ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்த ஸ்ரீ நித்ய திவ்ய கிரந்தம்

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த நவ கிரந்தகளுக்குள் இறுதியானது – ஸ்ரீ நித்ய கிரந்தம் என்பது
ஸ்ரீ பகவத் ஆராதன ப்ரயோகம் வஷ்யே -பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன் -என்று தொடங்கி இருப்பதால்
இது பகவத் ஆராதன கிரமத்தைத் தெரிவிப்பதற்காகவே அருளிச் செய்யப் பெற்று இருந்தாலும்
அதற்குப் பூர்வ அங்கமாக உடலைச் சுத்தி செய்து கொள்வது முதலியனவும் இந்நூலில் முதலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளன

திருவாராதனம் செய்யும் முன்பு அவனை சரண் அடைய வேண்டும் என்பதால்
தமேவ சரணம் உப கச்சேத் அகில இத்யாதிநா -என்று இந்நூலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது
அகில ஹேய ப்ரத்ய நீக -என்பது முதலான சூர்ணிகைகளால் எம்பெருமானைச் சரண் அடைய வேண்டும் என்பதால்
அகில ஹேய ப்ரத்ய நீக என்பது தொடங்கி
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்பது வரையும்
அதற்கு மேல் உள்ள ஸ்லோகங்களையும் இங்கு அனுசந்திக்க வேண்டும் என்பர் பெரியோர்

தண்டம் சமர்ப்பித்து பற்றி ப்ரணம்ய – வணங்கி -என்று ஒருமையிலே அருளிச் செய்தமையால்
ஒரு முறை தண்டம் சமர்ப்பிப்பதே எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் என்பது தெளிவு
அதே போல் மணி சேவிப்பதையும் அருளிச் செய்யாமையால் இல்லங்களில் திரு வாராதனம் செய்யும் பொழுது மணி சேவிப்பது இல்லை என்ற அனுஷ்டானமும் காட்டப்படுகிறது –

இறுதியில்
ஸ்ருதி ஸூகைஸ் ஸ்தோத்ரைஸ் அபிஷ்டூய-செவிக்கு இனிய சொற்களால் ஸ்துதித்து -என்று அருளிச் செய்யப்பட்டுள்ளதால்
செவிக்கு இனிய செஞ்சொல் -திருவாய் -10-6-11-திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவிக்க வேணும் என்பதையும் காட்டி அருளுகிறார் –

ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் உள்ள விஷயங்கள்
1- பகவானே நம்மைக் கொண்டு திருவாராதனம் செய்வித்துத் கொள்கிறான் என்று அனுசந்தித்தல்
2-நீர் நிலைக்குச் சென்று தேஹ சுத்தி செய்து கொள்ளுதல்
3-தீர்த்தமாடுதல்
4-வேஷ்ட்டி உத்தரீயம் அணிந்து திருமண் காப்பு இட்டுக் கொள்ளுதல்
5-ஆதார சக்தி தர்ப்பணம் முதலியவை செய்தல்
6-குரு பரம்பரையை அனுசந்தித்து பிறகு அகில ஹேய ப்ரத்ய நீக என்பது முதலிய
சரணாகதி கத்ய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து எம்பெருமானைச் சரண் அடைதல்
7-எம்பெருமானுடைய வலது திருவடிகளில் புகுவதாக நினைத்தால்
8-ஆவாஹனங்கள் செய்து வட்டில் முதலியவற்றை வைத்தல்
9-எம்பெருமானுடைய பரிஜன பரிவாரங்களை வணங்குதல்
10- எம்பெருமானுக்கு தண்டம் சமர்ப்பித்துத் திரு வாராதனத்தைத் தொடங்குதல்
11-அர்க்கியம் பாத்யம் ஆசமநீயம் சமர்ப்பித்தல்
12-ஸ்நாநாசனம் -திருமஞ்சனம் -சமர்ப்பித்தல்
13-அலங்கார ஆசனம் சமர்ப்பித்தல்
14-மந்த்ராஸனம் -உபசாரங்கள் -சமர்ப்பித்தல்
15-போஜியாசானம் -அமுது =சமர்ப்பித்தல்
16-மீண்டும் மந்த்ராஸனம் சமர்ப்பித்தல்
17-செவிக்கினிய செஞ்சொற்களால் ஸ்துதித்தல்
18-தண்டம் ஸமர்ப்பித்து திருவாராதனத்தை நிறைவு செய்தல் –

————-————————-

அத பரமைகாந்திநோ பகவதாராதன  ப்ரயோகம்  வக்ஷ்யே! 

பிறகு பரமைகாந்திகளினுடைய பகவானின் ஆராதன க்ரமத்தைச் சொல்லுகிறேன்.

பகவத் கைங்கர்யே கரதி! பரமைகாந்தி பூத்வா! ஸ்வஶேஷ பூதேநமயா!
ஸ்வகீயைஶ்ச தேஹேந்த்ரியாந்த: கரணை:| ஶ்வகீயை ரேவகல்யாணதமை:|
ஔபசாரிக ஸாம்ஸ்பர்ஶிகாப்வயஹாரிகை: போகைரகில பரிஜந பரிச்சாந்விதம்!
ஸ்வாத்மாநம் ப்ரீதம்| காரயிது முபக்ரமதே இத்யநுஸந்த்யாய தீர்த்தம் கத்வா|

ஶுசௌ தேஶே பாதௌ ப்ரதூல்யாசம்ய| தீரம் ஸம்ஶோத்ய|
ஶுசௌ தேஶே மூலமந்த்ரேண ம்ருத  மாதாய| த்விதா க்ருத்வா|
ஶோதித தீரே நிதாய| ஏகே நாதிக பாகேந தேஹமஹ ப்ரக்ஷாளநம் க்ருத்வா| நிஜம்யாசம்ய|
ப்ராணாயாம  த்ரய மாஸீநோ பகவந்தம் த்யாயநு| க்ருத்வாந்யம் ம்ருத்பாகமாதாய| வாமபாணி தலேத்ரிதா க்ருத்வா|

ப்ருதக் ப்ருதக் ஸம்ப்ரோக்ஷ்ய| அபிமந்த்ரைகேந திக்பந்தன அஸ்த்ர மந்த்ரேணகுர்யாது|
அந்யே நதீர்த்தஸ்ய பீடம் இதரேண காத்ரலேபநம் தத: பாணீ ப்ரக்ஷால்ய| உதகாஞ்சலி மாதாய|
தீர்த்தஸ்ய அர்க்யாந்த முதுக்ஷீப்ய|
பகவது வாம பாதாங்குஷ்ட விநிஸ்ஸ்ருத கங்கா ஜலம் தீர்த்த ஸங்கல்பித பீடே ஆவாஹ்ய|

மூல மந்த்ரேணாபி மந்த்ரிய உதகாஞ்ஜலி மாதாய| ஸப்த க்ருத்வோபி மந்த்ரியஸ்வ மூர்த்நிஸிம்சேத்| 
ஏவம் த்ரி: பஞ்ஜக்ருத்வ ஸப்த க்ருத்வோவா தக்ஷிணேந பாணிநா ஜலமாதாயாபி மந்த்ரிய|
பீத்வா ஆசம்ய ஸ்வாத்மாநம் ஸம்ப்ரோக்ஷ்ய|
தீர்த்தேநி மக்னோ பகவத் பாதாரவிந்த விந்யஸ்த ஶிரஸ்கோ யாவச்சக்தி மூல மந்த்ரம் ஜபித்வா|
உத்தீர்ய ஶுக்ல வஸ்த்ர தரோ த்ருதோத்தரீய ஆசம்ய| ஊர்த்வ புண்ட்ராம்ஸ்த தத்தந் மந்த்ரேண தாரயித்வா| 

————

பகவானுடைய கைங்கர்யமொன்றிலேயே ஆசையுடைய பரமைகாந்தியாயிருந்து
பகவாநேவ ……… உபக்ரமதே என்றநுஸந்தித்துத் தீர்த்தக் கரைக்குச் சென்று பரிசுத்தமான இடத்தில் கால்களை யலம்பி,
ஆசமனம் செய்து, கரையை யலம்பி விட்டுப் பரிசுத்தமான இடத்திலிருந்து மண்ணை எடுத்து, இரண்டு பாகங்களாகப் பிரித்து,
முன்னால் அலம்பப் பட்டிருக்கிற கரையில் வைத்து பெரியதாகிய ஒரு பாகம் மண்ணினால் உடம்பு முழுவதையும் தேய்த்து
அழுக்கைப் போக்கடித்துக் கொண்டு ஜலத்தில் முழுகி, ஆசமனம் செய்து, கரையில் உட்கார்ந்து
பகவானை த்யாநம் செய்து கொண்டு மூன்று ப்ராணாயமங்களைச் செய்து,

மற்றொரு பாகம் மண்ணை எடுத்து இடத்து உள்ளங்கையில் மூன்று பாகமாகப் பிரித்து வைத்துக் கொண்டு தனித்தனியே ப்ரோக்ஷித்து,
மூல மந்திரத்தினால் ஜபித்து, ஒரு பாகத்தை எடுத்து அஸ்திர மந்திரத்தினால் திக் பந்தனம் செய்ய வேண்டும்.
மற்றொரு பாகத்தினால் இனி ஆவாஹனம் செய்யப் போகிற தீர்த்தத்திற்குப் பீடம் கல்பிக்க வேண்டும். மற்றொரு பாகத்தினால் உடம்பு முழுவதையும் பூசிக் கொள்ள வேண்டும்.

பிறகு கைகளை யலம்பி, இரண்டு கைகளிலும் ஜலத்தை எடுத்து , தீத்த்தத்தில் முன் சேர்க்கப் பட்டிருக்கிற பீடத்தில்
பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரலிலிருந்து உண்டான கங்கா தீர்த்தத்தை ஆவாஹனம் செய்து, அஷ்டாக்ஷரத்தினால் ஜபித்து,
மறுபடியும் இரண்டு கைகளிலும் தீத்த்தத்தை எடுத்து,ஏழு தடவை மூல மந்திரத்தை உச்சரித்துத் தன் தலையில் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டியது.
இப்படி மூன்று,ஐந்து அல்லது ஏழு தடவை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டியது.

பிறகு வலது கையினால் ஜலத்தை எடுத்து அஷ்டாக்ஷரத்தினால் ஜபித்து உட்கொண்டு, ஆசமனம் செய்து
தன்னை ப்ரோக்ஷித்துக் கொண்டு, ஜலத்தில் முழுகியிருந்து கொண்டு
பகவானுடைய திருவடிகளில் தன்னுடைய தலை வைக்கப் பட்டிருப்பதாக த்யானித்துக் கொண்டு
ஶக்தியுள்ள வரையில் அஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
பிறகு கரையிலேறி பரிசுத்தமான வஸ்திரங்களை தரித்துக் கொண்டு, திரு மண் காப்புகளை
அந்தந்த மந்திரங்களினால் பகவானை த்யானித்துக் கொண்டு தரிக்க வேண்டும்.

—————

பகவந்த மநுஸ்ம்ருத்ய தந்மந்த்ரேண பகவத் பர்யந்தாபி தாயிநா மூல மந்த்ரேண
ஜலம் பீத்வாசம்ய ப்ரோக்ஷ்ய ! பரிஷிச்ய| உதகாஞ்சலி மாதாய|
பகவத் பாதார விந்தயோர் நிக்ஷிப்ய ப்ராணா நாயம்ய பகவந்தம் த்யாத்வா –
அஷ்டோத்தர ஶதம் மூலமந்த்ராவர்த்ய பரிக்ரம்ய| நமஸ்க்ருத்ய ஆதார ஶக்த்யாதி ப்ருதிவ்யந்தம் தர்ப்பயித்வா|
ஸ்ரீவைகுண்டாதி பார்ஷதாந்தம் தர்பயித்வா | தேவாந் ருஷீந் பிதுரூந்
பகவதாத்மகாந் த்யாத்வா ஸந்தர்ப்ய ஶுசௌ தேஶே வஸ்த்ரம் ஸம்பீட்யாசம்ய !
ஆவாஹித தீர்த்தம் ஆத்மநி மூல மந்த்ரேண ஸமாஹ்ருத்ய| யாகபூமிம் கச்சேத்|

ஸுப்ரக்ஷாளித | பாணிபாத: ஸ்வாசாந்த: ஶசௌ தேஶே அதிமநோஹரே நிஶ்ஶபேத் புவம் ஸம்க்ருஹ்ருயதாம்|
ஶோஷணாதிபிர் விஶோத்ய| குரு பரம்பரயா பரம குரும் பகவந்த முபகம்ய தமேவ ப்ராப்யத்வேந| ப்ராபகத்வேந|
அநிஷ்ட நிவாரகத்வேந| யதாவஸ்தித ஸ்வரூப ரூபகுண | விபூதி லீலோபகரண| விஸ்தார மநு ஸந்த்யாய தமேவ| ஶரண முபகச்சேத்|
அகிலஹேயே த்யாதிநா| ஏவம் ஸரணமுபகம்ய| தத்ப்ரஸாதோப ப்ரஹ்மித மநோ வ்ருத்தி தமேவ பகவந்தம் ஸர்வேஸ்வரேஸ்வர மாத்மந:
ஸ்வாமித்வேநாநுஸந்த்யாய அத்யர்த்த ப்ரியாவிரத விஶதத மப்ரத்யக்ஷ ரூபாநு த்யாயேந த்யாயந் நாஶீத|
ததஸ்ததநுபவ ஜநிதாதி மாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜா மாரபேத|

———-

பிறகு தேவதைகள், ரிஷிகள்,பித்ருக்கள் இவர்கள் பகவானை அந்தர்யாமியாக வுடையவர்கள் என்று
த்யானித்துக் கொண்டு தர்ப்பணம் செய்து பரிசுத்தமான இடத்தில் வஸ்திரத்தைப் பிழிந்து ஆசமனம் செய்து விட்டு
(ஸ்நான காலத்தில்)ஆவாஹனம் செய்யப்பட்ட தீர்த்தத்தை தன்னிடத்திலே அஷ்டாக்ஷரத்தினால்
ஆஹ்வானம் செய்து விட்டு ஆராதனம் செய்ய வேண்டிய இடத்திற்குப் போக வேண்டும்.

நன்றாகக் கை கால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்து விட்டு பரிசுத்தமாயும் அழகாயும் ஓசை யில்லாததுமான இடத்தில்
தனக்கு இடத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த பூமியை ஶோஷண தாஹன ப்லாவனங்களினால் சுத்தி செய்து
குரு பரம்பரையை முன்னிட்டுப் பகவானை த்யானம் செய்துகொண்டு அந்த பகவானையே
அடைய வேண்டிய ப்ரயோஜனமாகவும் அதை அடைவிக்கும் உபாயமாகவும்
அனிஷ்டங்களைப் போக்கடிப்பவனாகவும் அந்த பகவானுடைய உள்ளபடியான ஸ்வரூபம், ரூபம், குணங்கள், விபூதிகள்,
இவைகளின் விவரங்களை யெல்லாம் விஸ்தாரமாய் அனுஸந்தித்து,

“அகிலஹேய ப்ரத்யநீக”   என்றாரம்பிக்கும் கத்யத்தினால் ஶரணமாக வடைய வேணும்.
இப்படிச் ஶரணமாகவடைந்து அவனுடைய அனுக்ரஹத்தினால் வ்ருத்தி செய்யப்பட்ட மனோ தைர்யத்தை யுடையவனாய்
அந்த ஸர்வேஸ்வரனாகிய பகவானையே தனக்கு ஸ்வாமியாக அனுஸந்தானம் செய்து கொண்டு
மிகவும் ப்ரியமாகவும் இடைவிடாமலும் ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பதைப்போல் மிகவும் விஶதமாகவுமிருக்கிற
த்யானத்தினால் அனுஸந்தானம் செய்துகொண்டிருக்க வேண்டும்.
பிறகு அப்படிப்பட்ட அனுபவத்தினால் உண்டாக்கப்பட்ட ப்ரீதியினால் செய்விக்கப் படுகின்ற பரிபூர்ண கைங்கர்யமாகிய ஆராதனத்தை ஆரம்பிக்க வேண்டும்.

—————–

பகவாநேவ ஸ்வநீயாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஶேஷதைக ரஸேநா
நேநாத்மநா ஸ்வகீயைஶ்ச தேஹேந்த்ரியாந்த: கரணை;| ஸ்வகீய கல்யாண தமத்ரவ்ய மயாந்
ஔபசாரிக ஸாம் ஸ்பர்ஶிகாப்ய வஹாரிகாதி ஸமஸ்த போகாநதி ப்ரபூதாநதி|
ப்ரிய தமாநதி ஸமக்ராநத்யந்த பக்தி க்ருதாநகில பரிஜந பரிச்சதாந்வி தாயஸ்வஸ்மை|
ஸ்வ ப்ரீயதே ஸ்வயமே ப்ரதிபாதயிது முபக்ரமதே| இத்யநு ஸந்த்யாய|

ஸ்வ தேஹே பஞ்ஜோபநிஷந் மந்த்ராந் ஸம்ஹாரக்ரமேணந்யஸ்ய  ப்ராணேயாமேந ஏகேந தக்ஷிண பாணிநா|
நாபிதேஶே மூலமந்த்ரம் ந்யஸ்ய மந்த்ரோத்பூதே சண்டவாய்வ்யாப்யாயித
நாபிதேஶஸ்த வாயுநா ஶரீர அந்தர் பஹிஶ்ச ஸர்வ தத்வமயம் |
தத்வ க்ரமேண விஶோஷ்ய| புந:ப்ராணேயாமே நைகேந ஹ்ருத்தேஶ மூலமந்த்ரம் ந்யஸ்ய|
மந்த்ரோத்பூதசக்ராக்நி ஜ்வாலோப ப்ரஹ்மித ஜாடராக்னிநா தக்த தத்தத்ஸமஷ்டி ப்ரலீந
ஸர்வ தத்வ ஸர்வ கில்பிஷ ஸர்வாஜ்ஞானதத்வாஸநோ பூத்வா
பகவத் தக்ஷிண பாதாங்குஷ்டே மூல மந்த்ரேண ஸ்வாத்மாநம் ப்ரவேஶயேத்|

அபரேண ப்ராணாயாமேந பகவத் ப்ரஸாதேந பகவத் கிங்கரதா யோக்யதாமாபாத்யா|
தஸ்மாதாதாய  தத்வாம பாதாங்குஷ்டா தஸ்தாத் மூலமந்த்ரேணாத்மாநம் விந்யஸ்ய,
தேவவாமபாதாங்குஷ்டநகஶிதாம்ஶுமண்டலாத்கலத் திவ்யாமாதாரஸை: ஆத்மாநம் அபிஷிஞ்ஜேத்|
ஏவமாத்மானம் அபிஷிச்ய| பகவத் ப்ரஸாதேந தத் அம்ருதமயம் ஸர்வ கைங்கர்யைக மநோஹரம்
ஸர்வ கைங்கர்யைக யோக்யம் ஶரீரம் லப்த்வா தஸ்மின் ஶரீரே பஞ்ஜோபநிஷன்மந்த்ரான் ஸ்ருஷ்டி க்ரமேண விந்யஸேத்|

ஓம் ஷௌம் நம: பராய பரமேஷ்டியாத்மநே இதிமூர்த்தனி ஸ்ப்ருஶேத் |
ஓம் யாம் நம: பராய புருஷாத்மநே இதி நாஸிகாக்ரே
ஓம் ராம் நம: பராய விஶ்வாத்மநே இதி ஹ்ருதயே!
ஓம் வாம் நம: பராய நிவ்ருத்யாத்மநே இதி குஹ்யோ|
ஓம் லாம் நம: பராய ஸர்வாத்மனே நம இதி பாதயோ|
ஏவம் ந்யாஸம் குர்யாத் தத்தத் ஶக்தி மயத் பூதம் தேஹம் த்யாயேத்|

————-

பகவாநேவ ………உபக்ரமதே என்றனுஸந்தானம் செய்து தன்னுடைய தேஹத்தில் பஞ்சோபநிஷத் மந்திரங்களை
ஸம்ஹாரக்ரமமாக ந்யாஸம் செய்து ஒரு ப்ராணாயாமம் செய்து வலது கையினால் தொப்புளில் மூல மந்திரத்தை ந்யாஸம் செய்து
‘மந்த்ரோத்பூத சண்டவாவ்யாப்யாயித நாபிதேஶஸ்தே வாயுநா ஶரீர மந்தர்பஹிஶ்ச தத்வக்ரமேண ஶோஷயாமி’ என்றநுஸந்தானம் செய்து
ஶரீரம் முழுவதும் ஶோஷணம் செய்யப்பட்டதாக த்யானித்து மறுபடியும் ப்ராணாயாமம் செய்து
மூல மந்திரத்தினால் ஹ்ருதயத்தில் ந்யாஸம் செய்து
“மந்த்ரோத்பூதசக்ராக்நி ஜ்வாலோப ப்ரஹ்மித ஜாடராக்னிநா தக்த தத்தத்ஸமஷ்டி ப்ரலீந ஸர்வ தத்வ
ஸர்வ கில்பிஷ ஸர்வாஜ்ஞானதத்வாஸநம் ஶரீரம் தாஹயாமி”என்றநுஸந்தானம் செய்து
ஶரீரம் முழுவதும் கொளுத்தப் பட்டதாக த்யாநம் செய்து , பகவானுடைய
வலது காலின் கட்டை விரலின் கீழே தன்னுடைய ஜீவாத்மாவைச் சேர்த்துவிட வேண்டும்.

மற்றொரு ப்ராணாயாமம் செய்து பகவானுடைய அனுக்ரஹத்தினால் பகவானுடைய கைங்கர்யம் செய்வதற்கு
யோக்யத்தை யடைந்தவனாக த்யாநம் செய்து அந்தத் திருவடிகளின் கட்டை விரலின் கீழே இருக்கிறதாகவும்
அந்தக் கட்டை விரலிலிருந்து பெருகி வருகிற அம்ருத மயமான ஜலத்தினால் தன்னை அலம்பப் பட்டதாகவும்,
அந்த அம்ருத மயமாய் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்யக் கூடிய யோக்யதையை யுடைய ஶரீரத்தை
யடைந்ததாகவும்,த்யானித்து அந்த ஶரீரத்தில் பஞ்சோபநிஷத்  மந்திரங்களை ஸ்ருஷ்டி க்ரமமாக ந்யாஸம் செய்ய வேண்டும்.
“ஓம் ஷௌம் நம: பராய பரமேஷ்ட்யாத்மநே “ என்று தலையையும்,
“ஓம் யாம் நம: பராய புருஷாத்மநேநம:” என்று மூக்கையும்,
“ஓம் ராம் நம்பராய விஶ்வாத்மநே நம:” என்று மார்பையும்,
“ஓம் வாம்நம: பராய நிவ்ருதாத்மநே நம:”என்று குஹ்யத்தையும்,
ஓம் லாம் நம: பராய ஸர்வாத்மநே நம:” என்று கால்களையும் தொட வேண்டும்.
அந்தந்த ஶக்தி ஸ்வரூபமான தேஹம் கிடைத்ததாக த்யானிக்க வேண்டும்.

—————

தரங்க முக நந்தினீ ஹேமாப்ஜ நாயிகா ஸமேத
ஸ்ரீ தேவநாத பர ப்ரஹ்மணே நம:
ஸ்ரீமதே மகுள பூஷண மஹா குரவே நம:
ஸ்ரீமதே பகவதே பாஷ்யகாராய நம:
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேஶிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீநிவாஸ ராமாநுஜ மஹா தேஶிகாய நம:

—————

ஸ்ரீ அவதாரிகை

ஸ்ரீ பாஷ்யகாரரருளிச் செய்த நித்ய க்ரந்தத்திற்கு ஸதாசார்ய ஸம்ப்ரதாயாகதமாய்,
ஆசார்யோபதேஶத்தி னாலறியப்பட்ட அர்த்த விசேஷங்களை எளிதில் எல்லோரும் தெரிந்து
கொள்ளும் பொருட்டுத் தமிழில் ஒரு வ்யாக்யானம் செய்யப்படுகிறது.

அதில் பகவதாராதன ப்ரயோகம் மாத்திரம் ஸ்ரீ பாஷ்யகாரரினாலருளிச் செய்யப்பட்டிருப்பதினால்
அந்தப் பகவதாராதனம் ஸ்நாநாதிகளான பரிசுத்தியைக் கொடுக்கக்கூடிய கர்மங்களை யனுஷ்டிக்காமல் செய்ய முடியாதென்பது
ந ஹி ஶௌச மக்ருத்வைவ ஸமாராதனமஹர்தி’ 
ஸந்த்யாஹீநோஶுசிர்நித்ய மநர்ஹஸ்ஸர்வ கர்மஸு’ என்றிவை
முதலிய ப்ரமாணங்களினா லேற்படுகிறபடியினால் அப்படிப்பட்ட ஸ்நானம், ஸந்த்யாவந்தனம்,
முதலிய கர்மங்களை எல்லோரும் அறிந்தனுஷ்டிக்குமாறு அவைகள் தமிழில் ஸங்க்ரஹிக்கப் படுகின்றன.

ஒவ்வொரு தினத்தையும் ஐந்து காலமாகப் பிரித்து அந்தந்தக் காலங்களில் அந்தந்த க்ரியைகளை யனுஷ்டிக்க வேண்டும்.
அவைகளாவன:—அபிகமனம், உபாதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம், என்பவை.
அபிகமனமாவது காலையிலும் ஸாயங்காலத்திலும் அனுஷ்டிக்க வேண்டியது.
அதாவது ஸ்நானம் முதலிய கர்மங்களைச் செய்துவிட்டுப் பகவானை ஆஶ்ரயிப்பது.
அதாவது அன்றையதினம் நடக்கவேண்டிய க்ருத்யங்கள் முழுமையும் குறைவற ஸரியாய் நடக்கவேண்டுமென்று பகவானை ப்ரார்த்திப்பது.
உபாதானமாவது பகவானுடைய ஆராதனத்திற்கு யுபயுக்தமான த்ரவ்யங்களை ஸம்பாதிப்பது.

அது வெளியிலிருக்கும் புஷ்பம், சந்தனம், முதலியவைகளை ஸம்பாதிப்பதும்,
‘அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்’ ‘எட்டுமாமலர்’ இத்யாதிகளிலும் சொல்லப்படுகிற
ஶாந்தி முதலிய குணங்களை ஸத்க்ரந்த காலக்ஷேபாதிகளினால் ஸம்பாதிப்பதும் என்று இருவகைப்படும்.
இஜ்யையாவது மாத்யாஹ்நிகஸ்நாநம் முதலாக ஆரம்பித்துப் பகவதாராதனம், முதலியவைகள் செய்து அனுயாகம் வரையில் செய்வது,
ஸ்வாத்யாயமாவது வேதம், இதிஹாஸ புராணங்கள், அருளிச்செயல்கள், த்வயம் முதலிய மந்திரங்கள்
இவைகளின் அர்த்தானுஸந்தானம் செய்து, பகவானிடத்தில் பக்தியையும் ஜ்ஞானத்தையும் நாளுக்கு நாள் வளரச் செய்வது.
இதற்குப் பிறகு ஸாயமபிகமனம் என்பது ஸாயம் ஸந்த்யாவந்தநமும் பகவானை ஸேவிப்பதும்.
யோகமாவது பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை நித்திரை வருமளவும் த்யானம் செய்து கொண்டிருத்தலும்,
நித்திரை வரும் பொழுதும் பகவானுடைய திருவடிகளில் தலையை வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டிருப்பதாக
த்யானம் செய்துகொண்டு தூங்குதலும். இவைகளின் விவரங்கள் எழுதப் படுகின்றன

அபிகமனம்
தூக்கம் விழித்தல்–
ஸூர்யோதயத்திற்கு  ஒரு முஹூர்த்தகாலம் முன்னாலேயே தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு
ஹரிர் ஹரி: ஹரிர் ஹரி: ஹரிர் ஹரி: ஹரி: என்று சொல்லி க்ராஹ க்ரஸ்தே கஜேந்த்ர ருததி ஸரபஸம் தார்க்ஷ்ய
மாருத்ய தாவந் வ்யாகூர்ணந்மால்ய பூஷாவஸந பரிகரோமேக கம்பீர கோஷ: ஆபிப்ராணோ ரதாங்கம்
ஶரமஸி மபயம் ஶங்கசாபௌ ஸகேடௌ ஹஸ்தை: கௌமோதகீமபய வதுஹரி ரஸாவம்ஹஸாம் ஸம்ஹதேர்ந: நக்ராக்ராந்தே கரீந்த்ரே மருளித நயநே|
மூலமூலேதி சிந்நே நாஹம் நாஹம் ந சாஹம் ந ச பவதி புநஸ்தா த்ருஶோ மாத்ருஶேஷு!
இத்யேவம் த்யக்த ஹஸ்தே ஸபதி ஸுரகுணே! பாவ ஶூந்யே ஸமஸ்தே மூலம்
யத் ப்ராதுராஸீத்  ஸ திஸது பகவாந் மங்களம் ஸந்ததம் ந: |
ப்ராத:ஸ்மராமி  பவபீதி மஹார்தி ஶாந்த்யை: நாராயணம் கருடவாஹந மஞ்ஜநாபம்|
க்ராஹிபி பூத மதவாரண முக்தி ஹேதும் சக்ராயுதம் தருண வாரிஜ பத்ரநேத்ரம்  ||
ப்ராதர் நமாமி மநஸா வசஸா ச மூர்த்நா பாதாரவிந்த யுகளம் பரமஸ்ய பும்ஸ: |
நாராயணஸ்ய நரகார்ணவதாரணஸ்ய பாராயண ப்ரவண விப்ர பராயணஸ்ய|
ப்ராதர் பஜாமி பஜதா மபயம் கரந்தம் ப்ராகர் ஸர்வ ஜன்ம க்ருத பாபபயாபநுத்யை; |
யோக்ராஹ வக்த்ர பதிதாங்க்ரி கஜேந்த்ர கோர ஶோக ப்ரணாய மகரோத் த்ருத சங்க சக்ர: ||
ஶ்லோகத்ரயமிதம்  புண்யம் ப்ராதருத்தாய: ய” படேத்| லோக த்ரய குருஸ்தஸ்மை தத்யாதாத்ம பதம் ஹரி: ||
என்கிற ஶ்லோகங்களை ஹரி: என்னும் பதத்திற்கு விவரணம் செய்வதாக த்யானித்துக் கொண்டு அனுஸந்தானம் செய்யவேண்டும்.

அதாவது ஹரதீதி ஹரி: என்கிற வ்யுத்பத்தியினால் ஸகல பாபங்களையும் போக்கடிக்கிறவனென்றும்,
ஹரி: என்கிற அவதாரம் செய்து கஜேந்திரனுடைய துக்கத்தைப் போக்கடித்ததினாலும்
இந்த ஶ்லோகங்கள் ஹரி: என்னும் பதத்தினர்த்தத்தை விவரணம் செய்கின்றன. ஶக்தியுடையவனாயும் ஸாவகாசமுமிருந்தால், நூற்றெட்டுத் திருப்பதி விஷயமான த்யான ஶ்லோகங்களையும்,
தஶாவதார ஸ்தோத்திரங்களையும், பெரிய கத்யத்தையும், இன்னும் பகவத் பரங்களான ஸ்தோத்ராதிகளையும்
கேட்கிறவர்களுக்கு அதி மனோ ஹரமான ஸ்வரத்துடன் அனுஸந்திக்க வேண்டியது.

பிறகு ‘பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஶேஷதைக ரஸேநாநேநாத்மநா கர்த்ரா
ஸ்வாராதநைக ப்ரயோஜநாய பரமபுருஷஸ் ஸர்வஶேஷீ ஸ்வஶேஷ பூதமிதம் யோகாப்யாம் கர்ம ஸ்வஸ்மை
ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந்’ என்று முதல் நாள் ஆரம்பிவிக்கப்பட்ட யோகத்தை முடித்து
ஸாத்விகத்யாகம் செய்து ‘அநேந யோகாக்யேந பகவத் கர்மணா பகவாந் ப்ரீயதாம் வாஸுதேவ:’ என்றநுஸந்திக்கவேண்டியது.

பிறகு அந்தப் படுக்கையிலேயே உட்கார்ந்து கொண்டு தன்னுடைய வாழ்நாட்கள் வ்யர்த்தமாய்ப் போனதையும்,
பரம புருஷார்த்தமாகிய மோக்ஷம் தனக்குக் கிடைக்காமல் போனதையும் யோசித்து நிர்வேதப்பட வேண்டும்.
ப்ரபத்தி பண்ணிக் கொள்ளாதவனாயிருந்தால் இப்படி அகிஞ்சனனாய் எண்ணிறந்த பாபங்களுக்கு இருப்பிடமாய்
அந்தப் பாபங்களைப் பரிஹாரம் செய்துகொள்ளுவதற்கு மார்க்கத்தை யறியாமல் திகைத்துக் கொண்டிருக்கிற தன்னுடைய தீனதஶையைப் பார்த்து

”மாற்றமுளவாகிலும்”,
“சேமமேவேண்டித் தீவினை பெருக்கி”
“அமர்யாத: க்ஷூத்ர:” என்றிவை முதலிய இடங்களில் சொல்லுகிறபடியே
நிர்வேதப்பட வேண்டிய தவஶ்யம். ப்ரபன்னனாயிருந்தால் “இந்த ஹர்ஷம் விவேகியுமாய் ஹேயமான ஶரீராதிகளோடே
துவக்குண்டிருக்கிற இவனுக்கு நிர்வேதமிஶ்ரமாய் நடந்ததே யாகிலும் நிர்வேதமும் ஶோக நிவ்ருத்தியும்
பின்ன விஷயங்களாகையாலே விரோதமில்லை” என்று ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் அருளிச்செய்யப்பட் டிருக்கிறபடியினாலும்,
இதன் வ்யாக்யானத்திலும் “பின்ன விஷயமாகையினாலே” என்பதற்கு உபாயம் துஷ்கரம் என்கிற துக்கமில்லாமையினாலும்
பலத்திற்கு விளம்பமில்லை என்பதினாலும் நிஸ்ஸம்ஶயனுமாயிருப்பதினாலும் ஸந்தோஷம் உண்டாகிறது.

நிர்வேதம் அப்பொழுதே பலங்கிடைப்பதற்கு விரோதியான ஶரீரம் அநுவர்த்திக்கையினாலும்
அதினால் ஸுகதுக்கங்கள், புண்ய பாபங்கள் உண்டாகின்றன வாகையினாலும் உண்டாகிறது.
ஆகையினால் விரோதமில்லை என்றருளிச் செய்யப்பட்டிருப்பதினாலும் நிர்வேதப்பட வேண்டியதவஶ்யம்.
அதுவும் ஸம்ஸாரத்தில் நிவ்ருத்தி பிறந்து கடுக மோக்ஷத்தை யபேக்ஷிக்கும் த்வரை யுண்டாவதற்காக என்று பூர்வாசார்யர்களின் திருவுள்ளம்.

பிறகு கேவலம் நிர்வேதத்தோடே முடியுமானால் ஸர்வகார்யங்களுக்கும் விரோதியாகையினால்
மேல் நடக்க வேண்டிய கைங்கர்யங்கள் ஸரியாக நடக்க வேண்டியதற்காக
“கதத்திற்கு ஶோகியாதே வருகிற நீருக்கு அணைகோலும் கணக்கிலே” “இனிப் பகவதாராதனாதிகளைச்செய்து காலத்தை
‘தரித்தெழுதி வாசித்துங்கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது’ என்றும் ,
வர்தமாநஸ் ஸதா சைவம் பாஞ்சகாலிக வர்த்மநா|
ஸ்வார்ஜிதை கந்த புஷ்பாத்யை: ஶுபைஶ்ஶக்த்யநுரூபத: ஆராதயந் ஹரிம் பக்த்யாகமயிஷ்யாமி  வாஸராந்|”
என்றும் சொல்லுகிறபடியே ஸபலமாகக் கழிக்கப் போகிறேன் என்கிற ஸாத்விக தைர்யத்தை யடைந்து
படுக்கையிலிருந்துகொண்டே ஶ்ரோத்ராசமனம் செய்துவிட்டு (வலது காதை வலது கையினால் தொட்டு)

க்ருதம் ச கரிஷ்யாமி |பகவந்நித்யேந பகவத் ப்ரீத்யர்தேந மஹாவிபூதி சாதுராத்ம்ய பகவத் வாஸுதேவ
பாதாரவிந்தார்சநே நாபிகமநாக்க்யேந பகவத் கர்மணா பகவந்தம் வாஸுதேவ மர்சயிஷ்யாமி”  என்று
ஸங்கல்பித்துக்கொண்டு, பகவதோ பலேந பகவதோ வீர்யேண பகவஸ்தேஜஸா பகவத:
கர்மணா பகவத: கர்ம கரிஷ்யாமி பகவதோ வாஸுதேவஸ்ய” என்று அநுஸந்தானம் செய்து,
பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூப ஸித்தி ப்ரவ்ருத்தஸ்வஶேஷதைகரஸேந மயா ஸ்வகீயைஶ் சோக்கரணை:
ஸ்வராரநைக ப்ரயோஜநாய பரம புருஷ: ஸர்வஶேஷீ ஸ்வஶேஷ பூதமிதம்பிகமநாக்யம் கர்மஸ்வஸ்மை
ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி” என்று ஸாத்விகத்யாகம் செய்து,

குருபரம்பரானு ஸந்தானபூர்வமாகப் பகவானைச் ஶரணமாக அடைந்து,
த்வயாராதனகாமோயம் வ்ருதம் சரிதுமிச்சதி| ஸங்கல்ப ஸித்த்யை பகவந் பூரயாஸ்ய மநோரதாந்” என்கிற ஶ்லோகத்தினால்
கைங்கர்யங்கள் நிர்விக்னமாய் ஸரிவர நடக்கவேண்டுமென்று பகவானை ப்ரார்த்தித்து ,
ஸத் ஸங்காத் பவநி ஸ்ப்ருஹோகுருமுகாத்  ஸ்ரீஶம்ப்ரபத்யாத்மவாந்| ப்ராரப்தம் பரிபூஜ்ய கர்ம ஶகலம் ப்ரக்ஷீணகர்மாந்தர|
ந்யாஸாதேவ நிரங்குஶேஶ்வரதயார்லூந மாயாந்வயோஹார்தாநுக்ரஹ லப்தமத்ய தமநித்வாராத் பஹிர்நிர்கத|
முக்தோர்சிர்ந பூர்வபக்ஷ ஷடு தங்க்மாஸாப்த வாதாம் ஶுமத் க்லௌ  வத்யுத்வருணேந்த்ர தாத்ருமஹித;
ஸீமாத்மஸிந்தாப்லுத: ஸ்ரீவைகுண்டமுப்யேத நித்ய மஜடம் தஸ்மின் பரப்ரஹ்ம ஸாயுஜ்யம் ஸமவாப்ய நந்தனி ஸமஸ்தேநைவ தந்ய:
புமாத்|ப்ராதர் நித்யாந் ஸந்தேயம் பரமார்தம் முமுக்ஷுபி: ஶ்லோக த்வயேந ஸம்க்ஷிப்தம் ஸுவ்யக்தம் வரதோ ப்ரவீத்” என்கிற
ஶ்லோகங்களையும் அதின் அர்த்தமாகிய தானடையப் போகிற புருஷார்த்தத்தின் பெருமைகளையும் அனுஸந்தானம் செய்து
அதிக ஸந்தோஷத்தை யடைந்தவனாய் பகவந் நாமங்கள் பூர்வாசார்யர்களருளிச்செய்த பகவத் ஸ்தோத்திரங்கள்
இவைகளை அதிமனோஹரமான ஸ்வரத்துடன் அனுஸந்திக்க வேண்டும்.

ஸாவகாசமிருந்தால் வேதம் முதலியவைகளின் திருவை முதலியவைகள் செய்யலாம்.
பிறகு படுக்கையை விட்டெழுந்திருந்து “ஓம் நம: க்ஷீதிபராய” என்கிற மந்திரத்தை உச்சரித்து
பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிற ஸ்ரீவராஹ நயினாரை ப்ரார்த்தித்து விட்டு வலது காலைத் தூக்கிப் பூமியில் வைத்து
“நமோஸ்து ப்ரிய தத்தாயை துப்யம் தேவி வஸுந்தரே! த்வம் மாதா ஸர்வலோகாநாம் பாதஸ்பர்ஸம் க்ஷமஸ்வமே” என்று
பூமிதேவியைப் ப்ரார்த்திக்க வேண்டும். பிறகு “விஷ்ணோ: க்ரமோஸி” என்றாரம்பிக்கும் மந்திரத்தினால்
திரிவிக்ரமனை த்யானம் செய்துகொண்டு நடக்க வேண்டும்.

ஸ்நானம் செய்தல்
(பகவச் ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட ஸ்நான விதி)

பிறகு பகவானுடைய ஸந்நிதித் துறை, பாகவதர்கள் ஸ்நானம் செய்யும் துறை, இவைகளுக்குச் சென்று
கரையை யலம்பி கை கால்களை யலம்பிக்கொண்டு கிழக்கு அல்லது வடக்கு முகமாக உட்கார்ந்து
கையில் பவித்திரத்தைத் தரித்துக் கொண்டு மூன்று தடவை ப்ராணாயாமம் செய்யவேண்டும்.

ப்ராணாயாமம் செய்யும் விதம்
சுண்டு விரல் பவித்திர விரல் இவைகளினால் இடது பக்கம் மூக்கை அமுக்கிக் கொண்டு வலது பக்கத்தினால் தேஹத்திலிருக்கும் காற்றை வெளிவிட்டு,
கட்டை விரலினால் வலது மூக்கை மூடிக்கொண்டு இடது பக்கத்தினால் மூச்சை உட்கொண்டு அப்படியே இரண்டு துவாரங்களையும் மூடிக்கொண்டு,
வாய், கண், இவைகளை மூடிக்கொண்டு மனதில் பகவானை த்யானம் செய்து ஸப்த வ்யாஹ்ருதிகளையும்,
காயத்ரியையும், காயத்ரி ஶிரஸ்ஸையும் மூன்று தடவை உச்சரித்து கடைசியில்
வலது மூக்கினால் காற்றை வெளிவிட்டு வலது காதை ப்ரணவத்தினால் தொடவேண்டும்.

பிறகு கையைக் கூப்பிக் கொண்டு குரு பரம்பராநுஸந்தானம் செய்து
‘ஸ்ரீகோவிந்த’ என்றாரம்பித்து திதிவார நக்ஷத்திரங்களைச் சொல்லி
ஸ்ரீ பகவதாக்ஜ்ஞயா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்தம் கர்மண்யதா ஸித்த்யர்தம் ப்ராத ஸ்நானமகம் கரிஷ்யே’ என்று
ஸங்கல்பித்துக்கொண்டு க்ருதஞ்ச கரிஷ்யாமி என்று முன்போல் அநுஸந்திக்கவேண்டும்.

அதில் யோகாக்யேந என்பதற்கு பதிலாக ப்ராதஸ்நானாக்யேந என்றநுஸந்திக்க வேண்டும்.
இப்படியே மற்ற இடங்களிலும் அந்தந்தக் கர்மத்தை அநுஷந்திக்க வேண்டியது.
அப்படியே பகவதோபலேந என்கிற பல மந்திரத்தையும், பகவாநேவ என்கிற ஸாத்விகத்யாகத்தையும் செய்யவேண்டும்.

புண்ய தீர்த்தங்களைப் பற்றிய த்யான ஶ்லோகங்களைத் தெரிந்த வரையிலும் அநுஸந்திக்கிறது.
இப்படியே பகவத் பாகவதாசார்யர்களின் விஷயமாயும் அனுஸந்திக்கிறது.
இதற்குமேல் பாஞ்சராத்ர ஶாஸ்த்ரத்தில் விதிக்கப் படுகிற ஸ்நானத்தின் விவரம் இந்த நித்யத்திலேயே மாத்யாஹ்நிக ஸ்நாந ப்ரகரணத்தில்
சொல்லப்படுகிறபடியினாலே அங்கு சொல்லி இருப்பதைப் போல செய்யவேண்டும்.
ஸ்நானம் செய்த பிறகு வலது காலை ஜலத்திலும் இடது காலைக் கரையிலுமாக வைத்து உட்கார்ந்து கொண்டு ஆசமனம் செய்து கரையில் நின்று கொண்டு-ஆசார்யர்கள் விஷயமாயும் பகவான் விஷயமாயும் த்யான ஶ்லோகங்களைச் சொல்லிக்கொண்டு
இரண்டு வஸ்திரங்களில் ஒன்றினால் தலைப் பாகத்தையும் மற்றொன்றினால் மற்றப் பாகங்களையும் துடைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வ்யாஹ்ருதி த்ரயங்களினால் உலர்ந்த வேஷ்டியை ப்ரோக்ஷித்து
தேவஸ்ய த்வா ஸவிது: ப்ரஸவேஶ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோஹஸ்தாப்யாம் ஆததே என்கிற மந்திரத்தைச் சொல்லி எடுத்து
உதூத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ: த்ருஶே விஶ்வாய ஸூர்யம் என்று ஸூர்யனுக்குக் காண்பிவித்து,
அவதூதகும் ரக்ஷோ அவதூதாத்ராதய: என்கிற மந்திரத்தைச் சொல்லி உதறி,
ஆவஹந்தீ விதந்வாநாகுர்வாணாசீரமாத்மந: வரஸாம்ஸி மமகாவஶ்ச அந்நபாநேச ஸர்வதா| ததோ மே ஶ்ரிய மாவஹ என்கிற மந்திரத்தைச் சொல்லி,
உத்தரீயத்தைத் தலையில் சுற்றிக் கொண்டு யஜ்ஞோபவீதத்தை நிவீதமாக்கிக் காதில் சுற்றிக் கொண்டு
கௌபீனத்தைத் தரித்துக் கொண்டு, முழங்கால்களையும், கைகளையும் மண் ஜலம் இவைகளினா லலம்பிக்கொண்டு
வஸ்திரம், உத்தரீயம் இவைகளை உடுத்திக் கொண்டு கால்களை யலம்பி இரண்டு தரம் ஆசமனம் செய்து ப்ராணாயாமம் செய்து

ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்தம் மந்த்ரஸ்நானம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து
ஆபோஹிஷ்டா மயோபுவ| தாநஊர்ஜ ததாந| மஹேரணாயசக்ஷஸே| யோவஶ்ஶிவதமோரஸ:| |
தஸ்யபாஜயதேஹத: உஶதீரிவமாதர: தஸ்மா அரங்க மாமவ| யஸ்யக்ஷயாயஜிந்வத| ஆபோஜநயதாசந: |என்கிற
மந்திரங்களினால் க்ரமமாய் கால், தலை, ஆகாசம் இவைகளிலும், தலை ஆகாசம், கால் இவைகளிலும்,
ஆகாசம், தலை, கால் இவைகளிலும் முறையே ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மாநஸ ஸ்நானம் செய்ய வேண்டும். அதாவது ஆகாசத்தில் ஆயிரம் கோடி ஸூர்யன் உதயமானாற்போல
ப்ரகாசித்துக் கொண்டிருப்பவனாயும், ஶங்கம், சக்கரம், கதை, சார்ங்கம் முதலிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கிற
நான்கு திருக்கைகளையுடையவனாயும், கிரீடம், தோள்வளைகள் முதலிய ஸர்வாபரணங்களினா லலங்கரிக்கப்பட்டவனாயு மிருக்கிற பகவானையும்,
தாமரைப் புஷ்பங்களைப்பொல் ப்ரகாசித்துக் கொண்டும், ஶங்க சக்ராதி ரேகைகளோடு கூடிய திருவடிகளையும் ,
அந்தத் திருவடிகளிலிருந்து உத்பத்தியான கங்கை தன் தலையில் விழுந்து ப்ரும்மாந்திரத்தினால் உள் நுழைந்து
உள்ளும் வெளியுமாகத் தன்னுடைய ஸரீரம் அலம்பப்பட்டதாயும் த்யானம் செய்யவேண்டும்.
ஸ்நானம் செய்யும் பொழுது உபயோகித்திருந்த வஸ்திரத்தைப் பிழிந்து தனக்கு எதிரில் வைக்காமல் பக்கத்தில் வைத்துக் கொள்ளவேணும்.

பிறகு இந்த இடத்தில் ப்ரஸந்தானு ப்ரஸக்தியாக தர்ம ஶாஸ்திர க்ரமமான ஸ்நான விதி ஆஹ்நிகாதிகளில்
எழுதப்பட்டிருந்தபோதிலும் அனுஷ்டான பரம்பரையில் வராததினால் இங்கு எழுதவில்லை.
ஶக்தி இல்லாதவனா யிருந்தால் வெந்நீரில் ஸ்நானம் செய்யவேண்டும்.
தீட்டு முதலியவைகளினால் அசுத்தனாயிருந்தால் வெந்நீரில் ஸ்நானம் செய்யக்கூடாது.
ஶிரஸ்நானம் செய்ய ஶக்தி இல்லாமலிருந்தால் தொப்புள் வரையில் அலம்பி மேல் பாகங்களை ஈரத்துணியினால் துடைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கும் ஶக்தி இல்லாமலிருந்தால் ஶாஸ்திரங்களில் விதிக்கப் பட்டிருக்கும் மற்ற ஸ்நானங்களில்
தன் அதிகாரத்துக்குத் தகுந்ததான ஒன்றைச் செய்ய வேண்டும்.  ,

ஊர்த்வ புண்ட்ரம் தரித்தல்
தீர்த்த ஹரியில் ஜலத்தை எடுத்துக் கொண்டு அதிலிருந்து உத்தரணியினால் ஜலமெடுத்து
“வீர்யாய அஸ்த்ராயபட்” என்கிற அஸ்திர மந்திரத்தினால் இடது கையை அலம்பி, ப்ரணவத்தினால் திருமண்ணைக் கையில் எடுத்துவைத்து
‘கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம்  கரீஷிணீம்| ஈஸ்வரீம் ஸர்வபூதாநாம் த்வாமிஹோபஹ்வயேஶ்ரியம் என்று குழைத்து
அஸ்திர மந்திரத்தினால்   ரக்ஷையை எட்டுத் திக்குகளிலும் செய்து, ப்ரணவத்தினால் கலந்து, மூல மந்திரத்தினால் ஜபித்து,
ந்ருஸிம்ஹ பீஜாக்ஷரத்தை எழுதி, ஆள் காட்டி விரலினால் குழைத்து,

விஷ்ணோர்நுகம் வீர்யாணி ப்ரவோசம் ய: பார்திவாநி விமமேரஜாகும்ஸியோ அஸ்கபாய உத்தரகும் ஸதஸ்தம் விசக்ரமாணஸ்த்ரேதோருகாய:| |’ என்கிற மந்திரத்தையும்,-த்வாதஶாக்ஷரத்தையும் ஜபித்து, ‘விஷ்ணோரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்டமஸி விஷ்ணோ: ஶ்நப்த்ரேஸ்தோ
விஷ்ணோஸ்யஸூரஸி விஷ்ணோர்த்ருவமஸி வைஷ்ணவமஸி விஷ்ணவேத்வா|
உத்த்ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந ஶதபாஹுநா|| பூமிர்தேநுர்தரணீ   பூததாரிணீ|
ம்ருத்திகே ஹநமேபாபம் யந்மயா த்ருஷ்க்ருதம் க்ருதம் | த்வயா ஹதேந பாபேந ஜீவாமி ஶரதஶ்ஶதம் |
ம்ருத்திகே தேஹி மே புஷ்டிம் த்வயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம்|| என்கிற மந்திரங்களை உச்சரித்து

ஆள்காட்டி விரலினால் கொஞ்சம் எடுத்து ப்ரணவத்தினால் சிரஸ்ஸில் தரித்து,
பவித்திர விரலினால் நெற்றி முதலிய இடங்களில் பகவானுடைய திருவடிகளைப் போன்ற ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரித்துக் கொள்ளவேண்டியது.
நெற்றியிலும் நடுவயிற்றிலும், மார்பிலும், முன் கழுத்திலும், வலது வயிற்றிலும், வலது கையிலும்,வலது கழுத்திலும்,
இடது வயிற்றிலும், இடது கையிலும், இடது கழுத்திலும், அடி முதுகிலும், பின் கழுத்திலுமாக க்ரமமாகத் தரிக்கவேண்டியது.
தரித்துக் கொள்ளும்போது கேஶவாதி பன்னிரண்டு நாமங்களையும் ‘ஓம் கேஶவாய நம:’என்று முறையே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றாக உச்சரித்துக்கொண்டு இட்டுக் கொள்ள வேண்டியது.
மிகுதி திருமணை த்வாதஶாக்ஷரத்தினால் ஶிரஸில் தரித்துக் கொள்ள வேண்டியது.

பகவானுடைய திருமேனி ஸம்பந்தமுடைய மஞ்சள் முதலியவைகள் சேர்ந்த ஸ்ரீசூர்ணத்தை எடுத்துக் குழைத்து
கீழ்க்கூறிய க்ரமப்படி புண்ட்ரங்களின் நடுவில் தரிக்கவேண்டியது.
ஶ்ரியை நம:, அம்ருதோத்பவாயை நம:,கமலாயை நம:, சந்த்ரஸோதர்யை நம:, விஷ்ணுபத்ந்யை நம:, வைஷ்ணவ்யை நம:, வராரோஹாயை நம:,
ஹரிவல்லபாயை நம:, ஶார்ங்கிண்யை நம:, தேவதேவ்யை நம,, மஹாலக்ஷ்ம்யை நம:, லோகஸுந்தர்யை நம:, ஸர்வாபீஷ்ட பலப்ரதாயை நம: என்று
முறையே உச்சரித்துக் கொண்டு தரிக்க வேண்டும். பிறகு ஒம் கேஶவாய நம: என்கிற மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு புண்ட்ரங்களைக் க்ரமமாகத் தொட வேண்டும்.

பிறகு கையைக் கூப்பிக்கொண்டு சதுஶ்சக்ரம் நமஸ்யாமி கேஶவம் கநகப்ரபம்! நாராயணம் கநஶ்யாமம் சதுஶ்ஶங்கம் நமாம்யஹம்|
மாதவம் மணிபங்காபம் சிந்தயாமி சதுர்கதம்| சந்த்ரபாஸம் சதுஶ்ஶார்ங்கம் கோவிந்தமஹமாஶ்ரயோ
விஷ்ணும் சதுர்ஹலம் வந்தே பத்ம கிஞ்ஜல்க ஸந்நிபம்| சதுர்முஸலமப்ஜாகம் ஸம்ஶ்ரியே மதுஸூதநம்:
அக்னி வர்ணம் சது:கட்கம் பாவயாமி த்ரிவிக்ரமம்| வாமநம் பால ஸூர்யாபம் சதுர்புஜம் விபாவயே|
ஶ்ரீதரம்  புண்டரீகாபம் சது: பட்டஸமாஶ்ரயே| சதுர்முத்கரமப்யேமி  ஹ்ருஷிகேஶம் தடித்ப்ரபம்|
பஞ்சாயுதம் பத்ம நாபம் ப்ரணமாம்யர்கரோசிஷம்| தாமோதரம் சதுஷ்பாஶமிந்த்ரகோபநிபம் பஜே|
வாஸுதேவ முபாஸேஹம் பூர்ணேந்த்வயுத ஸந்நிபம்| என்று
அந்தந்தப் புண்ட்ரங்களுக்கு எதிரில் கையைக் கூப்பிக் கொண்டு ப்ரார்த்திக்க வேண்டும்.

பின்பு ஆழ்வார்கள் அருளிச் செய்த பன்னிரு திரு நாமப் பாட்டுக்களையு மநுஸந்திக்க வேண்டும்.
புண்ட்ரம் தரித்துக் கொண்டபிறகு கையலம்பக் கூடாது.
ஸாவகாசமில்லாமற் போனாலும், ஶக்தி இல்லாமற்போனாலும், நெற்றியிலும், பின்கழுத்திலும் அவஶ்யம் தரித்துக்கொள்ள வேண்டும்.
இவ்விரண்டு புண்ட்ரங்களையும் ஒரு பொழுதும் தவிரக்கூடாது.

பிறகு, “அஸ்மத் குருப்யோ நம: அஸ்மத் பரம குருப்யோ நம: அஸ்மத் ஸர்வ குருப்யோ நம: ஸ்ரீமதே வேதாந்த குரவே நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமதே மஹாபூர்ணாயநம: ஸ்ரீமத்யாமுநமுநயே நம: ஸ்ரீராமமி ஶ்ராய நம: 
ஸ்ரீபுண்டரீகாக்ஷாயநம: ஸ்ரீமந் நாதமுநயே நம: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாயநம: ஶ்ரியை நம: ஶ்ரீதராயநம:

அஸ்மத்தேஶிகமஸ்மதீயபரமாசார்யாந் அஶேஷாந் குரூந் ஸ்ரீமல்லக்ஷ்மண யோகிபுங்கவ மஹாபூர்ணௌ முநிம் யாமுநம்|
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் ஶடத்வேஷிணம் ஸேநேஶம் ஶ்ரியமிந்த்ரா ஸஹசரம் நாராயணம் ஸம்ஶ்ரயே|| ‘

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கியானடைவே – யவர் குருக்கள் நிரை வணங்கி, பின்னருளால்
பெரும்பூதூர் வந்த வள்ளல் பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி, நன்னெறியை யவர்க்குரைத்த
உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனைநாதன் இன்னமுதத் திருமகளென்றிவர்களை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகளடைகின்றேனே’ என்றும்,

தன்னுடைய ஆசார்யனுடைய தனியன் முதலியவைகளையும்
விஸ்தாரமாக அனுஸந்திக்க வேண்டும். துளஸி மணி மாலை, தாமரை மணி மாலை, திருப் பவித்திரம், முதலியவைகளைத் தரித்துக் கொள்ள வேண்டும்.
திருவடி ஜோட்டை ஶிரஸில் தரித்துக்கொண்டு தர்ப்ப பவித்திரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.

தேவர்ஷி பித்ரு தர்ப்பணம்
கால் கைகளை யலம்பி, ஆசமனம் செய்து ஸ்ரீபகவதாஜ்ஞ்யா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம்
ஸ்நாநாங்கம் தேவர்ஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே என்று ஸங்கல்பித்துக் கொண்டு
தேவதைகள், ருஷிகள், பித்ருக்கள், எல்லோரும் பகவானை அந்தர்யாமியாக வுடையவர்கள் என்று த்யானித்துக் கொண்டு தர்ப்பணம் செய்யவேண்டும்.

ப்ரஹ்மாதயோ யே தேவாஸ்தான் தர்ப்பயாமி!
ஸர்வாம் தேவாம்ஸ் தர்ப்பயாமி! ஸர்வ தேவகணாம்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வதேவ பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வ தேவகண பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று
நுனி விரல்களால் தர்ப்பணம் செய்யவேண்டும்.

யஜ்ஞோபவீதத்தை நிவீதமாக்கிக்கொண்டு இரண்டு கட்டை விரல்களிலும் மாட்டிக் கொண்டு
ஒம் க்ருஷ்ணத்வைபாய நாதயோயே ருஷ்ய: தாந் ருஷிம்ஸ்தர்ப்யாமி ! ஸர்வாந் ருஷீம்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வருஷிகணாம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வருஷிபத்நீம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வருஷிகணபத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று
இரண்டு கைகளின் நடுவினால் தர்ப்பணம் செய்யவேண்டும்.

யஜ்ஞோபவீதத்தை ப்ராசீனாவீதமாகத் தரித்துக்கொண்டு
ஸோம: பித்ருமான் யமோங்கிரஸ்வாந் அக்னிகவ்யவாஹ நாதயோ யே பிதர: தாந் பித்ரும்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வாந் பித்ரும்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வ பித்ருகணாம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வபித்ருபத்நீம்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வ பித்ரு கண பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று வலது கைக்கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவினால் தர்ப்பணம் செய்யவேண்டும்.

பிறகு ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பய தமேபித்ரூந் என்று
இரண்டு கைகளிலும் ஜலமெடுத்து ப்ரதக்ஷிணமாகச் சுற்றி இடது பக்கம் கரையில் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
என்று சொல்லி மூன்று தடவை ஜலத்தை இறைக்க வேண்டும்.
யஜ்ஞோபவீதத்தை க்ரமமாகத் தரித்துக் கொண்டு ஆசமனம் செய்யவேண்டும்.

ஶிரஸ்நானம் செய்யாத பக்ஷத்திலும் தீட்டு முதலியவைகளுக்காக ஸ்நானம் செய்யும் போதும், தேவருஷி பித்ரு தர்ப்பணம் செய்யக்கூடாது.
பகவாநேவ என்றாரம்பித்து, ப்ராத ஸ்நாநாக்யம் கர்மஸ்வஸ்மைவ ப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந் என்று
ஸாத்விக த்யாகம் செய்து அநேந ப்ராதஸ்நாநாக்யேந பகவத் கர்மணா பகவாந் ப்ரீத்யதாம் வாஸுதேவ: என்று
ப்ராத ஸ்நானத்தை முடிக்க வேண்டும்.

தத: ஸ்நாநார்த மாஸாந மாநீய கந்தாதிபி: அப்யர்ச்ய: |
பகவந்தம் ப்ரணம்ய: அநுக்ஞாப்ய: பாதுகே ப்ரதாய|
ஸ்நாநாஸநோ பவிஷ்டே மால்ய பூஷண வஸ்த்ராண்யபநீய விஶ்வக்ஸேநாய தத்வா|
ஸ்நாநஸாடிகாம் ப்ரதாய| அர்க்ய பாத்ய ஆசமனீய பாதபீட ப்ரதாந தந்தகாஷ்ட ஜிஹ்வா|

நிர்லேகந கண்டூஷ முகப்ரக்ஷாளந| ஆசமன தர்ஶ ப்ரதர்ஶந ஹஸ்த ப்ரக்ஷாளந|
முகவாஸ தாம்பூல தைலாப்யங்க உத்வர்த்தனாமலகதோயம் கதப்லோத தேஹஶோதந
சாடிகா ப்ரதான பாத்ய ஆசமன பவித்ர ப்ரதான கந்த புஷ்ப தூப தீப ஆசமன ந்ருத்த கீத வாத்யாதி ஸர்வ மங்களயுக்தா

அபிஷேக நீராஞ்ஜன ப்லோத வஸ்த்ர உத்தரீய யஜ்ஞோபவீத ஆசமன கூர்ச்ச ப்ராஸாரண
ஸஹஸ்ர தாராபிஷேக நீராஞ்ஜந ஆசமன தேஹஶோதந ப்லோத
வஸ்த்ர உத்தரீய யஜ்ஞோபவீத ஆசமனாநி தத்யாத்|  

பிறகு ஸ்நானாஸநத்தை ஸமர்ப்பிவித்து சந்தனம், புஷ்பம், முதலியவைகளினால் ஆஸனத்தை அலங்கரித்துப்
பகவானை ப்ரணாமம் செய்து அனுமதி பெற்றுக் கொண்டு பாதுகைகளை ஸமர்ப்பிவித்து ஸ்நானாஸநத்தில் பகவான் எழுந்தருளினபிறகு
வஸ்திரம், ஆபரணம், மாலை முதலியவைகளைக் கழற்றி விஷ்வக்ஸேனரிடத்தில் ஒப்புக் கொடுத்து ஸ்நானசாடிகை ஸமர்ப்பிவித்து
அர்க்யம் பாத்யம், ஆசமனீயம், பாதபீடம், தந்தகாஷ்டகம், ஜிஹ்வாநிர்லேகனம், கண்டூஷம், முகப்ரக்ஷாளநம்,
ஆசமனம், ஆதர்ஶப்ரதர்ஶநம், ஹஸ்தப்ரக்ஷாளனம், முகவாஸ தாம்பூலம், தைலாப்யங்கம், உத்வர்த்தனம்,
ஆமலகதோயம், கங்கதம், ப்லோத தேஹஶோதனசாடிகை, ஹரித்ரா லேபனம், ப்ரக்ஷாளனம், வஸ்திரம், உத்தரீயம்,
யஜ்ஞோபவீதம், பாத்யம், ஆசமனம், பவித்திரம், கந்தம், புஷ்பம், தூபதீபம், ஆசமனம், தேஹஶோதனம், வஸ்திரம்,
உத்தரீயம், யஜ்ஞோபவீதம், ஆசமனம் இவைகளை ஸமர்ப்பிவிக்க வேண்டும்.

தத: அலங்காராஸநம் அப்யர்ச்ய: ப்ரணம்ய|
அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய| தத்ர உபவிஷ்டே பூர்வவத் ஸ்நாநீய வர்ஜம்
அர்க்ய பாத்ய ஆசமனீய ஶுத்தோதகாநி மந்த்ரேண கல்பயித்வா|
பகவதே அர்க்ய பாத்ய ஆசமனீயாதி தத்வா கந்த புஷ்ப பாதஸம்மர்தன வஸ்த்ர உத்தரீய பூஷண உபவீத ஆசமனீயாநி தத்வா|
ஸர்வ பரிவாராணாம் ஸ்நாந வஸ்த்ர பூஷணாந்தம் தத்வா|

கந்தாதீந் தேவாநந்தரம் ஸர்வ பரிவாராணாம் ப்ரதாய| தூபதீப ஆசமனாந்தம் தத்யாத்|
அத பார்ஸ்வ பரிவாராணாம் கந்தாதிநேவ தத்யாத்| கந்த புஷ்ப ப்ரதாநாலங்கார ஊர்த்வ புண்ட்ராம் ஜநாதர்ஶ
தூப தீப ஆசமன த்வஜ சத்ர சாமர வாஹந ஶங்க சிஹ்ந காஹ்ள பேர்யாதி ஸகல ந்ருத்த கீத வாத்யாதிபி அப்யர்ச்ய |
மூல மந்த்ரேண புஷ்பம் ப்ரதாய ப்ரத்யாகாரம் புஷ்பம் ப்ரதாய|

த்வாதஶாக்ஷரேண விஷணு ஷடக்ஷரேண விஷ்ணு காயத்ரியா பஞ்சோபநிஷதை: புருஷ ஸூக்த ருக்பி:
புஷ்பம் ப்ரதாய அந்யைஶ்ச பகவந் மந்த்ரை: ஶக்தஶ்சேத் புஷ்பம் ப்ரதாய|
தேவ்யாதி பார்ஷதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா|

ப்ரணம்ய| ப்ரதி திஶம் ப்ரதக்ஷிணம் ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்ஜலிம் தத்வா|
புரத: ப்ரணம்ய| ஶ்ருதி ஸுகை: ஸ்தோத்ரை: ஸ்துத்வா|
ஸ்வாத்மாநம் நித்ய கிங்கரதயா நிவேத்ய ததைவ த்யாத்வா |
யதாஶக்தி மூல மந்த்ரம் ஜபித்வா| ஸர்வேப்யோ போக பூரணீம் மாத்ராம் தத்வா|

பிறகு அலங்காராஸநத்தைப் பூஜித்து பகவானை ப்ரணாமஞ்செய்து அனுமதி பெற்றுக் கொண்டு,
பாதுகைகளை ஸமர்ப்பித்து அதில் பகவான் எழுந்தருளினபிறகு, முன்போலவே
ஸ்நாநீயம் தவிர அர்க்யம் பாத்யம் ஆசமனீயம் ஸர்வார்த்ததோயம் இவைகளைக்
கீழ்ச் சொல்லியதைப் போலப் பரிகல்பனம் செய்து கொள்ள வேண்டும்.

பகவானுக்கு அர்க்ய பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பிவித்து
கந்தம், புஷ்பம், பாதஸம்மர்த்தனம், வஸ்திரம், உத்தரீயம்,  பூஷணம், யஜ்ஞோபவீதம், ஆசமனீயம், இவைகளை ஸமர்ப்பிவிக்க வேண்டும்.
மற்றெல்லா பரிவாரங்களுக்கும் ஸ்நாநம் வஸ்திரம் பூஷணங்கள் வரையில் ஸமர்ப்பித்துக்
கந்தம் முதலியவைகளைப் பகவானுக்கு ஸமர்ப்பிவித்த பிறகு ஸமர்ப்பிக்க வேண்டும்.

அதுவுமன்றிக்கே பரிவாரங்களுக்குக் கந்தம் முதலியவைகளை மாத்திரம் ஸமர்ப்பிக்க வேண்டியதாகவுமாம்.
(அர்க்ய பாத்ய ஆசமனாதிகள் வேண்டியதில்லை) கந்தம், புஷ்பம், அலங்காரம், ஊர்த்வ புண்ட்ரம், அஞ்ஜனம்,
ஆதர்ஶம், தூபம், தீபம், ஆசமனம், த்வஜம், சத்ரம், சாமரம், வாஹனம், சங்கம், சின்னம், காஹளனம், பேரி முதலிய
ஸகல நர்த்தனம், கீதம், வாத்யம், முதலிய உபசாரங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் புஷ்பம் ஸமர்ப்பிக்க வேண்டும்.
இப்படியே த்வாதஶாக்ஷரம், ஷடக்ஷரம், விஷ்ணு காயத்ரி, பஞ்சோபநிஷத் மந்திரங்கள், புருஷ ஸூக்த ருக்குகள், இவைகளினாலும்,
மற்ற இதர பகவந் மந்திரங்களினாலும், ஶக்தி உள்ளவரையில் புஷ்பங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.
அப்படியே தேவி முதலியவர்களுக்கும் அவரவர்கள் மந்திரங்களினால் ஸமர்ப்பிக்க வேண்டும்.

நாலு திக்குகளிலும் ப்ரணாமம் செய்து ப்ரதக்ஷிணம் செய்து புஷ்பாஞ்ஜலி ஸமர்ப்பிக்க வேண்டும்.
முன்பக்கத்தில் ப்ரணாமம் செய்து செவிக்கினிய ஸ்தோத்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.
பிறகு தன்னை, பகவானுடைய நித்யதாஸனாக அங்கீகரிக்க வேண்டுமென்று ஸமர்ப்பித்து, ஶக்திக்குத் தக்கபடி
திருவஷ்டாக்ஷரத்தை ஜபம் செய்து, ஸர்வ போகங்களையும் பூர்த்தி செய்யக் கூடிய மாத்திரையைத் தீர்த்தத்தினால் ஸமர்ப்பிக்க வேண்டும்.

———

முகவாஸ தாம்பூல ப்ரதாய| அர்க்யம் தத்வா | போஜ்யாஸநம் அப்யர்ச்ய | ப்ரணம்ய| அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய |
தத்ர உபவிஷ்டே பாத்ய ஆசமனீய அர்ஹணாநி தத்வா|
குடம் மாக்ஷிகம் ஸர்பி| ததி: க்ஷீரஞ்சேதி பாத்ரே நிக்ஷிப்ய விஶோத்ய |
அர்க்ய ஜலேந ஸம்ப்ரோக்ஷ்ய: மதுபத் பவநத ஶிரா: ஹர்ஷோத்புல்ல நயநோ ஹ்ருஷ்ட மதா: |

பூத்வா ப்ரதாய ஆசமனம் தத்யாத் | யத்கிஞ்சித் த்ரவ்யம் பகவத்தேயம் தத்ஸர்வம் ஶோஷணாதிபிர் விஶோத்ய|
அர்க்ய ஜலேந ஸம்ப்ரோக்ஷ்ய தத்யாத் ததஶ்ச காம் ஸ்வர்ண ரத்னாதிகம் ச யதாஶக்தி தத்யாத்|
தத”: ஸுஸம்ஸ்க்ருதாந்ந மாஜ்யாட்யம் ததிக்ஷீர மதூநி பலமூல வ்யஞ்ஜநாநி மோதகாம்ச
அந்யாநி லோகே ப்ரியதமாநி ஆத்மநஶ்சேஷ்டாநி ஶாஸ்த்ராவிருத்தாநி ஸம்ப்ருத்ய ஶோஷணாதி க்ருத்வா|
அர்க்ய ஜலேந ஸம்ப்ரோக்ஷ்ய| அஸ்த்ர மந்த்ரேண ரக்ஷாம் க்ருத்வா|

ஸுரபி முத்ராம் ப்ரத்ருஶ்ய அர்ஹண பூர்வகம் ஹவிர் நிவேதயேத்| 
அதிப்ரபூத மதி ப்ரிய தமமதி ஸமக்ர மத்யந்த பக்தி க்ருத மிதம் ஸ்வீகுரு |
இதி ப்ரணாம பூர்வகம் அத்யந்த ஸாத்வ ஸவிநயா வந்தோ பூத்வா நிவேதயேத்|
ததஶ்சாந் பாந தர்ப்பணே ப்ரதாய|

ஹஸ்த ப்ரக்ஷாளந ஆசமன ஹஸ்த ஸம்மார்ஜந சந்தன முகவாஸ தாம்பூலாநி தத்வா|
ப்ரணம்ய| புந: மந்த்ராஸநம் கூர்ச்சேந மார்ஜயித்வா அப்யர்ச்ய அநுஜ்ஞாப்ய  பாதுகே ப்ரதாய|
தத்ர உபவிஷ்டே கந்தமால்யாதிக மபோஹ்ய| விஶ்வக்ஸேநாய தத்வா|
பாத்ய ஆசமனீய கந்த புஷ்ப தூப தீப ஆசமன பூப பலா ஆசமனாநி தத்வா| முகவாஸ தாம்பூல ந்ருத்த கீத வாத்யாதிபி: அப்யர்ச்ய:| |
ப்ரதக்ஷிண த்வயம் க்ருத்வா| தண்டவத் ப்ரணம்ய  பர்யங்காஸநம் அப்யர்ச்ய| அநுஜ்ஞாப்ய| பாதுகே ப்ரதாய|

தத்ரோபவிஷ்டே பாத்யாசமநே தத்வா| மால்யபூஷண வஸ்த்ராணி அபநீய| விஶ்வக்ஸேநாய தத்வா|
ஸுகஶயநோசிதம் ஸுக:ஸ்பர்ஸம் வாஸ: தது சிதாநி பூஷணாதி உபவீதம் ச ப்ரதாய| ஆசமனீயம் தத்வா|
கந்த புஷ்ப தூப தீப ஆசமன முகவாஸ தாம்பூலாதிபி: அப்யர்ச்ய|
ஸ்வநீயாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஶேஷதைகரஸேந அநேநாத்மநா|

கர்த்ரா ஸ்வகீயைஶ்ச தேஹேந்த்ரியாந்த கரணை: ஸ்வகீய கல்யாண தமத்ரவ்ய மயாநௌபசாரிக
ஸாம்ஸ்பர்ஶிகாப்ய வஹாரிகாதி ஸமஸ்த போகாந் அதிப்ரபூதாநதி ப்ரியதமாநதி ஸமக்ராநத்யந்த
பக்தி க்ருதாநகிர பரிஜந பரிச்சதாந் விதாய ஸ்வஸ்மை ஸ்வப்ரீயதே ஸ்வயமேவ ப்ரதி பாதி தவாந் இத்யநுஸந்தாய பகவந்தம் அநுஜ்ஞாப்ய:

பகவந் நிவேதிதாத் ஹவிஶ்ஶேஷாத் விஶ்வக்ஸேநாய கிஞ்சிதுர்ருத்ய: நிதாயாந்யத்
ஸர்வம் ஸ்வாசார்ய ப்ரமுகேப்யோ வைஷ்ணவேப்ய:: ப்ரதாய பகவத்யாக ஶிஷ்டை: ஜலாதிபி: த்ரவ்யை: |
விஶ்வக்ஸேநம் அப்யர்ச்ய| பூர்வோத்ருதம் ஹவிஶ்ச தத்வா|
ததர்சநம் பரிஸமாப்ய: பகவந்தம் அஷ்டாங்கேந ப்ரணம்ய: ஶரணமுபகச்சேத்| மநோபுத்தி மாநேந ஸஹந்யஸ்ய தராதலே|

கூர்மவச் சதுர பாதாந் ஶிரஸ்தத்ரைவ பஞ்சமம் | ப்ரதக்ஷிண ஸமேதேந ஏவம் ரூபேண ஸர்வதா|
அஷ்டாங்கேந நமஸ்க்ருத்ய ஹ்யூப விஶ்யா க்ரதோவிபோ|
உரஸா ஶிரஸாசைவ வபுஷா மநஸா கிரா: பத்ப்யாம்  கரப்யாம் ஜாநுப்யாம் ப்ரணமோஷ்டாங்க உச்யதே|
இத்யுக்தாஷ்டாங்க ப்ரணாம: ஶரணாகதி ப்ரகாரஶ்ச பூர்வோக்த: தத:
அர்க்ய ஜலம் ப்ரதாய| பகவந்தம் அநுஜ்ஞாப்ய |பூஜாம் ஸமாபயேத்|

————-

பிறகு முகவாஸ தாம்பூலம் ஸமர்ப்பித்து, அர்க்யம் கொடுத்து போஜ்யாஸநம் ஸமர்ப்பிக்க வேண்டும்.
போஜ்யாஸநத்தைப் பூஜித்து பகவானிடத்தில் ப்ரணாமம் செய்து அனுமதி பெற்றுக் கொண்டு பாதுகைகளை ஸமர்ப்பித்து
அந்தப் போஜ்யாஸநத்தில் பகவான் எழுந்தருளிவிட்டதாக த்யானித்து பாத்யம், ஆசமனீயம், அர்க்யம்
இவைகளை ஸமர்ப்பித்து மதுபர்க்கம் ஸமர்ப்பிக்க வேண்டியது.

அதாவது வெல்லம், தேன், நெய், தயிர், பால் இவைகளைத் தனித்தனியே பாத்திரங்களில் வைத்து
ஶோஷணதாஹந ப்லாவனங்களைச் செய்து அர்க்ய தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து அமுது செய்தருளப் பண்ண வேண்டும்.
பிறகு பகவானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டிய பசுமாடு, ஸ்வர்ணம், ரத்னங்கள்,தனதான்யங்கள் இவைகள் முதலிய எல்லா வஸ்துக்களையும்
பகவானுக்கு எதிரில் வைத்து அர்க்ய தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து பகவானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு நன்றாகவும் பரிசுத்தமாகவும் பாகம் செய்யப்பட்ட அன்னங்களையும், நெய், தயிர், பால், தேன், பழம், கிழங்குகள் முதலிய
வ்யஞ்ஜனங்களைத் தனக்கு இஷ்டங்களாயும் ஶாஸ்திரங்களுக்கு விரோதமில்லாமலுமிருப்பவைகளை ஸம்பாதித்துப் பகவானெதிரில் ஸமர்ப்பித்து
அர்க்ய தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து, அஸ்திர மந்திரத்தினால் திக்பந்தனஞ்செய்து, ஸுரபி முத்திரையைக் காண்பித்து, அர்க்ய தீர்த்தத்தை எடுத்து
“அதிப்ரபூதம்………இதம் ஸ்வீகுரு” என்று ப்ரணாமம் செய்து ப்ரார்த்தித்து மிகுந்த விநய பக்தியுடன் தலைகுனிந்து நின்று ஸமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு அநுபானம், தர்ப்பணம், இவைகளையும் ஸமர்ப்பித்து ஹஸ்த ப்ரக்ஷாளநம், ஆசமனம், ஹஸ்த ஸம்மார்ஜனம், சந்தனம், முகவாஸ தாம்பூலம்
இவைகளை ஸமர்ப்பிக்க வேண்டும், பிறகு ப்ரணாமம் செய்து மந்திராஸநத்தைத் துடைத்துப் பூஜித்து பகவானிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு
பாதுகைகளை ஸமர்ப்பித்து, அதில் பகவான் எழுந்தருளின பிறகு, முன் ஸமர்ப்பித்த சந்தனம், மாலை முதலியவைகளைக் களைந்து
விஷ்வக்ஸேநரிடம் கொடுத்து பாத்யம், ஆசமனீயம், சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், ஆசமனம், பக்ஷ்யம், பழம், ஆசமனீயம், இவைகளை ஸமர்ப்பிக்க வேண்டும்.

முகவாஸ தாம்பூலம் ந்ருத்த கீத வாத்யங்களினால் ஆராதனஞ்செய்து, இரண்டு தடவை ப்ரதக்ஷிணம் செய்து
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பர்யங்காஸநத்தைத் துடைத்து பகவானிடத்தில் உத்திரவு பெற்றுக்கொண்டு
பாதுகைகளை ஸமர்ப்பித்து அதில் பகவான் எழுந்தருளியதாக த்யானஞ்செய்து பாத்யம், ஆசமனீயம், இவைகளை ஸமர்ப்பித்து
மாலை, பூஷணங்கள், வஸ்திரங்கள் இவைகளைக் களைந்து விஷ்வக்ஸேநரிடம் கொடுத்து
ஸுகஶயனத்திற்குத் தகுந்ததாய் ஸுகமான ஸ்பர்ஶத்தை உடையதான வஸ்திரம், பூஷணம், மாலை, உபவீதம் இவைகளை ஸமர்ப்பித்து
ஆசமனீயம் ஸமர்ப்பித்து சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், ஆசமனீயம், முகவாஸ தாம்பூலம் இவைகளை ஸமர்ப்பித்து,

“ ஸ்வநியாம்ய…….ப்ரதிவாதிதவாந்” என்று ஸாத்விகத்யாகஞ்செய்து பகவானிடத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு
பகவானுக்கு நிவேதனஞ்செய்யப்பட்ட ஹவிஸ்ஸின் மிகுதியிலிருந்து விஷ்வக்ஸேநருக்காகக் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டு
மற்றை எல்லா ஹவிஸ்ஸுக்களையும் தன்னுடைய ஆசார்யன் முதலான எல்லா வைஷ்ணவர்களுக்கும் ஸமர்ப்பித்து
பகவானுடைய ஆராதனத்தில் மிகுந்த தீர்த்தத்தினால் விஷ்வக்ஸேநருக்கு ஆராதனஞ்செய்து
முன்னமேயே எடுத்து வைத்திருக்கும் ஹவிஸ்ஸை நிவேதஞ்செய்து அந்த ஆராதனத்தை முடித்துப்
பகவானை ஸாஷ்டாங்கமாக ஸேவித்து ஶரணாகதி செய்ய வேண்டும்.

‘மனது, புத்தி, அஹங்காரம், இரண்டு கைகள், இரண்டு கால்கள், தலை இவைகளை ஆமைபோல் வைத்துக் கொண்டு ஸேவிப்பது’ என்றும்,
‘ப்ரதக்ஷிணங்களோடு கூடிய இப்படிப்பட்ட ஸாஷ்டாங்க ப்ரணாமத்தினால் பகவானை ஸேவித்து அவனெதிரில் உட்கார்ந்து’ என்றும்,
‘மார்பினாலும், தலையினாலும், ஶரீரத்தினாலும், மனதினாலும், வாக்கினாலும், கால்களினாலும்,
கைகளினாலும், முழங்கால்களினாலும், ப்ரணாமம் செய்வது ஸாஷ்டாங்க ப்ரணாமம்’ என்றும்
சொல்லப் படுகிறது என்று ஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்யும் விதம் சொல்லப் பட்டது.
ஶரணாகதி செய்யும் விதமும் முன்னமேயே சொல்லப் பட்டது.
பிறகு அர்க்யம் ஸமர்ப்பித்துப் பகவானிடத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு ஆராதனத்தை முடிக்க வேண்டும்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading