார்கள் ஸ்பர்சம் – சம்பந்தம் உள்ள பொருள்களால்
அல்லது சொல்லாதபடி இருக்குமவன்,’ என்னுதல்.

தடம் குருகூர்ச் சடகோபன் –
பிருந்தம் பிருந்தம் அயோத்யாயாம் –அயோத்தியா நகரத்தில் கூட்டம் கூட்டமாக’ என்கிறபடியே,
பெருமாளுடைய திருவபிஷேக மங்கள மகோத்சவத்தைக் காணவேண்டும்’ என்று நாடுகளடையத் திரண்டு கிடந்தால் போலே,
இவர் ஆத்மாவையும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் ‘வேண்டா’ என்று கழித்திருக்கிற இருப்பைக்
காண்கைக்காகத் திரண்ட ஸ்ரீ வைஷ்ணவ மக்களுக்கு அடைய இடம் போரும்படியான
பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.

செயிர் இல்சொல் இசை மாலை –
செயிர் – குற்றம். இல் – இல்லாமை: குற்றம் இன்றிக்கே இருக்கை. என்றது,
ஆத்மாத்மீயங்கள்- ‘ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் வேண்டா,’ என்ற
வார்த்தையில் புரையற்று -குற்றமின்றி இருக்கையைத் தெரிவித்தபடி.

வயிரம் சேர் பிறப்பு அறுத்து –
இவர் ‘வேண்டா’ என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பு ஏறிக் கிடக்கிற பிறவியினைக் கழித்து.

வைகுந்தம் நண்ணுவரே –
ஓர் உடம்பாய், ‘இதுதானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இவ்வுடம்பை விட்டு,
ச ஏகதா பவதி த்ரிதா பவதி -அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ என்கிறபடியே,
அவனுடைய சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும்
அஃது அடியான தன் சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும்-
அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி – பல சரீரங்களை மேற்கொண்டு அடிமை செய்யலாம்படியான தேசத்திலே
போய்ப் புகப்பெறுவர். என்றது, ‘பல படிகளாலும் அடிமை செய்யப்பெறுவர். என்றபடி.
(பல படிகளாலும்’ என்றது, சிலேடை : ‘பல சரீரங்களாலும், பல விதங்களாலும்’ )
அவன் விரும்பின படி இது என்று அறியாதே அன்றோ இவர்தாம் ‘வேண்டா’ என்கிறது-
(‘மங்கவொட்டு உன் மாமாயை’ என்ற திருப்பாசுரம் அநுசந்திக்கத் தகும்.
‘விரும்பினபடி’ சிலேடை : ‘விரும்பின விதம்’ என்பதும், ‘விரும்பின திருமேனி’ என்பதும்)

———————

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து
ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி.
திருவடியை –
சர்வ -எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.

நாரணனை –
இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய்-வத்சலனாய் – இருப்பவனை.

கேசவனை –
வத்சலனாய் -அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே,
இவர்களோடே -சஜாதீயனாய் -ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.

பரஞ்சுடரை –
இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்வத்தைச் சொன்னபடி.

திருவடி சேர்வது கருதி –
அவன் திருவடிகளைக் கிட்டினோமாக வேண்டும்’ என்னும் மநோ ரதத்தை எண்ணத்தை யுடையராய்;
துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று அடியே பிடித்து வருகின்ற எண்ணம் மநோ ரதம் இதுவே அன்றோ?

செழுங்குருகூர்ச் சடகோபன் –
திரு வயோத்தியையில் மண்பாடுதானே ஸ்ரீராமபத்தியைப் பிறப்பிக்குமாறு போலே,
அவ்வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ப்ராவண்யத்துக்கு – ஈடுபாட்டிற்குக் காரணம்.

திருவடிமேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமின் –
அவன் திருவடிகளிலே சொன்ன தமிழ் ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இந்தப் பத்தும் அவன் திருவடிகளிலே சென்று அடைவிக்கும்;
நீங்களும் அதற்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள்.
அவன் திருவடிகளிலே கிட்டக் கொள்ள, நீங்கள் உங்களுக்குமாய் இராமல்,
அடிசிற்பானை போலே அவன் திருவடிகளிலே நித்ய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்.
சாயுஜ்யம் பிரதிபன்னாயா -சமானமான பதவியை அடைந்தவர்களாய், விரோதி கழிந்தவர்களாய் எப்பொழுதும்
என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்கள்,’ என்றும், ‘
யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி – பகவான் எந்த எந்த வழியாலே செல்லுகிறானோ,
அந்த அந்த வழியிலே உயிரும் செல்கிறது,’ என்றும் சொல்கிறபடியே,
இப்படி அடிமை செய்வார்க்கு, இவர் விட்டவையும் விட்டுப் பற்றியதும் பற்ற வேண்டுமோ?’ என்னில்,
இவர் அருளிச்செய்த இத் திருவாய்மொழியைச் சொல்லவே-அனுசந்திக்கவே –
தன்னடையே சப்தாதிகளில் -ஐம்புல இன்பங்களில் விரக்தியையும் பிறப்பித்து
அவன் திருவடிகளில் சேர விடும் இத் திருவாய்மொழிதானே,’ என்க.

———————

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே–4-10-11-

ஆள் செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன் –
அடிமை செய்து சர்வேஸ்வரனைக் கிட்டினவர்.
முறையிலே சர்வேஸ்வரனைப் பற்றினவர் ஆயிற்று இவர். என்றது,
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் –வியக்கத்தக்க உடலின் சேர்க்கை ஈசுவரனுக்கு
அடிமை செய்யும்பொருட்டு’ என்கிறபடியே, அவன் கொடுத்த உபகரணங்களை -உறுப்புகளைக் கொண்டு-
அப்ராப்த – உலக விஷயங்களிலே போகாமல்,‘தந்த நீ கொண்டாக்கினையே’ என்கிறபடியே,
வகுத்த விஷயத்துக்கே சேஷமாக்கி -உரியதாக்கிக்கொண்டு கிட்டினமையைத் தெரிவித்தபடி.
ஆட்கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டு போலே காணும்,
தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது.
கையில் திருவாழி சேர்ந்தால் போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி.
கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.

ஆட்செய்கையாவது, அடிமை செய்கை. மனத்தால் செய்தல், வாக்கால் செய்தல், காயிக- சரீரத்தால் செய்தல் என
அவ்வடிமைதான் மூன்று வகைப்படும்.
இவற்றுள், மனத்தாலும் சரீரத்தாலும் செய்யும் அடிமைகட்கு இவர் ஆள் அல்லர். ‘என்?’ என்னில்,
பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் – நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல்வினை எம் பால் கடியும் நீதியாய்! நிற்சார்ந்து நின்று.’ பெரிய திருவந். 34’
என்கையாலே. இனி, ‘வாக்கால் செய்யும் அடிமை ஒன்றுமே யானால்.
(நெஞ்சு அழிந்தால் வாசிகமானதுதான் செய்யக்கூடுமோ?’ எனின், ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில்
சொல்லப்பட்ட காரணங்களையுடையவராகையாலே ‘மனம் முன்னே, வாக்குப் பின்னே’ என்னும் நியமம் இல்லை இவர்க்கு)
வாசிகமாகத் திருவாய்மொழி பாடி அடிமை செய்தார் என்கிறதோ?’ என்னில், அன்று;
அப்படியாமன்று இப்பாசுரம்; ‘முனியே நான்முகனே’ என்ற திருவாய்மொழியிலே ஆக வேண்டும்;
இல்லையாகில், சர்வ ஸங்க்ரஹமான -எல்லாவற்றிற்கும் சுருக்கமான முதல் திருவாய்மொழியிலே யாகிலும் ஆக வேண்டும்;
இல்லையாகில், இவர் வாசிகமாக அடிமை செய்த ‘புகழும் நல்லொருவன்’ என்ற திருவாய்மொழியிலே ஆகப்பெறில் சிறப்புடையதாம்.
ஆனால்,தேவதாந்த்ர பரத்வ நிரசன பூர்வகமாக –மற்றைத் தேவர்கள் பரம்பொருள் அல்லர் என்று
மறுத்து அறுதியிட்டுப் பேசுதல் மூலமாகச் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், முதல் திருவாய்மொழியிலேயாக அமையும்.
ஆனால், பரத்வ நிர்ணயத்திலே பரோபதேசமும் ஆகையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியிலே யாதல்,
அணைவதரவணை’ என்ற திருவாய்மொழியிலே யாதல் அமையும்.
ஆனால், அர்ச்சாவதாரத்திலே பரத்துவம் அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘செய்ய தாமரைக் கண்ணன்’ என்ற திருவாய்மொழியிலே யாதல் அமையும்.
ஆனால், பரோபதேசம் பண்ணுகையாலே சொல்லிற்று ஆனாலோ?’ என்னில், அதுவும் ஒண்ணாது. ‘என்னை?’ எனின்,
வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் பலவிடங்களிலும் பரோபதேசம் செய்தார்;
அவற்றிலும் ஆகப் பெற்றதில்லை.

ஆனால், யாது ஆவது!’ என்னில், இந்த ‘ஒன்றும் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே,
திருக் குருகூரதனுள் பரன் திறமன்றிப் பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே,’ என்று,
பொலிந்து நின்ற பிரானே எல்லாப் பொருள்கட்கும் அறப் பெரியவன் என்று இவர் அருளிச் செய்யக் கேட்டு,
கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’ என்ன, கண்டு, உலகம் எல்லாம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனார்கள்.
இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணும்படி அன்றோ அவர்கள் தாம் திருந்தினபடி?
பொலிக பொலிக’ என்று இதற்கென்ன ஒரு திருவாய்மொழி நேருகிறாரே அன்றோ?
சர்வேஸ்வரன் திரு அவதரித்துத் திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சம்சாரத்திலே இவர் திருத்தத் திருந்தினபடி.
இனி, இவர்க்குத் தத்வ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலத்
தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே’ ஆம்படி திருத்துகையாலே,
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்’ என்கிறார்.

வண் குருகூர் நகரான் –
இந்த நன்மைக்குக் காரணம் அவ்வூரில் பிறப்பு ஆயிற்று.

நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் –
நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் -இம் மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து,
சாத்தின மாலையும் வாடி இருந்தது முன்பு;
இப்போது, பகவானுடைய பரத்வத்தை உபபாதித்து -விரித்து அருளிச் செய்து,
இனி இவர்களுக்கு ஒரு குறை இல்லை,’ என்று தேறின பின்பு,
இட்ட மாலையும் செவ்வி பெற்றதாயிற்று; ஆதலின், ‘நாள் கமழ் மகிழ் மாலை’ என்கிறது.
(திரு குருகூர் பாசுரம் மட்டும் தான் மகிழ் மாலை–மொய்ம் மகிழான்
வகுளாபரணன் இவரே சொல்லி அருளி- தம்முடைய பெருமை அருளி / கலியன் -சீர்காழி)

மாறன் சடகோபன் –
பகவானை அடைவதற்குத் தடையாக -பகவத் பிராப்தி பிரதிபந்தகமான -உள்ளனவற்றிற்கு எல்லாம் யமன் ஆனவர்.

வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் –
தம்முடைய அபிநிவேச அதிசயத்தாலே -ஆசையின் மிகுதியாலே அருளிச்செய்த பாடல் ஆயிரத்திலும்
இப் பத்தையும் வல்லார்.
சிலர் தாந்தராய் -ஐம்பொறிகளையும் அடக்கினவர்களாய் வந்து நின்று கேட்கச் சொல்லுகிறார் அல்லர்;
தம்முடைய வேட்கையால் சொல்லுகிறாராதலின், ‘வேட்கையால் சொன்ன’ என்கிறார்.

மீட்சி இன்றி வைகுந்த மாநகர் வல்லார் கையது –
இரண்டும் இவர்கள் கையது.
மீண்டு வருதல் இல்லாத பரமபதமானது இவர்கள் கையது.
இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம்.
இப்பொருளில் ‘மற்றது’ என்பது அவ்யயமாய் -இடைச்சொல்.
அன்றிக்கே, ‘மற்றது’ என்பதனை வைகுந்த மா நகருக்கு அடைமொழியாக்கி, ‘
மற்றையதான – அதாவது, சம்சாரத்துக்கு -இவ்வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான
வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம்.
அன்றிக்கே, ‘பகவானுடைய பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்;
அதற்குமேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு ஏகாந்த தேசமான பரமபதமும்
இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி மூன்றாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழி தானே இது கற்றாரை உஜ்ஜீவிப்பித்து
பின்னர் -சாம்சாரிகமான -சகல துரிதத்தையும் போக்கும்,’ என்கிறார்-

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக் கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே–3-1-11–

அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்தும், ஒலியையுடைத்தான முந்நீரையுடைய பூமியிலே-
அசன்நேவ -‘பரம்பொருள் இலன் என்று அறிவானாகில் அவனும் இல்லாதவனாகிறான்,’ என்கிறபடியே,
அசத் கல்பரானவர்களை,சந்தமேநம் ததோ விது ‘ஸ்ரீ பரம்பொருள் உளன் என்று அறிவானாகில்
அவனும் உள்ளவனாகிறான்,’ என்கிறபடியே,-உஜ்ஜீவிப்பித்து விரோதிகளையும் போக்கும். என்றது,
அராஜகமான தேசத்திலே ராஜ புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே ,
ஸ்ரீ அழகர் திருவடிகளிலே செய்யும் கைங்கர்யத்தில் அந்வயிப்பித்துப் பின்பு
தத் விரோதியான சமுசார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் என்கிறார்,’

———————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யசித்தாருக்கு சரீர சம்பந்தம் அறுத்துக் கொடுக்கும் என்கிறார்
தம்முடைய வருத்தமெல்லாம் போம்படி அவன் வந்து முகங்காட்ட,
‘நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்றார் இவர்;
அவன் முகத்தைப் பார்த்தவாறே அவன் உயிர் நீடுபெற்றதாயிருந்தது.

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே–3-2-11-

இப்பத்தும் செய்வது என்?’ என்னில்–ராஜபுத்ரனையும் -அரசகுமாரனையும் வேடுவனையும் ஒருங்கு பிணைத்தாற்போன்று,
நித்யமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய்-ஸ்ரீ ஈஸ்வரனுக்கு சேஷமாய் -அடிமையாயிருக்கிற ஆத்மாவையும்,-
பரிணாமி த்ரவ்யமான அசித்தையும் -வளர்தல் குறைதல் முதலிய மாறுபாடுகளையுடைய சரீரத்தையும்
தன்னிலே-பந்தித்துக் – கட்டுவித்துக் கிடக்கிற அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.
இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறது அன்று;
‘இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை’ என்றபோதே ஸ்ரீ ஈஸ்வரன் இவர்க்கு இது போவதாக நினைப்பிட்டான்.
‘ஆயின், ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை யறுக்கலறா’ என்கிறது என்னை?’ எனின்,
பாதிதாநுவ்ருத்தியாலே அருளிச் செய்கிறார்.
ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒரு பலன் வேண்டுமே?
இவரோடு சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.

———————

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் அப்யஸிக்க வல்லவர்கள்,
ஸ்ரீ ஆழ்வார் பிரார்த்தித்த படியே ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட
அடிமைகளும் செய்யப்பெறுவர்,’ என்கிறார்.

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே–3-3-11-

ஒப்பில்லாத இப்பத்தையும் அப்யஸிக்க வல்லவர்கள்.
இப்பத்துக்கு ஒப்பு இல்லாமையாவது, ஆத்மாவினுடைய ஸ்வரூபத்திற்கு அனுரூபமான கைங்கரியத்தை
மனோ ரதித்த பத்து ஆகையாலே வந்த ஒப்பு இல்லாமை.
‘ஸ்ரீ இளையபெருமாள் ஒருவரே! அவர் பெற்ற பேறு என்?’ என்று இங்ஙனே படைவீடாகக் கொண்டாடியது போன்று,
எல்லாரும் புகழும்படியாக
அன்றிக்கே –
கைங்கரியத்தை மநோ ரதித்து விடுகை அன்றி இவருடைய மநோ ரதமே மநோ ரதமாக
கைங்கரியமாகிற சம்பத்தைப் பிராபித்து அனுபவிக்கப் பெறுவர்கள்.
இனி, ‘வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர்,’ என்று கொண்டு கூட்டி,
கொடியராயிருக்கும் பிரபுக்களை, அவர்கள் செய்யுங் கொடுமையும் நெஞ்சிலே கிடக்கவும், பிழைக்க வேண்டி ஏத்துவார்களே அன்றோ?
அங்ஙனன்றி, இவனை ஏத்தப் பெற்றோமே! இற்றை விடிவும் ஒரு விடிவே!’ என்று
பிரீதியோடே ஏத்தும்படியாக வாழ்வர் என்னுதல்.
‘விசேஞ்ஞர்கள் ஏத்துதலே யன்றி, அவர்களில் சிலர் நெஞ்சிலே த்வேஷமும் கிடக்க ஏத்துதலேயன்றி,
இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.

‘திரு வரை சுற்றிய சீரை ஆடையன்
பொருவருந் துயரினன் தொடர்ந்து போகின்றான்
இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை
ஒருவனோ! இவர்க்கு இவ்வூர் உறவென்றார் சிலர்.
‘என்பத்தைத் கேட்ட மைந்தன் இராமனுக் கிளையா ரென்று
முன்பொத்த தோற்றத் தேமில் யானென்றும் முடிவிலாத
துன்பத்துக் கேது வானேன்; அவனது துடைக்க நின்றான்;
அன்பத்துக் கெல்லை உண்டே? அழகி தென்னடிமை’ என்றான்.’- என்ற ஸ்ரீ கம்ப ராமாயணச் செய்யுள்கள்

———————

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்கள் நித்ய கைங்கரியத்தைப் பெற்று,
ஸ்ரீ அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’ என்கிறார்.

கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே–3-4-11-

புஷ்பம் -மலர்கள் பரிமளத்தோடே -மணத்தோடே மலருமாறு போன்று இசையோடு கூடின ஆயிரத்திலும்
வைத்துக்கொண்டு இப்பத்தையும்-அப்யஸிக்க – கற்க வல்லவர்கள்.
விச்சேத சங்கை -பிரிவின் ஐயம் ஒருநாளும் இல்லாத மோக்ஷ இன்பத்தையடைந்து.ஸ்ரீ அமரராலே மொய்த்து விரும்பப்படுவர்.
‘லீலா விபூதியை-ததீயத்வ ஆகாரத்தாலே – அநுசந்திப்பார் ஸ்ரீ நித்ய ஸூரிகளாகையாலே,
தாங்கள் அனுபவிக்கக்கூடிய அநுபவத்தை, ‘இவ்வுலகத்தே இருந்து வைத்தும் இப்படி இருப்பதொரு ஞான விசேஷம்
பிறந்து அநுசந்திப்பதே!’என்று ஸ்ரீ ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேம அதிசயத்தாலே,
அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, ஸ்ரீ சர்வேஸ்வரனை விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பார்கள்
ஸ்ரீ நித்தியசூரிகள் ஆதலின்,‘அமரர் மொய்த்து விரும்புவர்,’ என்கிறார்.

—————–

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி கற்றார், ஸ்ரீ பகவத் குண அநுசந்தானம் பண்ணினால்,-
அவிக்ருதராய் – விகாரம் இல்லாதவராய் -இருக்கைக்கு அடியான மஹாபாவத்தை
இது தானே-நிஸ் சேஷமாக அடியோடு போக்கும்,’ என்கிறார்.

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே–3-5-11-

ஸ்ரீ ஆழ்வார் அருளிச்செய்த ஒப்பற்ற ஆயிரத்திலும் இப்பத்து.
தண்-குளிர்த்தி / நேர்ந்த -சொன்ன என்றபடி /
ஸ்ரீ பகவானுடைய குண அநுசந்தானத்தாலே விக்ருதராய்க் கொண்டு -உரையும் செயலும் வேறுபட்டவராய்க் கொண்டு
சொன்ன ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்து என்பார், ‘வாய்ந்த சடகோபன் நேர்ந்த இப்பத்து’ என்கிறார்.
ஸ்ரீ பகவானுடைய குணங்களைக் கேட்டால் விக்ருதாராகாமல் -வேறுபடாதே திண்ணியராய்
இருக்கைக்கு அடியான மஹாபாவங்களைச் சாம்பல் ஆக்கும்.

——————-

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் அப்யஸிக்கவே பகவத் ப்ரேமம் உண்டாம்
இத்தை அப்யசியுங்கோள் -என்கிறார்

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள் செய்யும் வானவர் ஈசனைப்
பண் கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக் கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே–3-6-11-

எல்லாம் கிடைக்கிலும் கிடையாதது ஒன்று, மக்கட்கு ஸ்ரீ பகவானிடத்தில் பத்தி;
இத் திருவாய் மொழியைக் கற்க அதுவும் கிடைக்கும் ஸ்ரீ பத்தராகக் கூடும் பயிலுமின்
ஸ்ரீ பரத்வ ஞானத்துக்கு அடியான -ஸூஹ்ருதம் -புண்ணியமாதல்,சாஸ்திர ஞானமாதல்,
ஸ்ரீ சதாச்சார்ய -நற்குருவின் உபதேசமாதல், ஸ்ரீ பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் -ஸ்ரீ பகவத் கடாக்ஷம் –
இவையனைத்தும் இல்லாதார்க்கும் ஸ்ரீ அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே ஸ்ரீ பகவானிடத்தில் பத்தி
உண்டாகக் கூடும் என்கிறார்.
அவாப்த ஸமஸ்த காமனான ஒரு பொருளிலும் விருப்பம் இல்லாதவனான ஸ்ரீ சர்வேஸ்வரன்-ஆஸ்ரித வாத்சல்யத்தாலே
அடியார்களிடத்து வைத்த வாத்சல்யத்தாலே இவன் உகந்தது ஒன்றைத் திருமேனியாக விரும்பி,
‘இவன் உண்பித்ததை உண்டு, அகங்கள்தோறும் புக்கு விடமாட்டாமல் இருந்தால்,
‘இவன் நம்மை விடமாட்டாதே இருந்த பின்பு நாமும் இவனிடத்தில் அன்பு வைத்தல் ஆகாதோ?’
என்னக் கூடும் அன்றோ?’ என்றபடி.
‘‘பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன,
அவ்விடத்தைத் தோண்டுவார்களே -கல்லுவர்களே அன்றோ?
அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள்-அப்யசிப்பார்கள் – என்று அருளிச் செய்கிறார்.

——————–

நிகமத்தில் ‘பாகவதசேஷத்வ ப்ரதிபாதகமான இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள்,
இப் புருஷார்த்தத்துக்கு விரோதியான சம்சாரத்தைக் கடப்பர்கள்,’ என்கிறார்.

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே–3-7-11-

நெஞ்சிலே படும்படி கற்க ஆற்றல் உள்ளவர்களாகில்.
இனி, ‘இதில் ஒரு பாட்டும் விழ விடாதே கற்கில்’ என்னுதல்.
ததீய சேஷத்வ -அடியார்கட்கு அடிமையாம் தன்மைக்கு விரோதியான பிறவியிலே சேர்தல்-ஜென்ம அந்வயம் – அறும்.

———————-

நிகமத்தில் இத்திருவாய் மொழியில் -சப்த மாத்ரத்தாலே இதில் பிரார்த்தித்த படியே
அனுபவிக்கலான -பரமபதத்தைச் செல்லப் பெறுவர் என்கிறார் –
( சொன்னாலே -–ஒவ் ஒரு இந்த்ரியமும் -மற்ற வியாபாரம் பெற அங்கே தானே நடக்கும் –)

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை
நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-

பிரதிபாத்யத்தை விளாக்குலை கொண்ட -என்னுதல்
ப்ரதிபாதந சாமர்த்யத்தை உடைய என்னுதல் -அத்விதீயமான இப்பத்து
இன்னார் இனையார் இல்லாத ஸ்ரீ பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் இல்லாத வைலக்ஷண்யத்தை யுடைய
ஸ்ரீ பரமபதத்தை பிராபிக்கப் பெறுவார்
ச ஏகதா பவதி -என்றபடியே -அநேக சரீரங் களைப் பரிக்ரஹித்து
அவ்வோ சரீரங்களிலும் கரணங்களும் ஒவ் ஒரு இந்த்ரியமும் மற்றவற்றை எல்லாம் விரும்பி அனுபவித்து
பூர்ண அனுபவம் பண்ணலாம் படி தேசத்திலே பெறப் பெறுவர் – என்றபடி –

—————–

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழியின் இயல் மாத்திரத்தை அப்யசித்தார்களுக்கு
பிறரைக் கவி பாட யோக்கியமான ஜென்மம் இல்லை,’ என்கிறார்.

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-

யதோ வாசோ நிவர்த்தந்தே -அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன,’ என்னும்படியான
ஸ்ரீ பரம்பொருளை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதற்குப் போரும்படியான ஆயிரம்.
ஆயிரத்திலும் இப்பத்து, தகுதியான பெரும் புகழையுடைத்து. என்றது,
‘இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்குச் அநனுரூபமாக -சேராத வகையிலே பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்றும்,
ஸ்வரூபத்திற்குத் தகுதியாக -ப்ராப்தமான -அனுரூபமாக -அடையத்தக்க ஸ்ரீ பரம் பொருளைக் கவி பாட வம்மின்’ என்றும்
சொன்ன பத்து ஆகையாலே, சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் தகும்படி இருக்குமாயிற்று.
ஸ்ரீ நித்ய ஸூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே?
பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?
பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.

————————

நிகமத்தில் இத்திருவாய்மொழியை அப்யசித்தாரை சர்வ லோக பிரசித்தமாம்படி
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யில் -செல்வத்திலே நடத்தி,மேலே ஸ்ரீ பரமபதத்திலே சென்றால்
தன் ஐஸ்வர்யம் -செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–

முத்துகளை முகம் அறிந்து கோத்துச் சேர்வை பார்க்குமாறு போன்று, ‘இவையும் ஒரு பத்து’ என்கிறார்.
சொல்ல வல்லார்க்கு -பயிற்ற என்பதை -பயில என்று கொண்டு -அப்யஸிக்க கற்க வல்லவர்கட்கு.
‘பயிற்ற’ என்னும் பிறவினை, ஈண்டுத் தன்வினையின் கண் வந்தது. ‘அவன் தரும்’ என்று அந்வயம்
நாடு –த்ரவ்ய -பொருளின் விசேஷத்தை அறியாத சாதாரண மக்கள். -அவிசேஷஞ்ஞர்
நகரம் –த்ரவ்ய பொருளின் விசேஷம் அறிந்திருக்கும் பெரியோர்கள். -விசேஷஞ்ஞர்
நன்கு உடன் காண –நன்மையோடே காண. ‘இவனும் ஒருவனே!’ என்று கொண்டாட என்றபடி.
நலன் இடை ஊர்தி பண்ணி –நன்மைக்கு நடுவே நடக்கும்படி செய்து. நன்மையாவது, ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ.
வீடும் பெறுத்தி –ஸ்ரீ பரம புருஷார்த்த மோக்ஷத்தையும் கொடுத்து.
தன்னதான த்ரிவித -மூன்று விதமான-ஆத்மவர்க்கத்துக்கும் – உயிர்களின் கூட்டத்துக்கும் இவன்தான்-
அத்விதீய – ஒப்பு அற்ற தலைவன்-நாயகன் – ஆம்படி பண்ணிக் கொடுக்கும்.
ஆயின், ஸ்ரீ சர்வேஸ்வரனைப் போன்றவனோ இவனும்?’ எனின்,
அவன் தன்னதான ஐஸ்வர்யத்தை இவன் ‘என்னது?’ என்னும்படி செய்யும். என்றது,
இவனுக்கு ஐஸ்வர்யம் கொடாநிற்கச் செய்தே, இது தனக்குப் புறம்பாம்படி இருக்கை அன்றித்
தன் ஐஸ்வர்யத்திலே அந்தர்பூதமாம் -அடங்கியதாகும் -படி பண்ணிக் கொடுக்கும் –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-