Archive for the ‘ஸ்ரீ ராமானுஜர்’ Category

ஸ்ரீ யதிராஜ ஸ்தோத்திரம் — ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தரம் —

September 7, 2022

ஸ்ரீ யதிராஜ ஸ்தோத்திரம்

காஷாயாம்பர கவிசத சாத்ரம் கவிதக மண்டலு தண்ட பவித்ரம்
வித்ரு தசிகா ஹரினாஜன சூத்ரம் வ்யாக்யதா த்வைபாயன சூத்ரம் – (பஜ யதி ராஜம்)

காஷாய வஸ்திரத்தினால் சாத்திக் கொள்ளப்பட்ட திருமேனியை உடையவரும். கமண்டலத்தையும் திரி தண்டத்தையும்,
திரி தண்டத்துக்கு மேல் பாகத்தில் உள்ள வஸ்திர விசேஷத்தை உடையவரும், சிவிகையை உடையவரும்,
மான் தோல் முகம் கொண்ட யஞ்ஞோப வீதத்தை உடையவரும் த்வைபாயனர் என்று சொல்லும்பாடியான
வ்யாசர் அருளிய ப்ரஹ்ம ஸூத்திரங்கட்கு வ்யாக்யானம் செய்தவரான
எதிராஜரை ஜெபியுங்கள் என்று வடுக நம்பிகள் வம்சத்தவரானவரும், மிதுன கால இராம வாசியான ரங்காச்சாரியார்
தாம் அருளிச் செய்த பஜ யதிராஜ ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்

————–

 

ஸ்ரீ ப⁴ஜ யதிராஜ ஸ்தோத்ரம்

ஶ்ரீரங்கே³ஶய ஜயாஶ்ரயகேது: ஶ்ரித ஜந ஸம் ரக்ஷண ஜீவாது: ।
ப⁴வப⁴யஜலதே⁴ரேவ ஹி ஸேது: பத்³மாநேது: ப்ரணதௌ ஹேது: ॥ 1॥

ப⁴ஜ யதிராஜம் ப⁴ஜ யதிராஜம் ப⁴ஜ யதிராஜம் ப⁴வபீ⁴ரோ ।
ப⁴ஜ யதிராஜம் ப⁴ஜ யதிராஜம் ப⁴ஜ யதிராஜம் ப⁴வபீ⁴ரோ ॥ ப⁴ஜ யதிராஜம் …

ஆதௌ³ ஜக³தா³தா⁴ர: ஶேஷ: தத³நு ஸுமித்ராநந்த³நவேஷ: ।
தது³பரி த்⁴ரு’தஹலமுஸலவிஶேஷ: தத³நந்தரமப⁴வத்³கு³ருரேஷ: ॥ 2॥ ப⁴ஜ யதி ராஜம்

பு⁴ங்க்தே வைஷயிகம் ஸுக²மந்ய: ப்ரசகாஸ்த்யேவ அநஶ்நந்நந்ய: ।
இதி யஸ்தத்வம் ப்ராஹ வதா³ந்ய: தஸ்மாத³தி⁴க: கோ நு வதா³ந்ய: ॥ 3॥ ப⁴ஜ யதிராஜம்

நஷ்டே நயநே கஸ்யாலோக: சித்தே மத்தே கஸ்ய விவேக: ।
க்ஷீணே புண்யே க: ஸுரலோக: காமே தூ⁴தே கஸ்தவ ஶோக: ॥ 4॥ ப⁴ஜ யதிராஜம் …

நிஶி வநிதாஸுக²நித்³ராலோல: ப்ராத: பரதூ³ஷணபடுஶீல: ।
அந்தர்யாதி நிஜாயுஷ்கால: கிம் ஜாநாதி நர: பஶுலீல: ॥ 5॥ ப⁴ஜ யதிராஜம்

கேசில்லீலாலாலஸக³தய: கேசித்³பா³லாலாலிதரதய: ।
கேசித்³தோ³லாயிதஹமதய: கேऽபி ந ஸந்த்யர்சிதயதிபதய: ॥ 6॥ ப⁴ஜ யதிராஜம் …

யாவாநப³லோ ஜரயா தே³ஹ: தாவாந் ப்ரப³லோ விஷயே மோஹ: ।
வசஸி விரக்தி: ஶ்ருதிபரிவாஹ: மநஸி ஹிதஸ்த்வபரோऽபி விவாஹ: ॥ 7॥ ப⁴ஜயதிராஜம்

கலுஷநிகாயம் லலநாகாயம் பஶ்யந்முஹ்யஸி ஸாயம் ஸாயம் ।
ஜஹி ஜஹி ஹேயம் தத்³வ்யவஸாயம் ஸ்மர நிரபாயம் சரமோபாயம் ॥ 8॥ ப⁴ஜ யதிராஜம்

ராத்ரிந்தி³வமபி பி⁴க்ஷாசர்யா கலஹாயைவாக³ச்ச²தி பா⁴ர்யா ।
மத்⁴யே பா³ந்த⁴வஸேவா கார்யா கத²ய கதா³ தவ தே³வஸபர்யா ॥ 9॥ ப⁴ஜ யதிராஜம்

அந்த⁴ம் நயநம் பூ⁴மௌ ஶயநம் மந்த³ம் வசநம் மலிநம் வத³நம் ।
தஸ்மிந் காலே கோ³ப்தும் ஸத³நம் வாஞ்ச²ஸி த³த்ததநூஜாநயநம் ॥ 10॥ ப⁴ஜ யதிராஜம்

தாலச்ச²த³க்ரு’தகுப்³ஜகுடீர: ப்ரதிக்³ரு’ஹஸந்த்⁴யாகப³லாஹார: ।
விவித⁴படச்சரபா⁴ர: க்ரூர: ஸோऽபி விதா⁴த்ரு’ஸமாஹங்கார: ॥ 11॥ ப⁴ஜ யதிராஜம்

மந்த்ரத்³ரவ்யவிஶுத்³தோ⁴ யாக:³ ஸர்வாரம்ப⁴விராக³ஸ்த்யாக:³ ।
கர்தும் ஶக்யோ ந கலௌ யோக:³ கிந்து யதீஶகு³ணாம்ரு’தபோ⁴க:³ ॥ 12॥ ப⁴ஜ யதிராஜம்

உபரி மஹோபலவர்ஷாஸாரோ மார்கே³ கண்டககர்த³மபூர: ।கக்ஷே பா⁴ர: ஶிரஸி கிஶோர: ஸுக²யதி கோ⁴ர: கம் ஸம்ஸார: ॥ 13॥ ப⁴ஜ யதிராஜம்

ப⁴ஜஸி வ்ரு’தா² விஷயேஷு து³ராஶாம் விவித⁴விசித்ரமநோரத²பாஶாம் ।
கியத³பி லப⁴ஸே ந ஹி தத்ரைகம் கிந்து வ்ரஜஸி மஹாந்தம் ஶோகம் ॥ 14॥ ப⁴ஜ யதிராஜம்

கஶ்சந லோகே கரபுடபாத்ர: பாதும் ஸுதமாஶ்ரிதமட²ஸத்ர: ।
தஸ்மிந்வ்ரு’த்³தே⁴ தம் ஸகலத்ர: ஶபதி ஹி ரண்டா³ஸுத இதி புத்ர: ॥ 15॥ ப⁴ஜ யதிராஜம்

மநுஜபதிம் வா தி³க³தி⁴பதிம் வா ஜலஜப⁴வம் வா ஜக³த³தி⁴பம் வா ।
மமதாஹங்க்ரு’திமலிநோ லோகோ நிந்த³தி நிந்த³தி நிந்த³த்யேவ ॥ 16॥ ப⁴ஜ யதிராஜம்

பாபஹதோ வா புண்யயுதோ வா ஸுரநரதிர்யக்³ஜாதிக³தோ வா ।
ராமாநுஜபத³தீர்தா²ந்முக்திம் விந்த³தி விந்த³தி விந்த³த்யேவ ॥ 17॥ ப⁴ஜ யதிராஜம்

கு³ணகு³ணிநோர்பே⁴த:³ கில நித்ய: சித³சித்³த்³வயபரபே⁴த:³ ஸத்ய: ।
தத்³த்³வயதே³ஹோ ஹரிரிதி தத்த்வம் பஶ்ய விஶிஷ்டாத்³வைதம் தத்த்வம் ॥ 18॥ பஜ யதிராஜம்

யதிபதிபத³ஜலக³ணிகாஸேக: சதுரக்ஷரபத³யுக்³மவிவேக: ।
யஸ்ய து ஸாலநக³ர்யவலோக: தஸ்ய பதே³ந ஹதோ யமலோக: ॥ 19॥ ப⁴ஜ யதிராஜம்

சிந்தய ஸர்வம் சித³சித்³ரூபம் தநுரிதி தஸ்ய ஹரேரநுரூபம் ।
தஸ்மாத் கஸ்மிந்கலயஸி கோபம் பஶ்சாத்³ப⁴ஜஸி து³ராபம் தாபம் ॥ 20॥ ப⁴ஜ யதிராஜம்

யஶ்சதுரக்ஷரமந்த்ரரஹஸ்யம் வேத³ தமேவ வ்ரு’ணீஹி ஸத³ஸ்யம் ।
தச்சரணத்³வயதா³ஸ்யமுபாஸ்யம் தத்³விபரீதம் மதமபஹாஸ்யம் ॥ 21॥ ப⁴ஜ யதிராஜம்

வைஷ்ணவகுலகு³ணதூ³ஷணசிந்தாம் மா குரு நிஜகுலஶீலாஹந்தாம் ।
யதிபதிரேவ ஹி கு³ருரேதேஷாமிதி ஜாநீஹி மஹத்வம் தேஷாம் ॥ 22॥ ப⁴ஜ யதிராஜம்

ஸுமஸுகுமாரம் ஶோபி⁴தமாரம் ரதிஸுக²ஸாரம் யுவதிஶரீரம் ।
க³தஜீவிதமதிகோ⁴ரவிகாரம் த்³ரு’ஷ்ட்வா க³ச்ச²ஸி தூ³ரம் தூ³ரம் ॥ 23॥ ப⁴ஜ யதிராஜம்

வித்³யாநிபுணா வயமித்யந்யே ஹ்ரு’த்³யா த⁴நிநோ வயமித்யந்யே ।
ஸத்குலஜாதா வயமித்யந்யே தேஷு கலிம் பரிபூர்ணம் மந்யே ॥ 24॥ ப⁴ஜ யதிராஜம்

யமகிங்கரகரமூலே ஶூலே பதத³பி⁴யாதி ஹி பா²லே பா²லே ।
த³ஹதி தநும் ப்ரதிகூலே காலே கம் ரமயஸி தத்காலே பா³லே ॥ 25॥ ப⁴ஜ யதிராஜம்

நரவாஹநக³ஜதுரகா³ரூட்:³ஆ: நாரீஸுதபோஷணகு³ணமூடா:⁴ ।
நாநாரஞ்ஜகவித்³யாப்ரௌடா:⁴ நாக³ரிகா: கிம் யதயோ மூடா:⁴ ॥ 26॥ ப⁴ஜ யதிராஜம்

யஸ்ய முக²ஸ்தா² யதிபதிஸூக்தி: தஸ்ய கரஸ்தா² விலஸதி முக்தி: ।
நரகே பதிதம் நவநவயுக்தி: நஹி ரக்ஷதி ஸாமாந்யநிருக்தி: ॥ 27॥ ப⁴ஜ யதிராஜம் …

ஶ்ருதிஶிரஸாமத்யந்தவிதூ³ஷ்யம் ஸூத்ராநபி⁴மதமதிவைது³ஷ்யம் ।
ப்ரத²மம் மங்க³ளமந்ரு’தவிஶேஷ்யம் ப்ரலபஸி கிம் ப்ராக்ரு’தக்ரு’தபா⁴ஷ்யம் ॥ 28॥ப⁴ஜ யதிராஜம் …

தஸ்கரஜாரவிதூ³ஷகதூ⁴ர்தா மஸ்கரிமௌநிதி³க³ம்ப³ரவ்ரு’த்தா: ।
கு³ப்தத⁴நீக்ரு’த த⁴நமத³மத்தா: கு³ரவ: கிம் பரவஞ்சகசித்தா: ॥ 29॥ ப⁴ஜ யதிராஜம்

காந்திமதீஸுகுமாரகுமாரம் கேஶவயஜ்வகிஶோரமுதா³ரம் । யஜ்வ பாட²பே⁴த³ஸிம்ஹ
ராமாநுஜமஹிராட³வதாரம் மூகாந்தா⁴நபி மோக்ஷயிதாரம் ॥ 30॥ ப⁴ஜ யதிராஜம் …

காஷாயாம்ப³ரகவசிதகா³த்ரம் கலிதகமண்ட³லுத³ண்ட³பவித்ரம் ।
வித்⁴ரு’தஶிகா²ஹரிணாஜிநஸூத்ரம் வ்யாக்²யாதத்³வைபாயநஸூத்ரம் ॥ 31॥ ப⁴ஜ யதிராஜம் …

யாமுநபூர்ணக்ரு’போஜ்ஜ்வலகா³த்ரம் ராமாப்³ஜாக்ஷமுநீக்ஷணபாத்ரம் ।
கோமலஶட²ரிபுபத³யுக³மாத்ரம் ஶ்ரீமாத⁴வஸேநாபதிமித்ரம் ॥ 32॥ ப⁴ஜ யதிராஜம் …

ஸாலக்³ராமே ஸர்வஹிதார்த²ம் யேநாஸ்தா²பி கு³ரோ: பத³தீர்த²ம் ।
தத்குலதை³வதஹிதபுருஷார்த²ம் ஸகலோபாயாதி⁴கசரமார்த²ம் ॥ 33॥ ப⁴ஜ யதிராஜம் …

ப்ரவசநஸக்த: ப்ரஜ்ஞாயுக்த: பரஹிதஸக்த: பரமவிரக்த: ।
நாநாதை³வதப⁴க்த்யா யுக்த: ந ப⁴வதி முக்தோ ப⁴வதி ந முக்த: ॥ 34॥ ப⁴ஜ யதிராஜம்

ஸந்த்யஜ ஸகலமுபாயாசரணம் வ்ரஜ ராமாநுஜசரநௌ ஶரணாம் ।
பஶ்யஸி தமஸ: பாரம் நித்யம் ஸத்யம் ஸத்யம் புநரபி ஸத்யம்॥ 35॥ ப⁴ஜ யதிராஜம்

ப⁴க³வத்³ராமாநுஜஷட்த்ரிம்ஶ: ஸாலக்³ராமகு³ரூத்தமவம்ஶ்ய: ।
கௌண்டி³ந்ய: கவிராஹ பவித்ரம் ரங்கா³ர்யோ யதிராஜஸ்தோத்ரம் ॥ 36॥ ப⁴ஜ யதிராஜம் …

இதி யதிராஜஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

——————-

ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்ரம்–

ஸ்ரீ ராமானுஜ புஷ்கராஷோ யதீந்திர கருணாகர
காந்திமத்யாத்மஜா ஸ்ரீ மான் லீலா மானுஷ விக்ரஹ –1-

சர்வ சாஸ்திர தத்வஜ்ஞ சர்வஜ்ஞ சஜ்ஜனப்ரிய
நாராயண க்ருபா பாத்ர ஸ்ரீ பூத புர நாயக –2

அநகோ பக்த மனதார கேசவா நந்த வர்த்தன
காஞ்சி பூர்ணப்ரிய சக ப்ரணரார்த்தி விநாசன –3

புண்ய சங்கீர்த்தன புண்யோ ப்ரஹ்ம ராஷச மோசக
யாதவ பாதிதா பார்த்த வ்ருஷச் சேதகுடாரக –4

அமோகோ லஷ்மண முனி சாரதா சோக நாசன
நிரந்தர மநாஜ்ஞான நிர்மோசன விசஷண–5

வேதாந்த த்வய சாரஜ்ஞோ வரதாம்புப்ர தாயக
பராபிப்ராய தத்வஜ்ஞ யாமு நாங்குலி மோசக –6

தேவராஜா க்ருபா லப்த ஷட்வாக்யார்த்த மஹோததி
பூர்ணார்ய லப்த சந்மந்த்ரா சௌரி பாதாப்ஜ ஷட்பத –7

த்ரிதண்ட தாரி ப்ரஹ்மஜ்ஞோ ப்ரஹ்ம ஜ்ஞான பராயண
ரங்கேச கைங்கர்யயுத விபூதித்வ்ய நாயக –8

கோஷ்டீ பூர்ண க்ருபா லப்த மந்த்ரராஜ ப்ரகாசக
வர ரங்காநுகம்பாத்த த்ரவிடாம் நாய பாரக –9

மாலாதரார்ய ஸூஜ்ஞாத த்ராவிடாம் நாயா தத்வதீ
சதுஸ் சப்ததி சிஷ்ட்யாபஞ்சாசார்யா பதாச்ரய–10

பிரபீத விஷதீர்த்தாம்ப ப்ரகடீ க்ருதவைபவ
பிரணதார்த்தி ஹராசார்யா தந்த பிஷைக போஜன –11

பவீத்ரா கருத கூரேசோ பாகி நேயத்ரி தண்டக
கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயக –12-

ரங்கேச வேங்கடேசாதி ப்ரகடீ க்ருத வைபவ
தேவ ராஜார்ச்ச நர்த மூக முக்தி ப்ரதாயக –13-

யஜ்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாதா மந்த்ரதோ தரணீதர
வரதாசார்ய சத்பக்தோ யஜ்ஞே சார்த்தி விநாசக -14

அனந்தாபீஷ்ட பலதோ விடலேந்திர ப்ரபூஜீத
ஸ்ரீ சைல பூர்ண கருணா லப்த ராமாயணார்த்தக –15

வ்யாச ஸூத்ரார்த்த தத்வஜ்ஞ போதாயன மதாநுக
ஸ்ரீ பாஷ்யாமி மஹாக்ரந்த காரக கலி நாசன –16

அத்வைத மத விச்சேத்தா விசிஷ்டாத்வைத பாரக
குரங்க நகரீ பூர்ணம்ந்திர ரத்நோபதேசக –17

விநா சிதாகிலமத சேஷீ க்ருத ரமாபதி
புத்ரீ க்ருத சடாராதி சடஜித் குணகோசக 18-

பாஷா தத்த ஹயக்ரீவோ பாஷ்யகாரோ மகாயச
பவித்ரீ கருட பூ பாக கூர்ம நாத ப்ரகாசக –19-

ஸ்ரீ வேங்கடாசலாதீச சங்கு சக்ர ப்ரதாயக
ஸ்ரீ வெங்கடேச ச்வசுர ஸ்ரீ ராமசக தேசிக –20

க்ருபாமாத்ர ப்ரசன்னார்யோ கோபிகா மோஷ தாயக
சமீசீ நார்ய சச்சிஷ்ய சத்க்ருதோ வைஷ்ணவ ப்ரிய–21

க்ருமிகண்ட ந்ருபத்வம்சீ சர்வமந்திர மஹோததி
அங்கீ க்ருதாந்திர பூர்ணாய சாலக்ராம ப்ரதிஷ்டித –22

ஸ்ரீ பக்தக்ராம பூர்ணேச விஷ்ணு வர்த்தன ரஷக
பௌத்தத் வாந்த சஹாஸ்ராம்சு சேஷ ரூபப்ரதர்சக -23

நகரீ க்ருத வேதாத்ரி டில்லீச்வர சமர்ச்சித்த
நாராயண ப்ரடிஷ்டாதா சம்பத்புத்ர விமோசக–24

சனத்குமார ஜனக சாது லோக சிகாமணி
ஸூ ப்ரதிஷ்டித கோவிந்த ராஜ பூர்ண மநோரத–25

கோதாக்ரஜோ திகவிஜேதா கோதா பீஷ்டப்ரபூராக
சர்வ சம்சய விச்சேத்தா விஷ்ணு லோக ப்ரதாயக –26

அவ்யாஹத மஹத்வர்த்மா யதிராஜோ ஜகத்குரு
ஏவம் ராமானுஜர்யஸ்ய நாம் நாமஷ்டோத்தரம் சதம் –27

யா படத் ச்ருணுயாத்வாபி சர்வான் காமான் அவாப்நுயாத்
யதாந்த்ர பூர்ணேந மஹாத்ம நேதம் ஸ்தோத்ரம் க்ருதம் சர்வஜநாவநாய
தஜ்ஜீவ பூதம் புவி வைஷ்ணவா நாம் பபூவ ராமானுஜ மாநசானாம்-

———————-

ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தரம்

ஸ்ரீ இராமாநுஜாய நம:
ஓம் புஷ்கராக்ஷாய நம:
ஓம் யதீந்த்ராய நம:
ஓம் கருணாகராய நம:
ஓம் காந்திமத்யாத்மஜாய நம:

ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் லீலாமானநுஷ விக்ரஹாய நம:
ஓம் ஸர்வயாஷ்த்ரார்த்த தத்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸஜ்ஜநப்ரியாய நம:

ஓம் நாராயண க்ருபாபாத்ராய நம:
ஓம் ஸ்ரீ பூதபுர நாயகாய நம:
ஓம் அநகாய நம:
ஓம் பக்தமந்தாராய நம:
ஓம் கேஸவாநந்த வர்தநாய நம:

ஓம் காஞ்சீபூர்ண ப்ரியஸகாய நம:
ஓம் ப்ரணதார்த்திவிநாயநாய நம:
ஓம் புண்யஸங்கீர்த்தநாய நம:
ஓம் புண்யாய நம:
ஓம் ப்ரஹ்மராக்ஷஸ மோசகாய நம:

ஓம் யாதயா பாதிதா பார்த்த வ்ருக்ஷச் சேத குடாகாய நம:
ஓம் அமோகாய நம:
ஓம் லக்ஷ்மணமுநயே நம:
ஓம் ஸாரதா யோகநாயகாய நம:
ஓம் நிரந்தர ஜநாஜ்ஞாத நிர் மோசந நம:

ஓம் விசஷணாய நம
ஓம் வேதாந்த த்வய சாரஜ்ஞாய நம
ஓம் வரதாம்புப்ர தாயகாய நம
ஓம் பராபிப்ராய தத்வஜ்ஞாய நம
ஓம் யாமு நாங்குலி மோசகாய நம

ஓம் தேவராஜா க்ருபா லப்த ஷட்வாக்யார்த்த மஹோததி
பூர்ணார்ய லப்தாய நம
ஓம் சந்மந்த்ரா சௌரி பாதாப்ஜ ஷட்பதாய நம
ஓம் த்ரிதண்ட தாரயே நம
ஓம் ப்ரஹ்மஜ்ஞாய நம

ஓம் ப்ரஹ்ம ஜ்ஞான பராயணாய நம
ஓம் ரங்கேச கைங்கர்யயுத விபூதி த்வ்ய நாயகாய நம
ஓம் கோஷ்டீ பூர்ண க்ருபா லப்த மந்த்ரராஜ ப்ரகாசகாய நம
ஓம் வர ரங்காநுகம்பாத்தாய நம
ஓம் த்ரவிடாம் நாய பாரகாய நம

ஓம் மாலாதரார்ய ஸூஜ்ஞாத த்ராவிடாம் நாயா தத்வதீயா நம
ஓம் சதுஸ் சப்ததி சிஷ்ட்யாய நம
ஓம் பஞ்சாசார்யா பதாச்ரயா நம
ஓம் பிரபீத விஷதீர்த்தாம்பாய நம
ஓம் ப்ரகடீ க்ருதவைபவாய நம

ஓம் பிரணதார்த்தி ஹராசார்யா தந்த பிஷைக போஜனாய நம
ஓம் பவீத்ரா கருதாய நம
ஓம் கூரேசோ பாகி நேயத்ரி தண்டகாய நம
ஓம் கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயகாய நம

ஓம் ரங்கேச வேங்கடேசாதி ப்ரகடீ க்ருத வைபவாய நம
ஓம் தேவ ராஜார்ச்ச நர்த மூகாய நம
ஓம் முக்தி ப்ரதாயகாய நம

ஓம் யஜ்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாதா மந்த்ரதயா நம
ஓம் தரணீதராய நம
ஓம் வரதாசார்ய சத் பக்தாய நம
ஓம் யஜ்ஞே சார்த்தி விநாசகாய நம

ஓம் அனந்தாபீஷ்ட பலதாய நம
ஓம் விடலேந்திர ப்ரபூஜீதாய நம
ஓம் ஸ்ரீ சைல பூர்ண கருணா லப்த ராமாயணார்த்தகாய நம
ஓம் வ்யாச ஸூத்ரார்த்த தத்வஜ்ஞ போதாயன மதாநுக
ஸ்ரீ பாஷ்யாமி மஹாக்ரந்த காரக கலி நாசனாய நம

ஓம் அத்வைத மத விச்சேத்தாய நம
ஓம் விசிஷ்டாத்வைத பாரகாய நம
ஓம் குரங்க நகரீ பூர்ணம்ந்திர ரத்நோபதேசகாய நம
ஓம் விநா சிதாகிலமதாய நம
ஓம் சேஷீ க்ருத ரமாபதி புத்ரீ க்ருத சடாராதி சடஜித் குணகோசகாய நம

ஓம் பாஷா தத்த ஹயக்ரீவாய நம
ஓம் பாஷ்யகாரோ மகா யசாய நம
ஓம் பவித்ரீ கருட பூ பாக கூர்ம நாத ப்ரகாசகாய நம
ஓம் ஸ்ரீ வேங்கடாசலாதீச சங்கு சக்ர ப்ரதாயகாய நம
ஓம் ஸ்ரீ வெங்கடேச ஸ்வசுராய நம

ஓம் ஸ்ரீ ராமசக தேசிகாய நம
ஓம் க்ருபாமாத்ர ப்ரசன்னார்யாய நம
ஓம் கோபிகா மோஷ தாயக சமீசீ நார்யாய நம
ஓம் சச் சிஷ்ய சத்க்ருதாய நம
ஓம் வைஷ்ணவ ப்ரிய–

ஓம் க்ருமிகண்ட ந்ருப த்வம்சீ யாய நம
ஓம் சர்வமந்திர மஹோததி அங்கீ க்ருதாந்திர பூர்ணாய நம
ஓம் சாலக்ராம ப்ரதிஷ்டித
ஓம் ஸ்ரீ பக்த க்ராம பூர்ணேசாய நம
ஓம் விஷ்ணு வர்த்தன ரஷகாய நம

ஓம் பௌத்தத் வாந்த சஹாஸ்ராம்சு சேஷ ரூப ப்ரதர்சகாய நம
ஓம் நகரீ க்ருத வேதாத்ரி டில்லீச்வர சமர்ச்சித்த நாராயண ப்ரடிஷ்டாதாய நம
ஓம் சம்பத் புத்ர விமோசகாய நம

ஓம் சனத்குமார ஜனகாய நம
ஓம் சாது லோக சிகாமணியாய நம
ஓம் ஸூ ப்ரதிஷ்டித கோவிந்த ராஜயா நம
ஓம் பூர்ண மநோரத கோதாக்ரஜாய நம
ஓம் திக் விஜேதாய நம

ஓம் கோதா பீஷ்டப்ரபூராகாய நம
ஓம் சர்வ சம்சய விச்சேத்தாய நம
ஓம் விஷ்ணு லோக ப்ரதாயகாய நம

ஓம் அவ்யாஹத மஹத்வர்த்மாய நம
ஓம் யதிராஜோ ஜகத்குரவே நம

ஸ்ரீ ராமானுஜர்யஸ்ய நாம் நாமஷ்டோத்தரம் சதம் ஸம் பூர்ணம்-

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வடுக நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீ நித்ய கிரந்தம் —

July 15, 2022

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த நவ கிரந்தகளுக்குள் இறுதியானது – ஸ்ரீ நித்ய கிரந்தம் -என்பது
ஸ்ரீ பகவத் ஆராதன ப்ரயோகம் வஷ்யே -பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன் -என்று தொடங்கி இருப்பதால்
இது பகவத் ஆராதன கிரமத்தைத் தெரிவிப்பதற்காகவே அருளிச் செய்யப் பெற்று இருந்தாலும்
அதற்குப் பூர்வ அங்கமாக உடலைச் சுத்தி செய்து கொள்வது முதலியனவும் இந்நூலில் முதலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளன

திருவாராதனம் செய்யும் முன்பு அவனை சரண் அடைய வேண்டும் என்பதால்
தமேவ சரணம் உப கச்சேத் அகில இத்யாதிநா -என்று இந்நூலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது
அகில ஹேய ப்ரத்ய நீக -என்பது முதலான சூர்ணிகைகளால் எம்பெருமானைச் சரண் அடைய வேண்டும் என்பதால்
அகில ஹேய ப்ரத்ய நீக என்பது தொடங்கி
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்பது வரையும்
அதற்கு மேல் உள்ள ஸ்லோகங்களையும் இங்கு அனுசந்திக்க வேண்டும் என்பர் பெரியோர்

தண்டம் சமர்ப்பித்து பற்றி ப்ரணம்ய – வணங்கி -என்று ஒருமையிலே அருளிச் செய்தமையால்
ஒரு முறை தண்டம் சமர்ப்பிப்பதே எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் என்பது தெளிவு
அதே போல் மணி சேவிப்பதையும் அருளிச் செய்யாமையால் இல்லங்களில் திரு வாராதனம் செய்யும் பொழுது மணி சேவிப்பது இல்லை என்ற அனுஷ்டானமும் காட்டப்படுகிறது –

இறுதியில்
ஸ்ருதி ஸூகைஸ் ஸ்தோத்ரைஸ் அபிஷ்டூய-செவிக்கு இனிய சொற்களால் ஸ்துதித்து -என்று அருளிச் செய்யப்பட்டுள்ளதால்
செவிக்கு இனிய செஞ்சொல் -திருவாய் -10-6-11-திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவிக்க வேணும் என்பதையும் காட்டி அருளுகிறார் –

————————-

ஸ்ரீ நித்ய கிரந்த சாரம் –

நித்யம் –பரமை காந்திகளுக்கு –
பகவத் ஆராதனை பிரகாரம் வஷ்யே-யாகம் –யஜ தேவ பூஜாயாம் -திருவாராதனம் –
பகவத் ப்ரீத்யர்த்தம் கைங்கர்ய ரூபம் -ஏகாந்தி -பரமை காந்தி – மானஸ காகித க்ருதவ்யங்கள் –
பஞ்ச கால பராயணம் –ஆறு நாழிகையாக பிரித்து –
பிராத காலம் – சங்கம காலம் -மத்தியான -அபரான காலம் -சாயங்காலம் –
அபி கமனம் –நோக்கி போவது – உபாதானம் -சேகரிப்பது -இஜ்ஜா யாகம் திருவாராதனம் -ஸ்வாத்யாயம் – யோக காலம் –
யானை -ராஜா -இளவரசன் -பிறந்த குழைந்தை -போன்ற பரிவுடன் -ப்ரீதி காரித கைங்கர்யம் -ரதி -ஆசை உடன் -பரமை காந்தி -பகவான் ஒருவனுக்கு சேஷ பூதன்
கல்யாணை
திரு உதரம் -ஆப்ய வகாரிகம் –அன்னம் பழங்கள் சமர்ப்பித்து – சம் ஸ்பர்சிக்கம் –சந்தனம் புஷபம்-
ஒவ்பசாரிகம் தூபம் தீபம் – அகில பரி ஜனங்களுக்கும் -ஸமஸ்த மங்கள பரிவாரங்கள் –
திரு மந்த்ரம் -சுத்தி –திக் பந்தனம் -திக்குகளுக்கு –
தீர்த்த பீடம் -உடம்பில் மண் பூசி -அநு லேபனம் -உதக அஞ்சலி -கங்கா ஜலம் இடது திருவடி கட்டை விரலில் வந்த தீர்த்தம் என்ற நினைவால் -சப்த -தடவை –
திருவடியில் தலை வைத்து -எதுவரை இயலுமோ அது வரை திரு மந்த்ரம் -சுக்ல வஸ்திரம் -பன்னிரு திருமண் -பெருமாள் தாயார் நினைத்து –
அஷ்டோஷார சதம் மூல மந்த்ரம் -ஸ்ரீ வைகுண்டம் பரிஷத் -தேவர்கள் ரிஷிகள் -யாக பூமிக்கு கச்சதி –
குரு பரம்பரை பூர்வகம் –த்வயம் -பிராபகம் பிராப்யம் அவனே -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ஸ்வரூபம் ரூபம் விபூதி குணம் ஐஸ்வர்யம் -அனுசந்தானம் –
ப்ரத்யக்ஷ ரூப அனுசந்தானம் -சர்வேஸ்வரஸ்வரம் -ஸ்வாமித்வம் –தாஸ்ய சித்திக்காக -அத்யந்த ப்ரீதி -ப்ரீதி காரித பரி பூர்ண கைங்கர்யம்
தன்னால் கொடுக்கப்பட்ட சரீரம் தானே விநியோகம் கொள்கிறான் –

சரீர சுத்தி பூத சுத்தி -மூல மந்த்ரம் வைத்து -ஸூ ஆத்மாநாம் -ஓம் இத் ஆத்மாநாம் உன்ஜீத -ஆத்மாவை பகவான் கட்டை விரலில் சமர்ப்பித்து –
ஆராதனை காலத்தில் பகவத் பிரசாதத்தால் -உயர்ந்த சரீரம் வழங்குவான் -அம்ருத மயம் -சர்வ கைங்கர்யம் பண்ணும் யோக்யதை –மானஸ வியாபாரம் –
ஸூரபி முத்திரை காட்டி –பரிகல்பயாமி -அர்க்யம் பாத்யம் ஆசமனீய ஸ்நாநீய வட்டில்கள் –ஸர்வார்த்த தோயம் -நடுவில் -பிரதி க்ரஹ பாத்திரம் படிகம் –
திரு ஒத்து வாடை சமர்ப்பித்து –
ஓம் ஆதார சக்தி நம கூர்ம ரூபி நம -பீடம் – ஸ்ரீ வைகுண்டாய திவ்ய மண்டபம் நம ஸ்ரீ பூமா நீளா -பத்னீ ஜனங்கள் ஆவாஹனம் –
க்ரீடாதி திவ்ய பூஷணங்கள் எல்லாம் நித்ய ஸூரிகள் –நினைவுடன் வணங்கி –
திவ்ய ஆயுதங்கள் -பஞ்சாயுதங்கள் -ஸ்பர்சம் கொண்டதால் பூரித்து உள்ள – -திரு அனந்த ஆழ்வான்-பெரிய திருவடி
ஸ்ரீ விஷ்வக் சேனர்–ஸூத்ரவதி சமேத -(ஏக பீடம் திரு மால் இரும் சோலை சேவை உண்டே -இருவருக்கும் )
கஜா முகன் தொடங்கி விஷ்வக் சேனர் பரிஜனம் -வாசல் காப்பார்களை வணங்கி –
குமுதாய -கோயில் காப்பார்கள் -ஸூ முகன் -ஸூ பிரதிஷ்டன் -போல்வார் -திவ்ய அவதார தேசங்கள் -நம் அர்ச்சை தானே அனைத்தாகவும்-
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன நியாமகன் –

மந்த்ராஸனம் -ஸ்நாநாசனம் -அலங்காராசனம் -போஜ்யாசனம் -புநர் மந்த்ராஸனம் -பர்யங்காசனம்
மூன்று வியாபக மந்த்ரங்கள் -அனுசந்தானம் -யதா சக்தி -சர்வ போக பூரணீம் -மாத்ரா பிரசாதம் -அதி ப்ரிய தரம் –

————–

ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் உள்ள விஷயங்கள்
1- பகவானே நம்மைக் கொண்டு திருவாராதனம் செய்வித்துத் கொள்கிறான் என்று அனுசந்தித்தல்
2-நீர் நிலைக்குச் சென்று தேஹ சுத்தி செய்து கொள்ளுதல்
3-தீர்த்தமாடுதல்
4-வேஷ்ட்டி உத்தரீயம் அணிந்து திருமண் காப்பு இட்டுக் கொள்ளுதல்
5-ஆதார சக்தி தர்ப்பணம் முதலியவை செய்தல்
6-குரு பரம்பரையை அனுசந்தித்து பிறகு அகில ஹேய ப்ரத்ய நீக என்பது முதலிய
சரணாகதி கத்ய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து எம்பெருமானைச் சரண் அடைதல்
7-எம்பெருமானுடைய வலது திருவடிகளில் புகுவதாக நினைத்தால்
8-ஆவாஹனங்கள் செய்து வட்டில் முதலியவற்றை வைத்தல்
9-எம்பெருமானுடைய பரிஜன பரிவாரங்களை வணங்குதல்
10- எம்பெருமானுக்கு தண்டம் சமர்ப்பித்துத் திரு வாராதனத்தைத் தொடங்குதல்
11-அர்க்கியம் பாத்யம் ஆசமநீயம் சமர்ப்பித்தல்
12-ஸ்நாநாசனம் -திருமஞ்சனம் -சமர்ப்பித்தல்
13-அலங்கார ஆசனம் சமர்ப்பித்தல்
14-மந்த்ராஸனம் -உபசாரங்கள் -சமர்ப்பித்தல்
15-போஜியாசானம் -அமுது =சமர்ப்பித்தல்
16-மீண்டும் மந்த்ராஸனம் சமர்ப்பித்தல்
17-செவிக்கினிய செஞ்சொற்களால் ஸ்துதித்தல்
18-தண்டம் ஸமர்ப்பித்து திருவாராதனத்தை நிறைவு செய்தல் –

————-

அத பரமைகாந்திநோ பகவத் ஆராதன பிரயோகம் வஷ்யே

இனி பரமைகாந்திகளுடைய பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன்

பகவத் கைங்கர்ய ரதிர் பரமைகாந்தீ பூத்வா -பகவாநேவ ஸ்வ சேஷ பூதேந மயா
ஸ்வகீயைஸ் ச கல்யாண தமை ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்சிக அப்யவ  ஹாரிகை போகை
அகில பரிஜன பரிச்சாக அந்விதம்
ஸ்வாத்மாநம் ப்ரீதிம் காரயிதும் உபக்ரமத இதி அநு சந்தாய
தீர்த்தம் கத்வா ஸூசவ் தேசே பாதவ் ப்ரஷாள்ய ஆஸம்ய தீரம் ஸம் சோத்ய
ஸூசவ் தேசே மூல மந்த்ரேண ம்ருதம் ஆதாய த்விதா க்ருத்வா சோதி ததீரே நிதாய
ஏகேந அதிக பாகேந தேஹ மல பிரஷாளநம் க்ருத்வா நீமஜ்ஜ்ய ஆஸம்ய பிராணாயாம த்ரயம் ஆஸீநோ பகவந்தம் த்யானம் க்ருத்வா
அந்யம் ம்ருத் பாகம் ஆதாய வாம பாணி தலே த்ரிதா க்ருத்வா ப்ருதக் ப்ருதக் ஸம் ப்ரோஷ்ய
அபி மந்த்ர்ய ஏகேந திக் பந்தனம் அஸ்த்ர மந்த்ரேண குர்யாத்
அன்யேன தீர் தஸ்ய பீடம் இதரேண காத்ராநு லேபநம்

பகவானுக்கு கைங்கர்யம் செய்வதில் விருப்பமுடைய பரமைகாந்தியாக ஆகி
பகவானே தன்னுடைய அடியவனான என்னால்
தன்னுடையவைகளான மங்களமான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய போகங்களால் அனைத்து அடியவர்களுடன் பரிவாரங்களுடன் கூடிய
தன்னை ப்ரீதி செய்து கொள்வதற்குத் தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தீர்த்தத்துக்கு -நதி வல்லது குளத்துக்குச் சென்று -சுத்தமான இடத்திலே கால்களைக் கழுவிக் கொண்டு
ஆசமனம் செய்து கரையை நன்கு சுத்தம் செய்து
சுத்தமான இடத்தில் இருந்து திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு
மண்ணை எடுத்து அதனை இரு பங்கு ஆக்கி சுத்தமான இடத்தில் வைத்து
மண்ணில் ஒரு அதிக பாகத்தால் உடலை சுத்தம் செய்து கொண்டு தீர்த்தத்தில் முழுகி
ஆசமனம் செய்து அமர்ந்து பகவானை த்யானித்துக் கொண்டு மூன்று முறை பிராணாயாமம் செய்து
மற்ற ஒரு மண்ணின் பாகத்தை எடுத்து -இடது கையில் மூன்று பாகமாக்கி தனித்தனியே நன்றாக ப்ரோக்ஷித்து மந்த்ரித்து
மண்ணின் ஒரு பாக்கத்தால் -ஸஹஸ்ரோல்காய ஸ்வாஹா –வீர்யாய அஸ்த்ராய பட் -என்ற அஸ்த்ர மந்திரத்தால் திக் பந்தனம் செயய வேண்டும்
மற்ற ஒரு மண்ணின் பாகம் தீர்த்தத்துக்குப் பீடமாகும்
மற்ற ஒரு மண்ணின் பாகத்தால் உடலைத் தேய்த்துக் கொள்ள வேண்டும் –

தத பாணீ ப்ரஷால்ய உதக அஞ்சலி மாதாய தீர்தஸ்ய அர்க்க்யம் உத் ஷிப்ய
பகவத் பாத அங்குஷ்ட விநிஸ்ருத கங்கா ஜலம் ஸங்கல்பித பீடே ஆவாஹ்ய அர்க்யம் தத்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
உதக அஞ்சலி மாதாய ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய ஸ்வ மூர்த்நி சிஞ்சேத் ஏவம் த்ரி பஞ்ச க்ருதவ ஸப்த க்ருத்வோ வா

பிறகு இரு கைகளையும் கழுவிக் கொண்டு கைகளில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பகவானுடைய திருவடிகளின் கட்டை விரலில் இருந்து பெருகுகிற
கங்கா ஜலத்தை சங்கல்ப்பித்து வைத்து இருக்கிற பீடத்தில் ஆவாஹனம் செய்து அர்க்யம் கொடுத்து மூல மந்திரத்தினால் அபி மந்திரித்து தலையிலே நனைத்துக் கொள்ள வேண்டும் –
இவ்வாறு மூன்று முறை ஐந்து முறை அல்லது ஏழு முறை செய்ய வேண்டும்

தஷிணேந பாணிநா ஜல மாத்தையா அபி மந்த்ர்ய பீத்வா ஆஸம்ய ஸ்வாதமாநம் ஸம் ப்ரோஷ்ய -பரி ஷிஸ்ய -தீர்தே நிமக்னோ
பகவத் பாதாரவிந்த வின்யஸ்த சிரஸ்க யாவச் சக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
உத்தீர்ய ஸூக்லஸ்த்ரதரோ த்ருத உத்தரீ யஸ்ஸ ஆஸம்ய
ஊர்த்வ புண்ட்ரான் தத் தன் மந்த்ரேண தாரயித்வா பகவந்தம் அநு ஸ்ம்ருத்ய
தத் தன் மந்த்ரேண பகவத் பர்யந்த அபி தாயிநா மூல மந்த்ரேண ச ஜலம் பீதவா ஆஸம்ய ப்ரோஷ்ய பரி ஷிஸ்ய
உதக அஞ்சலிம் பகவத் பாதயோ நிஷிப்ய ப்ராணாநா யம்ய பக்கவாதம் த்யாத்வா
அஷ்டோத்தர சதம் மூல மந்த்ரம் ஆவர்த்ய பரி க்ரம்ய நமஸ் க்ருத்ய ஆதார ஸக்த்யாதி ப்ருதி வ்யந்தம் தர்ப யித்வா
ஸ்ரீ வைகுண்டாதி பாரிஷ தாந்தம் தர்ப யித்வா தேவான் ருஷீன் பித்ரூன் பகவத் ஆத்மகான் த்யாத்வா ஸந்தர்ப
வஸ்திரம் ஸூசைவ தேசே ஸம் பீட்ய ஆஸம்ய ஆவாஹிததீர்தம் மூல மந்த்ரேண ஆத்மநி ஸமாஹ்ருத்ய யாக பூமிம் கச்சேத்

வலது கையால் தண்ணீரை எடுத்துக் கொண்டு அபி மந்திரித்து பருகி ஆசமனம் செய்து தன்னை ப்ரோக்ஷித்துக் கொண்டு
தீர்த்தத்தில் முழுகி பகவானுடைய திருவடித் தாமரைகளைத் தலையிலே கொண்டவனாக நினைத்துக் கொண்டு
சக்தி யுள்ளவரை மூல மந்த்ரத்தை ஜபித்து தீர்த்தத்தில் இருந்து எழுந்து
வெண்மையான ஆடையை அணிந்தவனாய் உத்தரீயத்தையும் அணிந்தவனாய் ஆசமனம் செய்து
திரு மண் காப்பினை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி தரித்துக் கொண்டு பகவானை நினைத்துக் கொண்டு
பகவான் வரை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி -திருமந்த்ரத்தையும் சொல்லி தீர்த்தத்தைப் பருகி ஆசமனம் செய்து ப்ரோக்ஷித்துக் கொண்டு
பரி சேஷணம் செய்து கையிலே தீர்த்தத்தை எடுத்து பகவானுடைய திருவடிகளில் சமர்ப்பித்து பிராணாயாமம் செய்து
பகவானை நினைத்துக் கொண்டு நூற்று எட்டு முறை மூல மந்த்ரத்தை ஜபித்து தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்கி
ஆதார சக்தி முதல் பிருத்வி வரை தர்ப்பித்து ஸ்ரீ வைகுண்டம் முதலாக எம்பெருமானுடைய பரிவாரங்கள் வரை தர்ப்பித்து
பகவானை ஆத்மாவாகக் கொண்டவர்களாக தேவர்கள் முனிவர்கள் பித்ருக்கள் ஆகியோரை த்யானித்துத் தர்ப்பித்து
முன் களைந்த ஆடையை சுத்தமான இடத்தில் பிழிந்து சாய்த்து ஆசமனம் செய்து முன்பு ஆவாஹனம் செய்த தீர்த்தத்தை மூல மந்திரத்தால் தன்னிடம் ஆவாஹனம் செய்து
யாக பூமியான திருவாராதனம் செய்ய வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டும் –

ஸூ ப்ரஷாலித பாணி பாத ஸ்வா சாந்த ஸூசவ் தேசே அதி மநோ ஹரே நிஸ் சப்தே புவம் சங்க்ருஹ்ய தாம்
சோஷணாதிபி விசோத்ய குரு பரம்பரயா பரம கூறும் பகவந்தம் உபாகம்ய தமேவ ப்ராப்யத்வேந ப்ராபகத்வேந அநிஷ்ட நிவாரகத்வேந இஷ்ட ப்ராபகத்வேந ச யதா வஸ்தித
ஸ்வரூப ரூப குண விபூதி லீலோ பகரண விஸ்தாரம் அநு சந்தாய தமேவ சரணம் உபா கச்சேத் அகில ஹேய –இத்யாதி நா

நன்றாக அலம்பிய கை கால்களுடன் சுத்தமான மனத்துடன் சுத்தமான மனத்துக்கு இனிய சப்தம் இல்லாத இடத்தை அடைந்து
அந்த இடத்தை உணர்த்துதல் முதலியவைகளால் சுத்தம் செய்து
குரு பரம்பரை வழியாகப் பரம குருவான பகவானை அடைந்து ஸ்துதித்து –
அந்த பகவானையே அடையப்படுபவனாகவும் -அடைவிப்பவனாகவும் -விரும்பாதவற்றைத் தவிர்ப்பவனாகவும் –
விரும்பியவற்றைத் தருபவனாகவும் -அவனுடைய உள்ளபடியான ஸ்வரூபம் திருமேனி கல்யாண குணங்கள்
உபய விபூதிச் செல்வங்கள் முதலிய விளையாட்டு உபகரணங்களை விரிவாக அனுசந்தித்து
சரணாகதி கத்யத்தில் உள்ள அகில ஹேய -முதலிய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து
அந்த பகவானையே சரணம் அடைய வேண்டும் –

ஏவம் சரணம் உபாகம்ய தத் ப்ரஸாதோப ப்ரும்ஹித மநோ வ்ருத்தி தமேவ பகவந்தம் ஸர்வேஸ்வரேஸ்வரம் ஆத்மந
ஸ்வாமித்வேந அநு சந்தாய அத்யர்த ப்ரியா வாரித
விசததம ப்ரத்யக்ஷ ரூப அநு த்யாயேந த்யாயன் ஆஸீத
தத தத் அனுபவ ஜெனித அதிமாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜாம் ஆரபேத

இப்படி சரண் அடைந்து அவனுடைய அருளால் பெறப்பட்ட மனத்தின் செயல்பாட்டை உடையவனாய் ஸர்வேஸ்வர ஈஸ்வரனான அந்த பகவானையே
தனக்கு ஸ்வாமியாக அநு சந்தித்து மிகவும் பிரியமாய்த் தடை இன்றித் தொடர்வதும் நேரில் காண்பது போல மிகத் தெளிவாக உள்ளதுமான
தியானத்தினால் தியானித்துக் கொண்டு இருக்க வேண்டும் –
பிறகு அந்த அனுபவத்தினால் பிறந்த மிக்க ப்ரீதியினால் செய்விக்கப் பட்ட பரிபூர்ண கைங்கர்ய ரூபமான திரு வாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸ்வ நியாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷதைக ரசேந அநே நாத்மநா
ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை
ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான் ஒவ்ப சாரிக ஸாம்ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி ஸமஸ்த போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதான் விதாய
ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாத யிதும் உபக்ரமத இதி அநு சந்தாய
ஸ்வ தேஹ பஞ்ச உபநிஷந் மந்த்ரான் ஸம்ஹார க்ரமேண ந்யஸ்ய ப்ராணாயாமேந ஏகேந தஷிணேந பாணிநா
நாபி தேசே மூல மந்த்ரம் நியஸ்ய மந்த்ரோத்பூத சண்ட வாய்வாப் யாயித நாபீ தேசஸ்தா வாயுநா ஸரீரம் அந்தர் பஹிஸ்ஸ ஸர்வ தாத்தாவை மயம்
தத்துவ க்ரமேண விசோஷ்ய புநரபி ப்ராணாயாமேந ஏகேந ஹ்ருத் தேசே மூல மந்த்ரம் ந்யஸ்ய மந்த்ரோத்பூத
சக்ராக் நிஜ் வாலோப ப்ரும்ஹித
ஜாடராக்னிநா தக்த தத் தத் சமஷ்டி ப்ரலீந ஸர்வ தத்வ ஸர்வ கில்பிஷ ஸர்வ அஞ்ஞான தத் வாஸநோ பூத்வா
பகவத் தக்ஷிண பாத அங்குஷ்டே மூல மந்த்ரேண ஸ்வாத்மாநம் ப்ரவேசயேத்

பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையதும்
தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக உடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்திரிய மனஸ் முதலிய கரணங்களினால்
தன்னுடைய மங்களமான பொருள்களான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனதற்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் -மிகவும் நிறைந்தவைகளாய்-மிக ப்ரீதியானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னை ப்ரீத்தி செய்து கொள்வதற்காகத் தானே தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தன்னுடைய உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸம்ஹார க்ரமத்தில் ந்யாஸம் செய்து கொண்டு
ஒரு பிராணாயாமத்தால் வலது கையினால் தொப்புளில் தொட்டு மூல மந்த்ரத்தை நியாஸம் செய்து
மந்திரத்தினால் யுண்டான சண்ட வாயுவாகிய தொப்புளின் காற்றினால் ஸர்வ தத்வ மயமான உடலை உட்ப்புறமும் வெளிப்புறமும் தத்வ க்ரமத்தினால் உலர்த்தி
மறுபடியும் ஒரு பிராணாயாமத்தினால் உதய பிரதேசத்தில் மூல மந்த்ரத்தை ந்யாஸம் செய்து மந்திரத்தினால் யுண்டான சக்ர அக்னி ஜ்வாலையினால் பெறப்பட்ட ஜாடராக்னியினால்
அனைத்துத் தத்துவங்களும் அனைத்துப் பாபங்களும் அனைத்து அஞ்ஞானங்களும் அதன் வாசனைகளும் எரிக்கப் பட்டவனாகி
பகவானுடைய வலது திருவடிகளின் கட்டை விரலில் மூல மந்திரத்தினால் தன்னை நுழைக்க வேண்டும்
தான் நுழைவதாக நினைத்துக் கொள்ள வேண்டும் –

அபரேண ப்ராணாயாமேந பகவத் ப்ரஸாதேந பகவத் கிங்கரத்வ யோக்யதாம் ஆ பாத்ய தஸ்மாத் ஆதாய
தத் வாம பாத அங்குஷ்ட அத ஸ்தாத் மூல மந்த்ரேண ஆத்மாநம் வின்யஸ்ய
தேவ வாம பாத அங்குஷ்ட நாகா ஸீதாம் ஸூ மண்டல நிர்கலத் திவ்ய அம்ருத ரஸை ஆத்மாநம் அபி ஷிஸ்ய
பகவத் ப்ரஸாதேந தத் அம்ருத மயம் ஸர்வ கைங்கர்ய மநோ ஹரம் ஸர்வ கைங்கர்ய யோக்யம் ஸரீரம் லப்தவா
தஸ்மிந் ஸரீரே பஞ்ச உபநிஷத் மாத்ரான் ஸ்ருஷ்ட்டி க்ரமேண விந்யஸ்யேத்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -இதி மூர்த்நீ ஸ்ப்ருசேத்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –இதி நாஸாக்ரே
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -இதி ஹ்ருதயே
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -இதி குஹ்யே
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -இதி பாதயோ
ஏவம் ந்யாஸம் குர்வன் தத் தத் சக்தி மாயம் உத்பூத தேஹம் த்யாயேத்

மற்ற ஒரு பிராணாயாமம் செய்து பகவானுடைய அருளினால் பகவானுக்குக் கைங்கர்யம் செய்யும் தகுதியை அடைந்து -அதனால் பெற்ற
பகவானுடைய வலது திருவடி கட்டை விரலின் அடியில் மூல மந்திரத்தால் தன்னை ந்யாஸம் செய்து
பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரல் நகத்தின் நின்றும் பெருகும் குளிர்ந்த அம்ருத மயமான தாரைகளால் தன்னை நனைத்து
பகவானுடைய அருளினால் அம்ருத மயமாய் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு மநோ ஹரமாய்
எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு தகுதியான உடலைப் பெற்று
அந்த உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸ்ருஷ்ட்டி க்ரமத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -என்று தலையைத் தொட வேண்டும்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –என்று மூக்கின் நுனியைத் தொட வேண்டும்
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -என்று இதயத்தைத் தொட வேண்டும்
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -என்று வயிற்றைத் தொட வேண்டும்
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -என்று கால்களைத் தொட வேண்டும்
இப்படி ந்யாஸம் செய்து அந்தவந்த சக்தி மயத்தினால் உண்டான உடலை உடையவனாகத் தன்னை நினைக்க வேண்டும் –

புநரபி ப்ராணாயாமேந ஏகேந பகவத் வாம பாத அங்குஷ்ட விநிஸ்ருத அம்ருத தாரயா ஆத்மாநம் அபி ஷிச்ய
க்ருத லாஞ்சன த்ருத ஊர்த்வ புண்ட்ர பகவத் யாகம் ஆரபேத

மறுபடியும் ஒரு ப்ராணாயாமத்தினால் பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரலில் இருந்து பெருகும் அம்ருத தாரைகளினால் தன்னை நனைத்து
சக்ர அங்கனத்தையும் பன்னிரு திருமண் காப்புகளையும் தரித்துக் கொண்டு பகவானுக்குத் திருவாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸர்வம் காரயதீதி பூர்வ வத் த்யாத்வா ஹ்ருத்யாகம் க்ருத்வா ஸம் பாரான் ஸம் ப்ருத்ய
ஆத்மந வாம பார்ஸ்வே ஜல கும்பே தோயம் உத் பூர்ய கந்த புஷ்பயுதம் க்ருத்வா
ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய வி சோஷ்ய தக்த்வா திவ்ய அம்ருத தோயம் உத் பாத்ய
அஸ்திர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்யஅன்யானி பூஜா த்ரவ்யாணி ஆத்மந
தக்ஷிண பார்ஸ்வே நிதாய
ஆத்மந புரத ஸ்வாஸ் தீர்ணே பீடே க்ரமேண ஆக்நே யாதி கோணேஷு அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய பாத்ராணி நிதாய
அஸ்த்ர மந்த்ரேண ப்ரஷால்ய சோஷாணாதி நா பாத்ராணி வி சோத்ய ஸம்ஸ்க்ருத தோயேந தாநி பூரயித்வா
அர்க்ய பாத்ரே கந்த புஷ்ப குஸாக்ர அக்ஷதா தீநி நிஷிபேத்
தூர்வாம் விஷ்ணு பர்ணீம் ஸ்யாமாகம் பத்மகம் பாத்ய பாத்ரே
ஏலா லவங்க தக்கோல லாமஜ்ஜக ஜாதீ புஷ்பாணி ஆசம நீயே
த்வே ஹரித்ரே முரா சைலேய தக்கோல ஜடாமாசிமலயஜ கந்த சம்பக புஷ்பாணி
ஸித்தார்த்தி காதீ நிஸ்நா நீயே

பகவானே தன்னைக் கொண்டு எல்லாம் செய்வித்துத் கொள்கிறான் என்று முன்பு போலவே நினைத்து
இதய யாகம் செய்து திருவாராதனப் பொருள்களை சேகரித்துக் கொண்டு
தன்னுடைய இடது புறத்தில் தீர்த்தக் குடத்தில் தீர்த்தத்தை நிறைத்து -கந்த புஷ்பத்தைச் -குங்குமப்பூவைச் -சேர்த்து
ஏழு முறை திரு மந்திரத்தினால் அபி மந்திரித்து உலர்த்தி எரித்து -சுத்தம் செய்வதாகப் பாவித்து
அஸ்த்ர மந்த்ரத்தினாலே காப்பீட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி மற்ற திருவாராதனப் பொருள்களை தனக்கு வலது புறத்தில் வைத்து
தனக்கு முன்னால் உள்ள ஒரு பீடத்தில் -தட்டில் -முறையே தென் கிழக்கு மூலை முதலிய இடங்களில்
அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய வட்டில்களை வைத்து அஸ்த்ர மந்திரத்தால் அலம்பி உலர்த்துதல் முதலியவற்றால் பாத்ரங்களை சுத்தம் செய்து
நல்ல தீர்த்தத்தால் அவ் வட்டில்களை நிறைத்து அர்க்ய பாத்ரத்தில் கந்த புஷ்பம் தர்ப்பை நுனி அக்ஷதை முதலியவற்றைச் சேர்க்க வேண்டும்
தூர்வா விஷ்ணு பர்வணீ ஸ்யாமகம் பத்மகம் ஆகியவற்றைப் பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
ஏலம் லவங்கம் தக்கோலம் லாமஜ்கம் ஜாதீ புஷ்பம ஆகியவற்றை ஆசமனீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
இருவித மஞ்சள் முரை சைலேயம் தக்கோலம் ஜடாமாஸி மலை நாட்டு சந்தனம் சம்பக புஷ்பம ஸித்தார்த்தகம் ஆகியவற்றை ஸ்நாநீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

அந்யஸ்மின் பாத்ரே ஸர்வார்த்த தோயம் சங்கல்ப்ய ததோ அர்க்ய பாத்ரம் பாணிநா ஸ்ப்ருஷ்ட்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரிகல்பயாமி இதி அர்க்யம் பரிகல்பயேத்
ஏவம் பாத்யம் பரிகல்பயாமி இதி பாத்யம் ஆசமனம் பரிகல்பயாமி இதி ஆசாமி நீயம் ஸ்நா நீயம் பரிகல்பயாமி இதி ஸ்நா நீயம்
ஸூத்தோ தகம் பரிகல்பயாமி இதி ஸூ த்தோதகம் தத அர்க்ய ஜலாத் ஜாலம் அன்யேன பாத்ரேண ஆதாய யாக பூமிம்
ஸர்வாணி யாக த்ரவ்யாணி ஆத்மாநம் ச ப்ரத்யேகம் ப்ரோஷ்ய ஆஸனம் பரிகல்பயேத்

மற்ற ஒரு பாத்திரத்தில் ஸர்வார்த்த தோயம் -சுத்தோதகம் -தூய நீர் -ஸங்கல்பித்து பிறகு அர்க்ய பாத்ரத்தைக் கைகளால் தொட்டு மூல மந்திரத்தால் அபி மந்தரித்து
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரி கல்பயாமி இதி -அர்க்யத்தை ந்யாஸம் செய்ய வேண்டும் –
இப்படியே பாத்யம் பரி கல்பயாமி -என்று பாத்யம்
ஆசம நீயம் பரி கல்பயாமி என்று ஆசம நீயம்
ஸ்நா நீயம் பரி கல்பயாமி என்று ஸ்நா நீயம்
சுத்தோதகம் பரி கல்பயாமி என்று சுத்தோதகம்
பிறகு அர்க்ய ஜலத்தில் இருந்து தீர்த்தத்தை மற்ற ஒரு பாத்ரத்தினால் எடுத்து யாக பூமியை -பெருமாள் எழுந்து அருளிய இத்தையும் –
எல்லாத் திருவாராதனப் பொருள்களையும் தன்னையும் தனித் தனியாக ப்ரோக்ஷித்து ஆசனத்தை ஏற்படுத்த வேண்டும் –

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
போம் பூம் பூம்யை நம
இதி யதா ஸ்தாநம் உபர்யுபரி த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம இதி ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம இதி திவ்ய ஜந பதம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -இதி திவ்ய நகரம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -இதி திவ்ய விமானம் ப்ரணம்ய
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -இதி மண்டப ரத்னம் ப்ரணம்ய
தஸ்மிந் அநந்தாய -நாக ராஜாய -நம இதி ஆஸ்தரணம் ப்ரணம்ய தஸ்மிந் உபரி
ஓம் தர்மாய நம -இதி ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய
ஓம் ஞானாய நம -இதி நைர் ருதியாம்
ஓம் வைராக்யாய நம -இதி வாயவ்யாம்
ஓம் ஐஸ்வர்யாய நம -இதி ஐசான்யாம்
ஓம் அதர்மாய நம இதி ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய
ஓம் அஞ்ஞானாய நம இதி தஷிணாஸ் யாம்
ஓம் அவைராக்யாய நம இதி ப்ரதீஸ்யாம்
ஓம் அனைஸ்வர்யாய நம இதி உத்தரஸ் யாம் ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்யபஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் ஓம் அநந்தாய நம இதி வின்யஸ்ய

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
பூம் பூம் பூம்யை நம
என்று ஒன்றின் மேல் ஒன்றாக அந்த அந்த ஸ்தானத்தைத் த்யானம் செய்து வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம -என்று ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம -என்று திவ்ய ஜந பதத்தை -தேசத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -என்று திவ்ய நகரத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -என்று திவ்ய விமானத்தை வணங்கி
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -என்று மண்டப ரத்னத்தை வணங்கி
அதில்
அநந்தாய -நாக ராஜாய -நம என்று பள்ளிக்கட்டிலை வணங்கி
அதற்கு மேலே (தஸ்மிந் உபரி )
ஓம் தர்மாய நம -என்று தென் கிழக்கில் பாத பீடத்தையும் – (ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய )
ஓம் ஞானாய நம -என்று தென் மேற்கில் ( நைர் ருதியாம் )
ஓம் வைராக்யாய நம -என்று -வட மேற்கில் ( வாயவ்யாம் )
ஓம் ஐஸ்வர்யாய நம -என்று வட கிழக்கில் ( ஐசான்யாம் )

ஓம் அதர்மாய நம -என்று கிழக்கில் பாத பீடத்தை ந்யாஸம் செய்து (ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய)
ஓம் அஞ்ஞானாய நம -என்று தெற்கில் ( தஷிணாஸ் யாம் )
ஓம் அவைராக்யாய நம -என்று மேற்கில் ( ப்ரதீஸ்யாம் )
ஓம் அனைஸ்வர்யாய நம -என்று வடக்கில் ( உத்தரஸ் யாம்)
இவற்றை உடலாகக் கொண்ட பீடமாக இருக்கின்ற திரு அனந்தாழ்வானை ந்யாஸம் செய்து (ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்ய )
பிறகு எல்லாக் காரியங்களுக்கும் உன்முகமாய் எங்கும் உள்ள அனந்தாழ்வானை (பஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் )
ஓம் அநந்தாய நம -என்று ந்யாஸம் செய்து ( வின்யஸ்ய)

தஸ்மிந் உபரி ஓம் பத்மாய நம -இதி பத்மம் வி ந்யஸ்ய
தத் பூர்வ பத்ரே ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய
தத் ஆரப்ய
ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய

அதற்கும் மேல் (தஸ்மிந் உபரி )ஓம் பத்மாய நம -இதி ஆஸன பத்மத்தை ந்யாஸம் செய்து (பத்மம் வி ந்யஸ்ய )
முன் இதழில் (தத் பூர்வ பத்ரே ) ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம -என்று சாமரத்தைக் கையில் கொண்டுள்ள
கன்னிகையான விமலையை ந்யாஸம் செய்து (இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய )
அது முதல் கொண்டு (தத் ஆரப்ய)
ப்ரதக்ஷிணமாக வட கிழக்கு வரை உள்ள இதழ்களில் (ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு )
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
என்று அஷ்ட சக்திகளான சாமர கன்னிகைகளை ந்யாஸம் செய்து (இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய )
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–என்று கர்ணிகையின் முன் பாகத்தில் அனுக்ரஹா என்ற சாமர கன்னிகையை ந்யாஸம் செய்து (இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய )

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -இதி யோக பீடம் விந்யஸ்ய
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய
தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி வி ந்யஸ்ய
ஓம் அநந்தாய நம இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய
ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம்
கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய
அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய
ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே
ஓம் அஸ்மத் குருப்யோ நம இதி குரூன்
கந்த புஷ்ப தூப தீபை ஸம் பூஜ்ய ப்ரணம்ய அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -என்று யோக பீடத்தை ந்யாஸம் செய்து (இதி யோக பீடம் விந்யஸ்ய )
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம -என்று திவ்ய யோகப் பீடப்
பள்ளிக்கட்டிலை ந்யாஸம் செய்து (இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய )
அதில் நாக ராஜனாய் ஆயிரம் படங்களால் பிரகாசிக்கின்ற ஆதி சேஷனை (தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் )
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று ந்யாஸம் செய்து (இதி வி ந்யஸ்ய )
ஓம் அநந்தாய நம-என்று முன்னால் பாத பீடத்தை ந்யாஸம் செய்து ( இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய )
ஆதார சக்தி தொடங்கி பீடம் வரை எல்லாத் தத்துவங்களையும் தனித்தனியாக
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் இவற்றால் அர்ச்சித்து (ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம் கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய )
எல்லாப் பரிவாரங்களும் அவரவர் ஸ்தானங்களில் பத்மாஸனங்களை அமைத்து (ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய )
அனந்த கருட விஷ்வக் சேனர்களை பத்மத்தோடே கூடிய பீடத்தில் அமைத்து (அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய )
எல்லாருக்கும் புஷ்பம் அக்ஷதை முதலியவற்றை ஸமர்ப்பித்து (ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய )
யோக பீடத்தின் வடமேற்கு பாகத்தில் (யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே )
ஓம் அஸ்மத் குருப்யோ நம-என்று ஆச்சார்யர்களை ( இதி குரூன் )
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் ஆகியவற்றால் (கந்த புஷ்ப தூப தீபை )
நன்றாகக் பூஜித்து வணங்கி (ஸம் பூஜ்ய ப்ரணம்ய )
அவர்கள் அனுமதி கொண்டு எம்பெருமானின் திருவாராதனத்தை ஆரம்பிக்க வேண்டும் (அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே )

கல்பிதே நாக போகே ஸமா ஸீநம் பகவந்தம் நாராயணம்
புண்டரீக தலா மலாய தாக்ஷம்
கிரீட மகுட கேயூர ஹார கடகாதி ஸர்வ பூஷணை பூஷிதம்
ஆகுஞ்சித தக்ஷிண பாதம் பிரசாரித வாம பாதம் ஜாநு விந்யஸ்ய பிரசாரித தக்ஷிண புஜம் நாக போக விந் யஸ்ய வாம புஜம்
ஊர்த்வ புஜத்வயேந சங்க சக்ர தரம் ஸர்வேஷாம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ப்ரலய ஹேது பூத மஜ்ஜ நாபம்
கௌஸ்துபேந விராஜா மாநம் ஸகா சதம் உதக்ர ப்ரபுத்த ஸ்புரத் அபூர்வ அசிந்த்ய பரம சத்த்வ பஞ்ச சக்தி மய விக்ரஹம்
பஞ்ச உபநிஷதைர் த்யாத்வா ஆராத நாபி முகோ பவ இதி மூல மந்த்ரேண ப்ரார்த்ய மூல மந்த்ரேண தண்டவத் ப்ரணம்ய
உத்தாய ஸ்வா கதம் நிவேத்ய யாவதாராத ந ஸமாப்தி ஸாந்நித்ய யாஸ நம் குர்யாத்-

அமைக்கப்பட்ட அரவணையில் வீற்று இருப்பவனும் -தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களை உடையவனும்
கிரீடம் மகுடம் கேயூரம் ஹாரம் கடகம் முதலிய ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவனும்
மடக்கிய வலது திருவடியை உடையவனும் -நீட்டித் தொங்க விட்ட இடது திருவடியை யுடையவனும்
முழங்காலில் நீட்டி வைத்த வலது திருக்கரத்தை யுடையவனும்
அரவணையில் வைத்த இடது திருக்கரத்தை யுடையவனும்
மேல் இரண்டு திருக்கரங்களால் சங்கு சக்கரங்களைத் தரித்தவனும்
அனைவரையும் படைத்தால் காத்தல் அழித்தல் ஆகியவற்றுக்குக் காரணமான திரு நாபியை யுடையவனும்
கௌஸ்துப மணியினால் பிரகாசிப்பவனும்
பிரகாசிக்கின்ற மிக உயர்ந்த நல்ல மலர்ச்சியுடன் விளங்குகிற அபூர்வமான நினைக்கவும் முடியாத பரம ஸத்வமாய்
பஞ்ச சக்தி மயமான திரு மேனியை யுடையவனுமான பகவான் நாராயணனை பஞ்ச உபநிஷத்துக்களால் தியானித்து
திரு வாராதனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திரு மந்திரத்தினால் பிரார்த்தித்துக் கொண்டு
திரு மந்த்ரத்தைக் கூறி தடி போல் விழுந்து வணங்கி எழுந்து வரவேற்புக் கூறி திருவாராதனம் முடியும் வரை எழுந்து அருளி இருக்கும் படி யாசிக்க வேண்டும்

அந்யத்ர ஸ்வாபி மத தேசே பூஜா சேத் ஏவமாவாஹநம்
மந்த்ர யோக சமாஹ்வாநம் கர புஷ்போப தர்சனம்
பிம்போ பவேஸநம் சைவ யோக விக்ரஹ சிந்தனம்
பிரணாமஸ் ச ஸமுத்தா நம் ஸ்வா கதம் புஷ்ப்ப மேவ ச
சாந்நித்ய யாசநம் சேதி தத்ராஹ்வா நஸ்ய சத் க்ரியா

வேறு விருப்பமான இடத்தில் பூஜை என்றால் இப்படி ஆவாஹனம் செய்ய வேண்டும்
மந்த்ரத்தைக் கூறுதல் -எம்பெருமானை அழைத்தல் -கையில் புஷபத்தைக் காட்டுதல் –
பிம்பத்தில் எழுந்து அருள்ச செய்தல் -எம்பெருமானுடைய திரு மேனியைத் தியானித்தல் -வணங்குதல் –
எழுதல் -வரவேற்புக் கூறுதல் – புஷ்பம் சமர்ப்பித்தல் -சாந்நித்யம் செய்ய வேண்டும் -எழுந்து அருளி இருக்க வேண்டும் -என்று வேண்டுதல்
ஆகிய இவை ஆவாஹனம் செய்வதற்கு உரிய சத் க்ரியைகளாகும்

ததோ பகவந்தம் ப்ரணம்ய தஷிணத -ஓம் ஸ்ரீம் ஸ்ரியை நம -இதி ஸ்ரியம் ஆவாஹ்ய ப்ரணம்ய
வாமத ஓம் பூம் பூம்யை நம இதி புவம் ஆவாஹ்ய தத்ரைவ ஓம் நீம் நீலாயை நம இதி நீலாம் ஆவாஹ்ய
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம இதி உபரி பாகவத பஸ்சிம பார்ஸ்வே சதுர் பாஹும் சதுர் வக்த்ரம் க்ருதாஞ்சலி புடம் மூர்த்னி பகவத் கிரீடம் தார யந்தம் க்ரீடாக் யதி வ்ய புருஷம் பிரணம்ய

பிறகு பகவானை வணங்கி வலது பக்கத்தில் ஓம் ஸ்ரீம் ஸ்ரீ யை நம -என்று பெரிய பிராட்டியாரை ஆவாஹனம் செய்து வணங்கி
இடது பக்கத்தில் ஓம் பூம் பூம்யை நம -என்று பூமிப் பிராட்டியை ஆவாஹநம் செய்து
அங்கேயே ஓம் நீம் நீளாயை நம -என்று நீளா தேவியை ஆவாஹனம் செய்து
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம -என்று மேலே பகவானுடைய வலப்புறத்தில் நான்கு தோள்களை யுடையவனாய் நான்கு முகங்களை யுடையவனாய்
கூப்பிய கையனாய் திரு முடியில் பகவானுடைய கிரீடத்தை தரிப்பவனான கிரீடம் என்கிற திவ்ய புருஷனை வணங்கி

ஏவ மேவ
ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம -இத்யா பீடகம் தத்ரைவ புரஸ்தாத் ப்ரணம்ய
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம இதி தக்ஷிண குண்டலம் தக்ஷிணத ப்ரணம்ய
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம இதி வாம குண்டலம் வாமத ப்ரணம்ய
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம இதி வனமாலாம் புரத பிராணமய
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் -புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம இதி ஸ்ரீ வத்ஸம் புரத ப்ரணம்ய
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம இதி ஹாரம் புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம இதி
கௌஸ்துபம் புரத ப்ரணம்ய
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம இதி பீதாம்பரம் புரத ப்ரணம்ய

இப்படியே

ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம – என்று ஆபீடகத்தை
அங்கேயே முன்னால் வணங்கி
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம என்று வலது
திருக்காதில் உள்ள குண்டலத்தை வலப்புறத்தில் வணங்கி
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம -என்று இடது திருக்காதில் உள்ள குண்டலத்தகை இடப்புறத்தில் வணங்கி
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம என்று வனமாலையை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் –என்று திருத்துழாய் தேவியை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம என்று ஸ்ரீ வத்ஸாத்தை முன்னால் வணங்கி
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம -என்று காரத்தை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம -என்று கௌஸ்துபத்தை முன்னால் வணங்கி
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம -என்று பீதாம்பரத்தை முன்புறம் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம இதி ஸர்வ பூஷணாநி ஸர்வத ப்ரணம்ய
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம இதி ஸூ தர்சனம் ரக்த வர்ணம் ரக்த நேத்ரம் த்வி -சதுர் -புஜம் க்ருதாஞ்சலி புடம்
பகவந்த மாலோக யந்தம் தத் தர்சன அநந்த ப்ரும்ஹித முகம் மூர்த்நி பகவச் சக்ரம் தார யந்தம்
தஷிணத பிராணமய ஓம் நந்தகாய கட் காதி பதயே நம இதி நந்த காத்மா நம் சிரஸி பகவத் கட்கம் தார யந்தம்
தத்ரைவ ப்ரணம்ய ஓம் பத்மாய நம இதி பத்மம் -பத்மம் சிரஸி தார யந்தம் -ப்ரணம்ய
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம இதி சங்காத்மாநம் ஸித வர்ணம் -ரக்த நேத்ரம் -த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம்
சிரஸி பகவச் சங்கம் தார யந்தம் வாமத ப்ரணம்ய
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம இதி கதாத்மாநம் தத்ரைவ ப்ரணம்ய

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம -என்று எல்லா ஆபரணங்களையும் சுற்றிலும் வணங்கி –
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம -என்று சிவந்த நிறம் உள்ளவரும் சிவந்த கண்களை யுடையவரும்
இரு -நான்கு -திருக்கைகளை உடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் – பகவானை நோக்கிக் கொண்டு இருப்பவரும் –
பகவானை சேவித்தால் உண்டான மகிழ்ச்சியுடன் கூடிய முகத்தை யுடையவரும் தலையில் பகவானுடைய சக்கரத்தைத் தாங்கி இருப்பவருமான ஸூதர்சனரை வலப்புறத்தில் வணங்கி
ஓம் நந்தகாய கட் காதி பதயே நம -என்று நந்தகன் என்னும் பெயரை யுடையவரும் தலையிலே பகவானுடைய வாளைத் தாங்கி இருப்பவருமானவரை அங்கேயே வணங்கி
ஓம் பத்மாய நம என்று தாமரையை -தாமரையைத் தலையில் தாங்கியவரை-வணங்கி –
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம -என்று சங்கமாய்-வெண்மை நிறம் யுடையவரும் -சிவந்த கண்களை யுடையவரும் –
இரு கைகளை யுடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும்
தலையில் பகவானுடைய சங்கத்தைத் தாங்கி இருப்பவரை இடது புறத்தில் வணங்கி –
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம -என்று கதா யுதமாக இருப்பவரை அங்கேயே வணங்கி –

தத்ரைவ -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம இதி சார்ங்காத்மாநம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம இதி ஸர்வா யுதாநி பரித ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம இதி திவ்ய பாதாரவிந்த ஸம் வாஹி நீஸ் சமந்தத ப்ரணம்ய
ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி ப்ருஷ்டத அநந்தம் -பகவந்தம் -நாக ராஜம் சதுர் புஜம்
ஹலமுஸல தரம் க்ருதாஞ்சலி புடம் பணாமணி ஸஹஸ்ர மண்டித உத்தம அங்கம் பகவந்த மாலோகயந்தம்
பகவத் ஸ்பர்ச நாநந்த ப்ரும்ஹித ஸர்வ காத்ரம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம இதி அநுக்த அநந்த பரிஜனாந் சமந்தத ப்ரணம்ய
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம இதி பகவத் பாதுகே புரத ப்ரணம்ய

அங்கேயே -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம–என்று சார்ங்கத்தை-வில்லை – வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம -என்று எல்லா ஆயுதங்களையும் சுற்றலும் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம -என்று பகவானுடைய திருவடிகளை வருடுபவர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று அநந்தன் என்ற பெயரை யுடையவரும் -பகவான் நாக ராஜரும்-
நான்கு கைகளை யுடையவனும் -கலப்பை உலக்கை ஆகியவற்றைத் தாங்கி இருப்பவனும்
அஞ்சலி செய்து இருப்பவனும் -ஆயிரம் படங்களைக் ன்கொண்ட தலைகளை யுடையவனும் –
பகவானை சேவித்துக் கொண்டு இருப்பவனும் -பகவானைத் தொட்டுக் கொண்டு இருப்பதால் உண்டான மகிழ்ச்சி யோடு கொடிய உடலை உடையவனுமான ஆதி சேஷனை தியானித்து பின்புறம் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம -என்று இங்கு கூறப்படாத எல்லாப் பரிவாரங்களும் சுற்றிலும் வணங்கி
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம -என்று பகவானுடைய இரு பாதுகைகளை முன்னால் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம இதி ஸர்வ பரிச்ச தான் சமந்தத ப்ரணம்ய
ஓம் வைநதேயாய நம இதி அக்ரதோ -பகவதோ பகவந்தம் -வைநதேயம் ஆஸீநம் த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய இதி பகவத ப்ராக் உத்தர பார்ஸ்வே தஷிணாபி முகம் பகவந்தம் விஷ்வக் சேனம் ஆஸீநம்
சதுர் புஜம் சங்க சக்ர தரம் க்ருதாஞ்சலி புடம் நீல மேக நிபம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -இதி விஷ்வக் சேந பரி ஜநான் பிராணமய
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம இதி பூர்வ த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம-இதி தக்ஷிண த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -இதி பஸ்சிம த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -இதி உத்தர த்வார பார்ஸ்வயோ பிரணமேத்
ஏதே த்வார பாலாஸ் ஸர்வே சங்க சக்ர கதா தரா ஆஜ்ஞா முத்ர யுதா த்யதவ்யா-

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம –என்று எம்பெருமானுடைய எல்லா அடியவர்களையும் சுற்றிலும் வணங்கி
ஓம் வைநதேயாய நம -என்று பகவானுக்கு முன்னால் வீற்று இருக்கின்றவனும் -இரு கைகளை யுடையவனும் –
அஞ்சலி செய்து இருப்பவனுமான பகவான் கருடனை த்யானம் செய்து வணங்கி
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய -என்று எம்பெருமானுக்கு முன்னால் வடக்குப் பக்கத்தில் தெற்கு நோக்கி வீற்று இருப்பவரும் –
நான்கு திருக்கரங்களை உடையவரும் -சங்க சக்கரங்களை தரித்து இருப்பவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் –
நீலமேகம் போன்ற நிறத்தை உடையவருமான பகவான் விஷ்வக் சேனரை தியானித்து வணங்கி –
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -என்று
விஷ்வக் சேனருடைய அடியவர்களை வணங்கி
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம -என்று கிழக்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம- என்று தெற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -என்று மேற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -என்று வடக்கு வாசல் பக்கத்திலே வணங்க வேண்டும்
இந்த த்வார பாலகர்கள் யாவரையும் சங்க சக்கரம் தரித்தவர்களாயும் ஆணை இடுகின்ற முத்திரை யுடையவர்களாகவும் தியானிக்க வேண்டும் –

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம இதி ஸர்வ த்வாரேஷு ஸர்வ த்வார பாலான் ப்ரணம்ய
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பூர்வஸ்யாம் திஸி
பார்ஷ தேஸ்வரம் குமுதம் ப்ரணம்ய
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஆக்நேய்யாம் குமுதாஷம் ப்ரணம்ய
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி தக்ஷிண ஸ்யாம் புண்டரீகம் ப்ரணம்ய
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி நைர் ருத்யாம் வாமனம் ப்ரணம்ய
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பஸ்ஸிமஸ்யாம் சங்கு கர்ணம் ப்ரணம்ய
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி வாயவ்யாம் ஸர்ப நேத்ரம் ப்ரணம்ய
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி உதீச்யாம் ஸூ முகம் ப்ரணம்ய
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஐஸாந்யாம் ஸூ ப்ரதிஷ்டம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம இதி ஸர்வ ஸ்மாத் பஹி பிரணமேத்

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம -என்று எல்லா வாசல்களிலும் உள்ள த்வார பாளர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று கிழக்கு திசையில் பார்ஷ தேஸ்வரனான குமுதனை வணங்கி
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் கிழக்கில் குமுதாஷனை வணங்கி
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று தெற்கில் புண்டரீகனை வணங்கி
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் மேற்கில் வாமனனை வணங்கி
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம என்று மேற்கில் சங்கு கர்ணனை வணங்கி
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட மேற்கில் ஸர்ப நேத்ரனனை வணங்கி
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வடக்கில் ஸூ முகனை வணங்கி
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட கிழக்கில் ஸூ ப்ரதிஷ்டனை வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம -என்று எல்லாரையும் வெளிப்புறத்தில் வணங்க வேண்டும் –

அந்யத்ர ஆவாஹ்ய பூஜாயாம் ஆவஹ நஸ்தா நாநி பரம வ்யோம -ஷீரார்ணவ -ஆதித்ய மண்டல ஹ்ருதயாநி -மதுரா த்வாரகா -கோகுல -அயோத்யாதீநி
திவ்ய அவதார ஸ்தாநாநி ச அன்யாநி ப்வராணிகாநி ஸ்ரீ ரெங்காதீ நி ச யதா ருசி

மற்றோர் இடத்தில் ஆவாஹநம் செய்து திருவாராதனம் செய்வதற்கு உரிய இடங்களாக பரமபதம் திருப்பாற் கடல் -ஸூர்ய மண்டலம் முதலிய இடங்களையும்
வடமதுரை துவாரகை கோகுலம் அயோத்யை முதலிய திவ்ய அவதார ஸ்தலங்களையும்
ஸ்ரீ ரெங்கம் முதலிய திவ்ய தேசங்களையும் அவரவர் விருப்பப்படி ஆவாஹநம் செய்து கொள்ள வேண்டும் –

பாத்ரேண பூர்வ ஸ்தாபித அர்க்ய பாத்ராத் அர்க்ய ஜலம் ஆதாய பாணிப்யாம் முக சமம் உத்த்ருத்ய
பகவன் இதம் பிரதி க்ருஹ்ணீஷ்வ இதி சிந்தயன் பகவான் முகே தர்ச யித்வா பகவத் தக்ஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாயார்க்க்யம் ப்ரதிக்ருஹ பாத்ரே ப்ரஷிபேத் ஹஸ்தவ் ப்ரஷால்ய
பாதயோ புஷ்பாணி சமர்ப்ய பாத்ய பாத்ராத் பாத்ய ஜலம் ஆதாய பாதயோ கிஞ்சித் தத்வா மனஸா பாதவ் ப்ரஷாலயன் பாத்யம் பிரிதிக்ருஹ பாத்ரே நிஷிபேத்

முன்பு ஏற்படுத்தப்பட்ட அர்க்ய பாத்திரத்தில் இருந்து அர்க்ய ஜலத்தை எடுத்துக் கைகளாலன் முகத்துக்கு சமமாக உயர வைத்துக் கொண்டு
பகவானே இதனை ஏற்றுக் கொண்டு அருள வேணும் -என்று நினைத்து -பிரார்த்தித்து -பகவானுடைய திரு முகத்தின் முன் காட்டி
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது அர்க்யம் சமர்ப்பித்து ப்ரதிக்ருஹ -படிக -பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –
கைகளை அலம்பி எம்பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களை சமர்ப்பித்து பாத்ய பாத்திரத்தில் இருந்து பாத்ய ஜலத்தை எடுத்து
திருவடிகளில் சிறிது சேர்த்து மனத்தினால் திருவடிகளை விளக்குவதாக நினைத்து பி பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

ஹஸ்தவ் ப்ரஷால்ய
வஸ்த்ரேண பாதவ் ஸம் ம்ருஜ்ய கந்த புஷ்பாணி தத்வா
ஆசம நீய பாத்ராத் ஆசம நீய மாதாய பகவத் தஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாய பகவத் வதேந ஆசம நீயம் சமர்ப்பிதம் இதி மனசா பாவயன் சேஷ மாசம நீயம் ப்ரதிக்ரஹ பாத்ரே நிஷி பேத்
ததோ கந்த புஷ்ப தூப தீப ஆசமன முக வாஸ தாம் பூலாதி நிவேதநம் க்ருத்வா ப்ரணம்ய
ஆத்மா நம் ஆத்மீயம் ச ஸர்வம் பகவன் நித்ய கிங்கரத்வாய ஸ்வீ குர்வ இதி பகவதே நிவேதயேத்
தத ஸ்நாநார்தம் ஆஸனம் ஆ நீய
கந்தாதி ப்ரப்யர்ச்ய பகவந்தம் ப்ரணம்ய அனுஜ் ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்ய பூஷண வஸ்த்ராண் யப நீய விஷ்வக் ஸேனாய தத்வா ஸ்நாந சாடி காம் ப்ரதாய பாத்யாசமா நீய பாத பீட ப்ரதான தந்த காஷ்ட ஜிஹ்வா நிர்லேஹந

கைகளை அலம்பி
வஸ்திரத்தினால் திருவடிகளை ஒத்துத் துடைத்து -பூக்களை சமர்ப்பித்து ஆசம நீய பாத்திரத்தில் இருந்து ஆசம நீயம் எடுத்து
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது ஸமர்ப்பித்து பகவானுடைய திரு வாயில் ஆசம நீயம் சமர்ப்பிக்கப் பட்டது என்று மனத்தினால் பாவித்து
மிகுந்த ஆசம நீய தீர்த்தத்தை ப்ரதிக்ருஹ பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
பிறகு புஷ்பம் தூபம் தீபம் தாம்பூலம் முதலிய வற்றை நிவேதனம் செய்து -தண்டன் சமர்ப்பித்து –
தன்னுடைய ஆத்மாவையும் ஆத்மாவைச் சேர்ந்த எல்லாவற்றையும் பகவானே நித்ய கைங்கர்யம் செய்வதற்க்காக
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பகவான் இடம் சமர்ப்பிக்க வேண்டும்
பிறகு திருமஞ்சனத்துக்காக ஆஸனத்தை ஏற்படுத்தி கந்தம் முதலியவற்றால் அர்ச்சித்து பகவானை தண்டன் சமர்ப்பித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து பகவான் சாத்திக் கொண்டு இருக்கிற மாலை ஆபரணங்கள் வஸ்திரம் ஆகியவற்றைக் கழற்றி விஷ்வக் சேனர் இடம் கொடுத்து விட்டு
திருமஞ்சன வஸ்திரம் சாத்தி பாத்யம் ஆசம நீயம் பாத பீடம் சமர்ப்பித்து
திரு முத்து பல் விளக்குதல் திரு நாக்கு வழித்தல்

கண்டூஷ முக ப்ரஷாலந ஆசமன ஆ தர்ச ப்ரதர்சன ஹஸ்த ப்ரஷாலந -முக வாஸ தாம்பூல
தைலாப் யங்க–உத்வர்தாமலக தோய -கங்கதப் லோத தேஹ ஸோதந ஸாடிகா ப்ரதான
ஹரித்ரா லேபந ப்ரஷாலந வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோ பவீத ப்ரதான பாத்ய ஆசமன பவித்ர ப்ரதான
கந்த புஷ்ப தூப தீப ஆசமன – ந்ருத்த -கீத -வாத்யாதி ஸர்வ மங்கள ஸம் யுக்த
அபிஷேக நீராஞ்சன ஆசமன-தேஹ சோதந -ப்லோத வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோபவீத -ஆசமன -கூர்ச பிரசாரண
ஸஹஸ்ர தாராபிஷேக நீராஞ்சன ஆசமன -தேஹ சோதந ப்லோத வஸ்திர உத்தரீய -யஜ்ஜோ பவீத ஆசமநாநி தத்யாத் –

வாய் கொப்பளித்தல் திரு முகம் விளக்குதல் -ஆசமனம் – கண்ணாடி காண்பித்தல் -கைகளை அலம்புதல் -தாம்பூலம்
எண்ணெய் காப்பு – நல்ல நெல்லிக்காய் சேர்த்த தீர்த்தம் –திருமேனியைத் துடைக்கும் உலர்ந்த வஸ்திரம் -மான்கள் காப்பு தெளித்தல் -வஸ்திரம் உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் சமர்ப்பித்தல் –
பாத்யம் ஆசமநம் பவித்ரம் சமர்ப்பித்தல் -கந்தம் புஷ்பம தூபம் -தீபம் ஆசமனம் -நாட்டியம் இசை வாத்தியங்கள் முதலிய மண்கலன்களோடு கூடிய
திருமஞ்சன ஆலத்தி ஆசமனம் ஆகியவை சமர்ப்பித்து மறுபடியும் திரு மேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் கூர்ச்சம் சமர்ப்பித்தல்
சஹஸ்ர தாரை திருமஞ்சனம் ஆலத்தி ஆசமனம் திருமேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் ஆகியவை சமர்ப்பிப்பது –

தத அலங்காராஸனம் அப்யர்ச்ச ப்ரணம்ய அநுஜ ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பூர்வவத்
ஸ்நாநீய வர்ஜம் அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்தோத்தகாநி மந்த்ரேண கல்பயித்வா பகவதே
கந்தபுஷ்ப பாத ஸம் மர்தந-வஸ்திர -உத்தரீய -பூஷண -உபவீத -பார்க்க பாதுகா ஆசமநீயாநி தத்வா
ஸர்வ பரிவாராணாம் ஸ்நாந வஸ்த்ராதி பூஷணாந்தம் தத்வா கந்தாதீன் தேவ அநந்தரம் ஸர்வ பரிவாராணாம் ப்ரத்யேகம் ப்ரதாய தூப தீப ஆசமநீயாநி தத்யாத்
அதவா ஸர்வ பரிவாராணாம் கந்தாதீநேவ தத்யாத்

பிறகு அலங்காரச்சாநத்தைப் பூஜித்து -வணங்கி -எம்பெருமானுடைய அனுமதி கொண்டு -பாதுகையை சமர்ப்பித்து
அங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு முன்பு போலவே ஸ்நா நீயத்தைத் தவிர்த்து
அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்த தீர்த்தங்களை மந்திரத்தினால் ஏற்படுத்தி எம்பெருமானுக்கு கந்த புஷ்பம
திருவடிகளை வருடுதல் -வஸ்திரம் உத்தரீயம் -ஆபரணங்கள் -யஜ்ஜோ பவீதம் அரக்ய பாத்ய ஆசமநீயங்கள் சமர்ப்பித்து
காந்தம் முதலியவற்றை எம்பெருமானுக்குப் பிறகு எல்லாப் பரிவாரங்களும் தனித்தனியே ஸமர்ப்பித்து தூப தீப ஆசமநீயங்களை சமர்ப்பிக்க வேண்டும்
அல்லது எல்லாப் பரிவாரங்களும் காந்தம் முதலியவற்றை மட்டுமே ஸமர்ப்பிக்க வேண்டும் –

கந்த புஷ்ப ப்ரதான -அலங்கார -அஞ்சன -ஊர்த்வ புண்ட்ர -ஆதர்ச -தூப தீப -ஆசமன -த்வஜ -சத்ர -சாமர -வாஹந –
சங்க சிஹ்ன -காஹல -பேர்யாதி -சகல ந்ருத்த கீதா வாத்யாதிபி
அப்யர்ச்ச மூல மந்த்ரேண புஷ்பம ப்ரதாய

கந்த புஷ்பங்களை ஸமர்ப்பித்து அலங்காரம் அஞ்சனம் திருமண் காப்பு கண்ணாடி தூபம் தீபம் ஆசமனம் கொடி குடை சாமரம் வாஹனம்
சங்கம் திருச்சின்னம் காளம் பேரிகை முதலியவற்றுடன் நாட்டியம் இசை அனைத்து வாத்யங்கள் இவற்றுடன் அர்ச்சித்து மூல-திரு -மந்த்ரத்தினால் புஷ்பம் சமர்ப்பித்து
ஒவ்வொரு அஷரத்துக்கும் புஷ்பம் சமர்ப்பித்து –

த்வாதஸ அக்ஷரேண -விஷ்ணு ஷட் அக்ஷரேண-விஷ்ணு காயத்ர்யா -பஞ்ச உபநிஷதை -புருஷ ஸூக்தர்க்பி
அந்யைஸ் ச பகவன் மந்த்ரை சக்தஸ் சேத் -புஷ்பம் ப்ரதாய தேவ்யாதி திவ்ய பரிஷாதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா ப்ரணம்ய
ப்ரதி திஸம் ப்ரதக்ஷிண ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்சலிம் தத்வா புரத ப்ரணம்ய
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை ஸ்துத்வா ஆத்மாநம் நித்ய கிங்கர தயா நிவேத்ய ததைவ த்யாத்வா யதா ஸக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
ஸர்வ போக ப்ரபூர்ணம் மாத்ரம் தத்வா முகா வாஸ தாம்பூலே ப்ரதாய அர்க்யம் தத்வா போஜ்யாசனம் அப்யர்ச்ச ப்ரணம்ய
அநுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்ய ஆசமநீய அர்ஹாணி தத்வா

ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய -என்ற 12 எழுத்து மந்திரத்தாலும்
ஓம் விஷ்ணவே நம -என்ற ஆறு எழுத்து மந்திரத்தாலும்
ஓம் நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீ மஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்கிற விஷ்ணு காயத்ரியாலும்
பஞ்ச உபநிஷத்துக்களாலும்
புருஷ ஸூக்த ருக்குகளினாலும்
பிற பகவன் மந்த்ரங்களாலும்
சக்தியுள்ளவரை புஷ்ப்பங்களை சமர்ப்பித்து
பிராட்டி முதலிய அடியவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு உரிய மந்திரங்களுடன் புஷ்பம் ஸமர்ப்பித்து வணங்கி
எல்லா திசைகளிலும் ப்ரதக்ஷிணம் பிரணாமம் இவற்றுடன் எம்பெருமானுக்கு புஷ்பாஞ்சாலி ஸமர்ப்பித்து முன்னால் வணங்கி
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -திருப்பாவை முதலிய அருளிச் செயல்களால் -ஸ்துதித்து
தன்னை நித்ய கைங்கர்ய பரனாக ஸமர்ப்பித்து -அப்படியே தியானித்து -சக்தி யுள்ளவரை மூல திரு மந்த்ரத்தை ஜபித்து
எல்லா போகங்களையும் பூர்த்தி செய்யும் மாத்திரையை ஸமர்ப்பித்து வாயுக்கு வாஸனை அளிக்கும் தாம்பூலம் சமர்ப்பித்து
அர்க்கியம் சமர்ப்பித்து போஜ்யசாநத்தைப் பூஜித்து வணங்கி
பகவான் அனுமதி கொண்டு -பாதுகை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் பகவானுக்கு பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பித்து –

குடம் மாஷிகம் ஸர்பி ததி ஷீரம் சேதி பாத்ரை நிஷிப்ய
ஸோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய மது பர்கம் அவநத ஸிரா ஹர்ஷோத்புல்ல நயநோ ஹ்ருஷ்ட மநா பூத்வா ப்ரதாய ஆசமநீயம் தத்யாத்
யத் கிஞ்சித் த்ரவ்யம் பகவதே தீயதே தத் ஸர்வம் சோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய தத்யாத்

வெல்லம் தேன் நெய் தயிர் பால் ஆகியவற்றைத் தனித்தனிப் பாதிரிரத்தில் சேர்த்து சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி
அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து மதுபர்க்கத்தை குனிந்த தலையுடன் கண்களில் மகிழ்ச்சி பொங்க
உகப்பான மனத்துடன் கூடியவனாகி ஸமர்ப்பித்து ஆசமநீயம் ஸமர்ப்பிக்க வேண்டும்
எந்தப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கப் படுகிறதோ அவை அனைத்தையும் சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து சமர்ப்பிக்க வேண்டும் –

ததஸ் ச காம் ஸ்வர்ண ரத்நாதி கம் ச யதா ஸக்தி தத்யாத்
ததஸ் ஸூ ஸம்ஸ்க்ருதாந்நம் ஆஜ்யாட் யம் ததி ஷீர மதூ நிச பல மூல வ்யஞ்ஜநாநி
மோத காஸ் ச அந்யாநி ச லோகே ப்ரிய தமாநி ஆத்ம நஸ் ச இஷ்டா நி ஸாஸ்த்ரா விருத்தா நி ஸம் ப்ருத்ய சோஷணாதி பிர் விசோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய அஸ்த்ர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்ய
அர்ஹண பூர்வகம் ஹவிர் நிவேதயேத் அதி ப்ரபூதம் அதி சமக்ரம் அதி ப்ரிய தமம் அத்யந்த பக்தி க்ருதம் இதம் ஸ்வீ குர்வ இதி ப்ரணாம பூர்வகம்
அத்யந்த ஸாத் வச வி நயா வநதோ பூத்வா நிவேத யேத்-

பிறகு பசு தங்கம் ரத்னம் முதலியவற்றையும் தன்னால் முடிந்தவரை ஸமர்ப்பிக்க வேண்டும் –
பிறகு நன்றாக சமைக்கப் பட்ட அன்னத்தில் நெய் மிகுதியாகச் சேர்த்து தயிர் பால் தேன் முதலியவற்றையும்
பழங்கள் கிழங்குகள் வியஞ்சனங்களையும்
பிற பணியாரங்களையும் உலகில் மிகவும் விரும்பப்படுகிற பொருள்களாய் -தனக்கும் மிகவும் விருப்பமானவைகளாய்
ஸாஸ்த்ர விருத்தம் இல்லாதாவைகள் ஆனவற்றையும் சேர்த்து
அஸ்த்ர மந்திரத்தினால் காப்பிட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி அர்ப்பணிக்கும் பாவத்துடன் அமுது செய்விக்க வேண்டும் –
மிகவும் அதிகமானையும் -மிகவும் நிறைந்துள்ளவையும் -மிகவும் ப்ரீதியுடன் கூடியவையுமான இவற்றை
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வணக்கத்துடன் மிகவும் பணிவாக தலை சாய்த்து அமுது செய்விக்க வேண்டும் –

ததஸ் ச அநு பாந தர்பணோ ப்ரதாய ஹஸ்த ப்ரஷாலந ஆசமந ஹஸ்த ஸம் மார்ஜந -சந்தந -முகா வாஸ தாம்பூலாதீநி தத்வா ப்ரணம்ய
புந மந்த்ராஸனம் கூர்சேந மார்ஜயித்வா அப்யர்ச்ச அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்யாதிகம் அபோஹ்ய விஷ்வக் சேநாய தத்வா
பாத்யா சம நீய -கந்த -புஷ்ப தூப தீப ஆசமன அபூப பலாதீநி தத்வா
ஆசமன முகா வாஸ தாம்பூல ந்ருத்த கீத வாத்யாதி ப்ரப்யர்ச்ச ப்ரதக்ஷிணத் வயம் க்ருத்வா தண்டவத் ப்ரணம்ய

பிறகு தீர்த்தத்தை அன்புடன் ஸமர்ப்பித்து -திருக்கைகளை விளக்குதல் -ஆசமனம் -திருக்கைகளைத் துடைத்தல் -சந்தனம் தாம்பூலம்
முதலியவற்றை சமர்ப்பித்து வணங்கி மீண்டும் மந்த்ராசனத்தை தர்ப்பையினால் துடைத்து அர்ச்சித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து எழுந்து அருளியுள்ள எம்பெருமானுடைய மாலை முதலியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து பாத்யம் ஆசமநீயம் புஷ்பாம் தூபம் தீபம் ஆசமனம் அப்பம் பழங்கள் முதலியவற்றை ஸமர்ப்பித்து
ஆசமனம் தாம்பூலம் நாட்டியம் இசை வாத்தியங்கள் இவற்றால் அர்ச்சித்து இரண்டு ப்ரதக்ஷிணங்கள் செய்து தடியைப் போலே விழுந்து வணங்கி –

பர்யங்காசனம் அப்யர்ச்ய அனுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்யாசமநே தத்வா
மால்யா பூஷண வஸ்த்ராணி அப நீய விஷ்வக் ஸேனாய தத்வா
ஸூக சயன உசிதம் ஸூக ஸ்பர்சம் ச வாஸ ச தது சிதானி பூஷணாநி உபவீதம் ச ப்ரதாய ஆசம நீயம் தத்வா
கந்த புஷ்ப தூப தீப ஆசமன முகா வாஸ தாம்பூலாதி ப்ரப்யர்ச்ச
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை அபிஷ் டூய பகவா நேவ ஸ்வ ந்யாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷ தைக ரஸேந
அநேந ஆத்மநா ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான்
ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி சமஸத் போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதாந் விதாய ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாதிதவாந் இதி அநு சந்தாய
பகவந்தம் அனுஜ் ஞாப்ய பகவன் நிவேதித ஹவிஸ் சேஷாத் விஷ்வக் ஸேனாய கிஞ்சித் துத் த்ருத்ய நிதாய
அந்யத் ஸர்வம் ஸ்வா சார்ய ப்ரமுகே ப்யோ வைஷ்ணவேப்யோ தத்வா
பகவத் யாகாவா சிஷ்டை ஜலாதி பிர் த்ரவ்யை விஷ்வேக் சேனம் அப்யர்ச்ச பூர்வோத்ததம் ஹவிஸ் ச தத்வா
ததர்சனம் பரி ஸமாப்ய பகவந்தம்
அஷ்டாங்கேந ப்ரணாமேந ப்ரணம்ய சரணம் உப கச்சேத்

பர்யங்க ஆசனத்தை அர்ச்சித்து அனுமதி கொண்டு -பாதுகையை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு
பாத்யம் ஆசமனம் ஸமர்ப்பித்து -மாலை ஆபரணங்கள் -மேல் வஸ்திரங்கள் -ஆகியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து
ஸூ கமாக சயனிப்பதற்கு ஏற்ற மென்மையான வஸ்த்ரத்தையும் அதற்கு ஏற்ற ஆபரணங்கள் யஜ்ஜோ பவீதத்தையும் ஸமர்ப்பித்து
ஆசமனம் ஸமர்ப்பித்து புஷ்பம் தீபம் தூபம் ஆசமனம் தாம்பூலம் முதலியவற்றால் அர்ச்சித்து
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -அருளிச் செயல்களால் -திருப்பாவை முதலியவற்றின் சாற்றுப் பாசுரங்களை -சேவித்து ஸ்துதித்து
பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை யுடையதும் தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக யுடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்த்ரிய மனஸ் முதலிய கரணங்களால் தன்னுடைய மங்களமான பொருள்களான -உபசாரங்களான -குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் மிகவும் நிறைந்தவைகளாய் -மிக ப்ரீதி யானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னைத் தானே ப்ரீதி செய்து கொள்வதற்காகத் தானே திருவாராதனம் செய்து கொண்டான் என்று அனுசந்தித்து
பகவான் அனுமதி கொண்டு பகவானுக்கு அமுது செய்வித்து ப்ரசாதத்தில் விஷ்வக் சேனருக்குச் சிறிது எடுத்து வைத்து –
மற்ற எல்லாவற்றையும் தன ஆச்சார்யர் முதலிய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சமர்ப்பித்து
பகவானுக்குத் திருவாராதனம் செய்து மிகுந்த தீர்த்தம் முதலிய பொருள்களால் விஷ்வக் சேனரைப் பூஜித்து
முன்பு எடுத்து வைத்து இருந்த பிரசாதத்தையும் ஸமர்ப்பித்து அந்தப் பூஜையை முடித்து -பகவானை
எட்டு அங்கங்களுடன் கூடிய ப்ரணாமத்தால் வணங்கிச் சரண் அடைய வேண்டும் –

மநோ புத்தி அபி மாநேந ஸஹ ந்யஸ்ய தரா தலே
கூர்ம வத் சதுரஸ் பாதான் சிரஸ் தத்ரைவ பஞ்சமம்
ப்ரதக்ஷிண ஸமே தேந த்வேவம் ரூபேண ஸர்வதா
அஷ்டாங்கேந நமஸ் க்ருத்ய ஹ்யு விஸ்ய அக்ரத ப்ரபோ

இத் யுக்த அஷ்டாங்க ப்ரணாம ஸரணாகதி ப்ரகாரஸ் ச பூர்வ யுக்த ததஸ்
அர்க்ய ஜலம் ப்ரதாய பகவந்தம் அனுஜ ஞாப்ய பூஜாம் ஸமா பயேத்

இதி ஸ்ரீ பகவத் ராமாநுஜ விரசிதோ நித்ய க்ரந்த ஸமாப்தம்

மனம் புத்தி அபிமானம் -அஹங்காரம் -இவை மூன்றையும் அடக்கி
தரையில் ஆமை போலே நான்கு கால்கள் -கைகள் இரண்டு -கால்கள் இரண்டு -தலை ஆகிய ஐந்தையும் தரையில் படும்படி ப்ரதக்ஷிணத்தோடு கூடியதாய்
இப்படி எப்போதும் அஷ்டாங்கத்துடன் எம்பெருமான் திரு முன்பே நமஸ்கரித்து அமர்ந்து என்று அஷ்டாங்க பிராணாமம் கூறப்பட்டுள்ளது

சரணாகதி செய்யும் முறை முன்பே கூறப்பட்டது

பிறகு அர்க்ய தீர்த்தத்தை ஸமர்ப்பித்து பகவானுடைய அனுமதி கொண்டு திருவாராதனத்தை முடிப்பது

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிய நித்ய கிரந்தம் நிறைவடைந்தது –

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எம்பெருமானார் தர்சனம் –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

June 12, 2022

ஸ்ரீ எம்பெருமானார் பூர்வாச்சார்ய பரம்பரை யாகிற ரத்நாஹாரத்துக்கு நடுநாயக ரத்னம் என்பதை
ஸ்ரீ தேசிகன் யதிராஜ ஸப்ததியிலே

அமுநா தபந அதிசாயி பூம் நா
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி–15-

தேஜோவானான ஸூரியனிலும்-விஞ்சிய தேஜஸை யுடைய நம் ஸ்வாமி
நாயக ரத்னமாக அமைந்துள்ளதால்
மிகவும் பெருமை யுற்ற குரு பரம்பரையான ரத்ன ஹாரமானது மிகவும் பெருமை யுடையதாய்
தத்வ வித்துக்களான வித்வான்களுக்கு சிந்தனைக்கு இனியதாக விளங்குகிறது –

பூர்வாசார்ய பரம்பரையில், யதிராஜர் ஸுர்யனை விடப் ப்ரகாசத்துடன் நடுநாயக ரத்னமாக விளங்குகிறார் .
இதனால், குருபரம்பரைக்கே ஏற்றம் .குருபரம்பரை என்கிற மணிகளால் ஆன ஹாரத்தில் ,
பண்டிதர்களுக்கு , ஹ்ருதய அங்கமாக (மனத்துக்கு உகந்ததாக —மார்பில் பொருந்தியதாக)
இந்த நாயகக் கல்லாக, ஸ்ரீ ராமானுஜர் விளங்குகிறார்

ஸம்ஸாரிகள் துர் கதி கண்டு பொறுக்க மாட்டாதபடி கிருபை கரை புரண்டு இருக்கையாலே அர்த்தத்தின் சீர்மை பாராதே
அநர்த்தத்தையே பார்த்து திருக்கோட்டியூர் நம்பியிடம் பெற்ற ரஹஸ்ய த்ரய அர்த்தத்தை வெளியிட்டு அருளினார் எம்பெருமானார்
இவருடைய பர ஸம்ருத்திக்கு உகந்து -இவரது ஆஜ்ஞா அதி லங்கனம் பண்ணி அமர்யாதமாக பிரபத்தி பிரதானம் பண்ணின
ப்ரபாவத்தைக் கண்டு ஸாத்தி அருளிய திரு நாமம் அன்றோ இது
காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில் யாரே அறிபவர் நின்னருளின் தன்மை –

தர்சனம் -மதம் -பார்வை -கண் -பல பொருள்களைக் குறிக்கும் பதம்

மதம்
தர்சனம் என்னும் பதம் மதம் என்னும் பொருளைக் குறிக்கும் -நம் தர்சனத்துக்குத் தத்வங்கள் மூன்று -ஈடு மஹா பிரவேசம்

இதம் அகில தம கர்சனம் தர்சனம் ந -தேசிகன்

எம்பெருமானார் தர்சனம் என்றே பேர் இட்டு நாட்டி வைத்தார் நம்பெருமாள் -அத்தை வளர்த்த அச்செயலுக்காக –

யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத்
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய –57-

யதிராஜரின் விசிஷ்டாத்வைதம் பிற்பாடு தோன்றியது.
சங்கரரின் அத்வைதமோ, முன்னமே தோன்றியது. அதனால், அத்வைதமே சிறந்தது என்றனர், பிறமதத்தினர்.
மதங்களின் சிறப்புக்கும், உயர்வுக்கும் ,பழமையோ புதுமையோ காரணமல்ல.
விசிஷ்டாத்வைதம் பின்னாலே தோன்றியது என்பது, அதன் குறையல்ல !
உயர்ந்த அந்த தத்வத்தை,முன்னமேயே தோற்றுவிக்காதது மனிதனின் குறையே !
டங்கர் ,த்ரமிடர் , குஹதேவர் முதலிய பூர்வாசார்யர்கள் ,
சங்கரரைக் காட்டிலும் பழமையானவர்கள் தாங்கள் சொன்ன விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை எல்லோரும்
அப்போது பாராட்டியதால் , கவலை அற்றவர்களாக, கண்டனத்துக்கான நூல்களை அப்போது எழுதாது விடுத்தனர்

எம்பெருமானார் வளர்த்த இந்த தர்சனம் நூதனமே என்பாரேல்
அதனால் குறை ஒன்றும் இல்லை என்கிறார் –
இதை விட சங்கராதி மதங்கள் தொன்மை வாய்ந்தவை என்பதனால் என்ன பெருமை –
உறை கல்லில் உரைத்துப் பார்த்தால் தெரியும் –
இந்த விசிஷ்டாத்வைத மதத்தை ப்ராசீன காலத்திலேயே ப்ரவர்த்திப்பத்தது-
டங்கர் -த்ரமிட பாஷ்ய காரர் -குஹ தேவர் போல்வார் தெளிந்த ஞானம் யுடையவர் அன்றோ –

ஸம்ப்ரதாய பரிசுத்தி ஆரம்பத்தில் தேசிகன்
ஸர்வ லோக ஹிதமான அத்யாத்ம ஸாஸ்திரத்துக்கு பிரதம பிரவர்த்தகன் ஸர்வேஸ்வரன் -இந்த யுக ஆரம்பத்திலே ப்ரஹ்ம நந்த்யாதிகளுக்குப் பின்பு நம்மாழ்வார் ப்ரவர்த்தகர் ஆனார் –

ஸ்வாமி எம்பெருமானார் தாமே –
பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம் பூர்வாச்சார்யாஸ் சஞ்சி ஷுபு தன் மத அநு சாரேண ஸூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ் யந்தே -ஸ்ரீ பாஷ்யம்

பகவத் போதாயன டங்க த்ரமிட குஹ தேவர் கபர்தி பாருசி ப்ரப்ருதி அவி கீத சிஷ்ட பரிக்ருஹீத புராதன
வேத வேதாங்க வ்யாக்யா ஸூவ்யக்தார்த்த ஸ்ருதி நிகர நிதர்ச்சி தோயம் பந்தா -வேதார்த்த ஸங்க்ரஹம்

இம்மதம் அநாதி -எம்பெருமானார் பரம ரக்ஷகர் -ஸ்ரஷ்டா அல்லர்
நாதோ பஞ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹு பிரு பசிதம் யாமுநேய ப்ரபந்நை த்ராதம் ஸம்யக் யதீந்த்ரை -தேசிகன்

எம்பெருமானார் தர்சனம் என்றே இதற்கு நம்பெருமாள் பேர் இட்டு நாட்டி வைத்தார்
அம்புவியோர் இந்தத் தரிசனத்தை வளர்த்த அந்தச்செயல் அறிகைக்காக -மா முனிகள்
நாட்டி வைத்தார் -நம்பெருமாள் தானே நேராக இந்தத் திருநாமம் சாத்தி அருளினார் என்றும்
நாட்டு வித்தார் -திருக்கோட்டியூர் நம்பிகள் மூலம் சாத்துவித்து அருளினார்

————–

இனி இதன் ப்ரமேயங்களைப் பார்ப்போம் –

பிரதிதந்தர சித்தாந்தம் -அசாதாரணம் -சரீராத்ம பாவம் -இதனாலேயே ப்ரஹ்ம விசாரம் -சாரீரிக மீமாம்ஸை –
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வீ சரீரம் -ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா –நாராயண -உபநிஷத்
ச ஈஸ்வர வியஷ்ட்டி சமஷடி ரூப -ஸ்ரீ பராசர பகவான்
ஜகத் ஸர்வம் ஸரீரம் தே -ஸ்ரீ வால்மீகி பகவான்
அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ன -வேத வியாசர்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் நம்மாழ்வார்
யத் அண்டம் பராத்பரம் ப்ரஹ்ம சதே விபூதய -ஆளவந்தார்

விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தில்
தத்வம் -ஸ்ரீ மன் நாராயணனே பரதத்வம்
ஹிதம் -கிருபா விசிஷ்டனானவனே பரம உபாயம்
புருஷார்த்தம் -அவன் திரு உள்ள உகப்பே பரம புருஷார்த்தம்
பரத்வ ஸ்தாபகம் காரணத்வம் -முதல் பத்தில் பரத்வம் -அருளிச் செய்து -அடுத்த பத்தில் காரணத்வத்தையும் –
தத் அநு குணங்களான வியாபகத்வாதிகளையும் அடைவே அருளிச் செய்கிறார் –

———

வேதாந்தங்கள் காரண வஸ்துவை
ஸத்
ப்ரஹ்ம
ஆத்மா
ஹிரண்ய கர்ப்ப
சிவ
இந்த்ர
நாராயண
ஸப்தங்களால் நிர்த்தேசித்து உள்ளன
முதலில் சொன்ன ஆறும் பொதுச் சொற்கள்
நாராயண ஸப்தம் விசேஷ ஸப்தம்
நாராயண ஸப்த கடித வாக்கியத்தில் மட்டும் நாராயணன் ஒருவனே இருந்தான் -ப்ரஹ்மாவும் இலன் சிவனும் இலன் என்று ஸ்பஷ்டமாக ஓதப்பட்டுள்ளது
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந -உபநிஷத்

ஸத் ப்ரஹ்மாதி பரம காரண வாசிபி சப்தை நாராயண ஏவாபி தீயதே இதி நிச்சீயதே -வேதார்த்த ஸங்க்ரஹம்

ஸத் ப்ரஹ்மாத்ம பதை த்ரயீ சிரஸி

யோ நாராயண உக்த்யா ததா வ்யாக்யாதோ கதி ஸாம்ய லப்த விஷயான் அநந்ய த்வ போதோ ஜ்வலை -ஆழ்வான் ஸூந்தர பாஹு ஸ்தவம்

வாரணம் காரணன் என்று அழைக்க ஓடி வந்து அருள் புரிந்தவன் நாராயணன் ஒருவனே
ஆகவே நாராயணனே ஜகத் காரணன்

————

இனி ஸர்வ வியாபகத்வம்
உபாதானத்வமும் நிமித்தமும் -ஸஹ காரித்வமும் -ஆக – த்ரிவித காரணமும் அவனே அத்புத சக்தன்
அத்ரோச்யதே ஸகல இதர விலக்ஷணஸ்ய பரஸ்ய ப்ராஹ்மண ஸர்வ ஸக்தே சர்வஞ்ஞஸ்ய ஏக்ஸ்யைவ ஸர்வம் உபபத்யே -ஸ்ரீ பாஷ்யம்
ஸர்வஞ்ஞத்வ ஸர்வ சக்தித்வே நிமித்த உபாதானத உபயோகிநீ -ஸ்ருத ப்ரகாசிகா வாக்யம்
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ -ஸ்ருதி
ப்ரக்ருதிச்ச -என்றும்
சாஷாச்ச உபாயம்னானாத் – என்றும் வ்யாஸ ஸூ த்ரங்கள்
வேர் முதல் முத்து -த்ராவிட உபநிஷத்

வியாப்ய கத தோஷம் தட்டாமல் வியாபிக்கிறான்
நிர்விகாரத்வம் ஸ்வரூப நிஷ்டம் என்றும்
விகாரம் சரீர பூத சேதன அசேதன கதம்
அசேஷ ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதானம் ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீரதயா தத் ஆத்ம பூதம் பரம் ப்ரஹ்ம ஸ்வ சரீர பூதே ப்ரபஞ்சே —
ஸ்வஸ் மின் ஏகதாம் ஆ பன்னே சதி –ஜகச் சரீர தயா ஆத்மானம் பரிண மயதீதி ஸர்வேஷு வேதாந்தேஷு பரிணாமம் உபதேச -ஸ்ரீ பாஷ்யம்

பரமாத்ம சித் அசித் சங்காத ரூப ஜகதாகார பரிணாமமே பரமாத்ம சரீர பூத சிதம் சகதா ஸர்வ ஏவ அபுருஷார்த்தா
ததா பூதா சிதம் ச கதாச்ச சர்வே விகாரா பரமாத்மனி கார்யத்வம் ததவாப்தயோ தயோ நியந்த்ருத்வேந ஆத்மத்வம் -ஸ்ரீ பாஷ்யம்

அவிகார ஸ்ருதயே ஸ்வரூப பரிணாம பரிஹாரா தேவ முக்யார்த்தா -வேதார்த்த ஸங்க்ரஹம்
என்றும் இறே எம்பெருமானார் நிஷ்கர்ஷம்

லோகத்தில் கார்ய காரணங்கள் போல் அன்றிக்கே உபாதான காரணமும் தானே யாகையாலே கார்ய பூத ஸமஸ்த வஸ்துக்களும் வியாபகனாய் -பெரிய ஜீயர் ஆச்சார்ய ஹ்ருதய வியாக்யானம்

யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருத்வீ சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா –நாராயண -என்பதே மூல பிராமண கோஷம் –

————-

நாராயணனே ஸர்வ நியந்தா –

கீழ் சொன்ன வியாப்தி நிறம் பெறுவது நியந்த்ருதவத்தாலே
ஆகாசத்துக்கு வியாப்தி உண்டு -அசேதனம் ஆகையால் நியமன ஸாமர்த்யம் இல்லை –
ராஜாவுக்கு நியமன ஸாமர்த்யம் உண்டு -அணு மாத்ர ஸ்வரூபன் -ஆகையால் வியாபகத்வம் இல்லை
பகவான் பராமசேதனனாயும் விபூவாயும் இருக்கிற படியால் வியாபகனாயும் ஸர்வ நியாந்தாவாகவும் உள்ளான்
அனேந ந்ருப நபோ வ்யாவ்ருத்தி ஸ்ருத ப்ரகாஸகர்
சாந்தோக்யம் ஸத் வித்யா பிரகரணத்தில் -ஆதேச -பதத்துக்கு எம்பெருமானார்
ஆதிஸ்யதே அனேந இத்யாதேச –ஆதேச ப்ரஸாஸனம் -வேதார்த்த ஸங்க்ரஹம்
ஆதிஸ்யதே –ஆதேச -இதி ப்ரத்யயார்த்த வியாக்யானம்
ஆதேச ப்ரஸாஸனம் -இதி ப்ரக்ருத்யர்த்த வியாக்யானம் என்று இறே தாத்பர்ய தீபிகா
ஸாஸ்தா விஷ்ணுர் அசேஷஸ்ய -பள்ளிப்பிள்ளை வார்த்தை
ஈஸித்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக க -ஆளவந்தார்
வியாப்தி நிறம் பெற தனிக்கோல் செலுத்தும் ஸர்வ நியந்தா –
அந்தப்ரவிஷ்ட ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்மா -வேத கோஷம்

————

நாராயணனே உபய விபூதி யுக்தன்

புகழு நல் ஒருவன் என்கோ -திருவாய் மொழி
ஸ்ரீ கீதை பத்தாவது அத்யாயம் -நாராயணன் விபூதி மான் என்று அறுதியிட்டார்கள்

தத் வ்யதிரிக்தஸ்ய ஸமஸ்தஸ்ய ததா யத்ததாம் தத் வியாப்யதாம் தத் ஆதாரதாம் தந் நியாம்யதாம் தத் சேஷதாம் தத் ஆத்ம கதாம்ச ப்ரதிபாத்ய -வேதார்த்த ஸங்க்ரஹம் –

ப்ரஹ்ம சிவயோரபி இந்த்ராதி சமானாகரதயா தத் விபூதித்வம் ச ப்ரதிபாதித்தம் -வேதார்த்த ஸங்க்ரஹம்
க்ஷயந்தம் அஸ்ய ரஜஸ பராகே
அனேந த்ரி குணாத் மக்காத ஷேத்ரஜ்ஞஸ்ய போக்ய பூதாத் வஸ்துந ப்ரஸ்தாத் விஷ்ணோ வாஸஸ்தானம் இதி கம்யதே-வேதார்த்த ஸங்க்ரஹம்
த்வேவா ப்ரஹ்மணோ ரூபே -மூர்த்தம் சைவ அமூர்த்தம்ச இதி ப்ரக்ருத்ய –ஸமஸ்தம் ஸ்தூல ஸூஷ்ம ரூபம் பிரபஞ்சம் ப்ரஹ்மணோ ரூபத்வேந பராம் ருஸ்ய-ஸ்ரீ பாஷ்யம்
நிதித்யாஸனாய ப்ரஹ்ம ஸ்வரூபம் உபதிசத் த்வேவாவ ப்ரஹ்மண -இத்யாதி ஸாஸ்த்ரம் ப்ரஹ்மணோ மூர்த்தா மூர்த்த ரூபத்வாதி விசிஷ்டதாம் ப்ராக் அசித்தாம் நாநு வதிம் சமம் -ஸ்ரீ பாஷ்யம்
லோக்யத இதி லோக தத் த்ரயம் லோகத்ரயம் அசேதனம் தத் ஸம்ஸ்ருஷ்ட -சேதன முக்தச் சேதி பிரமாணாவ காம்யம் ஏதத் த்ரயம் ய ஆத்மதயா ஆவிஸ்ய பிபர்தி-கீதா பாஷ்யம் என்று
உபய விபூதி நாதத்த்வத்தை வெளியிட்டு அருளி உள்ளார்கள்
ஆக அவனே ஸர்வ ஸப்த வாஸ்யன் ஆகிறான் –

————-

திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்

அந்தராதித்யே ஹிரண்மய புருஷ –ஹிரண்மயஸ்மஸ்ரு –ஆ பிரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண –தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சுருதி
ராம கமல பத்ராஷ -ஸ்ரீ ராமாயணம்
இச்சா க்ருஹீத அபிமதோரு தேஹ -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ரூபம் வா அதீந்த்ரியம் –ஹிரண்மய இதி ரூப சாமான்யாத் -டங்காச்சார்ய வாக்யம்
யதா பூத வா திஹி ஸாஸ்த்ரம் –ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் –த்ரமிட பாஷ்யம்
துயர் அறு சுடர் அடி -திருவாய் மொழி

ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாயா ப்ரக்ருதி ஸ்வ பாவ ஸ்வ மேவ ஸ்வ பாவம் அதிஷ்டாய ஸ்வேநைவ ரூபேண ஸ்வ இச்சையா ஸம்பவாமி
இத்யர்த்த ஸ்வ ஸ்வரூபம் ஹி ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் —
க்ஷயந்தம் அஸ்ய ரஜஸ பராகே –அந்தராதித்யே ஹிரண்மய புருஷ -இத்யாதி ஸ்ருதி ஸித்தம் -கீதா பாஷ்யம்

இதாநீம் விஸ்வ சரீரத்வேந த்ருஸ்ய மான ரூப த்வம் தேனைவ ரூபேண பூர்வ ஸித்தேந சதுர் புஜேந ரூபேண யுக்தோ பவ -கீதா பாஷ்யம்
நீராய் நிலனாய் சிவனாய் அயனாய் -6-9-1-ஜெகதாகார அனுபவம் அனுவதித்திக் கொண்டு
கூராழி வெண் சங்கு ஏந்தி –வாராய் -என்று திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்ட அனுபத்தை – ஆசைப்படுகிறார் அன்றோ

—————–

உபய லிங்கம்

சத்ர சாமரங்கள் போல் அடையாளங்கள் -அகில ஹேய ப்ரத்ய நீகம்-கல்யாண குணை கதானத்வம் -என்று இது இறே பகவத் ஸப்த அர்த்தமாய்
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸி அசேஷத பகவத் ஸப்த வாஸ்யாநி விநா ஹேயை குணாதிபி -ஸ்ரீ பராசரர் நிஷ்கர்ஷம்

ப்ரஹ்மம் ஸ குணம் என்பதை
ஈஷதே நா ஸப்தம்
ஆனந்த மய அப்யாஸத்
அந்த தத் தர்மோப தேசாத்
அத்ருஸ்யத்வாதி குணகஸ் தர்ம யுக்த
சாஸ ப்ரஸா ஸனாத்
அபித்யோ பதே சாச்ச
ஆனந்தா தய ப்ரதானஸ்ய -இத்யாதிகளால் வேத வியாஸரும்
யுக்தம் தத் குண கோபா ஸநாத் -என்று வாக்யகாரரான டேங்கர் என்ற ப்ரஹ்ம நந்தியும்
யத்யபி –ததாபி அந்தர் குணா மேவ தேவதாம் பஜதே –ஸ குணைவ தேவதா ப்ராப்யதே -த்ரமிட பாஷ்யகாரர்
அபவ்ருஷே யத்வ நித்யத்வங்களாலே வேதம் அகில பிரமாண விலக்ஷணமாய் இருப்பது போல்
இந்த உபய லிங்கத்தால் இவனும் அகில பிரமேய விலக்ஷணன் –
இவற்றையே தூயானைத் தூய மறையானை -11-7-3- கலியன்
நம்மாழ்வார் முதலடியிலே மாயாவாதிகள் மிடற்றைப் பிடிக்குமா போல் நலமுடையவன் -என்றார் போல்
மாறன் அடி பணிந்து உய்ந்தவரான எம்பெருமானாரும்
நிர்மல ஆனந்த கல்யாண நிதயே -வேதார்த்த ஸங்க்ரஹம்
நிர்மல ஆனந்த உதன்வதே -வேதாந்த சாரம்
ஸ்ரீ யபதி நிகில ஹேயப்ரத்ய நீக கல்யாண குணை கதான -கீதா பாஷ்யம்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை குணை கதான -சரணாகதி கத்யம்
கல்யாண குணங்களே உள்ளவன் என்பதை ஸ குண ஸ்ருதியும்
அபேகுணங்கள் கேசமும் கிடையாது என்பதை நிர்குண ஸ்ருதியும் என்றும் இந்த நிர்ணயத்தை
ந ச நிர்குண வாக்ய விரோத ப்ராக்ருத ஹேய குண விஷயத்வாத் தேஷாம்
நிர்குணம் இத்யாதீனம்
பரஸ்ய ஸக்தி –ஏஷ ஆத்மா –ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப
இத்யாத்யா ஸ்ருதய ஞாத்ருத்வ பிரமுகான் கல்யாண குணான் -என்றும் அருளிச் செய்துள்ளார்

சங்க்யாதும் நைவ ஸக்யந்தே குணா தோஷச்ச சார்ங்கி ஆனந்த்யாத் -பிரதமோ ராசி அபாவதேவ பஸ்ஸிம -ஸாஸ்த்ர வசனம்

ஆழ்வானும் -தூரே குணா தவ து ஸத்வ ரஐஸ் தமாம் ஸி தேன த்ரயீ ப்ரதயதி த்வயி நிர்குணத்வம் நித்யம் ஹரே நிகில ஸத் குண சாகரம் ஹி த்வா மாமனந்தி பரமேஸ்வரம் ஈஸ்வராணாம் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

உபய லிங்கம் -உபய லக்ஷணம் நிரஸ்த நிகில தோஷத்வ கல்யாண குணாகரத்வ லக்ஷணோபேதம் இத்யர்த்த -ஸ்ரீ பாஷ்யம்

அந்நியோன்ய பின்ன விஷயா ந விரோத கந்தம் அர்ஹந்தி -நடாதூர் அம்மாள் தத்வ சார வாக்யம்

கல்யாணை அஸ்ய யோக ததிர விரஹோபி ஏக வாக்ய ஸ்ருதவ் ச -தேசிகன் -தத்வ முக்த கலாபம்

பதினாறு ஹேதுக்களைக் கொண்டு ஸத்ய கல்யாண குணாகரன் என்று ஸ்ருத பிரகாசிகர்

த இமே ஸத்ய காம -வேதாந்த கோஷம் –

—————

இவனே புருஷோத்தமன் –

பக்தனோடு முக்தனோடு நித்யனோடு வாசியற ஜீவ ஸாமான்யம் பகவத் பாரதந்த்ரம்
ஸ ஸ்வராட் பவதி
ஸ அக்ஷர பரம ஸ்வாட் -என்று ஸ்வா தந்தர்யம் ஓதப்பட்டு இருந்தாலும்
கர்மங்களைக் குறித்தே இந்த ஸ்வா தந்தர்யம்
அத ஏவ ச அநந்ய அதிபதி -வேத வியாச ஸூத்ரம்
அவன் ஒருவனே ஸ்வ தந்த்ரன் -புருஷோத்தமன் -மற்ற அனைவருமே பரதந்த்ரர்கள் -நாரீ துல்யர்கள்
இது பற்றியே நேஹ நா நா -என்று த்வதீய நிஷேதம்
பரமாத்ம ஸத்ருச ஸ்வ தந்த்ரன் மற்று ஒருவன் அல்லன் என்றவாறு –
ஸ ஏவ வாஸூ தேவோயம் ஸாஷாத் புருஷ உச்யதே -ஸ்ரீ ராமாயணம்

புருஷாத் கைவல்யார்த்தி ப்ராப்யாத் ஸ்வாத்ம ஸ்வரூபாத் உத்தம அபரிச்சின்ன தயா ஸ்ரேஷ்ட -ஸ்ரீ வசன பாஷ்ய டீகை

ந ச தேன விநா நித்ராம் லபதே புருஷோத்தம -ஸ்ரீ வால்மீகி பகவான்

புருஷோத்தம க -ஆளவந்தார்

ப்ரஹ்ம சப்தேந புருஷோத்தமோ அபி தீயதே -ஸ்ரீ பாஷ்யம்

————–

இவனே ஸ்ரீ மான்

பரமாத்வாய் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -அத ஏவ ச ஸ ப்ரஹ்ம
மலர்மகள் விரும்பும் –அடிகள் -1-3-1-
அருளாத திருமால் -1-3-8-
நம் திருவுடை அடிகள் -1-3-8-
அருளாத திருமால் -1-4-7-
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமால் -1-5-7-
மலராள் மைந்தன் -1-5-9-
திரு மகளார் தனிக்கேள்வன் -1-6-9-
திருவின் மணாளன் -1-9-1-
பூ மகளார் தனிக்கேள்வன் -1-9-3-
உடன் அமர் திருமகள் -1-9-4-
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4-
செல்வ நாரணன் -1-10-8-
நீயும் திருமாலால் -2-1-1-
ஞாலம் படைத்தவனைத் திரு மார்வனை -3-7-8-
திரு நாரணன் தாள் -4-1-1-0
மைய கண்ணாள் –உறை மார்பினன் -4-5-2-
மணிமாமை குறைவில்லா மலர் மாதர் உரை மார்வன் -4-8-2-
குடந்தைத் திருமால் -5-8-7-
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -6-10-10-
என் திருமகள் சேர் மார்பனே -7-2-9-
எழில் மலர் மாதரும் தானும் -7-10-1-

என் திரு வாழ் மார்பன் -8-3-7-
கமல மலர் மேல் செய்யாள் திரு மார்பினில் சேர் திருமாலை -9-4-1-
திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமால் -10-6-9-
உன் திரு மார்பத்து மாலை நான்கை -10-10-2-
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7-
என்று த்வய விவரணமான திருவாய் மொழியிலே ஸ்ரீ மானாக அருளிச் செய்கிறார் –

ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே -ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்
பாஷ்யகாரர் இது கொண்டு ஸூ த்ர வாக்கியங்களை ஒருங்க விடுவார்
புரா ஸூத்ரை வியாஸ –விவவ்ரே–வகுள தரதாம் ஏத்ய ஸ புன உபா வேதவ் க்ரந்தவ் கடயிதும் ராமாவரஜ-ஆச்சான் பிள்ளை

பொய்கையார் பரனை உபய விபூதி உக்தன் என்றும்
பூதத்தார் -அவனை நாராயணன் -என்றும்
பேயார் -அவனை ஸ்ரீ மான் என்று நிர்ணயித்து அருளிச் செய்கிறார்கள்-பெரியவாச்சான் பிள்ளை

ஸ்ரத்தயா தேவா தேவத்வம் அஸ்னுதே -என்றும்
ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யவ் -என்றும் வேத புருஷனும்

திருவில்லாத் தேவரை தேறேன்மின் தேவு -என்று திருமழிசைப் பிரானும்
வேதாந்தா தத்வ சிந்தாம் முரபிதுரசி யத் பாத சிந்ஹை தரந்தி -என்று பராசர பட்டரும்

கஸ் ஸ்ரீ ஸ்ரீய -என்று ஆளவந்தாரும்
ஸ்ரீ யபதித்வத்தைப் பரக்க அருளிச் செய்தார்கள் அன்றோ –

———————-

இவனே ஸகல பல பிரதன்

தத்வ த்ரயங்கள் -அசித் -சித் -ஈஸ்வரன்
புருஷார்த்த த்ரவ்யங்கள் -ஐஸ்வர்யம் -கைவல்யம் -பரம மோக்ஷம்
ஐம்கருவி கண்ட வின்பம் -தெரிவரிய அளவில்லாச் சிற்று இன்பம் –திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் -4-9-10-
இதில் முதலாவது போகம் -மற்றவை இரண்டும் அபவர்க்கம் –
போக அபவர்க்க ஸகல பல பிரதன் நாராயணனே

இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே –
வீடு முதல் முழுவதுமாய் –
வீடு முதலாம் –
பரஸ்மா தேவாஸ்மாத் புருஷாத் தத் பிராப்தி ரூபம் அபவர்காக்யம் பலம் இதி ஸம் ப்ரதி ப்ரூதே துல்ய ந்யாய தயா
ஸாஸ்த்ரீயம் ஐஹிகம் ஆமுஷ்மிகம் அபி பலம் அத ஏவ பரஸ்மாத் புருஷாத் பவதி இதி சாமான்யேந பலம் அத இத் யுச்யதே -எம்பெருமானார்

————-

ஆக
1-அகில ஜகத் காரணன்
2- ஸர்வ வியாபகன்
3-ஸர்வ நியாந்தா
4-உபய விபூதி யுக்தன்
5-திவ்ய விக்ரஹ யுக்தன்
6-உபய லிங்கம்
7-புருஷோத்தமன்
8-ஸ்ரீ மான்
9-ஸகல பல பிரதன்–
நாராயணனே என்று எம்பெருமானார் தர்சனத்தில் பர தத்வம் பற்றிய விஷயங்களை அனுபவித்தோம் –

இத்தை அறிய ஸாஸ்திரமே பிரமாணம்
தர்க்கஸ்ய அப்ரதிஷ்ட்டி தத்வாதபி ஸ்ருதி மூல ப்ரஹ்ம காரண வாத ஏவ ஆஸ்ரயணீய -ஸ்ரீ பாஷ்யம்
அத அதீந்த்ரிய அர்த்தே ஸாஸ்த்ரம் ஏவ பிரமாணம் தத் உப பிரும்ணா யைவ தர்க்க உபாதேய-ஸ்ரீ பாஷ்யம்
ஏவம் சித் அசித் வஸ்து சரீரதயா தத் விசிஷ்டஸ்ய ப்ரஹ்மண ஏவ ஜகத் உபாதானத்வம் நிமித்தத் வம்ச நாநுமான கம்யம் இதி
ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் தஸ்ய -யதோவா இத்யாதி வாக்கியம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்ம போதயதி இதி -வேதார்த்த சாரம் –

———

இனி பர தத்வ பிரசங்காத் அவர தத்வங்களான சேதன அசேதனங்களைப் பற்றிச் சிறிது அனுபவிப்போம்

ஜீவ தத்வம்

ஞாதாவாகையையாலே -தேஹாதிகளைக் காட்டில் வேறுபட்டவன் ஜீவாத்மா
பகவத் சேஷ பூதன் என்பதால் சேஷியான பகவானைக் காட்டிலும் வேறுபட்டவன் –
இதம் சரீரம் –ஏதத்யோ வேத்தி -ஷேத்ரஞ்ஞம் சாபி மாம் – கீதாச்சார்யன்

மூல மந்திரத்தில் மகாரமும் லுப்த சதுர்த்தி விஸிஷ்ட ஆகாரமும் -ஜீவனை ஞாதா சேஷன் -என்று கூறும்
பிறர் நன் பொருள் -கண்ணி நுண் சிறுத்தாம்பு

ஞாத்ருத்வம் பஹிரங்கம்
சேஷத்வம் அந்தரங்கம்
தாஸ்யம் இறே அந்தரங்க நிரூபகம்-ஸ்ரீ வசன பூஷணம்
அகாரத்தாலே சேஷத்வத்தைச் சொல்லி –
பின்பு இறே மகாரத்தாலே ஞாத்ருத்வத்தைச் சொல்லிற்று
மனத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே சேஷம் என்று ஆத்மாவை ஆதரிக்கிறது
அல்லாத போது -உயிரினால் குறைவிலம் -என்கிறபடியே த்யாஜ்யம்

ஸ்ரீ வேத வியாசர் முந்துற சேஷத்வத்தை முதல் அத்யாயம் அந்தர்யாம் யதிகரணாதிகளில் சொல்லி
பின்பு இறே இரண்டாம் அத்தியாயத்தில் ஞாத்ருத்வத்தை அருளிச் செய்கிறார் –

அத ஏவ பாஷ்ய காரைர் -சேஷத்வே சதி ஞாத்ருத்வம் சேதன லக்ஷணம் ஸம்ப்ரதாய பரம்பரா ப்ராப்தம் க்ருதம் என்றும்
அஹம் ப்ரத்யய வேத்யத்வாத் மந்த்ரே ப்ரதமம் ஈரணாத் பாஷ்ய காரஸ்ய வஸனாத் –சேஷத்வ முக்யதா ஸித்தே -ஸ்ரீ வசன பூஷண மீமாம்ஸா வாக்கியம்

ஞாத்ருத்வ விஸிஷ்ட சேஷத்வமே தாஸ்யம்
இது இறே அசித் ஈஸ்வர உபய வை லக்ஷண்ய ஸாதகமாய் இருப்பது
ஏதத் விஷய ஞானம் இல்லாத போது சத்தான ஜீவனும் அசித் ப்ராயன் அன்றோ என்று உபநிஷத் அசன்னேவ-பவத் என்கிறது
தாஸ பூதா ஸ்வத ஸர்வே ஹி ஆத்மாந பரமாத்மந -ஸாஸ்த்ர வசனம்
தாஸ்யேந லப்த சத்தாகா தாஸ பூதா –பூ சத்தாயாம் -என்று இறே தாது
தாஸ ஸப்தம் சேஷத்வத்தையும்
ஆத்ம ஸப்தம் ஞாத்ருத்வத்தையும் காட்டுவதைக் காணலாம்

ஆக பகவத் தாஸ்யத்தாலே லப்த சத்தாகும் ஜீவா தத்வம் என அறிந்தோம் –

———

அசித் தத்வம்

அசித் தத்வம் அறிவில்லாதது
பிரகிருதி காலம் சுத்த சத்வம் தர்ம பூத ஞானாமியென்ற நான்கு வகை
பிரகிருதி தத்வம் விரோதி -அர்த்த பஞ்சக ஞானத்தில் ஓன்று விரோதி ஸ்வரூபம் -இத்தையே மாயா என்பர்
அர்த்த பஞ்சக ஞானமே நிரதிசய ஆனந்த -பரம மோக்ஷ -ஹேது
அர்த்த பஞ்சக அஞ்ஞானம் அனந்த கிலேச -ஸம்ஸார ஹேது
அநாத்மாவான தன்னை ஆத்மாவாகவும்
அபோக்யமான தன்னை போக்யமாகவும்
அஸ்திர மான தன்னை ஸ்திரமாகவும்
காட்டும் விசித்திர சக்தி மாயா -பிரக்ருதிக்கு உண்டே

மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாத் மாயினம் து மஹேஸ்வரம் -உபநிஷத்
மம மாயா துரத்யயா -கீதா உபநிஷத்
இத்தை கழித்துக் கொள்ளவே பக்தி ப்ரபத்திகள் –

ஆக
அசேஷ சித்த அசித் வஸ்து சேஷீ நாராயணன் பரதத்வம் என்றும்
அவன் திருவடிகளில் தாஸ பூதன் ஜீவாத்மா என்றும்
கர்ம அனுகுண ப்ராக்ருத அசித் சம்பந்தம் விரோதி என்றும்
தத்வ த்ரயங்கள் பற்றி அறிந்தோம்

இனி
ஹிதம்
புருஷார்த்தம் பார்ப்போம்

—————-

பரம ஹிதம்
ஆத்ம க்ஷேமம் அடைய உபாயம் கிருபா விஸிஷ்ட ப்ரஹ்மமே
ஸ்வ ப்ராப்தவ் ஸ்வயம் இஹ கரணம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி தேசிகன்
உப பத்தே ச -வியாசர்
ப்ராப்யஸ் யைவ பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தவ் ஸ்வஸ் யைவ உபாயத்வ ப்ரதீதே -நாயமாத்மா -இதி அநன்ய உபாயத்வ ஸ்ரவணாத் -ஸ்ரீ பாஷ்யம்
ப்ராப்யஸ் யைவ பரமாத்மந ப்ராபகத்வ உப பத்தே யதாஹ –நாயமாத்மா -இதி –வேதாந்த ஸாரம்

புல்லைக்காட்டி அழைத்துப் புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்குப் பேதம் இல்லை
ப்ராப்தாவும் ப்ராபகனும் அவனே -ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
நல்குரவும் -6-3- அவதாரிகையில் ஈட்டில் இவ்விஷயம் வியக்தம்

ஆக பகவானே உபாயம்
உபாயத அவச்சேதகம் காருண்யம் –

———

பரம புருஷார்த்தம்

பகவன் முகோலாசமே ஜீவாத்மாவுக்கு பலம் -ப்ராப்யம்
பர்த்ரு பார்யா பாவ சம்பந்தம் அடியாக -உகாரார்த்த நீர்ணீதம்
ஜீவனான பார்யையைப் பார்த்து
இச்சிப்பான்
அடைவான்
அனுபவிப்பான்
நிறைந்த அனுபவம் பெறுவான்
ஆனந்திப்பான்
பகவானாக பர்த்ருவான பரமாத்மாவின் ப்ரிய மோத ப்ரமோத ஆனந்தங்கள் இருக்கும் படி –
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் –பரஸ்மை பத நிர்தேசம் -ப்ராப்தி கிரியா பலம் ஆனந்தம் பரஸ்மை -அந்நியனான பகவானுக்கே சேரும்
ஆப்நோதி -அத்யர்த்த ஞானினம் லப்தவா –
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -இளைய பெருமாள்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே -ஆழ்வார்
மற்றை நம் காமன்கள் மாற்று -ஆண்டாள்
ஆம் பரிசு அறிந்து கொண்டு ஐம் புலன் அகத்து அடக்கி -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித -ஆளவந்தார்
ப்ராப்திக்கு உகப்பானும் அவனே

ஆக பகவானே உபேயம் என்றும்
அவன் உகப்பு உபேயத அவச்சேதகம் என்றும் அறிந்தோம் –

ஆக
எம்பெருமானார் தர்சனத்தில்
தத்வ
ஹித
புருஷார்த்த
நிஷ்கர்ஷம் இருக்கும் படி அறிந்து
இனி இவற்றின் படி இருக்க வேண்டிய அனுஷ்டானம் பற்றியும் அறிய வேண்டுமே –

———–

அனுஷ்டானம் –

ஸ்ரீ கீதையில் சரம ஷட்கத்தில் முதல் மூன்று அத்யாயங்களால் தத்துவத்தையும்
அடுத்த மூன்றால் அனுஷ்டானத்தையும் நிரூபித்து அருளுகிறார் -தேசிகன்

ஆழ்வார் -உயர்வற திருவாய் மொழியால் தத்துவத்தையும்
வீடுமின் முற்றவும் -திருவாய் மொழியால் அனுஷ்டானத்தையும் அருளிச் செய்கிறார் -நம்பிள்ளை

இத்தை ஹிதத்திலும் சேர்ப்பார்கள் நம் பூர்வர்கள்

தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிவாக அறிந்த அதிகாரி
ஐஸ்வர்ய கைவல்ய -ப்ராப்ய ஆபாசங்களிலே நசையற்று
கர்ம ஞான பக்தியாதிகளான ப்ராபக ஆபாசங்களை அடியோடு கைவிட்டு-
ஸ்வரூப அனுரூபமான திவ்ய தம்பதி கைங்கர்யங்களிலே ஆசைப்பட்டு
ஸ்வரூப அனுரூபமாக பிராட்டியைப் புருஷகாரமாகப் பற்றி
பகவானை உபாயமாகப் பற்றக் கடவன்
இதுவே உயர்ந்த தவமான பிரபத்தி மார்க்கம்
தஸ்மாத் நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு -ஸ்ருதி

——–

இந்த ஸ்ரீவைஷ்ணவ ப்ரபன்னன் சரணாகதி செய்த பின்பு மோக்ஷம் அடையும் வரை நடந்து கொள்ள வேண்டும் படியை

உத்தர க்ருத்யத்தை ஸாஸ்த்ரம் விளக்கும்

இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் குண அனுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காகக் கொண்டு
மங்களா ஸாஸனமும்
ஆர்த்தியும்
அணுவார்த்தன நியதியும்
ஆகார நியமமும்
அனுகூல ஸஹவாஸமும்
பிரதிகூல ஸஹவாஸ நிவ்ருத்தியும்
வர்த்தித்துக் கொண்டு போகக் கடவன்

இவனுக்கு ஐந்து ஸ்பர்சம் பரிஹார்யங்கள் -அவை
சைவ ஸ்பர்சம்
மாயாவாத ஸ்பர்சம்
ஏகாயன ஸ்பர்சம்
உபாயாந்தர ஸ்பர்சம்
விஷயாந்தர ஸ்பர்சம்

அவனுடைய பரத்வத்தை அனுசந்தித்தவாறே சைவ ஸ்பர்சம் அகலும்
அவனுடைய உபய லிங்கத்தை அறியவே மாயாவதி ஸ்பர்சம் அகலும்
ஸ்ரீ யபதித்வத்தை அனுசந்திக்கவே ஏகாயன ஸ்பர்சம் அகலும்
அவனுடைய நிரபேஷ உபாயத்வத்தை அறியவே உபயாந்தர ஸ்பர்சம் அகலும்
அவனது திவ்ய மங்கள போக்யதையை அறியவே விஷயாந்தர ஸ்பர்சம் அகலும்

தேஹ தாரணமான தள்ள அளவு போஜனமும்
பரமாத்மா ஸமாராதன சமாப்தியான ப்ரஸாத பிரதிபத்தி என்கிற புத்தியோடு வர்த்திக்கக் கடவன்- பிள்ளை
லோகாச்சார்யார்
பிரதிபத்தி கர்மம் இடா பஷணாதி உபையுக்த ஸம்ஸ்காரம் என்பர் மீமாம்ஸகர்
ப்ரபன்னன் ஆஸனாதி அனுயாக அந்தமான் பகவத் ஆராதனத்தை பரம ப்ரேமத்தோடே செய்து கொண்டு
பகவத் பாகவத ஆச்சார்ய அபசாரங்களை நெஞ்சாலும் நினையாதவனாய்
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே என்கிறபடி
கரை குறுகும் காலம் எதிர்பார்த்து இருப்பன் –
இதுவே இவன் அனுஷ்டானம்

இப்படி
தத்வ பரமாக ஐந்து கிரந்தங்களையும்
அனுஷ்டான பரமாக நான்கு கிரந்தங்களையும்
நவரத்னங்களாக எம்பெருமான் அருளிச் செய்து ஸ்ரீ விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ஸம் ரக்ஷணம் செய்து அருளினார்

ஆகவே இறே நம்பெருமாள் அபிமானித்து எம்பெருமானார் தர்சனம் என்று பேர் இட்டு நாட்டுவித்து அருளினார் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ ப்ரஹ்ம மீமாம்ஸை -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரமும் ஸ்ரீ எம்பெருமானாரும்-விஷய நியமமே பிரபத்திக்கு உள்ளது –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 30, 2022

ஸ குணமான ப்ரஹ்ம விசாரம்
தத்வம் -ஸ்ரீ மன் நாராயணனே பரத்வம்
ஹிதம் -அவன் கிருபையே பரம ஹிதம்
புருஷார்த்தம் -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
ஸ்ரீ பராசர மகரிஷிக்கும் சத்யவதிக்கும் திரு அவதரித்த -வேத வியாஸர் -ஞான மார்க்க ப்ரவர்த்தனத்துக்கு ஆவேச அவதாரம் –
ஸூசநாத் ஸூத்ரம் -அநேக அர்த்தங்களை ஸூசனம் பண்ணும் –
வேதாந்தார்த்த கு ஸூம க்ருதனார்த் தத்வாத் ஸூத்ரம் -அழகானப் பூக்களைத் தொடுப்பது போல் –
ச விசேஷம் ப்ரஹ்மம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண ஏக குண மயன் -ஸர்வாத்மா –

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –
பூர்வ பாக கர்ம பலன் அல்பமாயும் அஸ்திரமாயும் இருப்பதை அறிந்து -அதனாலேயே ப்ரஹ்ம விசாரம்
பரீஷ்ய லோகான் – ப்ராஹ்மணோ நிர்வேதமாயாத் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித் பாணி ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்

ப்ருஹதி ப்ரஹ்மயதி தஸ்மாத் உச்யதே பரம் ப்ரஹ்ம –

ப்ருஹத்வாத் ப்ரும்ஹணாத் வாச் ச தத் ப்ரஹமேத் யபி தீயதே

ஸ்வரூப ப்ருஹத்வமாவது -பகவானுடைய ஆத்ம ஸ்வரூபம் -தன்னை ஒழிந்த ஸமஸ்த பதார்த்தங்களிலும் பூர்ணமாய் இருக்கும் இருப்பு –

குண ப்ருஹத்வமாவது -முக்கால ஸகல பதார்த்தங்களையும் அறிதல் முதலானவை –

யோ வேத்தி யுகபத் ஸர்வம் பிரத்யஷேண ஸதா ஸ்வத -நாத முனிகள்

ப்ருஹ்மணத்வமாவது -நாம ரூப ஸ்தூல அவஸ்தா ஜனக ஸங்கல்ப விசேஷமும்-

ஒரு கால விசேஷத்தில் ஆத்மாவுக்கு ஞான சங்கோசம் நீங்கப்பெற்று ஸ்வரூப ஆவிர்பாவமும்

யேந அக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோ வாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -என்று
எந்த ஞானத்தால் ஸ்வரூப விகாரமும் ஸ்வ பாவ விகாரமும் அற்ற புருஷனை அறிய முடியுமோ -அந்த ப்ரஹ்ம வித்யையை
தன்னைச் சரண் அடைந்த சிஷ்யனுக்கு ஆச்சார்யன் உபதேசிக்கக் கடவன் –
புருஷ ஸப்த வாஸ்யனும் ப்ரஹ்ம ஸப்த வாஸ்யனும் ஒன்றாகவே நிர்த்தேசித்துச் சொல்லும் ஸ்ருதி வாக்கியம் இது
நாராயண மாத்ர ப்ரதிபாதகமான ஸூக்தமே புருஷ ஸூக்தம் ஆகும் –

—————-

முதல் நான்கு ஸூத்ரங்களும் உபோத்காதம்

ஐந்தாவது ஈஷத் அதிகரணம்-சத் ஏவ சோம்ய இதம் அக்ரே –இத்யாதி
சத்தானதே காரண வஸ்து-என்பது நிர்விவாதம் –
அது ஆனுமானிக பிரதானமா -அசித் தத்துவமா -அல்லது ஸர்வஞ்ஞாதி குண விசிஷ்டா ப்ரஹ்மமா –
காரியமும் காரணமும் பிரதானம் தான் பூர்வபக்ஷம்
யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண்மயம் விஞ்ஞாதம் பவதி -த்ருஷ்டாந்தம் ஸ்பஷ்டம் என்பர்
இத்தை வேத வியாசர் ஈஷதேர் நா ஸப்தம் -என்கிற ஸூ த்ரத்தால் கண்டிக்கிறார் –
பஹுஸ்யாம் என்று ஸங்கல்பித்து -ஸ்ருஷ்டித்து -அனுபிரவேசித்து-சத்தா தாரகனாய் இருப்பது வேதாந்த விஷயம் –
இத்தால் சங்கல்பத்தைக் குணமாகச் சொல்லி ப்ரஹ்மம் ச குண விசிஷ்டம் என்று தேறும் அன்றோ –

————

ஆனந்தமய அதிகரணம்
ஸங்கல்ப விசிஷ்டமே ஜகத் காரணம் –
அசித்துக்குக் கூடாமையால் சித் -சேதனனான ஜீவனே ஜகத் காரணம் என்று கொள்ளலாம்
அதீந்த்ரமான பகவான் காரணம் அல்லன் என்று பூர்வ பக்ஷம்
இத்தை ஆனந்தமய அப்யாஸத் -என்று வேத வியாசர் கண்டிக்கிறார்
அதிக ஆனந்தம் உள்ளவன் பரமாத்மாவுக்கே புஷ்கலம்-அல்ப ஆனந்தமயமான ஜீவாத்மா காரணம் ஆகமாட்டான் –
வேதாந்தம் ஸைஷா நந்தஸ்ய மீமாம்ஸா -என்று மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக பெருமையைப்பேசி
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று அபரிச்சின்ன த்வத்தைச் சொல்லுகையாலே
ஆனந்தம் என்கிற குண விசேஷ விஸிஷ்ட ப்ரஹ்மமே விஷயம் –

————-

அந்தர் அதிகரணம்
ப்ரஹ்ம உபாசனம் செய்யும் அதிகாரிக்கு தேச விசேஷத்தில் ப்ரஹ்மத்தையும் ப்ரஹ்ம குணங்களையும் அனுபவிப்பதே புருஷார்த்தம்
ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –
ஆத்ம பதார்த்தம் என்பதை ஸ்தூல அருந்ததீ நியாயத்தால் உபநிஷத் தெரிவிக்கிறது –
அன்ன ரசமான சரீரத்துக்கு ஆத்மவத்தைச் சொல்லி -பிறகு பிராணமயம் -மநோ மயம் -விஞ்ஞான மாயம் -ஆனந்த மயம் -சொல்லி பரமாத்வாவுக்கு ஆத்மத்வத்தை ஸ்தாபிக்கிறது –
அவ்விடத்திலேயே -ஸ யஸ் சாயம் புருஷே யஸ் ஸாசா வாதித்யே -என்று
யத் தத் சப்தங்களால் ஆதித்ய மண்டல மத்ய வர்த்தியான புருஷனுக்கும் ஹ்ருதய குஹ வாஸியான புருஷனுக்கும் ஐக்யம் தெரிகிறது

சாந்தோக்யம் -தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேஸ –
இதில் ஆதித்ய மண்டல மத்ய வர்த்தி புருஷனுக்கு சரீர ஸம்பந்தம் சொல்லிற்று –
கர்மானுகுணமான ஸூக துக்கம் அனுபவிப்பதற்கே சரீர ஸம்பந்தம்
ந ஹ வை ஸ சரீரஸ்ய சத ப்ரீய அப்ரீயயோ அபஹரதிஸ்தி
பரமாத்வாவுக்கு இது கூடாதே என்பதால் இவன் ஜீவனே இவனே ஜகத் காரணம் என்பது பூர்வ பக்ஷம்

அந்தஸ் தத்தர் மோபதேசாத் என்றும்
பேத வியபதே சாச்ச அந்நிய -என்றும்
உள்ள ஸூத்ர த்வயத்தாலே கண்டிக்கிறார்
அபஹத பாப்மத்வாதிகளான சில தர்ம விசேஷங்களை வேதாந்தம் சொல்லுகையாலும்
ஆதித்யாதி தேவதைகளைக் காட்டிலும் ப்ரஹ்மதுக்கு பேதத்தை
ய ஆதித்யே திஷ்டன் யஸ்ய ஆதித்ய சரீரம் -இத்யாதி வாக்யங்களால் பேதம் சொல்லுகையாலும்
புண்டரீகாக்ஷத்வம் பகவத் அசாதாரணம் ஆகையால்
இச்சா க்ருஹீதா பிமதோரு தேஹ -அனுக்ரஹ அதீனமான சரீரம் கொண்டவன்
ஆக காரணத்வமும் பரத்வமும் உபாஸ்யத்வமும் நாராயண அசாதாரணம்
ப்ரஹ்ம ச குணத்வமே தேறும்

———–

ஜகத் வியாபார வர்ஜ அதிகரணம்
அநா வ்ருத்தி சப்தாத்
ந ச புனரா வர்த்ததே
வாஸூ தேவ ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸூ துர்லப
உயர்வற உயர்நலம் உடையவன்
வண் புகழ் நாரணன்
நம் கண்ணன் கண் அல்லது இல்லை யோர் கண்ணே
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –

——————

வேத அபஹாரிணாம் தைத்யம் மீன ரூபி நிராகரோத்
ததர்த்த அபஹாரிணஸ் ஸர்வான் வ்யாஸ ரூபீ மஹேஸ்வர –

வேதத்தை சோமுகன் அபஹரிக்க மத்ஸ்யமூர்த்தி திரு அவதாரம்
வேதார்த்தங்களை வைசேஷிக பவுத்த ஜைன பாசுபதாதி மதஸ்தர்கள் அபஹரிக்க ஸ்ரீ வேத வியாஸர் திரு அவதாரம் –

ப்ரஹ்ம ஸூ தர கிரந்தம் சாரீரகம் -ப்ரஹ்ம மீமாம்ஸை -எனப்படும் –
தஸ்யைஷா ஏவ சாரீர ஆத்மா -பரமாத்மாவே சாரீரன்
ஜகத் சர்வம் சரீரம் தே
ஸம்ஹிதம் ஏதச் சாரீரகம் -ஸ்ரீ போதாயன மகரிஷி

இதன் அர்த்தங்களை விஸ்தரேண ஸங்க்ரஹ பாவத்தால் ஸ்ரீ பாஷ்ய வேதாந்த தீபம் வேதாந்த சாரம் –

—————–

மூலமாக வெளியிட்டு அருளினார்

திருமந்திரம் மூன்று பதங்களால் சகல ஜீவாத்மாக்களுடைய

அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -மூன்று ஆகாரங்களும்
பரமாத்மாவினுடைய சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்களும் கிடைக்கும்
சாரீரகத்தில் முதல் இரண்டு அத்தியாயங்கள் பர ப்ரஹ்மம்

ஜகத் ஏக காரணமாயும் சேதன அசேதன விலக்ஷணமாயும் ஸர்வ சேஷியாகவும் அறுதியிடுகின்றன
இதுவே ப்ரணவார்த்த நிரூபணம்
மூன்றாம் அத்யாயம் ப்ரஹ்மம் உபாயம் -என்று அறுதி இடுகிறது -இதுவே நமஸ் ஸப்தார்த்தம்
நான்காம் அத்யாயம் பரம ப்ராப்யம் என்று அறுதி இடுகிறது -இதுவே நாராயணாய நிரூபணம்

காரணத்வம்
அபாத்யத்வம்
உபாயத்வம்
உபேயத்வம் -எகிற நான்கு அர்த்தங்களும் நான்கு அத்தியாயங்களின் சாரமாகும் –

வேதாந்தங்களிலே ஜகத் காரண வஸ்துவே த்யேயம் -சரண்யம் -ப்ராப்யம் என்று காட்டப்பட்டுள்ளத்து
காரணந்து த்யேய
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -தம் ஹ தேவம் –முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே –
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் –என்று இறே வேதாந்த கோஷம்
தாபத்ரயாதுரை அம்ருதத்வாய ச ஏவ ஜிஜ்ஞாஸ்ய -ஸ்ரீ பாஷ்யகாரர்
இந்த வேதாந்த ஸித்தாந்தத்தை ஸ்தாபிக்கவே வேத வியாசர் திரு அவதாரம் –


 

ஸுத்ரீ சங்க்யா ஸூபாஸீ அதிக்ருத கணநா சின்மயீ ப்ரஹ்ம காண்டே என்கிறபடியே
545-ஸூ த்ரங்கள்
156-அதிகரணங்கள்
16-பாதங்கள்
4-அத்தியாயங்கள்

ஜைமினி அருளிச் செய்த பூர்வ மீமாம்ஸை -கர்ம மீமாம்ஸை -முதல் 12 அத்தியாயங்களில் ஜ்யோதிஷ்டோமோதி கர்மங்கள் விசாரம்
மேல் நான்கு அத்யாயங்களின் கர்ம ஆராத்யா
தேவதைகள் விசாரம் -ஆக மீமாம்ஸா சாஸ்திரம் 20 அத்தியாயங்கள் கொண்டது –
ஸர்வ கர்ம ஸமாராத்யம் -ஸர்வ தேவதா அந்தராத்ம பூதம் -பரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்யம் என்று வேதாந்த ஸித்தம்
ஐக அர்த்யம்
பூர்வ காண்ட யுக்த கர்மங்கள் அங்கங்கள்
உத்தர காண்ட யுக்த ஞானம் அங்கி
கர்ம அங்கமான ஞானம் உபாயம் -ஐக ஸாஸ்த்ர்யம்
கர்த்ரு பேதமும் விஷய பேதமுமே உண்டு

விஷய த்விகம்-அல்லது ஸித்த த்விகம் என்றும்
விஷயி த்விகம் -அல்லது ஸாத்ய த்விகம் -என்றும் இந்த நான்கு அத்தியாயங்களை பிரிப்பர்
திருவாய் மொழியையும்
முதலிட்டு ஐந்து பத்துக்கள் ஸித்த பரங்கள்
மேலிட்டு ஐந்து பத்துக்கள் ஸாத்ய பரங்கள் -என்று பிரிப்பர் ஸ்ரீ வாதி கேசரி ஜீயர் ஸ்வாமிகள் –

அது பக்தாம்ருதம்
இது பராசர்ய வசஸ் ஸூதா

16 பாதங்களும் 16 திருக்கல்யாண குணங்களைக் கூறும்
அமலனாதி பிரான் -க குணவான் கஸ் ச வீர்யவான் போலே


விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

ஸ்ரஷ்டா-தேஹி -ஸ்வ நிஷ்டா -நிரவதி மஹிமா
அபாஸ்த பாத ஸ்ரீ தாப்தா காத்மா தேகேந்திரியாதேஹே உச்சித ஞானான க்ருத
சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி நிர்தோஷத்வாதி ரம்யோ பஹு பஜன பதம் ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய
பாபசித் ப்ரஹ்ம நாடி கதிக்ருத் ஆதி வாஹன் சாம்யதச்ச அத்ர வேத்ய–ஸ்ரீ அதிகரண சாராவளி

முதல் அத்யாயம் –
1-ஸ்ரஷ்டா–முதல் அத்யாயம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் இவனால்
2-தேஹி -இரண்டாம் பாதம் –சரீரீ இவன் -சேதன அசேதனங்கள் அனைத்தும் சரீரம்
3-ஸ்வ நிஷ்டா – மூன்றாம் பாதம் –ஆதாரம் நியமனம் சேஷி -சமஸ்தத்துக்கும் -தனக்கு தானே –அந்யாதாரன்
4-நிரவதி மஹிமா –நான்காம் பாதம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்

இரண்டாம் அத்யாயம் –
5-அபாஸ்த பாத –முதல் பாதம் –சாங்க்ய யோக சாருவாக வைசேஷிக புத்த ஜைன பாசுபத -புற சமய வாதங்களால் பாதிக்கப் படாதவன்
6-ஸ்ரீ தாப்தா -இரண்டாம் பாதம் -சரண் அடைந்தாரை ரஷிப்பவன் -பாஞ்சராத்ர ஆகம சித்தன்-பஞ்சகால பராயண ஆப்தன்
7-காத்மாதே –மூன்றாம் பாதம் -பிரகிருதி ஜீவர்களுக்கு அந்தராத்மாவாய் இருந்து சத்தை அளிப்பவன்-உசித ஜனன க்ருத -ஆகாச ஜீவர்களுக்கு ஸ்வரூப விகார ஸ்வாஸ் பாவ விகார ரூப ஜனனங்களுக்குக் கர்த்தா
8-தேகேந்திரியாதே – –நான்காம் பாதம் -சரீரம் கர்ம ஞான இந்திரியங்களை -கர்ம அனுகுணமாக அளிப்பவன்-உசித ஜனன க்ருத்

மூன்றாம் அத்யாயம்
9-சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி -முதல் பாதம் –ஸமஸ்த -பிரவ்ருத்தி நிவ்ருத்தி கள் இவன் அதீனம்-ஜாக்ரதாதி அவஸ்தா நிர்வாஹகன்
10-நிர்தோஷத்வாதி ரம்யோ -இரண்டாம் பாதம் -உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண குண ஏக நாதன்
11-பஹு பஜன பதம் –மூன்றாம் பதம் – மோக்ஷப்ரதன்-நாநா வித வித்ய உபாஸ்யம்
12-ஸ்வார்ஹ கர்ம ப்ரஸாத்ய –கர்மம் அடியாக பிரசாதம் -தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்த பல பிரதன்-வர்ணாஸ்ரம ஆசாரத்தாலே திரு உள்ளம் உகக்குமவன் –

நான்காம் அத்யாயம்
13-பாப சித்-முதல் பாதம் -கர்ம பல பாபா புண்ய பிரதிபந்தங்களை போக்குபவன்-உபாஸகர்களின் உத்தர பூர்வ பாபங்களினுடைய அஸ்லேஷ விநாஸ கர்த்தா
14-ப்ரஹ்ம நாடீ கதி க்ருத் -இரண்டாம் பாதம் –கர்மங்கள் தொலைந்த பின்பு -ப்ரஹ்ம நாடி வழியாக ஜீவனை புறப்படும் படி பண்ணுபவன்-ஸ்தூல தேஹ யுக்தனுக்குப் பலம்
15-ஆதி வாஹன் -மூன்றாம் பாதம் -வழித் துணை ஆப்தன்- ஸ்தூல தேஹாத் உதகராந்தனுக்கு ஏற்படும் பலன்கள்
16-சாம்யதச் ச அத்ர வேத்ய–நான்காம் பாதம் சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் -போக சாம்யம் -அளிப்பவன்

நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி
முக்திம் ததோ ஹி பரமம் தவ ஸாம்யம் ஆஹு த்வத் தாஸ்ய மேவ விதுஷாம் பரமம் மதம் தத -ஆழ்வான்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவமும் -அனுபவ ஜனித ப்ரீதிகாரித ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தித உசித -அசேஷ சேஷ விருத்தி தானே மோக்ஷம் -ஸாம்யா பத்தி

—————————–

முதல் அத்யாயம் -35 அதிகரணங்கள்
முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாஸ அதிகரணம் -ப்ரஹ்ம விசாரம் கர்த்தவ்யம் -கர்ம விசார அநந்தரம் கர்த்தவ்யம் என்கிற அர்த்தத்தை ஸ்தாபிக்கிறது
35 வது அதிகரணம் -வியாக்யான அதிகரணம் -பூர்வ யுக்த நியாய அதிதேசம் பண்ணுகிறது
இடையில் 26-அதிகரணம் -அப ஸூத்ராதிகரணம் -ப்ரஹ்ம வித்யா அதிகார பரம் –
மற்ற அதிகரணங்கள் -பரமாத்மா சேதன அசேதன விலக்ஷணன் -ஜகத் ஏக காரண பூதன் என்கிற அர்த்தத்தை ஸ்தாபிக்கின்றன –

ஸாஸ்த்ர உபோத்காதம் -முதலிட்டு நான்கு அதிகரணங்கள்
ஈஷத் அதிகரணம் ஐந்தாவது-அசேதன வைலக்ஷண்யத்தை ஸ்தாபித்து -இது தொடங்கியே ஸாஸ்த்ர ஆரம்பம்
ஆனந்தமய அதிகரணத்தில் சேதன வைலக்ஷண்யம் ஸ்தாபித்து
இவற்றின் விவரணம் மேலுள்ள அதிகரண விஷயங்கள்
ஈஷத் அதிகரணத்தில் ப்ரஹ்மத்தின் உபாயத்வமும்
ஆனந்தமய அதிகரணத்தில் ப்ரஹ்மத்தினுடைய உபேயத்வமும்
இவ்விரண்டும் திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனுக்கே யாகையால் அந்தர் அதிகரணத்தில் பரமாத்மா திவ்ய மங்கள விஸிஷ்டன் என்றும் ஸ்தாபித்தார்

இந்த அடைவே திருவாய் மொழியின் மூன்று பத்துக்களின் அடைவாகும் -இதின் விவரணமே மேல் பிரபந்த சேஷம் –

காரண வாக்கியங்கள் சேதன அசேதன விலக்ஷண விசிஷ்ட ப்ரஹ்மத்தின் இடத்தில் அந்வயம் என்பதால் முதல் அத்யாயம் சமன்வய அத்யாயம் எனப்படுகிறது –

இரண்டாம் அத்யாயம் அவிரோத அத்யாயம் -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -ஜகத் ப்ரஹ்ம கார்யம் -என்பதில் விரோதம் இல்லை என்று ஸ்தாபிக்கிறார்
முதல் இரண்டு பாதங்கள் காரணத்வ விசார பரம்
அடுத்த இரண்டு பாதங்கள் கார்யத்வ விசார பரம்

ப்ரஹ்ம காரணத்வத்தை அங்கீ கரியாமல்
பிரதான -ப்ரக்ருதி தத்வ -காரணத்வத்தையும்
பரமாணு காரணத்வத்தையும் கூறும்
சாங்க்ய -வைசேஷிக -பவ்த்த -ஜைன -சைவ மதங்களைக் கண்டித்து
சேதன அசேதன விலக்ஷண ப்ரஹ்ம காரணத்வத்தைத் தழுவிய பாஞ்சராத்ரத்தைக் கொண்டாடுகிறார்

இரண்டாம் பாதத்தில் ஸாங்க்யாதி பஞ்ச மதங்களைத் தூஷித்து பாஞ்சராத்ரத்தைக் கொண்டாடுகிறார்
பஞ்சே தராணி சாஸ்த்ராணி ராத்ரீ யந்தே மஹாந்த்யபி -பாத்மதந்திர வசனம்

மூன்றாம் பாதமான வியத் பாதத்திலும்
நான்காம் பாதமான ப்ராண பாதத்திலும்
ஸர்வம் ப்ரஹ்ம கார்யம் என்பதை ஸ்த்ரீ கரணம் செய்து ஸ்தாபிக்கிறார்

ஆகாசத்துக்கும் ஜீவாத்மாக்களுக்கும் ப்ரஹ்ம காரியத்தை உபபாதிக்கிறார்
அசித்துக்குக் கார்யத்வம் ஸ்வரூப அந்யதா பாவம்
சித்துக்குக் கார்யத்வம் ஸ்வ பாவ அந்யதா பாவம் என்று ஸித்தாந்தம்
போக்தா போக்யம் ப்ரேரிதா ச மத்வா –

அசித்து போக்யமாக ஸ்வரூப விகாரம் அடைய வேணும் -மாம்பூ மாம்பிஞ்சு மாவடு மாங்காய் மாம்பழம் போல் ஆக வேண்டுமே –
அதே போல் பிரகிருதி -மஹான் -அகங்கார பூத பஞ்ச காதிகளாகப் பரிணமிக்க வேண்டுமே
அவ்வாறு பரிணமிக்கும் படி சங்கல்பிக்கிறான் காரணபூதனான ஸர்வேஸ்வரன்
ஜீவன் இவற்றுக்குப் போக்தா
ஸ்வரூபத்தால் நிர்விகாரன்
ஸ்வ தர்மபூத பெற்று அனுபவிக்கிறான் –
இவற்றுக்கு நியாந்தா ஸர்வேஸ்வரன்
ஜீவாத்மா வேறு அவனது தர்மபூத ஞானம் வேறு -ஓன்று தர்மி -மற்ற ஓன்று தர்மம் –
தத்வத்ரயமும் ச விசேஷமே
வைலக்ஷண்யம் கூற ஓரோர் அதிகரணத்திலும் ஒரு விசேஷம் உண்டு என்று ஸ்தாபிக்கிறார் –
ஸங்கல்பம் ஆனந்தம் முதலான விசேஷ குணங்களோடு ப்ரஹ்மம் என்று ஸ்தாபிக்கிறார் –

மூன்றாம் அத்தியாயத்தில்
உபபத்தேச்ச -என்று உபாய பூதன் என்று கூறுகிறார்
வ்யாஜங்களாக பக்த்யாதிகள்
பக்தி விளையும் போது விஷயாந்தர வைராக்கியமும் -பகவத் விஷய ராகமும் வேண்டுமே –
முதல் பாதம் வைராக்ய பாவம் -இரண்டாம் பாதம் உபாயலிங்க பாதம் –
மூன்றாம் பாதத்தில் ப்ரஹ்ம உபாஸ்ய குணங்கள் விசாரம்
நான்காம் பாதம் ப்ரஹ்ம வித்யா அங்க பாதம்

நான்காம் அத்யாயம் பல அத்யாயம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுடைய பலம் –
இதில் முதல் முன்னமே வித்யா ஸ்வரூப சோதனம் செய்து மேலே வித்யா பலத்தைக் கூறுகிறார்
கர்ம விநாசம் அஸ்லேஷம் தூநநம் -உதறுதல் -உபாயனம் -வேறே ஒருவன் இடம் சேர்த்தால் இவன் எல்லாம் சொல்லப்படுகின்றன –
இப்படி சரீரத்தோடு கூடி இருக்கும் காலத்தில் வித்யா பலம் கூறப்பட்டு மேல் –
மூன்றாம் பாதத்தில் அர்ச்சிராதி கதி
நான்காம் பாதம் பிராப்தி பாதம் -பரமபதபிராப்தி
அனைத்துலகும் யுடைய அரவிந்த லோசனனைத் தினைத்தனையும் விடாதே அனுபவிக்கும் அனுபவம்
அபுநா வ்ருத்தி -பலமும் கூறப்படுகிறது –

ஆக
ஜகத் ஏக காரணமாய்
ஸர்வ சேஷியாய்
சேதன அசேதன விலக்ஷணமாய் உள்ள
ப்ரஹ்மமே
உபாஸ்யம்
முக்த ப்ராப்யம்
முக்தி பிரதம்
பரம போக்யம்
என்று சாரீரகத்தில் ஸ்ரீ வேத வியாஸ பகவான் அறுதியிடுகிறார்

இவை இத்தனையும்
ஸ்ரீ பாஷ்ய
வேதாந்த தீப
வேதாந்த சார
வேத்யங்கள் ஆகும் –

————-

விஷய நியமமே பிரபத்திக்கு உள்ளது

ஸ்ரீ வாஸூதேவனையே விஷயமாகக் கொள்ள வேண்டும்
ஆத்மாவுக்கு உத்தமம் மத்யமம் அதமம் என்ற புருஷார்த்தங்களாவன சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயங்கள் -நஞ்சீயர்

தரதி சோகம் ஆத்மவித் -சாந்தோ -7-1-3-என்று சோக நிவ்ருத்தியும்
தத் ஸூஹ்ருத துஷ் க்ருதே நூ நுதே -கௌ -2-1-4- என்று புண்ய பாப கர்ம நிவ்ருத்தியும் –
சோத்வ ந பரம ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கட -1-3-9-என்று தேச விசேஷ பிராப்தியும்
ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே -என்று ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவமும்
நிரஞ்சனம் பரமம் ஸாம்யம் உபையதி -முண்ட -3-1-3- என்று பரம சாம்யா பத்தியும்
ஆனந்தமயம் ஆத்மானம் உப ஸங்க்ராமதி -தைத்ரியம் ஆனந்த -8- என்று பகவத் ஸாமீப்யமும்
சோச்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா -தைத்த-ஆனந்த -1- என்று பகவத் குண அனுபவமும்
ரஸம் ஹ்யேவாயம் லப்தவா ஆனந்தீ பவதி -தைத்ரியம் -என்று பகவத் அனுபவ ஜெனித ஆனந்தமும்
யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதா -என்று பகவத் அனுவ்ருத்தி ரூபமான கைங்கர்யமும்
ஞான பலமாக உபநிஷத்துக்கள் கோஷிக்கும் –
பக்திக்கும் பிரபதிக்கும் விஷய நியமம் பரம அவஸ்யகம் என்று நம் முன்னோர் அறுதியிட்டுள்ளனர் –

பிரபத்திக்கு தேச நியமமும் கால நியமமும் பிரகார நியமமும் அதிகாரி நியமமும் பல நியமமும் இல்லை விஷய நியமமே உள்ளது -பிள்ளை லோகாச்சார்யார்-

உபாஸன மேவ நது ஞான மாத்ரம் இத்யேகா ப்ரதிஜ்ஜா தத்ராபி பக்தி ரூபா பன்னம் நோபாஸந மாத்ரம் இதி த்விதயா
ஏவம் விதம் உபாஸன மேவ ந து கர்ம சமுச்சிதம் -இதை த்ரு தயா தச்ச பர விஷய மேவ இதி சதுர்த்தீ -தேசிகன்

மீமாம்ஸா -கர்ம தேவதா ப்ரஹ்ம கோசரா சாத்ரிதா -தத்வ ரத்நாகர வசனம் -ஏகார்த்த ப்ரதிபாதகங்கள் –
ஸம்ஹித மேதத் சாரீரகம் ஜைனிநீ யேந – போதாயனர்
ஸகல கர்மாக்காலுக்கும் ஆராத்யன் -ஸகல தேவதைகளுக்கும் அந்தராத்மா -ப்ரஹ்ம ஸப்த வாஸ்யன் பரமாத்மாவே -புருஷோத்தமன் –

ப்ரஹ்ம மீமாம்ஸையில் முதல் பத்து பாதங்கள் தத்வ பரம்
மேல் ஆறும் பர ப்ரஹ்ம ப்ராப்த்ய அனுபவ கைங்கர்ய ரூப பரம மோக்ஷ ரூப பரம புருஷார்த்துக்கு உடலாக உபாய நிஷ்கர்ஷம்

உயர்வற -தத்வத்பரம்
வீடுமின் -ஹித பரம்
ஆதவ் சாரீரார்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதி வக்தி சாக்ரா -தேசிகன்

விரக்தி பூர்வகமாக ப்ராப்ய ருசி உண்டானால் ஜிஜ்ஞாசை பிறக்கும் அதிகாரிக்கு ஆச்சார்யன் ஸ்வரூப ப்ராப்ய உபாய அனுகுணமான உபதேசம் செய்து அருளுவான்
முதல் பத்து பாதங்களால் ப்ராப்யாந்தர ஹேயதையும் பரம ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும் அறிவித்து ப்ராப்ய ருசியைப் பிறப்பித்து
மேல் ஆறு பாதங்களால் ப்ராப்ய ஆணுக்கான ப்ராபகத்தை உபதேசிக்கிறார் –
பத்தாம் பாதத்தின் முடிவில் ஸித்த உபாய பூதனான சர்வேஸ்வரனுடைய காரணாந்தர நிரபேஷ காரணத்வ ரூபமான காரணத்வத்தை
உப பத்தே ச -3-2-34-என்ற ஸூத்ரத்தாலேயும்
பல ப்ரதத்வ ரூப ரக்ஷகத்வத்தை பல மத உபபத்தே -3-2-37- என்ற ஸூ த்ரத்தாலேயும் அறுதியிட்டு
வியாஜ உபாயத்தை மேல் விவரிக்கிறார் என்பது சம்ப்ரதாயம் –

உபாஸன மேவ நது ஞான மாத்ரம் இத்யேகா ப்ரதிஜ்ஜா தத்ராபி பக்தி ரூபா பன்னம் நோபாஸந மாத்ரம் இதி த்விதயா
ஏவம் விதம் உபாஸன மேவ ந து கர்ம சமுச்சிதம் -இதை த்ரு தயா தச்ச பர விஷய மேவ இதி சதுர்த்தீ -தேசிகன்

மீமாம்ஸா -கர்ம தேவதா ப்ரஹ்ம கோசரா சாத்ரிதா -தத்வ ரத்நாகர வசனம் -ஏகார்த்த ப்ரதிபாதகங்கள் –
ஸம்ஹித மேதத் சாரீரகம் ஜைனிநீ யேந – போதாயனர்
ஸகல கர்மாக்காலுக்கும் ஆராத்யன் -ஸகல தேவதைகளுக்கும் அந்தராத்மா -ப்ரஹ்ம ஸப்த வாஸ்யன் பரமாத்மாவே -புருஷோத்தமன் –

ப்ரஹ்ம மீமாம்ஸையில் முதல் பத்து பாதங்கள் தத்வ பரம்
மேல் ஆறும் பர ப்ரஹ்ம ப்ராப்த்ய அனுபவ கைங்கர்ய ரூப பரம மோக்ஷ ரூப பரம புருஷார்த்துக்கு உடலாக உபாய நிஷ்கர்ஷம்

உயர்வற -தத்வத்பரம்
வீடுமின் -ஹித பரம்
ஆதவ் சாரீரார்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதி வக்தி சாக்ரா -தேசிகன்

விரக்தி பூர்வகமாக ப்ராப்ய ருசி உண்டானால் ஜிஜ்ஞாசை பிறக்கும் அதிகாரிக்கு ஆச்சார்யன் ஸ்வரூப ப்ராப்ய உபாய அனுகுணமான உபதேசம் செய்து அருளுவான்
முதல் பத்து பாதங்களால் ப்ராப்யாந்தர ஹேயதையும் பரம ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும் அறிவித்து ப்ராப்ய ருசியைப் பிறப்பித்து
மேல் ஆறு பாதங்களால் ப்ராப்ய ஆணுக்கான ப்ராபகத்தை உபதேசிக்கிறார் –
பத்தாம் பாதத்தின் முடிவில் ஸித்த உபாய பூதனான சர்வேஸ்வரனுடைய காரணாந்தர நிரபேஷ காரணத்வ ரூபமான காரணத்வத்தை
உப பத்தே ச -3-2-34-என்ற ஸூத்ரத்தாலேயும்
பல ப்ரதத்வ ரூப ரக்ஷகத்வத்தை பல மத உபபத்தே -3-2-37- என்ற ஸூ த்ரத்தாலேயும் அறுதியிட்டு
வியாஜ உபாயத்தை மேல் விவரிக்கிறார் என்பது சம்ப்ரதாயம் –

——–

மூன்றாம் அத்யாயம் மூன்றாவது பாதம் -26 அதிகரணங்கள் கொண்டது
பர வித்ய அனுபந்தி விஷயங்கள் விசாரம் சில அதிகரணங்கள்
த்ருஷ்ட உபாஸன விஷயங்கள் விசாரம் பல அதிகரணங்கள் –
உபாஸன பேத அபேத விஷய விசாரம் சில அதிகரணங்கள்

இதில் 19 அதிகரணத்தில் -லிங்க பூயஸ்த்வ அதிகரணத்தில்
நாராயண அநுவாகம் ஸர்வ பர வித்ய உபாஸ்ய விசேஷ நிர்த்தாரகம்-என்று அறுதிப்படுகிறது –
ஸஹஸ்ர சீர்ஷம் தேவம் -தைத்ரியம் -தஹர வித்யா ப்ரகரணம் -ஆரம்பித்து
ஸோஷர பரம ஸ்வராட் -என்று முடிவாக ஓதப்பட்டதே இவ்வதிகரணத்துக்கு விஷய வாக்கியம் –
இந்த நாராயண அனுவாகம் -தஹர வித்யா உபாஸ்ய வஸ்து நிர்த்தாரணாய ப்ரவ்ருத்தமா –
ஸர்வ பர வித்யா உபாஸ்ய வஸ்து நிர்த்தாரணாய ப்ரவ்ருத்தமா என்பது சம்சயம்
தஹ்ரம் விபாப்மம் -என்று முன்னுக்கும் பத்மகோச ப்ரதீகாசம் என்றும் பின்னும் தஹர வித்யா பிரஸ்தாபம் உள்ளபடியால்
நடுவே உள்ள நாராயண ஸப்த கடித வாக்கியங்கள் தஹர வித்யா உபாஸ்யம் என்று பூர்வ பக்ஷம்
இத்தைக் கண்டிக்கிறார் -லிங்க பூயஸ்த்வாத் தத்தி பலீய ததபி -3-3-43-இது ஸித்தாந்த ஸூத்ரம்-

லிங்க ஸப்தம் வாக்ய பரம்
இந்த அனு வாகத்தில் பிரதி ஸ்லோகம் நாராயண ஸப்த ஆவ்ருத்தியும்
நான்காவது ஸ்லோகத்தில் பதம் தோறும் நாராயண ஸப்த ஆவ்ருத்தியும் உள்ளது
பரவித்யைகளில் அக்ஷரம் என்றும் சம்பு என்றும் சிவன் என்றும் பரப்ரஹ்மம் என்றுமாம் பரஞ்சோதி என்றும் பரதத்வம் என்றும் பரமாத்மா என்றும்
நிர்தேசிக்கப்பட்ட உபாஸ்ய வஸ்துவை தத் தச்சப்தத்தாலே இங்கு -நாராயண அனுவாகத்தில் -அனுவதித்து அந்த உபாஸ்ய வஸ்துவுக்கு நாராயணத்வம் விதிக்கப்படுகிறது –
ஆக இது ஸர்வ பர வித்யா உபாஸ்ய நிர்த்தாரணாய ப்ரவ்ருத்தமே
வாக்ய பஹுத்வத்தைக் கொண்டு பூர்வ பக்ஷம் நிரஸனம்

தத்தி பலீய -என்று மேலே ஸ்ருதி லிங்க வாக்யாதி பிராமண உபந்யாஸம் தோற்றுகிறபடியால் லிங்க ஸப்தம் ஹேது பரம் அன்று -சிஹ்ன பூத வாக்ய பரம் என்று கொள்ளப்பட்டது –
ப்ரகரணத்தை விட வாக்யம் பலிதம் என்பதே சித்தாந்தம் –

இதற்கு பூர்வபஷி மீண்டும் -எங்களுக்கு சாதகமாக லிங்கம் உள்ளது -முடிவில் பத்மகோச ப்ரதீகாசம் -என்று தஹர வித்யா சேஷத்வ உபபாதக லிங்கம் உள்ளதே
பிரகரணத்தை விடப் வாக்யம் பலிதமானாலும் லிங்கம் வாக்யத்தை விட பலிதம் ஆகுமே –

இதுக்கு லிங்க பூயஸ்த்வாத் -பரிஹார ஸூத்ரம்
இங்கே வாக்ய பூயஸ்தம் இருக்கிறபடியால் வாக்யங்களுக்கே பிரா பல்யம் –
மேலும் ஸஹஸ்ர ஸீர்ஷம் தேவம் -உபக்ரம லிங்கம் புருஷ ஸூக்த ப்ரத்யபிஜ்ஞ்ஞாபகம்
ஆகையால் உப சம்ஹாரகத லிங்கம் உபக்ரம லிங்கத்தை விட துர்லபம்
இந்த ப்ராபல்ய துர்லபத்வத்தை ததபி சப்தத்தால் பூர்வ காண்டத்தில்
ஸ்ருதி லிங்க வாக்ய ப்ரகரண ஸ்தான ஸமாக்யானம் சமவாயே பரா துர்பல்யம் அர்த்த விப்ர கர்ஷாத் -என்றே சொல்லிற்றே –

தஹர வித்யா ப்ரகரணத்தில் நாராயண அனுவாகம் படிக்கப்படுவான் என் என்னில்
உத்தாலகரான தகப்பனார் –
ஜகதாத்ம்யமிதம் ஸர்வம் -என்றும் –
ஸர்வம் ப்ரஹ்மாத்மகம் என்றும் பொதுவாகச் சொல்லி
பிறகு தத்வமஸி ஸ்வேதகேதோ -என்று பிள்ளை இடத்தில் விசேஷித்து உப ஸம்ஹரித்தால் போலே
பொதுவான விஷயத்தை தஹர வித்யா ரூப ப்ரஹ்ம வித்யா விசேஷத்தில் காட்டி அருளுகிறார் வேத புருஷன் –
தஹர வித்யா உபாஸ்யன் நாராயணன் என்று அறுதிப்படுமே யானால்
விகல்ப அவிசிஷ்ட பலத்வாத் -என்கிற ஸூத்ரத்தின் படியே
ஸர்வ பர வித்யா உபாஸ்யன் நாராயணன் என்று நியாய பூர்வகமாக அறுதிப்படும் –
நியாய நிரபேஷமாகவே ஸ்ருதியைக் கொண்டே இவ்வர்த்தத்தை அறுதியிட வேண்டி
நாராயண அனுவாகத்துக்கு தஹர வித்யா மாத்ர சேஷத்வத்தைக் கண்டித்து

ஸர்வ பர வித்யா உபாஸ்ய நிர்த்தாரணார்த்தத்வத்தை ஸ்ரீ வேத வியாசர் நிர்ணயித்தார் –

இந்த அநுவாகத்தில் -நாராயண பரம் ப்ரஹ்மா என்ற இடத்தில் நாராயணாத் பரம் -என்று பஞ்சமி ஸமாஸம் கொண்டு
சிலர் நாராயணனைக் காட்டிலும் மேம்பட்டது ப்ரஹ்மம் என்று வாதம் செய்தார்கள் –
இதுக்கு பூர்வ அபர விரோதமும் ஸ்ருத்யந்தர விரோதமும் வரும்
தத்வம் நாராயண பர -என்று இறே மேல் வாக்யம்
ஸமஸ்த பதமாகக் கொண்டால் லக்ஷனை ப்ரசங்கிக்கும்
லக்ஷணை இல்லாத வ்யஸ்த நிர்தேச நிர்வாகமே யுக்தம்
பற்றிற்று விடாமல் நாராயண பரம் என்றதனை ஸமஸ்த பதமாகக் கொண்டாலும்
நாராயண பர என்ற மஹா உபநிஷத்தில் பிரதம விபக்தியந்த நிர்த்தேசம் காணப்படுவதால்

இங்கும் -நாராயண பரம் என்னும் இடத்தில் -நாராயண பரம் ப்ரஹ்ம -என்று கொள்வதே யுக்தம்
தத் விருத்தமாகப் பஞ்சமீ ஸமாஸம் கொள்வது யுக்தம் அன்று –

———————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் -சொல்லுவோம் இராமானுசன் திரு நாமங்களே -ஸ்ரீ பரமாச்சார்யர் வைபவம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 28, 2022

ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் -நம்மாழ்வார் நம் இராமானுசன் -நம் மணவாள மா முனிகள்
மூவரும் திருவாவதரித்தது ஆழ்வார் திருநகரியிலேயே –

அஷ்டதிக் கஜங்கள் எண்மர்-
1- அழகிய வரதர் எனப்படும் ராமானுஜ ஜீயர் எனப்படும் வானமா மலை ஜீயர் -அருளாளப் பெருமாள் எம்பெருமானாரைப் போல் பிரியாது அடிமை செய்து போருவர்
2-பட்டர் பிரான் ஜீயர் -பூர்வாஸ்ரமத்தில் கோவிந்த தாஸப்பர் -எம்பாரைப் போல் பதச்சாயை –
3-திருவேங்கட ராமானுஜ ஜீயர்
4-கோயில் அண்ணன் -உடையவருக்கு முதலியாண்டானைப் போல் பாதுகா ஸ்தாநீயர்
5-பிரதிவாதி பயங்கரம் அண்ணன் -ஆழ்வானைப் போல் உஸாத் துணை
6- எறும்பி அப்பா -எம்பெருமானாருக்கு வடுக நம்பி போல் தேவு மற்று அறியாத அத்யந்த அபிமதர்
7-அப்பிள்ளை -உறங்கா வல்லி போல் மடத்தின் ஸர்வ பரங்களையும் நடத்திக் கொண்டே போருவர்
8-அப்பிள்ளார்

இவர்களைத் தவிர நவ ரத்ன சிஷ்யர்களும் உண்டு
1-சேனை முதலியாண்டான் நாயனார்
2-சடகோப தாஸரான நாலூர் சிற்றாத்தான்
3-கந்தாடை போரேற்று நாயனார்
4-ஏட்டூர் சிங்கராசார்யர்
5-கந்தாடை அண்ணப்பன்
6-கந்தாடை திருக்கோபுரத்து நாயனார்
7-கந்தாடை நாரணப்பை
8-கந்தாடை தோழப் பரப்பை
9-கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள்

இவரது பூர்வாஸ்ரமத்து திருக்குமாரர் -ராமானுஜாச்சார்யர்
திருப்பேரர் ஜீயர் நாயனார் -இவர் திருக்குருகைப்பிரான் பிள்ளான் போல் அத்ய ஆதரணீயர் –

ஸ்ரீ மான் ஸூ ந்தர ஜாமாத்ரு முனி பர்யாய பாஷ்ய க்ருத்
பாஷ்யம் வ்யாகுர்வதஸ் தஸ்ய ஸ்ரோத்ரு கோடவ் மம அந்வய -என்கிறபடியே
புனர் அவதாரமான பெரிய ஜீயர் பூ ப்ரதக்ஷிணம் பண்ணி அநேக ஸ்தலங்கள் ஜீரண உத்தாரணம் பண்ணி அருளினார்
பரமத நிரசன ஸ்வமத ஸ்தாபனம் பண்ணி அருளினார்
சர்ப்பாதி ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கும் மோக்ஷம் சாதித்து அருளினார்

ஈடு காலஷேபம்-இது ஸ்ருதி ப்ரக்ரியை -இது ஸ்ரீ பாஷ்ய ப்ரக்ரியை -இது ஸ்ருத ப்ரகாசிகா ப்ரக்ரியை
இது கீதா பாஷ்ய ப்ரக்ரியை -இது ஸ்ரீ பாஞ்சராத்ர ப்ரக்ரியை -இது ஸ்ரீ இராமாயண பிரகிரியை
இது மஹா பாரத ப்ரக்ரியை -இது ஸ்ரீ விஷ்ணு புராண பிரகிரியை -இது ஸ்ரீ மத் பாகவத பிரகிரியை
இது பதார்த்தம் -இது வாக்யார்த்தம் -இது மஹா வாக்யார்த்தம் -இது வ்யங்க்யார்த்தம் -என்று
அற்புதமாய் விசத வாக் சிகாமணி என்கிற தமது விருது நிறம் பெரும்படியும்
சர்வஞ்ஞ ஸார்வ பவ்மர் என்கிற பட்டம் பொலியவும் பிரவசனம் செய்து அருளினார்

ஆழ்வார் துவலில் மா மணி மாடம் -திருவாய் மொழியிலே தமது பெருமைகளை தாமே வெளியிட்டு அருளினால் போல்
இவரும் ஆர்த்தி பிரபந்தத்தில் வெளியிட்டு அருளுகிறார்

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுதுபோக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு போராமை பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-

இதுவே நமக்கு நித்ய அனுசந்தேயம்

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மா முனியே
இன்னுமொரு நூற்று ஆண்டு இரும் –

இவரது ஸாத்விக பாவம்
இவரது பெருமையைப் பொறாத சிலர் மடத்தில் நெருப்பு வைக்க
ஆதி சேஷ ரூபம் கொண்டு இவர் வெளியேற
அந்நாட்டு மன்னன் இதை அறிந்து அவர்களைத் தண்டிக்க முற்பட
பிராட்டி ராக்ஷஸிகளை ரக்ஷித்து அருளியது போல் பரம கிருபையால் வாத்சல்யத்தாலும் அவர்களை ரக்ஷித்து அருளினார்
தேவீ லஷ்மீர் பவஸி தயயா வத்சலத்வேந ச த்வம் -என்று கொண்டாடும் படி அன்றோ இவர் ஸாத்விக பாவ வைபவம் –

————-

சொல்லுவோம் ஸ்ரீ ராமானுஜன் திரு நாமங்களே-

தஸ்மை ராமாநுஜார்ய நம பரம யோகிநே
யஸ் ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் அசீச மத்

பெரிய திருமுடி அடைவு எம்பெருமானாருடைய திருநாமங்கள் அடைவு காட்டப்பட்டுள்ளது –

1-இளையாழ்வார்
பிங்கள வருஷம் சித்திரை திருவாதிரை திரு அவதாரம் பண்ணின காலத்தில் மாதுலர் சாற்றினை முதல் திரு நாமம்

ஆளவந்தார் ஆம் முதல்வன் என்று கடாக்ஷித்து அருளினார்
யதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை யடியாம் கதி பெற்றுடைய ராமானுஜன்
ஆளவந்தார் திருவடிகளையே விசேஷ தனமாக கதியாக நிதியாகக் கொண்டார்

2-இராமனுஜன்
பெரிய நம்பிகள் மூலமாகப் பெற்ற தாஸ்ய திருநாமம்
பஞ்ச ஆச்சார்யர்கள் -பெரிய நம்பி பெரிய திருமலை நம்பி -திருக்கோஷ்டியூர் நம்பி -திருமாலை ஆண்டான் -ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் –
இவர்கள் அனைவரும் இவருக்கு ஐந்து திருநாமங்கள் சாற்றி அருளினார்கள் –

3- யதிராஜர் –
திருவனந்த ஸரஸ்ஸிலே நீராடி ஆஸ்ரம ஸன்யாஸ ஸ்வீ காரம் பண்ணி அருள தேவப்பெருமாள் அவருக்கு சாற்றிய திரு நாமம் யதிராஜர் –

4- உடையவர் –
தென் அத்தியூரர் கழல் இணை அடிக்கீழ் பூண்ட அன்பாளனை
தன்னிடம் சேர்த்து தன்னையும் தனது சர்வத்தையும் கொடுத்து அருளி உடையவர் என்ற திருநாமம் சாற்றி அருளினார்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்-

5-லஷ்மண முனி
ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் சாத்தி அருளிய திரு நாமம்
திரு மிடற்று ஆசைக்காக வேண்டிய உபசாரங்கள் எல்லாம் பண்ணுவாராம்
லஷ்மண லஷ்மி சம்பன்ன -கைங்கர்ய சாம்ராஜ்ய லஷ்மி –

6- எம்பெருமானார்
திருக்கோஷ்டியூர் நம்பிகள் சாத்தி அருளிய திருநாமம்
எம்பெருமான் காருணீகர் இவரோ பரம காருணீகர் -அவனிலும் அதிசயித்தது அன்றோ
காரேய் கருணை இராமானுச இக்கடல் இடத்தில் ஆறே அறிபவர் நின் அருளின் தன்மை

7-சடகோபன் பொன்னடி
திருமாலை ஆண்டான் சாத்தி அருளிய திருநாமம்
ஆழ்வார் திரு உள்ளக் கருத்துப்படி வியாக்யானம் காட்டி அருளியதால் பெற்ற திரு நாமம்
ஆழ்வார் திருநகரியில் இன்றும் ஆழ்வார் திருப்பாதுகைக்கு இராமானுசன் என்றே பெயர் -மற்ற இடங்களில் தான் மதுரகவி –

8-கோயில் அண்ணர்
படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் -ஆவதற்காக
ஸ்ரீ இராமாயண அர்த்தங்களை உபதேசித்து அருளிய பொழுது
பெரிய திருமலை நம்பி சாத்தி அருளிய திரு நாமம்
ஆண்டாள் பாரித்த படி அழகருக்கு நூறு தடா வெண்ணெய் அக்கார அடிசில் சமர்ப்பித்ததற்கு உக்காந்து நாச்சியார் அழைத்த திருநாமம்

9- தேசிகேந்த்ரன்
திருவேங்கடமுடையான் சாத்தி அருளிய திருநாமம்
அப்பனுக்கும் சங்கு ஆழி கொடுத்தவர் அன்றோ
தேசிகனான பகவானுக்கும் தேசிகர் -தேசிகோ தேசிகா நாம் –

10- பூத புரீசர்
ஆதிகேசவப்பெருமாள் சாத்க்தி அருளிய திரு நாம கரணம்

11- பாஷ்யகாரர்
சாரதா தேவி உகந்து சாத்தி அருளிய திரு நாம கரணம்

12-ஸ்வாமி தகப்பன்
உலகுக்கு எல்லாம் தகப்பனாக செல்வப்பிள்ளை -தனக்கு ஸ்வாமியை தகப்பனாக அபிமானித்து சாத்தி அருளிய திருநாம கரணம்

13-ஸ்வாமி
ஸ்ரீ வைஷ்ணவ வாமன க்ஷேத்ர -திருக்குறுங்குடி நம்பி சாத்தி அருளிய திரு நாம கரணம்

————-

ஸ்ரீ பரமாச்சார்யர் வைபவம்

லஷ்மீ நாத ஸமா ரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மாதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

ஸ ச ஆச்சார்யவம் சோ ஜேய ஆச்சார்யாணாம் அசவ் அசவ் இதி ஆபகவத்த -ரஹஸ்ய ஆம்நாய ஸ்ருதி
ஆரோஹண அவரோஹண கிரமங்களாலும் அனுசந்திக்கப்பட வேண்டும் –
சரம ஆச்சார்யர் -அத ஏவ பரமாச்சாரியார் -ஸ்ரீ மணவாள மா முனிகள்
பரம ச அசவ் ஆச்சார்ய -பரமாச்சார்ய என்றும்
பரமஸ் யாபி ஆச்சார்ய பரமாச்சார்ய -என்றும் பொருள் கொள்ளத் தகும் –
நம் பூர்வாச்சார்ய பரம்பரை மண்டலாகாரமாக அன்றோ அமைந்துள்ளது –

ஸ்ரீ சைல தயா பாத்ர தனியன் வைபவம் ஸூ ப்ரஸித்தம் –
நம்பெருமாள் எந்தப் புறப்பாட்டிலும் மா முனிகள் ஈடு கால ஷேபம் செய்து அருளிய பெரிய திரு மண்டபத்தை ப்ரதக்ஷிணம் செய்வது யாவரும் அறிந்ததே –
பரமாச்சார்யருக்கு தனது சேஷ பீடத்தையும் பஹு மணமாகப் பிரஸாதித்து அருளினான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வன் –

பரோ மா யஸ்மாத் ஸ பரம –
ஆனித்திருமூல ஸ்ரீ சைல வைபவம் நாடும் நகரமும் நன்கு அறியக் கொண்டாடுவதும்
பிரதி ஸம்வத்ஸரம் மாசி சுக்ல துவாதசி இவரது திரு அத்யயனத்தை மிகவும் கோலா ஹலமாகத் திருவரங்கத்தில் நடப்பதும் ஸூ ப்ரஸித்தம்
விஷ்ணு பரம சேஷீ -இவரை தனக்கு சேஷீயாகக் கொண்டானே

————-

ஆசினோதி ஹி சாஸ்த்ரார்த்தான் ஆசாரே ஸ்தா பயத் அபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தஸ்மாத் ஆச்சார்ய உச்யதே

கு ஸப்தஸ் த்வந்தகார ஸ்யாத் குரு ஸப்த தன் நிரோதக-அந்தகார நிரோதித்வாத் குரு ரித்யபி தீயதே

ஆச்சார்யன் ப்ரஹ்ம வித்ய உபதேஷ்டா
குரு வேத அத்யாபகன்
ஸ்ரீ நாரத பகவான் -ஸ்வாத் யாய நிரதம்–வாக்விதாம் வரம் -முனி புங்கவம் –
நேரே ஆச்சார்யன் என்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்திரத்தை உபதேசித்தவனை -ஸ்ரீ வசன பூஷணம் -315-
திருமந்த்ரத்தைச் சொன்னது ரஹஸ்ய த்ரயத்துக்கும் உப லக்ஷணம் –

ஜீவ பர ஸம்பந்த பிரகாசம் இறே திருமந்திரம்
அவ்வானவருக்கு மவ்வானவர் எல்லாம் உவ்வானவர் அடிமை என்று உரைத்தார் -ப்ரமேய சாரம்
அம்பொன் அரங்கருக்கும் ஆவிக்கும் அந்தரங்க ஸம்பந்தம் காட்டும் அவன் அன்றோ ஆச்சர்யம் -ஸப்த காதலி

பாபிஷ்ட க்ஷத்ர பந்து ச புண்டரீக ச புண்ய க்ருத் ஆச்சார்யவத்தயா முக்தவ் தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் -புராண வசனம்
ஆச்சார்யாத் ஹைவ வித்யா விதிதா ஸாதிஷ்டம் பிராபத் -என்றும்
ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்றும் வேதாந்த வாக்கியங்கள்

தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமா போலே
ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன் தானே ஆச்சார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப் பண்ணும் –ஸ்ரீ வசன பூஷணம் -439-

நாராயணோ அபி விக்ருதிம் குர்யாத் குரோ ப்ரச்யுதஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவி ந தோஷ யதி -புராண வாக்கியம்

இத்தையொழிய பகவத் விஷயம் துர்லபம் -ஸ்ரீ வசன பூஷணம் -440-
அநாதி ஸித்தமாய் இருக்கச் செய்தேயும் ஆச்சார்யன் உணர்த்துவதற்கு முன்பு அஸத் கல்பமாய் –

அவன் உணர்த்தின பின்பே கார்யகரமாகக் கடவதாய் இருக்குமது –
உஜ்ஜீவன உபதாய கதாவச்சேதகம் ஸம்பந்த ஞானம் -தத் ஹேதுத்வம் ஆச்சார்யனுக்கு என்றபடி –
உஜ்ஜீவனம் மோக்ஷம் -தத் உபதாயகம் ஞாயமான பகவத் சம்பந்தம் -தத் அவச்சேதகம் -ஞாயமானத்வம் –
தத் அவச்சின்ன -தத் விசிஷ்ட-பகவத் ஸம்பந்தம் மோக்ஷ ஹேது என்றபடி -சம்பந்த ஞானம் அவஸ்யகம் என்றபடி –
ஸம்பந்தம் ஆச்சார்யனாலே என்றபடி
பகவல் லாபம் சேர்ப்பாராலே என்று இருக்கிறாள் -1-4-8- ஈடு –

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னுமுறை
யாராயில் நெஞ்சே யநாதி யன்றோ -சீராரும்
ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது என்றோ
கூசாமல் எப்பொழுதும் கூறு—ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -45-

ஏகாந்தீ வியபதேஷ்டவ்ய நைவ க்ரம குலாதிபி
விஷ்ணுநா வியபதேஷ்டவ்ய தஸ்ய ஸர்வம் பி ச ஏவ ஹி

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் –

ஸ்ரீ சைல தயா பாத்ரம் -என்று உபகாரகரான திருவாய் மொழிப்பிள்ளை ஸம்பந்தம்
யதீந்த்ர ப்ரவணம் -உத்தாரகரான எம்பெருமானார் சம்பந்தம்
அபிமான துங்கர் செல்வர் அன்றோ மா முனிகள் தீ பக்த்யாதி குணார்ணவம் -ஆச்சார்ய லக்ஷண பூர்த்தி கூறப்பட்டது
வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் -மா முனிகள் ஸம்பந்தம் பெரும் பேறாக மதித்து வணக்கம் செலுத்துகிறான் –

ஸ்ரீ சைல பூர்ணர்-பெரிய திருமலை நம்பி -தயைக்குப் பாத்திரமான எம்பெருமானார் யதீந்த்ரர் இஇராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் பெற்றார்
ஸ்ரீ சைலேசர் -திருவாய் மொழிப்பிள்ளை தயைக்குப் பாத்ரமான மணவாள மா முனிகள் -யதீந்த்ர பிரவணர்-தீர்த்தங்கள் ஆயிரமும் பெற்றவர்
இரண்டுமே ஸ்ரீ வைஷ்ண அரண்கள் அன்றோ –

யதீந்த்ரர் தாம் அவதரித்த பூதபுரியைத் துறந்து திருவரங்கத்துக்கு எழுந்து அருளி ஸம்ப்ரதாய பரிரக்ஷணம் பண்ணி அருளினார்
யதீந்த்ர பிரவணரும் தாம் அவதரித்த உறை கோயிலான திருக்குருகூரை விட்டு
காவேரி நடுவுப்பாட்டுக் கருமணியைக் கண்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யையும்
ஸ்ருதி சக்கரத்தையும் திராவிட வேத சக்கரத்தையும் பெருகப் பண்ணிக் கொண்டு போந்தார்

யதீந்த்ரர் எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தர்
யதீந்த்ர பிரவணர்-அனைத்து உலகும் வாழப்பிறந்தவர எதிராசா மா முனிகள் என்னும் பொருள் சுரந்தார் –
அவர் நாராயண வைபவ ப்ரகாசகர் -இவர் ராமானுஜ வைபவ ப்ரகாசகர் –

நர நாராயணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான்
அந்த அவதாரங்கள் போலே யதீந்த்ரரும் யதீந்த்ர பிரவணரும்

ந சேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருச

கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் –

ஆழ்வாருக்கு மதுரகவிகளிலும் சிரமமான திருவடிகள் இராமானுசன் ஆனால் போலே
ராமானுஜருக்கு ஆழ்வான் ஆண்டான் முதலானாரிலும் யதீந்த்ர பிரவணர் இறே சரமமான திருவடிகள் –
ஆகையால் சரம பர்வமான ஜீயர் விஷயமான இத்தனியன் ஸகல வேத சாரம் போல் நித்ய அனுசந்தேயம்

இப்படி வைபவசாலியாய் எழுந்து அருளி உள்ள மா முனிகள் திருவடிகளே தாரக போஷக போக்யங்களாகக் கொண்ட
நம் வானமா மலை ஜீயர் -கோயில் அண்ணன் -கோயில் அப்பன் -பிரதிவாதி பயங்கர அண்ணன் சம்பந்திகளாகி நாம் உஜ்ஜீவிப்போம் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீமத் ராமானுசருடைய 1006 வது திரு அவதார உத்சவம்🙏—ஸ்ரீ திருப்பாவை ஜீயர் அனுபவம்– ஸ்ரீ யதுகிரி ஸ்ரீ ராம் ஸ்வாமிகள் —

May 4, 2022

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

இன்று முதல்….
உடையவர் என்றழைக்கப்படுமவரான
ஸ்ரீமத் ராமானுசருடைய 1006 வது திரு அவதார உத்சவம்🙏

*ஸ்ரீமத் ராமானுஜரது
திருநாம
வைபவங்கள் மிகவும் சிறப்புடையன*

இளையாழ்வார்:

இளையாழ்வார் (ராமானுஜன்): ராமானுஜரின் தாய்மாமாவான பெரிய திருமலை நம்பி
குழந்தையின் லட்சணங்களைக் கண்டு இவர் ஸ்ரீ ராமனுக்கு எப்படி தம்பி இலக்குவனோ
அதுபோன்று உலகம் உய்யப் பிறந்த உத்தம புருஷன் என எண்ணி
இளையாழ்வார் என்று நாம கரணம் செய்வித்தார்….

யதிராஜர்:

துறவிகளின் அரசர்):*
பகவத் ராமானுஜர் இல்லறவாழ்வைத் துறந்து சந்நியாசம் மேற்கொண்டார்.
காஞ்சி வரதராஜரே அவரை வாரும் யதிராஜரே!
(யதி- துறவி, ராஜர்- அரசர், துறவிகளின் அரசர்) என்று அழைத்து மகிழ்ந்தார்.

உடையவர்:

காஞ்சியிலிருந்து திருவரங்கம் வந்து திருவரங்கன் திருவடியில் கைங்கர்யம் மேற்கொண்டார்
அப்போது, திருவரங்கன் திருவாய் மலர்ந்து கண்குளிர நோக்கி வாரீர்!! எம் உடையவரே!
இனி உபய விபூதி ஐஸ்வர்யமும் உமக்கே! இனி, நீர்! இங்கு நித்ய வாசம் செய்து கொண்டு நம் காரியத்தையும்
ஸ்ரீ ரங்க ஸ்ரீயையும் வளர்த்து வாரும் உம்முடைய திருவடி மற்றும் திருமுடி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மோட்சம் தந்தோம் என்றார்.
அன்று முதல் பகவத் ராமானுஜர் உடையவர் என்று அழைக்கப்பட்டார்.

எம்பெருமானார்:

ராமானுஜர் ஆசாரியரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் 17 முறை சென்றார். 18 -ஆவது முறை
திருமந்திரத்தின் பொருளை மற்ற யாருக்கும் இப்பொருளை வெளிப்படுத்தக் கூடாது என்று
ஸ்ரீ ராமனுஜரிடம் சத்ய சங்கல்பம் பெற்று ராமானுஜருக்கு ரகசியமாக ஒரு மந்திரத்தை உபதேசித்தார்.
திரு மந்திரத்தின் பொருளை பெற்ற ராமானுஜர் மிக்க உவகை கொண்டு தான் ஒருவர்க்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை,
இவர்கள் உய்வு பெறவேண்டும் என்று, மிக்க ஆர்த்தியுடன் தம்மை அர்த்தித்த சில ஸ்ரீவைஷ்ணவ அடியார்க்கு உபதேசித்தார்……
இதைக்கேள்வியுற்ற திருக்கோஷ்டியூர் நம்பிகள், அடியேனுக்கு இப்படி ஒரு நல்ல எண்ணம் இதுவரை தோன்றவில்லையே என்று,
ராமனுஜரின் விரிந்த உள்ளத்தை எண்ணி, அவரை வாரியணைத்து உச்சி முகர்ந்து
*வாரீர் எம்பெருமானாரே’ என்றவாறு அணைத்துக் கொண்டாடினார்…

ஸ்ரீ பாஷ்யக்காரர்:

ஸ்ரீமத் நாதமுனிகளின் திருப்பேரனார்
ஸ்ரீ ஆளவந்தாரின் மூன்று மனோரதங்களில் ஒன்று
ஸ்ரீ வேதவியாசர் அருளிச் செய்த பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைத சித்தாந்த முறையில் உரை செய்வது
இதற்கு ஸ்ரீ போதாயன மஹரிஷி அருளிய போதாயன விருத்தி கிரந்தம், காஷ்மீர் தேசத்திலுள்ள ஸ்ரீ சாரதா பீடத்தில் இருந்தது.
ஸ்ரீ கூரத்தாழ்வானுடன் வட தேச யாத்திரை சென்ற பகவத் ராமானுஜர் போதாயன விருத்தி கிரந்தத்தை
பல சிரமங்களுக்கிடையே பெற்றார், ஸ்ரீரங்கம் திரும்பியதும் பகவத் ஸ்ரீராமானுஜர் பிரம்ம சூத்திரங்களுக்கு
கூரத்தாழ்வான் உதவியுடன் பாஷ்யம் (விளக்க உரை) எழுதி காஷ்மீர் தேசத்திலுள்ள ஸ்ரீ சாரதா பீடத்தில்
எழுந்தருளியுள்ள ஸ்ரீ சரஸ்வதிதேவியின் திருவடிகளில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற ஏற்பாடு செய்தார்.
ஸ்ரீசரஸ்வதி தேவியும் மிக உகந்து விளக்க உரையை அங்கீகரிக்கும் பொருட்டு தன் முடி மேல் தாங்கி
பகவத் ராமனுஜரை பாராட்டி ஸ்ரீ பாஷ்யக்காரர் என்ற திருநாமம் சூட்டி தன்னிடம் உள்ள
ஹயக்ரீவர் விக்கிரகத்தையும் கொடுத்து கெளரவித்தாள்……

திருப்பாவை ஜீயர்:

திருப்பாவையில் பக்தி, அதிக ஈடுபாடுகொண்ட ராமானுஜர் மார்கழி மாதத்தில் ஒரு நாள் திருப்பாவையை
அநுஸந்தித்துக் கொண்டே வீதியில் வரும் போது தன் ஆசாரியர் ஸ்ரீ பெரிய நம்பியின் வீட்டின் முன் வரும்போது
அவருடைய பெண் அத்துழாயை பார்த்து மூர்ச்சித்து விழுந்தார்.
திடுக்கிட்ட அத்துழாய் தன் அப்பாவிடம் இதை கூறினாள்.
ராமனுஜரின் திருப்பாவையின் பிரேமையை மெச்சிய ஸ்ரீ பெரியநம்பிகள், உந்துமதகளிற்றன்பாசுர அநுஸந்தானமோ!*
என்று அவரைத் “திருப்பாவை ஜீயரே
என்று விளித்து அகம் மகிழ்ந்தார். அன்று முதல் ராமானுஜர் திருப்பாவை ஜீயர் ஆனார்……..

கோயிலண்ணர்:

பகவத் ராமானுஜர் நாச்சியார் திருமொழி பாசுரங்களுக்கு வியாக்யானம் செய்த பொழுது
நாறு நறும் பொழில் மாலிருந்சோலை நம்பிக்கு என்ற பாசுரத்தின் பொருளை விளக்கினார்.
அதில், கோதை ஸ்ரீ ரங்கநாதன் தனக்கு மணாளனாக அமைந்தால் திருமாலிருஞ்சோலை ஸ்ரீ அழகர் பெருமாளுக்கு
100 தடா வெண்ணெயும் 100 தடா அக்காரஅடிசிலும் செய்து சமர்ப்பிப்பதாக வேண்டியிருந்தாள்.
ஆனால் சமர்ப்பிக்கவில்லை; ராமானுஜர் அதை நிறைவேற்றினார். பின்பு ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்றார்.
கோயிலுக்குள் நுழைந்தபோது அர்ச்சைவடிவில் இருந்து ஆண்டாள், என் கோயில் அண்ணாவே வாரும் என்று அழைத்தார்.
தன்னை அண்ணா என்று அழைத்த ஆண்டாளுக்கு ஒரு சிம்மாசனம் சமர்ப்பித்தார் ராமானுஜர்.
இன்றளவும் அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்ட
அந்த சிம்மாசனத்தில்தான் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரங்க மன்னார், ஸ்ரீ கருடர் எழுந்தருளி இருக்கின்றனர்.
ஆண்டாளின் அவதாரம் பகவத் ராமானுஜர் அவதாரத்திற்கு முன்னமே நிகழ்ந்தாலும், ஆண்டாளின் வாழித் திருநாமத்தில்
அனுபவிக்கப் பெறுகிறோம்……

லட்சுமணமுனி:

திருக்கோட்டியூர் நம்பிகள் சில முக்கிய அர்த்த விசேஷங்களை பகவத் ராமனுஜருக்கு சொல்லும் படி
திருவரங்கப் பெருமாள் அரையரிடம் வேண்டிக்கொண்டார்.
ராமனுஜரும் ஆசாரியரான திருவரங்கப்பெருமாள் அரையருக்கு பக்குவமாக பாலமுது காய்ச்சி கொடுத்து
மேலும் பல தொண்டினை செய்து அவருக்கு உகப்பாக நடந்து கொண்டார்.
ஆறு மாத காலம் தொண்டு செய்து ஸ்ரீ ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்னம் மற்றும் சதுஸ்லோகி
ஆகியவற்றின் ஆழ்பொருளை அறிந்து கொண்டார்.

திருவரங்கப்பெருமாள் அரையர், எப்படி லட்சுமணன் அண்ணன் ஸ்ரீ ராமபிரானுக்கு சிறந்த தொண்டனாக
தன்னலம் கருதாது இரவு பகல் பாராது செயல்பட்டாரோ, அது போல் நம் ராமனுஜரின் செயல்களும் உள்ளது
என்ற நிலையால் “லட்சுமணமுனி’என்று திருநாமம் சூட்டி மகிழ்ந்தார்.

சடகோபன் பொன்னடி:

நம்மாழ்வரித்தும் அவர் அருளிச் செய்த திருவாய்மொழியிலும் ராமனுஜருக்கு அளவற்ற ஈடுபாடு.
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் தம்மை “சடகோபன் பொன்னடி’ என்றே அழைக்குமாறு வேண்டினார்.

குணம் திகழ் கொண்டல்:

திருவாய்மொழியின் மணம் தரும் இசை மன்னும் இடம் தோறும் புக்கு நிற்கும் “குணம் திகழ் கொண்டல்’ என்று
ராமானுஜ நூற்றந்தாதி எழுதிய திருவரங்கத்தமுதனார் ராமானுஜரை கொண்டாடுகிறார்.

ஜெகதாச்சாரியார்:

ராமானுஜர் காட்டிக் கொடுத்த பக்தி மார்க்கம் அனைவரும் அவரவர் தகுதிக்கும் அறிவுத்திறனுக்கும் தருந்தவாறு
பின்பற்றக்கூடியதாக இருக்கிறது பண்டிதரும், பாரரும், பெண்களும், பாலகரும் பின்பற்றக்கூடியது.
இதனால் இவர் எல்லாக்காலத்து மக்களுக்கும் பயன்படக்கூடிய பக்தி மார்க்கத்தைக் காட்டியருளியதால்
உலகத்துக்கு வழிகாட்டி என்ற முறையில் “ஜெகதாசாரியார்’ என்று போற்றப்படுகிறார்.

தேசிகேந்திரர்:

திருமலை வெங்கடேசப்பெருமாளால் ராமானுஜருக்கு வழங்கப்பட்டது.
உலக மக்களை நல்வழி படுத்துபவர் என்பதால் “தேசிகேந்திரர்’ எனப்படுகிறார்.

———–

ஸ்ரீமதே ராமானுஜாய நம:🙏

ஸ்ரீ திருப்பாவை ஜீயர்

திருப்பாவையில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்ததாலும் ,
அதை அநுஸந்திப்பதில் போர அபிநிவிஷ்ராயிருந்ததாலும் வ்யபதேசம்…..
அதுவுமன்றிக்கே முக்ய ஹேது ஒவ்வொரு பாசுரத்திலும் எம்பெருமானாரைச் சிந்திக்க வேண்டும் படியான
சொற்றொடர்கள் அமைந்துள்ளபடியாலும், இதை ஏறிட்டுரைக்கும் முறையிலன்றிக்கே
ஏற்ற முறையில் விவரிக்கப்படுமதாக உள்ளபடி……

1. மார்கழித் திங்கள்……

மதி நிறைந்த நந்நாள்.. என்றது பரிபூரணசுக்லபக்ஷம்.. . .
உள்ளுரைப்பொருள்…
மதி-ஜ்ஞானம்.. . . அது நிறையப்போகிற நந்நாள்..
எம்பெருமானார் அவதரித்த நாள் இருள்தரு மா ஞாலத்தவர்க்கு ஜ்ஞானம் நிறைவதற்கு ஹேதுவான நந்நாள்..

நிறையப்போகிற என்னுமிடத்து நிறைந்த என்றது 0கால வழுவமைதி என்று தமிழர்…
வடமொழி வ்யாகரணத்தில் ஆசம்ஸாயாம் பூதவச்ச என்னுமது..

யதிராஜ ஸப்ததியில்..
அநபாய விஷ்ணுபத ஸம்ஸ்ரயம் பஜே
என்று எம்பெருமானாரை விலக்ஷண பூரண சந்திரனாக ப்ரதிபாதிக்கப்படுகிறார்…
அந்த யதிராஜ சந்திரன் தோன்றிய நந்நாள்!!!

சித்திரைத்திங்கள் மனிதர்களுக்கு முதல் மாதம்…
மார்கழித் திங்கள் தேவர்களுக்கு முதல் மாதம்!!
ஆகவே ஸ்வாமி யின் அவதாரம் முதல் மாதம் என்கிற ப்ரஸித்திக்குக் குறையில்லை!!!!! 🙏

2. வையத்து வாழ்வீர்காள்!…..

பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்…. திருப்பாற்கடலிலே துயின்ற பரமன் க்ஷீராப்திநாதன்…
நம்மாழ்வார்
உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன்
என்கிற பாசுரத்தினால் பகவத் குணங்களைப் பாலாகப்பேசினார்..
அவர்தாமே அக்குணங்களைக்
சீர்க்கடலையுள் பொதிந்த என்று கடலாகவும் பேசினார்.

ஸ்ரீ பாஷ்யகாரரும்
அநந்த குணஸாகரம் ப்ரஹ்ம ” என்றார் பரமபுருஷனை…
அவ்வளவோடு நில்லாமல் அக்குணங்களையே தமது திவ்யக்ரந்தங்களில்
வாய் வெருவுவதும் செய்கிறார்..
ஏவஞ்ச, பகவத்குண ஸாகரத்திலே அஸ்தமிதாந்ய பாவராய் இன்புறும் பரமர் எம்பெருமானார் என்றபடி….. .. 🙏

3. ஓங்கி உலகளந்த உத்தமன்……

மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து…..
ஞானம் கனிந்த நலம் கொண்டு ….
இத்யாதிகளான நூற்றந்தாதிப் பாசுரங்களிற்படியே
எம்பெருமானைவிட ஓங்கி… அதிசயித்து. …
உலகத்தையெல்லாம் ஸ்வாதீனமாக்கிக்கொண்ட உத்தமர்
ஸ்ரீராமானுஜர் ஒருவரே. . ……

ஒருவர்க்கும் ஒன்றுஞ்சொல்லாதவர் அதமர்…
நிர்பந்தத்தினால் சொல்லுமவர் மத்யமர்….
தம்முடைய கருணையினால் தாமே சொல்லுமவர் உத்தமர்..
ஓராண்வழியாய் உபதேசித்தார் முன்னோர் என்கிற உபதேசரத்தினமாலை யின் படி உத்தமர் ஸ்ரீராமானுஜர் ஒருவரே….

நூற்றந்தாதியில் மற்றொரு பேறு மதியாது என்கிற பாசுரத்தில்
உத்தமனாக வும்
கூறப்பட்டுள்ளார்.. 🙏

4.ஆழிமழைக் கண்ணா…..

இப்பாடலில் ஆழியும் சங்கும் சார்ங்கமும் வருவதனால்
அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன் என்கிற
நூற்றந்தாதிப் பாசுரத்தின் படிக்கும்
வவ்ருதே பஞ்சபிராயுதைர் முராரே: என்கிற
யதிராஜ ஸப்ததி ப் படிக்கும்
பஞ்சாயுதாழ்வார்களின் ப்ராதுர்ப்பாவ விசேஷமான எம்பெருமானார் நினைப்பூட்டப்படுகிறார்.

ஒன்றும்நீ கைகரவேல்…..
அருமையாகப் பெற்ற அர்த்த விசேஷங்களை ஒன்றும் ஒளித்திடாமல்
வர்ஷித்த மேகம் இராமனுசனென்னுஞ் சீர்முகிலே….

ஆழியுள் புக்கு என்றவிடத்தில்
உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம் என்கிற
ஸ்ரீபாஷ்யகார திவ்யஸூக்தி மிகப் பொருத்தமாக அநுஸந்திக்கத்தகும்….. 🙏

5. மாயனை மன்னு வடமதுரை…..

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு..
எம்பெருமானார்……
இடக்கை வலக்கை அறியாத இடையர்கள் வாழ்ந்தவிடம் திருவாய்ப்பாடி…
அதில் தோன்றிய அணி விளக்கு… ஆயர்பாடிக்கு அணிவிளக்கே!! என்று
யசோதைப்பிராட்டியால் அழைக்கப்பெற்ற கண்ணபிரான்.

ந்ருபசு: என்று ஆளவந்தாரும்
வ்ருத்த்யா பசுர் நரவபு: என்று மணவாள மாமுனிகளும் அருளிச் செய்தபடி
பசுப்ராயர்களான அஸ்மதாதிகள் வர்த்திக்குமிடமும் ஆயர்குலமாதலால்
இருள்தருமாஞாலமாகிற இவ்வாயர் குலத்திலே தோன்றிய அணி விளக்கு —
இராமானுச திவாகரர்..

புண்யாம்போஜ விகாஸாய பாப த்வாந்த க்ஷயாய ச
ஸ்ரீமாந் ஆவிரபூத் பூமௌ ராமானுஜ திவாகர: என்னக்கடவதிறே…. 🙏

6. புள்ளும் சிலம்பினகாண்……….

புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கு என்பது
எம்பெருமானார்க்கு மிகச் சிறந்த ப்ரத்யபிஜ்ஞாபகம்..

பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியமே… என்றபடி பால் போன்ற நிறத்தது..

ஸ்வாமி எம்பெருமானாரும்
துக்தோ தந்வத் தவள மதுரம் ஸுத்த ஸத்வைகரூபம் யஸ்ய ஸ்புடயதிதராம் யம் பணீந்த்ராவதாரம் என்றபடி
பால் போன்ற திருநிறத்தவர்.
இந்தச் சங்கு எங்கு வாழ்ந்ததென்னில். புள்ளரையன்கோயில்…….

பூமருவப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனலரங்கமே என்று
பெரியாழ்வார் புள்ளரையன் கோயிலாகக் கூறிய திருவரங்கத்தில் வாழ்ந்தது.

சக்கரம் சங்கு என்ற இரண்டு திவ்யாயுதங்களில் சக்கரம் கருதுமிடம் பொருது என்ற
அருளிச்செயலின் படியே
காசீவிப்லோஷாதி நாநா கார்யவிசேஷங்களுக்காக பாஹ்ய ஸஞ்சாரங்கள் செய்து கொண்டேயிருக்கும்.

திருச்சங்கு அப்படியன்றியே
உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்
*கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே என்னும்படி இருக்கும்.
ஸ்வாமி தாமும் யாவச்சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ -(சரணாகதி கத்யே) என்ற
ஸ்ரீரங்கநாதன் கட்டளையைப் பெற்றுக் கோயிலே கதியாயிருந்தவர்.
ஆகவே, கோயில் சங்கு என்றது ஸ்வாமி எம்பெருமானார்க்கு மிகப் பொருத்தம்….. 🙏

7. கீசு கீசென்றெங்கும்……..

கலந்து பேசின பேச்சரவம்………
பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகளோடே கலந்திருக்கும்படி.. (அவற்றுக்கு முரண்படாதபடி)
ஸ்ரீஸூக்தி அருளிச் செய்தவர் ஸ்ரீராமானுஜர் என்பது இவருடைய திவ்யஸூக்தியினால் ஸித்தம்.
ஸ்ரீபாஷ்யம் தொடங்கும்போதே
பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்மஸூத்ர வ்ருத்திம் பூர்வாசார்யாஸ் ஸஞ்சிக்ஷிபி:
தந்மதாநு ஸாரேண ஸூத்ராக்ஷராணி வ்யாக்க்யாஸ்யந்தே
என்றருளிச்செய்தவர் ஸ்வாமி ஒருவரேயன்றோ!!!!

அன்றியும் ,
கலந்துபேசுவதாவது–
வடமொழி தென்மொழிகளைக் கலந்து மணிப்ரவாளமாகப் பேசுவது. ..
இத்தகைய க்ரந்தம் முதன்முதலாகத் திருவாறாயிரப்படியே தோன்றியது..
அது *பிள்ளான் அருளியதாயினும் எதிராசர் பேரருளால் என்று
மணவாள மாமுனிகள் அருளிச் செய்தபடியே ஸ்வாமி கற்பித்த நடையேயாம் அது..
ஆகவே *இருமொழிகளைக் கலந்து பேசின பேச்சுக்கு நிதான பூதர் ஸ்வாமி என்று குறிப்பிட்டவாறு… 🙏

8. கீழ்வானம் வெள்ளென்று…..

மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து….என்றதில்
ஸ்வாமி யின் ப்ரபாவமே நன்கு ஸ்புரிக்கும்..
*அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜத்வந்த்வமாச்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகா முக்திமாபு:. என்ற பட்டர்
ஸ்ரீஸூக்திப்படி க்கும்

*பாதகோடீரயோஸ் ஸம்பந்தேந ஸமித்யமான விபவாந் என்ற
நிகமாந்த மஹாகுருஸூக்திப்படிக்கும்
திருவடி ஸம்பந்தத்தாலே பின்னர்களையும்
திருமுடி ஸம்பந்தத்தாலே முன்னோர்களையும் வாழ்வித்தவர் ஸ்வாமி எம்பெருமானார்

* மிக்குள்ள பிள்ளைக ள் என்றது ஸ்வாமிக்கும் பூஜ்யர்களாயிருந்த பூர்வர்களை,
அவர்களைப் *போகாமல் காத்து என்றது தாம் அவதரித்து அவர்களை நற்கதி யெய்துவித்தபடியைக் காட்டுமதாம்… 🙏

9. *தூமணிமாடத்துச் சுற்றும்…..

மணிக்கதவம் தாள் திறவாய்…….

மணியென்று ரத்னத்திற்குப் பெயர்.
நவரத்னங்களாகையாலே ஒன்பது என்கிற ஸங்க்யை ஸூசிதமாகிறது.
கதவு என்பது பதார்த்தங்களைச் சேமித்து வைப்பது.
ஸ்வாமி யினுடைய திவ்யக்ரந்தங்களே இங்குக் கதவென்பன.
ஸ்வாமி அருளிச் செய்தவை
ஸ்ரீபாஷ்யம்,
வேதாந்த தீபம்,
*வேதாந்த ஸாரம்,
*வேதார்த்த ஸங்க்ரஹம்,
கீதா பாஷ்யம்,
சரணாகதி கத்யம்,
ஸ்ரீரங்க கத்யம்,
*ஸ்ரீவைகுண்ட கத்யம்,
*நித்யம் என்று ஒன்பது திவ்யக்ரந்தங்களாகையாலே அவையே இங்கு மணிக்கதவ மெனப்படுகிறது..

அவற்றைத்திறக்க வேணுமென்றது—
அவற்றிலுள்ள அர்த்தவிசேஷங்கள் எங்களுக்கும் நிலமாம்படி விளக்கியருளவேணுமென்றபடி.. 🙏

10. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற…….

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்……
அருங்கலமே…. என்ற இரண்டு விளிகளிலும்
ஸ்வாமியின் ப்ரத்யபிஜ்ஞை நன்கு உண்டாகும்.*

நோற்று என்றது மஹாபாக்ய வசத்தாலே என்றபடி.

*ஸுவர்க்கம் புகுகின்ற— வர்க்கமென்று ஸமூஹத்திற்குப் பெயர்.
ஒரு வகுப்பு என்றபடி.

(ஸு) என்பதனால்
மிகச் சிறந்த வகுப்பு என்றதாகும்.

யாதவப்ரகாசரிடத்திலே வாசித்துக் கொண்டிருந்து அவர் சாயையிலே ஒதுங்கி இருந்த ஸ்வாமி
அவருடைய கருத்தின்படியே ஆபத்துக்களை அடைந்து போகாமல்
நம்போலியர்களின் பாக்யவசத்தாலே பெருந்தேவி மணவாளனான பேரருளாளனது பரமக்ருபைக்கு இலக்காகி
ஸ்ரீவைஷ்ணவ வகுப்பிலே புகுந்து அனைவர்க்கும் தாயாயிருந்தவர்.

*சுவர்க்கம் என்பதற்கு ஸ்வர்க்கமென்றே பொருளானாலும்
யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா என்ற ஸ்ரீராமாயணத்தின்படி
எம்பெருமானோடு கூடப்பெற்றவர் என்றதாகும்.

ஸித்தாஸ்ரமத்தில் நின்றும் வருகிறோமென்று சொல்லிக் கொண்டு வந்த
வேடனும் வேடுவிச்சியுமான பகவத் தம்பதிகளோடே கூடப்பெற்றமை கூறினபடி.

அருங்கலமே!! என்றது
அருமை பெருமை வாய்ந்த ஆபரணமே!! என்றும்
உத்தம ஸத்பாத்ரமே!! என்றும் பொருள்படும்.
நம்முடைய குருபரம்பரையிலே மஹாபூஷணமாக விளங்குமவர் ஸ்வாமி

* தஸ்மிந் ராமானுஜார்யே குருர் இதி ச பதம் பாதி நாந்யத்ர
என்னும்படிக்குப் பொருத்தமாக உத்தம ஸத்பாத்ரமாயும் விளங்குமவர்…… 🙏

11ஆம் பாசுரம்…
கற்றுக் கறவைக் கணங்கள்

இப்பாசுரத்தில் கற்றுக் கறவை என்று தொடங்கி
கோவலர் தம் பொற்கொடியே என்னுமளவுமுள்ள விளி பூர்த்தியாக
எம்பெருமானார் தன்மையையே தெரிவிக்குமதாய் இருக்கும்..

கற்று–
சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லையில்லா வறநெறியாவும் தெரிந்தவன் என்ற
நூற்றந்தாதிப் பாசுரப்படியே எல்லாக் கல்விகளையும் கற்று;

கறவைக்கணங்கள் பல கறந்து…
பஞ்சாசார்ய பதாச்ரித என்று யதிராஜ வைபவத்தில் கூறியுள்ளதை விவரிக்கிறபடி..

கவா மங்கேஷு திஷ்டந்தி புவனானி சதுர்தச-என்கிறபடியே
கோக்கள் பதினான்கு லோகங்களையும் தம்முள் வஹிக்குமாபோலே
சதுர்தச வித்யைகளையும் தம்முட்கொண்டு நன்றாகக் கறக்கும் ஆசார்யர்கள் பலரிடத்திலும்
ஸத்ஸம்ப்ரதாயார்த்தங்கள் கேட்டு உய்ந்தவர் ஸ்வாமி ,,…….

பெரிய நம்பி பக்கலிலே பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்று மந்த்ரார்த்தங்கள் கேட்டும்,
பெரிய திருமலைநம்பி பக்கலிலே ஸ்ரீராமாயணார்த்தம் கேட்டும்,
திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே ரஹஸ்யார்த்தங்கள் சிக்ஷித்தும்
திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழிப் பொருள் கேட்டும்,
ஆளவந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே அருளிச் செயல் கற்றும்
நல்வார்த்தைகள் கேட்டும் போந்தவராகையாலே
கறவைக்கணங்கள் பலகறந்து என்றது ஸ்வாமி க்கு மிகப்பொருத்தம்..

அதற்கு மேல் செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்……..
எம்பெருமானை
நிர்க்குணனென்றும்
நிர்விபூதிகனென்றும்
நிர்லக்ஷ்மீகனென்றும்
திவ்யமங்களவிக்ரஹ சூன்யனென்றும் சொல்லுமவர்கள்–செற்றார்.. ;

அவர்களுடைய திறலழிய–
வாக்கு மிடுக்குத் தொலையும்படியாக,
திசைதொறு மெழுந்தருளி வாதப் போர் நிகழ்த்தியவர் ஸ்வாமி….

விப்ரம் நிர்ஜித்ய வாதத: என்கிறபடியே
இது குற்றமாகையன்றிக்கே ஸித்தாந்த ரக்ஷணார்த்தமாகச் செய்ததாகையாலே
நற்றமேயாயிற்றென்று காட்ட குற்றமொன்றில்லாத என்றது.

கோ என்னும் வடசொல் நாநார்த்தமாகையாலே
ஸ்ரீஸூக்தியையும் சொல்லக் கடவது.
யத் கோஸஹஸ்ர மபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் என்றவிடத்திலும் இது காணலாம்.

கோ வல்லவர்–
மஹாவித்வான்கள்.

அவர்தம் பொற்கொடி-
ஸ்வாமி..

கோ அ(ல்)லர்—
ஸ்வதந்திரரல்லர்…🙏

12 ஆம் பாசுரம்….
கனைத்திளங் கற்றெருமை…….

ஸ்வாமி யின் திருவவதார ஸ்ரீபெரும்புதூரில் இரட்டித்து சேவிக்கும் பாசுரமிது..
பூருவாசாரியர்களும் தங்கள் வ்யாக்யானங்களின் முடிவிலே எம்பெருமானாரை ப்ரஸ்தாவித்திருக்கும் பாசுரமுமிது.

இப்பாடலில்
நற்செல்வ னென்றது ஸ்வாமி யைக்கருதி…

நற்செல்வன் என்பதை வடமொழியில் கூறவேணுமானால்
லக்ஷ்மி ஸம்பந்ந:-என்னவேணும்….
ஸ்ரீராமாயணத்தில் லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: என்னப்பட்ட இளையபெருமாளே யன்றோ
இளையாழ்வார் ஆகத் திருவவதரித்தவர்…

அவர் அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்று விபவாவதாரத்திலே அடிமை செய்யப் பெற்றார்.
இவர் நித்ய கிங்கரோ பவாநி அர்ச்சாஸ்தலங்களிலே ஒப்புயர்வற்ற அடிமைகள் செய்யப்பெற்றார்..

மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றுமுவந்திடு நாள் 🙏🙏

13 ஆம் பாசுரம்…..
புள்ளின் வாய் கீண்டானை……

இப்பாட்டில்
கள்ளந்தவிர்ந்து கலந்து …என்றது
உயிரான சொற்றொடர்……….

கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்மாபஹாரிணா என்றபடி
ஆத்மாபஹாரக் கள்வமொன்றுண்டு.;

அது தவிர மற்றொரு கள்வம் கேண்மின்;
ஏகஸ் ஸ்வாது ந புஞ்ஜீத புஞ்ஜீத பஹுபிஸ் ஸஹ…..
இன் கனி தனியருந்தான் என்கிறபடியே
போக்ய பதார்த்தங்களைப் பலரோடுங்கூடி யநுபவித்துக் களிக்கையன்றிக்கே
அசலறியாதபடி யநுபவிக்கை கள்வம்;

எம்பெருமானார்க்கு முற்பட்ட ஆசாரிர்களிடத்து இத்தகைய கள்வமிருந்தது;
அதனைத் தவிர்ந்தவர் ஸ்வாமி யொருவரே தவிர்ந்து
எல்லாரோடுங் கலந்து அநுபவித்தவர்.

பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார் என்றதும்
ஸ்வாமி யின் பெருமையை நினைப்பூட்டும்.
*பாவைக்களம் என்பது காலக்ஷேப மண்டபம்.
அதில் எல்லோரும் புகழ் பெற்றது ஸ்வாமி க்கு முன்பு இல்லை.
அதிகாரப்பரீக்ஷை பண்ணிப் பலர் விலக்கப்பட்டிருந்தார்களன்றோ!!..
ஆசைக்கு மேற்பட்ட அதிகார ஸம்பத்தியில்லை யென்றுகொண்ட ஸ்வாமியின் காலத்தில் தான்
பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார் !!!
அதனை நன்கு காட்டினபடி……… 🙏

14 ஆம் பாசுரம்…………….

உங்கள் புழக்கடைத் தோட்டத்து……

இப்பாடலில்…..

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின…..
என்பதில் ஸ்வாமி யின் திவ்யப்ரபாவமொன்று நினைவுக்கு வரும்.

ஸ்வாமி யாதவப்ரகாசரிடத்திலே பூர்வபக்ஷ வேதாந்தம் வாசித்தபோது
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம
ஐததா³த்ம்யமித3ம் ஸர்வம் தத்த்வமஸி இத்யாதி
ஸ்ருதி வாக்யங்களுக்கு அவர் அபார்த்தம் கூற,
ஸ்வாமி “இப்படியன்றோ பொருள்” என்று உபபந்நமான அர்த்தமருளிச்செய்ய ,
மேல் வாய் திறக்க மாட்டாதே, ஹூங்காரமே பண்ணிப்போந்ததாக வைபவ நூல்கள் விளம்புகின்றன.
அது இங்கு நினைவுக்கு வரும்.

ஸ்வாமி திருவாய் மலர்ந்தருளியது செங்கழுநீர் வாய்நெகிழ்ந்தமை
யாதவர் மறுமாற்றம் சொல்லமாட்டாமே வாய்மூடிக் கிடந்தது ஆம்பல்வாய் கூம்பினமை

மேலே
செங்கல்பொடிக்கூ றை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
என்றதும் ஸ்வாமி க்கு மிகப் பொருத்தம்.

செங்கல்பொடிக்கூறை—-
காஷாயேண க்ருஹீத பீதவஸநா
யதிராஜ ஸப்ததி யில் போற்றப்பட்ட திவ்ய மூர்த்தி…

வெண்பல்–
அச்யுதபதாம்புஜ யுக்மருக்மவ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாயமேநே என்னும்படி
மஹாவிரக்த ஸார்வபௌமராகையாலே …
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம்சரண: தர்சயந் தந்த பங்க்தீ என்னும்படி
பிறர்பாடே பல்லைக்காட்டப் பெறாதவர்.

தவத்தவர்–
மம மம என்னாதே தவ தவ என்று சேஷத்வம் பரிமளிக்க நிற்பவர்.

தங்கள் திருக்கோயில்—-
அமுதனாருடைய ஆதீனத்திலிருந்த கோயில் தங்கள் திருக்கோயில் என்னும்படி
தம்மதீனமாகப் பெற்றவர்.

சங்கிடுவான்—-
சங்க: என்ற வடமொழி சங்கு என்று திரிவதுபோல்
சங்கு: என்ற வடமொழியும் சங்கு எனத்திரியும்.
இச்சொல் திறவுகோல் என்னும் பொருளைத்தரும்.
ஆறாயிரப்படியில் இப்பொருளும் படிக்கப் பெற்றது.
ஆழ்வான் மூலமாகத் திருக்கோயில் திறவுகோலைப்பெற்ற இதிஹாஸம் இச்சொற்றொடரில் அநுஸந்திக்கலாகிறது……. 🙏

15 ஆம் பாசுரம்……

எல்லே இளங்கிளியே……

இப்பாட்டில் உனக்கென்ன வேறுடையை… என்னுஞ்
சொற்றொடர் நிதியானது…
உமக்கு மட்டும் அசாதாரணமான பெருமை என்னே! என்று வியந்து கூறப்பட்டுள்ளது.
ஸ்வாமி க்கு முன்னே நம்மாழ்வரும் ஸ்ரீமந்நாதமுனிகளும் ஆளவந்தாரும்
நம் தர்சனத்திற்கு நிர்வாஹகர்களாயிருக்கச்செய்தேயும்
நம்மாழ்வார் தர்சனம் என்றோ,
நாதமுனிகள் தர்சனம் என்றோ,
ஆளவந்தார் தர்சனம் என்றோ
வ்யவஹாரம் வாராமே எம்பெருமானார் தர்சனம் என்றே வ்யவஹாரம் நிகழ்ந்துவருகைக்கீடான
ஸ்வாமி யின் அஸாதாரணமான பெருமை இங்கு அநுஸந்திக்க உரியது.

மாற்றாரை மாற்றழிக்க வல்லா னென்ற விடத்தில்—
பாஷண்ட த்ருமஷண்டதாவதஹனச் சார்வாக சைலாசநி:
பௌத்த த்வாந்த நிராஸ வாஸரபதிர் ஜைநேப கண்டீரவ:
மாயாவாதி புஜங்கபங்க கருட:

தற்கச்சமணரும் சாக்கியப்பேய்களும்…….. நீசரும் மாண்டனர்………

சாறுவாகமத நீறு செய்து…..
இத்யாதிகள் நினைவுக்கு வரும்…. 🙏

16 ஆம் பாசுரம்….
நாயகனாய் நின்ற நந்தகோபன்….

யதிராஜ ஸப்ததியில்….
அமுநா தபநாதிஸாயி பூம்நா யதிராஜேன நிபத்த நாயகஸ்ரீ: மஹதீ குருபங்க்தி ஹாரயஷ்டி: என்று
பணித்தபடியே நம்முடைய குருபரம்பரா ஹாரத்தில் நாயகமணியாய் விளங்குமவர் ஸ்வாமி……………

நந்தகோபன்……
தனக்கு ஔரஸபுத்திரனில்லாமல் ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் என்னப்பட்ட
ஒரு தெய்வத்தைப் புதல்வனாகக் கொண்ட நந்தகோபன் போலே
ஸ்வாமி யும் யதிராஜ ஸம்பத்குமாரா!……
என்னும்படி செல்வப்பிள்ளையை த் தம் புத்திரராகப் பெற்றவர்………..

உடைய……….
உடையவர் என்கிற திருநாமம் ஸூசிதமாகிறதென்று கொள்ளக்குறையில்லை………

கோயில்காப்பான்.
ஸ்ரீமந்! ஸ்ரீரங்க ச்ரியமநுபத்ரவா மநுதிநம் ஸம்வர்த்தய என்னும்படி
ஸ்ரீரங்க ஸ்ரீயைக் காத்தருளினவர் ஸ்வாமி…………

கொடித்தோன்றும் தோரண வாசல் காப்பான்…………
உபய விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷிக்தா!… என்பது ஸ்வாமி க்குக் கட்டியம்.

கீழ் கோயில் காப்பானே! லீலா விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் சொல்லிற்று.
இங்கு நித்யவிபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் சொல்லுகிறது.
*கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர் நெடுவரைத்தோரணம் நிறைத்து எங்கும் தொழுதனருலகே என்னும்படி
கொடித்தோன்றும் தோரண வாசல் நித்ய விபூதி வாசல்!;
அதையும் பிறர் புகாதபடி காத்தருள்பவர் ஸ்வாமி……. 🙏

17ஆம் பாசுரம்……
அம்பரமே தண்ணீரே………

அம்பரத்தையும் தண்ணீரையும் சோற்றையும் அறம் செய்தவர் ஸ்வாமி..
அம்பரம் வ்யோம வஸ்த்ரயோ: என்ற நிகண்டுவின்படி அம்பரமாவது ஆகாசம்;
பரமாகாசமெனப்படுகிற பரமபதம் அதையும்
விரஜை யாகிற தண்ணீரையும்,
அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் என்று உபநிஷத்தில்
அன்னமாகச் சொல்லப்பட்ட பரப்ரஹ்மாநுபவத்தையும்,

அறஞ்செய்யும் எம்பெருமான் ……..
க்ருபாமாத்ர ப்ரஸன்னாசார்யராய் உபகரித்தருளினவர் எம்பெருமானார்….
மேலே அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த வும்பர்கோமான் என்றதும்
எம்பெருமானாரை நன்கு நினைப்பூட்டும்.

ஆளவந்தாருடைய சரம திருமேனியை ஸ்வாமி சேவிக்கப்பெற்றபோது
ஆளவந்தாரோடே நான் சேர்ந்து வாழப்பெறில் பரமபதத்திற்குப் படிகட்டியிருப்பேனே! என்று
ஸ்வாமி பணித்ததாக ப்ரஸித்தி. ஆளவந்தாரோடே சேர்ந்து வாழப்பெறாமற்

போனாலும்
யத் பதாம்போருஹத்யான ஸ்லோகப்படியும் ஏகலவ்யனன்றோ நான் என்ற ஸூக்திப்படியும்
அவருடைய விலக்ஷண அநுக்ரஹ பாத்ரமாயிருக்கப்பெற்ற பெருமையினால்
நித்யவிபூதிக்கும் லீலாவிபூதிக்கும் இடைச் சுவர் தள்ளி உபயவிபூதியையும் ஒரு போகி யாக்கினவர்
நம் ஸ்வாமி யென்று ப்ரஸித்தமாயிற்று.

மதுரகவி சொன்ன சொல் நம்புவார்பதி வைகுந்தங்காண்மினே என்றவிடத்து வ்யாக்யானத்தில்
உபயவிபூதிக்கும் இடைச்சுவர் தள்ளின பெருமை பட்டருடையதாக அருளிச் செய்யப்பட்டிருந்தாலும்
அப்பெருமை ஸ்வாமிக்கு கிம்புனர்ந்யாய ஸித்தமே.
அம்பரத்தை— பரமாகாசத்தை
ஊடறுத்தவர் என்றதாயிற்று…. 🙏

18ஆம் பாசுரம்.. …..

உந்து மதகளிற்றன்…….

இப் பாசுரம் மூலமாகவே ஸ்வாமி க்குத்
திருப்பாவை ஜீயர்
என்று வ்யபதேசம் உண்டாயிற்றென்றும் ப்ரஸித்தமாதலால் இங்கு நாம் எதுவும் விவரிக்கவேண்டிற்றில்லை.
ஆனாலும் கீழும் மேலுமுள்ள விவரணங்களுக்குச்சேர இங்குமொன்றுரைப்போம்.

கந்தங்கமழும் குழலீ!…. என்று
கேசபாசத்தையிட்டுச் சொன்னது ஸ்வாமி யின் திருவுள்ளத்திற்கு மிகவுகப்பான ஸம்போதனமாம்.
மதாந்தரஸ்தர்களான யதிகள் சிகையை வஹியாதே முண்டனம் செய்து போருவர்கள்;
அங்ஙனன்றிக்கே
காரிசுதன் கழல் சூடிய முடியும் கன நற்சிகை முடியும் என்றும்
கமனீய சிகாநிவேசம் என்றும் நம் முதலிகள்
உள்குழைந்து பேசும்படி கமனீய சிகாபந்தத்தோடு ஸ்வாமி சேவை சாதித்தவழகு
நெஞ்சுகுளிர அநுபவிக்கப்பட்டதாயிற்று….. 🙏

19 ஆம் பாசுரம்……….

குத்து விளக்கெரிய……….

திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம் எழுந்தருளி
ரஹஸ்யார்த்த விசேஷம் பெற்று அவ்விடத்திலேயே அதைச் சிலர்க்கு உபதேசித்தருளின இதிஹாஸம்
இப்பாட்டில் நன்கு ஸூசிதமாகிறது.

தோரண விளக்கு குத்து விளக்கு என்று இருவிளக்குண்டு.
தோரண விளக்கு ஸ்தாவரமாயிருக்கும்.
குத்து விளக்கு ஜங்கமமாயிருக்கும்.
ஸ்வஸ்தானத்திலேயே ஸ்தாவரராகவிருந்த திருக்கோட்டியூர் நம்பி தோரண விளக்காவர்
பலகால் கதாகதம் செய்தருளின எம்பெருமானார் குத்து விளக்காவர்
இந்தக் குத்துவிளக்கு எரிய—நம்பி பக்கலிலே அர்த்த விசேஷம் கேட்டு ஜ்வலிக்க என்றபடி.

கோட்டு………..
ஏகதேச விக்ருதம் அநந்யவத் பவதி என்கிற வடமொழி வ்யாகரண முறையின்படி
கோட்டி என்றதாகக்கொள்க.
கோஷ்டி என்னும் வடசொல் கோட்டி என்று தானேதிரியும்.!
திருக்கோட்டியூர் என்றதாயிற்று.

அவ்விடத்திலே
கால் கட்டு…
ரஹஸ்யார்த்தம் உபதேசித்தருளாநின்ற நம்பிகள்
தம் திருவடியைத்தொட்டு சபதம் செய்து கொடுக்கும்படி நியமித்தாரன்றோ!
அந்த கால் கட்டு ஸூசிதமாகிறது.

மேலேறி..
ஏற்கனவே தம்மை அநுவர்த்தித்துக் கொண்டிருந்த சில விலக்ஷணர்களுக்கு உபதேசிக்கத் திருவுள்ளம் பற்றிய ஸ்வாமி,
ஸந்நிதியின் மேல் தளத்திலேறினபடியைக் காட்டுகிறது. இப்படி ஆசார்ய திவ்யாஜ்ஞையைக் கடந்து உபதேசித்திருப்பரோ
சாஸ்த்ர வச்யரான ஸ்வாமி? என்கிற சங்கைக்குப் பரிஹாரம் செய்கிறது..

மலர் மார்பா! என்னும் விளி…
ஸ்வாமி யினுடைய ஹ்ருதய வைசால்யமே
அதற்குக் காரணமென்று காட்டினபடி…
மலர்ந்த ஹ்ருதயமுடையவரே! என்று விளித்தபடி…………. 🙏

20 ஆம் பாசுரம்………

முப்பத்து மூவ ரமரர்க்கு….. …..

இப்பாட்டில் செப்பமுடையாய்!
திறலுடையாய்!
செற்றார்க்கு வெப்பம்
கொடுக்கும் விமலா!…. என்னும் விளிகள் ஸ்வாமிக்கு மிகவும் ஏற்றிருப்பவை.

வடமொழியில் ஆர்ஜவ மெனப்படும் குணம் தமிழில் செப்ப மெனப்படும்.
மநோவாக்காயங்களின் ஒற்றுமையாகிற
கரணத்ரய ஸாரூப்யமே ஆர்ஜவம்.. அதுதான் செப்பம்..

ஸ்வாமி யினுடைய திவ்யஸ்ரீஸூக்திகளை சேவிக்கும்போது
ஒவ்வோரக்ஷரமும் அவருடைய ஆர்ஜவ த்தை யன்றோ தெரிவிக்கின்றது.
பரநிந்தை முதலியவற்றை நெஞ்சாலும் நினையாமலும் வாக்கிலும் காட்டாமலுமிருந்த பெருமை ஸ்வாமி க்கும்
ஸ்வாமி யின் புநரவதார பூதரான மணவாள மாமுனிக ளுக்கும் அஸாதாரணமன்றோ!

திறலுடையாய்……
திறலாவது பராபிபவந ஸாமர்த்யம்.
நீறுபூத்த நெருப்புப் போலேயிருந்து இதர வாதிகளின் துர்வாதங்கள் தலை யெடுக்க
வொட்டாதபடி செய்தருளுமாற்றலும் ஸ்வாமி க்கு அஸாதாரணம்.

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும்… ……
செற்றா ராகிரார் எம்பெருமானுடைய பெருமையை ஸஹியாதே
குணிநமபி குணைஸ் தம் தரித்ராணம்….. ஆஹூ: என்ற பட்டர் ஸ்ரீஸூக்திப்படியே
அப்பெருமானை ஸர்வ தரித்ரனாகப் பேசிவைத்தவர்கள்;
அவர்களுக்கு வெப்பம் கொடுத்தவர் ஸ்வாமி

வெப்ப மாவது ஸ்வரம். பீதி ஜ்வரம்.

தஸ்மை ராமானுஜார்யாய நம: பரமயோகிநே, ய: ச்ருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம்
அந்தர் ஜ்வரமசீ சமத் என்று
ஸ்வாமி ச்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரங்களுக்கிருந்த அந்தர் ஜ்வரத்தைப் போக்கடித்ததாகச் சொல்லிற்று.

அதை எங்கே போகவிட்டார் தெரியுமோ?
செற்றா ருடைய உள்ளத்திலே போகவிட்டாராயிற்று.
திருவடி இலங்கையைக் கொளுத்தினாரே, எந்த நெருப்பைக் கொண்டு கொளுத்தினாரென்று கேட்க,
வாலில் அரக்கர் பற்ற வைத்த நெருப்பினால் என்றார்களாம்.;
அன்று அன்று;
சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:, ஆதாய தேநைவ ததாஹ லங்காம் என்று
பிராட்டி திருவயிற்றிலே மண்டிக் கிடந்த சோகாக்னியை அங்கு நின்றும் கிளப்பி
அதனாலேயே இலங்கையைக் கொளுத்தினாரென்றார் மர்மஜ்ஞர்.
அதுபோலவே இங்கும் ச்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரங்களின் அந்தர் ஜ்வரத்தையெடுத்துச்
செற்றார் வயிற்றிலெறிந்தபடி…. 🙏

21 ஆம் பாசுரம்…..

ஏற்றக்கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப………..

வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்……..
என்னும்போது ஸ்வாமி யின் பெருமை தவிர வேறு எதுவும் நினைவுக்கு வாராது..
ஸ்வாமி க்கு முன்பிருந்த ஆசார்யர்களை எடுத்துக்கொண்டு
அவர்களுக்கு எத்தனை சிஷ்யர்கள்?
என்று கேட்டால் இருவர் மூவர் நால்வர் ஐவர் என்ன வேண்டுமத்தனை..

ஸ்வாமியின் சிஷ்ய வர்க்கங்களைப் பற்றிக் கேட்டாலோ
ஏகாந்திபிர் த்வாதசபிஸ் ஸஹஸ்ரை: ஸம்ஸேவிதஷ ஸம்யமிஸப்த சத்யா என்று
உடனிருந்தவர்கள் பேசும்படியாயிருக்கும்.
அன்றியும்,
மஹாஜ்ஞான நிதிகளாகத் தேர்ந்தெடுத்து எழுபத்து நான்கு ஸிம்ஹாஸநாதிபதிகளென்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் தாம் எப்படிப்பட்டவர்களென்னில்;

எதிர்பொங்கி மீதளிப்ப………..
சிஷ்யாதிச்சேத் பராஜயம் என்னும்படி ஆசார்யரையும் விஞ்சினவர்களாயிருப்பர்கள்.
காச்மீரத்தில் சாரதா பீடத்தில் ஸ்வாமி யும் ஆழ்வானும் போதாயநவ்ருத்தியைக் கடாக்ஷியா நிற்க,
அதற்கு இடையூறு விளைந்த போது க்ரந்தத்தைப் பூர்த்தியாகப்பார்க்க முடியவில்லையே! என்று ஸ்வாமி க்லேசிக்க,
அந்த வ்ருத்திக்ரந்தத்தைப் பூர்த்தியாகக் கடாக்ஷித்து அத்தனையும் ஹ்ருதி தரித்துக்கொண்டிருந்த ஆழ்வான்
இங்கே விண்ணப்பஞ்செய்யவோ? இரண்டாற்றின் நடுவே விண்ணப்பஞ் செய்யவோ?.என்று பணித்தாரென்று ப்ரஸித்தம்.

இப்படியேயன்றோ மேன்மேலுமுள்ள சிஷ்யவர்க்கங்களின் சரித்திரமும்.
அவர்கள் இன்னமும் எப்படிப்பட்டவர்களென்னில்;
மாற்றாதே பால் சொரியும்……
அவ்வாசார்யர்களின் பரம்பரை பெரும்பாலும் அநுஸ்யூதமாக நிகழ்ந்து வந்து பால் போன்ற
அர்த்தவிசேஷங்களைச் சொரிந்து கொண்டிருக்கும்படி சொன்னவாறு..

இத்தகைய வள்ளல் பெரும் பசுக்களை ஆற்றப்படைத்தவர் ஸ்வாமி..
ஆற்ற-அபரிமிதமாக.
மேலே மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் என்ற
விடத்து யாதவப்ரகாசர் வந்து பணிந்த வ்ருத்தாந்தம் மிகப் பொருத்தம்….. 🙏

22 ஆம் பாசுரம்…..

அங்கண் மா ஞாலத்தரசர்……

திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் அங்கணிரண்டும் கொண்டு என்றதில்
ஸ்வாமி யினுடைய உபயவேதாந்தக்ரந்த ப்ரவசனபடுத்வம் பேசப்படுகிறது.
திங்களும் ஆதித்யனும் ஏக காலத்தில் எழுவது அஸம்பாவிதம்.
ஆதித்யனெழும்போது தீக்ஷ்ணதையும், திங்களெழும்போது தண்ணளியும் அநுபவிக்கலாயிருக்கும்.
உபயவேதாந்த ப்ரவர்த்தகரான ஸ்வாமி காலை வேளைகளில் ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் ஸாதிப்பதும்,
மாலை வேளைகளில் அருளிச் செயல்(பகவத்விஷய) காலக்ஷேபம் ஸாதிப்பதுமாயிருப்பர்.

மதாந்தர ப்ரத்யாக்க்யா நதத்பரமான ஸ்ரீபாஷ்யத்தின் அர்த்தங்கள் அநுபவிக்கப்படும்போது தீக்ஷ்ணதையும்
செவிக்கினிய செஞ்சொல் சீர் கலந்த சொல் ஈரச்சொல் என்ன நின்ற அருளிச்செயல்களின் அர்த்தங்கள்
அநுபவிக்கப்படும்போது ஸௌம்யதையும் காணலாயிருக்க
இரண்டிலுமிரண்டுமுண்டானாலும் இப்படிச் சொல்லுகிறதும் ஊற்றத்தைப் பற்ற என்ற
*ஸ்ரீவசனபூஷண ப்ரக்ரியையிலே கொள்ளக் கடவது.

மேலே அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் என்றவிடத்திலும்
உபய வேதாந்தப் பொருள்களையும் எங்களுக்குக் கடாக்ஷித்தருள வேணுமென்ற ப்ரார்த்தனையுள்ளது.
சக்ஷுஸ் மத்தா து சாஸ்த்ரேண என்றபடி கண்ணென்பது சாஸ்த்ரமேயாம்.
உபயவேதாந்தங்களும் ஸ்வாமி க்கு இரண்டு திருக்கண்களென்க.
ஒன்றில் ஆதரமும் மற்றொன்றில் அநாதரமும் கொண்டிருக்கையே சாபமாகும்.
அது தொலையவேணுமென்றவாறு. ஸ்வாமி பக்கலிலே சிஷ்யர்கள் ப்ரார்த்திப்பது இது…. 🙏

23 ஆம் பாசுரம்…………..

மாரிமலைமுழைஞ்சில்………..

அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்படும்
சீரியசிங்கம் நம் யதிஸார்வ பௌமஸிம்மம் தவிர வேறுண்டோ?..
நூற்றந்தாதியில் கலிமிக்க செந்நெல் கழனிக்குறையல் கலைப்பெருமானொலிமிக்க பாடலையுண்டு
தன்னுள்ளம் தடித்து அதனால் *வலிமிக்க சீயமிராமானுசன் என்று சீரிய சிங்க மாகச் சொல்லப் பட்டவர் ஸ்வாமி .

உலகில் சிங்கம் ஹேயமான உணவை உண்டு செருக்கியிருக்கும்.;
யதிராஜஸிம்மம் திருமங்கையாழ்வாருடைய திவ்யஸூக்திகளையுண்டு அதனால் தடித்திருக்குமென்கிறார் அமுதனார்..

இதற்கு மலையும் முழஞ்சும் விலக்ஷணமாயிருக்கும்.
முந்நூறாண்டு வேதமோதின பரத்வாஜ மஹர்ஷிக்குத் தேவேந்த்ரன் வேதங்களை மலையாகக் காட்டினனென்று
வேதமே சொல்லுகையாலே வேதமே மலையாகக் கொள்ள வுரியது.
அதில் முழஞ்சாவது
தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம் என்னும்படி தர்மஸூக்ஷ்மங்கள் பொதிந்து இருக்குமிடம்.
அதிலே மன்னிக் கிடந்து லௌகிக விஷயங்களில் திருக்கண் செலுத்தாதே
ஆத்மந்யேவ ஆத்மாநம் பச்யந் ஸுகித்திருப்பவர் ஸ்வாமி……….

அறிவுற்று……
நாம் அவதரித்தது எதற்காக? என்று
தம் அவதார ப்ரயோஜனத்தைக் குறிக்கொண்டு என்றபடி…….

தீவிழித்து………
(அமரகோசே) புத்திர் மநீஷா திஷணா தீ: என்றவிடத்து புத்திபர்யாயமாகப் படிக்கப் பட்ட..
தீ: என்பது இங்குத் தீயென நிற்கின்றது.
அது விழித்திருப்பது—விகஸித்திருப்பது *ஸ்வாமிக்கே யென்க……

எப்பாடும் பேர்ந்து உதறி…..
ஸ்ரீரங்கம் கரிஸைலமஞ்சனகிரிம் தார்க்ஷ்யாத்ரி ஸிம்ஹாசலௌ
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்,
ஸ்ரீமத் த்வாரதீவ ப்ரயாக மதுரா யோத்யா கயா புஷ்கரம்
ஸாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமேத ராமானுஜோயம் முநி: என்கிறபடியே
எண்டிசையும் பாதசாரத்தாலே ஸஞ்சரித்து,
ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறி யருளினவர் ஸ்வாமி….. 🙏

24 ஆம் பாசுரம்…

அன்றிவ்வுலகமளந்தாய்……..

இதில் வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்பதை உயிராகக் கொள்க.
கொல்வது கோல் என்னுமாபோலே வெல்வது வேல் எனப்படும்.
கண்ணபிரான் திருக்கையில் வேலாகச் சொல்லப்படுவது திருவாழியாழ்வான்.
ஸ்வாமி திருக்கையில் வேலாகச் சொல்லப்படுவது த்ரிதண்டம்.

ஸப்ததியில் விஷ்வக்சேனோ யதிபதிரபூத்வேத்ர ஸாரஸ் த்ரிதண்ட:
என்று சேனையர்கோன் ஸ்வாமி யாகத் திருவவதரிக்க,
உபயவிபூதி நிர்வாஹ நிபுணமாய் அவருடைய திருக்கையிலுள்ள திருப்பிரம்பு தானே த்ரிதண்டமாயிற்று என்னப்பட்டது.

அந்தத் திருப்பிரம்புக்கு எவ்வளவு சக்தியோ அவ்வளவும் ஸ்வாமி யின் த்ரிதண்டத்திற்கும் உண்டென்க.

தாடீ பஞ்சக த்தில் ஸ்வாமிக்கு ப் பேசவேண்டிய பெருமைகளெல்லாம்
த்ரிதண்டத்தின் மேலும்
யஜ்ஞஸூத்ரத்தின் மேலும் ஏறிட்டுப் பேசப்பட்டுள்ளன.
அங்ஙனம் பேசுகையில்
பாஷண்டஷண்ட திரிதண்டன வஜ்ரதண்டா:—-
ராமானுஜஸ்ய விலஸந்தி முநேஸ் த்ரிதண்டா:.என்றும்

தத்தே ராமானுஜார்ய: ப்ரதிகதக சிரோ வஜ்ரதண்டம் த்ரிதண்டம் என்றும் பேசப்பட்டதுண்டே,

அதுதான் வென்று பகை கெடுக்கு மென்றதற்கு விவரணம்.
அப்படிப்பட்ட கையில் வேலாகிய முக்கோலுக்கு மங்களாசாஸனம் செய்தது
முக்கோல் பிடித்த முனிக்கே மங்களாசாஸனம் செய்தபடியாம் என்றுணர்க….. 🙏🙏🙏🙏🙏

திருப்பாவை ஒவ்வொரு பாசுரத்திலும் …..
ஸ்வாமி எம்பெருமானாரைச்
சிந்திக்க வேண்டும் படியான சொற்றொடர்கள்
..
25 ஆம் பாசுரம்……

ஒருத்தி மகனாய்ப் பிறந்து…….

தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கஞ்சன் கருத்தைப் பிழைப்பித்து
அவன் வயிற்றில் நெருப்பென்று நின்றவர் *ஸ்வாமி.

கம்ஸன் கண்ணனிடத்திலே
அனர்த்தம் விளைக்க வழிதேடியிருந்தது போல,
நம் ஸ்வாமி க்கு அனர்த்தம் விளைக்க வழிதேடியிருந்தவர் ஒருவர் ப்ரஸித்தர்.
அவருடைய கருத்தைப் பிழைப்பித்து (பிழைபடச்செய்து) ஓரிரவில் ஒளித்து வளர்ந்தவர் ஸ்வாமி………

விந்த்யாடவியெங்கே!
ஸத்யவிரத க்ஷேத்ரமெங்கே!…..
ஓரிரவில் அங்கு நின்றும் இங்கு வந்து சேர்ந்தவர் தம் ப்ர பாவங்களையெல்லாம் ஒளித்து வைத்திருந்தாரத்தனையன்றோ!
அன்னவர் ஆஸுரப்ரக்ருதிகளின் வயிற்றில் நெருப்பென்ன நின்றார்….

“பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹந:”….

” பாஷண்ட ஸாகர மஹாபடபாமுகாக்நி: என்று நெருப்பாகவேயன்றோ பேசப்பட்டார் ஸ்வாமி…

நெடுமாலே!….
வ்யாமோஹங் கொண்டவர்…
“அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம ஸ்யாமோஹத…. 🙏

26 ஆம் பாசுரம்……..

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்…………..

இதில் ஆலினிலையாய்!
என்ற விளி இன்சுவை மிக்கது..
ஆலின் இலையதன்மேல் பையவுயோகு துயில் கொண்ட பரம்பரன் கண்ணன்

ஆலின் நிலையாய்!
ஆலமரத்தின் நிலைமை போன்ற நிலைமையுடையவர் ஸ்வாமி…..
எம்பெருமான் பாஹுச்சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந: என்கிறபடியே
தன் பஹுச்சாயையிலே ஒதுங்கினவர்களுக்கு நிழல் கொடுத்துத் தாபம் தீர்ப்பவன்..
ஸ்வாமி யோவென்னில் ப்ராப்தாநாம் பாதமூலம் ப்ரக்ருதி மதுரயாச்சாயயா தாபக்ருத் வ: என்றாற்போல
அடிபணிந்தார்க்குத் திருவடிநிழல் கொடுத்துத் தாபம் தணிப்பவர்.
இது தானே ஆலின் நிலைமை.

நூற்றந்தாதி தொடங்கும்போதே
பல்கலையோர் தாம் மன்னவந்த விராமானுசன் சரணாரவிந்தம் என்றன்றோ தொடங்கிற்று.
பல்கலையோர் தாம் மன்ன வந்த என்ற விசேஷணத்தை இராமானுசனுக்கு
ஆக்குவதுபோலவே அவருடைய சரணாரவிந்தத்திற்கும் ஆக்கலாமே.

ந்யக்ரோதோ பஹுபாத்வட: என்ற அமரகோசம்
ஆலமரத்திற்கு பஹுபாத் என்று பெயர் படித்தது.
உண்மையில் ஆலமரமானது மற்ற மரங்களைப் போலன்றிக்கே அபரிமிதமான பாதங்களை யுடைத்தாயிருக்கும்.
ஸ்வாமி க்கும் திருவடிகள் அபரிமிதங்கள். (சிஷ்யர்களே திருவடிகள்). இப்பாட்டில் சொன்ன சங்கம்

பெரும் பறை
பல்லாண்டிசைப்பார்
கோலவிளக்கு
கொடி
விதானம்
என்னுஞ்சொற்களை ஊன்றி நோக்கினால் இவையெல்லாம் ஸ்வாமியே என்னப் பொருந்தும்.

சங்கம்….
த்ருவனிடஞ்சென்ற பகவான் சங்கஸ்பர்ஸத்தினால் அவனை ஸர்வஜ்ஞனாக்கினதாகப் புராணங்கூறும்.
அதுபோல ஸ்வஸம்பந்தத்தாலே
ஆழ்வான் ஆண்டான் அனந்தாழ்வான்
எம்பார்
பிள்ளான் முதலானாரை ஸர்வஜ்ஞராக்கினவர் ஸ்வாமி…….

பறை…….
பகவத் குணங்களை எங்கும் பறைசாற்றினவராகையாலே தாமே பறை என்னத் தகுவர்……………

பல்லாண்டிசைப்பார்
பெரியாழ்வார் போலே எம்பெருமானுக்குத் தாம் பல்லாண்டு பாடினது மட்டுமின்றியே
பல்லாயிரவரைப் பாடுவிக்கவும் வல்லராயிருந்தார்.

கோலவிளக்கு…..
ஸ்ரீவைஷ்ணவ குலப்ரதீபமாயிருந்தவர்..

கொடி…….
ஸ்ரீமல்லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜ மென்று
பிறரைச்சொல்லும்போது ஸ்வாமி க்குச் சொல்லவேணுமோ?
விசிஷ்டாத்வைத ஸித்தாந்த விஜயத்வஜமென்க.

விதானம்……..
கண்ணன் வட மதுரையிலிருந்து திருவாய்ப்பாடிக் கெழுந்தருளும்போது
தொடுத்து மேல் விதானமாய பௌவநீரராவணை என்ற திருச்சந்தவிருத்தத்தின்படியே
விதானமாயிருந்தவர் ஆதிசேஷனான திருவனந்தாழ்வான்.
அவரேயன்றோ ஸ்வாமி யாக வடிவெடுத்தார்……. 🙏

27 ஆம் பாசுரம்……..

கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா…………..

யஜ்ஞமூர்த்தி போல்வாரான பல பல அத்வைதிகள் முதலிலே ஸ்வாமி யோடு எதிரம்பு கோப்பவர்களாய் (கூடாதவர்களாய்)
இருந்து பிறகு கூடினவர்களாய் ஸ்வாமி க்கு வெற்றியைத் தந்தார்கள்.
அவர்களை வெல்வதற்கு உறுப்பாயிருந்த சீர்களை உடையவர் ஸ்வாமி அந்தச் சீர்கள் எவையென்னில் ;
கேவலம் வைதுஷ்யம் மட்டுமல்ல;திவ்யமங்கள விக்ரஹ குணங்களும், திவ்யாத்ம குணங்களும் பல பல.
ஸ்வாமி யின் வடிவழகை சேவித்தமாத்திரத்திலேயே ஈடுபட்டவர்கள் பல பலர்.

கோவிந்தா……….
பசுக்களை மேய்ப்பதனாலே கண்ணன் கோவிந்தனாயினன்.;
ஸ்ரீஸூக்திகளும் கோ ஸப்தார்த்தமென்று கீழே காட்டினோமாகையாலே ஸகல ப்ரமாணங்களையும்
பிபேத்யல்பச்ருதாத் வேதி மாமயம் ப்ரதரிஷ்யதி என்னும்படியான
பீதியைப்போக்கி ரக்ஷித்தமையாலே ஸ்வாமியும்
கோவிந்தர்–பசுப்ராயர்களான நம்மைக் காத்தவரென்றுமாம். 🙏🙏

28 ஆம் பாசுரம்…….

கறவைகள் பின்சென்று……..

குறையொன்றுமில்லாத கோவிந்தா! உன்தன்னைப் பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்..–என்னும்
வார்த்தை ஸ்வாமி எம்பெருமானாரை நோக்கி ஸ்ரீவைஷ்ணவ குலத்தவர்கள் யாவரும் சொல்லத் தக்கது.
ஞானம் அனுட்டானம் பரஸம்ருத்த்யேக ப்ரயோஜநத்வம் ஆகிய மூன்றும்
ஆசார்ய பீடஸ்தர்களுக்கு அவச்யாபேக்ஷிதங்கள்.
ஞானமிருந்து அனுஷ்டானமில்லையானாலும் பயனில்லை;
அனுஷ்டானமிருந்து ஞானமில்லையானாலும் பயனில்லை; இவையிரண்டுமிருக்கவேணுமென்பர்.
இவையிரண்டுமிருந்தாலுங்கூட, பரஸம்ருத்தியே பேறாயிருக்கையில்லையாகில் பயனில்லை;
இவை மூன்றும் நன்கு நிறையப்பெற்றவர் ஸ்வாமியே.

குறையில்லாத——
குறையொன்றில்லாத———–
குறையொன்றுமில்லாத——- என்று
யோஜித்து மேற்சொன்ன மூன்றாலும் குறையற்றிருப்பவர் ஸ்வாமியே என்று கொள்வது.

கூரத்தாழ்வான் ஸ்வாமி க் கிட்ட தனியனில் தயைகஸிந்தோ: என்று விசேஷணமிட்டது
பரஸம்ருத்த்யேக ப்ரயோஜநத்வத்தையே காட்டினபடி.
இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்வாமி நமக்கு குலகூடஸ்தராகித் திருவவதரிக்கப் பெற்றது
வாசாமகோசரமான நமது பெரும்பாக்கியமன்றோ.

த்வீபாந்தரங்களிற் பிறவாதே ஜம்பூத்வீபத்தில் பிறந்தது,
பசு பக்ஷி க்ருமி கீடாதி யோனிகளிற் பிறவாது மானிடப்பிறவியிற் பிறந்தது,
அதிலும் பகவத் பாகவத பக்தி முதலியவற்றுக்கு நிலமல்லாத மநுஷ்யவர்க்கத்தில் பிறவாதே ஆஸ்திக குடும்பத்தில் பிறந்தது
இவை எல்லாவற்றுக்கும் மேற்படவன்றோ ததநுபந்த மதாவலிப்தே என்று பேரறிவாளர் பேசும்படியான
பெருமை வாய்ந்த எம்பெருமானார் திருவடி ஸம்பந்தம் பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸந்தானத்திலே நாம் பிறக்கப்பெற்றது.
இந்த ஹர்ஷப்ரகர்ஷத்தைக் காட்டுவதாம் உன்தன்னைப் பிறவிப்பெறுந்தனை
புண்ணியம் யாமுடையோம் என்பது..

உன்தன்னை..–என்பதற்கு
உன் தன்னைக் கொண்டு என்று பொருள் கொள்வது மிகச் சிறக்கும்.
உன்தன்னால்.. என்றபடி.
(உருபு மயக்கம்)
ஸ ஹி வித்யாதஸ் தம் ஜநயதி தத் ச்ரேஷ்டம் ஜந்ம.. -என்கிறபடியே
நாங்கள் ச்ரேஷ்டமான வித்யாஜந்மத்தை தேவரீர் திருவருளாலன்றோ பெற்றிருக்கிறோம்.
யதீச்வர ஸரஸ்வதி ஸுபிதாசயாநாம் ஸதாம் வஹாமி சரணாம்புஜம் ப்ரணதிசாலிநா என்று
மஹாசார்யர்கள் ஆசைப்படுவதற்குறுப்பானார் திரளிலேயன்றோ ஜனித்திருக்கிறோமென்றவாறு.

ஸ்வாமி திருவம்சத்திலே நாம் பிறக்கப்பெற்றது
நம் குலவிளக்காக ஸ்வாமி அவதரிக்கப்பெற்றது ஆகிய இரண்டும் இங்கு விவக்ஷிதமென்கை. 🙏

29 ஆம் பாசுரம்…….

சித்தஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து……

எற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முன்றன்னோ டுற்றோமேயாவோம் உனக்கே நாமாட் செய்வோ மென்பது
நாமெல்லோரும் ஸ்வாமியை நோக்கிறே சொல்லத் தகுந்த வார்த்தை.

ஆழ்வார்கள் இருள் தருமா ஞாலத்துளினிப் பிறவியான் வேண்டேன் என்றும்
இயக்கறாத பற்பிறப்பிலென்னை மாற்றி யென்றும் ஆதலால் பிறவி வேண்டே னென்றும்
புனர்ஜன்மத்தை வெறுத்துப் பேசுவர்கள்.
நாம் அப்படி வெறுக்க வேண்டா; எத்தனை ஜன்மங்களும் யதேஷ்டமாக நேரட்டும்;
நேருகிற ஜன்மங்கள் தோறும் இப்போது நமக்கு வாய்த்திருப்பது போலவே
எம்பெருமானார் திவ்யஸூக்தி ஸுதைகளையே பருகும் பாக்கியம் வாய்த்திடுமானால் பிறவியில் வெறுப்பு நமக்கேதுக்கு?
ஒரு பிறப்பன்று, ஒன்பதினாயிரம் பிறப்பெடுப்போமாக. அதற்குச் சளைப்போமல்லோம்;
ஆனால் அப்பிறவிதோறும் உன்றன்னோடுற்றோமேயாவோம்….

இராமானுசனடியார் என்னும் விருதுக்கு லோபமின்றிக்கே யிருக்கக் கடவோம்.

உனக்கே நாமாட் செய்வோம்………
வடுக நம்பி
ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையரென்பர் என்கிற ஸ்ரீவசனபூஷண ஸூக்தியின்படியே
இருகரையராகாமே வடுகநம்பியைப்போலே ஸ்வாமிக்கே அடிமை செய்துகொண்டிருக்கக் கடவோம்.
ஆனால்
வாழி யெதிராசன் வாழி யெதிராசன், வாழி யெதிராசனென வாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை
என்று மாமுனிகள் அருளிச் செய்த படியே
நமக்குப் புனர்ஜன்மமின்றிக்கே முக்தி ஸாம்ராஜ்யம் ப்ராப்தமாய்விடுமானாலும்
ஏரார் முயல் விட்டுக் காக்கைப்பின் போவதே என்கிற திருமங்கையாழ்வார் அநுஸந்தானமேயாயிருக்கக் கடவோம்.

கையில் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரினும் உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்
என்ற அமுதனார் அநுஸந்தானமே உறைத்திருக்கக் கடவது நமக்கு…… 🙏🙏🙏🙏🙏🙏🙏

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

—————-

ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு* என்ற
திருமழிசைப் பிரான் பாசுரத்தின் படியே (அஸ்தாநே பயஸங்கை) (
விரோதி வர்க்கங்கள் எம் பெருமாளுக்குத் தீங்கு செய்ய நெருங்கி வந்ததாக ப்ரமித்து) விஷாக்னியைக் கக்குகை
பரிவின் மிகுதியைக் காட்டுமதாகையாலே சொல்லிற்றென்க.

சேஷத்வத்தில் அக்ரேசரான
ஆதிசேஷன்…….

ஆதிசேஷ அவதாரமான
ஸ்வாமி எம்பெருமானார்..

சேஷவாஹனத்தில்
திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏

——————

ஸ்ரீமதே ராமானுஜாய நம:🙏

இன்று…….ஸ்வாமி எம்பெருமானார் வெள்ளை சாத்துப்படி……….🙏

சோழமண்டலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தினை தலைநகராகக் கொண்டு வைணவத்வேஷம் கொண்டு
”இரண்டாம் குலோத்துங்க சோழன்’ (கி.பி 1070-1116) என்னும் மன்னன் ஆண்டு கொண்டிருந்தான்.
அவனது அமைச்சர்களில் நாலூரான் எனும் வைணவத்தினைச் சார்ந்த துர்மதி அமைச்சனும் இருந்தான்.
மன்னன் சிவாத் பரதரம் நாஸ்தி (சிவனுக்கு மேலான தெய்வமில்லை) என்று
அனைத்து மதத்தினைச் சார்ந்தவர்களையும் வலுக்கட்டாயபடுத்தியோ அல்லது
ஏதேனும் ஒரு உபாயத்தினை பின்பற்றியோ நிலைநாட்டிக் கொண்டிருந்தான்.

துர்மதி நாலூரான் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொண்டான்.
வைணவத்தின் தலைவராகயிருக்கும் இராமானுஜர் ஒப்புக்கொண்டாலேயொழிய தாங்கள் நினைப்பதை
சாதிக்கவியலாது என்று அந்த துஷ்டனிடம் துர்போதனைச் செய்தான்.
வெறிகொண்ட மன்னன் திருவரங்கத்திற்கு தன் ஆட்களை அனுப்பி இராமானுஜரை அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்தான்.

திருவரங்கம் வந்து சேர்ந்த அவர்களிடம் சாமர்த்தியமாக பேசி உடையவரின் பரம சீடரானவரும் இராமானுஜரின்
சகோதரி புதல்வருமான நடாதுராழ்வான் உடையவரை அவர்கள் அழைத்து போவதற்கானக் காரணத்தினை யறிந்தார்.
மதிநுட்பம் வாய்ந்த அவர் இதனை உடையவரிடம் கூறாது கூரத்தாழ்வானிடம் ரகசியமாக தெரிவிக்கின்றார்.
இவரின் சமயோசித செயலைக் கண்ட கூரத்தாழ்வான் இவரை அன்போடு அணைத்து நீரன்றோ
*ப்ரிய பாகிநேயர் (பிரியமான மருமகன்) என்று உகக்கின்றார்.
இராமானுஜர் சோழ மன்னனின் சபைக்குச் சென்றால் தீங்கு நிச்சயம் என்று ஆழ்வானின் உள்ளுணர்வு உணர்த்துகின்றது.
அப்போதுதான் வடதிருக்காவிரிக்கு நீராட சென்றிருந்தார் இராமானுஜர்.

கூரத்தாழ்வான், அவரது காஷாயத்தினைத் தான் தரிக்கின்றார்
மடத்திலுள்ள மற்ற சீடர்களிடத்து இராமானுஜருக்கு ஆபத்து. உடனே அவரை அழைத்துக் கொண்டு
வெளிதேசம் சென்று விடுங்கள் என்று ஆணையிட்டு, மன்னனின் ஆட்களிடத்து தாம்தான் இராமானுஜர் என்று
நம்ப வைத்து மன்னனின் சபைக்கு (ஏறத்தாழ தனது 88வது வயதினில் – கி.பி 1097) நெஞ்சுரத்தோடு விரைகின்றார்
அப்போது அவர் தனியே செல்வது நல்லதல்ல எனக் கருதிய 100 வயதினைக் கடந்த பெரியநம்பியும்
தமது மகள் அத்துழாயுடன் அவரோடு செல்கின்றார்.

காவிரியில் நீராடித் திரும்பிய உடையவர் விவரமறிந்து அனலில் இட்ட புழு போன்று துடிக்கின்றார்.
மனம் வெம்பி கண்ணீர் உகுக்கின்றார். தாம் செல்ல எத்தனிக்கின்றார்.
அங்குள்ள சீடர்கள் இராமானுஜரை பலவாறு தேற்றுகின்றனர். இராமானுஜர் பெரியபெருமாளை ஸேவிக்கின்றார்.
பிரியாவிடை பெறுகின்றார். வெள்ளை ஆடைகளை காவிமேல் அணிந்து
எம்பார், முதலியாண்டான், நடாதூராழ்வான், பிள்ளான், வடுகநம்பி, கிடாம்பியாச்சான், வில்லிதாஸன் போன்ற
அந்தரங்கமான சீடர்களுடன் மேல் திசை நோக்கி பயணிக்கின்றார்.

தனது ஸபைக்கு வந்தது இராமானுஜர் அல்ல என்பதினை கேடுகெட்ட நாலூரான் சொல்ல,
வெறிகொண்ட அரசன் இராமானுஜரை எங்கிருந்தாலும் பிடித்து வர ஒரு சிறு வேகப்படையை அனுப்புகின்றான்.
இந்தப் படை இராமானுஜரை பின்தொடர்கின்றது. உடையவர் இரு கை நிறைய மணலை எடுக்கின்றார்.
கொடுமைசெய்யுங் கூற்றமும் என் கோலாடி குறுகப்பெறா, தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற் சேவகனே! என்று
ஓதி அவர்கள் வருகின்ற வழியில் அம்மணலைத் தூவச் சொல்கின்றார்.
பின்தொடர்ந்த படை பின் வாங்கியது.
‘போகிற பார்ப்பார் மந்த்ரவாதம் பண்ணிப்போனார்கள்” என்றுஅரண்மனை அடைந்தது.
உடையவரும் சீடர்களும் அரங்கத்துள் உறையும் இன் துணைவனே வழித்துணையாக, த்வயம் அனுஸந்தித்தவாறே பயணிக்கின்றனர்.

இங்கு அரசனுக்கு வெறி இன்னும் மிகுகின்றது. கெடுவான் கேடு நினைப்பான் என்றவாறே ஒருவன்
ஒரு பெரிய பாவத்தினைப் பண்ணுவதற்கு முன் அவன் கெடுவான்.
அவன் புத்தி கெடும் அல்லது யாரேனும் கெடுப்பதற்கென்றே வந்து சேருவர்.
இங்கு நாலூரான் வந்து சேர்ந்தான்
கேடுகெட்ட அரசனுக்கு. கூரத்தாழ்வாரிடத்து சிவாத் பரதரம் நாஸ்தி என்று எழுதி கையொப்பமிடச் சொல்கின்றார்.
கூரத்தாழ்வார் அதனை மறுத்து கிண்டலாக வேறு விதமாக
த்ரோணமஸ்தி தத:பரம் (சிவம் என்ற அளவைவிட த்ரோணம் என்னும் அளவு பெரியது) என்றுஎழுதி கையொப்பமிடுகின்றார்.
பல பிரமாணங்களைக் காட்டி விஷ்ணுவே பரத்வம் என்று வாதிடுகின்றார்.
வெறியனுக்கு முன் வாதம் செய்து என்ன பயன்?
இவ்விரு வைணவர்களின் கண்களையும் பிடுங்கி குருடராய் ஆக்குங்கள் என்று கட்டளையிடுகின்றான்.
உன்னைப் போன்ற பகவத் துவேஷியைக் கண்ட கண்கள் எனக்கு இனி வேண்டாம். உன் ஆட்களும் என்னைத் தொடவேண்டாம் என்று
தன்னுடைய கைவிரல் நகங்களாலேயே தம்மிரு கண்களையும் பிடுங்கி வீசுகின்றார் மாவீரனாய் கூரத்தாழ்வான்.
பெரியநம்பியின் கண்களும் பறிபோய் குழியாயிற்று..

வயதான நம்பிகள் வலி தாளாது துடிதுடியாய் துடிக்கின்றார்.
எமக்குதவ இங்கு எவரும் இல்லையா? என்று அத்துழாய் அலறுகின்றார்.
அரசனின் பணிப்பெண் நாவல்கொடி அம்மாள் என்ற ஓரேயொரு பெண்மணி மட்டும் நடப்பது நடக்கட்டும் என்று
தைரியமாக அத்துழாயையும், தரிஸனம் இழந்து வைணவ தரிஸனத்தினைக் காப்பாற்றிய ஆழ்வானையும்,
பெரியநம்பியையும், கைப்பிடித்து, சபையை விட்டு எல்லோரும் வெளியேறுகின்றனர்.
ஸ்ரீரங்கம் நோக்கி பயணிக்கின்றனர்–🙏🙏🙏🙏

உலகமுண்ட பெருவாயா

கீழ்த் திருவாய்மொழியில் அபரிமித ஆர்த்தி உடன் பரம பதத் அளவும் கேட்கும் படி கூப்பிட்டார்..
அங்கனம் கூப்பிடச் செய்தேயும் திரு முகம் காட்டி அருளாமையாலே தளர்ந்து நோவு பட்ட ஆழ்வார்
திரு வேங்கட மலையிலே
நித்ய சூரிகளோடு நித்ய சம்சாரிகளோடு திர்யக்குகளோடு வாசி அற
எல்லாரும் வந்து ஒரு மிடறாக ஆஸ்ரயிக்கலாம் படி நித்ய சந்நிதி பண்ணி அருளி இருக்கும் படியை அனுசந்தித்து
*திருவேங்கடமுடையான் திருவடிகளிலே
பெரிய பிராட்டியார் முன்னிலையாக*
தம்முடைய அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்து சரணம் புகுகிறார்🙏

தேச-கால -பிரகார -அதிகாரி -பல நியமங்கள் இல்லாத
விஷய நியமம் ஒன்றே உள்ளது சரணாகதிக்கு -அதாவது
சௌலப்யாதி குணங்கள் பூரணமாய் இருக்கிற இடமே விஷயமாகை
ஸ்வதஸ் ஸர்வஞ்ஞனான எம்பெருமானே சொல்லப் புகுந்தாலும் சொல்ல ஒண்ணாத குணங்கள்
பூர்த்தியாய் உள்ள அர்ச்சாவதாரத்தில் தலையான திரு மலையிலே சரணாகதி செய்து அருளுகிறார்
ஒன்பது பாட்டாலும் சரண்யன் படி சொல்லி

பத்தாம் பாட்டில் சரணம் புகுகிறார்🙏🙏

————

ந்யக்ரோத பீஜே வடவத் ப்ரணவே சப்தஜாலவத் !
ஸித்தே ததீயஸேஷத்வே ஸர்வாதாஸ் ஸம்பவந்திஹி !!🙏

ஆலம் விதையில் ஆலமரம் போலவும்

ப்ரணவத்தில் எல்லா சப்தங்கள் போலவும்

*பாகவத சேஷத்வம்
ஸித்திக்குமாயின்* (அதில் அடங்கிய) எல்லாப் பொருள்களும் கிடைத்தனவாகின்றன

நெடுமாற்கடிமை….

பகவத் சேஷத்வத்தின் எல்லைநிலமாகிய பாகவதசேஷத்வத்தைக் கொண்டாடுகிறார் ஆழ்வார்…..

அம்மணியாழ்வான் என்றொரு ஸ்ரீவைஷ்ணவர் பட்டரிடத்து தண்டன் சமர்ப்பித்து கேட்கின்றார்  
அடியேனுக்கு தஞ்சமாயிருப்பதொரு அர்த்தம் பிரஸாதித்தருள வேணும் என்று!……

பட்டர்
நெடுமாற்கடிமை’ என்ற பாசுரத்திற்கு அர்த்தம் கூறுகின்றார். 
மேலும், 
எம்பெருமானைப் பற்றி மட்டும் அறிந்தோமாயின் அந்த எம்பெருமானுக்கு அரைவயிறு மட்டும் நிரம்பியது போன்றதாகும். 
அவனது அடியார்களையும் அவர்களது வைபவங்களையும் உணர்ந்து அறிந்தோமாயின்
அந்த எம்பெருமானுக்கு முழுவயிறும் நிரம்பியது போன்றதாகும் என்று
பரம பாகவதோத்மர்களின் சிறப்பினைப் பற்றி விளக்குகின்றார்.🙏🙏🙏🙏

————–

கீழே -அறுக்கும் வினையாயின -திருவாய் மொழியில் -அவனைப் பெற வேணும் என்னும் மநோ இதமாய்ச் சென்றது –
அந்த மநோ ரதம் நிறைவேறாமையாலே கிலேசித்த படி சொல்லிற்று கீழ்த் திருவாய்மொழியில்
இத்தை அறிந்த எம்பெருமான் -ஆழ்வீர் எம்மைப் பெறாமையால் நீர் நோவு படுவது கிடக்கட்டும் –
உம்மைப் பெறாமல் இழவு பட்டுக் கிடப்பவன் நான் அன்றோ
உமக்கு ஒரு குறை உண்டோ
திரு நாட்டை விட்டு திருக் கண்ணபுரத்திலேநாம் சந்நிதி பண்ணி இருப்பது உமக்காக அன்றோ
இந்த சரீரத்தின் முடிவில் உம்முடைய அபேஷிதம் நிறைவேற்றக் கடவோம் -என்று சொல்லி சமாதானம் பண்ண
ஆழ்வாரும் சமாஹிதராய் அதனைச் சொல்லி மகிழ்கிறார் இத் திரு வாய் மொழியில்

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -உயிரான பாசுரம்
சர்வேஸ்வரன் சர்வ ஜன சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திருக் கண்ணபுரத்திலே கோயில் கொண்டு இரா நின்றான்
எல்லாரும் அவனை சென்று ஆஸ்ரயிங்கோள்
ஆஸ்ரயிக்கும் இடத்தில் அவன் திருவடிகளில் பக்தியை பண்ணுங்கோள்
பக்திக்கு உபகரணம் இல்லாதோர் பிரபத்தியைப் பண்ணுங்கோள்
அதற்கு உரிய அத்யவசாயம் இல்லாதார் உக்தி மாத்ரத்தை ஆகிலும் சொல்லுங்கோள்
அவ்வளவே கொண்டு அவன் தான் கை விடான்
ஆனபின்பு எல்லாரும் ஒக்க அவனை ஆஸ்ரயிங்கோள் -என்று
பரோபதேசமாக செல்கின்றது இப்பதிகம் –

மோஹித்துக் கிடந்தார் ஆகில் கிடக்கும் அத்தனை போக்கி
உணர்ந்தார் ஆகில் பிறர்க்கு ஹிதம் சொல்லி அல்லது நிற்க மாட்டார்-என்பர் நம்பிள்ளை
🙏🙏🙏🙏

————-

கூரத்தாழ்வானுக்கும் தத் ஸம்பந்திகளுக்கும் மோக்ஷம் நிச்சயம் என்ற அரங்கன் திரு வாக்கைக் கேட்டு இராமானுசர்
ஹரஷ ப்ரகர்ஷத்தாலே மேல் உத்தரீயத்தை ஆகாயத்தை நோக்கி வீசுதல்… 🙏

———

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்……..
அமுதனாருடைய எல்லை கடந்த ப்ராவண்யத்தை அறிந்த எம்பெருமானார்
‘நம்மேல் இவ்வளவு காதல் கொண்டிருக்கிற இவருடைய நெஞ்சை நாம்விட்டு நீங்கலாகாது, என்று கொண்டு
அமுதனாருடைய திருவுள்ளத்தை மிகவும் விரும்பியருள, அதனைக் கண்டு மகிழ்ந்து பேசுகிறார்.

இன்புற்றசீலத்து இராமானுசா…..
எத்தனையேனும் தண்ணியனான என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து – அது தன்னைப் பெறாப் பேறாக நினைத்து –
ஆநந்த நிர்பரராய் -எழுந்து அருளி இருக்கிற சௌசீல்யத்தை உடையவரே –
இப்படி இருக்கிற தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது-ஒரு கார்யம் உண்டு –
அது ஏது என்னில் –
ஐயார் கண்டமடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த –என்னுமா போலே -ஸ்ரீ திரு வாய் மொழி -2 9-3 – –
தோற்புரையே போமதன்றியிலே அஸ்த்திகதமாய் இன்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜனமான சரீரங்கள் தோறும் –
ஜநிப்பது மரிப்பதாய் – அசங்க்யேய துக்கங்களை அனுபவித்து முடியிலும்
சர்வ காலத்திலும் -சர்வ தேசத்திலும் -தேவரீருக்கு அனந்யார்ஹ்ராய் இருக்கும் அவர்களுக்கே மாறுபாடுருவின
ஸ்நேஹத்தை உடையேனாய் இருக்கும்படியாக செய்து என்னை அவர்கள் திருவடிகளிலே அடிமையாம்படி பண்ணி யருள வேணும் .
இதுவே அடியேனுக்கு புருஷார்த்தம் -என்கிறார் அமுதனார்….

அங்கயல் பாய்வயல் தென்னரங்கன்……
இப்பிரபந்தத்தின் தொடக்கத்தில் “இராமாநுசன் சரணாவிந்தம் நாம் மன்னிவாழ” என்று
எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளைப் பொருந்திவாழ்வதே தமக்குப் பரம புருஷார்த்தமாக அருளிச் செய்தவராகையாலே
அந்தப் புருஷார்த்தம் நமக்கு யாவஜ்ஜீவம் ஹித்திக்கும்படியாக -எல்லாச் செல்வங்களையும் அளிக்கவல்ல
பெரிய பிராட்டியாரைப் பிரார்த்திப்போமென்கிறார்-முடிவான இப்பாட்டில்.
ஸாமாந்ய ஸம்பத்தை அளிக்கவல்ல பிராட்டியே இந்த விசேஷ ஸம்பத்தையும் அளிக்கக் கடவள் என்றதாயிற்று.🙏🙏

———–

திருவவதார திருநக்ஷத்ரம்

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாசரதே பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

மேஷே புனர்வசஸுதிநே தாசரத்யம்ஸ ஸம்பவம் |
யதீந்த்ரா பாதுகாபிக்யம் வந்தே தாசரதிம் குரும் ||

இராமபிரான் இவ்வுலகில் வந்து அவதரித்த சித்திரை புனர்வஸு நன்னாளில்
தாசரதியான (தசரதன் மகனான) அவன் அம்சமாக வந்துதித்து,
யதீந்த்ர பாதுகைகளாக போற்றப்படும் தாசரதிமஹாகுருவை (முதலியாண்டானை) வணங்குகிறேன்🙏

ஸ்ரீவைஷ்ணவசிரோபூஷா ஸ்ரிராமானுஜபாதுகா |
வாதூலகுலோத்தம்ஸ ஸ்ரீதாசரதிரேததாம் ||

“ஸ்ரீராமானுஜ பாதுகையை ஸ்ரீவைஷ்ணவர் யாவருக்கும் தலைக்கணியாய்த் திகழும்
வாதூலகுல திலகரான (தாசரதி) முதலியாண்டானின் புகழ் ஓங்குக என்பது மேற் தனியனின் பொருள் .

முதலியாண்டான் என்று நம் ஸம்பிரதாயத்தில் புகழ் பெற்றவரான தாசரதி மஹாகுரு
ஸ்வாமி எம்பெருமானாரின் (ஸ்ரீராமானுஜர்) ஸஹோதரியின் குமாரராக
பச்சைவாரணப் பெருமாள் கோவில் என்னும் ஊரில் அவதரித்தவர்.
இவ்வூர் தற்சமயம் பேட்டை” என்றே அழைக்கப்படுகிறது.
எதிராஜரான ஜகத்குரு இவரைத் திருதண்டமாக (முக்கோல்) மதித்திருந்தார்.
இவரோ, ஜகதாசார்யரான சுவாமியின் (ஸ்ரீராமானுஜர் பாதுகங்களாகவே (திருவடி நிலைகள்) தம்மை நினைத்திருந்தார்.
எம்பெருமானார் ஸன்யாஸ்ரமம் புகும்போது, நமது முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தோம் என்று
அருளியதாக இவரது புகழ் பேசப்படுகிறது.

மொழியைக் கடக்கும் பெரும்புகழான் எனப்படும் கூரத்தாழ்வானும், தாசரதியும் (முதலியாண்டான்)
ஸ்வாமி ராமானுஜரை முதல் முன்னம் ஆச்ரயித்தவர்கள்.
ஆதலால் ஆழ்வான், ஆண்டான் என்று இவர்களைச் சேர்த்தே அழைப்பர் பெரியோர்.
இவர்களை ஸ்வாமியின் தண்டும் பவித்ரமுமாகச் சொல்வது வழக்கம்.

த்ரேதா யுகத்தில் பெருமாள் இராமபிரானாக வந்து அவதரித்தபோது, திருவனந்தாழ்வான் (ஆதிசேஷன்) இலக்குவனாக
வந்து பிறந்து அவனுக்கு எல்லா அடிமைகளும் செய்து மகிழ்வித்தான்.
அந்த கைங்கர்ய ரஸத்தைத் தான் முழுதும் பருகவேண்டும் என்று ஆசைகொண்ட பெருமாள்,
கலியுகத்தில், தானே அவர் (ஸ்ரீராமானுஜர்) சகோதரியின் புதல்வனாக வந்துதித்து,
தாசரதி என்ற பெயருடன் அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்களைச் செய்து மகிழ்வுற்றான்.
அதாவது, த்ரேதா யுகத்தில் இலக்குவனாக அவதரித்தான் திருவனந்தாழ்வான்;
இராமபிரானுக்கு அனைத்து கைங்கர்யங்களும் புரிந்தான். பின்னர் அவன் கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக அவதரித்தான்.
அதேபோல், இராமனாக அவதரித்து, இலக்குவனிடம் கைங்கர்யங்கள் பெற்றுக்கொண்ட பெருமான் அதற்கு ப்ரதி உபகாரமாக,
கலியுகத்தில் ஸ்ரீராமானுஜருக்குக் கைங்கர்யங்கள் செய்ய, அவரது சகோதரி மகனாக அவதரித்தான்.

ஆக, இலக்குவனே ஸ்ரீராமானுஜர்;
இராமனே முதலியாண்டான்

இராமபிரான் முதலியாண்டான்
இருவர் அவதரித்ததும் சித்திரை மாதம் புனர்பூசம் நக்ஷத்ர மாகும்

ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாமிகள் (முதல்வர்கள்), இவரை ஆண்டானாக (ஆளும் பிரானாக) மதித்ததினால்,
இவர் முதலியாண்டான் ஆனார்.
ஆனால் இவரோ, எதிராசருக்கும் அவர்களுக்கும் அடிமையாய் இருப்பதையே விரும்பினார்.
ஒரு சமயம் இராமானுசர் இவரைத் தனது ஆசார்யரான பெரியநம்பிகளின் குமாரத்தியான (மகள்) அத்துழாய்க்கு
சீதன வெள்ளாட்டியாக (பணிப்பெண்) அனுப்பினார்;
இவரும், அத்துழாயின் மாமியார் அகத்தில் ஒரு பணிப்பெண் செய்யும் அடிமைத் தொழில்களை மன நிறைவுடன் செய்தார்.
இராமானுசரிடம் இவர் கொண்ட ஆசார்ய பக்தி எவ்வளவு மேன்மையானது இதன் மூலம் தெரிகிறது.

யதிராஜருக்கும் முதலியாண்டானுக்கும் உள்ள உறவைக் காட்டும் ஒரு புகழ்வாய்ந்த ச்லோகம்:

அஜஹத்பாகிநேயத்வம் பாதுகாத்வம் த்ரிதண்டதாம் |
ஸம்ப்ராப்தோ யதிராஜஸ்ய குணைஸ்தத்ப்ரீதி ஹேதுபி: ||

மகிழ்விக்கும் ஆத்மகுண பூர்த்தியால்,
யதிராஜருக்கு விலகாத சகோதரி புத்ரர் என்ற உறவையும்
பாதுகை (திருவடி) ஆகையையும்,
த்ரிதண்டமாகையையும் (முக்கோல்) ஆகிய மூன்று நிலையினைப் பெற்றார் (முதலியாண்டான்).

மருமான் என்ற உறவு பிறவியால் வந்தாகிலும், தாய்மாமன் துற்வியானபோது அது தானே விலகிவிடவேண்டும்.
யதீந்த்ரரான ராமானுஜர் துறவியானபோது, தாசரதியான மருமானைத் துறக்கவில்லை.
முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தோம் என்றதும் இவரது பாகவத குணங்களைப் போற்றி,
தனது த்ரிதண்டமாகவும் பாதுகையாகவும் மதித்தது இவர் உள்ளத் தூய்மையையும், அடிமையாய் (சேஷி) இருக்கும்
விருப்பத்தையும் பற்றியவையாதல் வேண்டும்.
மேல்கோட்டை என்று வழங்கப்படும் திருநாராயணபுரத்தில் முதலியாண்டான் திருவடிகளை விளக்கி (அலம்பி),
அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தைப் புருகிய அவ்வூரார் பலர் மனம் திருந்தி உடையவர் பக்கம் பக்தர்களானார்கள் என்னும்
விஷயம் முதலியாண்டானின் மனத் தூய்மையை புலப்படுத்தும்.🙏🙏

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அந்திமோபாய நிஷ்டை–ஸ்ரீ பர வஸ்து பட்டர் பிரான் ஜீயர்

January 18, 2022

திருநக்ஷத்ரம் : கார்த்திகை புனர் பூசம்-பாரத்வாஜ கோத்ரம்
ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: கோயில் அப்பன் (தன்னுடைய பூர்வாஸ்ரம திருக்குமாரர்), பரவஸ்து அண்ணன், பர வஸ்து அழகிய மணவாள ஜீயர், அண்ணராய சக்ரவர்த்தி, மேல்நாட்டுத் தோழப்பர் நாயனார் எனப் பலர்.

அருளிச் செயல்கள்:அந்திம உபாய நிஷ்டை -பஞ்சம உபாய நிஷ்டை

திருநாடு அலங்கரித்த திவ்யதேசம் : திருமலை

கோவிந்தர் என்னும் திருநாமத்துடன் மதுரகவி ஐயர் (-ஸ்ரீ ராமானுஜருடைய 74 சிம்ஹாசநபதிகளில் ஒருவர்-அரணபுரத்தாழ்வான் திருவம்சம் என்றும் நடுவில் ஆழ்வான் திருவம்சம் என்றும் கூறுவர்) என்பவருடைய திருக்குமாரராக பர வஸ்து திருவம்சத்தில் அவதரித்தார். இவரை கோவிந்த தாஸரப்பன் என்றும் பட்டநாதன் என்றும் பூர்வாச்ரமத்தில் அழைப்பர். ஸந்யாஸாச்ரமம் ஏற்ற பின் பட்டர்பிரான் ஜீயர் என்றும் பட்டநாத முனி என்றும் அழைக்கப் பெற்றார். மாமுனிகள் அஷ்டதிக்கஜங்களில் ஒருவர் (மாமுனிகள் பிரதான சிஷ்யர்களும் நம் சம்பிரதாயத்தின் முக்கியத் தலைவர்களும் அஷ்டதிக் கஜங்கள் ஆவர்). நம் சம்பிரதாயத்திற்குப் பல கிரந்தங்களை அருளிச்செய்த பிள்ளைலோகம் ஜீயர் இவருடைய திருப்பேரனார் ஆவார்.

மாமுனிகளே இவரைத் தன் கோஷ்டியில் கோவிந்தப்பாதசர் (பட்டர் பிரான் ஜீயர்)  என்று போற்றியிருக்கிறார். ஒருமுறை மாமுனிகள் தன் கோஷ்டியார் குழுமியிருந்த போது பட்டர்பிரான் ஜீயர் ஒருவரே “தேவுமற்றறியேன்” என்ற  மதுரகவியாழ்வார் நிலைக்குத் தகுதியானவர் (நம்மாழ்வரைத் தவிர வேறு தெய்வம் அறியேன்) என்று சாதித்தார். பட்டர்பிரான் ஜீயரை மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாருக்கும், தெய்வவாரியாண்டான் ஆளவந்தாருக்கும், வடுக நம்பி எம்பெருமானாருக்கும் போன்று ஒப்பிட்டுக் கூறுவர். எம்பார் எப்படி எம்பெருமானாரை விட்டுப் பிரியாமல் இருந்தாரோ அதேபோல் பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளை விட்டுப் பிரியாமல் இருந்தார். இதனால் அனைத்து சாஸ்திரங்களையும் மாமுனிகளிடத்தே நேரடியாய்க் கற்று தொடர்ந்து மாமுனிகளுக்குத் தொண்டு பூண்டார்.

ஸ்ரீ பட்டர்பிரான் ஜீயர் தன் பூர்வாச்ரமத்தில் முப்பது ஆண்டுகளாக மாமுனிகள் போனகம் செய்த சேடத்தை (பெரியோர்கள் சுவீகரித்த பிரசாதத்தின் மீதம்) உண்டார். “மோர் முன்னார் ஐயர்” என்று ப்ரஸித்தமாய் அழைக்கப் பட்டார் (பக்தி ஸ்ரத்தையாலே மோர் பிரசாதத்தை முதலில் ஸ்வீகரிப்பவர்). வழக்கமாக நாம் முதலில் அருரிசி சோறுடன் பருப்பு – குழம்பு முதலியன உண்டு இறுதியாய் மோர் பிரசாதத்தை உண்போம். ஆனால் பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளின் இலையில் அமர்ந்து மாமுனிகள் ஸ்வீகரித்த மோர் பிரசாதத்தை சுவை மாறாமலிருக்க மோர் பிசாதத்தை முதலில் தினப்படி உண்பார் (மோர் பிரசாதம் ஆரம்பித்து பருப்பு – குழம்பு முதலியன). இதனாலேயே இவர் “மோர் முன்னார் ஐயர்” என்று என்னும் திருநாமம் கொண்டு வழங்கப் பெற்றார்.

ஸ்ரீ மாமுனிகள் சிஷ்யர்கள் மாமுனிகளை “பட்டநாத முனிவர அபீஷ்ட தைவதம்” எனக் குறிப்பிடுவர்கள். பட்டர்பிரான் ஜீயரின் அன்பைப் பெற்ற ஆசார்யன் என்று பொருள். அதே போல் பட்டர்பிரான் ஜீயரை மாமுனிகளிடம் மதுரகவி நிஷ்டை உடையவராய்க் கொண்டாடுவர்.

வர யோகி பதச்சாயா பரத்வாஜ கோத்ரம் -கோவிந்த பட்டர்

ஸ்ரீ மாமுனிகள் அந்திம காலத்தில் அண்ணராயச் சக்ரவர்த்தி (திருமலை நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தில் அவததரித்தவர்) திருமலையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளினார். பெரியகோயிலை மங்களாசாசனம் செய்யது விட்டு, தன் தாயார் சொன்னதை சிரமேற்கொண்டு, பெரிய ஜீயரை தண்டன் சமர்ப்பிக்க பெரிய ஜீயர் மடத்தை அடைந்தார். தன் குடும்பத்துடன் பட்டர்பிரான் ஜீயர் மூலமாக மாமுனிகளை அணுகுகிறார். பெரிய ஜீயர் தன் திவ்ய பாதத்தை அண்ணராயச் சக்ரவர்த்தி சென்னியில் (தலையில்) பதித்து பரிபூரணமாய் அனுகிரஹிக்கிறார். அண்ணராயச் சக்ரவர்த்தியின் திருமலை கைங்கர்யங்களை புகழ்ந்து, பிறகு பட்டர்பிரான் ஜீயரிடம் அண்ணராயச் சக்ரவர்த்தியை தன் சிஷ்யராக ஏற்கும்படி அழைத்தார். மாமுனிகள் “ராமஸ்ய  தக்ஷிணோ பாஹு” என்று சாதித்து , இராமனுக்கு இலட்சுமணன் வலது கரம் போலே – அடியேனுக்குப் பட்டர்பிரான் ஜீயர் வலது கரம் போலே; எனவே பட்டர்பிரான் ஜீயர் உமக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யது வைத்து, சிஷ்யராய் ஏற்று நம் சம்பிரதாயத்தின் ஒரு தலைவராய் உம்மை நியமனம் பண்ணட்டும் – என சாதித்தருளினார். இதை அண்ணராயச் சக்ரவர்த்தி மகிழ்வுடன் ஏற்று பட்டர்பிரான் ஜீயரை தன் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீ மாமுனிகள் திருநாடு அலங்கரித்த பிறகு பட்டர்பிரான் ஜீயர் திருமலையில் இருந்து பல ஜீவாத்மாக்களை உய்வித்தார். அந்திமோபாய நிஷ்டை என்னும் அற்புதமான கிரந்தத்தை அருளி அதில் நம் ஆசார்ய பரம்பரையைக் கொண்டாடி, எப்படி நம் பூர்வாசார்யர்கள் தம் தமது ஆசார்யர்களை ஆச்ரயித்து இருந்தனர் என விவரித்தருளினார். இந்த கிரந்தத்தின் ஆரம்பத்திலேயே அனைத்து சம்பவங்கள் மற்றும் தாத்பர்யங்கள் அனைத்தும் மாமுனிகள் தன் திருவாய் மலர்ந்து அருளியது என்றும் , தான் எழுதும் கரணமாகவே இருப்பதாயும் அறிவித்திருக்கிறார்.

இவர் ஒரு சிறந்த அறிஞர் மற்றும் மாமுனிகளின் அபிமானத்துக்கு மிகவும் பாத்திரமானவர். இவரின் திருவடிகளை வணங்குவதன் மூலம் சிறிதேனும் இவரைப் போல் பாகவத நிஷ்டையைப் பெறுவோம்.

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் | பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||-ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் தனியன

ஶ்ரீஸௌம்ய ஜாமாத்ரு  முநே: ப்ரஸாத ப்ரபாவ ஸாக்ஷாத் க்ருத ஸர்வ தத்த்வம்|
அஜ்ஞாந தாமிஸ்ர ஸஹஸ்ர பாநும் ஶ்ரீ பட்ட நாதம் முநிமாஶ்ரயாமி||-ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் தனியன

————-

ஸ்ரீ ஶாஸ்த்ரம் ஸ்ரீ பகவானுக்கு நிரந்தரமாகக் கைங்கர்யம் செய்வதையே
சிறந்த புருஷார்த்தமாக நிர்ணயித்துக் காட்டுகிறது.
இப் பலனான கைங்கர்ய ப்ராப்தியை அடைவதற்குப் பல வழிகளைக் காட்டியிருந்தாலும்
பக்தி மற்றும் ப்ரபத்தி அவற்றில் சிறந்ததாகச் சொல்லப்படுகின்றன.

அவற்றிற்கும் மேலே இப் பலனை அடைய ஒரு ஆசார்யனிடம் முழுவதுமாக அடிமை பூண்டு இருப்பதையே
தலை சிறந்ததாகவும் எளியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆஶிநோதி ய: ஶாஸ்த்ரார்த்தம் ஆசரே ஸ்தாபயதி அபி
ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் ஆசார்யஸ் தேந கீர்த்தித:

ஆசார்யன் என்பவன் ஶாஸ்த்ரத்தைத் தான் முழுதுமாக அறிந்து,
தான் அதை அனுஷ்டித்து பிறருக்கும் அதை உபதேசிப்பவன்.

மேலும் நம் பூர்வாசார்யர்கள் ஶாஸ்த்ரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆசார்யன் என்பவன்
ஸ்ரீமந் நாராயணனுக்கே ஆட் பட்டு இருந்து, அவனுடைய பரத்வத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு,
ஞான பக்தி வைராக்யங்களில் சிறந்து விளங்கி, உபாயாந்தரங்களிலிருந்தும் (எம்பெருமான் தவிர வேறு உபாயங்கள்),
உபேயாந்தரங்களிலிருந்தும் (எம்பெருமானுக்கும் அவன் அடியாருக்கும் தொண்டு செய்வதைத் தவிர வேறு பலன்கள்),
தேவதாந்தரங்களிலிருந்தும் விலகி இருத்தல் வேண்டும் என்று காட்டினர்.
நம் பூர்வாசார்யர்கள் அனைவரும் இந்த குணங்களில் சிறந்து விளங்கினர்.

பிள்ளை லோகாசார்யர், மணவாள மாமுனிகள், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்
பிள்ளை லோகாசார்யர் ஶாஸ்த்ரத்தின் ஸாரத்தை பூர்வாசார்யர்களின் உபதேசத்தின்படி
ஸ்ரீவசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்தின் மூலம் வெளியிட்டருளினார்.

இதன் முடிவில், “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்”, அதாவது
சிஷ்யனிடத்தில் ஆசார்யனின் கருணையே சிஷ்யனின் கைங்கர்ய ப்ராப்திக்கு வழி என்பதை அருளியுள்ளார்.

இந்தக் கொள்கையை பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (மணவாள மாமுனிகளின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவர்)
தன்னுடைய திவ்ய க்ரந்தமான அந்திம உபாய நிஷ்டையில், பல உதாரணங்களுடன் அழகாக விளக்கியுள்ளார்.

அந்திம = சிறந்த/எல்லையான, உபாய = வழி, நிஷ்டை = நிலைத்து நிற்றல்.
இதன் பொருள் “ஆசார்யனிடத்தில் முழுமையாக அடி பணிந்து இருத்தல்”.
பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் தானே, இந்த முழு க்ரந்தமும் மாமுனிகளின் நேரடி உபதேசங்களைக் கொண்டு எழுதப்பட்டது என்றும்
தான் ஆசார்யனின் வார்த்தைகளை ஏடுபடுத்த உதவும் ஓலைச் சுவடி, எழுத்தாணி போல மட்டுமே என்றும் சொல்கிறார்.-அந்திமோபாயநிஷ்டா யா வக்தா ஸௌம்ய வரோ முநி: |
லேககஸ்ய அந்வயோ மேத்ர லேகநீ தால பத்ரவத் |

இது நம்பிள்ளையின் ஈடு கால க்ஷேபங்களை எவ்வாறு வடக்குத் திருவீதிப் பிள்ளை ஏடுபடுத்தினாரோ அதைப் போன்றதே.
ஆக, இந்த நூலாசிரியரின் கருத்துப்படி இவை மாமுனிகளின் நேர் உபதேசங்களே

இந்த ஆசார்ய நிஷ்டை
மதுரகவி ஆழ்வாருக்கு நம்மாழ்வாரிடத்திலும்,
ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரிடத்திலும்,
தெய்வவாரி ஆண்டானுக்கு ஆளவந்தாரிடத்திலும்,
வடுக நம்பிக்கு எம்பெருமானாரிடத்திலும் இருந்தது.

இந்த நிலைக்குச் சரம பர்வ நிஷ்டை என்றும் ஒரு பெயருண்டு.
பகவானிடம் முழுமையாக அடிமை கொண்டிருத்தல் ப்ரதம் பர்வ நிஷ்டை (முதல் நிலை) என்றும்
ஆசார்யனிடம் அவ்வாறு இருப்பது சரம பர்வ நிஷ்டை (முடிந்த நிலை) என்றும் சொல்லப்படுகிறது.

ஆழ்வார்களும் ஆசார்யர்களும் முறையே திவ்ய ப்ரபந்தங்கள் மூலமாகவும்
தங்கள் ஸ்ரீஸூக்திகள் மூலமாகவும் இதை உபதேசித்துள்ளார்கள்.

பகுதி 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள்
பகுதி 2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம்
பகுதி 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்
பகுதி 4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி
பகுதி 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம்
பகுதி 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை
பகுதி 7 – நம்பிள்ளை வைபவம் 1
பகுதி 8 – ஆனி திரு மூலம் – ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்)
பகுதி 9 – நம்பிள்ளை வைபவம் 2
பகுதி 10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை
பகுதி 11 – எம்பார் மற்றும் எம்பெருமானாரின் சிஷ்யர்களின் நிஷ்டை
பகுதி 12 – ஆசார்யன் பகவத் அவதாரம்
பகுதி 13 – ஆசார்ய அபசார விளக்கம்
பகுதி 14 – பாகவத அபசார விளக்கம்
பகுதி 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம்
பகுதி 16 – பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)
பகுதி 17 – பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை
பகுதி 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்

——–

அந்திமோபாய நிஷ்டை – 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள்

ஶ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாத்ரம் முநிம் ||

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ரேகா மயம் ஸதா|
ததாயத் தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே||

பரவஸ்து பட்டர்பிரான்ஜீயர் தனியன்கள்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்ட நாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

காந்தோ பயந்த்ரு யமிந: கருணாம்ருதாப்தே :
காருண்ய ஶீதல கடாக்ஷ ஸுதா நிதாநம் |
தந் நாம மந்த்ர க்ருத ஸர்வ ஹிதோபதேஶம்
ஶ்ரீபட்ட நாத முநி தேஶிகமாஶ்ரயாமி ||

உபநிஷதம்ருதாப்தே ருத்த்ருதாம் ஸார வித்பி :
மதுரகவி முகைஸ் தாம் அந்தி மோபாய நிஷ்டாம் |
உபதிஶதி ஜநேப்யோ யோ தயா பூர்ண த்ருஷ்டி :
பஜ ஹ்ருதய ஸதாத்வம் பட்ட நாதம் முநீந்த்ரம் ||(ஜநேப்யோ-ஜென்மம் அடைந்தார்க்கு எல்லாம் உபதேசம்)

ருசி வர முநீந்த்ரேண ஆதரேணோபதிஷ்டாம்
அக்ருத க்ருதி வரிஷ்டாம் அந்திமோபாயநிஷ்டாம் |
தமிஹ நிகில ஜந்து உத்தாரணோத் யுக்த சித்தம்
ப்ரதி திந மபி வந்தே பட்ட நாதம் முநீந்த்ரம் ||

நமோஸ்து பட்ட நாதாய முநயே முக்தி தாயிநே |
யேநைவம் அந்திமோபாய நிஷ்டா லோகே ப்ரதிஷ்டதா||

தாதொன்றும் தார் புயத்தான் மணவாள முனி தனது
பாதம் பரவும். பட்டர் பிரான் முனி பல்கலையும்
வேதங்களும் சில புராணங்களும் தமிழ் வேதியரும்
ஓதும் பொருள் அந்திமோபாய நிட்டை யுரைத்தவனே!

அந்திமோபாயநிஷ்டா யா வக்தா ஸௌம்ய வரோ முநி: |
லேககஸ்ய அந்வயோ மேத்ர லேகநீதால பத்ரவத் |

எந்தை மணவாள யோகி எனக்குரைத்த
அந்திமோபாய நிட்டையாமதனை – சிந்தை செய்திங்
கெல்லாரும் வாழ எழுதி வைத்தேன் இப் புவியில்
நல்லறி வொன்றில்லாத நான்.

கற்றோர்கள் தாமுகப்பர் கல்வி தன்னிலாசை யுள்ளோர்
பெற்றோமென உகந்து பின்பு கற்பர் – மற்றோர்கள்
மாச்சரியத்தா லிகழில் வந்த தென்னெஞ்சே இகழ்கை
ஆச்சரியமோ தானவர்க்கு.

———–

“ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா: ஜகதந்தர் வ்யவஸ்திதா: |
ப்ராணிந: கர்ம ஜநித ஸம்ஸார வஶ வர்த்திந:” என்றும்,

“ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி:” என்றும் சொல்லுகிறபடியே
இருள் தரு மா ஞாலமான ஸம்ஸாரத்திலே,

(ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்ம அபி  ஜீவே துக்க ஆகுலே விஷ்ணோ க்ருபா காப்யுபஜாயதே ஸமீஷிதஸ்து தாஸோயம் கர்ணா வர்ஷ ரூபயா கர்ம ஸாம்யம் பஜேத்யேவ ஜீவோ விஷ்ணு ஸமீஷயா சக்தி பாவஸ் ஸவை ஜீவ முத்தாரயதி ஸம் ஸ்ருதே கர்மணீ ச ஸமே தத்ர தூஷ்ணீம் பாவம் உப கர்யதே –அஹிர் புத்த்ய ஸம்ஹிதை -என்று
ஸம்ஸார சக்ரஸ்தனாய் துக்காகுலனான ஜீவன் விஷயமாக ஸர்வேஸ்வரனுக்கு ஒரு கிருபை பிறக்கும் படியையும்
அந்தக் கிருபை அடியாக உண்டான அவன் கடாக்ஷத்துக்கு விஷயபூதனாயக் கொண்டு இவன் கர்ம ஸாம்யத்தைப் பஜிக்கும் என்னுமத்தையும்
அந்த அநுகிரஹாத் மிகையான சக்தியினுடைய ஸ்வ பாவம் இவனை சம்சாரத்தின் நின்றும் உத்தரிப்பிக்கும் என்னும் இடத்தையும்
கர்ம சாம்யம் என்பதின் கருத்தை ஸங்க்ரஹேண சொல்லிற்று)

இருள் தரு மா ஞாலமான ஸம்ஸாரத்திலே,

“ந அபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடி ஶதைரபி” என்றும்,

“யத் ப்ரஹ்ம கல்ப நியுத அநுபவேப்ய நாஶ்யம்” (கூரத்தாழ்வான் -பல கல்பங்களில் அனுபவித்தும் முடிக்க முடியாத கர்மங்ளை அரை விநாடியில் ஸம்பாதிக்கிறோமே)என்றும் சொல்லுகிறபடியே

பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்றள்ளல் பொய்ந் நிலமாகையாலே, தரை கண்டு காலூன்றித்
தரித்து நின்று அடி கண்டறுக்க வொண்ணாதபடி மூடிக் கிடக்கிற கொடு வினைத் தூற்றில் நின்று
பல காலம் வழி திகைத்தலமருகின்ற ஸம்ஸாரி சேதநனுக்கு அஞ்சினான் புகலிடமான
ஆசார்யாபிமாநமே உஜ்ஜீவிக்கைக்கு உசிதோபாயமென்று ஶ்ரீவசந பூஷணாதி திவ்ய ப்ரபந்த முகேந அறுதியிட்டு,

ஸம்ஸாரத்தில் உரு மாய்ந்து “அஸந்நேவ” என்கிறபடியே நஷ்ட கல்பனாய் கிடந்த இவனை
“ஸந்தமேநம்” என்னும்படி நிர்ஹேதுகமாக அங்கீகரித்தருளி, த்யாஜ்ய உபாதேயங்களைத் தெளிய அறிவித்து
ரக்ஷித்தருளின மஹோபகாரகனான ஸ்வாசார்யன் திருவடிகளை உபாயமாகப் பற்றி,

(அஸந்நேவ ஸ பவதி । அஸத்ப்ரஹ்மேதி வேத சேத் । அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத । ஸந்தமேந ந்ததோ விதுரிதி । தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா । ய: பூர்வஸ்ய । அதாதோ(அ)நுப்ரஶ்நா: । )

“தேவுமற்றறியேன்” என்றிருக்கும் அந்திமோபாயநிஷ்டனுக்கு ஸ்வாசார்யனுடைய திவ்ய நாம வைபவத்தையும்,
அவருடைய ஜ்ஞாந ப்ரேமாதி குண வைலக்ஷண்யத்தையும் அவருடைய திரு வவதார வைபவத்தையும்-
அவர் எழுந்தருளி யிருக்கும் திவ்ய தேஶ வைபவத்தையும், அவர் திருவடிகளே உபாயமென்னும் அவ் வழியாலே
உபேயமான தத் விக்ரஹ வைலக்ஷண்யத்தையும், அவர் திருமேனியை ஸர்வ தேஶ ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும்
த்ரிவித கரணத்தாலும் ஒன்றும் தப்பாமல் பேணும் வழியாலே தத்  கைங்கர்ய வைபவத்தையும்,
அந்த கைங்கர்ய த்வாரா அவருக்குண்டான ப்ரீத் யதிஶயத்தாலே தாம் பெறும் பேற்றினுடைய கௌரவத்தையும்
இடைவிடாமல் அநுஸந்தித்து தத் விஷயமாக மங்களாஶாஸநம் பண்ணி வாழுகையே
அநவரத கர்த்தவ்யம் என்னுமத்தையும் இப் ப்ரபந்த முகேந சொல்லுகிறது.

———–

அனந்த பாரம் பஹூ வேதிதவ்யம் அல்பஶ்ச காலோ பஹவஸ்ச விக்நா: |
யத் ஸார பூதம் தது பாஸிதவ்யம் ஹம்ஸோ யதா க்ஷீர மிவாம்பு மிஶ்ரம் ||

அஸாரம் அல்ப ஸாரஞ்ச ஸாரம் ஸார தரம் த்யஜேத் |
பஜேத் ஸார தமம் ஶாஸ்த்ரம் ரத்நாகர இவாம்ருதம் ||

(அஸாரம் –ஐஹிக ஆமுஷ்மிக பலன்களைக் கொடுக்கும் ஸ்ருதி பாகம்
அல்ப ஸாரம் -கைவல்ய பலனைக்கொடுக்கும் ஸ்ருதி பாகம்
ஸாரம் -உபாயாந்தரங்களைச் சொல்லும் ஸ்ருதி பாகம்
ஸார தரம் -அவனே உபாயம் என்று சொல்லும்-ஸ்வார்த்த கைங்கர்யம் ஸ்வ கத ஸ்வீகாரம்- ஸ்ருதி பாகம்
த்யஜேத்
பஜேத்
ஸார தமம் –பரார்த்த கைங்கர்யம் பர கத ஸ்வீகாரம்-அவன் திருவடிகள் ஸ்தானமான ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் -என்று சொல்லும் ஸ்ருதி பாகங்கள்)

தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்யா யாவிமுக்தயே |
ஆயாஸாயாபரம் கர்ம வித்யாந்யா ஶில்ப நைபுணம் ||

ஶாஸ்த்ர ஜ்ஞாநம் பஹு க்லேஶம் புத்தேஶ் சலந காரணம் |
உபதேஶாத் தரிம் புத்த்வா விரமேத் ஸர்வ கர்மஸு ||

ஆ   த்யாநம் ஸத்ருஶேகதம் விஸத்ருஶே தேஹே பவத்யாத்மந:
ஸத் புத்தேஸ்ஸ ச ஸங்க மாதபி பவேதௌஷ்ண்யம் யதா பாதஸி |
கோவா ஸங்கதி ஹேதுரேவம் அநயோ: கர்மாத ஶாம்யேத் குத:
தத் ப்ரஹ்மாதி கமாத் ஸ ஸித்யதி மஹாந் கஸ்மாத் ஸதாசார்யத: ||

(ஆ   த்யாநம் ஸத்ருஶே–தியானம் தொடங்கி ப்ரீதி காரித கைங்கர்யங்கள் வரை ஆத்மாவுக்குப் பொருந்திய கர்மாக்கள்
கதம் -எவ்வாறு
விஸத்ருஶே தேஹே பவத்யாத்மந:-ஆத்மாவுக்குப் பொருந்தாத தேஹத்தைப் பற்றிய கர்மங்களில் சேதனன் ஈடுபடுகிறான்
ஸத் புத்தேஸ்ஸ ச ஸங்க மாதபி –ஞானிகளும் கூட அன்றோ -இவ்வாறு அநர்த்தப்படுகிறார்கள் -தேஹ சம்பந்தம் -தொடர்பு காரணம்
பவேதௌஷ்ண்யம் யதா பாதஸி |–நீருக்கும் அக்னியின் தொடர்பால் உஷ்ணம் வருவது போல்
கோவா ஸங்கதி ஹேதுரேவம் அநயோ: கர்மாத ஶாம்யேத் குத:-இதில் இருந்து எவ்வாறு சேதனன் மீள்வான்
தத் ப்ரஹ்மாதி கமாத் ஸ ஸித் யதி மஹாந் கஸ்மாத் ஸதாசார்யத: ||ஆச்சார்யர் உபதேசத்தால் ப்ரஹ்ம ஞானம் பெற்று மீள்கிறான்)

அநாசார்ய உபலப்தாஹி வித்யேயம் நஶ்யதி த்ருவம் |
ஶாஸ்த்ராதிஷு ஸுத்ருஷ்டாபி ஸ அங்கா ஸஹ பலோதயா |
ந ப்ரஸீததிவை வித்யா விநா ஸ துபதேஶத: ||

தைவாதீநம் ஜகத் ஸர்வம் மந்த்ராதீநம் து தைவதம் |
தந் மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம் தஸ்மாத் ப்ராஹ்மண தைவதம் ||

வ்ருதைவ பவதோ யாதா பூயஸி ஜந்ம ஸந்ததி: |
தஸ்யாம் அந்ய தமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ ||

பாபிஷ்ட: க்ஷத்ர பந்துஶ்ச புண்டரீகஶ்ச புண்ய க்ருத் |
ஆசார்ய வத்தயா முக்தௌ தஸ்மாத் ஆசார்யவாந் பவேத் ||

ப்ரஹ்மண்யேவ ஸ்திதம் விஶ்வம் ஓங்காரே ப்ரஹ்ம ஸம்ஸ்திதம் |
ஆசார்யாத் ஸ ச ஓங்காரஸ் தஸ்மாத் ஆசார்யவாந் பவேத் ||

ஆசார்யஸ் ஸ ஹரிஸ் ஸாக்ஷாத் சர ரூபீ ந ஸம்ஶய: ||(உலாவும் பெருமாள் ஆச்சார்யர்)

தஸ்மாத் பார்யாத ய: புத்ராஸ்தம் ஏகம் குருமாப்நுயு: ||

ஸாக்ஷாந் நாரயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும் |
மக்நாந் உத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா ||

தஸ்மாத் பக்திர் குரௌ கார்யா ஸம்ஸார பய பீருணா ||

குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பரா கதி: |குருரேவ பரா வித்யா குருரேவ பரம் தநம் || குருரேவ பர: காமோ குருரேவ பாராயணம் |யஸ்மாத் தது பதேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு: ||

அர்ச்சநீயஶ்ச பூஜ்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ் ஜபேந் நமேத் பக்த்யா பஜேதப் யர்ச்சயேந் முதா ||

உபாயோபேய பாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வ ஶாஸ்த்ரேஷு ஸம் மதம் ||

யேந ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந தீப ப்ரதே குரௌ |
மர்த்ய புத்தி: க்ருதா தஸ்ய ஸர்வம் குஞ்ஜர ஶௌசவத் ||

யோ கத்யாத் பகவத் ஞானம் குர்யாத் தர்ம உப ஸேவனம்
க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாந் ந தத் துல்யம் கதஞ்சந ||

(பொன்னுலகு ஆளீரோ
இரண்டு உபய விபூதிகளையும் இரண்டு உபய விபூதி நாதனையும் கொடுத்தாலும் ஸத்ருசம் ஆகாதே)

ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குரு ரஷ்டாக்ஷர ப்ரத: || இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்த வ்யாஸ்தே மநீஷிபி: ||

யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா ப்ரதீயதே |
தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ: ||

யத் ஸ்நாதம் குருணா யத்ர தீர்த்தம் நாந்யத் ததோதிகம் |
யச்ச கர்ம ததர்த்தம் தத் விஷ்ணோ ராராதநாத் பரம் ||(ஆளவந்தார் படித் துறையில் நீராடி அனுஷ்டானம்)

பஶுர் மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஶ்ரயா: |
தேநைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ: பரமம் பதம் ||

பால மூக ஜடாந்தாஶ்ச பங்கவோ பதி ராஸ்ததா|
ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம் ||

யம் யம் ஸப்ருஶதி பாணிப்யாம் யம் யம் பஶ்யதி சக்ஷுஷா |
ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா: ||

அந்த அநந்த க்ரஹண வஶகோ யாதி ரங்கேஶயத்வத்
பங்குர் நௌகா குஹர நிஹிதோ நீயதே நாவிகேந |
புங்க்தே போகாந் அவிதி தந்ருபஸ் ஸேவகஸ்யார்ப காதி:
த்வத் ஸம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேஶிகோ மே தயாலு: ||

(குருடன் கண் உள்ளவனைக் கொண்டும்
படகால் நீரைக் கடந்தும்
ராஜ சேவக மக்கள் ராஜாவைப் பார்க்காமல் ஐஸ்வர்யம் அனுபவிப்பது போல்)

ஸித்தம் ஸத் ஸம்ப்ரதாயே ஸ்திரதியமநகம் ஶ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
ஸத்த்வஸ்தம் ஸத்ய வாசம் ஸமய நியதயா ஸாது வ்ருத்த்யா ஸமேதம் |
டம்பா ஸூயாதி முக்தம் ஜித விஷய கணம் தீர்க்க பந்தும் தயாலும்
ஸ்காலித்யே ஶாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேஶிகம் பூஷ்ணுரீப்ஸேத் ||

சத் ஸம்ப்ரதாயே -நல்ல -சத்துக்கள் -ஸ்ம்ப்ரதாயத்திலே
சித்தம் -சித்தி -நிலை பெற்றவனும் -ப்ரஸித்தி வாய்ந்தவனும்
ஸ்திர தியம் -உறுதி கொண்ட மனப்பான்மை கொண்டவனும்
அநகம் –குற்றம் அற்றவனும்
ஸ்ரோத்ரியம் -வேத வேதாந்தங்களைக் கசடறக் கற்று அறிந்தவனும்
ப்ரஹ்ம நிஷ்டம்-பரமாத்மாவிடம் நிலை பெற்றவனும்
சத்வஸ்தம் -ஸத்வ குணத்தில் இருப்பவனும்
சத்யவாஸம் -பேசியத்தைப் பழுது ஆக்காதவனும்
சமய நியதயா -காலம் தவறாத -காலத்துக்கு ஒத்ததான
சாது வ்ருத்த்யா -நல்ல ஒழுக்கத்தோடே -மதக் கொள்கைக்கு ஏற்ற நல்ல நடத்தை யுடையவனும்
ஸமேதம்-கூடியவனும்
டம்பா ஸூ யாதி முக்தம் -டம்பம் அஸூயை போன்ற கெட்ட குணங்கள் இல்லாதவனும்-ஆதி -பிற ஆத்ம கெட்ட குணங்கள் இல்லாதவனும்
ஜித விஷயி கணம் -ஸப் தாதி விஷயங்களில் செல்லும் இயல்புடைய ஐம் புலன்களையும் தனது வசமாக்கிக் கொண்டவனும்
தீர்க்க பந்தும் -மிகப் பெரிய பந்துவாகவும்
தயாளும்-வருந்துவர் இடம் இரக்கம் கொண்டவனும்
ஸ்காலித்யே சாஸிதாரம் -தவறு நேர்ந்தால் கண்டிப்பவனும்
ஸ்வ பர ஹித பரம் -தனக்கும் பிறருக்கும் நன்மையைத் தேடுபவனும்
ஆகிய இந்த 14 குணங்கள் வாய்ந்தவரை
பூஷ்ணுர் –நல்ல நிலையில் இறுக்கப் போகும் சிஷ்யன்
தேசிகம் –ஆச்சார்யனாக
ஈப்சேத் –பெற விரும்ப வேணும்

ஆச்சார்ய லக்ஷணங்கள் -14-அருளிச் செய்கிறார் இதில் –
ஆஸீ நோதி சாஸ்த்ரார்த்தம் -ஸூ யம் ஆச்ரயதே ஆச்சாரயத் -மூன்றும் -ஞானம் ஞானம் அனுஷ்டானம் வாக் சாதுர்யத்தால் சிஷயரை அப்படியே ஆக்கி –
சேர்ப்பார்களை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு என்னும் -கடகர்கள்-
கு ரு –கு -இருட்டை தொலைக்கும் – அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரந்த சம்பந்தம் காட்டி -தடை காட்டி
உம்பர் தெய்வம் என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி காட்டும்-
சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரத்தை நேராக உபதேசிப்பவரே ஆச்சார்யர் –

1–சித்தம் சத் ஸம்ப்ரதாயே–சத் சம்பிரதாய தத்வ த்ரய அர்த்த பஞ்சக -ஞானம் பெற்று
2–ஸ்திரதியம் -அசைக்க முடியாத –புற சமயிகளால் —
3–அநகம் -குற்றம் இல்லாத -க்யாதி லாப பூஜைக்காக இல்லாமல் தம் பேறாக –
ஏற்ற காலங்கள் எதிர் பொங்க மீது அளிக்கும் –பாலை சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் -ஆற்றப் படைத்தான் –
கூரத் தாழ்வான போல்வார் இந்த பசுக்களை -கொண்ட நம் ராமானுஜர் – மகன் -யதிராஜ சம்பத்குமாரார் -செல்ல -செல்வப் பிள்ளை /
தாய்க்கும் தம்பிக்கும் மகனுக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் உண்டே இந்த லக்ஷணங்கள் –
4–ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்–இது ஒன்றே நிஷ்டை
5–சத்வஸ்தம் –சத்வ குணத்திலே நிலை நின்று
6–சத்யவாஸம்-உண்மையே பேசி -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -பின்னோர்ந்து –தன நெஞ்சில் தோற்றியதை சொல்லி
இது பூர்வர் சொன்னார் என்று உலகை மயக்குவார்கள் பலர் –
ஆச்சார்யர் சிஷ்யனை தன் ஆச்சார்யனுக்கு சிஷ்யன் -என்ற நினைவால் –
ஆச்சார்யர் திருவடிகளே சரணம் சொல்லி -வெள்ளத்தில் தப்பி -ஆச்சார்யர் தன் திருவடிகளே சரணம் என்று ஆழ்ந்த கதை –
7– சமய நியதயா –அனுஷ்டானம் விடாமல்
8—சாது வ்ருத்த்யா ஸமேதம்
9–டம்பா ஸூ யாதி முக்தம் -டாம்பீகம் அ ஸூ யை இத்யாதிகள் இல்லாமல் – சரீரம் அர்த்தம் பிராணன் அனைத்தையும் சிஷ்யன் சமர்ப்பித்து
சிஷ்யன் ஆச்சார்யர் தேக ரக்ஷணம் -சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்யர் கடமை /சிஷ்யன் ஆசார்யன் சொத்தை வைத்து தன் தேக ரக்ஷணம்
வாங்கிக் கொள்ள கூடாது -கொடுக்க கூடாது -நினைவுடன் கொடுக்காமல் அவர் சொத்தை திரும்பி கொடுக்கிறோம் -தன்னது என்று அபிமானிக்க கூடாதே
கொள்ளில் மிடியனாம் -கொடுக்கில் கள்ளனாம் –
10–ஜித விஷயி கணம்
11 —தீர்க்க பந்தும்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
12–தயாளும் –கிருபை பொழிந்து- கட்டாயம் தரையில் பாட்டம் மழை பொழிந்தால் போலே பகவத் விஷயம் உபதேசித்து -சஜாதீயர் –
அனுஷ்ட்டித்தும் உபதேசித்தும் காட்டி அருளுவார் -மோக்ஷ பந்த இரண்டும் பகவான் ஹேது -ஆச்சார்யர் மோக்ஷ ஏக ஹேது –
13–ஸ்காலித்யே சாஸிதாரம்–சம்சாரத்தில் திருத்தி பணி கொண்டு
14—ஸ்வ பர ஹித பரம்
தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –மார்க்கம் திசைதி தேசிகம் -கை காட்டும்

14-லக்ஷணங்கள்
ஆச்சார்ய சம்பந்தம் இருப்பில் ஆத்ம குணங்கள் வந்து சேரும் பகவத் சம்பந்தமும் வரும் –
ஆச்சார்யர் பிரியம் சிஷ்யன் செய்ய வேண்டும் –  சிஷ்யன் ஹிதம் ஆச்சார்யர் பார்க்க வேண்டும் – ஈஸ்வரனை கொண்டு ஆசார்யன் நடத்த கடவன்
பெருமாள் நடுவில் இருந்து ஆச்சார்யருக்கு ஹிதமும் சிஷ்யனுக்கு பிரியமும் -நடத்தி அருளுவான் —

ஸத் சம்பிரதாயத்தில் ஸித்தம் -ஸத் சம்பிரதாயத்தில் ஸ்திர தியம் -திட அத்யவசாயம்

அநகம்–
அகம் என்பது பாவம் துக்கம் வியசனம் -ஆபத்து -அஜாக்கிரதை –காம க்ரோதங்களால் வரும் வியசனம்
இவை அனைத்தையும் விலக்கியவன் அநகம் உள்ளவன்

ப்ரஹ்ம நிஷ்டை -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று இருக்கும் நிலை

ஸத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் -ஸத்யமும் பிரியமும் கலந்த பேச்சு

தர்மஞ்ஞய ஸமயே ப்ரமாணம் –ஆச்சார்யர் அனுஷ்டானத்தையே தழுவி இருத்தலே ஸமய நியதம்

தீர்க்க பந்து -உலகு எல்லாமே உருவாகக் கொண்டவன்
ஸர்வஸ் தரது துர்காணி ஸர்வோ பத்ராணி பஸ்யது-ஸ்ரீ வியாஸர் -அனைவர் துக்கங்களையும் போக்கி ஸர்வ ஸூஹ்ருத்தாக இருக்க வேண்டும்

பயன் அன்றாகிலும் பாங்கு அல்லராகிலும் திருத்திப் பணி கொள்ள வேண்டுமே)

உத்பாதக ப்ரஹ்ம பித்ரோர் கரீயாந் ப்ரஹ்மத: பிதா |
ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜந்ம |
ஶரீரமேவ மாதா பிதரௌ ஜநயத: |
தேஹ க்ருந் மந்த்ர க்ருந் ந ஸ்யாத் மந்த்ர ஸம்ஸ்கார க்ருத் பர: |
தௌ சேந் ந ஆத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வ ஆத்மவித் ஆத்ம க்ருத் ||

நாசார்ய: குல ஜாதோபி ஜ்ஞாந பக்த்யாதி வர்ஜித: |
ந வயோ ஜாதி ஹீநஶ்ச ப்ரக்ருஷ்டாநாம் அநாபதி ||

கிமப் யத்ராபி ஜாயந்தே யோகி ந: ஸர்வ யோநிஷு |
ப்ரத்யக்ஷித ஆத்மநாதாநாம் ந ஏஷாம் சிந்த்யம் குலாதிகம் ||

பிந்ந நாவாஶ்ரிதோ ஜந்துர் யதா பாரம் ந கச்சதி |
அந்தஶ்ச அந்த கராலம்பாத் கூபாந்தே பதிதோ யதா ||

ஜ்ஞாந ஹீநம் குரும் ப்ராப்ய குதோ மோக்ஷமவாப்நுயாத் |
ஆசார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணு பக்தோ விமத்ஸர: |
மந்த்ரஜ்ஞோ மந்த்ர பக்தஶ்ச ஸதா மந்த்ராஶ்ரயஶ் ஶுசி: ||

ஸத் ஸம்ப்ரதாய ஸம் யுக்தோ ப்ரஹ்ம வித்யா விஶாரத: |
அநந்ய ஸாதநஶ்சைவ ததா அநந்ய ப்ரயோஜந : ||

ப்ராஹ்மணோ வீத ராகஶ்ச க்ரோத லோப விவர்ஜித: |
ஸத் வ்ருத்தஶ் ஶாஸிதா சைவ முமுக்ஷு : பரமார்த்த வித்||

ஏவமாதி குணோபேத ஆசார்யஸ்ஸ உதாஹ்ருத: |
ஆசார்யோபி ததா ஶிஷ்யம் ஸ்நிக்தோ ஹித பரஸ் ஸதா ||

ப்ரபோத்ய போதநீயாநி வ்ருத்தம் ஆசாரயேத் ஸ்வயம் |
உத்தாரயதி ஸம்ஸாராத் ததுபாய ப்லவேந து ||

குரு மூர்த்தி ஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம: |
த்ரி ரூபோ ஹிதமாசஷ்டே மநுஷ்யாணாம் கலௌ ஹரி: ||குருஶ்ச ஸ்வப்ந த்ருஷ்டஶ்ச பூஜாந்தே ச அர்ச்சகாநநாத் |(தேவப் பெருமாள் ராமானுஜருக்கு ஸ்வப்ன முகமாக யஜ்ஞ மூர்த்தி வாதத்தில்)

ஈஶ்வரஸ்ய வஶஸ் ஸர்வம்– மந்த்ரஸ்ய வஶ ஈஶ்வர: | மந்த்ரோ குரு வஶே நித்யம் -குருரேவே ஈஶ்வரஸ்திதி: ||

ஏஷவை பகவாந் ஸாக்ஷாத் ப்ரதாந புருஷேஶ்வர: ||யோகீஶ்வரைர் விம்ருக்ய அங்க்ரிர் லோகோயம் மந்யதே நரம் ||

(சாஷாத் பகவானே ஆச்சார்யர் -யோகிகளும் தேடும் திருவடி ஸ்தானீயர் ஆச்சார்யர் –
பகவானே இவர் என்று அறியாமல் மனுஷ்ய ரூபம் என்று இகழ்ந்து இழந்தே போகிறார்கள்)

நாராயணாஶ்ரயோ ஜீவஸ் ஸோயம் அஷ்டாக்ஷராஶ்ரய: |
அஷ்டாக்ஷரஸ் ஸதாசார்யே ஸ்திதஸ் தஸ்மாத் குரும் பஜேத் ||

தயா தம ஶமோபேதம் த்ருட பக்தி க்ரியா பரம் |
ஸத்ய வாக் ஶீல ஸம்பந்நமேவ கர்ம ஸு கௌஶலம் ||ஜிதேந்த்ரியம் ஸு ஸந்துஷ்டம் கருணா பூர்ண மாநஸம் |
குர்யால் லக்ஷண ஸம்பந்நம் ஆர்ஜவம் சாரு ஹாஸிநம் |
ஏவங்குணைஶ்ச ஸம் யுக்தம் குருமா வித்யாத் து வைஷ்ணவம் |

ஸஹஸ்ர ஶாகாத் யாயீ ச ஸர்வ யத்நேஷூ தீக்ஷித: |
குலே மஹதி ஜாதோபி ந குருஸ்ஸ்யாத் அவைஷ்ணவ: |
அஜ்ஞாந திமிர அந்தஸ்ய ஜ்ஞாந அஞ்ஜந ஶலாகயா |
சக்ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீகுருவே நம: ||

மந்தர: ப்ரக்ருதி ரித்யுக்தோஹ் யர்த்த: ப்ராண இதி ஸ்ம்ருத: |
தஸ்மாந் மந்த்ர ப்ரத ஆசார்யாத் கரீயாந் அர்த்ததோ குரு: ||

(மந்த்ரம் சரீரம் போல்
அவற்றின் அர்த்தங்கள் பிராணன் போல்)

குஶப்த ஸ்த்வந்தகாரஸ் ஸ்யாத் ருஶப்தஸ் தந் நிரோத க: || அந்தகார நிரோதி த்வாத் குருரித் யபி தீயதே ||

ஶிஷ்யம் அஜ்ஞாந ஸம்யுக்தம் ந ஶிக்ஷயதி சேத் குரு: || ஶிஷ்ய அஜ்ஞாந க்ருதம் பாபம் குரோர் பவதி நிஶ்சய: ||

லோபாத்வா யதி வா மோஹாச் சிஷ்யம் ஶாஸ்திநயோ குரு: |
தஸ்மாத் ஸம் ஶ்ருணுதே யஶ்ச ப்ரஸ் யுதௌதாத் உபாவபி ||

ஆஶிநோதி ஹி ஶாஸ்த்ரார்த்தாந் ஆசாரே ஸ்தாபயத்யபி |
ஸ்வயம் ஆசரதே யஸ்து ஆசார்யஸ்ஸோபி தீயதே ||

ரவி ஸந்நிதி மாத்ரேண ஸுர்ய காந்தோ விராஜதே|| குரு ஸந்நிதி மாத்ரேண ஶிஷ்ய ஜ்ஞாநம் ப்ரகாஶேதே ||

யதாஹி வஹ்நி ஸம்பர்க்காந் மலம் த்யஜதி காஞ்சநம் | ததைவ குரு ஸம்பர்க்காத் பாபம் த்யஜதி மாணவ: ||

ஸ்நேஹேந க்ருபயா வாபி மந்த்ரீ மந்த்ரம் ப்ரயச்சதி |
குருர் ஜ்ஞேயஶ்ச ஸம் பூஜ்யோ தாந மாநாதி அபிஸ் ஸதா ||

அநந்ய ஶரணாநாஞ்ச ததா வாந்ந்ய ஸேவிநாம் |
அநந்ய ஸாதநாநாஞ்ச வக்தவ்யம் மந்த்ர முத்தம்ம் ||

ஸம்வத்ஸரம் ததார்த்தம் வா மாஸ த்ரயமதாபி வா |
பரீக்ஷ்ய விவிதோபாயை: க்ருபயா நிஸ் ஸ்ப்ருஹோவதேத் ||

நாதீக்‌ஷிதாய வக்தவ்யம் நாபக்தாய ந மாநிநே |
நாஸ்திகாய க்ருதக் நாய ந ஶ்ரத் தாவிமுகாய ச ||

தேஶகாலாதி நியமம் அரிமித்ராதி ஶோதநம் |
ந்யாஸமுத்ராதி கம் தஸ்ய புரஶ்சரணகம் ந து ||

தேச காலாதி நியமமும் -வேண்டியவன் வேண்டாதவன் என்ற ஆராயவும் -சோதனமும் —ஞாச முத்ரா பிரகாரமும் -தஸ்ய புரஸ் கரனுக்கு -சரணாகதனுக்கு இவை  வேண்டாம்
விஷய நியமம் மட்டுமே உண்டு -வகுத்த ஸ்வாமியிடம் சரணாகதி பண்ண வேண்டும்

ந ஸ்வர: ப்ரணவோங்காநி நாப்யந்யவித யஸ்ததா |
ஸ்த்ரீணாஞ்ச ஶுத்ரஜாதீநாம் மந்த்ர மாத்ரோக்தி ரிஷ்யதே ||

ருஷ்யாதிஞ்ச கர ந்யாஸம் அங்க ந்யாஸஞ்ச வர்ஜயேத் |
ஸ்த்ரீ ஶூத்ராஶ் ச விநீதாஶ்சேந் மந்த்ரம் ப்ரணவ வர்ஜிதம் ||

ந தேஶ காலௌ நாவஸ்தாம் பாத்ர ஶுத்திஞ்ச நை[நே] ச்சதி |
த்வயோபதேஶ கர்த்தாது ஶிஷ்ய தோஷம் ந பஶ்யதி ||

துராசோரோபி ஸர்வாஸீ க்ருதக்நோ நாஸ்திக: புரா |
ஸமாஶ்ரயே தாதி தேவம் ஶ்ரத்தயா ஶரணம் யதி |
நிர் தோஷம் வித்திதம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந: ||

மந்த்ர ரத்நம் த்வயம் ந்யாஸம் ப்ரபத்திஶ் ஶரணாகதி: |
லஷ்மீ நாராயணஞ்சேதி ஹிதம் ஸர்வ பல ப்ரதம் |
நாமாநி மந்த்ர ரத்நஸ்ய பர்யாயேண நிபோதத || தஸ்யோச்சாரண மாத்ரேண பரிதுஷ்டோஸ்மி நித்யஶ: ||

ப்ராஹ்மணா: க்ஷத்ரியா வைஶ்யாஸ் ஸ்த்ரியஶ் ஶூத்ராஸ் ததே தரா: |
தஸ்ய அதிகாரிணஸ் ஸர்வே மம பக்தோப வேத்யதி ||

யஸ்து மந்த்ர த்வயம் ஸம்யக்  அத்யாபயதி வைஷ்ணவாந் |
ஆசார்யஸ்ஸ து விஜ்ஞேயோ பவ பந்த விமோசக: ||

ந்ருதேஹம் ஆத்யம் ப்ரதி லப்ய துர் லபம்
ப்லவம் ஸுகல்யம் குரு கர்ண தாரகம் |
மயா அநுகூலேந நபஸ்வ தேரிதம்
புமாந் பவாப்திம் ஸதரேத் ந ஆத்மஹா ||

(என்னுடைய அனுகூலத்தாலே ஆச்சார்யன் மூலம் பிறவிக் கடலைக் கடக்கிறான்
காற்று மூலம் கர்ண தாரகம்-படகோட்டி ஆற்றைக் கடக்க உதவுவது போல்)

ஆசார்யம் மாம் விஜாநீயாந் ந அவமந்யேத கர்ஹிசித் |
ந மர்த்ய புத்த்யா த்ரஶ்யேத ஸர்வ தேவ மயோ குரு: ||

————

அத ஶிஷ்ய லக்ஷணம்: –

மாநுஷ்யம் ப்ராப்ய லோகேஸ்மிந் ந மூகோ பதிரோபி வா |
ந அபக்ரமாதி ஸம்ஸாராத் ஸகலு ப்ரஹ்மஹா பவேத் ||

ஸதாசார்யோபஸத்த்யா ச ஸ அபிலாஷஸ் ததாத்மக: |
தத்வ ஜ்ஞாந நிதிம் ஸத்த்வ நிஷ்டம் ஸத் குண ஸாகரம் |

ஸதாம் கதிம் காருணிகம் தமாசார்யம் யதா விதி |
ப்ரணி பாத நமஸ்கார ப்ரிய வாக்பிஶ்ச தோஷயந் |
தத் ப்ரஸாத வஶேநைவ ததங்கீகார லாபவாந் |
ததுக்த தத்வ யாதாத்ம்ய ஜ்ஞாந அம்ருத ஸுஸம்ப்ருத: ||அர்த்தம் ரஹஸ்ய த்ரிதய கோசரம் லப்த வாநஹம் ||

பரீக்ஷ்ய லோகாந் கர்ம சிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் நாஸ்த் யக்ருத:
க்ருதேந தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணிஶ்
ஶ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் தஸ்மை ஸ வித்வாந் உபஸந்நாய ஸம்யக் ப்ரஶாந்த சித்தாய
ஶமாந்விதாய யேந அக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் ததத்வதோ ப்ரஹ்ம வித்யாம் ||

குரும் ப்ரகாஶயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் |
அப்ரகாஶ ப்ரகாஶாப்யாம் க்ஷீயேதே ஸம்பதாயுஷீ ||

ஆசார்யஸ்ய ப்ரஸாதேந மம ஸர்வ மபீப்ஸிதம் |
ப்ராப்நுயாமீதி விஶ்வஸோ யஸ்ய அஸ்தி ஸ ஸுகீ பவேத் ||

ஆத்மநோஹ் யதி நீசஸ்ய யோகி த்யேய பதார்ஹதாம் |
க்ருபயை வோப கர்த்தாரம் ஆசார்யம் ஸம்ஸ்மரேத் ஸதா ||

ந சக்ராத் யங்கநம் நேஜ்யா ந ஜ்ஞாநம் ந விராகதா |
ந மந்த்ர: பாரமை காந்த்யம் தைர் யுக்தோ குரு வஶ்யத: ||

நித்யம் குருமுபாஸீத தத் வச: ஶ்ரவணோத் ஸுக: |
விக்ரஹ ஆலோகந பரஸ் தஸ்யைவ ஆஜ்ஞா ப்ரதீக்ஷக: ||

ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணி பத்யோ பயுஜ்ய ச |
நித்யம் விதி வித் அர்க்யாத்யாத்யை ராத்ருதோப் யர்ச்சயேத்  குரும் ||

ஶ்ருதி: – ஆசார்யவாந் புருஷோ வேத | தேவமிவாசார்ய முபாஸீத |

ஆசார்யாதீநோ பவ | ஆசார்யாதீநஸ் திஷ்டேத் | ஆசார்ய தேவோ பவ |
யதா பகவத் யேவம் வக்த்ரி வ்ருத்தி: | குரு தர்ஶநே சோத்திஷ்டேத் | கச்சந்த மநுவ்ரஜேத் |

ஶரீரம் வஸு விஜ்ஞாநம் வாஸ: கர்ம குணாநஸூந் |
குர்வர்த்தம் தாரயேத் யஸ்து ஸஶிஷ்யோ நேதரஸ் ஸ்ம்ருத: ||

தீர்க்க தண்ட  நமஸ்காரம் ப்ரத்யுத்தாநம் அநத்ரம் |
ஶரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் ||

குர்வர்த்தஸ் யாத்மந: பும்ஸ: க்ருதஜ்ஞஸ்ய மஹாத்மந: |
ஸுப்ரஸந்நஸ் ஸதா விஷ்ணுர் ஹ்ருதி தஸ்ய விராஜதே ||

மந்த்ரே தீர்த்தேத் விஜே தேவே தைவஜ்ஞே பேஷஜே குரௌ |
யாத்ருஶீ பாவநா யத்ர ஸித்திர் பவதி தாத்ருஶீ ||

யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ |
தஸ்யைதே கதிதா ஹ்யர்த்தா: ப்ரகாஶ்யந்தே மஹாத்மந: |

தர்ஶந ஸ்பர்ஶ வசநைஸ் ஸஞ்சாரேண ச ஸத்தமா: |
பூதம் விதாய புவநம் மாமேஷ்யந்தி குரு ப்ரியா: ||

தேஹ க்ருந் மந்த்ர க்ருந் ந ஸ்யாந் மந்த்ர ஸம்ஸ்கார க்ருத் பர: |
தௌசேந் ந ஆத்ம விதௌ ஸ்யாதாம் அந்யஸ்த் வாத்மவித்  ஆத்ம க்ருத் ||

அவைஷ்ணவோபதிஷ்டம் ஸ்யாத் பூர்வம் மந்த்ர வரம் த்வயம் |
புநஶ்ச விதி நா ஸம்யக் வைஷ்ணவாத் க்ராஹயேத் குரோ: ||

அத ஸ்த்ரீ ஶூத்ர ஸங்கீர்ண நிர் மூல பதிதாதி ஷு |
அநந்யேந அந்ய த்ருஷ்டௌ ச க்ருதாபி ந க்ருதா பவேத் ||

அதோந்யத்ராநுவிதி வத் கர்த்தவ்யா ஶரணாகதி: |
தண்டவத் ப்ரணமேத் பூமா வுபேத்ய குரு மந்வஹம் |
திஶே வாபி நமஸ் குர்யாத் யத்ராஸௌ வஸதி ஸ்வயம் ||

ஆசார்யா யாஹரதேர்த்தாந் ஆத்மாநஞ்ச நிவேத யேத் |
தத்தீநஶ்ச வர்த்தேத ஸாக்ஷாந் நாரயணோ ஹி ஸ: ||

ஸத் புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத்த்வ போத அபிலாக்‌ஷீ
ஶுஶ்ரூஷுஸ் த்யக்தமாந: ப்ரணி பதந பர: ப்ரஶ்ந கலா ப்ரதீக்ஷ: |

ஶாந்தோ தாந்தோ அநஸுயுஶ் ஶரண முபகதஶ் ஶாஸ்த்ர விஶ்வாஸ ஶாலீ
ஶிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாங்க்ருதவித் அபிமதம் தத்த்வத: ஶிக்ஷணீய: ||

யஸ்த்வாசார்ய பராதீநஸ் ஸத் வ்ருத்தௌ ஶாஸ்யதே யதி |
ஶாஸேநே ஸ்திர வ்ருத்திஸ் ஸஶிஷ்யஸ் ஸத் பிருதாஹ்ருத: ||

ஶிஷ்யோ குரு ஸமீபஸ்தோ யத வாக் காய மாநஸ: |
ஶுஶ்ரூஷயா குரோஸ் துஷ்டிம் குர்யாந் நிர்தூத மத்ஸர: ||

ஆஸ்திகோ தர்ம ஶீலஶ்ச ஶீலவாந் வைஷ்ணவஶ் ஶுசி: |
கம்பீரஶ் சதுரோ தீர: ஶிஷ்ய இத்யபி தீயதே ||

ஆஸநம் ஶயநம் யாநம் ததீயம் யச்ச கல்பிதம் |
குரூணாஞ்ச பதா க்ரம்ய நரோ யஸ்த்வத மாம் கதிம் ||

கோஶ்வோஷ்டர யாந ப்ரஸாத ப்ரஸ்தரேஷு கடேஷு ச |
நாஸீத குருணா ஸார்த்தம் ஶிலாப லகநௌஷு ச ||

யஸ்திஷ்டதி குரூணாஞ்ச ஸம க்ஷமக்ருநாஞ்ஜலி: |
ஸம த்ருஷ்ட்யாத தாஜ்ஞாநாத் ஸ ஸத்யோ நிரயம் வ்ரஜேத் ||

ஆஸநம் ஶயநம் யாநம் அபஹாஸஞ்ச ஶௌநக |
அதி ப்ரலாபம் கர்வஞ்ச வர்ஜயேத் குரு ஸந்நிதௌ ||

யத்ருச்சயா ஶ்ருதோ மந்த்ரஶ் சந்நேந அதச் சலேந வா |
பத்ரேக்‌ஷிதோ வா வ்யர்த்தஸ் ஸ்யாத் தம் ஜபேத் யத் யநர்த்த க்ருத்||

மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரௌ |
த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸாது ஹி ப்ரதம ஸாதநம் ||

அதமோ தேவதா பக்தோ மந்த்ர பக்தஸ்து மத்யம: |
உத்தமஸ்து ஸ மே பக்தோ குரு பக்தோத்த மோத்தம: ||

ஶ்ருதி: –

ஆசார்யாந்மா ப்ரமத: | ஆசார்யாய ப்ரியம் தநமாஹ்ருத்ய |
குரோர் குரு தரம் நாஸ்தி குரோர் யந்ந பாவயேத் |
குரோர் வார்த்தாஶ்ச கதயேத் குரோர் நாம ஸதா ஜபேத் |

{குரு பதாம் புஜம் த்யாயேத் குரோர் நாம ஸதா ஜபேத் |
குரோர் வார்த்தாஶ்ச கதயேத் குரோர்ந் யந்ந பாவயேத் – பாட பேதம் }

அர்ச்சநீயஶ்ச வந்த்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ் ஜபேந் நமேத் பக்த்யா பஜே தப் யர்ச்சயேந் முதா ||

உபாய உபேய பாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வ ஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ||

ஏவம் த்வய உபதேஷ்டாரம் பாவயேத் புத்திமாந் தியா |
இச்சா ப்ரக்ருத் யநுகுணைர்  உபசாரைஸ் ததோசிதை: ||

பஜந் நவஹிதஶ் சாஸ்ய ஹிதம் ஆவேதயே த்ரஹ: |
குர்வீத பரமாம் பக்திம் குரௌ தத் ப்ரிய வத்ஸல: ||

தத் நிஷ்டா வஸாதீ தந் நாம குண ஹர்ஷித: |
ஶாந்தோ நஸுயு: ஶ்ரத் தாவாந் குர்வர்த்தாத் யாத்ம வ்ருத்திக: ||

ஶுசி: ப்ரிய ஹிதோ தாந்த: ஶிஷ்யஸ்ஸ உபரதஸ் ஸுதீ: |
ந வைராக்யாத் பரோ லாபோ ந போதாத பரம் ஸுகம் |
ந குரோர பரஸ் த்ராதா ந ஸம்ஸாராத் பரோ ரிபு: ||

————

அந்திமோபாய நிஷ்டை – 2 – ஆசார்ய வைபவம்
மதுரகவி ஆழ்வார் மற்றும்
பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம்

இன்னமும் ஆசார்ய வைபவம் –
ஸதாசார்ய ஸமாஸ்ரயணத்துக்கு முன்புள்ள அநாதி காலமெல்லாம் ஒரு காலராத்ரி,
அன்று தொடங்கி இவனுக்கு நல் விடிவு. ஆனபடி எங்ஙனே என்னில் –
“புண்யாம் போஜவிகாஸாய பாபத்வாந்தக்ஷயாய ச | ஶ்ரீமாநாவிரத்பூமௌ ராமானுஜ திவாகர:” என்றும்,
“ஆதித்ய – ராம – திவாகர – அச்யுத பாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி,
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுல பூஷணபாஸ்கரோதயத்திலே” என்றும்,
விடியா வெந் நரகான ஸம்ஸாரமாகிற கால ராத்ரிக்கு ஆசார்யன் தோற்றரவை ஸூர்யோதயமாகச் சொல்லுவார்கள்.

“பார்வை செடியார் வினைத் தொகைக்குத் தீ” என்றும்,
“ந ஹ்யம்மயாநி தீர்த்தாநி ந தேவாம்ருச்சி லாமயா: |
தே புநந்த்யுருகாலேந தர்ஶநாதே வ ஸாதவ: “ என்றும்,
“யாந் பஶ்யந்தி மஹாபாகா: க்ருபயா பாதகாநபி |
தே விஶுத்தா: ப்ராயஸ்யந்தி ஶாஶ்வதம் பத மவ்யயம்” என்றும் சொல்லுகிறபடியே

ஆசார்ய கடாக்ஷமானது ஸ்வ விஷயமானவர்களுக்கு வேறொரு ஸாதநாநுஷ்டாநம் பண்ண வேண்டாதபடி
தானே தூறு மண்டிக் கிடக்கிற அவர்களுடைய கர்மத்தை நிஶ் ஶேஷமாகச் சுட்டுப் பொகடுகையாலை
அவர்கள் முன்பு மஹா பாபிகளே யாகிலும் அந்த க்ஷணத்திலே மிகவும் பரிசுத்தராய்
அவ்வளவன்றிக்கே பின்பு ஸுஸ்திரமான பரம பதத்தையும் சென்றடையப் பெறுவார்கள்.

“நாராயணன் திருமால் நாரம் நாமென்னுமுறவு ஆராயில் நெஞ்சே அனாதி யன்றோ
சீராருமாசாரியனாலே யன்றோ நாமுய்ந்ததென்று கூசாமலெப்பொழுதும் கூறு”,

(அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி -உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ வாசாரியன்–1-)

“உண்ட போதொரு வார்த்தையும் உண்ணாத போதொரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேருண்டிறே,
அவர்கள் பாசுரங்கொண்டன்று இவ்வர்த்தம் அறுதி யிடுவது, அவர்களைச் சிரித்திருப்பார் ஓருவருண்டிறே,
அவர் பாசுரங்கொண்டே இவ்வர்த்தம் அறுதி யிடக் கடவோம்”.

பரமாசார்யரான நம்மாழ்வார் “அப்பொழுதைக் கப்பொழுதென் னாராவமுதம்” என்றார்.
ஶ்ரீமதுர கவிகள் “தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூருமென்னாவுக்கே” என்றார்.

அவர் “மலக்கு நாவுடையேன்” என்றார். இவர் “நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றார்.

அவர் “அடிக் கீழமர்ந்து புகுந்தேன்” என்றார். இவர் “மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே” என்றார்.

அவர் “கண்ணனல்லால் தெய்வமில்லை” என்றார். இவர் “தேவு மற்றறியேன்” என்றார்.

அவர் “பாடி யிளைப்பிலம்” என்றார். இவர் “பாடித் திரிவனே” என்றார்.

அவர் “இங்கே திரிந்தேற்கிழுக்குற்றென்” என்றார்.
இவர் “திரி தந்தாகிலும் தேவ பிரானுடைக் கரிய கோலத் திரு வுருக் காண்பன்” என்றார்.

அவர் “உரிய தொண்டன்” என்றார். இவர் “நம்பிக்காளுரியன்” என்றார்.

அவர் “தாயாய்த் தந்தையாய்” என்றார். இவர். “அன்னையாய் அத்தனாய்” என்றார்.

அவர் “ஆள்கின்றனாழியான்” என்றார். இவர் “என்னை யாண்டிடும் தன்மையான்” என்றார்.

அவர் “கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்” என்றார். இவர் “சடகோபன்” என்றார்.

“யானே என்றனதே என்றிருந்தேன்” என்றார்.
இவர் “நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்” என்றார்.

அவர். “எமரேழுபிறப்பும் மா சதிரிது பெற்று” என்றார். இவர் “இன்று தொட்டுமெழுமையுமெம்பிரான்” என்றார்.

அவர் “என்னால் தன்னை இன் தமிழ் பாடிய வீசன்” என்றார். இவர் “நின்று தன் புகழேத்த அருளினான்” என்றார்.

அவர் “ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே” என்றார். இவர் “என்றுமென்னை இகழ்விலன் காண்மினே” என்றார்.

அவர் “மயர்வற மதிநலமருளினன்” என்றார். இவர் “எண்டிசையுமறிய வியம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபனருளையே” என்றார்.

அவர் “அருளுடையவன்” என்றார். இவர் “அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்றார்.

அவர் “பேரேனென்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்” என்றார். இவர் “நிற்கப் பாடி என்னெஞ்சுள் நிறுத்தினான்” என்றார்.

அவர் “வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்றார். இவர் “ஆட் புக்க காதலடிமைப் பயனன்றே” என்றார்.

அவர் “பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்” என்றார்.
இவர் “பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்” என்றார்.

அவர் “ஆராத காதல்” என்றார். இவர் “முயல்கின்றேனுன்தன் மொய்கழற்கன்பையே” என்றார்.

அவர் “கோல மலர்ப்பாவைக்கன்பாகிய என் அன்பேயோ” என்றார். இவர் “தென் குருகூர் நகர் நம்பிக்கன்பனாய்” என்றார்.

அவர் “உலகம் படைத்தான் கவி” என்றார். இவர் “மதுரகவி” என்றார்.

அவர் “உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் ஊரெல்லாம்” என்றார்.
இவர் “நம்புவார் பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக் கட்டி யருளினார்.

அவர் “பீதக வாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து” என்றார்.
இவர் “கோலத் திரு மா மகள்கொழுநன் தானே குருவாகித் தன் அருளால்” என்றும், ***

பிள்ளை லோகாசார்யர்,
“தான் ஹிதோபதேஶம் பண்ணும் போது” என்று தொடங்கி,
“நேரே ஆசார்யனென்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திரு மந்தரத்தை உபதேஶித்தவனை.
ஸம்ஸார வர்த்தகங்களுமாய், க்ஷுத்ரங்களுமான பகவந் மந்த்ரங்களை உபதேஶித்தவர்களுக்கு ஆசார்யத்வ பூர்த்தி யில்லை.

ஆசார்யன் உஜ்ஜீவநத்திலே ஊன்றிப் போரும். ஆசார்யன் ஶிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக் கடவன்.
ஆசார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹாநி.
ஆசார்யன் தன்னுடைய தேஹ ரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன்.
ஆசார்யன் ஶிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவனல்லன். கொள்ளில் மிடியனாம்.
அவன் பூர்ணனாகையாலே கொள்ளான். அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது.

ஈஶ்வரனைப் பற்றுகை கையைப் பிடித்து கார்யங்கொள்ளுமோபாதி,
ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யங்கொள்ளுமோபாதி.
ஈஶ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப் பட்டிருக்கும்.
ஆகையிறே குரு பரம்பரையில் அந்வயித்ததும், ஶ்ரீ கீதையும் -அபய ப்ரதாநமும் அருளிச் செய்ததும்,
ஆசார்யனுக்கு ஸத்ருஶ ப்ரத் யுபகாரம் பண்ணலாவது விபூதி சதுஷ்டயமும் ஈஶ்வர த்வயமும் உண்டாகில்.
ஈஶ்வர ஸம்பந்தம் பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும்.
ஆசார்ய ஸம்பந்தம் மோக்ஷத்துக்கே ஹேதுவாயிருக்கும்.

ஆசார்ய ஸம்பந்தம் குலையாதே கிடந்தால் ஜ்ஞாந பக்தி வைராக்யங்களை உண்டாக்கிக் கொள்ளலாம். என்று தொடங்கி,
“இத்தை யொழிய பகவத் ஸம்பந்தம் துர் லபம். ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநதைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்.

ஆசார்யாபிமாநமே உத்தாரகம்”. “நல்ல வென் தோழி” என்று தொடங்கி,
“ஆசார்யாபிமாநந் தான் ப்ரபத்தி போலே உபயாந்தரங்களுக்கு அங்கமுமாய் ஸ்வதந்த்ரமுமாயிருக்கும்.
பக்தியிலஶக்தனுக்கு ப்ரபத்தி, ப்ரபத்தியிலஶக்தனுக்கு இது.
இது ப்ரதமம் ஸ்வரூபத்தைப் பல்லவிதமாக்கும், பின்பு புஷ்பிதமாக்கும், அநந்தரம் பல பர்யந்தமாக்கும்”.(சூரணை -463-)

(பிரதமத்தில் இச் சேதனனுக்கு
பிரணவ யுக்த அநந்யார்ஹ சேஷத்வத்தை சரம பர்வ பர்யந்தமாக உணர்த்தி –
அநாதி காலம் ஸ்வாதந்த்ர்யாமாகிற அழலிலே மண்டி -சரக்கு இழந்து கிடந்த ஸ்வரூபத்தை துளிர்த்து எழும்படியாய்  இருக்கும் –
இப்படி பல்லவிதமான பின்பு -மத்யம பத யுக்த -அநந்ய சரணத்வத்தை -சரம பர்யந்தமாக உணர்த்தி –
பல ஸூசகமான உபாயத்வ அவஸாய யோகத்தாலே ஸ்வரூபத்தை புஷ்பிதமாம் படி யாக்கும் –
இப்படி புஷ்பிதமான அநந்தரம் –
சரம பத உக்த -அநந்ய போகத்வத்தையும் -சரம பர்யந்தமாக உணர்த்தி –
நித்ய கைங்கர்ய யோகத்தாலே -ஸ்வரூபத்தை பல பர்யந்தமாம் படி யாக்கும் -)

“பொறுக்கிறவனுமாசார்யனன்று, பெறுகிறவனுமாசார்யனன்று, நியமிக்கறவனே ஆசார்யன்” என்று
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்.

விபரீத ஸ்பர்ஶமுடைய ஆசார்யன் முமுக்ஷுவுக்கு த்யாஜ்யன்.
விபரீத ஸ்பர்ஶமுடைய ஆசார்யனாவான் ஸம்ஸாரத்திலே சில மினுக்கங்கள் தோன்றச் சொல்லுமவன்.
ஆசார்யன் ஶிஷ்யனுயிரை நோக்கும்.
ஆசார்யனாவான் ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமாய்த் தன்னைக் கொண்டு முழுகுமவனன்று,
தன்னைக் கரை யேத்த வல்ல ஜ்ஞாநாதி பரிபூர்ணனாய் இருப்பானொருவனே.
ஆசார்யனுடைய ஜ்ஞாநம் வேண்டா, ஶிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்.
கருட த்யாநத்துக்கு விஷம் தீருமாப் போலே ஆசார்யனை த்யாநித்திருக்கவே
ஸம்ஸாரமாகிற விஷம் தீர்த்துக் கொள்ளலாம் என்று அருளிச் செய்வர்கள்.

ஆசார்யன், இவன், அஜ்ஞாநத்தைப் போக்கி ஜ்ஞாநத்தை உண்டாக்கிக் கொடுக்கும் பெரிய மதிப்பனாய்,
அர்த்த காமோபஹதனன்றிக்கே (தர்மம் மோக்ஷம் இவற்றையே பற்றிக் கொண்டு)லோக பரிக்ரஹ முடையனாயிருப்பானொருவன் (ஆசார்யனாவான்).

————

அந்திமோபாய நிஷ்டை – 3 –
சிஷ்ய லக்ஷணம்
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்,
திருவரங்கத்து அமுதனார்,
பிள்ளை லோகாசார்யர்
மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்

இன்னமும் ஶிஷ்ய லக்ஷணம் :-
“இருள் தரு மா ஞாலத்தே இன்பமுற்று வாழும் தெருள் தரு மா தேசிகனைச் சேர்ந்து”,
“குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்”,
“வேறாக ஏத்தி யிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தியிருப்பார் தவம்”,
“விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே”,
“வேறொன்றும் நானறியேன்”,
“தேவு மற்றறியேன்”,
“ஶத்ருக்நோ நித்ய ஶத்ருக்ந”,
“வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையரென்பர்”,

“இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”,
“இராமானுசன் புகழன்றி என் வாய் கொஞ்சிப் பரவகில்லாது என்ன வாழ்வின்று கூடியதே”,
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப் பேறளித்தற் காறொன்று மில்லை மற்றச் சரணன்றி”,
“நிகரின்றி நின்ற என்னீசதைக்கு நின்னருளின் கணன்றிப் புகலொன்று மில்லை அருட்கு மஃதே புகல்”,
“இராமானுசனை யடைந்த பின் என் வாக்குரையாது என் மனம் நினையாதினி மற்றொன்றையே”,
“இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வமிங்கு யாதென்றுலர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே”,
“கையில் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்”,

“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும் பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல்லோர்” என்று தொடங்கி
“இன்றவன் வந்திருப்பிடம் என்றனிதயத்துள்ளே தனக்கின்புறவே”,
“நந்தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமநுசனடிப் பூ மன்னவே”…

அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

“மாடும் மனையும் கிளையும் மறை முனிவர் தேடுமுயர் வீடும் செந் நெறியும்
பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகை கண்டீர் விதி”,

“வேதமொரு நான்கு” என்று தொடங்கித்
“தீதில் சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகுமென்னுமது”,

வில்லார் மணி கொழிக்கும்” என்று தொடங்கி, “எந் நாளும் மாலுக்கிடம்”,

“தேனார் கமலம்” என்று தொடங்கி, “யார்க்குமவன் தாளிணையை உன்னுவதே சால வுறும்”.

(மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் செம் நெறியும் –பீடுடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டிடுகை கண்டீர் விதி –30-

வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப் பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-

வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-பாட்டுக் கேட்க்கும் இடமும்– எல்லாம் வகுத்த இடமே

பொருளும் உயிரும் உடம்பும் புகலும்
தெருளும் குணமும் செயலும் -அருள் புரிந்த
தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
எந்நாளும் மாலுக்கு இடம் –37-

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந் நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-)

“ஆசார்ய ப்ரேமம் கனத்திருக்கையும்”,
“ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டாப் போலேயும்”,

“இப்படி ஸர்வ ப்ரகராத்தாலும் நாஶ ஹேதுவான அஹங்காரத்துக்கும்
அதினுடைய கார்யமான விஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தானாகையாலே” என்று தொடங்கி,
“இப்படி இவை இத்தனையும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக் கடவன்.

வக்தவ்யம் ஆசார்ய வைபவமும் ஸ்வ நிகர்ஷமும்.
பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசநமும் அநுஷ்டாநமும்.
ஆசார்ய கைங்கர்யமறிவது ஶாஸ்த்ர முகத்தாலும், ஆசார்ய வசநத்தாலும்.

இவனுடைய ஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய குணம்,
அஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய தோஷம்,
ஶக்திக்கிலக்கு ஆசார்ய கைங்கர்யம்
அஶக்திக்கிலக்கு நிஷித்த அநுஷ்டாநம்.

ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும், பல ஸாதந ஶுஶ்ரூஷையும், ஆர்த்தியும்,
ஆதரமும், அநஸூயையும் உடையவனென்கை”.

“மந்த்ரமும், தேவதையும், பலமும், பல அநுபந்திகளும்” – என்று தொடங்கி –
எல்லாம் ஆசார்யனே என்று நினைக்கக் கடவன்.
‘மாதா பிதா யுவதய:’ என்கிற ஶ்லோகத்திலே இவ் வர்த்தத்தை பரமாசார்யர் அருளிச் செய்தார்.

ஶிஷ்யன் தான் ப்ரியத்தை நடத்தக் கடவன். ஶிஷ்யன் (ஆசார்யனுடைய)உகப்பிலே ஊன்றிப் போரும்.
ஆகையால் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கிலக்காகை யொழிய ரோஷத்துக்கிலக்காகைக்கு அவகாஶமில்லை.(சூர்ணிகை-328)
ஶிஷ்யனுக்கு (நிக்ரஹம் உபாதேயம்)நிக்ரஹ காரணம் த்யாஜ்யம். ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹத்தைப் பேணக் கடவன்.

இவனுக்கு ஶரீராவஸாநத்தளவும் ஆசார்ய விஷயத்தில் “என்னைத் தீ மனங்கெடுத்தாய், மருவித் தொழும் மனமே தந்தாய்”
என்று உபகார ஸ்ம்ருதி நடக்கவேணும்.

பாட்டுக் கேட்குமிடமும் – என்று தொடங்கி – எல்லாம், வகுத்த விடமே என்று நினைக்கக் கடவன்.
இஹ லோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்ட அத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை.

ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹ யாத்ரையே தனக்கு ஆத்ம யாத்ரையாக நினைத்திருக்க வேணும்.
ஶிஷ்யன் ஆசார்யனுடைய உடம்பை நோக்கும்,
ஆசார்யனுக்கு என் வஸ்துவை உபகரிக்கிறேனென்றிருக்கும் ஶிஷ்யனுடைய அறிவையும் அழிக்க வடுக்கும்.
ஆசார்யன் பொறைக்கிலக்கான ஶிஷ்யனுக்கு பகவஜ் ஜ்ஞாநம் கைவந்ததென்ன வொண்ணாது.
நியமநத்துக்குப் பாத்ரனாக வேணும். ஆசார்யன் பண்ணின உபகாரத்தை நாள்தோறும் அநுஸந்தித்திலனாகில்
இவனுடைய ஜ்ஞாநாம்ஶமடைய மறந்து அஜ்ஞாநமே மேலிடும்.
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்தும் –செய்யப் பெறாத அடிமைக்கு இழவும்- பட்டிருப்பான்.
ஶிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதமே அப்ரஸாதமாகவும், அப்ரஸாதமே ஸுப்ரஸாதமாகவும் வேணும்.

(பெருமாளைக் காட்டுவார் -தன்னையே பற்று என்ன மாட்டார்
அவர் ப்ரஸாதம் பெருமாள்-அப்ரஸாதம் தனது திருவடி)

“சக்ஷுஸா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந | பாத மூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம் ||” என்று
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரியான சக்ரவர்த்தி திருமகனார் தன் கண் முன்னே நிற்க
அவனை விட்டுத் தன்னுடைய ஆசார்யர்களுடைய பாத ஸேவை பண்ணப்போகிறேனென்று போனாளிறே
தான் சதிரியாயிருக்கச் செய்தேயும் எல்லைச் சதுரை யாகையாலே ஶ்ரீஶபரி.

(சதுர் பகவத் அனுக்ரஹம் -கடாக்ஷத்தால் புனிதம் ஆனாள்
எல்லை சதுர் -ஆச்சார்ய அபிமானம்
மா சதிர் பெற்று வாழ்வு இனிதாகும்)

ஞானமநுட்டானமிவை நன்றாகவே யுடையனான குருவை யடைந்தக்கால் – என்று தொடங்கி.
திருமாமகள் கொழுநன் தானே வைகுந்தந்தரும். உய்யநினைவுண்டாகில் – என்று தொடங்கி –
கையிலங்கு நெல்லிக்கனி. தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது – என்று தொடங்கி –
ஆசாரியனைப் பிரிந்திருப்பாரார் மனமே பேசு. ஆசார்யன் சிஷ்யன் – என்று தொடங்கி –
ஆசையுடன் நோக்குமவன். பின்பழகராம் பெருமாள் சீயர் – என்று தொடங்கி –
நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந் நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்.
ராமானுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்நா – என்று தொடங்கி – தஸ்மாத் அநந்ய ஶரணோ பவதீதி மத்வா என்று நம்முடைய ஜீயர்,
தாம் அந்திமோபாய நிஷ்ட அக்ரேஸரர் என்னுமிடத்தை
ஸ்வ ப்ரபந்தங்களான உபதேச ரத்தின மாலையிலும், யதிராஜ விம்ஶதியிலும் நன்றாக ப்ரகாஶிப்பித்தருளித் தாம் பெற்ற பேறுகளை அநுஸந்தித் தருளுகிற தனியனிலும் –

மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம், முன்னவராம் நங்குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம்,
முழுதும் நமக்கவை பொழுது போக்காகப் பெற்றோம், பின்னை யொன்றுதனில் நெஞ்சு பேராமற் பெற்றோம்,
பிறர் மினுக்கம் பொறாமை யில்லாப் பெருமையும் பெற்றோமே – என்று
தம்முடைய நிஷ்டையை மதித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டரானாரிறே

———

அந்திமோபாய நிஷ்டை – 4 –
வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில்
எம்பெருமானாரின் கருணை
மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி

வடுக நம்பி உடையவர் தளிகைக்குப் பாலமுது காய்ச்சா நிற்க, பெரிய திருநாளுக்குப் பெருமாள்
அழகாக உடுத்து முடித்துப் புறப்பட்டருளி மடத்து வாசலிலே எழுந்தருள,
உடையவர் புறப்பட்டு ஸேவித்து, “வடுகா! பெருமாளை ஸேவிக்க வா” என்று அழைத்தருள,
வடுக நம்பி, ‘அடியேன் உம்முடைய பெருமாளை ஸேவிக்க வந்தால்
என்னுடைய பெருமாளுக்குப் பாலமுது பொங்கிப் போங்காணும். ஆகையால் இத்தை விட்டு வரக் கூடாது’ என்று
அருளிச் செய்தார் என்று ப்ரஸித்தமிறே.

“உன்னை யொழிய வொரு தெய்வ மற்றறியா, மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலையை,
என்றனுக்கு நீ தந்தெதிராசா எந் நாளும், உன்றனக்கே ஆட் கொள் உகந்து” என்று
வடுக நம்பி நிலையையும் நம்முடைய ஜீயர் ப்ரார்த்தித் தருளினாரிறே.

(1) ப்ரக்ருதிமானாகில் ஸத் வைத்யன் கண் வட்டத்திலே வர்த்திப்பான்;
ஆத்மவானாகில் ஸதாசார்யன் கண் வட்டத்திலே வர்த்திப்பான் என்றும்

(2) நம்பிள்ளை தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கரான வடக்குத் திருவீதிப் பிள்ளையைப் பார்த்துத்
தம்முடைய தேவிகள் நிமித்தமாக ஒரு கைங்கர்யம் நியமித்தருளி,
பின்பு, ‘க்ருஷ்ண ! நாம் நியமித்த கார்யத்துக்கு என்ன நினைத்திருந்தாய்? ‘ என்று கேட்டருள,
‘அடியேனுமொரு மிதுனம் தஞ்சமென்றன்றோ இருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
அபிமாந நிஷ்டனாகில் இப்படி இருக்க வேணுமென்று நம்பிள்ளை பிள்ளையை உகந்தருளினார் என்றும்

(அறுகால சிறு வண்டே –ஆச்சார்யர் -தர்ம பத்தினி-திருக் குமாரர் இவ்வாறு ஆறு திருவடிகள்)

(3) பிள்ளை லோகாசார்யர் தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராயிருப்பாரொரு ஸாத்த்விகையைப் பார்த்தருளி,
‘புழுங்குகிறது; வீசு’ என்ன, அவளும் ‘பிள்ளை! அப்ராக்ருதமான திருமேனியும் புழங்குமோ’ என்ன,
‘புழங்கு காண், “வேர்த்துப் பசித்து வயிறசைந்து” என்று ஓதினாய்’ என்று அவளுடைய ப்ரதிபத்தி குலையாமல்
அதுக்குத் தகுதியாகத் தம்முடைய க்ருபையாலே பிள்ளை அருளிச் செய்தார் என்றும்

இம் மூன்று வார்த்தையும் பல காலும் நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.
இதில் நடுவில் வார்த்தை (அர்த்த நிஷ்டைகள்)உபதேஶத்தாலே அறிய வேணும்.

(மேலே பல ஐதிக்யங்கள் அருளிச் செய்து ஆச்சார்ய சச் சிஷ்ய லக்ஷணங்களை விளக்கி அருளிச் செய்கிறார்)

(அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
திருநக்ஷத்ரம்: கார்த்திகை, பரணி
ஆந்திர பிரதேசத்தில் உள்ள -ஸுவர்ணமுகி நதிக்கரையிலுள்ள-விஞ்சிமூரில் பிறந்த இவருடைய இயற்பெயர் யஞ்ய மூர்த்தி என்பதாகும்.
சிஷ்யர்கள்: அநந்தாழ்வான், எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்தவை: ஞான சாரம், ப்ரமேய சாரம்

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம்
சதுர்த்தாஸ்ரம ஸம்பந்தம் தேவராஜ முநிம் பஜே-அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் தனியன்

எம்பெருமானாரின் ப்ரிய சிஷ்யர், வேதங்கள், சாஸ்த்ரங்களை உட் பொருள் உணர்ந்து கற்றவர். ஸந்யாச்ரமம் மேற்கொண்டவரான ஸ்ரீதேவராஜ முனிவர் என்னும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை அடியேன் சரண் புகுகிறேன்”

திருவாழுந் தென்னரங்கஞ் சிறக்க வந்தோன் வாழியே
தென்னருளாளர் அன்பால் திருந்தினான் வாழியே
தருவாழும் எதிராசன் தாளடைந்தோன் வாழியே
தமிழ் ஞானப் பிரமேய ஸாரம் தமர்க்குரைப்போன் வாழியே
தெருளாரும் மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே
தேசு பொலி மடந்தன்னைச் சிதைத்திட்டான் வாழியே
அருளாள மா முனியாம் ஆரியன் தாள் வாழியே
அருள் கார்த்திகைப் பரணியோன் அனைத் தூழி வாழியே!!!-வாழித் திருநாமம்:)

உடையவர் காலத்திலே அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்றொருவர்
வித்யையாலும் ஶிஷ்ய ஸம்பத்தாலும் அற மிகுந்தவராய் அநேக ஶாஸ்த்ரங்களை எழுதி க்ரந்தங்களைச் சுமையாகக் கட்டி
எடுப்பித்துக் கொண்டு தம்முடைய வித்யா கர்வமெல்லாம் தோற்றப் பெரிய மதிப்புடன் வந்து
உடையவருடனே பதினேழு நாள் தர்க்கிக்க,
பதினெட்டாம் நாள் அருளாளப் பெருமாளுடைய யுக்தி ப்ரபலமாக
உடையவர் ‘இது இருந்தபடியென்’ என்று எழுந்தருளி யிருக்க,
அவ்வளவில் அருளாளப் பெருமாள் தம்முடைய வெற்றி தோற்ற எழுந்திருந்து அற்றைக்குப் போக,

உடையவரும் மடமே எழுந்தருளித் திருவாராதநம் பண்ணிப் பெருமாளுடனே வெறுத்துப் பெருமாளை
‘இத்தனை காலமும் தேவரீருடைய ஸ்வரூப- ரூப- குண – விபூதிகள் ஸத்யமென்று ப்ரமாணத்தை நடத்திக் கொண்டு போந்தீர்;
இப்போது இவனொரு ம்ருஷாவாதியைக் கொண்டு வந்து என்னுடைய காலத்திலே எல்லா ப்ரமாணங்களையும்
அழித்துப் பொகட்டு லீலை கொண்டாடத் திரு வுள்ளமாகில் அப்படிச் செய்தருளும்’ என்று
அமுது செய்தருளாமல் கண் வளர்ந்தருள,
பெருமாளும் அந்த க்ஷணத்திலே ‘உமக்கு ஸமர்த்தனா யிருப்பானொரு ஶிஷ்யனை உண்டாக்கித் தந்தோம்;
அவனுக்கு இன்ன யுக்தியை நீர் சொல்லும், அவனும் அதுக்குத் தோற்று ஶிஷ்யனாகிறான்’ என்று
உடையவர்க்கு ஸ்வப்நத்திலே அருளிச் செய்தருள,

உடையவரும் திருக் கண்களை விழித்து, ‘இது ஒரு ஸ்வப்நமிருந்தபடி என்’ என்று திருவுள்ளமுகந்து
பெருமாள் ஸ்வப்நத்திலே அருளிச் செய்த யுக்தியைத் தம்முடைய திருவுள்ளத்திலே கொண்டு
“வலி மிக்க சீயமிராமாநுசன் மறை வாதியராம் புலி மிக்கதென்று இப் புவனத்தில் வந்தமை” என்கிறபடியே
மதித்த ஸிம்ஹம் போலே ப்ரஸந்ந கம்பீரராய்க் கொண்டு தர்க்க கோஷ்டிக்கு எழுந்தருள,
அவ் வளவில் அருளாளப் பெருமாள், உடையவர் எழுந்தருளுகிற காம்பீர்யத்தையும் ஸ்வரூபத்தையும் கண்டு
திடுக்கென்று இவர் நேற்று எழுந்தருளுகிற போது இங்கு நின்றும் சோம்பிக் கொண்டெழுந்தருளா நின்றார்,
ஆகையாலே இது மாநுஷமன்று என்று நிஶ்சயித்து, கடுக எழுந்திருந்து எதிரே சென்று உடையவர் திருவடிகளிலே விழ,

உடையவரும் ‘இதுவென்? நீ தர்க்கிக்கலாகாதோ?’ என்ன,
அருளாளப் பெருமாள், உடையவரைப் பார்த்து ‘தேவர்க்கு இப்போது பெரிய பெருமாள் ப்ரத்யக்ஷமான  பின்பு
தேவரீரென்ன, பெரிய பெருமாளென்ன பேதமில்லை என்றறிந்தேன்.
இனி அடியேன் தேவரீருடைய ஸந்நிதியிலே வாய் திறந்தொரு வார்த்தை சொல்ல ப்ராப்தி இல்லை.
ஆகையாலே அடியேனைக் கடுக அங்கீகரித்தருள வேணும் என்று மிகவும் அநுவர்த்திக்க,

உடையவரும் அவ் வளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து அவரைத் திருத்தி அங்கீகரித்து
விஶேஷ கடாக்ஷம் பண்ணி யருளி, அன்று தொடங்கி அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்று
தம்முடைய திருநாமம் ப்ரஸாதித்தருளிப் பெரியதொரு மடத்தையும் கொடுத்து,
‘உமக்குப் போராத ஶாஸ்த்ரங்களில்லை, புறம்புண்டான பற்றுக்களடைய ஸவாஸநமாக விட்டு ஶ்ரிய:பதியைப் பற்றும்,
உமக்கு பரக்கச் சொல்லலாவதில்லை. விஶிஷ்டாத்வைதப் பொருள் நீரும் உம்முடைய ஶிஷ்யர்களும் கூடி
வ்யாக்யாநம் பண்ணிக் கொண்டு ஸுகமே இரும்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
அவரும் க்ருதார்த்தராய், அதுக்குப் பின்பு அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் அந்த மடத்திலே சிறிது நாள் எழுந்தருளியிருந்தார்.

அநந்தரம் தேஶாந்தரத்தில் நின்றும் இரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் கோயிலுக்கெழுந்தருளித் திருவீதியிலே
நின்றவர்கள் சிலரைப் பார்த்து ‘எம்பெருமானார் மடம் ஏது’ என்று கேட்க,
அவர்கள் ‘எந்த எம்பெருமானார் மடம்’ என்ன,
புதுக்க எழுந்தருளின ஶ்ரீவைஷ்ணவர்கள் நெஞ்சுளைந்து “நீங்கள் இரண்டு சொல்லுவானென்?
இந்த தர்ஶநத்துக்கு இரண்டு எம்பெருமானாருண்டோ?” என்ன, அவர்கள் ‘உண்டு காணும்;
அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் எழுந்தருளி இருக்கிறார்; ஆகையாலே சொன்னோம்’ என்ன,
‘நாங்கள் அவரை அறியோம், ஶ்ரீ பாஷ்யகாரரைக் கேட்டோம்’ என்ன,
ஆனால் ‘உடையவர் மடம் இது’ என்று அவர் காட்ட,
அந்த ஶ்ரீவைஷ்ணவர்களும் உடையவர் மடத்திலே சென்று புகுந்தார்கள்.

இந்த ப்ரஸங்கங்களெல்லாத்தையும் யாத்ருச்சிகமாக அருளாளப் பெருமாளெம்பெருமானார் கேட்டு,
‘ஐயோ நாம் உடையவரைப் பிரிந்து ஸ்தலாந்தரத்திலே இருக்கையாலே லோகத்தார் நம்மை
எம்பெருமானார்க்கு எதிராகச் (நிகராகச் )சொன்னார்கள். ஆகையாலே நாம் அநர்த்தப்பட்டு விட்டோம்’ என்று
மிகவும் வ்யாகுலப்பட்டு, அப்போதே தம்முடைய மடத்தையும் இடித்துப் பொகட்டு வந்து
உடையவர் திருவடிகளைக் கட்டிக்  கொண்டு ‘அநாதி காலம் இவ் வாத்மா தேவர் திருவடிகளை அகன்று
அஹம் என்று அநர்த்தப்பட்டு போந்தது போராமல் இப்போதும் அகற்றி விடத் திருவுள்ளமாய் விட்டதோ?’ என்று மிகவும் க்லேஶிக்க,

உடையவர் ‘இதுவென்’ என்ன, அங்குப் பிறந்த வ்ருத்தாந்தங்களை விண்ணப்பம் செய்ய,
உடையவரும் அச் செய்திகளெல்லாவற்றையும் கேட்டருளி, ‘ஆனால் இனி உமக்கு நாம் செய்ய  வேண்டுவதென்’ என்ன,
அருளாளப் பெருமாளெம்பெருமானார் ‘அடியேனை இன்று தொடங்கி நிழலுமடிதாறும்போலே
தேவரீர் திருவடிகளின் கீழே வைத்துக் கொண்டு நித்ய கைங்கர்யம் கொண்டருளவேணும்’ என்று விண்ணப்பம் செய்ய,
உடையவரும் , ‘ஆனால் இங்கே வாரும்’ என்று அவரைத் தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல்
வைத்துக் கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருள அவரும் க்ருதார்த்தராய்த்
தாம் உடையவரொழிய வேறொரு தெய்வம் அறியாதிருந்தவராகையாலே ஸகல வேதாந்த ஸாரங்களையும்
பெண்ணுக்கும் பேதைக்கும் எளியதாக கற்று உஜ்ஜீவிக்கத் தக்கதாக ‘ஞான ஸாரம்’ ‘ப்ரமேய ஸாரம்’ என்கிற
ப்ரபந்தங்களையும் இட்டருளி, அதிலே “சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகும்” என்றும்
“தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி’ என்றுமித்யாதிகளாலே
ஸச் சிஷ்யனுக்கு ஸதாசார்யனே பர தேவதை; அவன் திருவடிகளே ரக்ஷகம் என்னுமதும்,
அவன் தான் பகவதவதாரம் என்னுமதும் தோற்ற ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாளெம்பெருமானார்
அருளிச் செய்தாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

———-

அந்திமோபாய நிஷ்டை – 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம்

கூரத்தாழ்வான் திரு வயிற்றிலே அவதரித்துப் பெருமாள் புத்ர ஸ்வீகாரம் பண்ணி வளர்த்துக் கொள்ள,
பெருமாள் குமாரராய் வளர்ந்த பட்டர் தர்ஶநம் நிர்வஹிக்கிற காலத்திலே, ஒரு தீர்த்தவாஸி ப்ராஹ்மணன் வந்து
பட்டருடைய கோஷ்டியிலே நின்று ‘பட்டரே! மேல்நாட்டிலே வேதாந்திகள் என்று ஒரு வித்வான் இருக்கிறான்,
அவனுடைய வித்யையும் கோஷ்டியும் உமக்கு துல்யமாயிருக்கும்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணன் சொன்ன வார்த்தைக் கேட்டு ‘ஆமோ, அப்படி ஒரு வித்வாம்ஸர் உண்டோ’ என்ன,
‘உண்டு’ என்று சொல்ல,

அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டு மேல்நாட்டுக்குப் போய், வேதாந்திகள் கோஷ்டியிலே நின்று
‘வேதாந்திகளே! உம்முடைய வித்யைக்கும் கோஷ்டிக்கும் சரியாயிருப்பாரொருவர் இரண்டாற்றுக்கும் நடுவே
பட்டர் என்றொருவர் எழுந்தருளியிருக்கிறார்’ என்ன,

வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆமோ, பட்டர் நமக்கொத்த வித்வானோ’ என்ன,
ப்ராஹ்மணன் ‘ஶப்த – தர்க்க – பூர்வோத்தரமீமாம்ஸம் தொடக்கமாக ஸகல ஶாஸ்த்ரங்களும் பட்டருக்குப் போம்’ என்ன,

வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணன் சொன்னது கேட்டு, ‘இந்த பூமியில் நமக்கெதிரில்லையென்று ஷட்தர்ஶநத்துக்கும்
ஆறு ஆஸநமிட்டு அதின் மேலே உயர இருந்தோம்; பட்டர் நம்மிலும் அதிகர் என்று ப்ராஹ்மணன் சொன்னான்’ என்று
அன்று தொடங்கி வேதாந்திகள் திடுக்கிட்டிருந்தார்.
அவ்வளவில் அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலுக்கு வந்து பட்டர் ஸந்நிதியிலே நின்று,
‘பட்டரே! உம்முடைய வைபவமெல்லாம் வேதாந்திகளுக்குச் சொன்னேன்’ என்ன,
‘பட்டருக்கு எந்த ஶாஸ்த்ரம் போம்’ என்று கேட்டார்’ என்ன,
‘ப்ராஹ்மணா, அதுக்கு வேதாந்திகளுக்கு என் சொன்னாய்’ என்ன,

‘ஶப்த தர்க்கங்களும் ஸகல வேதாந்தங்களும் நன்றாக பட்டர்க்குப் போம் என்று வேதாந்திகளுடனே சொன்னேன்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணனைப் பார்த்து ‘தீர்த்த வாஸியாய் தேஶங்களெல்லாம் நடையாடி எல்லாருடையவும்
வித்யா மாஹாத்ம்யங்களையும் அறிந்து நாகரிகனாய் இருக்கிற நீ நமக்குப் போமதெல்லாமறிந்து வேதாந்திகளுடனே சொல்லாமல்
வேத ஶாஸ்த்ரங்களே போமென்று தப்பச் சொன்னாய்’ என்ன,

அந்த ப்ராஹ்மணன் பட்டரைப் பார்த்து ‘இந்த லோகத்தில் நடையாடுகிற வேத ஶாஸ்த்ரங்களொழிய உமக்கு
மற்றெது போம் என்று வேதாந்திகளுடனே சொல்லுவது’ என்ன,
‘கெடுவாய்! பட்டருக்கு திருநெடுந்தாண்டகம் போமென்று வேதாந்திகளுடனே சோல்லப் பெற்றாயில்லையே’ என்று
பட்டர் வெறுத்தருளிச் செய்து, அநந்தரம் பட்டர் ‘வேதாந்திகளை நம்முடைய தர்ஶநத்திலே அந்தர் பூதராம்படி
பண்ணிக் கொள்ள வேணும்’ என்று தம்முடைய திருவுள்ளத்தைக்[தே] கொண்டு பெருமாளை ஸேவித்து,
‘மேல் நாட்டிலே வேதாந்திகளென்று பெரியதொரு வித்வான் இருக்கிறார்.
அவரைத் திருத்தி நம்முடைய தர்ஶந ப்ரவர்த்தகராம்படி பண்ண வேணும் என்று அங்கே விடைக் கொள்ளுகிறேன்,
அவரை நன்றாகத் திருத்தி ராமாநுஜ ஸித்தாந்தத்துக்கு நிர்வாஹகராம்படி திருவுள்ளம் பற்றி யருள வேணும்’ என்று
பட்டர் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய, பெருமாளும் ‘அப்படியே செய்யும்’ என்று திருவுள்ளமுகந்தருளித்
தம்முடைய குமாரரான வாசி தோற்ற, ‘அநேக கீத வாத்யங்களையும் கோயில் பரிகரத்தையும் கூட்டிப் போம்’ என்றுவிட,

பட்டரும் அங்கே எழுந்தருளி வேதாந்திகள் இருக்கிற ஊர் ஆஸந்நமானவாறே பராசர பட்டர் வந்தார், வேதாசார்ய பட்டர் வந்தார்’
என்று திருச்சின்னம் பரிமாறுகை முதலான அநேக வாத்ய கோஷத்துடனே பெருந்திரளாக மஹா ஸம்ப்ரமத்துடனே
ஸர்வாபரண பூஷிதராய்க் கொண்டு எழுந்தருள, அவ்வளவிலே அவ்வூரில் நின்றும் இரண்டு பேர் ப்ராஹ்மணர் எதிரே சென்று,
‘நீர் மஹா ஸம்ப்ரமத்துடனே வந்தீர், நீரார்? நீர் எங்கே எழுந்தருளுகிறீர்? என்று பட்டரைக் கேட்க,
அவர் ‘நாம் பட்டர், வேதாந்திகளுடனே தர்க்கிக்கப் போகிறோம்’ என்ன,
அந்த ப்ராஹ்மணர் சொன்னபடி – ‘நீர் இப்படி ஸம்ப்ரமத்துடனே எழுந்தருளினால் வேதாந்திகளை உமக்குக் காணப் போகாது.
அவர் க்ருஹத்துக்குள்ளே இருந்து விடுவர். அவருடைய ஶிஷ்ய ப்ரஶிஷ்யர்கள் தலை வாசலிலே இருந்து நாலிரண்டு மாஸம்
வந்த வித்வான்களுடனே தர்க்கித்து உள்ளே புகுர வொட்டாதே தள்ளி விடுவார்கள்’ என்ன,

பட்டரும் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆனால் நான் நேரே சென்று அவருடைய க்ருஹத்திலே புகுந்து
வேதாந்திகளைக் காணும் விரகேது’ என்று கேட்க, அவர்கள் சொன்னபடி –
‘வேதாந்திகள் தநவானாகையாலே அவாரியாக {=தடையின்றி} ப்ராஹ்மணர்க்கு ஸத்ர போஜநமிடுவர்,
அந்த ப்ராஹ்மணருடனே கலசி அவர்களுடைய வேஷத்தையும் தரித்துக் கொண்டு ஸத்ரத்திலே சென்றால்
வேதாந்திகளைக் கண்களாலே காணலாம். ஆகையாலே உம்முடைய ஸம்ப்ரமங்களெல்லாத்தையும் இங்கே நிறுத்தி
நீர் ஒருவருமே ஸத்ராஶிகளுடனே கூடி எழுந்தருளும்’ என்று சொல்லிப் போனார்கள்.

பட்டரும் அவர்கள் சொன்னது கார்யமாம் என்று திருவுள்ளம் பற்றித் தம்முடைய அனைத்து பரிகரத்தையும் ஓரிடமே நிறுத்தி,
ஸர்வாபரணங்களையும் களைந்து, ஒரு அரசிலைக் கல்லையையும் குத்தி இடுக்கிக் கொண்டு ஒரு காவி வேஷ்டியையும்
தரித்து ஒரு கமண்டலத்தையும் தூக்கி ஸத்ராஶிகளுடனே கூட கார்ப்பண்ய வேஷத்தோடே உள்ளே எழுந்தருள,

வேதாந்திகள் ப்ராஹ்மணர் புஜிக்கிறத்தைப் பார்த்துக் கொண்டு ஒரு மண்டபத்தின் மேலே பெரிய மதிப்போடே இருக்க,
ப்ராஹ்மணரெல்லாரும் ஸத்ர ஶாலையிலே புகுர,
பட்டர் அங்கே எழுந்தருளாமல் வேதாந்திகளை நோக்கி எழுந்தருள,
வேதாந்திகள் ‘பிள்ளாய் இங்கென் வருகிறீர்?’ என்ன, பட்டரும் ‘பிக்ஷைக்கு வருகிறேன்’ என்ன,
‘எல்லாரும் உண்கிற விடத்திலே ஸத்ரத்திலே போகீர் பிக்ஷைக்கு’ என்ன, ‘
எனக்கு சோற்று பிக்ஷை அன்று’ என்ன,

வேதாந்திகள் இவர் ஸத்ராஶியானாலும் கிஞ்சித் வித்வானாக கூடும் என்று விசாரித்து, ‘கா பிக்ஷா?’ என்ன,
பட்டர் ‘தர்க்க பிக்ஷா’ என்ன,
வேதாந்திகள் அத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு தீர்த்த வாஸி ப்ராஹ்மணன் வந்து முன்னாள் நமக்குச் சொன்ன பட்டரல்லது
நம்முடைய முன் வந்து நின்று கூசாமல் தர்க்க பிக்ஷை என்று கேட்க வல்லார் இந்த லோகத்திலே இல்லை யாகையாலே,
வேஷம் கார்பண்யமாயிருந்ததே யாகிலும் இவர் பட்டராக வேணும் என்று நிஶ்சயித்து
‘நம்மை தர்க்க பிக்ஷை கேட்டார் நீரார், பட்டரோ? என்ன,
அவரும் ‘ஆம்’ என்று கமண்டலத்தை, காவி வேஷ்டியை இவை யெல்லாத்தையும் சுருட்டி எறிந்து எழுந்தருளி நின்று
மஹா வேகத்திலே உபந்யஸிக்க,

அவ்வளவில் வேதாந்திகள் எழுந்திருந்து நடுங்கி வேறொன்றும் சொல்லாதே அரை குலையத் தலை குலைய இறங்கி வந்து
பட்டர் திருவடிகளிலே விழுந்து, ‘அடியேனை அங்கீகரித்தருள வேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க
பட்டரும் தாம் எழுந்தருளின கார்யம் அதிஶீக்ரத்திலே பலித்தவாறே மிகவும் திருவுள்ளமுகந்தருளி,
வேதாந்திகளை அங்கீகரித்து அவர்க்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பண்ணி யருளி,
‘வேதாந்திகளே! நீர் ஸர்வஜ்ஞராயிருந்தீர். ஆகையாலே உமக்கு நாம் பரக்கச் சொல்லாவதில்லை.
விஶிஷ்டாத்வைதமே பொருள்; நீரும் மாயா வாதத்தை ஸ வாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப் பற்றி,
ராமாநுஜ தர்ஶநத்தை நிர்வஹியும்’ என்று அருளிச் செய்து,
‘நாம் பெருமாளை ஸேவிக்கப் போகிறோம்’ என்று உத்யோகிக்கிற வளவிலே

ஊருக்குப் புறம்பே நிறுத்தின அனைத்துப் பரிகரமும் மஹாஸம்ப்ரமத்துடனே வந்து புகுந்து பட்டரை மீளவும்
ஸர்வாபரணங்களாலும் அலங்கரித்துத் திருப் பல்லக்கிலேற்றி உபய சாமரங்களைப் பரிமாற எழுந்தருளுவித்துக் கொண்டு
புறப்பட்டவளவிலே வேதாந்திகள் பட்டருடைய பெருமையும் ஸம்பத்தையும் கண்டு
‘இந்த ஶ்ரீமாந் இத்தனை தூரம் காடும் மலையும் கட்டடமும் கடந்து எழுந்தருளி நித்ய ஸம்ஸாரிகளிலும் கடை கெட்டு
ம்ருஷாவாதியாயிருந்த அடியேனுடைய துர் கதியே பற்றாசாக அங்கீகரித்தருளுவதே!’ என்று
மிகவும் வித்தராய்க் கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு பட்டர் திருவடிகளிலே விழுந்து க்லேஶித்து,

‘பெரிய பெருமாள் தாமாகத் தன்மையான ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதிகளுக்குத் தகுதியாக எழுந்தருளினார்,
அநாதி காலம் தப்பி அலம் புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாதபடி கை கழிந்து போன இவ்வாத்மா
என்றும் தப்பிப்போம் என்று திருவுள்ளம் பற்றி, இப்படி அதி கார்ப்பண்யமாயிருப்பதொரு வேஷத்தையும் தரித்துக் கொண்டு
ஸத்ராஶிகளுடனேகூட எழுந்தருளி அதி துர்மாநியான அடியேனை அங்கீகரித்தருளின அந்த வேஷத்தை நினைத்து
அடியேனுக்குப் பொறுக்கப் போகிறதில்லை’ என்று வாய் விட,
பட்டரும் வேதாந்திகளை எடுத்து நிறுத்தித் தேற்றி, ‘நீர் இங்கே ஸுகமே இரும்’ என்று அருளிச் செய்து கோயிலேற எழுந்தருளினார்.

அதுக்குப் பின்பு வேதாந்திகள் அங்கே சிறிது நாள் எழுந்தருளி யிருந்து பட்டரைப் பிரிந்திருக்க மாட்டாதே
கோயிலுக்கு எழுந்தருளத் தேட அங்குள்ளவர்கள் அவரைப் போக வொண்ணாதென்று தகையத்
தமக்கு நிரவதிக தநம் உண்டாகையாலே அத்தை மூன்றம்ஶமாகப் பிரித்து, இரண்டு தேவிமாருக்கு இரண்டு அம்ஶத்தைக் கொடுத்து,
மற்றை அம்ஶத்தைத் தம்முடைய ஆசார்யருக்காக எடுப்பித்துக் கொண்டு தத் தேஶத்தையும் ஸவாஸநமாக விட்டு ஸந்யஸித்துக்
கோயிலிலே எழுந்தருளி, பட்டர் திருவடிகளிலே ஸேவித்துத் தான் கொண்டு வந்த தநத்தையும் தம்மதென்கிற அபிமாநத்தை விட்டு,
பட்டர் இஷ்ட விநியோகம் பண்ணிக் கொள்ளலாம்படி அவர் திரு மாளிகையிலே விட்டு வைத்து, க்ருதார்த்தராய் எழுந்தருளி நிற்க,

அவ் வளவில் பட்டரும் மிகவும் திருவுள்ளமுகந்து, ‘நம்முடைய ஜீயர் வந்தார்’ என்று கட்டிக் கொண்டு ஒரு க்ஷணமும் பிரியாமல்
தம்முடைய ஸந்நிதியிலே வைத்துக் கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார்.
ஜீயரும் பட்டரை யல்லது மற்றொரு தெய்வம் அறியாதிருந்தார்.
பட்டர் நஞ்சீயர் என்று அருளிச் செய்தவன்று தொடங்கி வேதாந்திகளுக்கு நஞ்சீயரென்று திருநாமமாயிற்று.
நஞ்சீயர் நூறு திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்து நூறு திருவாய்மொழியும் நிர்வஹிக்கையாலே
ஜீயருக்கு ஶதாபிஷேகம் பண்ணிற்று என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்வர்.

(நஞ்சீயர் இயற் பெயர் -மாதவர்

நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே யஸ்ய வாகம்ருதஸார பூரிதம் புவந த்ரயம்-நஞ்சீயருடைய தனியன்:

தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே சீமாதவனென்னும் செல்வனார் வாழியே பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே பங்குனியில் உத்தர நாள் பாருதித்தான் வாழியே ஒண்டொடியாள் கலவி தன்னை யொழித்திட்டான் வாழியே ஒன்பதினாயிரப் பொருளை யோதுமவன் வாழியே எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே எழில் பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே-நஞ்சீயருடைய வாழி திருநாமம்: )

நஞ்சீயர் பட்டரை அநேகமாக அநுவர்த்தித்து அவருடைய அநுமதி கொண்டு திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரமாக
ஒரு வ்யாக்யாநமெழுதி, பட்டோலையானவாறே இத்தையொரு ஸம்புடத்திலே நன்றாக எழுதித் தரவல்லார் உண்டோ
என்று ஜீயர் தம்முடைய முதலிகளைக் கேட்க,
அவர்களும் ‘தென்கரையனென்னும் வரதராஜனென்று ஒருவர் பலகாலம் இங்கே வருவர். அவர் நன்றாக எழுதவல்லார்’
என்று ஜீயருக்கு விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் வரதராஜரை அழைத்து ‘ஒரு க்ரந்தம் எழுதிக்காட்டுங்காண்’ என்ன,
அவரும் எழுதிக் கொடுக்க, ஜீயர் அத்தைக் கண்டு ‘எழுத்து முத்துப் போலே நன்றாயிருந்தது;
ஆனாலும் திருவாய்மொழி வ்யாக்யாநமாகையாலே ஒரு விலக்ஷணரைக் கொண்டு எழுதுவிக்க வேணுமொழிய,
திருவிலச்சினை திருநாமமுண்டான மாத்ரமாய், விஶேஷஜ்ஞரல்லாத வரதராஜனைக் கொண்டு எப்படி எழுதுவிப்பது’
என்று ஸந்தேஹிக்க, வரதராஜனும் ஜீயர் திருவுள்ளத்தை யறிந்து
‘அடியேனையும் தேவரீர் திருவுள்ளத்துக்குத் தகும்படி திருத்திப் பணி கொள்ளலாகாதோ’ என்ன,

அவ்வளவில் ஜீயரும் மிகவும் திருவுள்ளமுகந்தருளி அப்போதே வரதராஜனை அங்கீகரித்து விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி
ஒன்பதினாயிரமும் பட்டோலை ஓருரு வரதராஜனுக்கு அருளிச் செய்து காட்டி
‘இப்படித்தப்பாமல் எழுதித்தாரும்’ என்று பட்டோலையை வரதராஜன் கையிலே கொடுக்க,
அவரும் அத்தை வாங்கிக் கொண்டு ‘அடியேனூரிலே போய் எழுதிக் கொண்டு வருகிறேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் ‘அப்படியே செய்யும்’ என்று விட,

வரதராஜன் திருக் காவேரிக்குள்ளே எழுந்தருளினவளவிலே சத்திடம் (சிற்றிடம்) நீச்சாகையாலே பட்டோலையைத் திருமுடியிலே
கட்டிக்கொண்டு நீஞ்ச, அவ்வளவிலே ஒரு அலை அவரை அடித்து க்ரந்தம் ஆற்றுக்குள்ளே விழுந்து போக,
அவரும் அக்கரையிலேயேறி ‘பட்டோலை போய்விட்டதே, இனி நான் செய்வதேது’ என்று விசாரித்து,
ஒரு அலேகத்தை {=வெற்றேடு} உண்டாக்கிக் கொண்டு ஜீயர் அருளிச் செய்தருளின அர்த்தம்
ஒன்றும் தப்பாமல் ஒன்பதினாயிரமும் நன்றாக எழுதி, தாம் சதிருடைய தமிழ் விரகராகையாலே ஓரொரு பாட்டுக்களிலே
உசிதமான ஸ்தலங்களுக்கு ப்ரஸந்ந கம்பீரமான அர்த்த விசேஷங்களும் எழுதிக் கொண்டு போய் ஜீயர் திருக்கையிலே கொடுக்க,

ஜீயரும் ஶ்ரீகோஶத்தை அவிழ்த்துப் பார்த்த வளவிலே தாமருளிச் செய்த கட்டளையாயிருக்கச் செய்தே
ஶப்தங்களுக்கு மிகவும் அநு குணமாக அநேக விஶேஷார்த்தங்கள் பல விடங்களிலும் எழுதி யிருக்கையாலே
அத்தைக் கண்டு மிகவும் திருவுள்ளமுகந்தருளி வரத ராஜனைப் பார்த்து ‘மிகவும் நன்றாயிரா நின்றது; இதேது சொல்லும்’ என்ன,
அவரும் பயப்பட்டு ஒன்றும் விண்ணப்பம் செய்யாதிருக்க,

ஜீயரும் ‘நீர் பயப்பட வேண்டாம், உண்மையைச் சொல்லும்’ என்ன,
வரதராஜனும் ‘திருக் காவேரி நீச்சாகையாலே பட்டோலையை அடியேன் தலையிலே கட்டிக் கொண்டேன்.
ஓரலை வந்து அடிக்கையாலே அது ஆற்றிலே விழுந்து முழிகிப் போய்த்து.
இது தேவரீர் அருளிச் செய்தருளின ப்ரகாரத்திலே எழுதினேன்’ என்று விண்ணப்பம் செய்ய,

ஜீயரும் ‘இது ஒரு புத்தி விசேஷமிருந்தபடியென்! இவர் மஹா ஸமர்த்தராயிருந்தார். நன்றாக எழுதினார்’ என்று
மிகவும் திருவுள்ளமுகந்து வரதராஜனைக் கட்டிக்கொண்டு ‘நம்முடைய பிள்ளை திருக் கலிக்கன்றி தாஸர்’ என்று திருநாமம் சாத்தித்
தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல் மாப்பழம்போலே வைத்துக் கொண்டு
பிள்ளைக்கு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார்.
ஆகையாலே ஜீயர் நம்பிள்ளை என்று அருளிச் செய்தவன்று தொடங்கி வரத ராஜனுக்கு நம் பிள்ளை என்று
திருநாமமாய்த்து என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவார்.

இந்த வ்ருத்தாந்தங்கள் தன்னை
“நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர், அவரவர்தம் ஏற்றத்தால்,
அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தானென்று நன்னெஞ்சே, ஏத்ததனைச் சொல்லி நீ இன்று” என்று
உபதேச ரத்தின மாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளினார்.

‘இந்திரன் வார்த்தையும், நான்முகன் வார்த்தையும் ஈசனுடன்
கந்தன் வார்த்தையும் கற்பவராரினிக் காசினிக்கே
நந்தின முத்தென்றும் நம்பூர் வரதர் திருமாளிகையில்
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திறை கொள்வரே’ என்றிறே நம்பிள்ளை யுடைய வைபவமிருப்பது.

(நம்பிள்ளை திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை அவதார ஸ்தலம்: நம்பூர் ஶிஷ்யர்கள்: வடக்குத் திருவீதிப் பிள்ளை , பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் , ஈயுண்ணி மாதவப் பெருமாள், நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் மற்றும் பலர் பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

வேதாந்த வேத்ய அம்ருத வாரிராஸேர் வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம்-நம்பிள்ளையின் தனியன்: தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே திருவரையில் பட்டாடை சேர் மருங்கும் வாழியே தாமமணி வட மார்வும் புரிநூலும் வாழியே தாமரைக் கை இணை யழகும் தடம் புயமும் வாழியே பாமருவும் தமிழ் வேதம் பயில் பவளம் வாழியே பாடியத்தின் பொருள் தன்னைப் பகர்நாவும் வாழியே நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே-நம்பிள்ளையின் வாழி திருநாமம்:

காதலுடன் நஞ்சீயர் கழல் தொழுவோன் வாழியே கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே-நம்பிள்ளையின் வாழி திருநாமம்:)

———-

அந்திமோபாய நிஷ்டை – 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை

திருக்கோட்டியூர் நம்பி கோயிலுக்கெழுந்தருளித் திருநாள் ஸேவித்து மீண்டெழுந்தருளுகிறவரை
எம்பெருமானார் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல் வார்த்தை அருளிச் செய்ய வேணும்’ என்று கேட்க,
நம்பியும் ஒரு நாழிகைப் போது திருக் கண்களைச் செம்பளித்துக் கொண்டு நின்று, பின்பு
‘எங்கள் ஆசார்யர் ஶ்ரீஆளவந்தார் அடியோங்களுக்கு ஹிதம் அருளும் போது அகமர்ஷண ஸமயத்திலே(காவேரியில் இறங்கி ஆழ்ந்து குளிக்கும் பொழுது)திருமுதுகிருக்கும்படி வல்லார் கடாரம் கவிழ்த்தாப் போலே காணும் இருப்பது;
அதுவே நமக்குத் தஞ்சமென்று விஶ்வஸித்திருப்பேன்; நீரும் மறவாமல் இத்தை நினைத்திரும்’ என்று அருளிச் செய்தாரென்று ப்ரஸித்தமிறே.
நம்பி தான் திருக்கோட்டியூரிலே தளத்தின் மேலே படிக் கதவைப் புகட்டு ஆளவந்தாரை த்யாநித்துக் கொண்டு
யமுனைத் துறைவர் என்கிற மந்த்ரத்தை ஸதா அநுஸந்தாநமாய் எழுந்தருளி இருப்பர் என்று அருளிச் செய்வர்.

உடையவரும் ஒரூமையைக் கடாக்ஷித்தருளி அவனளவில் தமக்குண்டான க்ருபாதிஶயத்தாலே
அவனைக் கடாக்ஷிக்கக் கடவோம் என்று திருவுள்ளம் பற்றி, ஏகாந்தத்திலே வைத்துக் கொண்டு
ஸம்ஜ்ஞையாலே தம்முடைய திருமேனியை ஊமைக்கு ரக்ஷகமாகக் காட்டி யருள,
ஆருக்கும் ஸித்தியாத விஶேஷ கடாக்ஷத்தைத் கூரத்தாழ்வான் கதவு புரையிலே கண்டு மூர்ச்சித்துத் தெளிந்த பின்பு
‘ஐயோ ஒன்றுமறியாத ஊமையாய்ப் பிறந்தேனாகில் இப் பேற்றை உடையவர் அடியேனுக்கும் இரங்கி யருளுவர்;
கூரத்தாழ்வானாய்ப் பிறந்து ஶாஸ்த்ரங்களைப் பரக்கக் கற்கையாலே தம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை
அடியேனுக்குத் தஞ்சமாகக் காட்டித் தந்தருளாமல் ப்ரபத்தியை உபதேஶித்து விட்டாராகையாலே
எம்பெருமானாருடைய திவ்ய மங்கள விக்ரஹமே எனக்குத் தஞ்சமென்கிற நிஷ்டைக்கு அநதிகாரியாய் விட்டேன்’ என்று
ஆழ்வான் தம்மை வெறுத்துக் கொண்டாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

உடையவர் ஆழ்வாரை ஸேவிக்க வேணுமென்று திருநகரிக்கெழுந்தருளுகிற போது திருப்புளிங்குடி என்கிற திருப்பதியிலே
எழுந்தருளினவாறே அவ் வூர்த் திருவீதியிலே பத்தெட்டு வயஸ்ஸிலே ஒரு ப்ராஹ்மணப் பெண் இருக்க,
உடையவர் அவளைப் பார்த்து, ‘பெண்ணே திருநகரிக்கு எத்தனை தூரம் போரும்’ என்று கேட்க,
அந்தப் பெண் உடையவரைப் பார்த்து ‘ஏன் ஐயரே! திருவாய்மொழி ஓதினீரில்லையோ?’ என்ன,
உடையவர் ‘திருவாய்மொழி ஓதினால் இவ்வூர்க்குத் திருநகரி இத்தனை தூரம் போம் என்று அறியும்படி எங்ஙனே?’ என்ன,
அப்பெண் – “திருபுளிங்குடியாய்! வடிவணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக்
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே” என்று ஆழ்வார் அருளிச் செய்கையாலே
திருநகரிக்கு இவ்வூர் கூப்பிடு தூரமென்று அறிய வேண்டாவோ’ என்று உடையவரைப் பார்த்து விண்ணப்பம் செய்ய,

உடையவரும் ‘இதொரு வாக்யார்த்தமிருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
அந்தப் பெண்ணளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து ‘இவளிருக்கிற ஊரிலே நமக்கு இன்று ஸ்வயம்பாகம் பண்ணுவதாகத்
தேடின பாண்டங்களையும் உடைத்துப் பொகட்டு, ‘பெண்ணே உன்னுடைய க்ருஹம் ஏது’ என்ன,
அவளும் தம்முடைய அகத்தைக் காட்ட, உடையவரும் அந்தக் க்ருஹத்திலே எழுந்தருளி,
அந்தப் பெண்ணையும் அவளுடைய மாதா பிதாக்களையும் தளிகைக்குத் திருப் போனகம் சமைக்கும்படி கற்பித்தருளித்
தாமும் முதலிகளும் அமுது செய்தருளி அந்தப் பெண்ணையும் அவளோடு ஸம்பந்தமுடையாரையும் அங்கீகரித்து
விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, தாமும் முதலிகளுமாகத் திருநகரிக்கேற எழுந்தருளினார்.

அன்று தொடங்கி அந்தப் பெண்ணும் தத் ஸம்பந்திகளும் உடையவரல்லது மற்றொரு தெய்வமறியாமலிருந்து
வாழ்ந்து போனார்கள் என்று பெரியோர்கள் அருளிச் செய்வர்கள்.

இந்த வ்ருத்தாந்தங்களாலே
‘பாலமூக- ஜடாந்தாஶ்ச பங்கவோ பதிராஸ்ததா |
ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம்’ என்கிறபடியே
ஶாஸ்த்ர அநதிகாரிகளான இவர்களெல்லாம்  பரம கிருபையாலே உஜ்ஜீவித்தார்கள் என்பதை உடையவர் பக்கலிலே காணலாம் என்றபடி.

திருக் குருகைப் பிரான் பிள்ளான் கொங்கு நாட்டுக்கு எழுந்தருளி அங்கே ஒரு ஶ்ரீவைஷ்ணவ க்ருஹத்திலே விட்டு
ஸ்வயம்பாகம் பண்ணுவதாக எழுந்தருளியிருக்க, அங்குள்ளவர்களெல்லாரும் கேவல பகவந் நாம ஸங்கீர்தநங்களைப் பண்ண,
அது இவர் திருவுள்ளத்துக்குப் பொருந்தாத படியாலே அமுது செய்தருளாமல் அவ்வருகே எழுந்தருளினார் என்றும்,
ஶ்ரீபாஷ்யகாரர் காலத்திலே கோஷ்டியிலே ஒரு வைஷ்ணவர் வந்து நின்று திருமந்த்ரத்தை உச்சரிக்க,
வடுக நம்பி எழுந்திருந்து குரு பரம்பரா பூர்வகமில்லாத படியாலே இது நாவ காரியம் என்று அருளிச் செய்து
அவ் வருகே எழுந்தருளினார் என்றும் இரண்டு வ்ருத்தாந்தமும்
“நாவ காரியம் சொல்லிலாதவர்” என்கிற பாட்டில் வ்யாக்யாநத்திலே காணலாம்.

திருமாலை யாண்டான் அருளிச் செய்யும்படி –
நாம் பகவத் விஷயம் சொல்லுகிறோமென்றால் இஸ் ஸம்ஸாரத்தில் ஆளில்லை; அதெங்ஙனே என்னில்,
ஒரு பாக்கைப் புதைத்து அதுருவாந்தனையும் செல்லத் தலையாலே எருச் சுமந்து ரக்ஷித்து அதினருகே கூறைகட்டிப்
பதினாறாண்டு காலம் காத்துக் கிடந்தால் கடவழி ஒரு கொட்டைப் பாக்காய்த்துக் கிடைப்பது;
அது போலன்றிக்கே இழக்கிறது ஹேயமான ஸம்ஸாரத்தை, பெறுகிறது விலக்ஷணமான பரம பதத்தை,
இதுக்குடலாக ஒரு நல் வார்த்தை யருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒரு காலாகிலும் க்ருதஜ்ஞராகாத
ஸம்ஸாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்லுவது என்று வெறுத்தார் என்று வார்த்தா மாலையிலே ப்ரஸித்தம்.

“கோக்நேசைவ ஸுராபே ச சோரே பக்ந வ்ரதே ததா|
நிஷ் க்ருதிர் விஹிதா ஸத்பி: க்ருதக்நே நாஸ்தி நிஷ் க்ருதி:” என்கிறவிடத்தில்
க்ஷுத்ரமான ப்ராக்ருத த்ரவ்ய உபகார விஸ்ம்ருதியை அகப்பட, நிஷ்க்ருதி யில்லாத பாபமென்றால் அப்ராக்ருதமாய்,
நிரதிஶய வைலக்ஷண்யத்தை உடைத்தான ஆத்ம வஸ்துவை அநாதி காலம் தொடங்கி,
“அஸந்நேவ” என்கிறபடியே அஸத் கல்பமாய்க் கிடக்க, ஜ்ஞாந ப்ரதாநத்தாலே அத்தை “ஸந்தமேநம்” என்னும் போது
உண்டாக்கின ஆசார்யன் திறத்தில் க்ருதக்நராகை பாபங்களுக்கெல்லாம் தலையான பாபமென்னுமிடம் கிம்புநர் ந்யாய ஸித்தமிறே.

தண்ணீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துச் தேத்தாம் விரையை யிட்டுத் தேற்றினாலும் மண்ணானது கீழ் படிந்து
தெளிந்த நீரானது மேலே நிற்குமாப் போலே அஜ்ஞாந ப்ரதமான ஶரீரத்திலே இருக்கிற ஆத்மாவை
ஆசார்யனாகிற மஹோபகாரகன் திருமந்த்ரமாகிற தேத்தாம் விரையாலே தேற்ற, அஜ்ஞாநம் மடிந்து, ஜ்ஞாநம் ப்ரகாஶிக்கும்;
தெளிந்த ஜலத்தை பாத்ராந்தரத்திலே சேர்க்குந்தனையும் கைப்பட்ட போதெல்லாம் கலங்குமாப்போலே,
பிறந்த ஜ்ஞாநத்தைக் கலக்குகிற ப்ராக்ருத ஶரீரத்தை விட்டுப் போய்,
அப்ராக்ருத ஶரீரத்திலே புகுந்தனையும் கலங்காமல் நோக்கும் தன்னுடைய ஸதாசார்யன், தத் துல்யர்கள் கண் வட்டத்திலே
வர்த்திக்கை ஸ்வரூபம் என்று பூர்வாசார்யர்கள் அருளிச் செய்வார்கள். (கதக ஷோத இத்யாதி-கதக-தேத்தாம் விரை).

ஆளவந்தார் திருவநந்தபுரத்துக்கு எழுந்தருளுகிறபோது தமக்கு அந்தரங்க ஶிஷ்யரான தெய்வாரி யாண்டானை
‘பெருமாளுக்குத் திருமாலையும் கட்டி ஸமர்ப்பித்து மடத்துக்கு காவலாக இரும்’ என்று கோயிலிலே வைத்து எழுந்தருள,
ஆண்டானுக்கு திருமேனியும் ஶோஷித்து, தீர்த்த ப்ரஸாதங்களும் இழியாமையிருக்கையாலே மிகவும் தளர,
பெருமாள் அவரைப் பார்த்து ‘உனக்கிப்படி ஆவானென்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
‘தேவரீருடைய கைங்கர்யமும் ஸேவையும் உண்டே யாகிலும் ஆசார்ய விஶ்லேஷத்தாலே இளைத்தேன்’ என்று அவரும் விண்ணப்பம் செய்ய,
‘ஆனால் நீர் ஆளவந்தார் பக்கல் போம்’ என்று பெருமாள் திருவுள்ளமாயருள,

அவரும் அங்கே எழுந்தருள, ஆளவந்தாரும் திருவநந்தபுரத்தை ஸேவித்து அரைக் காத வழி மீண்டு,
கரைமனை யாற்றங்கரையிலே விட்டெழுந்தருளி யிருந்தார்.
ஆண்டானும் அங்கே சென்று ஆளவந்தாரைக் கண்டு ஸேவித்துத் தம்முடைய க்லேஶம் தீர்ந்தவாறே மிகவும் ஹ்ருஷ்டராயிருக்க;
அவ்வளவிலே ஆளவந்தாரும் ‘திருவனந்தபுரம் திருச் சோலைகள் தோன்றுகிறது,
ஶ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு போய் ஸேவித்து வாரும்’ என்று திரு வுள்ளம் பற்றி யருள;
‘அது உம்முடைய திருவனந்தபுரம், என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது’ என்று ஆண்டான் விண்ணப்பம் செய்ய,
‘இது ஒரு அதிகாரம் இருந்தபடி யென்! இந் நினைவு ஒருவர்க்கும் பிறக்கை அரிது’ என்று
ஆளவந்தாரும் ஆண்டானளவிலே மிகவும் திருவுள்ளமுகந்தருளினார் என்று அருளிச் செய்வார்கள்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒரு காலம் திருமேனி பாங்கின்றியிலே கண் வளர்ந்தருளுகிற போது
தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து
‘அடியேன் இப்போது திருவடிச் சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிது நாள் இருக்கும்படி
“ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,
அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டு போலே திருமேனி பாங்காயிற்று.

இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஜ்ஞாந வ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செயதார்,
இது இவர் ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,
பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,

அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,

பிள்ளையும் அத்தைக் கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,
அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக் கட்டாமையாலே காணும்’ என்ன,
பிள்ளையும் அத்தைக் கேட்டு, ‘ஆகிறது, அம்மங்கி யம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,

அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச் செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு
ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன,
மீளவும் பிள்ளை அத்தைக் கேட்டு, ‘அம்மங்கி பெரிய முதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,

“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில்
மூலை யடியே முடித்துக் கொண்டு மீண்டு வருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச் செய்தது,
அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.

பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,
‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன,
‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன,

பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை; ஆனாலும் அடியேனைக் கொண்டு வெளியிட்டருளத்
திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன். தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித்
தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றி யருளி உலாவி யருளும் போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும்
சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று
ஜீயர் விண்ணப்பம் செய்தார்.

இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும்
‘இந்த விபூதியிலும் இவ் வுடம்போடே ஒருவர்க்கு இவ் வைஶ்வர்யம் கூடுவதே!’ என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் –
என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுளத்தைக் குறித்து
உபதேச ரத்தின மாலையிலே
“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.

(பின்பழகராம் பெருமாள் சீயர்
திருநக்ஷத்ரம் : ஐப்பசி சதயம்
அவதார ஸ்தலம் : திருப்புட்குழி
ஆசார்யன் : நம்பிள்ளை
பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்
ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குறும் பஜே ||-பின்பழகிய பெருமாள் ஜீயர் தனியன்)

பெரிய நம்பியும் திருக்கோட்டியூர் நம்பியம் திருமாலையாண்டானும் கூடிச் சந்த்ர புஷ்கரிணிக் கரையிலே
திருப்புன்னைக் கீழெழுந்தருளியிருந்து தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளியிருக்கும் படியையும்,
அவர் அருளிச் செய்தருளும் நல் வார்த்தைகளையும் நினைத்து அநுபவித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய்,
ஆனந்த மக்நராய்க் கொண்டு எழுந்தருளியிருக்கிற அளவிலே திருவரங்கச் செல்வர் பலி ப்ரஸாதிப்பதாக எழுந்தருளிப் புறப்பட,
இவர்களுடைய ஸமாதி பங்கம் பிறந்து எழுந்து இருந்து தண்டனிட வேண்டுகையாலே
‘இந்தக் கூட்டம் கலக்கியார் வந்தார்; இற்றைக்கு மேற்பட ஶ்ரீபலி யெம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே இருக்கக்கடவோம்’
என்று ப்ரதிஜ்ஞை பண்ணிக்கொண்டார்கள் என்று வார்த்தா மாலையிலே உண்டு.

பட்டர் திருத்தின வேதாந்தியான நஞ்சீயரை அநந்தாழ்வான் மேல்நாட்டிலே சென்று கண்டு ‘ஆசார்ய கைங்கர்யத்துக்கு விரோதியான ஸந்யாஸி வேஷத்தை தரித்துத் தப்பச் செய்தீர்; வேர்த்த போது குளித்து, பசித்த போது புசித்து, பட்டர் திருவடிகளே ஶரணம் என்று இருந்தால் உம்மைப் பரம பதத்தில் நின்றும் தள்ளி விடப் போகிறார்களோ? இனிக் கைங்கர்யத்தையும் இழந்து, ஒரு மூலையிலே இருக்க வன்றோ உள்ளது” என்று அருளிச் செய்தார்.

முன்பு ஶைவனாயிருந்து பின்பு தொண்டனூர் நம்பி ஶ்ரீபாதத்திலே திருந்தினாரொரு ஶ்ரீவைஷ்ணவர் திருமலைக்கு எழுந்தருளி,
அநந்தாழ்வானை ஸேவித்து நின்றளவிலே அவர் திருப் பூ மரங்களைப் பிடுங்குவது நடுவதாய்க் கொண்டு
திருவேங்கடமுடையானுக்குத் திரு நந்தவநம் செய்கிறத்தைக் கண்டு
‘அநந்தாழ்வான்! வேங்கடத்தைப் பதியாக வாழ்கிற நித்ய ஸூரிகளை ஒரு விடத்திலே இருக்க வொட்டாமல்
கழுத்தை நெறிப்பது பிடுங்குவதாய்க் கொண்டு ஏதுக்கு நலுங்குகிறீர்;
அடியேனுடைய ஆசார்யன் தொண்டனூர் நம்பி திரு மாளிகையிலே நாள் தோறும் ஶ்ரீவைஷ்ணவர்கள் அமுது செய்தருளின இலை
மாற்றுகிற தொட்டிலே எப்பொழுதும் எடுத்துச் செப்பனிடுகிற கைங்கர்யம் அடியேனதாயிருக்கும்;
அதிலே நாலத்தொன்று தேவர்க்கு தருகிறேன். அந்த பாகவத கைங்கர்யத்திலே அந்வயித்து
*பயிலுஞ்சுடரொளி, *நெடுமாற்கடிமைப் படியே வாழலாம். திருப் பூ மரங்களை பாதியாமல் எழுந்தருள மாட்டீரோ?’ என்று அருளிச் செய்தார்.

அநந்தரம் அங்குத் தானே அந்த ஶ்ரீவைஷ்ணவர்க்கு திருமேனி பாங்கின்றியிலேயாய் மிகவும் தளர்ந்து
அநந்தாழ்வானுடைய திரு மடியிலே கண் வளர, அநந்தாழ்வானும் ஶ்ரீவைஷ்ணவரைப் பார்த்து
‘இப்போது உம்முடைய திருவுள்ளத்தில் ஓடுகிறதேது?’ என்று கேட்க,
அவரும் ‘தொண்டனூர் நம்பி அடியேனுடைய பூர்வாவஸ்தையில் பொல்லாங்கையும் பாராமல் அங்கீகரித்தருளின
அவருடைய திரு மாளிகையில் பின்னாடியை நினைத்துக் கொண்டு கிடக்கிறேன்’ என்று அருளிச் செய்த உடனே திரு நாட்டுக்கு எழுந்தருளினார்.

இத்தால் சொல்லித்தென் என்னில்,
அவருக்கும் திருவேங்கடமுடையான் ஸந்நிதி ஸித்தித்திருக்க, அதில் ஒரு தாத்பர்யமற்று
ஆசார்யன் தம்மை அங்கீகரித்த ஸ்தலமே உத்தேஶ்யமான படி சொல்லிற்று.

————

அந்திமோபாய நிஷ்டை- 7 – நம்பிள்ளை வைபவம் 1

நம்பிள்ளையும் ஶ்ரீபாதத்தில் முதலிகளும் திருவெள்ளறை நாய்ச்சியாரை ஸேவித்து மீண்டு கோயிலுக்கு எழுந்தருளா நிற்க,
திருக் காவேரி இரு கரையும் ஒத்துப் பெருக, ஓடம் கிடையாதபடியாலே தோணியிலே எழுந்தருள,
நட்டாற்றிலே சென்றவாறே அப்போது அஸ்தமித்து மழையும் இருட்டுமாய், அக்கரை இக்கரை முன்னடி தெரியாதே
திக் ப்ரமம் பிறந்து, தோணி அமிழத் தேட, ‘இந்த அவஸ்த்தைக்கு நாலிரண்டு பேர் தோணியை விட்டால் கரையில் ஏறலாம்;
ஒருவரும் விடாதிருக்கில் நம்பிள்ளை முதலாக எல்லாரும் அமிழ்ந்து, தட்டுப் பட்டுப் போகும்’ என்று
தோணி விடுகிறவன் கூப்பிட்டவளவில் ஒருவரும் அதற்கிசைந்து நட்டாறாகையாலே பயாதிஶயத்தாலே தோணியை விட்டார்களில்லை.

அவ்வளவில் ஒரு ஸாத்த்விகை தோணி விடுகிறவனைப் பார்த்து
‘நூறு பிராயம் புகுவாய்! உலகுகளுக்கெல்லாம் ஓருயிரான நம்பிள்ளையைப் பேணிக் கரையிலே விடு’ என்று சொல்லி,
அவனை ஆஶீர்வதித்துத் தோணியை விட்டு அந்தகாரத்தையும் பாராமல் ‘நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்’ என்று ஆற்றிலே விழுந்தார்.
அவ்வளவு கொண்டு தோணி அமிழாமல் மிதந்து அக் கரையிலே சேர்ந்தேறிற்று.
அவ்வளவில் பிள்ளையும் ‘ஐயோ! ஒராத்மா தட்டுப் பட்டு போய் விட்டதே!’ என்று பல காலும் அருளிச் செய்து வ்யாகுலப் பட்டருள,

அந்த ஸாத்த்விகை யம்மை தோணியை விட்டு நாலடி எழப் போன வளவிலே அங்கே ஒரு திடர் ஸந்திக்கத் தரித்து நின்று,
இராக் குரலாகையாலே அருளிச் செய்கிறத்தைக் கேட்டு
‘பிள்ளையே! தேவர் வ்யாகுலப் பட்டருள வேண்டாம்; அடியேனிங்கே நிற்கிறேன்’ என்று குரல் காட்ட,
பிள்ளையும் ‘திடர்கள் மரங்கள் ஸந்தித்தாக வேணும்’ என்று திருவுள்ளம் பற்றி யருளித் தோணிக் காரனை விட்டு
அவளைக் கரையிலே அழைப்பித்துக் கொள்ள, அவளும் திருவடிகளிலே வந்து ஸேவித்து ஆசார்யனை யொழிந்து
வேறொரு ரக்ஷகாந்தரமறியாதவளாகையாலே
‘ஆற்றிலே அடியேன் ஒழுகிப் போகிற போது தேவர் அங்கே வந்து ஒரு கரை மேடாய் வந்து அடியேனை ரக்ஷித்தருளிற்றே?’ என்று கேட்க,
பிள்ளையும் ‘உன்னுடைய விஶ்வாஸம் இதுவான பின்பு அதுவும் அப்படியே யாகாதோ’ என்று
அருளிச் செய்தருளினார் என்று நம்முடைய ஜீயர் பல காலும் அருளிச் செய்தருளுவர்.

வைஷ்ணவனாயிருப்பானொரு ராஜா ஒரு பெருந்திரள் வருகிறத்தைக் கண்டு
‘நம் பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ, நம் பிள்ளை கோஷ்டி கலைந்ததோ’ என்று கேட்டான்.
இப்படி மஹா ஸம்ருத்தியான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே நம்பிள்ளை வாழ்ந்தருளுகிற காலத்திலே
ஶ்ரீபாதத்திலே உடையளாயிருப்பாளொரு அம்மையாருக்குத் திருமாளிகைக்கருகே ஒரு கோல் துறை(தரை) உண்டாய்,
அதிலே குடியிருக்கும் ஸப்ரஹ்மசாரியாய் இருப்பாரொரு ஶ்ரீவைஷ்ணவர், ‘பிள்ளை திருமாளிகைக்கு நெருக்கமாயிருக்கிறது,
இந்த ஒரு கோல் துறையையும் ஆசார்யனுக்குக் கொடுக்க வேணும்’ என்று அந்த அம்மையாருக்குப் பல காலும் அருளிச் செய்ய,

அவளும் ‘கோயிலிலே ஒருகோல் துறை ஆர்க்குக் கிடைக்கும், நான் திருவடி சேருந்தனையும் கொடேன்’ என்ன,
ஶ்ரீவைஷ்ணவரும் அந்தச் செய்தியைப் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘உனக்கொரு ஶரீரத்துக்கு ஒர் சத்திடமன்றோ வேண்டுவது? முதலிகள் எழுந்தருளியிருக்க
வென்றொரு கோல் துறையையும் நமக்குத் தாரும்’ என்று திருவுள்ளம் பற்றியருள,

அவளும் ‘அடியேன் அப்படிச் செய்கிறேன்; தேவரீர் பரம பதத்திலே ஒருகோல் துறை அடியேனுக்குத் தந்தருள வேணும்’ என்ன,
பிள்ளையும் ‘தந்தோம்’ என்று அருளிச் செய்ய,
‘அடியேன் ஸாது, அதிலே பெண் பெண்டாட்டி, தருகிறோம் என்று அருளிச் செய்த வார்த்தையால் போராது,
எழுதி எழுத்திட்டுத் தர வேணும்’ என்ன,
பிள்ளையும் ‘இவள் இப்படிக்கு கேட்பதே’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து,
‘இன்ன வருஷம் இன்ன மாஸம் இத்தனையாம் தேதி இந்த அம்மையாருக்குத் திருக் கலிக்கன்றி தாஸன்
பரம பதத்திலே ஒரு கோல் துறை கொடுத்தேன்; இத்தை ஶ்ரீவைகுண்டநாதன் க்ரயம் செலுத்திக் கொண்டு கொடுத்தருளவும்’ என்று
ஶாஸநம் எழுதித் தம்முடைய திருவெழுத்தும் சாத்திக் கொடுத்தருளினார்.

பின்பு அந்த அம்மையார் திரு முகத்தையும் வாங்கிக் கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதப்பட்டு அன்று
மற்று நாளும் பிள்ளையை ஸேவித்துக் கொண்டு ஸுகமே யிருந்து, மூன்றாம் நாள் பரம பதத்துக்குப் போனாள்.
ஆகையால் உபய விபூதியும் ஆசார்யனிட்ட வழக்காயிருக்குமென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

கூரத்தாழ்வானுடைய திருப்பேரனாரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்
நம்பிள்ளையுடைய ஜ்ஞான பக்தி வைராக்யங்களையும் பாகவத ஸம்ருத்தியையும், லோக பரிக்ரஹத்தையும்,
ஶிஷ்ய ஸம்பத்தியையும் கண்டு பொறுக்க மாட்டாமல் ‘கடி கடி’ என்று கொண்டு போருவராயிருப்பர்.
அக் காலத்திலே அந்த பட்டர் ராஜ ஸ்தாநத்துக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே பின்பழகிய பெருமாள் ஜீயரைக் கண்டு,
‘ஜீயா! நாம் ராஜ கோஷ்டிக்கு போகிறோம்; கூட வாரும்’ என்று ஜீயரைக் கூட்டிக் கொண்டு ராஜ ஸ்தானத்துக்கேற எழுந்தருள,
ராஜாவும் பட்டரை எதிர்க் கொண்டு பஹு மாநம் பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து ஸேவித்துக் கொண்டு
பெரிய திருவோலக்கமா யிருக்கிற வளவிலே,

ராஜா, தான் பஹு ஶ்ருதனாகையாலே வ்யுத்பந்நனாகையாலும், பட்டர் ஸர்வஜ்ஞர் என்கிறத்தை ஶோதிக்க வேணும் என்று விசாரித்து,
‘பட்டரே! “ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஶரதாத்மஜம்” என்று பரத்வம் தோற்றாமல் வர்த்திக்கிற பெருமாள்,
ஜடாயு மஹாராஜருக்கு மோக்ஷம் கொடுத்தபடி எப்படி?’ என்று கேட்க,
பட்டர் அதற்கு உத்தரம் அருளிச் செய்யச் சிறிது விசாரிக்க வேண்டி யிருக்க, அவ் வளவில் ராஜாவுக்கு வேறே பராக்காக,
அவ் வளவில் பட்டரும் ஜீயரைப் பார்த்து,
‘ஜீயா! திருக் கலிகன்றி தாஸர் பெரிய வுடையாருக்குப் பெருமாள் மோக்ஷம் கொடுத்தருளினத்தைப் எப்படி நிர்வஹிப்பர்?’ என்று கேட்க,
ஜீயரும் “ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந் தாநேந ராகவ:” என்று பிள்ளை நிர்வஹிப்பர் – என்ன,

பட்டரும் ‘ஆமோ’ என்று அத்தைத் திருவுள்ளத்திலே யோசித்து, ‘ஒக்கும்’ என்று எழுந்தருளி யிருக்க,
ராஜாவும் அவ்வளவில் திரும்பி, ‘பட்டரே! நாம் கேட்டதற்கு உத்தரம் அருளிச்செய்தீரில்லை’ என்ன,
பட்டரும் ‘நீ பராக்கடித்திருக்க நாம் சொல்லாவதொரு அர்த்தமுண்டோ? அபிமுகனாய் புத்தி பண்ணிக் கேள்’ என்று
“ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந் தாநேந ராகவ: குரூந் ஶுஶ்ரூஷயா வீரோ தநுஷா யுதி ஶாத்ரவாந்” என்று
இந்த ஶ்லோகத்தை பட்டர் அருளிச் செய்ய,
ராஜாவும் போர வித்தராய், ‘பட்டரே நீர் ஸர்வஜ்ஞர் என்றது நான் அறிந்தேன்’ என்று
ஶிர:கம்பம் பண்ணி மிகவும் ஶ்லாகித்து, மஹாநர்க்கங்களான அநேகாபரணங்கள், உத்தமமான அநேக வஸ்த்ரங்கள்,
அநேக தநங்களெல்லாத்தையும் கட்டிக் கொடுத்துத் தானும் தோற்று, பட்டர் திருவடிகளிலே விழுந்து,
‘நீர் திருமாளிகையிலேற எழுந்தருளும்’ என்று ஸத்கரித்துவிட,

பட்டரும் ராஜா கொடுத்த த்ரவ்யங்களை வாரிக் கட்டுவித்துக் கொண்டு அங்கு நின்றும் புறப்பட்டு
ஜீயர் திருக் கையைப் பிடித்துக் கொண்டு, ‘ஜீயரே! என்னையும் இந்த தநங்களையும் நம்பிள்ளை திருவடிகளிலே
கொண்டு போய்க் காட்டிக் கொடும்’ என்று போர ஆர்த்தியோடே அருளிச் செய்ய,
ஜீயரும் பட்டர் அருளிச்  செய்தபடியே நம்பிள்ளை கோஷ்டியிலே கொண்டுபோய்க் காட்டிக் கொடுக்க,

நம்பிள்ளையும் தம்முடைய பரமாசார்ய வம்ஶ்யரான பட்டர் எழுந்தருளுகையாலே மிகவும் ஆதரித்து,
‘ஐயரே! இது ஏது?’ என்று கேட்டருள, பட்டரும் பிள்ளை திருமுக மண்டலத்தைப் பார்த்து
‘தேவரீருடைய திவ்ய ஸூக்தியில் பதினாயிரம் கோடியில் ஒன்றுக்குப் பெற்ற தநமிதுவாகையாலே
அடியேனையும் இந்த த்ரவ்யங்களையும் அங்கீகரித்தருள வேணும்’ என்ன,

‘ஆகிறதென்? கூரத்தாழ்வானுடைய திருப் பேரனாரான நீர் இப்படிச் செய்ய ப்ராப்தமன்று காணும்’ என்ன,

பட்டரும் ‘நித்ய ஸம்ஸாரியான ராஜா தேவரீருடைய திவ்ய ஸூக்தியிலே சிந்தின சொல்லுக்குத் தோற்றுக் கொடுத்த தநமிது;
ஆன பின்பு கூரத்தாழ்வானுடைய குலத்தில் பிறந்த அடியேன் அந்தக் குல ப்ரபாவத்துக்குத் தகுதியாகும்
தேவருக்கு ஸமர்ப்பிக்கலாவதொன்றும் இல்லையே யாகிலும், அசலகத்தே யிருந்து இத்தனை நாள் தேவரை
இழந்து கிடந்த மாத்ரமன்றிக்கே தேவருடைய வைபவத்தைக் கண்டு
“அஸூயா ப்ரஸவபூ:” என்கிறபடியே அஸூயை பண்ணித் திரிந்த இவ் வாத்மாவை தேவருக்கு ஸமர்ப்பிக்கை யல்லது
வேறு எனக்கொரு கைம்முதலில்லை. ஆகையாலே அடியேனை அவஶ்யம் அங்கீகரித்தருள வேணும்’ என்று
கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு பிள்ளை திருவடிகளிலே ஸேவிக்க,

(அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர் அஸூயாப்ரஸ்வபூ க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-

1-அமர்யாத –வரம்பு மீறினவனும் 2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும் 3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும் 4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும் 5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும் 6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும் 7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும் 8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும் சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16 சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே- 9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும் 10-பாபிஷ்ட –மஹா பாபியுமான பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9- ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4- நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2- அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய – ராவணோ நாம துர்வ்ருத்த நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் – அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும் உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய் கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் )

பிள்ளையும் பட்டரை வாரி யெடுத்துக் கட்டிக் கொண்டு, விஶேஷ கடாக்ஷம் பண்ணி யருளி, தம்முடைய திரு வுள்ளத்திலே
தேங்கிக் கிடக்கிற அர்த்த விஶேஷங்களெல்லாத்தையும் ஒன்றும், தப்பாமல் பட்டருக்கு ப்ரஸாதித்தருள,
இவரும் க்ருதார்த்தராய், ஒரு க்ஷணமும் பிரியாமல் பிள்ளை ஸந்ததியிலே ஸதாநுபவம் பண்ணி,
ஸேவித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய் எழுந்தருளியிருந்தார்.

அக் காலத்திலே பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹித்தருள- பட்டர் பிள்ளை யருளிச் செய்ததொன்றும் தப்பாமல் கேட்டு,
தரித்து, எழுதித் தலைகட்டினவாறே, தாமெழுதின க்ரந்தங்களை ஸந்நிதியிலே கொண்டு போய் வைக்க ‘இதேது?’ என்று கேட்டருள,
‘தேவரீர் இந்த உருத் திருவாய்மொழி நிர்வஹித்தருளின கட்டளை’ என்ன,
பிள்ளையும், ‘ஆமோ’ என்றுக் க்ரந்தங்களையும் அவிழ்த்துப் பார்க்க,
நூறாயிரத்து இருபத்தைந்தாயிரம் க்ரந்தமாக எழுதி மஹாபாரத ஸங்க்யை யாயிருக்க, அத்தைக் கண்டு பிள்ளை பெருக்க வ்யாகுலப்பட்டு,
பட்டரைப் பார்த்து, ‘இதுவென்? நம்முடைய அநுமதி யின்றிக்கே நாட்டுக்கு பாட்டுரையாம்படி நீர் நினைத்த படியே
திருவாய்மொழியை இப்படி வெளியிடுவானென்?’ என்ன,

பட்டரும் ‘தேவரீர் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை எழுதினதொழிய,
ஒரு கொம்பு சுழி ஏற எழுதினதுண்டாகில் பார்த்தருளும்’ என்ன,

பிள்ளை பட்டரைப் பார்த்து, ‘திருவாய்மொழி நிமித்தமாக நாம் வாக்காலே சொன்னத்தை எழுதினீராகில்,
நம்முடைய நெஞ்சை எழுதப் போகிறீரோ?’ என்று வெறுத் தருளிச் செய்து,
‘உடையவர் காலத்திலே திருக் குருகைப்பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு ஶ்ரீ விஷ்ணு புராண ப்ரக்ரியையாலே
ஆறாயிர க்ரந்தமாக வ்யாக்யாநமிடுகைக்கு உடையவரை அநுமதி பண்ணுவித்துக் கொள்ளுகைக்குட்பட்ட யத்நத்திற்கு ஒரு மட்டில்லை.
ஆன பின்பு நம்முடைய காலத்திலே நம்மையும் கேளாமல் ஸபாத லக்ஷ க்ரந்தமாக இப்படி நெடுக எழுதினால்
ஒரு ஶிஷ்யாசார்ய க்ரமமற்று அஸம்பரதாயமுமாய்ப் போங்காணும்’ என்றருளிச் செய்து,
பட்டர் திருக் கையிலும் அவர் எழுதின க்ரந்தத்தை வாங்கிக் கொண்டு நீரைச் சொரிந்து கரையானுக்குக் கொடுக்க,
அவை அன்றே ம்ருத்தாய்ப் போய்த்து.

(நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் திருநக்ஷத்திரம் : ஐப்பசி அவிட்டம் அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : அவருடைய தகப்பனார் (பட்டர்), நம்பிள்ளை சிஷ்யர் : வலமழகியார் பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம் அவர் எழுதிய நூல்கள் : திருவாய்மொழி 125000 படி வ்யாக்யானம் , பிஷ்ட பசு நிர்ணயம், அஷ்டாக்ஷர தீபிகை, ரஹஸ்ய த்ரயம், த்வய பீடக்கட்டு, தத்வ விவரணம், ஸ்ரீவத்ச விம்சதி முதலியவை

இவர் பராசர பட்டரின் குமாரன் என்றும் பேரன் என்றும் சொல்லப்படுகிறார். இவர் முதலில் உத்தண்டபட்டர் என்று பெயரிடப்பட்டு பிற்காலத்தில் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் என்று புகழப்பட்டார். பெரிய திருமுடி அடைவு என்னும் நூலில் இவர் பராசர பட்டரின் குமாரன் என்றும், 6000 படி குரு பரம்பரை ப்ரபாவத்தில் இவர் கூரத்தாழ்வானின் பேரன் என்றும் அறியப்படுகிறார். பட்டோலையில் இவர் வேத வ்யாஸ பட்டரின் கொள்ளுப்பேரன் என்றும் அறியப்படுகிறார். இவ்வாறு சில அபிப்ராய பேதங்கள் இருந்தாலும் அவர் நம்பிள்ளையின் அன்பிற்குப் பாத்திரமான சிஷ்யரானார்.

லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் | ஸ்ரீவத்சசிஹ்னவம்சாப்திஸோமம் பட்டார்யாமாச்ரயே ||-நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் தனியன்)

அந்ந்தரம், பிள்ளை தமக்கு ப்ரிய ஶிஷ்யராய், தம்முடைய பக்கலிலே ஸகலார்த்தங்களையும் நன்றாகக் கற்றிருக்கிற
பெரியவாச்சான் பிள்ளையை நியமிக்க, அவரும் திருவாய்மொழிக்கு ஶ்ரீராமாயண ஸங்க்யையிலே
இருபத்து நாலாயிரமாக ஒரு வ்யாக்யாநம் எழுதினார்.

அதுக்கநந்தரம் பிள்ளைக்கு அந்தரங்கமான வடக்குத் திருவீதிப் பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹிக்கிற கட்டளையை
பகல் கேட்டு தரித்து, ராத்ரியில் எழுதித் தலைக் கட்டினவாறே அத்தைப் பிள்ளை ஸந்நிதியிலே கொண்டு போய் வைக்க,
நம்பிள்ளை ‘இதேது?’ என்று கேட்டருள,

அவரும் ‘தேவரீர் இந்த உரு திருவாய்மொழி நிர்வஹித்த கட்டளை’ என்று விண்ணப்பம் செய்ய,

பிள்ளையும் ஸ்ரீகோஶங்களை அவிழ்த்து பார்த்தருள, அதிஸங்கோசமுமின்றிக்கே, அதிவிஸ்தரமுமின்றிக்கே
ஆனைக் கோலம் செய்து புறப்பட்டாப் போலே மிகவும் அழகாய், ஶ்ருத ப்ரகாஶிகை கட்டளையிலே
முப்பத்தாறாயிர க்ரந்தமாயிருக்கையாலே நம்பிள்ளை அத்தைக் கண்டு மிகவும் உகந்தருளி,
வடக்கு திருவீதிப் பிள்ளையைப் பார்த்தருளி
‘நன்றாக எழுதினீர்; ஆனாலும் நம்முடைய அநுமதி யின்றிக்கே எழுதினீராகையாலே க்ரந்தங்களைத் தாரும்’ என்று
அவர் திருக் கையில் நின்றும் வாங்கி வைத்துக் கொண்டு

பின்பு தமக்கு அபிமத ஶிஷ்யரான ஶ்ரீமாதவப் பெருமாள் என்று திருநாமத்தை யுமுடையரான
ஈயுண்ணிச் சிறியாழ்வார் பிள்ளைக்கு ஈடு முப்பத்தாறாயிரமும் கொடுத்தருளினார் என்னும்,
இவ் வ்ருத்தாந்தம் உபதேசரத்தின மாலையிலே
“சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதேரார் தமிழ் வேதத்தீடுதனைத் தாருமென வாங்கி முன்
நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார் பின்னதனைத்தான்” என்று
நம்முடைய ஜீயர் தாமே அருளிச் செய்தருளினார்.
ஆகையாலே இன்னமும் திருவாய்மொழிக்குண்டான வ்யாக்யாந கட்டளைகள் எல்லாம்
உபதேச ரத்தின மாலையிலே தெளியக் காணலாம்.

ஆக இப்படி நம்பிள்ளை அவதரித்து நெடுங்காலம் ஜகத்தை வாழ்வித்தருளின அநந்தரம் திருநாட்டுக்குக்கெழுந்தருளினார்.
அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த முதலிகளெல்லாரும் திருமுடி விளக்குவித்துக் கொள்ள,
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்கு நேரே ப்ராதாவாய் இருப்பாரொருவர் பட்டரைப் பார்த்து
‘திருக்கலிகன்றி தாஸர் பரம்பத ப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள் கூரகுலத்திலே பிறந்த நீர் தலை
ஷௌரம் பண்ணிக் கொண்டது கூரகுலத்துக்கு இழுக்கன்றோ?’ என்ன,

பட்டரும் அவரைப் பார்த்து ‘அப்படியாம்; உங்கள் கூர குலத்துக்கு இழுக்காகப் பிறந்தேனே’ என்ன,

அவரும் பட்டரைப் பார்த்து, ‘ஏன் வ்யதிரேகம் சொல்லுகிறீர்?’ என்ன,

பட்டரும் ‘நம்பிள்ளை திருநாட்டுக்கு எழுந்தருளினால் அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த நான்
கூர குலத்தில் பிறந்தேனாகில் ஆழ்வானுடைய ஶேஷத்வத்துக்குத் தகுதியாக தாஸ க்ருத்யமான
மோவாயும் முன் கையும் வபநம் பண்ணுவித்துக் கொள்ள வேண்டி யிருக்க,
அத்தைச் செய்யாதே ஶிஷ்ய புத்ரர்களுடைய க்ருத்யமான தலை மாத்ரம் ஷௌரம் செய்வித்துக் கொண்டது
உங்களுடைய கூரக் குலத்துக்கு இழுக்கன்றோ பின்னை?’ என்ன,

அந்த ப்ராதாவானவர் பட்டரைப் பார்த்து ‘உம்முடைய திருக் கலிகன்றி தாஸர் போய் விட்டாரே!
இனி உமக்கு அவர் பக்கல் எத்தனை நாள் உபகார ஸ்ம்ருதி நடக்கும்?’ என்ன,

பட்டரும் ‘நம்பிள்ளை திருவடிகளில் உபகார ஸ்ம்ருதி அடியேனுக்கு யாவதாத்மபாவி நடக்கும்’ என்ன,

அந்த ப்ராதாவானவர் பட்டர் அருளிச் செய்கிறதைக் கேட்டு ‘‘உபகார ஸ்ம்ருதி ஆசார்ய விஷயத்தில் யாவதாத்மபாவியோ?
இதொரு அர்த்த விஶேஷமிருந்த படி என்!’ என்று, பெரிய வித்வானாகையாலும், குல ப்ரபாவத்தாலும் தெளிந்து, போர வித்தராய்,
பட்டர் திருவடிகளிலே திருந்தி, தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் கேட்டுக் கொண்டு
ஜ்ஞாநாதிகராய் விட்டார் என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

சிலர் ஶ்ரீபாஷ்யத்தை எப்படியிருக்குமென்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்னபடி –
நடுவில் திரு வீதியிலே அந்தியம் போதாக, பழுத்த வேஷ்டியும் உத்தரீயமுமாக தரித்துக் கொண்டு
கூரத்தாழ்வான் என்றொரு மூர்த்தீகரித்து ஸஞ்சரியா நிற்கும்;
அங்கே சென்றால் ஶ்ரீபாஷ்யத்தைக் கண்ணாலே காணலாம் என்றார்கள்.

(தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -ஆழ்வார்-பழுத்த வேஷ்டியும்-செங்கல் பொடிக்கூரை வெண் பல் தவத்தவர்)

சிலர் பகவத் விஷயம் எங்கே கேட்கலாம் என்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்ன படி –
நடுவில் திருவீதியிலே பட்டர் என்பதொரு தேன் மா பழுத்து நிற்கிறது. அங்கே சென்று நன்றாகப் பார்த்து,
கல்லிட்டெறியாதே, ஏறித் துகையாதே, அடியிலே இருக்க மடியிலே விழும் என்றார்கள்.

பட்டருக்கு அதி பால்யமாயிருக்கச் செய்தே, ‘ஸர்வஜ்ஞன் வந்தான்’ என்று ஒருவன் அநேக ஸம்ப்ரமத்தோடே விருதூதி வர,
பட்டர் அவனைப் பார்த்து ‘நீ ஸர்வஜ்ஞனோ?’ என்ன,

அவனும் ‘நாம் ஸர்வஜ்ஞனாம்’ என்ன,

பட்டர் இரண்டு திருக் கையாலும் கிடந்த புழுதியை அள்ளி அவனைப் பார்த்து ‘இது எத்தனை என்று சொல்’ என்ன,
அவன் அதுக்கு ஒன்றும் சொல்ல மாட்டாமல் லஜ்ஜித்து வாயடைத்து, கவிழ்தலையிட்டு நிற்க,

பட்டர் ‘உன்னுடைய ஸர்வஜ்ஞனென்கிற விருதையும் பொகடு’ என்ன,
அவனும் அவை எல்லாத்தையும் பொகட்டு ‘உமக்கு தோற்றேன்’ என்ன,

பட்டர் அவனைப் பார்த்து ‘கெடுவாய்! இது ஒரு கைப் புழுதி என்று சொல்லி ஸர்வஜ்ஞன் என்று விருதூதித் திரிய மாட்டாதே
அஜ்ஞனாய் விட்டாயே! இனிப் போ’ என்று அவனை பரிபவித்துத் தள்ளி விட்டார்.

பாஷண்டி வித்வான்கள் அநேக பேருங்கூடி ராஜாஸ்தானத்திலே சென்று ராஜாவுடனே தப்த முத்ரா தாரணத்துக்கு
ப்ரமாணமில்லை என்று ப்ரதிஜ்ஞை பண்ண, ராஜாவும் மஹா ஸமர்த்தனாயிருக்கையாலே
இத்தை நன்றாக அறிய வேணும் என்று பட்டரைப் பார்த்து
‘பட்டரே! தப்த முத்ராதாரணத்துக்கு ப்ரமாணமுண்டோ?’ என்ன,

அவரும் ‘நன்றாக உண்டு’ என்ன,

‘உண்டாகில் காட்டிக் காணீர்’ என்ன,

பட்டர் ‘என் தோளைப் பாரீர்’ என்று திருத் தோளும் திரு விலச்சினைகளையும் ராஜாவுக்கு காட்ட,
ராஜாவும் ‘அப்படியே ஆம்; ஸர்வஜ்ஞரான பட்டர் செய்ததே ப்ரமாணம்’ என்று தானும் விஶ்வஸித்து,
ப்ரமாணமில்லை என்ற பாஷண்டிகளையும் வாயடைப்பித்துத் தள்ளி ஓட்டி விட்டார் என்று
இவ் வ்ருத்தாந்தங்களெல்லாம் பெரியோர்கள் அருளிச் செய்வார்கள்.

ஆகையாலே
‘மட்டவிழும் பொழில் கூரத்தில் வந்துதித்து இவ்வையமெல்லாம் எட்டுமிரண்டும் அறிவித்த எம்பெருமான் இலங்கு
சிட்டர் தொழும் தென்னரங்கேசர் தம் கையில் ஆழியை நானெட்டன நின்ற மொழி ஏழுபாருமெழுதியதே” என்று
இந்த திருநாமமும், ஶ்ருதி வாக்யமும்
“விதாநதோ ததாந: ஸ்வயமேநாமபி தப்த சக்ர முத்ராம், புஜயேவமமைவ பூ ஸுராணாம் பகவல் லாஞ்சந் தாரணே ப்ரமாணம்” என்று
பட்டர் தாமருளிச் செய்த இந்த ஶ்லோகமும் லோகத்திலே ப்ரஸித்தமாய்த்து.

இவ் வ்ருத்தாந்தங்களால் சொல்லிற்று ஏதென்னில்
இவர்கள் எல்லாதனைலும் பெரியோர்களே யாகிலும் ஒருவனுடைய அபிமாநத்திலே ஒதுங்குகையாலே
ஸர்வர்க்கும் ஆசார்யாபிமாநமே உத்தாரகம் என்னும் அர்த்தம் சொல்லித்தாயிற்று.

———-

அந்திமோபாய நிஷ்டை- 8 – ஆனி திரு மூலம் –
ரம்ய ஜாமாத்ருவும் (ஸ்ரீரங்க நாதன்) ரம்ய ஜாமாத்ரு முனியும் (மா முனிகள்)

மலைக் குனிய நின்ற பெருமாள் என்னும் திரு நாமத்தை யுடையராய் -இப்போது தர்ஶநத்துக்குக் கர்த்தாவாய்க்
கோயிலிலே நித்ய வாஸமாக எழுந்தருளி யிருக்கிற பட்டருடைய திருத் தகப்பனார்- நம்முடைய ஜீயருக்குத்
திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரமும் நன்றாக பாடமுமாய்,
மற்றுமுள்ள வ்யாக்யாநங்களெல்லாம் பாட ப்ராயமுமாயிருக்கையாலே ‘முப்பத்தாறாயிர பெருக்கர்! இங்கே வாரும்’ என்று
நம்முடைய ஜீயரைத் தம்முடைய அருகே அணைத்துக் கொண்டு மிகவும் ப்ரியப்பட்டு உபலாலிப்பர்.

அவ்வளவன்றிக்கே
“நல்லதோர் பரீதாபி வருடந்தன்னில் நலமான ஆவணியின் முப்பத்தொன்றில் சொல்லரிய சோதியுடன் விளங்கு
வெள்ளிக் கிழமை வளர் பக்கம் நாலாம் நாளில் செல்வ மிகு திருமண்டபத்தில் செழுந் திருவாய் மொழிப் பொருளைச்
செப்புமென்று வல்லியுடை மணவாளரரங்கர் நங்கள் மணவாள முனிக்கு வழங்கினாரே” என்கிறபடியே
பரீதாபி வருஷத்தில் ஆவணி மாஸத்தில் பெருமாள் திருப் பவித்திரத் திருநாள் எழுந்தருளி
அணி யரங்கன் திரு முற்றத்திலே பெரியோர்களெல்லோரும் கூடிப் பெரிய திரு வோலக்கமாகத் தம்மை ஸேவித்து
மங்களாஶாஸநம் பண்ணிக் கொண்டு நிற்கிற வளவிலே பெருமாள் தாமே நம்முடைய ஜீயரைத் தனித்து அருளப் பாடிட்டருளி,
ஶ்ரீ ஶடகோபனையும் தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதித்தருளி,
‘நம்முடைய பெரிய திரு மண்டபத்திலே நாளை தொடங்கித் திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரமும் நீர் ஓருரு நிர்வஹியும்’ என்று
திருவாய் மலர்ந்தருளி, பெருமாள் தாமும் நாச்சிமார்களும் ஸேநை முதலியாரும் ஆழ்வார் எதிராசனுடனே
பெரிய திரு மண்டபத்திலே பெரிய திருவோலக்கமாக எழுந்தருளி யிருந்து நம்முடைய பெரிய ஜீயரைத்
திருவாய்மொழி நிர்வஹிக்கும்படி பெருமாள் திருவுள்ளம் பற்றி யருளினார்.

ஆகையாலே ஒரு ஸம்வத்ஸரம் ஒரு விக்நமற அவ் விடத்திலே திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரம் முதலாக
ஐந்து வ்யாக்யாநத்துடனே நடந்து, மீளவும் ஆ(னி)வணி மாஸத்திலே திருவாய்மொழி சாற்றுகிற போது
முன்பு போலே அனைத்துப் பரிகரத்துடனே கூடப் பெரிய திருமண்டபத்திலே பெருமாள் ஏறி யருளி(ஜீயர்)
திருவாய்மொழி சாற்றுகிற கட்டளையும் திருச் செவி சாற்றி யருளி, பெருமாள் மிகவும் திருவுள்ளமுகந்தருளி,
ஜீயரையும் நன்றாகப் பரிபாலித்தருளினார் என்னுமதுவும் ஜகத்ப்ரஸித்தம்.

ஆகையாலே
“நாமார் பெரிய திருமண்டபமார் நம்பெருமாள் தாமாக நம்மைத் தனித்தழைத்து நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளுமிங்கே வந்துரை என்றேவுவதே வாய்ந்து” என்று
நம்முடைய ஜீயர் தாமும் தமக்குப் பெருமாள் செய்தருளின க்ருபாதிஶயத்துக்கும்
தம்மை விநியோகம் கொண்டருளின வ்யாவ்ருத்திக்கும் உபகார ஸ்ம்ருதி பண்ணி யருளினார்.

‘வலம்புரி யாயிரம் சூழ் தர வாழி மருங்கொளுரு செலம் செல நின்று முழங்குக போல் தனது தொண்டர்
குலம் பல சூழ் மணவாள மா முனி கோயிலில் வாழ நலங்கடல் வண்ணன் முன்னே தமிழ் வேதம் நவிற்றனனே.–என்றும்
தாராரரங்கரிதற்கு முன்னாள் தந்தாமளித்தார் சீரார் பெரிய திருமண்டபத்துச் சிறந்தாய் என்
ஆராவமுதனையான் மணவாள மா முனியை யழைத்து ஏரார் தமிழ் மறை இங்கே யிருந்து சொல் என்றனனே” என்று
இத்யாதிகளாலே
நம்முடைய முதலிகளும் ஜீயருடைய ஶிஷ்ய ஸம்ருத்தியையும் பெருமாள் ஆர்க்கும் செய்யாத ஆதரம்
ஜீயருக்குச் செய்தருளினார் என்னுமத்தையும் அநுஸந்தித்தார்கள்.

இப்போது ஸ்வாசார்ய வைபவமும் சொல்லுவானென் என்னில்,
“குரும் ப்ரகாஶயேந் நித்யம்”,
“எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோபனருளையே”,
“வக்தவ்யம் ஆசார்ய வைபவம்” என்னக் கடவதிறே.

ஒரு நாள் நம்பிள்ளை பகவத் விஷயம் அருளிச் செய்த கோஷ்டி கலைந்த வளவிலே பின்பழகிய பெருமாள் சீயர் தண்டனிட்டு
‘இவ் வாத்மாவுக்கு ஸ்வரூபோபாய- புருஷார்த்தங்கள் இவை என்று அருளிச் செய்ய வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘எம்பெருமா(னாரு)னுடைய இச்சை ஸ்வரூபம், இரக்கம் உபாயம், இனிமை உபேயம்’ என்று அருளிச் செய்ய,
‘அப்படி யன்று அடியேன் நினைத்திருப்பது’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்ய,
பிள்ளை ‘ஆனால் உமக்கென்ன சில பிள்ளைக் கிணறுகளுண்டோ? அத்தைச் சொல்லிக் காணீர்’ என்ன,
‘தேவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கும் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமையாய் இருக்கை ஸ்வரூபம்,
அவர்களபிமாநமே அடியேனுக்கு உபாயம்,
அவர்களுடைய முக மலர்ச்சியே அடியேனுக்கு உபேயம் என்றிருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ஜீயரை உகந்தருளினார்.

———

அந்திமோபாய நிஷ்டை- 9 – நம்பிள்ளை வைபவம் 2

நம்பிள்ளை காலத்திலே முதலி யாண்டானுடைய திருப் பேரனார் கந்தாடை தோழப்பர் நம்பிள்ளை யுடைய வைபவத்தைக் கண்டால்
அஸூயையாலே பொறுக்க மாட்டாமல் இருப்பதாய், தோழப்பர் ஒரு நாள் கோயிலுக்குள்ளே பெருமாளை ஸேவித்துக் கொண்டெழுந்தருள,
நம்பிள்ளையும் முதலிகளும் பெருமாளை ஸேவிப்பதாகப் பெருந்திரளோடு கோயிலுக்குள்ளே எழுந்தருள,
தோழப்பர் அந்த ஸம்ருத்தியைக் கண்டு பொறுக்கமாட்டாமல் சீறிப் பெருமாள் ஸந்நிதியிலே நம்பிள்ளையை அநேகமாகப் பரிபவிக்க,
நம்பிள்ளையும் அத்தைக் கேட்டு நடுங்கிக் கொண்டு பெருமாளை ஸேவித்துப் புறப்பட்டெழுந்தருள,

அந்தச் செய்தியை ஜ்ஞாநாதிகையாயிருக்கிற தோழப்பர் தேவிகள் கேட்டுப் பெருக்க வ்யாகுலப்பட்டுத்
திருமாளிகைக்குள்ளே செய்கிற கைங்கர்யங்களையும் விட்டு, வெறுத்தருளி யிருக்க,
அவ்வளவிலே தோழப்பரும் பெருமாளை ஸேவித்து மீண்டு திருமாளிகைக்கெழுந்தருள,
தேவிகள் முன்பு போலே எதிரே புறப்பட்டு ப்ரியத்துடனே தமக்கொரு கைங்கர்யங்களும் பண்ணாமையாலே
தோழப்பர் தம்முடைய தேவிகளைப் பார்த்து ‘உன்னை நாம் அங்கீகரித்தவன்று தொடங்கி இன்றளவாக
ஆசார்ய ப்ரதிபத்தி பண்ணிக்கொண்டு போந்தாய், இன்று உதாஸீநரைப்போலே இராநின்றாய். இதுக்கடி ஏது?’ என்று கேட்க,

தேவிகள் தோழப்பரைப் பார்த்து, ‘வாரீர்! ஆழ்வார் தம்முடைய அவதாரம் போலே ஒரு அவதார விஶேஷமாய்,
பெருமாளுக்கு ப்ராண பூதராயிருந்துள்ள நம்பிள்ளையைப் பெருமாள் ஸந்நிதியிலே கூசாமல் அநேகமாகப் பரிபவித்து
இப்படிச் செய்தோம் என்கிற பயாநுதாபங்களுமற்று, உஜ்ஜீவிக்க வந்திருக்கிற உம்மோடு எனக்கென்ன ஸம்பந்தமுண்டு?
நீர் என்னை வெறுத்தாராகில் என்னுடைய மாதா பிதாக்கள் உம்முடைய கையில் காட்டித் தந்த என்னுடைய ஶரீரத்தை
உமக்கு வேண்டினத்தைச் செய்து கொள்ளும்.
என்னுடைய ஆத்மாவை எங்களாசார்யர் அடியிலே அங்கீகரித்தருளினவன்றே நான் உஜ்ஜீவித்தேன்,
ஆகையாலே ‘பத்மகோடிஶதேநாபி நக்ஷமாமி கதாசந’ என்று பாகவத நிந்தை பண்ணினவர்களை
ஒரு காலும் க்ஷமிப்பதில்லை என்று பெருமாள் தாமே அருளிச் செய்த திருமுகப் பாசுரத்தை அறிந்தும்,
அறியாதவராயிருக்கிற உம்மோடு எனக்கு ஸஹ வாஸம் கூடாது; ஆகையாலே நான் என் இஷ்டத்திலே இருந்து ஈடேறிப் போகிறேன்” என்ன,

தோழப்பரும் தேவிகள் சொல்லுகிற வார்த்தைகளைப் கேட்டும் சற்று போதிக்கும் திகைத்து எழுந்தருளி யிருந்து,
பெரிய வித்வானாகையாலும், குல ப்ரபாவத்தாலும் அஸூயையால் வந்த திருவுள்ளத்தில் வந்த கலக்கம் போய்,
தெளிந்து தேவைகளைப் பார்த்து ‘நீ சொன்னதெல்லாம் ஒக்கும்; நாம் தப்பும் செய்தோம். இனிமேல் செய்ய அடுக்குமது ஏது?’ என்ன,

தேவிகளும் ‘ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடாதே கொள்ளீர். கெடுத்த விடத்தில் தேடீர்’ என்ன,

தோழப்பரும் ‘அதுக்குப் பொருள் ஏது?’ என்ன,

தேவிகள் ‘பரம க்ருபையாளரான நம்பிள்ளை திருவடிகளிலே சென்று ஸேவித்து, அவரை க்ஷாமணம் பண்ணுவித்துக் கொண்டு
அவர் க்ருபை பண்ணியருள ஈடேறுவீர்’ என்ன,

தோழப்பரும் ‘நான் இப்போது அவரை மஹத்தான பெருமாள் திருவோலக்கத்திலே பரிபவித்து
இப்போது அவர் ஸந்நிதியிலே போய் நிற்க வென்றால் எனக்கு லஜ்ஜாபயங்கள் வர்த்தியா நின்றது;
நீ கூட வந்து க்ஷமிப்பிக்க வேணும்’ என்ன,

தேவிகள், தோழப்பர் அருளிச் செய்கிறத்தைக் கேட்டு ‘அப்படியே செய்கிறேன்’ என்று கடுக எழுந்திருந்து
அவரையும் கூட்டிக் கொண்டு நம்பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகப் புறப்படுகிற வளவிலே

நம்பிள்ளை செய்தபடி –
கோயிலுக்கு [கோயிலிலிருந்து] எழுந்தருளின பின்பு முதலிகளெல்லாரையும் ‘உங்களிடங்களிலே போங்கோள்’ என்றருளிச் செய்து,
பகலெல்லாம் அமுது செய்தருளாமல் தம்முடைய திருமாளிகை யளவிலே எழுந்தருளி யிருந்து,
போது அஸ்த்தமித்தவாறே ஒத்த {ஒற்றைத்} திருப் பரிவட்டத்துடனே முட்டாக்கிட்டுக் கொண்டு தாம் ஒருவருமே எழுந்தருளி,
கந்தாடை தோழப்பர் திருமாளிகை வாசலிலே கைப் புடையிலே வந்து கண் வளர்தருள,

தோழப்பரும் தேவிகளும் திரு விளக்கையும் ஏற்றிக் கொண்டு பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகத் திருமாளிகை வாசலிலே
புறப்பட்ட வளவிலே திரு விளக்கொளியிலே ஒரு வெள்ளை கைப் புடையிலே கிடக்கிற அத்தைக் கண்டு
தோழப்பர் ‘இங்கு ஆர் கிடக்கிறார்?’ என்று கேட்க,

பிள்ளை ‘அடியேன் திருக்கலிக்கன்றி தாஸன்’ என்ன,

அவ்வளவில் தோழப்பர் ‘இதுவென்? நீரிருந்தபடியென்?’ என்று திகைத்து, பிள்ளையைப் பார்த்து,
‘மஹா தேஜஸ்வியான நம்மைப் பெருமாள் திரு வோலக்கத்திலே பரிபவிக்கலாவதே என்கிற கோபாதிஶயத்தாலே
நம்முடைய வாசலிலே மூர்க்கம் செய்வதாக வந்து கிடக்கிறீரோ?’ என்ன,

பிள்ளை தோழப்பரைப் பார்த்து ‘அடியேன் அப்படிச் செய்யவில்லை’ என்ன,

‘ஆகில் இங்கு வந்தது கிடப்பானென்?’ என்ன,

பிள்ளை அருளிச் செய்தபடி – ‘பெரிய பெருமாள் ஸந்நிதியிலே முதலியாண்டானுடைய திருப் பேரனாரான தேவரீர்
திரு வுள்ளம் கலங்க வர்த்தித்த மஹா பாபியான அடியேனுக்கு தேவர் திருவாசலல்லது புகுவாசல் மாண்டு வந்து கிடக்கிறேன்’ என்ன,

இவரை அநுவர்த்திப்பதாகப் புறப்பட்டு வந்து நிற்கிற தோழப்பரும் பிள்ளை கண் வளர்ந்தருளுகிற தைந்யத்தையும் கண்டு,
அவருடைய நைச்யமான வார்த்தைகளையும் கேட்டு ‘இதோர் அதிகரமிருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
பிள்ளையை வாரி எடுத்தணைத்துக் கட்டிக் கொண்டு ‘இத்தனை நாளும் நீர் சிறிது பேருக்கு ஆசார்யர் என்றிருந்தேன்;
இப்போது லோகத்துக்கெல்லாம் நீரே ஆசார்யராகைக்கு ப்ராப்தர் என்றறிந்தேன் என்று –
‘லோகாசார்யர்’ என்று தோழப்பர் உகந்து பிள்ளைக்கு திருநாமம் சாற்றி, தம்முடைய திருமாளிகைக்குள்ளே கொண்டு புக்கு,
தாமும் தேவிகளுமாகப் பிள்ளையை அநேகமாக அநுவர்த்தித்து அவர் திருவுள்ளத்தையும் நன்றாக உகப்பித்துத்
தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் பிள்ளை திருவடிகளிலே கேட்டுக் கொண்டு
தோழப்பரும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று இவ்வ்ருத்தாந்தம்
“துன்னு புகழ்கந்தாடை தோழப்பர் தம்முகப்பால் என்ன உலகாரியனோ என்றுரைக்கப் பின்னை
உலகாரியனென்னும் பேர் நம்பிள்ளைக்கோங்கி விலகாமல் நின்றதென்றும் மேல்” என்று
உபதேசரத்தினமாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளினார்.

‘நெஞ்சத்திருந்து நிரந்தரமாக நிரயத்துய்க்கும்
வஞ்சக் குறும்பின் வகை யறுத்தேன் மாய வாதியர் தாம்
அஞ்சப் பிறந்தவன் சீமாதவனடிக் கன்பு செய்யும்
தஞ்சத்தொருவன் சரணாம் புயமென் தலைக்கணிந்தே” ,

“நமாமி தௌ மாதவ ஶிஷ்ய பாதௌ யத் ஸந்நிதிம் ஸுக்தி மயீம் ப்ரவிஷ்டா: |
தத்ரைவ நித்யம் ஸ்திதி மாத்ரியந்தே வைகுண்ட ஸம்ஸார விரக்த சித்தா: ||

ஶ்ருத்வாபி வார்த்தாஞ்ச யதீய கோஷ்ட்யாம் கோஷ்ட்யந்தராணாம் ப்ரதமாபவந்தி|
ஶ்ரீமத் கலி த்வம்ஸந்த தாஸ நாம்நே தஸ்மை நமஸ் ஸூக்தி மஹார்ணவாய” –என்றிறே
நம்பிள்ளை யுடைய வைபவம் இருப்பது.

இப்படி லோகாசார்யர் என்று திருநாமத்தை யுடையரான நம்பிள்ளைக்கந்தரங்க ஶிஷ்யரான வடக்குத் திருவீதிப் பிள்ளை
தாமும் தேவிகளும் விரக்தராய்க் கொண்டு எழுந்தருளி யிருந்து நம்பிள்ளைக்கு ஸர்வ தேஶ ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்
ஸர்வ வித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே
ஒரு நாள் நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை திருமாளிகைக்கெழுந்தருள,
அங்குள்ளாரெல்லாரும் பிள்ளை திருவடிகளிலே வந்து தண்டனிட, அப்போது வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்
ஈரப் புடவையுடனே தண்டனிட்டு நிற்க,

நம்பிள்ளை அருகு நிற்கிற ஸ்த்ரீ ஜனங்களைப் பார்த்து ‘இந்தப் பெண் ஈரப் புடவையுடன் நிற்பானென்?’ என்ன,
அவர்கள் சொன்னபடி – ‘நாலு நாளும் தூரஸ்தையாயிருந்து இப்போது தீர்த்தமாடி வந்து தேவர் திருவடிகளிலே ஸேவிக்கிறாள்’ என்ன,

அவ்வளவில் நம்பிள்ளை மிகவும் திருவுள்ளம் உகந்து அவளை ‘பெண்ணே! இங்கே வாரும்’ என்றழைத்துத்
தம்முடைய திருக் கையாலே அவளுடைய திரு வுதரத்தை ஸ்பர்ஶித்து
‘என்னைப் போலே ஒரு பிள்ளையைப் பெறுவாயாக’ என்று திருவுள்ளம் பற்றி யருளினார்.

ஆகையாலே அத்தைக் கண்டு அதுக்குப் பின்பு வடக்குத் திருவீதிப் பிள்ளை தமக்குக் குமாரர் உண்டானால்
ஆசார்யன் திருவுள்ளத்துக்கு உகப்பாம் என்றறிந்து ததுநுகுணமாக வர்த்திக்க, தத் ஸம்வத்ஸரத்திலே அவருடைய தேவிகள்
திரு வயிறு வாய்த்து குமாரர் திரு வவதரிக்க, அந்தக் குமாரரை லோகாசார்யர் என்று
ஆசார்யரான நம்பிள்ளை யுடைய திருநாமம் சாற்றி யருளினார்.

இப்படி நம்பிள்ளை யுடைய அருளாலே திருவவதரித்து வடக்குத்திருவீதிப்பிள்ளை குமாரரான பிள்ளை லோகாசார்யரும்
தம்முடைய பரம க்ருபையாலே ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணும் என்று திருவுள்ளம் பற்றி யருள,
தத்வ த்ரய, ரஹஸ்ய த்ரய, ஶ்ரீவசந பூஷணம் முதலாக அநேக ப்ரபந்தங்கள் இட்டருளினார்.

(பிள்ளை லோகாசார்யர் திருநக்ஷத்ரம்: ஐப்பசி திருவோணம் அவதார ஸ்தலம்: திருவரங்கம் ஆசார்யன்: வடக்குத்திருவீதிப்பிள்ளை ஶிஷ்யர்கள்: கூரகுலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை ,திருவாய்மொழிப் பிள்ளை, மணப்பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் மற்றும் பலர். பரமதித்த இடம்: ஜ்யோதிஷ்குடி (மதுரை அருகிலே) அருளிச்செய்தது: யாத்ருச்சிக படி, ஶ்ரிய:பதி படி, முமுக்ஷுப்படி, பரந்த படி, தனி ப்ரணவம், தனி த்வயம், தனி சரமம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், தத்வ ஶேகரம், ஸார ஸங்க்ரஹம், அர்ச்சிராதி , ப்ரமேய ஶேகரம் , ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ப்ரபன்ன பரித்ராணம், நவரத்ன மாலை, நவ வித ஸம்பந்தம், ஸ்ரீ வசன பூஷணம் மற்றும் பல

லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:-பிள்ளை லோகாசாரியரின் தனியன்: வாழி உலகாசிரியன் வாழி அவன் மன்னுகுலம் வாழி முடும்பை என்னும் மாநகரம் வாழி மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு நல்லார் இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு .

அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே.)

வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு பின்னையும் ஒரு குமாரர் திருவவதரிக்க, அவரை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
என்று திருநாமம் சாற்றி யருளினார். அவர் ஆசார்ய ஹ்ருதயம் இட்டருளினார்.

(அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருநக்ஷத்ரம் : மார்கழி அவிட்டம் அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : வடக்குத் திருவீதிப் பிள்ளை பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் க்ரந்தங்கள் : திருப்பாவை ஆராயிரப்படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம், அமலனாதிபிரான் வ்யாக்யானம், அருளிச்செயல் ரஹஸ்யம் (ஆழ்வாரின் அமுதச்சொற்களைக் கொண்டே எழுதப்பட்ட ரஹஸ்யத்ரய விவரணம்), ஆசார்ய ஹ்ருதயம் பட்டோலை (ஆசார்ய ஹ்ருதயத்திற்கு அவரே எழுதிய வ்யாக்யானம் இப்பொழுது கிடைக்கவில்லை) மற்றும் பல.

நஞ்சீயர் செய்த வ்யாக்கியைகள் நாலிரண்டுக்கு எஞ்சாமை யாவைக்கும் இல்லையே தம் சீரால் வையகுருவின் தம்பி மன்னு மணவாளமுனி செய்யுமவை தாமும் சில மாமுடும்பை மன்னு மணவாள அண்ணலொடு சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால் மாம் என்று தொட்டுரைத்த சொல்லும் துயம் தன்னினாழ்பொருளும் எட்டெழுத்தும் இங்குரைப்பாரார். நாயனார் இவ்வுலகைவிட்டு பரமபதத்தை அடைந்தபின் ரஹஸ்யத்ரயத்தின் (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) சரமஸ்லோகத்தில் எம்பெருமான் தன் ஹ்ருதயத்தைத் தொட்டு “மாம்” (நானே காப்பவன்) என்று சொன்ன ஆழ்ந்த பொருளை இனி எடுத்துரைக்கவல்லார் யார் உளர் ? என்று சோகிக்கிறார். பிள்ளை லோகாசார்யரே இப்படி சோகத்தில் ஆழும்படியானது நாயனாரின் மகிமையாகும். த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் | ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

தந்தருளவேணும் தவத்தோர் தவப்பயனாய் வந்த முடும்பை மணவாள – சிந்தையினால் நீயுரைத்த மாறன் நினைவின் பொருளனைத்தின் வாயுரைத்து வாழும் வகை)

ஆக இப்படி அவதார விஶேஷமாயிருந்துள்ள லோகாசார்யருடைய திருவடிகளிலே தம்முடைய திருத் தகப்பனார்
திகழக் கிடந்தான் திரு நாவீறுடைய பிரான் தாதரண்ணரையும் அஞ்சு திருநக்ஷத்ரத்திலே ஆஶ்ரயிப்பித்தார்கள்
அண்ணருடைய பெரியோர்கள் என்று அஸ்மதாசார்யோக்தம்.

———–

அந்திமோபாய நிஷ்டை- 10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை

உடையவர் எழுந்தருளி யிருக்கிற காலத்திலே அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஒருக்கால் திருமேனி பாங்கின்றிக்கே
கண் வளருகிற போது கூரத்தாழ்வான் அவரை அப்போதைக்கப்போது எழுந்தருளி ஆராயாமல்,
நாலு நாள் விளம்பித்து எழுந்தருளி, ‘தேவர் திருமேனியில் பாங்கில்லாமை செய்தபடி எப்படி’ என்று கேட்டருள,

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஆழ்வானைப் பார்த்து, ‘தேவரும் அடியேனும் இத்தனை நாளும் இருந்த ஸ்நேஹத்துக்கு
அடியேன் ஒரு நாள் தலை நொந்திருந்தேன் என்று கேட்டால் அப்போதே எழுந்தருளி க்ருபை பண்ணி யருளாமல்,
ஆழ்வான்! தேவரீர் இவ்வாத்மாவை உபேக்ஷித்திருந்த நெஞ்சாறல்,
அடியேன் போய் ஆளவந்தார் திருவடிகளிலே ஸேவித்தவன்று தீரும்’ என்றருளிச் செய்தார்.
இந்த ப்ரஸங்கம் *பொன்னுலகாளீரோ என்கிற திருவாய்மொழி ஈட்டில் ஸுஸ்பஷ்டம்.

வடுக நம்பி உடையவருக்குப் பின்பு சிறிது நாள் எழுந்தருளி யிருந்து பின்பு திருநாட்டுக்கு கெழுந்தருளினவாறே,
ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டருடனே ‘வடுகநம்பி திருநாட்டுக்கெழுந்தருளினார்’ என்று விண்ணப்பம் செய்ய,
அவரும் ‘வடுக நம்பியை அப்படிச் சொல்லலாகாது காணும்’ என்ன,

‘ஏன், வடுகநம்பியை திருநாட்டுக்கெழுந்தருளினார் என்று சொல்லலாகாதோ?’ என்ன,

‘ஆகாது காணும், சரகு தின்னிகளான உபாஸகரோடு ப்ரபந்நரோடு உபாசியரோடு {?} வாசியற,
எல்லார்க்கும் போகிற பொதுவான தேஶங்களன்று காணும் அவர் எழுந்தருளுவது’ என்ன,

‘ஆனால் திருநாடொழிய அவருக்கு ப்ராப்ய பூமி வேறே உண்டோ?’ என்ன,

‘உண்டு காணும், வடுகநம்பி எம்பெருமானார் திருவடிக்கெழுந்தருளினார் என்று சொல்லீர்’ என்று
அருளிச் செய்தார் பட்டர் என்று அஸ்மதாசார்யோக்தம்.

‘அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்” என்று ஆளவந்தார் ஸ்தோத்தரத்திலே அருளிச் செய்தார்.
‘விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன் மண்ணின் தலைத்துதித்து மறை நாலும் வளர்த்தனனே” என்று
நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனார் அருளிச் செய்தார்.

ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும், கூரத்தாழ்வான் குமாரரான பட்டரும், பரமாசார்யரான ஆளவந்தாரும்,
உடையவரும் கூரத்தாழ்வான் முதலான இவர்களுடைய திவ்ய வைபவத்தை எல்லாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி உபசரித்த
ஸர்வஜ்ஞராயிருக்கும் பிள்ளை அமுதனாரும் இப்படி ஏக கண்டமாக அருளிச் செய்கையாலே
சரமாதிகாரிகளுக்கு நித்ய விபூதியிலே போனாலும்
“பொது நின்ற பொன்னங்கழ”லாய்,
“தேவாநாம் தாநவாநாஞ்ச பர்வதமாயிருந்துள்ள ஈஶ்வரனைக் காட்டிலும், ஆத்மாவுக்கு அஸாதரண ஶேஷியாய்,
லீலா விபூதியிலே தொடங்கி, ‘சரணாகதி தந்த தன்னிறைவன்’ என்கிறபடியே அஸாதரண ஶேஷியாய்,
சரம பர்வமாயிருந்துள்ள ஆசார்யன் திருவடிகளே பரம ப்ராப்யமாயிருக்குமென்னும் இவ்வர்த்தம் உபபந்நம்.

(வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-)

ஆகையாலேயிறே ‘எதிராசா என்றுன்னடி சேர்வன் யான்’,
‘எதிராசா எந் நாளும் உன் தனக்கே ஆட் கொள் உகந்து’ என்று
நம்முடைய ஜீயர் இப்படி அருளிச் செய்தருளிற்று.

ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அமுது செய்தருளா நிற்க, கிடாம்பி யாச்சான் அவருக்குத் தண்ணீரமுது திருப் பவளத்திலே
பரிமாறுகிறவர் செவ்வையிலே நின்று பறிமாறாமையாலே அந்த ஶ்ரீவைஷ்ணவருடைய திருக்கழுத்து சற்று சாய,
அத்தை உடையவர் கண்டருளி, ஆச்சானைத் தம்முடைய திருக் கையாலே அறைந்து,
‘ஶ்ரீவைஷ்ணவருக்குப் பாங்காகப் பரிமாறிற்றில்லையே!’ என்று கோபிக்க,
ஆச்சானும் உடையவர் திருவடிகளிலே தண்டனிட்டு,
“பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட மணிமாய”னன்றோ தேவரீர் – என்று விண்ணப்பம் செய்து
ஆச்சானும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

(மணிமாமை குறையில்லா மலர்மாதர் உறைமார்பன் அணிமானத் தடைவரைத்தோள் அடல்ஆழித் தடக்கையன் பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைஇலமே.–4-8-2-

உடையவர் எழுந்தருளியிருக்கிற மடத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க, ஆச்சான் தண்ணீரமுது பரிமாறுகிறவர், ஓர் அருகே சாய நின்று பரிமாறினார்; அத்தை உடையவர் கண்டு, ஓர் அடி வந்து முதுகிலே மோதி, ‘நேரே நின்றன்றோவுடோ பரிமாறுவது?’ என்றார்; என்ன, ‘பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட’ என்று பணித்தார் ஆச்சான்.)

ஒரு நாள் கூரத்தாழ்வான் விஷயமாக உடையவர் சீறி யருள, நடுவு நின்றவர்கள் ஆழ்வானைப் பார்த்து
‘உம்மை உடையவர் நிக்ரஹித்தாரே, இப்போது நீர் என்ன நினைக்கிறீர்?” என்ன,
ஆழ்வான் அருளிச் செய்தபடி – “இவ் வாத்மா பாஷ்யகாரர்க்கே ஶேஷமான பின்பு அவருடைய
விநியோக ப்ரகாரங்கொண்டு அடியேனுக்குக் கார்யமென்?’ என்றார் என்னும் இவ் வ்ருத்தாந்தம்
மாணிக்ய மாலையிலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார்.

பிள்ளை யுறங்கா வில்லி தாஸர் முதலி யாண்டான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஶிஷ்ய லக்ஷணம் இருக்கும்படி என்?’ என்று விண்ணப்பம் செய்ய, ஆண்டான் அருளிச் செய்தபடி –
ஆசார்ய விஷயத்தில் ஶிஷ்யன் பார்யா ஸமனுமாய், ஶரீர ஸமனுமாய், தர்ம ஸமனுமாய் இருக்கக் கடவன்.
அதாவது சொன்னத்தைச் செய்கையும்,
நினைத்ததைச் செய்கையும்,
நினைவா யிருக்கையும் என்றருளிச் செய்தார்.

அநந்தரம் பிள்ளை கூரத்தாழ்வான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு ‘ஆசார்ய லக்ஷணம் எங்ஙனே இருக்கும்?’
என்று விண்ணப்பம் செய்ய, ஆழ்வான் அருளிச் செய்தபடி –
ஶிஷ்யன் விஷயத்தில் ஆசார்யன் பர்த்ரு ஸமனுமாய், ஶரீரி ஸமனுமாய், தர்மி ஸமனுமாய் இருக்கக் கடவன்.
அதாவது
ஏவிக் கொள்ளுகையும்,
எடுத்து இடுவிக்கையும்; அதாவது
அசேதநத்தை நினைத்த படியே விநியோகங் கொள்ளுமாப் போலே விநியோகங் கொள்ளுகையும்,
எடுத்துக் கொள்ளுகையும் என்றருளிச் செய்தார். இவ் வ்ருத்தாந்தம் ஶ்ரீவார்த்தா மாலையிலே உண்டு.

ஒரு நாள் கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் கூடி எழுந்தருளி யிருந்து சில அர்த்த விஶேஷங்களை அநுஸந்தியா நிற்க,
‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?
க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?” என்று இங்ஙனே ப்ரஸங்கமாக,
முதலியாண்டான் ‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன,
கூரத்தாழ்வான் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன,
ஆண்டான் “குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்” என்று பெரியாழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வாநுவர்த்தி ப்ரஸந்நாசார்யநாலே ஆக வேணும் என்ன,
ஆழ்வான் ‘அங்ஙனன்று; “பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி” என்று ஶ்ரீமதுரகவியாழ்வார் நமக்கெல்லார்க்கும்
ஸ்வ அநுவர்த்தி கூடாமையாலே க்ருபா மாத்ரத்தாலே மோக்ஷமாக வேணும்’ என்றருளிச் செய்தார்.
ஆண்டானும் ‘அப்படியே யாம்’ என்று மிகவும் ப்ரீதரானார் என்று அஸ்மாதாசார்ய உக்தம்.

க்ருமி கண்டன் வ்யாஜத்தாலே உடையவர் வெள்ளை சாற்றி மேல் நாட்டுக்கெழுந் தருளின போது
பெருமாள் பரிகரத்தார் தங்களை நெருக்கிக் கொண்டு போருகையாலே விஷமத்துக்காக
‘உடையவராலே யன்றோ இத் தேஶத்துக்குக் கலக்கங்கள் விளைந்தது, ஆகையாலே உடையவர் திருவடிகளில்
ஸம்பந்தமுள்ளவர்கள் ஒருவரும் கோயிலுக்குள் புகுந்து பெருமாளை ஸேவிக்க வொண்ணாது’ என்று திவ்யாஜ்ஞை இட்டு வைத்தார்கள்.

கூரத்தாழ்வான் தர்ஶநத்தை நிர்வஹிக்கைக்காக க்ருமி கண்டனிடத்திலே புக்கு அவனாலே திரு நயநங்களுக்கு உபத்ரவம் வந்தது
மீண்டு கோயிலுக்கெழுந்தருளி அங்குத்தைச் செய்தியை அறியாமல் பெருமாளை ஸேவிக்க எழுந்தருளின வளவிலே,
திரு வாசல் காக்கிறவர்களிலே ஒருவன் ஆழ்வானை ‘உள்ளே புகுராதே’ என்று தகைய,
ஒருவன் அவரைத் தகையாதே ‘கோயிலுக்குள்ளே புகுரும்’ என்ன,
அவ்வளவில் ஆழ்வான் திகைத்து நின்று ‘இங்குற்றை விசேஷம் ஏது?’ என்று திரு வாசல் காக்குமவர்களைக் கேட்க,
அவர்களும் ‘எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுள்ளவர்களொருவரையும் பெருமாளை ஸேவிக்க விட வேண்டாம்
என்று திவ்யாஜ்ஞை யிட்டுத் தகைந்து கிடக்கிறது’ என்ன,

‘ஆனால் நீங்கள் என்னைப் புகுரச் சொல்லுவானென்?’ என்ன,

அவர்கள் ‘ஆழ்வானே! நீர் எல்லாரையும் போலன்றிக்கே நல்ல குணங்களை உடையவராகுயாலே புகுரச் சொன்னோம்’ என்ன,

ஆழ்வான் அத்தைக் கேட்டு ஜல சந்திரனைப் போலே நடுங்கி, சிவிட்கென்று நாலடி மீண்டு,
‘ஐயோ! ஆத்ம குணங்கள் உண்டானால் எல்லார்க்கும் ஆசார்ய ஸம்பந்தத்துக்கு ஹேதுவாம் என்று ஶாஸ்த்ரம் சொல்லிற்று;
எனக்குண்டான ஆத்ம குணங்கள் எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தத்தை அறுத்து கொள்ளுகைக்கு ஹேதுவாய் விட்டதோ’
என்று வ்யாகுலப்பட்டுத் தம்மை மிகவும் நொந்து கொண்டு ‘எனக்குப் பேற்றுக்கு எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமே அமையும்;
தத் ஸம்பந்தத்தை யொழியப் பெருமாளை ஸேவிக்க வேண்டுவதில்லை’ என்று மீண்டு
ஆழ்வான் திருமாளிகைக்கு எழுந்தருளினார் என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

எம்பெருமான் தானே நம்மாழ்வாராய் வந்தது அவதரித்தருளினான் என்று ஆளவந்தார் அருளிச் செய்தருளுவர் என்னுமது
திரு விருத்த வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.
அத்ரி ஜமதக்நி பங்க்தி ரத வஸு நந்த ஸுநுவானவனுடைய யுக வர்ண க்ரமாவதாரமோ என்று
இவ் வாழ்வாரை பகவதவதாரமாக ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்தார்.

———

அந்திமோபாய நிஷ்டை- 11- ஸ்ரீஎம்பார் மற்றும் கொங்கில் பெரிய பிராட்டியார் நிஷ்டை

வட்டமணி குலத்தில் எம்பார் மஹா வித்வானாய், மஹா விரக்தராய், மிகவும் ஆசாரயுக்தராய் இருக்கச் செய்தே
ஶைவாகமத்திலே புகுந்து ஶிவபக்தியிலே மண்டி விழுந்து, அலந்த கொட்டையும் பூண்டு காளஹஸ்தியில்
ஒரு ருத்ராலயத்துக்கு சடங்கியாய், ஸர்வத்துக்கும் கர்த்தாவாய், குச்சியும் தாளும் எப்போதும் கையிலே பிடித்துக் கொண்டு
இரண்டாம் முத்தமிழ் விரகனான ஸம்பந்தன் என்னும்படியே பேயன் பாட்டுப்பாடி, காளஹஸ்தியிலே வர்த்திக்கிற காலத்திலே
திருமலையில் நின்றும் பெரிய திருமலை நம்பி ஒருகார்யத்திலே எழுந்தருளி, காளஹஸ்தி ஆஸந்நமாக,
ஒரு தோப்பிலே விட்டு எழுந்தருளியிருக்க,

அவ்வளவிலே எம்பாரும் ருத்ரனுக்குப் பூப்பறிப்பதாகப் பெரியதொரு பூக் கொடலையும்  கழுத்திலே கட்டிக் கொண்டு
ருத்ர ப்ரபாவமான பாட்டுக்களையும் கதறிக் கொண்டு, திருமலைநம்பி எழுந்தருளியிருக்கிற தோப்பிலே
நிறைய பூத்து நிற்பதொரு பாதிரியிலேயேறிப் பூப் பறியா நிற்க,

திருமலைநம்பி எம்பாருடைய ஶிவபக்தியில் பூத்த{ஊ}த்தைக்கண்டு ‘ஐயோ! இவ்வாத்மா அதிக்ஷுத்ரமான அப்ராப்த விஷயத்தில்
ப்ராவண்யங்களை ஸவாஸநமாக விட்டு ஆத்மாவுக்கு வகுத்த ஶேஷியான ஶ்ரிய:பதியைப் பற்றினானகில்
பெரிய வித்வானாகையாலும், அதிவிரக்தனாகையாலும் லோகத்துக்கு மிகவும் உபகாரகனாம்’ என்று திருவுள்ளம் பற்றித்
தாமும் முதலிகளும் எம்பார் பூப்பறிக்கிற பாதிரிக்கு ஆஸந்நமாக எழுந்தருளி யிருந்து
ஶ்ரிய:பதி நாராயணனே பரதத்வம் என்று சொல்லுகிற வேதாந்த வாக்யங்களை முதலிகளும் தாமும் ஒருவர்க்கொருவர் அநுபாஷிக்க,

எம்பார் ஆலயத்திலுண்டான கார்யங்களையும் பூப்பறிக்கிறத்தையும் மறந்து இவர்கள் அருளிச்செய்கிற
திவ்ய ஸுக்திகளைச் செவி மடுத்துக் கேட்டு ‘இதொன்று இருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
நெடும்போது கேட்டுக் கொண்டு திகைத்து நிற்க,

நம்பியும் எம்பாருடைய ஆபிமுக்யத்தைக் கண்டு ‘இன்னமும் ஆழ்வாருடைய திவ்ய ஸூக்தியிலே ஒன்றைச் சொல்லித்
திருத்தக் கடவோம்’ என்று திருவுள்ளம்பற்றி, “தேவரும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவனெம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே” என்று பெருக்க நொந்து அருளிச்செய்ய,
எம்பாரும் தமிழுக்கு மஹாநிபுணராகையாலே இத்தையும் கேட்டு, அப்போதே தத்த்வஸ்திதியையும் நன்றாக அறிந்து
‘தகாது, தகாது’ என்று பாதிரியின்மேலே நின்று பூக்கொடலையும் சுழற்றி எறிந்து அரைகுலைய தலைகுலைய இறங்கி
‘இத்தனை காலமும் பெருங்கையாற் குடமெடுத்துப் பேய்ச்சுரைக்கு நீர் சொரிந்து கெட்டேன் கெட்டேன்’ என்று கூப்பிட்டு
நம்பி திருவடிகளிலே விழ,

நம்பியும் தான் நினைத்த காரியம் அப்போதே கைகூடுகையாலே மிகவும் திருவுள்ளமுகந்து
எம்பாரையும் ‘தீர்த்தமாடிவாரும்’ என்ன,
அவரும் எலந்தைக்கொட்டைவடங்களையும் அறுத்தெறிந்து பாஷண்ட வேஷத்தையும் கழித்து, தீர்த்தமாடி ஈரப்புடவையோடே
தம்முடைய ஆர்த்தியெல்லாம் தோன்ற வந்து நிற்க, நம்பியும் எம்பாரளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து
அப்போதே அவர்க்கு பஞ்சஸம்ஸ்காரமும் பண்ணி, த்யாஜ்யோபாதேயங்களையும் தெளிய அறிவித்து,
‘புறம்புண்டான பற்றுக்களை யெல்லாத்தையும் ஸவாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப்பற்றி நம்முடைய தர்ஶநத்திலே
ஊற்றமுண்டாய் வாழும்’ என்று அருளிச் செய்ய,
அப்படியே எம்பாரும் க்ருதார்த்தராய், நம்பியை ஸேவித்துக் கொண்டு திருமலைக்கெழுந்தருளத்தேட,

அவ்வளவில் காளஹஸ்த்தியில் பாஷண்டிகளெல்லாரும் கூடி வந்து ‘எங்களுக்கு ஸர்வத்துக்கும் கர்த்தாவான நீர்
போக வொண்ணாது’ என்று எம்பாரைத் தகைய,
அவரும் ‘உங்கள் குச்சியும் தாளும் இதோ பிடியுங்கோள்’ என்று தூரத்திலே நின்று அவர்கள் மேலே எறிந்து
‘காளஹஸ்த்தி யாகிற சுடுகாட்டை நாமினிப் புரிந்துபாரோம்’ என்று அருளிச்செய்து,
பிராட்டி இலங்கை நின்றும் புறப்பட்டாப் போலே அங்குள்ள பற்றுக்களை அடைய ஸவாஸநமாக விட்டுப்
பெரிய ப்ரீதியோடே முக்தர் பரம பதத்தைக் குறித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஹார்த்தன் வழிநடத்தப் போமாப்போலே
திருமலை நம்பியை ஸேவித்துக் கொண்டு கலியுக வைகுண்டமான திருமலைக்கெழுந்தருளி,
நம்பிக்கு மிகவும் அந்தரங்கராய் ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு வாழுகிற காலத்திலே,

உடையவர் திருமலைக்கெழுந்தருளி திருமலைநம்பி ஶ்ரீபாதத்திலே ஶ்ரீராமாயணத்துக்கு ஸம்ப்ரதாயார்த்தம் கேட்டு
மீண்டும் கோயிலுக்கு எழுந்தருளுகிறபோது நம்பியும் உடையவர் அவதார விஶேஷமென்றறிந்து மிகவும் ஆதரித்து
ஆளவந்தாரைப் போலே கண்டு தம்முடைய புத்ராதிகளையும் உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்து
‘தேவரீருக்கு ஏதேனுமொன்று ஸமர்ப்பிக்க வேணும்’ என்ன,

உடையவரும் எம்பாருடைய ஆசார்ய ப்ரேமத்தைக் கண்டு திருவுள்ளமுகந்து ‘எம்பாரைத் தந்தருள வேணும்’ என்ன,

நம்பியும் எம்பாரை உடையவருக்கு உதகதாரா பூர்வமாகக் கொடுத்தார்.
அதுக்குப்பின்பு எம்பார் உடையவரை ஸேவித்துக்கொண்டு திருவரங்கத்துக்கு நாலஞ்சு பயணம் எழுந்தருள,
நம்பியைப் பிரிந்தது எம்பார்க்குத் திருமேனி ஶோஷிக்க, உடையவர் எம்பாரைப் பார்த்து ‘உமக்கிப்படி ஆவானென்’ என்ன,
‘அங்குத்தை யேறப்போம்’ என்ன, எம்பாரும் முன்பு நாலஞ்சு பயணமும் ஒரு பயணமாக மீண்டு
திருமலைக்கு எழுந்தருளி நம்பி திருவடிகளிலே தண்டனிட்டு நிற்க,
நம்பியும் எம்பாரைப் பார்த்து ‘உதக பூர்வமாக உம்மை உடையவருக்குக் கொடுத்து விட்டோமே;
அவரை விட்டு நீர் இங்கு வருவானென்?’ என்ன,
எம்பாரும் தம்முடைய திருமேனி ஸ்வபாவத்தை விண்ணப்பம் செய்ய,
நம்பியும் ‘விற்ற பசுவுக்குப் புல்லிடுவாருண்டோ? நீர் உடையவர்க்குத் தானே அடிமை செய்து கொண்டிரும்’ என்று
ஒரு போதும் ப்ரஸாதமிடாமல் தள்ளி விட்டார்.
எம்பாரும் அங்கு ஆசையற்று நமக்கினி உடையவர் திருவடிகளே தஞ்சம்’ என்று அறுதியிட்டுக் கோயிலுக்கெழுந்தருளி,
உடையவரை ஸேவித்துக் கொண்டு மிகவும் ப்ரீதராய் வாழுகிற காலத்திலே,

ஒருநாள் உடையவரும், முதலிகளும் பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருக்க, முதலிகளெல்லாரும் எம்பாருடைய
ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைச் சொல்லித் தலைத் தூக்கிக் கொண்டாட,
எம்பார் தாமும் ‘அது ஒக்கும், ஒக்கும்’ என்று அவர்களைக் காட்டில் மிகவும் தம்மை ஶ்லாகித்துக் கொள்ள,
உடையவரும் அத்தைக் கேட்டு எம்பாரைப் பார்த்து, ‘எல்லாரும் உம்மை ஶ்லாகித்தால் நீர் நைச்யாநுஸந்தாநம்
பண்ண வேண்டியிரா நிற்க, அது செய்யாதே நீர்தாமே உம்மை ஶ்லாகித்துக் கொள்ளா நின்றீர்;
இப்படி இருப்பது ஒன்றுண்டோ?’ என்ன,

எம்பாரும் உடையவரைப் பார்த்து, ‘ஐயா! முதலிகள் அடியேனைக் கொண்டாடில் காளஹஸ்த்தியிலே
கையும் குடமும் கழுத்தும் கப்படமுமாய்க் கொண்டு எளிவரவுபட்டு நின்ற அந்நிலையைக்
கொண்டாடுமத்தனை யன்றோ அடியேனுக்குள்ளது; இப்படியான பின்பு “பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்கிறபடியே
தேவரீர் இவ்வாத்மாவை எடுக்கைக்காக ஒரு திருவவதாரம் பண்ணி செய்தருளின க்ருஷி பரம்பரைகளை அநுஸந்தித்து
நித்ய ஸம்ஸாரிகளிலும் கடை கெட்டுக் கிடந்த அடியேனை காலதத்வமுள்ளதனையும்
‘எனக்கினி யார் நிகர் நீணிலத்தே”,
“நெஞ்சமே நல்லை நல்லை” என்கிறபடியே அடியேனை ஶ்லாகித்துக் கொள்ள ப்ராப்தி யுண்டு;
ஆகையாலே அடியோங்களெல்லாரும் தேவரீராலே இவ்வாத்மாவுக்குண்டான நன்மைகளை ஶ்லாகித்தது
தேவரீரைக் கொண்டாடித்தாமித்தனையன்றோ?’ என்று விண்ணப்பம் செய்ய,

உடையவரும் ‘ஶ்ரீகோவிந்தப் பெருமாளே! நல்லீர்! நல்லீர்!’ என்று எம்பாரை மிகவும் உகந்தருளினார்
என்று பெரியோர்கள் அருளிச் செய்தருளுவார்கள்.

(எம்பார் திருநக்ஷத்ரம்: தை புனர்பூசம் திரு அவதாரத்தலம்: மதுரமங்கலம் திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம் அருளிச்செய்தவை: விஞ்ஞான ஸ்துதி , எம்பெருமானார் வடிவழகு பாசுரம்

ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வநபாயிநீ | ததாயத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஶ்ரமஸ்தலீ ||-எம்பாரின் தனியன்:

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே–எம்பாரின் வாழி திருநாமம்:)

ஒரு ஆசார்யர் தம்முடைய ஶிஷ்யனுக்கு த்யாஜ்யோபாதேயங்களைத் தெளிய உபதேஶிக்க,
அவனும் அதுக்கு அநுரூபமாக நடக்க அறியாமையாலே அந்த ஆசார்யரும் “ஸ்காலித்யே ஶாஸிதாரம்” என்கிறபடியே
அவனை நியமித்துக் கொண்டு போர, அந்த ஶிஷ்யன் ஸ்வாசார்ய நியமநம் தனக்கு ஹிதம் என்று அறியாமல் வெருவி
இருந்த ஜ்ஞாநாதிகருடனே ‘ஐயோ! ஶிஷ்யன் என்ன, நியமியா நின்றார்கள்’ என்று வெறுக்க,
அந்த ஜ்ஞாநாதிகரும் ‘ஐயோ! ஶாஸநீயனான ஶிஷ்யனை யன்றோ நியமிப்பது? உம்மை நியமித்தாரோ’ என்று
வெறுத்தார் என்று அஸ்மதாசார்யோக்தம்.

இத்தால் விதேயனான ஶிஷ்யனையே ஆசார்யன் நியமிக்க வேணும் என்னுமதும்,
ஸதாசார்ய நியமநம் ஸச் சிஷ்யனுக்கு ப்ராப்யாந்தர் கதமாயிருக்கும் என்னுமதும் சொல்லிற்று.

நஞ்சீயர் திருவடிகளிலே ஆஶ்ரயித்து தேஶாந்தரத்திலே இருப்பானொரு ஶ்ரீவைஷ்ணவன் வந்து ஜீயரை ஸேவித்து
மீள எழுந்தருளிகிறபோது, ஜீயருக்கு அந்தரங்கராய்த் திருவடிகளிலே நித்ய ஸேவை பண்ணிக் கொண்டிருப்பாரொரு
ஶ்ரீவைஷ்ணவர் ஊருக்கு எழுந்தருளுகிற ஶ்ரீவைஷ்ணவரைப் பார்த்து
‘ஜயோ! உமக்கு ஜீயர் திருவடிகளை விட்டுப் பிரிந்து எழுந்தருள வேண்டுகிறதே! என்று க்லேஶிக்க,
அவரும் ‘அடியேன் எங்கே இருந்தாலும் ஜீயர் அபிமாநமுண்டே’ என்று தேறி வார்த்தை சொல்ல,
இந்த ப்ரஸங்கங்களை ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கையாயிருப்பாளொரு அம்மையார் கேட்டு,
ஆசார்யனைப் பிரிந்து அதிலே நெஞ்சு இழியாமல் போகிறவரைப் பார்த்து
‘என் சொன்னாய் பிள்ளாய்! – ஏனத்துருவாய் உலகிடந்த ஊழியான் பாதம் – நாடோறும் –
மருவாதார்க்கு உண்டாமோ வான்’ என்று அருளிச் செய்தார் என்று அஸ்மதாரசார்யோக்தம்.

இத்தால் ஸதாசார்யன் கண் வட்டத்தை விட்டால் இவனுக்கு த்யாஜ்யோபாதேயங்கள் தெரியாது.
ஆகையால் அஜ்ஞாநமே மேலிட்டு “நண்ணாரவர்கள் திருநாடு” என்கிறபடியே திருநாடு ஸித்திக்கை அரிது என்று கருத்து.

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-
(மருவாதார் -முதல் பிரபத்தி உபாயமாக -மேல் ருசி தூண்ட கைங்கர்யம் செய்ய வேண்டுமே)

கொங்கு நாடு க்ஷாமமானவாறே ஒரு ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானும் கோயிலிலே வந்து இருந்தான்.
அக் காலத்திலே எம்பெருமானார் ஏழு க்ருஹம் மாதுகரம் பண்ணி அமுது செய்தருளுவர்.
திரு வீதியிலே எழுந்தருளும் போது அகளங்கநாட்டாழ்வானடைய வட்டத்தில் முதலிகளெல்லாரும் தண்டனிடுவர்கள்.
அந்த ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானுமாக ஒரு மச்சிலே இருக்கையாயிருக்கும்.
ஒரு நாள் உடையவர் மாதுகரத்துக்கு அந்த க்ருஹத்துக்கு எழுந்தருளினவாறே அந்தப் பெண் மச்சு நின்றும் இழிந்து
இடை கழியிலே நின்று ‘ராஜாக்கள் உம்மை தண்டனிடாநின்றார்கள்; நீர் மாதுகரம் பண்ணா நின்றீர்;
இதுக்குக் காரணமேது?’ என்று உடையவரைக் கேட்க,

‘நாம் அவர்களுக்கு நல்வார்த்தை சொன்னோம்; ஆகையாலே தண்டனிடுகிறார்கள்’ என்று அருளிச்செய்ய, ‘

அந் நல்வார்த்தை எனக்கு அருளிச் செய்ய வேணும்’ என்று தண்டனிட்டாள்.

உடையவரும் அவளுக்கு ஹிதத்தை ப்ரஸாதித்தருளினார். பின்பு அவர்களுடைய தேஶம் ஸுபிக்ஷமாய்
அவர்கள் அங்கேறப்போக விருக்கிறவளவிலே உடையவரை ஸேவித்துப் போகப் பெற்றிலேன் என்று அந்தப்பெண் வ்யாகுலப்பட்டுக் கொண்டு இருக்கிறவளவிலே, மாதுகரத்துக்கு அங்கே எழுந்தருளினார்.
அந்தப் பெண் ‘மீளவும் எங்கள் நாடேறப் போகா நின்றோம்; முன்பு அருளிச் செய்த நல் வார்த்தை
அடியேன் நெஞ்சிலே படும்படி அருளிச் செய்து எழுந்தருள வேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க,

(மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு மன்னினான்-ஆழ்வாருக்கு)

உடையவரும் அவ் வாத்மாவை மிகவும் க்ருபை பண்ணி யருளி, ஹிதத்தை நெஞ்சிலே படும்படி ப்ரஸாதித்தருளி
எழுந்தருளப் புக்கவாறே, ‘இன்னமும் அடியேனுக்கு ஆத்ம ரக்ஷகமாக ஏதேனுமொன்று ப்ராஸாதித்தருள வேணும்’ என்று
அவள் விண்ணப்பம் செய்ய,

உடையவர் அப்போது சாற்றி எழுந்தருளியிருக்கிற திருவடி நிலைகளைப் பெரிய பிராட்டியார் என்கிற அந்தப் பெண்ணுக்கு
ப்ராஸாதித்து எழுந்தருளினார். அவளும் அன்று தொடங்கி உடையவர் திருவடி நிலைகளைத் திருவாராதநம்
பண்ணிக் கொண்டு போந்நாள் என்னும், இவ் வ்ருத்தாந்தம் வார்த்தா மாலையிலே ப்ரஸித்தம்.

(பெருமாள் பரத்தாழ்வானுக்கு அருளினார் -அதே போல் ராமானுஜரும் இவ்வாறு செய்து அருளினார்)

இத்தால் சொல்லிற்று ஏதென்னில், எம்பெருமானையுங்கூட உபேக்ஷிக்கிற ஸம்ஸாரத்திலே ஆசார்ய ருசி பரிக்ருஹீதமானது(த்வய மந்த்ர ரத்னம் என்றவாறு)ஏதேனுமொன்று தஞ்சம் என்று விஶ்வஸித்திருக்கை அரிது. ஆசார்ய விஶ்வாஸமுண்டானவர்கள்
கொங்கில் பெரிய பிராட்டியாரைப் போலே இருக்க வேணும் என்று சொல்லிற்று.

இவ்விடத்திலே பொன்னாச்சியார், தும்பியூர்க் கொண்டி, ஏகலவ்யன், விக்ரமாதித்யன் வ்ருத்தாந்தங்களை ஸ்மரிப்பது.

———–

அந்திமோபாய நிஷ்டை- 12 – ஆசார்யன் பகவத் அவதாரம்

ஸாக்ஷாத்காரமென்றும்,
விபூதி ஸாக்ஷாத்காரமென்றும்,
உபய விபூதி ஸாக்ஷாத்காரமென்றும்,
ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமென்றும் நாலு படியாயிருக்கும்.(அஷி கண்)

ஸாக்ஷாத்காரமாவது – ஒரு ஜ்ஞாந விஶேஷம்.

விபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் விரோதியை அறிகை.

(வீடுமின் அஹங்காரம் மமகாராம் விட வேண்டும்
சொன்னால் விரோதம் அசேவை சேவை கூடாது
ஒரு நாயகம் -ஐஸ்வர்ய கைவல்யம் த்யாஜ்யம்
கொண்ட பெண்டிர் ஆபாச பந்துக்கள் கூடாதே)

உபய விபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் ப்ராப்யத்தை அறிகை.

ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் உபேயமான வஸ்து தானே உபாயம் என்றறிகை,

இவ் விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமுமே புருஷார்த்தமென்றறிகை,
அப் புருஷார்த்தமே உபாயம் என்றறிகை.

கீழ்ச் சொன்ன மூன்றுக்கும் புருஷார்த்தம் உண்டாய்த்ததே யாகிலும் ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரம் இல்லாத போது
அவை உண்டானாலும் ப்ரயோஜநமில்லை.
அவை தான் ப்ரத்யக்ஷத்தாலல்லது ஸித்திக்க மாட்டாது.
அவை யாவன – பரத்வம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம், ஆசார்யத்வம் என்று ஆறுபடியாயிருக்கும்.

பரத்வம் நித்ய முக்தர்க்கும், வ்யூஹம் ஸநகாதிகளுக்கும், விபவம் தத்கால வர்த்திகளுக்கும்,
அந்தர்யாமித்வம் உபாஸகர்க்கும், அர்ச்சாவதாரம் எல்லார்க்கும், ஆசார்யத்வம் கதி ஶூந்யர்க்கும்.

இவனுக்கு முதல் சொன்ன நாலும் தேஶ-கால-கரண-விப்ரக்ருஷ்டதையாலே கிட்ட வொண்ணாது.
இனி இவை யிரண்டிலும் அர்ச்சாவதாரம் வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்யாமையாலே
இதுவும் அல்லாத அவதாரங்களோபாதி.

ஆகையாலே பத்த சேதநன் முக்தனாம் போது, ஸகல ஶாஸ்த்ரங்களாலும் அறுதி யிட்டுப் பார்த்த விடத்தில்,
ஆசார்யாவதாரத்தாலல்லது ஜ்ஞாந ப்ரதாநம் பண்ண வொண்ணாமையாலே
ஜ்ஞாந ப்ரதாநம் பண்ணின வஸ்து தானே உபேயமாக வேணும்;
உபேயமான வஸ்து தானே உபாயமாக வேணும்; இவ் விஷயத்தில் கைங்கர்யமே ப்ராப்யமாக வேணும்.

மயர்வற மதி நலமருளப் பெற்று இவ் வர்த்தத்தையும் அறுதியிட்ட பரமாசார்யரும்,(ஆளவந்தார் -மாதா பிதா –ஸர்வம் யதேவ குல பதேர் வகுளாபரணம்)மயர்வற மதி நல மருளினவன் தானே இவனுக்கு அவை யெல்லாம் என்கையாலே இனி இவனுக்கு இதுவே உபாயம்;
அல்லாதது உபாயாந்தரங்களோபாதி.
இப் பரத்யக்ஷ ஸாக்ஷாத்காரத்தாலல்லது மோக்ஷப்ரதத்வம் இல்லாமையாலே – என்று திருமுடிக் குறை ரஹஸ்யத்திலே
வேதாந்திகளான நஞ்சீயர் நம்பிள்ளைக்கு அருளிச் செய்தார்.

“ஆசார்யாபிமாநமாவது இவை யொன்றுக்கும் ஶக்தனன்றிக்கே இருப்பானொருவனைக் குறித்து
இவனுடைய இழவையும், இவனைப் பெற்றால் ஈஶ்வரனுக்கு உண்டான ப்ரீதியையும் அநுஸந்தித்து,
ஸ்தநந்தய ப்ரஜைக்கு வ்யாதி உண்டானால் தன் குறையாக நினைத்துத் தான் ஔஷத ஸேவை பண்ணி ரக்ஷிக்கும்
மாதாவைப் போலே இவனுக்குத் தான் உபாயாநுஷ்டாநம் பண்ணி ரக்ஷிக்க வல்ல
பரம தயாளுவான மஹா பாகவதாபிமாநத்திலே ஒதுங்கி,
“வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்று அர்த்த பஞ்சகத்திலே பிள்ளைலோகாசார்யரும்
இவ் வர்த்தத்தை ஸுஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்.

லோகாசார்யரும் தாம் பேரருளாளப் பெருமாளுடைய திருவவதாரமென்று மணற்பாக்கத்து நம்பியாருக்கு ப்ரத்யக்ஷம்.
இவ் வ்ருத்தாந்தம் ஶ்ரீவசநபூஷண வ்யாக்யாநத்திலே நம்முடைய ஜீயர் தெளிய அருளிச் செய்தருளினார்.
இன்னமும் ஸச்சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணமான நல்வார்த்தைகள் நம்முடைய ஜீயர் அருளிச் செய்தவை பலவுமுண்டு;
அவையெல்லாம் க்ரந்த விஸ்தர பயத்தாலே சொல்லுகிறிலோம்.

ஆக, இப்படி ஸகல வேதங்களும், ததநுஸாரிகளான ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களும்,
அவற்றினுடைய தாத்பர்யங்களை யதா தர்ஶநம் பண்ணியிருக்கும் முனிவரான
பராஶர – பாராஶர்ய – போதாயந – ஸுகாதிகளும், உபய விபூதியையும் கரதலாமலகமாக ஸாக்ஷாத்கரித்து
ஸகல வேதாந்த ஸாரார்த்தங்களையும் த்ராவிட ப்ரஹ்ம வித்யையாலே ஸர்வாதிகாரமாம்படி பண்ணியருளின
ப்ரபந்ந ஜன கூடஸ்தரான பராங்குஶ – பரகால – பட்டநாதிகளான நம் ஆழ்வார்களும்,
ஸர்வஜ்ஞராய், அவர்களுடைய அடிப்பாடு தப்பாமல் நடக்கும் ப்ராமாணிகரான நாத – யாமுன – யதிவராதிகள் (ஆதி-வர வர முனி அளவும்)தொடக்கமான
இவ் வருகுண்டான நம் ஆசார்யர்களெல்லாரும் ஏக கண்டமாக ஶ்ரிய:பதி நாராயணன் தானே
ஆசார்யனாய் வந்தவதரித்தான் என்று அறுதி யிட்டுப் பல விடங்களிலும் கோஷிக்கையாலே,

அநாதி காலமே தொடங்கி “ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஶ்வரனையும் மறந்து, ஈஶ்வர கைங்கர்யத்தையும் இழந்து,
இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட”
பரத்வாதி பஞ்ச ப்ரகாரனான ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே அவர்களைத் திரு மந்த்ர முகேந
“கடுங் கதிரோன் மண்டலத்தூடேற்றி வைத்து” என்கிறபடியே அர்ச்சிராதி மார்கத்தாலே கொண்டு போய்,
“ததஸ்து விரஜா தீர ப்ரதேஶம்” என்கிற அக்கரை யேற்றி, அமாநவ கர ஸ்பர்ஶத்தாலே அப்ராக்ருத ஶரீரத்தையும் கொடுத்து
நித்ய விபூதியிலே நித்ய கைங்கர்யம் கொண்டருளக் கடவோம் என்று திருவுள்ளம் பற்றி,
ஶ்ரீபதரிகாஶ்ரமத்திலே நரநாராயண ரூபேண வந்து முன்பு அவதரித்தாப் போலே
இப்போதும் நம்மை ஸம்ஸார ஸாகரத்திலே நின்றும் எடுக்கைக்காக
‘ஸாக்ஷாந் நாராயணோ தேவ:க்ருத்வா மர்த்யமயீம் தநும்|
மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா” என்கிறபடியே
ப்ரதம பர்வமான ஸர்வேஶ்வரன் தானே சரம பர்வமான ஆசார்யனாய் வந்து அவதரித்தான் என்று கொள்ள வேணும்.

இப்படி அவதார விசேஷமாயிருந்துள்ள ஸதாசார்யனை ஸச் சிஷ்யன் தேவதா ப்ரதிபத்தி பண்ண வேணுமென்று
கீழே பல ப்ரமாணங்களும் சொல்லிற்று; மநுஷ்ய புத்தி பண்ணலாகாதென்று மேலே ப்ரமாணங்களும் சொல்லுகிறது.
ஆகையாலே மநுஷ்ய புத்தி பண்ணினவன் நரகத்திலே விழுமென்றும்,
தேவதா ப்ரதிபத்தி பண்ணினவன் ஈடேறுமென்றும் கீழ் மேல் சொல்லுகிற உபய ப்ரமாணங்களாலும் பலித்தது.

“எக் காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு” என்கிறபடியே
குரு விஷயத்தில் நரக ஹேதுவான மநுஷ்ய புத்தியை ஸவாஸநமாக விட்டு,
“பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்கிறபடியே பகவதவதாரமென்று கொள்ள வேணுமென்னும்
இவ் வர்த்தம் பரமாஸ்திகராய், ப்ரமாண பரதந்த்ரராய் இருக்கும் சில பாக்யாதிகர்க்கு
நெஞ்சிலே ஊற்று மாறாமல் எப்போதும் நிலை நிற்கும்.

ஆக இப்படி “யத் ஸார பூதம் ததுபாஸிதவ்யம்” என்றும்,
“பஜேத் ஸார தமம் ஶாஸ்த்ரம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஸகல ஶாஸ்த்ர தாத்பர்யார்த்தமாய், ஶ்ரீமதுரகவி, நாதமுனிகள் தொடக்கமான நம் பூர்வாசார்யகளாலே
உபதேஶ பரம்பரா ஸித்தமாய், ஆத்மாவுக்கு நேரே வகுத்த விஷயமாய், ஒருக்காலும் ஸ்வாதந்த்ர்யாதிகள் கலசாத க்ருபா மூர்த்தியாய்,
அதி ஸுலபனாய், மோக்ஷைகஹேதுவாயிருந்துள்ள ஸதாசார்யனே
“உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்”,
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
உபாயோபேயமாகப் பற்ற வேண்டியிருக்க, அத்தைச் செய்யாதே

‘சக்ஷுர்கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ரகம்யம் துயஸ்ஸ்மரேத்”,
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ” என்றும்,
“ஸுலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே”, என்றும்,
‘விதிஶிவஸநகாத்யைர் த்யாதுமத்யந்ததூரம்” என்றும்,
‘பெண்ணுலாஞ்சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான் எண்ணிலாவூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப”
என்றும் சொல்லுகிறபடியே அதி துர்லபனாய், பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய்,

ஶரணாகதனான ஶ்ரீபரதாழ்வானையும்
“ஜலாந்மத்ஸ்யாவிவோத்ருதௌ” என்னும் ஸ்வபாவத்தையுடையளான
பிராட்டி போல்வாரையும் மறுத்து காட்டிலும் தள்ளிவிடும் நிர்க்ருணனாய்,
அர்ஜுநாதிகளுக்கு முதலடியிலே ப்ரபத்தியை உபதேஶித்து அவர்களை அத்யாபி லீலை கொண்டாடும் ஸ்வபாவத்தை உடையவனாய்,
“வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க” வல்லனாய்,
“க்ஷிபாமி”, “ந க்ஷமாமி” என்னும் நிரங்குஶ ஸ்வதந்த்ரனான உபாயோபேயமாகப் பற்றி,

(நச்சு அராஅணைக் கிடந்த* நாத! பாத போதினில்,*
வைத்த சிந்தை வாங்குவித்து* நீங்குவிக்க நீஇனம்,*
மெய்த்தன் வல்லை ஆதலால்* அறிந்தனன் நின் மாயமே,*
உய்த்து நின் மயக்கினில்* மயக்கல் என்னை மாயனே!)

“உத்தாரயதி ஸம்ஸாராத் ததுபாயப்லவேந து|
குருமூர்த்திஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்கிறபடியே
உத்தாரகனாய், அவதார விஶேஷமாயிருந்துள்ள ஸ்வாசார்யனையே
“ஸர்வம் யதேவ நியமேந” என்கிறபடியே ஶேஷித்வ – ஶரண்யத்வ – ப்ராப்யத்வாதிகளில்
ஸகல புருஷார்த்தமுமாகப் பற்ற வேண்டி யிருக்க,(ஆகாரத் திரயமும் நம் ஆச்சார்யர் இடம் உள்ளதே என்று உணர வேண்டுமே)

அங்ஙனம் அன்றிக்கே,
தத் விஷயத்தில் ஸர்வ ஸாமாந்யமான கேவல-உபாகாரத்வமே கொண்டு
“முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கூட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே
தன்னெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேச வரவாற்றதென்பர் மூர்க்கராவார்” என்கிறபடியே
நம் ஆசார்யர்களுடைய திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்து,
அதுக்குத் தகுதியாயிருந்துள்ள உக்த்யநுஷ்டாநங்களை ஆசரியாமல் தங்கள் மநஸ்ஸுக்குத் தோற்றினதே சொல்லி
‘இதுதானே ஸத் ஸம்ப்ரதாய பரம்பரா ஸித்தமாய் வருகிற அர்த்தம்’ என்றது –
ஸ்வதந்த்ர ப்ரக்ருதிகளாய், ஸ்வாசார்ய விஷயத்தில் ஊற்றமற்றிருக்கும் கர்ப்ப நிர்ப் பாக்யரான
ஶுஷ்க ஹ்ருதயர்க்கு நம் தர்ஶநத்தில் தாத்பர்யார்த்தமும் ததுநுகுணமான அநுஷ்டானமும் தெரியாதாகையாலே
மேலெழுந்தவாரியான இடு சிவப்புப் போலே இவ் வர்த்தம் நெஞ்சில் நிலை யில்லாது.

“ஆசார்யாயா ஹரே தர்த்தாந் ஆத்மாநஞ்ச நிவேதயேத்|
தததீநஶ்ச வர்த்தேத ஸாக்ஷாந் நாரயணே ஹி ஸ:”,
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந் தீப ப்ரதே குரௌ, ஆசார்யஸ் ஸஹரிஸ் ஸாக்ஷாச் சரரூபீ ந ஸம்ஶய:”,
‘குருரேவ பரம் ப்ரஹ்ம”, “குருமூர்த்தி ஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்று
இத்யாதி ப்ரமாணங்களை விஶ்வஸித்து, ஆசார்ய நிஷ்டனாய் உஜ்ஜீவிக்க வேணும்;
அல்லாத போது ஈடேற வழி யில்லை என்று அஸ்மதாசார்யோக்தம்.

“ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை
என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கை யாயிருக்கும்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே
பிள்ளை லோகாசார்யரும் அருளிச் செய்தார்.

இவ் வர்த்தம் ஸத் ஸம்ப்ரதாய பரம்பரா ஸித்தமாகையாலே தந்தாமுடைய ஸதாசார்யனை ஶ்ரிய:பதியான நாராயணனாகவும்,
அவன் திருவடிகளே உபாயோபேயங்களாகவும், அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தமாகவும்,
அவனுடைய முகோல்லாஸமே பலமாகவும், ப்ராப்ய பூமியும் அவன் எழுந்தருளி யிருக்கிற இடமாகவும்,
அவனுடைய விக்ரஹாநுபவாதிகள் *உண்ணுஞ் சோற்றுப் படியே தாரகாதிகளாகவும்,
“உத்தாரயதி ஸம்ஸாராத்” என்றும்,
“எதிராசா என்னை யினிக் கடுக இப் பவத்தினின்றும் எடுத்தருளே” என்றும்,
“ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்றும்,
“என் பெருவினையைக் கிட்டிக் கிழங்கொடு தன்னருளென்னும் ஒள் வாளுருவி வெட்டிக் களைந்த இராமாநுசன்” என்றும்,
“கண்டுகொண்டென்னைக் காரிமாறப் பிரான் பண்டை வல் வினை பாற்றி யருளினான்” என்றும் சொல்லுகிறபடியே

அவனே இஷ்ட ப்ராப்தி – அநிஷ்ட நிவாரணம் பண்ணித் தரும் உத்தாரகனாகவும் ப்ரதிபத்தி பண்ணி
விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு
“குருணா யோபிமந்யேத குரும் வா யோபி மந்யதே தாவுபௌ பரமாம் ஸித்திம் நியமாதுப கச்சத:” என்று
ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத-பரகத-ஸ்வீகாரங்களிரண்டிலும் பேறு தப்பாதென்று சொல்லிற்றே யாகிலும்
ஆசார்யனையும் தான் பற்றும் பற்றும் அஹங்கார கர்ப்பமாகையாலே ‘காலன் கொண்டு மோதிரமிடுமோபாதி’ என்கிறபடியே
ஸ்வகத ஸ்வீகாரம் அவத்யமாகையாலே ஸ்வரூபத்துக்குச் சேராதென்று அத்தை விட்டு
“ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்கிறபடியே
அவனுடைய நிர்ஹேதுக க்ருபையான பரகத ஸ்வீகாரமே உத்தாரகம் என்று அறுதி யிட்டு

“ஸம்ஸார ஆவர்த்த வேக ப்ரஶமந ஶுப த்ருக் தேஶிகப்ரேக்‌ஷி – தோஹம்” என்றும்,
“நிர் பயோ நிர் பரோஸ்மி” என்றும்,
“ஆசார்யஸ்ய ப்ரஸாதேந மம ஸர்வம் அபீப்ஸிதம்| ப்ராப்நுயாமீதி விஶ்வாஸோ யஸ்யாஸ்தி ஸ ஸுகீ பவேத்” என்றும்,
‘தனத்தாலுமேதுங்குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று” என்றும், சொல்லுகிறபடியே
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் ஒருகரை சொல்லித்து.

“இருந்தேனிரு வினைப் பாசங் கழற்றி” என்கிறபடியே புண்ய பாபங்களிலும் ஒட்டற்று,
“இவ்வாறு கேட்டிருப்பார்க்காளென்று கண்டிருப்பர் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான்”,
“தத்தமிறையின் வடிவென்று தாளினையை வைத்தவரை”,
“நீதியால் வந்திருப்பார்க்குண்டியிழியாவான்” என்றும்,
“இருள்தரு மாஞாலத்தே இன்புற்று வாழும் தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து” என்றும் சொல்லுகிறபடியே
நித்ய விபூதியோடு லீலா விபூதியோடு வாசியற கால தத்தவமுள்ளதனையும் ஆநந்த மக்நராய்க் கொண்டு வாழத் தட்டில்லை.

(அவ் வானவருக்கு மவ்வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் –இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –1-)

(தத்தம் இறையின் வடிவென்று தாளிணையை
வைத்த வவரை வணங்கி யிராப் –பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம் நீதியால்
வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் –9-)

ஆகையாலிறே இஹ லோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை என்று
மாணிக்க மாலையிலே நிஶ்சயமாக ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது.

ஆனால் இப்படி இருக்கும் அதிகாரிகளுக்கு லீலாவிபூதியே நித்யவிபூதியாமோ? என்னில்,
நம்பி திருவழுதி வளநாடு தாஸர் ஓருருவைக் கண்ணி நுண் சிறுத்தாம்பை அநுஸந்தித்து
“மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக் கட்டினவாறே
ஶ்ரீபாதத்திலே ஸேவித்திருந்த ஶ்ரீவைஷ்ணவகள் “லீலா விபூதியிலே ஒருவன் இத்தை விஶ்வஸித்து அநுஸந்திக்க,
அவ்விடம் நித்ய விபூதியாம்படி எங்ஙனே?’ என்று கேட்க,

திருவழுதி வளநாடு தாஸர் ‘அதானபடி சொல்லக் கேளீர், கூரத்தாழ்வான் திருமகனார் அவதரித்த பின்பு இடைச்சுவர் தள்ளி
இரண்டு விபூதியும் ஒன்றாய்த்துக் காணும்’ என்று பணித்தார் என்னும்
இவ் வார்த்தை கண்ணி நுண் சிறுத் தாம்பு வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.

———

அந்திமோபாய நிஷ்டை – 13 – ஆசார்ய அபசார விளக்கம்

அர்த்த பஞ்சக தத்த்வஜ்ஞா: பஞ்ச ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதா: |
ஆகார த்ரய ஸம்பந்நா: மஹா பாகவதாஸ் ஸ்ம்ருதா: ||
மஹா பாகவதா யத்ரா வஸந்தி விமலாஶ் ஶுபா: தத் தேஶம் மங்களம் ப்ரோக்தம் தத் தீர்த்தம் தத் து பாவநம் ||
யதா விஷ்ணு பதம் ஶுபம்” என்னுமிவ் வர்த்தத்தை பராஶர ப்ரஹ்மர்ஷியும் அநுக்ரஹித்தார்.

“பாட்டுக் கேட்குமிடமும், கூப்பீடு கேட்குமிடமும், குதித்த விடமும், வளைத்த விடமும், ஊட்டுமிடமும் எல்லாம்
வகுத்த விடமே என்றிருக்கக் கடவன்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளை லோகாசார்யரும்
இவ் வர்த்தத்தை ஸுவ்யக்தமாக அருளிச்செய்தார்.

(நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –)

ஆகையால் இவர்கள் தங்களுடைய ஆசார்யனை உபய விபூதிநாதனென்றும், உபய விபூத்யைஶ்வர்யமும் இவனே
என்று ப்ரதிபத்தி பண்ணி இருக்க வேணும்,
“இராமானுசன் என் தன் மா நிதியே”,
“ இராமானுசன் என்தன் சேம வைப்பே” ,
“எனக்குற்ற செல்வமிராமாநுசன்” என்றிறே தந்நிஷ்டர் இருக்கும்படி.

“ஸாக்ஷாந் நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்ய மயீம் தநும்” (ஸாக்ஷாந் நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்ய மயீம் தநும் மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா.)என்று இத்யாதிகளிலே
சொல்லுகிறபடியே தங்களை ஸம்ஸாரத்தில் நின்றும் எடுக்கைக்காக ஸர்வேஶ்வரன் மநுஷ்ய ரூபம் கொண்டு
வந்திருக்கிறானென்று அறியாதே அவன் அமுது செய்தருளுகை, கண்வளர்ந்தருளுகை முதலான
மேலெழுந்த ஆகாரத்தைப் பார்த்து ஸ்வஜாதீய புத்தியாலே
“மாநிடவனென்றும் குருவை”,
“ஜ்ஞாநதீபப்ரதே குரௌ | மர்த்யபுத்திஶ்ருதம் தஸ்ய”,
“யோகுரௌ மாநுஷம்பாவம்”, “குருஷுநரமதி:” என்றும் சொல்லுகிறபடியே
ஆசார்யனை மநுஷ்யன் என்று ஒருக் காலாகிலும் ப்ரதிபத்தி பண்ணியிருக்கும் நீசர்க்கு வரும் அநர்த்தத்தைச் சொல்லுகிறது மேல்.

“விஷ்ணோரர்ச்சாவதாரேஷு லோஹ பாவம் கரோதிய: |
யோகுரௌமாநுஷம் பாவம் உபௌநரகபாதிநௌ”,
“நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ: ப்ரச்யுதஸ்யதுர்புத்தே: |
ஜலாதபேதம் கமலம் ஶோஷயதி ரவிர் ந போஷயதி”,
“ஏகாக்ஷர ப்ரதாதாரம் ஆசார்யம் யோவ மந்யதே|
ஶ்வாந யோநி ஶதம் ப்ராப்ய சண்டாலேஷ்வபி ஜாயதே|”,
“குரு த்யாகீ பவேந் ம்ருத்யு: மந்த்ர த்யாகீ தரித்ரதா|
குரு மந்த்ர பரி த்யாகீ ரௌரவம் நரகம் வ்ரஜேத்”,

“மாடும் மனையும்” என்று தொடங்கி “பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகை கண்டீர் விதி”,
“ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குருரஷ்டாக்ஷர ப்ரத: |
இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்தவ்யாஸ்தே மநீஷிபி:”,
“மாநிடவனென்றும் குருவை” என்று தொடங்கி, “எக் காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு”,
“ஏகக்ராமநிவாஸஸ் ஸந் யஶ்ஶிஷ்யோ நார்ச்சயேத் குரும்|
தத் ப்ரஸாதம் விநா குர்யாத் ஸ வை விட்ஸூகரோ பவேத்”,

“எட்டவிருந்த குருவை இறை யன்றென்று விட்டு” என்று தொடங்கி, “அம்புதத்தைப் பார்த்திருப்பானற்று”,
“பற்று குருவைப் பரனன்றென இகழ்ந்து” என்று தொடங்கி, “அப் பொருள் தேடித் திரிவானற்று” ,
“என்றுமனைத்துயிருக்குமீரஞ்செய் நாரணனும்” என்று தொடங்கி, “பொங்கு சுடர் வெயிலின் அனலுமிழ்ந்து தானுலர்த்தி யற்று”,
“தத்தமிறையின் வடிவென்று தாளிணையை வைத்தவவரை வணங்கி யிராப்பித்தராய்,
நிந்திப்பார்க்குண்டேறா நீணிரயம் நீதியால் வந்திப்பார்க்குண்டிழியாவான்”,
“தன் குருவின் தாளிணைகள் தன்னிலன்பொன்றில்லாதார்” என்று தொடங்கி,
“ஆதலால் நண்ணாரவர்கள் திரு நாடு”,
“ப்ரதி ஹந்தா குரோர் அபஸ்மாரி வாக்யேந வாக்யஸ்ய ப்ரதிகாதம் ஆசார்யஸ்ய வர்ஜயேத்”,
“அர்ச்சா விஷ்ணௌ ஶிலாதீர் குருஷூ நரமதி:” என்று தொடங்கி, “ஸர்வேஶ்வரேஶே ததிதர ஸமதீர் யஸ்ய வா நாரகீ ஸ:”

குரு பரிபவமாவது – கேட்ட அர்த்தத்தின்படியே அநுஷ்டியாதொழிகையும்,
அநதிகாரிகளுக்கு உபதேஶிக்கையும்,
“தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமா போலே,
ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணும் ஈஶ்வரன் தானே ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப் பண்ணும்”,
“குரோர் அபஹ்நுதாத் த்யாகாத் ஸாம்யாத் அஸ்மரணாதபி|
லோப மோஹாதிபிஶ் சாந்யைரபசாரைர் விநஶ்யதி”,
“குரோரந்ருதாபிஶம்ஸநம் பாதக ஸமாநம் கலு, குர்வர்த்தே ஸப்த புருஷாந் இதஶ்ச பரதஶ்ச ஹந்தி|
மநஸாபி குரோர்நாந்ருதம் வதேத்| அல்பேஷ்வப் யர்த்தேஷு”,
“பொய் யுரைத்தல், மாறுரைத்தல், பொருளல்லாதன உரைத்தல், பொருளருளச் சிதகுரைத்தல், போற்றுதற்கு நெகிழுதல்,
நை யுரைத்தல், வலி யுரைத்தல், விதி மறுத்தல், கிடத்தல், மேலிருத்தல், கால் நீட்டல், விலங்கு முகமவைத்தல்,
கையெடுத்துத் தொழ நாணுதல், களை ஒதுக்காதிருத்தல், கருத்தறியாப் பொருளுரைத்தல், காயிலே வாய்க்கிடுதல்,
மெய் விதிர்த்தல், நிழல் மிதித்தல், தன்னிழல் மேலிடுதல் – வியன் குருவின் சன்னதியில் விடுங்கருமமிவையே”.

“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந தீப்ப்ரதே குரௌ|
மர்த்ய புத்தி ஶ்ருதம் தஸ்ய ஸர்வம் குஞ்ஜர ஶௌசவத்”,
“ஸுலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர் லபம் உபாஸதே|
லப்தம் த்யக்த்வா தநம் மூடோ குப்தமந்வேஷதிக்‌ ஷிதௌ”,
“சக்ஷுர் கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ர கம்யம் து யஸ் ஸ்மரேத்|
ஹஸ்தஸ்த முதகம் த்யக்த்வா கநஸ்தமபி வாஞ்சதி”,
“குரும்த்வங்க்ருத்ய ஹுங்க்ருத்ய விப்ரம் நிர்ஜித்ய வாதத: |
அரண்யே நிர் ஜலே தேஶே பவந்தி ப்ரஹ்ம ராக்ஷஸா:”- இது ஆசார்யாபசாரம்.

————

அந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம்

இனி தத் பக்த அபசாரமாவது – இவை ஒன்றுக்கொன்று க்ரூரங்களுமாய், உபாய விரோதிகளுமாய், உபேய விரோதிகளுமாயிருக்கும்,
கூரத்தாழ்வானுடைய ஶிஷ்யன் வீர ஸுந்தர ப்ரஹ்ம ராயன் என்பானொருவன் ஆழ்வான் குமாரரான பட்டருடனே விரோதித்து
அவரைக் கோயிலிலே குடி யிருக்க வொண்ணாதபடி கடலைக் கலக்கினாப் போலே
பட்டர் திருவுள்ளத்தைக் கலக்கி மிகவும் உபத்ரவிக்கையாலே பட்டரும் கோயில் நின்றும் புறப்பட்டுத்
திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருந்த ப்ரகாரம்
“பூகி கண்டத் வயஸ ஸரஸ ஸ்நிக்த நீரோப கண்டாம் ஆவிர்மோத ஸ்திமித ஶகுநாநூதித ப்ரஹ்ம கோஷாம் |
மார்க்கே மார்க்கே பதி கநிவஹைருஞ்ச்யமாநாபவர்க்காம் பஶ்யேயம் தாம் புநரபி புரீம் ஶ்ரீமதீம் ரங்கதாம்ந:” என்று
பெருமாளையும் கோயிலையும் விட்டுப் பிரிந்து மிகவும் க்லேஶப் பட்டுக் கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே,

(பூகீ கண்ட த்வயஸ ஸரஸ ஸ்நிகத நீ ர –
பாக்கு மரங்களின் கழுத்து அளவாக பெருகுகின்றதும் –
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் இ றே

உப கண்டாம் ஆவீர்மோத ஸ்திமித சகுநாநூதித ப்ரஹ்ம கோஷாம்-
தேனோடு கூடினதும்
சிநேக யுக்தமுமான
தீர்த்தத்தை சமீபத்திலே யுடையதாய்
மகிழ்ச்சி யுண்டாக்கி
ச்திமிதமாய் இருக்கின்ற பறைவைகளினால்
அநு வாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை யுடையதாய் –

மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாந அபவர்க்காம் பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்கதாம்ந
வழி நடப்பவர்களின் கூட்டங்களினால்
வழிகள் தோறும் திரட்டி எடுத்துக் கொள்ளப் படுகிற
மோஷத்தை யுடையதான –
முக்தி கரஸ்தம் -என்றபடி
கோயில் வாசமே மோஷம் என்பார்களே-)


ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டரை ஸேவித்து
“அடியேனுக்குத் திரு விருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு ப்ராஸாதித்தருள வேணும்” என்று மிகவும் அநுவர்த்திக்க,

பட்டரும் தம்முடைய ஶிஷ்யரான நஞ்சீயரைப் பார்த்து ‘ஜீயரே, எனக்குக் கோயிலையும் , பெருமாளையும் பிரிந்த
விஶ்லேஷாதிஶயத்தாலே செவிகள் சீப்பாயாநின்றது; ஆகையாலே எனக்கு வாய் திறந்தொரு வார்த்தை சொல்லப் போகிறதில்லை.
நீர் திருவிருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு இந்த ஶ்ரீவைஷ்ணவருக்குச் சொல்லும்’ என்று அவரை
ஜீயர் ஶ்ரீபாதத்திலே காட்டிக் கொடுத்து இங்ஙனே நடந்து செல்லுகிற நாளிலே
பட்டரளவிலே விரோதித்த வீர ஸுந்தர ப்ரஹ்மராயனுக்கு ஶரீர விஶ்லேஷமாக,
அவ்வளவில் கோயிலிலே பட்டர் திருத் தாயாரான ஆண்டாளை ஸேவித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்த ஶ்ரீவைஷ்ணவர்கள்
பட்டருடைய விரோதி போகையாலே திருப் பரிவட்டங்களை முடிந்து ஆகாஶத்திலே ஏறிட்டு,
நின்றார் நின்ற திக்கிலே ஸந்தோஷித்துக் கூத்தாட, அவ்வளவில் ஆண்டாள் செய்தபடி திரு மாளிகைக்குள்ளே புகுந்து
திருக்காப்பைச் சேர்த்து தாளை யிட்டுக் கொண்டு வயிற்றைப் பிடித்து வாய் விட்டழுதாள்;

அவ்வளவில் ஸந்தோஷித்துக் கூத்தாடுகிற முதலிகள் ஆண்டாளைப் பார்த்து
‘என்! பட்டருடைய விரோதி போகவும், பட்டரும் முதலிகளும் இங்கே எழுந்தருளவும்,
நாமெல்லாரும் கண்டு வாழவும் உமக்கு மிகவும் அஸஹ்யமாயிருந்ததோ?’ என்ன,
அவ்வளவில் ஶ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து ஆண்டாள் அருளிச் செய்தபடி:-
பிள்ளைகாள்! நீங்கள் ஒன்றும் அறிகிறிகோளில்லை; வீர ஸுந்தர ப்ரஹ்மராயன் என்கிறவன் நேரே
ஆழ்வானுடைய ஶிஷ்யனாயிருந்து, ஆசார்ய புத்ரரான பட்டரைப் திண்டாட்டங்கண்டு அவர் திறத்தில்
மஹாபராதத்தை தீரக் கழியப் பண்ணி, ‘அறியாமல் செய்தேனித்தனை, பொறுத்தருள வேணும்’ என்று
பட்டர் திருவடிகளிலே தலை சாய்ப்பதும் செய்யாதே ‘இப்படி செய்தோம்’ என்கிற அநுதாபமற்றுச் செத்துப் போனான்.
ஆகையாலே அவன் ஶரீரம் விட்ட போதே யமபடர் கையிலே அகப்பட்டுக் கலங்கி அடி யுண்டு மலங்க விழிக்கிறான்
என்றத்தை நினைத்து என் வயிறெரிகிறபடி உங்கள் ஒருவருக்கும் தெரிகிறதில்லை – என்று ஆண்டாள் அருளிச் செய்தார்.
ஆகையால் அபராதாதத்தினுடைய கொடுமை இப்படியிருக்குமென்று அஸ்மதாசார்யோக்தம்.

அந்த பட்டர் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சோழ மண்டலத்திலே எழுந்தருளியிருக்கும்
கடக்கத்துப் பிள்ளை உடையவரைப் பழுக்க ஸேவித்து, சோமாசி யாண்டான் தாமும் மேல் நாட்டிலே எழுந்தருளி யிருந்து
ஶ்ரீபாஷ்யம் நிர்வஹிக்கிறார் என்கிற விசேஷம் கேட்டு அங்கே எழுந்தருள,
சோமாசி யாண்டானும் ‘கடக்கத்துப் பிள்ளை எழுந்தருளப் பெற்றதே’ என்று மிகவும் ஆதரித்துத்
தம்முடைய திருமாளிகையிலே கொண்டிருக்க, அப்பிள்ளையும் ஆண்டான் அருளிச் செய்கிற ஶ்ரீபாஷ்யம் முதலான
பகவத் விஷயங்களைக் கேட்டுக் கொண்டு ஆண்டானை ஸேவித்துக் கொண்டு ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்து
ஶ்ரீபாஷ்யம் சாற்றினவாறே மீளவும் சோழ மண்டலத்துக்கு எழுந்தருளுவதாக
அப்பிள்ளை புறப்பட்டவளவிலே ஆண்டானும் எல்லை யறுதி எழுந்தருளி அப்பிள்ளையை வழி விட்டு மீண்டு
எழுந்தருளுகிற போது ‘தேவரீர் இங்கே ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்தவாறே
அடியேனுக்கு மிகவும் ஸந்தோஷமாயிருந்தது; இப்போது விஶ்லேஷத்தாலே பெருக்க வ்யாகுலமாயிரா நின்றது.
அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல் வார்த்தை ப்ரஸாதித்தருள வேணும்’ என்று அப்பிள்ளையை மிகவும் அநுவர்த்திக்க,
அப்பிள்ளை அருளிச்செய்தபடி:- ‘சோமாசி யாண்டான்! தேவரீர் ஜ்ஞாந வ்ருத்தருமாய்,
ஶ்ரீபாஷ்யம், திருவாய்மொழி இரண்டுக்கும் நிர்வாஹகருமாய், எல்லாத்தாலும் பெரியவராயிருந்தீரே யாகிலும்
சாற்றி யிருக்கிற திருப் பரிவட்டத் தலையிலே பாகவதாபசார நிமித்தமாக ஒரு துணுக்கு முடிந்து வையும்’ என்று
அருளிச் செய்தாரென்று அஸ்மதாசார்யோக்தம்.

‘ப்ராதுர் பாவைஸ் ஸுர நர ஸமோ தேவ தேவஸ் ததீயா: ஜாத்யா வ்ருத்தைரபி ச குணத: தாத்ருஶோநாத்ரகர்ஹா|
கிந்து ஶ்ரீமத் புவந பவந த்ராணதோந்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்பகல்ப: ப்ரகர்ஷ:”,
“அர்ச்சாவதாரோபாதாநம் வைஷ்ணவோத்பத்தி சிந்தநம்|
மாத்ரு யோநி பரீக்ஷாயாஸ் துல்யமாஹுர் மநீஷிண:”,
“அர்ச்சாயாமேவ மாம் பஶ்யந் மத் பக்தேஷு ச மாம் த்ருஹந்|
விஷ தக்தை ரக்நி தக்தைராயுதைர் ஷந்தி மாமஸௌ”,
“யா ப்ரீதிர் மயி ஸம்வ்ருத்தா மத் பக்தேஷு ஸதாஸ்துதே|
அவமாந க்ரியா தேஷாம் ஸம்ஹரத் யகிலம் ஜகத்”,
மத் பக்தம் ஶ்வ பசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா: |
பத்ம கோடி ஶதேநாபி ந க்ஷமாமி கதாசந” என்றுமுண்டு.

“சண்டாலமபி மத் பக்தம் நாவமந்யேத புத்திமாந்|
அவமாநாத் பதத்யேவ ரௌரவே நரகே நர:”,
“அஶ்வமேத ஸஹஸ்ராணி வாஜபேய ஶதாநி ச|
நிஷ்க்ருதிர் நாஸ்தி நாஸ்த்யேவ வைஷ்ணவம் வேஷிணாம் ந்ருணாம்”,
“ஶூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஶ்வ பசம் ததா|
ஈக்ஷதே ஜாதி ஸாமாந்யாத் ஸ யாதி நரகம் த்ருவம்”,
“அநாசாராந் துராசாராந் அஜ்ஞாத்ரூந் ஹீந ஜந்மந:|
மத் பக்தாந் ஶ்ரோத்ரியோ நிந்தந் ஸத்யஶ் சண்டாலதாம் வ்ரஜேத்”,
“அபிசேத் ஸு துராசாரோ பஜதே மாதநந்யபாக்|
ஸாது ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸ்தோ ஹி ஸ:”,
“ஸர்வைஶ்ச லக்ஷணைர் யுக்தோ நியுதஶ்ச ஶ்வ கர்மஸு|
யஸ்து பாகவதாந் த்வேஷ்டி ஸுதூரம் ப்ரச்யுதோ ஹி ஸ:”

“அமரவோரங்கமாறும்” என்று தொடங்கி,
“நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோரளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும்”,
“ஈஶ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர்”,
“அவமாந க்ரியா”, “பாகவதாபசாரந்தான் அநேக விதம்;
அதிலே யொன்று அவர்கள் பக்கல் ஜந்ம நிரூபணம். இது தான் அர்ச்சாவதாரத்தில் உபாதந ஸ்ம்ருதியிலுங்காட்டில் க்ரூரம்.
அத்தை மாத்ரு யோநி பரீக்ஷையோடொக்கும் என்று ஶாஸ்த்ரம் சொல்லும்”,
“த்ரிஶங்குவைப் போலே கர்ம சண்டாலனாய் மார்விலட்ட யஜ்ஞோபவீதந்தானே வாராய் விடும்”,
“ஜாதி சண்டாலனுக்குக் காலாந்தரத்திலே பாகவதனாயிருக்க யோக்யதை யுண்டு; அதுவுமில்லை இவனுக்கு ஆரூட பதிதனாகையாலே”.

“திருவுடை மன்னர், செழு மா மணிகள், நிலத் தேவர், பெரு மக்கள், தெள்ளியார், பெருந் தவத்தர், உருவுடையார்,
இளையார், வல்லார், ஒத்து வல்லார், தக்கார், மிக்கார், வேத விமலர், சிறு மா மனிசர், எம்பிரான் தன சின்னங்கள்” என்று
நங்குல நாதரான ஆழ்வார்கள் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு இப்படித் திரு நாமம் சாற்றுகையாலே
கேவலம் தன்னோடக்க ஒரு மநுஷ்யன் என்று வைஷ்ணவனை நினைத்திருக்கையே பாகவதாபசாரம்.

“தஸ்ய ப்ரஹ்ம விதாகஸ:”,
“நாஹம் விஶங்கே ஸுர ராஜ வஜ்ராந ந த்ர்யக்ஷ ஶுலாந் ந யமஸ்ய தண்டாத்|
நாக்ந் யர்க்க ஸோமா நாலவித்த ஹஸ்தாத் ஶங்கே ப்ருஶம் பாகவதாபசாராத்”.
ப்ரஹ்ம விதோபமாநாத் “ஆயுஶ் ஶ்ரியம் யஶோ தர்மம் லோகாநாஶிஷ ஏவ ச|
ஹந்தி ஶ்ரேயாம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹததிக்ரம:”,
“நிந்தந்தியே பகவதஶ் சரணாரவிந்த சிந்தாவதூத ஸகலாகிலகல்ம ஷௌகாந்|
தேஷாம் யஶோ தந ஸுகாயுர பத்ய பந்து மித்ராணி சஸ்திரதராண்யபி யாந்தி நாஶம்”,
“அப்யர்ச்சயித்வா கோவிந்தம் ததீயாந் நார்ச்சயந்தி யே|
ந தே விஷ்ணோ: ப்ரஸாதஸ்ய பாஜநம் டாம்பி கா ஜநா:”,
‘இழவுக்கவர்கள்பக்கல் அபசாரமே போரும்”,
“வைஷ்ணவாநாம் பரீவாதம் யோ மஹாந் ஶ்ருணுதே நர:|
ஶங்குபி ஸ்தஸ்ய நாராசை: குர்யாத் கர்ணஸ்ய பூரணம்”,

“இவ் விடத்திலே வைநதேய வ்ருத்தாந்தத்தையும், பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது”.

இப்படி ஆசார்யாபசாரமும், தத் பக்தாபசாரமும் அதி க்ரூரமென்று வேத ஶாஸ்த்ர புராணாதிகளும்,
அவற்றினுடைய அர்த்த தாத்பர்யங்களையும் யதா தர்ஶநம் பண்ணி ஸர்வஜ்ஞராயிருக்கும்
நம் ஆழ்வார்களும், ஆசார்யர்களும் ஒருக்கால் சொன்னாப் போலே ஒன்பதின்கால் சொல்லிக் கை யெடுத்து
ஒரு மிடறாகக் கூப்பிடுகையாலே ஆஸ்திகனாய், உஜ்ஜீவந பரனாய் இருக்குமவன் மறந்து ஒரு காலத்திலும், ஒரு தேஶத்திலும் ,
ஸ்வப்நாவஸ்தையிலும் தனக்கு வகுத்த ஶேஷிகளாய், ஸர்வ ப்ரகாரத்தாலும் ரக்ஷகராயிருந்துள்ள இவ் விஷயங்களை
கிஞ்சித் மாத்ரமும் நெகிழ நினைக்கக் கடவனல்லன். நெகிழ நினைத்தானாகில் நிலம் பிளந்தால் இழையிட வொண்ணாதாப் போலவும்,
கடலுடைந்தால் அடைக்க வொண்ணாதாப் போலவும், மலை விழுந்தால் தாங்க வொண்ணாதாப் போலவும்
இது அப்ரதி க்ரியமாயிருப்பதொரு அநர்த்தம் என்று நம்முடைய ஜீயர் பல காலும் அருளிச் செய்தருளுவர்.

ஆகையாலே ஸதாசார்ய – தத் துல்ய- விஷயங்களை கிஞ்சிந் மாத்ரமும் நெகிழ நினைக்கலாகாதென்கிற
அவஶ்யாநுஷ்டேயங்களை ப்ரதிபாதிக்கிறது மேல்.

———

அந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம்

“யோஸௌ மந்த்ரவரம் ப்ராதாத் ஸம்ஸாரோச்சேத ஸாதநம்|
யதிசேத் குருவர் யஸ்ய தஸ்யோச்சிஷ்டம் ஸுபாவநம்”, என்றும்,
“குரோர்யஸ்ய யதோச்சிஷ்டம் போஜ்யம் தத் புத்ர ஶிஷ்யயோ:” என்றும்.
“குரோருச்சிஷ்டம் புஞ்ஜீத” என்றும் சொல்லுகிறபடியே கீழே பல ப்ரமாணங்களாலும்
ஸர்வேஶ்வரனுடைய அவதாரமாக ப்ரதிபாதிக்கப்பட்ட தந்தாமுடைய ஸதாசார்யனே தைவமென்றும்
விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு ஆசார்யன் அமுது செய்து திருக் கை மாற்றி யருளின திருத் தளிகையில் ப்ரஸாதமும்,(இவர் மோர் முன்னாக உண்டவர் அன்றோ)

“ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணி பத்யோபயுஜ்ய ச|
நித்யம் விதிவதர்க்யாத்யை ராவ்ருதோப் யர்ச்சயேத் குரும்” என்கிறபடியே
அவனுடைய திருவடிகளில் தீர்த்தமும் பரம பாவநமுமாய், பெற்ற தாயினுடைய முலைப் பால் போலே
தாரகமுமாய், போஷகமுமாயிருக்கையாலே ஶரீராவஸாநத்தளவும் போக்யமுமாயிருக்கும்.

அவ்வளவன்றிக்கே “கங்கா ஸேது ஸரஸ்வத்யா: ப்ரயாகாந் நைமிஶாதபி|
பாவநம் விஷ்ணு பக்தாநாம் பாத ப்ரக்ஷாலநோதகம்”,
“யத் தத் ஸமஸ்த பாபாநாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி:|
நிர்ணீதம் பகவத் பக்த பாதோதக நிஷேவணம்”,
“திஸ்ர: கோட்யர்த்த கோடீ ச தீர்த்தாநி புவந த்ரயே|
வைஷ்ணவாங்க்ரி ஜலாத் புண்யாத் கோடி பாகேந நோ ஸம:”,
“ப்ராயஶ் சித்தமிதம் குஹ்யம் மஹா பாதகிநாமபி|
வைஷ்ணவாங்க்ரி ஜலம் ஶுப்ரம் பக்த்யா ஸம் ப்ராப்யதே யதி”,
“நாரதஸ்யாதிதே: பாதௌ ஸர்வாஸாம் மந்த்ரே ஸ்வயம்|
க்ருஷ்ண: ப்ரக்ஷால்ய பாணிப்யாம் பபௌ பாதோதகம் முநே:||,

“தொண்டர் சேவடிச் செழுஞ்சேறென் சென்னிக் கணிவனே”,
“தொண்டரடிப் பொடி யாட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே”,
“தத்பாதாமப் வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸுபாவநம்|
ததுக்தி மாத்ரம் மந்த்ராக்ர்யம் தத் ஸ்ப்ருஷ்ட மகிலம் ஶுசி”,
“கோடி ஜந்மார்ஜிதம் பாபம் ஜ்ஞாநதோ அஜ்ஞாநத: க்ருத: |
ஸத்ய: ப்ரதஹ்யதே ந்ரூணாம் வைஷ்ணவோச்சிஷ்ட போஜநாத்”,
“போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே

ஜ்ஞாநமும், விரக்தியும், ஶாந்தியும் உடையவராயிருக்கும் பரம ஸாத்த்விகராய், ஆசார்ய துல்யராயிருக்கும் மஹா பாகவதர்கள் அமுது செய்தருளின திருத் தளிகையில் ப்ரஸாதமும்,
அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும் வைதமாக ஸ்வீகரிக்கை யன்றிக்கே ஆத்மாவினுடைய ஶேஷத்வத்தின்
எல்லை நிலமாகையாலே ஸத்தா தாரகம் என்று அவஶ்யம் ஸ்வீகரிக்க வேணும்.

அது எங்ஙனே என்னில், “ஶரீரமேவ மாதா பிதரௌ ஜநயத:” என்கிற ஸாமாந்ய விஷயத்தில்,
“பிது: ஜ்யேஷ்டஸ்ய ப்ராதுருச்சிஷ்டம் போக்தவ்யம்” என்று
அவர்களுடைய ஶிஷ்ய புத்ரர்களுக்கு ஸ்வீகார்யமென்று விதித்த ஆபஸ்தம்ப மஹர்ஷி தானே
“ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி; தச் ச்ரேஷ்டம் ஜந்ம” என்று
ப்ரஹ்ம வித்யா ப்ரதனாகையாலே விஶேஷ பிதாவான ஸதாசார்யன் ஶரீரோத்பாதகனைப் பற்றவும்
இப்படி உத்க்ருஷ்டன் என்று ப்ரதிபாதிக்கையாலே ஶிஷ்யனுக்கு ஸதாசார்ய – தத் துல்யர்கள் அமுது செய்தருளின தளிகையில் ப்ரஸாதமும்,
அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும் அவஶ்யம் ஸ்வீகார்யமென்னுமிடம் கிம்புநர் ந்யாய ஸித்தமிறே.

இவ் விடத்தில் ஸதாசார்ய தத் துல்யரென்றது ஆரை என்னில் –
‘ஆசார்யவத் தைவவந் மாத்ருவத் பித்ருவத்’ இத்யாதிகளான ஶாஸ்த்ரங்கள் ஶ்ரீ வைஷ்ணவர்களை ஆசார்ய துல்யரென்று சொல்லுகையாலும்,
“அநுகூலராகிறார் ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள் இட்டு மாறினாப் போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படி யிருக்கும் பரமார்த்தர்” என்றும்,
“அதாவது ஆசார்ய துல்யரென்றும் ஸம்ஸாரிகளிலும், தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்று நினைக்கை” என்றும்,
“அநுகூலர் ஆசார்ய பரதந்த்ரர்” என்றும் ஶ்ரீவசந பூஷணத்திலே பிள்ளை லோகாசார்யரும் அருளிச் செய்த திவ்ய ஸூக்திப்படியே
பரம பாகவதர்களாய்,

“இராமாநுசனைத் தொழும் பெரியோர் பாதமல்லால் என்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையே”,
“இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடமே” என்கிறபடியே
அர்த்த காமங்களில் நசை யற்று ஆசார்ய பரதந்த்ரர்க்கு ஶேஷமாய், தங்களுக்கு ஸதாநுபவ யோக்யராயிருக்கும் பெரியோர்களை.

இன்னமும் இவ் வர்த்தத்தை ஸர்வஜ்ஞராயிருக்கும் ஆசார்யர்கள் ஸம்ஶய விபர்யயமற ஸப்ரமாணமாக
ஸ்வ ஸ்வ ப்ரபந்தங்களிலே தெளிய அருளிச் செய்தார்கள்.

மற்றுள்ளாரும் சொல்லுவார்கள்.
அதெங்ஙனே என்னில்,
“நல்லார் பரவுமிராமாநுசன் திருநாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர்,
அவர்க்கே எல்லாவிடத்திலும் என்றுமெப்போதிலுமெத்தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே”,
“இன்புற்ற சீலத்திராமாநுச, என்றுமெவ்விடத்துமென்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து,
எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி, என்னை யாக்கி அங்காட்படுத்தே” என்று
நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனாரும் அருளிச் செய்தார்.

கூரத்தாழ்வான் குமாரரான ஶ்ரீபராசர பட்டர் பகவத் விஷயம் அருளிச் செய்து கொண்டு தாமும் முதலிகளும் கூடிப்
பெரிய திருவோலக்கமாக எழுந்தருளி யிருக்கச் செய்தே கூரத்தாழ்வான் தேவிகள் ஆண்டாள் திருவோலக்கத்தின் நடுவே எழுந்தருளி
தம்முடைய குமாரரான பட்டரை தண்டனிட்டுத் தீர்த்தம் கொள்ள, ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அத்தைக் கண்டு
‘பெற்ற தாயார் தம்முடைய புத்ரனைத் தண்டனிட்டுத் தீர்த்தங்கொள்ளலாமோ’ என்ன,
அப்போது ஆண்டாள் அருளிச் செய்தபடி – திருவோலக்கத்திலே எழுந்தருளி யிருக்கிற முதலிகளைப் பார்த்து
‘பிள்ளைகாள்! அந்யர்க்குண்டான எம்பெருமானுடைய தீர்த்த ப்ரஸாதங்களை ப்ரஸாதப்பட வேணும்,
தான் ஏறி யருளப் பண்ணிக் கொண்ட எம்பெருமானுடய ப்ரஸாதங்கள் க்ரஹிக்கலாகாதென்று சொல்லுமவர்கள் ஶுஷ்க ஹ்ருதயராய்,
யதாஜ் ஞாநம் பிறவாத ப்ராந்தரன்றோ?’ என்று அருளிச் செய்தார்.என்னும் இப் ப்ரஸங்கம்
திருப்பாவை வ்யாக்யாநத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்தார்.

ஆண்டாள் தாம் அப்படி செய்தது என் கொண்டு? என்ன,
‘ ந பரீக்ஷ்ய வயோ வந்த்யா: நாராயண பராயணா:” என்றும்,
“வண்ணச்செஞ்சிறு கைவிரலனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன்” என்றுமுண்டாகையாலே செய்தாள்.

————-

அந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)

ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகளநுவர்த்திக்க அறிவு கொடுத்துக் குலதெய்வத்தோடொக்க பூஜை கொண்டு
பாவந தீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப் படியும்,
விஶ்வாமித்ர – விஷ்ணுசித்த- துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழுகுலமானவன் நிலையார் பாடலாலே
ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும், கீழ் மகன் தலை மகனுக்கு ஸம ஸகாவாய்,
தம்பிக்கு முற் பிறந்து வேலும் வில்லுங்கொண்டு பின் பிறந்தாரை ஶோதித்து.
தமையனுக்கு இளையோன் ஸத் பாவம் சொல்லும்படி ஏக குலமானமையும்,
தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் ஸகுண ஸஹ போஜநமும்,
ஒரு பிறவியிலே இரு பிறவியானாரிருவர்க்கு தர்ம ஸுநுஸ்வாமிகள் அக்ர பூஜை கொடுத்தமையும்,
ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாஶமாகச் செய்த புத்ர க்ருத்யமும்,
புஷ்ப த்யாக போக மண்டபங்களில் பணிப் பூவும் ஆல வட்டமும் வீணையுங்கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும்,
வைதிகோத்தமரும், மஹா முநியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாகாநுயாகோத்தர வீதிகளில்
காயாந்ந ஸ்தல ஶுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது.
அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யா வ்ருத்தங்களை கர்த்தப ஜந்மம், ஶ்வபசா தமம், ஶில்ப நைபுணம், பஸ்மாஹுதி,
ஶவ விதவாலங்காரமென்று கழிப்பர்கள் – என்று ஆசார்ய ஹ்ருதயத்தில்(85)
பிள்ளை லோகாசார்யர் திருத் தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்தார்.

உத்க்ருஷ்டமாக ப்ரமித்த ஜந்மம் ப்ரம்ஶ ஸம்பாவனையாலே “ஶரீரே ச” என்கிறபடியே பய ஜநகம்.
அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் பாவிக்க வேணும்.
அபக்ருஷ்டமாக ப்ரமித்த உத்க்ருஷ்ட ஜந்மத்துக்கு இரண்டு தோஷமுமில்லை. நைச்யம் ஜந்ம ஸித்தம்.
ஆகையாலே உத்க்ருஷ்ட ஜந்மமே ஶ்ரேஷ்டம். “ஶ்வபசோபி மஹீபால”.
நிக்ருஷ்ட ஜந்மத்தால் வந்த தோஷம் ஶமிப்பது விலக்ஷண ஸம்பந்தத்தாலே. ஸம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது
ஜந்மக் கொத்தை போக வேணும். ஜந்மத்துக்கு கொத்தையும், அதுக்குப் பரிஹாரமும்
“பழுதிலாவொழுகல்” என்கிற பாட்டிலே அருளிச் செய்தார்.

(ஸ்வ சோபி மஹீ பால – சூரணை-217–விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்கிற படி
எத்தனை யேனும் நிக்ருஷ்ட ஜன்மாவாய் இருந்தானே ஆகிலும்–பகவத் பக்தனானவன் த்வைஜநிர் காட்டில் அதிகன்-)

(ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பழுதிலா ஒழுகல்-இத்யாதியாலே -பிரம்மா தொடங்கி தங்கள் அளவும் வர
நெடுகப் போகிற வம்ச பிரவாகத்தில் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்கும் அவர்களாய் -பலராய் இருக்கிற சதுர் வேதிகாள்
இதில் கீழ்ப் பட்டது இல்லை என்னும் நிஹீன குலத்தில் பிறந்தார்களே  ஆகிலும்
என்னோடு உண்டான அசாதாராண சம்பந்தத்தை அறிந்து -அந்த ஞான அனுரூபமான ஸ்வ ஆசாரத்தை உடையார் ஆகில் –
நீங்கள் அவர்கள் காலில் விழுந்து ஆராதியுங்கோள் -அவர்கள் உங்கள் பக்கில் ஞான அபேஷை பண்ணில் -நீங்கள் ஆதரித்து சொல்லுங்கோள் –
அவர்கள் பகவத் ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கையில் -கேட்டு கிருதார்தர் ஆகுங்கோள் –
எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே -என்மாத்ரம் ஆகிலும் அவர்களை ஆராதித்து-நல் வழி போகுங்கோள்)

வேதகப் பொன் போலே இவர்களோட்டை ஸம்பந்தம்.
இவர்கள் பக்கல் ஸாம்ய புத்தியும், ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும். அதாவது ஆசார்ய துல்யரென்றும், ஸம்ஸாரிகளிலும்,
தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்றும் நினைக்கை. ஆசார்ய ஸாம்யத்துக்கடி ஆசார்ய வசநம்.
இப்படி நினையாதொழிகையும் அபசாரம். இவ் வர்த்தம் இதிஹாஸ புராணங்களிலும், பயிலுஞ்சுடரொளி நெடுமாற்கடிமையிலும்,
கண் சோர வெங்குருதியிலும், நண்ணாத வாளவுணரிலும், தேட்டருந்திறல் தேனிலும்,
மேம்பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் விஶதமாகக் காணலாம்.
க்ஷத்ரியனான விஶ்வாமித்ரன் ப்ரஹ்மர்ஷியானான். விபீஷணனை ராவணன் குலபாம்ஸநனென்றான்.
பெருமாள் இக்ஷவாகு வம்ஶ்யனாக நினைத்து வார்த்தை அருளிச்  செய்தார்.
பெரிய உடையாருக்குப் பெருமாள் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் பண்ணி யருளினார்.
தர்ம புத்ரர் அஶரீரி வாக்யத்தையும், ஜ்ஞாநாதிக்யத்தையுங்கொண்டு ஶ்ரீவிதுரரை ப்ரஹ்மமேதத்தாலே ஸம்ஸ்கரித்தார்.
ருஷிகள் தர்ம வ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம ஸந்தேஹங்களை ஶமிப்பித்துக் கொண்டார்கள்.
க்ருஷ்ணன் பீஷ்ம த்ரோணாதி க்ருஹங்களை விட்டு ஶ்ரீவிதுரர் திருமாளிகையிலே அமுது செய்தான்.
பெருமாள் ஶ்ரீஶபரி கையாலே அமுது செய்தருளினார்.
மாறனேரி நம்பி விஷயமாகப் பெரிய நம்பி உடையவருக்கு அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது – என்று
ஶ்ரீவசந பூஷணத்திலே பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்தார்.

“பவத் தயயா யதீந்த்ர த்வத் தாஸ தாஸ கணநாசரமாவதௌய: தத்தாஸதைகரஸதா விரதா மமாஸ்து” என்று
நம்முடைய ஜீயரும் யதிராஜ விம்ஶதியிலே அருளிச்செய்தருளினார்.

(ஸப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா
நஷ்டா பவத்விஹ பவத் தயயா யதீந்த்ர ! |
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ ய:
தத் தாஸதைக ரஸதாSவிரதா மமாஸ்து ||
(16)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, இஹ – இந்த ஸரீரம் இருக்கும் நிலையிலேயே, அஸ்மதீயா – அடியேனுடையதான, ஸப்தாதி போக விஷயா – நீசங்களான ஸப்தம் முதலியவற்றாலுண்டான அநுபவத்தைப்பற்றிய ருசி: – ஆசையானது, பவத்தயயா – தேவரீருடையதாய் அதிகமான துக்கத்தையே பற்றுக்கோடாகக்கொண்ட தயையினால், நஷ்டா பவது – உருத்தெரியாதபடி காணாமல்போகுக, (மேலும்) ய: – எந்த பாக்யஸாலியானவன், த்வத்தாஸ – விற்கவும் வாங்கவும் உரியவனாய் தேவரீர் இட்ட வழக்காயிருக்கும் அடியேனுடைய, தாஸகணநா – அடியவர்களை எண்ணும்போது, சரமாவதௌ – அவ்வெண்ணிக்கையின் கடைசியான எல்லையில், பவதி – இருக்கிறானோ, தத்தாஸதா – அவனைக் குறித்துச்செய்யும் அடிமையில், ஏக ரஸதா – (மற்றவற்றில் ஆசையோடு கலசாமல்) ஒன்றுபட்ட ஆசையானது, அவிரதா – நித்யமாக , பவத்தயயா – தேவரீருடைய தயையினால், மம அஸ்து – அடியேனுக்கு உண்டாயிடுக.)

திருவயிந்திரபுரத்திலே ஶ்ரீவில்லிபுத்தூர்ப் பகவரென்று உத்தமாஶ்ரமியாயிருப்பாரொருவர் எல்லாரும்
ஒரு துறையிலே அநுஷ்டாநம்பண்ண, தாம் ஒரு துறையிலே அநுஷ்டாநம் பண்ணுவராய்த்து.
அவரொரு நாள் அநுஷ்டாநம் பண்ணி மீண்டு வாரா நிற்கச் செய்தே இருந்த ப்ராஹ்மணர்
‘உமக்கு ஒரு துறையிலே நீராடுவதேது?’ என்று கேட்க,
‘விஷ்ணு தாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ண தர்மிண:|
அஸ்மாகம் தாஸ வ்ருத்தீநாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்கதி:” என்று,
‘நீங்கள் ப்ராஹ்மண வர்ண தர்மிகள், நாங்கள் தாஸ வ்ருத்திகள். கைங்கர்ய பரர். ஆகையாலே
உங்களோடு எங்களுக்கு அந்வயமில்லை’ என்று துறை வேறிட்டுப் போந்தாரென்று இவ் வ்ருத்தாந்தம்
ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யாநத்திலே திருநாராயணபுரத்தில ஆய் அருளிச் செய்தார்.

“பூதங்களைந்தும் பொருந்துமுடலினாற்பிறந்த சாதங்கள் நான்கினொடும் சங்கதமாம்,
பேதங்கொண்டென்ன பயன் பெறுவீர்” (14) என்றும்,
“குடியுங்குலமுமெல்லாம் கோகனகை கேள்வனடியார்க்கு அவனடியே யாகும்” என்றும்,
கேவல வர்ணாஶ்ரமங்களையே பற்றி நிற்க வில்லை ஒரு ப்ரயோஜநமில்லை;
ஸர்வர்க்கும் ஸர்வ ப்ரயோஜநமும் ஶ்ரிய:பதி நாராயணன் திருவடித் தாமரைகளே காணும் என்று
ஞான சாரத்திலே அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தார்.

(பூதங்கள் ஐந்தும் பொருந்து உடலினில் பிறந்த
சாதங்கள் நான்கினோடும் சங்கதமாம் பேதம் கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ்வுயிர்க்கும் இந்திரை கோன்
தன்னடியே காணும் சரண் –14-

பதவுரை:

பூதங்கள் ஐந்தும் பொருந்தும்-நிலம், நீர், தீ, காற்று, வானம், என்னும் ஐந்து பொருட்களுடைய கூட்டுறவால் உண்டான
உடம்பினால்-உடலை அடிப்படையாக வைத்துப் பிறந்த
சாதங்கள்-சாதிகள்
நான்கினொடும்-அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாலு வகைப் பிரிவோடும்
சங்கதமாம்-சேர்ந்திருக்கிற
பேதங்கொண்டு-உயர்வு தாழ்வாகிற வேற்றுமைகளைக் கொண்டு
என்னபயன் பெறுவீர்-என்ன லாபத்தை அடைவீர்?
எவ்வுயிர்க்கும்-அனைத்து உயிர்களுக்கும்
இந்திரைகோன்-லக்ஷ்மீ நாயகனான
தன்னடியே-எம்பெருமானுடைய திருவடிகளே
சரண்-புகலாகும் என்று
காணும் -அறிவீர்களாக (குறிப்பு) காணும் முன்னிலை

குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவன் அடியே யாகும் படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர்கலியைச் சேர்ந்திட மாய்ந்தற்று –15-

பதவுரை:

குடியும் -பிறந்த ஊரும்
குலமும் -பிறந்த கோத்திரமும்
எல்லாம் 0மற்றும் பிறப்பு (குறி) அடையாளங்கள் எல்லாம்
கோனகை-திருமங்கை மணாளன்
கேள்வனடியார்க்கு-தொண்டர்களுக்கு
அவனடியே யாகும்-இறைவனான அவனுடைய திருவடிகளே அனைத்தும் ஆகும்
இதற்கு எடுத்துக்காட்டு
படியின்மேல்-பூமியில்
நீர் கெழுவும்-நீர் நிறைந்த
ஆறுகளின்-நதிகளுடைய
பேரும்-கங்கை முதலிய பெயரும்
நிறமும்-சிவப்பு, வெளுப்பு, கருப்பு முதலிய
எல்லாம் வேற்றுமைகள் எல்லாம்
ஆர்கலி-சமுத்திரத்தை
சேர்ந்து-கலந்து
மாய்ந்திடும் அற்று-அழிந்து போவது போன்று)

 

“தேஹாத்ம ஜ்ஞாந கார்யேண வர்ண பேதேந கிம்பலம்|
கதிஸ் ஸர்வாத்மநாம் ஶ்ரீமந் நாராயண பத த்வயம்”
“ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ …நைவ க்ராமகுலாதிபி: விஷ்ணுநா-தஸ்ய ஸர்வம் ஏவ ஹி” என்னக் கடவதிறே.
“அத்ய ப்ரப்ருதி ஹே லோகா: யூயம் யூயம் வயம் வயம்|
அர்த்த காம பரா யூயம் நாராயண பரா வயம்” என்று ஶ்ரீஶுக ப்ரஹ்மர்ஷி தாம்
வேத வ்யாஸ புத்ரராயிருக்க ஶுக தாதர் என்று தம்மை யிட்டுப் பிதாவை நிரூபிக்க வேண்டும் படியான
ஜ்ஞாநாதிக்யத்தை உடையவராகையலே லௌகிகரைப் பார்த்து ஒட்டற வார்த்தை சொல்லி அவ்வளவன்றிக்கே,
“நாஸ்தி ஸங்கதிரஸ்மாகம் யுஷ்மாகஞ்ச பரஸ்பரம்|
வயம் து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்ரிய கிங்கரா:” என்று(நீங்கள் இந்திரிய கிங்கரர்கள் -ஆக்கையின் வழி உழன்றுள்ளீர் அடியேன் இந்தர்யம் அருளிய அவனுக்கு கிங்கரர்)
தமக்குண்டான விஶேஷ ஜ்ஞாநத்தையும் அவர்களுக்குண்டான இந்த்ரிய பாரவஶ்யதையையும் சொல்லி,
தத் ஸம்பந்தத்தையும் அறுத்து, அவ்வளவுமன்றிக்கே,
“நாஹம் விப்ரோ ந ச நரபதிர்நாபி வைஶ்யோ ந ஶூத்ரோ நோ வா வர்ணீ நசக்ருஹபதிர் நோ வநஸ்தோ யதிர்வா|
கிந்து ஶ்ரீமத் புவந பவந ஸ்தித்யபாயைக ஹேதோர் லக்ஷமீ பர்த்துர் நர ஹரிதநோர் தாஸ தாஸஸ்ய தாஸ:” –
என்னுடைய ஸ்வரூபம் வர்ணாஶ்ரமங்களை விட்டு நிரூபிக்கப்பட்டது;
ஜ்ஞாநாநந்தங்களும், பகவச் சேஷத்வமும் புற விதழ் என்னும்படி ததீய ஶேஷத்வத்தை யிட்டே நிரூபிக்கும்படி யிருக்கும்.
இப்படியான பின்பு பாகவதர்களென்றும், அபாகவதர்களென்றும் இரண்டு ஜாதியாகச் சொல்லுமேதொழிய
வேறொருபடி சொல்லத் தக்க பந்தமில்லை உங்களுக்கும் எங்களுக்கும் – என்று
ஶ்ரீஶுக ப்ரஹ்மர்ஷி லௌகிகரோடுண்டான ஸம்பந்தத்தை அறுத்துக் கொண்டு ஶ்ரீநரஸிம்ஹரூபியான நாராயணனுக்கு
ஶேஷ பூதராயிருக்குமவர்களுக்கு ஶேஷமாயிருக்கும் பாகவதர்களுடனே கூடிப் போனார்களென்னுமது ஜகத் ப்ரஸித்தமிறே.

“பஞ்சாஸ்த்ராங்கா: பஞ்ச ஸம்ஸ்கார யுக்தா: பஞ்சார்த்தஜ்ஞா: பஞ்சமோபாயநிஷ்டா: |
தே வர்ணாநாம் பஞ்சமாஶ் ச ஆஶ்ரமாணாம் விஷ்ணோர் பக்தா:
பஞ்ச கால ப்ரபந்நா:”,
“தேவர்ஷி பூதாப்தந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜந்|
ஸர்வாத்மநாயஶ் ஶரணம் அஶரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபந்ந:” என்றிறே ஸ்வரூபமிருப்பது.
ஆகையாலே ஜ்ஞாநவான்கள், அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யா வ்ருத்தங்களை கர்த்தப ஜந்மம், ஶ்வபச அதமம்,
ஶில்ப நைபுணம், பஸ்மாஹுதி, ஶவவிதவாலங்காரமென்று கழித்துத் தந்தாமுக்குத் தஞ்சமாகப் பற்று மிடத்தில்
பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும் ஈஶ்வரனைப் பற்றுவாரும்,
மோக்ஷத்துக்கே ஹேதுவான ஆசார்யனைப் பற்றுவாரும், உபேக்ஷணீயரான ஈஶ்வர பரதந்த்ரரைப் பற்றுவாரும்,
அநுகூலரான ஆசார்ய பரதந்த்ரரைப் பற்றுவாருமாய், அதிகார அநுகுணமாயிருக்கும்.

ஆகையாலே யிறே “நசேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ|
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஶ:” என்று கூரத்தாழ்வான்
‘நாராயண’ ‘ராமாநுஜ” என்கிற திருமந்த்ரங்களிரண்டுக்கும் வாசி பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயும்,
மோக்ஷைக ஹேதுவாயுமிருக்குமென்னுமிடம் தோற்ற ‘சதுரா சதுரக்ஷரீ’ என்று அருளிச் செய்தார்.

——-

அந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை

கண்ணன் எம்பெருமான் குசேலரை உபசரித்தல்
கண்ணன் எம்பெருமான் அர்ஜுனனுக்கு தேரோட்டியாய் இருத்தல்
ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளை ஆசார்யனாக ஏற்றுக் கொள்ளுதல்
எம்பெருமான் நம்மாழ்வாரிடம் அதீத அன்பு காட்டுதல்

“லோகே கேசந மத் பக்தாஸ் ஸத்தர்மாம்ருத வர்ஷிண:|
ஶமயந்த்யகமத்யுக்ரம் மேகா இவ தவா நலம்”,
“ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்” ,
”ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:”,
“மம ப்ராணா ஹி பாண்டவா:”
“நிரபேக்ஷம் முநிம் ஶாந்தம் நிர்வைரம் ஸம தர்ஶநம்|
அநு வ்ரஜாம் யஹம் நித்யம் பூயேயேத் யங்க்ரிரேணுபி:”,
“மம மத் பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகாந்ருப|
தஸ்மாந் மத் பக்த பக்தாஶ்ச பூஜநீயா விஶேஷத:” ,
“அந்நாத்யம் புரதோ ந்யஸ்தம் தர்ஶநாத் க்ருஹ்யதே மயா|
ரஸாந் தாஸஸ்ய ஜிஹ்வாயாமஶ்நாமி கமலோத்பவ”,
“மத் பக்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்|
ஸ்வயம்ப் யர்ச்சநஞ் சைவ மதர்த்தே டம்ப வர்ஜநம்||
மத் கதா ஶ்ரவணே பக்திஸ் ஸ்வர நேத்ராங்க விக்ரியா|
மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி||
பக்திரஷ்டவிதாஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே|
ஸ்விப்ரேந்த்ரோ முநிஶ் ஶ்ரீமாந் ஸ யதிஸ்ஸ ச பண்டித:||
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்” என்று
ஸர்வேஶ்வரன் தானும் தன்னுடைய அடியாரை லோக பாவநராகவும், தனக்கு ஆத்மாவாகவும், ப்ராணனாகவும்,
‘நாள் தோறும் நான் அவர்களுடைய பாத ரேணுக்களை ஆசைப் பட்டுப் பின் செல்லா நின்றேன்’ என்றும்,
‘அவர்களுடைய ஸத் காரம் எனக்கு மிகவும் ப்ரியம்’ என்றும்,
‘அந்நாதிகளிலுண்டான ரஸங்களெல்லாம் அவர்கள் முகேந ஜீவிப்பேன்’ என்றும்,
ம்லேச்ச ஜாதியிலே பிறந்தார்களே யாகிலும் தன்னைப் போலே அவர்களும் பூஜ்யர் என்றும் அருளிச் செய்தான்.

“அக்ஷ்ணோ: பலம் தாத்ருஶ தர்ஶநம் ஹி தந்வா: பலம் தாத்ருஶகாத்ரஸங்கம்|
ஜிஹ்வாபலம் தாத்ருஶ கீர்த்தநஞ்ச ஸுதுர்லபா பாகவதா ஹி லோகே”,
“நாஹம் ஸமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குணாந் பத்மபுவோப்யகண்யாந்|
பவத்ப்ரபாவம் பகவாந் ஹி வேத்தி ததாபவந்தோ பகவத்ப்ரபாவம்” என்று –
மஹா பாகவதர்களுடைய தர்ஶந – ஸ்பர்ஶந – ஸம்பாஷணங்களே தனக்கு ஸர்வ ப்ரயோஜநமென்று
அவர்களுடைய திவ்ய குணங்களைச் சொல்லுகைக்கு நான் ஸமர்த்தை யன்று என்றும்,
அவர்களுடைய ப்ரபாவத்தை என்னால் சொல்லித் தலைக் கட்டப் போகாது என்றும்
ஶ்ரீபூமிப் பிராட்டியும் அருளிச் செய்தாள்.

எம்பெருமானார் திருவதாரத்தாலே அனைவருக்கும் உஜ்ஜீவனம்

“திறம்பேன்மின் கண்டீர்” என்று தொடங்கி ,
“இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்களென்றான் நமனுந்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு” என்றும்,
“அவன்தமர் எவ்வினையராகிலும் எங்கோனவன்தமரே என்றொழிவதல்லால்
நமன்தமராலாராயப் பட்டறியார் கண்டீர் அரவணைமேல் பேராயற்காட்பட்டார் பேர்” என்றும்,
“பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம் நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை” என்றும்,
“வெள்ள நீர் வெள்ளத் தணைந்த அரவணை மேல் துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே வள்ளலே
உன் தமர்க்கென்றும் நமன் தமர் கள்ளர்” என்று பகவத் ப்ரபந்நர் எப்படி இருந்தார்களே யாகிலும்
அவர்களை யமாதிகள் ஏறிட்டுப் பார்க்க வொண்ணாத மாத்ரமுமன்றிக்கே யம படர் கள்ளர் பட்டது படுவார்கள் என்று
பாகவத ப்ரபாவத்தை ஆழ்வார்களும் அருளிச் செய்தார்கள்.

“நாவலிட்டுழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே” என்னும் மதிப்பரிறே ஆழ்வார்கள்.
“ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி” என்றும் பாகவத வைபவத்தைச் சொல்லுகிறது.

இந்த ப்ரஸங்கத்திலே யமாதிகள் பாகவத விஷயத்தில் வர்த்திக்கிறபடி சொல்லுகிறது.
“ஸ்வ புருஷமபி வீக்ஷ்ய பாஶ ஹஸ்தம் வததி யம: கில தஸ்ய கர்ண மூலே|
பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந் ப்ரபுரஹமந்ய ந்ருணாம் ந வைஷ்ணவாநாம்||
கமல நயந வாஸுதேவ விஷ்ணோ தரணிதர அச்யுத ஶங்க சக்ர பாணே|
பவஶரணமிதீரயந்தி யேவை த்யஜபட தூரதரேணதாநபாபாந்” என்றும் இத்யாதிகளாலே –
நான் பகவத் ப்ரபந்நரை நியமிக்கக் கர்த்தாவன்று; என்னுடைய ப்ருத்யரான நீங்களும் அவர்களைக் கண்டால்
தடஸ்தராய் உங்களைப் பேணிக் கொண்டு தூரத்திலே விலகிப் போங்கோள் – என்று
அவர்களுக்கு புத்தி சொல்லி எல்லாரையும் கர்மாநுகுணமாக உசித தண்டம் பண்ணுகிற
யமன் தன்னாலும் ஶ்ரீவிஷ்ணு புராணாதிகளிலே பாகவத வைபவம் சொல்லப்பட்டதிறே.

அபாகவத ஸம்ஶ்லேஷம் பாகவத விஶ்லேஷத்தையும், பகவத் விஶ்லேஷத்தையும் பிறப்பிக்கும்;
பாகவத ஸம்ஶ்லேஷம் பகவத ஸம்ஶ்லேஷத்தையும், அபாகவத விஶ்லேஷத்தையும் பிறப்பித்து,
இவனையும் கரை மரம் சேர்த்து விடும். இவ் வெல்லை மயக்கு ஸதாசார்யன் கண் வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது.
அவன் கண் வட்டம் விட்டால் நித்ய ஸம்ஸாரியாய்ப் போமித்தனை என்று ஆச்சான் பிள்ளையும் மாணிக்க மாலையிலே அருளிச் செய்தார்.

ஆகையாலே ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஆசார்ய அதீநமா யிருக்க வேணும்;
அப்படி யிராமல் கலங்கி தத் ஸம்பந்தத்தையும் மறந்து, ஸ்வாதந்த்ர்யம் தலை யெடுத்து,
அக்ருத்ய கரணம், பகவதபசாரம், பாகவதாபசாரம், அஸஹ்யாபசாரம் தொடக்கமான அநர்த்தங்களிலே
ஏதேனுமொன்றை விளைத்துக் கொண்டு, யாவதாத்மபாவி ரௌரவாதி கோர நரகங்களிலே விழுந்து
நஶித்துப் போகத் தக்கதான ஆத்மாக்களையும், முற்படத் தங்கள் திருவடிகளிலே ஒரு ஸம்பந்தமுண்டாகையாலும்
அவ் வாத்மாக்கள் மேல் படப் போகிற து:க பரம்பரைகளை அறிந்தருளுகையாலும் அவர்கள் விஷயத்தில்
‘ஐயோ’ என்கிற க்ருபாதிஶயத்திலே விட மாட்டாதே
“பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்”ளுகையிறே ஸதாசார்ய லக்ஷணம்.

ஆகையாலே தம்முடைய ஶிஷ்யனான நாலூரானும் க்ருமி கண்டனோடே கூடித் தம்முடைய விஷயத்திலே
மஹாபராதத்தைப் பண்ண, பெருமாள் அவனை ‘நஷமாமி’ என்று முனிந்தருள,
அவரோடே மறுதலைத்து ‘நாம் பெற்ற லோகம் நாலூரானும் பெற வேணும்’ என்று கூரத்தாழ்வானும்;

தம்முடைய ஶிஷ்யரா யிருப்பாரொருவர் ஸஹ வாஸ தோஷத்தாலே கலங்கி, விஷய ப்ராவண்யம் தலை யெடுத்து,
‘பட்டரே! உமக்கும் நமக்கும் பணியில்லை’ என்று அவருடைய திருவடிகளை விட்டகன்று போகத் தேட,
‘வாராய் பிள்ளாய்! அது உன்னுடைய அபிப்ராயத்தாலே யன்றே, நீ விட்டாலும் நான் விடேன்’ என்று
பட்டரும் தம்முடைய திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தும்;

அந்தரங்கராய், மஹா விரக்தராய் இருப்பாரொரு ஸாது ஶ்ரீவைஷ்ணவர் அந்ந தோஷத்தாலே அஹங்கராதிகள் தலை யெடுத்து,
பூர்வ தஶையில் பொகட்டு வந்த சவளத்தை (= ஈட்டியை) மீளவும் எடுத்துக் கொண்டு ராஜ ஸேவை பண்ணித் திரிய,
இப்படிக் கை கழிந்து போனவரையும் பின் தொடர்ந்து யத்நேந பிடித்துக் கொண்டு வந்து,
ஒரு அறையிலே தாமும் அவருமாக அடைத்துக் கொள்ள, ஶ்ரீபாதத்துக்கு பரிவரான முதலிகள் எல்லாருங்கூடி
‘ஐயோ! ப்ரமாதம் பிறக்கிறது; சவளமும் உடைத்துக் கையுமான அவனை விட்டு அறையினின்றும் புறப்பட வேணும்’ என்று
அதி க்லேஶத்தோடே கூப்பிட, “இவனை ரக்ஷித்தாலல்லது நான் புறப்படேன்; இவன் உஜ்ஜீவியாதிருக்கில்
இந்த சவளக்காரனோடே அடைத்துக் கொண்டு சாவேன்’ என்ற வேதாந்திகளான நஞ்சீயரும்;

தந்தாம் விஷயங்களிலே குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும், க்ருபையும், சிரிப்பும், உகப்பும், உபகார ஸ்ம்ருதியும்
நடக்க வேணுமென்று அருளிச் செய்த மாத்ரமன்றிக்கே அநுஷ்டாநத்துக்கு ஸீமா பூமியாயிருக்கும் பிள்ளை லோகாசார்யரும்,

“ஸ்வீகரோதி ஸதாசார்யஸ் ஸர்வாநப்ய விஶேஷத: |
யத் புநஸ் தேஷு வைஷம்யம் தேஷாம் சிஜ்ஜ்ஞாந வ்ருத்தயோ:||
தேஷாமேவ ஹி தோஷோயம், ந சாஸ்யேதி விநிஶ்சிதம்|
அபக்வ பத்ம கோசாநாம் அவிகாஸோ ரவேர்யதா” என்கிறபடியே

தங்கள் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கச் செய்தேயும் அவர்களுடைய ஜ்ஞாநதௌர்பல்யத்தாலே மீளவும் விபரீத ப்ரவ்ருத்தராய்,
பிறந்து போகத் தேடினவர்களையும் விட க்ஷமரன்றிக்கே
“ஸ்காலித்யே ஶாஸிதாரம்” என்றும்,
“தேஶிகோ மே தயாலு:” என்றும் சொல்லுகிறபடியே
தங்களுடைய நியமத்தலும் க்ருபாதிஶயத்தாலும் இப்படி ரக்ஷித்துப் போந்தார்கள்.

ஸ்ரீ சீதாப்பிராட்டியும் ஸ்ரீ மணவாள மா முனிகளும்

“வாஸுதேவம் ப்ரபந்நாநாம் யாந்யேவ சரிதாநி வை|
தாந்யேவ தர்ம ஶாஸ்த்ராணீத்யேவம் வேத விதோ விது:”
இப்படி பூர்வசார்யர்கள் விசேஷத்தை நம்முடைய ஆசார்யர் திருநகரியிலே ஓலமேச்சான் மடத்திலே
தாம் கண் வளர்ந்தருளா நிற்க, எம்பெருமானாருக்கு விஷமிட்ட சண்டாளரைப் போலே மனக்குற்ற மாந்தரான
அஸூயா பரரானவர்கள் கர்ம காலத்திலே மத்ய ராத்ரியிலே அந்த மடத்திலே அக்நி ப்ரக்ஷேபத்தைப் பண்ண,
அந்தக் கள்ளளரை அத் தேஶத்துக்குக் கர்த்தரான ராஜாக்கள் கண்டு பிடித்துக் கொண்டு சித்ரவதம் பண்ணத் தேட

“கேட்பார் செவி சுடு” என்கிறபடியே ஆருக்கும் ஶ்ரவண கடோரமான இம் மஹா பாபத்தைத் தம்முடைய விஷயத்திலே கூசாமல்
தீரக் கழியப் பண்ணின நிஷ்டுரரையுமுட்பட {அகப்பட}
“பாபாநாம் வா ஶுபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம|
கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந் நாபராத் யதி” என்றும்,
“பவேயம் ஶரணம் ஹி வ:” என்றும்,
“க: குப்யேத் வாநரோத்தம” என்றும் சொல்லுகிறபடியே

அந்த ராஜாக்களோடே மறுதலைத்து அந்தக் கள்ளரைக் கொல்லாதபடி விடுவித்து ரக்ஷித்தருளின
பரம க்ருபையாளர் என்னுமது லோகத்திலே எல்லாருமறிய ப்ரஸித்தமிறே.

இன்னமும் அஸ்மதாசார்யருடைய க்ருபாதிஶயமும், அவதார விசேஷமும் கீரி, கிளி, வ்ருக்ஷ வ்ருத்தாந்தங்களிலும்,
ஸ்வப்ந வ்ருத்தாந்தங்களிலும் அறிவார்க்கிறே தெரிவது.

——-

அந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்

இப்படி “ஸ்தாவராண்யபி முச்யந்தே” என்றும்,
“பஶுர் மநுஷ்ய: பஷீ வா” என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே
ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணுமென்ற திருவுள்ளத்தையுமுடையராய்,
பரம தயாவான் களாயிருந்துள்ள நம் ஆசார்யர்களுடைய அபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஒதுங்கித்

தாங்கள், ஸர்வஜ்ஞராகையாலே ஸாராஸார விவேகரில் தலைவராய், செய்த வேள்வியர் என்கிறபடியே க்ருதக்ருத்யராய்,
எப்போதும் மங்களா ஶாஸந பரராய்,
“நானும் பிறந்தமை பொய்யன்றே” ,(10-4)
“தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும்” என்று சொல்லுகிறபடியே

பழுதாகாத வழியை அறிந்து வேறாக ஏத்தி யிருக்குமவனைப் பற்றித் தெளிவுற்று வீவின்றி,
எல்லாம் வகுத்த விடமென்று விஶ்வஸித்து மார்பிலே கை வைத்துக் கோடையிலே குளிர் காற்றடிக்க மிகவும் ஸுகோத்தரராய்,
“சிற்ற வேண்டா” என்கிறபடியே ஒரு பரபரப்பற்று (குரு பரம்பரையைப் பற்றுகை)
“தேவுமற்றறியேன்” என்றிருக்கும் ஶ்ரீமாந்களான அதிகாரிகள்:

ஆழ்வார் திருமகளாராண்டாள்
நம்மாழ்வார் திருவடிகளிலே ஶ்ரீமதுரகவி யாழ்வார்
நாதமுனி திருவடிகளிலே குருகைக் காவலப்பன்
ஆளவந்தார் திருவடிகளிலே தெய்வ வாரி யாண்டான்
எம்பெருமானார் திருவடிகளிலே வடுக நம்பி
நம்பிள்ளை திருவடிகளிலே பின்பழகிய பெருமாள் ஜீயர்
வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே கூர குலோத்தம தாஸ நாயன், மணல் பாக்கத்து நம்பியார்
திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஜீயர்
இப்படியிருக்கும் உத்தமாதிகாரிகள் இவ்வாசார்யர்களிடத்திலே இன்னமும் உண்டாயிருக்கும் கண்டு கொள்வது.

நம்முடைய ஜீயர் திருவடிகளிலே இந் நிஷ்டைக்கு அதிகாரிகளாயிருக்கும் முதலிகள் பலருமுண்டு.
மற்றும் இக் காலத்தில் ஸச் சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணம் உண்டாயிருக்கும் ஜ்ஞாநாதிகரிடத்திலும் காணலாம்.

இனி மேலும் ராமாநுஜ ஸித்தாந்தம் நடக்கும் காலத்தளவும்
“கலியுங்  கெடும் கண்டு கொண்மின்” என்கிறபடியே ஏவம் பூதரான அதிகாரிகளும் ஸுசிதர்.

“வேத ஶாஸ்த்ர ரதா ரூடா: ஜ்ஞாந கட்க தராத் விஜா:|
க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம: பரமோ மத:” என்றும்,
“அதி கந்தவ்யாஸ் ஸந்தோ யத்யபி குர்வந்தி நைகமுபதேஶம்|
யாஸ்தேஷாம் ஸ்வைரகதாஸ்தா ஏவ பவந்தி ஶாஸ்த்ரார்த்தா:” என்றும்,
‘அல்லி மலர்ப் பாவைக் கன்பரடிக் கன்பர் சொல்லுமவிடு சுருதியாம்” என்றும்,
“ததுக்தி மாத்ரம் மந்த்ராக்ர்யம்” என்றும் சொல்லுகிறபடியே
ஜ்ஞாநாதிகரானவர்கள் “நாவ காரியம் சொல்லிலாதவ”ர்களாகையாலே விநோதமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ததும்
நல் வார்த்தையா யிருக்குமதொழிய மறந்தும் அபார்த்தமாக ஒரு வார்த்தையும் அருளிச் செய்யார்களாகையாலே
அவர்களுடைய திவ்ய ஸுக்திகளெல்லாம் ஸகல வேதாந்த ஸாரமான திரு மந்த்ரமாயிருக்கும்.

‘ருசோ யஜும்ஷி ஸாமாநிததைவ அதர்வணாநி ச|
ஸர்வ மஷ்டாஷராந்தஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம்” என்கிறபடியே ஸகல ப்ரமாண ப்ரமேயங்களும் ததந்தர் பூதமாயிருக்கும்.

ஆகையாலே நம்முடைய பெரியோர்களெல்லாரும் திரு மந்த்ரத்தில் மூன்று பதத்திலும் சொல்லப்படுகிற
ஶேஷத்வ – பாரதந்த்ர்ய – கைங்கர்யங்கள் ப்ரதம பர்வமான ஈஶ்வர விஷயத்திலே அரை வயிறாய்,-சரம பர்வமான ஆசார்ய விஷயத்திலே பரிபூர்ணமாக ஸித்திக்கும் என்னும் இவ் வர்த்தம்
இம் மந்த்ரத்தில் தாத்பர்யார்த்தமாகையாலே அத்தை உட் கொண்டு
ஸம்ஸ்க்ருதமாகவும், த்ராவிடமாகவும், மணி ப்ரவாளவாகமவும், ஏக கண்டமாக அருளிச்செய்த
ப்ரமாண பலத்தாலே ஆசார்யாபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஸுப்ரதிஷ்டிதராய்,

“தென் குருகூர் நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே”,
“நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றும்,
“எந் நா விருந்தெம்மையனிராமாநுசனென்றழைக்கும்”,(102)
“இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”,
“உன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறு சமய வெல்லும் பரம இராமாநுச” என்றும்,

“குரோர்வார்த்தாஶ்ச கதயேத் – குரோர் நாம ஸதா ஜபேத்” என்றும் சொல்லுகிறபடியே
ஶேஷியாய், ஶரண்யனாய், ப்ராப்யனாய்,
“மாதா பிதா யுவதய:”,
“அன்னையாயத்தனாய்”,
“தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம் என்றனக்கு நீயே எதிராசா” என்றும் இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே ஸர்வ வித பந்துவுமாயிருந்துள்ள ஸதாசார்யனைக் குறித்துப் பண்ணும் ப்ரபத்தியான
ப்ரதம நமஸ்ஸை ஸதாநுஸந்தேயமான மந்த்ரமென்றும்,

“குருரேவ பரம் ப்ரஹ்ம”,
“தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி”,(38)
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந தீப ப்ரதே குரௌ”,
“பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அவனே பர தேவதை என்றும்,

“யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா ப்ரதீயதே|
தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ:”,
“வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல் சொல்லார் பொழில் சூழ் திருப்பதிகள்
எல்லாம் மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள் அருளாலே வைத்த அவர்”,(36)
“நம்புவார் பதி வைகுந்தம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவன் எழுந்தருளி யிருக்கிற விடமே ப்ராப்ய பூமியான பரம பதம் என்றும்,

“ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே”,
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி, அப் பேறளித்தற்கு ஆறொன்றும் இல்லை மற்றச் சரணன்றி”,
“உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவன் திருவடிகளே உபாயோபேயங்களென்றும்,

“ராமாநுஜார்ய வஶக: பரிவர்த்திஷீய”,
“நித்யம் யதீந்த்ர தவ திவ்ய வபுஸ் ஸ்ம்ருதௌ மே ஸக்தம் மநோ பவது வாக் குண கீர்த்தநேஸௌ|
க்ருத்யஞ்ச தாஸ்ய கரணந்து கர த்வயஸ்ய வ்ருத்த்யந்தரேஸ்து விமுகம் கரண த்ரயஞ்ச”,(4)
‘ஶக்திக்கிலக்கு ஆசார்ய கைங்கர்யம்” (293)என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
த்ரிவித கரணத்தாலும் அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தமென்றும்,

‘ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும் பல ஸாதந ஶுஶ்ரூஷையும்”(323) என்கிறவிடத்தில் சொல்லுகிறபடியே
இவன் பண்ணும் கைங்கர்யம் கண்டு உகக்குமவனுடைய முகோல்லாஸமே மஹாபலம் என்றும்
அத்யவஸித்திருக்கும் அதிகாரிகளுக்கு ஸாம்ஸாரிகமான ஸகல துர் வ்யாபாரங்களையும் ஸவாஸநமாக விட்டு
அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸதா பஶ்யந்திப்படியே அநுபவித்து,
“அத்ர, பரத்ரசாபி”ப்படியே
அந்தமில் பேரின்பத்த டியரோடிருந்து அம்ருத ஸாகராந்தர நிமக்ந ஸர்வ அவயவராய்க் கொண்டு
கால தத்த்வமுள்ளதனையும் மங்களாஶாஸநம் பண்ணி வாழலாம்.

கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்” (104)என்கிற பாட்டும்,
“நாவினால் நவிற்று” என்கிற பாட்டும்
“நல்ல வென் தோழி” என்கிற பாட்டும்,
“மாறாய தானவனை” என்கிற பாட்டும்,
பரமாசார்யரான ஆளவந்தாரருளிச் செய்த “மாதா பிதா யுவதய:” என்கிற ஶ்லோகமும்,
“பஶுர் மநுஷ்ய:” என்கிற ஶ்லோகமும்,
“பால மூக ஜட அந்தாஶ்ச” என்கிற ஶ்லோகமும்,
“ஆசார்யஸ்ய ப்ராஸாதே ந மம ஸர்வ மபீப்ஸிதம்” என்கிற வசநமும்,
“இஹ லோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்ட அத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை” என்று
மாணிக்க மாலையிலே பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த திவ்ய ஸூக்தியும்,

“மந்த்ரமும், தேவதையும், பலமும், பல அநுபந்திகளும், பல ஸாதநமும், ஐஹிக போகமுமெல்லாம் ஆசார்யனே
என்று நினைக்கக் கடவன்” (322)என்று ஶ்ரீவசந பூஷணத்திலே பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்தருளின திவ்ய ஸுக்தியும்
இதுக்கு ப்ரமாணமாக அநுஸந்தேயங்கள்.

———-

ஶ்ரீஸௌம்ய ஜாமாத்ரு  முநே: ப்ரஸாத ப்ரபாவ ஸாக்ஷாத் க்ருத ஸர்வ தத்த்வம்|
அஜ்ஞாந தாமிஸ்ர ஸஹஸ்ர பாநும் ஶ்ரீ பட்ட நாதம் முநிமாஶ்ரயாமி||

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

பரம காருணிகரான ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீ சரமோபாய நிர்ணயம்

January 17, 2022

ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்

ஸ்ருத்யர்த்த ஸார ஜநகம் ஸ்ம்ருதி பால மித்ரம்
பத்மோல்லஸத் ப௧வதங்௧ரி புராண பந்தும் |
ஜ்ஞாநாதி ராஜம் அபய ப்ரத ராஐ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி ||

(வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய்
ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய்,
ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய்,
ஞானங்களுக்கு பேரரசராய்,
அபய ப்ரதராஜரின் பிள்ளையாய்,
பரம காருணிகரான என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

அபயப்ரத பாத தேஶிகோத்பவம்
குருமீடே நிஜமாதரேண சாஹம் |
ய இஹாகில லோக ஜீவநாதர:
சரமோபாய விநிர்ணயம் சகார ||

யாவரொருவருடைய அருளாலே அடியேன் சரமோபாய நிர்ணயத்தைச் சொல்லப் போகிறேனோ,
என் ஆசார்யராய், அபய ப்ரதபாதர் என்னும் திருநாமமுடைய அப்பெரியவாச்சான் பிள்ளையை ஆஶ்ரயிக்கிறேன்.

அபயப்ரத பாதாக்யமஸ்மத் தேஶிகமாஶ்ரயே |
யத் ப்ரஸாதஹம் வக்ஷ்யே சரமோபாயநிர்ணயம் ||

(அபயப்ரத பாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய்,
எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை
இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)

அஸ்மஜ் ஜநக் காருணய ஸுதாஸந்துஷி தாத்மவான் |
கரோமி சரமோபாய நிர்ணயம் மத்பிதா யதா ||

அடியேனுடைய தந்தையாருடைய கருணை அமுதத்தினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்மாவையுடைய அடியேன்
எந்தையார் அருளிய முறையிலே சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

அஸ்மதுத்தாரகம் வந்தே யதிராஜம் ஜகத்குரும் |
யத்க்ருபாப்ரேரித: குர்மி சரமோபாய நிர்ணயம் ||

உலகனைத்துக்கும் ஆசார்யராய், நமக்கு உத்தாரகரான எதிராசரை வணங்குகிறேன்,
அவருடைய கருணையினால் தூண்டப்பட்டுச் சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

பூர்வாபர குரூகதைஶச ஸ்வப்ந வ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் ||

எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும்,
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று
அடியேனால் நன்கு நிரூபிக்கப்படுகிறது.

பெரியவாச்சான் பிள்ளை யருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுப குண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம்|
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
ஶிஷ்டம் ஶ்ரீமத் குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||

[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷி யாயிருப்பவர்:
நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனி யாவார்.
கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார்.
அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது.
வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும்
அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

உடையவருக்கு முன்புள்ள முதலிகளுடையவும், பின்புள்ள முதலிகளுடையவும் திவ்ய ஸூக்திகளாலும்
அத்யத்புதமான ஸவப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயமானது உடையவரிடத்திலே பூர்ணமாக
நிர்ணயிக்கப்படுகையாலே இதுக்குச் சரமோபாய நிர்ணயமென்று திருநாமம் ஆயிற்று.

முதலிகள் தந்தாம் ஆசார்யர்கள் பக்கலிலே ஸாக்ஷாத் ஆசார்யத்வத்தை அறுதியிட்டு
அவ்வர்களுடைய அபிமானமே உத்தாரகமென்று சரமோபாயத்தை அறுதியிட்டிருந்தார்களேயாகிலும்,
தந்தாம் ஆசார்யர்கள் உடையவரையே உத்தாரகத்வேந அறுதியிட்டுத் தங்களைப் பற்றினார்க்கும்
உடையவரையே தஞ்சமாக உபதேசிக்கையாலே,
ஸர்வர்க்கும் உத்தாரகத்வேந சரமோபாயத்தை அறுதியிடலாவது உடையவர் பக்கலிலேயிறே.

குருரிதி ச பதம் பாதி என்கிறபடியே ஆசார்யத்வம் ஒளி விஞ்சிச் செல்லுகிறது
உடையவர் பக்கலிலே வ்யவஸ்திதமிறே.
வடுகநம்பி வார்த்தையை நினைப்பது.

உடையவர்க்கு முன்புள்ள முதலிகள் பாவ்யர்த்த ஜ்ஞாநமுடையவர்களாகையாலே,
பரம காருணிகரான இவரிடத்திலே உத்தாரகத்வம் நிலை நிற்குமென்று அறுதியிட்டுத்
தங்களுக்குப் பேற்றில் குறையின்றிக்கே இருக்கவும்
“கலியும் கெடும்” என்கிற ஆழ்வாருடைய திவ்ய ஸுக்தியை உட்கொண்டு இவரோடு
அவிநாபாவ ஸம்பந்தத்தைப் பரமோத்தாரகமென்று நினைத்து இருந்தார்கள்.

ஸம்பந்தம் தான் த்விவிதமாயிறேயிருப்பது;
ஆரோஹண ஸம்பந்தம் என்றும்,
அவரோஹண ஸம்பந்தம் என்றும்.

அதில் ஆரோஹண ஸம்பந்தம் ஆசார்யத்வேந படிப்படியாக ஏறி நிற்கும்.
அவரோஹண ஸம்பந்தம் ஶிஷ்யத்வேந படிப்படியாக இறங்கி வரும்.

இவை இரண்டுக்கும் விளை நிலம் உடையவரிறே.
இதில் ஒன்று நிரவதிகமாய் ஒன்று ஸாவதிகமாய் இருக்கும்.

அஸாவஸாவித்யாபகவத்த: என்கிறபடியே
எம்பெருமானளவும் சென்று கொழுந்திலையாயிருக்குமிறே.
மற்றயைது கொழுந்துவிட்டுப் படராநிற்கும். இந்த ஸம்பந்த த்வயந்தான் இடையிட்டு வந்ததொன்றிறே.
குருபரம்பரையிலே இடையிடபட்டாரிறே உடையவர்.

ஒரு முக்தாஹாரத்தில் நடுவே ஒளியுடைய மாணிக்கத்தை அழுத்தி வைத்தால் இருதலையும் நிறம்பெற்று வருமிறே.
அப்படியே உடையவரும் இருதலை நாயகமாகக் கொண்டு உபய ஸம்பந்திகளுக்கும் ப்ரகாசகரானார்.
இரண்டு திறத்தார்க்கும் கார்யம் கொள்ளும் போது மத்யஸ்தரைக் கொண்டு கொள்ளவேணுமிறே.
நடுச்சொன்னவரிறே மத்யஸ்தராவார். நாம் பற்றினாலும் முன் பின்னுற்ற ப்ரகாரம் கார்யம் தலைக்கட்டுமிறே
பத த்ரயத்துக்கும் மத்யம பதம் போலே ஆயிற்று.

இவர் இங்கிருக்கும் படி அதாவது – மகாரமான நார பதவாச்யர்க்கு இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களைப்
பண்ணிக் கொடுக்கவற்றான எம்பெருமானுடைய உபாயபாவத்தை காட்டுகிறது மத்யம் பதம்.
அப்படியே உடையவரும் – குருபரம்பரைக்கிடையிலிருந்து ஸம்பந்த த்வயத்துக்கும் கார்யோபயோகியான
தம்முடைய ஆசார்யத்வேந உத்தாரகத்வத்தை விஶேஷேண வெளியிட்டுக் கொண்டு
விஶ்வஸநீயராயிறேயிருக்கிறது இத்தையிட்டாயிற்று.
அர்வாஞ்ச: என்று அருளிச் செய்தது

இப்படி உத்தாரகமான ஆசார்யத்வந்தான் இரண்டு படிப்பட்டிருக்கும் –
ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வம் என்றும்,
க்ருபா மாத்ர ப்ரஸ்நநாசார்யத்வம் என்றும்.

இதில் பின்பு சொன்னது க்வாசித்கமாக இருக்கும்.
அக்ரோக்தமானது பஹுவ்யக்திதமாயிருக்கும்.

இவனுக்கு பேறு தப்பாதென்று துணிந்து இருக்கலாவது க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்ய ஸம்பந்த்த்தாலே யாயிற்று.
எலியெலும்பனாயிருக்கிற இவனுக்கு ஆசார்யன் திருவுள்ளத்துக்கேற்க அநுவர்த்திக்க முடியாதிறே

இவ்வர்த்தத்தில் ஆழ்வானுக்கும் ஆண்டானுக்கும் ப்ரஸங்கமாக ஆழ்வான் அறுதியிட்ட வார்த்தையை நினைப்பது.
“மத்தகத்துத் தன்தாளருளாலே வைத்த அவா” என்ற அவர் அருளிச் செய்கையாலே,
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யன் முக்யனென்று அறுதியிட்டார் என்று
நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச்செய்வர்.

ப்ரதம பர்வத்தில் பரகத ஸ்வீகாரம் போலே
சரம பர்வத்திலும் பரகத ஸ்வீகாரமே இவனுடைய பேற்றுக்கு முக்யமான உபாயமென்று அருளிச் செய்வர்.

யஸ்ஸாபராதாந் ஸ்வபத ப்ரபந்நாந் ஸவகீய காருண்ய குணேந பாதி |
ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ்தைவ ஸத்பி: பரிகீர்த்யதே ஹி || என்று
ஸோமாசியாண்டான் ஆசார்ய வைபவத்தை அருளிச்செய்கிற ‘குரு குணாவளி’ என்கிற ப்ரபந்தத்திலே
க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யனே முக்யமாக அருளிச்செய்தாரிறே.

இப்படி முக்கியமான க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் க்வாசித்கமான விடத்திலும் உத்தாரகத்வ விஶிஷ்டமாயிருக்கும்.
அதுவும் ம்ருக்யமாயிருக்கும்.
உத்தாரகத்வ விஶிஷ்டமான க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் பூரணமாக கடவது உடையவர் பக்கலிலேயிறே.

ஸ்வாநுவ்ருத்தியினாலே நம்பியை ப்ரஸன்னராம்படி பண்ணி வருத்தத்தினாலே பெற்ற சீரிய அர்த்தத்தை
தாம் மேல் விழுந்து க்ருபையினாலே எல்லார்க்கும் வெளியிட்டருளினாரிறே.

ராஜ மஹேந்தரப் பெருமாள் அரையருக்கு அரங்கமாளிகை என்று குமாரருண்டாய்,
அவர் பித்ருவசனாத் யுல்லங்கநம் பண்ணி அவிநீதராய்த் திரிகிற நாளிலே உடையவர் அறிந்தருளி,
ஶ்ரீ பாதத்திலுள்ளவர்களை அழைத்தருளி வலியப் பிடித்துக் கொண்டு வரச் சொல்லி அருளிச் செய்ய,
அவர்களும் அபிமத ஸ்தலத்தில் நின்றும் பிடித்துக்கொண்டு வந்து திருமுன்பே விட,

உடையவரும், “ பிள்ளாய்! நம்மோடு ஒட்டற்று நீ திரிந்தாலும் நாமுன்னை விட்டுக்கொடுப்பதில்லை காண் “ என்று
பேரருளாளர் ஸந்நதியிலே அழைத்துக் கொண்டு எழுந்தருளித் திருக் காப்பை அடைத்து திரிய ஒரு வட்டம்
பகவத் ஸம்பந்தம் பண்ணியருளி, ரஹஸ்யார்த்தத்தையும் ப்ரஸாதித்து அருளி,
தம்முடைய திருவடிகளிரண்டையும் அவர் தலையிலே வைத்து அருளி,
“ நீ பற்றிப் போந்த காலுக்கும் நம்முடைய காலுக்கும் வாசி கண்டாயே?
அது நரகாவஹம், இது மோஷாவஹம். இத்தையே தஞ்சமாக நினைத்திரும்” என்று
பூர்ணமாக கடாக்ஷித்துத் திருவடிகளைக் காட்டி அருளினார்.

அன்று தொடங்கி அப்படியே ப்ரதிபத்தி பண்ணிப் போந்தவராய் இந்த ரஹஸ்யத்தைப்
பிள்ளை அடியேனுக்கு அருளிச் செய்து, உடையவர் திருவடிகளையே தஞ்சமாக காட்டி அருளினார்.

அன்று தொடங்கி அப்படியே ப்ரதிபத்தி பண்ணிப் போருவன் உடையவருடைய உத்தாரகத்வ விஶிஷ்டமான
க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யத்வத்துக்கு இவ்விரண்டு வ்ருத்தாந்தமும் ப்ரமாணமாக அத்யவஸிக்கப் போரும்

அறிவுடையார்க்கு இன்னமும் இவ்வர்த்தத்தை ஸ்திரீகரிக்கைக்காக
உடையவர்க்கு முன்புள்ள முதலிகளுடைய திவ்ய ஸூக்திகளும்
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களும் பரக்க ப்ரதிபாதிக்கப்படுகிறது மேல்.

நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருத் திரை வளைத்துத் திருவாய்மொழி ப்ரஸாதித்து அருளுகிற அளவிலே
“பொலிக பொலிக” வந்தவாறே பூத பவிஷ்யத்வர்த்தமான கால த்ரய பர்யவஸாயி ஜ்ஞாநமுடையராகையாலே
உடையவருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று
“இந்த ப்ரபந்ந குலத்திலே ஒரு மஹானுபாவர் திரு அவதரிக்க போகிறார். அவராலே நாடு அடங்க வாழப் போகிறது”
என்று நாதமுனிக்கு அருளிச் செய்ய,

அவரும் “பயன் அன்றாகிலும்” என்கிற பாட்டை இயலும் இசையுமாக ஏறிட்டு ஆழ்வாரைப் பாடி உகப்பித்து,
”தேவரீர் ஸர்வஜ்ஞராகையாலே அறியப் போகாது ஒன்றுமில்லை
அவ்யக்தியினுடைய ஸம்ஸ்தானத்தை தேவரீர் பாவித்துக் காட்டி யருள வேணும்” என்று ப்ரார்த்திக்க

அற்றை ராத்திரியிலே நாதமுனிகளுக்கு ஸ்வப்ன முகேந ஆழ்வார் எழுந்தருளி
த்வாதஶோர்த்வ புண்டரங்களும் காஷாய திருப் பரியட்டமும், த்ரிதண்ட ஹஸ்தமும், ஆஜானுபாஹுவும்
நிரவதிக தேஜோ ரூபமான திருமேனியும்,
“மகரம்சேர் குழையிருபாடிலங்கியாட” தீர்க்கராய் எழுந்தருளி, க்ருபா ப்ரவாஹ ஸூசகமான முகமும்,
முறுவலும் சிவந்த திருக் கண் மலருமாக ஸேவை ப்ரஸாதித்தருளி
‘அவ்யக்த்தி யிருக்கும்படி இது காணீரே’ என்றருளிச் செய்து,
‘இவ்யக்தி அடியாக ப்ரபந்ந குல பூதரெல்லாரும் பேறு பெறப் போகிறார்கள்’ என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் உடனே உணர்ந்தருளி ஆழ்வார் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்து
‘தேவரீருடைய ஸம்ஸ்தானத்திலும் தேவரீர் பாவித்தருளின ஸம்ஸ்தானம் அடியேனுக்கு மிகவும் ஆகர்ஷகமாயிருந்ததீ!” என்ன,
“இதென்ன மாயம்! லோகமெல்லாம் இவ்யக்த்தியாலே காணும் மேல்விழப் போகிறது!” என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் திரியவும் ஆழ்வாரை உகப்பித்து இந்த பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை நித்யமாக அனுபவித்துக்
கொண்டிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய,
ஆழ்வாரும் உடையவருடைய ஸர்வோத்தாரகத்வத்தை வெளியிடக்கடவோமென்று
மற்றை நாள் ராத்திரி ஸ்வ விக்ரஹத்துக் கடவ சில்ப வம்ஶரிடத்திலே ஸ்வப்ன முகேன எழுந்தருளி
பவிஷ்யதாசார்ய ஸம்ஸ்தானத்தை வகுத்துக் காட்டி யருளி
“நாளை நம் புளிக்கீழே வந்து இப்படியே ஸர்வாவயவ பூர்ணமாக சமையுங்கோள்” என்று அருளிச் செய்ய,
மற்றை நாள் விடிந்தவாறே, திருப்புளியின் கீழேவந்து ஶரீரஶோதன பூர்வகமாக
ஆஹார நித்ரை யின்றிக்கே அவ்விக்கிரஹத்தை நிர்மித்துக் கொடுக்க,
அவ்விக்ரஹத்திலே ஒரு ஶக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்தருளி, நாதமுனிகளை அழைத்தருளி,
“உம்முடைய அபேக்ஷிதத்தை இதோ தலைக் கட்டினோம் கண்டீரே” என்று அவ் விக்ரஹத்தை ப்ராஸாதித்து அருளி –

“ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: “ இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன். (ரா-அ-34-13)
என்கிறபடியே நம்முடைய அவயவமாக நினைத்திரும்.
இவ்யக்த்திக்கு அடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் நம் கார்யத்துக்கு கடவதுமாயிருக்கும்.
இனிமேல் நம் தர்ஶனத்துக்கு வர்த்தகமாக அடியிட்டு வைத்தோம்.
உம்முடைய குலத்திலே ஒருவர் இவ் வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார்.
அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே
நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது,
இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டு கொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள,
அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

யஸ் ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பர ஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரி ஸூநும் ஶரணம் ப்ரபத்யே ||
எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை
எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது)
என்கிற ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று
நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர்.
இவ்வர்த்தம் ஓராண் வழியாய்ப் பரம குஹ்யமாய் வந்ததென்றும் அருளிச் செய்வர்.

இப்படி நாதமுனிகள் நாலாயிரமும் ஆழ்வார் பக்கலிலே கேட்டருளி, மீளவும் வீரநாராயணபுரத்தேற எழுந்தருளினவளவிலே,
ஆழ்வார் தம்மை விஷயீகரித்த ப்ரகாரங்களை மன்னனார் திரு முன்பே அருளிச் செய்து,
ஸந்நிதியிலே எல்லா வரிசைகளையும் பெற்றுத் தம்முடைய திருமாளிகையிலே எழுந்தருளித் தம்முடைய
மருமக்களான கீழையகத்தாழ்வானையும் மேலையகத்தாழ்வானையும் அழைத்தருளி,
ஆழ்வார் தம்மை விஶேஷ கடாக்ஷம் பண்ணி க்ருபை பண்ணி அருளின ப்ரகாரத்தையும்,
ஸ்வப்னமுகேன ஸேவை சாதித்த கட்டளையையும் அருளிச் செய்ய, அவர்களும் விஸ்மயப்பட்டு,
இப்படிப்பட்ட மஹானுபாவனுடைய ஸம்பந்தம்
ஆரோஹண க்ரமத்தாலே யாகிலும் உண்டாகக் பெற்றதே என்று தேறியிருக்கலாமென்றார்கள்;

பின்பு தம்முடைய ஶ்ரீபாதத்தில் ஆஶ்ரயித்து ஶிஷ்யகுண பூர்த்தியுடையவரான திருக்கண்ணமங்கை ஆண்டானுக்குத்
த்வயோபதேஶ பூர்வகமாகத் திருவாய்மொழி ப்ராஸாதித்தருளுகிற போது
‘பொலிக பொலிக’ வந்தவாறே ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்திகளையும்
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய
“அவ்யக்த்தியை ஸ்வப்னமுகேன ஸாக்ஷாத்கரித்த தேவரீரோடே ஸம்பந்தமுள்ள
அடியேனுக்கு ஒரு குறைகளுமில்லை” என்று அருளிச்செய்தார்.

பின்பு உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், தம்முடைய குமாரரான ஈஶ்வர முனிகள் இவர்களை அழைத்துருளி
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்திகளையும் அருளிச் செய்து,
குருகைக் காவலப்பனை யோக க்ரமத்தை அப்யஸிக்கச் சொல்லி,
உய்யக் கொண்டாரை தர்ஶனத்தை ப்ரவர்ப்பித்துக் கொண்டு வரச் சொல்லி,
ஈஶ்வர முனிகளை “ உமக்கொரு குமாரர் உண்டாகக் போகிறார். அவருக்கு யமுனைத் துறைவர் என்று திருநாமம் சாத்தும்”
என்று அருளிச் செய்து

ஆஸந்ந சரமதஶையானவாறே உய்யக்கொண்டாரை அழைத்தருளி, “ஒருவருக்கும் வெளியிடாதே கிடீர்” என்று
சூழரவு கொண்டு, ஆழ்வார் தமக்கு ப்ராஸிதித்தருளின பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை ப்ரஸாதித்தருளி,
வரவும் அருளிச் செய்து, ‘இத்தை ஈஶ்வர முனிகள் குமார ருக்கு நாம் விரும்பின விஷயமென்று சொல்லித்
தஞ்சமாக காட்டிக் கொடும்’ என்று அருளிச் செய்து, அவ்விக்ரஹத்தைத் திருவுள்ளத்திலே த்யானம் பண்ணிக் கொண்டு,
ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அந்தமில் பேரின்பத்தடியரோடு ஒரு கோவையாக எழுந்தருளினார்.

பின்பு உய்யக்கொண்டார், நாதமுனிகள் ஶ்ரீபாதத்து முதலிகளும் தாமுமாக தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு
ஸுகமே எழுந்தருளியிருக்கிற நாளிலே, உய்யக்கொண்டார் ஶ்ரீபாதத்து முதலிகள் மணக்கால்நம்பி,
திருவல்லிக்கேணிப் பாண் பெருமாளரையர் ஸ்வாசார்யரிடத்திலே திருவாய்மொழி கேட்கிறவளவிலே
“பொலிக பொலிக” என்கிற திருவாய்மொழி ஆனவாறே. “கலியும் கெடும்” என்கிற இடத்துக்கு அர்த்தம்
அருளிச்செய்கிற வளவில், நாதமுனிகள் தமக்கு அருளிச் செய்த ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய,
மிகவும் விஸ்மயப்பட்டு “நாதமுனிகள் பெற்ற பேறு ஆர் தான் பெறப் போகிறார்கள்?
பவிஷ்யதாசார்ய வ்யக்த்தியை ஸ்வப்னமுகேந ஸாக்ஷாத்கரித்த இடத்திலே அத்யாகர்ஷகமாயிருந்தது என்று
அருளிச் செய்யும் போது, ப்ரத்யக்ஷமாய் ஸாக்ஷாத்கரிக்கும் படியினால்
லோகமாக மேல் விழுந்து ஆஶ்ரயிக்குமாகாதே” என்று அருளிச் செய்தார்.
அவ்வளவிலே உய்யக்கொண்டார் “அந்த மஹானுபாவனுடைய ஸம்பந்தம் ஸித்தித்தாலே ஒழியத் தவிராதிறே” என்று அருளிச் செய்தார்.

உய்யக் கொண்டார் சரமதஶையிலே ப்ரதம சிஷ்யரான மணக்கால் நம்பியை அழைத்து அருளிப்
பன்னிரண்டு ஸம்வத்ஸரம் பழுக்க ஸ்வாநுவாத்தநம் பண்ணிப் போந்தவராகையாலே,
நாதமுனிகள் தமக்கருளிச் செய்த ரஹஸ்யார்த்தங்களையும் வெளியிட்டருளி, ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய,
மணக்கால் நம்பியும், இந்த தர்ஶன ப்ரவர்த்தகராரென்று கேட்க,
நம்முடைய பக்கலிலே பகவத் ஸம்பந்தம் பண்ணிக் கொண்ட நீரே நடத்தக் கடவீர்.
பின்பு சொட்டைக் குலத்திலே நாதமுனிகளுக்குத் திருப்பேரனாரான யமுனைத் துறைவர் ப்ரவர்த்தகராவார்.
அவருக்கு பின்பு கரையத் தேவையில்லை என்று அருளிச் செய்தார்.

அதாவது – நாதமுனிகள் அருளிச் செய்தபடியே ப்ரபன்ன குலமாகப் பேறு பெறும்படி ஒரு மஹானுபாவர் திருவவதரிக்கப் போகிறார்.
அவராலே தர்ஶனம் விளங்கப் போகிறது – என்று அருளிச் செய்தார் என்றபடி.

பின்பு உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பியை அழைத்தருளி, அவ்விக்ரஹத்தை ப்ராஸிதித்தருளி ,
“ நம் காலத்திலே யமுனைத் துறைவர் திருவவதரிக்கப் பெற்றதில்லையே.
நீர் இவ் விக்ரஹத்தை, ‘உங்கள் திருப்பாட்டனார் விரும்பின விஷயம்’ என்று தஞ்சமாக காட்டிக் கொடுத்து,
நாம் சொன்ன ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் ரஹஸ்யார்த்தர்தங்களையும் வெளியிடும்’ என்றருளிச் செய்தார்.

பின்பு மணக்கால் நம்பியும் ஆளவந்தாரைப் பச்சை யிட்டுக் கொண்டு கோயிலேற எழுந்தருளி
ஸ்வாசார்யரான உய்யக்கொண்டார் அநுமதிபடியே நாதமுனிகள் அருளிச் செய்ததாக ஸ்வாசார்யர் அருளிச் செய்த
அர்த்த விஶேஷங்களையும் விஶேஷித்து ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்து ‘
நெடுங்காலம் தேவரீர் இந்த தர்ஶனத்தை ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு ஶ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியோடே எழுந்தருளியிரும்’ என்றருளிச் செய்தார்.

அப்படியே ஆளவந்தார் தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுந்தருளியிருக்கிற நாளிலே மணக்கால் நம்பி
சரமதஶையானவாறே, நாதமுனிகள் ஸ்வப்னத்திலே எழுந்தருளி நம்பியைப் பார்த்து,
”நம்முடைய யமுனைத் துறைவர்க்கு நாட்டையளித்து உய்யச் செய்து நடத்துமவனை நாம் தேடச் சொன்னோம் என்று சொல்லும்.
நாம் விரும்பின விக்கிரஹத்தைத் தஞ்சமாக அவர் கையிலே காட்டிக் கொடும்” என்றருளிச் செய்ய,
இப்படி அருளிச் செய்கிறது ஏதென்ன, ‘நமக்கு ஸ்வப்ன த்ருஷ்டமான வ்யக்தி
நம் பேரனுக்கு ப்ரத்யக்ஷ ஸித்தமானால் நமக்கு நெஞ்சாறல் தீரும்’ என்றருளிச் செய்தார்.

நம்பியும் – உடனே உணர்ந்தருளி மிகவும் விஸ்மயப்பட்டு, நிர்ஹேதுகமாக நமக்குப் பேறு கிடைப்பதேயென்று
போர ப்ரீதராய் எழுந்தருளியிருக்கிற அவ்வளவிலே, ஆளவந்தாரும் அவராய் எழுந்தருள,
“உம்முடைய திருப்பாட்டனார் நிர்ஹேதுகமாக நமக்கு சேவை சாதித்தருளி தேவரீர்க்கு ஒரு வார்த்தை விண்ணப்பம்
செய்யச் சொல்லி அருளிச் செய்தாரென்று அவ்வார்த்தையை அருளிச் செய்ய,
இது நேரேயாகப் பெற்றதில்லையேயென்று இழவு பட்டருளி, ஸத்வாரகமாகவாகிலும் விஷயீகரிக்கப்பட்ட
இதுவே அமையுமென்று ப்ரீதராய் எழுந்தருளியிருக்க,
பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ப்ராஸிதித்து, “உம்முடைய திருப்பாட்டனார், தாம் விரும்பின விஷயம்” என்று
உம்மை இவ் விக்ரஹத்தைத் தஞ்சமாகப் பற்றி யிருக்கச் சொல்லும் என்று நியமித்தருளினார்.
ஆகையாலே தேவரீரும் இந்த அவதார ரஹஸ்யத்தைப் பேணி நோக்கி கொண்டு போரும்;
இவ்வ்யக்திமானை நேரே ஸாக்ஷாத்கரிக்கப் போகிறீர். அவ்யக்திமானாலே
இத் தர்ஶனம் நெடுங்காலம் நிலைநிற்கப் போகிறது” என்று அருளிச் செய்தார்.

ஆளவந்தாரும் அப்படியே தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுத்தருளியிருந்து அவ்விக்ரஹத்தைப் பரம ரஹஸ்யமாகப்
பரிவுடனே நோக்கிக் கொண்டு மணக்கால் நம்பி அருளிச் செய்தபடியே நாட்டை அளித்து உய்யச் செய்து
நடத்துகிறவனைத் தேடுவதாக உத்யோகித்து ஒருவரையும் அடைவு படக் காணாமையாலே
வ்யாகுலாந்த கரணராய் எழுந்தருளியிருக்க,
இளையாழ்வாருடைய வ்ருத்தாந்தங்களைச் சிலர் விண்ணப்பம் செய்யக் கேட்டருளி,
பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளினவுடனே, நம்பி முகேன இளையாழ்வாரைக் கண்டு
அவருடைய திருநக்ஷத்ரமும் கேட்டருளி, மூன்று படியாலும் ஓத்திருக்கையாலே பூர்ணமாகக் கடாக்ஷத்தருளி,
‘ஆமுதல்வனிவன்’ என்று ப்ரதிபத்தி பண்ணி யருளினார்.

பின்பு கோயிலேற எழுந்தருளிச் சிலநாள் செல்லத் தம்முடைய சரம தஶையானவாறே,
திருக்கோட்டியூர் நம்பியை அழைத்தருளி, அந்த விக்ரஹத்தை ப்ராஸிதித்து வரவாறும் அருளிச் செய்து,
மற்றுமுண்டான வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்து, நீர் இளையாழ்வார்க்கு நாம் அருளிச் செய்த
ரஹஸ்யார்தங்களெல்லாம் அருளிச் செய்யுமென்று நியமித்து,
அவர் திருநாமத்தாலே தர்ஶனம் விளங்க போகிறது என்றும் ப்ரபன்ன குலமாகப் பேறு பெறும்படி
உத்தாரகராகத் திருவவதரித்திருக்கிறார் என்றும் அருளிச் செய்தார்.

பின்பு ஆஸந்ந சரமதஶையானவாறே, முதலிகள் எல்லாரும் சூழ விருந்து,
அடியோங்களுக்கு இனி தஞ்சம் ஏதென்று கேட்டருள,
“உங்களுக்கு நாம் ஒருவரை உண்டாக்கி யன்றோ பேறு பெறப் போகிறோம்.
உங்களுடைய இழவைத் தீர்த்து நாம் மாத்ரம் அன்றோ இழவோடே போகிறோம்” என்று அருளிச் செய்தார்.

இப்படி எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் எல்லாரும் உடையவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டார்கள்.
முன்புள்ளார்க்கு இவர் உத்தாரகராக கூடும்படி எங்ஙனேயெனில்,

ஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: |
வைஷ்ணவோ ந: குலே ஜாத: ஸ ந: ஸந்தார யிஷ்யதி ||
‘வைஷ்ணவன் நம் குலத்தில் பிறந்து விட்டான்; நம்மைக் கரையேற்றுவான்’ என்று பித்ருக்கள்
கைகொட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்; பிதா மஹர்கள் நடனமாடுகிறார்கள். (வராஹ புராணம்)
என்று முன்பே லோகாந்தரஸ்தரான பித்ருக்கள் ஸ்வ குலத்திலே ஒருவன் வைஷ்ணவனாகப் பிறந்தால்
அவனையே தங்களுக்கு உத்தாரகனாகச் சொல்லக் கடவதிறே.

வைகுண்டே து பரே லோகே என்று சொல்லபடுகிற
(வைகுண்டம் என்னும் மேலான உலகில், உலகின் தலைவனாய் அளவிட்டறியமுடியாதவனாய்,
(குணநிஷ்டர்களான) பக்தர்களோடும், (கைங்கர்ய நிஷ்டர்களான) பாகவதர்களோடும் கூடியவனாய்,
பெரிய பிராட்டியாருடன் சேர்ந்த நாராயணன் எழுந்தருளியிருக்கிறான்.)
லோகாந்தரஸ்தரான நாதமுனி ப்ரப்ருதிகள், ஸ்வகீயமான ப்ரபந்ந குலத்திலே நித்ய ஸூரிகளின் தலைவராய்
வைஷ்ணவாக்ரேஸர் ஆகிய ஒரு மஹானுபாவன் திரு அவதாரம் பண்ணினால்,
அவரையே தங்களுக்கு உத்தாரகராக நினைத்திருக்கச் சொல்ல வேண்டாவிறே.

“பித்ராதிகளுக்கு வைஷ்ணத்வம் இல்லாமையாலும்,
அவர்களுக்கு ப்ராப்யமான தேஶ விசேஷம் வேறே ஒன்று உண்டாயிருக்கையாலும்,
உத்தரணாபேக்ஷை உடையவர்களாகையாலும் ஸ்வ குலோத்பன் ஆன வைஷ்ணவனை உத்தாரகனாகச் சொல்லக் குறையில்லை.

இவர்கள் தாம் வைஷ்ணவாக்ரேஸர் ஆகையாலும், ப்ராப்ய பூமி கைபுகுந்திருக்குமவர்கள் ஆகையாலும்
உத்தரணாபேக்ஷாரஹிதராயிருக்கவடுக்குமத்தனை போக்கிக் கால விப்ரக்ருஷ்டரான இவர் பக்கலிலே
ஸ்வோத்தாரகத்வ புத்தி பண்ணக்கூடாதே” என்னில் – அங்ஙனே சொல்லப்படாது.
இதுவும் கூடும். எங்ஙனேயென்னில்-

நாதமுனிகளுக்கு ஆழ்வாரிடத்திலே உத்தாரகத்வ ப்ரதிபத்தி நடக்குமே ; அதில் சோத்யமில்லையிறே;
இனி, நாதமுனிகள் தமக்கு உத்தாரகமாக ஆழ்வாருடைய திருவடிகளை அறுதியிட்டு இருக்கையாலும்,
ஆழ்வார் தாமும் பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தைக் காட்டிக் கொடுத்து –
ராமஸ்ய தக்‌ஷிணோ பாஹூ : என்கிறபடியே
“நம்முடைய அவயவமாக நினைத்திரும். இவ்வயக்திக்கடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் இருக்கும்” – என்று
உடையவரை ஆழ்வார் தமக்குத் திருவடிகளாக அறுதியிட்டு அன்றே அருளிச் செய்கையாலும்,
நாதமுனிகள் ஆழ்வார் ப்ரஸாதித்த வ்யக்தியிலே பரிபூர்ணமாக உத்தாரகத்வத்தை அறுதியிட்டு,
உய்யக்கொண்டார்க்கு வெளியிட்டருள, அவர் மணக்கால் நம்பிக்கு வெளியிட்டருள,
மணக்கால் நம்பியும் ஆளவந்தார்க்கு வெளியிட்டருள,
ஆளவந்தாரும் தம்முடைய ஶ்ரீபாதம் முதலிகளில் திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான்,
பெரிய நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர் தொடக்கமானார்க்கு வெளியிட்டருள,

இவர்களுடைய தந்நிஷ்டராய், இந்த ரஹஸ்ய விசேஷத்தைத் திருவுள்ளத்திலே கொண்டு
உடையவரோடு ஸம்பந்தம் தங்களுக்கு வேண்டுமென்று கொண்டு
“ கொடுமின் கொண்மின்” என்றும்

13-மத் பக்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்|
ஸ்வயம் பயாச்சநஞ்சைவ மதர்தே டம்ப வர்ஜநம்||

மத் கதா ஶ்ரவணே பக்தி: ஸ்வரநேத்ராங்க விக்ரியா|
மமாநுஸ்மரணம் நித்யம் யஶ்ச மாம் நோபஜீவதி ||

பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் மிலேச்சேபி வாத்ததே |
ஸ விப்ரேந்த்ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதி:ஸ ச பண்டித:
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜயோ யதாஹ்யஹம் ||

1. என் பக்தர்களிடத்தில் வாத்ஸல்யம்
2. என்னை ஆராதனம் செய்வதை ஆமோதித்தல்
3. தானே என்னைப் பூஜித்ததால் 4. என் விஷயத்தில் ஆடம்பரமற்றிருத்தல்
5. என் கதைகளைக் கேட்பதில் அன்பு,
6. (என் கதைகளைக் கேட்கும் போது) குரல் தழதழத்தும், கண்ணீர் மல்கியும், உடம்பு மயிர்க்கூச்செறிந்து கொண்டுமிருக்கை
7. எப்போதும் என்னை நினைத்திருக்கை,
8. என்னிடம் வேறு ஒரு ப்ரயோஜனத்தையும் கேளாதிருக்கை,
என்னும் இந்த எட்டு விதமான பக்தியானது எந்த மிலேச்சனிடமும் காணப்படுகிறதோ அவனே ப்ராஹ்மண ஶ்ரேஷ்டன்,
அவனே முனிவன், அவனே தனவான், அவனே இந்திரிய நியமனம் செய்தவன், அவனே பண்டிதன்,
அவனுக்கு ஞானத்தை உபதேஶிக்கலாம், அவனிடமிருந்து ஞானோபதேஶமும் பெறலாம்.
அவன் என்னைப்போல் பூஜிக்கத்தக்கவன் ] (காருடம் 219 6-9)

13.– தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் என்றும் சொல்லுகிறபடியே
தாங்கள் உடையவர்க்கு ரஹஸ்யார்த்தங்களை உபதேஶித்து ஆசார்ய வ்யாஜேன ஸம்பந்தம் பெற்று ,
தந்தாம் குமார்களையும் ஆஶ்ரயிப்பித்து ,
அத்வாரகமான ஸம்பந்தத்திலும் ஸத்வாரகமான ஸம்பந்தத்தையிறே கனக்க நினைத்திருந்து
ஸ்வோத்பாதக விஷயீகாரக விஷயத்தில் ஸ்வோத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிருந்தார்கள்’ – என்றபடி

கண்டாகர்ணன் பக்கம் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப்போலவும்,
ஶ்ரீ விபீஷணாழ்வான் பக்கல் பண்ணின விஷயீகாரம், கூடச் சென்ற நால்வரளவும் சென்றாப்போலவும்,
ஶ்ரீப்ரஹ்லாதாழ்வான் பக்கல் பண்ணின விஷயீகாரம் தத் ஸம்பந்திகள் அளவும் சென்றாப்போலவும் நினைத்திருந்தார்கள்.

பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் ஹேதுவான ப்ரதம பர்வ விஷயீகாரம் அப்படிச் செய்தபடி கண்டால்,
மோக்ஷைக ஹேதுவான சரம பர்வ விஷயீகாரம் இப்படியே செய்யச் சொல்ல வேண்டாவிறே.

இவர்கள் எல்லாரும் இவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டு இருக்கைக்கு நிதானம் நாதமுனிகளிறே.
உடையவர்க்கு இவர்கள் ஆசார்யர்கள் ஆனது எதிலே அந்வயிக்கறது என்னில்
உபகாரத்வத்திலே அந்வயிக்கும் இத்தனை, உத்தாரகத்வத்தில் புகாது.

ஆசார்யத்வந்தான் உபகாரத்வேநவும் உத்தாரகத்வேநவும் த்விவிதமாயிருக்கும்.
அதில் உபகாரத்வேந ஆசார்யத்வமே இவர்கள் பக்கலில் உள்ளது.
தங்கள் பக்கல் உத்தாரகத்வமுண்டாகில், தந்தாம் குமாரர்களை இங்கு ஆஶ்ரயிப்பிக்கக் கூடாதிறே
தங்கள் பக்கல் உபகாரகத்வமே உள்ளது என்னும் இடத்தை இவ்வழியாலே தோற்றுவித்தார்கள்.

உத்தாரகத்வந்தான் வ்யக்தி த்ரயகதமாயிருப்பது,
ஈஶ்வரனிடத்திலும், ஆழ்வாரிடத்திலும், உடையவரிடத்திலுமிறேயுள்ளது.
உபயவிபூதிக்கும் கடவனிறே உத்தாரகனாவான்.

14. (அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா) (விஷ்வக்ஸேந ஸம்ஹிதை)என்று
உபயவிபூதிக்கும் கடவனான ஶ்ரீமான் தானென்னுமிடத்தைத் தானே அருளிச் செய்தான்.

ஆழ்வார் “பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளிரோ“ என்று உபய விபூதியும் தாமிட்ட வழக்காய்
இருக்குமென்னிடத்தை தாமே அருளிச் செய்தார்.
பெரிய பெருமாள் உபய விபூதியும் கொடுக்கப் பெற்று உடையவரானாரிறே இவர்.
ஆகையாலே இது வ்யவஸ்தித விஷயமாயிருக்கும்..

அவ்யக்தி த்ரயத்திலும் உடையவரிடத்திலே உத்தாரகத்வம் உறைத்திருக்கும்.
ஈஶ்வரன் ஆழ்வாரை இவ்விபூதியிலே நெடுநாள் இட்டுவைத்து ஜகத்தைத் திருத்துவதாக நினைத்தளவிலே,
முப்பத்திரண்டு திருநக்ஷத்ரத்துக்குள்ளே, “கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ” என்றும்,
“எந்நாள் யானுன்னை இனி வந்து கூடுவனே” என்றும்,
“மங்கவொட்டுன் மாமாயை” என்றும் அறப் பதறி வீடு பெற்றாரிறே.

அந்த இழவெல்லாம் தீர உடையவரை நூற்றிருபது திருநக்ஷத்ரமிட்டு வைத்து ஜகத்தை வாழ்வித்தானிறே;
ஆழ்வார் காலத்தில் இல்லாத வைஷ்ணவ ஸம்ருத்தி இவர் காலத்தில் பொலிந்ததிறே.
இதுக்கு நிதாநம் – உத்தாரகத்வத்தினுடைய உறைப்பாய்த்து.
ஆழ்வார் தாமும் “கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து இசை பாடியாடி உழிதரக் கண்டோம்” என்று
நிஶ்சயித்து அருளிச் செய்தாரிறே.

ஆகையாலே, இவரே ஸர்வோத்தாரகர்.
ஆசார்யத்வத்திலே வந்தால் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வத்தை முக்யமாக கொள்வது இவர் பக்கலிலே ஆயித்து.
அநர்த்தங்கண்டால் ஆற்றாமையும், மிக்க க்ருபையும் உடையவராயிறே இவரிருப்பது.
இது தான் வ்யவஸ்தித விஷயமாகையாலே துர்லபமாயிருக்கும் .
ஆகையிறே ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டு ஶ்ரீகீதையை உபதேசிக்குமளவிலே.

15. (யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந்மே ஶிஷ்யஸ் தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம் )(கீதை 2-7)
எனக்கு எது நல்லது என்று உன்னால் நிஶ்சயிக்கப் படுகிறதோ, அதை எனக்குச் சொல்லுவாயாக.
நான் உனக்கு ஶிஷ்யன். உன்னை ஶரணமடைந்த என்னை நியமிப்பாயாக.

என்று தானும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாய்,
16. (தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா|
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சின: ||) (கீதை 4-34)
ஞானிகளை வணங்குவதாலும் நேரே குறிப்பிடாமல் கேட்பதாலும், ஶுஶ்ருஷை செய்வதாலும்
ஆத்மாவைப் பற்றிய அறிவைப் பெறுவாயாக.
உண்மையைக் கண்ட ஞானிகள் உனக்கு அவ்வறிவை உபதேஶிப்பார்கள். -என்று
ஸ்வ வ்யதிரிக்த விஷயத்திலும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வத்தையிறே சொல்லிற்று.
ஆகையாலே, ஆழ்வாரிடத்திலும், அவரடியாக வந்த இவரிடத்திலும் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் வ்யவஸ்திதம்.

இன்னமும் இவருடைய உத்தாரகத்வ ஸாதகங்களான ஆசார்ய திவ்ய ஸூக்திகள் பலவும் சொல்லப்படுகிறது.

பெரியநம்பி மதுராந்தகத்து ஏரி காத்த பெருமாள் கோயில் திருமகிழ அடியிலே எழுந்தருளியிருந்து
17.(சக்ராதிதாரணம் பும்ஸாம் பர ஸம்பந்த வேதநம் |
பதி வ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || )
(சக்கரம் முதலியவைகளை தரிப்பது பரமாத்ம ஸம்பந்தத்தைக் காட்டுகிறது.
வளை முதலிய ஆபரணங்கள் பதி வ்ரதைக்கு அடையாளங்களன்றோ.)என்றும்,

18.(ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் |
அத்யாபயேந் மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந் தோதி தைவதம் || ) என்றும் சொல்லுகிறபடியே
பகவத் ஸம்பந்த பூர்வகமாக உடையவர்க்கு த்வயோபதேஶம் பண்ணியருளி

“நாம் உமக்கு ஆசார்யராக வேணுமென்று பெருமைக்கு செய்தோமில்லை.
ஆளவந்தார் கணிசித்த விஷயமென்று செய்தோமித்தனை.
ஆழ்வார் உம்மைக் கடாக்ஷித்து ‘கலியும் கெடும் கண்டு கொண்மின்’ என்று அருளிச் செய்தாராகையாலே
அப்படிப்பட்ட மஹாநுபாவனன்றோ; இவ் வழியாலே தேவரீரோட்டை ஒரு ஸம்பந்தம் வேணுமென்றும் செய்தோம் இத்தனை.

“வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உய்யக்கொண்ட வீரன்” என்றும்,
19. ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா -(ரா-பா 67.22)
(ஜனக வம்ஶத்திற்கு என் பெண் புகழை உண்டாக்குவாள்)என்றும் சொல்லுகிறபடியே,

“தேவரீர் வந்தவரதரிக்கையாலே ப்ரபன்ன குலமாக விளங்கப் போகிறது. தேவரீரே ஸர்வோத்தாரகர்.
அடியேன் ரஹஸ்யத்திலே நினைத்திருப்பதும் அப்படியே” என்றருளிச் செய்தார்.
இவ்வார்த்தை ஸம்ப்ரதாயமென்று பிள்ளை அருளிச் செய்வர்.

பெரிய திருமலை நம்பி திருமாளிகையிலே, உடையவர் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி இருந்து
இதிஹாஸ ஶ்ரேஷ்ட்டமான ஶ்ரீராமாயணம் நம்பி பக்கலிலே கேட்டருளுகிறவளவிலே,
20-யஶ்ச ராமம் ந பஶ்யேத்து யஞ்ச ராமோ ந பஶ்யதி|
நிந்தித: ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே||(ரா-அ 17-14)
[எவனொருவன் ராமனைக் காணாதிருப்பானோ, எவனை ராமனும் காணாதிருக்கிறாரோ அவன் உலகில்
நிந்திக்கப்பட்டவனாய் வாழ்வான்; தன் ஆத்மாவும் இவனை இகழும்] (ரா-அ 17-14)

21-இமௌ ஸ்ம முநிஶார்தூல! கிங்கரௌ ஸமுபஸ்திதௌ|
ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை ஶாஸநம் கரவாவ கிம் ||
[முநிஶ்ரேஷ்டரே! நாங்களிருவரும் (தேவரீருக்குக்) கைங்கரியம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம்.
(தேவரீருடைய) இஷ்டப்பட கட்டளையிட வேண்டும்;
(தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள் செய்ய வேண்டும்? ] (ரா -பா 31-4) என்கிற ஶ்லோகம் வந்தவாறே
ஸ்வகத ஸ்வீகார பரகத ஸ்வீகாரங்கள் இரண்டுமன்றியிலே தானும் பிறரும் தன்னை இகழும்படி வர்த்திக்கிற சேதனனுக்கு
தஞ்சமேதென்று கேட்டருளினவளவிலே,
“நித்ய ஸூரிகளில் தலைவரான தேவரீருடைய அபிமானமே அமோகோத்தாரகம்” என்று அருளிச் செய்தார்.

பின்பு எம்பாரை உதக பூர்வகமாக உடையவர்க்கு ஸமர்ப்பித்து,
“நீர் உடையவரை நம்மிலும் அதிகராக நினைத்திரும் ; அவர் திருவடிகளே தஞ்சம்;
அவர் ஸர்வோத்தாரகராகத் திரு அவதரித்தவர். ஆகையாலே இவரோட்டை ஸம்பந்தம் நேராகப் பெற்றதில்லை என்று
ஶ்ரீராமாயண வ்யாஜத்தாலே ஒரு ஸம்பந்தம் பெற்றோம்.
ஆளவந்தாரும் இழவோடே எழுந்தருளும் படிகாணும் இவருடைய ஏற்றமிருப்பது.
இந்த மஹாநுபாவனோட்டை ஸம்பந்தத்தாலே நீரும் நிழலுமடிதாறுமாயிரும் “ என்றருளிச் செய்தார்.
இதுவும் ஸம்ப்ரதாயம்.

திருக்கோட்டியூரிலே உடையவர் எழுந்தருளி நம்பி பக்கலிலே சரம ஶ்லோகம் கேட்கிற போது,
தஞ்சமான அர்த்த விஶேஷங்களை எல்லாம் அருளிச்செய்து,
“தேவரீரைப் பலகாலும் துவளப் பண்ணினத்தைத் திருவுள்ளத்திலே கொள்ளாதே கிடீர்.
அர்த்தத்தின் சீர்மையை வெளியிட வேண்டிச் செய்தோமித்தனை.
தேவரீர் லோக ஸம்ரக்ஷணார்த்தமாகத் திருவவதரித்தருளிற்று. நாதமுனிகளுக்குத் தஞ்சமான விஷயம் தேவரீர்.
இப்படிப்பட்ட மஹானுபாவனோட்டை ஸம்பந்தமுண்டாகப் பெற்றோம் என்று மார்பிலே கைபொகட்டு உறங்கலாம்படிக்கு உடலாயிருக்கிறது.
எங்கள் ஆசார்யரான ஆளவந்தார் ஸ்ரீபாதத்திலே ஆஶ்ரயித்த முதலிகளிலே இத்தர்ஶநத்தை நிர்வஹிக்க ஆளுண்டாயிருக்கவும்,
தேவரீரே தர்ஶன ப்ரவர்த்தகராக வேணுமென்று பேரருளாளன் ஸன்னிதியிலே ப்ரபத்தி பண்ணியருளித்
திருநாட்டுக்கு எழுந்தருளுகிற போது, “இந்த மஹாநுபாவனோடே நாலு நாளாகிலும் கலந்து பரிமாறப் பெற்றோமில்லையே”
என்று இழவோடே எழுந்தருளினார். ஆகையாலே இத்தர்ஶனம் எம்பெருமானார் தர்ஶநமென்று தேவரீர் திருநாமத்தினால்
நாள் தோறும் கொழுந்து விட்டு விளங்கப்போகிறது” என்று அருளிச் செய்தார்.

திருக்கோட்டியூர் நம்பி நியோகத்தாலே உடையவர் திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழி நடத்தா நிற்க,
இடையிலே ஒரு அர்த்த வ்யத்யாஸத்தாலே வ்யாக்யானம் நடத்தாமல் தவிர,
இத்தைத் திருக்கோட்டியூர் நம்பி கேட்டருளிக் கோயிலேற எழுந்தருளினவளவிலே திருமாலை யண்டானை அழைத்தருளி
“ நீரிவருக்கு அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணுகிறோமென்று இராதே கொள்ளும்.
இவர்க்கு ஆளவந்தார்க்குத் தோற்றின அர்த்தமொழிய விபரீதார்த்தம் தோற்றாது.
ஸாந்தீபநி பக்கலிலே க்ருஷ்ணன் வேதாத்யயநம் பண்ணினாப்போலே காணும்
உம்முடைய பக்கலிலே இவர் திருவாய்மொழி கேட்கிறது” என்றருளிச் செய்து,
விட்ட தருவாய் தொடங்கி உடையவர் மடத்திலே
திருக்கோட்டியூர் நம்பியும், திருமாலையாண்டானும், பெரிய நம்பியும் கூட எழுந்தருளியிருந்து திருவாய்மொழி
வ்யாக்யானம் நடத்துவியா நிற்க,
“பொலிக பொலிக” வந்தவாறே, “கலியும் கெடும்” என்கிறவிடத்திலே நம்பியும் உடையவரை ஏறவும் இறங்கவும் பார்க்க,
உடையவர் அத்தைக் கண்டருளி இதுக்குப் பொருளேதென்று கேட்க,
“ தேவரீர் திருவவதரித்து இதினுடைய அர்த்தத்தை வெளியிட்டுக் கொண்டு எழுந்தருளியிருக்கச் செய்தே கேட்க வேணுமோ?
ப்ரபன்ன குலோத்தாரகரான தேவரீரே இதுக்குப் பொருள்;
அஸ்மதாதிகளைக் கரையேற்றுகைக்காக வன்றோ நித்ய விபூதியில் நின்றும் இங்கே எழுந்தருளிற்று” என்று அருளிச் செய்தார்.
இத்தைக் கேட்டிருந்த திருமாலையாண்டானும் ஹர்ஷபுளகிதகாத்ரராய்,
“இனி நான் ஆளவந்தாரை அறியேன்; எல்லாப் பேறும் தேவரீரே;
தேவரீரோடு உண்டான ஸம்பந்தமே அடியேனுடைய பேற்றுக்கு ஸாதனம்” என்றருளிச் செய்தார்.

உடையவர், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பக்கலிலே சென்று ஸ்வாநுவர்த்தனத்தாலே அவரை உகப்பித்து
பரம ரஹஸ்யமான சரமோபாயத்தைப் பெற்று ப்ரீதராய் எழுந்தருளியிருக்க அவ்வளவிலே உடையவரை அழைத்தருளி
“நாம் உமக்குச் சரமோபாய ரஹஸ்யத்தைச் சொன்னோமேயாகிலும் இது முக்யமாக விலைச்செல்லுகிறது
உம்முடைய பக்கலிலேதானே” என்றருளிச் செய்தார்”.
இதுக்கு நிதானம், நாதமுனிகளாகையாலே நீரே ஸர்வோத்தாரகராக குறையில்லை” என்றும் அருளிச் செய்தார்.

இப்படி ஐவரும் கூடி உடையவர்க்கு ஆசார்யர்களாக இருந்தார்களேயாகிலும்,
தாங்கள் தஞ்சமாக அறுதியிட்டு இருப்பது உடையவரிடத்தில் உத்தாரகத்வத்தையிறே.
திருக்கோட்டியூர் நம்பி தம் குமாரத்தியாரை உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தவளவிலே,
உடையவர் அப்பெண்பிள்ளையை ஏகாந்தத்திலே அழைத்தருளி தம் திருவடிகள் இரண்டையும் காட்டி,
“பெண்ணை! இத்தையே தஞ்சமாக நினைத்திரு” என்றருளிச் செய்தார்.

அந்தப் பெண்ணும் “மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே” என்று,
தேவரீர் எங்கே எழுந்தருளியிருந்தாலும், அடியேனுக்கு தேவரீருடைய திருவடிகளே தஞ்சம்;
தேவரீருக்கு ஆசார்யரான எங்கள் ஐயர் நினைத்திருக்கும்படி கண்டால்
தேவரீருக்கு அநந்யார்ஹ சேஷபூதையான அடியேன் நினைத்திருக்கச் சொல்லவேணுமோ” என்று
சொன்னாளாகப் பிள்ளை அருளிச்செய்வர்.

திருக்கோட்டியூர் நம்பி தம்முடைய அந்திம தஶையிலே குமாரத்தியாரை அழைத்தருளி,
“பெண்ணே! நம் ப்ராயாணத்தில் நீ நினைத்திருப்பது என்” என்ன ,
“ஐயரே! எங்களாசார்யரான எம்பெருமானரோடு உண்டான ஸம்பந்தத்தாலே தேவரீருக்குப் பேறு முற்படப் பெற்றதே
என்று நினைத்திருக்கின்றேன்” என்ன,
அவரும், “ வளர்த்ததனால் பயன் பெற்றேன்” என்று அப் பெண் பிள்ளையை அழைத்தருளி,
ஆளவந்தார் ப்ராஸாத லப்தமான விக்ரஹத்தை ஸாதித்து உள்ளிற்கருத்தும் வெளியாம்படி,
“எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
இத்தால் எம்பெருமானாரிடத்திலே நிஸ்ஸம்ஶயமாக உத்தாரகத்வத்தை அறுதியிட்டார் என்னுமிடம் ஸித்தமாயிற்றதிறே.

திருக்கச்சி நம்பி ஒரு நாள் ராத்திரி காலத்திலே பேரருளாளன் ஸன்னதியிலே நெடும் போது திருவாலவட்டம் பரிமாற ,
“நம்பி ! ஒன்று சொல்லுவாரைப் போலே இராநின்றீர், என்?” என்ன,
“நாயந்தே! இளையாழ்வார், ‘சில நினைவுகள் நினைத்தேன் அவை எவை என்று தேவரீரிடத்திலே கேட்டு வந்து சொல்ல வேணும்’ என்றார்.
அவற்றை அருளிச் செய்ய வேணும்” என்ன,
“வாரீர்! அவர் அறியாததோ நாம் சொல்லப் போகிறது. ஸாந்தீபனி பக்கலிலே நாம் அத்யயனம் பண்ணினாப் போலே காணும்
அவர் இருக்கும்படி ஸகல ஶாஸ்த்ரங்களும் ஸகலோபாயங்களும் அறிந்த ஸாரவித்தமராய்,
நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவராய், தம் பக்கலிலே ஸகலார்த்தங்களும் கேட்டு
நாடு அடங்க வாழ வேண்டியிருக்க , நாமென்று சொல்லக் கிடக்கிறதோ?
பின்னையும் உம்மையிடுவித்து கேட்கிறாரித்தனை” என்றருளிச் செய்தார்.

“உடையவர், பெரிய நம்பி தொடக்கமான ஐவர்களுக்கும் ஶிஷ்யராய், அவர்கள் ஆசார்யர்களாயிருக்க,
ஶிஷ்யரான இவரோட்டை ஸம்பந்தத்தாலே அவர்கள் பேறு பெற்றார்கள் என்று சொல்லும்படி எங்ஙனே?
ஆசார்ய ஸம்பந்தத்தாலே யன்றோ ஶிஷ்யனுக்குப் பேறு” என்னில் –

தஶரத வஸுதேவாதிகளிடத்திலே பிறந்த ராம க்ருஷ்ணாதிகள் வித்யாப்யாஸத்துக்குடலாக
விஶ்வாமித்ர ஸாந்தீபனீ ப்ரப்ருத்திகளை ஆசார்யத்வேந வரித்து
21-இமௌ ஸ்ம முநிஶார்தூல! கிங்கரௌ ஸமுபஸ்திதௌ|
ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை ஶாஸநம் கரவாவ கிம் ||(ரா -பா 31-4)
[முநிஶ்ரேஷ்டரே! நாங்களிருவரும் (தேவரீருக்குக்) கைங்கரியம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம்
(தேவரீருடைய) இஷ்டப்பட கட்டளையிடவேண்டும்;
(தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள் செய்ய வேண்டும்? ] என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தாங்கள் ஶிஷ்யராய் நின்றவிடத்தில் ஶிஷ்ய ஸம்பந்தத்தாலே உபதேஶகத்வேந நின்று
குருக்களான விஶ்வாமித்ராதிகளுக்குப் பேறானாப் போலே,
ஶிஷ்யரான இவரோடுண்டான ஸம்பந்தத்தாலே ஆசார்யர்களான பெரியநம்பி தொடக்கமானாக்கும் பேறாகக் குறையில்லை.

23.(விஷ்ணுர் மாநுஷ ரூபேண சாசர வஸுதாதலே )
விஷ்ணுவானவர் மனித வுருவுடன் பூமியில் ஸஞ்சரித்தார். (பாரதம் – வனபர்வம்)-என்றும்,

24.(இதாநீமபி கோவிந்த லோகாநாம் ஹிதகாம்யயா |
மாநுஷம் வபுராஸ்தாய த்வாரவத்யாம் ஹி திஷ்டஸி || )
கோவிந்தனே! இப்போதும் உலகங்களுக்கு நன்மைக்காக மனித வுருக் கொண்டு த்வாரகையில் நிற்கிறாய் என்றும் சொல்லுகிறபடியே
ஸாக்ஷாத் ஸர்வேஶ்வரன் தானே மாநுஷரூபத்தை ஏறிட்டுக் கொண்டு
நான் உனக்கு அடியேன்; உனக்கு இப்போது என்ன செய்வேன்?–ஶிஷ்யத்வபாவநாமாத்ரமாய்,
தன்னில் தானான தன்மையாய் இருக்கையாலே, அவர்களும் அடியறிந்தவர்களாகையாலே ,
உபதேஷ்டருத்வ பாவனை ஒழிய வஸ்துத: அஜ்ஞாதஜ்ஞாபனத்வாரா குருத்வம் தங்களுக்கு இல்லாமையாலே
அவர்களுக்குப் பேறு அவராலேயாகக்‌ குறையில்லை.

இங்கு அப்படிக் கூடாதே – என்னில் இங்கும் கூடும். எங்ஙனேயென்னில்-
25. ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபி ந ஸம்ஶய:
ஆசார்யனே நேரே நடமாடும் பரம புருஷன்: இதில் ஐயமில்லை.என்றும்,

26. குருரேவ பரம் ப்ரஹ்ம என்றும், -குருவே மேலான ப்ரஹ்மம்; குருவே மேலான தனம்; குருவே மேலான காமம்;
குருவே மேலான ப்ராப்யம்; குருவே மேலான கல்வி; குருவே மேலான ப்ராபகம்;
அப் பரம்பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.

“பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும்,
“திருமாமகள் கொழுனன் தானே குருவாகி” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடி
உடையவரும் அவதார விசேஷமாகையாலும்,
பெரிய நம்பி தொடக்கமானார் இவர்க்கு அஜ்ஞாத ஜஞாபனத்வாரா ஆசார்யர்களன்றிக்கே
இவரோடே நமக்கொரு ஸம்பந்தம் உண்டாகவேணுமென்னுமதிலே நோக்காய்
ஆசார்யத்வத்தை வ்யாஜமாக நினைத்திருக்கையாலும்
நாதமுனிகளுடைய ஸம்ப்ரதாய ஶ்ரவணத்தாலும், பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வத்தை இவரிடத்திலே அறுதியிட்டிருந்தார்கள்.

ப்ரதம குருவான எம்பெருமானுக்கும் இவர் உத்தாரகரானபடி கண்டால்,
அவாந்தர குருக்களுக்கு இவர் உத்தாரகராகச் சொல்ல வேண்டாவிறே.
உத்தாரகராகையாவது –
ஸ்வரூப ஸத்பாவம் அழிந்து அத:பதிதனானவனை ஸ்வரூப ஸத்பாவத்தை உண்டாக்கிக் கரைமரம் சேர்க்கையிறே.
பாஹ்ய குத்ருஷ்டிகள் ப்ரஹ்ம ஸ்வரூபத்தை இல்லை செய்ய, அத்தாலே ஸ்வரூப ஸித்தியில்லாமல்,
அத:பதிதனானவளவிலே, ஸகல வேதாந்தங்களாலும் பர ப்ரஹ்மத்தை ஸ்வரூப ஸித்தியுண்டாக்கிக் கரைமரம் சேர்த்தாரிறே.

இன்னமும்
27.அயம் ஸ கத்யதே ப்ராஜ்ஞை: புராணார்த்த விஶாரதை|
கோபாலோ யாதவம் வம்ஶம் மக்நமப் யுத்த ரிஷ்யதி||(வி-பு. 5-20-49)
[புராணப் பொருள்களிலே பண்டிதர்களான பேரறிவாளர்களாலே அவனே கோபாலனென்று கொண்டாடப்படுகிறான்.
தாழ்ந்து கிடந்த யதுகுலத்தைக் கைதூக்கிவிடப் போகிறான் இவன்]
(கோபாலோ யாதவம் வம்ஶம் ஸ்வயம் மக்நம் அப்யுத்தரிஷ்யதி) என்று நாரத பகவான் க்ருஷ்ணாவதாரத்தைக் கடாக்ஷித்து,
யது வம்ஶத்தை ஒரு கோபாலன் வந்து உத்தரிக்கப் போகிறான் என்று சொன்னாப் போலே,
ப்ரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரும் உடையவருடைய திருவவதாரத்தைக் கடாக்ஷித்து
“கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று ஒரு மஹானுபாவன் திருவவதரித்து ப்ரபன்ன குலமாக வாழும்படிக்கு
ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கொழுந்துவிட்டுச் செல்லும்படி பண்ணப்போகிறாரென்று அருளிச் செய்தாரிறே.

ஆகையாலே ஆளவந்தார் தொடக்கமான முன்புள்ள முதலிகள் பலரும் தர்ஶந ப்ரவர்த்தகராயிருக்க,
இங்கும் அங்கும் இவர் திருநாமத்தாலே தர்ஶனம் பேறு பெற்று –
எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தாரும், ஜ்ஞாநாதிகரான ஸந்யாஸிகளும், ஶ்ரீவைஷ்ணவர்களும், ஏகாங்கிகளும்,
ஜ்ஞாநாதிகைகளான அம்மையார்களும் நிரவதிக வைஷ்ணவ ஶ்ரீயோடே வாழ்ந்தது.
அந்த ஸம்ருத்தி இன்றளவும் வெள்ளமிட்டுப் பெருகும்படி ராமாநுஜ தர்ஶநமென்று கொழுந்து விட்டுச் செல்லுகிறது.

ஸர்வேஶ்வரன் க்ருஷ்ணாவதாரத்திலே அர்ஜுன வ்யாஜத்தாலே ஸ்வ விஷயமான சரமஶ்லோக முகத்தாலே
ப்ரதமோபாயத்தை நிஶ்சயித்துக் காட்டினாப் போலே
உடையவரும், அவதார விஶேஷமான தம் பக்கலிலே சரமோபாயத்தை நிஶ்சயித்து அருளிச் செய்தாரிறே.
எங்ஙனேயென்னில்:
திருநாராயணபுரத்திலே உடையவர் முதலிகளும் தாமுமாக எழுந்தருளி இருக்கிற நாளிலே
முதலியாண்டான் யாதவகிரி மாஹாத்ம்யம் வாசியா நிற்க,

28.(அனந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஶ்ச தத: பரம் |
பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கஶ்சித் பவிஷ்யதி || )
(திருவனந்தாழ்வான் முதல் மூர்த்தியாவான். லக்ஷ்மணன் அவனுடைய அடுத்ததான அவதாரமாவான்.
பலராமன் அவனுடைய மூன்றாவது மூர்த்தியாவான்,
நாலாவது மூர்த்தியாகக் கலியுகத்தில் ஒரு மஹாபுருஷர் அவதரிக்கப் போகிறார் )
என்கிற ஶ்லோகம் வந்தவாறே
சதுர்த்த பாதத்துக்குப் பொருள் ஏதென்று சில முதலிகள் முதலியாண்டானைக் கேட்க,
அவரும் உடையவர் திருமுக மண்டலத்தைப் பார்க்க, உடையவரும்,
‘ஆழ்வாரை அபேக்ஷித்து ருஷி சொன்னதாயிருக்கும்’ என்று அருளிச் செய்ய,
அதினாலே முதலிகளுக்கு த்ருப்தி இல்லாதபடியைக் கண்டு,
“இற்றைக்குச் செல்லும்; பின்னை வெளியிடுகிறோம்” என்றருளிச் செய்ய,

அவ்வளவிலே மாஹாத்ம்யத்தை முட்ட வாசித்துக் கட்டி, கோஷ்டியும் குலைந்து போய் அன்று ராத்ரி காலத்திலே
முதலியாண்டான், எம்பார், திருநாராயணபுரத்தரையர், மாருதியாண்டான், உக்கலம்மாள் இவர்கள்
ஐவர்களும் உடையவர் திருவடிகளிலே தண்டம் ஸமர்ப்பித்து,
“தேவரீர் அடியோங்களுக்கு அவ்வர்த்தத்தை அருளிச்செய்ய வேணும்’ என்ன,
“ஆகில் இத்தை ஓருவர்க்கும் வெளியிடாதே கிடீர்கள்.
இதிலே ப்ரதிபத்தி பிறக்கிறது மிகவும் துர்லபமாயிருக்கும்” என்றருளிச் செய்து,

28. (கலௌ கஶ்சித் பவிஷ்யதி) என்றதுக்கு நாமே விஷயம்;
நம் பிறவி ஸர்வோத்தாரகமாகப் பிறந்த பிறவியாய் இருக்கும்.
ஆகையாலே எல்லாரும் நம்மைப் பற்றி நிர்ப் பரராய் இருங்கோள். ஒரு குறைகளுமில்லை” என்றருளிச் செய்தார்.
இவ்வர்த்தம் பரம ரஹஸ்யம்.

உடையவர் தாம் அவதார விஶேஷமென்னுமிடத்தைப் பலரும் வெளியிட்டார்களிறே.
எங்ஙனே என்னில் –
அழகர் ஸன்னிதியிலே திருவத்யயனம் நடவாநிற்க, ஒரு நாள் திருவோலக்கத்திலே நம்மிராமாநுசமுடையார்க்கு
அருளப்பாடென்று திருவுள்ளமாய் அருள, ‘நாயந்தே’ என்று முதலிகள் எல்லாம் எழுந்திருந்து,
அழகர் திருவடிகளுக்கு ஆஸன்னமாக எழுந்தருள, பெரிய நம்பி வழியிலே சிலர் எழுந்திருந்து வாராமலிருக்க,
‘நாமழைக்க நீங்கள் வாராமலிருப்பானேன்’ என்ன,
“இராமநுசமுடையார்க்கு அருளப்பாடென்று தேவரீர் திருவுள்ளம் பற்றுகையாலே அவர் எங்களுக்கு ஶிஷ்யராய் இருக்கையாலே,
அவர் எங்களுக்கு ஶேஷபூதரன்றோ என்று வாராமலிருந்தோம்” என்ன,
அவரும் “நம்மை தஶரத வஸுதேவாதிகள் புத்ர ப்ரதிபத்தி பண்ணினாப் போலே இருந்தது
நீங்கள் நம் இராமநுசனை ஶிஷ்ய ப்ரதிபத்தி பண்ணினது.
நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவரான இவரோட்டை ஸம்பந்தத்தை
அறுத்துக் கொண்ட உங்களுக்கு கதி ஏது?” என்று அருளிச் செய்தார்.

பின்பொரு நாள் கிடாம்பியாச்சானை அழைத்து அருளப்பாடிட்டருளி, ஒரு பாசுரம் சொல்லிக் காணாயென்ன,
அவரும்,
29. ந தர்மநிஷ்டோஸ்மி நசாத்மவேதி நபக்திமாந் த்வச்சரணாரவிந்தே|
அகிஞ்சநோஅநந்யகதி: ஶரண்ய த்வத்பாதமூலம் ஶரணம் ப்ரபத்யே||

[கர்மயோகத்தில் நிலைநிற்பவனல்லேன், ஆத்மஜ்ஞானமுமில்லாதவன்,
உன் திருவடித் தாமரையில் பக்தி யோகமும் இல்லை, கைமுதலற்றவன், வேறு புகலற்றவன்,
ஶரணமடையத்தக்கவனே! உன் திருவடியை ஶரணமடைகின்றேன்] என்றருளிச் செய்ய ,
“நம்மிராமாநுசனை யுடையையாய் வைத்து அநந்ய கதி என்று சொல்லப் பெறாய் காண்” என்றருளிச் செய்தார்.
அதாவது – “எல்லார்க்கும் புகலிடமாய், ஸர்வோத்தாரகமான நம்மிராமாநுசனிருக்கச் செய்தே
உமக்கு ஒரு குறைகளுமில்லை. மார்விலே கைப்பொகட்டு உறங்கும்” என்றருளிச் செய்தார் என்றபடி.

பெருமாள் கோயிலிலே ஒரு வைஷ்ணவனுக்கு ஒரு பிள்ளை பிறந்தானாய்,
அந்தப் பிள்ளை ஐந்து, ஆறு வயஸ்ஸளவும் வார்த்தை சொல்லாமல் ஊமையாயிருந்து,
அநந்தரம் இரண்டு மூன்று ஸம்வத்ஸரம் அவனைக் காணாமல் போக,
சில நாளைக்குப் பின்பு அவன் வார்த்தை சொல்ல வல்லனாய் வந்தவாறே, இந்த ஆஶ்சர்யத்தைக் கேட்கைக்கு,
‘ஊமாய்! நீ இத்தனை நாளும் எங்கு போனாய்?’ என்று சிலர் கேட்க,
அவனும் ‘க்ஷீராப்திக்குப் போனேன்’ என்ன,
அங்கே விஶேஷமேதென்று கேட்க, “திருப்பாற்கடல் நாதன் ஸேனை முதலியாரை அழைத்தருளி,
‘எல்லாரும் நமக்காளாம்படி நீர் போய் அவதரித்து ஜகத்தை யடையத் திருத்தும்?’ என்று நியோகிக்க அப்படியே
ஸேனை முதலியாரும் இளையாழ்வாராய் வந்தவதரித்திருக்கிறாரென்று திருப்பாற்கடல் நாதன் ஸன்னிதியிலே
ஶ்வேத த்வீப வாஸிகள் ப்ரஸங்கம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்” என்று சொல்லி,
உடனே அந்தப் பிள்ளை அந்தர்த்தாநம் பண்ணிப்போயிற்று.

உடையவர் யாதவப்ரகாஶனோடே ஶாஸ்த்ரபாடம் காலக்ஷேபம் பண்ணிக் கொண்டிருக்கிற நாளிலே,
அந்த ராஜ்யத்து ராஜாவினுடைய பெண்ணை ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸு பிடித்து நலிய,
அத்தை யாதவ ப்ரகாஶனுக்கு அறிவிக்கப் பண்ண, அவனும் அதிக்ரூரமான மந்த்ரங்களை ஜபித்துக் கொண்டு
இளையாழ்வார் தொடக்கமானாருடனே சென்று அத்தைப் போகச் சொல்ல,
அது முடக்கின காலை நீட்டி, “நீ போகச் சொன்னால் உனக்கு பயப்பட்டு போகேன்” என்று சில வார்த்தைகள் சொல்ல,
“ஆனால் நீ யார் போகச் சொன்னால் போவுதி?” என்ன,
“உன்னுடனே வாசிக்கிறவர்களிலே ஒருவர் அநந்த கருட விஷ்வக்ஸேநாதிகளான
நித்யஸூரிகளில் தலைவரிலே ஓருவராயிருப்பார்” என்று உடையவரைக் காட்டி,
“அவர் போகச் சொன்னால் அவர் திருவடிகளிலே தண்டனிட்டுப் போகிறேன்” என்று சொல்லுகையாலே,
உடையவர் அவதார விஶேஷமென்னுமிடத்தை ப்ரம்ஹ்ரக்ஷஸ்ஸும் வெளியிட்டதிறே.

உடையவரும் ஶாரதா பீடத்துக்கு எழுந்தருளினவளவிலே ஸரஸ்வதியும் எதிரே புறப்பட்டு வந்து,
“இவர் ஸர்வேஶ்வரனுடைய அம்ஶாவதாரமே; தப்பாது” என்று சொல்லி அதி ப்ரீதியோடே,

30-ய ஏஷோஅந்தராதித்யே ஹிரண்யமய: புருஷோத்ருச்யதே ஹிரண்யசமச்ருர்
ஹிரண்யகேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண: I
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவக்ஷிணீ II

(ஸுர்யனுக்கு நடுவில் தங்கம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரமபுருஷன் காணப்படுகிறானோ,
அவன் ஸுவர்ணம் போன்று அழகான மீசையையும், கேசங்களையும்,நகம் முதலிய எல்லா அவையங்களையுமுடையவன்.
அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்ற இருகண்கள் உள )

என்கிற ஶ்ருதி வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்யவேணுமென்று உடையவரைக் கேட்க,
உடையவரும் ,
“ஶ்ரீமந் நாராயணனுக்கு அப்போதலர்ந்த செந்தாமரைப் பூப்போலேயிருக்கும் திருக்கண்கள் “ என்றருளிச் செய்ய,
ஸரஸ்வதியும் கேட்டு மிகவும் ஸந்தோஷித்து,
“ அவதார விஶேஷமான தேவரீர் நூற்றுக்காத வழி எழுந்தருளினது அடியேனைக் கடாக்ஷிக்கைக்காக எழுந்தருளிற்றே” என்று
ஶ்ரீபாஷ்யம் முதலான க்ரந்தங்களையும் ஶிரஸாவஹித்து உடையவருக்கு பாஷ்யகாரர் என்று திருநாமம் சாத்தி,
உடையவருடைய அவதார ரஹஸ்யத்தை ஸரஸ்வதியும் வெளியிட்டாளிறே.

கூரத்தாழ்வானும் – உடையவருடைய நியோகத்தாலே பேரருளாளன் விஷயமாக
வரதராஜ ஸ்தவம் அருளிச்செய்து நிறைவேற்றினவுடனே,
ஆழ்வானும் உடையவர் ஸன்னதியிலே ஸமர்ப்பித்து,
“தேவரீருடைய நியமன ப்ரகாரத்திலே வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாள் திருமுன்பே விண்ணப்பம் செய்தேன்,
திருவுள்ளமுகந்து, அவர் பெருவிசும்பருளும் பேரருளாளராகையாலே அடியேன் கேட்டபடியே,
12. வைகுண்டே து பரே லோகே ஶ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ|| என்று
சொல்லுகிற பரமபதத்தை ப்ரஸாதித்தோமென்று அருளிச் செய்து,
“நாம் வானிளவரசாகையாலே நமக்கு ஸ்வாதந்த்ரயம் மட்டமாயிருக்கும், நம் முதன்மையிலே அடிமை செய்வாரில்
தலைவரிலே ஒருத்தரான நம்மிராமாநுசனை அநுமதி கொண்டு அவர் தந்தோமென்றால் போய் வாரும்” என்றருளிச்செய்தார்,
அப்படியே தேவரீரும் திருவுள்ளம் பற்றியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்ய,
உடையவரும், ஆழ்வான் திருவுள்ளத்தையறிந்து அவருடைய வலத்திருச்செவியிலே த்வயத்தையும் ப்ரஸாதித்தருளி,
‘நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்’ என்றருளிச் செய்ய,
ஆழ்வானும் ‘நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய,
“க்ருஷ்ணன் கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப் போலே
நாம் உம்முடைய பக்கல் பண்ணின விஷயீகாரம் நாலூரானளவும் செல்லத் தட்டில்லை காணும்” என்று அருளிச் செய்தார்.
பின்பிறே கலங்காப் பெருநகரை ப்ராபித்தது.

ஆழ்வானுக்கு பட்டரைக் கொண்டு திருவத்யயன பர்யந்தம் நடத்தி, மற்றை நாள் உடையவர் பட்டரையும் கூட்டிக்கொண்டு
பெரியபெருமாளை ஸேவிப்பதாக எழுந்தருள, அவ்வளவிலே பெருமாளும் பட்டரை அருளப்பாடிட்டருளி,
“உமக்குப் பிதா போனாரென்று வ்யாகுலப் படாதே கிடீர்; நாமுமக்குப் பிதா” என்று
பட்டரை புத்ர ஸ்வீகாரம் பண்ணியருளி,
“நீர் ஒன்றுக்கும் கரையாதே கொள்ளும் காணும். த்ருஷ்டத்தில் உமக்கு ஒரு குறைகளும் வையோம்;
அத்ருஷ்டத்துக்கு நம் இராமநுசனிருக்கக் கரைய வேண்டுவதில்லை.
“நம் பரமாயதுண்டே என்று துணிந்திரும்” என்று அருளிச் செய்தார்.

உடையவர், முதலிகளும் தாமுமாக திவ்யதேஶங்களெல்லாம் ஸேவித்துத் திருகரியிலே எழுந்தருளி
ஆழ்வாரை ஸேவித்துக் கண்ணிநுண்சிறுத்தாம்பு அநுஸந்தாநம் பண்ணிக் கொண்டு நிற்க,
ஆழ்வாரும் மிகவும் உகந்தருளி அர்ச்சமுகேன அருளப்பாடிட்டருளி,
உடையவரைத் திருவடிகளின் கீழே திருமுடியை மடுக்கச் சொல்லி
ஸகலமான ஶ்ரீவைஷ்ணவர்களையும் கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தையும் அருளப்பாடிட்டருளி,
“நம்மோடு ஸம்பந்தம் வேண்டியிருப்பாரெல்லாரும் நமக்குப் பாதுகமாயிருக்கும் நம்மிராமாநுசனைப் பற்றுங்கோள்.
நம்மிராமாநுசனைப் பற்றுகை நம்மைப் பற்றுகையாயிருக்கும்.
நம்மிராமாநுசனையே நீங்கள் அனைவரும் உடையராய்ப் பிழையுங்கோள்” என்றருளிச் செய்தார்.
அன்று தொடங்கி ஆழ்வார் திருவடிகளுக்கு ‘இராமாநுசம்’ என்று திருநாமம் ஆயிற்று.
தத்பூர்வம் ஶடகோப பதத்வயம் மதுரகவிகள் என்று திருநாமமாயிருக்கும்.
இந்த ஸம்ப்ரதாயத்தை உட்கொண்டாயிற்று அமுதனார் “மாறனடி பணிந்துய்ந்தவன்” என்று அருளிச் செய்தது.

மதுரகவி ஆழ்வார் ஸர்வஜ்ஞராகையாலே ஆழ்வார் திருவுள்ளக் கருத்தை அறிந்து
“மேவினேனவன் பொன்னடி” என்று ஸாபிப்ராயமாக அருளிச் செய்தாரிறே.
தாமரையடி என்னாதே பொன்னடி என்று விஶேஷணமிட்டது –
பொன்னானது ஸகலத் த்ரவ்யங்களிலும் உத்க்ருஷ்டமாய், எல்லாரும் மேல் விழுந்து ஆசைப்படும்படியுமாய்,
பல ப்ரஸாதகமுமாய், ப்ராயிக(ப்ய)முமாய், வ்யக்தி தாரத்மயத்தையிட்டு வர்த்தியாமல்
தன் பக்கல் ருசியுள்ளாரிடமெல்லாம் வர்த்திக்கும்படியாய், ஆண்களோடு பெண்களோடு வாசியறத் தொடரும்படியுமாய்,
கைப்பட்டால் நோக்கிக் கொள்ள வேண்டும்படியுமாய், இழவிலே ப்ராணஹானி வருகைக்கு உடலுமாய் இருக்கையாலேயிறே
இந்த ஆகாரங்களெல்லாம் உடையவர் பக்கலிலே கண்டதிறே.

உடையவர் தாம் 31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:”
காருண்யத்தால் ஆசார்யகளுள் சிறந்தவர் எதிராஜர்.என்கிறபடியே
எல்லாரிலும் உத்க்ருஷ்டராய், எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தரும் ஆசைப்பட்டு மேல்விழுந்து ஆஶ்ரயிக்கும்படி ஸ்பரூஹணியருமாய்,
மோக்ஷபலப்ரதருமாய், இன்னாரின்னவர்களென்று அவர்களையும் விடாமல், ருசியுடையவர் பக்கலெல்லாம்
ரஹஸ்யார்த்தங்களை வெளியிட்டருளி, அளவிறந்த ஶ்ரீவைஷ்ணவர்களோடு வாசியற வாய்த்த எல்லாரையும் ஈடுபடுத்தி,
க்ருமிகண்டனடியாக வந்த துர்த்தஶையிலே முதலியாண்டான் தொடக்கமானாராலே பேணப்பட்டுத்
தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்ரீபாதத்தில் உள்ளவர்கள் பலரும் மூச்சடங்கும் படியாயிறே எழுந்தருளியிருந்தது.
ஆகையால் ஆழ்வார் திருவடிகள் உடையவர் தானேயிறே.

உடையவர் ப்ராயணத்தில் மூச்சடங்கினார்கள் பலருமுண்டிறே.
கணியனூர்ச் சிறியாச்சான் உடையவரைப் பிரிந்து கணியனூரிலே எழுந்தருளிச் சில நாள் கழிந்தவாறே
ஸ்வாசார்யரான உடையவரை ஸேவிக்க வேணுமென்று தேட்டமாயெழுந்தருள,
நடுவழியிலே ஒரு திருநாமதாரி கோயிலில் நின்றும் வரக்கண்டு,
அவனை, எங்கள் ஆசார்யரான எம்பெருமானார் ஸுகமே எழுந்தருளி இருக்கிறாரோ?” என்று கேட்க,
அவனும் உடையவருடைய ப்ரயாணத்தைச் சொல்ல,
“எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று மூச்சடங்கினாரிறே.

குமாண்டூர் இளையவில்லி என்கிறவர் திருப்பேரூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே,
ஒரு நாள் ராத்ரி ஸ்வப்னத்திலே உடையவர் அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தாப் போலே
நிரவதிக தேஜோரூபமான திவ்ய விமானத்திலே ஏறியருளி நிற்கப்
பரமபதத்துக்கும் பூமிக்கும் நடுவே நிர்வகாஶமாம்படி பரமபதநாதன், அநந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் தொடக்கமான
அநேகமாயிரம் நித்யஸூரிகளும், ஆழ்வார் நாதமுனிகள் தொடக்கமான அளவிறந்த முக்தரும் தாமுமாக
ஶங்க காஹளபேரிகள் தொடக்கமான வாத்ய கோஷங்களுடனே வந்து உடையவரை எதிர்கொண்டு முன்னே நடக்கத்
தாமும் பரிகரமும் பின்தொடர்ந்து போகிறதாகக் கண்டு திடுக்கிட்டு எழுந்திருந்து,
அசலகத்தில் வள்ளல் மணிவண்ணனை அழைத்தருளி,
“எங்களாசார்யரான எம்பெருமானார் திவ்யவிமானத்திலே ஏறியருளி, பரமபதநாதன், நித்யஸூரிகளும் தானுமாக
எதிர்கொள்ளப் பரமபதத்துக்கு எழுந்தருளுகிறதாகக் கண்டேன்.
‘தரியேனினி’ என்றருளிச் செய்து ‘எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்’ என்று மூச்சடங்கினாரிறே.

இப்படி இருந்த இடங்களிலே மூச்சடங்கினார் பலரும் உண்டிறே.
அருகிருந்தாரை ஏற்கவே ஆணையிட்டு விலக்குகையாலும் தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பிக்க வேண்டிப்
பெருமாள் வலியவிட்டு வைக்கையாலும் அருகிருந்த முதலிகள் ஆற்றாமைப் பட்டிருந்தார்கள்.
இப்படித் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்வாஶ்ரிதர் மூச்சடங்கும்படியான வைலக்ஷண்யமுடையராயாயிற்று உடையவர் தாமிருப்பது.

திருவாய்மொழி ப்ரவர்த்தகர்கள்
உடையவர் திருகுருகைப்பிரான் பிள்ளானுக்குத் திருவாய்மொழி ப்ரஸாதிக்கிற போது
“பொலிக பொலிக” வந்தவாறே திருகுருகைப்பிரான் பிள்ளான் ஹர்ஷ புலகிதகாத்ரராய் விஸ்மயாவிஷ்டசித்தராய் எழுந்தருளியிருக்க,
உடையவரும் அத்தைக் கண்டு , ‘இதென்ன வேறுபாடு தோற்றியிராநின்றீர்’ என்று கேட்டருள,
“ஆழ்வார் தேவரீருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி ‘கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று அருளிச் செய்தார்.
அப்படியே தேவரீரும் உருக்கள்தோறும் நாமே இதுக்கு விஷயமென்று தொட்டுக் காட்டியருளிற்று.

அத்தை எல்லாம் இப்போது நினைத்து ஹர்ஷ்பரவஶனாய், ஆழ்வார் அருளிச் செய்தபடியே ஸர்வோத்தாரகராய்
நாடு அடங்க வாழும்படி திரு அவதரித்த தேவரீரிடத்திலே ஸம்பந்தமும் பெற்று,
தேவரீர் திருப்பவளத்தாலே திருவாய்மொழிக்குப் பொருள் கேட்கும்படிக்கு ஒரு ஸுக்ருதம் நேர்படுவதே! என்று விஸ்மயப்பட்டிருந்தேன்” என்ன,
உடையவர் மிகவும் உகந்தருளி, அன்று ராத்ரி காலத்திலே பிள்ளானை அழைத்தருளி,
அவர் திருக்கையைப் பிடித்துக்கொண்டு பேரருளாளர் ஸன்னதியிலே அழைத்துக்கொண்டு எழுந்தருளித்
தம்முடைய திருவடிகள் இரண்டையும் அவர் முடியிலே வைத்தருளி, “
இத்தையே தஞ்சமாகப் பற்றி விஶ்வஸித்திரும், உம்மை அடைந்தார்க்கும் இத்தையே காட்டிக் கொடும்” என்றருளிச் செய்து, “
நாளை பேரருளாளர் ஸன்னதியிலே தொடங்கி திருவாய்மொழிக்கு, ஶ்ரீ விஷ்ணு புராண ஸங்க்யையிலே
ஆறாயிரம் க்ரந்தமாக வ்யாக்யானம் பண்ணும்” என்று நியமித்தருளினார்.
இத்தால் தம்முடைய உத்தாரகத்வத்தை வெளியிட்டபடியிறே.

உடையவர் தம் திருவடிகளில் ஆஶ்ரயித்த கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும்,
அருளாளப் பெருமாள் எம்பெருமானாரையும் கூட்டிக் கொண்டு
திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் பண்ணிக்கொண்டு இருக்கிற நாளிலே,
ஆசார்யர்கள் எல்லாரும் உடையவர் திருவடிகளிலே மேல் விழுந்து ஆஶ்ரயிக்க,
இந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்டு அனந்தாழ்வானும், எச்சானும், தொண்டனூர் நம்பியும், மருதூர் நம்பியும்,
உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிக்கவேணுமென்று எழுந்தருள,
அவர்களை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தருளினார்.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் போர பயப்பட்டு,
“குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டினாப்போலே செய்தாரித்தனை.
இதுக்கெல்லாம் எனக்கு அதிகாரம் போராது, எம்பெருமானார் ஸர்வோத்தாரகராய்க் கொண்டு
ஜகத்தடைய வாழப் பிறந்தவராகையாலே நமக்கெல்லாம் அவர் திருவடிகளேயாகையாலே,
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்து நிர்ப்பரராய் இருங்கோள்” என்று அருளிச் செய்தார்.

பின்பு உடையவர் அவர்களை அழைத்தருளி, “ நாம் பகவத்ஸம்பந்தம் பண்ணினோமில்லை என்று குறைப்பட்டிராதே கிடீர்கோள்;
அவர் பண்ணினதே நாம் பண்ணினது. உங்கள் பேற்றுக்கு நாமே கடவோம்” என்று அருளிச்செய்து,
திருவடிகளிரண்டையும் நெருக்கி வைத்தருளி, “இத்தையே தஞ்சமாக நினைத்திருங்கோள்” என்று அருளிச்செய்தாரிறே.

உடையவர், முதலிகளும் தாமுமாகத் திருவேங்கடமுடையானை ஸேவிக்கவேணுமென்று
பேரருளாளனை அநுமதி கொண்டு திருப்பதியிலே எழுந்தருளி, “விண்ணோர் வெற்பு” என்கிறபடியே
நித்யஸூரிகள் வந்து பரிமாறுமிடத்தே நாம் கால் கொண்டு மிதிக்கையாவதென்னென்று
அங்கே திருத்தாழ்வரை அடியிலே எழுந்தருளியிருந்து,
“தானே தொழுமத்திசையுற்று நோக்கியே” என்கிறபடியே
திருவேங்கடமுடையானை திசை கைகூப்பி ஸேவித்து மீண்டு எழுந்தருளுவதாக உத்யோகித்தவளவிலே,
அனந்தாழ்வான் தொடக்கமான ஶ்ரீவைஷ்ணவர்கள் எல்லாரும், ‘தேவரீர் ஏறாவிடில் நாங்களும் ஏறோம்;
மற்றையொருவரும் ஏறுவதில்லையாகையாலே தேவரீர் அவஶ்யம் எழுந்தருள வேணுமென்ன’,

உடையவரும் திருமேனி ஶோதனையும் பண்ணிக் கொண்டு,
32. “பாதேநாத் யாரோஹதி” என்று ஶ்ரீவைகுண்டநாதனுடைய நியோகத்தினாலே பாதபீடத்திலே அடியிட்டு ஏறுமாப்போலே
திருவேங்கடமுடையான் அருளப்பாடிட்டருளத் திருமலையிலே ஏறியருளித் திருப்பரியட்டப் பாறையளவாக எழுந்தருளாநிற்க,
“முடியுடைவானவர் முறை முறை எதிர் கொள்ள” என்கிறபடியே
பெரிய திருமலைநம்பி திருவேங்கடமுடையானுடைய தீர்த்த ப்ராஸாதமும் கொண்டு ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே எதிர்கொள்ள,
உடையவரும் தண்டம் ஸமர்ப்பித்து, தீர்த்தப்ரஸாதமும் ஸ்வீகரித்து,
“தேவரீர் எழுந்தருள வேணுமோ? ஒரு சிறியாரில்லையோ” என்ன,
“நாலு திருவீதியும் ஆராய்ந்து பார்த்தவிடத்திலும் என்னிலும் சிறியாரைக் கண்டிலேன்.
தேவரீரை எதிர்கொள்ளுகைக்குத் திருவேங்கடமுடையான் தானே எதிர் கொள்ள வேணும்,
ஸகலஜன ஜீவாதுவாய், ஸர்வரையும் உத்தரிப்பிக்க வேணுமென்று திரு அவதரித்தருளின தேவரீருடைய
வைபவத்தைப் பார்க்குமளவில் அடியேன் எதிரே விடைகொள்ளுகிறது தகாது ,
ஆகிலும், திருவேங்கடமுடையானுடைய நியோகத்தினாலே விடைகொண்டேனித்தனை” என்று அருளிச் செய்ய,

உடையவரும் போர உகந்து, அவருடனே கூடத் திருவேங்கடமுடையானுடைய ஸன்னிதியிலே எழுந்தருளி,
தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, அர்ச்சகமுகேந அருளப்பாடிட்டருளி,
“நாம் உமக்கு முன்பே நம் தெற்கு வீட்டிலே தானே உபயவிபூத்யைஶ்வர்யங்களையும் தந்து
ஜகத்தையடையத் திருத்தி வாழ்வித்திரும் என்று நியமித்தோமே, என்ன குறையாக வந்தீர்?” என்ன –
நாயன்தே! “கிடந்ததோர் கிடக்கை” என்றும்,
“பிரானிருந்தமை” என்றும்,
“நிலையார நின்றான்” என்றும் சொல்லுகிறபடியே தேவரீர் நிற்றல், இருத்தல், கிடத்தல் செய்தால் அது மிகவும் ஆகர்ஷகமாயிருக்கும்.
அதில் கிடையழகு கோயிலிலே காட்டியருளிற்று,
நிலையழகு ஹஸ்திகிரியிலே காட்டியருளிற்று,
“அமரர் முனிகணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே” என்கிறபடியே திருமலையிலே
குணநிஷ்டருக்கும் கைங்கர்ய நிஷ்டருக்கும் காட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிற நிலையழகும் கண்டு
அநுபவிக்க வேணுமென்று விடைகொண்டேன் என்ன,

ஆகில், இங்கு வாருமென்று திருவடிகளிலே திருமுடியை மடுக்கச் சொல்லி
“இத்தை மறவாதே நெஞ்சிலே கொண்டு தர்ஶனத்தை நடத்தி வையும், உபய விபூதிக்கும் நீரே கடவீர் .
உம்முடைய அபிமானத்திலே ஒதுங்கினவர்களே நமக்கு வேண்டியவர்கள், எல்லாரையும் நமக்காளாம்படி திருத்தும்,
ஜகத்தை அடையத் திருத்த வேணுமென்றாய்த்து, நாமும்மை நம் முதன்மையில் நின்றும் அழைப்பித்தது,
உம்மோடு ஸம்பந்தமுடையார்க்கு ஒரு குறைகளுமில்லை.

“சூழல் பல பல” என்கிறபடியே நாம் அனேகாவதாரங்கள் செய்தவிடத்தில் ஒருவரும் அகப்படாமல் இழவோடே போனோம்.
அந்த இழவை நீர் தீர்ப்பீரென்று ஆறியிருக்கிறோம். அப்படியே செய்யப்பாரும்” என்றருளிச் செய்தார்.
இத்தால் திருவேங்கடமுடையானும் இவருடைய உத்தாரகத்வத்தை வெளியிட்டானாய்த்து.

அனந்தரம், உடையவரும் முதலிகளுமாக நம்பியை சேவிக்க வேணுமென்று திருக்குறுங்குடிக்கு எழுந்தருளி,
நம்பி ஸன்னிதியிலே தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, நம்பியும் உடையவரை அருளப்பாடிட்டருளி, –

33-“பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி …” என்கிறபடியே
அர்ஜுனா! உனக்குப்போலே எனக்கும் பல பிறப்புகள் கடந்துவிட்டன.
(ஆயினும் யான் அவற்றை அறிவேன்; நீ அறிய மாட்டாய்.)
எத்தனை ஜன்மம் பிறந்தோமோ தெரியாது. அதிலொருவரும் அகப்பாடுவாரின்றிக்கே,

34.“ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி |
மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம் கதிம் ||”
அர்ஜுனா! அஸுரஸ்வபாவமுள்ள ஜன்மத்தை அடைந்து ஜன்மந்தோறும் மூடர்களாய்
என்னை அடையாமலே அதிலும் கீழான கதிக்குப் போகிறார்கள்.என்கிறபடியே
ஆஸுரப்ரக்ருதிகளாய், அதோகதிகளிலே விழுந்து விட்டார்கள்.
இப்போதே எல்லாரும் உமக்கேயாளாய்த் திரிகின்றார்கள்.
இப்படி இவர்கள் எல்லாரையும் அகப்படுத்திக் கொண்ட விரகெங்ஙனே?
அவ்விரகை நமக்கு ஒன்று நீர் சொல்லவேணுமென்று திருவுள்ளமாயருள,

உடையவரும் “ தேவரீர் கேட்டருளும் அடைவிலே கேட்டருளும் அடைவிலே கேட்டருளினால் விண்ணப்பம் செய்கிறேன்;
தேவரீர் இறுமாப்புக்குச் சொல்லுவதில்லை” என்ன,

நம்பியும் திவ்யாஸ்தானத்தில் நின்றும் கீழேயிறங்கியருளி, தரையிலே ஒரு ஓலியலை விரித்து
அதின் மேலே எழுந்தருளியிருந்து உடையவரைத் தன் ஸிம்ஹாஸனத்திலே எழுந்தருளியிருக்கும்படி பண்ணி,
எல்லாரையும் புறப்படுத்தி அஷ்டகர்ணமாயிருந்து, இனித்தான் சொல்லிக் காணீரென்ன,

உடையவரும்
18. “நிவேஶ்ய தக்ஷிணே ஸ்வஸ்ய விநதாஞ்ஜலி ஸம்யுதம்|
மூர்த்நி ஹஸ்தம் விநிக்ஷிப்ய தக்ஷிணம் ஜ்ஞாநதக்ஷினம் |
ஸவ்யம் து ஹ்ருதி விந்யஸ்ய க்ருபயா வீக்ஷயேத் குரு|
ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா ஜப்த்வா குரு பரம்பராம் ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் |
அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந்தோ’தி தைவதம்||” என்கிறபடியே
ஸகலோப்நிஷத்ஸார ஶ்ரேஷ்டமாய், மந்த்ரரத்நம் என்று திருநாமத்தையுடைய,
த்வயத்தை நம்பியுடைய வலத்திருச்செவியிலே அருளிச் செய்ய,

நம்பியும் அருளிச் செய்தபடி – “நாம் முன்பொரு காலத்திலே பத்ரிகாஶ்ரமத்திலே ஶிஷ்யாசார்யரூபேண நின்று
திருமந்த்ரத்தை வெளியிட்டோம். அவ்விடத்திலே ஶிஷ்யத்வேந நின்றவளவில்
ஆசார்யவஸ்து வ்யக்த்யந்த்ரமாகப் போராமல் நாமேயாய் நின்றோமித்தனை.
மத்வயதிரிக்தரிலே ஒருவன் ஆசார்யனாய் நிற்க, நாம் ஶிஷ்யனாய் நின்று அவன் பக்கலிலே ரஹஸ்யார்த்தம் கேட்கவும்,
ஒரு திறமும் பெற்றதில்லை என்று பெருங்குறையோடே இருந்தோம், அக்குறை உம்மாலே தீரப்பெற்றதே!
இனி நாம் இன்று தொடங்கி இராமாநுசமுடையாரிலே அந்தர்ப்பவிக்கப் பெற்றோம்” என்று அருளிச் செய்து,
‘நாம் வைஷ்ணவ நம்பியானதும் இன்றாய்த்து’ என்று அருளிச் செய்தார்.
இத்தால், நம்பியுடைய ஶிஷ்யத்வம் ஸ்வாதந்த்ரியத்தினுடைய எல்லை நிலமென்று தாத்பர்யம்.
ஸர்வர்க்கும் ப்ரதம குருவான நம்பி உடையவருடைய ஶிஷ்யத்வத்தை ஆசைப்பட்டு பெற்றது –
உத்தாரகத்வேந உக்தமான இவருடைய ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.

நடாதூர் அம்மாள் ஸ்ரீபாதத்திலே பத்துப் பன்னிரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் ஶ்ரீபாஷ்யம் வாசிக்கிற காலத்திலே,
பக்தி ப்ரபத்திகள் இரண்டும் துஶ்ஶகத்வ ஸ்வரூப விருத்தத்வ விஶ்வாஸ துர்லபத்வாதிகளாலே பண்ணக் கூடாமல்
வெறுங்கையனான சேதனனுக்கு பேறுண்டாம்படி எங்ஙனே? என்று சிலர் கேட்க,
“இவை யிரண்டும் இல்லாதார்க்கு எம்பெருமானாருடைய அபிமானமே உத்தாரகம்
இத்தை ஒழியப் பேற்றுக்கு வழியில்லை. நான் அறுதியிட்டிருப்பதும் அப்படியே” என்று அருளிச் செய்தார்.

பின்பு தம்முடைய சரமதஶையிலே ஸ்ரீபாதத்து முதலிகள், எங்களுக்கு தஞ்சமேதென்று சதுரராய் கேட்க ,
”உங்களுக்கு பக்தி ப்ரபத்திகள் துஷ்கரங்களாய் ஒழிந்தது; ஸுலபமென்று எம்பெருமானாரைப் பற்றி
அவரே தஞ்சமென்று விஶ்வஸித்திருங்கோள். பேற்றுக்கு குறையில்லை” என்று அருளிச் செய்தார்.

35.“ப்ரயாணகாலே சதுரஸ் ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீஷய|
பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||”

தன் சரம காலத்தில் தன் திருவடி வாரத்திலிருந்த நாலு ஶிஷ்யர்களைப் பார்த்து நடாதூர் அம்மாள்
‘பக்தி ப்ரபத்திகள் உங்களுக்கு செயற்கரியவையாகில் எம்பெருமானாரை ஶரணமாக கொள்ளுங்கள்’ என்று
உபதேஶித்தார்.என்று இவ்வர்த்தம் ப்ரஸித்தமிறே.

காராஞ்சியில் ஸோமயாஜியார், எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சில நாள் ஆசார்ய கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்து,
பின்பு தம்முடைய ஊரான காராஞ்சியிலே எழுந்தருளிச் சில நாள் கழித்தவாறே. ஸ்வாசார்யரைத் தேட்டமாய்,
தேவியாருடைய உபாதியினாலே ஸ்வாசார்யருடைய ஸன்னிதிக்கு எழுந்தருளக் கூடாமையாலே,
எம்பெருமானார்க்கு ப்ரதிநிதியாக ஒரு விக்ரஹம் ஏறியருளப் பண்ண,
அந்த ஸம்ஸ்தானம் நன்றாக வகுப்புண்ணாமையாலே அத்தையழித்து வேறே ஏறியருளப் பண்ண,
அன்றைக்கு ராத்ரி இவர் ஸ்வப்னத்திலே உடையவர் எழுந்தருளி,
“நீர் ஏன் இப்படி நம்மை நலிந்து உருவழிக்கிறீர்.
எங்ஙனே இருந்தாலும் நம்முடைய அபிமானமே உத்தாரகமென்று அத்யவஸிக்கமாட்டாத நீரோ
நம் விக்ரஹத்திலே ப்ரதிபத்தி பண்ணப் போகிறீர்” என்று அருளிச் செய்ய,
திடுக்கிட்டு எழுந்திருந்து அப்போது தானே அந்த விக்ரஹத்தையும் சேமத்திலே எழுந்தருளப் பண்ணி,
தேவியாரையும் அறத் துறந்து, அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலேற எழுந்தருளிக்
கண்ணும் கண்ணீருமாய்க் கை கால் பதறி வந்து உடையவர் திருவடிகளிலே
வேரற்ற மரம் போலப் புகல் அற்று விழுந்து பெருமிடறு செய்து அழப் புக்கவாறே

இது ஏதென்று கேட்டருள,
அங்குற்றை வ்ருத்தாந்தத்தை ஸ ப்ரகாரமாக விண்ணப்பம் செய்ய,
உடையவரும் முறுவல் செய்தருளி, “வாரீர் அஜ்ஞாதாவே! உம்முடைய ஸ்தீரீ பாரவஶ்யத்தை அறுக்க வேண்டிச் செய்தோமித்தனை,
நீர் இகழ்ந்தாலும் நாம் உம்மை நெகிழ விடத் தக்கதில்லை.
நீர் எங்கேயிருந்தாலும் நம்முடைய அபிமானத்தாலே உம்முடைய பேற்றுக்குக் குறை வராது.
ஸர்வ பரங்களையும் நம் பக்கலிலே பொகட்டு நிர்ப் பரராய் மார்விலே கை பொகட்டு உறங்கும்” என்று அருளிச் செய்தார் –
என்று நம்முடைய பிள்ளை அருளிச் செய்வர்.

கணியனூர் சிறியாச்சான் ஸசேல ஸ்நான பூர்வகமாக ஆர்த்தியோடே உபாஸன்னராய்ப்
பெரிய திருமண்டபத்திலே முதலிகளெல்லாரையும் திருவோலக்கமாக இருத்தி
ஶ்ரீஶடகோபனையும் திருமுடியிலே வைத்துக் கொண்டு திவ்யாஜ்ஞையிட்டு,

36(ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத் குரு|
ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||)

முக்காலும் சத்யம் செய்து கூறுகிறேன்; யதிராஜரே உலக குருவாவர். எல்லாவற்றையும் உய்விக்க செய்ய வல்லவர் அவரே.
என்று அருளிச் செய்து
“எல்லார்க்கும் எம்பெருமானார் திருவடிகளொழிய வேறொரு தஞ்சமில்லை, த்ரி ப்ரகாரமும் ஸத்யமே சொல்லுகிறேன்,
ப்ரபன்ன குலாந்தர்ப்பூதர்க்கெல்லாம் எம்பெருமானாரே உத்தாரகர், இதில் சற்றும் ஸம்ஶயமில்லை” என்று
திருவோலக்கத்தின் நடுவே கோஷித்தாரிறே.

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்த
அனந்தாழ்வானும், எச்சானும், தொண்டனூர் நம்பியும், மருதூர் நம்பியும் உடையவர் திருவடிகளிலே தண்டம் ஸமர்ப்பித்து
“இவ்வாத்மாவுக்கு ஆசார்யன் ஒருவனோ பலரோ, இத்தனை பேருண்டென்று நிஶ்சயித்து அருளிச் செய்ய வேணும்” என்று கேட்க
‘பொன்னாச்சியாரைக் கேளுங்கோள்’ என்று அருளிச் செய்ய,

அவர்களும் அங்கே எழுந்தருளி, “எம்பெருமானார் தேவரீரைக் கேட்கச் சொல்லி அருளிச் செய்தார்.
இவ்வாத்மாவுக்கு ஆசார்யன் ஒருவனோ பலரோ? இத்தனை பேருண்டென்று தேவரீர் நிஶ்சயித்தருளிச் செய்ய வேணும்” என்ன,
அவரும் திருக்குழற்கற்றையை உதறி ஒன்றாக ஒட்ட முடிந்து பொகட்டுக் கொண்டு,
“அடியேனாலே இது நிஶ்சயித்துச் சொல்லக்கூடாது. அபலையான அடியேனுக்குத் தெரியுமோ?
எம்பெருமானார் தாமே அருளிச் செய்ய வேணுமித்தனை” என்று அருளிச் செய்து
தரையிலே கிடந்த காவி நூலை எடுத்துத் தலையிலே வைத்துக் கொண்டு உள்ளே எழுந்து அருளினார்.

இவர்களும் அப்ராப்த மநோரதராய், உடையவர் ஸன்னிதியிலே சென்று தண்டம் ஸமர்ப்பித்து நிற்க,
போன கார்யம் என்னென்று கேட்டருள, அவர் தமக்குத் தெரியாது. எம்பெருமானார் தாமே அருளிச் செய்ய வேணுமத்தனை –
என்று அருளிச் செய்தார் என்ன,

நீங்கள் போனபோது அவர் செய்த வியாபாரம் என்னென்று கேட்க,

திருக் குழற் கற்றையை உதறி ஒன்றாக முடித்துத் தரையிலே கிடந்த காவி நூலை எடுத்துத் தலையிலே வைத்துக் கொண்டு,
எங்களை அனுப்பி உள்ளே எழுந்தருளினார் என்ன,

“அவர் வெறுமனே எழுந்தருளவில்லை. நீங்கள் பண்ணின ப்ரஶ்னத்துக்கு ஸதுத்தரமாகப் பொருள் சொல்லிப் போனார்.
உங்களுக்குத் தெரிந்ததில்லையே” என்றருளிச் செய்ய,

ஆகிலும் அந்த அர்த்தத்தை தேவரீர் வெளியிட்டருள வேணுமென்ன,

உடையவர் அருளிச் செய்தபடி – “அவர், திருக்குழற்கற்றையை உதறினதினாலே –
இவ்வாத்மாவுக்கு ஆசார்யனைப் பார்க்கும்போது ஓரோராகாரத்தாலே பலராயிருக்குமென்றபடி,
ஒன்றாக முடிந்து பொகட்டதாலே – இவனுக்கு ஆசார்யனாய் நின்று பேற்றைப் பண்ணிக் கொடுக்கிறவன் ஒருவனென்றபடி;
தரையிலே கிடந்த காவி நூலை எடுத்ததினாலே பேற்றுக் குடலாக அறுதியிட்ட ஆசார்யனை விசேஷிப்பதாக நினைத்துப்
பேற்றுக்குடலாக அறுதியிட்ட ஆசார்யர் சதுர்த்தாஶ்ரமத்தை ப்ராபித்து காஷாயம் சார்த்தியிருக்கிற எம்பெருமானாரென்று நம்மைச் சொன்னபடி.
தலையிலே வைத்ததினாலே நமக்கு மூர்த்தந்யரான இவர் அனைவர்க்கும் அதிஶயாவஹர் என்னுமிடத்தை வெளியிட்டபடி;
அங்கிராமல் உள்ளே புகுந்ததினாலே இப்படிப்பட்ட ஆசார்யனை ஹ்ருதயத்துக்குள்ளே,
‘பேணிக் கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன் பிறிதின்றி’ என்கிறபடியே பேணியிட்டு வைத்துக்கொண்டு
அநுஸந்தித்துக் கொண்டு இருக்கையே தத் ஸம்பந்திகளுக்கு ஸ்வரூபமென்னும் அர்த்தத்தை வெளியிட்டப்படி”.
ஆகையாலே நீங்களும் இவ்வர்த்தத்திலே நிஷ்ட்டராய்ப் போருங்கோளென்று அருளிச் செய்தார்.
இத்தாலே பொன்னாச்சியாரை யிடுவித்துத் தம்முடைய உபாயதாத்மகமான ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.

எம்பாரும் வடுக நம்பியும் உடையவர் ஏகாந்தத்திலே எழுந்தருளி யிருக்கிறவளவிலே
அவர் திருவடிகளிலே சென்று தண்டம் ஸமர்ப்பித்து, மதுரகவியாழ்வார் “தேவுமற்றறியேன்” என்று
ஶேஷித்வ ஶரண்யத்வ ப்ராப்யத்வங்கள் மூன்றையும் ஆழ்வாரிடத்திலே அறுதியிட்டுத்
ததேக நிஷ்ட்டராய் ப்ரதம பர்வத்திலே கண் வையாதே எழுந்தருளியிருந்த நிலை
அடியோங்களுக்கு உண்டாம்படி க்ருபை பண்ணி யருள வேணுமென்ன,

மதுரகவியாழ்வார் ஆழ்வாரிடத்திலே பண்ணின ப்ரதிபத்தி உங்களுக்கு நம் பக்கலிலே உண்டாம்படி பண்ணினோமே
இனி உங்களுக்குச் செய்ய வேண்டும் அம்ஶம் ஏதென்ன,

இந்த ப்ரதிபத்தி யாவதாத்ம பாவியாய் நடக்கும் படி பண்ணியருள வேணுமென்ன,

‘ஆசார்யாபிமான நிஷ்ட்டனாகில் இங்ஙனிருக்க வேண்டாவோ?’ என்று மிகவும் உகந்தருளி,
37. (உபாயோபேய பாவேன தமேவ ஶரணம் வ்ரஜேத்)
உபாயமாகவும், உபேயமாகவும் ஆசார்யனையே ஶரணமடைய வேண்டும்.-என்கிறபடியே
நமக்கிரண்டாகாரமுண்டாகையாலே, இரண்டிடத்திலும் நம் பக்கலிலே இரண்டையும் அறுதியிட்டு
“தேவுமற்றறியேன்” என்றிருக்கக் குறையில்லை. இதுதான் உங்களளவு மாத்ரமன்று,
நம்முடைய ஸம்பந்தி ஸம்பந்திகளுக்கும் இந்த ப்ரதிபத்தியே யாயிற்று கார்யகரமாவதென்று அருளிச் செய்தார்.

“ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள் உபாயத்வமித்தனை போக்கி
ப்ராப்ய பூமியில் உபாயத்வம் கொள்ளும்படி எங்ஙனே?
ப்ராப்யம் கை புகுந்தால் ப்ராபகம் வேண்டுவதில்லையே” என்னில்,
அங்குத்தானும் ஆசார்யனுக்கு உபாயத்வமுண்டு,

ஆகையிறே,
38. தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜதத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஶீம்நே|
நாதாய நாதமுநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||(ஸ்தோத்ர ரத்னம் 2)

[இவ்வுலகிலும் மேலுலகிலும் எப்போதும் எந்த ஶ்ரீமந்நாதமுனிகளுடைய திருவடிகள் எனக்குப் புகலிடமோ
மதுவை அழித்த எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றிய உண்மையறிவினுடையவும் அன்பினுடையவும்
பெருமேன்மையின் முடிவே எல்லையாயிருப்பவரும், எனக்கு நாதராயிருப்பவருமான அந்த நாதமுனிகட்கு நமஸ்காரம்.]
(அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்) என்று ஆளவந்தார் அருளிச் செய்தது.

39.(ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்)
ஸாத்யமில்லாவிடில் ஸாதனங்களால் என்ன பயன்? (வி-பு. 1-19.36) என்கிறபடியே
ப்ராப்ய பூமியிலே எல்லாம் கைப்பட்டு, ஸித்தமாய் ஸாத்யமன்றியிலேயிருக்கையாலே,
ஸாதனங்கொண்டு கார்யமில்லையேயாகிலும்,

40.உபாதத்தே ஸத்தா ஸ்திதி நியமநாத்யைஶ் சிதசிதௌ
ஸ்வ முத்திஶ்ய ஶ்ரீமாநிதி வததி வாகௌபநிஷதீ|
உபாயோபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணௌ
அதஸ்த்வாம் ஶ்ரீரங்கேஶய ஶரணமவ்யாஜம் பஜம் ||(ர-ஸ்த 2-88)

[ஹே ஶ்ரீரங்கநாதனே! ‘ஶ்ரீ மந்நாராயணன் – ஸ்ருஷ்டி, ஸ்திதி, நியமனம் முதலிய காரியங்களால்
சேதனாசேதனங்களைத் தனக்காக ஸ்வீகரிக்கிறான்’ என்று உபனிஷத் வாக்யமானது சொல்லுகிறது.
ஆகையால் இவ் விஷயத்தில் உபயத்வமும் உபேயத்வம் உனக்கு முக்யம்; கௌணமல்ல.
ஆகையால் உன்னை நிர் வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்.] என்கிறபடியே
இரண்டும் ஸ்வரூபமாயிருக்கும்;
அதிலொன்றுக்கு ஸங்கோசமில்லாமையாலே ஓளி விஞ்சிச் செல்லா நிற்கும்.
மற்றையது உள்ளடங்கியிருக்கும்.

இவ்வாகாரம் பகவத் விஷயத்திலன்றோவென்னில்;
ஆசார்ய விஷயத்திலும் அப்படியே கொள்ளகுறையில்லை.
37(உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்) என்கையாலே
ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களிரண்டும் ஆசார்யனுக்கு வடிவாயிருக்குமிறே.
இவை வடிவாகையாலேயிறே 38. (அத்ர பரத்ர சாபி) என்றது.

37. “தமேவ” என்று அவதாரணத்தையிட்டு அந்ய யோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே
சரம பர்வமும் ஸஹாயாந்தர ஸம்ஸர்க்காஸஹமாயிருக்கும்.
அதாவது
கார்யகாலத்தில் சரம பர்வம் ஸ்வ வ்யதிரிக்தத்தை ஸஹாயமாக அபேக்ஷியாமல் அந்திமோபாயமாயிருக்குமென்றபடி.
பகவத் ஸம்பந்தம் அஞ்சி யிருக்க அடுக்கும்; இது நிஸ் ஸம்ஶயமிறே.
அது ஸம்ஸார பந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவாயிருக்கும். பகவத் ஸம்பந்தம் ஆசார்ய ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கும்.
ஆசார்ய ஸம்பந்தத்துக்கு பகவத் ஸம்பந்தம் வேண்டுவதில்லை.
ஈஶ்வர விஷய ஜ்ஞானத்தை அபேக்ஷியாதென்றபடி.
ஆசார்ய விஷய ஜ்ஞானமுண்டாகிலிறே ஈஶ்வரன் ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணுவது.
இங்கு அது வேண்டுவதில்லை. இப்படி நிரபாயோபாய பூதரான உடையவரிடத்திலே, “தேவுமற்றறியேன்” என்கிற
ப்ரதிபத்தி தத் ஸம்பந்திகளுக்கெல்லாம் யாவதாத்மபாவியாக நடக்கக் குறையில்லை.

பூர்வாபரர்க்கெல்லாம் உடையவரே உத்தாரகராகில், ஆளவந்தார் நாதமுனிகளிடத்திலே உபாயத்வத்தை அறுதியிட்டபடி
எங்ஙனேயென்னில்,
நாதமுனிகள் – தான் ஆழ்வார் பக்கலிலே பெற்ற ரஹஸ்யார்த்தங்களையும், ஸ்வப்நார்த்தங்களையும்,
பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் உய்யக்கொண்டார் பக்கலிலே சேர்த்து,
பவிஷ்யத்தான ஆளவந்தாருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்து
“ஈஶ்வர முனிகளுக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார், அவருக்கு இந்த ரஹஸ்யார்த்தங்கள் எல்லாத்தையும் வெளியிடும்”
என்று உய்யக்கொண்டார்க்கு அருளிச்செய்ய,
அப்படியே தாமெழுந்தருளியிருக்கையிலே ஆளவந்தார் திரு அவதரிக்கப் பெறாமையாலே
ஶ்ரீபாதத்தில் மணக்கால் நம்பியை நியமிக்க,
அவரும் அப்படியே ஆளவந்தாருக்கு ஸம்ப்ரதாயார்த்தங்களையெல்லாம் வெளியிட,
ஆளவந்தாரும் “நாம் பிறவாதிருக்க முன்னமே தானே கருவிலே திருவுடையேனாம்படி விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி,
ஸம்ப்ரதாயார்தங்களையும் வெளியிடுவித்து, பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் காட்டி,
அது தன்னை ஸமகாலத்திலே கண்ணுக்கு இலக்காம்படி பண்ணி யிருக்க,
பின்னும் ஸத்வாரக ஸ்வப்னமுகேந எழுந்தருளி விஷயீகரித்து, இப்படிப் பண்ணின உபகாரங்களுக்கு நம்மால்
செய்யலாவதேதென்று நாதமுனிகளுடைய செயலுக்குத் தோற்று அவர் பக்கலிலே தமக்குண்டான உபகார ஸ்ம்ருதி
யாவதாத்மபாவியாய் நடக்குமென்னுமிடத்தை வெளியிட வேண்டி,
“நாதமுனிகள் அறுதியிட்ட விஷயத்தினளவும் போகவேணுமோ?
தாமறுதியிட்ட விஷயத்தைக் காட்டிக் கொடுத்த இவரே நமக்கு எல்லாம்” என்கைக்காகச் சொன்னாரித்தனை.
நாதமுனிகள் நினைவேயாயிற்று. இவர்க்கு உள்ளோடுகிற நினைவு.
நாதமுனிகளிடத்திலே பேற்றுக் குடலாக உபாயத்வத்தை அறுதி யிட்டாராகில் ஆழ்வாரிடத்திலே
41. ‘ஸர்வம்’ என்று உபாயத்வம் சொல்லக் கூடாதிறே.
ஆகையாலே

41.-மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஶ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா||(ஸ்தோ – ர 5)
[என் வம்ஶத்தவர்களுக்கு எப்போதும் தாயும், தந்தையும், மாதரும், மக்களும், பெருஞ்செல்வமும்,
மற்றுமுள்ள எல்லாமும் எப்போதும் எந்த ஆழ்வாருடைய திருவடியிணையேயோ, நமக்கு முதல்வரும்,
குலபதியுமான அவருடைய, மகிழ மலராலே அலங்கரிக்கப்பட்டதும், வைணவச் செல்வமுடையதுமான
அத்திருவடியிணையைத் தலையால் வணங்குகிறேன்.]

(மதந்வயாநாம் ஸர்வம் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா) என்று எல்லார்க்கும் தமக்கும்
ஆழ்வார் திருவடிகளே உபாயமாக அறுதியிடுகையாலே, உடையவரே உத்தாரகரென்று அறுதியிட்டபடியிறே அங்கே.
38. (மதீயம் ஶரணம்) என்று தம்மை ஒருவரையும் சொல்லி உபாயத்வத்தைச் சொல்லுகையாலே,
அவர் தமக்கு பண்ணின உபகாரத்துக்குத் தோற்று தத் ஸம்ருத்தி ஸூசகமாகச் சொன்னாரென்னுமிடம் ஸித்தம்.

எம்பார் ஒரு ராத்ரி திருவீதியிலே குணானுபவத்துடனே உலாவி யருளா நிற்க,
பட்டர் பார்த்தருள, எம்பாரை ஸேவித்து – ஆசார்யத்வமும் த்விவிதமாய், தத் விஷய ஸ்வீகாரமும் த்விவிதமாயன்றோ இருப்பது;
எதிலே தேவரீர் அறுதியிட்டிருப்பதென்ன.

எம்பாரும் – க்ருபா மாத்ர ப்ரஸன்னாசார்யனே முக்யன்; பரகத ஸ்வீகாரமே பேற்றுக்கு உடல்.
இவை இரண்டையும் நான் எம்பெருமானாரிடத்திலே அறுதியிட்டிருப்பன்.
நீரும் ‘பெருமாள் நம்மை புத்ர ஸ்வீகாரம் பண்ணியருளினார்: ஆழ்வானுடைய பிள்ளை;
ஸகல வித்யைகளை அப்யஸித்தோம்; நமக்கென்ன குறை’ என்று இறுமாந்திராதே
என்னைப் போலே எம்பெருமானாரிடத்திலே உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணி
அவரே உத்தாரகரென்று நினைத்திரும் என்று அருளிச் செய்தார்.

பட்டரும் நஞ்சீயருக்குத் திருவாய்மொழி வ்யாக்யானம் அருளிச் செய்து சாத்தினவுடனே
42. ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா -ஆசார்யர்கள் நேரில் துதிக்கத் தக்கவர்கள்.-என்கிறபடியே
நஞ்சீயர் பட்டரை மிகவும் கொண்டாடி, அடியேனுடைய தலையிலே தேவரீர் திருவடிகளை ப்ரஸாதித்தருள வேணுமென்ன,
ஏகாந்தத்திலே அழைத்தருளி, திருவடிகளிரண்டையும் ப்ரஸாதித்தருளி,
”இதுவன்று உமக்குத் தஞ்சம். உம்முடைய ப்ரதிபத்திக்காகச் செய்தோமித்தனை.
உமக்கு மெய்யே பேறு கைப்பட வேண்டினால், உமக்கும் நமக்கும் மற்றுமுள்ள எல்லார்க்கும் உத்தாரகரான
எம்பெருமானார் திருவடிகளே பேற்றுக்கு உடலென்ற விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராய் இரும்.
இல்லையாகில் நித்ய ஸம்ஸாரியாய் விடுவீர்” என்றருளிச் செய்தார்.

இத்தால் “எம்பெருமானாருடைய ஸம்பந்தமே உஜ்ஜீவனத்துக்கு உடல்.
தத் வ்யதிரிக்த விஷயங்களை உஜ்ஜீவனத்துக்கு உடலாக நினைக்கை அஜ்ஞான காரியம்” என்றபடி

இவ்வர்த்தத்தை அமுதனார் அருளிச் செய்தார்-
“இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கியாதென்றுலர்ந்து
அவமே ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே” என்று
“இராமானுசன் – வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம்” என்கையால் எம்பெருமானாரை விட்டால்
பின்னை உய்யக்கொள்ளவல்ல தெய்வமாகக் கண்டது எம்பெருமானேயிறே.

இனி சரம பர்வமான எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, ப்ரதம பர்வமான எம்பெருமானைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்றபடி.
ஆஸன்னமான சரம பர்வத்தைக் கைவிட்டு விப்ரக்ருஷ்டமான ப்ரதம பர்வத்தைப் பற்றுகை
அஜ்ஞான கார்யமென்னுமிடத்தை த்ருஷ்டாந்த ஸஹிதமாக அருளிச் செய்தாரிறே.
அருளாளப்பெருமாளெம்பெருமானார் “எட்டவிருந்த குருவை” என்று.

“சரம பர்வத்துக்கு ஆளாகாதவன் ப்ரதம பர்வத்துக்கு ஆளாகான்.
ப்ரதம பர்வத்துக்கு ஆளாகாதவன் சரம பர்வத்துக்கு ஆளாவானிறே” என்று வங்கி புரத்து நம்பி வார்த்தை

“ததீய ஶேஷத்வ ஜ்ஞானமில்லாதவனுக்குத் தச் சேஷத்வ ஜ்ஞானமும் இல்லையாய் விடும்.
பகவத் விஷயத்தில் ஜ்ஞானமில்லாதவன் தத் ப்ராப்த்யர்த்தமாக ஆசார்யோபஸத்தி பண்ணும்.
ஆசார்யாபிமான நிஷ்டன் ப்ரதம பர்வத்தில் கைவையான்” என்றபடி.

அன்றிக்கே,
“ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தவன் பகவத் க்ருதமான ஸ்வரூப ஸங்கோசத்தை உடையனாம்.
ஈஶவராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்க வேணும்.
சரமோபாய நிஷ்டனுக்கு ஈஶ்வராபிமானம் வேண்டுவதில்லை” என்று இங்ஙனே பொருளாகவுமாம்.

இத்தால் “எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவனை ஈஶ்வரன் கை விடும்.
ப்ரதமபர்வமான ஈஶ்வரன் தோஷ தர்சனந்தத்தாலே சேதனனை கை விடும்.
சரமபர்வரான எம்பெருமானார் கைவிடுவதில்லை.
எம்மெருமானாரோடு ஸம்பந்தமுண்டானவனுக்குப் பேற்றுக்கு உடலாக ஈஶ்வரன் கை பார்த்திருக்க வேண்டாவிறே” என்றபடி.

“தேவு மற்றறியேன் – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே” என்றிருந்தால்,
பின்னை அங்ஙனல்லது இராதிறே.
‘பொன்னடி’ என்றருளிச் செய்தாரிறே.
இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வர்க்கும் உத்தாரகர் எம்பெருமானாரேயாகக் குறை யில்லை.
இப்படி உத்தாரகரான எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பவியாதார் நித்ய ஸம்ஸாரிகளாய்ப் போருவர்கள்.

எம்பெருமானார் திருவடிகளிலே பொருந்தி வாழும் போது அவருடைய திருநாமத்தை அநுஸந்திக்க வேணுமிறே.
எம்பெருமானாருடைய திருநாமோச்சாரணம் தத்பாத கமல ப்ராவண்ய ஜனகமாக அருளிச் செய்தாரிறே.
அமுதனார் – இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே”
என்று நாம் மன்னி வாழ அவன் நாமங்களைச் சொல்லுவோமென்கையாலே.
அவன் நாமங்களைச் சொல்லாத போது பொருந்தி வாழக் கூடாது என்றபடி.
பொருந்தி வாழும் போது அவன் நாமங்கள் சொல்ல வேணுமென்கையாலே
தந்நாமாநுஸந்தானம் தத் பாத கமல ப்ராவண்ய (ஜநக?)மென்றபடி,

இப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தை அநுஸந்தித்து அவர் திருவடிகளிலே பொருந்தி வாழுகிறவர்களுக்கு
ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயிறே.
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப் பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று
ப்ராப்ய ப்ராபகங்களிரண்டையும் அவர் திருவடிகளிலே அறுதியிட்டாரிறே அமுதனார்.

“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி ஆறொன்றுமில்லை” என்று அந்ய யோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே
சரம பர்வத்திலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டால்,
ப்ரதம பர்வத்திலே முதல் தன்னிலே வ்யுத்பத்திதானுமில்லையோ என்னும்படி
ததேக நிஷ்டனாய் இருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகிறது.

இத்தால் ஆசார்யபிமான நிஷ்டனாகில் மறுக் கலசாதபடி இருக்கவேணுமென்றபடி.
இல்லையாகில் இரு கரையர் என்னுமிடம் சொல்லப்படும்.

வடுகநம்பி, திருவோலக்கத்திலே சென்றால் எம்பெருமானாரை நோக்கி தண்டன் ஸமர்ப்பித்து
ஒரு பார்ஶ்வத்திலே கடக்க நிற்பாராய், எம்பெருமானார் வடு கநம்பியை நம்முடைய மதுரகவிகள் என்றருளினாராம்.
ஆழ்வார்க்கும் ஒரு மதுரகவிகளுண்டிறே.
இப்படி இருக்கையாலேயிறே இவர்க்கு ஆழ்வானையும் ஆண்டானையும் இரண்டிட்டுச் சொல்லலாயிற்று.

ஒரு நாள் எம்பெருமானார் வடுக நம்பியை அழைத்தருளி,
‘வடுகா! ஆசார்யாபிமான நிஷ்டன் எத்தைப் போலே இருப்பான்’ என்று கேட்டருள
‘வேம்பின் புழுப் போலே இருப்பன்’ என்றருளிச் செய்தார்.
அதாவது – வேம்பின் புழு வேம்பன்றி யுண்ணாது” என்கிறபடியே ஆசார்யனுடைய அபிமானத்திலே ஒதுங்கி
இருக்கிறவன் பேற்றுக்கு உடலாக அறுதி யிட்டிருப்பது தத் அபிமானத்தை யொழிய
வேறொன்றையும் பேற்றுக்கு உடலாக நினைத்திரான் என்றபடி.

‘கரும்பின் புழு’ என்று சொல்லுகை யன்றிக்கே வேம்பின் புழுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவானே என்னில்
பரம தயாளுவான ஆசார்யன் தானே- தன் அபிமானத்திலே ஒதுங்கி இருக்கும் ஶிஷ்யனுக்குத்
தன் பக்கல் (உள்ள) வைரஸ்யம் பிறக்கும்படி காதுகனான தஶையிலும்,
‘நான் உன்னை யன்றியிலேன்” என்கிறபடியே ததபிமான ராஹித்யத்தில் ஸத்தையில்லை என்னும்படி
“களை கண் மற்றிலேன்” என்கிறபடியே ததபிமான நிஷ்டனாயிருக்க வேணும் என்னுமிடம் தோற்றுகைக்காகச் சொல்லிற்று.

இத்தால்- எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கரண த்ரயத்தாலும் ததேக நிஷ்டனாயிருக்கிறவன்
தத் வயதிரிக்த விஷயங்களில் உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிரான் – என்றபடி.

ஸர்வோத்தாரகமான விஷயத்தைப் பற்றினால் தத் வயதிரிக்தரைக் கொண்டு தேவையில்லையிறே.
“பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன்” என்று
எம்பெருமானாரை ஸர்வோத்தாரகராக அறுதியிட்டாரிறே ஸகல வேதஶாஸ்த்ர வித்தமரான அமுதனார்.

நம்பிள்ளை ஒரு நாள் எம்பெருமானார் ஸன்னிதியிலே எழுந்தருளி, நூற்றந்தாதி அநுஸந்தித்துச் சாத்தினவுடனே,
எம்பெருமானார் திருமுக மண்டலத்தை ஸேவித்து, இன்றைக்கு அடியேனுக்கு ஒரு ஹிதமருளிச் செய்யவேணும் என்று
திருமுன்பே அருளிச் செய்து திருமாளிகைக்கு எழுந்தருள,
அன்றைக்கு ராத்ரியிலே எம்பெருமானார் ஸ்வப்ன முகேன எழுந்தருளி திருவடிகளிரண்டையும் நம்பிள்ளை திருமுடியிலே வைத்து,
“உமக்கு ஹிதம் வேணுமாகில் இத்தையே தஞ்சமாக நினைத்திரும்.
உம்மை யண்டினார்க்கும் இதுவே தஞ்சமாக உபதேஶித்துக் கொண்டு போரும்; இதுக்கு மேல் ஹிதமில்லை” என்று அருளிச் செய்ய,

நம்பிள்ளை – நம்முடைய பிள்ளையை அழைத்தருளி அருளிச் செய்ய,
பிள்ளையும் அத்தை அத்யாதரத்தோடே கேட்டருளி தந்நிஷ்டராய் எழுந்தருளியிருந்து,
நம்பிள்ளை சரம தஶையிலே அடியேனுக்கு ஹிதமெதென்று கேட்கிறவளவில்,
“எம்பெருமானார் திருவடிகளுண்டாயிருக்க ஹிதமேதென்று கேட்க வேண்டியிருந்ததோ?
அவருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராயிருக்கிற நமக்கெல்லாம் ஹிதத்துக்குக் கரைய வேண்டா.
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராயிரும்;
நான் பெற்ற பேறு நீரும் பெறுகிறீர்” என்று அருளிச் செய்தார்.

இப்படி எல்லாரும் உத்தாரகத்வேந அறுதியிடும்படி அவதார விஶேஷமாய்,
பரம காருணிகராய் எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராய்
அவர் திருவடிகளையே ப்ராப்ய ப்ராபகமாக அறுதியிட்டுத் ததேக நிஷ்டராயிருக்கும் சரமாதிகாரிகளுக்கு
வஸ்தவ்யபூமி – “இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடம்” என்று
அமுதனார் அருளிச் செய்கையாலே, எம்பெருமானார் பக்கல் ப்ராவண்யம் உடையரான ஜ்ஞாநாதிகர்கள்
களித்து வர்த்திக்கும் இடமே வாஸஸ்தானம் என்றபடி.

இங்கிருக்கும் நாள் அநுபவத்துக்கு விஷயமேதென்னில்,
“உவந்திருந்தேன் அவன் சீரன்றி யானொன்றுமுள் மகிழ்ந்தே” என்கையாலே
எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் தானே அநுபவத்துக்கு போக்யத்வேந விஷயம்.

“இராமாநுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் நெஞ்சு” என்கையாலே
எம்பெருமானாருடைய அபரிச்சின்னமான ஶீல குணத்தை நெஞ்சுக்கு விஷயமாக்குகை
சரமாதிகாரிக்கு க்ருத்யம் என்றருளிச் செய்தபடியிறே.

“இராமானுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்கையாலே,
எம்பெருமானாருடைய ஔஜ்வல்ய கல்யாண குணங்களில் ப்ராவண்யமில்லாத கள்ளர் மிண்டரோடே
ஸஹவாஸ மின்றிக்கே இருக்கிறது சரமாதிகாரிக்கு ஏற்றமென்றபடி.

“சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்று தத்ஸஹவாஸராஹித்யம் ஆதிக்யாவஹமென்கையாலே
தத் ஸஹவாஸம் அநர்த்தாவஹமென்றபடி.

எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அதில்லாத மூர்க்கரோடு ஸஹவாஸம் பண்ணில்
ஸ்வரூபஹானி பிறக்குமிறே.

”இராமாநுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப் பரவகில்லாது” என்கையாலே
எம்பெருமானாருடைய கல்யாண குணங்களே சரமாதிகாரிகளுக்கு வாசா அநுஸந்தேயமென்றபடி.

“இராமாநுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன்” என்கையாலே,
எம்பெருமானார் திருவடிகளை மறவாதிருக்கை ததபிமான நிஷ்டனுக்கு கர்தவ்யம் என்றபடி.

“அருவினை என்னை எவ்வாறின்றடர்ப்பதுவே” என்கையாலே தத் ஸ்மரணமே, அநிஷ்ட நிவ்ருத்திகரம் என்றபடி
தத் விஸ்மரணம் அநர்த்தாவஹம் என்னுமிடம் அர்த்தாத் ஸித்தம்.

‘உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னை யாக்கி அங்காட்படுத்தே” என்கையாலே
எம்பெருமானார் திருவடிகளுக்கு அநந்யார்ஹ ஶேஷபூதரான ஶ்ரீவைஷ்ணவர்கள் பக்கலில் பக்தி யிருக்கும்படி
தச் சேஷத்வத்தை எம்பெருமானார் திருமுன்பே ப்ரார்த்திக்கை ததபிமான நிஷ்டனுக்கு ஸ்வரூபம்.

“உன்தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்……இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமாநுச” என்கையாலே
எம்பெருமானாருடைய விக்ரஹ குணங்களை ஸத்தா தாரகமாக நினைத்திருக்கை சரமாதிகாரி க்ருத்யம்.

“இராமானுசன் திருநாமம் நம்பவல்லார் திறத்தை” என்று தொடங்கி
“செய்வன் சோர்வின்றியே” என்கையாலே
எம்பெருமானாருடைய திருநாமத்திலே விஶ்வாஸ யுக்தரான ஶ்ரீவைஷ்ணவர்களை மறவாத பாகவதர்கள் பக்கல்
கரண த்ரயத்தாலும் ஸகலவித கைங்கர்யங்களும் வழுவில்லாமல் செய்து போருகை சரமாதிகாரிக்கு ஸ்வரூபம்.

எம்பெருமானாருடைய திருநாமத்தை விஶ்வஸித்துப் பரிஶீலனம் பண்ணாதார்க்குப் பேறு துர்லபமாயிருக்கும்.
“இராமாநுசன் திருநாமம் நம்பிக்கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே” என்று
துர்லபமாக அருளிச் செய்தாரிறே அமுதனார்.

இந்த அர்த்தங்களெல்லாம் எம்பெருமானாருடைய திருமுக மண்டலத்தைப் பார்த்து அருளிச் செய்ய,
அவரும் இதுக்கெல்லாம் இசைந்தெழுந்தருளியிருக்கையாலே இவ்வர்த்தம்
அவிசார்யமாய் ஸுத்ருடமான ஸகல ப்ரமாண ப்ரமேய ப்ரஹ்ம தீர்க்க (?) ரஸோக்தி – அநுஷ்ட்டாந ஸித்தம்.

இவ்வர்த்தம் 36. “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு|
ஸ ஏவ ஸர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய: ||“,
“இராமானுசன் மன்னுமாமலர்த்தாள் பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும்
நன்மை செய்யாப் பெருந்தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே” என்கையாலே
எம்பெருமானார் திருவடிகளிலே ப்ராவண்யமில்லாதார்க்கு யாவதாத்மபாவி ஸம்ஸாரம் அநுவர்த்திக்கும்.
உடையோருக்கு யாவதாத்மபாவி ஸர்வாபீஷ்டங்களும் ஸித்திக்கும்.

சரமோபாய நிர்ணயம் முற்றிற்று

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீ சரமோபாய நிர்ணயம் – ப்ரமாணத் திரட்டு

January 17, 2022

1,2,3,4 நாயனாராச்சான் பிள்ளை யருளிய உபோத்காத காரிகைகள்

1-அபயப்ரத பாத தேஶிகோத்பவம்
குருமீடே நிஜமாதரேண சாஹம் |
ய இஹாகில லோக ஜீவநாதர:
சரமோபாய விநிர்ணயம் சகார ||
யாவரொருவருடைய அருளாலே அடியேன் சரமோபாய நிர்ணயத்தைச் சொல்லப் போகிறேனோ,
என் ஆசார்யராய், அபய ப்ரதபாதர் என்னும் திருநாமமுடைய அப்பெரியவாச்சான் பிள்ளையை ஆஶ்ரயிக்கிறேன்.

2-அஸ்மஜ் ஜநக்காருணயஸுதாஸந்து ஷிதாத்மவான் |
கரோமி சரமோபாயநிர்ணயம் மத்பிதா யதா ||
அடியேனுடைய தந்தையாருடைய கருணை அமுதத்தினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்மாவையுடைய அடியேன்
எந்தையார் அருளிய முறையிலே சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

3-அஸ்மதுத்தாரகம் வந்தே யதிராஜம் ஜகத்குரும் |
யத்க்ருபாப்ரேரித: குர்மி சரமோபாய நிர்ணயம் ||
உலகனைத்துக்கும் ஆசார்யராய், நமக்கு உத்தாரகரான எதிராசரை வணங்குகிறேன்,
அவருடைய கருணையினால் தூண்டப்பட்டுச் சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

4-பூர்வாபரகு ரூகதைஶச ஸ்வப்நவ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் ||
எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும்,
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று
அடியேனால் நன்கு நிரூபிக்கப்படுகிறது.

5. பெரியவாச்சான் பிள்ளையருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுபகுண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம்|
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
ஶிஷ்டம் ஶ்ரீமத்குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||
[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷி யாயிருப்பவர்:
நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனியாவார்.
கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார்.
அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது.
வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும்
அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

6. ஸ ச ஆசார்ய வம்சோ ஜ்ஞேயோ பவதி I
ஆசார்யாணாம் அஸாவஸா வித்யா பகவத்த: II

[பகவானிடமிருந்து தொடங்கி ‘இவர் இவர்’ என்று குருபரம்பரை முழுவதும் அறியப்பட வேண்டும்.]

7. அர்வாஞ்சோ யத்பத ஸரசிஜ த்வந்த்வ மாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வய முபகதா தேசிக முக்திமாபு: I
ஸோயம் ராமாநுஜ முநிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாத் அமனுத கதம் வர்ண்யதே கூர நாத: II

[பின்னுள்ள ஆசார்யர்கள் எவருடைய திருவடித் தாமரையிணையோடு ஸம்பந்தம் பெற்றும்,
முன்னுள்ள ஆசார்யர்கள் எவருடைய திருமுடியோடு ஸம்பந்தம் பெற்றும் மோக்ஷம் அடைந்தனரோ,
அந்த ராமாநுஜ முனிவரே எவருடைய ஸம்பந்தத்தாலே தனக்கு மோக்ஷம் கைப்பட்டதாகக் கருதினாரோ
அத்தகைய கூரத்தாழ்வான் எப்படி வர்ணிக்கப்படுவார்.]

8-யாவரொரு ஆசார்யர் தம் அடியடைந்தவர்களைத் தன் கருணையினாலேயே ரக்ஷிக்கிறாரோ,
அவரே அளத்தற்கரிய முக்யாசார்யராவார். நல்லோர்களால் அப்படியே சொல்லப்படுகிறதன்றோ.
(ஸோமாசியாண்டான் அருளிய குருகுணாவளி)

9-இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன். (ரா-அ-34-13)

10-எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை
எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது)

11-ஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: |
வைஷ்ணவோ ந: குலே ஜாத: ஸ ந: ஸந்தார யிஷ்யதி ||
‘வைஷ்ணவன் நம் குலத்தில் பிறந்துவிட்டான்; நம்மைக் கரையேற்றுவான்’ என்று பித்ருக்கள்
கைகொட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்; பிதாமஹர்கள் நடனமாடுகிறார்கள். (வராஹ புராணம்)

12-வைகுண்டம் என்னும் மேலான உலகில், உலகின் தலைவனாய் அளவிட்டறியமுடியாதவனாய்,
(குணநிஷ்டர்களான) பக்தர்களோடும், (கைங்கர்ய நிஷ்டர்களான) பாகவதர்களோடும் கூடியவனாய்,
பெரிய பிராட்டியாருடன் சேர்ந்த நாராயணன் எழுந்தருளியிருக்கிறான்.

13-மத் பக்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்|
ஸ்வயம் பயாச்சநஞ்சைவ மதர்தே டம்ப வர்ஜநம்||
மத் கதா ஶ்ரவணே பக்தி: ஸ்வரநேத்ராங்க விக்ரியா|
மமாநுஸ்மரணம் நித்யம் யஶ்ச மாம் நோபஜீவதி ||
பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் மிலேச்சேபி வாத்ததே |
ஸ விப்ரேந்த்ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதி:ஸ ச பண்டித:
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜயோ யதாஹ்யஹம் ||
1. என் பக்தர்களிடத்தில் வாத்ஸல்யம்
2. என்னை ஆராதனம் செய்வதை ஆமோதித்தல்
3. தானே என்னைப் பூஜித்ததால் 4. என் விஷயத்தில் ஆடம்பரமற்றிருத்தல்
5. என் கதைகளைக் கேட்பதில் அன்பு,
6. (என் கதைகளைக் கேட்கும் போது) குரல் தழதழத்தும், கண்ணீர் மல்கியும், உடம்பு மயிர்க்கூச்செறிந்து கொண்டுமிருக்கை
7. எப்போதும் என்னை நினைத்திருக்கை,
8. என்னிடம் வேறு ஒரு ப்ரயோஜனத்தையும் கேளாதிருக்கை,
என்னும் இந்த எட்டு விதமான பக்தியானது எந்த மிலேச்சனிடமும் காணப்படுகிறதோ அவனே ப்ராஹ்மண ஶ்ரேஷ்டன்,
அவனே முனிவன், அவனே தனவான், அவனே இந்திரிய நியமனம் செய்தவன், அவனே பண்டிதன்,
அவனுக்கு ஞானத்தை உபதேஶிக்கலாம், அவனிடமிருந்து ஞானோபதேஶமும் பெறலாம்.
அவன் என்னைப்போல் பூஜிக்கத்தக்கவன் ] (காருடம் 219 6-9)

14(அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா)-(விஷ்வக்ஸேந ஸம்ஹிதை)
-உபய விபூதியும் இவளுக்கும் எனக்கும் ஶேஷமயிருப்பது.

15-(யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந்மே ஶிஷ்யஸ் தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம் )(கீதை 2-7)
எனக்கு எது நல்லது என்று உன்னால் நிஶ்சயிக்கப் படுகிறதோ, அதை எனக்குச் சொல்லுவாயாக.
நான் உனக்கு ஶிஷ்யன். உன்னை ஶரணமடைந்த என்னை நியமிப்பாயாக. (கீதை 2-7)

16-(தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா|
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சின: ||) (கீதை 4-34)
ஞானிகளை வணங்குவதாலும் நேரே குறிப்பிடாமல் கேட்பதாலும், ஶுஶ்ருஷை செய்வதாலும்
ஆத்மாவைப் பற்றிய அறிவைப் பெறுவாயாக.
உண்மையைக் கண்ட ஞானிகள் உனக்கு அவ்வறிவை உபதேஶிப்பார்கள்.

17-(சக்ராதிதாரணம் பும்ஸாம் பரஸம்பந்த வேதநம் |
பதிவ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || )
சக்கரம் முதலியவைகளை தரிப்பது பரமாத்ம ஸம்பந்தத்தைக் காட்டுகிறது.
வளை முதலிய ஆபரணங்கள் பதி வ்ரதைக்கு அடையாளங்களன்றோ.

18-தன் வலது புறத்தில் அடக்கத்துடனும் அஞ்ஜலியோடும் கூடிய சீடனை இருத்தி,
ஞானத்தைத் தரவல்ல தன் வலதுகையை சீடனின் சிரத்தில் வைத்து,
தன் இடது கையைச் சீடனின் மார்பில் வைத்து, தன் ஆசார்யனை இருதயத்தில் தியானித்து,
குருபரம்பரையை ஜபித்து இவ்வகையாக எம்பெருமானை சரணமடைந்து ரிஷிசந்தஸ் தேவதைகளுடன் கூடிய
மூலமந்த்ரத்தைத் தானே கருணையால் சீடனுக்கு உபதேசம் செய்யக்கடவன்.

19-ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா (ரா-பா 67.22)
ஜனக வம்ஶத்திற்கு என் பெண் புகழை உண்டாக்குவாள்.

20-யஶ்ச ராமம் ந பஶ்யேத்து யஞ்ச ராமோ ந பஶ்யதி|
நிந்தித: ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே||(ரா-அ 17-14)
[எவனொருவன் ராமனைக் காணாதிருப்பானோ, எவனை ராமனும் காணாதிருக்கிறாரோ அவன் உலகில்
நிந்திக்கப்பட்டவனாய் வாழ்வான்; தன் ஆத்மாவும் இவனை இகழும்]

21-இமௌ ஸ்ம முநிஶார்தூல! கிங்கரௌ ஸமுபஸ்திதௌ|
22-ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை ஶாஸநம் கரவாவ கிம் ||(ரா -பா 31-4)
[முநிஶ்ரேஷ்டரே! நாங்களிருவரும் (தேவரீருக்குக்) கைங்கரியம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம்.
(தேவரீருடைய) இஷ்டப்பட கட்டளையிடவேண்டும்;
(தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள் செய்ய வேண்டும்? ]

23-.(விஷ்ணுர் மாநுஷ ரூபேண சாசர வஸுதாதலே )
விஷ்ணுவானவர் மனித வுருவுடன் பூமியில் ஸஞ்சரித்தார். (பாரதம் – வனபர்வம்)

24.(இதாநீமபி கோவிந்த லோகாநாம் ஹிதகாம்யயா |
மாநுஷம் வபுராஸ்தாய த்வாரவத்யாம் ஹி திஷ்டஸி || )
கோவிந்தனே! இப்போதும் உலகங்களுக்கு நன்மைக்காக மனித வுருக்கொண்டு த்வாரகையில் நிற்கிறாய்

25-ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபி ந ஸம்ஶய:
ஆசார்யனே நேரே நடமாடும் பரம புருஷன்: இதில் ஐயமில்லை.

26. குருரேவ பரம் ப்ரஹ்ம –,குருவே மேலான ப்ரஹ்மம்; குருவே மேலான தனம்; குருவே மேலான காமம்;
குருவே மேலான ப்ராப்யம்; குருவே மேலான கல்வி; குருவே மேலான ப்ராபகம்;
அப் பரம் பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.

27.அயம் ஸ கத்யதே ப்ராஜ்ஞை: புராணார்த்த விஶாரதை|
கோபாலோ யாதவம் வம்ஶம் மக்நமப் யுத்த ரிஷ்யதி||(வி-பு. 5-20-49)

[புராணப் பொருள்களிலே பண்டிதர்களான பேரறிவாளர்களாலே அவனே கோபாலனென்று கொண்டாடப்படுகிறான்.
தாழ்ந்து கிடந்த யதுகுலத்தைக் கைதூக்கிவிடப் போகிறான் இவன்]

28-(அனந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஶ்ச தத: பரம் |
பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கஶ்சித் பவிஷ்யதி || )
திருவனந்தாழ்வான் முதல் மூர்த்தியாவான். லக்ஷ்மணன் அவனுடைய அடுத்ததான அவதாரமாவான்.
பலராமன் அவனுடைய மூன்றாவது மூர்த்தியாவான்,
நாலாவது மூர்த்தியாகக் கலியுகத்தில் ஒரு மஹாபுருஷர் அவதரிக்கப் போகிறார்.

29. ந தர்மநிஷ்டோஸ்மி நசாத்மவேதி நபக்திமாந் த்வச்சரணாரவிந்தே|
அகிஞ்சநோஅநந்யகதி: ஶரண்ய த்வத்பாதமூலம் ஶரணம் ப்ரபத்யே||

[கர்மயோகத்தில் நிலைநிற்பவனல்லேன், ஆத்மஜ்ஞானமுமில்லாதவன்,
உன் திருவடித் தாமரையில் பக்தி யோகமும் இல்லை, கைமுதலற்றவன், வேறு புகலற்றவன்,
ஶரணமடையத்தக்கவனே! உன் திருவடியை ஶரணமடைகின்றேன்]

30-ய ஏஷோஅந்தராதித்யே ஹிரண்யமய: புருஷோத்ருச்யதே ஹிரண்யசமச்ருர்
ஹிரண்யகேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண: I
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவக்ஷிணீ II

ஸுர்யனுக்கு நடுவில் தங்கம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரமபுருஷன் காணப்படுகிறானோ,
அவன் ஸுவர்ணம் போன்று அழகான மீசையையும், கேசங்களையும்,நகம் முதலிய எல்லா அவையங்களையுமுடையவன்.
அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்ற இருகண்கள் உள.

31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:”
காருண்யத்தால் ஆசார்யகளுள் சிறந்தவர் எதிராஜர்.

32. அழிவற்ற செல்வம்.

33. “பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி
அர்ஜுனா! உனக்குப்போலே எனக்கும் பல பிறப்புகள் கடந்துவிட்டன.
(ஆயினும் யான் அவற்றை அறிவேன்; நீ அறிய மாட்டாய்.)

34.“ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி |
மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம் கதிம் ||”
அர்ஜுனா! அஸுரஸ்வபாவமுள்ள ஜன்மத்தை அடைந்து ஜன்மந்தோறும் மூடர்களாய்
என்னை அடையாமலே அதிலும் கீழான கதிக்குப் போகிறார்கள்.

35. “ப்ரயாணகாலே சதுரஸ்ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீக்‌ஷய|
பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||”
தன் சரம காலத்தில் தன் திருவடிவாரத்திலிருந்த நாலு ஶிஷ்யர்களைப் பார்த்து நடாதூர் அம்மாள்
‘பக்தி ப்ரபத்திகள் உங்களுக்கு செயற்கரியவையாகில் எம்பெருமானாரை ஶரணமாக கொள்ளுங்கள்’ என்று உபதேஶித்தார்.

36. (ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு|
ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||)
முக்காலும் சத்யம் செய்து கூறுகிறேன்; யதிராஜரே உலக குருவாவர். எல்லாவற்றையும் உய்விக்க செய்ய வல்லவர் அவரே.

37. (உபாயோபேய பாவேன தமேவ ஶரணம் வ்ரஜேத்)
உபாயமாகவும், உபேயமாகவும் ஆசார்யனையே ஶரணமடைய வேண்டும்.

38. தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜதத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஶீம்நே|
நாதாய நாதமுநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||(ஸ்தோத்ர ரத்னம் 2)

[இவ்வுலகிலும் மேலுலகிலும் எப்போதும் எந்த ஶ்ரீமந்நாதமுனிகளுடைய திருவடிகள் எனக்குப் புகலிடமோ
மதுவை அழித்த எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளைப் பற்றிய உண்மையறிவினுடையவும் அன்பினுடையவும்
பெருமேன்மையின் முடிவே எல்லையாயிருப்பவரும், எனக்கு நாதராயிருப்பவருமான அந்த நாதமுனிகட்கு நமஸ்காரம்.]

39. (ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்)
ஸாத்யமில்லாவிடில் ஸாதனங்களால் என்ன பயன்? (வி-பு. 1-19.36)

40. உபாதத்தே ஸத்தாஸ்திதிநியமநாத்யைஶ் சிதசிதௌ
ஸ்வமுத்திஶ்ய ஶ்ரீமாநிதி வததி வாகௌபநிஷதீ|
உபாயோபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணௌ
அதஸ்த்வாம் ஶ்ரீரங்கேஶய ஶரணமவ்யாஜம்பஜம் ||(ர-ஸ்த 2-88)

[ஹே ஶ்ரீரங்கநாதனே! ‘ஶ்ரீ மந்நாராயணன் – ஸ்ருஷ்டி, ஸ்திதி, நியமனம் முதலிய காரியங்களால்
சேதனாசேதனங்களைத் தனக்காக ஸ்வீகரிக்கிறான்’ என்று உபனிஷத் வாக்யமானது சொல்லுகிறது.
ஆகையால் இவ்விஷயத்தில் உபயத்வமும் உபேயத்வம் உனக்கு முக்யம்; கௌணமல்ல.
ஆகையால் உன்னை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்.]

41-மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஶ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா||(ஸ்தோ – ர 5)
[என் வம்ஶத்தவர்களுக்கு எப்போதும் தாயும், தந்தையும், மாதரும், மக்களும், பெருஞ்செல்வமும்,
மற்றுமுள்ள எல்லாமும் எப்போதும் எந்த ஆழ்வாருடைய திருவடியிணையேயோ, நமக்கு முதல்வரும்,
குலபதியுமான அவருடைய, மகிழமலராலே அலங்கரிக்கப்பட்டதும், வைணவச் செல்வமுடையதுமான
அத்திருவடியிணையைத் தலையால் வணங்குகிறேன்.]

42-ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா-ஆசார்யர்கள் நேரில் துதிக்கத் தக்கவர்கள்.

சரமோபாய நிர்ணய ப்ரமாணத் திரட்டு முற்றிற்று.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் மற்றும் ஸ்ரீ கீதாஶ்லோகார்த்த ஸாரம்

January 14, 2022

ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் மற்றும் ஸ்ரீ கீதாஶ்லோகார்த்த ஸாரம்

ஸ்ரீ ஆளவந்தாரருளிச்செய்த கீதார்த்த ஸங்க்ரஹம்,
ஸ்ரீ வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் அருளிச் செய்த “பகவத் கீதை வெண்பா” மற்றும்
ஸ்ரீ. உ.வே. புத்தூர் க்ருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமியின் “ஸ்ரீமத் பகவத் கீதை” விவரணத்திலிருந்து.

ஸ்ரீ எம்பெருமானாரருளிச்செய்த ஆளவந்தார் தனியன்

யத் பதாம்போருஹ த்யாந வித்வஸ்தா ஶேஷ கல்மஷ:
வஸ்துதா முபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம்

பாயிரம்:
1. கண்ணா நீ பார்த்தர்க்குக் காத்தற் கினிதுரைத்த
திண்ணார் திறபருளுஞ் சீர் கீதை – யெண்ணாரு
நன் பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
புன்பொருளிற் போகா புலன்.

2. மாதவன் மாமாது மாறனும் வண் பூதூர் வாழ்
போத முனி யுந்தந்தம் பொன்னடிக்ண் – மீதருள
வுச்சி மேற் கொண்டே யுயர் கீதை மெய்ப் பொருளை
நச் சிமேற் கொண்டுரைப்பன் நான்.

3. நாத னருள்புரியு நற்கீ தைன்படியை
வேதம் வகுத்த வியன்முனிவன் – பூதலத்துப்
பாரதத்தே காட்டும் பதினெட்டோத் தும்பகர்வன்
சீர்த்தழைத்த வெண்பாத் தெரிந்து.

4. வேதப் பொருளை விசயர்க்குத் தேர்மீது
போதப் புயன்ற புகழ்மாயன் – கீதைப்
பொருள் விரித்த பூதூர் மன் பொன்னருளால் வந்த
தெருள்விரிப்ப னந்தமிழாற் றேர்ந்து.

5. தேயத்தோ ருய்யத் திருமா லருள்கீதை
நேயத்தோ ரெண்ணெய் நிறைவித்துத் – தூய
தெருணூல தேபெரிய தீபத்தை நெஞ்சி
லிருணூற வேற்றுகேன் யான்.

—–

1) ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண: பரம்ப்ரஹ்ம கீதாஶாஸ்த்ரே ஸமீரித:

ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: – தன் (வர்ணாச்ரம) தர்மரூபமாயிருக்கும் கர்மயோகத்தாலும்,
ஞானயோகத்தாலும், இதரவிஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தியொன்றுக்கே விஷயமாகுமவனாய்
பரம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான,
நாராயண: – நாராயணன்,
கீதாஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
ஸமீரித: – அறிவிக்கப்பட்டுள்ளான்.

6. சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
லத்தியா தொன்றை யறந்துறந்தோர் – பத்தியா
னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
கெண்ணும் பொருளா மிசைந்து.

தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும்,
சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தியடைந்த தம் நெஞ்சில்,
ஒன்றை அ(ர்)த்தியாது – (பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
பத்தியால் – (முற்கூறிய கர்மஜ்ஞாநவைராக்யங்களாலே உண்டான) பக்தியோகத்தாலே,
நண்ணும் – அடையும்,
பரமன் – பரப்ரஹ்மமாகிற,
நாரணனே – நாராயணனே,
நற்கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.

——–

பூர்வ ஷட்கம்:

2) ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே யோகலக்ஷ்யே ஸுஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே பூர்வஷட்கேந சோதிதே

ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வஜ்ஞாநம், இதரவிஷயங்களில் பற்றின்மை முதலான புத்திவிஶேஷங்களாலே) நன்கு அலங்கரிக்கப்பட்ட,
ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே – ஞானயோகமும், கர்மயோகமும்,
யோகலக்ஷ்யே – (ஆத்மஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப்பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
பூர்வஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும், சோதிதே – விதிக்கப்பட்டன.

7. ஞானங் கரும நலஞ்சேர் நிலையதனை
யான மனயோகத் தாராய்ந்திங் – கூனமறத்
தன்னா ருயிருணருந் தன்மையினை நற்கீதை
முன்னாறோத் தோதும் முயன்று.

ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞானயோகத்தையும், கர்மயோகத்தையும்,
ஆன மனயோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
இங்கு – இவ்வுலகிலேயே,
ஊனம் அற – குறைவில்லாமல்,
தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
நற்கீதை – மிகச்சிறந்த கீதையின்,
முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.

——–

மத்யம ஷட்கம்:
3) மத்யமே பகவத்தத்த்வ யாதாத்ம்யாவாப்தி ஸித்தயே
ஜ்ஞாநகர்மாபி நிர்வர்த்யோ பக்தியோக:ப்ரகீர்த்தித:

மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம் உண்டாவதன் பொருட்டு,
ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
பக்தியோக: – பக்தியோகம்,
ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.

8. உள்ளபடி யிறையை யுற்றெய்த முற்றறஞ்சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி – வெள்ள
நடையாடும் யோகத்தை நாதனருள் கீதை
யிடையாறோத் தோது மெடுத்து.

உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்மயோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
பத்திவெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்திவெள்ளம் பெருகி வரும் பக்தியோகத்தை,
நாதன் அருள் கீதை – ஸர்வஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.

——–

அந்திம ஷட்கம்:
4) ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
கர்ம தீர் பக்திரித்யாதி: பூர்வஶேஷோந்திமோதித:

ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்மயோகமும்,
தீ: – ஜ்ஞாநயோகமும்,
பக்தி: – பக்தியோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.

9. கருமமறி வன்பிவற்றின் கண்ணார் தெளிவில்
வருஞ்சித் தசிதிறையோன் மாட்சி – யருமையற
வென்னாதன் றந்த வெழிற்கீதை வேதாந்தப்
பின்னாறோத் தோதும் பெயர்ந்து.

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் ஆகிய
இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூலரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
அருமை அற – சிரமம் இல்லாமல்,
என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என்ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.

10. தானமுடன் றீர்த்தந் தவம்பிரித லைவேள்வி
யனமுத லாறு மறமிறைவற் – கேநயந்த
தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
கன்மயோ கத்தின் கணக்கு.

தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐவேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம்செய்தல்,
பஞ்சமஹாயஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
இறைவற்கே நயந்த தன்மையால் – (இக்கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
கன்ம யோகத்தின் கணக்கு – கர்மயோகத்தின் ஸ்வரூபமாகும்.

11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
பத்தியோ கத்தின் படி.

அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
நெஞ்சில் குடியிருத்தி – நெஞ்சில் அமைத்து,
மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
பத்தியோகத்தின் படி – பக்தியோகத்தின் ஸ்வரூபமாகும்.

12. புலன் பொறியை நீக்கித்தம் புத்தியினிற் செம்மை
யலம்புரிவார்க் குற்றவுயிர் மாட்சி – நலம்புனைந்து
மானயோ கத்திறையை மன்னுநிலை காண்பதே
ஞானயோ கத்தி னலம்.

புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
செம்மை அலம்புரிவார்க்கு – நேர்மைக்குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
உற்ற – தோன்றும்,
உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
மான யோகத்து – யோகமுறைகளினாலே,
இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
காண்பதே – அனுபவித்தலே,
ஞானயோகத்தின் நலம் – ஞானயோகத்தின் ஸ்வரூபமாகும்.

——–

13. இந்த வகையமைந்த யோகங்க ளிம்மூன்றுந்
தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
மானந் தருமியல்பால் வாய்ந்து.

ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
இந்த வகை அமைந்த யோகங்கள் இம்மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளையுடைய இந்த மூன்று யோகங்களும்,
தந்தம் இடையே தனித்தனிசேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித்தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.

—————-

1: அர்ஜுன விஷாத யோகம்:

5) அஸ்தாநஸ்நேஹகாருண்ய தர்மாதர்மதியாகுலம்
பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்

அஸ்தாந ஸ்நேஹகாருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும், உண்டான தர்மத்தில் அதர்மபுத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் – கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.

வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீன்டகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விச
னுற்றமயல் சொல்லுமுத லோத்து.

வேண்டிடத்தில் அன்றி – தகாத இடத்தில்,
நலம் இரக்கம் பூண்டு – அன்பையையும் கருணையையும் கொண்டு,
வெறுத்து – (யுத்தம் முதலான ஸ்வதர்மங்களை) வெறுத்து,
அவற்றை – அந்த ஸ்வதர்மங்களை,
பொல்லா புலம் என்று – தர்மம் அல்லாதவை என்று கூறி,
மீண்டு அகன்று – (யுத்தத்திலிருந்து) மீண்டு விலகிப்போய்,
சுற்றம் அது நோக்கியே – (பற்று வைக்கத் தகாத) அந்த உறவினர்களைப் பார்த்து,
சோகித்த – வருத்தமுற்ற,
தேர் விசயன் – தேரிலுள்ள அர்ஜுனன்,
உற்ற – அடைந்த,
மயல் – மயக்கத்தை,
முதல் ஓத்து சொல்லும் – முதல் அத்தியாயம் உரைக்கும்.

————

2: ஸாங்க்ய யோகம்:

6) நித்யாத்மாஸங்ககர்மேஹாகோசரா ஸாங்க்யயோகதீ:
த்விதீயேஸ்திததீலக்ஷாப்ரோக்தா தந்மோஹஶாந்தயே

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்மதத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீலக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்யயோகதீ – ஆத்மஜ்ஞானமும், கர்மயோகத்தைப் பற்றிய அறிவும்,
தந்மோஹஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

மேலிரண்டா மோத்தால் விசயன் வெறுப்பகற்றக்
கோலி யுயிருடலின் கூற்றிவைகள் – காலியுடன்
போமாயன் மன்னுயிர்கள் பொன்றாமை முன்னகமா
மாமாயன் சொன்னான் மகிழ்ந்து.

காலியுடன் போம் ஆயன் – பசுக்களின் பின் போகும் இடையனும்,
மாமாயன் – பேராச்சிரியமான ஸ்வரூபரூபகுண விபூதிகளையுடையவனுமான கண்ணன்,
விசயன் வெறுப்பு அகற்றக் கோலி – அர்ஜுனனுக்கு (யுத்தத்தினாலுண்டான) வெறுப்பை நீக்க நினைத்து,
மன் உயிரின் பொன்றாமை முன்னகமா – நிலை நிற்கும் ஆத்மாவின் ஆத்மாவின் அழியாமையை முன்னிட்டுக் கொண்டு,
உயிர் உடலின் கூற்றிவைகள் – உயிரினுடையவும், உடலினுடையவும் (அழியாமை, அழியும் தன்மை முதலான) இத்தன்மைகளை,
மேல் இரண்டாம் ஓத்தால் – அடுத்ததான இரண்டாமத்தியாயத் தால்,
மகிழ்ந்து சொன்னான் – மகிழ்ச்சியுடன் உபதேசித்தான்.

————

கீதாஶ்லோகார்த்தச் சுருக்கம்:
முதலத்தியாயமும், இரண்டாமத்தியாயத்தில் பத்துஶ்லோகங்கள் முடியவும்
சாஸ்திரம் அவதரித்த சந்தர்ப்பத்தைக்கூறும் அவதாரிகையாகிறது.

11-13: ப்ராப்யமான ஆத்மா நித்யமானது; ப்ராப்தி விரோதியான சரீரம் அநித்யமானது.
14-15: ப்ராப்திக்கு உபாயமான யுத்தம் முதலான கர்மங்களை அநுஷ்டிப்பதால் ஏற்படும் இன்பதுன்பம் முதலானவற்றைப் பொறுத்துக் கொள்ளுகிறவனே மோக்ஷமடையலாம்.
16-25: உத்பத்தி, விநாஶம், பரிணாமம் முதலான தன்மைகள் எல்லாம் தேஹத்தினுடையவையே; ஆத்மாவுக்கு இவை கிடையாது.
26-28: தேஹத்தைக் காட்டிலும் வேறான ஆத்மா இல்லை என்று நினைத்தாலும், நேர்ந்தே தீரவேண்டிய ஜந்மமரணங்களைக் குறித்து வருந்த இடமில்லை.
29: ஆத்மநித்யத்வப்ரஸம்ஸை.
30: ஆத்மநித்யத்வம் எல்லா ஆத்மாக்களுக்கும் பொதுவானது.
31-34: யுத்தம் இம்மை மறுமைகளில் நன்மையை விளைக்கும் தர்மமேயொழிய அதர்மமாகாது.
35-37: உறவினர் முதலான தகாதவிட அன்பாலே போர் புரியாமலிருப்பது தவறு. (இதுவரையில் அஸ்தானஸ்நேஹ காருண்யமும், தர்மத்தை அதர்மமென மயங்குவதும் போக்கடிக்கப்பட்டது. இனி, தர்மவிஷயமான உபதேசம்.)
38: மோக்ஷமடைய விரும்பும் க்ஷத்ரியன் இன்பதுன்பங்கள் முதலானவற்றில் ஸமபுத்தியுடன் போரிடவேண்டும்.
39-52: பலனில் பற்றற்று, அகர்த்ருத்வாநுஸந்தானத்துடன் (கர்த்ருத்வ, மமதா, பலத்யாகங்கள்) தனக்குரிய கர்மங்களை அநுஷ்டிப்பதாகிற கர்மயோகம் மோக்ஷஸாதனமாகும்; பலனில் பற்றுடன் அனுஷ்டிக்கும் கர்மம் தாழ்ந்தது.
53: முற்கூறிய கர்மயோகத்தின் பலம் ஞானயோகம். ஞானயோகத்தின் பலம் யோகம் எனப்படும் ஆத்மஸாக்ஷாத்காரம்.
54-58: ஸ்திதப்ரஜ்ஞநிலை எனப்படும்ஜ்ஞானயோகத்தின் நான்கு நிலைகளின் விவரணம்.

59-68: ஞானயோகம் அடைய அரியது. திவ்யமங்கள விக்ரஹத்தோடு கூடிய பரமபுருஷனிடம் நெஞ்சு செலுத்துகிறவனுக்கே அது ஸித்திக்கும். அப்படிச் செலுத்தாதவனுக்கு ஸித்திக்காது.
69-71: ஞானயோகத்தின் பலமான ஆத்மதர்சனத்தின் பெருமையும், அதை அடையும் மூன்றுவிதமான அதிகாரிகளும்.
72: அத்தியாயத்தின் ஸாரார்த்தம்.

——

3: கர்ம யோகம்:

7) அஸக்த்யா லோகரக்ஷாயை குணேஷ்வாரோப்ய கர்த்ருதாம்
ஸர்வேஶ்வரே வாந்யஸ்யோக்தாத்ருதீயே கர்மகார்யதா

லோகரக்ஷாயை – (ஜ்ஞாநயோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
குணேஷு – ஸத்வரஜஸ்தமோ குணங்களில்,
கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
ஸர்வேஶ்வரே வாந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில் அக்கர்த்ருத்வத்தைச் சேர்த்துவிட்டு,
அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
கர்மகார்யதா – கர்மங்களைச் செய்யவேண்டுமென்பது,
த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.

மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
ஏன்றா வதுகரும மென்பதனா – லான்றமைந்து
தன்கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
வன்கருமந் தீரும் வகை.

முன் உரைத்த புந்தியினும் – முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட ஞானயோகத்தைக் காட்டிலும்,
ஏன்று ஆவது கருமம் – (அனைவரும்) ஏற்றுக்கொள்ளத்தக்கதாயிருப்பது கருமயோகமே,
என்பதனால் – என்னும் காரணத்தினால்,
ஆன்று அமைந்து – மற்ற பலன்களில் பற்றில்லாமல் இருந்து கொண்டு, கர்த்ருத்வ த்யாகத்தையும் செய்து கொண்டு,
தன் கருமம் செய்யுமதே – தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களைச் செய்வதே,
வன் கருமம் தீரும் வகை – வலியதான புண்ய பாபரூபமான கர்மங்களைப் போக்கும் வழிகளுள்,
தக்கது – (அனைவருக்கும்) தக்கது,
என – என்று,
மூன்றாம் ஓத்தாகும் இது – இந்த மூன்றாம் அத்தியாயம்,
மிக்கு உரைக்கும் – உறுதியுடன் கூறும்.

1-2 ப்ரவ்ருத்தி மார்க்கமான கர்மயோகம் ஆத்மதர்ஶனத்துக்கு நேரே காரணமன்று; நிவ்ருத்தி மார்க்கமான ஜ்ஞாநயோகமே அதற்கு நேரே காரணம். இப்படி ஞானயோகமே சிறந்ததாயிருக்க கர்மயோகத்தில் ஏன் என்னை ஏவுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான்.
3-8 எளிதாகச் செய்யத்தக்கதாயிருக்கை, நழுவ இடமில்லாததாயிருக்கை, விடமுடியாததாயிருக்கை முதலான காரணங்களால் கர்மயோகம் ஜ்ஞாநயோகத்தைக் காட்டிலும் சிறந்தது.
9-16 பகவதாரதனமான யஜ்ஞத்திற்கு உறுப்பாகாத கர்மங்களே இவனை ஸம்ஸாரத்தில் கட்டுப்படுத்தும்; அதற்கு உறுப்பான கர்மங்கள் புருஷார்த்த ஸாதனமாகுமேயொழிய இவனைக் கட்டுப்படுத்தாது.
17-19 ஆத்மதர்ஶனம் கைவரப்பெற்ற முக்தனான கைவல்யநிஷ்டனே வர்ணாஶ்ரமதர்மங்களைச் செய்யாமலிருக்கலாமாகையால், அப்படி முக்தனல்லாத நீ கர்மயோகத்தை அனுஷ்டித்தே ஆத்மதர்ஶனத்தைப் பெறவேணும்.
20 ஜனகர் முதலானோர் கர்மயோகத்தாலேயே ஆத்மதர்ஶனத்தைப் பெற்றனர்.
20-26 சான்றோனாகப் புகழ் பெற்றவன், தான் ஜ்ஞானயோகாதிகாரியாயினும் அதில் அதில் அதிகாரமில்லாதவர்களை ரக்ஷிப்பதற்காகவும், அவர்களைக் கலக்குவதன் மூலம் தனக்குண்டாகும் அநர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகவும் கர்மயோகத்தையே அநுஷ்டிக்க வேண்டும்.
27-30 ‘ஸர்வேஶ்வரனால் தூண்டப்பட்டு, ஸத்வாதிகுணங்களுக்கு வசப்பட்டவனாகவே நான் கர்மம் செய்கிறேன்’ என்னும் அகர்த்ருத்வாநுஸந்தானத்தோடு கூடவே கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படி கர்மயோகத்தில் ஞானம் கலந்திருக்கையால், ஞானயோகத்தையிடையிடாமல் அதுவே நேரே ஆத்மதர்ஶனத்துக்கு உபாயமாகும். ஆகையால் அது ஞானயோகத்தைவிடத் தாழ்ந்ததல்ல.
31-32 கர்மயோகத்தை அநுஷ்டிப்பாரின் சிறப்பு; அதை அநுஷ்டியாதாரின் தாழ்வு.
33-43 எத்தகைய சிறந்த ஞாநயோகாதிகாரியையும், அநாதி வாஸநையும் அது காரணமாக வரும் காமக்ரோதங்களும் ஜ்ஞாநயோகத்தினின்றும் நழுவச் செய்துவிடும். அநாதிவாஸனை முதலானவற்றுக்கு அடியான பாபங்களைப் போக்கும் கர்மயோகத்தில் ஈடுபடுவதன் மூலமே இவற்றை வெல்ல முடியும். ஆகையால் நழுவுதற்கிடமுள்ளதாய், செயற்கரியதான ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும், நழுவுதற்கிடமற்றதாய், செயற்கெளியதான கர்மயோகமே ஜ்ஞாந யோகாதிகாரியோடு, கர்மயோகாதிகாரியோடு வாசியற அனைவராலும் கைக்கொள்ளத்தக்கது.

——–

4: ஜ்ஞான யோகம்:

8) ப்ரஸங்காத்ஸ்வஸ்வபாவோக்தி: கர்மணோகர்மதாஸ்ய ச
பேதா:ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்த்தாத்யாய உச்யதே

சதுர்த்தாத்யாயே – நான்காமத்தியாயத்தில்,
கர்மண: அகர்மதா உச்யதே – (ஞானமடங்கிய) கர்மயோகம் ஞானயோகமாகவேயிருத்தல் சொல்லப்படுகிறது;
அஸ்ய பேதா: ச (உச்யதே) – கர்மயோகத்தின் (ஸ்வரூபமும்) பிரிவுகளும் சொல்லப்படுகின்றன;
ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் (உச்யதே) – (கர்மயோகத்தில் அடங்கிய) ஞானபாகத்தின் பெருமையும் கூறப்படுகிறது;
ப்ரஸங்காத் – (தான் சொல்லுமர்த்தம் ப்ராமாணிகமானது என்று நிரூபிக்கவேண்டிய) ப்ரஸங்கம் ஏற்பட்டபடியாலே,
ஸ்வஸ்வபாவோக்தி: – (அவதார தசையிலும் மாறாத) தன் தன்மையைப் பற்றிய பேச்சும் (முதலில்) உள்ளது.

நாரா யணன்கீதை நாலாமோத் திற்றனது
சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
மேகப் பலபரிசா வேய்ந்து.

நாராயணன் – (கண்‍ணனாய் அவதரித்த) நாராயணன்,
கீதை நாலாமோத்தில் – கீதையின் நாலாம் அத்தியாயத்தில்,
தனது சீரார் பிறவிச் சிறப்புடனே – பெருமை மிகுந்த தன் அவதாரச் சிறப்போடு கூட,
ஏராரும் யோகத்துடன் – சிறப்புற்ற ஞானத்தோடு,
ஏகம் கருமம் – ஒன்றான கருமம்,
பலபரிசா ஏய்ந்து – பல வகைகளாக இருந்துகொண்டு,
முற்று இயலும் ஆறு – (ஜ்ஞானயோகத்தை இடையிடாமலே) பரிபூர்ண ஸாதனமாயிருக்கும் வகையை,
உரைக்கும் – உபதேசிக்கிறான்.

1-3: கர்மயோகம் ஶுத்தபரம்பராப்ராப்தம்.
4: அர்ஜுனனின் கேள்வி.
5-11: அவதார ரஹஸ்யம்.
12-24: கர்மயோகம்ஜ்ஞாநாகாரமாயிருப்பதை நிரூபிப்பது.
25-30: கர்மயோக வகைகள்.
30-32: கர்மயோகிகளுக்கு நித்யநைமித்திக கர்மங்கள் அநுஷ்டிக்க வேண்டியவையே. அவர்களிடையே பலபேதம் கிடையாது.
33-40: கர்மயோகத்தில் அடங்கியஜ்ஞாநாம்ஶத்தின்ப்ராதாந்யம்.
41-42: முடிவுரை.

———-

5 – கர்மஸந்யாஸ யோகம்:

9) கர்மயோகஸ்ய ஸெளகர்யம் ஶைக்ர்யம் காஶ்சந தத்விதா:
ப்ரஹ்மஜ்ஞாநப்ரகாரஶ்ச பஞ்சமாத்யாய உச்யதே

கர்மயோகஸ்ய – கர்மயோகத்தினுடைய,
ஸெளகர்யம் – செயற்கெளிய தன்மையும்,
ஶைக்ர்யம் – விரைவில் பலனளிக்கும் தன்மையும்,
காஶ்சந தத்விதா: – அதற்குறுப்பான சில அங்கங்களும்,
ப்ரஹ்மஜ்ஞாநப்ரகார: ச – ஶுத்தாத்மாக்களைக் ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும்,
பஞ்சமாத்யாயே – ஐந்தாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

அண்ண லருள்கீதை யஞ்சாமோத் துக்கருமந்
திண்ண முனர்வதனைச் சேர்ந்தமைந்த – வண்ணமது
சிந்தை தெளியத் தெளிவுற் றுரைக்குமதே
முந்தை மறைநெறியை மூண்டு.

அண்ணல் -ஸ்வாமியாகிற கண்ணன்,
அருள் – அருளிச் செய்த,
கீதை – கீதாஶாஸ்திரத்தின்,
அஞ்சாம் ஓத்து – ஐந்தாம் அத்தியாயம்,
முந்தை மறை நெறியை மூண்டு – பழையதான வேதமார்க்கத்தைப் பின்பற்றி,
கருமம் – கர்மயோகம்,
உணர்வு அதனை திண்ணம் சேர்ந்து அமைந்த வண்ணம் அது – “நான் கர்த்தாவல்லன்” என்னும் அறிவோடு
உறுதியாகச் சேர்ந்து பொருந்தியிருக்கும் தன்மையை,
சிந்தை தெளிய – (அர்ஜுனனுடைய) மனம் தெளிவடையும்படியாக,
தெளிவுற்று உரைக்குமதே – மிக விளக்கமாகச் சொல்லுவதாகும்.

1 கர்மஜ்ஞானயோகங்களில் எது சிறந்தது? என்று அர்ஜுனன் கேள்வி.
2-7 செயற்கெளிமையாலும், விரைவில் பலனளிக்கும் தன்மையாலும் கர்மயோகமே ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும் சிறந்தது என்று கண்ணனின் பதில்.
8-11 அகர்த்ருத்வாநுஸந்தானத்தில் ஒரு வகை – இந்த்ரியப்ராணன்களில் கர்த்ருத்வத்தை அந்ஸந்திக்கை.
12 பலத்யாகம் மோக்ஷஹேது.
13 சரீரத்தில் கர்த்ருத்வத்தை அநுஸந்திக்கை. (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
14-15 ஆத்மாவுக்குக் கர்த்ருத்வமின்மை. ப்ரக்ருதி வாஸனையின் கர்த்ருத்வம். (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
16 அகர்த்ருதாநுஸந்தானத்தை உள்ளடக்கிய ஆத்மவிஷயஜ்ஞாநத்தின் பெருமை.
17 ஆத்மாநுபவமாகிற மாடத்திற்கு ஏறும் படிக்கட்டாயிருக்கும் அறிவின் படிகளின் வரிசை.
1. ஆத்மதர்ஶனம் வேண்டும் என்ற உறுதியுடையவர்கள்
2. ஆத்மதர்ஶனத்தை குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்கள்.
3. அதற்காக முயல்பவர்கள்
4. ஆத்மதர்ஶனமே வாழ்க்கையின் பயனாக நினைப்பவர்கள்.
இவர்கள் கர்மவாஸனை நீங்கப் பெற்று மேற்கூறியபடி ஆத்மதர்ஶனத்தைப் பெறுவர்.
18-19 ஆத்மாக்கள் அனைவரும்ஜ்ஞானைகாகாரத்தால் ஸமர் என்னும் அறிவு – ஆத்மஸாக்ஷாத்காரத்தை மறுமையில் விளைப்பது; இம்மையிலும் மேலான துக்கநிவ்ருத்தியை அளிப்பது.
20-25 ஸமதர்ஶநநிலை ஏற்பட உதவும் ஆறு அநுஷ்டாந முறைகள்.
1. ஆசார்ய உபதேசத்தாலே, ஆத்மாவைப் பற்றியஜ்ஞானத்தைப் பெறுதல்.
2. சரீரத்தை வேறுபடுத்தி ஆத்மாவை எண்ணி மகிழ்தல்.
3. இன்பத்தில் மகிழாமலும் துன்பத்தில் வருத்தமுறாமலும்,

இவைப்ரக்ருதியின் செயல்களென எண்ணியிருத்தல்.
4. மனம்ப்ரக்ருதி விஷயங்களினின்றும் நீங்கப்பெற்று ஆத்மாவை அநுபவித்து மகிழ்தல்.
5. ப்ரக்ருதியினால் ஏற்படும் இன்பங்கள் நிலையற்றவையாதலால் துன்பத்திலேயே முடிவுறும்.
6. காமக்ரோதங்களை வென்றால் ஆத்மாநுபவம் இம்மையிலேயே சிறிது ஏற்படும். சரீரத்தை விட்டவுடன் முழுமை பெறும்.
26 ஆத்ம ஸமதர்ஶனம் கைவந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு பாராட்டி, அவற்றின் உஜ்ஜீவனத்துக்கு பாடுபடுவர். இத்தகைய ஸமதர்ஶனத்தால் ஆத்மாநுபவம் விரைவில் ஏற்படும்.
27-28 நித்ய நைமித்திக கர்மாநுஷ்டாநம் யோகத்தில் (த்யானத்தில்) நிறைவுறும்.
29 ஸர்வலோக ஸர்வேஶ்வரன் என்று கண்ணனை அறிந்து அவனுக்கு ஆராதனமாக கர்மயோகத்தை செய்வது எளிது.

————

6 – அத்யாத்ம யோகம்:

10) யோகாப்யாஸவிதிர் யோகீ சதுர்த்தா யோகஸாதநம்
யோகஸித்தி:ஸ்வயோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட்ட உச்யதே

யோகாப்யாஸவிதி: – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தைப் பழகும் முறையும்,
சதுர்த்தா யோகீ – நாலுவகைப்பட்ட யோகிகளும்,
யோகஸாதநம் – (முற்கூறிய) யோகத்திற்கு ஸாதநமாகிய அப்யாஸம், வைராக்யம் முதலானவையும்,
யோகஸித்தி: – (தொடங்கிய) யோகம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஸித்தியடையும் என்பதும்,
ஸ்வயோகஸ்ய பாரம்யம் – தன் விஷயமான பக்தியோகத்தின் உயர்வும்,
ஷஷ்ட்டே – ஆறாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

அத்த னருள்கீதை யாறாமோத் தாற்கருமத்
தொத்த தெளிவைத் தெரிந்துரைக்கு
— — — —
— — — — (லுப்தம்)

யோக விதியோகி யோகத்து நாலுவகை
யோகமது மேலா வுயர்நிலைமை – மேகநிக
ரண்ண லருள்கீதை யாறாமோத் தின்பொருளாத்
திண்ண முடிந்ததிது சேர்ந்து.

யோக விதி – யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தைப் பழகும் முறையும்,
யோகி யோகத்து நாலுவகை – அதைப் பழகும் யோகியரிலும், அந்த யோகத்திலும் உள்ள நாலு பிரிவும்,
யோகம் அது – ஸுப்ரஸித்தமான பக்தியோகம்,
மேலா உயர் நிலைமை – எல்லா யோகங்களைக் காட்டிலும் மேலாக உயர்ந்து நிற்கும் நிலையும்,
இது சேர்ந்து – ஆகிய இவ்வர்த்தங்கள் சேர்ந்து,
மேகம் நிகர் அண்ணல் அருள் கீதை ஆறாம் ஓத்தின் பொருளா திண்ணம் முடிந்தது – மேகத்தை ஒத்த ஸ்வாமியான
கண்ணன் அருளிய கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் பொருளாக அறுதியிடப்பட்டு நிறைவடைந்தது.

1-6 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்திற்கு, ஜ்ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகமே காரணம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அக்கர்மயோகத்தை விவரித்தல்.
7-9 யோகாப்யாஸ விதியின் (யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தை பழகும் முறையின்) தொடக்க நிலை.
10-28 யோகாப்யாஸவிதி விவரணம்.
10-12 பாஹ்ய உபகரண நியமம்.
13-14 அந்தரங்க உபகரணங்களான ஶரீர மநஸ்ஸுக்களின் நியமம்.
15 ஶுபாஶ்ரயமான பகவத் விக்ரஹத்தைச் சிந்திப்பது யோகோபகரணங்களில் முக்யமானது.
16-17 மற்றும் சில நியமங்கள் – உண்பது, உழைப்பு, தூக்கம் ஆகியவற்றில் அளவுடன் இருத்தல்.
18 யோகயோக்ய தஶையின் விளக்கம் – ஆத்மாஜ்ஞானத்தின் நன்மையை அறிந்ததால் ஏற்படும் மனவமைதி யோக்யதை.
20-23 யோகாப்யாஸம் மிகச் சிறந்த புருஷார்த்தம்.
24-27 யோகாப்யாஸத்திற்கு உறுப்பான மமகார பரித்யாகம் முதலானவை.
28 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தின் பலம்.
29-32 நாலுவகைப்பட்ட யோகிகள்.
1. எல்லா வுயிரிலும் ஆத்மாவைக் காணுதல்
2. எல்லாவற்றிலும் பகவானைக் காணுதல்
3. அந்தர்யாமியைக் காணுதல்
4. ஸுக துக்கங்களிலிருந்து விடுபடுதல்.
33-34 யோகஸாதனமான அப்யாஸம் (ஆத்மசிந்தனம்), வைராக்யம் முதலானவற்றைத் தெளிவாக அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
35-36 யோகஸாதனம் – பகவதாராதனமான அகர்த்ருத்வாநுஸந்தாநத்துடன் கூடிய கர்மாநுஷ்டானத்தாலே மனஶ்ஶுத்தி ஏற்படும். அதன் பிறகு யோகம் ஸித்திக்கும்.
37-39 யோகமாஹாத்ம்யத்தை அறிவதற்காக ‘யோகப்ரஷ்டனுக்கு போகமோக்ஷங்கள் இரண்டுமே கிடைக்காதோ’ என்று அர்ஜுனனின் கேள்வி.
40-45 யோகப்ரஷ்டனுக்கு இரண்டுமே காலக்ரமத்தில் கிடைக்கும் என்று கண்ணனின் பதில். (யோகமாஹாத்ம்யம்)
46 தபஸ்விகள் முதலானோரைக்காட்டிலும் ஜீவாத்மயோகியின் சிறப்பு.
47 தபஸ்விகள் முதலானோர், ஜீவாத்மயோகி ஆகிய அனைவரைக் காட்டிலும் பரமாத்மோபாஸகனின் சிறப்பு (பக்தியோகமாஹாத்ம்யம்).

——–

முதல் ஷட்கத்தின் ஸாரம்:
சோக முயிருணர்வு தொல்கருமச் செய்தியதி
லாகு மறிவுயர்த்தி யார்வகைகள் – யோகமுயிர்
காட்சி யிவற்றின் கருத்துமுத லாறோத்தின்
மாட்சிமை சொல்லும் வகை.

சோகம் – (அர்ஜுனனுடைய) சோகம்,
உயிர் உணர்வு – ஜீவாத்மதத்துவத்தைப் பற்றிய அறிவு,
தொல் கருமச் செய்தி – பழைமையான கர்மயோகாநுஷ்டானம்,
அதில் ஆகும் அறிவுயர்த்தி – அக்கர்மயோகத்தில் அடங்கிய அறிவின் சிறப்பு.
(அதில்) ஆர் வகைகள் – அக்கர்மயோகத்தில் உள்ள சில வகைகள்,
உயிர் காட்சி யோகம் – ஆத்மாவைக் காண்பதாகிற யோகம்,
இவற்றின் கருத்து – ஆகிய இவ்வாறு அர்த்தங்களின் விளக்கமும்,
முதல் ஆறு ஓத்தின் – (முறையே) முதல் ஆறு அத்தியாயங்களின்,
மாட்சிமை சொல்லும் வகை – முக்கியமான அர்த்தங்களைச் சொல்லும் வகையாகும்.

பூர்வமத்யமஷட்கார்த்த ஸங்கதி:
முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தாற்
றன்னா ருயிருணர்வு தானுரைத்துப் – பின்னார்வத்
தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
கூறு நடுவாறுங் கூர்ந்து

முதல் ஆறு – முதல் ஷட்கத்தினால் (ஆறு அத்தியாயங்களால்),
நல்லுணர்வின் முற்றும் கருமத்தால் – (ஆத்மாவைப் பற்றிய) உண்மையறிவினால் நிறைவடையும் கர்மயோகத்தால்,
தன் ஆர் உயிர் உணர்வு தான் உரைத்து – தனது அருமையான ஜீவாத்மஸ்வரூபத்தின் ஸாக்ஷாத்காரம் உண்டாவதாகக் கூறி,
ஆர்வம் தேறு மனத்தால் – அன்பு நிறைந்த நெஞ்சினால்,
இறைவன் பால் அன்பு செயல் – ஸர்வேஶ்வரனிடம் பக்திசெலுத்துவதாகிற பக்தியோகத்தை,
நடு ஆறும் – (கீதையின்) நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்களும்,
கூர்ந்து கூறும் – விரிவாக விளக்கும்.

அங்கம், ப்ராப்தா ஆகிய இரண்டையும் முதல் ஷட்கத்தில் கூறிய பின்
அங்கி, ப்ராப்யம் ஆகிய இரண்டையும் மத்யம ஷட்கத்தில் கூறுகிறது.

ஞானாம்ஶத்தை உள்ளடக்கிய கர்மயோகத்தை அங்கமாகக் கொண்டு பக்தியோகம் அங்கியாகிறது.

ஜீவாத்மாவான ப்ராப்தாவுக்கு பரமாத்மா பரமப்ராப்யம்.

————–

7 – விஜ்ஞான யோகம்:
11) ஸ்வயாதாத்ம்யம்ப்ரக்ருத்யாஸ்ய திரோதி: ஶரணாகதி:
பக்தபேத:ப்ரபுத்தஸ்யஶ்ரைஷ்ட்யம் ஸப்தம உச்யதே

ஸப்தமே – ஏழாவது அத்தியாயத்தில்,
ஸ்வயாதாத்ம்யம் – (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப் பற்றிய உண்மைநிலையும்,
ப்ரக்ருத்யா – மூலப்ரக்ருதியினாலே,
அஸ்யதிரோதி: – இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப் படுவதும்,
ஶரணாகதி: – (அம்மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாகதியும்,
பக்தபேத: – உபாஸகர்களில் (நாலு) வகையும்,
ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் – (அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும்,
உச்யதே – கூறப்படுகிறது.

ஆங்குமுத லேழாமோத் தன்புக் கிலக்காகு
மோங்குமிறை மாயத் தொழிக்குமப் – பாங்கிற்
சரண நெறியடைந்தார் தம்பேத ஞானி
யரணுயர்வு சொல்லு மமைந்து.

ஆங்கு முதல் – அந்த மத்யமஷட்கத்தில் முதல் அத்தியாயமான,
ஏழாம் ஓத்து – ஏழாம் அத்தியாயம்,
அன்புக்கு இலக்காகும் ஓங்கும் இறை – பக்திக்கு விஷயமாகும் தலைசிறந்த ஸர்வேஶ்வரனையும்,
மாயம் – (அவனை ஜீவனுக்கு மறைக்கும்) ப்ரக்ருதியையும்,
ஒழிக்கும் அப்பாங்கில் சரண நெறி – (அம்மறைவைப்) போக்கடிக்கும் தன்மையையுடைய ஶரணாகதியையும்,
அடைந்தார் தம் பேதம் – உபாஸிப்பவர்களின் (நாலு வகையான) உட்பிரிவையும்,
ஞானி அரண் உயர்வு – (அந்நால்வரில்) ஞானி (எம்பெருமானுக்கே) தாரகனாயிருக்கும் சிறப்புற்றவன் என்பதையும்,
அமைந்து சொல்லும் – நன்றாகக் கூறும்.

I 1-12 ஸ்வயாதாத்ம்யம் – பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
1 உண்மையறிவைக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை
2 இவ்வறிவைப் பூர்ணமாகப் பெற்றால், அறியவேண்டியது வேறொன்றுமில்லை.
3 மோக்ஷஸித்தியின் பொருட்டுக் கடைசிவரை முயல்பவன் ஆயிரத்தில் ஒருவன்; அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவன் பரமபுருஷனையே ப்ராப்யமாய் அறிபவன். அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவனே அவனை ப்ராபகமாகவும் அறிபவன்.
4 எட்டுவிதமான அசேதன ஸமஷ்டிப்பொருளும் பரமபுருஷ பரதந்த்ரமானது.
5 அசேதநப்ரக்ருதிக்கு மேற்பட்ட சேதநஸமஷ்டியும் பரமபுருஷபரதந்த்ரமானது.
6 முற்கூறிய சேதநாசேதந ஸமஷ்டிகளைக் காரணமாகக் கொண்ட வ்யஷ்டிப் பொருள்களுக்கும் பரமபுருஷனே காரணமாகவும், ஶேஷியாகவுமிருப்பவன்.
*7 கல்யாண குணங்களால் ஜீவர்களைக் காட்டிலும் மிகவுயர்ந்தவனும் பரமபுருஷனே.
7* அவனே அனைத்துக்கும் ஶரீரியாகவுமிருப்பவன். இக்காரணங்களால் அவனே இயற்கையான ப்ராப்ய ப்ராபகங்களா யிருப்பவன்.
8-11 சேதநாசேதநப் பொருள்களில் அவற்றின் ப்ராப்யத்வத்திற்கும், ப்ராபகத்வத்திற்கும் உறுப்பாக உள்ள சிறந்த பெருமைகள் பரமபுருஷாதீனமாய் வருபவையே.
12 ஸாத்விகர்களுக்கு ப்ராப்யப்ராபகங்களாயிருக்கும் முற்கூறியவைபோலே, ராஜஸதாமஸர்களுக்கு ப்ராப்யமாகவும், ப்ராபகமாகவுமிருக்கும் பொருள்களின் தன்மைகளும், அவ்வப்பொருள்களும் பரமபுருஷாதீநமே; பரமபுருஷன் அவற்றுக்கு அதீனமானவனல்லன்.
II 13-*14 பரமபுருஷனைப்பற்றிய முற்கூறிய உண்மையறிவை – அவனுக்கு அதீனமான ப்ரக்ருதியின் ஸம்பந்தம் ஜீவனுக்கு மறைக்கிறது.
III 14* ஜீவனுக்குள்ள ப்ரக்ருதி ஸம்பந்தம் பரமபுருஷ ஶரணாகதியாலேயே நீங்குகிறது.
15 மேன்மேலே பாபிஷ்டர்களான நாலுவகைப்பட்ட பாபிகள் பரமபுருஷனை ஶரணமடைவதில்லை.
IV பக்தபேதம்
16 மேன்மேலே புண்ணியமிகுதியால் உண்டாகும் ப்ரபத்திச் சிறப்பாலே சிறப்புற்ற நாலுவகை பக்தர்கள் பரமபுருஷனை ஶரணமடைகின்றனர்.
1) ஆர்த்தன், 2) அர்த்தார்த்தீ (இருவரும் சேர்ந்து ஐஶ்வர்யார்த்திகள்), 3) ஜிஜ்ஞாஸூ (கைவல்யார்த்தி), 4) ஜ்ஞாநி (பகவச் சரணார்த்தி)
V 17-27 ஞானியின் சிறப்பு
17 மூவரில், ஸாதனதஶையோடு ஸாத்யதஶையோடு வாசியற எப்போதும் எம்பெருமானுடன் சேர்ந்திருப்பவனாகையாலும், எம்பெருமான் ஒருவனிடமே அன்பு பூண்டவனாகையாலும் ஜ்ஞாநியானவன் – ஸாதநதஶையில் மாத்திரம் எம்பெருமானோடு சேர்ந்திருப்பவர்களும், ஸ்வஸாத்யமான ஐஶ்வர்ய கைவல்யங்களிலும், அவற்றுக்கு ஸாதனமாக எம்பெருமானிடமும் அன்பு பூண்டவர்களுமான ஐஶ்வர்ய கைவல்யார்த்திகளைக் காட்டிலும் சிறப்புற்றவன். எம்பெருமானிடம் பேரன்பு பூண்டவன்; எம்பெருமானுக்கு மிகவினியவன்.
18 மூவருமே பகவான் ஒருவனையே பலப்ரதானமாகப் பற்றியவர்களாகையாலே உதாரர்கள்; ஜ்ஞாநியோவெனில், எம்பெருமானையே பரமப்ராப்யமாகவும் பற்றியவனாகையாலே அவனுக்கே ஆத்மாவாய் (தாரகனாய்) இருப்பவன்.
19 பல ஜன்மங்கள் கழித்து உபாஸகஜ்ஞானிக்குப் பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவை அநுஸந்திப்பதாலே ‘அவனே ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவு மிருப்பவன்’ என்னும் அறிவு ஏற்பட்டு, அவனையே எல்லாமாகப் பற்றுகிறான். இவ்வறிவு ஏற்பட்ட ஜன்மமே இவனுக்குக் கடைசி ஜன்மம். இத்தகைய ஜ்ஞாநி மஹாத்மாவாவான். எம்பெருமானுக்கே கிடைத்தற்கரியவன் இவன்.
20 ராஜஸதாமஸ நூல்களில் சொன்ன நியமங்களைப்பற்றி நின்று தாழ்ந்த பலன்களுக்காக மற்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள் பலர்.
21 அவர்களுக்கும் தனது ஶரீரமான அந்த தெய்வங்களிடம் பக்திஶ்ரத்தைகளை எம்பெருமானே ஏற்படுத்துகிறான்.
22 பக்திஶ்ரத்தைகளோடு அந்த தெய்வங்களை ஆராதிப்பவர்களுக்கு, அந்த தெய்வங்களுக்கு அந்தர்யாமியான எம்பெருமானே பலனளிக்கிறான்.
23 புல்லறிவாளர்களான அவர்களுக்குக் கிடைக்கும் பலன் அல்பமாகவும் அஸ்திரமாகவுமே இருக்கிறது. பகவத் பக்தர்கள் அநந்த ஸ்திரபலனையே எளிதில் பெறுகிறார்கள்.
24 முற்கூறியவர்களிலும் கீழ்ப்பட்ட அறிவிலிகள் பலர் பரமபுருஷனை ஸாமாந்ய ஜீவனாக நினைக்கிறார்கள்.
25 மனிதவுருக்கொண்டு அவதரித்திருக்கும் ஸர்வேஶ்வரனை இவ்வறிவிலிகள் அறிவதில்லை.
26 பரமபுருஷனை உள்ளபடியறிபவன் முக்காலத்திலும் ஒருவனுமேயில்லை.
27 இதற்குக் காரணம் – அநாதிகாலமாக ஜீவர்கள் ப்ரதமப்ரவ்ருத்தியில் ப்ராக்ருத விஷயமான ஜ்ஞாநேச்சாப்ரயத்னங்களையே செய்து புண்ய பாப கர்மங்களைக் குவித்து வைத்திருப்பதால், பிறக்கும்போதே ப்ராக்ருத விஷயத்தில் நிற்கையேயாகும்.
VI முடிவுரை
28 இவர்களில் புண்யத்தாலே பாபம் சிறிதுசிறிதாக அழியப் பெற்றவர்கள், தத்தம் புண்ணியத்தின் ஏற்றத்தாழ்வுகள் ஏற்ப, ஐஶ்வர்யத்தையோ, கைவல்யத்தையோ, பரமபுருஷனையோ பெறவிரும்பி உறுதியுடன் பக்திசெய்கிறார்கள். புண்யபாப லக்ஷணம்.
29 கைவல்யார்த்திக்கு அறியவேண்டிய அர்த்தவிஶேஷங்களும், கைவிடவேண்டி யதும் பற்றிய ப்ரஸ்தாவம்.
30 ஐஶ்வர்யார்த்திக்கு அறியவேண்டும் அர்த்தவிஶேஷங்களும் கைக்கொள்ள வேண்டியவையும், ஐஶ்வர்யகைவல்ய பகவச்சரணார்த்திகளான ப்ரவ்ருத்தி பரர் அனைவர்க்கும் பொதுவாக அறியவேண்டியவையும், கைக்கொள்ள வேண்டியவையும் பற்றிய ப்ரஸ்தாவம்.

———

8 – அப்யாஸ யோகம்:

12) ஐஶ்வர்யாக்ஷரயாதாத்ம்ய பகவச்சரணார்த்திணாம்
வேத்யோபாதேயபாவாநாம் அஷ்டமே பேத உச்யதே

ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச்சரணார்த்திணாம் – (1) ஐஶ்வர்யார்த்தி, (2) ப்ரக்ருதியினின்று நீங்கிய
ஆத்ம ஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி, (3) பகவானுடைய திருவடித்தாமரையைப் பெறவிரும்பும் ஞானி ஆகிய மூவர்க்கும்,
வேத்யோபாதேயபாவாநாம் – அறியவேண்டும் அர்த்த விஷேஷங்கள், கைக்கொள்ள (அநுஷ்டிக்க) வேண்டியவை ஆகியவற்றின்,
பேத: – வேறுபாடு,
அஷ்டமே – எட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

போக முயிருண்மை பூமகள்கோனைப்பெறுதற்
காக முயல்வார்க் கறிவமர – மேகநிறத்
தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.

போகம் – ஐஶ்வர்ய போகங்கள்,
உயிருண்மை – ப்ரக்ருதியினின்றும் நீங்கிய ஆத்மாநுபவம்,
பூமகள் கோனை – ஸ்ரீமந்நாராயணன் ஆகிய இம்மூன்று ப்ராப்யங்களில் ஒன்றை,
பெறுதற்காக – பெறுவதற்காக,
முயல்வார்க்கு – முயற்சி செய்பவர்களுக்கு,
அறிவு அமர வகை – அறியவேண்டியவைகளையும்,
செய் மா வகை – அநுஷ்டிக்க வேண்டியவைகளையும்,
மேகநிறத்து எம்மான் அருள்கீதை எட்டாம் ஓத்தில் பொருள்கள் – மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானான கண்ணன்
அருளிய கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஶ்லோகங்கள்,
சேர்ந்து உரைக்கும் – ஒன்றுகூடிச் சொல்லும்.

1-2
1.கைவல்யார்த்திகள் அறியவேண்டிய ப்ரஹ்ம, அத்யாத்ம, கர்ம என்பவை யாவை?
2.ஐஶ்வர்யார்த்திகள் அறியவேண்டிய அதிபூதம், அதிதைவம் என்பவை
3. மூவகை அதிகாரிகளும் அறியவேண்டிய அதியஜ்ஞம் என்பது யாது? அதற்கு அதியஜ்ஞத்தன்மை எப்படி வந்தது?
4. மூவருக்கும் அந்திமஸ்ம்ருதி எத்தகையது? – என்று அர்ஜுனனின் கேள்விகள்.
3 முதற் கேள்விக்குக் கண்ணனின் பதில்.
4 முற்பாதியால் இரண்டாவது கேள்விக்கும், பிற்பாதியால் மூன்றாவது கேள்விக்கும் கண்ணனின் பதில்.
5 அந்திமஸ்ம்ருதி பற்றிய நாலாவது கேள்விக்குக் கண்ணனின் சுருக்கமான பதில் – ‘ஈஶ்வரன் விஷயமான அந்திமஸ்ம்ருதி அவரவர் விரும்பும் வகையில் ஈஶ்வரனோடு ஸாம்யத்தை விளைக்கும்’ என்று.
6 இது ஈஶ்வரவிஷயத்தில் மட்டுமல்ல. கடைசிக்காலத்தில் எந்த விஷயத்தை மனிதன் நினைத்தாலும் அந்நினைவுதானே அடுத்த பிறப்பில் அவ்விஷயம் போன்ற ஒரு நிலையை அவனுக்கு விளைத்துவிடும்.
7 ஆகையால் அர்ஜுனன் எப்போதும் தன்னைப்பற்றிய நினைவையும், அதை விளைக்கும் க்ஷத்ரிய தர்மமான யுத்தத்தையும் செய்யவேண்டும் என்று கண்ணன் நாலாவது கேள்விக்கு விளக்கமான பதில் கூறுகிறான்.
8-14 அவரவர்க்குரிய அந்திமஸ்ம்ருதி ஏற்படுவதற்குறுப்பான உபாஸனபேதம்.
8-10 ஐஶ்வர்யார்த்திக்குரிய உபாஸனமுறையும், அதையொட்டி ஏற்படும் அந்திமஸ்ம்ருதியும்.
14 ஜ்ஞாநி பகவானை உபாஸிக்கும் முறையும், அடையும் முறையும்.
15-28 ஜ்ஞாநிக்கும், கைவல்யார்த்திக்கும் இந்த ஸம்ஸாரமண்டலத்திற்குத் திரும்பி வராமையை உடைய அழிவற்ற பலன். ஐஶ்வர்யார்த்திக்குக் கர்மபூமிக்கே திரும்பி வரும் அழிவுள்ள பலன்.
15 ஜ்ஞாநியடையும் பலனான பகவதநுபவம் நித்யமானது.
16 தன்னை ப்ராப்யமாயடைந்தவர்களுக்குக் கிடைக்கும் பலன் நித்யமாயிருப்ப தற்கும், ஐஶ்வர்யார்த்தியின் பலன் அநித்யமாயிருப்பதற்கும் காரணம்.
17-19 ப்ரஹ்மலோகம் ஈறாகவுள்ள உலகங்களுக்கும், அவற்றினுள்ளிருப்பவர் களுக்கும் உத்பத்தி விநாஶங்களின் காலவரம்பு இருக்கையாலே ஐஶ்வர்யம் அநித்யமே.
20-21 கைவல்யாநுபவத்திற்கும் அழிவு இல்லாமையால் அதிலிருந்து மற்றொரு அநுபவத்தை அடைவதாகிற புநராவ்ருத்தி இல்லை.
22 கைவல்யத்தை அடைந்தவனுக்கு ப்ரஹ்மாநுபவம் என்றுமே கிடையாதாகை யால், கேவலாத்மாநுபவமாகிற அவனுடைய அநுபவத்தைக் காட்டிலும், பரிபூர்ணப்ரஹ்மாநுபவமாகிற ஜ்ஞாநியினுடைய அநுபவம் மிகவும் வேறுபட்டது.
23-24 பரமபுருஷநிஷ்டனும், ப்ரஹ்மாத்மகமாகத் தன் ஆத்மாவை உபாஸிக்கும் பஞ்சாக்னிவித்யாநிஷ்டனுமான இருவகையான ஜ்ஞாநிகள் ப்ரஹ்மத்தை அடைவதற்கு வழியான அர்ச்சிராதிகதியின் விவரணம்.
25 புண்ணியம் செய்த ஐஶ்வர்யார்த்திகள் ஸ்வர்க்கம் முதலான புண்ணிய லோகங்களுக்குச் செல்லும் வழியான தூமாதிமார்க்கத்தின் விவரணம்.
26 முற்கூறிய இரண்டு கதிகளும் ஶ்ருதிப்ரஸித்தமானவை. அர்ச்சிராதிகதியால் செல்பவன் திரும்பி வருதலில்லாத பகவதநுபவத்தை அடைகிறான். தூமாதிகதியால் செல்பவன் கர்மபூமிக்கே திரும்பிவருகிறான்.
27 அர்ச்சிராதிகதி சிந்தனம் தினந்தோறும் ஜ்ஞாநியால் செய்யப்படவேண்டும்.
28 ஏழு, எட்டு அத்தியாயங்களாகிற இரு அத்தியாயங்களில் சொல்லப்பட்ட -ப்ராப்யமாய், ப்ராபகமாய், ஶேஷியாய், காரணமாய், ஜ்ஞாநிக்கு தாரக போஷக போக்யமாயிருக்கும் கண்ணனின் பெருமையை அறிபவன் எல்லா ஸாதநாநுஷ்டானங்களைச் செய்தவர்கள் அடையும் பலனைக் காட்டிலும் சிறந்த பலனை இவ்விபூதியிலேயே பெற்று, மறுமையில் பரமபதத்தையும் அடைகிறான் – என்னும் அத்யாய த்வயார்த்த சிந்தன பலஶ்ருதி.

———

9 – ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்:

13) ஸ்வமாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம்
விஶேஷோ நவமே யோகோ பக்திரூப:ப்ரகீர்த்தித:

ஸ்வமாஹாத்ம்யம் – தன்னுடைய பெருமை,
மநுஷ்யத்வே பரத்வம் – மனிதனாய் அவதரிக்கும்போதும் மேன்மையையுடைத்தாயிருக்கை,
மஹாத்மநாம் விஶேஷ: -ஜ்ஞாநிகளுக்குள்ள சிறப்பு, (ஆகியவற்றோடு கூடிய),
பக்திரூப: யோக: ச – பக்தியோகம் எனப்படும் உபாஸனம்,
நவமே – ஒன்பதாவது அத்தியாயத்தில்,
ப்ரகீர்த்தித: – நன்றாகச் சொல்லப்பட்டது.

உன்னப் படும்பர னொண்சீர் மருவுயர்த்தி
மன்னப் பயில்ஞானி வாசிதான் – றன்னமர்ந்து
நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
யொன்றியசீ ரொன்பதா மோத்து.

உன்னப்படும் – உபாஸிக்கப்படும்,
பரன் – பரமாத்மாவினுடைய,
ஒண்சீர் மருவு – ஸெளலப்ய ஸெளசீல்யங்களோடு கூடிய,
உயர்த்தி – மேன்மையை,
மன்னப் பயில்ஞானி வாசிதான் – எப்போதும் சிந்திக்கும் ஞானியின் சிறப்போடு,
தன்னமர்ந்து நின்றியலும் பத்தி – தன்னிடத்தில் பொருந்தி நிலையாக உபாஸிப்பதாகிற பக்தியோகத்தை,
நற்கீதை சீர் ஒன்றிய ஒன்பதா மோத்து – நல்ல கீதையின் சிறப்புப் பொருந்திய ஒன்பதாம் அத்தியாயம்,
நிகழ்ந்துரைத்த – நன்கு உரைத்தது.

1 வேதாந்த ரஹஸ்யமான ஸாதன பக்தியை உபதேசிப்பதாகக் கண்ணன் ப்ரதிஜ்ஞை செய்தல்.
2 கர்மஜ்ஞானயோகங்களைக் காட்டிலும் பக்தியோகத்துக்குள்ள சிறப்பு.
3 ஶ்ரத்தையின்மையால் பக்தியோகத்தை அநுஷ்டிக்காதவர்கள் மோக்ஷமடை யாமல் ஸம்ஸாரத்திலேயே உழல்கின்றனர்.
4-10 பக்தியோகமாகிற உபாயத்தால் அடையப்படும் (ப்ராப்யமாகிற) எம்பெருமானின் பெருமை. மனிதனாகப் பிறந்த நிலையிலும் பரத்வம்.
4,5 பரமபுருஷன் மற்ற பொருள்களால் அறியப்படாமல் அவற்றை ஸங்கல்ப மாத்ரத்தாலே தரிப்பவனாய், நியமிப்பவனாய், படைப்பவனாய், அனைத்துக்கும் ஶரீரியாய், ஶேஷியாய் இருப்பவன்.
6 எல்லாப் பொருள்களின் ஸ்திதிப்ரவ்ருத்திகளும் தனக்கு அதீனமானவை என்பதைக் கண்ணன் த்ருஷ்டாந்தம் காட்டி நிரூபித்தல்.
7 அவற்றின் உத்பத்தி ப்ரளயங்களும் தன் அதீனமே என்று கூறல்.
8 ஸமஷ்டிவ்யஷ்டிரூபமாயுள்ள ஸ்ருஷ்டியின் முறையை விளக்குதல்.
9 கர்மானுகுணமாக ஸ்ருஷ்டிப்பதால் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் (பக்ஷபாதம், கருணையின்மை) விளையமாட்டா என்று நிரூபித்தல்.
10 தலைவனான தன்னால் தூண்டப்பட்டே மூலப்ரக்ருதி உலகனைத்தையும் படைக்கிறது எனல்.
11,12 ஆஸுரஸ்வபாவமுள்ளவர்கள் முற்கூறிய தன் பெருமையை உணராத அறிவிலிகளாய் அழிந்து போகிறார்கள் என்று கூறல்.
13 ஸ்வயம்ப்ரயோஜன பக்தி நிஷ்டர்களான மஹாத்மாக்களின் பெருமை.
14,15 ஸாதநபக்திநிஷ்டர்களான உபாஸகஜ்ஞானிகளின் பெருமை.
16-19 உபாஸனத்துக்குறுப்பாக – ஒருவனான தானே கார்யநிலையில் இவ்வுலகிலுள்ள பல பொருள்களை ஶரீரமாகக் கொண்டிருப்பதையும், அவற்றின் ஸத்தாஸ்திதி ப்ரவ்ருத்திகள் தன்னதீனம் என்பதையும் நிரூபித்தல்.
20,21 ஜ்ஞாநிகளுக்கு நேர் எதிர்த்தட்டானவர்களாய், தாழ்ந்த பலன்களை விரும்பும் அறிவிலிகளின் தன்மைகளை விவரித்தல்.
22 தன்னை நினைப்பது தவிர வேறொன்றறியாத மஹாத்மாக்களின் யோகக்ஷேமங்களைத் தானே வஹிப்பதாகக் கூறுதல்.
23 வேதாந்த விதிப்படி மற்ற தேவதைகளுக்கு அந்தர்யாமியாகத் தன்னை அறியாமல் அவர்களிடம் பக்தி செலுத்துகிறவர்களுக்கு அதனாலேயே மோக்ஷம் கிடைப்பதில்லை.
24 தேவதைகளைக் குறித்த யாகங்கள் பரமபுருஷனுக்கே ஆராதனமாகின்றன என அறிந்தவர்களுக்கு மோக்ஷமும், அப்படி அறியாதவர்களுக்கு அல்பாஸ்திர பலன்களுக்குமே கிடைக்கும்.
25 முற்கூறியபடி பலனில் வேறுபாடு அவரவர்களின் ஸங்கல்பத்தின் வேறுபாட்டாலே விளைகிறது.
26 தான் ஆராதனைக்கு மிக எளியவன் என நிரூபித்தல்.
27 பக்தியோகத்திற்கு அங்கமான அநுஸந்தானம் (பகவதர்ப்பணம்-ஶேஷத்வானுஸந்தானம்).
28 அவ்வநுஸந்தானத்தின் பலன் – தன்னை அடைதல்.
29,30 ஜன்மம், ஆகாரம், ஸ்வபாவம், ஜ்ஞாநம், ஒழுக்கம் ஆகியவற்றால் எத்தனை தாழ்ந்தவனாயினும் ஸ்வயம்ப்ரயோஜன பக்தியைச் செய்தானாகில் அவனிடம் கண்ணனின் ஈடுபாடு.
31 ஒழுக்கத்தில் குறைந்தவனானாலும் பக்தி செய்தால் விரைவில் தர்மாத்மாவாகி நற்பேறு பெறுவான்.
32,33 முற்பிறப்புக்களில் செய்த பாப மிகுதியாலே தாழ்ந்த பிறவியை எடுத்தவர்களும் தன்னை ஆஶ்ரயிப்பதாலேயே மோக்ஷமடையும்போது, உயற்பிறவியினர் தன்னை ஆஶ்ரயித்து மோக்ஷமடைவது நிச்சயம் என்று கூறி அர்ஜுனனை பக்தி செய்யும்படி விதித்தல்.
34 ஸாதனபக்தியின் தனித்தன்மைகளை விவரித்தல்.

——

10 – விபூதி யோகம்:

14) ஸ்வகல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்நஸ்வாதீநதாமதி:
பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா

பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
வண்ணம் விரித்துரைத்த வண்மையினைத் – திண்ணமாங்
கன்புறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
தின்புறவே யோது மெடுத்து.

1-3 தன்னை தேவாதிதேவனாக அநுஸந்திப்பதால், பக்தி உண்டாவதற்குத் தடையான பாபங்கள் நீங்கி, பக்தியுண்டாகும் என்று கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
4-8 தனது ஐஶ்வர்யம், கல்யாணகுணங்கள் ஆகியவற்றை அநுஸந்திப்பதால் பக்தி வளரும் என்பதை கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
9-11 பக்தியின் உச்சநிலையை அடைந்த ஸ்வயம்ப்ரயோஜன பக்திநிஷ்டனின் பெருமையை விளக்குதல்.
12-18 கண்ணனுடைய கல்யாண குணச்சேர்த்தியையும், செல்வச் சிறப்பையும் சுருக்கமாகக் கேட்ட அர்ஜுனன் அதன் விரிவைக் கேட்க விரும்பி வார்த்தை சொல்லுதல்.
12-15 கண்ணன் முன்ஶ்லோகங்களில் சுருங்கச் சொன்ன அர்த்தங்களில் தனக்குள்ள நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையால் அதில் அஸூயை இல்லாமலிருப் பதையும் அர்ஜுனன் காட்டுதல்.
16-18 விபூதிகளை விரிவாகச் சொல்லவேண்டுமென்று அர்ஜுனன் கண்ணனை வினவுதல்.
19 கண்ணன் தனது விபூதிகளை ஒவ்வொன்றாக விரிவாக வர்ணிப்பதும், கேட்பதும் இயலாதாகையால் முக்யமானவற்றைச் சுருக்கமாக வகைப்படுத்திக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை செய்தல்.
20 ஶ்லோகத்தின் முற்பாதியில் – தன்னைத் தன் விபூதியான மற்ற பொருள்களோடு அடுத்துள்ள ஶ்லோகங்களில் ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் – அவை தனக்கு ஶரீரமாகவும் தான் அவற்றுக்கு ஆத்மாவாகவும் இருப்பதே என்று காட்டி, பிற்பாதியாலே – அனைத்தையும் படைத்தளித்தழிப்பவனா யிருக்கை முதலான கல்யாணகுணங்களே யோகஶப்தத்தால் சொல்லப்படு கின்றன என்றும், அடுத்துள்ள ஶ்லோகங்களாலில் தன்னை மற்ற பொருள்க ளோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்கு அவை கார்யப்பொருளாகவும், தான் அவற்றுக்குக் காரணமாகவுமிருப்பது மற்றொரு ஹேதுவாகும் என்றும் கண்ணன் காட்டுதல்.
21-*39 பற்பல பொருள்களோடு கண்ணன் தன்னை ஒரே வேற்றுமையில் படித்தல்.
39* தன்னைப் பற்பல பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படித்ததற்குத் தான் அனைத்துக்கும் அந்தர்யாமியாயிருப்ப்தே காரணம் என்று நிகமனம் செய்தல்.
40 தன் விபூதிகளுக்கு எல்லையில்லாமையால் ஓரளவுக்கே அவற்றைச் சொன்னேன் என்று கூறல்.
41 இதுவரையில் சொல்லப்பட்ட விபூதிகள் – சொல்லப்படாதவையும் அவஶ்யம் சொல்லவேண்டியவையுமான மற்றும் பல முக்யவிபூதிகளுக்கு எடுத்துக்காட்டே என்று கூறி ப்ரகரணத்தை நிறைவுபடுத்தல்.
42 முக்யமானவை, அமுக்யமானவை என்னும் வாசியில்லாமல் பார்க்கும்போது, எல்லா உலகமும் தன்னுடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதியாலே தரிக்கப்படும் விபூதியே என்று கூறி அத்யாயத்தை முடித்தல்.

——-

11 – விஶ்வரூப தர்சனம்:

15) ஏகாதஶேஸ்வயாதாத்ம்யஸாக்ஷாத்காராவலோகநம்
தத்தமுக்தம் விதிப்ராப்த்யோர் பக்த்யேகோபாயதாததா

ஏகாதஶே – பதினோராமத்தியாயத்தில்,
ஸ்வயாதாத்ம்ய ஸாக்ஷாத்கார அவலோகநம் – தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண்,
தத்தம் உக்தம் – (அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது;
ததா – அவ்வண்ணமே,
விதிப்ராப்த்யோ – (பரம்பொருளை) அறிவது, (காண்பது), அடைவது ஆகியவை,
பக்த்யேகோபாயதா – பக்தியொன்றையே காரணமாகக் கொண்டவை (என்றும்),
உக்தம் – சொல்லப்பட்டது.

பார்த்தனுக்கு மாயனருள் கீதைப் பதினொன்றா
மோத்திவ் வுலகெல்லா முடம்பதனிற் – கோத்தபடி
காட்டுமது தன்னறிவு கண்டடைத றன்பத்தி
கூட்டுமதுஞ் சொல்லுங் குறித்து.

பார்த்தனுக்கு – அர்ஜுனனுக்கு,
மாயன் அருள் – மாயப் பிரானாகிய கண்ணன் அருளிய,
கீதை பதினொன்றாம் ஓத்து – கீதையின் பதினொன்றாம் அத்தியாயம்,
இவ்வுலகெல்லாம் – இவ்வுலகனைத்தையும்,
உடம்பதனில் – தன் சரீரத்தில்,
கோத்தபடி காட்டுமது – (கண்ணனின் ஒரு பகுதியாகக்) கோத்துக் கொண்டிருக்கும்படியைக் காட்டுவதாகும்.
தன் அறிவு கண்டு அடைதல் – தன்னை அறிவதும், காண்பதும், அடைவதுமாகிற பயன்களை,
தன் பத்தி கூட்டுமதும் – தன் விஷயமான பக்தியோகம் கூட்டிவைப்பதையும்,
குறித்துச் சொல்லும் – குறிக்கொண்டு கூறும்.

1-3 அர்ஜுனன் தனது நன்றியையும் ஆஸ்திக்யத்தையும் க்ருஷ்ணபக்தியையும் காட்டுகிறான்.
4 விஶ்வரூபத்தைக் காட்டும்படி அர்ஜுனனுடைய ப்ரார்த்தனை.
5-8 திவ்யசக்ஷுஸ்ஸை அர்ஜுனனுக்கு அளித்துத் தன் விஶ்வரூபத்தைக் கண்ண்னன் அவனுக்குக் காட்டுதல்.
9-13 விஶ்வரூப வர்ணனை.
14-30 அர்ஜுனன் விஶ்வரூபத்தின் பெருமைகளைக் கூறித் துதித்தல்.
31 அர்ஜுனனின் கேள்வி – (பயங்கர உருவத்தின் பயன்)
32-34 கண்ணனின் பதில் – (ஸ்வஸங்கல்ப ஶக்தியின் வீர்யம்)
35-46 அர்ஜுனனின் துதியும், மன்னிப்பு வேண்டுதலும், பிரார்த்தனையும்.
47-49 கண்ணனின் அபயப்ரதானம்.
50 கண்ணன் இயல்வான நான்கு தோள் திருமேனியை எடுத்துக்கொண்டு அர்ஜுனனைத் தேற்றியது.
51 அவ்வுருவைக் கண்ட அர்ஜுனன் தான் இன்புற்றுத் தன்னிலை பெற்றதைக் கூறுதல்.
52-55 கண்ணன் அர்ஜுனனுக்கு பக்தியோகத்தின் பெருமையையும் ஶுபாஶ்ரயமாயிருக்கும் திருமேனியின் பெருமையையும் பேசுதல்.

———–

12 – பக்தியோகம்:

16) பக்தே:ஶ்ரைஷ்ட்ய முபாயோக்திரஶக்தஸ்யாத்ம நிஷ்டதா
தத்ப்ரகாராஸ்த்வதிப்ரீதிர் பக்தேத்வாதஶ உச்யதே

பக்தே:ஶ்ரைஷ்ட்யம் – (ஆத்மோபாஸனத்தைக் காட்டிலும்) பகவதுபாஸனமாகிற பக்தியின் சிறப்பும்,
உபாயோக்தி: – அந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தலும்,
அஶக்தஸ்ய – பக்தியில் ஶக்தியில்லாதவனுக்கு,
ஆத்மநிஷ்டதா – ஆத்மோபாஸ னமும்,
தத் ப்ரகாரா: – கர்ம யோகம் முதலானவற்றுக்கு வேண்டியவைகளான குணங்களின் வகைகளும்,
பக்தே அதிப்ரீதி: து – தன் பக்தனிடம் மிகுந்த ப்ரீதியும்,
த்வாதஶே – பன்னிரண்டாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

பத்தி யறிவாற் கடக்கும் பலவகையு
மத்தி லுகப்பி னதிசயமு – முத்தி தரும்
பண்பி னருள்கீதை பன்னிரண்டா மோத்துரைக்குந்
திண்பயிலுந் சொல்லாற் செறிந்து.

முத்தி தரும் பண்பின் அருள் கீதை – வீடு பேற்றைத் தரும் இயல்பால் (கண்ணன்) அருளிய கீதையின்,
பன்னிரண்டாமோத்து – பன்னிரண்டாவது அத்தியாயம்,
பத்தியறிவாற்கு – பக்தியோகத்தை அறிபவனுக்கு,
அடக்கும் பல வகையும் – கைக்கொள்ளவேண்டிய பல குணங்களும்,
அத்தில் – அந்த பக்தியோகத்தில்,
உகப்பின் அதிசயமும் – (எம்பெருமானுக்குள்ள) அன்பின் மிகுதியும்,
திண் பயிலும் சொல்லால் செறிந்து உரைக்கும் – உறுதியானதாய் அனைவராலும் அனுஸந்திக்கத் தக்கதான சொற்களால் நன்றாகக் கூறும்.

1 பகவதுபாஸகர்கள், ஆத்மோபாஸகர்கள் என்னுமிருவரில் எவர் தம் பயனை விரைவில் அடைவர்கள்? என்னும் அர்ஜுனனின் கேள்வி.
2 “என்னையே ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பவர்கள் ஆத்மோபாஸகர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள்’ என்னும் கண்ணனின் பதில்.
3-5 முற்கூறிய ஜ்ஞானியைக் காட்டிலும் கைவல்ய நிஷ்டனின் தாழ்வைக் கண்ணன் விளக்குதல்.
6-7 தன்னை உபாஸிப்பவர்கள் சிறந்தவர்கள் என்று முற்கூறியதைக் கண்ணன் மிகத் தெளிவாகக் கூறுதல்.
8 “நீ என்னிடம் பக்தி செய்வாய்” என்று அர்ஜுனனைக் குறித்து விதித்தல்.
9 “என்னிடம் உறுதியான நெஞ்சைச் செலுத்த இயலவில்லையாகில் என் கல்யான குணங்களை அனுஸந்திப்பதாகிற அப்யாஸ யோகத்தின் மூலம் பக்தியையடையலாம்” என்று கூறல்.
10 “அப்யாஸ யோகத்தில் ஶக்தியில்லையாகில் என் விஷயமான கர்மங்களைச் செய்வதில் ஈடுபடுவதால் விரைவில் அப்யாஸ யோகத்தைப் பெற்று பக்தியைச் செலுத்தி என்னை அடையலாம்” என்று கூறல்.
11 “பக்தியோகத்தில் ஶக்தியில்லாதவன் அதை ஸாதித்துத் தரும் உபாய பரம்பரையில் எல்லை நிலமான கர்மயோகத்தை அநுஷ்டிக்க வேண்டும்” என்று கூறல்.
12 ஒன்பது, பத்து, பதினொன்று ஶ்லோகங்களை விளக்குதல்.
13-19 பலனில் விருப்பமற்றுச் செய்யப்படும் கர்மயோகத்தில் ஊன்றிநிற்பவன் கைக்கொள்ளவேண்டிய குணங்களை விவரித்தல்.
20 பக்திநிஷ்டன் தனக்கு மிகவினியவன் எனக்கூறல்.

———–

மத்யமஷட்கத்தின் ஸாரப்பொருள்:
பத்திவகை யாங்கறிந்து சேரப் பரன்பெருமை
யெத்தியலு மாய்நித் ததுவடிவி – லொத்தியலக்
காட்டியது பத்திநலங் கண்ணன் றருகீதை
மாட்டிடையா றொத்தின் வகை.

கண்ணன் தரு கீதை மாட்டு – கண்ணன் அருளிச் செய்த கீதையில்,
இடை ஆறு ஓத்தின் வகை – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எத்தியலுமாய் – கர்மயோகம் முழுவதையும் அநுஷ்டித்து,
நித்தது வடிவிலொத்தியல – நித்யமான ஆத்மஸ்வரூபத்தை நேரே காண்பதுபோன்ற காட்சியைக் கண்டு,
பத்தி வகை ஆங்கு அறிந்து – பக்தியோகத்தின் தன்மைகளை அதன்பின் அறிந்து,
பரன் பெருமை சேர – பரம் பொருளின் அனுபவத்தைப் பெறுவதற்காக,
பத்திநலம் – பக்தி யோகத்தின் பெருமைகளை, காட்டியது – விளக்கிற்று.

மூன்று ஷட்கங்களின் ஸாரப்பொருள்:
கன்ம முயிருணர்வாற் கட்டவரு முன்னாறு
நன்மையிறை பத்தி நடுவாறு – தன்மையுடன்
காயமுயி ரீசன் கருமமறி வன்புவகை
யேயவமைந் தேலுமீ றாறு.

முன் ஆறு – முதல் ஆறு அத்தியாயங்கள்,
கட்டவரும் – முயற்சி செய்ய உண்டாகும்,
கன்மம் உயிருணர்வால் – கர்மஜ்ஞாந யோகங்களால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்,
நடு ஆறு – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
நன்மை இறை பத்தி – சிறப்புமிக்க பரமாத்ம பக்தியோகத்தால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.
ஈறு ஆறு – கடைசியிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை – உடல், உயிர், ஈச்வரன், கர்மஜ்ஞான பக்தியோகங்கள்,
தன்மையுடன் – இவற்றின் தன்மைகளோடு,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.

—————

13 – க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

17) தேஹஸ்வரூபமாத்மாப்திஹேது ஆத்மவிஶோதநம்
பந்தஹேதுர்விவேகஶ்சத்ரயோதஶ உதீர்யதே

தேஹஸ்வரூபம் – தேஹத்தின் ஸ்வரூபமும்,
ஆத்மாப்திஹேது: – ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயமும்,
ஆத்மவிஶோதநம் – ஆத்மாவை ஆராய்ந்தறிதலும்,
பந்தஹேது: – (ஆத்மாவுக்கு அசித்தோடு) தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமும்,
விவேக: ச – (ஆத்மாவை அசித்திலிருந்து) பிரித்தநுஸந்திக்கும் முறையும்,
த்ரயோதஶே – பதிமூன்றாவது அத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப் படுகிறது.

ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
தாங்குடல மாருயி ராப்புறுத – னீங்குநெறி
தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
நன்மையுடன் சொல்லு நயந்து.

ஈங்கு – இந்த கடைசி ஷட்கத்தில்,
முதல் ஆகி ஏய்ந்த பதிமூன்றாம் ஓத்து – முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதிமூன்றாம் அத்தியாயம்,
ஆங்கு – இந்த ஸம்ஸாரத்தில்,
ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல் – ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்,
நீங்கு நெறி – அதிலிருந்து விடுபட வழியையும்,
தன்மையுடன் – அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்துடன்,
முற்றும் தகைமை பெற – மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்,
சோதித்து – ஆராய்ந்து,
நன்மையுடன் நயந்து சொல்லும் – சிறப்பாக விருப்பத்தோடு கூறும்.

1 ஶரீரமே க்ஷேத்ரம் எனப்படும்; அதை அறியும் ஜீவனே க்ஷேத்ரஜ்ஞன் எனப்படுவான்.
2 இரண்டுமே ஸர்வேஶ்வரனுக்கு ஶேஷமானவை என அறிவதே உண்மையறிவு.
3 இரண்டைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்போவதாகப் ப்ரதிஜ்ஞை.
4 இவ்வறிவு ஸகலப்ரமாண ஸித்தம்.
5,6 க்ஷேத்ரத்தைப் பற்றிய உண்மையறிவைச் சுருங்கக் கூறல்.
7-11 ஆத்மஜ்ஞான ஸாதனமான அமாநித்வம் முதலான இருபது குணங்களைக் கூறுதல்.
இது க்ஷேத்ரத்தினால் விளையும் கார்யத்தின் விளக்கமுமாகும்.

அமாநித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்
ஆசார்யோபாஸநம் ஶெளசம்ஸ்தைர்ய மாத்மவிநிக்ரஹ:

இந்த்ரியார்த்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச
ஜன்மம்ருத்யுஜராவ்யாதி து:கதோஷாநுதர்ஶநம்

அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டாநிஷ்டோபபத்திஷு

மயி சாநந்யயோகேன பக்திரவ்யபிசாரிணீ
விவிக்ததேஶஸேவித்வம் அரதிர் ஜநஸம்ஸதி

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்வஜ்ஞாநார்ததர்ஶநம்
ஏதத்ஜ்ஞாநமிதிப்ரோக்தம் அஜ்ஞாநம் யததோ (அ)ந்யதா

12-17 க்ஷேத்ரஜ்ஞன் எனப்படும் ஜீவஸ்வரூபத்தின் விளக்கம்.
18 கார்யத்தோடு கூடிய க்ஷேத்ரத்தையும், க்ஷேத்ரஜ்ஞனையும் அறிவதின் பலம்.
19-22 ஆத்மா ஶரீரத்தில் கட்டுப்பட்டிருப்பதற்குக் காரணம் ஸத்வாதிகுணங்களால் உண்டாகும் இன்பதுன்பங்களில் பற்றேயாகும்.
23 ப்ரக்ருதி புருஷர்களைப் பிரித்தறியும் விவேகஜ்ஞானத்தின் பலம் பிறவி நீங்குதலே.
24-25 பிரித்தறியும் விவேகிகளின் பல படிகள்.
26 தேஹமும் ஆத்மாவும் பிறவியிலிருந்தே அழுந்தக் கட்டப்பட்டிருப்பதால், அவற்றைப் பிரித்தறிவது அரிது.
27-33 தேஹாத்மாக்களைப் பிரித்தறியும் முறையாகிற விவேகத்தை விளக்குதல்.
34 க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞர்களைப் பிரித்தறியும் ஞானத்தின் பலம் ஆத்மப்ராப்தி எனக்கூறி அத்தியாயத்தை நிறைவுறுத்தல்.

————-

14 – குணத்ரய விபாகயோகம்:

18) குணபந்தவிதா தேஷாம் கர்த்ருத்வம் தந்நிவர்த்தநம்
கதித்ரயஸ்வமூலத்வம் சதுர்த்தஶ உதீர்யதே

குணபந்தவிதா – (ஸத்வம் முதலான மூன்று குணங்கள்) ஸம்ஸாரபந்தத்துக்குக் காரணமாகும் முறையும்,
தேஷாம் கர்த்ருத்வம் – அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மையும்,
தந்நிவர்த்தநம் – அந்த குணங்களை நீக்கும் முறையும்,
கதித்ரயஸ்வமூலத்வம் – (சிறந்த ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத்ப்ராப்தி என்னும்) மூன்று ப்ராப்யங்களும்
தன்னிடமிருந்தே கிடைக்கின்றன என்பதும்,
சதுர்த்தஶே – (கீதையின்) பதினாலாமத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப்படுகிறது.

முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
போதத் தியல்பாற் புரிந்து.

மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஓத்து – மிகச் சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம்,
முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் – (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில்
(தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்ற முறையும்,
அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் – அந்த குணங்களை நீங்கச் செய்யும் முறையையும்,
போதத்து இயல்பால் – அறிவிக்க வேண்டிய முறையில்,
புரிந்து – விருப்பத்தோடு,
கிளர்ந்து உரைக்கும் – உறுதியாகக் கூறும்.

1-2 இவ்வத்தியாயத்தில் கூறப்படும் அறிவைப் புகழ்தல்.
3-4 ஜீவனுக்கு ஶரீர ஸம்பந்தம்ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலும் அதற்குப் பின்பும் தன்னாலேயே செய்யப்படுகிறது என்று கண்ணன் உரைத்தல்.
5 முக்குணங்களே பிறவிகள் தொடர்வதற்குக் காரணம்.
6-8 ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களின் தனித்தன்மையையும் அவை ஜீவனைக் கட்டும் முறையையும் விளக்குதல்.
9 இக்குணங்கள் ஜீவனைக் கட்டுவதற்குக் காரணங்களில் முக்யமானதைக் காட்டுதல்.
10 ஒவ்வொரு ஶரீரத்தில் இக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கியிருப்பதால் அதன் விளைவுகளே அந்த உடலில் உண்டாகின்றன எனக் கூறல்.
11-13 முறையே முக்குணங்களும் மேலோங்கி நிற்பதை அவற்றின் கார்யங் கொண்டு அறியலாம் என்று விளக்குதல்.
14-15 முக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கியிருக்கும்போது மரணமடைந்தால் உண்டாகும் பலம்.
16-18 மிகுதியான ஸத்வ குணம் முதலானவற்றாலே விளையும் பலன்களை விளக்குதல். (இதுவரை குணங்கள் ஜீவனைக் கட்டும் முறை விளக்கப்பட்டது)
19 குணங்களின் கர்த்ருத்வம் (செயல் புரியும் தன்மை) அவசியம் அறியத்தக்கது.
20 குணங்களைக் கடந்து நிற்பவன், மரணம், தோற்றம், வான்பிணி, மூப்பு முதலானவை நீங்கப் பெற்று, மரணமற்ற தன் ஆத்மாவை அனுபவிக்கிறான்.
21 குணங்கடந்தவனுடைய உள் வெளி அடையாளங்களைப் பற்றியும், குணங்களைக் கடந்து நிற்பது எப்படி? என்பது பற்றியும் அர்ஜுனனின் கேள்வி.
22-25 அந்தக் கேள்விக்குப் பதிலாக குணங்கடந்தவனின் உள் வெளி அடையாளங்களை விளக்குதல்.
26 குணங்கடந்த நிலைக்குத் தன்னிடம் செய்யப்படும் ஏகாந்த பக்தியே முக்ய காரணம் என்று விவரித்தல்.
27 ஐஶ்வர்ய கைவல்ய பகவத்ப்ராப்திகள் தன்னாலேயே விளைபவை என விவரித்தல்.

———–

15 – புருஷோத்தம யோகம்:

19) அசிந்மிஶ்ராத்விஶுத்தாச்ச சேதநாத் புருஷோத்தம:
வ்யாபநாத்பரணாத்ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சதஶோதித:

அசிந்மிஶ்ராத் (சேதநாத்) – அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும்,
விஶுத்தாத் சேதநாத் ச – ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும்,
வ்யாபநாத் – (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும்,
பரணாத் – (அவர்களைத்) தாங்குகையாலும்,
ஸ்வாம்யாத் – (அவர்களை) உடையவனாயிருக்கையாலும்,
அந்ய: – வேறுபட்டவனான,
புருஷோத்தம: – புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
பஞ்சதஶோதித: – பதினைந்தாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டான்.

மன்னு மசித்தின் மருவியமர் சித்தினுமா
றுன்னு முயிர்வகையி லுத்தமனா – மன்னியவை
மீதுள் பரந்து பரித்திறையாய் மேவினனை
யோதும் பதினைந்தா மோத்து.

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் – அனாதிகாலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத சரீரத்தோடு கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும்,
மாறு உன்னும் உயிர் வகையில் – அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக் காட்டிலும்,
உத்தமனா மன்னி – மேற்பட்டவனாக விளங்கி,
அவை மீது உள் பரந்து – அவ்விரண்டையும் வ்யாபித்து,
பரித்து – அவற்றைத் தாங்கி,
இறையாய் – அவற்றை உடையவனாய்,
மேவினனை – பொருந்தியிருக்கும் புருஷோத்தமனான நாராயணனை,
பதினைந்தாம் ஓத்து – (கீதையின்) பதினைந்தாம் அத்யாயம்,
ஓதும் – கூறும்.

1 ஸம்ஸாரம் ஓர் அரசமரமாக உருவகப்படுத்தப்பட்டு அதை அறிந்தவனே வேதத்தை நன்கறிந்தவன் எனப்படுகிறது.
2 முற்கூறிய உருவகம் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
*3 இந்த மரத்திற்கு குணங்களில் பற்றே காரணமென்றும் குணங்கடந்த நிலையாலேயே இது அழிகிறதென்றும், அஜ்ஞானமே இதற்கு ஆதாரமென்றும் ஸம்ஸாரிகளால் அறியப்படுவதில்லை.
3*-*4 நல்லறிவால் விளைந்த ‘குணங்களில் பற்றின்மை’யாகிற ஆயுதத்தாலே இம்மரத்தை வெட்டி, ப்ராப்யமான ஆத்மா தேடத்தக்கது.
4* எம்பெருமானை ஶரணமடைவதன் மூலமே பற்றின்மையாகிற ஆயுதத்தைப் பெற்று ஸம்ஸாரத்தை வெட்டி வீழ்த்தலாம்.
5 எம்பெருமானை ஶரணமடைந்தவர்களுக்கு தேஹாத்ம மயக்கம் நீங்குகை, குணங்களில் பற்றை வெல்லுகை, ஆத்மஜ்ஞானத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்கை, மற்ற விஷயங்களில் விருப்பம் நீங்கப் பெற்றவர்களாகை, இன்ப துன்பங்களாகிற இரட்டைகளிலிருந்து விடுபடுகை முதலானவை அனைத்தும் எளிதாகி ஆத்மாநுபவமாகிற பலமும் ஸித்திக்கிறது.
6 பரிஶுத்தாத்ம ஸ்வரூபத்தின் பெருமை.
7 எம்பெருமானுடைய செல்வமாயிருக்கும் ஸம்ஸாரி ஜீவன் தான் சேர்த்து வைத்திருக்கும் புண்யபாபரூபமான விலங்குகளாலே வலியக்கட்டப் பெற்று, தன் ஶரீரமாகிற சிறையிலே அடைபட்டிருக்கிறான்.
8 அவன் ஒரு ஶரீரத்திலிருந்து மற்றொரு ஶரீரத்தில் புகுவது முதலான துன்பங்களை அனுபவிக்கிறான்.
9 இந்த்ரியங்களைக் கொண்டு அவன் விஷம் கலந்த தேன் போன்ற ப்ராக்ருத விஷயங்களை அனுபவித்து உழலுகின்றான்.
10 இத்துன்பங்களையெல்லாம் அவன் அனுபவிப்பதற்குக் காரணம் ஆத்மாபஹார மாகிற திருட்டே. இவன் தன்ஸ்வரூபத்தை அறியாமைக்குக் காரணம் தேஹத்தையே ஆத்மா என்று மயங்குவதே. இந்த மயக்கமில்லாமல் அறிவுக் கண்ணையுடையவர்கள் ஆத்மாவை அறிவே வடிவெடுத்ததாகக் காண்கிறார்கள்.
11 முன்ஶ்லோகங்களின் விளக்கம்.
12-14 ஸூர்யன், சந்திரன், அக்னி முதலானவற்றுக்குள்ளதான பொருள்களைப் ப்ரகாஶிக்கச் செய்யும் ஶக்தியும், பூமியின் தாரணஶக்தியும், சந்திரனின் போஷணஶக்தியும் ஜாடராக்னியின் ஜீர்ணம் செய்யும் ஶக்தியும் இதுபோல் உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்குமுள்ளதான ஒவ்வொரு கார்யத்தைச் செய்யும் ஶக்திகளும் எம்பெருமானுடையவையே. ஆகையால், ப்ராக்ருதப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானின் செல்வமே.
15 எல்லாப்பொருள்களையும் எம்பெருமானோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் அவன் அனைவருடைய ஹ்ருதயத்திலும் எழுந்தருளி நியமிப்பதே. வேதங்கள் இவ்வர்த்தத்தைச் சொல்லுகின்றன. எல்லா வேதவாக்யங்களாலும் முக்கியமாக அறியப்படுபவனும் அவற்றில் சொல்லப்பட்ட கர்மங்களுக்குப் பலம் அளிப்பவனும் எம்பெருமானே.
16 புருஷோத்தம வித்யையின் தொடக்கம்: க்ஷரபுருஷனாகிற ஸம்ஸாரி ஜீவன் அக்ஷரபுருஷனாகிற முக்தன் என்று ஜீவர்கள் இருவகைப்படுவர்.
17 அசித், ஸம்ஸாரிஜீவன், முக்தன் என்னும் மூன்று பொருளையும் வ்யாபித்து, தாங்கி நின்று, நியமிக்கும் பரமாத்மாவாகிற உத்தமபுருஷன் முற்கூறிய க்ஷராக்ஷரபுருஷர்களைக் காட்டிலும் வேறுபட்டவன்.
18 ஸம்ஸாரி ஜீவனைக் கடந்து நிற்பதாலும் முக்தனைக் காட்டிலும் மேலானவனாயிருப்பதாலும் ஶ்ருதிஸ்ம்ருதிகளில் “புருஷோத்தமன்” என்று பெயர் பெற்றவன் எம்பெருமானே.
19 இந்தப் புருஷோத்தம வித்யையை அறிந்தவன் எல்லா மோக்ஷோபாயங்களையும் அறிந்தவனாகிறான். பக்தி வகைகள் அனைத்தாலும் பக்தியைச் செய்தவனாகிறான்.
20 “உன் தகுதியைப் பார்த்து இந்தப் பரமரஹஸ்யமான ஶாஸ்த்ரத்தை உனக்கு உபதேஶித்தேன். இதை அறிந்து அறியவேண்டியதனைத்தையும் அறிந்தவனாகவும், செய்ய வேண்டியதனைத்தையும் செய்தவனாகவும் ஆவாயாக” என்று அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேஶித்து அத்தியாயத்தை நிறைவுபடுத்துகிறான்.

—-

16 – தேவாசுரஸம்பத் விபாக யோகம்:

20) தேவாஸுரவிபாகோக்திபூர்விகா ஶாஸ்த்ரவஶ்யதா
தத்வாநுஷ்டாநவிஜ்ஞாநஸ்தேம்நே ஷோடஶ உச்யதே

தத்வாநுஷ்டாநவிஜ்ஞாநஸ்தேம்நே – (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டாநத்தையும்
பற்றிய அறிவை உறுதிப்படுத்துவதற்காக,
தேவாஸுர விபாக உக்திபூர்விகா – (மனிதர்க்குள்) தேவப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இரு பிரிவுகள்
இருப்பதை முன்னிட்டுக்கொண்டு,
ஶாஸ்த்ரவஶ்யதா – (மனிதன்) சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மை,
ஷோடஶே – (கீதையின்) பதினாறாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
நன்மைசேர் சாத்திரத்தி னாடுதலும் – தொன்மை
யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
யுரைக்கும் பதினாறா மோத்து.

கீதை பதினாறாம் ஓத்து – கீதையின் பதினாறாம் அத்தியாயம்,
அங்கு தொன்மை உரைக்கு – அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப் பற்றியும்
அதை (அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின்,
அறிவு உரைப்பு காட்டுதற்கு – அறிவு உறுதிப்படுவதற்காக,
தன்மையால் தேவர் அசுரர் என சார்பிறவி – (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகை பிறவிகளாகப் பிரிவுபட்டிருப்பதையும்,
நன்மை சேர் சாத்திரத்தின் நாடுதலும் – நன்மையை அடைவிக்கும் சாஸ்திரத்திற்கு வசப்பட்டிருக்கும் தன்மையையும்,
உரைக்கும் – விளக்குகிறது.

1-3 தெய்வப்பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்.
1. பயமின்மை,
2. மனத்தின் பரிசுத்தி,
3. (ப்ரக்ருதியினின்றும் நீங்கிய) ஆத்மஸ்வரூபத்தைச் சிந்தித்திருத்தல்,
4. நல்லவழியில் தேடிய பொருளை நல்லோர்களுக்களித்தல்,
5. மனத்தை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
6. (பலனில் பற்றற்று பகவதாராதனமாகப்) பஞ்ச மஹாயஜ்ஞம் முதலானவற்றை அனுஷ்டித்தல்,
7. வேதாத்யயனத்தில் ஈடுபடுதல்,
8. ஏகாதசி உபவாஸம் முதலான தவங்களில் ஈடுபடுதல்,
9. மனம் மொழி மெய்களால் ஒருபடிப்பட்டிருத்தல்,
10. எந்த ஜீவராசியையும் துன்புறுத்தாமை,
11. ஜீவராசிகளுக்கு நன்மையான உண்மையையே உரைத்தல்,
12. பிறரைத் துன்புறுத்துவதில் மூட்டும் கோபம் இல்லாதவனாயிருக்கை,
13. தனக்கு நன்மையை விளைக்காத உடைமைகளைக் கைவிடுதல்,
14. (மனம் தவிர்ந்த) இந்த்ரியங்களை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
15. (பிறர்க்குத் தீங்கு விளைக்கும்) கோட்சொல்லுதலைத் தவிர்த்தல்,
16. ஜீவராசிகளின் துன்பங் கண்டு பொறாமலிருத்தல்,
17. விஷயங்களில் பற்றின்மை,
18. (நல்லோர்கள் அணுகலாம்படி) மென்மையுடனிருக்கை,
19. தகாத செயல்களைச் செய்வதில் வெள்கியிருத்தல்,
20. அருகிலிருக்கும் அழகிய பொருள்களையும் ஆசைப்படாமை,
21. (தீயவர்களால்) வெல்லவொண்ணாமை,
22. (துன்புறுத்துபவர்களிடமும்) பொறுமை,
23. (பேராபத்து வந்தாலும்) செய்யவேண்டியதில் உறுதியாயிருக்கை,
24. (மநோவாக்காயங்களில் சாஸ்த்ரங்களில் சொல்லிய) பரிசுத்தியாகிற அனுஷ்டானத் தகுதியை உடையவனாயிருக்கை,
25. பிறர் நற்செயல்களைத் தடுக்காமை,
26. தகாத கர்வம் இன்மை ஆகிய இருபத்தாறு குணங்கள்.
4 அஸுரப் பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்:
1. (தார்மிகன் என்னும்) புகழைப்பெற தர்மத்தை அநுஷ்டிப்பது,
2. (ஶப்தாதி விஷ்யங்களை அனுபவிப்பதனால் உண்டாகும்) செருக்கு,
3. அதிகமான கர்வம்,
4. (பிறரைத் துன்புறுத்தம்) கோபம்,
5. (நல்லோர்களை வெறுப்படையச் செய்யும்) கடுமை,
6. தத்வ விஷயத்திலும், செய்யத்தக்கது அல்லது தகாத விஷயத்திலும் அறிவின்மை ஆகிய ஆறு குணங்கள்.
*5 எம்பெருமான் ஆணையைப் பின் செல்வதாகிற தேவர்களுக்குரிய செல்வம் ஸம்ஸார விடுதலைக்கும், எம்பெருமானுடைய ஆணையை மீறுவதாகிற அசுரர்க்குரிய செல்வம் தாழ்ந்த கதிகளை அடைவதற்கும் உறுப்பாகின்றன.
5* அர்ஜுனன் தேவர்க்குரிய செல்வத்தைப் பெற்றவனே என்று கூறி அவனது வருத்தத்தைப் போக்குதல்.
6 தேவர்க்குரிய ஆசாரம் கர்மஜ்ஞான பக்தியோகங்களைச் சொல்லும்போது விரிவாகக் கூறப்பட்டது. அசுரர்க்குரிய ஆசாரம் மேலே (18-வது ஶ்லோகம் வரை) சொல்லப்படுகிறது.
7
1) அசுரப்பிறவிகள், ஐஶ்வர்ய ஸாதனமாகவும், மோக்ஷஸாதனமாகவும் இருக்கும் வைதிக தர்மத்தை அறியமாட்டார்கள்,
2) அவர்களிடம் ஶுத்தி இருக்காது,
3) ஸந்த்யாவந்தனம் முதலான ஆசாரமும் அவர்களிடம் இருக்காது.
4) உண்மை உரைத்தலும் அவர்களிடம் இருக்காது.
8
1) அசுரர்கள் உலகம் ப்ரஹ்மாத்மகம், ப்ரஹ்மத்தில் நிலைநிற்பது, ப்ரஹ்மத்தால் நியமிக்கப்படுவது என்று சொல்வதில்லை.
2) ஆண், பெண் சேர்க்கையால் உண்டாகாதது எதுவுமில்லையாகையால்
உலகனைத்தும் காமத்தையே காரணமாகக் கொண்டது என்று கூறுகிறார்கள்.
9 அசுரர்கள் தேஹத்திலும் வேறுபட்ட ஆத்மாவை அறியாமல் கொடிய செயல்களைச் செய்பவர்களாய், உலகம் அழிவதற்குக் காரணமாகிறார்கள்.
10 அசுரர்கள் காமத்தை நிறைவேற்ற அநியாய வழியில் தேடப்பெற்ற பொருள்களைக் கொண்டு சாஸ்த்ரத்திற்கு முரண்பட்ட விரதங்களைக் கொண்டவர்களாய், டம்பம், துரபிமானம், மதம் ஆகியவற்றோடு கூடியவர்களாய்ச் செயல்படுகிறார்கள்.
11 அசுரர்கள் அளவிடவொண்ணாத கவலைகளையுடையவர்களாய், காமாநுபவத் தையே பரம புருஷார்த்தமாக நினைப்பவர்கள்.
12
1) அசுரர்கள் நூற்றுக்கணக்கான ஆஶாபாஶங்களால் கட்டப்பட்டவர்கள்.
2) காமத்திலும், கோபத்திலுமே ஊன்றி நிற்பவர்கள்.
12. காமாநுபவத்திற்குத் தவறான வழிகளில் பொருளை விரும்பித் தேடுகிறார்கள்.
13 அசுரர்கள் தங்களுடைய இஷ்டப்ராப்தி தம் திறமையாலேயேயொழிய முன்வினையால் அல்ல என்று மயங்கி, காமாநுபவத்தில் பெற்றதையும், பெறவேண்டியதையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
*14 அசுரர்கள் ‘ஶத்ரு நிரஶனம்’ முதலான அநிஷ்ட நிவ்ருத்திகளும் தம் திறமையாலேயேயொழிய முன் வினையால் அல்ல என்று மயங்கியிருக்கிறார்கள்.
14*-15 அசுரர்கள் முற்கூறிய தம் திறமையும், மற்றும் பல திறமைகளும் தமக்கு இயல்பாக உள்ளதேயொழிய, புண்யத்தால் உண்டானதன்று என்று மயங்கியிருக்கிறார்கள்.
16 அசுரர்கள் பல கவலைகளையும், மயக்கங்களையும், புலனின்பங்களில் ஈடுபாட்டையும் உடையவர்களாயிருக்கையாலே அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
17
1) அசுரர்கள் தம்மைத்தாமே பெருமைபேசிக் கொள்பவர்கள்.
2) பணிவில்லாமல் நிமிர்ந்து நிற்பவர்கள்.
3) பணத்தினாலும் (கல்வி, குடிப்பிறப்பு ஆகியவற்றால் உண்டான)
அபிமானத்தாலும் விளையும் கர்வத்தை உடையவர்கள்.
4) புகழையே பயனாகக் கொண்டு சாஸ்த்ர விதிக்கு முரணாக டம்பத்திற்காக யாகம் செய்கிறார்கள்.
18 அசுரர்கள் அஹங்காரத்தையும், தன் பலத்தையும், கர்வத்தையும் கோபத்தையும் பற்றி நிற்பவர்களாய், அனைத்தையும் செய்விக்கும் பகவானிடத்தில் பொறாமையுடையவர்களாய் யாகம் செய்கிறார்கள்.
19 பகவானைத்வேஷிப்பவர்களாய், கொடியவர்களாய், மனிதர்களில் கடையானவர்களாய், அமங்களாமானவர்களான அவ்வசுரர்களை எம்பெருமான் பிறவிகளில், அதிலும் ஆஸுரப் பிறவிகளிலேயே தள்ளுகிறான்.
20 முற்கூறியபடி ஆஸுரப்பிறவிகளடைந்த அசுரர்கள் விபரீதஜ்ஞானம் வளரப் பெற்றவர்களாய், மேன்மேலும் தாழ்ந்த கதிகளையே அடைகிறார்கள்.
21 ஆஸுரத்தன்மைக்கு நுழைவாயிலாயிருக்கும் காமம், க்ரோதம், லோபம் என்னும் மூன்றையும் நல்லவர்கள் அவசியம் கைவிடவேண்டும்.
22 இம்மூன்றையும் கைவிடுபவன் தனது நன்மைக்கு முயற்சி செய்து பகவானையே அடைகிறான்.
23 ஆஸுரத்தன்மைக்கு மூலகாரணமான முற்கூறிய மூன்றைக்காட்டிலும் முக்கியமான காரணம் சாஸ்திர நம்பிக்கையின்மையே; சாஸ்திர விதியைக் கைவிடுபவன் இம்மை மறுமைப் பயன்களையும், மேலான கதியையும் அடையவே மாட்டான்.
24 ஆகையால், கைக்கொள்ளத்தக்கதையும் தகாததையும் நிர்ணயிப்பதில் சாஸ்த்ரமே (வேதமே) ப்ரமாணம். ஆகையால் வேதத்தில் சொல்லப்பட்ட புருஷோத்தமனாகிற தத்துவத்தையும், அவனை அடைய உபாயமான தர்மத்தையும் கைக்கொள்ள வேண்டும்.

———–

17 – ஶ்ரத்தாத்ரய விபாக யோகம்:

21) அஶாஸ்த்ரமாஸுரம்க்ருத்ஸ்நம் ஶாஸ்த்ரீயம் குணத: ப்ருதக்
லக்ஷணம் ஶாஸ்த்ரஸித்தஸ்யத்ரிதா ஸப்ததஶோதிதம்

க்ருத்ஸ்நம் அஶாஸ்த்ரம் – ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆஸுரம் – அஸுரர்க்குரியது (ஆகையாலே பயனற்றது என்றும்),
ஶாஸ்த்ரீயம் – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம்,
குணத: – (ஸத்வரஜஸ்தமோ) குணங்கள் மூன்றையிட்டு,
ப்ருதக் – மூன்று விதமாயிருப்பது என்றும்,
ஶாஸ்த்ரஸித்தஸ்ய – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட யாகம் முதலான் கர்மங்களுக்கு,
த்ரிதா லக்ஷணம் – “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள்
(தாம் சேர்வதன் மூலம் அவற்றை மற்ற கர்மங்களினின்றும் வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன (என்னும் விஷயமும்),
ஸப்ததஶோதிதம் – பதினேழாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசு நெறி
சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
வோர்ந்தே பதினேழா மோத்து.

சாத்திரந்தான் இன்மை – சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆசுரம் ஆம் – அசுரர்க்குரியதாகும்;
சாத்திரத்தில் தேசுடைய கன்மம் – சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்,
செறி குணத்தால் மூவகையா – (தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களையிட்டு மூவகையாகவும்,
பேசு நெறி இம்முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா – (சாஸ்த்ரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்)
இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்,
பதினேழாம் ஓத்து – பதினேழாம் அத்தியாயம்,
ஓர்ந்தே செப்புமே – ஆராய்ந்து கூறும்.

1 ஶாஸ்த்ரவிதி இல்லாமற் போனாலும் ஶ்ரத்தையோடு செய்யப்படும் கர்மங்களைப் பற்றி அர்ஜுனனின் கேள்வி.
2 ஶாஸ்த்ரங்களை ஒட்டியிருக்கும் ஶ்ரத்தை குணங்களையிட்டு கர்மம் மூவகைப்படுகிறது.
3 ஶ்ரத்தை எப்படிப்பட்டதோ அதற்குத்தக்க பலனே கிடைக்கும்.
4 ஸத்விக ராஜஸ தாமஸர்களால் ஆராதிக்கப்படுபவர்கள்.
5-6 ஶாஸ்த்ரவிதிக்கு முரணான கர்மங்கள் பகவதாஜ்ஞையை மீறுவதால் எப்பயனையும் விளைப்பதில்லை என்பதோடல்லாமல் அனர்த்தத்தையும் விளைக்கின்றன.
7 ஸத்வரஜஸ்தமோ குணங்களையிட்டு ஆஹாரமும், தவமும், தானமும் மூவகைப்பட்டிருக்கும் என்று கூறுதல்.
8 ஸாத்விக ஆஹாரத்தின் விளக்கம்.
9 ராஜஸ ஆஹாரத்தின் விளக்கம்.
10 தாமஸ ஆஹார விளக்கம்.
11 ஸாத்விக யாக விளக்கம்.
12 ராஜஸ யாக விளக்கம்.
13 தாமஸ யாக விளக்கம்.
14 உடலால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
15 வாக்கால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
16 மனத்தால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
17 ஸாத்விக தவத்தின் விளக்கம்.
18 ராஜஸ தவத்தின் விளக்கம்.
19 தாமஸ தவத்தின் விளக்கம்.
20 ஸாத்விக தானத்தின் விளக்கம்.
21 ராஜாஸ தானத்தின் விளக்கம்.
22 தாமஸ தானத்தின் விளக்கம்.
23 வைதிக கர்மங்கள் “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று ஶப்தங்களோடு இணைந்திருக்க வேண்டும் என்னும் வைதிக கர்ம லக்ஷணம்.
24 மூன்று ஶப்தங்களில் முதலாவதான ப்ரணவம் வைதிக கர்மங்களோடும், வேதங்களொடும், மூவர்ணத்தவர்களோடும் சேர்ந்திருக்கும் முறை.
25 வைதிக கர்மம் முதலான மூன்றுக்கும், “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி; மோக்ஷஸாதனமான கர்மங்களுக்கு “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்திருக்கை லக்ஷணம்.
26 “ஸத்” என்னும் சொல்லின் வழக்குகள் (ப்ரயோகங்கள்).
27 வைதிக கர்மங்கள் முதலான மூன்றுக்கும் “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி; ப்ராக்ருத பல ஸாதனங்களுக்கு “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்ந்திருக்கை லக்ஷணம்.
28 ஶாஸ்த்ரத்தையொட்டிச் செய்யப்படுவதானாலும் ஶ்ரத்தையில்லாமல் செய்யப்படும் கர்மம் “அஸத்” என்று சொல்லப்படும். அதனால் எப்பலனும் இல்லை.

———–

18 – மோக்ஷோபதேச யோகம்:

22) ஈஶ்வரே கர்த்ருதாபுத்திஸ்ஸத்வோபாதேயதாந்திமே
ஸ்வகர்மபரிணாமஶ்ச ஶாஸ்த்ரஸாரார்த்த உச்யதே

ஈஶ்வரே கர்த்ருதாபுத்தி: – கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவும்,
ஸத்வ உபாதேயதா – ஸத்வ குணம் கைக்கொள்ளத்தக்கது என்னும் விஷயமும்,
ஸ்வ கர்மபரிணாம: – (முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும்) ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதும்,
ஶாஸ்த்ரஸாரார்த்த ச – இந்த கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்திப்ரபத்திகளும்,
அந்திமே – கீதையின் கடைசியான பதினெட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
சாருங்க் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
றோரும் பதினெட்டா மோத்து.

செய்கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும் – அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஶ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்,
மெய்கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும் – உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்,
உய்கருமம் சாரும் கதியும் – முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதையும்,
இச்சாரத்தின் சாரமும் – ஶாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்திப்ரபத்திகளே என்பதையும்,
பதினெட்டாம் ஓத்து – (கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்,
உற்று ஓரும் – நன்கு ஆராய்ந்துரைக்கும்.

1 ஸந்யாஸ த்யாகங்கள் ஒன்றா வெவ்வேறா, அவற்றின் ஸ்வரூபம் என்ன என்று அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
2, 3 ஸந்யாஸ த்யாகங்களைப் பற்றிய அறிவாளிகளின் கருத்துக்கள்;
4-6 த்யாகம், ஸந்யாஸம் எனும் இரண்டும் ஒன்றே; கர்மங்களினுடைய ஸ்வரூபத்யாகம் தவறானது. ஸங்கல்பத்தையும் (கர்மம் என்னுடையது என்னும் எண்ணத்தையும்), பலனில் விருப்பத்தையும் விட்டு, கர்மங்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டியவையே.
7 கர்மஸ்வருபத்யாகம் தாமஸத்யாகம் (தமோகுணத்தால் விளைவது)
8 உடலுக்கு வருத்தம் விளையும் என்னும் அச்சத்தால் கர்மத்தை விடுவது ராஜஸத்யாகம். அதற்குப் பலனில்லை.
9 பலஸங்கங்களை மட்டும் விட்டு நித்யநைமித்திக கர்மங்களை அனுஷ்டிப்பது ஸாத்விகத்யாகமாகும்.
10 ஸாத்விகத்யாகத்தோடு கூடியவனுடைய ஆத்மகுணங்கள்.
11,12 கர்மபலத்யாகமே உண்மையான த்யாகமாகும். அத்தகையவனிடம் கர்மத்தின் பலன் ஒட்டாது. (இதுவரை அர்ஜுனனின் கேள்விக்குப் பதில் உரைக்கப்பட்டது.)
13-15 கர்த்ருத்வத்யாகத்தை ப்ரஸ்தாபித்தல், கர்மங்களுக்கு ஐந்து காரணங்களைக் காட்டுதல், ஐந்தாவது காரணமான பரமாத்மாவே ப்ரதான காரணம் என்று கூறுதல். (பராயத்தாதிகரணம்)
16,17 கர்த்ருத்வத்யாகத்தை விளக்குதல். (இந்தஶ்லோகம் வரை ‘கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே’ என்னும் அறிவு விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்)
18 கர்மங்களைப் பற்றிய வேதவிதி -ஜ்ஞாநம், ஜ்ஞேயம், ஜ்ஞாதா என்னும் மூன்றுடன் கூடியது. கர்மத்தின் வகை கரணம், கர்மா, கர்த்தா என்று மூன்று.
19 ஜ்ஞாநம் (கர்மத்தைப் பற்றிய அறிவு), கர்மம் (செய்யப்படும் கர்மம்), கர்த்தா (கர்மத்தைச் செய்பவன்) ஆகிய ஒவ்வொன்றும் முக்குணங்களையிட்டு மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
20 ஸாத்விக ஜ்ஞாநத்தின் விளக்கம்.
21 ராஜஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
22 தாமஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
23 ஸாத்விக கர்மத்தின் விளக்கம்.
24 ராஜஸ கர்மத்தின் விளக்கம்.
25 தாமஸ கர்மத்தின் விளக்கம்.
26 ஸாத்விக கர்த்தாவின் விளக்கம்.
27 ராஜஸ கர்த்தாவின் விளக்கம்.
28 தாமஸ கர்த்தாவின் விளக்கம்.
29 புத்தி, த்ருதி ஆகியவை குணத்தையிட்டு மூவகைப்படும் என்று கூறுதல்.
30 ஸாத்விக புத்தியின் விளக்கம்.
31 ராஜஸ புத்தியின் விளக்கம்.
32 தாமஸ புத்தியின் விளக்கம்.
33 ஸாத்விக த்ருதியின் விளக்கம்.
34 ராஜஸ த்ருதியின் விளக்கம்.
35 தாமஸ த்ருதியின் விளக்கம்.
36,37 ஸுகம் குணத்தையிட்டு மூவகைப்படுவதை விளக்கத் தொடங்கி ஸாத்விக ஸுகத்தின் விளக்கம்.
38 ராஜஸ ஸுகத்தின் விளக்கம்.
39 தாமஸ ஸுகத்தின் விளக்கம்.
(ஶ்லோக 18 முதல் 39 வரையில் ஸத்வகுணமே கைக்கொள்ளத்தக்கது என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்).
40 பத்த ஜீவர்களில் இந்த முக்குணங்களிலிருந்து விடுபட்டவன் எவனுமில்லை.
41 நாலு வர்ணத்தவர்களுக்கும் அவரவர் குலத்துக்கேற்றபடி தொழில்களையும், ஜீவனோபாயங்களையும் விளக்கத் தொடங்குதல்.
42 ப்ராம்மணருக்குரிய செயல்கள்.
43 க்ஷத்ரியருக்குரிய செயல்கள்.
44 வைசிய, சூத்ரர்களுக்குரிய செயல்கள்.
45 அவனவன் வர்ணத்துக்குரிய கர்மங்களில் நிலைநிற்பதால் மோக்ஷத்தையே அடையலாம் என்று விளக்கத் தொடங்குகிறான்.
46 அந்தந்த வர்ணத்துக்குரிய கர்மம் பரமாத்மாவுக்கு ஆராதனமாகையால் மோக்ஷகாரணமாகும்.
47 கர்மயோகமே ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும் சிறந்தது. அதை அநுஷ்டிப்பவன் ஸம்ஸாரத்தை அடையமாட்டான்.
48 ஜ்ஞானயோகத்தைச் செய்யத் தகுதியுள்ளவனுக்கும் கர்மயோகத்தை அநுஷ்டிப்பதே சிறந்தது.
49 கர்மயோகத்தை அனுஷ்டிப்பதாலேயே ஜ்ஞாநயோகத்தின் பலனாகிய தியான நிஷ்டையை அடையலாம்.
50 இந்தத் தியான நிஷ்டையால் ஆத்மதரிசனத்தைப் பெறும் வழியைக் கூறத் தொடங்குதல்.
51-53 ஆத்ம தரிசனத்தைப் பெறும் வழியைச் சுருக்கமாக விளக்குதல்.
54 ஆத்ம ஸாக்ஷாத்காரத்தாலே பரமபுருஷன் விஷயத்தில் பரபக்தி விளையும்.
55 பரபக்தியாலே பரமபுருஷனை உள்ளபடி அறிகையாகிற பரஜ்ஞாநத்தைப் பெற்று, அதற்குப் பின் அந்தப் பரபக்தியின் முற்றிய நிலையான பரமபக்தியாலே முக்தி நிலையில் பரமபுருஷனோடு ஸாயுஜ்யம் பெறுகிறான் ஜீவன்.
56 காம்யகர்மங்களையும் முற்கூறியபடி மூன்று வகைப்பட்ட பரித்யாகத்தோடு அனுஷ்டித்தால் மோக்ஷபலனை அடையலாம்.
57 ‘மூவகைப்பட்ட பரித்யாகங்களோடு என்னிடம் நெஞ்சை வைத்து உனக்குரிய யுத்தம் முதலான கர்மங்களைச் செய்வாயாக’ என்று அர்ஜுனனை நியமிக்கிறான்.
58 ‘முற்கூறியபடி கர்மங்களைச் செய்தால் ஸம்ஸாரத் துன்பங்களைத் தாண்டலாம், செய்யாவிட்டால் ஆத்மநாசத்தையே அடைவாய்’ என்கிறான்.
59 எப்படியாயினும் நீ போர் புரிவதைத் தவிர்க்க முடியாது என்கிறான்.
60 நீ போர் புரிய மாட்டேன் என்று உறுதிகொண்டாலும் உன் சரீரம் உன்னைப் போர் புரியும்படி நியமித்துவிடும் என்கிறான்.
(இதுவரையில் தனக்குரிய கர்மத்தால் மோக்ஷத்தையே அடையலாம் என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்.)
61 எல்லா உயிர்களும் ஸர்வேஶ்வரனான என்னால் ஹ்ருதயத்திலிருந்து பூர்வகர்மங்களை அநுஸரித்து சரீரத்தின் வழியில் செல்லும்படி நியமிக்கப்படு கிறார்கள் என்கிறான்.
62 அந்தப் பரமாத்மாவான என்னையே எல்லாவகையாலும் சரணமடைவாய். என் அருளாலே எல்லாக்கர்மங்களிலிருந்தும் விடுபட்டுப் பரமபதத்தையும் அடைவாய் என்கிறான்.
63 நான் இதுவரையில் மோக்ஷஸாதனமாகச் சொன்னவைகளில் உன் தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்றதை நீ கைக்கொள்வாய் என்கிறான்.
64,65 – 62வது ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட சரணாகதியை உடனே அர்ஜுனன் ஏற்றுக்கொள்ளாமையால் ப்ரவ்ருத்திபரனான அவனுக்கு பக்தியோகத்தை விதிக்கிறான்.
66 சென்ற ஶ்லோகத்தில் விதிக்கப்பட்ட பக்தியோகத்திற்கு அங்கமாக சரணாகதி சொல்லப்படுகிறது.

(இதுவரை கீதாபாஷ்யத்தையொட்டி 62வது ஶ்லோகம் முதல் 66வது ஶ்லோகம் வரை சுருக்கம் சொல்லப்பட்டது.
கத்யங்களில் எம்பெருமானார் திருவுள்ளம் பற்றியபடி அவற்றின் சுருக்கம் பின்வருமாறு.)

62. ஸர்வேஶ்வரனை ஜீவன் பற்றும் பற்றாகிற ஸ்வகத ஸ்வீகாரம் விதிக்கப்படுகிறது.
63. கர்மஜ்ஞானபக்தி யோகங்கள், தான் பற்றும் பற்றில் உபாய புத்தியுடன் ஈஶ்வரனைச் சரணமடைவது ஆகிய இந்த மோக்ஷோபாயங்களில் ஏதாவதொன்றைக் கைக்கொள்வாய் என்கிறான்.
64,65. அர்ஜுனன் வாளாவிருந்ததைக் கண்டு பக்தியோகமே அவனுக்குத் தக்கது என்று நினைத்து பக்தியோகத்தை அவனுக்கு விதிக்கிறான்.
66. “ஸர்வஸ்வாமியாய், அனைவரையும் நியமிக்கும் எம்பெருமான் அவனுக்கு அத்யந்த பரதந்த்ரனான என்னிடம் என்னை ரக்ஷித்துக்கொள்ளும் பொறுப்பை விட்டுவிட்டானே’ என்று கலங்கிய அர்ஜுனனுக்கு ‘இந்த எல்லா உபாயங்களிலும் உபாயபுத்தியை வைக்காமல் என்னைச் சரணடைந்தால், நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்” என்கிறான்.
(கீதார்த்த ஸங்க்ரஹத்தில் இதுவே ஶாஸ்த்ரார்த்தம் எனப்பட்டது.)

67 ‘நீ இவ்வர்த்தத்தை தகுதியில்லாதவர்களுக்கு உபதேசிக்காதே’ என்று கூறுகிறான்.
68 ‘தகுதியுள்ளவர்களுக்கு இந்த ஶாஸ்த்ரத்தை அவசியம் பொருளுடன் உபதேசிக்க வேண்டும்’ என்றும், ‘அப்படி உபதேசிப்பவனுக்கு மோக்ஷபலனே ஸித்திக்கும்’ என்றும் கூறுகிறான்.
69 ‘இந்த ஶாஸ்த்ரத்தை வ்யாக்யானம் செய்பவன் என்னிடம் பரமபக்தியை அடைந்து என்னையே அடைவான் என்று கூறியது பொருந்துமோ’ என்னும் ஐயம் எழ, ‘இந்த ஶாஸ்த்ரத்தை பக்தர்களுக்குத் தெரிவிப்பதாலேயே ஒரு மஹாத்மாவான ஜ்ஞாநியின் மனநிலையை பெற்றுவிடும் அந்த உபந்யாஸகனைக் காட்டிலும் எனக்கு இனியது செய்பவனோ இனியவனோ முக்காலத்திலும் வேறொருவன் இல்லையாகையாலே இது பொருந்தியதே” என்று சென்ற ஶ்லோகத்தை விளக்குகிறான்.
70 “ஓர் ஆசார்யனிடமிருந்து இந்த ஶாஸ்த்ரத்தை அர்த்தத்தோடு கேட்பவன் உபாஸகஜ்ஞானியை ஒத்தவனாகிறான்” என்று கூறுகிறான்.
71 “இந்த ஶாஸ்த்ரத்தை ஓர் ஆசார்யனிடமிருந்து (மூலத்தைக்) கேட்பதை மட்டும் செய்பவன் என்னிடம் பக்திக்குத் தடையான பாபங்கள் நீங்கப் பெற்று இதன் பொருளையும் உணரலாம்படி பக்தர்களின் கூட்டத்தில் சேரப்பெறுகிறான்” என்கிறான்.
72 “இந்த ஶாஸ்த்ரத்தை ஒருமுகப்பட்ட மனத்தோடு கேட்டாயா? அறிவின்மையால் உனக்கு விளைந்த மயக்கம் தீர்ந்ததா?” என்று கண்ணன் அர்ஜுனனைக் கேட்கிறான்.
73 “உன்னருளால் என்னுடைய விபரீதஜ்ஞாநம் அழிந்தது. உண்மையறிவை அடைந்து ஐயம் நீங்கப்பெற்று நிலைநின்றவனானேன். உன் வார்த்தைப்படி போர் புரிகிறேன்” என்று அர்ஜுனன் கூறுகிறான்.
74-78 ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரனுக்கு “கண்ணனும் அர்ஜுனனும் இருக்குமிடத்தில்தான் வெற்றி” என்னும் தன்னுடைய அபிப்ராயத்தைக் கூறுகிறான்.

கீதாஶ்லோகார்த்தச் சுருக்கம் நிறைவுற்றது.

———–

த்ருதீய ஷட்கத்தின் ஸாரப்பொருள்:

உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
யிடரிலெழி லீசன்ற னேற்றந் திடவசுரர்
தேவ ரியல்வுகுணஞ் சேர்க்கருமண்ய் சார்ந்தமர்வு
மாவனபின் னாறோத் தமர்ந்து.

உடல் உயிரின் தன்மை – உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்,
உறு குணத்தின் பன்மை – உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை,
இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம் – குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்,
திட அசுரர் தேவர் இயல்வு – (ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்,
குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன – குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றை,
பின் ஆறு ஓத்து அமர்ந்து – கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீய ஷட்கம் கூறுகிறது.

23) கர்மயோகஸ்தபஸ்தீர்த்ததாநயஜ்ஞாதிஸேவநம்
ஜ்ஞாநயோகோ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்தாத்மநிஸ்திதி:

கர்மயோக: – கர்மயோகமாவது,
தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் – தவம், தீர்த்தயாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில் இடைவிடாது ஈடுபடுதலேயாகும்.
ஜ்ஞாநயோக: – ஜ்ஞாநயோகமாவது,
ஜிதஸ்வாந்தை: – தனது மனத்தை வென்றவர்களால்,
பரிஶுத்தாத்மநிஸ்திதி: – ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலைநிற்றலேயாகும்.

24) பக்தியோக: பரைகாந்தப்ரீத்யாத்யாநாதிஷூஸ்திதி:
த்ரயாணாமபி யோகாநாம்த்ரிபி: அந்யோந்ய ஸங்கம:

பக்தியோக: – பக்தியோகமாவது,
பரைகாந்தப்ரீத்யா – பரமாத்மாவான ஸ்ரீமந்நாராயண னிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட,
த்யாநாதிஷூஸ்திதி: – தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலைநிற்றலேயாகும்.
த்ரயாணாமபி யோகாநாம் – கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில்,
த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.

25) நித்யநைமித்திகாநாம் ச பராராதந ரூபிணாம்
ஆத்மத்ருஷ்டேஸ்த்ரயோப்யேதே யோகத்வாரேண ஸாதகா:

பராராதந ரூபிணாம் – பரமபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,
நித்யநைமித்திகாநாம் ச – நித்ய நைமித்திக கர்மங்களுக்கும், (த்ரிபி: ஸங்கம: – மூன்று யோகங்களிலும் சேர்த்தியுண்டு),
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களும்,
யோகத்வாரேண – (மனம் ஒருமுகப்பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம்,
ஆத்மத்ருஷ்டே – ஆத்மஸாக்ஷாத்காரத்திற்கு, ஸாதகா: – உபாயங்களாகின்றன.

26) நிரஸ்த நிகிலாஜ்ஞாநோத்ருஷ்ட்வாத்மாநம் பராநுகம்
ப்ரதிலப்ய பராம் பக்திம் தயைவாப்நோதி தத்பதம்

நிரஸ்த நிகில அஜ்ஞாந: – (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய்,
பராநுகம் – பரம புருஷனுக்கு அடிமைப்பட்டிருக்கும்,
ஆத்மாநம் – தன்ஸ்வரூபத்தை,
த்ருஷ்ட்வா – கண்டு (அதன் விளைவாக),
பராம் பக்திம் – பரபக்தியை,
ப்ரதிலப்ய – அடைந்து,
தயா ஏவ – அந்த மேலான பக்தியாலேயே,
தத் பதம் – அந்த எம்பெருமானுடைய திருவடிகளை, ஆப்நோதி – அடைகிறான்.

27) பக்தியோகஸ் ததர்த்தீசேத் ஸமக்ரைஶ்வர்ய ஸாதக:
ஆத்மார்த்தீசேத்த்ரயோப்யேதே தத்கைவல்யஸ்ய ஸாதகா:

பக்தியோக: – பக்தியோகமானது,
ததர்த்தீசேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில்,
ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: – மிகச் சிறந்த செல்வத்தையளிக்கும்.
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களுமே,

ஆத்மார்த்தீசேத் – ஆத்மஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில், தத்கைவல்யஸ்ய ஸாதகா: – ஆத்மமாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.

28) ஐகாந்த்யம் பகவத்யேஷாம் ஸமாநமதிகாரிணாம்
யாவத்ப்ராப்தி பரார்த்தீசேத் ததேவாத்யந்தமஶ்நுதே

ஏஷாம் அதிகாரிணாம் – இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும்,
பகவதி – எம்பெருமானிடம்,
ஐகாந்த்யம் – மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி,
ஸமாநம் – பொதுவானது;
யாவத்ப்ராப்தி – பலனை அடைவதற்குள்,
பரார்த்தீசேத் – (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரமப்ராப்யமான பரமபுருஷனின் திருவடிகளை அடைய விரும்பினானாகில்,
தத் ஏவ – அந்தத் திருவடியையே,
அத்யந்தம் – எப்போதும்,
அஶ்நுதே – அடைகிறான். (உபாஸகஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில், அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)

29) ஜ்ஞாநீ து பரமைகாந்தீ ததாயத்தாத்ம ஜீவந:
தத்ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுகது:க்கஸ்ததேகதீ:

பரமைகாந்தீஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,
ததாயத்தாத்ம ஜீவந: – எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வையுடையவனாய்,
தத்ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுகது:க்க: – அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும், அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,
ததேகதீ: – அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.

30) பகவத்த்யாந யோகோக்தி வந்தநஸ்துதி கீர்த்தநை:
லப்தாத்மா தத்கதப்ராண மநோபுத்தீந்த்ரியக்ரிய:

பகவத்த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: – எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது,
அவனை வணங்குவது, துதிப்பது, திருநாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,
லப்தாத்மா தத்கதப்ராண மநோபுத்தி இந்த்ரியக்ரிய: – எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள்
ஆகியவற்றின் செயல்களை உடையவன்.

31) நிஜகர்மாதி பக்த்யந்தம் குர்யாத்ப்ரீத்யைவ காரித:
உபாயதாம் பரித்யஜ்யந்யஸ்யேத் தேவே து தாமபீ:

நிஜகர்மாதி – தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,
பக்த்யந்தம் – பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,
உபாயதாம் பரித்யஜ்ய – இவை ‘உபாயம்’ என்னும் எண்ணத்தைக் கைவிட்டு,
ப்ரீத்யா ஏவ காரித: – (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய்,
குர்யாத் – (பரமைகாந்தியான ஜ்ஞாநி) செய்யக்கடவன்;
அபீ: – பயமற்றவனாய்,
தாம் – அந்த உபாயத்வத்தை,
தேவே து – எம்பெருமானிடமே,
ந்யஸ்யேத் – அநுஸந்திக்க வேண்டும்.

அத்தியாயங்களின் ஸாரப்பொருள்:

1-2.9 உறவினர்களிடம் தகாத அன்பினாலும், கருணையினாலும், தனக்கு தர்மமான யுத்தத்தை அதர்மம் என நினைத்துக் கலங்கிச் சரணடைன்த அர்ஜுனனைக் குறித்து அவனது மயக்கம் தெளிவடைவதற்காக கீதாஶாஸ்த்ரம் தொடங்கப்பட்டது.
2 ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவுடையவனாய், கர்ம யோகத்தை அநுஷ்டிப்பவனுக்கு ஸ்திதப்ரஜ்ஞ நிலை எனப்படும் ஜ்ஞாநயோகம் ஏற்பட்டு, அது நிறைவடைந்தால் ஆத்மா (மனத்தால்) நேரே காணப்படுகிறது.
3 ஜ்ஞாநயோகத்தை அநுஷ்டிக்க ஶக்தியில்லாதவனும், ஶக்தியிருந்தபோதிலும் சான்றோனாகப் புகழ் பெற்றவனும், தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை (செயல் புரியும் தன்மையை) குணங்களிலோ, ஸர்வேஶ்வரனிடமோ சேர்ப்பதாகிற கர்த்ருத்வத்யாகத்தைச் செய்து, மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்வதாகிற (ஞானத்தோடு கூடிய) கர்மயோகத்தை அநுஷ்டிப்பதாலேயே ஆத்மஸாக்ஷாத்காரத்தை அடையலாம்.
4 1. அவதார ரஹஸ்யஜ்ஞானம்.
2. ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகம் ஞானயோகமாகவேயுள்ளது.
3. கர்மயோகஸ்வரூபம்.
4. அதன் வகைகள்.
5 1. கர்மயோகம் செய்வதற்கு எளியது; ஜ்ஞாநயோகத்தைக் காட்டிலும்

விரைவில் ஆத்மஸாக்ஷாத்காரமாகிற பலனை அளிப்பது.
2. அந்த கர்மயோகத்தின் அங்கங்கள்.
3. ஶுத்தமான (ஶரீரஸம்பந்தமற்ற) ஆத்மாக்கள் அனைவரும் ஸமமா யிருப்பவர்கள் என்று காண்பதற்கு உறுப்பான கர்மயோகியின் நிலை.
6 1. ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைப் பழகும் முறை.
2. ஆத்மஸாக்ஷாத்காரம் செய்யும் யோகிகளில் நாலு வகை.
3. அவ்வாத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு ஸாதனமாயிருக்கும் அப்யாஸம்

(சிந்தநம்), வைராக்யம் முதலானவை.
4. தொடங்கிய யோகம் இடையில் தடைப்பட்டாலும், அடியோடு அழிந்து விடாமல் காலக்ரமத்தில் ஸித்தியடையும்.
5. ஸர்வேஶ்வரனை விஷயமாகக் கொண்ட பக்தியோகம் முற்கூறிய ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைக் காட்டிலும் சிறப்புற்றது.
7 1. பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
2. அது ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் ஜீவர்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.
3. பரமபுருஷனை ஶரணமடைவதால் அம்மறைவு நீங்கும்.
4. பக்தர்களில் நாலு வகை.
5. இந்நால்வரில் ஞானியின் சிறப்பு.
8 ஐஶ்வர்யத்தை அல்லது கைவல்யத்தை அல்லது பரமபுருஷனை அடைய விரும்புகிறவர்கள் அறியவேண்டியவைகளும், கைக்கொள்ள வேண்டியவைகளும் யாவை என்பதன் விளக்கம்.
(பரமபுருஷனே ப்ராப்யம், ப்ராபகம், தாரகபோஷக போக்யங்கள் முதலான எல்லாமாயிருப்பவன் என்று உணர்ந்த ஞானிக்கு உபாயாநுஷ்டாநம் எதையும் எதிர்ப்பாராமல் எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபையாலேயே மோக்ஷம் கிடைக்கிறது என்பது 7-8 அத்தியாயங்களின் பரம ஸாரம்.)
9 (1) எம்பெருமானுடைய பெருமை, (2) மனிதனாயிருக்கும்போதே மேன்மையுடையவனாயிருக்கை, (3) ஜ்ஞானிகளுக்குள்ள சிறப்பு, (4) பக்தியோக மெனப்படும் உபாஸனம் ஆகியவை விளக்கப்பட்டது.
10 ஸாதநபக்தி உண்டாகி வளர்வதற்காக, தனது கல்யாணகுணங்கள் அளவற்றவை என்றும், எல்லாப் பொருள்களும் தனக்கு வசப்பட்டவை என்றும் விரிவாக உபதேசிக்கப்பட்டது.
11 (1) தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண் அர்ஜுனனுக்குக் கண்ணனால் கொடுக்கப்பட்டது.
(2) பரம்பொருளை அறிவது, காண்பது, அடைவது ஆகியவை பக்தி ஒன்றையே காரணமாகக் கொண்டவை என்று சொல்லப்பட்டது.
12 (1) ஆத்மாவைப் ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பதை காட்டிலும், பகவானை ப்ராப்யமாக நினைத்து உபாஸிக்கிற பக்தியின் சிறப்பு.
(2) இந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தல்.
(3) பக்தியில் சக்தியில்லாதவன் ஆத்மாவையே உபாஸிக்க வேண்டும்.
(4) கர்மயோகம் அனுஷ்டிப்பவர்கள் கைக்கொள்ள வேண்டிய ஆத்மகுணங்கள்.
13 (1) தேஹத்தின் ஸ்வரூபம், (2) ஜீவாத்மஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயம், (3) ஆத்மாவை ஆராய்ந்து அறிதல், (4) ஆத்மாவுக்கு அசித்தோடு தொடர்பு ஏற்படுவதற்குக் காரணம், (5) ஆத்மாவை அசித்திலிருந்து பிரித்து அனுஸந்திக்கும் முறை.
14 (1) ஸத்வம்முதலான மூன்றுகுணங்கள் ஸம்ஸாரபந்தத்திற்குக் காரணமாகும் முறை.
(2) அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மை.
(3) அந்த குணங்களை நீக்கும் முறை.
(4) ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத்ப்ராப்தி என்னும் மூன்று பலன்களும் எம்பெருமானிடமிருந்தே கிடைக்கின்றன.
15 அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்தஜீவனைக் காட்டிலும், ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும், (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும், (அவர்களைத்) தாங்குகையாலும், (அவர்களை) உடையவனாயிருக்கையாலும் வேறுபட்டவன் புருஷோத்தமனான நாராயணன்.
16 (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டா நத்தையும் பற்றிய அறிவு உறுதிப்படுவதற்காக, (மனிதர்களுக்குள்) தேவப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இருபிரிவுகள் இருப்பதை விளக்கியபின் மனிதன் சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மையை விளக்குதல்.
17 (1) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும் அஸுரர்க்குரியது; ஆகையால் பயனற்றது.
(2) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம் ஸத்வரஜஸ்தமோ குணங்கள் மூன்றையிட்டு மூன்றுவிதமாய் இருப்பது.
(3) “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள் ஶாஸ்த்ர விஹித கர்மங்களோடு சேர்வதன் மூலம் (அவற்றை மற்ற கர்மங்களினின்று வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன.
18 (1) கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவு அவசியம்.
(2) ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது.
(3) முற்கூறிய நினைவுடன் அனுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் மோக்ஷமாகும்.
(4) இந்த கீதாஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகள்.

—————-

கீதை பதினெட்டு அத்தியாயங்களின் பரம ஸாரப்பொருள்:

32) ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதிஸ் தத்பதமாப்நுயாத்
தத்ப்ரதாநமிதம் ஶாஸ்த்ரமிதி கீதார்த்த ஸங்க்ரஹ:

ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி – எம்பெருமானுடைய முகமலர்த்தியையே பயனாகக் கொண்டதாய்,
எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,
தத்பதம் – (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நுயாத் – அடைவான்;
இதம் ஶாஸ்த்ரம் – இந்த கீதா ஶாஸ்த்ரம்,
தத்ப்ரதாநம் – சேதனனைப் பரமைகாந்தியாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது.
இதி – இவ்வண்ணமாக,
கீதார்த்த ஸங்க்ரஹ: – கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் ‘கீதார்த்த ஸங்க்ரஹம்’ என்னும் நூல் நிறைவு பெறுகிறது.

எம்பெருமானே ப்ராப்யம் ப்ராபகம் முதலான அனைத்தும் என்னும் உறுதியுடன், அவனிடம் ஸ்வயம்ப்ரயோஜன
பக்தி செய்யும் பரமைகாந்திக்கு எம்பெருமான் பரமமோக்ஷத்தை நிர்ஹேதுகமாக அருளுகிறான்;
கர்மயோகம் முதலான உபாயங்கள் அனைத்தும் இத்தகைய பரமைகாந்திகளை உருவாக்கும் வழிகளே.

கீதை அத்யாய ஸாரார்த்தம் நிறைவுற்றது.

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ. உ.வே. புத்தூர் க்ருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீ வாதி கேஸரி அழகிய மணவாளச் சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.