Archive for the ‘Acharyarkall’ Category

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி -ஸ்ரீ திரு குருகைப்பிரான் பிள்ளான் வைபவங்கள் –

September 26, 2022

ஸ்ரீ பெரியதிருமலை நம்பி ஸ்ரீ திருவேங்கடமுடையானின் இன்னருளால் திருமலையில் திருவவதரித்தார். ஆளவந்தாரின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவருக்கு ஸ்ரீசைல பூர்ணர் என்ற திருநாமமும் உண்டு.
இவர் எம்பெருமான் மீது வைத்திருக்கும் பற்றைப் பார்த்து திருவேங்கடமுடையானே இவரை “பிதாமஹர்” என்று மிகவும் கௌரவித்தார்.
திருநக்ஷத்திரம் : வைகாசி, ஸ்வாதி

“தாதா” என்ற பதம்
திருமலை திருவேங்கடமுடையான் தனது பரம பக்த ஸ்ரேஷ்டரான ஸ்ரீ பெரிய திருமலை நம்பியைப் பார்த்து ஒரு ஸமயம்,
“தாதா” என்று கூப்பிட்டதிலிருந்து ஏற்பட்ட அருள் வாக்கு.
இந்த தாதாசாரியர் எனப்படும் ஆசார்ய புருஷ வம்சம் ஸ்ரீ சுமார் 1000 வருஷ காலமாக ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந் தத்தை பரப்புவதற்கும் பாதுகாப்பதற்கும்
அளவிலா பங்கு கொண்டது.

ஆளவந்தார் தன்னுடைய சிஷ்யர்களுள் 5 பிரதானமான சிஷ்யர்களை அழைத்து, எம்பெருமானாருக்கு சம்பிரதாயதில் உள்ள சகல அர்த விசேஷங்களையும் கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார்.
அந்த 5 பேரில், பெரியதிருமலை நம்பியை ஸ்ரீராமயணத்தை கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார்.
இதுவே நமது சம்பிரதாயத்தில் பிரபலமாக சரணாகதி சாஸ்திரம் என்று அழைக்கப்படும்.
திருமலைநம்பி ராமானுஜருடைய தாய்மாமன். மேலும் இவரே ராமானுஜர் அவதரித்த போது “இளையாழ்வார்” என்ற திருநாமத்தை அவருக்கு சூட்டினார். திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களில் இவரே முதன்மையானவராக பாராட்டப்பட்டார்.
இவர் திருவேங்கடமுடையானுக்கு நித்ய கைங்கர்யபரராக இருந்தார்.
தினமும் திருவேங்கடமுடையானுக்காக இவர் ஆகாச கங்கையிலிருந்து (திருமலையில் உள்ள நீர் ஆதாரம்) தீர்த்தம் கொண்டு வருவார்.
கோவிந்தப் பெருமாளை (எம்பார்) நமது சம்பிரதாயத்திற்கு (ஏனெனில் அவர் வரணாசி யாத்திரைக்கு சென்ற போது உள்ளங்கை கொணர்ந்த நாயனாராக மாறி,
காலஹஸ்தியில் தேவதாந்தரத்திற்குத் தொண்டு செய்து கொண்டிருந்தார்) கொண்டு வரவேண்டும் என்று எம்பெருமானார் ஆசைப்பட்டார்.
கோவிந்தப் பெருமாளைத் திருத்திப் பணிகொள்ள வேண்டும் என்று ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம் எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியிடம் கேட்டுக் கொண்டார்.
உடனே பெரிய திருமலை நம்பி தனது சிஷ்யர்கள் மற்றும் அந்த ஸ்ரீவைஷ்ணவரை (இவர் பின்னர் திருவரங்கத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை எம்பெருமானாரிடம் விவரிக்கிறார்)
அழைத்துக் கொண்டு கோவிந்தப் பெருமாளை பார்க்க காலஹஸ்திக்குச் சென்றார்.
கோவிந்தப் பெருமாள் வழக்கமாக நடந்து செல்லும் பாதையில் உள்ள ஒரு மரத்தினுடைய நிழலில் நம்பியும் அவருடைய சிஷ்யர்களும் உட்காந்திருந்தார்கள்.
கோவிந்தப் பெருமாள் சிவபக்தர் போல் ஆடைகள் அணிந்து கொண்டு, உடம்பில் திர்யக் புண்ரம் (சாம்பல்) மற்றும் ருத்ராக்ஷ மாலையை அணிந்து கொண்டு அந்த வழியாக வந்தார்.
நம்பி எம்பெருமானுடைய பெருமைகளைப் பாடிக்கொண்டிந்தார், அதை கோவிந்தப் பெருமாள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தார்.
சில நாட்கள் கழித்து, அதே நேரத்தில் அதே இடத்தில் நம்பி ஆளவந்தாருடைய ஸ்தோத்ர ரத்னத்தில் உள்ள 11வது ச்லோகத்தை
(இந்த ச்லோகமே ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தையும், இதர தேவதைகள் எம்பெருமனை எப்படிச் சார்ந்து இருக்கிறார்கள் என்பதையும் விளக்குவதாக அமைந்துள்ளது)
பனை ஓலையில் எழுதி அந்த இடத்தில் கீழே விட்டார்.
கோவிந்தப் பெருமாள் அதை எடுத்துப் படித்து விட்டு கீழே போட்டு விட்டார். திரும்பி வரும்பொழுது அந்த பனை ஓலையை தேடிக் கண்டுபிடித்தார்.
அந்த ச்லோகத்தினுடைய ஆழமான அர்த்தத்தைச் சிந்தித்து, நம்பியிடம் சென்று இது உம்முடையதா? என்று கேட்டார்.
கோவிந்தப் பெருமாள் மற்றும் பெரிய திருமலை நம்பிக் கிடையே ஒரு சிறிய உரையாடல் நடந்தது.
அப்பொழுது கோவிந்த பெருமாளுக்கு ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தில் இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் பெரிய திருமலை தெளிவுபடுத்தினார்.
அவர் வார்தைகள் அனைத்தையும் கேட்டு உறுதியான நம்பிக்கையுடன் கோவிந்தப் பெருமாள் அந்த இடத்தை விட்டு சென்றார். பின்னர் நம்பி மீன்டும் அந்த இடத்திற்கு வந்தார்.
அப்பொழுது கோவிந்தப் பெருமாள் மரத்தில் ஏறி ருத்ரனுக்காக புஷ்பங்கள் பறித்துக் கொண்டிருந்தார்.
நம்பி திண்ணன் வீடு பதிகத்தை விளக்கமாக உபந்யஸிக்க ஆரம்பித்தார். அந்த பதிகத்தில் எம்பெருமானுடைய பரத்வத்தைப் பற்றி ஆழ்வார் விளக்கமாகக் கூறியுள்ளார்.
அவர் 4வது பசுரத்தை மிகவும் அழகாக விவரித்தார். அதாவது புஷ்பமும், பூஜையும் (திருவாராதனமும்) எம்பெருமானுக்கு மட்டுமே தகும் என்று நம்மாழ்வார் மிகவும் அழகாக நிர்வஹித்துள்ளார் என்று கூறினார்.
இதைக் கேட்டவுடன் கோவிந்தப் பெருமாள் மரத்திலிருந்து கீழே குதித்து, வேரற்ற மரம் விழுவது போல நம்பியினுடைய திருவடித் தாமரைகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.
தேவையற்றவர்களுடைய சம்பந்தமே தன்னை இப்படி மாற்றியது என்றும் தன்னை நம்பியினுடைய திருவடிகளில்
கைங்கர்யம் பண்ணுவதற்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அழுதுகொண்டே கேட்டுக் கொண்டார்.
நம்பி அவரை மேலே எழுப்பி ஆறுதல் கூறினார். கோவிந்தப் பெருமாள் காளஹஸ்தியில் உள்ள அனைத்து சம்பந்தத்தையும் விட்டு, கருவூலத்தின் சாவியை ருத்ர பக்தர்களிடம் ஒப்படைத்தார்.
அந்த சமயத்தில் ருத்ர பக்தர்கள் கோவிந்தப் பெருமாளிடம் “நேற்று இரவு ருத்ரன் கனவில் வந்தார். இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும்
உண்மையான அறிவைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானார் அவதரித்திருக்கிரார்.
கோவிந்தப் பெருமாள் நம் மீது உள்ள பற்றை விட்டால் யாரும் தடுக்க கூடாது என்று ருத்ரன் கூறியதாக” கூறினார்கள். அதனால் மிகவும் சந்தோஷத்துடன் அவரை அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் இருவரும் திருமலைக்கு வந்த பிறகு, நம்பி கோவிந்தப் பெருமாளுக்கு உபனயன சம்ஸ்காரமும், பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து வைத்து
அவருக்கு ஆழ்வார்களுடைய அருளிச் செயலைக் கற்றுக் கொடுத்தார்.
எம்பெருமானார் ஒருமுறை திருமலைக்குச் சென்றார். எம்பெருமானார் திருமலையில் ஏறிச் சென்ற பொழுது, நுழைவு வாயிலில் நம்பி தாமே வந்து அவரை வரவேற்றார்.
நம்பி மிகவும் கற்றுத் தேர்ந்தவர், முதியவர் மேலும் எம்பெருமானாருக்கு ஆசார்யன் அதனால்,
எம்பெருமானார் “அடியேனை வரவேற்க யாரேனும் தாழ்ந்தவர் இல்லயோ?” என்று கேட்க,
அதற்கு நம்பி பெருந்தன்மையுடன் “எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன், என்னை விடத் தாழ்ந்தவர் யாருமே இல்லை” என்று நம்பி கூறினார்.
எம்பெருமானார் திருவேங்கடமுடையானை மங்களாசாசனம் பண்ணிவிட்டு திருமலையில் இருந்து இறங்கினார்.
ஸ்ரீ ராமானுஜர், நம்பியிடம் ஸ்ரீராமாயணம் கற்றுக் கொள்வதற்காகத் திருப்பதிக்கு வந்தார்.
ஒரு வருடம் முழுவதும் அங்கே இருந்து ஸ்ரீ ராமாயண காலக்ஷேபம் கேட்டார்.
காலக்ஷேபத்தின் முடிவில், திருமலை நம்பி எம்பெருமானாரிடம் ஏதாவது பரிசைத் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
அதற்கு எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டார். நம்பியும் சந்தோஷத்துடன் அதை ஏற்றுக் கொண்டார்.
எம்பெருமானாரும், கோவிந்தப் பெருமாளும் திருப்பதியை விட்டுச்சென்றார்கள்.
ஆனால் கோவிந்தப் பெருமாள் தன்னுடைய ஆசார்யனுடைய பிரிவைத் தாங்க முடியாமல், மீண்டும் திருப்பதிக்கு வந்தார்.
ஆனால் திருமலை நம்பி கோவிந்தப் பெருமாளிடம் ஒரு வார்தை கூட பேச விருப்பமில்லாமல், அவர்
எம்பெருமானாருக்குச் சொந்தமானவர் என்று கூறி உடனே அவரை எம்பெருமானரிடம் செல்லுமாறு அனுப்பி வைத்தார்.
பின்னர் கோவிந்தப் பெருமாள் ஸந்யாஸாச்ரமம் ஏற்றுக்கொண்டு எம்பாராக என்று பிரபலமாக விளங்கினார்.

திருப்பாவை 14வது பாசுரம் – அழகிய மணவாள பெருமாள் நாயனார் – “செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்” என்பதற்கு
நம்பியினுடைய ஆச்சர்யமான விளக்கத்தை இங்கே காட்டுகிறார்.
கோபிகைகளை எழுப்பும்பொழுது விடியற்காலை வேளையில் நடக்கும் சுப நிகழ்வுகளை இந்த இடத்தில் காட்டவேண்டியதால்,
இவர்களை சன்யாசிகளாக நினைக்க வேண்டும்.
அவர்கள் தான் விடியற்காலையில் எழுந்து, கோயிலுக்குச் சென்று எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வார்கள் என்பது நம்பியினுடைய நிர்வாஹம்.

நாச்சியார் திருமொழி – 10.8 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம். “மழையே மழையே” மற்றும் அடுத்த பாசுரமான “கடலே கடலே”, ஆகிய இரண்டு பாசுரங்களும்
நம்பிக்கு மிகவும் பிடித்த பாசுரமாக அடையாளம் காட்டப் பட்டுள்ளது.
ஆண்டாள் தான் எம்பெருமானிடம் இருந்து பிரிந்து தவிக்கும் உணர்வை, திருவேங்கடமுடையானிடம் கூறுவதற்காக மேகத்தைத் தூது விடுகிறாள்.
ஒவ்வொருமுறை நம்பி இந்த பாசுரத்தைச் சேவிக்கும் பொழுதும், மிகவும் உணர்ச்சி வசப்பட்டு ஒன்றுமே பேச முடியாத படி இருப்பார்.
நம் ஆசார்யர்கள் அனைவரும் நம்பி மீது பற்று வைத்துள்ளதால், அவர்களும் இந்தப் பாசுரத்தின் மீது மிகவும் ஈடுபாடு வைத்திருந்தார்கள்.

திருவிருத்தம் – 3 – நம்பிள்ளை வ்யாக்யானம் – ஆழ்வாருடைய பகவத் அனுபவம் மானஸ சாக்ஷத்காரமா? (மனதுக்குள்ளேயே அனுபவிக்கும் பகவத் அனுபவம்)
அல்லது வெளியில் நேராக அனுபவிக்கும் பகவத் அனுபவமா? என்று ஆழ்வார் ஆச்சர்ய படுவதாக ஆழ்வாருடைய மனதை பெரிய திருமலை நம்பி வெளிப்படுத்தினார்
என்று பிள்ளை திருநறையூர் நம்பி விளக்கமாகக் கூறினார்.

திருவாசிரியம் – 1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – எம்பெருமானுடைய அழகை வர்ணிக்கும்பொழுது,
ஆழ்வார் “செக்கர் மா முகிலுடுத்து …. கண்வளர்வது போல்” என்கிறார்.
அவர் “தூங்குவது” என்ற வார்தைக்கு பதிலாக “கண்வளர்வது” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளார்.
கண்வளர்வது என்பது ஸம்ப்ரதாய வார்த்தை, ஆனால் “தூங்குவது” என்பது பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை.
பெரிய திருமலை நம்பி இப்படி உயர்ந்ததான ஸம்ப்ரதாய வார்த்தைகளை உபயோகப்படுத்துவதில் மிகவும் நிபுணராக இருந்தார் என்பதை பெரியவாச்சான் பிள்ளை இங்கு எடுத்துரைக்கிறார்.
நம்பி ஒருமுறை எம்பெருமானாருக்கு ஒருவரை அடையாளம் காட்ட “பொன்னாலே தோடு செய்தாலும் அணிந்துகொள்ள முடியாத காதை உடையவர்” என்று உணர்த்துகிறார்.
அதாவது நல்ல உபதேசங்களையும் கேட்காதவர் என்பதை இப்படி நய்மாகக் கூறுகிறார்.

திருவாய்மொழி – 1.4.8 – நம்பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் நாயிகா பாவத்தில் “தான் எம்பெருமானிடத்திலிருந்து பிரிந்ததால்
தனது உடல் வலிமை மற்றும் அழகையும் இழந்து மிகவும் பலவீனமாக இருப்பதாக” பறவையிடம் கூறினார்
(தன்னுடைய நிலைமையை எம்பெருமானிடம் கூறுவதற்காகத் தூதாக அனுப்பினார்).
தான் பலவீனமாக இருப்பதால் அந்த பறவையைத் தானே உணவை தேடிக்கொள்ளுமாறு ஆழ்வார் கூறினார்.
இதில் நம்பிள்ளை, பெரிய திருமலை நம்பியினுடைய சரித்திரத்தை எடுத்துக்காட்டினார்.
தன்னுடைய கடைசி காலத்தில் நம்பி தன்னுடைய திருவாரதனப் பெருமாளிடம், அதாவது வெண்ணைக்காடும் பிள்ளையிடம் சென்று,
தான் மிகவும் தளர்ந்து விட்டதாகவும், அதனால் எம்பெருமான் அவரை பார்த்துக்கொள்ளத் தானே வேறு ஒருவரைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறினார்.

ஸ்ரீ பெரிய திருமலை நம்பியின் தனியன்

பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத ஸாதேச பல ப்ரதாய
ஸ்ரீபாஷ்யகா ரோத்தம தேசிகாய ஸ்ரீசைல பூர்ணாய நமோ நம: ஸ்தாத்

இதன் பொருள்: திருவேங்கடமுடையான் ‘தாத’ என்றழைத்தான்.
அதனால் ப்ரஹ்மனுக்கு பிதாமகன்-தாத்தாவானவரும், வால்மீகியின் ஸ்ரீமத்ராமாயணத்தில் 18 அர்த்த விசேஷங்கள் அருளியவரும்,
பகவத் ராமாநுஜருக்கு உத்தம ஆசார்யனுமாக இருந்தவரான ஸ்ரீசைலபூர்ணர் என்கிற திருமலை நம்பிகளுக்குஅடியேனுடைய நமஸ்காரங்கள் உரித்தாகட்டும்.

6000 படி குரு பரம்பரா ப்ரபாவம் மற்றும் பெரிய திருமுடி அடைவில் நம்பியினுடைய திருநக்ஷத்திரத்தை சித்திரை-சுவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வாழி திருநாமத்தில் வைகாசி-சுவாதி என்று இருப்பதால் அன்றே அவருடைய திருநக்ஷத்திரம் கொண்டாடப்படுகிறது.

சமீபத்தில் நடந்தேறிய திருமலை நம்பியின் 1049-வது அவதார மஹோத்சவம் சிறப்பாக நடந்தேறியது

ராமானுஜரின் தாய்மாமனான திருமலை நம்பி தான் முதலில் திருமலைக்கு வந்து, ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கர்யங்கள் செய்துள்ளார்.
இவரது வழி வந்த வாரிசுதாரர்கள், இன்றளவும் திருமலையில் சுவாமிக்கு தீர்த்த கைங்கர்யங்களை பல நூற்றாண்டுகளாக
தினமும் அதிகாலை செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் வீற்றிருக்கும் திருக்கோயிலுக்கு சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள பாபவிநாசம் எனும் தீர்த்தத்தில் இருந்து தான்
ஸ்வாமிக்கு தீர்த்த கைங்கர்யங்களுக்காக தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம்.
திருமலை நம்பி தினமும் இவ்வளவு தூரம் நடக்கிறாரே என உணர்ந்த பெருமாள், பாபவிநாசத்துக்கு முன் ஆகாச கங்கை என்னும்
மற்றொரு தீர்த்தத்தை உருவாக்கி கொடுத்துள்ளார்.
தற்போது இங்கிருந்து தான் ஸ்வாமி கைங்கர்யத்துக்கும், அபிஷேக ஆராதனைகளுக்கும் புனித தீர்த்தம்
திருமால் நம்பியின் வாரிசுதார்கள் மூலம் கொண்டு செல்லப் படுகிறது.

———————

ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்

இந்த ஸ்வாமி திருமலையில் (திருப்பதியில்) ஸ்ரீமுக வருஷம்  ஐப்பசி மாதம் பூர்வாஷாடா நக்ஷத்திரத்தில் சடமர்ஷண கோத்திரத்தில்
திருமலை நம்பி குமாரராய் அவதரித்து எம்பெருமானாருக்குப் பிறகு, ஞாநபுத்திரரான இந்த ஸ்வாமி
தனக்குத் தாயபாகமாகக் கிடைத்த ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவனை ஆராதித்துக்கொண்டு ஸம்பிரதாய ப்ரவசநம் செய்து வந்தார்.
பிள்ளானுக்குப் பிறகு சடமர்ஷண வம்சத்தவர்களான (1)புண்டரீகாக்ஷ தேசிகர்
(2) சடகோப தேசிகர்
(3) பத்மாக்ஷ தேசிகர் இவர்கள் வரையில் புத்ர பௌத்ரக்ரமமாய் வந்த ஹயக்ரீவனை – பத்மாக்ஷ தேசிகர் தன் குமாரரான
திருமலை ஸ்ரீநிவாஸாசாரியாரை (ப்ரபந்த நிர்வாஹ க்ரந்த கர்த்தா)யும் லக்ஷ்மீ ஹயக்ரீவனையும் ஸ்வாமி தேசிகனிடம் ஒப்படைத்து ரக்ஷணம் பண்ணும்படி நியமித்தார்.
இவர் அருளிய க்ரந்தம்;
பகவத் விஷயம்,
ஆறாயிரப்படி.

விக்யாதோ யதிஸார்வ பௌம ஜலதே: சந்த்ரோப மத்வேத ய:
ஸ்ரீபாஷ்யேண யதந்வயாஸ்ஸு விதிதா: ஸ்ரீவிஷ்ணு சித்தாதய:|
வ்யாக்யாம் பாஷ்ய க்ருதாஜ்ஞ யோபநிஷதாம் யோ த்ராவிடீநாம் வ்யதாத்:
பூர்ணம் தம் குருகேச்வரம் குருவரம் காருண்ய பூர்ணம் பஜே||

திருக் குருகைப்பிரான் பிள்ளான் என்பார் ராமனுஜரின் மாமாவான பெரிய திருமலை நம்பியின் குமாரர் ஆவார்.
ராமானுஜருடைய ஞான புத்திரனாக அனைவராலும் மதிக்கப்பட்டவர்.
ராமானுஜருக்கு நம்மாழ்வார் மீதான பிரதிபக்தியையும் ஆளவந்தாரின் திருவுள்ளப்படியும், குருகைப்பிரான் பிள்ளானின் நம்மாழ்வார்
மீதான மிகுந்த ஈடுபாட்டையும் குறித்தே பிள்ளான் என்ற பெயருடன் திருக்குரு கை என்ற நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தின் பெயரையும் சேர்த்து
திருக் குருகைப்பிரான் பிள்ளான் என்றே பெயரிட்டு அழைத்து வந்தார்.

ஒரு சமயம் ராமானுஜர் தமது மடத்தில் ஏகாந்தமாக ஓர் அறையில் தாளிட்டுக்கொண்டு நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றைத் தம் மனதிலேயே
நினைத்துக் கொண்டு அதற்கேற்ப அரையர் போல் அபிநயம் செய்து கொண்டிருந்ததைக் கதவின் சாவித் துவாரம் மூலம் கண்ட பிள்ளான்,
அந்தக் குறிப்பிட்ட பாசுரத்தை உரக்க கூறி, ராமானுஜரின் திருவுள்ளம் பற்றி அறிய விரும்பினார்.
அதைக் கேட்ட மாத்திரத்தில் ராமானுஜர் உடனடியாக வெளியே வந்து பிள்ளானை மிகவும் பாராட்டி அவருக்கு
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மீதான பற்றுதலை யறிந்து அவரையே திருவாய் மொழிக்கு வியாக்கியானம் (விளக்கவுரை)
அருளப் பொருத்தமானவர் என்று கருதி பிள்ளானுக்குக் கட்டளையிட்டார்.

அவரும் அதன்படியே ‘ஆராயிரப்படி’ என்ற வியாக்கியானத்தை அருளிச் செய்தார்.
இதுவே முதன்முதலில் கிரந்த ரூபமாக அவதரித்த ஸ்ரீ கோசம் (நூல்)
இதில் நாதமுனிகள், ஆளவந்தார், திருமலை யாண்டான், திருவரங்கப் பெருமாள் அறையர், ராமானுஜர் ஆகியோருடைய கருத்துகளைக் கொண்டதும் முதன் முதலாக ஸ்ரீ வைணவ சம்பிரதாய மொழியான மணிப்பிரவாள நடையில் அமைந்ததுமான கிரந்தமாகும்.

இவர் நம்பெருமாள் சன்னிதியில் விசேஷ கைங்கர்யங்களைச் செய்து கொண்டும் உபய வேதாந்தியாக விளங்கியவர்.
ராமானுஜர் திருநாடலங்கரித்த போது அவருக்கு இறுதிக் கடன்களை செய்யும்படியான பாக்கியம் இவருக்குக் கிட்டியது.
திருவஹிந்திரபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசர் திருக் கோயிலில் திருக் குருகைப்பிரான் பிள்ளான், ராமானுஜருடனும் கிடாம்பி யாச்சானுடனும் இணைந்து திருச் சிலா ரூபமாகக் காட்சி அளிப்பதை இன்றும் தரிசிக்கலாம்.

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –32– தாரிகாவின் மூன்று நிலைகள் —

August 2, 2022

அடுத்து அவளுடைய ஸ்தூலமான நிலை போன்றவற்றைக் குறித்து நான் கூற கேட்பாயாக –

யா ஹி ஏஷா பரமா வித்யா தாரிகா பாவ தாரிணீ
ஸ்தூலம் ஸூஷ்மம் பரம் சேதி தஸ்யா ரூப த்ரயம் ய ஸ்ருணு –1-

சக்தியின் மூன்று நிலைகளான ஸ்தூலம் ஸூஷ்மம் பரம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்ப்பாயாக
இது உயர்ந்த தாரிகா என்னும் மந்திரமாகும் -இது உபாஸகனைக் காப்பதாகும் –

பஞ்ச வர்ணம் சதுர் வர்ணம் இதி ஸ்தூலத் மகம் வபுஸ்
த்ரி வர்ணா ஸூஷ்ம ஸம்ஜ்ஞா மே பரா விஷ்ணு மயீ ஸ்திதா –2-

ஸ்தூல வடிவமானது -ஐந்து அல்லது நான்கு ஒலிகளைக் கொண்டதாக உள்ளது இது ஹ்ரீம் என்பதாகும்
ஸூஷ்ம நிலையானது மூன்று ஒலிகளைக் கொண்டதாகும் -இது ஈம் என்பதாகும்
பரம நிலையானது விஷ்ணு என்னும் ஒலியைக் கொண்டதாகும் இது ஈ என்பதாகும் –

இமாஸ்திஸ்ரோ ஹி அவஸ்தா மே ப்ரத்யேகம் து த்ரிதா த்ரிதா
ஸ்தூலே து யா பராவஸ்தா பரமாத்மாஸ்ரயா து ஸா –3-
அசேஷ புவந ஆதார விஷ்ணு வ்யாபி சமாஸ்ரயா
போக்த்ரு போக்யாத்மிகா சேயம் தஸ்யா ரூபம் நிபோத மே –4-

எனது இந்த ஒவ்வொரு நிலையும் மூன்றாய்ப் பிரிக்கப் படுகின்றன
ஸ்தூலத்தில் உள்ள பரம நிலையானது
அசேஷ புவன ஆதரம் -ர
விஷ்ணு -ஈ
மற்றும் வ்யாபின் ஆகியவற்றுடன் இணைந்த பரமாத்மன் -ஹ
என்ற ஒலியைக் கொண்டதாகும்
இதுவே ஹ்ரீம் என்கிறதுகாக்கிறது
இந்த நிலையானது அனுபவிப்பவன் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது

அதன் ரூபத்தை அடுத்து நான் வர்ணிக்கக் கேட்ப்பாயாக –

அசேஷ புவன ஆதார நிலய வ்யாபி ஜன்மநா
பரமாத்மாதி கேநைவ லலாட தடமேயுஷா –5-
ஆக்ரம்ய வைஷ்ணவம் ரூபம் ஸ்வே புனஸ் ப்ரதி திஷ்டதி
தார காரண நாதேந சோபமாநா ஹரி ப்ரியா –6-

ஸ்ரீ ஹரியின் பிரியையாக உள்ளவள் நான்
சஹஸ்ரார சக்ரம் எனப்படும்நெற்றிப்பகுதியின் பின்புறம் உள்ளாள்
இவள் அசேஷ புவன ஆதரம் -வ்யாபின் -பரமாத்மன் -ஆகிய ஒலிகளில் புறப்பட்டு
விஷ்ணு ரூபம் அடைந்து
அதன் பின்னர் தனக்கு உரிய ரூபம் எடுக்கிறாள்
இந்த ரூபமானது தாரா வெளிப்படும் நாதத்துடன் கூடியதாக உள்ளது –

போக்த்ரு போக்யாதிகம் ஸர்வம் புவனம் பிப்ரதீதியா
வ்யாபிநம் ஸர்வதோ தேவீ பரமாத்மாநம் ஆஸ்ரிதா –7-

போக்தா போக உபகரணங்கள் நிறைந்த இந்த உலகை தாரிகா தேவி தனது ஞானத்தால் சூழ்ந்த படி
பரமாத்வாவிடம் அண்டிய படி உள்ளாள்

தாவத்தயா ஸ்திதா விஷ்ணு ரூபா ஸ்தூலா கதி பரா
பஞ்ச க்ருத்ய கரீ சக்தி த்ரிவித ஐஸ்வர்ய ப்ரும்ஹிதா –8–
பிராணயந்தி ஸ்ரியா தேவம் ஜ்ரும்பா மாணோத் அதி பரபம்
ஆச்ரித்ய ஹி அநலம் பவமியம் ஸூஷ்மா கதிர் மதா–9-

அந்த தாரிகாதேவி ஸ்தூல நிலையில் விஷ்ணு ரூபம் கொண்டு அதிலேயே நிலைக்கிறாள்
ஸூஷ்ம நிலையிலே
ஸ்ருஷ்ட்டி முதலான ஐந்து செயல்களை செய்தபடி மூன்று வித ஐஸ்வர்யங்களுடன்
சமுத்திரம் போன்று ஓங்கி க்ரியா சக்தியின் அக்னி ரூபம் அண்டுகிறாள்

ஸ்ருஷ்ட்யாதிகம் விதாயாத வ்யோமஸ்தாம் பரமாஸ்திதா
ஸர்வ ஆச்சர்ய கரீ தேவீ ஸ்ருஷ்டி ஸ்திதி யந்தக்கரணம் –10-
ஸூர்யம் ஸமாஸ்ரிதா விஷ்ணும் கல யந்தீ ஜகத் ஸ்திதம்
கால பாவக தேஜோபி ஸ்தூல அஸ்தூல மயாத்துதா –11-

இப்படி ஸ்தூல ஸூஷ்ம நிலையில் உயர்ந்த நிலையில் உள்ளவளும் வ்யோமத்தில் -ம் -உள்ளவளும்
கால அக்னியின் -ர-துணையுடன் ஸூர்யன் -ஹ -விஷ்ணு -ஈ -ஆகிய ரூபங்களால் ஜகாத்தை நிலை பெறச் செய்கிறாள் –

கததா கத யஸ்திஸ்ரஸ் ஸ்தூலய மம வாஸவ
ஸூஷ்மா யாஸ்து கதீஸ் ஸ்திரஸ் ஸ்ருணு வ்ருத்ர நிஷுதந -12-

இப்படியாக எனது தாரகை நிலையுடைய மூன்று ஸ்தூலங்கள் குறித்துக் கூறப்பட்டன
வ்ருத்ரன் என்னும் அசுரனை அழித்தவனே -அடுத்து மூன்று ஸூஷ்ம நிலைகளைப் பற்றிக் கேள்

அகால கலாந ஸேயம் ஸூஷ்மா து பரமேஸ்வரீ
வ்யாபிநம் பரமாத்மா நம் ஸ்ரயந்தீ வர்த்ததே த்ருவா –13-

பரமேஸ்வரியின் ஸூஷ்ம ரூபமானது எப்போதும் நிலையாக –
வ்யாபிந் பரமாத்மா வின் அக்ஷரங்களில் உள்ளன
அதாவது ஹம்
இந்த நிலையானது காலத்திலேயே கட்டுப்படாததாகும் –

சுத்தோ வர்க்கஸ் தத அசுத்தோ த்வி விதம் ஸ்ருஜ்யம் உச்யதே
சுத்த இதரே ஸ்தித ஸ்தூலா சுத்தே ஸூஷ்மா ப்ரதிஷ்டிதா –14-

ஸ்ருஷ்டிக்கப்படும் அனைத்தும் சுத்தம் என்றும் அசுத்தம் என்றும் இரண்டு விதங்கள் –
ஸ்தூல ரூபம் அசுத்தத்தை உள்ளடக்கியும் ஸூஷ்ம ரூபம் சுத்தத்தை உள்ளடக்கியும் இருக்கும் –

திஸ்ரஸ் அப்யாஸாம் கதீ ஸம்யக் ஸ்தூலாயா இவ லக்ஷ்யேத்
பரா யா மே தனு சக்ர தஸ்யா ரூபம் நிஸாமய –15-

தாரிகையின் ஸ்தூல நிலைகள் போன்றே இந்த மூன்று ஸூஷ்ம நிலைகளும் தெளிவாகப் புலப்படுகின்றன
அடுத்து தாரிகையின் உயர்ந்த ரூபம் பற்றிக் கேள்

ஸர்வ வ்யாப்தி மதீ திவ்யா நிஷ்கலா ஸா நிரஞ்சநா
சா பரா மன்மயீ சக்தி கதிதா விஷ்ணு சம்ஜ்ஞயா –16-

அவள் எங்கும் நிறைந்தவளாகவும் திவ்யமாகவும் தோஷம் அற்றவளாகவும் உள்ளாள்
இந்த உயர்ந்த சக்தியான அவள் என்னை ஆத்மாவாகக் கொண்டவளாக
விஷ்ணு என்று அழைக்கப் படுகிறாள் -அதாவது ஈ –

ஏஷா ஸா வைஷ்ணவீ சத்தா ஸா ஏஷா அஹந்தா ஹரேர் மதா
ஏஷா ஸா யோகிநாம் நிஷ்டா ஸ ஏஷா சாங்யாத்மநாம் கதி –17-

அவளே விஷ்ணுவின் இருப்பாக உள்ளாள் -அவளே ஹரியின் நான் என்னும் நிலை
அனைத்து யோகிகளுக்கும் இவளே த்யான விஷயம்
சாங்க்ய -ஞான -நிலையின் கதியாக அவளே உள்ளாள் –

இயம் ஸா பரமா மூர்த்தி இயம் ஸா பரமா கதி
சக்தி குண்டலிநீ ச ஆத்யா ப்ரமரீ யோக தாயிகா –18-
அநா ஹதா ஹி ஆகோஷா ச நிர் மர்யாதா நதோத் கதா
ஸப்த ப்ரஹ்ம ததா சக்திர் மாத்ருகா யோநி உத்தமா –19-
காயத்ரீ ச கலா கௌரீ சசீ தேவீ ஸரஸ்வதீ
வ்ருஷாகபாயீ ஸத்யா ச ப்ராண பத்நீ யசஸ்விநீ –20-
இந்த்ர பத்நீ மஹாதேநு அதிதி தேவ நந்திநீ
ருத்ராணாம் ஐநநீ வஸூநாம் து ஹிதா ததா –21-
ஆதித்யா நாம் ஸ்வஸா நாபி அம்ருத தஸ்ய த்ருதி பரா
இடா ரதி ப்ரியா காரா கருதாத்ரீ மஹீ யஸீ –22-
மஹீ ச விஸ்ரு திஸ் சைவ த்ரயீ கௌஸ் ப்ரண வஸ்தலா
சக்திச்ச ப்ரக்ருதிச்சைவ மஹா ராஜ்ஜீ பயஸ்விநீ –23-
தாரா சீதா ததா ஸ்ரீஸ் ச காம வத்ஸா பிரியவ்ரதா
தருணீ ச வராரோஹ நிரூபா ரூப ஸாலி நீ –24-
அம்பிகா ஸூந்தரீ ஜ்யேஷ்டா வாமா கோரா மநோ மயீ
ஸித்தா ஸிந்தாந்திகா யோகா யோகிநீ யோக பாவிநீ –25-
ஏவ மாதீநி நாமானி ஸாஸ்த்ரே ஸாஸ்த்ரே மநீஷிபி
கதிதாநி ரஹஸ்யாநி ஸக்தே ஸித்தாந்த பாரகை –26-

அவளே உயர்ந்த ரூபமாகவும் உயர்ந்த நிலையை அடைவதற்கான வழியாகவும் உள்ளாள் –
சக்தி -குண்டலிநீ -ஆத்யா -ப்ரஹ்மரீ -யோக தாயிகா -அநாஹதா -அகோஷா -நிர்மர்யாதா -நதோத்கதா-
ஸப்த ப்ரஹ்மா -சக்திர் மாத்ருகா யோநி -உத்தமா -காயத்ரீ -கலா -கௌரீ -ஸசீ -தேவீ -ஸரஸ்வதீ –
வ்ருஷா கபாயீ -ஸத்யா -ப்ராண பத்நீ -யசஸ்விநீ -இந்த்ர பத்நீ -மஹா நேநு -அதிதி -தேவ நந்திநீ –
ருத்ரர்கள் மற்றும் வஸூ க்களுடைய தாய் -ஹிதா -ஆதித்யர்களுடைய ஸஹோதரி -அம்ருதத்தின் நாபி –
த்ருதி -இடா -ரதி -உயர்ந்த கருதாத்ரீ -மஹீ -விஸ்ருதி -த்ரயீ -கோ -ப்ரணவத்ஸலா -சக்தி -ப்ரக்ருதி –
மஹா ராஜ்ஜீ -பயஸ்விநீ -தாரா -ஸீதா -ஸ்ரீ -காம வத்ஸா -ப்ரியவ்ரதா -தருணீ -வராரோஹா -நிரூபா –
ரூபஸாலிநீ -அம்பிகா -ஸூ ந்தரீ -ஜ்யேஷ்டா -வாமா -கோரா -மநோ மயீ -ஸித்தா -சிந்தாந்திகா –
யோகா -யோகிநீ -யோக பாவி நீ -போன்ற பலவும்
அந்த சக்தியின் பல ரஹஸ்யப் பெயர்களாக பல்வேறு சாஸ்திரங்களில்
பல சான்றோர்களாலே கூறப்பட்டுள்ளன

ச ஏஷா சக்தி பரா திவ்யா த்ரிதா ரூபை அவஸ்திதா
ஸ்தூல ஸூஷ்ம பரத்வேந த்ரைதம் ஏதத் ப்ரதர்ச்யதே –27-

அந்த சக்தியானவள் மூன்று நிலைகளில் உள்ளாள் –
ஸ்தூலமாயும் ஸூஷ்மமாயும் உயர்ந்ததாகவும் உள்ள அவளுடைய
மூன்று வடிவங்கள் உனக்கு இப்போது கூறப்படுகின்றன –

அஸ்யா ஸ்வரூபம் ஈ ப்ரோக்தா சா அத்ரே தாவ திஷ்டதே
அப்ரமேய அதி ரூபேண தஸ்யா வ்யாக்யாம் இமாம் ஸ்ருணு –28-

ஈ என்னும் அக்ஷரமானது அவளுடைய ஸ்வரூபமாக உள்ளது
அதுவும் மூன்று விதங்களில் உள்ளது
அதன் உன்னதமான -அப்ரமேய -அதாவது அகார -வடிவத்தை இப்போது
நான் விளக்கக் கேட்ப்பாயாக

ஷாட் குண்யம் யத் பரம ப்ரஹ்ம வாஸூ தேவாக்யம் அவ்யயம்
சங்க்ருதாகில பேதம் தத் ஏகம் ஏவ யதா ததா –29-
அப்ரமேயாக்யயா தேவஸ் ததா யோகி ப்ரீர்யதே
வ்யாப்ய வ்யாபக பேதோ வா ஸ்ருஸ்ஜ்ய ஸ்ருஷ்டி விதாபி வா –30-
ந ததான்ய ப்ரமேயத்வம் ந கிஞ்சித் அஸ்ய வித்யதே
ததா ஸூந்யம் அவிகாரை ப்ரஸூப்தாம் இவ ஸர்வத–31-
ஷாட் குண்யம் ப்ரஹ்ம ஸம்ஸ்திதா விஷ்ணு ஸம்ஜ்ஞயா
அதரங்கார்ண வாகாரா சக்தி சக்தி மதோர் கதி -32-

பர ப்ரஹ்மமானது ஆறு குணங்களுடன் கூடியவனும்
எப்போதும் உள்ளவனுமாகிய வாஸூ தேவன்
அனைத்து பேதங்களையும் ஒன்றாகத் திரட்டி தன்னுள் அடக்குகிறான்
இத்தகைய திவ்யமான ரூபமே யோகிகளால் அப்ரமேயம் எனப்படுகிறது
அத்தகைய நிலையில் -பரவப்படும் பொருள் -பரவப்பட்ட பொருள் -என்கிற வேறுபாடோ
படைக்கப்பட்ட பொருள் -படைக்கின்ற பொருள் -என்கிற வேறுபாடோ இல்லை
அந்த நிலையில் அந்த வஸ்துவை அறிய இயலாது
ஆறு குணங்களுடன் கூடிய அந்த ப்ரஹ்மமானது ஆழ்ந்த உரக்க நிலையில் உள்ளதாக
ஸூ ன்யமாகவே அனைவராலும் உணரப்படுகிறது
அப்போது தாரிகா -விஷ்ணுவின் பெயரைத் தரித்தவளாக அலையற்ற சமுத்திரம் போன்று
சக்தியைக் கொண்ட வஸ்துவின் சக்தியாக அறியப்படுகிறான் –

ததா யதா புநர் ப்ரஹ்ம வாஸூ தேவாக்யம் அவ்ரணம்
உன் மிஷத் யாத்ம சங்கல்பாத் ததா ப்ரதம உச்யதே –33-

வாஸூ தேவன் என அழைக்கப்படும் அந்தத் தூய்மையான ப்ரஹ்மமானது
தன்னுடைய ஸங்கல்பம் காரணமாகவே மீண்டும் விழித்து எழுகிறது -இது பிரதமம் எனப்படும்

பிரததே ஹி யதா ப்ரஹ்ம ஸூத்த அஸூத் தாக்ய வர்த்மநா
மாயா நாம ததா த்வேஷா ப்ரஹ்ம ஸங்கல்ப ரூபிணீ –34-

அந்தப் ப்ரஹ்மம் ஸூத்தம் அஸூத்தம் -என்பதான ஸ்ருஷ்டியில் -தன்னை விரித்துக் கொள்ளும் போது
அந்தப் ப்ரஹ்மத்தின் சங்கல்பத்துக்கு நிகராக உள்ள சக்தியானது மாயா எனப்படுகிறாள்

சங்கர்ஷணாதி ஷித் யந்தஸ் தஸ்யா கர்பம் அவஸ்திதஸ்
யதா புநஸ் பரம் ப்ரஹ்ம ஸ்வ இச்சா ஸம்பாவதிதம் பிருதக்–35-
வியாப்ய வியாபக பேதேந ஸத்வி தீயம் அவஸ்திதம்
பஞ்ச பிந்துஸ் ததா தேவீ பஞ்ச க்ருத்ய விதாயி நீ –36-

ஸங்கர்ஷணன் தொடக்கமாக புல் பூண்டு முதலிய அனைத்து ஸ்ருஷ்டிகளும் அவளுடைய கர்ப்பத்தில் உள்ளன
ஒரு கட்டத்தில் ப்ரஹ்மமானது தனது இச்சையால்
வியாபிக்கும் பொருள் என்றும் வியாபிக்கப்படும் பொருள் என்றும் இரண்டாகப் பிரிகிறது
அப்போது ப்ரஹ்மத்தின் ஐந்து செயல்களைச் செய்யும் தேவியானவள் பஞ்ச பிந்து என்று அழைக்கப் படுகிறாள்

ப்ரஹ்மத்தின் ஐந்து செயல்களாவன -படைத்தல் காத்தல் அழித்தல் மயக்குதல் மற்றும் கடாக்ஷித்தல்

பராய இதி தே ப்ரோக்தோ மம தன்வா கதிஸ் த்ரயீ
ரூபம் ரூபம் விபஜ்யைஷா தத் தத் தத் வார்ண பேதி நீ –37-

இப்படியாக உள்ள எனது உயர்ந்த நிலை குறித்து உனக்கு உரைக்கப் பட்டது
அது பலவிதமான ரூபங்களை எடுப்பதாக உள்ளது
அந்த ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு அக்ஷரத்தை -அதாவது
க தொடக்கமாக உள்ள ஒவ்வொரு அக்ஷரத்தை குறிப்பதாக வேறுபாட்டுடன் உள்ளது –

தத் தத் வாசகதாம் நீதா ஸ்வ காமாஜ் ஜகதீ தநு
தேஷு தேஷு ஹி தத் வேஷு ஸ்வாத்ம பூதா வதிஷ்டதே –38-

அந்த ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு அக்ஷரமும் குறிக்கின்ற ஜகத்தின்
பல்வேறு வடிவங்களை உணர்த்துவதாகவும் உள்ளது
இப்படியாக ஒவ்வொரு தத்துவமும் எனது ஒவ்வொரு ரூபத்தைக் கொண்டதாகவே உள்ளது –

மத் அம்ச ஸூஷ்ம ரூபோ யோ மூட அக்னிரிவ தாரு ஷு
தத் தத் ரூப மநு ப்ராப்தா சேவ நீ நாம ஸாஸ்வதீ –39-

இப்படியாக ஒவ்வொரு அக்ஷரத்திற்கான ரூபங்களை எடுத்த பின்னர்
எனது ஸூஷ்ம ரூபங்கள் அந்த அந்த அக்ஷரத்தில் நித்தியமாக மறைந்து உள்ளன
அதாவது விறகுக்கட்டையில் அக்னி எவ்வாறு மறைந்து உள்ளதோ அதை போன்று ஆகும்

தத் தத் வர்ணோ பரா கேண தத் தத் வியக்தி வபுஸ் ஸ்வயம்
அதி தைவத பாவேந தத்ர யோம்ச பராத்மக –40-

வைஷ்ணவ சக்தி ரூபோ மே நியச்சன்ன வதிஷ்டதே
தத் தத் வாசகதாம் யாதி தேவீ சேயம நஸ்வரீ –41-

இப்படியாக ஒவ்வொரு அக்ஷரத்தின் அதிபதி தேவதையாக எனது பல்வேறு ரூபங்கள் உள்ளன
இதன் மூலம் விஷ்ணுவின் சக்தியாக உள்ள எனது உயர்ந்த நிலையானது
ஒவ்வொரு அக்ஷரத்தின் ஒலியிலும் அமைந்து உள்ளது
மேலும் அந்த அந்த அக்ஷரத்தின் ஓசை மற்றும் அமைப்பிற்கான அதிபதி தேவதையாகவும் உள்ளது –

அசேஷ புவநாதாரா யோகிநீ பரமேஸ்வரீ
கேவலஸ் தத்துவ வர்ணஸ்து த்ரை லோக்யை வர்யதாம் கத –42-

அனைத்து புவனங்களுக்கும் ஆதாரமாக உள்ளவளும் -பரமேஸ்வரீயுமாகிய யோகிநீ -என்னும் நான்
அந்த அந்த வர்ணங்களுக்கு -அக்ஷரங்களுக்கு -அடிப்படையாக அமைகிறேன்

தத் தத் ஸ்தூல மயம் தத்துவம் மதீயம் சக்தி ஸாஸ்வதம்
தத் தத் பாவாபிதாநேந தன் நியந்த்ருத்வ தர்சதே–43-

அவள் அனைத்து தூய்மையான தத்துவங்களை வெளிப்படுத்தும் அக்ஷரங்களால் உணர்த்தப்படுகிறாள்
மூன்று லோகங்களையும் ஆளவல்ல எஜமானத் தன்மையை அளிக்கிறாள்
ஒவ்வொரு ஸ்தூலமான தத்துவமும் எனது எப்போதும் உள்ள சக்தியே யாகும்
இது ஏன் என்றால் ஒவ்வொரு ஸ்தூலமான தத்துவமும் எனது நிலையையே வெளிப்படுத்துகின்றன –
அவற்றில் நானே ஆதிக்யம் செலுத்துகிறேன்

இயமே வேஸ்வரா தேவீ த்விதா ஸக்தா வதிஷ்டிதே
ஷாதி சாந்தம் புரா யத்தே தர்சிதம் ப்ரஹ்ம பஞ்சகம் –44-
ஷ இத்யாதி ஸ்வரூபேண த்ரைலோக்ய ஐஸ்வர்யதாம் கதா
ஸ்வரூபே நியமே சைவ த்வேதா ஸேயமவஸ்திதா –45–

ஒவ்வொரு வஸ்துவையும் நியமிக்கும் தேவியானவள் அவற்றுடன் இரண்டு முறையான உறவு முறையில் உள்ளாள்
அதாவது
நான் முன்பே உனக்கு கூறியதான
ஷ தொடங்கி ஸ முடிய உள்ள ஐந்து ப்ரஹ்மத்திலும் அவள் உள்ளாள்
இவ்விதமாக மூன்று லோகங்களையும் ஆளவல்ல எஜமானத் தன்மையை அளிக்கிறாள்
இரண்டு விதமான நிலையில் உள்ளாள்
அனைத்து வஸ்துக்களின் இருப்பாகவும்
அவற்றை நியமிப்பவளாகவும் உள்ளாள் –

தாரணா நாம் சதுஷ் கம் யத் வாதி யாந்த முதீ ரிதம்
தத்ர ஸூஷ்ம பர பாவே ஸ்தி தேயம் பூர்வவத் த்விதா –46-
த்ரைய வஸ்தோ மகார அயம் ப்ரோக்த சைதன்ய வாசக
தத்ராபி ஸூஷ்ம பரயோர்த்வ தேயம் தசயோர் த்வயோ -47-

வ காரம் தொடங்கி யகாரம் முடிய உள்ளதும் -முன்பு கூறப்பட்டதும் நான்கு தாரணைகளாக உள்ள சப்தங்கள்
முன்பு கூறப்பட்டதான தாரிகாவின் ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த நிலைகளைக் கொண்டதாக

அவளுடைய இரண்டு செயல்களை நிறைவேற்றுவதாக உள்ளன
சைதன்யத்தின் மூன்று நிலைகளைக் குறிப்பதாக ம அக்ஷரம் உள்ளதை முன்பே -கூறப்பட்டது
இதில் அவளுடைய ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த இரண்டு நிலைகளும் உள்ளாய்

மாயா ப்ரஸூதி த்ரை குண்ய ரூபோ யோ பார்ண உச்யதே
ஈ நாம பூர்வ வத் தேவீ தத்ர அபி தசயோர் த்வயோ -48

ப காரம் மூன்று தன்மைகளைக் கொண்ட மாயையைக் குறிக்கும்
மேலே கூறப்பட்ட இரண்டு நிலைகளில் உள்ள தாரிகா ஈ என்னும் அஷரத்தால் கூறப்படுபவளாகவும் உள்ளாள்

புத்தி அஹங்கார மநஸாம் யத் தூபம் பாதிகம் த்ரயம்
தத்ர அபி பூர்வவத் த்வேதா தேவீ யம் தசயோர்த்வயோ –49-

பகாரம் -புத்தி அஹங்காரம் மனம் – ஆகிய வற்றைக் குறிக்கும் -அதில் அவள் இந்த இரண்டு நிலைகளில் உள்ளாள் –

நாதிகே ணாதிகே சைவ ததேந்த்ரிய குணத்வயே
தசயோ ஸூஷ்ம பர யோரியம் த்வேதா வதிஷ்டதே –50-

நா -ணா -இவற்றால் குறிக்கப்படும் இந்த்ரியங்களில் தேவியானவள் ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த நிலைகள் ஆகியவற்றில் நிலையாக உள்ளாள்

ஞாதிகே ஙதிகே சைவ ஸ்தூல ஸூஷ்ம ஸ்வரூபகே
விபூதி பஞ்சகே தேவீ தசயோ பூர்வ வத் ஸ்திதா –51-

ஸ்தூல ஸூஷ்ம நிலையில் உள்ள இரண்டு ஐந்து விபூதிகளும் -தன்மாத்ரைகளும் பூதங்களும்
ஞா -ங-எழுத்துக்களால் குறிக்கப்பட்டு அவற்றிலும் அந்த இரண்டு நிலைகளிலும் தேவீ உள்ளாள்-

சப்தத்யா விததா பேதை ஸூத்த அஸூத்த மயாத்வநி
நடீவ ஸ்வய மயீ சக்திர் பிபர்தி பஹுதா வபு –52-

ஈ -என்னும் எழுத்தால் குறிக்கப் படுபவளும்
ஒரு நடிகையைப் போன்று பல்வேறு பாத்திரங்களை ஏற்பவளும்
ஸூத்த அஸூத்த பொருள்களில் எழுபது விதமான தத்துவங்களில் உள்ளாள்

இயத் வஸ்த்ருதிம் ஆபந் நாமீ மிமாம் பரமேஸ்வரீம்
விசிந்த்ய பரமம் யாதி பதம் விஷ்ணோ ஸ்தானம் –53-

இப்படிப்பட்ட பரமேஸ்வரியை ஆராதிப்பவன் உயர்ந்த நிலையான விஷ்ணுவின் இடத்தை அடைகிறான்

யதா யத்ர கதா ஸேயம் ஸூத்த அஸூத்தே ததாத்வநி
தத்ர தத்ர த்வஜ ஹதீ விஷ்ணோ ஸம்பந்தமீ ஸ்திதா –54-

இப்படி பட்ட ஈ அஷரத்தால் குறிக்கப்படும் அந்த சக்தியானவள்-ஸூத்த அஸூத்த ஸ்ருஷ்டிகளில் ஈடுபட்டாலும்
தனக்கும் விஷ்ணுவுக்கும் உள்ள சம்பந்தம் பிரியாமல் என்றுமே சேர்ந்தே உள்ளாள்

ஏக த்வி த்ரயாதி யோகேந ஸ்வர வ்யஞ்ஜந ரூஷிதா
ஸூத்த அஸூத் தாதவ வரகஸ்தா நாநா பேதோப பாதித–55-

அவள் பல ஸ்ருஷ்டிகளிலும் நிறைந்தவளாக -ஓன்று இரண்டு மூன்று என்று பல ஸ்வரங்கள் மற்றும்
வியஞ்ஜன வடிவங்களில் இருப்பவளாக பலவித பேதங்களுடன் உள்ளாள்-

ஜடோ பராக ஹீநயா அஸ்ய ஏவ புந ஸ் த்ரிதா
ஜேய ஸ்தூலாதி ரூபேண விபேதஸ் தத்த்வ சிந்தகை –56-

மேலும் உள்ளதான ஜ -ட -ஆகியவற்றுடன் சம்பந்தம் இல்லாததான அவளுடைய மூன்றுவிதமான பிரிவுகளை –
தத்வத்தைக் குறித்துச் சிந்தித்தபடி உள்ளவர்கள் அறிய வேண்டும்-

ஸ்ருஷ்டிக்ருத் ஸம்யுதா ஸ்தூலா ஸூஷ்மா வ்யாமேச ஸம்யுதா
நிரஞ்ஜநா பரா சேயமீ இத்யேவ அநு ராகிணீ –57-

ஸ்ருஷ்ட்டிக்ருதுடன்-அத்தியாவது-ஹ்-இணைந்து உள்ள போது அவள் ஸ்தூலமான நிலையில் உள்ளாள்
வ்யாமேசத்துடன் -அதாவது ம் -இணைந்து உள்ள போது அவள் ஸூஷ்மமான நிலையில் உள்ளாள்
அவள் ஈ -என்பதுடன் இணைந்த பொழுது தோஷம் அற்ற சக்தியாக உள்ளாள்

நிஷ்கம்பா தீப லேகேவ பத்நீ விஷ்ணோரியம் பரா
ஸர்வேஷூ ஆதார பத்மேஷு நிச்சல் ஏவ அவதிஷ்டதே–58-

மஹா விஷ்ணுவின் தர்மபத்னியான அவள் ஆதார பத்மங்களிலும் அசையாத தீபம் போன்று உள்ளாள் –

ஆபஸ்தி தேசாதா மூர்த்த ப்ரஹ்மயா நமநு வ்ரதா
ஏகேயம் உஜ்ஜ்வலா தீப்தா பாவாந ச யஸஸ்விநீ –59-
ப்ரஹ்ம ரந்த்ராத் விநிஷ் க்ரந்தா மஹா பத்மமுகே யுஷீ
ஓத ப்ரோதாத்மிகா சேயம் பரமா நந்தா வர்தமநி –60-
விலாப்ய மார்த்வயம் ரூபம் அம்ருதம் ப்லாவயேந் நரம்
மந்த்ராணாம் மந் மயா நாம் ஹி மந்த்ரைர் விஷ்ணு மயை ஸஹ –61-

வயிற்றின் அடிப்பாகம் தொடங்கி தலையின் உச்சி பாகம் முடிய ப்ரஹ்மத்தின் பாதையில் செல்கிற தேஜஸ் மிக்க ஒளிர்பவளான தூய்மைப்படுத்தும் சக்தியானவள்
தலையின் உச்சியில் உள்ள திவாரம் வழியே வெளியே செல்லுகிறாள்
இவ்வாறு வெளியேறும் அவள் உயர்ந்த தாமரையை அடைகிறாள்
உயர்ந்த ஆனந்தத்தின் பாதையாக உள்ள அவள் என்னையே சாரமாகக் கொண்டுள்ள அனைத்து மந்த்ரங்களுடைய சாரமாகவும்
மஹா விஷ்ணுவை சாரமாகக் கொண்டுள்ள அனைத்து மந்திரங்களின் சாரமாகவும் உள்ளாள்
அவளே உபாசகனுடைய இறப்பை அழித்து -மீண்டும் பிறக்காமல் செய்து -அம்ருதத்தால் நனைக்கிறாள்

ஸா மே நூந மநூந ஸ்ரீ ரிதி சங்க்யா பரா ஹி யா
தே ச சங்க்யா த்வயா மந்த்ரா ஜபாத் போக அபவர்கதா –62-

ஐநூறு எண்ணிக்கைகள் கொண்டதான அந்த உயர்ந்த மந்த்ரங்கள் மிகவும் சக்தி கொண்டவை ஆகும் –
இவற்றை சாங்க்யர்களுடைய அத்வயா மந்த்ரங்களுடன் சேர்த்துக் கூறும் போது
அவை இன்பம் மற்றும் மோக்ஷத்தை அளிக்கின்றன –

அஸ்யா ஏவ பரா யாஸ்து விப்ருஷ பரிகீர்த்திதா
யதா ஹி கிரண வ்ராதம் தேஜஸ்தவம் வியாப்ய திஷ்டதி -63-

யதா ஹி பார்த்திவான் பாவான் வியாப்ய ஸ்தைர்யம் வ்யவஸ்திதம்
நாநா விபவ ஸம்ஸ்தானம் நாநா ரஸந ஸம் ஸ்திதம் -64-

பாஹ்யாமாப் யந்தரம் சைவ பாவம் ஸப்த மயம் சமம்
வ்யாப்யைவமீ ஸ்திதா தேவீ விஷ்ணு பத்நீ யஸஸ்வி நீ –65-

இந்த்ர மந்த்ரங்கள் -தேவியின் துளிகளாக வர்ணிக்கப் படுகின்றன
எவ்விதம் தேஜஸ் நிறைந்த வஸ்துவில் ஒளியானது பரவி நிற்கின்றதோ -அதே போன்று
ஈ -என்னும் அக்ஷரத்தில் உள்ளவளும் அனைத்து விபவங்களிலும் பரவி நிற்பவளுமாகிய விஷ்ணுவின் பத்னியானவள்
அந்த விபாவங்களுடைய உள் மற்றும் புற இருப்பாக ஸப்த ப்ரஹ்மத்துடன் ஒன்றியவளாக இருக்கிறாள் –

ஸ்தூல ஸூஷ்மாதி பேத அயம் யதா வத் சக்ர தர்சித
தாரி காயா இதா நீம் த்வமங்காதீநி ஸ்ருணுஷ்வ மே –66-

சக்ரனே இப்படியாக தாரிக்காவின் ஸ்தூலம் மற்றும் ஸூஷ்மம் ஆகிய பல நிலைகள் குறித்து உனக்கு நான் கூறினேன்
அடுத்து அவளுடைய அங்க மந்த்ரங்கள் குறித்து உனக்குக் கூறுகிறேன்

ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -32- அத்யாயம் -ஸம்பூர்ணம் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம

ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் வைபவம்– ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

June 3, 2022

திருநக்ஷத்ரம்: ஆவணி ரோஹிணி

அவதார ஸ்தலம்:ஸ்ரீ மதுர மங்கலம்

ஆசார்யன்: கோயில் கந்தாடை ரங்காசார்யர் ஸ்வாமி (சண்டமாருதம் தொட்டாசார்யர் திருவம்ஸம்)

சிஷ்யர்கள்: பலர்

பரமபதித்த இடம்: ஸ்ரீ பெரும்பூதூர் 

இவர் மதுரமங்கலத்தில் ராகவாசார்யருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஆவணி ரோஹிணி அன்று அவதரித்தார். கண்ணன் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் திருநக்ஷத்திரத்தன்று பிறந்ததால் இவருக்கும் கிருஷ்ணன் என்றே பெயரிட்டனர். இவர் சீரியதான ஸ்ரீவத்ஸ குலத்தில் அவதரித்தார். இவர் ஆங்கில ஆண்டு 1805இல் அவதரித்தார்.(1834-ஜய வருஷம் என்றும் சொல்வர் )

அவருடைய பெற்றோர்கள் (ராகவாச்சார்யர் -ஜானகி அம்மாள் )தக்க வயதில் அந்தந்த வயதிற்குரிய வைதீக ஸம்ஸ்காரங்களை கிருஷ்ணமாசார்யருக்கு செய்து வைத்தனர். சிறு வயது முதற்கொண்டே இவர் எம்பெருமானிடத்தில் மிகுந்த பற்றுதல் உடையவராய் விளங்கினார். எப்பொழுதும் எம்பெருமானின் விக்ரஹங்களை வைத்துக்கொண்டு விளையாடுவார். மேலும் பகவத் விஷங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

ஒரு நாள் இவர் விஸ்மயப்படும்படி திருவேங்கடமுடையான் திரு மேனி ஒன்றுமே சேவை சாதித்து மற்ற திருமேனிகள் எல்லாம் மறைய
நிலை நின்ற திருவேங்கடத்தாயன் நாண் மலர்த்தாமரை அடிகளை மனத்தாலும் வாயாலும் போற்றி மகிழ்ந்து வந்தார் –

உரிய வயதில் இவருக்கு மணம் முடித்து வைக்க விரும்பிய இவருடைய தந்தையார், பெண் பார்க்கும் படலத்தை துவக்கினார். ஒருசமயம் பெண் தேடும் நிமித்தம் இவருடைய தந்தையாரும் கிருஷ்ணமாசார்யரும் வெளியூர் புறப்பட்டனர். பிரயாணத்தின்போது, ஒரு தம்பதியினர் தங்களுடைய குழந்தையுடன் பயணித்ததை கவனிக்க நேர்ந்தது. அதில் கணவன் அதிகப்படியான சுமைகளுடன் குழந்தையையும் சுமந்தபடி தன் மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவதும் பின்னர் அவ்வப்போது அவள் மீதுள்ள மோகத்தின் காரணமாக அமைதியடைவதுமாய் இருப்பதை காணமுடிந்தது. இதைக் கண்ணுற்ற கிருஷ்ணமாசாரியர் அதிர்ந்து போனார். உடனே -விஹித போகம் ஸ்வரூப விருத்தம் -ஸிஷ்ட கர்ஹிதம் -பிராப்தி பிரதிபந்தகம் -என்று தெளிந்தவராய் தன்னுடைய தந்தையாரிடம் தனக்கு திருமணமே வேண்டாம் எனக் கூறிவிட்டார்.

இச்சம்பவத்திற்கு பிறகு, ஒரு சமயம் கோயில் கந்தாடை ரங்காசார்யர் அவருடைய கப்பியாமூர் கிராமத்திற்கு வந்திருந்தபோது ஆசார்ய ஸம்பந்தம் கிடைக்கப்பெற்றார். ஆசார்யர் இவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்து ஸத் ஸம்ப்ரதாயத்தின் முக்கிய தத்துவார்த்தங்ளைப் போதித்தார். திருவாராதனப் பெருமாளும் எழுந்து அருளப் பண்ணிக் கொடுத்து அருளினார்
பாலப்பருவத்தில் சேவை சாதித்து அருளின திருவேங்கடத்துறை திருமாலே இங்கும் சேவை ஸாதிக்கக் கண்டு ஆனந்த பரவசரானார் -இதனைத் தொடர்ந்து ஆசார்ய கைங்கர்யத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதுடன் ஆசார்யருடன் இணைந்தே பல திவ்ய தேசங்களுக்கும் யாத்திரைகள் சென்றுவந்தார்.

ஒரு சமயம் அவர் திருவேங்கடத்தில் தங்கி இருந்தபோது, எம்பார் அவருடைய கனவில் தோன்றி மதுரமங்கலம் வரும்படி அழைத்து தனக்கு குளிராக இருப்பதாகவும் அதனால் ஒரு சால்வை கொண்டுவரும்படியும் பணித்தார். கிருஷ்ணமாசார்யர் திருவேங்கடமுடையானிடம் சென்று விஷயத்தைச் சொல்லி உத்தரவு வேண்டி நின்றார். திருவேங்கடமுடையானும் தன்னுடைய சால்வையையே கொடுத்து ஆசீர்வத்து விடை கொடுத்தனுப்பினார். கிருஷ்ணமாசார்யர் அந்த சால்வையை மதுரமங்கலம் எடுத்துச் சென்று எம்பாரிடம் சமர்ப்பித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, எம்பாரின் ஆசீர்வாதத்தினால் கிருஷ்ணமாசார்யருக்கு சன்னியாசத்தில் தீராத விருப்பம் மேலிட்டது.

திருவேங்கடத்திற்கு திரும்பிய அவர் வகுளாபரண ஜீயரிடம் (பெரிய ஜீயர்) தனக்கு சன்னியாஸாச்ரமத்தை அளிக்கும்படி வேண்டினார். கிருஷ்ணமாசார்யர் இன்னும் வயதில் மிகவும் இளையவராக இருப்பதாக நினைத்த வகுளாபரண ஜீயர் சில காலம் பொறுத்திருக்கும்படி கூறினார். ஆனால், கிருஷ்ணமாசார்யர், எம்பாருடைய அருளினால் தான் பற்றற்ற நிலையை எட்டிவிட்டதாகவும் தன்னால் தொடர்ந்து ஸம்ஸாரத்தில் நீடிக்க இயலாது என்று கூறியும் தனக்கு உடனே ஸன்யாஸத்தை அளிக்கும்படி வற்புறுத்தினார்.

வகுளாபரண ஜீயர், எம்பெருமான் ஆணை அதுவானால் தனக்கு சித்தம் எனச் சொல்லிவிட்டு திருமலைக்குச் சென்று விட்டார். வழியில் முறையாக தயார் செய்யப்பட்ட த்ரிதண்டம் ஒன்றை கண்டார். அதையும் எடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார். இரவு நித்திரையில் எம்பெருமான் அவர்முன் தோன்றி கிருஷ்ணமாசார்யருக்கு அந்த த்ரிதண்டத்தை அளித்து ஸந்யாஸாச்ரம ஸ்வீகாரம் செய்து வைக்கும்படி கட்டளையிடுகிறார். மிக்க மகிழ்ச்சி அடைந்த பெரிய ஜீயர், கிருஷ்ணமாசாரியாரை அழைத்து அவர்க்கு ஸந்யாஸாச்ரம ஸ்வீகாரம் செய்து செய்து வைத்தார்.

கிருஷ்ணமாசார்யருக்கு திருவேங்கடமுடையானிடம் இருந்த பக்தியை அறிந்த வகுளாபரண ஜீயர் அவருக்கு திருவேங்கட ராமானுஜ ஜீயர் என பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஸ்ரீ மதுர மங்கலம்  திரும்பிய திருவேங்கட ஜீயர், சில காலம் அங்கேயே தங்கியிருந்து எம்பாருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். அது முதல் மதுரமங்கலம் எம்பார் ஜீயர் என அன்புடன் எல்லோராலும் அழைக்க்ப்பட்டார்.எம்பார் ஜீயர் சமீபத்தில் எப்போதும் ஸர்ப்ப ஸஞ்சாரம் கண்டு ஸமீபஸ்தர் பயப்பட்டார்கள் –

அவர் பல திவ்யதேசங்களுக்கு விஜயம் செய்தபின் இறுதியாக
எம்பார் ஸ்வாமி ஒரு சமயம் திருக்குருகூர் எழுந்து அருளி ஆழ்வாரை சேவித்துக் கொண்டு இருக்க
திருவரங்கத்தில் பெரிய பெருமாளை சேவித்து இருக்கத் திரு உள்ளமாய்
அன்று இரவு இவர் ஸ்வப்னத்தில் திருநாராயண புரம் தொட்டாச்சார்யார் சேவை சாதித்து
நம் வார்த்தைகளைக் கேட்பீராக

மஸ்தகம் ஸ்ரீ சடாராதிம் நாதாக்யம் முக மண்டலம்
நேத்ர யுக்மம் ஸரோஜாஷம் கபோலவ் ராகவன் ததா

வக்ஷஸ் ஸ்தலம் யாமு நாக்யம் கண்டம் ஸ்ரீ பூர்ண தேசிகம்
பஹு த்வயம் கோஷ்டி பூர்ணம் ஸைல பூர்ணம் ஸ்தந த்வயம்

குஷிம் து வர ரங்கார்யம் ப்ருஷ்டம் மாலா தரம் ததா
கடிம் காஞ்சீ முனிம் ஜ்ஜேயம் கோவிந்தார்யம் நிதம்பகம்

பட்ட வேதாந்தி நவ் ஜங்கே ஊருயுக்மம் மதாத்மஜம்
கிருஷ்ணம் ஜானு யுகம் சைவ லோகம் ஸ்ரீ பாத பங்கஜம்

ரேகாம் ஸ்ரீ சைல நாதாக்யாம் பாதுகாம் வர யோகிநம்
புண்ட்ரம் ஸேநா பதிம் ப்ரோக்தம் ஸூத்ரம் கூர பதிம் ததா

பாகி நேயம் த்ரி தண்டஞ்ச காஷாயஞ் சாந்த்ர பூர்ணகம்
மாலாஞ்ச குருகே சார்யம் சாயாம் ஸ்ரீ சாப கிங்கரம்

ஏவம் ராமாநுஜார்யஸ் யாவயவாந கிலாந் குரூன்
அவயவிநம் மஹாத்மா நம் ராமானுஜ முனிம் பஜே

இப்படி சர்வ ஆச்சார்யர்களும் அவயவங்களாய் தான் அவயவியாய்
மாறன் அடி பணிந்து உய்ந்தவராய் -பொன்னரங்கம் எண்ணில் மயலே பெருகுமவராய்
உபய விபூதி சாம்ராஜ்ய பட்டாபிஷேக லஷ்மீ சம்பன்னராய்
எழுந்து அருளி இருக்குமவரான நம் இராமானுசன் திருவடித் தாமரைகளையே தஞ்சமாகப் பற்றி ஸ்ரீ பெரும்பூதூரிலே நித்ய வாஸமாக இரும் என்று அருளிச் செய்தார்-

ஸ்ரீ எம்பெருமானாரின்  அவதார ஸ்தலமான  ஸ்ரீ பெரும்பூதூர்  வந்தடைந்தார். அங்கேயே தங்கி எம்பெருமானாருக்கு சேவை செய்யவும் தீர்மானித்தார். அவருடய சீடர்கள் அவர் தங்குவதற்கேற்ப கோயிலுக்கு தெற்கே ஒரு மடத்தையும் நிறுவினர்.

ஒரு நாள் ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ பகவத் விஷய காலஷேபத்துக்கு ஸ்வாமிகள் காத்து இருக்க
ஜீயர் ஸ்வாமி ஓர் மண்டபத்தின் மண்ணை இருந்து துழாவி இது வாமனன் மண் என்று கூறி மண்ணை எடுத்து சிரம் மேல் கொண்டார் –
முதலிகள் என் என்று வினவ
ஆதி கேசவப் பெருமாள் குதியுரை நம்பிரான் மீது ஆரோஹித்து மண்டபத்தைச் சுற்றி எழுந்து அருளிக் கோயிலுக்குள் பிரவேசித்தார்
அந்த அடிச் சுவட்டைக் காண ஆசைப்பட்டுத் தேடிக் கண்டு களித்தேன் என்றார் –

அவர் ஸ்ரீபெரும்பூதூரில் இருந்த காலங்களில் பல ஸ்ரீவைஷ்ணர்கள் அவரை அணுகி அவரிடம் நம்முடய ஸத் ஸம்ப்ரதாயத்தின் மிக உயர்ந்த கோட்பாடுகளைக் கற்று அறிந்தனர். அவரும் நமது பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகளையும் அவற்றில் அடங்கியுள்ள தத்துவார்த்தங்களையும் விளக்கியதோடு அவருடய காலத்தில் பல வித்வான்களையும் உருவாக்கினார்.

அவர் இந்த லீலா விபூதியில் குறுகிய காலமே வழ்ந்து தன்னுடைய 77 வது வயதில் விஷு வருடம் தை மாதம் கிருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதியில் பரம பதத்திற்கு எழுந்தருளினார்.

அவர் இயற்றிய பல நூல்களில் தலை சிறந்ததாக போற்றப்படுவது பிள்ளை லோகாசார்யர் இயற்றிய ஸ்ரீவசனபூஷணத்திற்கு மணவாள மாமுனிகள் அருளிச்செய்த வ்யாக்யானத்திற்கான அரும்பதம் (விளக்க உரை நூல்). ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்திற்கு மிக உன்னதமான விளக்க உரை எழுதியதோடு நில்லாமல், ஸ்ரீவசனபூஷணத்தின்படி தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பகவத் மற்றும் பாகவத கைங்கர்யத்திற்கே அர்ப்பணித்தார். ஸத் ஸம்ப்ரதாயத்தின் தத்துவங்களை நிலை நிறுத்தக்கூடிய பல கிரந்தங்களையும் இவர் சாதித்துள்ளார்.

விஷ்ணுபுராணம், தத்வ த்ரயம், யதீந்த்ர மத தீபிகா போன்ற நூல்களில் உள்ள விளக்கங்களை அடிப்படையாகக்கொண்ட தன்னுடைய நூலில் ப்ரஹ்மாண்டம், அதன் வடிவம் பற்றி மிக அழகாக விவரித்துள்ளார். இந்த விளக்கம் ஒரு சித்திர வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீப காலத்தில் ஸ்ரீ ரவி எனப்படும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவரால் மறுபதிப்பீடாக வெளியிடப்பட்டது.

அவருடைய படைப்புகளில் சில:

  1. ஸ்ரீவசனபூஷணம் அரும்பதம்
  2. ஸித்தோபாய ஸுதரிசனம்
  3. ஸத் தரிசன ஸுதரிசனம்
  4. துத் தரிசன கரிஸனம்
  5. விப்ரதிபத்தி நிரஸனம்
  6. நம்மாழ்வாரின் “செத்தத்தின் …” ஸ்ரீஸூக்தி வ்யாக்யானம்
  7. சரணாகதிக்கு அதிகாரி விசேஷணத்வ ஸமர்த்தனம்
  8. ஜ்யோதிஷ புராணங்களுக்கு ஐக கண்ட்ய ஸமர்த்தனம்
  9. துருபதேஸதிக்காரம்
  10. சரண சப்தார்த்த விசாரம்
  11. ச்ருத ப்ரகாசிகா விவரநம்
  12. முக்தி பதசக்தி வாதம்
  13. ப்ரஹ்மபத சக்தி வாதம்
  14. பூகோள நிர்ணயம்
  15. த்யாக சப்தார்த்த டிப்பணி
  16. கீதார்த்த டிப்பணி
  17. கைவல்ய ஸத தூஷணி
  18. ஸ்ரீராமானுஜ அஷ்டபதி
  19. ஸித்தாந்த தூளிகை
  20. ஸித்தோபாய மங்கள தீபிகை
  21. தர்மக்யா ப்ராமாந்ய ப்ரகாசிகை
  22. ஸித்தாந்த பரிபாஷை
  23. ஸ்ரீராமானுஜரின் தெய்வீக வடிவத்தில் மூழ்குதல் – திருமஞ்ஞன கட்டியம், மற்றும் பல.

இவரே ஸ்ரீ பெரும்பூதூரில் நம்பிள்ளை லோகாச்சார்யார்களை எழுந்து அருளப் பண்ணுவித்து உத்ஸவம் கண்டு அருளப் பாரித்து செய்து அருளினார் –
உடையவர் திருவரங்கச் செல்வத்தைத் திருத்தினால் போலே -எம்பார் ஜீயர் ஸ்வாமியும் உடையவருடைய செல்வத்தைச் சீர் திருத்தி
ஸ்ரீ ராமானுஜ முக்ய தேசிக லஸத் கைங்கர்ய ஸம் ஸ்தாபராக எழுந்து அருளி இருந்தார்
உடையவர் திருமஞ்சனக் கட்டியம் அருளிச் செய்தார்
ஸ்ரீ பெரும் பூதூரில் வசந்த மண்டப கைங்கர்யம் -கோதா விலாசம் நந்தவனம் -வன போஜன உத்ஸவம் நடத்தி அருளினார் –

இவ்வாறாக, அப்பன் திருவேங்கட ராமானுஜ ஜீயர் அவர்களின் புகழ்மிக்க வாழ்வில் சில துளிகளை அனுபவித்தோம். அவர் ஒரு தலைசிறந்த ஞானியாக விளங்கியதோடு தன்னுடைய படைப்பிலக்கியங்களின் மூலம் நம்முடைய ஸம்ப்ரதாயதிற்கு பலவகையில் தொண்டு புரிந்துள்ளர். நாம் அனைவரும் ஸ்வாமிகளின் திருக்கமல பாதங்களை பணிந்து பகவத், பாகவத, ஆசார்ய விஷயங்களில் அவரைப்போலவே நாமும் ஞானம், பக்தி ஆகியவற்றைப் பெற்று வாழ்வோமாக.

அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் தனியன்:

ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே

 

————————————————

 

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் மாத திருநக்ஷத்ரம் –ஸ்ரீ ஸ்வாமி எம்பெருமானார் மாத திரு நக்ஷத்ரம்–ஸ்ரீ நல்லான் வைபவம் 🙏

June 2, 2022

இன்று மிருகசீரிஷம்…..

ஸ்வாமி திருக்கச்சி நம்பிகள் 🙏

மாத திருநக்ஷத்ரம்

இவர் பூவிருந்தவல்லியில் அவதரித்தவர்.
காஞ்சி பூர்ணர் மற்றும் கஜேந்திரதாசர் என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் தினமும் காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்து வந்தார்.

அந்தக் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம் நேரடியாக தேவப்பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாருடன் உரையாடவும் வல்லவர்.

வாரணாசி யாத்திரையின் போது தன்னைக் கொல்ல நடந்த சதியிலிருந்து தப்பித்தபின் காஞ்சி திரும்பிய இளையாழ்வார் (ஸ்ரீராமானுஜர்),

தன் தாயாரின் அறிவுரையின்படி ஆளவந்தாரின் சீடரும் காஞ்சி தேவப்பெருமாளின் அந்தரங்க கைங்கர்யபரரான

திருக்கச்சி நம்பிகளைத் தன்னுடைய வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார்.

நம்பிகள், இளையாழ்வாரைக் காஞ்சி தேவப்பெருமாள் கோயிலிலிருந்து சிறிது தூரத்திலுள்ள சாலைக்கிணற்றிலிருந்து

தினமும் தீர்த்தம் கொண்டு வந்து காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்த கைங்கர்யம் செய்யும்படி கூறினார்.

இளையாழ்வாரும் அந்த ஆணையை மகிழ்வுடன் ஏற்று தினமும் தீர்த்த கைங்கர்யத்தைச் செய்து வந்தார்.

பெரிய நம்பிகள் ஆளவந்தாரின் விருப்பத்தின் பேரில், ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக இளையாழ்வாரை ஆசாரியராக  நியமிக்கவும்,

அதன் பொருட்டு இளையாழ்வாரை சம்பிரதாயத்தில் ஈடுபடுத்தவும் எண்ணம் கொண்டு காஞ்சிபுரம் விஜயம் செய்தார்.

பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகளை அணுகித் தான் வந்த காரியத்தை எடுத்துரைத்தார்.

திருக்கச்சி நம்பிகளும் அதற்கு மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு பெரிய நம்பிகள் ஆளவந்தாரின்  பெருமைகளை இளையாழ்வாருக்கு  எடுத்துரைத்தார்.

பெரிதும் ஈர்க்கப்பட்ட இளையாழ்வார் ஆளவந்தாரை சரணடையும் பொருட்டு பெரிய நம்பிகளுடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.

ஆனால் ஆளவந்தாரை இளையாழ்வார் சந்திப்பதற்குள் ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளிவிட்டார்.

இதனால் மனமுடைந்த இளையாழ்வார் காஞ்சிபுரம் திரும்பி, தீர்த்த கைங்கர்யத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்..

நாளடைவில் இளையாழ்வாருக்கு திருக்கச்சி நம்பிகளிடம் மிகுந்த ஈடுபாடு ஏற்பட அவரையே சரணடைந்து தனக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்துவித்துத் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

திருக்கச்சி நம்பிகள் தான் பிராமணன் அல்லாததால் தனக்கு ஆசார்யனாகும் தகுதி இல்லை என்றும் அதனால் பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைக்க இயலாது என்றும் தன்னுடைய இயலாமையை எடுத்துக் கூறினார்.

சாஸ்திரங்களில் தனக்கு இருந்த அதீத நம்பிக்கையினால் திருக்கச்சி நம்பிகளின் கூற்றை இளையாழ்வார் வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டார்.

ஒரு முறை திருக்கச்சி நம்பிகளின் உச்சிஷ்டத்தை (அவர் உண்ட பிரசாதத்தின் மிகுதியை) ஸ்வீகரிக்க விரும்பிய இளையாழ்வார், திருக்கச்சி நம்பிகளைத் தன் இல்லத்திற்கு விருந்திற்கு வருமாறு அழைத்தார்.

திருக்கச்சி நம்பிகளும் இளையாழ்வாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

மிகுந்த மகிழ்ச்சியடைந்த இளையாழ்வாரும் தன் மனைவியிடம் விருந்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு தன்னுடைய தீர்த்த கைங்கர்யத்துக்காகச் சென்றிருந்தார்.

அவர் வீடு திரும்புவதற்குள் திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வார் வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டு சென்று விட்டார்.

இளையாழ்வாரின் மனைவி இளையாழ்வார் வீடு திரும்புவதற்குள், திருக்கச்சி நம்பிகள் (அவர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்பதால்) சாப்பிட்ட இலையை அப்புறப்படுத்தி விட்டு, அவர் சாப்பிட்டு முடித்த இடத்தையும் சாணமிட்டு மெழுகி சுத்தம் செய்தபின் தானும் குளித்து விட்டார்.

தன் கைங்கர்யத்தை முடித்து விட்டு வீடு திரும்பியதும் திருக்கச்சி நம்பிகளின் உச்சிஷ்டத்தை உண்ண எண்ணியிருந்த இளையாழ்வாருக்கு திருக்கச்சி நம்பிகளின் மகிமையை அறியாமல் அவரது குலத்தின் தாழ்ச்சியை மட்டும் நினைத்து தன் மனைவி தஞ்சம்மாள் செய்த செயல்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் மன வருத்தத்தையும் அளித்தன.

நம்பிகள் தேவப்பெருமாளுடன் நேரிடையாக உரையாட வல்லவர் என்பது அனைவரும் நன்கு அறிந்திருந்த உண்மை. இளையாழ்வாரின் மனதில் நெடுநாட்களாக சில சந்தேகங்கள் இருந்துவந்தன.

அவர் திருக்கச்சிநம்பிகளை அணுகி தன்னுடைய சந்தேகங்களுக்கான விடைகளை (குறிப்பு: ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷனுடைய மறு அவதாரம் ஆகியபடியால் அனைத்தும் அறிந்தவர். என்றாலும் பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளை ஸ்தாபிக்கும் முகமாக)   தேவப்பெருமாளிடமிருந்து பெற்றுத்தருமாறு வேண்டினார்.

அன்றைய தினம் இரவு தன்னுடைய கைங்கர்யங்களை முடித்திருந்த நம்பிகளை தேவப்பெருமாள் வழக்கமான மிகுந்த கருணையுடன் நோக்கினார்.

தேவப்பெருமாள் அனைத்தும் அறிந்தவர் ஆகையால் நம்பிகளை நோக்கி “நீர் ஏதாவது கூற விரும்புகிறீரா?” என்று வினவினார்.

நம்பிகளும் பெருமாளிடம் இளையாழ்வாரின் மனதில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும் அதற்கான விளக்கங்களைத் தந்தருளுமாறு வேண்டினார்.

உடனே தேவப்பெருமாளும் “நான் கலைகளைக் கற்பதற்காக ஸாந்திபினி ஆஸ்ரமத்திற்கு சென்றதைப் போல (ஆதிசேஷ அவதாரமான) அனைத்து சாத்திரங்களிலும் வல்லவரான  இளையாழ்வாரும் தன்னுடைய சந்தேகங்களுக்கான விடைகளை என்னிடம் கேட்கிறார்” என்று கூறினார்.

பிறகு தேவப்பெருமாளும் அனைவராலும் “
ஆறு வார்த்தைகள்” என்று பிரபலமாக அழைக்கப்படும் (ஆறு கட்டளைகளை) நம்பிகள் வாயிலாக இளையாழ்வாருக்கு அனுக்கிரஹித்தருளினார். அவைகள்:

அஹமேவ பரம் தத்வம் – நானே எல்லாவற்றுக்கும் மேலான மெய்ப்பொருள்

தர்சனம் பேத ஏவ – ஜீவாத்மாக்களும்/அசேதனங்களும் என்னிலிருந்து வேறுபட்டவை (அவை என்னுடைய சரீரமாக விளங்குபவை)

உபாயம் ப்ரபத்தி –
“என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்” என்னிடத்தில் சரணம் அடைவது ஒன்றே என்னை அடைவிக்கும் வழி.

அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம் – தங்களின் மரணத்தருவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை. வராஹ சரம ஸ்லோகத்தில் நானே அறிவித்தது போல, உன்னுடைய அந்திம காலத்தில் நானே உன்னைப்பற்றிய சிந்தனையை ஏற்கிறேன். (நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்கள் நமக்கு காட்டிச்சென்ற இனிமையான பாதை – நாம் எல்லா நேரத்திலும் நம்முடைய ஆசார்யரைப் பற்றியே சிந்தித்தபடி இருக்கவேண்டும்)

தேஹாவஸானே முக்தி –சரணாகதர்கள் தற்போதுள்ள தங்களுடைய இந்த சரீரத்தின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர்

பூர்ணாசார்ய பதாச்ரிதா – மஹாபூர்ணரை (பெரிய நம்பிகளை) ஆசார்யனாக ஏற்றுக்கொள்வாயாக

திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வாரிடம் சென்று பகவானின் இந்த ஆறு கட்டளைகளையும் தெரிவித்தார்.

இளையாழ்வாரும் திருக்கச்சி நம்பிகளின் பேருதவிக்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.

அதே சமயம் இளையாழ்வாரும் தன்னுடைய விருப்பமும் அதுவே என்று கூற, திருக்கச்சி நம்பிகள் பகவானின் திருவுள்ளமும் இளையாழ்வாரின் திருவுள்ளமும் ஒரே விதமாக இருப்பது கண்டு பேர் உவகை எய்தினார்

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இளையாழ்வாரும் பெரிய நம்பிகளை ஆசார்யனாக ஏற்று மதுராந்தகத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்துகொண்டு ஸ்ரீராமானுஜர் என்ற திருநாமத்தை ஏற்றார்.

இவற்றைத்தவிர, திருக்கச்சி நம்பிகளைப் பற்றிய விவரங்கள் பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களில் காணப்படவில்லை.

வியாக்யானங்களில் அவரைப்  பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அவை:

பெரியாழ்வார் திருமொழி – 3.7.8 – திருவாய்மொழிப் பிள்ளை ஸ்வாபதேச வியாக்யானம் – திருக்கச்சி நம்பிகள் தேவப்பெருமாளிடம் எம்பெருமானுக்கு உகந்த திருநாமம் ஒன்றை தனக்கு சூட்டுமாறு வேண்டி நிற்க, (கஜேந்திராழ்வான் காஞ்சியில் தேவபெருமாளை வழிபட்டதால், கஜேந்திராழ்வான் தேவப்பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானவர் என்பதால்) எம்பெருமானும் கஜேந்திரதாஸர் என்ற திருநாமத்தை திருக்கச்சி நம்பிகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்.

திருவிருத்தம் – 8 – நம்பிள்ளை ஈடு – ஒரு முறை எம்பெருமானார் சில ஸ்ரீவைஷ்ணவர்களுடன் கோஷ்டியாக அமர்ந்திருந்தார். திடீரென திருக்கச்சி நம்பிகளைப் பற்றிய நினைவு வந்தவராக

கோஷ்டியை நோக்கி யாராவது ஒருவர் காஞ்சி சென்று திருக்கச்சி நம்பிகளின் நலம் விசாரித்து வர இயலுமா என்று வினவினார்.

அப்போது கோஷ்டியில் ஒருவரும் முன்வரவில்லை. மறுநாள் காலை
பெரிய நம்பிகள் (மஹாபூர்ணர்) எம்பெருமானாரை அணுகி எம்பெருமானாருக்குத் திருவுள்ளாமானால் தான் காஞ்சிபுரம் சென்று வருவதாகக் கூறினார்.

எம்பெருமானாரும் மிக்க மகிழ்ச்சியடைந்தவராக பெரிய நம்பிகள் தன் மீது பூரண அதிகாரம் உள்ளவர் ஆகையால் தன் விருப்பத்தை நிறைவேற்றும் தகுதியும் அவருக்கே உள்ளது என்று கூறி அதற்கு சம்மதித்தார்.

பெரிய நம்பிகளும் காஞ்சிபுரம் சென்று திருக்கச்சி நம்பிகளைச் சந்ததித்து அவர் நலம் பற்றி விசாரித்துவிட்டு உடனடியாக ஸ்ரீரஙத்திற்குத் திரும்பத் தயாரானார். திருக்கச்சி நம்பிகள் எதிர் வரும் உத்ஸவத்தைக் காரணம் காட்டி பெரிய நம்பிகளை சில நாட்கள் கழித்து செல்லலாமே என்று கூறினார்.

பெரிய நம்பிகளோ, காஞ்சிபுரத்திற்கு வர ஒருவரும் முன்வராததாலேயே தான் வர நேர்ந்ததையும், மேலும் தான் வந்த காரியத்தின் நோக்கம் திருக்கச்சி நம்பிகளின் நலம் பற்றி விசாரித்தல் மட்டுமே அது நிறைவேறிவிட்டபடியால் உடனே கிளம்ப வேண்டும் என்று கூறினார்.

எம்பெருமானாரின் ஆசார்யரான பெரிய நம்பிகளே திருக்கச்சி நம்பிகளை சந்திப்பதற்காக காஞ்சிபுரம் சென்ற வந்ததிலிருந்து திருக்கச்சி நம்பிகளின் பெறுமையை நாம் நன்கு அறியலாம்.

ஆசார்ய ஹ்ருதயம் – 85ம் சூர்னிகை –

த்யாக மண்டபத்தில் ஆலவட்டமும் கையுமான அந்தரங்கரை வைதிகோத்தமர் அனுவர்த்தித்த க்ரமம் –

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ப்ராமண குலத்தில் பிறக்காத பாகவதர்களின் பெருமைகளைப்பற்றிக் குறிப்பிடும்போது, தியாக மண்டபம் என வழங்கப்படும் காஞ்சிபுரத்தில் தேவப்பெருமாளுக்கு ஆலவட்டம் வீசிக் கைங்கர்யம் செய்து வந்தவருக்கு (திருக்கச்சி நம்பிகளுக்கு) மிக உயர்ந்த வைதிகோத்தமரான (எம்பெருமானாரே) சேவை செய்ததை இவ்வாறாக குறிப்பிடுகிறார்.

மாமுனிகள் தன்னுடைய தேவராஜ மங்களம் 11வது ஸ்லோகத்தில் திருக்கச்சி நம்பிகளின் மேன்மையையும், தேவப்பெருமாளுக்கு அவர் மீதுள்ள பரிவையும் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ காஞ்சிபூர்ணமிச்ரேண ப்ரீத்யா ஸர்வாபிபாஷனே
அதிதார்ச்சாவ்யவஸ்தாய ஹஸ்தத்ரீஸாய  மங்களம்

திருக்கச்சி நம்பிகளிடம் உள்ள பேரன்பினால் தன்னுடைய அர்ச்சாவதாரப் பெருமைகளை குலைத்துக்கொண்டு உரையாடிய ஹஸ்திகிரீசனுக்கு ஸர்வ மங்களங்களும் உண்டாகட்டும்.

மாமுனிகள், இந்த ச்லோகத்தின் மூலம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் இடையே உள்ள உறவை தெளிவுபடுத்துவதுடன், நாமும் பக்தர்களை முன்னிட்டுக்கொண்டே பகவானை வழிபடவேண்டும் எனத் தெளிவுபடுத்துகிறார்.

திருக்கசி நம்பி தனியன்

தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம்
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம்
🙏🙏🙏🙏

இவர் அருளிச் செய்த
தேவராஜஅஷ்டகம்
என்னும் அற்புத ப்ரபந்தத்தின் மூலம் இவரின் அர்ச்சாவதார அனுபவத்தை அனுபவிக்கலாம் .. 🙏


இன்று திருவாதிரை..

ஸ்வாமி எம்பெருமானார் மாத திரு நக்ஷத்ரம்🙏

ஸகல சாஸ்த்ரங்களுக்கும் ஸங்க்ரஹம் திருவஷ்டாக்ஷரம்.. அதனுடைய பரம தாத்பர்யமாயும்,

ஆழ்வார்களுடைய திவ்ய ப்ரபந்தங்களின் ஸாரார்த்தமாயும்,
ஸ்ரீ மதுரகவிகளுடைய உக்தியாலும்
அநுஷ்டாநத்தாலும்
ப்ரகாசிதமாயும், நம் பூர்வாசார்யார்களின் உபேதச பரம்பரையாலே ப்ராப்தமாயும் சேதநர்களனைவர்க்கும் இன்றியமையாத ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களின் நிஷ்க்ருஷ்ட வேஷமாயும், பரம ரஹஸ்யார்த்தமாயு மிருப்பது சரம பர்வ நிஷ்டை. அஃதிருக்கும்படியை த் திருவரங்கத்தமுதனார்க்கு எம்பெருமானார் தமது நிர்ஹேதுக க்ருபையினாலே கூரத்தாழ்வான்
திருவடிகளிேல இவரை ஆச்ரயிப்பித்தருளி இவர் முகமாக உபேதசித்தருளினார். அங்கனம் உபேதச ப்ராப்தமான அந்தச் சீாிய பொருளை இவ்வமுதனார் தாம் அநவரத பாவநை பண்ணி எம்பெருமானார் திருவடிகைளை இடைவிடாது ஸேவித்துக்கொண்டு போந்தராய் அவருடைய திருக்கல்யாண
குணங்கைளத் தமது பத்திப் பெருங்காதலுக்குப் போக்குவீடாகப் பேசி அநுபவித்தே தீரவேண்டும்படியான நிலைமை தமக்கு உண்டானமையாலும் சரமபர்வநிஷ்டையே சீாியதென்கிற பரமார்த்தத்தைச் சேதநர்கட்கு எளிதில் உணர்த்த வேணுமென்கிற க்ருபாமூலகமான கருத்தினாலும் தாம் எம்பெருமானாருடைய திவ்யகுண சேஷ்டிதாதிகளை ப்ரேமத்துக்குத் தகுதியாகப் பேசுகிற பாசுரங்களாேலே அவருடைய வைபவங்களை அனைவர்க்கும் வெளியிடா நின்றுகொண்டு முன்பு ஆழ்வார் திருவடிகளுக்கே
அற்றுத்தீர்ந்த மதுரகவிகள் தமது நிஷ்டையைக்கூறும் முகத்தாலும் பிறர்க்கு உபேதசிக்கும் முகத்தாலும் உஜ்ஜீவநத்துக்கு உபயுக்தமான அர்த்தத்தை லோகத்தில் வெளியிட்டருளினதுபோல, இவர் தாமும் அவ்வகைகளாேலே ஆசார்யாபிமாந
நிஷ்டர்க்கு அறிந்து கொள்ளத்தக்க அர்த்தங்களையெல்லாம் மிக்க சுருக்கமும் மிக்க விாிவுமின்றி நூற்றெட்டுப் பாசுரங்கள் கொண்ட இத்திவ்ய ப்ரபந்த முகத்தால் அருளிச்செய்கிறார்.. . 🙏

நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,* நிறை வேங்கடப்பொற்
குன்றமும்* வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்*
உன்தனக்கு எத்தனை இன்பந் தரும் உன் இணைமலர்த்தாள்*
என்தனக்கும் அது,* இராமாநுச! இவை ஈந்தருளே……

எம்பெருமானாரே!
நிலை நின்ற பெரும்புகழும் அதிகமான நீர்ப்பெருக்கும் நிறைந்துள்ள திருவேங்கடமென்னும் அழகிய திருமலையும்
ஸ்ரீவைகுந்தமாகிய திருநாடும்
கொண்டாடத்தக்க திருப்பாற்கடலும்
தேவரீருக்கு
எவ்வளவு ஆநந்தத்தை விளைக்குமோ,
தேவரீருடைய உபய பாதாரவிந்தங்கள்
எனக்கும் அவ்வளவு ஆநந்தத்தை உண்டாக்கும்..
இப்படிப்பட்ட திருவடிகளை
அடியேனுக்குத் தந்தருள வேணும் ..

கீழ்ப்பாட்டில்…

அமுதனார் விளக்கிய பரமபக்தியை அறிந்த எம்பெருமானார் மிகவும் உகந்தருளி *இவர்க்கு
நாம் எதைச் செய்வோம்* என்றிருப்பதாகக் கண்ட அமுதனார், “ஸ்வாமிந்! அடிேயேனுக்குத் தேவரீர் வேறொன்றும்
செய்தருள வேண்டா; அடிேயனுக்கு ஸர்வஸ்வமாகிய இந்தத் திருவடித் தாமைரகைளத் தந்தருள வேண்டுமத்தனை
என்கிறார். … 🙏

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

—————

நல்லான்  வாழ்ந்தது கர்நாடக ராஜ்யத்தில். அப்புறம் காஞ்சிபுரம், திருமலை என்று பல இடங்களில் வம்சம் பரவியது.  

மஹான் நாதமுனிகளுக்கு ஒரு  வைஷ்ணவ  சிஷ்யன். உருப்பத்தூர்  ஆச்சான் பிள்ளை என்று பெயர்  (823–924) இன்னொரு பெயர்  வரதாச்சாரி.  

ஸ்ரீவத்ஸ  கோத்ரம்.   நான் சொல்வது காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு சம்பவம்.

ஒருநாள் வரதாச்சாரி  ஆற்றில் ஸ்னானம் செய்யப் போகும்போது  ஒரு பிணம் நீரில் மிதந்து வருகிறது. யார் இது என்று பார்க்கிறார்.

அதன் உடலில்  ஸ்ரீவைஷ்ணவ  நாமங்கள்  உடலில் பொறித்த சங்க சக்ரம்  இன்னும்   மறைய வில்லை.

அடாடா, யாரோ ஒரு  வைஷ்ணவர் உடலாக இருக்கி றதே.  அனாதையாக இப்படி நீரில் அடித்துச் செல்ல விடலாமா?

அதற்கு செய்யவேண்டிய இறுதி கார்யங்களைச்  செய்ய யாரும் இல்லாத போது  நாம் செய்யவேண்டியது கடமை அல்லவா?  என்று மனம் உரக்க சொல்லியது.  அந்த உடலை சிரமப்பட்டு கரையேற்றி,  வைஷ்ணவ சம்பிரதாய  வேத மந்த்ர  பிரேத ஸம்ஸ்காரங்கள் செய்து அக்னியில் அந்த உடலை சேர்த்து கடனை முடித்தார்.  தீ அந்த உடலை மட்டும் விழுங்கவில்லை,   காட்டுத்தீயாகப் பரவி  ஊரிலுள்ள பிராமணர்கள்  பண்டிதர்கள் எல்லோரும் சண்டைக்கு வந்துவிட்டார்கள்.
அப்போதெல்லாம் ஜாதி வித்யாசம் பார்த்த காலம் அல்லவா. எப்படி ஒரு வேறு வகுப்பு மனிதனின் உடலைத் தொட்டு வைஷ்ணவ அந்திம சடங்குகளை நீ செய்யலாம்? வரதாச்சாரியை ப்ரஷ்டம் செய்து ஒதுக்கி வைத்தார்கள்.
வரதாச்சாரி வீட்டில் ஸ்ரார்த்தம். ஒரு பிராமணனும் நடத்தி வைக்க  எந்த பிராமண வைதிகரும் தயாரில்லை. மறுத்துவிட்டார்கள்.

”காஞ்சி வரதராஜா,  ஸ்ரீரங்க ரங்கநாதா,  திருப்பதி வெங்கடேசா எல்லாம் உன் செயல்,  என் நிலையைப் பார்த்தாயா?’ ஒரு வைஷ்ணவனுக்கு  அந்திம சம்ஸ்காரம் செய்வித்ததற்கு இந்த தண்டனையா?.
நேரம்  ஓடுகிறது ஊருக்கு வெளியே  ரெண்டு பிராமணர்களைக் கண்டு அந்த வெளியூர்க் காரர்களை  ஸ்ரார்த்தம்  நடத்தி வைக்க கெஞ்சுகிறார். ஒப்புக்கொண்டு வருகிறார்கள்.   சாஸ்த்ரோக்தமாக நடத்தி கொடுத்து வைத்த அவர்களுக்கு நன்றியோடு நமஸ்காரம் செய்த  வரதாச்சாரி கண்ணீர் விட்டு வணங்குகிறார்.  நீங்கள்  யார் என்று அடியேன் அறியலாமா?

‘’நான் வரதராஜன், காஞ்சிபுரம், என்று ஒருவர் சொல்லி மற்றவரை பார்க்க அவர் ” நான் வெங்கடேசன் திருமலை’’  என்று சொல்லி புன்னகைத்து மறைகிறார்கள்.

அன்று காலை  காஞ்சி புறம் வரதராஜன் சந்நிதியில்  பட்டாச்சார்யார் கள் (வரதாச்சாரியை  ப்ரஷ்டம் செயது வைத்தவர்களில் சிலர்) பூஜை  செய்து காஞ்சி வரதனை அலங் கரித்து  ஹாரத்தி காட்டும்போது  கணீரென்று பெருமாள் குரல் ஒலிக்கிறது.

”ஊருக்கெல்லாம் பொல்லான், எமக்கு நல்ல ஆச்சான் சக்கரவர்த்தி’’

ஆஹா  இன்று  ஆச்சான் வரதாச்சாரி வீட்டில்  ஸ்ரார்த்தம்.  நாம்  ஒருவரும் உதவவில்லையே. பெருமாள் இப்படி சொல்கிறாரே என்று ஓடுகிறார்கள்.  விஷயம் கசிகிறது.   மின்னல் போல் எங்கும் சேதி பரவுகிறது
பெருமாளே வந்து நடத்திக் கொடுத்தது தெரிந்து வரதாச்சாரியை எல்லோரும்  வணங்கிக் கொண்டாடுகிறார்கள் .பெருமைப் படுத்துகிறார்கள்.  நல்லான்  சக்ரவர்த்தி என்று அழைக்கிறார்கள்
அவர் வம்சம் தான் நல்லான் சக்கரவர்த்தி என்ற பெருமை வாய்ந்த  காஞ்சி வரதராஜ பெருமாள் கொடுத்த  பட்டத்தை இன்னும்  விடாமல்  சூட்டிக்கொண்ட எத்தனையோ வைஷ்ணவர்கள்.  இந்த பட்டத்தை விடலாமா??  எத்தனை   பேருக்கு கிடைக்கும்

வந்தே வரத ராஜேந மம நல்லான் இதி ஸம்ருதம்
பரம ஏகாந்தி ஸம்ஸ்காராத் ப்ரக்யாதம் லோக தேசிகன் -இவர் தனியன்

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் வைபவம்🙏–ஸ்ரீ ஸ்வாமி அநந்தாழ்வான் வைபவம்🙏 — ஸ்ரீ யதுகிரி ஸ்ரீ ராம் ஸ்வாமிகள் —

May 23, 2022

இன்று ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் அவதார திருநக்ஷத்திரமான சித்திரையில் சித்திரை….. 🙏

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச் செய்த தனியன்கள்….

அவிதித விஷயாந்தரஸ் ஶடாரேர்
உபநிஷதாம் உபகான மாத்ர போக:/
அபி ச குண வசாத் ததேக ஶேஷி
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து//.. 🙏

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு எங்கள் மதுரகவியார்
எம்மை யாள்வார் அவரேயரண்… 🙏

மதுரகவியாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 5வது ஆழ்வார் ஆவர்.
இவர் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளூர் என்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார்.

மாதம் – சித்திரை
நட்சத்திரம் – சித்திரை
திவ்விய ப்ரபந்தம் – கண்ணிநுண்சிறுத்தாம்பு என்று தொடங்கும் பதினோரு பாசுரங்கள்.
மதுரகவி ஆழ்வார்
மதுரகவி ஆழ்வார்
மதுரகவியாழ்வார் திருமாலின் வாகனமான கருடனின் அம்சமாக அவதரித்தார்.

இவரது காலம் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

இவர் வேத சாத்திரங்களை நன்குக் கற்றவர். இவர் வடநாட்டு யாத்திரை மேற்கொண்டு இருந்தார்.

ஒருநாள் இரவு அயோத்தியில் பேரொளியைக் கண்டு வியப்படைந்தார்.அவ்வொளியை மறுநாளும் அவர் கண்டார்.

அவ்வொளி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.

பூரி, அஹோபிலம், திருவேங்கடம் ஆகிய தேசங்களை தாண்டியும் அவ்வொளித் தெரிந்தது.

மீண்டும் தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.கடைசியாக அந்த ஒளி, திருக்குருகூரில் மறைந்தது.

ஆழ்வாரும் அவ்வூர் மக்களிடம், இவ்வூரில் ஏதேனும் அதிசயம் உள்ளதா என்று வினவ,

அவ்வூர் மக்களும் இங்கு நம்மாழ்வார், ஒரு புளிய மரத்தடியில், யோக நிலையில் இருப்பதாகக் கூறினார்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வர்க்கு உயிர் இருக்கிறதா என்று சோதிக்க அவர் மேல் ஓர் கல்லை எறிந்தார்.

நம்மாழ்வார் முதன்முறையாக கண் திறந்துப் பார்த்தார். மதுரகவிகளும் இவர்க்கு உயிர் இருக்கிறது

என்பதை புரிந்துக் கொண்டு, இவரால் பேச முடியுமா என்று பரிசோதிக்க-

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார்

அதற்கு நம்மாழ்வார், அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றார்.

பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட மதுரகவிகள், நம்மாழ்வாரின் மேதா விலாசத்தை புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார்.

இந்த வினா விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது.

செத்ததின்,
அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால்,

பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும்.

தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு, பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால்,

அதைக்கொண்டே பக்தி வளரும்.
மதுரகவியாழ்வார் தன்னுடையப் பாசுரங்களில் திருமாலைத் தெய்வமாகப் பாடாது,

நம்மாழ்வாரை தெய்வமாகப் பாடினார்.இவரது பாசுரங்கள் ஆச்சார்ய பக்திக்கு எடுத்துக்காட்டாகும்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் பாசுரங்களை பட்டோலைப் படுத்தினார்.

நம்மாழ்வார் திருவைகுண்டத்திற்கு சென்ற பிறகு தங்கத்தால் ஆன நம்மாழ்வாரின் விக்ரகம் கிடைத்தது.

அவ்விக்ரகத்தை எழுதருளப்பண்ணிகொண்டு மதுரகவியாழ்வார் பல ஊர்களுக்கு சென்று

நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவுசெய்தார்.

“வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார்,

திருவாய்மொழிப்பெருமாள் வந்தார்,

திருநகரிப்பெருமாள் வந்தார்,

திருவழுதிவளநாடர் வந்தார்,

திருக்குருகூர்நகர்நம்பி வந்தார்,

காரிமாறர் வந்தார்,

சடகோபர் வந்தார்,

பராங்குசர் வந்தார்” என்று நம்மாழ்வாரின் பலவிருதுகளைப் பாடிக்கொண்டே மதுரகவியாழ்வார் மதுரையுள் சென்றார்.

அங்கே இருந்த சங்ககாலப் புலவர்கள், நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல்,

விருதுகளைப் பாடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அக்காலத்தில், சங்க பலகையில் பாடலை எற்றுவர்.

பலகை அப்பாடலை கிழே தள்ளிவிட்டால், புலவர்கள் அப்பாடலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நம்மாழ்வார் எட்டு வரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறையப் பாடியுள்ளார். அவற்றை விட்டு, இரண்டே வரியுள்ள,

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே! (திருவாய்மொழி 10.5.1)
(கண்ணனின் திருவடிகளில் ஆசை உடையவர்கள், கண்ணின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருங்கள்,

அது கண்ணனையே காட்டும்.இது திண்ணம்) என்ற பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார்.

பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது. நம்மாழ்வாரின் பெருமையை புரிந்துக்கொண்ட சங்ககாலப் புலவர்களும்

தாம் செய்த தவற்றின் பரிகாரமாக நம்மாழ்வாரின் பெருமையை தாம் பாடலாக இயற்றினர்.

ஈயடுவதோ கருடற்கெதிரே!!இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ!!
நாயாடுவதோ உறுமும்புலிமுன்!!
நரி கேசரிமுன் நடையாடுவதோ!!
பேயடுவதோ ஊர்வசிக்குமுன்!!*பெருமானடிசேர் வகுளாபரணன்
ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பொறுமோ* !
இவ்வுலகிற்கவியே!!!!
(இவ்வுலகில் உள்ள கவிகளே, பெரிய சிறகுகளை உடைய கருடன் முன் சிறிய ஈ ஆடுவதும்

இரவியின் முன் மின்மினி பூச்சிகள் ஆடுவதும் உறுமுகின்ற புலிமுன் நாய் ஆடுவதும்

சிங்கத்தின் முன் நரி ஆடுவதும் அழகிற்சிறந்த ஊர்வசிமுன் பேயாடுவதும்

வகுளமாலையத் தரிந்த நம்மாழ்வாரின் பாசுரங்கள் முன் தமிழில் உள்ள ஒரு சொல் சமமாகுமா! என்பது பொருள்)

இதில் வியப்பு என்ன வென்றால், அங்குக் கூடியிருந்த அனைத்து புலவர்களும் மேற்சொன்ன ஒரேப் பாடலை எழுதினர்

இவ்வாறு மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்லி

அவரும் தம் பெரியவரான நம்மாழ்வாரின் திருவடியைச் சென்று சேர்த்தார்.

மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர்

அதாவது, ஆச்சார்ய பக்தியும், பெருமானிடத்தில் உள்ள பக்தியும் படிக்கட்டுகளாக் கருதினால்
,பெருமான் மீது கொண்ட பக்தி என்பது முதல் படியாகும்

ஆச்சார்ய பக்தி இரண்டாவதுப் படியாகும் ஒருவேளை பெருமானிடத்தில் உள்ள பக்தி குறைந்து

அப் படிக்கட்டில் இருந்து தவறினால், சம்சாரம் என்னும் கடலில் விழுந்து விடுவோம்.

ஆச்சார்ய பக்தி என்னும் படியில் இருந்து தவறினால், அடுத்தப்படியான பெருமானின் மீது கொண்ட பக்தி காப்பாற்றிவிடும் என்று பொருள்… 🙏

 

அமுதனார் தாம் இயற்றிய ராமாநுச நூற்றந்தாதியில், மதுரகவி ஆழ்வாரைப்பற்றிப் பாடும் போது,

ராமானுசருக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும்  உள்ள தொடர்பைக் கொண்டாடுகிறார்.

“எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்

செய்தற்கு உலகில் வரும் சடகோபனை -சிந்தையுள்ளே

பெய்தற்கு இசையும் “பெரியவர்” சீரை உயிர்களெல்லாம்

உய்தற்கு உதவும் ராமாநுசன் எம் உறுதுணையே!-என்று பாடுகிறார்.

இதில் மதுரகவி ஆழ்வாரை,“பெரியவர்” என்று கொண்டாடுகிறார்.பெரியவர் என்னும் பதத்தை,

மதுரகவி ஆழ்வார் ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.

மதுரகவியாழ்வரை பெரியவர் என்று எதனால்  அமுதனார் சொல்கின்றார் என்பதற்கு ஒரு சுவையான விளக்கம்.

நம்மாழ்வாருக்கும்  பகவானுக்கும் யார் பெரியவன் என்ற விவாதம் நடக்கிறது.நம்மாழ்வார்,

“பகவானே உன்னை விட நான் பெரியவன். காரணம், நீ இரண்டு உலகங்களையும் (விண், மண்) உன்னிடம்  வைத்திருக்கிறாய்.

அப்படி வைத்திருக்கும் உன்னையே நான் என்னுள் வைத்திருப்பதால் நானே பெரியவன் என்பதை ஒப்புக்கொள்” என்று பாடிய பாடல் இது.

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்

செவிவழி உள்புகுந்து என்னுள்ளாய்  அவிவின்றி

யான் பெரியன் நீ பெரியை என்பதனை ஆர் அறிவார்

ஊன்பருகு நேமியாய் உள்ளு.”

பெருமானை விட நம்மாழ்வார் பெரியவர் என்றால்,

அவரை தன்  உள்ளத்தில் வைத்திருக்கும் மதுகவியாழ்வார் பெரியவருக்கு பெரியவரல்லவா.

இதைத்தான் ராமானுஜ நூற்றந்தாதியில் பாடுகிறார்.

தனக்கு ஸ்வாமியான நம்மாழ்வாரையே உபாயமாகவும், உபேயமாகவும் கொண்டு, அவருக்கு அடிமைப்பட்டிருந்தவர் மதுரகவிகள்.

அப்படித் தான் அனுஷ்டித்துக் காட்டியதைத்தான், தன்னுடைய திவ்யப் பிரபந்தத்தில் (கண்ணிநுண் சிறுத்தாம்பு) அருளிச்செய்தார்.

பாசுரம் 26இல், மதுரகவி ஆழ்வாரின் மகிமைகளையும், அவர் அருளிச்செய்துள்ள

பிரபந்தத்தின் (“கண்ணிநுண் சிறுத்தாம்பு”) பெருமையையும் உரைக்கின்றார் மாமுனிகள்:

உபதேசரத்தினமாலை யில்
ஸ்வாமி மணவாள மாமுனிகள்……

ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த
சீராரும் சித்திரையில் சித்திரைநாள் பாருலகில்

மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்
உற்றது எமக்கென்று நெஞ்சே ஓர்….

பாசுரம் 26..

வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம்போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை *ஆர்த்தபுகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே*
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து….

பிள்ளைலோகம் ஜீயர் இந்தப் பாசுரத்திற்கு வியாக்யானம் அருளிச்செய்கையில்,

கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தத்தை, அஷ்டாக்ஷர மந்திரத்தின் (திருமந்திரம்)

மத்திய பதமாக அமைந்துள்ள “நம:” ஶப்தத்திற்கு ஈடாகக் காட்டியுள்ளார்.

திருமந்திரமானது, இந்த ஜீவாத்மாவிற்குப் பேறானது ஆத்மாவால்” என்று உபதேசிக்கின்றது.

ஆத்மாவை பகவானுக்கு உரியதாகக் கொண்டு, அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதே

அதற்கு (ஆத்மாவிற்கு) உண்டான லக்ஷணமாகும் என்பதே திருமந்திரத்தால் உணரப்படவேண்டிய ஞானமாகும்.

இதில் நம: பதமே முக்கியமானதாகும் – இது ஜீவாத்மாவுக்கு தன்னைக் காத்துக்கொள்ளும் ( ரக்ஷித்துக் கொள்ளும்) சுதந்திரம் (உரிமை) கிடையாது;

நம்மை ரக்ஷிக்கும் பொறுப்பு எம்பெருமான் ஒருவனுக்கே உள்ளது என்று தெளிவிக்கிறது .

ஆனால், இதற்கு சற்றே மாறாக, *இந்த ஆத்மாவானது, எம்பெருமானுக்கு ஆட்பட்டு இருப்பதைக் காட்டிலும்

ஆசார்யனுக்கு உரியது என்று கொண்டு, அவருக்கு ஆட்பட்டு, அதோடு, அவரே நமக்கு ரக்ஷகர் ஆவார் என்று

உரைக்கும் பிரபந்தமாகும் மதுரகவிகள் அருளியுள்ள கண்ணிநுண் சிறுத்தாம்பு. ஆகையாலேயே,

சாஸ்திரங்களில் ரஸமாக இருக்கும் ஆசார்ய நிஷ்டையை உரைக்கும் இவரது பிரபந்தத்தை,

மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்துள்ள நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் நடுநாயகமாகச்
சேர்த்து, மதுரகவி ஆழ்வாருக்கு ஏற்றத்தை அளித்துள்ளார்கள் நம் பூர்வாசார்யர்கள்.

*இவ்வாழ்வார்
திருவவதரித்த* நக்ஷத்திரமான சித்திரையும்
27 நக்ஷத்திரங்களில் மத்யமாக அமைந்தது போல இவர் அருளிச்செய்துள்ள கண்ணிநுண் சிறுத்தாம்பு

திவ்யப் பிரபந்தமானது 4000 திவ்விய பிரபந்த ரத்தின ஹாரத்தின் நடு நாயகக் கல்லாக

இவர் அருளிச்செய்துள்ள பிரபந்தமும் அமைந்துள்ளது என்பது இவருடைய பிரபந்தத்திற்கும் உள்ள பெருமை ஆகும்…..
மதுரகவிகளின் வாழி திருநாமம்:

சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே🙏
திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே🙏
உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே🙏
ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே🙏
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே🙏
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே🙏
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே🙏
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே🙏🙏🙏🙏

——————-

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸுஸசரணம் வந்தே நந்தார்ய தேசிகம்🙏
ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !🙏

ஸ்வாமி அநந்தாழ்வான் வைபவம்🙏
அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர்
எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு
எச்சான்,
தொண்டனுர் நம்பி,
மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார்.

எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து
அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார்.
அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு
அவரை
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார்.
எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும்
அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார்
அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர்.
அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே
எம்பெருமானாரின் திருவடித் தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார்.
திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.🙏🙏🙏

காவிரிக்கரையில் உள்ள ஸ்ரீரங்கம் மடத்தில் ஒரு நாள் ஸ்ரீ ராமானுஜர் தன் சீடர்களுக்குத்
திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.
அதில் ஒரு பாடலில் சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து என்னும் தொடர் இடம் பெற்றிருந்தது.
பூக்கள் உதிர்ந்து கிடக்கும் திருப்பதி மலை என்பது இதன் பொருள்.
இதைச் சொல்லும் போதே ராமானுஜருக்கு கண்ணீர் பெருகியது.
பதறிய சீடர்கள் காரணம் கேட்டபோது திருப்பதியில் பூக்கும் மலர்கள் பெருமானின் திருவடியைச் சேராமல்
கீழே பயனற்று கிடக்கிறதே என விளக்கம் அளித்தார் .
சீடர்களில் ஒருவரான அனந்தன் எழுந்து
“ஆசார்யா!..தாங்கள் உத்தரவிட்டால் இப்ப்போதே திருமலைக்குச் சென்று தொண்டு செய்கிறேன் என்றார்.

நீரோ ஆண் பிள்ளை!!என்று சொல்லி அணைத்தார் ராமானுஜர்.
அதன் பின் அனந்தாண் பிள்ளை என பெயர் பெற்றார்.
திருப்பதி மலையில் பெருமாளுக்கு சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டார்.
நந்தவனம் அமைத்து துளசி  மல்லிகை என பூச்செடிகளை வளர்த்தார்.
தினமும் மாலை தொடுத்து பெருமாளுக்குச் சாத்துவார்.
கிணறு ஒன்றை வெட்டி அதற்கு ராமானுஜ புஷ்கரணி என்ற பெயரையே சூட்டினார்.. 🙏🙏

கர்நாடக மாநிலத்தில், மைசூர் பகுதியில் காவேரி நதிக்கரையில் உள்ள சிறுபுத்தூர் இவருடைய அவதார ஸ்தலம்.
அனந்தாழ்வானின் திருத்தகப்பனார் கேசவாச்சார்யார். யஜுர் வேதி. பரத்வாஜ கோத்திரர்.
அனந்தாழ்வான் கி.பி. 1053 விஜய நாம ஆண்டு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார்.
சிறு பருவத்தி லிருந்தே இவர் பகவத் சிந்தனையில் முழ்கியவர்.

அனந்தாழ்வான் திருவனந்தாழ்வான் அம்சம் என்றும் குறிப்பிடுவர்.
அனந்தாழ்வானுக்கு மதுரகவி தாசன் என்றும் பெயருண்டு.

திருமலையில் புஷ்ப கைங்கர்யம்:
எம்பெருமானாரின் கட்டளைக்கிணங்க தன் துணைவியருடன் திருமலைக்கு பயணமானார் அனந்தாழ்வான்.
புஷ்ப கைங்கர்யம் செய்வதற்காக எம்பெருமானின் திருக்கோயிலுக்கு அருகாமையில் ஒரு ஏரியையும்.
நந்தவனத்தையும் அமைக்க திட்டமிட்டார். உதவி புரிய அந்நேரம் அங்கு யாரும் இல்லை.
ஆனால் பிறருடைய உதவியைப் பெறுவதும் ஆசார்யனின் கட்டளைக்கு களங்கம் ஏற்படும் என்று எண்ணினார்.
இதையறிந்த அனந்தாழ்வானின் தர்மபத்தினி தானிருக்கிறேன் என்று கூறினார்.
நிறைமாத கர்ப்பினி எனினும் எம்பெருமான் மேல் பக்தியினால் ஆணுக்கு ஈடாக மண் கூடையை சுமந்தாள்.
அனந்தாழ்வானின் ஆனந்தத் திற்கு எல்லையே இல்லை. தான் ஒரு கடப்பாறையை கையில் ஏந்தி நின்றார்.

சகல லோகநாதனை ஸ்மரித்தார். கடப்பாரையால் மண்ணை தோண்டினார். தோண்டிய மண்ணை கூடையில் போட்டார்.
அம்மண் கூடையை அனந்தாழ்வான் தர்ம பத்தினி தலைமேல் வைத்துக் கொண்டு சிறிது தொலைவில் சென்று
கொட்டிவிட்டு மறுபடியும் வந்தார். இதையெல்லாம் கண்டறிந்த திருவேங்கடவன் ஒரு சிறுவன் வடிவத்தில் வந்து,
அவருடைய கையில் இருந்த மண்கூடையை வாங்க முயன்றான்.
அனந்தாழ்வான் உனக்கு வேண்டுமானால் நீயும் இன்னொரு கைங்கர்யத்தைச் செய்துகொள்.
ஆசார்யன் எனக்கு நியமித்த கைங்கர்யத்தில் பங்கு கேட்காதே. இந்த கடப்பாரையினாலே அடிப்பேன் என்றார்.

அச்சிறுவன் அனந்தாழ்வானின் தர்மபத்னியிடம் சென்று அம்மா! நீங்கள் மிகவும் சோர்ந்து போயுள்ளீர்கள்.
சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளம்மா. நான் உதவி புரிகிறேன் என்றான்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த தர்மபத்னி மெய்மறந்து தன்னையும் அறியாமலேயே மண் கூடையை கொடுத்து விட்டாள்.
அச்சிறுவன் இக்கைங்கர்யத்தில் ஈடுபட்டதைக் கண்ட அனந்தாழ்வான் சினம் கொண்டு அவனை அடிப்பதற்காகத் துரத்தி கொண்டு ஓடினார்.
ஓடுகின்ற சிறுவன் மீது அனந்தாழ்வான் தன் கையில் இருந்த கடப்பாரையை வீசி எறிந்தார்.
அது அச்சிறுவனின் திருமோவாய் மீது பட்டது. இரத்தம் சலசலவென கொட்டியது.

அச்சிறுவன் கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டான். மறுநாள் காலை அர்ச்சக ஸ்வாமிகள் கோயிலுக்குள் சென்று
பார்க்கையில் திருவேங்கடவன். திருமோவாயில் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது.
அதை அறிந்த அனந்தாழ்வான் சிறுவனாக வந்தவன் அவனே என்றுணர்ந்தார்.
எம்பெருமானிடம் அவசரபட்டோமே என்று மனம் கலங்கினார். இரத்தப் பெருக்கை நிறுத்த என்ன செய்வதென்று திகைத்த போது.
திருவேங்கடவன் அவருடைய பாதத்தூளியைத் தன்னுடைய மோவாயில் வைத்து அழுத்துமாறு கூறினார்.
அப்படியே அனந்தாழ்வான் செய்ய இரத்தப்பெருக்கு நின்று விட்டன. அனந்தாழ்வான் நிம்மதி அடைந்தார்.
அப்போது எம்பெருமான் அனந்தா நீ வருந்தாதே கடப்பாரையை என் மீது வீசினாயல்லவா.
இரத்தம் வந்த இடத்தில் வடு மோவாயில் நிரந்தரமாக இருந்து விடும்.

இதனால் தான் இன்றும் திருவேங்கடவனுக்கு திருமோவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றப்படுகிறது.
அது பாதரேணு (திருவடிப்பொடி) என்று கூறப்படுகிறது. கோயில் முஹதுவாரத்தின் சுவற்றின் மேல் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளது.
இன்றளவும் திருமலையில் கோபுர நுழைவு வாயிலில் வடக்கே மதில் மேல் கடப்பாரை (யை) காணலாம்*.
பிறகு அனந்தாழ்வான் நந்த வனத்தை அமைத்து முடித்து அதில் பூக்கின்ற புஷ்பங்களை மாலைகளாகத் தொடுத்து
அதை நித்தியமும் திருவேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஸ்ரீமத்ராமானுஜரின் நியமனப்படி
புஷ்ப கைங்கர்யத்தை செய்து கொண்டு வந்தார்.🙏🙏🙏🙏

இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த

மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும் தவனம், மரு, மகிழ,

வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி,

“அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்” என்று கூறினார்.

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்!

அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது.

அத்தோட்டம், இப்போது ‘அனந்தாழ்வான்’ தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

கிட்டதட்ட 900 ஆண்டுகளுக்கு முன்னர் பெருமாளுக்கு தினமும் மாலை சாத்தும் பாக்கியத்தைப் பெற்றவர்

ஸ்ரீராமாநுஜரின் பிரியத்துக்கு உரிய சீடர் அனந்தாழ்வான்.
திருமலை திருப்பதியில் இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தினந்தோறும் திருமலை நந்தவனத்தில் மலர்களைக் கொய்து, தானே அதை மாலையாகக் கட்டி பெருமாளுக்கு அணிவித்து, மகிழ்ந்து வந்தார்.

ஒருநாள், திருமலையில் தான் அமைத்த நந்தவனத்தில் பெருமாளுக்காக மலர்களைப் பறித்துக்கொண்டிருந்தார் அனந்தாழ்வான்.

அப்போது அந்த வனத்திலிருந்த பாம்பு ஒன்று அவரைத் தீண்டிவிட்டு அங்கிருந்து ஓடியது.

ஆனாலும், அதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமலும் சற்றும் பதற்றம் அடையாமல் பூக்களைச் சேகரித்துக்கொண்டிருந்தார்.

அவருடன் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த அவரின் நண்பர்கள் பதறிப்போய்,

”பாம்பின் விஷக்கடிக்கு பச்சிலை மருந்து வைத்துக் கட்டினால்தானே விஷமிறங்கும்.

அதைவிடுத்து நீங்கள் இப்படி செய்யலாமா?” எனக் கேட்டனர்.

அதற்கு, அனந்தாழ்வான் சிறிதும் பதற்றமின்றி, ”கடித்த பாம்பு வலிமையற்றதாக இருந்தால்,

திருக்கோனேரியில் தீர்த்தமாடி, திருவேங்கடமுடையானை தரிசிப்பேன்.

வலிமையுள்ளதாக இருந்தால், விரஜா நதியில் நீராடி, வைகுண்ட வாசனை சேவிப்பேன்” என பதில் சொன்னார்.

அவரின் பதிலைக் கேட்டு, நண்பர்களும் உறவினர்களும் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

அவர் கூறியதுபோலவே, பாம்பின் விஷம் வைராக்கியவாதியான அனந்தாழ்வானை எதுவும் செய்ய வில்லை.

எத்தனை வைராக்கியமான பக்தி!🙏🙏🙏🙏

அனந்தாழ்வான்:🙏
கர்நாடக மாநிலத்தில், மைசூர் பகுதியில் காவேரி நதிக்கரையில் உள்ள சிறுபுத்தூர் இவருடைய அவதார ஸ்தலம்.

அனந்தாழ்வானின் திருத்தகப்பனார் கேசவாச்சார்யார். யஜுர் வேதி. பரத்வாஜ கோத்திரர்.

அனந்தாழ்வான் கி.பி. 1053 விஜய நாம ஆண்டு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார்.

சிறு பருவத்தி லிருந்தே இவர் பகவத் சிந்தனையில் முழ்கியவர்.

அனந்தாழ்வான் திருவனந்தாழ்வான் அம்சம் என்றும் குறிப்பிடுவர். அனந்தாழ்வானுக்கு மதுரகவி தாசன் என்றும் பெயருண்டு.

திருமலையில் புஷ்ப கைங்கர்யம்: எம்பெருமானாரின் கட்டளைக்கிணங்க தன் துணைவியருடன் திருமலைக்கு பயணமானார் அனந்தாழ்வான்.

புஷ்ப கைங்கர்யம் செய்வதற்காக எம்பெருமானின் திருக்கோயிலுக்கு அருகாமையில் ஒரு ஏரியையும். நந்தவனத்தையும் அமைக்க திட்டமிட்டார்.

உதவி புரிய அந்நேரம் அங்கு யாரும் இல்லை.

ஆனால் பிறருடைய உதவியைப் பெறுவதும் ஆசார்யனின் கட்டளைக்கு களங்கம் ஏற்படும் என்று எண்ணினார்.

இதையறிந்த அனந்தாழ்வானின் தர்மபத்தினி தானிருக்கிறேன் என்று கூறினார்.

நிறைமாத கர்ப்பினி எனினும் எம்பெருமான் மேல் பக்தியினால் ஆணுக்கு ஈடாக மண் கூடையை சுமந்தாள்.

அனந்தாழ்வானின் ஆனந்தத் திற்கு எல்லையே இல்லை. தான் ஒரு கடப்பாறையை கையில் ஏந்தி நின்றார்.

சகல லோகநாதனை ஸ்மரித்தார். கடப்பாரையால் மண்ணை தோண்டினார். தோண்டிய மண்ணை கூடையில் போட்டார். அம்மண் கூடையை அனந்தாழ்வான் தர்ம பத்தினி தலைமேல் வைத்துக் கொண்டு சிறிது தொலைவில் சென்று கொட்டிவிட்டு மறுபடியும் வந்தார்.

இதையெல்லாம் கண்டறிந்த திருவேங்கடவன் ஒரு சிறுவன் வடிவத்தில் வந்து, அவருடைய கையில் இருந்த மண்கூடையை வாங்க முயன்றான்.

அனந்தாழ்வான் உனக்கு வேண்டுமானால் நீயும் இன்னொரு கைங்கர்யத்தைச் செய்துகொள்.

ஆசார்யன் எனக்கு நியமித்த கைங்கர்யத்தில் பங்கு கேட்காதே. இந்த கடப்பாரையினாலே அடிப்பேன் என்றார்.

அச்சிறுவன் அனந்தாழ்வானின் தர்மபத்னியிடம் சென்று அம்மா! நீங்கள் மிகவும் சோர்ந்து போயுள்ளீர்கள்.

சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளம்மா. நான் உதவி புரிகிறேன் என்றான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த தர்மபத்னி மெய்மறந்து தன்னையும் அறியாமலேயே மண் கூடையை கொடுத்து விட்டாள்.

அச்சிறுவன் இக்கைங்கர்யத்தில் ஈடுபட்டதைக் கண்ட அனந்தாழ்வான் சினம் கொண்டு அவனை அடிப்பதற்காகத் துரத்தி கொண்டு ஓடினார்.

ஓடுகின்ற சிறுவன் மீது அனந்தாழ்வான் தன் கையில் இருந்த கடப்பாரையை வீசி எறிந்தார்.

அது அச்சிறுவனின் திருமோவாய் மீது பட்டது. இரத்தம் சலசலவென கொட்டியது.

அச்சிறுவன் கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டான்.

மறுநாள் காலை அர்ச்சக ஸ்வாமிகள் கோயிலுக்குள் சென்று பார்க்கையில் திருவேங்கடவன். திருமோவாயில் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது.

அதை அறிந்த அனந்தாழ்வான் சிறுவனாக வந்தவன் அவனே என்றுணர்ந்தார்.
எம்பெருமானிடம் அவசரபட்டோமே என்று மனம் கலங்கினார்.

இரத்தப் பெருக்கை நிறுத்த என்ன செய்வதென்று திகைத்த போது. திருவேங்கடவன்

அவருடைய பாதத்தூளியைத் தன்னுடைய மோவாயில் வைத்து அழுத்துமாறு கூறினார்.

அப்படியே அனந்தாழ்வான் செய்ய இரத்தப்பெருக்கு நின்று விட்டன. அனந்தாழ்வான் நிம்மதி அடைந்தார்.

அப்போது எம்பெருமான் அனந்தா நீ வருந்தாதே கடப்பாரையை என் மீது வீசினாயல்லவா.

இரத்தம் வந்த இடத்தில் வடு மோவாயில் நிரந்தரமாக இருந்து விடும்.
இதனால் தான் இன்றும் திருவேங்கடவனுக்கு திருமோவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றப்படுகிறது.

அது பாதரேணு (திருவடிப்பொடி) என்று கூறப்படுகிறது.

கோயில் முஹதுவாரத்தின் சுவற்றின் மேல் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளது.
இன்றளவும் திருமலையில் கோபுர நுழைவு வாயிலில் வடக்கே மதில் மேல் கடப்பாரை (யை) காணலாம்*.

பிறகு அனந்தாழ்வான் நந்த வனத்தை அமைத்து முடித்து அதில் பூக்கின்ற புஷ்பங்களை மாலைகளாகத் தொடுத்து அதை நித்தியமும் திருவேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஸ்ரீமத்ராமானுஜரின் நியமனப்படி புஷ்ப கைங்கர்யத்தை செய்து கொண்டு வந்தார்.🙏🙏🙏🙏

அனந்தாழ்வானின் கூரிய ஞானத்தை விளக்கும் நிகழ்வு……

ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி,

‘உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்’ யாரென்று அறிந்து வரச் சொன்னார்.

அனந்தாழ்வான் சீடனிடம், ” உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன்,

ஒரு கொக்கைப் போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்” என்று கூறினார்!!!

பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.

‘கொக்கைப் போன்றவன்’ என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும், ‘

கோழியைப் போன்றவன்’ என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும் சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும்,

‘உப்பைப் போன்றவன்’ என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும், ‘

உன்னைப் போன்றவன்’ என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை,

பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

அனந்தாழ்வானுக்குத்
தனியன் அருளிச் செய்த திருவேங்கடவன்……

ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது, பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில்

அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார்.

அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல்,

தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும்,

அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!! அடியார்கள் நம்ப மறுத்து,

பெருமாளிடம் அவரது ‘ஆச்சார்ய தனியனை’ கூறுமாறு பணித்தனர்.

உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்

ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது,

பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்

ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழில், “ஏய்ந்தபெருங் கீர்த்தி” என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே. ‘

வேங்கடாசல இதிகாசமாலா’ என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் ‘கோயில் ஒழுகு’க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.

அவர் இயற்றிய ‘ராமானுஜ சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய

நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார்.

அது போலவே, ‘கோதா சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக,

வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!

புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை

திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, ‘பெத்த ஜீயங்கார் மடத்தை’ நிறுவினர்.

தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான்,

குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்!

உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார்.

அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர் மூர்த்திகளை விட தொன்மையானது என்று அறியப்படுகிறது. இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, ‘அனந்தாழ்வான்’ என்றே அழைக்கப்படுகிறது.

ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான் புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில்,

ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.🙏🙏

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாண்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு அனந்தாழ்வான் வைபவம் —

March 5, 2022

சென்றால் குடையாம் ஒரே பாசுரம் நித்ய ஸூரிகளில் ஒருவனுக்கு
உறகல்-இவனைச் சொல்ல வில்லையே
அங்கும் அஸ்தான பயசிங்கை பண்ணி பெரியாழ்வாரிலும் விஞ்சிய பரிவு உண்டே

அநந்தம் பிரதம ரூபம் -பின்பு எம்பெருமானார் -அடுத்து அனந்தாழ்வான் -பின்பு மா முனிகள்
ஆண் பிள்ளை
ஸ்த்ரீ பிராய ஸ்வரூபம் தன்னை அழிய மாறி
சிஷ்யன் இருக்கும் இருப்பைக் காட்டவே
நரன் காட்டி அருளாத ஒன்றைக் காட்டி அருளினார்
திருமலை நம்பி திருமலையில் நித்ய வாசம் செய்யாமல் கீழே இருந்து நித்யம் சென்று கைங்கர்யம்
ராமானுஜர் வேறே யாருக்கும் இப்படி பட்டம் கொடுக்க வில்லையே
பத்துக்கு மேல் அடையாளங்கள் திருமலையில் இவர் வை லக்ஷண்யம் காட்டி
புஷ்கரணி கைங்கர்யம் -பேக் சவாரி -கடப்பாரை -பூ பறிக்க பிராட்டியைக் கட்டி வைத்து -மாமனார் ஸ்தானம்

அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
மலையில் வேங்கடவருக்கு மாமனார் வாழியே
திருத்தேர் -இவர் சமர்ப்பிக்க -மாப்பிள்ளைக்கு மாமனார் சம்பாவனை இன்றும் உண்டே

மோவாக் கட்டையில் ரத்தம் பெருகி -மண்ணை வைத்து -நிற்க வைக்க
மகரந்த பொடி -என்று வேங்கடேச இதிஹாச மாலையிலே இவரே சொல்லி வைத்து
ப்ரஹ்ம உத்சவம் 10 நாள்-அப்ரதிக்ஷணமாக எழுந்து அருளி
மரத்துக்கு மரியாதை -பாக் தோட்டப்புறப்பாடு
திருத்தேர் உத்சவம் மணலை முன்பு என்றும் பின்பு பத்தாம் நாளாக மாற்றி
கடப்பாரை கோபுர வாசலில் இட்டும் காணலாமே
பச்சை கற்பூரம் -பிரசாதம் -ஸ்ரீ பாத ரேணு -இன்றும் பெற்று மகிழ்கிறோம்
தாமோதரன் பட்டம் போல் இன்றும் அடையாளம் உண்டே

கூப்பிட்டாலும் போகாமல் -ஆச்சார்ய நியமித்த கைங்கர்யங்களிலே ஈடுபாடு -ஆச்சார்யர் உகப்புக்காக செய்தார் –
பரன் சென்று சேர் திருவேங்கடம் -ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து
நான் -பூ லோக வைகுண்டத்தில் -ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து வந்தேன்

ப்ராப்யத்துக்கு ஆச்சார்ய கைங்கர்யம் பிரதம பர்வம்
மா முனிகள் -ப்ரீதிக்காகப் பண்ணும் பகவத் கைங்கர்யம் என்று காட்டி அருளுகிறார் –

பாகவதர் ப்ரீதிக்காகச் செய்யும் ஆச்சார்யர் கைங்கர்யம் சரம கைங்கர்யம்
நந்தவனம் -ஏரி -இவற்றைப் பார்க்கிறோம் இன்றும்
எங்கள் ஆழ்வான் வாத்ஸா வரதாச்சார்யர் வரும் பொழுது
பிரசாதம் கொடுத்து -அனந்தாழ்வான் தனியனை சாதித்த ஐதிக்யம்
அகிலாத்மா -இத்யாதி
இதில் ஆச்சார்யர் திருநாமம்
ஸ்ரீ ராமானுஜ பாதாப்ஜம் திருவடி நிலைகள்
கேட்டு ஆச்சரியப்பட்டார்

கடிபட்ட பாம்பு கடித்த பாம்பு

எறும்பு பிரசாதம் திரும்பி -எம்பெருமான் பொன்மலையிலே யாதேனும் ஆவேனே
அவனே யாகவுமாம் –
ஸ்வரூபம் அழிய மாறி இங்கே கைங்கர்யம் செய்ய வந்த ஆண் பிள்ளை அன்றோ
அதே போல் இங்கும்

எம்பெருமானார் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருள
மரம் மேல் ஏறினவர் பார்த்து வார்த்தை
கைகால் தானே உடையும்

திருக்கோளூர்
அங்கே கழுதை மேய்த்து ஜீவிக்க மாட்டாயோ
வெட்டு ஓன்று துண்டு ஒன்றாகப் பேசுவார்

எம்பெருமானாரே ஆலிங்கனம் செய்த உத்சவ மூர்த்தி ப்ரதிஷ்டை -செய்து இன்றும் சேவிக்கிறோம்

எம்பெருமானார் திருவடி நிலை முதலியாண்டான் -மற்ற இடங்களில்
திருமலையில் அனந்தாழ்வான் என்றே பெயர்

அத்யயன உத்சவம்
இயற்பா முதலில் செவிப்பர் இங்கு
நான்கு நாள் முதலாயிரம்
21 கண்ணி நுண்
அடுத்த நாள் ராமானுஜ நூற்றந்தாதி தனியாக

81 வருஷமா – 100 வருஷம் என்பர்
நேராக வர வேண்டாமோ
ஆள் அந்தி தொழுகிறானோ

சரம கைங்கர்யம் தோட்டத்திலே
மகிழ மரம் முளைத்து
இவரே இந்த மரம் என்று

திருவாடிப்பூரம் அன்று -பிராட்டி உடன் எழுந்து அருளுகிறார்
பாக் சவாரி தான் மட்டும் எழுந்து அருளுகிறார் –

பெரிய ஜீயர் -அனந்தாழ்வான் சிஷ்ய பரம்பரையே
மா முனிகளே மூன்று வருஷங்கள்
பெரிய சேஷ வாஹனம்
சின்ன சேஷ வாஹனம்
இரண்டுமே உண்டே இன்றும்
இப்படி பல விசேஷங்கள் திருமலைக்கு

அனந்தம் ப்ரதமம் ரூபம்
ராமானுஜ ததா பரம்
அனந்தாழ்வான் த்ருதீய
ததோ வர முனி ஸ்ம்ருத

————————————–

அவரை ஆரத்தழுவிய ராமானுஜர், “அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!” என்று கூறவே.
அன்றிலிருந்து, அவர் திருமலை ‘அனந்தாண்பிள்ளை’ என்று போற்றப்பட்டார்.
ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தார்யா, அங்கு ஒரு பூவனத்தை நிறுவி,
பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்தார். அத்தோடு, ஒரு கிணறு வெட்டி, அதற்கு ராமானுஜர் என்ற பெயர் சூட்டினார்.
அனந்தார்யா திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு,
அனந்தாழ்வான் என்ற திருநாமம் பெற்றார்.

அவர் மைசூருக்கு அருகே உள்ள சிறுபுத்தூர் என்ற கிராமத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து,
ராமானுசரின் மேன்மையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தவர்.
இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த
மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும்
தவனம், மரு, மகிழ, வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி,
“அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்” என்று கூறினார்.

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்!
அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது.
அத்தோட்டம், இப்போது ‘அனந்தாழ்வான்’ தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

கொஞ்சம் கோபக்காரரான அனந்தார்யா, ஒரு முறை தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு தோட்டத்தில்
உதவி செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவனை (தான் மட்டுமே திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய வேண்டும்
என்ற அதீத விருப்பத்தில் ஏற்பட்ட சினத்தால்) கடப்பாரையால் தாடையில் அடித்து விட்டார்.
அச்சிறுவனைத் அவர் துரத்திச் சென்றபோது, அவன் கோயிலுக்குள் நுழைந்து மாயமாய் மறைந்து விட்டான்.
கோயில் அர்ச்சகர்கள், மூலவப் பெருமாளின் தாடையில் ரத்தம் வருவதைக் கண்டு, அனந்தார்யாவிடம் கூறினர்.
சிறுவனாக வந்தவர் பெருமாளே என்பதை உணர்ந்த அனந்தார்யா, அடிபட்ட தாடையில் பச்சைக் கற்பூரம் வைத்து,
தன்னை மன்னித்தருளுமாறு மனமுருக வேண்டினார்! இரத்தம் வருவதும் நின்றது!
இன்றும், திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், ‘அந்தக்’ கடப்பாரையைக் காணலாம்!
அது போலவே, அனந்தன் நினைவாக, இன்றும், மூலவரின் தாடையில், பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது.
அது பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஆதிசேஷனின் அம்சமாகக் கருதப்படும் அனந்தாழ்வான் வைபவத்தில் ஒரு அழகான நிகழ்வு கூறப்பட்டுள்ளது.
ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது,
பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில் அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார்.
அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல்,
தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும்,
அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!!
அடியார்கள் நம்ப மறுத்து, பெருமாளிடம் அவரது ‘ஆச்சார்ய தனியனை’ கூறுமாறு பணித்தனர்.
உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்

போற்றுதலுக்குரிய கல்யாண குணங்களும், கருணையும், நற்சுற்றமும் கொண்ட ஆச்சார்ய அனந்தார்யனின்
திருவடிகளுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்.
அவரே, தன்னை வந்தடையும் மாந்தர்க்கு சிறந்த அடைக்கலம் தந்து அவர்களது அஞ்ஞான இருளை
நீக்குகிறார்!

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது,
பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !

இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்)
ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழில், “ஏய்ந்தபெருங் கீர்த்தி” என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே.
‘வேங்கடாசல இதிகாசமாலா’ என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் ‘கோயில் ஒழுகு’க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.
அவர் இயற்றிய ‘ராமானுஜ சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய
நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார்.
அது போலவே, ‘கோதா சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக,
வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!

புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,
வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, ‘பெத்த ஜீயங்கார் மடத்தை’ நிறுவினர்.
தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான்,
குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்!
உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார்.
அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர்
திரு மூர்த்திகளை போலவே பிரசித்தம்
ஞான முத்திரையுடன் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த திருமேனி அன்றோ
இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, ‘அனந்தாழ்வான்’ என்றே அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி,
‘உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்’ யாரென்று அறிந்து வரச் சொன்னார்.
அனந்தாழ்வான் சீடனிடம், ” உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன்,
ஒரு நாரை போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்” என்று கூறினார்!!!
பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.

‘நாரையைப் போன்றவன்’ என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும்,
‘கோழியைப் போன்றவன்’ என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும்
சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும்,
‘உப்பைப் போன்றவன்’ என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும்,
‘உன்னைப் போன்றவன்’ என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை,
பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான்
புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில், ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.

———–

திருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை
அவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்)
ஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
பரமபதம் அடைந்த இடம்: திருவேங்கடம்
எழுதிய கிரந்தங்கள் : வேங்கடேச இதிகாச மாலை, கோதா சது:ச்லோகி, ராமானுஜ சது:ச்லோகி

அநந்தாழ்வான் – அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு
எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார்.
எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார்.
அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார்.
எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார்.
அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும்
எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார்.
திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.

அநந்தாழ்வானுக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள சில ஒற்றுமைகள்:

இருவருக்கும் ஒரே திருநக்ஷத்ரம் …சித்திரை-சித்திரை
இருவருமே முழுவதுமாக ஆசார்ய நிஷ்டையில் திளைத்தவர்கள்.
மதுரகவியாழ்வார் நம்மாழ்வார் திருவடிகளிலும் அநந்தாழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளிலும் ஆச்ரயித்து இருந்தனர்.

எம்பெருமானார் திருவாய்மொழியின் தேனான பாசுரங்களுக்கு வ்யாக்யானம் சாதித்துக் கொண்டிருந்தபோது
ஒரு நாள், “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் (3.3) நம்மாழவார் திருவேங்கடமுடையானுக்குத் தன்னுடைய
நீண்ட நாள் ஆசையான உயர்ந்த கைங்கர்யங்களைச் செய்ய வேணுமென்று வெளிப்படுத்தியிருந்தார்.
அப்பதிகத்தில் திருவேங்கடமுடையான் உயர்ந்த புதிய புஷ்பங்களில் ஆசை உடையவராக இருந்ததைக் கூறியிருந்தார்.
இதை மனதில் கொண்டு எம்பெருமானார் அங்கிருந்தோரைப் பார்த்து யாரேனும் திருமலைக்குச் சென்று
அழகிய நந்தவனம் அமைத்து ஆழவார் விரும்பிய அந்த புஷ்ப கைங்கர்யத்தைச் செய்ய விருப்பம் உள்ளதா எனக் கேட்க
அநந்தாழ்வான் உடனே எழுந்திருந்து ஆழவார் மற்றும் எம்பெருமானாரின் அந்த திருவுள்ளத்தைத் தாம் பூர்த்தி செய்வதாகக் கூறினார்.
அது கேட்டு எம்பெருமானார் சந்தோஷப்பட உடனே அநந்தாழ்வான் திருமலைக்கு விடை பெற்றுச் சென்றார்.
அவர் முதலில் திருவேங்கடமுடையனுக்கு மங்களாசாசனம் செய்து புதிய நந்தவனம் அமைத்து
அதற்கு “ராமானுஜன்” என்று பெயரிட்டு திருவேங்கடமுடையனுக்கு தினமும் புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார்.
இது கேட்டு எம்பெருமானார் அதைக் காண விருப்பம் கொண்டு தம்முடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தை
விரைவாக முடித்துக் கொண்டு திருமலைக்குப் பயணப்பட்டார்.

வழியில் காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் மங்களாசாஸனம் செய்துவிட்டு திருப்பதி வந்தடைந்தார்.
அநந்தாழ்வானும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானாரை எதிர் கொண்டழைக்க மலை அடிவாரத்திற்குச் சென்றனர்.
ஆனால் எம்பெருமானார் திருமலையே ஆதிசேஷனின் அம்சம் எனக் கூறி அதன் மேலேற மறுத்துவிட்டார்.
பின் அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் “தேவரீரே மறுத்துவிட்டால் நாங்கள் எவ்வாறு ஏறுவோம்” என்று
மிகத் தாழ்மையுடன் வினவ அவரும் அதை ஆமோத்தித்துப் பின் மலை மேல் ஏறினார்.
திருமலை வந்தடைந்தவுடன் திருமலை நம்பியே வந்து எம்பெருமானாரை வரவேற்று அழைத்துச் சென்றார்.
ஸ்வாமி பின் திருமலையில் அநந்தாழ்வானால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த “ராமானுஜன்” நந்தவனத்தை பார்த்து
அங்கு நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பலவித வண்ண மலர்களைப் பார்த்து பேருவகை கொண்டார்.
திருமங்கை ஆழ்வார் கூறியது போல “வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (பரகால நாயகி ஒரு கிளி வளர்த்தாள்.
அது சதா சர்வ காலமும் எம்பெருமானின் திருநாமத்தையும்/சரிதத்தையும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்ததால்
பரகால நாயகி அக்கிளியை “வளர்த்ததால் பயன் பெற்றேன்” என்று பேரானந்தம் கொண்டாள்).
அவ்வாறே எம்பெருமானாரும் அநந்தாழ்வானின் அர்பணிப்பைப் பார்த்து பேருவகை கொண்டார்.

ஒரு சமயம் அநந்தாழ்வானும் அவரது கர்ப்பிணி மனைவியும் நந்தவனத்திற்காக. ஒரு சிறிய குளம் வெட்டிக் கொண்டு இருந்தனர்.
அப்போது எம்பெருமானே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தான்.
ஆனால் தன்னுடைய ஆசார்யனின் கட்டளையை தானே நிறைவேற்ற எண்ணிய அநந்தாழ்வான் அச்சிறுவனின் உதவியை மறுத்து விட்டார்.
ஆனால் அநந்தாழ்வான் இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி அச்சிறுவனின்உதவியைப் பெற்றுக் கொண்டாள்.
இதைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மிகுந்த கோபம் கொண்டு அச்சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார்.
இறுதியில் தாம் வைத்திருந்த கடப்பாரையை அவன் மீது எறிந்தார்.
அக்கடப்பாரை அச்சிறுவனின் நாடியில் பட அவனும் ஓடி சன்னதிக்குள் மறைந்தான்.
திருவேங்கடமுடையானின் முகவாயிலும் அடி பட்டதாகக் காட்சிளிக்க, அதற்காகத்தான் நம்ம இன்றளவும்
திருவேங்கடமுடையனுக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி குளிரப் பண்ணுகிறோம்.

ஒரு முறை அநந்தாழ்வானை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. அப்போது உடனிருந்தவர்கள் மிகுந்த கவலை அடைய அவர் கூறினார்.
“என்னைத் தீண்டிய சர்ப்பம் பலமுடையதாக இருந்தால் நான் இந்த சரீரத்தை வ்ரஜை நதியில் நீராடித் தொலைத்து விட்டுப்
பின் பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வேன்.
மாறாக இருந்தால் இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி திருவேங்கடத்திலேயே கைங்கர்யங்கள் செய்வேன்” என்றார்.
அவர் கைங்கர்யத்தில் அவ்வளவு ஊற்றம் உடையவராக விளங்கினார். தன்னுடைய தேஹ அபிமானமே இல்லாதிருந்தார்.

மற்றறொரு முறை அவர் பக்கத்தில் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவேங்கடத்திலிருந்து அவர் பிரசாதங்கள் கொண்டு வந்திருந்தார். அவற்றைப் பிரித்த போது
அதில் பல எறும்புகள் இருப்பதைப் பார்த்துத் தன்னுடைய சிஷ்யர்களைப் பார்த்து அவற்றை மீண்டும் மலையிலே கொண்டு விட பணித்தார்.
ஏனென்றால் குலசேகர ஆழவார் கூறியது போல் (அவரும் எம்பெருமானின் பக்தர்களும் ) அவர் மலையில் ஏதேனுமாக இருக்க ஆசைப் பட்டாரே.
அதனால் இந்த எறும்புகள் அவர்களாக இருக்கக் கூடும். எனவே நாம் அவர்கள் திருவேங்கடத்தில் வாழ்வதற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.

ஒரு முறை அநந்தாழவான் திருவேங்கடமுடையானுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை உடனே அழைத்து
வரும்படி ஒருவரை திருவேங்கடமுடையான் பணித்தார். ஆனால் அநந்தாழ்வான் தான் தொடுத்துக் கொண்டிருந்த
மாலை கைங்கர்யம் முடிந்த பின் தாமதமாகத் திருவேங்கடமுடையானிடம் சென்றார்.
அவருடைய கால தாமதத்திற்குக் காரணம் கேட்க அதற்கு அவர், தமக்கு புஷ்பங்கள் எல்லாம் மொட்டாக மலரும் தருவாயில்
இருக்கும்போதே மாலை கட்டி முடித்துவிடவேண்டும் என்றும் மேலும் சந்நிதியில் அவருக்கான கைங்கர்யங்கள் ஏதுமில்லை என்பதால்
எம்பெருமானாரால் கட்டளையிடப்பட்ட “கைங்கர்யத்தைத் தவிர வேறு கார்யம் இல்லை” என்று பதிலுரைத்தார்.
அதற்கு எம்பெருமான் “நான் உம்மை திருமலையிலிருந்தே வெளியேற வேண்டும் எனப் பணித்தால் என்ன செய்வீர்?” என்று வினவ
அதற்கு அவர், “நீர் எனக்குச் சில காலம் முன்பாக இங்கு வந்தீர். ஆனால் நான் எம் ஆசார்யன் கட்டளையாலே இங்கு வந்து சேர்ந்தேன்.;
அவ்வாறிருக்க நீர் எப்படி எம்மை வெளியேறச் சொல்ல முடியும்” என்று கேட்டார்.
அது கேட்ட எம்பெருமான், அநந்தாழ்வானின் மிக சிறந்த ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்.

அநந்தாழ்வானின் பெருமைகளையும் அறிவுரைகளையும் வ்யாக்யானங்களில் கூறிய படி சிலவற்றை இங்கே காண்போம்

பெரியாழவார் திருமொழி 4.4.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யனுக்கு உகப்பான வார்த்தைகளைத் தவிர
வேறெந்த வார்த்தைகளையும் பேச மாட்டார்கள் என்று ஆழ்வார் புகழ்கிறார்.
பட்டர் மேல் அநந்தாழ்வானுக்கு இருந்த பற்றுதலை (பட்டர் அநந்தாழ்வாழ்வானை விட வயதில் சிறியவராக இருந்தாலும்)
மாமுனிகள் வெளிப்படுத்துகிறார். அநந்தாழ்வானுடைய அந்திமக் காலத்தில் அவர் சில ஸ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து
பட்டருக்கு மிகவும் நெருக்கமான/பிடித்தமான பெயர் என்று கேட்க அதற்கு அவர்கள் பட்டருக்கு மிகவும் பிடித்தமான
நம்பெருமாள் பெயரான “அழகிய மணவாளன்” என்று பதில் கூறினர்.
அதற்கு அநந்தாழ்வான் ஒரு கணவனுடைய பெயரைச் சொல்லுவது நம் சம்பிரயதயத்திற்கு எதிரானது என்றாலும்
பட்டருக்கு உகப்பானது என்பதால் தாமும் அந்தப் பெயரையே சொல்வதாகவும் கூறி
அந்தத் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பரமபதம் அடைந்தார்.
அவருக்கு எம்பெருமானாரின் பெயரையே சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பட்டருக்குப் பிடித்தமான பெயர்
அழகிய மணவாளன் என்பதால் அதையே தாமும் கூறினார்.

நாச்சியார் திருமொழி 7 .2 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்: –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பாஞ்சஜன்யம் ஸமுத்ரத்தில் பிறந்தாலும் முடிவில் எம்பெருமானின்
திவ்ய திருக்கரங்களில் சென்றடைந்தது. இதைப் பற்றி விளக்கும்போது பெரியவாச்சான் பிள்ளை,
அநந்தாழ்வான் மற்றும் நஞ்சீயர் தொடர்பான விஷயத்தைக் கூறுகிறார்.
பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்ட ஒரு வேதாந்தி தம்முடைய செல்வத்தையெல்லாம் மூன்று பங்காகப் பிரித்து
இரண்டு பகுதிகளைத் தன்னுடைய இரண்டு மனைவிகளுக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கைத் தமது ஆசார்யரான
பட்டரிடம் ஸமர்ப்பித்துவிட்டுத் தாம் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டு தம்முடைய ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய விரும்பி ஸ்ரீரங்கம் வந்தார்.

இதைக் கேள்விப்பட்ட அநந்தாழ்வானும் அந்த வேதாந்தியிடம் “நீர் கிருஹஸ்தாச்ரமத்தில் நல்லபடியாக சௌகர்யமாகத் தானே
இருந்து வந்தீர். நீர் அங்கேயே தொடர்ந்து இருந்துகொண்டு ஸம்பரதாய விஷயத்தை நன்றாக அறிந்துகொண்டு
ஆசார்யனுக்கும் பாகவதர்களுக்கும் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்து பின்பு அப்படியே பரமபதம் அடைந்திருக்கலாமே.
ஏன் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டீர்?” என்றார்.
வேறு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதற்கு “என்ன செய்ய” என்று கேட்க
அநந்தாழ்வானும் “ஒருவர் திருமந்திரத்திலே பிறந்து (பரமாத்மா ஜீவாத்மா சம்பந்தத்தை அறிந்து கொண்டு)
பின் த்வய மஹா மந்த்ரத்தாலே வளர்ந்து (பரமாத்மாவே உபாயம் உபேயம் என்று அறிந்து கொண்டு)
அதற்குத் தகுந்தாற் போல் வாழ வேண்டும்” என்று அருளினார்.

நாச்சியார் திருமொழி 12.5 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் எவ்வாறு எல்லா கோபர்களும் கோபிகளும் கண்ணன் எம்பெருமான் காளியன் தலையில் மேல் நின்று
நடனம் ஆடுவதைக் கேட்டு மூர்ச்சித்து விழுந்தார்கள் என்று விளக்குகிறாள்.
ஒரு முறை அநந்தாழ்வான் நம்பி குஹ தாசர் என்பவருடன் எம்பெருமானாரை தரிசிக்க சென்றார்.
அவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அடைந்த பொது வழியில் சில ஏகாங்கிகள் (கைங்கர்யபரர்கள்) மழித்த தலையோடு காவேரியிலிருந்து
நீராடிவிட்டு வருவதைப் பார்த்துக் காரணம் வினவ அவர்கள் எம்பெருமானார் இந்த பூவுலகை நீத்து பரமபதம் அடைந்ததைச் சொன்னார்கள்.
இதைக் கேட்ட உடனேயே நம்பி குஹ தாசர் அருகிலிருந்த மரத்தின் மேலேறி தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார்.
அதற்கு அநந்தாழ்வான் “|நீர் எம்பெருமானார் பரமபதம் அடைந்த செய்தி கேள்விப்பட்ட அந்த க்ஷணமே உயிரை விட்டிருக்க வேண்டும்.
இப்போது மரத்தில் மீதிருந்து குதிப்பதால் உங்கள் உயிர் போகாது. ஆனால் உம்முடைய கால்கள் தான் உடைந்து போகும் என்றார்”.
இந்த நிகழ்வு கோப கோபிகளுக்கு கிருஷ்ணன் மீதிருந்த பற்றுதலை அழகாக விளக்குகிறது.

பெருமாள் திருமொழி 4.10 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் தாம் ஏதேனுமாக வேண்டும் என்று கூறுவதன் மூலம்
திருவேங்கடத்தின் மீது தாம் கொண்டிருந்த பற்றுதலைக் கூறினார்.
அது போல அநந்தாழ்வானும் திருவேங்கட மலைக்கும் தமக்கும் ஏதேனும் ஒரு சம்பந்தம் இருக்க வேணும் என்பதற்காக
திருவேங்கடமுடையனாகவே ஆனாலும் பரவாயில்லை என்கிறார்.

பெரிய திருமொழி 5.5.1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி பாவத்தில் திருவேங்கடத்தைப் பார்த்து “வேங்கடமே வேங்கடமே” என்று
கதறி அந்த திவ்ய தேசத்தின் மேல் தாம் கொண்டு இருந்த அளவில்லாப் பற்றுதலைக் கூறுகிறார்.
இதை நஞ்சீயர், பட்டர் எவ்வாறு நம்பெருமாளை “அழகிய மணவாளா” என்று கூப்பிட்டாரோ,
அநந்தாழ்வான் எவ்வாறு ஸ்ரீனிவாசனை “திருவேங்கடமுடையான்” என்று கூப்பிட்டாரோ அதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

திருவாய்மொழி 6.7.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வாருக்கு வைத்தமாநிதி எம்பெருமானிடத்திலும் திருக்கோளூர் திவ்ய தேசத்தின் மேலும் இருந்த
அதீத பற்றுதலைக் கூறுகிறார். நம்பிள்ளை இதை அநந்தாழ்வானின் ஒரு நிகழ்வின் மூலம் விளக்குகிறார்.
அதாவது ஒருவன் அவனுடைய சொந்த ஊரான திவ்ய தேசத்தில் இருந்து கொண்டே அந்தப் பெருமாளுக்கு
கைங்கர்யம் செய்வதே சிறந்ததது என்பதைக் குறிப்பிடுகிறார்.
ஒருமுறை அநந்தாழ்வான் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சோழ குலாந்தகன் என்ற ஊரில் ஒரு வயலில் உழவு வேலை செய்து
கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க அவரும் தாம் திருக்கோளுரைச் சேர்ந்தவன் என்று கூற
பின் ஏன் நீர் உமது சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வந்தீர் எனக் கேட்டார்.
அதற்கு அவர் தமது சொந்த ஊரில் அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்றும் அதனால் இங்கு வந்ததாகவும் சொன்னார்.
அது கேட்ட அநந்தாழ்வான் நீர் உமது சொந்த ஊரில் சில கழுதைகளை மேய்த்தாவது சம்பாதித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
அது திருக்கோளூர் எம்பெருமானுக்கும் நம்மாழ்வாருக்கும் மிகவும் உகப்பாக இருந்திருக்கும் .
இங்கு வந்து வயலில் வேலை செய்வதற்குப் பதில் அங்கேயே இருந்து கொண்டு அவர்களுக்குக் கைங்கர்யங்கள்
செய்து கொண்டு இருந்திருக்கலாம் என்றார். இதன் மூலம் இந்த உலகில் வாழும் ஜீவாத்மாக்கள் ஒரு திவ்ய தேசத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார்.

திருவாய்மொழி 6.8.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் பிரிவாற்றாமையால் தாம் படும் வேதனையை
எம்பெருமானிடத்தில் சென்று கூற ஒரு பறவையைத் தூது விடுகிறார்.
அப்போது ஆழ்வார் அந்தப் பறவையிடம் அது தமக்கு தூதாகச் சென்றால் அதற்கு அவள்
இந்த ஸம்ஸாரம் என்கிற லீலா விபூதியையும் பரமபதம் ஆகிய நித்ய விபூதியையும் இரண்டையுமே அளிப்பதாகக் கூறுகிறாள்.
(பராங்குச நாயகியே எம்பெருமானின் நாயகியாகவும்/மனைவியாகவும் இருப்பதால்
எம்பெருமானுக்குச் சொந்தமான எல்லாமே அவளுக்கும் சொந்தம்) .
அப்போது ஒருவர் பராங்குச நாயகி பின் எங்கே தங்குவாள் எனக் கேட்க அதற்கு அநந்தாழ்வான் அந்த பறவை
எங்கே இடம் கொடுக்கிறதோ அங்கே இருப்பாள் என்று மிக அழகாகச் சொல்கிறார்.

திருவாய்மொழி 7.2.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், எம்பெருமானைப் பார்த்து “என் திருமகள் சேர் மார்பன்” என்று சொல்கிறார்.
அதாவது அவரே. மஹாலக்ஷ்மித் தாயாரின் உறைவிடம் என்பதால். ஆழ்வாரின் மேல் இருந்த மிகுந்த பற்றுதலால்
அநந்தாழ்வான் தன்னுடைய பெண்ணிற்கு “என் திருமகள்” என்று பெயரிட்டார்.

வார்த்தமாலை 345 –
ஒரு முறை பட்டர் தனது சிஷ்யர்களுள் ஒருவரை அநந்தாழ்வானிடம் சென்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வரச் சொன்னார்.
அவரும் அநந்தாழ்வானின் திருமாளிகைக்குச் சென்ற போது அங்கே ததீயாராதனம் நடந்து கொண்டிருந்தது.
அங்கு இடம் முழுவதும் நிரம்பி இருந்ததால் அந்த சிஷ்யர் அங்கே எல்லோரும் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தார்.
அவரைப் பார்த்து விட்ட அநந்தாழ்வான் அவரை வரவேற்று இறுதியில் தம்மோடு இருந்து பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டினார்.
பின் அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது அந்த ஸ்ரீ வைஷ்ணவர் தாம் பட்டருடைய சிஷ்யர் என்றும்,
பட்டர் தான் அவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்று அநந்தாழ்வானிடமிருந்து அறிந்து கொண்டு வரச் சொன்னதையும் கூறினார்.

அதற்கு அநந்தாழ்வான் கூறினார்,
ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் கொக்கு போலவும்,கோழி போலவும் உப்பைப் போலவும் உம்மைப் போலவும் இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.

கொக்கு என்பது எப்போதும் மிகச் சிறந்த மீனுக்காக காத்திருந்து உண்ணும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் பகவானையே எப்போதும் எல்லாவற்றிற்கும் அண்டி இருந்து பாகவத கைங்கர்யத்தையே
மிகச் சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கோழி எப்போதும் குப்பையைக் கிளறி அதிலிருந்து தனக்குத் தேவையான அரிசியை பொறுக்கிக் கொள்ளும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் சாஸ்த்ரங்களிலிருந்து தேடி (அதில் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் கிடைக்கும்)
அதிலிருந்து மிக உயர்ந்த விஷயங்களான பரகத ஸ்விகாரம் பாகவத கைங்கர்யம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு
அவற்றைப் பின் பற்றி நடக்க வேண்டும்.

உப்பு நம் உணவுப் பண்டங்களோடு கலந்து அந்த உணவை சுவையானதாக ஆக்கும்.
அதுபோல ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் தன்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடக்கி இன்னொரு
ஸ்ரீவைஷ்ணவன் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மேலும் தான் இல்லாதபோது தான் செய்த
நல்ல செயல்களை மற்றவர்கள் எண்ணிப் பார்க்குமாறு இருக்க வேண்டும்.

இறுதியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் உம்மைப் போன்று பொறுமை காத்து பணிவோடு இருந்து
என்னிடமிருந்து விஷயங்களை அறிந்து கொண்டது போல ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அடுத்தவர்களின்
சந்தோஷத்திற்காக பணிவுடன் செயல் பட வேண்டும் என்றார்.

இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான
சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி
தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

அவர் முழுவதுமாக தான் வாழ்வை பாகவத நிஷ்டையிலேயே கழித்தார்.
எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கினார்.
நாமும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து அவருடைய பாகவத நிஷ்டையைப் போல்
ஒரு துளி அளவாவது பெற ப்ரார்த்திப்போம்.

ஸ்ரீ அநந்தாழ்வானுடைய தனியன்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

மலையில் வேங்கடவற்கு மாமனார் வாழியே
மணிச் சுடர் கோன் அநந்தன் என வந்து உதித்தான் வாழியே
உலகுக்கோர் தஞ்சம் என உதித்து அருள்வோன் வாழியே
உலகமுண்ட மாலடியை உகந்து உய்ந்தோன் வாழியே
இலகு சித்திரை தன்னில் சித்திரையோன் வாழியே
எந்தை எதிராசர் இணையடியோன் வாழியே
அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
அனந்தாழ்வான் திருவடிகள் அநவரதம் வாழியே –

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பிள்ளைப்பெருமாளையங்கார் வரலாறு–

January 22, 2022

ஸ்ரீ பிள்ளைப்பெருமாளையங்கார் வரலாறு

*அழகிய மணவாளதாச ரென்கிற திவ்வியகவி பிள்ளைப் பெருமாளை யங்கார்,
(கிருஷ்ணனுடைய குழந்தைத் திருநாமமாகிய பிள்ளைப் பெருமாளென்னும் பெயரை இடப் பெற்ற ஐயங்கா ரென்று
இப்பெயர்க்குப் பொருள் கூறுவர். ஐயங்காரென்பது, ஸ்ரீவைஷ்ணவப் பிராமணர்க்குக் குறியாக வழங்கும்.
அழகிய மணவாளனென்பது, ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி யிருக்கின்ற திருமாலின் திருநாமம்;
அப்பெருமானுக்கே அடியவராயிருந்ததனால், இவர் அழகிய மணவாளதாச ரெனப் பெயர் பெற்றனர்.)
சோழநாட்டில் திருமங்கை யென்னுந் திருப்பதியில் பிராமணவரு ணத்தில் ஸ்ரீவைஷ்ணவ சமயத்தில் அவதரித்து,
நல்லாசிரியர்பக்கல் தென் மொழியில் தொல்காப்பியம் முதலிய அரிய பெரிய இலக்கண நூல்களையும்
பழைய சங்கச் செய்யுள்களையும் அக்காலத்து வழங்கிய மற்றை நூல்களையும் ஐயந்திரிபற ஓதி உணர்ந்து,
இங்ஙனமே வடமொழியிலும் வேதம் வேதாங்கம் வேதாந்தம் முதலிய சகல கலைகளிலும் வல்லவராகி,
மற்றும் தமது ஸ்ரீவைஷ்ணவ சமயத்திற்கு உரிய சம்பிரதாயக் கிரந்தங்க ளெல்லாவற்றையுங் கற்று அவற்றிலும் அதிநிபுணராய்,
அடக்கம் முதலிய நற்குணங்களெல்லாம் ஒருங்கே அமையப் பெற்று, ஆழ்வார்களருளிச் செயல்களில் ஆழ்ந்து ஈடுபடுபவராய்,
திருவரங்கம் பெரியகோயிலி லெழுந்தருளி யிருக்கின்ற நம் பெரிய பெருமாளுடைய திருவடித் தாமரைகட்கு
மிக்க பக்திப் பேரன்புபூண்டு ஒழுகுமவராய் அமர்ந்திருந்தனர்.
(இவரை ‘தென்கலை வைணவர்’ என்பர், புலவர் புராண நூலுடையார் )

அந்நாளில், அந் நாட்டில் ஆண்டு கொண்டிருந்த அரசன்,
(இவ்வரசனைப் பெரிய திருமலை நாயக னென்பர் ஒரு சாரார்; அது, காலக் கணக்குக்கு ஒத்துவராது)
அவரது நற் குணங்களனைத்தையும் அறிந்து,
‘இக்குணங்களெல்லாம் ஒருங்கு அமைவது அருமை அருமை!’ என வியந்து, அவரைத் தனது சம்ஸ்தானத்திற்கு வரவழைத்து
அவர்க்குத் தனது இராஜாங்க காரியங்களிற் சிறந்ததோர் உத்தியோகங் கொடுத்து, அவரைத் தன் சமீபத்தில் வைத்துக் கொண்டனன்.
அவர் உத்தியோகத்தை மேற்கொண்டிருந்தபோதும் விஷ்ணு பக்தி விஞ்சி நின்றார்.

அப்பொழுது ஒருநாள், இராஜ சம்ஸ்தானத்தில் உத்தியோகம் நடத்து கின்றவர்களின் நடுவே தாமும் உடனிருந்து
காரியஞ்செய்துவருகிற அவர், தமது தோளி லணிந்த உத்தரீயத்தை இரண்டு கையிலுங்கொண்டு ‘கிருஷ்ண கிருஷ்ண’ என்று தேய்த்தனர்.
அது கண்ட பலரும் ‘ஐயங்காரே! நீர் நுமது உத்தரீயத்தை இங்ஙனம் ஏன் செய்தீர்?’ என வினவ,
அவர், ‘திருவரங்கம் பெரியகோயிலில் நம்பெருமாள் திருத்தேரி லெழுந்தருளித் திருவீதியிலுத்ஸவங்கண்டருளுகிறபோது
அருகு பிடித்த கைப்பந்தத்தின் சுவாலை தாவியதனாற் பற்றி யெரிகின்ற திருத்திரையை அவித்தேன்’ என்றார்.

அது கேட்டு அவர்கள் ‘கோயிலில் நம்பெருமாள் திருத்தேருத்ஸவங் கண்டருளு கிறது உமக்கு இங்ஙன் எங்ஙனே தெரிந்தது?’
என்று நகைத்து ‘ஏதோ இவர்க்கு இவ்வாறு திகைப்பு உண்டாயிருக்கிறது: இது இராஜ சேவைக்கு மிக விரோதமாகுமே!’ என்று
அவர் விஷயத்தில் இரக்கமுற்றவர்களாய், நடந்த செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். இது நிற்க;

கோயிலில் திருத் தேரிலே திருத் திரையிற் பந்தத்தின் சுவாலை தாவி யெரியும் போது அருகிற் பெருமாளைச் சேவித்து நின்ற
ஐயங்கார் கைகளால் திரையைத் தேய்த்துத் தீயை அவித்திட்டதாக அர்ச்சகர் முதலிய சந்நிதி கைங்கரியபரர்கள் கண்டு
உடனே தோஷ பரிகாரஞ்செய்து திருத் தேருத்ஸவத்தை நடத்தினார்கள்.

பின்பு இவ்வரலாறுகளைச் செவி யுற்றறிந்த அரசன் ஆச்சரிய பரவசனாய் ஐயங்காரை நோக்கி
‘திருத்தேருத்ஸவத்திற்கு எங்ஙனே போயினீர்!’ என்ன,
ஐயங்கார் ‘எனக்கு மாநஸாநுபவமே யல்லது கோயிலுக்குப் போனதில்லை’ என,
அரசன் ‘ரதோத்ஸவத்தினன்றுநீர் அங்கு இருந்ததாகப் பலர் சொல்வது பொய்யோ?’ என்ன,
அப்போது இவர் இங்கிருந்தபடியே உத்தரீயத்தை ‘கிருஷ்ண கிருஷ்ண’ என்று தேய்த்தது கண்ட சிலர்
‘இவர் அப்பொழுது இங்கே தான் இருந்தனர்’ என்று உண்மை கூற,

அரசன் ‘நன்று!’ என்று அத் தெய்விகத் திருவருட் செயலைக் குறித்து ஆச்சரியப்பட்டது மன்றி அன்றை யிரவு நித்திரையில்
தான் நம்பெருமாள் சந்நிதிக்குப் போனதாகவும், தென் திருக்காவேரியில் ஐயங்கார் நீராட்டஞ்செய்து நிற்கக் கண்டு
அவருடனே சந்நிதிக்குப் போய்ப் பெரிய பெருமாளைச் சேவித்து மீளும் போது ஐயங்காரைக் காணாது மயங்கியதாகவுங் கனாக் கண்டு,
கண் விழித்து, பொழுது விடிந்தவுடனே ஐயங்காரை வருவித்து,
‘நீர் மகாநுபாவரும் நம் பெருமாளுக்கு அந்தரங்க பக்தருமாக இருக்கின்றதனால், இனி என்னிடம்
உத்தியோகஞ்செய்தற்குச் சிறிதுந்தக்கவரல்லீர்; அடியேன் இதுவரையிலுந் தேவரீர் பெருமையை அறியாது செய்த அபராதங்களை
யெல்லாம் பொறுத்து, அடியேன் செய்யவேண்டும் பணிவிடையை நியமித்தருளவேண்டும்’ என்று வேண்ட,
ஐயங்கார் ‘பெரியகோயிலில் எனக்கு நிரந்தரவாசங்கிடைக்கும்படி செய்யவேண்டும்’ என்ன,
அரசன் அன்றுதொடங்கிக் கோயிலில் அவர்க்கு ஓர் இருப்பிடம் அமைப்பித்து,
தளிகைப் பிரசாதமும் அவர்க்குக் கிடைக்குமாறு செய்து அனுப்பி விட்டனன்.

அவரும், அவ்வாறே எழுந்தருளியிருந்து, திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்துமாலை, திருவரங்கக்கலம்பகம்,
ஸ்ரீ ரங்கநாயகரூசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகரந்தாதி, நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி என்னும்
எட்டு நூல்களையும் (இந்த எட்டுநூல்களும், ‘அஷ்டப்பிரபந்தம்’ எனவும், ‘ஐயங்கார்பிரபந்தம்’ எனவும் வழங்கும் )
பரப் பிரஹ்ம விவேகம் முதலிய பல நூல்களையும் அருளிச்செய்து, பலநாள் வாழ்ந்திருந்தனர்.

இவர் திருவேங்கடமாலை முதலிய நூல்க ளியற்றியதைக் குறித்து ஒருசாரார் வழங்குவதொரு வரலாறு வருமாறு:-
இவர் ஸ்ரீரங்கநாதனுக்கே தொண்டராகி அப் பெருமானை யன்றிப் பிறிதொரு தெய்வத்தை மறந்துந்தொழாத மனவுறுதியுடையவராய்,
அப் பரமன் விஷயமாகவே அந்தாதியும் மாலையும் கலம்பகமும் ஊசலும் பாடிய பொழுது,
திருவேங்கடமுடையான் இவர் வாயால் தாம் பிரபந்தம் பாடப்பெற விரும்பித் தமது உண்மை வடிவத்துடன்
இவரது கனவில் தோன்றி ‘வேங்கடத்தின் விஷயமாகச் சிலபிரபந்தம்பாடுக’ என்று கட்டளையிட,
இவர் அதற்கு இணங்காமல் ‘அரங்கனைப் பாடிய வாயாற் *குரங்கனைப் பாடேன்’ என்றுகூறி மறுக்க,
(திருவேங்கடமுடையானைக் குரங்கனென்றது, குரங்குகளுடன் மலையில் வாழ்தலால்;
“மந்தியாய் வடவேங்கடமாமலை,” “வானரமும் வேடுமுடை வேங்கடம்” என்றார் ஆழ்வார்களும்.
குரங்குகள் தங்களுக்கு என்று வசிக்கும் இடம் இல்லாமல் கிளைக்கு கிளை தாவுவது போல்
ஆஸ்ரிதர்களைப் பிடிக்க முயன்று அவர்கள் திரு உள்ளம் தேடி திரிபவன் இவனே என்றவாறு )

திருவேங்கடமுடையான் எங்ஙனமாவது இவர்வாயாற் பாடல்பெற அவாக் கொண்டதுமன்றி,
எல்லாத் திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் ஒருவனே யென்று இவர்க்குத் தெரிவித்து
இவர் கொண்டுள்ள பேத புத்தியை அகற்றவுங் கருதியதனால், இவர்க்கு உடனே கண்டமாலையென்னுங் கொடியநோய் உண்டாகும்படி செய்ய,
அந்த வியாதியால் மிக வருந்திய இவர் அதன்காரணத்தை உணர்ந்து கொண்டு அப்பெருமான் பக்கல் தாம் அபசாரப்பட்ட அபராதம்
தீருமாறு உடனே திருவேங்கடமாலை திருவேங்கடத்தந்தாதி என்னும் பிரபந்தங்களை இயற்றி அப்பெருமானைத் துதிக்க,
அது பற்றித் திருவுள்ளமுவந்த திருவேங்கடமுடையான் உடனே இவரெதிரில் எழுந்தருளிக் காட்சிதந்து அநுக்கிரகிக்க,
(திருவேங்கடமுடையான் [ஸ்ரீநிவாசன்] ஐயங்கார்க்குச் சேவை சாதித்த இடம் – கோயிலில் சலவைக் கல்மண்டபப் பிராகாரமென்கிற
உட் பிரகாரத்தில் தென் கிழக்குப்பக்கத்தில் என்பர் )
அதனால் இவர் அப்பொழுதே அந்நோய் நீங்கப் பெற்றவராகி, பின்பு, அவ்வடமலைக்கு ஈடான தென்மலையின் விஷயமாக
அழகரந்தாதி பாடி, அப்பால் தமது பேத புத்தி யொழிந்தமை நன்கு விளங்க நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதி பாடினர்.

பரமத நிரஸநம் பண்ணி ஸ்வமதஸ்தாபநஞ் செய்தற் பொருட்டு இவர் பாடிய பாடல்களின் தொகுதியே,
பரப் பிரஹ்ம விவேக மெனப்படுவது.

விசுவரூப தரிசந பசு சம்வாதமென்னும் மறுபெயரை யுடைய பரப்ரஹ்ம விவேக மென்னும் நூலின் உரைத் தொடக்கத்தில்
அந்நூலின் வரலாற்றைக் குறித்து எழுதியுள்ள விவரத்தை அடியிற் காண்க:-

“திருவரங்கத்தமுதனார் திருப் பேரனாராகிய அழகிய மணவாளதாச ரென்கிற திவ்விய கவி பிள்ளைப் பெருமாளை யங்கார்
நம் பெருமாள் முதலிய சில திவ்விய தேசப்பெருமாள் களின் மீது தமிழ்ப் பிரபந்தங்கள் பல செய்தருளுங்காலத்தில்,
தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்றுவல்ல சிறந்த புலவர்கள் பலரும் இவருடைய கவிகளிற்
சொல் நோக்கு பொருள் நோக்கு முதலியவற்றைக் கண்டுங் கேட்டுங் கொண்டாடுவதை ஆனைக் காவிலிருக்கும்
ஆகமவாதிகள் கேள்விப்பட்டு ‘இப் படிப்பட்ட வித்துவானால் நம்முடைய ஜம்புகேசுவரச் சிவபெருமான்
மீது ஒரு பிரபந்தம் பாடுவித்துக்கொள்ளவேண்டும்’ என்னுங் கருத்துடையவர்களாய்
ஒருநாள் இவருடைய திருமாளிகையில் வந்து தங்கள்கருத்தை வெளியிட, அதுகேட்டருளி,

திரிகரணத்தாலுந் தேவ தாந்தரத்தைப் பற்றற விட்ட சுத்த சத்துவ தொண்டக் குல ஸ்ரீவைஷ்ணவ சிகாமணியாகிய ஐயங்கார்
புன்னகை கொண்டு ‘யாம் அரங்கனைப்பாடின வாயினால் மற்றொரு *குருங்கனைப் பாடுவதில்லையே’ எனத்
திருவாய் மலர்ந்தருள,

(குரங்கம் – மான்: வடசொல்; அதனை இடக்கையிலேந்தியுள்ளவன், குரங்கன்: எனவே, சிவபிரானாம்.
அன்றி, குரங்குமுகமுள்ள நந்திகேசுரனை அடிமையாகவுடையனாதல்பற்றியும்,
அநுமானாக அவதரித்தவ னாதல்பற்றியும், சிவபிரானைக் குரங்க னென்றன ரென்னலாம்.
கு – குற்சிதமான, ரங்கன் – அம்பலத்தையுடையான் என்றுங் கூறுவர்)

கேட்டு, ‘குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்ளுமவரைப் போல நம்முடைய பரமசிவத்தின் மீது
பாடல் பெற்றுக் கொள்ள வந்து குரங்கனென்னுஞ் சொல்லைப் பெற்றுக் கொண்டோமே’ என்று மனம் பொறாதவர்களாய்ச்
சடக்கென எழுந்திருந்து, ‘எவ்வகையினாலாவது உம்முடைய வாக்கினால் எங்கள் பரம சிவத்தின் மீது
ஒரு பாடலாவது பெற்றுக் கொள்ளுகிறோம்’ என்று சபதங்கூறித் தங்களிருப்பிடத்திற்குப் போய் அதற்கு வகை தேடிக் கொண்டிருந்தனர்கள்.

இப்படியிருக்கச் செய்தே, கோயிலில் உதயத்தில் திருக் காப்பு நீக்கி நம்பெருமாளுக்குச் செய்யுங் கைங்கர்யமாகிய
விசுவ ரூபதரிசநஞ் செய்விக்கப் போகிற சமயத்திற் கொண்டு போய் அர்ச்சகர் சமர்ப்பிக்கிற பொருள்களில் ஒன்றாகிய
கபிலை யென்கிற பசுவானது ஒருநாள் ஆனைக்காவைச் சார்ந்த ஒருபுலத்தில் மேய அதை மேற்கூறிய ஆகமவாதிகள் பிடித்து
இதனால் தாங்கள் கொண்டகருத்தை ஈடேற்றுவித்துக் கொள்ளலாமென நினைத்துக் கட்டி வைத்தனர்கள்.

அன்று இராத்திரி கோயிலில் அர்ச்சகர் முதலாயினோர் விசுவரூப தரிசந பசுவைக் காணாமல் தேடிக் கொண்டு போகையில்,
ஆனைக்காவி லிருக்கக் கண்டு ஆகமவாதியர்களைப் பசுவைக் கொடுக்கும்படி கேட்க,
அவர்கள் ‘உங்களுடைய பிள்ளைப் பெருமாளையங்கார் வந்து கேட்டால் தருகிறோம்’ என்று சொல்ல,
அதுகேட்டு, விசுவரூப தரிசநத்துக்கு ப்ராதக் காலத்தில் வேண்டுமே யென்னும் எண்ணத்தினால்
அதை மறுத்து ஒன்றும் பேசாமல் ஒத்துக் கொண்டு, பரபரப்புடன் சென்று ஐயங்காரிடத்தில் விண்ணப்பஞ்செய்ய,

“மறந்தும்புறந்தொழாமாந்தர்” என்கிறபடியே அந்தப் பிரபந்நநிஷ்டாநுபவராகிய வைதிக வைஷ்ணவரானவர் அதுகேட்டருளி,
‘துஷ்கர்ம காலம் தவிர மற்றைக் காலத்தில் ருத்திர பூமியில் அடிவைப்பது கூடுமோ?
அன்றியும், அவ்வாலயத்திற் பிரவேசிப்பது வைதிக வைஷ்ணவனுக்குத் தக்கதன்று:
‘ஆனை துரத்தி வந்தாலும் ஆனைக்காவில் நுழையாதே என்கிற பழமொழியையேனும் கேட்டதில்லையோ?
ஆதலால், அந்த ஆகமவாதியர்களைக் கோயிலிடத்தில் அழைத்துவாருங்கள்’ எனச் சொல்லினர்.

அவ்வாறே அந்த ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆனைக்காவிற் சென்று அவர்களுக்குச் சொல்ல, எவ்வகையாலாயினும்
ஐயங்காரால் ஒருபாடல் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவர்களும்,
‘நம்முடைய எண்ணம் நிறைவேறுங் காலம் இதுதான்’ என்று அதற்கு ஒத்துக்கொண்டு,
அதிக சந்தோஷத்தோடு அக் கபிலையையும் ஓட்டிக்கொண்டு, ஜயவிஜயர்கள் எழுந்தருளியிருக்கும்
சந்தநு மகாராஜமண்டபத்தில் வந்து சேர்ந்தனர்கள்.

ஐயங்காரும் அவ்விடத்தில் எழுந்தருளி, ‘கபிலையை விடுவதற்கு உங்களுடைய கருத்து ஏது?’ என்று கேட்டருள,
அவர்கள் ‘உம்முடைய வாக்கால் ஜம்புகேசுரச்சிவபெருமானாகிய எங்கள் தெய்வத்தின் மீது ஒருபாடல் பாடித் தருவீரேல்,
விசுவரூப தரிசனப் பசுவை நாங்கள் விடுவதற்கு யாதோராடங்கமு மில்லை’ என்று சொல்லினர்.
“பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்” என்கிற குறளின்படி
அவர்கள் சொன்னதற்கு இணங்கினவரைப் போல நடித்து ஐயங்கார்
‘நம்பெருமாளுக்கு விசுவரூப தரிசனத்திற்கு மற்றாநாள் பிராதக் காலத்தில் ஆடங்கமாகிறபடியால்,
அப்பசுவை விடுவீர்களாகில், உடனே யாம் பாடுகிறோம்’ என,
‘எங்கள் சிவபெருமான்விஷயமாக நீர்பாடுவது யதார்த்தமாகில், அப்பாட்டில் இரண்டொரு சீரையேனும் முன்னே,
சொல்லுவீராகில் பசுவை விடுகிறோம்’ என்று அவர்கள் சொல்ல,
ஐயங்காரும் புன்னகைகொண்டு அவ்வாறே “மங்கை பாகன்” என்று முதலிரண்டு சீரை அருளிச் செய்த மாத்திரத்தில்,
அப்பசுவை விட்டனர்கள்.

உடனே ஐயங்காரும் முன் தாம் சொன்ன சீரைத் தொடங்கி,

“மங்கைபாகன் சடையில்வைத்த கங்கை யார்பதத்துநீர்
வனசமேவு முனிவனுக்கு மைந்தனான தில்லையோ
செங்கையா லிரந்தவன் கபால மாரகற்றினார்
செய்யதாளின்மல ரரன்சிரத்தி லான தில்லையோ
வெங்கண்வேழ மூலமென்ன வந்த துங்கள்தேவனோ
வீறுவாணனமரி லன்று விறலழிந்த தில்லையோ
அங்கண்ஞால முண்டபோது வெள்ளிவெற்பகன்றதோ
ஆதலா லரங்கனன்றி வேறுதெய்வ மில்லையே.

ஆதலால், சீவகோடியிற் சார்ந்தவரேயொழிய உங்கள் தேவதை பரமாத்மா வல்லர்” என்று இச்செய்யுளைச் சொல்லி
‘உலகத்துக்குப் பலதெய்வங்கள் உண்டோ? ஒரு தெய்வமேயாம்; அத்தெய்வம் திருவரங்கனே யல்லாமல் வேறில்லை’ என,

அது கேட்டு அவ்வாகமவாதியர்கள் ‘கிணறுவெட்டப்பூதம் புறப்பட்டாற்போல் இது என்ன விபரீதமாய் முடிந்ததே!’ என்று
சினங்கொண்டு அந்த ஆகமவாதிகளுக்குட் சிறந்த நிஷ்டாநுபவர்களாகிய சிலவித்வான்கள் வேதவிருத்தமாகிய
ஆகமபுராணங்களைக்கொண்டு புலவர் பெருமானாகிய ஐயங்காரோடு வாதுசெய்யத் தொடங்கினர்கள்.

அவ்வாதி சைவவித்வான்கள் கேட்ட வினாவுக்கு விடை சொல்லியருளிய உத்தரங்களைப் பின்னுள்ளோரும் தெரிந்துகொள்ளும்படி
பரமகாருணிகராகிய ஐயங்கார் வெள்ளைப்பாவாற் கூறினார்.
ஆதிசைவசமயநிஷ்டாநுபவர்களாகிய வித்துவான்கள் சொல்லிக் கொண்டுவந்த பிரச்நைகளுக்கு
வடமொழியிலும் தென்மொழியிலும் தெய்வப்புலமையுள்ள வீரவைஷ்ணவசிகாமணியாகிய ஐயங்கார் அருளிச்செய்த
விடைகளை மறுத்துச்சொல்ல ஒன்றுந் தோன்றாமல் அவ்வாதியர்கள் ‘ஓம்’ என்று தங்கள்தங்களிருப்பிடத்துக்குச் சென்றனர்கள்.”

‘திருநறையூர் நம்பி மேக விடு தூது’ என்றநூலும் இவர்செய்த தென்பர்.

இவர்செய்தனவாகத் தனிப்பாடல்களும் சில வழங்குகின்றன.

பின்பு இவர் ஒருநாள் தமது திருவடிகளிற் சம்பந்த முடையவர்களை நோக்கி
‘நமக்கு அந்திமதசை பசுவினாலே நேரிடும்’ என்று சொல்லி அப்படியே சக்கரவர்த்தித் திருமகனைச் சேவித்துக்கொண்டு
ஸ்ரீவைகுண்டநாதர் சந்நிதியிற் சேவிக்கும்பொழுது, ஒரு நொண்டிப்பசு வந்து தவறி இவர்மேல் விழ,
அது விழுந்ததனாலாகிய துன்பத்துடனே இவர்

“துளவ துளவவெனச் சொல்லுஞ் சொற் போச்சே
அளவி னெடுமூச்சு மாச்சே – முளரிக்
கரங்கால் குளிர்ந்ததே கண்ணும் பஞ்சாச்சே
இரங்கா யரங்கா வினி ”

என்று சொல்லித் திருநாட்டை யலங்கரித்தனர்.

இவர், சிலேடை திரிபு யமகம் அந்தாதி கலம்பகம் ஊசல் முதலியன விசித்திரமாகப் பாடுவதில் ஒப்புயர்வில்லாது மிக வல்லவர்;
இது, இவர் செய்துள்ள நூல்களால் இனிது விளங்கும்:
அன்றியும், ‘திவ்வியகவி’ என்ற இவரது பட்டப்பெயர்தானே இதனை வற்புறுத்தும்.
இவர் இயற்றிய திருவரங்கக்கலம்பகம் – வெண்பாப்பாடுதலில் வல்ல புகழேந்தியும்,
விருத்தம்பாட வல்ல கம்பரும், அந்தாதிக்கு எடுத்த ஒட்டக்கூத்தரும்,
கலம்பகத்திற்கென்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இரட்டையர்களும்,
சந்தம்பாடுதலிற் சமர்த்தரான படிக்காசுப்புலவரும் முதலிய மகாவித்வான்கள் சேர்ந்து செய்தாலொத்த சிறப்பினை யுடையது.

இங்ஙன மிருக்க, ஒருசாரார் ‘ஐயங்கார் அம்மானையில் அடி சறுக்கினார்’ என்று குறை கூறுவது,
சிறிதும் சரியன்று; திருவரங்கக்கலம்பகத்திலுள்ள “தேனமருஞ்சோலை” என்ற தொடக்கத்து அம்மானைச் செய்யுளினது ஈற்றடியின்
பிற்பகுதியிற் பொருந்திய சிலேடைப் பொருள் நயத்தையும் சரித்திர வமைப்பையும் ஆழ்ந்த கருத்தையும் ஊன்றி நோக்குமிடத்து,
அங்ஙனம் இழித்துரைப்பாரது பழிப்புரை வெற்றுரையே யா மென்பது தெற்றென விளங்கும்:

அன்றியும், அக்கூற்று அழுக்காற்றினா லாகியதேபோலும;
அந்த அம்மானைச் செய்யுளின் அருமை பெருமைகள் இங்கு விரிப்பிற் பெருகும்.
இன்னும், இவர் செய்துள்ள பிரபந்தங்களெல்லாம், ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தில் உள்ள நம்மாழ்வார் முதலிய
ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிச்செய்த திவ்வியப்பிரபந்தங்களின் ஸாரார்த்தங்களும்,
நாதமுனிகள் முதலிய ஆசாரியர்களுடைய அருளிச்செயல்களின் விசேஷார்த்தங்களும் பொதிந்திருத்தல் மாத்திரமேயன்றி,
“சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும் துறையின்நோக்கோடு எந்நோக்குங் காண இலக்கிய” மாகியும் இருப்பன.

இவர், ஸ்ரீவைஷ்ணவவிசிஷ்டாத்வைத மதஸ்தாபநாசாரியரான ஸ்ரீ பகவத்ராமாநுஜாசார்யரென்கிற
ஸ்ரீபாஷ்யகாரரது அந்தரங்கசிஷ்யரான கூரத்தாழ்வானுடைய குமாரராகிய ஸ்ரீபராசரபட்டரது சிஷ்ய ராதலாலும்,
அந்தப்பட்டரது திருவவதாரம் சாலிவாகனசகாப்தம் ஆயிரத்துநாற்பத்தைந்தில் என்று தெரிதலாலும்,
இவரதுகாலம் இற்றைக்குச் சற்றேறக் குறைய எழுநூற்றறுபது வருஷத்துக்குமுன்ன ராகின்றது;
(இப்பொழுது நிகழ்கிற சாலிசகம் – 1836.)
இவரை ஸ்ரீபாஷ்யகாரரது ஸ்ரீபாதத்தி லாசிரயித்தவர்களுட் பிரதானரும்,
இராமாநுசநூற்றந்தாதி அருளிச்செய்தவருமாகிய திருவரங்கத்தமுதனாரது திருக்குமார ரென்று பலரும்
திருப்பேரனாரென்று சிலரும் வழங்கிவருவதும், கீழ்க்கூறிய காலக்கணக்கையே வற்புறுத்தும்.

இவர்பேரனார், ஸ்ரீரங்கநாயகியாரூசல்செய்த கோனேரியப்பனையங்கார்.

இன்னும் இவரது வைபவவிசேஷங்களை வல்லார்வாய்க் கேட்டு உணர்க.

அடியில் வருகிற புலவர்புராணச் செய்யுள்கள் இங்குநோக்கத் தக்கவை:-

(1) ” தென்கலைவயிணவன் செகமெலாம்புக
ழின்கவிப்பிரபலன் இணையில்பட்டர்தம்
நன்கணத்தினர்களிலொருவன் நாரணன்
பொன்கழலன்றி மற்றொன்றும் போற்றிலான்.

(2) மருவழகியமணவாளதாசனென்
றொருபெயர்புனைந்தவன் உரைக்குமோர்சொலாற்
பொருள்பலதருங்கவிபொறிக்கும்பொற்பினிற்
பெருமிதனெனப் பலர்பேசும் பெற்றியான்.

(3) செவ்வியசொற்சுவைசிறிதுந்தேர்ந்திடா
தவ்வியப்போர்பொருமவர்களன்றிமற்
றெவ்வியற்புலவருமிசைந்துநாடொறுந்
திவ்வியகவியெனச்செப்புஞ்சீர்த்தியான்.

(4) தேனையுமமுதையுமனையதீஞ்சொலோர்ந்து
ஆனையின்கன்றெனவமைக்கும்பாடலான்
ஏனையபாடலொன்றேனுமோதிலான்
பூனைபோல்வஞ்சனைப்புந்திகொண்டிலான். ”

இவரை மிகுதியாகச் சிவதூஷணை செய்கின்றவ ரென்று சைவர்கள் பழித்தற்குப் புலவர் புராணமுடையார்
கூறும் சமாதானத்தை அடியில் வருகின்ற செய்யுள்களிற் காணலாம்:-

(15) “சிவனைநிந்தனைசெய்தவனேயென
இவனைச்சிற்சிலிளஞ்சைவரேசுவார்
அவன்தன்மாயவனாகத்திற்பாதியென்று
உவந்துபாடியபாக்களுமுள்ளவே.

(16) என்றென்றுந்தனதிட்ட தெய்வத்தையே
நன்றென்றேத்திடல்ஞானிகள்சம்மதம்
அன்றென்றோதவொண்ணாததனாலவன்
குன்றென்றச்சுதனைக்குறிக்கொண்டதே.

(17) சைவரிற்சிலர் தாமரைக்கண்ணனை
வைவதொப்ப வயிணவரிற்சிலர்
மைவனக்களவள்ளலைநிந்தனை
செய்வதுண்டு மதங்கொண்டசிந்தையால்.

(23) திரிவுசொற்றிறந்தேடித்தினந்தினம்
அரியின்மேற்கவிபாடிடுமந்தணன்
கரிவலஞ்செய்கருவைமன்றன்னிலும்
பெரிதுநிந்தனைபேசிலனுண்மையே.

(24) வளங்குலாந் துறைமங்கலவாசன்போல்
உளங்கனன்றரியன்பரொருவரும்
களங்கறுத்தவராயிரர்க்காதுதல்
விளங்கொர்பாடல்விளம்பிலர்மெய்ம்மையே. ”

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அந்திமோபாய நிஷ்டை–ஸ்ரீ பர வஸ்து பட்டர் பிரான் ஜீயர்

January 18, 2022

திருநக்ஷத்ரம் : கார்த்திகை புனர் பூசம்-பாரத்வாஜ கோத்ரம்
ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: கோயில் அப்பன் (தன்னுடைய பூர்வாஸ்ரம திருக்குமாரர்), பரவஸ்து அண்ணன், பர வஸ்து அழகிய மணவாள ஜீயர், அண்ணராய சக்ரவர்த்தி, மேல்நாட்டுத் தோழப்பர் நாயனார் எனப் பலர்.

அருளிச் செயல்கள்:அந்திம உபாய நிஷ்டை -பஞ்சம உபாய நிஷ்டை

திருநாடு அலங்கரித்த திவ்யதேசம் : திருமலை

கோவிந்தர் என்னும் திருநாமத்துடன் மதுரகவி ஐயர் (-ஸ்ரீ ராமானுஜருடைய 74 சிம்ஹாசநபதிகளில் ஒருவர்-அரணபுரத்தாழ்வான் திருவம்சம் என்றும் நடுவில் ஆழ்வான் திருவம்சம் என்றும் கூறுவர்) என்பவருடைய திருக்குமாரராக பர வஸ்து திருவம்சத்தில் அவதரித்தார். இவரை கோவிந்த தாஸரப்பன் என்றும் பட்டநாதன் என்றும் பூர்வாச்ரமத்தில் அழைப்பர். ஸந்யாஸாச்ரமம் ஏற்ற பின் பட்டர்பிரான் ஜீயர் என்றும் பட்டநாத முனி என்றும் அழைக்கப் பெற்றார். மாமுனிகள் அஷ்டதிக்கஜங்களில் ஒருவர் (மாமுனிகள் பிரதான சிஷ்யர்களும் நம் சம்பிரதாயத்தின் முக்கியத் தலைவர்களும் அஷ்டதிக் கஜங்கள் ஆவர்). நம் சம்பிரதாயத்திற்குப் பல கிரந்தங்களை அருளிச்செய்த பிள்ளைலோகம் ஜீயர் இவருடைய திருப்பேரனார் ஆவார்.

மாமுனிகளே இவரைத் தன் கோஷ்டியில் கோவிந்தப்பாதசர் (பட்டர் பிரான் ஜீயர்)  என்று போற்றியிருக்கிறார். ஒருமுறை மாமுனிகள் தன் கோஷ்டியார் குழுமியிருந்த போது பட்டர்பிரான் ஜீயர் ஒருவரே “தேவுமற்றறியேன்” என்ற  மதுரகவியாழ்வார் நிலைக்குத் தகுதியானவர் (நம்மாழ்வரைத் தவிர வேறு தெய்வம் அறியேன்) என்று சாதித்தார். பட்டர்பிரான் ஜீயரை மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாருக்கும், தெய்வவாரியாண்டான் ஆளவந்தாருக்கும், வடுக நம்பி எம்பெருமானாருக்கும் போன்று ஒப்பிட்டுக் கூறுவர். எம்பார் எப்படி எம்பெருமானாரை விட்டுப் பிரியாமல் இருந்தாரோ அதேபோல் பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளை விட்டுப் பிரியாமல் இருந்தார். இதனால் அனைத்து சாஸ்திரங்களையும் மாமுனிகளிடத்தே நேரடியாய்க் கற்று தொடர்ந்து மாமுனிகளுக்குத் தொண்டு பூண்டார்.

ஸ்ரீ பட்டர்பிரான் ஜீயர் தன் பூர்வாச்ரமத்தில் முப்பது ஆண்டுகளாக மாமுனிகள் போனகம் செய்த சேடத்தை (பெரியோர்கள் சுவீகரித்த பிரசாதத்தின் மீதம்) உண்டார். “மோர் முன்னார் ஐயர்” என்று ப்ரஸித்தமாய் அழைக்கப் பட்டார் (பக்தி ஸ்ரத்தையாலே மோர் பிரசாதத்தை முதலில் ஸ்வீகரிப்பவர்). வழக்கமாக நாம் முதலில் அருரிசி சோறுடன் பருப்பு – குழம்பு முதலியன உண்டு இறுதியாய் மோர் பிரசாதத்தை உண்போம். ஆனால் பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளின் இலையில் அமர்ந்து மாமுனிகள் ஸ்வீகரித்த மோர் பிரசாதத்தை சுவை மாறாமலிருக்க மோர் பிசாதத்தை முதலில் தினப்படி உண்பார் (மோர் பிரசாதம் ஆரம்பித்து பருப்பு – குழம்பு முதலியன). இதனாலேயே இவர் “மோர் முன்னார் ஐயர்” என்று என்னும் திருநாமம் கொண்டு வழங்கப் பெற்றார்.

ஸ்ரீ மாமுனிகள் சிஷ்யர்கள் மாமுனிகளை “பட்டநாத முனிவர அபீஷ்ட தைவதம்” எனக் குறிப்பிடுவர்கள். பட்டர்பிரான் ஜீயரின் அன்பைப் பெற்ற ஆசார்யன் என்று பொருள். அதே போல் பட்டர்பிரான் ஜீயரை மாமுனிகளிடம் மதுரகவி நிஷ்டை உடையவராய்க் கொண்டாடுவர்.

வர யோகி பதச்சாயா பரத்வாஜ கோத்ரம் -கோவிந்த பட்டர்

ஸ்ரீ மாமுனிகள் அந்திம காலத்தில் அண்ணராயச் சக்ரவர்த்தி (திருமலை நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தில் அவததரித்தவர்) திருமலையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளினார். பெரியகோயிலை மங்களாசாசனம் செய்யது விட்டு, தன் தாயார் சொன்னதை சிரமேற்கொண்டு, பெரிய ஜீயரை தண்டன் சமர்ப்பிக்க பெரிய ஜீயர் மடத்தை அடைந்தார். தன் குடும்பத்துடன் பட்டர்பிரான் ஜீயர் மூலமாக மாமுனிகளை அணுகுகிறார். பெரிய ஜீயர் தன் திவ்ய பாதத்தை அண்ணராயச் சக்ரவர்த்தி சென்னியில் (தலையில்) பதித்து பரிபூரணமாய் அனுகிரஹிக்கிறார். அண்ணராயச் சக்ரவர்த்தியின் திருமலை கைங்கர்யங்களை புகழ்ந்து, பிறகு பட்டர்பிரான் ஜீயரிடம் அண்ணராயச் சக்ரவர்த்தியை தன் சிஷ்யராக ஏற்கும்படி அழைத்தார். மாமுனிகள் “ராமஸ்ய  தக்ஷிணோ பாஹு” என்று சாதித்து , இராமனுக்கு இலட்சுமணன் வலது கரம் போலே – அடியேனுக்குப் பட்டர்பிரான் ஜீயர் வலது கரம் போலே; எனவே பட்டர்பிரான் ஜீயர் உமக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யது வைத்து, சிஷ்யராய் ஏற்று நம் சம்பிரதாயத்தின் ஒரு தலைவராய் உம்மை நியமனம் பண்ணட்டும் – என சாதித்தருளினார். இதை அண்ணராயச் சக்ரவர்த்தி மகிழ்வுடன் ஏற்று பட்டர்பிரான் ஜீயரை தன் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீ மாமுனிகள் திருநாடு அலங்கரித்த பிறகு பட்டர்பிரான் ஜீயர் திருமலையில் இருந்து பல ஜீவாத்மாக்களை உய்வித்தார். அந்திமோபாய நிஷ்டை என்னும் அற்புதமான கிரந்தத்தை அருளி அதில் நம் ஆசார்ய பரம்பரையைக் கொண்டாடி, எப்படி நம் பூர்வாசார்யர்கள் தம் தமது ஆசார்யர்களை ஆச்ரயித்து இருந்தனர் என விவரித்தருளினார். இந்த கிரந்தத்தின் ஆரம்பத்திலேயே அனைத்து சம்பவங்கள் மற்றும் தாத்பர்யங்கள் அனைத்தும் மாமுனிகள் தன் திருவாய் மலர்ந்து அருளியது என்றும் , தான் எழுதும் கரணமாகவே இருப்பதாயும் அறிவித்திருக்கிறார்.

இவர் ஒரு சிறந்த அறிஞர் மற்றும் மாமுனிகளின் அபிமானத்துக்கு மிகவும் பாத்திரமானவர். இவரின் திருவடிகளை வணங்குவதன் மூலம் சிறிதேனும் இவரைப் போல் பாகவத நிஷ்டையைப் பெறுவோம்.

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் | பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||-ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் தனியன

ஶ்ரீஸௌம்ய ஜாமாத்ரு  முநே: ப்ரஸாத ப்ரபாவ ஸாக்ஷாத் க்ருத ஸர்வ தத்த்வம்|
அஜ்ஞாந தாமிஸ்ர ஸஹஸ்ர பாநும் ஶ்ரீ பட்ட நாதம் முநிமாஶ்ரயாமி||-ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் தனியன

————-

ஸ்ரீ ஶாஸ்த்ரம் ஸ்ரீ பகவானுக்கு நிரந்தரமாகக் கைங்கர்யம் செய்வதையே
சிறந்த புருஷார்த்தமாக நிர்ணயித்துக் காட்டுகிறது.
இப் பலனான கைங்கர்ய ப்ராப்தியை அடைவதற்குப் பல வழிகளைக் காட்டியிருந்தாலும்
பக்தி மற்றும் ப்ரபத்தி அவற்றில் சிறந்ததாகச் சொல்லப்படுகின்றன.

அவற்றிற்கும் மேலே இப் பலனை அடைய ஒரு ஆசார்யனிடம் முழுவதுமாக அடிமை பூண்டு இருப்பதையே
தலை சிறந்ததாகவும் எளியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆஶிநோதி ய: ஶாஸ்த்ரார்த்தம் ஆசரே ஸ்தாபயதி அபி
ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் ஆசார்யஸ் தேந கீர்த்தித:

ஆசார்யன் என்பவன் ஶாஸ்த்ரத்தைத் தான் முழுதுமாக அறிந்து,
தான் அதை அனுஷ்டித்து பிறருக்கும் அதை உபதேசிப்பவன்.

மேலும் நம் பூர்வாசார்யர்கள் ஶாஸ்த்ரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆசார்யன் என்பவன்
ஸ்ரீமந் நாராயணனுக்கே ஆட் பட்டு இருந்து, அவனுடைய பரத்வத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு,
ஞான பக்தி வைராக்யங்களில் சிறந்து விளங்கி, உபாயாந்தரங்களிலிருந்தும் (எம்பெருமான் தவிர வேறு உபாயங்கள்),
உபேயாந்தரங்களிலிருந்தும் (எம்பெருமானுக்கும் அவன் அடியாருக்கும் தொண்டு செய்வதைத் தவிர வேறு பலன்கள்),
தேவதாந்தரங்களிலிருந்தும் விலகி இருத்தல் வேண்டும் என்று காட்டினர்.
நம் பூர்வாசார்யர்கள் அனைவரும் இந்த குணங்களில் சிறந்து விளங்கினர்.

பிள்ளை லோகாசார்யர், மணவாள மாமுனிகள், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்
பிள்ளை லோகாசார்யர் ஶாஸ்த்ரத்தின் ஸாரத்தை பூர்வாசார்யர்களின் உபதேசத்தின்படி
ஸ்ரீவசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்தின் மூலம் வெளியிட்டருளினார்.

இதன் முடிவில், “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்”, அதாவது
சிஷ்யனிடத்தில் ஆசார்யனின் கருணையே சிஷ்யனின் கைங்கர்ய ப்ராப்திக்கு வழி என்பதை அருளியுள்ளார்.

இந்தக் கொள்கையை பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (மணவாள மாமுனிகளின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவர்)
தன்னுடைய திவ்ய க்ரந்தமான அந்திம உபாய நிஷ்டையில், பல உதாரணங்களுடன் அழகாக விளக்கியுள்ளார்.

அந்திம = சிறந்த/எல்லையான, உபாய = வழி, நிஷ்டை = நிலைத்து நிற்றல்.
இதன் பொருள் “ஆசார்யனிடத்தில் முழுமையாக அடி பணிந்து இருத்தல்”.
பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் தானே, இந்த முழு க்ரந்தமும் மாமுனிகளின் நேரடி உபதேசங்களைக் கொண்டு எழுதப்பட்டது என்றும்
தான் ஆசார்யனின் வார்த்தைகளை ஏடுபடுத்த உதவும் ஓலைச் சுவடி, எழுத்தாணி போல மட்டுமே என்றும் சொல்கிறார்.-அந்திமோபாயநிஷ்டா யா வக்தா ஸௌம்ய வரோ முநி: |
லேககஸ்ய அந்வயோ மேத்ர லேகநீ தால பத்ரவத் |

இது நம்பிள்ளையின் ஈடு கால க்ஷேபங்களை எவ்வாறு வடக்குத் திருவீதிப் பிள்ளை ஏடுபடுத்தினாரோ அதைப் போன்றதே.
ஆக, இந்த நூலாசிரியரின் கருத்துப்படி இவை மாமுனிகளின் நேர் உபதேசங்களே

இந்த ஆசார்ய நிஷ்டை
மதுரகவி ஆழ்வாருக்கு நம்மாழ்வாரிடத்திலும்,
ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரிடத்திலும்,
தெய்வவாரி ஆண்டானுக்கு ஆளவந்தாரிடத்திலும்,
வடுக நம்பிக்கு எம்பெருமானாரிடத்திலும் இருந்தது.

இந்த நிலைக்குச் சரம பர்வ நிஷ்டை என்றும் ஒரு பெயருண்டு.
பகவானிடம் முழுமையாக அடிமை கொண்டிருத்தல் ப்ரதம் பர்வ நிஷ்டை (முதல் நிலை) என்றும்
ஆசார்யனிடம் அவ்வாறு இருப்பது சரம பர்வ நிஷ்டை (முடிந்த நிலை) என்றும் சொல்லப்படுகிறது.

ஆழ்வார்களும் ஆசார்யர்களும் முறையே திவ்ய ப்ரபந்தங்கள் மூலமாகவும்
தங்கள் ஸ்ரீஸூக்திகள் மூலமாகவும் இதை உபதேசித்துள்ளார்கள்.

பகுதி 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள்
பகுதி 2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம்
பகுதி 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்
பகுதி 4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி
பகுதி 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம்
பகுதி 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை
பகுதி 7 – நம்பிள்ளை வைபவம் 1
பகுதி 8 – ஆனி திரு மூலம் – ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்)
பகுதி 9 – நம்பிள்ளை வைபவம் 2
பகுதி 10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை
பகுதி 11 – எம்பார் மற்றும் எம்பெருமானாரின் சிஷ்யர்களின் நிஷ்டை
பகுதி 12 – ஆசார்யன் பகவத் அவதாரம்
பகுதி 13 – ஆசார்ய அபசார விளக்கம்
பகுதி 14 – பாகவத அபசார விளக்கம்
பகுதி 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம்
பகுதி 16 – பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)
பகுதி 17 – பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை
பகுதி 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்

——–

அந்திமோபாய நிஷ்டை – 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள்

ஶ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாத்ரம் முநிம் ||

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ரேகா மயம் ஸதா|
ததாயத் தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே||

பரவஸ்து பட்டர்பிரான்ஜீயர் தனியன்கள்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்ட நாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

காந்தோ பயந்த்ரு யமிந: கருணாம்ருதாப்தே :
காருண்ய ஶீதல கடாக்ஷ ஸுதா நிதாநம் |
தந் நாம மந்த்ர க்ருத ஸர்வ ஹிதோபதேஶம்
ஶ்ரீபட்ட நாத முநி தேஶிகமாஶ்ரயாமி ||

உபநிஷதம்ருதாப்தே ருத்த்ருதாம் ஸார வித்பி :
மதுரகவி முகைஸ் தாம் அந்தி மோபாய நிஷ்டாம் |
உபதிஶதி ஜநேப்யோ யோ தயா பூர்ண த்ருஷ்டி :
பஜ ஹ்ருதய ஸதாத்வம் பட்ட நாதம் முநீந்த்ரம் ||(ஜநேப்யோ-ஜென்மம் அடைந்தார்க்கு எல்லாம் உபதேசம்)

ருசி வர முநீந்த்ரேண ஆதரேணோபதிஷ்டாம்
அக்ருத க்ருதி வரிஷ்டாம் அந்திமோபாயநிஷ்டாம் |
தமிஹ நிகில ஜந்து உத்தாரணோத் யுக்த சித்தம்
ப்ரதி திந மபி வந்தே பட்ட நாதம் முநீந்த்ரம் ||

நமோஸ்து பட்ட நாதாய முநயே முக்தி தாயிநே |
யேநைவம் அந்திமோபாய நிஷ்டா லோகே ப்ரதிஷ்டதா||

தாதொன்றும் தார் புயத்தான் மணவாள முனி தனது
பாதம் பரவும். பட்டர் பிரான் முனி பல்கலையும்
வேதங்களும் சில புராணங்களும் தமிழ் வேதியரும்
ஓதும் பொருள் அந்திமோபாய நிட்டை யுரைத்தவனே!

அந்திமோபாயநிஷ்டா யா வக்தா ஸௌம்ய வரோ முநி: |
லேககஸ்ய அந்வயோ மேத்ர லேகநீதால பத்ரவத் |

எந்தை மணவாள யோகி எனக்குரைத்த
அந்திமோபாய நிட்டையாமதனை – சிந்தை செய்திங்
கெல்லாரும் வாழ எழுதி வைத்தேன் இப் புவியில்
நல்லறி வொன்றில்லாத நான்.

கற்றோர்கள் தாமுகப்பர் கல்வி தன்னிலாசை யுள்ளோர்
பெற்றோமென உகந்து பின்பு கற்பர் – மற்றோர்கள்
மாச்சரியத்தா லிகழில் வந்த தென்னெஞ்சே இகழ்கை
ஆச்சரியமோ தானவர்க்கு.

———–

“ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா: ஜகதந்தர் வ்யவஸ்திதா: |
ப்ராணிந: கர்ம ஜநித ஸம்ஸார வஶ வர்த்திந:” என்றும்,

“ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி:” என்றும் சொல்லுகிறபடியே
இருள் தரு மா ஞாலமான ஸம்ஸாரத்திலே,

(ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்ம அபி  ஜீவே துக்க ஆகுலே விஷ்ணோ க்ருபா காப்யுபஜாயதே ஸமீஷிதஸ்து தாஸோயம் கர்ணா வர்ஷ ரூபயா கர்ம ஸாம்யம் பஜேத்யேவ ஜீவோ விஷ்ணு ஸமீஷயா சக்தி பாவஸ் ஸவை ஜீவ முத்தாரயதி ஸம் ஸ்ருதே கர்மணீ ச ஸமே தத்ர தூஷ்ணீம் பாவம் உப கர்யதே –அஹிர் புத்த்ய ஸம்ஹிதை -என்று
ஸம்ஸார சக்ரஸ்தனாய் துக்காகுலனான ஜீவன் விஷயமாக ஸர்வேஸ்வரனுக்கு ஒரு கிருபை பிறக்கும் படியையும்
அந்தக் கிருபை அடியாக உண்டான அவன் கடாக்ஷத்துக்கு விஷயபூதனாயக் கொண்டு இவன் கர்ம ஸாம்யத்தைப் பஜிக்கும் என்னுமத்தையும்
அந்த அநுகிரஹாத் மிகையான சக்தியினுடைய ஸ்வ பாவம் இவனை சம்சாரத்தின் நின்றும் உத்தரிப்பிக்கும் என்னும் இடத்தையும்
கர்ம சாம்யம் என்பதின் கருத்தை ஸங்க்ரஹேண சொல்லிற்று)

இருள் தரு மா ஞாலமான ஸம்ஸாரத்திலே,

“ந அபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடி ஶதைரபி” என்றும்,

“யத் ப்ரஹ்ம கல்ப நியுத அநுபவேப்ய நாஶ்யம்” (கூரத்தாழ்வான் -பல கல்பங்களில் அனுபவித்தும் முடிக்க முடியாத கர்மங்ளை அரை விநாடியில் ஸம்பாதிக்கிறோமே)என்றும் சொல்லுகிறபடியே

பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்றள்ளல் பொய்ந் நிலமாகையாலே, தரை கண்டு காலூன்றித்
தரித்து நின்று அடி கண்டறுக்க வொண்ணாதபடி மூடிக் கிடக்கிற கொடு வினைத் தூற்றில் நின்று
பல காலம் வழி திகைத்தலமருகின்ற ஸம்ஸாரி சேதநனுக்கு அஞ்சினான் புகலிடமான
ஆசார்யாபிமாநமே உஜ்ஜீவிக்கைக்கு உசிதோபாயமென்று ஶ்ரீவசந பூஷணாதி திவ்ய ப்ரபந்த முகேந அறுதியிட்டு,

ஸம்ஸாரத்தில் உரு மாய்ந்து “அஸந்நேவ” என்கிறபடியே நஷ்ட கல்பனாய் கிடந்த இவனை
“ஸந்தமேநம்” என்னும்படி நிர்ஹேதுகமாக அங்கீகரித்தருளி, த்யாஜ்ய உபாதேயங்களைத் தெளிய அறிவித்து
ரக்ஷித்தருளின மஹோபகாரகனான ஸ்வாசார்யன் திருவடிகளை உபாயமாகப் பற்றி,

(அஸந்நேவ ஸ பவதி । அஸத்ப்ரஹ்மேதி வேத சேத் । அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத । ஸந்தமேந ந்ததோ விதுரிதி । தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா । ய: பூர்வஸ்ய । அதாதோ(அ)நுப்ரஶ்நா: । )

“தேவுமற்றறியேன்” என்றிருக்கும் அந்திமோபாயநிஷ்டனுக்கு ஸ்வாசார்யனுடைய திவ்ய நாம வைபவத்தையும்,
அவருடைய ஜ்ஞாந ப்ரேமாதி குண வைலக்ஷண்யத்தையும் அவருடைய திரு வவதார வைபவத்தையும்-
அவர் எழுந்தருளி யிருக்கும் திவ்ய தேஶ வைபவத்தையும், அவர் திருவடிகளே உபாயமென்னும் அவ் வழியாலே
உபேயமான தத் விக்ரஹ வைலக்ஷண்யத்தையும், அவர் திருமேனியை ஸர்வ தேஶ ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும்
த்ரிவித கரணத்தாலும் ஒன்றும் தப்பாமல் பேணும் வழியாலே தத்  கைங்கர்ய வைபவத்தையும்,
அந்த கைங்கர்ய த்வாரா அவருக்குண்டான ப்ரீத் யதிஶயத்தாலே தாம் பெறும் பேற்றினுடைய கௌரவத்தையும்
இடைவிடாமல் அநுஸந்தித்து தத் விஷயமாக மங்களாஶாஸநம் பண்ணி வாழுகையே
அநவரத கர்த்தவ்யம் என்னுமத்தையும் இப் ப்ரபந்த முகேந சொல்லுகிறது.

———–

அனந்த பாரம் பஹூ வேதிதவ்யம் அல்பஶ்ச காலோ பஹவஸ்ச விக்நா: |
யத் ஸார பூதம் தது பாஸிதவ்யம் ஹம்ஸோ யதா க்ஷீர மிவாம்பு மிஶ்ரம் ||

அஸாரம் அல்ப ஸாரஞ்ச ஸாரம் ஸார தரம் த்யஜேத் |
பஜேத் ஸார தமம் ஶாஸ்த்ரம் ரத்நாகர இவாம்ருதம் ||

(அஸாரம் –ஐஹிக ஆமுஷ்மிக பலன்களைக் கொடுக்கும் ஸ்ருதி பாகம்
அல்ப ஸாரம் -கைவல்ய பலனைக்கொடுக்கும் ஸ்ருதி பாகம்
ஸாரம் -உபாயாந்தரங்களைச் சொல்லும் ஸ்ருதி பாகம்
ஸார தரம் -அவனே உபாயம் என்று சொல்லும்-ஸ்வார்த்த கைங்கர்யம் ஸ்வ கத ஸ்வீகாரம்- ஸ்ருதி பாகம்
த்யஜேத்
பஜேத்
ஸார தமம் –பரார்த்த கைங்கர்யம் பர கத ஸ்வீகாரம்-அவன் திருவடிகள் ஸ்தானமான ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் -என்று சொல்லும் ஸ்ருதி பாகங்கள்)

தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்யா யாவிமுக்தயே |
ஆயாஸாயாபரம் கர்ம வித்யாந்யா ஶில்ப நைபுணம் ||

ஶாஸ்த்ர ஜ்ஞாநம் பஹு க்லேஶம் புத்தேஶ் சலந காரணம் |
உபதேஶாத் தரிம் புத்த்வா விரமேத் ஸர்வ கர்மஸு ||

ஆ   த்யாநம் ஸத்ருஶேகதம் விஸத்ருஶே தேஹே பவத்யாத்மந:
ஸத் புத்தேஸ்ஸ ச ஸங்க மாதபி பவேதௌஷ்ண்யம் யதா பாதஸி |
கோவா ஸங்கதி ஹேதுரேவம் அநயோ: கர்மாத ஶாம்யேத் குத:
தத் ப்ரஹ்மாதி கமாத் ஸ ஸித்யதி மஹாந் கஸ்மாத் ஸதாசார்யத: ||

(ஆ   த்யாநம் ஸத்ருஶே–தியானம் தொடங்கி ப்ரீதி காரித கைங்கர்யங்கள் வரை ஆத்மாவுக்குப் பொருந்திய கர்மாக்கள்
கதம் -எவ்வாறு
விஸத்ருஶே தேஹே பவத்யாத்மந:-ஆத்மாவுக்குப் பொருந்தாத தேஹத்தைப் பற்றிய கர்மங்களில் சேதனன் ஈடுபடுகிறான்
ஸத் புத்தேஸ்ஸ ச ஸங்க மாதபி –ஞானிகளும் கூட அன்றோ -இவ்வாறு அநர்த்தப்படுகிறார்கள் -தேஹ சம்பந்தம் -தொடர்பு காரணம்
பவேதௌஷ்ண்யம் யதா பாதஸி |–நீருக்கும் அக்னியின் தொடர்பால் உஷ்ணம் வருவது போல்
கோவா ஸங்கதி ஹேதுரேவம் அநயோ: கர்மாத ஶாம்யேத் குத:-இதில் இருந்து எவ்வாறு சேதனன் மீள்வான்
தத் ப்ரஹ்மாதி கமாத் ஸ ஸித் யதி மஹாந் கஸ்மாத் ஸதாசார்யத: ||ஆச்சார்யர் உபதேசத்தால் ப்ரஹ்ம ஞானம் பெற்று மீள்கிறான்)

அநாசார்ய உபலப்தாஹி வித்யேயம் நஶ்யதி த்ருவம் |
ஶாஸ்த்ராதிஷு ஸுத்ருஷ்டாபி ஸ அங்கா ஸஹ பலோதயா |
ந ப்ரஸீததிவை வித்யா விநா ஸ துபதேஶத: ||

தைவாதீநம் ஜகத் ஸர்வம் மந்த்ராதீநம் து தைவதம் |
தந் மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம் தஸ்மாத் ப்ராஹ்மண தைவதம் ||

வ்ருதைவ பவதோ யாதா பூயஸி ஜந்ம ஸந்ததி: |
தஸ்யாம் அந்ய தமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ ||

பாபிஷ்ட: க்ஷத்ர பந்துஶ்ச புண்டரீகஶ்ச புண்ய க்ருத் |
ஆசார்ய வத்தயா முக்தௌ தஸ்மாத் ஆசார்யவாந் பவேத் ||

ப்ரஹ்மண்யேவ ஸ்திதம் விஶ்வம் ஓங்காரே ப்ரஹ்ம ஸம்ஸ்திதம் |
ஆசார்யாத் ஸ ச ஓங்காரஸ் தஸ்மாத் ஆசார்யவாந் பவேத் ||

ஆசார்யஸ் ஸ ஹரிஸ் ஸாக்ஷாத் சர ரூபீ ந ஸம்ஶய: ||(உலாவும் பெருமாள் ஆச்சார்யர்)

தஸ்மாத் பார்யாத ய: புத்ராஸ்தம் ஏகம் குருமாப்நுயு: ||

ஸாக்ஷாந் நாரயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும் |
மக்நாந் உத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா ||

தஸ்மாத் பக்திர் குரௌ கார்யா ஸம்ஸார பய பீருணா ||

குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பரா கதி: |குருரேவ பரா வித்யா குருரேவ பரம் தநம் || குருரேவ பர: காமோ குருரேவ பாராயணம் |யஸ்மாத் தது பதேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு: ||

அர்ச்சநீயஶ்ச பூஜ்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ் ஜபேந் நமேத் பக்த்யா பஜேதப் யர்ச்சயேந் முதா ||

உபாயோபேய பாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வ ஶாஸ்த்ரேஷு ஸம் மதம் ||

யேந ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந தீப ப்ரதே குரௌ |
மர்த்ய புத்தி: க்ருதா தஸ்ய ஸர்வம் குஞ்ஜர ஶௌசவத் ||

யோ கத்யாத் பகவத் ஞானம் குர்யாத் தர்ம உப ஸேவனம்
க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாந் ந தத் துல்யம் கதஞ்சந ||

(பொன்னுலகு ஆளீரோ
இரண்டு உபய விபூதிகளையும் இரண்டு உபய விபூதி நாதனையும் கொடுத்தாலும் ஸத்ருசம் ஆகாதே)

ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குரு ரஷ்டாக்ஷர ப்ரத: || இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்த வ்யாஸ்தே மநீஷிபி: ||

யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா ப்ரதீயதே |
தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ: ||

யத் ஸ்நாதம் குருணா யத்ர தீர்த்தம் நாந்யத் ததோதிகம் |
யச்ச கர்ம ததர்த்தம் தத் விஷ்ணோ ராராதநாத் பரம் ||(ஆளவந்தார் படித் துறையில் நீராடி அனுஷ்டானம்)

பஶுர் மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஶ்ரயா: |
தேநைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ: பரமம் பதம் ||

பால மூக ஜடாந்தாஶ்ச பங்கவோ பதி ராஸ்ததா|
ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம் ||

யம் யம் ஸப்ருஶதி பாணிப்யாம் யம் யம் பஶ்யதி சக்ஷுஷா |
ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா: ||

அந்த அநந்த க்ரஹண வஶகோ யாதி ரங்கேஶயத்வத்
பங்குர் நௌகா குஹர நிஹிதோ நீயதே நாவிகேந |
புங்க்தே போகாந் அவிதி தந்ருபஸ் ஸேவகஸ்யார்ப காதி:
த்வத் ஸம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேஶிகோ மே தயாலு: ||

(குருடன் கண் உள்ளவனைக் கொண்டும்
படகால் நீரைக் கடந்தும்
ராஜ சேவக மக்கள் ராஜாவைப் பார்க்காமல் ஐஸ்வர்யம் அனுபவிப்பது போல்)

ஸித்தம் ஸத் ஸம்ப்ரதாயே ஸ்திரதியமநகம் ஶ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
ஸத்த்வஸ்தம் ஸத்ய வாசம் ஸமய நியதயா ஸாது வ்ருத்த்யா ஸமேதம் |
டம்பா ஸூயாதி முக்தம் ஜித விஷய கணம் தீர்க்க பந்தும் தயாலும்
ஸ்காலித்யே ஶாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேஶிகம் பூஷ்ணுரீப்ஸேத் ||

சத் ஸம்ப்ரதாயே -நல்ல -சத்துக்கள் -ஸ்ம்ப்ரதாயத்திலே
சித்தம் -சித்தி -நிலை பெற்றவனும் -ப்ரஸித்தி வாய்ந்தவனும்
ஸ்திர தியம் -உறுதி கொண்ட மனப்பான்மை கொண்டவனும்
அநகம் –குற்றம் அற்றவனும்
ஸ்ரோத்ரியம் -வேத வேதாந்தங்களைக் கசடறக் கற்று அறிந்தவனும்
ப்ரஹ்ம நிஷ்டம்-பரமாத்மாவிடம் நிலை பெற்றவனும்
சத்வஸ்தம் -ஸத்வ குணத்தில் இருப்பவனும்
சத்யவாஸம் -பேசியத்தைப் பழுது ஆக்காதவனும்
சமய நியதயா -காலம் தவறாத -காலத்துக்கு ஒத்ததான
சாது வ்ருத்த்யா -நல்ல ஒழுக்கத்தோடே -மதக் கொள்கைக்கு ஏற்ற நல்ல நடத்தை யுடையவனும்
ஸமேதம்-கூடியவனும்
டம்பா ஸூ யாதி முக்தம் -டம்பம் அஸூயை போன்ற கெட்ட குணங்கள் இல்லாதவனும்-ஆதி -பிற ஆத்ம கெட்ட குணங்கள் இல்லாதவனும்
ஜித விஷயி கணம் -ஸப் தாதி விஷயங்களில் செல்லும் இயல்புடைய ஐம் புலன்களையும் தனது வசமாக்கிக் கொண்டவனும்
தீர்க்க பந்தும் -மிகப் பெரிய பந்துவாகவும்
தயாளும்-வருந்துவர் இடம் இரக்கம் கொண்டவனும்
ஸ்காலித்யே சாஸிதாரம் -தவறு நேர்ந்தால் கண்டிப்பவனும்
ஸ்வ பர ஹித பரம் -தனக்கும் பிறருக்கும் நன்மையைத் தேடுபவனும்
ஆகிய இந்த 14 குணங்கள் வாய்ந்தவரை
பூஷ்ணுர் –நல்ல நிலையில் இறுக்கப் போகும் சிஷ்யன்
தேசிகம் –ஆச்சார்யனாக
ஈப்சேத் –பெற விரும்ப வேணும்

ஆச்சார்ய லக்ஷணங்கள் -14-அருளிச் செய்கிறார் இதில் –
ஆஸீ நோதி சாஸ்த்ரார்த்தம் -ஸூ யம் ஆச்ரயதே ஆச்சாரயத் -மூன்றும் -ஞானம் ஞானம் அனுஷ்டானம் வாக் சாதுர்யத்தால் சிஷயரை அப்படியே ஆக்கி –
சேர்ப்பார்களை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு என்னும் -கடகர்கள்-
கு ரு –கு -இருட்டை தொலைக்கும் – அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரந்த சம்பந்தம் காட்டி -தடை காட்டி
உம்பர் தெய்வம் என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி காட்டும்-
சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரத்தை நேராக உபதேசிப்பவரே ஆச்சார்யர் –

1–சித்தம் சத் ஸம்ப்ரதாயே–சத் சம்பிரதாய தத்வ த்ரய அர்த்த பஞ்சக -ஞானம் பெற்று
2–ஸ்திரதியம் -அசைக்க முடியாத –புற சமயிகளால் —
3–அநகம் -குற்றம் இல்லாத -க்யாதி லாப பூஜைக்காக இல்லாமல் தம் பேறாக –
ஏற்ற காலங்கள் எதிர் பொங்க மீது அளிக்கும் –பாலை சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் -ஆற்றப் படைத்தான் –
கூரத் தாழ்வான போல்வார் இந்த பசுக்களை -கொண்ட நம் ராமானுஜர் – மகன் -யதிராஜ சம்பத்குமாரார் -செல்ல -செல்வப் பிள்ளை /
தாய்க்கும் தம்பிக்கும் மகனுக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் உண்டே இந்த லக்ஷணங்கள் –
4–ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்–இது ஒன்றே நிஷ்டை
5–சத்வஸ்தம் –சத்வ குணத்திலே நிலை நின்று
6–சத்யவாஸம்-உண்மையே பேசி -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -பின்னோர்ந்து –தன நெஞ்சில் தோற்றியதை சொல்லி
இது பூர்வர் சொன்னார் என்று உலகை மயக்குவார்கள் பலர் –
ஆச்சார்யர் சிஷ்யனை தன் ஆச்சார்யனுக்கு சிஷ்யன் -என்ற நினைவால் –
ஆச்சார்யர் திருவடிகளே சரணம் சொல்லி -வெள்ளத்தில் தப்பி -ஆச்சார்யர் தன் திருவடிகளே சரணம் என்று ஆழ்ந்த கதை –
7– சமய நியதயா –அனுஷ்டானம் விடாமல்
8—சாது வ்ருத்த்யா ஸமேதம்
9–டம்பா ஸூ யாதி முக்தம் -டாம்பீகம் அ ஸூ யை இத்யாதிகள் இல்லாமல் – சரீரம் அர்த்தம் பிராணன் அனைத்தையும் சிஷ்யன் சமர்ப்பித்து
சிஷ்யன் ஆச்சார்யர் தேக ரக்ஷணம் -சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்யர் கடமை /சிஷ்யன் ஆசார்யன் சொத்தை வைத்து தன் தேக ரக்ஷணம்
வாங்கிக் கொள்ள கூடாது -கொடுக்க கூடாது -நினைவுடன் கொடுக்காமல் அவர் சொத்தை திரும்பி கொடுக்கிறோம் -தன்னது என்று அபிமானிக்க கூடாதே
கொள்ளில் மிடியனாம் -கொடுக்கில் கள்ளனாம் –
10–ஜித விஷயி கணம்
11 —தீர்க்க பந்தும்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
12–தயாளும் –கிருபை பொழிந்து- கட்டாயம் தரையில் பாட்டம் மழை பொழிந்தால் போலே பகவத் விஷயம் உபதேசித்து -சஜாதீயர் –
அனுஷ்ட்டித்தும் உபதேசித்தும் காட்டி அருளுவார் -மோக்ஷ பந்த இரண்டும் பகவான் ஹேது -ஆச்சார்யர் மோக்ஷ ஏக ஹேது –
13–ஸ்காலித்யே சாஸிதாரம்–சம்சாரத்தில் திருத்தி பணி கொண்டு
14—ஸ்வ பர ஹித பரம்
தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –மார்க்கம் திசைதி தேசிகம் -கை காட்டும்

14-லக்ஷணங்கள்
ஆச்சார்ய சம்பந்தம் இருப்பில் ஆத்ம குணங்கள் வந்து சேரும் பகவத் சம்பந்தமும் வரும் –
ஆச்சார்யர் பிரியம் சிஷ்யன் செய்ய வேண்டும் –  சிஷ்யன் ஹிதம் ஆச்சார்யர் பார்க்க வேண்டும் – ஈஸ்வரனை கொண்டு ஆசார்யன் நடத்த கடவன்
பெருமாள் நடுவில் இருந்து ஆச்சார்யருக்கு ஹிதமும் சிஷ்யனுக்கு பிரியமும் -நடத்தி அருளுவான் —

ஸத் சம்பிரதாயத்தில் ஸித்தம் -ஸத் சம்பிரதாயத்தில் ஸ்திர தியம் -திட அத்யவசாயம்

அநகம்–
அகம் என்பது பாவம் துக்கம் வியசனம் -ஆபத்து -அஜாக்கிரதை –காம க்ரோதங்களால் வரும் வியசனம்
இவை அனைத்தையும் விலக்கியவன் அநகம் உள்ளவன்

ப்ரஹ்ம நிஷ்டை -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று இருக்கும் நிலை

ஸத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் -ஸத்யமும் பிரியமும் கலந்த பேச்சு

தர்மஞ்ஞய ஸமயே ப்ரமாணம் –ஆச்சார்யர் அனுஷ்டானத்தையே தழுவி இருத்தலே ஸமய நியதம்

தீர்க்க பந்து -உலகு எல்லாமே உருவாகக் கொண்டவன்
ஸர்வஸ் தரது துர்காணி ஸர்வோ பத்ராணி பஸ்யது-ஸ்ரீ வியாஸர் -அனைவர் துக்கங்களையும் போக்கி ஸர்வ ஸூஹ்ருத்தாக இருக்க வேண்டும்

பயன் அன்றாகிலும் பாங்கு அல்லராகிலும் திருத்திப் பணி கொள்ள வேண்டுமே)

உத்பாதக ப்ரஹ்ம பித்ரோர் கரீயாந் ப்ரஹ்மத: பிதா |
ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜந்ம |
ஶரீரமேவ மாதா பிதரௌ ஜநயத: |
தேஹ க்ருந் மந்த்ர க்ருந் ந ஸ்யாத் மந்த்ர ஸம்ஸ்கார க்ருத் பர: |
தௌ சேந் ந ஆத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வ ஆத்மவித் ஆத்ம க்ருத் ||

நாசார்ய: குல ஜாதோபி ஜ்ஞாந பக்த்யாதி வர்ஜித: |
ந வயோ ஜாதி ஹீநஶ்ச ப்ரக்ருஷ்டாநாம் அநாபதி ||

கிமப் யத்ராபி ஜாயந்தே யோகி ந: ஸர்வ யோநிஷு |
ப்ரத்யக்ஷித ஆத்மநாதாநாம் ந ஏஷாம் சிந்த்யம் குலாதிகம் ||

பிந்ந நாவாஶ்ரிதோ ஜந்துர் யதா பாரம் ந கச்சதி |
அந்தஶ்ச அந்த கராலம்பாத் கூபாந்தே பதிதோ யதா ||

ஜ்ஞாந ஹீநம் குரும் ப்ராப்ய குதோ மோக்ஷமவாப்நுயாத் |
ஆசார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணு பக்தோ விமத்ஸர: |
மந்த்ரஜ்ஞோ மந்த்ர பக்தஶ்ச ஸதா மந்த்ராஶ்ரயஶ் ஶுசி: ||

ஸத் ஸம்ப்ரதாய ஸம் யுக்தோ ப்ரஹ்ம வித்யா விஶாரத: |
அநந்ய ஸாதநஶ்சைவ ததா அநந்ய ப்ரயோஜந : ||

ப்ராஹ்மணோ வீத ராகஶ்ச க்ரோத லோப விவர்ஜித: |
ஸத் வ்ருத்தஶ் ஶாஸிதா சைவ முமுக்ஷு : பரமார்த்த வித்||

ஏவமாதி குணோபேத ஆசார்யஸ்ஸ உதாஹ்ருத: |
ஆசார்யோபி ததா ஶிஷ்யம் ஸ்நிக்தோ ஹித பரஸ் ஸதா ||

ப்ரபோத்ய போதநீயாநி வ்ருத்தம் ஆசாரயேத் ஸ்வயம் |
உத்தாரயதி ஸம்ஸாராத் ததுபாய ப்லவேந து ||

குரு மூர்த்தி ஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம: |
த்ரி ரூபோ ஹிதமாசஷ்டே மநுஷ்யாணாம் கலௌ ஹரி: ||குருஶ்ச ஸ்வப்ந த்ருஷ்டஶ்ச பூஜாந்தே ச அர்ச்சகாநநாத் |(தேவப் பெருமாள் ராமானுஜருக்கு ஸ்வப்ன முகமாக யஜ்ஞ மூர்த்தி வாதத்தில்)

ஈஶ்வரஸ்ய வஶஸ் ஸர்வம்– மந்த்ரஸ்ய வஶ ஈஶ்வர: | மந்த்ரோ குரு வஶே நித்யம் -குருரேவே ஈஶ்வரஸ்திதி: ||

ஏஷவை பகவாந் ஸாக்ஷாத் ப்ரதாந புருஷேஶ்வர: ||யோகீஶ்வரைர் விம்ருக்ய அங்க்ரிர் லோகோயம் மந்யதே நரம் ||

(சாஷாத் பகவானே ஆச்சார்யர் -யோகிகளும் தேடும் திருவடி ஸ்தானீயர் ஆச்சார்யர் –
பகவானே இவர் என்று அறியாமல் மனுஷ்ய ரூபம் என்று இகழ்ந்து இழந்தே போகிறார்கள்)

நாராயணாஶ்ரயோ ஜீவஸ் ஸோயம் அஷ்டாக்ஷராஶ்ரய: |
அஷ்டாக்ஷரஸ் ஸதாசார்யே ஸ்திதஸ் தஸ்மாத் குரும் பஜேத் ||

தயா தம ஶமோபேதம் த்ருட பக்தி க்ரியா பரம் |
ஸத்ய வாக் ஶீல ஸம்பந்நமேவ கர்ம ஸு கௌஶலம் ||ஜிதேந்த்ரியம் ஸு ஸந்துஷ்டம் கருணா பூர்ண மாநஸம் |
குர்யால் லக்ஷண ஸம்பந்நம் ஆர்ஜவம் சாரு ஹாஸிநம் |
ஏவங்குணைஶ்ச ஸம் யுக்தம் குருமா வித்யாத் து வைஷ்ணவம் |

ஸஹஸ்ர ஶாகாத் யாயீ ச ஸர்வ யத்நேஷூ தீக்ஷித: |
குலே மஹதி ஜாதோபி ந குருஸ்ஸ்யாத் அவைஷ்ணவ: |
அஜ்ஞாந திமிர அந்தஸ்ய ஜ்ஞாந அஞ்ஜந ஶலாகயா |
சக்ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீகுருவே நம: ||

மந்தர: ப்ரக்ருதி ரித்யுக்தோஹ் யர்த்த: ப்ராண இதி ஸ்ம்ருத: |
தஸ்மாந் மந்த்ர ப்ரத ஆசார்யாத் கரீயாந் அர்த்ததோ குரு: ||

(மந்த்ரம் சரீரம் போல்
அவற்றின் அர்த்தங்கள் பிராணன் போல்)

குஶப்த ஸ்த்வந்தகாரஸ் ஸ்யாத் ருஶப்தஸ் தந் நிரோத க: || அந்தகார நிரோதி த்வாத் குருரித் யபி தீயதே ||

ஶிஷ்யம் அஜ்ஞாந ஸம்யுக்தம் ந ஶிக்ஷயதி சேத் குரு: || ஶிஷ்ய அஜ்ஞாந க்ருதம் பாபம் குரோர் பவதி நிஶ்சய: ||

லோபாத்வா யதி வா மோஹாச் சிஷ்யம் ஶாஸ்திநயோ குரு: |
தஸ்மாத் ஸம் ஶ்ருணுதே யஶ்ச ப்ரஸ் யுதௌதாத் உபாவபி ||

ஆஶிநோதி ஹி ஶாஸ்த்ரார்த்தாந் ஆசாரே ஸ்தாபயத்யபி |
ஸ்வயம் ஆசரதே யஸ்து ஆசார்யஸ்ஸோபி தீயதே ||

ரவி ஸந்நிதி மாத்ரேண ஸுர்ய காந்தோ விராஜதே|| குரு ஸந்நிதி மாத்ரேண ஶிஷ்ய ஜ்ஞாநம் ப்ரகாஶேதே ||

யதாஹி வஹ்நி ஸம்பர்க்காந் மலம் த்யஜதி காஞ்சநம் | ததைவ குரு ஸம்பர்க்காத் பாபம் த்யஜதி மாணவ: ||

ஸ்நேஹேந க்ருபயா வாபி மந்த்ரீ மந்த்ரம் ப்ரயச்சதி |
குருர் ஜ்ஞேயஶ்ச ஸம் பூஜ்யோ தாந மாநாதி அபிஸ் ஸதா ||

அநந்ய ஶரணாநாஞ்ச ததா வாந்ந்ய ஸேவிநாம் |
அநந்ய ஸாதநாநாஞ்ச வக்தவ்யம் மந்த்ர முத்தம்ம் ||

ஸம்வத்ஸரம் ததார்த்தம் வா மாஸ த்ரயமதாபி வா |
பரீக்ஷ்ய விவிதோபாயை: க்ருபயா நிஸ் ஸ்ப்ருஹோவதேத் ||

நாதீக்‌ஷிதாய வக்தவ்யம் நாபக்தாய ந மாநிநே |
நாஸ்திகாய க்ருதக் நாய ந ஶ்ரத் தாவிமுகாய ச ||

தேஶகாலாதி நியமம் அரிமித்ராதி ஶோதநம் |
ந்யாஸமுத்ராதி கம் தஸ்ய புரஶ்சரணகம் ந து ||

தேச காலாதி நியமமும் -வேண்டியவன் வேண்டாதவன் என்ற ஆராயவும் -சோதனமும் —ஞாச முத்ரா பிரகாரமும் -தஸ்ய புரஸ் கரனுக்கு -சரணாகதனுக்கு இவை  வேண்டாம்
விஷய நியமம் மட்டுமே உண்டு -வகுத்த ஸ்வாமியிடம் சரணாகதி பண்ண வேண்டும்

ந ஸ்வர: ப்ரணவோங்காநி நாப்யந்யவித யஸ்ததா |
ஸ்த்ரீணாஞ்ச ஶுத்ரஜாதீநாம் மந்த்ர மாத்ரோக்தி ரிஷ்யதே ||

ருஷ்யாதிஞ்ச கர ந்யாஸம் அங்க ந்யாஸஞ்ச வர்ஜயேத் |
ஸ்த்ரீ ஶூத்ராஶ் ச விநீதாஶ்சேந் மந்த்ரம் ப்ரணவ வர்ஜிதம் ||

ந தேஶ காலௌ நாவஸ்தாம் பாத்ர ஶுத்திஞ்ச நை[நே] ச்சதி |
த்வயோபதேஶ கர்த்தாது ஶிஷ்ய தோஷம் ந பஶ்யதி ||

துராசோரோபி ஸர்வாஸீ க்ருதக்நோ நாஸ்திக: புரா |
ஸமாஶ்ரயே தாதி தேவம் ஶ்ரத்தயா ஶரணம் யதி |
நிர் தோஷம் வித்திதம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந: ||

மந்த்ர ரத்நம் த்வயம் ந்யாஸம் ப்ரபத்திஶ் ஶரணாகதி: |
லஷ்மீ நாராயணஞ்சேதி ஹிதம் ஸர்வ பல ப்ரதம் |
நாமாநி மந்த்ர ரத்நஸ்ய பர்யாயேண நிபோதத || தஸ்யோச்சாரண மாத்ரேண பரிதுஷ்டோஸ்மி நித்யஶ: ||

ப்ராஹ்மணா: க்ஷத்ரியா வைஶ்யாஸ் ஸ்த்ரியஶ் ஶூத்ராஸ் ததே தரா: |
தஸ்ய அதிகாரிணஸ் ஸர்வே மம பக்தோப வேத்யதி ||

யஸ்து மந்த்ர த்வயம் ஸம்யக்  அத்யாபயதி வைஷ்ணவாந் |
ஆசார்யஸ்ஸ து விஜ்ஞேயோ பவ பந்த விமோசக: ||

ந்ருதேஹம் ஆத்யம் ப்ரதி லப்ய துர் லபம்
ப்லவம் ஸுகல்யம் குரு கர்ண தாரகம் |
மயா அநுகூலேந நபஸ்வ தேரிதம்
புமாந் பவாப்திம் ஸதரேத் ந ஆத்மஹா ||

(என்னுடைய அனுகூலத்தாலே ஆச்சார்யன் மூலம் பிறவிக் கடலைக் கடக்கிறான்
காற்று மூலம் கர்ண தாரகம்-படகோட்டி ஆற்றைக் கடக்க உதவுவது போல்)

ஆசார்யம் மாம் விஜாநீயாந் ந அவமந்யேத கர்ஹிசித் |
ந மர்த்ய புத்த்யா த்ரஶ்யேத ஸர்வ தேவ மயோ குரு: ||

————

அத ஶிஷ்ய லக்ஷணம்: –

மாநுஷ்யம் ப்ராப்ய லோகேஸ்மிந் ந மூகோ பதிரோபி வா |
ந அபக்ரமாதி ஸம்ஸாராத் ஸகலு ப்ரஹ்மஹா பவேத் ||

ஸதாசார்யோபஸத்த்யா ச ஸ அபிலாஷஸ் ததாத்மக: |
தத்வ ஜ்ஞாந நிதிம் ஸத்த்வ நிஷ்டம் ஸத் குண ஸாகரம் |

ஸதாம் கதிம் காருணிகம் தமாசார்யம் யதா விதி |
ப்ரணி பாத நமஸ்கார ப்ரிய வாக்பிஶ்ச தோஷயந் |
தத் ப்ரஸாத வஶேநைவ ததங்கீகார லாபவாந் |
ததுக்த தத்வ யாதாத்ம்ய ஜ்ஞாந அம்ருத ஸுஸம்ப்ருத: ||அர்த்தம் ரஹஸ்ய த்ரிதய கோசரம் லப்த வாநஹம் ||

பரீக்ஷ்ய லோகாந் கர்ம சிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் நாஸ்த் யக்ருத:
க்ருதேந தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணிஶ்
ஶ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் தஸ்மை ஸ வித்வாந் உபஸந்நாய ஸம்யக் ப்ரஶாந்த சித்தாய
ஶமாந்விதாய யேந அக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் ததத்வதோ ப்ரஹ்ம வித்யாம் ||

குரும் ப்ரகாஶயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் |
அப்ரகாஶ ப்ரகாஶாப்யாம் க்ஷீயேதே ஸம்பதாயுஷீ ||

ஆசார்யஸ்ய ப்ரஸாதேந மம ஸர்வ மபீப்ஸிதம் |
ப்ராப்நுயாமீதி விஶ்வஸோ யஸ்ய அஸ்தி ஸ ஸுகீ பவேத் ||

ஆத்மநோஹ் யதி நீசஸ்ய யோகி த்யேய பதார்ஹதாம் |
க்ருபயை வோப கர்த்தாரம் ஆசார்யம் ஸம்ஸ்மரேத் ஸதா ||

ந சக்ராத் யங்கநம் நேஜ்யா ந ஜ்ஞாநம் ந விராகதா |
ந மந்த்ர: பாரமை காந்த்யம் தைர் யுக்தோ குரு வஶ்யத: ||

நித்யம் குருமுபாஸீத தத் வச: ஶ்ரவணோத் ஸுக: |
விக்ரஹ ஆலோகந பரஸ் தஸ்யைவ ஆஜ்ஞா ப்ரதீக்ஷக: ||

ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணி பத்யோ பயுஜ்ய ச |
நித்யம் விதி வித் அர்க்யாத்யாத்யை ராத்ருதோப் யர்ச்சயேத்  குரும் ||

ஶ்ருதி: – ஆசார்யவாந் புருஷோ வேத | தேவமிவாசார்ய முபாஸீத |

ஆசார்யாதீநோ பவ | ஆசார்யாதீநஸ் திஷ்டேத் | ஆசார்ய தேவோ பவ |
யதா பகவத் யேவம் வக்த்ரி வ்ருத்தி: | குரு தர்ஶநே சோத்திஷ்டேத் | கச்சந்த மநுவ்ரஜேத் |

ஶரீரம் வஸு விஜ்ஞாநம் வாஸ: கர்ம குணாநஸூந் |
குர்வர்த்தம் தாரயேத் யஸ்து ஸஶிஷ்யோ நேதரஸ் ஸ்ம்ருத: ||

தீர்க்க தண்ட  நமஸ்காரம் ப்ரத்யுத்தாநம் அநத்ரம் |
ஶரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் ||

குர்வர்த்தஸ் யாத்மந: பும்ஸ: க்ருதஜ்ஞஸ்ய மஹாத்மந: |
ஸுப்ரஸந்நஸ் ஸதா விஷ்ணுர் ஹ்ருதி தஸ்ய விராஜதே ||

மந்த்ரே தீர்த்தேத் விஜே தேவே தைவஜ்ஞே பேஷஜே குரௌ |
யாத்ருஶீ பாவநா யத்ர ஸித்திர் பவதி தாத்ருஶீ ||

யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ |
தஸ்யைதே கதிதா ஹ்யர்த்தா: ப்ரகாஶ்யந்தே மஹாத்மந: |

தர்ஶந ஸ்பர்ஶ வசநைஸ் ஸஞ்சாரேண ச ஸத்தமா: |
பூதம் விதாய புவநம் மாமேஷ்யந்தி குரு ப்ரியா: ||

தேஹ க்ருந் மந்த்ர க்ருந் ந ஸ்யாந் மந்த்ர ஸம்ஸ்கார க்ருத் பர: |
தௌசேந் ந ஆத்ம விதௌ ஸ்யாதாம் அந்யஸ்த் வாத்மவித்  ஆத்ம க்ருத் ||

அவைஷ்ணவோபதிஷ்டம் ஸ்யாத் பூர்வம் மந்த்ர வரம் த்வயம் |
புநஶ்ச விதி நா ஸம்யக் வைஷ்ணவாத் க்ராஹயேத் குரோ: ||

அத ஸ்த்ரீ ஶூத்ர ஸங்கீர்ண நிர் மூல பதிதாதி ஷு |
அநந்யேந அந்ய த்ருஷ்டௌ ச க்ருதாபி ந க்ருதா பவேத் ||

அதோந்யத்ராநுவிதி வத் கர்த்தவ்யா ஶரணாகதி: |
தண்டவத் ப்ரணமேத் பூமா வுபேத்ய குரு மந்வஹம் |
திஶே வாபி நமஸ் குர்யாத் யத்ராஸௌ வஸதி ஸ்வயம் ||

ஆசார்யா யாஹரதேர்த்தாந் ஆத்மாநஞ்ச நிவேத யேத் |
தத்தீநஶ்ச வர்த்தேத ஸாக்ஷாந் நாரயணோ ஹி ஸ: ||

ஸத் புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத்த்வ போத அபிலாக்‌ஷீ
ஶுஶ்ரூஷுஸ் த்யக்தமாந: ப்ரணி பதந பர: ப்ரஶ்ந கலா ப்ரதீக்ஷ: |

ஶாந்தோ தாந்தோ அநஸுயுஶ் ஶரண முபகதஶ் ஶாஸ்த்ர விஶ்வாஸ ஶாலீ
ஶிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாங்க்ருதவித் அபிமதம் தத்த்வத: ஶிக்ஷணீய: ||

யஸ்த்வாசார்ய பராதீநஸ் ஸத் வ்ருத்தௌ ஶாஸ்யதே யதி |
ஶாஸேநே ஸ்திர வ்ருத்திஸ் ஸஶிஷ்யஸ் ஸத் பிருதாஹ்ருத: ||

ஶிஷ்யோ குரு ஸமீபஸ்தோ யத வாக் காய மாநஸ: |
ஶுஶ்ரூஷயா குரோஸ் துஷ்டிம் குர்யாந் நிர்தூத மத்ஸர: ||

ஆஸ்திகோ தர்ம ஶீலஶ்ச ஶீலவாந் வைஷ்ணவஶ் ஶுசி: |
கம்பீரஶ் சதுரோ தீர: ஶிஷ்ய இத்யபி தீயதே ||

ஆஸநம் ஶயநம் யாநம் ததீயம் யச்ச கல்பிதம் |
குரூணாஞ்ச பதா க்ரம்ய நரோ யஸ்த்வத மாம் கதிம் ||

கோஶ்வோஷ்டர யாந ப்ரஸாத ப்ரஸ்தரேஷு கடேஷு ச |
நாஸீத குருணா ஸார்த்தம் ஶிலாப லகநௌஷு ச ||

யஸ்திஷ்டதி குரூணாஞ்ச ஸம க்ஷமக்ருநாஞ்ஜலி: |
ஸம த்ருஷ்ட்யாத தாஜ்ஞாநாத் ஸ ஸத்யோ நிரயம் வ்ரஜேத் ||

ஆஸநம் ஶயநம் யாநம் அபஹாஸஞ்ச ஶௌநக |
அதி ப்ரலாபம் கர்வஞ்ச வர்ஜயேத் குரு ஸந்நிதௌ ||

யத்ருச்சயா ஶ்ருதோ மந்த்ரஶ் சந்நேந அதச் சலேந வா |
பத்ரேக்‌ஷிதோ வா வ்யர்த்தஸ் ஸ்யாத் தம் ஜபேத் யத் யநர்த்த க்ருத்||

மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரௌ |
த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸாது ஹி ப்ரதம ஸாதநம் ||

அதமோ தேவதா பக்தோ மந்த்ர பக்தஸ்து மத்யம: |
உத்தமஸ்து ஸ மே பக்தோ குரு பக்தோத்த மோத்தம: ||

ஶ்ருதி: –

ஆசார்யாந்மா ப்ரமத: | ஆசார்யாய ப்ரியம் தநமாஹ்ருத்ய |
குரோர் குரு தரம் நாஸ்தி குரோர் யந்ந பாவயேத் |
குரோர் வார்த்தாஶ்ச கதயேத் குரோர் நாம ஸதா ஜபேத் |

{குரு பதாம் புஜம் த்யாயேத் குரோர் நாம ஸதா ஜபேத் |
குரோர் வார்த்தாஶ்ச கதயேத் குரோர்ந் யந்ந பாவயேத் – பாட பேதம் }

அர்ச்சநீயஶ்ச வந்த்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ் ஜபேந் நமேத் பக்த்யா பஜே தப் யர்ச்சயேந் முதா ||

உபாய உபேய பாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வ ஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ||

ஏவம் த்வய உபதேஷ்டாரம் பாவயேத் புத்திமாந் தியா |
இச்சா ப்ரக்ருத் யநுகுணைர்  உபசாரைஸ் ததோசிதை: ||

பஜந் நவஹிதஶ் சாஸ்ய ஹிதம் ஆவேதயே த்ரஹ: |
குர்வீத பரமாம் பக்திம் குரௌ தத் ப்ரிய வத்ஸல: ||

தத் நிஷ்டா வஸாதீ தந் நாம குண ஹர்ஷித: |
ஶாந்தோ நஸுயு: ஶ்ரத் தாவாந் குர்வர்த்தாத் யாத்ம வ்ருத்திக: ||

ஶுசி: ப்ரிய ஹிதோ தாந்த: ஶிஷ்யஸ்ஸ உபரதஸ் ஸுதீ: |
ந வைராக்யாத் பரோ லாபோ ந போதாத பரம் ஸுகம் |
ந குரோர பரஸ் த்ராதா ந ஸம்ஸாராத் பரோ ரிபு: ||

————

அந்திமோபாய நிஷ்டை – 2 – ஆசார்ய வைபவம்
மதுரகவி ஆழ்வார் மற்றும்
பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம்

இன்னமும் ஆசார்ய வைபவம் –
ஸதாசார்ய ஸமாஸ்ரயணத்துக்கு முன்புள்ள அநாதி காலமெல்லாம் ஒரு காலராத்ரி,
அன்று தொடங்கி இவனுக்கு நல் விடிவு. ஆனபடி எங்ஙனே என்னில் –
“புண்யாம் போஜவிகாஸாய பாபத்வாந்தக்ஷயாய ச | ஶ்ரீமாநாவிரத்பூமௌ ராமானுஜ திவாகர:” என்றும்,
“ஆதித்ய – ராம – திவாகர – அச்யுத பாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி,
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுல பூஷணபாஸ்கரோதயத்திலே” என்றும்,
விடியா வெந் நரகான ஸம்ஸாரமாகிற கால ராத்ரிக்கு ஆசார்யன் தோற்றரவை ஸூர்யோதயமாகச் சொல்லுவார்கள்.

“பார்வை செடியார் வினைத் தொகைக்குத் தீ” என்றும்,
“ந ஹ்யம்மயாநி தீர்த்தாநி ந தேவாம்ருச்சி லாமயா: |
தே புநந்த்யுருகாலேந தர்ஶநாதே வ ஸாதவ: “ என்றும்,
“யாந் பஶ்யந்தி மஹாபாகா: க்ருபயா பாதகாநபி |
தே விஶுத்தா: ப்ராயஸ்யந்தி ஶாஶ்வதம் பத மவ்யயம்” என்றும் சொல்லுகிறபடியே

ஆசார்ய கடாக்ஷமானது ஸ்வ விஷயமானவர்களுக்கு வேறொரு ஸாதநாநுஷ்டாநம் பண்ண வேண்டாதபடி
தானே தூறு மண்டிக் கிடக்கிற அவர்களுடைய கர்மத்தை நிஶ் ஶேஷமாகச் சுட்டுப் பொகடுகையாலை
அவர்கள் முன்பு மஹா பாபிகளே யாகிலும் அந்த க்ஷணத்திலே மிகவும் பரிசுத்தராய்
அவ்வளவன்றிக்கே பின்பு ஸுஸ்திரமான பரம பதத்தையும் சென்றடையப் பெறுவார்கள்.

“நாராயணன் திருமால் நாரம் நாமென்னுமுறவு ஆராயில் நெஞ்சே அனாதி யன்றோ
சீராருமாசாரியனாலே யன்றோ நாமுய்ந்ததென்று கூசாமலெப்பொழுதும் கூறு”,

(அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி -உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ வாசாரியன்–1-)

“உண்ட போதொரு வார்த்தையும் உண்ணாத போதொரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேருண்டிறே,
அவர்கள் பாசுரங்கொண்டன்று இவ்வர்த்தம் அறுதி யிடுவது, அவர்களைச் சிரித்திருப்பார் ஓருவருண்டிறே,
அவர் பாசுரங்கொண்டே இவ்வர்த்தம் அறுதி யிடக் கடவோம்”.

பரமாசார்யரான நம்மாழ்வார் “அப்பொழுதைக் கப்பொழுதென் னாராவமுதம்” என்றார்.
ஶ்ரீமதுர கவிகள் “தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூருமென்னாவுக்கே” என்றார்.

அவர் “மலக்கு நாவுடையேன்” என்றார். இவர் “நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றார்.

அவர் “அடிக் கீழமர்ந்து புகுந்தேன்” என்றார். இவர் “மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே” என்றார்.

அவர் “கண்ணனல்லால் தெய்வமில்லை” என்றார். இவர் “தேவு மற்றறியேன்” என்றார்.

அவர் “பாடி யிளைப்பிலம்” என்றார். இவர் “பாடித் திரிவனே” என்றார்.

அவர் “இங்கே திரிந்தேற்கிழுக்குற்றென்” என்றார்.
இவர் “திரி தந்தாகிலும் தேவ பிரானுடைக் கரிய கோலத் திரு வுருக் காண்பன்” என்றார்.

அவர் “உரிய தொண்டன்” என்றார். இவர் “நம்பிக்காளுரியன்” என்றார்.

அவர் “தாயாய்த் தந்தையாய்” என்றார். இவர். “அன்னையாய் அத்தனாய்” என்றார்.

அவர் “ஆள்கின்றனாழியான்” என்றார். இவர் “என்னை யாண்டிடும் தன்மையான்” என்றார்.

அவர் “கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்” என்றார். இவர் “சடகோபன்” என்றார்.

“யானே என்றனதே என்றிருந்தேன்” என்றார்.
இவர் “நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்” என்றார்.

அவர். “எமரேழுபிறப்பும் மா சதிரிது பெற்று” என்றார். இவர் “இன்று தொட்டுமெழுமையுமெம்பிரான்” என்றார்.

அவர் “என்னால் தன்னை இன் தமிழ் பாடிய வீசன்” என்றார். இவர் “நின்று தன் புகழேத்த அருளினான்” என்றார்.

அவர் “ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே” என்றார். இவர் “என்றுமென்னை இகழ்விலன் காண்மினே” என்றார்.

அவர் “மயர்வற மதிநலமருளினன்” என்றார். இவர் “எண்டிசையுமறிய வியம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபனருளையே” என்றார்.

அவர் “அருளுடையவன்” என்றார். இவர் “அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்றார்.

அவர் “பேரேனென்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்” என்றார். இவர் “நிற்கப் பாடி என்னெஞ்சுள் நிறுத்தினான்” என்றார்.

அவர் “வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்றார். இவர் “ஆட் புக்க காதலடிமைப் பயனன்றே” என்றார்.

அவர் “பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்” என்றார்.
இவர் “பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்” என்றார்.

அவர் “ஆராத காதல்” என்றார். இவர் “முயல்கின்றேனுன்தன் மொய்கழற்கன்பையே” என்றார்.

அவர் “கோல மலர்ப்பாவைக்கன்பாகிய என் அன்பேயோ” என்றார். இவர் “தென் குருகூர் நகர் நம்பிக்கன்பனாய்” என்றார்.

அவர் “உலகம் படைத்தான் கவி” என்றார். இவர் “மதுரகவி” என்றார்.

அவர் “உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் ஊரெல்லாம்” என்றார்.
இவர் “நம்புவார் பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக் கட்டி யருளினார்.

அவர் “பீதக வாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து” என்றார்.
இவர் “கோலத் திரு மா மகள்கொழுநன் தானே குருவாகித் தன் அருளால்” என்றும், ***

பிள்ளை லோகாசார்யர்,
“தான் ஹிதோபதேஶம் பண்ணும் போது” என்று தொடங்கி,
“நேரே ஆசார்யனென்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திரு மந்தரத்தை உபதேஶித்தவனை.
ஸம்ஸார வர்த்தகங்களுமாய், க்ஷுத்ரங்களுமான பகவந் மந்த்ரங்களை உபதேஶித்தவர்களுக்கு ஆசார்யத்வ பூர்த்தி யில்லை.

ஆசார்யன் உஜ்ஜீவநத்திலே ஊன்றிப் போரும். ஆசார்யன் ஶிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக் கடவன்.
ஆசார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹாநி.
ஆசார்யன் தன்னுடைய தேஹ ரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன்.
ஆசார்யன் ஶிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவனல்லன். கொள்ளில் மிடியனாம்.
அவன் பூர்ணனாகையாலே கொள்ளான். அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது.

ஈஶ்வரனைப் பற்றுகை கையைப் பிடித்து கார்யங்கொள்ளுமோபாதி,
ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யங்கொள்ளுமோபாதி.
ஈஶ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப் பட்டிருக்கும்.
ஆகையிறே குரு பரம்பரையில் அந்வயித்ததும், ஶ்ரீ கீதையும் -அபய ப்ரதாநமும் அருளிச் செய்ததும்,
ஆசார்யனுக்கு ஸத்ருஶ ப்ரத் யுபகாரம் பண்ணலாவது விபூதி சதுஷ்டயமும் ஈஶ்வர த்வயமும் உண்டாகில்.
ஈஶ்வர ஸம்பந்தம் பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும்.
ஆசார்ய ஸம்பந்தம் மோக்ஷத்துக்கே ஹேதுவாயிருக்கும்.

ஆசார்ய ஸம்பந்தம் குலையாதே கிடந்தால் ஜ்ஞாந பக்தி வைராக்யங்களை உண்டாக்கிக் கொள்ளலாம். என்று தொடங்கி,
“இத்தை யொழிய பகவத் ஸம்பந்தம் துர் லபம். ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநதைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்.

ஆசார்யாபிமாநமே உத்தாரகம்”. “நல்ல வென் தோழி” என்று தொடங்கி,
“ஆசார்யாபிமாநந் தான் ப்ரபத்தி போலே உபயாந்தரங்களுக்கு அங்கமுமாய் ஸ்வதந்த்ரமுமாயிருக்கும்.
பக்தியிலஶக்தனுக்கு ப்ரபத்தி, ப்ரபத்தியிலஶக்தனுக்கு இது.
இது ப்ரதமம் ஸ்வரூபத்தைப் பல்லவிதமாக்கும், பின்பு புஷ்பிதமாக்கும், அநந்தரம் பல பர்யந்தமாக்கும்”.(சூரணை -463-)

(பிரதமத்தில் இச் சேதனனுக்கு
பிரணவ யுக்த அநந்யார்ஹ சேஷத்வத்தை சரம பர்வ பர்யந்தமாக உணர்த்தி –
அநாதி காலம் ஸ்வாதந்த்ர்யாமாகிற அழலிலே மண்டி -சரக்கு இழந்து கிடந்த ஸ்வரூபத்தை துளிர்த்து எழும்படியாய்  இருக்கும் –
இப்படி பல்லவிதமான பின்பு -மத்யம பத யுக்த -அநந்ய சரணத்வத்தை -சரம பர்யந்தமாக உணர்த்தி –
பல ஸூசகமான உபாயத்வ அவஸாய யோகத்தாலே ஸ்வரூபத்தை புஷ்பிதமாம் படி யாக்கும் –
இப்படி புஷ்பிதமான அநந்தரம் –
சரம பத உக்த -அநந்ய போகத்வத்தையும் -சரம பர்யந்தமாக உணர்த்தி –
நித்ய கைங்கர்ய யோகத்தாலே -ஸ்வரூபத்தை பல பர்யந்தமாம் படி யாக்கும் -)

“பொறுக்கிறவனுமாசார்யனன்று, பெறுகிறவனுமாசார்யனன்று, நியமிக்கறவனே ஆசார்யன்” என்று
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்.

விபரீத ஸ்பர்ஶமுடைய ஆசார்யன் முமுக்ஷுவுக்கு த்யாஜ்யன்.
விபரீத ஸ்பர்ஶமுடைய ஆசார்யனாவான் ஸம்ஸாரத்திலே சில மினுக்கங்கள் தோன்றச் சொல்லுமவன்.
ஆசார்யன் ஶிஷ்யனுயிரை நோக்கும்.
ஆசார்யனாவான் ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமாய்த் தன்னைக் கொண்டு முழுகுமவனன்று,
தன்னைக் கரை யேத்த வல்ல ஜ்ஞாநாதி பரிபூர்ணனாய் இருப்பானொருவனே.
ஆசார்யனுடைய ஜ்ஞாநம் வேண்டா, ஶிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்.
கருட த்யாநத்துக்கு விஷம் தீருமாப் போலே ஆசார்யனை த்யாநித்திருக்கவே
ஸம்ஸாரமாகிற விஷம் தீர்த்துக் கொள்ளலாம் என்று அருளிச் செய்வர்கள்.

ஆசார்யன், இவன், அஜ்ஞாநத்தைப் போக்கி ஜ்ஞாநத்தை உண்டாக்கிக் கொடுக்கும் பெரிய மதிப்பனாய்,
அர்த்த காமோபஹதனன்றிக்கே (தர்மம் மோக்ஷம் இவற்றையே பற்றிக் கொண்டு)லோக பரிக்ரஹ முடையனாயிருப்பானொருவன் (ஆசார்யனாவான்).

————

அந்திமோபாய நிஷ்டை – 3 –
சிஷ்ய லக்ஷணம்
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்,
திருவரங்கத்து அமுதனார்,
பிள்ளை லோகாசார்யர்
மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்

இன்னமும் ஶிஷ்ய லக்ஷணம் :-
“இருள் தரு மா ஞாலத்தே இன்பமுற்று வாழும் தெருள் தரு மா தேசிகனைச் சேர்ந்து”,
“குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்”,
“வேறாக ஏத்தி யிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தியிருப்பார் தவம்”,
“விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே”,
“வேறொன்றும் நானறியேன்”,
“தேவு மற்றறியேன்”,
“ஶத்ருக்நோ நித்ய ஶத்ருக்ந”,
“வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையரென்பர்”,

“இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”,
“இராமானுசன் புகழன்றி என் வாய் கொஞ்சிப் பரவகில்லாது என்ன வாழ்வின்று கூடியதே”,
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப் பேறளித்தற் காறொன்று மில்லை மற்றச் சரணன்றி”,
“நிகரின்றி நின்ற என்னீசதைக்கு நின்னருளின் கணன்றிப் புகலொன்று மில்லை அருட்கு மஃதே புகல்”,
“இராமானுசனை யடைந்த பின் என் வாக்குரையாது என் மனம் நினையாதினி மற்றொன்றையே”,
“இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வமிங்கு யாதென்றுலர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே”,
“கையில் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்”,

“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும் பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல்லோர்” என்று தொடங்கி
“இன்றவன் வந்திருப்பிடம் என்றனிதயத்துள்ளே தனக்கின்புறவே”,
“நந்தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமநுசனடிப் பூ மன்னவே”…

அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

“மாடும் மனையும் கிளையும் மறை முனிவர் தேடுமுயர் வீடும் செந் நெறியும்
பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகை கண்டீர் விதி”,

“வேதமொரு நான்கு” என்று தொடங்கித்
“தீதில் சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகுமென்னுமது”,
“

வில்லார் மணி கொழிக்கும்” என்று தொடங்கி, “எந் நாளும் மாலுக்கிடம்”,

“தேனார் கமலம்” என்று தொடங்கி, “யார்க்குமவன் தாளிணையை உன்னுவதே சால வுறும்”.

(மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் செம் நெறியும் –பீடுடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டிடுகை கண்டீர் விதி –30-

வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப் பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-

வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-பாட்டுக் கேட்க்கும் இடமும்– எல்லாம் வகுத்த இடமே

பொருளும் உயிரும் உடம்பும் புகலும்
தெருளும் குணமும் செயலும் -அருள் புரிந்த
தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
எந்நாளும் மாலுக்கு இடம் –37-

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந் நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-)

“ஆசார்ய ப்ரேமம் கனத்திருக்கையும்”,
“ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டாப் போலேயும்”,

“இப்படி ஸர்வ ப்ரகராத்தாலும் நாஶ ஹேதுவான அஹங்காரத்துக்கும்
அதினுடைய கார்யமான விஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தானாகையாலே” என்று தொடங்கி,
“இப்படி இவை இத்தனையும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக் கடவன்.

வக்தவ்யம் ஆசார்ய வைபவமும் ஸ்வ நிகர்ஷமும்.
பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசநமும் அநுஷ்டாநமும்.
ஆசார்ய கைங்கர்யமறிவது ஶாஸ்த்ர முகத்தாலும், ஆசார்ய வசநத்தாலும்.

இவனுடைய ஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய குணம்,
அஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய தோஷம்,
ஶக்திக்கிலக்கு ஆசார்ய கைங்கர்யம்
அஶக்திக்கிலக்கு நிஷித்த அநுஷ்டாநம்.

ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும், பல ஸாதந ஶுஶ்ரூஷையும், ஆர்த்தியும்,
ஆதரமும், அநஸூயையும் உடையவனென்கை”.

“மந்த்ரமும், தேவதையும், பலமும், பல அநுபந்திகளும்” – என்று தொடங்கி –
எல்லாம் ஆசார்யனே என்று நினைக்கக் கடவன்.
‘மாதா பிதா யுவதய:’ என்கிற ஶ்லோகத்திலே இவ் வர்த்தத்தை பரமாசார்யர் அருளிச் செய்தார்.

ஶிஷ்யன் தான் ப்ரியத்தை நடத்தக் கடவன். ஶிஷ்யன் (ஆசார்யனுடைய)உகப்பிலே ஊன்றிப் போரும்.
ஆகையால் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கிலக்காகை யொழிய ரோஷத்துக்கிலக்காகைக்கு அவகாஶமில்லை.(சூர்ணிகை-328)
ஶிஷ்யனுக்கு (நிக்ரஹம் உபாதேயம்)நிக்ரஹ காரணம் த்யாஜ்யம். ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹத்தைப் பேணக் கடவன்.

இவனுக்கு ஶரீராவஸாநத்தளவும் ஆசார்ய விஷயத்தில் “என்னைத் தீ மனங்கெடுத்தாய், மருவித் தொழும் மனமே தந்தாய்”
என்று உபகார ஸ்ம்ருதி நடக்கவேணும்.

பாட்டுக் கேட்குமிடமும் – என்று தொடங்கி – எல்லாம், வகுத்த விடமே என்று நினைக்கக் கடவன்.
இஹ லோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்ட அத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை.

ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹ யாத்ரையே தனக்கு ஆத்ம யாத்ரையாக நினைத்திருக்க வேணும்.
ஶிஷ்யன் ஆசார்யனுடைய உடம்பை நோக்கும்,
ஆசார்யனுக்கு என் வஸ்துவை உபகரிக்கிறேனென்றிருக்கும் ஶிஷ்யனுடைய அறிவையும் அழிக்க வடுக்கும்.
ஆசார்யன் பொறைக்கிலக்கான ஶிஷ்யனுக்கு பகவஜ் ஜ்ஞாநம் கைவந்ததென்ன வொண்ணாது.
நியமநத்துக்குப் பாத்ரனாக வேணும். ஆசார்யன் பண்ணின உபகாரத்தை நாள்தோறும் அநுஸந்தித்திலனாகில்
இவனுடைய ஜ்ஞாநாம்ஶமடைய மறந்து அஜ்ஞாநமே மேலிடும்.
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்தும் –செய்யப் பெறாத அடிமைக்கு இழவும்- பட்டிருப்பான்.
ஶிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதமே அப்ரஸாதமாகவும், அப்ரஸாதமே ஸுப்ரஸாதமாகவும் வேணும்.

(பெருமாளைக் காட்டுவார் -தன்னையே பற்று என்ன மாட்டார்
அவர் ப்ரஸாதம் பெருமாள்-அப்ரஸாதம் தனது திருவடி)

“சக்ஷுஸா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந | பாத மூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம் ||” என்று
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரியான சக்ரவர்த்தி திருமகனார் தன் கண் முன்னே நிற்க
அவனை விட்டுத் தன்னுடைய ஆசார்யர்களுடைய பாத ஸேவை பண்ணப்போகிறேனென்று போனாளிறே
தான் சதிரியாயிருக்கச் செய்தேயும் எல்லைச் சதுரை யாகையாலே ஶ்ரீஶபரி.

(சதுர் பகவத் அனுக்ரஹம் -கடாக்ஷத்தால் புனிதம் ஆனாள்
எல்லை சதுர் -ஆச்சார்ய அபிமானம்
மா சதிர் பெற்று வாழ்வு இனிதாகும்)

ஞானமநுட்டானமிவை நன்றாகவே யுடையனான குருவை யடைந்தக்கால் – என்று தொடங்கி.
திருமாமகள் கொழுநன் தானே வைகுந்தந்தரும். உய்யநினைவுண்டாகில் – என்று தொடங்கி –
கையிலங்கு நெல்லிக்கனி. தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது – என்று தொடங்கி –
ஆசாரியனைப் பிரிந்திருப்பாரார் மனமே பேசு. ஆசார்யன் சிஷ்யன் – என்று தொடங்கி –
ஆசையுடன் நோக்குமவன். பின்பழகராம் பெருமாள் சீயர் – என்று தொடங்கி –
நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந் நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்.
ராமானுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்நா – என்று தொடங்கி – தஸ்மாத் அநந்ய ஶரணோ பவதீதி மத்வா என்று நம்முடைய ஜீயர்,
தாம் அந்திமோபாய நிஷ்ட அக்ரேஸரர் என்னுமிடத்தை
ஸ்வ ப்ரபந்தங்களான உபதேச ரத்தின மாலையிலும், யதிராஜ விம்ஶதியிலும் நன்றாக ப்ரகாஶிப்பித்தருளித் தாம் பெற்ற பேறுகளை அநுஸந்தித் தருளுகிற தனியனிலும் –

மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம், முன்னவராம் நங்குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம்,
முழுதும் நமக்கவை பொழுது போக்காகப் பெற்றோம், பின்னை யொன்றுதனில் நெஞ்சு பேராமற் பெற்றோம்,
பிறர் மினுக்கம் பொறாமை யில்லாப் பெருமையும் பெற்றோமே – என்று
தம்முடைய நிஷ்டையை மதித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டரானாரிறே

———

அந்திமோபாய நிஷ்டை – 4 –
வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில்
எம்பெருமானாரின் கருணை
மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி

வடுக நம்பி உடையவர் தளிகைக்குப் பாலமுது காய்ச்சா நிற்க, பெரிய திருநாளுக்குப் பெருமாள்
அழகாக உடுத்து முடித்துப் புறப்பட்டருளி மடத்து வாசலிலே எழுந்தருள,
உடையவர் புறப்பட்டு ஸேவித்து, “வடுகா! பெருமாளை ஸேவிக்க வா” என்று அழைத்தருள,
வடுக நம்பி, ‘அடியேன் உம்முடைய பெருமாளை ஸேவிக்க வந்தால்
என்னுடைய பெருமாளுக்குப் பாலமுது பொங்கிப் போங்காணும். ஆகையால் இத்தை விட்டு வரக் கூடாது’ என்று
அருளிச் செய்தார் என்று ப்ரஸித்தமிறே.

“உன்னை யொழிய வொரு தெய்வ மற்றறியா, மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலையை,
என்றனுக்கு நீ தந்தெதிராசா எந் நாளும், உன்றனக்கே ஆட் கொள் உகந்து” என்று
வடுக நம்பி நிலையையும் நம்முடைய ஜீயர் ப்ரார்த்தித் தருளினாரிறே.

(1) ப்ரக்ருதிமானாகில் ஸத் வைத்யன் கண் வட்டத்திலே வர்த்திப்பான்;
ஆத்மவானாகில் ஸதாசார்யன் கண் வட்டத்திலே வர்த்திப்பான் என்றும்

(2) நம்பிள்ளை தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கரான வடக்குத் திருவீதிப் பிள்ளையைப் பார்த்துத்
தம்முடைய தேவிகள் நிமித்தமாக ஒரு கைங்கர்யம் நியமித்தருளி,
பின்பு, ‘க்ருஷ்ண ! நாம் நியமித்த கார்யத்துக்கு என்ன நினைத்திருந்தாய்? ‘ என்று கேட்டருள,
‘அடியேனுமொரு மிதுனம் தஞ்சமென்றன்றோ இருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
அபிமாந நிஷ்டனாகில் இப்படி இருக்க வேணுமென்று நம்பிள்ளை பிள்ளையை உகந்தருளினார் என்றும்

(அறுகால சிறு வண்டே –ஆச்சார்யர் -தர்ம பத்தினி-திருக் குமாரர் இவ்வாறு ஆறு திருவடிகள்)

(3) பிள்ளை லோகாசார்யர் தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராயிருப்பாரொரு ஸாத்த்விகையைப் பார்த்தருளி,
‘புழுங்குகிறது; வீசு’ என்ன, அவளும் ‘பிள்ளை! அப்ராக்ருதமான திருமேனியும் புழங்குமோ’ என்ன,
‘புழங்கு காண், “வேர்த்துப் பசித்து வயிறசைந்து” என்று ஓதினாய்’ என்று அவளுடைய ப்ரதிபத்தி குலையாமல்
அதுக்குத் தகுதியாகத் தம்முடைய க்ருபையாலே பிள்ளை அருளிச் செய்தார் என்றும்

இம் மூன்று வார்த்தையும் பல காலும் நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.
இதில் நடுவில் வார்த்தை (அர்த்த நிஷ்டைகள்)உபதேஶத்தாலே அறிய வேணும்.

(மேலே பல ஐதிக்யங்கள் அருளிச் செய்து ஆச்சார்ய சச் சிஷ்ய லக்ஷணங்களை விளக்கி அருளிச் செய்கிறார்)

(அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
திருநக்ஷத்ரம்: கார்த்திகை, பரணி
ஆந்திர பிரதேசத்தில் உள்ள -ஸுவர்ணமுகி நதிக்கரையிலுள்ள-விஞ்சிமூரில் பிறந்த இவருடைய இயற்பெயர் யஞ்ய மூர்த்தி என்பதாகும்.
சிஷ்யர்கள்: அநந்தாழ்வான், எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்தவை: ஞான சாரம், ப்ரமேய சாரம்

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம்
சதுர்த்தாஸ்ரம ஸம்பந்தம் தேவராஜ முநிம் பஜே-அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் தனியன்

எம்பெருமானாரின் ப்ரிய சிஷ்யர், வேதங்கள், சாஸ்த்ரங்களை உட் பொருள் உணர்ந்து கற்றவர். ஸந்யாச்ரமம் மேற்கொண்டவரான ஸ்ரீதேவராஜ முனிவர் என்னும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை அடியேன் சரண் புகுகிறேன்”

திருவாழுந் தென்னரங்கஞ் சிறக்க வந்தோன் வாழியே
தென்னருளாளர் அன்பால் திருந்தினான் வாழியே
தருவாழும் எதிராசன் தாளடைந்தோன் வாழியே
தமிழ் ஞானப் பிரமேய ஸாரம் தமர்க்குரைப்போன் வாழியே
தெருளாரும் மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே
தேசு பொலி மடந்தன்னைச் சிதைத்திட்டான் வாழியே
அருளாள மா முனியாம் ஆரியன் தாள் வாழியே
அருள் கார்த்திகைப் பரணியோன் அனைத் தூழி வாழியே!!!-வாழித் திருநாமம்:)

உடையவர் காலத்திலே அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்றொருவர்
வித்யையாலும் ஶிஷ்ய ஸம்பத்தாலும் அற மிகுந்தவராய் அநேக ஶாஸ்த்ரங்களை எழுதி க்ரந்தங்களைச் சுமையாகக் கட்டி
எடுப்பித்துக் கொண்டு தம்முடைய வித்யா கர்வமெல்லாம் தோற்றப் பெரிய மதிப்புடன் வந்து
உடையவருடனே பதினேழு நாள் தர்க்கிக்க,
பதினெட்டாம் நாள் அருளாளப் பெருமாளுடைய யுக்தி ப்ரபலமாக
உடையவர் ‘இது இருந்தபடியென்’ என்று எழுந்தருளி யிருக்க,
அவ்வளவில் அருளாளப் பெருமாள் தம்முடைய வெற்றி தோற்ற எழுந்திருந்து அற்றைக்குப் போக,

உடையவரும் மடமே எழுந்தருளித் திருவாராதநம் பண்ணிப் பெருமாளுடனே வெறுத்துப் பெருமாளை
‘இத்தனை காலமும் தேவரீருடைய ஸ்வரூப- ரூப- குண – விபூதிகள் ஸத்யமென்று ப்ரமாணத்தை நடத்திக் கொண்டு போந்தீர்;
இப்போது இவனொரு ம்ருஷாவாதியைக் கொண்டு வந்து என்னுடைய காலத்திலே எல்லா ப்ரமாணங்களையும்
அழித்துப் பொகட்டு லீலை கொண்டாடத் திரு வுள்ளமாகில் அப்படிச் செய்தருளும்’ என்று
அமுது செய்தருளாமல் கண் வளர்ந்தருள,
பெருமாளும் அந்த க்ஷணத்திலே ‘உமக்கு ஸமர்த்தனா யிருப்பானொரு ஶிஷ்யனை உண்டாக்கித் தந்தோம்;
அவனுக்கு இன்ன யுக்தியை நீர் சொல்லும், அவனும் அதுக்குத் தோற்று ஶிஷ்யனாகிறான்’ என்று
உடையவர்க்கு ஸ்வப்நத்திலே அருளிச் செய்தருள,

உடையவரும் திருக் கண்களை விழித்து, ‘இது ஒரு ஸ்வப்நமிருந்தபடி என்’ என்று திருவுள்ளமுகந்து
பெருமாள் ஸ்வப்நத்திலே அருளிச் செய்த யுக்தியைத் தம்முடைய திருவுள்ளத்திலே கொண்டு
“வலி மிக்க சீயமிராமாநுசன் மறை வாதியராம் புலி மிக்கதென்று இப் புவனத்தில் வந்தமை” என்கிறபடியே
மதித்த ஸிம்ஹம் போலே ப்ரஸந்ந கம்பீரராய்க் கொண்டு தர்க்க கோஷ்டிக்கு எழுந்தருள,
அவ் வளவில் அருளாளப் பெருமாள், உடையவர் எழுந்தருளுகிற காம்பீர்யத்தையும் ஸ்வரூபத்தையும் கண்டு
திடுக்கென்று இவர் நேற்று எழுந்தருளுகிற போது இங்கு நின்றும் சோம்பிக் கொண்டெழுந்தருளா நின்றார்,
ஆகையாலே இது மாநுஷமன்று என்று நிஶ்சயித்து, கடுக எழுந்திருந்து எதிரே சென்று உடையவர் திருவடிகளிலே விழ,

உடையவரும் ‘இதுவென்? நீ தர்க்கிக்கலாகாதோ?’ என்ன,
அருளாளப் பெருமாள், உடையவரைப் பார்த்து ‘தேவர்க்கு இப்போது பெரிய பெருமாள் ப்ரத்யக்ஷமான  பின்பு
தேவரீரென்ன, பெரிய பெருமாளென்ன பேதமில்லை என்றறிந்தேன்.
இனி அடியேன் தேவரீருடைய ஸந்நிதியிலே வாய் திறந்தொரு வார்த்தை சொல்ல ப்ராப்தி இல்லை.
ஆகையாலே அடியேனைக் கடுக அங்கீகரித்தருள வேணும் என்று மிகவும் அநுவர்த்திக்க,

உடையவரும் அவ் வளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து அவரைத் திருத்தி அங்கீகரித்து
விஶேஷ கடாக்ஷம் பண்ணி யருளி, அன்று தொடங்கி அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்று
தம்முடைய திருநாமம் ப்ரஸாதித்தருளிப் பெரியதொரு மடத்தையும் கொடுத்து,
‘உமக்குப் போராத ஶாஸ்த்ரங்களில்லை, புறம்புண்டான பற்றுக்களடைய ஸவாஸநமாக விட்டு ஶ்ரிய:பதியைப் பற்றும்,
உமக்கு பரக்கச் சொல்லலாவதில்லை. விஶிஷ்டாத்வைதப் பொருள் நீரும் உம்முடைய ஶிஷ்யர்களும் கூடி
வ்யாக்யாநம் பண்ணிக் கொண்டு ஸுகமே இரும்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
அவரும் க்ருதார்த்தராய், அதுக்குப் பின்பு அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் அந்த மடத்திலே சிறிது நாள் எழுந்தருளியிருந்தார்.

அநந்தரம் தேஶாந்தரத்தில் நின்றும் இரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் கோயிலுக்கெழுந்தருளித் திருவீதியிலே
நின்றவர்கள் சிலரைப் பார்த்து ‘எம்பெருமானார் மடம் ஏது’ என்று கேட்க,
அவர்கள் ‘எந்த எம்பெருமானார் மடம்’ என்ன,
புதுக்க எழுந்தருளின ஶ்ரீவைஷ்ணவர்கள் நெஞ்சுளைந்து “நீங்கள் இரண்டு சொல்லுவானென்?
இந்த தர்ஶநத்துக்கு இரண்டு எம்பெருமானாருண்டோ?” என்ன, அவர்கள் ‘உண்டு காணும்;
அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் எழுந்தருளி இருக்கிறார்; ஆகையாலே சொன்னோம்’ என்ன,
‘நாங்கள் அவரை அறியோம், ஶ்ரீ பாஷ்யகாரரைக் கேட்டோம்’ என்ன,
ஆனால் ‘உடையவர் மடம் இது’ என்று அவர் காட்ட,
அந்த ஶ்ரீவைஷ்ணவர்களும் உடையவர் மடத்திலே சென்று புகுந்தார்கள்.

இந்த ப்ரஸங்கங்களெல்லாத்தையும் யாத்ருச்சிகமாக அருளாளப் பெருமாளெம்பெருமானார் கேட்டு,
‘ஐயோ நாம் உடையவரைப் பிரிந்து ஸ்தலாந்தரத்திலே இருக்கையாலே லோகத்தார் நம்மை
எம்பெருமானார்க்கு எதிராகச் (நிகராகச் )சொன்னார்கள். ஆகையாலே நாம் அநர்த்தப்பட்டு விட்டோம்’ என்று
மிகவும் வ்யாகுலப்பட்டு, அப்போதே தம்முடைய மடத்தையும் இடித்துப் பொகட்டு வந்து
உடையவர் திருவடிகளைக் கட்டிக்  கொண்டு ‘அநாதி காலம் இவ் வாத்மா தேவர் திருவடிகளை அகன்று
அஹம் என்று அநர்த்தப்பட்டு போந்தது போராமல் இப்போதும் அகற்றி விடத் திருவுள்ளமாய் விட்டதோ?’ என்று மிகவும் க்லேஶிக்க,

உடையவர் ‘இதுவென்’ என்ன, அங்குப் பிறந்த வ்ருத்தாந்தங்களை விண்ணப்பம் செய்ய,
உடையவரும் அச் செய்திகளெல்லாவற்றையும் கேட்டருளி, ‘ஆனால் இனி உமக்கு நாம் செய்ய  வேண்டுவதென்’ என்ன,
அருளாளப் பெருமாளெம்பெருமானார் ‘அடியேனை இன்று தொடங்கி நிழலுமடிதாறும்போலே
தேவரீர் திருவடிகளின் கீழே வைத்துக் கொண்டு நித்ய கைங்கர்யம் கொண்டருளவேணும்’ என்று விண்ணப்பம் செய்ய,
உடையவரும் , ‘ஆனால் இங்கே வாரும்’ என்று அவரைத் தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல்
வைத்துக் கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருள அவரும் க்ருதார்த்தராய்த்
தாம் உடையவரொழிய வேறொரு தெய்வம் அறியாதிருந்தவராகையாலே ஸகல வேதாந்த ஸாரங்களையும்
பெண்ணுக்கும் பேதைக்கும் எளியதாக கற்று உஜ்ஜீவிக்கத் தக்கதாக ‘ஞான ஸாரம்’ ‘ப்ரமேய ஸாரம்’ என்கிற
ப்ரபந்தங்களையும் இட்டருளி, அதிலே “சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகும்” என்றும்
“தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி’ என்றுமித்யாதிகளாலே
ஸச் சிஷ்யனுக்கு ஸதாசார்யனே பர தேவதை; அவன் திருவடிகளே ரக்ஷகம் என்னுமதும்,
அவன் தான் பகவதவதாரம் என்னுமதும் தோற்ற ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாளெம்பெருமானார்
அருளிச் செய்தாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

———-

அந்திமோபாய நிஷ்டை – 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம்

கூரத்தாழ்வான் திரு வயிற்றிலே அவதரித்துப் பெருமாள் புத்ர ஸ்வீகாரம் பண்ணி வளர்த்துக் கொள்ள,
பெருமாள் குமாரராய் வளர்ந்த பட்டர் தர்ஶநம் நிர்வஹிக்கிற காலத்திலே, ஒரு தீர்த்தவாஸி ப்ராஹ்மணன் வந்து
பட்டருடைய கோஷ்டியிலே நின்று ‘பட்டரே! மேல்நாட்டிலே வேதாந்திகள் என்று ஒரு வித்வான் இருக்கிறான்,
அவனுடைய வித்யையும் கோஷ்டியும் உமக்கு துல்யமாயிருக்கும்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணன் சொன்ன வார்த்தைக் கேட்டு ‘ஆமோ, அப்படி ஒரு வித்வாம்ஸர் உண்டோ’ என்ன,
‘உண்டு’ என்று சொல்ல,

அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டு மேல்நாட்டுக்குப் போய், வேதாந்திகள் கோஷ்டியிலே நின்று
‘வேதாந்திகளே! உம்முடைய வித்யைக்கும் கோஷ்டிக்கும் சரியாயிருப்பாரொருவர் இரண்டாற்றுக்கும் நடுவே
பட்டர் என்றொருவர் எழுந்தருளியிருக்கிறார்’ என்ன,

வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆமோ, பட்டர் நமக்கொத்த வித்வானோ’ என்ன,
ப்ராஹ்மணன் ‘ஶப்த – தர்க்க – பூர்வோத்தரமீமாம்ஸம் தொடக்கமாக ஸகல ஶாஸ்த்ரங்களும் பட்டருக்குப் போம்’ என்ன,

வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணன் சொன்னது கேட்டு, ‘இந்த பூமியில் நமக்கெதிரில்லையென்று ஷட்தர்ஶநத்துக்கும்
ஆறு ஆஸநமிட்டு அதின் மேலே உயர இருந்தோம்; பட்டர் நம்மிலும் அதிகர் என்று ப்ராஹ்மணன் சொன்னான்’ என்று
அன்று தொடங்கி வேதாந்திகள் திடுக்கிட்டிருந்தார்.
அவ்வளவில் அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலுக்கு வந்து பட்டர் ஸந்நிதியிலே நின்று,
‘பட்டரே! உம்முடைய வைபவமெல்லாம் வேதாந்திகளுக்குச் சொன்னேன்’ என்ன,
‘பட்டருக்கு எந்த ஶாஸ்த்ரம் போம்’ என்று கேட்டார்’ என்ன,
‘ப்ராஹ்மணா, அதுக்கு வேதாந்திகளுக்கு என் சொன்னாய்’ என்ன,

‘ஶப்த தர்க்கங்களும் ஸகல வேதாந்தங்களும் நன்றாக பட்டர்க்குப் போம் என்று வேதாந்திகளுடனே சொன்னேன்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணனைப் பார்த்து ‘தீர்த்த வாஸியாய் தேஶங்களெல்லாம் நடையாடி எல்லாருடையவும்
வித்யா மாஹாத்ம்யங்களையும் அறிந்து நாகரிகனாய் இருக்கிற நீ நமக்குப் போமதெல்லாமறிந்து வேதாந்திகளுடனே சொல்லாமல்
வேத ஶாஸ்த்ரங்களே போமென்று தப்பச் சொன்னாய்’ என்ன,

அந்த ப்ராஹ்மணன் பட்டரைப் பார்த்து ‘இந்த லோகத்தில் நடையாடுகிற வேத ஶாஸ்த்ரங்களொழிய உமக்கு
மற்றெது போம் என்று வேதாந்திகளுடனே சொல்லுவது’ என்ன,
‘கெடுவாய்! பட்டருக்கு திருநெடுந்தாண்டகம் போமென்று வேதாந்திகளுடனே சோல்லப் பெற்றாயில்லையே’ என்று
பட்டர் வெறுத்தருளிச் செய்து, அநந்தரம் பட்டர் ‘வேதாந்திகளை நம்முடைய தர்ஶநத்திலே அந்தர் பூதராம்படி
பண்ணிக் கொள்ள வேணும்’ என்று தம்முடைய திருவுள்ளத்தைக்[தே] கொண்டு பெருமாளை ஸேவித்து,
‘மேல் நாட்டிலே வேதாந்திகளென்று பெரியதொரு வித்வான் இருக்கிறார்.
அவரைத் திருத்தி நம்முடைய தர்ஶந ப்ரவர்த்தகராம்படி பண்ண வேணும் என்று அங்கே விடைக் கொள்ளுகிறேன்,
அவரை நன்றாகத் திருத்தி ராமாநுஜ ஸித்தாந்தத்துக்கு நிர்வாஹகராம்படி திருவுள்ளம் பற்றி யருள வேணும்’ என்று
பட்டர் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய, பெருமாளும் ‘அப்படியே செய்யும்’ என்று திருவுள்ளமுகந்தருளித்
தம்முடைய குமாரரான வாசி தோற்ற, ‘அநேக கீத வாத்யங்களையும் கோயில் பரிகரத்தையும் கூட்டிப் போம்’ என்றுவிட,

பட்டரும் அங்கே எழுந்தருளி வேதாந்திகள் இருக்கிற ஊர் ஆஸந்நமானவாறே பராசர பட்டர் வந்தார், வேதாசார்ய பட்டர் வந்தார்’
என்று திருச்சின்னம் பரிமாறுகை முதலான அநேக வாத்ய கோஷத்துடனே பெருந்திரளாக மஹா ஸம்ப்ரமத்துடனே
ஸர்வாபரண பூஷிதராய்க் கொண்டு எழுந்தருள, அவ்வளவிலே அவ்வூரில் நின்றும் இரண்டு பேர் ப்ராஹ்மணர் எதிரே சென்று,
‘நீர் மஹா ஸம்ப்ரமத்துடனே வந்தீர், நீரார்? நீர் எங்கே எழுந்தருளுகிறீர்? என்று பட்டரைக் கேட்க,
அவர் ‘நாம் பட்டர், வேதாந்திகளுடனே தர்க்கிக்கப் போகிறோம்’ என்ன,
அந்த ப்ராஹ்மணர் சொன்னபடி – ‘நீர் இப்படி ஸம்ப்ரமத்துடனே எழுந்தருளினால் வேதாந்திகளை உமக்குக் காணப் போகாது.
அவர் க்ருஹத்துக்குள்ளே இருந்து விடுவர். அவருடைய ஶிஷ்ய ப்ரஶிஷ்யர்கள் தலை வாசலிலே இருந்து நாலிரண்டு மாஸம்
வந்த வித்வான்களுடனே தர்க்கித்து உள்ளே புகுர வொட்டாதே தள்ளி விடுவார்கள்’ என்ன,

பட்டரும் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆனால் நான் நேரே சென்று அவருடைய க்ருஹத்திலே புகுந்து
வேதாந்திகளைக் காணும் விரகேது’ என்று கேட்க, அவர்கள் சொன்னபடி –
‘வேதாந்திகள் தநவானாகையாலே அவாரியாக {=தடையின்றி} ப்ராஹ்மணர்க்கு ஸத்ர போஜநமிடுவர்,
அந்த ப்ராஹ்மணருடனே கலசி அவர்களுடைய வேஷத்தையும் தரித்துக் கொண்டு ஸத்ரத்திலே சென்றால்
வேதாந்திகளைக் கண்களாலே காணலாம். ஆகையாலே உம்முடைய ஸம்ப்ரமங்களெல்லாத்தையும் இங்கே நிறுத்தி
நீர் ஒருவருமே ஸத்ராஶிகளுடனே கூடி எழுந்தருளும்’ என்று சொல்லிப் போனார்கள்.

பட்டரும் அவர்கள் சொன்னது கார்யமாம் என்று திருவுள்ளம் பற்றித் தம்முடைய அனைத்து பரிகரத்தையும் ஓரிடமே நிறுத்தி,
ஸர்வாபரணங்களையும் களைந்து, ஒரு அரசிலைக் கல்லையையும் குத்தி இடுக்கிக் கொண்டு ஒரு காவி வேஷ்டியையும்
தரித்து ஒரு கமண்டலத்தையும் தூக்கி ஸத்ராஶிகளுடனே கூட கார்ப்பண்ய வேஷத்தோடே உள்ளே எழுந்தருள,

வேதாந்திகள் ப்ராஹ்மணர் புஜிக்கிறத்தைப் பார்த்துக் கொண்டு ஒரு மண்டபத்தின் மேலே பெரிய மதிப்போடே இருக்க,
ப்ராஹ்மணரெல்லாரும் ஸத்ர ஶாலையிலே புகுர,
பட்டர் அங்கே எழுந்தருளாமல் வேதாந்திகளை நோக்கி எழுந்தருள,
வேதாந்திகள் ‘பிள்ளாய் இங்கென் வருகிறீர்?’ என்ன, பட்டரும் ‘பிக்ஷைக்கு வருகிறேன்’ என்ன,
‘எல்லாரும் உண்கிற விடத்திலே ஸத்ரத்திலே போகீர் பிக்ஷைக்கு’ என்ன, ‘
எனக்கு சோற்று பிக்ஷை அன்று’ என்ன,

வேதாந்திகள் இவர் ஸத்ராஶியானாலும் கிஞ்சித் வித்வானாக கூடும் என்று விசாரித்து, ‘கா பிக்ஷா?’ என்ன,
பட்டர் ‘தர்க்க பிக்ஷா’ என்ன,
வேதாந்திகள் அத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு தீர்த்த வாஸி ப்ராஹ்மணன் வந்து முன்னாள் நமக்குச் சொன்ன பட்டரல்லது
நம்முடைய முன் வந்து நின்று கூசாமல் தர்க்க பிக்ஷை என்று கேட்க வல்லார் இந்த லோகத்திலே இல்லை யாகையாலே,
வேஷம் கார்பண்யமாயிருந்ததே யாகிலும் இவர் பட்டராக வேணும் என்று நிஶ்சயித்து
‘நம்மை தர்க்க பிக்ஷை கேட்டார் நீரார், பட்டரோ? என்ன,
அவரும் ‘ஆம்’ என்று கமண்டலத்தை, காவி வேஷ்டியை இவை யெல்லாத்தையும் சுருட்டி எறிந்து எழுந்தருளி நின்று
மஹா வேகத்திலே உபந்யஸிக்க,

அவ்வளவில் வேதாந்திகள் எழுந்திருந்து நடுங்கி வேறொன்றும் சொல்லாதே அரை குலையத் தலை குலைய இறங்கி வந்து
பட்டர் திருவடிகளிலே விழுந்து, ‘அடியேனை அங்கீகரித்தருள வேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க
பட்டரும் தாம் எழுந்தருளின கார்யம் அதிஶீக்ரத்திலே பலித்தவாறே மிகவும் திருவுள்ளமுகந்தருளி,
வேதாந்திகளை அங்கீகரித்து அவர்க்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பண்ணி யருளி,
‘வேதாந்திகளே! நீர் ஸர்வஜ்ஞராயிருந்தீர். ஆகையாலே உமக்கு நாம் பரக்கச் சொல்லாவதில்லை.
விஶிஷ்டாத்வைதமே பொருள்; நீரும் மாயா வாதத்தை ஸ வாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப் பற்றி,
ராமாநுஜ தர்ஶநத்தை நிர்வஹியும்’ என்று அருளிச் செய்து,
‘நாம் பெருமாளை ஸேவிக்கப் போகிறோம்’ என்று உத்யோகிக்கிற வளவிலே

ஊருக்குப் புறம்பே நிறுத்தின அனைத்துப் பரிகரமும் மஹாஸம்ப்ரமத்துடனே வந்து புகுந்து பட்டரை மீளவும்
ஸர்வாபரணங்களாலும் அலங்கரித்துத் திருப் பல்லக்கிலேற்றி உபய சாமரங்களைப் பரிமாற எழுந்தருளுவித்துக் கொண்டு
புறப்பட்டவளவிலே வேதாந்திகள் பட்டருடைய பெருமையும் ஸம்பத்தையும் கண்டு
‘இந்த ஶ்ரீமாந் இத்தனை தூரம் காடும் மலையும் கட்டடமும் கடந்து எழுந்தருளி நித்ய ஸம்ஸாரிகளிலும் கடை கெட்டு
ம்ருஷாவாதியாயிருந்த அடியேனுடைய துர் கதியே பற்றாசாக அங்கீகரித்தருளுவதே!’ என்று
மிகவும் வித்தராய்க் கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு பட்டர் திருவடிகளிலே விழுந்து க்லேஶித்து,

‘பெரிய பெருமாள் தாமாகத் தன்மையான ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதிகளுக்குத் தகுதியாக எழுந்தருளினார்,
அநாதி காலம் தப்பி அலம் புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாதபடி கை கழிந்து போன இவ்வாத்மா
என்றும் தப்பிப்போம் என்று திருவுள்ளம் பற்றி, இப்படி அதி கார்ப்பண்யமாயிருப்பதொரு வேஷத்தையும் தரித்துக் கொண்டு
ஸத்ராஶிகளுடனேகூட எழுந்தருளி அதி துர்மாநியான அடியேனை அங்கீகரித்தருளின அந்த வேஷத்தை நினைத்து
அடியேனுக்குப் பொறுக்கப் போகிறதில்லை’ என்று வாய் விட,
பட்டரும் வேதாந்திகளை எடுத்து நிறுத்தித் தேற்றி, ‘நீர் இங்கே ஸுகமே இரும்’ என்று அருளிச் செய்து கோயிலேற எழுந்தருளினார்.

அதுக்குப் பின்பு வேதாந்திகள் அங்கே சிறிது நாள் எழுந்தருளி யிருந்து பட்டரைப் பிரிந்திருக்க மாட்டாதே
கோயிலுக்கு எழுந்தருளத் தேட அங்குள்ளவர்கள் அவரைப் போக வொண்ணாதென்று தகையத்
தமக்கு நிரவதிக தநம் உண்டாகையாலே அத்தை மூன்றம்ஶமாகப் பிரித்து, இரண்டு தேவிமாருக்கு இரண்டு அம்ஶத்தைக் கொடுத்து,
மற்றை அம்ஶத்தைத் தம்முடைய ஆசார்யருக்காக எடுப்பித்துக் கொண்டு தத் தேஶத்தையும் ஸவாஸநமாக விட்டு ஸந்யஸித்துக்
கோயிலிலே எழுந்தருளி, பட்டர் திருவடிகளிலே ஸேவித்துத் தான் கொண்டு வந்த தநத்தையும் தம்மதென்கிற அபிமாநத்தை விட்டு,
பட்டர் இஷ்ட விநியோகம் பண்ணிக் கொள்ளலாம்படி அவர் திரு மாளிகையிலே விட்டு வைத்து, க்ருதார்த்தராய் எழுந்தருளி நிற்க,

அவ் வளவில் பட்டரும் மிகவும் திருவுள்ளமுகந்து, ‘நம்முடைய ஜீயர் வந்தார்’ என்று கட்டிக் கொண்டு ஒரு க்ஷணமும் பிரியாமல்
தம்முடைய ஸந்நிதியிலே வைத்துக் கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார்.
ஜீயரும் பட்டரை யல்லது மற்றொரு தெய்வம் அறியாதிருந்தார்.
பட்டர் நஞ்சீயர் என்று அருளிச் செய்தவன்று தொடங்கி வேதாந்திகளுக்கு நஞ்சீயரென்று திருநாமமாயிற்று.
நஞ்சீயர் நூறு திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்து நூறு திருவாய்மொழியும் நிர்வஹிக்கையாலே
ஜீயருக்கு ஶதாபிஷேகம் பண்ணிற்று என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்வர்.

(நஞ்சீயர் இயற் பெயர் -மாதவர்

நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே யஸ்ய வாகம்ருதஸார பூரிதம் புவந த்ரயம்-நஞ்சீயருடைய தனியன்:

தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே சீமாதவனென்னும் செல்வனார் வாழியே பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே பங்குனியில் உத்தர நாள் பாருதித்தான் வாழியே ஒண்டொடியாள் கலவி தன்னை யொழித்திட்டான் வாழியே ஒன்பதினாயிரப் பொருளை யோதுமவன் வாழியே எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே எழில் பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே-நஞ்சீயருடைய வாழி திருநாமம்: )

நஞ்சீயர் பட்டரை அநேகமாக அநுவர்த்தித்து அவருடைய அநுமதி கொண்டு திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரமாக
ஒரு வ்யாக்யாநமெழுதி, பட்டோலையானவாறே இத்தையொரு ஸம்புடத்திலே நன்றாக எழுதித் தரவல்லார் உண்டோ
என்று ஜீயர் தம்முடைய முதலிகளைக் கேட்க,
அவர்களும் ‘தென்கரையனென்னும் வரதராஜனென்று ஒருவர் பலகாலம் இங்கே வருவர். அவர் நன்றாக எழுதவல்லார்’
என்று ஜீயருக்கு விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் வரதராஜரை அழைத்து ‘ஒரு க்ரந்தம் எழுதிக்காட்டுங்காண்’ என்ன,
அவரும் எழுதிக் கொடுக்க, ஜீயர் அத்தைக் கண்டு ‘எழுத்து முத்துப் போலே நன்றாயிருந்தது;
ஆனாலும் திருவாய்மொழி வ்யாக்யாநமாகையாலே ஒரு விலக்ஷணரைக் கொண்டு எழுதுவிக்க வேணுமொழிய,
திருவிலச்சினை திருநாமமுண்டான மாத்ரமாய், விஶேஷஜ்ஞரல்லாத வரதராஜனைக் கொண்டு எப்படி எழுதுவிப்பது’
என்று ஸந்தேஹிக்க, வரதராஜனும் ஜீயர் திருவுள்ளத்தை யறிந்து
‘அடியேனையும் தேவரீர் திருவுள்ளத்துக்குத் தகும்படி திருத்திப் பணி கொள்ளலாகாதோ’ என்ன,

அவ்வளவில் ஜீயரும் மிகவும் திருவுள்ளமுகந்தருளி அப்போதே வரதராஜனை அங்கீகரித்து விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி
ஒன்பதினாயிரமும் பட்டோலை ஓருரு வரதராஜனுக்கு அருளிச் செய்து காட்டி
‘இப்படித்தப்பாமல் எழுதித்தாரும்’ என்று பட்டோலையை வரதராஜன் கையிலே கொடுக்க,
அவரும் அத்தை வாங்கிக் கொண்டு ‘அடியேனூரிலே போய் எழுதிக் கொண்டு வருகிறேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் ‘அப்படியே செய்யும்’ என்று விட,

வரதராஜன் திருக் காவேரிக்குள்ளே எழுந்தருளினவளவிலே சத்திடம் (சிற்றிடம்) நீச்சாகையாலே பட்டோலையைத் திருமுடியிலே
கட்டிக்கொண்டு நீஞ்ச, அவ்வளவிலே ஒரு அலை அவரை அடித்து க்ரந்தம் ஆற்றுக்குள்ளே விழுந்து போக,
அவரும் அக்கரையிலேயேறி ‘பட்டோலை போய்விட்டதே, இனி நான் செய்வதேது’ என்று விசாரித்து,
ஒரு அலேகத்தை {=வெற்றேடு} உண்டாக்கிக் கொண்டு ஜீயர் அருளிச் செய்தருளின அர்த்தம்
ஒன்றும் தப்பாமல் ஒன்பதினாயிரமும் நன்றாக எழுதி, தாம் சதிருடைய தமிழ் விரகராகையாலே ஓரொரு பாட்டுக்களிலே
உசிதமான ஸ்தலங்களுக்கு ப்ரஸந்ந கம்பீரமான அர்த்த விசேஷங்களும் எழுதிக் கொண்டு போய் ஜீயர் திருக்கையிலே கொடுக்க,

ஜீயரும் ஶ்ரீகோஶத்தை அவிழ்த்துப் பார்த்த வளவிலே தாமருளிச் செய்த கட்டளையாயிருக்கச் செய்தே
ஶப்தங்களுக்கு மிகவும் அநு குணமாக அநேக விஶேஷார்த்தங்கள் பல விடங்களிலும் எழுதி யிருக்கையாலே
அத்தைக் கண்டு மிகவும் திருவுள்ளமுகந்தருளி வரத ராஜனைப் பார்த்து ‘மிகவும் நன்றாயிரா நின்றது; இதேது சொல்லும்’ என்ன,
அவரும் பயப்பட்டு ஒன்றும் விண்ணப்பம் செய்யாதிருக்க,

ஜீயரும் ‘நீர் பயப்பட வேண்டாம், உண்மையைச் சொல்லும்’ என்ன,
வரதராஜனும் ‘திருக் காவேரி நீச்சாகையாலே பட்டோலையை அடியேன் தலையிலே கட்டிக் கொண்டேன்.
ஓரலை வந்து அடிக்கையாலே அது ஆற்றிலே விழுந்து முழிகிப் போய்த்து.
இது தேவரீர் அருளிச் செய்தருளின ப்ரகாரத்திலே எழுதினேன்’ என்று விண்ணப்பம் செய்ய,

ஜீயரும் ‘இது ஒரு புத்தி விசேஷமிருந்தபடியென்! இவர் மஹா ஸமர்த்தராயிருந்தார். நன்றாக எழுதினார்’ என்று
மிகவும் திருவுள்ளமுகந்து வரதராஜனைக் கட்டிக்கொண்டு ‘நம்முடைய பிள்ளை திருக் கலிக்கன்றி தாஸர்’ என்று திருநாமம் சாத்தித்
தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல் மாப்பழம்போலே வைத்துக் கொண்டு
பிள்ளைக்கு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார்.
ஆகையாலே ஜீயர் நம்பிள்ளை என்று அருளிச் செய்தவன்று தொடங்கி வரத ராஜனுக்கு நம் பிள்ளை என்று
திருநாமமாய்த்து என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவார்.

இந்த வ்ருத்தாந்தங்கள் தன்னை
“நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர், அவரவர்தம் ஏற்றத்தால்,
அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தானென்று நன்னெஞ்சே, ஏத்ததனைச் சொல்லி நீ இன்று” என்று
உபதேச ரத்தின மாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளினார்.

‘இந்திரன் வார்த்தையும், நான்முகன் வார்த்தையும் ஈசனுடன்
கந்தன் வார்த்தையும் கற்பவராரினிக் காசினிக்கே
நந்தின முத்தென்றும் நம்பூர் வரதர் திருமாளிகையில்
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திறை கொள்வரே’ என்றிறே நம்பிள்ளை யுடைய வைபவமிருப்பது.

(நம்பிள்ளை திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை அவதார ஸ்தலம்: நம்பூர் ஶிஷ்யர்கள்: வடக்குத் திருவீதிப் பிள்ளை , பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் , ஈயுண்ணி மாதவப் பெருமாள், நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் மற்றும் பலர் பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

வேதாந்த வேத்ய அம்ருத வாரிராஸேர் வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம்-நம்பிள்ளையின் தனியன்: தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே திருவரையில் பட்டாடை சேர் மருங்கும் வாழியே தாமமணி வட மார்வும் புரிநூலும் வாழியே தாமரைக் கை இணை யழகும் தடம் புயமும் வாழியே பாமருவும் தமிழ் வேதம் பயில் பவளம் வாழியே பாடியத்தின் பொருள் தன்னைப் பகர்நாவும் வாழியே நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே-நம்பிள்ளையின் வாழி திருநாமம்:

காதலுடன் நஞ்சீயர் கழல் தொழுவோன் வாழியே கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே-நம்பிள்ளையின் வாழி திருநாமம்:)

———-

அந்திமோபாய நிஷ்டை – 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை

திருக்கோட்டியூர் நம்பி கோயிலுக்கெழுந்தருளித் திருநாள் ஸேவித்து மீண்டெழுந்தருளுகிறவரை
எம்பெருமானார் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல் வார்த்தை அருளிச் செய்ய வேணும்’ என்று கேட்க,
நம்பியும் ஒரு நாழிகைப் போது திருக் கண்களைச் செம்பளித்துக் கொண்டு நின்று, பின்பு
‘எங்கள் ஆசார்யர் ஶ்ரீஆளவந்தார் அடியோங்களுக்கு ஹிதம் அருளும் போது அகமர்ஷண ஸமயத்திலே(காவேரியில் இறங்கி ஆழ்ந்து குளிக்கும் பொழுது)திருமுதுகிருக்கும்படி வல்லார் கடாரம் கவிழ்த்தாப் போலே காணும் இருப்பது;
அதுவே நமக்குத் தஞ்சமென்று விஶ்வஸித்திருப்பேன்; நீரும் மறவாமல் இத்தை நினைத்திரும்’ என்று அருளிச் செய்தாரென்று ப்ரஸித்தமிறே.
நம்பி தான் திருக்கோட்டியூரிலே தளத்தின் மேலே படிக் கதவைப் புகட்டு ஆளவந்தாரை த்யாநித்துக் கொண்டு
யமுனைத் துறைவர் என்கிற மந்த்ரத்தை ஸதா அநுஸந்தாநமாய் எழுந்தருளி இருப்பர் என்று அருளிச் செய்வர்.

உடையவரும் ஒரூமையைக் கடாக்ஷித்தருளி அவனளவில் தமக்குண்டான க்ருபாதிஶயத்தாலே
அவனைக் கடாக்ஷிக்கக் கடவோம் என்று திருவுள்ளம் பற்றி, ஏகாந்தத்திலே வைத்துக் கொண்டு
ஸம்ஜ்ஞையாலே தம்முடைய திருமேனியை ஊமைக்கு ரக்ஷகமாகக் காட்டி யருள,
ஆருக்கும் ஸித்தியாத விஶேஷ கடாக்ஷத்தைத் கூரத்தாழ்வான் கதவு புரையிலே கண்டு மூர்ச்சித்துத் தெளிந்த பின்பு
‘ஐயோ ஒன்றுமறியாத ஊமையாய்ப் பிறந்தேனாகில் இப் பேற்றை உடையவர் அடியேனுக்கும் இரங்கி யருளுவர்;
கூரத்தாழ்வானாய்ப் பிறந்து ஶாஸ்த்ரங்களைப் பரக்கக் கற்கையாலே தம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை
அடியேனுக்குத் தஞ்சமாகக் காட்டித் தந்தருளாமல் ப்ரபத்தியை உபதேஶித்து விட்டாராகையாலே
எம்பெருமானாருடைய திவ்ய மங்கள விக்ரஹமே எனக்குத் தஞ்சமென்கிற நிஷ்டைக்கு அநதிகாரியாய் விட்டேன்’ என்று
ஆழ்வான் தம்மை வெறுத்துக் கொண்டாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

உடையவர் ஆழ்வாரை ஸேவிக்க வேணுமென்று திருநகரிக்கெழுந்தருளுகிற போது திருப்புளிங்குடி என்கிற திருப்பதியிலே
எழுந்தருளினவாறே அவ் வூர்த் திருவீதியிலே பத்தெட்டு வயஸ்ஸிலே ஒரு ப்ராஹ்மணப் பெண் இருக்க,
உடையவர் அவளைப் பார்த்து, ‘பெண்ணே திருநகரிக்கு எத்தனை தூரம் போரும்’ என்று கேட்க,
அந்தப் பெண் உடையவரைப் பார்த்து ‘ஏன் ஐயரே! திருவாய்மொழி ஓதினீரில்லையோ?’ என்ன,
உடையவர் ‘திருவாய்மொழி ஓதினால் இவ்வூர்க்குத் திருநகரி இத்தனை தூரம் போம் என்று அறியும்படி எங்ஙனே?’ என்ன,
அப்பெண் – “திருபுளிங்குடியாய்! வடிவணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக்
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே” என்று ஆழ்வார் அருளிச் செய்கையாலே
திருநகரிக்கு இவ்வூர் கூப்பிடு தூரமென்று அறிய வேண்டாவோ’ என்று உடையவரைப் பார்த்து விண்ணப்பம் செய்ய,

உடையவரும் ‘இதொரு வாக்யார்த்தமிருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
அந்தப் பெண்ணளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து ‘இவளிருக்கிற ஊரிலே நமக்கு இன்று ஸ்வயம்பாகம் பண்ணுவதாகத்
தேடின பாண்டங்களையும் உடைத்துப் பொகட்டு, ‘பெண்ணே உன்னுடைய க்ருஹம் ஏது’ என்ன,
அவளும் தம்முடைய அகத்தைக் காட்ட, உடையவரும் அந்தக் க்ருஹத்திலே எழுந்தருளி,
அந்தப் பெண்ணையும் அவளுடைய மாதா பிதாக்களையும் தளிகைக்குத் திருப் போனகம் சமைக்கும்படி கற்பித்தருளித்
தாமும் முதலிகளும் அமுது செய்தருளி அந்தப் பெண்ணையும் அவளோடு ஸம்பந்தமுடையாரையும் அங்கீகரித்து
விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, தாமும் முதலிகளுமாகத் திருநகரிக்கேற எழுந்தருளினார்.

அன்று தொடங்கி அந்தப் பெண்ணும் தத் ஸம்பந்திகளும் உடையவரல்லது மற்றொரு தெய்வமறியாமலிருந்து
வாழ்ந்து போனார்கள் என்று பெரியோர்கள் அருளிச் செய்வர்கள்.

இந்த வ்ருத்தாந்தங்களாலே
‘பாலமூக- ஜடாந்தாஶ்ச பங்கவோ பதிராஸ்ததா |
ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம்’ என்கிறபடியே
ஶாஸ்த்ர அநதிகாரிகளான இவர்களெல்லாம்  பரம கிருபையாலே உஜ்ஜீவித்தார்கள் என்பதை உடையவர் பக்கலிலே காணலாம் என்றபடி.

திருக் குருகைப் பிரான் பிள்ளான் கொங்கு நாட்டுக்கு எழுந்தருளி அங்கே ஒரு ஶ்ரீவைஷ்ணவ க்ருஹத்திலே விட்டு
ஸ்வயம்பாகம் பண்ணுவதாக எழுந்தருளியிருக்க, அங்குள்ளவர்களெல்லாரும் கேவல பகவந் நாம ஸங்கீர்தநங்களைப் பண்ண,
அது இவர் திருவுள்ளத்துக்குப் பொருந்தாத படியாலே அமுது செய்தருளாமல் அவ்வருகே எழுந்தருளினார் என்றும்,
ஶ்ரீபாஷ்யகாரர் காலத்திலே கோஷ்டியிலே ஒரு வைஷ்ணவர் வந்து நின்று திருமந்த்ரத்தை உச்சரிக்க,
வடுக நம்பி எழுந்திருந்து குரு பரம்பரா பூர்வகமில்லாத படியாலே இது நாவ காரியம் என்று அருளிச் செய்து
அவ் வருகே எழுந்தருளினார் என்றும் இரண்டு வ்ருத்தாந்தமும்
“நாவ காரியம் சொல்லிலாதவர்” என்கிற பாட்டில் வ்யாக்யாநத்திலே காணலாம்.

திருமாலை யாண்டான் அருளிச் செய்யும்படி –
நாம் பகவத் விஷயம் சொல்லுகிறோமென்றால் இஸ் ஸம்ஸாரத்தில் ஆளில்லை; அதெங்ஙனே என்னில்,
ஒரு பாக்கைப் புதைத்து அதுருவாந்தனையும் செல்லத் தலையாலே எருச் சுமந்து ரக்ஷித்து அதினருகே கூறைகட்டிப்
பதினாறாண்டு காலம் காத்துக் கிடந்தால் கடவழி ஒரு கொட்டைப் பாக்காய்த்துக் கிடைப்பது;
அது போலன்றிக்கே இழக்கிறது ஹேயமான ஸம்ஸாரத்தை, பெறுகிறது விலக்ஷணமான பரம பதத்தை,
இதுக்குடலாக ஒரு நல் வார்த்தை யருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒரு காலாகிலும் க்ருதஜ்ஞராகாத
ஸம்ஸாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்லுவது என்று வெறுத்தார் என்று வார்த்தா மாலையிலே ப்ரஸித்தம்.

“கோக்நேசைவ ஸுராபே ச சோரே பக்ந வ்ரதே ததா|
நிஷ் க்ருதிர் விஹிதா ஸத்பி: க்ருதக்நே நாஸ்தி நிஷ் க்ருதி:” என்கிறவிடத்தில்
க்ஷுத்ரமான ப்ராக்ருத த்ரவ்ய உபகார விஸ்ம்ருதியை அகப்பட, நிஷ்க்ருதி யில்லாத பாபமென்றால் அப்ராக்ருதமாய்,
நிரதிஶய வைலக்ஷண்யத்தை உடைத்தான ஆத்ம வஸ்துவை அநாதி காலம் தொடங்கி,
“அஸந்நேவ” என்கிறபடியே அஸத் கல்பமாய்க் கிடக்க, ஜ்ஞாந ப்ரதாநத்தாலே அத்தை “ஸந்தமேநம்” என்னும் போது
உண்டாக்கின ஆசார்யன் திறத்தில் க்ருதக்நராகை பாபங்களுக்கெல்லாம் தலையான பாபமென்னுமிடம் கிம்புநர் ந்யாய ஸித்தமிறே.

தண்ணீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துச் தேத்தாம் விரையை யிட்டுத் தேற்றினாலும் மண்ணானது கீழ் படிந்து
தெளிந்த நீரானது மேலே நிற்குமாப் போலே அஜ்ஞாந ப்ரதமான ஶரீரத்திலே இருக்கிற ஆத்மாவை
ஆசார்யனாகிற மஹோபகாரகன் திருமந்த்ரமாகிற தேத்தாம் விரையாலே தேற்ற, அஜ்ஞாநம் மடிந்து, ஜ்ஞாநம் ப்ரகாஶிக்கும்;
தெளிந்த ஜலத்தை பாத்ராந்தரத்திலே சேர்க்குந்தனையும் கைப்பட்ட போதெல்லாம் கலங்குமாப்போலே,
பிறந்த ஜ்ஞாநத்தைக் கலக்குகிற ப்ராக்ருத ஶரீரத்தை விட்டுப் போய்,
அப்ராக்ருத ஶரீரத்திலே புகுந்தனையும் கலங்காமல் நோக்கும் தன்னுடைய ஸதாசார்யன், தத் துல்யர்கள் கண் வட்டத்திலே
வர்த்திக்கை ஸ்வரூபம் என்று பூர்வாசார்யர்கள் அருளிச் செய்வார்கள். (கதக ஷோத இத்யாதி-கதக-தேத்தாம் விரை).

ஆளவந்தார் திருவநந்தபுரத்துக்கு எழுந்தருளுகிறபோது தமக்கு அந்தரங்க ஶிஷ்யரான தெய்வாரி யாண்டானை
‘பெருமாளுக்குத் திருமாலையும் கட்டி ஸமர்ப்பித்து மடத்துக்கு காவலாக இரும்’ என்று கோயிலிலே வைத்து எழுந்தருள,
ஆண்டானுக்கு திருமேனியும் ஶோஷித்து, தீர்த்த ப்ரஸாதங்களும் இழியாமையிருக்கையாலே மிகவும் தளர,
பெருமாள் அவரைப் பார்த்து ‘உனக்கிப்படி ஆவானென்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
‘தேவரீருடைய கைங்கர்யமும் ஸேவையும் உண்டே யாகிலும் ஆசார்ய விஶ்லேஷத்தாலே இளைத்தேன்’ என்று அவரும் விண்ணப்பம் செய்ய,
‘ஆனால் நீர் ஆளவந்தார் பக்கல் போம்’ என்று பெருமாள் திருவுள்ளமாயருள,

அவரும் அங்கே எழுந்தருள, ஆளவந்தாரும் திருவநந்தபுரத்தை ஸேவித்து அரைக் காத வழி மீண்டு,
கரைமனை யாற்றங்கரையிலே விட்டெழுந்தருளி யிருந்தார்.
ஆண்டானும் அங்கே சென்று ஆளவந்தாரைக் கண்டு ஸேவித்துத் தம்முடைய க்லேஶம் தீர்ந்தவாறே மிகவும் ஹ்ருஷ்டராயிருக்க;
அவ்வளவிலே ஆளவந்தாரும் ‘திருவனந்தபுரம் திருச் சோலைகள் தோன்றுகிறது,
ஶ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு போய் ஸேவித்து வாரும்’ என்று திரு வுள்ளம் பற்றி யருள;
‘அது உம்முடைய திருவனந்தபுரம், என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது’ என்று ஆண்டான் விண்ணப்பம் செய்ய,
‘இது ஒரு அதிகாரம் இருந்தபடி யென்! இந் நினைவு ஒருவர்க்கும் பிறக்கை அரிது’ என்று
ஆளவந்தாரும் ஆண்டானளவிலே மிகவும் திருவுள்ளமுகந்தருளினார் என்று அருளிச் செய்வார்கள்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒரு காலம் திருமேனி பாங்கின்றியிலே கண் வளர்ந்தருளுகிற போது
தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து
‘அடியேன் இப்போது திருவடிச் சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிது நாள் இருக்கும்படி
“ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,
அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டு போலே திருமேனி பாங்காயிற்று.

இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஜ்ஞாந வ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செயதார்,
இது இவர் ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,
பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,

அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,

பிள்ளையும் அத்தைக் கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,
அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக் கட்டாமையாலே காணும்’ என்ன,
பிள்ளையும் அத்தைக் கேட்டு, ‘ஆகிறது, அம்மங்கி யம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,

அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச் செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு
ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன,
மீளவும் பிள்ளை அத்தைக் கேட்டு, ‘அம்மங்கி பெரிய முதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,

“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில்
மூலை யடியே முடித்துக் கொண்டு மீண்டு வருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச் செய்தது,
அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.

பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,
‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன,
‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன,

பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை; ஆனாலும் அடியேனைக் கொண்டு வெளியிட்டருளத்
திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன். தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித்
தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றி யருளி உலாவி யருளும் போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும்
சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று
ஜீயர் விண்ணப்பம் செய்தார்.

இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும்
‘இந்த விபூதியிலும் இவ் வுடம்போடே ஒருவர்க்கு இவ் வைஶ்வர்யம் கூடுவதே!’ என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் –
என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுளத்தைக் குறித்து
உபதேச ரத்தின மாலையிலே
“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.

(பின்பழகராம் பெருமாள் சீயர்
திருநக்ஷத்ரம் : ஐப்பசி சதயம்
அவதார ஸ்தலம் : திருப்புட்குழி
ஆசார்யன் : நம்பிள்ளை
பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்
ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குறும் பஜே ||-பின்பழகிய பெருமாள் ஜீயர் தனியன்)

பெரிய நம்பியும் திருக்கோட்டியூர் நம்பியம் திருமாலையாண்டானும் கூடிச் சந்த்ர புஷ்கரிணிக் கரையிலே
திருப்புன்னைக் கீழெழுந்தருளியிருந்து தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளியிருக்கும் படியையும்,
அவர் அருளிச் செய்தருளும் நல் வார்த்தைகளையும் நினைத்து அநுபவித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய்,
ஆனந்த மக்நராய்க் கொண்டு எழுந்தருளியிருக்கிற அளவிலே திருவரங்கச் செல்வர் பலி ப்ரஸாதிப்பதாக எழுந்தருளிப் புறப்பட,
இவர்களுடைய ஸமாதி பங்கம் பிறந்து எழுந்து இருந்து தண்டனிட வேண்டுகையாலே
‘இந்தக் கூட்டம் கலக்கியார் வந்தார்; இற்றைக்கு மேற்பட ஶ்ரீபலி யெம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே இருக்கக்கடவோம்’
என்று ப்ரதிஜ்ஞை பண்ணிக்கொண்டார்கள் என்று வார்த்தா மாலையிலே உண்டு.

பட்டர் திருத்தின வேதாந்தியான நஞ்சீயரை அநந்தாழ்வான் மேல்நாட்டிலே சென்று கண்டு ‘ஆசார்ய கைங்கர்யத்துக்கு விரோதியான ஸந்யாஸி வேஷத்தை தரித்துத் தப்பச் செய்தீர்; வேர்த்த போது குளித்து, பசித்த போது புசித்து, பட்டர் திருவடிகளே ஶரணம் என்று இருந்தால் உம்மைப் பரம பதத்தில் நின்றும் தள்ளி விடப் போகிறார்களோ? இனிக் கைங்கர்யத்தையும் இழந்து, ஒரு மூலையிலே இருக்க வன்றோ உள்ளது” என்று அருளிச் செய்தார்.

முன்பு ஶைவனாயிருந்து பின்பு தொண்டனூர் நம்பி ஶ்ரீபாதத்திலே திருந்தினாரொரு ஶ்ரீவைஷ்ணவர் திருமலைக்கு எழுந்தருளி,
அநந்தாழ்வானை ஸேவித்து நின்றளவிலே அவர் திருப் பூ மரங்களைப் பிடுங்குவது நடுவதாய்க் கொண்டு
திருவேங்கடமுடையானுக்குத் திரு நந்தவநம் செய்கிறத்தைக் கண்டு
‘அநந்தாழ்வான்! வேங்கடத்தைப் பதியாக வாழ்கிற நித்ய ஸூரிகளை ஒரு விடத்திலே இருக்க வொட்டாமல்
கழுத்தை நெறிப்பது பிடுங்குவதாய்க் கொண்டு ஏதுக்கு நலுங்குகிறீர்;
அடியேனுடைய ஆசார்யன் தொண்டனூர் நம்பி திரு மாளிகையிலே நாள் தோறும் ஶ்ரீவைஷ்ணவர்கள் அமுது செய்தருளின இலை
மாற்றுகிற தொட்டிலே எப்பொழுதும் எடுத்துச் செப்பனிடுகிற கைங்கர்யம் அடியேனதாயிருக்கும்;
அதிலே நாலத்தொன்று தேவர்க்கு தருகிறேன். அந்த பாகவத கைங்கர்யத்திலே அந்வயித்து
*பயிலுஞ்சுடரொளி, *நெடுமாற்கடிமைப் படியே வாழலாம். திருப் பூ மரங்களை பாதியாமல் எழுந்தருள மாட்டீரோ?’ என்று அருளிச் செய்தார்.

அநந்தரம் அங்குத் தானே அந்த ஶ்ரீவைஷ்ணவர்க்கு திருமேனி பாங்கின்றியிலேயாய் மிகவும் தளர்ந்து
அநந்தாழ்வானுடைய திரு மடியிலே கண் வளர, அநந்தாழ்வானும் ஶ்ரீவைஷ்ணவரைப் பார்த்து
‘இப்போது உம்முடைய திருவுள்ளத்தில் ஓடுகிறதேது?’ என்று கேட்க,
அவரும் ‘தொண்டனூர் நம்பி அடியேனுடைய பூர்வாவஸ்தையில் பொல்லாங்கையும் பாராமல் அங்கீகரித்தருளின
அவருடைய திரு மாளிகையில் பின்னாடியை நினைத்துக் கொண்டு கிடக்கிறேன்’ என்று அருளிச் செய்த உடனே திரு நாட்டுக்கு எழுந்தருளினார்.

இத்தால் சொல்லித்தென் என்னில்,
அவருக்கும் திருவேங்கடமுடையான் ஸந்நிதி ஸித்தித்திருக்க, அதில் ஒரு தாத்பர்யமற்று
ஆசார்யன் தம்மை அங்கீகரித்த ஸ்தலமே உத்தேஶ்யமான படி சொல்லிற்று.

————

அந்திமோபாய நிஷ்டை- 7 – நம்பிள்ளை வைபவம் 1

நம்பிள்ளையும் ஶ்ரீபாதத்தில் முதலிகளும் திருவெள்ளறை நாய்ச்சியாரை ஸேவித்து மீண்டு கோயிலுக்கு எழுந்தருளா நிற்க,
திருக் காவேரி இரு கரையும் ஒத்துப் பெருக, ஓடம் கிடையாதபடியாலே தோணியிலே எழுந்தருள,
நட்டாற்றிலே சென்றவாறே அப்போது அஸ்தமித்து மழையும் இருட்டுமாய், அக்கரை இக்கரை முன்னடி தெரியாதே
திக் ப்ரமம் பிறந்து, தோணி அமிழத் தேட, ‘இந்த அவஸ்த்தைக்கு நாலிரண்டு பேர் தோணியை விட்டால் கரையில் ஏறலாம்;
ஒருவரும் விடாதிருக்கில் நம்பிள்ளை முதலாக எல்லாரும் அமிழ்ந்து, தட்டுப் பட்டுப் போகும்’ என்று
தோணி விடுகிறவன் கூப்பிட்டவளவில் ஒருவரும் அதற்கிசைந்து நட்டாறாகையாலே பயாதிஶயத்தாலே தோணியை விட்டார்களில்லை.

அவ்வளவில் ஒரு ஸாத்த்விகை தோணி விடுகிறவனைப் பார்த்து
‘நூறு பிராயம் புகுவாய்! உலகுகளுக்கெல்லாம் ஓருயிரான நம்பிள்ளையைப் பேணிக் கரையிலே விடு’ என்று சொல்லி,
அவனை ஆஶீர்வதித்துத் தோணியை விட்டு அந்தகாரத்தையும் பாராமல் ‘நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்’ என்று ஆற்றிலே விழுந்தார்.
அவ்வளவு கொண்டு தோணி அமிழாமல் மிதந்து அக் கரையிலே சேர்ந்தேறிற்று.
அவ்வளவில் பிள்ளையும் ‘ஐயோ! ஒராத்மா தட்டுப் பட்டு போய் விட்டதே!’ என்று பல காலும் அருளிச் செய்து வ்யாகுலப் பட்டருள,

அந்த ஸாத்த்விகை யம்மை தோணியை விட்டு நாலடி எழப் போன வளவிலே அங்கே ஒரு திடர் ஸந்திக்கத் தரித்து நின்று,
இராக் குரலாகையாலே அருளிச் செய்கிறத்தைக் கேட்டு
‘பிள்ளையே! தேவர் வ்யாகுலப் பட்டருள வேண்டாம்; அடியேனிங்கே நிற்கிறேன்’ என்று குரல் காட்ட,
பிள்ளையும் ‘திடர்கள் மரங்கள் ஸந்தித்தாக வேணும்’ என்று திருவுள்ளம் பற்றி யருளித் தோணிக் காரனை விட்டு
அவளைக் கரையிலே அழைப்பித்துக் கொள்ள, அவளும் திருவடிகளிலே வந்து ஸேவித்து ஆசார்யனை யொழிந்து
வேறொரு ரக்ஷகாந்தரமறியாதவளாகையாலே
‘ஆற்றிலே அடியேன் ஒழுகிப் போகிற போது தேவர் அங்கே வந்து ஒரு கரை மேடாய் வந்து அடியேனை ரக்ஷித்தருளிற்றே?’ என்று கேட்க,
பிள்ளையும் ‘உன்னுடைய விஶ்வாஸம் இதுவான பின்பு அதுவும் அப்படியே யாகாதோ’ என்று
அருளிச் செய்தருளினார் என்று நம்முடைய ஜீயர் பல காலும் அருளிச் செய்தருளுவர்.

வைஷ்ணவனாயிருப்பானொரு ராஜா ஒரு பெருந்திரள் வருகிறத்தைக் கண்டு
‘நம் பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ, நம் பிள்ளை கோஷ்டி கலைந்ததோ’ என்று கேட்டான்.
இப்படி மஹா ஸம்ருத்தியான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே நம்பிள்ளை வாழ்ந்தருளுகிற காலத்திலே
ஶ்ரீபாதத்திலே உடையளாயிருப்பாளொரு அம்மையாருக்குத் திருமாளிகைக்கருகே ஒரு கோல் துறை(தரை) உண்டாய்,
அதிலே குடியிருக்கும் ஸப்ரஹ்மசாரியாய் இருப்பாரொரு ஶ்ரீவைஷ்ணவர், ‘பிள்ளை திருமாளிகைக்கு நெருக்கமாயிருக்கிறது,
இந்த ஒரு கோல் துறையையும் ஆசார்யனுக்குக் கொடுக்க வேணும்’ என்று அந்த அம்மையாருக்குப் பல காலும் அருளிச் செய்ய,

அவளும் ‘கோயிலிலே ஒருகோல் துறை ஆர்க்குக் கிடைக்கும், நான் திருவடி சேருந்தனையும் கொடேன்’ என்ன,
ஶ்ரீவைஷ்ணவரும் அந்தச் செய்தியைப் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘உனக்கொரு ஶரீரத்துக்கு ஒர் சத்திடமன்றோ வேண்டுவது? முதலிகள் எழுந்தருளியிருக்க
வென்றொரு கோல் துறையையும் நமக்குத் தாரும்’ என்று திருவுள்ளம் பற்றியருள,

அவளும் ‘அடியேன் அப்படிச் செய்கிறேன்; தேவரீர் பரம பதத்திலே ஒருகோல் துறை அடியேனுக்குத் தந்தருள வேணும்’ என்ன,
பிள்ளையும் ‘தந்தோம்’ என்று அருளிச் செய்ய,
‘அடியேன் ஸாது, அதிலே பெண் பெண்டாட்டி, தருகிறோம் என்று அருளிச் செய்த வார்த்தையால் போராது,
எழுதி எழுத்திட்டுத் தர வேணும்’ என்ன,
பிள்ளையும் ‘இவள் இப்படிக்கு கேட்பதே’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து,
‘இன்ன வருஷம் இன்ன மாஸம் இத்தனையாம் தேதி இந்த அம்மையாருக்குத் திருக் கலிக்கன்றி தாஸன்
பரம பதத்திலே ஒரு கோல் துறை கொடுத்தேன்; இத்தை ஶ்ரீவைகுண்டநாதன் க்ரயம் செலுத்திக் கொண்டு கொடுத்தருளவும்’ என்று
ஶாஸநம் எழுதித் தம்முடைய திருவெழுத்தும் சாத்திக் கொடுத்தருளினார்.

பின்பு அந்த அம்மையார் திரு முகத்தையும் வாங்கிக் கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதப்பட்டு அன்று
மற்று நாளும் பிள்ளையை ஸேவித்துக் கொண்டு ஸுகமே யிருந்து, மூன்றாம் நாள் பரம பதத்துக்குப் போனாள்.
ஆகையால் உபய விபூதியும் ஆசார்யனிட்ட வழக்காயிருக்குமென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

கூரத்தாழ்வானுடைய திருப்பேரனாரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்
நம்பிள்ளையுடைய ஜ்ஞான பக்தி வைராக்யங்களையும் பாகவத ஸம்ருத்தியையும், லோக பரிக்ரஹத்தையும்,
ஶிஷ்ய ஸம்பத்தியையும் கண்டு பொறுக்க மாட்டாமல் ‘கடி கடி’ என்று கொண்டு போருவராயிருப்பர்.
அக் காலத்திலே அந்த பட்டர் ராஜ ஸ்தாநத்துக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே பின்பழகிய பெருமாள் ஜீயரைக் கண்டு,
‘ஜீயா! நாம் ராஜ கோஷ்டிக்கு போகிறோம்; கூட வாரும்’ என்று ஜீயரைக் கூட்டிக் கொண்டு ராஜ ஸ்தானத்துக்கேற எழுந்தருள,
ராஜாவும் பட்டரை எதிர்க் கொண்டு பஹு மாநம் பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து ஸேவித்துக் கொண்டு
பெரிய திருவோலக்கமா யிருக்கிற வளவிலே,

ராஜா, தான் பஹு ஶ்ருதனாகையாலே வ்யுத்பந்நனாகையாலும், பட்டர் ஸர்வஜ்ஞர் என்கிறத்தை ஶோதிக்க வேணும் என்று விசாரித்து,
‘பட்டரே! “ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஶரதாத்மஜம்” என்று பரத்வம் தோற்றாமல் வர்த்திக்கிற பெருமாள்,
ஜடாயு மஹாராஜருக்கு மோக்ஷம் கொடுத்தபடி எப்படி?’ என்று கேட்க,
பட்டர் அதற்கு உத்தரம் அருளிச் செய்யச் சிறிது விசாரிக்க வேண்டி யிருக்க, அவ் வளவில் ராஜாவுக்கு வேறே பராக்காக,
அவ் வளவில் பட்டரும் ஜீயரைப் பார்த்து,
‘ஜீயா! திருக் கலிகன்றி தாஸர் பெரிய வுடையாருக்குப் பெருமாள் மோக்ஷம் கொடுத்தருளினத்தைப் எப்படி நிர்வஹிப்பர்?’ என்று கேட்க,
ஜீயரும் “ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந் தாநேந ராகவ:” என்று பிள்ளை நிர்வஹிப்பர் – என்ன,

பட்டரும் ‘ஆமோ’ என்று அத்தைத் திருவுள்ளத்திலே யோசித்து, ‘ஒக்கும்’ என்று எழுந்தருளி யிருக்க,
ராஜாவும் அவ்வளவில் திரும்பி, ‘பட்டரே! நாம் கேட்டதற்கு உத்தரம் அருளிச்செய்தீரில்லை’ என்ன,
பட்டரும் ‘நீ பராக்கடித்திருக்க நாம் சொல்லாவதொரு அர்த்தமுண்டோ? அபிமுகனாய் புத்தி பண்ணிக் கேள்’ என்று
“ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந் தாநேந ராகவ: குரூந் ஶுஶ்ரூஷயா வீரோ தநுஷா யுதி ஶாத்ரவாந்” என்று
இந்த ஶ்லோகத்தை பட்டர் அருளிச் செய்ய,
ராஜாவும் போர வித்தராய், ‘பட்டரே நீர் ஸர்வஜ்ஞர் என்றது நான் அறிந்தேன்’ என்று
ஶிர:கம்பம் பண்ணி மிகவும் ஶ்லாகித்து, மஹாநர்க்கங்களான அநேகாபரணங்கள், உத்தமமான அநேக வஸ்த்ரங்கள்,
அநேக தநங்களெல்லாத்தையும் கட்டிக் கொடுத்துத் தானும் தோற்று, பட்டர் திருவடிகளிலே விழுந்து,
‘நீர் திருமாளிகையிலேற எழுந்தருளும்’ என்று ஸத்கரித்துவிட,

பட்டரும் ராஜா கொடுத்த த்ரவ்யங்களை வாரிக் கட்டுவித்துக் கொண்டு அங்கு நின்றும் புறப்பட்டு
ஜீயர் திருக் கையைப் பிடித்துக் கொண்டு, ‘ஜீயரே! என்னையும் இந்த தநங்களையும் நம்பிள்ளை திருவடிகளிலே
கொண்டு போய்க் காட்டிக் கொடும்’ என்று போர ஆர்த்தியோடே அருளிச் செய்ய,
ஜீயரும் பட்டர் அருளிச்  செய்தபடியே நம்பிள்ளை கோஷ்டியிலே கொண்டுபோய்க் காட்டிக் கொடுக்க,

நம்பிள்ளையும் தம்முடைய பரமாசார்ய வம்ஶ்யரான பட்டர் எழுந்தருளுகையாலே மிகவும் ஆதரித்து,
‘ஐயரே! இது ஏது?’ என்று கேட்டருள, பட்டரும் பிள்ளை திருமுக மண்டலத்தைப் பார்த்து
‘தேவரீருடைய திவ்ய ஸூக்தியில் பதினாயிரம் கோடியில் ஒன்றுக்குப் பெற்ற தநமிதுவாகையாலே
அடியேனையும் இந்த த்ரவ்யங்களையும் அங்கீகரித்தருள வேணும்’ என்ன,

‘ஆகிறதென்? கூரத்தாழ்வானுடைய திருப் பேரனாரான நீர் இப்படிச் செய்ய ப்ராப்தமன்று காணும்’ என்ன,

பட்டரும் ‘நித்ய ஸம்ஸாரியான ராஜா தேவரீருடைய திவ்ய ஸூக்தியிலே சிந்தின சொல்லுக்குத் தோற்றுக் கொடுத்த தநமிது;
ஆன பின்பு கூரத்தாழ்வானுடைய குலத்தில் பிறந்த அடியேன் அந்தக் குல ப்ரபாவத்துக்குத் தகுதியாகும்
தேவருக்கு ஸமர்ப்பிக்கலாவதொன்றும் இல்லையே யாகிலும், அசலகத்தே யிருந்து இத்தனை நாள் தேவரை
இழந்து கிடந்த மாத்ரமன்றிக்கே தேவருடைய வைபவத்தைக் கண்டு
“அஸூயா ப்ரஸவபூ:” என்கிறபடியே அஸூயை பண்ணித் திரிந்த இவ் வாத்மாவை தேவருக்கு ஸமர்ப்பிக்கை யல்லது
வேறு எனக்கொரு கைம்முதலில்லை. ஆகையாலே அடியேனை அவஶ்யம் அங்கீகரித்தருள வேணும்’ என்று
கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு பிள்ளை திருவடிகளிலே ஸேவிக்க,

(அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர் அஸூயாப்ரஸ்வபூ க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-

1-அமர்யாத –வரம்பு மீறினவனும் 2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும் 3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும் 4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும் 5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும் 6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும் 7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும் 8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும் சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16 சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே- 9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும் 10-பாபிஷ்ட –மஹா பாபியுமான பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9- ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4- நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2- அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய – ராவணோ நாம துர்வ்ருத்த நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் – அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும் உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய் கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் )

பிள்ளையும் பட்டரை வாரி யெடுத்துக் கட்டிக் கொண்டு, விஶேஷ கடாக்ஷம் பண்ணி யருளி, தம்முடைய திரு வுள்ளத்திலே
தேங்கிக் கிடக்கிற அர்த்த விஶேஷங்களெல்லாத்தையும் ஒன்றும், தப்பாமல் பட்டருக்கு ப்ரஸாதித்தருள,
இவரும் க்ருதார்த்தராய், ஒரு க்ஷணமும் பிரியாமல் பிள்ளை ஸந்ததியிலே ஸதாநுபவம் பண்ணி,
ஸேவித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய் எழுந்தருளியிருந்தார்.

அக் காலத்திலே பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹித்தருள- பட்டர் பிள்ளை யருளிச் செய்ததொன்றும் தப்பாமல் கேட்டு,
தரித்து, எழுதித் தலைகட்டினவாறே, தாமெழுதின க்ரந்தங்களை ஸந்நிதியிலே கொண்டு போய் வைக்க ‘இதேது?’ என்று கேட்டருள,
‘தேவரீர் இந்த உருத் திருவாய்மொழி நிர்வஹித்தருளின கட்டளை’ என்ன,
பிள்ளையும், ‘ஆமோ’ என்றுக் க்ரந்தங்களையும் அவிழ்த்துப் பார்க்க,
நூறாயிரத்து இருபத்தைந்தாயிரம் க்ரந்தமாக எழுதி மஹாபாரத ஸங்க்யை யாயிருக்க, அத்தைக் கண்டு பிள்ளை பெருக்க வ்யாகுலப்பட்டு,
பட்டரைப் பார்த்து, ‘இதுவென்? நம்முடைய அநுமதி யின்றிக்கே நாட்டுக்கு பாட்டுரையாம்படி நீர் நினைத்த படியே
திருவாய்மொழியை இப்படி வெளியிடுவானென்?’ என்ன,

பட்டரும் ‘தேவரீர் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை எழுதினதொழிய,
ஒரு கொம்பு சுழி ஏற எழுதினதுண்டாகில் பார்த்தருளும்’ என்ன,

பிள்ளை பட்டரைப் பார்த்து, ‘திருவாய்மொழி நிமித்தமாக நாம் வாக்காலே சொன்னத்தை எழுதினீராகில்,
நம்முடைய நெஞ்சை எழுதப் போகிறீரோ?’ என்று வெறுத் தருளிச் செய்து,
‘உடையவர் காலத்திலே திருக் குருகைப்பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு ஶ்ரீ விஷ்ணு புராண ப்ரக்ரியையாலே
ஆறாயிர க்ரந்தமாக வ்யாக்யாநமிடுகைக்கு உடையவரை அநுமதி பண்ணுவித்துக் கொள்ளுகைக்குட்பட்ட யத்நத்திற்கு ஒரு மட்டில்லை.
ஆன பின்பு நம்முடைய காலத்திலே நம்மையும் கேளாமல் ஸபாத லக்ஷ க்ரந்தமாக இப்படி நெடுக எழுதினால்
ஒரு ஶிஷ்யாசார்ய க்ரமமற்று அஸம்பரதாயமுமாய்ப் போங்காணும்’ என்றருளிச் செய்து,
பட்டர் திருக் கையிலும் அவர் எழுதின க்ரந்தத்தை வாங்கிக் கொண்டு நீரைச் சொரிந்து கரையானுக்குக் கொடுக்க,
அவை அன்றே ம்ருத்தாய்ப் போய்த்து.

(நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் திருநக்ஷத்திரம் : ஐப்பசி அவிட்டம் அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : அவருடைய தகப்பனார் (பட்டர்), நம்பிள்ளை சிஷ்யர் : வலமழகியார் பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம் அவர் எழுதிய நூல்கள் : திருவாய்மொழி 125000 படி வ்யாக்யானம் , பிஷ்ட பசு நிர்ணயம், அஷ்டாக்ஷர தீபிகை, ரஹஸ்ய த்ரயம், த்வய பீடக்கட்டு, தத்வ விவரணம், ஸ்ரீவத்ச விம்சதி முதலியவை

இவர் பராசர பட்டரின் குமாரன் என்றும் பேரன் என்றும் சொல்லப்படுகிறார். இவர் முதலில் உத்தண்டபட்டர் என்று பெயரிடப்பட்டு பிற்காலத்தில் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் என்று புகழப்பட்டார். பெரிய திருமுடி அடைவு என்னும் நூலில் இவர் பராசர பட்டரின் குமாரன் என்றும், 6000 படி குரு பரம்பரை ப்ரபாவத்தில் இவர் கூரத்தாழ்வானின் பேரன் என்றும் அறியப்படுகிறார். பட்டோலையில் இவர் வேத வ்யாஸ பட்டரின் கொள்ளுப்பேரன் என்றும் அறியப்படுகிறார். இவ்வாறு சில அபிப்ராய பேதங்கள் இருந்தாலும் அவர் நம்பிள்ளையின் அன்பிற்குப் பாத்திரமான சிஷ்யரானார்.

லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் | ஸ்ரீவத்சசிஹ்னவம்சாப்திஸோமம் பட்டார்யாமாச்ரயே ||-நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் தனியன்)

அந்ந்தரம், பிள்ளை தமக்கு ப்ரிய ஶிஷ்யராய், தம்முடைய பக்கலிலே ஸகலார்த்தங்களையும் நன்றாகக் கற்றிருக்கிற
பெரியவாச்சான் பிள்ளையை நியமிக்க, அவரும் திருவாய்மொழிக்கு ஶ்ரீராமாயண ஸங்க்யையிலே
இருபத்து நாலாயிரமாக ஒரு வ்யாக்யாநம் எழுதினார்.

அதுக்கநந்தரம் பிள்ளைக்கு அந்தரங்கமான வடக்குத் திருவீதிப் பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹிக்கிற கட்டளையை
பகல் கேட்டு தரித்து, ராத்ரியில் எழுதித் தலைக் கட்டினவாறே அத்தைப் பிள்ளை ஸந்நிதியிலே கொண்டு போய் வைக்க,
நம்பிள்ளை ‘இதேது?’ என்று கேட்டருள,

அவரும் ‘தேவரீர் இந்த உரு திருவாய்மொழி நிர்வஹித்த கட்டளை’ என்று விண்ணப்பம் செய்ய,

பிள்ளையும் ஸ்ரீகோஶங்களை அவிழ்த்து பார்த்தருள, அதிஸங்கோசமுமின்றிக்கே, அதிவிஸ்தரமுமின்றிக்கே
ஆனைக் கோலம் செய்து புறப்பட்டாப் போலே மிகவும் அழகாய், ஶ்ருத ப்ரகாஶிகை கட்டளையிலே
முப்பத்தாறாயிர க்ரந்தமாயிருக்கையாலே நம்பிள்ளை அத்தைக் கண்டு மிகவும் உகந்தருளி,
வடக்கு திருவீதிப் பிள்ளையைப் பார்த்தருளி
‘நன்றாக எழுதினீர்; ஆனாலும் நம்முடைய அநுமதி யின்றிக்கே எழுதினீராகையாலே க்ரந்தங்களைத் தாரும்’ என்று
அவர் திருக் கையில் நின்றும் வாங்கி வைத்துக் கொண்டு

பின்பு தமக்கு அபிமத ஶிஷ்யரான ஶ்ரீமாதவப் பெருமாள் என்று திருநாமத்தை யுமுடையரான
ஈயுண்ணிச் சிறியாழ்வார் பிள்ளைக்கு ஈடு முப்பத்தாறாயிரமும் கொடுத்தருளினார் என்னும்,
இவ் வ்ருத்தாந்தம் உபதேசரத்தின மாலையிலே
“சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதேரார் தமிழ் வேதத்தீடுதனைத் தாருமென வாங்கி முன்
நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார் பின்னதனைத்தான்” என்று
நம்முடைய ஜீயர் தாமே அருளிச் செய்தருளினார்.
ஆகையாலே இன்னமும் திருவாய்மொழிக்குண்டான வ்யாக்யாந கட்டளைகள் எல்லாம்
உபதேச ரத்தின மாலையிலே தெளியக் காணலாம்.

ஆக இப்படி நம்பிள்ளை அவதரித்து நெடுங்காலம் ஜகத்தை வாழ்வித்தருளின அநந்தரம் திருநாட்டுக்குக்கெழுந்தருளினார்.
அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த முதலிகளெல்லாரும் திருமுடி விளக்குவித்துக் கொள்ள,
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்கு நேரே ப்ராதாவாய் இருப்பாரொருவர் பட்டரைப் பார்த்து
‘திருக்கலிகன்றி தாஸர் பரம்பத ப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள் கூரகுலத்திலே பிறந்த நீர் தலை
ஷௌரம் பண்ணிக் கொண்டது கூரகுலத்துக்கு இழுக்கன்றோ?’ என்ன,

பட்டரும் அவரைப் பார்த்து ‘அப்படியாம்; உங்கள் கூர குலத்துக்கு இழுக்காகப் பிறந்தேனே’ என்ன,

அவரும் பட்டரைப் பார்த்து, ‘ஏன் வ்யதிரேகம் சொல்லுகிறீர்?’ என்ன,

பட்டரும் ‘நம்பிள்ளை திருநாட்டுக்கு எழுந்தருளினால் அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த நான்
கூர குலத்தில் பிறந்தேனாகில் ஆழ்வானுடைய ஶேஷத்வத்துக்குத் தகுதியாக தாஸ க்ருத்யமான
மோவாயும் முன் கையும் வபநம் பண்ணுவித்துக் கொள்ள வேண்டி யிருக்க,
அத்தைச் செய்யாதே ஶிஷ்ய புத்ரர்களுடைய க்ருத்யமான தலை மாத்ரம் ஷௌரம் செய்வித்துக் கொண்டது
உங்களுடைய கூரக் குலத்துக்கு இழுக்கன்றோ பின்னை?’ என்ன,

அந்த ப்ராதாவானவர் பட்டரைப் பார்த்து ‘உம்முடைய திருக் கலிகன்றி தாஸர் போய் விட்டாரே!
இனி உமக்கு அவர் பக்கல் எத்தனை நாள் உபகார ஸ்ம்ருதி நடக்கும்?’ என்ன,

பட்டரும் ‘நம்பிள்ளை திருவடிகளில் உபகார ஸ்ம்ருதி அடியேனுக்கு யாவதாத்மபாவி நடக்கும்’ என்ன,

அந்த ப்ராதாவானவர் பட்டர் அருளிச் செய்கிறதைக் கேட்டு ‘‘உபகார ஸ்ம்ருதி ஆசார்ய விஷயத்தில் யாவதாத்மபாவியோ?
இதொரு அர்த்த விஶேஷமிருந்த படி என்!’ என்று, பெரிய வித்வானாகையாலும், குல ப்ரபாவத்தாலும் தெளிந்து, போர வித்தராய்,
பட்டர் திருவடிகளிலே திருந்தி, தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் கேட்டுக் கொண்டு
ஜ்ஞாநாதிகராய் விட்டார் என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

சிலர் ஶ்ரீபாஷ்யத்தை எப்படியிருக்குமென்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்னபடி –
நடுவில் திரு வீதியிலே அந்தியம் போதாக, பழுத்த வேஷ்டியும் உத்தரீயமுமாக தரித்துக் கொண்டு
கூரத்தாழ்வான் என்றொரு மூர்த்தீகரித்து ஸஞ்சரியா நிற்கும்;
அங்கே சென்றால் ஶ்ரீபாஷ்யத்தைக் கண்ணாலே காணலாம் என்றார்கள்.

(தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -ஆழ்வார்-பழுத்த வேஷ்டியும்-செங்கல் பொடிக்கூரை வெண் பல் தவத்தவர்)

சிலர் பகவத் விஷயம் எங்கே கேட்கலாம் என்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்ன படி –
நடுவில் திருவீதியிலே பட்டர் என்பதொரு தேன் மா பழுத்து நிற்கிறது. அங்கே சென்று நன்றாகப் பார்த்து,
கல்லிட்டெறியாதே, ஏறித் துகையாதே, அடியிலே இருக்க மடியிலே விழும் என்றார்கள்.

பட்டருக்கு அதி பால்யமாயிருக்கச் செய்தே, ‘ஸர்வஜ்ஞன் வந்தான்’ என்று ஒருவன் அநேக ஸம்ப்ரமத்தோடே விருதூதி வர,
பட்டர் அவனைப் பார்த்து ‘நீ ஸர்வஜ்ஞனோ?’ என்ன,

அவனும் ‘நாம் ஸர்வஜ்ஞனாம்’ என்ன,

பட்டர் இரண்டு திருக் கையாலும் கிடந்த புழுதியை அள்ளி அவனைப் பார்த்து ‘இது எத்தனை என்று சொல்’ என்ன,
அவன் அதுக்கு ஒன்றும் சொல்ல மாட்டாமல் லஜ்ஜித்து வாயடைத்து, கவிழ்தலையிட்டு நிற்க,

பட்டர் ‘உன்னுடைய ஸர்வஜ்ஞனென்கிற விருதையும் பொகடு’ என்ன,
அவனும் அவை எல்லாத்தையும் பொகட்டு ‘உமக்கு தோற்றேன்’ என்ன,

பட்டர் அவனைப் பார்த்து ‘கெடுவாய்! இது ஒரு கைப் புழுதி என்று சொல்லி ஸர்வஜ்ஞன் என்று விருதூதித் திரிய மாட்டாதே
அஜ்ஞனாய் விட்டாயே! இனிப் போ’ என்று அவனை பரிபவித்துத் தள்ளி விட்டார்.

பாஷண்டி வித்வான்கள் அநேக பேருங்கூடி ராஜாஸ்தானத்திலே சென்று ராஜாவுடனே தப்த முத்ரா தாரணத்துக்கு
ப்ரமாணமில்லை என்று ப்ரதிஜ்ஞை பண்ண, ராஜாவும் மஹா ஸமர்த்தனாயிருக்கையாலே
இத்தை நன்றாக அறிய வேணும் என்று பட்டரைப் பார்த்து
‘பட்டரே! தப்த முத்ராதாரணத்துக்கு ப்ரமாணமுண்டோ?’ என்ன,

அவரும் ‘நன்றாக உண்டு’ என்ன,

‘உண்டாகில் காட்டிக் காணீர்’ என்ன,

பட்டர் ‘என் தோளைப் பாரீர்’ என்று திருத் தோளும் திரு விலச்சினைகளையும் ராஜாவுக்கு காட்ட,
ராஜாவும் ‘அப்படியே ஆம்; ஸர்வஜ்ஞரான பட்டர் செய்ததே ப்ரமாணம்’ என்று தானும் விஶ்வஸித்து,
ப்ரமாணமில்லை என்ற பாஷண்டிகளையும் வாயடைப்பித்துத் தள்ளி ஓட்டி விட்டார் என்று
இவ் வ்ருத்தாந்தங்களெல்லாம் பெரியோர்கள் அருளிச் செய்வார்கள்.

ஆகையாலே
‘மட்டவிழும் பொழில் கூரத்தில் வந்துதித்து இவ்வையமெல்லாம் எட்டுமிரண்டும் அறிவித்த எம்பெருமான் இலங்கு
சிட்டர் தொழும் தென்னரங்கேசர் தம் கையில் ஆழியை நானெட்டன நின்ற மொழி ஏழுபாருமெழுதியதே” என்று
இந்த திருநாமமும், ஶ்ருதி வாக்யமும்
“விதாநதோ ததாந: ஸ்வயமேநாமபி தப்த சக்ர முத்ராம், புஜயேவமமைவ பூ ஸுராணாம் பகவல் லாஞ்சந் தாரணே ப்ரமாணம்” என்று
பட்டர் தாமருளிச் செய்த இந்த ஶ்லோகமும் லோகத்திலே ப்ரஸித்தமாய்த்து.

இவ் வ்ருத்தாந்தங்களால் சொல்லிற்று ஏதென்னில்
இவர்கள் எல்லாதனைலும் பெரியோர்களே யாகிலும் ஒருவனுடைய அபிமாநத்திலே ஒதுங்குகையாலே
ஸர்வர்க்கும் ஆசார்யாபிமாநமே உத்தாரகம் என்னும் அர்த்தம் சொல்லித்தாயிற்று.

———-

அந்திமோபாய நிஷ்டை- 8 – ஆனி திரு மூலம் –
ரம்ய ஜாமாத்ருவும் (ஸ்ரீரங்க நாதன்) ரம்ய ஜாமாத்ரு முனியும் (மா முனிகள்)

மலைக் குனிய நின்ற பெருமாள் என்னும் திரு நாமத்தை யுடையராய் -இப்போது தர்ஶநத்துக்குக் கர்த்தாவாய்க்
கோயிலிலே நித்ய வாஸமாக எழுந்தருளி யிருக்கிற பட்டருடைய திருத் தகப்பனார்- நம்முடைய ஜீயருக்குத்
திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரமும் நன்றாக பாடமுமாய்,
மற்றுமுள்ள வ்யாக்யாநங்களெல்லாம் பாட ப்ராயமுமாயிருக்கையாலே ‘முப்பத்தாறாயிர பெருக்கர்! இங்கே வாரும்’ என்று
நம்முடைய ஜீயரைத் தம்முடைய அருகே அணைத்துக் கொண்டு மிகவும் ப்ரியப்பட்டு உபலாலிப்பர்.

அவ்வளவன்றிக்கே
“நல்லதோர் பரீதாபி வருடந்தன்னில் நலமான ஆவணியின் முப்பத்தொன்றில் சொல்லரிய சோதியுடன் விளங்கு
வெள்ளிக் கிழமை வளர் பக்கம் நாலாம் நாளில் செல்வ மிகு திருமண்டபத்தில் செழுந் திருவாய் மொழிப் பொருளைச்
செப்புமென்று வல்லியுடை மணவாளரரங்கர் நங்கள் மணவாள முனிக்கு வழங்கினாரே” என்கிறபடியே
பரீதாபி வருஷத்தில் ஆவணி மாஸத்தில் பெருமாள் திருப் பவித்திரத் திருநாள் எழுந்தருளி
அணி யரங்கன் திரு முற்றத்திலே பெரியோர்களெல்லோரும் கூடிப் பெரிய திரு வோலக்கமாகத் தம்மை ஸேவித்து
மங்களாஶாஸநம் பண்ணிக் கொண்டு நிற்கிற வளவிலே பெருமாள் தாமே நம்முடைய ஜீயரைத் தனித்து அருளப் பாடிட்டருளி,
ஶ்ரீ ஶடகோபனையும் தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதித்தருளி,
‘நம்முடைய பெரிய திரு மண்டபத்திலே நாளை தொடங்கித் திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரமும் நீர் ஓருரு நிர்வஹியும்’ என்று
திருவாய் மலர்ந்தருளி, பெருமாள் தாமும் நாச்சிமார்களும் ஸேநை முதலியாரும் ஆழ்வார் எதிராசனுடனே
பெரிய திரு மண்டபத்திலே பெரிய திருவோலக்கமாக எழுந்தருளி யிருந்து நம்முடைய பெரிய ஜீயரைத்
திருவாய்மொழி நிர்வஹிக்கும்படி பெருமாள் திருவுள்ளம் பற்றி யருளினார்.

ஆகையாலே ஒரு ஸம்வத்ஸரம் ஒரு விக்நமற அவ் விடத்திலே திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரம் முதலாக
ஐந்து வ்யாக்யாநத்துடனே நடந்து, மீளவும் ஆ(னி)வணி மாஸத்திலே திருவாய்மொழி சாற்றுகிற போது
முன்பு போலே அனைத்துப் பரிகரத்துடனே கூடப் பெரிய திருமண்டபத்திலே பெருமாள் ஏறி யருளி(ஜீயர்)
திருவாய்மொழி சாற்றுகிற கட்டளையும் திருச் செவி சாற்றி யருளி, பெருமாள் மிகவும் திருவுள்ளமுகந்தருளி,
ஜீயரையும் நன்றாகப் பரிபாலித்தருளினார் என்னுமதுவும் ஜகத்ப்ரஸித்தம்.

ஆகையாலே
“நாமார் பெரிய திருமண்டபமார் நம்பெருமாள் தாமாக நம்மைத் தனித்தழைத்து நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளுமிங்கே வந்துரை என்றேவுவதே வாய்ந்து” என்று
நம்முடைய ஜீயர் தாமும் தமக்குப் பெருமாள் செய்தருளின க்ருபாதிஶயத்துக்கும்
தம்மை விநியோகம் கொண்டருளின வ்யாவ்ருத்திக்கும் உபகார ஸ்ம்ருதி பண்ணி யருளினார்.

‘வலம்புரி யாயிரம் சூழ் தர வாழி மருங்கொளுரு செலம் செல நின்று முழங்குக போல் தனது தொண்டர்
குலம் பல சூழ் மணவாள மா முனி கோயிலில் வாழ நலங்கடல் வண்ணன் முன்னே தமிழ் வேதம் நவிற்றனனே.–என்றும்
தாராரரங்கரிதற்கு முன்னாள் தந்தாமளித்தார் சீரார் பெரிய திருமண்டபத்துச் சிறந்தாய் என்
ஆராவமுதனையான் மணவாள மா முனியை யழைத்து ஏரார் தமிழ் மறை இங்கே யிருந்து சொல் என்றனனே” என்று
இத்யாதிகளாலே
நம்முடைய முதலிகளும் ஜீயருடைய ஶிஷ்ய ஸம்ருத்தியையும் பெருமாள் ஆர்க்கும் செய்யாத ஆதரம்
ஜீயருக்குச் செய்தருளினார் என்னுமத்தையும் அநுஸந்தித்தார்கள்.

இப்போது ஸ்வாசார்ய வைபவமும் சொல்லுவானென் என்னில்,
“குரும் ப்ரகாஶயேந் நித்யம்”,
“எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோபனருளையே”,
“வக்தவ்யம் ஆசார்ய வைபவம்” என்னக் கடவதிறே.

ஒரு நாள் நம்பிள்ளை பகவத் விஷயம் அருளிச் செய்த கோஷ்டி கலைந்த வளவிலே பின்பழகிய பெருமாள் சீயர் தண்டனிட்டு
‘இவ் வாத்மாவுக்கு ஸ்வரூபோபாய- புருஷார்த்தங்கள் இவை என்று அருளிச் செய்ய வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘எம்பெருமா(னாரு)னுடைய இச்சை ஸ்வரூபம், இரக்கம் உபாயம், இனிமை உபேயம்’ என்று அருளிச் செய்ய,
‘அப்படி யன்று அடியேன் நினைத்திருப்பது’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்ய,
பிள்ளை ‘ஆனால் உமக்கென்ன சில பிள்ளைக் கிணறுகளுண்டோ? அத்தைச் சொல்லிக் காணீர்’ என்ன,
‘தேவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கும் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமையாய் இருக்கை ஸ்வரூபம்,
அவர்களபிமாநமே அடியேனுக்கு உபாயம்,
அவர்களுடைய முக மலர்ச்சியே அடியேனுக்கு உபேயம் என்றிருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ஜீயரை உகந்தருளினார்.

———

அந்திமோபாய நிஷ்டை- 9 – நம்பிள்ளை வைபவம் 2

நம்பிள்ளை காலத்திலே முதலி யாண்டானுடைய திருப் பேரனார் கந்தாடை தோழப்பர் நம்பிள்ளை யுடைய வைபவத்தைக் கண்டால்
அஸூயையாலே பொறுக்க மாட்டாமல் இருப்பதாய், தோழப்பர் ஒரு நாள் கோயிலுக்குள்ளே பெருமாளை ஸேவித்துக் கொண்டெழுந்தருள,
நம்பிள்ளையும் முதலிகளும் பெருமாளை ஸேவிப்பதாகப் பெருந்திரளோடு கோயிலுக்குள்ளே எழுந்தருள,
தோழப்பர் அந்த ஸம்ருத்தியைக் கண்டு பொறுக்கமாட்டாமல் சீறிப் பெருமாள் ஸந்நிதியிலே நம்பிள்ளையை அநேகமாகப் பரிபவிக்க,
நம்பிள்ளையும் அத்தைக் கேட்டு நடுங்கிக் கொண்டு பெருமாளை ஸேவித்துப் புறப்பட்டெழுந்தருள,

அந்தச் செய்தியை ஜ்ஞாநாதிகையாயிருக்கிற தோழப்பர் தேவிகள் கேட்டுப் பெருக்க வ்யாகுலப்பட்டுத்
திருமாளிகைக்குள்ளே செய்கிற கைங்கர்யங்களையும் விட்டு, வெறுத்தருளி யிருக்க,
அவ்வளவிலே தோழப்பரும் பெருமாளை ஸேவித்து மீண்டு திருமாளிகைக்கெழுந்தருள,
தேவிகள் முன்பு போலே எதிரே புறப்பட்டு ப்ரியத்துடனே தமக்கொரு கைங்கர்யங்களும் பண்ணாமையாலே
தோழப்பர் தம்முடைய தேவிகளைப் பார்த்து ‘உன்னை நாம் அங்கீகரித்தவன்று தொடங்கி இன்றளவாக
ஆசார்ய ப்ரதிபத்தி பண்ணிக்கொண்டு போந்தாய், இன்று உதாஸீநரைப்போலே இராநின்றாய். இதுக்கடி ஏது?’ என்று கேட்க,

தேவிகள் தோழப்பரைப் பார்த்து, ‘வாரீர்! ஆழ்வார் தம்முடைய அவதாரம் போலே ஒரு அவதார விஶேஷமாய்,
பெருமாளுக்கு ப்ராண பூதராயிருந்துள்ள நம்பிள்ளையைப் பெருமாள் ஸந்நிதியிலே கூசாமல் அநேகமாகப் பரிபவித்து
இப்படிச் செய்தோம் என்கிற பயாநுதாபங்களுமற்று, உஜ்ஜீவிக்க வந்திருக்கிற உம்மோடு எனக்கென்ன ஸம்பந்தமுண்டு?
நீர் என்னை வெறுத்தாராகில் என்னுடைய மாதா பிதாக்கள் உம்முடைய கையில் காட்டித் தந்த என்னுடைய ஶரீரத்தை
உமக்கு வேண்டினத்தைச் செய்து கொள்ளும்.
என்னுடைய ஆத்மாவை எங்களாசார்யர் அடியிலே அங்கீகரித்தருளினவன்றே நான் உஜ்ஜீவித்தேன்,
ஆகையாலே ‘பத்மகோடிஶதேநாபி நக்ஷமாமி கதாசந’ என்று பாகவத நிந்தை பண்ணினவர்களை
ஒரு காலும் க்ஷமிப்பதில்லை என்று பெருமாள் தாமே அருளிச் செய்த திருமுகப் பாசுரத்தை அறிந்தும்,
அறியாதவராயிருக்கிற உம்மோடு எனக்கு ஸஹ வாஸம் கூடாது; ஆகையாலே நான் என் இஷ்டத்திலே இருந்து ஈடேறிப் போகிறேன்” என்ன,

தோழப்பரும் தேவிகள் சொல்லுகிற வார்த்தைகளைப் கேட்டும் சற்று போதிக்கும் திகைத்து எழுந்தருளி யிருந்து,
பெரிய வித்வானாகையாலும், குல ப்ரபாவத்தாலும் அஸூயையால் வந்த திருவுள்ளத்தில் வந்த கலக்கம் போய்,
தெளிந்து தேவைகளைப் பார்த்து ‘நீ சொன்னதெல்லாம் ஒக்கும்; நாம் தப்பும் செய்தோம். இனிமேல் செய்ய அடுக்குமது ஏது?’ என்ன,

தேவிகளும் ‘ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடாதே கொள்ளீர். கெடுத்த விடத்தில் தேடீர்’ என்ன,

தோழப்பரும் ‘அதுக்குப் பொருள் ஏது?’ என்ன,

தேவிகள் ‘பரம க்ருபையாளரான நம்பிள்ளை திருவடிகளிலே சென்று ஸேவித்து, அவரை க்ஷாமணம் பண்ணுவித்துக் கொண்டு
அவர் க்ருபை பண்ணியருள ஈடேறுவீர்’ என்ன,

தோழப்பரும் ‘நான் இப்போது அவரை மஹத்தான பெருமாள் திருவோலக்கத்திலே பரிபவித்து
இப்போது அவர் ஸந்நிதியிலே போய் நிற்க வென்றால் எனக்கு லஜ்ஜாபயங்கள் வர்த்தியா நின்றது;
நீ கூட வந்து க்ஷமிப்பிக்க வேணும்’ என்ன,

தேவிகள், தோழப்பர் அருளிச் செய்கிறத்தைக் கேட்டு ‘அப்படியே செய்கிறேன்’ என்று கடுக எழுந்திருந்து
அவரையும் கூட்டிக் கொண்டு நம்பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகப் புறப்படுகிற வளவிலே

நம்பிள்ளை செய்தபடி –
கோயிலுக்கு [கோயிலிலிருந்து] எழுந்தருளின பின்பு முதலிகளெல்லாரையும் ‘உங்களிடங்களிலே போங்கோள்’ என்றருளிச் செய்து,
பகலெல்லாம் அமுது செய்தருளாமல் தம்முடைய திருமாளிகை யளவிலே எழுந்தருளி யிருந்து,
போது அஸ்த்தமித்தவாறே ஒத்த {ஒற்றைத்} திருப் பரிவட்டத்துடனே முட்டாக்கிட்டுக் கொண்டு தாம் ஒருவருமே எழுந்தருளி,
கந்தாடை தோழப்பர் திருமாளிகை வாசலிலே கைப் புடையிலே வந்து கண் வளர்தருள,

தோழப்பரும் தேவிகளும் திரு விளக்கையும் ஏற்றிக் கொண்டு பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகத் திருமாளிகை வாசலிலே
புறப்பட்ட வளவிலே திரு விளக்கொளியிலே ஒரு வெள்ளை கைப் புடையிலே கிடக்கிற அத்தைக் கண்டு
தோழப்பர் ‘இங்கு ஆர் கிடக்கிறார்?’ என்று கேட்க,

பிள்ளை ‘அடியேன் திருக்கலிக்கன்றி தாஸன்’ என்ன,

அவ்வளவில் தோழப்பர் ‘இதுவென்? நீரிருந்தபடியென்?’ என்று திகைத்து, பிள்ளையைப் பார்த்து,
‘மஹா தேஜஸ்வியான நம்மைப் பெருமாள் திரு வோலக்கத்திலே பரிபவிக்கலாவதே என்கிற கோபாதிஶயத்தாலே
நம்முடைய வாசலிலே மூர்க்கம் செய்வதாக வந்து கிடக்கிறீரோ?’ என்ன,

பிள்ளை தோழப்பரைப் பார்த்து ‘அடியேன் அப்படிச் செய்யவில்லை’ என்ன,

‘ஆகில் இங்கு வந்தது கிடப்பானென்?’ என்ன,

பிள்ளை அருளிச் செய்தபடி – ‘பெரிய பெருமாள் ஸந்நிதியிலே முதலியாண்டானுடைய திருப் பேரனாரான தேவரீர்
திரு வுள்ளம் கலங்க வர்த்தித்த மஹா பாபியான அடியேனுக்கு தேவர் திருவாசலல்லது புகுவாசல் மாண்டு வந்து கிடக்கிறேன்’ என்ன,

இவரை அநுவர்த்திப்பதாகப் புறப்பட்டு வந்து நிற்கிற தோழப்பரும் பிள்ளை கண் வளர்ந்தருளுகிற தைந்யத்தையும் கண்டு,
அவருடைய நைச்யமான வார்த்தைகளையும் கேட்டு ‘இதோர் அதிகரமிருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
பிள்ளையை வாரி எடுத்தணைத்துக் கட்டிக் கொண்டு ‘இத்தனை நாளும் நீர் சிறிது பேருக்கு ஆசார்யர் என்றிருந்தேன்;
இப்போது லோகத்துக்கெல்லாம் நீரே ஆசார்யராகைக்கு ப்ராப்தர் என்றறிந்தேன் என்று –
‘லோகாசார்யர்’ என்று தோழப்பர் உகந்து பிள்ளைக்கு திருநாமம் சாற்றி, தம்முடைய திருமாளிகைக்குள்ளே கொண்டு புக்கு,
தாமும் தேவிகளுமாகப் பிள்ளையை அநேகமாக அநுவர்த்தித்து அவர் திருவுள்ளத்தையும் நன்றாக உகப்பித்துத்
தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் பிள்ளை திருவடிகளிலே கேட்டுக் கொண்டு
தோழப்பரும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று இவ்வ்ருத்தாந்தம்
“துன்னு புகழ்கந்தாடை தோழப்பர் தம்முகப்பால் என்ன உலகாரியனோ என்றுரைக்கப் பின்னை
உலகாரியனென்னும் பேர் நம்பிள்ளைக்கோங்கி விலகாமல் நின்றதென்றும் மேல்” என்று
உபதேசரத்தினமாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளினார்.

‘நெஞ்சத்திருந்து நிரந்தரமாக நிரயத்துய்க்கும்
வஞ்சக் குறும்பின் வகை யறுத்தேன் மாய வாதியர் தாம்
அஞ்சப் பிறந்தவன் சீமாதவனடிக் கன்பு செய்யும்
தஞ்சத்தொருவன் சரணாம் புயமென் தலைக்கணிந்தே” ,

“நமாமி தௌ மாதவ ஶிஷ்ய பாதௌ யத் ஸந்நிதிம் ஸுக்தி மயீம் ப்ரவிஷ்டா: |
தத்ரைவ நித்யம் ஸ்திதி மாத்ரியந்தே வைகுண்ட ஸம்ஸார விரக்த சித்தா: ||

ஶ்ருத்வாபி வார்த்தாஞ்ச யதீய கோஷ்ட்யாம் கோஷ்ட்யந்தராணாம் ப்ரதமாபவந்தி|
ஶ்ரீமத் கலி த்வம்ஸந்த தாஸ நாம்நே தஸ்மை நமஸ் ஸூக்தி மஹார்ணவாய” –என்றிறே
நம்பிள்ளை யுடைய வைபவம் இருப்பது.

இப்படி லோகாசார்யர் என்று திருநாமத்தை யுடையரான நம்பிள்ளைக்கந்தரங்க ஶிஷ்யரான வடக்குத் திருவீதிப் பிள்ளை
தாமும் தேவிகளும் விரக்தராய்க் கொண்டு எழுந்தருளி யிருந்து நம்பிள்ளைக்கு ஸர்வ தேஶ ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்
ஸர்வ வித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே
ஒரு நாள் நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை திருமாளிகைக்கெழுந்தருள,
அங்குள்ளாரெல்லாரும் பிள்ளை திருவடிகளிலே வந்து தண்டனிட, அப்போது வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்
ஈரப் புடவையுடனே தண்டனிட்டு நிற்க,

நம்பிள்ளை அருகு நிற்கிற ஸ்த்ரீ ஜனங்களைப் பார்த்து ‘இந்தப் பெண் ஈரப் புடவையுடன் நிற்பானென்?’ என்ன,
அவர்கள் சொன்னபடி – ‘நாலு நாளும் தூரஸ்தையாயிருந்து இப்போது தீர்த்தமாடி வந்து தேவர் திருவடிகளிலே ஸேவிக்கிறாள்’ என்ன,

அவ்வளவில் நம்பிள்ளை மிகவும் திருவுள்ளம் உகந்து அவளை ‘பெண்ணே! இங்கே வாரும்’ என்றழைத்துத்
தம்முடைய திருக் கையாலே அவளுடைய திரு வுதரத்தை ஸ்பர்ஶித்து
‘என்னைப் போலே ஒரு பிள்ளையைப் பெறுவாயாக’ என்று திருவுள்ளம் பற்றி யருளினார்.

ஆகையாலே அத்தைக் கண்டு அதுக்குப் பின்பு வடக்குத் திருவீதிப் பிள்ளை தமக்குக் குமாரர் உண்டானால்
ஆசார்யன் திருவுள்ளத்துக்கு உகப்பாம் என்றறிந்து ததுநுகுணமாக வர்த்திக்க, தத் ஸம்வத்ஸரத்திலே அவருடைய தேவிகள்
திரு வயிறு வாய்த்து குமாரர் திரு வவதரிக்க, அந்தக் குமாரரை லோகாசார்யர் என்று
ஆசார்யரான நம்பிள்ளை யுடைய திருநாமம் சாற்றி யருளினார்.

இப்படி நம்பிள்ளை யுடைய அருளாலே திருவவதரித்து வடக்குத்திருவீதிப்பிள்ளை குமாரரான பிள்ளை லோகாசார்யரும்
தம்முடைய பரம க்ருபையாலே ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணும் என்று திருவுள்ளம் பற்றி யருள,
தத்வ த்ரய, ரஹஸ்ய த்ரய, ஶ்ரீவசந பூஷணம் முதலாக அநேக ப்ரபந்தங்கள் இட்டருளினார்.

(பிள்ளை லோகாசார்யர் திருநக்ஷத்ரம்: ஐப்பசி திருவோணம் அவதார ஸ்தலம்: திருவரங்கம் ஆசார்யன்: வடக்குத்திருவீதிப்பிள்ளை ஶிஷ்யர்கள்: கூரகுலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை ,திருவாய்மொழிப் பிள்ளை, மணப்பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் மற்றும் பலர். பரமதித்த இடம்: ஜ்யோதிஷ்குடி (மதுரை அருகிலே) அருளிச்செய்தது: யாத்ருச்சிக படி, ஶ்ரிய:பதி படி, முமுக்ஷுப்படி, பரந்த படி, தனி ப்ரணவம், தனி த்வயம், தனி சரமம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், தத்வ ஶேகரம், ஸார ஸங்க்ரஹம், அர்ச்சிராதி , ப்ரமேய ஶேகரம் , ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ப்ரபன்ன பரித்ராணம், நவரத்ன மாலை, நவ வித ஸம்பந்தம், ஸ்ரீ வசன பூஷணம் மற்றும் பல

லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:-பிள்ளை லோகாசாரியரின் தனியன்: வாழி உலகாசிரியன் வாழி அவன் மன்னுகுலம் வாழி முடும்பை என்னும் மாநகரம் வாழி மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு நல்லார் இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு .

அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே.)

வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு பின்னையும் ஒரு குமாரர் திருவவதரிக்க, அவரை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
என்று திருநாமம் சாற்றி யருளினார். அவர் ஆசார்ய ஹ்ருதயம் இட்டருளினார்.

(அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருநக்ஷத்ரம் : மார்கழி அவிட்டம் அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : வடக்குத் திருவீதிப் பிள்ளை பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் க்ரந்தங்கள் : திருப்பாவை ஆராயிரப்படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம், அமலனாதிபிரான் வ்யாக்யானம், அருளிச்செயல் ரஹஸ்யம் (ஆழ்வாரின் அமுதச்சொற்களைக் கொண்டே எழுதப்பட்ட ரஹஸ்யத்ரய விவரணம்), ஆசார்ய ஹ்ருதயம் பட்டோலை (ஆசார்ய ஹ்ருதயத்திற்கு அவரே எழுதிய வ்யாக்யானம் இப்பொழுது கிடைக்கவில்லை) மற்றும் பல.

நஞ்சீயர் செய்த வ்யாக்கியைகள் நாலிரண்டுக்கு எஞ்சாமை யாவைக்கும் இல்லையே தம் சீரால் வையகுருவின் தம்பி மன்னு மணவாளமுனி செய்யுமவை தாமும் சில மாமுடும்பை மன்னு மணவாள அண்ணலொடு சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால் மாம் என்று தொட்டுரைத்த சொல்லும் துயம் தன்னினாழ்பொருளும் எட்டெழுத்தும் இங்குரைப்பாரார். நாயனார் இவ்வுலகைவிட்டு பரமபதத்தை அடைந்தபின் ரஹஸ்யத்ரயத்தின் (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) சரமஸ்லோகத்தில் எம்பெருமான் தன் ஹ்ருதயத்தைத் தொட்டு “மாம்” (நானே காப்பவன்) என்று சொன்ன ஆழ்ந்த பொருளை இனி எடுத்துரைக்கவல்லார் யார் உளர் ? என்று சோகிக்கிறார். பிள்ளை லோகாசார்யரே இப்படி சோகத்தில் ஆழும்படியானது நாயனாரின் மகிமையாகும். த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் | ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

தந்தருளவேணும் தவத்தோர் தவப்பயனாய் வந்த முடும்பை மணவாள – சிந்தையினால் நீயுரைத்த மாறன் நினைவின் பொருளனைத்தின் வாயுரைத்து வாழும் வகை)

ஆக இப்படி அவதார விஶேஷமாயிருந்துள்ள லோகாசார்யருடைய திருவடிகளிலே தம்முடைய திருத் தகப்பனார்
திகழக் கிடந்தான் திரு நாவீறுடைய பிரான் தாதரண்ணரையும் அஞ்சு திருநக்ஷத்ரத்திலே ஆஶ்ரயிப்பித்தார்கள்
அண்ணருடைய பெரியோர்கள் என்று அஸ்மதாசார்யோக்தம்.

———–

அந்திமோபாய நிஷ்டை- 10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை

உடையவர் எழுந்தருளி யிருக்கிற காலத்திலே அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஒருக்கால் திருமேனி பாங்கின்றிக்கே
கண் வளருகிற போது கூரத்தாழ்வான் அவரை அப்போதைக்கப்போது எழுந்தருளி ஆராயாமல்,
நாலு நாள் விளம்பித்து எழுந்தருளி, ‘தேவர் திருமேனியில் பாங்கில்லாமை செய்தபடி எப்படி’ என்று கேட்டருள,

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஆழ்வானைப் பார்த்து, ‘தேவரும் அடியேனும் இத்தனை நாளும் இருந்த ஸ்நேஹத்துக்கு
அடியேன் ஒரு நாள் தலை நொந்திருந்தேன் என்று கேட்டால் அப்போதே எழுந்தருளி க்ருபை பண்ணி யருளாமல்,
ஆழ்வான்! தேவரீர் இவ்வாத்மாவை உபேக்ஷித்திருந்த நெஞ்சாறல்,
அடியேன் போய் ஆளவந்தார் திருவடிகளிலே ஸேவித்தவன்று தீரும்’ என்றருளிச் செய்தார்.
இந்த ப்ரஸங்கம் *பொன்னுலகாளீரோ என்கிற திருவாய்மொழி ஈட்டில் ஸுஸ்பஷ்டம்.

வடுக நம்பி உடையவருக்குப் பின்பு சிறிது நாள் எழுந்தருளி யிருந்து பின்பு திருநாட்டுக்கு கெழுந்தருளினவாறே,
ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டருடனே ‘வடுகநம்பி திருநாட்டுக்கெழுந்தருளினார்’ என்று விண்ணப்பம் செய்ய,
அவரும் ‘வடுக நம்பியை அப்படிச் சொல்லலாகாது காணும்’ என்ன,

‘ஏன், வடுகநம்பியை திருநாட்டுக்கெழுந்தருளினார் என்று சொல்லலாகாதோ?’ என்ன,

‘ஆகாது காணும், சரகு தின்னிகளான உபாஸகரோடு ப்ரபந்நரோடு உபாசியரோடு {?} வாசியற,
எல்லார்க்கும் போகிற பொதுவான தேஶங்களன்று காணும் அவர் எழுந்தருளுவது’ என்ன,

‘ஆனால் திருநாடொழிய அவருக்கு ப்ராப்ய பூமி வேறே உண்டோ?’ என்ன,

‘உண்டு காணும், வடுகநம்பி எம்பெருமானார் திருவடிக்கெழுந்தருளினார் என்று சொல்லீர்’ என்று
அருளிச் செய்தார் பட்டர் என்று அஸ்மதாசார்யோக்தம்.

‘அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்” என்று ஆளவந்தார் ஸ்தோத்தரத்திலே அருளிச் செய்தார்.
‘விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன் மண்ணின் தலைத்துதித்து மறை நாலும் வளர்த்தனனே” என்று
நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனார் அருளிச் செய்தார்.

ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும், கூரத்தாழ்வான் குமாரரான பட்டரும், பரமாசார்யரான ஆளவந்தாரும்,
உடையவரும் கூரத்தாழ்வான் முதலான இவர்களுடைய திவ்ய வைபவத்தை எல்லாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி உபசரித்த
ஸர்வஜ்ஞராயிருக்கும் பிள்ளை அமுதனாரும் இப்படி ஏக கண்டமாக அருளிச் செய்கையாலே
சரமாதிகாரிகளுக்கு நித்ய விபூதியிலே போனாலும்
“பொது நின்ற பொன்னங்கழ”லாய்,
“தேவாநாம் தாநவாநாஞ்ச பர்வதமாயிருந்துள்ள ஈஶ்வரனைக் காட்டிலும், ஆத்மாவுக்கு அஸாதரண ஶேஷியாய்,
லீலா விபூதியிலே தொடங்கி, ‘சரணாகதி தந்த தன்னிறைவன்’ என்கிறபடியே அஸாதரண ஶேஷியாய்,
சரம பர்வமாயிருந்துள்ள ஆசார்யன் திருவடிகளே பரம ப்ராப்யமாயிருக்குமென்னும் இவ்வர்த்தம் உபபந்நம்.

(வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-)

ஆகையாலேயிறே ‘எதிராசா என்றுன்னடி சேர்வன் யான்’,
‘எதிராசா எந் நாளும் உன் தனக்கே ஆட் கொள் உகந்து’ என்று
நம்முடைய ஜீயர் இப்படி அருளிச் செய்தருளிற்று.

ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அமுது செய்தருளா நிற்க, கிடாம்பி யாச்சான் அவருக்குத் தண்ணீரமுது திருப் பவளத்திலே
பரிமாறுகிறவர் செவ்வையிலே நின்று பறிமாறாமையாலே அந்த ஶ்ரீவைஷ்ணவருடைய திருக்கழுத்து சற்று சாய,
அத்தை உடையவர் கண்டருளி, ஆச்சானைத் தம்முடைய திருக் கையாலே அறைந்து,
‘ஶ்ரீவைஷ்ணவருக்குப் பாங்காகப் பரிமாறிற்றில்லையே!’ என்று கோபிக்க,
ஆச்சானும் உடையவர் திருவடிகளிலே தண்டனிட்டு,
“பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட மணிமாய”னன்றோ தேவரீர் – என்று விண்ணப்பம் செய்து
ஆச்சானும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

(மணிமாமை குறையில்லா மலர்மாதர் உறைமார்பன் அணிமானத் தடைவரைத்தோள் அடல்ஆழித் தடக்கையன் பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைஇலமே.–4-8-2-

உடையவர் எழுந்தருளியிருக்கிற மடத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க, ஆச்சான் தண்ணீரமுது பரிமாறுகிறவர், ஓர் அருகே சாய நின்று பரிமாறினார்; அத்தை உடையவர் கண்டு, ஓர் அடி வந்து முதுகிலே மோதி, ‘நேரே நின்றன்றோவுடோ பரிமாறுவது?’ என்றார்; என்ன, ‘பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட’ என்று பணித்தார் ஆச்சான்.)

ஒரு நாள் கூரத்தாழ்வான் விஷயமாக உடையவர் சீறி யருள, நடுவு நின்றவர்கள் ஆழ்வானைப் பார்த்து
‘உம்மை உடையவர் நிக்ரஹித்தாரே, இப்போது நீர் என்ன நினைக்கிறீர்?” என்ன,
ஆழ்வான் அருளிச் செய்தபடி – “இவ் வாத்மா பாஷ்யகாரர்க்கே ஶேஷமான பின்பு அவருடைய
விநியோக ப்ரகாரங்கொண்டு அடியேனுக்குக் கார்யமென்?’ என்றார் என்னும் இவ் வ்ருத்தாந்தம்
மாணிக்ய மாலையிலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார்.

பிள்ளை யுறங்கா வில்லி தாஸர் முதலி யாண்டான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஶிஷ்ய லக்ஷணம் இருக்கும்படி என்?’ என்று விண்ணப்பம் செய்ய, ஆண்டான் அருளிச் செய்தபடி –
ஆசார்ய விஷயத்தில் ஶிஷ்யன் பார்யா ஸமனுமாய், ஶரீர ஸமனுமாய், தர்ம ஸமனுமாய் இருக்கக் கடவன்.
அதாவது சொன்னத்தைச் செய்கையும்,
நினைத்ததைச் செய்கையும்,
நினைவா யிருக்கையும் என்றருளிச் செய்தார்.

அநந்தரம் பிள்ளை கூரத்தாழ்வான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு ‘ஆசார்ய லக்ஷணம் எங்ஙனே இருக்கும்?’
என்று விண்ணப்பம் செய்ய, ஆழ்வான் அருளிச் செய்தபடி –
ஶிஷ்யன் விஷயத்தில் ஆசார்யன் பர்த்ரு ஸமனுமாய், ஶரீரி ஸமனுமாய், தர்மி ஸமனுமாய் இருக்கக் கடவன்.
அதாவது
ஏவிக் கொள்ளுகையும்,
எடுத்து இடுவிக்கையும்; அதாவது
அசேதநத்தை நினைத்த படியே விநியோகங் கொள்ளுமாப் போலே விநியோகங் கொள்ளுகையும்,
எடுத்துக் கொள்ளுகையும் என்றருளிச் செய்தார். இவ் வ்ருத்தாந்தம் ஶ்ரீவார்த்தா மாலையிலே உண்டு.

ஒரு நாள் கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் கூடி எழுந்தருளி யிருந்து சில அர்த்த விஶேஷங்களை அநுஸந்தியா நிற்க,
‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?
க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?” என்று இங்ஙனே ப்ரஸங்கமாக,
முதலியாண்டான் ‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன,
கூரத்தாழ்வான் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன,
ஆண்டான் “குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்” என்று பெரியாழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வாநுவர்த்தி ப்ரஸந்நாசார்யநாலே ஆக வேணும் என்ன,
ஆழ்வான் ‘அங்ஙனன்று; “பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி” என்று ஶ்ரீமதுரகவியாழ்வார் நமக்கெல்லார்க்கும்
ஸ்வ அநுவர்த்தி கூடாமையாலே க்ருபா மாத்ரத்தாலே மோக்ஷமாக வேணும்’ என்றருளிச் செய்தார்.
ஆண்டானும் ‘அப்படியே யாம்’ என்று மிகவும் ப்ரீதரானார் என்று அஸ்மாதாசார்ய உக்தம்.

க்ருமி கண்டன் வ்யாஜத்தாலே உடையவர் வெள்ளை சாற்றி மேல் நாட்டுக்கெழுந் தருளின போது
பெருமாள் பரிகரத்தார் தங்களை நெருக்கிக் கொண்டு போருகையாலே விஷமத்துக்காக
‘உடையவராலே யன்றோ இத் தேஶத்துக்குக் கலக்கங்கள் விளைந்தது, ஆகையாலே உடையவர் திருவடிகளில்
ஸம்பந்தமுள்ளவர்கள் ஒருவரும் கோயிலுக்குள் புகுந்து பெருமாளை ஸேவிக்க வொண்ணாது’ என்று திவ்யாஜ்ஞை இட்டு வைத்தார்கள்.

கூரத்தாழ்வான் தர்ஶநத்தை நிர்வஹிக்கைக்காக க்ருமி கண்டனிடத்திலே புக்கு அவனாலே திரு நயநங்களுக்கு உபத்ரவம் வந்தது
மீண்டு கோயிலுக்கெழுந்தருளி அங்குத்தைச் செய்தியை அறியாமல் பெருமாளை ஸேவிக்க எழுந்தருளின வளவிலே,
திரு வாசல் காக்கிறவர்களிலே ஒருவன் ஆழ்வானை ‘உள்ளே புகுராதே’ என்று தகைய,
ஒருவன் அவரைத் தகையாதே ‘கோயிலுக்குள்ளே புகுரும்’ என்ன,
அவ்வளவில் ஆழ்வான் திகைத்து நின்று ‘இங்குற்றை விசேஷம் ஏது?’ என்று திரு வாசல் காக்குமவர்களைக் கேட்க,
அவர்களும் ‘எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுள்ளவர்களொருவரையும் பெருமாளை ஸேவிக்க விட வேண்டாம்
என்று திவ்யாஜ்ஞை யிட்டுத் தகைந்து கிடக்கிறது’ என்ன,

‘ஆனால் நீங்கள் என்னைப் புகுரச் சொல்லுவானென்?’ என்ன,

அவர்கள் ‘ஆழ்வானே! நீர் எல்லாரையும் போலன்றிக்கே நல்ல குணங்களை உடையவராகுயாலே புகுரச் சொன்னோம்’ என்ன,

ஆழ்வான் அத்தைக் கேட்டு ஜல சந்திரனைப் போலே நடுங்கி, சிவிட்கென்று நாலடி மீண்டு,
‘ஐயோ! ஆத்ம குணங்கள் உண்டானால் எல்லார்க்கும் ஆசார்ய ஸம்பந்தத்துக்கு ஹேதுவாம் என்று ஶாஸ்த்ரம் சொல்லிற்று;
எனக்குண்டான ஆத்ம குணங்கள் எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தத்தை அறுத்து கொள்ளுகைக்கு ஹேதுவாய் விட்டதோ’
என்று வ்யாகுலப்பட்டுத் தம்மை மிகவும் நொந்து கொண்டு ‘எனக்குப் பேற்றுக்கு எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமே அமையும்;
தத் ஸம்பந்தத்தை யொழியப் பெருமாளை ஸேவிக்க வேண்டுவதில்லை’ என்று மீண்டு
ஆழ்வான் திருமாளிகைக்கு எழுந்தருளினார் என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

எம்பெருமான் தானே நம்மாழ்வாராய் வந்தது அவதரித்தருளினான் என்று ஆளவந்தார் அருளிச் செய்தருளுவர் என்னுமது
திரு விருத்த வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.
அத்ரி ஜமதக்நி பங்க்தி ரத வஸு நந்த ஸுநுவானவனுடைய யுக வர்ண க்ரமாவதாரமோ என்று
இவ் வாழ்வாரை பகவதவதாரமாக ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்தார்.

———

அந்திமோபாய நிஷ்டை- 11- ஸ்ரீஎம்பார் மற்றும் கொங்கில் பெரிய பிராட்டியார் நிஷ்டை

வட்டமணி குலத்தில் எம்பார் மஹா வித்வானாய், மஹா விரக்தராய், மிகவும் ஆசாரயுக்தராய் இருக்கச் செய்தே
ஶைவாகமத்திலே புகுந்து ஶிவபக்தியிலே மண்டி விழுந்து, அலந்த கொட்டையும் பூண்டு காளஹஸ்தியில்
ஒரு ருத்ராலயத்துக்கு சடங்கியாய், ஸர்வத்துக்கும் கர்த்தாவாய், குச்சியும் தாளும் எப்போதும் கையிலே பிடித்துக் கொண்டு
இரண்டாம் முத்தமிழ் விரகனான ஸம்பந்தன் என்னும்படியே பேயன் பாட்டுப்பாடி, காளஹஸ்தியிலே வர்த்திக்கிற காலத்திலே
திருமலையில் நின்றும் பெரிய திருமலை நம்பி ஒருகார்யத்திலே எழுந்தருளி, காளஹஸ்தி ஆஸந்நமாக,
ஒரு தோப்பிலே விட்டு எழுந்தருளியிருக்க,

அவ்வளவிலே எம்பாரும் ருத்ரனுக்குப் பூப்பறிப்பதாகப் பெரியதொரு பூக் கொடலையும்  கழுத்திலே கட்டிக் கொண்டு
ருத்ர ப்ரபாவமான பாட்டுக்களையும் கதறிக் கொண்டு, திருமலைநம்பி எழுந்தருளியிருக்கிற தோப்பிலே
நிறைய பூத்து நிற்பதொரு பாதிரியிலேயேறிப் பூப் பறியா நிற்க,

திருமலைநம்பி எம்பாருடைய ஶிவபக்தியில் பூத்த{ஊ}த்தைக்கண்டு ‘ஐயோ! இவ்வாத்மா அதிக்ஷுத்ரமான அப்ராப்த விஷயத்தில்
ப்ராவண்யங்களை ஸவாஸநமாக விட்டு ஆத்மாவுக்கு வகுத்த ஶேஷியான ஶ்ரிய:பதியைப் பற்றினானகில்
பெரிய வித்வானாகையாலும், அதிவிரக்தனாகையாலும் லோகத்துக்கு மிகவும் உபகாரகனாம்’ என்று திருவுள்ளம் பற்றித்
தாமும் முதலிகளும் எம்பார் பூப்பறிக்கிற பாதிரிக்கு ஆஸந்நமாக எழுந்தருளி யிருந்து
ஶ்ரிய:பதி நாராயணனே பரதத்வம் என்று சொல்லுகிற வேதாந்த வாக்யங்களை முதலிகளும் தாமும் ஒருவர்க்கொருவர் அநுபாஷிக்க,

எம்பார் ஆலயத்திலுண்டான கார்யங்களையும் பூப்பறிக்கிறத்தையும் மறந்து இவர்கள் அருளிச்செய்கிற
திவ்ய ஸுக்திகளைச் செவி மடுத்துக் கேட்டு ‘இதொன்று இருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
நெடும்போது கேட்டுக் கொண்டு திகைத்து நிற்க,

நம்பியும் எம்பாருடைய ஆபிமுக்யத்தைக் கண்டு ‘இன்னமும் ஆழ்வாருடைய திவ்ய ஸூக்தியிலே ஒன்றைச் சொல்லித்
திருத்தக் கடவோம்’ என்று திருவுள்ளம்பற்றி, “தேவரும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவனெம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே” என்று பெருக்க நொந்து அருளிச்செய்ய,
எம்பாரும் தமிழுக்கு மஹாநிபுணராகையாலே இத்தையும் கேட்டு, அப்போதே தத்த்வஸ்திதியையும் நன்றாக அறிந்து
‘தகாது, தகாது’ என்று பாதிரியின்மேலே நின்று பூக்கொடலையும் சுழற்றி எறிந்து அரைகுலைய தலைகுலைய இறங்கி
‘இத்தனை காலமும் பெருங்கையாற் குடமெடுத்துப் பேய்ச்சுரைக்கு நீர் சொரிந்து கெட்டேன் கெட்டேன்’ என்று கூப்பிட்டு
நம்பி திருவடிகளிலே விழ,

நம்பியும் தான் நினைத்த காரியம் அப்போதே கைகூடுகையாலே மிகவும் திருவுள்ளமுகந்து
எம்பாரையும் ‘தீர்த்தமாடிவாரும்’ என்ன,
அவரும் எலந்தைக்கொட்டைவடங்களையும் அறுத்தெறிந்து பாஷண்ட வேஷத்தையும் கழித்து, தீர்த்தமாடி ஈரப்புடவையோடே
தம்முடைய ஆர்த்தியெல்லாம் தோன்ற வந்து நிற்க, நம்பியும் எம்பாரளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து
அப்போதே அவர்க்கு பஞ்சஸம்ஸ்காரமும் பண்ணி, த்யாஜ்யோபாதேயங்களையும் தெளிய அறிவித்து,
‘புறம்புண்டான பற்றுக்களை யெல்லாத்தையும் ஸவாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப்பற்றி நம்முடைய தர்ஶநத்திலே
ஊற்றமுண்டாய் வாழும்’ என்று அருளிச் செய்ய,
அப்படியே எம்பாரும் க்ருதார்த்தராய், நம்பியை ஸேவித்துக் கொண்டு திருமலைக்கெழுந்தருளத்தேட,

அவ்வளவில் காளஹஸ்த்தியில் பாஷண்டிகளெல்லாரும் கூடி வந்து ‘எங்களுக்கு ஸர்வத்துக்கும் கர்த்தாவான நீர்
போக வொண்ணாது’ என்று எம்பாரைத் தகைய,
அவரும் ‘உங்கள் குச்சியும் தாளும் இதோ பிடியுங்கோள்’ என்று தூரத்திலே நின்று அவர்கள் மேலே எறிந்து
‘காளஹஸ்த்தி யாகிற சுடுகாட்டை நாமினிப் புரிந்துபாரோம்’ என்று அருளிச்செய்து,
பிராட்டி இலங்கை நின்றும் புறப்பட்டாப் போலே அங்குள்ள பற்றுக்களை அடைய ஸவாஸநமாக விட்டுப்
பெரிய ப்ரீதியோடே முக்தர் பரம பதத்தைக் குறித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஹார்த்தன் வழிநடத்தப் போமாப்போலே
திருமலை நம்பியை ஸேவித்துக் கொண்டு கலியுக வைகுண்டமான திருமலைக்கெழுந்தருளி,
நம்பிக்கு மிகவும் அந்தரங்கராய் ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு வாழுகிற காலத்திலே,

உடையவர் திருமலைக்கெழுந்தருளி திருமலைநம்பி ஶ்ரீபாதத்திலே ஶ்ரீராமாயணத்துக்கு ஸம்ப்ரதாயார்த்தம் கேட்டு
மீண்டும் கோயிலுக்கு எழுந்தருளுகிறபோது நம்பியும் உடையவர் அவதார விஶேஷமென்றறிந்து மிகவும் ஆதரித்து
ஆளவந்தாரைப் போலே கண்டு தம்முடைய புத்ராதிகளையும் உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்து
‘தேவரீருக்கு ஏதேனுமொன்று ஸமர்ப்பிக்க வேணும்’ என்ன,

உடையவரும் எம்பாருடைய ஆசார்ய ப்ரேமத்தைக் கண்டு திருவுள்ளமுகந்து ‘எம்பாரைத் தந்தருள வேணும்’ என்ன,

நம்பியும் எம்பாரை உடையவருக்கு உதகதாரா பூர்வமாகக் கொடுத்தார்.
அதுக்குப்பின்பு எம்பார் உடையவரை ஸேவித்துக்கொண்டு திருவரங்கத்துக்கு நாலஞ்சு பயணம் எழுந்தருள,
நம்பியைப் பிரிந்தது எம்பார்க்குத் திருமேனி ஶோஷிக்க, உடையவர் எம்பாரைப் பார்த்து ‘உமக்கிப்படி ஆவானென்’ என்ன,
‘அங்குத்தை யேறப்போம்’ என்ன, எம்பாரும் முன்பு நாலஞ்சு பயணமும் ஒரு பயணமாக மீண்டு
திருமலைக்கு எழுந்தருளி நம்பி திருவடிகளிலே தண்டனிட்டு நிற்க,
நம்பியும் எம்பாரைப் பார்த்து ‘உதக பூர்வமாக உம்மை உடையவருக்குக் கொடுத்து விட்டோமே;
அவரை விட்டு நீர் இங்கு வருவானென்?’ என்ன,
எம்பாரும் தம்முடைய திருமேனி ஸ்வபாவத்தை விண்ணப்பம் செய்ய,
நம்பியும் ‘விற்ற பசுவுக்குப் புல்லிடுவாருண்டோ? நீர் உடையவர்க்குத் தானே அடிமை செய்து கொண்டிரும்’ என்று
ஒரு போதும் ப்ரஸாதமிடாமல் தள்ளி விட்டார்.
எம்பாரும் அங்கு ஆசையற்று நமக்கினி உடையவர் திருவடிகளே தஞ்சம்’ என்று அறுதியிட்டுக் கோயிலுக்கெழுந்தருளி,
உடையவரை ஸேவித்துக் கொண்டு மிகவும் ப்ரீதராய் வாழுகிற காலத்திலே,

ஒருநாள் உடையவரும், முதலிகளும் பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருக்க, முதலிகளெல்லாரும் எம்பாருடைய
ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைச் சொல்லித் தலைத் தூக்கிக் கொண்டாட,
எம்பார் தாமும் ‘அது ஒக்கும், ஒக்கும்’ என்று அவர்களைக் காட்டில் மிகவும் தம்மை ஶ்லாகித்துக் கொள்ள,
உடையவரும் அத்தைக் கேட்டு எம்பாரைப் பார்த்து, ‘எல்லாரும் உம்மை ஶ்லாகித்தால் நீர் நைச்யாநுஸந்தாநம்
பண்ண வேண்டியிரா நிற்க, அது செய்யாதே நீர்தாமே உம்மை ஶ்லாகித்துக் கொள்ளா நின்றீர்;
இப்படி இருப்பது ஒன்றுண்டோ?’ என்ன,

எம்பாரும் உடையவரைப் பார்த்து, ‘ஐயா! முதலிகள் அடியேனைக் கொண்டாடில் காளஹஸ்த்தியிலே
கையும் குடமும் கழுத்தும் கப்படமுமாய்க் கொண்டு எளிவரவுபட்டு நின்ற அந்நிலையைக்
கொண்டாடுமத்தனை யன்றோ அடியேனுக்குள்ளது; இப்படியான பின்பு “பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்கிறபடியே
தேவரீர் இவ்வாத்மாவை எடுக்கைக்காக ஒரு திருவவதாரம் பண்ணி செய்தருளின க்ருஷி பரம்பரைகளை அநுஸந்தித்து
நித்ய ஸம்ஸாரிகளிலும் கடை கெட்டுக் கிடந்த அடியேனை காலதத்வமுள்ளதனையும்
‘எனக்கினி யார் நிகர் நீணிலத்தே”,
“நெஞ்சமே நல்லை நல்லை” என்கிறபடியே அடியேனை ஶ்லாகித்துக் கொள்ள ப்ராப்தி யுண்டு;
ஆகையாலே அடியோங்களெல்லாரும் தேவரீராலே இவ்வாத்மாவுக்குண்டான நன்மைகளை ஶ்லாகித்தது
தேவரீரைக் கொண்டாடித்தாமித்தனையன்றோ?’ என்று விண்ணப்பம் செய்ய,

உடையவரும் ‘ஶ்ரீகோவிந்தப் பெருமாளே! நல்லீர்! நல்லீர்!’ என்று எம்பாரை மிகவும் உகந்தருளினார்
என்று பெரியோர்கள் அருளிச் செய்தருளுவார்கள்.

(எம்பார் திருநக்ஷத்ரம்: தை புனர்பூசம் திரு அவதாரத்தலம்: மதுரமங்கலம் திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம் அருளிச்செய்தவை: விஞ்ஞான ஸ்துதி , எம்பெருமானார் வடிவழகு பாசுரம்

ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வநபாயிநீ | ததாயத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஶ்ரமஸ்தலீ ||-எம்பாரின் தனியன்:

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே–எம்பாரின் வாழி திருநாமம்:)

ஒரு ஆசார்யர் தம்முடைய ஶிஷ்யனுக்கு த்யாஜ்யோபாதேயங்களைத் தெளிய உபதேஶிக்க,
அவனும் அதுக்கு அநுரூபமாக நடக்க அறியாமையாலே அந்த ஆசார்யரும் “ஸ்காலித்யே ஶாஸிதாரம்” என்கிறபடியே
அவனை நியமித்துக் கொண்டு போர, அந்த ஶிஷ்யன் ஸ்வாசார்ய நியமநம் தனக்கு ஹிதம் என்று அறியாமல் வெருவி
இருந்த ஜ்ஞாநாதிகருடனே ‘ஐயோ! ஶிஷ்யன் என்ன, நியமியா நின்றார்கள்’ என்று வெறுக்க,
அந்த ஜ்ஞாநாதிகரும் ‘ஐயோ! ஶாஸநீயனான ஶிஷ்யனை யன்றோ நியமிப்பது? உம்மை நியமித்தாரோ’ என்று
வெறுத்தார் என்று அஸ்மதாசார்யோக்தம்.

இத்தால் விதேயனான ஶிஷ்யனையே ஆசார்யன் நியமிக்க வேணும் என்னுமதும்,
ஸதாசார்ய நியமநம் ஸச் சிஷ்யனுக்கு ப்ராப்யாந்தர் கதமாயிருக்கும் என்னுமதும் சொல்லிற்று.

நஞ்சீயர் திருவடிகளிலே ஆஶ்ரயித்து தேஶாந்தரத்திலே இருப்பானொரு ஶ்ரீவைஷ்ணவன் வந்து ஜீயரை ஸேவித்து
மீள எழுந்தருளிகிறபோது, ஜீயருக்கு அந்தரங்கராய்த் திருவடிகளிலே நித்ய ஸேவை பண்ணிக் கொண்டிருப்பாரொரு
ஶ்ரீவைஷ்ணவர் ஊருக்கு எழுந்தருளுகிற ஶ்ரீவைஷ்ணவரைப் பார்த்து
‘ஜயோ! உமக்கு ஜீயர் திருவடிகளை விட்டுப் பிரிந்து எழுந்தருள வேண்டுகிறதே! என்று க்லேஶிக்க,
அவரும் ‘அடியேன் எங்கே இருந்தாலும் ஜீயர் அபிமாநமுண்டே’ என்று தேறி வார்த்தை சொல்ல,
இந்த ப்ரஸங்கங்களை ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கையாயிருப்பாளொரு அம்மையார் கேட்டு,
ஆசார்யனைப் பிரிந்து அதிலே நெஞ்சு இழியாமல் போகிறவரைப் பார்த்து
‘என் சொன்னாய் பிள்ளாய்! – ஏனத்துருவாய் உலகிடந்த ஊழியான் பாதம் – நாடோறும் –
மருவாதார்க்கு உண்டாமோ வான்’ என்று அருளிச் செய்தார் என்று அஸ்மதாரசார்யோக்தம்.

இத்தால் ஸதாசார்யன் கண் வட்டத்தை விட்டால் இவனுக்கு த்யாஜ்யோபாதேயங்கள் தெரியாது.
ஆகையால் அஜ்ஞாநமே மேலிட்டு “நண்ணாரவர்கள் திருநாடு” என்கிறபடியே திருநாடு ஸித்திக்கை அரிது என்று கருத்து.

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-
(மருவாதார் -முதல் பிரபத்தி உபாயமாக -மேல் ருசி தூண்ட கைங்கர்யம் செய்ய வேண்டுமே)

கொங்கு நாடு க்ஷாமமானவாறே ஒரு ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானும் கோயிலிலே வந்து இருந்தான்.
அக் காலத்திலே எம்பெருமானார் ஏழு க்ருஹம் மாதுகரம் பண்ணி அமுது செய்தருளுவர்.
திரு வீதியிலே எழுந்தருளும் போது அகளங்கநாட்டாழ்வானடைய வட்டத்தில் முதலிகளெல்லாரும் தண்டனிடுவர்கள்.
அந்த ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானுமாக ஒரு மச்சிலே இருக்கையாயிருக்கும்.
ஒரு நாள் உடையவர் மாதுகரத்துக்கு அந்த க்ருஹத்துக்கு எழுந்தருளினவாறே அந்தப் பெண் மச்சு நின்றும் இழிந்து
இடை கழியிலே நின்று ‘ராஜாக்கள் உம்மை தண்டனிடாநின்றார்கள்; நீர் மாதுகரம் பண்ணா நின்றீர்;
இதுக்குக் காரணமேது?’ என்று உடையவரைக் கேட்க,

‘நாம் அவர்களுக்கு நல்வார்த்தை சொன்னோம்; ஆகையாலே தண்டனிடுகிறார்கள்’ என்று அருளிச்செய்ய, ‘

அந் நல்வார்த்தை எனக்கு அருளிச் செய்ய வேணும்’ என்று தண்டனிட்டாள்.

உடையவரும் அவளுக்கு ஹிதத்தை ப்ரஸாதித்தருளினார். பின்பு அவர்களுடைய தேஶம் ஸுபிக்ஷமாய்
அவர்கள் அங்கேறப்போக விருக்கிறவளவிலே உடையவரை ஸேவித்துப் போகப் பெற்றிலேன் என்று அந்தப்பெண் வ்யாகுலப்பட்டுக் கொண்டு இருக்கிறவளவிலே, மாதுகரத்துக்கு அங்கே எழுந்தருளினார்.
அந்தப் பெண் ‘மீளவும் எங்கள் நாடேறப் போகா நின்றோம்; முன்பு அருளிச் செய்த நல் வார்த்தை
அடியேன் நெஞ்சிலே படும்படி அருளிச் செய்து எழுந்தருள வேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க,

(மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு மன்னினான்-ஆழ்வாருக்கு)

உடையவரும் அவ் வாத்மாவை மிகவும் க்ருபை பண்ணி யருளி, ஹிதத்தை நெஞ்சிலே படும்படி ப்ரஸாதித்தருளி
எழுந்தருளப் புக்கவாறே, ‘இன்னமும் அடியேனுக்கு ஆத்ம ரக்ஷகமாக ஏதேனுமொன்று ப்ராஸாதித்தருள வேணும்’ என்று
அவள் விண்ணப்பம் செய்ய,

உடையவர் அப்போது சாற்றி எழுந்தருளியிருக்கிற திருவடி நிலைகளைப் பெரிய பிராட்டியார் என்கிற அந்தப் பெண்ணுக்கு
ப்ராஸாதித்து எழுந்தருளினார். அவளும் அன்று தொடங்கி உடையவர் திருவடி நிலைகளைத் திருவாராதநம்
பண்ணிக் கொண்டு போந்நாள் என்னும், இவ் வ்ருத்தாந்தம் வார்த்தா மாலையிலே ப்ரஸித்தம்.

(பெருமாள் பரத்தாழ்வானுக்கு அருளினார் -அதே போல் ராமானுஜரும் இவ்வாறு செய்து அருளினார்)

இத்தால் சொல்லிற்று ஏதென்னில், எம்பெருமானையுங்கூட உபேக்ஷிக்கிற ஸம்ஸாரத்திலே ஆசார்ய ருசி பரிக்ருஹீதமானது(த்வய மந்த்ர ரத்னம் என்றவாறு)ஏதேனுமொன்று தஞ்சம் என்று விஶ்வஸித்திருக்கை அரிது. ஆசார்ய விஶ்வாஸமுண்டானவர்கள்
கொங்கில் பெரிய பிராட்டியாரைப் போலே இருக்க வேணும் என்று சொல்லிற்று.

இவ்விடத்திலே பொன்னாச்சியார், தும்பியூர்க் கொண்டி, ஏகலவ்யன், விக்ரமாதித்யன் வ்ருத்தாந்தங்களை ஸ்மரிப்பது.

———–

அந்திமோபாய நிஷ்டை- 12 – ஆசார்யன் பகவத் அவதாரம்

ஸாக்ஷாத்காரமென்றும்,
விபூதி ஸாக்ஷாத்காரமென்றும்,
உபய விபூதி ஸாக்ஷாத்காரமென்றும்,
ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமென்றும் நாலு படியாயிருக்கும்.(அஷி கண்)

ஸாக்ஷாத்காரமாவது – ஒரு ஜ்ஞாந விஶேஷம்.

விபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் விரோதியை அறிகை.

(வீடுமின் அஹங்காரம் மமகாராம் விட வேண்டும்
சொன்னால் விரோதம் அசேவை சேவை கூடாது
ஒரு நாயகம் -ஐஸ்வர்ய கைவல்யம் த்யாஜ்யம்
கொண்ட பெண்டிர் ஆபாச பந்துக்கள் கூடாதே)

உபய விபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் ப்ராப்யத்தை அறிகை.

ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் உபேயமான வஸ்து தானே உபாயம் என்றறிகை,

இவ் விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமுமே புருஷார்த்தமென்றறிகை,
அப் புருஷார்த்தமே உபாயம் என்றறிகை.

கீழ்ச் சொன்ன மூன்றுக்கும் புருஷார்த்தம் உண்டாய்த்ததே யாகிலும் ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரம் இல்லாத போது
அவை உண்டானாலும் ப்ரயோஜநமில்லை.
அவை தான் ப்ரத்யக்ஷத்தாலல்லது ஸித்திக்க மாட்டாது.
அவை யாவன – பரத்வம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம், ஆசார்யத்வம் என்று ஆறுபடியாயிருக்கும்.

பரத்வம் நித்ய முக்தர்க்கும், வ்யூஹம் ஸநகாதிகளுக்கும், விபவம் தத்கால வர்த்திகளுக்கும்,
அந்தர்யாமித்வம் உபாஸகர்க்கும், அர்ச்சாவதாரம் எல்லார்க்கும், ஆசார்யத்வம் கதி ஶூந்யர்க்கும்.

இவனுக்கு முதல் சொன்ன நாலும் தேஶ-கால-கரண-விப்ரக்ருஷ்டதையாலே கிட்ட வொண்ணாது.
இனி இவை யிரண்டிலும் அர்ச்சாவதாரம் வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்யாமையாலே
இதுவும் அல்லாத அவதாரங்களோபாதி.

ஆகையாலே பத்த சேதநன் முக்தனாம் போது, ஸகல ஶாஸ்த்ரங்களாலும் அறுதி யிட்டுப் பார்த்த விடத்தில்,
ஆசார்யாவதாரத்தாலல்லது ஜ்ஞாந ப்ரதாநம் பண்ண வொண்ணாமையாலே
ஜ்ஞாந ப்ரதாநம் பண்ணின வஸ்து தானே உபேயமாக வேணும்;
உபேயமான வஸ்து தானே உபாயமாக வேணும்; இவ் விஷயத்தில் கைங்கர்யமே ப்ராப்யமாக வேணும்.

மயர்வற மதி நலமருளப் பெற்று இவ் வர்த்தத்தையும் அறுதியிட்ட பரமாசார்யரும்,(ஆளவந்தார் -மாதா பிதா –ஸர்வம் யதேவ குல பதேர் வகுளாபரணம்)மயர்வற மதி நல மருளினவன் தானே இவனுக்கு அவை யெல்லாம் என்கையாலே இனி இவனுக்கு இதுவே உபாயம்;
அல்லாதது உபாயாந்தரங்களோபாதி.
இப் பரத்யக்ஷ ஸாக்ஷாத்காரத்தாலல்லது மோக்ஷப்ரதத்வம் இல்லாமையாலே – என்று திருமுடிக் குறை ரஹஸ்யத்திலே
வேதாந்திகளான நஞ்சீயர் நம்பிள்ளைக்கு அருளிச் செய்தார்.

“ஆசார்யாபிமாநமாவது இவை யொன்றுக்கும் ஶக்தனன்றிக்கே இருப்பானொருவனைக் குறித்து
இவனுடைய இழவையும், இவனைப் பெற்றால் ஈஶ்வரனுக்கு உண்டான ப்ரீதியையும் அநுஸந்தித்து,
ஸ்தநந்தய ப்ரஜைக்கு வ்யாதி உண்டானால் தன் குறையாக நினைத்துத் தான் ஔஷத ஸேவை பண்ணி ரக்ஷிக்கும்
மாதாவைப் போலே இவனுக்குத் தான் உபாயாநுஷ்டாநம் பண்ணி ரக்ஷிக்க வல்ல
பரம தயாளுவான மஹா பாகவதாபிமாநத்திலே ஒதுங்கி,
“வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்று அர்த்த பஞ்சகத்திலே பிள்ளைலோகாசார்யரும்
இவ் வர்த்தத்தை ஸுஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்.

லோகாசார்யரும் தாம் பேரருளாளப் பெருமாளுடைய திருவவதாரமென்று மணற்பாக்கத்து நம்பியாருக்கு ப்ரத்யக்ஷம்.
இவ் வ்ருத்தாந்தம் ஶ்ரீவசநபூஷண வ்யாக்யாநத்திலே நம்முடைய ஜீயர் தெளிய அருளிச் செய்தருளினார்.
இன்னமும் ஸச்சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணமான நல்வார்த்தைகள் நம்முடைய ஜீயர் அருளிச் செய்தவை பலவுமுண்டு;
அவையெல்லாம் க்ரந்த விஸ்தர பயத்தாலே சொல்லுகிறிலோம்.

ஆக, இப்படி ஸகல வேதங்களும், ததநுஸாரிகளான ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களும்,
அவற்றினுடைய தாத்பர்யங்களை யதா தர்ஶநம் பண்ணியிருக்கும் முனிவரான
பராஶர – பாராஶர்ய – போதாயந – ஸுகாதிகளும், உபய விபூதியையும் கரதலாமலகமாக ஸாக்ஷாத்கரித்து
ஸகல வேதாந்த ஸாரார்த்தங்களையும் த்ராவிட ப்ரஹ்ம வித்யையாலே ஸர்வாதிகாரமாம்படி பண்ணியருளின
ப்ரபந்ந ஜன கூடஸ்தரான பராங்குஶ – பரகால – பட்டநாதிகளான நம் ஆழ்வார்களும்,
ஸர்வஜ்ஞராய், அவர்களுடைய அடிப்பாடு தப்பாமல் நடக்கும் ப்ராமாணிகரான நாத – யாமுன – யதிவராதிகள் (ஆதி-வர வர முனி அளவும்)தொடக்கமான
இவ் வருகுண்டான நம் ஆசார்யர்களெல்லாரும் ஏக கண்டமாக ஶ்ரிய:பதி நாராயணன் தானே
ஆசார்யனாய் வந்தவதரித்தான் என்று அறுதி யிட்டுப் பல விடங்களிலும் கோஷிக்கையாலே,

அநாதி காலமே தொடங்கி “ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஶ்வரனையும் மறந்து, ஈஶ்வர கைங்கர்யத்தையும் இழந்து,
இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட”
பரத்வாதி பஞ்ச ப்ரகாரனான ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே அவர்களைத் திரு மந்த்ர முகேந
“கடுங் கதிரோன் மண்டலத்தூடேற்றி வைத்து” என்கிறபடியே அர்ச்சிராதி மார்கத்தாலே கொண்டு போய்,
“ததஸ்து விரஜா தீர ப்ரதேஶம்” என்கிற அக்கரை யேற்றி, அமாநவ கர ஸ்பர்ஶத்தாலே அப்ராக்ருத ஶரீரத்தையும் கொடுத்து
நித்ய விபூதியிலே நித்ய கைங்கர்யம் கொண்டருளக் கடவோம் என்று திருவுள்ளம் பற்றி,
ஶ்ரீபதரிகாஶ்ரமத்திலே நரநாராயண ரூபேண வந்து முன்பு அவதரித்தாப் போலே
இப்போதும் நம்மை ஸம்ஸார ஸாகரத்திலே நின்றும் எடுக்கைக்காக
‘ஸாக்ஷாந் நாராயணோ தேவ:க்ருத்வா மர்த்யமயீம் தநும்|
மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா” என்கிறபடியே
ப்ரதம பர்வமான ஸர்வேஶ்வரன் தானே சரம பர்வமான ஆசார்யனாய் வந்து அவதரித்தான் என்று கொள்ள வேணும்.

இப்படி அவதார விசேஷமாயிருந்துள்ள ஸதாசார்யனை ஸச் சிஷ்யன் தேவதா ப்ரதிபத்தி பண்ண வேணுமென்று
கீழே பல ப்ரமாணங்களும் சொல்லிற்று; மநுஷ்ய புத்தி பண்ணலாகாதென்று மேலே ப்ரமாணங்களும் சொல்லுகிறது.
ஆகையாலே மநுஷ்ய புத்தி பண்ணினவன் நரகத்திலே விழுமென்றும்,
தேவதா ப்ரதிபத்தி பண்ணினவன் ஈடேறுமென்றும் கீழ் மேல் சொல்லுகிற உபய ப்ரமாணங்களாலும் பலித்தது.

“எக் காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு” என்கிறபடியே
குரு விஷயத்தில் நரக ஹேதுவான மநுஷ்ய புத்தியை ஸவாஸநமாக விட்டு,
“பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்கிறபடியே பகவதவதாரமென்று கொள்ள வேணுமென்னும்
இவ் வர்த்தம் பரமாஸ்திகராய், ப்ரமாண பரதந்த்ரராய் இருக்கும் சில பாக்யாதிகர்க்கு
நெஞ்சிலே ஊற்று மாறாமல் எப்போதும் நிலை நிற்கும்.

ஆக இப்படி “யத் ஸார பூதம் ததுபாஸிதவ்யம்” என்றும்,
“பஜேத் ஸார தமம் ஶாஸ்த்ரம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஸகல ஶாஸ்த்ர தாத்பர்யார்த்தமாய், ஶ்ரீமதுரகவி, நாதமுனிகள் தொடக்கமான நம் பூர்வாசார்யகளாலே
உபதேஶ பரம்பரா ஸித்தமாய், ஆத்மாவுக்கு நேரே வகுத்த விஷயமாய், ஒருக்காலும் ஸ்வாதந்த்ர்யாதிகள் கலசாத க்ருபா மூர்த்தியாய்,
அதி ஸுலபனாய், மோக்ஷைகஹேதுவாயிருந்துள்ள ஸதாசார்யனே
“உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்”,
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
உபாயோபேயமாகப் பற்ற வேண்டியிருக்க, அத்தைச் செய்யாதே

‘சக்ஷுர்கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ரகம்யம் துயஸ்ஸ்மரேத்”,
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ” என்றும்,
“ஸுலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே”, என்றும்,
‘விதிஶிவஸநகாத்யைர் த்யாதுமத்யந்ததூரம்” என்றும்,
‘பெண்ணுலாஞ்சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான் எண்ணிலாவூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப”
என்றும் சொல்லுகிறபடியே அதி துர்லபனாய், பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய்,

ஶரணாகதனான ஶ்ரீபரதாழ்வானையும்
“ஜலாந்மத்ஸ்யாவிவோத்ருதௌ” என்னும் ஸ்வபாவத்தையுடையளான
பிராட்டி போல்வாரையும் மறுத்து காட்டிலும் தள்ளிவிடும் நிர்க்ருணனாய்,
அர்ஜுநாதிகளுக்கு முதலடியிலே ப்ரபத்தியை உபதேஶித்து அவர்களை அத்யாபி லீலை கொண்டாடும் ஸ்வபாவத்தை உடையவனாய்,
“வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க” வல்லனாய்,
“க்ஷிபாமி”, “ந க்ஷமாமி” என்னும் நிரங்குஶ ஸ்வதந்த்ரனான உபாயோபேயமாகப் பற்றி,

(நச்சு அராஅணைக் கிடந்த* நாத! பாத போதினில்,*
வைத்த சிந்தை வாங்குவித்து* நீங்குவிக்க நீஇனம்,*
மெய்த்தன் வல்லை ஆதலால்* அறிந்தனன் நின் மாயமே,*
உய்த்து நின் மயக்கினில்* மயக்கல் என்னை மாயனே!)

“உத்தாரயதி ஸம்ஸாராத் ததுபாயப்லவேந து|
குருமூர்த்திஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்கிறபடியே
உத்தாரகனாய், அவதார விஶேஷமாயிருந்துள்ள ஸ்வாசார்யனையே
“ஸர்வம் யதேவ நியமேந” என்கிறபடியே ஶேஷித்வ – ஶரண்யத்வ – ப்ராப்யத்வாதிகளில்
ஸகல புருஷார்த்தமுமாகப் பற்ற வேண்டி யிருக்க,(ஆகாரத் திரயமும் நம் ஆச்சார்யர் இடம் உள்ளதே என்று உணர வேண்டுமே)

அங்ஙனம் அன்றிக்கே,
தத் விஷயத்தில் ஸர்வ ஸாமாந்யமான கேவல-உபாகாரத்வமே கொண்டு
“முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கூட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே
தன்னெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேச வரவாற்றதென்பர் மூர்க்கராவார்” என்கிறபடியே
நம் ஆசார்யர்களுடைய திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்து,
அதுக்குத் தகுதியாயிருந்துள்ள உக்த்யநுஷ்டாநங்களை ஆசரியாமல் தங்கள் மநஸ்ஸுக்குத் தோற்றினதே சொல்லி
‘இதுதானே ஸத் ஸம்ப்ரதாய பரம்பரா ஸித்தமாய் வருகிற அர்த்தம்’ என்றது –
ஸ்வதந்த்ர ப்ரக்ருதிகளாய், ஸ்வாசார்ய விஷயத்தில் ஊற்றமற்றிருக்கும் கர்ப்ப நிர்ப் பாக்யரான
ஶுஷ்க ஹ்ருதயர்க்கு நம் தர்ஶநத்தில் தாத்பர்யார்த்தமும் ததுநுகுணமான அநுஷ்டானமும் தெரியாதாகையாலே
மேலெழுந்தவாரியான இடு சிவப்புப் போலே இவ் வர்த்தம் நெஞ்சில் நிலை யில்லாது.

“ஆசார்யாயா ஹரே தர்த்தாந் ஆத்மாநஞ்ச நிவேதயேத்|
தததீநஶ்ச வர்த்தேத ஸாக்ஷாந் நாரயணே ஹி ஸ:”,
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந் தீப ப்ரதே குரௌ, ஆசார்யஸ் ஸஹரிஸ் ஸாக்ஷாச் சரரூபீ ந ஸம்ஶய:”,
‘குருரேவ பரம் ப்ரஹ்ம”, “குருமூர்த்தி ஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்று
இத்யாதி ப்ரமாணங்களை விஶ்வஸித்து, ஆசார்ய நிஷ்டனாய் உஜ்ஜீவிக்க வேணும்;
அல்லாத போது ஈடேற வழி யில்லை என்று அஸ்மதாசார்யோக்தம்.

“ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை
என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கை யாயிருக்கும்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே
பிள்ளை லோகாசார்யரும் அருளிச் செய்தார்.

இவ் வர்த்தம் ஸத் ஸம்ப்ரதாய பரம்பரா ஸித்தமாகையாலே தந்தாமுடைய ஸதாசார்யனை ஶ்ரிய:பதியான நாராயணனாகவும்,
அவன் திருவடிகளே உபாயோபேயங்களாகவும், அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தமாகவும்,
அவனுடைய முகோல்லாஸமே பலமாகவும், ப்ராப்ய பூமியும் அவன் எழுந்தருளி யிருக்கிற இடமாகவும்,
அவனுடைய விக்ரஹாநுபவாதிகள் *உண்ணுஞ் சோற்றுப் படியே தாரகாதிகளாகவும்,
“உத்தாரயதி ஸம்ஸாராத்” என்றும்,
“எதிராசா என்னை யினிக் கடுக இப் பவத்தினின்றும் எடுத்தருளே” என்றும்,
“ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்றும்,
“என் பெருவினையைக் கிட்டிக் கிழங்கொடு தன்னருளென்னும் ஒள் வாளுருவி வெட்டிக் களைந்த இராமாநுசன்” என்றும்,
“கண்டுகொண்டென்னைக் காரிமாறப் பிரான் பண்டை வல் வினை பாற்றி யருளினான்” என்றும் சொல்லுகிறபடியே

அவனே இஷ்ட ப்ராப்தி – அநிஷ்ட நிவாரணம் பண்ணித் தரும் உத்தாரகனாகவும் ப்ரதிபத்தி பண்ணி
விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு
“குருணா யோபிமந்யேத குரும் வா யோபி மந்யதே தாவுபௌ பரமாம் ஸித்திம் நியமாதுப கச்சத:” என்று
ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத-பரகத-ஸ்வீகாரங்களிரண்டிலும் பேறு தப்பாதென்று சொல்லிற்றே யாகிலும்
ஆசார்யனையும் தான் பற்றும் பற்றும் அஹங்கார கர்ப்பமாகையாலே ‘காலன் கொண்டு மோதிரமிடுமோபாதி’ என்கிறபடியே
ஸ்வகத ஸ்வீகாரம் அவத்யமாகையாலே ஸ்வரூபத்துக்குச் சேராதென்று அத்தை விட்டு
“ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்கிறபடியே
அவனுடைய நிர்ஹேதுக க்ருபையான பரகத ஸ்வீகாரமே உத்தாரகம் என்று அறுதி யிட்டு

“ஸம்ஸார ஆவர்த்த வேக ப்ரஶமந ஶுப த்ருக் தேஶிகப்ரேக்‌ஷி – தோஹம்” என்றும்,
“நிர் பயோ நிர் பரோஸ்மி” என்றும்,
“ஆசார்யஸ்ய ப்ரஸாதேந மம ஸர்வம் அபீப்ஸிதம்| ப்ராப்நுயாமீதி விஶ்வாஸோ யஸ்யாஸ்தி ஸ ஸுகீ பவேத்” என்றும்,
‘தனத்தாலுமேதுங்குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று” என்றும், சொல்லுகிறபடியே
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் ஒருகரை சொல்லித்து.

“இருந்தேனிரு வினைப் பாசங் கழற்றி” என்கிறபடியே புண்ய பாபங்களிலும் ஒட்டற்று,
“இவ்வாறு கேட்டிருப்பார்க்காளென்று கண்டிருப்பர் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான்”,
“தத்தமிறையின் வடிவென்று தாளினையை வைத்தவரை”,
“நீதியால் வந்திருப்பார்க்குண்டியிழியாவான்” என்றும்,
“இருள்தரு மாஞாலத்தே இன்புற்று வாழும் தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து” என்றும் சொல்லுகிறபடியே
நித்ய விபூதியோடு லீலா விபூதியோடு வாசியற கால தத்தவமுள்ளதனையும் ஆநந்த மக்நராய்க் கொண்டு வாழத் தட்டில்லை.

(அவ் வானவருக்கு மவ்வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் –இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –1-)

(தத்தம் இறையின் வடிவென்று தாளிணையை
வைத்த வவரை வணங்கி யிராப் –பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம் நீதியால்
வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் –9-)

ஆகையாலிறே இஹ லோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை என்று
மாணிக்க மாலையிலே நிஶ்சயமாக ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது.

ஆனால் இப்படி இருக்கும் அதிகாரிகளுக்கு லீலாவிபூதியே நித்யவிபூதியாமோ? என்னில்,
நம்பி திருவழுதி வளநாடு தாஸர் ஓருருவைக் கண்ணி நுண் சிறுத்தாம்பை அநுஸந்தித்து
“மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக் கட்டினவாறே
ஶ்ரீபாதத்திலே ஸேவித்திருந்த ஶ்ரீவைஷ்ணவகள் “லீலா விபூதியிலே ஒருவன் இத்தை விஶ்வஸித்து அநுஸந்திக்க,
அவ்விடம் நித்ய விபூதியாம்படி எங்ஙனே?’ என்று கேட்க,

திருவழுதி வளநாடு தாஸர் ‘அதானபடி சொல்லக் கேளீர், கூரத்தாழ்வான் திருமகனார் அவதரித்த பின்பு இடைச்சுவர் தள்ளி
இரண்டு விபூதியும் ஒன்றாய்த்துக் காணும்’ என்று பணித்தார் என்னும்
இவ் வார்த்தை கண்ணி நுண் சிறுத் தாம்பு வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.

———

அந்திமோபாய நிஷ்டை – 13 – ஆசார்ய அபசார விளக்கம்

அர்த்த பஞ்சக தத்த்வஜ்ஞா: பஞ்ச ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதா: |
ஆகார த்ரய ஸம்பந்நா: மஹா பாகவதாஸ் ஸ்ம்ருதா: ||
மஹா பாகவதா யத்ரா வஸந்தி விமலாஶ் ஶுபா: தத் தேஶம் மங்களம் ப்ரோக்தம் தத் தீர்த்தம் தத் து பாவநம் ||
யதா விஷ்ணு பதம் ஶுபம்” என்னுமிவ் வர்த்தத்தை பராஶர ப்ரஹ்மர்ஷியும் அநுக்ரஹித்தார்.

“பாட்டுக் கேட்குமிடமும், கூப்பீடு கேட்குமிடமும், குதித்த விடமும், வளைத்த விடமும், ஊட்டுமிடமும் எல்லாம்
வகுத்த விடமே என்றிருக்கக் கடவன்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளை லோகாசார்யரும்
இவ் வர்த்தத்தை ஸுவ்யக்தமாக அருளிச்செய்தார்.

(நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –)

ஆகையால் இவர்கள் தங்களுடைய ஆசார்யனை உபய விபூதிநாதனென்றும், உபய விபூத்யைஶ்வர்யமும் இவனே
என்று ப்ரதிபத்தி பண்ணி இருக்க வேணும்,
“இராமானுசன் என் தன் மா நிதியே”,
“ இராமானுசன் என்தன் சேம வைப்பே” ,
“எனக்குற்ற செல்வமிராமாநுசன்” என்றிறே தந்நிஷ்டர் இருக்கும்படி.

“ஸாக்ஷாந் நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்ய மயீம் தநும்” (ஸாக்ஷாந் நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்ய மயீம் தநும் மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா.)என்று இத்யாதிகளிலே
சொல்லுகிறபடியே தங்களை ஸம்ஸாரத்தில் நின்றும் எடுக்கைக்காக ஸர்வேஶ்வரன் மநுஷ்ய ரூபம் கொண்டு
வந்திருக்கிறானென்று அறியாதே அவன் அமுது செய்தருளுகை, கண்வளர்ந்தருளுகை முதலான
மேலெழுந்த ஆகாரத்தைப் பார்த்து ஸ்வஜாதீய புத்தியாலே
“மாநிடவனென்றும் குருவை”,
“ஜ்ஞாநதீபப்ரதே குரௌ | மர்த்யபுத்திஶ்ருதம் தஸ்ய”,
“யோகுரௌ மாநுஷம்பாவம்”, “குருஷுநரமதி:” என்றும் சொல்லுகிறபடியே
ஆசார்யனை மநுஷ்யன் என்று ஒருக் காலாகிலும் ப்ரதிபத்தி பண்ணியிருக்கும் நீசர்க்கு வரும் அநர்த்தத்தைச் சொல்லுகிறது மேல்.

“விஷ்ணோரர்ச்சாவதாரேஷு லோஹ பாவம் கரோதிய: |
யோகுரௌமாநுஷம் பாவம் உபௌநரகபாதிநௌ”,
“நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ: ப்ரச்யுதஸ்யதுர்புத்தே: |
ஜலாதபேதம் கமலம் ஶோஷயதி ரவிர் ந போஷயதி”,
“ஏகாக்ஷர ப்ரதாதாரம் ஆசார்யம் யோவ மந்யதே|
ஶ்வாந யோநி ஶதம் ப்ராப்ய சண்டாலேஷ்வபி ஜாயதே|”,
“குரு த்யாகீ பவேந் ம்ருத்யு: மந்த்ர த்யாகீ தரித்ரதா|
குரு மந்த்ர பரி த்யாகீ ரௌரவம் நரகம் வ்ரஜேத்”,

“மாடும் மனையும்” என்று தொடங்கி “பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகை கண்டீர் விதி”,
“ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குருரஷ்டாக்ஷர ப்ரத: |
இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்தவ்யாஸ்தே மநீஷிபி:”,
“மாநிடவனென்றும் குருவை” என்று தொடங்கி, “எக் காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு”,
“ஏகக்ராமநிவாஸஸ் ஸந் யஶ்ஶிஷ்யோ நார்ச்சயேத் குரும்|
தத் ப்ரஸாதம் விநா குர்யாத் ஸ வை விட்ஸூகரோ பவேத்”,

“எட்டவிருந்த குருவை இறை யன்றென்று விட்டு” என்று தொடங்கி, “அம்புதத்தைப் பார்த்திருப்பானற்று”,
“பற்று குருவைப் பரனன்றென இகழ்ந்து” என்று தொடங்கி, “அப் பொருள் தேடித் திரிவானற்று” ,
“என்றுமனைத்துயிருக்குமீரஞ்செய் நாரணனும்” என்று தொடங்கி, “பொங்கு சுடர் வெயிலின் அனலுமிழ்ந்து தானுலர்த்தி யற்று”,
“தத்தமிறையின் வடிவென்று தாளிணையை வைத்தவவரை வணங்கி யிராப்பித்தராய்,
நிந்திப்பார்க்குண்டேறா நீணிரயம் நீதியால் வந்திப்பார்க்குண்டிழியாவான்”,
“தன் குருவின் தாளிணைகள் தன்னிலன்பொன்றில்லாதார்” என்று தொடங்கி,
“ஆதலால் நண்ணாரவர்கள் திரு நாடு”,
“ப்ரதி ஹந்தா குரோர் அபஸ்மாரி வாக்யேந வாக்யஸ்ய ப்ரதிகாதம் ஆசார்யஸ்ய வர்ஜயேத்”,
“அர்ச்சா விஷ்ணௌ ஶிலாதீர் குருஷூ நரமதி:” என்று தொடங்கி, “ஸர்வேஶ்வரேஶே ததிதர ஸமதீர் யஸ்ய வா நாரகீ ஸ:”

குரு பரிபவமாவது – கேட்ட அர்த்தத்தின்படியே அநுஷ்டியாதொழிகையும்,
அநதிகாரிகளுக்கு உபதேஶிக்கையும்,
“தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமா போலே,
ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணும் ஈஶ்வரன் தானே ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப் பண்ணும்”,
“குரோர் அபஹ்நுதாத் த்யாகாத் ஸாம்யாத் அஸ்மரணாதபி|
லோப மோஹாதிபிஶ் சாந்யைரபசாரைர் விநஶ்யதி”,
“குரோரந்ருதாபிஶம்ஸநம் பாதக ஸமாநம் கலு, குர்வர்த்தே ஸப்த புருஷாந் இதஶ்ச பரதஶ்ச ஹந்தி|
மநஸாபி குரோர்நாந்ருதம் வதேத்| அல்பேஷ்வப் யர்த்தேஷு”,
“பொய் யுரைத்தல், மாறுரைத்தல், பொருளல்லாதன உரைத்தல், பொருளருளச் சிதகுரைத்தல், போற்றுதற்கு நெகிழுதல்,
நை யுரைத்தல், வலி யுரைத்தல், விதி மறுத்தல், கிடத்தல், மேலிருத்தல், கால் நீட்டல், விலங்கு முகமவைத்தல்,
கையெடுத்துத் தொழ நாணுதல், களை ஒதுக்காதிருத்தல், கருத்தறியாப் பொருளுரைத்தல், காயிலே வாய்க்கிடுதல்,
மெய் விதிர்த்தல், நிழல் மிதித்தல், தன்னிழல் மேலிடுதல் – வியன் குருவின் சன்னதியில் விடுங்கருமமிவையே”.

“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந தீப்ப்ரதே குரௌ|
மர்த்ய புத்தி ஶ்ருதம் தஸ்ய ஸர்வம் குஞ்ஜர ஶௌசவத்”,
“ஸுலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர் லபம் உபாஸதே|
லப்தம் த்யக்த்வா தநம் மூடோ குப்தமந்வேஷதிக்‌ ஷிதௌ”,
“சக்ஷுர் கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ர கம்யம் து யஸ் ஸ்மரேத்|
ஹஸ்தஸ்த முதகம் த்யக்த்வா கநஸ்தமபி வாஞ்சதி”,
“குரும்த்வங்க்ருத்ய ஹுங்க்ருத்ய விப்ரம் நிர்ஜித்ய வாதத: |
அரண்யே நிர் ஜலே தேஶே பவந்தி ப்ரஹ்ம ராக்ஷஸா:”- இது ஆசார்யாபசாரம்.

————

அந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம்

இனி தத் பக்த அபசாரமாவது – இவை ஒன்றுக்கொன்று க்ரூரங்களுமாய், உபாய விரோதிகளுமாய், உபேய விரோதிகளுமாயிருக்கும்,
கூரத்தாழ்வானுடைய ஶிஷ்யன் வீர ஸுந்தர ப்ரஹ்ம ராயன் என்பானொருவன் ஆழ்வான் குமாரரான பட்டருடனே விரோதித்து
அவரைக் கோயிலிலே குடி யிருக்க வொண்ணாதபடி கடலைக் கலக்கினாப் போலே
பட்டர் திருவுள்ளத்தைக் கலக்கி மிகவும் உபத்ரவிக்கையாலே பட்டரும் கோயில் நின்றும் புறப்பட்டுத்
திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருந்த ப்ரகாரம்
“பூகி கண்டத் வயஸ ஸரஸ ஸ்நிக்த நீரோப கண்டாம் ஆவிர்மோத ஸ்திமித ஶகுநாநூதித ப்ரஹ்ம கோஷாம் |
மார்க்கே மார்க்கே பதி கநிவஹைருஞ்ச்யமாநாபவர்க்காம் பஶ்யேயம் தாம் புநரபி புரீம் ஶ்ரீமதீம் ரங்கதாம்ந:” என்று
பெருமாளையும் கோயிலையும் விட்டுப் பிரிந்து மிகவும் க்லேஶப் பட்டுக் கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே,

(பூகீ கண்ட த்வயஸ ஸரஸ ஸ்நிகத நீ ர –
பாக்கு மரங்களின் கழுத்து அளவாக பெருகுகின்றதும் –
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் இ றே

உப கண்டாம் ஆவீர்மோத ஸ்திமித சகுநாநூதித ப்ரஹ்ம கோஷாம்-
தேனோடு கூடினதும்
சிநேக யுக்தமுமான
தீர்த்தத்தை சமீபத்திலே யுடையதாய்
மகிழ்ச்சி யுண்டாக்கி
ச்திமிதமாய் இருக்கின்ற பறைவைகளினால்
அநு வாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை யுடையதாய் –

மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாந அபவர்க்காம் பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்கதாம்ந
வழி நடப்பவர்களின் கூட்டங்களினால்
வழிகள் தோறும் திரட்டி எடுத்துக் கொள்ளப் படுகிற
மோஷத்தை யுடையதான –
முக்தி கரஸ்தம் -என்றபடி
கோயில் வாசமே மோஷம் என்பார்களே-)


ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டரை ஸேவித்து
“அடியேனுக்குத் திரு விருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு ப்ராஸாதித்தருள வேணும்” என்று மிகவும் அநுவர்த்திக்க,

பட்டரும் தம்முடைய ஶிஷ்யரான நஞ்சீயரைப் பார்த்து ‘ஜீயரே, எனக்குக் கோயிலையும் , பெருமாளையும் பிரிந்த
விஶ்லேஷாதிஶயத்தாலே செவிகள் சீப்பாயாநின்றது; ஆகையாலே எனக்கு வாய் திறந்தொரு வார்த்தை சொல்லப் போகிறதில்லை.
நீர் திருவிருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு இந்த ஶ்ரீவைஷ்ணவருக்குச் சொல்லும்’ என்று அவரை
ஜீயர் ஶ்ரீபாதத்திலே காட்டிக் கொடுத்து இங்ஙனே நடந்து செல்லுகிற நாளிலே
பட்டரளவிலே விரோதித்த வீர ஸுந்தர ப்ரஹ்மராயனுக்கு ஶரீர விஶ்லேஷமாக,
அவ்வளவில் கோயிலிலே பட்டர் திருத் தாயாரான ஆண்டாளை ஸேவித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்த ஶ்ரீவைஷ்ணவர்கள்
பட்டருடைய விரோதி போகையாலே திருப் பரிவட்டங்களை முடிந்து ஆகாஶத்திலே ஏறிட்டு,
நின்றார் நின்ற திக்கிலே ஸந்தோஷித்துக் கூத்தாட, அவ்வளவில் ஆண்டாள் செய்தபடி திரு மாளிகைக்குள்ளே புகுந்து
திருக்காப்பைச் சேர்த்து தாளை யிட்டுக் கொண்டு வயிற்றைப் பிடித்து வாய் விட்டழுதாள்;

அவ்வளவில் ஸந்தோஷித்துக் கூத்தாடுகிற முதலிகள் ஆண்டாளைப் பார்த்து
‘என்! பட்டருடைய விரோதி போகவும், பட்டரும் முதலிகளும் இங்கே எழுந்தருளவும்,
நாமெல்லாரும் கண்டு வாழவும் உமக்கு மிகவும் அஸஹ்யமாயிருந்ததோ?’ என்ன,
அவ்வளவில் ஶ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து ஆண்டாள் அருளிச் செய்தபடி:-
பிள்ளைகாள்! நீங்கள் ஒன்றும் அறிகிறிகோளில்லை; வீர ஸுந்தர ப்ரஹ்மராயன் என்கிறவன் நேரே
ஆழ்வானுடைய ஶிஷ்யனாயிருந்து, ஆசார்ய புத்ரரான பட்டரைப் திண்டாட்டங்கண்டு அவர் திறத்தில்
மஹாபராதத்தை தீரக் கழியப் பண்ணி, ‘அறியாமல் செய்தேனித்தனை, பொறுத்தருள வேணும்’ என்று
பட்டர் திருவடிகளிலே தலை சாய்ப்பதும் செய்யாதே ‘இப்படி செய்தோம்’ என்கிற அநுதாபமற்றுச் செத்துப் போனான்.
ஆகையாலே அவன் ஶரீரம் விட்ட போதே யமபடர் கையிலே அகப்பட்டுக் கலங்கி அடி யுண்டு மலங்க விழிக்கிறான்
என்றத்தை நினைத்து என் வயிறெரிகிறபடி உங்கள் ஒருவருக்கும் தெரிகிறதில்லை – என்று ஆண்டாள் அருளிச் செய்தார்.
ஆகையால் அபராதாதத்தினுடைய கொடுமை இப்படியிருக்குமென்று அஸ்மதாசார்யோக்தம்.

அந்த பட்டர் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சோழ மண்டலத்திலே எழுந்தருளியிருக்கும்
கடக்கத்துப் பிள்ளை உடையவரைப் பழுக்க ஸேவித்து, சோமாசி யாண்டான் தாமும் மேல் நாட்டிலே எழுந்தருளி யிருந்து
ஶ்ரீபாஷ்யம் நிர்வஹிக்கிறார் என்கிற விசேஷம் கேட்டு அங்கே எழுந்தருள,
சோமாசி யாண்டானும் ‘கடக்கத்துப் பிள்ளை எழுந்தருளப் பெற்றதே’ என்று மிகவும் ஆதரித்துத்
தம்முடைய திருமாளிகையிலே கொண்டிருக்க, அப்பிள்ளையும் ஆண்டான் அருளிச் செய்கிற ஶ்ரீபாஷ்யம் முதலான
பகவத் விஷயங்களைக் கேட்டுக் கொண்டு ஆண்டானை ஸேவித்துக் கொண்டு ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்து
ஶ்ரீபாஷ்யம் சாற்றினவாறே மீளவும் சோழ மண்டலத்துக்கு எழுந்தருளுவதாக
அப்பிள்ளை புறப்பட்டவளவிலே ஆண்டானும் எல்லை யறுதி எழுந்தருளி அப்பிள்ளையை வழி விட்டு மீண்டு
எழுந்தருளுகிற போது ‘தேவரீர் இங்கே ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்தவாறே
அடியேனுக்கு மிகவும் ஸந்தோஷமாயிருந்தது; இப்போது விஶ்லேஷத்தாலே பெருக்க வ்யாகுலமாயிரா நின்றது.
அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல் வார்த்தை ப்ரஸாதித்தருள வேணும்’ என்று அப்பிள்ளையை மிகவும் அநுவர்த்திக்க,
அப்பிள்ளை அருளிச்செய்தபடி:- ‘சோமாசி யாண்டான்! தேவரீர் ஜ்ஞாந வ்ருத்தருமாய்,
ஶ்ரீபாஷ்யம், திருவாய்மொழி இரண்டுக்கும் நிர்வாஹகருமாய், எல்லாத்தாலும் பெரியவராயிருந்தீரே யாகிலும்
சாற்றி யிருக்கிற திருப் பரிவட்டத் தலையிலே பாகவதாபசார நிமித்தமாக ஒரு துணுக்கு முடிந்து வையும்’ என்று
அருளிச் செய்தாரென்று அஸ்மதாசார்யோக்தம்.

‘ப்ராதுர் பாவைஸ் ஸுர நர ஸமோ தேவ தேவஸ் ததீயா: ஜாத்யா வ்ருத்தைரபி ச குணத: தாத்ருஶோநாத்ரகர்ஹா|
கிந்து ஶ்ரீமத் புவந பவந த்ராணதோந்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்பகல்ப: ப்ரகர்ஷ:”,
“அர்ச்சாவதாரோபாதாநம் வைஷ்ணவோத்பத்தி சிந்தநம்|
மாத்ரு யோநி பரீக்ஷாயாஸ் துல்யமாஹுர் மநீஷிண:”,
“அர்ச்சாயாமேவ மாம் பஶ்யந் மத் பக்தேஷு ச மாம் த்ருஹந்|
விஷ தக்தை ரக்நி தக்தைராயுதைர் ஷந்தி மாமஸௌ”,
“யா ப்ரீதிர் மயி ஸம்வ்ருத்தா மத் பக்தேஷு ஸதாஸ்துதே|
அவமாந க்ரியா தேஷாம் ஸம்ஹரத் யகிலம் ஜகத்”,
மத் பக்தம் ஶ்வ பசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா: |
பத்ம கோடி ஶதேநாபி ந க்ஷமாமி கதாசந” என்றுமுண்டு.

“சண்டாலமபி மத் பக்தம் நாவமந்யேத புத்திமாந்|
அவமாநாத் பதத்யேவ ரௌரவே நரகே நர:”,
“அஶ்வமேத ஸஹஸ்ராணி வாஜபேய ஶதாநி ச|
நிஷ்க்ருதிர் நாஸ்தி நாஸ்த்யேவ வைஷ்ணவம் வேஷிணாம் ந்ருணாம்”,
“ஶூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஶ்வ பசம் ததா|
ஈக்ஷதே ஜாதி ஸாமாந்யாத் ஸ யாதி நரகம் த்ருவம்”,
“அநாசாராந் துராசாராந் அஜ்ஞாத்ரூந் ஹீந ஜந்மந:|
மத் பக்தாந் ஶ்ரோத்ரியோ நிந்தந் ஸத்யஶ் சண்டாலதாம் வ்ரஜேத்”,
“அபிசேத் ஸு துராசாரோ பஜதே மாதநந்யபாக்|
ஸாது ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸ்தோ ஹி ஸ:”,
“ஸர்வைஶ்ச லக்ஷணைர் யுக்தோ நியுதஶ்ச ஶ்வ கர்மஸு|
யஸ்து பாகவதாந் த்வேஷ்டி ஸுதூரம் ப்ரச்யுதோ ஹி ஸ:”

“அமரவோரங்கமாறும்” என்று தொடங்கி,
“நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோரளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும்”,
“ஈஶ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர்”,
“அவமாந க்ரியா”, “பாகவதாபசாரந்தான் அநேக விதம்;
அதிலே யொன்று அவர்கள் பக்கல் ஜந்ம நிரூபணம். இது தான் அர்ச்சாவதாரத்தில் உபாதந ஸ்ம்ருதியிலுங்காட்டில் க்ரூரம்.
அத்தை மாத்ரு யோநி பரீக்ஷையோடொக்கும் என்று ஶாஸ்த்ரம் சொல்லும்”,
“த்ரிஶங்குவைப் போலே கர்ம சண்டாலனாய் மார்விலட்ட யஜ்ஞோபவீதந்தானே வாராய் விடும்”,
“ஜாதி சண்டாலனுக்குக் காலாந்தரத்திலே பாகவதனாயிருக்க யோக்யதை யுண்டு; அதுவுமில்லை இவனுக்கு ஆரூட பதிதனாகையாலே”.

“திருவுடை மன்னர், செழு மா மணிகள், நிலத் தேவர், பெரு மக்கள், தெள்ளியார், பெருந் தவத்தர், உருவுடையார்,
இளையார், வல்லார், ஒத்து வல்லார், தக்கார், மிக்கார், வேத விமலர், சிறு மா மனிசர், எம்பிரான் தன சின்னங்கள்” என்று
நங்குல நாதரான ஆழ்வார்கள் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு இப்படித் திரு நாமம் சாற்றுகையாலே
கேவலம் தன்னோடக்க ஒரு மநுஷ்யன் என்று வைஷ்ணவனை நினைத்திருக்கையே பாகவதாபசாரம்.

“தஸ்ய ப்ரஹ்ம விதாகஸ:”,
“நாஹம் விஶங்கே ஸுர ராஜ வஜ்ராந ந த்ர்யக்ஷ ஶுலாந் ந யமஸ்ய தண்டாத்|
நாக்ந் யர்க்க ஸோமா நாலவித்த ஹஸ்தாத் ஶங்கே ப்ருஶம் பாகவதாபசாராத்”.
ப்ரஹ்ம விதோபமாநாத் “ஆயுஶ் ஶ்ரியம் யஶோ தர்மம் லோகாநாஶிஷ ஏவ ச|
ஹந்தி ஶ்ரேயாம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹததிக்ரம:”,
“நிந்தந்தியே பகவதஶ் சரணாரவிந்த சிந்தாவதூத ஸகலாகிலகல்ம ஷௌகாந்|
தேஷாம் யஶோ தந ஸுகாயுர பத்ய பந்து மித்ராணி சஸ்திரதராண்யபி யாந்தி நாஶம்”,
“அப்யர்ச்சயித்வா கோவிந்தம் ததீயாந் நார்ச்சயந்தி யே|
ந தே விஷ்ணோ: ப்ரஸாதஸ்ய பாஜநம் டாம்பி கா ஜநா:”,
‘இழவுக்கவர்கள்பக்கல் அபசாரமே போரும்”,
“வைஷ்ணவாநாம் பரீவாதம் யோ மஹாந் ஶ்ருணுதே நர:|
ஶங்குபி ஸ்தஸ்ய நாராசை: குர்யாத் கர்ணஸ்ய பூரணம்”,

“இவ் விடத்திலே வைநதேய வ்ருத்தாந்தத்தையும், பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது”.

இப்படி ஆசார்யாபசாரமும், தத் பக்தாபசாரமும் அதி க்ரூரமென்று வேத ஶாஸ்த்ர புராணாதிகளும்,
அவற்றினுடைய அர்த்த தாத்பர்யங்களையும் யதா தர்ஶநம் பண்ணி ஸர்வஜ்ஞராயிருக்கும்
நம் ஆழ்வார்களும், ஆசார்யர்களும் ஒருக்கால் சொன்னாப் போலே ஒன்பதின்கால் சொல்லிக் கை யெடுத்து
ஒரு மிடறாகக் கூப்பிடுகையாலே ஆஸ்திகனாய், உஜ்ஜீவந பரனாய் இருக்குமவன் மறந்து ஒரு காலத்திலும், ஒரு தேஶத்திலும் ,
ஸ்வப்நாவஸ்தையிலும் தனக்கு வகுத்த ஶேஷிகளாய், ஸர்வ ப்ரகாரத்தாலும் ரக்ஷகராயிருந்துள்ள இவ் விஷயங்களை
கிஞ்சித் மாத்ரமும் நெகிழ நினைக்கக் கடவனல்லன். நெகிழ நினைத்தானாகில் நிலம் பிளந்தால் இழையிட வொண்ணாதாப் போலவும்,
கடலுடைந்தால் அடைக்க வொண்ணாதாப் போலவும், மலை விழுந்தால் தாங்க வொண்ணாதாப் போலவும்
இது அப்ரதி க்ரியமாயிருப்பதொரு அநர்த்தம் என்று நம்முடைய ஜீயர் பல காலும் அருளிச் செய்தருளுவர்.

ஆகையாலே ஸதாசார்ய – தத் துல்ய- விஷயங்களை கிஞ்சிந் மாத்ரமும் நெகிழ நினைக்கலாகாதென்கிற
அவஶ்யாநுஷ்டேயங்களை ப்ரதிபாதிக்கிறது மேல்.

———

அந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம்

“யோஸௌ மந்த்ரவரம் ப்ராதாத் ஸம்ஸாரோச்சேத ஸாதநம்|
யதிசேத் குருவர் யஸ்ய தஸ்யோச்சிஷ்டம் ஸுபாவநம்”, என்றும்,
“குரோர்யஸ்ய யதோச்சிஷ்டம் போஜ்யம் தத் புத்ர ஶிஷ்யயோ:” என்றும்.
“குரோருச்சிஷ்டம் புஞ்ஜீத” என்றும் சொல்லுகிறபடியே கீழே பல ப்ரமாணங்களாலும்
ஸர்வேஶ்வரனுடைய அவதாரமாக ப்ரதிபாதிக்கப்பட்ட தந்தாமுடைய ஸதாசார்யனே தைவமென்றும்
விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு ஆசார்யன் அமுது செய்து திருக் கை மாற்றி யருளின திருத் தளிகையில் ப்ரஸாதமும்,(இவர் மோர் முன்னாக உண்டவர் அன்றோ)

“ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணி பத்யோபயுஜ்ய ச|
நித்யம் விதிவதர்க்யாத்யை ராவ்ருதோப் யர்ச்சயேத் குரும்” என்கிறபடியே
அவனுடைய திருவடிகளில் தீர்த்தமும் பரம பாவநமுமாய், பெற்ற தாயினுடைய முலைப் பால் போலே
தாரகமுமாய், போஷகமுமாயிருக்கையாலே ஶரீராவஸாநத்தளவும் போக்யமுமாயிருக்கும்.

அவ்வளவன்றிக்கே “கங்கா ஸேது ஸரஸ்வத்யா: ப்ரயாகாந் நைமிஶாதபி|
பாவநம் விஷ்ணு பக்தாநாம் பாத ப்ரக்ஷாலநோதகம்”,
“யத் தத் ஸமஸ்த பாபாநாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி:|
நிர்ணீதம் பகவத் பக்த பாதோதக நிஷேவணம்”,
“திஸ்ர: கோட்யர்த்த கோடீ ச தீர்த்தாநி புவந த்ரயே|
வைஷ்ணவாங்க்ரி ஜலாத் புண்யாத் கோடி பாகேந நோ ஸம:”,
“ப்ராயஶ் சித்தமிதம் குஹ்யம் மஹா பாதகிநாமபி|
வைஷ்ணவாங்க்ரி ஜலம் ஶுப்ரம் பக்த்யா ஸம் ப்ராப்யதே யதி”,
“நாரதஸ்யாதிதே: பாதௌ ஸர்வாஸாம் மந்த்ரே ஸ்வயம்|
க்ருஷ்ண: ப்ரக்ஷால்ய பாணிப்யாம் பபௌ பாதோதகம் முநே:||,

“தொண்டர் சேவடிச் செழுஞ்சேறென் சென்னிக் கணிவனே”,
“தொண்டரடிப் பொடி யாட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே”,
“தத்பாதாமப் வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸுபாவநம்|
ததுக்தி மாத்ரம் மந்த்ராக்ர்யம் தத் ஸ்ப்ருஷ்ட மகிலம் ஶுசி”,
“கோடி ஜந்மார்ஜிதம் பாபம் ஜ்ஞாநதோ அஜ்ஞாநத: க்ருத: |
ஸத்ய: ப்ரதஹ்யதே ந்ரூணாம் வைஷ்ணவோச்சிஷ்ட போஜநாத்”,
“போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே

ஜ்ஞாநமும், விரக்தியும், ஶாந்தியும் உடையவராயிருக்கும் பரம ஸாத்த்விகராய், ஆசார்ய துல்யராயிருக்கும் மஹா பாகவதர்கள் அமுது செய்தருளின திருத் தளிகையில் ப்ரஸாதமும்,
அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும் வைதமாக ஸ்வீகரிக்கை யன்றிக்கே ஆத்மாவினுடைய ஶேஷத்வத்தின்
எல்லை நிலமாகையாலே ஸத்தா தாரகம் என்று அவஶ்யம் ஸ்வீகரிக்க வேணும்.

அது எங்ஙனே என்னில், “ஶரீரமேவ மாதா பிதரௌ ஜநயத:” என்கிற ஸாமாந்ய விஷயத்தில்,
“பிது: ஜ்யேஷ்டஸ்ய ப்ராதுருச்சிஷ்டம் போக்தவ்யம்” என்று
அவர்களுடைய ஶிஷ்ய புத்ரர்களுக்கு ஸ்வீகார்யமென்று விதித்த ஆபஸ்தம்ப மஹர்ஷி தானே
“ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி; தச் ச்ரேஷ்டம் ஜந்ம” என்று
ப்ரஹ்ம வித்யா ப்ரதனாகையாலே விஶேஷ பிதாவான ஸதாசார்யன் ஶரீரோத்பாதகனைப் பற்றவும்
இப்படி உத்க்ருஷ்டன் என்று ப்ரதிபாதிக்கையாலே ஶிஷ்யனுக்கு ஸதாசார்ய – தத் துல்யர்கள் அமுது செய்தருளின தளிகையில் ப்ரஸாதமும்,
அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும் அவஶ்யம் ஸ்வீகார்யமென்னுமிடம் கிம்புநர் ந்யாய ஸித்தமிறே.

இவ் விடத்தில் ஸதாசார்ய தத் துல்யரென்றது ஆரை என்னில் –
‘ஆசார்யவத் தைவவந் மாத்ருவத் பித்ருவத்’ இத்யாதிகளான ஶாஸ்த்ரங்கள் ஶ்ரீ வைஷ்ணவர்களை ஆசார்ய துல்யரென்று சொல்லுகையாலும்,
“அநுகூலராகிறார் ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள் இட்டு மாறினாப் போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படி யிருக்கும் பரமார்த்தர்” என்றும்,
“அதாவது ஆசார்ய துல்யரென்றும் ஸம்ஸாரிகளிலும், தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்று நினைக்கை” என்றும்,
“அநுகூலர் ஆசார்ய பரதந்த்ரர்” என்றும் ஶ்ரீவசந பூஷணத்திலே பிள்ளை லோகாசார்யரும் அருளிச் செய்த திவ்ய ஸூக்திப்படியே
பரம பாகவதர்களாய்,

“இராமாநுசனைத் தொழும் பெரியோர் பாதமல்லால் என்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையே”,
“இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடமே” என்கிறபடியே
அர்த்த காமங்களில் நசை யற்று ஆசார்ய பரதந்த்ரர்க்கு ஶேஷமாய், தங்களுக்கு ஸதாநுபவ யோக்யராயிருக்கும் பெரியோர்களை.

இன்னமும் இவ் வர்த்தத்தை ஸர்வஜ்ஞராயிருக்கும் ஆசார்யர்கள் ஸம்ஶய விபர்யயமற ஸப்ரமாணமாக
ஸ்வ ஸ்வ ப்ரபந்தங்களிலே தெளிய அருளிச் செய்தார்கள்.

மற்றுள்ளாரும் சொல்லுவார்கள்.
அதெங்ஙனே என்னில்,
“நல்லார் பரவுமிராமாநுசன் திருநாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர்,
அவர்க்கே எல்லாவிடத்திலும் என்றுமெப்போதிலுமெத்தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே”,
“இன்புற்ற சீலத்திராமாநுச, என்றுமெவ்விடத்துமென்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து,
எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி, என்னை யாக்கி அங்காட்படுத்தே” என்று
நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனாரும் அருளிச் செய்தார்.

கூரத்தாழ்வான் குமாரரான ஶ்ரீபராசர பட்டர் பகவத் விஷயம் அருளிச் செய்து கொண்டு தாமும் முதலிகளும் கூடிப்
பெரிய திருவோலக்கமாக எழுந்தருளி யிருக்கச் செய்தே கூரத்தாழ்வான் தேவிகள் ஆண்டாள் திருவோலக்கத்தின் நடுவே எழுந்தருளி
தம்முடைய குமாரரான பட்டரை தண்டனிட்டுத் தீர்த்தம் கொள்ள, ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அத்தைக் கண்டு
‘பெற்ற தாயார் தம்முடைய புத்ரனைத் தண்டனிட்டுத் தீர்த்தங்கொள்ளலாமோ’ என்ன,
அப்போது ஆண்டாள் அருளிச் செய்தபடி – திருவோலக்கத்திலே எழுந்தருளி யிருக்கிற முதலிகளைப் பார்த்து
‘பிள்ளைகாள்! அந்யர்க்குண்டான எம்பெருமானுடைய தீர்த்த ப்ரஸாதங்களை ப்ரஸாதப்பட வேணும்,
தான் ஏறி யருளப் பண்ணிக் கொண்ட எம்பெருமானுடய ப்ரஸாதங்கள் க்ரஹிக்கலாகாதென்று சொல்லுமவர்கள் ஶுஷ்க ஹ்ருதயராய்,
யதாஜ் ஞாநம் பிறவாத ப்ராந்தரன்றோ?’ என்று அருளிச் செய்தார்.என்னும் இப் ப்ரஸங்கம்
திருப்பாவை வ்யாக்யாநத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்தார்.

ஆண்டாள் தாம் அப்படி செய்தது என் கொண்டு? என்ன,
‘ ந பரீக்ஷ்ய வயோ வந்த்யா: நாராயண பராயணா:” என்றும்,
“வண்ணச்செஞ்சிறு கைவிரலனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன்” என்றுமுண்டாகையாலே செய்தாள்.

————-

அந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)

ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகளநுவர்த்திக்க அறிவு கொடுத்துக் குலதெய்வத்தோடொக்க பூஜை கொண்டு
பாவந தீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப் படியும்,
விஶ்வாமித்ர – விஷ்ணுசித்த- துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழுகுலமானவன் நிலையார் பாடலாலே
ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும், கீழ் மகன் தலை மகனுக்கு ஸம ஸகாவாய்,
தம்பிக்கு முற் பிறந்து வேலும் வில்லுங்கொண்டு பின் பிறந்தாரை ஶோதித்து.
தமையனுக்கு இளையோன் ஸத் பாவம் சொல்லும்படி ஏக குலமானமையும்,
தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் ஸகுண ஸஹ போஜநமும்,
ஒரு பிறவியிலே இரு பிறவியானாரிருவர்க்கு தர்ம ஸுநுஸ்வாமிகள் அக்ர பூஜை கொடுத்தமையும்,
ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாஶமாகச் செய்த புத்ர க்ருத்யமும்,
புஷ்ப த்யாக போக மண்டபங்களில் பணிப் பூவும் ஆல வட்டமும் வீணையுங்கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும்,
வைதிகோத்தமரும், மஹா முநியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாகாநுயாகோத்தர வீதிகளில்
காயாந்ந ஸ்தல ஶுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது.
அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யா வ்ருத்தங்களை கர்த்தப ஜந்மம், ஶ்வபசா தமம், ஶில்ப நைபுணம், பஸ்மாஹுதி,
ஶவ விதவாலங்காரமென்று கழிப்பர்கள் – என்று ஆசார்ய ஹ்ருதயத்தில்(85)
பிள்ளை லோகாசார்யர் திருத் தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்தார்.

உத்க்ருஷ்டமாக ப்ரமித்த ஜந்மம் ப்ரம்ஶ ஸம்பாவனையாலே “ஶரீரே ச” என்கிறபடியே பய ஜநகம்.
அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் பாவிக்க வேணும்.
அபக்ருஷ்டமாக ப்ரமித்த உத்க்ருஷ்ட ஜந்மத்துக்கு இரண்டு தோஷமுமில்லை. நைச்யம் ஜந்ம ஸித்தம்.
ஆகையாலே உத்க்ருஷ்ட ஜந்மமே ஶ்ரேஷ்டம். “ஶ்வபசோபி மஹீபால”.
நிக்ருஷ்ட ஜந்மத்தால் வந்த தோஷம் ஶமிப்பது விலக்ஷண ஸம்பந்தத்தாலே. ஸம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது
ஜந்மக் கொத்தை போக வேணும். ஜந்மத்துக்கு கொத்தையும், அதுக்குப் பரிஹாரமும்
“பழுதிலாவொழுகல்” என்கிற பாட்டிலே அருளிச் செய்தார்.

(ஸ்வ சோபி மஹீ பால – சூரணை-217–விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்கிற படி
எத்தனை யேனும் நிக்ருஷ்ட ஜன்மாவாய் இருந்தானே ஆகிலும்–பகவத் பக்தனானவன் த்வைஜநிர் காட்டில் அதிகன்-)

(ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பழுதிலா ஒழுகல்-இத்யாதியாலே -பிரம்மா தொடங்கி தங்கள் அளவும் வர
நெடுகப் போகிற வம்ச பிரவாகத்தில் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்கும் அவர்களாய் -பலராய் இருக்கிற சதுர் வேதிகாள்
இதில் கீழ்ப் பட்டது இல்லை என்னும் நிஹீன குலத்தில் பிறந்தார்களே  ஆகிலும்
என்னோடு உண்டான அசாதாராண சம்பந்தத்தை அறிந்து -அந்த ஞான அனுரூபமான ஸ்வ ஆசாரத்தை உடையார் ஆகில் –
நீங்கள் அவர்கள் காலில் விழுந்து ஆராதியுங்கோள் -அவர்கள் உங்கள் பக்கில் ஞான அபேஷை பண்ணில் -நீங்கள் ஆதரித்து சொல்லுங்கோள் –
அவர்கள் பகவத் ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கையில் -கேட்டு கிருதார்தர் ஆகுங்கோள் –
எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே -என்மாத்ரம் ஆகிலும் அவர்களை ஆராதித்து-நல் வழி போகுங்கோள்)

வேதகப் பொன் போலே இவர்களோட்டை ஸம்பந்தம்.
இவர்கள் பக்கல் ஸாம்ய புத்தியும், ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும். அதாவது ஆசார்ய துல்யரென்றும், ஸம்ஸாரிகளிலும்,
தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்றும் நினைக்கை. ஆசார்ய ஸாம்யத்துக்கடி ஆசார்ய வசநம்.
இப்படி நினையாதொழிகையும் அபசாரம். இவ் வர்த்தம் இதிஹாஸ புராணங்களிலும், பயிலுஞ்சுடரொளி நெடுமாற்கடிமையிலும்,
கண் சோர வெங்குருதியிலும், நண்ணாத வாளவுணரிலும், தேட்டருந்திறல் தேனிலும்,
மேம்பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் விஶதமாகக் காணலாம்.
க்ஷத்ரியனான விஶ்வாமித்ரன் ப்ரஹ்மர்ஷியானான். விபீஷணனை ராவணன் குலபாம்ஸநனென்றான்.
பெருமாள் இக்ஷவாகு வம்ஶ்யனாக நினைத்து வார்த்தை அருளிச்  செய்தார்.
பெரிய உடையாருக்குப் பெருமாள் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் பண்ணி யருளினார்.
தர்ம புத்ரர் அஶரீரி வாக்யத்தையும், ஜ்ஞாநாதிக்யத்தையுங்கொண்டு ஶ்ரீவிதுரரை ப்ரஹ்மமேதத்தாலே ஸம்ஸ்கரித்தார்.
ருஷிகள் தர்ம வ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம ஸந்தேஹங்களை ஶமிப்பித்துக் கொண்டார்கள்.
க்ருஷ்ணன் பீஷ்ம த்ரோணாதி க்ருஹங்களை விட்டு ஶ்ரீவிதுரர் திருமாளிகையிலே அமுது செய்தான்.
பெருமாள் ஶ்ரீஶபரி கையாலே அமுது செய்தருளினார்.
மாறனேரி நம்பி விஷயமாகப் பெரிய நம்பி உடையவருக்கு அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது – என்று
ஶ்ரீவசந பூஷணத்திலே பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்தார்.

“பவத் தயயா யதீந்த்ர த்வத் தாஸ தாஸ கணநாசரமாவதௌய: தத்தாஸதைகரஸதா விரதா மமாஸ்து” என்று
நம்முடைய ஜீயரும் யதிராஜ விம்ஶதியிலே அருளிச்செய்தருளினார்.

(ஸப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா
நஷ்டா பவத்விஹ பவத் தயயா யதீந்த்ர ! |
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ ய:
தத் தாஸதைக ரஸதாSவிரதா மமாஸ்து ||
(16)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, இஹ – இந்த ஸரீரம் இருக்கும் நிலையிலேயே, அஸ்மதீயா – அடியேனுடையதான, ஸப்தாதி போக விஷயா – நீசங்களான ஸப்தம் முதலியவற்றாலுண்டான அநுபவத்தைப்பற்றிய ருசி: – ஆசையானது, பவத்தயயா – தேவரீருடையதாய் அதிகமான துக்கத்தையே பற்றுக்கோடாகக்கொண்ட தயையினால், நஷ்டா பவது – உருத்தெரியாதபடி காணாமல்போகுக, (மேலும்) ய: – எந்த பாக்யஸாலியானவன், த்வத்தாஸ – விற்கவும் வாங்கவும் உரியவனாய் தேவரீர் இட்ட வழக்காயிருக்கும் அடியேனுடைய, தாஸகணநா – அடியவர்களை எண்ணும்போது, சரமாவதௌ – அவ்வெண்ணிக்கையின் கடைசியான எல்லையில், பவதி – இருக்கிறானோ, தத்தாஸதா – அவனைக் குறித்துச்செய்யும் அடிமையில், ஏக ரஸதா – (மற்றவற்றில் ஆசையோடு கலசாமல்) ஒன்றுபட்ட ஆசையானது, அவிரதா – நித்யமாக , பவத்தயயா – தேவரீருடைய தயையினால், மம அஸ்து – அடியேனுக்கு உண்டாயிடுக.)

திருவயிந்திரபுரத்திலே ஶ்ரீவில்லிபுத்தூர்ப் பகவரென்று உத்தமாஶ்ரமியாயிருப்பாரொருவர் எல்லாரும்
ஒரு துறையிலே அநுஷ்டாநம்பண்ண, தாம் ஒரு துறையிலே அநுஷ்டாநம் பண்ணுவராய்த்து.
அவரொரு நாள் அநுஷ்டாநம் பண்ணி மீண்டு வாரா நிற்கச் செய்தே இருந்த ப்ராஹ்மணர்
‘உமக்கு ஒரு துறையிலே நீராடுவதேது?’ என்று கேட்க,
‘விஷ்ணு தாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ண தர்மிண:|
அஸ்மாகம் தாஸ வ்ருத்தீநாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்கதி:” என்று,
‘நீங்கள் ப்ராஹ்மண வர்ண தர்மிகள், நாங்கள் தாஸ வ்ருத்திகள். கைங்கர்ய பரர். ஆகையாலே
உங்களோடு எங்களுக்கு அந்வயமில்லை’ என்று துறை வேறிட்டுப் போந்தாரென்று இவ் வ்ருத்தாந்தம்
ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யாநத்திலே திருநாராயணபுரத்தில ஆய் அருளிச் செய்தார்.

“பூதங்களைந்தும் பொருந்துமுடலினாற்பிறந்த சாதங்கள் நான்கினொடும் சங்கதமாம்,
பேதங்கொண்டென்ன பயன் பெறுவீர்” (14) என்றும்,
“குடியுங்குலமுமெல்லாம் கோகனகை கேள்வனடியார்க்கு அவனடியே யாகும்” என்றும்,
கேவல வர்ணாஶ்ரமங்களையே பற்றி நிற்க வில்லை ஒரு ப்ரயோஜநமில்லை;
ஸர்வர்க்கும் ஸர்வ ப்ரயோஜநமும் ஶ்ரிய:பதி நாராயணன் திருவடித் தாமரைகளே காணும் என்று
ஞான சாரத்திலே அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தார்.

(பூதங்கள் ஐந்தும் பொருந்து உடலினில் பிறந்த
சாதங்கள் நான்கினோடும் சங்கதமாம் பேதம் கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ்வுயிர்க்கும் இந்திரை கோன்
தன்னடியே காணும் சரண் –14-

பதவுரை:

பூதங்கள் ஐந்தும் பொருந்தும்-நிலம், நீர், தீ, காற்று, வானம், என்னும் ஐந்து பொருட்களுடைய கூட்டுறவால் உண்டான
உடம்பினால்-உடலை அடிப்படையாக வைத்துப் பிறந்த
சாதங்கள்-சாதிகள்
நான்கினொடும்-அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாலு வகைப் பிரிவோடும்
சங்கதமாம்-சேர்ந்திருக்கிற
பேதங்கொண்டு-உயர்வு தாழ்வாகிற வேற்றுமைகளைக் கொண்டு
என்னபயன் பெறுவீர்-என்ன லாபத்தை அடைவீர்?
எவ்வுயிர்க்கும்-அனைத்து உயிர்களுக்கும்
இந்திரைகோன்-லக்ஷ்மீ நாயகனான
தன்னடியே-எம்பெருமானுடைய திருவடிகளே
சரண்-புகலாகும் என்று
காணும் -அறிவீர்களாக (குறிப்பு) காணும் முன்னிலை

குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவன் அடியே யாகும் படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர்கலியைச் சேர்ந்திட மாய்ந்தற்று –15-

பதவுரை:

குடியும் -பிறந்த ஊரும்
குலமும் -பிறந்த கோத்திரமும்
எல்லாம் 0மற்றும் பிறப்பு (குறி) அடையாளங்கள் எல்லாம்
கோனகை-திருமங்கை மணாளன்
கேள்வனடியார்க்கு-தொண்டர்களுக்கு
அவனடியே யாகும்-இறைவனான அவனுடைய திருவடிகளே அனைத்தும் ஆகும்
இதற்கு எடுத்துக்காட்டு
படியின்மேல்-பூமியில்
நீர் கெழுவும்-நீர் நிறைந்த
ஆறுகளின்-நதிகளுடைய
பேரும்-கங்கை முதலிய பெயரும்
நிறமும்-சிவப்பு, வெளுப்பு, கருப்பு முதலிய
எல்லாம் வேற்றுமைகள் எல்லாம்
ஆர்கலி-சமுத்திரத்தை
சேர்ந்து-கலந்து
மாய்ந்திடும் அற்று-அழிந்து போவது போன்று)

 

“தேஹாத்ம ஜ்ஞாந கார்யேண வர்ண பேதேந கிம்பலம்|
கதிஸ் ஸர்வாத்மநாம் ஶ்ரீமந் நாராயண பத த்வயம்”
“ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ …நைவ க்ராமகுலாதிபி: விஷ்ணுநா-தஸ்ய ஸர்வம் ஏவ ஹி” என்னக் கடவதிறே.
“அத்ய ப்ரப்ருதி ஹே லோகா: யூயம் யூயம் வயம் வயம்|
அர்த்த காம பரா யூயம் நாராயண பரா வயம்” என்று ஶ்ரீஶுக ப்ரஹ்மர்ஷி தாம்
வேத வ்யாஸ புத்ரராயிருக்க ஶுக தாதர் என்று தம்மை யிட்டுப் பிதாவை நிரூபிக்க வேண்டும் படியான
ஜ்ஞாநாதிக்யத்தை உடையவராகையலே லௌகிகரைப் பார்த்து ஒட்டற வார்த்தை சொல்லி அவ்வளவன்றிக்கே,
“நாஸ்தி ஸங்கதிரஸ்மாகம் யுஷ்மாகஞ்ச பரஸ்பரம்|
வயம் து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்ரிய கிங்கரா:” என்று(நீங்கள் இந்திரிய கிங்கரர்கள் -ஆக்கையின் வழி உழன்றுள்ளீர் அடியேன் இந்தர்யம் அருளிய அவனுக்கு கிங்கரர்)
தமக்குண்டான விஶேஷ ஜ்ஞாநத்தையும் அவர்களுக்குண்டான இந்த்ரிய பாரவஶ்யதையையும் சொல்லி,
தத் ஸம்பந்தத்தையும் அறுத்து, அவ்வளவுமன்றிக்கே,
“நாஹம் விப்ரோ ந ச நரபதிர்நாபி வைஶ்யோ ந ஶூத்ரோ நோ வா வர்ணீ நசக்ருஹபதிர் நோ வநஸ்தோ யதிர்வா|
கிந்து ஶ்ரீமத் புவந பவந ஸ்தித்யபாயைக ஹேதோர் லக்ஷமீ பர்த்துர் நர ஹரிதநோர் தாஸ தாஸஸ்ய தாஸ:” –
என்னுடைய ஸ்வரூபம் வர்ணாஶ்ரமங்களை விட்டு நிரூபிக்கப்பட்டது;
ஜ்ஞாநாநந்தங்களும், பகவச் சேஷத்வமும் புற விதழ் என்னும்படி ததீய ஶேஷத்வத்தை யிட்டே நிரூபிக்கும்படி யிருக்கும்.
இப்படியான பின்பு பாகவதர்களென்றும், அபாகவதர்களென்றும் இரண்டு ஜாதியாகச் சொல்லுமேதொழிய
வேறொருபடி சொல்லத் தக்க பந்தமில்லை உங்களுக்கும் எங்களுக்கும் – என்று
ஶ்ரீஶுக ப்ரஹ்மர்ஷி லௌகிகரோடுண்டான ஸம்பந்தத்தை அறுத்துக் கொண்டு ஶ்ரீநரஸிம்ஹரூபியான நாராயணனுக்கு
ஶேஷ பூதராயிருக்குமவர்களுக்கு ஶேஷமாயிருக்கும் பாகவதர்களுடனே கூடிப் போனார்களென்னுமது ஜகத் ப்ரஸித்தமிறே.

“பஞ்சாஸ்த்ராங்கா: பஞ்ச ஸம்ஸ்கார யுக்தா: பஞ்சார்த்தஜ்ஞா: பஞ்சமோபாயநிஷ்டா: |
தே வர்ணாநாம் பஞ்சமாஶ் ச ஆஶ்ரமாணாம் விஷ்ணோர் பக்தா:
பஞ்ச கால ப்ரபந்நா:”,
“தேவர்ஷி பூதாப்தந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜந்|
ஸர்வாத்மநாயஶ் ஶரணம் அஶரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபந்ந:” என்றிறே ஸ்வரூபமிருப்பது.
ஆகையாலே ஜ்ஞாநவான்கள், அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யா வ்ருத்தங்களை கர்த்தப ஜந்மம், ஶ்வபச அதமம்,
ஶில்ப நைபுணம், பஸ்மாஹுதி, ஶவவிதவாலங்காரமென்று கழித்துத் தந்தாமுக்குத் தஞ்சமாகப் பற்று மிடத்தில்
பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும் ஈஶ்வரனைப் பற்றுவாரும்,
மோக்ஷத்துக்கே ஹேதுவான ஆசார்யனைப் பற்றுவாரும், உபேக்ஷணீயரான ஈஶ்வர பரதந்த்ரரைப் பற்றுவாரும்,
அநுகூலரான ஆசார்ய பரதந்த்ரரைப் பற்றுவாருமாய், அதிகார அநுகுணமாயிருக்கும்.

ஆகையாலே யிறே “நசேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ|
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஶ:” என்று கூரத்தாழ்வான்
‘நாராயண’ ‘ராமாநுஜ” என்கிற திருமந்த்ரங்களிரண்டுக்கும் வாசி பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயும்,
மோக்ஷைக ஹேதுவாயுமிருக்குமென்னுமிடம் தோற்ற ‘சதுரா சதுரக்ஷரீ’ என்று அருளிச் செய்தார்.

——-

அந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை

கண்ணன் எம்பெருமான் குசேலரை உபசரித்தல்
கண்ணன் எம்பெருமான் அர்ஜுனனுக்கு தேரோட்டியாய் இருத்தல்
ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளை ஆசார்யனாக ஏற்றுக் கொள்ளுதல்
எம்பெருமான் நம்மாழ்வாரிடம் அதீத அன்பு காட்டுதல்

“லோகே கேசந மத் பக்தாஸ் ஸத்தர்மாம்ருத வர்ஷிண:|
ஶமயந்த்யகமத்யுக்ரம் மேகா இவ தவா நலம்”,
“ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்” ,
”ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:”,
“மம ப்ராணா ஹி பாண்டவா:”
“நிரபேக்ஷம் முநிம் ஶாந்தம் நிர்வைரம் ஸம தர்ஶநம்|
அநு வ்ரஜாம் யஹம் நித்யம் பூயேயேத் யங்க்ரிரேணுபி:”,
“மம மத் பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகாந்ருப|
தஸ்மாந் மத் பக்த பக்தாஶ்ச பூஜநீயா விஶேஷத:” ,
“அந்நாத்யம் புரதோ ந்யஸ்தம் தர்ஶநாத் க்ருஹ்யதே மயா|
ரஸாந் தாஸஸ்ய ஜிஹ்வாயாமஶ்நாமி கமலோத்பவ”,
“மத் பக்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்|
ஸ்வயம்ப் யர்ச்சநஞ் சைவ மதர்த்தே டம்ப வர்ஜநம்||
மத் கதா ஶ்ரவணே பக்திஸ் ஸ்வர நேத்ராங்க விக்ரியா|
மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி||
பக்திரஷ்டவிதாஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே|
ஸ்விப்ரேந்த்ரோ முநிஶ் ஶ்ரீமாந் ஸ யதிஸ்ஸ ச பண்டித:||
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்” என்று
ஸர்வேஶ்வரன் தானும் தன்னுடைய அடியாரை லோக பாவநராகவும், தனக்கு ஆத்மாவாகவும், ப்ராணனாகவும்,
‘நாள் தோறும் நான் அவர்களுடைய பாத ரேணுக்களை ஆசைப் பட்டுப் பின் செல்லா நின்றேன்’ என்றும்,
‘அவர்களுடைய ஸத் காரம் எனக்கு மிகவும் ப்ரியம்’ என்றும்,
‘அந்நாதிகளிலுண்டான ரஸங்களெல்லாம் அவர்கள் முகேந ஜீவிப்பேன்’ என்றும்,
ம்லேச்ச ஜாதியிலே பிறந்தார்களே யாகிலும் தன்னைப் போலே அவர்களும் பூஜ்யர் என்றும் அருளிச் செய்தான்.

“அக்ஷ்ணோ: பலம் தாத்ருஶ தர்ஶநம் ஹி தந்வா: பலம் தாத்ருஶகாத்ரஸங்கம்|
ஜிஹ்வாபலம் தாத்ருஶ கீர்த்தநஞ்ச ஸுதுர்லபா பாகவதா ஹி லோகே”,
“நாஹம் ஸமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குணாந் பத்மபுவோப்யகண்யாந்|
பவத்ப்ரபாவம் பகவாந் ஹி வேத்தி ததாபவந்தோ பகவத்ப்ரபாவம்” என்று –
மஹா பாகவதர்களுடைய தர்ஶந – ஸ்பர்ஶந – ஸம்பாஷணங்களே தனக்கு ஸர்வ ப்ரயோஜநமென்று
அவர்களுடைய திவ்ய குணங்களைச் சொல்லுகைக்கு நான் ஸமர்த்தை யன்று என்றும்,
அவர்களுடைய ப்ரபாவத்தை என்னால் சொல்லித் தலைக் கட்டப் போகாது என்றும்
ஶ்ரீபூமிப் பிராட்டியும் அருளிச் செய்தாள்.

எம்பெருமானார் திருவதாரத்தாலே அனைவருக்கும் உஜ்ஜீவனம்

“திறம்பேன்மின் கண்டீர்” என்று தொடங்கி ,
“இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்களென்றான் நமனுந்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு” என்றும்,
“அவன்தமர் எவ்வினையராகிலும் எங்கோனவன்தமரே என்றொழிவதல்லால்
நமன்தமராலாராயப் பட்டறியார் கண்டீர் அரவணைமேல் பேராயற்காட்பட்டார் பேர்” என்றும்,
“பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம் நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை” என்றும்,
“வெள்ள நீர் வெள்ளத் தணைந்த அரவணை மேல் துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே வள்ளலே
உன் தமர்க்கென்றும் நமன் தமர் கள்ளர்” என்று பகவத் ப்ரபந்நர் எப்படி இருந்தார்களே யாகிலும்
அவர்களை யமாதிகள் ஏறிட்டுப் பார்க்க வொண்ணாத மாத்ரமுமன்றிக்கே யம படர் கள்ளர் பட்டது படுவார்கள் என்று
பாகவத ப்ரபாவத்தை ஆழ்வார்களும் அருளிச் செய்தார்கள்.

“நாவலிட்டுழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே” என்னும் மதிப்பரிறே ஆழ்வார்கள்.
“ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி” என்றும் பாகவத வைபவத்தைச் சொல்லுகிறது.

இந்த ப்ரஸங்கத்திலே யமாதிகள் பாகவத விஷயத்தில் வர்த்திக்கிறபடி சொல்லுகிறது.
“ஸ்வ புருஷமபி வீக்ஷ்ய பாஶ ஹஸ்தம் வததி யம: கில தஸ்ய கர்ண மூலே|
பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந் ப்ரபுரஹமந்ய ந்ருணாம் ந வைஷ்ணவாநாம்||
கமல நயந வாஸுதேவ விஷ்ணோ தரணிதர அச்யுத ஶங்க சக்ர பாணே|
பவஶரணமிதீரயந்தி யேவை த்யஜபட தூரதரேணதாநபாபாந்” என்றும் இத்யாதிகளாலே –
நான் பகவத் ப்ரபந்நரை நியமிக்கக் கர்த்தாவன்று; என்னுடைய ப்ருத்யரான நீங்களும் அவர்களைக் கண்டால்
தடஸ்தராய் உங்களைப் பேணிக் கொண்டு தூரத்திலே விலகிப் போங்கோள் – என்று
அவர்களுக்கு புத்தி சொல்லி எல்லாரையும் கர்மாநுகுணமாக உசித தண்டம் பண்ணுகிற
யமன் தன்னாலும் ஶ்ரீவிஷ்ணு புராணாதிகளிலே பாகவத வைபவம் சொல்லப்பட்டதிறே.

அபாகவத ஸம்ஶ்லேஷம் பாகவத விஶ்லேஷத்தையும், பகவத் விஶ்லேஷத்தையும் பிறப்பிக்கும்;
பாகவத ஸம்ஶ்லேஷம் பகவத ஸம்ஶ்லேஷத்தையும், அபாகவத விஶ்லேஷத்தையும் பிறப்பித்து,
இவனையும் கரை மரம் சேர்த்து விடும். இவ் வெல்லை மயக்கு ஸதாசார்யன் கண் வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது.
அவன் கண் வட்டம் விட்டால் நித்ய ஸம்ஸாரியாய்ப் போமித்தனை என்று ஆச்சான் பிள்ளையும் மாணிக்க மாலையிலே அருளிச் செய்தார்.

ஆகையாலே ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஆசார்ய அதீநமா யிருக்க வேணும்;
அப்படி யிராமல் கலங்கி தத் ஸம்பந்தத்தையும் மறந்து, ஸ்வாதந்த்ர்யம் தலை யெடுத்து,
அக்ருத்ய கரணம், பகவதபசாரம், பாகவதாபசாரம், அஸஹ்யாபசாரம் தொடக்கமான அநர்த்தங்களிலே
ஏதேனுமொன்றை விளைத்துக் கொண்டு, யாவதாத்மபாவி ரௌரவாதி கோர நரகங்களிலே விழுந்து
நஶித்துப் போகத் தக்கதான ஆத்மாக்களையும், முற்படத் தங்கள் திருவடிகளிலே ஒரு ஸம்பந்தமுண்டாகையாலும்
அவ் வாத்மாக்கள் மேல் படப் போகிற து:க பரம்பரைகளை அறிந்தருளுகையாலும் அவர்கள் விஷயத்தில்
‘ஐயோ’ என்கிற க்ருபாதிஶயத்திலே விட மாட்டாதே
“பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்”ளுகையிறே ஸதாசார்ய லக்ஷணம்.

ஆகையாலே தம்முடைய ஶிஷ்யனான நாலூரானும் க்ருமி கண்டனோடே கூடித் தம்முடைய விஷயத்திலே
மஹாபராதத்தைப் பண்ண, பெருமாள் அவனை ‘நஷமாமி’ என்று முனிந்தருள,
அவரோடே மறுதலைத்து ‘நாம் பெற்ற லோகம் நாலூரானும் பெற வேணும்’ என்று கூரத்தாழ்வானும்;

தம்முடைய ஶிஷ்யரா யிருப்பாரொருவர் ஸஹ வாஸ தோஷத்தாலே கலங்கி, விஷய ப்ராவண்யம் தலை யெடுத்து,
‘பட்டரே! உமக்கும் நமக்கும் பணியில்லை’ என்று அவருடைய திருவடிகளை விட்டகன்று போகத் தேட,
‘வாராய் பிள்ளாய்! அது உன்னுடைய அபிப்ராயத்தாலே யன்றே, நீ விட்டாலும் நான் விடேன்’ என்று
பட்டரும் தம்முடைய திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தும்;

அந்தரங்கராய், மஹா விரக்தராய் இருப்பாரொரு ஸாது ஶ்ரீவைஷ்ணவர் அந்ந தோஷத்தாலே அஹங்கராதிகள் தலை யெடுத்து,
பூர்வ தஶையில் பொகட்டு வந்த சவளத்தை (= ஈட்டியை) மீளவும் எடுத்துக் கொண்டு ராஜ ஸேவை பண்ணித் திரிய,
இப்படிக் கை கழிந்து போனவரையும் பின் தொடர்ந்து யத்நேந பிடித்துக் கொண்டு வந்து,
ஒரு அறையிலே தாமும் அவருமாக அடைத்துக் கொள்ள, ஶ்ரீபாதத்துக்கு பரிவரான முதலிகள் எல்லாருங்கூடி
‘ஐயோ! ப்ரமாதம் பிறக்கிறது; சவளமும் உடைத்துக் கையுமான அவனை விட்டு அறையினின்றும் புறப்பட வேணும்’ என்று
அதி க்லேஶத்தோடே கூப்பிட, “இவனை ரக்ஷித்தாலல்லது நான் புறப்படேன்; இவன் உஜ்ஜீவியாதிருக்கில்
இந்த சவளக்காரனோடே அடைத்துக் கொண்டு சாவேன்’ என்ற வேதாந்திகளான நஞ்சீயரும்;

தந்தாம் விஷயங்களிலே குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும், க்ருபையும், சிரிப்பும், உகப்பும், உபகார ஸ்ம்ருதியும்
நடக்க வேணுமென்று அருளிச் செய்த மாத்ரமன்றிக்கே அநுஷ்டாநத்துக்கு ஸீமா பூமியாயிருக்கும் பிள்ளை லோகாசார்யரும்,

“ஸ்வீகரோதி ஸதாசார்யஸ் ஸர்வாநப்ய விஶேஷத: |
யத் புநஸ் தேஷு வைஷம்யம் தேஷாம் சிஜ்ஜ்ஞாந வ்ருத்தயோ:||
தேஷாமேவ ஹி தோஷோயம், ந சாஸ்யேதி விநிஶ்சிதம்|
அபக்வ பத்ம கோசாநாம் அவிகாஸோ ரவேர்யதா” என்கிறபடியே

தங்கள் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கச் செய்தேயும் அவர்களுடைய ஜ்ஞாநதௌர்பல்யத்தாலே மீளவும் விபரீத ப்ரவ்ருத்தராய்,
பிறந்து போகத் தேடினவர்களையும் விட க்ஷமரன்றிக்கே
“ஸ்காலித்யே ஶாஸிதாரம்” என்றும்,
“தேஶிகோ மே தயாலு:” என்றும் சொல்லுகிறபடியே
தங்களுடைய நியமத்தலும் க்ருபாதிஶயத்தாலும் இப்படி ரக்ஷித்துப் போந்தார்கள்.

ஸ்ரீ சீதாப்பிராட்டியும் ஸ்ரீ மணவாள மா முனிகளும்

“வாஸுதேவம் ப்ரபந்நாநாம் யாந்யேவ சரிதாநி வை|
தாந்யேவ தர்ம ஶாஸ்த்ராணீத்யேவம் வேத விதோ விது:”
இப்படி பூர்வசார்யர்கள் விசேஷத்தை நம்முடைய ஆசார்யர் திருநகரியிலே ஓலமேச்சான் மடத்திலே
தாம் கண் வளர்ந்தருளா நிற்க, எம்பெருமானாருக்கு விஷமிட்ட சண்டாளரைப் போலே மனக்குற்ற மாந்தரான
அஸூயா பரரானவர்கள் கர்ம காலத்திலே மத்ய ராத்ரியிலே அந்த மடத்திலே அக்நி ப்ரக்ஷேபத்தைப் பண்ண,
அந்தக் கள்ளளரை அத் தேஶத்துக்குக் கர்த்தரான ராஜாக்கள் கண்டு பிடித்துக் கொண்டு சித்ரவதம் பண்ணத் தேட

“கேட்பார் செவி சுடு” என்கிறபடியே ஆருக்கும் ஶ்ரவண கடோரமான இம் மஹா பாபத்தைத் தம்முடைய விஷயத்திலே கூசாமல்
தீரக் கழியப் பண்ணின நிஷ்டுரரையுமுட்பட {அகப்பட}
“பாபாநாம் வா ஶுபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம|
கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந் நாபராத் யதி” என்றும்,
“பவேயம் ஶரணம் ஹி வ:” என்றும்,
“க: குப்யேத் வாநரோத்தம” என்றும் சொல்லுகிறபடியே

அந்த ராஜாக்களோடே மறுதலைத்து அந்தக் கள்ளரைக் கொல்லாதபடி விடுவித்து ரக்ஷித்தருளின
பரம க்ருபையாளர் என்னுமது லோகத்திலே எல்லாருமறிய ப்ரஸித்தமிறே.

இன்னமும் அஸ்மதாசார்யருடைய க்ருபாதிஶயமும், அவதார விசேஷமும் கீரி, கிளி, வ்ருக்ஷ வ்ருத்தாந்தங்களிலும்,
ஸ்வப்ந வ்ருத்தாந்தங்களிலும் அறிவார்க்கிறே தெரிவது.

——-

அந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்

இப்படி “ஸ்தாவராண்யபி முச்யந்தே” என்றும்,
“பஶுர் மநுஷ்ய: பஷீ வா” என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே
ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணுமென்ற திருவுள்ளத்தையுமுடையராய்,
பரம தயாவான் களாயிருந்துள்ள நம் ஆசார்யர்களுடைய அபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஒதுங்கித்

தாங்கள், ஸர்வஜ்ஞராகையாலே ஸாராஸார விவேகரில் தலைவராய், செய்த வேள்வியர் என்கிறபடியே க்ருதக்ருத்யராய்,
எப்போதும் மங்களா ஶாஸந பரராய்,
“நானும் பிறந்தமை பொய்யன்றே” ,(10-4)
“தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும்” என்று சொல்லுகிறபடியே

பழுதாகாத வழியை அறிந்து வேறாக ஏத்தி யிருக்குமவனைப் பற்றித் தெளிவுற்று வீவின்றி,
எல்லாம் வகுத்த விடமென்று விஶ்வஸித்து மார்பிலே கை வைத்துக் கோடையிலே குளிர் காற்றடிக்க மிகவும் ஸுகோத்தரராய்,
“சிற்ற வேண்டா” என்கிறபடியே ஒரு பரபரப்பற்று (குரு பரம்பரையைப் பற்றுகை)
“தேவுமற்றறியேன்” என்றிருக்கும் ஶ்ரீமாந்களான அதிகாரிகள்:

ஆழ்வார் திருமகளாராண்டாள்
நம்மாழ்வார் திருவடிகளிலே ஶ்ரீமதுரகவி யாழ்வார்
நாதமுனி திருவடிகளிலே குருகைக் காவலப்பன்
ஆளவந்தார் திருவடிகளிலே தெய்வ வாரி யாண்டான்
எம்பெருமானார் திருவடிகளிலே வடுக நம்பி
நம்பிள்ளை திருவடிகளிலே பின்பழகிய பெருமாள் ஜீயர்
வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே கூர குலோத்தம தாஸ நாயன், மணல் பாக்கத்து நம்பியார்
திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஜீயர்
இப்படியிருக்கும் உத்தமாதிகாரிகள் இவ்வாசார்யர்களிடத்திலே இன்னமும் உண்டாயிருக்கும் கண்டு கொள்வது.

நம்முடைய ஜீயர் திருவடிகளிலே இந் நிஷ்டைக்கு அதிகாரிகளாயிருக்கும் முதலிகள் பலருமுண்டு.
மற்றும் இக் காலத்தில் ஸச் சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணம் உண்டாயிருக்கும் ஜ்ஞாநாதிகரிடத்திலும் காணலாம்.

இனி மேலும் ராமாநுஜ ஸித்தாந்தம் நடக்கும் காலத்தளவும்
“கலியுங்  கெடும் கண்டு கொண்மின்” என்கிறபடியே ஏவம் பூதரான அதிகாரிகளும் ஸுசிதர்.

“வேத ஶாஸ்த்ர ரதா ரூடா: ஜ்ஞாந கட்க தராத் விஜா:|
க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம: பரமோ மத:” என்றும்,
“அதி கந்தவ்யாஸ் ஸந்தோ யத்யபி குர்வந்தி நைகமுபதேஶம்|
யாஸ்தேஷாம் ஸ்வைரகதாஸ்தா ஏவ பவந்தி ஶாஸ்த்ரார்த்தா:” என்றும்,
‘அல்லி மலர்ப் பாவைக் கன்பரடிக் கன்பர் சொல்லுமவிடு சுருதியாம்” என்றும்,
“ததுக்தி மாத்ரம் மந்த்ராக்ர்யம்” என்றும் சொல்லுகிறபடியே
ஜ்ஞாநாதிகரானவர்கள் “நாவ காரியம் சொல்லிலாதவ”ர்களாகையாலே விநோதமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ததும்
நல் வார்த்தையா யிருக்குமதொழிய மறந்தும் அபார்த்தமாக ஒரு வார்த்தையும் அருளிச் செய்யார்களாகையாலே
அவர்களுடைய திவ்ய ஸுக்திகளெல்லாம் ஸகல வேதாந்த ஸாரமான திரு மந்த்ரமாயிருக்கும்.

‘ருசோ யஜும்ஷி ஸாமாநிததைவ அதர்வணாநி ச|
ஸர்வ மஷ்டாஷராந்தஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம்” என்கிறபடியே ஸகல ப்ரமாண ப்ரமேயங்களும் ததந்தர் பூதமாயிருக்கும்.

ஆகையாலே நம்முடைய பெரியோர்களெல்லாரும் திரு மந்த்ரத்தில் மூன்று பதத்திலும் சொல்லப்படுகிற
ஶேஷத்வ – பாரதந்த்ர்ய – கைங்கர்யங்கள் ப்ரதம பர்வமான ஈஶ்வர விஷயத்திலே அரை வயிறாய்,-சரம பர்வமான ஆசார்ய விஷயத்திலே பரிபூர்ணமாக ஸித்திக்கும் என்னும் இவ் வர்த்தம்
இம் மந்த்ரத்தில் தாத்பர்யார்த்தமாகையாலே அத்தை உட் கொண்டு
ஸம்ஸ்க்ருதமாகவும், த்ராவிடமாகவும், மணி ப்ரவாளவாகமவும், ஏக கண்டமாக அருளிச்செய்த
ப்ரமாண பலத்தாலே ஆசார்யாபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஸுப்ரதிஷ்டிதராய்,

“தென் குருகூர் நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே”,
“நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றும்,
“எந் நா விருந்தெம்மையனிராமாநுசனென்றழைக்கும்”,(102)
“இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”,
“உன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறு சமய வெல்லும் பரம இராமாநுச” என்றும்,

“குரோர்வார்த்தாஶ்ச கதயேத் – குரோர் நாம ஸதா ஜபேத்” என்றும் சொல்லுகிறபடியே
ஶேஷியாய், ஶரண்யனாய், ப்ராப்யனாய்,
“மாதா பிதா யுவதய:”,
“அன்னையாயத்தனாய்”,
“தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம் என்றனக்கு நீயே எதிராசா” என்றும் இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே ஸர்வ வித பந்துவுமாயிருந்துள்ள ஸதாசார்யனைக் குறித்துப் பண்ணும் ப்ரபத்தியான
ப்ரதம நமஸ்ஸை ஸதாநுஸந்தேயமான மந்த்ரமென்றும்,

“குருரேவ பரம் ப்ரஹ்ம”,
“தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி”,(38)
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந தீப ப்ரதே குரௌ”,
“பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அவனே பர தேவதை என்றும்,

“யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா ப்ரதீயதே|
தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ:”,
“வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல் சொல்லார் பொழில் சூழ் திருப்பதிகள்
எல்லாம் மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள் அருளாலே வைத்த அவர்”,(36)
“நம்புவார் பதி வைகுந்தம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவன் எழுந்தருளி யிருக்கிற விடமே ப்ராப்ய பூமியான பரம பதம் என்றும்,

“ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே”,
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி, அப் பேறளித்தற்கு ஆறொன்றும் இல்லை மற்றச் சரணன்றி”,
“உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவன் திருவடிகளே உபாயோபேயங்களென்றும்,

“ராமாநுஜார்ய வஶக: பரிவர்த்திஷீய”,
“நித்யம் யதீந்த்ர தவ திவ்ய வபுஸ் ஸ்ம்ருதௌ மே ஸக்தம் மநோ பவது வாக் குண கீர்த்தநேஸௌ|
க்ருத்யஞ்ச தாஸ்ய கரணந்து கர த்வயஸ்ய வ்ருத்த்யந்தரேஸ்து விமுகம் கரண த்ரயஞ்ச”,(4)
‘ஶக்திக்கிலக்கு ஆசார்ய கைங்கர்யம்” (293)என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
த்ரிவித கரணத்தாலும் அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தமென்றும்,

‘ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும் பல ஸாதந ஶுஶ்ரூஷையும்”(323) என்கிறவிடத்தில் சொல்லுகிறபடியே
இவன் பண்ணும் கைங்கர்யம் கண்டு உகக்குமவனுடைய முகோல்லாஸமே மஹாபலம் என்றும்
அத்யவஸித்திருக்கும் அதிகாரிகளுக்கு ஸாம்ஸாரிகமான ஸகல துர் வ்யாபாரங்களையும் ஸவாஸநமாக விட்டு
அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸதா பஶ்யந்திப்படியே அநுபவித்து,
“அத்ர, பரத்ரசாபி”ப்படியே
அந்தமில் பேரின்பத்த டியரோடிருந்து அம்ருத ஸாகராந்தர நிமக்ந ஸர்வ அவயவராய்க் கொண்டு
கால தத்த்வமுள்ளதனையும் மங்களாஶாஸநம் பண்ணி வாழலாம்.

“கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்” (104)என்கிற பாட்டும்,
“நாவினால் நவிற்று” என்கிற பாட்டும்
“நல்ல வென் தோழி” என்கிற பாட்டும்,
“மாறாய தானவனை” என்கிற பாட்டும்,
பரமாசார்யரான ஆளவந்தாரருளிச் செய்த “மாதா பிதா யுவதய:” என்கிற ஶ்லோகமும்,
“பஶுர் மநுஷ்ய:” என்கிற ஶ்லோகமும்,
“பால மூக ஜட அந்தாஶ்ச” என்கிற ஶ்லோகமும்,
“ஆசார்யஸ்ய ப்ராஸாதே ந மம ஸர்வ மபீப்ஸிதம்” என்கிற வசநமும்,
“இஹ லோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்ட அத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை” என்று
மாணிக்க மாலையிலே பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த திவ்ய ஸூக்தியும்,

“மந்த்ரமும், தேவதையும், பலமும், பல அநுபந்திகளும், பல ஸாதநமும், ஐஹிக போகமுமெல்லாம் ஆசார்யனே
என்று நினைக்கக் கடவன்” (322)என்று ஶ்ரீவசந பூஷணத்திலே பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்தருளின திவ்ய ஸுக்தியும்
இதுக்கு ப்ரமாணமாக அநுஸந்தேயங்கள்.

———-

ஶ்ரீஸௌம்ய ஜாமாத்ரு  முநே: ப்ரஸாத ப்ரபாவ ஸாக்ஷாத் க்ருத ஸர்வ தத்த்வம்|
அஜ்ஞாந தாமிஸ்ர ஸஹஸ்ர பாநும் ஶ்ரீ பட்ட நாதம் முநிமாஶ்ரயாமி||

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ஆழ்வார்களுக்கு திருப்பள்ளி எழுச்சி —

January 16, 2022

முதலில் பிள்ளாய் எழுந்திராய்! (திரு-6) என்று ஆரம்பித்து
நாயகப் பெண் பிள்ளாய் ! (திரு-7),
கோதுகலம் உடைய பாவாய்! (திரு-8),
மாமான் மகளே! (திரு-9),
அம்மனாய்! ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே! (திரு-10),
பொற்கொடியே! புனமயிலே! செல்வப் பெண்டாட்டி! (திரு-11),
நற்செல்வன் நங்காய்!(12),
போதரிக் கண்ணினாய்! பாவாய்!(திரு-13),
நங்காய்! ( திரு-14),
இளங்கிளியே!(திரு-15) என்று வரிசையாக எழுப்புகிறாள்.

புண்ணிய நதிகளில் நீராட ஆண்டாள் ஏன் தன் தோழிகளை அழைக்கிறாள் ?
பக்தி என்ற சிறு விதையை நம் மனதில் விதைக்க, அது முளைவிட்டுக் கொடியாக வளர ஆரம்பிக்கும் போது
அதற்குத் தடங்களாகப் பாவங்களால் பல இடையூறுகள் வரலாம்
இந்த முளைவிட்ட பக்தி செடியைப் பாதுகாத்துப் படரவிட, சான்றோர்களின் நட்பு என்ற ஆதரவு குச்சியை அதனுடன் பிணைக்க வேண்டும்.
அதற்குப் புண்ணிய தீர்த்தங்களுக்குச் செல்ல வேண்டும்.

திருப்பாவையில் ஆறாம் பாசுரத்திலிருந்து பதினைந்தாம் பாசுரம் வரை இல்லினுள்ளே உறங்குகின்ற
பெண் பிள்ளைகளை எழுப்புவதுபோல் அமைந்துள்ளன.
பாசுரங்களுக்கு மேல் பூச்சான பொருளை நோக்கினால் பெண்களை எழுப்புவது போல் தோன்றினாலும்,
மறைமுகமான ஆழ்ந்த பொருளை நுணுகிப் பார்த்தால் ஒவ்வோர் ஆழ்வாரையும் எழுப்பி
அவர்களின் அருள் வேண்டுவதை நாம் உணரலாம்.

”புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்[து] அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்”

இது பெரியாழ்வாரைத் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம்.
பிள்ளாய்! என்பது இதில் விளி. அறிவில்லாதவனைப் பிள்ளை யென்பது.
எம்பெருமானுடைய ஸர்வ ரக்ஷகத்வம் முதலிய திருக் குணங்களை மறந்தே இவ்வாழ்வார்;
மங்களாசாஸனத்தில் ஒருப்பட்டாராதலால் பள்ளை யென்னத் தகுதியுடையாராயினர்.
“ஜ்ஞாந விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை யெல்லாம் அடிக் கழஞ்சு பெறும்” என்ற
ஸ்ரீவசனபூஷண திவ்ய பூஷ ஸூக்தியும் மங்களாசாஸநத்திற்கு அஜ்ஞானத்தையே மூலமாகக் காட்டிற்று.

இவ்வாழ்வார் பெரும்பாலும் நந்தனவனத்திலேயே போது போக்குவராதலால் அவ்விடத்து அடையாளமாகிய
‘புட்களின் சிலம்புதல்’ முன்னே கூறப்பட்டது.

புள்ளரையன் என்று பெரிய திருவடியின் ப்ரஸ்தாவம் செய்திருப்பதில் இப்பெரியாழ்வார்
பெரிய திருவடியின் அம்சமாகத் திருவவதரித்தவர் என்று குருபரம்பரா ப்ரபாவாதிகளிற் கூறியுள்ள
விஷயம் முத்ராலங்காராPதியில் ஸூசிதமாகிறது,

‘வெள்ளை விளிசங்கு’ என்கிற சொல்தொடர் முதன் முதலாகப் பெரியாழ்வாருடைய திருவாக்கில் தோன்றியது.
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – (பெரியாழ்வார் திருமொழி 4-1-7 காண்க.)
அதனை இங்கு அநுவதித்துக் காட்டுவது ஒருவகையான லிங்கம்.

(பேய்முலை நஞ்சுண்டு) பெரியாழ்வார் திருமொழியில் (சீதக் கடலில்) கண்ணபிரானுடைய சரித்திரங்களில்
பேய்முலை நஞ்சுண்ட கதை முதன் முதலாக அநுஸந்திக்கப்பட்டது.
சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்கு போத்தந்த
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-என்றது காண்க.

மறுபடியும் அந்தச் சரித்திரத்தை அநுஸந்திக்கையில் சகடாஸுரபங்கத்தையும் கூட்டி யநுஸந்தித்தார்.
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து சகடத்தை சாடிப் போய்
வாள் கொள் வளை எயிறு ஆர் உயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11—என்ற பாசுரங் காண்க.
அதற்குப் பொருந்த இங்கு
“பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடங் கலக்கழியக் காலோச்சி” என்றது.

“வெள்ளத்தரவில்” என்று தொடங்கிப் பெரியாழ்வார்க்குள்ள ‘விஷ்ணுசித்தர்’ என்னுற்திருநாமமும்
அதற்கு விவரணமான “அரவத்தமளியினோடும்”
“பனிக்கடலில் பள்ளிகோளை” என்ற பாசுரங்களின் தாற்ரியமும் நன்கு ஸூசிதம்.

அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5 2-10 –

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5 4-9 –

இது ஆறாம் பாசுரமாகும். இப்பாசுரம் பெரியாழ்வாரை எழுப்பும் பாசுரமாகும்.
பொழுது விடிந்ததற்கு அடையாளமாக பறவைகள் எழுந்து ஒலி எழுப்புவது “புள்ளும் சிலம்பின காண்” என்று காட்டப்பட்டுள்ளது.
பறவைகள் பெரும்பாலும் செடி கொடிகள், மரங்கள் நிறைந்த சோலைகள், நந்தவனங்கள் ஆகியவற்றில் தான் குடியிருக்கும்.
பெரியாழ்வாரும் அரங்கனுக்குப் பூமாலை சூட்டுவதற்காகப் பூக்கள் பறிக்க எப்பொழுதும் நந்தவனத்திலேயேதான் இருப்பார்.

“பிள்ளாய் எழுந்திராய்” எனும் சொற்றொடரில் உள்ள ‘பிள்ளாய்’ என்பதும் பெரியாழ்வாரையே குறிக்கிறது.
பிள்ளைகள் என்பவர்கள் ஒன்றும் அறியாதவர்கள்.
நாச்சியாரும் பின்னால் “அறியாத பிள்ளைகளோம்” என்று அருளுவார்.
உயர்வு, தாழ்வு, நல்லது, கெட்டது என்பன அறியாத பருவம்தான் பிள்ளைப் பருவம்.
பெரியாழ்வாரும் பிள்ளைக் குணம் கொண்டு பகவானின் உயர்வையே மறந்து விடுகிறார்!

அவர் மதுரை மாநகரில் பொற்கிழி யறுத்து, நாராயணனின் பரதத்துவத்தை நிலை நாட்டினார்.
அதனால் மனம் மகிழ்ந்த மன்னன் பெரியாழ்வாரைத் தன் பட்டத்து யானை மீது இருத்திப் பவனி வரச் செய்தான்.
அதை காணப் பகவானே வைகுந்தத்திலிருந்து வந்து விட்டார்.
அவரின் திருக்கோலத்தைக் கண்ட பெரியாழ்வார் அப்பகவானுக்குக் கண் எச்சில் பட்டுவிடப் போகிறதே என்று
எண்ணிப் “பல்லாண்டு பல்லாண்டு” என்று
தன்னை மறந்துப்
பகவானின் உயர்வையும் மறந்து
பிள்ளைக் குணத்தால் மங்களாசாசனம் செய்தார். எனவே ’பிள்ளாய்’ என்பது பெரியாழ்வாரையே குறிக்கிறது.

’புள்ளரையன் கோயில்’ என்பது பக்ஷிராஜனான கருடனின் திருக்கோயிலைக் குறிக்கும்.
பெரியாழ்வார் ’பெரிய திருவடி’ என்று போற்றப்படும் கருடாழ்வாரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.
ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில் ”வெள்ளை விளி சங்கு” என்று அருளுகிறார்.
பாண்டிய பட்டர் பெரியாழ்வாரைக் கொண்டாடும் போது,
“பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று ஈண்டிய சங்கம் எடுத்தூத……….”என்று காட்டுவார்.
அப்படிப் பெரியாழ்வார் ஈண்டிய சங்கம் எடுத்தூதியதைத்தான் ’வெள்ளை விரிசங்கம்’ என்று இப்பாசுரமும் காட்டுகிறது.

மேலும் இப்பாசுரத்தில், “பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி” என்று
பூதனா வதமும், சகடாசூர வதமும் காட்டப்படுகின்றன.
பெரியாழ்வார் கிருஷ்ணாவதாரத்தில் பெரிதும் ஈடுபட்டுத் தம் பாசுரங்களில் இந்த விருத்தாந்தங்களை அனுபவிப்பவர்.
பெரியாழ்வார் திருமொழியில் முதன்முதலில் வருவது ‘பிறங்கிய பேச்சியை சுவைத்திட்டு’ என்பதாகும்.

இப்பாசுரத்தில் உள்ள ‘வெள்ளத்தரவில்’ என்பதைப் பெரியாழ்வார் அருளியுள்ள
‘அரவத்தமளியோடு’ என்பதோடு ஒப்பிட்டுச் சுவைத்து மகிழலாம்.

‘முனிவர்களும் யோகிகளும்’ என்பதும் பெரியாழ்வாரைத்தான் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
ஏனெனில், முனிவர்கள் மற்றும் யோகிகள் ஆகியோர் பற்றற்றவர்கள். பகவானிடம் எதையும் விரும்பிக் கேட்க மாட்டார்கள்.
பெரியாழ்வாரும் பெருமாளிடம் எதையும் விரும்பிக் கேட்கவில்லை.
பெரியாழ்வார் திருமொழியின் சாராம்சமான கடைசிப் பாசுரத்தில் கூட அவர் எதையும் வேண்டிப் பிரார்த்திக்கவில்லை.

ஆக, ஆறாம் பாசுரத்தில் இப்படிப் பெரியாழ்வார் எழுப்பப்படுகிறார் என்பது தெரிகிறது.

————-

பேய்ப் பெண்ணை எழுப்புதல்-அடுத்துள்ள ஏழாம் பாசுரத்தில், குலசேகராழ்வார் எழுப்பப்படுகிறார்.

“கீசு கீசென்[று] எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்”

இது; பெரியாழ்வார்க்கு அடுத்த முந்தினவரான குலசேகராழ்வாரை யுணர்த்தும் பாசுரம்,
‘பேய்ப்பெண்ணே!, நாயகப் பெண்பிள்ளாய்?, தேசமுடையாய்!, என்ற மூன்று விளிகளும்
குலசேகராழ்வாரை வற்புறுத்துவன.
பெருமாள் திருமொழியில் மெய்யில் வாழ்க்கையை என்றவொரு பதிகத்தினால்
தம்மைப் பெரும் பேயராகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.

ஏர் மலர்ப்பூங்குழல், ஆலை நீள் கரும்பு, மன்னுபுகழ்க் கௌசலைதன் என்ற பதிகங்களில்
பல பெண்களின் தன்மையை யடைந்து பேசினாருமிவர்.

“கொல்லி காவலன் கூடல் நாயகன்” என்று அரசரான தன்மை தோற்றப் பேசினராதலால்
நாயகப் பெண் பிள்ளாய் என்றது.
அன்றியும், ஒரு ஹாரத்தில் நட்ட நடுவிலுள்ள மணியை ‘நாயகக்கல்’ என்பதுண்டு.
குரு பரம்பரையில் எம்பெருமானாரை நடுநாயகமென்று யதிராஜ ஸப்ததியில் தேசிகன் கூறினர்;
யதிராஜேந நிபத்த நாயக ஸ்ரீ: மஹதீ குரபங்க்தி ஹாசயஷ்டி:” என்கிறார்
அதுபோலவே ஆழ்வார்களுள் குலசேகரர் நடுநாயகமாக வுள்ளவர்.
பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசையர் மாறன் என முன்னே ஐவர்;
பட்டநாதன் கோதை தொண்டரடிப்பொடிகள் பாண்பெருமாள் கலியன் எனப்பின்னே ஐவர்;
நடுவே குலசேகரர்.
ஆகவே இதுபற்றயும் நாயகப்பெண்பிள்ளாய் என்ற பிறி நன்கு பொருந்தும்.

(தேசமுடையாய்!)
பகவத் கீதையில் (18-43) (சௌர்யம் தேஜோத்ருதிர் தாக்ஷ்யம் — க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்.)
என்று தேஜஸ்ஸு க்ஷத்திரிய தர்மமாகச் சொல்லப்பட்டிருப்பதற்கிணங்க இந்த விளி
இவ்வாழ்பாருடைய க்ஷத்திரியத்வத்தைத் தெரிவிக்கும்.
அன்றியும்,
“தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜன்மமும் இழுக்கென்பார்க்குப்
பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசிறே” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸுக்தியின்படியும்,
அதற்கு மூலமான “மண்ணாட்டிலாராகியெவ்விழிவிற்றானாலும்;, ஆழியங்கைப் பேராயற்கு
ஆளாம் பிறப்பு – உண்ணாட்டுத் தேசன்றே” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரத்தின்படியும்
பகவத் சேஷத்வத்திற்கு அநுகூலமான பிறப்பே தேஜஸ்ஸென்று நிர்ணயிக்கப்படுகிறது;
அப்படிப்பட்ட பிறப்பை ஊனேறு செல்வத்து என்ற பதிகத்தில் பாசுரந்தோறும் ஓரோ விதமாக விரும்பினவர்
இவ்வாழ்வாரேயாதலால் தேசமுடையார் இவரேயாகத்தகும்.

இப்பாட்டில் “ஆனைச்சாத்தன்” என்ற பதப்பிரயோகம் கவனிக்கத் தக்கது.
இச்சொல் மலையாள பாஷையிலிருந்து திசைச் சொல்லாகத் தமிழில் வழங்குவதென்பர்.
(ஆன சாதம்) என்று மலைநாடர் வலியனென்னும் பறவையை வழங்குவராம்.
இவ்வாழ்வார் மலைநாட்டில் திருவவதாரித்தவராதலால் அத்திசைச்சொல் இங்குட் பரவசமாகவே அமைந்தது போலும்.

காசும் பிறப்பும் என்று ஆபரண விசேஷங்களைப் பற்றின ப்ரஸ்தாவமிருப்பது இவ்வாழ்வாருடைய சரிதையில்
ஆபரண ப்ரஸ்தாவமுள்ளவாற்றை ஒருவாறு நினைப்பூட்டும்.
“ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே வாரங்கொடு குடப்பாம்பில் கையிட்டவன்” என்ற தனியனும் ஸ்மரிப்பது.

“வாசநறுங் குழ லாய்ச்சியர் மத்தின லோசைபடுத்த தயிரரவம்” என்றது பெருமாள் திருமொழியில்
“கெண்டை யொண்கணை மடவாளொருத்தி கீழையகத்துத் தயிர் கடையக்கண்டு…..
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ….. தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்” என்ற பாசுரத்துச் சொற் சுவைகளை நன்கு நினைப்பூட்டும்.

(நாராணயன் மூர்த்தி கேசவனைப் பாடவும்) திருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவாக வந்த கேசியென்னு மஸுரணை
வதஞ்செய்ததனால் கேசவனென்றது.
இவ்வாழ்வார் தமது திருமொழியில் முதன் முதலாக இந்த வரலாற்றையே பேசியநுபவித்தார்
மாவினை வாய் பிளந் துகந்தமாலை என்று.
ஸ்வ ப்ரபந்தத்தை “நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே” என்று நாராயணனைப் பாடித் தலைக் காட்டினார்.

(கேட்டே கிடத்தியோ) இவ்வாழ்வார் நாடோறும் அந்தணர்களைக் கொண்டு ஸ்ரீராமாயண பாராயணஞ் செய்வித்துத்
தாம் கேட்டவர்.
கேட்டு, இருந்தவிடத்திலிராமல் படையெடுத்துஞ்சென்றவர்.

—————

இதில் குலசேகர ஆழ்வார் எழுப்பப்படுகிறார்.
பொழுது விடிந்ததற்கு அடையாளமாக ஆனைச்சாத்தன் என்ற குருவி எழுந்து பேசுவது, அதாவது ஒலிப்பது இப்பாசுரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனைச்சாத்தன் என்பது ‘வலியன்’ என்று வழங்கப்படும் ‘பரத்வாஜப் பக்ஷி’யாகும்.
இக்குருவி மலையாள மொழியில் ‘ஆனை சாதம்’ என்று வழங்கப்படும்.
ஆனைச்சாத்தன் என்பது மலையாள மொழிச் சொல்லின் திரிபாகும். குலசேகர ஆழ்வாரும் மலையாள தேசத்தைச் சார்ந்தவர்.
அவர் மலையாள நாட்டில் உள்ள வஞ்சிக்களம் எனும் ஊரில் அவதரித்தவர் ஆவர்.

’பேய்ப்பெண்ணே!” என்பதும் குலசேகர ஆழ்வாரைக் குறிப்பதாகும்.
அவர்
“பேயரே யெனக்கி யாவரும், யானுமோர் பேயனே யெவர்க்கும் இது பேசியென்,
’ஆய னே!அரங்கா! என்றழைக்கின்றேன், பேயனா யொழிந்தே னெம்பிரானுக்கே” [பெருமாள் திருமொழி 3.8]
என்பது அவர் அருளிச் செயலாகும்.
எனவே நாச்சியார் அவரை ‘பேய்ப்பெண்ணே!’ என்றழைக்கிறார்.

குலசேகராழ்வாரின் அரண்மனையில் எப்பொழுதும் ஸ்ரீவைஷ்ணவர்களே நிறைந்திருப்பார்கள்.
அதை மந்திரிகள் விரும்பவில்லை. எனவே அவர்கள் பெருமாளின் ஆபரணங்களைத் திருடி மறைத்துவிட்டு
அப்பழியைப் பாகவதர்கள் மேல் போட்டுவிட்டார்கள்.
“என்னடியார் அது செய்யார்; பாகவதர்கள் எடுத்திருக்க மாட்டார்கள்” என்று கூறி அதற்காகச் சத்தியம் செய்ய
குலசேகராழ்வார் பாம்புள்ள குடத்திலே கையைவிட்டார். பாம்பு அவரைத் தீண்டாமல் வெளியே வந்து தலையை ஆட்டி
மூன்று முறை சத்தியம் செய்து போயிற்று. பிறகு நகையை மறைத்தவர்கள் மன்னிப்பு கேட்டு நகையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இந்த வரலாற்றை நினவூட்டும் விதமாகத்தான் இப்பாசுரத்தில் ‘காசும் பிறப்பும்’ எனும் சொற்றொடர் அமைந்துள்ளது.

காசு மற்றும் பிறப்பு என்பவை ஆயர் பெண்கள் அணிகின்ற அச்சுத்தாலி ஆமைத்தாலி ஆகியவற்றைக் குறிக்கின்றன.
இப்படி ஆபரணங்கள் பேசப்படுவதன் மூலம் குலசேகர ஆழ்வாரே காட்டப்படுகிறார்.
மேலும் ’பிறப்பு’ என்பது குலசேகரர் ‘ஊனேறு செல்வத்து’ பதிகத்தில் திருமலையின் மேல் ஏதேனும் ஒரு பிறப்பை வேண்டியதையும் குறிக்கிறது.

‘நாயகப் பெண்பிள்ளாய்’ எனும் சொற்றொடரும் குலசேகர ஆழ்வாரையே காட்டும்.
ஆழ்வார்கள் வரிசையைப் பார்த்தால் குலசேகர ஆழ்வார் நடு நாயகமாக விளங்கிறார்.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் என முன்னால் ஐந்து ஆழ்வார்களும்,
ஆண்டாள் நாச்சியார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் எனப்
பின்னால் ஐந்து ஆழ்வார்களும் இருக்க நடுநாயகமாய் குலசேகராழ்வார் விளங்குகிறார்.

‘பெண்பிள்ளாய்’ என்பதும் இவரையே காட்டும். குலசேகராழ்வார்
‘ஏர்மலர்ப் பூங்குழல்’, ‘ஆலை நீள்கரும்பு’, மற்றும் ‘மன்னுபுகழ் கோசலை’ பதிகங்களில்
தம்மைப் பெண்ணாக வைத்தே அருளிச் செய்திருக்கிறார்.

பெருமானுக்குக் ‘கேசவன்’ எனும் திருநாமம் குதிரை வடிவில் வந்த கேசி என்னும் அரக்கனை அழித்ததால் ஏற்பட்டது.
அத்தகைய கேசி வதத்தை முதன்முதல் பேசியவர் குலசேகர ஆழ்வாரே ஆவார்.

“கேட்டே கிடத்தியோ” என்பதும் குலசேகர ஆழ்வாரையே காட்டுகிறது.
ஒரு சமயம் இராமாயண உபன்யாசத்தில் ஸ்ரீஇராமன் கர தூஷணரோடு தனியாய் யுத்தம் செய்கிறான் என்று சொன்னதைக் கேட்ட
குலசேகரர் உடனே அமைச்சரை அழைத்து, “இராமபிரானுக்குத் துணையாய் நம் சைன்யத்தைத் திரட்டு” என ஆணையிட்டார்.
அப்படி ஓடியவரே இப்போது கேட்டுகொண்டு கிடக்கலாமா? என்று அவர் எழுப்பப்படுகிறார்.

அடுத்து இப்பாசுரத்தில் “தேசமுடையாய்” என்று காட்டப்படுகிறது.
தேசம் என்பது தேஜஸ், பலம், வீர்யம் பொலிவு, போன்ற பொருள்களைத் தரும் இக்குணங்கள் எல்லாம் க்ஷத்திரியருக்கே உரியன.
குலசேகரர் மன்னர். அதுவும் க்ஷத்திரியர் என்பதால் அதுவும் இவருக்கே பொருந்துகிறது.
ஆக ஏழாம் பாசுரத்தில் குலசேகராழ்வார் எழுப்பப்படுகிறார் என்பதை உணர முடிகிறது.

————

”கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம்; கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்) குலசேகரர்க்கு அடுத்த முந்தினவரான நம்மாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
கோதுகலமுடைய பாவாய்! என்றவிளி நம்மாழ்வாரை வற்புறுத்தும்.
கோதுகுலமுடைய என்று வழங்கிவரும் பாடம் பரமக்ருபையுடன் மறக்கத்தக்கது.
அப்பாடம் நெடுநாளாகவே நாடெங்கும் பரவியதனாலாய அநர்த்தம் பெரிதுமுண்டு.
ஸ்ரீ பரகாலஸ்வாமி வியாக்கியானம் செய்தருளுமிடத்து குலம் குலமாக வுனக்குப் பரிசர்யை பண்ணும்படி என்றுரைத்திட்டார்.
அது, கோதுகலமுடைய என்கிற (தவறுதலான) பாடத்தில் அபிநிவேசத்தினால் போலும்.
வஸ்துதஸ்து, வடமொழியில் கௌதூஹலம் என்ற சொல் தமிழில் கோதுகலமெனத் திரீந்தது.
இதில் குகரம் நுழைய ப்ரஸக்தியில்லை.
கோதுகலம் உடைக்குட்டனேயோ என்றார் பெரியாழ்வாரும்.)

கோதுகலமாவது ஆசை; ஆசையையுடைய என்றது.-எம்பெருமானிடத்தில் ஆசையையுடைய,
அல்லது எம்பெருமானுடைய ஆசையைத் தன்னிடத்திலே கொண்டுள்ள என்று இருவகையாகவும் பொருள்படும்.

பட்டர் நம்மாழ்வாரைப் பற்றிப் பேசும்போது ரீஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம் என்று
க்ருஷ்ண குதூஹலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது என்றார்.
க்ருஷ்ண த்ருஷ்ணா என்றதும் க்ருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணை, க்ருஷ்ணனுடைய த்ருஷ்ணை என இருவகையாகவும் விரியும்.
இதனால் தேறின பொருளை
கைம்மா துன்பொழித்தாயென்று கைதலை பூசலிட்டே, மெய்மால யொழிந்தேன் எம்பிரானுமென்மேலானே
என்ற பாசுரத்தினால் நம்மாழ்வார்; தாமே வெளியிட்டருளினர்.
ப்ரியோ ஹி ஜ்ஞாநிதோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய: என்றபடி.
நானும் எம்பெருமானிடத்துக் குதூகலங் கொண்டேன்,
அவனும் என்னிடத்துக் குதூஹலங் கொண்டான் என்றருளிச் செய்தவர் நம்மாழ்வார்.

பாவாய்! என்ற விளியும் இவர்க்குப் பொருந்தும்.
திருவாய் மொழியில் சூழ்வினை யாட்டியேன் பாவையே என்றும்
என்பாவை போயினித் தண்பழனத் திருக்கோளுர்க்கே என்றும்
பலவிடங்களில் தம்மைப் பாவையாகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.

எழுந்திராய் என்ற சொல்லாற்றல் நன்கு நோக்கத்தக்கது;
உட்கார்ந்திருப்பவரையன்றோ எழுந்திரா யென்பது.
மற்றையாழ்வார்களெல்லாரும் அர்ச்சையில் நின்ற திருக் கோலமாகவேயுள்ளார்;
நம்மாழ்வாரொருவரே வீற்றிருந்த திருக்கோலம்.
புத்மாஸநோபவிஷ்டம் என்கிற பூர்வாசார்ய ச்லோக ரத்னமும் இங்கு அநுஸந்தேயம்.

(கீழ்வானம் வெள்ளென்று.) உதயகாலத்தில் கிழக்குவெளுக்கும்.
இங்கும் வகுளுபூஷண பாஸ்கரோதய மாதலாலும்,
அதுதானும் கலியுகத்தின் உதயகாலத்திலாதலாலும் கிழக்கு வெறுத்ததாகச் சொல்லிற்று.

கீழ்வானமென்றபோதே மேல்வானம் நினைவுக்கு வரும்.
நி த்தியவிபூதி மேல் வானமாகும். லீலாவிபூதியானது நம்மாழ்வாருடைய திருவாய்மொழி யவதாரத்தாலே
வையம் மன்னிவீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடே இத்யாதிப்படியே தானே பரமபதமாயிற்று.
ஆகவே கீழ்வானமான இவ்விபூதி வெள்ளென்றது.

(எருமை சிறுவீடு மேய்வான்) வீடு என்று மோக்ஷம்; சிறு வீடு என்று கைவல்ய மோக்ஷம்.
இந்த ஸங்கேதமிட்டருளினவர் நம்மாழ்வார்;
திருவாய்மொழியில் (4-1-10) குறுக மிகவுணர்வத்தொடு நோக்கி என்ற பாசுரத்தின் பொருள் கொண்டு இஃது அறியத்தக்கது.

எருமையென்பது தாமஸப்ரக்ருதிகளை.
நம்மாழ்வார் திருவவதாரம் செய்தருள்வதற்கு முன்னே பலரும் தாமஸ ப்ரக்ருதிகளாய் நல்வீடு செல்லாது
சிறுவீடு முதலியவற்றிற் சென்று பாழாயினர் என்பது இங்கு ஸுசிதம்.

(மிக்குள்ள பிள்ளைகளுமித்யாதி.) மற்றைப் பிள்ளைகளையும் போகவொட்டாமல் தடுத்து
இப்பிள்ளை வாசலில் வந்துதுவள்வதனால் இவருக்குண்டான விலக்ஷணமான ஏற்றம் தோற்றுவதுபோல,
மற்றை யாழ்வார்களிற் காட்டில் நம்மாழ்வார்க்குண்டான ப்ரபந்நஜந கூடல்தத்வமாகிற ஏற்றம் தோற்றுவிக்கப் பட்டது.

போவான் போகின்றாரை என்ற பிரயோகம் வெகு ஆச்சரியமானது.
போவதற்காகப் போகிறவர்கள் என்று சொல்லுவதுண்டோ? இல்லை. அப்படியிருக்க ஏன் சொல்லிற்று?
போவதுதானே ஸ்வயம் ப்ரயோஜனமென்று காட்டுவதற்காகவே சொல்லிற்று.
இத்தகைய பிரயோகம் முதன் முதலாக நம்மாழ்வார் திருவாக்கில் தான் வந்தது;
திருவிருத்தத்தில் போவான் வழிக்கொண்ட மேகங்களே! என்றார்.

(உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்.) கூவிக்கொள்ளும் காலமின்னங் குறுகாதோ
என்னைக் கூவியருளாய் கண்ணனே கூவிக்கொள்ளாய் வந்தந்தோ என்று
பலகாலும் விரும்பினபடியே கூவுவான் வந்து நின்றோமென்கிறாள்,

(மாவாய் பிளந்த தேவாதிதேவனை) இப்போது ஆண்டாள் நோற்பதுபோல
நம்மாழ்வாரும் ஒரு திருவாய் மொழியில் நோன்பு நோற்றார்;
வீற்றிருந்தேழுலகும் என்ற திருவாய் மொழியில் ஏற்ற நோற்றேற்கு என்று முதலிலும்
வண்டமிழ் நூற்க நோற்றேன் என்று முடிவிலும் வருவது காண்க.
அங்ஙனம் நோற்ற திருவாய்மொழியில் தேவாதி தேவனை அநுபவிக்கின்ற ஆழ்வார்
மாவாய் பிளந்தானென்ற விசேஷணத்தையே முதற்பாட்டில் இட்டருளினர்;
வெம்மாபிறந்தான் தன்னை என்றது காண்க.

ப்ரதமப்ரபந்தத்தில் இமையோர் தலைவா! என்றும்;
சரமப்ரபந்தத்தில் அயர்வறுமமரர்களதிபதி என்றும்
தேவாதி தேவனையே முந்துற முன்னம் சேவித்தாராழ்வார்.

(சென்று நாம் சேவித்தால்) வான நாயகனே! அடியேன் தொழவந்தருளே என்று
தேவாதி தேவனை நீர் உம்மிடம் வருமாறு அழைத்தீர்;
அங்ஙனமல்லாமல் அவனிடம் நாம் சென்று சேவிக்கலாம் வாரும் என்றழைக்கிறாள் போலும்.

(ஆவாவென்று) ஆவாவென விரங்கார் அந்தோவலிதே கொல், மாவாய் பிளந்தார் மனம் என்றும்;,
அடியேற்கு ஆவாவென்னாயே என்றும்
நீர் விரும்பினபடியே மாவாய்பிளந்த பெருமான் உமக்கு ஆவாவென்பன் என்று காட்டுகிறபடி

(ஆராய்ந்து) ஆரென்னையாராய்வார் என்ற உம்முடைய குறையும் தீரும் என்று காட்டியபடி.

இது திருப்பாவையின் எட்டாம் பாசுரமாகும். இதன் உள்ளர்த்தத்தை ஆராய்ந்தால் நம்மாழ்வாரை எழுப்புவதை உணர முடிகிறது.
‘கீழ்வானம் வெள்ளென்று’ என்று முதலில் கிழக்கு வெளுத்ததை இப்பாசுரம் காட்டுகிறது.
நம்மாழ்வார் அவதரித்ததை ‘வகுள பூஷண பாஸ்கரோதயம்’ என்பார்கள்.
சூரியன் உதித்து இருள் அகல்வது போல, நம்மாழ்வர் அவதரித்து அஞ்ஞான இருள் அகன்றது இங்கே கூறப்படுகிறது.

‘எருமை சிறுவீடு’ என்று கூறுகிறது பாசுரம். சிறு வீடு என்று ஒன்று இருந்தால் பெருவீடும் இருக்கும்.
சிறு வீடு என்பதைக் கைவல்யானந்தம் என்றும், பெருவீடு என்பதை மோக்ஷம் என்றும் பொருள் கூறுவார்கள்.
ஆத்மாவை அறிந்து ஆனந்தப்பட்டு அங்கேயே நின்றுவிடக் கூடாது;
அதற்கும் மேலே மோக்ஷம் என்ற பெருவீடு ஒன்று இருக்கிறது என்று காட்டியவர் நம்மாழ்வார்.
மேலும் எம்பெருமானிடத்தில்தான் பரமானந்தம். எனவே, பெருவீட்டை ஆலோசிக்க வேண்டும்;
எம்பெருமானைப் பற்றி நிற்க வேண்டும் என்று நம்மாழ்வார் ‘சூழ்ந்த’ [3775] எனும் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.

“போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான்” என்பதும்
நம்மாழ்வாரைக் காட்டி எழுப்புவது போலிருக்கிறது.
வடதேசத்தில் யாத்திரை போய்க்கொண்டிருந்த மதுரகவி ஆழ்வாரைப் போகாமல் காத்துக் குருகூருக்கு
வரவழைத்தது நம்மாழ்வாரின் திருவுளம் அன்றோ?

“அடுத்துக் கூவுவான்” என்பதுவும் நம்மாழ்வாரையே காட்டும்.
நம்மாழ்வாரைக் கூவுவதற்காகவே அதாவது எழுப்புவதற்காகவே மதுரகவி ஆழ்வார் வந்தார்.

மேலும், “கூவிக் கொள்ளும் காலமின்னும் குறுகாதோ?” [3323] என்றும்,
“கூவிக்கொள்ளாய் வந்தந்தோ! [3767] என்றும் கூவுதல் எனும் சொல்லை மிகுதியும் சொன்னவர் நம்மாழ்வாரே ஆவார்.

‘கோதுகலமுடையாய்’ என்பதும் நம்மாழ்வாரையே காட்டுகிறது.
ஏனெனில் கிருஷ்ண குதூகலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது.
நானும் அவனிடம் அவனிடம் குதூகலம் கொண்டேன்; அவனும் என்னிடம் குதூகலம் கொண்டான் என்பார் நம்மாழ்வார்.

‘பாவாய்’ என்பதன் உள்பொருளை நோக்கினால் நம்மாழ்வார் தம்மைப் பாவையாய்ச் சொன்னது விளங்கும்.
“சூழ் வினையாட்டியேன் பாவையே” என்றும்,
“என் பாவை போய் இனித் திருக்கோளூர்க்கே” என அருளியவர் நம்மாழ்வார்.

’எழுந்திராய்’ என்று நம்மாழ்வாரைத்தான் எழுப்புகிறர்கள். உட்கார்ந்திருப்பவரைத்தானே எழுப்புவார்கள்.
ஆழ்வார் பெருமக்களில் நம்மாழ்வார் மட்டுமே அமர்ந்த கோலத்தில் இருப்பவர். எனவே அவர் எழுப்பப்படுகிறார்.

’தேவாதிதேவன்’ என்பதற்கு நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் முதலிலேயே
“உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்” என்பது காட்டப்படுகிறது.

“ஆவாவென்று ஆராய்ந்து”—
நம்மாழ்வார் “ஆர் என்னை ஆராய்வார்” [திருவாய்மொழி—5-4-5] என்று சொன்னவர்.
“தன்னை ஆராய வேண்டும்; பகவானை ஆராய வேண்டும்; அவனை அடையும் வழியை ஆராய வேண்டும்;
அடைந்தபின் ஏற்படும் பயனை ஆராய வேண்டும்; அவனை அடையவிடாமல் தடுக்கும் தடைகளை ஆராய வேண்டும்”
என்ற அர்த்த பஞ்சக ஞானத்தைத் தான் நம்மாழ்வாரின் பாசுரங்கள் அருளுகின்றன.

——————

ஒன்பதாம் பாசுரத்தில் எழுப்பப்படுபவர் திருமழிசை ஆழ்வார் ஆவார்.
“தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்!
மாமீர் அவளை எழுப்பீரோ! உன்மகள்தான்
ஊமையோ! அன்றிச் செவிடோ! அனந்தலோ!
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்).
நம்மாழ்வாருக்கு அடுத்த முந்தினவரான திருமழிசைப்பிரானை யுணர்த்தும் பாசுரமிது.
இதில் மாமான் மகளே! என்ற விளி ஒருவகையான தேஹ ஸம்பந்த்தில் நோக்குடையது.
ஆண்டாளுக்கும் திருமழிசை யாழ்வார்க்கும் ஒரு வகையான தேஹஸம்பந்தமுண்டு :
அதாவது – ஸ்ரீதேசிகன் கோதாஸ்துதியில்
“கமலாமிவாந்யாம் கோதாம்” என்றும்
“ஸந்த : பயோதி துஹிதுஸ் ஸஹஜாம் விதுல் த்வாம்” என்றும் அருளிச் செய்தபடியே
ஆண்டாள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியாவள்

“பார்க்கவீ லோகஜநநீ க்ஷ்ரஸாகரஸம்பவா” என்ற அமரகோசத்தின் படியும் இதிஹாஸ புராண வரலாற்றின் படியும்
லக்ஷ்மி (ஆண்டாள்) ப்ருகு குலத்தில் தோன்றியவள்.
திருமழிசைப்பிரானும் ப்ருகு குலத்தில் தோன்றியவரென்பது சரித்திர ஸித்தம்.
இத்தகைய ஸமாந குலஸம்பந்தம் இங்கு நோக்கத்தக்கது.
ரிஷி குலத்திலே பிறந்து பிரம்பன் குடியிலேயானார் அவர்.
ப்ராஹமண குலத்திலே பிறந்து கோபாலர் குலத்திலேயானாள் இவள். இதுவும் ஒற்றுமை நயம்.

(தூமணி மாடத்து) சிறந்த மாணிக்கக் குப்பியினுள்ளேயுள்ளது வெளியில் நிழலிட்டுத் தோன்றும்.
திருமழிசைப்பிரான் “உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே” என்று வேண்டிக் கொண்டபடியே
உள்ளிருந்த திருமால் அப்படியே வெளியிற் பொசிந்து காட்சி தந்தமையால் இவர் தூமணிமாட மென்னத் தகுதியுடையார்.

(சுற்றும் விளக்கெரிய) விளக்காவது ஞானவொளி.
“சாக்கியங் கற்றோஞ் சமண்கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்,” என்றபடி
இவ்வாழ்வார் ஸகல மதங்களிலும் புக்கு ஸர்வதோமுகமான ஞான விளக்கம் பெற்றவராதலால்
சுற்றும் விளக்கெரிதல் இவர்க்கு அஸாதாரணம்.

“யானறிந்தவாறு – ஆரறிவார்” என்றும்
“என் மதிக்கு விண்ணெல்லாமுண்டோ விலை” என்றும் இவரது பாசுரங்களினாலும் இது ஸித்தம்.

(தூபம் கமழ) சிறந்த ஞானமிருத்தல் மாத்திரம் பயன்படாது; அது நன்கு பரிமளிக்கவேண்டும்.
எம்பெருமானையன்றி வேறொரு தெய்வத்தைத் தொழாதிருத்தலே ஞானத்திற்குப் பரிமளம்.
“மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்பது இவ்வாழ்வாருடைய திருவாக்காகும்.

(துயிலணை மேல் கண்வளரும்) இவ்வாழ்வாருடைய திருக்கண் செல்வது
சயனத்திருக்கோலமான எம்பெருமான்களின் மீது தான்.
கச்சி வெஃகாவிலும் திருக்குடந்தையிலுமே பெரும்பாலும் இவர் காலம் கழித்தது.
சயனத் திருப்பதிகளையே ஒரு கோர்வையாக வெடுத்துப் பாசுரம் பாடினவரும் இவ்வாழ்வார்;
நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள் நாகத்தணையரங்கம் பேர் அன்பில் –
நாகத்தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத்தனவான்” என்றது காண்க.

(துயிலணை மேல் கண்வளரும் மாமானுடைய மகளே!)
மகள் என்றதனால் விதேயத்வம் சொன்னபடி.
மகள் சொற்படி தந்தை கேட்பதும் தந்தை சொற்படி மகள் கேட்பதும் வழக்கம்.
மாமான் என்றது மஹா மஹான் என்றபடி.
துயிலணைமேல் கண்வளரும் மாமான் யதோக்தகாரி யெம்பெருமான்;
அப்பெருமாள் இவ்வாழ்வார் சொற்படி கேட்டவர்;
‘கணிகண்ணன் போகின்றான் – நீயுமுயன்றன் பைந் நாகப் பாய் சுருட்டிக்கொள்’ என்ற போது
அப்படியே சுருட்டிக்கொண்டு புறப்பட்டார்;
“உன்றன் பைந்நாகப்பாய் விரித்துக்கொள்” என்ற போதும் அப்படியே.

இனி, துயிலணைமேற் கண்வளரும் மாமான் – ஆராவமுதன்;
அப்பெருமாளும் “எழுந்திருந்து பேசுவாழி கேசனே” என்ற
இவ்வாழ்வாரது வேண்டுகோளின்படி எழுந்திருந்தவர் என்பது ப்ரஸித்தம்.

(உன் மகள் தான் ஊமையோ)
வாய் திறவாமலே ஹஸ்த சேஷ்டை முதலியவற்றால் காரியம் செய்வது ஊமைகளின் பணி.
இவ்வாழ்வாரும் யாத்திரை யடைவில் பெரும்புலியூரென்னும் கிராமத்தில் ஒரு வேதியன் வீட்டு வாசல்
திண்ணையில் சிறிது பொழுது எழுந்தருளியிருக்க அங்கு வேதமோதிக்கொண்டிருந்த அந்தணர்கள்
நீறுபூத்த நெறுப்புப்போலுள்ள ஆழ்வாருடைய மஹிமையைத் தெரிந்துகொள்ளாமல்
அவரைக் கீழ்ச்சாதியராக வெண்ணி வேதாத்யயனம் அவருடைய காதிற்படலாகாது என்று கருதி ஓத்துத் தவிர்ந்திருக்க,
அக்குறிப்பை யறிந்த ஆழ்வார் அவ்விடத்தை விட்டுத் தூரத்திற் சென்று வேறோரகத்து மேடையில் வீற்றிருக்கையில்
அந்த வேதியர்கள் மீண்டும் வேதமோதத் தொடங்கி, விட்ட வாக்கியம் தோன்றாது மயங்கி நிற்க,
ஆழ்வார் அது கண்டு கறுப்பு தெற்களைக் கையுகிராலே இடந்துபோட,
அப்பொருளுள்ள வேதவாக்கியம் அவர்கட்குத்தோன்றிற்று:
அதாவது – “க்ருஷ்ணானாம் வ்ரித்றீணாம் நகநிர்பிந்நம்” என்பது.

உடனே அவர்கள் ப்ரதக்ஷ்ண ப்ரணாமாதிகளால் இவரை உபசரித்து க்ரதார்த்தராயினர் என்பது சரித்திர வரலாறு.
இங்ஙனமாக வாய் திறவாமலே, இங்கிதத்தினால் காட்டினது பற்றி ஊமையோ என்றது.
சொன்ன சொற்களைச் செவி யேற்காதவர் செவிடர்: அந்தச் செவிடும் இவரது சரிதையில ப்ரஸித்தம்:
முன் சொன்ன பெரும்புலியூரில் அந்தணரடிகள் யாகஞ் செய்து கொண்டிருந்த விடத்தில்
இவ்வாழ்வாரை எழுந்தருள்வித்துக் கொண்டு போய்ச் சில மஹான்கள் இவர்க்கு அக்ர மொழிகளை வர்ஷிக்க,
அவற்றை இவ்வாழ்வார் செவியேற்காதிருந்தனர் என்ற வரலாறு காண்க.

(அனந்தலோ) தூக்கமோ என்றபடி, பரமைகாந்திகட்குத் தூக்கமாவது பாஹ்ய விஷயங்களிற் சிறிதும்
நெஞ்சு செல்லாதிருக்கப் பெறுதலே.
“உன்னைத் தெரித்தெழுதி வர்சித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினென் போது” என்றும்
“தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாமமேத்தப் பொழுதெனக்கு மற்றதுவே போதும்” என்று மருளிச்
செய்யு மிவ்வாழ்வார்க்கு இந்த நிலைமையே அனந்தலாகும்.

(ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ)
மற்றையாழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வாருடைய பரமைகாந்தித்வம் மிக விலக்ஷணம் என்பது இங்கு அறியத்தக்கது.
“பிதிரு மனமிலேன் பிஞ்ஞகன்றன்னோடெதிர்வன், அவனெனக்கு நேரான்” என்னும் படியான
திரு நாவீறு இவர்க்கே அஸாதாரணமன்றோ!
இது தான் பெருந்துயில், எம்பெருமானை யொழிந்த மற்றையோரைக் கண்கொண்டு பாராமையிற் பெருமை.

(மாமாயன்)
“மாயமென்ன மாயமே” என்றும்,
“மாயமாய மாக்கிகனாய் உன்மாயமுற்று மாயமே” என்றும் பலகாலும் எம்பெருமானது மாமாயங்களைப் பேசுகிறவர் இவ்வாழ்வார்.

(மாதவன்) “மாதவனை ஏத்தாதார் ஈனவரே” என்றவரும் இவ்வாழ்வாரே,
“திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” என்றதுங் காணலாம்.

(வைகுந்தன்)
“வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு” என்றவர் இவ்வாழ்வாரே.
வைகுந்தனது சேவடிமேல் தாம் பாசுரம் பாடினவராகச் சொல்லிக்கொண்டார்.

ஆகவே, மாமாயன், மாதவன், வைகுந்தனென்ற திருநாமங்கள் இவ்வாழ்வார்க்குப் பரம போக்யங்களென்பது ஸூசிதம்.

தூமணி மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிகின்றன. ஒரே பிரகாசமாய் இருக்கிறது.
திருமழிசை ஆழ்வார் உள்ளத்தில் பகவான் பிரகாசமாய் வீற்றிருக்கிறான்.

திருப்பெரும்புலியூர் அக்ரகாரத்தில் ஒரு யாகம் நடக்கிறது. அந்த யாகத்தில் அக்ர பூஜையை திருமழிசையாழ்வாருக்கு அளிக்கும்போது
அனைவரும் எள்ளி நகையாடினர். தம் பெருமையை எல்லாம் அவர் மறைத்துக் கொண்டு இருந்ததால்
அவர் பெருமை யாருக்கும் தெரியவில்லை. அவர் மிகவும் சாமான்யமாக இருந்ததால் அவரைப் பற்றித் தப்பாகப் பேசினார்கள்.
உடனே திருமழிசையாழ்வார் தம் உள்ளே குடிகொண்டிருந்த பரமாத்மாவைக் காட்டினார்.

‘சுற்றும் விளக்கெரிய’ என்பது சாக்கியம், சைவம், சமணம் எல்லாம் சென்று பின்னர் ஸ்ரீவைஷ்ணவமே பெரிது என்று
இந்த ஆழ்வார் ஞான விளக்கம் பெற்றதைக் குறிக்கும்.
திருமழிசை ஆழ்வாருக்கு பெருமாளின் சயனக் கோலத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
அதைத்தான் இங்கு ‘துயிலணை மேல் கண் வளர’ என்று காட்டுகிறார்கள்.
அவன் படுத்திருக்கும் திவ்ய தேசங்கள் எல்லாவற்றையும் இவர் ஒரு பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.

“நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேரன்பில்—நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்
அணைப்பார் கருத்தனா வான்”-[நான்முகன் திருவந்தாதி—36]

‘மாமான் மகளே’ என்பது திருமழிசையாழ்வாருக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும் உள்ள திருமேனி சம்பந்தம் சொல்லப்படுகிறது.
இவர்களுக்குள் உறவுமுறை உண்டு. மகாலட்சுமியின் திருஉருவமே ஆண்டாள் ஆவார். மகாலட்சுமி பிருகு வம்சத்தில் தோன்றியவர்;
இந்த ஆழ்வாரும் பிருகு வம்சத்தவர். எனவே இருவருக்கும் உள்ள உறவு முறை இங்கு மறைமுகமாய்க் காட்டப்பட்டுள்ளது.

ஊமைகள் சைகைகளால் சாடை காட்டிப் பேசிக் கொள்வார்கள். திருமழிசையாழ்வாரும் ஒருமுறை சைகையாலே கருத்தறிவித்தார்.
அதாவது திருப்பெரும்புலியூரில் வேதபாராயணம் நடக்கும்போது இந்த ஆழ்வார் அங்கு வந்தார்.
உடனே அவர்கள் பாராயணத்தை நிறுத்தி விட்டார்கள். ஆழ்வாரை வரவேற்ற பிறகு தொடர நிறுத்திய இடம் அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லை.
உடனே ஆழ்வார் கீழே கிடந்த கருகிய நெல்லை எடுத்து நகத்தால் கிள்ளிக் காண்பித்தார்.
உடன் அவர்கள் முதல் காண்டத்தில் “க்ருஷ்ணாநாம் வ்ரீஹீணாம்” என வருவதை நினைவுக்குக் கொண்டு வந்தார்கள்.
இப்படி வாயால் பேசாமல் ஊமைபோல சைகையால் காண்பித்ததால் ‘ஊமையோ’ என்பது திருமழைசையாழ்வார்ருக்குப் பொருந்தும்.

மேலும் அந்தப் பெரும்புலியூரில் ஆழ்வாரை அனைவரும் ஏசினார்கள்.
ஆனால் திருமழிசையாழ்வாரோ காதில் ஏச்சினை விடாத செவிடாய் எதையுமே செவி மடுக்கவில்லை.
எனவே ’செவிடோ’ என்பது இவரையே குறிக்கும்.

‘அனந்தலோ’ என்பது தூக்கத்தை அதாவது பிற விஷயங்களில் நெஞ்சு செல்லாமல் இருப்பதைக் காட்டும்.
திருமழிசையாழ்வாரும்,
“தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்திப் பொழுது எனக்கு மற்றவை போதும்” என்று வாழ்ந்தவர்.
எனவே ஒன்பதாம் பாசுரத்தில் திருமழிசையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

———

அடுத்துப் பத்தாவது பாசுரம்:

”நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்)
திருமழிசை யாழ்வாருக்கு அடுத்த முந்தினவரான பேயாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
ஓடித் திரியும் யோகிகளாய் ஒருவரோடு ஒருவர் சேராமல் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த
பொய்கையார் பூதத்தார் பேயார் இம்மூவரையும் ஒன்று சேர்த்து அநுபவிக்கக் கருதிய எம்பெருமான்
ஒரு பெரு மழையை வியாஜமாக்கித் திருக்கோவலிடை கழியில் நெருக்கி யநுபவித்தானென்பது வரலாற்றின் சுருக்கம்.

இப்பேயாழ்வாரைப் பற்றித் திருவரங்கத்தமுதனார் நூற்றந்தாதியில் அருளிச் செய்யுமிடத்து
“மன்னிய போpருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவன்” என்றார்.
பொய்கையாரும் பூதத்தாரும் இருவிளக்கேற்றியிருளையகற்ற,
இவ் வாழ்வார் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று தொடங்கிப் பலாநுபவம் செய்தருளினார் என்பர் ஆன்றோர்.
ஆவ்வர்த்தமே யிங்கு முதலடியிற் பொலியும்.

நோற்று –
மற்றையிரண்டு ஆழ்வார்களும் விளக்கேற்றுகையாகிற உபாயாநுஷ்டானஞ் செய்யவே என்றபடி.

சுவர்க்கமாவது ஆனந்தாநுபவம்.
“யஸ்த்வயாஸஹ ஸஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயாவிநா” என்று ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டி அருளிச் செய்ததுங் காண்க.

“வாசல் திறவாதார்” என்றது பேயாழ்வார்க்கு மிகவும் பொருத்தமான லிங்கம்.
திருக்கோவ லிடைகழியில் பொய்கையார் முன்னே புகுந்து தாளிட்டுக் கொண்டார்;
பிறகு பூதத்தார் வந்து சேர அவர்க்கு அப்பொய்கையார் வாசல் திறந்தார்.
பிறகு வந்து சேர்ந்த பேயார்க்குப் பூதத்தார் வாசல் திறந்தார்.
இப் பேயார்க்குப் பிறகு ஒருவரும் வந்து புகாமையினால் வாசல் திறக்கவேண்டிற்றில்லை.
ஆகவே வாசல் திறவாதார் என்றது பேயாழ்வார்க்கு மிகப்பொருத்தமாக அமைந்த குறிப்பு.

(நாற்றத்துழாய்முடி நாராயணன்)
இவ்வாழ்வாருடைய பாசுரங்கள் திருத்துழாய் மயமாகவேயிருக்கும்.
திருக்கண்டேனுக்கு அடுத்த பாசுரம் “பொன் தோய்வரை மார்பில் பூந்துழாய்” என்பது.
அதற்கடுத்த பாசுரம் “மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்வன்” என்பது.
முடிவு பாசுரத்திலும் “தண்டுழாய்த்தார் வாழ் வரை மார்பன்” என்றார்.
இடையிலும் பல பாசுரங்கள் காண்க.

ஒன்பதாவது பாசுரத்தில் (நாமம் பல சொல்லி – யென்பதில்)
நாராயணனையும் திருத்துழாயையும் கண்ணனையும் சேர்த்துப் பாடினார் பேயார். இதுவும் ஒரு சிறந்த பொருத்தம்.

“காண்காணென விரும்பும் கண்கள்” என்று ஒரு நொடிப் பொழுதும் கண்மூடி யிருக்க மாட்டாமையைச்
சொல்லிக் கொண்ட நீர் கும்பகர்ணனுக்கும் மேலாக இன்னமும் துயில் கொள்ளல் தகுதியோ என்கிறாள்
பண்டோருநாளென்று தொடங்கி.

இப்பாட்டில் நட்ட நடுவில் இராமபிரானுடைய திவ்ய சரித்திர மொன்றை ஆண்டாள் அமைத்தது
பேயாழ்வாருடைய திருவந்தாதியில் நட்ட நடுவில்; “அவனே – இலங்காபுரமெரித்தானெய்து” என்றும்
“எய்ததுவும் தென்னிலங்கைக் கோன்வீழ” என்றும் அருளிச் செய்தமைக்கு நன்கு ஒக்கும்.

திருமழிசையாழ்வாரை யுணர்த்தின் கீழ்ப்பாட்டில் அனந்தலோ என்று வெறும் அனந்தலே சொல்லிற்று.
இப் பாட்டில் ஆற்றவனந்தலுடையாய்! என்கிறது –
மழிசையர் கோனுக்கும் இவ்வாழ்வார் ஆசாரியராதலால் விசேஷணமிட்டபடி அனந்தல் என்று
ஹேயமான உறக்கமன்று சொல்லுகிறது.
ழூஉரோவிந்யஸ்த ஹஸ்தாஸ்தே நித்ராயந்தே ஸுநிர்ப்பரா :- என்று பகவச் சாஸ்திரங்களில்
கொண்டாடப்பட்ட ‘அனந்தல்’ பரமை காந்தித்வ ஸீமா பூமியைக் காட்டுமது.

(அருங்கலமே!) எம்பெருமானது திருவருளை மிக அருமையாகப் பெற்ற ஸத் பாத்ரமே ! என்றபடி.
பாசுரம் தொடங்கும் போதே “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று ஆனந்தமாகத் தொடங்கப்பெற்ற
பகவத் பரமக்ருபா பாத்ரபூதர் மற்றொரு ஆழ்வாரில்லையே.

(தேற்றமாய் வந்துதிற) உம்முடைய திருநாமமோ பேயார்;
பேய்த்தனமாக வாராமல் தேறி வந்து திறவும் என்கிறாள்.

இப்பாசுரத்தில் பேயாழ்வார் எழுப்பப்படுகிறார்.
“மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்” என்பதன் மறைமுக விளக்கமே பேயாழ்வாராகும்.

திருக்கோவிலூர் திவ்யதேசத்தில் சிறியதோர் இடத்தில் மழையின் பொருட்டு பொய்கையாழ்வார் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டார்.
பின்னர் பூதத்தாழ்வார் வந்து கதவைத் தட்டப் பொய்கையாழ்வார் திறந்தார். அடுத்துப் பேயாழ்வார் வந்து தட்டினார்.
பூதத்தாழ்வார் திறந்தார். பின்னர் யாரும் வரவில்லை; கதவைத் தட்டவில்லை.
யாருக்கும் கதவைத் தட்ட வேண்டிய அவசியம் எழவில்லை. எனவே வாசல்திறவாதார் ஆகிறார் பேயாழ்வார்.

‘நாற்றத் துழாய்’ எனப்படும் திருத்துழாய் மீது அதிகமான பாசுரங்கள் அருளிச் செய்தவர் பேயாழ்வாரே ஆவார்.
“இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன் பொன்தோய் வரைமார்பில் பூந்துழாய்”[மூன்றாந்திருவந்தாதி—2]

“மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன்”[மூன்றாந்திருவந்தாதி—3]

என்பன அவர் அருளிச் செயல்களாகும்.

முந்தைய பாசுரத்தில் ‘அனந்தலோ’ என்று திருமழிசையாழ்வார் எழுப்பப்பட்டார்.
இதில் ‘ஆற்ற அனந்தலுடையாய்’ என்பது திருமழிசை ஆழ்வாரின் ஆச்சாரியரான பேயாழ்வாரைக் குறிக்கிறது.

திருமழிசையாழ்வார் பகவானின் பெருமை உணராமல் மனம் போன போக்கில் சுற்றி வந்தார்.
அப்போது பேயாழ்வார் ஒரு செடியை வெளியில் வேர் தெரியும்படி நுனிப்பாகத்தைப் பூமியில் நட்டார்.
அதுவும் இல்லாமல் ஓட்டைக் குடத்தைக் கயிற்றில் கட்டிக் கிணற்றில் நீர் எடுத்தார்.
இதைக் கண்ட பேயாழ்வார் “இது என்ன பைத்தியக் காரத்தனம்?” என்று கேட்க,
“பெருமாளின் பெருமை உணராத நீயன்றோ பைத்தியக்காரத்தனம் செய்கிறீர்” என்று அவரைத் திருத்தினார் பேயாழ்வார்.

கும்பகருணன் இப்பாசுரத்தில் பேசப்படுகிறான். ’கும்ப’ என்பது கலசத்தைக் குறிக்கும்; ‘கரணம்’ என்பது காரணமாகும்.
கலசத்தைக் காரணமாகக் கொண்டு பிறந்தவர் அகத்திய முனிவர் ஆவார்.
அகத்திய முனியே தோற்றுப் போகும்படியான நாவன்மை, புலமை கொண்டவர் பேயாழ்வார்.
எனவே அகத்தியர் தோற்று உனக்குத் தன் தமிழ்ப் புலமையைத் தந்துவிட்டாரோ என்றும் பொருள் கொள்ளப்பட்டு
அதுவும் பேயாழ்வாரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

”தேற்றமாய் வந்து கதவைத் திற” என்று வேண்டப்படுகிறது.
அதாவது, ‘அழகாய் வா’ என்றழைக்கிறது.
உன் பெயரே பேயாழ்வார் என்பதால் அச்சப்படப் போகிறார்கள். ‘அழகாய் வா’ என்று பேயாழ்வார் எழுப்பப்படுகிறார்.
இவ்வாறு பத்தாவது பாசுரத்தில் பேயாழ்வார் எழுப்பப்படுகிறார்.

——————–

அடுத்த பதினோராவது பாசுரத்தில் பூதத்தாழ்வார் எழுப்பப்படுகிறார்.

”கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்!
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்)
பேயார்க்கு அடுத்த முந்தினவரான பூதத்தாரை யுணர்த்தும் பாசுரமிது.
இதில், குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! என்ற விளி பூதத்தார்க்கு நன்கு பொருந்தும்.
பல பொருள்களை யுடையதான கோ என்னும் சொல் கோதா என்ற விடத்திற்போல ஸ்ரீ ஸூக்தியைச் சொல்கிறதிங்கு.
கோவலர் – ஸ்ரீ ஸூக்திகளை யருளவல்லவர்களான ஆழ்வார்கள்.
குற்றமொன்றில்லாத என்ற விசேடணம் முதலாழ்வார்கள் மூவர்க்கே பொருந்தும்;
யோநிஜத்வமாகிற வொருகுற்றம் மற்றையாழ்வார்களுக்குண்டு;
அக்குற்ற மொன்றும் இல்லாத கோவலர் முதலாழ்வார்கள்

அவர்களுள் பொற்கொடியே!
கோல்தேடி யோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம் என்கிற பாசுரத்தினால்
தம்மை ஒரு கொடியாகச் சொல்லிக்கொண்டவர் பூதத்தாழ்வாரே யாவர்.
எம்பெருமானாகிற உபத்நத்தைத் தேடிச் செல்லுகின்ற கொடி போல்வேன் நான் என்றவர் இவரேயிறே.
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்பது முதலாழ்வார் மூவர்க்கும் பொதுவான வாசகம்.

கற்றுக் கறவை கன்றாகிய கறவை. (கறவை யென்பதனால் ஸ்ரீ ஸூக்தி விவஸ்த்ம்)
மற்றை யாழ்வார்கள் பெரிய பாசுரங்கைள யளித்தார்கள்.
முதலாழ்வார்கள் அங்ஙனன்றிக்கே வெண்பாவகிய மிகச் சிறிய பாசுரங்களை யளித்தார்கள்.
பொய்கையாழ்வாரருளிய திருவந்தாதி கறவைக் கணம்;
பூதத்தாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள்;
பேயாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள் பல.
க்ரமேண ஏகவசந த்விவசந பஹுவசநங்கள் இணங்கின அழகு காண்க

(செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்)
தேசமெங்கும் திரிந்து பகவத விரோதிகளை நிரஸிக்க வேணுமென்கிற அர்த்தத்தை
எண்டிசையும் பேர்த்தகரம் நான்குடை யான் பேரோதிப் பேதைகாள்!
தீர்த்தகரராமின திரிந்து என்ற பாசுரத்தினால் வெளியிட்டவர் இவ்வாழ்வாரே.

புற்றரவல்குல் என்பது இடையழகை வருணிப்பதாகும்.
ஸ்வாப தேசத்தில் இடையழகாவது பக்தியின் பெருமை.
ஞானம் பக்தி விரக்தி என்ற மூன்றில் பக்தியானது இடைப்பட்டதாதலால் இடையழகென்பது பக்தியின் அழகேயாகும்.
இவ்வாழ்வார் தம்முடைய திருந்தாதியை முடிக்குமிடத்து
என்றனளவன்றால் யானுடையவன்பு என்றே முடித்தார். இதனால் இவரது இடையழகு நன்கு வெளிப்பட்டதாயிற்று.
அன்பிலே தொடங்கி அன்பிலே தலைக்காட்டினார்.

புனமயிலே! என்ற விளியும் இவர்க்கு அழகாகப் பொருந்தும்.
பொழிலிடத்தே வாழும் மயில்; இவ்வாழ்வார் தோன்றிய தலமோ திருக்கடல்மல்லை;
அதனைப் பாடின கலியன் கடி பொழில் சூழ்கடன் மல்லை என்றே பன்முறையும் பாடினர்.
மயில் மேகத்தைக் காண்பதிலே மிகக் குதூஹல முடைத்தாதலால்,
மேகம் நீர்பருக வருமிடமான கடற் கரையிலே மயில்கள் மகிழ்ந்து நிற்கும்.
இவ்வாழ்வார் நின்றவிடமும் கடற கரையிலேயிறே.

(சுற்றுத்துத் தோழிமாரித்யாதி.) இவர்க்குப் பொய்கையாரும் பேயாரும் சுற்றத்தவர்கள்;
மற்றையாழ்வார்கள் தோழிமார்.

(முகில் வண்ணன் பேர் பாட.)
முந்துற முன்னம் முகில் வண்ணன் பேர் பாடினவர் இவ்வாழ்வாரேயாவர்;
உலகேழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் ஏத்துமென்னெஞ்சு என்ற இவர் பாசுரம் காண்க
புன மயில் முகில் வண்ணனைத் தானே பாடும்.

இப்பாசுரத்தில் “பொற்கொடியே” என்று பூதத்தாழ்வார் குறிப்பிடப்படுகிறார்.
அவர்தான் தம்மைப் பொற்கொடியாகக் கூறிக் கொள்வார்.
“கோல்தேடி ஓடும் கொழுந்து அதே போன்றதே மால்தேடி ஓடும் மனம்” என்பது அவர் அருள் வாக்காகும்.

மேலும் ‘புனமயிலே’ என்பதும் பூதத்தாழ்வாரையே காட்டும்;
பூதத்தாழ்வார் கடற்கரையில் இருக்கும் திருக்கடல்மல்லை [மகாபலிபுரம்] என்னும் திவ்யதேசத்தில் அவதரித்தவர்.
கடற்கரையில் சோலைகள் இருக்கும். “கடிபொழில்சூழ் கடல் மல்லை” என்பது அருள்வாக்கு.
சோலைகளில் மயில் குடியிருக்கும். மேலும் மயில் மேகத்தைக் கண்டால் தோகை விரித்து ஆடும்.
மேகம் நீர் முகந்து கொள்ள கடலுக்குத்தான் வரும். அப்போதும் மயில் ஆடும்.
எனவே ‘புனமயிலே’ என்பது பூதத்தாழ்வாரையே காட்டும்.

மற்றும் பூதத்தாழ்வார் மேக வண்ணன் என்று பெருமானைக் காட்டுவார்.
“உலகேழும் முற்றும் விழுங்கும் முகில்வண்ணன் ஏத்தும் என் நெஞ்சு” என்பது அவர் அருளிச் செயலாகும்.
இப்பாசுரத்திலும் முகில்வண்ணன் எனும் திருநாமம் கூறப்படுகிறது.

“சுற்றத்துத் தோழிமார் எல்லாரும்” என்பதன் மூலம் பேயாழ்வார் காட்டப்படுகிறார்.
எப்படியெனில்,
பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் இவருக்குச் சுற்றமாவார்கள்;
மற்ற ஆழ்வார்கள் எல்லாரும் தோழிகள் ஆவர்.
இவ்வாறு பதினோராவது பாசுரத்தில் பூதத்தாழ்வார் எழுப்பப்படுகிறார்.

————-

அடுத்துப் பன்னிரண்டாவது பாசுரத்தில் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

“கனைத்திளம் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்)
பூதத்தாழ்வார்க்கு அடுத்து முந்தினவரான பொய்கை யாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
தங்காய்! என்ற விளி இவர்க்கு நன்கு பொருந்தும்
உலகில் தங்கையென்று ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும் தமக்கையென்று மூதேவியையும் வழங்குவர்கள்.
‘சேட்டை தம்மடி யகத்து’ என்ற திருமலைப் பாசுரத்தில், தமக்கைக்கு வாசகமான ஜ்யேஷ்டா என்ற சொல்லால்
மூதேவியைக் குறித்தமை காண்க.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாமரை மலரிற் பிறந்தவள்.
‘வனச மலர்க் கருவதனில் வந்தமைந்தாள் வாழியே’ என்கிறபடியே பொய்கை யாழ்வாரும் தாமரைப் பூவில் தோன்றியவர்
இந்த வொற்றுமைநயம் பற்றி தங்காய்! என விளிக்கத் தகுதியுடையாரிவ் வாழ்வார்.

“நனைத் தில்லஞ் சேறாக்கும்” என்ற விசேடணமும் இவர்க்கு வெகு நேர்த்தியாகப் பொருந்தும்.
ராவணவதாநந்தரம் திருவயோத்திக்கு மீண்டு எழுந்தருளாநின்ற பெருமாளை நோக்கி பரத்வாஜ மஹர்ஷி
“பங்க திக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதிக்ஷதே” என்றார்.
இங்கு பரதாழ்வான் சேறு பூசப் பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டதன் கருத்து யாது?
இரவும் பகலும் நிச்சலும் அழுதழுது நினைத்தில்லம் சேறாக்கினன் என்றபடி.
“வண்பொன்னின் பேராறுபோல் வருங் கண்ண நீர்கொண்டு
அரங்கன் கோயில் திருமுற்றம் சேறு செய் தொண்டர்” என்றார் குலசேகரப் பெருமாளும்.
அவ்வண்ணமாகவே பொய்கை யாழ்வாரும்
“பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று தாமே பேசினபடியே
அழுதவராதலால் நினைத்தில்லஞ் சேறாக்கின ரென்க.

(கனைத்து)
முதன் முதலாகப் பேசத் தொடங்கும்போது கனைப்பது இயல்பு.
பொய்கையார்க்கு முன்னம் பேசினவர்கள் யாருமில்லை.
இவரே முதன் முதலாகப்பேசத் தொடங்கினவரென்பது இவ்வினையெச்சத்தினால் தோற்றுவிக்கப்படும்.

(இளங்கற்றெருமை) எருமை என்றால் மஹிஷீ;
லக்ஷித லக்ஷணாக்ரமத்தால் தேவ தேவ திவ்ய மஹிஷீ என்றவாறு.
எம்பெருமானுக்கு திவ்ய மஹிஷியான பிராட்டியை யொப்பவர் இவ்வாழ்வார் என்பது ஸூரனை.
“இளங் கன்றுகளையுடைய” என்று விசேஷணமிட்டதனால், மற்றை யாழ்வார்களனைவரும் இவர்க்கு
வத்ஸ ஸ்தாநீயாகளாய் இவர் மாத்ரு ஸ்தாநீயர் என்று காட்டினபடி. ஆழ்வார்களுள் முதல்வரிறே யிவர்.

(கன்றுக்கிரங்கி) இவர் ஸ்ரீ ஸூக்தி யருளிச் செய்யத் தொடங்கினது கன்றுகளான நம் போல்வார்
பக்கலிலுள்ள பரம க்ருபையா லென்கை.

(நினைத்து முலைவழியே நின்று பால்சோர.)
பகவத் குணங்களை நினைத்தவாறே அந்த நினைவு தானே ஊற்றாகப் பால் போன்ற ஸ்ரீ ஸூக்திகள் பெருகப்புக்கன என்ற படி.

(பனித்தலை வீழ நின்வாசல் கடைபற்றி)
இவர் பொய்கையில் தோன்றினவராதலால் இவரது வாசற்கடையைப் பற்றுவார்க்குப் பணித்தலை வீழ ப்ராப்தமே யாகுமிறே.

(சினத்தினா இத்யாதி.)
இது ஸ்ரீராம குண கீர்த்தனம். மஹர்ஷிகளின் ஞானக் கண்ணுக்கும் இலக்காகாத வொரு ஸ்ரீராம சரிதம்
இவ்வாழ்வாருடைய அகக்கண்ணுக்கு இலக்கானமை
“பூமேய மாதவத் தோன்தாள் பணிந்த வாளரக்கன் நீண்முடியைப் பாதமத்தா லெண்ணினான் பண்பு.” என்ற
இவரது பாசுரத்திற் பொலியும்.
அதில் “நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே!” என்றதற்குப்பொருந்த “மனத்துக் கினியானை” என்றாள். (

இனித் தானெழுந்திராய்) “பழுதே பல பகலும்” என்கிற பாசுரம் பேசின பிறகுங்கூட உறங்கலாமோ? என்கை.

முழுக்ஷப்படியில் ‘பழுதே பல பகலும் போயின வென்று இறந்த நாளைக்குக் கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகில்லை”
என்ற ஸ்ரீ ஸூக்தியும் இங்கு அநுஸந்தேயம்.

(அனைத்தில்லத்தாரு மறிந்து) “அறியுமுலகெல்லாம் யானேயு மல்லேன்” என்ற இவ்வாழ்வாரது பாசுரத்தை
அழகாக நினைப்பூட்டுகிறபடி காண்மின்.

இப்பாசுரத்தோடு ஆண்டாளுக்கு முந்தின ஆழ்வார்களை யெல்லாம் உணர்த்திற்றாயிற்று.
“ஆழ்வார்கள் பன்னிருவர்” என்றுமுள்ள ஸம்ப்ர தாயப்படிக்கு ஸ்ரீ மதுர கவிகளும் ஆண்டாளும்
ஆழ்வார் கோஷ்டியில் சேராதவர்களாதலால் இவ்விருவரையும் உணர்த்துவதும் இப்பாட்டிலேயே அறியக் கிடக்கிறது.
எங்ஙனே யென்னில்;
நற்செல்வன் தங்காய்! என்றது நற்செல்வன் தங்கையே! என்று பொருள்படுதலால்
நற்செல்வன் தன்னுடைய கையாக இருப்பவனே! என்றபடியாகும்.
இங்கு நற்செல்வ னென்பது நம்மாழ்வாரை, அவர் திருவாய்மொழி அருளிச் செய்கையில்
மதுரகவிகள் அவருடைய சையின் ஸ்தாநீயராயிருந்து பட்டோலை கொண்டாராதலால் இந்த விளி மதுர கவிகட்குப் பொருந்தும்.

இனி நற்செல்வனென்று எம்பெருமானாரைச் சொல்லிற்றாகி
அவருடைய தங்கையென்று ஆண்டாளையுஞ் சொல்லக் குறையில்லை
“கோதற்ற ஞானத் திருப்பாவை பாடியபாவை தங்கை” என்றும்,
“பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்று முள்ளவை காண்க.
ஆண்டாள் தன்னைத் தானே உணர்த்திக் கொள்ளுகை பொருந்துமோவென்று விரஸமாக வினவுவார்க்கு
நாம் விடையளிக்க வல்லோமல்லோம்.
சொற்சுவை அமைந்திருக்கு மழகை அநுபவித்துப் போருகிறோ மத்தனை.

இப்பாசுரத்தில் ஆழ்வார்களில் முதலாழ்வாராகக் கருதப்படும் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.
ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திற்கு முதல் பாசுரம் பொய்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரமே ஆகும்.

‘கனைத்து’ என்ற சொல்லின் மூலம் இங்கு பொய்கையாழ்வார் காட்டப்படுகிறார்.
முதலில் பேசத் தொடங்கும் முன்னர் தொண்டையைக் கனைப்பது வழக்கமன்றோ?
பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்தில் திருவெஃகா எனும் திவ்யதேசத்தில் உள்ள பொய்கையில் தாமரை மலரில் அவதரித்தவர்.
“வாசமலர்க்கருவதனில் வந்த மைந்தா வாழியே” என்பது இவரின் வாழித் திருநாமங்களில் ஒன்றாகும்.
தாயார் மகாலட்சுமி தோன்றியதும் தாமரை மலரில்தானே?
எனவே மகாலட்சுமி ஆழ்வாருக்குத் தங்கை முறையாகிறார்.
எனவேதான் நற்செல்வன் தங்காய் என்று அழைப்பதன் மூலம் பொய்கையாழ்வார் காட்டப்படுகிறார்.

இவர் பொய்கையில் அவதரித்தார். பனி போன்று குளிர்ச்சியானது பொய்கை.
‘பனித்தலை வீழ’ என்று காட்டிப் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

‘இளங்கற்றெருமை’ என்று இப்பாசுரத்தில் பேசப்படுகிறது. இளமையான கன்று என இதற்குப் பொருள் ஆகும்.
இந்த ஆழ்வார் ஆழ்வார்களுக்குள் முதல்வர், இளையவர் என்பது இங்கு இந்தச் சொல் மூலம் கூறப்படுகிறது.
இவ்வாறு பன்னிரண்டாவது பாசுரத்தில் பொய்கையாழ்வார் எழுப்பப் படுகிறார்.

—————-

அடுத்தப் பதின்மூன்றாவது பாசுரத்தில் தொண்டரடிப் பொடியாழ்வார் எழுப்பப்படுகிறார்.

“புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளை களெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்”

ஸ்வாபதேசம்.)
இது ஆண்டாளுக்கு அடுத்த தொண்டரடிப்பொடி யாழ்வாரை யுணர்த்தும் பாசுரம்.

(போது அரிக் கண்ணினாய்!)
புஷ்பங்களை ஹரிப்பதிலேயே திருஷ்டியைச் செலுத்துபவரே! என்றபடி. புஷ்ப கைங்கரிய பராpறே இவ்வாழ்வார்.
“துளபத்தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி”
“தொடை யொத்த துளவமுங் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றவை காண்க.

பாவய்! என்ற விளியும் இவர்க்கு நன்கு பொருந்தும். பதிவ்ரதா சிரோமணியைப் பாவை யென்பர்.
இவ்வாழ்வார் அரங்கனொருவ னுக்கே வாழ்க்கைப்பட்டு வேறொருதிருப்பதி யெம்பெருமானை
நெஞ்சிலும் நினையாதவராதலால் கற்புச் சிறப்பு குறிக்கொள்ளத்தக்கது.
திருவேங்கடமுடையா னெதிரே ஒருவர் “பதின்மர் பாடும் பெருமாள்!” என்று ஏத்த,
அதைக்கேட்ட பெரிய கேள்விஜீயர், ‘சோழியன் கெடுத்தான் காணும்;
அந்த ஏற்றம் நம் பெருமாளுக்கில்லையே; நம்பெருமாளொருவர்க்கே’ என்றார் என்ற ஐதிஹ்யமும் இங்கு நினைக்கத் தக்கது.

(நன்னாளால்)
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” என்ற திருவாக்கிலேயே இச்சொல்லும் வருகின்றது.
தொண்டடிப்பொடிகள் திருவவதரித்தது மார்கழித் திங்களேயாதலால் நன்னாளென்னத் தட்டுண்டோ?

(கள்ளந் தவிர்ந்து)
‘சூதனாய்க் கள்வனாகி’ என்றும்;
‘கள்ளமேகாதல் செய்து’ என்றும்;
‘கள்ளத்தேனானுந் தொண்டாய்’ என்றும் பலகாலும் தமது கள்ளத்தைப் பேசிக்கொண்டாரிவ்வாழ்பார்.
இவரது சரிதையிலும் பொன்வட்டில் விஷயமான கள்ளம் அடிபட்டுக் கிடக்கிறது.
அது தவிர்ந்து பகவத் பாகவத கோஷ்டியில் கலந்த படியை ஈற்றடி தெரிவிக்கின்றது.

பெரியாழ்வார் போலவே இவ்வாழ்வாரும் பெரும்பாலும் பூம்பொழில்வாஸ முடையவராதலால்
அவ்விடத்து அடையாளமாகப் புள்ளும் சிலம்பினகான் என்பது இப்பாட்டிலும் புகுந்தது.

(குள்ளக் குளிரவித்யாதி.) நீராட்டம் முதலிய நித்ய கர்மாநுஷடானங்களையும் தவிர்த்து
சிலகாலம் பள்ளிக்கிடந்தமை இவ்வாழ்வாரது சரிதையிற்காணத்தக்கது.

புள்ளின்வாய் கீண்டானை யென்று தொடங்கிக் கண்ணபிரானுடையவும் இராமபிரானுடையவும்
கீர்த்திமை பாடினபடி சொல்லுகிறது. இவ்வாழ்வர் திருமாலையின் முடிவில்
‘வள வெழுந்தவளமாட மதுரைமா நகரந்தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலை’ என்று
கண்ணபிரானுடைய கீர்த்திமையையும்,
திருப்பள்ளி யெழுச்சியில் ‘மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிறலயோத்தி யெம்மரசே யரங்கத்தம்மா!’ என்று
இராமபிரானுடைய கீர்த்தியையும் பாடினமையுணர்க.

‘பிள்ளைகளெல்லாரும்’ என்றது ஆண்டாள் தனக்கு முந்தின ஆழ்வார்களெல்லாரையும் சொன்னபடி.

இப்பாசுரத்தின் முதல் அடி கண்ணனையும், அடுத்த அடி இராமபிரானையும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
தொண்டரடிப்பொடியாழ்வாரும் ‘திருமாலை’ முடிவில்,
“வளவெழுந்த வளமாட மதுரைமா நகரந்தன்னுள்
கவளமால் யானைகொன்ற கண்ணனை அரங்கமாலை” என்று கண்ணனைக் காட்டினார்.

அடுத்து திருப்பள்ளியெழுச்சியில்,
“மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய
வடுதிறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா” என்று இராமபிரானையும் போற்றுகிறார்.

“வெள்ளி எழுந்தது வியாழன் உறங்கிற்று” என்பதைத் தொண்டரடிப்பொடியாழ்வார்,
“கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனைரு ளகன்றது காலையம் பொழுதால்”
என்று காட்டியுள்ளார்.

“புள்ளும் சிலம்பின காண்” என்று பறவைகளின் ஒலி காட்டப்பட்டுள்ளது.
இவரும் பறவைகள் வாழும் சோலைகளிலேயே தங்கி பூப்பறித்து வந்தார்.

‘பாவாய்’ எனும் சொல் தொண்டரடிப்பொடியாழ்வாரைக் குறிப்பதாகும்.
“பாவாய்” என்பதற்குப் பரம ஏகாந்தி என்பது பொருளாகும். இவர் மட்டுமே ஆழ்வார்களில் ஏகாந்தியாவார்.
வேறு தேசத்துப் பெருமாள் எவரையும் பாடாததால் பரம ஏகாந்தியாவார்.
அதாவது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி உள்ள அரங்கனைத் தவிர வேறு எந்தத் திவ்ய தேசத்துப் பெருமாளையும்
இவர் மங்களாசாசனம் செய்யவில்லை.

இப்பாசுரத்தில் வரும் “நன்னாளால்” எனும் சொல் முதல் பாசுரத்தில்
“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்” என்று ஆளப்பட்டிருக்கும்.
மார்கழிதான் தொண்டரடிப்பொடியாழ்வார் அவதரித்த மாதமாகும்.

”பள்ளிக் கிடத்தியோ” என்பதும் இந்த ஆழ்வாருக்குப் பொருத்தமே.
இவர் சில காலம் தேவதேவி எனும் தாசியிடம் மயங்கி நீராட்டம், விரதம் மறந்து பள்ளிக்கிடந்தார்.
இவ்வாறு இப்பாசுரத்தில் தொண்டரடிப்பொடியாழ்வார் எழுப்பப்படுகிறார்.

————-

அடுத்துப் பதினான்காவது பாசுரத்தில் திருப்பாணாழ்வார் எழுப்பப்படுகிறார்.

”உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியில்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்பவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கன்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்)
தொண்டரடிப் பொடிகளுக்கு அடுத்த திருப்பாணாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
இதில், நங்காய்! நாணாதாய்! நாவுடையாய்! என்ற மூன்று விளிகளும் பாண் பெருமாளுக்கு நன்கு பொருந்தும்,

நங்கை யென்பது குணபூர்த்தியைச் சொல்லுகிறது.
லோக ஸாரங்க மஹாமுனிகள் வந்து என் தோளின்மீது ஏறிக்கொள்ளுமென்ன,
அத்யந்த பார தந்திரிய ஸ்வரூபத்தை நினைத்து அதற்கு உடன் பட்டமை குணபூர்த்தி,
அங்ஙனம் அந்தணர் தலைவரது தோளின்மீது ஏறியீருக்கச்செய்தேயும் சிறிதும் செருக்குக் கொள்ளாமல்
‘அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன் என்றே பேசினவராதலால் நாணாதவர். (நாண் – அஹங்காரம்)
‘பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்’ என்று தேசிகன் பணித்தபடி
ஸகல வேதார்த்தங்களையும் பத்துப் பாசுரத்திலே அடக்கிப் பேசின பரம சதுரராதலால் நாவுடைடயார்

“கையினார் சுரிசங்கனலாழியர்” என்று சங்கொடு சக்கர மேந்தின வழகை யநுபவித்தமை பற்றியும்
‘கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்’ என்று
கண்ணழகில் ஈடுபட்டும் பேசினமை பற்றியும் ‘சங்கொடு சக்கரமேந்துந் தடக்கையன் பங்கயக் கண்ணனைப் பாட என்றாள்.

இவ்வாழ்வார் தமது சாதி நிலைமைக்கு ஏற்ப வாழ்ந்த விடத்தைக்கருதி உங்கள் புழைக்கடை யித்யாதி அருளிச் செய்யப்பட்டது.

இவரது சரிதையில் ஸம்பந்தப்பட்ட லோகஸாரங்க மஹாமுனிகளின் தன்மையைக் காட்டுவது போலுள்ளது
செங்கற் பொடிக்கூறை யித்யாதி.

‘எங்களை முன்ன மெழுப்புவான் வாய் பேசும் நங்காய்’ என்பதில் ஒரு அழகிய பொருள் தொனிக்கும்.
(அதாவது-) எழுப்புவதாவது – தூக்கிக் கொள்வது. எங்களை என்றது பாகவதர்களை யென்றபடி.
பாண்பெருமாளே! உம்முடைய முதற் பாசுரத்தில் ‘அடியார்க் கென்னையாட்படுத்தவிமலன்’ என்ற
சொல் நயத்தை நோக்குங்கால் பாகவதர்களை நீர் தோளில் தூக்கிக் கொண்டாடுபவர் போலத் தெரிகின்றது.
உமது கதையோ அப்படியில்லை. மஹாபாகவதரான லோகஸாரங்க மஹா முனியின் தோளின் மீதேறி நீர் இருந்ததாகவுள்ளது.
ஆகவே, முந்துறமுன்னம் பாகவத சேஷத்வத்தை நீர் சொல்லிக்கொண்டது வாய்பேசு மத்தனையே போலும் என்று விநோதமாகக் கூறுகிறபடி.

‘நங்காய்’ என்பதற்குச் சிறந்த குணம் உடையவள் என்பது பொருளாகும்.
இவரும் உலோக சாரங்க முனிவர் மேல் ஏறி வர உடன்பட்ட குணபூர்த்தி உடையவர்.

‘நாணாதாய்’ என்பதற்கு வெட்கமில்லையா? என்று பொருள்.
ஏனெனில் திருப்பாணாழ்வார் அடியார்க்கு என்னை ஆட்படுத்தவேண்டும் என்று வேண்டியவர்.
“உம்மைப் போய் அடியவர்க்கு ஆட்படுத்தக் கேட்கிறீர்களே? வெட்கமில்லையா” என்று கேட்பது போன்றதாகும்.
மேலும் ஒரு தவ முனிவரின் தோள்கள் மேல் ஏறி வர வெட்கம் இல்லையா என்றும் பொருளாகும்.

அடுத்து ‘நாவுடையாய்’. இதற்கு நாவன்மை படைத்தவர்; சிறந்த நாவீறு மிக்கவர் என்பது பொருள்.
திருப்பாணாழ்வார் பத்தே பாசுரங்கள்தாம் அருளிச் செய்துள்ளார்.
ஆனால் இவற்றை ஒரு தட்டில் வைத்து, மீதி ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்தால்
இவர் பாசுரங்கள்தாம் கனமாக இருக்கும்.
“பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்து பழமறையின் பொருளென்று பரவுமின்கள்” என்பார் தேசிகன்.

‘சங்கொடு சக்கரம் ஏந்தும்’ என்பதில்
‘கையினார் சுரி சங்கனல்’ என்பதான ஆழ்வார் பாசுரத்தையே நினைவுபடுத்தி ஆண்டாள் இவரை எழுப்புகிறார்.

’பங்கயக் கண்ணானை’ என்பதன் மூலம் இந்த ஆழ்வார்தாம் எம்பெருமானின் கண்ணழகில் அதிகமாக ஈடுபட்டுப் பாடியது காட்டப்படுகிறது.
“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே”-என்பது அவர் அருளிச் செயலாகும்.

‘செங்கல்பொடிக் கூறை’ என்பது முனிவர்களைக் குறிப்பாக இந்த ஆழ்வாரைத்
தம் தோளில் ஏற்றிய சாரங்க முனிவரைக் காட்டுகிறது.

’எங்களை முன்னம் எழுப்புவான்’ என்பது
“அடியார்க்கென்னை ஆட்படுத்த விமலன்” என்று பாடியதால் நீர் பாகவதரைத் தோளில் ஏற்றிவருவீர் என எண்ணினோம்.
ஆனால், நீர் முனிவர் தோள் மீது வருகிறீர் முன்பு சொன்னது என்னவாயிற்று” என வினவுவது போல் உள்ளது.
இவ்விதமாக பதினான்காவது பாசுரத்தில் திருப்பாணழ்வார் எழுப்பப்படுகிறார்.

————————-

அடுத்துப் பதினைந்தாவது பாசுரத்தில் திருமங்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

“எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்ற ழையேன்மின் நங்கையீர்! போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்,
வல்லீர்கள் நீங்களே நானேதா னாயாயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை,
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்.)
பாண் பெருமாளுக்கு அடுத்தவரும் ஸாவக நிஷ்டருமான திருமங்கையாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
இவ்வாழ்வார் இரண்டு ஆய்ச்சிகளுக்குப் பரஸ்பர ஸம்வாதமாக
*மானமரு மென்னொக்கி* என்றொரு பதிகம் அருளிச்செய்தவராதலால் இவரை யுணர்த்தும் பாசுரம்
பரஸ்பர ஸம்வாத ரூபமாகவே அமைக்கப்பட்டது.

“கிளிபோல் மிழற்றி நடந்து” மென்கிளிபோல் மிக மிழற்று மென்பேதையே என்று பல பாசுரங்களில்
இவர் தம்மைக் கிளியாகச் சொல்லிக் கொண்டவராதலால் கிளியே! என்ற விளி இவர்க்குப் பொருந்தும்;
அன்றியும்,
சொல்லிற்றையே சொல்லுவது கிளியின் இயல்பு.
அதுபோல இவர் ‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற’ என்றபடி
நம்மாழ்வார் ஸ்ரீஸூக்திகளை யநுசரித்தே அருளிச் செய்பவராதலாலும் கிளியென்றது.

இரண்டாமடி திருமங்கையாழ்வாருடைய விடையளிப்பு. (வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்.)
இது கலியனை நோக்கி ஆண்டாள் கூறுமது. ‘வாசிவல்லீரிந்தரிர்! வாழ்ந்தேபோம் நீரே’ என்று நீர்
மிகக் கடினமாகப் பேச வல்லீரென்பது எனக்கு,

(பண்டே – நீர் அவதரித்துப் பாசுரம் பேசுவதற்கு முன்னமே) தெரியுங்காணும் என்றாள்.

அதுகேட்ட கலியன் வல்லீர்கள் நீங்களே
‘கொள்ளும் பயனென்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்,
அள்ளிப்பறித்திட்டவன் மார்பிலெறிந்து என்னழலைத் தீர்வேனே’ என்று அற வெட்டிதாகச் சொன்ன
உன் பேச்சு கடினமா? என் பேச்சு கடினமா? நீயே பார்க்கலாம் – என்றார்.

என்றவுடனே *நண்ணாதவாளவுணர் *கண்சோர வெங்குறுதி* முதலிய திருமொழிகளில் தாம் அநுஸந்தித்த
பாகவத சேஷத்வ காஷ்டையை நினைத்து *நானே தானாயிடுக* என்றார்.

“உனக்கென்ன வேறுடையை” என்றது திருமங்கை யாழ்வார்க்கு அஸாதாரணமான
திருமடல் திவ்யப்ரபந்த வக்த்ருவத்தை யுளப்படுத்தியதாகும்.

(எல்லாரும் போந்தராரோ இத்யாதி.) கலியனுக்கு முன்னமே மற்றுமுள்ள ஆழ்வார்கள் அவதரித்து,
பன்னிருவர் என்கிற ஸங்கியை இவரோடு நிரம்பிற்று என்று தெரிவிக்கப்பட்டது.

(வல் ஆனை கொன்றானை – மாயனைப் பாட.)
ஆனையைக் கொன்ற விஷயத்தை ஒரு ஆச்சரியமாக எடுத்துப் பேசினவர் கலியன்.
“ஆவரிவை செய்தறிவார் அஞ்சன மாமலை போலே” என்ற பெரிய திருமொழி காண்க.

அடிக்கடி கலியன் வாய் வெருவுவதும் வல்லானை. கொன்ற வரலாற்றையே;
“கவள யானைகொம் பொசித்த கண்ணனென்னும்” இத்யாதிகள் காண்க.

(மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட) எம்பெருமான் தன் திறத்தில்; மாறு செய்பவர்களது செருக்கை
வெகு ஆச்சரியமாக அடக்குபவன் என்பதைக் காட்டுகின்ற சரிதைகளுள் கோவர்த்தநோத்தாரண கதை மிகச் சிறந்தது.
மாறுசெய்த இந்திரனுக்கு ஒரு தீங்குமிழைக்காமலே கண்ணன் அவனது கொழுப்பை யடக்கினனிறே.
இக்கதையிலே கலியன் மிக்க வூற்றமுடையவர்;
பெரிய திருமொழியை முடிக்கும் போதும் “குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை” என்றார்;
சரமப் பிரபந்தமாகிய திருநெடுந் தாண்டகத்தை முடிக்கும்போதும் “குன்றெடுத்த தோளினானை” என்றே தலைக் கட்டினார்.

இப்பாசுரம் இருவர் உரையாடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
திருமங்கை மன்னனும் இதேபோல் பாசுரங்கள் அமைத்துள்ளார்.
“மானமரு மென்னோக்கி” என்று தொடங்கும் திருச்சாழல் பாசுரங்கள் பாசுரங்களில் இதைப் பார்க்கலாம்.

‘இளங்கிளியே’ எனும் சொல் இந்த ஆழ்வாரைத்தான் குறிக்கிறது. ஆழ்வார்களில் இவர்தான் கடைகோடி. இளமையானவர்.
மேலும் இவர் தம்மைக் கிளி என்றே சொல்லிக் கொள்வார்.
“மென்கிளி போல மிக மிழற்றுமென் பேதையே” என்பது அவர் வாக்கு.
’கிளி போல் மிழற்றி நடந்து’ என்றும் பாடி உள்ளார்.

கிளியானது பிறர் சொன்னதையே தானும் சொல்லும்.
திருமங்கை ஆழ்வாரும் இவருக்கு முன்னால் நம்மாழ்வார் சொன்னதையே சொல்லியிருக்கிறார்.
நம்மாழ்வார் நான்கு மறைகளை நான்கு பிரபந்தங்களில் அருளிச் செய்திருக்கிறார்.
அந்த நான்கு பிரபந்தங்களையும் திருமங்கையாழ்வார் ஆறு அங்கங்களாகப் பாடியுள்ளார்.
“மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற” என்பது நினைவு கூறத்தக்கது.

“எல்லாரும் போந்தாரோ?” என்பது நோன்பு நோற்க எல்லாரும் போய்விட்டார்களா? எனப் பொருள் தரும்.
ஆனால் எல்லா ஆழ்வார்களும் போய்விட்டார்களா என்று கேட்டால்,
ஆமாம் இவர்தான் கடைசியில் எழுப்பப்படுகிறார் என்பதுதான் விடையாகும்.

”மாற்றாரை மாற்றழிக்க வல்லானை” என்பது செருக்கழித்தலைக் காட்டும்.
ஆழ்வாரும் இந்திரன் செருக்கழித்தலைப் பாடுவார்.
“குன்றமெடுத்து ஆநிரை காத்தவன்” என்பது அவர் அருளிச் செயலாகும்.
திருநெடுந்தாண்டகம் நிறைவுபெறுகையில், ”குன்றெடுத்த தோளினான்” என்பார்.

இவர் வாக்கில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதால் ஆண்டாள் நாச்சியார் “வல்லீர்கள் நீங்களே” என்கிறார்.
திருமங்கைஆழ்வார் நாவன்மை படைத்தவர்.
“உனக்கென்ன வேறுடையை” என்பது இந்த ஆழ்வார் மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபடுகிறார் என்பதைக் கேட்கிறது.
இவர் மட்டுமே மடல் பாடியவர். மேலும் இவர் நீர் மேல் நடப்பது போன்ற பல விசித்திரங்கள் செய்து காட்டியவர்.
எனவேதான் ‘எல்லே’ (என்ன ஆச்சரியம் !) என்று நாச்சியார் வியந்து பாடுகிறர்.

———-

இவ்வாறு ஆறாம் பாசுரத்திலிருந்து பதினைந்தாம் பாசுரம் வரையில் உள்ளே இருக்கும் பாடல்கள்
பெண்களை எழுப்புவதுபோல் தோன்றினாலும்,
ஆழ்வார் பெரு மக்கள்தாம் எழுப்பப்பட்டு அவர்களின் அருள் வேண்டப்படுகிறது எனக் கூறலாம்.

————–———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –31–ஸ்ரீ ஸதர்சனம் —

January 15, 2022

ஸ்ரீ உவாஸ
1- யா ஸா ஷாட் குண்ய தேஜஸ் ஸ்தா க்ரியா சக்தி ப்ரகாசிதா
ஆக் நேயம் ரூபம் ஆஸ்ரித்ய ஸா தத்தே பவ்ருஷம் வபுஸ்
2- சர்வ அஸ்த்ர சாஸ்த்ர ஸம்ஸ் யூதம் ஸூர்ய ஸோம அக்னி மூலகம்
மஹத் ஸூ தர்சனம் நாம நாநா ரூப உப ஸோபிதம்

ஆறு குணங்களில் தேஜஸ் பிரதாநம் -குணங்களின் சாரமே க்ரியா சக்தி -புருஷ ரூபம் கொண்டது –
அவள் அக்னி ரூபமாகக் கொண்டு உள்ளாள்
அவள் ஸூர்யன் சந்திரன் அக்னி யிலிருந்து வெளிப்படுகிறாள்
அனைத்து அஸ்த்ரங்களையும் தன்னுள் கொண்டவள்
பெருமை மிக்க ஸூ தரிசனமாக -பல பெயர்களைக் கொண்டும் பல ரூபங்களை உள்ளடக்கியவளாக இருக்கிறாள் –

3- தஸ்ய மத்யே ஸ்திதா ஸக்தி பவ்ருஷீம் தனுமாஸ்திதா
ஸுவ்ம்ய அக்னேய ஸ்வரூபேண தத் தத் கால வ்யவஸ்தயா

ஸூ தரிசனத்தில் இருதயத்தில் புருஷ வடிவில் சக்தி சோமன் அக்னி போன்று உள்ளது
அந்த அந்த நேரத்துக்கு ஏற்ப இயங்க வல்லது

4-புரஸ்தாத் தர்சிதஸ் தஸ்யா வாசகஸ் தே சதுர்வித
தத்ர ஸம்ஜ்ஞாமயோ மந்த்ரோ பூயஸா பல வத்தர

சக்தியைக் குறிக்க வல்ல நான்கு வித ஒலிகள் பீஜம் பிண்டம் ஸம்ஜ்ஞா பதம் குறித்து முன்பு பார்த்தோம்
இதில் ஸம்ஜ்ஞா மந்த்ரம் பலம் பொருந்தியது

5-தஸ்ய வ்யாக்யாம் இமாம் சக்ர கதந்த்யா மே நிசா மய
யா ஸா ஸோம ஆத்மிகா சக்தி உன்மேஷ ப்ரதமோ ஹரி

சோமனை உள்ளடக்கிய அந்த சக்தி ஹரியின் இயங்கு நிலையான உள்ள ஸ்ரீ என்னும் நானே ஆகிறேன்
இதுவே ஸஹஸ்ரார மந்திரத்தின் முதல் எழுத்து -ஸ -முதன்மையாக சக்தியாகும் –

மூல சக்திர் அஹம் ஸ்ரீ ஸா ப்ரதம அக்ஷர ஸம்ஸ்திதா
அம்ருதா த்ருப்தி ரூபா ச ஸோ மாத்மா ச அகிலேஸ்வரீ –6-

சோமனை உள்ளடக்கியது -மூல சக்தி நானே –
ஸஹஸ்ரார மந்திரத்தின் முதல் எழுத்தில் உள்ள அவள் அம்ருதம் ஆவாள்
சோமனுடைய ஆத்மாவாக உள்ள அவள் அனைத்திற்கும் ஈஸ்வரீ ஆவாள் –

அம்ருதீ கரணம் குர்யாத் ஸர் கஸ்ய இந்து கலாஸ்திதா
சீரஸ் பத்மா தயோ மந்த்ரா பரமேஸ்வர யுக்தயா –7-
அநயா ஸ்ருதயா குர்யாத் த்ருப்திம் ஸம் ஸித்தி மேவ ஸ
ஸ்ருஷ்டி க்ருத் ஸம்யுதா ஸேயம் ஜீவ ஸக்தி ஸநாத நீ –8-

சந்திரன் ஒளியில் உள்ள அம்ருதம் மூலம் ஸ்ருஷ்டி ஏற்படுத்துகிறாள்
ஓம் ஸ சீரஸே ஸ்வாஹா
ஓம் ஸ ஸ்ரீ நிவாஸ பத்மாய ஸ்வாஹா –சீர பத்ம மந்த்ரங்கள்
அவளால் இணையப்பட்டு -ஸ -பரமேஸ்வரனைக் குறிக்கும் அக்ஷரம் -அதாவது -ஹ -சேர்க்கப்பட்டு
மன நிறைவு -மற்றும் வெற்றியை அளிக்கும்
அதே எழுத்து -ஸ -ஸ்ருஷ்டி க்ருத் -என்னும் அஷரத்துடன் சேர்ந்து ஜீவ சக்தி ஆகிறது –

த்ரை லோக்ய ஐஸ்வர்யத உபேதா வாயு வேஸ்ம அக்ஷர ஸ்திதா
தாரா காரா ரிபோர் மூர்திநி சிந்த்யேச் சேதன ஸித்தயே –9-

எதிரிகளை வெல்லும் சக்தி -அவள் சப்தம் ஸ -வாயுவை உள்ளடக்கிய -ய -த்ரை லோக்ய ஐஸ்வர்யம் ம் சேர்த்து
ஸயம்-தாரகை உருவகம் செய்து எதிரில் தலை மேல் நிற்பதாகக் காண வேண்டும் –

அப்ரமேய உப கூடாயா அக்னீ ஷோம மயீ ஜூஷ
அஸ்யா ஸக்தே ஸமுத் பூதம் ஸூ க்தம் பவ்ருஷம் உஜ்ஜ்வலம் –10-

அப்ரமேயன் -அகாரத்தில் மறைந்து உள்ளவன் -அக்னி சோமன் மற்றும் உள்ள அனைத்திலும் அந்தர்யாமி –
பரம புருஷன் -தேஜஸ்ஸூ உடன் கூடிய உயர்ந்த மந்த்ரம் இந்த சக்தியில் இருந்து வெளிப்படுகிறது –

ஏததா தீநி ஸூக்தாநி ஸஹஸ்ர ம்ருஷயோ விது
நித்யாம் ஆப்யா யதே மந்த்ர ஸ அயம் அக்னி ஜூஷா மயா –11-

புருஷ ஸூக்தம் -ஆயிரக் கணக்கான ரிஷிகள் அறிவார்
குனியில் வசிக்கும் என்னால் பரவசப்பட்டு உள்ள இந்த மந்த்ரம்
உபாசகனுக்கு அனைத்தையும் அளிக்கும்

தத் தத் கார்ய ஜூஷா தத் தத் வர்ண சக்தி த்ரயீ ஜூஷா
அநயா யந்ந ஸாத்யதே ந ததஸித ஜக த்ரயோ –12-

ஸூர்யன் சோமன் அக்னி -ஆகியவற்றையும் குறிக்கும் அக்ஷரங்களில் உள்ள மூன்று சக்திகளில் உள்ளதும்
அனைத்து வழிபாடுகளிலும் உள்ளதும் ஆகிய இந்த சக்தி மூலம்
மூன்று லோகங்களிலும் அடைய முடியாதது ஒன்றுமே இல்லையே –

ஸூதே ஸா ஸகலா சக்திர் அநு ஜாநாதி தா புந
ஸம் ஹரந்தீ புநஸ் சைதா இதி ச சமர்யதே தத –13-

ஸ்வம் உன்மேஷம் அதிஷ்டாய பரமாத்மா ஸ சக்தி ராட்
உதிதோ ஜகத அர்த்தாய ஹேதி தேவ ஸநாதன –14-

அவளே அனைத்து சக்தியையும் ஸ்ருஷ்டித்து -செயல்களில் ஈடுபடுத்தி -லயிக்கும் படி செய்கிறாள்

ஸூர்யச்ச போக்த்ருதாம் ப்ராப்ய ப்ராணயந் ப்ராண இஷ்யதே
ஆத்மாநம் தர்சயத்யேஷ த்ரை லோக்ய ஐஸ்வர்யத அந்வித –15–

ஹ்ருத் புண்டரீக மத்யஸ்தம் யம் விசின் வந்தி யோகிந
யதாவத்ம் த்யா யதோ வேத்யம் முக்தே ஷோர் வேக வத்தயோ –16-

ஸூர்யன் முக்கிய பிராணன் -ஹ
த்ரை லோக்ய ஐஸ்வர்யம் -ம்
ஹம -தாமரை போன்ற உபாஸகனது இதயத்தில் வெளிப்படும்

பிரகர்ஷேண ஓந் நயன் ப்ராணன் ப்ராண இத்யேஷ சப்த்யதே
இந்து மண்டல ஸம் வீதோ வ்யாபிமாந ப்ரமேயவான் –17-
ஜிஹ்வா மூலஸ் திதோ த்யாதோ வாக் ப்ரவ்ருத்திம் நியச்சதி
அம்மண்டலே ஸ்திதோ த்யாத ஸ ஏவ ஹி ஸூதாம் ஸ்ரவன் –18-
நிர்விஷீ கரணம் த்யாத கரோதி ஜகதாமபி
ராம உப கூடா தஸ் மத்தி ஸ்ரீ ய ஸூக்தம் சமுத்கதம்–19-

முக்கிய மூச்சுக்காற்றை சக்தி கொண்டதாகச் செய்வதால் அது பிராணன் எனப்படுகிறது
அந்த ஹ என்னும் எழுத்தானது சந்த்ர மண்டலத்தில் மறைவாக நின்று வ்யாபி மற்றும் அப்ரமேய எழுத்துக்களுடன் சேர்ந்து –
அதாவது ம் மற்றும் அ -இதன் மூலம் அஹம் என்பது கிடைக்கிறது
நாக்கின் வேர்ப்பாகத்தில் இருந்து வெளிப்படுவதாக த்யானிக்கப் பட்டு -வாக்கை உண்டாக்குகிறது
அதே எழுத்தானது அம் என்னும் ஓசையில் உள்ளதாக த்யானிக்கப்பட்டு
அம்ருதத்தை வெளிப்படுவதாக எண்ணப்பட்டு இந்த ஜகத்தில் உள்ள அறியாமை என்னும் விஷங்களை அகற்றுகிறது
இந்த எழுத்துடன் ராம என்னும் எழுத்தம் சேரும் போது ஸ்ரீ ஸூக்தம் வெளிப்படுகிறது –

ஏததாதீநி ஸூக்தாநி ஸஹஸ்ரம் ருஷயோ விது
தத் தத் கால ஜூஷா தத் தத் வர்ண சக்தி த்ரயீ ஜூஷா –20-
அநேந யன்ன ஸாத்யதே ந ததஸ்தி ஜகத் த்ரயே
ஹன்யதே சகலம் லோகம்கமயத் யமலம் பதம் –21-
வ்யாஜயத் யகிலம் க்லேசம் கம்யதே யோக சிந்தகை
ஹேத்யேவம் கத்யதே ஸத் பிரேவம் நிர்வச நாஸ்திதை –22–

இது போன்ற ஸூக்தங்களை ஆயிரக் கணக்கான ரிஷிகள் நன்றாக அறிவர்
ஒவ்வொரு ஸூ க்தமும் ஸூர்யன் அக்னி மற்றும் சந்திரன் ஆகிய சக்திகளைக் குறிக்கும் எழுத்துக்களுடன்
ஏதேனும் ஒரு கட்டத்தில் சம்பந்தம் கொள்கிறது
இந்த ஹ என்னும் எழுத்து கொண்டு மூன்று லோகத்தில் செய்ய இயலாதது என ஏதும் இல்லை
இது உபாசகனுடைய அனைத்து தடைகளையும் விலக்கி அவனைத் தூய்மையான நிலைக்குக் கொண்டு செல்கிறது
யோகிகள் விஷயத்தில் அந்த எழுத்தானது அனைத்து துன்பங்களையும் விலக்குவதாக உள்ளது
யார் ஒருவர் சத்வ வழியில் நிலை நின்று சரியான விளக்கத்தை அளிப்பவர்களாக உள்ளனரோ
அவர்கள் இவ்விதமே- ஹ -என்பதைக் குறித்து உரைக்கிறார்கள் –

அசேஷ புவன ஆதாரா சங்கல்ப ப்ரபல க்ருதா
ப்ரத்யபிஞ்ஞாயதே சைவ ஸத் பிரேவம் நிர்வசனஸ்திதை –23–
சரத்யஸ் யாச்சலம் ஸர்வம் ஸ்த்ரியதே சகலை ஸதா
ப்ருதிவீ ஸம்ஸ்திதா ஸேயம் ஸ்தம்பே ஸ்ருத்யா நியுஜ்யதே –24-

அசேஷ புவன ஆதார-ர என்னும் எழுத்து கொண்டவளும்
பரமாத்மாவின் அதே சக்தியானவளும் ஆகிய அவளை மேலும்
சுதந்திரமாக செயல்படத் தூண்டுவது -ஸ்ர -என்னும் ஒலியின் மூலம் அறியப்படுகிறது
அசையக்கூடிய அனைத்தும் அவள் இடம் இருந்தே வெளிப்பட்டு பாதுகாப்புக்காக அவளையே அண்டுகின்றன –
ப்ருத்வீ என்னும் ஒலியில் -அதாவது -க -உள்ள அதே சக்தியானவள் ஸ்ருஷ்ட்டின் அசையாமல் நிலை கொண்டு
அனைத்தையும் பாதுகாக்கும் செயலிலும் ஈடுபட்டபடி உள்ளாள் –

ஸஹோ நாம பலம் தத்ர ரமதே தத் ஸஹஸ்ர தா
ஸஹஸ்ர தி ஸஹஸ்ரா ஸ்யாத் அக்னீ ஷோ மாத்மநோ மம –25-

பலம் என்னும் பொருள் கொண்டதான ஸஹஸ் என்னும் ஸப்தம் ஆயிரக் கணக்கான வகையில் களித்தபடி உள்ளது
இப்படி அக்னி மற்றும் சோமனை உள்ளடக்கிய என் சக்தியானது ஆயிரக்கணக்கில் வெளிப்படுகிறது
இதுவே ஸஹஸ்ரா எனப்படுகிறது –

அக்னீ ஷோ மமயீ ஸ மே ஸக்தி ஸர்வ க்ரியா கரீ
ஸூ ஸங்கல்ப ஸமித்தா ஸா தேஜஸாம் ராசி ருர்ஜிதா –26-
ஸம் பிராப்யை வாநலம் பாவம் கால பாவ கதாம் கதா
ரேத்யேவம் கேவலீ பூத்வா ஜ்வலத்ய விரதோ தயா –27-
பரமேஸ்வர பூதா ஸ பரமாச்சர்ய காரிணீ
ர இத்யேவ மஹா சக்திர் மதீ யாத்யா க்ரியாஹ்வயா –28-

அக்னி மற்றும் சோமனை உள்ளடக்கிய எனது சக்தியானது அனைத்து விதமான செயல்களையும் செய்ய வல்லதாகும்
சரியான எண்ணங்கள் மற்றும் ஓங்கி நிற்கும் வலிமை ஆகியவற்றால் தூண்டப்படும் அவள் அக்னியின் உள்ளே இருப்பவளாக
அனைத்தையும் அழிக்க வல்ல அக்னி நிலையை அடைகிறாள்
ர -என்பதின் தூய்மையான நிலையில் அவள் மிகுந்த ஆற்றலுடன் ஒளிர்ந்தபடி உள்ளாள்
அவள் பரமேஸ்வரன் என்னும் -ஹ் -எழுத்துடன் சேர்ந்து வியக்க வைக்கும் செயல்களை செய்கிறாள்
ர் என்பதே எனது மஹா சக்தியான க்ரியா என்பதாகும் –

சங்க்யா அநந்த்யம் ஸஹஸ்ரம் ஸ்யாதரா நந்த்யம் தத் உச்யதே
வர்ம அஸ்த்ரயோ ஸ்வரூபம் ச தர்சிதம் தே புரந்தர –29–

ஸஹஸ்ரம் என்பது எண்ணற்ற என்பதைக் குறிக்கும்
இது ஸூதர்சனத்திலே உள்ள ஆரங்களாகும்
புரந்தரன் உனக்கு வர்மம் அஸ்திரம் இவற்றின் ஸ்வரூபம் பற்றி உனக்கு முன்பே கூறினேன் –

த்ருவச்ச ப்ரணவ அஸ்யாதி பூர்வமேவ நிரூபித
ஏவமேவ மஹா மந்த்ர ஸப்த ப்ரஹ்மோத்கதோ –30–

கிரியா சக்தியின் தொடக்கமாக பிரணவம் த்ருவம் உள்ளதாக முன்பே நிரூபித்தேன்
இப்படியாக இந்த மஹா மந்த்ரம் ஸப்த ப்ரஹ்மத்தின் முழு சக்தியும் உள்ளடக்கி இருக்கும் –

அதர்வணீ மஹா சக்திர் கிரியா சக்திர் ப்ரியா தநு
த்ரயீ சாரோ ஹி அர்த்த வாக்யா பஞ்ச பர்வா மஹா ஸ்ருதி –31-
மந்த்ரேண ஸூயதே அநேந சாரேணேவ வனஸ்பதி
அஸ்ய த்வங்க விதா நஜ்ஞா ஷடங்காநி ப்ரசக்ஷதே –32

மஹா ஸ்ருதி என்று கொண்டாடப்படும் அதர்வண வேதத்தில் உள்ள மஹா சக்தி கிரியா சக்தியின் பிரியமான சரீரம்
இந்த வேதம் ஐந்து பகுதிகளைக் கண்டது
நக்ஷத்ரம் விதாநம் விதிவிதாநம் ஸம்ஹிதை சாந்தி
இதுவே மற்ற மூன்று வேதங்களின் சாரம் -உரம் போல் வேத மரத்தை இதுவே வளர்க்கும்
சாஸ்திரஞ்ஞர் இத்தை ஆறு அங்கங்களாகக் கொண்டதாக உள்ளது என்பர் –

காயத்ரீம் அபி சக்ராக்யாம் ப்ராகாரம் ச அக்னி சம்ஜ்ஜிதம்
கோப நாத் வருணோத் ஸே தாத் ஸ உதயாத் அம்ருதாத் ததா –33-

அந்த ஸூதர்சனத்திற்கு சக்ரா என்னும் காயத்ரி மந்த்ரம் உள்ளது -அதனை அக்னி சூழ்ந்து உள்ளது
கோபந அக்ஷரம் -ஆ -வருண அஷரத்துடன்-வ – சேர்க்கப் படுகிறது
இது போன்று அம்ருத அக்ஷரம் -அ -உதய அஷரத்துடன் -உ-சேர்க்கப்பட்டு
வாம் ஸூ ம் என்ற மந்த்ரம் ஆகிறது –

சக்ராய ச ஸ்வாஹா ஹ்ருதா திஸ்து சிகா வதி
ஸூர்ய ஜ்வாலா பதாச்ச ஊர்த்வம் மஹா யுக்தாத் ஸூதர்சநாத் –34-

ஊர்த்வம் சக்ராய ஸ ஸ்வாஹா வர்மாத்ய அஸ்த்ராந்தகோ விதி –35-1-

இதைத் தொடர்ந்து சக்ராய ச ஸ்வாஹா என்பது அமைகிறது
அடுத்து ஹ்ருதயம் என்பது தொடங்கி சிகா முடிய முதல் மூன்று அங்க மந்த்ரங்கள் சேர்க்கப்படுகின்றன
இதன் பின்னர் ஸூர்ய அக்ஷரமும் -ஹ -ஜ்வாலா என்கிற பதமும் சேர்க்கப்படுகின்றன
அதன் பின்னர் ஸூ தர்சன என்கிற பதமும் சேர்க்கப் பட்டு தொடர்ந்து மஹா சப்தமும் இணைக்கப்படுகிறது –
அதன் பின்னர் சக்ராய ச ஸ்வாஹா -என்பது சேர்க்கப்படுகிறது
தொடர்ந்து வர்மம் தொடங்கி அஸ்திரம் முடிய உள்ள இறுதி மூன்று அங்க மந்த்ரங்கள் சேர்க்கப் படுகின்றன –

நமச் சக்ராய தஸ் யாந்தே வித்மஹே அசவ் சதுர்யுக –35-2-

ஜ்வாலாய ச ஸஹஸ்ராந்தே தீ மஹி இதி நவார்ணக
தந்ந ப்ரசோதயாந் மத்யே சக்ர இதி அஷ்ட வர்ணக–36-

அதன் பின்னர் நம சக்ராய -என்பதான நான்கு எழுத்துக்களும்
தொடர்ந்து -வித்மஹே -என்பதும் அமைகிறது
மேலும் தீ மஹி என்பதுடன் இணைந்த ஸஹஸ்ர என்பதன் பின்னால் ஜ்வாலாயா என்பது சேர்க்கப்படுகிறது
இந்த மந்த்ரம் ஒன்பது அக்ஷரங்கள் கொண்டதாகும்
இதன் பின்னர் சக்ர என்பது நடுவில் சேர்க்கப்பட்டதான
தந்ந மற்றும் ப்ரசோதயாத் என்பதுடன் கூடிய எட்டு அக்ஷரங்கள் இணைகின்றன

இந்த மந்திரத்தின் முழு வடிவமானது

வாம் ஸூம் சக்ராய ச ஸ்வாஹா
ஓம் ஹம் நாம ஓம் ஹம் ஸ்வாஹா
ஓம் ஹிம் வஷாத் ஹம்ஸாய
ஹ்ரம் மஹா ஸூ தர்சனாய சக்ராய ஸ்வாஹா
ஓம் ஹும் ஓம் ஓவ்ஷத் ஓம் பட் நம
சக்ராய வித்மஹே ஸஹஸ்ர ஜ்வாலாய தீ மஹி
தந் ந சக்ர ப்ரசோதயாத் –

முஷ்டிம் விதர்ஜ நீம் க்ருத்வா தர்ஜ நீம் தர்ஜ ஸம்ஸ்திதாம்
பரிதோ ப்ராமயேத் வஹ்நீம் த்யாயந் ப்ராகார ஸம்ஸ்திதம்–37-

கை விரல்கள் அனைத்தையும் முஷ்டியில் மடக்கி –
ஆள்காட்டி விரல்களை மட்டும் எச்சரிப்பது போன்று நீட்டியபடி
த்யானத்தில் ஆழ்ந்துள்ள உபாசகன் கீழே உள்ள அக்னியைத் தனது கரங்களால் சுற்ற வேண்டும் –

அந்யோன்ய சம்முகே பாணி தலே வை தஷிண உத்தரே
கநிஷ்ட அங்குஷ்ட யோரக்நே ஸ்லிஷ்டே தீர்க்காஸ் ததா பரா –38–

அதன் பின்னர் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றுடன் ஓன்று பார்க்கும் படியாக வைத்து
சுண்டு விரல் மற்றும் கட்டை விரல் ஆகியவற்றின் நுனிகள் தொடும்படி யாகச் செய்து
மற்ற அனைத்து விரல்களையும் நேரே இருக்கும்படியாக வைத்து
தனது கைகளை ஒரு வட்டம் வரைவது போல் சுற்ற வேண்டும் –

பரிதோ ப்ராமயே தேவம் சக்ர முத்ரே யமீ ரிதா
அங்க முத்ராஸ் து வஹ்யதே சக்தி க்ராஸ மநும் ஸ்ருணு –39-

இது சக்ர முத்திரை எனப்படும்
அங்க முத்ரை குறித்து பின்னர் கூறப்படும்
அடுத்து சக்தி க்ராஸம் என்னும் மந்த்ரம் பற்றிக் கேட்பாயாக –

பவித்ரம் அநலா ரூடம் ஸ வ்யாபி ப்ரணவாத் பரம்
மஹா ஸூ தர்சன இதி ஏவம் சக்ர ராஜம் மஹாத் வகம்–40-
ததஸ் அஸ்த கதத் இதி அஸ்மாத் ஸர்வ ஜூஷ்ட பயங்கர
சிந்தி சிந்தீத் யதஸ் பச்சான் பிந்தி பிந்தி ப்ரகீர்தயேத் –41-
விதாரய த்வயம் பச்சாத் பர மந்த்ரான் க்ரஸ க்ரஸ
த்விர் பக்ஷயேதி பூதாநி த்ராசயேதி த்விர் உச்சரேத் -42-
வர்மாஸ்த்ர வஹ்னி ஜாயா ஸ்யுர் சக்தி க்ரஸ ந க்ருந் மநு
ஸ்வயம் ஸூ தர்சநோ பூத்வா மந்த்ரம் உச்சாராயன் இமம் –43-
சக்திம் முக ஹ்ருதாதிப்ய பரஸ்யா ஸூஷ யோத்தியா
ஷட ஷரஸ்ய மந்த்ரஸ்ய ஸ்ருணு த்யானம் புரந்தர –44-

ப்ரணவத்தைத் தொடர்ந்து வருகின்ற பவித்ரம் -ப சப்தமானது
அநலம் -ர -என்பதுடன் சேர்க்கப்பட்டு
இதனுடன் வ்யாபின் -ம் -என்பது இணைக்கப்படுகிறது
அதன் பின்னர்
மஹா ஸூ தர்சன -சக்ர ராஜ -மஹாத் வக -என்னும் சொற்கள் சேர்க்கப்படுகின்றன
இவற்றைத் தொடர்ந்து
அஸ்த கத சர்வ துஷ்ட பயங்கர சிந்தி சிந்தி என்பதும் –
பிந்தி பிந்தி -என்பதும் உச்சரிக்கப்பட வேண்டும்
பின்னர்
விதாரய-என்பது இருமுறை கூறப்பட்டு
பர மந்த்ரான் க்ரஸ க்ரஸ -என்பது கூறப்பட்டு
பக்ஷய என்பது இரு முறை கூறப்பட்டு
தொடர்ந்து பூதாநி என்பது கூறப்பட்டு
த்ராஸய -என்பது இருமுறை கூறப்பட்டு
வர்மத்துடன் –ஹும் –
அஸ்த்ரத்துடன் -பட் –
அக்னியின் மனைவி பெயருடன் -ஸ்வாஹா –முடிக்கப்பட வேண்டும்

இந்த மந்த்ரம் மந்த்ர க்ரஸ்னம் எனப்படும்
இந்த மந்த்ரத்தை உச்சரித்த படியே உபாசகன் தன்னை ஸூதர்சனத்துடன் இணைத்து எண்ணி
தனது விரோதியின் சக்தியை அந்த விரோதியின் இதயம் மற்றும் வாய் வழியாக உறிஞ்ச வேண்டும்
இந்திரனே அடுத்த ஆறு எழுத்து கொண்ட மந்த்ர த்யானம் குறித்து கூறக் கேட்ப்பாயாக
இது ஸஹஸ்ரார மந்த்ரம் ஆகும் –

ந்யஸ்த அங்கச் சக்ர முத்ராபிர் வஹ்நி ப்ரகார மத்யக
ஸஹஸ்ரார மஹா சக்ரம யுதாக்நி சயோத் கடம் –45
ஷடத்வ மயம் உத் ப்ராந்தம் த்யாயேந் மச்சக்தி ஜ்ரும்பிதம்
அக்ஷஸ்தம் பரமாத்மாநம் நாராயணம் அநா மயம் –46-
சக்ர ரூபிணம் ஈஸாநாம் த்யாயேத் குங்கும ஸம் நிபம்
பீதாம்பரதரம் திவ்யம் முக்தாலங்கார பண்டிதம் –47–

சக்ர முத்ரையுடன் கூடிய அங்க ந்யாஸம் செய்த உபாசகன் ஒருவன் அக்கினியுடன் கூடிய புனிதமான இடத்தில்
ஆயிரம் ஆரங்கள் கொண்ட சக்ரத்தை தியானிக்க வேண்டும்
அந்தச் சக்ரமானது பல ஆயிரக் கணக்கான அக்னியின் பிரகாசம் கொண்டதாக உள்ளது
ஸ்ருஷ்டியின் ஆறு நிலைகளையும் வியாபித்து உள்ளது
எல்லையற்றதான அந்தச் சக்கரம் எனது சக்தியில் இருந்து விரிவதாக உள்ளது
அதன் அச்சுப்பகுதியில் தோஷங்கள் ஏதும் அற்றவனும் பரமாத்மாவுமாகிய நாராயணன் உள்ளான்
அவனையே அந்தச் சக்ர ரூபத்தில் ஈசனாகக் கொள்ள வேண்டும்
அவன் குங்குமக் குழம்பு நிறத்தில் பட்டுப் பீதாம்பரம் உடுத்தி திவ்யமாக முத்து ஆபரணங்கள் அணிந்தவனாக உள்ளான் –

ஏதம் அஷ்ட புஜம் த்யாயேந் மஹா வ்யஸந ஸம்ப்லவே
உத் யஜ்ஜா நும் அநேகாஸ்திரம் ஸ்திதம் பரம சோபனம் –48–

மிகுந்த ஆபத்தான நேரத்தில் அவன் எட்டுத் திருக்கரங்கள் மற்றும் திருவடிகளுடன் கூடியவனாக
திருக்கரங்களை உயர்த்தி நிற்பவனாக -பலவிதமான ஆயுதங்கள் தரித்தவனாக
மிகவும் அழகானவனாக இருப்பதை தியானிக்க வேண்டும் –

சக்ரம் முஸல முத்தாமம் அங்குசம் ஸரஸீ ருஹம்
யாம்யே கர சதுஷ்கே அத வாமே புஜ சதுஷ்டய –49–
சங்கம் பாண யுதம் சாபம் பாசம் குர்வீம் கதாம் அபி
ததாநம் தக்ஷிணம் திவ்யம் தம்ஷ்ட்ரா பாஸ்வரி தாநநம் –50-

தனது வலப்புற நான்கு திருக்கரங்களில் சக்ரம் சக்தி கொண்ட முஸலம் அங்குசம் மற்றும் தாமரை கொண்டவனாய் உள்ளான்
இடப்புற நான்கு திருக்கரங்களில் சங்கு வில் அம்பு பாசக்கயிறு மற்றும் வலிமையான கதை கொண்டவனாய் உள்ளான்
திவ்யமான திரு முகம் பற்களின் ஒளி மற்றும் கருணையுடன் கூடிய திருக்கண்களால் அழகாக உள்ளது –

பிங்காக்ஷம் பிங்க கேஸாடயம் ஜ்வாலா மாலா பரிஷ்க்ருதம்
அத ஷோடஸ ஹஸ்தம் ச த்யாயேத் ஏவம் ஸூ தர்சனம் –51-

அடர்த்தியான திருக்கேசம் கொண்ட அவனைச் சுற்றி அக்னியானது மாலை போன்று அமைந்து உள்ளது
இப்படியாக பதினாறு திருக்கரங்களுடன் கூடிய ஸூ தர்சனத்தை மட்டுமே தியானிக்க வேண்டும் –

பரைஸ் பரிபவ ப்ராப்தே ப்ரீதி கார விவர்ஜிதே
ஸ்தி தாவ நவ க்ல்ருப்தாயாம் அபி நிர்ஜித்ய வைரிண –52-
பயே மஹதி ஸஞ்ஜாதே சோர வ்யாக்ராத் விபாதிபி
ப்ரத்யா லீட ஸ்திதம் தேவீம் வைரி வர்கதி குந் முகம் –53-
ப்ரஹாரோத் யோகி பிர் பீ நைர் புஜைர் ஊர்த்வைர் அலங்க்ருதம்
சக்த்யா தீப்தேந கங்கே ந வஹ்னி நா சதார் சிக்ஷ –54-
அங்கு சேநாத தண்டேந குந்தே நாத ஜ்வலத் விசா
பரஸ்வதேந சக்ரேண தஷிணாத கரைஸ் க்ரமாத் –55-

சங்கேந சாப முக்யேந பாஸே நாத ஹலே நச
குலிசேந கதாஸ் த்ரேண முஸலே நாத ஸூலத –56-
ஊர்த் வாததஸ் ஸ்திதைர் வாபை ப்ரதீப்தை ராயுதைர் யுதம்
தம் ஷ்ட்ரா நிஷ்ட யூத கோராக் நி ஜ்வாலா கோலா ஹலா குலம் –57
ஸம்ஸ் யூத தத்த்வயா கீர்ணம் திவ்யஉலா வந மாலயா
கோராட்ட ஹாஸ ஸம் த்ரா சத்ர வதைத் யேந்திர தா நவம் –58
ஜ்வாலா குல ஜ்வலத் தைத்ய மேதோ மேதுர பாவகே
அயுதா யுத வஹ் நீ நாமஸ் பதே தீப்த தேஜஸாம் –59-
அத் வஷட் கமயே சக்ரே சக்ரிணம் சக்ரம் உத்தமம்
த்யாயே தேவம் விதம் தேவம் மயே மஹதி மாநவ –60-

வெல்ல இயலாதபடி உள்ள எதிரியிடம் தவிர்க்க இயலாத தோல்வியை அடையும் போதும்
அவர்கள் வெல்ல இயலாத படியான இடத்தில் உள்ள போதிலும் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்னும் போதும்
திருடர்கள் புலி இவற்றால் ஆபத்து நேரிடும் போதும்
பதினாறு திருக்கரங்களுடன் கூடியவனாக உள்ள ஸூதர்சனத்தை
இடது திருவடியை முன்பும் வலது திருவடியை பின்பும்
வைத்து எதிர்க்கத் தயாராக உள்ள நிலையில் இருப்பவனாகத் தியானிக்க வேண்டும்

விரோதியைத் தாக்கும் விதமாக வலிமையான அவன் திருக்கரங்கள் உயர்ந்து நிற்கின்றன
உயர்த்தியபடி உள்ள அவனது திருக்கரங்களில் கீழ் இருந்து மேலாக
ஜ்வாலையுடன் கூடிய உலோக உருண்டை வாள்
நூற்றுக் கணக்கான ஜ்வாலையுடன் கூடிய அக்னி மழு கோல்
ஜ்வாலையுடன் கூடிய குறு வாள் கோடாலி மற்றும் சக்கரம் ஆகியவை உள்ளன

உயர்த்தியபடி உள்ள அவனது திருக்கரங்களில் மேல் இருந்து கீழாக
சங்கு வில் அம்பு பாசக்கயிறு ஏர் இடி தண்டாயுதம் ஈட்டி ஆகியவை உள்ளன
அவனுடைய பற்களின் ஒளியில் இருந்து புறப்படும் அக்னியின் ஜ்வாலையால் அவன் சூழப்பட்டு உள்ளான்
மேலும் அவனைச் சுற்றி அழகான வனமாலையும் உள்ளது

தனது பயங்கரமான சிரிப்பால் ராக்ஷஸர்கள் மற்றும் தானவர்கள் ஆகியவர்களின் அரசர்களை ஓடும்படி செய்கிறான்
அச்சத்தில் உள்ளவர்கள் அவனுடைய இவ்வடிவை தியானிக்க வேண்டும்
அவனே மஹா விஷ்ணுவின் திருச்சக்கரத்தில் உள்ள அபிமான தேவதையாக உள்ளான்
அரக்கர்களின் எரிகின்ற சதையின் காரணமாக புகையுடன் கூடியதாக உள்ள அந்தச் சக்கரத்தில் அவன் உள்ளான்
ஸ்ருஷ்டியின் ஆறு நிலைகளிலும் இவனுடைய இந்த ஒளியானது காணப்படுகிறது –

ஏவம் த்யாத்வா புந த்யாயேத் சதுர் பாஹும் ஸூ தர்சனம்
அந்யதா நைவ சாந்தி ஸ்யாத் அஸ்தி தேஜஸ் ததா ஹரே –61

மீண்டும் ஒரு முறை நான்கு திருக் கைகளுடன் உள்ள ஸூ தர்சனம் தியானிக்க வேண்டும்
வித்தாகி ஸ்ரீ ஹரியின் சக்தியால் அமைதி ஏற்படும் –

கோர சாந்த விபேதேந பவ்ருஷம் த்யானம் ஈரிதம்
இதி தே ஸூர சார்த்தூல த்யானம் அந் யச்ச மே ஸ்ருணு –62-

இவ்வாறு கோரம் சாந்தம் இரு நிலைகளில் உள்ள புருஷ த்யானம் பற்றிச் சொன்னேன் –
மேல் மற்ற த்யானம் பற்றிக் கேள் –

ப்ரகாரா பவ்ருஷா யே யே த்யாநே அஸ்மின் பரி வர்ணிதா
தான் ஸர்வான் மன் மயா நேவ ஸம்ஸ்மரேத் சீக்ர ஸித்தயே –63-

என்னுடன் சம்பந்தம் பெற்ற பல்வேறு புருஷ நிலைகளை பற்றி ஸதா த்யானம் செய்ய வேண்டும் –
இது விரைவாகவே பலன் அளிக்க வல்லதாகும்

அத்யந்த அபூத மிதம் சக்ர ரஹஸ்யம் தே ப்ரகீர்த்திதம்
பூயோ ரஹஸ்யம் அந்யச்ச ஸ்ருணு மே ஸூர புங்கவ–64-

உனக்கு மிக உயர்ந்த ரஹஸ்ய பரம்பரை பற்றி உபதேசித்தேன் -மேலும் கேள்

ஆக்நேயீ யா மதீயா தே புரா சக்தி ப்ரகீர்த்திதா
ஸூர்ய கோட் யர்புதா பாஸா வஹ்னி கோட் யர் புதோமா –65-
இந்து கோட் யர் புதா பாஸா மம ஸ்பந்த மயீ தனு
அம்ருதம் பரமாத்மாநம் அசேஷ புவநாத் ருதிம் –66-
ஆஸ்தாய பஞ்ச பிந்து ஆத்மா ஸ்ப்ரு சந்தீ வ்யாபி நம் பரம்
ஹிதாய ஸர்வ பூதா நாமு தேதி பரமேச்வராத் –67-

அக்னியை உள்ளடக்கிய எனது சக்தி கோடிக்கணக்கான ஸூர்யன் மற்றும் அக்னி போன்று ஒளிர்ந்து
கோடிக்கணக்கான சந்திரன் போன்ற துடிப்பைக் கொண்டதாகவும் உள்ளது
ஸஹஸ்ரார என்று தொடங்கும் மாத்திரத்தில்
அம்ருதம் -ஸ -பரமாத்மன் -ஹ -அசேஷ புவன ஆதாரம் -ர -ஆகியவை
பஞ்ச பிந்து மற்றும் வ்யாபின் ஆகிய ஒலிகளுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளன –
மிகவும் உயர்ந்த பரமேஸ்வரனிடம் இருந்து உத்பத்தி யாகும் இந்த சக்தியானது
அனைத்து உயிரிகளுக்கும் நன்மை அளிக்க வல்லதாக உள்ளது –

தாமஷம் கல்பயேச் சக்திம் தத் ப்ரபாம் நாபி மண்டலம்
அராணி ஷண் மநோ ரர்ணான் ஸூர்ய உத்தாமவ் ஸ பிந்துகவ் –68-
ஸூஸ்திதவ் நேமி கவ் த்யாயேச் சேஷம் து ப்ரதி மண்டலம்
ஆத்மாநம் மத்யதோ த்யாயேத் ஸ்வம் மாயா பரமாத்மநோ –69-

அந்த சக்தியே ஸூ தர்சனத்தின் நாபியாகும் -அதன் ஒளியே வெளிவட்டம் -மந்த்ரத்தின் ஆறு ஒலிகளும் ஆறு ஆரங்கள் –
ஸூர்ய உத்தாம பிந்து ஒலிகள் அந்த ஆரங்கள் சக்கரத்தில் சென்று இணையும் வட்டத்தில்
உறுதியாக இணைக்கப் பட்டதாகக் கொள்ள வேண்டும்
மந்திரத்தில் எஞ்சிய பகுதி -பட் -சக்கரத்தை சூழ்ந்து உள்ளதாகக் கொள்ள வேண்டும்
தனது ஆத்மாவானது மஹா லஷ்மி மற்றும் பரமாத்மாவின் நடுவில் உள்ளதாக தியானிக்க வேண்டும் –

ஸூர்ய அநல அந்தரஸ்தம் ச நிரஸ்யந் ஸம்ஸ்மரேஜ் ஜனம்
த்யா யன்ன நிச மேவம் ஹி யோகீ த்யான பாராயண –70-
விதூய நிகிலம் தோஷம் ஸாம் ஸாரிகம் அசேஷத
மயி பக்திம் பராம் ப்ராப்ய மாமே வாந்தே ஸமஸ்நுதே –71-

தன்னை தனது சரீரத்தில் இருந்து வெளியே எடுத்ததாக எண்ணி
ஸூர்யன் மற்றும் அக்னியில் நான் இருப்பதாக தியானிக்க வேண்டும்
இவ்வாறு த்யானத்தில் ஆழ்ந்த யோகி தனது அனைத்து பாபங்களையும் அந்த த்யானம் மூலமாகவே கழிக்கிறான்
அதன் பின்னர் என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவனாக என்னையே தஞ்சம் எனப் புகுகிறான்

அந்தரா பரமாத்மா நம் அம்ருதம் ச ஸ்திதோ ஜபன்
மநீஷீ மனஸா நித்யம் பியூஷாப் யாய நம் ஸ்மரேத்–72-

ஸூ தர்சன மந்திரத்தின் பரமாத்மா மற்றும் அம்ருதம் -ஸ மற்றும் ஹ -ஆகியவற்றை உறுதியுடன் ஜபித்தபடி உள்ள ஒருவன்
அம்ருதத்தைப் பருகினால் உண்டாகும் சுவையை எப்போதும் மனத்தில் சிந்தித்த படி இருக்க வேண்டும் –

ஸூதயா ப்லாவ்ய மாநோ ஹி ஸ்த்ருதயா சக்தி கோடராத்
ப்ராணேந ப்ராண்யமா நச்ச தக்த தோஷோ அநலத் விஷா –73-
பஞ்ச பிந்து க்ரியா லாபாத் ஐஸ்வர்யம் பரமாஸ்தித
சந்தத அப்யாஸ யோகேந வஸீ யுக்தோ ஜிதேந்த்ரிய –74-
விஹாய சகலம் க்லேசம் வேஷ மாஸ்தாய மா மகம்
த்ருப்தோ ஜானபலோ யோகீ க்ரியயா ஸர்வதோ வஸீ –75-

ஹ-அக்ஷரம் யோகிகளின் அனைத்து தோஷங்களும் அநலம் என்னும் அக்னியின் ஜ்வாலைகளால் பொசுக்கப் படுகின்றன
அப்போது அவன் பஞ்ச பிந்து மூலமாக உயர்ந்த ஐஸ்வர்யத்தை அடைகிறான்
தொடர்ந்து யோகத்தைக் கைக்கொண்டு புலன்களை அடக்குகிறான்
என்னால் ஸாம்யா பத்தி அருளப்பெற்று தன்னைத் தன் வசப்படுத்தியவனாக உள்ளான்

ஈஸ்வர பரமோ பூத்வா ஸர்வ வ்யாப்தி மய ஸ்தித
மாமேவ மாமகம் தாம மத் ப்ரஸாதாத் உபாஸ் நுதே –76-

சாம்யா பத்தி அடைந்த அவன் எனது கருணை மூலமாகவே என்னையே அனுபவித்து ஆனந்திக்கிறான் –
ஆனந்தத்தில் சாம்யா பத்தி -ஸாயுஜ்யம் அடைகிறான் –

யா கிரியா ஸா சிதாக்யாதா யா சித்தி ஸா பரா க்ரியா
ஏதே ஸ பரமா நந்தாஸ்த்ர யஸ்தே பரி கீர்த்திதா –77-

அகண்டை கா பரா சக்திச் சித் க்ரியா நந்த ரூபிணி
வைஷ்ணவீ ஸா பரா ஹந்தா ஸாஹம் ஸர்வார்த்த பூரணீ –78

கிரியை செயல்பாடு என்று அழைக்கப்படுவது எதுவோ -அது சித் -அறிவு -எனவும் கூறப்படும்
சித்த என்று அழைக்கப்படுவது எதுவோ அது உயர்ந்த கிரியை எனவும் கூறப்படும்
இந்த இரண்டும் மற்றும் பரமானந்தம் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு உயர்ந்த சக்தியாக உள்ளது
இதுவே- சித்த கிரியை ஆனந்தம் -ஆகியவற்றின் ரூபமாக உள்ளது
அதுவே விஷ்ணுவின் நான் என்ற எண்ணமாக உள்ளது -அவை அனைத்தையும் நிறைவேற்றுபவன் நானே ஆவேன் –

ஸ்வாச் ஸந்த்யான் மம சங்கல்போ த்விதைவம் ப்ரவிஜ்ரும்பதே
ஏகா சக்திர் க்ரியாஹ் வாநா மஹா பூதிரதாபரா –79-

எனது இச்சையால் எனது சங்கல்பம் மூலம் நான் இரண்டு சக்திகளாக மாறுகிறேன்
அவற்றில் ஓன்று கிரியை எனவும் மஹா பூதி எனவும் கூறப்படுகிறது –

ஸாமான்யதஸ் அனயோர் சக்ர ஸ்திதாஹம் பரமேஸ்வரீ
ஏஷா தே சகலா சக்திர் க்ரியாரூபா பிரதர்சிதா –80-

இந்திரனே நான் அனைத்துக்கும் ஈஸ்வரியாக உள்ளதால் அந்த இரண்டு சக்திக்கும் பொதுவாக உள்ளேன்
இப்படி செயல் ரூபமாக உள்ள அந்த சக்தி மற்றும் அதன் அம்சங்கள் குறித்து அனைத்தும் உனக்கு கூறுகிறேன் –

ஸ்தூல ஸூஷ்ம பரத்வேந தாரிகாயா நிசாமய
நிமீ லித க்ரியாகாரா ஸ்பஷ்ட ஐஸ்வர்ய ஸ்வரூபிணீ –81–

தநு ஷாட் குண்ய ரூபா மே பூதிர் ஸா தாரி காஹ்தயா
தஸ்யா ஸ்தூலாதி ரூபாணி யதா வன்மே நிசாம்ய
உச்ய மாநாதி தேவே ச ஸாவதா நே ந சேத ஸா –82-

அடுத்து தாரிக்காவின் ஸ்தூல ஸூஷ்ம நிலையான வடிவம் குறித்துக் கேட் பாயாக
பூதி எனப்படும் தாரிகா ஆறு குணங்களுடன் கொண்ட ரூபம் உள்ளவளாக உள்ளாள்
ஆனால் அவளுடைய குணங்களில் செயல்படும் குணமானது மறைவாகவும் ஐஸ்வர்யம் என்ற குணமானது ஓங்கியும் உள்ளது

அடுத்து அவளுடைய ஸ்தூலமான நிலை போன்றவற்றைக் குறித்து நான் கூற கேட் பாயாக –

முப்பத்து ஒன்றாவது அத்யாயம் சம்பூர்ணம் –

——————————————————–361-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம