ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் -சொல்லுவோம் இராமானுசன் திரு நாமங்களே -ஸ்ரீ பரமாச்சார்யர் வைபவம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் -நம்மாழ்வார் நம் இராமானுசன் -நம் மணவாள மா முனிகள்
மூவரும் திருவாவதரித்தது ஆழ்வார் திருநகரியிலேயே –

அஷ்டதிக் கஜங்கள் எண்மர்-
1- அழகிய வரதர் எனப்படும் ராமானுஜ ஜீயர் எனப்படும் வானமா மலை ஜீயர் -அருளாளப் பெருமாள் எம்பெருமானாரைப் போல் பிரியாது அடிமை செய்து போருவர்
2-பட்டர் பிரான் ஜீயர் -பூர்வாஸ்ரமத்தில் கோவிந்த தாஸப்பர் -எம்பாரைப் போல் பதச்சாயை –
3-திருவேங்கட ராமானுஜ ஜீயர்
4-கோயில் அண்ணன் -உடையவருக்கு முதலியாண்டானைப் போல் பாதுகா ஸ்தாநீயர்
5-பிரதிவாதி பயங்கரம் அண்ணன் -ஆழ்வானைப் போல் உஸாத் துணை
6- எறும்பி அப்பா -எம்பெருமானாருக்கு வடுக நம்பி போல் தேவு மற்று அறியாத அத்யந்த அபிமதர்
7-அப்பிள்ளை -உறங்கா வல்லி போல் மடத்தின் ஸர்வ பரங்களையும் நடத்திக் கொண்டே போருவர்
8-அப்பிள்ளார்

இவர்களைத் தவிர நவ ரத்ன சிஷ்யர்களும் உண்டு
1-சேனை முதலியாண்டான் நாயனார்
2-சடகோப தாஸரான நாலூர் சிற்றாத்தான்
3-கந்தாடை போரேற்று நாயனார்
4-ஏட்டூர் சிங்கராசார்யர்
5-கந்தாடை அண்ணப்பன்
6-கந்தாடை திருக்கோபுரத்து நாயனார்
7-கந்தாடை நாரணப்பை
8-கந்தாடை தோழப் பரப்பை
9-கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள்

இவரது பூர்வாஸ்ரமத்து திருக்குமாரர் -ராமானுஜாச்சார்யர்
திருப்பேரர் ஜீயர் நாயனார் -இவர் திருக்குருகைப்பிரான் பிள்ளான் போல் அத்ய ஆதரணீயர் –

ஸ்ரீ மான் ஸூ ந்தர ஜாமாத்ரு முனி பர்யாய பாஷ்ய க்ருத்
பாஷ்யம் வ்யாகுர்வதஸ் தஸ்ய ஸ்ரோத்ரு கோடவ் மம அந்வய -என்கிறபடியே
புனர் அவதாரமான பெரிய ஜீயர் பூ ப்ரதக்ஷிணம் பண்ணி அநேக ஸ்தலங்கள் ஜீரண உத்தாரணம் பண்ணி அருளினார்
பரமத நிரசன ஸ்வமத ஸ்தாபனம் பண்ணி அருளினார்
சர்ப்பாதி ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கும் மோக்ஷம் சாதித்து அருளினார்

ஈடு காலஷேபம்-இது ஸ்ருதி ப்ரக்ரியை -இது ஸ்ரீ பாஷ்ய ப்ரக்ரியை -இது ஸ்ருத ப்ரகாசிகா ப்ரக்ரியை
இது கீதா பாஷ்ய ப்ரக்ரியை -இது ஸ்ரீ பாஞ்சராத்ர ப்ரக்ரியை -இது ஸ்ரீ இராமாயண பிரகிரியை
இது மஹா பாரத ப்ரக்ரியை -இது ஸ்ரீ விஷ்ணு புராண பிரகிரியை -இது ஸ்ரீ மத் பாகவத பிரகிரியை
இது பதார்த்தம் -இது வாக்யார்த்தம் -இது மஹா வாக்யார்த்தம் -இது வ்யங்க்யார்த்தம் -என்று
அற்புதமாய் விசத வாக் சிகாமணி என்கிற தமது விருது நிறம் பெரும்படியும்
சர்வஞ்ஞ ஸார்வ பவ்மர் என்கிற பட்டம் பொலியவும் பிரவசனம் செய்து அருளினார்

ஆழ்வார் துவலில் மா மணி மாடம் -திருவாய் மொழியிலே தமது பெருமைகளை தாமே வெளியிட்டு அருளினால் போல்
இவரும் ஆர்த்தி பிரபந்தத்தில் வெளியிட்டு அருளுகிறார்

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுதுபோக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு போராமை பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-

இதுவே நமக்கு நித்ய அனுசந்தேயம்

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மா முனியே
இன்னுமொரு நூற்று ஆண்டு இரும் –

இவரது ஸாத்விக பாவம்
இவரது பெருமையைப் பொறாத சிலர் மடத்தில் நெருப்பு வைக்க
ஆதி சேஷ ரூபம் கொண்டு இவர் வெளியேற
அந்நாட்டு மன்னன் இதை அறிந்து அவர்களைத் தண்டிக்க முற்பட
பிராட்டி ராக்ஷஸிகளை ரக்ஷித்து அருளியது போல் பரம கிருபையால் வாத்சல்யத்தாலும் அவர்களை ரக்ஷித்து அருளினார்
தேவீ லஷ்மீர் பவஸி தயயா வத்சலத்வேந ச த்வம் -என்று கொண்டாடும் படி அன்றோ இவர் ஸாத்விக பாவ வைபவம் –

————-

சொல்லுவோம் ஸ்ரீ ராமானுஜன் திரு நாமங்களே-

தஸ்மை ராமாநுஜார்ய நம பரம யோகிநே
யஸ் ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் அசீச மத்

பெரிய திருமுடி அடைவு எம்பெருமானாருடைய திருநாமங்கள் அடைவு காட்டப்பட்டுள்ளது –

1-இளையாழ்வார்
பிங்கள வருஷம் சித்திரை திருவாதிரை திரு அவதாரம் பண்ணின காலத்தில் மாதுலர் சாற்றினை முதல் திரு நாமம்

ஆளவந்தார் ஆம் முதல்வன் என்று கடாக்ஷித்து அருளினார்
யதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை யடியாம் கதி பெற்றுடைய ராமானுஜன்
ஆளவந்தார் திருவடிகளையே விசேஷ தனமாக கதியாக நிதியாகக் கொண்டார்

2-இராமனுஜன்
பெரிய நம்பிகள் மூலமாகப் பெற்ற தாஸ்ய திருநாமம்
பஞ்ச ஆச்சார்யர்கள் -பெரிய நம்பி பெரிய திருமலை நம்பி -திருக்கோஷ்டியூர் நம்பி -திருமாலை ஆண்டான் -ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் –
இவர்கள் அனைவரும் இவருக்கு ஐந்து திருநாமங்கள் சாற்றி அருளினார்கள் –

3- யதிராஜர் –
திருவனந்த ஸரஸ்ஸிலே நீராடி ஆஸ்ரம ஸன்யாஸ ஸ்வீ காரம் பண்ணி அருள தேவப்பெருமாள் அவருக்கு சாற்றிய திரு நாமம் யதிராஜர் –

4- உடையவர் –
தென் அத்தியூரர் கழல் இணை அடிக்கீழ் பூண்ட அன்பாளனை
தன்னிடம் சேர்த்து தன்னையும் தனது சர்வத்தையும் கொடுத்து அருளி உடையவர் என்ற திருநாமம் சாற்றி அருளினார்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்-

5-லஷ்மண முனி
ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் சாத்தி அருளிய திரு நாமம்
திரு மிடற்று ஆசைக்காக வேண்டிய உபசாரங்கள் எல்லாம் பண்ணுவாராம்
லஷ்மண லஷ்மி சம்பன்ன -கைங்கர்ய சாம்ராஜ்ய லஷ்மி –

6- எம்பெருமானார்
திருக்கோஷ்டியூர் நம்பிகள் சாத்தி அருளிய திருநாமம்
எம்பெருமான் காருணீகர் இவரோ பரம காருணீகர் -அவனிலும் அதிசயித்தது அன்றோ
காரேய் கருணை இராமானுச இக்கடல் இடத்தில் ஆறே அறிபவர் நின் அருளின் தன்மை

7-சடகோபன் பொன்னடி
திருமாலை ஆண்டான் சாத்தி அருளிய திருநாமம்
ஆழ்வார் திரு உள்ளக் கருத்துப்படி வியாக்யானம் காட்டி அருளியதால் பெற்ற திரு நாமம்
ஆழ்வார் திருநகரியில் இன்றும் ஆழ்வார் திருப்பாதுகைக்கு இராமானுசன் என்றே பெயர் -மற்ற இடங்களில் தான் மதுரகவி –

8-கோயில் அண்ணர்
படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் -ஆவதற்காக
ஸ்ரீ இராமாயண அர்த்தங்களை உபதேசித்து அருளிய பொழுது
பெரிய திருமலை நம்பி சாத்தி அருளிய திரு நாமம்
ஆண்டாள் பாரித்த படி அழகருக்கு நூறு தடா வெண்ணெய் அக்கார அடிசில் சமர்ப்பித்ததற்கு உக்காந்து நாச்சியார் அழைத்த திருநாமம்

9- தேசிகேந்த்ரன்
திருவேங்கடமுடையான் சாத்தி அருளிய திருநாமம்
அப்பனுக்கும் சங்கு ஆழி கொடுத்தவர் அன்றோ
தேசிகனான பகவானுக்கும் தேசிகர் -தேசிகோ தேசிகா நாம் –

10- பூத புரீசர்
ஆதிகேசவப்பெருமாள் சாத்க்தி அருளிய திரு நாம கரணம்

11- பாஷ்யகாரர்
சாரதா தேவி உகந்து சாத்தி அருளிய திரு நாம கரணம்

12-ஸ்வாமி தகப்பன்
உலகுக்கு எல்லாம் தகப்பனாக செல்வப்பிள்ளை -தனக்கு ஸ்வாமியை தகப்பனாக அபிமானித்து சாத்தி அருளிய திருநாம கரணம்

13-ஸ்வாமி
ஸ்ரீ வைஷ்ணவ வாமன க்ஷேத்ர -திருக்குறுங்குடி நம்பி சாத்தி அருளிய திரு நாம கரணம்

————-

ஸ்ரீ பரமாச்சார்யர் வைபவம்

லஷ்மீ நாத ஸமா ரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மாதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

ஸ ச ஆச்சார்யவம் சோ ஜேய ஆச்சார்யாணாம் அசவ் அசவ் இதி ஆபகவத்த -ரஹஸ்ய ஆம்நாய ஸ்ருதி
ஆரோஹண அவரோஹண கிரமங்களாலும் அனுசந்திக்கப்பட வேண்டும் –
சரம ஆச்சார்யர் -அத ஏவ பரமாச்சாரியார் -ஸ்ரீ மணவாள மா முனிகள்
பரம ச அசவ் ஆச்சார்ய -பரமாச்சார்ய என்றும்
பரமஸ் யாபி ஆச்சார்ய பரமாச்சார்ய -என்றும் பொருள் கொள்ளத் தகும் –
நம் பூர்வாச்சார்ய பரம்பரை மண்டலாகாரமாக அன்றோ அமைந்துள்ளது –

ஸ்ரீ சைல தயா பாத்ர தனியன் வைபவம் ஸூ ப்ரஸித்தம் –
நம்பெருமாள் எந்தப் புறப்பாட்டிலும் மா முனிகள் ஈடு கால ஷேபம் செய்து அருளிய பெரிய திரு மண்டபத்தை ப்ரதக்ஷிணம் செய்வது யாவரும் அறிந்ததே –
பரமாச்சார்யருக்கு தனது சேஷ பீடத்தையும் பஹு மணமாகப் பிரஸாதித்து அருளினான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வன் –

பரோ மா யஸ்மாத் ஸ பரம –
ஆனித்திருமூல ஸ்ரீ சைல வைபவம் நாடும் நகரமும் நன்கு அறியக் கொண்டாடுவதும்
பிரதி ஸம்வத்ஸரம் மாசி சுக்ல துவாதசி இவரது திரு அத்யயனத்தை மிகவும் கோலா ஹலமாகத் திருவரங்கத்தில் நடப்பதும் ஸூ ப்ரஸித்தம்
விஷ்ணு பரம சேஷீ -இவரை தனக்கு சேஷீயாகக் கொண்டானே

————-

ஆசினோதி ஹி சாஸ்த்ரார்த்தான் ஆசாரே ஸ்தா பயத் அபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தஸ்மாத் ஆச்சார்ய உச்யதே

கு ஸப்தஸ் த்வந்தகார ஸ்யாத் குரு ஸப்த தன் நிரோதக-அந்தகார நிரோதித்வாத் குரு ரித்யபி தீயதே

ஆச்சார்யன் ப்ரஹ்ம வித்ய உபதேஷ்டா
குரு வேத அத்யாபகன்
ஸ்ரீ நாரத பகவான் -ஸ்வாத் யாய நிரதம்–வாக்விதாம் வரம் -முனி புங்கவம் –
நேரே ஆச்சார்யன் என்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்திரத்தை உபதேசித்தவனை -ஸ்ரீ வசன பூஷணம் -315-
திருமந்த்ரத்தைச் சொன்னது ரஹஸ்ய த்ரயத்துக்கும் உப லக்ஷணம் –

ஜீவ பர ஸம்பந்த பிரகாசம் இறே திருமந்திரம்
அவ்வானவருக்கு மவ்வானவர் எல்லாம் உவ்வானவர் அடிமை என்று உரைத்தார் -ப்ரமேய சாரம்
அம்பொன் அரங்கருக்கும் ஆவிக்கும் அந்தரங்க ஸம்பந்தம் காட்டும் அவன் அன்றோ ஆச்சர்யம் -ஸப்த காதலி

பாபிஷ்ட க்ஷத்ர பந்து ச புண்டரீக ச புண்ய க்ருத் ஆச்சார்யவத்தயா முக்தவ் தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் -புராண வசனம்
ஆச்சார்யாத் ஹைவ வித்யா விதிதா ஸாதிஷ்டம் பிராபத் -என்றும்
ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்றும் வேதாந்த வாக்கியங்கள்

தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமா போலே
ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன் தானே ஆச்சார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப் பண்ணும் –ஸ்ரீ வசன பூஷணம் -439-

நாராயணோ அபி விக்ருதிம் குர்யாத் குரோ ப்ரச்யுதஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவி ந தோஷ யதி -புராண வாக்கியம்

இத்தையொழிய பகவத் விஷயம் துர்லபம் -ஸ்ரீ வசன பூஷணம் -440-
அநாதி ஸித்தமாய் இருக்கச் செய்தேயும் ஆச்சார்யன் உணர்த்துவதற்கு முன்பு அஸத் கல்பமாய் –

அவன் உணர்த்தின பின்பே கார்யகரமாகக் கடவதாய் இருக்குமது –
உஜ்ஜீவன உபதாய கதாவச்சேதகம் ஸம்பந்த ஞானம் -தத் ஹேதுத்வம் ஆச்சார்யனுக்கு என்றபடி –
உஜ்ஜீவனம் மோக்ஷம் -தத் உபதாயகம் ஞாயமான பகவத் சம்பந்தம் -தத் அவச்சேதகம் -ஞாயமானத்வம் –
தத் அவச்சின்ன -தத் விசிஷ்ட-பகவத் ஸம்பந்தம் மோக்ஷ ஹேது என்றபடி -சம்பந்த ஞானம் அவஸ்யகம் என்றபடி –
ஸம்பந்தம் ஆச்சார்யனாலே என்றபடி
பகவல் லாபம் சேர்ப்பாராலே என்று இருக்கிறாள் -1-4-8- ஈடு –

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னுமுறை
யாராயில் நெஞ்சே யநாதி யன்றோ -சீராரும்
ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது என்றோ
கூசாமல் எப்பொழுதும் கூறு—ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -45-

ஏகாந்தீ வியபதேஷ்டவ்ய நைவ க்ரம குலாதிபி
விஷ்ணுநா வியபதேஷ்டவ்ய தஸ்ய ஸர்வம் பி ச ஏவ ஹி

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் –

ஸ்ரீ சைல தயா பாத்ரம் -என்று உபகாரகரான திருவாய் மொழிப்பிள்ளை ஸம்பந்தம்
யதீந்த்ர ப்ரவணம் -உத்தாரகரான எம்பெருமானார் சம்பந்தம்
அபிமான துங்கர் செல்வர் அன்றோ மா முனிகள் தீ பக்த்யாதி குணார்ணவம் -ஆச்சார்ய லக்ஷண பூர்த்தி கூறப்பட்டது
வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் -மா முனிகள் ஸம்பந்தம் பெரும் பேறாக மதித்து வணக்கம் செலுத்துகிறான் –

ஸ்ரீ சைல பூர்ணர்-பெரிய திருமலை நம்பி -தயைக்குப் பாத்திரமான எம்பெருமானார் யதீந்த்ரர் இஇராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் பெற்றார்
ஸ்ரீ சைலேசர் -திருவாய் மொழிப்பிள்ளை தயைக்குப் பாத்ரமான மணவாள மா முனிகள் -யதீந்த்ர பிரவணர்-தீர்த்தங்கள் ஆயிரமும் பெற்றவர்
இரண்டுமே ஸ்ரீ வைஷ்ண அரண்கள் அன்றோ –

யதீந்த்ரர் தாம் அவதரித்த பூதபுரியைத் துறந்து திருவரங்கத்துக்கு எழுந்து அருளி ஸம்ப்ரதாய பரிரக்ஷணம் பண்ணி அருளினார்
யதீந்த்ர பிரவணரும் தாம் அவதரித்த உறை கோயிலான திருக்குருகூரை விட்டு
காவேரி நடுவுப்பாட்டுக் கருமணியைக் கண்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யையும்
ஸ்ருதி சக்கரத்தையும் திராவிட வேத சக்கரத்தையும் பெருகப் பண்ணிக் கொண்டு போந்தார்

யதீந்த்ரர் எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தர்
யதீந்த்ர பிரவணர்-அனைத்து உலகும் வாழப்பிறந்தவர எதிராசா மா முனிகள் என்னும் பொருள் சுரந்தார் –
அவர் நாராயண வைபவ ப்ரகாசகர் -இவர் ராமானுஜ வைபவ ப்ரகாசகர் –

நர நாராயணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான்
அந்த அவதாரங்கள் போலே யதீந்த்ரரும் யதீந்த்ர பிரவணரும்

ந சேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருச

கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் –

ஆழ்வாருக்கு மதுரகவிகளிலும் சிரமமான திருவடிகள் இராமானுசன் ஆனால் போலே
ராமானுஜருக்கு ஆழ்வான் ஆண்டான் முதலானாரிலும் யதீந்த்ர பிரவணர் இறே சரமமான திருவடிகள் –
ஆகையால் சரம பர்வமான ஜீயர் விஷயமான இத்தனியன் ஸகல வேத சாரம் போல் நித்ய அனுசந்தேயம்

இப்படி வைபவசாலியாய் எழுந்து அருளி உள்ள மா முனிகள் திருவடிகளே தாரக போஷக போக்யங்களாகக் கொண்ட
நம் வானமா மலை ஜீயர் -கோயில் அண்ணன் -கோயில் அப்பன் -பிரதிவாதி பயங்கர அண்ணன் சம்பந்திகளாகி நாம் உஜ்ஜீவிப்போம் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading