வெற்றியைப் பறைசாற்றி அனைவரையும் கௌரவித்த கிருஷ்ணன்.
வைஷ²ம்பாயன உவாச
தத꞉ ஸம்பூஜ்ய க³ருட³ம் வாஸுதே³வோ(அ)னுமான்ய ச |
ஸகி²வச்சோபக்³ருஹ்யைனமனுஜஜ்ஞே க்³ருஹம் ப்ரதி ||2-100-1
ஸோ(அ)னுஜ்ஞாதோ ஹி ஸத்க்ருத்ய ப்ரணம்ய ச ஜனார்த³னம் |
ஊர்த்⁴வமாசக்ரமே பக்ஷீ யதே²ஷ்டம் க³க³னேசர꞉ ||2-100-2
ஸ பக்ஷவாதஸங்க்ஷுப்³த⁴ம் ஸமுத்³ரம் மகராலயம் |
க்ருத்வா வேகே³ன மஹதா யயௌ பூற்வமஹோத³தி⁴ம் ||2-100-3
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்} கருடனைத் தன் நண்பனைப் போல மதித்துத் தன் வீட்டிற்கு அழைத்துச சென்றான்.(1) வானுலாவுபவனான அந்தப் பறவையானவன் {கருடன்} வாசுதேவனை வணங்கி விடைபெற்று வானத்தில் எழுந்தான்.(2) அந்நேரத்தில் அந்தப் பறவையானவன் தன் சிறகுகளை அடித்து உண்டான காற்றின் மூலம் மகரங்களின் வசிப்பிடமான பெருங்கடலை மொத்தமாகக் கலக்கியபடியே கிழக்கு கடலை நோக்கிச் சென்றான்.(3)
க்ருத்யகாலே உபஸ்தா²ஸ்ய இத்யுக்த்வா க³ருடே³ க³தே |
க்ருஷ்ணோ த³த³ர்ஷ² பிதரம் வ்ருத்³த⁴மானகது³ந்து³பி⁴ம் ||2-100-4
உக்³ரஸேனம் ச ராஜானம் ப³லதே³வம் ச ஸாத்யகிம் |
காஷ்²யம் ஸாந்தீ³பனிம் சைவ ப்³ரஹ்மகா³ர்க்³யம் ததை²வ ச ||2-100-5
அன்யாம்ஷ்²ச வ்ருத்³தா⁴ன்வ்ருஷ்ணீனாம் தாம்ஷ்²ச போ⁴ஜாந்த⁴காம்ஸ்ததா² |
ரத்னப்ரவேகைர்தா³ஷா²ர்ஹான்வீர்யலப்³தை⁴ஸ்ததா²ர்சயத் ||2-100-6
அந்த வினதையின் மகன்(கருடன்}, “பணி நேரும் காலத்தில் மீண்டும் வருவேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். கிருஷ்ணன், முதியவனான தன் தந்தை ஆனகதுந்துபிக்கும் {வசுதேவனுக்கும்},(4) மன்னன் உக்ரசேனன், பலதேவன், சாத்யகி, சாந்தீபனி, பிராமணர் கார்க்கியர் ஆகியோருக்கும்,(5) விருஷ்ணி, அந்தக, போஜ குலங்களைச் சேர்ந்த பிறருக்கும் தன் ஆற்றலின் மூலம் அடைந்த ரத்தினங்களைக் கொடுத்தான்.(6)
ஹதா ப்³ரஹ்மத்³விஷ꞉ ஸர்வே ஜயந்த்யந்த⁴கவ்ருஷ்ணய꞉ |
ரணாத்ப்ரதிநிவ்ருத்தோ(அ)யமக்ஷதோ மது⁴ஸூத³ன꞉ ||2-100-7
இதி சத்வரரத்²யாஸு த்³வாரவத்யாம் ஸுபூஜித꞉ |
சாக்ரிகோ கோ⁴ஷயாமாஸ புருஷோ ம்ருஷ்டகுண்ட³ல꞉ ||2-100-8
“பிராமணர்களின் பகைவர்கள் கொல்லப்பட்டனர். மதுசூதனர் போர்க்களத்தில் இருந்து தீங்கேதுமின்றித் திரும்பிவிட்டார். விருஷ்ணிகளும், அந்தகர்களும் வெற்றியடைந்தனர்”(7) என்று காது குண்டலங்களாலும், மலர்மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டவர்களாக இருந்த தூதர்கள், துவாரகையின் குறுக்கு சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் பறைசாற்றி அறிவித்தனர்.(8)
தத꞉ ஸாந்தீ³பனிம் பூர்வமபி⁴க³ம்ய ஜனார்த³ன꞉ |
வவந்தே³ வ்ருஷ்ணிந்ருபதிமாஹுகம் வினயான்வித꞉ ||2-100-9
ததா² ஹி பரிபூர்ணாக்ஷமானந்தா³க³தசேதஸம் |
வவந்தே³ ஸஹ ராமேண பிதரம் வாஸவானுஜ꞉ ||2-100-10
உபக³ம்ய ததா² ஷே²ஷான்ஸத்க்ருத்ய ச யதா²ர்ஹத꞉ |
ஸர்வேஷாம் நாம ஜக்³ராஹ தா³ஷா²ர்ஹாணாமதோ⁴க்ஷஜ꞉ ||2-100-11
தத꞉ ஸர்வாணி தி³வ்யானி ஸர்வரத்னமயானி ச |
ஆஸநாக்³ர்யாணி விவிஷு²ருபேந்த்³ரப்ரமுகா²ஸ்ததா³ ||2-100-12
ததஸ்தத்³த⁴னமக்ஷய்யம் கிங்கரைர்யத்ஸமாஹ்ருதம் |
தத்ஸபா⁴மானயாமாஸு꞉ புருஷா꞉ க்ருஷ்ணஷா²ஸனாத் ||2-100-13
தத꞉ ஸம்மானயாமாஸ தா³ஷா²ர்ஹாம்ஷ்²ச யதூ³த்தம꞉ |
ஸர்வாந்து³ந்து³பி⁴ஷ²ப்³தே³ன பூஜயிஷ்யஞ்ஜனார்த³ன꞉ ||2-100-14
சாந்தீபனியை முதலில் வணங்கிய ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அதன்பிறகு மன்னன் ஆஹுகனை {உக்ரசேனனை} பணிவுடன் வணங்கினான்.(9) ராமனுடன் {பலராமனுடன்} கூடியவனான வாசவனின் தம்பி {கிருஷ்ணன்}, கண்களில் கண்ணீருடன் மகிழ்ச்சியால் இதயம் நிறைந்திருந்த தன் தந்தையை வணங்கினான்.(10) அதன் பிறகு தாசார்ஹர்களை அணுகிய அதோக்ஷஜன் {கிருஷ்ணன்} அவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து அவர்கள் அனைவரையும் கௌரவித்தான்.(11) ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, பண்பட்டவையான இந்தப் பழக்கவழக்கங்களை வெளிக்காட்டியபிறகு, உபேந்திரனின் தலைமையிலான யாதவர்கள அனைவரும் அனைத்து வகை ரத்தினங்களும் பதிக்கப்பட்ட தெய்வீக அரியணைகளில் அமர்ந்தனர்.(12) அதன் பிறகு கிருஷ்ணனின் ஆணையின் பேரில் நரகனின் பணியாட்கள் {கிங்கரர்கள்} செல்வங்களையும், தங்களால் முன்பே கொண்டு வரப்பட்ட சபாமண்டபத்தையும் அங்கே கொண்டு வந்தனர்.(13) அப்போது யதுக்களில் முதன்மையான ஜனார்த்தனன், துந்துபி ஒலியை இசைத்துத் தாசார்ஹர்கள் அனைவரையும் கௌரவித்தான்.(14)
தாமாஸனவதீம் ரம்யாம் மணிவித்³ருமதோரணாம் |
ஸபா⁴ம் ஸர்வத³ஷா²ர்ஹாஸ்தே விவிஷு²꞉ க்ருஷ்ணஷா²ஸனாத் ||2-100-15
தத꞉ புருஷஸிம்ஹைர்யா யது³பி⁴꞉ ஸர்வதோ வ்ருதா |
ஸர்வார்த²கு³ணஸம்பன்னா ஸா ஸபா⁴ ப⁴ரதர்ஷப⁴ |
ஷு²ஷு²பே⁴(அ)ப்⁴யதி⁴கம் ஷு²ப்⁴ரா ஸிம்ஹைர்கி³ரிகு³ஹா யதா² ||2-100-16
ராமேண ஸஹ கோ³விந்த³꞉ காஞ்சனம் மஹதா³ஸனம் |
உக்³ரஸேனம் புரஸ்க்ருத்ய போ⁴ஜவ்ருஷ்ணிபுரஸ்க்ருத꞉ ||2-100-17
தத்ரோபவிஷ்டாம்ஸ்தான்வீரான்யதா²ப்ரீதிர்யதா²வய꞉ |
ஸமாபா⁴ஷ்²ய யது³ஷ்²ரேஷ்டா²னுவாச புருஷோத்தம꞉ ||2-100-18
அதன்பிறகு, கிருஷ்ணனின் ஆணையின் பேரில், ரத்தினமயமான இருக்கைகளையும், வாயிலையும் கொண்ட அந்த அழகிய சபா மண்டபத்திற்குள் தாசார்ஹர்கள் நுழைந்தனர்.(15) முன்னணி யது தலைவர்களால் நிறைந்த அந்தச் சபா மண்டபமானது சிங்கங்கள் வசிக்கும் மலைக்குகைகளைப் போல அழகாகவும், சிறப்பாகவும் ஒளிர்ந்தது.(16) விருஷ்ணிகளாலும், போஜர்களாலும் பின்தொடரப்பட்ட கோவிந்தன் தன் முன் உக்ரசேனனை வைத்துக் கொண்டு ஒரு பெரும் தங்க இருக்கையில் ராமனுடன் அமர்ந்தான்.(17) புருஷர்களில் முதன்மையான அவன் {கிருஷ்ணன்}, வயதுக்கேற்ற வரிசையில் அங்கே அமர்ந்திருந்த யது குல தலைவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினான்” என்றார் {வைசம்பாயனர்}.(18)
இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஸபா⁴ப்ரவேஷ²னம் நாம ஷ²ததமோ(அ)த்⁴யய꞉
————–—————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply