Archive for the ‘ஸ்ரீ ஹரி வம்சம்’ Category

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 103–(ஸ்ரீ விருஷ்ணி வம்ச வர்ணநம்)–ஸ்ரீ கிருஷ்ணனின் சந்ததி |–

February 1, 2021

கிருஷ்ணனின் குடும்பம்; பலதேவன், வசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோரின் குடும்ப வம்சாவளி கூறப்படல்.

ஜநமேஜய உவச
ப³ஹூநாம் ஸ்த்ரீஸஹஸ்ராணாமஷ்டௌ பா⁴ர்யா꞉ ப்ரகீர்திதா꞉ |
தாஸாமபத்யாந்யஷ்டாநாம் ப⁴க³வாந்ப்ரப்³ரவீது மே ||2-103-1

வைஷ²ம்பாயந உவாச
அஷ்டௌ மஹிஷ்ய꞉ புத்ரிண்ய இதி ப்ராதா⁴ந்யத꞉ ஸ்ம்ருதா꞉ |
ஸர்வா வீரப்ரஜாஷ்²சைவ தாஸ்வபத்யாநி மே ஷ்²ருணு ||2-103-2

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மதிப்பிற்குரிய ஐயா, கிருஷ்ணனின் பல்லாயிரம் மனைவியரில் எட்டுப் பெயர்களை முறையாகக் குறிப்பிட்டீர். அவர்களின் பிள்ளைகளைக் குறித்து இப்போது சொல்வீராக” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர், “கிருஷ்ணனின் எட்டு ராணிகள் {அவனது மனைவியரில்} முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் வீர மைந்தர்களை ஈன்றெடுத்தனர். அவர்களுடைய பிள்ளைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2)

ருக்மிணீ ஸத்யபா⁴மா ச தே³வீ நாக்³நஜிதீ ததா² |
ஸுத³த்தா ச ததா² ஷை²ப்³யா லக்ஷ்மணா சாருஹாஸிநீ ||2-103-3

மித்ரவிந்தா³ ச காலிந்தீ³ ஜாம்ப³வத்யத² பௌரவீ |
ஸுபீ⁴மா ச ததா² மாத்³ரீ ருக்மிணீதநயாஞ்ச்²ருணு ||2-103-4

ருக்மிணி, சத்யபாமா, {நக்னஜித்தின் மகளும், சத்யா என்று அழைக்கப்பட்டவளுமான} நாக்னஜிதி தேவி, சைப்யை என்றும் அழைக்கப்பட்ட (சிபி நாட்டு இளவரசி) ஸுதத்தை, அழகிய சிரிப்பைக் கொண்ட லக்ஷ்மணை,(3) காளிந்தி என்றும் அழைக்கப்பட்ட {காளிந்த நாட்டு இளவரசி} மித்ரவிந்தை, பௌரவி என்றும் அழைக்கப்பட்ட ஜாம்பவதி, மாத்ரி {மத்ர நாட்டு இளவரசி} என்றும் அழைக்கப்பட்ட ஸுபீமை ஆகியோரே அவர்கள் {கிருஷ்ணனின் எட்டு மனைவியர்}. இப்போது ருக்மிணியின் பிள்ளைகளைக் குறித்துக் கேட்பாயாக[“ருக்மிணி, ஸத்யபாமை, நாக்நஜிதி தேவி, சிபிதேசத்து ஸுதத்தை, அழகிய சிரிப்புடைய லக்ஷ்மணா, காளிந்த தேசத்து மித்ரவிந்தை, ஜாம்பவதி, புரு வம்சத்து மத்ரகுமாரி ஸுபீமை. ருக்மிணி பிள்ளைகளைப் பற்றிக் கேள்” என்றிருக்கிறது. இதிலும் சரியாக எட்டு மனைவியர் சொல்லப்பட்டிருக்கின்றனர்.].(4)

ப்ரத்³யும்ந꞉ ப்ரத²மம் ஜஜ்ஞே ஷ²ம்ப³ராந்தகர꞉ ஷு²ப⁴꞉ |
த்³விதீயஷ்²சாருதே³ஷ்ணஷ்²ச வ்ருஷ்ணிஸிம்ஹோ மஹாரத²꞉ ||2-103-5

சாருப⁴த்³ரஷ்²சாருக³ர்ப⁴꞉ ஸுதே³ஷ்ணோ த்³ரும ஏவ ச |
ஸுஷேணஷ்²சாருதே³ஷ்ணாஷ்²ச சாருவிந்த³ஷ்²ச வீர்யவான் ||2-103-6

சாருபா³ஹு꞉ கநீயாம்ஷ்²ச கந்யா சாருமதீ ததா² |
ஜஜ்ஞிரே ஸத்யபா⁴மாயாம் பா⁴நுர்பீ⁴மரத²ஸ்ததா² ||2-103-7

சம்பரனைக் கொன்றவனும், பிரத்யும்னன் என்ற பெயரைக் கொண்டவனுமான மகனையே முதலில் ருக்மிணி ஈன்றெடுத்தாள். அடுத்ததாக அவள் வலிமைமிக்கத் தேர்வீரனும், விருஷ்ணி குலக் கொழுந்துமான சாருதேஷ்ணனையும்,(5) அடுத்தடுத்து சாருபத்திரன், சாருகர்ப்பன், ஸுதேஷ்ணன், துருமன், ஸுஷேணன், சாருகுப்தன்,பெருஞ்சக்திவாய்ந்த சாருவிந்தன் ஆகியோரையும்(6) இளையவனான சாருபாஹுவையும் பெற்றாள். மேலும் அவள் சாருமதி என்ற பெயரைக் கொண்ட ஒரு மகளையும் பெற்றெடுத்தாள்.(7)

ரோஹிதோ தீ³ப்திமாம்ஷ்²சைவ தாம்ரஜாக்ஷோ ஜலாந்தக꞉ |
பா⁴நுர்பீ⁴மலிகா சைவ தாம்ரபர்ணீ ஜலந்த⁴மா ||2-103-8

கருடத்வஜன் (கிருஷ்ணன்) சத்யபாமாவிடம் பானு, பீமரதன், க்ஷுபன், ரோஹிதன், தீப்திமான், தாம்ரஜாக்ஷன், ஜலாந்தகன் என்ற ஏழு மகன்களையும், பானு, பீமலிகை, தாந்திரபக்ஷை {தாம்ரபர்ணி}[தாந்திரபக்ஷை/தாம்ரஜக்ஷை], ஜலந்தமை ஆகிய நான்கு மகள்களையும் பெற்றாள்.(8)

சதஸ்ரோ ஜஜ்ஞிரே தேஷாம் ஸ்வஸாரோ க³ருட³த்⁴வஜாத் |
ஜாம்ப³வத்யா꞉ ஸுதோ ஜஜ்ஞே ஸாம்ப³꞉ ஸமிதிஷோ²ப⁴ந꞉ ||2-103-9

ஜாம்பவதி, போர்க்களத்தின் ரத்தினமும், சாம்பன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனையும், மித்ரவான், மித்ரவிந்தன், மித்ரபாஹு, சுநீதன் என்ற மகன்களையும், மித்ராவதி என்ற ஒரு மகளையும் பெற்றாள்.(9)

மித்ரவாந்மித்ரவிந்த³ஷ்²ச மித்ரவத்யபி சாங்க³நா |
மித்ரபா³ஹு꞉ ஸுநீத²ஷ்²ச நாக்³நஜித்யா꞉ ப்ரஜா꞉ ஷ்²ருணு ||2-103-10

நாக்னஜிதியின் பிள்ளைகளை இப்போது கேட்பாயாக. அவள் பத்ரகாரன், பத்ரவிந்தன் என்ற இரு மகன்களையும், பத்ராவதி என்ற பெயரில் ஒரு மகளையும் பெற்றாள்.(10)

ப⁴த்³ரகாரோ ப⁴த்³ரவிந்த³꞉ கந்யா ப⁴த்³ரவதீ ததா² |
ஸுத³த்தாயாம் து ஷை²ஷ்யாயாம் ஸங்க்³ராமஜித³ஜாயத ||2-103-11

சைப்யை {ஸுதத்தை}, ஸங்கிராமஜித், ஸத்யஜித், சேனஜித், ஷூரன், ஸபத்நஜித் என்ற மகன்களைப் பெற்றாள்.(11)

ஸத்யஜித்ஸேநஜிச்சைவ ததா² ஷூ²ர꞉ ஸபத்நஜித் |
ஸுபீ⁴மாயா꞉ ஸுதோ மாத்³ர்யா வ்ருகாஷ்²வோ வ்ருகநிர்வ்ருதி꞉ ||1-103-12

விருகாஷ்வன், விருகநிர்விருதி, விருகதீப்தி, ஸுபீமன் என்ற இளவரசர்கள் மாத்ரியின் {ஸுபீமையின்} மகன்களாவர்.(12)

குமாரோ வ்ருகதீ³ப்திஷ்²ச லக்ஷ்மணாயா꞉ ப்ரஜா꞉ ஷ்²ருணு
கா³த்ரவாந்கா³த்ரகு³ப்தஷ்²ச கா³த்ரவிந்த³ஷ்²ச வீர்யவான் ||2-102-13

ஓ! மன்னா, லக்ஷ்மணையின் பிள்ளைகளை இப்போது கேட்பாயாக. காத்ரவான், காத்ரகுப்தன், பெருஞ்சக்திவாய்ந்த காத்ரவிந்தன் ஆகியோர், அவர்களின் தங்கையான காத்ரவதியுடன் {லக்ஷ்மணைக்குப்} பிறந்தனர்.(13)

ஜஜ்ஞிரே கா³த்ரவத்யா ச ப⁴கி³ந்யாநுஜயா ஸஹ |
அஷ்²ருதஷ்²ச ஸுதோ ஜஜ்ஞே காலிந்த்³யா꞉ ஷ்²ருதஸம்மித꞉ ||2-103-14

அஷ்²ருதம் ஷ்²ருதஸேநாயை ப்ரத³தௌ³ மது⁴ஸூத³ந꞉ |
தம் ப்ரதா³ய ஹ்ருஷீகேஷ²ஸ்தாம் பா⁴ர்யாம் முதி³தோ(அ)ப்³ரவீத் ||2-103-15

ஏஷ வாமுப⁴யோரஸ்து தா³யாத³꞉ ஷா²ஷ்²வதீ꞉ ஸமா꞉ |
ப்³ருஹத்யாம் து க³த³ஸ்யாஹு꞉ ஷை²ஷ்யாயாமங்க³த³ம் ஸுதம் ||2-103-16

உத்பந்நம் குமுத³ம் சைவ ஷ்²வேதம் ஷ்²வேதா ததா²ங்க³நா |
அகா³வஹ꞉ ஸுமித்ரஷ்²ச ஷு²சிஷ்²சித்ரரத²ஸ்ததா² ||2-103-17

காளிந்தி {மித்ரவிந்தை}, அஷ்ருதன், சுருதஸம்மிதன் என்ற மகன்களைப் பெற்றெடுத்தாள்,(14) மதுசூதனன் அஷ்ருதனை {முக்கிய மனைவியர் எட்டுப் பேரில் அடங்காத} சுருதசேனை என்பவளுக்குக் கொடுத்தான். அவ்வாறு தன் மகனைக் கொடுத்துவிட்ட ரிஷிகேசன் தன் மனைவியிடம் {காளிந்தியிடம்},(15) “இவன் எப்போதும் உங்கள் இருவருக்கும் மகனாக இருக்கட்டும்” என்றான்.
பிருகதி என்பவள் கதனைப்[கதன் என்ற பெயரில் கிருஷ்ணனின் தம்பி ஒருவனும் உண்டு. இங்கே குறிப்பிடப்படுவது அவனது மகன். ] பெற்றெடுத்தாள். {மற்றுமொரு} சைப்யையிடம் அங்கதன்,(16) குமுதன், ஸ்வேதன் என்ற மகன்களும், ஸ்வேதை என்ற மகளும் பிறந்தனர்.சுதேவை என்பவள் அபாவஹன், சுமித்ரன், சுசி, சித்ரரதன், சித்ரசேனன் என்ற பெயர்களைக் கொண்ட ஐந்து மகன்களையும், சித்திரை, சித்ராவதி என்ற பெயர்களைக் கொண்ட மகள்களையும் பெற்றாள்.(17)

சித்ரஸேந꞉ ஸுதே³வாயாஷ்²சித்ரா சித்ரவதீ ததா² |
வநஸ்தம்ப³ஷ்²ச ஜஜ்ஞாதே ஸுத꞉ ஸ்தம்ப³வநஷ்²ச ஹ ||2-103-18

நிவாஸநா வநஸ்தம்ப³꞉ கந்யா ஸ்தம்ப³வதீ ததா² |
உபஸந்நஷ்²ச ஷ²ங்குஷ்²ச வஜ்ராம்ஷு²꞉ க்ஷிப்ர ஏவ ச ||2-103-19

கௌஷி²க்யாம் ஷ்²ருதஸோமாயாம் யௌதி⁴ஷ்டி²ர்யாம் யுதி⁴ஷ்டி²ர꞉ |
காபாலீ க³ருட³ஷ்²சைவ ஜஜ்ஞாதே சித்ரயோதி⁴நௌ ||2-103-20

ஏவமாதீ³நி புத்ராணாம் ஸஹஸ்ராணி நிபோ³த⁴ மே |
த³ஷா²யுதம் ஸமாக்²யாதா வாஸுதே³வஸ்ய தே ஸுதா꞉ ||2-103-21

அயுதாநி ததா² சாஷ்டௌ ஷூ²ரா ரணவிஷா²ரதா³꞉ |
ஜநார்த³நஸ்ய ப்ரஸவ꞉ கீர்திதோ(அ)யம் ததா² மயா ||2-103-22

கௌசிகி என்பவளிடம் வனன், ஸ்தம்பவனன் என்றும் அழைக்கப்பட்ட ஸ்தம்பன், நிவாசனன், வனஸ்தம்பன் என்ற மகன்களும், ஸ்தம்பவதி என்ற மகளும் பிறந்தனர்.(18)

ஸுதஸோமையிடம் உபசன்னன், சங்கு, வஜ்ராம்சு, க்ஷிப்ரன் என்ற மகன்கள் பிறந்தனர்.(19)

யௌதிஷ்டிரி என்பவளிடம் போர்க்களங்களில் அற்புத வழிமுறைகளில் போரிடும் யுதிஷ்டிரன், கபாலி, கருடன் ஆகியோர் பிறந்தனர்.(20)

இவ்வாறே நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வாசுதேவனுக்கு மகன்கள் பிறந்தனர் என்பதை அறிந்து கொள்வாயாக.(21) போரில் திறன்மிக்கவர்களான ஜனார்த்தனனின் வீர மகன்களில் எண்பதாயிரம் பேர் என்னால் சொல்லப்பட்டனர்.(22)

ப்ரத்³யும்நஸ்ய ஸுதோ ஜஜ்ஞே வைத³ர்ப்⁴யாம் ராஜஸத்தம |
அநிருத்³தோ⁴ ரணே ருத்³தோ⁴ ஜஜ்ஞே ஸ ம்ருக³கேதந꞉ ||2-103-23

ரேவத்யாம் ப³லதே³வஸ்ய ஜஜ்ஞாதே நிஷ²டோ²ல்முகௌ |
ப்⁴ராதரௌ தே³வஸங்காஷா²வுபௌ⁴ புருஷஸத்தமௌ ||2-103-24

ஸுதநுஷ்²ச ஸுதாரா ச ஷௌ²ரேராஸ்தாம் பரிக்³ரஹ꞉ |
பௌண்ட்³ரக꞉ கபிலஷ்²சைவ வஸுதே³வஸ்ய தௌ ஸுதௌ ||2-103-25

தாராயாம் கபிலோ ஜஜ்ஞே பௌண்ட்³ரஷ்²ச ஸுதநோ꞉ ஸுத꞉ |
தயோர்ந்ரூபோ(அ)ப⁴வத்பௌண்ட்³ர꞉ கபிலஷ்²ச வநம் யயௌ ||2-103-26

துர்யாம் ஸமப⁴வத்³வீரோ வஸுதே³வாந்மஹாப³ல꞉ |
ஜரா நாம நிஷாதா³நாம் ப்ரபு⁴꞉ ஸர்வத⁴நுஷ்மதாம் ||2-103-27

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, பிரத்யும்னன் விதர்ப்ப இளவரசியிடம் {ருக்மியின் மகளான ருக்மாவதியிடம்} அநிருத்தன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். அவன் தன் கொடியில் மானைச் சின்னமாகக் கொண்டவனாகவும், போரில் எவராலும் தடுக்கப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(23)

பலதேவன் {பலராமன்} ரேவதியிடம் நிசடன், உல்முகன் என்ற இரு மகன்களைப் பெற்றான். அந்தச் சகோதரர்கள் இருவரும் தேவர்களைப் போன்ற அழகர்களாக இருந்தனர்.(24)

சூரனின் மகனான வசுதேவன், தன் இரு மனைவிகளான சுதானு, நாராச்சி {சுதாரா} ஆகியோரிடம் பௌண்ட்ரகன், கபிலன் என்ற இரு மகன்களைப் பெற்றான்.(25) அவர்களில் நாராச்சி {சுதாரை} கபிலனையும், சுதானு பௌண்டரகனையும் பெற்றனர். அவ்விரு மகன்களில் பொண்டரகன் மன்னனானான், கபிலன் கான்புகுந்தான்.(26) வசுதேவன், பெருஞ்சக்திவாய்ந்தவனும், {நிஷாதர்களின் தலைவனும்} பெரும் வில்லாளியுமான ஜரனை ஒரு சூத்திரப்பெண்ணிடம்[பெரும்பலவனான வசுதேவன், தூர்யையின் மூலம் துணிவுமிக்க ஒரு மகனைப் பெற்றிருந்தான். ஜரன் என்ற பெயரைக் கொண்ட அவன், வில்லாளிகளில் சிறந்தவனாக நிஷாதர்களின் தலைவனானான்” என்றிருக்கிறது.இங்கே குறிப்பிடப்படும் ஜரனே ஏகலவ்யன் என்பாரும் உண்டு. பெரும் வில்லாளி, நிஷாதத்தலைவன் என்பன போன்ற சொற்கள் அதை உறுதி செய்கின்றன. ஆனால், ஹரிவம்ச பர்வம் 34:33ல் ஏகலவ்யன் சூரனின் மூன்றாம் மகனான {வசுதேவனின் தம்பியான} தேவசிரவனின் இரண்டாம் மகனென மறைமுகமாகச் சொல்லப்படாமல் நேரடியாகப் பெயர் குறிப்பிட்டே சொல்லப்படுகிறான். எவ்வாறெனினும் ஏகலவ்யன் கிருஷ்ணனுக்குத் தம்பி முறையில் வருகிறான். ] பெற்றான்.(27)

காஷ்²யாம் ஸுபார்ஷ்²வம் தநயம் லேபே⁴ ஸாம்பா³த்தரஸ்விநம் |
ஸாநுர்ஜஜ்ஞே(அ)நிருத்³த⁴ஸ்ய வஜ்ர꞉ ஸாநோரஜாயத ||2-103-28

சாம்பன், வேகமாகச் செல்பவனான சுபார்ஸ்வனைக் காசியை என்பவளிடம் மகனாகப் பெற்றான். அநிருத்தனுக்குச் சானு, வஜ்ரன்[இந்த வஜ்ரனையே அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தின் மன்னனாக்கினான். இது மஹாபாரதம் மௌசல பர்வம் 7ம் பகுதியிலும், மஹாப்ரஸ்தானிகபர்வம் 1ம் பகுதியிலும் சொல்லப்பட்டுள்ளது. ] என்ற இரு மகன்கள் பிறந்தனர், அவர்களில் பின்னவனே மூத்தவனாக இருந்தான்.(28)

வஜ்ராஜ்ஜஜ்ஞே ப்ரதிரத²꞉ ஸுசாருஸ்தஸ்ய சாத்மஜ꞉ |
அநமித்ராச்சி²நிர்ஜஜ்ஞே கநிஷ்டா²த்³வ்ருஷ்ணிநந்த³நாத் ||2-103-29

ஷி²நேஸ்து ஸத்யவாக்³ஜஜ்ஞே ஸத்யகஷ்²ச மஹாரத²꞉ |
ஸத்யகஸ்யாத்மஜ꞉ ஷூ²ரோ யுயுதா⁴நஸ்த்வஜாயத ||2-103-30

அஸங்கோ³ யுயுதா⁴நஸ்ய மணிஸ்தஸ்யாப⁴வத்ஸுத꞉ |
மணேர்யுக³ந்த⁴ர꞉ புத்ர இதி வம்ஷ²꞉ ஸமாப்யதே ||2-103-31

வஜ்ரனுக்குப் பிரதிரதன் என்பவனும், அவனுக்கு {பிரதிரதனுக்கு} சுசாரு என்பவனும் பிறந்தனர்.
விருஷ்ணியின் இளைய மகன் அனமித்ரன் {சுமைத்ரன்}, சினியைப் பெற்றான்,(29) அவனுக்கு {சினிக்கு} சத்யவந்தன், பெருந்தேர்வீரனான சத்யகன் என்ற இரு மகன்கள் பிறந்தனர். வீர யுயுதானன் {சாத்யகி}, இந்தச் சத்யகனின் மகனே ஆவான்.(30) யுயுதானின் மகன் அசங்கன், அவனது {அசங்கனின்} மகன் மணி. மணியின் மகன் யுகந்திரன். இவனுடன் இந்த வம்சம் {ஜனமேஜயனிடம் இதைச் சொல்லும் காலம் வரை} நிறைவடைகிறது” என்றார் {வைசம்பாயனர்}.(31)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
வ்ருஷ்ணிவம்ஷா²நுகீர்தநே த்ர்யதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 102–(ஸ்ரீ நாரத³வாக்யே ஸ்ரீ கிருஷ்ண ஸ்துதி)–ஸ்ரீ கிருஷ்ணனின் மகிமை |–

February 1, 2021

கிருஷ்ணனின் பெருமைகளை முழுமையாகவும், விரிவாகவும் சொன்ன நாரதர்.

நாரத³ உவாச
ஸாதி³தா மௌரவா꞉ பாஷா² நிஸுந்த³நரகௌ ஹதௌ |
க்ருத꞉ க்ஷேம்ய꞉ புந꞉ பந்தா²꞉ புரம் ப்ராக்³ஜ்யோதிஷம் ப்ரதி ||2-101-1

ஷௌ²ரிணா ப்ருதி²வீபாலாஸ்த்ராஸிதா꞉ ஸ்பர்த்³தி⁴நோ ரணே |
த⁴நுஷஷ்²ச நிநாதே³ந பாஞ்சஜந்யஸ்வநேந ச ||2-102-2

மேக⁴ப்ரக்²யை ரதா²நீகைர்தா³க்ஷிணாத்யை꞉ ஸுரக்ஷிதம் |
ருக்மிணம் யுதி⁴ நிர்ஜித்ய மஹாப³லபராக்ரமம் |
ருக்மிணீமாஜஹாராஷு² கேஷ²வோ வ்ருஷ்ணிபுங்க³வ꞉ ||2-102-3

தத꞉ பர்ஜந்யகோ⁴ஷேண ரதே²நாதி³த்யவர்சஸா |
அவாப்ய மஹிஷீம் போ⁴ஜ்யாம் ஷ²ங்க²சக்ரக³தா³ஸிப்⁴ருத் ||2-102-4

நாரதர் {உக்ரசேனனிடமும், யாதவர்களிடமும்}, “முரனின் {முருவின்} பாசக்கயிறுகள் அறுக்கப்பட்டன, நிசும்பனும், நரகனும் கொல்லப்பட்டனர், பிராக்ஜோதிஷத்திற்குச் செல்லும் சாலை ஆபத்துகள் அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டது.(1) செருக்குமிக்க உலக மன்னர்களும் கூட இந்தச் சூர குல வழித்தோன்றலுடைய (கிருஷ்ணனது) வில்லின் நாணொலியையும், பாஞ்சஜன்ய சங்கின் ஒலியையும் கேட்டுப் போரில் அச்சமடைந்தனர்.(2) விருஷ்ணிகளில் முதன்மையான இந்தக் கேசவன், தக்காண {தென்னகத்தைச் சேர்ந்த} தேர் வீர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான ருக்மியை எளிதில் வீழ்த்தி ருக்மிணியை அபகரித்துச் சென்றான்.(3) சங்கு சக்கரக் கதாதாரியான இந்த ஹரி, சூரியனைப் போன்ற பிரகாசமிக்கதும், மேக முழத்தைப் போன்ற சடசடப்பொலியை உண்டாக்குவதுமான தேரில் போஜனின் மகளை {பீஷ்மகனின் மகளான ருக்மிணியைத்} தன் வீட்டிற்குக் கொண்டு சென்று, திருமணம் செய்து கொண்டான்.(4)

ஜாரூத்²யாமாஹ்வ்ருதி꞉ க்ராத²꞉ ஷி²ஷு²பாலஷ்²ச நிர்ஜித꞉ |
வக்ரஷ்²ச ஸஹ ஸைந்யேந ஷ²தத⁴ந்வாத² நிர்ஜித꞉ ||2-102-5

இந்த்³ரத்³யும்நோ ஹத꞉ கோபாத்³யவநஷ்²ச கஷே²ருமான் |
ஹத꞉ ஸௌப⁴பதி꞉ ஷ்²ரீமாஞ்சா²ல்வஷ்²ச த்³ருட⁴த⁴ந்வநா ||2-102-6

பர்வதாணாம் ஸஹஸ்ரம் ச சக்ரேண புருஷோத்தம꞉ |
விகீர்ய புண்ட³ரீகாக்ஷோ த்³யுமத்ஸேநம் வ்யபோத²யத் ||2-102-7

மஹேந்த்³ரஷி²க²ரே சைவ நிமேஷாந்தரசாரிணௌ |
ஜகா⁴ந புருஷவ்யாக்⁴ரோ ராவணஸ்யாபி⁴தஷ்²சரௌ ||2-102-8

இராவத்யாம் மஹாபோ⁴ஜாவக்³நிஸூர்யஸமௌ யுதி⁴ |
கோ³பதிஸ்தாலகேதுஷ்²ச நிஹதௌ ஷா²ர்ங்க³த⁴ந்வநா ||2-102-9

அக்ஷப்ரபாதநே சைவ டி³ம்போ³ ஹம்ஸஷ்²ச தா³நவௌ |
உபௌ⁴ தாவபி க்ரூஷ்ணேந ஸாநுகௌ³ விநிபாதிதௌ ||2-102-10

த³க்³தா⁴ வாராணஸீ சைவ கேஷ²வேந மஹாத்மநா |
ஸராஷ்ட்ர꞉ ஸாநுப³ந்த⁴ஷ்²ச காஷீ²நாமதி⁴போ ஹத꞉ ||2-102-11

இவன் ஜாருதி நகரில் ஆஹ்விருத்தி, கிராதன், சிசுபாலன் ஆகியோரை வீழ்த்தி, படைவீரர்களுடன் கூடிய தந்தவக்ரன், சததன்வன் ஆகியோரை வென்றான்.(5) இவன் கோபத்தால் தூண்டப்பட்டவனாக இந்திரத்யும்னன், யவனன் {காலயவனன்}, கசெருமான் ஆகியோரைக் கொன்றான். கனமான {சாரங்க} வில்லைக் கொண்ட இவன் (கிருஷ்ணன்) சௌபத்தின் தலைவனான மன்னன் சால்வனையும் கொன்றான்.(6) தாமரைக் கண்ணனான இந்தப் புருஷோத்தமன், ஆயிரக்கணக்கான மலைகளைச் சிதறடித்துவிட்டுத் தன் சக்கராயுதத்தால் தியுமத்சேனனைத் தாக்கினான் {கொன்றான்}.(7) புலியைப் போன்று துணிவுமிக்கவனும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மகேந்திர மலையின் சிகரத்திற்குச் செல்லவல்லவனுமான இவன், அங்கே திரிந்து கொண்டிருந்த ராவணனின் தொண்டர்களை {ராட்சசர்களைக்} கொன்றான்.(8) சாரங்கபாணியான இந்தக் கிருஷ்ணன், இராவதி நகரில் நடந்த போரில் அக்னி தேவனையும், சூரிய தேவனையும் போலப் போரிட்ட பெரும்போஜர்களான கோபதியையும், தாலகேதுவையும் கொன்றான்.(9) இந்தக் கிருஷ்ணன், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் டிம்பகன், ஹம்சன் ஆகியோரையும் அவர்களின் தொண்டர்களையும் கொன்றான்[அக்ஷப்ரபாதனம் எனும் இடத்தில் வைத்துக் கொன்றான்].(10) உயரான்மாவான இந்தக் கேசவன் (கிருஷ்ணன்), வாராணசியை {காசியை} எரித்தான். இவன் காசியின் மன்னனுடன் சேர்த்து அவனது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையும் கொன்றான்.(11)

விஜித்ய ச யமம் ஸங்க்²யே ஷ²ரை꞉ ஸந்நதபர்வபி⁴꞉ |
அதை²ந்த்³ரஸேநிராநீத꞉ க்ருஷ்ணேநாத்³பு⁴தகர்மணா ||2-102-12

ஸஹித꞉ ஸர்வயாதோ³பி⁴꞉ ஸமரேஷு மஹாப³ல꞉ |
ப்ராப்ய லோஹிதகூடம் ச க்ருஷ்ணேந வருணோ ஜித꞉ ||2-102-13

மஹேந்த்³ரப⁴வநே யாதோ தே³வைர்கு³ப்தோ மஹாத்மபி⁴꞉ |
அசிந்தயித்வா தே³வேந்த்³ரம் பாரிஜாதத்³ருமோ ஹ்ருத꞉ ||2-102-14

பாண்ட்³யம் பௌண்ட்³ரம் கலிங்க³ம் ச மாத்ஸ்யம் சைவ ஜநார்த³ந꞉ |
ஜகா⁴ந ஸஹிதாந்ஸர்வாந்வங்க³ராஜம் ததை²வ ச ||2-102-15

ஏஷ சைகஷ²தம் ஹத்வா ரணே ராஜ்ஞாம் மஹாத்மநாம் |
கா³ந்தா⁴ரீமாவஹத்³வீரோ மஹிஷீம் ப்ரியத³ர்ஷ²நாம் ||2-102-16

ததா² கா³ண்டீ³வத⁴ந்வாநம் க்ரீட³ந்தம் மது⁴ஸூத³ந꞉ |
ஜிகா³ய ப⁴ரதஷ்²ரேஷ்ட²ம் குந்த்யா꞉ ப்ரமுக²தோ விபு⁴꞉ ||2-102-17

த்³ரோணம் த்³ரௌணிம் க்ருபம் கர்ணம் பீ⁴ஷ்மம் சைவ ஸுயோத⁴நம் |
சக்ராநுயாநை꞉ ப்ரஹ்ரவணே ஜிகா³ய புருஷோத்தம꞉ ||2-102-18

ப³ப்⁴ரோஷ்²ச ப்ரியமந்விச்ச²ஞ்ச²ங்க²சக்ரக³தா³ஸிப்⁴ருத் |
ஸௌவீரராஜஸ்ய ஸுதாம் ப்ரஸஹ்ய ஹ்ருதவாந்ப்ரபு⁴꞉ ||2-102-19

பர்யஸ்தாம் ப்ருதி²வீம் க்ருத்ஸ்நாம் ஸாஷ்²வாம் ஸரத²குஞ்ஜராம் |
வைணுதா³ரிக்ருதே யத்நாஜ்ஜிகா³ய புருஷோத்தம꞉ ||2-102-20

அற்புதச் செயல்களைச் செய்பவனான கிருஷ்ணன், கூர்முனை கொண்ட கணைகளால் யமனை வென்று இந்திரசேனனின் மகனை விடுவித்தான்.(12) இந்தக் கிருஷ்ணன், (நீருக்கடியில் உள்ள) லோஹிதக்கூடம் சென்று நீர்வாழ் விலங்குகள் அனைத்துடன் கூடியவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான வருணனைப் போரில் வென்றான்.(13) இந்திரனின் மாளிகைக்குச் சென்ற இவன், பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களால் பாதுகாக்கப்பட்ட பாரிஜாத மரத்தை அபகரித்துச் சென்று அவர்களின் மன்னனை {இந்திரனை} அலட்சியம் செய்தான் {அவமதித்தான்}.(14) நுண்ணறிவுமிக்க இந்த ஜனார்த்தனன், பாண்டிய, பௌண்டர, கலிங்க, மாத்ஸ்ய, வங்க மன்னர்களைக் கொன்றான்.(15) இவன் {கிருஷ்ணன்}, பெருஞ்சக்திவாய்ந்த நூற்றுக்கணக்கான மன்னர்களைக் கொன்று தன்னுடைய அழகிய ராணியான காந்தாரியை மணந்து கொண்டான்.(16) ஆனால் இந்தத் தலைவன் மதுசூதனன், காண்டீபதாரியும், பாரதர்களில் முதன்மையானவனும், குந்தியின் முன் விளையாடுபவனுமான அர்ஜுனனுக்கே வெற்றி மகுடம் சூட்டினான்[அப்படியே காண்டீப விற்கையன் விளையாடுகிற அர்ஜுனனைக் குந்தி தேவி முன்னிலையில் மதுஸூதனன் ஜயித்தான்”].(17) மனிதர்களில் முதன்மையான இவன், {அர்ஜுனனின் மூலம்} போரில் துரோணர், துரௌணி {அஸ்வத்தாமன்}, கர்ணன், பீஷ்மர், சுயோதனன் {துரியோதனன்} ஆகியோரையும், பிற வீரர்களையும் வீழ்த்தினான்.(18) சக்திவாய்ந்தவனும், சங்கு சக்கரக் கதாதாரியுமான இந்த ஹரி, பப்ருவை {அக்ரூரனை} மகிழ்ச்சி கொள்ளச் செய்வதற்காகச் சௌவீர மன்னனின் மகளை வலுக்கட்டாயமாக அபகரித்துச் சென்றான்.(19) இந்தப் புருஷோத்தமன், குதிரைகள், தேர்கள், யானைகளுடன் மொத்த பூமியையும் வைணுதாரி {வேணுதாரியின் மகன்} ஒடுக்கியபோது பெருங்கவனத்துடன் அவனை வீழ்த்தினான்.(20)

அவாப்ய தபஸோ வீர்யம் ப³லமோஜஷ்²ச மாத⁴வ꞉ |
பூர்வதே³ஹே ஜஹாராயம் ப³லேஸ்த்ரிபு⁴வநம் ஹரி꞉ ||2-102-21

வஜ்ராஷ²நிக³தா³க²ட்³கை³ஸ்த்ராஸயத்³பி⁴ஷ்²ச தா³நவை꞉ |
யஸ்ய நாதி⁴க³தோ ம்ருத்யு꞉ புரம் ப்ராக்³ஜ்யோதிஷம் ப்ரதி ||2-102-22

அபி⁴பூ⁴தஷ்²ச க்ருஷ்ணேந ஸக³ண꞉ ஸுமஹாப³ல꞉ |
ப³லே꞉ புத்ரோ மஹ்வீர்யோ பா³ணோ த்³ரவிணவத்தர꞉ ||2-102-23

பீட²ம் ததா² மஹாபா³ஹு꞉ கம்ஸாமாத்யம் ஜநார்த³ந꞉ |
பைடி²கம் சாஸிலோமாநம் நிஜகா⁴ந மஹாப³ல꞉ ||2-102-24

ஜ்ரும்ப⁴மைராவணம் சாபி விரூபம் ச மஹாயஷா²꞉ |
ஜகா⁴ந புருஷவ்யாக்⁴ரோ தை³த்யம் மாநுஷரூபிணம் ||2-102-25

ததா² நாக³பதிம் தோயே காலீயம் ச மஹௌஜஸம் |
நிர்ஜித்ய புண்ட³ரீகாக்ஷ꞉ ப்ரேஷயாமாஸ ஸாக³ரம் ||2-102-26

ஸஞ்ஜீவயாமாஸ ம்ருதம் புத்ரம் ஸாந்தீ³பநேஸ்ததா² |
நிர்ஜித்ய புருஷவ்யாக்⁴ரோ யமம் வைவஸ்வதம் ஹரி꞉ ||2-102-27

இந்த மாதவன் தன்னுடைய முற்பிறவியில் குள்ளனின் வடிவை ஏற்று {வாமனனாக} தவத்தின் மூலம் சக்தி, பலம், ஆற்றல் ஆகியவற்றை அடைந்து, பலியிடமிருந்து மூவுலகங்களையும் அபகரித்தான்.(21) பிராக்ஜோதிஷ நகரத்தில் வஜ்ரங்கள், கதாயுதங்கள், வாள்கள் ஆகியவற்றுடன் கூடிய தானவர்களால் இவன் தாக்கப்பட்டபோதும் காலனால் இவனை நெருங்க முடியவில்லை.(22) பலியின் மகனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், ஆற்றல்மிக்கவனும், செல்வந்தனுமான பாணனும் அவனுடைய தொண்டர்களும் {அசுரர்களும்} இந்தக் கிருஷ்ணனால் வீழ்த்தப்பட்டனர்.(23) பெருஞ்சக்திவாய்ந்தவனான இந்த ஜனார்த்தனன், நீண்ட கரங்களைக் கொண்ட கம்சனின் அமைச்சர்களான பீடன், பைதிகன் அஸிதோமான் ஆகியோரையும் கொன்றான்.(24) பெருஞ்சிறப்புமிக்கவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான இந்த மாதவன், மனிதர்களின் வடிவில் இருந்த ஜிரும்பன், ஐராவணன், விரூபன் என்ற தைத்தியர்களைக் கொன்றான்.(25) இந்தத் தாமரைக் கண்ணன் (கிருஷ்ணன்), பெருஞ்சக்திவாய்ந்த நாகமன்னன் காளியனை நீர்நிலையில் வீழ்த்திக் கடலுக்கு அனுப்பினான்.(26) மனிதர்களில் முதன்மையான இந்த ஹரி, விவஸ்வானின் மகனான யமனை வென்று, சாந்தீபனியின் மகனை இறந்த நிலையில் இருந்து உயிரோடு மீட்டான்.(27)

ஏவமேஷ மஹாபா³ஹு꞉ ஷா²ஸ்தா தேஷாம் து³ராத்மநாம் |
தே³வாம்ஷ்²ச ப்³ராஹ்மநாம்ஷ்²சைவ யே த்³விஷந்தி ஸதா³ ந்ருப ||2-102-28

நிஹத்ய நரகம் பௌ⁴மமாஹ்ருத்ய மணிகுண்ட³லே |
தே³வமாதுர்த³தௌ³ சைவ ப்ரீத்யர்த²ம் வஜ்ரபாணிந꞉ ||2-102-29

ஏவம் ச தே³வதை³த்யாநாம் ஸுராணாம் ச மஹாயஷா²꞉ |
ப⁴யாப⁴யகர꞉ க்ருஷ்ண꞉ ஸர்வலோககரோ விபு⁴꞉ ||2-102-30

ஸம்ஸ்தா²ப்ய த⁴ர்மாந்மர்த்யேஷு யஜ்ஞைரிஷ்ட்வா(ஆ)ப்தத³க்ஷிணை꞉ |
க்ருத்வா தே³வார்த²மமிதம் ஸ்வஸ்தா²நம் ப்ரதிபத்ஸ்யதே ||2-102-31

க்ருஷ்ணோ போ⁴க³வதீம் ரம்யாம்ருஷிகாந்தாம் மஹாயஷா²꞉ |
த்³வாரகாமாத்மஸாத்க்ருத்வா ஸமுத்³ரம் க³மயிஷ்யதி ||2-102-32

ப³ஹுரத்நஸமாகீர்ணாம் சைத்யயூபஷ²தாங்கிதாம் |
த்³வாரகாம் வருணாவாஸம் ப்ரவேக்ஷ்யதி ஸகாநநாம் ||2-102-33

தாம் ஸூர்யஸத³நப்ரக்²யாம் மதஜ்ஞ꞉ ஷா²ர்ங்க³த⁴ந்வந꞉ |
விஸ்ருஷ்டாம் வாஸுதே³வேந ஸாக³ர꞉ ப்லாவயிஷ்யதி ||2-102-34

ஸுராஸுரமநுஷ்யேஷு நாஸீந்ந ப⁴விதா க்வசித் |
ய இமாமாவஸேத்கஷ்²சித³ந்யோ வை மது⁴ஸூத³நாத் ||2-102-35

ஓ! மன்னா {உக்ரசேனா}[இங்கே மன்னா என்ற சொல் நாரதர் சொல்வதாகும். எனவே இஃது உக்சேனனுக்குச் சொன்னதாகக் கொள்ளப்படுகிறது.], இவ்வகையிலேயே பேரான்மாவான இவன், பிராமணர்களுக்கும், தேவர்களுக்கும் தீங்கிழைக்கும் தீய ஆன்மாக்களைத் தண்டிக்கிறான்.(28) பூமியின் மகனான நரகனைக் கொன்று, {அவனிடமிருந்த} காது குண்டலங்களைக் கொண்டு வந்து, வஜ்ரதாரியை மகிழ்விப்பதற்காக அதைத் தேவர்களின் அன்னையிடம் {அதிதியிடம்} கொடுத்தான்.(29) பெருஞ்சிறப்புமிக்கவனும், உலகங்கள் அனைத்தையும் ஆள்பவனுமான தலைவன் விஷ்ணு, தைத்தியர்களுக்குப் பயங்கரனாகவும், தேவர்களுக்கு அச்சமற்ற நிலையை ஏற்படுத்துபவனுமாக இருக்கிறான்.(30) இவன், பல்வேறு வேள்விகளைச் செய்தும், தேவர்களின் பெரும்பணிகளை நிறைவேற்றியும் மனிதர்களுக்கு மத்தியில் அறத்தை நிறுவிவிட்டு தன் உலகிற்குத் திரும்பிச் செல்வான்.(31) பெருஞ்சிறப்புமிக்க இந்தக் கிருஷ்ணன், அதன் பிறகு ரிஷிகளால் விரும்பப்படும் போகவதி, துவாரகை ஆகிய நகரங்களைப் பெருங்கடல் விழுங்குமாறு செய்வான்.(32) பல்வேறு ரத்தினங்களாலும், வேள்விக்களங்களாலும் நிறைந்த துவாரகா நகரம், தன் தோட்டங்களுடன் {நந்தவனங்களுடன்} வருணனின் வசிப்பிடத்திற்குள் {கடலுக்குள்} புகும்.(33) சாரங்கபாணியான கிருஷ்ணனின் விருப்பத்தை அறிந்த பெருங்கடல், வாசுதேவனால் கட்டப்பட்டதும், சூரியனின் வசிப்பிடத்திற்கு ஒப்பானதுமான இந்தத் துவாரகா நகரத்தைப் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில் மூழ்கச் செய்யும்.(34) மதுசூதனனைத் தவிர வேறு தேவர்களாலும், அசுரர்களாலும், மனிதர்களாலும், வேறு எவராலும் இங்கே வாழ முடியாது.(35)

ஏவமேஷ த³ஷா²ர்ஹாணாம் விதா⁴ய விதி⁴முத்தமம் |
விஷ்ணுர்நாராயண꞉ ஸோம꞉ ஸூர்யஷ்²ச ப⁴விதா ஸ்வயம் ||2-102-36

அப்ரமேயஸ்த்வசிந்த்யஷ்²ச யதா² காமசரோ வஷீ² |
மோத³த்யேஷ ஸதா³ பூ⁴தைர்பா³ல꞉ க்ரீட³நகைரிவ ||2-102-37

ந ப்ரமாதும் மஹாபா³ஹு꞉ ஷ²க்யோ(அ)யம் மது⁴ஸூத³ந꞉ |
பரம் ஹ்யபரமேதஸ்மாத்³விஷ்²வரூபாந்ந வித்³யதே ||2-102-38

ஷ்²ருதோ(அ)யமேவ ஷ²தஷ²ஸ்ததா² ஷ²தஸஹஸ்ரஷ²꞉ |
அந்தோ ஹி கர்மணாமஸ்ய த்³ருஷ்டபூர்வோ ந கேநசித் ||2-102-39

ஏவமேதாநி கர்மாணி ஷி²ஷு²மத்⁴யக³தஸ்ததா³ |
க்ருதவாந்புண்ட³ரீகாக்ஷ꞉ ஸங்கர்ஷணஸஹாயவான் ||2-102-40

இத்யுவாச புரா வ்யாஸஸ்தபோவீர்யேண சக்ஷுஷா |
மஹாயோகீ³ மஹாபு³த்³தி⁴꞉ ஸர்வப்ரத்யக்ஷத³ர்ஷி²வான் ||2-102-41

நாராயணனான இந்த விஷ்ணு, இவ்வாறு பல்வேறு சிறந்த வழிமுறைகளைத் தாசார்ஹர்களின் மத்தியில் நிறுவிவிட்டு, சோமன், சூரியனுடன் தன்னைக் கலப்பான்.(36) சிந்தனைக்கு அப்பாற்பட்டவனும், ஒப்பற்றவனுமான இவன் விரும்பியவாறு எங்கும் செல்லவல்லவனும், புலன்களை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டவனுமாக இருக்கிறான்.(37) நீண்ட கரங்களைக் கொண்ட இந்த மதுசூதனனை எவராலும் அளவிட முடியாது; இவனது அண்ட வடிவுக்கு ஒப்பாகவோ, மேம்பட்டதாகவோ வேறு ஏதும் கிடையாது.(38) இவ்வகையிலேயே இவன் நூறாயிரம் முறை புகழ்ந்து துதிக்கப்படுகிறான். ஆனால் எவராலும் அவனது பணிகளின் எல்லையைக் காண முடிந்ததில்லை.(39) பெரும் நுண்ணறிவுமிக்கவரும், பெரும் யோகியுமான வியாசர், அனைவரின் சாட்சியாக இருந்து, தாமரைக்கண்ணனான கேசவன் குழந்தைப் பருவத்திலும், இளமையிலும் சங்கர்ஷணனின் உதவியிடன் செய்த செயல்கள் அனைத்தையும், தவச் சக்தியின் மூலம் பெருஞ்சக்தி கொண்ட தமது கண்களின் மூலம் கண்டு ஏற்கனவே உரைத்திருக்கிறார்” என்றார் {நாரதர்}.(40,41)

வைஷ²ம்பாயந உவாச
இதி ஸம்ஸ்தூய கோ³விந்த³ம் மஹேந்த்³ரவசநாந்முநி꞉ |
யது³பி⁴꞉ பூஜித꞉ ஸர்வைர்நாரத³ஸ்த்ரிதி³வம் யயௌ ||2-102-42

ததஸ்தத்³வஸு கோ³விந்தோ³ தி³தே³ஷா²ந்த⁴கவ்ருஷ்ணிஷு |
யதா²ர்ஹம் புண்ட³ரீகாக்ஷோ விதி⁴வந்மது⁴ஸூத³ந꞉ ||2-102-43

யாத³வஷ்²ச த⁴நம் ப்ராப்ய விதி⁴வத்³பூ⁴ரித³க்ஷிணை꞉ |
யஜ்ஞைரிஷ்ட்வா மஹாத்மாநௌ த்³வாரகாமாவஸத்புரீம் ||2-102-44

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தெய்வீக முனிவரான நாரதர், தேவர்களின் மன்னனுடைய ஆணையின் பேரில் கோவிந்தனின் மகிமைகளை இவ்வாறு பாடிவிட்டு, யாதவர்களால் துதிக்கப்பட்டவராகத் தேவலோகத்திற்குச் சென்றார்.(42) அதன்பிறகு, மதுசூதனனான கோவிந்தன், விருஷ்ணிகளுக்கும், அந்தகர்களுக்கும் மத்தியில் செல்வங்களையும், ரத்தினங்களையும் முறையே பகிர்ந்தளித்தான்.(43) உயரான்மாக்களான யாதவர்களும் அவற்றைப் பெற்றுக் கொண்டு ஏராளமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்து கொண்டு துவாரகா நகரத்தில் வாழத்தொடங்கினர்” என்றார் {வைசம்பாயனர்}.(44)

இதி ஷ்²ரிமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
நாரத³வாக்யம் நாம த்³வ்யதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 101–(ஸ்ரீ கிருஷ்ணஸ்ய ஸபா ப்ரவேஷம்)-ஸ்ரீ கிருஷ்ணனின் வல்லமை |–

February 1, 2021

தேவகியின் மகளான ஏகாநம்ச மாயையின் பெருமை; கிருஷ்ணனின் குழந்தைப்பருவ விளையாட்டுகளையும், அவன் செய்த தீரச் செயல்களையும் முற்றாகக் கூறிய நாரதர்

கிருஷ்ணன் {யாதவர்களிடம்}, “அறம் சார்ந்த யாதவர்களே, உங்கள் தவச சக்தியாலும், மனங்குவிந்த ஓர்மையினாலும், பூமியின் மகனான நரகன் செய்த பாவத்தாலும் அவன் கொல்லப்பட்டான்.(1) அழகிய கன்னிகையர் பலர் அவனது அந்தப்புரத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர், மணி மலையின் சிகரம் பெயர்த்தெடுக்கப்பட்டு இங்கே கொண்டு வரப்பட்டது.(2) என்னுடைய பணியாட்களும் {கின்னரர்கள்} இந்தச் செல்வத்திரளைக் கொண்டு வந்திருக்கின்றனர். இப்போது நீங்களே இவை யாவற்றுக்கும் உரிமையாளர்கள்” என்றான்.(3)

அந்தத் தலைவன் இதைச் சொல்லிவிட்டு நிறுத்தினான். வாசுதேவனின் சொற்களைக் கேட்ட போஜர்கள், அந்தகர்கள், விருஷ்ணிகள் ஆகியோர் மகிழ்ச்சியில் மயிர் சிலிர்த்தவர்களாக ஜனார்த்தனனை வழிபட்டனர்.(4) பிறகு அந்த வீரர்கள், கூப்பிக் கரங்களுடன் அவனிடம், “ஓ! பெருந்தோள்களைக் கொண்ட தேவகியின் மகனே, தேவர்களுக்காக மிகக் கடினமான அருஞ்செயலைச் செய்து, உன் சக்தியின் மூலம் அடைந்த வளங்களையும், இன்ப நுகர் பொருட்களையும் கொடுத்து உன் மக்களை நிறைவடையச் செய்கிறாய். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை” என்றனர்.(5,6)

அப்போது தாசார்ஹர்களின் மனைவியரும், ஆஹுகனும் {உக்ரசேனனும்} மகிழ்ச்சியில் நிறைந்தவர்களாகக் கிருஷ்ணனைக் காண சபா மண்டபத்திற்குச் சென்றனர்.(7) தேவகியின் தலைமையிலான வசுதேவனின் ராணிகள் எழுவரும்[“தேவகனின் மகள்களான ஸஹதேவி, ஸாந்திதேவி, தேவரக்ஷிதை, விருகதேவ, உபதேவி, தேவகி ஆகியோரும், {பூரு குலத்தைச் சேர்ந்த} ரோஹிணியும் இங்கே குறிப்பிடப்படும் வசுதேவனின் ஏழு மனைவியராவர். அபிஜித்தின் மகன் ஆஹுகன், ஆஹுகனின் மகன்கள் தேவகன், உக்ரசேனன் ஆகியோர். ஹரிவம்சத்தில் பல இடங்களில் ஆஹுகன் என்று தன் தந்தையின் பெயரைக் கொண்டே அழைக்கப்படும் உக்ரசேனன் கம்சனின் தந்தையாவன். தேவகி, உக்ரசேனனின் அண்ணனான தேவகனின் இளைய மகளாவாள். இவ்வாறே கம்சன் தேவகியின் அண்ணனானான்; கிருஷ்ணனின் மாமனும் ஆனான். வசுதேவனின் மனைவிமார் மொத்தம் 14 பேர் என ஹரிவம்ச பர்வம் 35ம் பகுதியில் குறிப்பிருக்கிறது. ], பெருங்கரங்களைக் கொண்ட ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனும் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டனர்.(8) ராமனும், கிருஷ்ணனும் முதலில் ரோஹிணியை வணங்கிய பிறகு தேவகியை வணங்கினர்.(9) மித்ரன், வருணன் ஆகியோருடன் அழகாகத் தெரியும் தேவர்களின் அன்னையான அதிதியைப் போலவே அந்தத் தேவியும் {தேவகியும்} தாமரைக் கண்களைக் கொண்டவர்களான தன்னிரு மகன்களுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.(10)

அங்கங்களேதுமின்றி ஒரே அம்சமாக இருப்பவள் {ஏகாநம்சா} என்று மக்களால் சொல்லப்படுபவளும், தேவர்களின் மன்னனான புரோஷோத்தமன் கிருஷ்ணனுடன் ஒரே சமயத்தில்பிறந்தவளும், அவன் கம்சனையும், அவனது உறவினர்களையும் எவளுக்காகக் கொன்றானோ அந்த யசோதையின் மாய மகள் {ஏகாநம்ச மாயை}, அப்போது மனிதர்களில் முதன்மையான கிருஷ்ணன், ராமன் ஆகியோரின் முன்பு தோன்றினாள்.(11,12) இந்தக் காலம் வரை அவள் விருஷ்ணிகளின் குலத்தில் துதிக்கப்பட்டும், ஒரு {மகள் அல்ல} மகனைப் போலப் பேணி வளர்க்கப்பட்டும் வந்தாள்.(13) தடுக்கப்படமுடியாத யோக கன்னிகையாகவும் {யோக மாயையாகவும்}, அங்கங்களேதுமின்றி ஒரே அம்சமாக இருப்பவளாகவும் {ஏகானம்சையாகவும்} உலக மக்களால் அறியப்படும் அவள் கேசவனின் பாதுகாப்புக்காகவே பிறந்தாள்.(14) தேவியைப் போன்ற தன் தெய்வீக உடலால் கேசவனைப் பாதுகாத்ததால் யாதவர்கள் அவளைப் பெரும் மகிழ்ச்சியுடன் வழிபட்டு வந்தனர்.(15)

அவள் மண்டபத்திற்குள் நுழைந்ததும், மாதவன் தன் தோழியை அணுகுபவன் போலச் சென்று அவளது கரத்தைப் பற்றினான்.(16) பெருஞ்சக்திவாய்ந்த ராமனும் {பலராமனும்} தன் வலது கையால் அவளைப் பற்றி ஆரத்தழவி உச்சி முகர்ந்தான்.(17) விருஷ்ணி குலப் பெண்கள், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் கைகளில் பொற்தாமரைகளுடன் தாமரையிலேயே அமர்ந்திருக்கும் ஸ்ரீதேவியை {லட்சுமிதேவியைப்} போல அவளைக் கண்டனர்.(18) அப்போது அவர்கள் பொரிகளையும், பல்வேறு மலர்களையும் பொழிந்துவிட்டுத் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(19) பிறகு, அந்த யாதவர்கள், ஜனார்த்தனனின் அற்புதச் செயல்களை உயர்வாகப் பேசி, அவனைக் கௌரவித்துவிட்டுத் தங்களுக்குரிய அரியணைகளில் மகிழ்ச்சியாக அமர்ந்தனர்.(20) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பெருஞ்சிறப்புவாய்ந்தவனும், குடிமக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான மாதவன், தேவர்களைப் போன்ற தங்கள் உற்றார் உறவினரால் இவ்வாறு துதிக்கப்பட்டவனாக அங்கே அவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தான்.(21) யாதவர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, வழிபடத்தகுந்தவரான நாரத முனிவர், தேவர்களின் மன்னனுடைய ஆணையின் பேரில் ஜனார்த்தனனைச் சந்திக்க வந்தார்.(22)

யது குல வீரத் தலைவர்களால் வழிபடப்பட்ட அவர் {நாரதர்}, கோவிந்தனின் கரங்களைப் பற்றிக் கொண்டு மிகச் சிறந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.(23) {அவன் அருகே} சுகமாக அமர்ந்த பிறகு விருஷ்ணிகளிடம் அவர், “ஓ! மனிதர்களில் சிறந்தவர்களே, தேவர்களின் மன்னனுடைய ஆணையின் பேரில் நான் இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவீராக.(24) ஓ! முன்னணி மன்னர்களே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணன், தன்னுடைய குழந்தைப் பருவம் முதல் செய்த வீரச் செயல்கள் அனைத்தையும் இப்போது கேட்பீராக.(25)

உக்ரசேனனின் தீய மகன் கம்சன், யாதவர்களை ஒடுக்கிவிட்டுத் தன் தந்தையான ஆஹுகனை {உக்ரசேனனை} சங்கிலிகளில் பிணைத்து {சிறைவைத்து} நாட்டைத் தானே கைப்பற்றிக் கொண்டான்.(26) தீய மனம் கொண்டவனும், இழிந்தவனும், குலத்தின் சாபமாக அமைந்தவனும், தன் மாமனாருமான ஜராசந்தனின் புகலிடத்தை நாடிய அவன், போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் பிறரை வெறுத்து வந்தான்.(27) பெருஞ்சக்திவாய்ந்த வசுதேவன், தன் உற்றார் உறவினருக்கான நற்பணியை நிறைவேற்றுவதற்காகத் தன் மகனைப் பாதுகாத்தான்.(28) மதுராவின் புறநகரில் கோபியருடன் {ஆயர்பாடியில்} வாழ்ந்து வந்தபோது சூரசேனர்கள் முன்பும், பிறர் முன்பும் மதுசூதனன் செய்த பேரற்புதச் செயல்களை நீங்கள் அனைவரும் கேட்டிருக்கிறீர்கள்.(29)

ஒரு நாள் ஜனார்த்தனன் ஒரு வண்டியின் அடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பெருஞ்சக்திவாய்ந்தவளும், பயங்கரமானவளும், கொடிய முகத்தோற்றம் கொண்டவளுமான பூதனை எனும் ராட்சசி, பறவையின் வடிவில் இவனிடம் வந்து, நஞ்சூட்டப்பட்ட தன் முலைகளைப் பருகச் செய்ய விரும்பினாள். எனினும் இவன் அவளைக் கொன்றான். கானுலாவும் கோபர்கள் {ஆயர்கள்}, பயங்கர முகத்தோற்றம் கொண்டவளும், பலியின் மகளுமான பூதனை கொல்லப்பட்டதைக் கண்டு, இவனை மீண்டும் பிறந்தவனாகக் கருதி அதோக்ஷஜன் என்ற பெயரை இவனுக்குக் கொடுத்தனர்.(30-33) இந்தப் புருஷோத்தமன், தன்னுடைய குழந்தைப் பருவத்தில் மற்றோர் அற்புத அருஞ்செயலைச் செய்தான். இவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, தன் பாதத்தால் {கட்டை விரலால்} ஒரு வண்டியைப் புரட்டிப் போட்டான். இவன் சிறுவர்கள் சிலருக்குக் காயமேற்படுத்தியதால் மர உரல் ஒன்றில் யசோதை இவனைக் கட்டினாள்.(34) அந்த நிலையிலும் இவன் இரண்டு அர்ஜுன மரங்களை வேருடன் சாய்ந்து தாமோதரன் என்ற பெயரைப் பெற்றான். யமுனையின் மடுவில் இவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது,(35) பெருஞ்சக்திவாய்ந்தவனும், தடுக்கப்பட முடியாதவனுமான நாகன் காளியன் இவனால் வெல்லப்பட்டான். இந்தத் தலைவன், அக்ரூரனின் முன்னிலையில் நாகர்களின் {பாம்புகளின்} வீட்டில் அவர்களால் துதிக்கப்பட்டவனாக தெய்வீக உடலை {திவ்யதேஹத்தை} ஏற்றான்.(36,37) உயரான்மாவும், நுண்ணறிவு மிக்கவனுமான வசுதேவன் மகன் கிருஷ்ணன், சிறுவனாக இருந்தாலும், குளிராலும், காற்றாலும் பீடிக்கப்படும் பசுக்களைக் கண்டு அவற்றைப் பாதுகாப்பதற்காக ஏழு இரவுகள் வரை கோவர்த்தன மலையை உயர்த்திப் பிடித்தான்.(29-38)

தீயவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், பேருடல் படைத்தவனும், மனிதர்களை அழிப்பவனுமான பேரசுரன் அரிஷ்டன், வாசுதேவனால் கொல்லப்பட்டான்.(39) சுநாமன் இவனைச் சிறைபிடிக்கப் படையுடன் வந்த போது, ஓநாய்களின் மூலம் அவனைத் தாக்கினான். பெருஞ்சக்திவாய்ந்தவனும், பேருடல் படைத்தவனுமான தானவன் தேனுகன்,(40) பசுக்களைப் பாதுகாப்பதற்காகக் கேசவனால் கொல்லப்பட்டான். ஆயர்களின் தோற்றத்தில் ரோஹிணியின் மகனுடன் காட்டில் திரிந்து வந்த இவன் கம்சனுக்கு அச்சத்தை ஏற்படுத்தினான்.(41) புருஷோத்தமனான இந்தச் சௌரி, விரஜத்தில் {ஆயர்பாடியில்} வாழ்ந்து வந்தபோது, போஜ மன்னன் கம்சனுக்கு உரிய குதிரையாக இருந்தவனும், அவனுக்கு {கம்சனுக்குப்} பேருதவி புரிபவனும், பற்களையே ஆயுதமாகக் கொண்டவனுமான பெருஞ்சக்தி வாய்ந்தவனை {கேசியைக்} கொன்றான்.(42,43) கம்சனின் சபைச் சேர்ந்தவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான தானவன் பிரலம்பன், ரோஹிணியின் மகனுடைய முஷ்டியின் ஒரே அடியில் கொல்லப்பட்டான்.(44) பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், தெய்வீக இளைஞர்களுக்கு ஒப்பானவர்களுமான இவர்கள் இருவரும் அந்தக் காலத்தில் கார்க்கியர் என்ற பிராமணரின் மூலம் தீக்ஷை பெற்றனர் {தொடக்கச் சடங்கை செய்து கொண்டனர் / பிறந்தது முதல் உள்ளபடியே சொல்லப்பட்ட உபநயநாதி ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்டனர்}.(45) அந்தப் பெரும் முனிவர்கள் இவர்கள் யாவர் என்பதை அறிந்திருந்தார், எனவே, பிறவி முதல் அவரே இவர்களுக்குக் கல்வி கற்பித்தார்.(46)

அப்போது, பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், இமயத்தில் வாழும் மதங்கொண்ட இளஞ்சிங்கங்கள் இரண்டைப் போன்றவர்களுமான இவ்விருவரும் இளமையை அடைந்தவர்களாகக் கோபியரின் இதயங்களைக் கொள்ளை கொண்டனர். வீரர்களும், பிரகாசமிக்கவர்களும், நந்தகோபனின் மகன்களுமான இவ்விருவரும், பிற சிறுவர்களுடன் மேய்ச்சல் நிலத்தில் திரிகையில் கூட அவர்களால் இவர்களைக் காண முடியாது எனும்போது(46-48) பலம், விளையாட்டு ஆகியவற்றில் எவ்வாறு அவர்களோடு இணை சொல்ல முடியும்? நீண்ட கரங்களையும், உறுதிமிக்கத் தோள்களையும் கொண்ட பலன் {பலராமன்}, கேசவன் {கிருஷ்ணன்} ஆகிய இவ்விரு சகோதரர்களும் சால மரங்களைப் போல வளர்ந்து வருவதைக் கேள்விப்பட்ட கம்சன் துன்பமடைந்தவனாகத் தன் அமைச்சர்களுடன் ஆலோசித்தான்.(49,50) அவனால் இவர்களை எவ்வழிமுறையின் மூலமும் கைப்பற்ற முடியாத போது அவன் வசுதேவனையும், அவனது உறவினர்களையும் ஒடுக்கினான்.(51) குற்றவாளியைப் போல உக்ரசேனனுடன் சங்கிலியில் கட்டப்பட்ட அனகதுந்துபி தன் நாட்களைப் பெருந்துயரில் கழிக்கத் தொடங்கினான்.(52) இவ்வாறு ஜராசந்தனன், ஆஹ்விருதி, பீஷ்மகன் ஆகியோரின் துணையுடன் கூடிய கம்சன், தன் தந்தையைச் சிறையில் வைத்து, சூரசேன நாட்டை ஆட்சி செய்தான்.(53)

சிறிது நாட்கள் கடந்த பிறகு மன்னன் கம்சன், தேவனான திரிசூலபாணியை மதிக்கும் வகையில் மதுராவில் ஒரு பெரும் விழாவை நடத்தினான்.(54) ஓ! மன்னா, பல்வேறு நாடுகளில் இருந்து மற்போர்வீரர்கள், பாடகர்கள், நுண்ணறிவுமிக்க நடனக் கலைஞர்கள் ஆகியோர் அவ்விழாவில் திரண்டனர்.(55) பெருஞ்சக்திவாய்ந்த கம்சன், நுண்ணறிவுமிக்கவர்களும், நல்ல அனுபவம் கொண்டவர்களுமான கலைஞர்களின் மூலம் அவ்விழாவில் ஒரு பெரிய அரங்கத்தை அமைத்தான்.(56 விண்மீன்கள் பதிக்கப்பட்ட வானத்தைப் போல ஆயிரக்கணக்கான இருக்கைகளில் குடிமக்களும், கிராமவாசிகளும் அமர்ந்திருந்தனர்.(57)

அறச்செயல்களைச் செய்பவன் தெய்வீகத் தேரில் ஏறுவதைப் போலவே போஜ மன்னனான கம்சனும் நன்கலங்கரிக்கப்பட்ட அந்த அரங்கத்தின் மேடையில் ஏறினான்.(58) பெருஞ்சக்திவாய்ந்த கம்சன், ராமனையும், கிருஷ்ணனையும் நினைத்துக் கொண்டே முந்தைய நாள் இரவு முழுவதும் உறங்காதிருந்தான்,(59) அந்தச் சந்தர்ப்பத்திலோ, சூரியனையும், சந்திரனையும் போன்றவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான இவர்களின் வருகையைக் கேட்டதும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் பெருங்கவனம் செலுத்தினான்.(60) மனிதர்களில் முதன்மையானவர்களும், பகைவரைக் கொல்பவர்களுமான வீர ராமன், கிருஷ்ணன் ஆகியோர் இருவரும் பசுக்களை மேய்க்கச் செல்லும் புலியைப் போல அங்கே நுழைந்தனர்.(61) வாயில் காப்போரால் தடுக்கப்பட்டும் உள்ளே நுழைந்த அவர்கள் குவலயபீடம் என்ற யானையைக் கொன்றனர். தடுக்கப்பட முடியாதவர்களான பலனும், கிருஷ்ணனும், முதலில் சாணூரனையும், ஆந்திரனையும் கசக்கிப் பிழிந்துவிட்டு, உக்ரசேனனின் தீய மகனையும் {கம்சனையும்}, அவனது தம்பியையும் கொன்றான்.(62-64)

தேவர்களாலும் செய்யமுடியாத இத்தகைய அருஞ்செயலைச் செய்ய யது குல வழித்தோன்றலைத் தவிர வேறு எவரால் முடியும்.(65) பிரஹலாதனும், பலியும், சம்பரனும் கூட இதற்கு முன்பு அடைய முடியாத செல்வங்கள் அனைத்தையும் கேசவன் கொண்டு வந்தான்.(66) முரு, பாஞ்சனன் என்ற தைத்தியர்களை அவன் கொன்றான். மலைசார்ந்த தன்னுடைய காட்டில் இருந்து வெளியே வந்த நிசுந்தனையும், அவனது உற்றார் உறவினர் அனைவரையும் கொன்றான்.(67) பூமியின் மகனான நரகனைக் கொன்றுவிட்டு, அதிதியின் அழகிய குண்டலங்கள் இரண்டையும் மீட்டுத் தேவலோகத்தில் இருந்து இந்த உலகம் வரை பெரும்புகழை ஈட்டினான்.(68)

ஓ! யாதவர்களே, கிருஷ்ணனின் கரவலிமையைச் சார்ந்தும், செருக்கு, அச்சம், கவலை ஆகியவற்றையும், பிற தடைகளையும் கைவிட்டும் பல்வேறு வேள்விகளைச் செய்வீராக.(69) தேவர்களின் பெரும்பணியொன்று நுண்ணறிவுமிக்கக் கிருஷ்ணனால் செய்யப்பட்டது. உங்களுக்கு நன்மை நேரட்டும்.(70) ஓ! தலைவர்களே, மகிழ்ச்சிமிக்க இந்தச் செய்திகளை உங்களுக்குத் தெரிவிக்கவே நான் இங்கே வந்தேன். நீங்கள் அடைய விரும்பிய எதையும் பெருங்கவனத்துடன் கொடுக்கப் போவதாக வாசவன் {இந்திரன்} சொல்லியிருக்கிறான். அவன் {கிருஷ்ணன்} உங்களுடையவன், நீங்கள் அவனுடையவர்கள். தேவர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர் என்பதைக் கிருஷ்ணனுக்குத் தெரிவிக்கவே பாகனைத் தண்டித்த முதன்மையான தேவன் {இந்திரன்} என்னை இங்கே அனுப்பினான் என்பதை உறுதியாக அறிவீராக.(71,72) புத்தியிருக்கும் இடத்தில் செழிப்பு இருக்கும். செழிப்பு இருக்கும் இடத்தில் பணிவு இருக்கும். பணிவு, புத்தி, செழிப்பு ஆகியவை எப்போதும் உயரான்ம கிருஷ்ணனிடம் இருக்கின்றன” என்றார் {நாரதர்}.(69-73)

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 100–(ஸ்ரீ கிருஷ்ணஸ்ய ஸபாப்ரவேஷம்)-சபை புகுந்த ஸ்ரீ கிருஷ்ணன் |

February 1, 2021

வெற்றியைப் பறைசாற்றி அனைவரையும் கௌரவித்த கிருஷ்ணன்.

வைஷ²ம்பாயன உவாச
தத꞉ ஸம்பூஜ்ய க³ருட³ம் வாஸுதே³வோ(அ)னுமான்ய ச |
ஸகி²வச்சோபக்³ருஹ்யைனமனுஜஜ்ஞே க்³ருஹம் ப்ரதி ||2-100-1

ஸோ(அ)னுஜ்ஞாதோ ஹி ஸத்க்ருத்ய ப்ரணம்ய ச ஜனார்த³னம் |
ஊர்த்⁴வமாசக்ரமே பக்ஷீ யதே²ஷ்டம் க³க³னேசர꞉ ||2-100-2

ஸ பக்ஷவாதஸங்க்ஷுப்³த⁴ம் ஸமுத்³ரம் மகராலயம் |
க்ருத்வா வேகே³ன மஹதா யயௌ பூற்வமஹோத³தி⁴ம் ||2-100-3

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்} கருடனைத் தன் நண்பனைப் போல மதித்துத் தன் வீட்டிற்கு அழைத்துச சென்றான்.(1) வானுலாவுபவனான அந்தப் பறவையானவன் {கருடன்} வாசுதேவனை வணங்கி விடைபெற்று வானத்தில் எழுந்தான்.(2) அந்நேரத்தில் அந்தப் பறவையானவன் தன் சிறகுகளை அடித்து உண்டான காற்றின் மூலம் மகரங்களின் வசிப்பிடமான பெருங்கடலை மொத்தமாகக் கலக்கியபடியே கிழக்கு கடலை நோக்கிச் சென்றான்.(3)

க்ருத்யகாலே உபஸ்தா²ஸ்ய இத்யுக்த்வா க³ருடே³ க³தே |
க்ருஷ்ணோ த³த³ர்ஷ² பிதரம் வ்ருத்³த⁴மானகது³ந்து³பி⁴ம் ||2-100-4

உக்³ரஸேனம் ச ராஜானம் ப³லதே³வம் ச ஸாத்யகிம் |
காஷ்²யம் ஸாந்தீ³பனிம் சைவ ப்³ரஹ்மகா³ர்க்³யம் ததை²வ ச ||2-100-5

அன்யாம்ஷ்²ச வ்ருத்³தா⁴ன்வ்ருஷ்ணீனாம் தாம்ஷ்²ச போ⁴ஜாந்த⁴காம்ஸ்ததா² |
ரத்னப்ரவேகைர்தா³ஷா²ர்ஹான்வீர்யலப்³தை⁴ஸ்ததா²ர்சயத் ||2-100-6

அந்த வினதையின் மகன்(கருடன்}, “பணி நேரும் காலத்தில் மீண்டும் வருவேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். கிருஷ்ணன், முதியவனான தன் தந்தை ஆனகதுந்துபிக்கும் {வசுதேவனுக்கும்},(4) மன்னன் உக்ரசேனன், பலதேவன், சாத்யகி, சாந்தீபனி, பிராமணர் கார்க்கியர் ஆகியோருக்கும்,(5) விருஷ்ணி, அந்தக, போஜ குலங்களைச் சேர்ந்த பிறருக்கும் தன் ஆற்றலின் மூலம் அடைந்த ரத்தினங்களைக் கொடுத்தான்.(6)

ஹதா ப்³ரஹ்மத்³விஷ꞉ ஸர்வே ஜயந்த்யந்த⁴கவ்ருஷ்ணய꞉ |
ரணாத்ப்ரதிநிவ்ருத்தோ(அ)யமக்ஷதோ மது⁴ஸூத³ன꞉ ||2-100-7

இதி சத்வரரத்²யாஸு த்³வாரவத்யாம் ஸுபூஜித꞉ |
சாக்ரிகோ கோ⁴ஷயாமாஸ புருஷோ ம்ருஷ்டகுண்ட³ல꞉ ||2-100-8

“பிராமணர்களின் பகைவர்கள் கொல்லப்பட்டனர். மதுசூதனர் போர்க்களத்தில் இருந்து தீங்கேதுமின்றித் திரும்பிவிட்டார். விருஷ்ணிகளும், அந்தகர்களும் வெற்றியடைந்தனர்”(7) என்று காது குண்டலங்களாலும், மலர்மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டவர்களாக இருந்த தூதர்கள், துவாரகையின் குறுக்கு சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் பறைசாற்றி அறிவித்தனர்.(8)

தத꞉ ஸாந்தீ³பனிம் பூர்வமபி⁴க³ம்ய ஜனார்த³ன꞉ |
வவந்தே³ வ்ருஷ்ணிந்ருபதிமாஹுகம் வினயான்வித꞉ ||2-100-9

ததா² ஹி பரிபூர்ணாக்ஷமானந்தா³க³தசேதஸம் |
வவந்தே³ ஸஹ ராமேண பிதரம் வாஸவானுஜ꞉ ||2-100-10

உபக³ம்ய ததா² ஷே²ஷான்ஸத்க்ருத்ய ச யதா²ர்ஹத꞉ |
ஸர்வேஷாம் நாம ஜக்³ராஹ தா³ஷா²ர்ஹாணாமதோ⁴க்ஷஜ꞉ ||2-100-11

தத꞉ ஸர்வாணி தி³வ்யானி ஸர்வரத்னமயானி ச |
ஆஸநாக்³ர்யாணி விவிஷு²ருபேந்த்³ரப்ரமுகா²ஸ்ததா³ ||2-100-12

ததஸ்தத்³த⁴னமக்ஷய்யம் கிங்கரைர்யத்ஸமாஹ்ருதம் |
தத்ஸபா⁴மானயாமாஸு꞉ புருஷா꞉ க்ருஷ்ணஷா²ஸனாத் ||2-100-13

தத꞉ ஸம்மானயாமாஸ தா³ஷா²ர்ஹாம்ஷ்²ச யதூ³த்தம꞉ |
ஸர்வாந்து³ந்து³பி⁴ஷ²ப்³தே³ன பூஜயிஷ்யஞ்ஜனார்த³ன꞉ ||2-100-14

சாந்தீபனியை முதலில் வணங்கிய ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அதன்பிறகு மன்னன் ஆஹுகனை {உக்ரசேனனை} பணிவுடன் வணங்கினான்.(9) ராமனுடன் {பலராமனுடன்} கூடியவனான வாசவனின் தம்பி {கிருஷ்ணன்}, கண்களில் கண்ணீருடன் மகிழ்ச்சியால் இதயம் நிறைந்திருந்த தன் தந்தையை வணங்கினான்.(10) அதன் பிறகு தாசார்ஹர்களை அணுகிய அதோக்ஷஜன் {கிருஷ்ணன்} அவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து அவர்கள் அனைவரையும் கௌரவித்தான்.(11) ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, பண்பட்டவையான இந்தப் பழக்கவழக்கங்களை வெளிக்காட்டியபிறகு, உபேந்திரனின் தலைமையிலான யாதவர்கள அனைவரும் அனைத்து வகை ரத்தினங்களும் பதிக்கப்பட்ட தெய்வீக அரியணைகளில் அமர்ந்தனர்.(12) அதன் பிறகு கிருஷ்ணனின் ஆணையின் பேரில் நரகனின் பணியாட்கள் {கிங்கரர்கள்} செல்வங்களையும், தங்களால் முன்பே கொண்டு வரப்பட்ட சபாமண்டபத்தையும் அங்கே கொண்டு வந்தனர்.(13) அப்போது யதுக்களில் முதன்மையான ஜனார்த்தனன், துந்துபி ஒலியை இசைத்துத் தாசார்ஹர்கள் அனைவரையும் கௌரவித்தான்.(14)

தாமாஸனவதீம் ரம்யாம் மணிவித்³ருமதோரணாம் |
ஸபா⁴ம் ஸர்வத³ஷா²ர்ஹாஸ்தே விவிஷு²꞉ க்ருஷ்ணஷா²ஸனாத் ||2-100-15

தத꞉ புருஷஸிம்ஹைர்யா யது³பி⁴꞉ ஸர்வதோ வ்ருதா |
ஸர்வார்த²கு³ணஸம்பன்னா ஸா ஸபா⁴ ப⁴ரதர்ஷப⁴ |
ஷு²ஷு²பே⁴(அ)ப்⁴யதி⁴கம் ஷு²ப்⁴ரா ஸிம்ஹைர்கி³ரிகு³ஹா யதா² ||2-100-16

ராமேண ஸஹ கோ³விந்த³꞉ காஞ்சனம் மஹதா³ஸனம் |
உக்³ரஸேனம் புரஸ்க்ருத்ய போ⁴ஜவ்ருஷ்ணிபுரஸ்க்ருத꞉ ||2-100-17

தத்ரோபவிஷ்டாம்ஸ்தான்வீரான்யதா²ப்ரீதிர்யதா²வய꞉ |
ஸமாபா⁴ஷ்²ய யது³ஷ்²ரேஷ்டா²னுவாச புருஷோத்தம꞉ ||2-100-18

அதன்பிறகு, கிருஷ்ணனின் ஆணையின் பேரில், ரத்தினமயமான இருக்கைகளையும், வாயிலையும் கொண்ட அந்த அழகிய சபா மண்டபத்திற்குள் தாசார்ஹர்கள் நுழைந்தனர்.(15) முன்னணி யது தலைவர்களால் நிறைந்த அந்தச் சபா மண்டபமானது சிங்கங்கள் வசிக்கும் மலைக்குகைகளைப் போல அழகாகவும், சிறப்பாகவும் ஒளிர்ந்தது.(16) விருஷ்ணிகளாலும், போஜர்களாலும் பின்தொடரப்பட்ட கோவிந்தன் தன் முன் உக்ரசேனனை வைத்துக் கொண்டு ஒரு பெரும் தங்க இருக்கையில் ராமனுடன் அமர்ந்தான்.(17) புருஷர்களில் முதன்மையான அவன் {கிருஷ்ணன்}, வயதுக்கேற்ற வரிசையில் அங்கே அமர்ந்திருந்த யது குல தலைவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினான்” என்றார் {வைசம்பாயனர்}.(18)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஸபா⁴ப்ரவேஷ²னம் நாம ஷ²ததமோ(அ)த்⁴யய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 99–(ஸ்ரீ கிருஷ்ணஸ்ய ஸ்ரீ மத் த்வாரகாப்ரவேஷம்)–ஸ்ரீ மத் துவாரகை புகுந்த ஸ்ரீ கிருஷ்ணன் |-

February 1, 2021

கிருஷ்ணனின் மாளிகை சிறப்பு; பாரிஜாத மரம் நடப்பட்டது; பதினாறாயிரம் பெண்களைக் கௌரவித்தல்.

வைஷ²ம்பாயன உவாச
ஏவமாலோகயான꞉ ஸ த்³வாரகாம் வ்ருஷபே⁴க்ஷண꞉ |
அபஷ்²யத்ஸ்வக்³ருஹம் க்ருஷ்ண꞉ ப்ராஸாத³ஷ²தஷோ²பி⁴தம் ||2-99-1

மணிஸ்தம்ப⁴ஸஹஸ்ராணாமயுதைர்விவ்ருதம் ஷ²தை꞉ |
தோரணைர்ஜ்வலனப்ரக்²யைர்மணிவித்³ருமராஜதை꞉ ||2-99-2

தத்ர தத்ர ப்ரபா⁴ஸத்³பி⁴ஷ்²சித்ரகாஞ்சனவேதி³கை꞉ |
ப்ராஸாத³ஸ்தத்ர ஸுமஹான்க்ருஷ்ணோபஸ்தா²னிகோ(அ)ப⁴வத் ||2-99-3

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இவ்வாறு மிகச்சிறந்த கண்களைக் கொண்ட கிருஷ்ணன் துவாரகையைப் பார்த்துக் கொண்டிருந்த போது, நூற்றுக்கணக்கான மாளிகைகளுடன் கூடிய தன் வீட்டைப் பார்த்தான்.(1) வெண்ணிறத்துடன் ரத்னமயமான தூண்கள் கோடிக்கணக்கானவற்றையும், நெருப்பைப் போன்று ஒளிரும் ரத்னங்களுடன் கூடிய ஒரு வாயிலையும், அங்கேயும், இங்கேயுமென வைக்கப்பட்டிருந்த பிரகாசமிக்கப் பொன் இருக்கைகள் எண்ணற்றவற்றையும் அங்கே அவன் கண்டான்.(2) ஸ்படிகத் தூண்களைக் கொண்டதும், மொத்தமாகப் பொன்னால் கட்டப்பட்டதுமான ஒரு பெரும் மாளிகை அவனது சபையாக இருந்தது.(3)

ஸ்பா²டிகஸ்தம்ப⁴விவ்ருதோ விஸ்தீர்ண꞉ ஸர்வகாஞ்சன꞉ |
பத்³மாகுலஜலோபேதா ரக்தஸௌக³ந்தி⁴கோத்பலா꞉ ||2-99-4

மணிஹேமனிபா⁴ஷ்²சித்ரா ரத்னஸோபானபூ⁴ஷிதா꞉ |
மத்தப³ர்ஹிணஜுஷ்டாஷ்²ச கோகிலைஷ்²ச ஸதா³மதை³꞉ ||2-99-5

ப³பூ⁴வு꞉ பரமோபேதா வாப்யஷ்²ச விகசோத்பலா꞉ |
விஷ்²வகர்மக்ருத꞉ ஷை²ல꞉ ப்ராகாரஸ்தஸ்ய வேஷ்²மன꞉ ||2-99-6

வ்யக்தகிஷ்குஷ²தோத்ஸேத⁴꞉ பரிகா²பரிவேஷ்டித꞉ |
தத்³க்³ருஹம் வ்ருஷ்ணிஸிம்ஹஸ்ய நிர்மிதம் விஷ்²வகர்மனா ||2-99-7

மஹேந்த்³ரஸத்³ருஷ²ம் வேஷ்²ம ஸமந்தாத³ர்த⁴யோஜனம் |
தத்ரஸ்த²ம் பாண்டு³ரம் ஷௌ²ரிர்மூர்த்⁴னி திஷ்ட²ன்க³ருத்மத꞉ ||2-99-8

நீரில் நிறைந்திருக்கும் தாமரைகளுடனும், பித்துப் பிடித்த மயில்களும், குயில்களும் வந்து செல்லும் நறுமணமிக்கச் சிவந்த உற்பலங்களுடனும் கூடியவையும், பொன்னாலும், ரத்தினங்களாலும் அமைந்த படிக்கட்டுகளைக் கொண்டவையும், பல்வேறு மரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அழகிய பெரிய தடாகங்களையும் அங்கே அவன் கண்டான்.(4,5) நூறு முழம் உயரம் கொண்டவையும், மலைப்பாறைகளால் அமைந்தவையுமான மதில்களும், அகழிகளும் சூழ விஷ்வகர்மன் அந்த வீட்டைக் கட்டியிருந்தான்.(6) அனைத்துப் பக்கங்களிலும் அரை யோஜனை அளவுள்ள நிலம் கொண்ட அந்த வீட்டை இந்திரனுடைய அரண்மனையின் அளவுகளின்படியே விஷ்வகர்மன் கட்டியிருந்தான். கருடனின் முதுகில் இருந்தபடியே அந்த மணல் வண்ண மாளிகையை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.(7,8)

ப்ரீத꞉ ஷ²ங்க²முபாத்⁴மாஸீத்³த்³விஷதாம் ரோமஹர்ஷணம் |
தஸ்ய ஷ²ங்க²ஸ்ய ஷ²ப்³தே³ன ஸாக³ரஷ்²சுக்ஷுபே⁴ ப்⁴ருஷ²ம் |
ரராஸ ச நப⁴꞉ க்ருத்ஸ்னம் தச்சித்ரமப⁴வத்ததா³ ||2-99-9

பாஞ்சஜன்யஸ்ய நிர்கோ⁴ஷம் ஸம்ஷ்²ருத்ய குகுராந்த⁴கா꞉ |
விஷோ²கா꞉ ஸமபத்³யந்த க³ருட³ஸ்ய ச த³ர்ஷ²னாத் ||2-99-10

ஷ²~க²சக்ரக³தா³பாணிம் க³ருட³ஸ்யோபரி ஸ்தி²தம் |
த்³ருஷ்ட்வா ஜஹ்ருஷிரே பௌரா பா⁴ஸ்கரோபமதேஜஸம் ||2-99-11

ததஸ்தூர்யப்ரணாத³ஷ்²ச பே⁴ரீணாம் ச மஹாஸ்வனா꞉ |
ஜஜ்ஞிரே ஸிம்ஹநாதா³ஷ்²ச ஸர்வேஷாம் புரவாஸினாம் ||2-99-12

ததஸ்தே ஸர்வதா³ஷா²ர்ஹா꞉ ஸர்வே ச குகுராந்த⁴கா꞉ |
ப்ரீயமாணா꞉ ஸமாஜக்³முராலோக்ய மது⁴ஸூத³னம் ||2-99-13

வாஸுதே³வம் புரஸ்க்ருத்ய ஷ²ங்க²தூர்யரவை꞉ ஸஹ |
உக்³ரஸேனோ யயௌ ராஜா வஸுதே³வநிவேஷ²னம் ||2-99-14

ஆனந்தி³னீ பர்யசரத்ஸ்வேஷு வேஷ்²மஸு தே³வகீ |
ரோஹிணீ ச யஷோ²தா³ ச ஆஹுகஸ்ய ச யா꞉ ஸ்த்ரிய꞉ ||2-99-15

தத꞉ க்ருஷ்ண꞉ ஸுபர்ணேன ஸ்வம் நிவேஷ²னமப்⁴யகா³த் |
சசார ச யதோ²த்³தே³ஷ²மீஷ்²வரானுசரோ ஹரி꞉ ||2-99-16

அதன்பிறகு அவன், பகைவருக்கும் மயிர் கூச்சத்தை ஏற்படுத்தும் ஒலியைக் கொண்ட தன் சங்கை முழக்கினான். அவ்வொலியால் பெருங்கடல் பெரிதும் கலங்கியது, வானம் அதை எதிரொலித்துக் கொண்டிருந்தது. உண்மையில் அஃது அற்புதம் நிறைந்ததாகக் காட்சியளித்தது.(9) குகுர, அந்தகக் குலத்தினர், அந்தப் பாஞ்சஜன்ய சங்கின் ஒலியைக் கேட்டும், கருடனைக் கண்டும் கவலையில் இருந்து விடுபட்டனர்.(10) கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதத்துடன் சூரியனைப் போன்று பிரகாசித்துக் கொண்டு கருடனில் அமர்ந்திருக்கும் கேசவனைக் கண்டு குடிமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(11) அவர்கள் பேரிகைகளையும், துந்துபிகளையும் இசைக்கத் தொடங்கிச் சிங்க முழக்கம் செய்தனர்.(12) குகுரர்களும், அந்தகர்களும், தாசார்ஹர்களும் மதுசூதனனைக் கண்ட பிறகு பெரும் மகிழ்ச்சியுடன் அவனிடம் சென்றனர்.(13) மன்னன் உக்ரசேனன், தன் முன்னே வாசுதேவனை {கிருஷ்ணனை} வைத்துக் கொண்டு சங்கு, துந்துபி ஒலிகளுடன் வசுதேவனின்-வாசுதேவனின்- மாளிகைக்குச் சென்றான்.(14) தேவகி, ரோஹிணி, {யசோதை}, ஆஹுகனின் {உக்ரசேனனின்} மனைவியர் ஆகியோர் தங்கள் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியாகத் திரிந்து உபசரிக்கத் தொடங்கினர்.(15) தான் விரும்பியபடி இந்திராதி தேவர்களுடன் பயணிக்கும் ஹரி சில கணங்களுக்குப் பிறகு குறிப்பட்ட அந்த வீட்டை வந்தடைந்தான் {தன்னுடைய வீட்டை அடைந்தான்}.(16)

அவதீர்ய க்³ருஹத்³வாரி க்ருஷ்ணஸ்து யது³நந்த³ன꞉ |
யதா²ர்ஹம் பூஜயாமாஸ யாத³வான்யாத³வர்ஷப⁴꞉ ||2-99-17

ராமாஹுகக³தா³க்ரூரப்ரத்³யும்நாதி³பி⁴ரர்சித꞉ |
ப்ரவிவேஷ² க்³ருஹம் ஷௌ²ரிராதா³ய மணிபர்வதம் ||2-99-18

தம் ச ஷ²க்ரஸ்ய த³யிதம் பாரிஜாதம் மஹாத்³ருமம் |
ப்ரவேஷ²யாமாஸ க்³ருஹம் ப்ரத்³யும்னோ ருக்மிணீஸுத꞉ ||2-99-19

தே(அ)ன்யோன்யம் த³த்³ருஷு²ர்வீரா தே³ஹப³ந்தா⁴னமானுஷான் |
பாரிஜாதப்ரபா⁴வேண ததோ முமுதி³ரே ஜனா꞉ ||2-99-20

தை꞉ ஸ்தூயமானோ கோ³விந்த³꞉ ப்ரஹ்ருஷ்டைர்யாத³வர்ஷபை⁴꞉ |
ப்ரவிவேஷ² க்³ருஹம் ஷ்²ரீமான்விஹிதம் விஷ்²வகர்மணா ||2-99-21

ததோ(அ)ந்த꞉புரமத்⁴யே தம் ஸஷ்²ருங்க³மணிபர்வதம் |
ந்யவேஷ²யத³மேயாத்மா வ்ருஷ்ணிபி⁴꞉ ஸஹிதோ(அ)ச்யுத꞉ ||2-99-22

தம் ச தி³வ்யம் த்³ருமஷ்²ரேஷ்ட²ம் பாரிஜாதமமித்ரஜித் |
அர்ச்யமர்சிதமவ்யக்³ரமிஷ்டே தே³ஷே² ந்யவேஷ²யத் ||2-99-23

யது குலத்தில் முதன்மையான கிருஷ்ணன் தன் வீட்டின் நுழைவாயிலில் இறங்கிக் கொண்டு யதுக்கள் அனைவருக்கும் உரிய மதிப்பைச் செலுத்தினான்.(17) பதிலுக்கு ராமன் {பலராமன்}, ஆஹுகன் {உக்ரசேனன்}, கதன், பிரத்யும்னன் மற்றும் {சூர குலத்தில் பிறந்த} பிறரால் மதிக்கப்பட்டு, ரத்தின மலைகளுடன் கூடியவனாகத் தன் வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்.(18) ருக்மிணியின் மகனான பிரத்யும்னன், இந்திரனின் மனைவிக்கு மிகவும் பிடித்தமான பாரிஜாதத்தை அந்த வீட்டிற்குக் கொண்டு சென்றான்.(19) பாரிஜாதத்தின் சக்தியின் மூலம் அந்த வீரர்கள் தங்கள் மேனி அழகைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(20) இவ்வாறு விஷ்வகர்மனால் கட்டப்பட்ட வீட்டிற்குள் யது குலத் தலைவர்களால் துதிக்கப்பட்டவனாக நுழைந்தான் கிருஷ்ணன்.(21) ஒப்பற்ற சக்தியைக் கொண்ட அச்யுதன், சிகரங்களுடன் கூடிய ரத்தின மலைகளைத் தன் அந்தப்புரத்தில் வைத்து விட்டு,(22) விருஷ்ணிகளுடன் சேர்ந்து தெய்வீக மரமான பாரிஜாதத்தை வழிபட்டு உரிய இடத்தில் அதை நட்டு வைத்தான்.(23)

அனுஜ்ஞாப்ய ததோ ஜ்ஞாதீன்கேஷ²வ꞉ பரவீரஹா |
தா꞉ ஸ்த்ரிய꞉ பூஜயாமாஸ ஸம்ஹ்ருதா நரகேண யா꞉ ||2-99-24

வஸ்த்ரைராப⁴ரணைர்தி³வ்யைர்தா³ஸீபி⁴ர்த⁴னஸஞ்சயை꞉ |
ஹாரைஷ்²சந்த்³ராம்ஷு²ஸங்காஷை²ர்மணிபி⁴ஷ்²ச மஹாப்ரபை⁴꞉ ||2-99-25

பூர்வமப்⁴யர்சிதாஷ்²சைவ வஸுதே³வேன தா꞉ ஸ்த்ரிய꞉ |
தே³வக்யா ஸஹ ரோஹிண்யா ரேவத்யா சாஹுகேன ச ||2-99-26

ஸத்யபா⁴மோத்தமா ஸ்த்ரீணாம் ஸௌபா⁴க்³யேநாப⁴வத்ததா³ |
குடூம்ப³ஸ்யேஷ்²வரீ த்வாஸீத்³ருக்மிணீ பீ⁴ஷ்மகாத்மஜா ||2-99-27

தாஸாம் யதா²ர்ஹஹர்ம்யாணி ப்ராஸாத³ஷி²க²ராணி ச |
ஆதி³தே³ஷ² க்³றிஹான்க்ருஷ்ண꞉ பாரிப³ர்ஹாம்ஷ்²ச புஷ்கலான் ||2-99-28

அதன் பிறகு, உற்றார் உறவினரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டவனும்,, பகைவரைக் கொல்பவனுமான கிருஷ்ணன், நரகனின் {நரகாசுரனின்} வீட்டில் இருந்து கொண்டு வந்த கன்னிகையர் அனைவருக்கும் {பதினாறாயிரம் பேருக்கும்}(24) ஆடைகள், ஆபரணங்கள், பணிப்பெண்கள், செல்வங்கள், இன்பநுகர் பொருட்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவர்களைக் கௌரவித்தான்.(25) தேவகி, ரோஹிணி, ரேவதி, ஆஹுகனின் மனைவியர் ஆகியோரால் ஏற்கனவே அந்தக் கன்னிகையர் மதிப்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.(26) சத்யபாமா தன் நற்பேற்றினால் பெண்கள் அனைவரையும் ஆண்டு வந்தாள், பீஷ்மகனின் மகளான ருக்மிணியோ உறவினர்களைப் பொறுப்புடன் கவனித்துக் கொள்ளும் தேவியானாள்.(27) கிருஷ்ணன் அந்தப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடுகளையும், தடாகங்களையும், தோட்டங்களையும் ஒதுக்கிக் கொடுத்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(28)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
த்³வாரகாப்ரவேஷ²ம் நாம நவனவதிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 98–(புனர் விஷேஷதோ ஸ்ரீ மத் த்வாரவதீ நிர்மாணம்)-ஸ்ரீ மத் துவாரகையைச் சீரமைத்த தேவதச்சன் | —

February 1, 2021

துவாரகை விஷ்வகர்மனால் மிகச்சிறப்பாக நிர்மாணிக்கப்படல்; கிருஷ்ணனின் மனைவியருக்கு மாளிகைகள் அமைத்தல்; செய்குன்றுகள், ஆறுகள், குளங்கள், வனங்கள், உபவனங்கள் ஆகியவை அமைத்தல்.

வைஷ²ம்பாயன உவாச
த³த³ர்ஷா²த² புரீம் க்ருஷ்ணோ த்³வாரகாம் க³ருடே³ ஸ்தி²த꞉ |
தே³வஸத்³மப்ரதீகாஷா²ம் ஸமந்தாத்ப்ரதிநாதி³தாம் ||2-98-1

மணிபர்வதயந்த்ராணி ததா² க்ரீடா³க்³ருஹாணி ச |
உத்³யானவனமுக்²யானி வலபீ⁴சத்வராணி ச ||2-98-2

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “கிருஷ்ணன், தேவர்களின் வசிப்பிடத்திற்கு ஒப்பானதும், அனைத்துப் பக்கங்களிலும் எதிரொலிகளால் நிறைந்ததும், மணி மலை, விளையாட்டு இல்லங்கள், தோட்டங்கள், காடுகள், சபாமண்டபங்கள், கோபுரங்கள் ஆகியவற்றைக் கொண்டதுமான துவாரகா நகரத்தைக் கருடனின் முதுகில் அமர்ந்தவாறே கண்டான்.(1,2)

ஸம்ப்ராப்தே து ததா³ க்ருஷ்ணே புரீம் தே³வகிநந்த³னே |
விஷ்²வகர்மாணமாஹூய தே³வராஜோ(அ)ப்³ரவீதி³த³ம் ||2-98-3

ப்ரியமிச்ச²ஸி சேத்கர்தும் மஹ்யம் ஷி²ல்பவதாம் வர |
க்ருஷ்ணப்ரியார்த²ம் பூ⁴யஸ்த்வம் ப்ரகுருஷ்வ மனோஹராம் ||2-98-4

உத்³யானஷ²தஸம்பா³தா⁴ம் த்³வாரகாம் ஸ்வர்க³ஸம்மிதாம் |
குருஷ்²வ விபு³த⁴ஷ்²ரேஷ்ட² யதா² மம புரீ ததா² || 2-98-5

யத்கிஞ்சித்த்ரிஷு லோகேஷு ரத்னபூ⁴தம் ப்ரபஷ்²யஸி |
தேன ஸம்யுஜ்யதாம் க்ஷிப்ரம் புரீ த்³வாரவதீ த்வயா ||2-98-6

க்ருஷ்ணோ ஹி ஸுரகார்யேஷு ஸர்வேஷு ஸததோத்தி²த꞉ |
ஸங்க்³ராமான்கோ⁴ரரூபாம்ஷ்²ச விகா³ஹதி மஹாப³ல꞉ |
தாமிந்த்³ரவசநாத்³க³த்வா விஷ்²வகர்மா புரீம் தத꞉ ||2-98-7

தேவகியின் மகனான கிருஷ்ணன் {துவாரகா} நகரத்தை அடைந்ததும், தேவர்களின் மன்னன் {இந்திரன்}, தேவதச்சனை {விஷ்வகர்மனை}அழைத்து,(3) “ஓ! சிற்பிகளில் முதன்மையானவனே, எனக்கு விருப்பமானதை நீ செய்ய விரும்பினால் கிருஷ்ணனின் மகிழ்ச்சிக்காக அவனது அழகிய நகரத்தை மேலும் அழகாக்குவாயாக.(4) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, தேவர்களின் நகரைப் போல நூற்றுக்கணக்கான தோட்டங்கள் சூழ துவாரகா நகரத்தை அமைப்பாயாக.(5) மூவுலகங்களிலும் காணப்படும் ரத்தினங்கள் அனைத்தையும் கொண்டு துவாராவதி நகரத்தை அலங்கரிப்பாயாக.(6) ஏனெனில், பெருஞ்சக்தி வாய்ந்த கிருஷ்ணன், தேவர்களின் பணிகள் அனைத்திற்காகவும் முனைந்து பயங்கரம் நிறைந்த போரெனும் கடலில் எப்போதும் மூழ்குகிறான்” என்றான் {இந்திரன்}.(7)

அலஞ்சக்ரே ஸமந்தாத்³வை யதே²ந்த்³ரஸ்யாமராவதீ |
தாம் த³த³ர்ஷ² த³ஷா²ர்ஹாணாமீஷ்²வர꞉ பக்ஷிவாஹன꞉ |
விஷ்²வகர்மக்ருதைர்தி³வ்யைரபி⁴ப்ராயைரலங்க்ருதாம் ||2-98-8

தாம் ததா³ த்³வாரகாம் த்³ருஷ்ட்வா ப்ரபு⁴ர்நாராயணோ விபு⁴꞉ |
ஹ்ருஷ்ட꞉ ஸர்வார்த²ஸம்பன்ன꞉ ப்ரவேஷ்டுமுபசக்ரமே ||2-98-9

ஸோ(அ)பஷ்²யத்³வ்ருக்ஷக²ண்டா³ம்ஷ்²ச ரம்யாந்த்³ருஷ்டிமனோஹரான் |
த்³வாரகாம் ப்ரதி தா³ஷா²ர்ஹஷ்²சித்ரிதாம் விஷ்²வகர்மணா ||2-98-10

பத்³மக²ண்டா³குலாபி⁴ஷ்²ச ஹம்ஸஸேவிதவாரிபி⁴꞉ |
க³ங்கா³ஸிந்து⁴ப்ரகாஷா²பி⁴꞉ பரிகா²பி⁴ர்வ்ருதாம் புரீம் ||2-98-11

ப்ராகாரேணார்கவர்ணேன ஷா²தகௌம்பே⁴ன ராஜதா |
சயமூர்த்⁴னி நிவிஷ்டேன த்³யாம் யதை²வாப்⁴ரமாலயா || 2-98-12

கானனைர்நந்த³னப்ரக்²யைஸ்ததா² சைத்ரரதோ²பமை꞉ |
ப³பௌ⁴ சாருபரிக்ஷிப்தா த்³வாரகா த்³யௌரிவாம்பு³தை³꞉ ||2-98-13

இந்திரனுடைய சொற்களின் பேரில் துவாராவதி நகருக்குச் சென்ற விஷ்வகர்மன் அதை அமராவதியைப் போல அலங்கரித்தான். தாசார்ஹர்களின் ஆட்சியாளனும், எப்போதும் பறவையில் பறப்பவனும், நாராயணனுமான தலைவன் ஹரி,(8) தெய்வீகப் பொருட்கள் அனைத்தையும் கொண்டு விஷ்வகர்மனால் அலங்கரிக்கப்பட்ட துவாரகா நகரத்தைக் கண்டு தன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேறியவனாக அங்கே நுழைந்தான்.(9) விஷ்வகர்மனால் பளபளப்பாக்கப்பட்ட துவாரகா நகருக்குள் நுழைந்தபோது அவன் அழகிய மரங்களைக் கண்டான்.(10) கங்கை, சிந்து ஆறுகளுக்கு ஒப்பாகத் தாமரைத் தண்டுகள் நிறைந்தவையும், அன்னப்பறவைகள் விளையாடும் நீரைக் கொண்டவையுமான அகழிகளால் சூழப்பட்ட அந்த நகரத்தைக் கண்டான்.(11) பொன்வண்ண மேகங்களால் மறைக்கப்பட்ட வானத்தைப் போலவே அந்த நகரமும் வீடுகளில் (வீடுகளின் மேற்கூரைகளில்) நிறுவப்பட்டிருக்கும் பொன்னாலான சூரியத் திரைகளுடன் {பிரகாரங்களுடன்} அழகாகத் தெரிந்தது.(12) நந்தனத்திற்கும், சைத்ரரதத்துக்கும் ஒப்பான தோட்டங்களால் சூழப்பட்டிருந்த துவாரகை மேகங்களால் பீடிக்கப்பட்ட வானத்தைப் போல அழகாகத் தெரிந்தது.(13)

ப³பௌ⁴ ரைவதக꞉ ஷை²லோ ரம்யஸானுகு³ஹாஜிர꞉ |
பூர்வஸ்யாம் தி³ஷி² லக்ஷ்மீவான்மணிகாஞ்சந்தோரண꞉ ||2-98-14

த³க்ஷிணஸ்யாம் லதாவிஷ்ட꞉ பஞ்சவர்ணோ விராஜதே |
இந்த்³ரகேதுப்ரதீகாஷ²꞉ பஷ்²சிமாயாம் ததா² க்ஷய꞉ ||2-98-15

உத்தராம் தி³ஷ²மத்யர்த²ம் விபூ⁴ஷயதி வேணுமான் |
மந்த³ராத்³ரிப்ரதீகாஷ²꞉ பாண்டு³ர꞉ பார்தி²வர்ஷப⁴꞉ ||2-98-16

சித்ரகம் பஞ்சவர்ணம் ச பாஞ்சஜன்யம் வனம் மஹத் |
ஸர்வர்துகவனம் சைவ பா⁴தி ரைவதகம் ப்ரதி ||2-98-17

லதாவேஷ்டிதபர்யந்தம் மேருப்ரப⁴வனம் மஹத் |
பா⁴தி பா⁴னுவனம் சைவ புஷ்பகம் ச மஹத்³வனம் ||2-98-18

அக்ஷகைர்பீ³ஜகைஷ்²சைவ மந்தா³ரைஷ்²சோபஷோ²பி⁴தம் |
ஷ²தாவர்தவனம் சைவ கரவீராகரம் ததா² ||2-98-19

பா⁴தி சைத்ரரத²ம் சைவ நந்த³னம் ச வனம் மஹத் |
ரமணம் பா⁴வனம் சைவம் வேணுமத்³வை ஸமந்தத꞉ ||2-98-20

பொன்னாலும், ரத்தினங்களாலுமான ஓரழகிய வாயிலும், அழகிய மேட்டுச் சமவெளி, குகைகள், முற்றங்களுடன் கூடிய காட்சிக்கினிய ரைவத மலையும் அதன் {துவாரகையின்} கிழக்குப் பக்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(14) தெற்கே ஐந்து வண்ணங்களுடன் கூடிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட புதர்கள் {பிரகாசமான லதாவேஷ்ட மலையும்} இருந்தன. மேற்கில் அதே போல வானவில்லின் வண்ணத்தில் {ஸுகக்ஷணமெனும் வெள்ளி மலையும்} இருந்தன.(15) ஓ! மன்னா, மந்தரத்திற்கு {மந்தர மலைக்கு} ஒப்பானதும், மஞ்சளாக இருப்பதுமான வேணுமான் மலை வடக்கிற்கு அழகூட்டிக் கொண்டிருந்தது.(16) சித்ரகம், பஞ்சவர்ணம், பாஞ்சஜன்யம், ஸர்வர்தகம் எனும் காடுகள் {கிழக்கில்} ரைவதக மலையின் அழகை அதிகரித்துக் கொண்டிருந்தன.(17) {தெற்கில் லதாவேஷ்ட மலையைச் சுற்றி} மரங்களின் வேர் வரை நீளும் கொடிகளால் முற்றிலும் மறைக்கப்பட்ட மேருப்ரபம் என்ற பெருங்காடும், பானு, புஷ்பகம் என்ற பெருங்காடுகளும் அங்கே ஒளிர்ந்தன.(18) {மேற்கில் ஸுகக்ஷண மலையைச் சுற்றி} அசோகம், பீஜகம், மந்தாரம் ஆகிய மரங்களால் ஆழகூட்டப்பட்ட கரவீராகரம் {மந்தாரம்}, அலரி மரங்களைக் கொண்ட ஸதாவர்த்தகம் ஆகிய காடுகளும் இருந்தன.(19) {வடக்கில் வேணுமான் மலையைச் சுற்றி} சைத்ரரதம், நந்தனம், ரமணம், பாவனம், வேணுமான் ஆகிய பெருங்காடுகள் அனைத்துப் பக்கங்களிலும் தங்கள் அழகைப் பரப்பிக் கொண்டிருந்தன.(20)

வைடூ³ர்யபத்ரைர்ஜலஜைஸ்ததா³ மந்தா³கினீ நதீ³ |
பா⁴தி புஷ்கரிணீ ரம்யா பூர்வஸ்யாம் தி³ஷி² பா⁴ரத ||2-98-21

ஸானவோ பூ⁴ஷிதாஸ்தத்ர கேஷ²வஸ்ய ப்ரியைஷிபி⁴꞉ |
ப³ஹுபி⁴ர்தே³வக³ந்த⁴ர்வைஷ்²சோதி³தைர்விஷ்²வகர்மணா ||2-98-22

மஹாநதீ³ த்³வாரவதீம் பாஞ்சாஷ²த்³பி⁴ர்மஹாமுகை²꞉ |
ப்ரவிஷ்டா புண்யஸலிலா பா⁴வயந்தீ ஸமந்தத꞉ ||2-98-23

அப்ரமேயாம் மஹோத்ஸேதா⁴மகா³த⁴பரிகா²யுதாம் |
ப்ராகாரவரஸம்பன்னாம் ஸுதா⁴பாண்டு³ரலேபனாம் ||2-98-24

தீக்ஷ்ணயந்த்ரஷ²தக்⁴னீபி⁴ர்ஹேமஜாலைஷ்²ச பூ⁴ஷிதாம் |
ஆயஸைஷ்²ச மஹாசக்ரைர்த³த³ர்ஷ² த்³வாரகாம் புரீம் ||2-98-25

அஷ்டௌ ரத²ஸஹஸ்ராணி நக³ரே கிங்கிணீகினாம் |
ஸமுச்ச்²ரிதபதாகானி யதா² தே³வபுரே ததா² ||2-98-26

ஓ! பரதனின் வழித்தோன்றலே, வைடூரத் தாமரை இலைகளாலும், அழகிய தடாகத்தாலும் அலங்கரிக்கப்பட்ட மந்தாகினி எனும் பேராறு கிழக்கில் பாய்ந்தது.(21) விஷ்வகர்மனால் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்ட எண்ணற்ற தேவர்களும், கந்தர்வர்களும் கேசவனை மகிழ்விப்பதற்காக அங்கே மேட்டுச் சமவெளிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.(22) புனித ஆறான மந்தாகினி ஐம்பது வாய்களுடன் துவாரகா நகருக்குள் நுழைந்து அங்கே வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியளித்தாள்.(23) ஒப்பற்ற அழகுடன் கூடியதும், அகழிகளாலும், மதில்களாலும் சூழப்பட்டதும், மஞ்சள் வண்ணம் பூசப்பட்டதும்,(24) கூரிய சதக்னிகளாலும், இரும்புச் சக்கரங்களாலும் பளபளப்பாக்கப்பட்டதுமான துவாரகா நகரை அவன் கண்டான். மணிகளின் வலைகளாலும், பறக்கும் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டவையும்,(25) தேவர்களின் நகரைப் போல அந்த நகரை அழகாகத் தெரியச் செய்வதுமான எட்டாயிரம் தேர்களையும் கிருஷ்ணன் கண்டான்.(26)

அஷ்டயோஜனவிஸ்தீர்ணமசலாம் த்³வாத³ஷா²யதாம் |
த்³விகு³ணோபநிவேஷா²ம் ச த³த³ர்ஷ² த்³வாரகாம் புரீம் ||2-98-27

அஷ்டமார்க³மஹாரத்²யாம் மஹாஷோட³ஷ²சத்வராம் |
ஏகமார்க³பரிக்ஷிப்தாம் ஸாக்ஷாது³ஷ²னஸா க்ருதாம் ||2-98-28

ஸ்த்ரியோ(அ)பி யய்ஸ்யாம் யுத்⁴யேரன்கிமு வ்ருஷ்ணிமஹாரதா²꞉ |
வ்யூஹாநாமுத்தமா மார்கா³꞉ ஸப்த சைவ மஹாபதா²꞉ ||2-98-29

எட்டு யோஜனைகள் நீளம், பனிரெண்டு யோஜனைகள் ஆகலம், மேலும் இரு மடங்கு சுற்றுப்புறத்துடன் உறுதியாக நிறுவப்பட்டிருந்த துவாரகா நகரத்தை அவன் கண்டான்.(27) எட்டு நெடுஞ்சாலைகளையும், பதினாறு குறுக்குச் சாலைகளையும் கொண்டிருந்த அந்த நகத்தில், உசானஸால் அமைக்கப்பட்டிருந்த முக்கியச் சாலையில்,(28) பெண்களும் எளிதாகப் போரிடக்கூடும் எனும்போது விருஷ்ணிகளைக் குறித்து என்ன சொல்வது? விஷ்வகர்மன் படைவீரர்களின் அணிவகுப்புக்காக ஏழு நெடுஞ்சாலைகளை அமைத்திருந்தான்.(29)

தத்ர வை விஹிதா꞉ ஸாக்ஷாத்³விவிதா⁴ விஷ்²வகர்மணா |
தஸ்மின்புரவரஷ்²ரேஷ்டே² தா³ஷா²ர்ஹாணாம் யஷ²ஸ்வினாம் ||2-98-30

வேஷ்²மானி ஜஹ்ருஷே த்³ருஷ்ட்வா ததோ தே³வகிநந்த³ன꞉ |
காஞ்சனைர்மணிஸோபானைருபேதானி ந்ருஹர்ஷணை꞉ ||2-98-31

பீ⁴மகோ⁴ஷமஹாகோ⁴ஷை꞉ ப்ராஸாத³வரசத்வரை꞉ |
ஸமுச்ச்²ரிதபதாகானி பாரிப்லவவனானி ச ||2-98-32

காஞ்சநாக்³ராணி பா⁴ஸ்வந்தி ப்ராஸாத³ஷி²க²ராணி ச |
க்³ருஹாணி ரமணீயானி மேருகூடனிபா⁴னி ச ||2-98-33

பாண்டு³பாண்து³ரஷ்²ருங்கை³ஷ்²ச ஷா²தகும்ப⁴பரிஷ்க்ருதை꞉ |
ரம்யஸானுக்³ருஹை꞉ ஷ்²ருங்கை³ர்விசித்ரைரிவ பர்வதை꞉ ||2-98-34

பஞ்சவர்ணை꞉ ஸுவர்ணைஷ்²ச புஷ்பவ்ருஷ்டிஸமப்ரபை⁴꞉ |
பர்ஜன்யதுல்யநிர்கோ⁴ஷைர்னானாரூபைரிவாத்³ரிபி⁴꞉ ||2-98-35

தா³வாக்³நிஜ்வலிதப்ரக்²யைர்நிர்மிதைர்விஷ்²வகர்மணா |
ஆஷ்²லிஷத்³பி⁴ரிவாகாஷ²மதிசந்த்³ரார்கபா⁴ஸ்வரை꞉ ||2-98-36

தைர்த³ஷா²ர்ஹைர்மஹாபா⁴கை³ர்ப³பா⁴ஸே தத்³வனத்³ருமை꞉ |
வாஸுதே³வேந்த்³ரபர்ஜன்யைர்க்³ருஹமேதை⁴ரலங்க்ருதா ||2-98-37

த³த்³ருஷே² த்³வாரகா சாருமேகை⁴ர்த்³யௌரிவ ஸம்வ்ருதா |
ஸாக்ஷாத்³ப⁴க³வதோ வேஷ்²ம விஹிதம் விஷ்²வகர்மணா ||2-98-38

த³த்³ருஷே² வாஸுதே³வஸ்ய சதுர்யோஜனமாயதம் |
தாவதே³வ ச விஸ்தீர்ணமப்ரமேயம் மஹாத⁴னம் ||2-98-39

ப்ராஸாத³வரஸம்பன்னைர்யுக்தம் ஜக³தி பர்வதை꞉ |
யcசகார மஹாபா⁴க³ஸ்த்வஷ்டா வாஸவனோதி³த꞉ ||2-98-40

பயங்கர முழக்கங்களால் நிறைந்தும், முற்றங்கள் நிறைந்ததும், பொன், ரத்தினங்களாலான படிகளைக் கொண்டதும், மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுமான அந்தச் சிறந்த நகரத்தில் சிறப்புமிக்கத் தாசார்ஹர்களின் மாளிகைகளைகளைக் கண்டு கிருஷ்ணன் பெரிதும் மகிழ்ந்தான்.(30,31) அந்த மாளிகைகளின் கோபுரங்கள் கொடிகளாலும், இலைகளாலும், கிளைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேரு மலையின் சிகரங்களுக்கு ஒப்பான பொன்மாடங்களால் அந்த மாளிகைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(32,33) பொன் மலர்களாலும், ஐந்து வண்ண மலர்களாலும் மறைக்கப்பட்டதைப் போல வீடுகளின் உச்சிகள் அழகிய சிகரங்களையும், குகைகளையும் கொண்ட அழகிய மலைகளைப் போல இருந்தன.(34,35) விஷ்வகர்மனால் கட்டப்பட்டவையும், காட்டுத் தீயைப் போல எரிபவையுமான அந்த வீடுகள், மேக முழக்கம் போன்ற ஒலியால் நிறைந்த மலைகள் பலவற்றைப் போலத் தெரிந்து சூரியனையும், சந்திரனையும் போன்ற பிரகாசத்துடன் வானத்தை மறைத்தன.(36) அந்த நகரம், காட்டு மரங்களாலும், உன்னதத் தாசார்ஹர்களாலும் பளபளத்தது.(37) மேகம் போன்ற வீடுகளாலும் தேவர்களான வாசுதேவன், இந்திரன் ஆகியோராலும் அலங்கரிக்கப்பட்ட துவாரகா நகரம், பலவண்ண மேகங்களால் பீடிக்கப்பட்ட வானத்தைப் போலத் தெரிந்தது.(38) தெய்வீகனான வாசுதேவனுக்காக விஷ்வகர்மனால் கட்டப்பட்ட வீடு நான்கு யோஜனை அகலும், அதே அளவு நீளமும் கொண்டதாக இருந்தது.(39) ஒப்பற்றவனும், பெரும் வளம் கொண்டவனுமான வாசுதேவனின் வீடானது, மாளிகைகளாலும், செய்குன்றுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரும் விஷ்வகர்மன் வாசவனின் ஆணையின் பேரில் அந்த வீட்டைக் கட்டியிருந்தான்.(40)

ப்ராஸாத³ம் சைவ ஹேமாப⁴ம் ஸர்வபூ⁴தமனோஹரம் |2-98-41

மேரோரிவ கி³ரே꞉ ஷ்²ருங்க³முச்ச்²ரிதம் காஞ்சனம் மஹத் |
ருக்மிண்யா꞉ ப்ரவரம் வாஸம் விஹிதம் விஷ்²வகர்மணா ||2-98-42

ஸத்யபா⁴மா புனர்வேஷ்²ம யதா³வஸத பாண்டு³ரம் |
விசித்ரமணிஸோபானம் தத்³விது³ர்போ⁴க³வத்த்விதி ||2-98-43

விமலாதி³த்யவர்ணாபி⁴꞉ பதாகாபி⁴ரலங்க்ருதம் |
வ்யக்தஸஞ்ஜவனோத்³தே³ஷோ² யஷ்²சதுர்தி³ங்மஹாத்⁴வஜ꞉ ||2-98-44

விஷ்வகர்மன், சுமேரு மலையின் உயர்ந்த சிகரம் போன்று பேரழகுடன் கூடிய பெரிய பொன்மாளிகை ஒன்றை ருக்மிணிக்காகக் கட்டினான். அது காஞ்சனை எனப் பெயரிடப்பட்டது.(41,42)
சத்யபாமா, தெளிந்த சூரியனைப் போலப் பிரகாசிக்கும் கொடிகால் அலங்கரிக்கப்பட்டதும், ரத்தினமயமான படிக்கட்டுகளைக் கொண்டதுமான ஒரு மஞ்சள் வீட்டைக் கொண்டிருந்தாள். அது போகவான் என்ற பெயரால் கொண்டாடப்பட்டது.(43,44)

ஸ ச ப்ராஸாத³முக்²யோ(அ)த² ஜாம்ப³வத்யா விபூ⁴ஷித꞉ |
ப்ரப⁴யாப்⁴யப⁴வத்ஸர்வாம்ஸ்தானன்யா பா⁴ஸ்கரோ யதா² ||2-98-45

உத்³யத்³பா⁴ஸ்கரவர்ணாப⁴ஸ்தயோரந்தரமாஷ்²ரித꞉ |
விஷ்²வகர்மக்ருதோ தி³வ்ய꞉ கைலாஸஷி²க²ரோபம꞉ ||2-98-46

ஜாம்பூ³னத³ இவாதீ³ப்த꞉ ப்ரதீ³ப்தஜ்வலனோ யதா² |
ஸாக³ரப்ரதிமோத்தி²ஷ்ட²ன்மேருரித்யபி⁴விஷ்²ருத꞉ ||2-98-47

தஸ்மின்கா³ந்தா⁴ரராஜஸ்ய து³ஹிதா குலஷா²லினீ |
கா³ந்தா⁴ரீ ப⁴ரதஷ்²ரேஷ்ட² கேஷ²வேன நிவேஷி²தா ||2-98-48

பத்³மகூல இதி க்²யாதம் பத்³மவர்ணம் மஹாப்ரப⁴ம் |
ஸுபீ⁴மாயா மஹாகூடம் வாஸம் ஸுருசிரப்ரப⁴ம் ||2-98-49

ஸூர்யப்ரப⁴ஸ்து ப்ராஸாத³꞉ ஸர்வகாமகு³ணைர்யுத꞉ |
லக்ஷ்மணாயா ந்ருபஷ்²ரேஷ்ட² நிர்தி³ஷ்ட꞉ ஷா²ர்ங்க³த⁴ன்வனா ||2-98-50

சுற்றிலும் பெருங்கொடிகளைக் கொண்டதும், ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தோற்றத்தைக் கொடுக்கவல்லதும், நன்கு அமைக்கப்பட்டதுமான சிறந்த மாளிகை ஜாம்பவதிக்காகக் கட்டப்பட்டது.(45,46)
எரியும் நெருப்பையும், தங்கத்தையும் போன்ற பிரகாசமானதும், கைலாச மலையின் சிகரத்தையும், பெருங்கடலையும் போன்று பெரியதுமான மற்றொரு மாளிகையை விஷ்வகர்மன் மேரு என்ற பெயரில் கட்டினான். காந்தார மன்னனின் நுண்ணறிவுமிக்க மகளைக் கேசவன் அந்த வீட்டில் அமர்த்தினான்.(47,48)
பைமைக்கு {பீமைக்கு} பத்மகூலம் என்ற பெயரில் ஒரு வீடு கட்டப்பட்டது. அது தாமரையின் வண்ணத்தைக் கொண்டதாகவும், பெரும் பிரகாசம் மிக்கதாகவும், காட்சிக்கினிய உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகவும் இருந்தது.(49)
ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, சாரங்கபாணியான கேசவன், விருபத்திற்குரிய பொருட்கள் அனைத்துடன் கூடியதும், சூரியபிரபை என்ற பெயரைக் கொண்டதுமான வீட்டை லக்ஷ்மணைக்காகக் கட்டினான்.(50)

வைடூ³ர்யமணிவர்ணாப⁴꞉ ப்ராஸாதோ³ ஹரிதப்ரப⁴꞉ |
யம் விது³꞉ ஸர்வபூ⁴தானி பரமித்யேவ பா⁴ரத ||2-98-51

வாஸம் தம் மித்ரவிந்தா³யா தே³வர்ஷிக³ணபூஜிதம் |
மஹிஷ்யா வாஸுதே³வஸ்ய பூ⁴ஷனம் தேஷு வேஷ்²மஸு ||2-98-52

யஸ்து ப்ராஸாத³முக்²யோ(அ)த்ர விஹிதோ விஷ்²வகர்மணா |
அதீவ ரம்யரம்யோ(அ)ஸௌ தி⁴ஷ்டி²த꞉ பர்வதோ யதா² ||2-98-53

ஸுவார்தாயா நிவாஸம் தம் ப்ரஷ²ஸ்தம் ஸர்வதை³வதை꞉ |
மஹிஷ்யா வாஸுதே³வஸ்ய கேதுமானிதி விஷ்²ருத꞉ ||2-98-54

ஓ! பரதனின் வழித்தோன்றலே, வைடூரியத்தின் காந்திக்கு ஒப்பான பிரகாசம் கொண்டதும், உலகம் முழுவதும் பரம் என்ற பெயரில் அறியப்படுவதும், மாளிகைகளின் ரத்தினமும், பெரும்ரிஷிகள் வந்து செல்வதுமான பச்சை மாளிகையானது வாசுதேவனின் ராணியான மித்ரவிந்தைக்காகத் தனியாக ஒதுக்கப்பட்டது.(51,52)
தேவர்களாலும் உயர்வாகப் பேசப்பட்டதும், கேதுமான் என்ற பெயரில் கொண்டாடப்பட்டதும், மலை போல விஷ்வகர்மனால் கட்டப்பட்டதுமான சிறந்த மாளிகை கேசவனின் ராணியான சுவார்த்தைக்காகக் கட்டப்பட்டது.(53,54)

யத்ர ப்ராஸாத³முக்²யோ வை யம் த்வஷ்டா வித³தே⁴ ஸ்வயம் |
யோஜனாயதவிஷ்கம்ப⁴꞉ ஸர்வரத்னமய꞉ ஷு²ப⁴꞉ ||2-98-55

ஸ ஷ்²ரீமான்விரஜா நாம வ்யராஜத்தத்ர ஸுப்ரப⁴꞉ |
உபஸ்தா²னக்³ருஹம் யத்ர கேஷ²வஸ்ய மஹாத்மன꞉ ||2-98-56

தஸ்மின்ஸுவிஹிதா꞉ ஸர்வே ருக்மத³ண்டா³꞉ பதாகின꞉ |
ஸத³னே வாஸுதே³வஸ்ய மார்க³ஸஞ்ஜவனத்⁴வஜா꞉ ||2-98-57

ரத்னஜாலானி தி³வ்யானி தத்ரைவ ச நிவேஷி²தா꞉ |
ஆஹ்ருத்ய யது³ஸிம்ஹேன வைஜயந்தோ(அ)சலோ மஹான் ||2-98-58

அந்த மாளிகைகளில் தேவதச்சன் தன் சொந்த கைகளால் கட்டியதும், விரஜம் என்ற பெயரைக் கொண்டதும், பேரழகுடன் கூடிய ஒளிமிக்கதும், ஒரு யோஜனை தொலைவு பரப்பளவையும், அனைத்து வகை ரத்தினங்களையும் கொண்டதுமான மாளிகை, உயரான்ம கேசவனின் சபையானது.(55,56) வாசுதேவனின் அந்த மாளிகையில் சாலைகளைச் சுட்டுவதற்காகத் தங்கக்கம்பங்களுடன் கூடிய கொடிகளும், முக்கோணக் கொடிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. யது குலத்தில் முதன்மையான கேசவன், பெரும் மலையான வைஜயந்தத்தையும், பல்வேறு தெய்வீக ரத்தினங்களையும் அங்கே கொண்டு வந்திருந்தான்.(57,58)

ஹம்ஸகூடஸ்ய யச்ச்²ருங்க³மிந்த்³ரத்³யும்னஸர꞉ ப்ரதி |
ஷஷ்டிதாலஸமுத்ஸேத⁴மர்த⁴யோஜனமாயதம் ||2-98-59

ஸகின்னரமஹாநாக³ம் தத³ப்யமிததேஜஸா |
பஷ்²யதாம் ஸர்வபூ⁴தாநாமானீதம் லோகவிஷ்²ருதம் ||2-98-60

ஆதி³த்யபத²க³ம் யத்து மேரோ꞉ ஷி²க²ரமுத்தமம் |
புண்ட³ரீகஷ²தைர்ஜுஷ்டம் விமானைஷ்²ச ஹிரண்மயை꞉ ||2-98-61

ஜாம்பூ³னத³மயம் தி³வ்யம் த்ரிஷு லோகேஷு விஷ்²ருதம் |
தத³ப்யுத்பாட்ய க்ரூஷ்ணார்த²மானீதம் விஷ்²வகர்மணா ||2-98-62

ப்⁴ராஜமானமதீவாக்³ர்யம் ஸர்வௌஷதி⁴ஸமன்விதம் |
ததி³ந்த்³ரவசனாத்த்வஷ்தா கார்யஹேதோ꞉ ஸமானயத் ||2-98-63

பெருஞ்சக்திவாய்ந்த விஷ்வகர்மன், இந்திரத்யும்னமெனும் தடாகத்தின் அருகில் இருந்ததும், அறுபது தாலங்கள் {அறுபது பனை மர} உயரத்தைக் கொண்டதும், அரையோஜனை அளவு பரப்பளவைக் கொண்டதுமான நன்கறியப்பட்ட ஹம்ஸகூட மலைச் சிகரத்தைக் கின்னர்கள், மற்றும் பெரும் நாகர்களின் உதவியுடன் அங்கே கொண்டு வந்து வைத்தான்.(59,60) விஷ்வகர்மன், சூரியனின் பாதையில் கிடந்த சுமேருவின் தங்கத்தேரையும், மூவுலகங்களிலும் நன்கறியப்பட்ட நூறு தாமரைகளுடன் கூடிய மிகச் சிறந்த தங்கச் சிகரத்தையும் கிருஷ்ணனுக்காகப் பெயர்த்தெடுத்து அங்கே கொண்டு வந்தான்.(61,62) அந்தத் துவஷ்டா {விஷ்வகர்மன்}, அனைத்து வகை மூலிகைகளுடன் கூடியதும், பேரழகைக் கொண்டதுமான சிகரத்தை இந்திரனின் வேண்டுகோளுக்கிணங்கவும், பெரும் பணியில் ஈடுபடும் ஊக்கத்துடனும் அங்கே கொண்டு வந்தான்.(63)

பாரிஜாதஷ்²ச தத்ரைவ கேஷ²வேனாஹ்ருத꞉ ஸ்வயம் ||2-98-64

நீயமானே து தத்ராஸீத்³யுத்³த⁴மத்³பு⁴தகர்மண꞉ |
க்ருஷ்ணஸ்ய யே(அ)ப்⁴யரக்ஷம்ஸ்து தே³வா꞉ பாத³பமுத்தமம் ||2-98-65

புண்ட³ரீகஷ²தைர்ஜுஷ்டம் விமானைஷ்²ச ஹிரண்மயை꞉ |
விஹிதா வாஸுதே³வார்த²ம் ரத்னபுஷ்பப²லத்³ருமா꞉ ||2-98-66

பத்³மக²ண்ட³ஜலோபேதா ரத்னஸௌக³ந்தி⁴கோத்பலா꞉ |
மணிஹேமப்லவாகீர்ணா꞉ புஷ்கரிண்ய꞉ ஸராம்ஸி ச ||2-98-67

தாஸாம் பரமகூலானி ஷோ²ப⁴யந்தி மஹாத்³ருமா꞉ |
ஷா²லாஸ்தாலா꞉ கத³ம்பா³ஷ்²ச ஷ²தஷா²கா²ஷ்²ச ரௌஹிணா꞉ ||2-98-68

யே ச ஹைமவதோ வ்ருக்ஷா யே ச மேருருஹாஸ்ததா² |
ஆஹ்ருத்ய யது³ஸிம்ஹார்த²ம் விஹிதா விஷ்²வகர்மணா ||2-98-69

ரக்தபீதாருணஷ்²யாமா꞉ ஷ்²வேதபுஷ்பாஷ்²ச பாத³பா꞉ |
ஸர்வர்துப²லஸம்பன்னாஸ்தேஷு கானனஸந்தி⁴ஷு ||2-98-70

ஸமகூலஜலோபேதா꞉ ஷா²ந்தஷ²ர்கரவாலுகா꞉ |
தஸ்மின்புரவரே நத்³ய꞉ ப்ரஸன்னஸலிலா ஹ்ரதா³꞉ ||2-98-71

புஷ்பாகுலஜலோபேதா நாநாத்³ருமலதாகுலா꞉ |
அபராஷ்²சாப⁴வன்னத்³யோ ஹேமஷ²ர்கரவாலுகா꞉ ||2-98-72

மத்தப³ர்ஹிணஸங்கை⁴ஷ்²ச கோகிலைஷ்²ச ஸதா³மதை³꞉ |
ப³பூ⁴வு꞉ பரமோபேதாஸ்தஸ்யாம் புர்யாம் ச பாத³பா꞉ ||2-98-73

தத்ரைவ க³ஜயூதா²னி புரே கோ³மஹிஷாஸ்ததா² |
நிவாஸஷ்²ச க்ருதஸ்தத்ர வராஹம்ருக³பக்ஷிபி⁴꞉ ||2-98-74

புர்யாம் தஸ்யாம் து ரம்யாயாம் ப்ராகாரோ வை ஹிரண்மய꞉ |
வ்யக்த꞉ கிஷ்குஷ²தோத்ஸேதோ⁴ விஹிதோ விஷ்²வகர்மணா ||2-98-75

அதீவ ரம்ய꞉ ஸோ(அ)தா²ஸீத்³வேஷ்டித꞉ பர்வதோ யதா² |
தே ச தே ச மஹாஷை²லா꞉ ஸரிதஷ்²ச ஸராம்ஸி ச |
பரிக்ஷிப்தானி பௌ⁴மேன வனான்யுபவனானி ச ||2-98-76

கேசவனே பாரிஜாத மரத்தை அபகரித்து வந்து துவாரகையில் வைத்தான்.(64) அற்புதச் செயல்களைச் செய்பவனான கிருஷ்ணன் அந்த மரத்தைக் கொண்டு வரும்போது அதைப் பாதுகாத்து வந்த தேவர்களுடன் போரிட வேண்டி இருந்தது.(65) தங்கம் மற்றும் ரத்தினங்களாலான தெப்பங்களும், தாமரைகளும், நறுமணமிக்க ரத்தினமயமான தாமரைகளும் கிருஷ்ணனுக்காக வெட்டப்பட்ட குளங்களிலும் தடாகங்களிலும் மிதந்து கொண்டிருந்தன.(66) ரத்தினமயமான மலர்களும், கனிகளும் நிறைந்த மரங்களாலும், நூற்றுக்கணக்கான தங்கத் தாமரைகளாலும் குளங்களும், தடாகங்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(67) நூற்றுக்கணக்கான கிளைகளைக் கொண்டவையும், பெரியவையுமான சாலம், தாலம் {பனை}, கதம்ப மரங்கள் காட்சிக்கினியவையான அந்தத் தடாகங்களின் கரைகளுக்கு அழகூட்டின.(68) யது குலத்தில் சிறந்த கிருஷ்ணனுக்காக விஷ்வகர்மன், சுமேரு, இமய மலைகளில் வளரும் மரங்கள் அனைத்தையும் துவாரகைக்குக் கொண்டு வந்து நட்டான்.(69) தோட்டங்களின் வேலிகளில் அனைத்து பருவகாலங்களிலும் கனிகளைக் கொடுப்பவையும், வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பச்சை, அந்திச்சிவப்பு நிறங்களிலான மலர்களை உச்சியில் கொண்டவையுமான மரங்கள் நடப்பட்டன.(70) அந்தச் சிறந்த நகரத்தின் இனிமைமிக்க ஓடைகளிலும், தடாகங்களிலும் உள்ள நீரும், அவற்றின் கரைகளும் நிகர் அளவில் {சமமாக} இருந்தன.(71) அங்கே இருந்த சந்தனம் பச்சை சர்க்கரையினை போன்றிருந்தது. சில ஆறுகளில் எப்போதும் மலர்கள் மிதந்து கொண்டிருந்தன; மணல் பொன்னாலான சக்கரை வண்ணம் கொண்டவையாக இருந்தது.(72) பித்துப்பிடித்த மயில்களும், குயில்களும் அந்நகரத்தின் மரங்களில் அமர்ந்து மேலும் அழகூட்டிக் கொண்டிருந்தன.(73) யானைகள், பசுக்கள், எருமைகள், பன்றிகள், மான்கள் ஆகியவற்றின் மந்தைகளும், பறவைக் கூட்டங்களும் அந்த நகரத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தன.(74) இவ்வகையிலேயே விஷ்வகர்மன் நூற்றுக்கணக்கான கோபுரங்களுடனும், பெரும் மலைகள், ஆறுகள், தடாகங்கள், காடுகள், தோட்டங்கள் ஆகியவற்றுடன் அந்த அழகிய நகரை அமைத்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(75,76)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
த்³வாரகாவிஷே²ஷநிர்மாணம் நாமாஷ்டனவதிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 97–(வஜ்ரநாபவதம்)

February 1, 2021

வஜ்ரநாபனுக்கும், பிரத்யும்னனுக்கும் இடையில் நடந்த கடும்போரில் இருவரும் மயக்கமடைந்தது; சக்கர ஆயுதத்தால் வஜ்ரநாபனைக் கொன்ற பிரத்யும்னன்; சுநாபனின் மரணம்; நான்காகப் பிரிக்கப்பட்ட வஜ்ரநாபனின் நாடு.

வைஷ²ம்பாயன உவாச
ஜக³தஷ்²சக்ஷுஷி ததோ முஹூர்தாப்⁴யுதி³தே ரவௌ |
ப்ராது³ராஸீத்³த⁴ரிர்தே³வஸ்தார்க்ஷ்யேணோரக³ஷ²த்ருணா ||2-97-1

ஹம்ஸவாயுமனோபி⁴ஷ்²ச ஸுஷீ²க்⁴ரதரக³꞉ க²க³꞉ |
தஸ்தௌ² வியதி ஷ²க்ரஸ்ய ஸமீபே குருநந்த³ன ||2-97-2

ஸமேத்ய ச யதா²ந்யாயம் க்ருஷ்ணோ வாஸவஸந்நிதௌ⁴ |
பாஞ்சஜன்யம் ஹரிர்த³த்⁴மௌ தை³த்யானாம் ப⁴யவர்த⁴னம் ||2-97-3

தம் ஷ்²ருத்வாப்⁴யாக³தஸ்தத்ர ப்ரத்³யும்னோ பரவீரஹா |
வஜ்ரநாப⁴ம் ஜஹீத்யுக்த꞉ கேஷ²வேன த்வரேதி ச ||2-97-4

தார்க்ஷ்யமாருஹ்ய க³ச்சே²தி புனரேவ ப்ரணோதி³த꞉ |
சகார ஸ ததா² வீர꞉ ப்ரணிபத்ய ஸுரோத்தமௌ || 2-97-5

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “உலகின் விழியான சூரியன் உதித்து மூன்று முஹூர்த்தங்கள் கடந்ததும், பாம்புகளின் பகைவனான கருடனைச் செலுத்திக் கொண்டு தேவன் ஹரி அங்கே வந்தான்.(1) ஓ! குருவின் வழித்தோன்றலே, பறவைகளின் மன்னனான கருடன், அன்னப்பறவைகளையும், காற்றையும், மனத்தையும் விட வேகமாகச் ஆகாய லோகத்தில் இருக்கும் சக்ரனிடம் சென்றான்.(2) தலைவன் கிருஷ்ணன், வாசவனின் அருகில் வந்ததும் தைத்தியர்களின் அச்சத்தைப் பெருகச் செய்யும் பாஞ்சஜன்ய சங்கத்தை முழக்கினான்.(3) பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னன் அவ்வொலியைக் கேட்டு தன் தந்தையின் அருகில் வந்தபோது, கேசவன் அவனிடம், “விரைவாக வஜ்ரநாபனைக் கொல்” என்றான்.(4) மீண்டும் அவன், “கருடனின் முதுகில் ஏறி அங்கே செல்வாயாக” என்றான். தேவர்களில் முதன்மையான இந்திரனையும், உபேந்திரனையும் வணங்கிவிட்டு அவ்வாறே அவன் செய்தான் {கருடனின் முதுகில் ஏறிச் சென்றான்}.(5)

ஸ மனோரம்ஹஸா வீர தார்க்ஷ்யேணாஷு² யயௌ ந்ருப |
அப்⁴யாஸம் வஜ்ரநாப⁴ஸ்ய மஹாத்³வந்த்³வஸ்ய பா⁴ரத ||2-97-6

ததஸ்தார்க்ஷ்யக³தோ வீரஸ்ததர்த³ ரணமூர்த⁴னி |
வஜ்ரநாப⁴ம் ஸ்தி²ரோ பூ⁴த்வா ஸர்வாஸ்த்ரவித³னிந்தி³த꞉ ||2-97-7

தேன தார்க்ஷ்யக³தேனைவ க³த³யா க்ருஷ்ணஸூனுனா |
உரஸ்யப்⁴யாஹதோ வீரோ வஜ்ரனாபோ³ மஹாத்மனா ||2-97-8

ஸ தேநாபி⁴ஹதோ வீரோ தை³த்யோ மோஹவஷ²ம் க³த꞉ |
சக்ஷார ச ப்⁴ருஷ²ம் ரக்தம் ப³ப்⁴ராமைவ க³தாஸுவத் ||2-97-9

ஓ! பேரரசே {ஜனமேஜயனே}, பிரத்யும்னன், மனம் போல் வேகம் கொண்ட கருடனைச் செலுத்திச் சென்று தன் பெரும் பகைவனான வஜ்ரநாபனை அவன் அணுகினான்.(6) அனைத்து ஆயுதங்களின் பயன்பாட்டையும் நன்கறிந்த வீரப் பிரத்யும்னன், கருடன் மீது உறுதியாக அமர்ந்து கொண்டு வஜ்ரநாபனைத் தாக்கினான்.(7) பெருஞ்சக்திவாய்ந்த வஜ்ரநாபன், கருடனின் மீது அமர்ந்து வந்த உயரான்ம கிருஷ்ணனின் மகனுடைய {பிரத்யும்னனின்} கதாயுதத்தால் மார்பில் காயமடைந்தான்.(8) பிரத்யும்னனின் கதாயுதத்தால் கடுமையாகத் தாக்கப்பட்ட அந்தத் தைத்திய வீரன் {வஜ்ரநாபன், தன்னினைவை இழந்து கலங்கி இறந்தவனைப் போல மீண்டும் மீண்டும் குருதியைக் கக்கினான்.(9)

ஆஷ்²வஸேதயத² தம் கார்ஷ்ணிருவாச ரணது³ர்ஜய꞉ |
லப்³த⁴ஸஞ்ஜ்ஞ꞉ ஸ வீரஸ்து ப்ரத்³யும்னமித³ம்ப்³ரவீத் ||2-97-10

ஸாது⁴ யாத³வ வீர்யேண ஷ்²லாக்⁴யோ மம ரிபுர்ப⁴வான் |
ப்ரதிப்ரஹாரகாலோ(அ)யம் ஸ்தி²ரோ ப⁴வ மஹாப³ல ||2-97-11

போரில் தடுக்கப்பட முடியாதவனான கிருஷ்ணனின் மகன் அப்போது அவனிடம், “களைப்பாறுவாயாக” என்று சொன்னான். வீரனான வஜ்ரநாபன் ஒரு கணத்தில் நினைவு மீண்டவனாகப் பிரதயும்னனிடம்,(10) “ஓ! பெருஞ்சக்தி வாய்ந்த யாதவா, நன்று செய்தாய். உன் ஆற்றலின் மூலம் நீ என் பகைவரில் சிறப்புமிக்கவன் ஆகிவிட்டாய். இப்போது உன்னைத் திருப்பித் தாக்குவதற்கான நேரம் எனக்கு; இங்கேயே உறுதியுடன் நிற்பாயாக” என்றான்.(11)

ஏவமுக்த்வா மஹாநாத³ம் முக்த்வா மேக⁴ஷ²தோபமம் |
க³தா³ம் முமோச வேகே³ன ஸக⁴ண்டாம் ப³ஹுகண்டகாம் ||2-97-12

தயா லலாடே(அ)பி⁴ஹத꞉ ப்ரத்³யும்னோ க³த³யா ந்ருப |
உத்³வமன்ருதி⁴ரம் பூ⁴ரி முமோஹ யது³நந்த³ன꞉ ||2-97-13

தம் த்³ருஷ்ட்வா ப⁴க³வான்க்ருஷ்ண꞉ பாஞ்சஜன்யம் ஜலோத்³ப⁴வம் |
த³த்⁴மாவாஷ்²வாஸனகரம் புத்ரஸ்ய ரிபுநாஷ²ன꞉ ||2-97-14

தம் பாஞ்சஜன்யஷ²ப்³தே³ன ப்ரத்யாஷ்²வஸ்தம் மஹாப³லம் |
த்³ருஷ்ட்வா ப்ரமுதி³தா லோகா விஷே²ஷேணேந்த்³ரகேஷ²வௌ ||2-97-15

இதைச் சொல்லிவிட்டு நூறு மேகங்களைப் போல முழங்கிய அந்தத் தைத்தியர்களின் தலைவன் {வஜ்ரநாபன்}, மணிகளால் அலங்கரிக்கப்பட்ட பெரும் கதாயுதத்தைப் பெருஞ்சக்தியுடன் வீசினான்.(12) ஓ! மன்னா {ஜனமேஜயா}, யதுக்களில் முதன்மையான பிரத்யும்னன் அந்தக் கதாயுதத்தின் மூலம் நெற்றியில் படுகாயம் அடைந்து குருதி கக்கி தன் நினைவை இழந்தான்.(13) பகைவரைக் கொல்பவனான தெய்வீகக் கிருஷ்ணன், இதைக் கண்டதும் தன் மகனைத் தேற்றுவதற்காக {பெருங்கடலின் நீரில் உதித்த} பாஞ்சஜன்யத்தை {சங்கை} முழக்கினான்.(14) பெருஞ்சக்திவாய்ந்தவனான பிரத்யும்னன் பாஞ்சஜன்யத்தின் ஒலியால் உணர்வு மீண்டு எழுந்து நின்றான். ஓ! பாரதா, களைப்பகன்று வந்த பிரத்யும்னனைக் கண்டு உலகத்தினர் அனைவரும், குறிப்பாக இந்திரனும், கேசவனும் பெரிதும் மகிழ்ந்தனர்.(15)

தஸ்ய சக்ரம் கரே யாதம் க்ருஷ்ணச்ச²ந்தே³ன பா⁴ரத |
க்ஷுரனேமிஸஹஸ்ராரம் தை³த்யஸங்க⁴குலாந்தகம் ||2-97-16

தன்முமோசாச்யுதஸுதஸ்தஸ்ய நாஷா²ய பா⁴ரத |
நமஸ்க்ருத்வா ஸுரேந்த்³ராய க்ருஷ்ணாய ச மஹாத்மனே ||2-97-17

வஜ்ரநாப⁴ஸ்ய தத்காயாது³ச்சகர்த ஷி²ரஸ்ததா³ |
நாராயணஸுதோன்முக்தம் தை³த்யாநாமனுபஷ்²யதாம் ||2-97-18

க³த³꞉ ஸுநாப⁴மவதீ⁴த்³யதமானம் ரணாஜிரே |
ஹர்ம்யப்ருஷ்டே² ஜிகா⁴ம்ஸந்தம் ரணத்³ருப்தம் ப⁴யானகம் ||2-97-19

ஸாம்ப³꞉ ஸமரமத்⁴யஸ்தா²னஸுரானரிமர்த³ன꞉ |
நினாய நிஷி²தைர்பா³ணை꞉ ப்ரேதாதி⁴பபரிக்³ரஹம் |2-97-20

நிகும்போ⁴(அ)பி ஹதே வீரே வஜ்ரநாபே⁴ மஹாஸுரே |
ஜகா³ம ஷட்புரம் வீரோ நாராயணப⁴யார்தி³த꞉ ||2-97-21

ஓ! ஜனமேஜயா, அதன்பிறகு ஆயிரம் கூர்முனைகளைக் கொண்டதும், தைத்தியர்களுக்கு அழிவைத் தருவதுமான சக்கரம் {சக்கராயுதம்}, கிருஷ்ணனின் விருப்பத்தின் பேரில் அவனுடைய மகனின் கைக்கு வந்தது.(16) அவன் {பிரத்யும்னன்}, உயரான்ம இந்திரனையும், உபேந்திரனையும் வணங்கிவிட்டு பகைவனை அழிப்பதற்காக அதை ஏவினான்.(17) ஓ! பாரதா, நாராயணனின் மகனால் ஏவப்பட்ட அந்தச் சக்கரம், தைத்தியர்களின் முன்னிலையிலேயே வஜ்ரநாபனின் உடலில் இருந்து அவனது தலையைப் பிரித்தது.(18) பகைவரைக் கொல்ல விரும்புபவனும், போரில் திளைப்பவனும், பயங்கரம் நிறைந்தவனுமான சுநாபன் மிகக் கவனத்துடன் இருந்தாலும் {மாளிகையின் பின்புறம்} போர்க்களத்தில் கதனால் கொல்லப்பட்டான்.(19) பகைவரைக் கலங்கடிப்பவனான சாம்பன் கூரிய கணைகளைக் கொண்டு தேவர்களின் பகைவரை யம குலத்தவராக்கிக் கொண்டிருந்தான்.(20) பேரசுரன் வஜ்ரநாபனின் அழிவுக்குப் பிறகு, நாராயணனிடம் அச்சங்கொண்ட நிகும்பன் ஷட்புர நகரத்திற்குத் தப்பிச் சென்றான்.(21)

நிப³ர்ஹிதே தே³வரிபௌ வஜ்ரநாபே⁴ மஹாஸுரே |
அவதீர்ணௌ மஹாத்மானௌ ஹரீ வஜ்ரபுரம் ததா³ ||2-97-22

லப்³த⁴ப்ரஷ²மனம் சைவ சக்ரது꞉ ஸுரஸத்தமௌ |
ஸாந்த்வயாமாஸதுஷ்²சைவ பா³லவ்ருத்³த⁴ம் ப⁴யார்தி³தம் ||2-97-23

இந்த்³ரோபேந்த்³ரௌ மஹாத்மானௌ மந்த்ரயித்வா மஹாப³லௌ |
ஆயந்த்யாம் ச ததா³த்வே ச ப்³ருஹஸ்பதிமதானுகௌ³ ||2-97-24

வஜ்ரநாப⁴ஸ்ய தத்³ராஜ்யம் சதுர்தா⁴ சக்ரதுர்ந்ருப |
விஜயஸ்ய சதுர்பா⁴க³ம் ஜயந்ததனயஸ்ய வை ||2-97-25

ப்ரத்³யும்னஸ்ய சதுர்பா⁴க³ம் ரௌக்மிணேயஸுதஸ்ய ச |
சந்த்³ரப்ரப⁴ஸ்ய த³த³துஷ்²சதுர்பா⁴க³ம் ஜனேஷ்²வர ||2-97-26

கோத்யஷ்²சதஸ்ரோ க்³ராமாணாமதி⁴காஸ்தா விஷா²ம்பதே |
ஷா²கா²புரஸஹஸ்ரம் ச ஸ்பீ²தம் வஜ்ரபுரோபமம் |
சதுர்தா⁴ சக்ரதுஸ்தத்ர ஸம்ஹ்ருஷ்டௌ ஷ²க்ரகேஷ²வௌ ||2-97-27

கம்ப³லாஜினவாஸாம்ஸி ரத்னானி விவிதா⁴னி ச |
சதுர்தா⁴ சக்ரதுர்விரௌ வீரவாஸவகேஷ²வௌ ||2-97-28

இவ்வகையில் தேவர்களின் பகைவனும், தடுக்கப்பட முடியாதவனுமான வஜ்ரநாபன் கொல்லப்பட்ட பிறகு, உயரான்மாக்களான அந்த ஹரிக்கள் இருவரும் {இந்திரனும், கிருஷ்ணனும்} வஜ்ர நகரத்திற்கு இறங்கி வந்தனர்.(22) தேவர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும், அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிறுவர்களையும், முதியவர்களையும் தேற்றி அங்கே அமைதியை நிறுவினர்.(23) ஓ! மன்னா, அதன்பிறகு பெருஞ்சக்தி வாய்ந்த மஹேந்திரனும், உபேந்திரனும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் {நடப்பவற்றையும், நடக்க இருப்பவற்றையும்} குறித்து (அவற்றுக்கான ஏற்பாடுகளைக் குறித்தும்} பிருஹஸ்பதியுடன் சேர்ந்து ஆலோசித்து,(24) வஜ்ரநாபனின் நாட்டை நான்கு பகுதிகளாகப் பிரித்தனர். ஓ! மன்னா,வெற்றியால் ஈட்டப்பட்ட அந்த நாட்டில் நான்கில் ஒரு பகுதி ஜயந்தனின் மகன் விஜயனுக்கும்,(25) நான்கில் மற்றொரு பகுதி பிரத்யும்னனின் மகனுக்கும், இன்னும் ஒரு பகுதி சாம்பனின் மகனுக்கும் {குணவானுக்கும்}, நான்கில் மேலும் எஞ்சிய ஒன்று கதனின் மகனான சந்திரபிரபனுக்கும் கொடுக்கப்பட்டன.(26) ஓ! மன்னா, சக்ரனும், கேசவனும், வஜ்ரநாபனின் நாட்டில் நான்கு கோடி கிராமங்களையும், வஜ்ரபுரம் போன்று வளமிக்க ஆயிரம் கிளை நகரங்களையும்கூட நான்கு பகுதிகளாகப் பிரித்தனர்.(27) ஓ! வீரா, வீர வாசவனும், கேசவனும், கதகதப்பான ஆடைகள் பலவற்றையும், மான்தோல்களையும், துணிமணிகளையும் கூட நான்காகப் பிரித்தனர்.(28)

ததோ(அ)பி⁴ஷிக்தாஸ்தே வீரா ராஜானோ வாஸவாஜ்ஞயா |
தே³வது³ந்து³பி⁴வாத்³யேன ந்ருப விஷ்ணுபதீ³ஜலை꞉ ||2-97-29

ஸ்வயம் ஷ²க்ரேண தே³வேன கேஷ²வேன ச தீ⁴மதா |
ருஷிவம்ஷே² மஹாத்மான꞉ ஷ²க்ரமாத⁴வநந்த³னா꞉ ||2-97-30

விஜயஷ்²ச ப்ரஸித்³தை⁴வ க³திர்வியதி தீ⁴மத꞉ |
மாத்ருஜேன கு³ணேனாபி மாத⁴வானாம் மஹாத்மனாம் ||2-97-31

சக்ரன், மாதவன் ஆகியோரின் பெரும் வழித்தோன்றல்களான அந்த வீர மன்னர்கள், தேவதுந்துபிகளில் உண்டான இசையுடனும், விஷ்ணுவின் பாதங்களில் இருந்து வெளிப்படும் {விஷ்ணுபதியான} கங்கையின் நீரைக் கொண்டு ரிஷிகளின் முன்னிலையில் வைத்து தேவர்களான சக்ரன், கிருஷ்ணன் ஆகியோரால் அரசபட்டஞ்சூட்டி நீராட்டப்பட்டனர்.(29,30) விஜயன் முன்பிருந்தே ஆகாயலோகத்தில் திரிபவன், மாதவனின் வழித்தோன்றல்களும் தங்கள் அன்னையரிடம் இருந்து பெற்ற குணங்களின் நிமித்தம் அதைப் பயின்றனர்.(31)

அபி⁴ஷிச்ய ஜயந்தம் து வாஸவோ ப⁴க³வான்ப்³ரவீத் |
த்வயைதே வீர ஸம்ரக்ஷ்யா ராஜான꞉ ஸமிதிஞ்ஜயா꞉ ||2-97-32

மம வம்ஷ²கரோ(அ)த்ரைக꞉ கேஷ²வஸ்ய த்ரயோ(அ)னக⁴ |
அவத்⁴யா꞉ ஸர்வபூ⁴தானாம் ப⁴விஷ்யந்தி மமாஜ்ஞயா ||2-97-33

க³மநாக³மனம் சைவ தி³வி ஸித்³த⁴ம் ப⁴விஷ்யதி |
த்ரிவிஷ்டபம் த்³வாரகாம் ச ரம்யாம் பை⁴மாபி⁴ரக்ஷிதாம் ||2-97-34

தி³ஷா²க³ஜஸுதாந்நாகா³ன்ஹயாம்ஷ்²சோச்சை꞉ஷ்²ரவோ(அ)ன்வயான் |
இச்ச²யைஷாம் ப்ரயச்ச²ஸ்வ ரதா²ம்ஸ்த்வஷ்ட்ருக்ருதானபி ||2-97-35

க³ஜாவைராவணஸுதௌ ஷ²த்ருஞ்ஜயரிபுஞ்ஜயௌ |
ப்ரயச்சா²காஷ²கௌ³ வீரௌ ஸாம்ப³ஸ்ய ச க³த³ஸ்ய ச ||2-97-36

ஆகாஷே²ன புரீம் யாதும் த்³வாரகாம் பை⁴மரக்ஷிதாம் |
ஆயாதௌ ச ஸுதௌ த்³ரஷ்டும் யதே²ஷ்டம் பை⁴மநந்த³னௌ ||2-97-37

இவ்வாறு அவர்கள் அனைவரையும் அரியணையில் நிறுவியபிறகு தெய்வீக வாசவன் {இந்திரன்}, {தன் மகன்} ஜயந்தனிடம், “ஓ! வீரத்துடன் படைகளை வெல்பவனே, இந்த மன்னர்கள் அனைவரையும் பாதுகாப்பதே உனக்குத் தகும்.(32) ஓ! பாவமற்றவனே, அவர்களில் ஒருவன் என் குலத்தைத் தழைக்கச் செய்பவன், மற்ற மூவரும் கேசவனின் வம்சத்தில் பிறந்தவர்களாவர். என் ஆணையின் பேரில் உயிரினங்களின் மத்தியில் எவராலும் அவர்களைக் கொல்ல இயலாது.(33) பைமர்களின் பாதுகாப்புடன் தேவலோகத்துக்கும், துவாரகைக்கும் இடையில் ஆகாய வழியில் செல்லும் பயிற்சியை அவர்கள் அடைவார்கள்.(34) அவர்களின் விரும்பியவாறு திக்கஜங்களின் குலத்தில் பிறந்த யானைகளையும், உச்சைஷ்ரவத்தின் குலத்தில் பிறந்த குதிரைகளையும், தேவதச்சனால் {துவஷ்டாவான விஷ்வகர்மனால்} கட்டப்பட்ட தேர்களையும் அவர்களுக்குக் கொடுப்பாயாக.(35) ஓ! வீரா, ஐராவதனின் மகன்களும், ஆகாயத்தில் செல்லவல்ல யானைகளுமான ஷத்ருஞ்ஜயன், ருபுஞ்ஜயன் என்ற இருவரையும் வீரர்களான கதனுக்கும், சாம்பனுக்கும் கொடுப்பாயாக.(36) அதன் மூலம் இந்தப் பைமர்கள் இருவரும் {கதனும், சாம்பனும்} தங்கள் மகன்களைக் காண ஆகாய வழியில் இங்கே வந்து பைமர்களால் பாதுகாக்கப்படும் துவாராவதி நகருக்குத் திரும்பிச் செல்ல முடியும்” என்றான் {இந்திரன்}.(37)

இதி ஸந்தி³ஷ்²ய ப⁴க³வாந்தே³வராஜ꞉ புரந்த³ர꞉ |
ஜகா³ம ப⁴க³வான்ஸ்வர்க³ம் த்³வாரகாமபி கேஷ²வ꞉ ||2-97-38

ஷண்மாஸானுஷிதஸ்தத்ர க³த³꞉ ப்ரத்³யும்ன ஏவ ச |
ஸாம்ப³ஷ்²ச த்³வாரகாம் யாதா ரூடே⁴ ராஜ்யே மஹாப³லா꞉ ||2-97-39

அத்³யாபி தானி ராஜ்யானி மேரோ꞉ பார்ஷ்²வே ததோ²த்தரே |
திஷ்ட²ந்தி ச ஜக³த்³யாவத்ஸ்தா²ஸ்யந்த்யமரஸம்நிப⁴ ||2-97-40

நிவ்ருத்தே மௌஸலே யுத்³தே⁴ ஸ்வர்க³ம் யாதேஷு வ்ருஷ்ணிஷு |
க³த³ப்ரத்³யும்னஸாம்பா³ஸ்தே க³தா வஜ்ரபுரம் விபோ⁴ ||2-97-41

தத꞉ ப்ரோஷ்ய புனர்யாந்தி ஸ்வர்க³ம் ஸ்வை꞉ கர்மபி⁴꞉ ஷு²பை⁴꞉ |
ப்ரஸாதே³ன ச க்ருஷ்ணஸ்ய லோககர்துர்ஜனேஷ்²வர ||2-97-42

இவ்வாறு ஆணையிட்டதும் தெய்வீகனான புரந்தரன் தேவ நகரத்திற்கும் {அமராவதிக்கும்}, தலைவன் கேசவன் துவாரகைக்கும் சென்றனர்.(38) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன், கதன், சாம்பன் ஆகியோர் அங்கேயே {வஜ்ரபுரத்திலேயே} ஆறு மாதங்கள் காத்திருந்தனர். மகன்களின் நாடுகள் உறுதியாக நிறுவப்பட்ட பிறகே அவர்கள் துவாரகைக்குத் திரும்பினர்.(39) ஓ! தேவனைப் போன்ற மன்னா, அந்த நாடுகள் இப்போதும் சுமேரு மலைக்கு அருகில் {மேருவின் வடக்கு பக்கத்தில்} இருக்கின்றன. உலகம் உள்ள வரை அவை புகழுடன் இருக்கும்.(40) உலக்கைப் போர் முடிந்து விருஷ்ணிகள் தேவலோகத்திற்குப் புறப்பட்ட பிறகு கதன், பிரத்யும்னன், சாம்பன் ஆகியோர் வஜ்ரபுரத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(41) ஓ! மன்னா, அவர்கள் அங்கே நீண்ட காலம் வாழ்ந்த பின்பு, தங்கள் தங்களுக்குரிய அறச்செயல்களின் மூலமும், உலகின் படைப்பாளனான ஜனார்த்தனனுடைய தயவின் மூலமும் மீண்டும் தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றனர்[மஹாபாரதத்தின் 16ம் பர்வமான மௌசல பர்வத்தில் சொல்லப்படும் இரும்பு உலக்கையால் உண்டான போர் முடிந்து யாதவர்கள் பெருமளவில் அழிந்த பிறகு எனப் பொருள் கொள்ள வேண்டும். மௌசல பர்வம் 3ம் அத்தியாயத்தில் 44, 45ம் ஸ்லோகங்களில் மேற்சொன்ன அனைவரும் கொல்லப்பட்டதாக ஒரு குறிப்பு இருக்கிறது. எனவே, அவர்கள் இறந்த பிறகு தேவலோகத்தில் இருந்து வஜ்ரபுரத்திற்குத் திரும்பி வந்து, நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் தேவலோகத்திற்கே திரும்பிச் சென்றனர் எனப் பொருள் கொள்ளலாம். இறுதியில் கிருஷ்ணனின் பேரனான அநிருத்தனின் மகன் வஜ்ரன் இந்திரப்ரஸ்தத்தின் ஆட்சிக்கட்டிலில் நிறுவப்படுகிறான்.].(42)

ப்ரத்³யும்னோத்தரமேதத்தே ந்ருதே³வ கதி²தம் மயா |
த⁴ன்யம் யஷ²ஸ்யமாயுஷ்யம் ஷ²த்ருநாஷ²னமேவ ச ||2-97-43

புத்ரபௌத்ரா விவர்த்³த⁴ந்தே ஆரோக்³யத⁴னஸம்பத³꞉ |
யஷோ² விபுலமாப்னோதி த்³வைபாயனவசோ யதா² ||2-97-44

ஓ! மன்னா, இவ்வாறே என்னால் சொல்லப்பட்ட பிரத்யும்னனின் வரலாறானது, அருள், புகழ், நீண்ட வாழ்நாள் ஆகியவற்றைப் பொழிந்து, பகையை அழிக்கும்.(43) துவைபாயனரால் {வியாசரால்} சொல்லப்பட்ட இந்தச் சொற்களைக் கேட்பவர்களின் மகன்களும், பேரன்களும் செழித்திருப்பர், கேட்பவர்களின் உடல் நலமும், செல்வ வளமும் பெருகும், அவர்கள் அடையும் புகழ் பெரியதாக இருக்கும்” என்றார் {வைசம்பாயனர்}.(44)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
வஜ்ரநாப⁴வதோ⁴ நாம ஸப்தனவதிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 96–(பிரத்யும்ன தைத்ய யுத்தம்)-தேவலோகத்தை வெல்ல விரும்பிய வஜ்ரநாபன் |–

February 1, 2021

வஜ்ரநாபனை அறிவுறுத்திய கசியபர்; வஜ்ரநாபன் தன் மகள்களின் பிள்ளைகளைக் கொல்லச் சொன்னது; பிரத்யும்னன், கதன், சாம்பன் ஆகியோர் அசுரர்களை அழித்தது

வைஷ²ம்பாயன உவாச
ஸத்ராவஸானே ச முனே꞉ கஷ்²யபஸ்யாதிதேஜஸ꞉ |
ஜக்³முர்தே³வாஸுரா꞉ ஸ்வானி ஸ்தா²னான்யமிதவிக்ரமா꞉ ||2-96-1

வஜ்ரநாபோ⁴(அ)பி நிர்வ்ருத்தே ஸத்ரே கஷ்²யபமப்⁴யகா³த் |
த்ரைலோக்யவிஜயாகாங்ஃக்²ஷீ தமுவாசாத² கஷ்²யப꞉ ||2-96-2

வஜ்ரநாப⁴ நிபோ³த⁴ த்வம் ஷ்²ரோதவ்யம் யதி³ சேன்மம |
வஸ வஜ்ரபுரே புத்ர ஸ்வஜனேன ஸமாவ்ருத꞉ ||2-96-3

தபஸாப்⁴யதி⁴க꞉ ஷ²க்ர꞉ ஷ²க்தஷ்²சைவ ஸ்வபா⁴வத꞉ |
ப்³ரஹ்மண்யஷ்²ச க்ருதஜ்ஞஷ்²ச ஜ்யேஷ்ட²꞉ ஷ்²ரேஷ்ட²தமோ கு³ணை꞉ ||2-96-4

ராஜா க்ருத்ஸ்னஸ்ய ஜக³த꞉ பாத்ரபூ⁴அத꞉ ஸதாம் க³தி꞉ |
ஸம்ப்ராப்தோ லோகராஜ்யம் ஸ ஸர்வபூ⁴தஹிதே ரத꞉ ||2-96-5

நைவ ஷ²க்யஸ்த்வயா ஜேதும் வஜ்ரநாப⁴ விஹன்யஸே |
அஹிம் பதா³ வ்யுத்க்ரமன்வை ந சிராத்³வினஷி²ஷ்யஸி ||2-96-6

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஒப்பற்றவரான கசியபரின் வேள்வி {ஸத்ரயாகம்} நிறைவடைந்ததும், தேவர்களும், அசுரர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(1) மூவுலகங்களை வெல்ல விரும்பிய வஜ்ரநாபன், அந்த வேள்வியின் முடிவில் கசியபரிடம் சென்றான். அவர் அவனிடம்,(2) “ஓ! வஜ்ரநாபா, கேட்பதற்குத் தகுந்தவையாக என் சொற்களை நீ நினைத்தால் நான் சொல்வதைக் கேட்பாயாக. {மகனே, மக்களால் சூழப்பட்டவனாக வஜ்ரபுரத்தில் வசிப்பாயாக}.(3) உங்கள் அனைவரிலும் சக்ரன் {இந்திரன்} மூத்தவனும், திறன்களில் முதன்மையானவனும் ஆவான்; அவன் பெருந்தவச் சக்திகளுடன் கூடியவனாகவும், இயல்பிலேயே பலவானாகவும், பிராமணர்களிடம் அர்ப்பணிப்புமிக்கவனாகவும்,(4) நன்றி நிறைந்தவனாகவும், மொத்த உலகின் மன்னனாகவும், நல்லோருக்கும், அறவோருக்கும் புகலிடமாகவும் திகழ்கிறான். {மூவுலகங்களின் மன்னனான அவனே அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் முனைப்புடன் இருக்கிறான்}.(5) ஓ! வஜ்ரநாபா, உன்னால் அவனை {இந்திரனை} வெல்ல முடியாது, {இம்முயற்சியில்} நீயே கொல்லப்படுவாய். பாம்பின் கோபத்தைத் தூண்டியவன் தானே {பாம்பை மிதித்தவன்} அழிவடைவதைப் போல நீயும் உடனே அழிக்கப்படுவாய்” என்றார் {கசியபர்}.(6)

வஜ்ரநாப⁴ஷ்²ச தத்³வாக்யம் நாபி⁴னந்த³தி பா⁴ரத |
காலபாஷ²பரீதாங்கோ³ மர்துகாம இவௌஷத⁴ம் ||2-96-7

அபி⁴வாத்³ய ஸ து³ர்பு³த்³தி⁴꞉ கஷ்²யபம் லோகபா⁴வனம் |
த்ரைலோக்யவிஜயாரம்பே⁴ மதிம் சக்ரே து³ராஸத³꞉ ||2-96-8

ஜ்ஞாதியோதா⁴ன்ஸமானீய மித்ராணி ஸுப³ஹூனி ச |
ப்ரதஸ்தே² ஸ்வர்க³மேவாக்³ரே விஜிகீ³ஷன்விஷா²ம்பதே ||2-96-9

ஓ! பாரதா, காலபாசத்தில் கட்டப்பட்ட அங்கங்களைக் கொண்டவன் மரணத்தை விரும்பி மருந்தை உட்கொள்ளாததைப் போலவே வஜ்ரநாபனும் கசியபரின் சொற்களை அங்கீகரித்தானில்லை.(7) மிகத் தீயவனும், தடுக்கப்பட முடியாதவனுமான அவன், உலகின் பாதுகாவலரான கசியபரை வணங்கிவிட்டு, மூவுலகங்களையும் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான்.(8) ஓ! மன்னா, அவன் தன்னுடைய உற்றார், உறவினர், போர்வீரர்கள், நண்பர்கள் ஆகியோரைத் திரட்டினான். அவன் முதலில் தேவர்களின் உலகத்தைக் கைப்பற்ற புறப்பட்டுச் சென்றான்.(9)

ஏதஸ்மின்னந்தரே தே³வௌ க்ருஷ்ணேந்த்³ரௌ ச மஹாப³லௌ |
ப்ரேஷயாமாஸதுர்ஹம்ஸான்வஜ்ரனாஹவத⁴ம் ப்ரதி ||2-96-10

ஸமாக³தாஸ்து தச்ச்²ருத்வா யது³முக்²யா மஹாப³லா꞉ |
மந்த்ரயித்வா மஹாத்மானஷ்²சிந்தாமாபேதி³ரே ததா² ||2-96-11

வஜ்ரநாபோ⁴(அ)த்³ய ஹந்தவ்ய꞉ ப்ரத்³யும்னேனேத்யஸம்ஷ²யம் |
தயோர்து³ஹிதரோ பா⁴ர்யா ப⁴க்த்யா தா꞉ ஸர்வபா⁴வனா꞉ ||2-96-12

அந்த நேரத்தில் பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களான இந்திரனும் உபேந்திரனும் வஜ்ரநாபனுக்கு அழிவைக் கொண்டு வருவதற்காக அன்னப்பறவைகளை அங்கே அனுப்பினர்.(10) உயரான்மாக்களும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களுமான யதுக்கள் அந்த அன்னப்பறவைகளிடமிருந்து செய்தியைக் கேட்டு இவ்வாறு {பின்வருமாறு} ஆலோசித்துச் சிந்தினை செய்தனர்,(11) “இனி நிச்சயம் பிரத்யும்னனால் வஜ்ரநாபன் கொல்லப்படுவான். ஆனால், வஜ்ரநாபனின் மகளும், சுநாபனின் மகள்களும் அவர்களிடம் {பிரத்யும்னன், கதன், சாம்பன் ஆகியோரிடம்} அர்ப்பணிப்புக் கொண்ட மனைவியராக இருக்கின்றனர். {அவர்கள் எப்போதும் நம் நலத்தையே நாடுகிறார்கள்}.(12) அவர்கள் அனைவரும் கருவுற்றவர்களாகவும், மகப்பேறுகாலம் நெருங்கியவர்களாகவும் இருக்கின்றனர். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?” {என்று சிந்தித்தனர்}.(13)

ஸர்வா꞉ ஸக³ர்பா⁴ஸ்தாஷ்²சைவ கிம் நு கார்யமனந்தரம் |
ப்ராப்த꞉ ப்ரஸவகாலஷ்²ச தாஸாம் நாதிசிராதி³வ ||2-96-13

ஸம்மந்த்ரயித்வைதத³ர்த²ம் ஹம்ஸானூசுர்மஹாப³லா꞉ |
ஆக்²யேயமர்த²வத்க்ருத்ஸ்னம் ஷ²க்ரகேஷ²வயோஸ்ததா³ ||2-96-14

ஹம்ஸைர்க³த்வா ததா³க்²யாதம் தே³வயோஸ்தத்³யதா²தத²ம் |
தாப்⁴யாம் ஹம்ஸாஸ்து ஸந்தி³ஷ்டா ந பே⁴தவ்யமிதி ப்ரபோ⁴ ||2-96-15

உத்பத்ஸ்யந்தி கு³ணை꞉ ஷ்²லாக்⁴யா꞉ புத்ரா வ꞉ காமரூபிண꞉ |
க³ர்ப⁴ஸ்தா²꞉ ஸர்வவேதா³ம்ஷ்²ச ஸாங்கா³ன்வேத்ஸ்யந்த்யனிந்தி³தா꞉ ||2-96-16

ததா² சாநாக³தம் ஸர்வமஸ்த்ராணி விவிதா⁴னி ச |
ஸத்³ய ஏவ யுவானஷ்²ச ப⁴விஷ்யந்தி ஸுபண்டி³தா꞉ ||2-96-17

இவ்வாறு சிந்தித்த {தங்களுக்குள் ஆலோசித்த} அவர்கள் {யாதவர்கள்}, சக்ரனிடமும், கேசவனிடமும் அனைத்து உண்மைகளையும் சொல்லுமாறு அன்னப்பறவைகளைக் கேட்டுக் கொண்டனர்,(14) அவையும் அவ்வாற அவ்விரு தேவர்களிடமும் சென்று தெரிவித்தன. அதற்கு அவர்கள் {இந்திரனும், கிருஷ்ணனும்} அந்த அன்னப்பறவைகளிடம், “{யாதவர்களே,} அஞ்சாதீர்;(15) அனைத்துத் திறன்களையும் கொண்ட காமனைப் போன்ற அழகிய மகன்களை நீங்கள் பெறுவீர்கள்; அவர்கள் கருவறையில் இருக்கும்போதே வேதங்கள் அனைத்திலும், அவற்றின் அங்கங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெறுவார்கள்.(16) உங்கள் மகன்கள் உடனே இளைஞர்களாகி வருங்காலத்திற்குத் தேவையான பல்வேறு சாத்திரங்களிலும் தேர்ச்சியடைவார்கள்” என்று சொல்லி அனுப்பினர்.(17)

ஏவமுக்த்வா க³தா ஹம்ஸா꞉ புனர்வஜ்ரபுரம் விபோ⁴ |
ஷ²ஷ²ம்ஸுஷ்²சைவ பை⁴மானாம் ஷ²க்ரகேஷ²வபா⁴ஷிதம் ||2-96-18

ப்ரபா⁴வதீ ததா³ புத்ரம் ஸுஷுவே ஸத்³ருஷ²ம் பிது꞉ |
ஸத்³யோ யௌவனஸம்ப்ராப்தம் ஸர்வஜ்ஞத்வம் ச பா⁴ரத ||2-96-19

மாஸமாத்ரேண ஸுஷுவே தே³வீ சந்த்³ரவதீ ந்ருப |
சந்த்³ரப்ரப⁴மிதி க்²யாதம் தனயம் ஸத்³ருஷ²ம் பிது꞉ ||2-96-20

ஸத்³யஷ்²ச யௌவனம் ப்ராப்தம் ஸர்வ்ஜ்ஞத்வம் ச பா⁴ரத |
கு³ணாவத்யபி புத்ரம் ச கு³ணவந்தமனிந்தி³தா ||2-96-21

யுவானாவத² ஸத்³யஸ்தௌ ஸர்வஷா²ஸ்த்ரார்த²கோவிதௌ³ |
இந்த்³ரோபேந்த்³ரப்ரஸாதே³ன ஸம்வ்ருத்தௌ யுத்³த⁴வர்த்³த⁴னௌ ||2-96-22

ஹர்ம்யப்ருஷ்டே² வர்த்³த⁴மானா த்³ருஷ்டாஸ்தே யது³நந்த³னா꞉ |
இந்த்³ரோபேந்த்³ரேச்ச²யா வீர நான்யதே²த்யவதா⁴ர்யதாம் ||2-96-23

நிவேதி³தாஷ்²ச ஸம்ப்⁴ராந்தைர்தை³த்யைராகாஷ²ரக்ஷிபி⁴꞉ |
வஜ்ரநாபா⁴ய வீராய த்ரிவிஷ்டபஜயைஷிணே ||2-96-24

வதா⁴ய ஸர்வே க்³ருஹ்யந்தாம் மமைதே க்³ருஹத⁴ர்ஷகா꞉ |
இத்யுவாசாஸுரபதிர்வஜ்ரநாபோ⁴ மஹாஸுர꞉ ||2-96-25

ஓ! தலைவா, இவ்வாறு அன்னங்களிடம் சொல்லப்பட்டதும் அவை வஜ்ரபுரத்திற்குத் திரும்பி சக்ரனும், கேசவனும் சொன்னதைப் பைமர்களிடம் தெரிவித்தன.(18) அனைத்தையும் அறிந்தவனும், தன் தந்தையைப் போன்றே இளமை நிறைந்தவனுமான ஒரு மகனை பிரபாவதி ஈன்றாள்.(19) ஒரு மாதம் கழிந்ததும் இணையான இளமையையும், அனைத்தையும் அறியும் அறிவையும் கொண்டவனும், கதனை ஒத்திருந்தவனுமான மகன் சந்திரப்ரபனைச் சந்திரவதி ஈன்றாள்.(20) குணவதியும், குணவான் என்ற பெயரில் அதே போல இளமை நிறைந்தவனும், அனைத்தையும் அறிந்தவனுமான அழகிய மகனை ஈன்றெடுத்தாள்.(21) இந்த யதுகுலச் சிறுவர்கள் அனைத்து சாத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றுக் கொண்டே இந்திரன், உபேந்திரன் ஆகியோரின் விருப்பத்தின் பேரில் தங்கள் தங்களுக்குரிய மாளிகைகளின் மாடிகளில் திரிந்து நல்ல குணங்களைப் பெற்றவர்களாக வளர்ந்து வந்தனர்.(22) இந்திரன், உபேந்திரன் ஆகியோரின் விருப்பங்களின் பேரிலேயே அவர்களால் (தைத்தியர்களால்) காணவும்பட்டனர்; இதை நிச்சயம் அறிந்து கொள்வாயாக.(23) வானத்தில் இருந்த தைத்தியர்கள் அவர்களைக் கண்டதும், தேவலோகத்தைக் கைப்பற்ற விரும்பும் வஜ்ரநாபனிடம் மதிப்புடன் இதைத் தெரிவித்தனர்.(24) தடுக்கப்பட முடியாதவனான அசுரமன்னன் வஜ்ரநாபன் இதைக் கேட்டதும், “என் வீட்டிற்குள் வரம்பு கடந்தவர்களைச் சிறை பிடிப்பீராக”என்றான்.(25)

தத꞉ ஸைன்யம் ஸமாஜ்ஞப்தமஸுரேந்த்³ரேண தீ⁴மதா |
ஆவாரயாமாஸ தி³ஷ²꞉ ஸர்வா꞉ குருகுலோத்³வஹ ||2-96-26

க்³ருஹ்யதாமாஷு² வத்⁴யந்தாமிதி வாசஸ்ததஸ்தத꞉ |
உச்சேருரஸுரேந்த்³ரஸ்ய ஷா²ஸநாத³ரிஷா²ஸின꞉ ||2-96-27

ஓ! குருவின் வழித்தோன்றலே, நுண்ணறிவுமிக்க அசுர மன்னனால் இவ்வாறு ஆணையிடப்பட்டதும் படைவீரர்கள் திசைகள் அனைத்தையும் காத்தனர்.(26) பகைவரை அழிப்பவனான அசுர மன்னனின் ஆணைப்படி, “அவர்களைப் பிடித்து விரைவாகக் கொல்வீராக” என்ற ஒலிகள் அனைத்துப் பக்கங்களிலும் எழுந்தன.(26,27)

தச்ச்²ருத்வா வ்யதி²தாஸ்தேஷாம் மாதர꞉ புத்ரவத்ஸலா꞉ |
ருருது³ஸ்தா ருத³ந்தீஷ்²ச ப்ரத்³யும்ன꞉ ப்ரஹஸன்ப்³ரவீத் ||2-96-28

மா பை⁴ஷ்ட ஜீவமானேஷு ஸ்தி²தேஷ்வஸ்மாஸு ஸர்வதா² |
கிம் நோ தை³த்யா꞉ கரிஷ்யந்தி ஸர்வதா² ப⁴த்³ரமஸ்து வ꞉ ||2-96-29

இதைக் கேட்டதும் மகன்கள் மேல் அன்பு கொண்ட அன்னையர் அச்சத்தில் அழத் தொடங்கினர். பிரத்யும்னன் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிரித்துக் கொண்டே,(28) “நாங்கள் உயிரோடும், உறுதியோடும் இருக்கும் வரை நீங்கள் அஞ்சத் தேவையில்லை. உங்களுக்கு நன்மை நேரட்டும். தைத்தியர்களால் எங்களை ஏதும் செய்ய முடியாது” என்றான்.(29)

ப்ரபா⁴வதீமதோ²வாச ப்ரத்³யும்னோ விப்லவாம் ஸ்தி²தாம் |
பிதா தவ க³தா³பாணி꞉ பித்ருவ்யாஷ்²ச ஸ்தி²தாஸ்தவ ||2-96-30

ப்⁴ராதரஷ்²சைவ தே தே³வி ஜ்ஞாதயஷ்²ச ததா²பரே |
ஏதே பூஜ்யாஷ்²ச மான்யாஷ்²ச தவார்தே² க²லு ஸர்வதா² ||2-96-31

ப⁴கி³ன்யௌ ப்ருச்ச² ப⁴த்³ரம் தே காலோ(அ)யம் க²லு தா³ருண꞉ |
மரணம் ஸஹமானானாம் யுத்³த்⁴யதாம் விஜயோ த்⁴ருவம் ||2-96-32

தா³னவேந்த்³ராத³யோ ஹ்யேதே யோத்ஸ்யந்தே(அ)ஸ்மத்³வதை⁴ஷிண꞉ |
கிமத்ர கார்யமஸ்மாபி⁴꞉ ஸர்வைஷ்²சக்ராந்தரஸ்தி²தை꞉ ||2-96-33

பிறகு அவன் கலங்கியிருந்த பிரபாவதியிடம், “ஓ! பெண்ணே, உன்னுடைய தந்தை, சிற்றப்பன்மார், சகோதரர்கள், உற்றார், உறவினர் ஆகியோர் தங்கள் கைகளில் கதாயுதங்களுடன் காத்திருக்கின்றனர். உங்களின் நிமித்தமாக எங்களால் மதிக்கப்படவும், கௌரவிக்கப்படவும் தகுந்தவர்கள் அவர்கள்.(30,31) ஆனால் காலமோ படுபயங்கரமாக இருக்கிறது. அதைப் பொறுத்துக் கொண்டால் நாங்கள் இறந்து போவோம். போரிட்டால் வெற்றியடைவோம்.(32) எங்களைக் கொல்ல விரும்பும் தானவ மன்னன் எங்களுடன் போரிடப் போகிறான். நீ உன் தங்கைமாருடன் கலந்தாலோசித்து நாங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சொல்வாயாக. ஏனெனில் இப்போது நாங்கள் உன் அதிகாரத்தின் கீழ் இருக்கிறோம்” என்றான்.(33)

ப்ரபா⁴வதீ ருத³ந்தீ து ப்ரத்³யும்னமித³மப்³ரவீத் |
ஷி²ரஸ்யஞ்ஜலிமாதா⁴ய ஜானுப்⁴யாம் பதிதா க்ஷிதௌ ||2-96-34

க்³ருஹாண ஷ²ஸ்த்ரமாத்மானம் ரக்ஷ ஷ²த்ருனிப³ர்ஹண |
ஜீவன்புத்ராம்ஷ்²ச தா³ராம்ஷ்²ச த்³ரஷ்டாஸி யது³நந்த³ன ||2-96-35

ஆர்யாம் ந்ருவர வைத³ர்பீ⁴மநிருத்³த⁴ம் ச மானத³ |
ஸ்ம்ருத்வைதன்மோக்ஷயாத்மானம் வ்யஸநாத³ரிமர்த³ன ||2-96-36

து³ர்வாஸஸா வரோ த³த்தோ முனினா மம தீ⁴மதா |
வைத⁴வ்யரஹிதா ஹ்ருஷ்டா ஜீவபுத்ரா ப⁴விஷ்யஸி ||2-96-37

ஏஷ மே ஹ்ருத³யாஷ்²வாஸோ ப⁴விதா ந தத³ன்யதா² |
ஸூர்யாக்³னிதேஜஸோ வாக்யம் முனேரிந்த்³ரானுஜாத்மஜ ||2-96-38

இத்யுக்த்வாதா²ஸிமாதா³ய ஸூபஸ்ப்ருஷ்ட்வா மனஸ்வினீ |
ப்ரத³தௌ³ ரௌக்மிணேயாய ஜயஸ்வேதி வரம் வரா ||2-96-39

ஸ தம் ஜக்³ராஹ த⁴ர்மாத்மா ப்ரஹ்ருஷ்டேனாந்தராத்மனா |
ப்ரணம்ய ஷி²ரஸா த³த்தம் ப்ரியயா ப⁴க்தியுக்தயா ||2-96-40

சந்த்³ரவத்யபி நிஸ்த்ரிம்ஷ²ம் க³தா³ய ப்ரத³தௌ³ முதா³ |
ததா³ கு³ணவதீ சைவ ஸாம்பா³யாஸிம் மஹாத்மனே ||2-96-41

பிரபாவதி தன் நெற்றியில் கை மடித்து, பூமியில் முழங்காலில் விழுந்து அழுதபடியே,(34) “ஓ! யதுவின் வழித்தோன்றலே, ஓ! பகைவரைக் கொல்பவரே, உங்கள் ஆயுதங்களை ஏந்தி உங்களைப் பாதுகாத்துக் கொள்வீராக. பிழைத்திருந்தால் மட்டுமே உங்கள் மனைவியையும், மகன்களையும் நீ காண்பீர்.(35) மதிப்பிமிக்க வைதர்ப்பியையும் {ருக்மிணியையும்}, அநிருத்தனையும் நினைவில் கொண்டு இந்தப் பேராபத்தில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வீராக.(36) ஓ! உபேந்திரரின் மகனே, நான் எப்போதும் களங்கமற்ற வாழ்வை வாழ்வேன், ஒருபோதும் கைம்பெண்ணாகேன் {விதவையாகமாட்டேன்}, என் மகன்களும் எப்போதும் வாழ்வார்கள் என்று நுண்ணறிவுமிக்கவரான பெரும் ரிஷி {துர்வாசர்} எனக்கு வரமளித்திருக்கிறார். சூரியனையும், நெருப்பையும் போன்ற பிரகாசமிக்கவரான அந்த ரிஷியின் சொற்கள் பொய்யாகாது என நான் நம்புகிறேன்” என்றாள்.(37,38) பெண்களில் ரத்தினமும், நுண்ணறிவுமிக்கவளுமான பிரபாவதி இதைச் சொல்லிவிட்டுத் தன் வாயைக் கொப்பளித்துவிட்டு {அல்லது வாளைத் தூய்மை செய்து கொண்டு வந்து}, ருக்மிணியின் மகனிடம் ஒரு வாளைக் கொடுத்து, “வெற்றி அடைவீராக” எனும் வரத்தையும் அளித்தாள்.(39) அற ஆன்மா கொண்ட பிரத்யும்னன், தன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனைவி கொடுத்த வாளைத் தலைவணங்கி ஏற்றுக் கொண்டான்.(40) சந்திரவதி கதனிடம் ஒரு நிஷ்திரிங்கத்தையும் {வாளையும்}, குணவதி பெருஞ்சக்திவாய்ந்த சாம்பனிடம் அதே போன்ற மற்றொரு ஆயுதத்தையும் {வாளையும்} மகிழ்ச்சியுடன் கொடுத்தனர்.(41)

ஹம்ஸகேதுமதோ²வாச ப்ரத்³யும்ன꞉ ப்ரணதம் ப்ரபு⁴꞉ |
இஹைவ ஸாம்ப³ஸஹிதோ யுத்³த்⁴யஸ்வ ஸஹ யாத³வை꞉ ||2096-42

ஆகாஷே² தி³க்ஷு ஸர்வாஸு யோத்ஸ்யாம்யஹமரிந்த³ம |
இத்யுக்த்வாத² ரத²ம் சக்ரே மாயயா மாயினாம் வர꞉ ||2-96-43

ஸஹஸ்ரஷி²ரஸம் நாக³ம் க்ருத்வா ஸாரதி²மாத்மவான் |
அனந்தபோ⁴க³ம் கௌரவ்ய ஸர்வநாகோ³த்தமோத்தமம் ||2-96-44

ஸ தேன ரத²முக்²யேன ஹர்ஷயன்வை ப்ரபா⁴வதீம் |
சசாராஸுரஸைன்யேஷு த்ருணேஷ்விவ ஹுதாஷ²ன꞉ ||2-96-45

ஷ²ரைராஷீ²விஷப்ரக்²யைரர்த்³த⁴சந்த்³ரானுகாந்திபி⁴꞉ |
பே⁴த³னைர்கா³த⁴னைஷ்²சைவ தத³ர்த³ தி³திஸம்ப⁴வான் ||2-96-46

அஸுராஷ்²ச ரணே மத்தா꞉ கார்ஷ்ணிம் ஷ²ஸ்த்ரைரிதஸ்தத꞉ |
ஜக்⁴னு꞉ கமலபத்ராக்ஷம் பரம் நிஷ்²சயமாஸ்தி²தா꞉ ||2-96-47

சிச்சே²த³ பா³ஹூன்கேஷாஞ்சித்கேயூரவலயோஜ்ஜ்வலான் |
ஸகுண்ட³லானி கேஷாஞ்சிச்சி²ராம்ஸ்யபி ச சிச்சி²தே³ ||2-96-48

க்ஷுரச்சி²ன்னை꞉ ஷி²ரோபி⁴ஷ்²ச காயைஷ்²ச ஷ²கலைரபி |
அஸுராணாம் மஹீ கீர்ணா ப்ரத்³யும்னேனாதிதேஜஸா ||2-96-49

தே³வேஷ்²வரோ தே³வக³ணை꞉ ஸஹித꞉ ஸமிதிஞ்ஜய꞉ |
த³த³ர்ஷ² முதி³தோ யுத்³த⁴ம் பை⁴மானாம் தி³திஜை꞉ ஸஹ ||2-96-50

யே க³த³ம் சைவ ஸாம்ப³ம் ச தை³த்யா꞉ ஸமபி⁴து³த்³ருவு꞉ |
தே யயுர்நித⁴னம் ஸர்வே யாதா³ம்ஸீவ மஹோத³தௌ⁴ ||2-96-51

பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன், தன்னை வணங்கிய {தேர் சாரதியான} ஹம்ஸகேதுவிடம், “ஓ! பகைவரைக் கொல்பவனே, சாம்பனுடன் இங்கேயே இருந்து தானவர்களை எதிர்த்துப் போரிடுவாயாக.(42) பகைவரைக் கொல்பவனுடன் சேர்ந்து அனைத்துத் திசைகளையும் பாதுகாத்தபடியே நான் வானத்தில் இருந்து போரிடப் போகிறேன்” என்றான். மாயைகளை அறிந்தோரில் முதன்மையான பிரத்யும்னன் மாயையைப் பயன்படுத்தி ஒரு தேரை உண்டாக்கினான்.(43) நாக வகையில் முதன்மையானவனும், ஆயிரந்தலைகளைக் கொண்டவனுமான நாகனான அனந்தனைத் தன் தேரோட்டியாக்கினான்.(44) அவன் பிரபாவதிக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் அந்தச் சிறந்த தேரில் ஏறி புல்லில் திரியும் நெருப்பைப் போல அசுரப் படைக்கு மத்தியில் திரியத் தொடங்கினான்.(45) பாம்புகளைப் போன்று பயங்கரமானவையும், பிறை வடிவம் கொண்டவையுமான கணைகளில் {அர்த்தச்சந்திர பாணங்களில்} கூரிய தலைகளைக் கொண்ட சிலவற்றையும், மழுங்கிய தலை கொண்ட சிலவற்றையும் கொண்டு அவன் திதியின் மகன்களைத் தாக்கத் தொடங்கினான்.(46) உறுதிமிக்கவர்களும், போர் வெறி கொண்டவர்களுமான அசுரர்களும் கூட, கமலத்தலைவனின் மகனும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவனுமான அவனை {பிரத்யும்னனைப்} பல்வேறு ஆயுதங்களால் தாக்கினர்.(47) கிருஷ்ணனின் மகன், கேயூரங்களால் அலங்கரிக்கப்பட்ட சிலரின் கரங்களையும், பலரின் தலைகளையும் கொய்தான்.(48) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னனின் வாளால் வெட்டப்பட்ட அசுரர்களின் தலைகளும், உடல்களும் பூமியின் பரப்பில் நிறைந்து கிடந்தன.(49) படைகளை வெல்பவனான தேவர்களின் மன்னன் {இந்திரன்}, தைத்தியர்களுக்கும், பைமர்களுக்கும் இடையில் நடக்கும் போரைத் தேவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கண்டான்.(50) கதனையும், சாம்பனையும் தொடர்ந்து விரைந்த தைத்தியர்கள், பெருங்கடலில் தெப்பம் செல்வது போல அழிவை அடைந்தனர்.(51)

விஷமம் து ததா³ யுத்³த⁴ம் த்³ருஷ்ட்வா தே³வப்திர்ஹரி꞉ |
க³தா³ய ப்ரேஷயாமாஸ ஸ்வம் ரத²ம் ஹரிவாஹன꞉ ||2-96-52

தி³தே³ஷ² மாதலிஸுதம் யந்தாரம் ச ஸுவர்சஸம் |
ஸாம்பா³யைராவணம் நாக³ம் ப்ரேஷயாமாஸ சேஷ்²வர꞉ ||2-96-53

ஜயந்தம் ரௌக்மிணேயஸ்ய ஸஹாயமத³தா³த்³விபு⁴꞉ |
ஐராவணமதி⁴ஷ்டா²தும் ப்ரவரம் ஸ நியுக்தவான் ||2-96-54

தே³வபுத்ரத்³விஜௌ வீராவப்ரமேயபராக்ரமௌ |
அனுஜ்ஞாப்ய ஸுராத்⁴யக்ஷம் ப்³ரஹ்மாணம் லோகபா⁴வனம் ||2-98-55

தம் மாதலிஸுதம் சைவ க³ஜமைராவணம் ததா³ |
தே³வ꞉ ப்ரேஷி²தவாஞ்ச²க்ரோ விதி⁴ஜ்ஞோ வரகர்மஸு ||2-96-56

தேவர்களின் தலைவனான ஹரி அப்போது அந்தப் பயங்கரப் போரைக் கண்டு, தன்னுடைய தேரை கதனிடம் அனுப்பி,(52) மாதலியின் மகனான ஸுவர்ச்சஸை அதன் சாரதியாகும்படி கேட்டுக் கொண்டான். தலைவன் இந்திரன் தன்னுடைய ஐராவதத்தைச் சாம்பனிடம் அனுப்பிப் பிரவரனை அதைச் செலுத்துவதில் ஈடுபடுத்தினான். மேலும் அவன் ருக்மிணியின் மகனுக்குத் துணையாக {தன் மகன்} ஜயந்தனை அனுப்பி வைத்தான்.(53,54) நற்பணிகள் அனைத்தின் வழிமுறைகளையும் நன்கறிந்த சக்ரன் {இந்திரன்}, உலகின் படைப்பாளனும், நற்பணிகள் அனைத்தின் வழிகாட்டியுமான பிரம்மனின் அனுமதியுடன் மாதலியின் மகனால் {ஸுவர்ச்சஸால்} செலுத்தப்படும் தேரையும், ஐராவதத்தையும், தெய்வீக இளைஞனான ஜயந்தனையும், இருபிறப்பாளர்களில் சிறந்த பிரவரனையும் அங்கே அனுப்பி வைத்தான்.(55,56)

க்ஷீணமஸ்ய தபோ வத்⁴யோ யதூ³நாமேஷ து³ர்மதி꞉ |
ப்ரவிஷ²ந்தி து பூ⁴தானி ஸர்வத்ர து யதே²ப்ஸிதம் ||2-96-57

ப்ரத்³யும்னஷ்²ச ஜயந்தஷ்²ச ப்ராப்தௌ ஹர்ம்யம் மஹாப³லௌ |
அஸுராஞ்ச்ச²ரஜாலௌகை⁴ர்விக்ராம்யந்தௌ ப்ரணஷ்²யது꞉ ||2-96-58

“இவனுடைய தவத்தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்து விட்டன, இந்தத் தீயவன் யாதவர்களால் கொல்லப்படப் போகிறான்” என்று நினைத்த பூதங்கள் {உயிரினங்கள்} தாங்கள் விரும்பிய வண்ணம் எங்கும் நுழைந்தன.(57) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னனும், ஜயந்தனும் அசுரர்களின் மாளிகைகளுக்குள் படிப்படியாக நுழைந்து கணைவலையால் அவர்களை அழிக்கத் தொடங்கினர்.(58)

க³த³ம் கார்ஷ்ணிஸ்ததோ³வாச து³ர்வார்யரணது³ர்ஜய꞉ |
உபேந்த்³ரானுஜ ஷ²க்ரேண ரதோ²(அ)யம் ப்ரேஷிதஸ்தவ ||2-96-59

ஹரியுங்மாதலிஸுதோ யந்தா சாயம் மஹாப³ல꞉ |
ப்ரவராதி⁴ஷ்டி²தஷ்²சாயம் ஸாம்ப³ஸ்யைராவணோ க³ஜ꞉ ||2-96-60

அத்³யோபஹாரோ ருத்³ரஸ்ய த்³வாரகாயம் மஹாப³ல꞉ |
ஷ்²வ ஏஷ்யதி ஹ்ருஷீகேஷ²ஸ்தஸ்மின்வ்ருத்தே(அ)ச்யுதானுஜ ||2-96-61

தஸ்யாஜ்ஞயா வதி⁴ஷ்யாமோ வஜ்ரநாப⁴ம் ஸபா³ந்த⁴வம் |
அப்⁴யுத்தா²னக்ருதம் பாபம் த்ரிவிஷ்டபஜயம் ப்ரதி ||2-96-62

கரிஷ்யாமி விதா⁴னம் ச நைஷ சக்ரம் ஸுதான்விதம் |
விஜேஷ்யத்யப்ரமாத³ஸ்து கர்தவ்ய இதி மே மதி꞉ ||2-96-63

கலத்ரரக்ஷணம் கார்யம் ஸர்வோபாயைர்னரைர்பு³தை⁴꞉ |
கலத்ரத⁴ர்ஷணம் லோகே மரணாத³திரிச்யதே ||2-96-64

போரில் வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணனின் மகன் {பிரத்யும்னன்}, தடுக்கப்பட முடியாத கதனிடம், “ஓ! உபேந்திரரின் தம்பியே, தேவர்களின் மன்னன் {இந்திரன்}, குதிரைகளுடன் கூடிய இந்தத் தேரை உமக்காக அனுப்பியிருக்கிறான்.(59) பெருஞ்சக்திவாய்ந்த மாதலியின் மகன் அதன் சாரதியாக இருக்கிறான். பிரவரனால் செலுத்தப்படும் ஐராவத யானை சாம்பனுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.(60) ஓ! அச்யுதரின் தம்பியே, இன்று துவாரகையில் ருத்ரப் பெரும்பூஜை நடைபெறுகிறது. நாளை அது நிறைவடைந்ததும், பெருஞ்சக்திவாய்ந்த ரிஷிகேசரே இங்கே வருவார்.(61) தேவர்களின் நகரைக் கைப்பற்றுவதாகச் சொல்லி செருக்கில் மிதக்கும் இந்தப் பாவம் நிறைந்த வஜ்ராநாபனை அவரது {கிருஷ்ணரின்} ஆணையின் பேரில் உற்றார் உறவினருடன் சேர்த்துக் கொல்வோம்.(62) நான் தேவையான ஏற்பாடுகளைச் செய்யப் போகிறேன். அவனால் {வஜ்ரநாபனால்} தனது பகைவனையும் {இந்திரனையும்} பகைவனின் மகனையும் கைப்பற்ற இயலாது. நாம் மிகக் கவனமான இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்.(63) நுண்ணறிவுமிக்க மனிதர்கள், காலத்திற்கும் காக்கப்பட வேண்டியவர்களை அனைத்து வழிமுறைகளினாலும் காத்துக் கொள்வது முக்கியமாகும். காலத்திற்கும் காக்கப்பட வேண்டியவர்களுக்கு {மனைவி / மகன் / இடம் ஆகியவற்றுக்குத்} தீங்கு நேர்வது இவ்வுலகில் மரணத்தைவிடக் கொடியது[உபாயம் செய்வேன். இவன் புத்ரனுடன் கூடிய இந்திரனை ஜயிக்கப் போவதில்லை. ஜாக்ரதை செய்யத்தக்கது என்பது எனது அபிப்ராயம். அறிவாளியான மனிதரால் எல்லா உபாயங்களாலும் ரக்ஷிக்கப்பட வேண்டிய ஸ்தானம் காக்கத்தக்கது. உலகில் தன் க்ஷேத்ரத்தைக் கேவலப்படுத்துவது மரணத்தைக் காட்டிலும் கொடியது”
காலத்ரரக்ஷணம் என்பதற்குக் காலத்திற்கும் பாதுகாக்கப்பட வேண்டிய மனைவி என்றும், மகன் என்றும், இடம் என்றும் கூடப் பொருள் கொள்ளலாம்.]” என்றான்.(64)

ஏவம் ஸந்தி³ஷ்²ய பை⁴ம꞉ ஸ க³த³ஸாம்பௌ³ மஹாப³ல꞉ |
ப்ரத்³யும்னகோட்ய꞉ ஸஸ்ருஜே மாயயா தி³வ்யரூபயா ||2-96-65

தமஷ்²ச நாஷ²யாமாஸ தை³த்யஸ்ருஷ்டம் து³ராஸத³ம் |
ஜஹ்ருஷே தே³வராஜஷ்²ச தம் த்³ருஷ்ட்வா ரிபுமர்த³னம் ||2-96-66

த³த்³ருஷு²꞉ ஸர்வபூ⁴தானி கார்ஷ்ணிம் ஸர்வேஷு ஷ²த்ருஷு |
அந்தராத்மனி வர்தந்தம் க்ஷேத்ரஜ்ஞமிவ தம் விது³꞉ ||2-96-67

பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன் இவ்வாறு கதனுக்கும், சாம்பனுக்கும் ஆணையிட்டுவிட்டு, தன் மாய சக்தியைப் பயன்படுத்தித் தன்னைப் போல் கோடி பேரை உண்டாக்கி {தன்னைப் போன்ற கோடி வடிவங்களை மாயையில் காட்டி} தைத்தியர்களால் உண்டாக்கப்பட்ட பயங்கர இருளை அகற்றினான். பகைவரைக் கொல்லும் அவனைக் கண்டு தேவர்களின் மன்னன் {இந்திரன்} பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.(65,66) மனித ஆன்மாக்கள் அனைத்திலும் தெய்வீக ஆன்மா வாழ்வதைப் போலவே ஒவ்வொரு பகைவரிலும் கிருஷ்ணனின் மகனை {பிரத்யும்னனை} உயிரினங்கள் கண்டன.(67)

ஏவம் வ்யதீதா ரஜனீ ரௌக்மிணேயஸ்ய யுத்⁴யத꞉ |
அஸுராணாம் த்ரிபா⁴க³ஷ்²ச நிஹதஷ்²சாதிதேஜஸா ||2-96-68

யாவத்³வியோத⁴யாமாஸ கார்ஷ்ணிர்தை³த்யான்ரணாஜிரே |
ஸந்த்⁴யோபாஸ்தா ஜயந்தேன தாவத்³விஷ்ணுபதீ³ஜலே ||2-96-69

அயோத⁴யஜ்ஜயந்தஷ்²ச யாவத்³தை³த்யான்மஹாப³ல꞉ |
தாவதா³காஷ²க³ங்கா³யாம் பை⁴மா꞉ ஸந்த்⁴யாமுபாஸ்தவான் ||2-96-70

பெருஞ்சக்திவாய்ந்த ருக்மிணியின் மகன் இவ்வாறு போரிடுகையில் இரவும் கடந்தது, நான்கில் மூன்று பங்கு அசுரர்களும் கொல்லப்பட்டனர்.(68) ஜயந்தன், விஷ்ணுவின் பாதங்களில் இருந்து வெளிப்படும் கங்கைக்கு {விஷ்ணுபதிக்குத்} தன் மாலைநேர வழிபாட்டுக்காகச் சென்ற நேரத்தில் கிருஷ்ணனின் மகன் {பிரத்யும்னன்} தனியாகத் தைத்தியர்களுடன் போரிட்டான். அதன்பிறகு பிரத்யும்னன், ஆகாயக் கங்கையில் தன் மாலைநேர வழிபாட்டைச் செய்த போது, பெருஞ்சக்திவாய்ந்த ஜயந்தன் தனியாகத் தைத்தியர்களுடன் போரிட்டான்” என்றார் {வைசம்பாயனர்}.(69,70)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ப்ரத்³யும்னதை³த்யயுத்³தே⁴ ஷண்ணவதிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 95–(ஸ்ரீ பிரத்யும்ன பாஷணம்)-ஸ்ரீ பிரத்யும்னன் பேச்சு |–

February 1, 2021

மழைக்காலம்; ஸ்ரீ கிருஷ்ணனின் சந்திரவம்ச அவதாரம்;
பிரபாவதியின் பெருமை சொன்ன ஸ்ரீ பிரத்யும்னன்.

வைஷ²ம்பாயன உவாச
நபோ⁴ நப⁴ஸ்யே(அ)த² நிரீக்ஷ்ய மாஸி
காமஸ்ததா³ தோயத³வ்ருந்த³கீர்ணம் |
ப்ரபா⁴வதீம் சாருவிஷா²லநேத்ரா-
முவாச பூர்ணேந்து³னிகாஷ²வக்த்ர꞉ ||2-95-1

தவானநாபோ⁴ வரகா³த்ரி சந்த்³ரோ
ந த்³ருஷ்²யதே ஸுந்த³ரி சாருபி³ம்ப³꞉ |
த்வத்கேஷ²பாஷ²ப்ரதிமைர்நிருத்³தோ⁴
ப³லாஹகைஷ்²சாருநிரந்தரோரு ||2-95-2

ஸந்த்³ருஷ்²யதே ஸுப்⁴ரு தடி³த்³த⁴னஸ்தா²
த்வம் ஹேமசார்வாப⁴ரண்ன்விதேவ |
முஞ்சந்தி தா⁴ராஷ்²ச க⁴னா நத³ந்த-
ஸ்த்வத்³தா⁴ரயஷ்டே꞉ ஸத்³ருஷா² வராங்கி³ ||2-95-3

க⁴னப்ரதே³ஷே²ஷு ப³லாகபங்க்தய-
ஸ்த்வத்³த³ந்தபங்க்திப்ரதிமா விபா⁴ந்தி |
நிமக்³னபத்³மானி ஸரித்ஸு ஸுப்⁴ரு
ந பா⁴ந்தி தோயானி ரயாகுலானி ||2-95-4

அமீ க⁴னா வாயுவஷோ²பயாதா
ப³லாகமாலாமலசாருத³ந்தா꞉ |
அன்யோன்யமப்⁴யாஹனிதும் ப்ரவ்ருத்தா
வனேஷு நாகா³ இவ ஷு²க்லத³ந்தா꞉ ||2-95-5

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “முழுநிலவைப் போன்ற முகத்தைக் கொண்ட காமன் {பிரத்யும்னன்},
மழைக்காலத்தில் மேகங்களால் நிறைந்த வானைப் பார்த்துக் கொண்டிருந்தபோது,
அழகிய கண்களைக் கொண்ட பிரபாவதியிடம்,(1)
“ஓ! அழகிய பெண்ணே, கூந்தலில் மறைந்திருக்கும்
உன் முகத்தைப் போலவே அழகிய கதிர்களைக் கொண்ட சந்திரன் மேகங்களால் மறைக்கப்பட்டிருப்பதைப் பார்.(2)
ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, உன்னுடைய அழகிய பொன்னாபரணத்தைப் போலவே மேகங்களில்
இருக்கும் மின்னல் அழகாகத் தெரிவதைப் பார். ஓ! அழகிய அங்கங்களைக் கொண்டவளே, மழைத்தாரைகளைப் பொழிந்து
முழங்கும் மேகங்கள் உன்னுடைய ஆரங்களை {முத்து மாலைகளைப்} போல இருக்கின்றன.(3)
நீர்த்துளிகளில் நுழையும் கொக்குகள் உன் பல்வரிசையைப் போல ஒளிர்கின்றன.
ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, தாமரைகள் மூழ்கியிருப்பதால் ஓடைகள் நிறைந்த தடாகங்கள் அழகாகத் தெரியவில்லை.(4)
கொக்குகளால் அலங்கரிக்கப்பட்டுத் தூய்மையான அழகிய பற்களைப் போலத் தெரியும் மேகங்கள்,
காட்டில் ஒன்றோடொன்று மோத இருக்கும் பெருந்தந்தங்களுடைய யானைகளைப் போலத் தெரிகின்றன.(5)

த⁴னுஸ்த்ரிவர்ணம் வரகா³த்ரி பஷ்²ய
க்ருதம் தவாபாங்க³மிவானனஸ்த²ம் |
விபூ⁴ஷயந்தம் க³மனம் க⁴நாஷ்²ச
ப்ரஹர்ஷணம் காமிஜனஸ்ய காந்தே ||2-95-6

க⁴னான்னத³ந்த꞉ ப்ரதினர்த³மானா-
ந்நிரீக்ஷ்ய ஸுஷ்²ரோணி ஷி²கீ²ன்ப்ரஹ்ரூஷ்டான் |
ஸமாஹ்ருதானுத்³த⁴தபிச்ச²பா⁴ரா-
ந்ப்ரியாபி⁴ராமானுபந்ருத்யமானான் ||2-95-7

ஹர்ம்யேஷு சான்யே ஷ²ஷி²பாண்டு³ரேஷு
ராஜந்தி ஸுஷ்²ரோணி மயூரஸங்கா⁴꞉ |
முஹூர்தஷோ²பா⁴மதிசாருரூபாம்
த³த்த்வா பதந்தோ வலபீ⁴புடேஷு ||2-95-8

ப்ரக்லின்னபக்ஷாஸ்தருமஸ்தகேஷு
முஹூர்தசூடா³மணிதாம் விதா⁴ய |
ப்ரயாந்தி பூ⁴மிம் நவஷா²த்³வலானா-
மாஷ²ங்கமானா த்⁴ருதசாருதே³ஹா꞉ ||2-95-9

ப்ரவாதி தா⁴ராந்தரநி꞉ஸ்ருதஷ்²ச
ஸுகோ²(அ)னிலஷ்²சந்த³னபங்கஷீ²த꞉ |
கத³ம்ப³ஸர்ஜார்ஜுனபுஷ்பபூ⁴தம்
ஸமாவஹன்க³ந்த⁴மனங்க³ப³ந்து⁴ம் || 2-95-10

ஓ! அழகிய அங்கங்களைக் கொண்டவளே, உன் நெற்றியில் இருக்கும் வளையங்களை {கோடுகளைப்} போலவே
வானத்தையும் மேகங்களையும் அலங்கரிக்கும் மூவண்ண வானவில் காரிகையருக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது.(6)
அழகின் இலக்கணமான மயில்கள் தங்கள் இணைகளின் துணையுடன் மேக முழக்கங்களைக் கேட்டு
மகிழ்ந்து தங்கள் பெரும் தோகைகளை விரித்து அகவிக் கொண்டிருக்கின்றன.(7)
மற்ற மயில்கள், கோபுரங்களிலும், சந்திரனைப் போன்ற வெண்ணிறம் கொண்ட வீடுகளின் மேற்கூரைகளிலும்
தங்கள் எழில்மிகு அழகை வெளிப்படுத்தியவாறு ஆடிக் கொண்டிருக்கின்றன.(8)
களைப்படைந்த இறகுகளைக் கொண்ட அழகிய மயில்கள் ஒரு கணத்தில் மர உச்சிகளை அலங்கரித்துப்
புதிதாய் முளைத்த புல்லுக்கு அஞ்சி மீண்டும் வெறுந்தரையை அடைகின்றன.(9)
சந்தனம் போன்ற குளிர்ந்த மழைத்துளிகளில் இருந்து வீசும் இனிமைமிக்கத் தென்றல்,
காமனின் நண்பர்களான சர்ஜ, அர்ஜுன மலர்களின் நறுமணத்தைச் சுமந்தபடியே வீசுகிறது.(10)

ரதிஷ்²ரமஸ்வேத³விநாஷ²ஹேது-
ர்னவோத³பா⁴ராநயனே ச ஹேது꞉ |
ந மாருத꞉ ஸ்யாத்³யதி³ சாருகா³த்ரி
ந மேக⁴காலோ மம வல்லப⁴꞉ ஸ்யாத் ||2-95-11

ஏவம்விதே⁴ஷு ப்ரியஸங்க³மேஷு
ரதாவஸானே யது³பைதி வாயு꞉ |
ரதிஷ்²ரமஸ்வேத³ஹர꞉ ஸுக³ந்தீ⁴
தத꞉ பரம் கிம் ஸுக²மஸ்தி லோகே ||2-95-12

ஜலாப்லுதானீக்ஷ்ய மஹாநதீ³னாம்
ஸுகா³த்ரி ஹம்ஸா꞉ புலினானி ஹ்ருஷ்டா꞉ |
க³தா꞉ ஷ்²ரமம் மானஸவாஸலுப்³தா⁴꞉
ஸஸாரஸா꞉ க்ரௌஞ்சகு³ணானுவித்³த்³தா⁴꞉ ||2-95-13

ந பா⁴ந்தி நத்³யோ ந ஸராம்ஸி சைவ
ஹதத்விஷீவாயதசாருநேத்ரே |
க³தேஷு ஹம்ஸேஷ்வத² ஸாரஸேஷு
ரதா²ங்க³துல்யாஹ்வயனேஷு சைவ ||2-95-14

ஓ! அழகிய உடலைக் கொண்டவளே, இந்தக் காற்று புது மழையைக் கொண்டு வராமலும், தன்னுடன்
விளையாடியவரின் களைப்பை நீக்காமலும் இருந்தால் நிச்சயம் என்னால் விரும்பப்படாது.(11)
காதலர்கள் இணைவதற்கு உகந்த இந்தக் காலத்தில் நறுமணமிக்கத் தென்றல் வீசுவதைவிட
மனிதர்களுக்குப் பிடித்தமானது வேறு யாது?(12)
ஓ! அழகிய உடல்படைத்தவளே, அன்னப்பறவைகள் நீர் பெருகும் ஆற்றங்கரைகளைக் கண்டு களைத்து,
தங்கள் இதயம் விரும்பும் இடங்களைக் காண சாரஸங்கள், கிரௌஞ்சங்கள் ஆகியவற்றுடன்
சேர்ந்து மகிழ்ச்சியாகச் செல்கின்றன.(13)
ஓ! அழகிய கண்களைக் கொண்டவளே, அன்னங்களும், தேர்ச்சக்கரங்களைப் போலச் சடசடக்கும்
சாரஸங்களும் சென்றபிறகு ஆறுகளும், தடாகங்களும் அழகாகத் தெரியவில்லை.(14)

போ⁴கை³கதே³ஷே²ன ஷு²ப⁴ம் ஷ²யானம்
த்⁴ருவம் ஜக³ந்நாத²முபேந்த்³ரமீஷ²ம் |
நித்³ராப்⁴யுபேதா வரகாலதஜ்ஜ்ஞா
ஷ்²ரியம் ப்ரக³ம்யோத்தரசாருரூபாம் ||2-95-15

நித்³ராயமாணே ப⁴க³வத்யுபேந்த்³ரே
மேகா⁴ம்ப³ராக்ராந்தநிஷா²கரோ(அ)த்³ய |
பத்³மாமலாப⁴꞉ கமலாயதாக்ஷி
க்ருஷ்ணஸ்ய வக்த்ரானுக்ருதிம் கரோதி ||2-95-16

கத³ம்ப³னீபார்ஜுனகேதகானாம்
ஸ்ரஜோ த்⁴ருவம் க்ருஷ்ணமுபானயந்தி |
புஷ்பாணி சான்யான்ய்ருதவ꞉ ஸமஸ்தா꞉
க்ருஷ்ணாத்ப்ரமாதா³னபி⁴காங்க்ஷமாணா꞉ ||2-95-17

நாகா³ஷ்²சரந்தோ விஷதி³க்³த⁴வக்த்ரா꞉
ஸ்ப்ருஷ²ந்தி புஷ்பாண்யபி பாத³பான்யான் |
பேபீயமானான்ப்⁴ரமரைர்ஜனானாம்
கௌதூஹலம் தே ஜனயந்த்யதீவ || 2-95-18

ஹரியின் இயல்பையும், மழைக்காலத்தின் உண்மை இயல்பையும் அறிந்த நித்ரா தேவி,
பேரழகுடைய ஸ்ரீயை {ஸ்ரீதேவியை} வணங்கிவிட்டு, தேவலோகத்தில் ஓய்வில் கிடக்கும் உலகின் தலைவனான
உபேந்திரனின் புகலிடத்தை நாடினாள்.(15)
ஓ! தாமரை போன்ற கண்களைக் கொண்டவளே, தெய்வீகனான உபேந்திரன் {கிருஷ்ணன்} உறங்கும்போது,
துணி போன்ற மேகத்தால் மறைக்கப்பட்டு ஒளிரும் சந்திரனும் அவது {கிருஷ்ணனுடைய} முகத்தின் நிறத்தைக் காட்டுகிறான்.(16)
கிருஷ்ணனை மகிழ்விக்க விரும்பும் அனைத்துப் பருவகாலங்களும், கதம்ப, அர்ஜுன, நீப, கேடக
மலர் மாலைகளைக் கொண்டு வந்து அனைத்து வகை மலர்களையும் பொழிகின்றன.(17)
நஞ்சு பூசப்பட்ட முகங்களுடன் கூடிய பாம்புகளுடன் கூடியவையும், வண்டுகள் நிறைந்தவையுமான அனைத்து மலர்களும்,
மரங்களும் மனிதர்களின் பேராவலைத் தூண்டுகின்றன.(18)

தோயாதிபா⁴ராம்பு³த³வ்ருந்த³னத்³த⁴ம்
நப⁴꞉ பதிஷ்யந்தமிவாபி⁴வீக்ஷ்ய |
நிபானக³ம்பீ⁴ரமபி⁴ன்னவ்ருஷ்டம்
மனோஹரம் சாருமுக²ஸ்தனோரு ||2-95-19

ப³லாகமாலாகுலமால்யதா³ம்னா
நிரீக்ஷ ரம்யம் க⁴னவ்ருந்த³மேதத் |
ஸஸ்யானி பூ⁴மாவபி⁴வர்ஷமாணம்
ஜக³த்³தி⁴தார்த²ம் விமலாங்க³யஷ்டே || 2-95-20

.ஜலாவலம்பா³ம்பு³த³வ்ருந்த³கர்ஷீம்
க⁴னைர்க⁴னான்யோத⁴யதீவ வாயு꞉ |
ப்ரவ்ருத்தசக்ரோ ந்ருபதிர்வனஸ்தா²-
ந்க³ஜான்ஜ்க³ஜை꞉ ஸ்வைரிவ வீர்யத்³ருப்தான் ||2-95-21

அபௌ⁴மமம்போ⁴ விஸ்ருஜந்தி மேகா⁴꞉
பூதம் பவித்ரம் பவனை꞉ ஸுக³ந்தி⁴ |
ஹர்ஷாவஹம் சாதகப³ர்ஹிணானாம்
வராண்ட³ஜானாம் ஜலத³ப்ரியாணாம் ||2-95-22

ப்லவங்க³ம꞉ ஷோட³ஷ²பக்ஷஷா²யீ
விரௌதி கோ³ஷ்ட²꞉ ஸஹ காமினீபி⁴꞉ |
ருசோ த்³விஜாதி꞉ ப்ரியஸத்யத⁴ர்மா
யதா² ஸுஷி²ஷ்யை꞉ பரிவார்யமாண꞉ ||2-95-23

கு³ணே மாஹாம்ஸ்தோயத³காலஜோ(அ)ய-
மபு³த்³த⁴மேக⁴ஸ்வனபீ⁴ஷிதானாம் |
பரிஷ்வஜந்த꞉ பரிவர்த்³த⁴யந்தி
வினாபி ஷ²ய்யாஸமயம் ப்ரியாணாம் || 2-95-24

நீருண்ட மேகங்களின் கனத்தால் வானம் அழுத்தப்படுவதைக் கண்டுவிட்டதைப் போல உன் அழகிய முகமும்,
முலைகளும், தொடைகளும் அகழிக்குள் நுழைகின்றன {வற்றுகின்றன – நிறம் மங்குகின்றன}.(19)
கொக்குகளால் அமைந்த மாலையால் அலங்கரிக்கப்பட்டதைப் போன்ற அந்த அழகிய மேகங்களைக் கண்டால்,
உலகின் நன்மைக்காக அவை பூமியில் தானியங்களைப் பொழிவதைப் போலத் தெரிகிறது.(20)
பலம்வாய்ந்த மன்னன் தன்னுடைய யானையை மதங்கொண்ட யானைகளுடன் மோத விடுவதைப் போலவே
காற்றும் நீருண்ட மேகங்களை ஒன்றோடொன்று மோதச் செய்கிறது.(21)
முட்டைகளில் இருந்து பிறப்பவையான புறாக்களுக்கும், மயில்களுக்கும், பிற பறவைகளுக்கும் மகிழ்ச்சியை அளிப்பதும்,
காற்றால் தூய்மை செய்யப்பட்டதுமான தெய்வீக நீரை மேகங்கள் பொழிகின்றன.(22)
வாய்மையையும், அறத்தையும் விரும்பும் இருபிறப்பாளர்கள் தங்கள் சீடர்களால் சூழப்பட்டவர்களாக ரிக்குகளை
உரைப்பதைப் போலக் காளைகளும் பசுக்களுடன் சேர்ந்து மேய்ச்சல் நிலங்களில் முழங்குகின்றன.(23)
பெண்கள் எப்போதும் தங்கள் காதலரின் துணையுடன் வாழ விரும்புவதும் இந்த மழைக் காலத்தின் பண்புகளில் ஒன்றாகும்.(24)

தோ³ஷோ(அ)யமேக꞉ ஸலிலாக³மஸ்ய
மாம் ப்ரத்யுதா³ரான்வயவர்ணஷீ²லே |
ந த்³ருஷ்²யதே யத்தவ வக்த்ரதுல்யோ
க⁴னக்³ரஹக்³ரஸ்ததனு꞉ ஷ²ஷா²ங்க꞉ ||2-95-25

ப்ரத்³ருஷ்²யதே பீ⁴ரு யதா³ ஷ²ஷா²ங்கோ
க⁴னாந்தரஸ்தோ² ஜக³த꞉ ப்ரதீ³ப꞉ |
ததா³னுபஷ்²யந்தி ஜனா꞉ ப்ரஹ்ருஷ்டா
ப³ந்து⁴ம் ப்ரவாஸாதி³வ ஸந்நிவ்ருத்தம் ||2-95-26

விலாபஸாக்ஷீ ப்ரியஹீனிதானாம்
ஸந்த்³ருஷ்²யதே பீ⁴ரு யதா³ ஷ²ஷா²ங்க꞉ |
நேத்ரோத்ஸவ꞉ ப்ரோஷிதகாமுகானாம்
த்³ருஷ்ட்வைவ காந்தம் ப⁴வதீத்யவைமி ||2-95-27

நேத்ரோத்ஸவ꞉ காந்தஸமாக³தானாம்
தா³வாக்³னிதுல்ய꞉ ப்ரியஹீனிதானாம் |
தேனைவ தே³ஹேன வராங்க³னானாம்
சந்த்³ரோ(அ)பி தாவத்ப்ரியவிப்ரியஷ்²ச ||2-95-28

வினாபி சந்த்³ரேண புரே பிதுஸ்தே
யத꞉ ப்ரபா⁴ சந்த்³ரக³ப⁴ஸ்திகௌ³ரீ |
கு³ணாகு³ணாம்ஷ்²சந்த்³ரமஸோ ந வேத்³மி
யதஸ்ததோ(அ)ஹம் ப்ரஷ²ஷ²ம்ஸயிஷ்யே ||2-95-29

அவாப யோ ப்³ராஹ்மணராஜ்யமீட்³யோ
து³ராபமன்யை꞉ ஸுக்ருதைஸ்தபோபி⁴꞉ |
கா³யந்தி விப்ரா꞉ பவமானஸஞ்ஜ்ஞம்
ஸமாக³தா꞉ பர்வணி சாப்யுதா³ரம் ||2-95-30

ஓ! அழகிய பெண்ணே, உன் முகத்தோற்றதிற்கு ஒப்பான சந்திரன், கிரஹம் போன்ற மேகத்தால் உடல்
பீடிக்கப்பட்டவனாகப் புலப்படாமல் போவது மட்டுமே மழைக்காலத்தின் ஒரே குறையென நான் உணர்கிறேன்.(25)
இந்தக் காலத்தில் மேகம் மறைக்கப் போகும் இடைவெளியில் சந்திரன் காட்சி தரும்போது, அந்நிய நாட்டில் இருந்து
திரும்பி வந்த நண்பனைக் காண்பது போலவே மக்கள் அவனைப் பார்க்கிறார்கள்.(26)
பிரிவால் வாடும் பெண்களின் புலம்பல்களுக்குச் சாட்சியாக இருக்கும் சந்திரனைக் காண்போரின் கண்கள்,
பிரிவால் வாடும் பெண்கள் காதலரைக் கண்டதும் அடையும் இன்பத்தைப் போல இன்புறுகின்றன.
இவ்வாறே எனக்குத் தோன்றுகிறது என்றாலும் இஃது உண்மையல்ல.(27)
சந்திரனின் காட்சி, காதலருடன் சேர்ந்திருக்கும் பெண்களின் கண்களுக்கு விருந்தாகவும்,
பிரிவால் வாடுவோருக்குக் காட்டுத் தீயாகவும் இருப்பதால் சந்திரன் பெண்களின் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் பிறப்பிடமாவான்.(28)
உன் தந்தையின் நகரத்தில் சந்திரன் இல்லாத போதும் அவனுடைய கதிர்களின் பிரகாசம் இருக்கும்;
எனவே சந்திரனை உன் முன்னால் நான் புகழும் போது, அவனால் விளையும் நன்மைகளையும்,
தீமைகளையும் உன்னால் புரிந்து கொள்ள முடியாது.(29)
அறவோரால் பயிலப்படும் கடுந்தவங்களைச் செய்து, அடைவதற்குக் கடினமானதும், அனைவராலும் வழிபடப்படுவதுமான
பிரம்ம லோகத்தை {பிராமண ராஜ்ஜியத்தை} அவன் அடைந்திருக்கிறான். பிராமணர்கள் {பவமான} வேள்வியில்
சாமம் உரைத்து {சாமவேத கானம் செய்து} பெருஞ்சோமனின் {சந்திரனின்} மகிமைகளைத் துதிக்கின்றனர்.(30)

பிதா பு³த⁴ஸ்யோத்தரவீர்யகர்மா
புரூரவா யஸ்ய ஸுதோ ந்ருதே³வ꞉ |
ப்ராணாக்³நிரீட்³யோ(அ)க்³னிமஜீஜனத்³யோ
நஷ்டம் ஷ²மீக³ர்ப⁴ப⁴வம் ப⁴வாத்மா ||2-95-31

ததை²வ பஷ்²சாச்சகமே மஹாத்மா
புரோர்வஷீ²மப்ஸரஸாம் வரிஷ்டா²ம் |
பீத꞉ புரா யோ(அ)ம்ருதஸர்வதே³ஹோ
முனிப்ரவீரைர்வரகா³த்ரி கோ⁴ரை꞉ ||2-95-32

ந்ருப꞉ குஷா²க்³ரை꞉ புனரேவ யஷ்²ச
தீ⁴மானதோ(அ)க்³நிர்தி³வி பூஜ்யதே ச |
ஆயுஷ்²ச வம்ஷே² நஹுஷஷ்²ச யஸ்ய
யோ தே³வராஜத்வமவாப விர꞉ ||2-95-33

வேள்வி நெருப்பானது கந்தர்வலோகத்தில் இருந்து புரூரவனால் கொண்டு வரப்படும் வழியிலேயே மறைந்தது.
அந்த இடத்தில் தேடிய போது ஓர் அரச மரம் {அரணிக் கட்டை} காணப்பட்டது. அந்த மரத்தில் இருந்து விறகுகளைச் சேகரித்து மூன்று நெருப்புகளும் தூண்டப்பட்டன. எனவே, மரங்கள் மற்றும் மூலிகைகளின் தலைவனான சந்திரனே மறைந்த நெருப்பை அரச மரத்தில் {அரணிக் கட்டையில்} இருந்து மீட்டான். சந்திரன், மிகச் சிறந்த செயல்களைச் செய்யும் புதனின் தந்தை ஆவான். மன்னன் புரூரவன் புதனின் மகனாவான்.(31) ஓ! அழகிய பெண்ணே, முன்பொரு காலத்தில் கடுந்தவம் செய்யும் முனிவர்களால் அவனது அமுதவுடல் பருகப்பட்டபோது, அந்த உயரான்ம சோமன் {புரூரவனாகப் பிறந்து}, அப்சரஸ்களில் முதன்மையான ஊர்வசியை விரும்பினான்.(32) அவனுடைய வம்சத்தில் தோன்றிய ஆயு, குசப் புற்களின் நுனியின் மூலம் தேவலோகத்தை அடைந்து சிறு தெய்வமென்ற மதிப்பை அடைந்தான், வீரனான நகுஷனும் தேவர்களின் மன்னன் {இந்திரன்} என்ற மதிப்பை அடைந்தான்[“ஸோமன் (சந்த்ரன்) புதனின் பிதா. மேலான வீர்ய கார்யங்கள் புரியும் அரசன் “புரூரவஸ்” என்பான் புதனின் மகன். ப்ராணாக்னியாகத் துதிக்கப்படும் ருத்ர ஸ்வரூபியான சந்த்ரன் மறைந்த அக்னியை அரணிக் கட்டையிலிருந்து பிறப்பித்தான். உடலழகியே, மஹாத்மா சந்த்ரன் முன்னாள் சிறந்த ஊர்வசியை விரும்பினான். அம்ருதமயமான தேஹமுடைய அவன் கடுந்தவமுடைய முனி ச்ரேஷ்டர்களால் “அப்படியே” பருகப்பட்டான். மறுபடியும் புத்திமான் அரசன் ஒருவன் குசப்புற்களின் முனைகளால் அக்னியில் யாகம் செய்தான். ஸ்வர்க்கத்தில் கௌரவிக்கப்படுகிறான். அவன் வம்சத்தில் “ஆயுவும், நகுஷனும்” உதித்தனர். அந்த வீர நகுஷனும் தேவேந்த்ர பதவியை அடைந்தான்” ].(33)

தே³வாதிதே³வோ ப⁴க³வான்ப்ரஸூதௌ
வம்ஷே² ஹரிர்யத்ர ஜக³த்ப்ரணேதா |
பை⁴ம꞉ ப்ரவீர꞉ ஸுரகார்யஹேதோ-
ர்ய꞉ ஸுப்⁴ரு த³க்ஷஸ்ய வ்ருத꞉ ஸுதாபி⁴꞉ ||2-95-34

ப³பூ⁴வ ராஜாத² வஸுஷ்²ச யஸ்ய
வம்ஷே² மஹாத்மா ஷ²ஷி²வம்ஷ²தீ³ப꞉ |
யஷ்²சக்ரவர்தித்வமவாப வீர꞉
ஸ்வை꞉ கர்மபி⁴꞉ ஷ²க்ரஸமப்ரபா⁴வ꞉ ||2-95-35

யது³ஷ்²ச ராஜா ஷ²ஷி²வம்ஷ²முக்²யோ
யோ(அ)வாப மஹ்யாமதி⁴ராஜபா⁴வம் |
போ⁴ஜா꞉ குலே யஸ்ய நராதி⁴பஸ்ய
வீரா꞉ ப்ரஸூதா꞉ ஸுரராஜதுல்யா꞉ ||2-95-36

ந கூடக்ருத்³யஸ்ய ந்ருபோ(அ)ஸ்தி வம்ஷே²
ந நாஸ்திகோ நைஷ்க்ருதிகோ(அ)பி வாத² |
அஷ்²ரத்³த³தா⁴னோ(அ)ப்யத²வா கத³ர்ய꞉
ஷௌ²ர்யேண வா வாரிருஹாக்ஷி ஹீன꞉ ||2-95-37

வம்ஷே² வதூ⁴ஸ்த்வம் கமலாயதாக்ஷி
ஷ்²லாக்⁴யா கு³ணாநாமதிபாத்ரபூ⁴தா |
குரு ப்ரணாமம் ஷி²க²ராக்³ரத³ந்தி
தஸ்ய த்வமீஷ²ஸ்ய ஸதாம் ப்ரியஸ்ய ||2-95-38

நாராயணாயாத்மப⁴வாயனாய
லோகாயனாய த்ரித³ஷா²யனாய |
க²கே³ந்த்³ரகேதோ꞉ புருஷோத்தமாய
குரு ப்ரணாமம் ஷ்²வஷு²ராய தே³வி ||2-95-39

தெய்வீகத் தலைவனும், உலகத்தைப் படைத்தவனுமான ஹரி, தேவர்களின் பணி நிமித்தம் பைமத் தலைவனாக எவனுடைய குலத்தில் பிறந்தானோ அந்தச் சந்திரன், எப்போதும் தக்ஷனின் மகள்களால் {27 நட்சத்திரங்களால்} சூழப்பட்டவனாக இருக்கிறான்.(34) குலத்தின் கொடியாகவும், தன செயல்களால் குடிமுதல்வன் என்ற மதிப்பை அடைந்தவனுமான உயரான்ம வஸு அவனுடைய குலத்திலேயே பிறந்தான்; சந்திர குலத்தில் முதன்மையான மன்னன் யதுவின் வம்சத்தில் தேவர்களின் மன்னனுக்கு ஒப்பான போஜர்கள் பிறந்தனர், ஏற்கனவே குடிமுதல்வர்களாக இருந்தவர்களும் மீண்டும் சந்திர குலத்தில் பிறந்தனர்.(35,36) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே, சந்திர குலத்தில் பிறந்த யதுவின் வம்சத்தில் வஞ்சகனாவோ, நாத்திகனாகவோ, மதிப்பற்றவனாகவோ, அழகற்றவனாகவோ, கோழையாகவோ எந்த மன்னனும் பிறந்ததில்லை.(37) நற்குணங்களின் சுரங்கமான நீ குணவானான ஓர் இளவரசரின் மருமகளாக இருக்கிறாய். எனவே அறவோர் விரும்பும் ஈஷ்வரனை வணங்குவாயாக.(38) ஓ! பெண்ணே, புருஷர்களில் முதன்மையானவனும், பெரும்பாட்டன், தேவர்கள் மற்றும் உலகங்களுக்குப் புகலிடமாக இருப்பவனுமான நாராயணனே உன் மாமனார். அவரை வணங்குவாயாக” என்றான் {பிரத்யும்னன்}.(39)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ப்ரத்³யும்னபா⁴ஷணே பஞ்சனவதிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 94–(பிரபாவதீபாணிக்ரஹணம்)-பிரத்யும்னன் பிரபாவதி திருமணம் |–

February 1, 2021

பிரபாவதியை காந்தர்வ மணம்புரிந்த பிரத்யும்னன்; வஜ்ரநாபனின் தம்பி சுநாபனின் மகள்களான சந்திரவதி கதனையும், குணவதி சாம்பனையும் மணந்தது

வைஷ²ம்பாயன உவாச
ஆவிஷ்தேயம் மயா பா³லா ஸர்வதே²த்யவக³ம்ய து |
கார்ஷ்ணிர்ஹ்ருஷ்டேன மனஸா ஹம்ஸீமித³முவாச ஹ ||2-94-1

தை³த்யேந்த்³ரதனயாம் ப்ராப்தமவக³ச்ச²ஸ்வ மாமிஹ |
ஷட்பதை³꞉ ஸஹ ஷட்பாதோ³ பூ⁴த்வா மால்யே விலீய ஹி ||2-94-2

விதே⁴யோ(அ)ஸ்மி ப்ரபா⁴வத்யா யதே²ஷ்டம் மயி வர்ததாம் |
இத்யுக்த்வா த³ர்ஷ²யாமாஸ ஸுரூபோ ரூபமாத்மன꞉ ||2-94-3

தத்³த⁴ர்ம்யப்ருஷ்ட²ம் ப்ரப⁴யா த்³யோதிதம் தஸ்ய தீ⁴மத꞉ |
அபி⁴பூ⁴தா ப்ரபா⁴ சைவ ராஜம்ஷ்²சந்த்³ரோத்³ப⁴வா ஷு²பா⁴ ||2-94-4

ப்ரபா⁴வத்யாஸ்து தம் த்³ருஷ்ட்வா வவ்ருதே⁴ காமஸாக³ர꞉ |
சந்த்³ரஸ்யேவோத³யே ப்ராப்தே பர்வண்யாம் ஸரிதாம் பதி꞉ ||2-94-5

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அதன்பிறகு, கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னன், “இந்தக் கன்னிகை முற்றிலும் என்னால் பீடிக்கப்பட்டிருக்கிறாள்” என்று நினைத்து அங்கிருந்த அன்னத்திடம் மகிழ்ச்சியாக,(“என்னிடம் இஷ்டப்படியிருக்கலாம்” ) “மாலையுடன் இருக்கும் {ஆறு பாதங்களுடன் கூடிய} வண்டுகள் பிறவற்றுடன் சேர்ந்து நானும் ஒரு வண்டின் வேடத்தில் இங்கே இருக்கிறேனெனத் தைத்தியனின் மகளிடம் சொல்வாயாக.(2) இப்போது நான் அவள் வசத்தில் இருக்கிறேன். அவள் விரும்பியவாறு என்னுடன் இருக்கலாம்” என்றான்[1]. ரதியின் கணவனான அவன் {காமனான பிரத்யும்னன்} இதைச் சொல்லிவிட்டு தன் சொந்த வடிவில் அங்கே தோன்றினான்.(3) அந்த நேரத்தில் அந்த வீடு நுண்ணறிவுமிக்க மதனனின் {மன்மதனான பிரத்யும்னனின்} மேனியொளியால் ஒளியூட்டப்பட்டிருந்தது. சந்திரனின் எழில்மிகு கதிர்கள் வெட்கமடைந்தன.(4) பர்வ நாள் ஒன்றில் {பௌர்ணமியில்} நீர்நிலைகளின் தலைவன் (பெருங்கடல்) இரவின் தலைவனுடன் (சந்திரனுடன்) எழுவதைப் போலப் பிரபாவதியின் காதல் கடல் அந்தக் காமனைக் கண்டதும் பெருகிற்று.(5)

ஸலஜ்ஜாதோ⁴முகீ² கிஞ்சித்கிஞ்சித்திர்யக³வேக்ஷிணீ |
ப்ரபா⁴வதீ ததா³ தஸ்தௌ² நிஷ்²சலம் கமலேக்ஷணா ||2-94-6

கரேணாத⁴꞉ப்ரதே³ஷே² தாம் சாருபூ⁴ஷணபூ⁴ஷிதாம் |
ஸ்ப்ருஷ்ட்வோவாச வராரோஹாம் ரோமாஞ்சிததனுஸ்தத꞉ ||2-94-7

மனோரத²ஷ²தைர்லப்³த⁴ம் கிம் பூர்ணேந்து³ஸமப்ரப⁴ம் |
அதோ⁴முக²ம் முக²ம் க்ருத்வா ந மாம் கிஞ்சித்ப்ரபா⁴ஷஸே ||2-94-8

ப்ரபோ⁴பமர்த³ம் மா கார்ஷீர்வத³னஸ்ய வரானனே |
ஸாத்⁴வஸம் த்யஜ்யதாம் பீ⁴ரு தா³ஸ꞉ ஸாத்⁴வனுக்³ருஹ்யதாம் ||2-94-9

ந காலமிவ பஷ்²யாமி பீ⁴ரு பீ⁴ருத்வமுத்ஸ்ருஜ |
யாசாம்யேஷோ²(அ)ஞ்ஜலிம் க்ருத்வா ப்ராப்தகாலம் நிபோ³த⁴ மே ||2-94-10

கா³ந்த⁴ர்வேண விவாஹேன குருஷ்வானுக்³ரஹம் மம |
தே³ஷ²காலானுரூபேண ரூபேணாப்ரதிமா ஸதீ ||2-94-11

தாமரைகளைப் போன்ற கண்களைக் கொண்ட பிரபாவதி, வெட்கத்துடன் சற்றே கண்களைத் திருப்பி {கடைக்கண்ணால் அவனைக் கண்டு}, தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.(6) இதைக் கண்ட பிரத்யும்னன், அழகியும், எழில்மிக்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளுமான மெல்லியள் பிரபாவதியின் முகத்தைத் தன் கைகளில் தாங்கினான். மயிர் சிலர்த்த மேனியுடன் கூடிய அவன்,(7) “நூறுமுறை விரும்பியதை அடைந்த பிறகும், முழு மதிக்கு ஒப்பான உன் முகம் ஏன் கீழ் நோக்கியிருக்கிறது? ஏன் என்னுடன் பேசாதிருக்கிறாய்?(8) ஓ! அழகிய முகத்தாளே, உன் முகத்தின் ஒளியை மறைக்காதே. அச்சத்தைக் கைவிட்டு உன் பணியாளான என்னை ஆதரிப்பாயாக.(9) ஓ! அச்சம் கொண்டவளே, நேரம் அதிகமில்லை. நான் திரும்பிச் செல்லும் வேளை வந்துவிட்டது. உன் அச்சத்தை விலக்குமாறு நான் கை கூப்பி வேண்டுகிறேன்.(10) அழகிலும், மெய்ப்பற்றிலும் ஒப்பற்றவளான நீ காலத்திற்கும், இடத்திற்கும் இணக்கமான காந்தர்வத் திருமணத்தின் மூலம் என்னை ஆதரிப்பாயாக” என்றான் {பிரத்யும்னன்}.(11)

உபஸ்ப்ருஷ்²ய ததோ பை⁴மோ மணிஸ்த²ம் ஜாதவேத³ஸம் |
ஜுஹாவ ஸமயே வீர꞉ புஷ்²பைர்மந்த்ரானுதீ³ரயன் ||2-94-12

ஜக்³ராஹாத² கரம் தஸ்யா வராப⁴ரணபூ⁴ஷிதம் |
சக்ரே ப்ரத³க்ஷிணம் சைவ தம் மணிஸ்த²ம் ஹுதாஷ²னம் ||2-94-13

ப்ரஜஜ்வால ஸ தேஜஸ்வீ மாநயன்னச்யுதாத்மஜம் |
ப⁴க³வாஞ்ஜக³த꞉ ஸாக்ஷீ ஷு²ப⁴ஸ்யாதா²ஷு²ப⁴ஸ்ய ச ||2-94-14

பைம {பீம குல} வீரனான பிரத்யும்னன் அப்போது (தன் மேனியில் அணிந்திருந்த) ரத்தினத்தில் இருக்கும் நெருப்பைத் தீண்டி, மந்திரங்களைச் சொல்லி, மலர்களுடன் ஹோமச் சடங்கைச் செய்தான்.(12) பிறகு, மிகச் சிறந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரபாவதியின் கரங்களைப் பற்றிக் கொண்டு அந்த ரத்தினத்தில் இருந்த நெருப்பை வலம் வந்தான்.(13) ஓ! மன்னா, அந்த நேரத்தில் ஒளியின் தெய்வீகத் தலைவனும், அறதிற்கும், பாவத்திற்கும் சான்றாக இருப்பவனுமான ஹுதாசனன் {அக்னி தேவன்}, அச்யுதனின் மகனுடைய மதிப்பைத் தக்க வைப்பதற்காகச் சுடர்விட்டெரிந்தான்.(14)

உத்³தி³ஷ்²ய த³க்ஷிணாம் வீரோ விப்ராணாம் யது³நந்த³ன꞉ |
உவாச ஹம்ஸீம் த்³வாரஸ்தா²ம் திஷ்டா²வாம் ரக்ஷ பக்ஷிணி ||2-94-15

தஸ்யாம் ப்ரணம்ய யாதாயாம் காமஸ்தாம் சாருலோசனாம் |
க்³ரஹாய த³க்ஷிணே ஹஸ்தே நினாய ஷ²யனோத்தமம் ||2-94-16

ஊராவேவோபவேஷ்²யானாம் ஸாந்த்வயித்வா புன꞉ புன꞉ |
சுசும்ப³ ஷ²னகைர்க³ண்ட³ம் வாஸயன்முக²மாருதை꞉ ||2-94-17

ததோ(அ)ஸ்யாஷ்²ச பபௌ வக்த்ரபத்³மம் மது⁴கரோ யதா² |
ஆலிலிங்கே³ ச ஸுஷ்²ரோணீம் க்ரமேண ரதிகோவித³꞉ ||2-94-18

அராமயத்³ரஹஸ்யேனாம் ந சோத்³வேஜிதவாம்ஸ்ததா³ |
அபக்ருஷ்டம் சரத்யர்த²ம் ரதிகார்யவிஷா²ரத³꞉ |
உவாஸ ஸ தயா ஸார்த⁴ம் ரமன்க்ருஷ்ணஸுத꞉ ப்ரபு⁴꞉ ||2-94-19

அருணோத³யகாலே ச யயௌ யத்ர நடாலயம் |
அகாமயா ப்ரபா⁴வத்யா கத²ஞ்சித்ஸ விஸர்ஜித꞉ ||2-94-20

தாமேவ மனஸா காந்தாம் காந்தரூபாம் ஸமுத்³வஹன் |
த ஊஷுர்னடவேஷேணா கார்யார்த²ம் பை⁴மவம்ஷ²ஜா꞉ ||2-94-21

அப்போது யதுவின் வழித்தோன்றலான அந்த வீரன் {பிரத்யும்னன், பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டிய} தக்ஷிணை (பணக்கொடை) குறித்துத் தன் மனத்தில் தீர்மானித்தவனாக அன்னத்திடம் {சுசீமுகியிடம்} “ஓ! பறவையே, வாயிலில் நின்று எங்களைக் காப்பாயாக” என்றான்.(15) அதைக் கேட்ட அன்னம் அவனை வணங்கிவிட்டுச் சென்றது.
{காமன் (பிரத்யும்னன்), அந்த எழில்விழியாளின் வலக்கையைப் பிடித்துக் கொண்டு மிகச் சிறந்த பள்ளியறைக்கு அழைத்துச் சென்றான்.(16) அதன் பிறகு அவளைத் தன் தொடையில் அமரச் செய்து மீண்டும் மீண்டும் தேற்றினான். மெதுவாகக் கழுத்தை முகர்ந்தபடியே அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.(17) தாமரை மலரில் தேன் பருகும் வண்டைப் போல அவளது முகத்தைப் பருகினான். காமத்தில் திறன்மிக்கவனான அவன் (பிரத்யும்னன்), அழகிய கூந்தலுடன் கூடிய அந்தப் பெண்ணை (பிரபாவதியை) மெதுவாகத் தழுவினான்.(18) பின்னர் அவன் இரவில் அவளைச் சலிப்பின்றி இன்புறச் செய்தான். காமத்தில் திறன்மிக்கவனான அந்தப் பிரத்யும்னன் மெதுவாகச் செயல்பட்டான்.(19) கிருஷ்ணனின் மகனான அந்தத் தலைவன் {பிரத்யும்னன்} அங்கேயே தங்கி அவளுடன் இன்புற்றிருந்தான். சூரியன் எழும் நேரத்தில் (அதிகாலையில்) நடிகர்களின் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றான்}[“ப்ரத்யும்னன் வலக் கையால் ப்ரபாவதியைப் பிடித்து உத்தம சயனத்துக்கு அழைத்துச் சென்றான். ப்ரத்யும்னன் இவளைத் தொடையில் உட்கார வைத்துத் திரும்பத் திரும்பச் சாந்தப்படுத்தித் தன் முகக் காற்றால் மணம் பெறச் செய்து மெதுவாகக் கன்னத்தில் முத்தமிட்டான். பிறகு வண்டு போல் ப்ரபாவதியின் முகப் பத்மத்தைப் பானம் செய்தான். இன்ப ஸமர்த்தனான ப்ரத்யும்னன் முறைப்படி அழகிய பின்பாகமுடைய ப்ரபாவதியை அணைத்துக் கொண்டான். க்ருஷ்ணன் மகன் இன்பச் செயலில் வல்லவன். ப்ரபு ப்ரத்யும்னன் ரஹஸ்யத்தில் ப்ரபாவதியுடன் ரமித்தான். அவளுக்கு ப்ரியமில்லாத கார்யம் செய்யவில்லை. அவன் ப்ரபாவதியுடன் ரமித்து வஸித்தான். அருணோதயக் காலத்தில் ப்ரத்யும்னன் நடிகர்களிருக்குமிடம் அடைந்தான்”].(20) பிரபாவதி தயக்கம் காட்டினாலும் அவனுக்கு விடை கொடுத்தனுப்பினாள், அவனும் தன காதலியின் அழகை மனத்தில் நினைத்தபடியே சென்றான்.(21)

ப்ரதீக்ஷந்தஸ்ததா³ வாக்யமிந்த்³ரகேஷ²வயோஸ்ததா³ |
உத்³யோக³ம் வஜ்ரநாப⁴ஸ்ய த்ரைலோக்யவிஜயம் ப்ரதி ||2-94-22

ப்ரதீக்ஷந்தோ மஹாத்மானோ கு³ஹ்யஸம்ரக்ஷணே ரதா꞉ |
கஷ்²யபஸ்ய முனே꞉ ஸத்ரம் யாவத்தாவன்னராதி⁴ப ||2-94-23

தே³வாஸுராணாம் ஸர்வேஷாமவிரோதோ⁴ மஹாத்மனாம் |
த்ரைலோக்யவிஜயார்தா²ய யததாம் த⁴ர்மசாரிணாம் ||2-94-24

ஏவம் காலம் ப்ரதீக்ஷாணாம் வஸதாம் தத்ர தீ⁴மதாம் |
ஸம்ப்ராப்த꞉ ப்ராவ்ருஷோ ரம்ய꞉ ஸர்வபூ⁴தமனோஹர꞉ ||2-94-25

பெரும்பணிகளைச் செய்யவல்ல பைமர்கள், இவ்வாறே இந்திரன், கிருஷ்ணன் ஆகியோரின் ஆணைக்காகக் காத்திருந்து, நடிகர்களின் வேடத்தில் அங்கே வாழ்ந்து வந்தனர்.(22) அந்த உயரான்மாக்கள், வஜ்ரநாபன் மூவுலகங்களையும் வெல்வதற்காகப் புறப்படும் வரை ரகசியத்தை வெளியிடாமல் அங்கே காத்திருந்தனர்.(23) கசியபர் வேள்வி செய்து கொண்டிருந்த வரை அந்த உயரான்மாக்களுக்கும், அறம்சார்ந்த தேவர்களுக்கும், மூவுலகங்களையும் வெல்லக் காத்திருந்த அசுரர்களுக்கும் இடையில் எந்தச் சச்சரவும் நேரவில்லை.(24) நுண்ணறிவுமிக்க யாதவர்கள் உரிய காலத்திற்காக இவ்வாறு காத்திருந்தபோது, அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கவல்ல மழைக்காலம் அங்கே தோன்றியது.(25)

அஹர்நிஷ²ம் ச வ்ருத்தாந்தம் ப்ரயச்ச²ந்தி மனோஜவா꞉ |
ஷ²க்ரகேஷ²வயோர்ஹம்ஸா꞉ குமாராணாம் மஹாத்மனாம் ||2-94-26

ரேமே ஸஹ ப்ரபா⁴வத்யா ப்ரத்³யும்னஷ்²சானுரூபயா |
ராத்ரௌ ராத்ரௌ மஹாதேஜா தா⁴ர்தராஷ்ட்ராபி⁴ரக்ஷித꞉ ||2-94-27

தைர்ஹி வஜ்ரபுரம் ஹம்ஸைர்வஸத்³பி⁴ர்வாஸவாஜ்ஞயா |
வ்யாப்தம் ந்ற்^ப நடாம்ஸ்தாம்ஸ்து ந விது³꞉ காலமோஹிதா꞉ ||2-94-28

தி³வாபி ரௌக்மிணேயஸ்து ப்ரபா⁴வத்யா ந்ருபாலயே |
திஷ்ட²த்யந்தர்ஹிதோ வீரோ ஹம்ஸஸங்கா⁴பி⁴ரக்ஷித꞉ ||2-94-29

மாயயாஸ்ய ப்ரதிச்சா²யா த்³ருஷ்யதே ஹி நடாலயே |
தே³ஹார்தே⁴ன து கௌரவ்ய ஸிஷேவே(அ)ஸௌ ப்ரபா⁴வதீம் ||2-94-30

ஸன்னதிம் வினயம் ஷீ²லம் லீலாம் தா³க்ஷ்யமதா²ர்ஜவம் |
ஸ்ப்ருஹயந்த்யஸுரா த்³ருஷ்ட்வா வித்³வத்தாம் ச மஹாத்மனாம் ||2-94-31

ரூபம் விலாஸம் க³ந்த⁴ம் ச மஞ்ஜுபா⁴ஷாமதா²ர்யதாம் |
தாஸாம் யாத³வநாரீணாம் ஸ்ப்ருஹயந்த்யஸுரஸ்த்ரிய꞉ ||2-94-32

மனம் போன்ற வேகம் கொண்டவையான {தார்தராஷ்டிர} அன்னங்கள், பெருஞ்சக்தி வாய்ந்த இளவரசர்களின் செய்திகளைச் சக்ரனுக்கும், கேசவனுக்கும் தினமும் கொண்டு சென்றன.(26) பெருஞ்சக்தி வாய்ந்த பிரத்யும்னன், இவ்வாறு அந்தத் தார்தராஷ்டிரங்களின் காவலுடன் அழகிய பிரபாவதியுடன் ஒவ்வோரிரவையும் கழித்தான்.(27) வாசவனின் ஆணையின் பேரில் வஜ்ர நகரத்தில் உள்ள அன்னங்களாலும், நடிகர்களாலும் தாங்கள் சூழப்பட்டிருப்பதைக் காலத்தால் பீடிக்கப்பட்ட அசுரர்களால் உணர முடியவில்லை.(28) ருக்மிணியின் வீரமகன், அன்னங்களின் பாதுகாப்புடன் மெல்ல மெல்ல பகல் பொழுதையும் பிரபாவதியின் வீட்டில் கழிக்கத் தொடங்கினான்.(29) ஓ! குருவின் வழிதோன்றலே, அவன் தன் உடலின் ஓர் அம்சம் மேடையில் தோன்றுமாறும், மறு அம்சம் பிரபாவதியுடன் வாழுமாறும் தன் மாய சக்திகளைப் பயன்படுத்தினான்.(30) உயரான்ம யாதவர்களின் செழிப்பு, பணிவு, குணம், விளையாட்டுத் தனம், புத்திசாலித்தனம், எளிமை, கல்வித் திறன் ஆகியவற்றைக் கண்டு அசுரர்கள் பொறாமை அடைந்தனர்.(31) யாதவப் பெண்களின் அழகு, வசதி, நறுமணம், தூய சொற்கள், தூய ஒழுக்கம் ஆகியவற்றைக் கண்டு அசுரப் பெண்கள் பொறாமை அடைந்தனர்.(32)

வஜ்ரநாப⁴ஸ்ய து ப்⁴ராதா ஸுநாபோ⁴ நாம விஷ்²ருத꞉ |
து³ஹித்ருத்³வயம் ச ந்ருபதேஸ்தஸ்ய ரூபகு³ணான்விதம் ||2-94-33

ஏகா சந்த்³ரவதீ நாம்னா கு³ணவத்யத² சாபரா |
ப்ரபா⁴வத்யாலயம் தே து வ்ரஜத꞉ க²லு நித்யதா³ ||2-94-34

த³த்³ருஷா²தே து தே தத்ர ரதிஸக்தாம் ப்ரபா⁴வதீம் |
பரிபப்ரச்ச²துஷ்²சைவ விஸ்ரம்போ⁴பக³தாம் ஸதீம் ||2-94-35

ஓ! மன்னா, வஜ்ரநாபனின் சிறப்புமிக்கத் தம்பியான சுநாபன் என்பவனுக்கு, அழகுமிக்கவர்களும், குணம் நிறைந்தவர்களுமான மகள்கள் இருவர் இருந்தனர்.(33) அவர்களில் ஒருத்தி சந்திரவதி என்ற பெயரையும், மற்றொருத்தி குணவதி என்ற பெயரையும் கொண்டிருந்தனர். அவர்கள் தினமும் பிரபாவதியின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.(34) ஒரு நாள் பிரபாவதி தன் வீட்டில் காதலில் ஈடுபடுவதைக் கண்டு, தங்கள் மீது அவள் வைத்திருக்கும் அன்பில் நம்பிக்கையால் அது குறித்து அவர்கள் அவளிடம் கேட்டனர்.(35)

ஸோவாச மம வித்³யாஸ்தி யாதீ⁴தா காண்க்ஷிதம் பதிம் |
ரத்யர்த²ம் ஸானயத்யாஷு² ஸௌபா⁴க்³யம் ச ப்ரயச்ச²தி ||2-94-36

தே³வம் வா தா³னவம் வாபி விவஷ²ம் ஸத்³ய ஏவ ஹி |
ஸாஹம் ரமாமி காந்தேன தே³வபுத்ரேண தீ⁴மதா ||2-94-37

த்³ருஷ்²யதாம் மத்ப்ரபா⁴வேண ப்ரத்³யும்ன꞉ ஸுப்ரியோ மம |
தே த்³ருஷ்ட்வா விஸ்மயம் யாதே ரூபயௌவனஸம்பத³ம் ||2-94-38

அவள் {பிரபாவதி}, “விரும்பிய கணவனை வசப்படுத்தி விரைவில் கொண்டு வரச் செய்வதும், செழிப்பைத் தருவதுமான ஒரு வித்தை என்னிடம் இருக்கிறது.(36) தானவனாகவோ, தேவனாகவோ இருந்தாலும் நினைக்கப்பட்ட உடனே அவன் தன் வசத்தை இழந்து வந்து விடும் அளவுக்கு அஃது {அந்த வித்தை} அற்புத சக்தியைக் கொண்டது. அந்த வித்தையின் சக்தி மூலம் நான் ஒரு தேவனின் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.(37) என் சக்தியின் மூலம் எனக்கு மிகப் பிடித்தமானவராகிவிட்ட இந்தப் பிரத்யும்னரைப் பார்” என்றாள். அழகும், இளமையும் கொண்ட அவனைக் கண்டதும் அவர்கள் ஆச்சரியத்தில் நிறைந்தனர்.(38)

புனரேவாப்³ரவீத்தே து ப⁴கி³ன்யௌ சாருஹாஸினீ |
ப்ரபா⁴வதீ வராரோஹா காலப்ராப்தமித³ம் வச꞉ ||2-94-39

தே³வா த⁴ர்மரதா நித்யம் த³ம்ப⁴ஷீ²லா மஹாஸுரா꞉ |
தே³வாஸ்தபஸி ரக்தா ஹி ஸுகே² ரக்தா மஹாஸுரா꞉ ||2-94-40

தே³வா꞉ ஸத்யே ரதா நித்யமந்ருதே ச மஹாஸுரா꞉ |
த⁴ர்மஸ்தபஷ்²ச ஸத்யம் ச யத்ர தத்ர ஜயோ த்⁴ருவம் ||2-94-41

தே³வபுத்ரோ வரயதாம் பதிவித்³யாம் த³தா³ம்யஹம் |
உசிதௌ மத்ப்ரபா⁴வேண ஸத்³ய ஏவோபலப்ஸ்யத²꞉ ||2-94-42

அந்த அழகிய பிரபாவதி, அருள்நிறைந்தவளாகச் சிரித்துக் கொண்டே அந்தக் காலத்துக்குத் தகுந்த இந்தச் சொற்களைத் தன் தங்கையருக்குச் சொல்லும் வகையில்,(39) “தேவர்கள் எப்போதும் அறச் செயல்களிலும், தவங்களிலும் ஈடுபடுபவர்களாகவும், வாய்மை நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். மறுபுறம், பேரசுரர்கள் செருக்கு நிறைந்தவர்களாகவும், இன்பங்களை விரும்புகிறவர்களாகவும், பொய்மை நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(39,40) அறம், தவம், வாய்மை ஆகியவை ஆட்சி செய்யும் இடத்திலேயே வெற்றியும் இருக்கிறது என்பதால் தேவர்கள் மேன்மையானவர்களாக இருக்கிறார்கள்.(41) இந்த வித்தையை நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்; நீங்களும் இரு தெய்வீக இளைஞர்களை உங்களுக்கு வரப்போகும் கணவர்களாகத் தேர்ந்தெடுக்கலாம். என் சக்தியின் மூலம் நீங்கள் அவர்களை விரைவில் அடையலாம்” என்றாள்.(42)

தாம் ததே²த்யூசதுர்ஹ்ருSடே ப⁴கி³ன்யௌ சாருலோசனாம் |
பரிபப்ரச்ச² பை⁴மம் ச கார்யம் தத்பதிமானினீ ||2-94-43

ஸ பித்ருவ்யம் க³த³ம் வீரம் ஸாம்ப³ம் சாதா²ப்³ரவீத்ததா³ |
ரூபான்விதௌ ஸுஷீ²லௌ ச ஷூ²ரௌ ச ரணகர்மணி ||2-94-44

ப்ரபா⁴வத்யுவாச
பரிதுஷ்டேன த³த்தா மே வித்³யா து³ர்வாஸஸா புரா |
பரிதுஷ்டேன ஸௌபா⁴க்³யம் ஸதா³ கன்யாத்வமேவ ச ||2-94-45

தே³வதா³னவயக்ஷாணாம் யம் த்⁴யாஸ்யஸி ஸ தே பதி꞉ |
ப⁴விதேதி மயா சைவ வீரோ(அ)யமபி⁴காங்க்ஷித꞉ ||2-94-46

இதைக் கேட்ட அந்தச் சகோதரிகள் இருவரும், அழகிய கண்களைக் கொண்ட பிரபாவதியிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்றனர். அதன்பேரில் வஜ்ரநாபனின் மதிப்புமிக்க மகள் {பிரபாவதி}, பிரத்யும்னனிடம் இது குறித்துக் கேட்ட போது,(43) அழகர்களும், குணவான்களும், துணிவுமிக்கவர்களுமான தன் சிற்றப்பன் கதன், வீர சாம்பன் ஆகிய இருவரின் பெயர்களையும் அவன் குறிப்பிட்டான்.(44)
பிரபாவதி {தன் தங்கையரிடம்}, “முன்பு என்னிடம் நிறைவு கொண்ட துர்வாசர் இந்த வித்தையை எனக்கு அளித்தார்; இது நல்லூழையும், எப்போதும் கன்னிகையாக இருக்கும் தன்மையையும் கொடுக்கிறது.(45) அந்தப் பெரும் முனிவர், “தேவர்கள், தானவர்கள், யக்ஷர்கள் ஆகியோருக்கு மத்தியில் எவனை நீ நினைக்கிறாயோ அவன் உன் கணவனாவான்” என்றார். நான் இந்த வீரரை {பிரத்யும்னரை} விரும்பினேன்.(46)

க்³ருஹ்ணீதம் ததி³மாம் வித்³யாம் ஸத்³யோ வாம் ப்ரியஸங்க³ம꞉ |
ததோ ஜக்³ருஹதுர்ஹ்ருஷ்தே தாம் வித்³யாம் ப⁴கி³னீமுகா²த் ||2-94-47

த³த்⁴யதுர்க³த³ஸாம்பௌ³ ச வித்³யாமப்⁴யஸ்ய தே ஷு²பே⁴ |
தௌ ப்ரத்³யும்னேன ஸஹிதௌ ப்ரவிஷ்டௌ பை⁴மநந்த³னௌ ||2-94-48

ப்ரச்ச²ன்னௌ மாயயா வீரௌ கார்ஷ்ணினா மாயினா ந்ருப |
கா³ந்த⁴ர்வேண விவாஹேன தாவப்யரிப³லார்த³னௌ ||2-94-49

பாணிம் ஜக்³ருஹதுர்வீரௌ மந்த்ரபூர்வம் ஸதாம் ப்ரியௌ |
சந்த்³ரவத்யா க³த³꞉ ஸாம்போ³ கு³ணவத்யா ச கைஷ²வி꞉ ||2-94-50

ரேமிரே(அ)ஸுரகன்யாபி⁴ர்வீராஸ்தே யது³புங்க³வா꞉ |
மார்க³மாணாஸ்த்வனுஜ்ஞாம் தே ஷ²க்ரகேஷ²வயோஸ்ததா³ ||2-94-51

நீங்கள் இந்த வித்தையை அடைந்து, உங்கள் காதலர்களை உடனே அடைவீராக” என்றாள்.
ஓ! மன்னா, சுநாபனின் மகள்களான அந்த அழகியர் இருவரும் இதனால் மகிழ்ச்சியில் நிறைந்து, தன் சகோதரியின் வாயில் இருந்து வந்த வித்தையை ஏற்றுக் கொண்டு,(47) அதைப் பயின்றனர். பிறகு அவர்கள் கதனையும், சாம்பனையும் நினைத்தனர். வீரப் பைமர்களான அவர்கள் இருவரும் பிரத்யும்னனின் மாயையால் மறைக்கப்பட்டவர்களாக அவனுடன் அங்கே நுழைந்தனர்.(48) நல்லோரை விரும்புகிறவர்களும், பகைவரைக் கொல்பவர்களுமான அந்த வீரர்கள் இருவரும், மந்திரங்களை உரைத்து காந்தர்வ சடங்குகளின்படி அவர்களை மணந்து கொண்டனர். அவர்களில் கதன் சந்திரவதியையும், கேசவனின் மகன் சாம்பன் குணவதியையும் மணந்து கொண்டனர்.(49,50) அந்த முன்னணி யதுக்கள், இவ்வாறு சக்ரன், கேசவன் ஆகியோரின் ஆணைக்காகக் காத்திருந்த போது, அசுரப் பெண்களுடன் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(46-51)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ப்ரபா⁴வதீபாணிக்³ரஹணே சதுர்னவதிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-