Archive for the ‘ஸ்ரீ ராமானுஜர்’ Category

ஸ்ரீ ராமானுஜ ஸூப்ரபாதம் -ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள்

February 29, 2024

ஶ்ரீவாதி³பீ⁴கரகு³ருபி⁴ரநுக்³ரு’ஹீதம்
॥ ஶ்ரீ: ॥
॥ ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ॥
॥ ஶ்ரீவாதி³பீ⁴கரகு³ரவே நம: ॥

வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்
வத்ஸாந் வவாய மநவத்ய குணைரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்–ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள்   தனியன் :

திருநக்ஷத்ரம்: ஆடி – பூசம்

அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம் (திருத்தண்கா, தீபப்ரகாசர் சந்நிதி அருகே)

ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: தமது திருக் குமாரர்களான அண்ணனப்பா, அனந்தாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

அருளிச்செயல்கள்:

  • ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத் பாகவதம், ஸுபாலோபநிஷத் ஆகியவைகளுக்கு குறுகிய வ்யாக்யானங்கள்.
  • பராசர பட்டரின் அஷ்ட ஸ்லோகீ வ்யாக்யானம்
  • மாமுனிகளின் நியமனப்படி : ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம், ஸ்தோத்ரம், ப்ரபத்தி, மங்களாசாசனம் –
  • வரவரமுனி சதகம் (மாமுனிகளை மேன்மைப்படுத்தி 100 ஸம்ஸ்க்ருத ச்லோகங்கள் )
  • வரவரமுனி மங்களம்
  • வரவரமுனி ஸுப்ரபாதம் –
  • மாமுனிகளின் வாழி திருநாமமாகிய “செய்ய தாமரைத் தாளினை வாழியே…” (அருளிச்செயல் கோஷ்டியில் இறுதியில் சேவிக்கப்படும்)
  • மற்றும் பல ஸ்லோகங்கங்கள் — ஸ்தோத்ர க்ரந்தங்கள்.

முடும்பை நம்பி திருவம்சத்தில் “ஹஸ்திகிரிநாதர்” என்னும் திருநாமம் கொண்டு அவதரித்தார். இவரை அண்ணா என்றும் அழைப்பார்கள். ப்ரதிவாதி பயங்கரர் என்றும் பிரபலமாக அறியப்பட்டார்.

எப்படி கூரத்தாழ்வான் எம்பெருமானாருக்கு முற்பட்டு அவதாரம் செய்திருந்தாலும் எம்பெருமானாருடைய ப்ரியமான சிஷ்யரானாரோ, அதேபோல் அண்ணாவும் மாமுனிகளுக்கு முற்பட்டு அவதாரம் பண்ணியிருந்தாலும் மாமுனிகளுக்கு இவர் ப்ரியமான சிஷ்யரானார். இவர் மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களில் (மாமுனிகளின் எட்டு முக்கிய சிஷ்யர்கள்) ஒருவருமாவார்.
——————–

ஜய ஜய யதி ஸார்வபௌ⁴ம அமல ஸ்வாந்த ! துப்⁴யம் நம:
ஜய ஜய ஜநி ஸிந்து⁴மக்³நாத்மஸந்தாரகக்³ராமணீ: ! ।
ஜய ஜய ப⁴ஜநீய ! கூரேஶ முக்²யை: ப்ரஸீத³ ப்ரபோ⁴ !
ஜய ஜய விது³ஷாம் நிதே⁴ ! ஜாக்³ரு’ஹி ஶ்ரீநிதே⁴ ! ஜாக்³ரு’ஹி ॥ 1॥

பூர்ணார்ய பூர்ண கருணா பரிலப்³த⁴ போ³த⁴ !
வைராக்³ய ப⁴க்தி முக² தி³வ்ய கு³ணாம்ரு’தாப்³தே⁴ ! ।
ஶ்ரீ யாமுநார்ய பத³பங்கஜ ராஜ ஹம்ஸ !
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 2॥

ஆநேதுமத்³ய வரத³ஸ்ய க³ஜாத்³ரி ப⁴ர்து:
பாநீய மச்ச²மதிஶீதம் அகா³த⁴ கூபாத் ।
த்⁴வாந்தம் நிரஸ்தம் அருணஸ்ய கரைஸ் ஸமந்தாத்
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 3॥

ஶ்ரீரங்க³ராஜ பத³பங்கஜயோர் அஶேஷ
கைங்கர்யம் ஆகலயிதும் ஸகுதூஹலஸ் த்வம் ।
உத்திஷ்ட² நித்ய க்ரு’திம் அப் யகி²லாம் ச கர்தும்
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 4

த்வாம் வீக்ஷிதும் ஸமுபயாதி வ்ரு’ஷாசலேந்த்³ர:
த்வத் ஸம் ப்ரக்ல்ரு’ப்த வர ஶங்க²ரதா²ங்க³பாணி: ।
ஸம் யோஜிதாம் உரஸி மாம் ப⁴வ தைவ பி³ப்⁴ரத்
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 5॥

ஶ்ரீமத் குரங்க³பரிபூர்ண விபு⁴ஸ்த்வது³க்தம்
ஶ்ரீபா⁴ஷ்ய ஶாஸ்த்ரமமலம் த்வயி ப⁴க்தி யுக்த: ।
ஶ்ரோதும் ஸமிச்ச²தி யதீந்த்³ர ! ஸிதோர்த்⁴வ புண்ட்³ர:
தம் போ³த⁴யார்த²மகி²லம் தவ ஸுப்ரபா⁴தம் ॥ 6॥

ஶ்ரீபா⁴ஷ்யமாலிகி²துமாத்த விஶாலலேக்²ய:
ஶ்ரீவத்ஸ சிஹ்ந கு³ருராநத தி³வ்ய கா³த்ர: ।
வேதா³ந்த ஸூத்ரமபி வக்தும் அமுஷ்ய ஸர்வம்
உத்திஷ்ட² லக்ஷ்மண முநே ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 7॥

ஶ்ரீமாந் ஸ பூர்ண வடுராத³ரத: ப்ரக்³ரு’ஹ்ய
ஶ்ரீபாது³காம் யதிபதே ! பத³யோ: ப்ரயோக்தும் ।
த்³வாரி ஸ்தி²திம் விதநுதே ப்ரணதார்தி ஹாரிந் !
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 8॥

காஷாய வஸ்த்ர கடி ஸூத்ர கமண்ட³லூம்ஶ்ச
ஶ்ரீத³ந்தகாஷ்ட²மபி தே³ஶிக ஸார்வபௌ⁴மா: ।
பாணௌ நிதா⁴ய நிவஸந்தி விஶுத்³த⁴கா³த்ரா:
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 9॥

த்வாம் போ³த⁴யந்தி கு³ரவ: ப்ரதி²தா மஹாந்த:
ஶ்ரீவைஷ்ணவாஶ்ச யமிநஸ்தவ பாத³ப⁴க்தா: ।
ஏகாந்திநஶ்ச விமலாஸ்த்வத³நந்யபா⁴வா:
தாந் பாலயாத்³ய யதிஶேக²ர ! ஸுப்ரபா⁴தம் ॥ 10॥

ப்³ராஹ்மே ப்ரபு³த்⁴ய விபு³தா:⁴ ஸ்வ கு³ரூந் ப்ரணம்ய
ராமாநுஜாய நம இத்யஸக்ரு’த் ப்³ருவாணா: ।
அஷ்டாக்ஷரம் ஸசரமம் த்³வயமுச்சரந்தி
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 11॥

ப்ராத: பட²ந்தி பரம த்³ரவிட³ப்ரபந்ந
கா³யத்ரி மந்த்ர ஶதமஷ்ட ஶிரஸ்கமச்ச²ம் ।
ஶ்ரீவைஷ்ணவாஸ் தவ பதா³ப்³ஜ நிவிஷ்டபா⁴வா:
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 12॥

ஆராத⁴நம் ரசயிதும் கமலாஸக²ஸ்ய
ஶ்ரீயாத³வாசலபதே: விவிதோ⁴பசாரை: ।
பாதும் ச த்³ரு’ஷ்டி கமலேந நதாந ஶேஷாந்
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 13॥

ஸஸேவ்ய ! ஸப்த ஶத ஸம்யமி ஸார்வபௌ⁴மை:
ஸத்³தே³ஶிகை: ஸகல ஶாஸ்த்ர விதா³ம் வரிஷ்டை:² ।
ஏகாந்திபி:⁴ பரம பா⁴க³வதைர் நிஷேவ்ய !
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 14॥

க³த்³ய த்ரயம் நிக³ம ஶேக²ரதீ³பஸாரௌ
வேதா³ர்த²ஸங்க்³ரஹமபி ப்ரதி²தம் ச நித்யம் ।
கீ³தார்த²பா⁴ஷ்யமபி தே³ஶிக புங்க³வாநாம்
தா³தும் ப்ரஸீத³ யதி ஶேக²ர ! ஸுப்ரபா⁴தம் ॥ 15

பாதா³ம் பு³ஜம் யதிபதே ! ஶரணம் விஹர்தும்
ஸங்க³த்ய ஸம் ஸரண வாரி விலங்க⁴நோத்கா: ।
ஆயாந்தி ஹஸ்த கமலாபி⁴த்⁴ரு’தோபசாரா:
தாந் பாஹி கருணயா தவ ஸுப்ரபா⁴தம் ॥ 16॥

ஸ்நாதும் கவேர தநயா ஸலிலேஷு ஶிஷ்யை:
ஆசார்ய பூருஷ வரை: யதிபி⁴ர் விஶுத்³தை:⁴ ।
ஶ்ரீவைஷ்ணவைஶ்ச ஸஹ ஸேவ்ய ! மஹாநுபா⁴வை:
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 17॥

ராமாநுஜார்ய ! ரமணீயகு³ணாபி⁴ராம !
ராகா³தி³ தூ³ரக³ கு³ரோ ! கு³ரு ஸார்வபௌ⁴ம ! ।
ஸத்த்வ ப்ரதா⁴ந ! ஶரணாக³த வத்ஸல !
த்வத் பாதா³ப்³ஜ யோரிஹ பரத்ர ச கிங்கர: ஸ்யாம் ॥ 18

இதி ஶ்ரீவாதி³பீ⁴கரகு³ருபி⁴ரநுக்³ரு’ஹீதம் ஶ்ரீராமாநுஜஸுப்ரபா⁴தம் ।
॥ ஶ்ரீவாதி³பீ⁴கரகு³ரவே நம: ॥

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ:  “சாரீரக பரிபாஷா” என்னும் ஸ்ரீ: யதீந்த்ர மத தீபிகை–

February 6, 2024

ஸ்ரீ:யதீந்த்ரமத தீபிகை என்னும் இந்த க்ரந்தமானது ஸ்ரீ:சோளஸிம்ஹபுரம் மஹாசார்யர் என்று ப்ரஸித்தி பெற்ற ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யரால் அருளப்பட்டது. இதில் விசாரிக்கப்பட்டுள்ள விஷயங்களே பகவத் ஸ்ரீ:இராமானுச ஸித்தாந்தம் என்று சொல்லப்படும் ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந்தத்தின் முக்கிய விஷயங்கள் ஆகும்.

இந்நூலில் மொத்தம் 10 அவதாரங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

அபிநவ தசாவதாரமோ என்று வியக்கும்படி இக் க்ரந்தம் 10 அவதாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் அவதாரத்தில், பதார்த்தங்களின் பிரிவைக் காட்டி விட்டு பின் ப்ரத்யக்ஷப் ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. இரண்டாவது அவதாரத்தில் அனுமானம் விசாரிக்கப்படுகிறது. மூன்றாவது அவதாரத்தில் சப்தம் விசாரிக்கப்படுகிறது. இப்படி ப்ரமாணங்கள் விளக்கப்பட்ட பின், ப்ரமேயங்கள் விளக்கப்படுகின்றன. நான்காவது அவதாரத்தில் ப்ரக்ருதியும், ஐந்தாவது அவதாரத்தில் காலமும் விளக்கப்படுகின்றன. ஆறாவது, ஏழாவது அவதாரங்களில் முறையே நித்ய விபூதியும் தர்ம பூத ஞானமும் விளக்கப்படுகின்றன. எட்டாவது அவதாரத்தில் ஆத்மாவாகிற ஜீவன் விசாரிக்கப்படுகிறது. ஒன்பதாவது அவதாரத்தில் ஈச்வர தத்வம் விளக்கப்பட்டுள்ளது. 10வது அவதாரம் அத்ரவ்ய தத்வத்தினை விளக்குகிறது.

இந்நூலினை இவ்வாசிரியர் தாமே “சாரீரக பரிபாஷா” என்று அருளியுள்ளார். 

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் -1-
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்
–2-

ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யர் தாம் தொடங்கிய க்ரந்தம் நிர்விக்னமாக நிறைவு பெறுவதற்கும், பின்புள்ளார் அனுஸந்திப்பதற்கும் முதலில் இஷ்ட தேவதா நமஸ்காரமாக ச்லோகம் அருளிச்செய்கிறார்.

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பனான ஸ்ரீநிவாஸனையும், ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கும் கச்சி தேவப்பெருமாளையும், கடிகாத்ரி மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநரஸிம்ஹனான அக்காரக்கனியையும், கீதாசாரியனான கண்ணன் எம்பெருமானையும், ஸித்தாந்த ஸ்தாபகரான எம்பெருமானாரையும், ஸ்வப்னத்தில் ஸேவை ஸாதித்தருளிய மஹாசார்யரையும் அடியேன் வணங்குகிறேன்.

  • இந்த ஸ்வாமிக்கு அவர்தம் ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமி ஸ்வப்னத்தில் ஸேவை ஸாத்திதருளி இக்க்ரந்தம் அருள நியமித்தார் என்பது ப்ரஸித்தம்.
  • ஸ்வாமி திருமலையில் நெடுநாட்கள் கைங்கர்யம் செய்ததால் முதலில் ஸ்ரீவேங்கடாசல நாயகனான ஸ்ரீநிவாஸன் என்று தொடங்கினார் என்னவுமாம்
  • ஸ்ரீநிவாஸன் எனத்தொடங்கி எம்பெருமானார் நடுவாக தமது ஆசார்யரான மஹாசர்யர் பர்யந்தமாக அருளியதால் இந்த ச்லோகம் லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்…. அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் என்று குருபரம்பராநுஸந்தானமும் அருளிச் செய்தாராயிற்று.
    • தண்ணார் வேங்கடம் – குளிர்மிக்கு இருந்துள்ள திருமலை. ரக்ஷகனுக்கு ரக்ஷ்ய வர்க்கம் பெறாமையால் வரும் தாபத்தையும், இங்குள்ளார்க்கு ரக்ஷகனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் தீர்க்கவற்றாய் இருக்கை. (தி. வா. மொழி 1-8-3)
    • வட வேங்கடம் – உபயவிபூதிக்கும் நடுவான (திரு. நெடு – 16)
    • சீரார் திருவேங்கடமே – நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்கும் ஒக்கமுகங்கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையாய் ஏற்றம் உண்டிறே திருமலைக்கு – (சி. திருமடல்)
    • வேங்கடவன் – அர்ச்சாவதாரத்துக்குப் பொற்கால் பொலிய விட்ட இடம். (அமலனாதிபிரான் – 1 நாயனார் வ்யா) – இத்யாதி ஏற்றம் பெற்றதிறே திருமல(க்ருஷ்ணேந ஸஹ யதி ராஜம்) என்பது இன்சுவை மிக்கது.
    • க்ருஷ்ணன் கீதாசாரியன், கீதை அருளியவன். ஸ்வாமி அதற்கு செம்மைப் பொருள் பாரினில் தெரிய வ்யாக்யானம் அருளியவர்.
    • அவன் பலராமானுஜன். இவர் இராமானுசர்.
    • அவன் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான். இவர் மேதினி (பூமி) நம் சுமை ஆறும் எனத் துயர்விட்டு விளங்க (பூமாதேவி நல்லவர்களைத் தாங்குவது எளிது. தீயவர்களை சுமப்பது மிகவும் சுமையாகக் கருதுபவள். எம்பெருமானார் திருவவதரித்ததால் அனைவரும் திருந்தி விட்டதால் தம் சுமை நீங்கியது என ஆறி இருந்தாள். அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே – நாரணற்காயினரே) திருவவதரித்தார்.
    • க்ருஷ்ணனின் மாமாவான கம்ஸன் ஸாரதியாய் தேரோட்டினான்; க்ருஷ்ணனும் பார்த்தஸாரதியாய் தேரோட்டினான் – ஸ்வாமியின் மாதுலரான பெரிய திருமலை நம்பி திருவேங்கடமுடையானுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்தார் – ஸ்வாமியும் சாலைக்கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் செய்தார்.
    • அவன் – கருந்தெய்வம், இருளன்ன மாமேனி கொண்டவன்; ஸ்வாமி – [உத்யத்திநேசநிபமுல்லஸதூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே] (உதிக்கும் ஸூரியனை ஒத்ததும் திருமண்காப்பு துலங்குவதுமான தேவரீர் திருமேனி) என்றபடி உதிக்கும் ஸூரியனை ஒத்த திருமேனியை உடையவர்
    • யதீச்வரம் ப்ரண்ம்யாஹம் வேதாந்தார்யம் மஹாகுரும் |
      கரோமி பாலபோதார்த்தம் யதீந்த்ரமத தீபிகாம் || 2
    • யதிகளுக்கெல்லாம் தலைவரான எம்பெருமானாரையும், வேதாந்தாசாரியரையும், தமது ஆசாரியரான மஹாசாரியரையும் வணங்கி, பாலர்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு  யதீந்த்ர மத தீபிகை என்னும் இந்த க்ரந்தத்தை இயற்றுகிறேன்.
    • இதனால் இந்த க்ரந்தத்தில் அருளும் அர்த்தம் குரு பரம்பராப்ராப்தமானது என்பதைக் காட்டியருளினாராயிற்று.
    • யதீந்த்ரர் என்றால் யதிகளுக்கு அரசர் என்றர்த்தம். இத் திருநாமம் கச்சி தேவப்பெருமாளால் ஸ்வாமிக்கு ஸந்யாஸ ஆச்ரமத்தை ஸ்வீகரிக்கும் பொழுது அனுக்ரஹிக்கப்பட்டது. பெரிய திருமொழித் தனியனிலும் எம்பெருமானாரை “தவராசா” என்றது காண்க.
    • பாலர்கள் என்றால் தத்வத்தை அறிந்து கொள்வதில் ஆசையுள்ளவர்கள் என்றபடி. மீமாம்ஸா பரிபாஷா முதலான க்ரந்தங்களிலும் பாலர்கள் என்பது இவ்வர்த்ததில் ப்ரயோகப்படுத்தியிருப்பது காண்க
    • ஸ்ரீமந் நாராயண ஏவ சிதசித் விசிஷ்டாத்வைதம் தத்வம், பக்தி ப்ரபத்திப்யாம் ப்ரஸன்ன ஸ ஏவ உபாய: இதி வேதாந்த வாக்யை: ப்ரதிபாதயதாம் வ்யாஸ போதாயன குஹதேவ பாருசி ப்ரஹ்மநந்தி ட்ரமிடாசார்ய ஸ்ரீபராங்குச நாத யாமுன முனி யதீச்வர ப்ரப்ருதீநாம் மதாநுஸாரேண பால போதனார்த்தம் வேதாந்த அநுஸாரிணி யதீந்த்ர மத தீபிகாக்யா சாரீரக பரிபாஷா மஹாசார்ய க்ருபாவலம்பினா மயா யதா மதி ஸங்க்ரஹேண ப்ரகாச்யதே || 3 ||
    • க்ரந்தத்தின் ஆதியில், மங்களாசாஸனம், நமஸ்காரக்ரியா ஆகியவை தவிர அக்க்ரந்தத்தில் தெரிவிக்கப்படும் விஷயத்தையும் அறிவிப்பது சாஸ்த்ரக்ரமம். ஆகையாலே முதலில் ஸித்தாந்தத்தை ஸங்க்ரஹிக்கிறார் –
    • அறிவுள்ள சேதனர் எனப்படும் சித், அறிவற்றவையான அசித் இவையிரண்டையும் தனக்கு, பிரிக்க முடியாத விசேஷணங்களாக, ப்ரகாரமாக உடையவனான பெரிய பிராட்டியாருடன் கூடியவனான நாராயணன் ஒருவனே தத்வம். இதனையே பரமாசாரியாரன ஸ்வாமி நம்பிள்ளை ஈட்டில் “நம் தர்சனத்துக்குத் தத்வங்கள் மூன்று. அவையாவன – சித்தும், அசித்தும், ஈச்வரனும். ப்ரகார ப்ரகாரிகள் ஐக்யத்தாலே ஒன்றென்னலாய், ஸ்வரூப பேதத்தாலே பலவென்னலாயிருக்கும்.” என்றருளினார். ப்ரகாரம் என்றால் பிரிக்க முடியாத விசேஷணம் என்றபடி.  “குண்டலங்களை அணிந்த புருஷர் வருகிறார்” – என்ற வாக்கியத்தில் குண்டலங்கள் விசேஷணமாக இருந்தாலும் அதனை விசேஷ்யமான புருஷனிடமிருந்து பிரித்துவிடலாம். ஆனால் *அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ்தித:* என்று உள்ளும் புறமும் ஒக்க வ்யாபித்திருக்கும் நாராயணனுக்கு, சித் அசித் ஆகிய இரண்டும் பிரிக்க முடியாத விசேஷணங்களாகின்றன. எனவே அவை ப்ரகாரங்கள் ஆகின்றன. இதையே அப்ருதக்ஸித்த விசேஷணம் என்று அழைப்பர்.
    • இதனையே திருமழிசைப் பிரான் * உலகு நின்னொடொன்றி நிற்க * என்றார். இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையினுடைய வ்யாக்யானம்.” ஜகத்து உனக்கு சரீரமாகையாலே உன்னைப் பிரியாதே நிற்க ” அதாவது ப்ரபஞ்சம் முழுவதும் சரீரியான உன்னோடு சரீரமாய் அணைந்து நிற்க என்றபடி.
    • தானே எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்திருசுடருமாய இறை (சுடர் விடும் அக்னியும் பெரிய குலபர்வதங்களும் எட்டுத் திக்குக்களும் அண்டத்தினுள்ள சந்த்ர சூர்யர்களும் தனக்கு ப்ரகாரமாயிருக்கப் பெற்ற எம்பெருமான்) என்றார் மஹதாஹ்வயரான பேயாழ்வார். தானே என்ற ஏகாரத்தினால் இப்படி இருப்பவன் ஒருவனே – வேறுயவனுமில்லை என்றருளினாராயிற்று
    • ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் புவநாநி விஷ்ணு:
    • வநாநி விஷ்ணுர் கிரயோ திசச்ச |
    • நத்ய: ஸமுத்ராச்ச ஸ ஏவ ஸர்வம்
    • யதஸ்தி யந்நாஸ்தி ச விப்ரவர்ய || (ஸ்ரீ வி.பு – 12-12-38)
    • ஸ்ரீ பராசர பகவானும் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே “அந்தணர் தலைவரே! (மைத்ரேயரே!) சோதிகளும் விஷ்ணுவே; உலகங்களும் விஷ்ணுவே; வானங்களும் விஷ்ணுவே; வனங்களும், மலைகளும், திசைகளும் , நதிகளும், ஸமுத்ரங்களும் விஷ்ணுவே; நிலையானதாகையால் உள்ளதெனப்படும் சேதனமும், நிலையற்றதாகையாலே இல்லதெனப்படும் அசேதனமும் ஆகிய எல்லாம் அவனே” என்று ஸகல பதார்த்தங்களும் தனக்கு ப்ரகாரமாய், தான் ப்ரகாரியாய், தன்க்கு ஒரு ப்ரகார்யந்தரமன்றிக்கே இருக்கக்கடவன் ஸர்வேஸ்வரன் என்பதனை அருளினார்.
    • (த்வயோர்பாவத் த்விதா – த்விதம்; த்விதைவ த்வைதம்; நாஸ்தி த்வைத யஸ்மின், ததத்வைதம்; சிதசிதோர்ப்ருதக்ஸித்தவிசேஷணத்வேந ப்ரஹ்மண்யண்தர்பூதத்வாத் விசிஷ்டம் ஏகமேவ தத்த்வம் இத்யர்த்த🙂 இரண்டாகப் பாவிப்பது த்விதம் – இரண்டு என்பது த்வைதம் – இரண்டாவது இல்லை என்பது அத்வைதம் – சித் அசித் ஆகியவற்றைத் தனக்கு சரீரமாகக் கொண்ட வஸ்துவான ப்ரஹ்மத்தைப் போன்று இரண்டாவது வஸ்து இல்லை என்பது விசிஷ்டாத்வைதம்.
    • இப்படி இருக்கும் பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனே பக்தி, ப்ரபத்தி எனும் இரண்டில் ஒன்றினால் அகமகிழ்ந்து, தானே உபாயமாகிறான். உபாயமாகிறான் என்றது மோக்ஷம் அளிக்கிறான் என்றபடி. இப்படி மோக்ஷம் அளிக்கும் வல்லமை ஸ்ரீமந்நாராயணனுக்கே உண்டு. ஆழ்வார் தாமும் எம்பெருமானுடைய பரத்வத்தை அறிவிக்க நாலு திருவாய்மொழிகளை அருளிச் செய்தார் (உயர், திண், அணை, ஒன்று என்று ஆசார்ய ஹ்ருதயத்தில் அவை காட்டப்பட்டுள்ளது காண்க). அவற்றுள் அணைவது அரவணை மேல் என்னும் திருவாய்மொழியில் மோக்ஷப்ரதத்வம் என்னும் குணத்தையே ஆழ்வார் காட்டியருளினார். ஸ்ரீமத் வரவரமுனிகளும் இத்திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி அருளிச்செய்யுமிடத்து, இது தன்னையே குணந்தனையே என்றருளினார்.
    • ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதான தேசவிஷேஷமான பரமபதத்தில் இருக்கும் அவ்வெம்பெருமானே மோக்ஷத்தில் அடையப் பெரும் பொருளாகிறான். இது அப்ராக்ருதம் என்றதினால், இந்த தேசம், அங்கு கிடைக்கும் பலன் ஆகியவை அழியாதது என்ற அர்த்தம் கிடைத்தாயிற்று. ப்ராக்ருதம் – ப்ரக்ருதி ஸம்பந்தமுடையது; அப்ராக்ருதம் – அது இல்லாதது. இத்தால் ப்ரக்ருதி மண்டலம் போல ஸத்த்வ, ரஜஸ், தமோ குணங்கள் சேர்ந்தது இல்லாமல் சுத்த ஸத்வமாய் உள்ளது என்றதாயிற்று. * சோதி விண் * என்றபடி. ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யானம் – ஸூ 79 இது விளக்கப்பட்டுள்ளது காண்க.
    • ஆக இவ்வளவினால் தத்வ, ஹித, புருஷார்த்தங்களை அருளினாராயிற்று. தத்வம் -> சிதசித் விசிஷ்ட ப்ரஹ்மம்; ஹிதம் -> எம்பெருமானின் அருள்; புருஷார்த்தம் -> ஸ்ரீவைகுண்டத்தில் அவனைக் கிட்டி அங்கு பெறும் வாழ்வு.
    • இதனால் எம்பெருமானே உபாயம்; அவனே உபேயம் என்பதனை தெரிவித்தருளினாராயிற்று. புல்லைக் காட்டி அழைத்து புல்லை இடுவாரைப் போலே பலஸாதநங்களுக்கு பேதமில்லை என்கிற ஸ்ரீவசன பூஷண ஸ்ரீஸுக்தி இங்கு நினைக்கத் தக்கது.
    • இது தன்னையே வேதாந்த வாக்யங்கள் ப்ரதிபாதிக்கின்றன. மேலும் ஆசாரியர்களும் இது தன்னையே கைக் கொண்டார்கள். அவ்வாசார்ய பரம்பரையை அனுஸந்திக்கிறார்.
    • இவர்கள் அனைவருமே மேலே கூறிய மதத்தையே ஆசரித்திருக்கிறார்கள். அவர்களுடைய மதத்தை அனுஸரித்து “யதீந்த்ர மத தீபிகை” என்னும் சாரீரக பரிபாஷையானது என் ஆசாரியரான ஸ்வாமியின் க்ருபையால் சிறுவர்களுக்கு ஞானம் உண்டாவதற்காக செய்யப்படுகிறது. ஸ்ரீ பாஷ்யத்திற்கு சாரீரக மீமாம்ஸா பாஷ்யம் என்றே பெயர். ஸமஸ்த சேதனாசேதனங்களும் எம்பெருமானுக்கு சரீரம்; எம்பெருமான் சரீரி – சாரீரனைப் பற்றிக் கூறும் சாஸ்த்ரம் ஆகையாலே இது சாரீரகம். (யஸ்ய ப்ருதிவீ சரீரம்) என்றாம்பித்து (யஸ்யாத்மா சரீரம்) என அனைத்தையும் ப்ரஹ்மத்திற்கு சரீரமாக ஸ்ருதி சொன்னது.
    • நம்மாழ்வாரைக் குறிப்பிடும் பொழுது மட்டும் “ஸ்ரீ” சேர்க்கப்பட்டது காண்க. ருஷிகளில் காட்டிலும் இவருக்கு உண்டான ஏற்றம் ஆசார்ய ஹ்ருதயத்தில் காட்டப்பட்டுள்ளது இங்கு ஸ்மரிக்கத் தக்கது.
    • (வேதாந்த வாக்யை:) என்ற பஹுவசனத்தினால் (பன்மையினால்), சிலரைப் போன்று, ஒன்று இரண்டு வாக்யங்களை முக்யமாகக் கொண்டு ஸித்தாந்தம் செய்வதில்லை. வேதத்தில் உள்ள வாக்யங்கள் அனைத்தையும் கொண்டு தான் ஸித்தாந்தம்  செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டியருளினார் ஆயிற்று. ஸ்வாமி எம்பெருமானாரும் தம்முடைய வேதார்த்த ஸங்க்ரஹத்தில், இதே ரீதியில் வேதாந்த வாக்ய ஜாதம் (வேதாந்த வாக்யங்களின் கூட்டங்கள்) என்றார்.
    • வ்யாஸரை இவரது ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியும் தமது பாராசர்ய விஜயத்தில்
    • வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||
    • என்னும் ஶ்லோகத்தினால் கொண்டாடியிருப்பது குறிக்கத்தக்கது. அதாவது “வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான்.” என்றபடி.
    • ———————
    • ஸர்வம் பதார்த்த ஜாதம் ப்ராமாண ப்ரமேய பேதேன த்விதா பிந்நம் ॥ 4
    • இனி க்ரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது. முதலில் வஸ்துக்களின் பிரிவினைக் காட்டி விட்டு பின் ஒவ்வொன்றாக எடுத்து விளக்க உள்ளார். அனைத்து வஸ்துக்களயும் ப்ரமாணம், ப்ரமேயம் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
    • ப்ரமாணாணி த்ரீண்யேவ | ப்ரமேயம் த்விவிதம், த்ரவ்யத்ரவ்யபேதாத் ॥ 5
    • ப்ரமாணம் – உள்ளதை உள்ளபடி அறிய உதவுவது; ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது. ப்ரமாணங்கள் மொத்தம் மூன்று – 1) ப்ரத்யக்ஷம், 2) அனுமானம், 3) ஶப்தம். ப்ரமேயத்தை மொத்தம் இரண்டாகப் பிரிக்கலாம். 1) த்ரவ்யம் – மாறும் நிலைகளையுடைய பொருள்; 2) அத்ரவ்யம் – த்ரவ்யங்களின் நிறம், சுவை முதலிய தன்மைகள்.
    • அழகிய மணவாளச் சீயரும் தம்முடைய தத்வ நிரூபணத்தில் “இவற்றில் ப்ரத்யக்ஷத்தையும், அநுமாநத்தையும், ஆகமத்தையும் இம்மூன்றையும் வைதிகர் ப்ரமாணமாக பர்க்ரஹிக்கிறவளவிலே…” என்றருளிச் செய்தது இங்கு குறிக்கொள்ளத்தக்கது..
    • ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது என்று ஸாதாரணமாகச் சொன்னாலும், முமுக்ஷுக்களுக்கு சிதசித் விலக்ஷணான பரமாத்மாவே ப்ரமேயம் என்பது அறியத் தக்கது.
      • கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ – ஈடு ஸ்ரீ ஸூக்தி – இவ்விஷயத்தையொழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடலல்ல என்றிருக்கிறார். தத்ஜ்ஞாநமதோந்யதுக்தம் என்றானிறே. பகவல்லாபத்துக்குஉடலான ஜ்ஞாநம் ஜ்ஞாநமாகிறது; அல்லாதது அஜ்ஞாநமென்னக்கடவதிறே
      • ஸர்வம் -வஸ்து –பிரமாணம் ப்ரமேயம் -என்ற இரண்டு
      • பிரமாணம் -ப்ரத்யக்ஷம் -அனுமானம் -சப்தம் -என்ற மூன்றும்
      • ப்ரமேயம்-த்ரவ்யம் அத்ரவ்யம் என்ற இரண்டும்
      • த்ரவ்யம் த்விவிதம் ஜடமஜடம் சேதி ॥ 6
      • த்ரவ்யத்தை ஜடம், அஜடம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். ஜடமாவது – வேறொரு ஜ்ஞானத்தால் மட்டுமே தோன்றக்கூடியது; அஜடமாவது – தானாகவே ப்ரகாஶிப்பது.
      • ஜடம் ச த்விவிதம், ப்ரக்ருதி காலச்சேதி । ப்ரக்ருதிச் சதுர்விம்ஶதி தத்வாத்மிகா । காலஸ்து உபாதி பேதேந த்ரிவித: ॥7
      • ஜடத்தின் பிரிவுகள் இரண்டு – ப்ரக்ருதி மற்றும் காலம். ப்ரக்ருதி – 24 தத்வங்களாவது; சூரியனுடைய உபாதி பேதத்தால் காலம் மூன்று – 1) பூத (இறந்த காலம்), 2) பவிஷ்ய (வருங்காலம்); 3) வர்த்தமான (நிகழ் காலம்) காலங்கள்.
      • அஜடம் து த்விவிதம், பராக் ப்ரத்யக் சேதி। பராகபி த்விவிதா-நித்ய விபூதி:, தர்ம பூத ஞானம் சேதி। ப்ரத்யகபி த்விவிதா: – ஜீவேஶ்வர பேதாத்॥ 8
      • அஜடம் இருவகைப்படும் – 1) ப்ரத்யக் மற்றும் 2) பராக். ப்ரத்யக் – தன்னைப் பற்றிய ஜ்ஞானம் தனக்கு வருமாறு உள்ள பொருள். பராக் – தன்னப் பற்றின ஜ்ஞானம் மற்றொன்றிற்கே வருமாறு உள்ள பொருள் (ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அஜடப் பொருள்கள் அனைத்தும் இந்தப் பிரிவின் கீழ் வரும்)
      • நித்ய விபூதியும் தர்மபூத ஞானமும் பராக் –
      • ஜீவனும் பரமாத்மாவும் ப்ரத்யக்
      • ஜீவ: த்ரிவித: பத்த முக்த நித்ய பேதாத் ॥  9
      • ஜீவர்கள் மொத்தம் மூன்று வகை – பத்தர், முக்தர், நித்யர்.
      • பத்தர்க்கும் பரமபதத்திலிருக்கும் நித்யர்க்கும், முக்தர்க்கும் உள்ள படியினை ஸ்ரீ லோகதேசிகனான பிள்ளை லோகாசார்யர், அஷ்டாதச க்ரந்தங்களில் ஒன்றான அர்ச்சிராதியில் கீழ்க்கண்டவாறு அருளியுள்ளார்.
      • (அர்ச்சிராதி மூலம்) நித்யர் மற்றும் முக்தர், ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப (திருவாய் 4-9-10) என்கிறபடியே அவனுடைய செங்கோலே ஏகாதபத்ரமாக நடக்கும்படி அவனுடைய அபிமாநத்திலே அந்தர்பவித்துப் போருவர்கள்.  லீலாவிபூதியிலுள்ளார் அவர்களைப்போலே சந்தாநுவர்த்திகளன்றிக்கே ஸங்கல்பாநுவிதாயிகளாய் “நம இத்யேவ வாதிந:” என்கிறதுக்கு எதிராக, “ந நமேயம்”, “ஈஶ்வரோஹம்” என்கிறபடியே, மனையடைவே, “யானேயென்றனதே” என்று,
      • ஒண்டொடியாள் – அழகிய வளைகளை உடையவள்; கழலாத வளைகளை உடையவள் – அகலகில்லேன் இறையும் என இருப்பவளிறே; சங்கு தங்கு முன்கை நங்கையிறே; சீரார் வளை (திருப்பாவை – 6000 படி ஸ்ரீ ஸூக்தி) – வளைக்குச் சீர்மையாவது – கையில் நின்றும் கழலாதொழிகை. விஶ்லேஷவ்யஸநம் அநுபவியாத வளை. சங்குதங்குமுன்கை – ஒண் டொடியாள் திருமகள் திருமகளும் – பெரிய பிராட்டியாரும்; நீயுமே – எம்பெருமானுமே;  செங்கோல் – செம்மையான கோல்/ஆட்சி; ஏகாதபத்ரமாக –வேறு ஒருவனுடைய தலையீடு இல்லாமல்/ ஒரு குடைக்குக் கீழே; அபிமானம் – எம்பெருமானால் தன்னுடையவன் (மதீயர்கள்) என்று நினைக்கப்படுதல்;  சந்தாநுவர்த்திகளன்றிக்கே– எம்பெருமான் திருவுள்ளம் அறிந்து கைங்கர்யம் செய்பவர்களாய் இருக்கை தவிர்ந்து; ஸங்கல்பாநுவிதாயிகளாய் – ஸங்கல்பத்தைப் பின்செல்லுபவர்களாய்; நம இத்யேவ வாதிந: – இரண்டு கைகளையும் குவித்துக் கொண்டு வாயால் எப்போதும் நம: என்று சொல்லிக் கொண்டும் (நித்யர் மற்றும் முக்தர் படி)ந நமேயம் – ஒருவனையும் வணங்க மாட்டேன் (இராவணன் சொன்னது); ஈஶ்வரோஹம் – நானே ஈஶ்வரன் [பகவத் கீதை]; (லீலா விபூதியிலுள்ளார் படி);  மனை யடைவே – ஸம்ஸாரம் முழுவதும்; யானே யென்றனதே – அஹம்/மம, நான்/எனது என்றிருக்கும் இருப்பு
      • (மூலம்) அவர்கள் “பணியா அமரர்” (திருவாய் 8-3-6) யிருக்கும் இருப்புக்கெதிராக “மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து” (திருவாய் 4-10-7)
      • பணியா அமரர் – ஸ்ரீமந் நாராயணனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்காதே;
      • (மூலம்) “மிக்கார் வேத விமலர்” (திருவாய் 2-9-8) என்கிறபடியே, அவர்களைப்போலே “பெருமக்களாய்” (திருவாய் 3-7-4) இராதே “சிறியார் சிவப்பட்டார்” (நான். திரு 6) என்கிறபடியே சிறியாராய்
      • மிக்கார் – பகவதனுபவத்திலே எல்லாரைக் காட்டிலும் விசேஷமாண ஸ்வபாவம் உடையவர்களாய்; மலம் – அழுக்கு; விமலர் –தோஷமில்லாதவர்கள் வேத விமலர் –  வேதத்திலே விமலராய் சொல்லப்பட்டவர்கள்; சிறியார் – அல்ப்பர், சிறியார் – ஸ்வத:ப்ரமாணமான வேதத்தை விட்டு ஆகமத்தைக் கொண்டவர்கள் தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பர் என்னக்கடவதிறே.
      • (மூலம்)  “அயர்வறும் அமரர்கள்” (திருவாய் 1-1-1) என்கிறபடியே அவர்களைப்போலே திவ்ய ஜ்ஞாநோபபந்நராயிராதே அறிவிலா மனிசராய் (திருமாலை 13), ஒளிக் கொண்ட சோதிக்கெதிராக (திருவாய் 2-3-10) அழுக்குடம்பை (திருவிருத்தம் 1) பரிக்ரஹித்து,
      • அயர்வு – மறதி முதலானவைகள்; திவ்யஜ்ஞாநோபபந்நராயிராதே – திவ்யமான ஜ்ஞானம் உடையவராய் இராதே; ஒளிக்கொண்டசோதி – ரஜோகுணம் தமோகுணம் கலசாதே ஸுத்தசத்வ திவ்ய மங்கள விக்ரஹம்;
      • (மூலம்)  விபந்யவ: விண்ணோர் பரவுந்தலைமகன் (திருவாய் 2-6-3) என்றதுக்கெதிராக உலகில் கண்டவா தொண்டரைப் பாடி (பெரிய திருமொ 1-1-7),
      • விபந்யவ: – விசேஷமாக எம்பெருமானைத் துதிப்பவர்கள்; விண்ணோர் பரவுந்தலைமகன்  – நித்ய ஸூரிகளால் துதிக்கப் படுபவன்; உலகில் கண்டவா தொண்டரைப் பாடி – கண்ட ஆ – தன்னை ஸ்தோத்திரம் பண்ண இச்சை உடையவர்களை பாடி, திருவாய்மொழி ஈட்டில் ஒரு அற்புதமான கதை த்ருஷ்டாந்தமாக இவ் வர்த்ததிற்கு எடுக்கப்பட்டுள்ளது இங்கு நோக்கத் தக்கது
      • (மூலம்) உனக்கே நாமாட்செய்வோம் (திருப்பாவை 29) என்கிறபடியே அவனுக்காட் செய்யாதே மாரனார் வரிவெஞ்சிலைக்காட்செய்து (பெரு திரு 3-3)தொண்டுபூண்டமுதமுண்ணாதே (திருமாலை 5) பாவையர் வாயமுதமுண்டு (பெரிய திருமொ 1-3-5),
      • உனக்கே நாமாட்செய்வோம் – உனக்கும் எங்களுக்குமாயிருக்கிற இருப்பைத் தவிர்ந்து “தனக்கேயாக” என்னுமா போலே கொள்ள வேணும் (திருப்பாவை 6000படி ஸ்ரீ ஸுக்தி); மாறன் – மன்மதன்;
      • (மூலம்) ஸ ஏகதா பவதி என்கிறதுக்கெதிராக குலந்தானெத்தனையும் பிறந்து (பெரிய திருமொ 1-9-4), உருவார் சக்கரஞ்சங்கு சுமந்திங்கவனோடு ஒருபாடு உழலாதே (திருவாய் 8-3-7) ஆக்கையின் வழியுழன்று (திருவாய் 3-2-1),
      • ஸ ஏகதா பவதி – பரமபதம் செல்லும் முக்தாத்மா எம்பெருமான் ஸங்கல்பத்தாலே சரீரங்களை கொள்கிறான் – ஏனெனில் எம்பெருமானை ஒரு சரீரத்தால் அனுபவித்து முடிக்க முடியாமையாலே. பரம பதத்தில் இருப்பவர்கள் எம்பெருமானை அனுபவிப்பதற்காக சரீரம் கொள்கிறார்கள்; ஸம்ஸாரத்தில் உள்ளார் கர்மமடியாக பல சரீரங்களை எடுக்கிறார்கள் என்பது தாத்பர்யம்; உருவார் – அழகான; ஒருபாடு – ஒரு பக்கம்; அவனுடைய திருவாயுதங்களைச் சுமந்து கொண்டு அவனோடு போகாதே; ஆக்கை – உடம்பு; ஆக்கையின் வழியுழன்று  – சரீரத்தைக் கொடுத்து எம்பெருமானை அடை என்றால், சரீரம் செல்லும் வழி சென்று
      • (மூலம்) ஏதத் வ்ரதம் மம என்கிறவனுடைய வ்ரதத்துக்கெதிராக யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை (திருவிருத்தம் – 95) ஏறிட்டுக் கொண்டு, அவர்தருங் கலவியே கருதி ஓடினேன் (பெரிய திருமொ 1-1-1) என்கிறபடியே அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் (திரு நெடு – 6) எட்டாதபடி கைகழியவோடி, அற்பசாரங்களவை சுவைத்தகன்று (திருவாய் 3-2-6) போரக் கடவராயிருப்பர்கள்.
      • ஏதத் வ்ரதம் மம – ஒருக்காலே சரணம் அடைந்தார்க்கும் எல்லாராலும் வரக்கூடிய பயங்களைப் போக்குகிறேன் என்னும் பெருமாளின் வ்ரதம்; யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை – ஏதேனும் பற்றிக் கொண்டு நாம் எம்பெருமானை விட்டு நீங்கும் வ்ரதம்; ஏறிட்டுக் கொண்டு – இத்தால் இது (யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை) வந்தேறி என்றபடி – நானும் உனக்குப் பழவடியேன் என்பதே ஜீவாத்மாவின் உண்மையான நிலை; அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் – ஆச்ரிதர்கள் போதும் போதும் என்று சொன்னாலும் நிறுத்தாத நீண்ட நெடுங்கைகள்; எட்டாதபடி கை கழிய வோடி – அதற்கும் தப்பி; அற்பசாரம் – சப்தாதி விஷயங்கள்
      • பத்தோபி த்விவித: – புபுக்ஷுமுமுக்ஷுபேதாத்॥ 10
      • பத்தர் இருவகைப்படுவர் – புபுக்ஷு, முமுக்ஷு
      • புபுக்ஷுபி த்விவித: – அர்த்தகாமபரோ தர்மபரச்சேதி | தர்மபரோ த்விவித:- தேவதாந்தரபரோ பகவத்பரஶ்சேதி|| 11
      • புபுக்ஷுக்கள் இருவகை – அர்த்தபரர் மற்றும் தர்மபரர். தர்மபரர்கள் இருவகைப்படுவர் – தேவதாந்தரபரர் மற்றும் பகவத்பரர்கள்.
    • முமுக்ஷுபி த்விவித: – கைவல்யபரோ மோக்ஷபரச்சேதி | மோக்ஷபரோ த்விவித: – பக்த: ப்ரபந்நச்சேதி | ப்ரபந்நச்ச த்விவித: – ஏகாந்தீ பரமைகாந்தி சேதி | பரமைகாந்தீ த்விவித: – த்ருப்தார்தபேதாத் ॥12
    • முமுக்ஷுக்கள் இரண்டு வகைப்படுவர் – கைவல்யபரர் மற்றும் மோக்ஷபரர்கள்; மோக்ஷபரர்கள் பக்தர்கள் மற்றும் ப்ரபந்நர்கள் என்று இரண்டு வகைப்படுவர்கள். ப்ரபந்நர்கள் மறுபடியும் ஏகாந்தீ, பரமைகாந்தீ என இரண்டு வகைப்படுவர்கள். பரமைகாந்தீ த்ருப்தன் ஆர்த்தன் என இரண்டு வகைப்படுவர்.
    • மோக்ஷத்தில் இச்சையுடையவர்கள் முமுக்ஷுக்கள். மோக்ஷம் என்றால் பரமானந்தம் என்று நிகண்டு. அதாவது ப்ரஹ்மானுபவம்.
    • த்ருப்தன் – சரீரம் விடும்பொழுது மோக்ஷம் கிடைக்கட்டும் என ஆறி இருப்பவன்; ஆர்த்தன் – சரணாகதி செய்தயுடன் மோக்ஷம் வேண்டுபவன்
    • ஈஶ்வர: பஞ்சதா – பரவ்யூஹவிபவாந்தர்யாம்யர்சாவதாரபேதாத் | பர ஏகதா | வ்யூஹச்சதுர்தா – வாஸுதேவஸங்கர்ஷணப்ரத்யும்னாநிருத்தபேதாத் | கேசவாதி வ்யூஹாந்தரமத்ரைவாந்தர்பவதி | மத்ஸ்யாதயோ விபவா: புந: அநந்தா: | அந்தர்யாமி ப்ரதிஶரீரமவஸ்தித: | அர்சாவதாரஸ்து ஸ்ரீரங்கவேங்கடாத்ரிஹஸ்திகிரியாதவாத்ரி கடிகாசலாதிஷு ஸகலமனுஜநயநவிஷயதாம் கதோ மூர்த்திவிசேஷ: || 23
    • ஈஶ்வரன் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று ஐந்து ப்ரகாரமாக இருக்கிறான். பரமபத நாதனான பகவான் ஸ்ரீமந் நாராயணன் என்கிற ரூபம் ஒன்றுதான். * ஆதியஞ்சோதிவுரு * . இவ்வுருவில் இருந்தே மற்ற ரூபங்கள் தோன்றுவதினால் பரம் என்னப்பட்டது. வ்யூஹ ருபங்கள் – வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்று நான்கு. மத்ஸ்யம், கூர்மம் முதலான ரூபங்கள் விபவங்கள். அவை கணக்கற்றவை. அந்தர்யாமி நிலையாவது ஒவ்வொரு உடம்பிலும் அவர்கள் உபாஸிக்கும்படி அவர்கள் ஹ்ருதயத்தில், கட்டை விரல் அளவுள்ளதாய் இருக்கும் ரூபம். அர்ச்சாவதாரமாவது, ஸ்ரீரங்கம், திருவேங்கடம், முதலான திவ்யதேசங்களில் அனைவர் கண்களுக்கும் விஷயமாம்படி இருக்கும் நிலை.
    • தத்வத்ரயம் – 182, ஸ்ரீமத் வரவரமுனிகள் வ்யாக்யானம் இவ்வர்த்தம் அழகாக விளக்கப்பட்டுள்ளது காண்க.
    • விபவங்கள் அநந்தம் என்னுமிடம் தத்வத்ரயம் – 189வது சூர்ணிகையில் ” பரிகணித்துத் தலைக் கட்டப் போகாதபடி அநந்தமாய் ” என்ற வ்யாக்யான ஸ்ரீஸூக்தி கொண்டு நோக்க வேண்டியது.
    • அடலரவப் பகையேறி அசுரர் தம்மை வெல்லும் அவன் இவன் என்று பரமபதத்தில் இருக்கும் பெருமானே அர்ச்சாவதாரமாக உள்ளான் என்று கொண்டு அர்ச்சாவதாரமே முக்கியமாகக் கொண்டனர் நம் ஆசார்யர்கள். மற்றைய நிலைகளைக் காட்டிலும் இதன் ஏற்றம் * தமருகந்த அடியோமுக்கே என்னும் பின்னானார் வணங்கும் இடத்திலே எல்லாம் பூர்ணம் * என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையின் வ்யாக்யானத்தில் கண்டு கொள்வது.
    • இங்ஙனே த்ரவ்யம் பலவாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும்,
    • சிதசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டவன் என்பதினால் ஒன்று என்றும்,
    • ஆத்மா, அநாத்மா (ஆத்மா அல்லாதது – ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அனைத்தும்) என்ற பேதத்தால் இரண்டு என்றும்,
    • * போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா * என்ற ச்ருதியை அனுஸரித்து சித், அசித், ஈச்வரன் என மூன்றாகவும்,
      • இங்கு ” போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா என்று போக்த்ரு சப்தத்தாலும், போக்ய சப்தத்தாலும், ப்ரேரயித்ரு சப்தத்தாலும் சிதசிதீச்வர தத்வங்கள் மூன்றையுமிரே சொல்லுகிறது” என்னும் ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யான ஸ்ரீஸுக்தி ஸ்மரிக்கத்தக்கது.
    • ப்ரக்ருதி, காலம், நித்யவிபூதி, தர்மபூதஜ்ஞானம், ஜீவன், ஈச்வரன் என ஆறாகவும் கொள்ளலாம்.
    • அத்ரவ்யம் து ஸத்வரஜஸ்தமச்ஶப்தஸ்பர்சரூபரஸகந்தஸம்யோகஶக்திபேதாத்தசதைவ || 24
    • அத்ரவ்யம் ஶப்தம், ஸ்பர்ஶம், ரூபம், ரஸம், கந்தம், ஸத்வம், ரஜஸ், தமஸ், ஸம்யோகம், ஶக்தி என 10 பிரிவுகளைக் கொண்டது.
    • —————–
    • ஏவமுத்தேச க்ரமேந பரீக்ஷா க்ரியதே |
    • இனி நிர்ணயித்த க்ரமத்திலேயே வஸ்துக்களைப் பற்றின லக்ஷணம் உரைக்கப்பட்டு அவை பரீக்ஷிக்கப் படுகின்றன. சாஸ்த்ர க்ரந்த விசாரங்கள் இந்த ரீதியிலே அமையும். முதலில் வஸ்துக்களை வரிசைப்படுத்தி, பின்பு அவற்றின் லக்ஷணமுரைத்து, அந்த லக்ஷணங்களை ஆராய்வது இந்த ரீதியிலேயே இருக்கும்.
    • இது தன்னை பெரிய ஜீயரும் தத்வத்ரய வ்யாக்யானத்தில் “உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை என்று மூன்று வகைப்பட்டிறே தத்வ நிர்ணயக்ரமம் இருப்பது” என்றருளிச் செய்தார்
    • தத்ர ப்ரமாகரணம் ப்ரமாணம் | ப்ரமாணம் லக்ஷ்யம் | ப்ரமாகரணம் லக்ஷணம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமா || ப்ரமா லக்ஷ்யம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுண ஞானத்வம் லக்ஷணம் | ஞானம் ப்ரமேத்யுக்தே ஶுத்திகாயாம் “இதம் ரஜதம்” இதி ஞானேSதிவ்யாப்தி: | அத உக்தம் வ்யவஹாரானுகுணம் ஞானமிதி | ஏவமபி தத்ரைவாதிவ்யாப்தி: ப்ராந்தி தஶாயாமிதம் ரஜதமிதி வ்யவஹ்ரியமாணத்வாத் | அத உக்தம் யதாவஸ்திதேதி |
    • ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு லக்ஷணம் – லக்ஷ்யம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவ் வஸ்துவின் லக்ஷணமாகும். அந்த லக்ஷணத்தால் அறிந்துகொள்வது லக்ஷ்யமாகும். இனி ப்ரமாணம் லக்ஷ்யமாமிடத்தில் – ப்ரமாகரணம் அதன் லக்ஷணம் ஆகும். அதாவது ப்ரமைக்கு கரணமாயிருப்பது. ப்ரமா லக்ஷ்யமாமிடத்தில் – ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்குக் (வ்யவஹரிப்பதற்கு) காரணமான அறிவு (அ) ஞானம் என்பது அதன் லக்ஷணம் ஆகும்.  ப்ரமைக்கு ஏன் ஞானம் என்று லக்ஷணம் உரைக்ககூடாது என்னில் – அப்படிக் கொண்டால் சுத்தி என்று சொல்லப்படும் முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுவதும் ப்ரமை என்றாகிவிடும். இது அதி வ்யாப்தி எனும் தோஷமாகும். அதைத் தவிர்ப்பதற்காகவே ப்ரமைக்கு ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்கு (வ்யவஹரிப்பதற்க்கு) காரணமான அறிவு என்று லக்ஷணம் உரைக்கப்பட்டது.
    • லக்ஷணம், அதி வ்யாப்தி, முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுகிற ஞானம் இவை அனைத்தும் மேலே விளக்கப்படவுள்ளன.
    • யதாவஸ்தித பதேன ஸம்சய அந்யதா விபரீத ஞான வ்யாவ்ருத்தி: | தர்மிக்ரஹணே மிதோ விருத்த அநேக விசேஷ ஸ்புரண ஸம்சய: | யதா ஊர்த்வதாவிசிஷ்டே ஸ்தாணூர்வா புருஷோ வேதி ஞானம் | அந்யதாஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா கர்த்ருத்வேன பாஸமானே ஆத்மநி குயுத்பி: கர்த்ருத்வஸ்ய ப்ராந்தத்வோபபாதனம் | விபரீத ஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா வஸ்துனோ வஸ்த்வநந்தர ஞானம் |
    • உள்ளதை உள்ளபடி வழங்குதல் என்றதினால் ஸம்சய ஞானம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் ஆகியவைகள் தள்ளப்பட்டன.
    • ஸம்சயம் என்றால் என் என்னில் – தர்மியை (தர்மி – பூ; தர்மம் – அதனுடைய  மணம்/நிறம்) க்ரஹிக்கும் பொழுது ஒரே சமயத்தில் விருத்தமான (ஒன்றுக்கொன்று விரோதமான) பல தர்மங்கள் (விசேஷணங்கள்) தோன்றுவது ஸம்சயம் ஆகும். உதாரணத்திற்கு நாம் இருட்டில் தூரத்தில் ஒரு வஸ்துவைப் பார்க்கிறோம். அது கை, கால்கள் கொண்ட மனிதன் போன்று தெரிகிறது. அதே சமயத்தில் அது கிளைகள் கொண்ட மரம் போன்றும் தோன்றுகிறது. இது தன்னையே ஸ்தாணுர் வா புருஷோ வ (மரமா அல்லது மனிதனா) என்று உரைப்பர்கள். ஒரே வஸ்துவினிடத்தில் மரத்தினுடைய விசேஷணங்களும், மனுஷ்யத்வமும் தோன்றுவதால் – இது ஸம்சயம் ஆகும்.
    • அந்யதா ஞானமாவது – தர்மியை க்ரஹிக்கும் விஷயத்தில் மாறாட்டம். ஒரு வஸ்துவினுடைய தர்மத்தை மாறாகக் க்ரஹிப்பது. கர்த்ருத்வம் எனப்படும் செயல்படும் தன்மையாவது ஆத்மாவின் (ஆத்மா – தர்மி; கர்த்ருத்வம் – தர்மம்) தர்மம் அன்று என்று தர்ம விஷயத்தில் மாறுபாடகக் கொள்வது அந்யதாஞானமாகும்.  இப்படி கர்த்ருத்வமாவது ஆத்மாவிற்கு கிடையாது என்று கொள்வது ஸாங்க்யர்கள் பக்ஷமாகும். அவர்கள் அதை ப்ரக்ருதிக்கேயுள்ளது என்கிறார்கள். அவர்களை நிரஸிக்கிறார். அப்படிக் கொண்டால் சேதனனைக் குறித்துக் கட்டளையிடும் வேத வாக்யங்கள் பயனற்றவையாகி விடும்.
    • இதன் விரிவினை தத்வத்ரய சூர்ணிகைகள் 31, 32 மற்றும் ஸ்ரீமத் வரவரமுநிகளின் வ்யாக்யானம் கொண்டு மேலும் அறிந்து கொள்ளலாம்.
    • விபரீத ஞானமாவது – தர்மியையே மாறாடி க்ரஹிக்கை. ஒரு வஸ்துவை க்ரஹிக்கும் பொழுது அந்த வஸ்துவையே தவறாகக் க்ரஹிக்கை. உதாரணமாக சுக்திகையை (சிப்பியை) ரஜதமென்று (வெள்ளியென்று) க்ரஹிக்கை, அல்லது தேஹத்தை ஆத்மா என்று கொள்ளுகை.
    • “அந்யதாஞானமாவது தேவதாந்தர சேஷமென்றிருக்கை. விபரீதஞானமாவது ஸ்வதந்த்ரமாகவும், ஸ்வபோக்யமாகவும் நினைத்திருக்கிற கேவலனைடைய ஞானம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்.” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் (1-1-1 மயர்வற),
    • “சேஷத்வஸயைவ ஆத்மந ஸ்வரூபநிரூபகத்வாத் ததவிஹாய ஸ்வதந்த்ரத்வேநாநுஸந்தாநம் தர்மிவிபர்யாஸ இத்யபிப்ராயேணாஹ, விபரீதஞானமாவது யத்வா நிரதிசய போக்யத்தை பராபிக்கவேணுமென்று அபேக்ஷித்து, அந்த போக்யந்தான் ஏதென்று நிரூபித்து போக்யந்தானே என்று நிச்சயிக்கையினாலே கேவலன் போக்யத்திலே ஸ்வபேதாத்யவஸாயம் பண்ணுகிறான் அது தர்மயாரோபரூப விபரீதஜ்ஞாநமென்று திருவுள்ளம்.” என்று அதன் அரும்பத ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது.
      • ஆத்மாவினுடைய தர்மமான பகவானுக்கு மட்டும் அடிமைப்பட்டு இருத்தல் என்பதை மாறாக தேவதாந்தரங்களுக்கு சேஷமாக நினைப்பதால் அது அந்யதாஞானம்.
      • கேவலனான கைவல்யார்த்தி பரம புருஷார்த்தத்தை நிச்சயிக்கும் பொழுது அதைத் தவறாக பகவானை அனுபவிக்காமல் தன்னைத் தானே அனுபவிப்பதாகிற சிற்றின்பமாகக் நிச்சயிப்பதால் அது விபரீத ஞானமாகும்.
    • அந்யதாஞானம் மற்றும் விபரீத ஞானம் இரண்டையும் சேர்த்து விபர்யயம் என்று சொல்வதுண்டு.
    • “*துயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் *ஸ்தாணூர்வா புருஷோவா* என்கிறபடியே க்ராஹ்யவஸ்துவை இன்னதென்று நிச்சயிக்கமாட்டாத ஸம்சயமும், *மயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் ரஜ்ஜூ சுக்த்யாதிவிஷய ஸர்ப்பரூப்யாதி புத்திபோலே அதஸ்மிந் தத்புத்தியகிற விபர்யமும்” – என்கிற ஸ்ரீமத்வரவரமுனிகளின் ஆசார்ய ஹ்ருதய (ஸூ – 98) வ்யாக்யான ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது
    • லக்ஷணஸ்ய த்ரீணி தூஷணாநி ஸந்தி, அவ்யாப்திரதிவ்யாப்திரஸம்பவம் | லக்ஷயைகதேசே லக்ஷணஸ்யாவர்தனமவ்யாப்தி | லக்ஷாயதந்யத்ர வர்த்தமானத்வமதிவ்யாப்தி: | லக்ஷ்யே க்வாப்யவரதமனஸம்பவ | யதா ஜீவோ குணத்ரயவச்ய இத்யுக்தே அவ்யாப்தி:, ஞாநகுணக இத்யுக்தே அதிவ்யாப்தி:, சக்ஷுர்விஷயோ ஜீவ இத்யுக்தேSஸம்பவ ஏவ | அத்ரோக்ததூஷணத்ரயாபாவாத் ப்ரமாண லக்ஷணம் ஸுஸ்தம் |
    • லக்ஷணம் என்றால் ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவது என்று முன்பு உரைக்கப்பட்டது. ஒரு வஸ்துவிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது, அந்த லக்ஷணத்திற்கு மூன்று விதமான தூஷணங்கள் (குற்றங்கள்) ஸம்பவிக்கலாம். அவை அவ்யாப்தி, அதிவ்யாப்தி மற்றும் அஸம்பவம் ஆகும்.
    • உதாரணத்திற்கு பசு மாட்டிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது வெள்ளை நிறமுடையது பசுமாடு என்று லக்ஷணம் உரைத்தால், மற்ற நிறமுடைய பசுக்கள் விடுபடும். இது அவ்யாப்தியாகும்.
    • கொம்புடையது மாடு என்று கொண்டால், ஆட்டிற்கும் கொம்பு இருப்பதால் அது அதிவ்யாப்தி ஆகும். அந்த லக்ஷணம் ஆட்டையும் சேர்த்துக் கொள்ளும்.
    • இரண்டு கால்கள் உள்ளது பசு மாடு என்றால், அது மாட்டையே குறிக்காததாகையால் அது அஸம்பவம் ஆகும்.
    • மூலத்தில் குறிப்பிட்டுள்ள உதாரணமாவது – ஜீவர்கள் முக்தர்கள், நித்யர்கள் மற்றும் பக்தர்கள் என் மூவகைப்படுவர்கள். ஜீவர்களுக்கு லக்ஷணம் சொல்லும் பொழுது – குணத்ரயவச்யர்கள் ஜீவர்கள் என்று கொண்டால் அது முக்தர்கள் மற்றும் நித்யர்களைக் குறிக்காது – ஆகையினால் அது அவ்யாப்தி ஆகும். ஞானத்தையுடையவன் என்று லக்ஷணம் சொன்னால் அது ஈச்வரனையும் குறிக்கும் ஆதலால், அது அதிவ்யாப்தி ஆகும். கண்ணால் பார்க்கப்படுபவன் ஜீவன் என்று சொன்னால் அது அஸம்பவம். ஒரு ஜீவனையும் கண்ணால் பார்க்க முடியாது.
    • இங்கு “இப்போது இவர்களுக்கு லக்ஷணம் – சேஷத்வத்தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம்.” என்கிற தத்வத்ரய சூர்ணிகையும் (61),
      • “சேஷத்வமாத்ரத்தை சொல்லில் அசித்வ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், ஜ்ஞாத்ருத்வமாத்ரத்தை சொல்லில் ஈச்வரவ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், சேஷத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வமே லக்ஷணம் என்கிறார்” என்கிற அதன் வ்யாக்யான ஸ்ரீஸுக்தியும் நினைக்கத்தக்கது.
    • இம்மூன்று தோஷங்களும் இல்லாதது லக்ஷணமாகும். ப்ரமைக்கு சொன்ன லக்ஷணமாவது இந்த மூன்று தோஷங்களும் இல்லாமல் உள்ளது.
    • ஸாதகதமம் கரணம் | அதிசயித ஸாதகம் ஸாதகதமம் | யஸ்மிந் ஸத்யவிலம்பேந ஞானமுத்பத்யதே தததிசயிதமித்யுச்யதே |
    • கரணம் என்பது ஸாதகதமம் ஆகும். அதாவது மிகுந்த உபகாரத்தைச் செய்வது. இவ்விடத்தில் ப்ரமை உண்டாவதற்கு தாமதமில்லாமல் மிகுந்த உபகாரத்தைச் செய்வது என்று கொள்ளல் வேண்டும். அதாவது ப்ரமா எனப்படும் உள்ளதை உள்ளபடி வழங்குதல் எனும் ஞானம் விரைவாக உண்டாவதற்கு உபகாரத்தைச் செய்வது.
    • இத்தால், ப்ரமாணம் என்பதன் லக்ஷணத்தை (ப்ரமா கரணம்) விரிவாக அருளிச் செய்தாராயிற்று.
    • ———-
    • தானி ப்ரமாணானி ப்ரத்யக்ஷானுமானஶப்தாக்யானி த்ரீண்யேவ | தத்ர ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷம் | அனுமானாதிவ்யாவ்ருத்த்யர்த்தம் ஸாக்ஷாத்காரிதி | துஷ்டேந்த்ரியவ்யாவ்ருத்த்யர்த்தம் ப்ரமேதி |
    • இப்படி விளக்கப்பட்ட ப்ரமாணமானது மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது – அவை (1) ப்ரத்யக்ஷம், (2) அநுமானம், (3) ஶப்தம். அவைகளில் நேராய் (ஸாக்ஷத்தாய்) வஸ்துவை அறிவதற்குக் காரணமாயிருப்பது ப்ரத்யக்ஷமாகும். ஸாக்ஷாத்காரி என்னும் சொல்லினால் அநுமானம், ஶப்தம் ஆகிய ப்ரமாணங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தோஷமுள்ள இந்த்ரியங்களால் வருவதை ப்ரமாணம் என்று கொள்ளாமல் இருக்க லக்ஷணத்தில், ப்ரமை எனும் சொல் சேர்ந்திருக்கிறது.
    • அநுமானம், ஶப்தம் ஆகியவற்றின் விளக்கம், லக்ஷணம் ஆகியவை மேலே அவதாரங்களில் வரப் போகின்றன. இப்போதைக்கு ஸாக்ஷத்தாய் (நேராய்) வஸ்துவை அறிவது ப்ரத்யக்ஷத்தால் என்று கொள்வது.
    • துஷ்ட இந்த்ரியத்திற்கு எடுத்துக்காட்டு காமாலை நோய் வந்தவனின் கண்கள். அதைக் கொண்டு பார்த்தால் வெண்சங்கும் மஞ்சளாகத் தெரியும். அதனை ப்ரமை விலக்குகிறது.
    • ப்ரமையின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டது.
    • தச்ச ப்ரத்யக்ஷம் த்விவிதம் – ஸவிகல்பகநிர்விகல்பகபேதாத் | நிர்விகல்பகம் நாம குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டப்ரதமபிண்டக்ரஹணம் | ஸவிகல்பகம் து ஸப்ரத்யவர்ஷம் குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டத்விதீயாதிபிண்டக்ரஹணம் | உபயமப்யேதத் விஶிஷ்டவிஷயமேவ | அவிஶிஷ்டக்ராஹிண: ஞானஸ்யானுபலம்பாத் அனுபபத்தேச்ச |
    • இந்த ப்ரத்யக்ஷ ஞானமானது இரண்டு வகை.
    • நிர்விகல்பகம்
    • ஸவிகல்பகம்.
    • நிர்விகல்பகமாவது ஒரு வஸ்துவை முதன் முதலில் அறிவது. அப்போதும் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம். ஸவிகல்பகமாவது அதே வகுப்பைச் சேர்ந்த வஸ்துவை பின்னர் அறியும் பொழுது உண்டாகும் ஞானமாகும். இப்போதும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  இப்படி இரண்டாவதாக அறிவதினால் (ஸவிகல்பக ஞானத்தால்) முதலில் அறியப்பட்ட வஸ்து நினைவில் வந்து, சில அமைப்புக்கள் இந்த வஸ்துவின் வகுப்பிற்கே பொது என்னும் ஞானம் உண்டாகிறது.
    • உதாரணமாக முதன் முதலில் ஒரு பசுமாட்டைப் பார்க்கிறோம். அப்போது நமக்கு பசுவின் ஸம்ஸ்தானம் – அமைப்புகள், தெரிந்து அவற்றைக் க்ரஹித்துக் கொள்கிறோம். இப்பொழுது எல்லாப் பசுக்களுக்கும் இந்த அமைப்புக்கள் இருக்கும் என்பதை அறியமாட்டோம். இது நிர்விகல்பகம் ஆகும்.
    • பின்பு சிறிது காலம் கழித்து வேறு ஒரு பசுமாட்டைப் பார்க்கும் பொழுது, கோத்வம் முதலிய விசேஷணங்கள் மற்றும் ஸம்ஸ்தானங்கள் பசு வகுப்பிற்கே பொதுவானவைகள் என்று அறிந்து கொள்கிறோம்.
    • இவ்விருவகையிலும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  விசேஷணங்கள் இல்லாமல் வஸ்துவின் ஞானம் மட்டும் உண்டாகாது. விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது.
    • இது தன்னை (விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது) பாஷ்யகாரர்  [கேனசித்விசேஷேண இதமித்தமிதி ஹி ஸர்வா ப்ரதீதிரூபஜாயதே] (ஸ்ரீ பாஷ்யம் 1-1-1) என்றருளிச்செய்தார். அதாவது எல்லா ஜ்ஞாநமும், ஏதாவது விசேஷத்தையிட்டு ‘இது இப்படியானது’ என்றுதானே உண்டாகிறது.
    • அத்வைதிகள், நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்கிறார்கள். நிர்விகல்பகம் என்பதை விகல்பம் அற்றது என்று கொண்டு, ப்ரஹ்மம் ஒன்றே இருக்கிறது. வேறு இல்லை அது தன்னைக் க்ரஹிக்கிறோம் என்கிறார்கள்.
    • – பலவாகக் கல்பிக்கப்படுவது
    • இது கிடையாது, நிர்விகல்பகம் என்றால் ஏதாவது விசேஷணங்களை விட்டுவிட்டு க்ரஹிப்பதே அன்றி, விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது அன்று. ஒருவனை நிர்தனன்/தரித்ரன் என்று சொன்னால் மிகவும் குறைவாக பணம் உள்ளவன் என்று ஆகுமே அன்றி, பணமே இல்லாதவன் என்று ஆகாது.
    • வைசேஷிகர்களும் நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது, ஸவிகல்பகமாவது – விசேஷணம், விசேஷ்யம், அவைகளின் ஸம்பந்தம் ஆகிய மூன்றும் தோன்றும் ஜ்ஞாநம் என்கிறார்கள்.
    • இதற்கு உதாரணமாகக் குழந்தைகள் இப்படித் தான் க்ரஹிப்பார்கள் என்கிறார்கள்.
    • ஆனல் அதுவும் சரியன்று, பாலர்களும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள். ஒரு குழந்தை விளையாடும் பொம்மையை எடுத்துக் கொண்டு வேறு ஒன்றைக் கொடுத்தால் அது ஏற்பதில்லை. எனவே குழந்தைகளும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள்.
    • க்ரஹணப்ரகாரஸ்து – ஆத்மா மனஸா ஸம்யுஜ்யதே | மன இந்த்ரியேந, இந்த்ரியமர்தேந | இந்த்ரியாணாம் ப்ராப்யகாரித்வநியமாத் | அத: கடாதிரூபார்தஸ்ய சக்ஷுரூபேந்த்ரியஸ்ய ச ஸன்னிகர்ஷே ஸதி அயம் கட: இதி சாக்ஷுஷஞானம் ஜாயதே | ஏவம் ஸ்பார்சந ப்ரத்யக்ஷாதயோபி | த்ரவ்யக்ரஹணே ஸம்யோக: ஸம்பந்த: | த்ரவ்யகதரூபாதிக்ரஹணே ஸமவாயானங்கீகாராதி ஸம்யுக்தாஶ்ரயணம் ஸம்பந்த: ||
    • ப்ரத்யக்ஷ ஜ்ஞாநமாவது கண் முதலான இந்த்ரியங்களால் உண்டாவது என்று விளக்கப்பட்டது. இப்பொழுது அவை க்ரஹிப்படும் ப்ரகாரம் விளக்கப்படுகிறது. முதலில் ஆத்மா மனதோடு சேருகிறது, மனம் இந்த்ரியத்தோடு சேருகிறது, இந்த்ரியம் கடம் முதலான வஸ்துக்களோடு சேருகிறது. இப்படி ஐந்து விதமான ப்ரத்யக்ஷ ஜ்ஞாநங்கள் உண்டாகின்றன, கண், மெய், நாக்கு, செவி, மூக்கு என்ற ஐந்து இந்த்ரியங்கள் வாயிலாக அவை உண்டாகின்றன.
    • இதனால் தான் மனம் ஒன்றாவிட்டால் இந்த்ரியங்கள் அதன் வேலையைச் செய்தாலும் நம்மால் க்ரஹிக்க இயலவில்லை. இதனை அனுபவத்திலேயே உணரலாம். நாம் மனம் செலுத்தாவிட்டால், எதிரில் நடந்து வரும் நமக்குத் தெரிந்த நபரையே அறியாமல் சென்று விடுவோம்.
    • இப்படி ஒரு த்ரவ்யத்தை அறியும் பொழுது அதற்கும் இந்த்ரியத்திற்கும் ஸம்பந்தம் ஸம்யோகம். அந்த த்ரவ்யத்தை ஆச்ரயித்திருக்கும் ரூபம் முதலான குணங்கள் அறியும் பொழுது அந்த ஸம்பந்தம் – ஸம்யுக்தாஶ்ரயணம்.
    • வைசேஷிகர்கள் ரூபம் முதலான குணங்கள் ஸமவாயம் என்பதினால் சேர்ந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். எம்பெருமானார் தரிசனத்தில் ஸமவாயம் அங்கீகரிக்கப் படவில்லையாதலால், அது ஸம்யுக்தாஶ்ரயணம் ஆகிறது.
    • ஸமவாயம் என்பது ஒரு ஸம்பந்தம் – அதை ஒரு பொருளானது, அதன் ஆதாரத்தை விட்டுப் பிரியாமல் இருந்தால் அந்த தொடர்பு ஸமவாயம் என்பது வைசேஷிகர்களின் கொள்கை. இதிலுள்ள குறைகள்/தோஷங்கள் ஸ்ரீ பாஷ்யத்தில் மஹத்தீகாதிகரணத்தில் காட்டப்பட்டுள்ளது.
    • ——–
    • நிர்விகல்பகஸவிகல்பகபின்னம் ப்ரத்யக்ஷம் த்விவிதம், அர்வாசீனமநர்வாசீனம் சேதி | அர்வாசீனம் புனர்த்விவிதம், இந்திரியஸாபேக்ஷம் ததநபேக்ஷம் சேதி | ததநபேக்ஷம் த்விவிதம் – ஸ்வயம்ஸித்தம்திவ்யம் சேதி | ஸ்வயம்ஸித்தம்-யோகஜந்யம், திவ்யம் பகவத்ப்ரஸாதஜந்யம் அநர்வாசீனம் து, இந்த்ரியாநபேக்ஷம் நித்யமுக்தேஶ்வரஞானம் | அநர்வாசீனம் ப்ரஸங்காதுக்தம் | ஏவ ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷமிதி ஸித்தம் |
    • நிர்விகல்பகம், ஸ்விகல்பகம் என இரண்டு வகையான ப்ரத்யக்ஷமானது – (1) தாழ்ந்தது, (2) உயர்ந்தது என இரண்டு வகைப்படும்.
    • தாழ்ந்தது என்பது இந்த்ரியத்தைக் கொண்டு உண்டாவது, இந்த்ரியம் இல்லாமல் உண்டாவது என்று இருவகைப்படும். இந்த்ரியமில்லாமல் உண்டாவது என்பதும் தானே உண்டாவது (ஸ்வத ஸித்தம்), திவ்யம் (எம்பெருமானால் உண்டாவது) என்றும் இருவகைப்படும். தானே உண்டாவது – யோகத்தினால் உண்டாவது. திவ்யம் ஆவது எம்பெருமானின் அனுக்ரஹத்தினால் உண்டாவது.
    • யோகிகளின் ப்ரத்யக்ஷமாவது (ஸ்வத ஸித்தமாவது) – யோகாப்யாஸத்தாலோ, அல்லது தபஸினாலோ உண்டாகிறது. ஆகையினாலே இவர்களால் வேறு லோகத்தில் நடப்பவை ப்ரத்யக்ஷமாகப் பார்க்கப்படுகிறது.
    • திவ்யம் என்பது தேவனால் அளிக்கப்படுவது. தேவன் என்பது எம்பெருமானே. திவ் க்ரீடாதௌ என்கிற தாது ஸித்தமான அர்த்தம் எம்பெருமானையே குறிக்கும். இதுவே “மயர்வற மதிநலம் அருளுவது” (திருவாய் 1-1-1). பகவத் கீதையிலே இது தன்னையே [திவ்யம் ததாமி தே சக்ஷு:] (11-8) என்றருளினான்.
    • இங்கு ஸ்வாமி எம்பெருமானார் வ்யாக்யானம் – [தவ திவ்யம் – அப்ராக்ருதம் மத்தர்சனஸாதனம் சக்ஷுர்ததாமி] என்பது நினைக்கத்தக்கது.
    • அநர்வாசீநமாவது இந்த்ரியங்களின் உதவியில்லாமல் வரும் அறிவு. இது பகவானுக்கும், நித்யர்களுக்கும், முக்தர்களுக்கும் உள்ளது. இது ப்ரஸங்காத் சொல்லப்பட்டது.
    • உபநிஷதானது [அபாநிபாதோ ஜவனோ க்ருஹீதா பச்யத்யசக்ஷு: ஸ ச்ருநோத்யகர்ண:] என்றது. அதாவது எம்பெருமானுக்கு ஒரு பொருளை எடுப்பதற்குக் கைகள் தேவையில்லை. கண்கள் பார்ப்பதற்கு அவசியமில்லை. அவனது திருவருளால், முக்தியடைந்தார்க்கும் இது கலங்காப்பெருநகரம் என்னும் பரமபதம் அடைந்தவுடன் இது ஸம்பவிக்கிறது.
    • ஸ்வாமி கூரத்தாழ்வான் தம்முடைய வரதராஜஸ்தவத்தில் 24-வது ஶ்லோகத்தில் இந்த விபூதியிலே பேரருளாளப் பெருமாளை இவ்விதம் அவனது திருவருளால் இந்த்ரியங்களின் அடைவுகெட அனுபவிக்க ஆசைப்பட்டதும் இந்த ரீதியிலே – முக்தி தசையில் அனுபவிக்கப் படுவதை இங்கு அனுபவிக்க ஆசைப்பட்டார்
    • நநு யதாவஸ்திதவ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமேதி உக்தம் | ஏவம் ச ஸ்ம்ருதேரபி யதாவஸ்தித வ்யவஹாராணுகுணஞாநத்வேன ப்ராமாண்யாத் ஸ்ம்ருதேரபி ப்ரமாணத்வேன பரிகணனாத் த்ரீந்யேவ ப்ரமாணானி இதி கதம் ப்ரதிபாத்யதே இதி சேத்; உச்யதே – ஸ்ம்ருதே: ப்ராமாண்யாங்கீகாரேSபி ஸம்ஸ்காரஸாபேக்ஷத்வாத், தஸ்ய ப்ரத்யக்ஷமூலத்வாத் மூலபூதப்ரத்யக்ஷேSந்தர்பாவ: இதி ந ப்ருதக்ப்ரமாணத்வகல்பனம் | அத: த்ரீண்யேவேதி ஸம்பவதி ||
    • இப்பொழுது ஸ்ம்ருதி என்பது தனி ப்ரமாணம் அல்லவா? என்று விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு ஸ்ம்ருதி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஸ்ம்ருதியாவது ஒரு வஸ்துவை முன் அனுபவித்ததால் எழும் ஜ்ஞானம் ஆகும். அதாவது முன் அறிந்ததை மறுபடியும் நினைத்துக் கொள்வது.
    • இப்பொழுது மூலம் விளக்கப்படுகிறது. – ஒரு வஸ்துவை உள்ளது உள்ளபடி அறிவது ப்ரமா என்று சொல்லப்பட்டது. அப்படிக் கொண்டால் ஸ்ம்ருதியும் ஒரு ப்ரமாணமாகும். அப்படி இருக்கும் பொழுது, ப்ரமாணங்கள் மூன்று தான் என்று சொல்வது எப்படி என்று கேட்டால்?
    • பதில் சொல்கிறோம். ஸ்ம்ருதியை ப்ரமாணம் என்று அங்கீகரிப்பதற்குக் காரணம் ஸம்ஸ்காரம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் ப்ரத்யக்ஷத்தாலே உண்டாகிறது. எனவே ஸ்ம்ருதியை தனி ப்ரமாணமாகக் கொள்ள வேண்டியது இல்லை – அது ப்ரத்யக்ஷத்திலேயே அடங்கி விடுகிறது.
    • ஸம்ஸ்காரம் என்பது கீழே விளக்கப்படுகிறது.
    • ஸ்ம்ருதிர்நாம பூர்வானுபவஜன்யஸம்ஸ்காரமாத்ரஜன்ய ஞானம் | தத்ர சோத்புத்த: ஸம்ஸ்காரோ ஹேது: | ததுத்போதச்ச “ஸத்ருஷ-அத்ருஷ்ட – சிந்த்யாத்யா:” இத்யுக்தப்ரகாரேண க்வசித் ஸத்ருஷதர்ஷநாத் பவதி, க்வசித் அத்ருஷ்டாத், க்வசிச்சிந்தயா | ஆதிஶப்தேந ஸாஹசர்யஸ்யாபி க்ரஹநாத்தேனாபி ச பவதி | ஸாத்ருஶ்யஜா யதா – தேவதத்தயஞ்தத்தயோ: ஸத்ருஶயோர்தேவதத்ததர்ஷன யஞ்தத்தஸ்ம்ருதி: | த்விதீயா யதா – யாத்ருச்சிக காலான்தரானுபூத ஸ்ரீரங்காதி திவ்யதேஶஸ்ம்ருதி: | த்ருதீயா யதா சிந்த்யமானே ஸ்ரீவேங்கடேஸஸ்ய கமனீயதிவ்யமங்கலவிக்ரஹஸ்ம்ருதி: | சதுர்தீ து – ஸஹசரிதயோர்தேவதத்தயஞதத்தயோர்மத்யே அந்யதரதர்ஷநேன ததந்யதரஸ்ம்ருதி: | ஸம்யகனுபூதஸ்ய ஸர்வஸ்ய ஸ்ம்ருதிவிஷயத்வநியம: | க்வசித் காலதைர்த்யாத் வ்யாத்யாதினா வா ஸம்ஸ்காரஸ்ய ப்ரமோஷாத் ஸ்ம்ருத்யபாவ: |
    • ஸ்ம்ருதி என்பது முன் அநுபவத்தினால் உண்டான ஸம்ஸ்காரத்தினால் மட்டும் உண்டாகும் ஜ்ஞானம். இதற்கு ஸம்ஸ்காரம் தான் முக்கிய காரணம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் வருவதற்கு காரணங்கள்
    • ஒற்றுமை,
    • அத்ருஷ்டம்,
    • சிந்தை
    • சில சமயங்களில் முன்பு பார்க்கப்பட்ட வஸ்துவிற்கும், இப்பொழுது பார்க்கப்படுகிற வஸ்துவிற்கும் இருக்கும் ஒற்றுமையினாலும், சில சமயங்களில் அத்ருஷ்டத்தாலும், சில சமயங்களில் சிந்தையினாலும் உண்டாகிறது. “ஆதி” ஶப்தத்தால் ஸாஹசர்யம் சொல்லப்பட்டது. இவற்றுக்கு உதாரணங்கள்
    • (1) ஒருவருக்கொருவர் ஒப்பாக உள்ள தேவதத்த யஜ்ஞதத்தர்களுள் தேவதத்தனைப் பார்க்கும் பொழுது, வரும் யஜ்ஞதத்தனின் நினைவு.
    • (2) யாத்ருச்சிகமாக வேறு காலத்தில் அநுபவித்த ஸ்ரீரங்கம் முதலான திவ்யதேஶங்களின் நினைவு,
    • (3) சிந்திக்கும் பொழுது தோற்றும் ஸ்ரீவேங்கடேசனுடைய ரம்யமான திருமேனியின் நினைவு.
    • (4) எப்பொழுதும் சேர்ந்தே பார்க்கப்பட்ட தேவதத்தன், யஜ்ஞதத்தன் ஆகியவர்களில், தேவதத்தனைப் பார்க்கும் பொழுது வரும் யஜ்ஞதத்தனின் நினைவு. இதற்கும் (1) வித்யாஸம் உள்ளது. முதலாவது ஆகார ஒற்றுமை (உருவ ஒற்றுமை) யினால் உணர்த்தப்படுவது. இங்கு யானையையும் அதன் பாகனையும் சேர்த்தே பார்த்த ஒருவனுக்கு, யானையைக் கண்டவுடன் வரும் பாகனின் நினைவு.
    • நன்றாய் அநுபவிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நினைவுக்கு வராமல் இருக்காது. ஆனால் நீண்ட காலமாவதாலும், வ்யாதி முதலியவைகளாலும் ஸம்ஸ்காரம் மழுங்கிப் போவதால் நினைவுக்கு வருவதில்லை.
    • யதா ஸ்ம்ருதே: ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ஏவம் “ஸோSயம் தேவதத்த: ” இதி ப்ரத்யபிஜ்ஞா அபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ||
    • எப்படி ஸ்ம்ருதியானது ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறதோ, அப்படியே “இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன், முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தன் தான்” என்னும் ப்ரத்யபிஜ்ஞாவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறது.
    • இந்த ப்ரத்யபிஜ்ஞா என்பது நிர்விகல்பக/ஸவிகல்பக ஞானம், ஸ்ம்ருதி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. எல்லாவற்றிற்கும் ஆகாரம் பொதுவானது என்றறிவது ஸவிகல்பக ஞானம். ஸ்ம்ருதியின் ஸம்ஸ்கார காரணங்கள் (நான்கு) கீழே விளக்கப்பட்டன. ப்ரத்யபிஜ்ஞா என்பது முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தனே, இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன் என்னும் ஞானம்.
    • அஸ்மந்மதே அபாவஸ்ய பாவந்தர ரூபத்வாத்தஸ்யாபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: | கடப்ராகபாவோ நாம ம்ருதேவ | கடத்வம்ஸச்ச கபாலமேவ | ப்ராய: புருஷேநாநெண பவிதவ்யமித்யேதத் ஊஹ: | ஸம்ஸய உக்த: || தயோரபி ப்ரத்யக்ஷே அந்தர்பாவ: | புண்யபுருஷநிஷ்டா ப்ரதிபாபி ப்ரத்யக்ஷேSந்தர்கதா ||
    • பரம வைதிக மதமான எம்பெருமானார் தரிசனத்தில், அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தமாகக் கொள்ளப்படவில்லை. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. வைசேஷிகர்களான தார்க்கிகர்கள் அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தம் என்றும், அது ப்ராகபாவம் (இல்லாமை), ப்ரத்வம்ஸாவாம் (த்வம்ஸமாகை) என்றும் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு குடம் செய்வதன் முன்பு அது காணப்படாது – அது ப்ராகபாவம்; அது உருவாகி உடைந்த பின்பும் அது காணப்படாது – அது ப்ரத்வம்ஸாவாம் என்கிறார்கள்.
    • இது கல்பிப்பதே – ப்ராகபாவம் – மண்கட்டி (குடம் ஆவதன் முன்); ப்ரத்வம்ஸாவாம் – கபாலங்கள்.
    • அதே போன்று ஊஹமும் (ஒரு வஸ்துவில் கால்/கை அசைவதால் அவன் மனிதனே என்பது) ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ஸம்ஸயம் என்பது கீழே விளக்கப்பட்டது. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது.
    • புண்ணியம் புரிந்த ஒரு புருஷனிடத்தில் இருக்கிற ப்ரதிபையும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ப்ரதிபையாவது ஒரு மலை, நதி ஆகியவைகளைக் கண்டால் மேன்மேலும் அதைப் பற்றித் தோன்றும் ஞானம்.
    • ————
    • “யதார்தம் ஸர்வவிஜ்ஞானமிதி வேதவிதாம் மதம்” இத்யுக்தத்வாத் ப்ரமாதி ப்ரத்யக்ஷஞானம் யதார்தமேவ, அக்யாதி – ஆத்மக்யாதி – அநிர்வசனீயக்யாதி – அன்யதாக்யாதி வாதினோ நிரஸ்ய ஸத்க்யாதி பக்ஷஸ்வீகாராத் | ஸத்க்யாதிர்நாம ஞானவிஷயஸ்ய ஸத்யத்வம் | தர்ஹி ப்ரமத்வம் கதமிதி சேத், விஷயவ்யவஹாரபாதாத் ப்ரம: | ததுபபாதயாம: – பஞ்சீகரணப்ரக்ரியா ப்ருதிவ்யாதிஷு ஸர்வத்ர ஸர்வபூதானாம் வித்யமானத்வாத், அத ஏவ ஶுக்திகாயாம் ரஜதாம்ஶஸ்ய வித்யமானத்வாத் ஞானவிஷயஸ்ய ஸத்யத்வம் | தத்ர ரஜதாம்ஶஸ்ய ஸ்வல்பத்வாத்து ந வ்யவஹார இதி தஞ்ஞானம் ப்ரம: | ஶுக்தயம்ஸபூயஸ்த்வஞானாத் ப்ரமநிவ்ர்த்தி: |
    • இதுவரையில் ப்ரத்யக்ஷத்தின் லக்ஷணம் மற்றும் அவற்றின் பிரிவுகள் ஆகியவற்றை விசாரித்துவிட்டு, இப்பொழுது ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தால் அறியப்படுபவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறார். ஸர்வவிஜ்ஞானம் – அனைத்து ஞானங்களும்; யதார்த்தம் – யதார்த்தமே – வஸ்துக்களை உள்ளபடி காட்டுகின்றன; இதி வேதவிதாம் மதம் – என்று வேதம் அறிந்தவர்களுடைய, ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் ஆகியோருடைய மதம் – என்று ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் அருளியுள்ளார்.
    • ஸ்ரீமந்நாதமுனிகள் தம்முடைய ந்யாய தத்வத்தில் – [ஷஷ்டீம் சேயம் க்யாதியதார்த்தக்யாதி] என்றருளியுள்ளார்.  அதாவது (1) அஸத்க்யாதி, (2) ஆத்மக்யாதி, (3) அநிர்வசநீயக்யாதி, (4) அந்யதாக்யாதி, (5) அக்யாதி என்று 5 விதமான க்யாதிகள் இல்லாமல் ஆறாவதான யதார்த்தக்யாதி என்பதே நம் ஆசார்யர்களால் கைக்கொள்ளப்பட்டுள்ளது.
    • குறிப்பு – இப்போது சில விஷயங்கள் அறிந்து கொள்வது, மேல் விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு அவசியம் ஆகிறது.
    • ஶுக்தி எனப்படும் முத்துச் சிப்பியை சில சமயம் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது – அது வெள்ளி போன்று தோன்றுகிறது. பின்பு நெருங்கிச் சென்று அதை கையில் எடுத்துப் பார்த்தால் அது வெள்ளியன்று என்று ப்ரமம் நீங்கி விடுகிறது. இதை பலவாறாகப் பல மதங்களிலே கொண்டுள்ளார்கள்.
    • (1) அஸத்க்யாதி,
    • இது மாத்யாமிகனுடைய மதம் சார்ந்தது. ஜ்ஞானமும் ஆகட்டும், வெளியிருக்கிற வஸ்துக்களாகட்டும் ஒன்றும் இல்லை – சூந்யம் தான் உள்ளது. அஸத் தோன்றுவதால் இது அஸத்க்யாதி என்னப்பட்டது.
    • (2) ஆத்மக்யாதி
    • இது பௌத்தர்களுடையதாகும் (யோகாசாரர்களுடையது). ஆத்மாவான ஞானம் ஒன்று தானிருக்கிறது. இது வஸ்துவை க்ரஹிக்கும் பொழுது, வஸ்துக்கள் இல்லை. ஜ்ஞானம் தான் இவைகள். ஜ்ஞானம் இல்லாத பொழுது இவை தோன்றவில்லையே! ஆகவே ஜ்ஞானமே ப்ராந்தியால் விஷயமாகத் தோன்றுகிறது என்பது இவர்கள் கொள்கை.
    • (3) அநிர்வசநீயக்யாதி,
    • இது அத்வைதிகளின் பக்ஷம். முத்துச்சிப்பியினைப் பார்க்கும் பொழுது, வெள்ளியானது ப்ரத்யக்ஷமாய் இல்லை. கடையில் இருக்கும் வெள்ளி ப்ரத்யக்ஷமாகத் தோன்றாது. இது தன்னை ஸ்ம்ருதி என்றும் சொல்ல முடியாது. எனவே சிப்பியில் வெள்ளி தோன்றும் பொழுது, அது எல்லாராலும் கடையில் காணப்படும் வெள்ளியினைக் காட்டிலும் அவித்யையின் மஹிமையால் வேறொரு வெள்ளி உண்டாகிறது. இது இப்படி என்று சொல்ல முடியாதாகையாலே இது அநிர்வசநீயம் என்னப்பட்டது. இது ப்ரஹ்ம வ்யதிரிக்தமான பதார்த்தம் (ப்ரஹ்மத்தைத் தவிர்த்த வேறு பதார்த்தம்) ஆகையாலே இதை ஸத் என்றும் சொல்லமுடியாது (அவர்கள் கொள்கைப்படி ப்ரஹ்மம் ஒன்றே ஸத்யம்), தோன்றுவதால் அதை அஸத் என்றும் சொல்லமுடியாது
    • (4) அந்யதாக்யாதி,
    • இது தார்க்கிகர்களின் மதம் ஆகும். ஆபரணம் செய்வதற்கு உபயோகப்படும் வெள்ளியானது தோஷத்தாலே சிப்பியிலே தோன்றுகிறது. சிப்பியானது அந்யத்தாக (வேறாக) தோன்றுவதால் இது அந்யதாக்யாதி
    • (5) அக்யாதி
    • மீமாம்ஸகர்கள் மதம் அக்யாதி வாதத்தினை கொண்டுள்ளது. சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று ப்ரமிக்கும் பொழுது,
    • இதம் (இது) என்றும் ரஜதம் என்றும் இரண்டு ஜ்ஞானங்கள்
    • இது என்பது ப்ரத்யக்ஷம் – கண்ணால் காண்பது.
    • ரஜதம் என்பது ஸ்ம்ருதி அல்லது ஸ்மரணம்.
    • இவை இரண்டின் பேதத்தை அறியாமையே ப்ரமம் (சிப்பியை வெள்ளி என்று எண்ணுவது).
    • இந்த பேத க்ரஹணம் இல்லாமையே அக்யாதி.
    • க்யாதி: பேத க்ரஹ: – க்யாதி (ஜ்ஞானம்) என்பது பேத க்ரஹணம்.
    • ததபாவ: – அக்யாதி – அது இல்லாமை அக்யாதி.
    • இவற்றுள் முதலாவதான அஸத்க்யாதிக்கு நிரதிஷ்டான க்யாதி என்றும் பெயர். அவர்கள் பக்ஷத்தில் தோன்றும் அனைத்தும் அஸத்.
    • ஆத்மக்யாதியும் நிலை நிற்காது. ஜ்ஞானமும் விஷயமும் சேர்ந்தே தோன்றுகிறது. அப்படித் தோன்றினாலும் அவை வெவ்வேறே! ஜ்ஞானமாவது வஸ்துவை க்ரஹிக்கிறது. “अहम् घटम् जानामि” என்பதால் நான் கடத்தை அறிகிறேன் என்னும்பொழுது, அறியக்கூடிய ஜ்ஞானமும் அறியப்பட்ட கடமும் ஒன்றாக ஆகமுடியாது.
    • அநிர்வசநீயமும் ஸத்தா அஸத்தா என்று கேட்டால் அதுவும் நிற்காது. அநிர்வசநீயம் என்பது எப்படி அறியப்படுகிறது? இன்னதென்று சொல்ல முடியுமா என்று கேட்டால் – ஆம் என்று விடையளிப்பார்களாயின், அது அநிர்வசநீயமே அன்று. இல்லை என்றால் – அஸத்தான ஒன்றைக் கொண்டு நிர்வாஹம் செய்ய முடியாதாகையாலே, அதுவும் தள்ளுண்டதாகும்.
    • எனவே மீமாம்ஸகர்களுடைய விளக்கத்தையோ அல்லது தார்க்கிகர்களின் விளக்கத்தையோ கொண்டு தான் மேல் விவரிக்க வேண்டும். இதில் அக்யாதி எனப்படும் மீமாம்ஸகர்களின் கொள்கையானது அனுபவத்திற்க்கும், நமது மதத்திற்க்கும் ஒத்து வருகிறது.
    • யதார்த்தக்யாதி
    • இனி நாம் நம் ஆசார்யர்கள் கொண்ட யதார்த்தக்யாதி எனப்படும் ஸத்க்யாதியினைப் பார்க்கலாம்.
    • தூரத்தில் இருந்து சிப்பியினைப் பார்க்கும் பொழுது, வெள்ளியினுடைய அம்சமான பளபளப்பு தோன்றுகிறது.
    • சிப்பியில் இந்த அம்சம் தோன்றுவதன் காரணம் பஞ்சீகரணம் ஆகும். (பஞ்சீகரணம் மேலே விளக்கப்படுகிறது).
    • இதனால் இது வெள்ளி என்று நினைத்து அதை ஒருவன் எடுத்துக் கொள்ள எத்தனிக்கிறான்.
    • அருகில் பார்த்ததும், அது சிப்பி (வெள்ளியின் அம்சம் குறைவானது) என்பது தெரிந்து கொள்கிறான்.
    • இதில் அனைத்து ஜ்ஞானமும் உண்மையே. பின்பு ஏன் சிப்பியினை வெள்ளி என்று கொள்வதில்லை என்றால் – அதில் வெள்ளியின் அம்சம் குறைவாக இருப்பதினால் வ்யவஹாரம் பாதிக்கப்படுகிறது.
    • பஞ்சீகரணம்
    • பஞ்சீகரணமாவது ப்ருத்வியாதி ஐந்து பூதங்களிலும் மற்ற நான்கு பூதங்களை 50% சேர்ப்பது. உதாரணத்திற்கு ஆகாசம் என்னும் பூதத்தில் ஆகாசம் 50 சதவிகிதமும், மற்றைய பூதங்கள் (அக்னி, வாயு, நீர், ப்ருதிவீ) சேர்ந்து 50% உள்ளன. ஒவ்வொரு பூதத்தில் நின்றும் 1/8 பங்கு பிற பூதங்களில் உள்ளன. இந்த பஞ்சீகரணம் ஸ்ருஷ்டிக்கு அவசியமாகிறது.
    • இங்குக் கீழே ஆகாசம் காட்டப்பட்டுள்ளது. இது போன்றே பிற பூதங்களையும் கொள்ள வேண்டியது.
    • இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகள் தத்வத்ரயம் – 116 சூர்ணிகையில் ” ஆகாசாதி பூதங்களைந்தையும் தனிதனியே இரண்டு கூறுகளாக்கி, அவற்றிலே ஒரு கூறை நாலு கூறுகளாக்கி, அந்தக் கூறுகளை பூதாந்தரங்களிலே கூட்டி, ஸர்வ பூதங்களிலும் ஸர்வமுண்டாம்படி பண்ணுகை.” என்றருளியுள்ளது நோக்கத் தக்கது.
    • இனி மூலத்தில் உள்ளபடி விளக்கப்படுகிறது.
    • ஸத்க்யாதி என்றால் ஜ்ஞானத்தின் ஸத்யத்வம். ஜ்ஞானம் ஸத்யம் என்றால், ப்ரமம் எப்படி உண்டாகிறது என்னில், ப்ரமமானது வ்யவஹாரத்தைப் பாதிப்பது. அதாவது சிப்பியில் சிறிதளவு பார்த்திபாம்சம் இருப்பதனால், அதை வெள்ளி என்று பார்க்கும் ஜ்ஞானம் ஸத்யமாய் இருந்தாலும், அதில் வெள்ளியின் அம்சம் குறைவாக இருப்பதினால் அதை வெள்ளி என்று வ்யவஹரிப்பதை (அதைக் கடையில் கொடுத்து ஆபரணம் ஆக்க முடியாது) பாதிக்கிறது.
    • பஞ்சீகரணப் ப்ரக்ரியையினாலே ஸர்வ பூதங்களிலும் மற்ற பூதங்கள் அம்சம் சிறிதளவு கலந்து இருப்பதினால் சிப்பி, வெள்ளி போன்று தோற்றம் அளிக்கிறது. அந்த ரஜதாம்சம் ஸ்வல்பம் என்று அறியாமல் இருப்பது ப்ரமம். அதை அறிவது ப்ரம நிவ்ருத்தி ஆகும்.
    • ஸ்வப்நாதிஞானம் து ஸத்யமேவ | தத்தத்புருஷானுபாவ்யதயா தத்தத்காலாவஸானாந் ரதாதீந் பரமபுருஷ: ஸ்ரூஜதீதி ஹி ஶ்ருத்யா அவகம்யதே |
    • இனி சிப்பியில் வெள்ளி தோன்றுவது போல இருக்கும் வேறு சிலவற்றை நிர்வஹித்தருளுகிறார். ஸ்வப்நத்தில் பார்க்கப்படும் வஸ்துக்களும் உண்மையே. அந்த அந்த புருஷர்களின் புண்யபாபங்களுக்கு ஏற்ப, எம்பெருமான், அவன் மட்டும் அனுபவிக்குமாறு அவற்றை ஸ்ருஷ்டிப்பதாலே.
    • ஸ்வப்ன காலத்தில் ரதங்களோ, குதிரைகளோ, பாதைகளோ இல்லை, அந்த சமயம் ரதங்களையும், குதிரைகளையும், பாதைகளையும் (ஸவப்னம் அனுபவிப்பவன் மட்டும் பார்க்கும் படி ஈஶ்வரன் ஸ்ருஷ்டிக்கிறான் – அவனல்லவோ ஸர்வ கர்த்தா – என்னும் ப்ருஹதாரண்ய உபநிஷத்தை திருவுள்ளத்தில் கொண்டு ஶ்ருத்யா அவகம்யதே என்றார்.
    • பீதஶ்ஶங்க இத்யாதௌ நயநவர்திபித்தத்ரவ்யஸம்பின்னா நாயனரச்மயஶ்ஶங்காதிபி: ஸம்யுஜ்யன்தே: | தத்ர பித்தகதபீதிமாபிபூதச்ஶங்ககதஶுக்லிமா ந க்ருஹ்யதே | அத: ஸுவர்ணானுலிப்தச்ஶங்கவத் “பீதஶ்ஶங்க:” இதி ப்ரதீயதே | ஸுக்ஷ்மத்வாத் பீதிமா ஸ்வநயநநிஷ்க்ராந்ததயா ஸ்வேநைவ க்ருஹ்யதே, நத்வன்யை: |
    • வெண்மையான ஶங்கம் மஞ்சளாகத் தோற்றுவது இந்த்ரியத்தின் தோஷத்தாலே. கண்ணில் இருக்கும் பித்தத்துடன் கலந்த சக்ஷுரிந்த்ரியத்தின் கிரணங்கள் க்ரஹிப்பதால் அவனுக்கு மாத்திரம் வர்ணம் மஞ்சளாகத் தெரிகிறது.
    • ஜபாகுஸுமஸமீபவர்திஸ்படிகமநிரபி ரக்த இதி க்ருஹ்யதே | தத்ஞானம் ஸத்யமேவ |
    • செவ்வரத்தம்பூவின் பக்கத்திலுள்ள ஸ்படிகம் சிவப்பாக அறியப்படுவதும் ப்ரமை தான். பூவிலுள்ள சிவப்பு வர்ணம் ஸ்படிகத்தின் வெண்மையை மறைத்துவிடுகிறது
    • மரீசிகாயாம் ஜலஞானமபி பஞ்சீகரணப்ரக்ரியயா பூர்வோக்தவதுபபத்யதே | பஞ்சீகரணப்ரக்ரியா து உத்தரத்ர வக்ஷ்யதே |
    • கானல் நீர் தோற்றுவதும் முன்பு சொன்ன பஞ்சீகரணத்தாலே. பஞ்சீகரண ப்ரக்ரியை முன்பு விளக்கப்பட்டது.
    • திக்ப்ரமோபி ததைவ. திஷி திகந்தரஸ்ய வித்யமானத்வாத் அவச்சேதக-மன்தரேன திகிதி த்ரவ்யான்தரானங்கீகாராச்ச |
    • ஒரு திக்கை வேறு திக்காக எண்ணுவதும் அப்படியே. திக்கு என்பது வஸ்துவின் இடத்தைப் பொறுத்து மாறுவதாலும்.
    • அலாதசக்ராதௌ து ஶைக்ஹ்ர்யாதன்தராலாக்ரஹநாத்தத்தத்தேஸஸம்யுக்த தத்தத்வஸ்துந ஏவ சக்ராகாரேந க்ரஹணம் | ததபி ஸத்யமேவ |
    • ஒரு கொள்ளிக்கட்டையை வேகமாகச் சுற்றும் பொழுது இடைவெளி தோன்றாமல் அது சக்ரமாகத் தோன்றுகிறது. அதனாலே ஒரு சக்ரமாகப் பார்க்கப்பட்டதும் உண்மையில் இருப்பது தான்.
    • தர்பணாதிஷு நிஜமுகாதிப்ரதீதிரபி யதார்தா | தர்பணாதிப்ரதிஹதகதயோ நாயநரஷ்மயோ தர்பணாதி க்ரஹநபூர்வகம் நிஜமுகாதி க்ருஹ்ணன்தி | தத்ராப்யதி ஶைக்ஹ்ர்யாதன்தராலாக்ரஹணாத்ததா ப்ரதீதி: |
    • கண்ணாடி முதலியவற்றில் தெரியும் முகமும் ஸத்யமே. கண்ணாடியில் பட்டு கண்ணில் இருந்து வரும் கிரணங்கள் திரும்பி வருகின்றன. முதலில் கண்ணாடியைப் பார்த்துப் பின் முகத்தைப் பார்க்கின்றன. இவை அனைத்தும் வேகமாக நடப்பதால் நம்மால் பிரித்து உணர முடியவில்லை. எனவே கண்ணாடியில் முகம் இருப்பது போன்று தோன்றுகிறது.
    • த்விசந்த்ரஞானதாவபி அங்குல்யவஷ்டம்ப திமிராதிபிர்நயனதேஜோகதிபேதாத் ஸாமக்ரீத்வயமந்யோந்யநிரபேக்ஷம் த்விசந்த்ரக்ரஹநஹேதுர்பவதி | ஸாமக்ரீத்வயம் பாரமார்திகம் | தேன த்விசந்த்ரஞானம் பவதி | அதஸ்ஸர்வம் ஞானம் ஸத்யம் ஸவிசேஷவிஷயம் ச; நிர்விஶேஷவஸ்துநோSக்ரஹணாத் ||
    • கண்ணில் விரலை வைத்துப் பார்த்தால் சந்த்ரன் இரண்டாகத் தெரிவது – கண்ணில் இருந்து புறப்படும் கிரணங்கள் இரண்டாகப் பிரிந்து தனித்தனியே போய் சந்த்ரனுடன் ஸம்பந்தப்படுகின்றன. ஆகையால் சந்த்ரன் இரண்டாகத் தெரிகிறது.
    • ஆகையால் எல்லா ஜ்ஞானங்களும் ஸத்யமாகவும், விசேஷணங்களுடன் கூடியே தான் இருக்கும் என்பது காட்டப்பட்டது. நிர்விசேஷ க்ரஹணம் என்பது ஸம்பவிக்காது.
    • ஏவம் பூதம் ப்ரத்யக்ஷம் ப்ரதமதோ பேதமேவ க்ருஹ்ணாதி | பேத இதி வ்யவஹாரே து ப்ரதியோக்யபேக்ஷா, ந து ஸ்வரூபே | தேநாவஸ்தான்யோந்யாஶ்ரயதோஷோSபி நாஸ்தி | உபர்யுபரி த்வபேக்ஷா அநவஸ்தா | பரஸ்பராபேக்ஷா அந்யோந்யாஶ்ரய: ||
    • வஸ்துக்களை க்ரஹிக்கும் பொழுது விஶேஷணங்களுடன் சேர்ந்தே க்ரஹிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது. இந்த விஶேஷணம் அந்த வஸ்துவின் தர்மமாகவே இருக்கிறது. இதனை நையாயிகர்கள், அந்த வஸ்துவின் ஜாதியைக் காட்டிலும் வேறான பேதமாகக் கொண்டார்கள். உதாரணத்திற்கு ஒரு பசு மாட்டினை பார்க்கும் பொழுது அதன் ஜாதியான கோத்வம் (பசுவாயிருக்கும் தன்மை) என்பது விஶேஷணம். இதனை அவர்கள் வேறு பேதம் என்று கொள்கிறார்கள். அப்படிக் கொண்டால் அந்யோந்யாஶ்ரயணம், அநவஸ்தா என்கிற தோஷங்கள் வரும். எனவே அது கூடாது.
    • அந்யோந்யாஶ்ரயணம் – பசுமாட்டையும், வேறு ஒரு விலங்கு – ஆட்டினையும் எடுத்துக் கொள்வோம். இப்பொழுது அந்த விஶேஷணம் பேதம் என்று கொண்டால், அது ஆட்டில் இருந்து வேறுபட்டது என்று தெரிய ஆட்டின் விஶேஷணம் அறிய வேண்டும். ஆட்டின் விஶேஷணம் அறிய, அது மாட்டின் விஶேஷணத்தில் இருந்து வேறுபட்டது என்று அறிய மாட்டின் விஶேஷணம் அறிய வேண்டும். இப்பொழுது அறிந்து கொள்ள ஆரம்பித்ததே மாட்டின் விஶேஷணத்தைத் தான்!
    • அநவஸ்தா – ஆட்டின் விஶேஷணம் மாட்டைக் காட்டில் வேறாகில், அது மாட்டின் விஶேஷணத்தை காட்டிலும் வேறு என்றறிவதற்கு ஒரு பேதத்தையும், அதை மாட்டில் இருந்து வேறுபடுத்திக் காட ஒரு பேதத்தையும் கொள்ள வேண்டும். இது முடிவே இல்லாமல் போகும்
    • நநு தஶதத்வமஸி இத்யேததபி ப்ரத்யக்ஷம் கிம் நஸ்யாதிதி சேந்ந; த்வமிதேதஸ்ய ப்ரத்யக்ஷத்வேSபி தஶமோSஹமித்யேதஸ்ய வாக்யஜன்யத்வாத் | யதி தஶமோஹமித்யேதஸ்ய ப்ரத்யக்ஷவிஷயத்வம் தர்ஹி தர்மவாம்ஸ்த்வமித்யேத்ஸ்யாபி ப்ரத்யக்ஷத்வம் ஸ்யாத் | அங்கீகாரேSதிப்ரஸங்காத் | அத ஏவ தத்வமஸி இதி வாக்யஸ்ய நாபரோக்ஷஞானஜனகத்வம் ||
    • வாக்ய ஜன்ய ஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் என்று கூறும் அத்வைதிகள் பக்ஷத்தினைக் கண்டிக்கிறார். தன்னை மறந்த 10 மூடர்கள் கதை எனப்படும் – அதாவது ஒரு ஆற்றினை பத்துப் பேர் கடக்கிறார்கள். ஆற்றினை கடந்த பின்பு அனைவரும் கடந்து விட்டோமா என்று பார்ப்பதற்க்காக அனைவரையும் எண்ணுகிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை எண்ணாமல் மற்ற 9 பேர்களை எண்ணி, ஒருவனைக் காணவில்லை என்று துக்கிக்கும் பொழுது – ஒரு அறிவாளி அதனைப் பார்த்து – நீ தான் அந்த பத்தாவது நபர் என்று அறிவுரை கூறியவுடன். நாம் பத்துப் பேர்கள் என்கிற ஜ்ஞானம் வந்து மகிழ்ச்சியடைகிறார்கள்.
    • அதுபோன்று தன்னையொழிந்த பதார்த்தங்கள் அனைத்தும் மித்யை என்று தெரியாத ப்ரஹ்மமானது, ஒரு ஆசாரியன் “தத்வமஸி” என்று உபதேசம் பெற்றவுடன் அந்த மித்யை நீங்கி, மோக்ஷம் அடைகிறான் எனவும், தத்வமஸி என்னும் வாக்ய ஜன்ய ஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் என்றும் கூறுகிறார்கள்.
    • வாக்ய ஜன்ய ஜ்ஞானம் என்றுமே ப்ரத்யக்ஷம் ஆக முடியாது. அப்படிக் கொண்டால் ப்ரமாணத்தின் வரைமுறையே போய்விடும். தனது வருங்காலத்தை தெரிந்து கொள்வதில் ஆசையுடைய ஒருவன் ஒரு ஜோஸ்யனிடம் சென்று பார்க்கிறான். அந்த ஜோஸ்யன் அவனை நோக்கி “நீ தர்மவானாக இருக்கிறாய்” என்றால் – இவர்கள் கொள்கைப்படி – தர்மவான் என்பது ப்ரத்யக்ஷம் ஆகிவிடும்!
    • ஏதேந ப்ரத்யக்ஷப்ரமாகரணம் ப்ரத்யக்ஷப்ரமாணம் | ப்ரமா சாத்மசைதன்யமேவ, சைதன்யம் ச த்ரிவிதம் – அந்த:கரணாவச்சிந்ந சைதன்யம், வ்ருத்த்யவச்சிந்ந சைதன்யம், விஷயாவச்சிந்ந சைதன்யம் சேதி | யதா த்ரயாணாமைக்யம் தா ஸாக்ஷாத்கார: | ஸோSபி நிர்விஶேஷவிஷய ஏவ, அபேதமேவ க்ருஹ்ணாதி-இத்யாதி குத்ருஷ்டிகல்பநா நிரஸ்தா | நிர்விகல்பகம் நாம ஜாத்யாதியோஜனாஹீனம் வஸ்துமாத்ராவகாஹி கிஞ்சிதிதமிதி ஞானமிதி நையாயிகாநாம் மதமபி நிரஸ்தம் |
    • இனி அத்வைதிகள், ப்ரமையாவது ஆத்மசைதந்யமாகும். அதுவும் மூன்று வகைப்படும்.
    • 1) அந்த:கரணத்தோடு சேர்ந்த சைதந்யம்,
    • 2) செயல்படும் சைதந்யம்,
    • 3) விஷயத்தோடு சேர்ந்த சைதந்யம்
    • எப்போது இந்த மூன்றும் ஒன்று சேருகின்றதோ, அப்போது ஸாக்ஷாத்காரம் உண்டாகிறது. அவ்வறிவும் பேதமின்மையே காட்டுகிறது. அதற்கு விஷயம் நிர்விஶேஷ ஜ்ஞானமாத்திரமான ப்ரஹ்மமேயாகும். என்பது அவர்கள் பக்ஷமாகும்.  இவையனைத்தும் ப்ரமாணத்திற்கு விருத்தமாகயாலே பொருந்தாது.
    • இவ்விடத்தில், ப்ரமாண விருத்தம் என்றதற்கு
    • [இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோSநுவிதீயதே – ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி]-2-67) விஷயங்களில் ஈடுபடும் இந்த்ரியங்களை எந்த மனமானது பின்பற்றும்படி செய்யப்படுகிறதோ, அந்த மனம்  (சைதந்ய திரிவிதமோ அந்த:கரணமோ இங்கு அருளவில்லை என்பது )- என்கிற பகவத் கீதா வாக்யமும்,
    • ஸ்ரீ பாஷ்ய ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் மஹா ஸித்தாந்தத்தில் ஸ்வாமி பாஷ்யகாரர் ஸ்ரீஸுக்திகளையும்
    • திருவுள்ளம் பற்றி ப்ரமாணத்திற்கு விருத்தம் என்று அருளுகிறார்.
    • ஆத்மா வஸ்துக்களை க்ரஹிக்கிற விதம் கீழேயே அருளப்பட்டது.
    • இனி நையாகிகர்கள் (தார்க்கிகர்கள்) பக்ஷம் விலக்கப்படுகிறது. அவர்கள் பக்ஷத்தில் “நிர்விகல்பக ப்ரத்யக்ஷம் என்பது ஜாதி (ஜாதி என்றால் பசு மாடுகள் அனைத்தும் ஒரு ஜாதி, ஆடுகள் அனைத்தும் ஒரு ஜாதி என்பன போன்று) முதலான விசேஷணங்கள் இல்லாமல் வஸ்து மாத்திரத்தைத் தெரிவிக்கிறது” என்பதாகும். அதுவும் தள்ளப்பட்டது. நிர்விகல்பக/ஸவிகல்பக ஞானங்கள் கீழே விளக்கப்பட்டது காண்க.
    • நநு “காணாதம் பானிணீயஞ்ச ஸர்வஸாஸ்த்ரோபகாரத்வகம்” இத்யுக்த்வாத் கதம் கௌதமமதநிராஸ இதி சேத்; உச்யதே – நாஸ்மாபி: கார்த்ஸ்ன்யேனாஸ்ய மதஸ்ய நிராஸ: க்ரியதே, யாவதிஹ யுக்தியுக்தம், தாவத் ஸ்வீக்ரீயதே; பரகல்பிததடாகோபஜீவனவத் | ந கலு தடாகஸ்த: பங்கோSபி ஸ்வீக்ரீயதே | அத: பரமாணுகாரணத்வம், வேதபௌருஷேயத்வம், ஈஶ்வரானுமானிகத்வம், ஜீவவிபுத்வம், ஸாமான்யவிசேஷஸமாவாயானாம் பதார்தத்வேன ஸ்வீகார:, உபமானாதே: ப்ரமாணாத்வகல்பனம், ஸங்க்யாபரிமாநப்ருதக்த்வ பரத்வாபரத்வகுருத்வத்ரவத்வாதீனாம் ப்ருதக்குணத்வ கல்பனம், திஶோSபி த்ரவ்யத்வகல்பனம் இத்யாதிஸூத்ரகாராதிவிருத்தா ப்ரக்ரியா நாஸ்மாBஹி: ஸ்வீக்ரியதே | அவிருத்தானி ஸ்வீக்ரியந்தே இதி விரோத: |
    • காணாதரால் ப்ரவர்த்திப்பிக்கப்பட்ட தர்க்கமும், பாணினியை முதல்வராகக் கொண்ட வையாகரண மதமும் எல்லா ஶாஸ்த்ரங்களுக்கும் உபகாரம் செய்கின்றன என்று சொல்லி இருக்க – அம் மதங்களைத் தள்ளலாமா என்று கேள்வியை அனுவாதம் (அனுமதித்து) செய்து, அதற்கு உத்தரம் அருளுகிறார்.
    • வேதவிருத்தமான விஷயங்கள் அம்மதங்களில் இருப்பதினால் வைதிகர்கள் அம்மதங்களைக் கொள்ளமாட்டார்கள். அவைகளாவன,
    • ஸாமான்யம், விசேஷம், ஸமவாயம் என்று பொருட்களைக் கற்பிப்பது,
    • ஸங்க்யை, பரிமாணம், ப்ருதக்த்வம், பரத்வம், அபரத்வம், குருத்வம், த்ரவத்வம் – என்ற ஏழும் தனிக்குணங்கள்
    • வேதம் பரமபுருஷனால் செய்யப்பட்டது
    • பரமாணுக்கள் ஜகத் காரணம் என்பது
    • ஜீவனை விபு என்பது
    • உபமானம் முதலானவற்றை தனிப் ப்ரமாணம் என்பது
    • திக்கை தனி த்ரவ்யமாகக் கொள்வது
    • முதலான கொள்கைகளால் வேத விருத்தமானவற்றை ஆதரிப்பதால், வைதிகர்கள் அவற்றைக் கைக்கொள்ளார்கள். குளத்தில் இருந்து நீர் எடுத்துக் கொள்ளத் தக்கதாயிருந்தாலும், அதில் உள்ள சேறு உபயோகப்படாதாப் போலே, அவர்கள் மதத்தில் உள்ள வேத விருத்தமில்லாதவற்றைக் கைகொள்ளலாம் என்பதே “ஸர்வஶாஸ்த்ரோபகாரகம்” என்பதின் விஷயமாகும்.
    • —–
    • ஆக இந்த முதல் அவதாரத்தால், ஸித்தாந்த ஸங்க்ரஹத்தை முதலில் சொல்லி, பின்பு, உத்தேச, லக்ஷண, பரீக்ஷா க்ரமத்தில் உத்தேசிக்கப்பட்ட பதார்த்தங்களின் பிரிவினைக் காட்டி, அதன் பின்பு முதலில் ப்ரத்யக்ஷத்தை விசாரிக்க ஆரம்பித்து, ப்ரமாணத்தின் லக்ஷணத்தைச் சொல்லி, ஸம்சய அந்யதா விபரீத ஜ்ஞானங்களை விவரித்து, லக்ஷணத்தின் தோஷங்களைக் காண்பித்து, அத்தோஷங்கள் கீழ்ச் சொன்ன லக்ஷணத்தில் இல்லை என்பது விளக்கியருளி, நிர்விகல்பகம் – ஸவிகல்பகம் ஆகியவற்றை விளக்கி, நிர்விகல்பகம் வஸ்து மாத்ரம் க்ரஹிப்பது அன்று என்று விளக்கியருளி, ப்ரத்யக்ஷ ஜ்ஞானம் உண்டாகும் விதத்தினைக் காட்டி, நிர்விகல்பக ஜ்ஞானத்தின் பிரிவுகள் காட்டியருளி, ஸ்ம்ருதி, ப்ரத்யபிஞை ஆகியவைகள் தனிப் ப்ரமாணம் அன்று – அவைகள் ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறது என்பதையும் காட்டி அபாவத்தின் அநங்கீகாரத்தையும் காட்டி, ஜ்ஞானங்கள் அனைத்தும் உண்மையே என்கிற ஸத்க்யாதி பக்ஷத்தைக் விளக்கியருளி, அதன் காரணத்தையும் காட்டி, வாக்யஜன்ய ஞானம் ப்ரத்யக்ஷம் அன்று என்பதையும் விளக்கியருளி, காணாதம் எனப்படும் ந்யாய மதம் முதலானவற்றை ஏற்காத காரணங்களையும் அருளிச் செய்து இந்த ப்ரத்யக்ஷ அவதாரத்தைத் தலைக்கட்டியருளுகிறார்.
    • முதல் அவதாரம் முற்றிற்று.
    • ————————-
    • ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    • ஸ்ரீநிவாஸாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    • ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    • ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    • ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    • ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள்திருவடிகளே சரணம்-

ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்த ஸ்ரீ நித்ய திவ்ய கிரந்தம்

November 29, 2023

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த நவ கிரந்தகளுக்குள் இறுதியானது – ஸ்ரீ நித்ய கிரந்தம் என்பது
ஸ்ரீ பகவத் ஆராதன ப்ரயோகம் வஷ்யே -பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன் -என்று தொடங்கி இருப்பதால்
இது பகவத் ஆராதன கிரமத்தைத் தெரிவிப்பதற்காகவே அருளிச் செய்யப் பெற்று இருந்தாலும்
அதற்குப் பூர்வ அங்கமாக உடலைச் சுத்தி செய்து கொள்வது முதலியனவும் இந்நூலில் முதலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளன

திருவாராதனம் செய்யும் முன்பு அவனை சரண் அடைய வேண்டும் என்பதால்
தமேவ சரணம் உப கச்சேத் அகில இத்யாதிநா -என்று இந்நூலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது
அகில ஹேய ப்ரத்ய நீக -என்பது முதலான சூர்ணிகைகளால் எம்பெருமானைச் சரண் அடைய வேண்டும் என்பதால்
அகில ஹேய ப்ரத்ய நீக என்பது தொடங்கி
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்பது வரையும்
அதற்கு மேல் உள்ள ஸ்லோகங்களையும் இங்கு அனுசந்திக்க வேண்டும் என்பர் பெரியோர்

தண்டம் சமர்ப்பித்து பற்றி ப்ரணம்ய – வணங்கி -என்று ஒருமையிலே அருளிச் செய்தமையால்
ஒரு முறை தண்டம் சமர்ப்பிப்பதே எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் என்பது தெளிவு
அதே போல் மணி சேவிப்பதையும் அருளிச் செய்யாமையால் இல்லங்களில் திரு வாராதனம் செய்யும் பொழுது மணி சேவிப்பது இல்லை என்ற அனுஷ்டானமும் காட்டப்படுகிறது –

இறுதியில்
ஸ்ருதி ஸூகைஸ் ஸ்தோத்ரைஸ் அபிஷ்டூய-செவிக்கு இனிய சொற்களால் ஸ்துதித்து -என்று அருளிச் செய்யப்பட்டுள்ளதால்
செவிக்கு இனிய செஞ்சொல் -திருவாய் -10-6-11-திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவிக்க வேணும் என்பதையும் காட்டி அருளுகிறார் –

ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் உள்ள விஷயங்கள்
1- பகவானே நம்மைக் கொண்டு திருவாராதனம் செய்வித்துத் கொள்கிறான் என்று அனுசந்தித்தல்
2-நீர் நிலைக்குச் சென்று தேஹ சுத்தி செய்து கொள்ளுதல்
3-தீர்த்தமாடுதல்
4-வேஷ்ட்டி உத்தரீயம் அணிந்து திருமண் காப்பு இட்டுக் கொள்ளுதல்
5-ஆதார சக்தி தர்ப்பணம் முதலியவை செய்தல்
6-குரு பரம்பரையை அனுசந்தித்து பிறகு அகில ஹேய ப்ரத்ய நீக என்பது முதலிய
சரணாகதி கத்ய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து எம்பெருமானைச் சரண் அடைதல்
7-எம்பெருமானுடைய வலது திருவடிகளில் புகுவதாக நினைத்தால்
8-ஆவாஹனங்கள் செய்து வட்டில் முதலியவற்றை வைத்தல்
9-எம்பெருமானுடைய பரிஜன பரிவாரங்களை வணங்குதல்
10- எம்பெருமானுக்கு தண்டம் சமர்ப்பித்துத் திரு வாராதனத்தைத் தொடங்குதல்
11-அர்க்கியம் பாத்யம் ஆசமநீயம் சமர்ப்பித்தல்
12-ஸ்நாநாசனம் -திருமஞ்சனம் -சமர்ப்பித்தல்
13-அலங்கார ஆசனம் சமர்ப்பித்தல்
14-மந்த்ராஸனம் -உபசாரங்கள் -சமர்ப்பித்தல்
15-போஜியாசானம் -அமுது =சமர்ப்பித்தல்
16-மீண்டும் மந்த்ராஸனம் சமர்ப்பித்தல்
17-செவிக்கினிய செஞ்சொற்களால் ஸ்துதித்தல்
18-தண்டம் ஸமர்ப்பித்து திருவாராதனத்தை நிறைவு செய்தல் –

————-————————-

அத பரமைகாந்திநோ பகவதாராதன  ப்ரயோகம்  வக்ஷ்யே! 

பிறகு பரமைகாந்திகளினுடைய பகவானின் ஆராதன க்ரமத்தைச் சொல்லுகிறேன்.

பகவத் கைங்கர்யே கரதி! பரமைகாந்தி பூத்வா! ஸ்வஶேஷ பூதேநமயா!
ஸ்வகீயைஶ்ச தேஹேந்த்ரியாந்த: கரணை:| ஶ்வகீயை ரேவகல்யாணதமை:|
ஔபசாரிக ஸாம்ஸ்பர்ஶிகாப்வயஹாரிகை: போகைரகில பரிஜந பரிச்சாந்விதம்!
ஸ்வாத்மாநம் ப்ரீதம்| காரயிது முபக்ரமதே இத்யநுஸந்த்யாய தீர்த்தம் கத்வா|

ஶுசௌ தேஶே பாதௌ ப்ரதூல்யாசம்ய| தீரம் ஸம்ஶோத்ய|
ஶுசௌ தேஶே மூலமந்த்ரேண ம்ருத  மாதாய| த்விதா க்ருத்வா|
ஶோதித தீரே நிதாய| ஏகே நாதிக பாகேந தேஹமஹ ப்ரக்ஷாளநம் க்ருத்வா| நிஜம்யாசம்ய|
ப்ராணாயாம  த்ரய மாஸீநோ பகவந்தம் த்யாயநு| க்ருத்வாந்யம் ம்ருத்பாகமாதாய| வாமபாணி தலேத்ரிதா க்ருத்வா|

ப்ருதக் ப்ருதக் ஸம்ப்ரோக்ஷ்ய| அபிமந்த்ரைகேந திக்பந்தன அஸ்த்ர மந்த்ரேணகுர்யாது|
அந்யே நதீர்த்தஸ்ய பீடம் இதரேண காத்ரலேபநம் தத: பாணீ ப்ரக்ஷால்ய| உதகாஞ்சலி மாதாய|
தீர்த்தஸ்ய அர்க்யாந்த முதுக்ஷீப்ய|
பகவது வாம பாதாங்குஷ்ட விநிஸ்ஸ்ருத கங்கா ஜலம் தீர்த்த ஸங்கல்பித பீடே ஆவாஹ்ய|

மூல மந்த்ரேணாபி மந்த்ரிய உதகாஞ்ஜலி மாதாய| ஸப்த க்ருத்வோபி மந்த்ரியஸ்வ மூர்த்நிஸிம்சேத்| 
ஏவம் த்ரி: பஞ்ஜக்ருத்வ ஸப்த க்ருத்வோவா தக்ஷிணேந பாணிநா ஜலமாதாயாபி மந்த்ரிய|
பீத்வா ஆசம்ய ஸ்வாத்மாநம் ஸம்ப்ரோக்ஷ்ய|
தீர்த்தேநி மக்னோ பகவத் பாதாரவிந்த விந்யஸ்த ஶிரஸ்கோ யாவச்சக்தி மூல மந்த்ரம் ஜபித்வா|
உத்தீர்ய ஶுக்ல வஸ்த்ர தரோ த்ருதோத்தரீய ஆசம்ய| ஊர்த்வ புண்ட்ராம்ஸ்த தத்தந் மந்த்ரேண தாரயித்வா| 

————

பகவானுடைய கைங்கர்யமொன்றிலேயே ஆசையுடைய பரமைகாந்தியாயிருந்து
பகவாநேவ ……… உபக்ரமதே என்றநுஸந்தித்துத் தீர்த்தக் கரைக்குச் சென்று பரிசுத்தமான இடத்தில் கால்களை யலம்பி,
ஆசமனம் செய்து, கரையை யலம்பி விட்டுப் பரிசுத்தமான இடத்திலிருந்து மண்ணை எடுத்து, இரண்டு பாகங்களாகப் பிரித்து,
முன்னால் அலம்பப் பட்டிருக்கிற கரையில் வைத்து பெரியதாகிய ஒரு பாகம் மண்ணினால் உடம்பு முழுவதையும் தேய்த்து
அழுக்கைப் போக்கடித்துக் கொண்டு ஜலத்தில் முழுகி, ஆசமனம் செய்து, கரையில் உட்கார்ந்து
பகவானை த்யாநம் செய்து கொண்டு மூன்று ப்ராணாயமங்களைச் செய்து,

மற்றொரு பாகம் மண்ணை எடுத்து இடத்து உள்ளங்கையில் மூன்று பாகமாகப் பிரித்து வைத்துக் கொண்டு தனித்தனியே ப்ரோக்ஷித்து,
மூல மந்திரத்தினால் ஜபித்து, ஒரு பாகத்தை எடுத்து அஸ்திர மந்திரத்தினால் திக் பந்தனம் செய்ய வேண்டும்.
மற்றொரு பாகத்தினால் இனி ஆவாஹனம் செய்யப் போகிற தீர்த்தத்திற்குப் பீடம் கல்பிக்க வேண்டும். மற்றொரு பாகத்தினால் உடம்பு முழுவதையும் பூசிக் கொள்ள வேண்டும்.

பிறகு கைகளை யலம்பி, இரண்டு கைகளிலும் ஜலத்தை எடுத்து , தீத்த்தத்தில் முன் சேர்க்கப் பட்டிருக்கிற பீடத்தில்
பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரலிலிருந்து உண்டான கங்கா தீர்த்தத்தை ஆவாஹனம் செய்து, அஷ்டாக்ஷரத்தினால் ஜபித்து,
மறுபடியும் இரண்டு கைகளிலும் தீத்த்தத்தை எடுத்து,ஏழு தடவை மூல மந்திரத்தை உச்சரித்துத் தன் தலையில் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டியது.
இப்படி மூன்று,ஐந்து அல்லது ஏழு தடவை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டியது.

பிறகு வலது கையினால் ஜலத்தை எடுத்து அஷ்டாக்ஷரத்தினால் ஜபித்து உட்கொண்டு, ஆசமனம் செய்து
தன்னை ப்ரோக்ஷித்துக் கொண்டு, ஜலத்தில் முழுகியிருந்து கொண்டு
பகவானுடைய திருவடிகளில் தன்னுடைய தலை வைக்கப் பட்டிருப்பதாக த்யானித்துக் கொண்டு
ஶக்தியுள்ள வரையில் அஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
பிறகு கரையிலேறி பரிசுத்தமான வஸ்திரங்களை தரித்துக் கொண்டு, திரு மண் காப்புகளை
அந்தந்த மந்திரங்களினால் பகவானை த்யானித்துக் கொண்டு தரிக்க வேண்டும்.

—————

பகவந்த மநுஸ்ம்ருத்ய தந்மந்த்ரேண பகவத் பர்யந்தாபி தாயிநா மூல மந்த்ரேண
ஜலம் பீத்வாசம்ய ப்ரோக்ஷ்ய ! பரிஷிச்ய| உதகாஞ்சலி மாதாய|
பகவத் பாதார விந்தயோர் நிக்ஷிப்ய ப்ராணா நாயம்ய பகவந்தம் த்யாத்வா –
அஷ்டோத்தர ஶதம் மூலமந்த்ராவர்த்ய பரிக்ரம்ய| நமஸ்க்ருத்ய ஆதார ஶக்த்யாதி ப்ருதிவ்யந்தம் தர்ப்பயித்வா|
ஸ்ரீவைகுண்டாதி பார்ஷதாந்தம் தர்பயித்வா | தேவாந் ருஷீந் பிதுரூந்
பகவதாத்மகாந் த்யாத்வா ஸந்தர்ப்ய ஶுசௌ தேஶே வஸ்த்ரம் ஸம்பீட்யாசம்ய !
ஆவாஹித தீர்த்தம் ஆத்மநி மூல மந்த்ரேண ஸமாஹ்ருத்ய| யாகபூமிம் கச்சேத்|

ஸுப்ரக்ஷாளித | பாணிபாத: ஸ்வாசாந்த: ஶசௌ தேஶே அதிமநோஹரே நிஶ்ஶபேத் புவம் ஸம்க்ருஹ்ருயதாம்|
ஶோஷணாதிபிர் விஶோத்ய| குரு பரம்பரயா பரம குரும் பகவந்த முபகம்ய தமேவ ப்ராப்யத்வேந| ப்ராபகத்வேந|
அநிஷ்ட நிவாரகத்வேந| யதாவஸ்தித ஸ்வரூப ரூபகுண | விபூதி லீலோபகரண| விஸ்தார மநு ஸந்த்யாய தமேவ| ஶரண முபகச்சேத்|
அகிலஹேயே த்யாதிநா| ஏவம் ஸரணமுபகம்ய| தத்ப்ரஸாதோப ப்ரஹ்மித மநோ வ்ருத்தி தமேவ பகவந்தம் ஸர்வேஸ்வரேஸ்வர மாத்மந:
ஸ்வாமித்வேநாநுஸந்த்யாய அத்யர்த்த ப்ரியாவிரத விஶதத மப்ரத்யக்ஷ ரூபாநு த்யாயேந த்யாயந் நாஶீத|
ததஸ்ததநுபவ ஜநிதாதி மாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜா மாரபேத|

———-

பிறகு தேவதைகள், ரிஷிகள்,பித்ருக்கள் இவர்கள் பகவானை அந்தர்யாமியாக வுடையவர்கள் என்று
த்யானித்துக் கொண்டு தர்ப்பணம் செய்து பரிசுத்தமான இடத்தில் வஸ்திரத்தைப் பிழிந்து ஆசமனம் செய்து விட்டு
(ஸ்நான காலத்தில்)ஆவாஹனம் செய்யப்பட்ட தீர்த்தத்தை தன்னிடத்திலே அஷ்டாக்ஷரத்தினால்
ஆஹ்வானம் செய்து விட்டு ஆராதனம் செய்ய வேண்டிய இடத்திற்குப் போக வேண்டும்.

நன்றாகக் கை கால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்து விட்டு பரிசுத்தமாயும் அழகாயும் ஓசை யில்லாததுமான இடத்தில்
தனக்கு இடத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த பூமியை ஶோஷண தாஹன ப்லாவனங்களினால் சுத்தி செய்து
குரு பரம்பரையை முன்னிட்டுப் பகவானை த்யானம் செய்துகொண்டு அந்த பகவானையே
அடைய வேண்டிய ப்ரயோஜனமாகவும் அதை அடைவிக்கும் உபாயமாகவும்
அனிஷ்டங்களைப் போக்கடிப்பவனாகவும் அந்த பகவானுடைய உள்ளபடியான ஸ்வரூபம், ரூபம், குணங்கள், விபூதிகள்,
இவைகளின் விவரங்களை யெல்லாம் விஸ்தாரமாய் அனுஸந்தித்து,

“அகிலஹேய ப்ரத்யநீக”   என்றாரம்பிக்கும் கத்யத்தினால் ஶரணமாக வடைய வேணும்.
இப்படிச் ஶரணமாகவடைந்து அவனுடைய அனுக்ரஹத்தினால் வ்ருத்தி செய்யப்பட்ட மனோ தைர்யத்தை யுடையவனாய்
அந்த ஸர்வேஸ்வரனாகிய பகவானையே தனக்கு ஸ்வாமியாக அனுஸந்தானம் செய்து கொண்டு
மிகவும் ப்ரியமாகவும் இடைவிடாமலும் ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பதைப்போல் மிகவும் விஶதமாகவுமிருக்கிற
த்யானத்தினால் அனுஸந்தானம் செய்துகொண்டிருக்க வேண்டும்.
பிறகு அப்படிப்பட்ட அனுபவத்தினால் உண்டாக்கப்பட்ட ப்ரீதியினால் செய்விக்கப் படுகின்ற பரிபூர்ண கைங்கர்யமாகிய ஆராதனத்தை ஆரம்பிக்க வேண்டும்.

—————–

பகவாநேவ ஸ்வநீயாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஶேஷதைக ரஸேநா
நேநாத்மநா ஸ்வகீயைஶ்ச தேஹேந்த்ரியாந்த: கரணை;| ஸ்வகீய கல்யாண தமத்ரவ்ய மயாந்
ஔபசாரிக ஸாம் ஸ்பர்ஶிகாப்ய வஹாரிகாதி ஸமஸ்த போகாநதி ப்ரபூதாநதி|
ப்ரிய தமாநதி ஸமக்ராநத்யந்த பக்தி க்ருதாநகில பரிஜந பரிச்சதாந்வி தாயஸ்வஸ்மை|
ஸ்வ ப்ரீயதே ஸ்வயமே ப்ரதிபாதயிது முபக்ரமதே| இத்யநு ஸந்த்யாய|

ஸ்வ தேஹே பஞ்ஜோபநிஷந் மந்த்ராந் ஸம்ஹாரக்ரமேணந்யஸ்ய  ப்ராணேயாமேந ஏகேந தக்ஷிண பாணிநா|
நாபிதேஶே மூலமந்த்ரம் ந்யஸ்ய மந்த்ரோத்பூதே சண்டவாய்வ்யாப்யாயித
நாபிதேஶஸ்த வாயுநா ஶரீர அந்தர் பஹிஶ்ச ஸர்வ தத்வமயம் |
தத்வ க்ரமேண விஶோஷ்ய| புந:ப்ராணேயாமே நைகேந ஹ்ருத்தேஶ மூலமந்த்ரம் ந்யஸ்ய|
மந்த்ரோத்பூதசக்ராக்நி ஜ்வாலோப ப்ரஹ்மித ஜாடராக்னிநா தக்த தத்தத்ஸமஷ்டி ப்ரலீந
ஸர்வ தத்வ ஸர்வ கில்பிஷ ஸர்வாஜ்ஞானதத்வாஸநோ பூத்வா
பகவத் தக்ஷிண பாதாங்குஷ்டே மூல மந்த்ரேண ஸ்வாத்மாநம் ப்ரவேஶயேத்|

அபரேண ப்ராணாயாமேந பகவத் ப்ரஸாதேந பகவத் கிங்கரதா யோக்யதாமாபாத்யா|
தஸ்மாதாதாய  தத்வாம பாதாங்குஷ்டா தஸ்தாத் மூலமந்த்ரேணாத்மாநம் விந்யஸ்ய,
தேவவாமபாதாங்குஷ்டநகஶிதாம்ஶுமண்டலாத்கலத் திவ்யாமாதாரஸை: ஆத்மாநம் அபிஷிஞ்ஜேத்|
ஏவமாத்மானம் அபிஷிச்ய| பகவத் ப்ரஸாதேந தத் அம்ருதமயம் ஸர்வ கைங்கர்யைக மநோஹரம்
ஸர்வ கைங்கர்யைக யோக்யம் ஶரீரம் லப்த்வா தஸ்மின் ஶரீரே பஞ்ஜோபநிஷன்மந்த்ரான் ஸ்ருஷ்டி க்ரமேண விந்யஸேத்|

ஓம் ஷௌம் நம: பராய பரமேஷ்டியாத்மநே இதிமூர்த்தனி ஸ்ப்ருஶேத் |
ஓம் யாம் நம: பராய புருஷாத்மநே இதி நாஸிகாக்ரே
ஓம் ராம் நம: பராய விஶ்வாத்மநே இதி ஹ்ருதயே!
ஓம் வாம் நம: பராய நிவ்ருத்யாத்மநே இதி குஹ்யோ|
ஓம் லாம் நம: பராய ஸர்வாத்மனே நம இதி பாதயோ|
ஏவம் ந்யாஸம் குர்யாத் தத்தத் ஶக்தி மயத் பூதம் தேஹம் த்யாயேத்|

————-

பகவாநேவ ………உபக்ரமதே என்றனுஸந்தானம் செய்து தன்னுடைய தேஹத்தில் பஞ்சோபநிஷத் மந்திரங்களை
ஸம்ஹாரக்ரமமாக ந்யாஸம் செய்து ஒரு ப்ராணாயாமம் செய்து வலது கையினால் தொப்புளில் மூல மந்திரத்தை ந்யாஸம் செய்து
‘மந்த்ரோத்பூத சண்டவாவ்யாப்யாயித நாபிதேஶஸ்தே வாயுநா ஶரீர மந்தர்பஹிஶ்ச தத்வக்ரமேண ஶோஷயாமி’ என்றநுஸந்தானம் செய்து
ஶரீரம் முழுவதும் ஶோஷணம் செய்யப்பட்டதாக த்யானித்து மறுபடியும் ப்ராணாயாமம் செய்து
மூல மந்திரத்தினால் ஹ்ருதயத்தில் ந்யாஸம் செய்து
“மந்த்ரோத்பூதசக்ராக்நி ஜ்வாலோப ப்ரஹ்மித ஜாடராக்னிநா தக்த தத்தத்ஸமஷ்டி ப்ரலீந ஸர்வ தத்வ
ஸர்வ கில்பிஷ ஸர்வாஜ்ஞானதத்வாஸநம் ஶரீரம் தாஹயாமி”என்றநுஸந்தானம் செய்து
ஶரீரம் முழுவதும் கொளுத்தப் பட்டதாக த்யாநம் செய்து , பகவானுடைய
வலது காலின் கட்டை விரலின் கீழே தன்னுடைய ஜீவாத்மாவைச் சேர்த்துவிட வேண்டும்.

மற்றொரு ப்ராணாயாமம் செய்து பகவானுடைய அனுக்ரஹத்தினால் பகவானுடைய கைங்கர்யம் செய்வதற்கு
யோக்யத்தை யடைந்தவனாக த்யாநம் செய்து அந்தத் திருவடிகளின் கட்டை விரலின் கீழே இருக்கிறதாகவும்
அந்தக் கட்டை விரலிலிருந்து பெருகி வருகிற அம்ருத மயமான ஜலத்தினால் தன்னை அலம்பப் பட்டதாகவும்,
அந்த அம்ருத மயமாய் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்யக் கூடிய யோக்யதையை யுடைய ஶரீரத்தை
யடைந்ததாகவும்,த்யானித்து அந்த ஶரீரத்தில் பஞ்சோபநிஷத்  மந்திரங்களை ஸ்ருஷ்டி க்ரமமாக ந்யாஸம் செய்ய வேண்டும்.
“ஓம் ஷௌம் நம: பராய பரமேஷ்ட்யாத்மநே “ என்று தலையையும்,
“ஓம் யாம் நம: பராய புருஷாத்மநேநம:” என்று மூக்கையும்,
“ஓம் ராம் நம்பராய விஶ்வாத்மநே நம:” என்று மார்பையும்,
“ஓம் வாம்நம: பராய நிவ்ருதாத்மநே நம:”என்று குஹ்யத்தையும்,
ஓம் லாம் நம: பராய ஸர்வாத்மநே நம:” என்று கால்களையும் தொட வேண்டும்.
அந்தந்த ஶக்தி ஸ்வரூபமான தேஹம் கிடைத்ததாக த்யானிக்க வேண்டும்.

—————

தரங்க முக நந்தினீ ஹேமாப்ஜ நாயிகா ஸமேத
ஸ்ரீ தேவநாத பர ப்ரஹ்மணே நம:
ஸ்ரீமதே மகுள பூஷண மஹா குரவே நம:
ஸ்ரீமதே பகவதே பாஷ்யகாராய நம:
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேஶிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீநிவாஸ ராமாநுஜ மஹா தேஶிகாய நம:

—————

ஸ்ரீ அவதாரிகை

ஸ்ரீ பாஷ்யகாரரருளிச் செய்த நித்ய க்ரந்தத்திற்கு ஸதாசார்ய ஸம்ப்ரதாயாகதமாய்,
ஆசார்யோபதேஶத்தி னாலறியப்பட்ட அர்த்த விசேஷங்களை எளிதில் எல்லோரும் தெரிந்து
கொள்ளும் பொருட்டுத் தமிழில் ஒரு வ்யாக்யானம் செய்யப்படுகிறது.

அதில் பகவதாராதன ப்ரயோகம் மாத்திரம் ஸ்ரீ பாஷ்யகாரரினாலருளிச் செய்யப்பட்டிருப்பதினால்
அந்தப் பகவதாராதனம் ஸ்நாநாதிகளான பரிசுத்தியைக் கொடுக்கக்கூடிய கர்மங்களை யனுஷ்டிக்காமல் செய்ய முடியாதென்பது
ந ஹி ஶௌச மக்ருத்வைவ ஸமாராதனமஹர்தி’ 
ஸந்த்யாஹீநோஶுசிர்நித்ய மநர்ஹஸ்ஸர்வ கர்மஸு’ என்றிவை
முதலிய ப்ரமாணங்களினா லேற்படுகிறபடியினால் அப்படிப்பட்ட ஸ்நானம், ஸந்த்யாவந்தனம்,
முதலிய கர்மங்களை எல்லோரும் அறிந்தனுஷ்டிக்குமாறு அவைகள் தமிழில் ஸங்க்ரஹிக்கப் படுகின்றன.

ஒவ்வொரு தினத்தையும் ஐந்து காலமாகப் பிரித்து அந்தந்தக் காலங்களில் அந்தந்த க்ரியைகளை யனுஷ்டிக்க வேண்டும்.
அவைகளாவன:—அபிகமனம், உபாதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம், என்பவை.
அபிகமனமாவது காலையிலும் ஸாயங்காலத்திலும் அனுஷ்டிக்க வேண்டியது.
அதாவது ஸ்நானம் முதலிய கர்மங்களைச் செய்துவிட்டுப் பகவானை ஆஶ்ரயிப்பது.
அதாவது அன்றையதினம் நடக்கவேண்டிய க்ருத்யங்கள் முழுமையும் குறைவற ஸரியாய் நடக்கவேண்டுமென்று பகவானை ப்ரார்த்திப்பது.
உபாதானமாவது பகவானுடைய ஆராதனத்திற்கு யுபயுக்தமான த்ரவ்யங்களை ஸம்பாதிப்பது.

அது வெளியிலிருக்கும் புஷ்பம், சந்தனம், முதலியவைகளை ஸம்பாதிப்பதும்,
‘அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்’ ‘எட்டுமாமலர்’ இத்யாதிகளிலும் சொல்லப்படுகிற
ஶாந்தி முதலிய குணங்களை ஸத்க்ரந்த காலக்ஷேபாதிகளினால் ஸம்பாதிப்பதும் என்று இருவகைப்படும்.
இஜ்யையாவது மாத்யாஹ்நிகஸ்நாநம் முதலாக ஆரம்பித்துப் பகவதாராதனம், முதலியவைகள் செய்து அனுயாகம் வரையில் செய்வது,
ஸ்வாத்யாயமாவது வேதம், இதிஹாஸ புராணங்கள், அருளிச்செயல்கள், த்வயம் முதலிய மந்திரங்கள்
இவைகளின் அர்த்தானுஸந்தானம் செய்து, பகவானிடத்தில் பக்தியையும் ஜ்ஞானத்தையும் நாளுக்கு நாள் வளரச் செய்வது.
இதற்குப் பிறகு ஸாயமபிகமனம் என்பது ஸாயம் ஸந்த்யாவந்தநமும் பகவானை ஸேவிப்பதும்.
யோகமாவது பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை நித்திரை வருமளவும் த்யானம் செய்து கொண்டிருத்தலும்,
நித்திரை வரும் பொழுதும் பகவானுடைய திருவடிகளில் தலையை வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டிருப்பதாக
த்யானம் செய்துகொண்டு தூங்குதலும். இவைகளின் விவரங்கள் எழுதப் படுகின்றன

அபிகமனம்
தூக்கம் விழித்தல்–
ஸூர்யோதயத்திற்கு  ஒரு முஹூர்த்தகாலம் முன்னாலேயே தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு
ஹரிர் ஹரி: ஹரிர் ஹரி: ஹரிர் ஹரி: ஹரி: என்று சொல்லி க்ராஹ க்ரஸ்தே கஜேந்த்ர ருததி ஸரபஸம் தார்க்ஷ்ய
மாருத்ய தாவந் வ்யாகூர்ணந்மால்ய பூஷாவஸந பரிகரோமேக கம்பீர கோஷ: ஆபிப்ராணோ ரதாங்கம்
ஶரமஸி மபயம் ஶங்கசாபௌ ஸகேடௌ ஹஸ்தை: கௌமோதகீமபய வதுஹரி ரஸாவம்ஹஸாம் ஸம்ஹதேர்ந: நக்ராக்ராந்தே கரீந்த்ரே மருளித நயநே|
மூலமூலேதி சிந்நே நாஹம் நாஹம் ந சாஹம் ந ச பவதி புநஸ்தா த்ருஶோ மாத்ருஶேஷு!
இத்யேவம் த்யக்த ஹஸ்தே ஸபதி ஸுரகுணே! பாவ ஶூந்யே ஸமஸ்தே மூலம்
யத் ப்ராதுராஸீத்  ஸ திஸது பகவாந் மங்களம் ஸந்ததம் ந: |
ப்ராத:ஸ்மராமி  பவபீதி மஹார்தி ஶாந்த்யை: நாராயணம் கருடவாஹந மஞ்ஜநாபம்|
க்ராஹிபி பூத மதவாரண முக்தி ஹேதும் சக்ராயுதம் தருண வாரிஜ பத்ரநேத்ரம்  ||
ப்ராதர் நமாமி மநஸா வசஸா ச மூர்த்நா பாதாரவிந்த யுகளம் பரமஸ்ய பும்ஸ: |
நாராயணஸ்ய நரகார்ணவதாரணஸ்ய பாராயண ப்ரவண விப்ர பராயணஸ்ய|
ப்ராதர் பஜாமி பஜதா மபயம் கரந்தம் ப்ராகர் ஸர்வ ஜன்ம க்ருத பாபபயாபநுத்யை; |
யோக்ராஹ வக்த்ர பதிதாங்க்ரி கஜேந்த்ர கோர ஶோக ப்ரணாய மகரோத் த்ருத சங்க சக்ர: ||
ஶ்லோகத்ரயமிதம்  புண்யம் ப்ராதருத்தாய: ய” படேத்| லோக த்ரய குருஸ்தஸ்மை தத்யாதாத்ம பதம் ஹரி: ||
என்கிற ஶ்லோகங்களை ஹரி: என்னும் பதத்திற்கு விவரணம் செய்வதாக த்யானித்துக் கொண்டு அனுஸந்தானம் செய்யவேண்டும்.

அதாவது ஹரதீதி ஹரி: என்கிற வ்யுத்பத்தியினால் ஸகல பாபங்களையும் போக்கடிக்கிறவனென்றும்,
ஹரி: என்கிற அவதாரம் செய்து கஜேந்திரனுடைய துக்கத்தைப் போக்கடித்ததினாலும்
இந்த ஶ்லோகங்கள் ஹரி: என்னும் பதத்தினர்த்தத்தை விவரணம் செய்கின்றன. ஶக்தியுடையவனாயும் ஸாவகாசமுமிருந்தால், நூற்றெட்டுத் திருப்பதி விஷயமான த்யான ஶ்லோகங்களையும்,
தஶாவதார ஸ்தோத்திரங்களையும், பெரிய கத்யத்தையும், இன்னும் பகவத் பரங்களான ஸ்தோத்ராதிகளையும்
கேட்கிறவர்களுக்கு அதி மனோ ஹரமான ஸ்வரத்துடன் அனுஸந்திக்க வேண்டியது.

பிறகு ‘பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஶேஷதைக ரஸேநாநேநாத்மநா கர்த்ரா
ஸ்வாராதநைக ப்ரயோஜநாய பரமபுருஷஸ் ஸர்வஶேஷீ ஸ்வஶேஷ பூதமிதம் யோகாப்யாம் கர்ம ஸ்வஸ்மை
ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந்’ என்று முதல் நாள் ஆரம்பிவிக்கப்பட்ட யோகத்தை முடித்து
ஸாத்விகத்யாகம் செய்து ‘அநேந யோகாக்யேந பகவத் கர்மணா பகவாந் ப்ரீயதாம் வாஸுதேவ:’ என்றநுஸந்திக்கவேண்டியது.

பிறகு அந்தப் படுக்கையிலேயே உட்கார்ந்து கொண்டு தன்னுடைய வாழ்நாட்கள் வ்யர்த்தமாய்ப் போனதையும்,
பரம புருஷார்த்தமாகிய மோக்ஷம் தனக்குக் கிடைக்காமல் போனதையும் யோசித்து நிர்வேதப்பட வேண்டும்.
ப்ரபத்தி பண்ணிக் கொள்ளாதவனாயிருந்தால் இப்படி அகிஞ்சனனாய் எண்ணிறந்த பாபங்களுக்கு இருப்பிடமாய்
அந்தப் பாபங்களைப் பரிஹாரம் செய்துகொள்ளுவதற்கு மார்க்கத்தை யறியாமல் திகைத்துக் கொண்டிருக்கிற தன்னுடைய தீனதஶையைப் பார்த்து

”மாற்றமுளவாகிலும்”,
“சேமமேவேண்டித் தீவினை பெருக்கி”
“அமர்யாத: க்ஷூத்ர:” என்றிவை முதலிய இடங்களில் சொல்லுகிறபடியே
நிர்வேதப்பட வேண்டிய தவஶ்யம். ப்ரபன்னனாயிருந்தால் “இந்த ஹர்ஷம் விவேகியுமாய் ஹேயமான ஶரீராதிகளோடே
துவக்குண்டிருக்கிற இவனுக்கு நிர்வேதமிஶ்ரமாய் நடந்ததே யாகிலும் நிர்வேதமும் ஶோக நிவ்ருத்தியும்
பின்ன விஷயங்களாகையாலே விரோதமில்லை” என்று ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் அருளிச்செய்யப்பட் டிருக்கிறபடியினாலும்,
இதன் வ்யாக்யானத்திலும் “பின்ன விஷயமாகையினாலே” என்பதற்கு உபாயம் துஷ்கரம் என்கிற துக்கமில்லாமையினாலும்
பலத்திற்கு விளம்பமில்லை என்பதினாலும் நிஸ்ஸம்ஶயனுமாயிருப்பதினாலும் ஸந்தோஷம் உண்டாகிறது.

நிர்வேதம் அப்பொழுதே பலங்கிடைப்பதற்கு விரோதியான ஶரீரம் அநுவர்த்திக்கையினாலும்
அதினால் ஸுகதுக்கங்கள், புண்ய பாபங்கள் உண்டாகின்றன வாகையினாலும் உண்டாகிறது.
ஆகையினால் விரோதமில்லை என்றருளிச் செய்யப்பட்டிருப்பதினாலும் நிர்வேதப்பட வேண்டியதவஶ்யம்.
அதுவும் ஸம்ஸாரத்தில் நிவ்ருத்தி பிறந்து கடுக மோக்ஷத்தை யபேக்ஷிக்கும் த்வரை யுண்டாவதற்காக என்று பூர்வாசார்யர்களின் திருவுள்ளம்.

பிறகு கேவலம் நிர்வேதத்தோடே முடியுமானால் ஸர்வகார்யங்களுக்கும் விரோதியாகையினால்
மேல் நடக்க வேண்டிய கைங்கர்யங்கள் ஸரியாக நடக்க வேண்டியதற்காக
“கதத்திற்கு ஶோகியாதே வருகிற நீருக்கு அணைகோலும் கணக்கிலே” “இனிப் பகவதாராதனாதிகளைச்செய்து காலத்தை
‘தரித்தெழுதி வாசித்துங்கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது’ என்றும் ,
வர்தமாநஸ் ஸதா சைவம் பாஞ்சகாலிக வர்த்மநா|
ஸ்வார்ஜிதை கந்த புஷ்பாத்யை: ஶுபைஶ்ஶக்த்யநுரூபத: ஆராதயந் ஹரிம் பக்த்யாகமயிஷ்யாமி  வாஸராந்|”
என்றும் சொல்லுகிறபடியே ஸபலமாகக் கழிக்கப் போகிறேன் என்கிற ஸாத்விக தைர்யத்தை யடைந்து
படுக்கையிலிருந்துகொண்டே ஶ்ரோத்ராசமனம் செய்துவிட்டு (வலது காதை வலது கையினால் தொட்டு)

க்ருதம் ச கரிஷ்யாமி |பகவந்நித்யேந பகவத் ப்ரீத்யர்தேந மஹாவிபூதி சாதுராத்ம்ய பகவத் வாஸுதேவ
பாதாரவிந்தார்சநே நாபிகமநாக்க்யேந பகவத் கர்மணா பகவந்தம் வாஸுதேவ மர்சயிஷ்யாமி”  என்று
ஸங்கல்பித்துக்கொண்டு, பகவதோ பலேந பகவதோ வீர்யேண பகவஸ்தேஜஸா பகவத:
கர்மணா பகவத: கர்ம கரிஷ்யாமி பகவதோ வாஸுதேவஸ்ய” என்று அநுஸந்தானம் செய்து,
பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூப ஸித்தி ப்ரவ்ருத்தஸ்வஶேஷதைகரஸேந மயா ஸ்வகீயைஶ் சோக்கரணை:
ஸ்வராரநைக ப்ரயோஜநாய பரம புருஷ: ஸர்வஶேஷீ ஸ்வஶேஷ பூதமிதம்பிகமநாக்யம் கர்மஸ்வஸ்மை
ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி” என்று ஸாத்விகத்யாகம் செய்து,

குருபரம்பரானு ஸந்தானபூர்வமாகப் பகவானைச் ஶரணமாக அடைந்து,
த்வயாராதனகாமோயம் வ்ருதம் சரிதுமிச்சதி| ஸங்கல்ப ஸித்த்யை பகவந் பூரயாஸ்ய மநோரதாந்” என்கிற ஶ்லோகத்தினால்
கைங்கர்யங்கள் நிர்விக்னமாய் ஸரிவர நடக்கவேண்டுமென்று பகவானை ப்ரார்த்தித்து ,
ஸத் ஸங்காத் பவநி ஸ்ப்ருஹோகுருமுகாத்  ஸ்ரீஶம்ப்ரபத்யாத்மவாந்| ப்ராரப்தம் பரிபூஜ்ய கர்ம ஶகலம் ப்ரக்ஷீணகர்மாந்தர|
ந்யாஸாதேவ நிரங்குஶேஶ்வரதயார்லூந மாயாந்வயோஹார்தாநுக்ரஹ லப்தமத்ய தமநித்வாராத் பஹிர்நிர்கத|
முக்தோர்சிர்ந பூர்வபக்ஷ ஷடு தங்க்மாஸாப்த வாதாம் ஶுமத் க்லௌ  வத்யுத்வருணேந்த்ர தாத்ருமஹித;
ஸீமாத்மஸிந்தாப்லுத: ஸ்ரீவைகுண்டமுப்யேத நித்ய மஜடம் தஸ்மின் பரப்ரஹ்ம ஸாயுஜ்யம் ஸமவாப்ய நந்தனி ஸமஸ்தேநைவ தந்ய:
புமாத்|ப்ராதர் நித்யாந் ஸந்தேயம் பரமார்தம் முமுக்ஷுபி: ஶ்லோக த்வயேந ஸம்க்ஷிப்தம் ஸுவ்யக்தம் வரதோ ப்ரவீத்” என்கிற
ஶ்லோகங்களையும் அதின் அர்த்தமாகிய தானடையப் போகிற புருஷார்த்தத்தின் பெருமைகளையும் அனுஸந்தானம் செய்து
அதிக ஸந்தோஷத்தை யடைந்தவனாய் பகவந் நாமங்கள் பூர்வாசார்யர்களருளிச்செய்த பகவத் ஸ்தோத்திரங்கள்
இவைகளை அதிமனோஹரமான ஸ்வரத்துடன் அனுஸந்திக்க வேண்டும்.

ஸாவகாசமிருந்தால் வேதம் முதலியவைகளின் திருவை முதலியவைகள் செய்யலாம்.
பிறகு படுக்கையை விட்டெழுந்திருந்து “ஓம் நம: க்ஷீதிபராய” என்கிற மந்திரத்தை உச்சரித்து
பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிற ஸ்ரீவராஹ நயினாரை ப்ரார்த்தித்து விட்டு வலது காலைத் தூக்கிப் பூமியில் வைத்து
“நமோஸ்து ப்ரிய தத்தாயை துப்யம் தேவி வஸுந்தரே! த்வம் மாதா ஸர்வலோகாநாம் பாதஸ்பர்ஸம் க்ஷமஸ்வமே” என்று
பூமிதேவியைப் ப்ரார்த்திக்க வேண்டும். பிறகு “விஷ்ணோ: க்ரமோஸி” என்றாரம்பிக்கும் மந்திரத்தினால்
திரிவிக்ரமனை த்யானம் செய்துகொண்டு நடக்க வேண்டும்.

ஸ்நானம் செய்தல்
(பகவச் ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட ஸ்நான விதி)

பிறகு பகவானுடைய ஸந்நிதித் துறை, பாகவதர்கள் ஸ்நானம் செய்யும் துறை, இவைகளுக்குச் சென்று
கரையை யலம்பி கை கால்களை யலம்பிக்கொண்டு கிழக்கு அல்லது வடக்கு முகமாக உட்கார்ந்து
கையில் பவித்திரத்தைத் தரித்துக் கொண்டு மூன்று தடவை ப்ராணாயாமம் செய்யவேண்டும்.

ப்ராணாயாமம் செய்யும் விதம்
சுண்டு விரல் பவித்திர விரல் இவைகளினால் இடது பக்கம் மூக்கை அமுக்கிக் கொண்டு வலது பக்கத்தினால் தேஹத்திலிருக்கும் காற்றை வெளிவிட்டு,
கட்டை விரலினால் வலது மூக்கை மூடிக்கொண்டு இடது பக்கத்தினால் மூச்சை உட்கொண்டு அப்படியே இரண்டு துவாரங்களையும் மூடிக்கொண்டு,
வாய், கண், இவைகளை மூடிக்கொண்டு மனதில் பகவானை த்யானம் செய்து ஸப்த வ்யாஹ்ருதிகளையும்,
காயத்ரியையும், காயத்ரி ஶிரஸ்ஸையும் மூன்று தடவை உச்சரித்து கடைசியில்
வலது மூக்கினால் காற்றை வெளிவிட்டு வலது காதை ப்ரணவத்தினால் தொடவேண்டும்.

பிறகு கையைக் கூப்பிக் கொண்டு குரு பரம்பராநுஸந்தானம் செய்து
‘ஸ்ரீகோவிந்த’ என்றாரம்பித்து திதிவார நக்ஷத்திரங்களைச் சொல்லி
ஸ்ரீ பகவதாக்ஜ்ஞயா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்தம் கர்மண்யதா ஸித்த்யர்தம் ப்ராத ஸ்நானமகம் கரிஷ்யே’ என்று
ஸங்கல்பித்துக்கொண்டு க்ருதஞ்ச கரிஷ்யாமி என்று முன்போல் அநுஸந்திக்கவேண்டும்.

அதில் யோகாக்யேந என்பதற்கு பதிலாக ப்ராதஸ்நானாக்யேந என்றநுஸந்திக்க வேண்டும்.
இப்படியே மற்ற இடங்களிலும் அந்தந்தக் கர்மத்தை அநுஷந்திக்க வேண்டியது.
அப்படியே பகவதோபலேந என்கிற பல மந்திரத்தையும், பகவாநேவ என்கிற ஸாத்விகத்யாகத்தையும் செய்யவேண்டும்.

புண்ய தீர்த்தங்களைப் பற்றிய த்யான ஶ்லோகங்களைத் தெரிந்த வரையிலும் அநுஸந்திக்கிறது.
இப்படியே பகவத் பாகவதாசார்யர்களின் விஷயமாயும் அனுஸந்திக்கிறது.
இதற்குமேல் பாஞ்சராத்ர ஶாஸ்த்ரத்தில் விதிக்கப் படுகிற ஸ்நானத்தின் விவரம் இந்த நித்யத்திலேயே மாத்யாஹ்நிக ஸ்நாந ப்ரகரணத்தில்
சொல்லப்படுகிறபடியினாலே அங்கு சொல்லி இருப்பதைப் போல செய்யவேண்டும்.
ஸ்நானம் செய்த பிறகு வலது காலை ஜலத்திலும் இடது காலைக் கரையிலுமாக வைத்து உட்கார்ந்து கொண்டு ஆசமனம் செய்து கரையில் நின்று கொண்டு-ஆசார்யர்கள் விஷயமாயும் பகவான் விஷயமாயும் த்யான ஶ்லோகங்களைச் சொல்லிக்கொண்டு
இரண்டு வஸ்திரங்களில் ஒன்றினால் தலைப் பாகத்தையும் மற்றொன்றினால் மற்றப் பாகங்களையும் துடைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வ்யாஹ்ருதி த்ரயங்களினால் உலர்ந்த வேஷ்டியை ப்ரோக்ஷித்து
தேவஸ்ய த்வா ஸவிது: ப்ரஸவேஶ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோஹஸ்தாப்யாம் ஆததே என்கிற மந்திரத்தைச் சொல்லி எடுத்து
உதூத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ: த்ருஶே விஶ்வாய ஸூர்யம் என்று ஸூர்யனுக்குக் காண்பிவித்து,
அவதூதகும் ரக்ஷோ அவதூதாத்ராதய: என்கிற மந்திரத்தைச் சொல்லி உதறி,
ஆவஹந்தீ விதந்வாநாகுர்வாணாசீரமாத்மந: வரஸாம்ஸி மமகாவஶ்ச அந்நபாநேச ஸர்வதா| ததோ மே ஶ்ரிய மாவஹ என்கிற மந்திரத்தைச் சொல்லி,
உத்தரீயத்தைத் தலையில் சுற்றிக் கொண்டு யஜ்ஞோபவீதத்தை நிவீதமாக்கிக் காதில் சுற்றிக் கொண்டு
கௌபீனத்தைத் தரித்துக் கொண்டு, முழங்கால்களையும், கைகளையும் மண் ஜலம் இவைகளினா லலம்பிக்கொண்டு
வஸ்திரம், உத்தரீயம் இவைகளை உடுத்திக் கொண்டு கால்களை யலம்பி இரண்டு தரம் ஆசமனம் செய்து ப்ராணாயாமம் செய்து

ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்தம் மந்த்ரஸ்நானம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து
ஆபோஹிஷ்டா மயோபுவ| தாநஊர்ஜ ததாந| மஹேரணாயசக்ஷஸே| யோவஶ்ஶிவதமோரஸ:| |
தஸ்யபாஜயதேஹத: உஶதீரிவமாதர: தஸ்மா அரங்க மாமவ| யஸ்யக்ஷயாயஜிந்வத| ஆபோஜநயதாசந: |என்கிற
மந்திரங்களினால் க்ரமமாய் கால், தலை, ஆகாசம் இவைகளிலும், தலை ஆகாசம், கால் இவைகளிலும்,
ஆகாசம், தலை, கால் இவைகளிலும் முறையே ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மாநஸ ஸ்நானம் செய்ய வேண்டும். அதாவது ஆகாசத்தில் ஆயிரம் கோடி ஸூர்யன் உதயமானாற்போல
ப்ரகாசித்துக் கொண்டிருப்பவனாயும், ஶங்கம், சக்கரம், கதை, சார்ங்கம் முதலிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கிற
நான்கு திருக்கைகளையுடையவனாயும், கிரீடம், தோள்வளைகள் முதலிய ஸர்வாபரணங்களினா லலங்கரிக்கப்பட்டவனாயு மிருக்கிற பகவானையும்,
தாமரைப் புஷ்பங்களைப்பொல் ப்ரகாசித்துக் கொண்டும், ஶங்க சக்ராதி ரேகைகளோடு கூடிய திருவடிகளையும் ,
அந்தத் திருவடிகளிலிருந்து உத்பத்தியான கங்கை தன் தலையில் விழுந்து ப்ரும்மாந்திரத்தினால் உள் நுழைந்து
உள்ளும் வெளியுமாகத் தன்னுடைய ஸரீரம் அலம்பப்பட்டதாயும் த்யானம் செய்யவேண்டும்.
ஸ்நானம் செய்யும் பொழுது உபயோகித்திருந்த வஸ்திரத்தைப் பிழிந்து தனக்கு எதிரில் வைக்காமல் பக்கத்தில் வைத்துக் கொள்ளவேணும்.

பிறகு இந்த இடத்தில் ப்ரஸந்தானு ப்ரஸக்தியாக தர்ம ஶாஸ்திர க்ரமமான ஸ்நான விதி ஆஹ்நிகாதிகளில்
எழுதப்பட்டிருந்தபோதிலும் அனுஷ்டான பரம்பரையில் வராததினால் இங்கு எழுதவில்லை.
ஶக்தி இல்லாதவனா யிருந்தால் வெந்நீரில் ஸ்நானம் செய்யவேண்டும்.
தீட்டு முதலியவைகளினால் அசுத்தனாயிருந்தால் வெந்நீரில் ஸ்நானம் செய்யக்கூடாது.
ஶிரஸ்நானம் செய்ய ஶக்தி இல்லாமலிருந்தால் தொப்புள் வரையில் அலம்பி மேல் பாகங்களை ஈரத்துணியினால் துடைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கும் ஶக்தி இல்லாமலிருந்தால் ஶாஸ்திரங்களில் விதிக்கப் பட்டிருக்கும் மற்ற ஸ்நானங்களில்
தன் அதிகாரத்துக்குத் தகுந்ததான ஒன்றைச் செய்ய வேண்டும்.  ,

ஊர்த்வ புண்ட்ரம் தரித்தல்
தீர்த்த ஹரியில் ஜலத்தை எடுத்துக் கொண்டு அதிலிருந்து உத்தரணியினால் ஜலமெடுத்து
“வீர்யாய அஸ்த்ராயபட்” என்கிற அஸ்திர மந்திரத்தினால் இடது கையை அலம்பி, ப்ரணவத்தினால் திருமண்ணைக் கையில் எடுத்துவைத்து
‘கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம்  கரீஷிணீம்| ஈஸ்வரீம் ஸர்வபூதாநாம் த்வாமிஹோபஹ்வயேஶ்ரியம் என்று குழைத்து
அஸ்திர மந்திரத்தினால்   ரக்ஷையை எட்டுத் திக்குகளிலும் செய்து, ப்ரணவத்தினால் கலந்து, மூல மந்திரத்தினால் ஜபித்து,
ந்ருஸிம்ஹ பீஜாக்ஷரத்தை எழுதி, ஆள் காட்டி விரலினால் குழைத்து,

விஷ்ணோர்நுகம் வீர்யாணி ப்ரவோசம் ய: பார்திவாநி விமமேரஜாகும்ஸியோ அஸ்கபாய உத்தரகும் ஸதஸ்தம் விசக்ரமாணஸ்த்ரேதோருகாய:| |’ என்கிற மந்திரத்தையும்,-த்வாதஶாக்ஷரத்தையும் ஜபித்து, ‘விஷ்ணோரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்டமஸி விஷ்ணோ: ஶ்நப்த்ரேஸ்தோ
விஷ்ணோஸ்யஸூரஸி விஷ்ணோர்த்ருவமஸி வைஷ்ணவமஸி விஷ்ணவேத்வா|
உத்த்ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந ஶதபாஹுநா|| பூமிர்தேநுர்தரணீ   பூததாரிணீ|
ம்ருத்திகே ஹநமேபாபம் யந்மயா த்ருஷ்க்ருதம் க்ருதம் | த்வயா ஹதேந பாபேந ஜீவாமி ஶரதஶ்ஶதம் |
ம்ருத்திகே தேஹி மே புஷ்டிம் த்வயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம்|| என்கிற மந்திரங்களை உச்சரித்து

ஆள்காட்டி விரலினால் கொஞ்சம் எடுத்து ப்ரணவத்தினால் சிரஸ்ஸில் தரித்து,
பவித்திர விரலினால் நெற்றி முதலிய இடங்களில் பகவானுடைய திருவடிகளைப் போன்ற ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரித்துக் கொள்ளவேண்டியது.
நெற்றியிலும் நடுவயிற்றிலும், மார்பிலும், முன் கழுத்திலும், வலது வயிற்றிலும், வலது கையிலும்,வலது கழுத்திலும்,
இடது வயிற்றிலும், இடது கையிலும், இடது கழுத்திலும், அடி முதுகிலும், பின் கழுத்திலுமாக க்ரமமாகத் தரிக்கவேண்டியது.
தரித்துக் கொள்ளும்போது கேஶவாதி பன்னிரண்டு நாமங்களையும் ‘ஓம் கேஶவாய நம:’என்று முறையே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றாக உச்சரித்துக்கொண்டு இட்டுக் கொள்ள வேண்டியது.
மிகுதி திருமணை த்வாதஶாக்ஷரத்தினால் ஶிரஸில் தரித்துக் கொள்ள வேண்டியது.

பகவானுடைய திருமேனி ஸம்பந்தமுடைய மஞ்சள் முதலியவைகள் சேர்ந்த ஸ்ரீசூர்ணத்தை எடுத்துக் குழைத்து
கீழ்க்கூறிய க்ரமப்படி புண்ட்ரங்களின் நடுவில் தரிக்கவேண்டியது.
ஶ்ரியை நம:, அம்ருதோத்பவாயை நம:,கமலாயை நம:, சந்த்ரஸோதர்யை நம:, விஷ்ணுபத்ந்யை நம:, வைஷ்ணவ்யை நம:, வராரோஹாயை நம:,
ஹரிவல்லபாயை நம:, ஶார்ங்கிண்யை நம:, தேவதேவ்யை நம,, மஹாலக்ஷ்ம்யை நம:, லோகஸுந்தர்யை நம:, ஸர்வாபீஷ்ட பலப்ரதாயை நம: என்று
முறையே உச்சரித்துக் கொண்டு தரிக்க வேண்டும். பிறகு ஒம் கேஶவாய நம: என்கிற மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு புண்ட்ரங்களைக் க்ரமமாகத் தொட வேண்டும்.

பிறகு கையைக் கூப்பிக்கொண்டு சதுஶ்சக்ரம் நமஸ்யாமி கேஶவம் கநகப்ரபம்! நாராயணம் கநஶ்யாமம் சதுஶ்ஶங்கம் நமாம்யஹம்|
மாதவம் மணிபங்காபம் சிந்தயாமி சதுர்கதம்| சந்த்ரபாஸம் சதுஶ்ஶார்ங்கம் கோவிந்தமஹமாஶ்ரயோ
விஷ்ணும் சதுர்ஹலம் வந்தே பத்ம கிஞ்ஜல்க ஸந்நிபம்| சதுர்முஸலமப்ஜாகம் ஸம்ஶ்ரியே மதுஸூதநம்:
அக்னி வர்ணம் சது:கட்கம் பாவயாமி த்ரிவிக்ரமம்| வாமநம் பால ஸூர்யாபம் சதுர்புஜம் விபாவயே|
ஶ்ரீதரம்  புண்டரீகாபம் சது: பட்டஸமாஶ்ரயே| சதுர்முத்கரமப்யேமி  ஹ்ருஷிகேஶம் தடித்ப்ரபம்|
பஞ்சாயுதம் பத்ம நாபம் ப்ரணமாம்யர்கரோசிஷம்| தாமோதரம் சதுஷ்பாஶமிந்த்ரகோபநிபம் பஜே|
வாஸுதேவ முபாஸேஹம் பூர்ணேந்த்வயுத ஸந்நிபம்| என்று
அந்தந்தப் புண்ட்ரங்களுக்கு எதிரில் கையைக் கூப்பிக் கொண்டு ப்ரார்த்திக்க வேண்டும்.

பின்பு ஆழ்வார்கள் அருளிச் செய்த பன்னிரு திரு நாமப் பாட்டுக்களையு மநுஸந்திக்க வேண்டும்.
புண்ட்ரம் தரித்துக் கொண்டபிறகு கையலம்பக் கூடாது.
ஸாவகாசமில்லாமற் போனாலும், ஶக்தி இல்லாமற்போனாலும், நெற்றியிலும், பின்கழுத்திலும் அவஶ்யம் தரித்துக்கொள்ள வேண்டும்.
இவ்விரண்டு புண்ட்ரங்களையும் ஒரு பொழுதும் தவிரக்கூடாது.

பிறகு, “அஸ்மத் குருப்யோ நம: அஸ்மத் பரம குருப்யோ நம: அஸ்மத் ஸர்வ குருப்யோ நம: ஸ்ரீமதே வேதாந்த குரவே நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமதே மஹாபூர்ணாயநம: ஸ்ரீமத்யாமுநமுநயே நம: ஸ்ரீராமமி ஶ்ராய நம: 
ஸ்ரீபுண்டரீகாக்ஷாயநம: ஸ்ரீமந் நாதமுநயே நம: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாயநம: ஶ்ரியை நம: ஶ்ரீதராயநம:

அஸ்மத்தேஶிகமஸ்மதீயபரமாசார்யாந் அஶேஷாந் குரூந் ஸ்ரீமல்லக்ஷ்மண யோகிபுங்கவ மஹாபூர்ணௌ முநிம் யாமுநம்|
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் ஶடத்வேஷிணம் ஸேநேஶம் ஶ்ரியமிந்த்ரா ஸஹசரம் நாராயணம் ஸம்ஶ்ரயே|| ‘

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கியானடைவே – யவர் குருக்கள் நிரை வணங்கி, பின்னருளால்
பெரும்பூதூர் வந்த வள்ளல் பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி, நன்னெறியை யவர்க்குரைத்த
உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனைநாதன் இன்னமுதத் திருமகளென்றிவர்களை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகளடைகின்றேனே’ என்றும்,

தன்னுடைய ஆசார்யனுடைய தனியன் முதலியவைகளையும்
விஸ்தாரமாக அனுஸந்திக்க வேண்டும். துளஸி மணி மாலை, தாமரை மணி மாலை, திருப் பவித்திரம், முதலியவைகளைத் தரித்துக் கொள்ள வேண்டும்.
திருவடி ஜோட்டை ஶிரஸில் தரித்துக்கொண்டு தர்ப்ப பவித்திரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.

தேவர்ஷி பித்ரு தர்ப்பணம்
கால் கைகளை யலம்பி, ஆசமனம் செய்து ஸ்ரீபகவதாஜ்ஞ்யா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம்
ஸ்நாநாங்கம் தேவர்ஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே என்று ஸங்கல்பித்துக் கொண்டு
தேவதைகள், ருஷிகள், பித்ருக்கள், எல்லோரும் பகவானை அந்தர்யாமியாக வுடையவர்கள் என்று த்யானித்துக் கொண்டு தர்ப்பணம் செய்யவேண்டும்.

ப்ரஹ்மாதயோ யே தேவாஸ்தான் தர்ப்பயாமி!
ஸர்வாம் தேவாம்ஸ் தர்ப்பயாமி! ஸர்வ தேவகணாம்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வதேவ பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வ தேவகண பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று
நுனி விரல்களால் தர்ப்பணம் செய்யவேண்டும்.

யஜ்ஞோபவீதத்தை நிவீதமாக்கிக்கொண்டு இரண்டு கட்டை விரல்களிலும் மாட்டிக் கொண்டு
ஒம் க்ருஷ்ணத்வைபாய நாதயோயே ருஷ்ய: தாந் ருஷிம்ஸ்தர்ப்யாமி ! ஸர்வாந் ருஷீம்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வருஷிகணாம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வருஷிபத்நீம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வருஷிகணபத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று
இரண்டு கைகளின் நடுவினால் தர்ப்பணம் செய்யவேண்டும்.

யஜ்ஞோபவீதத்தை ப்ராசீனாவீதமாகத் தரித்துக்கொண்டு
ஸோம: பித்ருமான் யமோங்கிரஸ்வாந் அக்னிகவ்யவாஹ நாதயோ யே பிதர: தாந் பித்ரும்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வாந் பித்ரும்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வ பித்ருகணாம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வபித்ருபத்நீம்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வ பித்ரு கண பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று வலது கைக்கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவினால் தர்ப்பணம் செய்யவேண்டும்.

பிறகு ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பய தமேபித்ரூந் என்று
இரண்டு கைகளிலும் ஜலமெடுத்து ப்ரதக்ஷிணமாகச் சுற்றி இடது பக்கம் கரையில் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
என்று சொல்லி மூன்று தடவை ஜலத்தை இறைக்க வேண்டும்.
யஜ்ஞோபவீதத்தை க்ரமமாகத் தரித்துக் கொண்டு ஆசமனம் செய்யவேண்டும்.

ஶிரஸ்நானம் செய்யாத பக்ஷத்திலும் தீட்டு முதலியவைகளுக்காக ஸ்நானம் செய்யும் போதும், தேவருஷி பித்ரு தர்ப்பணம் செய்யக்கூடாது.
பகவாநேவ என்றாரம்பித்து, ப்ராத ஸ்நாநாக்யம் கர்மஸ்வஸ்மைவ ப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந் என்று
ஸாத்விக த்யாகம் செய்து அநேந ப்ராதஸ்நாநாக்யேந பகவத் கர்மணா பகவாந் ப்ரீத்யதாம் வாஸுதேவ: என்று
ப்ராத ஸ்நானத்தை முடிக்க வேண்டும்.

தத: ஸ்நாநார்த மாஸாந மாநீய கந்தாதிபி: அப்யர்ச்ய: |
பகவந்தம் ப்ரணம்ய: அநுக்ஞாப்ய: பாதுகே ப்ரதாய|
ஸ்நாநாஸநோ பவிஷ்டே மால்ய பூஷண வஸ்த்ராண்யபநீய விஶ்வக்ஸேநாய தத்வா|
ஸ்நாநஸாடிகாம் ப்ரதாய| அர்க்ய பாத்ய ஆசமனீய பாதபீட ப்ரதாந தந்தகாஷ்ட ஜிஹ்வா|

நிர்லேகந கண்டூஷ முகப்ரக்ஷாளந| ஆசமன தர்ஶ ப்ரதர்ஶந ஹஸ்த ப்ரக்ஷாளந|
முகவாஸ தாம்பூல தைலாப்யங்க உத்வர்த்தனாமலகதோயம் கதப்லோத தேஹஶோதந
சாடிகா ப்ரதான பாத்ய ஆசமன பவித்ர ப்ரதான கந்த புஷ்ப தூப தீப ஆசமன ந்ருத்த கீத வாத்யாதி ஸர்வ மங்களயுக்தா

அபிஷேக நீராஞ்ஜன ப்லோத வஸ்த்ர உத்தரீய யஜ்ஞோபவீத ஆசமன கூர்ச்ச ப்ராஸாரண
ஸஹஸ்ர தாராபிஷேக நீராஞ்ஜந ஆசமன தேஹஶோதந ப்லோத
வஸ்த்ர உத்தரீய யஜ்ஞோபவீத ஆசமனாநி தத்யாத்|  

பிறகு ஸ்நானாஸநத்தை ஸமர்ப்பிவித்து சந்தனம், புஷ்பம், முதலியவைகளினால் ஆஸனத்தை அலங்கரித்துப்
பகவானை ப்ரணாமம் செய்து அனுமதி பெற்றுக் கொண்டு பாதுகைகளை ஸமர்ப்பிவித்து ஸ்நானாஸநத்தில் பகவான் எழுந்தருளினபிறகு
வஸ்திரம், ஆபரணம், மாலை முதலியவைகளைக் கழற்றி விஷ்வக்ஸேனரிடத்தில் ஒப்புக் கொடுத்து ஸ்நானசாடிகை ஸமர்ப்பிவித்து
அர்க்யம் பாத்யம், ஆசமனீயம், பாதபீடம், தந்தகாஷ்டகம், ஜிஹ்வாநிர்லேகனம், கண்டூஷம், முகப்ரக்ஷாளநம்,
ஆசமனம், ஆதர்ஶப்ரதர்ஶநம், ஹஸ்தப்ரக்ஷாளனம், முகவாஸ தாம்பூலம், தைலாப்யங்கம், உத்வர்த்தனம்,
ஆமலகதோயம், கங்கதம், ப்லோத தேஹஶோதனசாடிகை, ஹரித்ரா லேபனம், ப்ரக்ஷாளனம், வஸ்திரம், உத்தரீயம்,
யஜ்ஞோபவீதம், பாத்யம், ஆசமனம், பவித்திரம், கந்தம், புஷ்பம், தூபதீபம், ஆசமனம், தேஹஶோதனம், வஸ்திரம்,
உத்தரீயம், யஜ்ஞோபவீதம், ஆசமனம் இவைகளை ஸமர்ப்பிவிக்க வேண்டும்.

தத: அலங்காராஸநம் அப்யர்ச்ய: ப்ரணம்ய|
அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய| தத்ர உபவிஷ்டே பூர்வவத் ஸ்நாநீய வர்ஜம்
அர்க்ய பாத்ய ஆசமனீய ஶுத்தோதகாநி மந்த்ரேண கல்பயித்வா|
பகவதே அர்க்ய பாத்ய ஆசமனீயாதி தத்வா கந்த புஷ்ப பாதஸம்மர்தன வஸ்த்ர உத்தரீய பூஷண உபவீத ஆசமனீயாநி தத்வா|
ஸர்வ பரிவாராணாம் ஸ்நாந வஸ்த்ர பூஷணாந்தம் தத்வா|

கந்தாதீந் தேவாநந்தரம் ஸர்வ பரிவாராணாம் ப்ரதாய| தூபதீப ஆசமனாந்தம் தத்யாத்|
அத பார்ஸ்வ பரிவாராணாம் கந்தாதிநேவ தத்யாத்| கந்த புஷ்ப ப்ரதாநாலங்கார ஊர்த்வ புண்ட்ராம் ஜநாதர்ஶ
தூப தீப ஆசமன த்வஜ சத்ர சாமர வாஹந ஶங்க சிஹ்ந காஹ்ள பேர்யாதி ஸகல ந்ருத்த கீத வாத்யாதிபி அப்யர்ச்ய |
மூல மந்த்ரேண புஷ்பம் ப்ரதாய ப்ரத்யாகாரம் புஷ்பம் ப்ரதாய|

த்வாதஶாக்ஷரேண விஷணு ஷடக்ஷரேண விஷ்ணு காயத்ரியா பஞ்சோபநிஷதை: புருஷ ஸூக்த ருக்பி:
புஷ்பம் ப்ரதாய அந்யைஶ்ச பகவந் மந்த்ரை: ஶக்தஶ்சேத் புஷ்பம் ப்ரதாய|
தேவ்யாதி பார்ஷதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா|

ப்ரணம்ய| ப்ரதி திஶம் ப்ரதக்ஷிணம் ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்ஜலிம் தத்வா|
புரத: ப்ரணம்ய| ஶ்ருதி ஸுகை: ஸ்தோத்ரை: ஸ்துத்வா|
ஸ்வாத்மாநம் நித்ய கிங்கரதயா நிவேத்ய ததைவ த்யாத்வா |
யதாஶக்தி மூல மந்த்ரம் ஜபித்வா| ஸர்வேப்யோ போக பூரணீம் மாத்ராம் தத்வா|

பிறகு அலங்காராஸநத்தைப் பூஜித்து பகவானை ப்ரணாமஞ்செய்து அனுமதி பெற்றுக் கொண்டு,
பாதுகைகளை ஸமர்ப்பித்து அதில் பகவான் எழுந்தருளினபிறகு, முன்போலவே
ஸ்நாநீயம் தவிர அர்க்யம் பாத்யம் ஆசமனீயம் ஸர்வார்த்ததோயம் இவைகளைக்
கீழ்ச் சொல்லியதைப் போலப் பரிகல்பனம் செய்து கொள்ள வேண்டும்.

பகவானுக்கு அர்க்ய பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பிவித்து
கந்தம், புஷ்பம், பாதஸம்மர்த்தனம், வஸ்திரம், உத்தரீயம்,  பூஷணம், யஜ்ஞோபவீதம், ஆசமனீயம், இவைகளை ஸமர்ப்பிவிக்க வேண்டும்.
மற்றெல்லா பரிவாரங்களுக்கும் ஸ்நாநம் வஸ்திரம் பூஷணங்கள் வரையில் ஸமர்ப்பித்துக்
கந்தம் முதலியவைகளைப் பகவானுக்கு ஸமர்ப்பிவித்த பிறகு ஸமர்ப்பிக்க வேண்டும்.

அதுவுமன்றிக்கே பரிவாரங்களுக்குக் கந்தம் முதலியவைகளை மாத்திரம் ஸமர்ப்பிக்க வேண்டியதாகவுமாம்.
(அர்க்ய பாத்ய ஆசமனாதிகள் வேண்டியதில்லை) கந்தம், புஷ்பம், அலங்காரம், ஊர்த்வ புண்ட்ரம், அஞ்ஜனம்,
ஆதர்ஶம், தூபம், தீபம், ஆசமனம், த்வஜம், சத்ரம், சாமரம், வாஹனம், சங்கம், சின்னம், காஹளனம், பேரி முதலிய
ஸகல நர்த்தனம், கீதம், வாத்யம், முதலிய உபசாரங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் புஷ்பம் ஸமர்ப்பிக்க வேண்டும்.
இப்படியே த்வாதஶாக்ஷரம், ஷடக்ஷரம், விஷ்ணு காயத்ரி, பஞ்சோபநிஷத் மந்திரங்கள், புருஷ ஸூக்த ருக்குகள், இவைகளினாலும்,
மற்ற இதர பகவந் மந்திரங்களினாலும், ஶக்தி உள்ளவரையில் புஷ்பங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.
அப்படியே தேவி முதலியவர்களுக்கும் அவரவர்கள் மந்திரங்களினால் ஸமர்ப்பிக்க வேண்டும்.

நாலு திக்குகளிலும் ப்ரணாமம் செய்து ப்ரதக்ஷிணம் செய்து புஷ்பாஞ்ஜலி ஸமர்ப்பிக்க வேண்டும்.
முன்பக்கத்தில் ப்ரணாமம் செய்து செவிக்கினிய ஸ்தோத்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.
பிறகு தன்னை, பகவானுடைய நித்யதாஸனாக அங்கீகரிக்க வேண்டுமென்று ஸமர்ப்பித்து, ஶக்திக்குத் தக்கபடி
திருவஷ்டாக்ஷரத்தை ஜபம் செய்து, ஸர்வ போகங்களையும் பூர்த்தி செய்யக் கூடிய மாத்திரையைத் தீர்த்தத்தினால் ஸமர்ப்பிக்க வேண்டும்.

———

முகவாஸ தாம்பூல ப்ரதாய| அர்க்யம் தத்வா | போஜ்யாஸநம் அப்யர்ச்ய | ப்ரணம்ய| அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய |
தத்ர உபவிஷ்டே பாத்ய ஆசமனீய அர்ஹணாநி தத்வா|
குடம் மாக்ஷிகம் ஸர்பி| ததி: க்ஷீரஞ்சேதி பாத்ரே நிக்ஷிப்ய விஶோத்ய |
அர்க்ய ஜலேந ஸம்ப்ரோக்ஷ்ய: மதுபத் பவநத ஶிரா: ஹர்ஷோத்புல்ல நயநோ ஹ்ருஷ்ட மதா: |

பூத்வா ப்ரதாய ஆசமனம் தத்யாத் | யத்கிஞ்சித் த்ரவ்யம் பகவத்தேயம் தத்ஸர்வம் ஶோஷணாதிபிர் விஶோத்ய|
அர்க்ய ஜலேந ஸம்ப்ரோக்ஷ்ய தத்யாத் ததஶ்ச காம் ஸ்வர்ண ரத்னாதிகம் ச யதாஶக்தி தத்யாத்|
தத”: ஸுஸம்ஸ்க்ருதாந்ந மாஜ்யாட்யம் ததிக்ஷீர மதூநி பலமூல வ்யஞ்ஜநாநி மோதகாம்ச
அந்யாநி லோகே ப்ரியதமாநி ஆத்மநஶ்சேஷ்டாநி ஶாஸ்த்ராவிருத்தாநி ஸம்ப்ருத்ய ஶோஷணாதி க்ருத்வா|
அர்க்ய ஜலேந ஸம்ப்ரோக்ஷ்ய| அஸ்த்ர மந்த்ரேண ரக்ஷாம் க்ருத்வா|

ஸுரபி முத்ராம் ப்ரத்ருஶ்ய அர்ஹண பூர்வகம் ஹவிர் நிவேதயேத்| 
அதிப்ரபூத மதி ப்ரிய தமமதி ஸமக்ர மத்யந்த பக்தி க்ருத மிதம் ஸ்வீகுரு |
இதி ப்ரணாம பூர்வகம் அத்யந்த ஸாத்வ ஸவிநயா வந்தோ பூத்வா நிவேதயேத்|
ததஶ்சாந் பாந தர்ப்பணே ப்ரதாய|

ஹஸ்த ப்ரக்ஷாளந ஆசமன ஹஸ்த ஸம்மார்ஜந சந்தன முகவாஸ தாம்பூலாநி தத்வா|
ப்ரணம்ய| புந: மந்த்ராஸநம் கூர்ச்சேந மார்ஜயித்வா அப்யர்ச்ய அநுஜ்ஞாப்ய  பாதுகே ப்ரதாய|
தத்ர உபவிஷ்டே கந்தமால்யாதிக மபோஹ்ய| விஶ்வக்ஸேநாய தத்வா|
பாத்ய ஆசமனீய கந்த புஷ்ப தூப தீப ஆசமன பூப பலா ஆசமனாநி தத்வா| முகவாஸ தாம்பூல ந்ருத்த கீத வாத்யாதிபி: அப்யர்ச்ய:| |
ப்ரதக்ஷிண த்வயம் க்ருத்வா| தண்டவத் ப்ரணம்ய  பர்யங்காஸநம் அப்யர்ச்ய| அநுஜ்ஞாப்ய| பாதுகே ப்ரதாய|

தத்ரோபவிஷ்டே பாத்யாசமநே தத்வா| மால்யபூஷண வஸ்த்ராணி அபநீய| விஶ்வக்ஸேநாய தத்வா|
ஸுகஶயநோசிதம் ஸுக:ஸ்பர்ஸம் வாஸ: தது சிதாநி பூஷணாதி உபவீதம் ச ப்ரதாய| ஆசமனீயம் தத்வா|
கந்த புஷ்ப தூப தீப ஆசமன முகவாஸ தாம்பூலாதிபி: அப்யர்ச்ய|
ஸ்வநீயாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஶேஷதைகரஸேந அநேநாத்மநா|

கர்த்ரா ஸ்வகீயைஶ்ச தேஹேந்த்ரியாந்த கரணை: ஸ்வகீய கல்யாண தமத்ரவ்ய மயாநௌபசாரிக
ஸாம்ஸ்பர்ஶிகாப்ய வஹாரிகாதி ஸமஸ்த போகாந் அதிப்ரபூதாநதி ப்ரியதமாநதி ஸமக்ராநத்யந்த
பக்தி க்ருதாநகிர பரிஜந பரிச்சதாந் விதாய ஸ்வஸ்மை ஸ்வப்ரீயதே ஸ்வயமேவ ப்ரதி பாதி தவாந் இத்யநுஸந்தாய பகவந்தம் அநுஜ்ஞாப்ய:

பகவந் நிவேதிதாத் ஹவிஶ்ஶேஷாத் விஶ்வக்ஸேநாய கிஞ்சிதுர்ருத்ய: நிதாயாந்யத்
ஸர்வம் ஸ்வாசார்ய ப்ரமுகேப்யோ வைஷ்ணவேப்ய:: ப்ரதாய பகவத்யாக ஶிஷ்டை: ஜலாதிபி: த்ரவ்யை: |
விஶ்வக்ஸேநம் அப்யர்ச்ய| பூர்வோத்ருதம் ஹவிஶ்ச தத்வா|
ததர்சநம் பரிஸமாப்ய: பகவந்தம் அஷ்டாங்கேந ப்ரணம்ய: ஶரணமுபகச்சேத்| மநோபுத்தி மாநேந ஸஹந்யஸ்ய தராதலே|

கூர்மவச் சதுர பாதாந் ஶிரஸ்தத்ரைவ பஞ்சமம் | ப்ரதக்ஷிண ஸமேதேந ஏவம் ரூபேண ஸர்வதா|
அஷ்டாங்கேந நமஸ்க்ருத்ய ஹ்யூப விஶ்யா க்ரதோவிபோ|
உரஸா ஶிரஸாசைவ வபுஷா மநஸா கிரா: பத்ப்யாம்  கரப்யாம் ஜாநுப்யாம் ப்ரணமோஷ்டாங்க உச்யதே|
இத்யுக்தாஷ்டாங்க ப்ரணாம: ஶரணாகதி ப்ரகாரஶ்ச பூர்வோக்த: தத:
அர்க்ய ஜலம் ப்ரதாய| பகவந்தம் அநுஜ்ஞாப்ய |பூஜாம் ஸமாபயேத்|

————-

பிறகு முகவாஸ தாம்பூலம் ஸமர்ப்பித்து, அர்க்யம் கொடுத்து போஜ்யாஸநம் ஸமர்ப்பிக்க வேண்டும்.
போஜ்யாஸநத்தைப் பூஜித்து பகவானிடத்தில் ப்ரணாமம் செய்து அனுமதி பெற்றுக் கொண்டு பாதுகைகளை ஸமர்ப்பித்து
அந்தப் போஜ்யாஸநத்தில் பகவான் எழுந்தருளிவிட்டதாக த்யானித்து பாத்யம், ஆசமனீயம், அர்க்யம்
இவைகளை ஸமர்ப்பித்து மதுபர்க்கம் ஸமர்ப்பிக்க வேண்டியது.

அதாவது வெல்லம், தேன், நெய், தயிர், பால் இவைகளைத் தனித்தனியே பாத்திரங்களில் வைத்து
ஶோஷணதாஹந ப்லாவனங்களைச் செய்து அர்க்ய தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து அமுது செய்தருளப் பண்ண வேண்டும்.
பிறகு பகவானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டிய பசுமாடு, ஸ்வர்ணம், ரத்னங்கள்,தனதான்யங்கள் இவைகள் முதலிய எல்லா வஸ்துக்களையும்
பகவானுக்கு எதிரில் வைத்து அர்க்ய தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து பகவானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு நன்றாகவும் பரிசுத்தமாகவும் பாகம் செய்யப்பட்ட அன்னங்களையும், நெய், தயிர், பால், தேன், பழம், கிழங்குகள் முதலிய
வ்யஞ்ஜனங்களைத் தனக்கு இஷ்டங்களாயும் ஶாஸ்திரங்களுக்கு விரோதமில்லாமலுமிருப்பவைகளை ஸம்பாதித்துப் பகவானெதிரில் ஸமர்ப்பித்து
அர்க்ய தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து, அஸ்திர மந்திரத்தினால் திக்பந்தனஞ்செய்து, ஸுரபி முத்திரையைக் காண்பித்து, அர்க்ய தீர்த்தத்தை எடுத்து
“அதிப்ரபூதம்………இதம் ஸ்வீகுரு” என்று ப்ரணாமம் செய்து ப்ரார்த்தித்து மிகுந்த விநய பக்தியுடன் தலைகுனிந்து நின்று ஸமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு அநுபானம், தர்ப்பணம், இவைகளையும் ஸமர்ப்பித்து ஹஸ்த ப்ரக்ஷாளநம், ஆசமனம், ஹஸ்த ஸம்மார்ஜனம், சந்தனம், முகவாஸ தாம்பூலம்
இவைகளை ஸமர்ப்பிக்க வேண்டும், பிறகு ப்ரணாமம் செய்து மந்திராஸநத்தைத் துடைத்துப் பூஜித்து பகவானிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு
பாதுகைகளை ஸமர்ப்பித்து, அதில் பகவான் எழுந்தருளின பிறகு, முன் ஸமர்ப்பித்த சந்தனம், மாலை முதலியவைகளைக் களைந்து
விஷ்வக்ஸேநரிடம் கொடுத்து பாத்யம், ஆசமனீயம், சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், ஆசமனம், பக்ஷ்யம், பழம், ஆசமனீயம், இவைகளை ஸமர்ப்பிக்க வேண்டும்.

முகவாஸ தாம்பூலம் ந்ருத்த கீத வாத்யங்களினால் ஆராதனஞ்செய்து, இரண்டு தடவை ப்ரதக்ஷிணம் செய்து
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பர்யங்காஸநத்தைத் துடைத்து பகவானிடத்தில் உத்திரவு பெற்றுக்கொண்டு
பாதுகைகளை ஸமர்ப்பித்து அதில் பகவான் எழுந்தருளியதாக த்யானஞ்செய்து பாத்யம், ஆசமனீயம், இவைகளை ஸமர்ப்பித்து
மாலை, பூஷணங்கள், வஸ்திரங்கள் இவைகளைக் களைந்து விஷ்வக்ஸேநரிடம் கொடுத்து
ஸுகஶயனத்திற்குத் தகுந்ததாய் ஸுகமான ஸ்பர்ஶத்தை உடையதான வஸ்திரம், பூஷணம், மாலை, உபவீதம் இவைகளை ஸமர்ப்பித்து
ஆசமனீயம் ஸமர்ப்பித்து சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், ஆசமனீயம், முகவாஸ தாம்பூலம் இவைகளை ஸமர்ப்பித்து,

“ ஸ்வநியாம்ய…….ப்ரதிவாதிதவாந்” என்று ஸாத்விகத்யாகஞ்செய்து பகவானிடத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு
பகவானுக்கு நிவேதனஞ்செய்யப்பட்ட ஹவிஸ்ஸின் மிகுதியிலிருந்து விஷ்வக்ஸேநருக்காகக் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டு
மற்றை எல்லா ஹவிஸ்ஸுக்களையும் தன்னுடைய ஆசார்யன் முதலான எல்லா வைஷ்ணவர்களுக்கும் ஸமர்ப்பித்து
பகவானுடைய ஆராதனத்தில் மிகுந்த தீர்த்தத்தினால் விஷ்வக்ஸேநருக்கு ஆராதனஞ்செய்து
முன்னமேயே எடுத்து வைத்திருக்கும் ஹவிஸ்ஸை நிவேதஞ்செய்து அந்த ஆராதனத்தை முடித்துப்
பகவானை ஸாஷ்டாங்கமாக ஸேவித்து ஶரணாகதி செய்ய வேண்டும்.

‘மனது, புத்தி, அஹங்காரம், இரண்டு கைகள், இரண்டு கால்கள், தலை இவைகளை ஆமைபோல் வைத்துக் கொண்டு ஸேவிப்பது’ என்றும்,
‘ப்ரதக்ஷிணங்களோடு கூடிய இப்படிப்பட்ட ஸாஷ்டாங்க ப்ரணாமத்தினால் பகவானை ஸேவித்து அவனெதிரில் உட்கார்ந்து’ என்றும்,
‘மார்பினாலும், தலையினாலும், ஶரீரத்தினாலும், மனதினாலும், வாக்கினாலும், கால்களினாலும்,
கைகளினாலும், முழங்கால்களினாலும், ப்ரணாமம் செய்வது ஸாஷ்டாங்க ப்ரணாமம்’ என்றும்
சொல்லப் படுகிறது என்று ஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்யும் விதம் சொல்லப் பட்டது.
ஶரணாகதி செய்யும் விதமும் முன்னமேயே சொல்லப் பட்டது.
பிறகு அர்க்யம் ஸமர்ப்பித்துப் பகவானிடத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு ஆராதனத்தை முடிக்க வேண்டும்.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த  ஸ்ரீ நித்ய கிரந்த சாரம் –

November 29, 2023

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த நவ கிரந்தகளுக்குள் இறுதியானது – ஸ்ரீ நித்ய கிரந்தம் என்பது
ஸ்ரீ பகவத் ஆராதன ப்ரயோகம் வஷ்யே -பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன் -என்று தொடங்கி இருப்பதால்
இது பகவத் ஆராதன கிரமத்தைத் தெரிவிப்பதற்காகவே அருளிச் செய்யப் பெற்று இருந்தாலும்
அதற்குப் பூர்வ அங்கமாக உடலைச் சுத்தி செய்து கொள்வது முதலியனவும் இந்நூலில் முதலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளன

திருவாராதனம் செய்யும் முன்பு அவனை சரண் அடைய வேண்டும் என்பதால்
தமேவ சரணம் உப கச்சேத் அகில இத்யாதிநா -என்று இந்நூலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது
அகில ஹேய ப்ரத்ய நீக -என்பது முதலான சூர்ணிகைகளால் எம்பெருமானைச் சரண் அடைய வேண்டும் என்பதால்
அகில ஹேய ப்ரத்ய நீக என்பது தொடங்கி
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்பது வரையும்
அதற்கு மேல் உள்ள ஸ்லோகங்களையும் இங்கு அனுசந்திக்க வேண்டும் என்பர் பெரியோர்

தண்டம் சமர்ப்பித்து பற்றி ப்ரணம்ய – வணங்கி -என்று ஒருமையிலே அருளிச் செய்தமையால்
ஒரு முறை தண்டம் சமர்ப்பிப்பதே எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் என்பது தெளிவு
அதே போல் மணி சேவிப்பதையும் அருளிச் செய்யாமையால் இல்லங்களில் திரு வாராதனம் செய்யும் பொழுது மணி சேவிப்பது இல்லை என்ற அனுஷ்டானமும் காட்டப்படுகிறது –

இறுதியில்
ஸ்ருதி ஸூகைஸ் ஸ்தோத்ரைஸ் அபிஷ்டூய-செவிக்கு இனிய சொற்களால் ஸ்துதித்து -என்று அருளிச் செய்யப்பட்டுள்ளதால்
செவிக்கு இனிய செஞ்சொல் -திருவாய் -10-6-11-திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவிக்க வேணும் என்பதையும் காட்டி அருளுகிறார் –

————————-

ஸ்ரீ நித்ய கிரந்த சாரம் –

நித்யம் –பரமை காந்திகளுக்கு –
பகவத் ஆராதனை பிரகாரம் வஷ்யே-யாகம் –யஜ தேவ பூஜாயாம் -திருவாராதனம் –
பகவத் ப்ரீத்யர்த்தம் கைங்கர்ய ரூபம் -ஏகாந்தி -பரமை காந்தி – மானஸ காகித க்ருதவ்யங்கள் –
பஞ்ச கால பராயணம் –ஆறு நாழிகையாக பிரித்து –
பிராத காலம் – சங்கம காலம் -மத்தியான -அபரான காலம் -சாயங்காலம் –
அபி கமனம் –நோக்கி போவது – உபாதானம் -சேகரிப்பது -இஜ்ஜா யாகம் திருவாராதனம் -ஸ்வாத்யாயம் – யோக காலம் –
யானை -ராஜா -இளவரசன் -பிறந்த குழைந்தை -போன்ற பரிவுடன் -ப்ரீதி காரித கைங்கர்யம் -ரதி -ஆசை உடன் -பரமை காந்தி -பகவான் ஒருவனுக்கு சேஷ பூதன்
கல்யாணை
திரு உதரம் -ஆப்ய வகாரிகம் –அன்னம் பழங்கள் சமர்ப்பித்து – சம் ஸ்பர்சிக்கம் –சந்தனம் புஷபம்-
ஒவ்பசாரிகம் தூபம் தீபம் – அகில பரி ஜனங்களுக்கும் -ஸமஸ்த மங்கள பரிவாரங்கள் –
திரு மந்த்ரம் -சுத்தி –திக் பந்தனம் -திக்குகளுக்கு –
தீர்த்த பீடம் -உடம்பில் மண் பூசி -அநு லேபனம் -உதக அஞ்சலி -கங்கா ஜலம் இடது திருவடி கட்டை விரலில் வந்த தீர்த்தம் என்ற நினைவால் -சப்த -தடவை –
திருவடியில் தலை வைத்து -எதுவரை இயலுமோ அது வரை திரு மந்த்ரம் -சுக்ல வஸ்திரம் -பன்னிரு திருமண் -பெருமாள் தாயார் நினைத்து –
அஷ்டோஷார சதம் மூல மந்த்ரம் -ஸ்ரீ வைகுண்டம் பரிஷத் -தேவர்கள் ரிஷிகள் -யாக பூமிக்கு கச்சதி –
குரு பரம்பரை பூர்வகம் –த்வயம் -பிராபகம் பிராப்யம் அவனே -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ஸ்வரூபம் ரூபம் விபூதி குணம் ஐஸ்வர்யம் -அனுசந்தானம் –
ப்ரத்யக்ஷ ரூப அனுசந்தானம் -சர்வேஸ்வரஸ்வரம் -ஸ்வாமித்வம் –தாஸ்ய சித்திக்காக -அத்யந்த ப்ரீதி -ப்ரீதி காரித பரி பூர்ண கைங்கர்யம்
தன்னால் கொடுக்கப்பட்ட சரீரம் தானே விநியோகம் கொள்கிறான் –

சரீர சுத்தி பூத சுத்தி -மூல மந்த்ரம் வைத்து -ஸூ ஆத்மாநாம் -ஓம் இத் ஆத்மாநாம் உன்ஜீத -ஆத்மாவை பகவான் கட்டை விரலில் சமர்ப்பித்து –
ஆராதனை காலத்தில் பகவத் பிரசாதத்தால் -உயர்ந்த சரீரம் வழங்குவான் -அம்ருத மயம் -சர்வ கைங்கர்யம் பண்ணும் யோக்யதை –மானஸ வியாபாரம் –
ஸூரபி முத்திரை காட்டி –பரிகல்பயாமி -அர்க்யம் பாத்யம் ஆசமனீய ஸ்நாநீய வட்டில்கள் –ஸர்வார்த்த தோயம் -நடுவில் -பிரதி க்ரஹ பாத்திரம் படிகம் –
திரு ஒத்து வாடை சமர்ப்பித்து –
ஓம் ஆதார சக்தி நம கூர்ம ரூபி நம -பீடம் – ஸ்ரீ வைகுண்டாய திவ்ய மண்டபம் நம ஸ்ரீ பூமா நீளா -பத்னீ ஜனங்கள் ஆவாஹனம் –
க்ரீடாதி திவ்ய பூஷணங்கள் எல்லாம் நித்ய ஸூரிகள் –நினைவுடன் வணங்கி –
திவ்ய ஆயுதங்கள் -பஞ்சாயுதங்கள் -ஸ்பர்சம் கொண்டதால் பூரித்து உள்ள – -திரு அனந்த ஆழ்வான்-பெரிய திருவடி
ஸ்ரீ விஷ்வக் சேனர்–ஸூத்ரவதி சமேத -(ஏக பீடம் திரு மால் இரும் சோலை சேவை உண்டே -இருவருக்கும் )
கஜா முகன் தொடங்கி விஷ்வக் சேனர் பரிஜனம் -வாசல் காப்பார்களை வணங்கி –
குமுதாய -கோயில் காப்பார்கள் -ஸூ முகன் -ஸூ பிரதிஷ்டன் -போல்வார் -திவ்ய அவதார தேசங்கள் -நம் அர்ச்சை தானே அனைத்தாகவும்-
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன நியாமகன் –

மந்த்ராஸனம் -ஸ்நாநாசனம் -அலங்காராசனம் -போஜ்யாசனம் -புநர் மந்த்ராஸனம் -பர்யங்காசனம்
மூன்று வியாபக மந்த்ரங்கள் -அனுசந்தானம் -யதா சக்தி -சர்வ போக பூரணீம் -மாத்ரா பிரசாதம் -அதி ப்ரிய தரம் –

————–

ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் உள்ள விஷயங்கள்
1- பகவானே நம்மைக் கொண்டு திருவாராதனம் செய்வித்துத் கொள்கிறான் என்று அனுசந்தித்தல்
2-நீர் நிலைக்குச் சென்று தேஹ சுத்தி செய்து கொள்ளுதல்
3-தீர்த்தமாடுதல்
4-வேஷ்ட்டி உத்தரீயம் அணிந்து திருமண் காப்பு இட்டுக் கொள்ளுதல்
5-ஆதார சக்தி தர்ப்பணம் முதலியவை செய்தல்
6-குரு பரம்பரையை அனுசந்தித்து பிறகு அகில ஹேய ப்ரத்ய நீக என்பது முதலிய
சரணாகதி கத்ய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து எம்பெருமானைச் சரண் அடைதல்
7-எம்பெருமானுடைய வலது திருவடிகளில் புகுவதாக நினைத்தால்
8-ஆவாஹனங்கள் செய்து வட்டில் முதலியவற்றை வைத்தல்
9-எம்பெருமானுடைய பரிஜன பரிவாரங்களை வணங்குதல்
10- எம்பெருமானுக்கு தண்டம் சமர்ப்பித்துத் திரு வாராதனத்தைத் தொடங்குதல்
11-அர்க்கியம் பாத்யம் ஆசமநீயம் சமர்ப்பித்தல்
12-ஸ்நாநாசனம் -திருமஞ்சனம் -சமர்ப்பித்தல்
13-அலங்கார ஆசனம் சமர்ப்பித்தல்
14-மந்த்ராஸனம் -உபசாரங்கள் -சமர்ப்பித்தல்
15-போஜியாசானம் -அமுது =சமர்ப்பித்தல்
16-மீண்டும் மந்த்ராஸனம் சமர்ப்பித்தல்
17-செவிக்கினிய செஞ்சொற்களால் ஸ்துதித்தல்
18-தண்டம் ஸமர்ப்பித்து திருவாராதனத்தை நிறைவு செய்தல் –

————-

அத பரமைகாந்திநோ பகவத் ஆராதன பிரயோகம் வஷ்யே

இனி பரமைகாந்திகளுடைய பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன்

பகவத் கைங்கர்ய ரதிர் பரமைகாந்தீ பூத்வா -பகவாநேவ ஸ்வ சேஷ பூதேந மயா
ஸ்வகீயைஸ் ச கல்யாண தமை ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்சிக அப்யவ  ஹாரிகை போகை
அகில பரிஜன பரிச்சாக அந்விதம்
ஸ்வாத்மாநம் ப்ரீதிம் காரயிதும் உபக்ரமத இதி அநு சந்தாயதீர்த்தம் கத்வா

ஸூசவ் தேசே பாதவ் ப்ரஷாள்ய ஆஸம்ய தீரம் ஸம் சோத்ய
ஸூசவ் தேசே மூல மந்த்ரேண ம்ருதம் ஆதாய த்விதா க்ருத்வா சோதி ததீரே நிதாய
ஏகேந அதிக பாகேந தேஹ மல பிரஷாளநம் க்ருத்வா நீமஜ்ஜ்ய ஆஸம்ய பிராணாயாம த்ரயம் ஆஸீநோ பகவந்தம் த்யானம் க்ருத்வா

அந்யம் ம்ருத் பாகம் ஆதாய வாம பாணி தலே த்ரிதா க்ருத்வா ப்ருதக் ப்ருதக் ஸம் ப்ரோஷ்ய
அபி மந்த்ர்ய ஏகேந திக் பந்தனம் அஸ்த்ர மந்த்ரேண குர்யாத்
அன்யேன தீர் தஸ்ய பீடம் இதரேண காத்ராநு லேபநம்

பகவானுக்கு கைங்கர்யம் செய்வதில் விருப்பமுடைய பரமைகாந்தியாக ஆகி
பகவானே தன்னுடைய அடியவனான என்னால்
தன்னுடையவைகளான மங்களமான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய போகங்களால் அனைத்து அடியவர்களுடன் பரிவாரங்களுடன் கூடிய
தன்னை ப்ரீதி செய்து கொள்வதற்குத் தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தீர்த்தத்துக்கு -நதி வல்லது குளத்துக்குச் சென்று -சுத்தமான இடத்திலே கால்களைக் கழுவிக் கொண்டு
ஆசமனம் செய்து கரையை நன்கு சுத்தம் செய்து
சுத்தமான இடத்தில் இருந்து திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு
மண்ணை எடுத்து அதனை இரு பங்கு ஆக்கி சுத்தமான இடத்தில் வைத்து
மண்ணில் ஒரு அதிக பாகத்தால் உடலை சுத்தம் செய்து கொண்டு தீர்த்தத்தில் முழுகி
ஆசமனம் செய்து அமர்ந்து பகவானை த்யானித்துக் கொண்டு மூன்று முறை பிராணாயாமம் செய்து
மற்ற ஒரு மண்ணின் பாகத்தை எடுத்து -இடது கையில் மூன்று பாகமாக்கி தனித்தனியே நன்றாக ப்ரோக்ஷித்து மந்த்ரித்து
மண்ணின் ஒரு பாக்கத்தால் -ஸஹஸ்ரோல்காய ஸ்வாஹா –வீர்யாய அஸ்த்ராய பட் -என்ற அஸ்த்ர மந்திரத்தால் திக் பந்தனம் செயய வேண்டும்
மற்ற ஒரு மண்ணின் பாகம் தீர்த்தத்துக்குப் பீடமாகும்
மற்ற ஒரு மண்ணின் பாகத்தால் உடலைத் தேய்த்துக் கொள்ள வேண்டும் –

தத பாணீ ப்ரஷால்ய உதக அஞ்சலி மாதாய தீர்தஸ்ய அர்க்க்யம் உத் ஷிப்ய
பகவத் பாத அங்குஷ்ட விநிஸ்ருத கங்கா ஜலம் ஸங்கல்பித பீடே ஆவாஹ்ய அர்க்யம் தத்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
உதக அஞ்சலி மாதாய ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய ஸ்வ மூர்த்நி சிஞ்சேத் ஏவம் த்ரி பஞ்ச க்ருதவ ஸப்த க்ருத்வோ வா

பிறகு இரு கைகளையும் கழுவிக் கொண்டு கைகளில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பகவானுடைய திருவடிகளின் கட்டை விரலில் இருந்து பெருகுகிற
கங்கா ஜலத்தை சங்கல்ப்பித்து வைத்து இருக்கிற பீடத்தில் ஆவாஹனம் செய்து அர்க்யம் கொடுத்து மூல மந்திரத்தினால் அபி மந்திரித்து தலையிலே நனைத்துக் கொள்ள வேண்டும் –
இவ்வாறு மூன்று முறை ஐந்து முறை அல்லது ஏழு முறை செய்ய வேண்டும்

தஷிணேந பாணிநா ஜல மாத்தையா அபி மந்த்ர்ய பீத்வா ஆஸம்ய ஸ்வாதமாநம் ஸம் ப்ரோஷ்ய -பரி ஷிஸ்ய -தீர்தே நிமக்னோ
பகவத் பாதாரவிந்த வின்யஸ்த சிரஸ்க யாவச் சக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
உத்தீர்ய ஸூக்லஸ்த்ரதரோ த்ருத உத்தரீ யஸ்ஸ ஆஸம்ய

ஊர்த்வ புண்ட்ரான் தத் தன் மந்த்ரேண தாரயித்வா பகவந்தம் அநு ஸ்ம்ருத்ய
தத் தன் மந்த்ரேண பகவத் பர்யந்த அபி தாயிநா மூல மந்த்ரேண ச ஜலம் பீதவா ஆஸம்ய ப்ரோஷ்ய பரி ஷிஸ்ய
உதக அஞ்சலிம் பகவத் பாதயோ நிஷிப்ய ப்ராணாநா யம்ய பக்கவாதம் த்யாத்வா
அஷ்டோத்தர சதம் மூல மந்த்ரம் ஆவர்த்ய பரி க்ரம்ய நமஸ் க்ருத்ய ஆதார ஸக்த்யாதி ப்ருதி வ்யந்தம் தர்ப யித்வா
ஸ்ரீ வைகுண்டாதி பாரிஷ தாந்தம் தர்ப யித்வா தேவான் ருஷீன் பித்ரூன் பகவத் ஆத்மகான் த்யாத்வா ஸந்தர்ப
வஸ்திரம் ஸூசைவ தேசே ஸம் பீட்ய ஆஸம்ய ஆவாஹிததீர்தம் மூல மந்த்ரேண ஆத்மநி ஸமாஹ்ருத்ய யாக பூமிம் கச்சேத்

வலது கையால் தண்ணீரை எடுத்துக் கொண்டு அபி மந்திரித்து பருகி ஆசமனம் செய்து தன்னை ப்ரோக்ஷித்துக் கொண்டு
தீர்த்தத்தில் முழுகி பகவானுடைய திருவடித் தாமரைகளைத் தலையிலே கொண்டவனாக நினைத்துக் கொண்டு
சக்தி யுள்ளவரை மூல மந்த்ரத்தை ஜபித்து தீர்த்தத்தில் இருந்து எழுந்து
வெண்மையான ஆடையை அணிந்தவனாய் உத்தரீயத்தையும் அணிந்தவனாய் ஆசமனம் செய்து
திரு மண் காப்பினை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி தரித்துக் கொண்டு பகவானை நினைத்துக் கொண்டு
பகவான் வரை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி -திருமந்த்ரத்தையும் சொல்லி தீர்த்தத்தைப் பருகி ஆசமனம் செய்து ப்ரோக்ஷித்துக் கொண்டு
பரி சேஷணம் செய்து கையிலே தீர்த்தத்தை எடுத்து பகவானுடைய திருவடிகளில் சமர்ப்பித்து பிராணாயாமம் செய்து
பகவானை நினைத்துக் கொண்டு நூற்று எட்டு முறை மூல மந்த்ரத்தை ஜபித்து தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்கி
ஆதார சக்தி முதல் பிருத்வி வரை தர்ப்பித்து ஸ்ரீ வைகுண்டம் முதலாக எம்பெருமானுடைய பரிவாரங்கள் வரை தர்ப்பித்து
பகவானை ஆத்மாவாகக் கொண்டவர்களாக தேவர்கள் முனிவர்கள் பித்ருக்கள் ஆகியோரை த்யானித்துத் தர்ப்பித்து
முன் களைந்த ஆடையை சுத்தமான இடத்தில் பிழிந்து சாய்த்து ஆசமனம் செய்து முன்பு ஆவாஹனம் செய்த தீர்த்தத்தை மூல மந்திரத்தால் தன்னிடம் ஆவாஹனம் செய்து
யாக பூமியான திருவாராதனம் செய்ய வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டும் –

ஸூ ப்ரஷாலித பாணி பாத ஸ்வா சாந்த ஸூசவ் தேசே அதி மநோ ஹரே நிஸ் சப்தே புவம் சங்க்ருஹ்ய தாம்
சோஷணாதிபி விசோத்ய குரு பரம்பரயா பரம கூறும் பகவந்தம் உபாகம்ய தமேவ ப்ராப்யத்வேந ப்ராபகத்வேந அநிஷ்ட நிவாரகத்வேந இஷ்ட ப்ராபகத்வேந ச யதா வஸ்தித
ஸ்வரூப ரூப குண விபூதி லீலோ பகரண விஸ்தாரம் அநு சந்தாய தமேவ சரணம் உபா கச்சேத் அகில ஹேய –இத்யாதி நா

நன்றாக அலம்பிய கை கால்களுடன் சுத்தமான மனத்துடன் சுத்தமான மனத்துக்கு இனிய சப்தம் இல்லாத இடத்தை அடைந்து
அந்த இடத்தை உணர்த்துதல் முதலியவைகளால் சுத்தம் செய்து
குரு பரம்பரை வழியாகப் பரம குருவான பகவானை அடைந்து ஸ்துதித்து –
அந்த பகவானையே அடையப்படுபவனாகவும் -அடைவிப்பவனாகவும் -விரும்பாதவற்றைத் தவிர்ப்பவனாகவும் –
விரும்பியவற்றைத் தருபவனாகவும் -அவனுடைய உள்ளபடியான ஸ்வரூபம் திருமேனி கல்யாண குணங்கள்
உபய விபூதிச் செல்வங்கள் முதலிய விளையாட்டு உபகரணங்களை விரிவாக அனுசந்தித்து
சரணாகதி கத்யத்தில் உள்ள அகில ஹேய -முதலிய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து
அந்த பகவானையே சரணம் அடைய வேண்டும் –

ஏவம் சரணம் உபாகம்ய தத் ப்ரஸாதோப ப்ரும்ஹித மநோ வ்ருத்தி தமேவ பகவந்தம் ஸர்வேஸ்வரேஸ்வரம் ஆத்மந
ஸ்வாமித்வேந அநு சந்தாய அத்யர்த ப்ரியா வாரித
விசததம ப்ரத்யக்ஷ ரூப அநு த்யாயேந த்யாயன் ஆஸீத
தத தத் அனுபவ ஜெனித அதிமாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜாம் ஆரபேத

இப்படி சரண் அடைந்து அவனுடைய அருளால் பெறப்பட்ட மனத்தின் செயல்பாட்டை உடையவனாய் ஸர்வேஸ்வர ஈஸ்வரனான அந்த பகவானையே
தனக்கு ஸ்வாமியாக அநு சந்தித்து மிகவும் பிரியமாய்த் தடை இன்றித் தொடர்வதும் நேரில் காண்பது போல மிகத் தெளிவாக உள்ளதுமான
தியானத்தினால் தியானித்துக் கொண்டு இருக்க வேண்டும் –
பிறகு அந்த அனுபவத்தினால் பிறந்த மிக்க ப்ரீதியினால் செய்விக்கப் பட்ட பரிபூர்ண கைங்கர்ய ரூபமான திரு வாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸ்வ நியாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷதைக ரசேந அநே நாத்மநா
ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை
ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான் ஒவ்ப சாரிக ஸாம்ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி ஸமஸ்த போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதான் விதாய
ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாத யிதும் உபக்ரமத இதி அநு சந்தாய
ஸ்வ தேஹ பஞ்ச உபநிஷந் மந்த்ரான் ஸம்ஹார க்ரமேண ந்யஸ்ய ப்ராணாயாமேந ஏகேந தஷிணேந பாணிநா
நாபி தேசே மூல மந்த்ரம் நியஸ்ய மந்த்ரோத்பூத சண்ட வாய்வாப் யாயித நாபீ தேசஸ்தா வாயுநா ஸரீரம் அந்தர் பஹிஸ்ஸ ஸர்வ தாத்தாவை மயம்
தத்துவ க்ரமேண விசோஷ்ய புநரபி ப்ராணாயாமேந ஏகேந ஹ்ருத் தேசே மூல மந்த்ரம் ந்யஸ்ய மந்த்ரோத்பூத
சக்ராக் நிஜ் வாலோப ப்ரும்ஹித
ஜாடராக்னிநா தக்த தத் தத் சமஷ்டி ப்ரலீந ஸர்வ தத்வ ஸர்வ கில்பிஷ ஸர்வ அஞ்ஞான தத் வாஸநோ பூத்வா
பகவத் தக்ஷிண பாத அங்குஷ்டே மூல மந்த்ரேண ஸ்வாத்மாநம் ப்ரவேசயேத்

பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையதும்
தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக உடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்திரிய மனஸ் முதலிய கரணங்களினால்
தன்னுடைய மங்களமான பொருள்களான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனதற்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் -மிகவும் நிறைந்தவைகளாய்-மிக ப்ரீதியானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னை ப்ரீத்தி செய்து கொள்வதற்காகத் தானே தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தன்னுடைய உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸம்ஹார க்ரமத்தில் ந்யாஸம் செய்து கொண்டு
ஒரு பிராணாயாமத்தால் வலது கையினால் தொப்புளில் தொட்டு மூல மந்த்ரத்தை நியாஸம் செய்து
மந்திரத்தினால் யுண்டான சண்ட வாயுவாகிய தொப்புளின் காற்றினால் ஸர்வ தத்வ மயமான உடலை உட்ப்புறமும் வெளிப்புறமும் தத்வ க்ரமத்தினால் உலர்த்தி
மறுபடியும் ஒரு பிராணாயாமத்தினால் உதய பிரதேசத்தில் மூல மந்த்ரத்தை ந்யாஸம் செய்து மந்திரத்தினால் யுண்டான சக்ர அக்னி ஜ்வாலையினால் பெறப்பட்ட ஜாடராக்னியினால்
அனைத்துத் தத்துவங்களும் அனைத்துப் பாபங்களும் அனைத்து அஞ்ஞானங்களும் அதன் வாசனைகளும் எரிக்கப் பட்டவனாகி
பகவானுடைய வலது திருவடிகளின் கட்டை விரலில் மூல மந்திரத்தினால் தன்னை நுழைக்க வேண்டும்
தான் நுழைவதாக நினைத்துக் கொள்ள வேண்டும் –

அபரேண ப்ராணாயாமேந பகவத் ப்ரஸாதேந பகவத் கிங்கரத்வ யோக்யதாம் ஆ பாத்ய தஸ்மாத் ஆதாய
தத் வாம பாத அங்குஷ்ட அத ஸ்தாத் மூல மந்த்ரேண ஆத்மாநம் வின்யஸ்ய
தேவ வாம பாத அங்குஷ்ட நாகா ஸீதாம் ஸூ மண்டல நிர்கலத் திவ்ய அம்ருத ரஸை ஆத்மாநம் அபி ஷிஸ்ய
பகவத் ப்ரஸாதேந தத் அம்ருத மயம் ஸர்வ கைங்கர்ய மநோ ஹரம் ஸர்வ கைங்கர்ய யோக்யம் ஸரீரம் லப்தவா
தஸ்மிந் ஸரீரே பஞ்ச உபநிஷத் மாத்ரான் ஸ்ருஷ்ட்டி க்ரமேண விந்யஸ்யேத்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -இதி மூர்த்நீ ஸ்ப்ருசேத்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –இதி நாஸாக்ரே
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -இதி ஹ்ருதயே
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -இதி குஹ்யே
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -இதி பாதயோ
ஏவம் ந்யாஸம் குர்வன் தத் தத் சக்தி மாயம் உத்பூத தேஹம் த்யாயேத்

மற்ற ஒரு பிராணாயாமம் செய்து பகவானுடைய அருளினால் பகவானுக்குக் கைங்கர்யம் செய்யும் தகுதியை அடைந்து -அதனால் பெற்ற
பகவானுடைய வலது திருவடி கட்டை விரலின் அடியில் மூல மந்திரத்தால் தன்னை ந்யாஸம் செய்து
பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரல் நகத்தின் நின்றும் பெருகும் குளிர்ந்த அம்ருத மயமான தாரைகளால் தன்னை நனைத்து
பகவானுடைய அருளினால் அம்ருத மயமாய் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு மநோ ஹரமாய்
எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு தகுதியான உடலைப் பெற்று
அந்த உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸ்ருஷ்ட்டி க்ரமத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -என்று தலையைத் தொட வேண்டும்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –என்று மூக்கின் நுனியைத் தொட வேண்டும்
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -என்று இதயத்தைத் தொட வேண்டும்
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -என்று வயிற்றைத் தொட வேண்டும்
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -என்று கால்களைத் தொட வேண்டும்
இப்படி ந்யாஸம் செய்து அந்தவந்த சக்தி மயத்தினால் உண்டான உடலை உடையவனாகத் தன்னை நினைக்க வேண்டும் –

புநரபி ப்ராணாயாமேந ஏகேந பகவத் வாம பாத அங்குஷ்ட விநிஸ்ருத அம்ருத தாரயா ஆத்மாநம் அபி ஷிச்ய
க்ருத லாஞ்சன த்ருத ஊர்த்வ புண்ட்ர பகவத் யாகம் ஆரபேத

மறுபடியும் ஒரு ப்ராணாயாமத்தினால் பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரலில் இருந்து பெருகும் அம்ருத தாரைகளினால் தன்னை நனைத்து
சக்ர அங்கனத்தையும் பன்னிரு திருமண் காப்புகளையும் தரித்துக் கொண்டு பகவானுக்குத் திருவாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸர்வம் காரயதீதி பூர்வ வத் த்யாத்வா ஹ்ருத்யாகம் க்ருத்வா ஸம் பாரான் ஸம் ப்ருத்ய
ஆத்மந வாம பார்ஸ்வே ஜல கும்பே தோயம் உத் பூர்ய கந்த புஷ்பயுதம் க்ருத்வா
ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய வி சோஷ்ய தக்த்வா திவ்ய அம்ருத தோயம் உத் பாத்ய
அஸ்திர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்யஅன்யானி பூஜா த்ரவ்யாணி ஆத்மந
தக்ஷிண பார்ஸ்வே நிதாய
ஆத்மந புரத ஸ்வாஸ் தீர்ணே பீடே க்ரமேண ஆக்நே யாதி கோணேஷு அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய பாத்ராணி நிதாய
அஸ்த்ர மந்த்ரேண ப்ரஷால்ய சோஷாணாதி நா பாத்ராணி வி சோத்ய ஸம்ஸ்க்ருத தோயேந தாநி பூரயித்வா
அர்க்ய பாத்ரே கந்த புஷ்ப குஸாக்ர அக்ஷதா தீநி நிஷிபேத்
தூர்வாம் விஷ்ணு பர்ணீம் ஸ்யாமாகம் பத்மகம் பாத்ய பாத்ரே
ஏலா லவங்க தக்கோல லாமஜ்ஜக ஜாதீ புஷ்பாணி ஆசம நீயே
த்வே ஹரித்ரே முரா சைலேய தக்கோல ஜடாமாசிமலயஜ கந்த சம்பக புஷ்பாணி
ஸித்தார்த்தி காதீ நிஸ்நா நீயே

பகவானே தன்னைக் கொண்டு எல்லாம் செய்வித்துத் கொள்கிறான் என்று முன்பு போலவே நினைத்து
இதய யாகம் செய்து திருவாராதனப் பொருள்களை சேகரித்துக் கொண்டு
தன்னுடைய இடது புறத்தில் தீர்த்தக் குடத்தில் தீர்த்தத்தை நிறைத்து -கந்த புஷ்பத்தைச் -குங்குமப்பூவைச் -சேர்த்து
ஏழு முறை திரு மந்திரத்தினால் அபி மந்திரித்து உலர்த்தி எரித்து -சுத்தம் செய்வதாகப் பாவித்து
அஸ்த்ர மந்த்ரத்தினாலே காப்பீட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி மற்ற திருவாராதனப் பொருள்களை தனக்கு வலது புறத்தில் வைத்து
தனக்கு முன்னால் உள்ள ஒரு பீடத்தில் -தட்டில் -முறையே தென் கிழக்கு மூலை முதலிய இடங்களில்
அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய வட்டில்களை வைத்து அஸ்த்ர மந்திரத்தால் அலம்பி உலர்த்துதல் முதலியவற்றால் பாத்ரங்களை சுத்தம் செய்து
நல்ல தீர்த்தத்தால் அவ் வட்டில்களை நிறைத்து அர்க்ய பாத்ரத்தில் கந்த புஷ்பம் தர்ப்பை நுனி அக்ஷதை முதலியவற்றைச் சேர்க்க வேண்டும்
தூர்வா விஷ்ணு பர்வணீ ஸ்யாமகம் பத்மகம் ஆகியவற்றைப் பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
ஏலம் லவங்கம் தக்கோலம் லாமஜ்கம் ஜாதீ புஷ்பம ஆகியவற்றை ஆசமனீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
இருவித மஞ்சள் முரை சைலேயம் தக்கோலம் ஜடாமாஸி மலை நாட்டு சந்தனம் சம்பக புஷ்பம ஸித்தார்த்தகம் ஆகியவற்றை ஸ்நாநீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

அந்யஸ்மின் பாத்ரே ஸர்வார்த்த தோயம் சங்கல்ப்ய ததோ அர்க்ய பாத்ரம் பாணிநா ஸ்ப்ருஷ்ட்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரிகல்பயாமி இதி அர்க்யம் பரிகல்பயேத்
ஏவம் பாத்யம் பரிகல்பயாமி இதி பாத்யம் ஆசமனம் பரிகல்பயாமி இதி ஆசாமி நீயம் ஸ்நா நீயம் பரிகல்பயாமி இதி ஸ்நா நீயம்
ஸூத்தோ தகம் பரிகல்பயாமி இதி ஸூ த்தோதகம் தத அர்க்ய ஜலாத் ஜாலம் அன்யேன பாத்ரேண ஆதாய யாக பூமிம்
ஸர்வாணி யாக த்ரவ்யாணி ஆத்மாநம் ச ப்ரத்யேகம் ப்ரோஷ்ய ஆஸனம் பரிகல்பயேத்

மற்ற ஒரு பாத்திரத்தில் ஸர்வார்த்த தோயம் -சுத்தோதகம் -தூய நீர் -ஸங்கல்பித்து பிறகு அர்க்ய பாத்ரத்தைக் கைகளால் தொட்டு மூல மந்திரத்தால் அபி மந்தரித்து
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரி கல்பயாமி இதி -அர்க்யத்தை ந்யாஸம் செய்ய வேண்டும் –
இப்படியே பாத்யம் பரி கல்பயாமி -என்று பாத்யம்
ஆசம நீயம் பரி கல்பயாமி என்று ஆசம நீயம்
ஸ்நா நீயம் பரி கல்பயாமி என்று ஸ்நா நீயம்
சுத்தோதகம் பரி கல்பயாமி என்று சுத்தோதகம்
பிறகு அர்க்ய ஜலத்தில் இருந்து தீர்த்தத்தை மற்ற ஒரு பாத்ரத்தினால் எடுத்து யாக பூமியை -பெருமாள் எழுந்து அருளிய இத்தையும் –
எல்லாத் திருவாராதனப் பொருள்களையும் தன்னையும் தனித் தனியாக ப்ரோக்ஷித்து ஆசனத்தை ஏற்படுத்த வேண்டும் –

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
பூம் பூம் பூம்யை நம
இதி யதா ஸ்தாநம் உபர்யுபரி த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம இதி ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம இதி திவ்ய ஜந பதம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -இதி திவ்ய நகரம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -இதி திவ்ய விமானம் ப்ரணம்ய
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -இதி மண்டப ரத்னம் ப்ரணம்ய
தஸ்மிந் அநந்தாய -நாக ராஜாய -நம இதி ஆஸ்தரணம் ப்ரணம்ய தஸ்மிந் உபரி
ஓம் தர்மாய நம -இதி ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய
ஓம் ஞானாய நம -இதி நைர் ருதியாம்
ஓம் வைராக்யாய நம -இதி வாயவ்யாம்
ஓம் ஐஸ்வர்யாய நம -இதி ஐசான்யாம்
ஓம் அதர்மாய நம இதி ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய
ஓம் அஞ்ஞானாய நம இதி தஷிணாஸ் யாம்
ஓம் அவைராக்யாய நம இதி ப்ரதீஸ்யாம்
ஓம் அனைஸ்வர்யாய நம இதி உத்தரஸ் யாம் ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்யபஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் ஓம் அநந்தாய நம இதி வின்யஸ்ய

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
பூம் பூம் பூம்யை நம
என்று ஒன்றின் மேல் ஒன்றாக அந்த அந்த ஸ்தானத்தைத் த்யானம் செய்து வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம -என்று ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம -என்று திவ்ய ஜந பதத்தை -தேசத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -என்று திவ்ய நகரத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -என்று திவ்ய விமானத்தை வணங்கி
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -என்று மண்டப ரத்னத்தை வணங்கி
அதில்
அநந்தாய -நாக ராஜாய -நம என்று பள்ளிக்கட்டிலை வணங்கி
அதற்கு மேலே (தஸ்மிந் உபரி )
ஓம் தர்மாய நம -என்று தென் கிழக்கில் பாத பீடத்தையும் – (ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய )
ஓம் ஞானாய நம -என்று தென் மேற்கில் ( நைர் ருதியாம் )
ஓம் வைராக்யாய நம -என்று -வட மேற்கில் ( வாயவ்யாம் )
ஓம் ஐஸ்வர்யாய நம -என்று வட கிழக்கில் ( ஐசான்யாம் )

ஓம் அதர்மாய நம -என்று கிழக்கில் பாத பீடத்தை ந்யாஸம் செய்து (ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய)
ஓம் அஞ்ஞானாய நம -என்று தெற்கில் ( தஷிணாஸ் யாம் )
ஓம் அவைராக்யாய நம -என்று மேற்கில் ( ப்ரதீஸ்யாம் )
ஓம் அனைஸ்வர்யாய நம -என்று வடக்கில் ( உத்தரஸ் யாம்)
இவற்றை உடலாகக் கொண்ட பீடமாக இருக்கின்ற திரு அனந்தாழ்வானை ந்யாஸம் செய்து (ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்ய )
பிறகு எல்லாக் காரியங்களுக்கும் உன்முகமாய் எங்கும் உள்ள அனந்தாழ்வானை (பஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் )
ஓம் அநந்தாய நம -என்று ந்யாஸம் செய்து ( வின்யஸ்ய)

தஸ்மிந் உபரி ஓம் பத்மாய நம -இதி பத்மம் வி ந்யஸ்ய
தத் பூர்வ பத்ரே ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய
தத் ஆரப்ய
ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய

அதற்கும் மேல் (தஸ்மிந் உபரி )ஓம் பத்மாய நம -இதி ஆஸன பத்மத்தை ந்யாஸம் செய்து (பத்மம் வி ந்யஸ்ய )
முன் இதழில் (தத் பூர்வ பத்ரே ) ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம -என்று சாமரத்தைக் கையில் கொண்டுள்ள
கன்னிகையான விமலையை ந்யாஸம் செய்து (இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய )
அது முதல் கொண்டு (தத் ஆரப்ய)
ப்ரதக்ஷிணமாக வட கிழக்கு வரை உள்ள இதழ்களில் (ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு )
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
என்று அஷ்ட சக்திகளான சாமர கன்னிகைகளை ந்யாஸம் செய்து (இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய )
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–என்று கர்ணிகையின் முன் பாகத்தில் அனுக்ரஹா என்ற சாமர கன்னிகையை ந்யாஸம் செய்து (இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய )

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -இதி யோக பீடம் விந்யஸ்ய
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய
தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி வி ந்யஸ்ய
ஓம் அநந்தாய நம இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய
ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம்
கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய
அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய
ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே
ஓம் அஸ்மத் குருப்யோ நம இதி குரூன்
கந்த புஷ்ப தூப தீபை ஸம் பூஜ்ய ப்ரணம்ய அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -என்று யோக பீடத்தை ந்யாஸம் செய்து (இதி யோக பீடம் விந்யஸ்ய )
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம -என்று திவ்ய யோகப் பீடப்
பள்ளிக்கட்டிலை ந்யாஸம் செய்து (இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய )
அதில் நாக ராஜனாய் ஆயிரம் படங்களால் பிரகாசிக்கின்ற ஆதி சேஷனை (தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் )
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று ந்யாஸம் செய்து (இதி வி ந்யஸ்ய )
ஓம் அநந்தாய நம-என்று முன்னால் பாத பீடத்தை ந்யாஸம் செய்து ( இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய )
ஆதார சக்தி தொடங்கி பீடம் வரை எல்லாத் தத்துவங்களையும் தனித்தனியாக
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் இவற்றால் அர்ச்சித்து (ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம் கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய )
எல்லாப் பரிவாரங்களும் அவரவர் ஸ்தானங்களில் பத்மாஸனங்களை அமைத்து (ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய )
அனந்த கருட விஷ்வக் சேனர்களை பத்மத்தோடே கூடிய பீடத்தில் அமைத்து (அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய )
எல்லாருக்கும் புஷ்பம் அக்ஷதை முதலியவற்றை ஸமர்ப்பித்து (ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய )
யோக பீடத்தின் வடமேற்கு பாகத்தில் (யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே )
ஓம் அஸ்மத் குருப்யோ நம-என்று ஆச்சார்யர்களை ( இதி குரூன் )
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் ஆகியவற்றால் (கந்த புஷ்ப தூப தீபை )
நன்றாகக் பூஜித்து வணங்கி (ஸம் பூஜ்ய ப்ரணம்ய )
அவர்கள் அனுமதி கொண்டு எம்பெருமானின் திருவாராதனத்தை ஆரம்பிக்க வேண்டும் (அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே )

கல்பிதே நாக போகே ஸமா ஸீநம் பகவந்தம் நாராயணம்
புண்டரீக தலா மலாய தாக்ஷம்
கிரீட மகுட கேயூர ஹார கடகாதி ஸர்வ பூஷணை பூஷிதம்
ஆகுஞ்சித தக்ஷிண பாதம் பிரசாரித வாம பாதம் ஜாநு விந்யஸ்ய பிரசாரித தக்ஷிண புஜம் நாக போக விந் யஸ்ய வாம புஜம்
ஊர்த்வ புஜத்வயேந சங்க சக்ர தரம் ஸர்வேஷாம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ப்ரலய ஹேது பூத மஜ்ஜ நாபம்
கௌஸ்துபேந விராஜா மாநம் ஸகா சதம் உதக்ர ப்ரபுத்த ஸ்புரத் அபூர்வ அசிந்த்ய பரம சத்த்வ பஞ்ச சக்தி மய விக்ரஹம்
பஞ்ச உபநிஷதைர் த்யாத்வா ஆராத நாபி முகோ பவ இதி மூல மந்த்ரேண ப்ரார்த்ய மூல மந்த்ரேண தண்டவத் ப்ரணம்ய
உத்தாய ஸ்வா கதம் நிவேத்ய யாவதாராத ந ஸமாப்தி ஸாந்நித்ய யாஸ நம் குர்யாத்-

அமைக்கப்பட்ட அரவணையில் வீற்று இருப்பவனும் -தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களை உடையவனும்
கிரீடம் மகுடம் கேயூரம் ஹாரம் கடகம் முதலிய ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவனும்
மடக்கிய வலது திருவடியை உடையவனும் -நீட்டித் தொங்க விட்ட இடது திருவடியை யுடையவனும்
முழங்காலில் நீட்டி வைத்த வலது திருக்கரத்தை யுடையவனும்
அரவணையில் வைத்த இடது திருக்கரத்தை யுடையவனும்
மேல் இரண்டு திருக்கரங்களால் சங்கு சக்கரங்களைத் தரித்தவனும்
அனைவரையும் படைத்தால் காத்தல் அழித்தல் ஆகியவற்றுக்குக் காரணமான திரு நாபியை யுடையவனும்
கௌஸ்துப மணியினால் பிரகாசிப்பவனும்
பிரகாசிக்கின்ற மிக உயர்ந்த நல்ல மலர்ச்சியுடன் விளங்குகிற அபூர்வமான நினைக்கவும் முடியாத பரம ஸத்வமாய்
பஞ்ச சக்தி மயமான திரு மேனியை யுடையவனுமான பகவான் நாராயணனை பஞ்ச உபநிஷத்துக்களால் தியானித்து
திரு வாராதனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திரு மந்திரத்தினால் பிரார்த்தித்துக் கொண்டு
திரு மந்த்ரத்தைக் கூறி தடி போல் விழுந்து வணங்கி எழுந்து வரவேற்புக் கூறி திருவாராதனம் முடியும் வரை எழுந்து அருளி இருக்கும் படி யாசிக்க வேண்டும்

அந்யத்ர ஸ்வாபி மத தேசே பூஜா சேத் ஏவமாவாஹநம்
மந்த்ர யோக சமாஹ்வாநம் கர புஷ்போப தர்சனம்
பிம்போ பவேஸநம் சைவ யோக விக்ரஹ சிந்தனம்
பிரணாமஸ் ச ஸமுத்தா நம் ஸ்வா கதம் புஷ்ப்ப மேவ ச
சாந்நித்ய யாசநம் சேதி தத்ராஹ்வா நஸ்ய சத் க்ரியா

வேறு விருப்பமான இடத்தில் பூஜை என்றால் இப்படி ஆவாஹனம் செய்ய வேண்டும்
மந்த்ரத்தைக் கூறுதல் -எம்பெருமானை அழைத்தல் -கையில் புஷபத்தைக் காட்டுதல் –
பிம்பத்தில் எழுந்து அருள்ச செய்தல் -எம்பெருமானுடைய திரு மேனியைத் தியானித்தல் -வணங்குதல் –
எழுதல் -வரவேற்புக் கூறுதல் – புஷ்பம் சமர்ப்பித்தல் -சாந்நித்யம் செய்ய வேண்டும் -எழுந்து அருளி இருக்க வேண்டும் -என்று வேண்டுதல்
ஆகிய இவை ஆவாஹனம் செய்வதற்கு உரிய சத் க்ரியைகளாகும்

ததோ பகவந்தம் ப்ரணம்ய தஷிணத -ஓம் ஸ்ரீம் ஸ்ரியை நம -இதி ஸ்ரியம் ஆவாஹ்ய ப்ரணம்ய
வாமத ஓம் பூம் பூம்யை நம இதி புவம் ஆவாஹ்ய தத்ரைவ ஓம் நீம் நீலாயை நம இதி நீலாம் ஆவாஹ்ய
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம இதி உபரி பாகவத பஸ்சிம பார்ஸ்வே சதுர் பாஹும் சதுர் வக்த்ரம் க்ருதாஞ்சலி புடம் மூர்த்னி பகவத் கிரீடம் தார யந்தம் க்ரீடாக் யதி வ்ய புருஷம் பிரணம்ய

பிறகு பகவானை வணங்கி வலது பக்கத்தில் ஓம் ஸ்ரீம் ஸ்ரீ யை நம -என்று பெரிய பிராட்டியாரை ஆவாஹனம் செய்து வணங்கி
இடது பக்கத்தில் ஓம் பூம் பூம்யை நம -என்று பூமிப் பிராட்டியை ஆவாஹநம் செய்து
அங்கேயே ஓம் நீம் நீளாயை நம -என்று நீளா தேவியை ஆவாஹனம் செய்து
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம -என்று மேலே பகவானுடைய வலப்புறத்தில் நான்கு தோள்களை யுடையவனாய் நான்கு முகங்களை யுடையவனாய்
கூப்பிய கையனாய் திரு முடியில் பகவானுடைய கிரீடத்தை தரிப்பவனான கிரீடம் என்கிற திவ்ய புருஷனை வணங்கி

ஏவ மேவ
ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம -இத்யா பீடகம் தத்ரைவ புரஸ்தாத் ப்ரணம்ய
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம இதி தக்ஷிண குண்டலம் தக்ஷிணத ப்ரணம்ய
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம இதி வாம குண்டலம் வாமத ப்ரணம்ய
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம இதி வனமாலாம் புரத பிராணமய
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் -புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம இதி ஸ்ரீ வத்ஸம் புரத ப்ரணம்ய
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம இதி ஹாரம் புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம இதி
கௌஸ்துபம் புரத ப்ரணம்ய
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம இதி பீதாம்பரம் புரத ப்ரணம்ய

இப்படியே

ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம – என்று ஆபீடகத்தை
அங்கேயே முன்னால் வணங்கி
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம என்று வலது
திருக்காதில் உள்ள குண்டலத்தை வலப்புறத்தில் வணங்கி
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம -என்று இடது திருக்காதில் உள்ள குண்டலத்தகை இடப்புறத்தில் வணங்கி
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம என்று வனமாலையை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் –என்று திருத்துழாய் தேவியை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம என்று ஸ்ரீ வத்ஸாத்தை முன்னால் வணங்கி
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம -என்று காரத்தை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம -என்று கௌஸ்துபத்தை முன்னால் வணங்கி
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம -என்று பீதாம்பரத்தை முன்புறம் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம இதி ஸர்வ பூஷணாநி ஸர்வத ப்ரணம்ய
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம இதி ஸூ தர்சனம் ரக்த வர்ணம் ரக்த நேத்ரம் த்வி -சதுர் -புஜம் க்ருதாஞ்சலி புடம்
பகவந்த மாலோக யந்தம் தத் தர்சன அநந்த ப்ரும்ஹித முகம் மூர்த்நி பகவச் சக்ரம் தார யந்தம்
தஷிணத பிராணமய ஓம் நந்தகாய கட் காதி பதயே நம இதி நந்த காத்மா நம் சிரஸி பகவத் கட்கம் தார யந்தம்
தத்ரைவ ப்ரணம்ய ஓம் பத்மாய நம இதி பத்மம் -பத்மம் சிரஸி தார யந்தம் -ப்ரணம்ய
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம இதி சங்காத்மாநம் ஸித வர்ணம் -ரக்த நேத்ரம் -த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம்
சிரஸி பகவச் சங்கம் தார யந்தம் வாமத ப்ரணம்ய
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம இதி கதாத்மாநம் தத்ரைவ ப்ரணம்ய

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம -என்று எல்லா ஆபரணங்களையும் சுற்றிலும் வணங்கி –
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம -என்று சிவந்த நிறம் உள்ளவரும் சிவந்த கண்களை யுடையவரும்
இரு -நான்கு -திருக்கைகளை உடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் – பகவானை நோக்கிக் கொண்டு இருப்பவரும் –
பகவானை சேவித்தால் உண்டான மகிழ்ச்சியுடன் கூடிய முகத்தை யுடையவரும் தலையில் பகவானுடைய சக்கரத்தைத் தாங்கி இருப்பவருமான ஸூதர்சனரை வலப்புறத்தில் வணங்கி
ஓம் நந்தகாய கட் காதி பதயே நம -என்று நந்தகன் என்னும் பெயரை யுடையவரும் தலையிலே பகவானுடைய வாளைத் தாங்கி இருப்பவருமானவரை அங்கேயே வணங்கி
ஓம் பத்மாய நம என்று தாமரையை -தாமரையைத் தலையில் தாங்கியவரை-வணங்கி –
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம -என்று சங்கமாய்-வெண்மை நிறம் யுடையவரும் -சிவந்த கண்களை யுடையவரும் –
இரு கைகளை யுடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும்
தலையில் பகவானுடைய சங்கத்தைத் தாங்கி இருப்பவரை இடது புறத்தில் வணங்கி –
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம -என்று கதா யுதமாக இருப்பவரை அங்கேயே வணங்கி –

தத்ரைவ -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம இதி சார்ங்காத்மாநம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம இதி ஸர்வா யுதாநி பரித ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம இதி திவ்ய பாதாரவிந்த ஸம் வாஹி நீஸ் சமந்தத ப்ரணம்ய
ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி ப்ருஷ்டத அநந்தம் -பகவந்தம் -நாக ராஜம் சதுர் புஜம்
ஹலமுஸல தரம் க்ருதாஞ்சலி புடம் பணாமணி ஸஹஸ்ர மண்டித உத்தம அங்கம் பகவந்த மாலோகயந்தம்
பகவத் ஸ்பர்ச நாநந்த ப்ரும்ஹித ஸர்வ காத்ரம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம இதி அநுக்த அநந்த பரிஜனாந் சமந்தத ப்ரணம்ய
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம இதி பகவத் பாதுகே புரத ப்ரணம்ய

அங்கேயே -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம–என்று சார்ங்கத்தை-வில்லை – வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம -என்று எல்லா ஆயுதங்களையும் சுற்றலும் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம -என்று பகவானுடைய திருவடிகளை வருடுபவர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று அநந்தன் என்ற பெயரை யுடையவரும் -பகவான் நாக ராஜரும்-
நான்கு கைகளை யுடையவனும் -கலப்பை உலக்கை ஆகியவற்றைத் தாங்கி இருப்பவனும்
அஞ்சலி செய்து இருப்பவனும் -ஆயிரம் படங்களைக் ன்கொண்ட தலைகளை யுடையவனும் –
பகவானை சேவித்துக் கொண்டு இருப்பவனும் -பகவானைத் தொட்டுக் கொண்டு இருப்பதால் உண்டான மகிழ்ச்சி யோடு கொடிய உடலை உடையவனுமான ஆதி சேஷனை தியானித்து பின்புறம் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம -என்று இங்கு கூறப்படாத எல்லாப் பரிவாரங்களும் சுற்றிலும் வணங்கி
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம -என்று பகவானுடைய இரு பாதுகைகளை முன்னால் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம இதி ஸர்வ பரிச்ச தான் சமந்தத ப்ரணம்ய
ஓம் வைநதேயாய நம இதி அக்ரதோ -பகவதோ பகவந்தம் -வைநதேயம் ஆஸீநம் த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய இதி பகவத ப்ராக் உத்தர பார்ஸ்வே தஷிணாபி முகம் பகவந்தம் விஷ்வக் சேனம் ஆஸீநம்
சதுர் புஜம் சங்க சக்ர தரம் க்ருதாஞ்சலி புடம் நீல மேக நிபம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -இதி விஷ்வக் சேந பரி ஜநான் பிராணமய
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம இதி பூர்வ த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம-இதி தக்ஷிண த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -இதி பஸ்சிம த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -இதி உத்தர த்வார பார்ஸ்வயோ பிரணமேத்
ஏதே த்வார பாலாஸ் ஸர்வே சங்க சக்ர கதா தரா ஆஜ்ஞா முத்ர யுதா த்யதவ்யா-

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம –என்று எம்பெருமானுடைய எல்லா அடியவர்களையும் சுற்றிலும் வணங்கி
ஓம் வைநதேயாய நம -என்று பகவானுக்கு முன்னால் வீற்று இருக்கின்றவனும் -இரு கைகளை யுடையவனும் –
அஞ்சலி செய்து இருப்பவனுமான பகவான் கருடனை த்யானம் செய்து வணங்கி
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய -என்று எம்பெருமானுக்கு முன்னால் வடக்குப் பக்கத்தில் தெற்கு நோக்கி வீற்று இருப்பவரும் –
நான்கு திருக்கரங்களை உடையவரும் -சங்க சக்கரங்களை தரித்து இருப்பவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் –
நீலமேகம் போன்ற நிறத்தை உடையவருமான பகவான் விஷ்வக் சேனரை தியானித்து வணங்கி –
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -என்று
விஷ்வக் சேனருடைய அடியவர்களை வணங்கி
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம -என்று கிழக்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம- என்று தெற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -என்று மேற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -என்று வடக்கு வாசல் பக்கத்திலே வணங்க வேண்டும்
இந்த த்வார பாலகர்கள் யாவரையும் சங்க சக்கரம் தரித்தவர்களாயும் ஆணை இடுகின்ற முத்திரை யுடையவர்களாகவும் தியானிக்க வேண்டும் –

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம இதி ஸர்வ த்வாரேஷு ஸர்வ த்வார பாலான் ப்ரணம்ய
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பூர்வஸ்யாம் திஸி
பார்ஷ தேஸ்வரம் குமுதம் ப்ரணம்ய
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஆக்நேய்யாம் குமுதாஷம் ப்ரணம்ய
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி தக்ஷிண ஸ்யாம் புண்டரீகம் ப்ரணம்ய
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி நைர் ருத்யாம் வாமனம் ப்ரணம்ய
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பஸ்ஸிமஸ்யாம் சங்கு கர்ணம் ப்ரணம்ய
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி வாயவ்யாம் ஸர்ப நேத்ரம் ப்ரணம்ய
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி உதீச்யாம் ஸூ முகம் ப்ரணம்ய
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஐஸாந்யாம் ஸூ ப்ரதிஷ்டம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம இதி ஸர்வ ஸ்மாத் பஹி பிரணமேத்

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம -என்று எல்லா வாசல்களிலும் உள்ள த்வார பாளர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று கிழக்கு திசையில் பார்ஷ தேஸ்வரனான குமுதனை வணங்கி
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் கிழக்கில் குமுதாஷனை வணங்கி
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று தெற்கில் புண்டரீகனை வணங்கி
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் மேற்கில் வாமனனை வணங்கி
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம என்று மேற்கில் சங்கு கர்ணனை வணங்கி
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட மேற்கில் ஸர்ப நேத்ரனனை வணங்கி
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வடக்கில் ஸூ முகனை வணங்கி
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட கிழக்கில் ஸூ ப்ரதிஷ்டனை வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம -என்று எல்லாரையும் வெளிப்புறத்தில் வணங்க வேண்டும் –

அந்யத்ர ஆவாஹ்ய பூஜாயாம் ஆவஹ நஸ்தா நாநி பரம வ்யோம -ஷீரார்ணவ -ஆதித்ய மண்டல ஹ்ருதயாநி -மதுரா த்வாரகா -கோகுல -அயோத்யாதீநி
திவ்ய அவதார ஸ்தாநாநி ச அன்யாநி ப்வராணிகாநி ஸ்ரீ ரெங்காதீ நி ச யதா ருசி

மற்றோர் இடத்தில் ஆவாஹநம் செய்து திருவாராதனம் செய்வதற்கு உரிய இடங்களாக பரமபதம் திருப்பாற் கடல் -ஸூர்ய மண்டலம் முதலிய இடங்களையும்
வடமதுரை துவாரகை கோகுலம் அயோத்யை முதலிய திவ்ய அவதார ஸ்தலங்களையும்
ஸ்ரீ ரெங்கம் முதலிய திவ்ய தேசங்களையும் அவரவர் விருப்பப்படி ஆவாஹநம் செய்து கொள்ள வேண்டும் –

பாத்ரேண பூர்வ ஸ்தாபித அர்க்ய பாத்ராத் அர்க்ய ஜலம் ஆதாய பாணிப்யாம் முக சமம் உத்த்ருத்ய
பகவன் இதம் பிரதி க்ருஹ்ணீஷ்வ இதி சிந்தயன் பகவான் முகே தர்ச யித்வா பகவத் தக்ஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாயார்க்க்யம் ப்ரதிக்ருஹ பாத்ரே ப்ரஷிபேத் ஹஸ்தவ் ப்ரஷால்ய
பாதயோ புஷ்பாணி சமர்ப்ய பாத்ய பாத்ராத் பாத்ய ஜலம் ஆதாய பாதயோ கிஞ்சித் தத்வா மனஸா பாதவ் ப்ரஷாலயன் பாத்யம் பிரிதிக்ருஹ பாத்ரே நிஷிபேத்

முன்பு ஏற்படுத்தப்பட்ட அர்க்ய பாத்திரத்தில் இருந்து அர்க்ய ஜலத்தை எடுத்துக் கைகளாலன் முகத்துக்கு சமமாக உயர வைத்துக் கொண்டு
பகவானே இதனை ஏற்றுக் கொண்டு அருள வேணும் -என்று நினைத்து -பிரார்த்தித்து -பகவானுடைய திரு முகத்தின் முன் காட்டி
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது அர்க்யம் சமர்ப்பித்து ப்ரதிக்ருஹ -படிக -பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –
கைகளை அலம்பி எம்பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களை சமர்ப்பித்து பாத்ய பாத்திரத்தில் இருந்து பாத்ய ஜலத்தை எடுத்து
திருவடிகளில் சிறிது சேர்த்து மனத்தினால் திருவடிகளை விளக்குவதாக நினைத்து பி பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

ஹஸ்தவ் ப்ரஷால்ய
வஸ்த்ரேண பாதவ் ஸம் ம்ருஜ்ய கந்த புஷ்பாணி தத்வா
ஆசம நீய பாத்ராத் ஆசம நீய மாதாய பகவத் தஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாய பகவத் வதேந ஆசம நீயம் சமர்ப்பிதம் இதி மனசா பாவயன் சேஷ மாசம நீயம் ப்ரதிக்ரஹ பாத்ரே நிஷி பேத்
ததோ கந்த புஷ்ப தூப தீப ஆசமன முக வாஸ தாம் பூலாதி நிவேதநம் க்ருத்வா ப்ரணம்ய
ஆத்மா நம் ஆத்மீயம் ச ஸர்வம் பகவன் நித்ய கிங்கரத்வாய ஸ்வீ குர்வ இதி பகவதே நிவேதயேத்
தத ஸ்நாநார்தம் ஆஸனம் ஆ நீய
கந்தாதி ப்ரப்யர்ச்ய பகவந்தம் ப்ரணம்ய அனுஜ் ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்ய பூஷண வஸ்த்ராண் யப நீய விஷ்வக் ஸேனாய தத்வா ஸ்நாந சாடி காம் ப்ரதாய பாத்யாசமா நீய பாத பீட ப்ரதான தந்த காஷ்ட ஜிஹ்வா நிர்லேஹந

கைகளை அலம்பி
வஸ்திரத்தினால் திருவடிகளை ஒத்துத் துடைத்து -பூக்களை சமர்ப்பித்து ஆசம நீய பாத்திரத்தில் இருந்து ஆசம நீயம் எடுத்து
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது ஸமர்ப்பித்து பகவானுடைய திரு வாயில் ஆசம நீயம் சமர்ப்பிக்கப் பட்டது என்று மனத்தினால் பாவித்து
மிகுந்த ஆசம நீய தீர்த்தத்தை ப்ரதிக்ருஹ பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
பிறகு புஷ்பம் தூபம் தீபம் தாம்பூலம் முதலிய வற்றை நிவேதனம் செய்து -தண்டன் சமர்ப்பித்து –
தன்னுடைய ஆத்மாவையும் ஆத்மாவைச் சேர்ந்த எல்லாவற்றையும் பகவானே நித்ய கைங்கர்யம் செய்வதற்க்காக
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பகவான் இடம் சமர்ப்பிக்க வேண்டும்
பிறகு திருமஞ்சனத்துக்காக ஆஸனத்தை ஏற்படுத்தி கந்தம் முதலியவற்றால் அர்ச்சித்து பகவானை தண்டன் சமர்ப்பித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து பகவான் சாத்திக் கொண்டு இருக்கிற மாலை ஆபரணங்கள் வஸ்திரம் ஆகியவற்றைக் கழற்றி விஷ்வக் சேனர் இடம் கொடுத்து விட்டு
திருமஞ்சன வஸ்திரம் சாத்தி பாத்யம் ஆசம நீயம் பாத பீடம் சமர்ப்பித்து
திரு முத்து பல் விளக்குதல் திரு நாக்கு வழித்தல்

கண்டூஷ முக ப்ரஷாலந ஆசமன ஆ தர்ச ப்ரதர்சன ஹஸ்த ப்ரஷாலந -முக வாஸ தாம்பூல
தைலாப் யங்க–உத்வர்தாமலக தோய -கங்கதப் லோத தேஹ ஸோதந ஸாடிகா ப்ரதான
ஹரித்ரா லேபந ப்ரஷாலந வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோ பவீத ப்ரதான பாத்ய ஆசமன பவித்ர ப்ரதான
கந்த புஷ்ப தூப தீப ஆசமன – ந்ருத்த -கீத -வாத்யாதி ஸர்வ மங்கள ஸம் யுக்த
அபிஷேக நீராஞ்சன ஆசமன-தேஹ சோதந -ப்லோத வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோபவீத -ஆசமன -கூர்ச பிரசாரண
ஸஹஸ்ர தாராபிஷேக நீராஞ்சன ஆசமன -தேஹ சோதந ப்லோத வஸ்திர உத்தரீய -யஜ்ஜோ பவீத ஆசமநாநி தத்யாத் –

வாய் கொப்பளித்தல் திரு முகம் விளக்குதல் -ஆசமனம் – கண்ணாடி காண்பித்தல் -கைகளை அலம்புதல் -தாம்பூலம்
எண்ணெய் காப்பு – நல்ல நெல்லிக்காய் சேர்த்த தீர்த்தம் –திருமேனியைத் துடைக்கும் உலர்ந்த வஸ்திரம் -மான்கள் காப்பு தெளித்தல் -வஸ்திரம் உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் சமர்ப்பித்தல் –
பாத்யம் ஆசமநம் பவித்ரம் சமர்ப்பித்தல் -கந்தம் புஷ்பம தூபம் -தீபம் ஆசமனம் -நாட்டியம் இசை வாத்தியங்கள் முதலிய மண்கலன்களோடு கூடிய
திருமஞ்சன ஆலத்தி ஆசமனம் ஆகியவை சமர்ப்பித்து மறுபடியும் திரு மேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் கூர்ச்சம் சமர்ப்பித்தல்
சஹஸ்ர தாரை திருமஞ்சனம் ஆலத்தி ஆசமனம் திருமேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் ஆகியவை சமர்ப்பிப்பது –

தத அலங்காராஸனம் அப்யர்ச்ச ப்ரணம்ய அநுஜ ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பூர்வவத்
ஸ்நாநீய வர்ஜம் அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்தோத்தகாநி மந்த்ரேண கல்பயித்வா பகவதே
கந்தபுஷ்ப பாத ஸம் மர்தந-வஸ்திர -உத்தரீய -பூஷண -உபவீத -பார்க்க பாதுகா ஆசமநீயாநி தத்வா
ஸர்வ பரிவாராணாம் ஸ்நாந வஸ்த்ராதி பூஷணாந்தம் தத்வா கந்தாதீன் தேவ அநந்தரம் ஸர்வ பரிவாராணாம் ப்ரத்யேகம் ப்ரதாய தூப தீப ஆசமநீயாநி தத்யாத்
அதவா ஸர்வ பரிவாராணாம் கந்தாதீநேவ தத்யாத்

பிறகு அலங்காரச்சாநத்தைப் பூஜித்து -வணங்கி -எம்பெருமானுடைய அனுமதி கொண்டு -பாதுகையை சமர்ப்பித்து
அங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு முன்பு போலவே ஸ்நா நீயத்தைத் தவிர்த்து
அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்த தீர்த்தங்களை மந்திரத்தினால் ஏற்படுத்தி எம்பெருமானுக்கு கந்த புஷ்பம
திருவடிகளை வருடுதல் -வஸ்திரம் உத்தரீயம் -ஆபரணங்கள் -யஜ்ஜோ பவீதம் அரக்ய பாத்ய ஆசமநீயங்கள் சமர்ப்பித்து
காந்தம் முதலியவற்றை எம்பெருமானுக்குப் பிறகு எல்லாப் பரிவாரங்களும் தனித்தனியே ஸமர்ப்பித்து தூப தீப ஆசமநீயங்களை சமர்ப்பிக்க வேண்டும்
அல்லது எல்லாப் பரிவாரங்களும் காந்தம் முதலியவற்றை மட்டுமே ஸமர்ப்பிக்க வேண்டும் –

கந்த புஷ்ப ப்ரதான -அலங்கார -அஞ்சன -ஊர்த்வ புண்ட்ர -ஆதர்ச -தூப தீப -ஆசமன -த்வஜ -சத்ர -சாமர -வாஹந –
சங்க சிஹ்ன -காஹல -பேர்யாதி -சகல ந்ருத்த கீதா வாத்யாதிபி
அப்யர்ச்ச மூல மந்த்ரேண புஷ்பம ப்ரதாய

கந்த புஷ்பங்களை ஸமர்ப்பித்து அலங்காரம் அஞ்சனம் திருமண் காப்பு கண்ணாடி தூபம் தீபம் ஆசமனம் கொடி குடை சாமரம் வாஹனம்
சங்கம் திருச்சின்னம் காளம் பேரிகை முதலியவற்றுடன் நாட்டியம் இசை அனைத்து வாத்யங்கள் இவற்றுடன் அர்ச்சித்து மூல-திரு -மந்த்ரத்தினால் புஷ்பம் சமர்ப்பித்து
ஒவ்வொரு அஷரத்துக்கும் புஷ்பம் சமர்ப்பித்து –

த்வாதஸ அக்ஷரேண -விஷ்ணு ஷட் அக்ஷரேண-விஷ்ணு காயத்ர்யா -பஞ்ச உபநிஷதை -புருஷ ஸூக்தர்க்பி
அந்யைஸ் ச பகவன் மந்த்ரை சக்தஸ் சேத் -புஷ்பம் ப்ரதாய தேவ்யாதி திவ்ய பரிஷாதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா ப்ரணம்ய
ப்ரதி திஸம் ப்ரதக்ஷிண ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்சலிம் தத்வா புரத ப்ரணம்ய
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை ஸ்துத்வா ஆத்மாநம் நித்ய கிங்கர தயா நிவேத்ய ததைவ த்யாத்வா யதா ஸக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
ஸர்வ போக ப்ரபூர்ணம் மாத்ரம் தத்வா முகா வாஸ தாம்பூலே ப்ரதாய அர்க்யம் தத்வா போஜ்யாசனம் அப்யர்ச்ச ப்ரணம்ய
அநுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்ய ஆசமநீய அர்ஹாணி தத்வா

ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய -என்ற 12 எழுத்து மந்திரத்தாலும்
ஓம் விஷ்ணவே நம -என்ற ஆறு எழுத்து மந்திரத்தாலும்
ஓம் நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீ மஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்கிற விஷ்ணு காயத்ரியாலும்
பஞ்ச உபநிஷத்துக்களாலும்
புருஷ ஸூக்த ருக்குகளினாலும்
பிற பகவன் மந்த்ரங்களாலும்
சக்தியுள்ளவரை புஷ்ப்பங்களை சமர்ப்பித்து
பிராட்டி முதலிய அடியவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு உரிய மந்திரங்களுடன் புஷ்பம் ஸமர்ப்பித்து வணங்கி
எல்லா திசைகளிலும் ப்ரதக்ஷிணம் பிரணாமம் இவற்றுடன் எம்பெருமானுக்கு புஷ்பாஞ்சாலி ஸமர்ப்பித்து முன்னால் வணங்கி
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -திருப்பாவை முதலிய அருளிச் செயல்களால் -ஸ்துதித்து
தன்னை நித்ய கைங்கர்ய பரனாக ஸமர்ப்பித்து -அப்படியே தியானித்து -சக்தி யுள்ளவரை மூல திரு மந்த்ரத்தை ஜபித்து
எல்லா போகங்களையும் பூர்த்தி செய்யும் மாத்திரையை ஸமர்ப்பித்து வாயுக்கு வாஸனை அளிக்கும் தாம்பூலம் சமர்ப்பித்து
அர்க்கியம் சமர்ப்பித்து போஜ்யசாநத்தைப் பூஜித்து வணங்கி
பகவான் அனுமதி கொண்டு -பாதுகை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் பகவானுக்கு பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பித்து –

குடம் மாஷிகம் ஸர்பி ததி ஷீரம் சேதி பாத்ரை நிஷிப்ய
ஸோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய மது பர்கம் அவநத ஸிரா ஹர்ஷோத்புல்ல நயநோ ஹ்ருஷ்ட மநா பூத்வா ப்ரதாய ஆசமநீயம் தத்யாத்
யத் கிஞ்சித் த்ரவ்யம் பகவதே தீயதே தத் ஸர்வம் சோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய தத்யாத்

வெல்லம் தேன் நெய் தயிர் பால் ஆகியவற்றைத் தனித்தனிப் பாதிரிரத்தில் சேர்த்து சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி
அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து மதுபர்க்கத்தை குனிந்த தலையுடன் கண்களில் மகிழ்ச்சி பொங்க
உகப்பான மனத்துடன் கூடியவனாகி ஸமர்ப்பித்து ஆசமநீயம் ஸமர்ப்பிக்க வேண்டும்
எந்தப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கப் படுகிறதோ அவை அனைத்தையும் சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து சமர்ப்பிக்க வேண்டும் –

ததஸ் ச காம் ஸ்வர்ண ரத்நாதி கம் ச யதா ஸக்தி தத்யாத்
ததஸ் ஸூ ஸம்ஸ்க்ருதாந்நம் ஆஜ்யாட் யம் ததி ஷீர மதூ நிச பல மூல வ்யஞ்ஜநாநி
மோத காஸ் ச அந்யாநி ச லோகே ப்ரிய தமாநி ஆத்ம நஸ் ச இஷ்டா நி ஸாஸ்த்ரா விருத்தா நி ஸம் ப்ருத்ய சோஷணாதி பிர் விசோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய அஸ்த்ர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்ய
அர்ஹண பூர்வகம் ஹவிர் நிவேதயேத் அதி ப்ரபூதம் அதி சமக்ரம் அதி ப்ரிய தமம் அத்யந்த பக்தி க்ருதம் இதம் ஸ்வீ குர்வ இதி ப்ரணாம பூர்வகம்
அத்யந்த ஸாத் வச வி நயா வநதோ பூத்வா நிவேத யேத்-

பிறகு பசு தங்கம் ரத்னம் முதலியவற்றையும் தன்னால் முடிந்தவரை ஸமர்ப்பிக்க வேண்டும் –
பிறகு நன்றாக சமைக்கப் பட்ட அன்னத்தில் நெய் மிகுதியாகச் சேர்த்து தயிர் பால் தேன் முதலியவற்றையும்
பழங்கள் கிழங்குகள் வியஞ்சனங்களையும்
பிற பணியாரங்களையும் உலகில் மிகவும் விரும்பப்படுகிற பொருள்களாய் -தனக்கும் மிகவும் விருப்பமானவைகளாய்
ஸாஸ்த்ர விருத்தம் இல்லாதாவைகள் ஆனவற்றையும் சேர்த்து
அஸ்த்ர மந்திரத்தினால் காப்பிட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி அர்ப்பணிக்கும் பாவத்துடன் அமுது செய்விக்க வேண்டும் –
மிகவும் அதிகமானையும் -மிகவும் நிறைந்துள்ளவையும் -மிகவும் ப்ரீதியுடன் கூடியவையுமான இவற்றை
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வணக்கத்துடன் மிகவும் பணிவாக தலை சாய்த்து அமுது செய்விக்க வேண்டும் –

ததஸ் ச அநு பாந தர்பணோ ப்ரதாய ஹஸ்த ப்ரஷாலந ஆசமந ஹஸ்த ஸம் மார்ஜந -சந்தந -முகா வாஸ தாம்பூலாதீநி தத்வா ப்ரணம்ய
புந மந்த்ராஸனம் கூர்சேந மார்ஜயித்வா அப்யர்ச்ச அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்யாதிகம் அபோஹ்ய விஷ்வக் சேநாய தத்வா
பாத்யா சம நீய -கந்த -புஷ்ப தூப தீப ஆசமன அபூப பலாதீநி தத்வா
ஆசமன முகா வாஸ தாம்பூல ந்ருத்த கீத வாத்யாதி ப்ரப்யர்ச்ச ப்ரதக்ஷிணத் வயம் க்ருத்வா தண்டவத் ப்ரணம்ய

பிறகு தீர்த்தத்தை அன்புடன் ஸமர்ப்பித்து -திருக்கைகளை விளக்குதல் -ஆசமனம் -திருக்கைகளைத் துடைத்தல் -சந்தனம் தாம்பூலம்
முதலியவற்றை சமர்ப்பித்து வணங்கி மீண்டும் மந்த்ராசனத்தை தர்ப்பையினால் துடைத்து அர்ச்சித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து எழுந்து அருளியுள்ள எம்பெருமானுடைய மாலை முதலியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து பாத்யம் ஆசமநீயம் புஷ்பாம் தூபம் தீபம் ஆசமனம் அப்பம் பழங்கள் முதலியவற்றை ஸமர்ப்பித்து
ஆசமனம் தாம்பூலம் நாட்டியம் இசை வாத்தியங்கள் இவற்றால் அர்ச்சித்து இரண்டு ப்ரதக்ஷிணங்கள் செய்து தடியைப் போலே விழுந்து வணங்கி –

பர்யங்காசனம் அப்யர்ச்ய அனுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்யாசமநே தத்வா
மால்யா பூஷண வஸ்த்ராணி அப நீய விஷ்வக் ஸேனாய தத்வா
ஸூக சயன உசிதம் ஸூக ஸ்பர்சம் ச வாஸ ச தது சிதானி பூஷணாநி உபவீதம் ச ப்ரதாய ஆசம நீயம் தத்வா
கந்த புஷ்ப தூப தீப ஆசமன முகா வாஸ தாம்பூலாதி ப்ரப்யர்ச்ச
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை அபிஷ் டூய பகவா நேவ ஸ்வ ந்யாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷ தைக ரஸேந
அநேந ஆத்மநா ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான்
ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி சமஸத் போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதாந் விதாய ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாதிதவாந் இதி அநு சந்தாய
பகவந்தம் அனுஜ் ஞாப்ய பகவன் நிவேதித ஹவிஸ் சேஷாத் விஷ்வக் ஸேனாய கிஞ்சித் துத் த்ருத்ய நிதாய
அந்யத் ஸர்வம் ஸ்வா சார்ய ப்ரமுகே ப்யோ வைஷ்ணவேப்யோ தத்வா
பகவத் யாகாவா சிஷ்டை ஜலாதி பிர் த்ரவ்யை விஷ்வேக் சேனம் அப்யர்ச்ச பூர்வோத்ததம் ஹவிஸ் ச தத்வா
ததர்சனம் பரி ஸமாப்ய பகவந்தம்
அஷ்டாங்கேந ப்ரணாமேந ப்ரணம்ய சரணம் உப கச்சேத்

பர்யங்க ஆசனத்தை அர்ச்சித்து அனுமதி கொண்டு -பாதுகையை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு
பாத்யம் ஆசமனம் ஸமர்ப்பித்து -மாலை ஆபரணங்கள் -மேல் வஸ்திரங்கள் -ஆகியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து
ஸூ கமாக சயனிப்பதற்கு ஏற்ற மென்மையான வஸ்த்ரத்தையும் அதற்கு ஏற்ற ஆபரணங்கள் யஜ்ஜோ பவீதத்தையும் ஸமர்ப்பித்து
ஆசமனம் ஸமர்ப்பித்து புஷ்பம் தீபம் தூபம் ஆசமனம் தாம்பூலம் முதலியவற்றால் அர்ச்சித்து
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -அருளிச் செயல்களால் -திருப்பாவை முதலியவற்றின் சாற்றுப் பாசுரங்களை -சேவித்து ஸ்துதித்து
பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை யுடையதும் தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக யுடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்த்ரிய மனஸ் முதலிய கரணங்களால் தன்னுடைய மங்களமான பொருள்களான -உபசாரங்களான -குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் மிகவும் நிறைந்தவைகளாய் -மிக ப்ரீதி யானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னைத் தானே ப்ரீதி செய்து கொள்வதற்காகத் தானே திருவாராதனம் செய்து கொண்டான் என்று அனுசந்தித்து
பகவான் அனுமதி கொண்டு பகவானுக்கு அமுது செய்வித்து ப்ரசாதத்தில் விஷ்வக் சேனருக்குச் சிறிது எடுத்து வைத்து –
மற்ற எல்லாவற்றையும் தன ஆச்சார்யர் முதலிய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சமர்ப்பித்து
பகவானுக்குத் திருவாராதனம் செய்து மிகுந்த தீர்த்தம் முதலிய பொருள்களால் விஷ்வக் சேனரைப் பூஜித்து
முன்பு எடுத்து வைத்து இருந்த பிரசாதத்தையும் ஸமர்ப்பித்து அந்தப் பூஜையை முடித்து -பகவானை
எட்டு அங்கங்களுடன் கூடிய ப்ரணாமத்தால் வணங்கிச் சரண் அடைய வேண்டும் –

மநோ புத்தி அபி மாநேந ஸஹ ந்யஸ்ய தரா தலே
கூர்ம வத் சதுரஸ் பாதான் சிரஸ் தத்ரைவ பஞ்சமம்
ப்ரதக்ஷிண ஸமே தேந த்வேவம் ரூபேண ஸர்வதா
அஷ்டாங்கேந நமஸ் க்ருத்ய ஹ்யு விஸ்ய அக்ரத ப்ரபோ

இத் யுக்த அஷ்டாங்க ப்ரணாம ஸரணாகதி ப்ரகாரஸ் ச பூர்வ யுக்த ததஸ்
அர்க்ய ஜலம் ப்ரதாய பகவந்தம் அனுஜ ஞாப்ய பூஜாம் ஸமா பயேத்

இதி ஸ்ரீ பகவத் ராமாநுஜ விரசிதோ நித்ய க்ரந்த ஸமாப்தம்

மனம் புத்தி அபிமானம் -அஹங்காரம் -இவை மூன்றையும் அடக்கி
தரையில் ஆமை போலே நான்கு கால்கள் -கைகள் இரண்டு -கால்கள் இரண்டு -தலை ஆகிய ஐந்தையும் தரையில் படும்படி ப்ரதக்ஷிணத்தோடு கூடியதாய்
இப்படி எப்போதும் அஷ்டாங்கத்துடன் எம்பெருமான் திரு முன்பே நமஸ்கரித்து அமர்ந்து என்று அஷ்டாங்க பிராணாமம் கூறப்பட்டுள்ளது

சரணாகதி செய்யும் முறை முன்பே கூறப்பட்டது

பிறகு அர்க்ய தீர்த்தத்தை ஸமர்ப்பித்து பகவானுடைய அனுமதி கொண்டு திருவாராதனத்தை முடிப்பது

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிய நித்ய கிரந்தம் நிறைவடைந்தது –

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் மஹாத்ம்யம்–

August 19, 2023

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் மஹாத்ம்யம்–தமிழ்‌ இலக்கிய வரலாறு பதினாறாம்‌ நூற்றாண்டு, பாகம்‌ -3 –ஸ்ரீ மு. அருணாசலம்‌ அவர்கள் —

திரவிட சிசு
செளந்தரியலகரி மூலத்தில்‌ 75ஆம்‌ பாடல்‌:
தவஸ்தன்யம்‌ மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹி ஸாரஸ்‌ வதமிவ
தயாவத்யா தத்தம்‌ த்ரவிட சிசுராஸ்வாத்ய தவயத்‌
கவீனாம்‌ ப்ரெளடானாம்‌ மஜனி கமனீய: கவயிதா.
மலையரசன்‌ மகளே, உனது திருமுலைப்பால்‌, இதயத்திலிருந்து உதித்த. அமிருதப்‌ பிரவாகம்‌ போலும்‌, சரசுவதியே உருக்கொண்டு
வந்தாற்போலும்‌ பெருகுகிறது என்று கருதுகிறேன்‌; ஏனெனில்‌
நீ அருள்‌ சுரந்து அளித்த திருமுலைப்பாலை அருந்தித்‌ திரவிட சிசு (தமிழ்க்குழந்தை) பெருமை மிகக்‌ கவிஞருக்குள்‌ மனங்கவரும்‌
கவிஞன்‌ ஆகிவிட்டான்‌ அன்றோ” என்பது இதன்‌ பொருள்‌.

இங்கு திரவிட சிசு என்பது தமிழ்க்‌ குழந்தையாகிய திருஞான சம்பந்தர்‌ என்பதே நேரான பொருள்‌. வேறு அக்காலத்‌ திராவிட நாட்டில்‌ சிசு கவிஞன்‌ அன வரலாறு இல்லை. ஞானசம்பந்தர்‌-திருமூலைப்‌ பாலருந்திய செய்தியை அவரே தமது பாசுரத்தில்‌
போதையார்‌ பொற்கிண்ணத்‌ தடிசில்‌ பொல்‌ லாதெனத்‌
தாதையார்‌ முனிவுறத்‌ தானெனை யாண்டவன்‌. என்று பாடுகிறார்‌.

இது பெரியபுராணத்தால்‌ நாடெங்கும்‌ நன்‌ கறியப்பட்ட வரலாறு. சம்பந்தர்‌ கி.பி. ஏழாம்‌ நூற்றாண்டின்‌
முற்பாதியில்‌ (640) வாழ்ந்தவர்‌. சங்கரர்‌ கி.பி. 820 வரை வாழ்ந்‌ தவர்‌. ஆகவே சம்பந்தரை இவர்‌ அறிந்து குறிப்பிடுவதும்‌ பொருந்‌தக்கூடியதே.
திரவிடம்‌ என்றால்‌ அக்காலத்தில்‌ தமிழ்‌ என்றே பொருள்‌; திரவிட சிசு என்றால்‌ மூன்றே வயதான தமிழ்க்‌ குழந்தை
யான சம்பந்தர்‌ என்பதுதான்‌ எளிதான கருத்து.
ஆனால்‌ தமிழுக்குச்‌ சிறப்புத்‌ தரலாகாது என்று கருதிய அத்வைதிகள்‌ இதைச்‌ சும்மா விடவில்லை. சங்கரரே திரவிடர்‌,
அவர்‌ சிறு குழந்தையாக இருக்கையில்‌ ஒரு சமயம்‌ தாயும்‌ தந்தையும்‌ வீட்டில்‌ இல்லாதபோது அழுதுகொண்டிருந்ததால்‌
பார்வதி தேவியே தோன்றிப்‌ பாலூட்டித்‌ தேற்றினார்‌ என்றும்‌,
சங்கரர்‌, “கவிஞருக்குள்‌ பெருங்‌ கவிஞனாக அனான்‌”: என்று தம்‌மையே படர்க்கையில்‌ சொல்லிக்கொண்டார்‌ என்றும்‌ சொல்‌வார்கள்‌.
இது பிற்காலத்தெழுந்த பொருந்தாக்‌ கூற்று. கவிராச பண்டிதர்‌, இங்கு தம்‌ மொழிபெயர்ப்புப்‌ பாடலில்‌ “கவுணியன்‌
சிறுமதலை’ (கவுணியன்‌ கோத்திரத்தில்‌ உதித்த திருஞான சம்‌ பந்தர்‌) என்றே பாடுகிறார்‌. உரையாசிரியரும்‌ இப்படியே எழுது
வதும்‌ காணத்தக்கது. தமிழில்‌ பாடினோருக்குத்‌ திரவிடசிசுசங்கரர்‌ என்ற கருத்தே எழவில்லை. இது பிற்காலத்தில்‌ புனையப்‌
பட்ட போலிக்கதை என்பது தெளிவு.

———–

அருளாளதாசர்‌ பாடிய மிக விரிவான 9142 பாடல்‌ கொண்ட புராண பாகவதமும்‌
செவ்வைச்‌ சூடுவார்‌ பாடிய 4973 பாடல்‌ கொண்ட இதிகாச பாகவதமும்‌
இக்‌காலத்தில்‌ தோன்றிய பெருநூல்கள்‌.
ஆசிரியர்‌ பெயர்‌ தெரியாத கூ!_ற்புராணமும்‌
திருக்குருகைப்‌ பெருமாள்‌ கவிராயர்‌ பாடிய திருக்குருகை மான்மியமும்‌
இக் காலத்தில்‌ தோன்றிய தல :புராணங்கள்‌.
இவையே வைணவத்தில்‌ தோன்றிய முதல்‌ புராணங்களுமாகும்‌.
இவையன்றி, அரிதாசர்‌ பாடிய இரு சமய விளக்கம்‌ என்ற தத்துவ சம்வாத நூலும்‌ இக்காலத்துக்குரியது

விசய நகர மன்னர்‌ தோன்றித்‌ தமிழ்நாட்டிற்‌ பெரும்‌ பகுதியைத்‌ தங்களுக்குட்படுத்தி, முகம்மதியர்‌ படையெடுப்பால்‌
வைதிக சமயத்துக்கு ஏற்பட்‌டிருந்த சீர்குலைவைப்‌போக்கி மீண்டும்‌ வைதிக சமயம்‌ தலையெடுக்குமாறு செய்‌தார்கள்‌.
விசயநகர மன்னரும்‌, அவர்கள்‌ ஆணையின்படி தமிழ்‌நாட்டில்‌ மதுரை, திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில்‌
தங்கி நாட்டைப்‌ பரிபாலித்த தலைவர்களான நாயக்கர்களும்‌,திருமாலடியவர்கள்‌.
எனவே, இவர்களாட்சியில்‌ திருமால்‌ சமயத்‌ திற்குப்‌ பேராதரவு இருந்தமை இயல்பு.

————-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

இராமானுசார்ய திவ்ய சரிதை முதலான சில வைணவ சரித்திர மணிப்பிரவாள நூல்கள்‌ எழுதியமையால்‌
இவர்‌ வைணவ சமய இலக்கிய வரலாற்றில்‌ ஒரு நிலைத்த இடம்‌ பெறுகிறார்‌.

இவர்‌ மணவாள மாமுனிகள்‌ திருவடிகளுக்கு அந்தரங்கரான கோவித்தப்பருடைய திருவம்சத்தில்‌ உதித்தவர்‌.
இந்தக்‌ கோவிந்தப்பர்‌ துறவியாகி, பரவஸ்து பட்டர்‌ பிரான்‌ ஜீயர்‌ என்று அஷ்டதிக்கஜங்களில்‌ ஒருவராயிருந்தவர்‌,
இவருடைய புதல்வர்‌  அழகிய மணவாளன்‌;
இவருடைய பெளத்‌திரார்‌ வரதாசாரி எனப்பட்டவர்‌; இவ்வரதாசாரி துறவு பூண்டு பிள்ளைலோகம்‌ சீயர்‌ எனப்‌ பெயர்‌ பூண்டார்‌;
இப்பெயர்‌ பிள்ளை லோகார்யம்‌ சீயர்‌ என்றும்‌ வழங்குவதுண்டு.
பிள்ளை லோகாசாரியர்‌ என்ற பிரசித்தி பெற்ற ஆசாரியர்‌ இருப்பதனாலே, இவர்‌ பெயர்‌
பிள்ளைலோகம்‌ ஜீயர் எனச்‌ சுருக்கப்பட்டது என்று சான்றோர்‌ கூறுவர்‌.
இவருடைய திருநட்சத்திரம்‌ சித்திரைத்‌ திருவோணம்‌.
இவர்‌ கடல்‌ கொண்ட கடல்மல்லைத்‌ தலசயனத்‌ துறைவார்‌ சந்நிதியைப்‌ புதிதாய்க்‌ கட்டி,
பெருமாளைப்‌ பிரதிஷ்டை பண்ணி, தீர்த்தம்‌ மரியாதைகளெல்லாம்‌ பெற்றவர்‌-
புரட்டாசித்‌ திருவோணம்‌ சிறப்புடையது,–அது பொய்கை யாழ்வார்‌, பிள்ளை லோகாசாரியர்‌ திருநட்சத்திரம்‌.

நூல்கள்‌

பிள்ளை லோகஞ்சீயர்‌ முந்தையோர்‌ நூல்களில்‌ சம்பிரதாய வியாக்கியானம்‌ ஏற்படாதவற்றுக்கு மட்டும்‌ வியாக்கியானம்‌ எழுதினார்‌.
இவர்‌ செய்த நூல்கள்‌ பின்வருவன;
இவையாவும்‌ மணிப்பிரவாள நடை.
சிலவற்றில்‌ நடை முழுமையுமே வடமொழியாயிருக்கும்‌.
1. இராமானுசார்ய திவ்ய சரிதை.
2. மணவாள மாமுனிகள்‌ சரித்திரமாகிய யதீந்திரப்‌ பிரவணப்‌ பிரபாவம்‌.
இவை இரண்டும்‌ புதிதாக எழுதிய தனி வரலாற்று நூல்கள்‌.
3. திருவரங்கத்தமுதனார்‌ செய்த இராமானுச நூற்றந்தாதி வியாக்கியானம்‌.
4. பின்ளைலோகாசாரியா்‌ செய்த உரைநடை நூலான அர்த்த பஞ்சக வியாக்கியானம்‌.
5. அவருடைய மாணாக்கர்‌ விளாஞ்சோலைப்‌ பிள்ளை செய்த சப்த காதை வியாக்கியானம்‌.
6. மணவாள மாமுனிகள் அருளிச் செய்துள்ள திவ்ய பிரபந்தங்கள் வியாக்கியானம்‌:
௮. உபதேச ரத்தினமாலை,
அ. ஆர்த்திப்‌ பிரபந்தம்‌;
இ.திருவாய்மொழி நூற்றந்தாதி உரை.
7. ஸ்ரீ வைஷ்ணவ சமயாசார நிஷ்கர்ஷம்‌. இது தனி உரை நடை நால்‌.
8-அனைத்து நாலாயிர திவ்யப்‌ பிரபந்தத்‌ தனியன்‌களுடைய வியாக்கியானம்‌.
9. உபதேசத் திருநாமம்‌.
10. திருமந்திரார்த்த அரும்பத விளக்கம்‌.

———–

இராமானுசார்ய திவ்ய சரிதை

இந்த நூல்‌ இராமானுசர்‌ சரித்திரத்தை மிகவும்‌ விரித்து (ராயல்‌ அளவில்‌ 200 பக்கம்‌ கொண்ட) பெருநூலாகச்‌ சொல்வது.

இவ்வாசிரியருக்கு மூலம்‌, இராமானுசர்‌ காலத்திலேயே கருட வாஹன பண்டிதர்‌ எழுதிய திவ்விய ஸூரி சரிதம்‌
முதலான வட. மொழி நூல்களும்‌, பெரிய திருமுடி அடைவும்‌, பின்பழகிய சீயருடைய ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவமும்‌.
வழக்கம்‌ போல்‌, இதுவும்‌ அதிக வடமொழித்‌ தொடர்கள்‌ கலந்த மணிப்‌ பிரவாளமே.
வாதங்கள்‌ வருமிடங்களில்‌ இவர்‌ பக்கம்‌ பக்கமாக வடமொழிச்‌ சுலோகங்களையே சொல்லிக்கொண்டு போகிறார்‌.
அன்றியும்‌ இராமானுசர்‌ வரலாற்றையே விரித்துக்‌ கூறும்‌ தமிழ்ப்‌ பாடல்களையும்‌ இடையிடையே தருகிறார்‌.
பல பாடல்கள்‌ இவ்வாறு உள்ளன.
இவை இவரே செய்தனவா, அல்லது
வேறு ஏதேனுமொரு நூலிலிருந்து மேற்கோளாக எடுத்துத்‌ தருக றாரா என்பது சொல்ல முடிய வில்லை. இரண்டொன்றைக்‌ கீழே தருகிறோம்‌.
பேரருளாளர்‌ (அத்திகிரி வரதராசப்‌ பெருமாள்‌) இராமானுசர்‌, கோயிலுக்கு (திருவரங்கத்துக்கு)ப்‌ போக விடை கொடுத்தனுப்புகிறார்‌:
சந்ததி யில்லா மனைமகள்‌ போலே
தடமுலை யில்லா மடமகள்‌ போலே
செந்தண லில்லா ஆகுதி போலே
தேசிக னில்லா வோதுகை போலே,
சந்திர னில்லாத்‌ தாரகை போலே,
இந்திரனில்லா உலகம்‌ போலே
எங்கள்‌ இராமா னுசமுனி போனால்‌
இப்புவி தானினி எப்படி யாமோ?

இராமானுசர்‌ பிரிய மனமின்றிப்‌ பிரிந்து செல்கிறார்‌:
திக்கு நோக்கித்‌ திரும்பித்‌ திரும்பியே
தேவராசர் தம்‌ கோயிலை நோக்கியே
செக்கர்‌ மேனி மிகப்பெருங்‌ கைகளால்‌
சோர்ந்த கனிகள்‌ பனிநீர்‌ தெளித்திட
மிக்க கோயில்‌ பெருவழி தன்னிலே
வேதம் வல்ல மறையோர்கள்‌ தம்முடன்‌
புக்குகத்துக்குப்‌ போகிற பெண்கள் போல்‌
போயினார்‌ பெரும்‌ பூதூர்‌ முனிவனார்‌.

இவையன்றி, இராமானுசரைப்‌ புகழும்‌ பாடல்கள்‌ மிகப்பல
உள்ளன.
யாவும்‌ பிரபந்த அமைப்பும்‌ உடையவை.
சில பின்‌ வருவன. தாலாட்டுப்‌ பாடல்‌:

அத்திரிசூர்‌ ஞால மனந்தாவ தாரமெனச்‌
சித்திரையில்‌ ஆதிரைநாள்‌ வந்துதித்த தேசிகனோ.
கேசவனார்‌ வாழக்‌ கிளை வாழக்‌ கீர்த்தி மிகும்‌
ஆசூரி வந்துதித்த ஆரியனைச்‌ சொன்னாரார்‌.*

திருமஞ்சனக்‌ கவி:
குத்திரப்‌ பர சமய நிரசநந்‌ தால் வந்த கொடுவிடாய்‌ தீருகைக்கோ
கூற்றப்‌ பெருங்கலியை மாற்றிப்‌ புகட்ட கொடுஞ்‌ சந்தாப மாறுகைக்கோ
மத்தளத்‌ தோடு முரசுடக்கை மல்லாரி பேரிகைகள்‌ திமிதிமெனவே
வானவர்கள்‌ மலர்தூவ ஆவலொடு கின்னரர்கள்‌ தனாதனா என்றேத்தவே
எத்திசையு மெண்ணில்‌ எழுபத்து நால்வருடனே எந்தை கந்தாடை யாண்டான்‌
எப்பொழுது மினிதாக ஏற்ற கைங்‌ கர்யங்கள்‌ செய்து இணையடி தொழுதேத்தவே
பத்தியுடை யடியவர்கள்‌ சுற்றி நீராகவே பண்ணும்‌ பரந்தாமனே
பரவாதி மத்த கஜ பஞ்சானைப்‌ பெரிய பாபாத்ரி வச்ராயுதா
முத்திதனை வித்தார மாகவரு எண்ணலே முடி மன்னர்‌ பணி பாதனே
முரவைரி பரனென்ற எதிராசனே நீரிந்‌ நின்ற திருமஞ்சனம்‌ செய்வதே.

திருமஞ்சனக்‌ கவி, வாகனக்கவி, கட்டியம்‌ முதலாயின விருத்த மாயினும்‌, நான்கடியின்‌ மிகுந்து போதலுண்டு.

திருச்சின்னம்‌:
யதிராசன்‌ வந்தான்‌ யதிராசன்‌ வந்தான்‌ யதிராசன்‌ வந்தான்‌
எதிராரு மில்லாதான்‌ வந்தான்‌ மதிராசி இராமானுசன்‌ வந்தான்‌.
ஆமா றறியும்‌ பிரான்‌ வந்தான்‌ சீமான்‌ சரணாகதி தந்த பிரான்‌ வந்தான்‌
அரணாகுங்‌ கழலோன்‌ வந்தான்‌ முரணாகும்‌ வாதியரை வெல்லுமவன்‌ வந்தான்‌
மாநிலத்தில்‌ வேதியரில்‌ மிக்கமகன்‌ வந்தான்‌. வாய்த்த பெரும்பூதூரில்‌ மன்‌ வந்தான்‌
ஏத்து மிளையாழ்‌ வாரென்னு மெம்பிரான்‌ வந்தான்‌
வளையாழி ஏந்திய மால்‌ வந்தான்‌
நளினமுக வெம்பெருமான்‌ எங்கள்‌ எதிராசன்‌ வந்தான்‌
வம்பொருநாட்‌ செய்யா வானவன்‌ வந்தான்‌
உம்பரெல்லாம்‌ நோக்கும்‌ இராமானுச முனிவனோ வந்தான்‌
வாக்கிலுயர்‌ சூரியில்‌ மன்னவன்‌ வந்தான்‌
பார்க்கு ரூடையவவரா மென்னு மொரு முதல்வன்‌ வந்தான்‌.

பல்லாண்டு முதலான பாடல்களும்‌ உள்ளன.

வாழித்‌ திருநாமம்‌:

நிழல்‌ கொடுத்துப்‌ புகழ்படைத்து நின்றபிரான்‌ வாழியே
நின்றிருந்து பட்டோலை கொண்டபிரான்‌ வாழியே
நின்றிருந்து பட்டோலை கொண்டபிரான்‌ வாழியே
களிக்குமறைப்‌ பொருள்‌ விரித்துக்‌ கீண்ட பிரான் வாழியே
கேள்விமிகு மாறன்‌ செந்‌ தமிழ்செய்தான்‌ வாழியே
அழித்தலுத்‌ தவன்றிசைக ளாக்கினான்‌ வாழியே
ஆளவந்தா ராக்கினையை அறவளர்த்தோன்‌ வாழியே
கொழிக்குமணி மாடம்சூழ்‌ பூதூரான்‌ வாழியே
குரைகழற்குப்‌ பாதுகமாய்க்‌ கூடினான்‌ வாழியே

சந்தர்ப்பம்‌ நேரும்போதெல்லாம்‌ இந்நூலாசிரியர்‌ இராமானுசர்‌ பாடியதாக அனேகம்‌ பாடல்கள்‌ பாடியிருக்கிறார்‌.
திருக்குருகூரை நண்ணியதும்‌ -“இதுவோ திருநகரி” என்று இரா மாநுசர்‌ பாடியதாக வரலாறு.

இராமானுசர்‌ ஆண்டாளைப்‌ பின்வரும்‌ பாடல்‌ சொல்லி மங்களா சாசனம்‌ பண்ணினார்‌ என்று சொல்கிறார்‌.
வாழி திருப்பாவை பாடு மடப்பாவை,
வாழி யரங்க மணவாளர்‌, – வாழியவன்‌
மாடு நிற்கும்‌ புள்ளரையன்‌, வாழி பெரியாழ்வார்‌
பாடு நிற்கும்‌ வேதாந்தப்‌ பா.

கிடாம்பிப்‌ பெருமாளைப்‌ புகழ்ந்த ஒரு பாடல்‌:
வேதாந்தங்‌ கொண்டு வடதிசைப்‌ போதந்து மீண்ட வந்நாள்‌
போதார்‌ பொழிற்றும்பை யூர் வந்த கொண்டிதன்‌ புன்மைகெட
யாதானு மாகிலு மென் பேற்றை யெய்தென்‌ றெழுதியருள்‌
தாதாரு மையன்‌ கிடாம்பிப்‌ பெருமாள்‌ தயா நிதியே.

இராமானுசர்‌ முதவிகளை அழைத்துக்கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூர்‌ செல்லுங்காலை, அவர்கள்‌ சோர்ந்து போனார்கள்‌ போலும்‌.
இவர்‌ இடமணித்து என்று அகத்துறையில்‌ தலைவன்‌ தலைவிக்குக்‌ காட்டுவதுபோல்‌ காட்டுவதாக ஒரு பாடல்‌:
முத்தூரும்‌ வெண்ணகையாய்‌! கடந்தோம்‌ முதுபாலைநிலம்‌,
எத்தூரம்‌ போகும் முன்‌ செல்லுகின்ற தூரம்‌ எனிலிரண்டு
செய்த்தூரம்‌ போருந்‌ திருமல்லி நாட்‌ டுறைந்தவில்லி
புத்தூரும்‌ பச்சைத்‌ துழாய் மணம்‌ நாறிய பொய்கையுமே.

ஆண்டாளைப்‌ பாதாதி கேசமாகச்‌ சேவிக்குமிடத்தில்‌ ஒரு பாடல்‌:
மெல்லிய பஞ்சடி யுந்துவ ராடையும்‌ மேகலையும்‌
வல்லியை வென்ற மருங்குமுத்‌ தார வனமுலையும்‌
சொல்லியல்‌ வன்மையும்‌ வில்லிபுத்‌ தூரம்மை தோளழகும்‌
முல்லையை வென்ற நகையுமெல்லாமென்றன்‌ முன்னிற்குமே.

கோவிந்தப்‌ பெருமாள்‌ எம்பார்‌ ஆகியபின்‌, அவர்‌ நிலையைக்‌கண்ட முதலிகள்‌ அவரைப்‌ போற்ற,
அப்போற்றல்‌ சரியென்று அவர்‌ தம்மையே சிலாகித்துப்‌ பாடியதாக ஒரு பாடல்‌:
பற்ப மெனத்திகழ்‌ பைங்கழ லுன்றன பல்லவ மேவிரலும்‌
பாவன மாகிய பைந்துவ ராடை பதிந்த மருங்கழகும்‌
முப்புரி நாலொடு முன்கையி லேதிகழ்‌ முக்கோல்‌ தன்னழகும்‌
முன்னவர்‌ தந்திடு மொழிகள்‌ நிறைந்த முறுவல்‌ நிலா வழகும்‌
கற்பக மேவிய கருணைபொ ழிந்திடு கமல முகத்தழகும்‌
காரி சுதன்கழல்‌ சூடிய முடியுங்‌ கனநற்‌ சிகைமுடியும்‌
எப்பொழு தும்மெதி ராசன்‌ முகத்தழ .கென்னித யத்துளதால்‌
இல்லை யெனக்கெதி ரில்லை யெனக்கெதிர்‌ இல்லை யெனக்கெதிரே.

இராமானுசர்‌ மேல்‌ நாட்டிலிருந்து கோயிலுக்குத்‌ திரும்பிய போது கோயிலார்‌ அவரைப்‌ போற்றுகிறார்கள்‌:
வையம்‌ குருடன்றோ, மாமறையும்‌ பொய்யன்றோ,
ஐய னுரைத்தமிழ்‌ ஆரறிவர்‌:- வையத்துக்‌
கூன்று கோ லெந்தை எதிராசர்‌ ஆதரித்த
மூன்றுகோல்‌ காண்பதற்கு முன்‌.

இவர்‌ மங்களாசாசானம்‌ பெற்ற தலங்கள்‌ யாவும்‌ சென்று வழிபட்டார்‌ என்று ஒவ்வொன்றாய்‌ விரித்துக்‌ கூறுகிறது.
.இவருடையசித்தாந்தத்தைப்‌ பிரமாணத்திலே தரிசிப்பித்ததைப்‌ பிரத்தியடஷசத்திலும்‌ தரிசிப்‌பிக்க வேண்டும்‌ என்று கேட்‌.ட அரசன்‌
வித்துவான்‌ களின்‌ பொருட்டாக ஒரு ராத்திரியிலே வேதாந்த சாரத்தைத்‌ தம்முடைய திருக்கைகளிலே விரித்தெழுதி
அதைச்‌ சரசுவதியின்‌ கரத்திலே வைத்துக்‌ கதவைச்‌ சாத்தி மறுநாள்‌ இரவு பார்க்க,
அது சரசுவதியின்‌ சிரசிலே சிரோ பூஷணமாயிருந்ததாம்‌. கண்டு-இராமானுசர்‌,
நாம்பெற்ற நன்மையும்‌ நாமங்கை நன்னெஞ்சத்து
ஓம்பியிருந்‌ தெம்மை ஒதுவித்து – வேம்பின்‌
பொருணீர்மை யாயினும்‌ பொன்னாடுபா டென்னும்‌
அருள்‌ நீர்மை தந்த அருள்‌–என்று பாடித்‌ துதித்தாராம்‌.

பெரிய நம்பியிடம்‌ இவர்‌ இரண்டாம்‌ முறையும்‌ துவயார்த்தம்‌ கேட்கிறார்‌.
உடையவர்‌ திருவேங்கட யாத்திரை சென்றபோது, பருத்திக்‌ கொல்லையம்மாள்‌ என்ற பக்தர்‌ திருமாளிகைக்கு எழுந்தருளினார்‌.
அவர்‌ அந்நேரம்‌ தெருவில்‌ உபாதானம்‌ எடுக்கச்‌ சென்றிருந்தார்‌.
அவருடைய தேவிகள்‌ மிகவும்‌ கந்தலான புடவை மட்டுமே அணிந்திருந்தபடியால்‌, வெளியிலே வந்து,
இவரை உபசரிக்க லச்சித்து ஒளித்‌ திருந்தார்‌.
உடையவரும்‌ தெரிந்து, ஒரு புடவையை எறிய,
அவ்வம்மையார்‌ அதை அணிந்து வெளிவந்து இவரை உபசரித்துச்‌ சமையல்‌ செய்து உண்பித்தார்‌ என்பது ஒரு வரலாறு
அக்காலத்துப்‌ பாகவதர்களின்‌ வறுமை நிலையை விளக்கிக்‌ காட்டுகிறது.

உடையவரின்‌ ஆசாரியருள்‌ ஒருவரான பெரிய திருமலை நம்பிகள்‌ இவர்‌ வருவதை அறிந்து,
வழியில்‌ எதிர்‌ சென்று தீர்த்தப்‌ பிரசாதம்‌ கொடுத்து வரவேற்றபோது,
இவர்‌ “தேவரீரே எழுந்‌ தருளவேண்டுமோ, ஒரு சிறியார்களில்லையோ?” என்று கேட்டார்‌.
அவரோ, “நாலு வீதியிலும்‌ ஆராய்ந்தவிடத்து என்னில்‌ சிறியாரைக்‌ கண்டிலேன்‌” என்றாராம்‌.
எத்துணைப்‌ பணிவும்‌ அதனாலேயே உயர்வும்‌ சிறப்பும்‌ பொருந்திய சொற்கள்‌!

ஒருநாள்‌ கோவிந்தப்‌ பெருமாள்‌ நந்தவனத்தில்‌ ஒரு பாம்பின்‌ வாயில்‌ கைவிட்டுப்‌ பிறகு
தம்‌ பின் வருவதைக்‌ கண்டு உடையவர்‌, “இதுவென்ன? என்று கேட்டபோது,
அவர்‌ “ஒரு பாம்பு நாக்கை நீட்டிக்கொண்டு நோவு படும்படிகண்டு, சமீபத்திலே போய்ப்‌ பார்க்குமளவில்‌.
அதன்‌ நாக்கிலே முள்ளிருக்கக்‌ கண்டு அந்த மூள்ளை வாங்கினேன்‌” என்று விண்ணப்பம்‌ செய்ய,
உடைய வரும்‌ “இவருடைய தயை இருந்தபடி என்‌!” என்று மிகவும்‌ உகந்தருளினாராம்‌.

மின்னையு மொருநாள்‌ கோவிந்தப்‌ பெருமாள்‌, திருமாலை நம்பிக்குத்‌ திருப்படுக்கை படுத்துத்‌
தாம்‌ முதலடியிலே படுத்துக்‌ கொண்டு பார்க்க;
உடையவரும்‌ இத்தை ஒருநாள்‌ கண்டருளி திருமலை நம்பிக்கு விண்ணப்பஞ்‌ செய்ய;
திருமலை நம்பியும்‌ கோவிந்தப்‌ பெருமாளை அழைத்தருளி,
“நீர்‌ நமக்குப்‌ படுத்த படுக்கையிலே படுத்துக்‌ கொண்டிருந்தீர்‌ என்று கேட்டோம்‌,
இப்படிச்‌ செய்யலாமோ? இதுக்குப்‌ பலமேது?’ என்று கேட்டருள,

கோவிந்தப்‌ பெருமாளும்‌, “நரகம்‌” என்ன;
நம்பியும்‌, “இப்படி யறிந்திருந்து செய்வானென்‌” என்ன;
கோவிந்தப்‌ பெருமாளும்‌, “தேவரீர்‌ திருமேனியிலே ஒன்று உறுத்துதல்‌, கடித்தல்‌ செய்யாமல்‌
கண்‌ வளர்ந்தருளப்புக்கால்‌ அடியேனுக்கு நரகமே யமையும்‌” என்று விண்ணப்பம்‌ செய்ய;
நம்பியும்‌ “”இதொரு ப்ரபத்தி இருந்த படியென்‌’ என்று மிகவும்‌ உகந்தருளினார்‌.
சபரியின்‌ செயலும்‌ கண்ணப்பர்‌ செயலும்‌ இங்கு நினைவு கூரத்தக்கன.

இராமானுசர்‌, வீதியில்‌ சீரார்‌ வளையொலிப்ப வந்து திறவாய்‌ என்று
திருப்பாவையை அனுசந்தானம்‌ பண்ணிக்‌ கொண்டே நின்ற அளவில்‌
பெரிய நம்பி திருமாளிகையில்‌ அவர்‌ மகள்‌ அத்துழாய்‌ கதவுதிறக்கவும்‌ கண்டு மூர்ச்சித்து விழுந்தார்‌
என்ற செய்தி,
இதில்‌ திருக்கோட்டியூர்‌ நம்பி திருமாளிகையில்‌ அவர்‌ மகள்‌ தேவகிப்‌ பிராட்டி கதவு திறக்க நேர்ந்தது என்று
சொல்லப்பட்டுள்ள து.

கோவிந்தப்‌ பெருமாளைத்‌ திருத்திப்‌ பணிகொண்டு சந்நியாச ஆஸ்ரமம்‌ கொடுத்து, உடையவர்‌ தம்முடைய திருநாமத்தையும்‌ கொடுத்தாராம்‌.
அப்போது அவர்‌ “உமது திருவடி. நிழலையே பற்றி இருந்த அடியேனுக்குத்‌ திருநாம நிழலே போதும்‌”
எனலும்‌
இவர்‌ தம்‌ பெயரின்‌ (எம்பெருமானார்‌ என்பதன்‌) அதியந்தத்தை மட்டும்‌ வைத்து “எம்பார்‌” என்று பெயரிட்டாராம்‌.
சுவையான வழக்குக்களும்‌ பல இந்நூலின்கண்‌ உள்ளன.
திருமலைமேல்‌ இராத்‌ தங்கல்‌ கூடாது என்பது ஒன்று; இன்றும்‌ கூட உள்ளது.
‘திருச்சித்ரகூட கிரியிலே பெருமாள்‌ பிராட்டி கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு உலாவி யருளினாப்‌ போலே,
அத்திகிரியிலே, திருக்கச்சி நம்பிக்குத்‌ திருஷ்டி,கோசரமாய்‌
இவர்‌ ஆனந்திக்கும்படி பெருந்தேவியாரான பெரியபிராட்டியின்‌ திருக்கையைப்‌ பிடித்துக்கொண்டு வைய மானிகையிலே பேரரு ளாளர்‌ தாம்‌ வளைய வளைய உலாவி யருள்வது” – என்கிறார்‌.
இதுவும்‌ இருபதாம்‌ நூற்றாண்டுக்‌ கண்ணோடு பார்த்துச்‌ சுவைக்க கூடிய செய்தி.
தேசாந்தரகதனான புத்ரன்வருகிறான்‌ என்றால்‌ மாதாபிதாக்கள்‌ காண அசைப்படுமாப்‌ போலே,
திருவரங்க நாதன்‌ இராமானுசரைக்‌ காண ஆசைப்பட்டான்‌ என்கிறார்‌.

க்ருமி கண்ட சோழன்‌ என்ற வரலாறு ஒன்று;
மற்றது கோவிந்தப்‌ பெருமாள்‌ வரலாறு. இவர்‌ உடையவருடைய சிறிய தாயார்‌ புதல்வர்‌.
காசியில்‌ கங்கையில்‌ இவர்‌ நீராடியபோது கையில்‌ ஒரு சிவலிங்கம்‌ வர அதைப்‌ பூசை செய்துகொண்டு
இவர்‌ காளத்தி யில்‌ தங்கியிருந்தார்‌
உள்ளங்கை கொணர்ந்த நாயனார்‌ என்பது பெயர்‌.
இவரை வைணவத்துக்கு மாற்றினால்‌, தம்‌ சமயத்துக்குப்‌ பலம்‌ என்று உடையவர்‌ கருதினார்‌.
அக் கருத்தை முற்றுவிக்கும்‌படி திருமலையிலிருந்த பெரியதிருமலை நம்பிக்குச்‌ சொல்லி அனுப்பினார்‌.
“உள்ளங்கை குளிர்ந்த விடத்தே சுருள்‌ நாற்றம்‌ எழும்பிற்று.
அவர்‌ இப்போது துூர்வாசனாதியாத்தாலே அன்னியபரராய்க்‌ காளத்தியாகிய காட்டிலே நின்றார்‌” என்கிறார்‌.
அவர்‌ “ரநுத்ராபிஷேகக்‌ குடமெடுத்து வரக்கண்டு, நம்பியும்‌ அவனைப்‌ பார்த்து,
கொன்றைச்‌ சடை முடியானைக்‌ குளிர நீராட்டினால்‌
இன்றுனக்‌ குண்டாகும்‌ பயனென்‌? என்றருளிச்‌ செய்ய, அவரும்‌ இப்பாசுரங்‌ கேட்டு விஸ்மயமானமுகனாய்‌ இவரையும்‌ ஏறப்‌ பாராநின்று கொண்டு போனான்‌.
திருமலை நம்பியும்‌ அவரிடம்‌ பக்குவமாகப்‌ பேச்சுக்‌ கொடுத்தார்‌.
பின்‌ தேவனெம்‌ பெருமானுக்‌ கல்லால்‌ பூவும்‌ பூசனையும்‌ தகுமே என்ற பாசுரத்தை நம்பி சொல்லியபோது,
அவனும்‌ திடுக்கென்று குதித்துக்‌ கையில்‌ படலிகையையும்‌ கழற்றி எறிந்து தரித்திருந்த ருத்ராக்ஷ வடங்‌ களையும்‌
அலங்கலழிய வீசிப்போகட்டு ‘ தகாது தகாது’ என்று நம்பி திருவடிகளிலே அடைவுகெட விழுந்து புலம்பினார்‌.

பின்னால்‌ தம்மைக்‌ குறிப்பிட்டுக்‌ கொள்ளும்போது இவர்‌
“காளத்தியில்‌ கையும்‌ குடமும்‌ கழுத்தில்‌ இலந்தைக்‌ கொட்டை யும்‌ ருத்ராக்ஷ வடமூமாய்‌ எளிவரவு பட்டு நிற்கின்ற நிலைமை’ என்கிறார்‌.
முன்னமே கோவிந்தபட்டர்‌, அவர்‌ இவர்‌ என்ற மரியாதை பெற்றிருந்த அவர்‌,
ருத்ராபிஷேகக்‌ குடம்‌ என்று சொல்ல வந்த வுடனே அவன்‌ இவன்‌ போனான்‌ என்றாகிவிடுகிறார்‌.
திருமலைமேல்‌ நின்ற சிலை வடிவத்தை இராமானுசர்‌ திருமாலாக நிரூபித்த விருத்தாந்தமும் இங்குள்ளது.

வருணனை
பல இடங்களில்‌ இவர்‌ வருணனைப்‌ பகுதிகளைப்‌ பெரும்‌ பான்மையும்‌ வடமொழி விரவாமல்‌ அடுக்கிச்‌
சுவைபடச்‌ செய்யுளோசையாய்ச்‌ சொல்வது படித்து இன்புறத்தக்கது.
கலியனுடைய திருவுருவ வருணனை:
அணைத்தவேலும்‌ தொழுதகையும்‌ அழுந்திய திருநாமமும்‌ ஓமென்ற வாயும்‌
உயர்ந்த மூக்கும்‌ குளிர்ந்த முகமும்‌ பரந்த விழியும்‌ இருண்ட குழலும்‌
சுருண்ட வளையமும்‌ வடிந்த காதும்‌ அலர்ந்த காது காப்பும்‌
தாழ்ந்த செவியும்‌ சரிந்த கழுத்தும்‌ அகன்ற மார்பும்‌ திரண்ட தோளும்‌ நெளிந்த முதுகும்‌ குவிந்த இடையும்‌
அல்லிக்‌ கயிறும்‌ அழுந்திய சீராவும்‌ தூக்கிய கடுங்கோவையும்‌ தொங்கலும்‌
தனி மாலையும்‌ சாத்தின திருத்தண்டையும்‌ சதிரான வீரக்‌ கழலும்‌
குந்தியிட்ட கணைக்காலும்‌ குஸிரவைத்த திருவடி மலரும்‌
வாய்த்த மணங்கொல்லையும்‌ வயலாலி மணவாளன்‌ வாடினேன்‌ வாடி. வாழ்வித்தருளிய நீலக்கலிகன்றி மருவலர்த்த மூடல் துணிய
வாள்‌ வீசும்‌ பரகாலன்‌ மங்கை மன்னனான வடிவே.

ஆண்டாள்‌ திருவுருவ வருணனை –பாதாதிகேசம்‌
பாடகமே யென்னப்படுமதான பாடகஞ்சேர்‌ மெல்லடி களையும்‌,
ஆடையுடுப்போம்‌ என்று அவனுடுத்த பீதக வண்ணவாடையையும்‌
அன்றிக்கே, மந்திரக்கோடியுடுத்தபடி யையும்‌
என்கைப்பற்றி அவன்‌ கையைப்‌ பற்றப்படுமதாய்‌ சூடகத்தோடே கூடின வெள்ளை வளைக்கையையும்‌,

அதிலே கழுநீர்‌ பிடித்த அழகையும்‌ அத்தோபாதி தோள்வளையோடே கூடி. அழகியதாய்‌
மருங்கிலே நீட்டி நேரே பொகட்ட மற்றத்‌ திருக்கையழகையும்‌, கொம்மை முலையு மிடையும்‌,
“ஊனுடையாழிசங்‌ குத்தமற்கென் ன்னித்‌ தெழுந்த வென்‌ தடமுலைகள்‌” என்று கொண்டாடும
தான திருமுலைத்‌ தடங்களையும்‌, அதின்‌ மேலே பல்கலனும்‌ யாமணிவோம்‌ என்கிறபடியே

அதில்‌ அவன்‌ தங்கும்படியான குங்குமக்‌ குழம்பின்‌ எழிலையும்‌ அவன்‌ பூட்டப்‌ பூட்டின பல ஆபரணங்களையும்‌,

அதில்‌ மேலாய்க்‌ காறை பூணும்‌ கண்டத்‌ தினழகையும்‌,
அதுக்கு மேலே செவிப்பூவே என்று அவன்‌ தோள்களுக்கு அடையாளமானவற்றோடே கூடின திருச்செவி மலர்களையும்‌,
அவன்‌ விரும்பிப்‌ போடுமதான முத்தன்ன வெண்‌ முறுவல்‌ செய்ய வாயையும்‌
அதினழகுக்கு மேலே குமிழழகைக்‌ கொள்ளை கொள்ளும்‌ கொடி மூக்கையும்‌
அத்தோடே சேர்ந்து செவியளவும்‌ வளர்ந்து இனவேல்‌ தெடுங்கண்கள்‌ என்றும்‌
என்‌ பொரு கயல்‌ கண்ணிணை என்றும்‌ சொல்லப்படுகிற திருக்‌ கண்களையும்‌,
அதுக்கு மேலான நன்னுதலையம்‌ திங்கள்‌ திரு முகத்தையும்‌,
குழல்கோதை என்னும்படி யான மயிர்‌ முடியையும்‌
மணமாலை சூடின கோலத்தோடே நிற்கிற சூடிக்‌ கொடுத்த சுடர்க்‌ கொடியை
பதி ஸம்மானிதமான வடிவழகைப்‌ பாதாதி கேசாந்தமாக ஸேவித்தார்‌.

காவிரிச்‌ சோலைகளின்‌ வருணனை
பொன்னு மாமணியும்‌ முத்தமும்‌ சுமந்து பொருதிரை மாநதி புடை சூழ்ந்து
அன்னமாடுலவு மலைபுனல்‌ சூழ்ந்த படியையும்‌
சந்தினொடு மணியும்‌ கொழிக்கும்‌ புனல்‌ காவிரி என்றும்‌,
வண்டு பாடும்‌ மதுவார்‌ புனல்‌ வந்திழி காவிரி என்றும்‌,
துளைக்கை யானை மருப்பும்‌ அகிலும்‌ கொணர்ந்துந்தி முன்‌ திளைக்கும்‌ செல்வப்‌ புனல்‌ காவிரி என்றும்‌,
பரந்த பொன்னிரந்து நுந்திவந்‌ தலைக்கும்‌ வார்புனல்‌ என்றும்‌,
புண்ணந்‌ துழாமே பொருநர்‌ என்றும்‌,
இப்படி. ப்ரவஹிக்கிற திருக்காவேரியின்‌ ஜலஸம்ர்த்தி யையும்‌,
அதில்‌ நண்டையுண்டு நாரை பேர வாளை பாய நீலமே அண்டை. கொண்டு கெண்டை மேயும்‌ படியையும்‌, அதனருகில்‌
அண்ட நாறும்‌ பொழில்களையும்‌ அணி பொழில்களையும்‌, கொங்கு நீர்‌ பரந்து பாயும்‌ பூம்‌ பொழில்களையும்‌
அதில்‌ போதில்‌ வைத்த தேன்‌ சொரியும்படியையும்‌,
அதினருகில்‌ அங்கயல்‌ பாய்‌ வயலையும்‌ அதில்‌ சேவலொடு பெடையன்னம்‌
செங்கமல மலரேறி ஊசலாடும்படியையும்‌, திருமுகமாய்ச்‌
செங்கமலம்‌ திருநிறமாய்க்‌ கருங்குவளை பொருமுகமாய்‌ நின்‌ றலரும்‌ படி யையும்‌
திருவடி.தன்‌ திருவுருவும்‌ திருமங்கை மலர்க்‌ கண்ணும்‌ காட்டி. நின்று
உருவுடைய மலர்‌ நீலம்‌ காற்றாட்ட வோசலிக்கும்‌ படியையும்‌ உரம்‌ பெற்ற மலர்க்கமல மூலகளந்த சேவடி. போலுயர்ந்து காட்ட
வரம்புற்ற கதிர்ச்‌ செந்நெல்‌ தாள்‌ சாய்த்துத்‌ தலைவணங்கும்‌ படியையும்‌ –
புதுநாண்மலர்க்‌ கமலம்‌ எம்‌ பெருமான்‌ பொன்‌ வயிற்றில்‌ பூவே போல்வான்‌
பொது நாயகம்‌ பாவித்திறுமாந்து பொற்சாய்க்கும்‌ படியையும்‌;
அதில்‌
பூமருவு புள்ளினங்கள்‌ புள்ளரையன்‌ புகழ்‌ குழறும்‌ படியையும்‌,
யாழினிசை வண்டினங்கள்‌ ஆளம்‌ வைக்கும்‌ படியையும்‌,
எல்லியம்‌ போதிருஞ்‌ சிறை வண்டெம்‌ பெருமான்‌ குணம்‌ பாடும்‌ படியையும்‌,
மற்றும்‌ வண்டின முரலுஞ்‌ சோலை இத்யாதியான
ஆராமங்களையும்‌ கரை வழியே கண்டு கேட்டு அநுபவியா நின்றார்‌.

சொற்கள்‌
இந்நூல்‌ அக்காலத்து வைணவ சமூகத்தில்‌ வழங்கிய சொல்லாட்சிகளைக்‌ காட்டும்‌ கண்ணாடியபோல்‌ உதவுகிறது.
முந்தை வைணவச்‌ சொல்லாட்சிகளை இவர்‌ அப்படியே காட்டுகிறார்‌.
போர்‌ என்பது ஒரு சொல்‌; மிகவும்‌ என்ற பொருளுடையது.
இராமாயணத்தின்‌ பகுதிகளை இவர்‌ ஸ்ரீமத்‌ ஆரணிய காண்டம்‌, ஸ்ரீமத்‌ சுந்தர காண்டம்‌ என்றே வழங்குவார்‌. அரங்கத்‌ தமுதனாரைப்‌ பிள்ளையமுதனார்‌ என்பார்‌. வீராணத்தேரியை வீராவணத்‌ தேரி என்பார்‌.
மனைவி என்ற சொல்லை மிகவும்‌ மரியாதை யாகவே குறிப்பிடுவது வைணவ மரபு.
கூரத்தாழ்வானுடைய தேவிகள்‌ என்று சொல்லும்போது பொருள்‌ மனைவி என்பது; பன்மையல்ல; ஒருமையே.
விளியாக எப்போதும்‌ சொற்கள்‌
முதலிகாள்‌ என்றே வரும்‌; முதலிகாள்‌, வாரிகோள்‌, அறிவிகோளே போந்திகோளே கேட்டிகோளே பாரிகோள்‌ (முதலிகளே வாருங்கள்‌ அறியுங்கள்‌ போந்தீர்களோ கேட்டீர்களோ பாருங்கள்‌ என்பது பொருள்‌)
மூன்றாம்‌ வருணத்தில்‌ பிறந்த திருக்கச்சி நம்பிகள்‌, தம்மைத்‌ தளிகை செய்ய அழைத்திருந்த
இராமானுசர்‌ திருமாளிகை அடைந்து அவருடைய தேவிகளை விளித்து மதினியாரே தளிகை படையுங்கள்‌ என்கிறார்‌;
இராமானுசர்‌ முதலாம்‌ வருணம்‌-இவரினும்‌ ஆண்டில்‌ மிகவும்‌ இளையவர்‌
மதினியார்‌ என்பது உரிமை பாராட்டி. அழைக்கும்‌ சொல்‌ என்று அறிகிறோம்‌.
ஸ்ரீபாஷ்யத்தை ஓரிடத்தில்‌ போாட்சியம்‌ என்று சொல்கிறார்‌
உடையவர்‌ வைபவத்தை முன்னிருந்தவர்களும்‌ சொல்‌ கிறார்களாம்‌.
அவர்‌ பெருமையை அவர்‌ சாதனைகளாலும்‌ பிற்காலத்தார்‌ வாக்காலும்‌ உணர்தல்‌ போதாது என்று ஆசிரியா்‌
கருதியிருக்கிறார்‌.
எம்பெருமான்களில்‌ நம்பெருமாள்‌, திரு வேங்கட முடையான்‌, பேரருளாளர்‌, திருநாராயணப்‌ பெருமாள்‌,
அழகர்‌, திருக்குறுங்குடி நம்பி இவர்கள்‌ தமிழில்‌;
பின்‌ ரிஷிகள்‌, வடமொழியில்‌ சொல்கிறார்கள்‌; நம்மாழ்வார்‌, நாதமுனிகள்‌, ஆளவந்தார்‌, பெரிய நம்பி, திருக்கோட்டியூர்‌ நம்பி, திருமலை நம்பி,
திருமாலையாண்டான்‌, திருவரங்க.ப்‌ பெருமாளரையர்‌,
பிறகு இராமானுசருக்குப்‌ பின்வந்தவர்கள்‌,
பின்‌ நூலைப்‌ பின்வரும்‌ சொற்களால்‌ முடிக்கிறார்‌:
“சக்கரவர்த்தித்‌ திருமகன்‌ வைபவம்‌ போலே ஸ்ரீராமானுஐார்யார்‌ வைபவமும்‌ அவாங்‌ மனஸ கோசரமிறே.
சாகரத்தைக்‌ கை நீச்சினால்‌ நீந்தினாலும்‌ உததியைச்‌ சிறாங்கிச்சாலும்‌,
உடையவர்‌ வைபவம்‌ அடையச்‌ சொல்லப்போகாதிறே. யதாமதி யதாணருதமாகச்‌ சொன்னேனத்தனை,
இப்படி எல்லோருக்கும்‌ ஸ்வரூபோபாய புருஷார்த்தங்களை நியமித்துக்‌ கொண்டு
எம்பெருமானார்‌ ஐகதாசார்யராய்‌, யதிஸமர்வ பெளமராய்‌ நம்பெருமாள்‌ கோயிலிலே நூற்றிருபத்தைந்து
திருநட்‌சித்திரங்கள்‌ எழுந்தருளியிருந்தார்‌.”

“விசிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தபாகரான இளையாழ்வார்‌
வைபவத்தை அவதார காலமே தொடங்கி
எல்லோருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி பரம காருணியரான பிள்ளை லோகஞ்சீயர்‌ அருளிச்‌ செய்த ராமானுஜாரிய திவ்ய சரிதை

—————

பிள்ளை லோகஞ்‌ சீயர்‌ – யதீந்திரப்‌ பிரவணப்‌ பிரபாவம்‌

இது மணவாள மாமுனிகளுடைய வரலாற்றைக்‌ கூறும்‌ மணிப்பிரவாள உரைநடை, நூல்‌.
முனிகள்‌ வரலாற்றைக்‌ கூறத்‌ தொடங்கி, இவர்‌ முனிகளிடம்‌ ஆசாரிய பரம்பரை வந்த வரலாற்றைச்‌ சொல்லுகிறேன்‌ என்று
பிள்ளைலோகாசாரியர்‌ நம்‌ பிள்ளை அனுக்கிரகத்தினால்‌-வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை புதல்வராகப்‌ பிறந்த செய்தி தொடங்கியுரைக்கிறார்‌.
முன்னர்த்‌ தோன்றியிருந்த ஆறாயிரப்படி குருபரம்‌பராப்‌ பிரபாவம்‌ பரமபதநாதன்‌ தொடங்கி,
நம்பிள்ளை வரையிலுள்ள ஆழ்வார்‌ ஆசாரியர்‌ வரலாற்றைக்‌ கூறுவதாக,
நம்பிள்ளையின்‌ மாணாக்கரான பின்பழகிய பெருமான்‌ சீயரால்‌ செய்யப்பட்டது.
நம்பிள்ளையின்‌ சீடர்‌ வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளை,
அவருடைய புதல்வரும்‌ சீடருமாயிருந்தவர்‌ பிள்ளைலோகாசாரியர்‌ என்ற ஆசாரியர்‌
இவருடைய மாணாச்கர்‌ பலராயினும்‌, அடுத்த ஆசாரியராக, வந்தவர்‌ திருமலையாழ்வார்‌ என்னும்‌ திருவாய்‌ மொழிப்பிள்ளை.
இவருடைய மாணாக்கரே மணவாள மாமுனிகள்‌ என்ற ஆசாரியர்‌ (கி.பி. 1370-1444).
இவரை ஆதிசேஷ அவதாரம்‌ என்பது வைணவ மரபு. மணவாள மாமுனிகளுக்குப்‌ பின்‌, அவர்‌ சீடரும்‌
அட்டதிக்கஜங்களில்‌ ஒருவருமான பரவஸ்து பட்டர்‌ பிரான்‌ சீயருடைய பேரராக வந்தவர்‌
பிள்ளைலோகம்‌ சீயர்‌ என்று முன்பு காட்டினோம்‌.
நம்பிள்ளைக்குப்‌ பின்‌ மணவாள மாமுனிகள்‌ வரையிலுள்ள ஆசாரியர்‌ வரலாற்றுக்கு இந்த
யதீந்திரப்‌ பிரவணப்‌ பிரபாவமே ஆதாரம்‌.
முதல்‌ குருபரம்பரை செய்த பின்பழகிய பெருமாள்‌ சீயர்‌, தாம்‌ அறிந்தனவும்‌, கேட்‌ டனவுமாகிய செய்திகளை மட்டும்‌
முறையாகத்‌ தொகுத்துச்‌ சொல்லிக்‌ கொண்டு போகிறார்‌.
முக்கியமான சிலவற்றைப்‌ பின்னே கூறுவோம்‌.
திருவாய்மொழிக்குப்‌ பல வியாக்கியா னங்கள்‌ பிறந்தமைக்குக்‌ காரணத்தை உணர்த்தினார்‌.
பலர்‌ தங்கள்‌ புத்திக்குத்‌ தோன்றின பிரகாரம்‌ வியாக்கியானம்‌ இட்டமை யால்‌, எம்பெருமானார்‌, சகஸ்ரசாகோப நிஷத்‌ சமாகத்வம்‌ விளங்கும்படி
ஒரு பிரபந்தமிடும்படி. திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளானைக்‌ கடாட்‌சித்தார்‌
பின்னர்‌ பெருமாள்‌ அர்ச்சகமுகேந, நஞ்சீயரை, பட்டர்‌ திருவுள்ளப்‌ படிக்கு ஒன்பதினாயிரப்படி. வியாக்கியானம்‌ செய்யும்‌
என்று நியமித்தருள, ஆறாயிரப்‌ படிக்குக்‌ கனகாபிஷேகமென்னும்படி. அவர்‌ செய்தார்‌.
இதைப்‌ பட்டோலை கொள்ள ஒரு நல்ல லேகரியை நஞ்சீயர்‌ தேடி யிருந்த சமயம்‌, தேவராஜர்‌ என்பவரை அழைத்துச்‌ செய்க என்று ஸ்வப்னமாயிற்று.
அவர்‌ “நஞ்சீயர்‌ திருவடிகளே சரணம்‌ பட்டர்‌ திருவடிகளே சரணம்‌: என்று எழுத்து எழுதிக்‌ காட்டினார்‌.

அவருக்கு இந்த ஒன்பதாயிரப்‌ படியை எழுத ஸ்ரீ ரங்கராஜரே முன்னின்று உதவினார்‌.
“நம்‌ இராமானுஜன்‌ தரிசனத்தை வளர்த்துக் கொண்டு மோரும்‌ என்று நஞ்சீயர்‌, பட்டர்‌ சரம காலத்திலே தமக்கு சாதித்திருந்த
தர்சன ப்ரவர்த்தகருக்குரிய மோதிரத்தை நம்பிள்ளை திருவிரவிலேயிட்‌ டார்‌.
பெரியவாச்சான்பிள்ளை செய்தது போலவே இவைரும்‌
(வடக்கு திருவீதிப்‌ பிள்ளையும்‌) செய்திருக்கக்‌ கண்டு நம்பிள்ளை முதலில்‌ கோபித்துப்‌ பின்‌ தெளிந்தார்‌.
(நடுவில்‌ திருவீதிப்பின்ளை எழுதிய வரலாறு இங்கில்லை.
நம்பிள்ளை இவர்‌ வியாக்கியான ஏட்டைப்‌ பலவாகப்‌ பெருக்கி,
“உம்வழியில்‌ முப்பத்தாறாயிரப்‌ பெருக்கராய்‌ ஒருவர்‌ வருவார்‌’ என்று கூறினார்‌.

பிள்ளைலோகாசாரியர்‌ செய்த ஸ்ரீவசன பூஷணம்‌ பற்றிச்‌
சிலர்‌ பெருமாளிடம்‌ போய்க்‌ கோள்‌ சொல்ல
அவரும்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ மூலம்‌ இதன்‌ சிறப்பைக்‌ கேட்டுப்‌ பாராட்டினார்‌.
துருக்கர்‌ கலகத்தின்போது, ஆழ்வாரை (பெருமாளை) ஒரு
பள்ளத்திலே இட்டு வைத்திருந்து பின்‌
திருமலையாரழ்வார்‌ உதவி கொண்டு எடுக்க முற்பட்‌. போது, ஆழ்வார்‌ வரவும்‌,
தோழப்பார்‌ சங்கிலி அறுந்து காலமானார்‌ என்ற செய்தியைச்‌ சொல்லு கிறார்‌.
கூரகுலோத்தமதாசர்‌ சென்று திருமலையாழ்வாரை ஆட்கொண்ட வரலாற்றை மிகவும்‌ விரித்துச்‌ சொல்லுகிறார்‌.
விளாஞ்சோலைப்பிள்ளை ஸ்ரீவசன பூஷணத்தின்‌ தாத்பர்‌ யத்தை ஏழு காதையாகச்‌ சங்கிரகித்து அருளிச்‌ செய்தார்‌ என்பர்‌.
திருவாய்மொழிப்பிள்ளை ஒரு சமயம்‌,
இன்றோ எதிராசர்‌ இவ்வுலகில்‌ தோன்றிய நாள்‌
இன்றோ கலியிருள்‌ நீங்கிய நாள்‌-என்று பாடி,
அதற்குமேல்‌ வராமல்‌ நிற்க, அப்போது அங்கிருந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ என்ற மணவாள
மாமுனிகள்‌,
இன்றோ தான்‌ வேதியர்கள்‌ வாழ விரைமகிழோன்‌ தான் வாழ வாதியர்கள்‌ வாழ்வடங்கு நாள்‌.–என்று பாடி முடித்தாராம்‌.
இவர்‌ திருமலை தரிசிக்கச்‌ சென்ற செய்தியைப்‌ பிள்ளை லோகம்‌ ஜீயர் எழுதும்போது பல செய்திகள்‌
இன்று போலவே இருந்ததை அறிகிறோம்‌.
மொண்ணைக்‌ கோபுரம்‌, ஸ்ரீபாதரேணு. அன்றும்‌ இருந்து இருக்கிறது, அதில்‌ சேவார்த்திகள்‌ காணிக்கை
சமர்ப்‌பிக்கிறார்கள்‌.
மாமுனிகளுடைய தந்தை பெயர்‌ திகழக்‌ கிடந்தான்‌ திரு
நாவீறுடைய பிரான்‌ தாதரண்ணரையன்‌.
திகழக்கிடந்தான்‌ என்ற தொடர்‌, மறைந்து போயிருந்த நாலாயிரமும்‌ வெளிப்‌ படுத்துவதற்குக்‌ காரணமாயிருந்த குடந்தைப்‌ பாசுரம்‌ –
ஆரா வமுதே அடியேன்‌ உடலம்‌ நின்பால்‌ அன்பாயே என்பதில்‌ வரும்‌ “திகழக்‌ கிடந்தாய்‌ கண்டேன்‌’ என்ற தொடரிலிருந்து எடுத்ததாகும்‌.
அண்ணன்‌ என்றாலும்‌ ஐயன்‌ என்றாலும்‌ பொருள்‌ ஒன்றே.
இருப்பினும்‌ இரண்டையும்‌ சேர்த்துப்‌ பெயரில்‌ வழங்கும்‌
வழக்கு அக்காலத்தில்‌ இருந்திருக்கிறது.
அக் காலத்தில்‌ கிருஷ்ண தேவராயர்‌ ஆதரவில்‌ வாழ்ந்தவர்‌ அரி தாசர்‌ என்ற புலவர்‌; இரு சமய விளக்கம்‌ என்ற பெருநூல்‌ செய்தவர்‌.
அவருடைய தமையன்‌ பெயா்‌ வடமலை அண்ணகளரையன்‌ என்பதும்‌ காணத்தக்கது.
பெரியாழ்வார்‌ திருமொழிப்‌ பகுதிக்குப்‌ பெரிய வாச்சான்‌ பிள்ளை செய்திருந்த வியாக்கியானம்‌
மணவாள மாமுனிகள்‌ காலத்திலேயே எப்படியோ மறைந்து போய்விட்டது;
அது பற்றி இதற்கு மட்டும்‌ மாமுனிகள்‌ வியாக்கியானமிட்டார்‌ என்று பிள்ளைலோகம்‌ எழுதுகிறார்‌.
வெவ்வேறு காரணங்களாலும்‌
சூழ்நிலைகளாலும்‌ திருவாய்மொழி போன்ற பிரபந்தங்களுக்கு வியாக்கியானம்‌ பல ஏற்பட்டிருந்த போதிலும்‌,
ஒருவர்‌ வியாக்‌கியானம்‌ செய்த நூலுக்கு மற்றவர்‌ வியாக்கியானம்‌ செய்வதில்லை என்ற மரபு வைணவரிடையே போற்றப்பட்டு வந்திருக்கிறது.
கணக்கில்லாமல்‌ வடமொழித்‌ தொடர்களையும்‌ சொற்‌
களையும்‌ நல்ல தமிழோடே கலந்து விளையாடுகிற
இந்த வைணவ சம்‌பிரதாயத்தில்‌, தொடர்பாக, சமஸ்கிருதத்தில்‌ மனத்தைச்‌ செல்லவிடவேண்டாம்‌ என்று
எல்லோரும்‌ உபதேசம்‌ செய்‌வதையும்‌ காண்கிறோம்‌.
ஆண்டான்‌ திருவங்கிபுரத்து நம்பியைப்‌ பார்த்து, உனக்கு இன்னும்‌ முரட்டுச்‌ சமஸ்கிருதம்‌ விட்ட பாடில்லையே* என்கிறார்‌;
பெரியவாச்சான்‌. பிள்ளை திருமாலை வியாக்கியனத்தில்‌, வடக்குத்‌ திக்கு ஆரிய பூமியாகையாலே
சமஸ்கிருதம் மட்டுமே நடையாடுகிறது -, ஆழ்வார்கள்‌ ஈரச் சொல்லும்‌ நடையாடாத தேசம்‌ என்கிறார்‌.
நஞ்சீயருக்கு பட்டரும்‌, நம்‌ பிள்ளைக்கு
நஞ்சீயரும்‌ “சமஸ்கிருதத்தில்‌ பலகால்‌ கண்‌ வையாதீர்‌’ என்றே
தம்‌ ஆயுள்‌ இறுதிக்‌ காலத்தில்‌ கடைசி உபதேசமாகச்‌ செய்கிறார்கள்‌.
அந்த மரபிலேயே இங்கும்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை தம்‌ இறுதி நாளில்‌ திருநாட்டுக்‌ கெழுந்தருளும்‌ சமயம்‌
மணவாள மாமுனிக்கு உபதேசம்‌ செய்கிறார்‌ என்று பிள்ளை லோகம்‌ ஜீயர் எழுதுகிறார்‌.
“காலம்‌ கவிகாலமாகையாலே ஆழ்வார்கள்‌ திவ்ய ஸுத்திகளான அருளிச்‌ செயலிலே
ருசி விச்வாசங்களையுடையராய்‌ இத்தை வளர்த்துப்‌ போருவாராரென்று மிகவும்‌ க்லேச மாயிரா நின்றது” என்ற,
பின்பு
நாயனாரும்‌ திருவடிகளிலே ஸேவித்து, அடியேன்‌ அப்படியே செய்கிறேனென்ன,
கேவலம்‌வார்த்தை போராதென்ன, நாயனாரும்‌ திருவடிகளைத்‌ தொட்டு சப பூர்வமாக அப்படி யே செய்கிறேனென்றருளிச்‌ செய்ய,
பின்பு திருவுள்ளம்‌ தேறி நாயனாரை யழைத்தருளி, “ஸ்ம்ஸ்க்ருத சாஸ்த்ரங்களிலே பலகாலும்‌ கண்‌ வையாமல்‌ ஸ்ரீபாஷ்யத்தை ஒருக்கால்‌ கேட்டு
நமக்கும்‌ எம்பெருமானார்க்கும்‌ ப்ரியமாக
திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயலிலே அநவரதம்‌ பரிசீலநம்‌ பண்ணிக்‌ கொண்டு
பூர்வர்களைப்‌ போலே பெருமாளுக்கு மங்களாசாஸந பரராய்க்‌ கொண்டு கோயிலிலே நித்ய வாஸமாசு
எழுந்தருளியிரும்‌” என்று நியமித்தருளினார்‌.

சொல்லாட்சிகள்‌
வைணவ மணிப்பிரவாள நூல்கள்‌ யாவும்‌ தனித்த சொல்‌
லாட்சியுடையவை.
இவை 12ஆம்‌ நூற்றாண்டு தொடங்கி, அதிக அளவில்‌ மணிப்பிரவாள வியாக்கியானங்களில்‌ காணப்‌ படுகின்றன.
பல வடசொல்லடி யாகப்‌ பிறந்தவை, சில சிறப்‌ புடைய தமிழ்ச்‌ சொற்கள்‌.
இவை யாவும்‌ வடமொழிக்‌ கலப்பு என்று ஓதுக்கி விடுவது விவேகமன்று.
சிலவற்றை மட்டும்‌, யதீந்திரப்‌ பிரவணப்‌ பிரபாவத்திலிருந்து கீழே விளக்குகிறோம்‌.
அமுது என்பது உணவுக்கு வழங்கும்‌ பொதுச்சொல்‌.
எல்லா உணவுப்‌ பொருளும்‌ அமுதென்றே வழங்கக்‌ காண்கிறோம்‌.
அமுதுபடி, பருப்பமுது, கறியமுது, பழ அமுது, பாலமுது,-நெய்யமுது, தயிரமுது, உப்புச்சாற்றமுது என.
சாதம்‌ என்ற சொல்லும்‌ அருமையாக வருகிறது –
திருவுற்ற சாதம்‌. சாதம்‌ என்பது பிரசாதம்‌ என்பதன்‌ தலைக்குறையென்று கருதுகிறார்கள்‌.
இங்கு இச்சொல்‌ பயில்கிறது.
அரவணையென்பது ஒரு சொல்‌;
சர்க்கரைப்‌ பொங்கல்‌ நிவேதனத்துக்கு வழங்குகின்ற அபூர்வ மான ஆட்சி.
தோசைப்படி யென்ற சொல்லையும்‌ காண்கிறோம்‌.
தோசை என்ற சொல்‌ ஓர்‌ அப்ப வகையின்‌ பெயராக முதல்‌ முதல்‌ திவாகரத்தில்‌ காணப்படுகிறது.
சர்க்கரைப்‌ பொங்கலுக்கு அக்கார அடிசில்‌ என்ற பெயருண்டு.
அக்கார அடிசில்‌, அக்காரக்‌ கனி என தெரடர்கள்‌ நாலாயிரத்திலும்‌, வருகின்றன.
படி.மா என்பது விரதமிருந்து உண்ணும்‌ உணவின்‌ பெயராக வருகிறது.
தமப்பனார்‌ என்பது ஒரு சொல்‌; தம்‌-அப்பனார்‌. இச்சொல்‌ தந்தையென்று பொருள்படும்‌.
ஆனால்‌ இது, முதல்‌ நிகண்டு களில்‌ காணப்படவில்லை. திருவாசகம்‌ முதலாகத்‌ தகப்பன்‌ என்ற சொல்‌ ஆட்சிக்கு வந்துவிட்டது.
அன்றாடும்‌ – அன்றாடம்‌.-
சயிக்கவிடுதல்‌ – சயனிக்க விடுதல்‌.
ஞாயிறுபாடு – காலை,
நாயன்‌-தலைவன்‌, நாயன்தே, நாயன்தே – தெய்வமொத்த தலைவன்‌,
வேளையம்‌ – வெற்றிலை பாக்கு என்ற பொருளில்‌; இது ஓர்‌ அபூர்வப்‌ பிரயோகம்‌,
பிற்காலத்தில்‌ இதுவே விடையம்‌.என்றாகி யிருக்கலாம்‌. இரகிடுதல்‌ என்பது ஒரு சொல்‌; காணுதல்‌ என்ற பொரு ளுடையது போலும்‌.
இவர்‌ கிடாய்‌ – இவர்‌ கண்டாய்‌;
நாமே கிடீர்‌ – நாமே கண்டீர்‌.
இவை போல்வன பல.
இவை காண்‌ என்பதனடி யாகப்‌ பிறந்த அசைச்‌ சொற்கள்‌. மிடறு செய்தல்‌ – வருந்துதல்‌.
தினவு கெடுதல்‌ – அறிவுத்தாகம்‌ அடங்குதல்‌.
இந்த நூலில்‌ ஐயங்கார்‌ என்னும்‌ சொல்லாட்சி மிகவும்‌ அதிகமாய்‌ உள்ளது.
ஐயர்‌ – அவர்கள்‌ என்ற சொற்கள்‌ (அவர்கள்‌ – தெலுங்கில்‌ காரு) ஐயன்கார்‌ ஐயங்கார்‌ என அன்றோர்‌ கருதுவர்‌.
ஆசூயாளுக்கள்‌ – பொறாமையுடையவர்கள்‌,
உபலாளித்தல்‌- கொண்டாடுதல்‌.
த்வரை – வேகம்‌; இதிலிருந்து வந்ததே துரை என்ற சொல்‌,
லேகரி -எழுதுபவன்‌.
வியாக்கியானங்களெங்கும்‌ பெண்மைக்குப்‌ பெரு மதிப்புக்‌ கொடுக்கப்பட்டு இருக்கக்‌ காணலாம்‌.
எந்த ஆசிரியரும்‌ மனைவி என்று சொன்னதில்லை; மனைவி என்றால்‌ தேவிதான்‌-
அதுவும்‌ ஒருமையல்ல,-எப்போதும்‌ தேவிகள்‌ என்று பன்மை யிலேயே சொல்வார்கள்‌. இது வைணவத்தின்‌ சிறப்பு,
ப்ரவணம்‌- ஈடுபாடு.

—————–

இராமானுச நூற்றந்தாதி வியாக்கியானம்‌
திருவரங்கத்தமுதனார்‌ பிரபன்ன காயத்திரி என்னும்‌ பெய ருடைய 108 பாடல்‌ கொண்ட இராமானுச நூரற்றந்தாதிக்கு

முதலில்‌ மணவாள முனியின்‌ சீடரான அப்பிள்ளை ஓர்‌ உரை செய்தார்‌.
பிறகு பிள்ளை லோகம்‌ சீயர்‌ விரிவான வியாக்கியானம்‌ எழுதினார்‌. இது மிகவும்‌ விரிந்தது,
அதிகமாக எழுதிப்‌ பழக்கமுடைய இவர்‌ இதை விரிவாக எழுதியதில்‌ வியப்பில்லை. மேற்‌ கோள்கள்‌ நிரம்பத்‌ தருகிறார்‌.
பாசுபதர்‌ வேத பாஹ்யர்‌ என்று கூறுவார்‌;
பாசுபதர்‌ தமிழ்நாட்டில்‌ என்றுமே திரளாக வாழ்ந்தவர்களல்லர்‌;

அவர்களுடைய ஆசாரங்கள்‌ தாழ்வானவையாதலால்‌ ஜீயர்‌ சொல்வதில்‌ தவறு இல்லை.
“ருத்ர வசனமான ஆகமத்தை அதிகரித்துப்‌ போந்து அதி தாமசரா யிருக்கிற பாசுபதரும்‌,
பெளத்தரை எடுத்தவுடனே பாசுபதரை எடுத்தது, அவர்களோ பாதி இவர்களும்‌ வேத பாஹயரென்னுமிடம்‌ தோற்றுகைக்காக…
ஜகத்‌ உபாதானகாரணம்‌ ஆகமசித்தேசுவரன்‌ நிமித்த காரணம்‌…
கர்மானுஷ்டானத்தலலோ பசுபதிசாரூப்யம்‌ பெறுகை, மோட்ச மாகிறது என்று சொல்லுமவர்‌,
‘ சைவம்‌ என்ற இடம்‌ வந்தால்‌, பிற சமயத்தார்‌ (அத்வைதிகளும்‌ விசிஷ்டாத்வைதிகளும்‌)
பாசுபதர்‌ காளாமுகர்‌ என்று நினைக்கிறார்களே தவிர, சைவ சித்தாந்தி என்று நினைக்கவில்லை.
பல இடங்களில்‌ நயம்படி. உரை எழுதுவார்‌.
ஈரத்தமிழ்‌சம்சார தாபமெல்லாம்‌ அறும்படியான ஈரப்பாட்டையுடையது. ஸ்ரீ பராங்குச நம்பி என்பார்‌.
கார்த்திகையானும்‌ என்ற, பாட லுரையில்‌, பாணாசுரன்‌ வரலாறு விரிவாகக்‌ கூறுகிறார்‌.
அநிருத்‌ தனைக்‌ குறிப்பிடும்போது, அநிருத்தாழ்வான்‌ என்கிறார்‌.
99ஆம்‌ பாடல்‌ உரையில்‌ தற்கச்‌ சமணரும்‌ சாக்கியப்‌ பேய்களும்‌ என்பதை விளக்கும்போது
பல சமயத்தாரை விரிவாகக்‌ குறிப்பிட்டுப்‌ பேசுகிறார்‌:
சாக்கியர்‌ சைனர்‌ சாருவாகர்‌ நையாயினர்‌ வைசேடிகர்‌ பாசுபதர்‌ சூனியவாதர்‌ வைபாடிகள்‌ செளந்திராந்திகர்‌
யோகா சாரர்‌ மாத்யமிகர்‌ என்ற நால்வகைப்‌ பெளத்துர்‌, சங்கரன்‌ பாஸ்கரன்‌ யாதவன்‌ ருத்ரன்‌ பாட்டப்‌ பிரபாகரர்‌ ஏகாயநர்‌ என்கிறார்‌.
இவருடைய போக்குக்கு எடுத்துக்காட்டாக, 98ஆம்‌ பாடல்‌ அவதாரிகைப்‌ பகுதியை இங்கு குறிப்பிடலாம்‌:
இப்படி எம்‌பெருமானார்‌ தம்மை சர்வோத்கிருஷ்டமான அதிகாரத்திலே மூட்டின உபசாரத்தை அனுசந்தித்து
ஹரிஷ்டானவாறே இவ ருடைய திருவுள்ளமானது, தீர்‌ இப்படி சொன்னீரேயாகிலும்‌ சர்வ நியந்தாவான
சர்வேஸ்வரன்‌ அநாதி காலந்‌ தொடங்கி தத்தத்‌
கர்மானுகுணமாகப்‌ பலத்தைக்‌ கொடுப்பதாகச்‌
சங்கல்பித்துக்‌ கொண்டி ருக்கிறா னொருவனாகையாலே இவ்வளவும்‌ ஸ்வர்க்க நரக சர்ப்பங்களிலே இடைவிடாதே அடைவே
தட்டித்‌ திரிய விட்டி ருந்தது நம்முடைய கர்மத்தைக்‌ கடாட்சித்தன்றோ,
அக்கர்மங்களை உண்டாக்‌கக் கடவதான பிரகிருதி சம்பந்தம்‌ நமக்கு இன்றும்‌ கிடக்கையாலே,
துர்வாசனை மேலிட்டு திரும்‌பும்‌ நிக்ரகத்துக்கு உடலான துஷ்கார்யங்களிலே அன்வயிக்கவும்‌ யோக்யுதையுண்டே,
ப்ராப்திபர்யந்தமானாலிறே நீர்‌ இப்படி நிர்ப்பரராய்ச்‌ சொல்லக்‌ கடவது என்று தளரா நிற்க;
எம்பெரு மானர்‌ தம்மை சரணமென்றால்‌ அப்படி ஸ்வர்க்க நரகாதிகள்‌ ஒன்றிலும்‌ விட்டுக்‌ கொடுக்கும்‌ ஸ்வபாவரல்லராகையாலே

இனி ப்ராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டாமென்கிறார்‌.

—————

அர்த்த பஞ்சக வியாக்கியானம்‌
பிள்ளை லோகசாரியர்‌ அஷ்டா தச ரகசியம்‌ என்று 18 நூல்கள்‌ செய்தார்‌.
அவையனைத்துக்கும்‌ மணவாள மாமுனி வியாக்கியானம்‌ செய்தார்‌.
அவற்றுள்‌ அர்த்த பஞ்சகம்‌ என்பது மூன்றாவது நூல்‌.
அறிய வேண்டிய பொருள்கள்‌ ஐந்து. இவையே அர்த்த பஞ்சகம்‌ எனப்படும்‌.
இவையாவன:
ஸ்வ ஸ்வரூபம்‌ (உலகின்‌ இயல்புதன்‌ நிலை)
பர ஸ்வரூபம்‌ (இறைவன்‌ நிலை),
விரோதி ஸ்வரூபம்‌ (உயிர்‌ இறைவனை அடையாது தடை செய்து நிற்கும்‌ வினையின்‌ இயல்பு).
புருஷார்த்த ஸ்வரூபம்‌ (புருஷனால்‌ வேண்டப்படும்‌ பேற்றின்‌ நிலை),
உபாய ஸ்வரூபம்‌ (பேற்றிற்குத்‌ தடையைப்‌ போக்கி இறைவனை அடைதற்குரிய உபாயத்தின்‌ நிலை) என்ற ஐந்து.
இப்பெயரில்‌ வேதாந்த தேசிகர்‌ ஒரு பிரபந்‌ தமே பாடியிருக்கிறார்‌.
லோகாசாரியர்‌ நூலுக்குப்‌ பிள்ளை லோகஞ்‌ சீயர்‌ ஒரு வியாக்கியானம்‌ எழுதியிருக்கிறார்‌.
இதன்‌ விரிவான அவதாரிகையில்‌, பகவான்‌ வேதங்களையும்‌ சாஸ்திரங்‌ களையும்‌ நாலாயிரப்‌ பிரபந்தங்களையும்‌ உபதேசித்ததோடமையாது,
பிள்ளை லோகாசாரியர்‌ மூகமாக அர்த்த பஞ்சக ரகஸ்ய சாஸ்திரத்தை வெளிப்படுத்தியருளினான்‌ என்று கூறுகிறார்‌.
அர்த்த பஞ்சகமானது 49 வாக்கியங்களாக அமைந்துள்ளது.
இவர்‌, வாக்கியத்திலுன்ள ஒவ்வொரு தொடராக எடுத்து விரிவாக உரை எழுதிக்கொண்டு செல்கிறார்‌.
உரை மணிப்பிரவாள நடை. இதன்‌ பகுதியொன்று பின்னால்‌ உரைநடை என்ற தலைப்‌பில்‌ எடுத்துக்‌ காட்டப்படும்‌.
அட்டாங்கயோகம்‌ பற்றி இவர்‌ கூறும்‌ கருத்துக்களை மட்டும்‌ இங்கு தருகிறோம்‌:
யமம்‌ ஆவது பாஷ்ய இந்திரிய நிக்கிரகம்‌;
நியமம்‌ அவது அந்தரிந்திரிய நிக்கிரகம்‌:
பாஹ்ய பரிசுத்தி என்றும்‌ அந்தர பரிசுத்தி என்றும்‌ சொல்லுவார்கள்‌.
ஆசனம்‌ ஆகிறது கூர்மாசனம்‌குக்குடாசனம்‌ பத்மாசனம்‌ முதலியவை.
பிராணாயாமம்‌ ஆவது ஒரு யாமத்தளவு பஞ்ச வாயுக்களை நவரந்த்ரங்களால்‌ சரீரத்தில்‌ நின்றும்‌ புறப்படாதபடி பிடித்துக்‌ கொண்டிருக்கை.
பிரத்தி யாகாரம்‌ ஆவது பஞ்ச வாயுக்களை சாத்மிக வெளியில்‌ புறப்பட விடுகை.
அதவா, பிரத்தியாகாரம்‌ என்பதற்கு காய கோஷணத்‌துக்குத்‌ தக்க ஆசாரத்தையும்‌ சொல்லவுமாம்‌.
பிரகரணத்துக்குச்‌ சேருவது முதலில்‌ சொன்னதாகும்‌.
தியானம்‌ ஆவது அவிச்சின்ன ஸ்மரணம்‌.
தாரணம்‌ ஆவது மலதாரணம்‌. அன்றிக்கே சக்தி விசேஷத்தைச்‌ சொல்லவுமாம்‌.
அதாவது ஹ்ருதயத்தில்‌ பகவத்‌விக்கிரக சிந்தை நிறுத்தலுமாகும்‌.
சமாதி ஆகிறது, ஈசுவரன்‌ திருவடிகளிலே மனசை இடைவிடாதே பொருந்தியிருக்க வைத்தல்‌.
இப்படி யான ஆதாரங்களையு/டையவையான அஷ்ட
வித அங்கங்களோடு கூடியிருக்கிற யோகத்தின்‌ கிரமம்‌.”

—————–

சப்தகாதை வியாக்கியானம்‌
பிள்ளை லோகாசாரியரின்‌ மாணாக்கர்‌ விளாஞ்சோலைப்‌ பிள்ளை. இவர்‌ “தீண்டாத: வகுப்பினர்‌.
இவருடைய இயற்‌ பெயர்தானும்‌ தெரிந்திலது.
* தமக்குப்‌ பின்‌ ஆசாரியராய்‌ வரத்‌ தக்கவரான திருமலையாழ்வாருக்குத்‌ திருவாய்மொழியைக்‌ கற்பிக்கும்படி,
பிள்ளை லோகாசாரியர்‌ இவருக்கு நியமித்‌திருந்தார்‌. திருமலையாழ்வார்‌
இவரிடம்‌ கற்றபின்‌ திருவாய்‌ மொழிப்‌ பிள்ளை என்றே பெயர்‌ பெற்றார்‌.
விளாஞ்சோலைப்‌ பிள்ளையின்‌ வரலாறு தெளிவாகத்‌ தெரியவில்லை.
சில செய்திகள்‌ சியர்‌ உரையால்‌ மட்டுமே தெரிய வருகின்றன:
இவர்‌ “உடையவருக்குப்‌ பிள்ளை யுறங்கா வில்லி தாஸரைப்‌ போலவும்‌,
நம்‌ பிள்‌ளைக்கு ஏறு திருவுடையான்‌ தாஸரைப்‌ போலவும்‌,
நடுவில்‌ திரு வீதிப்‌ பிள்ளை பட்டர்க்குப்‌ பிள்ளை வானமாமலை தாஸரைப்‌போலவும்‌,
பிள்ளை லோகாசார்யருக்கு ஆத்ம ஸமராயும்‌, ப்ராண ஸமராயும்‌, த்ருஷ்டி ஸமராயும்‌, பாஹு ஸமராயும்‌,
ஆபரண ஸமராயும்‌, பாத ஸமராயும்‌, பாத ரோகா ஸமராயும்‌, பாதச் சாயா ஸமராயும்‌, பாதுகா ஸமராயும்‌,
பாதோபதாநஸமராயுமெழுந்‌ தருளியிருக்குமவராய்‌ இருந்தவர்‌ இவர்‌.
அன்றியும்‌ தீதற்ற ஞானத் திருவாய்மொழிப்‌ பிள்ளை என்னும்படி,
ஸமஸ்த சாஸ்‌திரபா ரங்கதராயும்‌ ஸர்வஜ்ஞராயும்‌ பெருமதிப்பராயும்‌ போருகிற திரு வாய்மொழிப்‌ பிள்ளையுங்கூடத்‌
தம்மருகே சென்று சரமார்த்த விசேஷங்களைக்‌ கேட்டுப்‌ போரும்படி மிகவும்‌ ஸர்வஜ்ஞராய்‌ இருந்தார்‌.
பிள்ளை லோகாசாரியருடைய திருவோலக்க வாழ்வைத்‌ தியானித்துக்‌ கொண்டு தம்‌ திருமேனியில்‌
சிலந்தி நூல்‌ இழைக்கும்படியாகவும்‌ நாலாறு நாள்‌ சமாதியிலே எழுந்தருளியிருந்தார்‌.’
உரையில்‌ இராமானுசர்‌ நூற்றிருபதாண்டு குறைவு நிறைவு களின்றிக்கே யிருந்தார்‌ என்பதையும்‌ சொல்லுகிறார்‌.

பிள்ளை லோகாசாரியருடைய திருவுருவ வருணனை:

தேமருவும்‌ செங்‌ கமலத்‌ திருத்தாள்களும்‌ திகழும்‌ வான்பட்டாடை பதிந்த திரு மருங்கும்‌ முப்புரி நூலின்‌ தாமமணி வடமமர்ந்த திருமார்பும்‌,
முன்னவர்‌ தந்தருள்‌ மொழிகள்‌ நிறைந்த திருமுறுவலும்‌, கருணை பொழிந்திடுமிணைக்‌ கண்களும்‌
கனநல்ல சிகை முடியும்‌ திங்கள்‌ போலும்‌ திருநுதலும்‌ திருக்கண்ணும்‌ செவ்வாயும்‌,
பொங்கொளி சேர்பொன்மொழியும்‌ புரிநூலும்‌ பொற்றோனும்‌,
மங்கலமான மலர்‌ மார்பும்‌ மணிவடமும்‌, மருங்குதனில்‌ பரியட்டமும்‌ கமலப்‌ பதயுகமும்‌,
அழகிய பத்மாஸநமும்‌, ஈராறு திருநாமமணிந்த வெழிலும்‌,
இனிதிருப்போ டெழில்‌ ஞான முத்திரையும்‌ தாமு மாக வெழுந்தருளியிருக்கிற
பிள்ளை லோகாசார்யருடைய திவ்ய மங்கள விக்ரஹத்தைப்‌ பாதாதி கேசாந்தமாகவும்‌ கேசாதி பாதாந்தமாகவும்‌
உருவ வெளிப்பாட்டாலே விசத விசததர விசததமமாகத்‌ த்யாநித்து-
சப்த காதைக்கு இவர்‌ வியாக்கியானமும்‌ தனிப்‌ பதவுரையும்‌ எழுதியிருக்கிறார்‌

அவதாரிகையின்‌ தொடக்கத்தில்‌ இவர்‌ சப்த காதைக்குக்‌ கூறும்‌ தனியன்‌:
வாழி நலந்திகழும்‌ நாரண தாதனருள்‌
வாழி அவனமுத வாய்மொழிகள்‌ – வாழியே
ஏறு திருவுடையான்‌ எந்தை உல காரியன்‌ சொல்‌
தேறு திருவுடையான்‌ சீர்‌.
சப்த காதை என்பது விளாஞ்சோலைப்பிள்ளை அருளிச்‌ செய்த ஏழு வெண்பா.
இது தென்கலையாருக்கு நித்தியானு சந்தானமாக உள்ளது.
இந்த உரையின்‌ இறுதிப்‌ பகுதி இவர்‌ வாக்குக்கு எடுத்துக்காட்டாகக்‌ கொள்ளத்தகும்‌.
“ஆக இப்பிரபந்‌ தத்தால்‌ – அர்த்த பஞ்சக உபதேஷ்டாவே ஆசார்யனாகிறான்‌ என்னுமிடத்தையும்‌,
அவனிடத்தில்‌ ப்ரேமமற்றிருப்பார்‌ ஸ்வாத்‌காதக ரென்னுமிடத்தையும்‌,
அவர்கள்‌ ஜ்ஞானவிசேஷண யுக்தரோயாகிலும்‌, நித்ய ஸம்ஸாரிகளாய்ப்‌ போருவர்‌ என்னுமிடத்‌தையும்‌,
அதுக்கு க்ருதக்நரான இவர்கள்‌ அதிக்ரூர ரென்னு மிடத்தையும்‌,
ஸ்வோத்கர்ஷத்தைத்‌ தேடுகை ஆசார்யனுக்கு அழுக்கென்னு மிடத்தையும்‌,
இவ்வழுக்குக்கடி யான தோஷத்தைப்‌ பெரிய பெருமாள்‌ தாமே தமக்குப்‌ போக்கியருள வேணுமென்னு மிடத்தையும்‌.
ஆசார்யன்பக்கல்‌ ப்ரேமயுக்‌ தனானவன்‌ அர்ச்சிராதி மார்க்கத்தாலே
பரமபதத்திலே சென்று முக்தைசுவரியத்தைப்‌ பெற்றுக்‌ கைங்கர்ய ஸாம்‌ ராஜ்யத்திலே மூர்த்தாபிஷிக்தனாய்க்‌
கொண்டு யாவதாத்ம பாவியாக விரு.ப்பனென்னு மிடத்தையும்‌ அருளிச்‌ செய்து நின்றராய்த்து.”

சில கருத்துக்கள்‌:
அரங்கத்தின்‌ சிறப்பு – இனிதாகத்‌ திருக்‌கண்கள்‌ வளர்கின்ற திருவரங்கம்‌ என்று சொல்கி
விரோதி: அமர வஸ்‌துக்களில்‌ பரத்வ புத்தியும்‌,
அரக்ஷ்யரிடத்தில்‌ ரக்ஷ்கத்வ புத்தியும்‌.
அசேஷிகளிடத்தில்‌ சேஷித்வ புத்தியும்‌, அனுபாஸ்யரிடத்தில்‌ உபாஸ்ய புத்தியும்‌,
அனாத்மாவில்‌ ஆத்மபுத்தியும்‌.
அஸ்வதந்திரனான தன்னிடத்தில்‌ ஸ்வதந்திரபுத்தியும்‌,
அனுபாயங்களில்‌ உபாயத்வபுத்தியும்‌,
அபந்துக்களில்‌ பந்துத்வ புத்தியும்‌,
அபோக்‌யங்களில்‌ போக்யதாபுத்தியும்‌
பகவத்கைங்கரியத்தில்‌ ஸ்வபோக்‌த்ருத்வபுத்தியும்‌,
இவையெல்லாவற்றுக்கும்‌ வேர்ப் பற்றான அஹங்கார மமகாரங்களும்‌.

——————–

உபதேச ரத்தின மாலை வியாக்கியானம்‌
இம்மாலை மணவாள மாமுனி செய்தது. – 73 வெண்பாக்களுடையது.
இறுதியில்‌ உள்ள தனியன்‌
மன்னுயிர்காள்‌ இங்கே மணவாள மாமுனிவன்‌
பொன்னடியாம்‌ செங்கமலப்‌ போதுகளை – உன்னிச்‌
சிரத்தாலே தீண்டில்‌ அமானவனும்‌ நம்மைக்‌
கரத்தாலே தீண்டல்‌ கடன்‌.
சுவையான பல செய்திகளும்‌ இங்கு காணப்படும்‌. “நஞ்சீயர்‌ செய்த வியாக்கியைகள்‌ நாலிரண்டுக்கு எஞ்சாமை யாவைக்கு மில்லையே” (47) என்ற தொடருக்கு வியாக்கியானம்‌ சொல்லுவதுகாணத்தக்கது:
“பெரிய வாச்சான்‌ பிள்ளையைப்‌ போல திவ்வியப்‌
பிரபந்த முழுமைக்கும்‌ இவர்‌ வியாக்கியானம்‌ எழுதவில்லை;
நாலிரண்டுக்கே செய்தார்‌. நாவிரண்டு என்பது ஒரு முழுச்சொல்‌ (மரபுத்தொடர்‌), சில என்பது பொருள்‌.
இவர்‌ செய்தவை திருப்‌ பாவையும்‌ கண்ணிநுண்‌ சிறுத்தாம்பும்‌; பின்னையும்‌ உண்டாகில்‌
கண்டு கொள்வது” என்று எழுதுகிறார்‌.
நாலிரண்டு என்பது எட்டு அல்லது ஆறு என்று பொருளல்ல; சில என்றே பொருள்படும்‌ என்று இவர்‌ குறிப்பிடுவது ஒரு மரபு விளக்கமாகும்‌.
இவர்‌ இந்‌. நூலுக்குரிய இரண்டு தனியன்களுக்கும்‌ சேர்த்தே வியாக்கியா னம்‌ எழுதியுள்ளார்‌.

மூதற்பாடலுரையில்‌, பேசுகின்றேன்‌ மன்னியசீர்‌ வெண்‌
பாவில்‌ வைத்து என்பதன்‌ உரை
தமிழுக்கு வெண்பா கலித்துறை என்னுமாப்போலே அனேகம்‌ பாக்களுண்டிறே,
அதில்‌ கலித்‌துறையாலே ப்ரவிருத்தமாய்த்து சரம ப்ரபந்த நூற்றந்தாதி.
அதிலும்‌ அப்பியசிக்க எளிதாயிருக்கிற வெண்பா என்கிற சந்தஸ்ஸிலே வைத்தாய்த்து சதியருடைய
தமிழ்‌ விரகரான தாம்‌ அருளிச்‌ செய்தது. கற்கவிறே தாம்‌ உபதேசிக்கிறது.
“வெண்பா இரு காலிற்‌ கல்லானை”: என்றிறே இதன்‌ எளிமையிருப்பது.
அதுக்குச்‌ சீர்‌ மன்னுகையாவது,
முச்சீர்‌ நாற்சீர்‌ என்று சொல்லப்படுகிற சீரோடே பொருந்தியிருக்கை.
அன்றிக்கே
புகழ்‌ மலிந்தபா என்னுமாப்போலே இதுவும்‌ சீர்‌ மன்னியிருக்கிற தென்னவுமாம்‌,
எண்ணருஞ்சீர்‌ –
பொய்கை முன்னோருடைய சீரோடேபொருந்தியிருக்கிறது.

பின்னும்‌ சிலசெய்திகள்‌:
திருவிருத்தம்‌ முதலான நம்மாழ்வார்‌ பிரபந்தம்‌ நாலுக்கும்‌
திருமொழி முதலான பிரபந்தங்கள்‌ ஆறும்‌ அங்கங்களாயிறே இருப்பது.
அது திராவிட வேதமானால்‌, இதுவும்‌ திராவிட ரூபமான அங்கங்களென்னக்‌ குறையில்லை.
தமிழ்‌ செய்கையாவது,
எய்தற்கசிய மறைகளை ஆயிரம்‌ இன்தமிழால்‌ செய்தற்கு உலகில்‌ வரும்‌ சடகோபனை என்கிறபடியே,
வேதமானால்‌ அதிக்ருதாதிகார.மாயிருக்குமாகையால்‌ அகில சேதனர்க்கும்‌ அப்பியசித்து உஜ்ஜீவிக்கை
அரிதென்று
ஸர்வாதிகாரமாய்‌ ஸர்வோப ஜீவ்யமுமாயிருக்கும்‌
படி திராவிட பாஷாரூப சந்தர்ப்பத்தாலே
வேதார்த்தத்தை விசதீகரித்து அருளிச்‌ செய்தாரென்கை (பாடல்‌ 14),
இவர்கள்‌ கலை திராவிட ப்ரஹ்ம வித்தை.
மற்றோரிடம்‌: ஆண்டாள்‌ பிறக்கைக்‌ கடியான அவருடைய
(பெரியாழ்வாருடைய) பெருமை இருக்கிறபடி,
திருமாலை கட்டுகையே தொழிலாக இருக்கிற இவர்‌ திருத்துழாயடி யிலே அவதரித்த இவளை
எடுத்துக்‌ கொண்டு போரய்த்‌ தந்தேவிகள்‌*
* தேவிகள்‌ என்பது இங்கு வைணவ சம்பிரதாயத்தில்‌ ஒருமையே; தேவியார்‌ என்பது போல.
கையிலே காட்டிக்‌ கொடுக்க, வந்த்யையா கையாலே அவரும்‌ அரும்பெறல்‌ பெண்ணாயிருக்கிற இப்பெண்பிள்ளையை அதிப்ரீதியடனே எடுத்துக்‌ கொள்ள, அப்போது வனமுலைகள்‌ சோர்ந்து பாய என்னும்‌ படி.யிறே ஸ்தன்யம்‌ பிரவஹித்தது
23-ஆதித்யோதயத்துக்கு அருணோதயம்‌ போலே வகுள பூஷண பாஸ்கரோதயத்துக்கு முன்னே வந்து அவதரித்த மதுரகவியாழ்வார்‌.
திருமங்கையாழ்வார்‌ அவதரித்த குறையலூர்‌ மண்ணியாற்றின்‌ ஜலஸம்ருத்தியையுடையது.
ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, இருப்பத்து நாலா
யிரப்படி, முப்பத்தாறாயிப்படி. என்ற வியாக்கியானங்கள்‌ நான்கும் முறையே
புராண ரத்னமான விஷ்ணு புராணம்‌, ஸ்ரீ பாஷ்யம்‌,
ஸ்ரீ ராமாயணம்‌, சுருதப்பிரகாசிகை
ஆகியவற்றின்‌ சங்கியையால்‌ செய்யப்பட்டன என்று சொல்லுகிறார்‌.
“நம்‌ சடகோபனைப்‌ பாடினையோ என்று நம்பெருமாள்‌ விஞ்சிய வாதரத்தாற்‌ கேட்ப என்றாய்த்து” என்று
சடகோபரத்தாதித் தனியனைக்‌ குறிப்பிடுகிறார்‌.
வரதராசர்‌, நஞ்சீயர்‌ பிரசாதித்த ஒன்பதினாயிரப்படியைக்‌
காரவேரியிலே விட்டு விட்டுப்‌ (பின்‌ தம்‌ நினைவாற்றலால்‌
முழு மையும்‌ எழுதி நம்பிள்ளை என்று பெயர்‌ பெற்ற செய்தியைச்‌ சொல்லுகிறார்‌.
இவையன்றி, இராமானுசருக்கு முன்‌ தொடங்கி, மணவாள மாமுனிகள்‌ வரையுள்ள ஆசாரியர்‌ வாழ்க்கையிலும்‌
உபதேசத்திலும்‌
கண்ட பல செய்திகளையும்‌ கருத்துக்களையும்‌ தம்‌ உரையெங்கும்‌ சொல்கிறார்‌.
இவ்வுரைகள்‌ யாவுமே குறித்த நூலின்‌ உரைகள்‌ மட்டுமல்ல;
உரை என்ற வியாஜத்தால்‌ அளவற்ற செய்திகளைத்‌ தெரிவிக்கும்‌ ஒரு சமய வரலாற்றுக்‌ களஞ்சியம்‌.

————–

திருவாய்மொழி நூற்றந்தாதி வியாக்கியானம்‌
நம்மாழ்வாரின்‌ திருவாய்மொழியில்‌ ஒவ்வொரு திருவாய் மொழிக்கும்‌ (பதிகத்துக்கும்‌) முதற்பாடலின்‌ தொடக்கச்‌ சொல்லையும்‌
இறுதிப்‌ பாடலின்‌ இறுதிச்‌ சொல்லையும்‌ ஒரு வெண்பாவின்‌ தொடக்கமாகவும்‌ இறுதியாகவும்‌ முறையே அமைத்து
மணவாள மாமுனிகள்‌ ஒரு நூல்‌ செய்தார்‌.
திருவாய்மொழி முழுமையும்‌ அந்தாதி ஆனமையால்‌ இந்நூலும்‌ அந்தாதியாக உள்ளது.
இது திருவாய்மொழி நூற்றந்தாதி என்று பெயர்‌ பெறும்‌. இதன்‌ பாடல்களில்‌ ஒவ்வொன்றும்‌ நம்மாழ்வார்‌ புகழைக் கொண்டது. பாடல்‌ தொகை 100.
இந்நூலுக்குப்‌ பிள்ளை லோககஞ்சீயா்‌ விரிவான வியாக்கியானம்‌ செய்தார்‌.
இப்‌ பாடல்களில்‌ அமைந்த சில வரையறையை இவரே பின்வருமாறு கூறுகிறார்‌:
“இப்பிரபந்தங்களுக்கு அனேக நிர்பந்தங்களுண்டாயிறே இருப்பது.
அதெங்ஙனே என்னில்‌,
வெண்பா என்கிற சந்தஸ்‌ ஆகையும்‌,
இப்படியான இப்பாட்டில்‌ முற்பாதியிலே ஓரோர்‌ திருவாய்‌ மொழியின்‌ தாத்பர்யமும்‌,
தத்சங்கதிகளடைகையும்‌,
பாட்டுக்கள்‌ தோறும்‌ ஆழ்வார்‌ திருநாமங்கள்‌ வருகையும்‌,
அதில்‌ தாத்பர்யங்‌ களைத்‌ தாத்பர்யந்தமாய்ப்‌ பேசுகையும்‌, அந்தாதியாய்‌ நடக்கையுமாகிற-ஐந்து நிர்ப்ந்த முண்டாயிருக்குமாயிற்று’

இந்நூற்றந்தாதியின்‌ தனியன்‌ இரண்டுக்கும்‌ இவர்‌ உரை எழுதவில்லை.
இவ்வந்தாதிக்கு இவர்‌ பாடிய தனியன்கள்‌:
அல்லும்‌ பகலும்‌ அனுபவிப்பார்‌ தங்களுக்குச்‌
சொல்லும்‌ பொருளும்‌ தொகுத்துரைத்தான்‌ – நல்ல
மணவாள மாமுனிவன்‌ மாறன்‌ மறைக்குத்‌
தணவா நூற்‌ றந்தாதி தான்‌.
மன்னு புகழ்சேர்‌ மணவாள மாமுனிகள்‌
தன்னருளா லுட்பொருள்கள்‌ தன்னுடனே – சொன்ன
திருவாய்‌ மொழிநூற்றந்‌ தாதியாம்தேனை
ஒருவா தருந்துநெஞ்சே உற்று.

ஆர்த்திப்‌ பிரபந்த வியாக்கியானம்‌
மணவாள மாமுனிகள்‌ செய்த மூலம்‌, பெரும்பகுதி வெண்பா, சிறு பகுதி விருத்தம்‌ கலித்தாலிசை கலிப்பா கொண்டது.
பாடல்‌ எதிராசரைப்‌ புகழ்வது.
ஆயுள்‌ இறுதியில்‌ பரமபதத்தில்‌ ஆசை பிறந்து இந்நூல்‌ பாடிப்‌ பரமபதம்‌ அடைந்தார்‌ என்பார்‌.
பிள்ளை லோகஞ்சீயர்‌ இந்நூலுக்குத்‌ தாம்‌ செய்த வியாக்கியானத்‌ தொடக்கத்தில்‌ இரு தனியன்களைக்‌ குறிப்பிடுகிறார்‌
இவை முன்னமே உண்டாயிருந்தன என்கிறார்‌:
தேன்பயிலுந்‌ தாரா னெதிராசன்‌ சேவடிமேல்‌
தான்பரம பத்தி தலையெடுத்து – மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன்‌ ஒண்தபிழ்கள்‌ செய்தான்‌
மணவாள மாமுனிவன்‌ வந்து.
வம்பவிழ்தார்‌ வண்மை மணவாள மாமுனிவன்‌
அம்புவியிற்‌ கால்பொருந்தா ஆர்த்தியினால்‌ – உம்பர்தொழும்‌
விண்ணுலகிற்‌ செல்ல விரைந்தெதிரா சன்பதங்கள்‌
நண்ணி யுரைத்தான்‌ நமக்கு.

இந்நூலுக்குத்‌ தமிழில்‌ பதவுரையும்‌ மணிப்‌ரவாளத்தில்‌ விரிவான வியாக்கியானமும்‌ செய்திருக்கிறார்‌.
பாடல்‌ தோறும்‌ விரிவான அவதாரிகை கூறிப்‌ பொருளைத்‌
தொடர்புபடுத்துகிறார்‌.
சில கருத்துகள்‌:
அஞ்சு வயசுக்குட்பட்ட ப்ரஜையுடைய துர்மரணமெல்லாம்‌ மாதாவினுடைய அனவதானத்தாலே வந்ததாக
அவளுக்கு சாஸ்திரம்‌ தோஷம்‌ விதிக்கையால்‌ கண்ணிலே
வெண்ணெயிட்டு நோக்கவேணுமிறே;
பிரஜையைக்‌ கிணற்றின்‌ கரையில்‌ நின்றும்‌ வாங்காதொழிந்தால்‌ தாயே தள்ளினாள்‌ என்னக்‌ கடவதிறே,
உடைமைக்கொரு முழுக்கு, உடையவனுக்கு-உடைமை பெறுந்தனையும்‌ முழுகவேண்டும்படியிறே இருப்பது.
ஓலமிடுதல்‌, வாக்காலே பெருமிடறு செய்து கூப்பிடுதல்‌. வாழி-நித்ய மங்களமாய்ச்‌ சொல்லவேணும்‌.
ஆழ்வார்கள்‌ பதின்மர்‌ என்கிறார்‌.
அருளுவீர்‌-அருளுவுதீர்‌ என்கிறார்‌.
————–

தனியன்‌ வியாக்கியானம்‌
நாலாயிரத்‌ இவ்வியப்‌ பிரபந்தங்கள்‌ இருபத்து நான்குக்கும்‌
தனி தனியான பல தனியன்கள்‌
(சிறப்புப்‌ பாயிரம்‌ போன்றவை) செய்யப்‌ பெற்றுள்ளன: அவற்றை ஓதியே பாசுரங்களை ஓதுவது
வைணவ சம்பிரதாயம்‌.
இவற்றுள்‌ வடமொழிச்‌ சுலோகங்கள்‌ சில,
தமிழ்ப்‌ பாடல்கள்‌ 34. இவற்றுள்‌ இரண்டொரு பாடல்கள்‌
நீங்கலாகச்‌ சம்பிரதாயமாக வழங்கும்‌ ஏனையவற்றுக்குப்‌
பிள்ளை லோகஞ்சீயர்‌ வியாக்கியானம்‌ எழுதியிருக்கிறார்‌. இவ்‌ வியாக்கியானங்கள்‌ பொதுவாய்‌ அவ்வப்‌ பிரபந்தங்கள்‌ தமக்குரிய பெரிய வாச்சான்‌ பிள்ளை வியாக்கியானம்‌ அரும்பதம்‌ முதலி
யவற்றோடு
தனிநூல்‌ எனப்‌ பதிப்பிக்கப்பட்ட இடங்களில்‌,
முற்சேர்க்கையாகச்‌ சேர்த்துப்‌ பதிப்பிக்கப்பெற்றுள்ளன.
தனி நூல்‌ வடி. வத்தில்‌ அச்சிடப்‌ பெறவில்லை போலும்‌. இத்தனியன்‌ வியாக்கியானங்களில்‌ பிள்ளை லோகம்‌ மூலத்தின்‌ பொருளை மட்டும்‌ விளக்கிக்கொண்டு போகிறார்‌.

————

உபதேசத்‌ திருநாமம்‌
இப்பெயருடைய ஒரு செய்யுள்‌ நூல்‌ ஏட்டுவடி வில்‌ உள்ளது.
நூலில்‌ ஆசிரியர்‌ பெயர்‌ குறிக்காவிட்டாலும்‌ இந்நூல்‌ தொடக்‌ கத்தில்‌ எழுதப்பெற்றுள்ள வடமொழித்‌ தனியன்‌,   “தம்‌ லோக தேசிக முனிம்‌ சரணம்‌ ப்ரபத்யே”என்று கூறுவதால்‌ இந்நூல்‌ லோகம்‌ ஜீயர்‌(லோகதேசிகர்‌) செய்ததாயிருக்கலாம்‌ என்று கொள்ளப்படுகிறது.
இது 89 பாடல்‌ கொண்டது; வெண்பா கட்டளைக்‌ கலித்துறை விருத்தம்‌ முதலான பல பாவினங்களும்‌ உள்ளன.
இப்பாடல்கள்‌ அனைத்தையுமே சீயர்‌ செய்யவில்லை.
தமக்கு முன்னே வழங்கிய பிள்ளை லோகாகாரியர்‌ மணவாள மாமுனிகள்‌ பற்றிய பாடல்கள்‌,
சில உபதேச ரத்தினமாலைப்‌ பாடல்கள்‌ ஆகியவற்றோடு தாமும்‌ சில புதுப்பாடல்கள்‌:. புனைந்து
இந்நூலாகக்‌ கோத்தார்‌ என்று தெரிகிறது.
பிள்ளை லோகாசாரியர்‌, அவர்‌ சீடரான கூர குலோத்தமதாசர்‌, திருமலை யாழ்வார்‌ என்னும்‌ திருவாய்‌ மொழிப்பிள்ளை;
இவர்‌ சீடரான மணவாள மாமுனிகள்‌; இவர்‌ தந்தையான திகழக்கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌
தாதரண்ணரையன்‌, மாதா மகரான குரவை மணவாளர்‌ ஆகியோர்‌ இங்கு போற்றப்‌ பெறுகின்றனர்‌.
(குரவை மணவாளர்‌ – திருக்கோட்டியூர்‌ அழகிய மணவாளர்‌
என்பவர்‌).
பல இடங்களிலிருந்து பாடல்கள்‌ தொகுக்கப்பட்டன என்று தெரிகிறது.
இதன்‌ முதல்‌ பாடல்‌, யதீந்திர ப்ரவணப்ரபாவத்தின்‌ தொடக்கத்திலுள்ள பாடல்‌:
குலநாத னெங்கள்‌ மணவாள யோகி குணக்கடலைப்‌
பலநாளும்‌ மண்டிப்‌ பருகிக்‌ களித்திந்தப்‌ பாரினுள்ளே
உலகாரிய முனிமேகம்‌ முன்னாள்‌ என்‌ உள்ளங்குளிர
நலமான நீர்மழை நாளும்‌ பொழியுமிந்‌ நானிலத்தே.

————–

திருமந்திரார்த்த அரும்பத விளக்கம்‌
வைணவத்தில்‌ மூன்று மந்திரங்கள்‌ .மந்திரத்திரயம்‌ எனப்படும்‌.
அவற்றுள்‌ முதலாவது திருமந்திரம்‌; ஓம்‌ நமோநாராயணாய என்பது; இதுவே அஷ்டாக்ரம்‌, எட்டெழுத்து;
நான்‌ கண்டு கொண்டேன்‌ என்று திருமங்கையாழ்வார்‌ பாடுவது.
இதன்‌ பொருளை விளக்கிப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ முமுட்சுப்படி என்று எழுதினார்‌.
இது அவர்‌ எழுதிய அட்டாதச ரகசியங்களில்‌ ஒன்று.
முமுட்சு என்றால்‌ வீடுபேற்றில்‌ விருப்பமுள்ளவன்‌ என்று
பொருள்‌.
முதல்‌ திருமந்திரார்த்தப்‌ பகுதிக்கு, பின்ளையின்‌
தம்‌பியான அழகிய மணவாளப்‌ பெருமான்‌ நாயனாரே வியாக்‌கியானம்‌ எழுதியிருக்கிறார்‌.

இவ்வியாக்கியானத்துக்கு, பிள்ளை லோகம்‌ சீயர்‌ சுருக்கமாயும்‌, சுத்தசத்துவம்‌ தொட்டாசாரியர்‌ சற்று விரிவாயும்‌,
அரும்பத விளக்கம்‌ எழுதியிருக்கிறார்கள்‌.
பின்னர்‌ எம்‌. பாவையங்கார்‌ மிகவம்‌ விரிவான மற்றொரு வியாக்‌யானம்‌ எழுதினார்‌.
இவை யாவும்‌ ஒரு நூலாக 1893இல்‌ அச்சிடப்‌ பெற்றன.
பல கதைகளை எழுதித்‌ தேர்ந்தவரான பிள்ளை லோகஞ்‌
சீயர்‌ இங்கும்‌ தம்‌ அவதாரிகை உரையில்‌ பலசெய்திகளைச்‌
சொல்லுகிறார்‌.
“சர்வேஸ்வரன்‌ பெரிய பிராட்டியாருக்கு உபதேசம்‌
பண்ணினாரென்கிறது மந்திர த்வயத்துக்கும்‌ உபலஷ்ணமாய்‌,
அவள்‌ சேனை முதலியாருக்கு உபதேசிக்க, அவர்‌ பிராட்டி
நியோகத்தாலே நாதமுனிகளுக்குப்‌ பிரசாதித்தார்‌…
நாத முனிகளுக்கு ஸ்வப்னமுகனே உபதேகித்தார்‌ என்றும்‌ அருளிச்‌ செய்‌வார்கள்‌.
“ஒருநாள்‌ ரகஸ்யார்த்தமும்‌ மற்றைநாள்‌ திருவாய்மொழி
முதலான பிரபந்தமும்‌, அதின்‌ மற்றைநாள்‌ அவற்றினுடைய
அர்த்தமும்‌
ஆக மூன்று நானாக அருளிச்‌ செய்தருளினார்‌ என்று
அருளிச்‌ செய்வர்‌.
கண்ணிநுண்‌ சிறுத்தாம்பைப்‌ பன்னீராயிரம்‌ உருப்புரச்சரணம்‌ பண்ணப்‌ பிரத்தியட்சமாய்த்‌
திருத்திரை வளைத்துக்‌ கொண்டிருந்து
விசத விசததர விசததமமாகப்‌ரசாதித்தார்‌ என்று அருளிச்‌ செய்தருளுவர்‌.
“பிராட்டி பிரமா வுக்குப்‌ பிரசாதிக்க, பிரமா இவ்வருகுண்டான சிஷ்யாதிகளுக்கு
ரகஸ்யத்ரயோபதேசம்‌ பண்ணினார்‌
என்று ரிஷிகளுக்கு ரகஸ்‌யத்தினுடைய வரலாறு என்று அருளிச்‌ செய்து”…
“நாத முனிகள்‌தொடங்கி, நமக்கு சம்பிரதாயமாயிருக்கும்‌; பிரமா முதலாக, ரிஷிகளுக்கு சம்பிரதாயமாயிருக்கும்‌”-
என்றெல்லாம்‌ கூறியிருக்‌கும்‌ வரலாறுகள்‌ காணத் தக்கன.
இவருடைய அரும்பத விளக்கம்‌ பெயருக்கேற்றாற்போல்‌
மிகவும்‌ சுருக்கமாகவே இருக்கும்‌;
சுவையான பகுதிகளும்‌ நிரம்ப உள்ளன.

—————-

ஸ்ரீவைஷ்ணவ சமயசார நிஷ்கர்ஷம்‌
இது மிகவும்‌ விரிந்த நூல்‌. டெம்மியளவில்‌ 600 பக்கம்‌
உடையது.
பரதத்துவ விவேகம்‌, சதாசார்ய விவேகம்‌, சித்தோபாய
விவேகம்‌, பாஞ்சராத்ப்ரமாண வைபவ விவேகம்‌,
பகவத்‌ பக்த துர்ஜாத்யபகம விவேகம்‌, வர்ணாச்மாசார விவேகம்‌, ஸ்ரீ வைஷ்ணவ யதச்ருஹஸ்தாதி
அந்யோந்ய வந்தநாதி சமர்த்தனம்‌, ப்ரபந்த தினசர்யை, பகவத்‌ ப்ரசாத யோக்யாயோக்யதாதியதிதி நிர்ணயம்‌,
சிஷ்டாசார்ய ப்ராதான்ய நிரூபணம்‌ என்ற பத்துப்‌ பிரகரணங் களைக்‌ கொண்டது.
இதன்‌ நடையைப்‌ பார்க்கும்போது, இவ்‌வாசிரியர்‌ இதை முதலில்‌ எழுதியிருக்கலாமோ என்று கருதத்‌ தோன்றுகிறது,
முழுமையும்‌ வரிவரியாக, வாக்கியம்‌ வாக்கியமாக வடமொழியாகவே எழுதியிருக்கிறார்‌.
200 சொற்கள்‌ கொண்ட ஒரு பக்கம்‌ முழுமையும்‌ எடுத்துக்கொண்டால்‌, 22 சொற்களே தமிழ்ச்‌ சொற்கள்‌.
ஏனைய யாவும்‌ வடச்சொற்களே. ,
ஆகையாலே,
அனைவர்க்கும்‌, என்று, அத்தனையிறே, அங்கு, ஆகையால்‌,
என்று சொல்லக்‌ குறையில்லை,
ஆகையால்‌, என்கிற, இதன்‌ படியே, கீழ்ச்‌ சொன்ன, என்று விவேகிகள்‌ கண்டு கொள்வது,
இன்னமும்‌, யதிகளுக்குச்‌ சொல்லியிராமையாலும்‌, அவற்றில்‌, அந்த, அவர்களைப்‌ போலன்றிக்கே,
அந்த உண்டாகச்‌ சொல்லி யிருக்கையாலே, இல்லையென்னுமதுவே – இவையே தமிழ்ச்‌
சொற்கள்‌.
ஏனைய யாவும்‌ வடசொற்கள்‌, கிரந்த எழுத்து. ஒருகால்‌
பொருளானது சமயாசாரமானபடியால்‌, முழுமையும்‌
இங்கு வடமொழியாகத்‌ தந்து இடைச்சொற்களை மட்டும்‌ தமிழாகப்‌ பெய்து தந்தார்‌ போலும்‌.
ஓரிடத்தில்‌ இவர்‌ ‘விப்ரயதி: என்னுமத்தாலே வர்ணத்ரயத்திலும்‌ யதிகள்‌ உண்‌
டென்னுவதும்‌
அவர்களுக்குண்டான தண்டபேதங்களும்‌
சுப்பிரசித்தம்‌’ என்று எழுதியிருப்பது கருதத்தக்கது.
பிராமணருக்கு மட்டுமே சத்நியாசமும்‌ ஆசாரிய
பதவியும்‌ உண்டென்று அத்வைதிகள்‌ கூறிய கூற்றை
மறுத்துச்‌ சிவாக்கிரயோகிகள்‌, மற்ற வருணத்தாருக்கும்‌ சந்நியாசயும்‌ ஆசாரிய பதவியும்‌ உண்டென்று நிலைநாட்டிச்‌ சைவ சந்நியாச
பத்ததி (வடமொழியில்‌)
எழுதியமை முன்னர்க்‌ குறிப்பிட்டோம்‌.
வைணவ பரமாக இந்த ஜீயரும்‌ இதைச்‌ சொல்வது காணத்தக்கது.
ஒவ்வொரு பத்தியின்‌ முடி விலும்‌ இவர்‌, இப்படி, விவேகிகள்‌ கண்டு கொள்வது (அல்லது நிச்சயித்துக்‌ கொள்வது) என்று முடிப்பார்‌.
இது, பெருந்தேவனார்‌ பாரத வெண்பாவின்‌ உரை நடைப்‌ பகுதியின்‌ இறுதியிலும்‌
‘இவ்வாறு செய்தாராகக்‌ கண்டு
கொள்வது” என்று வரும்‌ தொடரை நினைவூட்டுகிறது.
காலம்‌
மணவாள மாமூனிகள்‌ 15அம்‌ நூற்றாண்டின்‌ இடைப்‌ பகுதியில்‌ (கி.பி. 1443) பரமபதம்‌ அடைந்தார்‌. அக்காலத்தில்‌
பரகால நல்லான்‌ பட்டர்பிரான்‌ ஜீயர்‌ பிரசித்தமாய்‌ விளங்கிய சீடர்‌.
அவர்‌ வழியில்‌ மூன்றாம்‌ தலைமுறையில்‌ வந்தவரே பிள்ளை லோகஞ்சிீயர்‌.
எனவே, இவர்‌ காலம்‌ கி.பி. 1525-50 எனக்‌ கொள்ளுதல்‌ பொருந்துவதாகும்‌.

————–

பரகால நல்லான்‌
இவர்‌ பதினாறாம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்து, ஸ்ரீ வைஷ்ண
வத்தின்‌ ரகஸ்யத்ரயம்‌ என்னும்‌ மூன்று மந்திரங்களுக்கும்‌ விரிவான விளக்கம்‌ எழுதினார்‌.
இவ்விளக்கம்‌ ரகஸ்யார்த்த ப்ரதபரகை என்றும்‌, பரகால நல்லான்‌ ரகஸ்யம்‌ என்றும்‌ பெயர்‌ பெறும்‌.
இவர்‌ பெயரும்‌ திருவரங்கச்‌ செல்வனார்‌ என்றும்‌ பர காலார்யார்‌ என்றும்‌ வழங்குவதுண்டு.
இவர்‌ நூலும்‌ இவர்‌ வர லாறும்‌ பிரசித்தமாக வழங்கவில்லை.
நூலிலிருந்து சில செய்தி களை இங்குக்‌ குறிப்பிடலாம்‌.
நூல்‌ பெரிய நூல்‌; டெம்மி அளவில்‌ 308 பக்கம்‌ கொண்டது.
மூன்று பிரகரணமாயுள்ளது. முதலாவது திருமந்திரப்‌ பிரகரணம்‌.திருமந்திரம்‌ – ஓம்‌ நமோ நாராயணாய.
இதன்‌ ரகஸ்யார்த்தத்தை 72 பக்கங்களில்‌ விளக்குகிறது. இரண்டாவது த்வயப்‌ பிரகரணம்‌.-த்வயம்‌ என்பது இரண்டு மந்திரங்கள்‌.
ஸ்ரீமந்‌ நாராயணாய சரணெள சரணம்‌ ப்ரபத்யே-ஸ்ரீமதே நாராயணாய நம; என்பன.
இவற்றின்‌ ரகஸ்யார்த்தத்தை 76 பக்கங்களால்‌ விளக்கு
கிறது.
மூன்றாவது சரம சுலோகம்‌ (பகவத்‌ கதையிலுள்ளது):
ஸர்வதர்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ அஹம்‌ த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமிமா சுச:
(எல்லாக்‌ கர்ம யோகாதி உபாயங்களையும்‌ விட்டு என்னொரு வனையே சரணமாக அடைவாய்‌,
நான்‌ உன்னை உனது பாபங்்‌களிவிருந்தும்‌ விடுவிப்பேன்‌: நீ சோகிக்கவேண்டிய நிமித்தமில்லை என்பது இதன்‌ பொருள்‌;
கண்ணன்‌ இப்பொருளைக்‌ குருக்ஷேத்‌ திரத்துப்‌ போர்முனையில்‌ அருச்சுனனுக்கு உபதேசித்தான்‌.)
இது இங்கு 71பக்கங்களால்‌ விளக்கப்படுகிறது.
நல்லான்‌ இம்மந்திரத்தையும்‌ சொல்‌ சொல்லாகப்‌ பிரித்து விரிவாகப்‌ பொருள்‌ எழுதுகிறார்‌.
நடை அதிகமான வடமொழி. கலந்த மணிப்பிரவாளம்‌ என்பது மட்டுமல்ல. மிகவும்‌ கடினமானது.
அதனால்தான்‌ இது அதிகம்‌ ஆட்சி பெறவில்லை போலும்‌: தெளிவாக விளங்கிக்‌ கொள்ளக்கூடி யவாறு இதிலிருந்து சில வரிகளை எடுத்துக்‌ காட்ட இயலவில்லை. கீழ்வரும்‌ பகுதியைக்‌ காண்க.
“மாம்‌ என்று அசரயண்யமான வயக்தியைச்‌ சொல்லு
கையாலே –
நாராயண பதத்தில்‌ அனுஸந்தேயமான வாத்ஸல்யாதி குண சதுஷ்டயங்களும்‌ அனுஸந்தேசங்கள்‌.
“வாத்ஸல்யமாவது – அன்றீன்ற கன்றின்‌ பக்கல்‌ தாய்‌
பண்ணும்‌ வ்யாமோஹம்‌,;
அதாவது – சுவடுபட்ட தரையில்‌ புல்லையும்‌ காற்கடைகொள்ளும்‌ தேநுவானது தன்கடையில்‌
நின்றும்‌ புறப்பட்ட
கன்றினுடைய தோஷத்தைத்‌ தன்பேறாக நக்கி தன்‌ முலைப்‌ பாலாலே அத்தைத்‌ தரிப்பிக்குமாபோலே
ஆஸ்ரிதகமான தோஷமே போக்யமாக அங்கீகரித்து பாலே
போல்‌ சீர்‌: என்கிற தன்‌ கல்யாண குணங்களாலே அவர்களை ரக்ஷிக்கை.
ஸ்வாமித்வமாவது – ஆஸ்ரிதருடைய பேறிழவினுண்‌
டான ஸூக துக்கங்கள்‌ அவர்களுக்கன்றிக்கே யாம்படி, அவர்‌ களையுடையனாகை
ஸெளஷஸீல்யமாவது – ‘அவாக்ய நாதராக” என்கிறபடியே பெரிய மேன்மையுடையனாய்‌ ‘அவனெவ்விடத்‌
தான்யானார்‌’ என்னும்படி யிருக்கிறவன்‌ க்ஷுத்ரஸம்சாரியான சேதநனோடே அவன்‌ சிறுமையாதல்‌ தன்‌ பெருமையாதல்‌ தன்‌ நெஞ்சிற்‌ படாதபடி புரையறக்‌ கலக்கை.
ஸெளலப்யமாவது, கட்கரிய பிரமன்‌ சிவனிந்திரனென்றிவர்க்குக்‌ கட்கரிய கண்ணன்‌” என்கிறபடியே
அதீந்த்ரியனான தான்‌ எல்லாருடைய கண்ணுக்கு
மிலக்காய்க்‌ கொண்டு ஸுலபனாய்‌ நிற்கை.”

பூர்வாசாரியர்கள்‌ குறித்த பல செய்திகளும்‌ வரலாறும்‌
கூறுகிறார்‌. பட்டர்‌ பற்றிய செய்தியொன்று: பட்டர்‌ பாதிரிக்‌
குடியிலே எழுந்தருனினபோது, மறவன்‌ : முயற்குட்டியைப்‌
பிடித்தேன்‌;
அதன்‌ தாய்‌ முன்னே வந்து தண்டனிட்டவாறே
விட்டுப்‌ போந்தேன்‌” என்ன,
முயலுக்குச்‌ சரணாகதியே ரஷகமென்று உபதேசித்தாரில்லை.
அரி: ப்ராணாந்‌ பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: என்கிற ஞானம்‌ வேடனுக்கு இப்படியிருக்க,
ப்ரபத்தி வைபவம்‌ இருந்த படியென்‌ என்று பட்டர்‌ விஸ்மிதரானார்‌
துவயத்தை விளக்குமிடங்களில்‌, எம்பார்‌ பட்டர்‌ ஜீயர்‌ சிறியாத்‌ தான்‌ கொற்றியம்மைப்‌ பிராட்டி, அருளாளப்‌ பெருமாள்‌ அம்‌ மங்கியம்மாள்‌ அனந்தாழ்வான்‌ நஞ்சீயர்‌ போன்றார்‌ செய்திகள்‌ பல கூறுகிறார்‌.
நூல்‌ முழுமையும்‌ ராமாயணம்‌ உபநிடதம்‌ கதை நாலாயிரப்‌ பிரபந்தம்‌ முதலியவற்றின்‌ மேற்கோள்கள்‌ அளவின்றிக்‌ காணப்படும்‌.

——–
மணிப்பிரவாளம்‌
மணிப்பிரவாளம்‌ பற்றிய பல செய்திகளை எமது தமிழ்‌ இலக்கிய வரலாற்று நூல்களில்‌ வெவ்வேறிடங்களில்‌ விளங்கக்‌ கூறியிருக்கிறோம்‌
* இங்கு மலையாள மொழியிலக்கணத்திலிருந்து
சில குறிப்புக்களை மட்டும்‌ தருகிறோம்‌. இக்குறிப்புக்களோடு அச்‌ செய்திகளையும்‌ சேர்த்துப்‌ படித்துக்‌ கொள்க:
“இரண்டு வகையான சொற்கள்‌ கலப்பதாலேயே நாட்டு
மொழி – சமஸ்கிருதக்‌ கலப்புத்‌ தோன்ற முடியும்‌.
அவ்வாறு தோன்றும்‌ தனித்‌ தன்மையுடைய வாக்கியங்களை மணிப்பிர வாளம்‌ என்று பெயரிடுவது இலக்கணை.
மணி என்பது நாட்டு மொழியையும்‌ பிரவாளம்‌ என்பது சமஸ்கிருதத்தையும்‌ ஒரு தலையாகக்‌ குறிக்கின்றன.
தமிழ்மணி ஸம்ஸ்க்ருத பவழம்‌ கோக்கின்றேன்‌. வ்ருத்தமான செந்நூன்‌ மேல்‌. என்று வழங்குதலைப்‌ பார்க்க.
ஆனால்‌,தமிழ்‌ சம்ஸ்க்ருதம் என்று உள்ள ஸுமனஸ்ஸுகள்‌ கொண்டொரு : இண்ட மால தொடுக்கின்றேன்‌
புண்டரிகாக்ஷ பூஜயா(ய்‌). என்றும்‌,
ஸம்ஸ்க்ருத மாயின செங்கழிநீரும்‌
நற்றமி மாயின பிச்சக மலரும்‌
ஏக கலந்து கரம்பக மாலாம்‌
வ்ருத்த மனோஜ்ஞாம்‌ ஸம்க்ருத யிஷ்யே.
என்றும்‌ கற்பிக்கின்ற கருத்துக்கள்‌ மணிப்பிரவாளம்‌ என்ற
பெயருக்குப்‌ பொருந்துவதில்லை.
இப்பாடல்களில்‌ காணப்படும்‌ “மாலை: என்பது நாட்டு மொழி – சமஸ்கிருதக்கலப்பின்‌ பெயரன்று.
ஒப்புமை அடிப்படையிலமைந்த இலக்கணையால்‌
மாலை எனக்‌ கூறப்படுகின்றது. ஆனால்‌ மணிப்பிரவாளம்‌ என்ற பெயரோ, இலக்கணை இடுகுறி ஆகிய இரண்டின்‌ அடிப்படை யிலும்‌ அமைந்ததாகும்‌.”*
இக்கருத்து மலையாள மொழி மணிப்பிரவாளத்துக்கு
லீலாதிலகம்‌ என்பது அவ்விலக்கணத்தைக்‌ கூறும்‌ மலையாள இலக்கண நூல்‌.
தமிழில்‌ மணிப்பிரவாளம்‌ உரை நடையில்‌ வருவதே யொழியச்‌ செய்யுளில்‌ வந்ததில்லை, அதற்கு இலக்கணமும்‌ இல்லை.

————

உலாப்‌ பிரபந்தம்‌
உலா என்பது இறைவன்‌ நீராடி அலங்கரித்துக்‌ குழாங்கள்‌ புடை சூழ நையாத மனத்தினரையும்‌ நைவிக்கும்‌ பொருட்டு

வீதியிலே உலாவரும்போது, சம்பிரதாயமான
பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண்‌ என்ற ஏழு பருவ மகளிரும்‌
கண்டு காழமுறுகிறார்கள்‌ என்று பாடும்‌ அமைப்‌ புடையது.
இது அடி வரையறையின்றி நிமிர்ந்து செல்லுகின்ற கலிவெண்பா யாப்பினால்‌ பாடப்பெறும்‌.
இறைவனே ஆன்மாக்‌ களுக்கெல்லாம்‌ நாயகனாதவின்‌ அவனை கண்டு பெண்டிர்‌ காமுற்றனர்‌ என்று சொல்லும்போது,
பெண்டிர்‌ மட்டுமல்லாது எல்லா உயிர்களுமே அவன்மீது காதல்‌ கொண்டன என்று சொல்லும்‌ பொருத்தமும்‌ அமைகிறது.

தலத்தின்‌ சிறப்புக்கள்‌,
இறைவன்‌ பெருமை, அவன்‌ திருமஞ்சனம்‌ கொள்ளும்‌ சிறப்பு,-அவன்‌ அணிகலன்‌ அணிந்து அலங்கரித்துக்‌ கொள்ளுதல்‌,
அவன்‌அமர்ந்து வருகின்ற வாகனச்‌ சிறப்பு, உடன்வரும்‌ குழாங்கள்‌ முதலியன தொடக்கப்‌ பகுதியில்‌ விரிவாகச்‌ சொல்லப்பெறும்‌.
வீதிகளின்‌ வழியே பெருமான்‌ உலா வருங்கால்‌ எழு பருவ மகளிரும்‌ கண்டு காதலித்துக்‌ கலக்க முற்றார்கள்‌ என்று
கவிராயர்‌ பருவத்துக்குப்‌ பொருந்த கற்பனைத்‌ திறனோடு சொல்வது இப்‌ பிரபந்தமாகும்‌.
அவ்வப்‌ பருவங்களுக்குரிய செயலாகிய சிற்றி லிழைத்தல்‌, கழங்காடுதல்‌, அம்மனையாடுதல்‌,
பாவை விளை யாட்டு, ஊசல்‌ நீராடுதல்‌, பந்தாடுதல்‌, யாழ்‌ வாசித்தல்‌ முதலிய விளையாட்டுக்களும்‌ பிறவும்‌ சொல்லப் பெறும்‌.
சொல்லுங்கால்‌ மடக்கு முதலிய சொல்லணிகள்‌ அதிகம்‌ அமைக்கப் பெறும்‌.
சமயம்‌ நோக்கி மாதப்‌ பெயர்கள்‌ நாட்‌ பெயர்கள்‌ வாரப்‌ பெயர்‌ கள்‌ முதலியன சிலேடை வகையால்‌ சுவையாகச்‌ கூறவும்‌ பெறும்‌.
இடையே தல புராணச்‌ செய்திகள்‌ பலவும்‌ பெய்யப்பெறும்‌,
இவ்வாறெல்லாம்‌ நிகழ, பாட்டுடைத்‌ தலைவன்‌ போந்தான்‌ உலா என்று நூலை முடிப்பது மரபு.

ஏழு பருவத்துக்கும்‌ உரிய ஆண்டுகளை இலக்கணநூல்கள்‌
கூறும்‌.
இவை முறையே 3-8, 9-70, 77-74, 75-15, 24, 29, 36 என்பது
பன்னிரு பாட்டியல்‌; 7, 77, 73, 19, 25, 31, 40 என்பது பிங்கல
நிகண்டு.
பிற பாட்டியல்களும்‌ வெவ்வேநாகக்‌ கூறும்‌.
பின்‌ வருவது ஒரு தனிப்பாடல்‌;
பேதை தனக்குப்‌ பிராயமும்‌ ஏழு; பெதும்பைக்கு ஒன்பது;
ஒதிய மங்கைக்குப்‌ பன்னிரண்‌ டாகும்‌; ஒளிர்‌ மடந்தை
மாதருக்‌ கீரேழ்‌; அரிவை பதினெண்‌; மகிழ்‌ தெரிவைச்‌
சாதிமூவே ழெனும்‌; பேரிளம்‌ நாலெட்டுத்‌ தையலர்க்கே.
காதல்‌ தோற்றியும்‌ தோன்றாதும்‌ உள்ளது பெதும்பைப்‌
பருவநிலையாதலால்‌, அதைப்‌ பாடுவது கடினம்‌ என்ற கருத்தோடு,
பேசும்‌ உலாவிற்‌ பெதும்பை புலி’ என்று பழம்பாடல்‌ கூறும்‌.

திருமால்‌ பிரபந்தங்களாக அறியப்‌படுபவை மூன்றே,
திருக்குறுங்குடி. அழகிய நம்பியுலா
சிறுபுலியூர்‌்உலா –
இரண்டின்‌ ஆசிரியர்‌ பெயரும்‌ தெரியவில்லை;
காலம்‌ 77ஆம்‌ நூற்றாண்டு.
மற்றது திருவேங்கடஉலா, காலத்தால்‌ அவ் விரண்டுக்கும்‌ முற்பட்டது.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ உடையவர் மஹாத்ம்யம் —

August 18, 2023

அநந்தம் பிரதமம் ரூபம் லஷ்மணஸ் ச ததா பர
பல பத்ரஸ் து கலவ் கஸ்ஸித் பவிஷ்யதி -என்று -பவிஷ்ய புராணம் -சேஷ அம்சமாகவும் சொல்லுவார்

ப்ரதமோ நந்த ரூபஸ் ச த்விதீயோ லஷ்மணஸ் ததா
த்ருதீயோ பலராமஸ் ச கலவ் ராமானுஜோ முனி -பூர்வர் வாக்கியம்

ஸ்ருதிர் நஷ்டா ஸ்ம்ருதிர் லுப்தா ப்ராயேண பதிதா த்விஜா
அங்காநி ச வி சீர்ணாநி ஹா விருத்தோ வர்த்ததே கலீ –என்று பகவான் ஆணை இட
மந் நியோகாத் பூத புரியாம் அஹீநாம் ஈஸ்வர கலவ்
ஸ்ரீ ராமாமாநுஜ ரூபேண ஜனிஷ்யதி ஸதாம் முதே -புத்ர காமேஷ்டி யாகம் மூலமாக இளையபெருமாள் போல் திருவவதாரம்

பதிஷ்யே ஏக ஏவ அஹம் நரகே குரு பாதகாத்
ஸர்வே கச்சந்து பவதாம் கிருபயா பரமம் பதம் -என்று ஆசை உடையார்க்கு என்று வரம்பு அறுத்து எம்பெருமானார் ஆனார்

உலகோர் எல்லாம் அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே -நாரணற்கு ஆயினரே
இவை என் தனக்கு அன்று அருளால் தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து

வேதாந்த ஸித்தாந்த ஸமர்த்தநாய பாஹ்யாந்தர ப்ராந்தா மதாப நுத்யை
சேஷாம் ஸஹ கேஸவ யஜ்வ தேவ்யாம் தேஜோ நிதி கஸ்சி ததா விராஸீத் –என்றும்

ஸேஷோ வா ஸைன்ய நாதோ வா ஸ்ரீ பதிர் வேதி ஸாத்விகை
விதர்க்யாய மஹா ப்ராஞ்ஜைர் யதிராஜாய மங்களம் -என்றும் ஆந்திர பூர்ணர் -என்னும் வடுக நம்பி

ராமாநுஜார்ய குரவே நர வேஷ பாஜே
சேஷாய தூத கலயே கலயே ப்ராணாமாந்
யோ மாத்ருஸா நபி க்ருசான் பரிபாதுகாம
பூமா வவதராத் உதஞ்சித போத பூமா -விஸ்வ குண தர்ச சம்பூ -வேங்கடாத்ரி மஹா கவி

மேஷார்த்தா ஸம்பவம் விஷ்ணோர் தர்சன ஸ்தாபன உத் ஸூ கம்
துண்டீர மண்டலே சேஷ மூர்த்திம் ராமானுஜம் பஜே -திவ்ய ஸூரி ஸ்தோத்ரம் -ப்ரஹ்ம தந்த்ர ஸ்வ தந்த்ர ஸ்வாமிகள்

————

ஒரு பூரண மனித ஆயுளைப் பூர்த்தி செய்த மகான் ஸ்ரீராமானுஜர். அவ்வாறு 120 ஆண்டுகள் வாழ்ந்து ஆன்மிக சமுதாயக் கடமையாற்றிய அப்பெருமகனாரின் வாழ்க்கையை 120 வாக்கியங்களில் தொகுத்தளித்திருக்கிறார் மெய்யூர் ஸ்ரீநரசிம்மாச்சார்யார். உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜரைப் பற்றிய ஒவ்வொரு வாக்கியமும் ‘உடையவாக’வே முடிவது சிறப்புக்குரியது.

1. ஸ்ரீ பெரும்பூதூரை பிறப்பிடமாக உடையவர்.
2. ஆஸுரிகேசவாசார்யர் மற்றும் காந்திமதிதேவியை பெற்றோர்களாக உடையவர்.
3. சித்திரையில் ஆதிரை நாளில் அவதரித்த பெருமையை உடையவர்.
4. திருமலை நம்பியை மாதுலராக உடையவர்.
5. மாதுலரால் சூட்டப்பட்ட லக்ஷ்மணன் என்ற பெயரை உடையவர்.
6. பிற்காலத்தில் சூட்டப்பட்ட இளையாழ்வான், ராமானுஜர் என்ற பெயர்களை உடையவர்.
7. பதினாறு வயதிற்குள் நன்கு கசடறக்கற்றுக்கொண்ட வேத, வேதாங்க, சாஸ்திர கல்வியை உடையவர்.
8. நல்லார் பரவும் ராமானுஜன், கற்றார் காமுறு சீலன் என்று போற்றப்பட்ட பெருமையை உடையவர்.
9. வேதாந்த சாஸ்திரத்தை போதித்த யாதவபிரகாசரை குருவாக உடையவர்.
10. அனந்தனாம் ஆதிசேஷனின் அவதாரமாகப் போற்றப்படும் பெருமையை உடையவர்.
11. தன் சிறிய தாயாரின் மகன் கோவிந்தனை சிஷ்யனாக ஏற்று, எம்பார் என்னும் ஆசார்யனாக்கிய பெருமையை உடையவர்.
12. அன்பினால் பகை வென்ற அருஞ்செயல் வீரத்தை உடையவர்.
13. வேதாந்தம் பயிலும்போதே குருவுடன் வாதம் செய்து ப்ரம்மத்தின் உண்மை நிலையை உணர்த்தும் உபநிஷத் வாக்கியங்களுக்கு சரியான முறையில் அர்த்தம் செய்த பெருமையை உடையவர்.
14. பூலகில் வைகுந்தம் காட்டிய வித்தகர் என்ற பெருமையை உடையவர்.
15. பூரண ஞானப் பொலிவை புறத்தே பொசிந்து காட்டும் வடிவழகை உடையவர்.
16. மண்ணுலகில் சாதனைகள் பல புரிந்த சரித்திரச் சான்றோன் என்ற புகழ் உடையவர்.
17. மேதா விலாஸத்தையும், தீக்ஷ்ணமான புத்தியையும் உடையவர்.
18. வாக்சாதூர்யம் உடையவர்.
19. வேதாந்த விஷய ஞானத்தில் தனக்குப் போட்டியாக அவதரித்தவன் என்றும், அத்வைத சித்தாந்தத்தை அசைக்கக்கூடியவன் என்றும், சாஸ்திர ஞானத்தில் தன்னையும் விஞ்சக்கூடியவன் என்றும், யாதவ பிரகாசரை அஞ்சச் செய்த பெருமை உடையவர்.
20. தன்னைக் கொல்லச் செய்த சூழ்ச்சியை அறிந்து நடுக்காட்டில் தப்பி வந்து தேவப் பெருமாளால் (காஞ்சி வரதர்) காஞ்சியில் சேர்க்கப்பட்ட அற்புதத்தை உடையவர்.
21. கரிகிரிமேல் காவலனாய் (காஞ்சி வரதர்) நிற்கும் கண்ணனுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்த பாக்கியத்தை உடையவர்.
22. ஆளவந்தாரின் திவ்ய கடாக்ஷத்திற்கு பாத்ரரான பெருமையை உடையவர்.
23. திருக்கச்சி நம்பி மூலம் தேவப்பெருமாளால் அருளப் பெற்ற வசிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபனத்திற்குத் தேவையான ஆறு வார்த்தைகளைக் கேட்ட பாக்கியத்தை உடையவர்.
24. ஆளவந்தாரின் அனுக்ரஹ விசேஷத்தால் ஐந்து ஆசார்யர்களைப் பெற்ற பாக்கியம் உடையவர்.
25. தேவாதி ராஜன் காஞ்சி வரதர் திருஉள்ளப்படி பெரிய நம்பியை ஆச்ரயித்து பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்யப் பெற்று மந்த்ரோபதேசம் பெற்ற பாக்கியம் உடையவர்.
26. திருமலை நம்பியிடம் ஸ்ரீமத் ராமாயணத்தின் விசேஷார்த்தங்களை ஸ்வீகரித்த பெருமையை உடையவர்.
27. திருக்கோட்டியூர் நம்பியிடம் திருமந்த்ரார்த்த விசேஷங்களைப் பெற்று ஸர்வஜனங்களுக்கும் பிரகாசப்படுத்திய பரந்த உள்ளம் உடையவர்.
28. க்ருஹஸ்தாச்ரமத்தில் வெறுப்புற்று ஸந்யாஸாச்ரமத்தை ஸ்வீகரித்த பக்குவம் உடையவர்.
29. சைவனாக மாறிய தன் தம்பி கோவிந்தனை திருமலை நம்பிகள் மூலம் திருத்தி வைஷ்ணவனாக்கி தன் சிஷ்யனாகக் கொண்ட வாத்ஸல்யம் உடையவர்.
30. ஆளவந்தாரின் மனோரதத்தைப் பூர்த்தி செய்ய ஸ்ரீ பாஷ்யத்தை இயற்றிய பெருமையை உடையவர்.
31. இதர மதஸ்தர்களை வாதில் வென்று விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை ஸ்தாபனம் செய்த பெருமையை உடையவர்.
32. சகல சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான சிஷ்யர்களைக் கொண்ட பெருமையை உடையவர்.
33. 74 ஸிம்ஹாஸனாதிபதிகளை ஏற்படுத்திய பெருமையை உடையவர்.
34. அத்வைதியான தன் குரு யாதவ பிரகாசரை தனக்கு சிஷ்யனாக ஏற்ற பெருந்தன்மையை உடையவர்.
35. மூன்று உலகங்களின் புண்ய பலனாகிற முக்கோலை உடையவர்.
36. ‘‘வாரீர் எம் உடையவரே’’ என்று திருவரங்கனால் அருளப் பாடிட்டு அழைக்கப்ெபற்ற பாக்கியம் உடையவர்.
37. ‘‘உபய விபூதி ஐச்வர்யமும் நீர் இட்ட வழக்காய் இருக்கும்’’ என்று அரங்க நகரப்பனால் அருளப் பெற்ற பாக்கியம் உடையவர்.
38. தன் உடன் பிறந்தாளின் பிள்ளை தாசரதி என்ற முதலியாண்டானை மட்டும் துறக்காமல் தம் த்ரிதண்டமாகவே கருதி தம்முடன் வைத்துக் கொண்ட கருணையை உடையவர்.
39. வயதிலும் ஞானத்திலும் சீலத்திலும் தன்னை விஞ்சி நின்ற கூரத்தாழ்வானை தன்னுடைய பவித்ரமாகக் கருதி பிரதான சிஷ்யராகக் கொண்ட பெருமையை உடையவர்.
40. காஷாயம் உடுத்தி முக்கோல் பிடித்து துறவுக்கோலம் பூண்ட நிலையில் முன்னிலும் அழகாக விளங்கக் கண்ட திருக்கச்சி நம்பியால் ‘‘யதிராஜர்’’ என்றழைக்கப்பட்ட பெருமையை உடையவர்.
41. ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யப் பணியை இனிது நடத்திய பெருமையை உடையவர்.
42. திருவரங்கம் பெரிய கோயிலைப் பழுது பார்த்து செப்பனிட்டு நந்தவனம், மண்டபங்கள், மருத்துவச்சாலை, நூல் நிலையங்கள் அமைத்து ஆழ்வார்கள் அனுபவித்த ரஸம் குன்றாமல் ஆராமம் சூழ்ந்த ஆரங்கத்தைக் காத்த பெருமை உடையவர்.
43. திருவரங்க நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்த சோழச் சிற்றரசன் அகளங்கனைத் தேர்ந்தெடுத்த அறிவுக்கூர்மை உடையவர்.
44. உறங்காவில்லிதாஸனை திருவரங்கனின் கண்ணழகில் ஈடுபடுத்தி பகவத் பாகவத கைங்கர்யத்தில் ஈடுபடும்படி செய்த பெருமை உடையவர்.
45. சீரிய பண்புகளையும், தெய்வீக அருளையும் உடையவர்.
46. திருவரங்கத்தில் பொருட் செல்வத்தோடு, அறிவுச் செல்வமும் அருட்செல்வமும் பெருகச் செய்த பெருமையை உடையவர்.
47. திருக்கோட்டியூர் நம்பியால், தன் பரந்த உள்ளத்தையும் பிறர் வாழ்வில் விருப்பினையும் உகந்தருளியதால் ‘எம்பெருமானார்’ என்ற பெயர் சூட்டப்பட்ட பெருமை உடையவர்.
48. பரம வைதீக சித்தாந்தம் என்று இருந்ததை ‘எம்பெருமானார் தரிசனம்’ என்று அழைப்பதே அரங்கன் திருஉள்ளம் என்று திருக்கோஷ்டியூர் நம்பியால் போற்றப்பட்ட பெருமையை உடையவர்.
49. திருக்கோட்டியூர் நம்பி தானே உகந்து சரம ச்லோகத்தின் ரஹஸ்யார்த்தத்தை அருளின பாக்யத்தை உடையவர்.
50. திருமாலையாண்டானிடம் ஆளவந்தார் கருத்துப்படி திருவாய்மொழி உரை கேட்கும் பாக்கியம் உடையவர்.
51. மாயாவாதியான யக்ஞமூர்த்தியை வாதப் போரில் வென்ற வீரத்தை உடையவர்.
52. தன்னைச் சரணடைந்த யக்ஞமூர்த்தியை வைஷ்ணவனாக்கி ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்ற திருநாமம் சூட்டி சிஷ்யனாக ஏற்ற மகிமையை உடையவர்.
53. சரஸ்வதி தேவியால் ‘ஸ்ரீ பாஷ்யகார்’ என்ற பெயர் சூட்டப்பட்டு ஹயக்ரீவ விக்ரஹத்தையும் பெற்ற பாக்கியம் உடையவர்.
54. திருவாய்மொழிக்கு அபூர்வ அர்த்தங்கள் ஸாதிக்கும் மேதா விலாஸம் உடையவர்.
55. ஆளவந்தாரிடம் ஏகலைவ பக்தி பூண்டு அவரின் அருளைப் பெற்ற பாக்கியம் உடையவர்.
56. திருமாலையாண்டானால் ‘சடகோபன் பொன்னடி’ என்ற திருநாமம் சூட்டப்பட்ட பாக்கியத்தை உடையவர்.
57. திருவரங்கப் பெருமாள் அரையரால் ‘‘ஆசார்யனே உபாயம் உபேயம் நடமாடும் பரமபுருஷன் என்று விச்வஸித்து இரும்’’ என்ற பஞ்சம சரமபர்வ அர்த்த விசேஷத்தை அருளப் பெற்ற பாக்கியம் உடையவர் (கர்ம, ஞான, பக்தி, ப்ரபத்தி, 4 பர்வாக்கள்).
58. திருப்பாவையில் ஆழ்ந்த அனுபவம் காரணமாக திருப்பாவை ஜீயர் என்ற திருநாமம் பெற்ற பெருமையை உடையவர்.
59. ‘பெரும்பூதூர் மாமுனி’ என்ற திருநாமம் உடையவர்.
60. ஆசார்யனையும் (ராமானுஜர்), அவரது பாதுகைகளையுமே தெய்வமாகக் கொண்ட வடுக நம்பியை சிஷ்யராக உடையவர்.
61. ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், கீதாபாஷ்யம், சரணாகதிகத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், நித்யம் என்ற நவரத்னம் ஆகிய 9 க்ரந்தங்களை இயற்றிய மேதாவிலாஸம் உடையவர்.
62. தனது சிஷ்யர்களுக்கு ஆறுவிதமான கைங்கர்யங்களை வாழ்நாளில் செய்யும்படி அருளிச்செய்த கருணையை உடையவர்.
63. குறையல் பிரானடியாரிடம் விள்ளாத அன்பு உடையவர்.
64. பொய்கைப் பிரான் (பொய்கையாழ்வார்) மறையின் குருத்தின் பொருளையும், செந்தமிழையும் கூட்டி ஒன்றத்திரித்து அன்றெரித்த திருவிளக்கை தன் உள்ளத்தே உடையவர்.
65. இருள்கெட ஞானமென்னும் நிறை விளக்கேற்றிய பூதத்திருவடித் (பூதத்தாழ்வார்) தூள்களை நெஞ்சத்தில் உடையவர்.
66. மன்னிய பேரிருள் மாண்டபின் ‘‘திருக்கண்டேன்’’ என்றுரைத்த தமிழ்த்தலைவன் பேயனின் (பேயாழ்வார்) பொன்னடி போற்றும் திரு உடையவர்.
67. சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த புகழ்ப்பாண் பெருமான் (திருப்பாணாழ்வார்) சரணபதுமதத்தை சென்னிமேல் உடையவர்.
68. இடங்கொண்ட கீர்த்திமழிசைக்கிறைவன் (திருமழிசையாழ்வார்) இணையடிப் போதடங்கும் இதயத்தை உடையவர்.
69. பசுந்துளவத் தொழில் மாலையும் செந்தமிழில் பெய்யும் மறைத் தமிழ் மாலையும் சீரங்கத்தையன் கழற்கணியும் பரன் தாளன்றி ஆதரியா மெய்யை உடையவர்.
70. கொல்லிக் காவலன் (குலசேகராழ்வார்) சொல் பதிக்கும் கலைக்கவிபாடும் பெரியவர் பாதம் துதிக்கும் பண்பை உடையவர்.
71. சோராத காதல் பெருஞ்சுழிப்பால் தொல்லை மாலையொன்றும் பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் (பெரியாழ்வார்) தாள் பேராத உள்ளம் உடையவர்.
72. அரங்கர்மெளலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் (ஆண்டாள்) தொல்லருளால் வாழும் வாழ்வை உடையவர்.
73. கலைபரவும் தண்டமிழ் செய்த நீலன்
(திருமங்கையாழ்வார்) தனக்குலகில் இனியான் என்ற பேர் உடையவர்.
74. மறைகளை ஆயிரம் இன்தமிழால் செய்த சடகோபனை (நம்மாழ்வார்) சிந்தையுள்ளே பெய்த பெரியோன் என்ற மகிமையை உடையவர்.
75. தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்பூதூர்), தமருகந்த திருமேனி (மேல்கோட்டை), தானேயான திருமேனி (ஸ்ரீரங்கம்) என்று மூன்றுவித அர்ச்சாவதார திருேமனியை உடையவர்.
76. நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் பக்தியை உடையவர்.
77. வாணன் பிழைபொறுத்த தீர்த்தனையேத்தும் சீலத்தை உடையவர்.
78. ‘‘வைப்பாய வான் பொருள்’’ என்று நல்லன்பர் மனத்தகத்தே வைக்கும் மொய்ப்புகழ் உடையவர்.
79. காரேய் கருணையும், திக்குற்ற கீர்த்தியும் உடையவர்.
80. கொழுந்து விட்டோங்கிய வள்ளல் தனமும் வெள்ளைச்சுடர் விடும் பெருமேன்மையும் உடையவர்.
81. திருவரங்கத் தமுதனாரின் (நம்மாழ்வார்) வாய் கொஞ்சிப் பரவும் புகழ் உடையவர்.
82. தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ் தன்னை தன்பத்தியென்னும் வீட்டின் கண் வைத்த பெருமையை உடையவர்.
83. தென்னத்தியூரர் (காஞ்சி வரதர்) கழலிணைக் கீழ்பூண்ட அன்பை உடையவர்.
84. ‘‘கமலத்தலர் மகள் கேள்வன் கையாழியும் சங்கும், நாந்தகமும், படர்தண்டும் ஒண்சார்ங்கவில்லும் இந்தப் பூதலம் காப்பதற்கென்று ராமானுச முனியாயின’’ என்று போற்றுப்படும் பெருமையை உடையவர்.
85. பொன்னரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னில் மயலேபெருகும் திருமனம் உடையவர்.
86. ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண்பொருள் கொண்டவர் பின்படரும் குணம் உடையவர்.
87. ‘படிகொண்ட கீர்த்தி இராமாயணம்’ என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் என்று போற்றப்படும் பெருமையை உடையவர்.
88. கண்ணனுக்கே ஆமதுகாமம் அறம்பொருள் வீடிதற்கென்றுரைத்த சீலத்தை உடையவர்.
89. சொல் ஆர்தமிழொரு மூன்றும், சுருதிகள் நான்கும், எல்லையில்லா அறநெறியாவும் தெரிந்த பெருமையை உடையவர்.
90. கருதரிய பற்பல உயிர்களும் பல்லுலகில் யாவும் பரனதென்னும் நற்பொருள் தன்னை இந்நானிலத்தே நாட்டிய மகிமையை உடையவர்.
91. அரங்கன் மலரடிக்காள் உற்றவரே தனக்குற்றவராகக் கொள்ளும் உத்தம குணம் உடையவர்.
92. மாயன் அன்றைவர் தெய்வத் தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரிய பாரினிற் சொன்ன பெருமையை உடையவர்.
93. என்பெருவினையைக் கிட்டி கிழங் கொடு வெட்டிக் களைந்த அருள் என்னும் வாளை உடையவர்.
94. வைகுந்தம், வேங்கடம், மாலிருஞ்சோலை என்னும் இருப்பிடம் கொண்ட மாயன் அவை தன்னொடும் வந்திருக்கும் மனம் உடையவர்.
95. நம் இதயத்தை இருப்பிடமாக உடையவர்.
96. எப்பொழுதும் அச்சுதனின் தாமரை இணையடியை நினைத்து மோஹித்திருப்பதைத் தவிர மற்ற விஷயங்களை அற்பமாக மதிக்கும் சீலம் உடையவர்.
97. ஞான, வைராக்ய, பக்தியாகிய, முக்கோல் உடையவர்.
98. ஸ்ரீமந் நாராயணனுடைய குணங்களாகிய முத்துக் குவியல்களை வெளியிடும் முத்துச்சிப்பிகள் போன்ற க்ரந்தங்களை இயற்றிய பெருமையை உடையவர்.
99. வாதப்போர் புரிவதிலுள்ள உத்ஸாஹமென்னும் பிசாசினால் பீடிக்கப்பட்ட யுக்திவாதம் செய்பவர்களின் புகழாகிய கடலின் பெருக்கை உறிஞ்சுவதில் அகஸ்தியர் போன்ற அறிவுச்செல்வமும் வாக்சாதுர்யமும் கொண்ட அநேக சிஷ்யர்களை
உடையவர்.
100. வேதார்த்தங்களை ஆராய்வதில் ஈடுபட்டிருப்பவர்களால் பகவத் குணங்களை விளக்கும் ராமானுஜரின் ஸ்ரீஸுக்திகளாகிய கோல் கொண்டு திசையெங்கும் பரவ முழக்கப்பட்ட புகழாகிய பறையை உடையவர்.
101. சிற்றறிவினரான நம்முடைய உள்ளத்தில் வைப்பதற்காக வேதார்த்தங்களில் மறைந்துள்ள ரஹஸ்யார்த்தத்தை மேலே எடுத்து வரும் தம் திருக்கையில் பொருந்திய ஞான முத்திரையை உடையவர்.
102. மேல் கோட்டை நாரணனை டில்லி பாதுஷாவிடமிருந்து மீட்டு தன் செல்வப்
பிள்ளையாகப் பெற்ற பாக்கியம் உடையவர்.
103. அஹங்காரமாகிய இருளை ஒழிப்பதாய், பிரகாசிப்பதாய் உள்ள திருக்கண்ணோக்கு உடையவர்.
104. நம் மனக்குகையில் வசிக்கும் சீரிய சிங்கப்பிரானின் திவ்ய கடாக்ஷத்தை உடையவர்.
105. சஞ்சலமான மனநிலையைப் போக்கும் மருந்தாயுள்ள திருவடிகளை உடையவர்.
106. அகலகில்லேன் இறையு மென்றுரை அலர்மேல் மங்கை யுறை மார்பனை திருவேங்கடவனைத் தன்னகத்தே உடையவர்.
107. மலர்மகள் மடியமரும் மாலோலனை அஹோபிலம் தன் மனக்குகையுள்
உடையவர்.
108. அலர்மகள் அன்பன் அரங்கத்தரவணையானின் பாத கமலங்களில் தன்னைக் காக்கும் பரத்தையும் அதன் பலனையும் ஸமர்ப்பித்து நிர்பரமான, நிர்பயமான வாழ்வை வாழ்ந்த மகிமையை உடையவர்.
109. திருமலையில் சீடர் அனந்தாழ்வான் மூலம் நந்தவனம் ஏற்படுத்தி இன்றளவும் நடக்கும் புஷ்பகைங்கர்யத்தை துவக்கி வைத்த
பெருமையை உடையவர்.
110. திருமலையில் எழுந்தருளியிருப்பவன் ஸ்ரீமந் நாராயணனே என்று நிரூபித்து வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இருந்த சச்சரவைத் தீர்த்து வைத்த பெருமையை உடையவர்.
111. வைணவ சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்து 120 வருடம் வாழ்ந்த பெருவாழ்வை உடையவர்.
112. மாமலராள் புணர்ந்த பொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ் கொண்டல் என்ற மகிமையை உடையவர்.
113. கடிபொழில் தென்னரங்கன் தொண்டர் குலாவும் ராமானுஜன் என்ற பெருமையை உடையவர்.
114. மிக்க நான்மறையின் சுடரொளியால் கலியிருளைப் போக்கிய ராமானுஜன் என்ற பெருமையை உடையவர்.
115. அடியைத் தொடரும் ஐவர்கட்காய் அன்று பாரதப்போர் முடிய பரிநெடுந்தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த அடியார்க்கமுதம் என்ற பெருமையை உடையவர்.
116. ‘‘பிடியைத் தொடரும் களிறென்ன யான் உன்பிறங்கியசீர் அடியைத் தொடரும்படி நல்க வேண்டும்’’ என்று திருவரங்கத்தமுதனார் பரவிய சீர்மை உடையவர்.
117. ‘‘பண்தருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் விண்டிட எங்கள் ராமானுச முனி வேழம் குவலயத்தே வந்தது’’ என்று போற்றப்படும் பெருமையை உடையவர்.
118. ஆசார்ய பரம்பரையான ரத்தினமாலையில் சூரியனிலும் அதிகமாக பிரகாசிக்கும் நடுநாயக மணியாக விளங்கும் மகிமை உடையவர்.
119. கவிதார்க்கிக சிங்கமாகிய வேதாந்த தேசிகனால் யதிராஜ ஸப்ததி என்ற உயர்ந்த அத்யற்புதமான ஸ்தோத்ரத்தினால் புகழப்பட்ட மகிமை உடையவர்.
120. சகல வித்யாநதிகளும் உற்பத்தியாகும் மலையாய் இருக்கும் மகிமை உடையவர்.

————

ஸ்ரீ பாஷ்யம் த்ரவிட ஆகம ப்ரவசனம் ஸ்ரீஸ் தலேஷ் வந்வஹம்
கைங்கர்யம் யது சைல நித்ய வசதிஸ் சார்த்த த்வய உச்சாரணம்
யத்வா பாகவத அபிமான வசதி ஸ்ரேய ஸதாம் இத் யலம்
சிஷ்யன் ப்ராஹ யதீஸ்வர பரமகாத் விஷ்ணோ பதம் ஸாஸ்வதம்

படித்வா ஸ்ரீ பாஷ்யம் ப்ரவசனம் அசக்தவ் சடரிபோர்
கிரி ஸ்ரத்தா தத் தத் ப்ரபு விரசித ஸ்தாந நிவஹே
ப்ரபோ ஸேவா யத்வா ப்ரபதன மநோ ரர்த்த மனநம்
குடீம் க்ருத்வா தஸ்மிந் யதுகிரி தடே நித்ய வசதி

———–

தத்தம் யேன தயா ஸூதாம்பு நிதினர் –யதிராஜ சப்தாதி ஸ்லோகத்தில் -தேசிகர் இளைய பெருமாளுக்கும் ராமானுஜருக்கு ஒற்றுமை பல காட்டி அருளுகிறார்
தயா அம்ருதக்கடல் ராமானுஜர்
தேவப்பெருமாளும் கருணைக்கடல் -பேர் அருளாளன்
இவர் ஸமர்ப்பித்த அம்ருத ஜலத்தைப் பருகினார் -புஷ்ட்டியை அடைந்தார்
கரு முகில் கடல் நீரைப் பருகும் -மலை மீது அமரும் -அதிக மழையைக் கொடுக்கும்
பகவானாகிற முகில் வண்ணனும் அமுத நீரைப் பருகி புஷ்ட்டியை அடைந்து
நமக்கு ஆளாக்கி தன்னையே தரும் கற்பகமாகிறான் –

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் பிங்களாம் பத்ம மாலி நீம் -ஸ்ரீ ஸூக்தம்
பொன்னிறமான திருமேனி உடையவள் ஆகையால் பிராட்டி பிங்களாம் –
ஸமஸ்த மங்களங்களும் அருள்பவள்
ஆகையால் அன்றோ ராமானுஜர் பிங்கள வருஷத்தில் திரு அவதாரம்

ராமன் எவனுக்குத் தம்பியோ அவரே ராமானுஜன்
ராமர் கோஷ்ட்டி இருந்த விபீஷணன் போல் அன்றே ராமானுஜர் கோஷ்ட்டியில் இருந்த பிள்ளை உறங்கா வல்லி தாஸர்
ஆகையால் கருணா காகுஸ்தனை விஞ்சிய காரேய் ராமதாசர்
ராமை யாருக்குத் தங்கையோ -பெரும்பூதூர் மா முனிக்குப் பின்னானாள் வாழியே –
பெரும்பூதூர் மா முனிக்குப் பின்னானாள்-நான் நாள்பின் -வாழியே –
பூரம் -புனர்பூசம் -பூசம் ஆஸ்லேஷம் மகம் -திருவாதிரை அன்றோ
போஜராஜன் என்னும் கவி இராமாயண சம்பூவில்
ஸ்வதஸ் ஸித்தம் யஸ்மின் இதர துரவாபம் விஜயதே
ஸூ மித்ரா புத்ர த்வதாபி ஜகதி ராமானுஜ பதம்
யதீயா ஷித்வந்த ப்ரதி நிதி பவேத் அம்புஜ யுகம்
நிசீதே நிர்நித்ரம் யதி தமபி ஸாஷாத் க்ருத ச
பரதன் சத்ருக்னர் இடம் ராமானுஜ பத பிரயோகம் -துரவாபம்-என்கிறார்
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத
இவருக்கே ஸ்வதஸ் ஸித்தம் –
ப்ரஹ்மானந்தமாகிய மோக்ஷத்தைக் கொடுத்து உய்விக்கவே எம்பெருமானே அநு பிரவேசம் செய்த அநந்தாழ்வானே ராமானுஜர் –

ந சேத் ராமாநுஜே த்யே தத் சதுரா சதுர் அஷரி
காம் தசாம் ப்ரத்யத்யேரன் ஜந்தவோ ஹந்த மாத்ருஸா

அநு கல்ப பூத முரபித்பத் ஸதாம் அஜஹத் த்ரிவர்கம் அபவர்க வைபவம் சல சித்த வ்ருத்தி வினி வர்த்தன் ஒவ்ஷதம் சரணம் யதீந்த்ர சரணம் விருணிமஹே

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பிரசித்தமான பிரமாணங்கள் –

February 26, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

————–

வ்ருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாசான் நிஸார்த்த மர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோர் இஹ ஜந்மனா ச —
எட்டு மாதங்கள் உழைத்து மழைக்காலம் நான்கு மாதங்கள் நிம்மதியாகவும்
பகலில் உழைத்து இரவில் நிம்மதியாகவும்
இளமையில் உழைத்து முதுமையில் நிம்மதியாகவும் இருப்பது போலே
அவ்வுலக நிம்மதிக்கு இஹ லோகத்தில் பிரயத்தனம் செய்ய வேண்டுமே

————–

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும்

——-

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி-

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

———————-

வேதம் -வேதயதி -தர்ம அதர்மங்களை அறிவிக்கின்றதால் வேதம்
ப்ரத்யக்ஷ அநுமித்யா வா யஸ்து உபாயோ ந வித்யதே
ஏநம் விதந்தி வேதோ தஸ்மாத் வேதஸ்ய வேத தா

—–

ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||

இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்.
நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),
பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான
வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ
அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.

உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லை
என்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.

———–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1), தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3); நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1); ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) – ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.
இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று
16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———-

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும்,
பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ,
அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

———————

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||–இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம்

———-

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார்.

————–

7-வது காண்டத்தில், 5-வது ப்ரஸ்நத்தில் மேற்கண்டவற்றைக் காண்கிறோம்.
இங்கு, வேதேப்யஸ்ஸ்வாஹா) என்று வருகிறது. உடனே, காதாப்யஸ்ஸ்வாஹா) என்கிறது.
ஸம்ஸ்க்ருத வேதத்தையும், த்ராவிட வேதமான திவ்ய ப்ரபந்தத்தையும் முறையே வேத மற்றும் காதா என்கிற சொற்கள் குறிக்கின்றன.
ஸ்வாமி தேசிகன் காதா இவ்வார்த்தையை த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் பலமுறை
திவ்ய ப்ரபந்தத்தைக் குறித்து உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.
உதாரணமாக, தாத்பர்ய ரத்னாவளியின் இரண்டாவது பாசுரம் காண்க:

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
க்ரத்நாதி ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்)||

பொருள் –
காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத்
தன்னில் கொண்டதாய், அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான
ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய், சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை,
வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற
அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக்கொண்டு கடைகிறேன்.
இத்துடன் த்ராவிட வேதாந்தத்தின் பெருமைகளை ஸம்ஸ்க்ருத வேதத்தின் மூலம் கண்டறியும் விசாரம் முற்றிற்று.

—————–

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

—————-

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

————-

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது-

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11)
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே”

———————-

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

“அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது

ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்-

——————-

எம்பெருமானார் கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களால்
எம்பெருமானின் பரதவ, சௌலப்ய, பிரணயித்வமாகிற மூன்று அரசு நிலைகளைக் காட்டியருளுகிறார்.
பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது
அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.
எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி. அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.
எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

————————

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ”–

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”–வேதார்த்த சங்க்ரஹம்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்-சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்-கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம் -[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார்
சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார்.
எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன.
மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில்.
இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில்
“தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது.
தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.
”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ அதே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது
தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது.
திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன”
எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத
பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய்
நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள்.
”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது.
பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும்,
குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில்
“செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

புண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று இவ்வளவே உள்ளதை
எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம்.
ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை
புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார்.
இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

ஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே.
வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர்.
பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள்.
இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.

ஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு
எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது.
திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும்
அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

————–

உக்த்லக்ஷண-தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரணபோஷநாதிகமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”

தர்மசீலா: =அவர்கள் நியமிக்கப்பட்ட தர்மத்தைத் தங்கள் தகுதியாக உடையவர்கள்.
“தர்மம்” என்ற சொல் பொதுப்படையான தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்,
அல்லது விசேஷமாக வைஷ்ணவ தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
முன் ஸ்லோகத்தில் “யதா யதாஹி தர்மஸ்ய” என்றிருப்பதால் முதலில் சொன்ன பொருளும்,
இவ்வுரையில் அடுத்த சொல் “வைஷ்ணவாக்ரேசரா:” என்றுள்ளதால் பின் சொன்ன பொருளும் ஒக்கும்.

வைஷ்ணவாக்ரேசரா: – இவர்கள் வைஷ்ணவர்களில் முதன்மையானோர். இதுதான் இங்கு மிக முக்யமான குறிப்பு.
ஸ்வாமி இராமானுசரின் சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
வைஷ்ணவாக்ரேசரா: என்கிற சொல் அவர்களின் உயர்ந்த ஸ்தானத்தைக் காட்டுகிறது.

மத் ஸமாஸ்ரயேண பவித்ரா: – என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்கள்.
இக் குறிப்பு, “துயரறு சுடரடி தொழுது”,
“ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்” போன்ற ஆழ்வார்களின் திருவாக்குகளால் கிளர்த் தப்பட்டது.

மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸாகோசாரதயா –
“என் சொல்லிச்சொல்லுகேன்?”
“நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லே” என்று ஆழ்வார்கள் எம்பெருமானின்
திவ்ய நாமங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலானவை நினைவையும் சொல்லையும் கடந்தவை என்று உணர்ந்தவர்கள்.

மத் தர்சநேன வினா ஸ்வாத்ம தாரணபோஷணாதிகம் அலபமாநா: –
ஆழ்வார்களால் எம்பெருமானைக் காணாமலும் உணராமலும் நிற்கவோ தரிக்கவோ இயலாது.
“தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”,
“காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” போன்ற பாசுரங்களில் இது தெளிவு.

க்ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா: – எம்பெருமானோடு ஒரு நொடிப் பிரிவும்கூட ஆழ்வார்களால்
ஆயிரம் ஊழிக் காலப் பிரிவாகவே உணரப்படுகிறது. இதை அவர்கள் சொற்களிலேயே காணலாம்.
“ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ”,
“ஊழியில் பெரிதாய் நாழிகை என்னும்”,
“ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” போல்வன,

ப்ரசிதில-சர்வ-காத்ரா: –
எம்பெருமானோடு பிரிந்தபோதும், சேர்ந்தபோதும் ஆழ்வார்களின் திருமேனி களைத்தும் இளைத்துமே போந்தன.
கூடலில், சேர்த்தி இன்பத்தால் களைப்பு. பிரிவில், துயரத்தால் களைப்பு.
“காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்”,
“காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்க் கூச்சமறா”,
“உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்”,
மற்றும் “உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளேன்” என்பன போல்வன.

சுருங்கச் சொல்லில், “ஒரு ஸாது வைஷ்ணவர்களில் தலைவராய் இருப்பார், தர்ம ஒழுக்கத்தில் நிலை நிற்பவர்,
கண்ணனான என்னையே புகலாய் நினைத்திருப்பார், என் நாமங்களும் சேஷ்டிதங்களும் திவ்யமானவை,
மனதையும் சொல்லையும் கடந்தவை என்றிருப்பார், இவற்றின் அனுபவமின்றித் தரித்திலராவார்,
என் காட்சியும் உனர்வுமின்றித் தரித்திலர், என் பிரிவு ஒரு கணமும் ஓர் ஊழியாய் நினைப்பார்”
ஒரு சாது எம்பெருமானோடு கொண்டுள்ள உறவு இப்படி நெருக்கமும் நுட்பமும் கொண்டது .

————

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே
யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே
அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய
வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)

ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும்
விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம்,
அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் ,
கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும்
குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய்
சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து
அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்

————-

ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர்.
ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.
திருவரங்கத்தமுதனாரும் ஸ்வாமியை ‘யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’ என்று இவரை
யதிகளுக்கு, அதாவது ஸந்யாஸிகளுக்கு இறைவன் என்றே போற்றுகிறார்.

ந வயம் கவ்யஸ்து கேவலம்,ந வயம் கேவல-தந்த்ர-பாரகா:, அபிது ப்ரதிவாதிவாரண-ப்ரகடாடோப-விபாடந-க்ஷமா:)

“நாம் வெறும் கவி மட்டும் அல்ல; வெறும் ஆகம தந்த்ரங்கள் அறிந்த வித்வான்கள் மட்டும் அல்ல;
நாம் அதற்கும் மேல், யானை போன்ற ப்ரதிவாதிகளின் ஆணவப் பிளிறல்களை அடக்கும் வல்லமைப் பெற்றவர்கள்” என்றார்.

வேத வேதாந்தத்தின் ரஹஸ்யமான மறைபொருளின் அர்த்தத்தை ஸ்ரீ பராசர மஹரிஷியை விட
ஸ்வாமி நம்மாழ்வார் நன்றாக விளக்கியுள்ளார். மேலும், ஆழ்வாரின் இனிமையான பாசுரங்கள்
எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகவும், உலகுய்ய வைப்பதாகவும் உள்ளது. ஆழ்வார் பரம க்ருபையால்
நமக்கருளிச்செய்த பகவத் விஷயத்தை மனத்திற்கொண்டு, ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வாரையும்,
கோடானுகோடி ஜீவன்களுக்கு தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அருளிய எம்பெருமானையும் சமநிலையில் காண்கிறார்.
எப்படி வேதாந்தமானது, பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனை எல்லோருக்கும் தாய், தந்தை, எல்லாம் என்று சொல்கிறதோ,
அதேபோல், ஸ்வாமி ஆளவந்தார் வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவடியே
தமக்கு எல்லாம் என்று சரணடைந்தார்” – வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் மூர்த்நா ப்ரணமாமி

—————————

விஷ்ணோர் தேஹானுரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ்தநூம்–
எம்பெருமான் திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு அனுரூப திருமேனி கொள்கிறாள் பிராட்டியும் –
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி-அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயநீ –

காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் -ச வாஸூ தேவோ பகவான் ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவா பரம்

பரஸ்ய ப்ரஹ்மானோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே-ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி
திங்நாகை ரர்ச்சிதஸ் தத்ர புரா விஷ்ணுஸ் சநாதன-ததோ ஹஸ்தி கிரீர் நாமக்க்யாதி ராசீன் மஹா கிரே-புராண பிரமாணம்-
திக்கஜங்களால் பூஜிக்கப் பட்டதால் ஹஸ்திகிரி
ராமோ விக்ரஹவான் தர்ம –கிருஷ்ணம் தர்மம் சனாதனம் —

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே யா ஸ்ருதி ஸ்ம்ருதி சூத்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத் —

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு-ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நசேத் ராமாநுஜத் யேஷா சதுரா சதுரஷரீ காவஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ –
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி பதம் பாதி நான்யத்ர –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

இராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச –
தேவதாயா குரோஸ்ஸாபி மந்த்ரஸ்யாபி ப்ரகீர்த்த நாத் ஐஹிக ஆமுஷ்மிகீ சித்தி த்விஜஸ் யாஸ் தே ந சம்சய —
தேவதை குரு மந்த்ரம் இவற்றை கீர்த்தனம் செய்வதால் இம்மை மறுமை பயன்கள் உண்டு -ஐயம் இல்லையே –

குரோர் நாம சதா ஜபேத் –
பவபயாபி தப்த ஜன பாகதேய வைபவ பாவிதா வதரணேந பகவதா பாஷ்ய காரேண–ஸ்ருத பிரகாசிகை ஸ்ரீ ஸூக்தி-
சம்சார பயத்தால் தவித்து கொண்டு இருக்கும் மக்களின் பாக்கியத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதாரம் –
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா-
விஷ்ணுச் சேஷீ ததீயச்சுப குணநிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி –
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பாத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அன்றோ –

ஸ்ரீ ராமாநுஜாய முநயே நம யுக்தி மாத்ரம் காமா துரோ அபி குமதி கலயன் நபீஷ்ணம் –
யாமாமநந்தி யமினாம் பகவஜ் ஜனாநாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கேட்டு காமத்தால் பீடிக்கப் பட்டவனாக இருப்பினும் ஸ்ரீ ராமாநுஜாய நாம என்று சொல்லுமவன் மோக்ஷம் அடைகின்றனர் –

உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –உதய சூர்யன் ஒத்து
திருமண் காப்பு துலங்கும் ஸ்வாமி உமது அழகிய திருமேனி காட்டி அருளுவாய் –
சரீர ஆத்ம லஷணம் ஆவது-யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே -நியந்தும் தாரயிதும் சக்யம்-
தத் சேஷை தைக ஸ்வரூப பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

லஷ்மீ நாதாக்கய சிந்தவ் சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் ததநு ரகுவராம் போஜ சஷூர்ஜ் ஜராப்யாம்
கத்வா தாம் யாமு நாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மா கரேந்த்ரம் சம்பூர்ய ப்ராணிச ஸயீ ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை —

ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யத் ந கிஞ்சன –
ஆசிநோதிஹி சாஸ்த்ரார்த்தாந் ஆஸாரே ஸ்த்தாபயத்யபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தமாசார்யம் ப்ரசக்ஷதே –ஆச்சார்ய லக்ஷணம் –

ந்ருதேஹ மாத்யம் ப்ரதிலப்ய துர்லபம் ப்லவம் ஸூ கல்யம் குரு கர்ண தாரம் -மயாநுகூலேன நபஸ்வதேரித புமான் பவாப்திம் நதரேத்ச ஆத்மஹா —
முதன்மை வாய்ந்த -கிடைத்தற்கு அரிய -திறமை வாய்ந்த -குருவை ஓட காரனாக கொண்டதுமான மானிட உடல் ஆகிய ஓடத்தை பெற்று –
அனுகூலமாய் இருக்கும் என்னை – ஈஸ்வரனான -காற்றினால் தூண்டப்பட்டு சம்சாரக் கடலை தாண்டாதவன் தற்கொலை செய்து கொண்டவன் ஆவான் –

ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதைச் சிதம்-பாபராசிம் தஹத்யாச தூலராசி மிவாநல–கோவிந்தனை ஒருகால் நினைத்தாலும்
சேதனர் நூறு பிறவிகளில் சேர்த்த பாப குவியலை நெருப்பு பஞ்சு குவியலை போலே உடனே கொளுத்தி விடுகிறான் –

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ச ராந்தர் வ்யவஸ்த்திதி -ந ஸவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச சைவசம் —
கண்ணன் பால் சிந்தனை இல்லா மனுஷர் உடன் வாசம் செய்யும் கொடுமை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூண்டுக்களுள் இருப்பதை விட கொடியது

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ –
ஆரியன் -சமதி சர்வ சாஸ்த்ரரர் –அதத்வேப்யோ தூராத்யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா —
சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் -தத்வம் அல்லாதவற்றவைகள் நின்றும் தூரஸ்தர்
யஸ்மாத் தாதுபதேஷடாசவ் தஸ்மாத் குருத்ரோ குரு –உபதேசம் பண்ணும் ஆச்சார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மேம்பட்டவர்
நாராயணோ அபி விக்ருதிம் யாதி குரோ ப்ரஸியு தஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந போஷயதி –

தத்தேரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷி-வ்யாஸ திலகம் -அரங்கன் தன் பாதத்தை ஆச்சார்யர் கட்டளையை எதிர்பார்த்து அளிக்கிறான்
த்ருணீக்ருத விரிஞ்யாதி நிரங்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந
மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சனாதன ஸ்கந்த பூதா ருகாத் யாஸித்தே சாகா பூதாஸ் ததாபரே —
கிருதயுகம் வேதம் மரம் -தர்மம் வேர் -ருகாதிகள் தண்டு -மற்றவை கிளைகள் –
விஷ்ணோர் பூதாநி லோகாநாம் பாவநாய சரந்திஹி–ஸ்ரீமத் பாகவதம் –1–2–28-திரிந்து புனிதமாக்கும் முதல் ஆழ்வார்கள்
சிர நிர்வ்ருத்தம் அப்யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம் -பால காண்டம் -முன்பே நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போல் காட்டப்பட்டது –
யாவன் சரனவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ஜ நான்விதவ் சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி —
ஸ்ரீ பரதன் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசன் மேல் அவா –

நைவ சப்தே ஸ்வதோ தோஷா ப்ராமாண்ய பரிபந்தின–சந்தி கிந்து ஸ்வதஸ் தஸ்ய ப்ரமாணத்வமிதிஸ்த்திதி –
வக்து ராசய தோஷேண கேஷூ சித்ததபோத்யதே–
சப்தத்தில் பிரமாணம் ஆவதற்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனில் பிரமாணம் ஆகும் தன்மையே –
அதன் இடத்தில் இயல்பாய் அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிராமணத் தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில் உள்ள குற்றத்தால்
சில இடங்களில் வேறுபடுகிறது -ஆகம ப்ராமாண்யம் –ஆளவந்தார் –

ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேசவச்யாத் கர்ணாம்ருதை ஸ்து திசதை ரநவாப்தா பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத் தர
பதாநுகுணம் பிரசாதம் –ஸ்ரீதேசிகன் -பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றது சூடிக் கொடுத்த இவள் திரு மாலை சமர்ப்பித்ததாலே என்றவாறு –

பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததநயா பித்ரு மாத்ருப் ருத்ய வர்க்கே சடமதி ருபயாதியோ அர்த்த த்ருஷ்ணாம்
தமதமசேஷ்ட மவேஹி நாஸ்ய பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7–30–சடமதி உடன் உள்ளவன் ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லன் –

அசேஷ ஜகத்திதா நுஸாசந ஸ்ருதி நிகர சிர –உலகு அனைத்துக்கும் ஹிதம் கற்பிக்கும் வேதாந்தம் -வேதாந்த சங்க்ரஹம் –
மாதா பித்ரு ஸஹஸ்ரேப்யோ வத்சல தரம் ஹி சாஸ்திரம்

கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமன் –சிவன் வாணனை ரஷித்து அளிக்க பெருமாளை வேண்டிக் கொண்டான் –
உன்னை புருஷோத்தமனாக அறிகிறேன் என்றபடி -கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத –தற்கால பாடம்

தேஜஸ் -துர்ஜனை அநபிபவ நீயத்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம் -தீயோரால் அடர்க்கப் படாமை –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம் நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷாண்டோ பஹாதா ஜநா –
கலிகாலம் பாஷாண்டிகள் மலிந்து இருப்பார்களே –
யத் ப்ரஹ்ம கல்ப நியதா அநுபவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துரிஹா க்ஷணார்த்தே–
அரை நொடியில் -பதினாயிரம் ப்ரஹ்ம கர்ப்ப காலம் அனுபவித்தாலும் தீராத பாபங்களை சம்பாதிக்கிறோம் –
வாஸூ தேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாஸதே த்ருஷிதோ ஜாஹ்நவீ தீரே கூபம் கநதி துர்மதி –
-விடாய் தீர கங்கை கரையில் கிணறு வெட்டுவது போலே தேவதாந்த்ர பஜனம் –

வால்மீகி கிரி ஸம்பூதா ராம சாகரகாமிநீ புநாதி புவனம் புண்யா ராமாயண மஹாநதீ –
-வால்மீகி மலையில் தோன்றி -பெருமாள் என்னும் கடலை நோக்கிச் செல்லும் புண்ய நதி ஸ்ரீ ராமாயணம் –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம் காண்டக்ராஹ மஹாமீநம் வந்தே ராமாயனார்ணவம் — –
ஸ்லோகங்கள் -சார நீர் -சர்க்கம் அலைகள் -காண்டம் -முதலை / பெரிய மீன்கள் / ஸ்ரீ ராமாயணம் கடல் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அதிருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதசம கல்மஷம் — ஸ்ரீ ராம சரிதம் அமுத கடலை பருகி
போதும் என்று திருப்தி அடையாத குற்றம் அற்ற வால்மீகி -பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் போலே –

சம்யக் நியாய கலாபேந மஹா பாரதேநச உப ப்ரும்ஹித வேதாய நமோ வியாஸாய விஷ்ணவே
-ஸ்ரீ சுருதி பிரகாசர் -ஸ்ரீ வேத வியாசர் மஹா பாரதத்தையும் பரம கிருபையால் அருளிச் செய்கிறார்

சீல க ஏஷ தவ ஹந்த தயைகஸிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே ஷோதீய ஸோபிஹி ஜனஸ்ய க்ருதே
க்ருதீத்வ மத்ராவதீர்ய நநு லோசந கோசரோ பூ —
அதிமானுஷ ஸ்தவம் -அருளே நிறைந்த கடலே –அற்ப சகல மனுஷ நயன விஷயமாகும் படி திரு அவதரித்து
அருளும் உன் ஷீலா குணத்தை என் என்பது –
ஜடரா குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்தவர தீர்க்கா நிபதித நிஜா பாத்யாதித் சாவ தீர்ண பித்ருக்ரமாத் -ரஹஸ்ய த்ரயசாரம் –
அளற்று ஓடையில் விழுந்த குழந்தை எடுக்கவே –
கம்சத்தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று மார்க்கண்டேயன் உபதேசிக்க -திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –

அநதிகத பத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய ப்ரத்யஷாதி சகல பிராமண ததிதி கர்த்தவ்யதா ரூப சமீசி
நந்யாய மார்காணாம்–ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் –
சொல் வாக்கியங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மை கருத்து ப்ரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களை உணர்த்துவது
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வலிகள் இவற்றை அறியாதவர்கள் -பேதையர் –

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரேஷ்டாரம் ஈஸ்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா –
ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நிய ந கிஞ்சன –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா –பெருமாள் உடன் கூடி சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -பிராட்டி –
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –திருவாய் -2–10-7-
பசவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வலீலயா தேநைவ மோசநீயாஸ்தே நாநயைர் மோசயிதும் ஷமா –
கன்ம பாசக்கயிற்றால் கட்டப்பட்டு -அவனாலே விடுவிக்கப் படத் தக்கவர்கள் -பிறரால் அல்ல –
யா ப்ரீதிர விவேகா நாம் விஷயேஷ்வ நபாயிநீ -த்வம் அநு ஸ்மரத்தாஸ் சாமே ஹ்ருதயா ந்நாபசர்ப்பது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1–20–13-
சம்சாரிகள் விஷயாந்தரங்களில் ப்ரீதி நீங்காது இருப்பது போலே உன்னை தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும்
என் இருதயத்தின் நின்றும் நீங்காது நிலைத்து இருந்து அருள்வாய் –
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்திர் அபிசாப்யய—

பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் யேநாவ் யாஹத சங்கல்பம் கஸ்து லஷ்மீ தரம் விது –மாயவனுக்கு மஹிமை ஸூ தர்சனம்
சர்வ பாபாநி வேம் ப்ராஹூ கடஸ் தத்தாஹ உச்யதே –பிரமாணம் – வேம் -பாபங்களை -அவற்றை கொளுத்துவதால் கட–எனவே வேங்கடம் –
யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா பிரதீயதே -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச –சரணாகதி வித்யை அளித்த ஆச்சார்யனே
ஸ்ரீ வைகுண்டமும் திருப் பாற் கடலும் ஸ்ரீ மத் த்வாரகையும் எல்லாம் வகுத்த இடமே –
யோந்யதா சாந்த மாத்மாநம் அந்யதா பிரதிபத்யதே கிம் தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாப ஹாரிணா–ஆத்ம அபஹாரமே மிக பெரிய பாபம் –
அநாத்மன் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி –அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ்த்திதம் –சம்சார வ்ருஷத்துக்கு வித்து-
சதுர் வேததாரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேதபார பராக்ரஅந்த ச வை ப்ராஹ்மண கர்தபா — வாஸூ தேவனை அறியாமல் குங்குமம் சுமந்த கழுதை –
அந்நியம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ –
மாம் வஹவா ச தேவேச வரம் மத்தோ க்ருஹாணாச யேநாஹம் சர்வ பூதா நாம் பூஜ்யாத் பூஜ்யத்ரோஸ் பவம் –
கேசவன் அனைவரும் அறியும்படி நீ வரம் வாங்கி கொள்ள வேண்டும் -அனைவரும் பூஜிக்க உரியவனாக ஆகும் படி அருள வேணும் -என்றதும்
த்வம்ச ருத்ர மஹா பாஹோ சாஸ்த்ராணி காரயா -மோஹ சாஸ்திரங்களை செய்விக்க வேண்டும் -மருள் சுரந்த பசுபதி ஆகமம் –

சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
த்வயோர்பாவ–த்விதா- த்விதைவ- த்வைதம்- நத்வைதம் அத்வைதம் –
இதம் சர்வம் யத் அயமாத்மா -ப்ருஹ–6–5–7-
ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி –ப்ருஹ –6–4–19-
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம –தைத்ய -ஆனந்த வல்லி -1–1-
நிஷ்களம் நிஷ்க்ரியம் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மய்வ பவதி -முண்டகம் –3–2–6-
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்தமசவ் வித்ருதவ் திஷ்டத–ப்ருஹ –5-8–8–நியமனம் ஆதாரம்
ஐததாத்ம் யமிதம் சர்வம்–சாந்தோக்யம் –6–8-7-
தத்வமஸி —
நித்யோ நித்யானாம் சேதனச் சேதனானாம் ஏகோ பஹு நாம் யோவிததாதி காமான் –கட-2–5–12- / ஸ்வேதா -6-13-
அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய ஸ்த்தித—ஸ்ரீ கீதை –18-20-
சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை –11–40-
ஏஷ சம்பிரசாதோ அஸ்மத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஸ்பத்யதே –
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யகம் –
தத பூத பவ்ய ஈஸ்வரத்வா தேவ வாத்சல்யா திசயாத் தேகதா நபி தோஷான் போக்யதயா பஸ்ய தீத்யர்த்த –வாத்சல்ய குணத்தால்
தோஷங்களை போக்யமாக ஈஸ்வரன் கொள்கிறான் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு வல்லி –
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6-
தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே —6-14-2-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன-
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக–விபாஸ -சத்யகாம -ஸத்யஸங்கல்ப –
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய—சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி–
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய —
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது -கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் -ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ-
அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே -சாந்தோக்யம் -என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
–ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண -ஸூ பால உபநிஷத் –
-தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -புருஷ சூக்தம்-
யத் ஊர்த்வம் கார்க்கிதிவோ யதர்வாக் ப்ருதிவ்யா –ப்ரு-3–8–6-மூன்று காலங்களில் உண்டாக்கப்பட்ட அனைத்தும் அவற்றுக்கு
காரண பூதமான ஆகாசத்தில் சேர்க்கப்பட்டு அதனையே ஆதாரமாக கொண்டு உள்ளன –
கஸ்மின் நு கல்வாகச ஒதச்ச ப்ரோதச்ச –ப்ரு–5–8–7-இந்த ஆகாசத்துக்கு காரண பூதம் எது என்னில்-
ஏதஸ்மிந் து கல் வஷரே கார்க்கி ஆகச ஒதச்ச ப்ரோதச்ச–ப்ரு –3–8–7- அக்ஷரமே ஆதாரம் -இதுவே பிரதானம் –

ந தஸ்ய பிராணா உத்க்ராமந்தி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–6-

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

————

“மத்‌பக்தம்‌ ங்வபசம்‌ வாபி நிரந்தரம்‌ குர்வந்தி யே நரா: | பத்வகோடிர௱தேநாபி ௩ க்ஷமாமி வஸுந்த,ரே |” [பூகேவியே! சண்டாளனாயிருக்கபோதிலும்‌ என்னுடைய பக்தனை எந்த ஜனங்கள்‌ நிந்தை செய்கிறார்களோ,
அவர்‌களைக்‌ கோடிக்கணக்கான பத்மகாலங்களானாலும்‌ பொறுக்க மாட்டேன்‌.

| ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌,ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சசே,தீ, மம த்‌,ரோஹீ (05२11456 509 ந த வைஷ்ணவ: || [ ஸ்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆஜ்ஞைகளே. அவற்றை எவன்‌ மீறி ஈடக்கறுனோ அவன்‌ என்‌ ஆணையை மீறி நடக்கிறவனாகையால்‌ எனக்கு த்ரோஹம்‌ செய்தவ னாதறான்‌. என்னுடைய பக்தனாயிருந்தபோதிலும்‌ அவன்‌ வைஷ்னவனல்லன்‌. ] “மநீஷீ வைதி,காசாரம்‌ மஸா5$5பி ௩ லங்க,யேத்‌” [ ஈல்ல மனத்தையுடையவன்‌ வேததர்மத்தை மனத்தினாலேயும்‌ மீறக்கூடாது. ]

“ய: மாஸ்த்ரவிதி,முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: | ® नण ஸித்‌;திமவாப்நோதி ௩ ஸாுகழம்‌ ௩ பராங்க;திம்‌’ [ எவனொருவன்‌ சாஸ்திரவிதியை வீட்டுத்‌ தன்‌ இஷ்டப்படி நடக்கறானோ அவன்‌ சித்தியையும்‌, ஸுகத்தையும்‌ மேலான கதியையும்‌ அடைவதில்லை. ] “தாகஹம்‌ த்‌,விஷத: க்ரூராம்‌ ஸம்ஸாரேஷு நராதழமார்‌| க்ஷிபாம்யஜஸ்ரமமரப,ாநா ஸாரீஷ்வேவ யோ நிஷா ||” [என்னை த்‌வேஷிப்பவர்களும்‌, கொடூரமானவர்களும்‌, மனிதர்களுள்‌ இழ்மையானவர்களும்‌, சபமற்றவர்களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌ ௮ திலும்‌ அஸுரயோனிகளில்‌ (ஏப்போதும்‌ தள்ளுகிறேன்‌.]

“யதபராத,ஸஹஸ்ரமஜஸ்ர ஜம்‌ த்வயி முரண்ய ஹிரண்ய உபாவஹத்‌ | வரக, தேர சிரம்‌ த்வமவிக்ரியோ விக்ருதிம்‌ அர்ப்ப,க நிர்பஜநாத,க;ா: 1″ [சரண்யனே! உன்‌ வீஜயத்தில்‌ ஹிரண்யன்‌ இடைவீடா து செய்த ஆயிரக்கணக்கான அபரா தங்களினாலும்‌ வெகுநாள்‌ விகாரமடையாத நீ; சிறவனான ப்ரஹ்லாதனைத்‌ தன்‌ புறத்தியதால்‌ விகாரமடைந்தாய்‌] என்‌ று பாகவதாபசாரம்‌ செய்தவர்களில்‌ தலைவனாக எண்ணப்படும்‌ ஹிரண்யனே.

“வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர: புமாந்‌ | விஷ்ணுராராத்‌,யதே பந்தள நரந்யஸ்‌ தத்‌ தோஷகாரக: ॥” ‘[வர்ணாங்ரம தர்மப்படி நடக்கும்‌ புருஷனா லேயே பரம புருஷனான விஷ்ணு ஆரா திக்கப்படுகிறான்‌ . அவனை உ௨௧ப்‌ பிப்பது வேறொன்றுமன்று.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்‌ தில்‌ சொல்லப்பட்ட தன்றோ. (தவ தர்மா) உன்னை அடைவ தற்கு ஸாதனமாகச்‌ சொல்லப்பட்ட தர்மங்களை *யஜ்ஞோ த,நேக தபஸா ऽना ८०७९ விவிதி,ஷந்தி ப்ராஹ்மணா:” , [யஜ்ஞத்தினாலும்‌. தானத்தினாலும்‌. சீபஸ்ஸினாலும்‌ ப்ராஹ்‌ மணர்கள்‌ பரமா ப்மாவை அறிய விரும்புகிறோர்கள்‌.] என்று சொல்லப்பட்ட கன்றோ. (தவ தர்மா) “யஜ்ஞதாநதப: கர்ம ௩ த்யாஜ்யம்‌ கார்யமேவ தத்‌” [யஜ்ஞம்‌, தானம்‌. தபஸ்‌ | ஆகிய கர்மங்கள்‌ வீடத்தக்கவையல்ல; செய்யத்தக்கவையே. | என்‌ ¢ உன்‌ னாலேயே விதிக்கப்பட்ட தர்மங்களை. (தர்மா) தர்மாணி’ என்னும்‌ பதத்தின்‌ சளந்தஸரூபம்‌. (யத்‌ யுபேோ பிம) யாகொரு சாரணத்தினால்‌ லோபம்‌ செய்தோமோ “ ம்ருத்யோ: பதம்‌ யோபயந்த: “ என்றவீடத்திற்போலே “யோபயதி’ என்னும்‌ தாது லோபம்‌ செய்வது என்னும்‌ பொருளிலே வந்துள்ளது. (தேவ ) வாஸுகேவனே! (தஸ்மாத்‌ ஏநஸ;) அந்த அந்தப்‌ பாபங்களினால்‌. (மா ந ரீரிஷ:) எங்களை ஹிம்ஸிக்கவேண்டாம்‌. ரிஷதி’ தாது ஹிம்ஸை என்னும்‌ பொருளையுடையது. (ஏஈஸ:) “ஏதி கர்த்தாரம்‌ இதி ஏஈ:” [தன்னைச்‌ செய்பவனை வந்து அடைகிற தாகையால்‌ “कः என்று பாபம்‌ சொல்லப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி,

“யத தே,நுஸஹஸ்ரேஷு வத்ஸோ விந்த,தி மாதரம்‌ | தத பூர்வக்ருதம்‌ கர்ம கர்த்தாரமதி,க,ச்ச,தி ॥” [ ஆயிரக்கணக்கான பசுக்களில்‌ எப்படிக்‌ கன்றுக்குட்டி தாயை அடைகிறதோ, அப்படியே முன்‌ செய்யப்பட்ட கர்மமும்‌ செய்தவனை அடைறெது

“ய ஏஷோ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே…. தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட கமேவமக்ஷிணீ”’ [ ஆதித்யமண்டலத்தின்‌ நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ காணப்படுகிறொனோ, அவனுக்கு ஸூர்ய னல்‌ ८०००१८५ தாமரைபோன்ற இரு கண்கள்‌ உள.]

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந: | , நாக, பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக,தோ மது,ராம்‌ புரீம்‌ | [பாற்கடலில்‌ பையத்தயின்ற பரமனான இந்த ஸ்ரீமந்‌ நாராயணனேசேஷயயனத்தைவீட்டு மதராபுரிக்குக்‌கண்ணனாய்‌ வந்துள்ளான்‌.]

“தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ ஸமிந்த,தே” [ஸர்வஜ்ஞர்களாய்‌, அதிப்பதையே தொழிலாகக்‌ கொண்ட வர்களாயுள்ள நித்யஸூரிகள்‌ அப்பரமபதத்தில்‌ (எப்போ அம்‌) வீழிப்புடன்‌ வீளங்குகறார்கள்‌.]

“தத்‌, யதள இவஷீகதூலமக்‌ரெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூ,யந்தே |”
[அக்னியில்‌ இட்ட டஞ்சு எப்படிக்‌ கொளுத்தப்படு கிறதோ அப்படியே இவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தஹிக்கப்படுகின்‌ றன. ]
தத்‌, யதள புஷ்கரபலாரய ஆபோ ए ங்லிஷ்யந்தே | ஏவம்‌ ஏவம்விதி, பாபம்‌ கர்ம ® ங்லிஷ்யதே || `
[எப்படித்‌ தாமரை யிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டுவதில்லையோ: அப்படியே இம்மாதிரி ௮றிபவனீடத்தில்‌ பாபகர்மம்‌ ஓட்டாது..] என்று வேதங்களிலும்‌.
“ தத.தி,கம உத்தர பூர்வாக,யோரமங்லேஷவிகாமொள ”
[ப்ரஹ்ம வித்யையைத்‌ தொடங்கியவுடன்‌ உத்தராகங்கள்‌ ஓட்டமாட்டா; பூர்வாகங்‌ கள்‌ நசித்துவிடும்‌.] என்று பாதராயணராலும்‌.

நீலதோயத, மத்யஸ்தஎ வித்வுல்லேகேவ பளஸ்வரா ‘ ^” ப்ரஸந்நாதி,த்ய வர்ச்சஸம்‌” -சந்த்பூ,ாஸ்கர வர்ச்சஸம்‌” [குளிர்ச்சியிலே சந்திரன்‌ போன்‌ றதாய்‌, ஒளியிலே ஸூர்யன்‌. போன்றதான காந்தியை உடையவல்‌ ]

“க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம்‌ ஸ்மரதி நித்யமா: | ஜலம்‌ பி,த்வா யதஏ பத்மம்‌ ஈரகாது,த்‌,தராம்யஹம்‌ |” [க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன்‌ . என்னை எப்போதும்‌ நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப்‌ பிளந்து கொண்டு தாமரையை எடுப்பதுபேரல்‌ நான்‌ ` நரகத்தி லிருந்து தூக்கிவிழுகிறேன்‌.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி லும்‌ சொல்லப்படுகின்‌ றது.

“ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந்‌ ஹரி: | ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர்‌ மைத்ரேம ஈாநயோர்‌ வித்‌,யதே பரம்‌ ॥ ग [மைத்ரேயரே ! தேவர்‌, திர்யக்‌, மநுஷ்யர்‌ ஆகிய இவற்றில்‌, ஆணாயிருப்பது பகவான்‌ ஹரியாகவும்‌, டெண்ணாயிருப்ப.து லக்ஷ்மீ தவியாகவும்‌ உள்ளனர்‌. இவ்விருவர்க்கும்‌ மேலான தொன்றுமில்லை.]

நாயமாத்மா ப்ரவசநேந லப்‌,யோ ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்‌,யஸ்‌ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌ ||” [இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால்‌ அடையத்தக்கவனல்லன்‌ ; எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்‌ கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இப்பரமாத்மா தன்‌ திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு கிறான்‌.] என்று சுடர்மிகுசருதியில்‌ சொல்லப்பட்டது.

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | தா யதஸ்யாய௩ம்‌ பூர்வம்‌ தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ‘ [ஜலம்‌ ஈரனாகிற பகவானால்‌ ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. யால்‌ நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்‌: இவ னுக்கு இருப்பீடமாயிருக்கையால்‌ இவன்‌ நாராயணனெனப்‌ படுகிறான்‌ ] என்று மனுஸ்ம்ருதி

“ ப்ருஹத்த்வாத்‌; ப்‌ரும்ஹணத்வாச்ச தத்‌; ப்‌;ரஹ்மேத்யபி,தி,யதே [பெரியதாயிருக்கையாலும்‌, பிறரைப்‌ பெரியவர்களாகச்‌ செய்வதாலும்‌ ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள்‌ சொல்லப்‌ படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம்‌ சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம்—“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5”

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | . ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” [‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வகுள மாலை–ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –ஸ்ரீமணவாள மாமுனிகளின் திரு அத்யயன தீர்த்தம்–

February 24, 2023

ஸ்ரீ நம்மாழ்வாரின் திருநாமங்கள்

சடகோபன்,
மாறன்,
காரிமாறன்,
பராங்குசன்,
வகுளாபரணன்,
குருகைப்பிரான்,
குருகூர் நம்பி,
திருவாய்மொழி பெருமாள்,
பெருநல் துறைவன்,
குமரி துறைவன்,
பவரோக பண்டிதன்,
முனி வேந்து,
பரப்ரம்ம யோகி,
நாவலன் பெருமாள்,
ஞான தேசிகன்,
ஞான பிரான்,
தொண்டர் பிரான்,
நாவீரர்,
திருநாவீறு உடையபிரான்,
உதய பாஸ்கரர்,
வகுள பூஷண பாஸ்கரர்,
ஞானத் தமிழுக்கு அரசு,
ஞானத் தமிழ் கடல்,
மெய் ஞானக் கவி,
தெய்வ ஞானக் கவி,
தெய்வ ஞான செம்மல்,
நாவலர் பெருமாள்,
பாவலர் தம்பிரான்,
வினவாது உணர்ந்த விரகர்,
குழந்தை முனி,
ஸ்ரீவைணவக் குலபதி,
பிரபன்ன ஜன கூடஸ்தர்,
மணிவல்லி,
பெரியன் –
இவையெல்லாம் நம்மாழ்வாரின் திருநாமங்களாக போற்றப்படுகிறது.

————–

ஸ்ரீ வகுள மாலை-may june -1937-

அகந்தை செத்த பின் அமலன் தோற்றுவான்
ஆடை இல்லாதவன் அரை மனிதன்
இந்திரையை மார்பில் வைத்தான் இருடீகேசன்
ஈசன் இடத்து உமையை அந்தி பகல் அமைத்தான்
உந்திக் கமலன் கமலையை நாவில் வைத்தான்
ஊமையராய் வாழ்தலை உத்தமன் உகவான்
எக்காலத்தும் எம்பெருமான் அடி சேர்
ஏய்ந்த புகழ் யுடையோன் எம் இராமானுசன்
ஐ ஐத் தத்துவம் நம் உயிர் என்க
ஒரு தனி முதல்வன் காண் எம் ஆதிப்பிரான்
ஓதல் ஓதுவித்தல் ஒப்பிலார் தொழில்கள்
ஒவ்வியம் அவித்தலே ஆக்கத்திற்கு அடியாம்

—————

ஸ்ரீ மாறன் அடி மெய்ம்மை

மாறன் அடி பணிந்து உயந்த உடையவர் ஒருவரே உத்தாரகர் -உலகு உய்ய ஒரே வழி

மறை நெறி தேறித் தூய மாறனார் பாத பற்பே
இறை எனும் முறைமை காக்கும் திறமையே தெரிக்கும் தீரர்
முறை முறை முழங்கி யாங்கே துறை துறை உயிர் அளிக்கும்
நிறை மொழி சொரிந்து யாண்டும் நிரம்பியது இயம்புவாமே

சந்திம் இச்சந்தி சாது -சாதுக்கள் ஸத்தின் மேல் அன்பு செய்பவர்
ஸத் -ஸந்தாதா -சந்திமான் -பரமனின் திரு நாமங்கள்
பரனும் ஏனையரும் சந்தி நிலமே சடகோப தத்வம்
பாதுகா ஸ்ரீ பெற்ற பரதாழ்வானை -பரனை ஒன்றினீரோ -பேறு பெற்றீரோ –என்று உஸாவினார் பரத்வாஜ முனிவர் –
ஆர்யம் மார்க்கம் ப்ரபந்நஸ்ய நாநுமந்யே தக புமாந் -என்று வால்மீகி பகவான் புகழ்கிறார்
இது அடியாகவே
நாம் ஆழ்வாரை
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்-ஆத்யஸ்யன குல பதே-
குல தனம்
குல தைவதம்
எம்பெருமான் திருப்பாதத்தையும் ஸ்ரீ சடாரி என்கிறோம் –

சத்ருக்ந ஆழ்வானை -பாதுகா ப்ருத்ய அநு ப்ருத்யன் என்பர்

சூழ் விசும்பு திருவாய் மொழியில்
நிதி -பத பிரயோகம் ஸ்ரீ சடகோபன் -திருவடி நிலை என்றே பிள்ளானும் நம்பிள்ளையும் அருளிச் செய்கிறார்கள்
நிதி -நல்ல ஆதாரம் -நல்ல காப்பு -என்றவாறு
சாந்தியை சாதுவாக்குவாரே சாதுக்கள்
வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ
கவி முனி ரிஷி இவரே
ஏஷ விக்ரஹவான் தர்ம
ஏஷ புத்யாதி கோ லோகே
தபஸ் ச பராயணம்
விச்வா மித்ரர் -உலகுக்கு எல்லாம் அன்பார் அன்றோ -மந்திரம் கொள் மறை முனிவன்
காயத்ரியே விஸ்வ ஜநநீ
இவரையே ஏஷ வீர்ய வாதம் வர -என்கிறார் வால்மீகி

அந்த விச்வா மித்ர முனிவரிலும் தூயராய்
அவ்வன்பர் தமக்கும் நல் அன்பராய்
தமிழ் மறை பருப்பதமுமாய்
அப்பன் பொற் பாதுகமுமாய்
அப்பனும் அடியாரும் ஒன்றித் திகழும் ஓர் தனிச் சாந்தி நிலமாய்
திரு நாரணன் ஒருவனே தனக்கு மாறு என்னலாம்படி மதி நலம் அருளும்
தெள் அருள் மாரியாய் -தெள்ளிய மாறப் பிரானாய்

ஏவம் யுக அநு ரூபாப்யாம் பகவான் யுக வர்த்திபி –கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
க்வசித் க்வசித் மஹா ராஜத்ரவிநேஷுச பூரிச
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருத மாலா பயஸ்வி நீ காவேரீ ச மஹா புண்யா ப்ரதீ சீச மஹா நதி
யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனு ஜேஸ்வர ப்ரயோ பக்தா பகவதி வாஸூ தேவே அமலா சயா
தேவ ரிஷி பூதாத்ம ந்ரூணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ரிணீ ச ராஜன்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்
ஸ்வ பாத மூலம் பஜத ப்ரியஸ்ய த்யக்த அந்நிய பாவஸ்ய ஹரி பரேச விகர் மயச் சோத் பதிதம் கதம் சித் துநோதி ஸர்வம் ஹ்ருதி சந்நிவிஷ்ட

யுக வர்ண க்ரமம் கலவ் -என்பதால் வர்ணமும்
பக்தா நாராயண பராயணா பன்மையாலே ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைஸ் பாகவத ஸஹ -என்று ஓதிய பக்தர்களே ஆழ்வார்கள் என்றும்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்-என்ற ஒருமையாலே
பூதம் தனியனில் போல் –நம்மாழ்வார் அங்கி மற்றவர்கள் அங்கங்கள் என்றும்
வாஸூ தேவ ஸர்வம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று விடாய்த்துப் பெற்றவராயும்
அவர் தம்மிலும் ஸ மஹாத்மா ஸூ துர்லப-என்று பரன் தன்னாலும் பெரு விடாய்த்துப் பெறப்பட்டவராயும்-ஆழ்வாரே இந்த சுலோகத்துக்கு விஷயம் –

பக்தா நாராயண பராயணா
கலவ் தேவ பராங்குச

ஆழ்வார் கண்ணன் கழலிணை -என்று தேறி மதுரகவியாரும்
தேவு மற்று அறியேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ என்று
திண்ணம் நாரணமே என்றது திண்ணம் பராங்குசமே
பரன் திருப்பாதுகமே இவ்வாழ்வார் என்றதை
திருடித் திருடி தயிர் உருக்கும் நெய்யோடு உண்டான் அடிச் சடகோபன் –பொருநல் குருகூர் எந்தை என்றும்
திரு நாடனை வேலை சுட்ட சிலை ஆரமுதின் அடிச் சடகோபனைச் சென்று இறைஞ்சும் தலையார் எம்மை ஆளும் தபோ தநரே
திரு நாட்டிலும்
திரு அயோத்தியிலும்
திரு ஆய்ப்பாடியிலும்
திருக் குருகூரிலும்
விளங்கா நிற்கும் ஓர் ஒருவரே பரன் அடிச் சடகோபன்

குருகையில் கூட்டம் கொண்டார் –என்னை வானின் வரம்பிடை நின்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அங்குப் போய் அவர்க்கு ஆட் செய்வேனே
மாறன் -விலக்ஷணன் என்பதை பாவகத்தால் தன் திரு அவதாரம் பதினொன்று

என்று இப்பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழ்ந்து
நாவாகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்து அளித்த கோவகத்தார்
மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே இவர்

மறைச் சிரம் மருவும் ஆன்றோர் அன்று தொட்டு இன்று காறும்
அறை மறை செழித்த மாறன் அமிழ்தின் இணை அடியே மூழ்கும்
முறைமையே பழகி வாழும் மூதுவர் உலகு வாழ
நிறை யரித்து திருவாய் ஓதும் நிதி எனும் நிலை விரித்தோம் –

—————

ஸ்ரீ திருவாய் மொழி அனுபவம்

காரணந்து த்யேய
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸூ -அடுத்து ப்ரஹ்ம லக்ஷண வாக்யம்
ப்ரஹ்மம் ஆனந்த மயம் -ப்ரஹ்மமே ஆனந்தம் -உயர்வற உயர் -நலம்
உடையவன் அவன் -ஸர்வ ஸ்வாமி -அஸ்மத் ஸ்வாமி
அருளினன்
அதிபதி
அடி தொழுது -அடிகள் தோறும் ஸ்வாமித்வம் சொல்லி

ம்

து
என்று நான்கு அடிகளிலும் தொடங்கி -உமது என்று தானும் அவனதே என்று காட்டி அருளி
முடிவிலும் முனியே நான்முகனிலும்
என் என்பது என் யான் என்பது என் என்று
ஸ்வத்வ ஸ்வா தந்தர்யங்களை -விலக்கி
என் முதல் தனி வித்தேயோ
முழு மூ வுலகாதிக்கு எல்லாம் முதல் தனி யுன்னை யுன்னை
முக்தி பெறும் தர்ணத்திலே அனுசந்தித்து
முனியே என்ற விளியால் காரணமே -மவ்நம் -சிந்தனை –தவம் செய்து
இனிப்போடே தொடங்கி
இனிதே பேசிப்பாடி
இனிப்போடே
இந்த திவ்ய ப்ரபந்தம்
இனிது முற்றிற்று
ஆனந்த வல்லி ப்ருகு வல்லி கூட்டிப் பொருள் அருளுகிறார்

————–

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –
அந்தாதி தொடையால் அமைந்த ஒன்பது கட்டளை கலித்துறை பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தம் –

பூ மான் பிறந்து சிறந்தது வேலை புவி படைத்த
கோ மான் பிறந்து சிறந்தது நான்மறை கூடல் சங்கம்
நா மான் பிறந்து சிறந்தது பண்டு எதிராசன் என்னும்
சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே –1-

வேலை-கடலானது
பூ மான் -பூவிலே எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி
பிறந்து சிறந்தது -பெருமை உள்ளது
புவி படைத்த கோ மான் -புற்றில் இருந்து பூத்த-ஸ்ரீ பூமா தேவி உண்டாக்கிய ஸ்ரீ வால்மீகி பகவான்
பிறந்து சிறந்தது நான்மறை -வேத ப்ராஸேத ஸாதா ஸீத் ஸாஷாத் ராமாயணா மநா —
முனிவனைக் கோமான் என்றது வாக்கின் சீர்மையை நோக்கி -கோ வாக்கு -கோதா என்னுமா போலே –
நா மான் பிறந்து சிறந்தது கூடல் சங்கம் –நா வீறு படைத்த நம்மாழ்வார் -திரு அவதாரம் -மதுரை தமிழ் சங்கம் –
கண்ணன் கழலிணை -அடி பொறித்த முறியைச் சங்கப்பலகை தாங்கிய விருத்தாந்தம்
சேமம் குருகையோ –ஈ யாடுவதோ கருடர்க்கு எதிரே –
பண்டு -இங்கனம் வேலை -நான்மறை கூடல் சங்கம் -முதலியன சிறந்தன ஒவ்வொருவராலே பண்டு –
எதிராசன் என்னும் சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே -இவர் ஒருவரால் அம்மூன்றும் ஒரு சேரச் சிறப்புற்றதுடன்
சரணாகதியும் சரணாகதி ஸாஸ்த்ரமும் சிறந்த பிரபத்தி ஸாஸ்த்ர பலனும் ஸமஸ்த ஜகத்தும் உஜ்ஜீவிக்கும் படி இவரால் சிறப்புற்றது –
ஆதிசேஷன் அவதாரம் என்பதால் வேலை -திருப்பாற் கடல் சிறப்புற்றது
ஸ்ரீ பாஷ்யம் வேதாந்த சாரம் வேதாந்த ஸங்க்ரஹம் வேதாந்த தீபம் இவற்றால் நான்மறை சிறப்புற்றது
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் என்பதால் கூடல் சங்கம் சிறப்புற்றது –

————

சிறந்தது செல்வம் சிறவாதது கலி சில் சமய
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த வைகுந்த மன்னு முனி
திறந்தது வாசல் திறவா நரகம் தெரிந்த வையம்
பிறந்தது பூதூர்ப் பிறவா முனிவன் பிறந்த பின்னே –2-

பிறவா முனிவன்-நம்மைப் போல் கர்மவஸ்யராய் பிறவாமல் இச்சா மாத்ரத்தால்
ஸங்கல்பித்துக் கொண்டு திரு அவதரித்த எம்பெருமானார்
பிறந்தது பூதூர்-திரு அவதரித்த ஸ்ரீ பெரும் பூதூர்
இவர் பிறந்த பின்னே –
சிறந்தது செல்வம் -கைங்கர்ய ஸ்ரீ சிறப்புற்றது
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -இத்யாதி
சிறவாதது கலி -கலியின் கொடுமை சிறப்பு இழந்து நலிந்தது -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
சில் சமயம் -அல்ப சமயமான சைவம்
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த -பெண்ணை இடப்பக்கம் கொண்ட சிவன் போரையும் சொல்லக் கை விட்டது –
அதனால் அன்றோ ஆழ்வானும் கண் இழந்தது –
தாழ் சடையான் சொல் கற்ற சோம்பரும் மாண்டனர்
மாதவன் பேர் வாழ்த்த என்று இடை நிலைத் தீவகமாய் ஸ்ரீ யபதியான திரு மாலின் நாமம் பலவும் நவிலச் செய்ய
வைகுந்த வாசல் திறந்தது-
நரகம் வாசல் திறவா-நலியும் நரகமும் நைந்த
தெரிந்த வையம் -லீலா விபூதி காணும் சக்தியைப் பெற்றது -உலகில் நல்லறிவு தலைப்படல் ஆயிற்று –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து உலவச் செய்தமையால் வையம் கண் பெற்றது –
முனி மன்னும் -இவ்வளவு அரிய செயல்களை ஆற்றியது எதிராச முனி
மன்னும் -நிலை பெற்று நிற்கும் -தென் ஆனாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் -என்பதற்கு ஏற்ப
ஸ்ரீ ரெங்கம் ஸ்ரீ திருவேங்கடம் ஸ்ரீ திருநாராயண புரம் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஆகிய திவ்ய தேசங்களில் நித்ய வாசம் செய்து அருளும் –

——-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம்
இன்னே இதற்கு மருந்து அறிந்தேன் இந்த மேதினியில்
தன்னேர் ஒருவர் ஒவ்வா எதிராசர் சரணம் என்று
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே -3-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம் -எழுமையும் எழு பிறப்பும் பின்னே தொடருவதால் பெரும் பிணி
பேர்த்தல் -வேரோடு கல்லிக் களைந்து எறிதல்
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவார் இல்லையாய் இருக்க
இவர் மருந்து அறிந்தேன் என்பது
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே–அறிந்திலையோ -சஞ்சல வியப்பு –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் – -எதிராசன் சரணம் என்று சொல்வதாலேயே –
பூர்வர்கள் அனைவரும் தங்கள் தங்கள் சிஷ்யருக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள்
என்று அன்றோ உபதேசித்துப் போர்வார்கள்
மேதினி -திருமாலால் வதைக்கப் பட்ட மது கைடபர்களின் மேதசினால் -கொழுப்பினால் நனைந்தது என்றவாறு –

————

விட்டது தீ வினை மாண்டது கோவம் மெய்ஞ்ஞானம் நெஞ்சில்
பட்டது வேறு பர வச்சம் தீர்ந்தது பாவம் எல்லாம்
கெட்டது வீடு தகும் என்று கேசவன் தாள் தலை மேல்
இட்டது எங்கள் ராமானுஜன் என்று இருப்பவர்க்கே –4–

கோவம் -கோபம் -கோபமே பாபங்களுக்குத் தாய் தந்தை யாதலால் -அது மாளவே மெய்ஞ்ஞானம் தத்வ அறிவு தலைப்பெறுமே –
அந்த அறிவினால் பாரமாய பழ வினை யச்சம் தீருமே
பாபம் கெடவே புடமிட்ட பொன் போலாகக் கேசவன் வீடு தகும் என்று திருவடி சம்பந்தம் செய்து தமர் ஆக்குவனே –

————–

இருக்கின் பொருளும் அறிவின் பொருளும் எழுத்து எட்டினால்
உருக்கும் பொருளும் உணர்வின் பொருளும் ஒன்றாக வெல்லாம்
சுருக்கும் பொருளும் துணிவின் பொருளும் துணிந்த பின்பு
செருக்கும் பொருளும் எதிராசன் தெரிந்தனனே –5–

இருக்கின் பொருளும் -ருக்கு என்றது நான்கு வேதங்களுக்கும் உப லக்ஷணம் -கர்ம காண்ட அர்த்தம்
அறிவின் பொருளும் -ஞான காண்ட அர்த்தம்
எழுத்து எட்டினால் உருக்கும் பொருளும் -திருமந்திர பொருளும்
உணர்வின் பொருளும் -த்வயத்தின் ஆழ் பொருளும் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
ஆத்மா முக்கியமாக அறிய வேண்டுவது பிராட்டியாலேயே பேறு என்று உணர்வதுவே –ஆகவே இங்கு த்வயத்திலேயே நோக்கு
ஒன்றாக வெல்லாம் சுருக்கும் பொருளும் -சரம ஸ்லோக பொருளும் -பஞ்சம வேத சார பூத கீத உபநிஷத் தாத்பர்யமே சரம ஸ்லோகம் தானே –
இதனது சார அர்த்தம் அறிவதற்காகவே திருக்கோஷ்டியூர் நம்பி இடம் 18 பர்யாயம் எழுந்து அருளினார் –
துணிவின் பொருளும் -ப்ரஹ்ம ஸூ த்ரத்தின் பொருளும் –
துணிந்த பின்பு -ப்ரஹ்மத்தை இன்னது என்று முடிவு காட்டுவதால் வந்த துணிவு –
செருக்கும் பொருளும் -விசிஷ்டாத்துவைத ஆழ்ந்த தேறின பொருளும் -ப்ரபத்தியே தஞ்சம் -ஆச்சார்ய அபிமானம் -உத்தாரகம்
எதிராசன் தெரிந்தனனே –இவை அனைத்தும் நமக்கும் தெரிய வைத்து அருளினார் எதிகளுக்கு எல்லாம் அரசரான படியால் –

————

தெரியாத வாதியர் தேற்றம் விட்டே திரு எட்டு எழுத்தின்
உரியார் அருள் பெற வேண்டுதிரேல் உடுவும் பிறையும்
பிரியா மதிள் பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில்
தரியாதவர் அறியார் இனி வேறு இல்லை சத்தியமே –6-

வாதியர்-புற சமயிகள்
தேற்றம் -துணிபு
திரு எட்டு எழுத்தின் உரியார்–ப்ரதிபாத்யர் ஸ்ரீயப்பதி
உடு -நக்ஷத்ரம்
பேச்சு -உபதேசம் –

திரு எட்டு எழுத்தின் உரியார் –ஸ்ரீ மன் நாராயணன் -திருமால் –
அவர் அருள் பெற வேண்டுதிரேல் -அவரது கிருபைக்குப் பாத்திரமாக விரும்புவீர் ஆகில்
தெரியாத வாதியர் தேற்றம் விட்டே -தத்வ ஹித புருஷார்த்தங்கள் இன்னவை என்று அறியாத
சமயச் சழக்கர் கத்தும் சூழ் அறவுகளை உதறித் தள்ளி –
உடுவும் பிறையும் -நக்ஷத்ரங்களும் சந்திரனும்
பிரியா மதிள் -விட்டுப் போக முடியாத உயர்ந்த மதிள்களை உடைய
பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில் தரி-தரியும் -நிலவ நிறுத்துங்கள் –
அங்கன் தரிப்பீர் ஆகில்
யாதவர் அறியார்-தரித்த அவர் அறியாதது ஏதும் உண்டோ -அனைத்தையும் அறிவர்
இனி வேறு இல்லை சத்தியமே –இதுக்கு மாறு கிடையாது -தொட்டுப் பிரமாணம் செய்கிறேன் –

சமய வாதியரால் குழம்பி தத்வ யாதாத்ம்யம் அறியாத சேதனன் ஒருவனைக் குறித்து அருளிச் செய்யும் பாசுரம் இது –

பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சாவது
சகல வேதங்களிலும் -சகல ஸாஸ்த்ரங்களிலும் -சகலமான அருளிச் செயல்களிலும் -சகல ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளிலும்
ஏக கண்டமாக -ஒரு அதிகாரிக்கு த்வயம் ஒழிய வேறே மந்த்ரம் இல்லை -மிதுனம் ஒழிய ஒரு வஸ்து இல்லை –
கைங்கர்யம் ஒழிய புருஷார்த்தம் இல்லை -ஆச்சார்ய அபிமானம் ஒழிய மோக்ஷ உபாயம் இல்லை –
பாகவத அபசாரம் ஒழிய மோக்ஷ விரோதம் இல்லை -என்பதே –

————–

சத்தியத்தின் பொருள் தத்துவத்தின் பொருள் தன்னின் உன்னும்
புத்தியத்தின் பொருள் புண்ணியத்தின் பொருள் பூ சுரர் தம்
பத்தியத்தின் பொருள் பற்று அறுக்கும் பொருள் பற்றுதலால்
முத்தியத்தின் பொருள் பூதூர் முனிவன் மொழிந்தனனே –7-

புத்தியம் -புத்தி
பத்தியம் -வேதம்

எம்பெருமானார் மொழிந்த அர்த்த விசேஷங்கள் இவை இவை என்று பட்டியல் இட்டுக் காட்டி அருளுகிறார் ஐயங்கார் இதில்

1-சத்தியத்தின் பொருள் -ஸத்யம் -உண்மை -எம்பெருமானார் தரிசனத்தில் தத்வ த்ரயங்கள் மூன்றுமே உண்மையாக இருந்தாலும் மேலே
தத்துவத்தின் பொருள் வருவதால் இங்கு ஸத்யம் என்று ஈஸ்வரனையே சிறப்பாகக் காட்டும் –
ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்மம் –
அவனுக்குப் பொருளாவது -அஸங்க்யேய கல்யாண குண கணங்களும் அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும்

2-தத்துவத்தின் பொருள் -தத்வ த்ரயங்கள் -கீழே ஸத்யம் பொருள் என்று ஈஸ்வர பொருளைப் பார்த்தோம் –
சித் -ஜீவாத்மா -பத்தர் முக்தர் நித்யர் மூவகைப்படும் –
இதன் பொருளாவது
1- கர்ம ஞான இந்த்ரியங்களில் வேறுபட்டு இருத்தல்
2-ஸூயம் ப்ரகாசகமாய் இருத்தல்
3-ஆனந்த மயமாய் இருத்தல்
4-ஸாஸ்வதமாய் இருத்தல் –
5- அணுவாய் இருத்தல்
6-கட் புலனுக்குத் தெரியாமல் இருத்தல்
7-மனத்தினாலும் நினைக்க முடியாது இருத்தல்
8-நிர் அவயவமாய் இருத்தல்
9-நிர் விகாரமாய் இருத்தல்
10-அறிவுக்கு இருப்பிடமாய் இருத்தல்
11-ஈஸ்வரனுக்கு சரீரமாய் -அவன் இட்ட வழக்காய் இருத்தல் –

இனி அசித்தின் பொருளாவது
1-முக்குண வசப்பட்டு இருத்தல்
2-ஞான ஸூந்யமாய் இருத்தல்
3- ஸாஸ்வதமாய் இருத்தல்
4-ஈஸ்வரனுக்கு போக உபகரணமாய் இருத்தல்
5- சதத பரிணாமம் -விகாரம் உடைத்தாய் இருத்தல்
இதனை ப்ரக்ருதி மாயை அவித்யை என்றும் சொல்வர்

3-தன்னின் உன்னும் புத்தியத்தின் பொருள் –
தன்னின் -அசித் தத்துவத்தின் நின்றும் வேறுபட்டு
உன்னும் -நினைவாற்றல் படைத்த
புத்தியம் -புத்தி என்று ஆராய்ந்து தெளியும் அந்தக்கரணம்
புத்தி -அறிவு -சித்துக்கே உரித்தாகை
இதன் பொருளாவது
ஜடமான அசித்துடன் வேறு பட்டு இருந்தே -அஜடமான ஜீவாத்மாவுடன் தான் ஒன்றி இருந்து –
உடல் மிசை உயிர் -எனக் கரந்து இருக்கும் தன்மையை வெளிப்படுத்துவது –
இதனால் பெற வைப்பது -சரீர சரீரி சம்பந்தம் -விழுமிய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அசாதாரணம் அன்றோ இது –
உற்று நோக்கினால் சித் ஈஸ்வரனுக்கு சரீரமாகும் தன்மையையே குறிக்கும் –

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்விலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரினில் உள்ளாள் ஆதுமோர் பற்று இலாத
பாவனை யதனைக் கூடில் அவனையும் கூடலாமே

ஆக -சத்தியத்தின் பொருள் என்று ஈஸ்வர குணங்களையும் –
தத்துவத்தின் பொருள் என்று சித் அசித் இவற்றின் இயல்புகளையும்
தன்னின் உன்னும் பொருள் -என்றதால் தத்வங்களின் இடையில் உள்ள சரீர சரீரீ சம்பந்தத்தையும் மொழிந்தபடி காட்டிய வாறு –
எனவே இம் மூன்றிலும் ஸ்ரீ பாஷ்யம் குறித்த படி –

4-புண்ணியத்தின் பொருள்
புண்ணியம் -ஸ்ரீ கிருஷ்ணன் -ஸாஷாத் புண்ணியத்துக்கு பாலும் சோறும் இட்டு அன்றோ வளர்க்கிறோம் என்கிற படி
கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம்
கருத்து ஆகு பெயராலே அவன் வெளியிட்டு அருளிய ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரத்தைச் சொன்னவாறு –

5-பூ சுரர் தம் பத்தியத்தின் பொருள்
பூ சுரர் -அந்தணர் -வேதியர் -அவரது பத்தியம் -வேதம் -செய்யுள் -வேத மந்த்ரம் -வேதியருக்கு குல தனம் வேதமே
இந்த வேதங்களின் விழுப் பொருளைப் பூதூர் முனிவன்
வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த தீபம் – வேதார்த்த சாரம் -ஆகிய திவ்ய கிரந்தங்களால் மொழிந்தார் –

6-பற்று அறுக்கும் பொருள்
ஸ்ரீ சரணாகத கத்யத்தின் பொருள்கள்
ஸ்ரீ ரங்க கத்யம் சரணாகதி கத்யத்தின் சுருக்கமே

7-பற்றுதலால் முத்தியத்தின் பொருள்
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தின் பொருள்

பூதூர் முனிவன் மொழிந்தனனே
ஆக பூதூர் முனிவரின்
ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த சாரம் -வேதார்த்த தீபம் –
சரணாகதி கத்யம் ரெங்க கத்யம்
வைகுண்ட கத்யம்
ஆகிய அஷ்ட கிரந்தங்களை மொழிந்துள்ளார் என்றவாறு –

——————-

மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்தந்த மொய் குழலார்
விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள் மெய் ஞான நெஞ்சில்
சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி சொலச் சொன்ன
வழிக்கே நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே –8-

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -மீட்டு அறிவூட்டி அருளிய வாறு –
மொய் குழலார் மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்து தந்த விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள்-
அவர்கள் பேச்சு -உவமையாகச் சொல்லி வைத்து என்பதால் அநாதரவு தோற்றச் சொன்னவாறு –
மெய் ஞான நெஞ்சில் சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி -தத்வ உணர்வு ஒருங்கே திரண்டு செழிப்பு உறும் —
மால் பால் மனம் சுழிப்ப –
சொலச் சொன்ன வழிக்கே –ஆளவந்தார் சொல்லியது ஆவது
பெரிய நம்பி இளைய ஆழ்வாருக்கு ஸமாச்ரயணம் செய்விக்க வேணும்
திருக்கோட்டியூர் நம்பி சரம ஸ்லோஹார்த்தம் உபதேசித்து அருள வேணும்
திருமாலை யாண்டான் திருவாய் மொழிப் பொருளை உபதேசித்து அருள வேண்டும்
பெரிய திருமலை நம்பி ஸ்ரீ ராமாயணப் பொருளை அருளிச் செய்ய வேணும்
திருவரங்கப் பெருமாள் அரையர் திவ்ய பிரபந்தங்கள் ஸ்தோத்திரங்கள் நல் வார்த்தைகள் அருளிச் செய்ய வேணும்
என்றும் ஆணை இட்டது –

அங்கனம் உபதேசம் பெற்ற எதிராசர் சொன்ன வழிக்கே நினையும் கிடீர் என்று அந்வயம்
வழி -உபாயம் -மார்க்கம் -பிரபத்தி –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே
வேறு மோக்ஷ உபாயங்கள் கூறுபவரோடு உறவு அறுத்து எப்போதும் பிரபத்தி உபாயத்தையே பின் பற்றி
நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே வாழ்வார் உடனே நித்ய வாசம் பண்ணுங்கோள்
உடையவர் அருளிச் செய்த சரம 72 வார்த்தைகளில் -56 வது வார்த்தையை ஸ்மரிக்க வேண்டும்

வழிக்கே -ஏவகாரம்-பிரிநிலையோடு தேற்றம்
கிடீர் -முன்னிலைப்பன்மை உரையசை
பிரபத்தி வழி நினைத்தால் எதிரே வரும் வைகுந்தமே
ஆளவந்தாரோடு நான் கூடி இருந்து குளிர பெற்றேன் ஆகில் பரமபதத்துக்குப் படி கட்டி இருப்பேன் என்று பலகாலும் எதிராசர் பணிப்பரே

———-

வையகத்தே தன்னை வள்ளல் என்று ஏத்தினும் வாய் திறவாக்
கையரகத்தே நின்று கண் குளிர்வீர் – கருணா கரணை –
மெய்யகத்தே வைத்த பூதூர் முனி தன் விரை மலர்த்தாள்
பொய்யகத்தே நிற்கினும் அகலாள் மணப் பூ மகளே –9-

கை –கீழ் மகன்
அகம் -இடம்
மெய்யகம் -ஸத்யமான ஹ்ருதயம்
விரை -மணம்
பூ மகள் -ஸ்ரீ தேவி

வையகத்தே -பொருள்களை வைக்கும் இடம் -பூமிக்குக் காரணப் பெயர்
கையரகத்தே -கையர் கீழ் மக்கள் -மூடர்
கையர் -கை ஆகு பெயராய் ஆளைக் காட்டிற்று -எத்தனை கை வேலை செய்தன என்னுமா போலே
அகம் -வீடு -வாசல் கடை
கண் குளிர்வீர் -விளிச் சொல்
கருணா கரணை -ராமபிரானை
படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் –
இராமபிரானை மெய்யகத்தே வைத்தல் இயல்பே
மெய்யகம் – உண்மை உள்ளம்
கருணாகரன் -திருமால் என்னவுமாம் –
விரை -பரிமளம்
மலர்த்தாள்-உவமைத் தொகை
மெய்யகத்தே வைத்த பூதூர் முனிவன்
பொய்யகத்தே -வஞ்ச உள்ளம்
மணப் பூ மகளே –நறு மண ம் வீசும் செந்தாமரையில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மித் தாயார்
அகலாள் -விட்டு நீங்காள்

எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று மனப்பூர்வகமாக இன்றிப் பொய்யாக நினைத்தாலும் சகல ஸுவ்பாக்யங்களும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரது கடாக்ஷ லேசத்தாலே ஏற்படும் என்று மங்கள கரமாக அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————-

சந்தார் புயத்து எங்கள் ஆழ்வார் தமக்கும் ததியருக்கும்
அந்தாதி பத்து மணவாள தாசர் அலற்றியதால்
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு ஒரு நாய் கங்கை நீர்
தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –10-

சந்து -அழகு -மணம் -நாள் கமழ் மகிழ் மாலை மார்பன் –
புயத்து-திருத்தோள்களில்
எங்கள் ஆழ்வார் -நம்மாழ்வார்
தமக்கும் ததியருக்கும் -ஆழ்வாருக்கும் மாறன் அடி பணிந்து உயந்த எதிராசருக்கும் –
அந்தாதி பத்து -ஒன்பதாக இருந்தாலும் அந்தாதி பத்து என்ற அந்தாதி வகையை நோக்கி அருளிச் செய்கிறார்
அழகிய மணவாள தாசர் -திவ்ய கவி -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அலற்றியதால் -இடைவிடாமல் முறை இன்றியும் பேசியது
0–பக்திப் பெருக்கை வெளியிட்டவாறு –
பத்தர் சொன்னவும் பித்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு -அந்த எதிராசருக்கு -கெடாத மறையாத -அவியாத குற்றம் உண்டாகாது –
ஒரு நாய் கங்கை நீர் தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –
கங்கை நீரின் புனிதம் -தோஷம் குற்றம் வாராமல் -ஒரே சீராய் இருப்பது போல் –
நஸ்வா வலீடமபி தீர்த்தம் அதீர்த்தம் ஆஹு -ஸ்ரீ வைகுண்டஸ்தவம் போல் இங்கும் –
தன்னைப் பிறர் போல் நாந்தி கூறும் பதிகச் செய்யுள் –தற் சிறப்பு பாசுரம் –

————————-

ஶ்ரீவைணவ ஜீயர் ஸ்ரீமணவாள மாமுனிகளின் திரு அத்யயன தீர்த்தம் நாளை(17/02/2023) மாசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசியுடன் கூடிய திருநாள்

ஸ்ரீராமாநுஜரின் புனரவதார புருஷரான ஸ்ரீ மணவாள மாமுனிகள் பரமபதம் எய்திய திருநாள் 16-2-1444
ருதிரோத்காரி ஆண்டு

இந்த நாளில் தான் பெரிய ஜீயரான மாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்
( இன்று 16-2-2023 ஆச்சாரியர் திருநட்சத்திரமான மூலம் என்னே பொருத்தம்)

மாமுனிகள் திருநாட்டுக்கு எழந்தருளிய பிரகாரத்தை ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

யதீந்த்ர ப்ரவண பிரபாவம் என்னும் ஸ்ரீமணவாள மாமுனிகள் திவ்ய சரிதத்தில் கீழே உள்ளவாறு அருளிச் செய்துள்ளார்

ஆதித்ய அஸ்தமன மானவாறே தம்முடைய கர்ம அனுஷ்டானங்களை செய்தருளி திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகளே சரணம்
வாழி உலகாசிரியன்
என்று அனுஸந்தித்துக் கொண்டு
பிள்ளையை தியானித்து கொண்டு அவசராக அணையிலே சாய்ந்தருள ஸ்ரீபாதத்து முதலிகள் எல்லாரும் கைகூப்பிக் கொண்டு

ப்ரஹ்மவல்லி ப்ருகுவல்லி சூழ்விசும்பணி முகில்
அர்ச்சிராதி இராமானுஜ நூற்றந்தாதி இவைகளை அநுஸந்திப்பாராய் பெரிய ஆரவாரத்துடன் சொல்லுகிற அளவில்

அங்கயல் பாய்வயல் தென்னரங்கன் (இரா.நூற்.108) பாசுரத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள் அனுஸந்திக்க கேட்டு தாமும் கிருதாஞ்சலி புடராய் (தம் திருக்கைகளைக் கூப்பி) எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று அனுஸந்தித்துக் தத்கத சித்தராய் திருக்கண்களை செம்பளித்து கொண்டிருக்க

கநககிரிமேலே கரியமுகில்போல விநதை சிறுவன் மேற்கொண்டு’
(ஆர்த்.பிர.52)என்றும் எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல் வந்து முகங்காட்டி வழி நடத்த (59) என்றும் இவர் அபேக்ஷித்தபடியே பெரிய பெருமாளும்

செழும்பறவை தானேறி திரிவராய்த் தம் தாளிணையை (திரு.மொழி10-6-5) இவர் திருமுடி மேலே வைத்து
மஞ்சுயர் பொன்மலை மேலெழுந்த மாமுகில் போன்ற (பெரிய.திரு.9-2-8)
தன் வடிவை ஸாக்ஷாத்கரிப்பித்து அநுபவிக்க அநுபவித்து
உன் சரணம் தந்தென் சன்மங் களையாயே என்றும் ஸுகேநேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய என்றும்

நோய்களால் என்னை நலுங்காமல் சதிராக உன் திருத்தாள் தா என்றும்

நிரதிசய போக்யமான திருமேனியை விடுவித்து அங்கீகரிக்கப் பெற்று மாதவன் தன் துணையா நடந்தாள் என்றும்

அரங்கத்துறையுமின் துனைவனோடும் போய் என்றுஞ் சொல்லுகிறபடியே

ச்ரியபதியான பெரிய பெருமாள்

பெரிய திருவடி மேற்கொண்டு ஹார்த்தன் வழி நடத்த ஷுஷும்நையாகிற (நாடி)
வாசலிலே புறப்பட்டு சிர கபாலத்தைப் பேதித்து பரஹ்மரந்த்ரத்தாலே
ஜீயர் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்கிறார்

ஆச்சாரியன் திருநாடு எழுந்தருளிய நாளை தீர்த்த தினம் என்பர் (ஆசார்யரின் நினைவைப் போற்றிஅவரது ஸ்ரீபாததீர்த்தம் ஸ்வீகரித்து கொள்வதால்)

திருவத்யயனம் தீர்த்த பரிபாலனம் (ஆசார்யர் நினைவைப் போற்றித் திருவாய் மொழி அத்யயனம் செய்வதால்-சேவிப்பதால்) என்று வைணவ சம்பிரதாயத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது

(சாதாரணமாக சிரார்த்தம் திதிவதிவசம் எனப்படுகிறது)

ஒருவருடைய திருஅத்யயனம்/தீர்த்தம் (திதி) அவருடைய நேரடி சந்ததி(குமாரர்) அல்லது நேரடி சீடரால் மட்டுமே அனுஷ்டிக்கப் படுகிறது

ஆழ்வார்கள் ராமாநுஜர் மற்றுள்ள ஆசார்யர்களுக்கு நேரடி சந்ததி/சீடர் இன்று இல்லாததால் அவர்களுக்கு திருவத்யயனம் அனுஷ்டிப்பதில்லை

மணவாளமாமுனிகள் சுமார் 580 ஆண்டுகளுக்கு முன்னரே பரமபதம் எய்தியிருந்தாலும் அவருடைய நேரடி சீடர் இன்றும் எழுந்தருளி இருக்கிறார் அவர் என்றென்றும் எக்காலத்திலும் இருப்பார்

அவர் தமது ஆசார்யருக்கு ஆண்டுதோறும் திருவத்யயனம் செய்கிறார்

ஆம் மணவாள ஜீயரின் (மாமுனிகளின்),மகத்தான அழகிய மணவாள சீடர்
அந்த ஸ்ரீரங்கநாதப் பெருமாளே

ஶ்ரீரங்கநாயகம் என்னும் பாலகன் வடிவில் வந்து மாமுனிகளை தம் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்

திருவாய்மொழிக்கு நம்பிள்ளையின் ஈடு வியாக்யனத்தை
மணவாள மாமுனிகள் திருவாயால் செவியுற விரும்பிய அழகிய மணவாளர் (நம்பெருமாள்) ஒரு வருடம் தம்முடைய உற்சவங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு மாமுனிகளிடம் சிரத்தையாக ஈடுவியாக்யானம் கேட்டார்

வியாக்யானம் முடியும் சாற்றுமுறை தினத்தில் நம்பெருமாளே ஒரு பாலகனாக உருவெடுத்து வந்து மாமுனிகளை ஆசார்யராக ஏற்று கொண்டதற்கு ஆசார்ய சம்பாவணையாக ஒரு தனியனைச் சுவடியில் எழுதிச் சமர்ப்பித்தார்

அந்தத் தனியனே நாம் அனைவரும் நாளும் அனுஸந்திக்கும்

ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம்முநிம் என்னும் தனியன்

(ஸ்ரீசைலேசர் என்றழைக்கப்படும் திருவாய்மொழிப் பிள்ளையின்
எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமான வரும்,வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும் யதிராஜரான ராமாநுஜர் மீது அளவுகடந்த பக்தி நிறைந்தவருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்)

அதோடு மட்டுமல்ல ஒரு சீடர் ஆசார்யருக்குச் செய்ய
வேண்டிய சிஷ்ய லட்சணமான ஐந்து கடமைகளையும் செவ்வனே நடத்தினார் நம்பெருமாள்

1) தனியன் சமர்ப்பித்தல்

2) ஆசார்யர் கீர்த்தியை வையம் எங்கும் பரப்புதல்

எல்லா திவ்ய தேசங்களிலும்
பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன் முதலிலும் சாற்று முறையின் போது முடிவிலும் தம் ஆசார்ய தனியனான ஸ்ரீசைலேச தயாபாத்ரம் சேவிக்க வேண்டுமென்று நியமித்தார்

அதுபோக ஶ்ரீமடங்கள் ராமானுஜ கூடங்கள் ஆசார்யர்கள் பாகவதர்கள் திருமாளிகைகள் என நாளும் சேவிக்கபடுகிறது

3) ஒரு சீடர் தனக்கென்று எந்த உடமையும்/சொத்தும் இல்லையென்றும் எல்லாம் ஆசார்யருடையதே தாம் அனுபவிப்பது அவர் கிருபையால் தந்தருளியது என்னும் நிஷ்டையில் இருத்தல் அவசியம்

இதை நடைமுறை செய்யவே அரங்கன் தம் உடமைகளை யெல்லாம் ஆளும்/நிர்வகிக்கும் ஆதிசேஷனையே மாமுனிகளுக்குத் தந்து விட்டார்
அதனால் தான் மாமுனிகள் எங்கும் எப்போதும் சேஷபீடத்திலேயே எழுந்தருளியிருக்கிறார்

ஆதிசேஷ அவதாரமான ராமாநுஜருக்கே இல்லாத சேஷாசனத்தை மாமுனிகளுக்குத் கொடுத்து அருளினார் நம்பெருமாள்

4) ஆசார்யருடைய திருநாமத்தை சீடர் தரித்தல்

நம்பெருமாளின் திருநாமம்- அழகிய மணவாளன் என்பதே அது மாமுனிகளின் இயற்பெயர் அவர் சந்யாசம் ஏற்ற போது
சடகோப ஜீயர் என்னும் நாமத்தை ஏற்க விரும்பினார் ஆனால் பெருமாள் நியமனத்தால் பழைய நாமத்தையே தொடர்ந்தார் (அப்படியிருந்தால் தானே ஆச்சார்யர் திருநாமமும் பெருமாள் திருநாமமும் ஒன்றாக இருக்க முடியும்)

5) ஆசார்யர் திருநட்சித்திரத்தையும்
தீர்த்தத்தையும் சிறப்பாக அனுஷ்டித்தல்

அரங்கர் இவ்விரண்டையும் இன்றளவும் செவ்வனே நடத்தி வருகிறார்

இரண்டு நாட்களிலும் பெருமாள் பிரசாதங்கள் உடுத்துக்களைந்த மாலைகள் பரிவட்டங்கள் சந்தனம் முதலானவற்றை மாமுனிகள் சந்நிதிக்கு அனுப்பி வைக்கிறார்

தீர்த்த நாளன்று (நாளை) அரங்கருக்குத் திருவாராதனம் செய்யும் அர்ச்சகரே மாமுனிகளுக்கும் ஆராதனம் செய்கிறார்

நம்பெருமாளுக்குக் காலை நைவேத்யம் இல்லை

மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே இவருக்கு நைவேத்யம்.(நம் போன்றே நம்பெருமாளும் காலை உபவாசம்)

அன்று பெருமாள் சுருளமுது (வெற்றிலை) கண்டருள்வதில்லை

ஆக நாளை ஶ்ரீமணவாள மாமுனிகளின் தீர்த்த நாளில் அவசியம் ஶ்ரீமடங்களுக்கு எழுந்தருளி தீர்தம் ஸ்வீகரியுங்கள்

அவசியம் அகத்தில் ஒரு இனிப்பு பட்சணம் செய்து ஆச்சாரியனுக்கு சமர்பித்து பகவானுக்கும் சமர்பித்து ஸ்வீகரியுங்கள்

கும்பம் பாஸ்வதி யாதி தத் ஸூ ததிநே பக்ஷே வள க்ஷேத்ரே
த்வாதஸ்யாம் ஸ்ரவணர் க்ஷபாஷி ருதி ரோத் கார்யாக்ய ஸம் வத்சரே
தீ பக்த்யாதி குண ஆர்ணவோ யதி வராதீ நா நிலாத்ம ஸ்த்திதி
ஸ்ரீ வைகுண்ட மகுண்ட வைபவ மகாத் காந்தோ பயந்தா முனி–மணவாளமாமுனிகளின சரம ஸ்லோகம்

ஞான பக்த்யாதி குணங்களுக்கு மஹா சமுத்திரம் போன்றவரும்
எம்பெருமானாருக்கு ஸ்வா தினமான ஸமஸ்த நிலைகளையும் யுடையவரான
மணவாள மா முனிகள்
ருதிரோத்காரி சம்வத்சரத்தில்
ஸூ ர்யன் கும்ப ராசியை அடைந்த அளவில் -மாசி மாதத்தில்
சனிக்கிழமை
கிருஷ்ண பக்ஷம்
திருவோணம் நக்ஷத்திரத்தில்
துவாதசி தினத்து அன்று
எல்லையற்ற பெருமை கொண்ட ஸ்ரீ வைகுண்டத்தை அலங்கரித்து அருளினார்
என்று அங்குத்தை அந்தரங்கள் அருளிச் செய்தார்கள்

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ வடுக நம்பி அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ திவாகர அஷ்டோத்திர சதநாம வளி — ஸ்ரீ யதிராஜ மங்களம் ஸ்லோகம் —

January 28, 2023

ஸ்ரீ ராமானுஜ திவாகர அஷ்டோத்திர சத நாம வளி –

ஓம் ஸ்ரீ ராமானுஜாய நம

ஓம் புஷ்கராஷயா நம

ஓம் யதீந்திராயா நம

ஓம் கருணாராயா நம

ஓம் காந்திமத்யாத்மஜாயா நம

ஓம் ஸ்ரீ மதே நம

ஓம் லீலா மானுஷ விக்ரஹயா நம

ஓம் சர்வ ஸாஸ்த்ரார்த்த தத்வஜ்ஞயா நம

ஓம் சர்வஜ்ஞயா நம

ஓம் சஜ் ஜன ப்ரியா நம

ஓம் நாராயண க்ருபா பாத்ராயா நம

ஓம் ஸ்ரீ பூத புர நாயக நம

ஓம் அநகாய நம

ஓம் பக்த மந்தாராயா நம

ஓம் கேசவ ஆநந்த வர்த்தனாய நம

ஓம் காஞ்சி பூர்ண ப்ரிய ஸஹாயா நம

ஓம் ப்ரணரார்த்தி விநாசனாய நம

ஓம் புண்ய சங்கீர்த்தனாய நம

ஓம் புண்யாய நம

ஓம் ப்ரஹ்ம ராஷச மோசகாய நம

ஓம் யாதவ பாதிதா பார்த்த வ்ருஷச் சேத குடாரகாய நம

ஓம் அமோகாய நம

ஓம் லஷ்மண முனயே நம

ஓம் சாரதா சோக நாசனாய நம

ஓம் நிரந்தரம் அஜ்ஞான நிர்மோசன விசஷணாயே நம

ஓம் வேதாந்த த்வய சாரஜ்ஞாய   நம

ஓம் வரதாம்பு ப்ரதாயகாய நம

ஓம் பராபிப்ராய தத்வஜ்ஞாய   நம

ஓம் யாமுந அங்குலி   மோசகாய நம

ஓம் தேவராஜா க்ருபா லப்த ஷட் வாக்யார்த்த மஹோ ததயே நம

ஓம் பூர்ணார்ய லப்த  சந்மந்த்ராய நம

ஓம் சௌரி பாதாப்ஜ ஷட் பதாய நம

ஓம் த்ரிதண்ட தாரினே நம

ஓம் ப்ரஹ்மஜ்ஞாய நம

ஓம் ப்ரஹ்ம ஜ்ஞான பராயணாய நம

ஓம் ரங்கேச கைங்கர்ய ரதாய நம

ஓம் விபூதி த்வ்ய நாயகாய நம

ஓம் கோஷ்டீ பூர்ண க்ருபா லப்த மந்த்ர ராஜ ப்ரகாசகாய நம

ஓம் வர ரங்க அநுகம்பாத்த  த்ரவிடாம் நாய பாரகாய நம

ஓம் மாலாதரார்ய ஸூஜ்ஞாத த்ராவிட ஆம்நாயா தத்வதீயே நம

ஓம் சதுஸ் சப்ததி சிஷ்டாப்யாய நம

ஓம் பஞ்சாசார்யா பதாச்ரயாய நம

ஓம் பிரபீத விஷ தீர்த்தாம்பசே நம

ஓம் ப்ரகடீ க்ருத வைபவாய நம

ஓம் பிரணதார்த்தி ஹராசார்யா தத்த பிஷைக போஜனாயா நம

ஓம் பவீத்ரா க்ருத கூரேசாய நம

ஓம் பாகி நேயத்ரி தண்டகாய நம

ஓம் கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரகாஸகாய நம

ஓம் ரங்கேச வேங்கடேசாதி ப்ரகடீ க்ருத வைபவாய நம

ஓம் தேவ ராஜ அர்ச்சந ஆராதாய நம

ஓம் மூக முக்தி ப்ரதாயகாய நம

ஓம் யஜ்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாத்ரே நம

ஓம் மந் நாதாய நம

ஓம் தரணீ தராய நம

ஓம் வரதாசார்ய சத் பக்தாய நம

ஓம் யஜ்ஞே சார்த்தி  விநாசகாய நம

ஓம் அனந்தாபீஷ்ட பலதாய நம

ஓம் விடலேந்திர ப்ரபூஜீதாய நம

ஓம் ஸ்ரீ சைல பூர்ண கருணா லப்த ராமாயண அர்த்தகாய நம

ஓம் பிரபத்தி தர்மக ஏக ரதாயா நம

ஓம் கோவிந்தாய பிரியாநுஜாய நம

ஓம் வ்யாச ஸூத்ரார்த்த தத்வஜ்ஞாய நம

ஓம் போதாயன மதாநுகாய நம

ஓம் ஸ்ரீ பாஷ்யாதி மஹாக்ரந்த காரகாய நம

ஓம் கலி நாசனாய நம

ஓம் அத்வைத மத விச்சேத்ரே நம

ஓம் விசிஷ்டாத்வைத பாரகாய நம

ஓம் குரங்க நகரீ பூர்ண மந்திர ரத்நோபதேசகாய நம

ஓம் விநா சிதாகில மதாய நம

ஓம் சேஷீ க்ருத ரமாபதயே நம

ஓம் புத்ரீ க்ருத சடாராதினே நம

ஓம் சடஜித் த்ருண மோசகாய நம

ஓம் பாஷா தத்த ஹயக்ரீவாய நம

ஓம் பாஷ்யகாராய நம

ஓம் மகாயசஸே நம

ஓம் பவித்ரீ கருட பூ பாகாய நம

ஓம் கூர்ம நாத ப்ரகாசகாய நம

ஓம் ஸ்ரீ வேங்கடாசலாதீச சங்க சக்ர  ப்ரதாயகாய நம

ஓம் ஸ்ரீ வெங்கடேச ச்வசுராய நம

ஓம் ஸ்ரீ ராம சக தேசிகாய நம

ஓம் க்ருபாமாத்ர ப்ரசன்னார்யாய நம

ஓம் கோபிகா மோஷ தாயகாய நம

ஓம் சமீசீ நார்ய சச் சிஷ்ய சத் க்ருதாய நம

ஓம் வைஷ்ணவ ப்ரியாய நம

ஓம் க்ருமி கண்ட  ந்ருப த்வம்சீனே நம

ஓம் சர்வ மந்திர மஹோததயே நம

ஓம் அங்கீ க்ருதாந்திர பூர்ணார்யாய நம

ஓம் சால க்ராம ப்ரதிஷ்டிதாய நம

ஓம் ஸ்ரீ பக்த க்ராம பூர்ணேசாய நம

ஓம் விஷ்ணு வர்த்தன ரஷகாய நம

ஓம் பௌத்த த்வாந்த சஹாஸ்ராம்சவே நம

ஓம் சேஷ ரூப ப்ரதர்சகாய நம

ஓம் நகரீ க்ருத வேதாத்ரினே நம

ஓம் டில்லீச்வர சமர்ச்சித்தாய நம

ஓம் நாராயண ப்ரடிஷ்டாத்ரே நம

ஓம் சம்பத் புத்ர விமோசகாய நம

ஓம் சம்பத் குமார ஜனகாய நம

ஓம் சாது லோக சிகாமணயே நம

ஓம் ஸூ ப்ரதிஷ்டித கோவிந்த ராஜாய நம

ஓம் பூர்ண மநோரதாய நம

ஓம் கோதாக்ரஜாய நம

ஓம் திக் விஜேத்ரே நம

ஓம் கோதா பீஷ்ட ப்ரபூரகாய நம

ஓம் சர்வ சம்சய விச்சேத்ரே நம

ஓம் விஷ்ணு லோக ப்ரதாயகாய நம

ஓம் அவ்யாஹத மஹத்வர்தம்மே நம

ஓம் யதிராஜாய நம

ஓம் ஜகத்குரவே நம

ஏவம் ராமானுஜர்யஸ்ய நாம் நாமஷ்டோத்தரம் சதம்
யா படத் ச்ருணுயாத் வாபி சர்வான் காமான் அவாப்நுயாத்
யதாந்த்ர பூர்ணேந  மஹாத்ம நேதம் ஸ்தோத்ரம் க்ருதம் சர்வஜநாவநாய
தஜ் ஜீவ பூதம் புவி வைஷ்ணவா நாம் பபூவ ராமானுஜ மாநசானாம்-

—————————————————————————————————————————————–

ஸ்ரீ யதிராஜ மங்களம் -ஸ்லோகம் —

ஸ்ரீ பராங்குச பாதாப்ஜ ஸூரபீக்ரு மௌலயே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன நாதாய யதிராஜாய மங்களம் –1-

நாத பன்மாஷ ராமார்ய பாத பங்கஜ சேவிநே
சேவ்யாய சர்வ யமி நாம் யதிராஜாய மங்களம் –2

பூர்ணார்ய பூர்ண கருணா பாத்ராயாமித தேஜஸே
மாலாதர ப்ரியா யாஸ்து யதிராஜாய மங்களம் –3-

சம்சேவ்ய யாமு நாசார்யமே கலவ்யோசம் யஹம் குரோ
அன்யன்னேதி பதே நித்யம் யதிராஜாய மங்களம் –4

ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிச்ரோக்த ரஹச்யார்த்தவிதே சதா
தேவராஜா ப்ரியா யாஸ்து யதிராஜாய மங்களம் -5

ஸ்ரீ மத் கோஷ்டீபுரீ பூர்ண திவ்யாஜ்ஞாம் குர்வதே முதா
ச்லோகார்த்தம் குர்வதே தஸ்மை யதிராஜாய மங்களம் –6

கூரேச குருகா நாத தாசரத்யாதி தேக்கா
யச்சிஷ்யா பாந்தி தே தஸ்மை யதிராஜாய மங்களம் -7

சரமச்லோக தத்வார்த்தம் ஞ்யாத்வார்யாஜ்ஞாம் விலங்க்யச
தத்தே தம் ஸ்வ கீயோப்யோ யதிராஜாய மங்களம் -8

ஸ்ரீ சைல  பூர்ணக்ருபயா ஸ்ரீ ராமாயண மர்த்ததா
பக்த்யா யேன ஸ்ருதம் தஸ்மை யதிராஜாய மங்களம் –9

சங்கராதி குத்ருஷ்டீ  நாம் பாஹ்யா நாம் நித நாய்ச
ஸ்ரீ பாஷ்யம் குர்வதே தஸ்மை யதிராஜாய மங்களம் -10-

குர்வந்துப நிஷத் பாஷ்யம் ஜகத் ரஷாம் கரோதிய
தயா பரதந்த்ராய பாஷ்யகராய மங்களம் -11

த்ரமிடோப நிஷத்வ்யாக்யாம் வதேதி மத நுஜ்ஞயா
சாசதே குருகேசம்தம் பாஷ்யகராய மங்களம் –12

கத்வாது சாரதா பீடம் வ்ருத்திம் போதைய நச்யச
அவலோக்யா கதா யாஸ்து பாஷ்யகராய மங்களம் -13

பரமாணும்ருஷாவாதி வாதி சம்ஹார காரிணே
தஸ்மை பகவதே ஸ்ரீ மத் பாஷ்யகராய மங்களம் –14

ஸ்ரீ மத் குரங்க பூர்ணாய ஸ்ரீ பாஷ்யம் வததேஸ்வயம்
பித்ரே சம்பத்  தஸ்யாபி பாஷ்யகராய மங்களம் -15

தத்வா வ்ருஷகிரி சாஸ்ய சங்க சக்ர ரமாபதே
பரமப்ரீதி யுக்தாய பாஷ்யகராய மங்களம் –16

ஸ்ந்யாசம் குருதே காஞ்ச்யாம் அநந்த சரஸீ தடே
வரதே விசத பாராய பாஷ்யகாராய மங்களம் -17-

ஸ்ரீ மத் மகா பூத புரே ஸ்ரீ மத் கேசவ யஜ்வன
காந்திமத்யாம் ப்ர ஸூ தாயா யதிராஜாய மங்களம் -18

சேஷதிவா சைன்யநாதோவா ஸ்ரீபதிர் வேதி சாத்விகை
விதர்க்யாய மகா ப்ராஜ்ஞை எதிராஜாயா மங்களம் –19

ப்ரக்ருஷ்ட குண பூர்ணாய ப்ராப்யாய ஸ்வாங்க்ரி சேவிதாம்
ப்ரபன்ன சார்த்தவாஹாய யதிராஜாய மங்களம் -20-

வேதாத்மக  ப்ரமாணே  சத்விகைச்ச ப்ரமாத்ருபி
ப்ரமேயண சஹ ஸ்ரீ மான் வர்த்ததாம் யதிசேகர–21

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சரமோபாய தாத்பர்யம்–

September 28, 2022
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -பஞ்சம உபாயம் -சரம உபாயம்
ஜெகதாச்சார்யரான ராமானுஜர் திருவடிகளே உத்தாரகத்வத்துக்கு உபாயம்
நம் ஆச்சார்யர்கள் உபகார ஆச்சார்யர்கள் –
அனைத்து உலகும் உய்யப் பிறந்த யதிராஜர் அன்றோ
நாதம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ் தவ்ய மாலாதரான்
யோகீந்த்ரம் குருகேசசந்திரஜலதிம் கோவிந்த கூராதியௌ
பட்டார்யம் நிகமாந்தயோகி ஜகதார்சார்யௌ சக்ருஷ்ண த்வயௌ
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான் —திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது
திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே –மா முனிகள் அருளியது
——–
ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை அந்த வ்யாக்யானத்தை எழுதி முடிக்க, திருவாய்மொழிக்கான அவருடைய வ்யாக்யானமே ஈடு முப்பத்தியாராயிரப்படி என்று பிரபலமாக வழங்கப்படுகிறது.

நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளையை, ஈயுண்ணி மாதவப் பெருமாளின் வழித் தோன்றல்களுக்கு கற்பிக்கும் பொருட்டு
அந்த வ்யாக்யானத்தை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் தருமாறு பணித்தார்.

“ஈதல்” என்ற தமிழ் சொல்லுக்கு தர்மம் என்று பொருள்.
“உண்ணுதல்” என்றால் சாப்பிடுவது.
ஈயுண்ணி என்பதன் பொருள் பிற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உணவளித்த பின்பே தாம் உண்பவர் என்பதாகும்,

ஈயுண்ணி மாதவப் பெருமாள் அவற்றை தம்முடைய மகனான ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு உபதேசித்தார்.
ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அவற்றைத் தம்முடைய அன்பிற்கு பாத்திரமான சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கு உபதேசித்தார்.

இவ்வாறாக ஒவ்வொரு ஆசார்யரிடமிருந்து
சிஷ்யர் என்ற முறையில் இவை உபதேசிக்கப்பட்டு வந்தது.
நாலூர் பிள்ளையின் அன்பிற்கு பாத்திரமான சிஷ்யரும் மகனும் நாலூராச்சான் பிள்ளையாவார்.
நாலூராச்சான் பிள்ளை நாலூர் பிள்ளையின் திருவடித் தாமரைகளின் கீழ்மர்ந்து ஈடு முப்பத்தாறாயிரப்படியைக் கற்றார்.

நாலூராச்சன் பிள்ளைக்கு இருந்த பல சிஷ்யர்களில் திருவாய்மொழிப் பிள்ளையும் ஒருவர்.
நாலூர் பிள்ளையும் நாலூராச்சான் பிள்ளையும் தேவப் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்யும் பொருட்டு காஞ்சிபுரம் செல்லும் பொழுது,
எம்பெருமானே நாலூராச்சான் பிள்ளையை திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஈடு வ்யாக்யானம் போதிக்குமாறு பணித்தார்.

திருவாய்மொழிப் பிள்ளையும் மற்றோரும் ஈடு வ்யாக்யானத்தை நாலூராச்சான் பிள்ளையிடம் பயின்று
அதனை ஈட்டுப் பெருக்கர் (ஈட்டு வியாக்கியானத்தை வளர்ப்பவர்) என்று கொண்டாடப்படும் மணவாள மாமுனிகளுக்கு கற்பித்தார்.
இவ்வாறாக ஈடு வ்யாக்யானம் மணவாள மாமுனிகளை அடையும் என்று அறிந்திருந்ததனாலேயே,
ஸ்ரீ நம்பிள்ளை அதனை ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்குக் கொடுத்தார்.

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –

அதிஷ்டித சதுர் க்ராமாசார்யா தேவ பதேர் குரோ
சாஹார்த்தைர் லேபிரே யேன சர்வேச த்ராவிடாகமா-என்னக் கடவது இறே-

(தேவ பதேர் -நாலூர் ஆச்சான் பிள்ளையே தேவப் பெருமாள் )

லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பன்னம் பதவார்யம் அஹம்பஜே ||-ஈயுண்ணி மாதவப் பெருமாள் தனியன்

மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||-ஈயுண்ணி பத்மனபாப் பெருமாள் தனியன்

சதுர் க்ராம குலோத்பூதம் த்ராவிட பிரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||-நாலூர் பிள்ளை தனியன்

நாலூர் பிள்ளை-கோலேஸர் -அருளாளர் திருவடி ஊன்றியவர் –நாலூர் பிள்ளையின் திருவடிகளில் சடாரி வைத்து அருளிச் செய்த வ்ருத்தாந்தம்

நமோஸ்து தேவராஜாய சதுர்க் கிராம நிவாஸினே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணஸாலினே ||நாலுராச்சான் பிள்ளை தனியன்

———-

சீரார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை எழுது
ஏரார் தமிழ் வேதத்து ஈடு தன்னைத் -தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தாம் கொடுத்தார் பின்னதனைத் தான் –48-

ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார் பின்-
பின் – தம்முடைய சந்நிதியிலே வைத்த பின்பு –
ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார்-
அதாவது
ஸ்ரீ ஈ யுண்ணி என்கிற குடியிலே திரு அவதரிதவராய் தம்முடைய திருவடிகளிலே ஆஸ்ரயித்த அநந்தரம் –
ஸ்ரீ மாதவப் பெருமாள் -என்று
தமக்கு ஆச்சார்யரான ஸ்ரீ நஞ்சீயர் உடைய திரு நாமத்தைச் சாற்றப் பெற்றவராய்
தமக்கு அத்யந்த அபிமத விஷயமாய் இருக்கிற அவர்க்கு –

தாம் கொடுத்தார் பின்-
ஸ்ரீ மாதவ சிஷ்யர் -என்றும் –
சீ மாதவனடிக்கு அன்பு செய்யும் -என்றும் அத்தையே நிரூபகமாக யுடையராய்
(நெஞ்சத்து இருந்து –நிரந்தமாக நிரந்தரம் உய்க்கும் வஞ்சக் குறும்பை அறுத்தேன்
மாய வாதிகள் தாம் அஞ்சப் பிறந்தவன் ஸீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும் நம்பிள்ளை)
ஸ்ரீ திருவாய் மொழிக்கு முப்பத்தாறாயிரம் கிரந்த சங்க்யையாம் படி உபன்யசித்து அருளின தாம்
இவர் பேறு பெறும்படி கொடுத்தார் –
தம் தாம் ஸ்வத்தை தம் தாம் வேண்டினவர்களுக்கு விநியோக்கிகுமா போலே
இத்தை ஒருவருக்கும் பிரகாசியாதே அனுசந்தித்துக் கொண்டு போரும் -என்று
அவர் கையிலே காட்டிக் கொடுத்தார் –
ஸ்ரீ மாதவப் பெருமாளுக்கு இந்த மஹத் ஐஸ்வர்யத்தைக் காட்டிக் கொடுத்தார்-

(ஈயுண்ணி மாதவப் பெருமாள் – கார்த்திகை மாசம் பரணி நக்ஷத்ரம் – திரு அவதாரம் –
கார்த்திகே பரணீ ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
வேதாந்தத் த்வய ஸம்பந்தம் மாதவார்யம் அஹம் பஜே )

(நஞ்சீயர் மாதவ முனி –
வரதார்யா தயா பாத்ரம் ஸ்ரீ மாதவ குரும் ஆஸ்ரயே
குருகாதீச வேதாந்த சேவோன் மீலித வேதனம்
யது வச -சகலாம் சாஸ்திரம்-யத் க்ரியா வைதிக விதி –
யத் கடாஷோ ஜகத் ரக்ஷை தம் வந்தே மாதவ முனிம் )

பின் –
அவர் திரு முன்பே வைத்த அனந்தரத்திலே-

அதனைத் தான் –
அப்படி அனுமதி இன்றிக்கே எழுதின கிரந்தத்தைத் தான் –
முழுச் சொல் இருக்கிறபடி –
(ஈட்டைத் தானாகிய நம்பிள்ளை என்று பிரிக்க வேண்டாம் என்ற படி )

ஆகையால்
இப்படி சீரியதான அர்த்தத்தை சீ மாதவர் இடத்திலே மேல் எல்லாருக்கும் உதவும் படி
சேமித்து வைத்து அருளினார் ஆய்த்து –

(ஸ்ரீ நம்பிள்ளை யுடைய பிரசாதத்தாலே ஸ்ரீ சிறியாழ்வானப் பிள்ளை-என்ற திருநாமத்தை யுடையரான
ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாள்
தமது திருக்குமாரர் ஈயுண்ணி பத்மநாப பெருமாளுக்கும்
அவர் தம் சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கும்
அவர் தம் திருக்குமாரர் நாலூர் ஆச்சான் பிள்ளைக்கும்
அவர் திருவாய் மொழிப்பிள்ளைக்கு ப்ரசாதித்து அருள
இப்படி ஐந்து தலைமுறையாக ஓராண் வழியாக திருவாய் மொழிப்பிள்ளை பெற்றதை மா முனிகள் பெற்று
பார் உலகில் ஆசை உடையார்க்கு எல்லாம் ஆகும்படி மா முனிகள் -ஈட்டுப் பெருக்கர் பண்ணி அருளினார் )

——————————————————-

இப்படி ஸ்ரீ நம்பிள்ளை யுடைய பிரசாதத்தாலே
ஸ்ரீ சிறியாழ்வான் அப் பிள்ளை-என்ற திருநாமத்தை யுடையரான
ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாளுக்கு -பிராப்தமான ஸ்ரீ ஈடானது –
தம்முடைய ஆச்சார்யரான ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை அளவும்
சம்ப்ரதாயமாக நடந்து வந்த படியை அருளிச் செய்கிறார் -( மா முனிகள் )

ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வான் அப் பிள்ளை
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு —49-

ஆங்கு அவர்பால் பெற்ற -நம்பிள்ளை இடம் பெற்ற
சிறியாழ்வான் அப் பிள்ளை-இவரே ஈயுண்ணி மாதவாச்சார்யர்
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -ஈயுண்ணி பத்மநாபாசார்யர்
பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் -கோல வராஹ நாயனாருக்கு -இவரே -நாலூர் பிள்ளை-சதுஷ் கிராமம் –
இவருக்கு பத்ம நாபாச்சார்யார் கொடுத்தார்
நல்ல மகனார்க்கு அவர் தாம்-தேவாதிபர்-தேவ ராஜர் என்கிற நாலூர் ஆச்சான் பிள்ளைக்கு இவர் தந்தையான நாலூர் பிள்ளை கொடுத்தார்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு-மேலோர் -திருவாய் மொழி ஆச்சான் பிள்ளை -ஆய் ஜனனாச்சார்யர் -திருவாய் மொழிப்பிள்ளை –
மூன்று வம்சத்தாரும் இன்றும் உள்ளார்கள் -இவர்களுக்கு நாலூர் ஆச்சான் பிள்ளை கொடுத்தார்

ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்கு சிறு பெயர் சிறியாழ்வான் அப் பிள்ளை-
நான்கு ஊர் சேர்ந்தவை நாலூர் -பெருமாள் கோயில் பக்கம் –

ஆங்கு அவர் பால் பெற்ற சிறியாழ்வான் அப் பிள்ளை –
ஆங்கு –
அந்த திவ்ய கோஷ்டியாய் இருக்கிற அவர் திரு முன்பே
அன்றிக்கே
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை திருக் கையில் நின்றும் வாங்கின அத் தசையிலே -என்னவுமாம் –
(வாங்கிய அன்றே என்றும் மாதவ பெருமாள் நம் பெருமாள் இடம் பிரார்த்திக்க பின் பெற்றார் என்றுமாம் )

அவர் பால் பெற்ற –
அந்த கோஷ்டிக்கு நாயகமாய் அந்த ஸ்ரீ ஈட்டுக்கு பிரதான வக்தாவான ஸ்ரீ நம்பிள்ளை இடத்திலே –
நிதி பெற்றால் போலே
உறு பெரும் செல்வம் -அடியாக–(ராமானுஜ -19)- வந்த அர்த்தத்தைப் பெற்றவர் ஆய்த்து –
இவர் தாம் – ஒரு தேசமும் தேசிகரும் கோசமும் இருந்தபடி –

(தேசம் -ஆங்கு கோயில்
தேசிகர் -அவர் பால்-நம்பிள்ளை
கோசம் -ஈடு )

சிறியாழ்வான் அப் பிள்ளை -தாம் –
இவருடைய சிறு பேர் இருக்கிறபடி –
இப்படியான இந்த நிதியைப் பெற்றுடைய –

தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் –
சஞ்சிதம் காட்டுவாரைப் போலே ஸ்ரீ மாதவப் பெருமாளான தாம் –
ஸ்ரீ பத்மநாபப் பெருமாள் என்று நிரூபகமாய் இருக்கிற
தம்முடைய திருக் குமாரர் திருக் கையிலே காட்டிக் கொடுத்தார் –
அதாவது –
அவருக்கு ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரத்தையும் பிரசாதித்த பின்பு
அவர் திருக் கையிலே திரு வாராதனமாய் இருந்த ஸ்ரீ கோசத்தையும்
காட்டிக் கொடுத்தார் -என்கை-
ஆகை இறே மாதவ பத்ம நாப (ஈட்டு தனியன் )-என்றது –

(ஈயுண்ணி பத்மநாப பெருமாள் -தனியன்
ஏந அவகாஹ்ய விமலோஸ்மி ஸடாரி ஸூரேர் வாணீ கணார்த்த பரிபோத ஸூ தாபகாயாம்
ஸ்ரீ மன் முகுந்த சரணாப்ஜ மது வ்ரதாய ஸ்ரீ பத்ம நாப குரவே நம ஆஸ்ரய )

இப்படி இவர்கள் இரண்டு பேருடைய காலத்திலும் ஓராண் வழியாக உபதேசித்துக் கொண்டு
ஸ்ரீ கோசத்தையும் பிரகாசிப்பியாமல்
ஸ்ரீ கோயில் ஆழ்வாரில் திரு வாராதனமாய்ப் பேணிக் கொண்டு
ஸ்ரீ நம் பிள்ளையினுடைய நியமனத்தின் படியே நடந்து போந்தது ஆய்த்து
திருவாய் மொழியின் ஈடு தான் –

இப்படி நிதியை நோக்கிக் கொண்டு போருமா போலே
இத்தை நோக்கிக் கொண்டு போந்தது தான்
ஸ்ரீ பெருமாள் கோயிலிலே பட்டர்கள் திரு வீதியில் திரு மாளிகையில் ஆய்த்து –
(ஸ்ரீ ரெங்க ராஜ வீதி -பட்டர்கள் திரு வீதி காஞ்சிபுரம்
சம்பிரதாய ரக்ஷணம் தேவப்பெருமாள் -திருமங்கை ஆழ்வாருக்கும் -ராமானுஜருக்கும் ரக்ஷித்து
கைங்கர்யம் கொடுத்து வளர்த்து பின்பு அரங்கனுக்கு -சொத்தை விட்டு கொடுத்தவரும் இவரே – )

பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் –
அதாவது –
ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே ஆஸ்ரயித்து
அவரை
பிரணி பாத
நமஸ்கார
பிரிய வாக்குகளாலே
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -(பெரியாழ்வார் -4-4-)
அவரை மிகவும் உகக்கப் பண்ணி

இப்படி பல சாதன ஸூஸ்ருஷையை யுடையராய் இருக்கிற
ஸ்ரீ நாலூர் பிள்ளைக்கு –
ப்ரணி பாத பிரசன்னராய் இருக்கிற ஸ்ரீ பத்மநாபப் பெருமாள்
ஸ்ரீ ஈட்டை இவர் ஒருவருக்குமே ஓராண் வழியாக
முன்பு நடந்து போந்த படியே பிரசாதிப்பதாக
இவரை ஸ்ரீ பேரருளாள பெருமாள் திரு முன்பே கொண்டு புக்கு
பிரமாண புரஸ்ஸரமாய் ஸூழரவு கொண்டு சொல்ல வேணும் என்று
ஸ்ரீ சடகோபனை அர்ச்சக முகேன இவர் திரு முடியிலே ஊன்றி வைக்க –
(நின் ஆணை திரு ஆணை அழுத்தி நம்பிள்ளை ஆணை படியே வேர் ஒருவருக்கும் கொடுக்கக் கூடாது என்று )

(சதுர்க்ராமோத்பவம் ஸ்ரீ மத் ராமாவரஜ கிங்கரம்
சர்வதா த்வய சந்நிஷ்டம் கோலாஹ்வயமஹம் பஜே -என்றும்
ஸ்ரீ மத் ராமானுஜ தாஸ பாத யுக்ம முபாஸ்மஹே
சடகோபார்யா வாணீ நாமர்த்த தாத்பர்ய சித்தயே-என்று இறே இவர் விஷயத்தில் தனியன்கள் இருப்பது
ராமானுஜ தாசர் என்ற திரு நாமமும் கோல வராகர் -நாலூர் பிள்ளைக்கு உண்டாம் )

(யா பத்ம நாப குருதஸ் சடஜிந் முநீந்திர ஸ்ரீ ஸூ க்தி பாஷ்ய மதிகம்ய சம்ருத்த போத
தத் தேவராஜ குரவே ஹ்யதி சச்சதுஷ் பூர்வாசேத்த கோலவர தேசிகம் ஆஸ்ரயே தம் –
என்று இறே இவர் சம்ப்ரதாய க்ரமம் இருப்பது-)

அவர் அதனை ஒருவருக்கும் வெளி யிடாமைக்கு ஊன்றி வைக்கிற ஆகாரத்தை
பாவஞ்ஞரான இவர் அறிந்து –
ஸ்ரீ பெருமாள் திரு முக மண்டலத்தைப் பார்த்து
தம் திரு முடியிலே வைத்த அந்த ஸ்ரீ சடகோபனை
ஸ்ரீ அருளாளர் திருவடியை ஊன்றினவர்-என்னும் படி தம் திருக் கையாலே ஊன்றி
சம்ஜ்ஞை பண்ணின அது –
சர்வஞ்ஞரான ஸ்ரீ பெருமாள் திரு உள்ளத்திலே உற்று இத்தை நீர் எல்லாருக்கும் பிரகாசிப்பியும் என்று
அர்ச்சக முகேன திவ்ய ஆஞ்ஞை இட்டு அருள
அத்தைக் கேட்ட ஸ்ரீ பத்மநாபரும் எண்ணினவாறு ஆகாமையாலே-(10-6-3)
திரு உள்ளமான படி -என்று
பின்பு உகப்புடனே பிரசாதித்து அருளினார் -என்கை –
(யஸ்ய பிரசாத கலயா –பேச முடியாதவன் பேசி -பேர் அருளாளன் -வரத ராஜன் -அவர் -நம்பூர் வரதர் நம்பிள்ளை
அஸ்மாத் துல்யோ பவதி -பெரியோர் முடிவு ச வாசனமாக முந்திய நிஷ்டையை மாறப் பண்ணுமே )

இவர் இத்தை எல்லாருக்கும் வெளியிட வேணும் என்கிற தம்முடைய
பர சம்ருத்ய ஏக பிரயோஜனதா ரூபமான திரு உள்ளக் கருத்தாலே
ஸ்ரீ பேரருளாளப் பெருமாளைக் குறித்து பிரதஷிண நமஸ்காராதிகளைப் பண்ணியும்
அ நதிக்ரமண ஹேதுவான
சரண க்ரஹணம் பண்ணியும் ஆய்த்து இவர் இப்படி அர்த்தித்தது

அவரும்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதர் ஆகையாலே இப்படி செய்து அருளினார் –
ஆகை இறே –
ஸூமன கோலேச தேவாதிபான் -என்று அருளிச் செய்தது –
(தீஷிதம் வீக்ஷிதம் விரத ஸம்பன்னாம் )

அப்படியே ஸ்ரீ ஜீயரை ஸ்ரீ பிள்ளையும் ஸ்ரீ அரங்கர் தம் தாளை ஊன்று வித்து இறே
ஸ்ரீ திருவாய் மொழியின் ஈட்டைப் பிரவர்த்திப்பித்தது –
சரணாப்ஜ சமர்ப்பணாத் தர்சயந்து க்ரஹாந அர்த்தான் த்ரமிடோப நிஷித்கிராம் -என்னக் கடவது இறே-

(ஸ்ரீ ஜீயரை ஸ்ரீ பிள்ளையும்-மா முனிகளுக்கு திருவாய் மொழிப் பிள்ளை
ஸ்ரீ நஞ்சீயரை ஸ்ரீ நம்பிள்ளையும் முன்னம் திரு உள்ளம் சமாதானம் படுத்தினார் )

நல்ல மகனார்க்கு அவர் தாம் –
அந்த ஸ்ரீ நாலூர் பிள்ளையும் தம்முடைய திரு உள்ளக் கருத்தின் படியே
ஸ்ரீ பெருமாள் தலைக் கட்டி அருளுகையாலே
பெற்றுப் பேரிடும்படியான அந்த உபகாரத்துக்கு -தமக்கு குமாரர் திரு வவதரித்த உடனே –
ஸ்ரீ தேவப் பெருமாள் -என்று திரு நாமம் சாத்த –
இப்படி பேர் பெற்று சகல கலா பூரணராய் வளர்ந்து போருகிற –
நல்ல மகனாரான -ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளைக்கு இத்தை வர்திப்பித்துக் கொண்டு போரும் என்று
ஈட்டை பிரசாதித்து அருளினார் –
அவர் சௌ மனஸ்யம் போலே யாய்த்து இவர் குணசாலி யானதும் –
(ஸூ மானஸ கோலேஸர் அவர் இவர் குணசாலி )

அன்றிக்கே –
இவர் ஸ்ரீ அருளாளர் திருவடி ஊன்றினவர் -என்றதுக்கு
இவர் -என்று ஸ்ரீ பத்ம நாபரைச் சொல்லி
அவருடைய அருளை யுடையவர் என்று ஸ்ரீ நாலூர் பிள்ளையைச் சொல்லி –
திருவடி ஊன்றினவர் என்று ஈட்டை பிரசாதிக்கும் படி ஸ்ரீ நாலூர் பிள்ளையாலே
ஸ்ரீ பேரருளாளப் பெருமாள் திருவடி ஊன்றப் பட்ட ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளையைச் சொல்லி –
அப்படி திருவடி ஊன்றின ஸ்ரீ தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் ஸ்ரீ திருமலை ஆழ்வார் -என்று
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையைச் சொல்லுகிறது என்றும் அருளிச் செய்து போருவர்கள் –

(ஸூ தம் கோல வராஹச்ய குருகாதீச பூர்வஜம்
சாந்தம் சத்வ்ருத்த நிரதம் தேவராஜ மஹம் பஜே -என்றும்
நமோஸ்து தேவராஜாய – என்னும்படி இறே நாலூர் ஆச்சான் பிள்ளை வைபவம் இருப்பது )

—————-

ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சரமோபாய தாத்பர்யம்

சரமோபாய தாத்பர்யம் யதீந்த்ர விஷயே கரோத் |

யஸ்தமார்ய வரம் வந்தே தேவராஜாஹ் வயம் குரும் ||

1-பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகமான ஸம்ஸாரத்தில் அருசி பிறந்து –2-பகவத் சரணாரவிந்த ப்ராப்தி ரூபமான மோக்ஷத்திலிச்சை பிறந்த வதிகாரி ,
தத் (பகவத் ப்ராப்தி) சித் யர்த்தமாக– சரம பர்வமான எம்பெருமானார் அபிமானத்திலே ஒதுங்கி , –தத் விஷய ப்ரபத்தி நிஷ்டையை யுடையவனாயிருக்க வேணும் .

பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷத்தை பெறுகைக்குடலாக வேதாந்தங்களிலே கர்மாத் யுபாய சதுஷ்டயத்தைச் சொல்லிப் போரா நிற்க ,
அத்தை விட்டு , அதில் லகுவான சரம பர்வ விஷயத்தில் ப்ரபத்தியை பேற்றுக்குடலாக அவலம்பிக்கும்படி எங்ஙனே யென்னில்;

1 ”யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவ இதரோ ஜந: | ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே” (பகவத் கீதா அத்யா 3 ஶ்லோ 21)என்கிற கணக்கிலே
ஞாநாதிகரான நம் பூர்வாசார்யர்கள் யாதொன்றை யநுஷ்டித்தார்கள், யாதொன்றை யதநுப்ரமாணமாக அங்கீகரித்தார்கள்,
அவையிரண்டு மிறே பின்புள்ள அஸ்மதாதிகளுக்கு க்ராஹ்யங்கள்

எல்லா ஶாஸ்த்ரங்களையும் அறிந்தவனென்றும் அநுஷ்டான ஸம்பந்நனென்றும் ப்ரஸித்தனான மனுஷ்யன்
யத் யதாசரதி — எந்தபடி யநுஷ்டிக்கிறான் ,
தத்த தேவ – அந்த அந்த படிகளையே ,
இதரோ ஜந: — பூர்ண ஜ்ஞாநமில்லாதவனும் ,
ஆசரதி – அநுஷ்டிக்கிறான் ,
ச: — அந்த ஶ்ரேஷ்ட மநுஷ்யன் ,
யத் ப்ரமாணம் – ( இப்படி யநுஷ்டிக்கப்படுமவைகளை ) எவ்வளவாக வறுதியிட்டு ,
குருதே — அநுஷ்டிக்கிறானோ ,
தத் -– அத்தை அவ்வளவென்றே நினைத்து ,
லோக: — ஊர்ணஜ்ஞாநமில்லாத மனுஷ்யனும் ,
அநுவர்த்ததே -– அந்த ஶ்ரேஷ்டனை பின் சென்று அநுஷ்டிக்கிறான்.

——–

2-“கர்ம ஞானஞ்ச பக்தி: ப்ரபதந மிதிச ப்ராப்ய சித்யர்த்த மேதாந் ஆலோச்யாலோச்ய ஹேதூந் புநரிஹ சுதராந் தோஷ த்ருஷ்டிம் விதாய | கர்தும் சக்தான பூர்வே யதிவர சரண த்வந்த்வ மூர்தாபி யுக்தாஸ் தத் காருண்ய அபிமாநாத் ததநுச குரவோ-முக்திமாப்தா மஹாப்தா: ||

பூர்வாசார்ய ஸூக்தி ( கர்மஜ்ஞாநஞ்சேதி ) கர்மஜ்ஞாநஞ்ச பக்தி: ப்ரபதநமிதிச -– கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளென்கிற ,
ஹேதூந் –- உபாய சதுஷ்டயத்தையும் ,
ப்ராப்ய -– அடைந்து , அதாவது பகவத் ப்ராப்திக்கு ஸாதநங்கள் என்று அறிந்து ,
புந: — திரும்பவும் ,
ஏதாந் -– இந்த உபாயங்களை ,
ஸித்யர்த்தம் –- பேற்றுக்குடலாமோவென்று ,
ஆலோச்யாலோச்ய –- உணர்ந்து உணர்ந்து பார்த்து ,
இஹ -– இந்த உபாயங்களில் ,
சுதராம் – மிகவும் ,
தோஷ த்ருஷ்டிம் –- தோஷ தர்ஸநத்தை ,
விதாய —- செய்து( அதாவது கர்ம, ஜ்ஞாந, பக்திகளநுஷ்டிக்க வஸ்யங்களென்பதற்கு மேலே ,
இவை பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தங்களென்கிற தோஷம் ப்ரதாநமா யிருக்கிற தென்றும் ;
ப்ரபத் யுபாயம் மஹா விஸ்வாஸ ரூபமா யிருக்கைக்கு மேலே நிரங்குசமான ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமிதற்கு நியதமா யிருக்கிறதென்றும் ;
( நன்றாக அறுதியிட்டு என்கை ) ,
கர்தும் – இவற்றை  யநுஷ்டிக்கைக்கு ,

முக்திமாப்தா மஹாப்தா: || என்று கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாய சதுஷ்டயத்தையும் பேற்றுக் குடலாக பற்றலாமோ
என்று உணர்ந்துணர்ந்து பார்த்த விடத்தில் ஸ்வரூப விருத்தத்வதுஸ்ஸகத்வ விஸ்வாஸ பூயஸ்த்வாதி தோஷங்கள் காண்கையாலே
இவைகளெல்லாம் அரும் தேவைகளாய் இருந்ததென்று பரி த்யஜித்து எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்களும் பின்புள்ள ஆசார்யர்களும் தாங்கள் ஜ்ஞாநாதிகருமாய் ப்ரமாணிக அக்ரேசருமா யிருக்கையாலே
பரம காருணிகராய் ப்ரபந்ந ஜந கூடஸ்தரான வெம்பெருமானாருடைய திருவடிகள் ஸம்பந்தத்தையும் திருமுடிகள் ஸம்பந்தத்தையும் பெற்றுடையராய்
எம்பெருமானாருடைய காருண்ய ப்ரவாஹ ஜநிதமான வபிமாநத்தாலே பேறு பெற்றார்களிறே

(மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
செய்யாதன செய்யோம்
கற்றார் வாழும் கண்ண புரத்து திண்ணைப் பேச்சே பிரமாணம்)

பூர்வர்களுடைய வநுஷ்டாநத்தை பிடித்து நடத்தும் போது அது ப்ரமாண புரஸ்ஸரமாகா விடில் நிரஸ்த கோடியில் அந்தர் பவிதாயோ வென்னில் ;-திராதிறே விதயஶ்ச வைதிகாஸ் த்வதீய கம்பீரா மனோனு சாரிண: (“ ஸ்தோத்ர ரத்நம் – ஶ்லோ 20 )என்றதிறே .

விதயஶ்ச வைதிகாஸ் இதம் குரு இதம் மாகார்ஷீ: என்று ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் ,
த்வதீய கம்பீர மனோனுசாரிண: – அநந்யப்ரயோஜநாராயாஶ்ர யித்தவர்களுடைய கம்பீரமான மநஸ்ஸை பின் செல்லா நின்றன ,

மநஸ்ஸுக்கு காம்பீர்யமாவது , ஷுத்ரமான ஐஶ்வர்யாதிகளில் கால் தாழாதே அநந்ய ப்ரயோஜநமாகை ,
நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் “ என்னும்படி பகவத் விஷயத்தில் அபவகாஹியாதார்க்கிறே
வைதிகமான “ நிதித்யாஸிதவ்ய: “ – என்கிற விதி வேண்டுவது .

—————–

தத் பரமாய் இருப்பதே தாத்பர்யம்-சாரம் – -உட் கருத்து –
சரம உபாயம் –உபாயங்களில் சரமமான உபாயம் ஆச்சார்ய அபிமானம்
தாத்பர்யம் -ராமானுஜர் இடத்தில் -அவர் அபிமானத்தில் ஒதுங்குதல் -ராமானுஜர் அபிமானமே உத்தாரகம் –
ஸ்வாமியுடைய அங்கீ காரம் -அபி மானமே வேண்டுவது –
அர்ச்சையில் பிரபத்தி செய்பவர்கள் மூவர் –
ஆழ்வார்கள் பக்தி பாரவஸ்யத்தாலும்
ஞாநாதிக்யத்தால் ஆச்சார்யர்களும்
அஞ்ஞானத்தால் அஸ்மதாதிகளும் –
ஸுலப்யம் பூர்ணம் -கண்டு பற்றுகைக்கு அர்ச்சாவதாரம் –
அதுக்கும் மேல் யதீந்த்ர விஷயத்தில் -அபரோத் —
இப்படி சாதித்துக் கொடுத்த தேவராஜரை வணங்குவோம் –

————-

இதுக்கு மேலே முக்த கண்டமாக ப்ரமாண முண்டாகில் முக்யமன்றோ ? வென்னில் ; அது தானுமுண்டு ; எங்ஙனே யென்னில் ,

ஸ்ரீஶாஸ்த்ரத்திலே (ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரத்திலே)பெரிய பிராட்டியைக் குறித்து , ஈஶ்வரன் தன்னுடைய வவதார வைபவத்தைச் சொல்லு கிறவிடத்திலே

ஸம்யக் உக்தம் த்வயா விஷ்ணோ ஜந்மநாந் த வைபவம் | த்வதாசார்யா வவதாரத்வ ப்ரகாரமபி மே வத ||

( ஸம்யக் உக்தமிதி ) – ஹே விஷ்ணோ – ஸர்வாந்தர்யாமியாயிருக்கு மவரே ,
த்வயா – தேவரீராலே ,
தவ ஜந்மநாம் – தேவரீரதான அவதாரங்க ளினுடைய ,
வைபவம் – ப்ரபாவமானது ,
ஸம்ய குக்தம் – நன்றாக சொல்லப்பட்டது ,
த்வதாசார்யா வதாரத்வ ப்ரகாரம்பி – இனி தேவரீருடைய வாசார்ய ரூபமான வவதார விசேஷத்தினுடைய ப்ரகாரத்தையும் ,
மே – எனக்கு ,
வத – அருளிச் செய்ய வேணும் , என்று
பிராட்டி பெருமாளை நோக்கி விண்ணப்பம் செய்தாரென்கை .

தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம்என்றும் “ மேலையார் செய்வனகள் “ என்றும் சிஷ்ட்டாசாரமே ப்ரபல ப்ரமாணமாகச் சொல்லக் காண்கையாலே , ப்ரமாண சித்தமாயிருக்கும் . இவர்கள் அநுஷ்டாந ப்ரமாணானு குணமாயல்ல

ந ஶக்தா — ஸமர்த்தர்களாகாமல் ,
மஹாப்தா: — ஜ்ஞாநாதிகராயும் ப்ரமாணிகாக்ரேசரருமாயுமிருக்கிற ,
பூர்வே குரவ: — நம் பூர்வாசார்யர்கள் ,
யதிவர சரணத்வந்த்வ மூர்தாபியுக்தாஸ்ஸந்த: — எம்பெருமானாருடைய திருவடி ஸம்பந்தத்தாலும் திருமுடி ஸம்பந்தத்தாலும் ஸமஸ்த ஶிஷ்ட ஜநபூஜ்ய ராய்க்கொண்டு ,
தத்காருண்யாபிமானாத் – அந்த வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினாலுண்டான வபிமானத்தாலே ,
ததநுச – அந்த வாசார்யர்களை ( அதாவது தங்களை என்ற படி ) பின் சென்றவர்களோடு கூட ,
முக்திமாப்தா: — பேற்று பெற்றார்கள் .
——————–

3 த்வயாசார்யாவதாரஸ்து கிமர்தம் க்ரியதே ப்ரபோ |

க்ருதஸ்யாப் யவதாரஸ்ய பலம் வா கிமவாப்ஸ்யஸி ||

3 ( த்வயாசார்யாவதாரஸ்த்விதி ) – ஹே ப்ரபோ – ஓ ஸ்வாமீ
ஆசார்யாவதாரஸ் து – ஆசார்ய ரூப அவதாரமானது ,
( இவ் விடத்தில் து – என்கிற அவ்யம் பரத்வ , வ்யூஹ விபவாதிகளைக் காட்டிலும்
ஆசார்யாவதாரத்துக் குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது )
த்வயா – தேவரீராலே ,
கிமர்தம் க்ரியதே – எந்த ப்ரயோஜநத்துக்காக செய்யப் படுகிறது ,
க்ருத்ஸ்யாப் யவதாரஸ்ய – அப்படி செய்யப்பட்ட வந்த வவதார விசேஷத்துக்கு ,
கிம்வாபலம் – எந்த பலன் தான் ,
அவாப்ஸ்யஸி – அடையப் போகிறீர் .

4 இதி ப்ருஷ்டோ மஹா லக்ஷ்ம்யா பகவாந் புருஷோத்தம: |

குருரூப வவதாரஸ்ய மஹாத்ம்யம் வக்துமுத்யத: ||

4 ( இதி ப்ருஷ்ட இதி ) – பகவான் புருஷோத்தம: — ஷாட்குண்ய பரி பூர்ணனாயும் ,
நித்யஸூரி நிர்வாஹகனாயும் இருந்துள்ள எம்பெருமான் ,
மஹா லக்ஷ்ம்யா –- பெரிய பிராட்டியாராலே ,
இதி ப்ருஷ்டஸன் –- இந்த ப்ரகாரமாக கேட்கப்பட்டவராய்க் கொண்டு ,
குருரூ பாவ்தாரஸ்ய –- ஆசார்ய ரூப மான அவதாரத்தினுடைய ,
வைபவம் –- வைபவத்தை ,
வக்தும் – சொல்லுகைக்கு ,
உத்யத: — ( ஆபூதிதிஶேஷத: ) யத்நித்தவரானார் .
மஹாத்ம்யம் வக்துமுத்யத

————–

ஸ்ரீபகவாந் | 1 ஸாது ப்ருஷ்ட்டஸ் ்வயா தேவீ ஸாராம்ஸார வித்தமே | ஸ்ருணு வக்ஷயே மதாசார்ய , ஜந்மநோ வைபவம் தவ ||

1 ( ஸாது ப்ருஷ்ட்ட இதி ) சார வித்தமே -– சாரஜ்ஞர்களில் ஶ்ரேஷ்ட்டை யான ,
ஹே தேவி -– ஸர்வ ஸமாஶ்ரயணீயையானவளே ,
ஸாது — ஶ்லாக்யமாய் இருந்துள்ள ,
ஸாராம்ஸ: — ஸார பூதமான விஷயம்,
ப்ருஷ்ட: — கேட்கப் பட்டது ,
மதாசார்ய ஜந்மந: — என்னால் செய்யப்பட்ட தான ஆசார்யாவதாரத்தினுடைய ,
வைபவம் -– மஹாத்ம்ய விஶேஷத்தை,
தவ – உனக்கு ,
வக்ஷ்யே -– சொல்லுகிறேன் ,
ஶ்ருணு – கேளாய் , என்று பெருமாள் அருளிச்செய்தாரென்கை .

2 ஸம்ஸார ஸாகரே மக்நாந், சேதநாந் உஜ்ஜிஹீர்ஷயா | ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானீ சேதிஹாஸா: ப்ரதர்ஸிதா: | தேந மார்கேண கேநாபி முக்திர் லப்தா ந பூதலே ||

2 ( ஸம்ஸார ஸாகர இதி ) ஸம்ஸார ஸாகரே –- ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே ,
மக்நாந் –- முழுகிக் கிடக்கிற ,
சேதநாந் –– பத்த சேதநரை ,
உஜ்ஜி ஹீர்ஷயா -– கரையேத்த வேணுமென்கிற விச்சையினாலே ,
ஶ்ருதி ஸ்ம்ருதி புராணாநி இதிஹாஸஸ்ச –- அபௌருஷேயமாய் நித்ய நிர்தோஷமாய் , ஸ்வத: ப்ரமாணங்களான ருகாதி வேதங்களும்
ததுபப்ருஹ்மணங்களான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களும் ,
ப்ரதர்ஶிதா: — விஸதமாக வெளியிடப்பட்டது
( இத்தனையும் செய்த போதிலும் )
தேந மார்கேண – கீழ்ச் சொன்ன ஶ்ருத்யாதி மார்க்கத்தாலே
பூதலே -– லீலா விபூதியில் ,
கேநாபி – ஒருத்தனாலேயும் ,
முக்தி: — பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷமானது ,
ந லப்தா – அடையப் படவில்லை .

3 ததோ விபவ ரூபேண ஜந்மாநி ஸு பஹுநிமே || ஜாதாநி தேவி தத்ராபி மோக்ஷ ஆர்த்த கோபி ந பவத் ||

3 ( ததோ விபவரூபேணேதி ) – இப்படி மத் ஆஜ்ஞா ரூபங்களான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளால் நாம் நினைத்தபடி நடவாத பின்பு ,
விபவ ரூபேண – ராம க்ருஷ்ணாதி ரூபத்தாலே ,
ஸுபஹுநி -– அநேகங்களான ,
ஜந்மாநி – அவதாரங்களானவை ,
மே -– சேதநோஜ்ஜீவநார்தியான எனக்கு ,
ஜாதாநி –- என்னுடைய இச்சையினாலே உண்டாய்த்தன , ஹே தேவி -– சேதநோஜ் ஜீவநத்தில் எனக்கு முற்பாடளாய் ஸந்தோஷிக்கும் அவளே ,
தத்ராபி -– அப்படி யவதாரங்கள் செய்தவிடத்திலும் ,
( “ அவஜாநந்தி மாம் மூடாம் மாநுஷீம் தநுமாஸ்ரிதம் “ என்கிறபடியே , ஸஜாதீயத்வேந ஸுலபனாய் அவதரித்த விவ்வளவே ஹேதுவாக சேதநர்கள் நம்மை யவமதி செய்கையாலே ) ,
கோபி — ஒருத்தனாவது , மோக் ஷஆர்த்தி — மோக்ஷஆபேக்ஷஐ யுடையவனாக , ந பவது — ஆக வில்லை .

————-

1 வேதாந்தே விவிதோபாய பக்த்யாத்யா விஹிதா மயா |

தேஷ்வப் யக்தாஸ் யாத்மாநஸ் ஸம்ஸரந்தி புந:புந: ||

1 ( வேதாந்தே விவிதோபாய இதி ) “ படாதன பட்டு “ என்கிறபடியே நாம் , எவ்வளவு பட்டது மன்னிக்கே ) ,
மயா — என்னாலே ,
வேதாந்தே — ப்ரஹ்ம ப்ரதிபாதந பரமான வேதாந்த ஶாஸ்த்ரங்களிலே ,
பக்த்யாத்யா: — பக்தி யோகம் முதலான ,
விவிதோபாயா: — அநேக விதமான உபாயங்கள் ,
விஹிதா: — விதிக்கப்பட்டவை ,
( இப்படி விதித்த விடத்திலும் ) ,
ஆத்மாந: — பத்த சேதநர்கள் ,
தேஷ்வபி — அந்த பக்த்யாத யுபாயங்களை யனுஷ்டிக்கும் விஷயத்திலும் ,
அஶக்தாஸ் ஸந்த: — ஶக்தி யில்லாதவர்களாய்க் கொண்டு ,
புந:புந: — அடிக்கடி ,
ஸம் ஸரந்தி — ஜன்ம மரணாதி க்லேஶ பாஹிகளாய்க் கொண்டு திரிகிறார்கள் .

2 ஏவம் பஹுவிதோபாயேஷ் வநிஷ்பந்ந பலேஷ் வஹம் |
ஸதாசார்ய ஸ்வரூபேண ஜநித்வா ஸர்வ சேதநாந் |
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ கமிஷ்யாமீத் வசிந்தயம் ||

2 ( ஏவம் பஹுவிதோபாயேஷ்விதி ) ஏவம் — இந்த ப்ரகாரமாக ,
பஹுவிதோபாயேஷு — சேதநோஜ்ஜீவனார்த்தமாக நாம் செய்த வுபாயங்க ளெல்லாம் ,
அநிஷ்பந்ந பலேஷுஸத்ஸு — நிஷ்பலங்களாய்ச் சென்றவளவில் ,
அஹம் — ஸர்வஜ்ஞனான நான் ,
ஸதாசார்ய ஸ்வரூபேண — ஜ்ஞாநமநுஷ்டாநமிவை நன்றாகவே யுடையனான வாசார்யனாய் ,
ஜநித்வா — அவதரித்து ,
ஸர்வ சேதநாந் — எல்லா சேதநர்களையும் ,
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ — வாரிப் பிடியாக பிடித்துக் கொண்டே ,
கமிஷ்யாமீதி — நலமந்தமில்லதோர் நாடு புகுவோமென்று ,
அசிந்தயம் — எண்ணினேன் .

(ஸ்வ தந்தரரான அவன் ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் -நம்முடைய பாரதந்தர்யத்தை விட அவனுடைய பாரதந்தர்யம் நிலைத்து இருக்குமே)

(தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –ஞான சாரம்-38-

சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தா நும் மக்நான் உத்தர தே லோகன் காருண்யாச் சாஸ்திர பாணிநா
தஸ்மாத் பக்திர் குரௌ கார்யா சம்சார பய பீருணா -என்று –ஸ்ரீ ஐயாக்க்ய சம்ஹிதையில் ஸ்ரீ சாண்டில்யன் சொன்ன வசனம்

கீழே அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்ய பிரபாவம் தகும் என்பதை ஸ்ரீ ஆசார்யன் சாஷாத் நாராயணன் உடைய அவதார விசேஷமே
என்ற சாஸ்த்ரார்த்தம் காட்டி அருளுகிறார் –
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -ஸ்ரீ பெரியாழ்வார் –)

3 ஏவம் ஸந்சிந்த்ய பத்மாஷீ குரு ரூபேணவை புரா |

அவதீர்ணோ ஜநாந் காம்ஸ்சித் ஜநாந் பவாத் அப்யுத்தரம் மே ||

3 ( ஏவம் ஸந்சிந்த்யேதி ) ஏ பத்மாஷீ — தாமரைப் பூப் போன்ற திருக் கண்களை யுடையவளாய் ,
ரமே — நமக்கு ஆனந்தவஹையாயும் ஸ்வயமாநம் நிர்பரையுமாயிருக்குமவளே ,
ஏவம் ஸந்சிந்த்ய — இந்த ப்ரகாரமாக வெண்ணி ,
புரா — முற்காலத்திலே ,
குரு ரூபேண — தத்தாத்ரேயாதி ரூபியாய் ,
அவதீர்ண: — அவதரித்தவனாய்க் கொண்டு ,
காம்ஸசித்ஜநாந் — சில பத்த சேதநர்கள் ,
பவாத் — ஜன்ம மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தில் நின்றும்
அப்யுத்தரம் — கரை யேத்தினேன் .

4 இத: பரம்சாபி கரிஷ்யதே | மயா யதா புரா தேவி ஜநி: க்ருதா ததா| குரு ஸ்வரூபேண நிமக்ந சேதநாந் ஸமுத்தரிஷ்யாமி நிஜ ப்ரபாவத: 

4 ( இத:பரமிதி ) ஹே தேவி — நமக்கு அபிமதமாயும் அநுரூபமாயும் இருந்துள்ள விக்ரஹ குணங்களும் ஆத்ம குணங்களுமுடையவளே ,
புரா — முன்பு ,
மயா — என்னாலே ,
ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
யதா க்ருதா — எவ்விதமாக செய்யப் பட்டதோ ,
ததா — அவ் விதமாகவே ,
இத:பரஞ்சாபி — இனிமேலும் ,
கரிஷ்யதே — செய்யப்படப் போகிறது ,
குரு ஸ்வரூபேண — அப்படி செய்யப்பட்ட வந்த வவதாரத்தில் நாம் ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
நிமக்ந சேதநாந் — ஸம்ஸார ஸாகரத்தில் முழுகிக் கிடக்கிற பத்த சேதநர்களை ,
நிஜ ப்ரபாவத: — ஆசார் யாபிமான ரூபமான நம்முடைய ப்ரபாவத் தாலே ,
ஸமுத்தரிஷ்யாமி — “ ந ச புநராவர்த்ததே “ என்னும்படி கரை யேத்தப் போகிறேன் .

——————-

1க்ஷ்மீ: ||

1 ( லக்ஷ்மீ: )( இப்படி எம்பெருமானார் அருளிச்செய்த வார்த்தைகளைக் கேட்டு ) பிராட்டி மீளவும் சொல்லுகிறார் .

2 கஸ்மிந் குலே பவாந் விஷ்ணோ கரிஷ்யதி. குரோர் ஜநிம் | கஸ்மிந் யுகே வதீர்ணஸ் த்வம் பவிஷ்யஸி வத ப்ரபோ: ||

2 ( கஸ்மிந் குல இதி ) ஹே விஷ்ணோ — ஸர்வ வ்யாபியான ஸ்வாமீ ,
பவாந் — தேவரீர் ,
குரோர் ஜநிம் — ஆசார்ய ரூபமான விலக்ஷண அவதாரத்தை
கஸ்மிந் குலே — எந்த திரு வம்ஸத்திலே ,
கரிஷ்யதி — செய்யப் போகிறது ,
ஹே ப்ரபோ — ஸர்வ நியந்தாவான ஓ ஸ்வாமீ ,
த்வம் — தேவரீர் ,
கஸ்மிந் யுகே — எந்த யுகத்திலே தான் ,
அவதீர்ணோ பவிஷ்யஸி -அவதரிக்கப் போகிறீர் ?
வத — ( இவ் வர்த்தத்தை “ தான் யஹம் வேத ஸர்வாணி “ என்கிறபடியே , தேவரீர் தானே யறிந்திருப்பதால் )
தேவரீரே அருளிச் செய்ய வேணுமென்று பிராட்டி விண்ணப்பம் செய்தாரென்கை .

3 ஶ்ரீபகவான் || 4 அஹமாசார்ய ரூபேண பவிஷ்யாமி யுகே யுகே ||

3 ( ஶ்ரீபகவான் ) இப்படி விண்ணப்பம் செய்த பிராட்டியை நோக்கி எம்பெருமான் அருளிச் செய்கிறார் .

4 தத்ராபி யோகிநாம் பும்ஸாம் குலே மஹதி ஜந்ம மே ||

( அஹமிதி ) ஹே தேவி — நிரவதிக தேஜஸ்ஸை யுடையவளான பிராட்டி
( இந்த பதம் மேலில் ஶ்லோகத்திலிருந்து இவ் விடத்திற்கு ஆகர்ஷிக்கப் படுகிறது ) ,
அஹம் — ஸர்வ ஜ்ஞனான நான் ,
ஆசார்ய ரூபேண — ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
யுகே யுகே — யுகங்கள் தோறும் ,
பவிஷ்யாமி — அவதரிக்கப் போகிறேன் ,
தத்ராபி — அப்படி யவதரிக்கு மிடத்திலும் ,
யோகிநாம் பும்ஸாம் — பரம யோகிகளாயிருக்கிற மஹா புருஷர்க ளுடைய ,
மஹதி — ஸர்வ ஶ்லாக்யமாயிருந்துள்ள ,
குலே — திருவம்ஸத்திலே ,
மே — எனக்கு ,
ஜந்ம — அவதாரமானது ,
பவிஷ்யதி — உண்டாகப் போகிறது

1 விஶிஷ்யமே தேவி கலௌ யுகே குரோர் ஜநிர் பவித்ரீ கலு ஸத் குலே ரமே | த்ரிதண்ட காஷாய பட ஊர்த்வ புண்ட்ரபாக் பவிஷ்யதி ஸாஹி புஜிஷ்ய பூயஸீ ||

1 ( விஶிஷ்ய மே தேவீ )
ஹே ரமே தேவி — நிரதிஶய ஆநந்த யுக்தையாய்க் கொண்டு நமக்கு பட்ட மஹிஷியாயிருக்குமவளே ,
கலௌ யுகேது — கலி யுகத்திலேயோ வென்றால் ,
( இவ் விடத்தில் பூர்வத்தில் காட்டிலும் விசேஷம் சொல்ல வேண்டுகையாலே ,
து — என்கிற அவ்யயம் அத்யாஹரிக்கப்பட்டது )
ஸத் குலே — ஒரு விலக்ஷணமான திரு வம்ஶத்திலே
மே — எனக்கு ,
விஶிஷ்ய — பூர்வ அவதாரங்களைக் காட்டில் விலக்ஷணமாக ,
குரோர்ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
பவித்ரீ கலு — உண்டாகப் போகிறது

( இவ்விடத்தில் கலு என்கிற அவ்யயமிருப்பதால் இவ் வர்த்தம் ப்ரமாண ப்ரதிபந்நமென்று சொல்லுகிறது ) , ஸா — அந்த அவதாரமானது

( “ அடையார் கமலத்தலர் மகள் கேள்வன் “ என்கிற பாசுரத்தின் படியே ,
மனோ புத்தி , ஞாநங்களுக்கும் , ஸாத்விக தாமஸ ரூபத் விவிதாஹங்காரங்களுக்கும் அபிமாநிகரான பஞ்சாயுதாழ்வார் ,
தம் நினைவைப் பின் சென்று தாமதிகரித்த கார்யத்துக்கு ஸஹகரிக்கையாலே ) ,
புஜிஷ்ய பூயஸீ ஸதி — அபரிமிதமான சிஷ்ய ஸம்பத்தை யுடைத்தானதாய்க் கொண்டு ,
த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் — “ காஷாயசோபி “என்கிற ஶ்லோகத்தின்படியே ,
த்ரிதண்டமென்ன , காஷாய வஸ்த்ர மென்ன , த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களென்ன இவைகளையுடையது ,
பவிஷ்யதி — ஆகக் கடவது .
இது சத்ரந்த பதமா இவ்வர்த்தம் காட்டுகிறது ,
இவ்விடத்தில் , ஹி என்கிற அந்வயம் இருப்பதால் , இவ் வர்த்தத்தினு டைய ப்ரஸித்தி சொல்லப்படுகிறது .

(அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –)

(காஷாயசோபி கமநீயசிகாநிவேசம்தண்டத்ரயோஜ்வலகரம் விமலோபவீதம் |. உத்யத்திநேசநிப முல்லஸதூர்த்வபுண்ட்ரம்.)

(உபாய அபாய ஸம்யோகம் கூடாதே
தர்ம வழி வேறே உபாயாந்தரங்களைப் பற்றி
அபாயம் -அதர்மம் வழியில் செல்வது
இரண்டுமே கூடாதே)

(ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்)

2 ஸர்வோபாய தரித்ராணாம் சேதநாநாம் வராநநே | மமாபிமாநாத் ஸர்வேஷாம் முக்தி: குரு ஸரீரிண:

2 ( ஸர்வோபாய தரித்ராணாமிதி ) ஹே வராநநே ஸர்வோத்க்ருஷ்டமான திருமுக மண்டலத்தை உடைய பிராட்டி ,
ஸர்வோபாய தரித்ராணாம் — கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாயங்களென்கிற கைமுதலற்றவராயிருக்கிற ,
ஸர்வேஷாம் சேதநாநாம் — ஶ்ரீ வசநபூஷணத்திலருளிச் செய்த படியே , அஜ்ஞரும் ஞாநாதிகரும் பக்தி விவசருமான எல்லா சேதநர்களுக் கும் ,
( இவ்விடத்தில் பக்தி விவசரென்பது , ஆசார்ய ப்ரேமாதிஸயத்தாலே ஸிதில கரணராய்
ஆந்ரு ஶம்ஸத்தாலே பரார்த்தமாகவாவது , ஒன்றையும் அடவு படவநுஷ்டிக்க க்ஷமரல்லாதவரை ) ,
குரு ஸரீரிண: — பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்கிறபடியே , ஆசார்ய ரூபியாய் இருக்கிற,
மம — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்தி: — மோக்ஷ மானது ,
( பவிஷ்யதி ந ஶம்ஶய: ) நிஶ் ஶம்ஶயமாக உண்டாகக் கடவது
( இந்த பதங்கள் , மேல் சொல்லப்போகிற
மத்க்ருதோ யோபிமாநஸ் ஸ்யாத் , என்கிற ஶ்லோகத்திலிருந்து
ஆகர்ஷிக்கப்படுகிறது . )

1 மத் பக்தா ஜ்ஞாந பூர்ணாயே பவிஷ்யந்தி கலௌ யுகே |
த்ரிதண்டிந அபிமாநாந் மே தே ஸர்வே குரு ரூபிண: |
முக்தி பாஜோ பவிஷ்யந்தி ஸத்யே நாஹம் ப்ரவீமிதே ||

1 ( மத் பக்தா இதி ) கலௌ யுகே — கலியும் கெடும் என்னும்படியான பெருமை பெற்று வந்த கலியுகத்திலேயே — யாதொருத்தர் ,
ஜ்ஞாந பூர்ணாஸ்ஸந்த — அர்த்த பஞ்சக ஜ்ஞாந பூர்த்தியுடையவர்களாய்க் கொண்டு,
( ஜ்ஞாநத்துக்கு பூர்த்தியாவது , “ எல்லாம் வகுத்த விடமே என்றிருக்கக் கடவன் “ என்கிற
ஸ்ரீ ஸூக்திபடியே யெல்லாமாசார்ய விஷயமாக வறுதியிடுகை ) ,
மத் பக்தா பவிஷ்யந்தி — ஆசார்ய ரூபியான வென்னிடத்தில் நிரதிஶய பக்தி யுடையவர்களாகிறார்களோ ,
தே ஸர்வே — அப்படிப்பட்டவர்களெல்லாரும்,
த்ரிதண்டிந: — த்ரிதண்ட தாரியாயும் ,
குரு ரூபிண: — ஆசார்ய ரூபியாயுமிருக்கிற ,
மே — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்திபாஜோ பவிஷ்யந்தி — பேற்று பெற்றவர்களாகப் போகிறார்கள்
( இவ் வர்த்தத்தை ) ,
அஹம் —நான் ,
தே — உனக்கு ,
ஸத்யேந — ஸபத பூர்வமாக ,
ப்ரவீமி — சொல்லுகிறேன் .

2 மத் க்ருதோ யோபிமாநஸ் யாதாசார்யத்வே ஸுபாநநே |

யேவ முக்திதோ தேவி பவிஷ்யதி ந ஶம்ஶய: ||

2 ( மத் க்ருதோ யோபிமாநஸ்ஸ்யாத் இதி ) ஹே ஸுபாநநே — ஸர்வருக்கும் மங்களாவஹமான திருமுக மண்டலத்தை யுடையவர்களாயும் ,
தேவி — நம்முடைய விபூத் யைஶ்வர்யத்துக்கு ஸஹ தர்மசாரிணியாயுமிருக்கும் பிராட்டி ,
ஆசார்யத்வே — ஆசார்ய கார்யமான வுபதேச விஷயத்திலே
மத் க்ருத இதி — ( பின்புள்ளார் உபதேசத்தாலும் , அது க்ருபா மாத்ர ப்ரஸந்ந ரான ) நம்மால்
செய்யப்பட்டதென்று நாம் நினைத்திருக்கையாகிற ,
யோபிமாநஸ் ஸ்யாத் — யாதோரபிமாந விசேஷமுண்டோ ,
ஸயேவ — அதுவே தான் ,
முக்தி த: — ( உபதேசம் செய்யுமவர்களுடைய ஜ்ஞாநாநுஷ் டான பூர்த்தியைப் பாராமல் ) மோக்ஷ ப்ரதமாக ,
பவிஷ்யதி — ஆகப் போகிறது ,
ந ஶம்ஶய: — இது விஷயத்தில் ஸந்தேஹமில்லை .

3 குரு ரூபஸ்ய மே நாம்நா ஸமயோ விஜயீ பவேத் ||

3 ( குரு ரூபஸ்யேதி ) ஸமய: — ( அப்படிப்பட்ட வாசார்ய ரூபாவதாரத்தில் நம்மால் உத்தரிக்கப்பட்ட ) விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தமானது ,
குரு ரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — என்னுடைய ,
நாம்நா — திரு நாமத்தாலே ,
விஜயீ பவேத் — “ இடங்கொள் ஸமயத்தையெல்லா மெடுத்துக் களைவன போலே நடந்தும் , பரந்தும் , குனித்தும் நாடகம் செய்கின்றனவே “ என்கிறபடியே
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தை களிலும் ஸர்வோத்க்ருஷ்டமாக , அபிவ்ருத்தி யடையக் கடவது ;
இவ் விடத்தில் என்னுடைய திரு நாமத்தாலே யென்னது ,
இராமாநுஜ , என்கிற திருநாமத்தாலே யென்றாய் , இத்தால் , இராமாநுஜ ஸித்தாந்தம் -( எம்பெருமானார் தரிசநம் ) என்று ஜய ஶீலமாகக் கடவதென்கை .

————-

1 மத்காலாதநு பத்மாக்ஷஈ ஸமயோ லோபமேஷ்யதி ||

1 ( மத்காலாதந் விதி ) ஹே பத்மாஷீ — தாமரை போன்ற திருக் கண் அழகை யுடைய பிராட்டி ,
ஸமய: — அப்படி வ்ருத்தி யடைந்து வருகிற பரம வைதிக ஸித்தாந்தமானது ,
மத்காலாதநு — நம்முடையதான வந்த வாசார்யாவதாரத்துக்குப் பின்பு ,
( இவ்விடத்தில் “ பூத்வா பூயோ வர வர முநிர்போகிநாம் ஸார்வபௌம: “ என்கிற வபியுக்தோக்திப்படியே ,
யதிவர புநரவதாரமான பெரிய ஜீயர் காலத்துக்கும் பின்பு , என்று கொள்ள வேணும்)லோபமேஷ்யதி — ஸங்கோசத்தை யடையப் போகிறது .

2 குரு ரூபஸ்ய மே ஶக்திம் தத்ர தத்ர நிதாயவை |

ஸமயம் ஸங்க்ரஹீஷ்யாமி நாதிலுப்தோ யதா பவேத் ||

2 ( குருரூபஸ்ய மே ஶக்தி மிதி ) — ( இவ்வர்த்தத்தை நாம் முன்னமே யறிந்து ) குருரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — நம்முடையே ,
ஶக்திம் — திவ்ய ஶக்தியை ,
தத்ர தத்ர — ( நமக்கு வுத்தேஶ்யமாயிருக்கிற ) அந்த அந்த ஸ்தலங்களிலே ,
நிதாய — அர்ச்சா ரூபமாக ப்ரதிஷ்டிப்பித்து ,
ஸமயம் — லோபிக்கப்போகிற ஸித்தாந்தத்தை ,
யதா — எந்த ப்ரகாரமாக ,
நாதிலுப்தோ பவேத் — மிகவும் லோபத்தை யடையாமலிருக்குமோ ,
ததா — அந்த ப்ரகாரமாக ,
ஸங்க்ரஹீஷ்யாமி — சேரப் பிடிக்கப் போகிறோம் .

3 மமாசார்யாவதாரேது ஏஷாம் பக்திர் பவிஷ்யதி | தேஷாமேவ பவேந் முக்திர் நாந்யேஷாம் ஸுலபா பவேத் ||

3 ( மமாசார்யாவதாரேத் இதி ) யேஷாம்து — யவர்களுக்கானால் ,
மம — என்னுடையதான ,
ஆசார்யாவதாரே — ஆசார்ய ரூபமான வவதார விசேஷத்திலே ,
பக்தி: — ஸ்நேஹ பூர்வகமாய் , இடைவிடாத நினைவு ,
பவிஷ்யதி — உண்டாகக் கடவதோ ,
தேஷாமேவ — அவர்களுக்குத்தானே ,
முக்தி: — பகவத் ப்ராப்தியாவது ,
ஸுலபா — சுகமாக லபிக்குமது ,
பவேத் — ஆகக் கடவது ,
அந்யேஷாம் — அந்த வாசார்ய பக்தி யில்லாதவர்களுக்கு ,
ஸுலபா ந பவேத் — சுலபமாக மாட்டாது .

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —————60-

ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் ————61-

1 அஸ்மிந் நர்தேஹி விஸ்வாஸஸ் ர்வேஷாம் ந ஜநிஷ்யதி |

மத்கடாக்ஷஓ பவேத் யஸ்மிந் மைய்யேவ ப்ரவணோஹிய: | தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ்தோயம் பவிஷ்யதி ந ஶம்ஸய: ||

1 ( அஸ்மிந்நர்த இதி ) அஸ்மிந் அர்த்தே — “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்னுமிவ்வர்த்தத்திலே ,
விஶ்வாஸ: — இது தான் பரமார்த்தம் என்கிற நினைவு ,
ஸர்வேஷாம் — எல்லாருக்கும் ,
ந ஜநிஷ்யதி: — உண்டாகப் போகிறதில்லை என்பது நிச்சயம் ;
( ஆனால் பின்னை யுஜ்ஜீவிக்கும் விறகேதென்னில் )
யஸ்மிந் — எந்த சேதநந் விஷயத்திலே ,
மத் கடாக்ஷ: — ஆசார்ய ரூபியாயிருக்கிற வென்னுடைய கடாக்ஷமானது ,
பவேத் — உண்டாகக் கடவதோ ,
ய: — எந்த சேதநன் தான் ,
மய்யேவ — என்னிடத்தலேயே,
ப்ரவண: — நெஞ்சிரக்கமுடையனாயிருப்பனோ ,
தஸ்ய தஸ்ய — அந்த வந்த வதிகாரிக்கு ,
ஹ்ருதிஸ்த: — நெஞ்சில் நிலை நின்றதாக ,
அயம் -– இந்த பாவ விசேஷமானது
( அதாவது “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்கிற நினைவென்கை ) ,
பவிஷ்யதி -– உண்டாகப் போகிறது,
ந ஶம்ஶய: — இவ்வர்த்தத்தில் ஶம்ஶயமில்லை ,
ஹி – இவ்வர்த்தம் ஸுப்ரசித்தம் .

என்றிப்படி ப்ரபல ப்ரமாணங்களை எம்பெருமான் தானே யருளிச்செய்து வைக்கையாலே ,
முக்த கண்டமாக முக்ய ப்ரமாணங்களும் இவ்வர்த் தத்தில் குறைவரக் காண்கின்றன .

இவை யெல்லாவற்றையும் முன் கொண்டு , இந்த ப்ரமாண ப்ரதி பாத்யமான வர்த்தங்களைத் தெளிய வறிந்து ,
நம்மாசார்யகளனைவரும் தந் நிஷ்டராய் ,
தங்களைப் பற்றினார்க்கும் , இத்தையே யோக்யதாநுகுணமாக உபதேசித்துப் போந்தார்கள் .
இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்றும் ,
த்ரிதண்ட தாரியாய் யாசார்ய ரூபேண தானே அவதரிப்பனென்றும் , ஈஶ்வரனருளிச் செய்கையாலே
மற்றுமவனருளிச்செய்த வர்த்தங்க ளெல்லாம் எம்பெருமானாரிடத்திலே யாயிற்று நிலை நின்றிருப்பது ;

ஆகையால் ஆசார்யத்வ பூர்த்தி யுள்ளதும் அவரிடத்திலேயே யிறே ,
அவர் அபிமானமே நமக்கெல்லா முத்தாரகமென்று. ஶம்ஶய விபர்யமற நம் பூர்வாசார்யர்களும் அறுதி யிட்டார்களிறே ;
ஆகையாலே நம் பூர்வாசார்யார்களநுஷ்டாநமே நமக்கெல்லாம் ப்ரமாணமென்பது
“ தர்மஜ்ஞ ஸமய “ – ஸமயமென்னும் ப்ரபல ப்ரமாண ப்ரதிபந்நமென்றும் , சொல்லிற்றாயிற்று .

—————-

இனி சரம பர்வமான எம் பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி
“ தேவுமற்றறியேன் “ என்னுமதிகாரிக்கு , பக்தி ப்ரபத்திகளிரண்டும் பயாவஹமாயிருக்கும் . எங்ஙனேயென்னில் ;
பக்தி தான் ஸ்வ யத்ந ஸாத்யமாகையாலும் , பகவத் பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ ப்ரவ்ருத்தி விரோதி யாகையாலும் ,
ஸ்வ ஸ்வாதந்த்ரிய ரூபமான வஹங்காரத்தை விளைவித்து பாரதந்த்ரிய ஸ்வரூபமான வாத்ம சத்தையை யழிக்குமென்று பயம் பிறக்குமிறே ;

பாரதந்த்ரிய ஸ்வரூபத்துக்கு அனு குணமாய் பகவத் விஷய விஸ்வாச ரூபமான ப்ரபத்யுபாயமும்

(பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி
பக்தியை விடுவதற்கு ஸ்வரூப விருத்தம் தானே ப்ராதான்ய ஹேது -சக்தி இருந்தாலும் பூர்வர்கள் இதனாலே விட்டார்கள்

திரௌபதி -இருக்கையும் விட்டேனோ திரௌபதியைப் போலே -லஜ்ஜயை விட்டாள்
ஸீதா பிராட்டியும் ஸூவ ஸக்தியையும் விட்டாள்
திருக்கண்ண மங்கை ஆண்டான் ஸூவ வியாபாரத்தை விட்டான்

ப்ரபத்தியில் அசக்தனுக்கு இது -ஆச்சார்ய அபிமானம் –
ஈஸ்வர ஸ்வா தந்தர்யம் முதல் ஹேது
விஸ்வாஸ மால்யம் -மஹா விஸ்வாஸம் துர்லபம்

பசு பக்ஷி வா -இத்யாதி -விச்வாஸம் இல்லாவிட்டாலும் ஆச்சார்யர் தானே அபிமானத்து பேற்றை அளிப்பார் அன்றோ

ஆசார்ய அபிமானம் தான் பிரபத்தி போலே உபாயாந்தர ங்களுக்கு அங்கமாய் –
ஸ்வ தந்த்ரமுமாய் – இருக்கும் –சூரணை -461-

இது பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதம் ஆக்கும் –பின்பு புஷ்பிதம் ஆக்கும் –அநந்தரம்பல பர்யந்தம் ஆக்கும் —சூரணை -463-

இப் பிரகரணத்தால் –
ஆசார்யனை உபாயமாகப் பற்றினார்க்கு -பய அபயங்கள் இரண்டும் மாறி மாறி நடக்கும் என்னும் பிரசங்கம் இல்லாமையும் -407
இவ் அர்த்த நிர்ணய பிரமாணம் இன்னது என்னுமதும்-409-
இவ் அர்த்த ஸ்தாபனத்துக்கு ஈடான உபபத்தியும்-410- -ஐதிக்யமும் -411-
இவ் அர்த்த உபபாதன அர்த்தமாக ப்ராப்ய நிர்ணயமும் -412-
இப்படி ப்ராப்ய நிர்ணயம் பண்ணினால் இதுக்கு சத்ருசமாகக் கொள்ள வேணும் ப்ராபகம் என்னும் அதுவும் -425-
அல்லாத போது வரும் -தூஷணமும் -426-
ஈஸ்வர விஷயத்தில் இவனுக்கு உள்ள சரணவத் பாரதந்த்ர்ய அனந்யத்வங்களை ஸூசிப்பித்துக் கொண்டு -427-
ஈஸ்வரனைப் பற்றும் அதில் இவனைப் பற்றும் அதுக்கு உள்ள விசேஷமும் -428-
ஈஸ்வர சேதனர்கள் இருவருக்கும் இவன் உபகாரகன் என்றும் -429
ஈஸ்வரனும் ஆசைபடும் பதத்தை உடையவன் என்றும் -430
இவன் பண்ணும் உபகாரத்துக்கு சத்ருச பிரத்யுபகாரம் இல்லை என்றும் -432
இவனோட்டை சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் என்றும் -433
ஈஸ்வரனை உபகரித்த இவனிலும் -இவனை உபகரித்த ஈச்வரனே மகா உபகாரகன் -என்றும் -436
இவ் ஆசார்ய வைபவமும் -ஆத்ம குணம் உண்டானாலும்
ஆசார்ய சம்பந்தத்தை நெகிழ்க்லில் அந்த பிரயோஜனமும் அவத்யகரமும் ஈஸ்வர நிஹ்ரக ஹேதுவாம் படியும் -437-438-439-
ஆசார்ய சம்பந்த விச்சேதத்தில் பகவத் சம்பந்த த்வர்பலமும் -440-
ஆசார்ய அன்வயத்துக்கும் பாகவத சம்பந்தம் அபேஷிதம் என்னும் அதும் -441-442-443-
ஆசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன உபாயம் இல்லை என்னும் இடத்தில் -ஆப்த உபதேசமும் –
இவ் அர்த்தத்தினுடைய ஸ்தீரீகரணமும்-444-445-
இவ் ஆசார்ய அபிமான நிஷ்டனான அவன் சுலபமான இவ் விஷயத்தை விட்டு
துர்லபமான பகவத் விஷயத்தை ரஷகமாக விச்வசிக்க கடவன் அல்லன் -என்றும் -448-
பரத்வாதி ப்ராப்ய ஸ்தலங்கள் எல்லாம் இவ் விஷயமே என்று இருக்கக் கடவன் -என்றும் -450-
இவனுக்கு பிரதிகூல அநு கூல அநு பயர் இன்னார் என்றும் -451
இவனுடைய ஞான அனுஷ்டானங்களுக்கு விநியோகமும் -452-
இவனுக்கு நிஷித்த அனுஷ்டானமும் 453–விஹித போகாதிகளும் -த்யாஜ்யம் என்னும் இடமும் -455-
ஸ்வரூப பிரச்யுதி வாராமைக்கு வேண்டும் அவஸ்தையும் -457-
ப்ராப்ய பூமி ப்ராவண்யாதி த்ரயமும் இவனுக்கு அவஸ்ய அபேஷிதம் என்னும் அதுவும் -458-
ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகார உபாய த்வய பிரமாணங்களும் -459-/460-
ஆசார்ய அபிமானத்தின் ஸ்வ தந்திர உபாயத்வமும் -461-
தத் அதிகாரி நிர்ணயமும் -462-
இவ் ஆச்சார்ய அபிமானம் இச் சேதனனுக்கு உண்டாக்கும் பல பரம்பரையும் 463–சொல்லுகையாலே –
சதாச்சார்ய அபிமானமே சர்வருக்கும் உத்தாரகம் -என்னும் இடம் சொல்லப்பட்டது –

ஆக
இத்தால்
வாக்ய த்வயயோ உக்யதா- உபாய உபேய -சரம அவதியை -அருளிச் செய்தார் ஆயிற்று –)

(ஆச்சார்ய அபிமானமும் இரண்டு வகை
குருவால் அபிமானிக்கப்பட்டவனுக்கு குருவை அபிமானித்தவனை விட -பரகத ஸ்வீ காரம் – பூனைக் குட்டியைக் கவ்விய தாய் பூனை -ஸ்ரேஷ்டம்
ஸ்வ கத ஸ்வீ காரத்தை விட -குரங்குக் குட்டி குரங்கைப் பிடித்துக் கொள்ளுமா போல்- ஸ்ரேஷ்டம்
நாம் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பமாய் இருக்கும்
அங்கும் வேறுபாடு உண்டாம்
கர்மாதி மூலம் பெற்ற பேற்றை விடவும்
ஸ்வ கத ஸ்வீ காரம் மூலம் பெற்ற பேற்றை விடவும்
பர கத ஸ்வா காரம் மூலம் பெற்ற பேறு –
பகவத் முக விலாஸத்தில் வேறுபாடு இருக்குமாம் -)

(தேவ சரணாகதியால் பரத சரணாகதிக்கு பலம் விளம்பம் ஆயிற்று –
யாம் வந்த கார்யம் முன்பே சொல்லாமல் சிற்றம் சிறு காலையில் வைத்து அருளினாள் அன்றோ -நாச்சியார்
சரண்ய ஹ்ருதய அநுசரியாக இருக்க வேண்டுமே
இது போல் ஆச்சார்யர் இருக்க மாட்டாரே
ஆச்சார்ய ஹ்ருதய ஆனுகூல்ய விரஹம் இல்லை அன்றோ
இக் குற்றம் பகவத் விஷயத்திலே தான் இருக்கும் -)

ஸ்வகத ஸ்வீகாரம் அஹங்கார கர்ப்பதயா அவத்யகரமாய் இருந்ததே ஆகிலும் –
பல சித்தியில் வந்தால் -பழுது போகாது என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –
குருணா யோபி மன்யேத குரும் வா யோ அபிமந்யதே தாவு பௌ பரமாம் சித்திம் நியமா துபக கச்சத -என்று
பர கத ஸ்வீகாரோத்தோபாதி-ஸ்வகத ஸ்வீகாரத்துக்கும் பலம் தப்பாது என்னும் இடம் –
பாரத்வாஜ சம்ஹிதையிலும் -சொல்லப் பட்டது -இறே-
(தாவு பௌ–இருவருக்கும் நியாமேந-பல சித்தி –
பிரபத்திக்கு சரண்யா ஹ்ருதய அனுசாரி யாக இருக்க வேண்டும் –
பரம தயாளு -என்பதால் அது இங்கு இல்லை -அஹங்கார கர்ப்பம் –பழுது என்று ஒத்துக் கொண்டு –
பழுது ஆகாது -பல சித்தியில் -என்று இரண்டுக்கும் இதுவே பிரமாணம் –
அபலை சிறு பெண் -பிஞ்சாய் பழுத்து அவள் ஸ்ரீ ஸூக்தி அடுத்ததுக்கு -)

(அமோகமாய் –ஸ்வ கத ஸ்வீ காரமும் வீணாகாதே -இங்கே ஆச்சார்ய அனுசார ஹ்ருதயம் சங்கை இல்லையே -பரதந்த்ரன் என்பதால் –
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு -அங்கும் ததீயருக்கே –)

இனிமேல் பரகத ஸ்வீ காரம் ஆகிற பரம உபாயத்துக்கு பிரமாணங்கள் பலவற்றையும் –
தர்சிப்பித்து அருளுகிறார் –

(1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –சூரணை -460-)

(எட்டவிருந்த குருவை இறை அன்று என்று
விட்டு ஓர் பரனை விருப்புறுதல்-பொட்டெனத் தன்
கண் செம்பளித்திருந்து கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்து இருப்பானற்று –33-

ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் –
கைப்பட்ட பொருளைக் கைவிட்டுப் புதைத்த பொருளைக் கணிசிக்கக் கடவன் அல்லன்
-விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை யுபேஷித்து ஜீமூத ஜலத்தையும் சாகர சலித்தையும்
வாபி கூப பயஸ் ஸூக்களையும் வாஞ்சிக்கக் கடவன் அல்லன் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்திகள் –

பற்று குருவைப் பரன் அன்று என இகழ்ந்து
மற்றோர் பரனை வழிபடுதல் -எற்றே தன்
கைப் பொருள் விட்டு ஆரேனும் காசினியில் தாம் புதைத்த
அப்பொருள் தேடித் திரிவான் அற்று –34-

ஸூலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் யா உபாஸதே லப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்த மன்வேஷ திஷிதௌ–)

(ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4-

உன்னை அடைவதற்கு உறுப்பாக நீ கண்டு வைத்த சாதனங்கள் எனக்கு ஒன்றும் உடல் ஆகின்றன இல்லை;
ஆன பின்பு, தேவரை நான் அடைவதற்கு எனக்கு என்னத் தனியே ஒரு சாதனம் கண்டு தர வேணும் என்கிறார்.

நஞ்சீயரை, நம்பிள்ளை ஒரு நாள் “பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லா நின்றார்கள்;
நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்று உண்டோ?” என்று கேட்டருள,
“நான் அறிகிலேன்; இனி, நான்காவது உபாயந்தான் பகவானேயாயிருக்க, ஆகாயமென்று கூறப்படுகிற நாராயணனுக்கும்
அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப் போல, அவனுக்கும் அவ்வருகே ஒன்று உண்டு’ என்கை அன்றோ,
அது நான் கேட்டு அறியேன்” என்று அருளிச் செய்தார்.

ஆகாயம் என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்று உண்டு என்று சொல்லுவாரைப் போலே’ என்றது,
“தத்ராபிதஹரம்”என்கிறபடியே, நாராயணனைச் சொல்லி,
“தஸ்மின் யதந்த:”என்கிறபடியே, அவனுக்கு அந்தர்யாமியாக இருப்பவன் சிவன் என்று
சொல்லுவாரைப் போலே என்றபடி. அங்ஙனம் சொல்லுபவர், சைவர்.

“ஆனால், ‘ஆவா’ என்கிற பாசுரம் அருளிச் செய்யும் போது, ‘எனக்குத் தனியே ஒரு சாதனம் கண்டு தர வேணும் என்கிறார்’ என்று
அருளிச் செய்கையாயிருக்குமே” என்ன, “அதுவோ! அது உன் நினைவின் குற்றங்காண்; அதற்கு இங்ஙனே காண் பொருள்;
நீயும் உளையாயிருக்க, நான் இங்ஙனே இழப்பதே என்கிறார் காண்” என்று அருளிச் செய்தார்.

தகராகாசம் -நாராயணனுக்கு உள்ளே இருப்பதை உபாசிப்பாய் வியோம அதீத -தாண்டி -தஸ்மிந் அந்தஸ்த உபாஸித்வயம்
குணங்களை உபாசிக்கச் சொல்லிற்று -பசுபதி மதத்தார் உள்ளே உள்ள சிவன் என்பர் –
ஸூவ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் ஒழிய விரகு இல்லை-இதுவே உத்தாரகம் –
வ்யூஹம் -வாசுதேவன் -அந்தர்பூதம் ஆக்கி த்ரி வியூகம் சொல்வது போலே ஆச்சார்ய அபிமானம் ஸ்வ தந்த்ர உபாயம் ஆகிலும்
காலைப் பிடித்து கார்யம் கொள்ளுவது போலே அந்தர்பூதம்-ஐஞ்சாம் உபாயம் என்கிறது அமோக பழுது ஆகாத பலன் என்பதால் –
உபாயாந்தர குற்றம் வராதே -ஆச்சார்யன் ஈஸ்வரனே -காருண்யத்தால் சஸ்த்ர பாணி -மோக்ஷ ஏக ஹேது-பரதந்த்ரன் -ஆச்சார்யர் –
பிராட்டி உபாயம் ஆக்க கூடாதோ -ஸ்வ தந்திரம் வருமே -அதனால் வாராது -ஆச்சர்யராக வருவதற்கு அவன் சங்கல்பித்தான் —
ஸ்வதந்த்ர உபாயம் இல்லை -தானே பரதந்த்ரம் -ஸ்வதந்திரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் தானே ஆச்சார்ய ஜென்மம் –

“ஸாஹம் கேஸக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவித்யபி ப்ரபோ – நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும் படி
நான் மான பங்கம் செய்யப்பட்டவள் ஆவதே! உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு?
ப்ரபோ – நீயும் என்னைப் போன்று பெண்ணானாயாகில் நான் ஆறியிருக்க லாயிற்றே;
நீ பரிபவத்தைப் போக்கக் கூடியவனாய் இருக்கச் செய்தே நான் நோவு படுவதே என்றாளன்றோ.

ஸாஹம் கேஸக்ரஹம் பிராப்தா பரிகிலிஷ்டா ஸபாங்கதா பஸ்யதாம்
பாண்டு புத்ராணாம் த்வயி ஜீவத்யபி ப்ரபோ”–என்பது, மஹாபாரதம்.

கற்றைத் துகில் பிடித்துக் கண்ணிலான் பெற்றெடுத்தோன் பற்றித் துகிலுரியப் பாண்டவரும் பார்த்திருந்தார்
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி அற்றைக்கும் என்மானம் ஆர்வேறு காத்தாரே.-என்பது, வில்லிபாரதம்.

நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன்,
‘எம்பெருமானே உபாயமாகில் சரணாகதி கொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன,
செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து
ஓராண் வழியாய்க் கொண்டு போந்த இதனை,
இதன் சீர்மை அறியாத உனக்கு மஹா பாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக் கொண்டு–
திருப்பள்ளி யறையிலே புக்கருளினார். –இவனை நிக்ரகிக்காதே என்று பிரார்த்தித்தார் —

திவ்விய மங்கள விக்கிரஹமும் விக்கிரஹ குணங்களும் திவ்வியாத்ம ஸ்வரூப குணங்களும்
நித்திய முக்தர்கட்குப் பிராப்யமானாற்போலே, முமுக்ஷுவாய்ப் பிரபந்நனான இவ்வதிகாரிக்குச்
சரணாகதியே பிராப்பியமாய் இருக்கும் அன்றோ.
பண்ணும் பொழுது அதிகாரி விசேஷணமாய் இருக்கும் –விருப்பம் உள்ளவன் என்று காட்ட -ஓடத்தில் ஏறி அமர்ந்தது போலே –
விருப்பம் உபாயம் இல்லை -விஷ்ணு போதம் ஓடம் உபாயம் -பண்ணின பின்பு அதுவே ப்ராப்யம்

ஆ ஆ என்னாது –
ஈஸ்வரனுக்குப் பிரியம் செய்கை யாகிறது, அவன் விபூதியிலே கிருபை செய்தலே அன்றோ;
நஞ்சீயர், “ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்க முடியாத தன்மை வந்ததாகில்,
‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில்,
‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கே கை வாங்க அமையும்” என்று அருளிச் செய்தார்.
பிறர் ஆகிறார் யார்? என்னில், தன்னினின்றும் வேறுபட்டவர்.)

(குணங்களை உபாசிக்கச் சொன்னது அவனில் வேறுபட்ட ஒன்றைச் சொல்லாதது போல்
ஆச்சார்ய அபிமானமும் அவனில் வேறுபட்டது அல்ல
ப்ரஹ்ம உபாஸனம் -ஸ்வரூப உபாஸனம் -ப்ரஹ்ம குண உபாஸனம் -ஆச்சார்ய அபிமானம் -திவ்ய மங்கள விக்ரஹ உபாசனம்
காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமா போல் -முன்பு கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமது போல் -கார்யம் நிச்சயம் என்பதால் பஞ்சம உபாயம் என்கிறார்)

1 “ பவ மோக்ஷணயோஸ் த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்க நிதே “ -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்-என்கிறபடியே
பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய் நிரங்குச ஸ்வதந்த்ரனான வெம்பெருமான் தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தாலே
மீளவும் ஸம்ஸரிப்பிக்கில் செய்வதென்னென்று பயப் படப் பண்ணும் .

இப்படி ஸ்வ ப்ரவ்ருத்தி ஸாத்யமான பக்த் யுபாயமும் , ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸாத்யமான ப்ரபத்யுபாயமும் , பய ஜநகமாகையாலே
சரம பர்வ நிஷ்டனுக்கு நெஞ்சில் தங்காது ;

1 ( பவ மோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்க நிதே ) ஹே ரங்க நிதே -– “ நிதயேர்த்திநாம் “ என்னுமாப் போலே
அர்த்திகளுக்கு நிதியாய்க் கொண்டு கோயிலிலே கண் வளர்ந்திருக்குமவரே ,
ஜந்து: — சேதநநாநவன்,
த்வயைவ –- உன்னாலே தான் ,
பவ மோக்ஷணயோ: — பந்த மோக்ஷங்க ளிரண்டுக்கும் விஷயமாக ,
க்ரியதே -– செய்யப் படுகிறான் ;

இரு வல் அருள் நல் வினைகள் ” என்னும் ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்திப் படியே புண்ய பாப ரூப கர்மங்களடியாக ஸம்ஸரிப்பித்தும் ;
இப்படிப்பட்ட விந்த சேதநர்களுடைய துக்க தர்ஶந மாத்ரத்தாலே நிர் ஹேதுகமாக கடாஷித்து நிரதிசய ஆனந்த ரூப
ஸ்வ ப்ராப்தி பர்யந்தமாக விவர்களை யுஜ்ஜீவிப்பித்தும் போருகிற வீஶ்வரனுடைய செயல்களைக் கண்டால் ,
இத்தனையுமவனே செய்தமை , இவனுக்கு விசதமாக ப்ரகாசிக்குமென்னதாயிற்று ;
இதற்கு மேல் சொல்ல வேண்டுமவையாய் வருகிற வைஷம்ய நைர்க்ருண்ய தோஷ பரிஹாரங்கள் ஸ்ரீபாஷ்யாதிகளிலே கண்டு கொள்வது .

(இவற்றுக்கு மூலம் இரு வல் அருள் நல் வினைகள்—ஆசார்ய ஹ்ருதய-சூர்ணிகை-8

இரு வல் வினை -பாப புண்ய ரூப வலிய கர்மாக்கள்
அருள் நல் வினை -கிருபா மூலம் வரும் ஸூஹ்ருதம் –இவனும் அறியாதே சாஸ்திரமும் அறியாதே —
வரவாறு ஒன்றும் இல்லாமல் வெறிதே அருள் செய்வான்

அதாவது
இஜ் ஜென்மத்துக்கு மூலம்
சார்ந்த இரு வல் வினை–
சார்ந்த இரு வல் வினைகளும் சரிந்து மாய பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி
வீடு திருத்துவான் திருவாய்-1-9-10-என்று
ஆத்மா உடன் பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி கிடக்கிற பிரபலங்களான புண்ய பாபங்கள்-

இக் கடாஷத்துக்கு மூலம்
தொல் அருள் நல் வினை–
தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கோல் தோழிமீர்காள் தொல் அருள் மண்ணும் விண்ணும்
தொழ நின்ற திரு நாமம் -திருவாய்-5-9-10- என்கிற
அவனுடைய ஸ்வாபாகிக கிருபை ஆகிய ஸூஹ்ருதம் என்கை-
தொல் அருள் பூர்வ ஸூஹ்ருதம் -கிருபையால் நம் தலையில் போடுகிறார் அன்றோ

இரு வல் லருள் நல் வினைகள் என்றது
இரு வல் வினையும் அருள் நல் வினையும் என்ற படி)

ஆகையாலிறே , இவ் வதிகாரிக்கு பக்தி ப்ரபத்திக ளுபாயமன்னென்றும் ,
எம்பெருமானாருடைய வபிமாநமே யுத்தாரகமென்றும் ,
நம் பூர்வாசார்யர்களறுதியிட்டதும் .

(ப்ரயாண காலே ) இத்யாதி , —
அதாவது பக்தி ப்ரபத்திகள் உபாயமல்லாமையாலே , நிர் ஹேதுகமாக கடாஷித்து பவ்யனாக்கி கொண்டு போறும்
பரமகாருணிகராய் ஸதாசார்யரான வெம்பெருமானார் , இவன் நம்முடையவனென்று அபிமாநித்திருக்கும் அந்தவபிமாநமே ,
இவனுக்கு ஸம்சார உத்தாரக மென்றபடி
ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்று , ஸ்தோத்ரத்தின் முடிவிலே பரமாசார்யரான ஆளவந்தாரும் அருளிச் செய்தார் இறே .

———

நடாதூர் அம்மாள்  கூறியதாவது

”எம்பெருமானாரின் அபிமானம் ஒன்றே  இதற்கு  வழி. வேறெதுவும் இல்லையே. எம்பெருமானாரே, தங்கள் திருவடித் தாமரை ஒன்றே  சரணம்  என்று அவரை அடிபணிந்தால்  நாம்  காப்பாற்றப் படுவோம்.”

நடாதூர் அம்மாளின்  கீழ்க் கண்ட  ஸ்லோகம்  இதை  எடுத்துரைக்கிறது.

ப்ரயாண காலே சதுரஸ் ஸ்வஸிஷ்யாந் பதாதிகஸ்தாந் வரதோ ஹி வீக்ஷ்ய பக்தி ப்ரபத்தி யதி துஷ்கரேவ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்”.

அவரது அந்திம காலத்தில் ”எங்களுக்கு  எது இனி  அடைக்கலம்?”  என்று சீடர்கள் வினவினார்கள்.

“ பக்தியும் பிரபத்தியும் உங்கள் ஸ்வரூபத்துக்கு  ஒவ்வாதது.  எம்பெருமானார் திருவடி நிழலே சரணம் என்று  அவர் தாள் பணியுங்கள் அது ஒன்றே உங்களை உய்விக்கும் ”  என்கிறார்  ஸ்வாமிகள்.

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம்

பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி)--நடாதூர் ஆழ்வான் தனியன்:

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||-ஶ்லோகம் 65 –

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

—-

இனி இந்த வாசார்யாபிமாநந்தான் ஸ்வேதரோபாயங்களுக்கு அங்கமோ ! ஸ்வதந்த்ரோபாயமோ ! வென்னில் ,
உபயமுமாயிருக் கும் ; எங்ஙனேயென்னில் ,

மஹா விஸ்வாச ரூபையான ப்ரபத்தியானது , கர்ம ஜ்ஞாந பக்திகளாகிற உபாயாந்தரங்களுக்கு விச்சேதா பாதக பாப ஹரத்வேந தத் வர்த்தகமான வங்கமுமாய் ,
1 “ ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரி ப்ராரப்தஸ்யாபி பூயஸீ “ என்கிறபடியே ,
1 ப்ரபந்ந பாரிஜாதே –- பலோதய பத்ததௌ — ஶ்லோ 178
( ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ ) – இதற்கு பூர்வார்தம் ,

“ உபாய பக்தி: ப்ராரப்த வ்யதிரிக்தாக நாஸிநி “ என்று . இவ்விடத்தில்
பக்தியென்கிறது பற்றின விஷயந்தன்னில் அவ்யபிசாரிணியான சேவையை .
இதுதான் , உபாய விஷயத்திலாம்போது தந்நிஷ்டா விஶேஷத்தைச் சொல்லுகிறது ;
உபாயபக்தி: — ஸாங்கமான பக்த்யுபாயத்தில் அவ்யபி சாரிணியான நிஷ்டையானது ,
ப்ராரப்த வ்யதிரிக்தாஹ நாஸினீ – ப்ராரப்த கர்ம வ்யதிரிக்தங்களான பூர்வோத்தராகங்களை நஸிப்பித்து விடும்;
பூயஸீ -– பாமரு மூவுலகத்தில் படியான பரமார்த்தரிடத்தி லதிசயித்திருக்கிற ,
ஸா -– ஸாத்ய பக்திஸ்து –
“ தஸ்மாந்யாஸமேஷாந் “ என்று
வேதாந்தங் களிலே ப்ரஸித்தமாயும் உபேயாந்தர பூதமாயுமிருக்கிற ப்ரபத்யுபாயமோ வென்னில் ,
ப்ராரப்தஸ்யாபி – கர்ம ஜ்ஞாந ஸஹ க்ருதையான பக்த்யுபாயத் தாலும் கூட அவிநாஸ்யமாயிருந்துள்ள ப்ராரப்த கர்மத்துக்கும் ,
ஹம்த்ரி – நாசகமாயிருக்கும் ;
து –- என்கிற அவ்யயம் பக்த்யுபாயத்தில் காட்டில் , இப்ரத்யுபாயத்துக்குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது ;

இவ்விடத்தில் ஆர்த்த ப்ரபந்நர் விவஷிதராகையாலே ,அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட ப்ராப்திக்கு ஸ்வதந்த்ரோபாயமு மாயிருக்குமாப் போலே ;
இதுவும் ஸ்வேதரோபாயங்களுக்கு உபதேஷ்ட்ருத்வ ப்ரவர்த்தகத் வாதிகளாலே , அங்கமுமாய் ,

“ 1 தேவமிவாசார்ய துபாஸீத “ ,

1 ஸ்ருதி ( தேவமிவேதி ) ஆசார்யம் – ஆசார்யனை , தேவமிவ -– ( எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே
என் மாத்ரமாகிலுமவர்களை யாராதித்து நல் வழி போங்கோளென்று சொல்லுகிற
“ சச பூஜ்யோ யதாஹ்யஹம் “ என்கிற உப ப்ரும்மணத்தின்படியே
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவனான வெம்பெருமானைப்போலே ,
உபாஸீத – உபாஸநம் ஸ்யாத்ரு வாநுஸ்ம்ருதி: “ என்கிற அத்யர்த்த ப்ரேமத்தோடே யநுவர்த்திக்கக் கடவன் .

2 “ ஆசார்யான் புருஷோ வேதா “ ,

2 ஸ்ருதி ( ஆசார்யவாநிதி ) –-
ஆசார்யவான் – ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ண னான வாசார்யனை யுடையனாயிருக்கிற ,
புருஷ: — முமுஷு வான புருஷன் ,
வேத -– அர்த்த பஞ்சகங்களை யலகலகாக வறியக் கடவன் .

3 “ உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத் “

3 ப்ரபந்ந பாரிஜாதே –
குரூபாஸநபத்ததௌ – ஶ்லோ 18 ( உபாயோபேய பாவேநேதி ) – தமேவ –– அப்படிப்பட்ட ஆசார்யனையே ,
உபாயோபேய பாவேந — உபாயோபேயங்களிரண்டும் அவனே என்கிற நினைவோடே ,
சரணம் –- ரக்ஷகனாக ,
வ்ரஜேத் –- புத்தி பண்ணக் கடவன் .

என்று இத்யாதி களில் சொல்லுகிறபடியே
இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் தனக்கு மேலற்ற ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்கும் .

பக்தி ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்க ப்ரபத்தி ஸ்வதந்த்ரோபாயமானாப் போலே
இந்த வாசார்யாபி மாநமாகிற சரம ப்ரபத்தியும் , ஸ்வதந்த்ரோபாயமாய் வந்தது ;

பக்திக்கந்தர்யாமி விஷயம் ,-ப்ரபத்திக்கு அர்ச்சாவதாரம் விஷயம் ,-சரம ப்ரபத்திக்கு பகவதவதாரமான வெம்பெருமானார் விஷயம் .

ப்ராக்ருத விக்ரஹ யுக்தரா யெழுந்தருளியிருக்கையாலே ,அவர்களுக்குண்டான அவ்வார்த்தி விஶேஷத்தையே
ப்ராரப்த கர்ம:பல மாகக் கொண்டு ஈஶ்வரன் அந்த கர்மங்களை வஸிப்பிக்குமென்னபடி ;

தத ப்ராப்தி மஹாது:கவிலீநாஶேஷ பாதகா “ என்று
சிந்தயந்திக்கு பகவத் ப்ராப்தி , நினைத்த போதே கிடைக்க வில்லை யென்னும் ஆற்றாமையாகிற
மஹாது:காநுபவத்தாலே ஸமஸ்த பாபங்களும் வுருமாய்ந்து போயிற்றே என்று சொல்லிற்றே

ஸஜாதீய புத்தி பண்ணலாம்படி யிருந்ததேயாகிலும் ,
எம்பெருமானா ரிடத்திலே எம்பெருமான் ஸ்வரூபேண நின்று விஶேஷாதிஷ்டாநம் பண்ணுகையாலும் ,
இவ் வர்த்தத்தை ஸ்வயமேவ அருளிச் செய்கையாலும் ,
பகவதவதாரம் எம்பெருமானார் என்கிற வம்ஸத்தில் ஶம்ஶயமில்லை .

——————–

1 ததுக்தம் பாஞ்சராத்ரே பகவதா ஸேநேஸம் ப்ரதி ;

1 ( ததுக்தமிதி ) – தத் -– கீழ்ச்சொன்ன பகவதவதார மெம்பெருமானாரென்கிற விவ்வர்த்தம் ,
பாஞ்சராத்ரே –- ஸ்ரீபாஞ்சராத்ர ஶாஸ்த்ரத்தில் ,
பகவதா -– ஈஶ்வரனாலே ,
ஸேநேஸம் ப்ரதி -– ஸேனை முதலியாரைக் குறித்து ,
உக்தம் – அருளிச்செய்யப்பட்டது .

2 மம ஸ்வரூபம் ஸர்வஸ்மாத் பரஸ்ய ஜகதீசிது: || ஷட்விதம் பரிபூர்ணந்த த்ஸேநேச பரிபட்யதே ||

2 எங்ஙனேயென்னில்
( மமஸ்வரூபமிதி ) –ஹே ஸேநேஸ –- வாரீர் ஸேனை முதலியாரே ,
ஸர்வஸ்மாத் பரஸ்ய -– ஸர்வ ஸ்வாமியாகவும் ,
ஜகதீசிது: — ஸர்வ நியந்தாவாகவுமிருக்கிற ,
மம -– என்னுடைய ,

தத் –-ஸகல வேதாந்தங்களிலும் ப்ரஸித்தமான ,
ஸ்வரூபம் -– அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ விஶிஷ்ட ஸ்திதியானது ,
பரிபூர்ணம் –- “ இதம் பூர்ணமத:பூர்ணம் “ என்கிறபடியே ஜ்ஞாநபலைஶ்வர்யாதி கல்யாணகுண புஷ்கலமாயும் ,
ஷட்விதம் –- ஆறு ப்ரகாரமுடைத்தானதாயும் ,
பரிபட்யதே — ஶாஸ்த்ரங்களிலெங்கும் ப்ரதிபாதிக்கப்படுகிறது .

3 பரத்வ , வ்யூஹ , விபவமந் தர்யாமித்வ மே வ ச | அர்ச்சா சார்யாவதாரௌ த்வௌ ஷாட்வித் யம் மே ப்ரகீர்த்திதம் ||

3 ( பரத்வேதி ) -– அந்த ஷட்விதமான ஸ்வரூபமெப்படிப்பட்டதென்ன ,
பரத்வ வ்யூஹ விபவம் –- பரத்வமென்றும் , வ்யூஹமென்றும் , விபவ மென்றும் ,
அந்தர்யாமித்வமேவச – அந்தர்யாமித்வமென்றும் ;
( இவ்விடத் தில் , ஏவ—ச—என்கிற அவ்யவங்களிரண்டும் , வாக்யாலங்காரமாகக் கொள்வது )
அர்ச்சாசார்யாவதாரௌத்வௌ | — “ ஸர்வம் பூர்ணம் ச ஹோம் “ என்கிறபடியே
ஸமஸ்த கல்யாண குண புஷ்கலமாகையாலே ப்ரபத்திக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரம் ,
இப்படிப்பட்ட ஸித்தோபாயத்துக்கு பஹிர்பூதமன்றியே
தத்சரமாவதியான –- ஆசார்யரூபாவதாரம் , என்கிற விவையிரண்டுமென்றும் ,
மே -– என்னுடையதான ,
ஷாட்வித்யம் –- ஆறு ப்ரகாரமானது ,
ப்ரகீர்த்திதம் — ஶாஸ்த்ரங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டது .

—————-

1 பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத்ஸுலபோ ஹ்யுத்தரோத்தர: | தேஷ்வாசார்யாவதரணே காருண்யம் பரிபூரிதம் ||

1 ( பூர்வஸ்மாதபீ இதி ) –
பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத் -– பரத்வம் முதல் முன் முன்னானவைகள் காட்டில் ,
உத்தரோத்தர: — பின் பின்னான வவதாரம்,
ஸுலப: — ஒன்றைக் காட்டிலுமொன்றாஶ்ரிதற்கு ஸுலபமாயிருக்கும் ,
தேஷு – அவைகளில் வைத்துக் கொண்டு ,
ஆசார்யாவதரணே -– ஸர்வ ஸுலபமான ஆசார்யாவதாரத்திலே ,
காருண்யம் – ஆஶ்ரித ஸம் ரக்ஷணமே, ஸ்வபாவமாயிருக்கைக்கு ஈடான க்ருபையானது ,
பரி பூரிதம் –- வடிவிலே தொடைக் கொள்ளலாம்படி புஷ்கலமாயிருக்கும்

2 ஜ்ஞாநாதி குணதஸ் தத்ர விஶேஷா திஷ்டிதிர் பவேத் |
ஆசநந்த்வாத் தயாளுத்வாத் ஜ்ஞாநித்வாத் குரு பாவத: |
சரமஸ்ய வதாரஸ்ய குரு ரூபஸ்ய மே ஸதா ||

2 ( ஜ்ஞாநாதிகுணத இதி )
குருரூபஸ்ய –- ஆசார்ய ரூபத்தை யுடைத்தா யிருக்கிற ,
சரமஸ்யாவதாரஸ்ய –- கடைசி அவதாரமானது ,
1-ஆசந்த்வாத் –- “ நடமினோ தமர்களுள்ளீர் “ என்கிறபடியே சென்று ஸேவிக்க வேண்டியதான வர்ச்சாவதாரம் போலன்றிக்கே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து “ என்று ஆஶ்ரிதரிருக்குமிடம் தேடி வந்து கிட்டியிருப்பதாலும் ,
2-தயா ளுத்வாத் -– கர்மாநுகுணமாக விவனை ஸம்ஸ்கரிக்கவும் விடும் ஸ்வதந்த்ர மான தயை போலன்றிக்கே
ஸர்வ ப்ரகாரத்தாலு மிவனை யுஜ்ஜீவிப்பித்தே விடும் நிரதிஶய தயையை யுடைத்தாயிருக்கையாலும் ,
3-ஜ்ஞாநித்வாத் – “ ஜ்ஞாநீத்வாத்மயிவ மே மதம் “ என்கிறபடியே
நமக்கு தாரகமானதாயிருக் கையாலும் ,
4-குரு பாவத: — அஜ்ஞாந நிவர்த்தகனென்கிறதே ஸ்வரூபமா யிருக்கையாலும் ,
தத்ர – அந்த அவதாரத்தில் ,
ஜ்ஞாநாதி குணத: — ஜ்ஞாந பலைஶ்வர்யாதி குணங்களையுடைத்தான முந்தின வவதார பஞ்சகத்திற் காட்டில் ,
மே – என்னுடைய ,
விஶேஷாதிஷ்டிதி: — விஶேஷாதிஷ்டான மானது ,
ஸதா –- எப்போதும் ,
பவேத் –- உண்டாயிருக்கக் கடவது .

3 ப்ராப்யத்வ ப்ராபகத்வே த்வேஸ்வநிஷ்டே ந குணௌ மதௌ | தஸ்மாந் மத் பாத யுகளம் ஶரண்யம் மோக்ஷகாமிநாம் ||

3 ( ப்ராப்யத்வ ப்ராபகத்வே இதி ) –
(அந்தவவதாரத்தில்) ப்ராப்யத்வ ப்ராப கத்வே த்வே –- உபாயத்வம் – உபேயத்வம் ஆகிற விவையிரண்டும் ,
ஸ்வ நிஷ்டே -– நமக்கு ஸ்வரூபமாகவேயிருக்கும் ;
குணௌ – நமக்கவை குணங்களாக ,
நமதௌ – எண்ணப் பட்டதன்று ,
தஸ்மாத் -– ஆன படியாலே,

என்று பகவான் தானே யருளிச் செய்தாரிறே -இத்தாலும் , எம்பெருமானார் திருவடிகளே ஸம்ஸாரோத்தரணோபாயம் .

இனி ஸ்வதந்த்ர னாயிருப்பானொரு மஹா ப்ரபுவைக் கண்டு கார்யம் கொள்ளுமவன்
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொள்ளுமளவில் அவன் இனியனாய் இவன் கார்யம் செய்கைக்கும்
ஸ்வதந்த்ரனாய் சீறி யுதறி யுபேஷிக்கைக்கும் உடலாயிருக்கும் ;
அந்த ப்ரபு தன்னையே காலைப் பிடித்துக் கொள்ளுமளவில் ,அவன் தயா பரவசனாய் , உதற மாட்டாமல் , கார்யம் செய்து விடுமோபாதி ,
சரணஸ்தாநீயரான வெம்பெருமானாரை பற்றினால் , அவன் பரம தயாளுவாய் இவன் கார்யம் செய்யுமிடத்தில் ஸம்ஸயமில்லையிறே .

———————

1 “ லோகே ச பாத பதநம் பாணி ஸங்க்ரஹணாதபி | தயா ஹேது தயா த்ருஷ்டுமித் யுக்தம் சரணாவிதி “ என்றும் ;

1 ( லோகே ச பாதபதநமிதி ) லோகே ச -– இருள் தரு மா ஞாலமாகையாலே சரணாகத ஸம்ரக்ஷணம் பரம தர்மமென்றறுதி யிடமாட்டாத இந்த விபூதி யிலும் கூட ,
பாத பதநம் -– காலைப் பிடித்துக்கொள்ளுமது ,
பாணி ஸங்க்ர ஹணாதபி -– கையைப் பிடித்துக்கொள்ளுமதிலும்காட்டில் ,
தயா ஹேது தயா -– க்ருபை யுண்டாகுகைக்கு காரணமாக ,
த்ருஷ்டமிதி -– காணப்பட்ட தென்று ,
சரணாவிதி –- ( மந்த்ர ரத்நத்தில் ) “ சரணௌ “ என்று ( திருவடி களைப் பற்றும்படி ) ,
உக்தம் –- சொல்லப்பட்டது .

2 “ அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் “ என்றும் , சொல்லுகிற படியே , சரண க்ரஹணம் அமோகோபாயமிறே |

2 ( அநதிக்ரமணீயமிதி )
சரண க்ரஹணம் – அஜ்ஞன் முதல் ஸர்வஜ்ஞன் வரையிலுள்ள யெல்லார்க்கும் காலைப் பிடித்துக் கொள்கையென்றால் ,
அநதிக்ரமணீயம்ஹி – அதிக்ரமிக்கக் கூடாததாய் இருக்குமிறே ;

தாத்பர்யம்
பறை -கைங்கர்யம் என்றே தாத்பர்யம்
மேலோட்டமாக பேரி வாத்யம்
கோவிந்தா -வேத வாக்கு -பூமி -மாடுகளின் பின்னே போய் தாத்பர்யம் அறியாதவன் –
பரமமான உபாயம் -எம்பெருமானார் அபிமானம் -இதுவே இந்த பிரபந்தத்தின் தாத்பர்யம்

பட்டர் திருவணையாடி மீண்டெழுந்தருளுகிறபோது பாதிரி என்கிற கிராமத்திலே ஒரு வேடவனகத்திலே ஓர் இரவு தங்கின வளவிலே பிறந்த ( முசலின் விஷயமான ) வார்த்தையை இவ்விடத்திலநுஸந்திப்பது ; இத்தால் திருவடிகளைப் பற்றுமது அமோகோபாயமென்னதாயித்து .

நம்பெருமாள் , பெரிய திருவோலக்கமாக வெழுந்தருளியிருக்க , திருவடி தொழ வந்தவர்கள் , எம்பெருமானாரை நோக்கி தண்டனிட, தத்கால வர்த்தியான ராஜா , எம்பெருமானாரை தண்டனிட்டு , எல்லாரும் பெருமாளை விட்டு உம்மையே தண்டனிடா நின்னார்கள்

இதுக்கு இப்பொருளருளிச்செய்ய வேணுமென்ன ,
உம்முடைய பக்கலிலே சிலர் கார்யம் கொள்ள வந்தால் அவர்களில் , ஒருவன் உடுவரைக் கொண்டு வந்தான் ,
ஒருவன் உம்முடைய பாதுகையைப் பிடித்து நின்றான் , இதிலே யாருக்கு நீர் முந்துற கார்யம் செய்வீர் ! என்ன ;
காலைப் பிடித்தவனிடத்திலே ப்ரீதி விளையுமென்ன ,
அப்படியே நாம் நம்பெருமாளுக்கு திருவடிகளாயிருப்போம்
, அதனால் நம்மைப் பத்தினார்க்கு கார்யாம்ஶத்திலொரு குறையுமின்றியிலே யமோகமாகப் பலிக்குமென்றருளிச் செய்தார் .

உத்தாரகமான வெம் பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தம் தேவதாந்தர , மந்த்ராந்தர தோஷ ஸ்பர்ஶத்தாலே கலங்கி குலையாமல் ஸத்தையுடன் கிடைக்கப் பெறில் , ஸ்வரூபாலங்காரமான தத்வ ஜ்ஞாநமும் , அநந்ய பக்தியும் , அந்ய  வைராக்யமும் இல்லா விடிலும் ,
மேலந்த ஸம்பந்தத்தாலே யுண்டாக்கிக் கொள்ளலாம் ;

(ஞான பக்தி வைராக்யங்கள் பூஷணங்கள் போல் -எம்பெருமானார் ஸம்பந்தம் உணர்வது தாலி இருப்பது போல் -என்றவாறு)

ம்ருத ஸஞ்சீவினியான வெம் பெருமானாரோட்டை ஸம்பந்தம் நிஷித்த அநுஷ்டாந அந்வய லேஸத்தாலே யவன் கைவிடும்படி குலைந்தால் ,
அநர்தமே விளைந்து , அத்தால் ஜ்ஞாநாதிகள் சிலதுண்டானாப் போலே தோற்றிற்றாகிலும் , ப்ரயோஜநமில்லையாம் .

(தாலி கிடந்தால் பூஷணங்கள் மேல் பண்ணிக் கொள்ளலாம் அன்றோ)

ஸதாசார்யரான எம்பெருமானாரோடு ஸம்பந்தமற்ற ஜ்ஞாநாதிகளுமிவனுக்கு , அவத்யகரமாய் தலைக்கட்டும் ;

அவத்யகரமாகையாவது , பகவந் நிக்ரஹத்தை விளைத்து யாவதாத்மபாவி நரகத்திலே தள்ளிவிடுமென்றபடி , எம்பெருமானாரோடுண்டான ஸம்பந்தம் ஸ்வரூப விகாஸ ஹேது , ததபாவம் ஸ்வரூப விநாஶ ஹேது , என்று வங்கீபுரத்து நம்பி வார்த்தை .

1 “ மையாசார்யாவதாரேது யஸ்ய பக்திர் ந வித்யதே , தஸ்யாத்ம நாசஸ் ஸேநேஸ பவிஷ்யதி ந ஶம்ஸய: “ என்று எம்பெருமான் தானேயருளிச் செய்தானிறே .

1 விஶ்வக்ஸேந ஸம்ஹிதாயாம் — ( மய்யாசார்யாவதாரேத்விதி )
ஹே ஸேநேஸ -– வாரீர் ஸேனை முதலியாரே ,
ஆசார்யாவதாரே –- ஆசார்ய ரூபியாயவதரித்திருக்கிற ,
மயி -– என்னிடத்தில் ,
யஸ்யது –- எவனுக்கானால் ,
பக்தி: — அத்யந்த ஸ்நேஹத்தோடு ,
மோக்ஷகாமிநாம் முமுஷுக்களுக்கு ,
மத்பாதயுகளம் — அப்படி யாசார்ய ரூபியாயிருக்கிற நம் திருவடிகளிரண்டுமே ,
சரண்யம் — ரக்ஷகமாகக் கடவது .

1 “ ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரண த்வந்த்வ ஆஶ்ரயா ஶ்ரீபதிர் மாமாத்ருத்ய மஹாபல ப்ரசவிதா ஜாதோஹி ரங்கேஸ்வர: |
தத் த்ருஷ்ட்வா மயி ரங்கநாத ரமணீ ஸ்ரீரங்கநாயக்யஹோ ஸ்ரீராமாநுஜ பாத பாகயமிதி ப்ராசீகச ஸ்வாந்தயாம் “
என்று இறே நம்பிள்ளை யருளிச் செய்யும்படி ;

அதாவது
எம்பெருமானாருடைய திருவடிகளில் ஸம்பந்தமுடையவனன்றோ வென்று பெரிய பெருமாள் , என்னை யாதரித்து
“ அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை “ யாகிற மஹா: பலத்தைத் தருவாராக ஒருப்பட்டார் ;
அத்தைப் பெருமாளுக்கு பத்நியா யினிய விஷயமாயிருக்கிற ஸ்ரீரங்கநாச்சியார் கண்டு ,
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுண்டான பின்பு தத் ஶத்ருஶமாகக் கொடுக்கலாவ திது-(அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை)வன்று , வேறு தகுதியா யிருப்பதொரு பலம் கொடுக்க வேணும் என்று , நினைத்துக் காணாமையாலே ,
தம்முடைய நிர்ஹேதுகமான க்ருபையை , என் பக்கலிலேயொரு மடையாக வெளியிட்டாள் ;
இதென்ன வாச்சர்யம் என்று உகந்து அருளினார் என்றபடி  

(ஒன்று உண்டு செங்கண்மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்?  )

இத்தால் எம்பெருமானாரோடு ஸம்பந்தமுண்டாகவே , பிராட்டியும் எம் பெருமானு மொருவர்க் கொருவர் பரிந்து மேல் விழுவார்களென்று மர்த்தம் சொல்லப்பட்டது,

நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் பரம காருணிகரான வெம்பெருமானார் இவன் நம்முடையவன் , என்றபிமாநிக் குமபிமாநமே ஸம்ஸார உத்தாரகமென்று கூடிய தாஸ்ய ருசியானது ,
ந வித்யதே -– இல்லாமல் போகிறதோ ,
தஸ்ய –- அந்த சேதநநுக்கு ,
ஆத்மநாஶ: — ( ஶேஷத்வமில்லாத போது ஸ்வரூப மில்லை “ யாகையாலே ) ஸ்வரூபநாஶமானது ,
பவிஷ்யதி -– உண்டாகக் கடவது ;
ந ஶம்ஶய: — ( இவ்வர்த்தத்தில் ப்ரமாணங்கள் சுருக்கமறக் காண் கையாலே ) ஸந்தேஹமில்லை .
1 ( ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ரேதி ) -– இதுதான் ப்ரமாணிகாக்ரேசரரான நம்பிள்ளை யருளிச்செய்த ஶ்லோகமா யிருக்கும் ;
ஶ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாத் –- ஸ்ரீமத் –- ஸ்ரீவைஷ்ணவஸம்பத்தை யுடையராய் ,
அன்றிக்கே பகவதநுபவகைங்கர்யரூபமாகிற நிலைநின்ற ஸம்பத்தையுடையராய் ,
அஜ்ஞநுமன் றிக்கே நமக்கபேஷிதமான ப்ராப்யத்தை தருகைக்கீடான ஜ்ஞாநாதி ஸம்பத்தையுடையரா யென்றுமருளிச் செய்வர் ;

லக்ஷ்மண தேஶிகேந்த்ர – ஆசார்ய குல ஶிகாமணியான வெம்பெருமானாருடைய
( இவ்விடத்தில் “ லக்ஷ்மண ” என்கிற பதம் அவதாரத்தினுடைய ஊத்தக் காலைக் காட்டுகிறது ) ,
சரணத்வந்த் வாஶ்ரயாத் – இரண்டு திருவடி களை யாஶ்ரயித்த பலத்தாலே
( மந்த்ர ரத்ந்த்தில் “ சரணௌ “ என்கிற பதத்துக்குச் சொன்ன வர்த்தங்களெல்லா மிவ்விடத்துக்கு சேரும் ),
ஸ்ரீபதி: — ஸ்ரீய:பதியான ,
ரங்கேஶ்வர: — பெரியபெருமாளானவர் ,
மாம் — ( ஸ்வப்ந முகேன தம்முடைய திருவடிகளிரண்டுமே உபாயோபேயங்களென்று
எம்பெருமானார் தாமே காட்டிக் கொடுக்கும்படியான பாக்யமுடைய ) அடியேனை ,
ஆத்ருத்ய – விஶேஷ கடாக்ஷம் செய்தருளி ,
மஹா:பல ப்ரசவிதா – நித்ய கைங்கர்யமாகிற பரம புருஷார்த்தத்தைத் தருவாராக
( ப்ரதம பருவநிஷ்டருக்கு கொடுப்பது ஃபலம் , இவர்க்கு கொடுப்பது மஹாபலம் , அதாவது , அடியார்க்காள்படுத்துகை ) ,
ஜாதோஹி – ஒருப் பட்டாறிறே ,
தத் – அப்படிப்பட்ட பெரியபெருமாளுடைய திருவுள்ளக் கருத்தை ,
த்ருஷ்ட்வா – கடாஷித்தருளி ,
ரங்கநாத ரமணீ –( ஶம்ஶ்லேஷ தஸையிலீஶ்வரனையும் , விஶ்லேஷதஸையில் சேதநநையும் திருத்தி
சேதநரக்ஷணமே யாத்ரையா யிருக்கையாலே ) பெரியபெருமாளுக்கு ஆனந்தாவஹையாயிருக்கிற ஸ்ரீரங்கநாயகீ –-
பெரியகோயில் ஐஶ்வர்யத்துக்கெல்லாம் கடவுளான ஸ்ரீரங்கநாயகியாரானவர் ,
அயம் –- இந்த நம்பிள்ளை ,
ஸ்ரீராமாநுஜ பாத பாக் இதி –- பெரியபெருமாள் தாமே விரும்பி உபயவிபூத்யைஶ்வர்யத்தையும் கொடுக்கும் படியான
ஜ்ஞாநாதி குணஸம்பத்தையுடைய வெம்பெருமானார் திருவடிகளை யாஶ்ரயித்தவ னென்று ,
மயி –- அடியேனிடத்தில் ,
ஸ்வாம் – தனக்கஸாதாரணமா யிருக்கிற ,
தயாம் – “ பாபாநாம் வா ஸுபாநாம் வா “ என்கிறபடியே , அஜ்ஞ , விஶேஷஜ்ஞ விபாகமறவெல்லாரும் வாழும்படியான நிர்ஹேதுக க்ருபையை ,
ப்ராசீகசத் – பரிபூர்ணமாக வெளியிட்டாள் ;
அஹோ – “ என்னைப் புவியிலொரு பொருளாக்கி “ இத்யாதியில்படியே ,
எம்பெருமானார் செய்தருளின விவ்வுபகாரம் ஆச்சர்ய கரமாயிருக்கிறதென்கிறார் .

சாரார்த சதுஷ்டய விவரணத்தில் அம்மங்கி யம்மாளுக்கு , எங்களாழ்வான் தாமுமருளிச் செய்தாறிறே .

(ஸ்ரீ வார்த்தா மாலையில் பதினேழாம் வார்த்தை

ஸ்ரீ எங்கள் ஆழ்வான் ஸ்ரீ பாதத்தில் அம்மங்கி அம்மாள் தண்டன் இட்டு -அடியேனுக்கு தர்சனம் இருக்கும்படியை
அருளிச் செய்ய வேண்டும் -என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ எங்கள் ஆழ்வானும் –
தரசநாந்திரிகளை நிரசிக்கவோ –
ஸ்வ தர்சன ஸ்தாபநம் பண்ணவோ –
தர்சனம் இருக்கும்படி கேட்கவோ -என்று அருளிச் செய்ய –

இவரும்
தர்சநாந்திரிகளை  நிரசிக்கவும்
ஸ்வ தர்சன ஸ்தாபனம் பண்ணவும் தேவரீர் எழுந்து அருளி இருந்தீர் –
அடியேனுக்கு தர்சனம் இருக்கும்படி அருளிச் செய்ய வேணும் என்ன –

ஸ்ரீ எங்கள் ஆழ்வான் ஸ்ரீ அம்மங்கி அம்மாளுக்கு அருளிச் செய்த சாரார்த்த சதுஷ்டயம் –

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்கும் நம் பூர்வாசார்யர்கள் –
தங்களுக்கு தஞ்சமாகவும்
உத்தாரகமாகவும்
போக்யமாகவும் அனுசந்தித்தும்
உபதேசித்தும் போருவது நாலிரண்டு அர்த்தம் உண்டு –

அவையாவன –ஸ்வரூப ஞானம் என்றும் -ஸ்வரூப யாதாம்ய ஞானம் என்றும் –
விரோதி ஞானம் என்றும் விரோதி யாதாம்ய ஞானம் என்றும் –
பல ஞானம் என்றும் பல யாதாம்ய ஞானம் என்றும் –
உபாய ஞானம் என்றும் -உபாய யாதாம்ய ஞானம் என்றும் –

(ஸ்வரூப ஞானம் என்பதில் பர ஸ்வரூபமும் ஸ்வ ஜீவ ஸ்வரூபமும் அடங்குமே -ஆக இவையே அர்த்த பஞ்சகம்)

இதில் ஸ்வரூப -ஞானமாவது -ஞான ஆனந்தங்களும் புற இதழ் என்னும்படி –
பகவத் அனந்யார்ஹ சேஷத்வமே ஸ்வரூபம் என்று இருக்கை –
ஸ்வரூப யாதம்ய ஞானமாவது பகவத் சேஷத்வமும்
புற இதழ் என்னும்படி பாகவத சேஷத்வமே ஸ்வரூபம் என்று இருக்கை –

விரோதி ஞானமாவது -பரம பாகவத விஸ்லேஷத்திலே நெஞ்சு அழியாத நினைவு –
விரோதி யாதாம்ய ஞானமாவது -வருந்தி ஒரு பாகவதனோடே சம்ஸ்லேஷிக்க தொடங்கி –
அவன் பக்கலிலே தோஷ தர்சனம் பண்ணுகை –

பல ஞானமாவது -ஒரு பாகவதன் நியமனத்தை வெறுத்தல் பொறுத்தல்
செய்கை அன்றிக்கே விஷய பிரவணனுக்கு படுக்கைத் தலையிலே விஷய பாருஷ்யம் போக்யமாம் போலே
ஆகிலும் போக்யம் என்று இருக்கை –
பல யாதாம்ய ஞானமாவது -ஆர்த்த பிரபத்தியை பண்ணி -அக்கரைப்பட ஒருப்பட்டு இருக்கச் செய்தே –
மாதா பிதாக்களும் கூட அநாதரிக்கும் படியான ஆர்த்தியை உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களைக்
கண்டால் -அவர்களுடைய ரஷனத்துக்கு உறுப்பாக இங்கே இருக்கையிலே ஒருப்படுகை –

உபாய ஞானமாவது- சம்பந்த ஞானம் –
சம்பந்த ஞானம் தான் –
சம்பந்த ஞானம் என்றும் –
சம்பந்த யாதாம்ய ஞானம் என்றும் –
சம்பந்த ஸ்வரூப ஞானம் என்றும் –
சம்பந்த ஸ்வரூப யாதாம்ய ஞானம் என்றும் நாலு வகையாய் இருக்கும் –

இதில் சம்பந்த ஞானமாவது -அவனுடைய நிருபாதிக சேஷித்வத்தையும்
தன்னுடைய நிருபாதிக சேஷத்வத்தையும் தெளிய அறிகை —
சம்பந்த யாதாம்ய ஞானமாவது -அவனுடைய நிருபாதிக சரீரித்வத்தையும் –
தன்னுடைய நிருபாதிக சரீரத்வத்தையும் தெளிய அறிகை –

சம்பந்த ஸ்வரூப ஞானமாவது -அவனுடைய நிருபாதிக தர்மித்வத்தையும் –
தன்னுடைய நிருபாதிக தர்மத்வத்தையும் தெளிய அறிகை –
சம்பந்த ஸ்வரூப யாதாம்ய ஞானமாவது -தரமி தர்மங்களினுடைய ஐக்யததை தெளிய அறிகை
அதாவது விசிஷ்ட வேஷத்தில் அவன் ஒருவனுமேயாய் -தான் இல்லை என்னலாம் படி இருக்கை

உபாய யாதாம்ய ஞானமாவது -தந் நிஷ்டை -அதாவது –
சேஷத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் -பிறக்கை-

சேஷத்வத்தில் கர்த்ருத்வமாவது -ராஜ ஆஸ்ரயத்தை இட்டு ஜகத்தை பீடிக்கும் மந்த்ரிகளைப் போலே –
பகவதாசத்தியை இட்டு சதாசாரத்தை நெகிழ்க்கை –
அதாவது சப்தாதி விஷய ஸ்பர்சத்திலே அச்சமும் –
பகவத் பாகவத கைங்கர்ய விச்லேஷத்தில் ஆர்த்தியும் விளையாது ஒழிகை –

தந் நிவ்ருதியாவது –
ப்ராமாதிகமான விஷயத்திலே அச்சமும் –
ப்ராமாதிகமான கைங்கர்ய விச்லேஷத்தில் ஆர்த்தியும் விளைகை —

ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் ஞாதா வாகையால் அன்றோ நம்மை அவன் என்று தன் ஞானத்தை இட்டு இறுமாக்கை –
தந் நிவ்ருத்தி யாவது –
தேக ஆத்ம அபிமாநிகளிலும் கடையாய் –
அசித்கல்பனாய் -முதல் அழித்துக் கொண்டு அசத் கல்பனாய் கிடந்த என்னை-
இரும்பை பொன்னாக்குவாரைப் போலே -கரும் தறையிலே புகுந்து ஆத்ம ஞானத்தை பிறப்பித்து
அங்கீ கரிப்பதே -என்று கிருதஞ்ஞானாய் போருகை –

கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது -நாம் நிஷித்தங்களை விட்டு -விஹிதங்களை பற்றுகையால் அன்றோ
நம்மை அவன் அங்கீ கரித்தான்  என்று தன பிரவ்ருத்தி நிவ்ருத்தியை இட்டு இறுமாக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
நம் வியாபாரங்கள் ஒன்றும் இல்லை -மரப்பாவையை ஆட்டுவாரைப் போலே தானே நிஷித்தங்களின் நின்றும்
விடுவித்து விஹிதங்களை பற்றுவித்தான் என்று இருக்கை –

போக்த்ருவத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
தன் கையாலே தன் மயிரை வகுத்தால் அந்யோந்யம் உபகார ஸ்ம்ருதி பண்ணாதா போலே –
அவயவ பூதனான ஆத்மா அவயவியான எம்பெருமானுக்கு அடிமை செய்கிறான் என்று இருக்கை –

இவ் வர்த்தங்கள் ஓர் ஆச்சார்யன் அங்கீ கரித்த முமுஷுவுக்கு ஞாதவ்யம் –)

ஸோமாஸி யாண்டானும் ,

1 பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி ஸாத்யாயா பக்தே: ஸ்வாதந்த்ர்யரூபாஹங்கார

1 ஸோமாஸியாண்டானருளிச் செய்த சரமோபாய விவரணத்திலே. (பகவத் ப்ரவருத்தி விரோதி இத்யாதி ) –
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி -–ஸ்வாமியாய் ஜநகத்வாத் பகவந்தமுபேத்ய – தத் சரணார விந்தயுகள
சரணாகதேரபி நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா பீதிஹேது
ஸ்வதந்த்ரனானவன் ஸ்வயமாய் பரதந்த்ரனாயிருக்கிறவிவனைப் பெற நினைக்கையாகிற
பகவதி ப்ரவ்ருத்திக்கு ப்ரதிபந்தகமாயிருந்துள்ள , ஸ்வப்ரவ்ருத்தி
ஸாத்யாயா: — ஸ்வ யத்ந ரூப ப்ரவ்ருத்தி விஶேஷத்தாலே ஸாதிக்கப்படுமதான,
பக்தே: — கர்ம ஜ்ஞாந ஸஹக்ருதையான பக்தி யோகத்திற்கு ,
ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகத்வாத் — ஸ்வாதந்த்ர ரூபாஹங் கார ஜநகத்வமுண்டாயிருகையாலும் ,
( அதாவது , ஸ்ரீபாஷ்யத்திலறுதி யிட்டபடியே விவேக விமோதிகளாகிற நியமங்களையுடையனாய் ,
வர்ணா ஶ்ரம விஹிதக ர்மங்களைத் தானநுஷ்டித்த பின்பு “ த்ருவாநுஸ்ம்ருதி “ யென்கிற பக்தி யோகத்தை
நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கை யாலே , இதில் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபமான வஹங்காரம் பிறக்குமென்ன படி )

( இவ்விடத்தில் ப்ராஸங்கிகமாக சில அர்த்த விஶேஷங்கள் சொல்லப்படுகி றது ; அதாவது ,
“ ஸ்வஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவித்து “ என்கிற படியே ,
பக்தி யோகமானது நழுவும் போது ,
“ ஏவம் நியம யுக்தஸ் யாஶ்ரம விஹித கர்மாநுஷ்டாநேநைவ வித்யா நிஷ்பத்திரித் யுக்தம் பவதி “ என்று
அந்த பக்தி யோகத்துக்கு ஸாதகங்களாக வறுதியிடப்பட்ட விவேக விமோ காதிகளும் ,
தத் ஸாத்யையான பக்தி யோகத்தோடு , ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகமென்று ,
இந்த சரமாதிகாரிக்கு த்யாஜ்யமாய்விடுமோ வென்னில் , ஆகாது ;
“ இவன் தானிவைதன்னை நேராக விட்டிலன் “ என்கிற க்ரமத்திலே ,
இவையெல்லாமிவனுக்கு வகுத்தவிடமான வெம் பெருமானாருடைய முகமலர்த்தியாகிற உபேயத்துக்கு ஶேஷமாய்க் கொண்டு ,
அத்தாலே யவர் விஷயத்தில் “ த்யாயேத்ஜபேந்நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்சயேந்முதா “ என்று ஶாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட
( நிரவதிக ப்ரேம ரூப த்ருவாநுஸ்ம்ருதியென்கிற ) பக்தி யோகத்துக்கு நாடோறு மதிஶயாவஹங்களாகையாலே ,
மிகவுமுத்தேஶ்யங்களு முபாதேயதமங்களு மாயிருக்கும் –

இவ்வர்த்தங்களை ” ஜ்ஞாநாநுஷ்டாநங்களிரண்டுமல்லாதார்க்கு பாயாங்கமாயிருக்கும் , இவனுக்குபேயாங்கமாயிருக்கும் “ என்று துடங்கி
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே பரக்க வருளிச் செய்தாறிறே –
இவ்வளவும் ப்ராஸங்கிகமாக சொல்லவேண்டித்து )

இனி ப்ரக்ருதார்த்தங்கள் சொல்லப்படுகிறது

பகவந்தமுபேத்ய தத் சரணாரவிந்த யுகள சரணா கதேரபி –
த்வா ச , ததுபயவிஷய பகவதவதாரபூத பரம காருணிக ராமாநுஜ யோகி
சரணாரவிந்த சரணாகதிரேவ ஸர்வோஜ்ஜீவனாய பவதி இதி ஸமர்த்திதம் “ என்று
ஸ்வ ப்ரணீதமான சரமோபாய விவரணத்திலே யருளிச் செய்தார் இறே |(உபய -பக்திக்கும் பிரபத்தி க்கும் விஷயமான பகவத் அவதாரமே எம்பெருமானார்)

பகவந்தம் -– ஈஶ்வரனை ,
உபேத்ய –- கிட்டி ( இவ்விடத்தில் ப்ரபத்தி விவஷிதமாகையாலே யதுக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரத்திலே நோக்காய் ,
அதுதான் “பூர்ணம் “ என்கையாலே , ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்களான குணங்களோடு
ஆஶ்ரித கார்யாபாதகங்களான குணங்களோடு வாசியற
ஸகல கல்யாண குண பூர்ணமென்கிற விவ்வர்த் தத்தை இந்த பகவத் ஶப்தம் காட்டுகிறது ) ,
தத் சரணாரவிந்த யுகள சரணாகதேரபி —
தத்சரணாரவிந்தயுகள — அந்த வெம்பெருமானுடைய திருவடித் தாமரைகளிரண்டிலும் செய்யப்படுமதான ;
சரணாகதேரபி — உபாயாந்தர பரித்யாகமாகிற வங்கத்தோடே கூடி ,
ஸ்வதந்த்ரமாயிருந்துள்ள ப்ரபத்திக்கும் ; நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா —
நிரங்கு ஶைஸ்வர்ய -– பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் தனக்கு மேலற்ற நிர்வாஹக னான ;
பகவத் – எம்பெருமானுடையதான ,
ஸ்வாதந்த்ர்ய -– கர்ம நிபந்தனமாக ஸம்ஸரிப்பிக்கவும் ,
காருண்ய நிபந்தனமாக முக்தனாக்கவும் வல்ல ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ;
ஸ்மரண த்வாரா -– அநுஸந்திக்கிற வழியாலே ;
பீதி ஹேது த்வாச்ச – பலத்தில் ஸம்ஶயத்தால் வரும் பயத்துக்கு காரண மாகையாலும் ;
ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி சரணாரவிந்த சரணாகதிரேவ ;
ததுபயவிஷய -– அந்த பக்தி ப்ரபத்தி களிரண்டுக்கும் விஷயபூதனான ;
பகவத் — ஈஶ்வரனுடைய ;
அவதாரபூத -–அவதார விஶேஷமான ,
பரமகாருணிக – ( பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கையன்றிக்கே , மோக்ஷ ஏக ஹேதுவாயிருக்கையாலே )
ஈஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயிருக்கிற ,
ராமாநுஜயோகி – எம்பெருமானாருடைய ,
இவ்விடத்தில் யோகி என்கிற பதம் ஸுபாஶ்ரய மான வெம்பெருமானிடத்தில் தம் திருவுள்ளத்தை
ஸ்தாவர ப்ரதிஷ்டை யாக வைத்திருக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
சரணாரவிந்த – திருவடித் தாமரைகளிலே ( செய்யப்படுமதான ) ,
சரணாகதிரேவ – ப்ரபத்தி தானே ,ஸர்வோஜ்ஜீவனாய – அஜ்ஞ , விசேஷஜ்ஞ விபாகமறவெல்லாருடையவும் உஜ்ஜீவனத்தைப் பொருட்டு ,
பவதி இதி – ஆகிறதென்று ,
ஸமர்த்திதம் – நிர்வஹிக்கப்பட்டதென்கை |

————————-

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் 1 “ பார தந்த்ர்யம் ஸ்வரூபம் ஹி ஸர்வ ஜீவாத்மநாமபி | தத் வ்ருத்தா ஹி பக்திஸ்து ஜீவ யத்நாபி லாஷிணீ ||

1 வாதிகேஸரி அழகியமணவாளச் சீயரருளிச் செய்த சரம குரு சரிதையில், ( பாரதந்த்ர்யமிதி )
ஸர்வ ஜீவாத்மநாமபி –- பத்த , முக்த , நித்யரென்கிற த்ரிவிதாத்ம வர்க்கத்துக்கும் ,
பாரதந்த்ர்யம் – ஈஶ்வரனிட்ட வழக்காயிருக்கை ,
ஸ்வரூபம் ஹி – ஜ்ஞாநாநந்தங்களிற் காட்டிலும் அந்தரங்க நிரூபகமாகவே யிருக்கும் ,
ஜீவயத்நாபிலாஷிணி –- ( “ ஒன்றி நின்று நற்றவம் செய்து” என்கிற பாட்டிலும் ,“
புன்புல வழியடைத்து “ என்கிற பாட்டிலும் திருமழிசைப்பிரானருளிச் செய்த ) சேதந ப்ரயத்நங்களை யபேஷித்திருக்கிற
பக்திஸ்து — ( ஸர்வ க்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண ஸாதிக்கப்படுவதான)பக்தி யோகமோ வென்னில் ;
தத் விருத்தாஹி — அந்த பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூபத்துக்கு விருத்தமாகவே யிருக்கும் |

த்யாகோ நிவ்ருத்தி ஸாத்யோயம் நிர்மலாநந்த ஸாயிந: | ஸ்வாதந்த்ர்ய ஸ்ம்ருதி மாத்ரேண பீதி ஹேதுர் பவிஷ்யதி || 1
தஸ்மாத் பக்திம் ப்ரபத்திம் ச விஹாய விமலாஶயா: | அஸ்மத் ஆர்யா மஹாத்மாந:ஸதாசார்ய சரணாஶ்ரயா:|

தத் க்ருதேந அபிமாநேந நிஸ்தரந்தி பவார்ணவம் ||

( த்யாக இதி ) – நிவ்ருத்தி ஸாத்ய: —
“ சிற்ற வேண்டா “ என்கிறபடியே பகவத் ப்ரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வ ப்ரவ்ருத்தியினுடைய நிவ்ருத்தியினாலே ஸாதிக்கப்படுமதான ,
அயம் த்யாக: — இந்த ப்ரபத்தியானது ; (
இவ்விடத்தில் புரோவர்த்தியாநத்தைக் காட்டுமதான “ அயம் “ என்கிற பதம் ப்ரயோகித்திருக்கையாலே ,
ப்ரபத்யுபாயமானது , ஸகல வேத வேதாந்தாதிகளிலும் புகழ் பெற்றதென்றும் ,
தர்மஜ்ஞ ருசி பரிக்ருஹீத மென்றும் ,
சரண்ய ஹ்ருதயாநுஸாரியென்றும் ,
பாரதந்த்ர்ய ஸ்வரூபத் துக்குசிதமானதென்றும் , இத்யாதிகளைக் காட்டுகிறது ),
நிர்மலானந்த ஸாயிந: ;
நிர்மல – அகிலஹேய ப்ரத்யநீகனாயும் ,
அநந்த ஸாயிந: — திரு வனந்தாழ்வானாகிற படுக்கையிலே சாய்ந்தருளுகிறவனாயுமிருக்கிற வெம் பெருமானுடைய ;
ஸ்வாதந்த்ர்ய ஸ்ருதி மாத்ரேண –
ஸ்வாதந்த்ர்ய – நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ,
ஸ்ம்ருதி மாத்ரேண –ஸ்மரண மாத்திரத்தினாலே ,
பீதி ஹேது: — ஃபலஸித்தியிலே ஶம்ஶயமாகிற பயத்துக்கு காரண மாக ,
பவிஷ்யதி – ஆகக்கடவது |

( இந்த ஶ்லோகத்தில் “ நிர்மல “ என்கிற பதம் “
அநஸ்நந்யோ அபிசாகசீதி“ என்கிற ஸ்ருதியில் சொல்லுகிற
“ தத் கத தோஷைர ஸம்ஸ்புருஷ்டத் வத்தை “
( அதாவது சேதந தோஷங்கள் ஈஶ்வரனுக்கு தட்டாமையை ) சொல்லுகிறது ,
ஸ்ருதியில் “ அபிசாக சீதி “ என்றிருப்பதால் ,
அகில ஹேயப்ரத்யநீகனாய் என்று அர்த்தமெழுத வேண்டிற்று ;
இப்படி விளங்கா நின்றுள்ள வீஶ்வரன் தான் சேதனனோடே ஏக தத்வமென்னலாம்படி பொருந்தி யிருக்கச் செய்தேயும் ,
“ தயோரந்ய:பிப்பலம் ஸ்வாத்வத்தி “ என்று அந்த ஸ்ருதியில் சொல்லுகிறபடியே
சேதநந் கர்மஃபலத்தை யநுபவிக்குமிடத் தில் –- தன் கர்மஃபலத்தை தான் புஜிக்கிறானென்று , உபேஷித்திருக்கை யாலே ,
“ நிர்மல” என்கிற குணம் ஸ்வாதந்த்ர்ய பயத்துக்கு ஹேதுவாகிறது|

இனி “ அனந்தஸாயிந: “ என்கிற பதத்தினர்த்தத்தை ஆராயுமிடத்தில் –-
அது தான் , ஸ்ரீநாரத பகவான் போல்வாரையும் ,
கச்ச நாரதமாசிரம் | ஏகாக்ராச்சிந்தயேயுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி “ என்று
ப்ரேமம் இல்லாதவராக விலக்க வேண்டும்படி நித்ய நிரவத்ய நிரதிசய ப்ரேமமுடையராய் “
அஸ்தாநேபயஸங்கிகளா “ யிருக்கிறவர்களுக்குத் தன்னுடம்பை ஸர்வ ஸ்வதாநமாக கொடுத்துக் கொண்டிருக்கும்படியைச் சொல்லுகையாலே ,
அநாதி கர்ம பரவசராய்க்கொண்டு , பகவதி ப்ரேம கந்தமே கண்டறியாத
நம்மை “ ஷிபாமி “ என்று தள்ளி விடுகைக்கு ஹேதுவாயிருக்கிற ஸ்வா தந்த்ர்யத்தினுடைய பயம் ஸித்தம் ;
இதுக்கு மேலே , பரதந்த்ர ஶேஷியாய்,மோஷ ஏக ஹேதுவான ஆசார்யாவதாரத்துக்கு ஊற்றுவாயான திருவநந் தாழ்வானும் ,
பகவத் ப்ரேம பரவசராய் , அஸ்தாநே பயஶங்கைபண்ணி ,“
தஹ்யமாநா வநந்தஸ்ய விஷ ஜ்வாலா ப்ரவேஸ “ என்று ,
ஷீராப்தி நாதனைக் கிட்டத் தேடுகிற மதுகைடபரென்கிற அசுரரை , தன் விஷ ஜ்வாலைகளாலே
உறுமாய்ந்துபோம்படி பண்ணுகிறவவதாநத்தை காட்டுகையாலே
“ அநந்தஸாயிநா “ என்கிறது மிகவும் பய ஹேதுவாயிருக்கும் |
“ வத்யதா மேஷ தண்டேன தீவ்ரேண ஸஸிவைஸ்ஸஹ | ராவணஸ்ய ந்ருஸம் சஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண: “ என்றிறே ,
ப்ரேம பரவசருடைய பரி மாற்றமிருக்கும்படி |
( ஸ்ரீநாரத பகவான் ஸ்வேததீபத்துக்கு எழுந்தருளி அங் குள்ள திவ்ய புருஷர்களை ஸேவித்து தத்ஸமீபத்தில் நின்று ,
ஊர்த்வ பாஹுவாய் ஸமாஹித சித்தனாய் , ஸர்வேஶ்வரனை , ஸ்ரீமஹா புருஷ ஸ்தவமென்கிற
பரம குஹ்யமான ஸ்தோத்ரத்தாலே ஸ்துதிக்க , அப்போது ஸர்வேஶ்வரன் ,
இவருக்கு தன்னுடைய விஶ்வ ரூபத்தை அநேக வர்ண ஸம்ஸ்தாநத்தோடு விசித்ரதரமாகக் காட்டிக்கொடுத்து ,
ஏகதத்விதத்ரிதர்க ளுக்கும் கூடக் காணவரிதான இந்த திவ்ய ரூபத்தை , ஏகாந்தி ஸத்தமராகை யாலே நீர் காணப்பெற்றீர் .
இவ்விடத்திலிருக்கிற திவ்ய புருஷர்களுடைய பக்திபாரவஸ்யத்தைப் பார்த்தால் , உம்முடைய பக்தி
குளப்படியென்ன வேண்டும்படியா யிருக்குமாகையாலே , அவர்களுடைய த்ருவாநுஸ்ம்ரு திக்கு விக்நம் தட்டாதபடி நீர்
இவ் விடத்திலிருந்து கடுகப் புறப்பட்டுப்போ மென்று ஸர்வேஶ்வரனருளிச் செய்ததாக ,
ஸ்ரீமஹாபாரத சாந்தி பர்வாந்தர் கத மோக்ஷ தர்ம பர்வத்தில் 339-340 அத்யாயங்களில்
சொல்லப்பட்ட வர்த்தம், இவ்விடத்தில் அநுஸந்தேயமாகக் கடவது | )

1 ( தஸ்மாதிதி ) , தஸ்மாத் – அந்தக்காரணத்தாலே ;
விமலாஶயா: — பரிசுத்தமான அந்த:கரணத்தை யுடையராய்
மஹாத்மாந: — ஸர்வஜ்ஞரா யிருக்கிற ;
( இவ்விடத்தில் , விமலாஶயா: — மஹாத்மாந: என்கிற பதங் கள் ,
“ மநஸாதுவிஸுத்தேந “ என்கிறபடியே
“ அறியவேண்டு மர்த்தமெல் லாமறிகைக்கு “ அந்த:கரண ஸுத்தி தான் ப்ரதானகாரணமென்று மர்த்தத் தைக் காட்டுகிறது “ )
அஸ்மதார்யா: — நம் பூருவாசாரியர்கள் ;
பக்திம் – ஸ்வரூப விருத்தமான பக்தி யோகத்தையும் ,
ப்ரபத்திம் ச -– “ ப்ரபத்யுபாயத் திக்கிக் குற்றங்கள் ஒன்றுமில்லை “ என்கிறபடியே
நிர்தோஷமாயிருக்கச் செய்தேயும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமுள்ளதான ப்ரபத்தியையும் ,
விஹாய –- விட்டு ,
ஸதாசார்ய சரணாஶ்ரயாஸ்ஸந்த: — அந்த ஸித்தோபா யத்துக்கு வேறாவதன்றியே தத் சரமாவதியான
ஸதாசார்யனுடைய திருவ டிகளே யுபாயோபேயமென் றாஶ்ரயித்தவர்களாய்க் கொண்டு ,
தத் க்ருதேந – அந்த ஸதாசார்யனாலே பண்ணப்பட்ட ,
அபிமாநேந -– இவன் நம்முடைய வனென்கிற அபிமாநத்தாலே ,
பவார்ணவம் –- ஸம்ஸார ஸாகரத்தை ,
நிஸ்தரந்தி -– கடக்கப் பாய்கிறார்கள் |

1 லகூபாயேந லப்தவ்யே:பலே மஹதி தேஹிநாம் |
குரூபாய த்வயாத் கிம் வா கர்த்தவ்யம் ஸ்யாந் முமுஷுபி: || என்று
சரமகுரு சரிதையிலே யருளிச் செய்தாறிறே |

1 ( லகூ பாயேநேதி )
தேஹிநாம் -– விரோதியான ப்ரக்ருதியோடு கூடி அதிட்டவழக்காயிருக்கிற சேதநவர்க்கத்திற்கு ,
மஹதி:பலே “ :பலமத உப பத்தே: “ என்று , எம்பெருமானாலேயே ஸித்திக்க வேண்டும்படியான
பெருமையை யுடையதாய் ஸகல புருஷார்த்த விலக்ஷணமான கைங்கர்ய ரூப :பலமானது ,
லகூபாயேந –- ( க்ருப மாத்ர ப்ரபந்நரான ஸதாசார்யரு டைய வபிமாநமாகிற ) ஸுலபோபாயத்தாலே ;
லப்த வ்யேஸதி –- அடைய த்தக்கதாயிருக்க ,
முமுஷுபி: — ப்ரக்ருதியினுடைய தோஷங்களையறிந்து ப்ராப்ய ருசி தலை யெடுத்திருக்குமதிகாரிகளாலே ;
குரூபாயத்வயாத் -– ஸ்வரூப விரோத பயத்தாலும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயத்தாலும் ,
துர்ல பங்களான பக்தி ப்ரபத்திகளால் ;
கர்த்தவ்யம் -– செய்யவேண்டுமது ;
கிம்வாஸ்யாத் -– என்னதானிருக்கும் |
ப்ரக்ருதி பரவசராகையாலே முமுஷுத்வமில்லாத சேதநர்களுக்கும் கூட , ஸதாசார்யாபிமாநத்தாலே பேறு லபிக்கத்தக்கதாயிருக்க ,
முமுஷுக்களாய் ஆசார்ய அபிமாநத்திலொதுங்கி யிருக்குமவர்களுக்குச் சொல்ல வேண்டா விறே ;
ஆகையாலே, இவர்களுக்கு பக்தி ப்ரபத்திகளால் கார்யமில்லை யென்றபடி |

————–

ப்ராமாணிக அக்ரேசரரான பட்டரும் ,

2 பரம காருணிகச்ய பரம குரோர் பகவத: ஸ்ரீமந் நாராயணஸ்ய புண்டரீக தள மலாய தேக்ஷண முக கமல விகாஸ

2 ஸ்ரீபராஶரபட்டார்ய ஸுக்தி |
( பரம காருணிகேத்யாதி )
பரமகாருணிகஸ்ய – ( “ ஈஶ்வரஶ்யச ஸௌஹார்த்தம் “ இத்யாதியில் படியே , ஆசார்ய ப்ராப்திக்கும் ப்ரதம ஹேது தானாகையாலே ) மேலான காருணிகனாய் ;
பரம குரோ: — “ லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் “ என்று குரு பரம்பராதியிலே தன்னை யநுஸந்திக்க வேண்டுகையாலே , மேலானவாசார்யனாய் ;
பகவத: — அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதானனாய் ;
ஸ்ரீமந் நாராயணஸ்ய –
ஸ்ரீமத் – புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடே நித்ய ஸம்யுக்தனாயிருக்கிற ,
நாராயணஸ்ய -– எம்பெருமானுடைய ;
புண்டரீக தளாமலாயதேக்ஷண முககமலவிகாஸ ஹேதுபூதம் ஹி -–
புண்டரீக தள – வெள்ளைத் தாமரை தளங்களைப் போன்றதாயும் ,
அமல — நிர்மலங்களாயும் ,
ஆயத – நீண்டதுகளாயு மிருக்கிற ,
ஈக்ஷண -– திருக்கண்களை யுடைத்தான ,
முக கமல — திருமுக மண்டலமாகிற செந்தாமரையினுடைய,
விகாஸ — மலர்கைக்கு ,
ஹேது பூதம் ஹி – காரணபூதமாகவேயன்றோ ?
பகவத் ராமாநுஜ சரணார விந்த சரணவரணம் —
பகவத் ராமாநுஜ “ ஸர்வ கல்யாண ஸம்பூர்ணம் , ஸர்வஜ்ஞாநோப ப்ரும்ஹிதம் ;
ஆசார்யமாஶ்ர யேத் “ என்கிற ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையரான எம்பெருமானாருடைய ,
சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளிலே பண்ணும் ,
சரணவரணம் – சரணாகதி தானிருப்பது ; என்கை |
(இத்தால் எம்பெருமானார் திருவடிகளில் ஸமாஶ்ரயணமே ஸ்ரீமந்நாராயணனுடைய முக்கோல்லாஸ ஹேதுபூதமென்னதாயிற்று )
தஸ்மாத் -– அந்த ஹேதுவினாலே ,
ததேவ – அந்த எம்பெருமானாருடைய திருவடிகளிலே பண்ணும் ப்ரபத்தி தானே ,
அஸ்மாகம் – அஸ்மதாதிக ளுக்கு ,
உஜ்ஜீவனாய – உஜ்ஜீவிக்கைக்கு ,
அலமிதி -– போறுமென்று ,
அஸ்மத் தாதபாதா: — பூஜ்யரான நம் திருத்தகப்பனார் , மேநிறே – திருவுள்ளத்திலறுதியிட்டாரென்கை |

————-

ஹேது பூதம் ஹி பகவத் ராமாநுஜ சரணாரவிந்த சரண வரணம் |
தஸ்மாத் ததேவ அஸ்மாகம் உஜ்ஜீவனாய அலம்இத்யஸ் மத் தாத பாதாமேனிறே “ என்று
ஆழ்வானுடைய ஸித்தாந்தமாக குரு ப்ரபாவ தீபிகையிலே யருளிச் செய்தார் |

1 க்ஷ்மணாசார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாய …..கலு தத் க்ருபா பரம் | யத் க்ஷணேன நிஜ முக்யமாநி தாம் வ்யுத்ஷிணோதி ……..

1 ( லக்ஷ்மணார்யேதி ) –
இந்த ஶ்லோகம் தான் எழுபத்துநாலு ஸிம்ஹா ஸநஸ்தர்களிலே முதலியாண்டான் போல்வாரான ஆசார்யர் அருளிச் செய்ததாயிருக்கும் |
இதில் எம்பெருமானார் ஸ்வாஶ்ரிதர்க்கு “ வித்யா மதோ , தந மத ஸ்ததைவாபிஜநோ மத: “ என்கிற முக்குறும்பை
ஸவாஸ நமாக நிரஸித்தபடியைச் சொல்லி , எவ்வழியாலுமவரே ரக்ஷகரென்று சொல்லுகிறது |
தத் க்ருபா , பரம் என்கிற பதங்களால் அவருடைய க்ரு பையே அவரை ஆஶ்ரயித்தவர்களுக்கு ரக்ஷகமென்றும் ,
கலு , என்று இவ்வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியும் , சொல்லுகையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு பூர்வ பாவியான அத்வேஷாதிகள் மாத்ரமே பகவத் க்ருபையாலே உண்டாகிற தத்தனைப் போக்கி ,
ஆசார்ய ப்ராப்திக்குப் பின்பு “ செயல் நன்றாக திருத்துகை “ ஆசார்ய க்ருத்தமென்னதாயித்து ;
“ ஆசார்யன் சிச்ச னாருயிரைப் பேணுமவன் “ என்னக் கடவதிறே |
உடையவர் தாம் ப்ரமா ணங்களைக் கொண்டு ஸ்வாஶ்ரிதரைத் தாமே திருத்துகை யன்றிக்கே,
திருக்கோட்டியூர் நம்பியைக்கொண்டும் , முதலியாண்டானுக்கு ஸ்வரூப சிக்ஷஐ ப்ரஸாதிப்பித்தருளினார் ;
இவரைப் பின்சென்றவாழ்வானும் பிள்ளை பிள்ளையாழ்வானுக்கு ஸ்வரூப சிஷை ப்ரஸாதித்தருளினார் |

“ திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கு “ மதிலும் காட்டில் ,
ததீயர்க்கும் அவர்கள் மிகவும் விரும்புகிற வாசார்யனுக்கும் இஷ்ட விநியோகார்ஹ னாம்படி செய்கை மிகவும் உத்தேஶ்யம் ;
ஸர்வேஶ்வரன் தானும் அடியார்க்காள்படுத்துமிறே |
இனி இவர்களைத் திருத்தி முக்குறும்பை ஸவாஸநமாக நிரஸித்தாலொழிய ,
அந்த உத்தேஸ்யம் தலைக் கட்டப் போகாது ; அதுவும் ஈஶ்வரனே செய்தா லோவென்னில் ?
அவன்தான் ஸ்வாதந்த்ர்யத்தாலே “ ந க்ஷமாமி “ என்று கொண்டு
“ அவமான க்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத் “ என்று , சீறுகையாலே
இவர்களைத் திருத்த விசையமாட்டான் ;
இப்படிப்பட்ட வெம்பெருமான் திருவுள்ள மறிந்து இவர்களை யவன் கையில் காட்டிக் கொடுக்கில் என்படுமோ என்று வயிறெரிந்து
க்ருபா மாத்ர ப்ரஸந்நராய் இவர்களை வரிந்து திருத்துகையா லிறே
லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாய கலு தத் க்ருபா பரம் “ என்றருளிச் செய்ததும் |
யத் – எந்த காரணத்தினாலே
( எம்பெருமானார் நிர்ஹேதுகமான தம்முடைய ஆஶ்ரித வாத்ஸல்யமே காரணமாக என்கை)
நிஜ முக்யமாநிதாம் –
நிஜ – தம்மைப் பற்றின ஆசார்யர்களிடத்தில் உண்டாகக் கடவதான ,
முக்யமாநி தாம் – முக்குறும்பை ,
ஃபலரீதி தத்வத: —
ஃபல — இவை இருப்பதாலும் , இவற்றை நிரஸிப்பதாலும் வரக் கடஃ:பலத் தினுடைய ,
ரீதி தத்வத: — ப்ரகார யாதாத்ம்யத்தாலே ,
( அதாவது ப்ரகா ரங்களை உள்ளபடிக் காட்டுகையாலே என்கை) |
க்ஷணேன – ஒரு நிமிஷத்திலே ஏக தேசமான அல்ப காலத்திலேயே ,
வ்யுத்ஷிணோதி –- ஸவாஸநமாக எடுத்துப் பொகடுகிறாரோ ,
தத் —அந்தக் காரணத்தினாலே ,
( யத்த தோர் நித்ய ஸம்பந்த: என்கிற ந்யாயத்தாலே இங்கு “தத்” சப்தம் வருகிறது )
லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் – லக்ஷ்மணார்ய குரு -– “ ஆசார்யோ வேதஸம்பந்ந:” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஸர்வ லக்ஷண ஸம்பந்நராய் ஆஶ்ரிதர்க்கு அஜ்ஞாந நிவர்த்தகராயக் கொண்டு ,
உத்தாரக ஆசார்யரான எம்பெருமானாருடைய ,
பாதஸேவிநாம் – ( “ இராமாநுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ “ என்கிறபடியே , பரம ப்ராப்யமான )
திருவடி களை உபாயமாகப் பற்றினவர்களுடைய ,
ரக்ஷணாய – ரக்ஷணத்தின் பொருட்டு ,
தத் க்ருபா பரம் கலு – அந்த வெம்பெருமானாருடைய க்ருபை தானே யன்றோ ? அமைந்திருக்கிறது |

இப்படி ஸ்வரூப சோதநமே பிடித்து :பலரீதி த்த்வத: “ என்று பூர்வர்கள் சொல்லும் முக்தகமிறே |

1 “ ஸ்வ வ்யாபாரேண ஸாத்யா பஜந கதிரியம் ஸ்வாநுரூபத்வஹா நாத்யாஜ்யா பூஜ்யைஹி ப்ரபந்நைச் சரண வரணிதா தேஶிகைர் நாப்யுபாத்தா |
கிம்த்வாசார்யாபிமாநாத் பரமபதமஹோ லப்யதே நாந்யதோ , ந தஸ்மாத் ராமாநுஜாங்க்ரி த்விதீயமநுபமம் ஸாதநம் பாவயாம: “ என்று
பக்தி ப்ரபத்திகளை த்யாஜ்ய கோடியிலே யாக்கி
தத் க்ருபையினாலேயாயிருக்க ,
பேற்றுக்கவர் திருவடிகளே ஸாதநமென்பது , கிம் புநர் ந்யாய ஸித்தமிறே யென்கை |

1 நாயனாராச்சாம்பிள்ளை யருளிச்செய்த ஸ்ரீஸூக்தி | ( ஸ்வ வ்யாபாரே ணேதி ) –
ஸ்வ வ்யாபாரேண -– ஸ்வப்ரயத்நத்தாலே
( இங்குச் சொல்ல வேண்டிய வர்த்த விஶேஷங்களெல்லாம் , இதற்கு முன்னமே சொல்லப் பட்டிருக்கிறது ) ;
ஸாத்யா – ஸாதிக்கப்படுவதான ,
இயம் பஜநகதி: — இந்த பக்த்யுபாயமானது
( இவ்விடத்தில் ஸமீப வர்த்தியாநத்தைக் காட்டுகிற இயம் என்கிற பதம் ஸ்ரீபாஷ்யத்திலறுதியிட்ட
இந்த பக்த்யுபாயத்தின் ப்ராதாந்யம் இவர் திருவுள்ளத்திலோடுகின்ற படியைக் காட்டுகிறது )
ஸ்வாநு ரூபத்வ ஹாநாத் —
ஸ்வ – பரதந்த்ரனான தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநுகுணமாயிருக்கும்படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கை யாலே ,
பூஜ்யை: — பூஜ்யராயிருக்கிற ,
ப்ரபந்நை: — ஜ்ஞாநாதிக்யத்தாலே , ப்ரபந்நரான நாத யாமுந யதிவராதிகளாலே ,
த்யாஜ்யா -– த்யஜிக்கத் தக்க தாய்விட்டது ; ( அப்படியே )
தேஶிகை: — நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு கட வரான அந்த ஆசார்யர்களாலே ,
சரணவரணிதாபி -– பகவச் சரணாரவிந்த சரணாகதனாயிருக்கும்படியும் ,
ஸ்வாநுரூபத்வ ஹாநாத் –
ஸ்வ -– ஆசார்ய பரதந்த்ரனாயிருக்கிற தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநு குணமாயிருக்கும் படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கையாலே ,
நோபாத்தா –- அங்கீகரிக்கப்படவில்லை |
அதவா -–
பயாபயங்களிரண்டும் மாறி மாறி நடக்கும் ப்ரஶக்தியில்லாததாக அங்கீகரிக்கப்படவில்லையென்னுமாம் |
கிந்து -– பின்னையோவென்னில் ,
ஆசார்யாபிமாநாத் -– “ ஆசிநோதிஹி ஶாஸ்த்ரார்த்தான் “ இத்யாதி ப்ரகாரங்களாலே
பரிபூர்ணனான ஸதாசார்ய னுடைய வபிமாநத்தாலே |
பரமபதம் – நலமந்தமில்லதோர் நாடானது ,
லப்யதே –- அடையப் படுகிறது ; ( என்றும் )
அந்யத: — பகவத் பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பக்த்யுபாயமென்ன
ஆசார்ய பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பகவத் சரணாரவிந்த சரணாகதியென்ன ,
இவைகளாலே , ந லப்யதே – அடையப் படுகிறதில்லை ;
ந சேஜ்யயா “ )
பக்த்யா த்வநந்யயா ஸக்ய: ( இத்யாதி பரஸ்ஸதங்களான ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே |
“ உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய “
ஏவம் நியமயுக் தஸ்ய ; இத்யாதி ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ணனான வதிகாரியினாலே அடையப்படுமதான பரமபதமானது ,
ஆசார்யாபிமான ரூப ஸுலபோபாயத்தாலே லபிக்கப்படுகிறதென்கிறது ) ஆஶ்சர்யமென்னபடி |
தஸ்மாத் –- இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரக மாகையாலே ,
ந: — அஸ்மதாதிகளுக்கு
இராமாநுஜாங்க்ரித்விதயம் — இராமாநுஜ –- ( உபாயாத்மகமானவாசார்யத்வ முள்ள ) எம்பெருமானா ருடைய ,
அங்க்ரித்விதயம் -– திருவடிகளிரண்டுமே,
அநுபமம் – இதர நிரபேக்ஷமாகையாலே நிகரின்றிக்கே இருக்கிற ,
ஸாதநம் -– உபாயமாக ,
பாவயாம: — அத்யவஸிக்கக்கடவோம் | 1
எம்பெருமானாருடைய வபிமாநத்தாலே பேறு தப்பாதென்று , தத் சரணார விந்தங்களை
யுபாயமாக வறுதியிட்டார் இறே நாயனாராச்சாம் பிள்ளையும் |

இப்படி நம் பூர்வ ஆசார்யார்களனைவரும் ப்ரமாண புரஸ் ஸரமாக வெம்பெருமானாரிடத்திலே யுத்தாரகக்வத்தை யறுதி யிட்டு ,
அவர் அபிமாநத்திலே யொதுங்கி “ தேவுமற்றறியேன் “ என்று ததேகநிஷ்டராய் போந்தார்களிறே |

ஆகையால் எம்பெருமானாரோடுண்டான ஸம்பந்தத்துக் கிசையாதே
தொண்டுக்கே கோலம் பூண்டு” என்கிறபடியே குழச்சியிடுவதும் , கும்பிடுவதுமாய் கொண்டு
பர ப்ராமகராய்த் திரியும் துர்மாநிகளான கள்ளக் கழணி மிண்டர்க்கு ,
யாவ தாத்மபாவி யீஶ்வரன் பல:ப்ரதனன்றிக்கே, ஸம்ஸார ஸாகரத்திலே யழுந்தி போரும்படி யிட்டு வைப்பன் |

இவ் வர்த்தத்தை , இராமாநுசன் மன்னு மாமலர்த்தாள் பொருந்தா நிலையுடை புன்மையினோர்க் கென்றும்
நன்மை செய்யா பெருந்தேவரைப் பரவும் பெரியோர் “ என்று ஸ்பஷ்டமாக வருளிச் செய்தார் இறே |

1 யஸ் ஸ்ரீலக்ஷ்மண யோகி வர்ய சரண த்வந்த்வாஶ்ரயீ நா பவத் தஸ்யாத்யந்த தயாதி ஸத் குண நிதிர் நாராயண ஸ்ரீபதி: |  நஞ்ஜீயரருளிச் செய்த ஸ்ரீஸூக்தி

( யஸ் ஸ்ரீலக்ஷ்மணேதி ) –
ய: — எந்த சேதநந் ,
ஸ்ரீலக்ஷ்மணயோகிவர்ய , சரண த்வந்த்வாஶ்ரயீ — ஸ்ரீ – ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய் , லக்ஷ்மண யோகி வர்ய – சேஷாவதாரமென்று ஸூசிக்குமதான
லக்ஷ்மண னென்கிற திருநாமத்தையுடைய யோகிஶ்ரேஷ்டருடைய
( இளைய பெரு மாள் “ ந தேவ லோகாக்ரமணம் “ ) என்னிருந்தாப்போலே இவரும்
“ காகுத்தன் கடியார் பொழிலரங்கத் தம்மானை “ யல்ல தறியாரிரே ) |
சரணத்வந்த்வாஶ்ரயீ -– ஒன்றைக்காட்டிலுமொன்று போக்யமாய் ஸேர்த்தி யழகையுடைய இரண்டு திருவடிகளுமே
யுபாயோபேயத்வேந தாதும் முக்தி மனாதரோபவ ப்ருஹத் வாராஸயே ஸந்ததம் நிஷேப்யைவ ஹ்ருதாபிநோ
கணயதி ப்ராக் சித்த கர்மேரித: “ என்று நஞ்ஜீயர் இவ் வர்த்தத்தை யருளிச் செய்தார் ;

அதாவது
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்த ரஹிதனாய் நான் வைஷ்ணவனென்று யாதொருத்தன்
ப்ரஸித்தி தோற்றவிருக்கிறான் , அவனுக்கு நிரவதிக வாத்ஸல்ய யுக்தனான ஸர்வேஶ்வரன் ,
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரருகிலிருந்தாலும் தயாதி குண பரிபூர்ணனாயிருந் தாலும் ,
மோக்ஷ பலம் கொடாமல் அநாதரித்து , யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே தள்ளியிட்டு வைத்து ,
அவன் தான் தன்னுடைய அநாதி சித்தமான கர்மத்துக்கு பரவசனாகி , இப்படி அநர்த்தப்பட்டானென்று கொண்டு ,
என் செய்தான் , என் பட்டான், என்று , திருவுள்ளத்தாலும் எண்ணானென்னபடி —

————–

இப்படி பரம காருணிகராய் , பரமோத்தாரகரான வெம்பெருமானர் அபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் வைஷ்ணவாதிகாரி  தனக்கு-1- ஸஹவாஸ யோக்யரும் -2-ஸதாநுபவ யோக்யரும் , 3-ஸத்கார யோக்யரும் , உண்டாம்படி தேடிக் கொண்டிருக்க வேணும் ;
இல்லை யாகில் ஸ்வ ஸ்வரூப ப்ரத்யுதி வந்து அத:பதித்து விடுவன் ,

இதில் , 1-ஸஹ வாஸ யோக்யராகிறார் , மரு வற்ற சரம பர்வ நிஷ்டராய் ,(நிஷ்டை நிரந்தர ஸ்திதி) எம்பெருமானாருடைய பற்றினவனாக ,
ந பவத் — ஆகவில்லையோ ,
தஸ்ய — அந்த சேதநநுக்கு ,
( இந்த பதத்துக்கு தாதும் முக்திமநாதர: என்கிற பதங்களோடு ஸம்பந்தம் )
நாராயண: — நிரவதிக வாத்ஸல்யாதி கல்யாண குணயுக்தனான ஸர்வேஶ்வரன் ,
ஸ்ரீபதி: — புருஷகாரபூதையான பிராட்டி சொல்வழி வருமவனாயிருந்தாலும்
அத்யந்த தயாதி ஸத்குணநிதி: — நிரவதிக க்ருபாதி குண பரிபூர்ணனாயிருந்தாலும் ,
முக்திம் -– மோக்ஷத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
அநாதரஸ் ஸந் – ஆதரமில்லாதவனாய்க் கொண்டு( ராமாநுஜ பதாஶ்ரயனாகாத வந்த சேதனனை ) ,
ப்ருஹத்வாராஸயே -– ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே ,
நிஷேப்யைவ — “ ஷிபாமி “ என்கிற படியே மறுவலிடாதபடி தள்ளி விட்டு ,
( அயம் ) ப்ராக் ஸித்தி கர்மேரித: — ( இதி ) ( இவன் தான் ) தன்னுடைய அநாதி சித்தமான
கர்மத்தாலே ப்ரேரிதனாய் ( இப்படி அதோ கதி யடைந்தானென்று கொண்டு ) ,
ஹ்ருதாபி – ஒருக்காலும் மனஸ்ஸாலும் கூட ,
நோ கணயதி – ( இவன் என்பட்டான் என் செய்தான் என்று ) எண்ணமாட்டானென்கை |

# ( குண:ப்ரதிபாதகமான ) திவ்யஸூக்திகளை ப்ரஸங்கிக்கில் ,

இவையும் சில ஸூக்திகளிருந்தபடியே , பாவியேன் , இவற்றை யநாதி காலமிழந்து கெட்டேன் , என்று நெஞ்சுருகி யீடுபட்டிருக்கு மவர்கள் ;

2-ஸதாநுபவ யோக்யராகிறார் ,-எம்பெருமானார் திரு நாமத்தை யுச்சரியா விடில் நாக்கு வற்றுமென்று ததேகாநுஸந்தான தத் பரராய் ,(நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே)
ததுக்தி ஶ்ரவணத்தில் ப்ரணவராய் , ஸர்வநேத்ராங்க விக்ரி யையை யுடையவராய் ,
தத் விஷயத்தில் ப்ரவணராயிருக்குமவர்கள்;

3-ஸத்கார யோக்யராகிறார் ,-தேஹ யாத்ரையில் உபேஷை பிறந்து , ஆத்ம யாத்ரையில் மிக்க வபிநிவேஶத்தை யுடையராய் ,
ததீயாபிமா நத்திலே யொதுங்கி எம்பெருமானாருடைய திருநாமாநுஸந்தாநத் தாலே மாதுகரங்கொண்டு , தேஹ தாரணம் பண்ணி வர்த்திக்குமவர்கள் |

எம்பெருமானாருடைய கல்யாண குணங்களிலே மக்நாஶயரல் லாதாரோடு ஸஹ வாஸம் , சரம பர்வாதிகாரிக்கு அவத்யமாயிருக்கும் ;
இராமாநுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரே னெனக்கென்ன தாழ்வினியே “, என்றும் , அருளிச் செய்து வைத்தார் இறே |

இவ் வதிகாரிக்கு க்ஷணமுமிடைவிடாமல் காலஷேபத்துக்கு விஷயமாகிறது

# ( குணப்ரதிபாதகமாக ) என்கிற குண்டலித க்ரந்தமில்லாவிடிலும் , அழகி யது .
1 ( த்வத் ப்ரபந்த பரிஶீலநைரிதி ) – இதுதான் எம்பெருமானார் விஷயமான ப்ரார்தநா பஞ்சகத்தில் ஶ்லோகமாயிருக்கும் .
இதில் எம்பெருமானாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களுடைய பரிசீலநத்தால் கால யாபநம் பெற வேண்டுமென்று ப்ரார்த்திக்கிறது . “

பராங்குச முனீந்த்ராதி “ என்கிற ஶ்லோகத்திலே அருளிச் செயல்களில் ருசியை ப்ரார்த்திக்கிறவர்
அதற்கு முன் ஸ்ரீபாஷ்யாதி பரிசீலநத்தை ப்ரார்த்திப்பானெ னென்னில் ? —
“ 1 த்வத் ப்ரபந்த பரிஶீலநை: காலஷேபோஸ்து-என்கிறபடியே
தத் ப்ரதிபாதிதமான வேதாந்த க்ரந்தங்களும் , பகவத்  குணாநுபவரூபாதி திவ்ய ஸூக்திகளும் ;
திவ்ய ஸூக்திகளாவன –- ஆழ்வார்களுடைய வருளிச் செயல்களும் , திருப்பாவையும்
பூர்வா சார்யர்களருளிச் செய்த ரஹஸ்யங்களும் .

“ மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் “ என்கிறவிடத்தில் ஸ்ரீபாஷ்யத்தை யருளிச் செயல்களுக்குக் காவலாகச் சொல்லுகையாலே .
இனி , இந்த ஶ்லோகத்தில் “ ஆமோக்ஷம் லக்ஷ்மணார்ய “ இத்யாதி பதங்களுமிருக்கையாலே , அவைகளையும் சேர்த்துக் கொண்டு அர்த்தமெழுதப்படுகிறது .
ஹே லக்ஷ்மணார்ய – அபியுக்தாக்ரேசரரான வெம்பெருமானாரே ,
ஸத்பி: — தேவரீரபிமாநத்திலே யொதுங்கியிருக்கும் ஸத்துக்களோடே ,
ஸஹவாஸம் — ஸஹவாஸத்தை ,
உபேயுஷாம் – அடைந்திருக்கிற ,
ந: — அடியோங்க ளுக்கு ,
த்வத் ப்ரபந்தபரிசீலனை –
த்வத் – தேவரீராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ,
ப்ரபந்த -– ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களினுடைய ,
பரிசீலனை –- பரிசீல நத்தாலே
( பரி என்கிற உபஸர்க்கத்தோடு கூடின இந்த பதம் அந்த க்ரந்தங்களி லறுதியிடப்பட்ட அர்த்தங்களில்
ஓன்றும் நழுவாதபடி அடிக்கடி ஸேவிக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
காலஷேப: — கால க்ஷேபமாக ,
அஸ்து –- ஆகக் கடவது ;
இப்படியெத்தனை நாள் வரையென்னில் ?
ஆமோக்ஷம் -– மோக்ஷமுண்டாகிற வரையிலும் . ( ப்ரக்ருதிஸம்பந்தமிருக் கிறவரையிலும் )
மந்யதா ப்ரதிபத்யாதிகள் துர்ஜயமாகையாலும் ,
அதுகளை ஸ்ரீபாஷ்யாதி ஸூக்திகளாலே பல படியாக நிரஸித்திருக்கையாலும் ,
மோக்ஷமுண்டாகிற வரையில் , இன்னமொரு ஜந்மமுண்டாகிலும் அப்போதும் இவற்றினுடைய பரிஶீலநமே
காலஷேபமாயிருக்க வேணுமென்று ப்ரார்த்திக்கிறார் ) .

———-

இனி யிந்த சரமாகாதிகாரிக்கு நாலு நிலை யுண்டு , அதாவது ,
1-ஸ்வரூப ஜ்ஞாநமென்றும் ,
2-ஸ்வரூப நிஷ்டையென்றும் ,
3-ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமென்றும் ,
4-ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டை யென்றும் நாலு வகையாயிருக்கும் ;

(கூரத்தாழ்வான் முதலியாண்டான் போல் வார் ஸ்வரூப ஞானம் பெற்று அதற்குத்தக்க அனுஷ்டானமாக -ஸ்வரூப நிஷ்டர்கள்
வடுக நம்பி மதுரகவி ஆழ்வார் போல்வார் ஸ்வரூப யதாத்ம்ய ஞானம் பெற்று அதற்குத்தக்க அனுஷ்டானமாக ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டர்கள்)

இவற்றில் 1-ஸ்வரூப ஜ்ஞாநமாவது-
பகவத் பரதந்த்ரமாயிருக்கிற வசாதாரணாகாரத்தை யெவ் வழியாலும் ஸத்தை குலையாமல் நின்றுணர்ந்து ,
அதுதான் ததீய பர்யந்தமாகாவிடில் குலையுமாகையாலே
யெம்பெருமானாருக்கும் ததீயருக்கும் , அத்யந்த பரதந்த்ரமா யிருக்கு மென்றறுதி யிட்டு ,
ததேக நிஷ்டராயிருக்கு மிருப்பை யுள்ளபடி யறிகை

2-ஸ்வரூப நிஷ்டையாவது , இஷ்ட விநியோகார்ஹ ஸ்வரூபமான-Two lines of handwritten Telugu manuscript–எழுதியது புரியவில்லை

ததீயஶேஷத்வம் ;
1 “ அகிஞ்சித் காரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி: “ என்கிறபடியே

1 ( அகிஞ்சித்கரஸ்யேதி ) —-
அகிஞ்சித் கரஸ்ய – கிஞ்சித்கரியாதவனுக்கு ,
ஶேஷத்வாநுபபத்தி: — ஶேஷத்வத்தினுடைய வுபபத்தியில்லை என்கை

கிஞ்சித்காரமில்லாதபோது அந்த ஶேஷத்வம் நிலை நில்லாமையாலே ,
தத் சித்யர்த்தமாக , தத் ப்ரதிஸம்பந்திகளாய் பரம ஶேஷிகளான எம்பெருமானாரபிமான நிஷ்டர் விஷயத்திலும் ,
த்ரிவித கரணத்தாலும் , கிஞ்சித்கரித்துப் போரும் நிலையிலே யொரு படப் பண்ணுகை .

3-ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமானது
எம்பெருமானா ருடைய வபிமாநத்திலொதுங்கி , தத் விஷய கிஞ்சித்காரத்தாலே நிலையை யுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் ,
அவ்யபிசாரிணியான பக்தியைப் பண்ணி , தத் விஷய விஷயீகாரத்திலே ஸ்வ ஸ்வரூபத்தைச் சொறுகியிட்டு ,
இந்த ஸ்வரூபம் அத் தலைக்கே யுறுப்பாய் விநியோகப் படவேணுமென்று
இவ் வர்த்தத்தினுடைய நித்ய ப்ரார்த்தனையிலே நிலையுடையனா யிருக்குமிருப்பை யுள்ளபடியறிகை ; “
உன் தொண்டர்கட்கே யன்புற்றிருக்கும்படி யென்னையாக்கியங்காட் படுத்தே “ என்று , அமுதனாரும் இவ்வர்த்தத்தை யருளிச்செய்தார் இறே

4-ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டையாவது ,
சரம பர்வமான எம்பெருமானாருடைய முக விகாஸத்துக்குடலாக ததீய விஷய கிஞ்சித்காரத் தாலும்,
தன் முக விகாஸ ஹேதுவான தத் சேஷ விஷய கிஞ்சித் காரத்தாலும்,
ஸ்வரூபத்தை விநியோகார்ஹமாம்படி , தத்தத் சந்தாநுவர்த்தன பூர்வகமாக
அஶேஷ ஶேஷ வ்ருத்தியிலுமந்வயிப்பித்து , அது தான் தத் தத் விஷய பூதரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
பரம்பரா பர்யந்தமாக த்ரிவித கரணத்தாலும் பர்யவஸிக்கும்படி பண்ணி ,
தத் விஷய கிஞ்சித்காராபாவத்தில் ஆத்ம ஸத்தையில்லை யென்னும் படியான நிலை பிறந்து ததேக நிஷ்டையிலே தத் பரனாயிருக்கை .

(முதலியாண்டான் சீதன வெள்ளாட்டி -மணக்கால் நம்பி உய்யக்கொண்டார் திருக்குமாரத்திகள் கால்கள் படும் படி இருந்த -விதைக் கோட்டை நெல்லை பாகவதர்களுக்கு கொடுத்த-நிலைகள் போல்வன)

இனி இவ்வர்த்த நிஷ்டை தான் ஓரொருவர்க்கு சரம ஶேஷியான. வெம்பெருமானாருடைய கடாக்ஷ விசேஷத்தாலே
லபிக்குமதொழிய மற்றபடி துர்லபமாயிற்று ;
ஆகையாலேயிறே அந்த சந்தத்தில் சரம சேஷியான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம்
ஸார்வத்ரிகமன்றிக்கே , தேடிப் பிடிக்க வேண்டும்படி க்வாசித்கமாயிருக்கிறது .

அஸ்மிந்நர்தே விஶ்வாஸஸ் ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி | மத் கடாஷோ பவேத் யஸ்மிந் மய்யேவ ப்ரவணோஹி ய: |
தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ் தோயம் பவிஷ்யதி ந ஶம்ஶய: “ என்று ,
எம்பெருமான் தானே சரம பர்வ விஷயமான ப்ரதிபத்தி , தத் கடாக்ஷமடியாக வுண்டாக வேணுமென்று சொல்லி வைத்தானிறே .

உஜ்ஜீவநேச்சுவான வதிகாரி , தனக்கு , ப்ரதமத்திலே சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம் விளைகைக் குடலாக ,
1-ததபிமாந நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலுமநுவர்த்தநம் பண்ணி 2-ததவசர ப்ரதீக்ஷனாய் ,தனக்கவர்கள் ஸ்வரூப ஸோதநம் கொடுத்து, தன்னை விரும்பி மேல் விழுந்து , தத் குண வைபவத்தை யுபதேசிக்க
3-சுக்கான் பாறை போலே கடின ஹ்ருதயனன்றிக்கே நெஞ்சிரக்கமுடை யனாய்ச் செவி தாழ்த்து ,
4-கண்ணும் கண்ணீருமா யிருக்கும் படியான பரிபாக தசை பிறந்தால் ,சரம சேஷி கடாக்ஷம் பிறந்து தடையின்றி யிலே யிவன் பக்கல் ப்ரவஹிக்கும் ;
பின்பு , தத் ஸம்பந்தம் அபிச் சின்ன ஸ்ரோதோ ரூபேண நடந்து செல்லுமிறே .

இப்படிப்பட்ட ஸம் பந்தத்தை இவனுக்கவர்களுணர்த்தும் போது , இவன் அறியாததாய் ,
எம்பெருமானாரும் ததீயருமறிந்ததாயிருப்பன சில கைமுதலிவன் பக்கலுண்டாயிருக்க வேணுமிறே ;

அவையாவன : —
1-நிரங்குஸ ஸ்வ தந்த்ரனாய் நிருபாதிக ஶேஷியான வெம்பெருமான் ,
இவ்வதிகாரியி னிடத்திலே நன்மையை நினைக்கும் படியான குளிர்ந்த திருவுள்ளத்தை யுடையனாக வேணும் ;
2-அதுக்கடியாக விவனுக்கு அஜ்ஞாதமாய் , அவனுக்கு ஜ்ஞாதமா யிருப்பதொரு யாத்ருச்சிக ஸூஹ்ருதம் பிறந்திருக்க வேணும் ;
3-இவன் பக்கலேதேனும் யாத்ருச்சிகமாக ஒரு நன்மை காணும் போது என்றோவென்று ,
எங்குமொக்க வ்யாப்தி பண்ணி யவ காசம் பார்த்திருக்கும் ஸர்வேஶ்வரனுடைய கடாக்ஷ விஶேஷம் இவன் பக்கல் அபிமுகமாயிருக்க வேணும் ;
4-இப்படி யெம்பெருமானுடைய விஶேஷ கடாக்ஷ மபிமுகமான தசையிலே , பகவத் ப்ரஸங்கம் வந்தால் ,
சிவிட்கென்று த்வேஷம் கொண்டாடாமல் , அநுமதி ப்ரதனா யிருக்க வேணும் ;
5-இதடியாக பகவத் குண விக்ரஹ விபூதி தர்சநத்தில் முகம் மாறாடாமல ,அபிமுகனா யிருக்கும் படியான நினைவு பிறக்க வேணும் ;
6-இதுக்கெல்லாமடியாக இவை இத்தனையும் பெற்று , பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி விஷய ஜ்ஞாநத்தை யுடையராய்
நிஷ் க்ருஷ்ட ஸத்வ குண நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்களோடு ஸம்பந்தத்துக்கு பூர்வ பாவியான ஸம்பாஷணமுண்டாக வேணும் ;

இவையித்த னையுமுண்டாகிலிறே , இவனுக்கு ஸதாசார்யராய் சரம பர்வனான வெம்பெருமானாரோடு ஸம்பந்தம் சித்திப்பது .
ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தம்( ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தமிதி )
இந்த ஶ்லோகந்தான் இப் ப்ரபந்தத்துக்கு நாயக ரத்னமாயிருக்கிறது .
ஆசார்ய ப்ராப்திக்காக வீஶ்வரன் பண்ணுகிற க்ருஷி பரம்பரைகளைச் சொல்லுகையாலே , சரமோபாயவைபவத்தைப் பற்றி இதுக்கு மேல் வக்தவ்யாம்ஶமில்லை .

(யஸ் ஸ்வாபாவ காலே கருணாகரஸ் ஸந் பவிஷ்யதாச்சார்ய பர ஸ்வரூபம்
ஸந்தர்சயாமாஸ மஹாநுபாவம் தம் காரி ஸூநும் சரணம் ப்ரபத்யே–நாத முனிகள் உபகார ஸ்ம்ருதியால் அருளிச் செய்த ஸ்லோகம்)

ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸுஹ்ருதம் ததா | விஷ்ணோ: ப்ரஸாதாத் அத்வேஷ ஆபி முக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஷடேதாநி ஹ்யாசார்ய ப்ராப்தி ஹேதவ: –பாஞ்சராத்ர வசனம்

ஆஶ்ரயண ஸௌகர்ய ஆபாத கங்களான வாத்ஸல்ய , ஸ்வாமித்வ , ஸௌஶீல்ய , ஸௌலப்யங்களும்,
ஆஶ்ரித கார்ய ஆபாதகங்களான ஜ்ஞாந , ஶக்திகளுமாக , பகவத் ப்ராப்திக்கு ஆறு குணங்கள் போலே ,
ஆசார்ய ப்ராப்திக்கும் இந்த ஶ்லோகத்தில் சொல்லுகிற ஆறு ஹேதுக்களும் அக் குணங்களோடு
இவற்றுக்கு உண்டான ஸாதர்ம்யத்தை க்ரந்த விஸ்தர பயத்தாலே இவ்விடத்தில் ப்ரதி பாதிக்கிக்கிறிலோம் .

ஈஸ்வரஸ்ய –- ஸர்வ நியந்தாவான வெம்பெருமா னுடைய ஸௌஹார்தம் –
சேதந விஷயத்தில் நன்மையை நினைப்பிடு கைக்கீடான நல்ல ஹ்ருதயமும் ,
( இவ்விடத்தில் , ஈஸ்வரபதம் “ மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹ நம் ச “ என்று கர்மாநுகுணமாக
பந்த மோக்ஷங்க ளிரண்டுக்கும் கடவனாயிருக்கும்படியைக் காட்டுகிறது .
ச –– என்கிற , அவ்யவம் , இப்படிப்பட்டவனுக்கு ஸௌஹார்தம் ஜநிக்கை யறிதென்னும் படியான வதி ஸங்கையைக் காட்டுகிறது ;
நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தாலே இவனை ஸம்ஸார ஹேது வான நிக்ரஹ ஸக்திக்கிலக்காக்கி
“ ஷிபாமி “ என்று தள்ளி வைத்தமையை பார்த்தால் , இவனுக்கும் ஸௌஹார்த மென்பதுண்டோ என்று அதி சங்கை பண்ண வேண்டும்படியிறே யிருப்பது .
இனி ஸௌஹார்தம் என்கிற பதம் நிருபாதிக ஸ்நேஹத்தைக் காட்டுகிறது ;
பிதா புத்ர ஸம்பந்தத்தாலே ஸ்நேஹம் நிருபாதிகமாகவே இருக்கும் ;
“ ஷிபாமி “ என்பதும் ஹித பரனாய்ச் செய்தவித்தனை )
இப்படி நிருபாதிக ஸ்நேஹ யுக்தனான வீஶ்வரனிவனிடத்தில் நன்மை–
யத்ருச்சா ஸுஹ்ருதம் ததா | விஷ்ணோ: ப்ரஸாதாதத் வேஷ ஆபி முக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம்
ஷடேதாநி ஹ்யாசார்ய ப்ராப்தி ஹேதவ: “ என்று இறே
இதுக்கு நினைக்கும்படியைச் சொல்லுகிறது மேல் ,

யத்ருச்சா ஸுஹ்ருதம் –
விடாயைத்தீர்த்தாய் , ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் ; என்றாப்போலே ஈஶ்வரனே உண்டாக்குகிற யாத்ருச்சிக ஸுஹ்ருதமும் ,
ததா –- ஸௌ ஹார்தத்தாலே யாத்ருச்சா ஸுஹ்ருதம் பிறந்தாப்போலே ,
விஷ்ணோ: ப்ரஸாதாத் -– ஸர்வ வ்யாபகனான , அவனுடைய அநுக்ரஹத்தாலே ,
அத்வேஷ அபிமுக்யம் ச –- பகவத் ப்ரஸங்கத்தில் த்வேஷமில்லாமை யென்ன
பகவத் குண விக்ரஹாதிகளி லாபிமுக்யமென்ன ,
விவை யிரண்டும் ,
ஸாத்விகை: ஸம்பாஷணம் – வேதங்கற்பான் போன்ற பரம ஸாத்வி கரோடு ஸம்பாஷணமும் , ஏதாநிஷட் -– ( ஆகிற ) இவையாறும் ,
ஆசார்ய ப்ராப்தி ஹேதவ: — ஆசார்ய ப்ராப்திக்குக் காரணங்களாகின்றன .
( இவற்றில் விஷ்ணோ: என்கிற பதம் ஸர்வத்ர வ்யாபித்து நிற்கும்படியைச் சொல்லுகையாலே
நிருபாதிக ஸ்நேஹ விஶிஷ்டனான வீஶ்வரன் சேதநனிடத்தில் யத்ருச்சா ஸுஹ்ருதம் கிடைக்கும்போது , என்றோ , என்று ,
அவசர ப்ரதீக்ஷனா யிருக்கும்படியைக் காட்டுகிறது .
ததா – என்கிற அவ்யயமும்,
ப்ரஸாதாத் என்கிற பஞ்சம்யந்த பதமும் நிருபாதிக ஸ்நேஹத்தாலே யத்ருச்சா ஸுஹ்ருதத்தைத் தேடிப் பிடித்தாப்போலே ,
க்ருபையாலே அத்வேஷாதிகள் உண்டாக்கினபடி சொல்லுகிறது .
அத்வேஷத்துக்கும் , ஆபிமுக்யத்துக்கும் ஹேது பகவத் ப்ரஸாதமே தவிர , யத்ருச்சா ஸுஹ்ரு தமன் னென்னுமிடம்
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே ஸுஸ்பஷ்டம் .
பகவத் ப்ரஸாதத்துக்கு யத்ருச்சாஸுஹ்ருதம் காரணமானதும் , வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராமைக்காக வாயிற்று ;
இல்லையாகில் ஸௌஹார் தத்தாலே பகவத் ப்ரஸாதமும்
அத்தாலே யத்ருச்சாஸுஹ்ருதமுமாக விப்படி பிறக்கவமையும் .
அத்வேஷ பதம் ஸம தமாதி ஸமஸ்தாத்ம குணங்களுக்கு முபலக்ஷணம் ;
“ ஆசார்ய லாபம் ஆத்மகுணத்தாலே “ என்கையாலே , அத்வேஷமும் ஆபிமுக்யமும் பகவத்க்ருபையாலே என்று சொல்லுகையாலே
“ ஆசார்யலாபம் பகவானாலே “ என்கிற சரம ஸூக்த் யர்த்தம் ஸூசிக்கப்படுகிறது .
ஸாத்விகைஸ் ஸம்பாஷணம் என்னுமிடத்தில் ஜந்ம வ்ருத்தாதிகளை யிட்டுச்சொல்லாதே ,
அவிஶேஷண ஸாத்விகை : என்கையாலும் ,
ஸம்பாஷணமாவது ஸம்யக் பாஷணமாகையாலும் ,
ஜந்ம வ்ருத்தாதி நிரூபணம் பண்ணாதே ஜ்ஞாந விஶேஷத்தையே பார்த்து
“ தொழுமினீர் கொடுமின் கொள்மின் “ என்கிற படியே ,
பரம ஸாத்விகரோடு கலந்து பரிமாறும்படியைச் சொல்லுகிறது .

————-

இனி எம்பெருமானாருடைய வபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் சரமாதிகாரியான வைஷ்ணவனுக்கு வஸ்தவ்ய பூமியா வது ,
“ இராமாநுசனை தொழும் பெரியோரெழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிட “ மென்கையாலே ,
எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையவராய் , பெரிய மதிப்பராய் ,
தத் ஸம்பந்த வைலக்ஷ்ண்ய அபிவிருத்தி யுண்டாகப் பெற்றோமென்கிற ஹர்ஷ ப்ர ஹர்ஷத்தாலே ஸ ஸம்ப்ரந்ருத்தம் பண்ணி வர்த்திக்கிற ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளி யிருக்கும் பரம பாவனமான தேசம் .
அஸ்மத் தேஶிக பகவத் ராமாநுஜ யோகி சரண யுகள ———ஷடேதாநி , என்கையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு இவை யித்தனையும் வேண்டுமென்றதாயித்து ;
அவையாவன ; கர்மமடியாக , “ ஷிபாமி “ என்கிற பகவந் நிக்ரஹம் மாறி , நிருபாதிக ஸ்நேஹம் தலையெடுக்க வேணும் ;
அதடியாக யத்ருச்சா ஸுஹ்ருதமென்பதொன்னுண்டாக வேணும் ;
ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக இந்த யத்ருச்சா ஸுஹ்ருதத்தை ஹேதுவாகக் கொண்டு பகவத் க்ருபை பிறக்க வேணும் .
அத்தாலே அத்வேஷமும் , அத்தைப் பின் செல்லுமதான ஆபிமுக்யம் உண்டாக வேணும் .
அதுக்கு மேலே , ஆசார்ய ஸமாஶ்ரயணத்துக்கு ப்ரதாந அபேஷிதமான பாகவதர்களோடு ஸம்பாஷணமாகிற ஸம்பந்த முண்டாக வேணும் .
ஆகவிவையத்தனையும் வேணுமென்றதாயித்து .
ஆசார்யப்ராப்திஹேதவ: என்கிறவிதில் ஆசார்ய பதம் “ ஆசினோதிஹி ஶாஸ்த்ரார்தான் “ இத்யாதியில் சொல்லுகிறபடியே ,
ஞானமனுட்டான மிவை நன்றாகவே வுடையனான னாசார்யனைச் சொல்லுகிறது .
ப்ராப்தி , யென்கையாலே யிப்படிப்பட்ட வாசார்யன் லபிக்குமது பெறாப்பேறாயிருக்கு மென்கிறது .
ஈஶ்வரனைப் பார்த்தால் ஸௌஹார்தம் பிறக்கையே அரிதென்னும்படி இருக்கையாலும் ,
சேதநனைப் பார்த்தால் அத்வேஷமுள்பட பகவத் க்ருபையாலே உண்டாக வேண்டும்படி அஸூயா ப்ரஸவ பூவா யிருக்கையாலும் ,
கர்மங்களைப் பார்த்தால் ஒவ்வொன்றும் ப்ரம்ம கல்ப நியுதாநுபவேப்யநாச்யமா யிருக்கையாலும் ,
அத்வேஷ பதத்தாலே ஸூசிக்கப்பட்ட மற்ற வாத்ம குணங்களைப் பார்த்தால் அவை நம்மாலும் , பிறராலும் பிறப்பித்துக்கொள்ள வொண்ணாததுகளா யிருக்கையாலும் ,
ஆசார்ய லாபம் பெறாப் பேறாகவே யிருக்கும் )

நாயனாராச்சாம்பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீஸூக்தி , ( அஸ்மத் தேஶிகேத்யாதி )
அஸ்மத் தேஶிக பகவத்ராமாநுஜ யோகிசரணயுகளமாஶ்ரிதாநாம் –
அஸ்மத் தேஶிக – நம்மு டைய உஜ்ஜீவநத்துக்கு கடவரான ,
பகவத்ராமாநுஜயோகி – பகவத் ஸர்வமாஸ்ரிதாநாம் ததபிமாநைகநிஷ்டாநாம்
தத் குண ஸந்தோஹாநுப வாநந்தாம்ருத ஸாகரதரங்க ஷீகர ஸம்பந்த ஶீதலஹ்ருதயாநாம் ததீய திவ்ய கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ணஜ்ஞாநத்தையுமுடையரான , ராமாநுஜயோகி — “
அவை தம்மொடும் வந்திருப்பிடம மாயனிராமாநுசன் மனத்து “ என்கிறபடியே ,
ஸர்வேஶ் வரன் ஸ விபூதிகனாய்க்கொண்டு தம்முடைய திருவுள்ளத்தில் வீற்றிருக் கும்படியான யோக நிஷ்டையையுடைய வெம்பெருமானாருடைய ,
( யோக ரஹஸ்ய க்ரமம் குருகைக் காவலப்ப னோடே தீர்த்தம் ப்ரஸாதித்ததாயிருந்தாலும்
“ யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மனா |
ஶ்ரத்தாவான் பஜதே யோ மாம்ஸமே யுக்ததமோ மத: “ என்கிறபடியே
“ உணர்ந்த மெய்ஞ்ஞாநியர் யோகம் தொறும் “ என்கிற பாட்டில் சொன்ன நிரதிசய ப்ரேமத்தை
இவ்விடத்தில் யோக நிஷ்டையாக சொல்லுகிறது ;
இதுதான் “ நித்ய யுக்த ஏக பக்தி: “ என்றும் ,“
ஜ்ஞாநீத்வாத்மைவ “ என்றும்,
அவனே வாய் விட்டு புகழும்படியான பெருமையை யுடைத்தா யிருக்குமிறே ) .
சரண யுகளம் –- இரண்டு திருவடி களை ,
ஆஶ்ரிதானாம் -– உபாயோ பேயமென்று பற்றினவர்களாயும் ,
ததபிமானைகநிஷ்டாநாம் -– அந்த வெம்பெருமானாருடைய வபிமாநத்தி லேயே நிலைபெற்றவர்களாயும்,
தத்குண ஸந்தோஹாநுபவானந்தாம்ருத ஸாகர தரங்க ஷீகர ஸம்பந்த ஸீதல ஹ்ருதயாநாம் –
தத்குணஸந்தோஹ –
( “ செம்மை நூற்புலவர்க் கெண்ணருங் கீர்த்தி “ என்கிறபடியே
பேரளவு டையவர்களுக்கு பரிச்சேதிக்கவரிதான )
அவருடையதான கல்யாண குண ஸமூஹத்தினுடைய ,
அநுபவ – அநுபவத்தினாலுண்டான ,
ஆனந்த – ஆனந்தமாகிற ,
அம்ருத ஸாகர -– அம்ருதமய ஸமுத்திரத்தினுடைய ,
தரங்க -– அலைகளின் ,
ஷீகர – திவலைகளுடைய ,
ஸம்பந்த -– நித்ய ஸம்ஶ்லேஷத்தாலே ,
ஶீதல ஹ்ருதயாநாம் – குளிர்ந்த திரு வுள்ளத்தை யுடையவர்களாயும் ,
ததீய திவ்ய நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் –
ததீய – அந்த வெம்பெருமானா ருடையதான ,
திவ்ய நாம – ( “ சதுரா சதுரக்ஷரீ “ என்று அபியுக்தர் நெஞ்சுருகி கொண்டாடுமதான ) திருநாமத்தினுடைய ,
உச்சாரண – வாக் வ்யாபார மாத்ரத்தாலே ,
ஜநித -– உண்டான ,
ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் – ஆனந்தாதிஸயத்தாலே ,
ஸஸம்ப்ரமநர்த்தனம் குர்வதாம் –- ( ப்ரீதியுள்ள டங்காமையாலே ) பரவஸராய் ,
நர்த்தனம் குர்வதாம் – நர்த்தனம் செய்யு மவர்களாயும் ,
ஸாத்விகாக்ரேசராணாம் -– பரமஸாத்விகளில் உத்க்ருஷ்ட தமராயும் ,
ஸமதமாதிகுணேபேதாநாம் – ஸமதமாத்யாத்மகுண ஸம்பந்ந ராயும்
( இவ்விடத்தில் ஸமம் என்கிறது அந்த:கரண நியமனத்தை;
நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் ஸ்வாதி காக்ரேசராணாம்
ஸம தமாதி குணே பேதாநாம் தத்வ வித்தமானாம் அஸ்மத் ஸ்வாமிநாம் ஆந்த்ர பூர்ண கோவிந்தார்ய துல்ய
ஸ்வபாவாநாம் உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் , ஸ்ரீவைஷ்ணவானாம் ஆவாசஸ்தான மேவ
அஸ்மதாதி சரமாதிகாரிணாம் அபி ஆவாஸபூமி: “ என்று
நாயனா ராச்சாம் பிள்ளை யருளிச்செய்தார் இறே .

இனி இந்த சரமாதிகாரிக்கு பரிஹரிக்க வேண்டும் அம்ஶங்கள் சிலவுண்டு ;
அவையாவன –

1- பரம காருணிகரான வெம்பெருமானாருடைய குணானுஸந்தான
ஸ்ரவணத்தில் ஸிவிட்கென்று நெஞ்சிறக்க மற்றிருக்கும் துர்மாநிகளுடன் ஸம்பாஷணமும்

2-அவர்களுடன் ஸஹ வாஸமும் ,
3-அவர்களுடன் கூடி புஜிக்குமதுவும் ,
4-தத் பாத தீர்த்தமும் ,
5-பாணி பக்வ அந்ந போஜநமும் ,
6-ஶரீர ஸம்பந்த ப்ரயுக்தமாக வவர்களுடன்.
(தமமென்கிறது பாஷ்ய கரண நியமனத்தை ) ,
தத்வ வித்தமாநாம் -– பராவர தத்வ யதாத்ம்யத்தை யறிந்தவர்களில் ஸ்ரேஷ்டராயும் ,
அஸ்மத் ஸ்வாமி நாம் -– அஸ்மதாதிகளுக்கு வகுத்த ஶேஷிகளாயும் ,
ஆந்த்ரபூர்ணகோவிந் தார்ய துல்ய ஸ்வபாவாநாம் -– வடுகநம்பி , எம்பார் , இவர்களோடொத்த வாசார்யநிஷ்டையை யுடையவர்களாயும் ,
உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் –
உபாதேயதம -– “ மூவரிலும் வைத்துக்கொண்டு மிகவும் வேண்டுவது ப்ரபந்நநுக்கு “ என்கிறபடியே மிகவும் வேண்டுமவை யான ,
திவ்யஜ்ஞாந -– ( கேவலனுடைய ஜ்ஞாநம் போலன்றிக்கே ,“ தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு “ என்கிற ) ;
ஸ்ரீய: பதி விஷயமான ஜ்ஞாநமென்ன ,
பக்தி -– ( ஸர்வக்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண பரிணமிக்கக் கடவதான ) தத்விஷயத்தில் பக்தி யென்ன ,
வைராக்ய –- “ ப்ரபந்நனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற் றம் “ என்கிற வைராக்ய விஶேஷமென்ன ,
இவற்றில் , நிஷ்டானாம் -– நிலை நின்றவர்களாயுமிருக்கிற ,
( இவ்விடத்தில் , திவ்ய , என்கிற பதம் , ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள் மூன்றிலு மந்வயித்து ,
அவற்றினுடைய நிஷ்க்ருஷ்ட வேஷத்தைக் காட்டுகிறது ) .
ஸ்ரீவைஷ்ணவாநாம் – இராமாநு சனைத் தொழும் பெரியோர்களுடைய ,
ஆவாசஸ்தாநமேவ – எழுந்திரைத் தாடுமிடம் என்கிற விருப்பிடமே ,
ஆவாசபூமி( “ தேசோயம் ஸர்வ காம துக் “ என்கிறபடியே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் , இஷ்டப்ராப்திக்கும் ஹேதுவாய்க்கொண்டு )
வஸ்தவ்யமான விடமாகக் கடவதென்னபடி அஸ்மதாதி சரமாதிகாரிணாமபி –-
அஸ்மதாதி — அடியேன் முதலான சரமாதிகாரிணாமபி ( ஸ்வாபிமாநத்தா லே யீஶ்வராபிமாநத்தைக் குலைத்துக்கொள்ளுகையாலே
போக்கற்ற செயல் மாண்டு “
6-த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌகமத்யே மித்யாசராமி “ என்கைக்குத் பரந்தவாஸக்தி யுண்டாகையும் ,
7-தத் க்ருத பகவத் குணாநுஸந்தான ஶ்ரவணமும் ,
8-தத் ததீய ஸத்காரமும் ,
9-தத் தத்த த்ரவ்ய ஸ்வீகார மும்,
10-தத் விஷய ப்ரணாமமும் ,
ஆக இந்த 10 க்ருத்யமும் ,
சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் மருவத்த ப்ராவண்யமு டையனாய் ,
ததபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் உத்தமாதிகாரிக்கு விஶேஷித்து பரிஹரிக்க வேணும் .
இல்லையாகில் , ஒருதலை த்வந்த்வ பக்தியும் , ஒருதலை # விழுப்புமாய் போருமிவனுக்கு , உபய ஸம்பந்தமும் குலைந்து ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமநுவர்த் திக்குமொழிய , கரை காண்கிறதில்லை .

————

ஸ்ரீய:பதியாய் ,
பரம தயாளு வாய் ,
பரம ஶேஷியாய் ,
ஸர்வ ஶக்தி யுக்தனான வெம்பெருமானுடைய திருவடிகளை யுபாயமாகப் பற்றி ,
தத் குண ப்ரதிபாதிக திவ்ய ப்ரபந்தங்களை , யநுஸந்தாநத்துக்கு விஷயமாக்கி ,
“பொழுதெனக்கு மற்றது வெப்போது “ என்கிறபடியே போது போக்கி வர்த்திக்கிற நமக்கு ,
பேற்றில் கண்ணழிவுண்டோவென்று நினைத்து , சரம பர்வத்திலிறங்காமல் , துரபிமாநிகளாயிருக்கும் கழணி மிண்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் ,
அவர்கள் தங்கள் தங்கள் நினைவாலே பேறுண் டென்றிருக்கிலும் ,

ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே சரணமிதி தியா @ தத்ர பக்தி தக்கவரா யிருக்கிற ) பஞ்சமோபாய நிஷ்டர்க்கும் 
ஈஶ்வரன் ஸர்வஜ்ஞனாகையாலே , சரம பர்வமான வெம்பெருமானார் பக்கல் கண் வையோமென்றிருந்த வதுவே ஹேதுவாக
வவர்களுக்கு , பேற்றைப் பண்ணிக் கொடாத மாத்ரமே யன்றியே ,
இவர்கள் ஸ்வரூபத்தையும் , கால க்ரமத்திலே , ஸங்குசிதமாம் படி பண்ணி விடுவன்

# யிழவு பாடாந்தரம் @ தத் ப்ரபத்தி பாடாந்தரம் .

எம்பார் ஸூக்தி – ( ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜ இதி )
ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே –
ஸ்ரீச -– ஸ்ரீய:பதியினுடைய ,
ஸ்ரீமத் பதாப்ஜே –-
“ பிராட்டியுமவனும் விடிலும் திரு வடிகள் விடாது “ என்கிற பெருமையை யுடைத்தான “ திருவடித்தாமரைக ளிரண்டுமே
“ சரணமிதி -– இதர நிரபேக்ஷமான வுபாயமென்கிற ,
தியா –- புத்தியினாலே ,
தத்ர – அந்த திருவடிகளிலே பக்தி

த்வராணாம் ஸ்ரீமத் ராமாநுஜார்ய ப்ரணதிம் அபஜதாம் கூட சித்தா ஸயாநாம் |
காருண்ய ஷாந்தி ஸிந்து ஸ்வ பத நிவஸதிம் நேஸ்வரோ தாது மிச்சேதித் யேவம் சிந்தகாநாமபி பரம பதம் தாதுகாமஸ் ஸ ஜாது “ என்று ,
எம்பாரருளிச்செய்த இந்த திவ்ய ஸூக்தி ,
உக்தமமான வர்த்தத்துக்கு ப்ரமாணமாக அநு ஸந்தேயமாகக் கடவது .

த்வராணாம். –
“ ஸ்நேஹ பூர்வமநுத்யாநம் பக்தி: “ என்கிற ப்ரீதி பூர்வக ஸ்மரணத்தில் மேன் மேலும் அபிநிவேஸமாகிற த்வரையை யுடையவராய்க் கொண்டு ,
( பாடாந்தரம் தத் ப்ரபத்தி த்வராணாம் –- அந்த திருவடிக ளில் பண்ணக் கடவதான சரண வரண ரூப ப்ரபத்தியில்
த்வரையை யுடைய வர்களாய்க்கொண்டு ,
இந்த பக்ஷத்தில் , த்வரை , ஸாதநாந்தரங்களுடைய தோஷ தர்ஶநத்தாலும் , ஸம்ஸாரத்திலடிக் கொதிப்பாலும் உண்டாகிற தென்று கொள்ளவேணும் ) . ஸ்ரீமத்ராமாநுஜார்ய ப்ரணதிம பஜதாம் –
ஸ்ரீமத் –- அந்த ஸ்ரீய:பதியினுடைய திருவடிகள் தாமே யென்னும்படியான நிரவதிக ஸம்பத்தை யுடையராயிருக்கிற ,
ராமாநுஜார்ய -– எம்பெருமானாருடைய ,
ப்ரணதிம் –- ( திருவடிகளில் செய்யக் கடவதான ) சரணாகதியை ,
அபஜதாம் – செய்யாதவர்களாய் ,
கூடஸித்தாஸயாநாம் — இப்படி எம்பெரு மானாரை யுபேஷித்திருக்கிற தங்களுடைய வந்தரங்காபிப்ராயத்தை வெளிப்படுத்தாமல் ,
தம்மை எம்பெருமானார் தர்ஶநத்தில் நிஷ்டை யுடைய வரென்று பிறர் நினைக்கும்படி இருக்குமவர்களுக்கு ,
( எம்பெருமான் பரம பதத்திலிடம் கொடானென்கிற மேலில் வாக்யத்தோடி இதற்கு அந்வயம் ).
காருண்யஷாந்தி ஸிந்து: —
காருண்ய –- ( அத்வேஷம் துடங்கி யாசார்ய ப்ராப்தி பர்யந்தமாக செய்து கொடுக்கைக்கீடான ) க்ருபைக்கும் , ஷாந்தி: –

( “ தன்னடியார் “ என்கிற பாட்டின்படியே
“ என்னடியார் அது செய்யார் “ என்கைக்கீடான பொறுமைக்கும் ,
ஸிந்து: — ஸமுத்திரம் போலே யிருக்கு மவனான ,
ஈஶ்வர: — ஸர்வேஶ்வரன் ,
ஸ்வபதநிவசதிம் -– தனக்குப் படை வீடான பரமபதத்தில் ஸ்தானத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
நேச்சத் –- இச்சிக்க மாட்டான் .
( இவ்வளவேயன்றிக்கே )
இத்யேவம் -– இந்த ப்ரகார மாகவே ,
சிந்தகாநாமபி –- ( எம்பெருமானார் திருவடிகளை ஆஶ்ரயியோ மென்று ) மநஸ்ஸில் நினைக்குமவர்களுக்கும் கூட ,
ஜாது –- ஒருகாலும் ,
பரமபதம் -– நலமந்தமில்லதோர் நாட்டை ,
தாதுகாம: — கொடுக்க இச்சை யுடையவனாக ,
ந பவேத் -– ஆக மாட்டான் )
( இவ்விடத்தில் ந பவேத் என்கிற அவ்யயமும் , க்ரியையும் ஔசித்யத்தாலே அத்யாஹரிக்கப்படு கிறது .
இத்தால் கால க்ரமத்திலே இவர்களுடைய ஸாமாந்ய ஜ்ஞாநத்தையும் மலிநமாம்படி பண்ணி
ஸ்வரூபத்தை ஸங்குசிதமாக்கி விடுவதென்ற தாயித்து )

———-

இன்னமும் ராமாநுஜ பதச் சாயை யென்று புகழ் பெற்றவிவர்
ஸ்ரீமந் நாராயண சரணாரவிந்த சரணாகதிரேவ உஜ்ஜீவநாய பவதீதி புத்யா ,
பகவந்தம் பரம காருணிகம் பரமோதாரம் அபார கல்யாண குணாகரம்
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் அசரண்ய அகில ஜந சரண்யம் அநவரதம்
ஆஶ்ரயணீய சரண கமல யுகளம் அபிமத அநுரூப நிரவதிக ஆனந்த சந்தோஹ ஜநக
 அபிமத அநுரூப நிரவதிக ஆனந்த சந்தோஹ ஜநக

“ நித்ய ஸூரி பரிஷத் அந்தர் பாவ மஹா:பல ப்ரஸாதகம்  அஸ்மதுத் தாரகம் அதி ரமணீய
விமலதர , லாவண்யகர திவ்ய மங்கள விக்ரஹமதி ஶீதல விமல கம்பீர ஜலாஸய ப்ரபவ
மிஹிர தருண கிரணநிகிர விகசித விராஜ மான கமலதளாயத திவ்ய நயன யுகளம்

ஸ்வவச கமிதி
சிதசிதீஶ்வர தத்வ த்ரய ஸூசக தண்ட த்ரய ரூப மண்டன மண்டித மஸ்மந்மாதர
மஸ்மத்பிதரமம்ருத லஹரீவதநுகூல நவ்ய திவ்ய கோமல விமல மதுராயமாண
நிஜ ஸூக்தி கலாபைராஸ்ரிதாநகில ஜநாஹ்லாதயந்தம் ஸ்ரீமந்தமார்ய ஜநாபிவந்த்யம்
அஸ்மத் குலநாத மஸ்மத் அஸாதாரண ஶேஷிணம் அஸ் மதாதி ரக்ஷ்ய வர்க ஸர்வ ப்ரகார ரக்ஷணைக தீஷாகுரும்
ஸ்ரீராமா நுஜாசார்யம் அநாத்ருத்ய , பரம காருணிக: பகவாநேவ ஸ்வ சரண கமல ஸமாஶ்ரிதாநாம் அஸ்மாகம்
ஸ்வ ப்ராப்தி ரூப பலம் ப்ரயச்சதீதி ஸ்வ மதேந விசிந்த்ய வர்த்தமாநாநாம் ,
தத்வ ஜ்ஞாந லவலேஶ தேஶாதிகாநாம் துரபிமாந ஸஹக்ருத ,
பர ப்ராமக வ்ருத்தாநாம் – ரூப வேஷ தாரிணம் -வயமேவ ஸ்ரீவைஷ்ண வா இதி ,
ஸ்வ மதேநாத்மாநம் பஹு மந்யமாநாநாம் சேதநாநாம் , அபார காருண் யௌதார்ய வாத்ஸல்ய ஸௌஶீல்யைக நிதிரபி பகவான் புருஷோத்தம:

( 1 ) எம்பார் ஸ்ரீஸூக்தி ( ஸ்ரீமந்நாராயணேத்யாதி )
ஸ்ரீமந் நாராயண சரணார விந்த சரணாகதிரேவ — ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளில் பண்ணும் ,
சரணாகதிரேவ -– ப்ரபத்தி தானே ,
உஜ்ஜீவநாய – ஆத்மோஜ்ஜீவநத்தைப் பொருட்டு ,
பவதீதி -– ஆகிறதென்கிற,
புத்யா — “ வ்யவஸாயாத்மிகா புத்தி: “ என்கிற ஜ்ஞாந விஶேஷத்தாலே ;
பகவந்தம் -– பரிபூர்ண ஜ்ஞாநத்தை யுடையராயும் ,
பரம காருணிகம் –- பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான வீஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயும் ,
பரமோதாரம் –- ( ஸ்வாபிமாநாந்தர்பூதர்க்கு கார்யம் செய்யவேணும் “ என்று ஈஶ்வரனோடே மன்னாடுகையாலே )
இதுக்கு மேலில்லை யென்னும்படியான ஔதார்யத்தை யுடையராயும் ,
அபார கல்யாண குணா கரன் -– அபாரமான கல்யாண குணங்களுக்கு நிவாசஸ்தாந பூதராயும் ,
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் –- அவற்றில் வாத் ஸல்ய ஸௌஶீல்யங்கள் அபரிமிதமா யிருக்கையாலே ,
அவற்றுக்கு ஸமுத்ரம் போன்றவராயும் ,
( வாத்ஸல்யம் தோஷபோக்யத்வம் ,
ஸௌஶீல்யம் -– தாழ்ந்தவர்களோடு கலந்து பரிமாறுகை )
அசரண்யாகில ஜநசரண்யம் –
அசரண்ய -– ( “ நன்மையென்று பேரிடலாவதொரு தீமையும் காணாத “ , ஸர்வேஶ்வரனும் கைவிடுகையாலே )
கத்யந்தரமில்லாத ,
அகில ஜந -– ஸமஸ்த சேதநர்களுக்கும் ,
சரண்யம் -– ரக்ஷகராயும் ,
அநவரதமாஶ்ரயணீய சரண கமலயுகளம் —
அநவரதம் -– “ அத்ர பரத்ராச் சாபி “ என்கிறபடியே ஸம்ஸாரத்திலும் , ப்ராப்யமான நித்ய விபூதியிலும் ,
ஆஶ்ரயணீய –- ஆஶ்ரயிக்கைக்கு யோக்யமான ,
சரணகமலயுகளம் –-திருவடித் தாமரைகள் இரண்டுமுடையவராயும் ,
அபிமதாநுரூப + மஹாப் பலப்ரஸாதகம் –
அபிமதாநுரூப – ( ஸ்வரூப ஜ்ஞாநமுடையவனுக்கு ) அபிமதமாயும் , அநுரூபமாயும் , இருந்துள்ள ,
நிரவதிகானந்த -– எல்லை யில்லாத ஆனந்தத்தினுடைய ,
ஸந்தோஹ -– ஸமூஹத்துக்கு ,
ஜநக –- மேன்மேலும் அபிவிருத்தியை யுண்டாக்குமதான ,
நித்யஸூரி பரிஷத் –- நித்யஸூரி கோஷ்டியில் ,
அந்தர்பாவ –- உடன் கூடுகையாகிற ,
மஹா:பல –- ஸர்வோத்தம்மான:பலத்தை ,
ப்ரஸாதகம் -– க்ருபை செய்தருளுமவராயும் ,
அஸ்மதுத்தாரகம் -– அடியே னுக்கு உத்தாரகாசார்யராயும்
( முதலிலே பெரியநம்பி தம்மை விஷயீகரித் ததற்கும் , உடையவர் காரணமாகையாலும் ,
அவர்தா முபாயோபேயங்களி ரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயென்று தமக்கு காட்டிக்கொடுக்கை யாலும் , அடியேனுக்கு உத்தாரகாசார்யனென்கிறார் ) .
அதிரமணீய + மங்க ளவிக்ரஹம் —
அதிரமணீய -– பரம போக்யமாய்
( “ உன்றன்மெய்யில் பிறங் கிய சீரன்றி வேண்டிலன் “ என்னும்படியிறே போக்யதைதானிருப்பது )
விமலதர -– ( ஜ்ஞாந பரிமளமெல்லாம் வடிவிலே தொடைக்கொள்ளலாம் படி ) மிகவும் நிர்மலமாய் ,
லாவண்ய கர – ( பகவத் குணாநுபவத்தாலே களித்திருக்கையாலே , திருமேனியெங்கும் நிறைந்த ) காந்தி வெள்ளத்துக் கிருப்பிடமாய் ,
திவ்யமங்கள -– ( “ திருமாலிருஞ்சோலைமலையே “ என்கி றபடியே , எம்பெருமான் விரும்புகையாலே ) அப்ராக்ருதமாய் விலக்ஷண மாயிருக்கிற ,
விக்ரஹம் –- திருமேனியை யுடையவராயும் ,
அதிஶீதல + நயனயுகளம் —
அதிஶீதல –- மிகவும் குளிர்ந்து ,
விமல –- தெளிந்து ,
கம்பீர –- ஆழங்காணவரிதாயிருக்கிற ,
ஜலாஶய –- ஏரியில் ,
ப்ரபவ –- பிறந்ததாய் ,
மிஹிரதருணகிரண –- பாலஸூர்ய கிரணங்களாலே ,
விகசித – அலர்த்தப்பட்டதாய் ,
விராஜமான – செவ்வி மாறாமல் ப்ரகாஸித்துக் கொண்டிருக்கிற ,
கமலதள -– தாமரை யிதழைப் போலே ,
ஆயத – கர்ணாந்த விஶ்ராந்தமான ,
திவ்ய நயன யுகளம் -– கண்ணுள் நின்றகலாதவனுக்கு கோயில் கட்டணமாயிருக்கிற திருக் கண்களை யுடையவராயும் ;
( இவ்விடத்தில் கண்ணென்று ஜ்ஞாநமாய் அதுதான் ஸ்ரீய:பதி விஷயமா யிருக்கையாலும்
இரண்டாயிருக்கையாலும் உபய வேதாந்த விஷய ஜ்ஞாநத் தைக் காட்டுகிறது ) .
ஸ்வ — வசகமிதி தம் வசமாக்கப்பட்ட ,
சிதசிதீஶ்வர -– சேதந த
த்வம், அசேதந தத்வம் , ஈஶ்வரதத்வமென்கிற , தத்வத்ரய -– மூன்று தத்வத்துக்கும் ,
ஸூசக –- ஸூசிக்குமதாயிருக்கிற ,
தண்ட த்ரய ரூப -– த்ரிதண்டரூபமான ,
மண்டன -– அலங்காரத்தாலே ,
மண்டிதம் –- அலங்க ரிக்கப்பட்டவராயும் ,
அஸ்மந் மாதரம் -– அடியேனுக்கு ப்ரியமே நடத்திக் கொண்டு போருகையாலே , மாத்ருபூதராயும் ,
அஸ்மத் பிதரம் -–இதத்தைச் செய்கையாலே தந்தையாயும் ,
அம்ருதலஹரீவத் + ஆஹ்லாதயந்தம் —-
அம்ருதலஹரீவத் — அம்ருதப்ரவாஹத்தினுடைய அலைகள் போலே , அநுகூல -– செவிக்கினய செஞ்சொற்களாய் ,
நவ்ய –- அபூர்வங்களாய் ,
திவ்ய –- “ கேட்டாரார் வானவர்கள் “ என்கையாலே திவ்யரான நித்ய ஸூரிகளுக்கு கேட்க யோக்யங்களாய் ,
கோமல –- ம்ருது ஶைலியோடுகூடி ,
விமல –- நிர்தோஷங்களாய் ,
மதுராயமாண -– (ஸ்ரீய:பதி , நித்யஹேயப்ரத்யநீகனாயும் , கல்யாணைகதானனாயும் இருப்பனென் றறுதியிடுகையாலே )
தேனும் பாலும் கன்னலும் அமுதும் போலிருப்ப தான ;
நிஜ ஸூக்திகலாபை: — ஸ்ரீபாஷ்யம் முதலான தம்முடைய திவ்ய ஸூக்தித்தொடைகளாலே ;
ஆஶ்ரிதான் -– தம்மை ஆஶ்ரயித்த ,
அகில ஜனான் –- ஸமஸ்த சேதநர்களையும் ;
ஆஹ்லாதயந்தம் –- ஆனந்திப்பித் துக் கொண்டிருக்குமவராயும் ,
ஸ்ரீமந்தம் — “ ஸம்ஸேவிதஸ் ஸம்யமி ஸப்தஸத்யா பீடைஸ்சதுஸ்ஸப்ததிபிஸ்ஸமேத: “ இத்யாதி படியே
அடியார்களுடைய நிரவதிக ஸம்பத்தை உடையவராயும் ,
ஆர்ய ஜநாபி வந்த்யம் -– நாதயாமுந ப்ரப்ருதி பூர்வாசார்யர்களால் புகழப்பட்டவராயும் ,
அஸ்மத் குல நாதம் -– நம்முடைய ப்ரபந்நகுலத்துக்கு நாதராயும் ,
அஸ்மதஸாதாரண ஶேஷிணம் -– அடியேனுக்கு வகுத்த ஶேஷியாயும் ,
அஸ்மதாதிரக்ஷ்யவர்க + தீக்ஷஆகுரும் ––
அஸ்மதாதி –- அடியேன் முத லான ,
ரக்ஷ்யவர்க -– ரக்ஷ்ய பூதருடைய திரளை ,
ஸர்வப்ரகார –- எல்லா ப்ரகாரத்தாலும் ,
ரக்ஷண -–ரஷிக்கை யென்கிற ,
ஏக –- முக்யமான ,
தீஷா – தீஷையுடைய ,
குரும் – ஆசார்யராயுமிருக்கிற ,
ஸ்ரீராமாநுஜா சார்யம் -– தர்ஶந ஸ்தாபநாசார்யரான வெம்பெருமானாரை ,
அநாத்ருத்ய -– அநாதரித்து ,
பரம காருணிக: — ( ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே , அடியே தொடங்கி க்ருஷி பண்ணிக்கொண்டு போருகையாலே ) தனக்கு மேலற்ற காருணிகரான ,
பகவாநேவ – ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்க ளோடு , ஆஶ்ரித கார்யாபாதகங்களோடு வாசியற
ஸமஸ்த கல்யாண குணங்களாலும் பரிபூர்ணனான ஸர்வேஶ்வரன்தானே ,
ஸ்வசரண கமலஸமாஶ் ரிதானாம் -– ( “ வணங்க வைத்த கரணமிவை “ என்னுமவர் வேண்டாதபடி
“ விசித்ரா தேஹ ஸம்பத்திரீஶ்வராய நிவேதிதும் “ என்று ஶாஸ்த்ரத்தாலறிந்து தம் திருவடித் தாமரைகளை ஆஶ்ரயித்தவர்களான ,
அஸ்மாகம் –- நமக்கு ,
ஸ்வப்ராப்திரூபபலம் –- தன்னுடைய ப்ராப்தியாகிற பரம்புருஷார்த் தத்தை ,
ப்ரயச்சதீதி — தருகிறானென்று ,
ஸ்வமதேந — ( அஹங்கார தூஷிதமான ) ஸ்வாபீப்ராயத்தாலே ,
விசிந்த்ய –- ஆலோசித்து ,
வர்த்த மாநாநாம் -– அந் நிலையில் நின்றும் பேராதவர்களாயும் ,
தத்வஜ்ஞாந லவலேஸ தேஸாதிகாநாம் —
தத்வஜ்ஞாந –- வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய,
லவலேஸ -– ஏகதேஶத்தில் அல்ப பாகமாவது நடையாடுகிற ,
தேஶ — ப்ரதேஶத்தை ,
அதிகாநாம் – அதிக்ரமித்து ( அதாவது அந்த ஜ்ஞாந மாத்ரமேயன்றிக்கே
தத்வ ஜ்ஞாநமென்பதொன்றுண் டென்றிருக்குமவர்கள் வஸிக்கும் ப்ரதேஶத்தையும் கூடவறியாமல் ) இருக்கிறவர்களாயும் ,
( “ பரஞ்சோதிரூப ஸம்பத்ய “ இத்யாதி ப்ரகாரமாக ஆவிர்பூதஸ்வரூப னான வாத்மாவுக்கு ஶேஷத்வமே ஸ்வரூபமாய்
அது தான் ததீய பர்யந்த மாயன்றி நில்லாதென்கிறவிதுவே வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய உள்கருத் தாய்
அந்த ததீயருடைய முகமலர்த்திக்குறுப்பாக வாசார்ய ஶேஷத்வம் ராகப்ராப்தமாய் தன்னடையே வருகிறதாகையாலே ,
ஆசார்யத்வ பூர்த்தி யுள்ள வெம்பெருமானாரை யனாதரித்தவர்களுடைய தத்வ ஜ்ஞாநம்
அஸத்கல்பமாகவேயிருக்குமென்று கருத்து )
துரபிமாந ஸஹக்ருத பரப்ராமக வ்ருத்தாநாம் — ( இப்படி தத்வயாதாத்ம்ய ஜ்ஞாநகந்தமே யில்லாதிருந்தாலும் )
துர்மாநத்தை யுள்கொண்டு , தம்மைப் பிறர் காணில் “ இந்தளத்தில் தாமரைபோலே யிவரும் சிலரேயென்று மோஹிக்கும்படி ,
பரமஸாத்விகருடைய வநுஷ்டாநத்தை யபிநயிக்குமவர்களாயும் ;
ரூபவேஷதாரிணாம் -– ( “ ஆக்ருதிமத்வச்சரணாரவிந்த ப்ரேம “ என்கிற தற்கு நேரே எதிர்தட்டாக )
க்ருத்ரிமமான ஸ்ரீவைஷ்ணவரூப வேஷங்களை யுடையவர்களாயும் ,
வயமேவ + மந்யமாநாநாம் —
வயமேவ – நாங்களே,
ஸ்ரீவைஷ்ணவா இதி -– வைஷ்ணவாக்ரேசரரென்று ,
ஸ்வமதேந -– அஹங் கார க்ரஸ்தமான தம்முடைய வபிப்ராயத்தாலே ,
ஆத்மாநம் -– தங்களை,
பஹுமந்யமாநாநாம் -– ( “ அமர்யாத: க்ஷஊத்ர: “ இத்யாதிக்கு நேரே எதிர் தட்டாக )
போரப் பொலியக் கொண்டாடிக் கொள்ளு மவர்களாயுமிருக்கிற ,
சேதநாநாம் -– சேதநர்களுக்கு , ( இவர்களை அசேதநர் என்னவேண்டியிரு க்க , “ சேதநாநாம் “ என்றது
அமங்கள வாரத்தை , மங்களவாரமென்றாப் போலே )
பகவான் -– அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைக தானனாய் ,
புருஷோத்தம: — “ யஸ்மாத் க்ஷரமதீதோஹ மக்ஷராதபிசோத்தம: |
அதோ ஸ்ரீமந்நாராயண: அஸ்மத்குல ஸ்வாமிநோ பகவத: ஸ்ரீமத்ராமாநுஜ குரோ:சரணயுகள
ஸம்பந்தராஹித்யம் ஹ்ருதிநிதாய கதாசிதபி ஸ்வப்ராப்திரூப மோக்ஷ:பலமகுர்வாண: ,
யாவதாத்ம பாவி ஸம்ஸார நிரயகர்த்தே
“ ஷிபாம்யஜஸ்ர “ மிதி வதன் நிஷேப்ய , கதாசிதபி தான் ஹ்ருதாநகணயன் ,
ராமாநுஜகுரு க்ருபாபிமாநாந்த் தர்பூத ஸாத்விக ஜநேஷு ஸ்மிலோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம: “ என்கிறபடியே
க்ஷர ஶப்த வாச்யரான பக்தசேதநரென்ன ,
அக்ஷர ஶப்தவாச்யரான முக்தசேதநரென்ன
இவர்களில் காட்டில் விலக்ஷணனாகையாலே புருஷோத்தமனென்று ப்ரஸித்தனாயிருக்கிற , ஸ்ரீமந்நாராயண: — ஸ்ரீய:பதியானவன் ,
அபார காருண்ய + நிதிரபி ,
அபார –- பாரமில்லாத ,
காருண்ய – ( “ க்ருபா காப்யுபஜாயதே “ என்கிறபடியே , ஸம்ஸாரி சேதநருடைய உஜ்ஜீவநத்துக்கு ஹேதுபூதமான ) காருண்யமென்ன ,
ஔதார்ய “ சேரும் கொடை “ என்கிற உதாரத்வமென்ன ,
வாத்ஸல்ய -– தோஷ போக்யத்வமென்ன ,
ஸௌஶீல்யதன் — பெருமை பாராதே தாழ்ந்தார்களோடு புரையறக்கலக்கும் ஸ்வபாவமென்ன , இவற்றுக்கு ,
ஏக –- அத்விதீயனான ,
நிதிரபி – நிவாச ஸ்தான பூதனாயிருந்தாலும் ,
அஸ்மத் குல ஸ்வாமிந: + ஹ்ருதிநிதாய —
அஸ்மத் குல ஸ்வாமிந: — “ ந: குலபதே: “ என்கிறபடியே அடியேனுடைய குலத்துக்கு ஸ்வாமியாய் ,
பகவத: ( நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு வேண்டும் கைமுதல்களான ) ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையராய் ,
ஸ்ரீமத் ராமாநுஜகுரோ: — ( “ ஆசார்ய பதமென்று தனியேயொரு பதமுண்டு , அதுள்ளது எம்பெருமானார்க்கே , என்கிற )
நிலை நின்ற ஆசார்ய பத ஸம்பத்தை யுடையருமான வெம்பெருமானாருடைய ,
சரணயுகள ஸம்பந்த ராஹித்யம் —
சரணயுகள -– இரண்டு திருவடிகளில் ,
ஸம்பந்த ராஹித்யம் -– ஆஶ்ரயண ரூப ஸம்பந்தமில்லாமையை ,
ஹ்ருதி –- தன் திருவுள்ளத்திலே ,
நிதாய -– வைத்து ,
கதாசிதபி –- ஒருக் காலமும் ,
ஸ்வ:ப்ராப்தி ரூப மோக்ஷ:பலம் — தன்னுடைய ப்ராப்தியா கிற மோக்ஷ:பலத்தை ,
அகுர்வாண: — செய்து கொடுக்காமல் ,
யாவதாத்ம பாவி + நிஷேப்ய —
யாவதாத்ம பாவி – ஆத்ம ஸத்தை யுள்ளதனையும் ,
ஸம்ஸார நிரயகர்த்தே –- ஸம்ஸாரமாகிற நரக கூபத்திலே “ ஷிபாம் யஜஸ்ர “ மிதிவதன் , நிஷேப்ய -– அஹங்காரம் , பலம் , தர்ப்பம் , காமம் , க்ரோதம் ச ஸம்சிதா: “ என்று தொடங்கி
“ தாநஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷு நராதமான் க்ஷஇபாம்யஜஸ்ரம் “ என்று
அஹங்காராதி தோஷ துஷ்டரான புருஷாதமரை ஜந்ம மரணாதி ரூபேண சுழன்று வருகிற ஸம்ஸாரத்தில்
க்ரூர ஸ்வபாவமுள்ளவராய் பிறக்கும் படியாகவே

நித்ய தத்தத்ருஷ்டி: தேப்யஸ்ஸர்வஸ்வதாந கரணேபி கிமபி ந தத்தமே வேத்யத்யாப்ய பரிதுஷ்ட: ,
ராமாநுஜகுரு சரணயுகள ப்ராவண்ய நைரந்தர்ய ப்ரதாநைக நிஷ்ணாதோ வர்த்ததே “ என்று
எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவர்களுக்கு , ஸர்வ ப்ரகாரத்தாலும் ஈஶ்வரன் ஸ்வ ப்ராப்தி பண்ணிக் கொடாமல் ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற நரக குழியிலே தள்ளியிட்டுவைத்து ,
திருவுள்ளத் தாலும் அவர்களை நினையா நின்றருளிச் செய்தார் இறே .

ஆகையால் ஸர்வ ப்ரகாரத்தாலும் , உஜ்ஜீவிக்க வேணுமென்றும் நினைவுடைய வன் ,
அசரண்ய சரண்யராய் , பரம காருணிகராய் , பரமோதாரரான வெம்பெருமானாருடைய
வபிமாநமே , உத்தாரகமென்றறுதியிட்டு , ததேகநிஷ்டனாய்
“ தேவு மற்று அறியேன் “ என்று ஶேஷித்வ , சரண் யத்வ ப்ராப்யத்வங்களை
யெம்பெருமானார் பக்கலிலே யறுதியிட்டு ,நிக்ரஹித்துத் தள்ளி விடுவேனென்றாப்போலே சொல்லிக்கொண்டே தள்ளி விட்டு ,
கதாசிதபி — ஒருக் காலமும் ,
தான்— அவர்களை ,
ஹ்ருதா — திருவுள்ளத்தால் ,
ந கணயன் –- நினையாமல் ,
ராமாநுஜகுரு + தத்த த்ருஷ்டி:–
ராமாநுஜகுரு -– அஜ்ஞாநி வர்த்தகரான வெம்பெருமானாருடைய ,
க்ருபாபி மாநாந்தர்பூத நிர்ஹேதுக க்ருபையால் வந்த வபிமாநத்தி லொதுங்கின ,
ஸாத்விக ஜநேஷு –- பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்க ளிடத்திலே ,
நித்ய தத்த த்ருஷ்டி: — வைத்த கண் வாங்காமல் பூர்ண கடாக்ஷமுடையனாயக் கொண்டு ,
தேப்யஸ்ஸர்வஸ்வ + பரிதுஷ்ட: —–
தேப்ய: — அவர்களுக்கு ,
ஸர்வஸ்தாந கரணேபி -– உபயவிபூதியோடு தன்னையே கொடுத்திருந்தாலும் ,
கிமபி ந தத்தமேவேதி -– ( “ அஸ்மை ந கிஞ்சிதுசிதம் க்ருதம் “ என்னாப் போலே ) இவர்களுக்குத் தகுதியாக
ஒன்றும் செய்யப் பெற்றிலோமே ? என்று ,
அத்யாப்யபரிதுஷ்ட: — இன்னமும் குறைவாளனாய் ,
ராமாநுஜா + வர்த்ததே —
ராமாநுஜகுரு – அப்படிப்பட்ட வெம்பெருமானாருடைய ,
சரண யுகள –- இரண்டு திருவடிகளிலும் ( உண்டாயிருக்கிற ) ,
ப்ராவண்ய -– நிரதிசய ப்ரீதிக்கு ,
நைரந்தர்ய –- தைலதாரா துல்யமான அவிச்சேதத்தை ,
ப்ரதான கொடுக் கையில் ,
ஏக -– அத்விதீயனான ,
நிஷ்ணாத: — உள் புக்காராயுமவனாய் ( அதாவது ஆண்களையும் பெண்ணுடை யுடுக்கப்பண்ணும்
வைர உறுக்கா கையாலே , இவ்வதிகாரிக்கு நித்ய சத்ருவான தன்னுடைய நிரதிசய
ஸௌந்தர்யத்தில் ஆழங்கால்பட்டு , இரு கரையராகாமல் நோக்கிக் கொண்டு போருமவனாய் )
வர்த்ததே -– இதுவே பணியாக விருக்கிறான் , என்று எம்பார் அருளிச்செய்தாரென்கை .

சரமோபாய தாத்பர்ய ப்ரமாண வசநாயா: |

பூர்வாசார்ய லஸத்ஸூக்தீரூபஜீவ்ய விசோதிதா: ||.

பேற்றுக்குடலாக ப்ரதம பர்வத்தில் நெஞ்சு தாழ்ந்து , இருகரை யனாய் யாதாயாதம் பண்ணி யலமாவாதே ,
எம்பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி , நமக்குப் பேற்றில் கண்ணழிவில்லை யென்று நெஞ்சில் தேற்றமுடையவனாய் ,
எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்ய சீமா பூமிகளான பரம ஸாத்விக வர்க்கத்துடன் ,
“ போதயந்த: பரஸ் பரம் “ பண்ணிக்கொண்டு ,
பரஸம்ருத்யைக ப்ரயோஜனனாய் ,
எம் பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யமுடையாரைக் கண்டால் , இந்தளத்திலே தாமரைப் பூத்தாப் போலே ,
இருள் தரு மாஞா லமான விக் கொடு உலகத்திலே , இங்ஙனேயும் சிலருண்டாகப் பெறுவதே யென்று
ஷர்ஷ புலகித ஶரீரனாய் , யாவச் சரீர பாதம் , த்ரிவித கரணத் தாலும் , ஒருபடிப்பட ஸ்வரூபத்தை நோக்கிக் கொண்டு .,
எம்பெருமா னாருடைய , திருநாமோச்சாரணமில்லாவிடில் நாக்கு வற்றும்படி யான நிலையோடு பொருந்தி ,
மநஸ்ஸை ஸாவதாநமாய்ப் பண்ணிக் கொண்டு , ஸ்வரூபாநுகுணமாக வர்த்திக்க வேணும் .

சரமோபாய தாத்பர்யம் ஸமாப்தம்

சரமோபாய தாத்பர்யம் தேவராஜகுரூதிதம் |

ஸம்ப்ரதாயாநுரோதேந யதாமதி விசோதிதம் ||

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.