Archive for the ‘ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்’ Category

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் —11–பரிகரவிபாகாதிகாரம் —

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் —11-பரிகரவிபாகாதிகாரம்
ப்ரபத்திக்கு பரிகரங்கள் –அதாவது அங்கங்களைச் சொல்வது

அதிகாரத்திலிருந்து

இயாந் இத்தம் பூத : ஸக்ருத் அயம் அவச்யம் பவநவாந்
தயா திவ்ய அம்போதெள ஜகத் அகிலம் அந்த : யமயதி
பவ த்வம்ச உத்யுக்தே பகவதி பர ந்யாஸ வபுஷ :
பரபத்தே : ஆதிஷ்ட : பரிகர விசேஷ : ச்ருதி முகை :

வ்யாக்யானம்
கருணைக் கடல் என்றால் இவனையே குறிக்கும் படியான கருணைக்குச்
சிறந்த ஸமுத்ரமாகவும் ,எல்லா ஜீவராசிகளுக்கும் ஹ்ருதயத்தின் உள்ளே
இருந்து நியமிக்கும் பரமாத்மாவாகவும் ,ஸம்ஸார நாசகனாகவும் இருக்கிற
பகவானிடம் பொறுப்பை ஸமர்ப்பிக்கிற ப்ரபத்தியின் அங்கங்களின்
விசேஷம், வேதம் இவற்றால் இது என்றும் இத்தனை என்றும் , இவைகளின்
ஸ்வரூபம், உபயோகம் இவற்றைப் பற்றியும் ,ப்ரபத்தி செய்யும் போது
இந்த அங்கங்கள் அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்று நியமிக்கப் பட்டிருக்கிறது.

அதிகாரத்திலிருந்து

ப்ரபத்தியின் அங்கங்கள் சொல்லப்படுகின்றன

இவ் வித்யைக்குப் பரிகாரமாவது ஆநுகூல்ய ஸங்கல்பமும் , ப்ராதிகூல்ய வர்ஜனமும் ,
கார்பண்யமும் , மஹா விச்வாஸமும் , கோப்த்ருவ வரணமும் .

வ்யாக்யானம்

ப்ரபத்தி என்கிற இந்த ந்யாஸ வித்யைக்கு அங்கங்களாவன —-
1.பகவானுக்கு உகந்தவை ,எவையோ அவற்றை மட்டும் செய்தல் –ஆநுகூல்ய ஸங்கல்பம்
2.பகவானுக்கு உகப்பில்லாதவற்றை செய்யாது தவிர்த்தல் — ப்ராதிகூல்ய வர்ஜனம்
3.பகவானைத் தவிர வேறு உதவியில்லை என்று இருத்தல் –கார்பண்யம்
4. பகவானிடம் அசஞ்சலமான விச்வாஸம் –மஹா விச்வாஸ
5. பகவான் தான் ரக்ஷிக்க வேண்டும் என ப்ரார்த்திப்பது — கோப்த்ருவ வரணம்

அதிகாரத்திலிருந்து

இவ்விடத்தில்
ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப : ப்ரதிகூல்யஸ்ய வர்ஜநம்
ரக்ஷிப்யதீதி விச்வாஸோ கோப்த்ருத்வ வரணம் ததா
ஆத்ம நிக்ஷேப கார்ப்பண்யே ஷட் விதா சரணாகதி :

இத்யாதிகளிற் சொல்லுகிற ஷாட்வித்யமும் அஷ்டாங்க யோகமென்னுமாப் போலே
அங்க அங்கி ஸமுச்சயத்தாலே ஆகக்கடவதென்னுமிடமும் ,இவற்றில் இன்னது
ஒன்றுமே ,இதரங்கள் அங்கங்களென்னுமிடமும் ,

நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ : பஞ்சாங்க ஸம்யுத :
ஸந்ந்யாஸஸ்த்யாக இத்யுக்த : சரணாகதிரித்யபி

என்கிற ச்லோகத்தாலே ந்யாய நிரபேக்ஷமாக ஸித்தம்

வ்யாக்யானம்

அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை சொல்கிறது ( 37 வது அத்யாயம் —28, 29 பகுதிகள் )

நாரதர், ருத்ரனை—பரமேஸ்வரனை , ந்யாஸத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார் —
நாரதர் :— மஹேஸ்வரா ! வெளிப்படையானதும் ,மானஸிகமுமான யோகத்தைப்
பற்றிச் சொன்னீர்கள். அப்போது,”” ந்யாஸம்”””” என்கிற உபாயத்தையும் சொன்னீர்கள்.
இதைப்பற்றி விரிவாகக் கூற வேண்டுகிறேன்

அஹிர்புத்ந்யர் :—இது, பெரிய உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள ,தேவர்களும்
அறியாத ரஹஸ்யம் . அனைத்துப் பாபங்களையும் போக்க வல்லது.கோரும்
பலனைக் கொடுக்கக் கூடியது. இதை, எல்லோருக்கும் சொல்லக் கூடாது.
முக்யமாக , பகவத் பக்தி இல்லாதவனுக்குச் சொல்லக் கூடாது.
நீர், என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருக்கிறீர். உமது க்ஷேமத்தை விரும்பி
விவரத்தைச் சொல்கிறேன்—– என்று ஆரம்பித்தார்

அஹிர்புத்ந்யர் சொன்னது :—-

யாரால் மற்ற உபாயங்களால் அடைய முடியாததோ ஸாங்க்ய யோகம் ,
பக்தி யோகம் இவற்றால் எந்த மோக்ஷத்தைப் பெற முடியாதோ , எந்த இடத்துக்குச்
சென்றால் திரும்ப இவ்வுலகம் முதலியவற்றுக்கு வரமுடியாதோ , அப்படிப்பட்ட ”பரமபதம்”
ந்யாஸத்தாலே கிடைக்கும். பரமபுருஷனான பகவானுக்குக் கைங்கர்யம்
எய்யும் பாக்கியம் கிடைக்கும்.
ப்ரபத்தியின் அங்கங்கள் ஆறு என்று வேதங்களைக் கற்று அறிந்த ஜ்ஞானிகள்
சொல்கிறார்கள்.
1. ஆநுகூல்ய ஸங்கல்பம் = உமக்கு அநுகூலமாகவே இருப்பேன் என்று உறுதி
2. ப்ராதிகூல்ய வர்ஜனம் = உமக்குப் ப்ரீதியில்லாத கார்யங்களைச் செய்யமாட்டேன்
என்று உறுதி
3.ரக்ஷிஸ்யதீதி விச்வாஸ =பகவான் நம்மைக் காப்பாற்றுவான் என்கிற திடநம்பிக்கை
4. கோப்த்ருவவரணம் = நீ, என்னைக் காத்தருளவேண்டும் என்று ப்ரார்த்திப்பது
5.ஆத்ம நிக்ஷேப : =தன்னுடைய ஆத்மாவை, பகவானுடைய சொத்து என்று நினைத்து
உம்முடைய உம்மிடமே ஸமர்ப்பிக்கிறேன் என்று ஸமர்ப்பிப்பது .
6. கார்பண்யம் = இது, ஆகிஞ்சின்யம் , அநந்யகதித்வம் , இரண்டும் சேர்ந்தது.
அதாவது, கர்ம , ஞான ,பக்தி யோகங்கள் எனக்குத் தெரியாது,
உன்னைத் தவிர எனக்குச் சரணமடைய யாரும் இல்லை,

ஆக , ந்யாஸம் –சரணாகதி –என்பது ஆறு வகை.
அஷ்டாங்க யோகம் என்பதில் யமம் , நியமம் –இவை அங்கங்கள்.ஸமாதி –அங்கி.
இங்கு, ஆநுகூல்ய ஸங்கல்பம் ,ப்ராதிகூல்யவர்ஜனம், கார்பண்யம்,ரக்ஷிஸ்யதீதி விச்வாஸ
என்கிற மஹா விச்வாஸம், கோப்த்ருவ வரணம்–இந்த ஐந்து அங்கங்களுடன் கூடிய
ஆத்ம நிக்ஷேப என்கிற ஆத்ம ஸமர்ப்பணமான அங்கியுடன் கூடி –ஆறு எனப்படுகிறது.
ஷட்விதா சரணாகதி என்பர் .ப்ரபத்தி என்று சொல்லும்போது ,சரணம் என்கிற ”சொல் ”
உபாயம் , அதாவது சாதனம்.

லக்ஷ்மீ தந்த்ரம் ( 17—74 )

நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ : பஞ்சாங்க ஸம்யுத :
ஸந்ந்யாஸஸ்த்யாக இத்யுக்த : சரணாகதிரித்யபி

ஆத்ம நிக்ஷேபம் என்பது, அங்கி.மற்ற ஐந்தும் அங்கங்கள். இரண்டையும்
சேர்த்து, ”ஷட்விதா சரணாகதி ” என்பர்.
ப்ரபத்தி என்று சொல்லும்போது, சரணம் என்கிற சொல் உபாயம், அதாவது சாதனம்.

அதிகாரத்திலிருந்து

மோக்ஷார்த்த ப்ரபத்தியில் பல —-ஸங்க –கர்த்ருத்வாதி த்யாகங்களின் அவச்யம்

சாச்வதீ மம ஸம்ஸித்திரியம் ப்ரஹ்மவிபவாமி யத்
புருஷம் பரமுதிச்ய ந மே ஸித்திரித : அந்யதா
இதியங்கமுதிதம் ச்ரேஷ்டம் பலேப்ஸா தத்விரோதிநீ

என்று அஹிர்புத்ந் யோக்தமான பல த்யாக ரூப அங்காந்தரம் மோக்ஷார்த்தமான
ஆத்ம நிக்ஷேபத்திலே நியதம். பல,ஸங்க , கர்த்ருத்வாதி த்யாகம் , கர்மயோகம்
முதலாக நிவ்ருத்தி தர்மங்களெல்லாவற்றிலும் வருகையாலே இவ்வநுஸந்தானம்
முமுக்ஷுவுக்கு ஸாங்க ஸமர்ப்பண தசையிலே கர்த்தவ்யம்

வ்யாக்யானம்

அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையிலிருந்து ,மேற்கோள் காட்டுகிறார் —
52 வது அத்யாயம் —-பகுதிகள் 13 மற்றும் 14

சாச்வதீ மம ஸம்ஸித்திரியம் ப்ரஹ்மவிபவாமி யத்
புருஷம் பரமுதிச்ய ந மே ஸித்திரித : அந்யதா
இதியங்கமுதிதம் ச்ரேஷ்டம் பலேப்ஸா தத்விரோதிநீ

அஹிர்புத்ந்யர் சொல்கிறார் —
உலகத்தில் தாழ்ந்தவன் என்கிற வரிசையில் எல்லா ஜீவர்களும் அடங்குவர் .
உயர்ந்தவன் எம்பெருமான் ஒருவனே. ஜீவன்கள் நமஸ்கரிக்கிறார்கள் ;
எம்பெருமான் வணங்கப்படுகிறான் ;அவனே வணங்கப்படுபவன் .
ஸம்பந்தம் எந்தப் பலனையும் கருதியது அல்ல .
நமஸ்கரித்தலே , ப்ரபத்தி . இதுவே புருஷார்த்தம் . ”நம ” என்கிற ஸப்தம்
ப்ரபத்தி என்கிற அர்த்தத்தை நிரூபிக்கிறது.
பரம புருஷனைக் குறித்து , நான் நமஸ்கரிக்கிறேன் , என்பது எதுவோ
அதுவே எனக்கு நிலையான புருஷார்த்தம் அல்லது ஸ்வாபாவிக கார்யம்.
இதைவிட வேறான பலனானது எனக்கு வேண்டாம் இதுவே சிறந்த அங்கம் .
மோக்ஷம் அடைய ஆத்ம ஸமர்ப்பணமான ஸரணாகதி –ப்ரபத்தி –இதற்கு
கர்மங்களை நாமே செய்கிறோம் என்கிற எண்ணமும்,பலன்களில் பற்றும்
அறவே கூடாது.

அதிகாரத்திலிருந்து

ஆநுகூல்ய ஸங்கல்பம் , ப்ராதிகூல்ய வர்ஜநம்–இவற்றுக்கான காரணம் —
இவற்றால் வரும் பயன்

இங்குப் பரிகரங்களானவற்றில் ஆநுகூல்ய ஸங்கல்பத்துக்கும் ,
ப்ராதிகூல்ய வர்ஜநத்துக்கும் நிபந்தனம் , ஸர்வ சேஷியான ஸ்ரீய :பதியைப்
பற்றப் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளாலே அபிமதாநுவர்த்தனம் பண்ண வேண்டும்படி
இவனுக்கு உண்டான பாரார்த்ய ஜ்ஞாநம் . இத்தாலே அநுகூல்யேதராப்யாம் து
விநிவ்ருத்தி ரபாயத : என்கிறபடியே அபாய பரிஹாரம் ஸித்தம்

வ்யாக்யானம்

இவனுக்கு ஜ்ஞானம் பிறக்கிறது ? எப்போது ?
ப்ரபத்திக்குச் சொல்லப்பட்ட அங்கங்களில், பகவானுக்குச் சந்தோஷத்தை
உண்டாக்கும் கார்யங்களைச் செய்தல், அவன் விரும்பாத கார்யங்களில்
இழியாது இருத்தல் . இப்படி இருப்பின் பகவானுக்காகவே அனைத்தும்
உள்ளன என்கிற ஜ்ஞானம் பிறக்கிறது. இதுவே சேஷத்வ ஜ்ஞானம்.
ஆதலால், சேஷத்வ ஜ்ஞானம் ஏற்பட, பகவானுக்கு உகப்பானதைச்
செய்தலும், பகவானுக்கு உகப்பில்லாதவற்றைச் செய்யாதிருத்தலுமேயாகும் .
லக்ஷ்மீ தந்த்ரம் ( 17–76 )
அநுகூல்யேதராப்யாம் து விநிவ்ருத்தி ரபாயத : என்கிறது
அதாவது, பகவானுக்கு விருப்பமானதைச் செய்தல், அவன் விரும்பாதவற்றைச்
செய்யாதொழிதல் –என்பதன் மூலமாக, அவனது கட்டளைகளை மீறாமல்
இருக்கும் நிலை ஏற்படுகிறது.

அதிகாரத்திலிருந்து

கார்ப்பண்யம் அதனால் வரும் பலன்

கார்ப்பண்யமாவது முன்பு சொன்ன ஆகிஞ்சந்யாதிகளுடைய அநுஸந்தானமாதல் ,
அதடியாக வந்த கர்வஹாநியாதல் , க்ருபா ஜநக க்ருபண வ்ருத்தியாதலாய் நின்று
சரண்யனுடைய காருண்யோத்தம்பநார்த்தமுமாய் ,கார்ப்பண்யேநாப்யுபாயாநாம்
விநிவ்ருத்திரிஹேரிதா என்கிறபடியே பின்பும் அநந்யோபாயதைக்கும்
உபயுக்தமாயிருக்கும்

வ்யாக்யானம்

கார்ப்பண்யம் என்பது, முன்பு சொன்ன ஆகிஞ்சந்யம் இவற்றையெல்லாம்
நினைத்திருத்தலாம் . இந்த நினைவுகள் /எண்ணங்கள் மூலமாக தனது என்கிற
கர்வம் அகலும். இதன் மூலமாக, நாம் எவ்வித உதவியும் /கதியும் இல்லாமல்
இருக்கிறோம் என்கிற எண்ணம் வரும். இவ்வாறு, எண்ணிப் பகவானிடம்
தஞ்சம் என்று அடையும்போது ,பகவானின் கருணையானது ,நம்மிடம்
வெள்ளமிடுகிறது. இதன் மூலம், வேறு எந்த உபாயமும் இல்லை என்கிற
ஜ்ஞானம் மேலோங்குகிறது
லக்ஷ்மீ தந்த்ரம் :— கார்ப்பண்யேநாப்யுபாயாநாம் விநிவ்ருத்திரிஹேரிதா–
மற்ற எந்த உபாயத்தையும் நாடாமலிருப்பதே கார்ப்பண்யம்

அதிகாரத்திலிருந்து

மஹா விச்வாஸம் அதனால் வரும் பலன்

மஹா விச்வாஸம் ரக்ஷிஸ்யதீதி விச்வாஸாத் அபீஷ்டோபாய கல்பநம்
என்கிறபடியே அணியிடாத அநுஷ்டான ஸித்தர்த்தமுமாய்ப் பின்பு
நிர்பரதைக்கும் உறுப்பாயிருக்கும்

வ்யாக்யானம்

எவ்வித சந்தேகமும் இல்லாத மஹா விச்வாஸம் என்பது ,ப்ரபத்திக்கு
மிக முக்கியமானது. இதுவே ப்ரபத்திக்குப் பிறகும், நம்மைப் பற்றிய
கவலை கொள்வது, நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நாமே முயற்சி
செய்வது போன்ற செயல்களிலிருந்து , நம்மை விலக்குகிறது.
லக்ஷ்மீ தந்த்ரம் : — மஹா விச்வாஸம் ரக்ஷிஸ்யதீதி விச்வாஸாத்
அபீஷ்டோபாய கல்பநம்—-
பகவான் நிச்சயம் ரக்ஷிப்பான் என்கிற மஹா விச்வாஸத்தால்
பகவானை உபாயமாகப் பற்றுதல் என்கிற பலன் ஏற்படுகிறது

அதிகாரத்திலிருந்து

கோப்த்ருவ வரணம் —-இதன் அவச்யம்

ஸ்வரூபாநுசித புருஷார்த்தங்கள் போலே ஸ்வரூப ப்ராப்தமான அபவர்க்கமும்
புருஷார்த்தமாம்போது புருஷன் அர்திக்கக் கொடுக்க வேண்டுகையாலே
இங்கு கோப்த்ருவ வரணமும் அபேக்ஷிதம் . நன்றாயிருப்பது ஒன்றையும்
இப்புருஷன் அர்த்திக்கக் கொடாத போது புருஷார்த்தங் கொடுத்தானாகானிறே .
ஆகையாலேயிறே அப்ரார்த்திதோ ந கோபாயேத் என்றும், கோப்த்ருவ வரணம்
நாம ஸ்வாபிப்ராய நிவேதநம் என்றும் சொல்லுகிறது

இப்படி , இவ்வைந்தும் இவ்வித்யாநுஷ்டாந காலத்தில் உபயுக்தங்களாகையால்
இவை இவாத்மநிக்ஷேபத்துக்கு அவிநாபூத ஸ்வபாவங்கள்

வ்யாக்யானம்

நமது ஸ்வரூபத்துக்கு ,மோக்ஷம் குறிக்கோள் . ஆனால் அதை புருஷார்த்தம்
என்று வேண்டும்போதோ / விரும்பும்போதோ , மற்ற புருஷார்த்தங்களை
யாசித்துப் பெறுவதைப் போல இதையும் யாசித்தே பெற வேண்டும்.
இப்படியாக, மோக்ஷம் என்கிற புருஷார்த்தத்தை ஒருவன் விரும்பும் போது,
அதை யாசித்தால் மட்டுமே பெற முடியும். மஹா விச்வாஸத்துடன் வேண்டுபவனுக்கு
அளிக்கப்படுகிறது. காப்பாற்ற வேண்டும் என்கிற வேண்டுதல் வேண்டியதாகிறது.
எந்த ஒரு நல்ல பொருளும் வேண்டாமல் கிடைப்பதில்லை . ஆதலால்,
ஒருவன் வேண்டாதபோது, மோக்ஷமென்கிற புருஷார்த்தம் அளிக்கப்படுவதில்லை.
லக்ஷ்மீ தந்த்ரம் —17—72
அப்ரார்த்திதோ ந கோபாயேத் = வேண்டுதல் இல்லாமல், எந்த ரக்ஷத்வமும்
செய்யப்படுவதில்லை
லக்ஷ்மீ தந்த்ரம் —17–78 –
கோப்த்ருவ வரணம் நாம ஸ்வாபிப்ராய நிவேதநம் = நமது மனத்தில் உள்ளதை பகவானிடம்
சொல்வதே கோப்த்ருவ வரணம்

இப்படியாக, மேலே சொல்லப்பட்ட ஐந்தும் ப்ரபத்திக்கு உதவுவதால், இவை
ஆத்ம ஸமர்ப்பணம் செய்வதற்கு முக்யமானவையாகும்

அதிகாரத்திலிருந்து

இவ்வர்த்தம் பிராட்டியைச் சரணமாகப் பற்ற வாருங்கள் என்று ஸாத்த்விக ப்ரக்ருதியான
த்ரிஜடை ராக்ஷஸிகளுக்குச் சொல்லுகிற வாக்யத்திலும் காணலாம்
ததலம் க்ரூ ஸ்வாக்யைர்வ : என்று ப்ராதிகூல்யவர்ஜநம் சொல்லப்பட்டது
ஸாந்த்வமேவாபி தீயதாம் என்கையிலே மந :பூர்வமாகவல்லது வாக்ப்ரவ்ருத்தி
இல்லாமையாலே ஆநுகூல்ய ஸங்கல்பம் ஆக்ருஷ்டமாயிற்று.
ராகவாத்தி பயம் கோரம் ராக்ஷஸாநாமுபஸ்திதம் என்று போக்கற்று நிற்கிற
நிலையைச் சொல்லுகையாலே அதிகாரமான ஆகிஞ்சந்யமும் அதினுடைய
அநுஸந்தானமுகத்தாலே வந்த கர்வஹாந்யாதிரூபமாய் அங்கமான கார்ப்பண்யமும்
சொல்லிற்றாயிற்று.
அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் என்கையாலும்
இத்தை விவரித்துக்கொண்டு அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீகணம்
என்று திருவடி அநுவதிக்கையாலும் , பெருமாள் ஒருத்தனை நிக்ரஹிக்கப்
பார்க்கிலும் அவர் சீற்றத்தை யாற்றி இவள் ரக்ஷிக்க வல்லவளாகையாலே
ரக்ஷிஸ்யதீதி விச்வாஸம் சொல்லப்பட்டது.
அபியாசாம வைதேஹீம் ஏதத்தி மம ரோசதே , பர்த்ஸிதாமபி யாசத்வம்
ராக்ஷஸ்ய : கிம் விவக்ஷயா என்கையாலே கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்றாயிற்று

வ்யாக்யானம்

இவ்வர்த்தம் என்று சொல்லும்படியான உயர்ந்த விஷயங்கள், ராக்ஷஸிகளில் சிறந்தவளான
த்ரிஜடை , அசோகவனத்தில் மற்ற அரக்கிகளிடம் ” சீதாப்பிராட்டியைச் சரணமடையுங்கள் ”
என்று சொல்வதன் மூலமாகத் தெளிகிறது

ஸ்ரீமத்ராமாயணம்

ததலம் க்ரூ ஸ்வாக்யைர்வ : =நீங்கள் பேசும் குரூர வார்த்தைகளை நிறுத்துங்கள் .

இதன் மூலமாக, பகவானுக்கு ஏற்காததைத் தவிர்க்கிற ”ப்ராதிகூல்ய வர்ஜனம் ”
சொல்லப்பட்டதாகக் கூறுவர்.

ஸாந்த்வமேவாபி தீயதாம் = சாந்தத்தை /சமாதானத்தை உண்டாக்கும் சொற்களைப்
பேசுங்கள் என்பதால், ”ஆனுகூல்ய ஸங்கல்பம் ”சொல்லப்பட்டது என்பர் .பகவானுக்கு
சந்தோஷத்தைத் தருவது இது.

ராகவாத்தி பயம் கோரம் ராக்ஷஸாநாமுபஸ்திதம் =ராமபிரான் மூலமாக , அரக்கர்களுக்கு
பெரிய பயம் ஏற்பட்டது , என்பதால், அரக்கர்களின் கதியற்ற நிலை ”ஆகிஞ்சன்யம் ”
சொல்லப்பட்டது. இதனால், அரக்கர்களின் கர்வம் முதலியன அழியும் என்பதால்,
”கார்ப்பண்யமும் ” சொல்லப்பட்டது என்பர்.

அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் = த்ரிஜடை சொல்கிறாள்.
அரக்கிகளே , ராமன் மூலமாக நமக்கு ஏற்படும் பயத்திலிருந்து இவள் –சீதை —
நம்மைக் காப்பாற்றுகிற சக்தி உடையவள்

அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீகணம் =
மேற்கூறிய த்ரிஜடையின் பேச்சை , ஹநுமானும், ராமனிடமிருந்து அரக்கிகளைக்
காக்கும் சக்தி உடையவள் இவள் என்று ஆமோதிக்கிறார்.
இவற்றின் மூலம், பகவான் ஒருவனைத் தண்டிக்கவேண்டும் என்று தீர்மானித்தாலும்
அதை மாற்றி பிராட்டி காப்பாற்றுவாள் என்கிற மஹா விச்வாஸம் சொல்லப்பட்டது என்பர்.

ப்ரணிபாத ப்ரஸன்னாஹி மைதிலீ ஜனகாத்மஜா |
அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் ||

மிதிலா நகரைச் சேர்ந்தவள் ,ஜனகமஹாராஜாவின் புத்ரியான ஸீதை ,
நமது நமஸ்காரத்தால் கோபம் தணிந்தவளாக ஆகிவிடுவாள் . ராக்ஷஸிகளே —
பெரிய பயத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு ,இவள் சக்தி வாய்ந்தவள் .
த்ரிஜடை இப்படிச் சொன்னபோது, ராக்ஷஸிகளுக்கு , ஸீதை ரக்ஷிப்பாள் என்கிற
மஹாவிச்வாஸம் ஏற்பட்டது.
பகவான் நிக்ரஹிப்பது , சீற்றத்தால் . பிராட்டியின் இங்கிதங்களைப் பார்த்து
அதற்கு மாறாகச் செய்யமாட்டாவதனாய் சீற்றம் ஒழிகிறது. ஸீதையை ஆச்ரயித்து
இருக்கிறார்கள் என்கிறபோது, சீற்றம் போய்விடும் .

அபியாசாம வைதேஹீம் ஏதத்தி மம ரோசதே , பர்த்ஸிதாமபி
யாசத்வம் ராக்ஷஸ்ய : கிம் விவக்ஷயா = ஸீதையிடம் , நாம், அபயம் என்று வேண்டுவோம் .
இதுவே எனக்குச் சரியாகப் படுகிறது என்று த்ரிஜடை ,அரக்கிகளிடம் சொல்கிறாள்.
நீங்கள் ஸீதையைப் பயமுறுத்தி இருந்தாலும் அவளைப் பிரார்த்தியுங்கள் .அவள்
காப்பாற்றுவாளோ என்கிற சந்தேகமே வேண்டாம் . என்கிறாள்
இதன்மூலம் , கோப்த்ருத்வ வரணம் சொல்லப்பட்டது

இப்படியாக ஸீதாதேவியிடமே பர ந்யாஸம் செய்யச் சொல்கிறாள். பகவானும் ,
பிராட்டியும் ஏக தத்வம். அதனால் இவளைக் கதியாகக் கொள்ளலாம்
ஆதலால் ரக்ஷிக்க வேண்டும் என்று ஸீதையை வேண்டுவோம் என்கிறாள் த்ரிஜடை .

அதிகாரத்திலிருந்து

இவ்வைந்துக்கும் அங்கியான ஆத்ம நிக்ஷேபம் , ப்ரணிபாத ப்ரஸந்நா ஹி மைதிலீ
ஜநகாத்மஜா என்று ப்ரஸாத காரண விசேஷத்தைச் சொல்லுகிற ப்ரணிபாத ஸப்தத்தாலே
விவ்க்ஷிதமாயிற்று . ஆகையால் ந்யாஸ :பஞ்சாங்க ஸம்யுத : என்கிற சாஸ்த்ரார்த்தம்
இங்கே பூர்ணம்

இப்படி உபதேசிக்க ராக்ஷஸிகள் விலக்க மாட்டாதே பற்றாசாகப் பிராட்டி தன் வாத்ஸல்யத்தாலே
பவேயம் சரணம் ஹி வ : என்று அருளிச் செய்தாள் . இப்பாசுரம் ஸஹ்ருதமாய்
பலபர்யந்தமானபடியை

மாதர் மைதிலீ ராக்ஷஸீ : த்வயி ததைவ ஆர்த்ராபராதா : த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா

என்று அபியுக்தர் வெளியிட்டார்கள் . இவ்விடத்தில் த்ரிஜடையுடைய ஆத்மாத்மீய
பர ஸமர்ப்பணத்திலே அவர்களுக்குப் பிறவித் துவக்காலே நம்மவர்களென்று
கண்ணோட்டம் பிறக்கும் ராக்ஷஸிகளும் அந்தர்பூதைகள் . அப்படியே
ஸ்ரீ விபீஷணாழ்வானோடு கூட வந்த நாலு ராக்ஷஸரும் அவருடைய உபாயத்திலே
அந்தர்பூதர்

வ்யாக்யானம்

ப்ரணிபாதம் ( தலை வணங்குதல் ) என்கிற பதம் , மேலே சொல்லப்பட்ட ஐந்து
அங்கங்களுடன் கூடிய ஆத்ம சமர்ப்பணத்தைச் ( அங்கி ) சொல்கிறது.

ப்ரணிபாத ப்ரஸந்நா ஹி மைதிலீ ஜநகாத்மஜா = நீங்கள் ஸீதையிடம்
செய்த ப்ரபத்தியால் , அவள் உங்களுக்குக் கருணை புரிபவளாக இருக்கிறாள் .

ந்யாஸ :பஞ்சாங்க ஸம்யுத : = லக்ஷ்மீ தந்த்ரம் கூறுகிறது.
ஐந்து அங்கங்களுடன் கூடியது , ”ந்யாஸம் ” என்பது ,த்ரிஜடையின் சரணாகதியில்
நன்கு வெளிப்பட்டது. ஐந்துஅங்கங்களுடன் சேர்த்துச் சொல்லப்பட்ட இந்த
நமஸ்காரம் –ப்ரபத்தியே

இப்படியாக, த்ரிஜடை சொன்னதை அரக்கிகள் மறுக்க வில்லை.வெளிப்படையாகச்
”சரணம் அடைகிறோம் ” என்று சொல்லா விட்டாலும், த்ரிஜடை சொன்னதை மறுக்காமல்
இருந்ததையே ,ஏற்புடையதாகக் கொண்டு, ஸீதை , அரக்கிகளிடம் ,”நான் உங்களுக்கு
அடைக்கலமாக இருக்கிறேன் ” என்றால்.

ஸ்ரீகுணரத்னகோசம் ( 50 )

மாதர் மைதிலீ ! ராக்ஷஸீ த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரக்ஷந்த்யா பவனாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டீ க்ருதா |
காகம் த விபீஷணம் ”சரணம்” இத்யுக்தி க்ஷமெள ரக்ஷத :
ஸாந : ஸாந்த்ரமஹாகஸ : ஸுகயது க்ஷாந்திஸ் தவாகஸ்மிகீ ||

மாத : ! மைதிலி ! =எல்லாருக்குக்கும் தாயான மிதிலைநகரத்து அரசனின் குமாரியே ! மைதிலியே !
த்வயி =தேவரீரிடம் அப்போதே தவறுகளைச் செய்துகொண்டே இருந்த அசோகவனத்து
ராக்ஷஸிகளை ,வாயுபுத்ரனான அனுமனிடமிருந்து காப்பாற்றிய தேவரால் ,அடைக்கலம்
என்று வந்த காகாசுரனையும் ,தர்மாத்மாவான விபீஷணனையும் பாதுகாத்த ஸ்ரீ ராமபிரானின்
செயலானது , சற்று லேசானதுபோல் ஆகிவிட்டது.
ஸா ஆகஸ்மிகீ = அத்தகைய வேண்டுதலை எதிர்பார்க்காமல் அநுக்ரஹித்த தேவரீருடைய
க்ஷாந்தி: =பொறுமை என்கிற குணம் , ஸாந்த்ரமஹாகஸ : = (குற்றம் செய்த கை உலராமல்
இருக்கும் சமயத்திலும் ) பசுமையான பெரிய குற்றங்களைச் செய்கிற எங்களை,
ந : ஸுகயது =அப்படிப்பட்ட எங்களுக்கு நன்மை அடையச் செய்யட்டும்.
ஹே —மைதிலீ —ரங்கநாயகி –உன்னுடைய க்ஷமை என்கிற குணத்தால் ,ராக்ஷஸிகள் கேட்காமலே
அவர்களை ரக்ஷித்தாய் .எங்களையும் ரக்ஷிப்பாயாக —–
என்கிறார்.
ராக்ஷஸிகளை, வாயுபுத்ரனான ஹநுமானிடமிருந்து காப்பாற்றினாள் .
சரணம் என்று தாமே சொல்லாவிட்டாலும் காப்பாற்றினாள் . காத்தலே –க்ஷமை என்கிற குணம்.
ஸீதையின் திருவோலக்கத்திலே சேர்ந்துவிட்டதாலே ,த்ரிஜடை சொன்னதற்கு மறுப்பு
இல்லாததாலே —இதுவே சரணாகதி . இவர்களுக்கும் சேர்த்து த்ரிஜடை சரணாகதி.
ஒரு ராக்ஷஸ குலத்திலே –பிறவியினாலே ஏற்பட்ட ஸம்பந்தம் .

அதிகாரத்திலிருந்து

விபீஷண சரணாகதி

அங்குற்ற அபயப்ரதான ப்ரகரணத்திலும் இவ்வங்க அங்கி வர்க்கம் அடைக்கலாம் .
எங்ஙனேயென்னில் ப்ராதிகூல்யத்திலே வ்யவஸ்திதனான ராவணனக்குங்கூடப்
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ , ஸீதாம் ச ராமாய நிவேத்ய தேவீம் வஸேம
ராஜந்நிஹ வீதசோகா : என்று ஹிதம் சொல்லுகையாலே ஆனுகூல்யஸங்கல்பம்
தோற்றிற்று . இந்த ஹித வசனம் பித்தோபஹதனுக்குப் பால் கைக்குமாப்போலே
அவனுக்கு உத்வேக ஹேதுவாயிற்று . த்வாம் து திக் குல பாம்ஸநம் என்று திக்காரம்
பண்ணினபின்பு இனி இவனுக்கு உபதேசிக்கவும் ஆகாது , இவனோடு அனுபந்தித்த
விபூதிகளுமாகாது , இருந்தவிடத்தில் இருக்கவுமாகாதென்று அறுதியிட்டு

த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச , பரித்யக்தா மயா லங்காம் மித்ராபி ச தநாநி ச
என்கிற ஸ்வவாக்யத்தின்படியே அங்குத் துவக்கற்றுப் போருகையாலே ப்ராதிகூல்ய
வர்ஜந அபிஸந்தி தோற்றிற்று . ராவணோ நாம துர்வ்ருத்த : என்று தொடங்கி
ஸர்வஜித்தான ராவணனோட்டை விரோதத்தாலே தாம் போக்கற்று நிற்கிற நிலையைச்
சொல்லுகையாலும் , பின்பும்

அநுஜோ ராவணஸ்யாஹம் தேந ஸாஸ்ம்யவமாநித :
பவந்தாம் ஸர்வபூதாநாம் சரண்யம் சரண்யம் கத :

என்கையாலும் கார்ப்பண்யம் சொல்லப்பட்டது. அஞ்சாதே வந்து கிட்டி ஸர்வலோக
சரண்யாய ராகவாய மஹாத்மனே என்று சொல்லும்படி பண்ணின மஹா விச்வாஸம்
விபீஷணோ மஹாப்ராஜ்ஞ : என்று காரண முகத்தாலே சொல்லப்பட்டது. ப்ராஜ்ஞதையை
விசேஷிக்கிற மஹச் சப்தத்தாலே விச்வாஸாதிசயந்தானே விவக்ஷிதமாகவுமாம் .
ராகவம் சரணம் கத : என்கையாலே உபாய வராணாந்தர்நீதமான கோப்த்ருவ வரணம்
சொல்லிற்றாயிற்று . உபாயவரண ஸப்தத்தாலே வ்யாஜ்ஜிதமாகிறவளன்றிக்கே ,
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபாஸ்திதம் என்கையாலே கடக புரஸ்ஸரமான
ஆத்ம நிக்ஷேபம் சொல்லிற்று. இப்ப்ரகரணத்திலே நிவேதந சப்தம் விஜ்ஞாபநமாத்ர
பரமானால் நிஷ்ப்ரயோஜனம்

இப்படி மற்றுமுள்ள ப்ரபத்தி ப்ரகரணங்களிலும் லௌகிக த்ரவ்ய நிக்ஷேபங்களிலும்
ஸம்க்ஷேப விஸ்தர ப்ரக்ரியையாலே இவ்வர்த்தங்கள் காணலாம். தான் ரக்ஷிக்க
மாட்டாதொரு வஸ்துவை ரக்ஷிக்க வல்லவனொருவன் பக்கலிலே ஸமர்ப்பிக்கும் போது
தான் அவன் திறத்தில் அநுகூலாபிஸந்தியை யுடையவனாய் , ப்ரதிகூலாபிஸந்தியைத்
தவிர்த்து , ”இவன் ரக்ஷிக்க வல்லவன் , அபேக்ஷித்தால் ரக்ஷிப்பதும் செய்யும் ” , என்று தேறி
தான் ரக்ஷித்துக் கொள்ள மாட்டாமையை அறிவித்து , நீ ரக்ஷிக்க வேண்டுமென்று அபேக்ஷித்து
ரக்ஷ்ய வஸ்துவை அவன் பக்கலிலே ஸமர்ப்பித்துத் தான் நிர்பரனாய் பயங்கெட்டு மார்பிலே
கைவைத்துக் கொண்டு கிடந்து உறங்கக் காணா நின்றோமிறே

வ்யாக்யானம்

ராமபிரானால் அபயம் அளிக்கப்பட சந்தர்ப்பத்திலும் இந்த அங்கம் ,அங்கிகள்
காணக் கிடைக்கின்றன. ராவணன் ,தகாதவற்றைச் செய்ய வேகமாக இருந்தான். அவனுக்கு
விபீஷணன் சொன்ன நன்மையைக் கொடுக்கும் வார்த்தைகள்
ஸ்ரீமத் ராமாயணம் –யுத்த காண்டம் ( 9–22 ) ம் மற்றும்

பூரா ஸரத்ஸூர்ய மரீசி ஸன்னிபான் நவான்
ஸுபுங்கான் ஸுத்ருடான் ந்ருபாத்மஜ |
ஸ்ருஜத்யமோகான் விஸிகான் வதாய தே
ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||

த்யஜஸ்வ கோபம் ஸுகதர்ம நாஸனம்
யஜஸ்வ தர்மம் ரதிகீர்தி வர்தனம் |
ப்ரஸீத ஜீவேம ஸுபுத்ர பாந்தவா :
ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||

யாவன்ன லங்காம் ஸமபித்ரவந்தீ வலீமுகா : பர்வத கூடமாத்ரா : |
தம்ஷ்ட்ராயுதாஸ்சைவ நகாயுதாஸ்ச ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||

யாவன்ன க்ருஷ்ணந்தி ஸிராம்ஸி வாணா ராமேரிதா ராக்ஷஸ புங்கவானாம் |
வஜ்ரோபமா வாயு ஸமான வேகா : ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||

ராமனிடம் ஸீதையை ஒப்படைத்து விடு
என்றும்,ஸீதையை , ராமனிடம் ஒப்படைத்துவிட்டு ,நாம் இந்த லங்காராஜ்யத்தில்
வருத்த மில்லாமல் வாழலாம் —
என்றெல்லாம் விபீஷணன் சொல்கிறான்—இவை ஆனுகூல்ய ஸங்கல்பம்

இந்த வார்த்தைகள், பித்து ஏறிய ஒருவனுக்குப் பால் கசக்குமாப்போலே
ஆயிற்று. ராவணன் கோபப்பட்டான்

த்வாம் து திக் குல பாம்ஸநம் = நம்முடைய அசுரகுலத்தைக் கெடுக்கிற
உன்னை அவமதிக்கிறேன் என்று ராவணன் கோபப்பட்டவுடன் , இனி இவனுக்கு
உபதேசம் செய்துப் பயனில்லை; இவனுடைய சொத்துக்கள் எதையும்
அனுபவிக்கக்  கூடாது; இவனுடன் இங்கு இருக்கவும் தகாது —என்று விபீஷணன் தீர்மானிக்கிறான்

இப்படித் தீர்மானித்த விபீஷணன்
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச , பரித்யக்தா மயா லங்காம் மித்ராபி ச தநாநி ச =
புத்ரன் ,மனைவி இவர்களைத் துறந்து ராமனைச் சரணடைந்தேன் ;லங்கை, நண்பர்கள்
செல்வம் ஆகியவற்றையும் துறந்தேன் –என்று சொல்வதால் , ப்ராதிகூல்ய வர்ஜனம்
வெளிப்படுகிறது.

அதே யுத்த காண்டத்தில்,
ராவணோ நாம துர்வ்ருத்த : என்று தொடங்கி
ஸர்வஜித்தான ராவணனோட்டை விரோதத்தாலே தாம் போக்கற்று நிற்கிற நிலையைச்
சொல்லுகையாலும் , = ராவணன் மோசமான நடவடிக்கையுள்ளவன், அனைவரையும்
ஜயித்திருக்கிறான் , அவனிடம் விரோதப்பட்டேன் , எனக்கு வேறு புகலிடம் இல்லை,
ராவணனின் இளைய சகோதரன், அவனால் அவமானப்படுத்தப்பட்டேன், எல்லா ஜீவன்களுக்கும்
ரக்ஷகன் நீ, உன்னைச் சரணமாக அடைந்தேன் —-
என்கிறான்.
அநுஜோ ராவணஸ்யாஹம் தேந ஸாஸ்ம்யவமாநித :
பவந்தாம் ஸர்வபூதாநாம் சரண்யம் சரண்யம் கத :
இதனால், கார்பண்யம் வெளிப்பட்டது.

ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மனே என்று சொல்லும்படி பண்ணின மஹா விச்வாஸம்
விபீஷணோ மஹாப்ராஜ்ஞ : என்று காரண முகத்தாலே சொல்லப் பட்டது. ப்ராஜ்ஞதையை
விசேஷிக்கிற மஹச் சப்தத்தாலே விச்வாஸாதிசயந்தானே விவக்ஷிதமாகவுமாம் .
ராகவம் சரணம் கத : என்கையாலே உபாய வராணாந்தர்நீதமான கோப்த்ருவ வரணம்
சொல்லிற்றாயிற்று . உபாய வரண ஸப்தத்தாலே வ்யாஜ்ஜிதமாகிறவளன்றிக்கே ,
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபாஸ்திதம் என்கையாலே கடக புரஸ்ஸரமான
ஆத்ம நிக்ஷேபம் சொல்லிற்று. இப்ப்ரகரணத்திலே நிவேதந சப்தம் விஜ்ஞாபநமாத்ர
பரமானால் நிஷ்ப்ரயோஜனம் =
ராமன் சர்வலோக சரண்யன் என்கிறான் —மஹாவிச்வாஸம்
விபீஷணோ மஹாப்ராஜ்ஞ : =விபீஷணன் மிகுந்த புத்திசாலி ;அறிவுள்ளவன்
”மஹ ” என்கிற பதத்தாலே மிகுந்த –ஞானம் —இவற்றைச் சொல்லி, விபீஷணனின்
விச்வாஸத்தையும் சொல்கிறது.
ராகவம் சரணம் கத : =ராமனைச் சரணமடைந்தேன் — இது கோப்த்ருத்வ வரணம் ஆகும்.

நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபாஸ்திதம் =விபீஷணனாகிய என்னை, ராமனிடம்
ஸமர்ப்பியுங்கள் –இதில் ”ஆத்ம நிக்ஷேபம் ”சொல்லப்பட்டது.
விபீஷணனுடன் கூடவந்தவர்களுக்கும் ,ராமபிரான் அருள்கிறான். அவர்கள் கேட்கா விட்டாலும்,
விபீஷணன் ப்ரார்த்தித்த போது , அதில் அடக்கம்.

மற்ற ப்ரபத்தி நூல்களிலும், இந்த விஷயங்கள் , அதாவது,ஒருவரின் பொருளை ,மற்ற ஒருவரிடம்
வைப்பது—அப்பொருளைத் தன்னால் காக்க இயலாது நினைப்பவன், இவனால்தான்
பாதுகாக்க முடியும் வேண்டினால் இவன் பாதுகாப்பான் என்று தீர்மானித்து,அவனிடம் சென்று
பொருளைக்காக்க இயலாத நிலைமையைச் சொல்லி, நீயே காக்கவேண்டும் என்று
வேண்டுவது. வேண்டுதல் நிறைவேறியவுடன் , பொருளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு ,
மார்பிலே கைவைத்துச் சுகமாக உறங்குவது –இவற்றை இவ்வுலகில் காண்கிறோம்

அதிகாரத்திலிருந்து

இக்கட்டளை யெல்லாம் க்ரியாமாணார்த்த ப்ரகாசகமான த்வயாக்யமந்த்ரத்திலே அநுஸந்திக்கும்படி
எங்ஙனே யென்னில் —ஸர்வஜ்ஞ ஸர்வ சக்தியுக்தனாய் ,கர்மாநுரூப பலப்ரதனாய் ,ஸர்வோபகார
நிரபேக்ஷனாய் ,க்ஷூ த்ர தேவதைகளைப் போலே க்ஷிப்ரகாரி யன்றிக்கே யிருப்பானாய் ,
ஸமாதிக தரித்ரனான ஸர்வேச்வரன் அநந்தாபராதங்களையுடையார்க்கு அபிகமயனாகையும்,
ப்ராப்தி விரோதியான அநந்தாபராதங்களை யுடையார்க்குஅளவில்லாத பலத்தைத் தருகையும்
அல்பவ்யாபாரத்துக்குத் தருகையும் ,தாழாதே தருகையும் ,தரம் பாராதே தருகையும் கூடுமோவென்கிற
சங்கைகளுக்கு நிவர்த்தகங்களுமாய் யதா ஸம்பவம் உபாயத்வப்ராப்யத்வோப யுக்தங்களுமாய்
இருந்துள்ள புருஷகார ஸம்பந்த குண வ்யாபார ப்ரயோஜன விசேஷங்களாகிற சேஷியினுடைய
ஆகாரங்களைப் பொதிந்து கொண்டிருக்கிற ஸ்ரீமச் சப்தத்திலும் நாராயண சப்தத்திலும் ஆர்த்தமாக
ஆநுகூல்ய ஸங்கல்பமும் ப்ராதிகூல வர்ஜனமும் அநுஸந்தேயமாகக் கடவது . இப்படி
விசிஷ்டனான ஸ்வாமியைக் காட்டுகிற சப்தங்கள் ஒளசித்யத்தாலே அவன் திறத்தில் ப்ராப்தமான
அபிவதாநுவர்த்தன ஸங்கல்பத்தையும் அநபிமத நிவர்த்தனத்தையும் ப்ரகாசிப்பிக்கின்றன

வ்யாக்யானம்

ப்ரபத்தியின் உள்ளார்ந்த அர்த்தத்தைச் சொல்லும் ”த்வயத்”தில் ஐந்து அங்கங்கள் வெளிப்படுகின்றன
எப்படி என்றால், எல்லாம் அறிந்துணர்ந்தவன் , எங்குமுள்ளவன் , செய்யும் கர்மங்களுக்கு
ஏற்றபடி பலனளிப்பவன் ,வேறு எவருடைய உதவியும் வேண்டாதவன் ,மற்ற தேவதைகள் போன்று
உடனே பலனளிக்காதவன் தனக்கு நிகரும் .மிக்காரும் இல்லாதவன் என்று இருக்கிற
ஸர்வேச்வரன் விஷயத்தில் சந்தேகங்கள் வந்தால் ,

1. கணக்கற்றத் தவறுகள் செய்தவர்கள் ,பகவானை நெருங்கமுடியுமா
2. கணக்கற்றத் தவறுகள் செய்தவர்கள்,அவற்றால் தடைப்படும் பலன்களை எவ்விதக்
கட்டுப்பாடும் இல்லாமல் பகவானிடமிருந்து பெறமுடியுமா
3.அல்பமான கர்மாக்களைச் செய்தவர்களும் பலன்களை அடைய முடியுமா
4.இத்தகைய பலன்கள் தாமதமின்றிக் கிடைக்குமா
5.தன்னடியார்களிடம் ஏற்றத்தாழ்வு பாராமல் இருப்பானா
இவற்றுக்கெல்லாம் , பகவான் எவ்வித விசேஷங்களை உடையவன் என்பதை முதலில்
அறியவேண்டும்

பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டுள்ளவன்
பிராட்டியோடு கலந்து பேசும் போது ,குற்றங்களைப் பற்றியே பேசும் பகவான் ,
புருஷகாரமாகப் பிராட்டியைப் பற்றிய பிறகு ,இவன்( சேதனன் ) செய்த குற்றங்களை
மறந்தாற்போல இருக்கிறான் ..பகவானுக்கு ”அவிஜ்ஞாதா ” என்று ஸஹஸ்ரநாமத்தில்
ஒரு திருநாமம் உண்டு. குற்றத்தை அறியாதவன் என்று பொருள் . தெரிந்தும் தெரியாதவன்போல
இருப்பவன் .
எஜமானன் –வேலைக்காரன் என்கிற உறவுமுறை தனது படைப்புகள் மீது ஆழ்ந்த அன்பு
உள்ளவன் . அனைத்து உயிர்களையும் , கரைசேர்க்கும் எண்ணமுள்ளவன் .
இவ்வாறு கரையேற்றுவதைத் தனது பலனாகக் கொண்டவன்
இந்த எஜமானக் குணங்கள் ,த்வயத்தில் ”ஸ்ரீமத் ” என்கிற வார்த்தை மூலமாகவும்
அவனின் திருவடியை அடைதல் என்பதை ”நாராயண ” என்கிற வார்த்தை மூலமாகவும்
தெளியப்படுகிறது . ஆனால், பகவானுக்கு விருப்பமானத்தைச் செய்வேன்,விருப்பமில்லாததைச்
செய்யமாட்டேன் என்கிற எண்ணம் இல்லாதவனுக்கு ,மேற்கூறியவைகள் வெளிப்படாது.

மோக்ஷர்த்தமாகப் பகவானைச் சரணமடையும்போது ,பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு
சரணமடையவேண்டும். ஸ்ரீ பாஷ்யகாரர் , கத்ய த்ரய ஆரம்பத்தில், சரணாகதி கத்யத்தில்
பகவந் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப , ரூபகுண ,விபவ ,ஐஸ்வர்யசீலாதி ,அநவதிக,
அதிசய ,அசங்க்யேய , கல்யாண குணகணாம் பத்மவநாலயாம் ,பகவதீம் ச்ரியம் தேவீம் ,
நித்யானபாயினீம் ,நிரவத்யாம் தேவதேவ திவ்ய மஹிஷீம் அகிலஜகன்மாதரம் அஸ்மந்
மாதரம் அசரண்ய சரண்யாம் ,அநந்யசரண : சரணமஹம் ப்ரபத்யே —-
என்று இப்படி, முதல் சூர்ணிகையாலே பிராட்டியைச் சரணமடைகிறார்.
”பகவந் நாராயண” —-என்று ஆரம்பம் . ”பகவதீம் ச்ரியம் தேவீம்—-” நடுவில் வருவது.
”பகவத்” ஸப்த ஸ்தானத்தில் ,”பகவதீம் ” என்றும் , ”நாராயண ” ஸப்த ஸ்தானத்திலே
”ச்ரியம் ” என்றும் உள்ளது . இதனால்,பகவத் ஸப்தத்தின் பொருளும் ,நாராயண ஸப்தத்தின்
பொருளும் பிராட்டியிடம் உண்டு என்பது தெளிவாகிறது.த்வய அதிகாரத்தில் ,
ஸ்ரீ பாஷ்யகாரரும்” பகவந் நாராயண ” என்கிற நேரிலே ”பகவத் ச்ரியம் ” என்று
அருளிச் செய்தாரென்று ஸ்வாமி தேசிகன் சொல்கிறார். மேற்கொண்டு,
இதன் விவரத்தை 28 வது ”த்வய அதிகாரத்தில் ” பார்க்கலாம்.

ஸ்ரீ ச்ருதப்ரகாசிகா ஆசார்யர் ——
சரணாகதி கத்ய வ்யாக்யானத்தில் பிராட்டியின் சாக்ஷாத் உபாயத்வத்தை ,
ஸம்ப்ரதாய ஸித்தம் என்று அருள்கிறார்.
பகவந் நாராயண ——-இத்யாதியை புருஷகார ப்ரபத்திபரமாக யோசித்து
ச்ரியம் ப்ரபத்ய ,தத் ஸந்நிதெள , மூல மந்த்ரேண ,ஸ்வரூபானுரூப ,புருஷார்த்தப்ரார்த்தனம்
ததுபாய ப்ரார்த்தனா பர்யந்தம் க்ருத்வா ,ததுநுஜ்ஞயா ,த்வயம் அநுஸந்தீயதே இதி
பூர்வாசார்ய அநுஸந்தானம் அநுசஸ்மரன் ப்ரதமம் ச்ரியம் ப்ரபத்யதே —————-

மூல மந்த்ரத்தைக் கொண்டு பிராட்டியிடம் புருஷார்த்த ப்ரார்த்தனமும் செய்து ,
உபாயத்வ ப்ரார்த்தனமும் செய்து ,பிறகு பகவானை சரண வரணம் பண்ணுவது
பூர்வாசார்ய ஸம்ப்ரதாயம் .

லக்ஷ்மி கல்யாணத்தில், பட்டர்
”பத்மாயா : தவ ச சரணெள ந : சரணயந் ” ஸாரஸாஸ்த்ரத்திலே உதாஹரித்துள்ளார் .
ஸ்ரீ பராசர பட்டர் தன்னுடைய குணரத்ன கோசத்திலே –32 வது ச்லோகத்தில்
ப்ரஸகந பலஜ்யோதிர் ஜ்ஞாநைஸ்வரீ விஜய ப்ரதா —
ப்ரணத வரணப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா : |
அபி பரிமல : காந்திர் லாவண்யம் அர்ச்சி :இதீந்திரே !
தவ பகவதஸ்சைதேஸாதாரணா குணராஸய : ||

ப்ரேம = அடியார்களின் பிரிவைத் தாங்காதவன் க்ஷேமங்கரத்வ =அடியார்களிடம்
குற்றங்களை நீக்கி அவர்களுக்கு மோக்ஷபர்யந்தமான நன்மைகளைச் செய்பவன்

சதுச்லோகி
—————–

நான்கு வ்யூஹம் —அதில் அநிருத்தன் ஒன்று.அநிருத்த வ்யூஹத்திலிருந்து
விபவ மூர்த்திகள் —-ஹார்த்தம் ( ஹ்ருதயத்தில் வாஸம் )
அர்ச்சை , விபவ மூர்த்திகளே —-
லக்ஷ்மி தந்த்ரம் —பகவானின் 38 விபவங்களைச் சொல்கிறது.கேசவாதி மூர்த்திகள்
அம்மூர்த்திகளுக்குப் பத்னியும் சொல்லப்படுகிறது
ப்ரஹ்ம ஸூத்ரம் —–4 அத்யாயம் பகவானுக்கு இதில் சொல்லப்பட்ட 4 அம்சங்களும்
பிராட்டிக்கும் உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது

சதுச்லோகீ —4 ச்லோகமாக ஸ்ரீ ஆளவந்தார் அருளினார்
1. உலகுக்கெல்லாம் இவள் பகவானைப்போல ”சேஷீ ”
2.பகவானுக்கும் ,பிராட்டிக்கும் ”மேன்மை ”ஒரே விதமாகத் தானாகவே ஏற்பட்டது
3.மோக்ஷமும் இவள் அநுக்ரஹத்தாலே
4. இவளுக்கும் ”விபுத்வம் ” பகவானின் எங்கும் பரவியிருக்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில்
பிராட்டியும் நெருக்கமாக இணைந்திருப்பதாலே ,பகவானுக்கு உள்ள விபுத்வம்
இவளுக்கும் உண்டு.

மதுராந்தகம் ஸ்வாமி தன்னுடைய ”ஸம்ப்ரதாய ஸுதா ” என்கிற க்ரந்தத்தில்,
6 வது அதிகாரத்தில் ” லக்ஷ்மி உபாயத்வ ஸம்ரக்ஷணம் ” என்பதாகச் சொல்கிறார்.
ஸ்ரீ ஸுக்த பாஷ்யத்திலே —-பெரிய ஜீயர் சொன்னதை இங்கு சொல்கிறார்

ச்ரியம் ஸ்ரீரீஸ்ரயே இதி ஸர்வாதாரத்வம் புருஷகாரத்வேந உபாயத்வேந
சாஸ் ரீயமாணத்வம் ஸ்ர்ருஹிம்ஸாயாமிதி ஆச்ரித தோஷ நிவர்தகத்வம்
ஸ்ராபரிபாகே இதி ஆச்ரிததோஷாநபஹாய ச்ரீணாத் ச குணைர்ஜகத் இதி
ஆச்ரிதகுணபூரகத்வம் ஏவமாதயே : தர்மா : ஸுசிதா : ச்ரீஸப்தேந ——

——————————————-

ஸ்ரீ பாஞ்சராத்ர வசனம் இப்படிச் சொல்கிறது —-
லக்ஷ்மீம் ச மாம் ஸுரேசம் ச த்வயேன சரணம் கத : |
மல்லோகம் அசிரால்லப்த்வா மத்ஸாயுஜ்யம் ஸ கச்சதி ||

அதிகாரத்திலிருந்து

சேஷியின் புருஷகாரம் போன்றவைகள்

இப் புருஷகாராதிகள் அஞ்சுக்கும் விசேஷங்களாவன —
மறுக்க வொண்ணாமையும் ,ஒழிக்க ஒழியாமையும் , நிருபாதிகமாகையும் ,ஸஹகாரியைப்
பார்த்திருக்க வேண்டாமையும் ,தண்ணியரான பிறருடைய பேறே தன் பேறாகையும்

வ்யாக்யானம்

பிராட்டியிடமிருந்து புருஷகாரமாக ( சிபாரிசாக ) பகவான் பெறுகின்றவை ஐந்து
தன்மைகள் உள்ளவையாகும். அவை —-1.பிராட்டி சொல்வதை மறுக்க இயலாமை
2.சரணம் என்று வந்தவர்களைத் தள்ள இயலாமை 3.எதிர்பார்ப்பு இல்லாமல்
இருத்தல் 4.சரணம் அடைய வேறு எதையும் எதிர்பாராது இருத்தல் 5.சரணமடைத்தவர்களின்
பலனைத் தன்னுடைய பலனாக நினைத்தால்
புருஷகாராதிகள் 5ம் ஸ்ரீமந் நாராயண என்கிற சொல்லில் அடங்கியுள்ளன.
ஸ்ரீ —என்பதால், புருஷகாரமான பிராட்டி சொல்லப்படுகிறாள். நார —-என்பதிலிருந்து
பகவானுக்கும் ஜீவனுக்கும் உள்ள ஸம்பந்தம் சொல்லப்படுகிறது . நார –சப்தமே
பகவானின் குணங்களைச் சொல்லிற்று .ஆனுகூல்ய ஸங்கல்பம் , ப்ராதிகூல்ய வர்ஜனம்

அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தி -இதற்கு ஐந்து சந்தேகங்கள்

இவ் விசேஷங்கள் அஞ்சாலும் சங்காபரிஹாரம் பிறந்தபடி எங்ஙனே யென்னில்

ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தி யாயிருந்தானே யாகிலும் மறுக்க வொண்ணாத புருஷகார
விசேஷத்தாலே அந்தப்புர பரிஜந விஷயத்திற்போலே அபிகந்தவ்யதா விரோதிகளான
அபராதங்களை யெல்லாம் க்ஷமித்து இவற்றில் அவிஜ்ஞாதா என்னும்படி நின்று அபீகந்தவ்யனாம்

கர்மாநுரூப பலப்ரதனேயாகிலும் இப்பிரபத்தி ரூப வ்யாஜத்தாலே ப்ரஸன்னானாய்
ஸ்வாமித்வ தாஸத்வ ஸம்பந்தோபோதிதமாய் தாயம் போலே ஸ்வத :ப்ராப்தமான
அளவில்லாத பலத்தையும் தரும்.

அவாப்த ஸமஸ்த காமதையாலே ஸர்வோபகார நிரபேக்ஷனேயாகிலும் அல்பவ்யாஜத்தாலே
வசீகார்யனான ஸுஜந ஸார்வபௌமனைப் போலே தன் நிரூபாதிக காருண்யாதிகளாலே
இவன் செய்கிற சிலவான வ்யாபாரத்தைத் தனக்குப் பறிபோபகாரமாக ஆதரித்துக்கொண்டு
க்ருதஜ்ஞனாய்க் கார்யம் செய்யும் க்ஷூத்ர தேவதைகளைப் போலே க்ஷிப்ரகாரியன்றாகிலும்
மற்றுள்ள சாஸ்த்ரார்த்தங்களுக்கு விளம்பித்துப் பலங்கொடுத்தானே யாகிலும்
அநந்ய சரணனுடைய ப்ரபத்திக்கு ஒளதார்யாதி குண ஸஹிதமாய் சஹகார்யாந்தர நிரபேக்ஷமான
தன் ஸங்கல்ப மாத்ரத்தாலே காக விபூஷணாதிகளுக்குப் போலே இவன் கோலின காலத்திலே
அபேக்ஷிதம் கொடுக்கும்

ஸமாதிக தரித்ரனேயாகிலும் ஸ்வாதந்த்ரயாதி குணவிசிஷ்டனாய் தன் ப்ரயோஜனமாக
ஆச்ரிதருக்கு அபேக்ஷிதம் செய்கிறானாகையால் கோசல ஜனபதத்தில் ஜந்துக்களுக்குப் போலே
குமாரனோடொக்கத் திர்யக்கான கிளிக்குப் பாலூட்டுங்கணக்கிலே தரம் பாராதே கொடுக்கும்

இப்படி யதாலோகம் பிறந்த சங்கைகளுக்கு யதாலோகம் பரிஹாரமுண்டாகையாலே
யதா சாஸ்த்ரம் ப்ரபத்தி அபேக்ஷித சாதனமாகக் குறையில்லை

வ்யாக்யானம்

ப்ரபத்தி சம்பந்தமான ஐந்து சந்தேகங்களும் .ஐந்து தன்மைகளால் நீங்கியது
எப்படியெனில் —–
பகவான் அனைத்துமறிந்தவன் ;அனைத்து சக்தியுமுள்ளவன்.இருப்பினும், பிராட்டியின்
புருஷகாரத்தை மறுக்க இயலாதவன்.ராணியின் ஆட்கள் தவறுகள் செய்தாலும் ,
அரசன் பொறுத்துக்கொள்வதைப் போலே , புருஷகார பூதையான பிராட்டியின் தயைக்கு
உள்ளானவர்களின் குற்றங்களைப் பொறுக்கிறான் .இவைகளைக் காணாமல் போல்
இருக்கிறான்

அவரவர் கர்மங்களுக்குத் தக்க பலனை அளிப்பவனாக இருந்தாலும், ப்ரபத்தி
செய்தவனிடம் அதிகக் கருணை காட்டுகிறான் . ஆண்டான் –அடிமை உறவு இருந்தாலும்
அடிமை தவறுகள் செய்தாலும், அவர்கள் அடையவேண்டிய நன்மைகளைச் செய்கிறான்

பகவான் அடையவேண்டிய அனைத்துமுள்ளவன் ;அதற்கு எவருடைய உதவியும்
தேவையில்லாதவன். நாம் செய்யும் ப்ரபத்தியை ,நாம் அவனுக்குச் செய்யும் பேறாகக்
கருதுகிறான்;இது அவனுடைய காருண்யத்தைக் காட்டுகிறது.ஒரு அரசனுக்கு, ஒருவன்
சிறியதாக ஒன்றைச் சமர்ப்பித்தாலும் , அதனால் மகிழும் அவர் , எண்ணற்ற உதவிகளைச்
செய்வதை இது ஒக்கும்

பகவான் சாதாரண தேவதைகளைப்போல உடனே பலனளிப்பதில்லை . மற்ற சாஸ்த்ரங்களின்படி
நடப்பவனுக்கு சற்றுத் தாமதமாகவே பலனைத் தருகிறான் . ஆனால்,மற்ற உபாயங்களைத்
தள்ளி, சரணம் என்று ப்ரபத்தி செய்தவர்கள் வேண்டுவதை உடனே நிறைவேற்றுகிறான்
இதை,காகாசுரன், விபீஷணன் விருத்தாங்தங்களில் காணலாம்.

இவனுக்கு ஒப்பாரும் இல்லை ; மிக்காரும் இல்லை.இவன் ஸர்வ ஸ்வதந்த்ரன் .
ஆனாலும் தன்னை அண்டியவர்களின் விருப்பப்படி நடந்து ,மகிழ்ச்சி அடைகிறான் யாருடைய
உயர்வு தாழ்வையும் பார்ப்பதில்லை.தான் வளர்க்கும் கிளிக்குப் பாலூட்டும்
ராஜகுமாரன் முதல், குழந்தைக்குப் பாலூட்டும் விலங்குகள் வரை, ராமபிரான்
கோசலநாட்டில் சமமாக நடத்தினான்

ப்ரபத்தி குறித்து நாம் அன்றாடம் செயல்படும்போது ஏற்படும் சந்தேகங்கள் ,நாம் அன்றாடம்
செய்யும் செயல்கள் மூலமாகவே தீர்க்கப்பட்டன ஆதலால், ப்ரபத்தி என்பது
பகவானை அடைவதற்கான உபாயம் என்று தெளிவாகிறது.

அதிகாரத்திலிருந்து
மஹாவிச்வாஸம் —ஆசார்ய கடாக்ஷம் மூலமே

இவ் விசிஷ்டமான புருஷகாராதிகள் அஞ்சையும் ஸதாசார்ய கடாக்ஷ விசேஷத்தாலே
தெளிந்தவனுக்கல்லது மஹா விச்வாஸம் பிறவாது.எங்ஙனேயென்னில் —-ஈச்வரன்
அபிமுகநல்லாமையாலே கர்ம யோகாதிகளுக்குஅநர்ஹனாம்படியான மஹாபராதங்களை
உடையவனாய் திகசுசிமவிநீதம் என்கிற ச்லோகத்தின்படியே எட்ட அரிய பலத்தைக்
கணிசிக்கும்படியான சாபலத்தையுமுடையவனாய் இப்பலத்துக்கு அநுஷ்டிக்கப் புகுகிற
உபாயம் காயக்லேச அர்த்தவ்யய காலதைர்த்யாதிகளொன்றும் வேண்டாததொரு
ஸக்ருதநுஸந்தானமாதல் , ஸமுதாயஜ்ஞான பூர்வக ஸக்ருதுக்திமாத்ரமாதலாய் ,
இந்த லகுதரமான உபாயத்தைக் கொண்டு அந்த குருதரமான பலத்தைத் தான்
கோலின காலத்திலே பெற ஆசைப்பட்டு இப்பலத்துக்கு சுநமிவ புரோடாச :
என்கிறபடியே ஜன்மவ்ருத்தாதிகளாலே தான் அநர்ஹனாய் வைத்துத் தன் அநுபந்திகளையுங் கொண்டு
இப்பேறு பெறுவதற்காக ஒருத்தனுக்கு மஹாவிச்வாஸம் பிறக்கையில் அருமையை நினைந்து
கலவெள்ளுக்கட்டுப்போய்க் கல எண்ணெயாயிற்று என்று எம்பார் அருளிச்செய்தாரிறே

வ்யாக்யானம்

இதற்கு முன்பு சொல்லப்பட்ட புருஷகாரம் முதலான ஐந்தையும் ,ஆசார்யன் க்ருபையால்
தெரிந்துகொள்ளாதவனுக்கு ,மஹாவிச்வாஸம் ஏற்படாது. மஹாவிச்வாஸம் ஏற்படவில்லையெனில்
பகவானின் கடாக்ஷம் கிடைக்காது. இதனால்,கர்மயோகம் போன்றவற்றைச் செய்யும்
தகுதி இல்லாது, பாபியாக இருக்கிறான் . இதை ஸ்ரீ ஆளவந்தார் ,தனது ஸ்தோத்ர ரத்னத்தில் (47)
கூறுகிறார்.
திகசுசிமவிநீதம் நிர்ப (த )யம் மாமலஜ்ஜம்
பரமபுருஷ யோஹம் யோகிவர்யாக்ரகண்யை : |
விதிசிவ ஸநகாத்யைர் த்யாது மத்யந்ததூரம்
தவபரிஜந பாவம் காமயே காமவ்ருத்த : ||

சாஸ்த்ரங்களில் சொல்லியபடி ஸாத்விக ஆகாரங்களை உண்டு ,இந்த்ரியங்களை
அடக்கி , மனத்தையும் ஸாத்விகமாக்கி பெரியவர்களிடம் அடக்க ஒடுக்கமாக அவர்களுக்குப்
பணிவிடை செய்து பூர்ண புருஷாகாரம் இருந்தாலும் உன்னிடம் நெருங்க அஞ்சுகிறார்கள் .
யோக்யதை இருந்தாலும் பெரியோர்கள் கோஷ்டியில் சேர வெட்கப்பட்டு , அநுஷ்டானபரர்களும்
நெருங்கப் பயப்படுகிறார்கள் . ப்ரஹ்ம ருத்ராதிகளும் ஸநகாதி முனிவர்களும்
உன்னை அண்டவே அஞ்சுகிறார்கள் .அப்படி அஞ்சாமல் உன்னிடம் மோக்ஷத்தைக்
கேட்டிருந்தால் எப்போதோ மோக்ஷம் அடைந்திருப்பார்கள்.
நானோ ஒருவித சக்தியுமில்லாதவன் எவ்வித சிக்ஷையும் பெறாதவன் .துணிந்து
வெட்கமின்றிப் ப்ரார்த்திப்பது தகாதுதான் . ஆனால், நான் காமவ்ருத்தன் ; எல்லா சாஸ்திரங்களையும்
மீறி நடந்ததைப்போல ,மோக்ஷம் வேண்டுவதற்கான சாஸ்த்ரங்களையும் மீறி இருக்கிறேன்.
துணிந்து கேட்கிறேன், மோக்ஷம் . இதனை ஆராய்ந்தால் நானே என்னை வெறுத்து
ஒதுக்கவேண்டியவன் ஆவேன்.

திகசுசிமவிநீதம் =தூய்மை வெட்கம் தயை போன்றவை இல்லாதவனை நிந்திக்கவேண்டியதுதான்
நியாயம். ஆனால், அடையஇயலாத ஒன்றுக்கு முயற்சி செய்து சுலபமான உபாயத்தைச் செய்கிறான் .
இந்த உபாயம் கடுமையான உடல் முயற்சி இல்லாதது; பணச் செலவு இல்லாதது;
அதிக நேரம் தேவையில்லை; மிக எளிமையானது ; மனஸ் அல்லது வாக்கால் பொருள் அறிந்து
சொன்னாலே போதும்.இந்த உபாயத்தின் மூலம்,தான் விரும்பும் மோக்ஷத்தை, தான்
அடைய விரும்பும் நேரத்தில் பெறுவதற்கு ஆசைப்படுகிறான் .

பாத்ம ஸம்ஹிதையில் , ” சுநமிவ புரோடாச : —–” என்று சொல்லுமாப்போலே , அதாவது,
புரோடாசம் என்பது ஹோம த்ரவ்யம் –இது தேவர்களுக்கு உரியது, அதை ஏற்கும் தகுதி நாய்க்கு இல்லை—
அதைப்போல,பிறவி, மற்றும் சாஸ்த்ர விரோத நடவடிக்கைகளால்,மோக்ஷம்பெறத் தகுதி
இல்லாவிடினும் அதை அடைய ஆசைப்படுகிறான். பக்தியோகம் செய்யவே அச்சமும் தயக்கமும்
உள்ளவன் ப்ரபத்திக்கு முக்ய அங்கமான மஹாவிச்வாஸம் கொள்ள எண்ணுதல்
கலவெள்ளுக்கட்டுப்போய்க் கல எண்ணெயாயிற்று என்று எம்பார் அருளிச்செய்ததைப்
போலுள்ளது அதாவது, ஒரு வாணியனின் –எண்ணெய் விற்பவனின்— செக்கு —எண்ணையை
ஆட்டும் மரத்தாலான சாதனம்—-பழுதுபட , வாணியன் ,கானகத்துக்குச் சென்று செக்குக்கான
ஒரு மரத்தை வெட்ட முயன்றான். அப்போது அந்த மரத்தில் குடியிருந்த ஒரு பிசாசு,
”மரத்தை வெட்டாதே—-உனக்குப் பிழைப்பதற்கு தினமும் ஒரு மூட்டை எள்ளையே
தருகிறேன்;எள்ளை விற்றுப் பிழைத்துக்கொள் —” என்க , வாணியனும் சம்மதிக்க, அந்தப்
பிசாசு, தினமும் ஒரு மூட்டை எள் கொடுத்து வந்தது.சிறிது நாள் கழித்து,அந்த மரத்தினடியே
வந்த மற்றொரு பிசாசு, விஷயத்தைக் கேள்விப்பட்டு,முதல் பிசாசிடம் , நான் அந்த வாணியனைக்
கொன்றுவிட்டு வருகிறேன் என்று சொல்லி, வாணியனின் வீட்டுக்கு வந்தது.
அந்தச் சமயத்தில், வாணியன் , தனது பிள்ளையிடம் , முரண்டு பிடிக்கும் இரண்டாவது
காளை மாட்டைக் காட்டி , ” மகனே—அந்த இரண்டாவது பிசாசைப் பிடித்துக் கட்டு –”
என்றான். வாணியனைக் கொல்ல வந்த பிசாசு ,நடுங்கிப்போய் ,”ஐயா —நான் உனக்கு
தினமும் எண்ணெயாகவே கொடுக்கிறேன் –என்னை —” என்று சொல்லி ஓடிப்போயிற்று.
இதைக் கேள்வியுற்ற முதல் பிசாசு, சிரித்ததாம் .
இதைப்போன்றே மஹாவிச்வாஸம் , பக்தி யோகத்தைக் காட்டிலும் சிரமமானது என்பர்.
ஒருபிடி எள்ளையே , கொடுக்க இயலாதவனிடம் ,ஒரு பாத்திரம் நிரம்ப எண்ணெய்
கேட்பது போல—கர்ம யோகத்துக்கே தகுதி இல்லாதவன் மஹா விச்வாஸம் கொள்ள நினைப்பது
உள்ளது –என்றும் பொருள் கொள்ளலாம் .

அதிகாரத்திலிருந்து

அப்புள்ளாரின் விவரணங்கள்

இவ்விடத்தில் ஸர்வேச்வரனுடைய பரத்வ மாத்ரத்தை அறிந்து அகலுகையாலே நராதமனென்று
பேர் பெற்ற பிறந்து கெட்டானிற் காட்டில் இடைச்சிகளைப்போலே விவேகமில்லையேயாகிலும்
ஸௌலப்யத்தை அறிந்து அந்நலனுடை யொருவனை நணுகுமவனே பரமாஸ்திகனென்று
அப்புள்ளார் அருளிச் செய்யும் பாசுரம்

வ்யாக்யானம்
ஸ்ரீ அப்புள்ளார் கூறுவதாவது —-

கோகுலத்து ஆய்ச்சியர்கள் போன்று விவேகம் இல்லையென்றாலும் , ஒருவன் , பகவானின்
ஸௌலப்யத்தை–எளிமையை உணர்ந்து அவன் பகவானை அணுகினால்,அவன் பரம ஆஸ்திகன் .
ஆனால், பகவானின் பரத்வத்தை மட்டிலுமே உணர்ந்து , அவனை அணுகத் தகுதியில்லை
என்றிருப்பவன் ”நராதமன் ” என்று கீதை சொல்கிறது ஆதலால், நராதமன் என்பவனைக்காட்டிலும்
பரம ஆஸ்திகன் பகவானிடம் மஹாவிச்வாஸம் அதிகமுள்ளவன் ஆகிறான்

அதிகாரத்திலிருந்து
த்வயத்தில் மஹாவிச்வாஸம் ,கார்ப்பண்யம்

இப்படி புருஷகாராதி ஜ்ஞானத்தாலே பிறந்த விச்வாஸ மஹத்வமும் விச்வாஸ ஸ்வரூபமும்
கார்ப்பண்யமும் ப்ரபத்யே என்கிற க்ரியா பதத்தில் உபஸர்க்கத்திலும் ,சரணசப்தோபலிஷ்டமான
தாதுவிலும் உத்தமனிலும் அநுஸந்தேயங்கள் . இதில் உத்தமனில் விவக்ஷிதத்தை அநந்யசரண :
என்று கத்யத்திலே வ்யாக்யானம் பண்ணினார்

வ்யாக்யானம்
த்வய மந்த்ரத்தில் உள்ள ப்ரபத்யே என்பதில் ”ப்ர ” என்பதில், பெரியபிராட்டியாரின்
புருஷாகாரம் ,மஹா விச்வாஸத்தின் மேன்மை இதன் ஸ்வரூபம் , வேறு கதியில்லை
என்கிற முடிவு சொல்லப்படுகிறது.
மேலும்,சரணம் என்கிற வார்த்தையுடன் சேர்ந்து வருகிற ”ப்ரபத்யே ” என்பதில் உள்ள
”’பத் ‘ என்பதிலும் ( தாது—root )தெரிகிறது.இக் கருத்தையே எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில்
அநந்யசரண :–வேறு அடைக்கலம் இல்லை என்று அருளினார்

அதிகாரத்திலிருந்து
த்வயத்தில் –கோப்த்ருத்வ வரணம்

இவ்விடத்தில் உபாயத்வ அத்யவஸாய வாசக ஸப்தத்திலே கோப்த்ருத்வவரணம் அந்தர்நீதம் .

அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலயோ அகிஞ்சிநோ அகதி :
த்வம் ஏவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநாபதி :

சரணாகதிரித்யுக்தா ஸா தேவே அஸ்மிந் ப்ரயுஜ்யதாம் என்றும்

உபாயோ க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த : சரணமித்யயம்
வர்த்ததே ஸாம்ப்ரதம் உபாயார்த்த ஏக வாசக : என்றும்

சொல்லுகிறபடியே உபாயாந்தர அசக்தனுக்கு ஸர்வேச்வரன் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த
சாதாரணமான ரக்ஷகத்வ மாத்ரத்திலே நிற்கை யன்றிக்கே ஸ்வீக்ருத பரனாய்க் கொண்டு
உபாயாந்தர ஸ்தானத்திலே நிவேசிக்கையாலும் ந்யஸ்த பரனான இவ்வதிகாரிக்குப் பின்பு
அந்நயோபாயத்வம் நிலை நிற்கைக்காகவும் உபாயத்வாத்யவஸாயம் இவ்விடத்திலே
விவக்ஷிதமாயிற்று . உபாயமென்றால் ஒரு விரகு என்ற மாத்ரமாகையாலே
இவ்வுபாயத்வம் சேதந அசேதந ஸாதாரணமாயிருக்கையாலும்

ரக்ஷிஷ்யதீதீ விச்வாஸோ கோப்த்ருத்வவரணம் ததா என்றும்

ஸர்வஜ்ஞ : அபி ஹி விச்வேசா : ஸதா காருணிகோ அபி ஸந்
ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் ரக்ஷாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே என்றும்

சொல்லுகிறபடியே சேதநைகாந்தமான கோப்த்ருத்வ வரணம் அநுஸந்தேயமாகையாலும்
கோப்த்ருத்வ வரணம் இங்கே விவக்ஷிதம் . அதி சரண சப்தம் ஒரு ப்ரயோகத்திலே
இரண்டு அர்த்தத்தை அபிகாநம் பண்ணமாட்டாமையாலே இவ்வதிகாரிக்கு
அஸாதாரணமான உபாயத்வாத்யவஸாயம் இவ்விடத்தில் சப்தமாய் ஸர்வாதிகாரி
ஸாதாரணமான கோப்த்ருத்வவரணம் அர்த்தமாகக் கடவது

வ்யாக்யானம்

பகவானிடம் ஏற்படுகிற மஹா விச்வாஸம் த்வயத்தில் வெளிப்படையாகவே உள்ளது.
நம்மைக் காப்பாற்றும்படி ப்ரார்த்திப்பது சரணம் என்பதிலேயே உள்ளது

அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையிலிருந்து ப்ரமாணம் சொல்கிறார்

அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலயோ அகிஞ்சிநோ அகதி :
த்வம் ஏவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநாபதி : ( 37–30 )

சரணாகதிரித்யுக்தா ஸா தேவே அஸ்மிந் ப்ரயுஜ்யதாம் ( 37–31 )

உபாயோ க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த : சரணமித்யயம்
வர்த்ததே ஸாம்ப்ரதம் உபாயார்த்த ஏக வாசக : ( 37–29 )

நீயே எனக்கு உபாயமாகவேண்டும் என்று ப்ரார்த்திப்பது –சரணாகதி –அது
இந்த எம்பெருமானிடம் செய்யப்படட்டும்

அடியோங்கள் குற்றங்களுக்கு இருப்பிடம் கைமுதல் ஏதும் இல்லாதவன்
ரக்ஷகன் யாருமில்லாமல் இருக்கிறேன் .தேவரீரே எனக்கு உபாயமாக
இருக்கவேண்டும் என்கிற ப்ரார்த்தனை வடிவமான ஜ்ஞானம் –சரணாகதி —
இது பகவானிடம் செய்ய வேண்டும்
சரணம் என்கிற வார்த்தை உபாயம் ( சாதனம் ), வீடு, ரக்ஷிப்பவன் என்கிற பல
அர்த்தங்கள் இருந்தாலும் இங்கு உபாயம் என்று பொருள்
எல்லாவற்றையும் காப்பவன் எம்பெருமான். சரணாகதி செய்த ப்ரபன்னனைக்
காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டும் , உபாயமே எம்பெருமானாக உள்ளதாலும்
ப்ரபன்னன் எப்போதும் எல்லாப் பொறுப்புக்களையும் பகவானிடம் கொடுத்து
வேறு உபாயத்தை நாடாமல் ,அவனே உபாயம் என்று இருக்கவேண்டும்.
உபாயம் என்னில் இலக்கை அடைய வழி

ரக்ஷிஷ்யதீதீ விச்வாஸோ கோப்த்ருத்வவரணம் ததா
ரக்ஷிப்பான் என்கிற திடநம்பிக்கை , ரக்ஷிக்கவேண்டும் என்கிற ப்ரார்த்தனை

ஸர்வஜ்ஞ : அபி ஹி விச்வேசா : ஸதா காருணிகோ அபி ஸந்
ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் ரக்ஷாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே —–லக்ஷ்மீ தந்த்ரம்

எல்லாவற்றையும் நியமிப்பவன்; எல்லாம் அறிந்தவன் ;மிகுந்த காருண்யமுள்ளவன் ,
இருந்தாலும் ஸம்ஸாரத்தை வழி நடத்துபவனாகையால் , ”ரக்ஷிக்க வேணும் ”
என்கிற ப்ரார்த்தனையை எதிர்பார்க்கிறான்
சேதனன் மட்டுமே இப்படி ப்ரார்த்திக்க முடியும்.
த்வயத்தில் உள்ள ”சரணம் ” என்கிற பதம் உபாயத்தையும் குறிக்கிறது;
ரக்ஷிக்க வேணும் என்பதையும் குறிக்கிறது
சரணம் என்னும் இப் பதம்  பகவானே ப்ரபன்னனுக்கு உபாயம் என்பதையும்
ரக்ஷிக்க வேணும் என்று வேண்டப் பட்டதாகவும் கொள்ள வேணும்.

அதிகாரத்திலிருந்து

அறிவித்தனர் அன்பர் ஐயம் பறையும் உபாயம் இல்லாத்
துறவித் துனியில் துணையாம் பரனை வரிக்கும் வகை
உறவு இத்தனை இன்றி ஒத்தாரென நின்ற உம்பரை நாம்
பிறவித் துயர் செகுப்பீர் என்று இரக்கும் பிழை அறவே

ப்ரக்யாத :பஞ்சஷ அங்க :ஸக்ருத் இதி பகவச் சாஸநை : ஏஷ யோக :
தத்ர த்வாப்யாம் அபாயாத் விரதி : அநிதர உபாயதா ஏகேந போத்யா
ஏகேந ஸ்வாந்ததார்ட்யம் நிஜ பர விஷயே அந்யேந தத் ஸாத்யதா இச்சா
தத்வ ஜ்ஞான ப்ரயுக்தா து இஹ ஸ பரிகரே தாததீந்ய ஆதி புத்தி :

வ்யாக்யானம்

பக்தி யோகம் போன்றவற்றை அனுசரிக்க இயலாத நிலையில் இருப்போருக்கும்
இவை பலன் தருமோ என்று சந்தேகப் படுவோருக்கும் இவர்களது கதி யற்ற
நிலையை உணர்ந்த எம்பெருமான் நம்மைக் காக்கத் திருவுள்ளம் கொண்டான்.
உபாயமாக அவனையே வேண்டி, அவனையே அடைய அன்பு கொண்ட
ஆசார்யர்கள் -அதற்கான வழியை உபதேசித்தார்கள்
, இதன் மூலமாக,நம்மைப் போன்றே கர்ம வினைகளால் பீடிக்கப்படும்
மற்ற தெய்வங்களை நாடி , நமக்குச் சிறிதும் தொடர்பில்லாத அவர்களிடம்
என்னை இந்த ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று
இத் தெய்வங்களிடம் கையேந்தும் தவறைச் செய்ய மாட்டோம்

பாஞ்சராத்ர ஆகமத்தில் ப்ரபத்தி யோகம் ஐந்து அங்கங்களைக் கொண்டது
என்றும் ஒரே ஒருமுறை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.
(மோக்ஷத்துக்காகச் செய்யப்படும் ப்ரபத்தியில் ”ஸாத்விக த்யாகம் ”ஆறாவது அங்கம் )
ஏனைய பலன்களைக் கோரிச் செய்யப்படும் ப்ரபத்தியில் இந்த அங்கம் இல்லை.
எம்பெருமானின் கட்டளையை மீறுதல் என்பதை மாற்ற,ஆநுகூல்ய ஸங்கல்பம் ,
ப்ராதிகூல்ய வ்ரஜநம் இரண்டு அங்கங்களும் , பகவானை அல்லாது வேறு
உபாயத்தைப் பற்றாததை கார்ப்பண்யம் என்கிற அங்கமும் , தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்
விஷயத்தில் வேறு உபாயங்களை நாடாமல் பகவானை நம்பி யிருப்பது
மஹா விச்வாஸத்தையும் , விரும்பும் பலனை அளிக்கிறேன் என்கிற பகவானின்
ஸங்கல்பத்தை கோப்த்ருத்வ வரணம் என்கிற அங்கமும் ஏற்படுத்துகிறது .
இப்படியாக உள்ள ப்ரபத்தியில் ,இவை யாவும் பகவானாலேயே என்கிற எண்ணமும்
சாஸ்த்ர ஞானத்தால் மட்டுமே உண்டாகிறது .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –11 வது அதிகாரம் —- பரிகரவிபாகாதிகாரம் —–நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் —10–ப்ரபத்தி யோக்ய அதிகாரம்

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் —10-ப்ரபத்தி யோக்ய அதிகாரம்

அர்த்தித்வேந ஸமர்த்ததா த்ரிகதநு :ஸம்பிண்டிதா : அதிக்ரியா
ஸா சாஷ்டாங்க ஷடங்க யோக நியதாவஸ்தா வ்யவஸ்தாபிதா |
ச்ரோதீ ஸர்வ சரண்யதா பகவத : ஸ்ம்ருத்யா அபி ஸத்யாபிதா
ஸத்யாதிஷு இவ நைகமேஷு அதிக்ருதி : ஸர்வ ஆஸ்பதே ஸத்பதே ||

வ்யாக்யானம்

ஒருபலனைப் பெற மிக ஆவல் இருந்து, அதை அடைவதற்கான உபாயத்தில்
ஈடுபட தகுதி வேண்டும்.
முதலாவது, அந்தப் பலனில் ,அளவில்லா ஆவல் இருக்க வேண்டும்
அடுத்து, மூன்று விதமான தகுதிகள் வேண்டும்.
1.ஜ்ஞானம்
2.சக்தி
3. யோக்யதை
இந்தத் தகுதிகளைப் பொறுத்தே உபாயத்துக்கான வழியில் ,ஒரு முமுக்ஷு
ஈடுபடுகிறான்.
ஆனால், பக்தி யோகத்துக்கு எட்டு அங்கங்கள் ; ப்ரபத்தி அனுசரிக்க ஆறு அங்கங்கள்.
எல்லா ஜீவராசிகளுக்கும், பகவானே சரணமளிக்கிறான் என்பதை ஸ்ருதிகள்
கூறுகின்றன; ஸ்ம்ருதிகள் உறுதி செய்கின்றன.உண்மையை மட்டுமே பேசு என்று வேதங்கள்
சொல்வது,எல்லோருக்கும் பொருந்துவதைப் போல, ப்ரபத்தியும் யாவருக்கும்
பொருந்துகிறது

பக்தி யோகம் செய்பவர்களுக்கு,—அந்த யோகா விஷயமான ஜ்ஞானம், அதைச் செய்யும் சக்தி,
அதற்கான யோக்யதை =ஸ்வரூபம்
ப்ரபத்தி செய்பவர்களுக்கு, ப்ரபத்தி விஷயமான ஜ்ஞானம், அதைச் செய்யும் சக்தி,
அதற்கான யோக்யதை =ஸ்வரூபம்

பக்தி யோகம் செய்பவர்களுக்கு, தேஹம் முடிவிலே மோக்ஷம் அபேக்ஷை இல்லை.
மோக்ஷ ப்ரபத்திக்கு வைதீக அக்நி வேண்டாமென்றாலும், வைதீக மந்த்ரம் வேண்டும்.
த்வயம் போன்ற மந்த்ரங்கள் ப்ரமாணம் . வேத அத்யயநுத்துக்கான உபநயனம் ,
வேத அத்யயநம் இல்லாவிட்டாலும், இது கை கூடும் .

ப்ரபத்திக்கான ஆறு அங்கங்கள்
1.ஆநுகூல்ய ஸங்கல்பம் =இன்று முதல் அநுகூலனாக வர்த்திக்கக்கடவேன் என்கிற ஸங்கல்பம்
2.ப்ராதிகூல்ய வர்ஜநம் =ப்ரதிகூலம் செய்ய மாட்டேன் என்கிற ஸங்கல்பம்
3. கார்ப்பண்யம் =கர்ம ,ஞான,பக்தி யோகங்கள் செய்யச் சக்தியில்லை என்று ப்ரார்த்தித்தல்
4. மஹா விச்வாஸம் =பகவானின் திருவடிகளைப் பற்றினால் , பகவான் நிச்சயம் அருளுவான்
என்கிற திடமான நம்பிக்கை
5.கோப்த்ருவ வரணம் = எதுவும் சக்தி யில்லாத எனக்கு, நீயே உபாயமாக இருந்து,
பலனளிக்க வேண்டும் என்று வேண்டுவது
6. ஸாத்விக த்யாகம் = மோக்ஷத்தை உத்தேசித்துச் செய்த ப்ரபத்திக்கு –பல த்யாகம்
அதாவது, இந்த ஆத்மாவை ரக்ஷிக்கிற பர ஸமர்ப்பணத்தை
பகவானே, தன்னுடைய ப்ரீதிக்காக, தானே, தன்னைச் சேர்ந்த
என்னைக் கொண்டு செய்துகொள்கிறான் /செய்து கொண்டான்
இதனால் வரும் பலன் பகவானுக்கே என அர்ப்பணித்தல்

அதிகாரத்திலிருந்து

அதிகாரம், உபாயம், பலன் –இவற்றுக்கான விவரம்

இப்படி அபிமத பலத்துக்கு உபாயாந்தர நிஸ்ப்ருஹனாய் ந்யாஸ வித்யையிலே
இழியுமவனுக்கு இவ் வித்தைக்கு அதிகார விசேஷம் முதலானவை இருக்கும்படி
அறியவேணும் .
அதிகாரமாவது —அவ்வோ பலோபாயங்களிலே ப்ரவ்ருத்தனாம் புருஷனுக்குப் பலத்தில்
அர்த்தித்வமும் , உபாயத்தில் ஸாமர்த்யமும் . இவற்றில் ஸாமர்த்யமாவது
சாஸ்த்ரார்த்தத்தை அறிகையும் , அறிந்தபடி அநுஷ்டிக்க வல்லவனாகையும்
சாஸ்த்ராநுமத ஜாதி குணாதி யோக்யதையும் . இவ்வதிகாரம் முன்பே
ஸித்தமாயிருக்கும் . இது உடையவனுக்குப் ப்ரயோஜனமாய்க் கொண்டு ஸாத்யமாக
அநுவதிக்கப்படுமது பலம் . ததர்த்தமாக ஸாத்யமாக விதிக்கப்படுவது உபாயம் .

வ்யாக்யானம்

ப்ரபத்தி என்கிற ந்யாஸ வித்யையில் ஈடுபட விரும்புபவன், வேறு எதையும்
உபாயமாகப் பற்றுவதில் ஆவலில்லாமல் இருப்பவன், எவ்விதத் தகுதிகளோடு
இருக்கவேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
அதிகாரம் என்பது இந்த இடத்தில்,
ஒரு பலனை அடைவதில் மிக விருப்பம், அதை அடைவதற்கான உபாயத்தில்
மிக ஆர்வம், அந்த உபாயத்தைச் செய்யக்கூடிய திறமை, அல்லதுதகுதி,ஸாமர்த்யம்
என்பதைக் குறிக்கிறது ,
திறமை, அல்லதுதகுதி,ஸாமர்த்யம் —என்றால், சாஸ்த்ரங்களில் ஆழமான அறிவு,
அந்த அறிவின்படி அநுஷ்டானம் , சாஸ்திரங்களில் கூறப்படும் ஜாதி அதன் தன்மைகளைக்
கொண்டிருப்பது—என்பன போன்றவையாகும்.
இப்படிப்பட்ட தகுதி உள்ளவன், உபாயத்தைச் செய்து, அவனுடைய இலக்கைப் பலனாக
அடைகிறான். உபாயமென்பது—பலனைப் பெறுவதற்கான வழி .
பலன் —–எவனெவன் எந்த பலத்துக்காக எந்த உபாயத்தைக் கடைப் பிடிக்கிறானோ
அவனுக்கு அந்தப் பலத்தில் ஆசை, அந்த உபாயத்தில் ஸாமர்த்யம் வேண்டும்.இவன் எதைச்
செய்கிறானோ அந்த விஷயத்தில் இச்சை இருப்பதால் செய்கிறான்.ஏன் செய்கிறான் என்றால்,
அப்படிச் செய்வதால் வரும் பலனில் ஆசை இருப்பதால் செய்கிறான்.
சாஸ்த்ராநுமதஜாதி குணாதி யோக்யதை = சாஸ்த்ரங்களில் கூறியபடி ஜாதி, தன்மைகள்
இந்தக் கார்யத்தை, இன்ன ஜாதியில் பிறந்தவன், இத்தகைய ஆசை போன்ற குணமுள்ளவன்
இப்படி ஆசாரமுள்ளவன் செய்ய வேண்டாம் என்பதைச் செய்யாமலிருப்பவன் எவனோ
அவனே இந்தக் கார்யத்தைச் செய்யலாம் சாஸ்த்ரம் யாருக்கு அநுமதி அளித்திருக்கிறதோ
அவன்தான் அந்த உபாயத்தைச் செய்யலாம்.
ப்ரபத்தி , எல்லா ஜாதியருக்கும் பொதுவாக இருக்க, இங்கு ஜாதி எதற்குச் சொல்லப்படுகிறது
என்றால், இந்த வாக்யம் —சொல் —ப்ரபத்திக்கு மட்டும் அதிகாரம் சொல்லப்படுவதற்காகச்
சொல்லப் படவில்லை. பொதுவாக, எல்லா உபாயத்தையும் சொல்கிறது.
சிலர், பலத்தில் இருக்கும் அடங்கா ஆசையாலே , தன் அறிவு என்ன, தன் சக்தி என்ன ,
என்பதை ஆராயாமல் , உபாயத்தில் இழிந்துத் தடுமாறினால் , அதைத் தடுக்க
இப்படிச் சொல்லப்பட்டது,.

பக்தி யோகம் போன்றவற்றைச் செய்பவனுக்கு அந்த விஷயத்தில், ஜ்ஞானம், சக்தி, அதன்
பலன்களில் ஆசை வேண்டுமென்றாலும் , வேறு ஒன்றை விரும்பாமலிருப்பது,
அதில் ஜ்ஞானம், சக்தி இல்லாமலிருப்பது —-என்பது இல்லை.

ஆனால் ப்ரபத்திக்கு ,வேறுபலனில் ( மோக்ஷத்தைத் தவிர ) ஆசையில்லாமை , வேறு உபாயத்தில்
ஜ்ஞானம், சக்தி இல்லாமை வேண்டும். இது, ஆகிஞ்சன்யம் , அநந்யகதிகத்வம் என்பர்

அதிகாரத்திலிருந்து

ஆகிஞ்சன்யம் , அநந்யகதிகத்வம் விளக்கம்

இங்கு முமுக்ஷுத்வமுண்டாய் ஸ்வதந்த்ர ப்ரபத்தி ரூப மோக்ஷோபாயவிசேஷ நிஷ்டனுக்கு
சாஸ்த்ர ஜந்ய ஸம்பந்த ஞாநாதிகள் உபாஸகனோடு ஸாதாரணமாயிருக்க விசேஷித்த
அதிகாரம் தன்னுடைய ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும் . ஆகிஞ்சந்யமாவது உபாயாந்தர
ஸாமர்த்யாபாவம் . அநந்யகதித்வமாவது ப்ரயோஜநாந்தர வைமுக்யம் , சரண்யாந்தர
வைமுக்யமாகவுமாம். இது ப்ரயோஜநாந்தர வைமுக்யத்தாலும் அர்த்தஸித்தம் .
இவ்வர்த்தம்
ப்ராஹ்மணம் சிதிகண்டம் ச யாந்சாந்யா தேவதா : ஸ்ம்ருதா :
ப்ரதிபுத்தா ந ஸ்வந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்
இத்யாதிகளிலே கண்டுகொள்வது

தீவ்ரதமமான முமுஷுத்வமின்றிக்கே தேஹாநுவ்ருத்யாதி ப்ரயோஜநாந்தர ஸக்தனானவன்
மோக்ஷார்த்தமாக ப்ரபத்தியைப் பற்றினால் அவ்வோ ப்ரயோஜநாந்தரங்களின்
அளவுக்கு ஈடாக மோக்ஷம் விளம்பிக்கும்

வ்யாக்யானம்

ஒருவனுக்கு மோக்ஷம் அடைய விருப்பம் ஏற்படலாம். இவன், சாஸ்த்ர ரூபமாக, ஜீவாத்ம —
பரமாத்ம தத்வங்களை ,வேறுபாடுகளை —பக்தி யோகம் செய்பவனைப் போலத் தெரிந்து கொள்கிறான்.
இவன் ப்ரபத்தியை மோக்ஷ உபாயமாக அனுஷ்டிக்கும்போது இவனுக்கு, ஆகிஞ்சந்யமும்
அநந்யகதித்வமும்–இந்த இரண்டும் தகுதிகள் ஆகின்றன.
ஆகிஞ்சந்யம் என்றால், மற்ற எந்த உபாயங்களிலும் இழியத் தகுதியோ ,திறமையோ
இல்லாததாகும்.
அநந்யகதித்வம் என்றால், மோக்ஷம் தவிர வேறு எதையும் வேண்டாமையும், வேறு எதிலும்
பற்றில்லாமையும் , எம்பெருமானே சர்வமும் என்கிற உறுதியும் ஆகும்.
வேறு எதிலும் பற்றில்லாமை என்பதும் ஆகிஞ்சந்யத்தில் அடங்கியதே .
இதை மஹாபாரதம் சாந்தி பர்வம் ( 350–36 ) சொல்கிறது

ப்ராஹ்மணம் சிதிகண்டம் ச யாந்சாந்யா தேவதா : ஸ்ம்ருதா :
ப்ரதிபுத்தா ந ஸ்வந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்
அறிவிற் சிறந்த முமுக்ஷுக்கள் ,ப்ரம்மன் ருத்ரன் போன்றவர்களை ஆச்ரயிப்பதில்லை .
ஏனெனில் அவர்கள் அருளும் பலன்கள் மிக அற்பமானவை என்பதை அறிந்துள்ளனர்

ஒருவன், தன்னுடைய சரீரத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்றும் மோக்ஷத்தில்
ஆசை யில்லாமல் ப்ரபத்தி செய்தாலும், அதற்கேற்றபடி பலன் கிடைக்கும்.
அப்போது, மோக்ஷம் தாமதிக்கும் .

அதிகாரத்திலிருந்து
ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும்–இவற்றுக்கான காரணம்

இவ் ஆகிஞ்சந்யத்துக்கும் அநந்யகதித்வதுக்கும் நிபந்தநம் உபயாந்தரங்களில்
இவ்வதிகாரியினுடைய அஜ்ஞான அசக்திகளும் பலவிளம்ப அஸஹத்வமும் .
இதில் சரண்யாந்தர வைமுக்யத்துக்கு நிபந்தனம் :
யதா வாயோஸ்த்ருணாக்ராணி வசம் யாந்தி பலீயஸ :
தாதுரேவ வசம் யாந்தி ஸர்வபூதாநி பாரத
என்கிறபடியே தனக்கும் பிறருக்குமொத்திருக்கிற பகவதேக பாரதந்த்ர்யாத் யவஸாயமும் ப்ரயோஜநாந்தர வைமுக்யமும்

வ்யாக்யானம்

ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும் ஏற்படக் காரணம்—
மற்ற உபாயங்களில் ஈடுபட இயலாமை, அவற்றைப் பற்றிய அறியாமை, மோக்ஷம்
பெறுவதில் தாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமை. மற்றும், பகவானே
அனைத்தும் என்கிற சிந்தனை
இதை, மஹாபாரதம் உத்யோக பர்வம் ( 26–29 ) சொல்கிறது —
யதா வாயோஸ் த்ருணாக்ராணி வசம் யாந்தி பலீயஸ :
தாதுரேவ வசம் யாந்தி ஸர்வ பூதாநி பாரத

ஹே –பாரத —-பலமான காற்றின் வசத்தில் ,புல்லின் நுனிகள்
இருப்பதைப் போல எல்லாப் பிராணிகளும் , உலகைப் படைக்கிற பகவானின்
வசத்தில் இருக்கின்றன

அதிகாரத்திலிருந்து

ப்ரபத்திக்குப் ப்ரமாணங்கள்

இப்ப்ரபத்யாதிகார விசேஷம் ;
ஸ பித்ரா ச பரித்யக்தஸ் ஸுரைச்ச ஸமஹர்ஷிபி :
த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத :
அஹமஸ்ம்யபராதாநாமாலய : அகிஞ்சந : அகதி :
ஆகிஞ்சந : அநந்யகதி : சரண்ய ,
அநாகதாநந்தகால ஸமீக்ஷயாப்யத்ருஷ்ட ஸந்தாரோபாய : ,
தத்ப்ராப்த்யே ச தத்பாதாம்புஜத்வய ப்ரபத்தேரந்யந்ந மே கல்பகோடி
ஸஹஸ்ரேணாபி ஸாதநமஸ்தீதி மந்வாந : ,
புகலொன்றில்லா அடியேன்
என்றிவை முதலான ப்ரமாண ஸம்ப்ரதாயங்களிலே ஸித்தம்

வ்யாக்யானம்

இந்தப் ப்ரபத்திக்கு உள்ள அதிகாரத்தைப் பல ப்ரமாணங்களாலே
ஸ்வாமி தேசிகன் விளக்குகிறார்
ஸ்ரீமத் ராமாயணம் —
ஸ பித்ரா ச பரித்யக்தஸ்ஸுரைச்ச ஸமஹர்ஷிபி :
த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத :

இந்த்ரனின் பிள்ளையானவன் ,காக்கை ரூபத்தில் ஸீதா பிராட்டியிடம்
அபசாரப்பட்டு, ஸ்ரீ ராமபிரான் அஸ்த்ரம் ஏவ, தப்பிப்பிதற்காக
தேவர்கள்,ரிஷிகள்,தனது தந்தையான இந்த்ரன் யாவராலும்
கைவிடப்பட்டுக் கடைசியில் ராமபிரானையே சரணமடைந்தது.

அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை —- ( 37—30 )
அஹமஸ்ம்யபராதாநாமாலய : அகிஞ்சந : அகதி :
நாரதர் கேட்கிறார்
மஹேஸ்வரனே —-”ந்யாஸம் ” என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும் .
அஹிர்புத்ந்யர் ——நாரதா—இது தேவர்களும் அறியாத பரம ரஹஸ்யம் .
உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டுள்ளது. விரும்பிய பலனை உடனே
தர வல்லது .அனைத்துப் பாபங்களையும் போக்கச் சக்தி உள்ளது.
இதை எல்லோருக்கும் சொல்லி விடக் கூடாது.பக்தி இலாதவனுக்குச்
சொல்லவே கூடாது. நீர், ஆழ்ந்த பக்தி உள்ளவராதலால் உமது
க்ஷேமத்தை விரும்பி இதைச் சொல்கிறேன் . பலவித விருப்பங்களை
அடைய விரும்புபவன் ,யாரால், மற்ற உபாயங்களால் விரைவில்
அடைய முடியாதோ, மோக்ஷத்தை விரும்புபவன் பக்தி யோகம்
செய்து அதை எப்போது அடைவோம் என்று அறிய இயலாதோ ,
எங்கு சென்றால் திரும்பவும் ஜனனம் என்பதே கிடையாதோ
அப்படிப்பட்ட ”பரமபதம் ”, ந்யாஸத்திலே கிடைக்கும்.
இதனால், புருஷோத்தமனான பரம புருஷனை அடையலாம்.
அடியேன் குற்றங்களுக்கெல்லாம் இருப்பிடம் ;கை முதல் ஏதும்
இல்லாதவன்; உம்மைத் தவிர அடியேனை ரக்ஷிக்க யாருமில்லை ;
தேவரீரே , அடியேனுக்கு உபாயமாக இருக்க வேண்டும்;
என்கிற ப்ரார்த்தனை வடிவான ஜ்ஞானம் —ஸரணாகதி /ந்யாஸம் .
கார்பண்யம் ( ஆகிஞ்சன்யம் —கர்ம , ஞான ,பக்தி யோகங்கள் செய்யச்
சக்தி யில்லாதவன் ; அநந்யகதித்வம் —உன்னைத் தவிர ரக்ஷகன் இல்லை;)
கார்பண்யம் இவையிரண்டும் சேர்ந்தது.ஆத்மாவை ,பகவானுக்குச்
சமர்ப்பிக்கும்போது , ஒரு உபாயத்தைக் கொண்டு சமர்ப்பிக்க வேண்டும்.
அப்படி, ஏதும் ,அடியேனிடம் இல்லை.ஆதலால்,தேவரீர் ”பக்தி ”
என்கிற உபாயமாக இருந்து ரக்ஷிக்கவேண்டும் . இப்படி,நிறைய
விஷயங்களைச் சொல்கிறார்.

ஸ்தோத்ர ரத்னம் ( 22 )

ந தர்ம நிஷ்ட்டோஷ்மி ந சாத்ய வேதீ
ந பக்திமான் த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ நந்ய கதிஸ் சரண்ய
த்வத்பாத மூலம் சரணம் ப்ரபத்யே ||

முதலில், ஸாத்விக த்யாகம் . பிறகு, கீதையில் சொன்ன தேவ அர்ச்சனை போன்ற
கர்மயோகம் இதில் ஒன்று. வெகு காலம் இப்படிச் செய்து, மனஸ் சுத்தமானால்
ஜீவாத்ம தத்வ சிந்தனை என்கிற ஜ்ஞான யோகம். இப்படிப் பலகாலம் செய்து,
ஜீவனை சாக்ஷாத்காரம் செய்தபிறகு ,பகவானிடம் பக்தி யோகம் .
பகவானின் திருவடியை அடைய, கீதையில் க்ருஷ்ணன் சொன்னது.
இவற்றில் ஒன்றும் செய்யவல்லேன்
த்வத் பாதமூலம் –உன் திருவடியின் உட்புறத்தைச் சரணமாகப் பற்றுகிறேன் .
வெளிப்புறம் பற்றி ,வேறு பலன் பெற்றுப் போகமாட்டேன். உன் திருவடியின்
உட்புறத்தில் மறைந்தாலல்லாது , எனது பாபங்கள் —வினைகள்—என்கிற
யமகிங்கரர்கள் விடமாட்டார்கள்.
கர்ம யோகம் செய்வதற்கும் ,ஜ்ஞானம் வேண்டும் .
ந பக்திமான்—நாத்ம வேதீ —ந தர்ம நிஷ்ட்ட :
செய்யாவிட்டாலும் செய்ய முயற்சிக்கலாமே என்றால் அதற்குச் சக்தியில்லை
அகிஞ்சந :

கர்ம யோகம்
தர்மம் இரண்டு வகை. ப்ரவ்ருத்தி தர்மம் மற்றும் நிவ்ருத்தி தர்மம்
வேறு பலனுக்காகச் செய்யும் கர்மா /தர்மம். ப்ரவ்ருத்தி தர்மம்.
மோக்ஷத்துக்காகச் செய்யும் தர்மம் நிவ்ருத்தி தர்மம்
ஆதலால், கர்ம யோகம் தொடங்கும் போதே ,வேறு பலனில் ஆசையில்லாது
ஸாத்விகத் த்யாகத்துடன் தொடங்க வேண்டும்.
லக்ஷ்மி தந்த்ரம் சொல்கிறது —-

உபாயச் ச சதுர்த்தஸ்தே ப்ரோக்த : சீக்ரபலப்ரத |
பூர்வேத்ரய உபாயஸ்தே பவேயு ரமமநோஹரா : ||
சதுர்த்த மாச்ரயந் ஏவம் உபாயம் சரணாச்ரயம் —–

நான்குவித உபாயங்கள் இருந்தாலும் , மூன்று உபாயங்கள் ( கர்ம, ஞான, பக்தி )
பல காலம் செய்ய வேண்டும். இதற்கே பற்பல ஜன்மங்கள் எடுக்க வேண்டும்.
எல்லா ஜன்மங்களிலும் , உபாயத்துக்கான லக்ஷ்யம் எண்ணெய் ஒழுக்கு போல
இருக்கவேண்டும்.
ஆதலால், நான்காவதான சரணம் ஆச்ரயம் என்கிறது.

ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழி ( 5–7–1 )

அதனால்தான் நம்மாழ்வாரும்
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவு இலேன் ஆகிலும் இனி உன்னைவிட்டு ஒன்றும்
ஆற்றகிற்கிலேன் அரவின் அணை அம்மானே
சேற்றுத் தாமரைச் செந்நெலுடு மலர் சிரீவரமங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய் ! உனக்கு மிகை அல்லேன் அங்கே
என்கிறார்.
அடியேன் =
எனக்குப் பலனை அளிக்க, நீ என்னிடம் எதிர்பார்ப்பது ஒன்றுமில்லை.
பலனை அளிப்பதற்கான ,பக்தி யோகமும் அதற்குமுன்பாக ஜீவாத்மாவுக்கான
(ஜீவாத்ம ஸாக்ஷாத்காரம் ) ஜ்ஞான யோகமும் , அதற்கு முன்னாலான கர்ம யோகமும்
தேவை.நான் கர்ம யோகமே செய்யவில்லை. செய்யா விட்டாலும் ,முன் ஜன்மங்களிலாவது
செய்திருக்கலாமே என்றால் , அப்படிச் செய்திருந்தால் இந்த ஜன்மத்தில் அதிலே
மேலும் மேலும் நோக்கம் அதிகப்பட்டுஇருக்கும். அது இல்லை.
ஜ்ஞான யோகமும் இல்லையே . அது, முன் ஜன்மத்தில் இருந்திருந்தால் இப்போது
ஜீவாத்ம ஸாக்ஷாத்காரமாவது இருக்க வேண்டும். அதுவும் இல்லை.
இதெல்லாம் இராதபோது நான் எங்கே பக்தி யோகம் செய்வது ?
ஆனால், ப்ராக்ருத —உலகப் ப்ரஜைகளைப்போல நான் இல்லையே ?
உன்னை அடையவேண்டும் என்கிற தாபம் / ஆசை இருக்கிறதே !
உன்னை அடையாமல் தரிக்கமாட்டேன் . ஐச்வர்யமோ , ஸ்வர்க்கமோ ,
கைவல்யமோ கொடுத்து என்னைப் புறம் தள்ள உன்னால் முடியாது. ஆகிலும்,
ஆயுள் முடிவில் பார்க்கலாம் ,அர்ச்சிராதி மார்க்கமாக பரமபதத்தில் என்னை
வந்து சேர் என்றால் உனது செயல் தகாது.
இது, ச்ரீ உடையதாலே ” ச்ரீவரம் ”. துக்கத்துக்குச் சிறிதும் இடம் இல்லாததாலே
மங்கலம் . எழுந்தருளி யிருக்க ,அங்கு உன்னை வந்து கிட்டாமல் என்னை
அபேக்ஷிக்காதே —-
ஸ்ரீ ரங்க கத்யம் —-
ஆகிஞ்சந : அநந்யகதி : சரண்ய =

ஸ்வாத்ம நித்ய நியாம்ய நித்ய தாஸ்யை கரஸாத்ம ஸ்வபாவாநு ஸந்தாந
பூர்வக பகவத் அநவதிகாதிசய ஸ்வாம்யாத்யகில குணகணானுபவ ஜநித
அநவதிகாதிசய ப்ரீதிகாரித அசேஷாவஸ்தோதித அசேஷ சேஷதைகரதிரூப
நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாயபூத பக்திததுபாய ஸம்யக்ஜ்ஞாந ததுபாய
ஸமீசீநக்ரியா ததநுகுண ஸாத்விக தாஸ்திக்யாதி ஸமஸ்தாத்ம குண விஹீந : |
துரத்தராநந்த தத்விபர்ய யஜ்ஞான க்ரியாநுகுண அநாதி பாபவாஸனா
மஹார்ண வாந்தர்நிமக்ந :, தில தைலவத் தாருவஹ்நிவத் துர்விவேச த்ரிகுண
க்ஷணக்ஷரண ஸ்வபாவ சேதந ப்ரக்ருதி வ்யாபதி ரூபதுரத்யய பகவந்மாயா திரோஹித
ஸ்வப்ரகாச : அநாத்யவித்யா ஸஞ்சித அநந்த அஸக்ய விஸ்ரம்ஸந கர்மபாச ப்ரக்ரதித :
அநாகத அநந்தகால ஸமீக்ஷயாபி அத்ருஷ்ட ஸந்தாரோபாய : நிகில ஜந்து ஜாத சரண்ய :
ஸ்ரீமந் நாராயண : தவ சரணார விந்த யுகளம் சரணமஹம் ப்ரபத்யே |
என்றும் , எனக்குக் கட்டளை யிட்டுக் கைங்கர்யத்தைச் செய்யும் கைங்கர்ய பரனாக
இதை சிந்தித்து ,எல்லாவற்றையும் அடக்கி ஆளும் பகவானின் கல்யாண குணங்களை
அநுபவித்து ,இதனால் மிக அதிகமாக ப்ரேமம் பொங்க ,செய்யப்படும் ஸர்வாவஸ்சோசித
ஸர்வவித கைங்கர்யங்களையும் செய்வதையே இயல்பாகக் கொண்ட அடியவன்
என்கிற பதத்தை அடைவதற்கு அவச்ய சாதனமான பக்தியும்,இதற்கு உகந்த
ஜ்ஞான யோகமும் இதை ஸாதிக்கும் கர்ம யோகமும் இதற்கு ஏற்றபடி ஸத்வ குணம்
நிறைந்து இருப்பதும் ,இதனால் வரும் ஆஸ்திகத் தன்மையும் மற்ற ஆத்ம குணங்களும்
இல்லாதவனும் கடக்க முடியாதவை எண்ணற்றவை முன்சொன்ன ஆத்ம குணங்கள்
கர்ம , ஜ்ஞான , பக்தி யோகங்களை அழிக்கவல்ல ,விபரீத ஜ்ஞானம் , தீய செயல் இவற்றை
உண்டாக்க வல்லதும், அநாதி காலமாக துர்ப் பழக்கத்தைத் திருப்பித் திருப்பிச் செய்யும்
வாஸனையாகிற பெரிய கடலில் விழுந்து உழல்பவனும் , எள்ளில் எண்ணெய் போலவும்
விறகில் நெருப்பு போலவும் பிரித்து உணரமுடியாததும் ,முக்குணங்கள் உள்ளதும்,
க்ஷணந்தோறும் தேயும் இயல்பு உடையதும் ,அறிவற்றதுமான ப்ரக்ருதியினால்
சுற்றிலும் சூழ்ந்து கட்டுண்ணப் பண்ணுகிற நீக்க முடியாத பகவானது மாயையால்
மறைக்கப்பட்ட ஆத்ம ஜ்ஞானத்தை உடையவனும் அநாதி காலமாக என்னைத் தொடர்ந்து
வந்து கொண்டே இருக்கிற அஜ்ஞானத்தால் நானே நிறைய சம்பாதித்துக் கொண்டதும்,
அளவில்லாததும் அவிழ்க்க முடியாததுமான புண்ய பாப கர்மம் என்றும், பாசத்தால்
நன்கு பிணைக்கப்பட்டவனும் முடிவு இல்லாத எதிர்காலம் முழுவதுமே இதிலிருந்து
விடுவித்துக் கொள்ள வழி தெரியாதவனும் ஆன , நான் , எல்லாப் பிராணிகளையும்
ரக்ஷிக்கும் பொறுப்பை ஏற்க வல்லவரே, அகலகில்லேன் என்று உறையும் அலர் மேல்
மங்கை உறை மார்பா , எளிதில் அணுகும்படியாக இருக்கிற எந்தையே, உமது
திருவடித் தாமரைகளில் பரிபூர்ண நம்பிக்கையுடன் ,என்னைக் காக்கும் பொறுப்பை
ஸமர்ப்பிக்கிறேன் .
ஒருவரியில் சொல்லப்போனால்,
எல்லையற்ற ஸம்ஸாரம் எதிர் காலங்களிலும் உள்ளது;இந்த ஸம்ஸாரத்தைக்
கடக்க, உன்னைத் தவிர வேறு உபாயம் இல்லை

ஸ்ரீ வைகுண்ட கத்யம்
அநாகதாநந்தகால ஸமீக்ஷயாப்யத்ருஷ்ட ஸந்தாரோபாய : ,
தத்ப்ராப்த்யே ச தத்பாதாம்புஜத்வய ப்ரபத்தேரந்யந்ந மே கல்பகோடி
ஸஹஸ்ரேணாபி ஸாதநமஸ்தீதி மந்வாந : =

பகவானை அடைவதற்கு, அவனுடைய திருவடித் தாமரைகளில் ப்ரபத்தி
செய்வதைத் தவிர வேறு உபாயம் , ஆயிரம் கல்ப கோடிக் காலம் சென்றாலும்
அடியேனுக்கு இல்லை என்கிற எண்ணமுடைய நான்——-

திருவாய்மொழி ( 6–10–10 )

அகலகில்லேன் என்று உறையும் அலர்மேல் மங்கையுறை மார்பா !
நிகரில் புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே !
புகல் ஒன்று இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே !

தாமரையில் வாஸம் செய்பவள் பெரிய பிராட்டியார், நொடிப் பொழுதும்
விலகியே இருக்க மாட்டேன் என்று நித்ய வாஸம் செய்யும் திரு மார்பை
உடையவனே ! ஒப்புவமை இல்லாத கல்யாணகுணங்களால் ,ப்ரஸித்தி
ஆனவனே ! சேதன , அசேதன , ப்ரபஞ்ச ( ப்ரக்ருதி ) இவைகளை உடையவனே !
நீசனான என்னையும் உனக்கு என்று ஆக்கி ஆட்படுத்தி ஆள்பவனே !
கைங்கர்யபரர்கள் –கைங்கர்ய அநுபவத்தில் திளைத்து இருப்பவர்கள்–
விரும்பி வந்து வழிபடுகிற திருமலை யாண்டவனே !வேறு புகலிடம் இல்லாத
சரணம் என்று வேறு எங்கும் போக இயலாத உமது அடிமையாகிய நான்
உனது திருவடித் தாமரைகளில் வேறு பலன்களில் விருப்பமில்லாது
பிரபத்தி செய்தேன்

இது த்வயத்தைச் சொல்லும் பாசுரம் என்பர்.திருவாய்மொழிக்கு வ்யாக்யானமான
”ஈட்”டில் ஒரு ஐதிஹ்யம் உள்ளது—பட்டர் சொன்னது. 4வது அதிகாரமான
அர்த்தபஞ்சக அதிகாரத்திலே இதைப் பார்த்தோம்.
பிராட்டி =பத்மாவதி
திருவேங்கடத்தான் = பத்மாபதி
திவ்ய தம்பதியரிடம் செய்யும் ப்ரபத்தியை இப்பாசுரம் சொல்கிறது என்பர்.

அதிகாரத்திலிருந்து
ப்ரபத்திக்கு எல்லோருக்கும் அதிகாரம்

இவ்வளவு அதிகாரம் பெற்றால் ப்ரபத்திக்கு ஜாத்யாதி நியமமில்லாமையாலே
ஸர்வாதிகாரத்வம் ஸித்தம் .

அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்து உலகும்
நொந்தவரே முதலாக நுடங்கி அனன்னியராய்
வந்து அடையும் வகை வன் தகவு ஏந்தி வருந்திய நம்
அந்தம் இல் ஆதியை அன்பர் அறிந்து அறிவித்தனரே

பக்த்யாதெள சக்தி அபாவ :ப்ரமிதி ரஹிததா சாஸ்த்ரத : பர்யுதாஸ :
காலக்ஷேப அக்ஷபத்வம் த்விதி நியதிவசாத் ஆபதப்தி :சதுர்பி :
ஏக த்வி த்ரி ஆதியோக வ்யதிபிதுர நிஜ அதிக்ரியா : ஸம்ச்ரயந்தே
ஸந்த : ஸ்ரீசம் ஸ்வதந்த்ர ப்ரபதந விதிநா முக்த்யே நிர்விசங்கா :

வ்யாக்யானம்

ப்ராம்மணர் முதல் சண்டாளர் வரை உள்ள— அந்த எல்லையில் அடங்கிய
எல்லா லோகங்களிலும் சம்ஸார தாபத்தால் வாடுபவர்கள், வேறு உபாயம்
செய்ய இயலாதவர்களாய்த் துவண்டு வேறு பலன் வேறு ரக்ஷகன் தேடாதவராய் ,
சரணம் அடையும் வழியை , பெரிய குற்றம் புரிந்து இருந்தாலும் , மிக்கக்
க்ருபையுடன் ரக்ஷிக்க முயற்சிக்கிற அழிவில்லாத, ஜகத் காரணனான
நம் பகவானை பகவத் பக்தி ஆசார்ய பக்தி உடைய ஆசார்யர்கள் , தங்கள்
ஆசார்யர்களிடமிருந்து நன்கு தெரிந்துகொண்டு நமக்கு உபதேசித்தார்கள் .

பக்தி யோகம் போன்ற உபாயங்களை அநுஷ்டிக்க சக்தி யில்லாமை ,
இவற்றைப் பற்றிய ஞான மில்லாமை , இவற்றை யெல்லாம் அநுஷ்டிக்கத்
தகுதி யில்லை என்று சாஸ்த்ரங்களால் விலக்கி வைப்பது,மோக்ஷமடைய
நேரும் கால தாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமை—
இவற்றில் ,ஒன்றோ , இரண்டோ, மூன்றோ அல்லது நான்கோ அல்லது யாவுமோ
அமைவது , பூர்வ கர்ம பலனால் நேரும். இவை, லக்ஷ்மி நாயகனான எம்பெருமானை
ப்ரபத்தி மூலமாக அடைவதற்கான தகுதிகள் . இவற்றை அறிந்தவர்,இவ்வுபாயங்களைக்
கொண்டு மோக்ஷம் அடைவதில் எவ்வித சந்தேகமுமின்றி எம்பெருமானை
அண்டியுள்ளனர்.

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் —9-உபாயவிபாகாதிகாரம் —

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் —9-உபாயவிபாகாதிகாரம்

இந்த அதிகாரத்தில் ,ஸ்வாமி தேசிகன் ,மோக்ஷத்தை அடைவதற்கான பிரிவுகளைச் சொல்கிறார்

அதிகாரத்திலிருந்து

உபாய : ஸ்வ ப்ராப்தே : உபநிஷத் அதீத : ஸ பகவான்
ப்ரஸத்த்யை தஸ்ய உக்தே ப்ரபதந நிதித்யாஸந கதீ |
ததாரோஹ : பும்ஸ : ஸுக்ருத பரிபாகேண மஹதா
நிதானம் தத்ர அபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுணா : ||

வ்யாக்யானம்

பகவானை அடைவதற்கான உபாயம் அவனே –இதை உபநிஷத்துக்கள்
சொல்கின்றன. பகவானின் க்ருபையைப் பெற இரண்டு மார்க்கங்கள்
ஒன்று பக்தி ,மற்றொன்று ப்ரபத்தி. இந்த வழிகளில், இழிவதற்கு,
பூர்வ ஜன்ம புண்யம் தேவைப்படுகிறது.இருந்தாலும், அனைத்துக்கும்
யஜமானனான பகவானே காரணம்.

அதிகாரத்திலிருந்து

உபாயம் மற்றும் உபேயம்

இவர்களுக்குக் கர்த்தவ்யமான உபாயமாவது ஒரு ஜ்ஞான விகாஸ விசேஷம்.
இத்தாலே ஸத்யமாய் ப்ராப்தி ரூபமான உபேயமாவது ஒரு ஜ்ஞான விகாஸ விசேஷம்.
இவற்றில் உபாயமாகிற ஜ்ஞான விகாஸ விசேஷம் கரண ஸாபேக்ஷமுமாய்
சாஸ்த்ர விஹிதமுமாய் ஸத்யத்வாதிகளான ஸ்வரூப நிரூப தர்மங்கள்
அஞ்சோடே கூடின அவ்வோ வித்யா விசேஷ ப்ரதிநித்ய குணாதிகளிலே
நியத ப்ரஹ்ம விஷயமுமாயிருக்கும்.
உபேயமாகிற ஜ்ஞான விகாஸ விசேஷம் கரண நிரபேக்ஷமுமாய் ஸ்வபாவ
ப்ராப்தமுமாய் குண விபூத்யாதிகள் எல்லாவற்றாலும் பரிபூர்ண விஷயமுமாயிருக்கும்.

வ்யாக்யானம்

மோக்ஷத்தை விரும்பும் முமுக்ஷுக்களுக்குத் தேவையானது, ஒருவித
ஜ்ஞான மலர்ச்சி .இது உபாயம். இந்த உபாயத்தின் மூலமாக வேண்டும் வஸ்து
உபேயம் , இது மற்றோர் வகை ஜ்ஞான மலர்ச்சி
உபாயமாக இருக்கிற ஜ்ஞான மலர்ச்சி இந்த்ரியங்களை அடிப்படையாகக் கொண்டது,
என்று சாஸ்த்ரங்கள் சொல்கின்றன. இது ஐந்து தன்மைகள் கொண்டது.
ஆனந்த வல்லி என்கிற ப்ரஹ்ம வல்லி ( வாருணீ உபநிஷத் ) சொல்கிறது—
ப்ரஹ்மவிதா” ப்னோதி பர”ம்
ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான்
ப்ரஹ்மம் ,ஸத்யம் ஜ்ஞானம் , அனந்தம் —இந்த ப்ரஹ்மம், ஹ்ருதய குகையில்
பரமாகாசத்தில் இருக்கிறது. இது ப்ரஹ்மத்தையே குறியாகக் கொண்டுள்ளது.

இப்போது சொன்ன ஸத்யம் முதலான தன்மைகள் அந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தைச்
சொல்கிறது.தவிரவும் பல ப்ரஹ்ம வித்யைகளில் சொல்லியுள்ள தன்மைகளும் உள்ளன.

ஆனால், உபேய ஜ்ஞான மலர்ச்சி, ஞானேந்த்ரியங்களின் உதவியின்றி இயங்குகிறது.
இது, ஜீவாத்மாக்களுக்கு இயற்கையாகவே உள்ளது.எல்லா குணங்களும், விபூதிகளும் உள்ள
ப்ரஹ்மத்தை இலக்காகக் கொண்டுள்ளது.

அதிகாரத்திலிருந்து

உபாஸிதகுணாதேர்யா ப்ராப்தாவப்ய வஹிஷ்க்ரியா
ஸா தத்க்ரதுநய க்ராஹ்யா ந ஆகாராந்தா வர்ஜநம்

வ்யாக்யானம்

தத் க்ரது ந்யாயம் என்று சொல்கிறார்கள். இது, பகவானை அனுபவிக்கும் சமயத்தில்
த்யானம் முதலியவை அப்படியே உள்ளன என்பதைச் சொல்கிறது. வேறு எதையும்
விடச் சொல்ல வில்லை.

தத் க்ரது ந்யாயம்

இவ்வுலகில் முமுக்ஷு, பகவானை எவ்வித குணம் உள்ளவனாக உபாஸிக்கிறானோ
த்யானம் செய்கிறானோ, அவ்வித குணம் உள்ளவனாகவே ,சரீரத்தை விட்டு
பகவானை அடையும்போதும் அநுபவிக்கிறான் .
இது சாந்தோக்யத்தில் சொல்லப்படுகிறது
இங்கு உபாஸிக்கப்படும் / த்யானிக்கப்படும் பகவானின் குணங்கள்
மோக்ஷ தசையில் அவச்யம் அனுபவிக்கப்படுகிறது என்பதுதான் ,இந்த
”ந்யாயத்”துக்குத் தாத்பர்யம். இங்கு உபாஸிக்கப்படாத / த்யானிக்கப்படாத
குணாதிகள் அங்கு அனுபவிக்க உரியன அல்ல என்றோ அனுபவிக்க
இயலாது என்றோ தாத்பர்யமல்ல.

அதிகாரத்திலிருந்து
உபாய,உபேயங்கள் -பக்தருக்கும், ப்ரபந்நருக்கும் எப்படிப் பயனளிக்கிறது ?

ப்ராப்தி ரூபமான இவ்வநுபவத்தினுடைய பரீவாஹமாய்க் கொண்டு கைங்கர்யம்
உபேயம். இவ்வுபாய ரூபமாயும், ப்ராப்தி ரூபமாயுமிருக்கிற ஜ்ஞானத்துக்கு
விஷயமாய்க் கொண்டு பல ப்ரதந்த்வ போக்யத்வாதி வேஷத்தாலே ஈச்வரனுக்கு
உபாயத்வமும் உபேயத்வமும்

இவ்வீச்வரனுடைய உபாயத்வம் அத்வாரக ப்ராப்தி நிஷ்டன் பக்கல்
உபாயாந்தர ஸ்தாந நிவேசத்தாலே விசிஷ்டமாய் இருக்கும். மற்ற அதிகாரிக்கும்
கர்மயோகாரம்பம் முதலாக உபாஸந பூர்த்தி பர்யந்தமாக நடுவுள்ள
கர்த்தவ்யங்களில் அத்யந்த அசக்த்யமான நேர்களிலே இப் ப்ரபத்தி வசீக்ருதனான
ஈச்வரன் புகுந்து நின்று அந்த துஷ்கர கர்த்தவ்யங்களாலே வரும் பாப நிவ்ருத்தியையும்
ஸத்த்வோந்மேஷாதிகளையும் உண்டாக்கிக் கொடுத்து அவ்வுபாஸநமாகிற
உபாயத்தை பல பர்யந்தமாக்கிக் கொடுக்கும்.

வ்யாக்யானம்

பகவானுக்குச் செய்யும் கைங்கர்யம், நாம் அடையும் பேறு –பாக்யம் .
இது அடையும் பேறாக இலக்காக (உபேயம் ) உள்ளது.ஜ்ஞானத்துக்கு விஷயமாக
உள்ள பகவானே உபாயமாகவும் உபேயமாகவும் உள்ளான்.எல்லாவித பலன்களையும்
அளிப்பதால், உபாயமாகவும், அனுபவிக்கப்பட வேண்டியவனாக இருப்பதால்
உபேயமாகவும் உள்ளான் .

முமுக்ஷு ப்ரபத்தி செய்யும்போது, அதற்கு எல்லாவித உபாயமாக பகவான் இருக்கிறான் .
பக்தி யோகம் செய்யும் பக்தனுக்கும் பகவானிடம் ஈடுபாடு உள்ளது.இவன் கர்மயோகம்
செய்யும்போது, இவன் செய்த பாவத்தின் காரணமாக அந்தக் கர்ம யோகம் தடைபடலாம் .
கர்ம யோகம் தொடங்குதல், தொடங்கியது முடியாமலிருத்தல் என்கிற நிலைகள்
ஏற்படுகின்றன. அச் சமயம் பகவான் க்ருபைசெய்து , தடை செய்யும் பாவங்களை ஒழித்து
ஸத்வ குணம் மேலோங்கும்படி அருள்கிறான்.இவர்களின் உபாஸனம் / த்யானம்
இவையாவும் பலனளிக்குமாறு அருள்கிறான்.

பக்தி யோகம் செய்பவன் அதில் இழியும்போது அதற்கான உபாயங்களைச் செய்கிறான்.
அப்போது, அவன் செய்த பாவங்கள், உபாயத்துக்குத் தடை செயும் . அதை விலக்க ,
பெரிய பெரிய ப்ராயச் சித்தங்களைச் செய்கிறான். அந்த ப்ராயச் சித்த ஸ்தானத்தில்
பகவானை நிறுத்துகிறான். பகவானும் அந்த ஸ்தானத்தில் இருந்து தடைகளை நீக்கி
ஸத்வ குணம் மேலோங்கச் செய்கிறான். அதனால் பக்தி வளர்கிறது.
ஆகையால், ப்ரபத்தியின் கார்யம் எங்கும் ஒரே ரீதியாக இருக்கிறது.பக்தி யோகத்துக்கு
மட்டுமல்ல, பகவத் விஷயமான பக்தி யோகத்துக்கு முன்பாக ஜ்ஞான யோகத்தையும்
அதற்கும் முன்னே கர்ம யோகத்தையும் ஸாத்விகத் த்யாகத்தோடு —
கர்மாக்களைத் தொடங்கிச் செய்கிறான். எல்லாத் தடைகளையும் கர்ம யோகம்
முதற்கொண்டு —ஏற்படும் தடைகளை—விலக்க –ப்ரபத்தி செய்கிறான்.
ஆக , பக்தி நிஷ்டனுக்கும் ,ப்ரபத்தி தேவை. இப்படிப் பல ப்ரபத்திகளை,
பக்தி யோகத்துக்காகச் செய்கிறான்.ஆதலால், பக்தி யோகத்தை விட மாட்டான்.

அதிகாரத்திலிருந்து

கர்ம யோகத்தின் ஸ்வரூபம்

அங்குக் கர்ம யோகமாவது –சாஸ்த்ரத்தாலே ஜீவ பரமாத்மா யாதாத்ம ஜ்ஞானம்
பிறந்தால் தனக்கு சக்யங்களாய் பலஸங்காதி ரஹிதங்களான காம்ய கர்மங்களோடும்
நித்ய நைமித்திகங்களோடும் கூட ஸநியமமாகப் பரிக்ருஹீதமாயிருக்கும்
கர்மவிசேஷம். அதின் அவாந்தர பேதங்கள் தைவமேவாபரே யஜ்ஞம் என்று
தொடங்கிச் சொல்லப்பட்ட தேவார்சன தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதிகள் அதிகாரி
பேதத்தாலே ப்ரபத்தி தானே பக்தியை இடையிட்டும் இடையிடாதேயும் மோக்ஷ
ஹேதுவானாற்போலே இக் கர்மயோகம் ஜ்ஞான யோகத்தை இடையிட்டும்
இடையிடாதேயும் ஸபரிகரமான யோகத்தைக் கொண்டு ஆத்மாவலோகந
ஸாதனமாம்

வ்யாக்யானம்
கர்மயோகம் என்பதை விளக்குகிறார் ,ஸ்வாமி தேசிகன்.
சாஸ்த்ரங்களை அறிந்ததால் ஜீவாத்ம —பரமாத்ம ஜ்ஞானமும் ,விவேகமும்
உண்டாக்கிக் செய்யப்படுவது ”கர்மயோகம் ”***
இது, நித்ய கர்மா, நைமித்திக கர்மா , காம்ய கர்மா என மூவகை.இவை
ஒவ்வொன்றும், அவற்றைச் செய்யும் அதிகாரி–முமுக்ஷு –இவனின் திறமையைப்
பொறுத்தது.
ஸ்ரீமத் பகவத் கீதை (4–2–5 )

தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந : பர்யுபாஸதே |
ப்ரஹ்மாக் நாவபஸே யஜ்ஞம் யஜ்ஜேநைவோ பஜுஹ்வதி ||

சில கர்ம யோகிகள், தேவதாராதனமென்று யஜ்ஞம் செய்கிறார்கள்.வேறு சிலர்
ப்ரஹ்மமாகிய அக்நியில் யஜ்ஞத்தால் யஜ்ஞத்தையே ஹோமம் செய்கிறார்கள்.

அதாவது,கர்ம யோகங்கள் பல . ஜீவ —ஆத்ம தர்ஸநம் வேண்டும் என்று
ஸங்கல்பித்துக் கொண்டு ஸஹஸ்ரநாம அர்ச்சனை போன்று தேவாரச்சனை
செய்வது.ஏதேனும் ஒருவிதமான ”தபஸ் ” செய்வது.தீர்த்த யாத்ரை செய்வது.
தானம் செய்வது. யாகம் செய்வது.தினமும் யஜ்ஞம் செய்வது;இதைத்
தொடர்ந்து செய்யவேண்டும் .ஒருநாள், தேவாரச்சனை, ஒருநாள் தானம்,
ஒருநாள் யாகம் என்று மாற்றலாகாது.இப்படிச் செய்தால், வைராக்யம்
முதிரும்.ஜீவாத்ம தர்ஸநத்துக்கான மனஸ் ஸுத்தி ஏற்படும்.
மற்ற நித்ய நைமித்திக கர்மாக்கள் ,இதற்குத் துணையாகச் செய்ய வேண்டும்.
இவற்றை, ஆச்ரம தர்மம் என்றும் சொல்வர்
இந்த நித்ய கர்மாநுஷ்டானத்தை
ஜ்ஞான யோகம் செய்பவனும் அதற்குத் துணையாகச் செய்வான்.
பக்தி யோகம் செய்பவனும் இதற்குத் துணையாகச் செய்வான்.இந்த
நித்யகர்மாநுஷ்டானம் அதற்குத் துணையே. இதுவே கர்ம யோகம் அல்ல.

ப்ரபத்தி எப்படி அதைச் செய்யும் அதிகாரியின் தகுதியைப் பொறுத்து,
நேரடியாகவோ அல்லது பக்தியை முன்னிறுத்தியோ மோக்ஷம் அளிக்கிறதோ
அதைப்போல கர்ம யோகமானது ஜ்ஞான யோகத்தை முன்னிறுத்தியோ அல்லது
தான் மட்டுமாகவோ ஆத்ம தர்ஸனத்தை உண்டாக்கும்

முமுக்ஷுவுக்கு நான்கு உபாயங்கள்
கர்மயோகம், ஜ்ஞானயோகம் பக்தியோகம் ப்ரபத்தி
கர்மயோகம், ஜ்ஞானயோகம்–என்றது, இவன் செய்யவேண்டிய
நித்ய கர்மாக்களையும் ,இவன் பெறவேண்டிய ஆசார்ய முகேன –மூலமாக —
பகவத் ஜ்ஞானத்தையும் என்று பொருள். இவை இல்லாமல் பக்தி யோகத்தை
அநுஷ்டிக்க முடியாது.
ஸ்வர்க்கத்தை அபேக்ஷிப்பவன் –யாகம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது.
இது கர்மா. இது விஷயத்தில், ஜ்ஞானம் தேவை அல்லவா ?
கர்ம யோகம் என்பது –நித்யகர்மாநுஷ்டாநம் என்று அர்த்தமல்ல .
ஜ்ஞானயோகம் என்பது பரமாத்ம விஷய ஜ்ஞானம் என்று அர்த்தமல்ல .
இவை, நேராக மோக்ஷ ஸாதனம் ஆகாது .இவை,பக்தி யோகத்துக்குச்
ஸாதனம் .
இந்த அதிகாரத்தில், கர்ம ,ஜ்ஞான,பக்தி ,ப்ரபத்தி ,ஈச்வரன் என்கிறார்.
உபாயத்தில் இரண்டே —
ஸித்தோபாயம் , ஸாத்யோபாயம்
மோக்ஷத்துக்கு உள்ள ஸாத்ய உபாயத்தில் பக்தி, ப்ரபத்தி இரண்டு தான்.
அந்த பக்தியில் பல உட்பிரிவுகள் உள்ளன.
ப்ரபத்தியிலும் மாநஸ, வாசிக என்று உள்ளன.
கர்ம , ஜ்ஞான யோகங்கள் —உபாயங்கள்
பக்தி யோகம் செய்வதற்கு முன்பு,ஜீவாத்ம ஸ்வரூபம் முதலியன
தெரிந்திருக்க வேண்டும் .அதற்கு கர்ம , ஜ்ஞான யோகங்கள் தேவை
இதற்கும் முன்பு , ஜீவாத்ம ஸ்வரூபம் எப்படிப்பட்டது என்று ஆசார்யன் மூலமாக
அறிந்திருக்க வேண்டும் . பிறகு, முமுக்ஷுவாகி ,ஸாத்விக த்யாகத்துடன்
ஸகல கர்மாநுஷ்டானம் செய்பவனாக இருக்க வேண்டும்.
அந்த நித்ய, நைமித்திக கர்மாநுஷ்டானம் ,கர்ம யோகம் தொடங்குவதற்கு
முன்பும், கர்ம யோகாதிகளில் இழியாத ப்ரபத்தி நிஷ்டனுக்கும்
பக்தி யோகம் முடிவாக அநுஷ்டிப்போருக்கும் —–ஆக , இந்த மூன்று
பிரிவினருக்கும் பொது.பொதுவான இவர்களை விட, கர்ம யோகம் என்பது வேறு.

—————————————————————————
இவைகளுடன் ,வேதங்களில் காம்யமாக அதாவது ஐஹிக ,ஆமுஷ்மிகமான
பலன்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் கர்மாக்களைக் கூட ,தனக்கு மேலும்
வைராக்யம் வளர்வதற்காக ,அந்தப் பலன்களைத் த்யாகம் செய்து விட்டு
பகவத் ப்ரீதிக்காகச் செய்கிறேன் என்று ஸங்கல்பித்து ,முடிந்த வரை
செய்யலாம். அவையும் இவன் செய்யும் யோகத்துக்குத் துணையாகி
இவன் செய்யும் யோகம் பூர்த்தி செய்ய உதவும்.

இதையே, ” பலஸங்காதி ரஹிதங்களான காம்ய கர்மங்களோடும் –”என்று
ஸ்வாமி தேசிகன் ஸாதித்துள்ளார்.
அதாவது,பலத்தில் பற்று ,நான் கர்த்தா, இது எனக்கு என்கிற புத்தி–எண்ணங்கள்
இல்லாமலிருக்க வேண்டும். கர்மாநுஷ்டானத்தில், இவற்றை விடவேண்டும். இதற்கு
முன்பாகவே ஜீவன் வேறு, தேஹம் வேறு ,பரமாத்மா வேறு என்றும் ,அதனதன்
ஸ்வரூப விவேகம் வேண்டும். மோக்ஷம் வேண்டும் என்கிற தெளிவு வேண்டும்.
இதுதான் ” -சாஸ்த்ரத்தாலே ஜீவ பரமாத்மா யாதாத்மஜ்ஞானம் பிறந்தால் ”
என்று சொல்லப்படுகிறது.
அநேக காலம் தேஹ சக்தியுடனும், பிறர் ஸஹாயத்துடனும் தேவார்ச்சனை
தீர்த்த, யஜ்ஞ கர்மாக்களைச் செய்பவன் ,மனஸ் ஸுத்தி பெற்று
இந்த உதவிகளைப் பெறாமல் ஜ்ஞான யோகத்தையே செய்வான்.
அதன்பிறகு, முக்ய யோகத்தைச் செய்வான்.ஆஸனத்தில் அமர்ந்து,
ப்ராணாயாம பூர்வகமாக எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி ,மனத்தை
ஒருமுகப்படுத்தி, ஜீவாத்மாவைத் தொடர்ச்சியாகத் த்யானம் செய்தால்
ஜீவாத்ம தர்ஸநம் (அவலோகநம் ) ஏற்படும்.

அதிகாரத்திலிருந்து

ஜ்ஞான யோகச் சிறப்பு

ஞான யோகமாவது —கர்ம யோகத்தாலே அந்தகரண ஜயம் பிறந்தவனுக்குப்
ப்ரக்ருத்யாதி விலக்ஷணமாய் ஈச்வரனைப் பற்ற ஆதேயத்வ விதேயத்வ
சேஷத்வங்களாலே சரீரதயா ப்ரகாரமான தன் ஸ்வரூபத்தை
நிரந்தர சிந்தநம் பண்ணுகை.இக் கர்ம யோக ஜ்ஞான யோகங்களாலே
யோக முகத்தாலே ஆத்மாவலோகநம் பிறந்தால் வைஷயிக ஸுக
வைத்ருஷ்ணயாவஹமான ஆத்மாநுபவஸுகமாகிற ஆகர்ஷகத்தில்
அகப்பட்டிலனாகில் பரம புருஷார்த்தமான பகவதநுபவத்துக்கு
உபாயமான பக்தி யோகத்திலே இழியும் போது உள்ளிருக்கிற ரத்நம்
காண்கைக்குக் கிழிச் சீரை கண்டாற்போலே அந்தர்யாமியைப்
பார்க்கும் போதைக்கு அவனுடைய சரீர பூதனான ஜீவாத்மாவினுடைய
தர்சனம் உபயுக்தமாய்க் கொண்டு பக்தி யோகத்துக்கு
அதிகார கோடியிலே ஏறிட்டுக் கிடக்கும்.

வ்யாக்யானம்

கர்ம யோகம் மூலமாக, மனஸ் ,புத்தி இவைகளை வசப்படுத்தினால்,
ஞான யோகம் கிட்டும்.
தனது ஆத்மாவின் ஸ்வரூபம், பகவானின் சரீரம் என்று உணர்ந்து,தியானித்தல்,
ஞான யோகம் என்றும் சொல்வர்.இதனால் ஆத்ம தர்ஸனம் கிட்டுகிறது.இந்த அநுபவம்
அவனுக்கு ஒருவித இன்பத்தைக் கொடுக்கும் போது ,அதில் சிக்காமல்
இருக்க வேண்டும்.அப்படியிருந்தால், மிக உயர்ந்த புருஷார்த்தமான
பகவானை அடையும் மார்க்கமான, பக்தி யோகத்தில் திளைப்பான்.
அதன் மூலமாக, பகவத் அநுபவம் கிட்டும்.

கர்மயோக மாத்ரத்தாலோ கர்ம யோகத்துக்குப் பிறகு வரும்
ஜ்ஞான யோக மாத்ரத்தாலோ –த்யானம் ( த்யான யோகம் ) கூடியபோது
ஜீவாத்ம சாக்ஷாத்காரம் வருகிறது.இது,ஆகர்ஷமாகிறது .அப்படி ஆகும் போது
அதிலேயே ஈடுபட்டு பக்தி யோகத்தில் இழிய மாட்டார்கள்.இதை விட, பரம
புருஷார்த்தம் ,பகவதநுபவம் என்கிற ருசி தெரிந்தால் பக்தி யோகத்தில்
இழிவான் .

இப்படி பக்தி யோகத்தில் திளைக்கும்போது ஹ்ருதயத்தில் அந்தர்யாமியாக
வீற்றிருக்கின்ற பகவானை த்யானிக்கிறான்.இவனுக்கு, ஆத்ம தர்ஸனம்
என்பது,துணியில் கட்டி வைக்கப்பட்ட ரத்னத்தைப் போன்றது என்கிறார் பரமாசார்யன் .

கிழிச்சீரை —துணி— ரத்னத்தை மூடிக் கொண்டிருக்கும் .
ரத்னம், துணி அல்லது செப்புப் பெட்டியில் இருக்கும்.முதலில் தெரிவது, கிழிச்சீரை.
பிறகே அதனுள் இருக்கும் ரத்னம் தெரியும். அதைப் போல,முதலில்
தன் ஆத்ம தர்ஸனம் .இது கிழிச் சீரையைப்போல. பிறகு,
அந்தர்யாமியான பரமாத்ம தர்ஸனம் .இது ரத்னத்தைப் போல.
ஐச்வர்ய பல அநுபவம் .ஸூக்ஷ்ம ஆத்ம விஷயத்தில் அநுபவம் .இதில்
இவனுடைய வைராக்யத்தைப் பரீக்ஷை செய்து ,ஈச்வரன் பக்தி யோகத்தில்
இழியச் செய்கிறான்.ஜீவாத்ம அந்தர்யாமியாக, பரமாத்மாவை த்யானிக்கிறான்.
இரண்டும் வேறாக இருந்த போதிலும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து காண வேண்டிய போது
ஒன்றின் தர்ஸனம் மற்றொன்றின் தர்சநத்துக்குக் காரணம் ஆகிறது.

அதிகாரத்திலிருந்து

பக்தி யோகச் சிறப்பு

பக்தி யோகமாவது அநந்ய நிஷ்டனாய் அநந்ய கதியனாய் அநந்ய சேஷபூதனான
பகவானுடைய ஸ்வரூபாதிகளை விஷயமாக வுடைத்தாய் நிரதிசய ப்ரீதி ரூபமான
த்யான விசேஷம். அதுதான் தைலதாரைப்போலே நிரந்தரமான ஸ்ம்ருதி ரூபமாய்
ஸாக்ஷாத்கார துல்யமான வைசத்யத்தை யுடைத்தாய்ப் பரம பதத்துக்குப் ப்ரயாணம்
பண்ணும் திவஸமறுதியாக நாள் தோறும் அநுஷ்டிக்க வளர்ந்து வருவதாய்
அந்திம ப்ரத்யய அவதியான ஜ்ஞான ஸந்ததி விசேஷம்

வ்யாக்யானம்

பக்தி யோகம் –இது எதையும் எதிர்பார்க்காமல், பகவானிடம் செலுத்தும் ப்ரேமை.
பகவான் தன்னுடைய எந்தக் காரியங்களுக்கும் யாரையும் எதிர்பார்ப்பவனல்ல.
யாருடைய கட்டளைக்கும் அடிபணிய வேண்டிய அவச்யமற்றவன். யாராலும் எதற்கும்
அவனை நிர்ப்பந்திக்க இயலாது.இப்படிப்பட்ட பகவானின் ஸ்வரூபம் அவனது கல்யாண
குணங்கள் ஆழங்கால்பட்டு அவனை த்யானிப்பது பக்தி யோகம்
இது மிகத் தெளிந்த ஞானம். எண்ணெய் ஒழுக்குப் போன்று தடையற்று உள்ளதாகும்.
பரம பதம் அடையும் வரை, ஒவ்வொரு நொடியும் வளர்ந்தபடி இருப்பதாகும்.
உயிர் பிரியும் க்ஷணத்தில் ,மற்ற நினைவுகள் இல்லாததாகும்.

அதிகாரத்திலிருந்து

வர்ணாச்ரமம் –அவச்யம்

இதுக்கு வர்ணாச்ரம தர்மங்கள் ஜ்ஞாந விகாஸ ஹேதுவான ஸத்த்வாதி வ்ருத்திக்குக்
களையான ரஜஸ் தமஸ்களுக்கு மூலமான பாபங்களைக் கழித்துக் கொண்டு
இதிகர்த்தவ்யதையாயிருக்கும்.

வ்யாக்யானம்

ஸத்வம் என்பது பயிராக உருவகித்தால், இது வளர்வதற்குக் களையாக
இருப்பது,ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள். இந்தக் களை ஏற்படக் காரணம்
முன் வினைப் பயன்–பாபம் .இது ஒழிந்து ஸத்வம் வளர்ந்தால், ஞானம் செழிக்கும் .
இந்தப் பாவங்கள் கழிய அவரவர் வர்ணாச்ரம தர்மங்கள் வழியாக வாழ்வதே.
வர்ணாச்ரம தர்மப்படி கர்மாக்களைச் செய்யும்போது பாவங்கள் தொலைகின்றன
இவ் விதமாக வர்ணாச்ரம தர்மங்கள், பக்திக்கு அனுசரணையாக உள்ளன.

அதிகாரத்திலிருந்து

பக்தி யோகம் –ஐச்வர்யத்தை அளிக்கும்

இப்பக்தி யோகந்தானே ப்ரத்யயார்த்தம் ச மோக்ஷஸ்ய ஸித்தய : ஸம்ப்ரகீர்த்திநா :
என்கிறபடியே இளநெஞ்சரைத் தேற்றுகைக்கு இட்ட விரகான வழியில் காமநா
பேதத்தாலே ஐச்வர்யாதிகளுக்கும் ஸாதனமென்னும் இவ்வர்த்தம் சதுர்விதா
பஜந்தே மாம் என்று சொல்லப்பட்டது

வ்யாக்யானம்

பக்தியோகம் –உலகவிஷயங்கள், கைவல்யம் –இவற்றை அடையச் ஸாதனம் –இதை
ஸத்வத ஸம்ஹிதை கூறுகிறது
ப்ரத்யயார்த்தம் ச மோக்ஷஸ்ய ஸித்தய : ஸம்ப்ரகீர்த்திநா : =மோக்ஷம் என்கிற பலன்
விஷயத்தில், நம்பிக்கை வருவதற்காக ஐச்வர்யாதி பலன்களும் கூறப்பட்டன.
ஸாரப்ரகாஸிகா —-ஸாராஸ்வாதிநி இவற்றில் பகவான் தானாக அளிக்கும்
அஷ்ட ஸித்திகளைக் கொள்ளாமல் ,ஐச்வர்யாதி பலன்களுக்காக இதை விதித்தது
நம்பிக்கைக்காக என்று விளக்கமுள்ளது.
வேதத்தில் நம்பிக்கை ஏற்பட , சத்ருவைக் கொல்ல அபிசார ஹோமம் உள்ளது.
ஸுக்ரீவனுக்கு நம்பிக்கை வருவதற்காக, ஏழு மராமரங்களை ராமபிரான் ஒரே
பணத்தால் வீழ்த்தினான் .

ஸ்ரீமத் பகவத் கீதை (7–16 )

சதுர்விதா பஜந்தேமாம் ஜநா : ஸுக்ருதிநோர்ஜூந |
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப ||

அர்ஜுனா —துயரம் உள்ளவன் ,பகவத் தத்வத்தை அறிய விழைபவன்
பொருளை விரும்புபவன் பகவத் தத்வ ஜ்ஞானம் உள்ளவன் –என்று
நான்கு வகையான மநுஷ்யர்கள் என்னையே துதிக்கிறார்கள்

அதிகாரத்திலிருந்து

ஞாநியின் மேன்மை

அவ்விடத்தில் தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏகபக்திர்விசிஷ்யதே என்று தொடங்கிச்
சொன்ன ஞானியினுடைய ஏற்றத்தை

சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா :
ஏஷாமேகாந்திந : ச்ரேஷ்டா : தே சைவாநந்யதேவதா :
அஹமேவ கதிஸ்தோஷாம் நிராசீ : கர்மகாரிணாம்
யே து சிஷ்டாத்ரயோ பக்தா :பலகாம ஹி தே மதா :
ஸர்வே ச்யவநதர்மாண : ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாத்

என்று தானே வெளியிட்டான்

வ்யாக்யானம்

முன்பு சொன்ன நான்கு விதமானவர்களில், ஞானியின் ஏற்றத்தை
ஸ்ரீமத் பகவத் கீதையில் ( 7–17 )பகவான் சொல்கிறான்.

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏகபக்திர் விசிஷ்யதே |

ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்த மஹம்ஸ ச மம ப்ரிய : ||

இந்த நால்வருள், எப்போதும் என்னிடம் பக்தி செய்பவன் ,என்னையே
த்யானம் செய்பவன் —இவன் –ஞாநி —-இவன் உயர்ந்தவன், அவனுக்கு
நான் ப்ரியமானவன். அதைப் போல எனக்கும் அவன் மிக ப்ரியமானவன்
உடையவர் வ்யாக்யானம் —-ஞாநிக்கு , நான் ப்ரியமானவன் என்று
பகவான் சொல்கிறார்; எவ்வளவு ப்ரியம் என்பதை, அவனாலேயே
அளவிட்டுச் சொல்ல முடியாது;இத்தனைக்கும் பகவான் , ஸர்வஜ்ஞன் ;
ஸர்வ ஸக்தன் —-

மஹா பாரதம்

சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா :
ஏஷாமேகாந்திந : ச்ரேஷ்டா : தே சைவாநந்யதேவதா :
அஹமேவ கதிஸ்தோஷாம் நிராசீ : கர்மகாரிணாம்
யே து சிஷ்டாத்ரயோ பக்தா :பலகாம ஹி தே மதா :
ஸர்வே ச்யவநதர்மாண : ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாத்

என்னுடைய பக்தர்கள் நான்கு வகைப் படுவர்.அவர்களில் மற்ற தேவதைகளை
நாடாமல், என்னிடமே பக்தி செலுத்துபவர்கள் சிறந்தவர்.இவர்கள் தங்கள் கர்மாக்களை
எவ்வித ப்ரதி பலனையும் எதிர்பாராமல் செய்கின்றனர்.என்னை அடைவதே
இவர்களின் லக்ஷ்யம் .மற்ற மூன்று வகைப்படுபவரும் உலக இன்பங்களைப்
பலனாகக் கோருகிறார்கள் .அதனால், முக்கிய லக்ஷ்யத்தை நழுவ விடுகிறார்கள்.
என்னை மட்டுமே ஆச்ரயிப்பவன் புத்திமானாக ,என்னையே அடைகிறான்

அதிகாரத்திலிருந்து

பக்தி—-பரபக்தி —பரஜ்ஞாநம் —பரம பக்தி —-விளக்கம்

இப்படி மோக்ஷோபாயமாக விதித்த பக்தி யோகம், பரம பக்தி என்று பேசப்பட்டது.
இதினுடைய ஹேதுவாய் ஸாத்விக பரிசீலநாதிகளாலே வந்த பகவத் விஷயத்தில்
ப்ரீதி விசேஷம் ஸர்வேச்வரனைத் தெளிய வறிய வேணுமென்னும் அபிநிவேசத்துக்குக்
காரணமாய் பக்தி யென்று பேர் பெற்றிருக்கும்

வ்யாக்யானம்

மோக்ஷத்துக்கு உள்ள பக்தி யோகம் ”பரபக்தி ” எனப்படுகிறது.ஸாத்விகர்களுடன்
சகவாஸம், பகவானிடம் அளவு கடந்த ப்ரேமை , இவற்றால் ஏற்படும் பரபக்தியே
பக்தியாகும். இதனால்,பகவானை மேலும் மேலும் அனுபவிக்க ஆவல் பெருகும்

பரபக்தி =மோக்ஷம் அடைய ,தைல தாரை போன்று பகவத் த்யானம் செய்வது

பக்தி விசேஷம் = பகவானிடம் ப்ரீதியுடன் , ச்ரவணம் ,மனனம் செய்வது—இது,
இந்த பக்தி, பரபக்தியுடன் ஸம்பந்தப்படுகிறது

பர ஜ்ஞானம் = மோக்ஷத்தை அடைய நிறைய நிலைகள் உள்ளன. இந்த பர ஜ்ஞானம்
பரபக்திக்குப் பின்னால் வருகிறது.தைல தாரை போன்று பகவத் த்யானம் செய்யச்
செய்ய, பர ப்ரஹ்மத்தைப் பற்றிய ஜ்ஞானம் வளருகிறது.

பரம பக்தி = பிறகு, முமுக்ஷுவானவன் ,கர்ம ,ஞான யோகங்களை செய்து பர ஜ்ஞானத்துடன்
செய்யும் பக்தி யோகம்

அதிகாரத்திலிருந்து

இத்தாலே சுத்த பாவம் கதோ பக்த்யா சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் என்கிறபடியே
சாஸ்த்ர ஜந்ய தத்த்வ ஜ்ஞான கர்ம யோகாதி பரம்பரையிலே பிறந்த பரபக்தி யானது
ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்னும் அபிநிவேசத்தை உண்டாக்கி ”யோகேச்வர ததோ மே
த்வம் தர்சயாத்மாநமவ்யயம் ” காணுமாறு அருளாய் , ஒருநாள் காண வாராய் என்று
விலபிக்கும்படி பண்ணி இவ்வபேக்ஷா மாத்ரமடியாக வந்த பகவத் ப்ரஸாத விசேஷத்தாலே
தத்கால நியதமான பரிபூர்ண ஸாக்ஷாத்காரத்தை உண்டாக்கும். இஸ்ஸாக்ஷாத்காரம்
பர ஜ்ஞானமென்று பேசப் பட்டது.

இப்படி நிரதிசய போக்யமான பகவத் ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்தவாறே
பெருவிடாய்ப் பட்டவன் தடாகத்தைக் கண்டாற்போலே பிறந்த ப்ரீத்யதிசயம் பரம பக்தி

வ்யாக்யானம்

மஹாபாரதம் –சொல்கிறது-
சுத்தபாவம் கதோ பக்த்யா சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் = பகவான் மற்றும்
ஆசார்யன் மீது உள்ள பக்தி காரணமாக என்னுடைய ஸ்வரூபத்தை உணர்ந்தேன்.
சாஸ்த்ரம் மூலமாக, ஜனார்த்தனனை அறிகிறேன்.இப்படியான , பரபக்தி
என்பது கர்ம ,ஞானயோகத்தால் உண்டாகிறது.இது பகவானைத் தர்ஸிக்க வேண்டும்
என்கிற ப்ரேமையை அதிகப் படுத்துகிறது .இந்தப் பிரேமை பகவானைக் குறித்து
புலம்ப வைக்கிறது
ஸ்ரீமத் பகவத் கீதை ( 11–4 )
மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ |
யோகேச்வர ததோ மே த்வம் தர்சயாத்மாநமவ்யயம் ||

ஜ்ஞானம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமான க்ருஷ்ணா ——
நான் பார்க்கலாம் என்று எண்ணினால் அழிவில்லாத உன் திருவடியை
எனக்குக் காட்டி அருள்வாயாக
நாரத பக்தி ஸூத்ரம் அரும்பதவுரையில் காண்க —–

திருவாய்மொழி ( 8–1–1 )

தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார்
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்கண் அது ஓர் பவளவாய் மணியே !
ஆவியே !அமுதே! அலைகடல் கடந்த அப்பனே ! காணுமாறு அருளாய் !

அப்பனே! உன்னிடம் அநுகூலங்கள் நிறைந்து இருக்கின்றன .ப்ரதிகூலம்
எதுவும் இல்லை.ஆகையால் அருள்க ! அநுகூலங்களைக் கேட்கிறாயா ?
சொல்கிறேன்
திருமகள்,மணமகள் உனக்குத் தேவிமார். திருமகள் உனக்குச் செல்வம்.
அவருக்கு வளம் சேர்ப்பவள் மணமகள். குற்றம் இருந்தாலும் காக்க வேண்டும்
என்று சொல்பவள், திருமகள் . பரம விரோதியான ராவணனுக்கே ”மித்ரமௌ
பயிகம் கர்த்தும் ராம ” (குற்றத்தைப் பொறுக்கச் சொல்லி ) ராமனை ,நண்பனாக
அடைவாயாக என்று சொன்னவள், சீதாப் பிராட்டியான திருமகள்.
மண்மகளோ , ஏது குற்றம் என்று சொல்பவள் .இவர்கள் எனக்கு அநுகூலர்கள் .
நித்ய ஸூரிகள் புருஷகாரர்கள் . இவர்களும் அநுகூலர்களே .ஏனெனில்
இவர்கள் ஆசார்ய ஸ்தானம் வகிப்பவர்கள்.எல்லாம் இருந்தும், நீ, ஐச்வர்யம்
இல்லை, இடையூறு என்று சொல்ல முடியாது .உலகெல்லாம் உனது ஆட்சி .
உனக்கு அடங்காதார் எவருமில்லை.”பரம பதத்தில் இருக்கும் என்னை
எப்படிக் காண முடியும் ”என்று கேட்கிறாயா ?தேவர்களுக்காக ,மநுஷ்ய
அவதாரம் எடுத்தாய்.அலைக் கடலைக் கடைய ,எத்தனை அவதாரம் எடுத்தாய் !
உன் கண்ணழகும் பவளச் செவ்வாயும் என்னை வாட்டுகிறது.அப்படிப்பட்ட
திருமேனியோடு என்னைக் காண வருக என்று சொல்லக் காரணம்
நீ, எனக்குப் ப்ராணனும் ஆவியல்ல !ஆத்மாவும் ஆவியல்ல ! பரமாத்ம
ஸ்வரூபமும் ஆவியல்ல ! சுபாஸ்ரயமான உன் திருமேனியை ,என் ஆவி !
அந்தத் திருமேனி எனக்குப் பரம போக்யம் !அமுதம் ! நீ எனக்கு அப்பன் !
என் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு நான் உன்னைக் காணுமாறு
அருள்க !

திருவாய்மொழி ( 6–9–4 மற்றும் 8–5–1 )

தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர் உடல் வேறா
பிளந்தும் வீயத் திருக்காலால் ஆண்ட பெருமானே !
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்கவொருநாள் காணவாராய் விண்மீதே

சகடாசுரன் உன்னைக் கொல்லப் பார்த்த போது நீ , உறக்கத்தின் நடுவே
உன் திருவடியைத் தூக்கி அந்த ஸம்பந்தத்தாலே சகடாசுரன் பொடிப் பொடியாக
ஆனான். சகடத்தில் புகுந்த அசுரன், ஒருவரா பலரா யார் கண்டார்கள் !
சகடம் ஒன்றானபடியால் சகடாசுரன் பொடிப் பொடியாக ஆனதில் ஒருவன் பலராகவும்
இருக்கலாம். அவர்கள்,யார் கண்ணுக்கும் தெரியாதபடி தளர்ந்து ,முறிந்து
வேறு வேறாக ஆக்கிப் பிளக்கப்பட்டு ஒழிந்தார்கள். அப்படிப்பட்ட
திருவடியே எங்களைக் காக்கிறது.அந்தத் திருவடி ஸம்பந்தத்தால்
என் பாவம் எல்லாம் அழிந்தது. என்னுடைய கஷ்டங்களை அழிக்க
பூமிக்கு வர இஷ்டமில்லையாகில் ,ஆகாயத்தில் வந்து நிற்கலாமே !
நீ, எனக்காகப் பரமபதத்திலிருந்து கிளர்ந்து விரைவில் வந்தால்
கஜேந்த்ர ஆழ்வானுக்காக நீ அரை குலைய தலை குலைய வந்து
அருளியபோது, ”நாஹம் நாஹம் ந சாஹம் ந ச பவதிபுன :தாத்ருஸோ
மாத்ரேஷு ” என்று தாங்கள் ஆதி மூலம் இல்லை என்று ப்ரம்மா சிவன்
இந்த்ரன் விண்ணவர் எல்லோரும் உன்னை ஆகாயத்தில் சூழ்ந்து
இருந்தனர். பூமிக்கு வர இஷ்டமில்லையாகில் இவர்கள் சூழ , நீ,
விண்ணில் நின்றால் உன் ப்ரகாசத்தால் உலகம் எல்லாம் விளங்கும்.நானும்
உன்னைத் தர்ஸிப்பேன்—வந்து அருள்க !

திருவாய்மொழி ( 8–5–1 _)

மாயக்கூத்தா ! வாமநா ! வினையேன் கண்ணா !கண்கைகால் ,
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாயமுகில் அது ஆ
சாயல் சாமத் திருமேனி தண் பா சடையா தாமரைநீள்
வாசத்தடம்போல் வருவானே ! ஒருநாள் காணவாராயே !

மாயக்கூத்தா ! வாமநா ! அழகான ஆச்சர்யமான செயல்களைச் செய்பவனே !
நீ, குளிர்ச்சியான தடாகம்.உன் திருமேனியில் தடாகத்துக்கு வேண்டியது
எல்லாம் இருக்கின்றன. தாமரைப் புஷ்பங்கள்;மொட்டு ;இலை —-திருமேனி காந்தி
எங்கும் ப்ரகாசிக்கிறது .உன் சுயரூபத்தை மறைத்து,வேறு வேஷமணிந்து
ஆடுகிறாய் !தேவலோக வேஷத்துக்கு வாமனாவதாரம் !மனிதப் பிறப்புக்குக்
கண்ணன் அவதாரம். வாமநனாய், மஹாபலி அருகே சென்று மாய சேஷ்டைகள்
செய்தாய். கண்ணனாய்,வெண்ணெய்க்கு ஆடின கூத்து !உன் அவதாரம்
எல்லாம் மாயக்கூத்து !இப்படியெல்லாம் என் கண்ணில் படும்படி , நான் காணும்படி,
ஒருநாளாவது வந்து அருள்க !

இப்படிப்பட்ட எல்லையில்லா ஆவலினால், பகவானின் க்ருபை கிடைக்கிறது.
க்ருபையினால் , தனது பரிபூர்ண திருவடிவைக் காண்பிக்கிறான். இதுவே,
பர ஜ்ஞானமாகும்
பரபக்தி என்பது மோக்ஷத்துக்கு உபாயம் . கர்ம யோகம்,ஜ்ஞான யோகம் —
இதற்கு அங்கங்கள் .

மிகவும் தாகமெடுத்தவன் நீர்நிலையைக் கண்டவுடன் மிகவும் மகிழ்வதைப்போல
பகவானைத் தர்ஸித்தவன் அவனிடம் அளவில்லாப் ப்ரியம் அடைகிறான்.
இதுவே, பரமபக்தி .

அதிகாரத்திலிருந்து

பரமபக்தி மோக்ஷம் அடைய வைக்கிறது

இது, முனியே நான்முகனிற்படியே ஸங்கோசமற அனுபவித்தல்லது
தரிக்க வொண்ணாத அபிநிவேசத்தை உண்டாக்கி மறுக்க வொண்ணாத
திரு வாணை யிட்டு வளைத்துக் கூப்பிடுகையாலே இவனுக்குக் கடுகப்
ப்ராப்தியைக் கொடுக்கும்படி ஸர்வேச்வரனுக்குத் த்வராதிசயத்தை
உண்டாக்கி இவனை அவாவற்று வீடு பெறப்பண்ணும்

வ்யாக்யானம்

பரமபக்தி ,எவ்வித இடைஞ்சலுமில்லாமல் பகவானை அநுபவிக்க வேண்டும்
என்கிற ஆவலையும் உறுதியான எண்ணத்தையும் ஏற்படுத்தும்.
அதைத் தொடர்ந்து, பகவானின் அநுபவ மகிழ்ச்சி இன்றி, உயிர் வாழவே
இயலாது என்கிற நிலை ஏற்படும்.
திருவாய்மொழி (10–10–1 ) இதைச் சொல்கிறது —
முனியே ! நான்முகனே ! முக்கண்ணப்பா !என்பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே ! என்கள்வா !
தனியேனாருயிரே ! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே

நீ, ஸங்கல்ப மாத்ரத்தில் உலகங்களைச் ஸ்ருஷ்டிக்கிறாய் ! சேதநர்களை
நித்ய விபூதியில் சேர்க்கப் படாதபாடு படுகிறாய் !நீ, என்னை விடலாகாது !
ப்ரஹ்மாவைப் படைத்து அவனுக்குள் புகுந்து செயல் புரிகிறாய் !
ருத்ரனைப் படைத்து, அவனுக்கும் அந்தர்யாமியாய் ஸம்ஹரிக்கிறாய் !
உனது, ஒவ்வொரு செயலும் எனக்கு ”போக்யம் “. பக்தர்களோடு
பேசும் கனிவாயும் , குளிரக் கடாக்ஷிக்கும் திருக்கண்களும் ,அணைக்கவான
திருமேனியும், எனக்கு போக்யம் !
நான்முகன் , நான்கு வாய் உள்ளவன் ; முக்கண்ணன் ஒருகண் ,நெருப்பு !
குளிர்ந்த கடாக்ஷத்துக்கு உன் திருக் கண்களே சான்று !இவைமட்டுமல்ல—
நீ, கருமாணிக்கம் !தாபங்களையெல்லாம் தீர்க்கும், மாணிக்கம் !
முந்தானையில் முடிந்துகொள்ளும்படியான ”ஸௌலப்யம் ” உள்ளவன் ,நீ !
வானேற வழி தந்தவன் ! உன் திருவடிகள், என் தலையில் படிந்தன !
முக்தர் செல்லும் வழியில் என்னைச் செலுத்தினாய் !இப்படிப்
பேரவாவை உண்டுபண்ணிவிட்டு ஏதேனும் மோகனமான குணத்தைக்
காண்பித்து,நான் கேட்பதை, நான் மறக்குமாறு செய்துவிடாதே !

அடுத்த திருவாய்மொழியில் சொல்கிறார் —–

மாயம் செய்யேல் என்னை உன் திருமார்வத்து மாலை நங்கை
வாசஞ்செய் பூங்குழலாள் திரு வாணை நின் ஆணை கண்டாய்
நேசஞ்செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசஞ்செய்யாது கண்டாய் ! என்னைக் கூவிக் கொள்வாய் வந்து அந்தோ !

பரமபத ருசியில் எவ்வளவு ஆசைப்பட்ட போதும்,பகவத் பாகவத ஸம்ருத்தி
என்பதைக் காண்பித்து பரமபத ருசியை இனியும் குறைக்காதே !எல்லோரும்
விரும்புவது லக்ஷ்மீ கடாக்ஷம் !லக்ஷ்மி விரும்புவது, உன் கடாக்ஷத்தை !அவளாலே
உனக்கும் பெருமை !அவள் மாதா —-அந்த மஹாலக்ஷ்மியின் மேல்
ஆணை யிடுகிறேன் —உன்மீதும் ஆணை !நீயல்லவோ, என்னைக்
கூவிக் கொள்ள வேண்டும் ? ஒருதரம் ப்ரார்த்தித்தாலே காக்கின்ற ,நீ,
முடிவில் வளைத்துக் கூப்பிட வேண்டுமென்று நிர்ப்பந்தம் செய்கிறாயோ ? அந்தோ !

அதிகாரத்திலிருந்து
பக்தியோகம் ,ப்ரபத்தியின் பலனைக்கொடுக்கிறது

இப் பக்தி யோகம் த்ரைவர்ணிகரையொழிந்தார்க்கும் த்ரைவர்ணிகர் தங்களில்
ஞானத்திலேயாதல் சக்தியிலேயாதல் இரண்டிலுமாதல் குறையுடையார்க்கும்
பலவிளம்பம் பொறுக்க இசையாத தீவ்ர ஸம்வேகமுடையார்க்கும்
யோக்யமில்லாமையாலே தங்கள் அளவுகளைத் தெளிந்து அத்வாரகமாக ப்ரபத்தியை
மோக்ஷோபாயமாகப் பற்றுமவர்களுக்கு ஸர்வபலஸாதனமான ப்ரபத்திதானே
பரபக்தி ஸ்தாநத்திலே சோதிதையாகையாலே உபாஸகனுக்குப் பரபக்திக்குமேல்
வரும் அவஸ்தைகள் போலே இஸ்ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுடைய கோலுதலுக்கு
ஈடாக இப்ப்ரபத்திக்கு மேல்வரும் அநுகூலாவஸ்தைகள் இதின் பலமாயிருக்கும் .

வ்யாக்யானம்

இந்தப் பக்தி யோகத்தை ,மூன்று வர்ணத்தார்தான் (அந்தணன்,க்ஷத்ரியன் ,வைச்யன் )
செய்யலாம். இவர்களிலும், ஞானம் சக்தி இவைகளில் குறையிருப்பின்
பக்தி யோகம் செய்ய இயலாது.தவிரவும், பக்தியோகம் செய்வதன் பலனாகிய
மோக்ஷத்தைப் பெறத் தாமதத்தைப் பொறுக்க இயலாதவர்களாலும் செய்ய இயலாது.
இப்படிப்பட்டவர்களுக்கு, ப்ரபத்தி ஏற்புடைத்து. ஆகவே,ப்ரபத்தியே ,பரபக்திக்குப்
பதிலாக ஏற்கப்படுகிறது.பரபக்தி உள்ளவன், பரஜ்ஞானம் பெறவேண்டும்.
ஆனால்,ப்ரபத்தியை ஏற்பவன் அதன் பலனை விரைவில் அடைகிறான்.

பக்தி யோகம் செய்ய இயலாதவர்கட்கு , ப்ரபத்திதான் ஸாதனம் . ஏன் பக்தி செய்ய
முடிவதில்லையெனில் , பக்தி விஷயமான ஜ்ஞானம் இல்லை. அப்படி இருந்தாலும்,
இந்த ஜன்மம் முடியும் போது மோக்ஷத்தை அபேக்ஷித்தால் ,கிடைக்காது என்பதுமாம் .

அதிகாரத்திலிருந்து

ப்ரபத்தி —ப்ரஹ்ம வித்யைகளில் ஒன்று

இப்படி,ப்ரபத்திக்கும் ,பக்திக்கும் அதிகாரி விசேஷத்தைப் பற்றித் துல்யபலத்வம்
உண்டாகையாலே விகல்பமாகக் கடவது. இவற்றுக்கு நாநாஸப்தாதி பேதாத்
என்கிற அதிகரணத்திலே பேதம் ஸித்தம் . விகல்போ அவிசிஷ்டபலத்வாத்
என்கிற அதிகரணத்திலே விகல்பமும் ஸித்தம் .

வ்யாக்யானம்

இப்படி, பக்தியும் ப்ரபத்தியும் அவற்றை அநுஷ்டிப்பவர் தகுதியைப் பொறுத்தது .
இவை இரண்டுமே வெவ்வேறு என்பதை ப்ரஹ்மஸூத்ரம் —அதிகரணங்களிலே
பார்க்கலாம்.
ப்ரஹ்மஸூத்ரம் ( 3–3–56 )
நாநாஸப்தாதி பேதாத்—ப்ரஹ்ம வித்யைகள் வெவ் வேறாக இருப்பதைப் போல,
அவற்றின் பெயர் முதலியனவும் வெவ்வேறானவை.

ப்ரஹ்மஸூத்ரம் ( 3–3–57 )

விகல்போ அவிசிஷ்டபலத்வாத் =ப்ரஹ்ம வித்யைகள் அனைத்துக்கும்
மோக்ஷம் ஒன்றே பலன் . ஆதலால்,அந்த வித்யைகளில், எதில் ஈடுபாடு உள்ளதோ
அதைச் செய்யலாம்.

விகல்பமாகக் கடவது = விகல்பம் —ஸாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட சம வலிமை உடைய
இரண்டில், ஏதாவது ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை அநுஷ்டித்தல்—இது விகல்பம்
எனப்படுகிறது.
உதாரணம் =32 வித்யைகளும்,ப்ரபத்தியும் மோக்ஷத்துக்கு என்று உள்ளன.
அவற்றுள், மோக்ஷத்துக்கு என்பதாக ஏதாவதொன்றை அநுஷ்டிப்பது
சாஸ்த்ர ஸம்மதம் .
இப்படி, இங்குள்ள பலன்களில் வித்யாஸம் இருந்தாலும் மோக்ஷரூப முக்ய பலனில்
வித்யாஸமில்லை . ஒரு யோகத்தில் இழிந்தவன் ,வேறொரு பக்தி யோகத்தைச்
செய்யாமல் இருப்பதைப்போல ,ப்ரபத்தியில் இழிந்தவனும் வேறு உபாயம்
தேடவேண்டியதில்லை.

ப்ரஹ்ம வித்யைகள் 32—இவை, 1.சாந்தோக்யம் 2.முண்டகோபநிஷத் 3.ப்ரஹதாரண்ய
உபநிஷத் 4.தைத்திரீயம் 5.சுபாலோபநிஷத் 6.ஸ்வேதாஸ்வர உபநிஷத் 7.ஈசாவாச்யம்
8.கேநோபநிஷத் என்கிற எட்டு உபநிஷத்துக்களில் விளக்கப்பட்டுள்ளன  –
இந்த உபநிஷத்துக்களில் விவரிக்கப்பட்டுள்ள (பக்தி யோகத்துக்கான )மிகக்
கடினமானப்ரஹ்ம வித்யைகள் 32 . இவை உபாஸனா மார்க்கங்கள்
1.அக்நி வித்யை
2.அக்ஷர வித்யை
3.ஆனந்த வித்யை
4.அபிம்ருத்யுபாஸன வித்யை
5.பாலாகி வித்யை
6.பூமி வித்யை
7.ப்ரஹ்ம வித்யை
8.சாண்டில்ய வித்யை
9.தஹர வித்யை
10.ஜ்யோதிர் வித்யை
11.கோஸவிஜ்ஞான வித்யை
12.மது வித்யை
13.மைத்ரேயி வித்யை
14.கௌரக்ஷஜ்யோதிர் வித்யை
15. ந்யாஸ வித்யை
16.பஞ்சாக்னி வித்யை
17.பரவித்யை
18.பர்யங்க வித்யை
19.ப்ரஜாபதி வித்யை
20.ப்ராண வித்யை
21.ப்ரதர்ன வித்யை
22.புருஷ வித்யை
23.புருஷாத்ம வித்யை
24.ரைக்வ வித்யை
25.புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27.ஸர்வ பரவித்யை
28.ஷோடஸகல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31.வைஷ்ணவ வித்யை
32.வைச்வாநர வித்யை

————————————————————–

அதிகாரத்திலிருந்து

பக்தி யோகத்தைப்போலவே ,ப்ரபத்தியிலும் உட்பிரிவுகள்

உபாஸனத்தில் விசேஷங்கள் போலே சாகா பேதங்களிலும் பகவச் சாஸ்த்ர
ஸஹிதா பேதங்களிலும் சொல்லும் ந்யாஸ வித்யையில் மந்த்ராதி விசேஷங்களைக்
கண்டு கொள்வது. நமஸ்காரம் வாசிகம் மாநஸம் காயிகமென்று பிரிந்தாற்போல
ப்ரபத்தியிலும் ஓர் ஒன்றை முன்னிட்டு இவ் விபாகங்கள் சொல்லப்பட்டன.
இவை மூன்றும் பொருந்தின போது பூர்ண நமஸ்காரமானாற்போலே
பூர்ண ப்ரபத்தியாகக் கடவதென்றவர்கள் பாசுரங்களுக்கும் வாசிக காயிகங்களான
வ்யாபார விசேஷங்கள் பரீவாஹமாம்படியான மாநஸ ப்ரபத்தியினுடைய
பூர்த்தியிலே தாத்பர்யமாகக் கடவது. யதாதிகாரம் இவையெல்லாம்
பலப்ரதங்களென்னுமிடம் முன்பே சொன்னோம்

வ்யாக்யானம்

உபாஸனங்கள் செய்வதில் வேறுபாடுகள் உள்ளதைப்போல ந்யாஸ வித்யையிலும்
( ப்ரபத்தி ) சாஸ்த்ர ஸம்மதமான பலவித மந்த்ர பேதங்கள் சொல்லப்படுகின்றன.
நமஸ்காரம் செய்வதில், வாக்கு,மனஸ் ,சரீரம் ஆகிய வேறுபாடுகள் உள்ளதைப்போல
ப்ரபத்தியிலும் ஈடுபாட்டைப் பொறுத்து வேறுபாடு அமைகிறது.
நமஸ்காரம் என்பதில் வாக்கு, மனஸ் , சரீரம் மூன்றும் இணைந்து பொருந்தினாலே
முழுமையான நமஸ்காரமாகிறது.
ப்ரபத்தியிலும் இப்படி மூன்றும் பொருந்தவேண்டும். அதாவது,மனஸ்ஸளவில்
செய்யும் ப்ரபத்தி வாக்கு சரீரம் இரண்டிலும் ப்ரதிபலித்து வெளிப்படுவதாக
உணர்தல் வேண்டும்.
இவை ஒவ்வொன்றும் அவரவர் தகுதியைப் பொறுத்தே அமைகிறது.

நமஸ்காரம் மூன்று விதம்
1.மாநஸம்= நமஸ்கரிக்கப்படுபவனை ,தனக்கு மேம்பட்டவனாக நினைப்பது
2. வாசிகம் = இவ் வர்த்தத்தைச்சொல்லும், நம : என்பன போன்ற ஸப்த ப்ரயோகம்
3.காயிகம் = அஞ்ஜலி
இதில் மானஸ புத்தி முக்யம் .அந்தந்த வ்யவஹாரங்கள் (வ்யாபாரங்கள் )
மானஸ புத்தியில்லாமல் வராது.
இந்த மூன்றிலும் பொதுவாக இருப்பது =ஜ்ஞானம் . மோக்ஷ ஸாதனம் .
மானஸ ப்ரபத்தி =த்யான ப்ரதானம்
வாசிக ப்ரபத்தி =பரஸமர்ப்பணமான ”த்வய ” உச்சாரணமாய் ஸப்த ப்ரதானம்
காயிக ப்ரபத்தி =பரஸமர்ப்பண ,ப்ரணிபாத ரூபம்

மாநஸ ப்ரபத்தி செய்பவர்களுக்கும் அவசர பரீவாஹமாக ,
ஆநுகூல்ய ஸங்கல்பம் ,
ப்ராதிகூல்ய வர்ஜநம்
கார்ப்பண்யம்
மஹா விச்வாஸம்
கோப்த்ருவ வரணம்
ஸாத்விக த்யாகம்
-இவைகளை-இந்த அங்க , அங்கிகளை மனஸ்ஸால் அநுஷ்டிக்கும்படியாகும்
அதேபோல , காயிக ப்ரபத்தியும் ,மானஸ ப்ரபத்தி அநுஷ்டிக்கும்போது ,
தண்ட ,ப்ரணாமாதிகள் ஸாத்யமாகாவிட்டாலும் அஞ்ஜலி ரூபமாகச் செய்வது.

மாநஸம் ——த்யானம் என்றால், இது உபாயம். சிலருக்கு இது முடிகின்ற
சமயத்தில் மனப்பக்குவம் இராமல், த்யானமே நிற்கும்.
ஆக , ஸர்வசாதாரணமாக ஜ்ஞானமே —த்யானம் –உபாயம் .

இது, 1.மாநஸம் 2.வாக்வ்யாபார விசிஷ்ட மாநஸம் 3.காயிக வ்யாபார
விசிஷ்ட மாநஸம் 4.வாக் , காய , உபய வ்யாபார விசிஷ்ட மாநஸம்
என்கிற நான்கில் —
மாநஸ அம்சமே ப்ரதானம் .
பரத்வாஜ ஸம்ஹிதை சொல்கிறது —–
சிஷ்யனுக்கு,வாசிக மந்த்ர உச்சாரணத்தையும் ,காயிக ப்ரணாமத்தையும்
ஆசார்யன் செய்விக்கிறான் . அதனால், ஆசார்யன் செய்யும் ஆசார்ய நிஷ்டையை
வாசிகம் என்றும், காயிகம் என்றும் சொல்வதுண்டு.
இந்த வாசிக , காயிக வ்யாபாரங்கள் ப்ரபத்தி அநுஷ்டானத்துக்கு முன்பே
நடந்தால், இவை மாநஸம்

————————————————————————————————————-

அதிகாரத்திலிருந்து

நின்ற நிலைக்கு உறநிற்கும் கருமமும் நேர் மதியால்
நன்று என நாடிய ஞானமும் நல்கும் உள் கண் உடையார்
ஒன்றிய பத்தியும் ஒன்றும் இலா விரைவார்க்கு அருளால்
அன்று பயன் தரும் ஆறும் அறிந்தவர் அந்தணரே

கர்ம ஞானம் உபாஸநம் சரணவ்ரஜ்யா இதி ச அவஸ்திநாத்
ஸந்மார்க்காந் அபவர்க்க ஸாதந வித்யெள ஸத்வாரக அத்வாரகாந்
ஏகத்வி ஆக்ருதி யோக ஸம்ப்ருத ப்ருதக்பாவ அநுபாவாந் இமாந்
ஸம்யக் ப்ரேக்ஷ்ய சரண்ய ஸரதி கிராமந்தி ரமந்தி புதா :

வ்யாக்யானம்

வேதம் முற்றும் கற்ற அந்தணர் யாரெனில் என்று ஸ்வாமி தேசிகன் கூறுகிறார்
க்ஷத்ரிய ,ப்ராம்மண , வைச்ய வர்ணாச்ரமத்தில் இருப்பவர்கள், அந்தந்த
தர்மத்துக்கு ஏற்றபடி கர்மயோகம் செய்தல்,ஞானயோகத்தை அதன் பலனை
முழுவதுமாகத் தெரிந்த ஞானத்துடன் செய்தல், பக்தியோகத்தை
ஆத்மஸாக்ஷாத்காரத்துடன் செய்தல், இவற்றுக்கெல்லாம் தகுதி இல்லாதவர்கள்,
மோக்ஷம் பெறுவதில் தாமதத்தைப் பொறுக்காதவர்கள், ஆகியோருக்கு,
பகவானின் க்ருபையால் , விரைவாகப் பலனளிக்கும் ப்ரபத்தி –இவற்றை
அறிந்தவர்கள் வேதம் முற்றும் கற்ற அந்தணர் —என்கிறார்

கர்ம , ஞான ,பக்தி யோகங்கள், மற்றும் சரணாகதி –இவை நான்கும்
மோக்ஷத்துக்கான உபாயங்கள் —இவற்றில் சில நேராகவே மோக்ஷம் அளிக்கும்.
சில மறைமுகமாக மோக்ஷமளிக்கும் . கர்ம ,ஞான யோகங்கள் மறைமுகமாகவும்
பக்தியோகம் நேரிடையாகவும் மோக்ஷபலன் அளிப்பவையாகும்.
ப்ரபத்தி தானாகவே நேராக மோக்ஷபலனை அளிக்கும். பக்தியோகத்தைத்
தூண்டி மறைமுகமாகவும் பலனளிக்கும் .
இப்படி, இரண்டு வழிகளிலும் மோக்ஷமளிக்க வல்ல உபாயமாக இருப்பது
ப்ரபத்தி . இந்த மேன்மையையும் உண்மையையும் அறிந்தவர்கள் ப்ரபத்தி
அநுஷ்டிக்கிறார்கள்

9 வது அதிகாரம் —-உபாயவிபாகாதிகாரம் —நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் 7—–முமுக்ஷுத்வ அதிகாரம்–

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் 7—–முமுக்ஷுத்வ அதிகாரம்-முமுக்ஷுவுக்கு ,மோக்ஷத்தில் விருப்பம் உண்டாவதைச் சொல்கிறது

அதிகாரத்திலிருந்து
கால ஆவர்த்தாந் ப்ரக்ருதி விக்ருதீ : காம போகேஷு தோஷாந்
ஜ்வாலா கர்த்த ப்ரதிம துரித உதர்க்க துக்க அநு பூதிம்
யாதா தத்யம் ஸ்வ பரி நியதம் யச்ச திவ்யம் பதம் தத்
காராகல்பம் வபுரபி விதந் கஸ்திதிக்ஷேத பந்தம்

வ்யாக்யானம்
சுழலைப் போல மறுபடியும் மறுபடியும் வருகின்ற காலங்கள் , ப்ரக்ருதி , மற்றும் அதன்
மாற்றமான மஹத் போன்ற தத்வங்கள் , இவ்வுலகம் மற்றும் அவ்வுலகம் ஆகியவற்றில்
உள்ள சுகங்களில் மறைந்து இருக்கிற தோஷங்கள், நெருப்பு ஜ்வாலையால்
குழியில் நிரம்ப உள்ள பாவங்களின் பலனாக தொடர்ந்து வருகிற துன்பங்கள் ,
தன்னிடமும் பகவானிடமும் எப்போதும் சேர்ந்து இருக்கும் உண்மையான ஸ்வபாவங்கள்,
ப்ரஸித்தமான பரம பதம்,சிறைபோல் இருக்கிற சரீரம் –இவையெல்லாம் அறிந்த /அறிகிற
யார் ஒருவன் * /எவன்தான் , இந்த ஸம்ஸார பந்தத்தைப் பொறுத்துக் கொள்வான் ?
( ஒருவரும் பொறுத்துக்கொள்ள மாட்டான்—)

புத்தியால் அறிவது—-
இந்தப் புத்திக்கு எட்டு வகையான சிறப்பு –இவற்றால் அறிதல்
1.கேட்க ஆவல் , 2. கேட்டல், 3.கேட்டதை புத்தியில் நன்கு வாங்கிக் கொள்ளுதல்
4.அப்படி வாங்கிக் கொண்டதைத் தரித்தல் , 5.சேர்க்க வேண்டியதை ஊகித்துச்
சேர்த்தல், 6.தள்ள வேண்டியதை விலக்குதல், 7.ஒவ்வொரு வஸ்துவிலும் உள்ள
விசேஷங்களை அறிதல், 8.உண்மையான அறிவைப் பெறுதல்
புத்தி என்கிறோமே , இது எட்டு வகை
1.சீக்ரத்தில் க்ரஹிப்பது , 2. மறக்காமல் தரிப்பது , 3.சமயத்தில் நினைவு படுத்திக் கொள்வது
4.பிறருக்குச் சொல்லிக் கொடுப்பது , 5.ஊகித்துத் தானாகவே சரியாகத் தெரிந்து கொள்வது
6.ஸமயோசிதமாய் மாற்றுவது, 7.பகுத்து அறிவது , 8.தத்வ ஜ்ஞானம்
மேற்கண்டவற்றையெல்லாம் இப்படிப் புத்தியால் அறிகிறோம்.
முக்யமாக எதை அறிகிறோம் ?
இப்படிச் சுழலில் சிக்கி, காலம் காலமாகச் ”ஸுகத்”தில் மறைந்துள்ள தோஷங்கள்–
குற்றங்களைச் செய்து, அதன்மூலம், நெருப்பு போன்ற ”பாவம் ” என்கிற பலனைப் பெறுகிறோம்.
———————————————————-
அதிகாரத்திலிருந்து
——————————–
இப்படி, இவ்வர்த்தங்களை அத்யாத்ம சாஸ்த்ரங்களாலே தெளிந்து,ஸ்வயம் ப்ரகாசத்வ,
ஜ்ஞாத்ருத்வ , கர்த்ருத்வ ,போக்த்ருத்வ, சரீரித்வ , அணுத்வ, நித்யத்வ, நிரவயத்வ ,
ச்சேதந , தஹந , க்லேதந , சோஷணாத்யநர்ஹத்வ , வ்ருத்திஹ்ரஸா ரஹித ,
ஸ்வரூபத்வாதிகளாலே , ஆத்மாவுக்கு விசேஷண பூத தேஹேந்த்ரியாதி
வைலக்ஷண்யத்தைக் கண்டு இவனுடைய பர லோக  கமந தேஹாந்தரப்ராப்தி
யோக்யத்வ நிச்சயத்தாலே , ஸாமாந்யேந ,லோகோத்தீர்ண புருஷார்த்த யோக்யராய்,
நரக பதநாதி ஜந்மாந்தர க்லேசங்களுக்கு அஞ்சி ,அவற்றின் காரணங்களான
கர்மங்களினின்றும் நிவ்ருத்தராய் , ஆதேயத்வ ,விதேயத்வ , சேஷத்வ, அல்ப சக்தித்வ ,
அணுத்வ, அஜ்ஞான , ஸம்சய , விபர்யய , துக்காதி யோக்யத்வ , அசுபாச்ரயத் வாதிகளாலே
உண்டான விசேஷ்ய பூத, ஈச்வர, வ்யாவ்ருத்தி நிச்சயத்தாலே , பகவத் கைங்கர்ய ரூபமான
ஸ்வரூப ப்ராப்த வைபவத்தை அபேக்ஷிக்கைக்கு யோக்யராய் ——

வ்யாக்யானம்
இப்படி, இவ்வர்த்தங்களை அத்யாத்ம சாஸ்த்ரங்களாலே தெளிந்து—

அத்யாத்ம சாஸ்த்ரங்கள் =ஆத்மாவைப்பற்றி விளக்கிச் சொல்கிற சாஸ்த்ரங்கள் —
இவற்றை நன்கு படித்து ,அல்லது படித்தவர்கள் மூலமாக நன்கு அறிந்து ,தெளிவு பெற்று —
ஸ்வயம் ப்ரகாசத்வ, =ஆத்மா தானாகவே ப்ரகாஸிக்கும்
ஜ்ஞாத்ருத்வ = ஜ்ஞானம் உள்ள ஆத்மா
கர்த்ருத்வ =கர்மாக்களைச் செய்யும்
போக்த்ருத்வ = அனுபவிக்கும்
சரீரித்வ =இந்த சரீரத்தால் இவற்றைச் செய்யும் ( ஆத்மா )
அணுத்வ = அணு அளவானது ,
நித்யத்வ ==எப்போதும் இருப்பது அழிவில்லாதது
நிரவயத்வ =உடலுறுப்புகளற்ற
ச்சேதந , தஹந , க்லேதந , = அறுக்க ,எரிக்க, காயப்படுத்த இயலாத
சோஷணாத்யநர்ஹத்வ =உணர வைக்க இயலாத ,
வ்ருத்திஹ்ரஸா ரஹித =எந்த வகையிலும் மாற்ற இயலாத ( ஆத்மா விரிவதோ,
சுருங்குவதோ இல்லை )
ஸ்வரூபத்வாதிகளாலே , ஆத்மாவுக்கு விசேஷண பூத தேஹேந்த்ரியாதி
வைலக்ஷண்யத்தைக் கண்டு = ஸ்வரூபம் முதலியவற்றாலே இப்படியாக
ஆத்மாவுக்கும், தேகம் இந்த்ரியங்களுக்கும் விசேஷமாக சொல்லப்படும்
விவரங்களால் ,
ஆத்மாவானது, வேறு உடலையோ, அல்லது வேறு உலகத்துக்குச் சென்று
அங்கு வேறு சரீரத்தையோ எடுக்கும் என்கிற நிச்சயத்தாலே,இப்படியான
ஜன்மங்களில் ஏற்படும் துக்கம், கஷ்டம் இவற்றுக்குப் பயப்பட்டு ,
இவ்வுலகில் பெரும் பலன்களைக் காட்டிலும், உயர்ந்த பலன்கள் இருக்கின்றன
என்பதை உணர்ந்து,நரகவாதனைக்குப் பயப்பட்டு,துக்கம் துன்பம் கஷ்டம்
இவற்றை உண்டாக்கும் பாவச் செயல்களைத் தவிர்க்கிறான்.

ஆதேயத்வ ,விதேயத்வ , சேஷத்வ, அல்ப சக்தித்வ ,
அணுத்வ, அஜ்ஞான , ஸம்சய , விபர்யய , துக்காதியோக்யத்வ , அசுபாச்ரயத் வாதிகளாலே
உண்டான =
தான் , பகவானால் நியமிக்கப்பட்டு இருந்தாலும்,
மிக அற்பமானவன் , அறியாமையில் இருப்பவன், சந்தேகம் நிரம்பியவன் ,
குற்றங்கள் செய்பவன், துன்பம் மற்றும் துக்கத்தில் இருப்பவன், அசுத்தங்கள் இருப்பிடம்
என்பதை நன்கு உணர்கிறான்.
இதனால், தான், ஈச்வரனை விட வேறுபட்டவன் என்றுத் தெளிவாக அறிகிறான்.
இந்த ஜ்ஞானத்தால், மேன் மேலும் கைங்கர்யங்கள் செய்து, பகவானை அடையும்படியான
அபேக்ஷைக்கு —விருப்பத்துக்குத் தகுதி பெற்று ———

———–
அதிகாரத்திலிருந்து
திருமந்த்ரார்த்த அனுஸந்தானத்தால் அஹங்காரம் முதலியன அழிவது–
ஸர்வாபேக்ஷித ஸங்க்ரஹமான திருமந்த்ரத்தைக் கொண்டு
ஸாரதமார்த்தங்களை அநுஸந்திக்கும்போது
1.ப்ரதம பதத்தில் த்ருதீயாக்ஷரத்திலே ப்ரதிபந்நமான ஞானத்வாத்யநுஸந்தானத்தாலே
தேஹ ததநுபந்திகளில் வரும் அஹங்கார மமகாரங்களையும்
2. ப்ரதமாக்ஷரத்தில் லுப்த சதுர்த்தியாலே ப்ரதிபந்நமான தாதர்த்யத்தாலே தேஹாதிரிக்த
ஆத்மஸ்வரூப ததுகுணங்களில் த்வம் மே அஹம் மே என்கிற ச்லோகத்தின் படியே
தனக்குரிமை யுண்டாக நினைக்கிற
அஹங்கார மமகாரங்களையும்
3.மத்யமாக்ஷரத்தில் அவதாரணார்த்தத்தாலே அந்ய சேஷ பூதோ அஹம் என்றும்
மமாந்ய : சேஷி என்றும் வரும் அஹங்கார மமகாரங்களையும்
4. மத்யம பதத்தில் ப்ரதிபந்நமான நிஷேத விசேஷத்தாலே ஸ்வ ரக்ஷண வ்யாபாரத்தைப் பற்ற
வரும் நிரபேக்ஷ ஸ்வாதந்த்ர்ய நிரூபாதிக சேஷித்வாபிமானரூபங்களான
அஹங்கார மமகாரங்களையும்
5. இந் நிஷேத ஸாமர்த்யந் தன்னாலே த்ருதீய பதத்தில் சதுர்த்தியாலே அபிப்ரேதமாய்
பாவியான கைங்கர்ய பர்யந்தாநுபவமாகிற பலத்தைப் பற்ற இப்போது
பலாந்தராநுபவ ந்யாயத்தாலே வரும் ஸ்வாதீந கர்த்ருவ போக்த்ருவ ஸ்வார்த்த கர்த்ருத்வ
போக்த்ருத்வ ப்ரமரூபங்களான அஹங்கார மமகாரங்களையும் யதா யோக்யம்
ஆர்த்தமாகவும் சப்தமாகவும் அடி யறுத்து இப்படி ஸ்திர ப்ரதிஷ்ட ஞானராய் —

இதன் அர்த்தச் சுருக்கம்
நம்பெருமாள் = நீ எனக்கு சேஷன்
ஜீவாத்மா =நான் எனக்கே சேஷன்
நம்பெருமாள் =நீ இப்படிச் சொல்வதற்குக் காரணம் என்ன
ஜீவாத்மா = தேவரீர் ,சொல்வதற்கு என்ன காரணம்
நம்பெருமாள் =நான் சொன்னது வேதத்தை மூலமாகக் கொண்ட ப்ரமாணத்தால்
ஜீவாத்மா =நான் சொன்னது ,அனாதையாக ஏற்பட்ட அநுபவத்தின் பெருமையால்
நம்பெருமாள் =உன் அநுபவம் ஆக்ஷேபிக்கப்பட்டிருக்கிறது
ஜீவாத்மா =எங்கே எவரால் ஆக்ஷேபிக்கப்பட்டது
நம்பெருமாள் =கீதை முதலிய நூல்களில் ஆக்ஷேபிக்கப் பட்டிருக்கிறது
ஜீவாத்மா =இவ்விஷயத்தில் யார் சாக்ஷி
நம்பெருமாள் =மஹாஜ்ஞானிகளான வ்யாஸர் ,பராசரர் போன்றோர்
ஜீவாத்மா = ஆனால்,அவர்கள் உன்னிடம் பக்ஷபாதம் உள்ளவர்கள்
இவ்வாறு , ஜீவாத்மாவுக்கும் ஸம்வாதம் ஏற்பட்டபோது, நீர் எங்கு தேடியும்
இரண்டு கக்ஷிக்கும் பொதுவான ஒருவர் கிடைக்காததால் ,
ஸத்யப்ரமாணம் செய்ய முயற்சிப்பவரைப்போல ,ஸேவை ஸாதிக்கிறீர்
என்பதாக இந்த ச்லோகத்தை ஸ்ரீ பட்டர் அருளினார் என்பர்

————–

1-கிற்பன் கில்லே னென்றிலன் முனநாளால் அற்ப சாரங்க ளவை சுவைத்தகன்றொழிந்தேன்

2-கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி

3-தஸ்மிந் ப்ரஸந்நே கிமிஹாஸ்த்யலப்யம்
தர்மார்த்தகாமைரலமல்பகாஸ்தே ,

4-அந்தவஸ்து பலம் தத்பவத்யல்ப மேதஸாம் ,

5-அநித்யமஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் ,

6-மஹா பலாந் மஹாவீர்யான் அநந்ததந ஸத்ஜயாந் கதாந் காலேந மஹதா
கதாசேஷாந்நராதிபாந் ச்ருத்வா ந புத்ரதாராதௌ க்ருஹக்ஷேத்ராதிகே
அபி வா த்ரவ்யாதௌ வா க்ருதப்ரஜ்ஜோ மமத்வம் குருதே நர :,

7-ஸர்வம் துக்கமயம் ஜகத் ,

8-ஸ்வர்க்கே அபி பாதபீதஸ்ய க்ஷயிஷ்ணோர்நாஸ்தி நிர்வ்ருத்தி :

9-ராஜ்யே க்ருத்நந்த்யவித்வாம்ஸோ மமத்வாஹ்ருத சேதஸ : அஹம்மாந
மஹாபாந மதமத்தா ந மாத்ருசா : ,

10-ஆப்ரஹ்மபவநாதேதே தோஷா : ஸத்தி
மஹா புநே அத ஏவ ஹி நேச்சந்தி ஸ்வர்க்கப்ராப்திம் மநீஷிணா : ,

11-ப்ரஹ்மணா : ஸதநாதூர்த்வம் தத்விஷ்ணோ :பரமம் பதம் சுத்தம் ஸநாதநம்
ஜ்யோதி :பரம் ப்ரஹ்மேதி ந தத்ர பூதா கச்சந்தி புருஷா விஷயாத்மகா :
டம்ப லோப மத க்ரோத த்ரோஹ மோஹைரபி த்ருதா : நிர்மமா
நிரஹங்காரா நிர்த்வந்த்வா : ஸம்யதேந்த்ரியா : த்யாநயோகரதாச்சைவ
தத்ர கச்சந்தி ஸாதவ : ,

12-ரம்யாணி காமசாராணி விமாநாநி ஸமாஸ்ததா
ஆக்ரீடா விவிதா ராஜாந் பத்மிந்யச்ராமலோதகா : ,

13-ஏதே வை நிரயாஸ்தாத
ஸ்தாநஸ்ய பரமாத்மந :, இத்யாதி ப்ரமாணங்களாலே அல்பத்வ ,
அஸ்திரத்வ ,துக்கமூலத்வ , துக்கமிச்ரத்வ , துக்கோதர்க்கத்வ ,
விபரீதாபிமாநமூலத்வ , ஸ்வாபாவிகாநந்த விருத்தத்வங்களாகிற
அசித் விஷயானுபவ தோஷ ஸப்தகத்தையும் இவற்றில் யதாஸம்பவம்
உண்டான சேதநமாத்ராநுபவ தோஷங்களையும்

இவ்வநுபவங்களுக்கு
எதிர்த்தட்டான பகவதநுபவத்தின் வைலக்ஷணத்தையும் விசதமாக
அநுஸந்தித்து ,

பரமாத்மநி யோ ரக்தோ விரக்த : அபரமாத்மநி
என்கிற அவஸ்தையையுடையராய் .
ப்ரவ்ருத்தி லக்ஷணம் தர்மம் ப்ரஜாபதிரதாப்ரவீத் என்கிற ப்ரவ்ருத்தி
தர்மங்களில் நின்றும் நிவ்ருத்தராய்

நிவ்ருத்த லக்ஷணம் தர்மம்
ருஷிர்நாராயணோ அப்ரவீத் என்கிற நிவ்ருத்தி தர்மங்களிலே
ப்ரவ்ருத்தரானவர்கள் முமுக்ஷுக்களான அதிகாரிகள்

—————
வ்யாக்யானம்
ஸ்வாமி தேசிகன் இங்கு பதின்மூன்று ப்ரமாணங்களைச் சொல்கிறார்
1.திருவாய்மொழி ( 3–2–6 )
கிற்பன் கில்லே னென்றிலன் முனநாளால்
அற்ப சாரங்க ளவை சுவைத்தகன்றொழிந்தேன்
பற் பல்லாயிரமுயிர் செய்த பரமா !—நின்
நற் பொற் சோதித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே ?
இதற்கு முன் எல்லா நாட்களிலும் ,எதைச் செய்யவேண்டுமோ அதில்,
செய்யவல்லேன் என்று அதில் கவனம் செலுத்தவில்லை.எனக்குக்
கூடாதவற்றில், என்னால் செய்யவல்லேன் என்று, செய்யாமலிருக்கவில்லை.
ஸ்வல்ப ஸாரமே இருக்கிற அந்த செய்யக்கூடாத விஷயங்களைச் செய்து
அநுபவித்து ,உன்னை விட்டே ஒழிந்தேன்.அவற்றின் தோஷங்களை அறிந்து
அவற்றைக் கைவிட்டேன்.
எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட ஆயிரக்கணக்கான ஜீவன்களை ஸ்ருஷ்டித்த
ஸர்வேச்வரனே —மிகச் சிறந்த, மிக அழகிய ,மிகவும் ஒளி பொருந்திய
உனது திருவடிகளை, அடியேன் என்றைக்கு அடைவது ?அதை அருள்வாயாக !

2.திருவாய்மொழி ( 4–9–10 )–(பார்க்க–அதிகாரம் 1—உபோத் காத அதிகாரம் )
கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் , தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
—————————————————————————-
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே
————–திருவாய்மொழி (4-9-10)
பஞ்சேந்த்ரியங்களால் பெறும் இன்பம் மற்றும் ஆத்மாநுப இன்பம்
இவற்றைக் கைவிட்டேன்;அழகிய வளையல்களை அணிந்த பிராட்டியும் , நீயும் ,
உங்களைத் தவிர வேறு ஈச்வரர்களில்லை என்னும்படியாக ஸேவை சாதிக்க
நித்ய ஸூரிகளைப்போல எல்லா ஆத்மாக்களும் உன்னை அநுபவித்துக்
கைங்கர்யம் செய்யும்படியான –இப்படி உன்னால் ஏற்பட்ட புருஷார்த்தத்தை
நான் ஸாக்ஷாத்கரித்தேன்
ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி, தன்னுடைய பிரபந்த ரக்ஷையில் கூறுகிறார்—
பொருள் அழிவு, ஆயுள் முடிவு, பேராசை பரஹிம்ஸை பலநரக பாதையான
ஸம்ஸாரத்திலே , ஐங்கருவி( ரூபம்,சப்தம், ஸ்பர்சம் ,வாஸனை , ரஸம் ) இன்பத்தை
அநுபவித்து அதன் வாசனையால் மேன்மேல் திரிகின்ற பஞ்சேந்த்ரியங்களால்
மறுபடியும் மறுபடியும் சிற்றின்பத்தை நுகர்ந்து, அவை அற்பமாய் துயரமாகவே
இருப்பதையும் , ஆத்ம அனுபவமென்கிற ”கைவல்யம் ”எம்பெருமானைப்
பற்றிய அறிவு சிறிதும் அப்போது இல்லாததால் மிகக் கேவலமே என்றும்,
அவற்றில் இழிந்தாரோடு ஸ்நேஹம் அனர்த்தம் விளைவிக்கும் என்றும்
இவைகளை விட்டொழித்து,நேராக உன் திருவடிகளை ஆச்ரயித்தேன்

3.விஷ்ணு புராணம்
தஸ்மிந் ப்ரஸந்நே கிமிஹாஸ்த்யலப்யம் தர்மார்த்தகாமைரலமல்பகாஸ்தே =
தஸ்மிந் =அந்த பகவான்
ப்ரஸந்நே =அநுக்ரஹிக்கும்போது
இஹ அலப்யம் = இங்கு அடைய முடியாதது
கிம் அஸ்தி = என்ன இருக்கிறது !
தர்மார்த்தகாமைரலமல்பகா =தர்மம், அர்த்தம், காமம் மூன்றும் வேண்டாம்,
அவை அல்ப புருஷார்த்தங்கள்;அவற்றால் ஆவது ஏதுமில்லை

4. ஸ்ரீமத் பகவத் கீதை ( 7–23 )
அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்ப மேதஸாம்
தேவாந்தே வயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி
தேவதாந்தரர்களின் பக்தர்கள்,சிற்றறிவு உடையவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் பூஜிக்கும் தேவதாந்தரங்கள் அல்ப பலனையே கொடுக்கின்றன .
இது அழியக்கூடியது

5.ஸ்ரீமத் பகவத் கீதை ( 9–33 )
கிம் புநர் ப்ராஹ்மணா : புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா |
அநித்ய ஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வமாம் ||
ஸ்ரீ க்ருஷ்ணன் , அர்ஜுனனிடம் சொல்கிறார் —
புண்யம் செய்து ப்ராம்மணப் பிறவி எடுத்த ப்ராம்மணர்களும்,பக்தர்களான ராஜரிஷிகளும் ,
இந்த உலகம் அநித்யம் ,இங்கு ஸுகம் இல்லை, என்பதைத் தெளிந்து உணர்ந்து ,நித்யலோகப்
ப்ராப்திக்காக என்னை ஆச்ரயிப்பதைப்போல, நீயும் , என்னைப் பூஜிப்பாயாக .

6. விஷ்ணு புராணம்
மஹா பலாந் மஹாவீர்யான் அநந்ததந ஸத்ஜயாந் கதாந் காலேந மஹதா
கதாசேஷாந்நராதிபாந் ச்ருத்வா ந புத்ரதாராதௌ க்ருஹக்ஷேத்ராதிகே
அபி வா த்ரவ்யாதௌ வா க்ருதப்ரஜ்ஜோ மமத்வம் குருதே நர :

மிக்க மனோபலம், வீர்யம் ,அளவற்ற தானம் , உடையவர்களாக இருந்தும்,
நராதிபாந் =உலகங்களை ஆண்ட அரசர்கள் , கதாந் = மாண்டவர்களாய்
மஹதா காலோ =அவர்கள் காலம் ஜீவிதம் அதிகமாக இருந்தாலும்
கதாஸேஷாந் ச்ருத்வா =அவர்களின் கதைகளைமட்டில் கேட்டு ,
எல்லாம் அல்பம், அநித்யம் என்று தெளிவு உடையவன்
ந புத்ரதாராதௌ க்ருஹக்ஷேத்ராதிகே அபி வா = மக்கள், மனைவி,
வீடு,வயல், பணம் போகம் இவற்றில் அபிமானமின்றி
எல்லாம் என்னுடையது என்கிற மமதை கொள்ளமாட்டான்.

7.விஷ்ணு புராணம்
ஸர்வம் துக்கமயம் ஜகத்
இந்த உலகம் முழுதும் துக்கமயமானது

8.விஷ்ணு புராணம்
ஸ்வர்க்கே அபி பாதபீதஸ்ய க்ஷயிஷ்ணோர்நாஸ்தி நிர்வ்ருத்தி :
புண்யம் செய்து ஸ்வர்க்கத்தில் உள்ளவன் , ஸுகத்தை அனுபவித்தாலும் அந்தப் புண்யபலன் குறைந்து, தீர்ந்துவிட்டால், தான் கீழே விழுந்து
பூமியில் துன்பம் அனுபவிக்க நேரிடுமே என்கிற பயம் காரணமாக முழுமையான ஸுகம் அநுபவிக்க முடிவதில்லை

9.விஷ்ணு புராணம்

ராஜ்யே க்ருத்நந்த்யவித்வாம்ஸோ மமத்வாஹ்ருத சேதஸ : அஹம்மாந
மஹாபாந மதமத்தா ந மாத்ருசா : =
அஹங்காரம் கொண்டவர்கள் மட்டுமே ,அந்த அஹங்காரத்தால் ,ராஜ்யம் ,
ப்ரதேசம் இவைகளில் ஆசையுடன் இருப்பர்.என் போன்றவர்கள்
அவைகளுக்காக ஏங்குவதில்லை

10. இதிஹாச சமுச்சயம்
ஆப்ரஹ்மபவநாதேதே தோஷா : ஸத்தி
மஹா புநே அத ஏவ ஹி நேச்சந்தி ஸ்வர்க்கப்ராப்திம் மநீஷிணா : =
ஹே –ரிஷியே ! ப்ரம்மலோகம் முதலாக எல்லா உலகங்களிலும் மிக அல்பமான தோஷங்களே பரவி இருக்கின்றன.
ஆதலால்,அறிவாளிகள், ஸ்வர்க்கத்துக்கு ஆசைப்படுவதில்லை

11. மஹாபாரதம்
ப்ரஹ்மணா : ஸதநாதூர்த்வம் தத்விஷ்ணோ :பரமம் பதம் சுத்தம் ஸநாதநம்
ஜ்யோதி :பரம் ப்ரஹ்மேதி ந தத்ர பூதா கச்சந்தி புருஷா விஷயாத்மகா :
டம்ப லோப மத க்ரோத த்ரோஹ மோஹைரபி த்ருதா : நிர்மமா
நிரஹங்காரா நிர்த்வந்த்வா : ஸம்யதேந்த்ரியா : த்யாநயோகரதாச்சைவ
தத்ர கச்சந்தி ஸாதவ : =
ப்ரம்மலோகத்தின் மேலே விஷ்ணுவின் பரமபதம் இருக்கிறது.தூய்மையாகவும் , நித்யமாயும் , ஜ்யோதிஸ்ஸாகவும் இருக்கிறது.
பரம்பொருளை அனுபவிக்கத் தகுந்ததாக ”பதம் ”
இங்கு, டம்பம் , லோபம் , ஆணவம் , கோபம் , த்ரோகம் , ஆசை இவற்றுக்கு
ஆளான அறிவு இல்லாதவர்கள் இங்கு செல்வதில்லை;செல்ல இயலாது.
அஹங்கார ,மமகாரம் அற்றவர்கள் , இன்பதுன்பங்களில் சமநிலையில்
இருப்பவர்கள், புலன்களை அடக்கியவர்கள், பகவானைத் த்யானித்தபடி
இருப்பவர்கள் –இவர்கள்தான்–இப்படிப்பட்ட சாதுக்கள்தான் -அவர்கள்
மட்டுமே அங்கு செல்கிறார்கள்.

12. மஹாபாரதம்
ரம்யாணி காமசாராணி விமாநாநி ஸமாஸ்ததா
ஆக்ரீடா விவிதா ராஜாந் பத்மிந்யச்ராமலோதகா : =
பரமபதத்தில் இஷ்டப்படி செல்லக்கூடிய அழகிய விமானங்கள், அழகான மண்டபங்கள்,பற்பலவகையான தோட்டங்கள்,
தெளிந்த நீருள்ள தடாகங்கள் ஆகியவை இருக்கின்றன

13. மஹாபாரதம்
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந : =
பகவானின் பரமபதத்துக்கு முன்பாக, மற்ற எல்லா உலகங்களும் நரகம் போன்றவையே
மேற்சொல்லப்பட்ட, பல ப்ரமாணங்கள் மூலமாக,அசித் பொருள்களால் —
அசேதனத்தால் ,வருகிற இன்பம் யாவும் , ஏழு தோஷங்கள்–குற்றங்கள்
உடையவை
இவை —-
1கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டியதாக இருப்பது
2.துக்கத்துடன் கலந்திருப்பது
3.துக்கத்துக்கு மேலும் காரணமாக இருப்பது
4.. அல்பமானவை,
5 நிலையற்றவை,அதாவது–அழியக் கூடியது.
6.ஆத்ம ஸ்வரூபத்தை அதற்கு மாறுபட்டதாக எண்ணுவது
7.மோக்ஷ ஆனந்தத்துக்கு வேறாக இருப்பது
இதே தோஷங்கள் , ஒருவன் தன்னுடைய ஆத்ம அனுபவத்தில் திளைக்கும்போதும் உண்டாகும் என்றும் அறிய வேண்டும்.
இவற்றுக்கு எதிராக உள்ளது யாதெனில்,

பகவத் அநுபவத்தின் மூலம் ஏற்படும் ஆனந்தம் . இவற்றின் நன்மைகளை அறிந்து, அதில் இழிய வேண்டும்.
பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி
பரமாத்மநி யோ ரக்தோ விரக்த : அபரமாத்மநி =
இப்படி இழிந்தால்,பகவானிடம் மட்டுமே ப்ரேமை;மற்றவற்றில் வெறுப்பு என்கிற
நிலைக்கு முமுக்ஷு வந்து விடுவான்

மஹாபாரதம்
ப்ரவ்ருத்தி லக்ஷணம் தர்மம் ப்ரஜாபதிரதாப்ரவீத்
நிவ்ருத்தலக்ஷணம் தர்மம் ருஷிர்நாராயணோ அப்ரவீத்
ப்ரவ்ருத்தி தர்மங்களை ப்ரம்மன் சொன்னான் என்று உள்ள ப்ரவ்ருத்தி தர்மங்களைக் கைவிட்டும் ( ப்ரவ்ருத்தி தர்மம் =பயனை வேண்டிச் செய்யும்
தர்மங்கள் ), நாராயண ரிஷி என்பவர்,நிவ்ருத்தி தர்மங்களை உரைத்தார் என்னும்படியான தர்மங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்
நிவ்ருத்தி தர்மம் =மோக்ஷத்தை விரும்பிச் செய்யப்படும் தர்மங்கள் ) இவை,
மோக்ஷத்தை விரும்புபவர்கள் –முமுக்ஷுக்கள்—இவர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள்

————
அதிகாரத்திலிருந்து
கீழ்ச் சொன்னபடியிலே பராவரங்களான தத்வங்களும் புருஷார்த்தங்களும்
தெளிந்தாலும் , இப்படி வைராக்யபூர்வமாக பரம புருஷார்த்தோபாய
அநுஷ்டானத்தில் ப்ரவர்த்தியானாகில் சீல வ்ருத்த பலம் ச்ருதம் , சமார்த்தம்
ஸர்வசாஸ்த்ராணி விஹிதாநி மநீஷிபி : தஸ்மாத் ஸ ஸர்வசாஸ்த்ரஜ்ஜோ
யஸ்ய சாந்தம் மந : ஸதா
என்கிற ச்ருத பலத்தையும் இழந்து ,நாச்சாதயதி கௌபீநம் ந தம்ச மசகாபஹம்
சுந : புச்சாமிவாநர்த்தம் பாண்டித்யம் தர்மி வர்ஜிதம்
என்கிறபடியே ஹாஸ்யனாம் .
ஆகையால் வயஸ : கர்மணோ அர்த்தஸ்ய ச்ருதஸ்யாபிஜநஸ்ய ச வேஷவாக்வ்ருத்தி
ஸாருப்யமாசரந் விசரேஹித
என்கிறபடியே ச்ருதாநுரூபமாக ஸ்வோசிதமான பரம புருஷார்த்தோபாயநுஷ்டானத்திலே
த்வரிக்குமவர்கள் ”தன் கருமஞ்செய்யப் பிறருகந்தார் ” என்கிறபடியே , தம் தேவா
ப்ரஹ்மாணம் விது : ப்ரணமந்தி தேவதா :
இத்யாதிகளிற் சொல்லும் ஏற்றம் பெறுவர்கள்

வ்யாக்யானம்
ஒருவன், எது உயர்ந்த தத்வம் ,எது தாழ்ந்தது ; எது உயர்ந்த புருஷார்த்தம் ,எது தாழ்ந்தது என்று அறிய இயலும்.
ஆனாலும், உயர்ந்த புருஷார்த்தத்தைத் தெரிந்துகொண்டு, அதனை அனுசரிக்கவேண்டும்;இல்லையெனில்
மஹாபாரதம்
சீல வ்ருத்த பலம் ச்ருதம் =சாஸ்த்ர அறிவால் ஏற்படும் ஞான பலன்களான ஆத்மகுணம் நல்லொழுக்கம் இவற்றை இழக்க நேரிடும்.
இதிஹாச ஸமுச்சயம்
, சமார்த்தம் ஸர்வசாஸ்த்ராணி விஹிதாநி மநீஷிபி : தஸ்மாத் ஸ ஸர்வசாஸ்த்ரஜ்ஜோ
யஸ்ய சாந்தம் மந : ஸதா =மனஸ்ஸைக் கட்டுப்படுத்த பல சாஸ்த்ரங்கள்
ஞானிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், எவ்வளவு சாஸ்த்ரங்களைத்
தெரிந்து வைத்திருந்தாலும், மனஸ்ஸை அடக்காதவன் சாஸ்த்ரஜ்ஞன்
என்கிற பெயரையும் இழக்கிறான் .
நாச்சாதயதி கௌபீநம் ந தம்ச மசகாபஹம்
சுந : புச்சாமிவாநர்த்தம் பாண்டித்யம் தர்மி வர்ஜிதம்
நாயின் வால் மறைக்கப்பட வேண்டிய இடத்தை மறைக்கவேண்டும்.ஈ ,கொசு இவற்றையும் விரட்ட வேண்டும்;
அதைப்போல, தர்மானுஷ்டானமில்லாத அறிவு இருந்தும் ப்ரயோஜனமில்லை
மநு ஸ்ம்ருதி

வயஸ : கர்மணோ அர்த்தஸ்ய ச்ருதஸ்யாபிஜநஸ்ய ச வேஷவாக்வ்ருத்தி
ஸாருப்யமாசரந் விசரேஹித
வயது, கர்மம் , அதன் பிரயோஜனம் , சாஸ்த்ரஜ்ஞாநம் நற்குடியில் பிறப்பு
இவைகளுக்கு ஏற்றபடி,வயதுக்கேற்ற வேஷமும் வயதுக்கேற்ற பேச்சும்
வயதுக்கேற்ற செயலும் இருக்கவேண்டும்.
இப்படியாக உயர்ந்த புருஷார்த்தத்தைக் கொடுக்கிற உபாயத்தைக்
கடைப்பிடிப்பவர்கள் ஏற்றம் என்னவெனில் —–

”தன் கருமஞ்செய்யப் பிறருகந்தார் ” =
தனது கடமைகளை ஒருவன் செய்தானென்றால் எல்லோராலும் புகழப்படுவான்
மஹாபாரதம்
தம் தேவா ப்ரஹ்மாணம் விது : =
ஒரு சண்டாளன் நல்ல ஒழுக்கத்துடன் இருந்தால் அவன் தேவர்களால் பிராம்மணன் என்றே கொள்ளப்படுவான்
விஷ்ணு தர்மம்
ப்ரணமந்தி தேவதா : =
அப்படிப்பட்டவனை தேவர்கள் துதிக்கின்றனர்

———–

விஷமது பஹிஷ்குர்வந் தீரோ பஹிர்விஷயாத்மகம்
பரிமிதரஸ ஸ்வாத்ம ப்ராப்தி ப்ரயாஸ பராங்முக :
நிரவதி மஹாநந்த ப்ரஹ்மாநுபூதி குதூஹலீ
ஜகதி பவிதா தைவாத் கச்சித் ஜிஹாஸித ஸம்ஸ்ருதி :

வ்யாக்யானம்
மோக்ஷமாகிய உயர்ந்த புருஷார்த்தம் , பகவானின் திருவடிகளைத் தன்னுடைய ஸிரஸ்ஸில் தரித்து அவனுக்கு கைங்கர்யம் செய்தல்
வளர்ந்துகொண்டே இருப்பதும், அழிவதை இயல்பாக உடையது—–ஸம்ஸாரம் .
இவ்விரண்டில் மோக்ஷம் நன்மை; ஸம்ஸாரம் என்பது தீமை.
இப்படி ஒருவன் அறிவது,ஆசார்யன் மூலமாகவேயாகும் . ஆசார்யர்களின்
கருணையால்,இந்த்ரிய நிக்ரஹம் செய்து மிக உயர்ந்த புருஷார்த்தமான
மோக்ஷத்தை விரும்பியிருப்பவன் –முமுக்ஷு
கலக்கமில்லா மனதுடையவன்;விஷம் கலந்த தேன் போன்றுள்ளஉலக விஷயங்களை ஒதுக்குபவன்;
அல்ப சுகத்தை அளிக்கும் ஆத்மானுபவத்தை வெறுப்பவன்;ஸர்வேச்வர அனுபவம் எல்லையில்லா ஆனந்தம் அளிக்கும்
என்பதில் ஆவல் கொண்டு பகவானின் அநுக்ரஹத்துடன் ஸம்ஸாரத்திலிருந்து
விடுபட ஆசையுள்ளவன்

——————————–

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் 6—–பரதேவதாபாரமார்த்த்யாதிகாரம் —

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் 6—–பரதேவதா பாரமார்த்த்யாதிகாரம் —

பரதேவதை யார் என நிர்ணயித்து விளக்குகிறது

திவ்ய தம்பதிகளே பரதேவதை –ப்ராப்யமும் , சரண்யரும்

அதிகாரத்திலிருந்து

ஆத்மைக்யம் தேவதைக்யம் த்ரிகஸமதிகதா துல்யதைக்யம் த்ரயாணாம்
அந்யத்ர ஐச்வர்யம் இத்யாதி அநிபுணா பணிதீ :ஆத்ரியந்தே ந ஸந்த : |
த்ரயந்தை : ஏககண்டை : தத் அநுகுண மநு வ்யாஸ முக்ய உக்திபி : ச
ஸ்ரீமாந் நாராயணோ ந :பதி : அகிலதநு : முக்தித : முக்த போக்ய : ||

1.வ்யாக்யானம்

1. சாஸ்த்ர அறிவு முற்றும் அற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் எனில் ,
ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே ; தேவதைகள் யாவரும் ஒன்றே ;
த்ரிமூர்த்திகளின் தன்மையும் ஒன்றே;இவர்களின் ஆத்ம ஸ்வரூபமும்
ஒன்றே; இந்த மூவரையும்விட மேலாக இருப்பவன் ஒருவனே ஈச்வரன்.

ஆனால், இது ஸாரமுள்ளது , இது ஸாரமில்லாதது என்று பிரித்து
அறியும் வல்லமையுடையவர்கள், இவைகளை ஏற்பதில்லை.
ஒரே கருத்தைச் சொல்லும் உபநிஷத்துக்களினாலும் ,அவைகளோடு
ஒத்திருக்கிற , மநு , வ்யாஸர் முதலியவர்களின் ஸூக்திகளாலும் ,
எல்லாவற்றையும் சரீரமாக உடையவனும் ,மோக்ஷத்தை அளிப்பவனும்,
முக்தர்களால் அநுபவிக்கப்படுபவனுமான பிராட்டியுடன் எப்போதும்
பிரியாமல் இருக்கிற நாராயணனே , நமக்கும் அனைவருக்கும்
எஜமானன் –சேஷீ என்பதாகும் .

2.அதிகாரத்திலிருந்து

பரதேவதை யார் என்று ஏன் நிர்ணயிக்க வேண்டும் ?

உக்த வைதர்ம்யங்களாலே பொதுவிலே ப்ரக்ருதி —புருஷ –ஈச்வர –விவேகம்
பண்ணினாலும் , ஒன்றுந்தேவும் இத்யாதிகளிற்படியே பர தேவதா விசேஷ
நிச்சயமில்லாத போது , உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்
அவனை யல்லால் என்கிற பரமைகாந்தித்வம் கூடாமையாலும் ,
பரமைகாந்திக்கல்லாது வ்யவதாந ரஹிதமாக மோக்ஷம் கிடையாமையாலும்
ஈச்வரன் இன்ன தேவதா விசேஷமென்று நிஷ்கரிக்க வேணும்

2. வ்யாக்யானம்

இதுவரையில் சொல்லப்பட்ட பல விளக்கங்கள் /விவரங்கள் மூலமாக ,
எல்லாத் தத்வங்களும் , ப்ரக்ருதி—புருஷன் —ஈச்வரன் என்று
பிரிக்கட்டுள்ளதை அறிந்தோம்.இப்படியாகப் ,பிரித்து அறியும்
ஜ்ஞானம் இருந்தால் கூட , இவர்தான் யாவற்றிலும் உயர்ந்த தெய்வம்
என்பதை , திருவாய்மொழியில் ”ஒன்றுந்தேவும்…” அருளியதைப் போன்று
நம்மால் உணர இயலாது; இவர் தான் பரதெய்வம் என்று முடிவு காண ,
”உன்னித்து மற்றொரு தொழாள் , அவனை யல்லால் –” என்கிற அதே
திருவாய்மொழிப் பாசுரத்தின் ,ஜ்ஞானமும் அவச்யமாகும்.
இப்படியான, பரமைகாந்தி நிலையில் உள்ளார்க்கு அல்லாது,
வேறு எவருக்கும் மோக்ஷமானது கிடைப்பதில்லை. ஆகவே தான், இவர்தான்
பர தெய்வம் என்பது நிரூபிப்பது அவச்யமாகிறது.

திருவாய்மொழி ( 4–10–1 )
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று, நான்முகன் தன்னோடு தேவருலகோடு உயிர் படைத்தான்
குன்றம்போல் மணிமாட நீடு திருக்குருகூரதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே

நீங்கள் நாடுகின்ற தேவதைகளும் ,வசிப்பதற்கு இடமான
உலகங்களும்
உயிர் உம் = வசிக்கும் பிராணிகளும், ஜந்துக்களும்
மற்ரும் =போக்யங்கள், அவற்றுக்கான உபகரணங்களும்
அன்று = அந்த மஹாபிரளயம் ஏற்பட்ட வேளையிலே
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் =
ஸமஷ்டியைப் படைத்து, ப்ரஹ்மாண்டத்தைப் படைத்து,
ப்ரஹ்மாவையும் படைத்து, அதோடு நிற்காமல்,
தேவருலகங்களையும் , தேவர்களையும் படைத்து ,
உயிர் படைத்தான் = மனுஷ்ய,திர்யக் , தாவரங்களையும்
படைத்தான்; ஸ்ருஷ்டித்தான்.
அவன்
மலைகள் போல மணிகளால் ஆன சிறந்த வீடுகளால் அழகு
பொருந்திய திருக்குருகூர் திவ்ய தேசத்தில் , எழுந்தருளியிருக்கின்ற
ஆதிப் பிரான் என்கிற ஸ்ரீமந் நாராயணன் .
நிற்க =நீங்கள் வந்து ஸேவிப்பீர்கள் என்று எதிர்பார்த்துக் காத்து நிற்க,
மற்று எத்தெய்வம் நாடுதிர் = மற்ற எந்தத் தெய்வத்தை
ஆச்ரயிக்கலாம் என்று தேடுகிறீர்கள் ?

நீங்கள் தேடும் தெய்வங்கட்குப் ”பரத்வம் ” இல்லை. உங்களைப் போலவே
அவர்களும் யுகப் ப்ரளயத்தில் அழிந்தவர்களே ! இப்படி, யுகப் ப்ரளயம்
முடிந்து எல்லாம் அழிந்து எதுவுமில்லாத சமயத்திலே , ஜீவாத்மாக்களிடம்
கருணையுடன் , மறுபடியும் ப்ரஹ்மாண்டம் ப்ரஹ்மா தேவர்கள் மநுஷ்யர்கள்
விலங்குகள் தாவரங்கள் இவர்கள் வசிக்க உலகங்கள்—எல்லாவற்றையும்
ஸ்ருஷ்டி செய்தான். ஸ்ருஷ்டி செய்துகொண்டுமிருக்கிறான் . அவர்கள்
அனைவர்க்கும், அந்தராத்மாவாகவும் இருக்கிறான். இப்படிப் படைப்பதற்குக்
காரணமானவனை விட்டு விட்டு அவனால் படைக்கப்பட்ட தெய்வங்களை
நாடுகிறீர்களே ? பரத்வம் இருக்கலாம்; ஸௌலப்யம் இல்லையே
என்று சொன்னால் அது தவறு—இவனை ஆச்ரயித்த பாகவதர்கள்
வசிக்கும் மணி மாடங்கள் மலை போல் விளங்குகிற ஊர்
உங்களுக்குத் தெரியவில்லையா ! அங்கு, உங்கள் வருகைக்காக
ஆதிப் பிரான் நிற்கிறான்; அவனை ஸேவித்து உய்வதை விட்டு விட்டு,
வேறு தெய்வங்களை நாடலாமா —என்கிறார் ஆழ்வார்.

ஈடு வ்யாக்யானம்
வாஸுதேவம் பரித்யஜ்ய யோந்யம்தேவம் உபாஸதே |
த்ருஷிதோ ஜாஹ்நவீதீரே கூபம் அநதி துர்மதி ||

கங்கை பெருகி ஓடுகிறது; தாகம் உள்ளவன் நீரை அள்ளிக் குடித்துத்
தாகம் தீர்த்துக்கொள்ளலாம் . அதன் கரையில் , குந்தாலி கொண்டு
கிணறு கல்லித் தன் விடாய்க்கு உதவ நாக்கு நனைக்க இருக்குமாப் போலே
ப்ராப்தனுமாய் ஸுலபனுமாய் , ஸுசீலனுமான இவனை விட்டு
திருவில்லாத் தேவரைத் தேடுதிரே —

திருவாய்மொழி ( 4–6–10 )

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால்
நும்மிச்சைச் சொல்லி நும்தோள் குலைக்கப்படுமன்னைமீர் !
மன்னப்படு மறைவாணனை வண் துவராபதி
மன்னனை , ஏத்துமின் ஏத்தலும் தொழுதாடுமே

அவனையல்லால் உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் =
அந்தப் பெரிய தெய்வத்தை விட்டுவிட்டு , வேறு ஒரு தெய்வத்தையும்
ஒரு பொருட்டாக நினைத்து, தொழாள் –நினைக்கமாட்டாள் —
கை கூப்பி வணங்க மாட்டாள் .
உங்களுக்குத் தோன்றியதையெல்லாம் சொல்லி, உங்கள்
தோள்கள் குலுங்கி அதனால் ஆயாசப்படுபவர்களே !
எல்லாம் நிலைபெறத் தோன்றி யுள்ளவன்; வேதங்களில்
வாழ்கிறவன்; விலக்ஷணமான த்வாரகாநாதன் ; கண்ணன்;
அவனைத் துதிக்க வாருங்கள் ;நீங்கள் துதித்தவுடன்,
இவளும் அவனைத் தரித்து வணங்கி ஆனந்தமாக ஆடுவாள் .

இந்தப் பெண் வேறு தெய்வத்தை வணங்க மாட்டாள்; மனத்தில்
நினைக்க மாட்டாள்; த்வாரகாதீசன் கண்ணனைத்
தொழுகின்றாள்; நீங்கள் வேறு தெய்வத்தை அவளுக்குக்
காட்டாதீர்கள்; நீங்கள், உங்கள் மனஸ்ஸில் தோன்றிய
தெய்வத்தை யெல்லாம் , உங்கள் உடல் , தோள் குலுங்க
கைகளை ஆட்டிஆட்டிச் சொன்னாலும், அவள், அதை,
ஒரு பொருட்டாக மதிக்க மாட்டாள். ஆதலால், அதை விடுத்து,
க்ருஷ்ணனைத் துதியுங்கள் ; இவளும் உத்ஸாகமாக ஆடுவாள்.
அவன் விஷயத்திலே மோஹித்துக் கிடக்கிறாள் .
இதை நினைவு படுத்தினால், மகிழ்ந்து ,தெளிந்து, எழுந்து
உடனே தொழுவாள்; ஆடுவாள்; பாடுவாள்; ஆனந்திப்பாள்.

3.அதிகாரத்திலிருந்து

பகவான் விஷயமாகப் பல மதங்கள் கண்டன வாதங்கள்

அவ் விடத்தில் சேதநாசேதநங்களுடைய அத்யந்த பேதம் ப்ரமாண
ஸித்தமாகையாலே எல்லாம் பரதேவதையாயிருக்கிற
ப்ரஹ்ம தெய்வமென்கிற பக்ஷம் தடியாது .
ஸ்வபாவ ஸித்தமான ஜீவேச்வர பேதமும் அப்படியே தேவாதி ரூபரான
ஜீவர்களுடைய அந்யோந்ய பேதமும் ஸுக துக்காதி வ்யவஸ்தையிலே
ப்ரமாணிகமாகையால் ஸர்வந்தர்யாமி ஒருவனே யாகிலும்
ப்ரஹ்ம ருத்ரேந்தாதி ஸர்வ தேவதைகளும் ஈச்வரனோடும்
தன்னில் தானும் அபிந்நர் என்கிற பக்ஷம் கூடாது.

3.வ்யாக்யானம்

சேதநங்கள் , அசேதநங்கள் –இவையெல்லாம் வெவ்வேறானவை
என்பதை , ப்ரமாணங்கள் மூலமாகத் தெளிந்து அறிந்ததால் ,
எல்லாமே ப்ரஹ்மத்தின் அங்கமென்பது ஏற்க இயலாததாக
ஆயிற்று. ப்ரமாணங்கள் மூலமாகவே ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும்
வேறுபாடு உள்ளதென்றும் , தேவர்களாக உள்ள ஜீவாத்மாக்களுக்கும்
இடையே வேறுபாடு உள்ளதென்றும் , எல்லா ஜீவாத்மாக்களுக்கும்
அந்தர்யாமியாக ஈச்வரன் இருக்கிறானென்றும் , உணரலாயிற்று
ப்ரஹ்மா , ருத்ரன் ,இந்த்ரன் இவர்களுக்கும் ஈச்வரனுக்கும்
பேதம் இல்லை என்கிற வாதமும் இவர்களுக்கு இடையேயும்
ஒருவருக்கொருவர் பேதமில்லை என்கிற வாதமும் ,ஏற்க முடியாததாயிற்று .

4.அதிகாரத்திலிருந்து
——————————-

ப்ரஹ்மன் , ருத்ரன் இவர்கள் –பர தேவதை யல்ல

இத் தேவதைகளில் ப்ரதானராகச் சொல்லுகிற ப்ரம்மருத்ரேந்தாதிகளுக்குத்
கார்யத்வ கர்மவச்யத்வங்கள் ப்ரமாணிகங்களாகையாலும் ,

ஆபூதஸம்ப்லவே ப்ராப்தே ப்ரலீனே ப்ரக்ருதெள மஹாந்
ஏகாஸ்திஷ்டதி விச்வாத்மா ஸ து நாராயண : ப்ரபு :

ஆத்யோ நாராயணோ தேவ : தஸ்மாத் ப்ரஹ்மா த்தோ பவ :

பரோ நாராயணோ தேவ : தஸ்மாத் ஜாதச்சதுர்முக :
தஸ்மாத் ருத்ரோ அபவதேவி-இத்யாதிகளிலே

ததஸ்த்வமாபி துர்தர்ஷ : தஸ்மாத் அபவாத் ஸநாதனம்
ரக்ஷார்த்தம் ஸர்வபூதானாம் விஷ்ணுத்வமுபஜக்மிவாந்

என்கிறபடியே ஸ்வேச்சாவதீர்ணனாய் த்ரிமூர்த்தி மத்யஸ்தனான
விஷ்ணு நாராயணாதி சப்த வாச்யன் தானே தன்னுடைய பூர்வாவஸ்தையிலே
ஸர்வ ஜகத்துக்கும் காரணமென்கையாலும்

நித்யம் ஹி நாஸ்தி ஜகதி பூதம் ஸ்தாவர ஜங்கமம்
ருதே தமேகம் புருஷம் வாஸுதேவம் ஸநாதனம்-என்கிறபடியே

அவனே நித்யனென்கையாலும் , த்ரிமூர்த்திகளும் ஸமரென்றும்
த்ரிமூர்த்திகள் ஏகதத்த்வமென்றும் த்ரிமூர்த்யுத்தீர்ணன் ஈச்வரனென்றும்
த்ரிமூர்த்திகளுக்குள்ளே ப்ரஹ்மாவாதல் ருத்ரனாதல் ஈச்வரனென்று
சொல்லுகிற ஸாம்ய ஐக்ய உத்தீர்ண வ்யக்த்யந்தர பக்ஷங்கள் தடியா

4. வ்யாக்யானம்

தேவதைகளில் ப்ரதானராகச் சொல்லப்படுகிற ப்ரம்மன் ,ருத்ரன் , இந்த்ரன் ,
ஆகிய எல்லோரும் கர்மத்தின் வசப்பட்டவர்களே என்பதைப்
பலப் ப்ரமாணங்கள் தெளியலாம்

மஹாபாரதம் —-
ஆபூத ஸம்ப்லவே ப்ராப்தே ப்ரலீனே ப்ரக்ருதெள மஹாந்
ஏகாஸ்திஷ்டதி விச்வாத்மா ஸ து நாராயண : ப்ரபு :

பஞ்ச பூதங்களும் லயத்தை அடைந்து, மஹத் என்பது
ப்ரக்ருதியில் லயத்தை அடைந்த போது , அனைத்துக்கும்
ஆத்மாவான ஒருவன் மட்டுமே இருக்கிறான்; அவனே
அனைத்துக்கும் ப்ரபுவான நாராயணன்

வராஹ புராணம் —–

ஆத்யோ நாராயணோ தேவ : தஸ்மாத் ப்ரஹ்மா த்தோ பவ :

தொடக்கத்தில் , நாராயணன் மட்டுமே இருக்கிறான் ; அவனிடமிருந்து
பிரம்மனும் அவனிடமிருந்து ருத்ரனும் ( சிவன் ) தோன்றினார்கள்.

இதுவும் வராஹ புராணமே —

பரோ நாராயணோ தேவ : தஸ்மாத் ஜாதச்சதுர்முக :
தஸ்மாத் ருத்ரோ அபவதேவி

ஹே , தேவி, நாராயணனே எல்லோர்க்கும் மேலான தெய்வம்—
அவனிடமிருந்து நான்முகனும். நான்முகனனிடமிருந்து ,சிவனும்
தோன்றினர்.

மேலும்,

ஸ்ரீமத் ராமாயணம் –உத்தர காண்டம் –ப்ரஹ்மா சொல்கிறார்—

ததஸ்த்வமாபி துர்தர்ஷ : தஸ்மாத் அபவாத் ஸநாதனம்
ரக்ஷார்த்தம் ஸர்வபூதானாம் விஷ்ணுத்வமுபஜக்மிவாந்

அடியேன் உபாஸனையால் , ஒருவராலும் வெல்ல இயலாத தேவரீர் ,
எப்போதுமிருக்கிற அந்தப் பர ரூபத்திலிருந்து ,எல்லாப் பிராணிகளையும்
ரக்ஷிக்க , த்ரிமூர்த்திகளில் நடுவான ”விஷ்ணு ” வாகத் தோன்றினீர்
இவை போன்றவற்றின் மூலமும் , நாராயணன், விஷ்ணு போன்ற
பலத் திருநாமங்களால் அனைத்து நிலைகளிலும் இருக்கிறான்.

மஹா பாரதம்

நித்யம் ஹி நாஸ்தி ஜகதி பூதம் ஸ்தாவர ஜங்கமம்
ருதே தமேகம் புருஷம் வாஸுதேவம் ஸநாதனம்

எப்போதும் இருக்கிற புருஷன் என்று சொல்லப்படுகிற
அந்த வாஸுதேவன் ஒருவனைத் தவிர , உலகில்,
ஸ்தாவரமோ ஜங்கமமோ , நிரந்தரமாக இருப்பதில்லை என்று கூறியதன்
மூலம், இவன் ஒருவனே நித்யன் என்று விளங்குகிறது.

இப்படியான ப்ரமாணங்களால், மும் மூர்த்திகளும் சமம்,
மும்மூர்த்திகளும் ஒன்றே, மும்மூர்த்திகளுக்கும் மேலானவன்
ப்ரம்மனோ ,ருத்ரனோ என்கிற வாதங்கள் தள்ளப்படுகின்றன .
இப்படிப்பட்ட வாதங்கள் மூலமாக வெளிப்படும் ”ஸமத்வம் ”
ஒரே தன்மை, இவற்றைக் காட்டிலும் உயர்ந்த ஒன்று
போன்ற கருத்துக்கள் எல்லாமும் ப்ரமாணங்களுக்கு விரோதமாக
உள்ளன.

5.அதிகாரத்திலிருந்து
———————————-
ப்ருஹ்ம ருத்ராதிகள் ஈச்வரனின் படைப்பே

ப்ரம்ம ருத்ராதிகள் ஸர்வேச்வரனுக்குக் கார்யபூதரென்னுமிடம் ,
தத்விஸ்ருஷ்டஸ்ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே-இத்யாதிகளாலும்
ஸங்க்ஷிப்ய ச புரா லோகாந் மாயயா ஸ்வயமேவ ஹி
மஹார்ணவே சாயாந : ஆப்ஸு மாம் த்வம் பூர்வமஜீஜந :

க இதி ப்ரஹ்மணோ நாம ஈச : அஹம் ஸர்வதேஹிநாம்
ஆவாம் தவாங்கே ஸம்பூதெள தஸ்மாத் கேசவ நாமவாந்

அஹம் ப்ரஸாத ஜஸ்தஸ்ய கஸ்மிம்ச்சித் காரணாந்தரே
த்வம் ச ஏவ க்ரோதஜஸ்தாத் பூர்வ ஸர்க்கே ஸநாதனே-என்று எதிரி கையாலே விடுதீட்டானபடியே அவர்கள் தங்கள்
பாசுரங்களாலும் ஸித்தம்

5.வ்யாக்யானம்

ப்ரம்மன் ,ருத்ரன் இவர்களெல்லாம் பகவானிடமிருந்து தோன்றியவர்கள்
என்று ”மநு ஸ்ம்ருதி கூறுகிறது

தத்விஸ்ருஷ்டஸ்ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே

நாராயணனிடமிருந்து உண்டான அந்தப் புருஷன், ப்ரம்மன் என்று
சொல்லப்படுகிறான் . என்கிற பிரமாணங்கள் மூலமும் அறியலாம் .

ஸ்ரீமத் ராமாயணம்

ஸங்க்ஷிப்ய ச புரா லோகாந் மாயயா ஸ்வயமேவ ஹி
மஹார்ணவே சாயாந : ஆப்ஸு மாம் த்வம் பூர்வமஜீஜந :

முன்பு தேவரீரே , உமது ஸங்கல்பத்தாலே உலகங்களை அழித்து,ப்ரளய
ஸமுத்ரத்தில் படுத்து இருந்து, முதலில் என்னைப் படைத்தீர்
( ப்ரஹ்மா , தன்னைக் குறித்து பகவானிடம் சொன்னது )

ஹரி வம்சம்
க இதி ப்ரஹ்மணோ நாம ஈச : அஹம் ஸர்வதேஹிநாம்
ஆவாம் தவாங்கே ஸம்பூதெள தஸ்மாத் கேசவ நாமவாந்

சிவன் சொல்வது–
”க ” என்று ப்ரம்மனுக்குப் பெயர்; நான் எல்லாப் பிராணிகளுக்கும்
ஈசன் ; நாங்கள் இருவரும், தேவரீருடைய திருமேனியிலிருந்து
உண்டானவர்கள் ; ஆதலால் , தேவரீர் ,”கேசவன் என்கிற திருநாமமுடையவர்

மஹாபாரதம்

அஹம் ப்ரஸாத ஜஸ்தஸ்ய கஸ்மிம்ச்சித் காரணாந்தரே
த்வம் ச ஏவ க்ரோதஜஸ்தாத் பூர்வஸர்க்கே ஸநாதனே

ப்ரம்மன் சொல்வது —-
குழந்தாய் —-எம்பெருமான் மகிழ்வுடன் இருந்த சமயம் ,நான் அவரால் தோன்றினேன் .
ஒரு சமயம் அவர் கோபத்தில் இருக்கும்போது நீ முன் ஸ்ருஷ்டியில்
அந்தக் கோபத்தால் உண்டானாய் .

மேலே சொல்லப்பட்டவை யாவுமே, பல தேவதைகளும் ,
தங்களுக்குத் தாங்களே பகவானால் படைக்கப்பட்டவர்கள் என்று
வாக்கு மூலம் கொடுப்பதைப் போன்று உள்ளதை உணர்க

6.அதிகாரத்திலிருந்து
————————————-

இவர்கள் கர்ம வச்யர்களாய் சில கர்ம விசேஷங்களாலே ஸர்வேச்வரனை
ஆராதித்துத் தத்தம் பெற்றார்களென்னுமிடம்

ஸர்வதேவா வாஸுதேவம் யஜந்தே ஸர்வே தேவா வாஸுதேவம் நமந்தே

ஸப்ருஹ்மகாஸ்சருத்ராச்ச ஸேந்த்ர தேவா மஹர்ஷய :
அர்ச்சயந்தி ஸுரச்ரேஷ்டம் தேவம் நாராயணம் ஹரிம்

சிந்தயந்தோ ஹி யம் நித்யம் ப்ரஹ்மே சாநாதய : ப்ரபும்
நிச்சயம் நாதிகச்சந்தி தமஸ்மி சரணம் கத :

பத்மே திவ்யே அர்க்க ஸங்காசோ நாப்யாமுத்பாத்ய மாமபி
ப்ராஜாபத்யம் த்வயா கர்ம ஸர்வம் மயி நிவேசிதம்
ஸோ அஹம் சந்ந்யஸ்த பாரோ ஹி த்வாமுபாஸே ஜகத்பதிம்

யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ :
புனஸ்த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவாநித சுச்ரும

விச்வ ரூபோ மஹாதேவ : ஸர்வமேதே மஹாக்ரதௌ
ஜுஹாவ ஸர்வ பூதாநி ஸ்வயமாத்மாநமாத்மநா

மஹாதேவ : ஸர்வமேதே மஹாத்மா ஹ்ருத்வா ஆத்மாநம் தேவதேவோ ப்பூவ
விச்வான் லோகாந் வ்யாப்ய விஷ்டப்ய கீர்த்யா விராஜதே துதிமாந் க்ருத்திவாஸா :

யோ மே யதா கல்பிதவாந் பாகமஸ்மிந் மஹாக்ரதௌ
ஸ ததா யஜ்ஞபாகர்ஹோ வேதஸுத்ரே மயா க்ருத :–இத்யாதிகளிலே ப்ரஸித்தம்

6.வ்யாக்யானம்
———————

ஸர்வதேவா வாஸுதேவம் யஜந்தே ஸர்வே தேவா வாஸுதேவம் நமந்தே
எல்லாத் தேவர்களும் வாஸுதேவனையே ஆராதிக்கிறார்கள். எல்லாத் தேவர்களும் வாசுதேவனையே நமஸ்கரிக்கிறார்கள்.

மஹாபாரதம்
ஸப்ருஹ்மகாஸ்சருத்ராச்ச ஸேந்த்ர தேவா மஹர்ஷய :
அர்ச்சயந்தி ஸுரச்ரேஷ்டம் தேவம் நாராயணம் ஹரிம்

ப்ரஹ்மா சிவன் இந்த்ரன் தேவர்கள் ரிஷிகள் யாவரும் தேவர்களுக்கெல்லாம்
தேவனான ஸ்ரீ ஹரியாகிய நாராயணனையே ஆராதிக்கிறார்கள்

மஹாபாரதம்
சிந்தயந்தோ ஹி யம் நித்யம் ப்ரஹ்மே சாநாதய : ப்ரபும்
நிச்சயம் நாதிகச்சந்தி தமஸ்மி சரணம் கத :

ப்ரஹ்மா ,சிவன் முதலானோர் நாராயணனை எப்போதும் ஆராதித்து வந்தாலும்
அவனது தன்மை இத்தகையது என்பதை இன்னமும் அறியவில்லை;
இப்படிப்பட்ட நாராயணனை வணங்குகிறேன்

ஸ்ரீமத் ராமாயணம் —
பத்மே திவ்யே அர்க்க ஸங்காசோ நாப்யாமுத்பாத்ய மாமபி
ப்ராஜாபத்யம் த்வயா கர்ம ஸர்வம் மயி நிவேசிதம்
ஸோ அஹம் சந்ந்யஸ்த பாரோ ஹி த்வாமுபாஸே ஜகத்பதிம்

ப்ரஹ்மா கூறுவதாவது —-
தேவரீரின் திருநாபியில் உண்டான ஸுர்யன் போல ஜ்வலிக்கும்
தாமரைப் புஷ்பத்தில் என்னையும் உண்டாக்கி , ப்ரஜாபதி என்னும்
அதிகாரி செய்யவேண்டிய காரியங்களையும் அடியேனை செய்விக்க வைத்து
பெரும் பாரத்தைக்கொண்டவனாக அடியேனை ஆக்கிய
ஜகத்பதியாகிய உன்னை, (வணங்குகிறேன் ) த்யானம் செய்கிறேன்

மஹாபாரதம்

யுககோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ :
புனஸ்த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவாநித சுச்ரும
ஆயிரம் கோடி யுகங்கள் எம்பெருமானை ஆராதித்து ப்ரஹ்மா மறுபடியும்
மூன்று உலகங்களைப் படைக்கும் அதிகாரத்தைப் பெற்றான் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம்

மஹாபாரதம்

விச்வரூபோ மஹாதேவ : ஸர்வமேதே மஹாக்ரதௌ
ஜுஹாவ ஸர்வபூதாநி ஸ்வயமாத்மாநமாத்மநா

விச்வரூபன் என்கிற பெயர் கொண்ட ருத்ரன் ”ஸர்வமேதம் ” என்கிற
பெரிய யாகத்தில், எல்லாப் பூதங்களையும் , தன்னையும் ,மனத்தாலே ஹோமம் செய்தான்

மஹாபாரதம்

மஹாதேவ : ஸர்வமேதே மஹாத்மா ஹ்ருத்வா ஆத்மாநம் தேவதேவோ ப்பூவ
விச்வான் லோகாந் வ்யாப்ய விஷ்டப்ய கீர்த்யா விராஜதே துதிமாந் க்ருத்திவாஸா :

ஸர்வமேதம் என்கிற பெரிய யாகத்தில், ருத்ரன் இப்படியாகத் தன்னையும்
அர்பணித்துக்கொண்டு ,தேவர்களில் உயர்ந்தவன் என்கிற பெயர் பெற்றான்.
இதன்மூலமாக, யானைத் தோலைத் தனது வஸ்த்ரமாகக் கொண்டு ,தன்னுடைய
ஜ்ஞானம் மூலமாக எல்லா உலகங்களிலும் வியாபித்து, எட்டுவித மூர்த்திகளைத்
தாங்கி காந்தியுடன் கீர்த்தியுடன் ப்ரகாசிக்கிறான்

மஹாபாரதம்

யோ மே யதா கல்பிதவாந் பாகமஸ்மிந் மஹாக்ரதௌ
ஸ ததா யஜ்ஞபாகர்ஹோ வேதஸுத்ரே மயா க்ருத :

இப்படியான பெரிய யாகத்தில், யார் , எனக்குக் கொடுக்கவேண்டிய ஹவிர்பாகத்தை
முறைப்படி கொடுத்தாரோ , அவன் யஜ்ஞ பாகத்தைப் பெறுவதற்குத்
தகுந்தவன் என்று வேதத்திலும், ஆபஸ்தம்ப ஸூத்ரத்திலும் சொல்லி ஏற்படுத்தியிருக்கிறேன்

.7.அதிகாரத்திலிருந்து
———————————

ப்ரஹ்ம ருத்ராதிகள் எம்பெருமானின் மாயைக்கு வசப்பட்டவர்;குணங்களுக்கு
வசப்பட்டவர்; அறிவின் ஏற்றச் சுருக்கமுடையவர்

இவர்கள் பகவந் மாயா பரதந்த்ர்ரராய் குண வச்யராய் ஞான ஸங்கோச
விகாஸவான்களாயிருப்பார்களென்னுமிடம் வேதாபஹராதி வ்ருத்தாந்தங்களிலும்

ப்ரஹ்மாத்யாஸ்ஸகலா தேவா மனுஷ்யா: பசவஸ்ததா
விஷ்ணுமாயா மஹாவர்த்த மோஹாந்த தமஸாவ்ருதா :

ப்ரஹ்மா விச்வஸ்ருஜோ தர்மா மஹாந் அவ்யக்தமேவ ச
உத்தமாம் ஸாத்த்விகீமேதாம் கதிமாஹுர்மநீஷிணா :–இத்யாதிகளிலும் ப்ரஸித்தம்

7. வ்யாக்யானம்

ப்ரஹ்மன் ,ருத்ரன் இவர்களெல்லாம் நாராயணனின் மாயைக்கு
வசப்பட்டவர்கள். இவர்களின் ஜ்ஞானம் விரிவதும் ,சுருங்குவதுமாகவே
உள்ளது. இவை அனைத்தையும் ப்ரஹ்மா ,வேதங்களைத் தொலைத்த
சம்பவம் மூலமாகவும் கீழே சொல்லப்பட்டவை மூலமாகவும் அறியலாம்

விஷ்ணு புராணம்
ப்ரஹ்மாத்யாஸ்ஸகலா தேவா மனுஷ்யா: பசவஸ்ததா
விஷ்ணுமாயா மஹாவர்த்த மோஹாந்த தமஸாவ்ருதா :

பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள், மனிதர்கள்,மிருகங்கள் ஆகிய எல்லாமும்
விஷ்ணுவின் மாயை ( மாயை என்பது ப்ரக்ருதி ) என்கிற இருளால் சூழப்பட்டுள்ளனர்

மநு ஸ்ம்ருதி
————————–

ப்ரஹ்மா விச்வஸ்ருஜோ தர்மா மஹாந் அவ்யக்தமேவ ச
உத்தமாம் ஸாத்த்விகீமேதாம் கதிமாஹுர்மநீஷிணா :

முந்தைய ஜன்மத்தில் ஸத்வ குணத்தால் சிறந்த புண்யம் செய்தவர்களால்
பிரம்மா, ஒன்பது ப்ரஜாபதிகள், தர்மதேவதை , மஹத் தேவதை , அவ்யக்த தேவதை
என்கிற உயர்ந்த பிறவிகள் அடையப்படுகின்றன

8.. அதிகாரத்திலிருந்து
———————————–
ப்ரஹ்ம ருத்ராதிகள் பகவானிடம் ஜ்ஞானம் பெற்றுக் கைங்கர்யம் செய்பவர்கள்

இவர்கள் தங்களுக்கு அந்தராத்மாவான அவன் கொடுத்த ஞானாதிகளைக்
கொண்டு அவனுக்கு ஏவல் தேவை செய்கிறார்களென்னுமிடம்

ஏதௌ விபுதச்ரேஷ்ட ப்ரஸாத க்ரோதஜெள ஸம்ருதௌ
ததாதர்சித பந்நாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகெள–என்று சொல்லப்பட்டது

8.வ்யாக்யானம்
————————–
ப்ரம்மன் முதலானவர்கள் தங்களுக்கு அந்தர்யாமியான ஸ்ரீமந் நாராயணன்
அளித்த ஜ்ஞானத்தைக் கைக்கொண்டு அந்த ஜ்ஞானத்தின் மூலம்
அவனுக்கு ஏற்ற கைங்கர்யங்களைச் செய்துவருகின்றனர் .
இதை மஹாபாரதம் சொல்கிறது

ஏதௌ விபுதச்ரேஷ்ட ப்ரஸாத க்ரோதஜெள ஸம்ருதௌ
ததாதர்சித பந்நாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகெள

பகவானின் சந்தோஷத்தாலும், கோபத்தாலும் தோன்றியவர்களான
தேவர்களில் உயர்ந்தவர்களான பிரம்மனும் சிவனும் ,பகவான் அளித்துள்ள
ஜ்ஞானத்தின் மூலம் ஸ்ருஷ்டியையும் , ஸம்ஹாரத்தையும் செய்து வருகின்றனர் .

9.அதிகாரத்திலிருந்து
————————————–
ப்ரஹ்ம ருத்ராதிகள் த்யானிக்கத் தகுந்தவரல்லர்

இவர்களுக்கு சுபாச்ரயத்வமில்லை யென்னுமிடத்தை

ஹிரண்யகர்ப்போ பகவான் வாஸவோ அத ப்ரஜாபதி :-என்று தொடங்கி ,
அசுத்தாஸ்தே ஸமஸ்தாஸ்து தேவாத்யா : கர்மயோநய : என்றும்

ஆப்ரஹ்ம ஸ்தம்பபர்யந்தா ஜகதந்தர்வ்யவஸ்திதா :
ப்ராணின : கர்மஜனித ஸம்ஸார வசவர்த்திந : என்றும்

கர்மணாம் பரிபாகத்வாத் ஆவிரிஞ்சாதமதங்களம்
இதி மத்வா விரக்தஸ்ய வாஸுதேவ : பராகதி : என்றும்

பராசர சௌநக சுகாதிகள் ப்ரதிபாதித்தார்கள்

9.வ்யாக்யானம்
————–

ப்ரம்மன் முதலான இவர்கள், தூய்மையற்றவர்கள் த்யானம்
செய்யத் தகுதி இல்லாதவர்கள் என்பவைகளை இப்போது
அறியலாம்

விஷ்ணுபுராணம்

ஹிரண்யகர்ப்போ பகவான் வாஸவோ அத ப்ரஜாபதி :-என்று தொடங்கி ,
அசுத்தாஸ்தே ஸமஸ்தாஸ்து தேவாத்யா : கர்மயோநய :

ப்ரம்மன் இந்த்ரன் ப்ரஜாபதிகள் தேவர்கள் ஆகியோர் பூர்வகர்மத்தின்
பயனாக பிறவி எடுத்தவர்கள்—ஆதலால், தூய்மையற்றவர்கள்

யோகிகள் த்யானம் செய்வதாயிருந்தால் , ப்ராணாயாமத்தினால்
வாயுவையும், ப்ரத்யாஹாரத்தினால் இந்த்ரியங்களையும் வசப்படுத்தி
மனஸ்ஸைப் பகவானிடம் செலுத்தவேண்டும் . இப்படி த்யானிக்கப்படும்
எம்பெருமானின் ஸ்வரூபம் , மூர்த்தம் , அமூர்த்தம் என்று இரண்டு
வகையாக உள்ளது. இவை மூர்த்த ப்ரஹ்மத் த்யானம் ,அமூர்த்த
ப்ரஹ்மத் த்யானம் என்றும் சொல்லப்படும்.
மூர்த்தம் —-ஹிரண்யகர்பன் , ப்ரஜாபதி ,மருத்துக்கள்,வஸுக்கள் ,ருத்ரர்கள் ,
ஸூர்யன் ,நக்ஷத்ரங்கள் , கந்தர்வ,யக்ஷ தேவ வர்க்கங்கள், மனிதன், விலங்கு,
மலைகள் ,கடல்கள், மரங்கள், இவையெல்லாம் உள்ள பூமி –இவைகள்
யாவும் அசுத்தமானவை–”மூர்த்தம் ”.
இவை எல்லாமும் ,ப்ரஹ்மத்தை ஆத்மாவாக உடையதாகத் த்யானம்
செய்வது—-மூர்த்த ப்ரஹ்மத் த்யானம்

ப்ரஹ்மத்தை ”ஸத் ” ஸ்வரூபமாக தோஷங்கள் இல்லாததாக ,ஸ்வயம்
ப்ரகாசமான ஜ்ஞான ஸ்வரூபமாகத் த்யானம் செய்வது–அமூர்த்த ப்ரஹ்மத் த்யானம்

மேற்சொன்ன இருவிதத் த்யானங்களும் மிகக் கடுமையானவை எளியது, சிறந்தது எதுவெனில் அழகான திவ்யமங்கள விக்ரஹத்தோடு
அனந்தகல்யாணகுணங்களோடு , த்யானிப்பது . இது, சுபாச்ரய ப்ரஹ்மத் த்யானம் எனப்படும்.

விஷ்ணு தர்மம்

ஆப்ரஹ்ம ஸ்தம்பபர்யந்தா ஜகதந்தர்வ்யவஸ்திதா :
ப்ராணின : கர்மஜனித ஸம்ஸார வசவர்த்திந :

ப்ரம்மன் முதலாகத் துரும்புவரை –சிறிய புல் வரை—-இருக்கிற
அனைத்து ஜீவன்களும் கர்மவினைகாரணமாகப் பிறவி எடுத்தவர்களே .
ஆதலால், அவர்களும் ஸம்ஸார சுழற்சிக்கு உட்பட்டவர்களே

ஸ்ரீமத் பாகவதம்

கர்மணாம் பரிபாகத்வாத் ஆவிரிஞ்சாதமதங்களம்
இதி மத்வா விரக்தஸ்ய வாஸுதேவ : பராகதி :

உலகப் பற்றுக்களே இல்லாதவன், ப்ரம்மன் முதலானோர் ,எந்தப்
பாவத்தையும் போக்க வல்லமை இல்லாதவர்கள் என்று தெளிய வேண்டும்.
ஏனெனில், அவர்கள் தூய்மை யற்றவர்கள் . ஆதலால், வாஸுதேவனையே ,தங்களுடைய
உயர்ந்த லக்ஷ்யமாகக் கொள்ள வேண்டும்

இப்படியெல்லாமே பராசரர் சௌநகர் சுகர் முதலானோர் உபதேசித்தனர் .

10.அதிகாரத்திலிருந்து
————————————-
ப்ரஹ்ம ருத்ராதிகள் பகவானை ஆச்ரயித்தவர்கள்

இவர்களுக்குப் பகவான் ஆச்ரயணீயனென்னுமிடத்தையும் ,பகவானுக்கு
ஓர் ஆச்ரயணீயர் இல்லையென்னுமிடத்தையும்

ருத்ரம் ஸமாச்ரிதா தேவா ருத்ரோ ப்ரஹ்மாணமாச்ரித :
ப்ரஹ்மா மாமாச்ரிதோ ராஜந் அஹம் கஞ்சிதுபாச்ரித :
மமாச்ரயோ ந கச்சித்து ஸர்வேஷாமாச்ரயோ ஹி அஹம்
என்று தானே யருளிச் செய்தான்

10.வ்யாக்யானம்
——————————–

ப்ரஹ்மா முதலானோர் தங்களுடைய பாதுகாப்புக்கு ,பகவானையே
அண்டி யிருக்கின்றனர். ஆனால், பகவானோ,யாரையும் எதற்கும்
அண்டி யிருக்க வேண்டியதில்லை –இக்கருத்தை
மஹாபாரதத்தில் பகவானே சொல்கிறான் —
ஹே ராஜன்—தேவர்கள் தங்களுடைய பாதுகாப்புக்கு , ருத்ரனை
அண்டுகின்றனர்; ருத்ரன் ,ப்ரஹ்மனை அண்டுகிறான் ;
ப்ரஹ்மனோ ,தன பாதுகாப்புக்காக என்னை அடைகிறான்.
நான் எனது பாதுகாப்புக்கு யாரையும் அண்ட வேண்டியதில்லை.
நானே எல்லோருக்கும் புகலிடமாக இருப்பதால், என்னால்
அடையப்படும் இடம் என்று ஏதுமில்லை.

11. அதிகாரத்திலிருந்து
———————————–

ப்ரஹ்ம ருத்ராதிகள் பகவானின் விபூதிகள்

இவர்கள் உபாயவிபூதிநாதனான ஸர்வேச்வரனுக்கு விபூதிபூதரென்னுமிடம்
ப்ரஹ்மா தக்ஷாதய : கால : ருத்ர : காலாந்தகாத்யாச்ச இத்யாதிகளிலே
மற்றுமுள்ளோரோடு துல்யமாகச் சொல்லப்பட்டது

11.வ்யாக்யானம்
—————————–

நித்ய விபூதி, லீலாவிபூதி இரண்டிற்கும் தலைவன் –எம்பெருமான். இவனின்
விபூதிகளாக, ப்ரம்மன் ருத்ரன் முதலானோர் இருக்கின்றனர் .
இதை , விஷ்ணு புராணம் சொல்கிறது

ப்ரஹ்மா தக்ஷாதய : கால
ப்ரம்மன் , தக்ஷன் ,காலம் போன்றவை எம்பெருமானின் விபூதிகளாக இருந்து
உலகை உண்டுபண்ணக் காரணமாக இருக்கிறார்கள்

ருத்ர : காலாந்தகாத்யாச்ச

ருத்ரன் யமன் போன்றவர்கள் பகவானின் விபூதிகளாக இருந்து,
நான்கு விதமான ப்ரளயங்களுக்குக் காரணமாக இருக்கின்றனர் .

12. அதிகாரத்திலிருந்து

இப்படி வஸ்த்வந்தரம்போல இவர்களும் ஸர்வ சரீரியான ஸர்வேச்வரனுக்கு
ப்ரகார பூதரென்னுமிடம் வஸ்த்வந்தரங்களுக்கும் இவர்களுக்கும் சேர
நாராயணாதி சப்த ஸாமாநாதிகரண்யத்தாலே ஸித்தம்

12.வ்யாக்யானம்

மற்ற பொருள்களைப் போலவே ப்ரம்மன் முதலிய அனைத்தையும் தனது சரீரமாகக்
கொண்டுள்ளவர் பகவான் . இவர்கள் எல்லாமும் ,அவனுக்கு விசேஷணமாக உள்ளனர்
இதனை,நாராயண என்கிற சப்தத்துடன் மற்ற பொருள்கள் கூறப்படுவதைப்போல
இவர்களும் அவ்வாறே கூறப்படுகின்றனர் என்பதை அறியலாம்

13.அதிகாரத்திலிருந்து
———————————
ப்ரஹ்மருத்ராதிகள் ,பகவானுக்கு சேஷர்கள்

இவர்கள் சரீரமாய் அவன் ஆத்மாவாயிருக்கிறபடியை ,

தவாந்தராத்மா மம ச யே ச அந்யே தேஹிஸம்ஞிதா :
ஸர்வேஷாம் ஸாக்ஷிபூத : அஸௌ ந க்ராஹ்ம : கேநசித் க்வசித்

என்று ப்ரஹ்மா ருத்ரனைக் குறித்துக் கூறினான்

13.வ்யாக்யானம்
——————————
ப்ரஹ்மா முதலானோர் பகவானின் சரீரமாக உள்ளத்தையும்,
அவன் இவர்களுக்கெல்லாம் ஆத்மாவாக இருப்பதையும்

மஹாபாரதம் சொல்கிறது —
தவாந்தராத்மா மம ச யே ச அந்யே தேஹிஸம்ஞிதா :
ஸர்வேஷாம் ஸாக்ஷிபூத : அஸௌ ந க்ராஹ்ம : கேநசித் க்வசித்

ப்ரஹ்மா ,ருத்ரனிடம் சொன்னதாவது—
உனக்கும் எனக்கும்,சரீரமெடுத்த எல்லோருக்கும் ஆத்மாவாக பகவான்
இருந்து, எல்லோருடைய செயல்களையும் எப்போதும் பார்க்கிறான்.
ஆனால், அவனை யாராலும் எளிதில் இயலாது.

14.அதிகாரத்திலிருந்து
———————————–

ப்ரஹ்ம ருத்ராதிகள் ,பகவானின் தொண்டர்கள்

இவர்கள் சேஷ பூதர் , அவன் சேஷி என்னுமிடத்தை

தாஸபூதாஸ்ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மாந : பரமாத்மந :
அத : அஹம் அபி தே தாஸ இதி மத்வா நமாமி அஹம்

என்று மந்த்ர ராஜபத ஸ்தோத்ரத்திலே சர்வஜ்ஞனான ருத்ரன் தானே சொன்னான்

14.வ்யாக்யானம்
————————–

ப்ரஹ்மா முதலானோர் தொண்டர்கள் என்பதையும் பகவானே
இவர்களின் எஜமானன் என்பதையும் அனைத்துமறிந்த சிவன்
மந்த்ரராஜபத ஸ்தோத்ரத்தில் சொல்கிறான்

தாஸபூதாஸ்ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மாந : பரமாத்மந :
அத : அஹம் அபி தே தாஸ இதி மத்வா நமாமி அஹம்

அனைத்து ஆத்மாக்களும் இயற்கையாகவே பகவானுக்கு அடிமைகள்.
இந்த ஜ்ஞானமுடைய நானும்,உன் தொண்டனான நானும் உன்னை வணங்கி நிற்கிறேன்

மந்த்ரராஜபத ஸ்தோத்ரம்

ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹனுக்கான மந்த்ரங்கள் நிறைய உள்ளன
ஸ்ரீ ந்ருஸிம்ஹ மந்த்ரங்களை மனத்தில் பதியவைப்பது மிகக் கஷ்டம் .
ஆனால், ஸ்ரீ ருத்ர பகவான் , ஸ்ரீ ந்ருஸிம்ஹ மந்த்ரமான ”அநுஷ்டுப் ”
மந்த்ரத்தை அநுஷ்டுப் சந்தஸ்ஸில் உள்ள
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்

என்பதான மந்த்ரத்துக்கு ,பதம் பதமாக விவரித்து ஸ்தோத்ரம்
அருளியிருக்கிறார்.
மந்த்ரங்களுக்குள்ளே இது ராஜா .இதில் உள்ள பதினோரு
பதங்களுக்கு விவரம் உள்ள ஸ்தோத்ரம். 32 அக்ஷரங்கள் உள்ள
மந்த்ரம் . 32 ப்ரஹ்ம வித்யைகள் இதில் அடக்கம். 11 பதங்களுக்கு
11 ச்லோகங்கள் . பலச்ருதி ஒரு ச்லோகம் .ஆக 12 ச்லோகங்கள்.
இதில் 11 வது ச்லோகத்தை ஸ்வாமி தேசிகன் இங்கு சொல்கிறார்.
அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் 54 முதல் 56 அத்தியாயங்கள் வரை
இந்த மந்த்ரத்தின் விளக்கத்தைச் சொல்கிறது

15.அதிகாரத்திலிருந்து
———————————–

ஸ்ரீமந் நாராயணன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்

இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் நாராயணன் ஸமாதிக தரித்ரன் என்னுமிடத்தை
1.ந பரம் புண்டரீகாக்ஷாத் த்ருச்யதே புருஷர்ஷப :
2.பரம் ஹி புண்டரீகாக்ஷாத்பூதம் ந பவிஷ்யதி :
3.ந விஷ்ணோ : பரமோ தேவோ வித்யதே ந்ருபஸத்தம :
4.ந வாஸுதேவாத் பரம் அஸ்தி மங்களம் ந வாஸுதேவாத் பரம் அஸ்தி பாவநம்

ந வாஸுதேவாத் பரம் அஸ்தி தைவதம் ந வாஸுதேவாத் ப்ரணிபத்ய ஸீததி

5.த்ரைலோக்யே தாத்ருசா : கச்சித் ந ஜாதோ ந ஜநிஷ்யதே

6.ந தைவம் கேசவாத்பரம்

7.ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணுர் ப்ரஹ்மமயோ மஹாந்
ஈச்வரம் தம் விஜாநீம : ஸ பிதா ஸ ப்ரஜாபதி :–இத்யாதிகளாலே பலபடியும் சொன்னார்கள்

15.வ்யாக்யானம்
———————-

இப்படியாக எல்லா விதங்களிலும் தனக்கு ஒப்பாகவும் ,தனக்கு
மேலாகவும் யாருமே இல்லாதவனாகவும் நாராயணன் இருக்கிறான்
என்பதை இப்போது ப்ரமாணங்களில் பார்க்கலாம்

மஹாபாரதம்

1.ந பரம் புண்டரீகாக்ஷாத் த்ருச்யதே புருஷர்ஷப :

புருஷச்ரேஷ்டனே ! செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானைக் காட்டிலும் உயர்ந்தவன் எவருமில்லை

மஹாபாரதம்
2.பரம் ஹி புண்டரீகாக்ஷாத்பூதம் ந பவிஷ்யதி :

செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானைக் காட்டிலும்
உயர்ந்தவர்கள் இல்லை; இனியும் உண்டாகப் போவதில்லை.
3.ந விஷ்ணோ : பரமோ தேவோ வித்யதே ந்ருபஸத்தம :

அரசர்களில் ச்ரேஷ்டனே ! காட்டிலும் உயர்ந்த தேவர் எவருமில்லை

4.ந வாஸுதேவாத் பரம் அஸ்தி மங்களம்

ந வாஸுதேவாத் பரம் அஸ்தி பாவநம்

ந வாஸுதேவாத் பரம் அஸ்தி தைவதம்

ந வாஸுதேவாத் ப்ரணிபத்ய ஸீததி

வாஸுதேவனை விடச் சிறந்த மங்களம் யாதுமில்லை ; வாஸுதேவனைக்
காட்டிலும் நமது பாபத்தை அழித்து தூய்மையாக்குபவர் யாருமில்லை;
வாஸுதேவனைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் யாருமில்லை
வாஸுதேவனைஅடைந்து ஒருவரும் வருத்தமடைகிறதில்லை

5.த்ரைலோக்யே தாத்ருசா : கச்சித் ந ஜாதோ ந ஜநிஷ்யதே

மூன்று உலகங்களிலும் பகவானுக்கு நிகராக யாரும் இல்லை ;-இனியும் உண்டாகப் போவதில்லை.

ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணம்
6.ந தைவம் கேசவாத்பரம்

கேசவனை விட உயர்ந்த தெய்வம் வேறு எதுவும் இல்லை

மஹாபாரதம்

7.ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணுர் ப்ரஹ்மமயோ மஹாந்
ஈச்வரம் தம் விஜாநீம : ஸ பிதா ஸ ப்ரஜாபதி :

அனைத்து உயிர்களுக்கும் அரசனைப் போன்றுள்ள ப்ரஹ்மாவுக்கும்
அரசனாக விஷ்ணு இருக்கிறான். அவனே ப்ரஹ்மம்; அவனே மிகவும்
உயர்ந்தவன்;ஆதலால், நாம் அவனை ஈச்வரன் என்று அறிகிறோம்;
அவனே அனைத்துக்கும் தந்தை;அவனே ப்ரஜாபதி–அனைத்தையும் படைப்பவன் அவனே.

16.அதிகாரத்திலிருந்து
———————————–
பகவானுக்கும் பிற தேவதைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்

கருவிலே திருவுடையார்களாய் ஜாயமான தசையிலே ராஜஸ் தம :
ப்ரசம ஹேதுவான மதுஸுதநனுடைய கடாக்ஷமுடையவர்கள்
முமுக்ஷுக்களாவார்களென்னுமிடமும் , ப்ரஹ்மருத்ர த்ருஷ்டரானவர்கள்
ரஜஸ்தம : பரதந்த்ரராவார்களென்னுமிடமும்
ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேந் மதுஸுதந :
ஸாத்த்விகஸ்ஸது விஜ்ஞ்ஏயஸ்ஸ வை மோக்ஷர்த்தசிந்தக :
பச்யத்யேநம் ஜாயமானம் ப்ரஹ்மா ருத்ர :அதவா புந :
ரஜஸா தமஸா ச அஸ்ய மானஸம் ஸமபிப்லுதம் -என்று விபஜிக்கப்பட்டது

இவர்கள் முமுக்ஷுக்களுக்கு அநுபாஸ்யரென்னுமிடமும் ,இவர்களுக்குக்
காரண பூதனான ஸர்வேச்வரனே இவர்களுக்கும் மற்றுமுள்ள
முமுக்ஷுக்களுக்கும் உபாஸ்யரென்னுமிடமும்
ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்
விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சித் அஸ்தி பராயணம்–என்றும்
ப்ரஹ்மாணாம் சிதிகண்டம் ச யாச்சாந்யா தேவதாஸ்ஸ்ம்ருதா :
ப்ரதிபுத்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிதிதம் பலம்–என்றும்
ஹரிரேக : ஸதா த்யேயோ பவத்பி : ஸத்த்வ ஸம்ஸ்திதை :
உபாஸ்ய : அயம் ஸதா விப்ரா உபாய : அஸ்மி ஹரே : ஸ்ம்ருதௌ–என்றும் சொல்லப்பட்டது

இத்தாலே இவர்களை மோக்ஷோபகாரகராகச் சொன்னவிடங்களும்
ஆசார்யாதிகளைப் போலே ஞானாதிஹேதுக்களாகையாலே என்றும் நிர்ணிதம் .

இவ்வர்த்தம்
ஸுர்யஸ்யைவ து யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந ருத்ர பக்த : ப்ரஜாயதே
சங்கரஸ்ய து யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந விஷ்ணு பக்த : ப்ரஜாயதே
வாசுதேவஸ்ய யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந வாஸுதேவ ப்ரலீயதே–என்கிற இடத்திலும் விவ்க்ஷிதம் .

இப்படி ஸூர்யபக்தாயாதிகள் பரஸ்பரயா பகவத்பக்யாதிகளிலே
மூட்டுவதும் ,பராவர தத்த்வங்களிலே ஏக்யபுத்தியும் ,வ்யத்யயபுத்தியும்
ஸமத்வபுத்தியும் மற்றும் இப்புடைகளிலே வரும் மதிமயக்கங்களும்
ஆஸுரஸ்வபாவத்தாலே ஒரு விஷயத்தில் ப்ரத்வேஷாதிகளுமின்றிக்கே
ஸுர்யாதிகளைப் பற்றுமவர்களுக்கே என்னுமிடத்தை
யே து ஸாமாந்ய பாவேந மந்யந்தே புருஷோத்தமம்
தே வை பாஷாண்டிதோ ஜ்ஞ்ஏயா : ஸர்வகர்ம பஹிஷ்க்ருதா :–இத்யாதிகளிலே கண்டுகொள்வது

இப்படி ஞானாதிகளில் மாறாட்டம் உடையார்க்கு தேவதாந்தரபக்தி
உண்டேயாகிலும் பகவந் நிக்ரஹத்தாலே ப்ரத்யவாயமே பலிக்கும். ஆகையால்,
த்வம் ஹி ருத்ர மஹாபாஹோ மோஹ சாஸ்த்ராணி காரய
தர்சயித்வா அல்பமாயாஸம் பலம் சித்ரம் ப்ரதர்சய
என்கிறபடியே மோஹனஸாஸ்த்ரங்களிலே த்ருஷ்டபல ஸித்தியை
உண்டாக்கினதுவும் அவற்றையிட்டு மோஹிப்பித்து நரகத்திலே விழவிடுகைக்காகவத்தனை

ஸத்யஸங்கல்பனான பகவான் , ஒருவனை நிக்ராஹவனாக்கக் கோலினால்
ப்ரஹ்மா ஸ்வயம்பூச்சதுராநநோ வா ருத்ராஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோ
வா இந்த்ரோ மஹேந்த்ர : ஸுரநாயகோ வா த்ராதும் ந ஸக்தா யுதி ராமவத்யம்-என்கிறபடியே
தேவதாந்தரங்கள் ரக்ஷிக்க சக்தரல்லர்கள் . ஸர்வதேவதைகளும்
ஸுக்ரீவமஹாராஜாதிகளைப்போலே தனக்கு அந்தரங்கபூதராயிருப்பாரும்
தன்னையடைந்தானொருவனை நலிய நினைத்தால் ஸக்ருதேவ ப்ரபந்நாய-என்கிறபடியே
ஸத்யப்ரதிஜ்ஞநான தன் வ்ரதம் குலையாமைக்காக ராவணாதிகளைப்போலே
துஷ்ப்ரக்ருதிகளாய் நிராகரிக்க வேண்டுவாரை நிராகரித்தும் ,ஸ்ரீவானர
வீரர்களைப்போலே ஸத்ப்ரவ்ருத்திகளாய் அநுகூலிப்பிக்க வேண்டுவாரை
அநுகூலிப்பித்தும் ஸர்வேச்வரன் ரக்ஷிக்கும் .

தேவதாந்தரங்கள் பக்கல்
காங்க்ஷந்த : கர்மணாம் ஸித்தம் யஜந்த இஹ தேவதா :
க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா-என்கிறபடியே
விஷமது துல்யங்களான க்ஷுத்ரபலன்கள் கடுக ஸித்திக்கும் .
அவை தாமும்
லபதே ச தத : காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்
ஏஷ மாதா பிதா சாபி யுஷ்மாகம் ச பிதாமஹ :
மயா அநுசிஷ்டோ பவிதா ஸர்வம்பூத வரப்ரத :
அஸ்ய சைவாநுஜோ ருத்ரோ லலாடாத்ய :ஸமுத்தித :
ப்ரஹ்மானுசிஷ்டோ பவிதா ஸர்வஸத்த்வ வரப்ரத :-இத்யாதிகளிற்படியே பகவத்தீனங்கள் .
யஸ்மாத் பரிமிதம் பலம் ஸாத்விகேஷு து கல்பேஷு
மஹாத்ம்யமாதிதம் ஹரே : தேஷ்வேவ யோக ஸம்ஹித்தா
கமிஷ்யந்தி பராம் கதிம்–என்கையாலே அவர்கள் பக்கல் மோக்ஷம் விளம்பித்தும் கிடையாது

ஸர்வேச்வரன் பக்கல் யுககோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ :
இத்யாதிகளிற்படியே அதிசயிதமான ஐச்வர்யாதிகளும் வரும்.
பின்பு விடாய்த்தீரக் கங்காஸ்நானம் பண்ணப் பாபம் போமாப்போலே
விஷயஸ்வபாவத்தாலே ஆனுஷங்கிககமாகப் பாபக்ஷயம் பிறந்து
ரஜஸ் தமஸ்ஸுக்கள் தலைசாய்ந்து ஸத்த்வோந்மேஷமுண்டாய் ஜநக
அம்பரீஷ கேகயாதிகளுக்குப் போலே க்ரமேண மோக்ஷபர்யந்தமாய் விடும்.
மோக்ஷோபாய நிஷ்டனாம்போது

பஹுனாம் ஜன்மநாமந்தே ஞானவாத் மாம் ப்ரபத்யதே |

யே ஜந்மகோடிபி : ஸித்தா :தேஷாமந்தே அத்ர ஸம்ஸ்திதி :

ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ த்யான ஸமாதிபி :
நரணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி : ப்ரஜாயதே-என்கிறபடியே விளம்பமுண்டு.

மோக்ஷருசி பிறந்து வல்லதோருபாயத்திலே மூண்டால்
தேஷாமஹம் ஸமுத்தர்த்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்
பவாமி ந சிராத் பார்த்த மய்யாவேசித சேதஸாம்-என்கிறபடியே மோக்ஷஸித்திக்கு விளம்பமில்லை

ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுக்கு தான் கோலினதேயளவு , வேறு விளம்பா
விளம்பங்களுக்குக் குறையில்லை . இந்நியமங்களெல்லாம்
ஸ்வாதந்தர்யமைச்வரமபர்யநுயோஜ்யமாஹு : என்கிற நிரங்குச
ஸ்வச்சந்ததையாலே ஸித்தங்களென்று ப்ரமாண பரதந்த்ரருக்கு ஸித்தம் .

இவ்வர்த்தங்கள் இப்படித் தெளியாதார்க்கே தேவதாந்தரங்கள்
ஸேவ்யங்களென்னுமிடம் ப்ரதிபுத்தவர்ஜம் ஸேவ்யந்து என்று வ்யவஸ்தை பண்ணப்பட்டது .

இத்தேவதாந்தரங்களை பகவச் சரீரமென்று அறியாதே பற்றினார்க்குச்
சார்வாகனாயிருப்பான் ஒரு ஸேவகன் ராஜாவினுடம்பிலே
சந்தனாதிகளைப் ப்ரயோகிக்க ராஜ சரீரத்தில் ஆத்மாப்ரீதனமாப்போலே
வஸ்து வ்ருத்தியில் ஸர்வேச்வரனே ஆராத்யனானாலும் ,
யே அப்யந்யதேவதாபக்தா : யஜந்தே ச்ரத்தயா அந்விதா :
தே அபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம்-என்கிறபடியே சாஸ்த்ரார்த்த வைகல்யமுண்டானபடியாலே அவற்றிற்
சொன்ன பலம் விகலமாம் .

பகவச்சரீரங்களென்றறிந்து க்ஷுத்ர
பலங்களைக் கடுகப்பெறவேணுமென்கிற ராகவிசேஷத்தாலே
அவர்களை உபாஸிப்பார்க்கு அவ்வோ பலங்கள் பூர்ணங்களாம் .

இப்படி அறிந்தால் பகவான் தன்னையே ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்த்தி
என்கிறபடியே பலாந்தரங்களுக்காகவும் பற்றினால் அந்த பலங்கள்
அதிசயிதங்களாம் . அநந்யப்ரயோஜனராய்ப் பற்றினார்க்கும்
சரீராரோக்யமர்த்தாம்ச்ச போகாம் ச்சைவ ஆநுஷங்கிகாந் ததாதி
த்யாயினாம் நித்யம் அபவர்க்கப்ரதோ ஹரி :
என்கிறபடியே பலாந்தரங்கள் ஆநுஷங்கிகமாக வரும்.
இவ்வர்த்தத்தை ஆநுஷங்க ஸித்தைச்வர்யரான ஸ்ரீ குலசேகரப்
பெருமாளும்
நின்னையே தான் வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம் போல்
என்று அருளிச் செய்தார்.
அபிலஷித துராப யே புரா காமயோகா ஜலதிமிவ ஜலெளதாஸ்தே
விசாந்தி ஸ்வயம் ந :
என்று ஈசாண்டாலும் தாமருளிச் செய்தஸ்தோத்ரத்திலே நிபந்தித்தார் .
இது வித்யாவிசேஷ ராகவிசேஷாதிநியதம் .

16.
வ்யாக்யானம்
————————–

மதுஸூதனனின் கடாக்ஷமானது , ராஜஸ தாமஸ குணங்களை அறுத்துவிடும் .
பாக்யவான் , தாயின் கர்ப்பவாஸத்திலேயே மதுஸூதனனின் கடாக்ஷத்தைப்
பெறுகிறான். –இதுவே ஜாயமான கடாக்ஷம் . இவன் முமுக்ஷுவாகவே இருப்பான்.
பிறக்கிறபோது ப்ரஹ்மன் , ருத்ரன் பார்வையைப் பெற்றவர்கள் ராஜஸ தாமஸ
குணம் உள்ளவர்களாக இருப்பர் .

மஹாபாரதம் சொல்கிறது

ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேந் மதுஸுதந :
ஸாத்த்விகஸ்ஸது விஜ்ஞ்ஏயஸ்ஸ வை மோக்ஷர்த்தசிந்தக :
பச்யத்யேநம் ஜாயமானம் ப்ரஹ்மா ருத்ர :அதவா புந :
ரஜஸா தமஸா ச அஸ்ய மானஸம் ஸமபிப்லுதம் .

ஒருவன் பிறக்கும்போதே மதுஸூதனன் கடாக்ஷித்தால் அவன் ஸத்வகுணத்துடன்
மோக்ஷத்தைப் பற்றியே எண்ணியபடி இருப்பான். ஆனால்,ப்ரம்மனோ,
ருத்ரனோ பார்த்தால் ராஜஸ, தாமஸ குணங்கள் மேலோங்கி இருக்கும்.

முமுக்ஷுக்கள் –மோக்ஷத்தில் ஆர்வமுடையவர்கள்—ப்ரம்மன் ,ருத்ரன் போன்றோரை
வழிபட அவச்யமில்லை.இவர்களுக்கு எல்லாம் காரணமான நாராயணனையே
இவர்களும் முமுக்ஷுக்களும் உபாஸிக்கவேண்டும் என்பது ப்ரமாணங்களில்
காணலாம்

விஷ்ணுதர்மம்

ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்
விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சித் அஸ்தி பராயணம்

ஸம்ஸாரக் கடலில் மூழ்கி உலக விஷயங்களில் அகப்பட்டுள்ள மனம்
படைத்தவர்களுக்கு இந்தக் கடலிலிருந்து கரையேற்றும் ஓடம் விஷ்ணுவைத்
தவிர வேறொன்றில்லை

மஹாபாரதம்

ப்ரஹ்மாணாம் சிதிகண்டம் ச யாச்சாந்யா தேவதாஸ்ஸ்ம்ருதா :
ப்ரதிபுத்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிதிதம் பலம்

நல்லறிவுள்ள முமுக்ஷுக்கள் , ப்ரம்மனையும் சிவனையும் மற்ற தேவர்களையும்
வணங்குவதில்லை; காரணம் ,இவர்கள் அளிக்கும் பலன் மிக அற்பமானதாகும்

ஹரிவம்ஸம்

ஹரிரேக : ஸதா த்யேயோ பவத்பி : ஸத்த்வ ஸம்ஸ்திதை :

சிவன் –சொல்வது-
ஸத்வ குணம் உள்ள அந்தணர்களே ! உங்களால் எப்போதும் த்யானிக்கப்பட
வேண்டியவன், ஸ்ரீ ஹரி ஒருவனே

ஹரிவம்ஸம்

உபாஸ்ய : அயம் ஸதா விப்ரா உபாய : அஸ்மி ஹரே : ஸ்ம்ருதௌ

சிவன் மேலும் சொல்வது —

ஸ்ரீ ஹரி ஒருவனே உபாஸிக்கத்தக்கவன்;அவனைத் த்யானம் செய்வதற்கு
ஏற்ற வழிகாட்டியாக நான் இருக்கிறேன்

ஒரு சில இடங்களில் ப்ரம்மன் ,சிவன் போன்றவர்கள் மோக்ஷத்துக்கான
உபாயங்கள் என்பதைப்போல சொல்லப்பட்டிருந்தாலும், அவர்கள்
ஆசார்யனைப் போன்று மோக்ஷத்துக்கான ஜ்ஞானத்தை மட்டுமே
அளிக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.
இதனை ,இந்த ச்லோகம் சொல்கிறது–

ஸுர்யஸ்யைவ து யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந ருத்ர பக்த : ப்ரஜாயதே
சங்கரஸ்ய து யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந விஷ்ணு பக்த : ப்ரஜாயதே
வாசுதேவஸ்ய யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந வாஸுதேவ ப்ரலீயதே

ஒருவன் , ஏழு ஜன்மங்களில் ஸூர்யனிடம் பக்தி செலுத்தினால்,அவன்
ஸூர்யனின் அருளால் ருத்ரனின் பக்தனாகிறான். இவனே ,ஏழு பிறவிகளில்
ருத்ர பக்தனாக நீடித்தால், ருத்ரனின் க்ருபையால் , விஷ்ணுபக்தனாகிறான்.
இப்படி இவனே ஏழு ஜென்மங்களில் விஷ்ணு பக்தனாக இருந்தால்,
வாஸுதேவனின் அருளால் அவனையே அடைகிறான்.

இங்ஙனம் ஸூர்யனிடம் பக்தி முதலியவை ,பகவானை அடைய உதவும்
என்றாலும் இவனுக்கு பகவானின் மேன்மையைப் பற்றிய சந்தேகமோ
பகவானின் தாஸர்களான மற்ற ஜீவாத்மாக்களைப் பற்றிய சந்தேகமோ
இருக்கக்கூடாது. சந்தேகம் எதுவும் இல்லாமல் அவ்வாறு இருந்தாலே,
அவனது பக்தி வாஸுதேவனிடம் இட்டுச் செல்லும்.
சந்தேகங்கள் என்றால் —
பகவானும் இவர்களும் ஒன்றே ;ஜீவாத்மாவே பகவான்;இவையாவும்,
பகவானுக்கு நிகரான மேன்மை உடையவை;இவர்களிடம் அசுரகுணம்
கிடையாது —போன்றவையாகும்
இதைச் சொல்லும் ச்லோகம்

யே து ஸாமாந்ய பாவேந மந்யந்தே புருஷோத்தமம்
தே வை பாஷாண்டிதோ ஜ்ஞ்ஏயா : ஸர்வகர்ம பஹிஷ்க்ருதா :

புருஷோத்தமனாகிய எம்பெருமானும் மற்ற தேவதைகளும் ஒன்றே என
நினைப்பவர்கள் –பாஷாண்டிகள் –வேஷதாரிகள் என்று உணர வேண்டும்.
அவர்களுக்கு எவ்விதமான கர்மம் இயற்றும் அதிகாரமும் இல்லை என்பதை
அறியவேண்டும்

இப்படி உள்ளவர்கள் ,மற்ற தேவதைகளிடம் அறிவு மயக்கத்தால் ,
பக்திசெலுத்தினால் , பகவானால் தண்டிக்கப்படுவர்; பாவம் செய்தவர்களாவர்
வராஹ புராணம் இப்படிச் சொல்கிறது —–

த்வம் ஹி ருத்ர மஹாபாஹோ மோஹ சாஸ்த்ராணி காரய
தர்சயித்வா அல்பமாயாஸம் பலம் சித்ரம் ப்ரதர்சய

நீண்ட கரங்களுடைய ருத்ரனே !நீ , ஜனங்களுக்கு மோஹமுண்டாகும்படி
மக்கள் மயங்கும்படியான சாஸ்த்ரங்களை இயற்றுவாயாக ! அவற்றில் உள்ள
கொஞ்ச ச்ரமத்தை அனுபவித்து,சீக்ரமாகப் பலனடையலாம் என்று காண்பி.

இவைபோன்றவை, மனிதர்களை மயக்கி நரகத்தில் விழவைக்கும் என்பதை
அறியவேண்டும்.

பகவான் ஸத்யஸங்கல்பன் அவன் ஒருவனைத் தண்டிக்கத் தீர்மானித்துவிடில்
அந்த மனிதனை,எந்தத் தேவர்களாலும் காக்க இயலாது.

ஸ்ரீமத் ராமாயணம் –ஸுந்தர காண்டச் ச்லோகம் சொல்கிறது

ப்ரஹ்மா ஸ்வயம்பூச்சதுராநநோ வா ருத்ராஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோ
வா இந்த்ரோ மஹேந்த்ர : ஸுரநாயகோ வா த்ராதும் ந ஸக்தா யுதி ராமவத்யம்

யுத்தத்தில் ராமனால் ஒருவன் கொல்ல உத்தேசிக்கப்பட்டால் , அவனை,
நான்முகனான ப்ரஹ்மாவாலும் காப்பாற்றமுடியாது.முக்கண்ணனாய்
மூன்று பட்டணங்களை நாசம்செய்த ருத்ரனாலும் காப்பாற்றமுடியாது.
தேவர்களின் அதிபதியான இந்த்ரனாலும் ரக்ஷிக்க முடியாது.

ஆனால், ஒருவன் பகவானிடம் சரணம் என்று வந்துவிடில் ,அந்த மனிதனை
எல்லாத் தேவர்களும் , வானர அரசனான ஸுக்ரீவன்போன்ற நெருங்கிய நண்பரும்
எதிர்த்தாலும், பகவான் நிச்சயம் ரக்ஷிப்பான்

ஸ்ரீமத் ராமாயணம் யுத்தகாண்டத்தில் ” ஸக்ருதேவ ப்ரபந்நாய ——”
என்கிறபடியே ஒரு தடவை சரணாகதி செய்தாலும் –என்கிற சொற்களுக்கு
ஏற்ப ஸத்யத்தைக் காக்கவேண்டும்என்கிற உறுதி குலையாமல்
இருக்கவேண்டும் என்பதற்காக சரணம் என்றவரைக் காத்தே தீருவான்.
ராவணன் போன்று அழிக்கப்படவேண்டியவர்களை அழித்தும் , வானரர்கள்
போன்றவர்களிடம் ஹிதமாகப் பேசியும் விபீஷணனைக் காத்தான் அல்லவா !

மற்ற தேவதைகளைப் பூஜிக்கும்போது அற்பமான பலன்கள்விரைவில் கிடைத்துவிடும்;
ஆனால் அவை இனிப்பு மேலே தடவிய விஷம் போன்றவை.
ஸ்ரீமத் பகவத் கீதை —
காங்க்ஷந்த : கர்மணாம் ஸித்தம் யஜந்த இஹ தேவதா : |
க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா ||

மனிதர்கள் பலன் வேண்டுமென்று கோரி தேவதைகளை ஆசையுடன் கர்மாக்களைச்
செய்து பூஜிக்கிறார்கள் . இந்த உலகத்தில் ,இப்படிப்பட்ட தேவதைகளை
பலன் ஸித்திக்க வேண்டுமென்று கர்மாக்களை செய்து பூஜித்தால்
பலன் விரைவில் கிடைக்கிறது.

அந்தத் தேவதைகள் எல்லாமும் , மனிதர்களுக்குப் பலன் அளிக்க , பகவானையே
அண்டியிருக்கின்றன
இதை பார்க்கலாம்
ஸ்ரீமத் பகவத் கீதை ( 7–22 )
ஸதயா ஸ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராதந மீஹதே |
லபதே ச தத : காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந் ||

அந்த மனிதன் ச்ரத்தையுடன் அந்தத் தேவதையைப் பூஜிக்கிறான். நானே,அந்தத்
தேவதை மூலமாகப் பலனைக் கொடுக்கிறேன். பலனை என்னிடமிருந்து பெற்று
அந்தத் தேவதை அவனுக்குக் கொடுக்கிறது.

மஹாபாரதம் —
ஏஷ மாதா பிதா சாபி யுஷ்மாகம் ச பிதாமஹ :
மயா அநுசிஷ்டோ பவிதா ஸர்வம்பூத வரப்ரத :
அஸ்ய சைவாநுஜோ ருத்ரோ லலாடாத்ய :ஸமுத்தித :
ப்ரஹ்மானுசிஷ்டோ பவிதா ஸர்வஸத்த்வ வரப்ரத :

பகவான் தேவர்களிடம் சொன்னது —
இந்த நான்முகன் ,உங்களுக்குத் தாயாகவும் தந்தையாகவும்,பிதாமகனாகவும்
உள்ளான்;எனது கட்டளைக்கு ஏற்ப, எல்லா வரங்களையும் உங்களுக்கு அளிப்பான் ;
எனது நெற்றியிலிருந்து தோன்றியவனும் ப்ரம்மனுக்குப் பின்னால்
வந்தவனுமான சிவன்,ப்ரம்மனின் ஆணைக்கு ஏற்ப அனைவருக்கும்
வரங்களை அளிப்பான்.

மஹாபாரதம் —
யஸ்மாத் பரிமிதம் பலம் ——-
ப்ரம்மன் முதலானோர் அளிக்கும் பலன்கள் அற்பமானவை

மத்ஸ்ய புராணம்
ஸாத்விகேஷு து கல்பேஷு மஹாத்ம்யமாதிதம் ஹரே : தேஷ்வேவ யோக ஸம்ஹித்தா
கமிஷ்யந்தி பராம் கதிம் —

ஸத்வ குணம் மிகுந்த கல்பங்களில் பகவானுடைய பெருமை அதிகமென்று சொல்வர்.
அவைகளிலேயே மனதை நிறுத்தி சாஸ்த்ரவிஹிதமாக யோகம் செய்பவர்கள் மிக
உயர்ந்த கதியை அடைகின்றனர்.
இதன்மூலமாக எவ்வளவு காலம் ஆனாலும் மற்ற தேவதைகளால் மோக்ஷம்
அளிக்க இயலாது என்பது தெளிவாகிறது.

பகவானைப் பூஜித்தால் அளவற்ற ஐச்வர்யம் கிடைக்கும் என்பதை மஹாபாரதம் சொல்கிறது
யுககோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ :—-
ப்ரம்மன், ஆயிரம்கோடி யுகங்கள் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்து ப்ரம்ம பதவி
பெற்றான்.
அதன்பின்பாக, தனது தண்ணீர்த் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள கங்கையில்
இறங்கியவனின் பாபம் , மறைமுகமாகக் கழிவதைப்போல ,இவனது பாபங்களும்
கழிகின்றன .அவனது ராஜஸ தாமஸ குணங்கள் மெதுவாக மறைந்து ,ஸத்வ குணம்
வளர்ந்து அந்த மனிதன், ஜநகன் , அம்பரீஷன் , கேகயன் போன்றவர்கர்களைப்போல
மோக்ஷம் பெறுகிறான். ஆனால், இவ்விதமான மோக்ஷம் வர ,தாமதம் ஏற்படலாம்

ஸ்ரீமத் பகவத் கீதை ( 7–19 )

பஹுனாம் ஜன்மநாமந்தே ஞானவாந்மாம் ப்ரபத்யதே |
வாஸுதேவா ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப : ||

பலப் பலப் பிறவிகள் எடுத்து ,புண்யம் செய்து செய்து கடைசியில்
”ஸகலமும் வாஸுதேவனே ” என்கிற ஜ்ஞானத்தைப் பெற்று ,என்னையே
சரணம் அடைகிறான் .அத்தகையவன் கிடைத்தற்கு அரியவன்

பௌஷ்கர ஸம்ஹிதை

யே ஜந்மகோடிபி : ஸித்தா :தேஷாமந்தே அத்ர ஸம்ஸ்திதி :

பலகோடிப் பிறவிகளில் பகவானிடமிருந்து ஐச்வர்யம் போன்றவற்றைப்
பெற்றவர்களே பக்தி முதலியவற்றில் நிலைத்திருப்பர் .

பாஞ்சராத்ரம்

ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ த்யான ஸமாதிபி :
நரணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி : ப்ரஜாயதே

பல்லாயிரம் ஜன்மங்களில் செய்த தபஸ் ,த்யானம் , யோகம் ஆகியவற்றால்
தங்களின் பாபங்கள் யாவும் நீங்கப் பெற்றவர்களுக்கே ,க்ருஷ்ணனிடம்
பக்தி உண்டாகிறது.

ஆனால் மோக்ஷத்தில் மிகுந்த ருசி உண்டாகி சிறந்த உபாயத்தைக் கைக்கொள்ளும்போது
மோக்ஷம் உடனடியாகக் கிட்டுகிறது
கண்ணன் , ஸ்ரீமத் பகவத் கீதையில் ( 12–7 )
தேஷாமஹம் ஸமுத்தர்த்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்
பவாமி ந சிராத் பார்த்த மய்யாவே சித சேதஸாம்

என்னிடம் மனஸ்ஸைச் செலுத்தி, பக்தி செய்பவர்களை ஜனன ,மரணமாகிற
ஸம்ஸாரக் கடலிலிருந்து உடனே கரை சேர்க்கிறேன் —
என்கிறார்

இங்கு ஜநக,அம்பரீஷ கேகயாதிகளைச் சொல்ல வேணும் —

ஜநகன் —–சிறந்த கர்ம யோகி ;ராஜரிஷி;நிமி வம்சம் .பல யாகங்களைச்
செய்திருக்கிறார். ஆத்ம ஜ்ஞானம் நிரம்பியவர். மிதிலையை ஆண்ட போது ,
தினமும் வனத்துக்குச் சென்று யாஜ்ஞவல்க்ய மஹரிஷியிடம் வேதாந்தப்பாடம்
கற்றுக்கொண்டு வந்தார் . பலரிஷிகள் ,சிஷ்யர்கள் கூடவே கற்றனர் .
யாஜ்ஞவல்க்யர் , ஜநகர் வந்தபிறகுதான் பாடம் ஆரம்பிப்பார்.இது ,
சிஷ்யர்களுக்கு எரிச்சலாக இருந்தது.
ஒருநாள்—வேதாந்த பாடம் நடந்துகொண்டிருந்தது.ராஜதூதன் அந்தச்
சமயத்தில் பாடம் நடக்கும் இடத்துக்கு வந்து ”மிதிலா நகரமே தீப்பிடித்துப்
பற்றி யெறிகிறது என்று பதட்டத்துடன் கத்தினான்.
ஸந்யாஸிகள் ,சிஷ்யர்கள் உடனே அரக்கப்பரக்க எழுந்து ஓடினார்கள்.
தாங்கள் தங்கியிருக்கும் மடத்துக்கு ஓடினார்கள்.
ஆசார்யனிடம் எதுவும் சொல்லவில்லை. ஏன் இந்த அவசரம் தெரியுமா ?
பிக்ஷா பாத்ரம் , உலர்த்தியுள்ள வஸ்த்ரங்கள் இவையெல்லாம் தீயில் எரிந்து
சாம்பலாகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து ,அவைகளை எடுக்க ஓடினார்கள்.

ஜநகர் , துளிக்கூட அசையவில்லை. யாஜ்ஞவல்க்யருக்கு ஆச்சர்யம் ,.
”ஹே—–ராஜன்-ஆண்டிகள் தங்கள் உடைமை என்று நினைத்து சிலவற்றைப்
பாதுகாக்க ஓடுகிறார்கள். மிதிலா நகரமே உம்முடையது—நீ , ஏன்
ஓடவில்லை –? ” என்று கேட்டார் .
அதற்கு ஜநகர் ,
” ஹே–ஆச்சார்ய—என்னுடைய சொத்துக்கள் அழிவில்லாதது.இவ்வுலக சொத்துக்கள்
என்னுடையதல்ல.மிதிலை தீக்கிரையானாலும் என்னுடையது கொளுத்தப்படவில்லை.
ஆத்மாவை எரிக்கவோ வெட்டவோ, நனைக்கவோ ,உலர்த்தவோ முடியாது.
அனைத்தும் பகவானின் சொத்து. ..” என்கிறார்.திரும்பி வந்த துறவிகளிடம் ,
யாஜ்ஞவல்க்யர் , வேதாந்தபாடம் கேட்கும் உங்களுக்கு தத்வ ஜ்ஞானம்
வரவில்லையே—அரசனைப்போன்று உங்களால் இருக்கமுடியவிலையே —
அரசர் கர்மயோகி மாத்ரமல்ல , ப்ரஹ்மஜ்ஞானி –அதனால்தான் எனக்கு
அவரிடம் பரிவு. ” என்றாராம்.

அம்பரீஷன் —ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது

அம்பரீஷர்–உலகம் முழுவதற்கும் சக்ரவர்த்தி. அதே சமயத்தில்
பகவானிடமும் ,பாகவதர்களிடமும் அசஞ்சலமான பக்திகொண்டவர்.
பற்பல யஜ்ஞங்கள் செய்து பகவானை ஆராதித்தவர்.
க்ரு ஹம் , தாரம்,புத்ரன் ,பந்து,ராஜ்யம் இவைகளை ஒதுக்கி
பகவத் பக்தி கொண்டவர். ஏகாந்த பக்தி. பகவான் இந்த பக்தியைப்
பாராட்டி , ஸ்ரீ ஸுதர்சன சக்ரத்தை இவருக்குப் பாதுகாப்பாக
அளித்திருந்தார்.
ஒரு சமயம்.த்வாதசீ வ்ரதம். உபவாஸம் . உபவாஸம் முடிந்து
பாரணைக்குப் போகும்போது , துர்வாஸ மஹரிஷி வந்தார்.
அவரைப் பாரணைக்கு அம்பரீஷர் அழைத்தார். தீர்த்தமாடிவிட்டு,
வருகிறேன் என்று போன ரிஷி ,ரொம்ப நாழிகை ஆகியும் வரவில்லை.
பாரணை காலம் முடிவதற்குள் ஆசார்யன் அநுமதி பெற்று ,
தீர்த்தத்தை ஸ்வீகரித்துக்கொண்டார் . பாரணை செய்தமாதிரி
ஆகும்.துர்வாஸர் , இதைத் தெரிந்து கோபம் கொண்டு , அதிதி ஸத்காரம்
தெரியாத உன்னை , இந்தப் பேய் அழிக்கும் என்று ஜடாமுடியினின்று
ஒரு கேசத்தை எடுத்து அம்பரீஷன் பேரில் ஏவினார்.பேய் துரத்திற்று.
ஸுதர்சன சக்ரம் வெறுமனே இருப்பாரா— சக்ரத்தாழ்வார் ,
பேய் ரிஷி இருவரையும் துரத்தினார்.
துர்வாஸர் , ஸத்யலோகம் சென்றார்;ப்ரஹ்மா என்னால் உம்மைக்
காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிட்டார். கைலாஸம் சென்றார்.
ருத்ரனும் என்னால் காப்பாற்ற இயலாது என்று சொல்லிவிட்டார்.
நாங்களும் பகவானுக்கு உட்பட்டவர்கள். பகவானிடம் அடைக்கலம்
என்று சொல்லி அவரிடம் செல்லுங்கள் என்று சொன்னார்கள்.
ஸ்ரீ வைகுண்டம் சென்றார்.
பகவானிடம் ப்ரார்த்தித்தார்
பகவான், ”என்னைச் சரணம் என்று அடைந்த என் பக்தர்களுக்கு
நான் வசப்பட்டவன்;அம்பரீஷனிடமே சென்று மன்னிப்புக் கேளும் ”
என்றார்.துர்வாஸர் ,அம்பரீஷனை நமஸ்கரிக்க ,அம்பரீஷன்
ஸ்ரீ ஸுதர்சனரைப் ப்ரார்த்திக்க , துர்வாஸர் ஆபத்திலிருந்து
விடுபட்டார்.

கேகயன் –கேகய நாட்டு அரசன்.பெயர் யுதாஜித் .பரதனுக்கு அம்மான்.
கர்மயோகம் செய்து பரம பக்தராகி,மோக்ஷம் பெற்றார்.
————————————

ப்ரபத்தி செய்துகொண்டவன் , மோக்ஷத்தைத் தாமதிக்க நினைத்தாலோ
மோக்ஷம் வேண்டாம் என்று நினைத்தாலோ அல்லாமல் , மோக்ஷம்
கைகூடாமை என்பதில்லை.இவை ப்ரமாணங்களை ஏற்பவர்களால்
ஒப்புக்கொள்ளப்படும்.இவைபோன்றவை யாராலும் தடுக்க இயலாத
ஈச்வரனின் ஸங்கல்பத்தால் நடைபெறுகின்றன.
ஸ்ரீ வைகுண்டஸ்தவம் (55 ) இப்படிக் கூறுகிறது

ரூபப்ரகார பரிணாம க்ருத வ்யவஸ்த்தம்
விச்வம் விபர்யஸிதும் அந்யத் அஸத் ச கர்தும் |
க்ஷாம்யன் ஸ்வபாவநியமம் கிமுதீக்ஷஸே த்வம் ?
ஸ்வாதந்த்ர்யம் ஐச்வரம் அபர்யநு யோஜ்யமாஹு : ||

உரு மாறுவது,தன்மை மாறுவது என்ற வ்யவஸ்தைகளை உடைய
சேதநம், அசேதநம் எல்லாவற்றையும் மாற்றி அமைப்பதற்கும் வேறாகப்
படைப்பதற்கும் இல்லாமல் செய்யவும் தகுதி உள்ளவராக தேவரீர் ,
இது இது இந்த ஸ்வபாவத்தால் இப்படித்தான் ஆகும் என்கிற
வ்யவஸ்தையை ஏன் எதிர்பார்க்கிறீர் ? பகவானைச் சேர்ந்தவர்களை
அவர் விருப்பப்படி நடத்துவது என்பதை, ஏன் என்று கேட்கமுடியாது
என்று பெரியோர்களும் ,வேதங்களும் சொல்கின்றன.

கல் பெண்ணாவது ,கரிக்கட்டை குழந்தையாவது –இவை
ஸ்வபாவ நியமத்துக்கு மாறுபட்டு பகவானின் ஸ்வாதந்தர்யத்தில் நடந்தது.
பகவானின் ஸ்வாதந்தர்யம் =சிலரை ஸம்ஸார வாசனையே இல்லாமல்
நித்யராக்குவது.ஸம்ஸார பயங்களுக்கு அஞ்சி அடைக்கலம்
அடைந்தவர்களை முக்தர்களாக ஆக்குவது.சிலரை ஸம்ஸாரிகளாகவே
வைத்திருப்பது. பகவானின் ஈச்வரத்தன்மை சுதந்திரமானது.யாராலும்
கேள்வி கேட்க இயலாது.இப்படிப்பட்ட ஆழ்ந்த பொருளை அறியாதவர்களே
மற்ற தேவதைகளைப் பூஜிக்கின்றனர்.
தேவதைகளை ஆராதிப்பது—-ப்ரதி புத்தவர்ஜம் –விவேகம் இல்லாதவர்களாலே
மற்ற தேவதைகள் ஆராதிக்கப்படுகின்றனர்

ஒரு சிலர், மற்ற தேவதைகள் யாவும் பகவானுக்குச் சரீரம் என்பதை அறியாமல்
அந்தத் தேவதைகளைப் பூஜிப்பர் . இவர்கள், ஆத்மா என்று ஒன்றுமில்லை ,
உடல் மட்டுமே உண்மையானது என்று கருதுகிற அரச சேவகன் ,தன்னுடைய
அரசனுக்கு, சந்தனம் பூசுதல் போன்றவைகளைச் செய்யும்போது,
அரசனின் ஆத்மா மகிழ்கிறது என்று உணர்வதில்லை.மற்ற தேவதைகளைப்
பூஜிக்கும்போது, அந்தத் தேவதைகளைச் சரீரமாக உடைய பகவானே மகிழ்கிறான் .
ஆனால் இந்தத் தேவதைகள் மூலமாக அடையும் பலன்கள் மிகச் சொற்பமே.
அல்பமானவை;முழுமை இல்லாதவை.

ஸ்ரீமத் பகவத் கீதை ( 9–23 )

யே அப்யந்யதேவதாபக்தா : யஜந்தே ச்ரத்தயாந் விதா : |
தே அபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம் ||

அர்ஜுனா—-யார் யார் வேறு தேவதைகளிடம் பக்திகொண்டு பூஜிக்கிறார்களோ
அவர்களும் முறைதவறி , என்னையே பூஜிக்கிறார்கள்

ஆனாலும் அவர்கள் ஸாஸ்த்ர நெறிகளின்படி செய்யாதவர்கள் .
ஆனால், இப்படிப்பட்ட தேவதைகள் பகவானின் சரீரம் என்று உணர்ந்து
பலன்களை சீக்கிரம் பெறவேண்டும் என்று எண்ணி அத்தேவதைகளின்
பூஜையின் மூலம் பெறப்படும் பலன்கள் மிக உயர்ந்தவை மற்றும் முழுமையானவை

ஸ்ரீமத் பகவத் கீதை ( 7–16 )

சதுர்விதா பஜந்தேமாம் ஜநா : ஸுக்ருதிநோர்ஜூந |
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப ||

அர்ஜுனா —துயரம் உள்ளவன் ,பகவத் தத்வத்தை அறிய விழைபவன்
பொருளை விரும்புபவன் பகவத் தத்வ ஜ்ஞானம் உள்ளவன் –என்று
நான்கு வகையான மநுஷ்யர்கள் என்னையே துதிக்கிறார்கள்

வேறு பலன் எதையும் கோராமல் மோக்ஷத்தை மட்டுமே விரும்பி பகவானை
அடைபவர்களைக் குறித்து
விஷ்ணு தர்மம் சொல்கிறது—

சரீராரோக்யமர்த்தாம்ச்ச போகாம் ச்சைவ ஆநுஷங்கிகாந்
ததாதி த்யாயினாம் நித்யம் அபவர்க்கப்ரதோ ஹரி :

தன்னைத் த்யானித்தபடி இருப்பவர்களுக்கு ஸ்ரீ ஹரி ,அவர்கள் வேண்டும் மோக்ஷம்
மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான ஆரோக்யம் , செல்வம்,
போகம் யாவையும் அளிக்கிறான் .ஆக , இவர்களுக்கு,இத்தகைய நலன்கள்
அவர்கள் வேண்டாமையிலேயே கிட்டுகிறது.

இத்தகைய செல்வங்கள் கிடைக்கப் பெற்ற குலசேகர ஆழ்வார் ,
பெருமாள் திருமொழியில் ( 5—9 ) கூறுகிறார்.
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே , தான் வேண்டும் செல்வம்போல் , மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட்டம்மா ,
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே

ஸ்ரீ குலசேகரர் சேரநாட்டு மன்னர்.
பகவானைமட்டுமே வேண்டுகிறார்
நீ தான்வேண்டும், என்று வேண்டுகிறார் நீள் செல்வம் ==பட்டியலிடும்
செல்வம் வேண்டியதில்லை . அந்தச் செல்வங்கள், அப்போது உன்
கருணையால் ,தன்னைத்தானே வேண்டி அனைத்துச் செல்வங்களும்
தாங்களாகவே விரும்பி வந்து சேரும்.

ஈசாண்டன் —சொல்வது-

அபிலஷித துராப யே புரா காமயோகா
ஜலதிமிவ ஜலெளதாஸ்தே விசாந்தி ஸ்வயம் ந :

எந்தச் செல்வங்களெல்லாம் ,முன்பு நாம் விரும்பியபோது
கிடைக்காமல் இருந்தனவோ ,அவை யாவும் , நதிப் பெருக்கம்
தானாகவே கடலில் சென்று சேர்வதைப்போல ,இப்போது , நாம்
எவ்வித முயற்சியும் செய்யாமல் இருக்கும்போது ,நம்மை
அடைகின்றன.

ஆனால், ஒரு கேள்வி வரலாம் —
மோக்ஷம் மட்டுமே விரும்பியோர்க்கு ஏன் மற்ற செல்வங்கள் கிட்டுவதில்லை ?
இதற்கு காரணம், மோக்ஷம் மட்டுமே விரும்பியோர் செய்த , ஒருவகைத் ”த்யானம் ”
அல்லது பழைய ஜன்மங்களில் ஏற்பட்ட விருப்பம் ,அல்லது பின்பற்றிய
ஒருவகை வித்யை —

17. அதிகாரத்திலிருந்து
————————————
பகவானுக்கும் பிற தேவதைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்–
ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளில்

இப்படி ஸர்வேச்வரனுக்கும் ப்ரஹ்மருத்ராதிகளுக்கும் உண்டான விசேஷங்களை

எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவரல்லாதார் தாமுளரே என்றும்

நான்முகனை நாராயணன் படைத்தான் ,நான்முகனும் தான்முகமாய்ச்
சங்கரனைத்தான் படைத்தான் என்றும்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம் நாவிக்கமல
முதற்கிழங்கு என்றும் ,
தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமஞ்சேர்த்தி அவையே
சிவன் முடிமேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான்
பெருமை என்றும்,
வானவர் தம்மை ஆளுபவனும் நான்முகனும் சடை முடியண்ணலும்
செம்மையானவன் பாதபங்கயம் சிந்தித்தேத்தித் திரிவரே என்றும் ,
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே என்றும்
ஒற்றைவிடையனும் நான்முகனும் உன்னையறியாப் பெருமையோனே என்றும்,
எருத்துக் கொடியுடையானும் ,பிரமனும்,இந்திரனும் மற்றுமொருத்தரும்
இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை என்றும்
பலமுகங்களாலே அருளிச் செய்தார்கள்

17. வ்யாக்யானம்
——————————–

இப்படியாகப் ப்ரஹ்மா ருத்ரன் முதலானோர்க்கும் பகவானுக்கும் உள்ள
வேறுபாடுகளை, ஆழ்வார்கள்,அருளிச் செய்துள்ளதைப் பார்ப்போம்

பெரிய திருமொழி ( 11–6-2 )

நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம்
மல்லாண்ட தடக்கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து, அன்று
எல்லாரும் அறியாரோ ? எம்பெருமான் உண்டுமிழ்ந்த எச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே ?அவன் அருளே உலகாவது அறியீர்களே !

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் கூறுகிறார்
யுகப்பிரளயம் —எல்லாக் கடல்களும் கொந்தளித்து
நீள்விசும்பின் மீதோடி =ஆகாயத்தையும் தொட்டு அதன்மீது ஓடி,
நிமிர்ந்து நின்ற சமயம் —-பகவான் தன் தடக்கையால் அண்டபகிரண்டம்
எல்லாம் எடுத்து அதை வாயில்வைத்து உண்டு , பிறகு வயிற்றில் வைத்துக்
காத்து ,மறுபடியும் ஸ்ருஷ்டிக்கச் ஸங்கல்பிக்கும்போது ,வெளியே
உமிழ்கிறான். ஆக ,அண்டபகிரண்டம் எல்லாம் அவன் எச்சில்.
இப்படிச் செய்யும் அகடிதகடினா ஸாமர்த்யம் உள்ள தேவர் வேறு யார்
இருக்கிறார்கள் !ஒருவரும் இல்லை.இவ்வுலகங்கள் எல்லாம் அவன் அருள் —

நான்முகன் திருவந்தாதி ( 1 )

நான்முகனை நாராயணன் படைத்தான் , நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்—- யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை
சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து

பகவான் ,ப்ரஹ்மாவைப் படைத்தான்; ப்ரஹ்மா தன்னுடையதாகச் சங்கரனைப்
படைத்தான்.அடியேன் ,ஒருமுகமாக இந்த அந்தாதியில் இதைமேலிட்டு
அறிவிக்கிறேன் . ஆழ்ந்த இந்தப் பொருளைச் சிந்தாமல் தேர்ந்து எடுப்பீராக !

திருவாய்மொழி ( 10–10–3 )

கூவிக்கொள்ளாய் வந்து அந்தோ ! என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்
மேவித்தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம்
நாவிக்கமல முதற்கிழங்கே !உம்பரந்ததுவே

தங்கள் அதிகாரத்தில் விருப்பமுற்று ஆசையுடன் வணங்குகிற பிரமன், சிவன், இந்திரன்
முதலிய தேவர்களுக்கு எல்லாம், நாபியில் இருக்கும் தாமரைப் புஷ்பத்திற்கு
கிழங்கு போன்று உள்ள ஆதி காரணனே ! அதற்கும் மேலான பரமபதத்துக்கும்
கிழங்கு போன்றவனே !என் ஆத்மாவுக்குப் பிடிப்பான,பற்றிக்கொள்ளக் கொம்பாக ,
உன்னைத் தவிர வேறு எவரையும் அறிகிலேன் . எனக்குப் போக்யமான
கருமாணிக்கமே !நீயே வந்து உன் குரலாலே என்னை அழைத்துக் கொள்வாயாக

திருவாய்மொழி ( 2–8–6 )

தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூத்தாமம்
சேர்த்தி அவையே சிவன்முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே

தீர்த்தன் = பரிசுத்தமாக்குகிற கண்ணன்
த்ரிவிக்ரம அவதாரத்திலே உலகம் அனைத்தும் தனதாக்கிக்கொண்ட
செவ்விய திருவடியின் மேலே சேர்க்கப்பட்ட புஷ்பமாலைகள் ,
பிறகு தனக்குத் தர்சனம் அளித்த சிவனார் முடியின்மேல்
இருக்க அர்ஜுனன் கண்டு, மிகவும் திடமாகத் தெளிந்து, சந்தேகம் நீங்கி,
திருத்துழாய் மாலையை அணிந்த பகவானின் ஸர்வேச்வரத் தன்மையை
வேறுபடுத்திப் பேசுவதற்கு வழி இல்லாமல், எந்த விவாதத்துக்கும்
இடமில்லாமல் உணர்ந்தான்.

பிரபந்த ரக்ஷையிலிருந்து —

தீர்த்தன் = பாகவதர்கள் உள்ளத்திலே குடி கொண்டிருக்கிறான்.
பகவானை எப்போதும் தங்களுடைய ஹ்ருதயத்தில் பூஜிக்கிற
பாகவதர்கள் , கங்கை நதிகளில் ஸ்நானம் செய்கிறார்கள்.
கங்கைநீர் , பகவானும் ஸ்நானம் செய்வதாலே தீர்த்தமாகிறது.
அவை, தீர்த்தங்கள் ; பகவான், தீர்த்தன் .
”தீர்த்தா நா மபி தீர்த்தோஸௌ —-”

தீர்த்தீ குர்வந்தி தீர்த்தாநி ஸ்வாந் தஸ்தேன கதாப்ருதா———
என்று தீர்த்தங்கள் , தீர்த்தன் இவைகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது .

திருவாய்மொழி ( 3–6–4 )

வைம்மின் நும்மனத்தென்றி யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என் ? அதுநிற்க நாடொறும், வானவர்
தம்மை ஆளும் அவனும் நான்முகனும் , சடைமுடி அண்ணலும்
செம்மையால், அவன் பாதபங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே

உங்கள் மனத்தில் ஸ்திரமாக வையுங்கள் ! என்னால் விரித்து
உரைக்கப்படும் கண்ணனின் ஸௌலப்ய சௌசீல்யாதிகளை ,
என்னைப்போன்ற அநந்ய பக்தர்கள் உரைப்பது எதுவானாலும் உங்களுக்கு அவை, போதாது.
ஆகையால்,அவை அப்படியே இருக்க,ஒவ்வொரு நாளும்
தேவர்கள் யாவரையும் ஆளும் இந்திரனும் ,பிரம்மனும் ,பசுபதியும்
அநந்ய பக்தர்களைப்போல அந்தக் கண்ணனின் –மாயனின்
திருவடித் தாமரைகளைத் த்யானித்து ,ஸ்தோத்தரித்து , நர்த்தித்து ஓடி ஆடுவர் .

திருவாய்மொழி ( 4–10–4 )
பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே ,கபாலம் நல் மோக்கத்தில் கண்டுகொண்மின்
தேசமாமதிள் சூழ்ந்த அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன்பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலங்கியர்க்கே

அவரவர்களால் ஈச்வரன் என்று பேசப்படுகிற பரமசிவனுக்கும், அவனுக்கும்
மேலான ப்ரம்மனுக்கும் ,அவர்கட்குக் கீழான தேவர்கட்கும் நாதனாக
இருப்பவன் அகார வாச்யனான நாராயணனே .இதை, சிவன் கபாலத்திலிருந்து
விடுபட்டதன் மூலமாக நன்கு தெரிந்துகொள்ளுங்கள்.
ஒளியும் பெருமையும் உள்ள மதிள்களால் சூழப்பட்ட அழகே உருவான
திருக்குருகூர் என்கிற திவ்யதேசத்தில் எழுந்தருளியுள்ள ஸர்வேச்வரனிடம்
குறைகளைக் கண்டு கோஷிப்பது,அநுமானம் செய்து வாதிடுபவர்களுக்கு
என்ன பயன் அளிக்கும் ? ( ஒரு பயனும் அளிக்காது )

பெரியாழ்வார் திருமொழி ( 4–10–4 )

ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னையறியாப் பெருமையோனே !
முற்ற உலகெல்லாம் நீயேயாகி மூன்றெழுத்தாய முதல்வனேயோ !
அற்றது வாணாள் இவற்கென்றெண்ணி அஞ்ச நமன் தமர் பற்றல் உற்ற
அற்றைக்கு நீயென்னைக் காக்கவேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே !

அரங்கத்து அரவணையில் பள்ளிகொண்டவனே !காளை வாகனத்துச் சிவனும்,
பிரம்மனும் அறியாப் பெருமை உடையோனே !எல்லா உலகங்களுக்கும்
நீயே ஆகி, மூன்றெழுத்துக்களால் ஓங்காரமானவனே !எமபட்டார்கள்,
இவனுக்கு ஆயுள் முடிந்தது என்று நினைத்துப் பிடிக்கும்போது அன்று நீ
என்னைக் காத்தருளவேண்டும்.

பெரியாழ்வார் திருமொழி ( 5–3–6 )

எருத்துக்கொடியுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை
மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா ! மறுபிறவி தவிரத்
திருத்தி, உன்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய் !

காளைமாட்டைத் தன் கொடியாகக் கொண்ட சிவனும், பிரம்மனும், இந்திரனும்,
ஆகிய யாரும் ஸம்ஸாரம் என்கிற பிறவிப் பிணிக்கு மருந்து அறிந்தவர் அல்லர்

18.அதிகாரத்திலிருந்து
—————————————–
நாராயணனே உயர்ந்த தெய்வம் என்பது ரஹஸ்யத்ரயத்தில் உள்ள இடங்கள்

இப்பரதேவதா பாரமார்த்தம் திருமந்திரத்தில் ப்ரதமாக்ஷரத்திலும் ,
நாராயண சப்தத்திலும் , த்வயத்தில் ஸவிசேஷணங்களான நாராயண
சப்தங்களிலும் ,சரம ச்லோகத்தில் ”மாம் , அஹம் , ” என்கிற சப்தங்களிலும் அநுஸந்தேயம்

18.வ்யாக்யானம்

நாராயணனே உயர்ந்த தெய்வம் என்கிற விஷயமானது,திருமந்திரத்தில்
உள்ள முதல் எழுத்தான ”அ ‘ என்பதிலும்,( ஓம் என்பதில் உள்ள ”அ ” எழுத்து )
நாராயண என்பதிலும் காணலாம்.இதைத் ”த்வய ” மந்திரத்தில் உள்ள
”ஸ்ரீ ” என்பதுடன் கூடிய நாராயண சப்தத்தில் காணலாம். சரம ச்லோகத்தில் ”நான்” என்கிற பதத்தில் காணலாம்.

19. அதிகாரத்திலிருந்து
—————————————
பரதேவதா நிச்யமில்லாதவனுக்கு அநந்ய சரணத்வம் இல்லை

இத்தேவதா விசேஷ நிச்சயமுடையவனுக்கல்லது
”கண்ணன் கண்ணல்லதில்லையோர் கண்ணே ” என்றும் ,
களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன் ” என்றும்
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் என்றும்
தருதுயரம் தடாயேல் என்கிற திருமொழி முதலானவற்றிலும்
சொல்லும் அநந்ய சரணத்வாவஸ்தை கிடையாது.

19. வ்யாக்யானம்

நாராயணன் மாத்ரமே காக்கவல்லவன் என்கிற நிலையானது
ஆழ்வார் பாசுரங்களில் வெளிப்படுகிறது

திருவாய்மொழி

திண்ணன் வீடுமுதல் முழுதுமாய்
எண்ணின்மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடனுண்ட , நம்
கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே

திண்ணன் = இது திடமானது —–எது ?
வீடுமுதல் முழுதுமாய் =மோக்ஷம் முதலான எல்லாப் புருஷார்த்தங்களுமாக ஆகி ,
எண்ணின் மீதியன் = சிந்தைக்கு மேலான
எம்பெருமான் = எமது ஸ்வாமி
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட = கீழுலகு ,மேலுலகு எல்லாவற்றையும் ஒரேசமயத்தில் உண்டவனான
நம்கண்ணன் =நமக்குப் ப்ரத்யக்ஷமான கண்ணனே நம்மை நிர்வஹிப்பான்
அல்லது இல்லை ஓர் கண்ணே = அவனல்லாது வேறு நிர்வஹிப்பாரில்லை

திருவாய்மொழி

களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்
வளைவாய் நேமிப்படையாய் ! குடந்தைக் கிடந்த மாமாயா ! ,
தளராவுடலும் எனது ஆவி சரிந்து போம்போது ,
இளையாது உனதாள் ஒருங்கப்பிடித்துப் போத இசை நீயே

எங்கும் சூழ்ந்து கூர்மையான சக்ரத்தை ஆயுதமாக உடையவனே !
திருக்குடந்தையிலே சயனத்திருக்கோலத்திலே இருக்கும் ஆச்சர்யமான திருமேனி உடையவனே !
நீ , எனது துன்பங்களைப் போக்கினாலும் ,போக்காமலே இருந்தாலும்
துன்பத்தைப் போக்கிக்கொள்ளும் இடம் அடியேனுக்கு வேறொன்றும் இல்லை.
எனது சரீரம் தளர்ந்து, அதிலுள்ள என் ப்ராணன் நிலைகுலைந்து போகும்போது,
நான் மேலும் பலவீனமாகாமல் உடனே உன் திருவடிகளை உறுதியாகப்
பிடித்திருக்கும்படி நீயே அருள வேணும் ( இசைய வேணும் ) என்கிறார்

திருவாய்மொழி ( 10–=10–3 )

திருவாய்மொழி ( 10–10–3 )

கூவிக்கொள்ளாய் வந்து அந்தோ ! என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்
மேவித்தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம்
நாவிக்கமல முதற்கிழங்கே !உம்பரந்ததுவே

தங்கள் அதிகாரத்தில் விருப்பமுற்று ஆசையுடன் வணங்குகிற பிரமன், சிவன், இந்திரன்
முதலிய தேவர்களுக்கு எல்லாம், நாபியில் இருக்கும் தாமரைப் புஷ்பத்திற்கு
கிழங்கு போன்று உள்ள ஆதி காரணனே ! அதற்கும் மேலான பரமபதத்துக்கும்
கிழங்கு போன்றவனே !என் ஆத்மாவுக்குப் பிடிப்பான,பற்றிக்கொள்ளக் கொம்பாக ,
உன்னைத் தவிர வேறு எவரையும் அறிகிலேன் . எனக்குப் போக்யமான
கருமாணிக்கமே !நீயே வந்து உன் குரலாலே என்னை அழைத்துக் கொள்வாயாக

பெருமாள் திருமொழி

தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை
விரை குழுவு மலர்பொழில் சூழ் விற்றுவக்கோட்டம்மானே !
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் , மற்றவள்தன்
அருள் நினைந்தேயழும் குழவியதுவே போன்றிருந்தேனே

என் கர்மாக்களுக்கு ஏற்றபடி எனக்கு ஏற்படும் துன்பங்களைத் தடுக்க ,
உன் திருவடி சரணம் என்பதைத் தவிர வேறு சரண் இல்லை.
பகவானே சரணம், அவன்தான் ரக்ஷகன், பகவானைத் தவிர வேறு ரக்ஷணம்
கிடையாது, என்கிற விஷயத்தை,ஸ்ரீ குலசேகரர் இப்பாசுரத்தில் சொல்கிறார்.
தான்பெற்ற குழந்தையைத் தாயானவள் கோபத்தால் உதைத்துத் தள்ளினாலும்
அந்தக் குழந்தை, தாயின் காலையே பிடித்துக்கொண்டு அழுவதைப்போல ,
நீ, எனக்குப் பலதுன்பங்களைக் கொடுத்து விரட்டினாலும் ,உன் திருவடியையே
பிடிப்பேன். எனக்கு வேறு உபாயம் இல்லை என்பதை இப்பாசுரத்தின் மூலம் சொல்கிறார்.

இது மாத்திரமல்ல—ஆழ்வார் , இதைப்போன்றுப் பல உதாரணங்களை
இத்திருமொழிப் பாசுரங்களில் சொல்கிறார்
1. பத்தினிப் பெண், தனக்குப் பிரியனான கணவன் ,தன்னைக் கண்டவர்கள்
இகழும்படி அடித்து, உதைத்துத் தள்ளினாலும், அவள், அவனைஅன்றி , மற்றோருவனைச் சரணம் என நினைக்கமாட்டாள்.
2. நாட்டில், அரசன், எவ்வளவு கொடுமை செய்தாலும் , குடிமக்கள்,அரசனின் நன்மையையே விரும்புவர்.
3.கட்டி முதலியவற்றை,வைத்யன் , கத்தியால் அறுத்தாலும் , நோயாளி வைத்யனிடம் அன்பு செலுத்துவான்
4.நங்கூரம் ஆகியிருந்த பெரியகப்பலின் உயர்ந்த கம்பத்தில் உட்கார்ந்த காகம்
கப்பல் புறப்பட்டு நடுக்கடலுக்குச் சென்றதை அறியாமல், அப்போது,அங்கிருந்து
கரைசேரக்கருதி நான்குபுறமும் பறந்து சென்று கரையைக் காணாமல்,
மீண்டும் கப்பலின் கொடிக்கம்பத்துக்கு வருகிறது.
5. மிக மென்மையானது தாமரை புஷ்பம். ஆனால்,ஸுர்யனோ மிகுந்த வெப்பம்
உள்ளவன் . உதிக்கும்போது உஷ்ணத்தை அள்ளிவீசிக்கொண்டே உதிக்கிறான் .
தண்ணீரின்மேல் கூம்பி இருக்கும் தாமரை , இப்போது மலர்கிறது.குளிர்ந்த
கிரணங்களை உடைய சந்த்ரனைக் கண்டால் மலர்வதில்லை.
6.ஆகாயத்தில் மேகமே இல்லாமல் மழைபெய்யத்து இருந்தாலும்
பூமியில் உள்ள பயிர்கள்,ஆகாயத்தில் கருத்த மேகங்களை எதிர்பார்த்திருக்கும்.
7.நதிகள், பெரியன—சிறியன —எல்லாம், ஸமுத்ரத்தில்தான் சேரும் .
8. செல்வத்துக்கு ஒரு இயல்பு. தன்னை விரும்பாமல் பகவானையே பெறவிரும்பி
இருப்பானை, செல்வம் விரும்பும்.செல்வம் தன்னை வேண்டாதவனை விரும்பும்.
அடியேனும்,என்னை விரும்பாத உன்னையே அண்டி நிற்கிறேன்

இதுவே ”அநந்ய சரணத்வா அவஸ்தை ” என்பது. அதாவது, பரதேவதா விச்வாஸம்
வேண்டும்;பரதேவதை நாராயணன் என்கிற உறுதி வேண்டும்.

20 அதிகாரத்திலிருந்து

பகவத் சேஷத்வம்–தேவதாந்த்ர த்யாகம்

இந்தப் பரதேவதா பாரமார்த்தத்தைத் திருமந்த்ரத்திலே கண்டு ததீய
பர்யந்தமாக தேவதாந்த்ரத் த்யாகமும் ததீய பர்யந்தமாக பகவச்சேஷத்வமும்
ப்ரதிஷ்ட்திமானபடியை மற்றுமோர் தெய்வம் உளதென்றிருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கடிமை என்கிற பாட்டிலே
ஸர்வேச்வரன் பக்கலிலே ஸர்வார்த்தக்ரஹணம் பண்ணின ஆழ்வாரருளிச்செய்தார் .

இவர் ”பாருருவி நீரெரிகால் ” என்கிற பாட்டிலே பரிசேஷ க்ரமத்தாலே விவாதவிஷயமான
மூவரை நிறுத்தி, அவர்கள் மூவரிலும் ப்ரமாநு ணானுஸந்தாநத்தாலே இருவரைக்
கழித்துப் பரிசேஷித்த பரஞ்ஜ்யோதிஸ்ஸான ஒருவனை ”முகிலுருவம்
என் அடிகளுருவம் ” என்று நிஷ்கர்ஷித்தார் . இந்த ரூபவிசேஷத்தையுடைய பரமபுருஷனே
ஸர்வவேத ப்ரதிபாத்யமான பரதத்த்வமென்னும் இடத்தை ஸர்வவேத ஸார பூத ப்ரணவ
ப்ரதி பாத்யதையாலே ”மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை
உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் –” என்று பெரியாழ்வார்
அருளிச் செய்தார்.

20. வ்யாக்யானம்

இதில் ஸர்வேச்வரன் பக்கலிலே ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணின ஆழ்வார் —
என்று திருமங்கை ஆழ்வாரைச் சிறப்பித்துக் கூறுகிறார், ஸ்வாமி தேசிகன்.
ஸர்வேச்வரன் பக்கலிலே ஸர்வார்த்த க்ரஹணம்—என்றால் என்ன ?
ஆழ்வார், எம்பெருமானிடமிருந்து ஸகல அர்த்தங்களையும் க்ரஹித்தார் ;அறிந்தார்;
பெற்றுக்கொண்டார் . பகவானே இந்த ஆழ்வாருக்கு ஆசார்யனாக இருந்து
ஸகல அர்த்தங்களையும் உபதேசித்தார். இது மஹாபாக்யம் .

திருவாலி க்ஷேத்ரத்துக்கு அருகே ,பகவான் பிராட்டியோடு விவாஹக்கோலத்தோடு
எழுந்தருள்கிறார். ஆழ்வாரைப் பணிகொள்ள இப்படி ஒரு சந்தர்ப்பத்தைஏற்படுத்திக்கொள்கிறார்.
பகவத் ஆராதனத்துக்குப் பணம் சம்பாதிப்பதையே குறியாகக் கொண்ட ஆழ்வார்,
வழியில் பதுங்கி இருக்கிறார் ;இரவு நேரம்;கல்யாண கோலத்தில் வரும் பகவானையும்
பிராட்டியையும் –சாதாரண மநுஷ்யர்கள் என்று எண்ணி வாளைக்காட்டி ,
அவர்களைத் தடுத்து நிறுத்தி ,மிரட்டி எல்லா ஆபரணங்களையும் பறித்துக் கொள்கிறார்.
கடைசியில் பகவானின் திருவடி விரலில் அணிந்திருந்த ”பீலி ” என்கிற மோதிரத்தைப்
பறிக்க முயற்சிக்கிறார். மோதிரத்தைக் கரத்தால் கழட்ட முடியவில்லை. தன்னுடைய
வாயால், எம்பெருமானின் திருவடி விரலில் உள்ள மோதிரத்தைக் கவ்வி இழுக்கிறார்.
அப்போது, எம்பெருமான், ஆழ்வார் முன்பாகப் ப்ரஸந்நமாகிறார் .
திருமந்த்ரம் —–அதன் அர்த்தம்——–இவற்றை ஆழ்வாருக்கு உபதேசிக்கிறார்.
லௌகீகமான திருவாபரணம் முதலான அர்த்தங்களையும் ( -பொருள்—செல்வம் )
திருமந்த்ரமான வைதீக அர்த்தங்களையும் எம்பெருமான் பக்கலிலே இருந்து
க்ரஹிக்கிறார் –இதுவே ”பரதேவதா பாரமார்த்யத்தைத் திருமந்திரத்தில் கண்டு ”

ததீய பர்யந்தமாக தேவதாந்தர த்யாகம்

ததீய பர்யந்தம் =எம்பெருமானைப் பற்றுவது அவனை அர்ச்சிப்பது ; அவனின்
அடியார்களைப் பற்றுவது.
இதற்கு விரோதமாக இருக்கும் –தேவதாந்தரத்தைத் தியாகம் செய்வது—
தேவதாந்தரம்—மற்ற தேவதைகள் –பிரம்மா, ருத்ரன் ,இந்த்ரன் போன்றவர்கள்
இவற்றை நாடாமல் இருப்பது.இவர்களுடைய பக்தர்களையும் நாடாமலிருப்பது
இது, ததீய பர்யந்தமாக தேவதாந்த்ர த்யாகம் .
ததீய பர்யந்தமாக பகவத் சேஷத்வம்—–எம்பெருமானைப் பற்றுவது;அவன்
அடியார்களைப் பற்றுவது.

———————————————————–

பகவானிடமிருந்து ,நேரிடையாகவே உபதேசம் பெற்ற திருமங்கை ஆழ்வார்,
பகவானைப் உண்மையைத் ”திருமந்திரம் ” மூலம் உணர்ந்தார்.இவர், மற்ற தேவதைகளை
விட்டுவிட்டு,பகவானுக்கு மட்டுமே அடிமை என்கிற நிலையை அடைந்தார்.
பெரியதிருமொழியில்
மற்றும் ஓர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் , உற்றதும் உன்னடியார்க்கடிமை ,
மற்றெல்லாம் பேசினும் நின் திருவெட்டெழுத்தும்
கற்று, நான் கண்ணபுரத்துறையம்மானே

ஹே –கண்ணபுரத்து அம்மானே ! உன்னைத் தவிர உபாஸிக்க வேறு தெய்வம்
இருக்கிறதென்று எண்ணுகிறவர்களுடன் நான் சேரமாட்டேன்.நான் விரும்பி
ஏற்றுக்கொண்டதும், உன் அடியார்களுக்கு அடிமையாய் இருப்பதே.

இதே ஆழ்வார், திருநெடுந்தாண்டகத்தில் கூறுகிறார் :–

பாரருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற நீ
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற இமையவர்தம் திருவுருவேறெண்ணும்போது
ஒருவரும் பொன்னுருவம் ஒன்று செந்தி ஒன்று மாகடலுருவம் ஒத்துநின்ற
மூவுருவும் கண்டபோது ஒன்றாம் சோதி முகிலுருவம் எம்மடிகளுருவந்தானே

மூன்று தெய்வமே முக்கியம் எனப்படும் பிரமன், சிவன், விஷ்ணு இவர்களில்,
பிரமன் திருமேனி பொன் போன்றதென்றும், சிவனின் திருமேனி
சிவந்த நெருப்பு போன்றதென்றும் விஷ்ணுவின் திருமேனி
பெரிய கருங்கடல் போன்றதென்றும், சொல்வர். இவைகளைப்
ப்ரமாணங்களைக் கொண்டு ஆராயும்போது, பஞ்சபூதங்களையும் , பல
வரையறைகளை உடைய உலகைப் படைத்து, அதனுள் அந்தர்யாமியாய்
நிற்கும் பரஞ்ஜோதி என ஓதப்படும் ஸ்ரீமந் நாராயணனின் திருமேனிகாளமேகம் போல் இருக்கும்.

பெரியாழ்வார் கூறுகிறார்

மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து மேல்மிடற்றினை உள்ளெழவாங்கி
காலுங்கையும் விதிர்விதிர்த்தேறிக் கண்ணுறக்கமதாவதன் முன்னம்
”மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி
வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலுமாமே

வேதங்களுக்கு மூலமான ஒரு எழுத்தான ப்ரணவத்தை ,மூன்று
மாத்ரையுடன் ஒருவருக்கும் காதில் கேட்காதபடி சொல்லி,கடல்வண்ணனான
பகவானைப் ப்ரீதியுடன் த்யானித்தால் பரமபதம் ஏகலாம்

மூலமாகிய ஒற்றை எழுத்தை —-”ஓம் ”—-
இது ப்ரணவம்.இதில் மூன்று எழுத்துக்கள் . ”அ , உ , ம ” எழுத்துக்கள்.
மஹரிஷிகள் ,ரிக் வேதத்தை ,புத்தியாகிய மத்தால் கடைந்தார்கள் .
எட்டு அக்ஷரங்கள் கிடைத்தன.இதைப்போலக் கடைந்தபோது,யஜுர்
வேதத்திலிருந்து எட்டு அக்ஷரங்களும், ஸாம வேதத்திலிருந்து
எட்டு அக்ஷரங்களும் கிடைத்தன. 3 x 8 =24 எழுத்துக்கள் .இதுவே
காயத்ரி மந்த்ரம்.

இதையும் சுருக்கினார்கள்
ரிக்வேத எட்டு அக்ஷரங்களிலிருந்து, ”பூ ”—இதிலிருந்து ”அ ”காரம்
யஜுர் வேத எட்டு அக்ஷரங்களிலிருந்து ”புவ :”. இதிலிருந்து ”உ ”காரம்
ஸாம வேத எட்டு அக்ஷரங்களிலிருந்து ”ஸுவ : ”.இதிலிருந்து ”ம ”காரம்
இந்த மூன்று அக்ஷரங்களையும் இன்னும் சுருக்கி ஒன்றாக்கினார்கள் —
”இப்பத்து,ஓம் ” காரம் பிறந்தது.

இது ப்ரணவம். வேதமூலம் ; வேதஸாரம் ஒற்றை எழுத்து.
கண்ணுறக்கம் ஆவதன் முன்னம் =மரணம் நெருங்குவதற்கு முன்பாக
கண்ணுறக்கம் =மரணம் ; மீண்டும் உயிர் பெற இயலாத உறக்கம்
இந்த உடல் அவ்வளவுதான்
மூன்று மாத்ரை = கண் இமைக்கும் நேரம் ;நொடிப்பொழுது.
மாத்ரை என்கிற கால அளவு .
உரக்கச் சொல்லாமல் உச்சரிக்கவேண்டும்.
ப்ரணவத்தை உச்சரிக்கும்போது ”ம் ” என்கிற எழுத்து வருகிறதே ,
அது சேர்க்காமல்,மூன்று மாத்ரை
ஓ ———ம் என்று உச்சரிக்கும்போது ”ம் ” என்கிற எழுத்து
உதட்டை இணைப்பதால் வெளியே அவ்வளவாக சப்தம் கேட்காது.
இப்படி உச்சரித்து கடல்நிறவண்ணனை உபாஸிக்கவேண்டும்.
இவன் பெரியபிராட்டியாருடன் இருப்பவன்.ஸ்ரீ ய :பதி. இவன்தான்
பரமபுருஷன்.பரதேவதை. இப்படித் திவ்ய தம்பதியரே அனைத்துமாக உள்ளனர்

21. அதிகாரத்திலிருந்து
————————————–

அனைத்தும் திவ்யதம்பதியர்

தைத்திரீயத்தில் ஸ்ரீய: பதித்வ சிஹ்நத்தாலே மஹாபுருஷனுக்கு வ்யாவ்ருத்தி
ஓதினபடியே நினைத்துத் ” திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் ”
என்று உபக்ரமித்துச் ” சார்வு நமக்கு ” என்கிற பாட்டிலே ப்ரதிபுத்தரான
நமக்குப் பெரிய பிராட்டியாருடனே இருந்து என்றும் ஒக்கப் பரிமாறுகிற
இவனையொழிய ப்ராப்யாந்தரமும் சரண்யாந்தரமுமில்லை .
இத்தம்பதிகளே ப்ராப்யரும் சரண்யரும் என்று நிகமிக்கப்பட்டது .

இவ்வர்த்தத்தை தேவதா பாரமார்த்யம் ச யதாவத்வேத்ஸ்யதே பவாந்
புலஸ்த்யேந யதுக்தம் தே ஸர்வமேதத்பவிஷ்யதி என்று புலஸ்த்ய வஸிஷ்ட
வரப்ரஸாதத்தாலே பரதேவதா பாரமார்த்ய ஞானமுடையனாய் ,
பெரியமுதலியார் தஸ்மை நமோ முநிவராய பராசராய என்று
ஆதரிக்கும்படியான ஸ்ரீ பராசரப்ரஹ்மர்ஷி பரக்கத் பேசி தேவ திர்யங்
மநுஷ்யேஷு புந்நாம பகவான் ஹரி : ஸ்த்ரீநாம்நி லக்ஷ்மீமைத்ரேய
நாநயோர்வித்யதே பரம் என்று பரமரஹஸ்ய யோக்யனான ஸச்சிஷ்யனுக்கு உபதேசித்தான்.

இத்தை மயர்வற மதிநலமருளப் பெற்று ஆத்யஸ்ய ந : குலபதே : என்கிறபடியே
ப்ரபந்நஸந்தாந கூடஸ்தரான நம்மாழ்வாரும் ”ஒண்டொடியாள் திருமகளும்
நீயுமே நிற்பக்கண்ட சதிர்கண்டு ” என்று அருளிச் செய்தார்.
இவ்விஷயத்தில் வக்த்வ்யமெல்லாம் சது :ச்லோகீ வ்யாக்யானத்திலே
பரபக்ஷ ப்ரதிசேஷப்பூர்வகமாகப் பரக்கச் சொன்னோம். அங்கு கண்டுகொள்வது .

21. வ்யாக்யானம்

தைத்திரீய உபநிஷத்தில் நாராயண அநுவாகத்தில் சொல்லியிருப்பது–
குறைவில்லா வீர்யமுடைய பூமிப்பிராட்டியும், எல்லா லக்ஷணங்களும்
உடையவளும் அனைவராலும் ஆச்ரயிக்கத் தக்கவளுமான பெரியபிராட்டியும்
அனைவரையும் காப்பது என்கிற யாகத்துக்குத் தீக்ஷிதனான உனக்கு
கூடவே இருந்து உதவுவதில் அவர்களும் தீக்ஷிதர்களாக உள்ளனர்.
இந்த அநுவாகம் ஸ்ரீ ய : பதியே உயர்ந்த தத்வம் என்று கோஷிக்கிறது.

மூன்றாம் திருவந்தாதி —பேயாழ்வார்

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் , திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் —-செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

மஹாலக்ஷ்மியைக் கண்டேன்; ஸ்வர்ணம் போன்ற அழகியத் திருமேனி கண்டேன்;
பகவானைக் கண்டேன்; சக்ரம் சங்கமும் கண்டேன்
என்றெல்லாம், திருக்கோயிலூர் தேஹளீசனைத் தர்ஸித்துப் பாடுகிறார்.

இப்படித் தொடங்கியவர்,
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் , தண்துழாய்த்
தார்வாழ்வரைமார்பன் தான் முயங்கும் —காரார்ந்த
வானமருமின்னிமைக்கும் வண்தாமரை நெடுங்கண்
தேனமரும் பூமேல் திரு .-என்று முடிக்கிறார்.

சக்கரக்கையன்; துழாய்மாலை அணிந்த மலைபோன்ற திருமார்பை
உடையவன்;இவன் எம்பெருமான். இவனே மோஹித்து ,அதனால்
எப்போதும் கூடவே இருப்பவளாய் ஆகாசத்தில் நிலைத்து நிற்கும்
மின்னலைப் போன்றுள்ளவளாய் ,பங்கஜநேத்ரமுள்ளவளாய் ,
தேன் நிறைந்த தாமரைப் புஷ்பத்தில் வசிப்பவளாய் உள்ள
பெரியபிராட்டியார் நமக்கு இலக்கும் சரணமும் ஆவார் .

இந்த மிக உசந்ததான தத்வத்தை ஸ்ரீ பராசர மஹரிஷி , தன்னுடைய சிஷ்யனுக்கு உபதேசித்தார்.
தேவ திர்யங் மநுஷ்யேஷு புந்நாம பகவான் ஹரி : ஸ்த்ரீநாம்நி லக்ஷ்மீமைத்ரேய நாநயோர்வித்யதே பரம்”

மைத்ரேயரே—தேவர்கள், மிருகங்கள், மனிதர்கள், இப்படியாக உள்ள
பலவற்றில் ஆண்வர்க்கம் எல்லாமும் எம்பெருமானுக்கும்
பெண்வர்க்கம் எல்லாமும் மஹாலக்ஷ்மிக்கும் அடங்கியவை.
என்று பரமரஹஸ்ய யோக்யனான ஸச்சிஷ்யனுக்கு( மைத்ரேயனுக்கு )
சொன்னார்.இந்த ரஹஸ்யம் , யாவும் , புலஸ்த்யர் ,வசிஷ்டர் மூலமாக இவர் அடைந்தார்.

விஷ்ணு புராணம்
தேவதா பாரமார்த்யம் ச யதாவத்வேத்ஸ்யதே பவாந்

புலஸ்த்யர் , பராசரருக்குச் சொன்னது—-
பரதேவதையைப் பற்றியா உண்மையை நீ தெரிந்துகொள்

வசிஷ்டர், பராசரருக்குச் சொன்னது—
புலஸ்த்யேந யதுக்தம் தே ஸர்வமேதத்பவிஷ்யதி
புலஸ்த்யர் உனக்கு உபதேஸித்தது எல்லாமே உனக்குக் கைகூடும்

ஸ்ரீ ஆளவந்தார், ஸ்தோத்ர ரத்னத்தில்
தத்வேந யஸ்சிதசிதீஸ்வரதத் ஸ்வபாவ போகாபவர்க ததுபாயகதீருதார :
ஸந்தர்சயந் நிரமிமீத புராண ரத்னம் தஸ்மை நமோ முனிவராய பராசராய

எந்த மஹரிஷி , சித் , அசித் , ஈச்வரன் , இம்மூன்றின் தன்மைகள்,
இவற்றின் அநுபவங்களான கைவல்ய,ஐச்வர்ய,புருஷார்த்தம் ,
மோக்ஷம் , இவற்றுக்கான உபாயம், இவற்றையெல்லாம் தெளிவாகச்
சொல்லும் புராண ரத்னத்தை இயற்றினாரோ அந்த பராசரருக்கு வந்தனம் —என்கிறார்

நமக்கு லக்ஷ்யமாக , நாம் சரணம் அடையுமிடமாக ,பகவானுடன் சேர்ந்து
பெரியபிராட்டியும் இருக்கிறாள் என்பதை,ப்ரபத்தி பரம்பரையில்
முதலாவதாக உள்ளவரும் பகவானிடம் இருந்து தடுமாற்றமில்லாத
ஞானத்தைப் பெற்றவருமான நம்மாழ்வார், திருவாய்மொழியில் சொல்கிறார்

கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் , தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
—————————————————————————-
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே
————–திருவாய்மொழி (4-9-10)

அழகிய வளையல்களை அணிந்த பிராட்டியும் , நீயும் ,
உங்களைத் தவிர வேறு ஈச்வரர்களில்லை என்னும்படியாக ஸேவை சாதிக்க
நித்ய ஸூரிகளைப்போல எல்லா ஆத்மாக்களும் உன்னை அநுபவித்துக்
கைங்கர்யம் செய்யும்படியான –இப்படி உன்னால் ஏற்பட்ட புருஷார்த்தத்தை நான் ஸாக்ஷாத்கரித்தேன்

ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி, தன்னுடைய பிரபந்த ரக்ஷையில் கூறுகிறார்—
பொருள் அழிவு, ஆயுள் முடிவு, பேராசை பரஹிம்ஸை பலநரக பாதையான
ஸம்ஸாரத்திலே , ஐங்கருவி( ரூபம்,சப்தம், ஸ்பர்சம் ,வாஸனை , ரஸம் ) இன்பத்தை
அநுபவித்து அதன் வாசனையால் மேன்மேல் திரிகின்ற பஞ்சேந்த்ரியங்களால்
மறுபடியும் மறுபடியும் சிற்றின்பத்தை நுகர்ந்து, அவை அற்பமாய் துயரமாகவே
இருப்பதையும் , ஆத்ம அனுபவமென்கிற ”கைவல்யம் ”எம்பெருமானைப்
பற்றிய அறிவு சிறிதும் அப்போது இல்லாததால் மிகக் கேவலமே என்றும்,
அவற்றில் இழிந்தாரோடு ஸ்நேஹம் அனர்த்தம் விளைவிக்கும் என்றும்
இவைகளை விட்டொழித்து,நேராக உன் திருவடிகளை ஆச்ரயித்தேன்

22. அதிகாரத்திலிருந்து

வாதியர் மன்னும் தருக்கச் செருக்கின் மறைகுலையைச்
சாது சனங்கள் அடங்க நடுங்கத் தனித்தனியே
ஆதி எனாவகை ஆரணதேசிகர் சாற்றினார் —நம்
போதமரும் திருமாதுடன் நின்ற புராணனையே

ஜநபத புவநாதி ஸ்தாந் ஜைத்ராஸநஸ்தேஷு
அநுகத நிஜவார்த்தம் நச்சரேஷு ஈச்வரேஷு
பரிசித் நிகமாந்த : பச்யதி ஸ்ரீ ஸஹாயம்
ஜகதி கதிம் அவித்யா தந்துரே ஜந்துரேக :


வ்யாக்யானம்

தவறான வாதம் செய்பவர்கள் தங்களுடைய தர்க்கம் செய்யும் திறமை
காரணமாக முயற்சி செய்தது யாதெனில்,
வேதங்கள் நடுங்கும்படியாக, பகவானின் அடியவர்கள் நடுங்கும்படியாக
அவரவர் எண்ணப்படி பிரம்மன் ,சிவன் முதலானோர் தாம் இவ்வுலகின் காரணம்
என்று கூறத் தொடங்கினர் . ஆனால், அவர்கள் அவ்விதம் கூற இயலாதபடி
வேதாந்த ஸாஸ்த்ர நிபுணர்களான நமது ஆசார்யர்கள் , தாமரை மலரில்
அமர்ந்துள்ள பெரியபிராட்டியின் நாயகனான ஆதி புருஷனான
நாராயணனே இவ்வுலகின் காரணம் என்பதை நிரூபித்தனர்

கர்மவசப்பட்ட உலகில், ஞானம் முழுமையாக இல்லாத உலகில்,
ஜயம் மற்றும் சுகம் இவை சூசகங்களாக உள்ள சிம்மாசனத்தில்
அமர்ந்த ஈச்வரர்கள் தங்களுடைய கதைகளும் தங்களுடன்
நாசமடையும்படி போகும்போது , வேதாந்தங்களை அடிக்கடி
படிக்கிற ஒரு ப்ராணி , ஸ்ரீமந் நாராயணனை ரக்ஷகனாக அறிகிறான்

அதிகாரம் 6—–பரதேவதாபாரமார்த்த்யாதிகாரம் நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து அளித்தவை —அதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –

அதிகாரத்திலிருந்து —–

ப்ரக்ருதி ஆத்மாப்ராந்தி : களதி சித் அசித் லக்ஷண தியா
ததா ஜீவ ஈச ஐக்ய ப்ரப்ருதி கலஹ : தத் விபஜனாத்
அத : போக்தா போக்யம் தத் உபய நியந்தா நிகமை :
விபக்தம் ந : தத்த்வத்ரயம் உபதிசந்தி அக்ஷததிய :

வ்யாக்யானம் —–

சேதநங்கள் , அசேநதங்கள் —இவைபற்றிய ஜ்ஞானம் ஏற்படும் போது,-இதுவரை எண்ணியிருந்த, இந்த சரீரமும், இந்த்ரியங்களுமே ஆத்மா
என்கிற மதி மயக்கம் அகலும்; அதாவது, சித் , அசித் இவைபற்றிய ஜ்ஞானம். ஆத்மா வேறு; உடல் இந்திரியங்கள் வேறு என்கிற
உண்மையான ஜ்ஞானம் ஏற்படும்.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்கிற தவறான வாதம் , இவற்றின் குணங்களால் உணரப்படும் போது
அகன்று விடும்.அதாவது, ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்கிற உண்மையான ஜ்ஞானம்.
இந்த ஜ்ஞானம் , எப்போது ஏற்படும் என்றால், நமது ஆசார்யர்கள் நமக்கு ,சாஸ்த்ரங்கள் சொல்லும் மூன்று தத்வங்களை
நன்கு உபதேசம் செய்யும்போது ஏற்படும்.

இந்த மூன்று தத்வங்கள் —
1. சேதநன் —சுக துக்கங்களை அனுபவிப்பவன்–போக்தா
2. அசேதநம் —சேதநனால் அனுபவிக்கப்படுவது
3 ஈச்வரன் –சேதந ,அசேதநங்களை நியமிப்பவன் –நியந்தா

அதாவது—போக்தா–சேதநன் –அவனுக்கு வருகிற சுகம்; துக்கம் இவைகளை அவனே அனுபவித்துத் தீர்ப்பது.
போக்யம் —இதுவே அசேதநம் —சேதநன் அனுபவிக்கிறானே ,அவை.
நியந்தா —அதாவது–பகவான்—அனுபவிப்பவன், அனுபவிக்கப்படுவை இவற்றை நியமிப்பவன் .
போக்தா என்கிற அநுபவிப்பவன் , போக்யம் என்கிற அனுபவிக்கப்படும் வஸ்துக்கள், இவற்றையெல்லாம்,
ப்ரேரிதா என்கிற ஈச்வரன்– —-பொருளை –வஸ்துக்களை அனுபவிக்கும்படியாக , சேதநனை ஆக்குபவன்
இவற்றை, போக்ருத்வம், போக்யத்வம் , நியம்க்ருத்வம் என்றும் சொல்வர் .
பகவான், சேதநன் அசேதநம் இரண்டிலும் வியாபித்து ( இவை இரண்டும் பகவானுக்குச் சரீரம் ) அரணிக் கட்டையில் அக்நியைப்
போலவும், எள்ளில் எண்ணையைப் போலவும், பாலில் நெய் போலவும் மறைந்து நின்று , கர்மாநுகூணமான பலனைப் பெறச் செய்கிறான்.
ச்வேதாச்வசர உபநிஷத் இப்படிக்கு கூறுகிறது—
பகவான் தன்னை அறிய ஸங்கல்ப குணங்களோடும் , தன்னை அறிந்தவனை வாழ்விக்க வாத்ஸல்யம் , காருண்ய குணங்களோடும் இருக்கிறான்.
இவற்றை உள்ளபடி அறிந்து, பக்தியில் ப்ரஹ்ம ஜ்ஞானம் ஏற்படும்போது, புண்ய ,பாப கர்மாக்களிலிருந்து விடுபடுகிறான்.

அதிகாரத்திலிருந்து—–

தத்வ த்ரயம் —இதை எதற்காகத் தெரிந்துகொள்ள வேண்டும் ?

ஸம்பந்தமும் அர்த்தபஞ்சகமுங்கூட ஆறு அர்த்தமறிய வேண்டியிருக்க , இவற்றில் ஏகதேசமான தத்வத்ரயத்தை முமுக்ஷுவுக்கு விசேஷித்து
அறியவேண்டுமென்று ஆசார்யர்கள் உபதேசித்துப் போருகைக்கு அடியெனென்னென்னில் —–
அதுக்கடி ப்ரக்ருதி ஆத்ம க்ரமமும் ஸ்வதந்த்ர ஆத்ம க்ரமமும் , இதுக்கு நிதானமான அநீச்வரவாதருசியுமான
மஹா விரோதிகளை முற்படக் கழிக்கப் ப்ராப்தமாகை .
இத்தை நினைத்து போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபத்தாலே சாஸ்த்ரங்களிலே தத்த்வ விவேகம் பண்ணுகிறது

இவற்றில் வைத்துக்கொண்டு
”அசேதநா பரார்த்தா ச நித்யா ஸததவீக்ரியா
த்ரிகுணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே அநாதிர்பகவான்
காலோ நாந்தோ அஸ்ய த்விஜ வித்யதே, கலா முஹுர்த்தாதி மயச்ச காலோ
ந யத்விபூதே :பரிணாம ஹேது : ஞானானந்தமயா லோகா :காலம் ஸ
பசதே தத்ர ந காலஸ்தத்ர வை ப்ரபு :”–இத்யாதிகளாலே த்ரிகுண கால சுத்த ஸத்வரூபங்களான த்ரிவித
அசேதநங்களுடைய ஸ்வபாவஞ் சொல்லிற்று

புமாந் ந தேவோ ந நர : நாயம் தேவோ ந மர்த்யோ வா
க்ஷரஸ்ஸர்வாணி பூதாநி கூடஸ்த :அக்ஷர உச்யதே ,
யத்வை பச்யந்தி ஸுரய :–இத்யாதிகளாலே த்ரிவித ஜீவர்களுடைய ப்ரகாரம் விவேகிக்கப்பட்டது.

ஸர்வஜ்ஞ: ஸர்வக்ருத் ஸர்வம் சக்தி ஞான பல,
க்லம தந்த்ரீ பய க்ரோத காமாதிபிரஸம்யுத :–இத்யாதிகளாலே ஈச்வர ஸ்வபாவம் உபதிஷ்டமாயிற்று

இவ் ஈசோசிதவ்ய ரூபமான தத்வத்ரயம் நிற்கும் நிலையை
ஸ்வாதீந த்ரிவித சேதந அசேதந ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திபேதம்–என்று சுருங்க அருளிச் செய்தார்.
த்ரிவிதசேதனரென்றது பத்தரையும் , முக்தரையும் , நித்யரையும்
த்ரிவித அசேதனமென்றது த்ரிகுணத்ரவ்யத்தையும் காலத்தையும் சுத்த ஸத்வமான த்ரவத்தையும்

வ்யாக்யானம்

ஸம்பந்தம் —-அதாவது ,ஜீவ , ஈச்வர ஸம்பந்தம்
அர்த்த பஞ்சகம் —மேற்படி ஸம்பந்தத்துடன் கூடிய ஆறு தத்வங்கள் ,
முமுக்ஷுவால் அறியப்பட வேண்டியவையாகும். சொல்லப்படும் மூன்று தத்வங்களும், ஆறு தத்வங்களில் உள்ளன.

இப்படி இருக்கும்போது, மேற்கூறியவற்றை ஆசார்யர்கள் விசேஷித்துச் சொல்லக் காரணம் என்னவெனில்,
1. சரீரமே ஆத்மா என்கிற மயக்கமும், இந்த ஜீவாத்மா ஸ்வதந்த்ரமானவன் என்கிற மயக்கமும், அகலவேண்டும் என்பதற்காகவே —
இப்படிப்பட்ட மயக்கம் ஏன் ஏற்படுகிறது என்றால்,
பகவான் என்பவரே இல்லை என்று எண்ணுவதாகும். இப்படி, இவை எல்லாமே ஒரு ஜீவாத்மா மோக்ஷம் அடையத் தடைகளாகின்றன.
இதனால்தான், சாஸ்த்ரங்கள் தத்வங்களை மூன்றாகப் பிரித்துச் சொல்கின்றன —அவையே–சேதநன் என்கிற அநுபவிப்பவன் ,
அசேதநம் என்கிற ”அநுபவிக்கப்படும் வஸ்துக்கள் ”
மற்றும், ஈச்வரன் –இவற்றையெல்லாம் நியமிப்பவன் அதாவது, பகவான்

மேலே சொல்லப்பட்ட, அசேதநங்களான,அனுபவிக்கப்படும் பொருள்கள் மூன்று வகை—-
1. ஸத்வ ,ரஜோ , தாமஸ குணங்களுடன் கூடிய ப்ரக்ருதி , 2.காலம் ,3. ஸுத்த ஸத்வம்
இவற்றில் ப்ரக்ருதியின் தன்மை, பரம ஸம்ஹிதையில்

”அசேதநா பரார்த்தா ச நித்யா ஸததவீக்ரியா
த்ரிகுணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே”–என்று சொல்லப்படுகிறது. அதாவது,
ப்ரக்ருதி , அறிவில்லாதது, எப்போதும் மற்றவர்களுக்காகவே உள்ளது,-தனது ஸ்வரூபத்துக்கு அழிவு இல்லை ,
எப்போதும் மாறுகிற குணம் உள்ளது,–ஸத்வம் ,ரஜஸ், தாமஸம் என்கிற மூன்று குணங்களை உடையது,
கர்மாக்களைச் செய்கிறார்களே–சேதநர்கள் —-அவர்களுக்கு,-அந்தக் கர்மாக்களின் பலனை அநுபவிக்கும் சரீரமாக உள்ளது.

காலம் —இதை விஷ்ணு புராணம் சொல்கிறது

அநாதிர்பகவான் காலோ நாந்தோ அஸ்ய த்விஜ வித்யதே, கலா முஹுர்த்தாதி மயச்ச
காலோ ந யத்விபூதே :பரிணாம ஹேது :

பகவானுக்குச் சரீரமாக உள்ள, காலம் என்பதற்கு, தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை; மற்றும், வினாடி, முஹூர்த்தம் என்று காலப்
பரிணாமங்களைச் சொல்கிறோமே இவை, எம்பெருமானின் நித்யவிபூதியில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்வதில்லை–உண்டாக்குவதில்லை.

ஸுத்த ஸத்வம்—–ப்ரக்ருதி என்று பார்த்தோமே –உலகங்கள்—இவற்றுக்கு அப்பாலே வெகு தொலைவில் உள்ள எம்பெருமானின் ”நித்ய விபூதி”யில்
யாவுமே (அசேதநங்களாக இருந்தாலும் ), ஸுத்த ஸத்வத்தால் ஆனவை.
ஆதலால், இவை ”ஞானானந்தமயா லோகா :” ஜ்ஞானமும் , ஆனந்தமும் முற்றிலும் நிறைந்தவை

காலம் ஸ பசதே தத்ர ந காலஸ்தத்ர வை ப்ரபு :” ( மஹா பாரதம் –சாந்தி பர்வம் )
நித்ய விபூதியில் ,காலமானது எம்பெருமானுக்குக் கட்டுப்பட்டது. அவன்தான் காலத்தை நிர்ணயிக்கிறான்.நித்ய விபூதியில்,
”காலம் ” எவ்வித மாறுதல்களையும் ஏற்படுத்த இயலாது.
இப்படியாக, ப்ரக்ருதி ,கால, ஸுத்தஸத்வம் என்கிற மூன்று அசேதனங்களின் தன்மை விவரிக்கப்பட்டது.

(பித்ருக்களுக்கு—கிருஷ்ண பக்ஷம் இரவு –ராத்ரி ; சுக்ல பக்ஷம் –பகல்.
தேவர்களுக்கு / தேவதைகளுக்கு—-தக்ஷிணாயணம் –இரவு –ராத்ரி .உத்தராயணம் —-பகல்
நமக்கு ஒரு வருஷம் என்பது, அவர்களுக்கு ஒரு நாள் ( அஹோராத்ரம் ) இப்படி, 360 நாட்கள், அவர்களுக்கு ஒரு வருஷம் )

நிமிஷம் —ஒரு மாத்ரை ;15 நிமிஷங்கள் –ஒரு காஷ்டை ;30 காஷ்டை –ஒரு கலை
15 கலை —ஒரு நாழிகை ;2 நாழிகை –ஒரு முஹூர்த்தம் ;
30 முஹூர்த்தம் –ஒரு நாள்; 30 நாள் –ஒரு மாதம்; 12 மாதம்–ஒரு வருஷம்.

இதைப்போல,
17, 28,000 வருஷங்கள் –க்ருத யுகம் –பிறகு யுக ப்ரளயம் –யுக சந்தி என்றும் சொல்வர்
12, 96,000 வருஷங்கள் –த்ரேதா யுகம் –பிறகு யுக ப்ரளயம் ”
8,64,000 வருஷங்கள் –த்வாபர யுகம் —பிறகு யுகப்ரளயம் ”
4,32,000 வருஷங்கள் –கலியுகம் —பிறகு யுகப்ரளயம் ”

இப்படி காலச் சுழற்சி ஏற்படுகிறது.
இப்படி ஏற்படும் சுழற்சியில், நான்காயிரம் யுகம் ( 1000 சதுர் யுகம் )–ப்ரஹ்மாவுக்கு ஒரு பகல் ;
அடுத்த நான்காயிரம் யுகம் ( 1000 சதுர் யுகம் )–ஒரு ராத்ரி –இவற்றை ”கல்பம் ”என்பர்
பகல் ஒரு கல்பம்; இரவு ஒரு கல்பம்.
கல்பத்தின் முடிவில், நைமித்திக ப்ரளயம் — காலம்,நிமித்தமாக இருப்பதால், நைமித்திகம் இப்படி ப்ரஹ்மாவுக்கு ஒரு நாள்

14 கல்பங்கள்–ஒரு மன்வந்த்ரம் ; மொத்தம் 14 மன்வந்த்ரங்கள்.
இப்போது நாம் இருப்பது, வைவஸ்வத மன்வந்த்ரம் எனப்படும்.
இது ஏழாவது மன்வந்த்ரம். ;இதுவரை, 1.ஸ்வாயம்புவன் , 2. ஸ்வாரோசிஷன் ,
3. உத்தமன், 4.தாமஸன் , 5. ரைவதன் , 6. சரஸுக்ஷன் என்கிற மன்வந்த்ரங்கள் முடிந்துள்ளன.

வ்யாக்யானம் —-
ஜீவாத்மாவைப் பற்றி ஸ்ரீ விஷ்ணு புராணம் இப்படிச் சொல்கிறது—
புமாந் ந தேவோ ந நர :—–மனிதனும் அல்லன்; தேவனும் அல்லன்.

நாயம் தேவோ ந மர்த்யோ வா —தேவனும் அல்லன் ; மனிதனும் அல்லன்
சேதநர் , மூன்று பிரிவுகளாவர் இதை,ஸ்ரீமத் பகவத் கீதை சொல்கிறது—-

க்ஷரஸ்ஸர்வாணி பூதாநி கூடஸ்த :அக்ஷர உச்யதே , ஸ்ரீமத் பகவத் கீதை ( 15–16 )
த்வாமிமௌ புருஷெள லோகே க்ஷரஸ் ஸாக்ஷர ஏவ ச |
க்ஷவ : ஸர்வாணி பூதானி கூடஸ்தோக்ஷர உச்யதே ||
கர்மவசத்துக்கு உட்பட்டவர்கள் –க்ஷரன் /க்ஷரம்-அதாவது, பத்தர் ,கர்மவசப்பட்டவர்கள் . முக்தர்–கர்மஸம்பந்தம்
இல்லாமல் இருப்பவர்–அக்ஷரர் . நித்யஸூரிகள் –அக்ஷரர் –கர்மவசத்துக்கு உட்படாதவர்கள்
ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்கிறது—
யத்வை பச்யந்தி ஸுரய : நித்ய ஸூரிகள் பார்த்தபடி உள்ள இடம்

இவ்வாறாக, மூன்று வித ஜீவர்களின் தன்மைகள் விவரிக்கப்பட்டன.

அடுத்து, ஈச்வர தத்வம் சொல்லப்படுகிறது
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலிருந்தே ,ஸ்வாமி தேசிகன் மேற்கோள் காட்டுகிறார்

ஸர்வஜ்ஞ: ஸர்வக்ருத் ஸர்வம் சக்தி ஞான பல,
க்லம தந்த்ரீ பய க்ரோத காமாதிபிரஸம்யுத :

ஈச்வரன் —-பகவான் –இவன் ஸர்வஜ்ஞன் –அனைத்தும் அவனே இவன் ஸர்வக்ருத் —எல்லாம் அறிந்தவன்
இவன் ஸர்வ ——சக்தி, ஜ்ஞான ,பல , ஐச்வர்ய , குணாதிகள் நிறைந்தவன்;
களைப்பு, சோம்பல், பயம், கோபம், காமம் போன்றவை இல்லாதவன்
இப்படியாக ஈச்வர ஸ்வபாவம் விளக்கப்பட்டது.

அடுத்து, ஈச்வரன் , அவனால் நியமிக்கப்படுபவை இவற்றையெல்லாம் நமது
ஆசார்யர்கள் சுருக்கமாகச் சொல்லியுள்ளதாக, ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்.

எம்பெருமானாரின் ”வைகுண்ட கத்யம் ” , ஸ்ரீ ஆளவந்தாரின் ”ஆத்ம ஸித்தி ” எடுத்துச் சொல்லப்படுகிறது.
ஸ்வாதீன த்ரிவித சேதநாசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் , க்லேசகர்மாதி
அஸேஷதோஷா ஸம்ஸ்ப்ருஷ்டம் , ஸ்வாபாவிக அநவதிகாதிஸய , ஜ்ஞான
பல , ஐச்வர்ய , வீர்ய , சக்தி , தேஜ :, ப்ரப்ருதி அஸங்க்யேய கல்யாண குணகணெளக
மஹார்ணவம் , பரமபுருஷம் , பகவந்தம் , நாராயணம் , ஸ்வாமித்வேன ,
ஸுஹ்ருத்வேன , குரூத்த்வேன ச பரிக்ருஹ்ய ————

சம்ஸாரி , முக்தன் , நித்ய ஸூரி என்றும், 3 வித ஜீவராசிகளுடையவும் ,
த்ரிகுண ப்ரக்ருதி , காலம்,நித்ய விபூதி என்றும் 3 வித அசேதனங்களுடையவும்
ஸ்திதி, ப்ரவ்ருத்தி , நிவ்ருத்தி இவைகளைத் தாமிட்ட வழக்காக உடையவரும் ,
5 வித க்லேசங்களும், புண்ய பாபரூபமான கர்மங்களும் எனப்படும் எவராலும் மாசுபடாதவரும் , மிக உயர்ந்தவரும்,
இந்த்ரியங்களின் உதவியே இல்லாமல் காண்பது, மூலகாரணமாகப் பொருளாக ஆகும் ஆற்றல், அனைத்தையும்
எவ்வித ச்ரமமும் இன்றி தரிக்கும் வலிமை , எல்லாரையும் /எல்லாவற்றையும் ஸங்கல்பத்தின்படி நடத்தும் தலைமை ,
சிறிதும் சோர்வு அடையாத பெருமை , அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொள்ளும் ஒளி —-இவைகள் எல்லாம்
நிறைந்தவரும், ஸமஸ்த ஜீவாத்மாக்களைக் காட்டிலும் உயர்ந்தவரும்,
பகவானான ஸ்ரீமந் நாராயணனை ,நம்மையெல்லாம் அடிமையாக்கிக்கொண்ட ஸ்வாமியாகவும் , ஆசார்யனாகவும் ——————–

த்ரிவித சேதநர் என்பது—சம்ஸார பந்தத்தில் உள்ள ”பத்தர் ‘, மோக்ஷமடைந்த முக்தர் , மற்றும் நித்ய ஸூரிகள்
த்ரிவித அசேதநம் என்பது—-ப்ரக்ருதி, காலம், ஸுத்தஸத்வம்

அதிகாரத்திலிருந்து ——-

ஸ்வரூபம் —ஸ்திதி —ப்ரவ்ருத்தி –இவற்றின் விவரம்

ஸ்வரூபமென்றது
ஸ்வாஸதாரண தர்மத்தாலே நிரூபிதமான தர்மியை

ஸ்திதியாவது
இதனுடைய காலாந்தரானுவ்ருத்தி . இதுதான் நித்ய வஸ்துக்களுக்கு நித்யையாயிருக்கும் .
அநித்ய வஸ்துக்களுக்கு ஈச்வர ஸங்கல்பத்துக்கு ஈடாக ஏறியும் சுருங்கியும் இருக்கும்.
இங்கு, ப்ரவ்ருத்தியாவது
ப்ரவ்ருத்தி –நிவ்ருத்தி ரூபமான வியாபாரம் . இவையெல்லாம், வஸ்துக்கள் தோறும் ப்ரமாண ப்ரதி நியதமாயிருக்கும் .
ப்ரமாணங்கள் வஸ்துக்களைக் காட்டும் போது
அவ்வோ வஸ்துக்களின் ஸ்வரூபத்தையும் , ஸ்வரூப நிரூபக தர்மங்களையும் , நிரூபித ஸ்வரூப விசேஷணங்களையும் , வ்யாபாரங்களையும் காட்டும்.
அதில் ஸ்வரூபத்தை ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே விசிஷ்டமாகவே காட்டும்.
அந்த ஸ்வரூபத்தைச் சொல்லும் போது அவ்வோ தர்மங்களை இட்டல்லது சொல்ல வொண்ணாது .
அவற்றைக் கழித்துப் பார்க்கில் சச விஷாண துல்யமாம் .

வ்யாக்யானம்

ஸ்வரூபம் —என்பது, ஒரு வஸ்துவின் தனித் தன்மையைக் குறிக்கும் . அதனுடைய அசாதாரண தன்மையையும் குறிக்கும்.
உதாரணம் —மரம் — இது அசேதநம் . ஆலமரம் என்று வைத்துக் கொள்வோம் .
இதன் ஸ்வரூபம் –ஆலமரம் . இதன் தனித்தன்மை –சிறிய இலைகள்; சிறிய பழங்கள் .
அசாதாரணத் தன்மை—விழுதுகள் பூமியில் பரவி , அரசனின் ”ரத ,கஜ ,துரக ,பதாதிகள் ” தங்குவதற்கு நிழல் தரும் தன்மை .

ஸ்திதியாவது —-ஸ்வரூபத்தின் நீடிப்பு எனலாம். காலத்தின் போக்கில் அப்படியே இருக்கும். ஆனால், நித்யமில்லாத வஸ்துக்களுக்கு விரிவதும் ,சுருங்குவதுமான
தன்மைகள் இருக்கும். இவை ஈச்வரனின் ஸங்கல்பத்தின்படி ஏற்படும். நித்யமில்லாத வஸ்து; அசேதநம் ; வளரும், சுருங்கும்,பட்டுப்போகும் .

ப்ரவ்ருத்தி —–
செயலாற்றுவது , செயலாற்றாமலும் இருப்பது. இவை கால நிலைக்கு ஏற்ப , அதாவது,
மழை,வெய்யில், வசந்தம் ; இலைகள் துளிர்ப்பது , பட்டுப்போவது.சில காலங்களில் துளிர்வது, பட்டுப்போவது இல்லாமல் அப்படியே இருப்பது.
ஆக ,மேற்சொன்ன மூன்றும் பற்பல ப்ரமாணங்கள் மூலமாக, பொருளுக்குப் பொருள்
( வஸ்துக்கள் ) வேறுபடும்.ப்ரமாணம் என்பது, ஒரு வஸ்துவின் ஸ்வரூபம்,அதன் தன்மை , அதன் செயல்பாடு இவற்றைச் சொல்வது.
ஸ்வரூபத்தைப்பற்றிச் சொல்லும்போது, அந்த ஸ்வரூபத்தின் தன்மைகளும் சொல்லப்படும்.
ஒரு வஸ்துவின் ஸ்வரூபத்தின் தன்மைகளைக் குறிப்பிடாமல் , அந்த வஸ்துவைப் பற்றி மட்டுமே சொல்வது, முயலின் காது பற்றிப் பேசுவதற்கு ஒப்பாகும்.

அதிகாரத்திலிருந்து——

ஜீவ தத்வ நிரூபணம் —
ஜீவனின் ஸ்வரூபம்
ஆகையால் ஜீவ ஸ்வரூபத்தை ஞானத்வம் , ஆனந்தத்வம் ,அமலத்வம் , அணுத்வம் இத்யாதிகளான நிரூபக தர்மங்களை யிட்டு
நிரூபித்து ஞானம், ஆனந்தம், அமலம், அணு என்று இம் முகங்களாலே சொல்லக் கடவது .

வ்யாக்யானம்

ஆகவே , ஜீவனின் ஸ்வரூபத்தை, ஞானம் , ஆனந்தம் , அமலம் ( தூய்மை ), அணு ஆகிய தன்மைகளைக் கொண்டு சொல்லலாம் .
அதாவது—-ஜீவன், ஞானமயமானவன் , ஆனந்தமயமானவன், தூய்மையானவன் , அணுவைப்போன்றவன் என்றெல்லாம் சொல்லலாம்.

அதிகாரத்திலிருந்து—-

ஜீவ தத்வம் –திருமாலுக்கே இயல்பாக அடிமை

இஜ் ஜீவ தத்த்வம் ஸர்வேச்வரனுக்குச் சேஷமாயேயிருக்குமென்றும் அவனுக்கே நிரூபாதிக சேஷமென்றும் அயோகாந்ய யோக வ்யவச்சேதங்களாலே ப்ரதம பதத்திலே
தோன்றின சேஷத்வம் ஸம்பந்த ரூபமாகையாலே ஸம்பந்தி ஸ்வரூபம் நிரூபிதமானாலல்லது அறிய வொண்ணாமையாலே ஜீவனுக்கு இது நிரூபித ஸ்வரூப விசேஷணமென்னலாம் .

அணுத்வே ஸதி சேதநத்வம் போலே ஸ்வத : சேஷத்வே ஸதி சேதநத்வமும் ஜீவலக்ஷணமாகவற்றாகையாலே இச்சேஷத்வம் ஜீவனுக்கு
ஸ்வரூப நிரூபகமென்னவுமாம் .

இப்படி விபுத்வேஸதி சேதநத்வமும் , அனன்யாதீனத்வ நிரூபாதிகசேஷித்வாதிகளும் ஈச்வர லக்ஷணங்கள் .
ஜீவேச்வரரூபமான ஆத்மவர்க்கத்துக்கெல்லாம் பொதுவான லக்ஷணம் சேதநத்வமும் ப்ரத்யக்த்வமும் .
சேதநத்வமாவது ஞானாச்ரயமாகை . ப்ரத்யக்த்வமாவது தனக்குத்தான் தோற்றுகை .
அப்போது தர்மபூதஞான நிரபேக்ஷமாக நான் என்று தோற்றும் .
இப்படி சேதநத்வாதிகள் ஈச்வரனுக்கும் ஜீவனுக்கும் பொதுவாகையாலே அவனிற்காட்டில் வ்யாவ்ருத்தி தோற்றுகைக்காக
ஜீவலக்ஷணத்தில் ஸ்வதச்சேஷத்வாதிகள் சொல்லுகிறது .
ப்ரதமாக்ஷரத்தில் சதுர்த்தியில் தோற்றின தாதர்த்யத்துக்கு உபாதியில்லாமையாலே ஸர்வ ரக்ஷகனான
ஸ்ரீய :பதிக்கு ஜீவாத்மா நிரூபாதிக  சேஷமாயே யிருக்குமென்று இப்படி யாவத்ஸ்வரூபம் ஸம்பந்தம் சொல்லுகை அயோக வ்யவச்சேதம் —
மத்யமாக்ஷரத்தில் அவதாரண ஸாமர்த்யத்தாலே அவனுக்கே நிரூபாதிக சேஷம் . வேறொருத்தருக்கு நிரூபாதிகசேஷமென்கை
அந்யயோக வ்யவச்சேதம் . இச் சேஷத்வம் பாகவத சேஷத்வ பர்யந்தமாக வளரும்படி மேலே சொல்லக் கடவோம்

வ்யாக்யானம்

ஜீவன் என்கிற தத்வம், எப்போதும் எம்பெருமானுக்கு அடிமையாக இருப்பதே .
எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், பகவானுக்கு அடிமையாக உள்ளான்
எப்போதும் அவனுக்காகவே ஜீவன் இருக்கிறான். இதுவே அயோக வ்யவச்சேதம் .
மற்றவர்களுக்காக அல்ல , இது அந்யயோக வ்யவச்சேதம் .

திருமந்த்ரத்தின் முதல் பதமான ப்ரணவத்தின் மூலம் ஜீவன் பகவானுக்கு அடிமை என்பது தெளியலாயிற்று .
இதனால்,ஜீவனுக்கும் பகவானுக்கும் உள்ள ஸம்பந்தம் சொல்லப்பட்டது. இத்தகைய ஸம்பந்தமின்றி ஜீவனைப் பற்றி , ஏதும்
சொல்ல இயலாது. ஜீவனின் தன்மைகள் ”அணு ” என்றும் , ”அறிவுள்ளது ” என்றும் சொல்வதைப் போல
பகவானுக்கு, ஜீவன் அடிமை என்பதும் ஒரு தன்மையே . ஆகவே ,அடிமையாக இருப்பதும் ஜீவனுக்கு ஒரு அடையாளம்
இதைப் போன்றே , அறிவுடன் உள்ளதும், எங்கும் உள்ளதும் ( விபுத்வம் ) ஈச்வரனின் தன்மையாகிறது.
தவிரவும்,பகவான் மற்ற எதனையும் சார்ந்து இல்லை என்பதும், சுதந்திரமாக உள்ளான் என்பதும் , மற்றவற்றிலிருந்து எதையும் எதிர்பாராமல்
உள்ளான் என்பதும், இங்கு அறியப்படவேண்டியவை.
ஜீவன், ஈச்வரன் –ஆத்ம வஸ்துக்கள்—இவற்றிற்கு சேதநத்வம், ப்ரத்யக்த்வம் இரண்டும் பொருந்தும்.

சேதநத்வம்—–ஞானத்துடன் உள்ள நிலை. ப்ரத்யக்த்வம்—-தன்னைப்பற்றிய அறிவுடன் உள்ள நிலை
தர்ம பூத ஞானம் —-ஜீவனிடம் உள்ள ஞானம் –இவற்றின் மூலமாக , ஜீவன் எல்லாவற்றையும் அறிகிறான்.
அதே சமயம் , தன்னைப் பற்றி அறிந்துகொள்ள இந்த தர்மபூத ஞானம் அவச்யமில்லை.
ஜீவனுக்கும், ஈச்வரனுக்கும் . சேதநத்வம், ப்ரத்யக்த்வம் இரண்டும் பொதுவாக இருந்தாலும், ஜீவனின் தன்மையை, ஈச்வரனின் தன்மையிலிருந்து
வேறுபடுத்திக்காட்ட ,ஜீவன் இயல்பாகவே ஈச்வரனின் அடிமை என்று .சொல்லப்படுகிறான்

ஆக , திருமந்த்ரத்தின் முதல் பதமான ப்ரணவத்தின் ”அ ” என்கிற அக்ஷரத்தின் மூலம்
ஜீவன் எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஈச்வரனின் அடிமை என்பது உணர்த்தப்படுகிறது.

இந்த ஸம்பந்தம் ,ஜீவன் உள்ளவரையில் எப்போதுமே இருக்கும் இந்த ஸம்பந்தம் , அயோக வ்யவச்சேதம் எனப்படுகிறது.

ப்ரணவத்தின் நடு அக்ஷரமான ”உ ” என்பதன் பொருள் –”மட்டும் ” எனப்படுகிறது.
அதாவது, ஜீவன், ஈச்வரனுக்காக மட்டுமே உள்ளான் என்றும் மற்றவர்க்காக உள்ளான் என்பது மறுக்கப்படவும் செய்கிறது.
இந்த மறுப்பானது—–அந்யயோக வ்யவச்சேதம் .என்று சொல்லப்படுகிறது.
‘இப்படிப்பட்ட” சேஷத்வம்” பகவான் முதலாக அவன் அடியார்கள் –பாகவதர்கள் வரை
நீடிப்பதை நாம் வேறு ஒரு இடத்தில் விளக்குவோம்

அதிகாரத்திலிருந்து——

சேதநனின் ப்ரவ்ருத்தி

இப்படியிருக்க , சேதநருக்குப் ப்ரவ்ருத்தியாவது ——–பராதீனமுமாய் பரார்த்தமுமான கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் , ஈச்வரன் தன்
போக்த்ருத்வார்த்தமாக இவர்களுக்குக் கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை உண்டாக்குகையால் இவை பரார்த்தங்கள்

வ்யாக்யானம்

சேதனர்களின் செயல்கள் ,பகவானின் ஸங்கல்பத்துக்கு இணங்க கர்மாக்களைச் செய்வதாகும்.அந்தக் கர்மாக்களின் பலனை அனுபவிப்பதுமாகும் .
இவை யிரண்டும், பகவானின் சங்கல்பத்தின் காரணமாகவே நடப்பதால், சேதநர்கள் , பகவானுக்காகவே இருக்கின்றனர்;
தங்களுக்காகவோ மற்றவர்களுக்காகவோ அல்ல .

அதிகாரத்திலிருந்து

பத்த —முக்த–நித்யர் …..மூன்றுவகைச் சேதநர்களும் ,ப்ரவர்த்திகளும் ,வேறுபாடுகளும்

பத்த சேதநருக்கு நீங்கியுள்ளாரில் பேதம் அவித்யா கர்ம வாஸனா ருசி ப்ரக்ருதிஸம்பந்த யுக்தராயிருக்கை.
இவர்களுக்கு, அன்யோன்யம் வரும் ஞானஸுகாதிபேதத்தை ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்தகளான வகுப்புகளிலே கண்டு கொள்வது.
இப்பத்த சேதநர் தந்தாமுக்குக் கர்மாநுரூபமாக ஈச்வரன் அளித்த சரீரங்களை தர்மி ஸ்வரூபத்தாலும் தரியா நிற்பார்கள் .
தர்மியால் வருகிற தாரணம் சரீரத்தினுடைய ஸத்தைக்குப் ப்ரயோஜனமாயிருக்கும்
ஜாக்ரதாத்யவஸ்தையில் தர்மபூத ஞானத்தாலே வருகிற சரீர தாரணம் புருஷார்த்த ததுபாயாநுஷ்டானங்களுக்கும் ,
க்ருதோபாயனான பரமைகாந்திக்கு பகவதனுபவ கைங்கர்யங்களுக்கும் உபயுக்தமாயிருக்கும் .
பாப க்ருத்துக்களுக்கு இச் சரீர தாரணம் விபரீத பலத்துக்கு ஹேதுவாயிருக்கும் . இஜ்ஜீவர்கள் இச்சரீரத்தை விட்டால் இதின்
ஸங்காதம் குலையுமித்தனை . சரீரத்துக்கு உபாதானமான த்ரவ்யங்கள் ஈச்வர சரீரமாய்க் கொண்டு கிடக்கும். பத்த சேதநருக்கு இதரரிற் காட்டில்
ஸ்திதிபேதம் யாவந்மோக்ஷம் அனுவர்த்திக்கை .

ப்ரவர்த்திபேதம் புண்யபாப அநுபயரூபங்களான த்ரிவித ப்ரவ்ருத்திகளும் .முக்தருக்கு நீக்கியுள்ளாராகில் பேதம் ப்ரதிபந்தக நிவ்ருத்தியாலே ஆவீர்பூத ஸ்வரூபராயிருக்கை. ஸ்திதிபேதம் பூர்வாவதியுண்டான ஆவிர்பாவத்துக்கு
உத்தராவதியன்றிக்கேயிருக்கை .

இவர்களுக்கு அன்யோன்யம் ஸ்திதிபேதம் ஆவிர்பாவத்தில் முற்பாடு பிற்பாடுகளால் உண்டான முன்புற்ற
ஏற்றச் சுருக்கம் . ப்ரவ்ருத்திபேதம் அநாதிகாலம் இழந்து பெற்ற பரிபூர்ண பகவதனுபவஜநித ப்ரீதிகாரிதமான யதாபிமத கைங்கர்ய விசேஷங்கள்

நித்யருக்கு நீக்கியுள்ளாரில் பேதம் அநாத்யா ஆவீர்பூத –ஸ்வரூபராய் பரதந்த்ரராய் இருக்கை . இவர்களுக்கு நீக்கியுள்ளாரிற்காட்டில் ஸ்திதிபேதம்
அநாத்யனுவ்ருத்தமான சேஷிதத்வ அநுபவம் . இது நித்யருக்கு எல்லாம் பொதுவானபடியாலே இவர்களுக்கு அன்யோன்யம் ஸ்திதியில்
வைஷம்யம் இல்லை. இவர்களுக்குப் ப்ரவர்த்திபேதம் ”அநாதி ப்ரவாஹ நித்யங்”களான கைங்கர்ய விசேஷங்கள்

வ்யாக்யானம்

பத்தர்—சம்ஸார பந்தம் என்கிற பிடியில் சிக்கியுள்ள சேதநர்கள் –இவர்களுக்கும்
மற்ற சேதநர்களான முக்தர், நித்யர்களுக்கும் வேறுபாடு ஏதென்னில் —
பந்தத்தில் உள்ள சேதநர்கள் அறியாமை ( பகவானைப் பற்றியது ), கர்மாக்கள் அவற்றின் பாப புண்ய அனுபவங்கள், பூர்வ கர்மாக்களின் வாஸனை,
உலக –லௌகிக விஷயங்களில் ஈடுபாடு , இவ்வுலகத் தொடர்பு –இப்படி யாவற்றையும் கொண்டுள்ளனர். ப்ரஹ்மா முதலாக , புல் பூண்டு வரை
ஜீவாத்மாக்களின் ஞானம் ,ஸுக துக்க அனுபவங்கள் முதலியவற்றில் வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம்
அவரவர்களுடைய கர்ம வினைப் பயன் காரணமாக பகவான் அளித்த சரீரங்களைப் பெற்று , அவற்றை ஆதரித்து,அவரவர் ஸ்வரூபம் மூலமாகவும்
தர்மபூத ஞானம் மூலமாகவும் சரீரத்தைப் போஷிக்கின்றனர்.
ஸ்வரூபம் மூலமாகத் தாங்கப்படுவதால்,சரீரம் இருக்கிறது; விழித்திருக்கும்போது தர்மபூதஞானத்தின் மூலமாக ,இந்தச் சரீரமானது,வாழ்வின் புருஷார்த்தங்களைத் தேடுகிறது. பெறவும் முயற்சி செய்கிறது.பரமைகாந்திகளுக்கு ( மோக்ஷத்தைத் தவிர, பகவானிடம் வேறு எதையும் ப்ரார்த்திக்காதவர்கள் ), தர்மபூதஞானம் மூலமாக இந்த உடல்,பகவத் அனுபவத்திலும் , அவனுடைய கைங்கர்யத்திலும் ஈடுபடுத்தப்படுகிறது.

பாபிகளுக்கு, இந்தச் சரீரம் மேன்மேலும் பாபம் செய்யக் காரணமாக இருக்கிறது. ஜீவன் வெளியேறும்போது, இந்தச் சரீரம் அழியத் துவங்குகிறது.
சரீரம் ஏற்படக் காரணமாக இருந்த ”பஞ்ச பூதங்”களும் பகவானின் சரீரமாக ஆகிவிடுகின்றன. பத்த சேதநர்களின் ஸ்திதி—நீடிப்பு –என்பது,
பகவானை அடையும்வரை —மோக்ஷம் பெறும்வரை —சரீரத்துடன் தொடர்பு கொண்டவையாகவே இருக்கும் ( பாப ,புண்ய பலன்களுக்கு ஏற்றவாறு
வெவ்வேறு சரீரங்கள் ) இந்த பத்தசேதநர்களின் ப்ரவ்ருத்தி—- செயல்கள்— மூன்று வகை. பாபம் , புண்யம் , இரண்டும் இல்லாதது.

முக்தர்கள்–முக்தி பெற்றவர்கள் –இவர்களுக்கும் மற்ற ஜீவர்களுக்கும் உள்ள வேறுபாடு யாதென்னில் —
முக்தி பெற்றவர்கள், தங்களுடைய தடைகளைக் கடந்து , தங்களுடைய முக்தர் என்கிற ஸ்வரூபத்தை அடைந்தவர்கள்.
இவர்களுடைய ஸ்திதி அதாவது நீடிப்பு —அடையப்பட்ட ஸ்வரூபத்துடன் முடிவில்லாமல் அப்படியே நீடித்திருப்பது .
இவர்களுடைய ப்ரவ்ருத்தி—செயல்கள்—கணக்கில்லாக் காலமாக இழந்து வருந்திய , பகவானிடம் பக்திகொண்டு
அன்பு காரணமாக, கைங்கர்ய பாக்யத்தை மறுபடியும் பெறுதலேயாகும்

அநாதி ப்ரவாஹ நித்யம் –விளக்கம்
நித்யர்கள்—அநாதியாக எப்போதும் ஸ்ரீவைகுண்டவாஸிகள். இவர்களின் இருப்புக்கு ஆதி கிடையாது, எப்போதும் கைங்கர்யம் செய்துகொண்டு இருப்பதால் இப்போதுதான் ஆரம்பித்தார்கள் என்று கைங்கர்யத்துக்கு ஆதி –அதாவது –ஆரம்பம் சொல்லமுடியாது. ஆதலால்,நித்யரின் கைங்கர்யங்கள்,
அநாதியானவை . நித்யமானவை.எப்போதும் கைங்கர்யம் செய்துகொண்டு இருப்பதால் கைங்கர்யமும் நித்தியமானது.கைங்கர்யம் என்பது
பணிவிடை (அல் ) செய்கை, செயல், க்ரியை . இது நொடிதோறும் மாறுபட்டது.

இது நித்யம் என்று எப்படிச் சொல்லலாம் ,மாறுபட்டுக்கொண்டிருப்பது எப்படி நித்யமாகும் என்றால்,
ஆற்றில் வெள்ளம் வருகிறது; அதிலிருந்து வருபவனை ”வெள்ளம் எப்படி இருக்கிறது ” என்று கேட்டால் ,அப்படியேதான் இருக்கிறது என்பான்.
அதிகப்படியான தண்ணீரின் ஓட்டம் வெள்ளம்; அது மறுநாள் குறையலாம் . நேற்று பார்த்த வெள்ள நீர் கடலில் கலந்து இருக்கும் . ஆனால், ஜீவ நதிகளில்
நீர் என்றும் நித்யமாகவே இருக்கும். நீர் வெவ்வேறாயினும் மாற்றி மாற்றி நீர் ஓட்டம் இருந்துகொண்டே இருக்கும்
இதுதான் ,”ப்ரவாஹ நித்யம் ”.ஒருபொருள் அழிவில்லாமல் இருப்பது , ”ஸ்வரூப நித்யம் ”.

அதிகாரத்திலிருந்து ——

முக்தர்கள்,நித்யர்கள்—- இவர்களுக்கு ஸித்திக்கும் கைங்கர்யங்கள்

அனந்த கருடாதிகளுக்கு அதிகார விசேஷங்களும் ததுசித் கைங்கர்யங்களும் வ்யவஸ்திதங்களாயிருக்க , நித்யருக்கும் முக்தருக்கும் ஸர்வவித கைங்கர்ய
ஸித்தியுண்டென்கிற அர்த்தம் கூடுமோவென்னில் —-
ஸ்வாமியினுடைய அபிப்ராயத்துக்கு ஈடாக தனக்கு அபிமதங்களான கைங்கர்யங்களிலே கிடையாதவை ஒன்றுமில்லையாலும் , ஓரோருத்தருக்கு
வ்யவஸ்திதங்களான கைங்கர்யங்களைத் தாங்கள் அநுஷ்டிக்கிற வேணுமென்கிற அபிஸந்தி வேறொருத்தருக்குப் பிறவாமையாலும்
ஆரேனுமொருவர் அநுஷ்டிக்கும் கைங்கர்யமும் ஸ்வாமிக்குப் ப்ரியமானபடியாலே ததுசித் கைங்கர்யங்களும் ஸர்வருக்கும் ப்ரியமாய் கைங்கர்ய பலமான
ப்ரீதியில் வாசியில்லாமையாலும் ஸர்வருக்கும் ஸர்வவித கைங்கர்ய ஸித்தி உண்டென்கையில் விரோதமில்லை .

வ்யாக்யானம்

ஆதிசேஷன் ,கருடன் முதலான நித்யர்கள் —நித்யஸூரிகள் —இவர்கள் ஒரு குறிப்பிட்ட கைங்கர்யங்களைச் செய்கிறார்கள் எனச் சொல்வதுண்டு.
ஆனால்,எம்பெருமானார் கூறுவதான –நித்யஸூரிகளும் முக்தர்களும் அனைத்துக் கைங்கர்யங்களையும் செய்கின்றனர் –என்பதில் முரண்பட்டு தோன்றுகிறதே
என்னில் ,
அவரவர்கள் தங்களுக்கு விருப்பமான கைங்கர்யங்களைச் செய்ய எந்தத் தடையும் இல்லை; அதேசமயம், ஒருவர் செய்யும் கைங்கர்யத்தைத் தானே
செய்யவேண்டும் என்கிற போட்டி மனப்பான்மை –அதாவது எண்ணம் — அவர்களிடம் இல்லை என்பதே கருத்து. இவர்களில் யார் எந்தக் கைங்கர்யம்
செய்தாலும், எம்பெருமானுக்கு உகப்பே வரும். ஒருவர் செய்யும் கைங்கர்யத்தைப் பார்த்து, மற்றவர்க்கு மகிழ்ச்சியே ஏற்படும் ; அந்த மகிழ்ச்சியில் எந்த
வேறுபாடும் இல்லை; அனைவருக்கும், அனைத்துக் கைங்கர்யமும் உண்டு என்கிற எம்பெருமானார் கூற்றில் முரண்பாடு இல்லை.

பத்தர், முக்தர் இவர்களைக் காட்டிலும், நித்யருக்கு வாசி அதிகம்.
நித்யருடைய கைங்கர்யங்கள், அநாதியானவை. முக்தருடைய கைங்கர்யங்கள் அநாதிகாலமாக இல்லாமல் பின்னால் பெறப்பட்டவை .

கைங்கர்யங்கள்–சேஷத்வம் குன்றாதபடி செய்யவேண்டும். சேஷியின் உகப்புக்குச் செய்யவேண்டும். சேஷியின் உகப்புக்கு ஆகாததைச் செய்யக்கூடாது .
சேஷத்வத்திலேயே நோக்கம் இருக்கவேண்டும். தனக்கு வரும் பெருமையில் நோக்கம் தகாது.

அதிகாரத்திலிருந்து —

தர்ம பூத ஜ்ஞான நிரூபணம்

இவ்வாத்மாக்களெல்லாருக்கும் தர்மிஸ்வரூபம் போலே தர்மபூதஜ்ஞானமும் த்ரவ்யமாயிருக்க , இதன் ஸ்வரூபத்தைத் தனித்து இங்கு அருளிச் செய்யாதொழிந்தது
சேதநரென்று எடுத்த விசிஷ்டத்திலே விசேஷணமாய் சொருகி நிற்கையடியாக

வ்யாக்யானம்

எல்லா ஆத்மாக்களுக்கும் ஸ்வரூபம் என்பது அடிப்படையாக இருப்பதைப் போல தர்மபூத ஜ்ஞானமும் அடிப்படையாக இருக்கிறது.
இப்படியான , தர்மபூதஜ்ஞானத்தின் ஸ்வரூபத்தை இங்கு சொல்லாமல் இருப்பதன் காரணம், சேதநன் என்று சொல்லும்போது
அந்த வார்த்தையிலேயே ஸ்வரூபமும் அடங்கி இருப்பதாகும்

அதிகாரத்திலிருந்து—-

தர்மபூதஜ்ஞானத்தின் ஸ்வரூப–ஸ்திதி–ப்ரவ்ருத்திகள்

இத் தர்மபூதஜ்ஞானம் விஷய ப்ரகாஸ தசையிலே ஸ்வாச்ரயத்துக்கு ஸ்வயம் ப்ரகாசமாயிருக்கும்
இது ஈச்வரனுக்கும் நித்யருக்கும் நித்யவிபுவாயிருக்கும் . மற்றுமுள்ளோருக்கு ஸம்ஸாராவஸ்தையில் கர்மாநுரூபமாக பஹுவித ஸங்கோச விகாஸவத்தாய்
முக்தாவஸ்தையிலே ஏகவிகாஸத்தாலே பின்பு யாவத்காலம் விபுவாயிருக்கும்

இதுக்கு ப்ரவ்ருத்தியாவது விஷயங்களை ப்ரகாசிப்பிக்கையும் ,ப்ரயத்நாவஸ்தையிலே சரீராதிகளைப் ப்ரேரிக்கையும் , பத்த தசையில் ஸங்கோச விகாரங்களும் ,
ஆனுகூல்ய ப்ரதீகூல்ய ப்ரகாசமுகத்தாலே போகமென்கிற அவஸ்தையை அடைகையும் . போகமாவது தனக்கு அனுகூலமாகவாதல் ஒன்றை அனுபவிக்கை

வ்யாக்யானம்

தர்மபூதஜ்ஞானம் என்னும் இது, அந்தந்த ஆத்மாவிற்குத் தகுந்த காலத்தில் தானாகவே வெளிப்படும். எம்பெருமானுக்கும் ,நித்யர்களுக்கும் எங்கும் எப்போதும்
சகலத்தையும் அறியும் விதமாகஇது விளங்கும்.முக்தர்களுக்கு, ஒருமுறை நன்கு மலர்ந்து, மறுபடியும் சுருங்காமல் நீடித்து இருக்கும். பத்தர்களுக்கு, அவரவர்
கர்மவினைகளுக்கு ஏற்ப விரிவடைந்தும் , சுருங்கியும் விளங்கும்.

தர்மபூத ஜ்ஞானத்தின் ப்ரவ்ருத்தி என்பது, எல்லா விஷயங்களையும் குறித்த ஜ்ஞானத்தை ஏற்படுத்துவது. சரீரத்தையும் புலன்களையும் கட்டளைக்கு
உட்படுத்துவது, அதற்கான விருப்பத்தை ஏற்படுத்துவது, ஸம்ஸாரத்தில் விரிவடைவது; சுருங்குவது. இப்படி விஷயங்களை அனுபவிக்கும்போது,
எதை ஏற்பது என்பனவற்றையும் அனுபவிப்பதில் எது ஏற்புடைத்து என்பதையும் உணர்த்துவது.

அதிகாரத்திலிருந்து

தர்மபூதஜ்ஞானம் பற்றி மேலும் சில விளக்கங்கள்

ஈச்வர விபூதியான ஸர்வ வஸ்துவுக்கும் ஆனுகூல்யம் ஸ்வபாவமாய் இப்படி ஈச்வரனும் நித்யரும் முக்தரும் அனுபவியா நிற்க , ஸம்ஸாரிகளுக்குக்
காலபேதத்தாலும் புருஷபேதத்தாலும் தேசபேதத்தாலும் அல்பானுகூலமாயும் ப்ரதிகூலமாயும் உதாஸீனமாயுமிருக்கிற இவ்விபாகங்களெல்லாம்
இவ்வஸ்துக்களுக்கு ஸ்வபாவ ஸித்தங்களல்ல . இது இவர்களுடைய கர்மங்களுக்கீடாக ஸத்ய ஸங்கல்பனான ஈச்வரன் இவர்களுக்கு
பலப்ரதானம் பண்ணினப் ப்ரகாரம்

இக்கர்மபலம் அனுபவிக்கைக்குப் பத்தருக்கு ஸ்வரூப யோக்யதையும் ஸஹகாரியோக்யதையுமுண்டு. ஸ்வரூப யோக்யதை பரதந்த்ரசேதநத்வம் .
ஸஹகாரி யோக்யதை ஸாபராதத்வம். நித்யருக்கும் முக்தருக்கும் பரதந்த்ர சேதநதையாலே ஸ்வரூபயோக்யதையுண்டேயாகிலும்
ஈச்வராநபிமத விபரீதாநுஷ்டானமில்லாமையாலே ஸஹகாரி யோக்யதை இல்லை . ஈச்வரன் ஸர்வம்ப்ரசாஸிதவாய்த் தானொருத்தருக்கு
சாஸநீயனன்றிக்கே நிற்கையாலே பரதந்த்ர சேதநத்வமாகிற ஸ்வரூப யோக்யதையுமில்லை . ஸ்வதந்த்ராஞாதிலங்கனமாகிற ஸஹகாரி
யோக்யதையுமில்லை

ஜீவேச்வரரூபரான ஆத்மாக்களெல்லாருடையவும் ஸ்வரூபம் ஸ்வஸ்மை ஸ்வயம்ப்ரகாஸம் . இத்தர்மிஸ்வரூப ப்ரகாசத்துக்குப் பத்தருக்குமுள்பட
ஒரு காலத்திலும் ஸங்கோச விகாஸங்களில்லை . ஸர்வாத்மாக்களுடையவும் தர்மபூதஜ்ஞானம் விஷய ப்ரகாசன வேளையிலே ஸ்வாச்ரயத்துக்கு
ஸ்வயம் ப்ரகாஸமாயிருக்கும் . ஜ்ஞானத்தவமும் ஸ்வயம்ப்ரகாஸத்வமும் தர்மதர்மிகளுக்கு ஸாதாரணம் . தர்மபூதஜ்ஞானத்துக்கு விஷயித்வமேற்றம் .
தர்மியான ஆத்மஸ்வரூபத்துக்குப் ப்ரத்யக்த்வம் ஏற்றம். ஜ்ஞானத்வமாவது கஸ்யசித் ப்ரகாசத்வம் ,
அதாவது தன்னுடையவாகவுமாம் , வேறொன்றினுடைய வாகவுமாம் ஏதேனுமொன்றினுடைய வ்யவஹாரானுகுண்யத்தைப்பண்ணுகை
ஸ்வயம்ப்ரகாஸத்வமாவது தன்னை விஷயீகரிப்பதொரு ஞானாந்தரத்தால் , அபேக்ஷையறத்தானே ப்ரகாசிக்கை .
தர்மபூதஜ்ஞானத்துக்கு விஷயித்வமாவது தன்னையொழிந்ததொன்றைக் காட்டுகை.

ஆத்மாக்களுக்குப் ப்ரத்யக்தமாவது ,ஸ்வஸ்மைபாஸமானத்வம் .
அதாவது தன் ப்ரகாசத்துக்குத்தான் பலியாயிருக்கை என்றபடி ஏதேனுமொரு வஸ்துவின் ப்ரகாசத்துக்குப் பலியென்கிற ஸாமான்யாகாரத்தைத்
தன் ப்ரகாசத்துக்குத் தான் பலியென்று விசேஷித்தவாறே ப்ரத்யக்த்வமாம் .
இவ்விசேஷமில்லாத வஸ்துவுக்கு இஸ்ஸாமான்யமும் இத்தோடு வ்யாப்தமான சேதனத்வமுமில்லை . இத்தர்ம தர்மிகளிரண்டும் ஸ்வயம் பிரகாசமாயிருந்தாலும்
நித்யத்வாதி தர்மவிசேஷ விசிஷ்டரூபங்களாலே ஞானாந்தர வேத்யங்களுமாம் . தன்னுடைய தர்மபூதஜ்ஞானம் தனக்கு ஞானாந்தர வேத்யமாம்போது
ப்ரஸரணபேதமாத்ரத்தாலே ஞானாந்தர வ்யபதேசம் .

வ்யாக்யானம்

ஈச்வரனின் –பகவானின்–விபூதியான எல்லாப் பொருட்களுமே , அவற்றின் இயல்பு மாறாமல், எல்லோராலும் ஏற்கப்படும் தன்மையில் உள்ளன.
ஈச்வரன், நித்யர்கள், முக்தர்கள் ஏற்கிறார்கள். ஆனால்,பத்தருக்கு– ஸம்ஸாரிகளுக்கு இந்தப்பொருள்கள் ( விபூதிகள் ) , சில நேரங்களில் ,
சில இடங்களில் , ஒரு சில பத்தருக்கு ஏற்கும்படியாகவும்,வேறு சில நேரங்களில், சில இடங்களில் சில பத்தருக்கு ஏற்காதபடியும் உள்ளன.
ஆனால், இந்த முரண்பாடுகள் ,அந்தப் பொருட்களிடம் இயற்கையாகவே இருப்பதில்லை. இப்படி நேருவது, அந்தந்த பத்தர்களின் கர்மவினை காரணமாக
ஈச்வரனின் மாற்ற இயலாத ஸங்கல்பத்தினால் ஏற்படுகின்றன.

இங்கு காலபேதம் –என்பதாவது—-சீதகாலத்தில் அநுகூலமான அக்நி , உஷ்ண காலத்தில் பிரதிகூலமாக இருப்பதைப்போலே . ஒட்டகத்துக்கு, முள்
அநுகூலமென்றால் மாட்டுக்குப் புல் அநுகூலமானதைப் போலே —

பத்தர்கள் –ஸம்ஸாரிகள் –இப்படிக் கர்மவினைகளை அநுபவித்தலென்பது , ஈச்வரனுக்கு அடங்கியவர்கள் என்பதால் இயற்கை , வேறு சில காரணங்களுமுண்டு
என்பதால், பகவானுக்கு எதிரான பாபச் செயல்களைச் செய்வதாகும்.
நித்யர்கள், முக்தர்களுக்கும் ஈச்வரனுக்குக் கட்டுப்பட்டு இருப்பதால், கர்மபலன் அனுபவித்தல் என்பது அவர்களுக்கும் உண்டு. ஆனால், பகவானின்
விதிகளை மீறாமல் இருப்பதால், வேறு காரணங்கள் என்பவை இவர்களுக்கு இல்லை.
பகவான், அனைத்தையும் நியமிப்பவன் ; எவருக்கும் கட்டுப்பட்டு இல்லாதவன் , ஆகையால், பகவானுக்குக் இப்படியான அனுபவித்தல் என்பது இயற்கையாகவே இல்லை. இப்படித்தான் செயலாற்றவேண்டும் என்று பகவானைச் சொல்ல யாரும் கிடையாது; ஆதலால்,மற்ற காரணங்களால் என்கிற பேச்சும் இவருக்கு இல்லை.
ஸ்வரூப யோக்யதை—-கர்மபலனை இயற்கையாகவே அனுபவிப்பது
ஸஹகாரி யோக்யதை–கூடவே உள்ள வேறு காரணங்களான , பகவானுக்கு எதிராகப் பாபச் செயல்களைச் செய்வது

ஜீவ , ஈச்வர ரூப ஆத்மாக்கள் –(ஜீவாத்மாக்கள் எண்ண இயலாதவை ; ஈச்வரன் ஒருவனே)
இவை யாவும் ஸ்வயம் ப்ரகாசமுள்ளவை –அதாவது, தங்களுக்குத் தாங்கள்
ப்ரகாசமானவை. இது,ஸம்ஸாரிகள் உட்பட, யாருக்கும் எப்போதும்
விரிவதோ சுருங்குவதோ இல்லை.
ஆத்மாவுக்கு இயற்கையாகவே உள்ள ஜ்ஞானம் —ஸ்வரூப ஜ்ஞானம்
இதைத் தவிர தர்மபூதஜ்ஞானம் உள்ளது. இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை யாதெனில்,
இவை இரண்டுமே , மற்ற எவற்றின் உதவியில்லாமலே , ப்ரகாசிப்பவை( ஸ்வயம்பிரகாசம் )
.தர்மபூதஜ்ஞானத்தின் விசேஷம்—-பொருள்களை உணர்த்துவது –விஷயித்வம் .
ஸ்வரூபஜ்ஞானத்தின் விசேஷம் —தன்னைத்தானே உணர்த்துவது —ப்ரத்யக்த்வம்
இவையிரண்டுக்கும் பொதுவாக உள்ள ஜ்ஞானம் — தன்னைப்பற்றியோ,
மற்றொன்றைப் பற்றியோ உணர்த்துவது ;தன் மீதோ ,மற்றவற்றின் மீதோ
செயலாற்ற வைக்கிறது.
ஸ்வயம் ப்ரகாசம் என்பது, தன்னை உணர்த்த /விளக்க/ அறிய,
மற்ற ஏதோ ஒரு ஜ்ஞானம் அவச்யமில்லாமல் தானாகவே தன்னை உணர்த்துதல்
தர்மபூதஜ்ஞானம் —தன்னை அல்லாமல், மற்றொரு பொருளை உணர்த்துவது.
ஸ்வரூப ஜ்ஞானம் —தன்னையே உணர்த்துவது
இவை பொதுவான கருத்து.
ஒரு ஆத்மாவின் ஸ்வரூபஜ்ஞானம் தன்னையே அறிந்து அதனால் தானே
பலனடைவது–இது ப்ரத்யக்த்வம் என்று பார்த்தோம். இப்படி ப்ரத்யக்த்வம் இல்லாதவை
சேதநன் என்று கூற இயலாது.
தர்மபூதஜ்ஞானமும் ,இது உள்ள ஆத்மாவும் (சேதநன்). தங்களைத் தாங்களே
வெளிப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தாலும் , சாஸ்த்ரம் மூலமாக
வெளிப்படுத்தி, நித்யத் தன்மை போன்றவற்றை விளக்கும்.
தானே வெளிப்படும் தர்மபூதஜ்ஞானமும், மற்ற ஒரு ஜ்ஞானத்தின்
மூலமாகவும் விளக்கப்படலாம் –இப்படிப்பட்ட ஜ்ஞானம் என்பது
தர்மபூதஜ்ஞானத்தின் ஒரு பகுதியே ஆகும்

அதிகாரத்திலிருந்து

மூன்று வகை அசேதநங்கள் –நிரூபணமும், இலக்கணமும்

த்ரிவிதாசேதனங்களும் பரருக்கே தோன்றக்கடவனவாயிருக்கும் அசேதநத்வமாவது
ஞானாச்ரயமன்றிக்கேயொழிகை . பிறருக்கே தோன்றுகையாவது தன்
ப்ரகாசத்துக்குத்தான் பலியன்றிக்கேயொழிகை . இவையிரண்டும் தர்மபூத
ஞானாதிகளுக்கும் துல்யம்

த்ரிவிதாசேதனங்களென்றெடுத்தவற்றில் ப்ரக்ருதியும் காலமும் ஜடங்கள் .
ஸுத்தஸத்வமான த்ரவ்யத்தையும் ஜடமென்று சிலர் சொல்லுவார்கள்
ஜடத்வமாவது ஸ்வயம்பிரகாசமன்றிக்கேயிருக்கை . பகவத்சாஸ்த்ராதி
பராமர்சம் பண்ணினவர்கள் ஞானாத்மகத்வம் சாஸ்வ ஸித்தமாகையாலே
ஸுத்தஸத்வத்ரயத்தையும் ஸ்வயம்ப்ரகாசமென்பார்கள்

இப்படி ஸ்வயம் ப்ரகாசமாகில் ஸம்ஸாரிகளுக்கு சாஸ்த்ரவேத்யமாக வேண்டாதே
தானே தோன்ற வேண்டாவோவென்னில் ஸர்வாத்மாக்களுடையவும்
ஸ்வரூபமும் தர்மபூத ஞானமும் ஸ்வயம் ப்ரகாசமாயிருக்க ஸ்வரூபம்
தனக்கே ஸ்வயம் பிரகாசமாய் வேறெல்லார்க்கும் ஞானாந்தரவேத்யமானாற்
போலவும் தர்மபூத ஞானம் ஸ்வாச்ரயத்துக்கே ஸ்வயம்ப்ரகாசமாய்
இதரருக்கு ஸ்வயம்ப்ரகாசம் அல்லாதாப்போலவும் , இதுவும் நியதவிஷயமாக
ஸ்வயம்ப்ரகாசமானால் விரோதமில்லை

யோ வேத்தி யுகபத்ஸர்வம் ப்ரத்யக்க்ஷேண ஸதா ஸ்வத :
தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்த்ரம் ந்யாயதத்வம் ப்ரஸக்ஷ்மஹே
என்கிறபடியே தர்மபூத ஞானத்தாலே ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரித்துக்
கொண்டிருக்கிற ஈச்வரனுக்கு ஸுத்தஸத்வத்ரயம் ஸ்வயம்ப்ரகாசமாயிருக்கிறபடி
எங்ஙனேயென்னில் —-
இவனுடைய தர்மபூத ஞானம் திவ்யாத்மஸ்வரூபம் ஸ்வயம்ப்ரகாசமாயிருக்கிறாப்போல
இதுவும் ஸ்வயம் ப்ரகாசமாயிருக்கலாம் . இப்படி நித்யருக்கும் துல்யம் .
விஷயப்ரகாச காலத்திலே தர்மபூத ஞானம் ஸ்வாச்ரயத்துக்கே ஸ்வயம்ப்ரகாசமானாற்போலே
முக்தருக்கும் அவ்வவஸ்தையிலே இதுவும் ஸ்வயம் ப்ரகாசமானால் விரோதமில்லை
தர்மபூத ஞானத்தினுடைய ஸ்வாத்ம ப்ரகாசன சக்தியானது ,விஷயப்ரகாசமில்லாத
காலத்தில் கர்மவிசேஷங்களாலே ப்ரதிபத்தையானாற்போலே ஸுத்தஸத்வத்தினுடைய
ஸ்வாத்ம ப்ரகாசன சக்தியும் பத்ததசையில் ப்ரதிபத்தையாகையாலே , ஸுத்தஸத்வம்
பத்தருக்கு ப்ரகாசியாதொழிகிறது

திய : ஸ்வயம்ப்ரகாசத்வம் முக்தொள ஸ்வாபாவிகம் யதா
பத்தே கதாஸித்ஸம்ருத்தம் ததா அத்ராபி நியம்யதே

இவ்வளவு அவஸ்தாந்தராபத்தி விகாரித்ரவ்யத்துக்கு விருத்தமன்று . ஆகையாலே
ப்ரமாணப்ரதிபந்நார்தத்துக்கு யுக்திவிரோதம் சொல்ல வழியில்லை .
இங்ஙனன்றிக்கே உபசாரத்தாலே நிர்வஹிக்கப் பார்க்கில் ஆத்ம ஸ்வரூபத்திலும்
ஞானாதிசப்தங்களை அன்யப்பரங்களாக்கலாம் . ஸ்வயம் ப்ரகாசத்துக்கு
ரூபரஸாதிகுணங்களுக்கும் அவையடியாக வந்த ப்ருதிவ்யாதி விபாகமும் பரிணாமாதிகளும்
கூடுமோவென்கிற சோத்யமும் தர்மபூத ஞானத்துக்கும் தர்மிஞானத்துக்குமுண்டான
வைஷ்மயங்களை ப்ரதிபந்தியாகக் கொண்டு ப்ரமாணபலத்தாலே பரிஹ்ருதம் .
இப்படி ஸ்வயம் ப்ரகாசமான ஸுத்தஸத்வ த்ரயத்தை ஞாத்ருத்வமில்லாமையாலே
த்ரிவிதாசேதநங்களென்று சேரக்கோத்தது

இவ்வசேதனங்கள் மூன்றுக்கும் ப்ரவ்ருத்தியாவது ஈச்வரஸங்கல்பானுரூபங்களான விசித்ர பரிணாமாதிகள்

வ்யாக்யானம்

ப்ரக்ருதி, காலம்,ஸுத்தஸத்வம் –மூன்று வகையான அசேதனங்கள்

மூன்று வகையான அசேதனங்கள் –பரருக்கே –மற்ற ஜீவன்களுக்கே தோன்றுகின்றன
தங்களுக்காக அல்ல.
அசேதனம் என்பது— ஞானம் இல்லாமலிருப்பது
மற்றவர்களுக்காகவே தோன்றுவது என்பது — அவை,தங்களுக்குத் தாங்களே
பலன் அளித்துக்கொள்வதில்லை என்பதாகும் . ஞானம் இல்லாமலிருப்பது ,
தனக்காக இல்லாமலிருப்பது –இவையிரண்டும்—இவர்களுடைய தர்மபூத ஞானம்
என்பதற்குப் பொருந்தும்.

மூன்று வகையான அசேதனங்கள் என்று பார்த்தோம் . இவற்றில் ப்ரக்ருதி , காலம்
இரண்டும் ஜடப்பொருள்கள் , ஒரு சிலர் ஸுத்தஸத்வத்தையும் ஜடப்பொருள் என்று
சொன்னாலும்,அது அப்படியல்ல
ஜடப்பொருள் என்றால் தன்னைத் தானே வெளிப்படுத்த முடியாத பொருள்
என்று அர்த்தம்.
சாஸ்த்ரங்கள் சொல்கின்றன; பாஞ்சராத்ரம் முதலான ஆகம வல்லுநர்கள்
-சொல்வது—–ஸுத்தஸத்வம் என்பது ஜ்ஞானம் முழுவதும் உள்ள அசேதநம் —
ஆதலால் இது ஜடம் அல்ல , தானாகவே வெளிப்படக்கூடியது –இது ஸுத்தஸத்வம்
(அதாவது, முழுவதும் ஸத்வமயம் .பரமபதம் என்கிற ஸ்ரீவைகுண்டம்
முழுதும் ஸுத்தஸத்வம் — )

ஸுத்தஸத்வம் தானாகவே வெளிப்படும் திறனுள்ளது;சாஸ்த்ரங்கள் மூலமாக
தெரிந்துகொள்ளத் தேவையில்லையெனில் ,ஸம்ஸாரிகளுக்கு –பத்தர்களுக்கு —
ஏன் புலப்படவில்லை என்றால்—–
ஜீவனின் ஸ்வரூபம் –பத்தர் –அவரவர்க்கு மட்டுமே வெளிப்படும். ஸ்வயம்ப்ரகாசம்
என்று பார்த்தோம். இயற்கையாகவே ஆத்மாவிற்கு–சேதநன் –பத்தன் —
என்று எந்தப் பெயரிட்டுச் சொன்னாலும்–ஸம்ஸாரிகளுக்கு இயற்கையாகவே
உள்ளது. இந்த ஆத்மா–ஸம்ஸாரி —மற்றவர்களை அறிய தர்மபூத ஞானம் உதவுகிறது.
இந்த தர்மபூத ஞானம்அந்தந்த ஆத்மாவுக்கு மட்டுமே புலப்படும்.
ஸுத்தஸத்வம் என்பது,, ஈச்வரன், நித்யர் முக்தர் –இவர்களுக்கு மட்டுமே
தானாகவே வெளிப்படும். மற்றவர்களுக்கு வெளிப்படாது.

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிய ”ந்யாய தத்வத்”தின் மங்கள ச்லோகத்தை
ஸ்வாமி தேசிகன் இங்கு சொல்கிறார்
யோ வேத்தி யுகபத்ஸர்வம் ப்ரத்யக்க்ஷேண ஸதா ஸ்வத :
தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்த்ரம் ந்யாயதத்வம் ப்ரஸக்ஷ்மஹே

எந்த ஸர்வேச்வரன் , எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் தனது ஸ்வபாவம்
மூலமாக அறிகிறானோ அந்த ஸ்ரீ ஹரியை நமஸ்கரித்து , ந்யாயதத்வம்
என்கிற இந்த சாஸ்த்ரத்தைக் கூறுகிறோம்
ஒரு சந்தேகம் வரலாம் —-
ஸுத்தஸத்வம் , பகவானின் தர்மபூத ஞானம் மூலமாக அவனுக்குப்
புலப்படுகிறது என்று வைத்துக்கொண்டால் , ,பகவானுக்கு , அது ,தானாகவே
புலப்படுவது என்று கூறுவது சரியா ?
பகவானின் தர்மபூத ஞானம் அவனுடைய திவ்ய ஸ்வரூபம் உட்பட
எல்லாவற்றையும் புலப்படவைக்கிறது . என்றாலும் , அவனது ஸ்வரூபம் தானாகவே
வெளிப்படவல்லது என்று அறுதியிட்டுச் சொல்வதைப்போல
ஸுத்தஸத்வமும் , தர்மபூத ஞானம் மூலமாக வெளிப்பட்டாலும்
தானாகவே வெளிப்படுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது
சாஸ்த்ர முடிவு.நித்ய ஸூரிகளுக்கும் இப்படியே
ஒரு பொருளைத் தெரிந்துகொள்ளவேண்டிய சமயத்தில் , ஆத்மாவிற்கு ,
தர்மபூத ஞானம் தானாகவே வெளிப்படுவதைப்போல ,
முக்தர்களுக்கு , ஸுத்தஸத்வமும், தானாகவே வெளிப்படுத்திக்கொள்ளும் .
இதில் முரண்பட்டு ஏதுமில்லை.
ஆனால், பத்தனுக்கு , ஸம்ஸாரிகளுக்கு , கர்மவினை காரணமாக ,
ஒரு பொருளை உணர்த்தவேண்டிய சமயத்தில், தர்மபூத ஞானம் தடைப்படும் .
இதைப் போலவே, ஸம்ஸாரத்தில் உள்ளவர்களுக்கு ஸுத்தஸத்வமும்
தானாகவே வெளிப்படுத்த இயலாமல் போகும்.

திய : ஸ்வயம்ப்ரகாசத்வம் முக்தொள ஸ்வாபாவிகம் யதா
பத்தே கதாஸித்ஸம்ருத்தம் ததா அத்ராபி நியம்யதே

மோக்ஷ வேளையில் , தானாகவே வெளிப்படும் தர்மபூத ஞானம்
ஸம்ஸாரத்தில் சில நேரங்களில் தடைப்படுகிறது . இதைப்போலவே
ஸுத்தஸத்வ விஷயத்திலும் நேருகிறது.

இவ்வளவு — அவஸ்தாந்தராபத்தி—-வேறு ஒரு நிலையை அடைவதானது —
பொருள்கள் மாற்றமடையும்போது அவை ஒரு சிலரால் ஏற்கப்படுவதோ
நிராகரிக்கப்படுவதோ நிகழலாம். மற்றவர்கட்கும் இப்பொருள் குறித்து
இதே போன்ற நிலை ஏற்படலாம் இதில் முரண்பட்டு ஏதுமில்லை .
சாஸ்த்ரங்களைப் ப்ரமாணமாக எப்போதும் ஏற்கவேண்டும்.
ஸுத்தஸத்வம் , சேதநன் மேலும் அறிபவன் ஆகிய இரண்டின்
தன்மையும் இல்லாமலிருப்பதால் , அசேதனத்தில் சேர்க்கப்பட்டது.

இந்த மூன்று அசேதனங்களின் ப்ரவ்ருத்தி என்பது, பகவானின்
ஸங்கல்பத்தின்படி தொடர்ந்து மாறியபடியே இருப்பதே இவற்றின்
பரிணாமம்

அதிகாரத்திலிருந்து —

த்ரிகுண த்ரவ்யத்தின் ஸ்வரூப –ஸ்திதி

இவற்றில் த்ரிகுண த்ரவ்யத்துக்கு ஸ்வரூப பேதம் குணத்ரயாச்ரயத்வம்
ஸததபரிணாமசீலமான இத்த்ரவ்யத்துக்கு ஸத்த்வரஜஸ்தமஸ்ஸுக்கள்
அன்யோன்யம் ஸமமானபோது மஹாப்ரளயம் . விஷமமானபோது ஸ்ருஷ்டி
ஸ்திதிகள் . குணவைஷம்யமுள்ள ப்ரதேசத்திலே மஹதாதி விகாரங்கள் . இதில்
விக்ருதமல்லாத ப்ரதேசத்தையும் விக்ருதமான ப்ரதேசத்தையுங்கூட
ப்ரக்ருதி மஹதஹங்கார தன்மாத்ர பூதேந்த்ரியங்களென்று இருபத்துநாலு
தத்வங்களாகச் சாஸ்த்ரங்கள் வகுத்துச் .சொல்லும் சில விவக்ஷா விசேஷங்களாலே
ஓரோரிடங்களில் அவாந்தர வகுப்புக்களும் அவற்றின் அபிமானி தேவதைகளும்
அவ்வோ உபாஸநாதிகாரிகளுக்கு அறிவெனும். ஆத்மாவுக்கு அவற்றிற்காட்டில்
வ்யாவ்ருத்தியறிகை இங்கு நமக்குப் ப்ரதானம்

வ்யாக்யானம்

மூன்று அசேதனங்களில் ,ப்ரக்ருதியின் ஸ்வரூபம் என்பது மூன்று குணங்களுடன் உள்ளது .
இந்தப் ப்ரக்ருதி எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.ப்ரக்ருதியில் உள்ள
ஸத்வ ,ரஜஸ் ,தாமஸ குணங்கள் யாவும் சரிசமமாக இருக்கும்போது
மஹா.ப்ரளயம் ஏற்படுகிறது . இவற்றில் வேறுபாடு இருக்கும்போது ஸ்ருஷ்டி
உண்டாகிறது. இந்தக் குணங்களில் ஏற்றத்தாழ்வு உண்டாகும்போது ,
”மஹத்” முதலானவைகளாக மாறுகிறது.
மாறாமல் உள்ள ப்ரக்ருதியின் பகுதி, மாறும் ப்ரக்ருதியின் பகுதி –இவற்றை,
சாஸ்த்ரங்கள் 24 தத்வங்களாகப் பிரிக்கின்றன.
இந்தப் பிரிவுகளைப் பற்றிய விவரங்களையும், ஒவ்வொரு பிரிவுக்கான தேவதையையும்
இவற்றைத் த்யானம் செய்யத் தகுதி உள்ளவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்
இவை யாவும், ஆத்மாவைக் காட்டிலும் வேறானவை. அந்த வேறுபாடு என்ன என்பதையும்
அறியவேண்டும்

அதிகாரத்திலிருந்து —-

தத்வங்கள் ,ஈச்வரனுக்கு ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும் இருப்பது

இவையெல்லாம் ஸர்வேச்வரனுக்கு அஸ்த்ரபூஷணாதி ரூபங்களாய் நிற்கும் நிலையை

புருடன் மணிவரம் ஆக பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான் தண்டாகத்
தெருள் மருள்வா ளுறையாக வாங்கா ரங்கள் சார்ங்கஞ்சங் காகமனம் திகிரியாக
விருடிகங்க ளீரைந்துஞ் சரங்களாக இருபூத மாலை வனமாலையாகக்
கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் கரிகிரிமேல் நின்று அனைத்தும் காக்கின்றானே-என்கிற கட்டளையிலே அறிகை உசிதம்

இருபத்துநாலு தத்வங்களுக்கும் அன்யோன்ய ஸ்வரூபபேதமும் அவ்வோ
லக்ஷணங்களாலே ஸித்தம் . இவற்றில் கார்யமான இருபத்துமூன்று
தத்வங்களுக்கும் இவற்றால் ஆரப்தங்களானவற்றுக்கும் ஸ்திதியில்
வரும் ஏற்றச் சுருக்கங்கள் புராணங்களிலே ப்ரஸித்தமானபடியே கண்டு
கொள்வது.
ஸ்வஸத்தா பாஸகம் ஸத்த்வம் குணஸத்த்வாத்விலக்ஷணாம்
தமஸ : பரமோ தாதா அப்ராக்ருதம் ஸுரைர்வந்த்யம்-இத்யாதிகளாலே தமஸ்ஸுக்கு மேலான தேசவிசேஷம் ஸித்திக்கையாலே

அனந்தஸ்ய ந தஸ்யாந்த : ஸங்க்யானம் வா அபி வித்யதே
ததனந்தபஸங்க்யாத ப்ரமாணம் சாபி வை யத :-இத்யாதிகள் நித்யவிபூதியில் அவச்சின்னமல்லாத ப்ரதேசத்தாலே மூலப்ரக்ருதிக்கு
ஆனந்த்யம் சொல்லுகின்றன

வ்யாக்யானம்

இந்த 24 தத்வங்களும் எம்பெருமானுக்கு ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும்
இருப்பதை , ”புருடன் மணிவரமாக —” என்னும் பாசுரம் சொல்கிறது.

ஸ்வாமி தேசிகனின் ”அதிகார சங்க்ரஹம் ”–பாசுரம் 41

கருடனுடைய சரீரம் வேதங்கள்; இந்த வேதங்களின் பொருள் கண்ணன்.

ஜீவன் –கௌஸ்துப ரத்னம் ;மூல ப்ரக்ருதி –ஸ்ரீவத்ஸம் என்கிற மறு ; மஹத்வம் —
கௌமோதகி என்கிற கதை ; ஜ்ஞானமும் ,அஜ்ஞானமும் —கந்தகம் என்கிற கத்தி ,
அதன் உறை ; ஸாத்விக அஹங்காரம்—சார்ங்கம் என்கிற வில் ;தாமஸ அஹங்காரம் —
சங்கம் ; மனஸ் —சக்ரம் ; ஈரைந்து இந்த்ரியங்கள் —-பாணங்கள் ;
தன்மாத்ரை 5ம் பூதங்கள் 5ம் —வனமாலை;

இப்படியாக, சகல தத்வங்களும் ,ஆயுதமாகவும் ஆபரணமாகவும்
இருக்க,ஹஸ்திகிரியின் மேலே எல்லோரும் தரிசிக்கும்படி நின்று
எல்லாவற்றையும் காப்பாற்றுகிறான்

ஈரைந்து இந்த்ரியங்கள் —- ஜ்ஞானேந்திரியங்கள் 5ம் கர்மேந்த்ரியங்கள் 5ம் — பாணங்கள் ;
தன்மாத்ரை 5ம்—ஸப்தம் , வாயு, தேஜஸ், ஜலம் , மண்.
பூதங்கள் 5ம் — ஆகாசம் , காற்று,நெருப்பு, ஜலம் ,மண் ஆக 10ம் —வனமாலை;

இந்த 24 தத்வங்களின் ஸ்வரூபம் அவற்றின் இலக்கணம் தெரிந்துகொள்ளவேணும்
இவற்றில் 23 தத்வங்கள் , ப்ரக்ருதியின் மாறுதல்களால் ,ப்ரக்ருதியின் கார்யமாக
வெளியாகிறது . மேலும் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மாறுதல்களை
ஏற்படுத்துகின்றன இவற்றின் விளைவுகளும் வேறானவை.இவை புராணங்களில் உள்ளன.

ஸ்வஸத்தா பாஸகம் ஸத்த்வம் குணஸத்த்வாத்விலக்ஷணாம்—பௌஷ்கர ஸம்ஹிதை
ஸுத்தஸத்வம் என்பது தானாகவே வெளிப்படுவது; இந்த ஸுத்தஸத்வம்,
ரஜஸ் ,தமஸ் இவற்றுடன் உள்ள ஸத்வம் என்பதைக் காட்டிலும் வேறானது

தமஸ : பரமோ தாதா———– ஸ்ரீமத் ராமாயணம்
தமஸ்ஸுக்கும் அப்பால் உள்ளவன் பரமாத்மா –எம்பெருமான்

அப்ராக்ருதம் ஸுரைர்வந்த்யம்———ஜிதந்தே ஸ்தோத்ரம்
நித்யவிபூதி என்பது, ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறானது;நித்யஸூரிகள் இருக்கும் இடம் ;
அவர்களால் போற்றப்படுவது

ஸ்ரீ விஷ்ணு புராணம் —
அனந்தஸ்ய ந தஸ்யாந்த : ஸங்க்யானம் வா அபி வித்யதே
ததனந்தபஸங்க்யாத ப்ரமாணம் சாபி வை யத :

ப்ரக்ருதிக்கு அழிவு கிடையாது ; கால அளவும் கிடையாது . இப்படி அளவிட இயலாதது

இப்படியாக, நித்ய விபூதிக்கு உட்படாத ப்ரக்ருதியின் எல்லையின்மை கூறப்பட்டது.
(உத்தமூர் ஸ்வாமி —–ஸத்வம் ,ரஜஸ் ,தமஸ் —மூன்று குணங்கள் . ஸத்வ குணம்
தத்வஜ்ஞானத்துக்குக் காரணமானாலும் ரஜஸ், தமஸ் அதிகமானால்,
ஸத்வம் அடங்கிவிடும் )

அதிகாரத்திலிருந்து —

மூன்று குணங்களின் ப்ரவ்ருத்தி பேதங்கள்

த்ரிகுணத்ரயத்துக்குப் ப்ரவ்ருத்தி பேதம் பத்த சேதநருடைய போகாப வர்கங்களுக்கும்
ஈச்வரனுடைய லீலாரஸத்துக்குமாக ஸமமாகவும் விஷமமாகவும் பரிணாம
ஸந்ததியையுடைத்தாய் தேஹேந்த்ரியாதிரூபத்தாலே அவ்வோ வ்யாபாரங்களையும்
பண்ணுகை . இது ரஜஸ்தமஸ்ஸுக்களையிட்டுப் பத்தர்க்குத் தத்த்வங்களிலுண்மையை
மறைத்து விபரீத ஜ்ஞானத்தை உண்டாக்குகிறது போகார்த்தமாக . இதுதானே
அபவர்க்கார்த்தமாக ஸத்த்வ விவ்ருத்தியாலே தத்த்வங்களை யதாவத் ப்ரகாசிப்பிக்கிறது
இவையெல்லாமீச்வரனுக்கு லீலாரஸாவஹமாயிருக்கும்

வ்யாக்யானம்

மூன்று குணங்களும் ப்ரக்ருதியும் –ப்ரக்ருதியின் செயல்கள்
1. ஸத்வம் ,ரஜஸ் ,தமஸ் மூன்று குணங்களும் சமமாக ,ஒரே அளவில் இருக்கும்போது
ப்ரளயம் உண்டாகிறது.
2. ப்ரக்ருதியின் செயல்கள் பேதப்பட்டு ( ஒன்று அதிகமாதல்,இன்னொன்று குறைதல்,இப்படி )
ப்ரக்ருதியும் மாறுதல் அடைந்து ஸ்ருஷ்டி ஏற்படுகிறது
3. ஸ்ருஷ்டி சமயத்தில் ஜீவன்கள் ஸம்ஸாரத்தில் கட்டுப்பட்டு அநுபவத்தை அடைகிறது
4. அநுபவம் மூலமாக ஜீவன்கள் ஸம்ஸாரத்திலிருந்து விடுபடுகிறது
5. இவை யாவும் பகவானின் லீலைக்காக ஏற்படுகிறது
6. லீலைக்கு ஏற்றவகையில் –அதற்கு ஏற்றவாறு பெயர் மற்றும் உருவம் எடுக்கிறது
( மொத்தத்தில் லீலா விபூதி )
7. ஜீவன்கள் அடையும் உடல்–சரீரம் காரணமாக ரஜோ தாமஸ குணங்களால்
உண்மையான தத்வத்தை , இவை மறைத்து ,தவறான ஜ்ஞானத்தைக் கொடுக்கிறது.
8. ஜீவனுக்கு ,ஸத்வகுணம் மேலோங்கும்போது அவனுக்கு உண்மையான ஜ்ஞானம்
புலப்படுகிறது
9. இந்த உண்மையான ஜ்ஞானம் , மோக்ஷத்தை அடையும் வழியில் ஜீவனை முயற்சிக்கச்
செய்கிறது.
இவை யாவும் பகவானின் லீலை

அதிகாரத்திலிருந்து ——

ஸுத்தஸத்வத்தின் ஸ்வரூபம், ஸ்திதி, ப்ரவ்ருத்தி

ஸுத்தஸத்வத்துக்கு ஸ்வரூபபேதம் ரஜஸ்தமஸ்ஸுக்களோடு கலவாத
ஸத்த்வகுணாச் ரயமாயிருக்கை . இதின் ஸ்திதிபேதம் நித்யமான மண்டப
கோபுராதிகளிலும் ஈச்வரனுடையவும் நித்யருடையவும் விக்ரஹவிசேஷங்களிலும்
நித்யமாயிருக்கும் .நித்யருடையவும் முக்தருடையவும் ஈச்வரனுடையவும்
அநித்யேச்சையாலே வந்த விக்ரஹாதிகளில் அநித்யமாயிருக்கும் . இதின்
ப்ரவ்ருத்திபேதம் இவர்களுடைய இச்சைக்கீடான பரிணாமாதிகளிலே
சேஷிக்கு போகோபகரணமாயும் சேஷபூதனுக்கு கைங்கர்யோபகரணமாயும்
நிற்கை

வ்யாக்யானம்

ஸுத்தஸத்வத்தின் ஸ்வரூபம் என்பது,ரஜஸ் தமஸ் கலவாத/சேராத/ ஸுத்த
ஸத்வமாகும் . இது ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கிற மண்டபம், கோபுரம் ஈச்வரனின்
விக்ரஹம் , நித்யர்களின் சரீரம் என்கிற தன்மைகளில் நிரந்தரமாக இருக்கும்.
ஆனால் ,
ஈச்வரன் , நித்யர் , முக்தர் இவர்களின் தாற்காலிக விருப்பத்தின்படி விக்ரஹம்
போன்றவற்றில் நித்யமாக இருப்பதில்லை .ஈச்வரனின் விருப்பப்படி ஸுத்தஸத்வமான
ஒரு போகம் இன்னொரு போகமாக மாறுதல் அடையும் .நித்யரின் ப்ரார்த்தனைப்படி
ஸுத்தஸத்வமான ஒரு பொருள் —உதாரணமாக——ஆலவட்டம்—
சாமரமாக மாறும் ; மாறுபாடு அடையும் , முக்தனின் வேண்டுகோளின்படி
ஸுத்தஸத்வமான ஒரு புஷ்பம் , இன்னொரு புஷ்பமாக மாறுதல் அடையும்
இத்தகைய மாறுதல்கள் மூலமாக ஸுத்தஸத்வமானது எஜமானானாகிய
எம்பெருமானுக்கு அனுபவிக்கும் பொருளாகவும் , நித்யர் முக்தர்களுக்கு கைங்கர்யம்
செய்வதற்கான பொருளாகவும் இருக்கிறது

அதிகாரத்திலிருந்து

காலத்தின் ஸ்வரூப–ஸ்திதி–ப்ரவ்ருத்தி பேதங்கள்

காலத்துக்கு ஸ்வரூபபேதம் ஜடமாய் விபுவாயிருக்கை . இதன் ஸ்திதி
காலாவச்சேதமில்லாமையாலே நித்யையாயிருக்கும் . இதின் ப்ரவ்ருத்தி பேதம்
கலாகாஷ்டாதி விபாகத்தாலே ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபகரணமாயிருக்கிறபடியிலே
கண்டு கொள்வது

இத்த்ரவ்யங்களெல்லாம் ஸ்வரூபேண நித்யங்களாயிருக்கும் நாமாந்தரபஜனார்ஹாவஸ்தா
விசேஷ விசிஷ்டதையிட்டுச் சிலவற்றை அநித்யங்களென்கிறது . அழிந்ததோடு
ஸஜாதீயங்களான அவஸ்தாந்தரங்கள் மேலும் முழுக்க வருகையிலே
ப்ரவாஹநித்யங்களென்று சொல்லுகிறது

இப்பதார்த்தங்கள் எல்லாவாற்றினுடையவும் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதங்கள்
ஈச்வரனுக்கு ஸ்வாதீநங்களாயிருக்கையாவது ஈச்வரஸத்தையையும்
ஈச்வரேச்சையையுமொழிய இவற்றுக்கு ஸத்தாதிகள் கொடாதொழிகை

ஆகையால் ஸமஸ்த வஸ்துக்களுக்கும் ஸ்வபாவ ஸித்தானுகூல்யம் ஈச்வரேச்சாயத்தம் .
இத்தாலே ஈச்வரனுக்கும் நித்யருக்கும் முக்தருக்கும் ஸர்வமும் அநுகூலமாயிருக்கும்
பத்தருக்குக் கர்மாநுரூபமாகப் புருஷபேதத்தாலும் காலபேதத்தாலும் இவற்றில்
ப்ராதிகூல்யங்களும் அல்பானுகூல்யங்களும் நடவாநிற்கும் . இப்பத்தர்
தங்களுக்கும் ஸ்வாத்மஸ்வரூபம் ஸர்வதா அநுகூலமாக ஈச்வரேச்சாஸித்தம் . இப்படி
அநுகூலமான ஆத்மஸ்வரூபத்தோடே ஏகத்வ ப்ரமத்தாலும் கர்மவசத்தாலுமிறே
ஹேயமான சரீரம் ஞானாஹீனருக்கு அநுகூலமாய்த் தோற்றுகிறது .
இவற்றுக்குக் கர்மாபாதிகமான ப்ரதிகூலரூபத்தாலே முமுக்ஷுவைப் பற்ற
த்யாஜ்யத்வம் . ஸ்வாபாவிகமான அநுகூல ரூபத்தாலே முக்தனைப் பற்ற அவை தமக்கே
உபாதேயத்வம் . அஹங்கார மமகாரயுக்தனாய்க் கொண்டு தனக்கென்று
ஸ்வீகரிக்குமவையெல்லாம் ப்ரதிகூலங்களாம் . ஸ்வரூபஜ்ஞானம் பிறந்து
ஸ்வாமிசேஷமென்று காணப்புக்கால் எல்லாம் அநுகூலமாம் . இவ்வர்த்தம் பரிபூர்ண
ப்ரஹ்மானுபவம் சொல்லுமிடத்திலே பரக்கச் சொல்லக்கடவோம்

வ்யாக்யானம்

காலத்தின் ஸ்வரூபம் என்பது தானே வெளிப்படாது; ஆனால் எங்கும் பரவியிருக்கும்
இதற்கு கால அளவு எல்லையில்லாதது; அதனால் என்றும் இருப்பது –ஸ்திதி ஆகிறது
இதன் செயல் ஸ்ருஷ்டிக்கு உதவுகிறது. ( காலத்தின் அளவுகள் மேலேயே கூறினோம் )

இதன் ஸ்வரூபம் —எங்கும் பரவியிருப்பது
இதன் ஸ்திதி—என்றும் இருப்பது
இதன் ப்ரவ்ருத்தி அல்லது செயல்—ஸ்ருஷ்டிக்கு உதவியாக இருப்பது

இத்த்ரவ்யங்களெல்லாம் –வஸ்துக்களெல்லாம் ஸ்வரூபத்தால் என்றுமே இருந்தாலும்
தங்களது நிலையை அவ்வப்போது மாற்றிக்கொள்கின்றன . அதனால், தாற்காலிகமானவை
என்றோ அழியக்கூடியவை என்றோ சொல்ல இயலாது. நிலையை மாற்றுவது என்பது
நீர் ,பனிக்கட்டி ஆதல், பிறகு நீர் ஆதல் , பிறகு ஆவியாதல் . இப்படி மாற்று நிலையில்
வேறுபெயரிட்டாலும் ,பழைய நிலையிலிருந்து ,புதிய நிலைக்கு வரும்போது
இடைவெளியே இல்லாததால், இவை நித்யம் என்றே சொல்லப்படுகின்றன

இப்பதார்த்தங்கள் என்கிற வஸ்துக்களின் ஸ்வரூபம் ஸ்திதி, ப்ரவ்ருத்தி ஆகிய ஈச்வரனின்
இட்ட வழக்காயுள்ளன. ஏனெனில்,அவனில்லாமல் இவை இல்லை;
அவனுடைய ஸங்கல்பமில்லாமல் இவை இல்லை

ஆகையால், ஸமஸ்த வஸ்துக்களுக்கும் ,ஈச்வரனின் ஸங்கல்பம் இயல்பாகவே ஏற்புடைத்து.
ஆனால், ஸம்ஸாரிகளுக்கு –பத்தர்களுக்கு, அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்ப ஒரு சில
சில சமயங்களில் ஏற்புடையதாகவும்,மற்றச் சில சமயங்களில் அப்படி ஏற்க
இயலாததாகவும் ஆகிவிடும். இவர்களின் ஆத்மஸ்வரூபம் , இவர்களால் ஏற்கப்படுகிறது.
ஒரு சிலருக்கு சரீரம் ஏற்கத்தகுந்தது என்று சிந்தனை வர, அதனால் சரீர அபிமானம்
பெருகி,ப்ரக்ருதி அதன் மாறுபாடுகள் யாவும் கர்மவினை காரணமாக
இந்தச் சிலரை ஸம்ஸார பந்தத்தில் ஆழ்த்திவிடும் மோக்ஷத்தை அடையத் துடிப்பவன்
இந்தப் பற்றுதல்களை விலக்கி ஒழிக்கவேண்டும்.
முக்தனுக்கு ஏற்கெனவே இத்தகைய ப்ரக்ருதியின் மாறுபாட்டால் எந்தப் பாதிப்புமில்லை .

இவை எல்லாமும் ஒருவனுக்கு எப்போது ஏற்புடையதாக ஆகுமென்னில்
நான் , எனது என்கிற எண்ணத்தை விலக்கி தன்னுடைய ஸ்வரூபஜ்ஞானத்தை உணர்ந்து
யாவுமே எம்பெருமானுக்காகவே உள்ளன என்கிற பக்ஷத்தில் , சாத்யமாகும் .
இவைபோன்றவற்றை , ப்ரஹ்மத்தின் பூர்ணம் மற்றும் ஆனந்தம் பற்றிச்
சொல்லும்போது விளக்குவோம்

ஈச்வர தத்வ நிரூபணம் -பகவானுடைய ஐந்து ஸ்வரூப ,நிரூபக விசேஷணங்கள்

அதிகாரத்திலிருந்து

இப்படி ஸ்வாதீன ஸர்வஸத்தாதிகளையுடைவனாயிருக்கிற ஈச்வரனுடைய
ஸ்வரூபம் ஸத்யவாதிகளாகிற ஸ்வரூப நிரூபக தர்மங்களிலே ஸத்யமாய்
ஜ்ஞானமாய் அநந்தமாய் ஆனந்தமாய் அமலமாயிருக்கும் . இவ்வர்த்தத்தை
நந்தாவிளக்கேயளத்தற்கரியாய் என்றும், உணர்முழுநலமென்றும் ,சூழ்ந்ததனிற்
பெரிய சுடர்ஞானவின்பம் என்றும் அமலன் என்றும் இத்யாதிகளாலே
ஆழ்வார்கள் அநுஸந்தித்தார்கள்

மற்றுள்ள குணங்களும் திவ்ய மங்கள விக்ரஹாதிகளுமெல்லாம் ஈச்வரனுக்கு
நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாயிருக்கும் . இக்குணங்களில் ஞான ,பல ,
ஐச்வர்ய ,வீர்ய சக்தி தேஜஸ்ஸுக்களென்று ஆறு குணங்கள் பரத்வோபயுக்தங்களாயிருக்கும் .
ஸௌசீல்யவாத்ஸல்யாதிகள் ஸௌலப்யோபயுக்தங்களாயிருக்கும் . இக்குணங்களெல்லாம்
ஸர்வ காலத்திலும் ஸ்வரூபாஸ்ரீதங்களாயிருக்கும்

பர வ்யூஹாதி விபாவங்களில் குணநியமம் சொல்லுகிறதெல்லாம் அவ்வோ
ரூபங்களை அநுஸந்திப்பார்க்கு ஸர்வேச்வரன் ஆவிஷ்கரிக்கும் குணவிசேஷங்கள்
சொல்லுகைக்காகவத்தனை . ஒளபநிஷத் வித்யாவிசேஷங்கள்தோறும் அனுஸந்தேய
குண விசேஷங்கள் நியதங்களானாற்போலே பகவச் சாஸ்த்ரோக்தமான ரூப
விசேஷானுஸந்தானத்துக்கும் குணவிசேஷங்கள் நியதங்கள் . அவ்விடத்தில்
பரரூபத்தில் ஞானாதிகுணங்கள் ஆறும் வேத்யங்கள்

வ்யூஹங்கள் நாலென்றும் மூன்றென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும்.
நாலு வ்யூஹமுண்டாயிருக்க வ்யூஹவாஸுதேவரூபத்துக்குப் பரரூபத்திற்காட்டில்
அனுஸந்தேய குணபேதமில்லாமையாலே த்ரிவ்யூஹமென்கிறது.இப்பக்ஷத்தை

குணைஷ்ஷட்பிஸ்த்வேதை : ப்ரதமதர மூர்த்தஸ்தவ பபௌ
ததாஸ்திஸ்ரஸ்தேஷாம் த்ரியுக யுகளைர்ஹி த்ரிப்ரபு :0என்கிற ச்லோகத்தில் ஸங்க்ரஹித்தார்கள் . இப்பரவ்யூஹங்களில் குண க்ரியா
விபவங்கள்

ஷாட்குண்யாத் வாஸுதேவ :பர இதி ஸபவாந் முக்தபோக்யோ பலாட்யாத்
போதாத் ஸங்கர்ஷண : த்வம் ஹரஸி விதனுஷே சாஸ்த்ரம் ஐச்வர்ய வீர்யாத்
ப்ரத்யும்ந : ஸர்க்கதர்மெள நயஸிச பகவந் சக்தி தேஜோநிருத்த :
பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ–என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹிக்கப்பட்டன . ஜாக்ரதாதிபதபேதங்களிலுள்ள
விசேஷங்களெல்லாம்

ஜாக்ரத்ஸ்வப்னாத்யலஸ துரீயப்ராய த்யாத்ருக்ரமவதுபாஸ்ய :
ஸ்வாமிந் தத்தத்குண பரிவர்ஹ : சாதுர்வ்யூஹம் வஹஸி சதுர்த்தா-என்று ஸங்க்ருஹீதங்களாயிற்று

கேசவாதிகளான பன்னிரண்டு ரூபங்களை வ்யூஹந்தரங்கள் . விபவங்களான
பத்மநாபாதிகளான முப்பத்துச் சின்ன ரூபங்கள். இவற்றில் மத்ஸ்ய கூர்மாதிகளான
அவதாரங்கள் ஒரு ப்ரயோஜனவசத்தாலே விசேஷித்துச் சொல்லப்பட்டன.
இவ்விபவங்களில் ஈச்வரன் அவ்வோ கார்யவிசேஷங்களுக்கு ஈடாகத்தான்
வேண்டின குணங்களை வேண்டியபோது மறைத்தும் வேண்டியபோது
ப்ரகாசிப்பித்தும் நடத்தும். இவற்றில் அவாந்தரபேதங்கள் க்ருஷ்ணரூபாண்ய —
—ஸங்க்யாநி இத்யாதிகளிற்படியே அநந்தங்கள் . இப்படியே விபவாந்தரங்களும்
கண்டுகொள்வது. சில ஜீவர்களை விக்ரஹ விசேஷத்தாலும் சக்தி விசேஷத்தாலும்
அதிஷ்டித்து அதிசயித்த கார்யங்களை நடக்கிறதுவும் விபவபேதம்

பர வ்யூஹாதி ரூபங்கள் தாமே ஆச்ரிதர்க்காக அவர்கள் அபேக்ஷித்தபடியிலே
பிம்பாக்ருத்யாத்மநா ” பிம்பே ஸமாகத்யாவதிஷ்டதே ” என்கிறபடியே-நிற்கிற நிலை அர்ச்சாவதாரம்

ஸர்வருடையவும் ஹ்ருதயங்களிலே ஸுக்ஷ்மாமாயிருப்பதொரு ரூபவிசேஷத்தைக்கொண்டு
நிற்கிற நிலை அந்தர்யாம்யவதாரம் . இது ஸர்வாந்தர்யாமியான திவ்யாத்மஸ்வரூபத்தை
அநுஸந்திக்க இழிவார்க்குத் துறையாக

அஷ்டாங்க யோக ஸித்தாநாம் ஹ்ருத்யாக நிரதாத்மநாம்
யோகிநாமதிகாரஸ்ஸ்யாத் ஏகஸ்மின் ஹ்ருதயேசயே-இத்யாதிகளிலே சொல்லுகையாலே அந்தர்யாமிரூபமென்று சொல்லப்பட்டது

இப்படி அவதரிக்கிற ரூபங்களில் வகைகளெல்லாம் ஸுத்தஸத்வ த்ரவ்யமயங்களாய்
கர்மதத்பலங்களோடு துவக்கற வருகையாலே ஸுத்தஸ்ருஷ்டிஎன்று பேர்பெற்றிருக்கும்

இவ்வவதாரங்களெல்லாம் ஸத்யங்களென்றும் இவற்றில் ஈச்வரனுக்கு ஞானாதி
ஸங்கோசமில்லையென்றும் , இவ்விக்ரஹங்கள் ஸுத்தஸத்வமயங்களென்றும்
இவற்றிற்கு ஈச்வரேச்சாமாத்ரமே காரணமென்றும் , தர்மரக்ஷணம் பண்ணவேண்டும்
காலமே காலமென்றும் ஸாதுபரித்ராணாதிகளிலே ப்ரயோஜனங்களென்றும் இவ்வர்த்தம்
தெளிந்து அநுஸந்திப்பார்க்கு ஏகஜன்மத்திலே ஸ்வாதிகாராநுகுண ஸமீஹிதோபாய —
—பூர்த்தியாலே ஜன்மாந்தரம் அநுபவியாதே முக்தராகலாமென்றும் , பஹுநி மே வ்யதீதாநி
என்று தொடங்கி ஐந்து ச்லோகத்தாலே கீதாசார்யன் அருளிச் செய்தான் .
இது ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுக்கு சரண்யகுணாவிசேஷ ஞானமுகத்தாலே
உபாயாநுஷ்டானக்ஷணத்திலே மஹாவிச்வாஸாதிகளை ஸ்த்ரீகரித்து உபகாரகமாம்

வ்யாக்யானம்

இப்படி அனைத்தையும் தன்னைச் சார்ந்துள்ளதாக வைத்துள்ள பகவானின்
ஸ்வரூபமானது, ஸத்யம் , ஜ்ஞானம் , அனந்தம் (முடிவில்லாதது ), முதலியவாகவே
இருப்பதாக ஆழ்வார்கள் அனுபவித்துள்ளனர்

பெரிய திருமொழி ( 3–8–1 )

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் !
நரநாரணனே ! கருமாமுகில்போல்
எந்தாய்!எமக்கே அருளாய் எனநின்று
இமையோர் பரவும் இடம் ,எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாடமாடே
களிவண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே

நாசமல்லாததாயும் ,ஸ்வயம்ப்ரகாசமாயும் ,தேச ,கால,வஸ்து இவைகளால்
அளவிட இயலாத ஸ்வரூபத்தை உடையவனே!
——————————————————————————————————-
திருவாய்மொழி (1–1–2 )
மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன் பொறி உணர்வு அவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில எனனுயிர் மிகு நரையிலனே

மனத்தில் உள்ள காமக்ரோத விஷயாதிகள் அறுந்தபிறகு, மானஸயோக
ஞானத்தாலே ( த்யானிப்பதாலே )ஞானயோகத்தாலே இவ்வளவு என்று அளவிட்டுச்
சொல்ல இயலாத நிலையை உடையவன். இந்த்ரியஞானங்கள் ,தன்விஷயத்தில்
இல்லாதவன். இப்படிப்பட்ட ஒன்றுமில்லாதவன், பூரண ஆனந்த ஸ்வரூபன்.
மூன்று காலங்களிலும் இப்படிப்பட்டவன் என்று ஒன்றும் இல்லாதவன்.
எனக்கு ஆத்மா. இவனுக்கு மேம்பட்டவர், மிகுந்தவர்இல்லை.
முழுவதும் ஜ்ஞானமும் ஆனந்தமும் நிரம்பப்பெற்ற ஸ்வரூபனே
—————————————————————————————————-
திருவாய்மொழி (10–10–10 )

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்ததனில் பெரிய பரநன்மலர்ச் சோதீயோ
சூழ்ந்ததனில் பெரிய சுடர்ஞான இன்பமேயோ
சூழ்ந்ததனில் பெரியஎன்னவாவறச் சூழ்ந்தாயே

சூழ்ந்து ,அகன்று, ஆழ்ந்து உயர்ந்த= எல்லாத் திக்குகளிலும் இருந்து
முழுவதும் சூழ்ந்து, குறுக்கில் பரவி நித்யவிபூதிகளோடு பெருமளவுக்கு உயர்ந்து
ப்ரக்ருதியான அவஸ்தை என்றும் குன்றாத ,பல ப்ரஹ்மாண்டங்கள்
என்கிற கார்யமெல்லாம் உண்டாகும்படியாக ப்ரக்ருதிக்கு அந்தர்யாமியே !
எங்கும் பரவி, ப்ரக்ருத்திக்கு மேலாகவும் செல்லும் ,
அசேதனத்துக்கும் சேஷியான ஜ்ஞானானந்த ஸ்வரூபமான மலர்ந்து எங்கும்
பரவுகிற தர்மபூதஜ்ஞானம் உள்ள ஜீவாத்மாவின் அந்தர்யாமியே !
எங்கும் பரவி மலர்ந்த ஜ்ஞானம் உடைய முக்தர்களிலும்
பெரிதான தர்மபூதஜ்ஞானத்தை உடைய ஜ்ஞானாநந்த ஸ்வரூபனே
மேலே சொன்ன வஸ்துக்களையெல்லாம் க்ரஹித்து, அதற்கு மேலாக
நித்யவிபூதி விஷயமாகவும் நின்ற , உன்னைப்பெறவேண்டுமென்கிற
எனது தாகமான ஆவல்,முன்னெல்லாம்போல மீண்டும் மீண்டும்
உண்டாகும்படி இல்லாமல், அது தீர்க்கும்படி, என்னைச் சூழ்ந்து
பூர்ண ஆனந்தானுபவம் அளிப்பவனே
——————————————————————————————————-
அமலனாதிபிரான் ( 1 )

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர்கோன் ,விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன், நின்மலன், நீதிவானவன் நீள் மதிளரங்கத்தம்மான் , திருக்
கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளனவொக்கின்றதே

தூயனாய், ஆதிமூலமாய் தன்னுடைய அடியவர்களுக்கு அடியேனை
ஆட்படுத்துவதால் , சிறந்த ஒளியுடைவனாய் , நறுமணம் சூழ்ந்த
சோலைவாழ் திருவேங்கடவன், முறைவழுவா நிறைகுணத்தன் ,
உயர்ந்த மதில்கள் சூழ் திருவரங்கத்தான் , திருவடித் தாமரைகள்
தாமாகவே வந்து அடியேனின் விழிகளுக்குள் புகுந்தாப்போல் உள்ளன

————————————————————————————————–

மற்றுள்ள குணங்களும் = எம்பெருமானின் ஏனைய குணங்களும் அவனது
திவ்ய மங்கள விக்ரஹமும் அவனது ஸ்வரூபத்தை நிரூபிக்கின்றன .
இந்தக் கல்யாண குணங்களில், ஜ்ஞானம், பலம், ஐச்வர்யம், வீர்யம்,
சக்தி, தேஜஸ், ஆகிய ஆறு குணங்கள் இவனே பரத்வம் என்று
பறையறிவித்தார்போல் உள்ளன. சௌசீல்யம் ,வாத்ஸல்யம் போன்றவை
அனைவராலும் எளிதில் அணுகக்கூடியவன் என்பதை வெளியிடுகின்றன.
இப்படியாக ,எல்லாக் குணங்களும் எம்பெருமானின் ஸ்வரூபத்தின்
தன்மைகளாக எக்காலத்திலும் உள்ளன.

பர வ்யூஹாதி விபவங்களில் = அதாவது இந்தக் கல்யாண குணங்களில்,
சில எம்பெருமானின் ”பர ” ரூபத்திலும் ( பரவாஸுதேவனாக ), சில ”வ்யூஹ ” ரூபத்திலும்
( வாஸுதேவ , ஸங்கர்ஷண , ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்கள் )
சில ”விபவ ரூபத்திலும் ( அவதாரங்கள் )மட்டுமே வெளிப்படும். ஏனெனில்,
எந்த ரூபத்தை உபாஸனம் செய்தாலும், பகவான் தனது குணங்களைக்
காட்டி அருள்கிறான் என்பதை விளக்கவே !
உபநிஷத் , பகவானை உபாஸிக்கப் பற்பல ”வித்யை”களைச் சொல்கிறது.
பாஞ்சராத்ரம் , குறிப்பிட்ட பகவானின் ரூபங்களில், குறிப்பிட்ட
குணங்களை உபாஸிக்கச் சொல்கிறது. ஆனால், எல்லா ரூபங்களிலும்,
இந்த ஆறு கல்யாணகுணங்களும் வெளிப்படும்

வ்யூஹங்கள் நாலென்றும், மூன்றென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும்–அதாவது,
பகவானின் வ்யூஹ அவதாரங்கள் , நான்கு என்றும், மூன்று என்றும் சாஸ்த்ர
ரீதியாகச் சொல்லும்போது , நான்கு என்று சொல்லுமிடங்களில், வாஸுதேவன்
நான்கில் ஒருவன் என்று சொல்வர்.
பரவாஸுதேவனுக்கும் , வ்யூஹ வாஸுதேவனுக்கும் த்யானிப்பதில்
குணபேதம் இல்லை என்பர். இதைவைத்து, வ்யூஹங்கள் மூன்று என்றும் சொல்வர்.
இதற்கு ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை மேற்கோள் காட்டுவர்

ச்லோகம் 16–ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளியது.

ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்
தேவப்பெருமாளே திருச்செவி சாத்திய ஸ்தோத்ரம்
எம்பெருமானாரும், மற்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஸ்ரீ வரதன் ஸந்நிதியில்
குழுமியிருக்க தேவப் பெருமாள் , திருமுகப்பில் அரங்கேறிய ஸ்தோத்ரம்

குணை:ஷட்பிஸ்த்வேதை : ப்ரதமதர மூர்திஸ்தவ பபௌ
தத ஸ்திஸ்ரதேஷாம் த்ரியுக 1 யுகலைர் ஹி த்ரிப்ரபு : |
வ்யவஸ்த்தா யா சைஷா நநு வரத ! ஸா$$விஷ்க்ருதி வசாத்
பவாந் ஸர்வத்ரைவ த்வகணித மஹாமங்கல குண : ||

த்ரியுக =மூவிரண்டு குணங்களை உடைய
வரத = தேவப்பெருமாளே
தவ=தேவரீருடைய
ப்ரதமதர மூர்தி =முதன்மையான திருவுருவான பரவாஸுதேவ மூர்த்தி
ஷட்குணை :=அந்த ஆறு குணங்களால்
பபௌ =விளங்கியது
தத :திஸ்ர =அதிலிருந்து தோன்றிய மூன்று மூர்த்திகளான ஸங்கர்ஷண ,
ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்கள்
தேஷாம்= அந்த ஜ்ஞான சக்த்யாதி குணங்களுடைய
த்ரிபி: யுகலை =மூன்று இரட்டைகளாகவே
அபு : =ப்ரகாசித்தன
ஏஷாயா வ்யவஸ்த்தா = இத்தகைய யாதொரு கட்டுப்பாடு உண்டோ
ஸா = அது
ஆவிஷ்க்ருதி வசாத் = அந்தந்த மூர்த்திகளின் குணங்களை வெளியிடுவதால்
உண்டானதாகும்
து =ஆனால்
பவாந் =தேவரீர்
ஸர்வத்ர ஏவ =எல்லா நிலைகளிலும்
அகணித =எண்ணில் அடங்காத
மஹா மங்கல குண : =பெரிய மங்களமான குணக்கூட்டங்களை உடையவரே

ஹே வரதனே —உன்னுடைய பரவாஸுதேவ ரூபம் ஆறு குணங்களால் ப்ரஸித்தி .
ஸங்கர்ஷண ,ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்கள் , இந்த ஆறு குணங்களிலிருந்து
இரண்டிரண்டு குணங்களை ஸ்வீகரித்துக்கொண்டுள்ளன

ஸ்ரீ ரங்கராஜஸ்த்வம் ( 2–39 )
ஷாட்குண்யாத் வாஸுதேவ :பர இதி ஸபவாந் முக்தபோக்யோ பலாட்யாத்
போதாத் ஸங்கர்ஷண : த்வம் ஹரஸி விதனுஷே சாஸ்த்ரம் ஐச்வர்ய வீர்யாத்
ப்ரத்யும்ந : ஸர்க்கதர்மெள நயஸிச பகவந் சக்தி தேஜோநிருத்த :
பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ

ஹே ரங்கராஜனே , ஆறு குணங்களை உடையவராய் பரவாஸுதேவன் என்று
கொண்டாடப்படுகிற தேவரீர் முக்தர்களால் இப்படியாக அனுபவிக்கப்படுகிறீர்.
அப்படியே மூன்றாகப் பிரிந்து, ஜ்ஞானம் ,பலம் இந்த இரண்டு குணங்களுடன்
ஸங்கர்ஷணனாக உலகை ஸம்ஹரிக்கிறீர் , சாஸ்த்ரப்ரவசனம் செய்கிறீர்.
ஐச்வர்யம் வீர்யம் இந்த இரண்டு குணங்களுடன் ,ப்ரத்யும்நனாயிருந்து
உலகங்களைப் படைத்து, தர்ம ரக்ஷணம் செய்கிறீர். சக்தி, தேஜஸ் –இரண்டு
குணங்களுடன் அநிருத்தனாயிருந்து ரக்ஷித்து,தத்வ உபதேசம் செய்கிறீர்

ஸ்ரீ ரங்கராஜஸ்த்வம் ( 2–40 )

ஜாக்ரத்ஸ்வப்னாத்யலஸ துரீயப்ராய த்யாத்ருக்ரமவதுபாஸ்ய :
ஸ்வாமிந் தத்தத்குண பரிவர்ஹ : சாதுர்வ்யூஹம் வஹஸி சதுர்த்தா

ஹே ரங்கநாதா —தேவரீரைத் த்யானம் செய்பவர்கள் சிலர், விழித்துக்
கொண்டிருப்பவர்கள் போல இருக்கிறார்கள். சிலர், கனவு காண்பவர்போல
இருக்கிறார்கள். சிலர் தூங்குபவர் போல இருக்கிறார்கள். சிலர்,
மூர்ச்சையடைந்தவர் போல இருக்கிறார்கள்.

[விழித்திருப்பாருக்கு –இந்த்ரியங்கள் வேலை செய்கின்றன
கனவு காண்பவருக்கு –மனம் மாத்ரம் வேலை செய்கிறது
தூங்குபவர்களுக்கு–மனமும் வேலை செய்வதில்லை
மூர்ச்சை நிலையில் —உயிரோடு இருக்கும் அடையாளம்கூட இல்லை ]

இவர்களைப்போல, ஹே பகவந் , நீர்,நான்கு ரூபங்களாகப் பிரிந்து
அந்தந்த ரூபங்களுக்குத் தகுந்த குணங்கள், ஆயுதங்களுடன்
உபாஸிக்கப்படுகிறீர்

வ்யூஹாந்தரங்கள்
———————————
1. வாஸுதேவன் –கேசவன் நாராயணன் மாதவன்
பத்னி –லக்ஷ்மி ஸ்ரீ வாகீச்வரி காந்தீ
2. ஸங்கர்ஷணன் —கோவிந்தன் விஷ்ணு மதுஸூதனன்
பத்னி –கீர்த்தி-9ஜீவன் )–க்ரியா சாந்தி விபூதி :
3. ப்ரத்யும்நன் —— த்ரிவிக்ரமன் வாமநன் ஸ்ரீதரன்
பத்னி–ஜயா (புத்தி ) இச்சா ப்ரீதி : ரதி:
4.அநிருத்தன் — – ஹ்ருஷீகேசன் பத்மநாபன் தாமோதரன்
பத்னி–மாயா(அஹங்காரம் ) மாயா தீ : மஹிமா

நான்கு வ்யூஹம் மற்றும் செயல் [ ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் —
பெளண்டரீகபுர ஆச்ரம வெளியீடு ]
பரமபதத்தில்—–விசாக ஸ்தம்பம் என்கிற அப்ராக்ருதமான பெரிய
ஸ்தம்பம் உள்ளது. அது நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாகத்துக்கும் நான்கு பக்கங்கள்.
கிழக்கே ஆரம்பித்து, தெற்கு, மேற்கு,வடக்கு என்றுஒவ்வொரு பக்கத்திலும்
வாஸுதேவ, ஸங்கர்ஷண ,ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்களாக
பகவான் எழுந்தருளியிருக்கிறான் .
நான்கு பாகங்கள் என்று பார்த்தோமல்லவா —
1.–முதலில்–ஜாக்ரத் ஸ்தானம் –இதில், ஜகத் ஸ்ருஷ்டி, ஆயுதங்கள், வாஹனங்கள்,
சின்னம்
2.அதற்கு மேல் —ஸ்வப்ந ஸ்தானம் —ஆகாரம், வர்ணம், சின்னம் [ஸ்பஷ்டமாகப்
ப்ரகாஸிக்காது; ஜகத் வ்யாபாரமின்றி
இச்சை மாத்திரம் இருக்கும்.
3. அதற்கு மேல் —ஸுஷுப்தி ஸ்தானம் –வர்ணம்,ஆயுதம் இவை இன்றி,
இச்சையுமின்றி ஸ்வாநத்தா அநுபவம்
4. அதற்கு மேல்–துரீய ஸ்தானம்—ஸ்தம்பத்தின் கிளைகள்போலத் தோற்றம்
————————————————————————————————

ஜீவனுக்கு–

1. விழிப்பு நிலை—-அநிருத்தன்
2. ஸ்வப்ந நிலை—ப்ரத்யும்நன்
3. உறக்க நிலை–ஸங்கர்ஷணன்
4. மோக்ஷ நிலை —வாஸுதேவன் , பரவாஸுதேவன்

1. விழித்திருப்பது—
எல்ல இந்த்ரியங்களும் இயங்குகின்றன ;கர்மாவைச் செய்கிறான்

2. ஸ்வப்நம்
ஜீவன் , வேறு ஒரு சரீரத்தில் இருப்பதாக உணர்கிறான் ஸ்வப்ந சமயத்தில்,
ஜீவன் சரீரத்தைவிட்டு வெளியேறினாலும் ,ப்ராணவாயு ( ப்ராணன் ),ஜீவனுடன்கூட
வெளியே செல்வதில்லை.அது ,பழைய சரீரத்திலேயே இருக்கிறது.
அதன்மூலமாக,சரீரம் ரக்ஷிக்கப்படுகிறது.ஸ்வப்நத்தில் , இவன்
எடுத்துக்கொண்ட சரீரம் ,விழித்துக்கொண்டிருக்கும்போது இவனுடன்
இருப்பதில்லை. விழித்திருக்கும்போது உள்ள சரீரம் ,ஸ்வப்நத்தில்
இருப்பதில்லை. ஸ்வப்நத்தில் இவன் இதை விட்டுவிடுகிறான்.
ஆதலால், சரீரத்தைவிட , ஆத்மா வேறு என்பது தெளிவாகிறது

3. உறக்கம்–ஸுஷுப்தி
ஸ்வப்நத்தின்போது , ” ஜீவன்,”ஹிதா ” என்கிற நாடிகளில் இருக்கிறான்.
தூங்கும்போதோ , ஸாக்ஷாத் பரமாத்மாவிடமே இருக்கிறான். அப்போது,
அவனுக்கு அநுகூல ,ப்ரதிகூல விஷயங்கள் தெரியாது.
வெளி உலகம் தெரியாது.சுக துக்கம் தெரியாது. ப்ரியமான ஸ்திரீயால்
அணைக்கப்பட்டு உள்ள நிலையில், தன்னை மறந்து இருப்பதைப் போல
தூக்க நிலையில் ,பரம ப்ரியனான பரமாதவினால் அணைக்கப்பட்டு,
அதிலேயே லயித்து, எல்லாவற்றையும் மறந்து தூங்குகிறான்.
பரமாத்மாவைக் கூட அறிய முடியாமல் தூங்குகிறான். இச்சமயம்
எந்த இந்த்ரியமும் வேலை செய்வதில்லை. மனஸ் ஓய்வில் இருக்கிறது.
ஜ்ஞானமானது ,மனஸ்ஸை அடைந்து ,மனஸ் இந்த்ரியங்களை
ஏவுதல் போன்ற எந்தக் காரியமும் உரக்க நிலையில் இல்லை.

4. மோக்ஷ நிலை—
சமயம் வரும்போது வேறு ஒரு அதிகாரத்தில் பார்ப்போம்

பரவாஸுதேவ , உபாஸனையில் ஆறு குணங்களையும் உபாஸிக்கவேணும்
ஜ்ஞானம் = சாஸ்த்ர நிர்மாணம்
பலம் =ஸம்ஹாரம்
ஐச்வர்யம் =ஸ்ருஷ்டி
வீர்யம் =தர்ம ஸ்தாபனம்
சக்தி = ரக்ஷிப்பது
தேஜஸ் =தத்வத்தை அறிவிப்பது

மாண்டூக்ய உபநிஷத் சொல்கிறது—

ஆத்மா
—————
பதம் நிலை ( தசை ) மூர்த்தி

1. வைச்வாநரன் விழிப்பு அநிருத்தன் (சக்தி,தேஜஸ் –அறிவை அழிப்பது, ரக்ஷணம் )
2. தைஜஸன் ஸ்வப்நம் ப்ரத்யும்நன் ( ஐச்வர்யம், வீர்யம் –ஸ்ருஷ்டி, தர்ம வ்யவஸ்தை )
3. ப்ராஜ்ஞன் உறக்கம் ஸங்கர்ஷணன் (ஜ்ஞானம், பலம்–ஸம்ஹாரம் ,சாஸ்த்ர ப்ரசாரம் )
4. துரீயன் மோக்ஷம் வாஸுதேவன் (பொது–வ்யூஹ வாஸுதேவன் )

—————————————————————————————————-

கேசவாதிகளான பன்னிரண்டு ரூபங்களும் வ்யூஹாந்த்தரங்கள்—–அதாவது-
கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதன ,த்ரிவிக்ரம ,வாமந ,
ஸ்ரீதர , வ்ருஷீகேச , பத்மநாப, தாமோதர,
என்கிற 12 ரூபங்களும் வ்யூஹத்திலிருந்து வெளிப்படும் மற்ற வ்யூஹாந்தரங்க ரூபங்கள்.
விபவங்கள் என்பவை ”பத்மநாபன் ”முதலான முப்பது ரூபங்கள்.
இந்த முப்பது ரூபங்களில், மத்ஸ்யம் ,கூர்மம் போன்றவை, ஒரு குறிப்பிட்ட கார்யத்துக்காக
வெளிப்பட்டவை.
இப்படியான ,விபவ அவதாரங்களில், அந்தந்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப
ஈச்வரன் தனது சில குணங்களை மட்டுமே வெளிப்படுத்தியும்,
சிலவற்றை மறைத்தும் உள்ளான்.இவற்றில் உட்பிரிவுகளுக்குக் கணக்கில்லை.

க்ருஷ்ணரூபாண்யஸங்க்யாநி –அதாவது, க்ருஷ்ணனாக அவதரித்த எம்பெருமானின்
ரூபங்களுக்குக் கணக்கில்லை என்று ஸ்ரீ பாஞ்சராத்ரம் சொல்லுகிறது.
விபவாவதாரங்களை –பலவற்றை–சாஸ்த்ரங்கள் மூலமாகத் தெளியலாம்.
சில ஜீவன்களில் உள்ளே புகுந்தோ, அல்லது தன்னுடைய சக்தியைப் புகுத்தியோ
அளவிலா அதிசயங்களைச் செய்கிறான். இவைபோன்றவையும், விபவத்துடனே சேரும்.

பர வ்யூஹாதி ரூபங்கள் தாமே ஆச்ரிதர்க்காக —-என்பது–
பர ,வ்யூஹ ,விபவ ரூபங்கள் தன்னை ஆச்ரயித்த சேதநர்களுக்கு ,
பிம்பத்தில் எழுந்தருளி அநுக்ரஹிப்பது –இது அர்ச்சாவதாரமாகும்
ஸாத்வத ஸம்ஹிதை கூறுகிறது—
ஆச்ரிதர்களாக , எம்பெருமானை ஸேவிக்க முயற்சிப்பவர்களுக்கு
” பிம்பே ஸமாகத்யாவதிஷ்டதே ”
பிம்பத்தில்–விக்ரஹரூபமாக — விக்ரஹமா, திருமேனியா என்று
பிரிக்க இயலாதபடி அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ளான்

அடுத்து, அந்தர்யாமித்வம் என்கிறார் —
ஜீவன்களின் ஹ்ருதயத்திலே சூக்ஷ்ம ரூபமாகபகவான் இருக்கிறான்
என்கிறார்,ஆசார்யன் .
இது அந்தர்யாமி ரூபம்
பகவானின் திவ்ய மங்கள ரூபத்தைத் த்யானிப்பவர்களுக்கு இது
அந்தர்யாமித்வம் . ஸாத்வத ஸம்ஹிதை , இதையும் சொல்கிறது

அஷ்டாங்க யோக ஸித்தாநாம் ஹ்ருத்யாக நிரதாத்மநாம்
யோகிநாமதிகாரஸ்ஸ்யாத் ஏகஸ்மின் ஹ்ருதயேசயே

அஷ்டாங்க யோகத்தைச் செய்து, ஆத்மாவலோகனம் என்கிற
ஸித்தியடைந்தவர்கள் , மானஸ பூஜையை விரும்பி
ப்ரஹ்மோபாஸனம் செய்து, யோகிகளாகி அவர்களின் ஹ்ருதயத்தில்
ஒரு மூர்த்தியாக த்யானிப்பது. மூர்த்தி என்பது, நான்கு வ்யூஹங்களாகப்
பிரியாமலிருக்கிற ரூபம் என்று அர்த்தம்.

அஷ்டாங்க யோகம் என்பதை ”பக்தி யோகம் ”என்றும் சொல்வர் .
1.யமம்
2. நியமம்
3.ஆஸனம்
4.ப்ராணாயாமம்
5.ப்ரத்யாஹாரம்
6.தாரணை
7.த்யானம்
8.ஸமாதி

எம்பெருமானின்
பர ரூபத்தில் ஈடுபட்டவை —-உபநிஷத்துக்கள்
விபவ ரூபத்தில் ஈடுபட்டவை —புராணங்கள்
வ்யூஹம், அர்ச்சை –இரண்டிலும் ஈடுபட்டவை–பாஞ்சராத்ர ஆகமங்கள்
அந்தர்யாமித்வம் –யோகிகளால் மட்டுமே சாக்ஷாத்கரிக்க முடியும்.

இப்படியாக, எம்பெருமான் ஆவிர்பவிக்கும் ரூபங்களனைத்தும் ஸுத்தஸத்வம்
எனப்படும். இவையாவும்,கர்மாக்களுடனோ , அந்தக் கர்மாக்களின்
பலன்களுடனோ சம்பந்தப்பட்டவையல்ல . இவை சுத்த ஸ்ருஷ்டி

இப்படியான அவதாரங்கள் எல்லாமும் ஸத்யமானவை . ஈச்வரனுக்கே உள்ள
ஜ்ஞானம் போன்ற கல்யாண குணங்கள் நிரம்பியவை. இவை, எம்பெருமானின்
ஸங்கல்பத்தால் ஏற்படுபவை.தர்மத்தில் நிலைநிறுத்த , சாதுக்களைக்காப்பற்ற
பகவான் எடுக்கும் அவதாரங்கள்.
நெல் செய்யப் புல் தேயுமாப்போலே என்பார்கள். சாது ரக்ஷணம்
என்கிற நெல்லை பகவான் செய்கிறான்; அந்த ரக்ஷணத்துக்கு இடைஞ்சலாக
இருக்கிற –நெல் வளர இடைஞ்சலாக இருக்கிற புல் —துஷ்ட நிக்ரஹம்
செய்கிறான்.
–இதைத் தெரிந்துகொண்டவர்கள் மோக்ஷம் பெறுவர். அவர்களுக்கு
மேலும் மேலும் பிறவிகள் இல்லை.இவைபற்றி பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்
அருளியிருக்கிறார். ஸ்ரீமத் பகவத் கீதை–4ம் அத்யாயம்

5.பஹு நி மே வியதீதாநி ஜன்மாநி தவ சார்ஜந |
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப ! ||

பகவான் சொல்கிறார்
அர்ஜுனா ! எனக்கு எத்தனையோ ஜன்மங்கள் கழிந்துவிட்டன .
உனக்கும் அப்படியே.அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன் .
நீ அறியமாட்டாய்

6. அஜோ$பி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோபி ஸந் |
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாப ஸம்பவாம்யாத்மமாயயா ||

நான் பிறப்பற்றவன். அழிவு இல்லாதவன்.ஸகல பூதங்களுக்கும் ஈச்வரன் .
இப்படி எல்லாம் இருந்தாலும் என்னுடைய மாயையால்
ஸங்கல்ப மாத்ரத்தில் அவதரிக்கிறேன்

7.யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத |
அப்யுத்தாந மதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||

எப்போது எப்போது தர்மம் நிலைகுலைந்துபோய் அதர்மம் வளர்கிறதோ
அந்தச் சமயத்தில் எல்லாம் நான் அவதரிக்கிறேன்

8.பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

ஸாதுக்களைக் காப்பாற்றவும் , துஷ்டர்களை அழிக்கவும்
தர்மத்தை நிலை நிறுத்தவும் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன்

9. ஜந்ம கர்ம ச மே தி வ்யமேவம் யோ வேத்தி தத்வதா |
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜுந ||

அர்ஜுனா என்னுடைய திவ்ய அவதார ரஹஸ்யங்கள் என்னுடைய
செயல்கள் ,எவன் இப்படி உள்ளபடி தெரிந்து கொள்கிறானோ
அவன் (ஆத்மா ), சரீரத்தை விட்டவுடன் மறுபடியும் பிறவி இல்லாமல்
என்னையே அடைகிறான்

10. வீதராக பயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா |
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா ||

விருப்பம், பயம், கோபம் இல்லாதவர்களும் என்னையே
சரணம் என்று அடைந்தவர்களும் ஜ்ஞானம் என்கிற தவத்தால்
மோக்ஷமடைகிறார்கள்

விபாவதாரங்களைத் த்யானம் செய்வதால் அவனுக்கு
அந்த எம்பெருமானின் குணங்கள் பற்றிய ஜ்ஞானம் வருகிறது;
மஹாவிச்வாஸம் உண்டாகிறது; இதனால், மோக்ஷம் அடைவதற்கு
உள்ள உபாயம் ”ப்ரபத்தி ” என்று உணர்கிறான்

அர்ச்சாவதாரமும் மோக்ஷம் அளிக்கவல்லது

அதிகாரத்திலிருந்து

இப்படியே அர்ச்சாவதாரமும் மிறுக்கிற மோக்ஷத்தைத் தருமென்னுமிடத்தை

ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ : ப்ரஸந்ந வதநேக்ஷணாம்
க்ருத்வா ஆத்மந : ப்ரீதிகரீர் ஸுவர்ண ரஜதாதிபி : |
தாமர்சயேத்தாம் ப்ரணமேத்தாம் யஜேத்தாம் விசிந்தயேத்
விசத்யபாஸ்ததோஷஸ்து தாமேவ ப்ரஹ்மரூபிணீம் ||

என்று ஸ்ரீ சௌனகபகவான் அருளிச் செய்தான். ஆழ்வார்களுக்கும்
இவ்வவதார ரஹஸ்யத்தையும் , அர்ச்சாவதார வைலக்ஷண்யத்தையும்
ப்ரசுரமாக அநுஸந்தித்து , இதற்கு பேரணியாக பரத்வத்தைக் கண்டு
போந்தார்கள்

வ்யாக்யானம்

இப்படியே அர்ச்சாவதார ஈடுபாடும் ,எவ்விதக் கஷ்டமும் இன்றி
மோக்ஷம் பெறுவதற்கு உதவுகிறது. இதை ஸ்ரீ சௌனகர்
ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் கூறுகிறார்

ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ : ப்ரஸந்ந வதநேக்ஷணாம்
க்ருத்வா ஆத்மந : ப்ரீதிகரீர் ஸுவர்ண ரஜதாதிபி : |
தாமர்சயேத்தாம் ப்ரணமேத்தாம் யஜேத்தாம் விசிந்தயேத்
விசத்யபாஸ்ததோஷஸ்து தாமேவ ப்ரஹ்மரூபிணீம் ||

தங்கத்தாலே விக்ரஹத் திருமேனி, வெள்ளியாலே அப்படித் திருமேனி
தரிசிப்பவர் கண்ணையும் கருத்தையும் ஈர்க்குமாறு வடித்து,
அர்ச்சனம் செய்து த்யானிக்கவேண்டும். இதன்மூலமாக, அனைத்துத்
தோஷங்களும் தொலைந்து ப்ரஹ்ம ரூபமான அதையே
அடைந்து விடுவான் இந்த அர்ச்சாவதார ரஹஸ்யம் ,இதன் மேன்மை
இவற்றை உணர்ந்த ஆழ்வார்கள், அர்ச்சாவதாரத்திலேயே
முழுதும் மூழ்கி ,இதன் மூலமான பரமாத்மாவையே தர்ஸித்தனர் .

இப்படிப்பட்ட அர்ச்சாவதாரம் ,
தெய்வம்
மானுஷம்
ஆர்ஷம்
ஸ்வயம்வக்தம் என்று நான்கு விதமாக உள்ளன.

தெய்வம்—-தேவதைகளால் ப்ரதிஷ்டை செய்யப்பட விக்ரஹங்கள்
மானுஷம் —மநுஷ்யர்கள்,ஆகம சாஸ்த்ர விதிப்படி, தங்கம், வெள்ளி,
தாமிரம்,அல்லது, பஞ்சலோகம்
(தங்கம், வெள்ளி, தாமிரம்,இவற்றுடன் வெண்கலம், இரும்பு சேர்த்தால் பஞ்சலோகம் )
என்கிற உலோகக்கலவையில் ”ஸ்தபதி ”மூலம் விக்ரஹங்களை வார்ப்பது )
இவற்றால் செய்து விசேஷமாகப் ”ப்ரதிஷ்டை ” செய்யப்பட விக்ரஹங்கள்
ஆர்ஷம் —மஹரிஷிகளுக்குப் ப்ரத்யக்ஷமாகி அவர்களால் ப்ரார்த்திக்கப்பட்ட
பிம்பங்களில் பகவான் எழுந்தருளியிருப்பது
ஸ்வயம்வக்தம்—-தானே விரும்பி எழுந்தருளி இருப்பது

அதிகாரத்திலிருந்து

ஈச்வரனுடைய ப்ரவ்ருத்திகள்

இப்படியிருக்கிற ஈச்வரன் தன் ஆனந்தத்துக்கு பரீவாஹமாகப் பண்ணும்
வ்யாபாரங்கள் ஸகலஜகத்ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார மோக்ஷப்ரதத்வாதிகள்

வ்யாக்யானம்

இப்படியிருக்கிற–மேலே சொல்லப்பட்டவாறு மோக்ஷத்தை அளிப்பவனான
எம்பெருமானின் செயல்களாவது —எல்லா உலகங்களையும் படைத்து,
அவற்றை ரக்ஷித்து,அதன்பிறகு ஸம்ஹரித்து , தன்னுடைய மகிழ்ச்சிக்காக
இவையெல்லாம் செய்கிறான்.

ஸ்ருஷ்டி முதலியவை–பகவானுக்கு விளையாட்டு –லீலை .
இவற்றால் அவனுக்கு ஆனந்தம் ஏற்படுகிறது. இந்தச் செயல்களால்
ஜீவன்களுக்கு மோக்ஷம் அளிக்க , தன்னுடைய வாத்ஸல்யத்தாலே
ஜீவன்களின் கர்மக்களைக் கழிப்பதற்காக, இப்படி இவைகளை லீலைகளாகச்
செய்கிறான்.

அதிகாரத்திலிருந்து

ஈச்வரன் எந்த நிலையிலும் பிராட்டியைப் பிரியாமை

இவ்வீச்வரன் , ”நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோ : ஸ்ரீ ரநபாயிநீ ..”
இத்யாதிகளிற்படியே , ஸர்வாவஸ்தையிலும் ஸபத்நீகனாய்க் கொண்டேயிருக்கு
மென்னுமிடத்தை தத்த்வேந ய : மாதா பிதா என்கிற ச்லோகங்களிலே
உபகார விசேஷத்தாலே ஸாதரமாக விசேஷித்துச் சொல்லப்பட்ட
பராசர பராங்குச ப்ரபந்தங்களிலே தெளிந்து கொள்வது

வ்யாக்யானம்

எம்பெருமான் எப்போதும் தன்னுடைய பத்நியாகிய பெரியபிராட்டியாருடன்
கூடியவனாகவே உள்ளான் என்பதை ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்கிறது
‘நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோ : ஸ்ரீ ரநபாயிநீ ..’
உலகத்துக்கே தாயான ஸ்ரீ மஹாலக்ஷ்மி , நாயகனான விஷ்ணுவை எப்போதும்
பிரியாமல் உள்ளாள். ( ப்ருகு மஹரிஷிக்குப் பெண்ணான பிறகோ ,
திருப்பாற்கடலில் தோன்றிய பிறகோ பகவானுடன் சேர்ந்தாள் என்பதல்ல–
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ,ரக்ஷண ,ஸம்ஹார ,மோக்ஷ தசைகளிலும்
பகவானுடன் கூடவே ஸர்வ அவஸ்தைகளிலும் பகவானுடன் கூடவே இருக்கிறாள் )
இதனை , பராசரர் –ஸ்ரீ விஷ்ணு புராணத்தை இயற்றியவர்—
மற்றும் பராங்குசர் –ஸ்ரீ நம்மாழ்வார்–அருளிச் செயல்—பகவத் விஷயம்—
மூலமாக அறியலாம்.
இதனை ஸ்ரீ ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் 4 மற்றும் 5 வது ச்லோகங்கள் மூலம் அறியலாம்.

ஸ்ரீ ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் –4 வது ச்லோகம்

தத்வேந யஸ்சிதசிதீஸ்வரதத் ஸ்வபாவ
போகாபவர்க ததுபாயகதீருதார : |
ஸந்தர்சயந் நிரமிமீத புராண ரத்னம்
தஸ்மை நமோ முனிவராய பராசராய ||

எந்த மஹரிஷி , வள்ளல்தன்மையுடன் ஜீவன், அசேதநம் ,ஈச்வரன்
இவர்களின் தன்மை, ஜீவனின் அநுபவம், அசித்தின் அநுபவமான
கைவல்ய, ஐச்வர்ய , புருஷார்த்தங்கள் , மோக்ஷம், அவருக்கான -உபாயம்-வழி
இவற்றையெல்லாம் உள்ளது உள்ளபடியாக தெளிவாகக் காண்பிக்க
புராண ரத்னம் என்பதை இயற்றினாரோ –அந்தப் பராசரருக்கு எனது வந்தனம்

5 வது ச்லோகம்

மாதா பிதா யுவதயஸ்தநயா விபூதி :
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந : குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்கிரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
இமாதா பிதா யுவதயஸ்தநயா விபூதி :
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந : குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்கிரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
இது ஸ்ரீ நம்மாழ்வாருக்கான தனியன்-ஸ்ரீ ஆளவந்தார் அருளியது.

ஸ்ரீநம்மாழ்வார்—”ஆத்யஸ்ய ந குலபதே —-”, ப்ரபந்நஜன ஸந்தான கூடஸ்தர் .
”மதன்வயாநாம்—” ஆளவந்தார், தம்மைச் சேர்ந்தவர் எல்லாரையும்
சேர்த்துக்கொண்டு,ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே ”சரணம்” என்கிறார்.
எனக்கும், என்னைச் சேர்ந்தவர்களுக்கும் எப்போதும் தாயாகவும், தகப்பனாகவும்,
பிள்ளைகள், ஆகவும், தன்னோடு ஸம்பந்தம் உள்ள –வித்யை,பிறப்பு —

அதாவது ”வித்யா வம்சம்” , ஜன்ம வம்சம்”—வித்யா வம்சம் என்பது—ஆசார்ய சம்பந்தத்தால் வருவது—வளருவது.
ஆசார்யன் —அவனுக்கு ஸத்சிஷ்யர்கள் —அவர்கள், ஆசார்யர்களாகி ,
வித்யைகளைக் கற்றுக்கொடுத்து அடுத்த சிஷ்யர்களை உண்டாக்குவது–

என்று இப்படி வளருவது—-வித்யா வம்சம். எல்லா சிஷ்யர்களும்
சொல்லிக்கொள்ளும்படி இல்லாவிட்டால்கூட ,ஒன்றிரண்டு சிஷ்யர்களால்
இந்த ”வித்யா வம்சம் ”வளரும்.

”ஜன்ம வம்சம்”என்பது, தேஹ சம்பந்தத்தால் வருவது. ”க்ருஹஸ்தாஸ்ரமத்”தில்
இருந்து பிள்ளை பெண், பேரன் , பேத்தி, என்று தொடருவது இந்த வம்சம்.
இப்படி வளரும் இந்த வம்சம், எண்ணத்தொலையாத வம்சங்களைப் போல,
எவ்வித முக்யத்வமும் இன்றி இருப்பதுண்டு.
ஏதோ, சில தலைமுறைகளில் சொல்லிக்கொள்ளும்படியாக சில வம்சத்தவர் இருப்பதுண்டு.
இது, பெரும்பாலும் ”பித்ரு கடன்” தீர்ப்பதற்கே இருக்கும்

இவைகளினால் தன்வம்சத்தைச் சேர்ந்த முன்னோர், பின்னோர், —
யாவருக்கும் பகவான் முதல் ஆசார்யன் . பொதுவானவன்.ஆனால் நமக்கு,
நாதமுனிகள் ஸம்ப்ரதாயம் —ஆதலால் ஆழ்வார் நமக்கு ”அஸாதாரணர் ”
பரதத்வத்தை நிச்சயிக்கும் நம்மாழ்வாரின் அருளிச் செயல்கள்,
எப்போதும் மாறாத உண்மையைச் சொல்கிறது.ஸாத்விகர் ஸமர்ப்பித்த
மகிழம்பூ –இவற்றை மாலையாக அணிந்தவர் .

வேதங்களின் ரஹஸ்ய அர்த்தங்களை எளிமையாகத் தெரிந்துகொள்ளக்
காரணமாயும், அப்போதே பகவானின் திருவுள்ளத்துக்கு உகப்பைக்
கொடுக்கக்கூடியதாயும், மதுரகவி முதலான ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகர்கள்
புகழ்ந்தும், ஸ்ரீமந் நாதமுநிகளுக்கு பகவானின் ஸங்கல்பத்தினால்
யோகதசையில் ஆவிர்ப்பவித்து, எல்லா வேத ,உபநிஷத்துக்களுக்கும்
ஸாரமான அர்த்தங்களை உபதேசித்தவராயும்,தாய், தகப்பன் ,ஸஹோதரன்
எல்லாமே ,ஸ்ரீமந் நாராயணனே என்கிற உபநிஷத் வாக்கியத்தில் சொல்லப்படுகிற
பகவானுடைய ஸ்வபாவத்தை உடையவராகத் தெரிந்து, தெளிந்து,ஸ்ரீ ஆளவந்தார் இந்தத்
தனியனின் மூலமாக ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவடிகளில் ஸேவிக்கிறார் .

ப்ரணமாமி மூர்த்நா —தலையால்—சிரஸ்ஸால் வணங்குகிறேன் என்கிறார்–
விபூதி—வேலைக்காரர்கள், தாஸர்கள் ,பணம், ரத்நம் ,எல்லாமும்—விபூதி –செல்வம்.
இவையெல்லாமிருந்தும் , .
இந்தத் திருவடியே,,நம்மால் அபேக்ஷிக்கப்படுகிற பலன்.
இப்படிப் பகவானின் திருவடி வேண்டுமென்றால், ஆசார்யனின் க்ருபை வேண்டும்,
ஆசார்ய க்ருபை இருப்பின் அச்யுதனின் நிக்ரஹத்தையும் சமன் செய்துவிடலாம்.

பாஷ்யம்(வ்யாக்யானம் ) இப்படிக் கூறுகிறது—-

ஈச்வருகிருபா அநாதிரபி ஆசார்யக்ருபாம் அபேக்ஷதே லீலாரஸ ஸஹசரிதா ச
ஆசார்யக்ருபாது தந்நிக்ரஹமபிசமயதி . அநுக்ரஹைக ரஸா ச . ஈச்வரஸ்ய
க்வசித் அதோ நீநீஷாபிவர்த்ததே அஸாது காரயித்ருத் வம் ச . ஆசார்யஸ்தது
ஸர்வத்ர உந்நிநீஷைவ ஸ ஸாத்வேவ காரயதி —
எம்பெருமானின் தயை ,ஆசார்யனின் தயையை அபேக்ஷித்தே
நமக்கு நன்மையைச் செய்கிறது.சிலபேர்விஷயத்தில், ஈச்வரன் நிக்ரஹமும்
செய்வன் . கெட்ட செயல்களைச் செய்யஇடமளிப்பான்.ஆசார்யனின் க்ருபை
அநுக்ரஹத்தையே செய்யும்.நன்மையையே விளைவிக்கும்.

பகவானுக்குச் சில விஷயங்களில், சிலருக்கு (அஸுரர்களுக்கு ) சாஸ்த்ர வ்ருத்தமான
அர்த்தங்களை ஏற்படுத்தி,பாபகார்யங்களைச்செய்யவைத்து,கீழே தள்ளிவிடும்
ஆசையும் உண்டு. ஆசார்யனுக்கோ,எல்லா சிஷ்யர்களும் உஜ்ஜீவிக்கவேண்டும்
என்கிற ஆசைதான். எந்தச் சமயத்திலும் .சாஸ்த்ர விரோதமான பேச்சே இராது–

குழந்தையை —
தாயார்—தன் த்ரேகம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சுமந்து, பெற்று வளர்க்கிறாள்;
எவ்வளவு அலக்ஷ்யம்செய்தாலும் ,அன்பைச் செலுத்துகிறாள் .
தகப்பனார், —-பேச ஆரம்பிக்கும்போது, எடுத்துக் கொஞ்சி, நல்லொழுக்கம், வேதம் ,புராணம் ,
இதிஹாசம் முதலியவற்றைப் போதிக்கிறார் .
மனைவி—யௌவன வயதில் தாய் தந்தைக்கும் மேலாக உதவி, அமைச்சனாகவும்
இருந்து உதவுகிறாள்
பிறக்கும் மக்கள்—-வயதானபோது, அரவணைத்து, ஆதரவு நல்குகிறார்கள் .
இப்படி இவர்கள் எல்லோருடைய மூலமாக சுகங்களும்,(இடர்களையும் சேர்த்து) சேர்ந்து அனுபவிக்க
பந்துக்களும், நண்பர்களும், வேண்டும்;
இவை எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது ”தனம்”—சொத்து.இது ப்ரஜைகளுக்கு
அந்தந்த சமயங்களில் தேவைப்படும்.

ஆனால்,
வித்யா வம்சம், ஜந்ம வம்சம் ஆகிய இரண்டு வம்சங்களில், முன்னேயும் பின்னேயும்
சம்பந்தப்பட்டவருக்கும் ஆசார்ய ,ப்ராசார்ய என்று சம்பந்தப்பட்டவர்கட்கும்,வேண்டிய தனம் —

முதல் குலபதி —-ஸ்ரீ நம்மாழ்வார்
குலபதி எனில் , பரம்பரை, பரம்பரையாக பல கிளைகளாக வித்யைகள்
பெருக , மூலகாரணமாக இருப்பவர். முதல் ஆசார்யன் எம்பெருமானாக இருந்தாலும்,
பரம்பரை என்று சொல்லப் புகுந்தால், ஸ்ரீ சடகோபனே மூல புருஷராவார் .
அதனாலேயே அவர் ப்ரபந்நஜன ஸந்தான கூடஸ்தர்.

அவரது திருவடிகளைத் தலையாலே வணங்குகிறேன்.
ப்ரணமாமி மூர்த்நா —-
தலையால் வணங்குவது என்பதற்கு, வ்யாக்யானம் செய்யத் தொடங்கினால் ,
இந்தப் ப்ரணாமம் , பஞ்சாங்க ப்ரணாமம், ஷடங்க ப்ரணாமம், அஷ்டாங்க ப்ரணாமம்,
த்வாதசாங்க ப்ரணாமம்,, ஷோடசாங்க ப்ரணாமம், ஸுக்ருத் ப்ரணாமம், தண்டாங்க ப்ரணாமம்,
மஸ்திஷ்க ப்ரணாமம்,, ஸம்புட ப்ரணாமம், ப்ரஹ்வாங்க ப்ரணாமம்என்று பலவகையாக
இருக்கிறது இருப்பினும், மிகவும் அனுஷ்டானத்தில் உள்ள,

”அஷ்டாங்கப் ப்ரணாமத்தைச் சொல்ல வேண்டி வருகிறது.
ஸ்ரீ பாஷ்யகாரர் நித்ய க்ரந்தத்தில்
மனம், அறிவு, எண்ணம், இவைகளுடன் ஆமையைப் போன்று இருகைகளையும்
தரையில் பதியவைத்து,இருகால்களையும் நன்கு நீட்டி,
தலையால் வணங்குவது அஷ்டாங்க ப்ரணாமம் எனச் சொல்லப்படுகிறது.

ஸ்வாமி தேசிகன், நித்ய வ்யாக்யானாதிகாரத்தில்,
மார்பு, தலை, சொல், மனம்,அறிவு, கன்னங்கள், கால்கள், கைகள், —என்று எட்டு அங்கங்கள் சொல்கிறார்.
”ஸ்ரீ” உள்ளவராக, இளையபெருமாளாகிய லக்ஷ்மணன் ,கஜேந்த்ரன் போன்றோரைச்
சொல்கிறோம். எதனால் —பகவத் கைங்கர்யத்தில் எப்போதும் இழிந்து இருந்ததால்.

அவ்வாறே,
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டுமென
அருளினார். திவ்யதேசம் தோறும் நடந்து , பாடி, கும்பிட்டு, நர்த்தனமாடவேண்டுமென
அருளினார். அதனால் இவரும்”ஸ்ரீ” உள்ளவரே . இது இவருக்கு அழியாச் செல்வம்.
இதற்கு அழியா மணமுள்ள ”மகிழ் மாலை ” யும் பூண்டு அழியாச் செல்வமாயிற்று.
எம்பெருமானுக்கு ”துளஸி ” எப்படியோ, அவ்வாறு, ஆழ்வாருக்கு ”மகிழம்பூ ”
ஆழ்வாருக்கு உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை பருகும் நீர் -எல்லாமே கண்ணன்.
நமக்கு, இவை எல்லாமே ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி .ஆசார்ய பரம்பரையில் வரும்
ஸ்ரீமந் நாதமுநிகளும் ,மற்றோரும் அவரது திருவடியே.
ஆழ்வார் குலபதி ஆவதால், அவரது திருவடி, நமக்கு, மாதா பிதா எல்லாமே என்பதாம்.

ஸ்ரீ ஆளவந்தார் ,வாழ்ந்த காலத்தில் அவரது திருமாளிகையில், ஸ்ரீ நம்மாழ்வாரின்
திருவடி நிலைகள் ”மகிழ்மாலை” சார்த்தப்பட்டு.ஆராதிக்கப்பட்டது என்பதும் குருபரம்பரைச் செய்தி.

ஸ்ரீ விஷ்ணு புராணம்— பராசரர் அருளியது–புராண ரத்னம்
ஸ்ரீ ஆளவந்தார் அருளியது –ஸ்தோத்ர ரத்னம்
த்வய மந்த்ரம்—மந்த்ர ரத்னம்

ஸ்ரீ விஷ்ணு புராணத்தை, ஸ்ரீ ஆளவந்தார் ”புராண ரத்னம் ”
என்கிறார். ஸ்வாமி தேசிகன் தன்னுடைய ஸ்தோத்ர பாஷ்யத்தில்
அத்ராஸம் மானதம் ரத்னம் ஸ்திரம் போக்யம் ப்ரகாஸகம் |
மஹார்கம் மங்களம் மான்யம் ஸுரக்ஷம் ஸுக்ரஹம் ந்ருணாம் ||-என்கிறார்
த்ராஸம் என்றால் ரத்னத்துக்கு உள்ள தோஷத்தைச் சொல்வது.
இது ”அத்ராஸம் ”. இந்த ரத்னம் எவ்விதத் தோஷமும் இல்லாதது.
மேலும் வைத்திருப்பவருக்குப் பெருமை முதலியன தருவது.
தோத்ர ரத்னத்தில் , ஸ்ரீ ஆளவந்தார்
முதல் 5 ச்லோகங்களாலே ஜ்ஞானத்தைக் கொடுத்தவர்களை நமஸ்கரிக்கிறார்.
ச்லோகம் 6ம் 7ம் —பரத்வம்
ச்லோகம் 8ம் 9ம் —ஸௌலப்யம்
ச்லோகம் 10 முதல் 21 —நாராயண ஸப்தார்த்தம்
ச்லோகம் 22–ப்ரபத்தி அநுஷ்டித்தது
ச்லோகம் 23—27 =ப்ரபத்திக்கு அதிகாரம் தமக்கு உள்ளதென்கிறார்
ச்லோகம் 28ம் 29ம், —லகு உபாயத்தைச் சொல்கிறார்
ச்லோகம் 30—46 =த்வயத்தில் உத்தரகண்டத்தின் பொருளைச் சொல்கிறார்
ச்லோகம் 47—-பலனில் ஆசையுடன் தகுந்த உபாயம் செய்யாததற்காக வருத்தம்
ச்லோகம் 48—51 =ப்ரபத்தி அளிக்கும்படி வேண்டுகிறார்
ச்லோகம் 52ம் 53ம் —ஸரணாகதி —ஸமர்ப்பணத்தைச் சொல்கிறார்
ச்லோகம் 54—57 =தேஹம் விடும்வரை இருக்க வேண்டுகிறார்
ச்லோகம் 58—63 =பகவானின் காருண்யம் பரத்வம், வாத்ஸல்யம்
ச்லோகம் 64—–வ்ரதம்
ச்லோகம் 65—ஆசார்ய அநுக்ரஹத்தின் பெருமை

இப்படியாக ”ஸ்தோத்ர ரத்ன”த்தின் பெருமை இங்கு சொல்லப்பட்டது.

அதிகாரத்திலிருந்து

திவ்ய -தம்பதிகள்-தங்களுக்குள் பிரித்துக்கொண்ட செயல்கள்

இவ்விடத்தில் தண்டதரத்வமும் புருஷகாரத்வாதிகளும் எம்பெருமானுக்கும்
பிராட்டிக்கும் கூறாக விபஜித்த வ்யாபாரங்கள் .உபசித்யமான தர்மாதாரத்திற்
காட்டில் அதிதிச்யமான தர்மாதாரத்துக்கு விசேஷம் ஸ்வத ;ப்ராப்தம்
என்று உவர் அருளிச் செய்ததுக்கும் இப்படி விபாகத்தால் வந்த
வைஷம்யத்தாலே தாத்பர்யம் . இது யுவத்வாதெள துல்யே அபி
என்கிற ச்லோகத்திலே நிர்ணிதம் . இறை நிலையுணர்வரிது என்று
ஆழ்வார் அருளிச் செய்த நிலத்திலே ஏதேனுமொரு வ்ருதாநிர்ப்பந்தம்
ஆகாது . க்ருசாநர்தாம்ஸ்த : கேசித் க்ருசாம்ஸ்தத்ர குர்வதே
என்கிறபடியே தர்க்கபாண்டியத்தாலே நினைத்ததெல்லாம்
ஸாதிக்கலாயிருக்கச் செய்தேயிறே நாம் ப்ரமாண சரணராய்ப்
போருகிறது . ஆகையால் இவ்வீச்வரத்தையும் ஈசிதவ்யதத்வங்களையும்
யதாப்ரமாணம் தெளியப் ப்ராப்தம்

இவ்விடத்தில் ஸர்வஜ்ஞனாகவும் வேண்டா. அத்யந்தானுபயுக்தங்களிற் போலே
ஸ்வல்போபயுக்தங்கலானவற்றில் அபிஸந்தி பண்ணவும் வேண்டா .
அபரிச்சேத்யமான கடலிலே படகோடுவார் வழி முதலாக வேண்டுவன
தெளியுமாப்போலே இவ்வளவு விவேகிக்கை அவச்யாபேக்ஷிதம் .
இது ப்ரதிஷ்டிதமாகைக்காக இவற்றின் விரிவுகள் எண்ணுகிறது

இப்படி மூன்று தத்வங்களாக வகுத்துச் சிந்தித்தாற்போலே
ஸர்வவிசிஷ்டவேஷத்தாலே ஈச்வரன் ஏகதத்வமாக அநுஸந்திப்பார்க்கும்
ஈச —ஈசிதவ்யங்கள் , ஆத்மா –அநாத்மாக்கள் , உபாய–உபேயங்களென்றாற்போலே
இரண்டு அர்த்தம் ஞாதவ்யமாக வகுப்பார்க்கும் , ரக்ஷ்யம் —ரக்ஷகன் ,
ஹேயம் –உபாதேயம் என்று இப்புடைகளிலே அர்த்தசதுஷ்டயம் ஞாதவ்யமாக
ஸங்க்ரஹிப்பார்க்கும் , முன்பு சொன்னபடியே அர்த்தபஞ்சகம்
ஷடர்த்தங்களென்று விவேகிப்பார்க்கும் , ரஹஸ்ய ஸாஸ்த்ரங்களிலே
ஸப்த —-பதார்த்த —சிந்தாதிகள் பண்ணுவார்க்கும் அவ்வோ
ஞானாநுஷ்டான –ப்ரதிஷ்டாரூபங்களான ப்ரயோஜனவிசேஷங்கள்
கண்டுகொள்வது

முக்யமான ஜ்ஞானம் பெற்று உபாயத்தில் மூளுகை
—————————————————————————-
சாஸ்த்ரஞானம் பஹுக்லேசம் புத்தேச்வலந காரணம்
உபதேசாத்தரிம் புத்தவா விரமேத் ஸர்வகர்மஸு

என்கிறது உபயுக்தமான ஸாராம்ஸத்தைக் கடுக ச்ரவணம் பண்ணி க்ருஷி
பண்ணாதே உண்ண விரகுடையவன் க்ருஷி சிந்தையை விடுமாப்போலே
விரிவுகற்கைக்கு ஈடான சாஸ்த்ராப்யாஸாதிகர்மங்களில் உபரதனாய்க்
கடுக மோக்ஷோபாயத்திலே மூள ப்ராப்தமென்றபடி

உபயுக்தேஷு த்ரிவர்க்க நிரபேக்ஷதா
கராணத்ரய ஸாரூப்யம் இதி ஸெளக்ய ரஸாயனம்

தேற இயம்பினர் சித்தும் அசித்தும் இறையும் என
வேறுபடும் வியன் தத்துவம் மூன்றும், வினை உடம்பில்
கூறுபடும் கொடுமோகமும் தான் இறையாம் குறிப்பும்
மாறநினைந்து அருளால் மறைநூல் தந்த வாதியரே

ஆவாப உத்வாபதஸ்ஸ்யு : கதி கதி கவிதீ சித்ரவத்தத்ததர்தேஷு
ஆனந்த்யாதஸ்திநாஸ்த் யோரநவதி குஹநா யுக்திகாந்தா : க்ருதாந்தா : |
தத்த்வாலோகஸ்து லோப்தும் ப்ரபவதி ஸஹஸா நிஸ்ஸமஸ்தாந் ஸமஸ்தாந்
பும்ஸ்த்வே தத்வேந த்ருஷ்டே புனரபி ந கலு ப்ராணிதா ஸ்தாணுதாதி : ||

வ்யாக்யானம்

இவ்விடத்தில், இப்போது, பெருமானுக்கும் ,பிராட்டிக்கும் செயல்களில்
உள்ள வேறுபாடுகளைப் பார்ப்போம்.
பகவான், தவறு செய்பவர்களைத் தண்டிக்கிறான்
பிராட்டியோ, அவ்வாறு தவறு செய்பவர்களை மன்னிக்கும்படி ,பகவானிடம்
வேண்டுகிறாள்
மீமாம்ஸம் படித்தவர்கள் சொல்வர் —-
ஒரு வஸ்துவானது, எந்தத் தன்மையால் மற்றொரு வஸ்து போன்றே
உள்ளதோ , அதே தன்மையால் அந்த வஸ்துவைக் காட்டிலும் வேறுபட்டதாகவும்
இருக்கும். இங்கு பகவானின் மற்றும் பிராட்டியின் ஸங்கல்பம் என்பது
இவ்விதமே என உணரலாம் ஸ்ரீ பராசர பட்டர் அருளிய ”ஸ்ரீ குணரத்னகோசம் ”
( 34 வது ச்லோகம் )இப்படிக் கூறுகிறது

யுவாத் வா தெள துல்யேப்ய பரவஸதா–ஸத்ரு –ஸமன–
ஸ்த்த்ரவாதீன் க்ருத்வா பகவதி குணான் பும்ஸ்த்வஸுலபான்
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பாரார்த்தய கருணா
க்ஷமாதீன் வா போக்தும் பவதி யுவயோராத்மனிபிதா

ஹே பெரியபிராட்டியாரான ரங்கநாயகி—-
இளமை முதலானவை ஒத்து இருந்தாலும் தனித்துச் செயல்படும்
திறமை,எதிரிகளை அடக்குவது , எடுத்த காரியத்தில் உறுதியோடு
இருப்பது, முதலான நல்ல குணங்கள் ஆண்மைக்கு அநாதிகாலமாக
இருக்க, ஜகன்மாதாவான உம்மிடம் பெண்மைக்கே தகுந்தவை என்று
ஏற்பட்ட மனஸ்ஸின் தன்மை , நாயகனான பகவானின் திருவுள்ளத்துக்கு மீறாமல் இருப்பது
, பிறர் கஷ்டங்களைத் துடைப்பது, பொறுமை , இவை முதலானவை
அநாதிகாலமாக அமையப்பெற்று ஜீவன்கள் அநுபவிக்க ஏற்றவாறு
உங்கள் இருவரின் ஆத்ம ஸ்வரூபத்தில் பிரித்து அறியும் நிலை ஏற்பட்டுவருகிறது.

குணங்கள் மூன்று வகை
ஆத்ம குணங்கள் ஞானம் , சக்தி, ஆனந்தம் முதலியவை
திவ்ய மங்கள விக்ரஹத்தை ஆச்ரயித்த குணங்கள் –ஒளஜ்வல்யம்
ஸௌந்தர்யம் , ஸௌகந்த்யம் , ஸௌகுமார்யம் , லாவண்யம் ,யௌவனம்
திவ்ய ஆத்ம ஸ்வரூபம் —இரண்டையும் ஆச்ரயித்த குணங்களான-ஸௌஹார்த்தம் , மாதுர்யம் , சாதுர்யம் , தைர்யம் முதலியன
-நமக்கு-பகவான்–சேஷீ பிராட்டி–சேஷி பூதை
தாயார், பகவானுக்கு மட்டில் =சேஷ பூதை

ஈச்வரனின் உண்மையான நிலையை அறிவது கடினம் என்று
ஸ்ரீ நம்மாழ்வார் கூறுகிறார் –திருவாய்மொழி ( 1–3–6 )

உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்துருவியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந்துணரிலும் இறைநிலை உணர்வரிது உயிர்காள் !
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து அரியயனரனென்றும் இவரை
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே

உணர்வுள்ளவர்களே ! பகவானின் தன்மையை அறிதல் அரிதாகும் .
அவனை இன்னானென்று அறிய இயலாது.

மஹாபாரதத்தில் சொல்வது —

க்ருசாநர்தாம்ஸ்த : கேசித் க்ருசாம்ஸ்தத்ர குர்வதே
சிலர் சிறிய விஷயங்களையும் பெரிதாக்குகின்றனர் . நாம் நமது
வாதங்களை நமக்குள்ள தர்க்கவாத அறிவைக்கொண்டே
நிரூபித்து விடலாம்.ஆனாலும் சிறிய விஷயங்களாக இருந்தாலும்
சாஸ்த்ர பிரமாணம் தேவைப்படுகிறது. ஆதலால்,இந்த ஈச்வர தத்வத்தையும் சாஸ்த்ர ரூபமாக அறிய வேணும்

உபசித்யமான தர்மாதாரத்திற்காட்டில் அதிதிச்யமான
தர்மாதாரத்துக்கு விசேஷம் ஸ்வத ;ப்ராப்தம்= இதற்கான விளக்கம்

சில தர்மங்கள் அவரவர்களுக்கு இயற்கையிலேயே உள்ளன.
பூர்வ மீமாம்ஸையில் , யாகாதிகளை ,ப்ரக்ருதி யாகம், விக்ருதி யாகம்-என்று இரண்டாகச் சொல்வர்.
ப்ரக்ருதி யாகம்= அந்த யாகத்தில் செய்யவேண்டிய தர்மங்களுக்கு எல்லாம்-எதற்கு ஸ்பஷ்டமாக உபதேசம் ஆகியுள்ளதோ அது.
விக்ருதி யாகம் = இங்கு உபதேசிக்காத தர்மங்களையும் இதற்கு முன்பு-சொல்லப்பட்ட ப்ரக்ருதி யாகத்திலிருந்து கொண்டுவரவேண்டுமென்று ஆராய்ந்து
அதைப்போல இதையும் செய்யவேண்டும் என்று நிரூபிக்கிறோமோ அது.
ப்ரக்ருதி யாகம் =ஆக்னேய யாகம் —–அக்னி தேவதா யாகம்
விக்ருதி யாகம் =சௌர்ய யாகம் —ஸூர்ய தேவதா யாகம்

இதைப்போலப் பிராட்டிக்கும் சில விசேஷங்கள்உண்டு,.சில குணங்கள்
பிராட்டிக்கும் , பகவானுக்கும் பொதுவாக இருந்தாலும்
சில குணங்கள் பிராட்டிக்கு மட்டில்; சில குணங்கள் பகவானுக்கு மட்டில்.

இருந்தாலும், நாம் , எல்லாவற்றையும் அறிய வேண்டியதில்லை.
தேவையில்லாத விஷயங்களைக் குறித்து ச்ரமப்படவேண்டியதில்லை.
பெரிய ஸமுத்ரத்தில் படகை ஓட்டுபவனுக்கு , தான் போகவேண்டிய
வழியை அறிந்தாலே போதுமானது. நமக்கு அவச்யமானதை
அறிந்தாலே போதுமானது. இந்தத் தத்வங்களை நன்கு உறுதியாக
அறிய விரிவாகக் கற்பது அவசியமாகிறது

தத்வங்களை மூன்றாகப் பிரித்தாலும் , சிலர் ஈச்வரன் மட்டுமே தத்வம் என்றும்
மற்றவை அவனது தன்மைகள் என்பர்.வேறு சிலர், தத்துவங்கள் இரண்டு என்பர்.
1.ஈச்வரன்—அவனுக்கு அடங்கியவை . ஆத்மா–ஆத்மா அல்லாதவை
2.அடையப்படும் இடம் –அதற்கான வழி

இன்னும் சிலர் நான்கு விதமாகச் சொல்வர்
1. ரக்ஷிப்பவன்
2. ரக்ஷிக்கப்படுவது
3. விலக்கப்பட வேண்டியவை
4. ஏற்கப்பட வேண்டியவை

இதில் விசேஷமென்னவெனில்,
அர்த்த பஞ்சகம் ஐந்து என்பாரும் உளர்;ஆறு என்பாரும் உளர்

ரஹஸ்யார்த்தங்களில் —
ஸப்த —-பதார்த்த —சிந்தாதிகள் பண்ணுவார்க்கும் அவ்வோ
ஞானாநுஷ்டான –ப்ரதிஷ்டாரூபங்களான ப்ரயோஜனவிசேஷங்கள்
கண்டுகொள்வது —இது என்னவெனில்,
1.ஈச்வரன்
2. அவித்யை ( அஞ்ஞானம் )
3. கர்மம் ( ஊழ்வினை )
4.காலம்
5. கடமை ( கர்த்தவ்யதை )
6.செய்யவேண்டிய முறை ( இதி கர்த்தவ்யதை )
7. புலனடக்கம் (ஸம்யமம் )
அவரவர் சிந்தனைக்கு ஏற்றவாறு தத்வங்களை அணுகி அறிந்து
செயல்பட அவற்றுக்கேற்ற நன்மைகளும் , பலன்களும் கிடைக்கிறது

சாஸ்த்ரஞானம் பஹுக்லேசம் புத்தேச்வலந காரணம்
உபதேசாத்தரிம் புத்தவா விரமேத் ஸர்வகர்மஸு

சாஸ்த்ரஜ்ஞானம் ஸம்பாதிப்பதில் மிகவும் கஷ்டம்.
அதனால் மதி கலக்கம். எனவே,ஆசார்யனின் உபதேசத்தைப்
பெற்று, அந்த உபதேசத்தால் எம்பெருமானையும் , மற்றவற்றையும்
தெரிந்து, சாஸ்த்ரஜ்ஞானம் ஸம்பாதிப்பதான மீதி எல்லாச்
செயல்களிலிருந்தும் விலகவேண்டும். மேலும் மேலும் ஆராய்ந்து,
மோக்ஷ பலனை அடைவதை தாமதம் செய்யக்கூடாது.
தனக்குத் தேவையான உணவைப் பெற்றிருப்பவன்,
விவசாயம் இழியமாட்டான் . அதைப்போல , ஆசார்யன்
உபதேசத்தைப் பெற்று இருப்பவன் தாமதமின்றி,
மோக்ஷ உபாயங்களில் இழியவேண்டும்

உபயுக்தேஷு த்ரிவர்க்க நிரபேக்ஷதா
கராணத்ரய ஸாரூப்யம் இதி ஸெளக்ய ரஸாயனம்

எது ஸெளக்ய ரஸாயனம் ( நலத்தைத் தரும் மருந்து ) என்றால்,
தேவையானவற்றில் ஜ்ஞானம், தர்ம ,அர்த்த ,காமப் பற்றை
அறுத்தல், எண்ணம்,சொல் செயல் –மூன்றும் ஒருப்பட்டு இருப்பது.

தேற இயம்பினர் சித்தும் அசித்தும் இறையும் என
வேறுபடும் வியன் தத்துவம் மூன்றும், வினை உடம்பில்
கூறுபடும் கொடுமோகமும் தான் இறையாம் குறிப்பும்
மாறநினைந்து அருளால் மறைநூல் தந்த வாதியரே

வேதமாகிய சாஸ்த்ரத்தை உபதேசித்த ஆசார்யர்கள் , நம்மீது
ஏற்பட்ட அளவற்ற கருணையால் , கர்மவினையால் இந்த சரீரத்தின் மீது
உள்ள -மோகம் – அதாவது சரீரமே ஆத்மா என்கிற எண்ணம்–மற்றும்
நான் சுதந்திரன் என்கிற –கர்வம் இவைகளை நீக்கத் திருவுள்ளம்
பற்றி, சேதநன் , அசேதநம் , ஈச்வரன் என்கிற மூன்று தத்வங்கள்
இவைகளின் வேறுபாடுகள் என்று எல்லாவற்றையும் நமக்குத் ,
துளியும் சந்தேகமின்றி உபதேசித்தார்கள்

ஆவாப உத்வாபதஸ்ஸ்யு : கதி கதி கவிதீ சித்ரவத்தத்ததர்தேஷு
ஆனந்த்யாதஸ்திநாஸ்த் யோரநவதி குஹநா யுக்திகாந்தா : க்ருதாந்தா : |
தத்த்வாலோகஸ்து லோப்தும் ப்ரபவதி ஸஹஸா நிஸ்ஸமஸ்தாந் ஸமஸ்தாந்
பும்ஸ்த்வே தத்வேந த்ருஷ்டே புனரபி ந கலு ப்ராணிதா ஸ்தாணுதாதி : ||

பலபலத் தத்வங்கள் சொல்லப்படுகின்றன . ஒன்றில் இல்லை ;மற்றொன்றில் உளது. இன்னொன்றில் நீக்கல்; வேறொன்றில்
சேர்க்கை.இப்படியாக, அவரவர் வாதங்களால் கேட்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது .புலவர்களின் எல்லையில்லச் சிந்தனையைப்
போல, தத்வங்கள் எல்லையற்று உள்ளன உண்மையைக் காணும் அறிவு, இவை அனைத்தையும் இருக்குமிடம் தெரியாமல் போக்கிவிடும் .
ஒரு மனிதன் தனக்கு முன்பு உள்ள பொருளை ”மணிதன் எனத் தெளிந்தால் , பின்பு ,அது மிருகமா, கட்டையா என்கிற ஐயம் வராது.
அப்படியே எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் எனத் தெளிந்தபிறகு ,ருத்ரனா ,ப்ரம்மனா என்கிற ஐயம் அடியோடு நீங்கும்

அதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம்—-நிறைவு —

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் 4–அர்த்தபஞ்சக அதிகாரம் —

April 11, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் 4–அர்த்த பஞ்சக அதிகாரம் —-

முமுக்ஷுக்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 தத்வங்கள்

1.ஈச்வர ஸ்வரூபம்
2.ஜீவ ஸ்வரூபம்
3.மோக்ஷோபாயம்–மோக்ஷம் என்கிற பலன்
4.ப்ராப்தி விரோதி
5.அதற்கான பரிகாரம்
இவையே அந்த 5 தத்வங்கள்
இவற்றை விவரிக்கிறார், ஸ்வாமி தேசிகன் இந்த அதிகாரத்தில்–

அதிகாரத்திலிருந்து —-

ஆதெள ப்ராப்யம் பரமம் அநதம் ப்ராப்த்ரு ரூபம் ச மாதெள
இஷ்ட உபாயம் து அயனன மஸோரீர்ப்ஸிதார்த்தம் சதுர்த்யாம்
தத் வ்யாதாதம் மமக்ருதிகிரி வ்யஜ்ஜயந்தம் மனும் தம்
தத் ப்ராயம் ச த்வயம் அபி விதந் ஸம்மத :ஸர்வவேதீ

வ்யாக்யானம் —-

1.ப்ரணவத்திலும் ”அ ” உள்ளது; அஷ்டாக்ஷரத்தில் , நாராயண என்பதிலும் ”அ ” உள்ளது. இவற்றின் மூலமாக, குற்றமே இல்லாததும்,
மிக மிக உயர்ந்ததும், அடையப்பட வேண்டிய பொருளாக உள்ளதும் , இருப்பது ”பகவான் ” என்று கூறப்பட்டது.
நாராயணாய என்பதில் உள்ள நான்காம் வேற்றுமை (உ–ம்.விவசாயி மாடுகளுக்குத் தண்ணீர் கொடுக்கிறான் )
அடைய ஆசைப்படும் பகவானைச் சொல்லிற்று.
”அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே —-” என்று ஆரம்பிக்கிறது ,
மஹா நாராயண உபநிஷத்
2. நம என்கிற பதத்தில் உள்ள ”ம ” என்கிற அக்ஷரத்தின் மூலமாக ,பகவானை அடைய வேண்டிய ஜீவாத்மாவின் ஸ்வரூபம் கூறப்பட்டது.
3.நாராயணாய என்பதில் உள்ள, ”அயநம் ” என்பதன் மூலமாக, பகவானை அடையும், ஸித்தோபாயம் கூறப்பட்டது.
4. நம என்பதன் மூலமாக, இப்படிப்பட்ட உபாயத்துக்கு வேண்டிய முக்கிய அங்கமான சரணாகதி (ஸாத்யோபாயம் ) கூறப்பட்டது.
.5.”நம ” என்பதில் உள்ள ”ம ” என்கிற எழுத்து, பகவானை அடையத் தடையாக உள்ள ”மம காரத்தைச் சொல்லிற்று .
மம காரம் என்றால்,நான், என்னுடையது என்கிற எண்ணம்–சிந்தனை–

இங்ஙனம் 5 உன்னத விஷயங்களை விளக்குகின்ற அஷ்டாக்ஷரத்தையும் இதைப்போல , த்வயம் , சரம ச்லோகம்
இவற்றையும் தெளிவாக அறிபவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான்.

அதிகாரத்திலிருந்து—-

ஐந்து அர்த்தங்களைக் கூறுவதற்கும் , ஆறு அர்த்தங்களைக் கூறுவதற்கும் வேறுபாடு இல்லை. நாராயணாதி சப்தங்களிலே விவக்ஷிதமான
ஸம்பந்த விசேஷத்தை ஸித்தாந்தத்துக்குத் தளமாக்கி இத்தை அநுபந்தித்திருக்கும் அர்த்த பஞ்சகத்தைச் சிலர் விசாரித்தார்கள்
இச் சம்பந்தத்தோடே கூட ஷடர்த்தங்களென்று சிலர் அநுஸந்தித்தார்கள்

வ்யாக்யானம்—-

நாராயணாதி ஸப்தங்களிலே —” நாராயண ” , ”ஓம் ” ஆகிய பதங்களின் மூலமாக பகவானுக்கும், ஜீவாத்மாவுக்கும் இருக்கிற உறவுமுறை ,
ஆத்மாவுக்கும், சரீரத்துக்கும் இருப்பதைப் போன்றது என்பது இங்கு விவரிக்கப்பட்டது.

இந்தத் தத்வம் , நமது விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திற்கு அடிப்படை என்று பறை சாற்றுபவர்கள் , முமுக்ஷுவால் ( மோக்ஷத்துக்கு ஆசைப்படுபவன் )
தெரிந்து கொள்ள வேண்டியது, அர்த்தபஞ்சகம் எனக் கருதி, அதை ஆராய்ந்தார்கள். இன்னும் சிலர், ஈச்வரன்—ஜீவன் என்கிற உறவு முறையும்
நன்கு அறியப்பட வேண்டும் என்று உணர்ந்து, ஆறு அர்த்தங்களையும் ஆராய்ந்தனர்

அதிகாரத்திலிருந்து——

அர்த்த பஞ்சகத்தின் விவரம்
———————————————-
இச் சம்பந்தம் போலே , முமுக்ஷுவுக்கு விசேஷித்து அறிய வேண்டுவதாகச் சேர்த்த அர்த்த பஞ்சகம் ஏதென்னில்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச்ச ப்ரத்யகாத்மந :
ப்ராப்த்யுபாய பலம் ச ஏவ ததா ப்ராப்தி விரோதி ச
வதந்தி ஸகலா வேதா : ஸ இதிஹாஸ புராணகா :

வ்யாக்யானம் —-
—————————-

ஸ்வாமி தேசிகன், ஹாரீத ஸம்ஹிதையிலிருந்து மேற்கோள் காட்டுகிறார் —
முமுக்ஷுக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் இதில் சொல்லப் படுகின்றன-
ஜீவாத்மா அறிய வேண்டியவை —
1.ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம்
2.அவனை அடைய விரும்பும் ஜீவனின் ஸ்வரூபம்
3.ப்ரஹ்மத்தை அப்படி அடைவதற்கான உபாயம்
4.ப்ரஹ்மத்தை அடைவதால் பெரும் பயன்
5.ப்ரஹ்மத்தை அப்படி அடைவதற்குத் தடையாக உள்ள விஷயங்கள்

ப்ரஹ்மத்தின்-ஈச்வரனின் ஸ்வரூபம்

அதிகாரத்திலிருந்து—
———————————

இவற்றில் ப்ராப்யமான ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூபம் –திருமந்த்ரத்தில் ப்ரதம அக்ஷரத்திலும் நாராயண சப்தத்திலும் ,
த்வயத்தில்
ஸவிசேஷணங்களான நாராயண சப்தங்களிலும் ,சரம ச்லோகத்தில்
மாம் , அஹம் என்கிற பதங்களிலும் அனுஸந்தேயம்

வ்யாக்யானம்
———————-

இவற்றில் –அதாவது–அர்த்த பஞ்சகத்தில்
அடையப்பட வேண்டியதான லக்ஷ்யமான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் திருமந்த்ரத்தின் முதல் அக்ஷரமான –”அ ” என்பதன் வாயிலாகவும்,
”நாராயண ” என்கிற பதத்தின் வாயிலாகவும் நன்கு தெளிவாகிறது.
”த்வய ” மந்த்ரத்தில் இருக்கிற ”ஸ்ரீமந் ” என்கிற பெருமை சேர்க்கும் சொல்லுடன் கூடிய ”நாராயண –” என்கிற சொல் மூலமாகத் தெளியப்படுகிறது.
சரம ச்லோகத்தில் உள்ள ”நான் ”, ”என் ” என்கிற சொற்கள் மூலமும் அறியப்படுகிறது.

அதிகாரத்திலிருந்து——

ஈச்வரன் , பிராட்டியை விட்டுப் பிரியாதவன் , ஜ்ஞானானந்த ஸ்வரூபன்
———————————————————————————————–

அவ் விடங்களில் அநுஸந்திக்கும் போது

1.ஸ்ரீரியா ஸார்த்தம் ஜகத்பதி :
2.ஏஷ நாராயண: ஸ்ரீமாந்
3.பவாந் நாராயணோ தேவ :ஸ்ரீமாந் சக்ர தரோ விபு :
4.ஸ்ரீவத்ஸ வக்ஷா நித்ய ஸ்ரீ :
5.விஷ்ணோ :ஸ்ரீரநபாயிநீ
6.ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸம் இதம் வசனம ப்ரவீத்
7.ஸீதாமுவாசாதியசா ராகவம் ச மஹா வ்ருதம்
8.அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீ கணம்
9.பவேயம் சரணம் ஹி வ :
10.பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா
11.தயா ஸஹாஸீநமனந்த போகினி
12.காந்தஸ்தே புருஷோத்தம :
13.ஸ்வ பரிசரண போகை :ஸ்ரீமதி ப்ரீயமாணே
14.ஸ்ரீமதே நிர்மலானந்தோ தன்வதே விஷ்ணவே நம :
15.ஸ்ரீய :காந்த :அநந்தோ வர குண கணைகாஸ்பத வபு :
16.ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸோ
17.ஸ்ரீய :பதிர் நிகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநாநந்த ஞானானந்த ஸ்வரூப :
18.நீயும் திருமகளும் நின்றாயால்
19.ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
20.கோலத் திரு மா மகளோடு உன்னை
21.நின் திரு வருளும் பங்கயத்தாள் திரு வருளும்
22.உன் தாமரை மங்கையும் நீயும்
23.அகலகில்லேன் இறையும்
24.உணர் முழு நலம்
25.நந்தா விளக்கே அளத்தற்கரியாய்

என்றும் ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே ,ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வாவஸ்தையிலும் ஸஹ தர்ம சாரிணியான
பெரிய பிராட்டியாரோடு பிரிவில்லாத முழு நலமான அநந்த ஞானானந்த ஸ்வரூபமாக அநுஸந்திக்க வேணும்

வ்யாக்யானம்
——————————

பகவானின் ஸ்வரூபம் ,எல்லை யில்லா ஞானம் உள்ளதாகவும், எல்லை யில்லா ஆனந்தம் உடையதாகவும் அறிய வேண்டும்.
அவன், எப்போதும், எந்த உருவிலும், எந்தச் சூழலிலும் , தனது நாயகியான பெரிய பிராட்டியாரை விட்டுப் பிரியாமல்
இருக்கிறான் என்பதையும் அறிய வேண்டும் . பெரிய பிராட்டியார், பகவானுடைய எல்லாச் செயல்களிலும் உதவி–பங்கு பெற்று–
இருக்கிறாள் என்பதையும் அறிய வேண்டும். இவற்றைப் பல ப்ரமாணங்கள் மூலமாக அறியலாம்

1. லைங்க புராணம்—-

ஸ்ரீரியா ஸார்த்தம் ஜகத்பதி :—-உலகங்களுக்குப் பதியான நாராயணன்,
ஸ்ரீ மஹா லக்ஷ்மியுடன் வைகுண்டத்தில் இருக்கிறான்

2.ஹரிவம்ஸம் (113–62 )

ஏஷ நாராயண: ஸ்ரீமாந் —இந்த ஸ்ரீமந் நாராயணன் எப்போதும்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸஹிதமாகவே இருக்கிறான்

3.ஸ்ரீமத் ராமாயணம் –யுத்த காண்டம் (6– 120–13 )

பவாந் நாராயணோ தேவ :ஸ்ரீமாந் சக்ரதரோ விபு :—–ராமா —
நீயே மஹா லக்ஷ்மியின் நாயகனும் சக்ர தாரியும் எல்லா உலகங்களுக்கும் எஜமானனுமான நாராயணன் ஆவாய்

4. ஸ்ரீமத் ராமாயணம் –யுத்த காண்டம் (6– 114–15 )

ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ ——-ஸ்ரீ வத்ஸம் என்கிற மறுவை தன்னுடைய திருமார்பில் தரித்தவரும், எப்போதும்
பெரிய பிராட்டியாருடன் கூடியிருப்பவரும் —

5. விஷ்ணு புராணம் ( 1–18–17 )

விஷ்ணோ :ஸ்ரீரநபாயிநீ ——மஹா லக்ஷ்மி எம்பெருமானை விட்டு எப்போதும் பிரியாதவள்

6.ஸ்ரீமத் ராமாயணம் ( 3–15–6 )

–ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸம் இதம் வசனமப்ரவீத் —-லக்ஷ்மணன், ஸீதையின் முன்பாக, ராமனிடம் இந்த வார்த்தையைச் சொன்னான்.

7.ஸ்ரீமத் ராமாயணம் ( 2–31–2 )

ஸீதாமுவாசாதியசா ராகவம் ச மஹாவ்ருதம் ——தன்னைச் சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பேன் என்கிற ஸங்கல்பத்தை
உடைய ராமனிடமும், ஸீதையிடமும் ,லக்ஷ்மணன் சொன்னான்

8.ஸ்ரீமத் ராமாயணம் ( 5–58–87 )

அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீ கணம் —-ராக்ஷஸிகளின் கூட்டத்தை, ராமனிடமிருந்து காப்பாற்றும் சக்தி ,ஸீதையிடம் உள்ளது.

9. ஸ்ரீமத் ராமாயணம் ( 5–58–90-)
பவேயம் சரணம் ஹி வ :—–ஹே ராக்ஷஸிகளே — உங்களுக்கு நான் சரணம் புகுகின்றவள் ஆவேன் –( சரணம் என்று
அடைந்த ராக்ஷஸிகளைக் காப்பேன் )

10. ஸ்ரீமத் ராமாயணம் (2–31–27 )

பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா —–ஹே ராமா, இந்த மலை அடி வாரத்தில் ஸீதையுடன் சுகமாக இருப்பீராக —
நீர் விழித்து இருந்தாலும், தூங்கினாலும் உங்களுக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் ,நான் செய்வேன்

11.ஸ்தோத்ர ரத்னம் (39 )–ஸ்ரீ ஆளவந்தார்

தயா ஸஹாஸீநமநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைகதாமநி |
பணாமணி வ்ராதமயூகமண்டல
ப்ரகாசமாநோதர திவ்ய தாமநி ||

தயாஸஹ –பெரிய பிராட்டியுடன் — வீற்றிருக்கிறான் பகவான் எங்கு வீற்றிருக்கிறான்
சிறந்த ஜ்ஞானம் , பலம் என்பனவற்றுக்கு முக்கிய இடமாய், தன்னுடைய படங்களிலிருக்கும் ரத்னக் கூட்டங்களின்
ஒளி வட்டத்தாலே உள் பிரதேசமெல்லாம், பிரகாசமாக இருப்பதான அப்ராக்ருதமான மணிமண்டபத்தை உடையவனுமான
திருவனந்தாழ்வான் என்கிற நாகணை மேல் வீற்றிருக்கிறான்
பெரிய பிராட்டி ,திவ்ய மஹிஷி என்று ஸேவிப்போர் அறியும் வண்ணம் வீற்றிருக்கிறான்.

12.சதுச்லோகீ –ஸ்ரீ ஆளவந்தார் ( 1 )

காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதி : ஸய்யாஸனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ யவநிகா , மாயா ஜகன்மோஹிநீ |
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜ :ஸதயித : த்வத்தாஸதாஸீகண :
ச்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம : கதம் த்வாம் வயம் ||

ஹே –பகவதீ —புருஷர்களில் உத்தமனாகிய புருஷோத்தமனாகிய பகவான் , உனக்குக் காந்தன்; ப்ரியன் . கைங்கர்யபதியான
ஆதிசேஷன் சயனமும் ,ஆஸனமும் ஆகிறான். வேத ஸ்வரூபியான கருடனும் , உனக்கு வாஹனம் ;ஆஸனம் .
ஹே –ஜகன்மோஹினீ –உலகில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு, விபரீத ஜ்ஞானத்தைக் கொடுக்கும் மூல ப்ரக்ருதி என்கிற தத்வம்
உனக்கு சேஷம்—-அதாவது அடிமை. இது திரை போல் இருக்கிறது. ஜீவர்கள் உன்னைத் தரிசிக்க விட்டாமல் தடுக்கிறது. ப்ரஹ்மா,
ருத்ரன் முதலான தேவர்கள் ,அவர்கள் மனைவியரும் உனக்கு ”தாஸத்வம் ” செய்யும் ஸ்த்ரீகளுடன் சேர்ந்து ,
அடிமைக் கூட்டமாக இருக்கிறார்கள். இதில், நீ ”ச்ரீ ” என்று சொல்லப்படுகிறாய்.நாங்கள் யாராக இருந்தாலும்,
உன் பெருமைகளைத் தெளிவாகச் சொல்ல இயலாது.
பெரிய பிராட்டியார், தானே விரும்பி, எம்பெருமானுக்கு சேஷமானதையும்,
நித்ய விபூதி, லீலா விபூதி என்கிற மற்ற எல்லாவற்றிலும் அவள், எம்பெருமானுடன் சேர்ந்து சேஷியாகிறாள்

13.ஆத்ம ஸித்தி ( மங்கள ச்லோகம் ) ஸ்ரீ ஆளவந்தார்

ஸ்வ பரிசரண போகை :ஸ்ரீமதி ப்ரீயமாணே —–எம்பெருமானுடைய
கைங்கர்யங்களைப் போகமாக எண்ணுகிற நித்ய ஸூரிகளால்
சந்தோஷப் படுத்தப்பட்ட பெரிய பிராட்டியுடன் கூடிய
பகவானிடத்தில் பக்தி உண்டாக வேணும்

14.வேதாந்த ஸாரம் –மங்கள ச்லோகம் (ஸ்ரீ உடையவர் )

ஸ்ரீமதே நிர்மலானந்தோ தன்வதே விஷ்ணவே நம —
அசேஷ சிதசித் விஷ்ணு சேஷிநே சேஷஸாயிநே
நிர்மலாநந்த கல்யாண நிதயே விஷ்ணவே நம :
மஹாலக்ஷ்மியுடன் கூடியவனும் கெட்ட குணங்களே இல்லாமல் ஆனந்தக் கடல் போலிருப்பவனும் ஆகிய ஸ்ரீ விஷ்ணுவுக்கு நமஸ்காரம் .
( இது 32 அக்ஷரங்களைக் கொண்டது என்றும் , 32 ப்ருஹ்ம வித்யைகளைக் குறிக்கிறது என்றும்,
எல்ல வேதங்களும் இந்த 32 அக்ஷரங்களில் அடக்கம் என்றும் சொல்வர் )

15. வேதாந்த தீபம் –மங்கள ச்லோகம்–( ஸ்ரீ உடையவர் )

ஸ்ரீய :காந்த :அநந்தோ வர குண கணைகாஸ்பத வபு :—-
மஹா லக்ஷ்மிக்குப் ப்ரியமானவனும் ,எங்கும் நிறைந்தவனும், எல்லை யில்லாக் கல்யாண குணங்களுக்கு ஒரே இடமான
திருமேனியை உடையவனுமான எம்பெருமான்—

16.ஸ்ரீபாஷ்யம் –மங்கள ச்லோகம்—ஸ்ரீ உடையவர்

ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸோ –மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடமான பரப்ரஹ்மத்தினிடத்தில்

17.ஸ்ரீ கீதா பாஷ்யம் —ஸ்ரீ உடையவர் —

ஸ்ரீய :பதிர் நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநாநந்த ஞானானந்த ஸ்வரூப :—-
லக்ஷ்மிபதியான எம்பெருமான், எல்லாக் கெட்ட குணங்களுக்கும் விரோதியாய், எல்ல நற்குணங்களுக்கும் ஒரே இருப்பிடமாய்,
தேசம், காலம், வஸ்து இவைகளால் அளவில்லா ஜ்ஞானமும் ஆனந்தமுமான ஸ்வரூபத்தை உடையவன்.

18. முதல் திருவந்தாதி ( 86 ) பொய்கை ஆழ்வார்

நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்து
பாயும் பனி மறைத்த பண்பாளா —வாசல்
கடைகழியா உள்புகாக் காமர்பூங்கோவல்
இடைகழியே பற்றி இனி .

குன்றெடுத்து மழையைத் தடுத்து, ஆயர்களையும் கோக்களையும்
காத்தவனே—நீ திருமகளுடன் இடைகழியில் நின்றாய்– —
——————————————————————–.
என்னிடம் உள்ள அன்பால் அங்கேயே நின்றாய்—இடைகழியை விட்டு வெளியேயும் வரவில்லை; உள்ளேயும்
புகவில்லை.எங்களுடன் கலந்த மகிழ்ச்சியால் இடைகழியிலேயே நின்றாய்.

19. திருவாய்மொழி ( 4–9–10 ) ஸ்ரீ நம்மாழ்வார்

ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப—-

கண்டு கேட்டுற்று மோந்து உண்டுழலு மைங்கருவி
கண்ட வின்பம் தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்
கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தே னுன் திருவடியே

அழகிய முன் கை வளைகளை உடைய பெரிய பிராட்டியும் , நாராயணனான நீயும் , நிலாநிற்ப—கைங்கர்யம் பெறுவதற்குச்
சேஷியாய் நிலைத்திருக்க

20. திருவாய்மொழி ( 6–9–3 ) ஸ்ரீ நம்மாழ்வார்

கோலத் திருமாமகளோடு உன்னை

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே
கோலத்திருமாமகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ

மஹா லக்ஷ்மியுடன் பொருந்தியுள்ள உன்னை—–

21. திருவாய்மொழி ( 9–2–1 ) ஸ்ரீ நம்மாழ்வார்

நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்

பண்டைநாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு, நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்
தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தென்திரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த திருப்புளிங்குடிக் கிடந்தானே

தேவரீருடைய கருணையையும் தாமரையில் வஸிக்கும் பிராட்டியின் கருணையையும் கொண்டு,
தேவரீருடைய கோயிலைச் சுத்தப்படுத்தி ( கைங்கர்யங்கள் செய்து )

22.திருவாய்மொழி ( 9–2–3 ) ஸ்ரீ நம்மாழ்வார்

.உன் தாமரை மங்கையும் நீயும்

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி ? உன் திருவுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழிவரும் தொண்டரோர்க்கருளி
தடங்கொள் தாமரை கண்விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே

உனக்குத் தகுந்த திவ்ய மஹிஷியாய் தாமரைப் பூவிலிருக்கும் பிராட்டியும் , நீயும் (மூன்று உலகங்களும் கைங்கர்யம் செய்யுமாறு
இருந்து அருள வேண்டும் )

23. திருவாய்மொழி ( 6–10–10 ) ஸ்ரீ நம்மாழ்வார்

அகலகில்லேன் இறையும்

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பா !
நிகரில் புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

ஒரு க்ஷண நேரம் கூட உன்னை விட்டுப் பிரியச் சக்தி யில்லை யென்று தாமரையில் இருக்கும் பிராட்டி வஸிக்கின்ற திரு மார்பை உடையவனே

24. திருவாய்மொழி (1–1–2 ) ஸ்ரீ நம்மாழ்வார்

உணர் முழு நலம்

மனனக மலமற மலர்மிசை யெழு தரும்
மனனுணர் வளவிலன் பொறி யுணர்வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர் நிகழ் கழிவினும்
இனனிலனெனனுயிர் மிகுநரை யிலனே

எம்பெருமான், முழுவதும் ஞான ஸ்வரூபன் மற்றும் ஆனந்த ஸ்வரூபன்

25. பெரிய திருமொழி ( 3–8–1 )

.நந்தாவிளக்கே அளத்தற்கரியாய்

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் !
நரநாரணனே ! கருமாமுகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாயென நின்று
இமையோர் பரவும் இடம் , எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசை பாட மாடே
களிவண்டுமிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே

நாசமல்லாததாயும் , ஸ்வயம் ப்ரகாசமாயும் , தேசம்,காலம், வஸ்து இவைகளின் அளவுகளில்
இல்லாததாயும் ஸ்வரூபத்தை உடையவனே

அதிகாரத்திலிருந்து—–

ஈச்வரன், இழி குணங்களே இல்லாதவன்

இப்படி ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண்வாக்யம் பரமம் பதம்
பர :பராணாம் ஸகலா ந யத்ர க்லேசாதயஸ் ஸந்தி பராவரேசே-என்கிறபடியே ஹேய ப்ரத்யநீகமாக அநுஸந்தேயம்

வ்யாக்யானம்
————————–

விஷ்ணு புராணத்திலிருந்து ,ஸ்வாமி தேசிகன் மேற்கோள் காட்டுகிறார்

ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண்வாக்யம் பரமம் பதம் ( 1–22– 53 )——-
விஷ்ணு என்கிற திருநாமம் கொண்ட எம்பெருமானின் ஸ்வரூபம் தோஷங்களே இல்லாதது.

பர :பராணாம் ஸகலா ந யத்ர க்லேசாதயஸ் ஸந்தி பராவரேசே ( 6–5–85 )

பகவான் , உயர்ந்தவைகளை விட மிகவும் உயர்ந்தவன்; அவனிடம்,க்லேசங்கள் முதலான தோஷங்களும் கிடையாது.

அதிகாரத்திலிருந்து
———————————–

ஈச்வரன்,அநந்த கல்யாண குணங்களை உடையவன்

1. தைர்யுக்த : ச்ரூயதாம் நர :
2.தமேவம் குண ஸம்பன்னம்
3.ஜ்யேஷ்டம் ச்ரேஷ்டகுணைர்யுக்தம்
4. ஏவம் ச்ரேஷ்டகுணைர்யுக்த :
5.குணைர்விரருசே ராம :
6.தமேவம் குணஸம்பன்னம் அப்ரதத்ருஷ்யபராக்ரமம்
7. பஹவோ ந்ருப கல்யாணகுணா :புத்ரஸ்ய ஸந்தி தே
8. ஆந்ரு சம்ஸ்யமநுக்ரோச :ச்ருதம் சீலம் தமச்சம :ராகவம்
சோபயந்த்யேதே ஷட்குணா :புருஷோத்தமம்
9. விதித :ஸ ஹி தர்மஞ : சரணாகத வத்ஸல :
10. சரண்யம் சரண்யம் ச த்வாம் ஆஹுர்திவ்யா மஹர்ஷய :
11. நிவாஸவ்ருக்ஷ : ஸாதூநாம் ஆபன்னானாம் பரா கதி :
12.தேஜோ ப்லைச்வர்ய மஹாவபோத ஸ்வீர்ய சக்த்யாதி குணைகராசி :
13. ஸர்வபூதாத்ம பூதஸ்ய விஷ்ணோ: கோ வேதிதம் குணான்
14. யதா ரத்னாநி ஜலதே: அஸங்க்யேயாநி புத்த்ரக ததா குணாச்ச தேவஸ்ய த்வஸங்க்யேயா ஹி சக்ரிணா :
15. வர்ணாயுதைர்யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வதேவை :
16. சதுர்முகயுர்யதி கோடிவக்த்ரோ பவேந்நர : க்வாபி விசுத்தசேதா : ஸ தே குணாநாமயுதைகமம்சம் வதேந்ந வா தேவவர ப்ரஸீத
17. தவானந்த குணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா : யைஸ்த்வயேவ ஜகத்குக்ஷொள அந்யேஅப்யந்தர்நிவேசிதா :
18. இஷுக்ஷயாந்நிவர்த்தந்தே நாந்தரிக்ஷ க்ஷிதி க்ஷயாத் மதி க்ஷயாந்நிவர்த்தந்தே ந கோவிந்த குண க்ஷயாத்
19. வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்
20. உயர்வற உயர்நலம் உடையவன்-என்கிறபடியே
ப்ராப்யத்வ ப்ராபகத்வோபயுக்தங்களான குணங்களாலே விசிஷ்டமாக அநுஸந்தேயம்

வ்யாக்யானம்
————————–

ஈச்வரன் –ஸ்ரீமந் நாராயணன் , ஜீவன்களால் அடையக் கூடியவனாக இருப்பதற்கு எந்தெந்தக் குணங்கள் தேவையோ , அப்படி அளவற்ற
கல்யாண குணங்களை உடையவன் என்றும், அவ்விதம் ஜீவன்கள் அடைவதற்கு ஏற்ற உபாயமாக இருப்பதற்கும் , கல்யாண
குணங்களைக் கொண்டுள்ளான் என்றும் , அவற்றுக்கான பற்பல எடுத்துக் காட்டுக்களை ,ஸ்வாமி தேசிகன் சொல்கிறார்

1. ஸ்ரீமத் ராமாயணம் ( 1–1–7 )

தைர்யுக்த : ச்ரூயதாம் நர : ——இப்படிப்பட்ட குணங்கள் அனைத்தையும் கொண்டவரைச் சொல்கிறேன்—கேட்பீராக

2.ஸ்ரீமத் ராமாயணம் ( 2–2–48 )
தமேவம் குண ஸம்பன்னம் ——இப்படி குணங்கள் நிறைந்த அந்த ராமனை–

3. ஸ்ரீமத் ராமாயணம் (1–1–20 )
ஜ்யேஷ்டம் ச்ரேஷ்ட குணைர் யுக்தம்—-மூத்தவனும், இப்படி மிக உயர்ந்த குணங்களை உடைய ராமனை

4.ஸ்ரீமத் ராமாயணம்– 2–1–31
ஏவம் ச்ரேஷ்ட குணைர் யுக்த :—-இப்படி , மிகவும் உன்னதமான குணங்கள் கொண்ட ராமனை

5.ஸ்ரீமத் ராமாயணம்–
குணைர் விரருசே ராம :——கல்யாண குணங்கள் மூலமாக ராமன் விளங்கினான்

6.ஸ்ரீமத் ராமாயணம் —
தமேவம் குண ஸம்பன்னம் அப்ரத த்ருஷ்ய பராக்ரமம் —இப்படி, எல்லாக் கல்யாண குணங்களின் இருப்பிடமாகவும், யாராலும்
வெல்லப் படாதவனுமான உள்ள ராமன்
7. ஸ்ரீமத் ராமாயணம் —
பஹவோ ந்ருப கல்யாணகுணா :புத்ரஸ்ய ஸந்தி தே –தசரதா , உன் புத்திரனான ராமனுக்குப் பல உயர்ந்த குணங்கள் உள்ளன.

8. ஸ்ரீமத் ராமாயணம்—
ஆந்ரு சம்ஸ்யமநுக்ரோச :ச்ருதம் சீலம் தமச்சம :ராகவம்
சோபயந்த்யேதே ஷட்குணா :புருஷோத்தமம் —–தன்னைச்
சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பாற்றும் தன்மை (குணம் ) அளப்பரிய கருணை, வேதங்களின் –சாஸ்த்ரங்களின் பொருளை
உணர்ந்திருக்கும் தன்மை, தாழ்ந்தவர்களிடமும் சமமாகப் பழகும் தன்மை, மனத்தை அடக்கும் திறன், இந்த்ரிய நிக்ரஹம்–
அதாவது,புலனடக்கம் –ஆகிய ஆறு குணங்களும் புருஷ ச்ரேஷ்டனான ராமனை அலங்கரிக்கின்றன
9. ஸ்ரீமத் ராமாயணம்—
விதித :ஸ ஹி தர்மஞ : சரணாகத வத்ஸல :—–எல்லாத் தர்மங்களையும் அறிந்த ராமன், தன்னிடம் சரணம்
அடைந்தவர்களிடம் மிகுந்த அன்பு உடையவன் என்று எல்லோராலும் அறியப்பட்டவன் அல்லவா
10. ஸ்ரீமத் ராமாயணம்—
சரண்யம் சரண்யம் ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய :—-ராமா —-நீயே சரணாகத ரக்ஷகன் என்றும், சரணம் என்று
அடைபவர்களுக்கு ஏற்றவன் என்றும்,சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பவன் என்றும், ஸநகாதி மஹரிஷிகள் கூறுகின்றனர்
11.ஸ்ரீமத் ராமாயணம்
நிவாஸவ்ருக்ஷ : ஸாதூநாம் ஆபன்னானாம் பரா கதி :—
ஸாதுக்களுக்கு , நிழல் கொடுக்கும் கற்பக மரம் ; ஆபத்தில் உள்ளவர்கள் அடைய வேண்டிய உயர்ந்த கதி

12.விஷ்ணு புராணம்
தேஜோ ப்லைச்வர்ய மஹாவபோத ஸ்வீர்ய சக்த்யாதி குணைகராசி : —மிக உயர்ந்த தேஜஸ், பலம், ஐச்வர்யம் ,
ஜ்ஞானம், வீர்யம், சக்தி,இவை முதலான குணங்கள் யாவும் ஒன்று சேர்ந்து இருக்கும் இடம்—ஷாட்குண்ய பரிபூர்ணன்

13.ப்ரஹ்ம புராணம்
ஸர்வபூதாத்ம பூதஸ்ய விஷ்ணோ: கோ வேதிதம் குணான்
எல்லாவற்றுக்கும் ஆத்மாவாக இருக்கிற விஷ்ணுவின் குணங்களை( ருத்ரனையும் ,பார்வதியையும் காட்டில் ), எவன் அறிய வல்லவன் !
14. வாமன புராணம்–
யதா ரத்னாநி ஜலதே: அஸங்க்யேயாநி புத்த்ரக ததா
குணாச்ச தேவஸ்ய த்வஸங்க்யேயா ஹி சக்ரிணா : —
ஸமுத்ரத்தில் உள்ள ரத்னக் கற்களைக் கணக்கிட இயலாது; அதைப்போல , சக்ரத்தை ஏந்திய எம்பெருமானின் குணங்களைக் கணக்கிட இயலாது.
15. மஹாபாரதம் —
வர்ணாயுதைர்யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வதேவை : எல்லாத் தேவர்களும் ஒன்றுகூடி,
இருந்து பலப் பதினாயிரம் வருடங்கள் சொன்னாலும்,அவனது குணங்களை முழுமையாகக் கூறி விட முடியாது.
16. வராஹ புராணம் —-
சதுர்முகயுர்யதி கோடிவக்த்ரோ பவேந்நர : க்வாபி விசுத்தசேதா : ஸ தே குணாநாமயுதைகமம்சம்
வதேந்ந வா தேவவர ப்ரஸீத —–ப்ரஹ்மாவின் ஆயுஸ்ஸும் – பல ஆயிரக்கணக்கான வாய்களும், மிகவும் சுத்தமான
மனமும் உள்ள ஒருவன் எங்கேயாவது இருந்து, அவன், உன்னுடைய குணங்களின் பதினாறாயிரத்தின்
ஒரு பாகத்தையாவது கூற முடியுமோ ? முடியாதோ ?( முடியாது என்பது தேற்றம் )

17. தவானந்த குணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா :
யைஸ்த்வயேவ ஜகத்குக்ஷொள அந்யேஅப்யந்தர்நிவேசிதா :

நீ ,கணக்கற்ற குணங்களை உடையவன்;ஆனாலும், ஜ்ஞானம் , பலம், ஐச்வர்யம் ,வீர்யம்,சக்தி,தேஜஸ் என்கிற
ஆறு குணங்கள் முக்யமானவை .இவ்வுலகை , நீ, வயிற்றில் வைத்திருப்பதைப்போல , இந்த ஆறு குணங்களும் மற்ற
குணங்களைத் தங்களுக்குள் அடக்கிக் கொண்டிருக்கின்றன.

18. இஷுக்ஷயாந்நிவர்த்தந்தே நாந்தரிக்ஷ க்ஷிதி க்ஷயாத்
மதி க்ஷயாந்நிவர்த்தந்தே ந கோவிந்த குண க்ஷயாத்

ஆகாசம் முழுவதும் பாணங்களால் நிரப்ப வேண்டும் என்று அம்புகளைப் போடும் சிலர், தங்களிடம் பாணங்கள்
தீர்ந்து விடுவதால், ஓய்ந்து போகிறார்களேயன்றி ஆகாசம் , நிரம்புவதால் அல்ல. இதைப் போல, முழுவதும்
சொல்ல புத்தியின் ஆற்றல் இல்லாதவர்கள் கோவிந்தனுடைய குணங்களை சொல்லி ஓய்ந்து
போகிறார்களே யன்றி , குணங்கள் யாவையும் சொல்லி முடிந்து விட்டதால் அல்ல
19. திருவாய்மொழி
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்

மணந்த பேராயா ! மாயத்தால் முழுதும் வல்வினையேனையீர்கின்ற
குணங்களையுடையாய் ! அசுரர் வன்கையர் கூற்றமே 1கொடியபுள்ளுயர்த்தாய் !
பணங்களாயிரமு (மு )டைய பைந்நாகப் பள்ளியாய் !பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீதானே

மிகவும் கொடிய பிரபலமான பாவங்களைச் செய்த என் போன்றவனையும் உன் பால் ஈர்க்கின்ற குணங்களை உடையவனே
பாசுரத்துக்கு,சுருக்கமான பொருள்—-
நப்பின்னையைப் போல ,பல கோபிகைகள் , பேர் ஆயா –கோபர்களின் அரசனே –கண்ணனே
மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்
ஆச்ரிய சேஷ்டிதங்கள் அகடதகடினா சாமர்த்யங்கள் இவற்றால் வல்வினையேனை
——கொடிய பாபியான என்னை , சிறிதும் விடாமல் ,பாபங்களைப் பிளந்து எறிகின்ற , கோபிகைகள் அநுபவித்த கல்யாண குணங்களை
உடையவனே–புஜபல பராக்ரமம் உடைய அசுரர்களுக்கு யமனே —கருடக் கொடி உடையவனே
ஆயிரம் படங்களை உடைய ஆதி சேஷன் மீது, திருப்பாற்கடலில் சயனித்து இருப்பவனே
வணங்கும் ஆறு –வழி –அறியேன் –உன்னைத் துதிக்கும் வழி தெரியாதவன்
மனம் ,வாக்கு,செய்கை இவைகளுக்கு அந்தர்யாமியாய் இருப்பவனே — என்கிறார்

20. திருவாய்மொழி
உயர்வற உயர்நலம் உடையவன்

உயர்வற வுயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே

உயர்வு இவ்வளவுதான் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாதபடி, உயர்ந்ததான ஆனந்தம் முதலிய குணங்களை உடையவனே

ஹே—மனஸே —வேறு எவரும் தன்னைவிட ஏற்றமில்லாதபடி இருப்பவனும் உயர்ந்த ஆனந்தமான கல்யாண குணங்களை
எப்போதும் உடையவனும் வேதத்தால் புகழப்படுபவனும் அஞ்ஞானத்தை அகற்றி அறிவையும் பக்தியையும் அளிப்பவனும்
மறதி ,தளர்வு இல்லாத நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியும் — இப்படிப்பட்ட பகவானுடைய, ஆச்ரிதர்களின் துக்கங்களைப்
போக்கும் குணமுடைய ,ஜ்யோதிஸ் ஸ்வரூபமான திருவடிகளை எப்போதும் வணங்கி உஜ்ஜீவிப்பாயாக —-
என்கிறபடியே ப்ராப்யத்வ ப்ராபகத்வோபயுக்தங்களான
குணங்களாலே விசிஷ்டமாக அநுஸந்தேயம் —

தன்னை அடைவதற்கும் அடைவிப்பதற்கும் தேவையான குணங்களுடன் இருக்கிறான்.
இந்தப் பகவத் குணங்கள், உபயோகத்துக்கு ஏற்ப, ப்ராப்யத்வோபயுக்த குணங்கள் என்றும்,
ப்ராபகத்வோபயுக்த குணங்கள் என்றும்உபயோபயயுக்த குணங்கள் என்றும் மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.
ப்ராப்யத்வோபயுக்த குணங்கள் —எல்லாவற்றிற்கும் சேஷியாக இருப்பது , எல்லை இல்லாத ஆனந்த ஸ்வரூபனாக இருப்பது
ப்ராபகத்வோபயுக்த குணங்கள்—- தயை, வாத்ஸல்யம் , ஒளதார்யம், –முதலிய குணங்களோடு இருப்பது
உபயோபயயுக்த குணங்கள் —ஷாட்குண்யம் — ஜ்ஞானம் , பலம், ஐச்வர்யம் ,வீர்யம்,சக்தி,தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்
இப்படியாக, எம்பெருமான் ,அளவில்லாக் கல்யாண குணங்களை உடையவனாக இருக்கிறான்.

அதிகாரத்திலிருந்து ———-

ஈச்வரன் ”திவ்ய மங்கள விக்ரஹமுடையவன்

1.ஸதைக ரூப ரூபாய
2. நித்ய ஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ சந்நிதிம் ப்ரஜேத்
3. ஸமஸ்தாச்சக்த்யச்சைதா ந் ருப யத்ர ப்ரதிஷ்டிதா : தத்விச்வரூப வைரூப்யம் ரூபமன்யத்த ரூபமன்யத்தரேர்மஹத்
4. இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ :
5. ந பூதஸங்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மாந :
6. ந தஸ்ய ப்ரக்ருதா மூர்த்தி : மாம் ஸமேதோ அஸ்திஸம்பவா
7. பூஜைச்சதுர்பி : ஸமுபேதமேதத்ருபம் விசிஷ்டம் திவி ஸம்ஸ்திதம் ச
8. ருக்மாபம்ஸ்வபந் தீ கம்யம்
9.தத்ரைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்நம்
10. பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே
11. அஸ்த்ர பூஷண ஸம்ஸ்தாந ஸ்வரூபம்
12. பூஷணாஸ்த்ர ஸ்வரூபஸ்தம் யதேதமகிலம் ஜகத்
13. தமஸா : பரமோ தாதா சங்கம் சக்ரம் கதா தர :–என்கிறபடியே
ஸர்வ ஜகதாச்ரயமான அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டமாக அநுஸந்தேயம் .

இவ்விக்ரஹம் பர வ்யூஹ விபவ ஹார்த்தர்சாவதார ரூபேண பஞ்சப்ரகாரமாயிருக்கும்படியும்
இவற்றிலுள்ள விசேஷங்களும் பகவச் சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்தாலே அறியப்படும்

வ்யாக்யானம்
————————-
1. விஷ்ணு புராணம் —
ஸதைக ரூப ரூபாய—எப்போதும் ஒரேவிதமான மாறுதல் இல்லாத திருமேனியை உடையவன்

2. பௌஷ்கர ஸம்ஹிதை
நித்ய ஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ சந்நிதிம் ப்ரஜேத் ————————
ஹே , பௌஷ்கரனே —எப்போதும் இருப்பதுமான திருமேனியை உடையவன் ;அவன் எல்லோருக்கும் மேம்பட்டவன் என்றும் ,
எவனுடைய மனத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறதோ, அவன் அருகில் எம்பெருமான் எப்போதும் உள்ளான் .
3. விஷ்ணு புராணம்
ஸமஸ்தாச்சக்த்யச்சைதா ந் ருப யத்ர ப்ரதிஷ்டிதா : தத்விச்வரூப வைரூப்யம் ரூபமன்யத்த ரூபமன்யத்தரேர்மஹத்—
எல்லா சரீரங்களைக் காட்டிலும், வேறான திருமேனியை உடையவன்,
எம்பெருமான்.அந்தத் திருமேனியில், எல்லா சக்திகளும் நிலையாக உள்ளன.
4. விஷ்ணு புராணம்—
இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ : —
பக்தர்களுக்கு இஷ்டமான , அனைவர்க்கும் இன்பம் தருகிற திருமேனியைத் தன் ஸங்கல்பத்தாலே பகவான் எடுத்துக்கொள்கிறான் .
5. மஹா பாரதம்—சாந்தி பர்வம்—-
ந பூதஸங்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மாந : —-
இந்தப் பரமாத்மாவின் திருமேனி பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டானதல்ல
6.வராஹ புராணம்—
ந தஸ்ய ப்ரக்ருதா மூர்த்தி : மாம் ஸமேதோ அஸ்திஸம்பவா —–
எம்பெருமானின் திருமேனி, மாம்ஸம், மேதஸ் (மஜ்ஜை ) எலும்பு ஆகியவற்றால் ஆனதல்ல
7.மஹாபாரதம்—
பூஜைச்சதுர்பி : ஸமுபேதமேதத்ருபம் விசிஷ்டம் திவி ஸம்ஸ்திதம் ச —
பகவானது திருமேனி, நான்கு திருக்கரங்களுடன் உள்ளது;சிறப்பானது; பரமபதத்தில் நிலையாக உள்ளது.
8.மநு ஸ்ம்ருதி—
ருக்மாபம்ஸ்வபந் தீ கம்யம் —–தங்கம் போன்று ப்ரகாசிப்பவன்; அவனைக் கனவில் காண்பதைப் போல மனத்தால் மட்டுமே நினைக்க முடியும்.
9.ஸ்ரீமத் பகவத் கீதை—
தத்ரைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்நம் ப்ரவிபக்த மநேகதா |
அபஸ்யத் தேவ தேவஸ்ய சரீரே பாண்டவஸ்துதா ||
உலகங்கள் பலவிதமாகப் பிரிந்து இருக்கின்றன.ஆனால், அவையாவும் தேவதேவனான பகவானின்–ஸ்ரீ க்ருஷ்ணனின் திருமேனியில் ,
ஒரு சிறிய பகுதியாக இருப்பதை அர்ஜுனன் பார்த்தான்.
10.ஸ்ரீமத் பகவத் கீதை—
பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூத விசேஷ ஸங்காத் |
ப்ரஹ்மாண மீஸம் கமலாசநஸ்தம்ம்ருஷீம்ஸ்ச ஸர்வானுரகாம்ஸ்ச திவ்யாந் ||
ஆச்சர்யப்பட்டு, மெய்சிலிர்க்க அர்ஜுனன் வணங்கிக் கூறுகிறான்.
—–ஹே தேவாதி தேவனே, க்ருஷ்ணா —உன்னுடைய திருமேனியில் அனைத்துத் தேவதைகளையும் நான் காண்கிறேன்.
பிராணிகளின் கூட்டங்களைப் பார்க்கிறேன்.கமலாஸனத்தில் வீற்றிருக்கும் ப்ரஹ்மாவைப் பார்க்கிறேன்.
ஸகல ரிஷிகளையும் பார்க்கிறேன்.தெய்வத் தன்மை உள்ள ஸர்ப்பங்களையும் பார்க்கிறேன்.
11.விஷ்ணு புராணம்—-
அஸ்த்ர பூஷண ஸம்ஸ்தாந ஸ்வரூபம் ——–ஆயுதங்களும் ஆபரணங்களும் உன் திருமேனியை இருப்பிடமாகக் கொண்டிருக்கின்றன.
12. விஷ்ணு புராணம்—-
பூஷணாஸ்த்ர ஸ்வரூபஸ்தம் யதேதமகிலம் ஜகத் —- உலகங்கள் யாவும் அவனது திருமேனியில் ஆயுதங்களாகவும் ஆபரணங்களாகவும் உள்ளன.
13.ஸ்ரீமத் ராமாயணம்—
தமஸா : பரமோ தாதா சங்கம் சக்ரம் கதா தர :——
ப்ரக்ருதிக்கும் மேலிடத்தில் இருப்பவனாய், சங்க,சக்ர ,கதாதாரியாய் போஷகனாக இருக்கிறான், ஸ்ரீ ராமன்.

என்றெல்லாம் சொல்லுமாப்போலே ,இவற்றிலுள்ள விசேஷங்களும் பக்வச் சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்தாலே அறியப்படும் ——
இந்த விதங்களில் அமைந்திருக்கும் தனித்வ பெருமைகளும் பகவானைப் பற்றிச் சொல்லும் சாஸ்த்ரங்களும் பாஞ்சராத்ர முதலிய
ஸம்ப்ரதாய க்ரந்தங்களாலே தெளிந்து கொள்ளலாம்

அதிகாரத்திலிருந்து–

பகவான் எல்லையற்ற விபூதிகளை உடையவன்
————————————————————————-

1.விஷ்ணோரேதா விபூதய :
2.மஹா விபூதி ஸம்ஸ்தாந
3.நாந்த : அஸ்தி மம திவ்யானாம் விபூதினாம் பரந்தப இத்யாதிகளுடைய ஸங்க்ரஹமான
4. யதண்டமண்டாந்தர கோசரம் ச யத்

என்கிற ச்லோகத்தின்படியே அநந்தவிபூதி விசிஷ்டமாக அநுஸந்தேயம்

வ்யாக்யானம்
————————-

1.விஷ்ணு புராணம்—விஷ்ணோரேதா விபூதய :
இவை எல்லாமும் –அதாவது, மநு முதலானோர்,காலம் , எல்லா ஜந்துக்கள் இவையாவும், உலகின் ஸ்திதிக்குக் காரணமான மஹாவிஷ்ணுவின்
விபூதிகள் –ஐச்வர்யங்கள்

2. விஷ்ணு புராணம்— மஹா விபூதி ஸம்ஸ்தாந–மஹா விபூதி எனப்படுகிற நித்ய விபூதியைத் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டவனே

3.ஸ்ரீமத் பகவத் கீதை–
நாந்த : அஸ்தி மமதிவ்யானாம் விபூதினாம் பரந்தப |
ஏஷ தூத்தேஸத : ப்ராக்தோவிபூதேர் விஸ்தரோமயா ||
ஸ்ரீ க்ருஷ்ணன் , அர்ஜுனனிடம் சொல்கிறான்—–
ஹே—அர்ஜுனா—பகைவரை வாட்டுபவனே ! என்னுடைய திவ்ய விபூதிகளுக்கு முடிவே கிடையாது. இதுவரை நான் சொன்னவை
என்னுடைய விபூதியின் ஓரளவுதான்–சிலவற்றையே சொன்னேன்.

4. ஸ்தோத்ர ரத்னம் —
யதண்டம் அண்டாந்தர கோசரஞ்ச யத்
தசோத்தராண்யா வரணாநி யாநி ச |
குணா : ப்ரதானம் புருஷ : பரம்பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய : ||

தே –விபூதய :–உனது ஐச்வர்யங்கள் எவை என்றால் யத் அண்டம்—எந்த எந்த அண்டங்களோ , அவற்றின் உட்புறங்கள்
எவையோ, அந்த அண்டங்களுக்கு மேன்மேல் ,பத்து மடங்கு அதிக விஸ்தீரணங்கள் உள்ள ,மேலும் மேலும் சூழ்ந்து இருக்கிற
பஞ்ச பூதங்கள்–நீர், நெருப்பு, இவை எவையோ,
குணா : —- ஸத்வ ,ரஜோ ,தாமஸ குணங்களும்
ப்ரதானம் —-அவற்றுக்கு ஆதாரமான மூல ப்ரக்ருதியும்
புருஷ :=பக்த ஜீவர்களும்
பரம்பதம் = ஸுத்த ஸத்வ த்ரவ்யமான ஸ்ரீ வைகுண்டமும்,
பராத்பரம் =இவற்றில் பரம் ஆனதற்கும் மேலாக பூர்ண சைதன்ய
விகாஸம் உடைய முக்தர்களும், நித்யர்களும், இப்படி எல்லாமும்
தே விபூதய : =உனது ஐச்வர்யங்கள்
என்று , ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் ( 17 ) கூறுகிறார்

அதிகாரத்திலிருந்து—

ஈச்வரனின் லீலா ரூப ஜகத் வ்யாபாரம்
—————————————————————

இவ்விபூதிகளில் ,சேதநங்களாயும் அசேதநங்களாயும் உள்ள இரண்டு வகையும் லீலார்த்தங்களையும் போகார்த்தங்களையும் விபக்தங்களாயிருக்கும்
அநுஸந்தேயம் பொதுவாயிருக்க ரஸ வைஷம்யத்தாலே லீலா-போக–விபாகம் யதாலோகம் கண்டு கொள்வது. அப்படியே ,
1.ஜந்மாத்யஸ்ய யத :
2. க்ரீடா ஹரேரிதம் ஸர்வம்
3. க்ரீடதோ பாலகஸ்யேவ
4. பால :க்ரீடநகைரிவ
5. ஹரே விஹரஸி க்ரீடா கந்துகைரிவ ஐந்துபி :
6. லோகவத்து லீலா கைவல்யம்
என்கிறபடியே லீலாரூப ஜகத்வ்யாபார லக்ஷணமாக அநுஸந்தேயம்

வ்யாக்யானம்
————————-
பகவானின் விபூதிகள், சேதனம், அசேதனம் என்று இருவகைப்படும். இவை, பகவானுடைய லீலைக்காகவும், அவன் அநுபவிப்பதற்காகவும்
உள்ளன. இப்படிப்பட்ட இரண்டு பிரிவு ,அவனது ”ரஸத்”துக்காக மட்டுமே.
அனைத்தும் அவனால் ஏற்கப்படுகிறது.பகவான் இவ்வுலகில் ஈடுபடுவது, அவனது லீலைக்காக என்பதை இப்போது அறியலாம்.

1. ப்ரஹ்ம ஸூத்ரம் —ஜந்மாத்யஸ்ய யத : =கண்ணால் பார்க்கப்படும் இவ்வுலகின் பிறப்பு முதலானவைகளை, யாரிடமிருந்து உண்டாகிறதோ , அவனே ”ப்ரஹ்மம் ”

2.மஹாபாரதம்—சாந்தி பர்வம்–க்ரீடா ஹரேரிதம் ஸர்வம் = இவை யாவும் பகவானுக்கு விளையாட்டு

3. விஷ்ணு புராணம்–க்ரீடதோ பாலகஸ்யேவ = விளையாடும் குழந்தையின் சேஷ்டைகள் போலிருக்கிற ,எம்பெருமானின் லீலைகளைப் பார்.

4. மஹா பாரதம்–ஸபா பர்வம்–பால :க்ரீடநகைரிவ = குழந்தை, விளையாட்டுக் கருவிகளான பொம்மைகளை வைத்து விளையாடுவதைப்
போல, பகவான், நம்மை வைத்து விளையாடுகிறான்.

5. விஷ்ணு தர்மம்—ஹரே விஹரஸி க்ரீடா கந்துகைரிவ ஐந்துபி := பந்துகளை வைத்து விளையாடுவதைப் போல,ஸ்ரீ ஹரியே—உனது விளையாட்டு இருக்கிறது.

6. ப்ரஹ்ம ஸூத்ரம் –லோகவத்து லீலா கைவல்யம் =இவை எல்லாமே அவனது விளையாட்டுக்காகவே

இப்படி, எல்லாமே அவனது, உலக வியாபார லீலா விநோதங்களின் லக்ஷணம் என்று அறியப்படுகிறது.

அதிகாரத்திலிருந்து–
——————————–

ஜீவ ஸ்வரூபம்
————————
இப்படி, லக்ஷ்மி ஸஹாயமாய் அபரிமித ஞானானந்தமாய் , ஹேயப்ரத்யநீகமாய் ,ஞான –சக்த்யாத்யனந்த –மங்களகுண –விசிஷ்டமாய்,
திவ்ய மங்கள–விக்ரஹோபேதமாய்,சரீரபூத–விபூதித்வய –யுக்தமாய் , ஜகத்ஸ்ருஷ்ட்யாதி –வ்யாபார –லீலமாய்க் கொண்டு,
ப்ராப்யமான ப்ரஹ்மத்தை ப்ராபிக்கும் , ப்ரத்யகாத்மாவினுடைய ,பத்த–முக்த –நித்ய–ஸாதாரண– ரூபமும்
உபாயாதிகாரியான தனக்கு இப்போது அஸாதாரணமான ரூபமுமறியவேணும் .

வ்யாக்யானம்
————————

இப்படி, எம்பெருமான் ,மஹாலக்ஷ்மியுடன் எப்போதும் இணைந்தவனாக இருக்கிறான்
அவன், எல்லையில்லா ஜ்ஞானம் உள்ளவன். எல்லையில்லா ஆனந்தம் உள்ளவன். எல்லாத் தாழ்வுகளுக்கும் , எதிராக உள்ளவன்.
ஜ்ஞானம், சக்தி போன்ற அளவற்ற மங்கள குணங்களை உடையவன் . திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபி.
தன்னுடைய சரீரமாக, லீலா விபூதி, நித்ய விபூதியை உடையவன். படைத்தல், காத்து நிர்வஹித்தல் இவனுக்கு பொழுதுபோக்கு –விளையாட்டு.
இங்ஙனம் அடையவேண்டிய ப்ராப்யமாக –பொருளாக –இருக்கிறான் என்பதை உணர்ந்து அவனை அடைய விரும்பும் ஜீவன்கள் —
பத்தர், முக்தர், நித்யர் என்று மூன்று விதமாக இருப்பதையும் அவர்களுக்குள்ள வேறுபாட்டையும் அறிய வேண்டும்.

அதிகாரத்திலிருந்து

மூன்று வகைச் சேதனர்களின் லக்ஷணம்

இவர்களில்,
பத்தரானவர் அநாதி கர்ம ப்ரவாஹத்திலே ,அனுவ்ருத்த ஸம்ஸாரராய் ப்ரஹ்மாதி ,ஸ்தம்ப ,பர்யந்த ,விபாக ,பாகிகளான க்ஷேத்ரஜ்ஞர்.

முக்தராவார் , சாஸ்த்ர சோதிதங்களான ,உபாய விசேஷங்களாலுண்டான பகவத்ப்ரஸாதத்தாலே , அத்யந்த ,நிவ்ருத்த ,ஸம்ஸாரராய் ,ஸங்கோச
ரஹித பகவதனுபவத்தாலே ,நிரதிசயானந்தராய் இருக்குமவர்கள்

நித்யராவார், ஈச்வரனைப் போலே அநாதியாக ஞானசங்கோசமில்லையாமையாலே
ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா : என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸாரராய்க் கொண்டு நித்ய கைங்கர்யம் பண்ணுகிற அநந்த , கருட ,விஷ்வக்ஸேனாதிகள்

இவர்களெல்லார்க்கும் ஸாதாரணமான ரூபம் அணுத்வ ஜ்ஞானானந்த அமலத்வாதிகளும் பகவத் சேஷத்வ பாரதந்த்யாதிகளும் முமுக்ஷுவான
தனக்கு அஸாதாரணமாக அறியவேண்டும் ஆகாரங்கள் உபோதாத்திலே சொன்னோம்.
மேலும் கண்டு கொள்வது

வ்யாக்யானம்
——————–
பத்தர்கள் எனப்படுவோர், கணக்கற்ற முடிவே இல்லாத காலமாகத் தொடர்ந்துகொண்டே வருகிற கர்மாக்கள் காரணமாக, ஸம்ஸாரம்
என்கிற சக்கரத்தில் அகப்பட்டு, அதில் சுழன்று, அதிலேயே உழன்று வருபவர்கள். புல் முதலாக, ப்ரஹ்மா வரையிலும் க்ஷேத்ரஜ்ஞர்.ஆவர்.

முக்தர் என்பவர்கள், சாஸ்த்ரங்களில் சொல்லிய உபாயங்களைச் சரியானபடி பின்பற்றி, எம்பெருமானின் க்ருபையைப் பெற்றவர்கள்.
இவர்கள், ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு, வெளியேறி, பகவத் அனுபவத்தில் எல்லையில்லா ஆனந்தத்தில் எப்போதும் திளைத்திருப்பவர்கள்.

நித்யர்கள் என்பவர்கள் , தங்களுடைய ஜ்ஞானம் எப்போதுமே சுருங்காமல், விகஸித்து பிரகாசிக்க, பகவானையே ஒத்து இருப்பவர்கள்.
இதனை ,
ஸ்ரீ பராசர பட்டர் தனது க்ரந்தமான குணரத்ன கோசத்தில் சொல்கிறார் (27 )

தே ஸாத்யா : ஸந்திதேவா : ஜனனி ! குண–வபுர் –வேஷ–வ்ருத்த –ஸ்வரூபை :
போகைர்வா நிர்விசேஷா : ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா : |
ஹே—ஸ்ரீ : ! ஸ்ரீரங்கபர்த்து : தவச பத பரீசார வ்ருத்த்யை ஸதா பி
ப்ரேம ப்ரத்ராண பாவவில ஹ்ருதய ஹடாத்கார கைங்கர்யபோகா : ||

ஹே–ஜனனீ —தாயே— ஹே–ஸ்ரீ —பெரிய பிராட்டியே–எவர்கள் நல்லகுணங்கள் ,வயசுக்கு ஏற்ற நடத்தைகளுடன் , ஆத்ம ஸ்வரூபத்தாலும்
பகவத் அநுபவங்களாலும் ,வேறுபாடு இல்லாமல், ஒரே வயதுள்ளவர்களாய் எப்போதும் எந்தக் குற்றமும் அற்றவர்களாய்,பகவானிடம் ப்ரீதியுடன்
நல்ல மனஸ்ஸுடன் கைங்கர்யங்களில் ஈடுபடுகிறார்களோ அந்த ஸாத்ய தேவர்கள் எனப்படும் நித்ய ஸூரிகள் ,
உனக்கும், பகவானுக்கும் திருவடிகளில் கைங்கர்யம் செய்துகொண்டு எப்போதும் வைகுண்டத்தில் இருக்கிறார்கள்.இவர்கள், ஆதிசேஷன், கருடன்,
விஷ்வக்ஸேனர் முதலானவர்கள்.

இவர்கள் எல்லோருக்கும் பொதுவான தன்மைகள் என்னவெனில்—
அணு போன்று அளவுள்ள தன்மை , ஞானமயமாக இருத்தல், ஆனந்த மயமாக இருத்தல், எவ்விதக் குற்றமும் இல்லாமல் இருத்தல்,
முதலியவையாகும்.
இப்படி, இவர்கள் யாவரும் பகவானுக்கு அடிமைகள்.அவனது ஸங்கல்பத்தின்படி பணியாற்றுபவர்கள்.

அதிகாரத்திலிருந்து—-
————————————–

ஜீவனின் ஸ்வரூபத்தை ,ரஹஸ்ய த்ரயத்தில் அநுஸந்திப்பது

இப்ராப்தாவினுடைய ஸ்வரூபம், ப்ரணவ நமஸ்ஸுக்களில் மகாரங்களிலும் நார சப்தங்களிலும், ப்ரபத்யே என்கிற உத்தமனிலும் ,வ்ரஜ என்கிற
மத்யமனிலும் , த்வா என்கிற பதத்திலும் , மா சுச : என்கிற வாக்யத்திலும் அநுஸந்தேயம்

மோக்ஷோபாயம் , பற்றி –ரஹஸ்ய த்ரயத்தில்
———————————————————————————————————–

ப்ராப்த்யுபாயமும் , இதில் பரிகரங்களும் , பலஸ்வரூபமிருக்கும்படியும் மேலே ப்ராப்த ஸ்தலங்களிலே பரக்கச் சொல்லக் கடவோம்.
இவற்றில் உபாயம் ,
திருமந்த்ரத்தில் நமஸ்ஸிலும் , அயந சப்தத்திலும் த்வயத்தில் பூர்வ கண்டத்திலும் , சரம ச்லோகத்தில் பூர்வார்த்தத்திலும் அநுஸந்தேயம்.
பல ஸ்வரூபம்,
சதுர்த்யந்த பதங்களிலும் த்வயத்தில் நமஸ்ஸிலும் ,ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிறவிடத்திலும் அநுஸந்தேயம் .

வ்யாக்யானம்
———————

ஜீவனின் ஸ்வரூபம்—அஷ்டாக்ஷரத்தில் ”ஓம் ” என்கிற அக்ஷரத்தின் மூன்றாவது அக்ஷரமான ( எழுத்தான ) , ”ம ” என்பதன் மூலமாகவும், ”
”நம ” என்கிற பதத்தின் மூலமாகவும், ”நாராயணா ” என்பதில் ”நார ” என்பதன் மூலமும், சொல்லப்பட்டது.
த்வயத்தில் , ”ப்ரபத்யே ” என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது.
சரம ச்லோகத்தில், ”வ்ரஜ ” என்பதன் மூலமும், ”த்வா ” என்பதன் மூலமும் ”மா சுச : ” என்பதன் மூலமும் வெளிப்படுத்தப்பட்டது.

மோக்ஷோபாயம் போன்றவற்றுக்கு, பகவானை அடையும் உபாயம் ஸம்பந்தமாகவும் அவ்விதம் மோக்ஷம் அடைந்த பிறகு, கிடைக்கின்ற
பலன்கள் பற்றியும் , நாம் போகப்போக விவரிப்பதாக, ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்.
உபாயம் என்பது,
அஷ்டாக்ஷரத்தில் உள்ள –ஓம் நமோ நாராயணாய — என்பதில் உள்ள ”நம ” என்பதன் மூலமும்,
நாராயணாய என்பதில் உள்ள ”அயந ” என்பதன் மூலமும், அறியக் கடவோம் .

த்வய மந்த்ரத்தில் , ஸ்ரீமந் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே — என்கிற முதல் வரியின் மூலம் அறியக்கடவோம் .

சரம ச்லோகத்தில், இரண்டாவது வரியான ”அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: ” என்பதன் மூலமும் அறியக்கடவோம்

அதிகாரத்திலிருந்து—-
—————————————–

மோக்ஷம் பெறுவதைத் தடுக்கும் விரோதிகள் –பகவன் நிக்ரஹமே முக்ய விரோதி
——————————————————————————————————————-

ப்ராப்தி விரோதியாவது
அவித்யா–கர்ம — வாஸனாதி —ரூபமான மோக்ஷ ப்ரதிபந்தக வர்க்கம்.
இதில் ப்ரதானம் , அநாதியாக ஸந்தன்யமானமான ஆஜ்ஞாதி லங்கன மடியாகப் பிறந்த பகவான் நிக்ரஹம் .
இது, க்ஷேத்ரஜ்ஞர்க்கு –ஞானசங்கோசகரமான , த்ரிகுணாத்மக , ப்ரக்ருதி ஸம்ஸர்க்க விசேஷத்தை உண்டாக்கியும் ,
இப் ப்ரக்ருதி பரிணாம விசேஷங்களான சரீரேந்த்ரியாதிகளோடே துவக்கி,
திண்ணமழுந்தக்கட்டி பல செய்வினை வன்கயிற்றால் புண்ணை மறையவரிந்தென்னைப் போரவைத்தாய் புறமே என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன் என்றும்–சொல்லுகிறபடியே
தேஹேந்த்ரியாதி பரதந்த்ரனாக்கியும்
அவ்வவஸ்தையிலும் சாஸ்த்ரவச்யதை கூடாத திர்யகாதி தசைகளிலே நிறுத்தியும்
சாஸ்த்ர யோக்யங்களான மனுஷ்யாதி ஜன்மங்களில் பாஹ்யகுத்ருஷ்டி மதங்களாலே கலக்கியும் ,
அவற்றில் இழியாதவர்களையுமுள்பட பகவத் ஸ்வரூப திரோதானகரீம்
விபரீத ஞான ஜனனீம் ஸ்வவிஷயாயாச்ச கோப்யபுத்தேர்ஜனனீம் என்கிறபடியே ,
இம்மூலப்ரக்ருதி முதலான மோஹன பிஞ்சிகை தன்னாலே தத்வஞான விபரீத ஞான விஷய ப்ராவண்யங்களைப் பண்ணியும்
இவையடியாக ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ என்கிறபடியே
ஸுகலவார்த்தமான அக்ருத்ய கரணாதி ரூபமான ஆஜ்ஞாதிலங்கனத்தைப் பண்ணுவித்தும் ,
பாபம் ப்ராஜ்ஞாம் நாசாயதி க்ரியமாணம் புந : புந : நஷ்டப்ரஜ்ஞ : பாபமேவ புநராரபதே நர :என்கிறபடியே
மேலும் அபராத பரம்பரைகளிலே மூட்டி அதன் பலமாக
க்ஷிபாம்யஜஸ்ரம் இத்யாதிகளிற்படியே , கர்ப ,ஜன்ம, ஜரா, மரண , நரகாதி சக்ர பரிவ்ருத்தியிலே பரிப்ரமிப்பித்தும் க்ஷுத்ர ஸுகாதிகளுக்கு
ஸாதனமான ராஜஸ தாமஸ சாஸ்த்ரார்த்தங்களைக்கொண்டு
யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா :ப்ரேதான் பூதகணாம்ச்சாந்யே யஜந்தே தாமஸா ஜனா : என்கிறபடியே
தன்னோடு ஒக்கவொழுகு சங்கிலியிலே கட்டுண்டு உழலுகிற க்ஷேத்ரஜ்ஞர் காலிலே விழப்பண்ணியும் ,
அவர்கள் கொடுத்த ஜூகுப்ஸாவஹ க்ஷுத்ர தேவதா புருஷார்த்தங்களாலே க்ருமிகளைப் போலே க்ருதார்த்தராக மயக்கியும்
யோக ப்ரவ்ருத்தரானவர்களையும் க்ஷுத்ர தேவதா யோகங்களிலேயாதல் நாமாத்ய சேதனோபாஸனங்களிலேயாதல்
மூளப்பண்ணிச் சில்வானங்களான பலங்களாலே யோகத்தைத் தலைசாய்ப்பித்தும்
,ஆத்மப்ரவணரையும் ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டம் , ப்ரக்ருதி வியுக்தமென்கிற இவ்விரண்டு படியிலும் ப்ரஹ்மாத்யஷ்டையாலேயாதல் ,
ஸ்வரூப மாத்ரத்தாலேயாதல் உபாஸிக்க மூட்டி
அவை நாலுவகைக்கும் பலமாக அல்பாஸ்வாதங்களைக் கொடுத்து புனராவ்ருத்தியைப் பண்ணியும்
ப்ரஹ்மாத்மக ஸ்வாத்மசிந்தன ப்ரவ்ருத்தரானவர்களையும் ஸ்வாத்மசரீரக பரமாத்ம சிந்தனபரரையும் அந்தராயமான
ஆத்மாநுபவத்தாலேயாதல் , அஷ்டௌ ஸ்வர்ய ஸித்திகளாலேயாதல்,வஸ்வாதிபதப்ராப்தி ப்ரஹ்மகாயநிஷேவணாதிகளாலேயாதல்
,அபிஷேகத்துக்கு நாளிட்ட ராஜகுமாரனுக்குச் சிறையிலே எடுத்துக் கை நீட்டின சேடிமார் பக்கலிலே கண்ணோட்டமுண்டாமாப் போலே
ப்ராரப்த கர்மபலமான தேஹேந்த்ரியங்களிலும் ததனுபந்திகளான பரிக்ரஹங்களிலும் தன்மூல போகங்களிலும் கால்தாழப்
பண்ணியாதல் அந்யபரராக்கியும் இப்படிப் பல முகங்களாலே பகவத்ப்ராப்திக்கு விலக்காயிருக்கும் .முப்பத்திரண்டு அடியான
துரவுதத்துவார் முன்னடியிலே விழுந்ததோடு முப்பதாமடியிலே அந்தராயமுண்டானாலும் இவன் ஸம்ஸாரத்தைக் கடந்தானாகான்

கர்மயோகாதிகளில் ப்ரவர்த்தனுக்கு நேஹாபிக்ரம நாசோ அஸ்தி இத்யாதிகளிற்படியே இட்டபடை கற்படையாய் என்றேனுமொருநாள்
பலஸித்தியுண்டாமென்கிறவிதுவும் கல்பாந்தர மன்வந்தர யுகாந்தர ஜன்மாந்தராதிகளில் எதிலே யென்று தெரியாது.
அனுகூல்யம் மிகவுமுண்டாயிருக்க வசிஷ்டாதிகளுக்கு விலம்பங்காணா நின்றோம்..
ப்ரதிகூல்யம் மிகவுண்டாயிருக்க வ்ருத்ர க்ஷத்ரபந்து பரப்ருதிகளுக்குக் கடுக மோக்ஷமுண்டாகக் காணா நின்றோம்.
ஆதலால், விலம்பரஹித மோக்ஷஹேதுக்களான ஸுக்ருதவிசேஷங்கள் ஆர்பக்கலிலே கிடக்குமென்றும் தெரியாது .
விலம்ப ஹேதுவான நிக்ரஹத்துக்குக் காரணங்களான துஷ்கர்மவிசேஷங்களும் ஆர்பக்கலிலே கிடைக்குமென்றுந்தெரியாது.

வ்யாக்யானம்
————————-

மோக்ஷம் பெறுவதற்குத் தடையாக உள்ளவை–
1. அவித்யை—சரீரத்தை ஆத்மாவாக நினைத்தல்மற்றும் ஆத்மாவை ஸ்வதந்த்ரன் என்று நினைத்து இறுமாந்து, அஹங்காரம் ,மமகாரம் கொள்ளுதல்
2.கர்மா அல்லது கர்மம் —ஜீவன் செய்யும் புண்ய ,பாபச் செயல்கள்
3.வாசனை —முன்னாலே சொன்ன அவித்யை,கர்மா இவைகளாலே உண்டாகும் ஸம்ஸ்காரம் அதாவது தன்மை
4. ருசி—மேற்சொன்ன வாசனைக்கு ஏற்ப உண்டாகிற விருப்பம் /ஆசை
5. ப்ரக்ருதி ஸம்பந்தம் —சரீர சம்பந்தத்தாலே ,ஜீவன் மேற்சொன்ன ருசிக்கு ஏற்ப ,உலக விஷயங்களில் ஈடுபடல்

இந்த ஐந்தும் , சேதனனுக்கு ( ஜீவன் )சக்கரச் சூழற்சியைப் போலத் தொடர்ந்து வருகின்றன. இதில் முக்கியமான தடை, பகவானின்
கட்டளைகளை, எல்லையற்ற காலமாகத் தொடர்ந்து மீறியபடி இருப்பது. அதனால், பகவானின் தண்டனைக்கு ஆளாதல்.

ப்ரதிபந்தக வர்க்கம் –அடிக்கடி செய்யப்பட்ட பாபமானது, அறிவை அழிக்கிறது. அறிவை இழந்த ஜீவன், மறுபடியும் பாபத்தையே செய்கிறான்.
இவற்றில் மோக்ஷத்துக்கு முக்யத் தடை யாதெனில்,
காலங்காலமாக பகவானின் கட்டளைகளைத் தொடர்ந்து மீறியபடி இருப்பதால், அவற்றுக்காக அவன் கொடுக்கும் தண்டனைகளே
ஆகும். இதன்காரணமாக, நிகழ்வது பலப்பல—-

1. சேதனனுக்கு,ப்ரக்ருதியுடன் ஏற்படும் தொடர்பு
2. இந்தப் ப்ரக்ருதி ஸத்வம் ,ரஜஸ்,தமஸ் என்கிற மூன்று குணங்களுடன் இருப்பதால், சேதனனின் ஜ்ஞானம் சுருங்குகிறது.
3. ஜ்ஞானம் சுருங்குவதால், சேதனன் ப்ரக்ருதி சம்பந்தமுடைய சரீரத்தோடும் இந்த்ரியங்களோடும் சேர்கிறான்.
4.இதனை ஸ்ரீ நம்மாழ்வார் ,திருவாய்மொழியில் (5–1–5 ) கூறுகிறார்.

கண்ணபிரானை விண்ணோர்கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வல் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே

பரமபதத்தில் இருப்பவர்க்கு ,கரிய மாணிக்கம் போல் மதிப்பும் அமுது =போக்யமாயும் உள்ள கண்ணனே –கண்ணனான பகவானே —
மனஸ்ஸால் நினைத்து, அவ்வப்போது செய்யும் கர்மாவுக்கு இணங்க, ப்ராக்ருத சரீரத்தில் இந்த ஜீவனைப் புகுவித்து,
ஜீவன் செய்த (நான் செய்த ) பல பாபங்கள் என்கிற கயிற்றால் இந்த சரீரத்தில் , திண்ணம் அழுந்தக்கட்டி = அமிழ்ந்து
கிடக்கும்படி இறுக்கமாகக் கட்டி , புண்ணை மறைய = உடம்பிலே இருக்கிற ரணங்கள் வெளியே தெரியாதபடி தோலினால் மூடி,
என்னைப் புறமே போரவைத்தாய் = உனக்கு அடிமையான என்னை இந்தப் ப்ரக்ருதியில் உழன்று நீடித்து இருக்கும்படி செய்துவிட்டாய்

5. திருவாய்மொழி ( 3–2–1 )

முந்நீர் ஞாலம் படைத்த எம்முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேரறப் பாய்ந்து
எந்நாள் நான் உன்னை இனி வந்து கூடுவனே

மூன்று விதமான ஜலத்தை உடைய –அதாவது—மழை நீர், ஆற்று நீர், ஊற்று நீர் —பூமியைக் கடல் சூழ்ந்து இருக்குமாறு
படைத்த முகில் வண்ணனே ! ஜீவன்களாகிய எங்களிடம் கருணை கொண்ட காளமேகம் போன்றவனே !
ச்ருஷ்டியின் தொடக்கத்தில், நீ , என் நன்மைக்காக அருளிய ஆக்கையின் வழி உழல்வேன் =உடல் செல்லும்
வழியிலே நடந்து ஸம்ஸாரத்திலே அலைகிறேன் .
வெந்நாள் நோய் வீய= ப்ரளய அக்னி போல எரிக்கின்ற ச்ருஷ்டியின் பாதைகள் அழியும்படி ,
வினைகள் வேர் அறப் பாய்ந்து=என் , புண்ய பாபக் கர்மாக்களை வேரோடு அறுத்து அழித்து
எந்நாள் நான் உன்னை = என்றுதான் நல்ல வழியை அடைந்து என்றைய நாளில் ,அடியேன், உன் திருவடித்தாமரைகளில்
இனி வந்து கூடுவனே = இனி எப்போது வந்து சேர்வேனோ ?

6. ஜீவனை–சேதனனை—ஸாஸ்த்ரங்களின்படி நடக்க இயலாத விலங்கு போன்ற சரீரங்களை எடுக்கும்படி செய்துவிடுகிறது.

7.ஸாஸ்த்ரங்களின்படி நடக்கக் கூடிய மனிதப் பிறவி அளித்தாலும், வேதங்களுக்குத் தவறான விளக்கங்களைக்
கொடுக்கும் மதங்களில்,ஜீவனின் மனஸ்ஸை ஈடுபடுத்துகிறது

8. ஸ்ரீ உடையவர் ஸரணாகதி கத்யத்தில் கூறுகிறார்(கத்ய த்ரயம் )

மதீயானாதி கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தாம்–பகவத் ஸ்வரூப திரோதானகரீம்–விபரீத ஜ்ஞான ஜனனீம்
ஸ்வவிஷயாயாஸ்ச போக்த புத்தேர் ஜனனீம்–தேஹேந்த்ரியத்வேன–போக்யத்வேன–சூக்ஷ்மரூபேண சாவஸ்திதாம்
தைவீம்–குணமயீம் மாயாம் தாஸபூத சரணாகதோஸ்ம தவாஸ்மி தாஸ : இதி வக்தாரம மாம், தாரய |

இந்தப் ”ப்ரக்ருதி ” இருக்கிறதே , இது ,,அநாதி காலமாக அடியேன் செய்த கர்ம வினை என்கிற ஆற்று வெள்ளத்தில் அடித்துத்
தள்ளப்பட்டு பகவானின் ஸ்வரூபத்தை அறியாதபடி செய்கிறது.
நாராயணன் , பரமன்; அவனுக்கு நாம் நல்லடியோம் என்கிற நல்ல எண்ணங்கள் தோன்றாதபடி தடுத்து, அதற்கு எதிரான
எண்ணங்களை நினைக்கச் செய்கிறது.
ஒரு பொருளை, வேறு ஒரு பொருளாக நினைக்கச் செய்கிறது.
தனக்குத் தானே இன்பமானவன் என்கிற எண்ணத்தைத் தோன்றச் செய்கிறது. மாயாவித்யை செய்பவன்,காண்பவரை
மயக்க , தன் கையில் மயில்தோகை வைத்திருப்பதைப் போன்று ப்ரக்ருதியானது , சரீரத்தையும் , இந்த்ரியங்களையும்
தன்வசம் வைத்து ஜீவனை மயக்கி அவன் உண்மையை அறியாமல் , அவனுக்குத் தவறான அறிவைக் கொடுத்து,
புலன் இன்பங்களில் ஈடுபடச் செய்கிறது.
” நான் உமக்கு அடிமை ; உம்மையே தஞ்சமாகப் பற்றினேன்” என்று சரணாகதி மந்த்ரத்தைச் சொல்லும் அடியேனை ,
இந்தப் ப்ரக்ருதி ஸம்பந்தத்திலிருந்து தாண்டும்படி செய்து அருளவேணும்

9. இந்தப் ப்ரக்ருதி ஸம்பந்தமானது , ஜீவனை, பகவானின் கட்டளைப்படி நடக்கவிடாமல், சாஸ்த்ரங்களால் தடுக்கப்பட்ட செயல்களில் ஈடுபடவைக்கிறது
திருவாய்மொழி ( 6–9–9 ) பாசுரத்தை ஸ்வாமி தேசிகன் இங்கு எடுத்துச் சொல்கிறார்

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ ?
தாவி வையங்கொண்ட தடந்தாமரை கட்கே
கூவிக்கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ ?

என் மனஸ் கலங்கும்படி ஐந்து இந்திரியங்களும் எனக்குத் துக்கத்தை ஏற்படுத்த ,அல்ப ஸுக விஷயங்களை எனக்குத் தோன்றத் செய்து,
உனக்குத் தாஸனான நான் , தாஸத்வம் செய்யாமல், ப்ரக்ருதியில் தங்கும்படி பாபம் செய்த என்னை , உன்னை அநுபவிக்க இயலாமல்,
இந்த உலகத்திலேயே மூழ்கடித்து அழிக்கப் பார்க்கிறாயா ?
உலகங்களை எல்லாம் ,திருவடிகளால் வசப்படுத்திய அந்தத் திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்ய ,
நீயே ,என்னைக் கூப்பிட்டு ஆட்கொள்ளும் நாள் நெருங்காதோ ?

10. மஹாபாரதம் –உத்யோக பர்வம் —

பாபம் ப்ராஜ்ஞாம் நாசாயதி க்ரியமாணம் புந : புந : நஷ்டப்ரஜ்ஞ : பாபமேவ புநராரபதே நர :என்கிறபடியே
மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து செய்கின்ற பாபம் அறிவை அழிக்கிறது;
அறிவை அவன் –ஜீவன்–இழப்பதால், மேலும் மேலும் பாவங்களையே செய்கிறான்.

11. ஸ்ரீமத் பகவத் கீதை –16ம் அத்யாயம்–19 வது ச்லோகம்

தாநஹம் த்விஷத :க்ரூரான் ஸம்ஸாஸேஷு நராதமாந் |
க்ஷிபாம் யஜஸ்ர மஸுபா ராஸுரீஷ்வேவ யோநிஷு ||

என்னை வெறுக்கிற க்ரூரர்களான மனுஷ்யப் பதர்களை , அசுரப் பிறவிகளில் அடிக்கடித் தள்ளுகிறேன்

இப்படி மேலும் மேலும் பாபம் செய்கிறவர்களை, கர்பவாஸம் , பிறப்பு, கிழத்தன்மை, மரணம், நரகம், என்னும் சுழற்சியில் ஆழ்த்தி விடுகிறான்.

12. க்ஷுத்ர ஸுகங்களில் –மிக அல்பமான ஸுகங்களில் இழிவோர், ராஜஸ —தாமஸ ஸாஸ்திரங்களை அப்யஸித்து
தாங்களும் தங்களைப் போன்றவர்களும் ,தங்களுக்குச் சமமான சங்கிலியால் கட்டப்பட்டவர்களும் ,ஆகிய க்ஷுத்ர தேவதைகளின் கால்களில் விழுகின்றனர்.
இதை .ஸ்ரீமத் பகவத் கீதையில், ஸ்ரீ கண்ணன் சொல்கிறார்

யஜந்தே ஸாத்விகா தேவாந் யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா : |
ப்ரேதான் பூதகணாம்ச்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா : ||

ஸாத்விகர்கள் , தேவர்களையும் , ராஜஸ குணம் உள்ளவர்கள் யக்ஷர்களையும் , தாமஸ குணம் உள்ளவர்கள் ப்ரேதங்களையும்
பூதங்களையும் பூஜிப்பார்கள் .
இந்த க்ஷுத்ர தேவதைகள் இவர்களுக்கு அருவருப்பைத் தரும் மிக்க தாழ்ந்த பலன்களைக் கொடுக்கின்றன. சேற்றில் உள்ள
புழுக்கள் , அந்தச் சேற்றில் மகிழ்வதைப்போல, இந்த அல்பப் பலன்களை , தங்களுக்குக் கிடைத்த உயர்ந்த பலன்களாகக் கருதி மகிழ்கின்றனர்

13. யோக ப்ரவருத்தரானவர்களையும் க்ஷுத்ர தேவதா யோகங்களிலேயாதல்
நாமாத்ய சேதனோபாஸனங்களிலேயாதல் மூளப் பண்ணிச்
சில்வானங்களான பலங்களாலே யோகத்தைத் தலை சாய்ப்பித்தும்—-என்று ஸ்வாமி தேசிகன் கூறுகிறார் . அதாவது—–
யோகம், துக்க நிவ்ருத்திக்குச் சாதகமாகச் சொல்லப்பட்டாலும், யோகத்தில் ஈடுபடும் சிலர், இந்த்ரன் முதலிய தேவர்களையே உபாஸிக்கின்றனர் .
இந்த யோகிகளிலும் சிலர், இந்த்ரன் முதலிய தேவர்கள் தாழ்ந்தவர்கள் என்று அறிந்து, ”நாமோபாஸன”த்தில் ஈடுபடுகின்றனர்.இது ,
சாந்தோக்யத்தில் ”பூம வித்யை யில் உள்ளது.
இதில், வேதங்களின் சப்தத்தையோ வாக்கு, மனஸ் , ஆகாசம் ,ஜலம் –இந்த அசேதநங்களை, ”ப்ரஹ்ம”மாக உபாஸிப்பது .
இதனால், தன் விருப்பப்படி எங்கும் சஞ்சரிப்பது, போன்ற பலன்களை அடைந்து, இவற்றையே பெரிய பலனாக நினைத்து,
உயர்நிலையை அடையாது தடைப்பட்டு விடுவர் .

பூம வித்யை–சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ளது–
நாரதர், ஸநத்குமாரரை அணுகி உபதேசம் செய்யும்படி ப்ரார்த்தித்தார் .
அவரது மனஸ் கலங்கியிருந்தது. நாரத மஹரிஷி யாவும் அறிந்தவர். அவருக்கே கலக்கம் என்றால் !
ஸநத்குமாரர் , நாரதரைப் பார்த்து, ”முதலில் உங்களுக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லுங்கள் ” என்கிறார்.
நாரதர் =நான் எல்லா ஸப்தங்களையும் அறிந்திருக்கிறேன்
ஸநத்குமாரர் ==இதை ப்ரஹ்மமாக உபாஸித்து ஸப்தம் கேட்கும் இடங்களில், எல்லாம் சஞ்சரித்து ஆனந்தம் அடையலாமே
நாரதர் =இதற்கு மேலும் உண்டா
ஸநத்குமாரர் =ஸப்தம் , வாக்கு, மனஸ் , ஸங்கல்பம் , சித்தம் , த்யானம் , விஜ்ஞானம் , பலம்,அன்னம் , தண்ணீர் , தேஜஸ் , ஆஸயம் ,
நினைவு, ஆசை , என்று 14 ஐயும் ப்ரஹ்மமாக உபாஸிக்கலாம்
நாரதர் = இதற்கும் மேலானது, எது
ஸநத்குமாரர் =”ப்ராணனை ” மேலானதாக உபாஸிக்கலாம்.ப்ராணன் — ஜீவாத்மா–இதை உயர்ந்த புருஷார்த்தமாக உபாசிக்கலாம்.
நாரதர் =இதைவிட உயர்ந்தது உள்ளதா
ஸநத்குமாரர் = ப்ரஹ்மத்தை உபாஸிப்பது சிறந்தது.இதற்கு உபாஸனம்மனனம்; இதில் ச்ரத்தை;இதில் அசைக்கமுடியாத பற்றுதல்;அதற்குத்
தகுந்தவாறு செய்யப்படும் செய்கை;ஊக்கம்; இப்படி இருந்து, ப்ரஹ்மத்தை உபாஸிக்கலாம் . இதற்கு ”பூம வித்யை ”என்று பெயர்.
இதற்கு மேம்பட்டது இல்லை.ப்ரஹ்மம் எல்லாவற்றுக்கும் ஆத்மா.பரமாத்மா.இப்படி உபாஸிப்பவன் , கர்மாக்களிலிருந்து விடுபடுகிறான்.
இதற்கு, மனஸ் சுத்தம் வேண்டும். மனஸ் சுத்தமாவதற்கு , சுத்தமான ஆகாரத்தைச் சாப்பிடவேண்டும்.
ஸநத்குமாரரை , ”ஸ்கந்தர் ” என்றும் சொல்வதுண்டு.

ஆத்மாவின் விஷயத்தில் ஈடுபடுவோர்— ஆத்மாவானது ப்ரக்ருதியுடன் தொடர்பு உடையதாகவோ, அல்லது
இல்லாததாகவோ உபாசிப்பர். இப்படி நான்கு த்யானங்கள் — உபாஸனங்கள் சொல்லப்படுகின்றன
1.ப்ரக்ருதியுடன் கூடியதாக, தன்னுடைய ஆத்மாவையே ப்ரஹ்மமாக ஏறிட்டு உபாஸிப்பது
2.ப்ரக்ருதியுடன் கூடிய தன்னுடைய ஆத்மாவை , ப்ரஹ்மம் என்று ஏறிடாமல், ”அஹம் , அஹம் ” ( நான், நான் ) என்று உபாசித்தல்
3.ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்ற சுத்த ஜீவாத்ம ஸ்வரூபத்தை ப்ரஹ்மமாக ஏறிட்டு உபாஸித்தல்
4.ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்ற சுத்த ஜீவாத்ம ஸ்வரூபத்தை ”அஹம் ,அஹம் ” ( நான் , நான் , ) என்று உபாஸித்தல் .
சேதநாசேதநங்களைசரீரமாக உடைய ப்ரஹ்மத்தினுடைய அவயவமான ஜீவனை உபாஸிப்பதால் ,
இவை நான்கும் ப்ரதீக ( அவயவ ) உபாஸனங்கள் எனப்படுகிறது. இவை, பகவத் அனுபவத்தைத் தராது.
தாழ்ந்த ஆத்ம அனுபவத்தைக் கொடுத்து, மறுபடியும் ஸம்ஸாரத்தில் சிக்குவர் ஸ்ரீ உடையவரின் ஸ்ரீ பாஷ்யம் ( 4–3–5 )
இதுவும் மோக்ஷத்தைத் தராது.

இவை தவிர, த்ருஷ்டி உபாஸனம் போன்ற பல உபாஸனங்கள் உள்ளன.

இன்னும் சிலர், சேதநர்கள் —ப்ரஹ்மத்தையே உபாஸித்தாலும் ,தங்களது ஆத்மாவைத் தியானித்து,( ஆத்மோபாஸனம் ) அந்த ஆத்மாவில் அந்தர்யாமியாக ப்ரஹ்மம்
இருப்பதாகவும் , ஆத்மாவைச் சரீரமாகக் கொண்டுள்ளதாகவும் உபாஸித்தாலும் மறைமுகமாக,தங்களின் ஆத்ம த்யானத்தில் ஈடுபடுவதால், ”கைவல்ய ”
நிலையை அடைகிறார்கள். இதில் அஷ்டமாஸித்திகள் கிடைக்கும்; ”வசு”க்கள் போன்ற ஜன்மங்கள் கிடைக்கும்.அல்லது ப்ரஹ்மா முதலானவர்களின்
சரீரத்தில் புகுகின்ற ஆற்றல் கிடைக்கும். அரசாள்வதற்காக, ”ராஜ கிரீடத்”தைச் சூட்டிக்கொள்ளும் நிலையில் உள்ள அரசகுமாரன், தான் காராக்ருஹத்தில்
( சிறையில் ) இருந்தபோது, தன்னைக் கவனித்துக் கொண்ட வேலைக்காரப் பெண்கள் பக்கம் சாய்வது போலாகும் என்று இதற்கு உதாரணமிட்டுக் கூறுவர்.

இப்படியாக,தங்களுடைய வினைப்பயன் காரணமாக , சரீரத்தாலும், இந்த்ரியங்களாலும் உழன்று அலைந்து, அவற்றால் கிடைக்கும் போகமே நிலை என்பதாக
எண்ணி,புருஷார்த்தத்தை இழந்து, சேதநர்கள் —ஜீவாத்மாக்கள் உள்ளனர்.
மேற்சொன்னவாறு பகவானை அடையப் பற்பலத் தடைகள் உள்ளன. பகவானை அடையச் சரியான வழியில் செல்வதாகச் சொன்னாலும்,
அந்த வழியில்( கிணறு தாண்டுவார் ) முப்பத்திரண்டு படிகள் இருப்பதாக வைத்துக் கொண்டால்,
முதல் படியில் தடுக்கிக் கீழே விழுந்தாலும், முப்பத்திரெண்டாவது படியில் தடுக்கிக் கீழே விழுந்தாலும், எந்த வித்யாஸமும் இல்லை.
இப்படி, எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், எந்தக் காலமாக இருந்தாலும், இப்படித் தடைகள் நேரிடில், சேதநன்–ஜீவன் , ஸம்ஸாரத்தில்
உழன்றுகொண்டேதான் இருப்பான்.

கர்மயோகத்தைப் பற்றி.ஸ்ரீ கிருஷ்ணன் , கீதையில் சொல்லும்போது—
நேஹாபி க்ரமநாஸோஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே |
ஸ்வல்ப மப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் ||
அதாவது, கர்மயோகத்தை ஒரு சேதநன்—ஜீவாத்மா– முமுக்ஷு ( மோக்ஷத்தில் ஆசையுள்ளவன் ) ஆரம்பித்தால் , அது வீணாகப்போய்விடும் என்பது இல்லை.
ஜன்மங்களின் முடிவிலோ , யுகத்தின் முடிவிலோ , கல்பத்தின் முடிவிலோ , மன்வந்த்ரத்தின் முடிவிலோ —அதன் பயன்–எப்போது கிடைக்கும் என்று
சொல்லமுடியாது. எதிர் பலனும் வராது. ஆனால், இதன் சிறு பகுதிகூட, ஸம்ஸாரம் என்கிற பெரிய பயத்திலிருந்து காக்கும்.
அதாவது, கர்மயோக பலன் என்பது–கல்லால் கட்டப்பட்ட சுவர் போன்றது; என்றும் நிலையாக இருக்கும். ஆனால், அதன் பலன், எப்போது கிட்டும்
என்று உறுதியாகச் சொல்லமுடியாது.
பகவான் உகக்குமாறு பற்பலச் செயல்களைச் செய்த வசிஷ்டர் முதலானோர்கூட, பலகாலம் காத்திருக்கும்படி ஆயிற்று.
ஆனால், பகவானை விரோதித்த வ்ருத்ராஸுரன் , க்ஷத்ரபந்து முதலானோர் மிகவும் எளிதாக,தாமதமின்றி, மோக்ஷம் அடைந்தனர்.

வ்ருத்ராஸுரன் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம் — ஸ்ரீமத் பாகவதத்தில் இருக்கிறது–
தேவர்களுக்கு, புரோஹிதர் இல்லாத சமயம். த்வஷ்டா என்கிற ரிஷியின் குமாரன் விச்வரூபன் தேவர்களுக்குப் புரோஹிதர் ஆனார்.
சுக்ராச்சார்யரால் ( அசுரர் குரு )அவருடைய வித்யையால் மறைத்துவைக்கப்பட்டிருந்த தேவர்களின் சொத்துக்களை , நாராயண கவசம்
என்கிற வைஷ்ணவ வித்யையை உபாஸித்து , அந்தச் சொத்துக்களை மீட்டு, விச்வரூபன் என்கிற தேவர்களின் புரோஹிதர் ,இந்த்ரனுக்கு
அளித்தார். நாராயண கவசத்தையும் இந்திரனுக்கு உபதேசித்தார் .
இந்த உபாஸனத்தால் , இந்த்ரன் , தன்னுடைய உலகங்களை அசுரர்களிடமிருந்து மீட்டான்.
இந்த விச்வரூபனுக்கு , மூன்று தலைகள். இவர், யாகங்கள் செய்யும்போது, ஹவிர்ப் பாகங்களை ,மறைமுகமாக , அசுரர்களுக்கு
அளித்தார். மேலும், இந்த்ரன் ஆகும் தவ வலிமையும் இவருக்கு இருந்தது.
அதனால்,இந்த்ரன் தன்னுடைய வஜ்ராயுதத்தால் இவர் தலைகளை வெட்டி, இவரைக் கொன்றுவிட்டான்.
விச்வரூபனின் தகப்பனாரான ”த்வஷ்டா ” என்கிற ரிஷி,
இந்த்ரனைக் கொல்லக்கூடிய சத்ரு வேண்டும் என்று ஒரு ஹோமம் வளர்த்து ,அதில், ”இந்த்ர சத்ரோ வர்தஸ்வ ” என்று ஆஜ்யத்தைச் ( நெய் )
சேர்த்தார்.மந்த்ரத்தில் ஸ்வரப்பிழை இருந்ததால்,இந்த்ரனால் கொல்லப்படும் ஒரு புருஷன் கோரமான ரூபத்துடன் தோன்றினான்.
இவன்தான் ”வ்ருத்ராஸுரன் ”.

இவன் செய்த கொடுமைகளைத் தாங்கமுடியாத ரிஷிகளும் தேவர்களும் பகவானிடம் ப்ரார்த்தித்தார்கள் .
பகவான், ரிஷியின் சரீரத்திலிருந்து எலும்பை எடுத்து, விச்வகர்மாவைக் கொண்டு அதை ஆயுதமாகச் செய்து, அந்த ஆயுதத்தைப் ப்ரயோகித்தால்
அவன் மடிவான் என்று அருளினார்.
தேவர்கள், ரிஷியைப் ப்ரார்த்தித்தார்கள் . அவர், பகவானைத் த்யானித்து தன்னுடைய சரீரத்திலிருந்து வெளியே வந்தார்.பகவானின் கட்டளைப்படியே
ரிஷியின் சரீரத்திலிருந்து எலும்பை எடுத்து, விச்வகர்மாவிடம் கொடுத்து , அவர் அதை ஆயுதமாகச் செய்துகொடுக்க அந்த ஆயுதத்தை ஏந்தி,
இந்த்ரன் வ்ருத்ராஸுரனோடு யுத்தம் செய்தான்.
த்ரேதா யுகத்தில், நர்மதா நதி தீரத்தில்,மிகக் கோரமான தேவாஸுர யுத்தம் நடந்தது.சம்பரன் போன்ற அசுரர்கள் பயந்து ஓடினர் .
வ்ருத்ரன் மட்டில், இந்த்ரனை எதிர்த்து சண்டையிட்டான்.அப்போது சொன்னான்—
” இந்த்ரா —-இந்த ஆயுதத்தால் என்னைத் தாக்கு . நான் பாபங்கள் அகன்று மோக்ஷம் அடைவேன். என் மனம் பகவான் நாராயணனின் சரணங்களைப்
பற்றி இருக்கிறது.” என்று சொல்லிக்கொண்டே , பெரிய உருவம் எடுத்து, ஐராவதத்துடன் இந்த்ரனை விழுங்கிவிட்டான்.இந்த்ரன் , அஸுரனின் வயிற்றை
விச்வகர்மா செய்து கொடுத்த ஆயுதத்தால் கிழித்து, வெளியே வந்து வ்ருத்ரனின் தலையை அறுத்து அவனைக் கொன்றான். அஸுரனின்
ஆத்மா, பரமாத்மா ஜ்யோதிஸ்ஸை அடைந்து மோக்ஷம் பெற்றது.

க்ஷத்ர பந்து வ்ருத்தாந்தம் –குருபரம்பரா ஸாரத்தில் முன்னமேயே பார்த்தோம்.
ஆக மோக்ஷத்தை அடையும் விசேஷமான கர்மாக்களை யார் செய்தார்கள் என்றோ, மோக்ஷம் அடையத் தாமதமான கர்மாக்களை
யார் செய்தார்கள் என்றோ, கூற இயலாது.

அதிகாரத்திலிருந்து
———————————-

மோக்ஷத் தடையை விலக்க , சரணாகதியே பரிஹாரம்
—————————————————————————————–

இப்படி அநிஷ்ட பரம்பரைக்கு மூலங்களான அஜ்ஞாதிலங்கனங்களாலே வந்த பகவத் நிக்ரஹ விசேஷமாகிற ப்ரதான விரோதிக்குச் செய்யும்
பரிஹாரத்தை ,தஸ்ய ச வசீகரணம் தச்சரணாகதிரேவ —-என்று கடவல்லியில்வசீகார்த்த பரம்பரையை வகுத்த இடத்திலே ஸ்ரீ பாஷ்யகாரர்
அருளிச் செய்தார்.

மோக்ஷத் தடைகள் பற்றி ரஹஸ்ய த்ரயம் சொல்வது—
——————————————————————————

இவ் விரோதி வர்க்கத்தை யெல்லாம் ரஹஸ்யத்ரயத்தில் விதிக்கிற அர்த்தங்களுடைய வ்யவச்சேத சக்தியாலும், நமஸ்ஸுக்களில்
மகாரங்களில் ஷஷ்டிகளாலும் ஸர்வபாப ஸப்தத்தாலும் அநுஸந்தித்து ஸம்ஸாரத்தில் அடிச்சூட்டாலே பேற்றுக்குறுப்பான
வழிகளிலே த்வரிக்க ப்ராப்தம்

பொருள் ஒன்று என நின்ற பூமகள்நாதன் அவனடி சேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினைவல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஒன்று இலாவகை என் மனம் தேற இயம்பினரே

ப்ராப்யம் ப்ரஹ்ம ஸமஸ்த சேஷி பரமம் ப்ராப்தா அஹம் அஸ்ய உசித :
ப்ராப்தி : தாய தன க்ரமாத் இஹ மம ப்ராப்தா ஸ்வத :ஸூரிவத்
ஹந்த ஏனாம் அதிவ்ருத்தவாந் அஹம் அஹமத்யா விபத்யாச்ரய :
ஸேது :ஸம்ப்ரதி சேஷிதம்பதி பரந்யாஸஸ்து மே சிஷ்யதே

வ்யாக்யானம்
—————————-

மோக்ஷம் அடைவதற்குத் தடையாக இருப்பவனவற்றில் முதன்மையானது எதுவெனில், பகவானின் கட்டளைகளை மீறுவதே ( வேதங்களும் சாஸ்த்ரங்களும்
சொல்வது தான் பகவானின் கட்டளை )இப்படி மீறிச் செயல்படுவதே, சங்கிலித் தொடர் போன்ற சொல்லொணாத் துன்பங்களுக்குக் காரணம்.
இவற்றை விலக்குவது எப்படி என்று ஸ்ரீ பாஷ்யகாரர் சொல்வது என்னவெனில்,
எம்பெருமானை வசப்படுத்துக —இது ஒன்றே நமக்கு அநுக்ரஹம் பண்ணும்படி பகவானை வசப்படுத்தும்
ஸாதனம் —-அவனிடம் செய்யும் சரணாகதியே
இதனை, கடோபநிஷத்தில் புலன் மனம் போன்றவற்றை அடக்கும் வரிசை கூறும் இடத்தை விளக்கும்போது விவரிக்கிறார்.
யோகத்தில் இழிபவன் எதை வசப்படுத்த வேண்டும் —வசீகரிக்க வேண்டும், எதை விட வேண்டும், எதை வசீகரிப்பதில் ச்ரமம் அதிகம் என்பதையெல்லாம்
இதில் காணலாம்.
புற இந்த்ரியங்களை , மனஸ்ஸிலும் ,மனஸ்ஸைப் புத்தியிலும் புத்தியை ஜீவாத்மாவிலும் , ஜீவாத்மாவைப் பரமாத்மாவிலும் அடக்க வேணும்.
இதுவே வசீகரிக்கும் முறை என்று கடோபநிஷத் கூறுகிறது.
பக்தி யோகத்தால் ,பகவானை வசீகரிக்கலாம் ; பக்தியோகம் செய்ய இந்த்ரியங்களை வெல்ல வேண்டும் ; இந்திரியங்களை வெல்ல பகவானை
வசீகரிக்க வேண்டும். இப்படி ஒன்றையொன்று பிணைத்திருப்பதால் சக்ரக தோஷம் என்பது ஏற்படுகிறது. இதை போக்க, எம்பெருமானைச்
சரணமடைவதே வழி ( ஸ்ரீபாஷ்யம் –ஆநுமாநிகாதிகரணம் )

இவ்விதம் , மோக்ஷத்தைத் தடை செய்யும் விரோதிகளை ”வ்யவச்சேத சக்தியால் ” அதாவது, மறைமுகமாகக் கூறப்படும் கருத்துக்கள்—
”நம” என்பதில் உள்ள மமகாரம் ( நான், எனது ) சரம ச்லோகத்தில் ”ஸர்வ பாபம் ”
இப்படி மறைமுகமாக அறிவதன்மூலமாக ஒரு சேதநன் ,”நாம் ஸம்ஸாரம் என்கிற சூடான மணலில் நடக்கிறோம்;–அடிச்சூடு —
மிகவும் வேகமாக நடந்து இதைக்கடந்து, மகிழ்ச்சிப் பாதையை அடையவேண்டும் என்பதை உணர்வான்

பொருள் ஒன்று என நின்ற பூமகள்நாதன் அவனடி சேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினைவல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஒன்று இலாவகை என் மனம் தேற இயம்பினரே

பரமாத்மா இவன் ஒருவனே, தாமரைச் செல்வியின் நாதன் இவனே-இவனே எம்பெருமான்
எம்பெருமானை மிக விரும்பி, அவனது அருளை யாசித்து, அவனது திருவடிகளை சரணம் என்று பற்றியிருக்கும
ஜீவன் இதற்கு, எம்பெருமானை அடைய ஜீவன் கைக்கொள்ளும் உபாயம் எம்பெருமானை அடைந்த பின்னர் பெரும் பலன்
எம்பெருமானை அடைவதற்குத் தடையாக உள்ள அறியாமை போன்ற வினைப்பயன்கள்
இந்த ஐந்து விஷயங்களையும் எல்லாம் அறிந்த நம் ஆசார்யர்கள் ,ஐயம் அற நமக்கு உபதேசித்தனர்

ப்ராப்யம் ப்ரஹ்ம ஸமஸ்த சேஷி பரமம் ப்ராப்தா அஹம் அஸ்ய உசித :
ப்ராப்தி : தாய தன க்ரமாத் இஹ மம ப்ராப்தா ஸ்வத :ஸூரிவத்
ஹந்த ஏனாம் அதிவ்ருத்தவாந் அஹம் அஹமத்யா விபத்யாச்ரய :
ஸேது :ஸம்ப்ரதி சேஷிதம்பதி பரந்யாஸஸ்து மே சிஷ்யதே

நான் அடையவேண்டிய லக்ஷியம் –மிக உயர்ந்ததான ,எல்லாருக்கும் எஜமானான பரமாத்மா. அவனை அடைவதற்கு ஏற்றவன் நான்.
தகப்பனாரின் சொத்து, பிள்ளைக்கு வருவதைப்போல நித்ய சூரிகளுக்குக் கிடைத்த கைங்கர்யம் எனக்கும் கிடைத்திருக்கவேண்டும்.
ஆனால், நான், அறியாமை, அஹங்காரம் இவற்றால் இதனை இழந்துள்ளேன்.
திவ்யதம்பதியரான –எம்பெருமானையும் பிராட்டியையும் சரணாகதி செய்யும்போது, இவை கிடைத்துவிடும்.
சரணாகதி என்பது, இந்த லக்ஷ்யத்தை அடையும் உபாயம் என்பதைத் தெளிந்தேன் .

——————

அதிகாரம் 4–அர்த்தபஞ்சக அதிகாரம் நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் 1—உபோத்காத அதிகாரம் —

April 11, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ஸமாச்ரயணம் ஆன பிறகு, ”க்ரந்த சதுஷ்டயம் ” என்கிற நான்கு க்ரந்தங்களை,
ஆசார்யனிடம் , ”காலக்ஷேப ” மாகக் கேட்கவேண்டும் என்று ஆசார்யர்கள் கட்டளையிட்டு இருக்கிறார்கள்.
1. ஸ்ரீ பாஷ்யம்—ஸ்ரீ வ்யாஸரின் ”ப்ரஹ்ம ஸுத்ர”த்துக்குஸ்ரீ உடையவரின் வ்யாக்யானம் —உரை
2. ஸ்ரீ கீதா பாஷ்யம்—ஸ்ரீமத் பகவத் கீதைக்கு, ஸ்ரீ ராமானுஜர் அருளிய உரை-அதற்கு, ஸ்வாமி தேசிகன் ஸாதித்த ”தாத்பர்ய சந்த்ரிகை ”
3. பகவத் விஷயம் –ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு , ஸ்ரீ ராமானுஜர் கட்டளைப்படி, அவருடைய ஞான புத்ரர்
”திருக்குருகைப் பிரான் பிள்ளான் ” அருளிய வ்யாக்யானம் –ஆறாயிரப்படி –மணிப்ரவாள நடையில்
4. ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் —ஸ்வாமி தேசிகன், நாமெல்லோரும் நல்ல கதியை அடையவேண்டுமென்று விரும்பி ,
தனது அந்திம காலத்தில்,அருளிச் செய்த க்ரந்தம்

இந்த நான்கும், மாறுபட்ட கருத்து ஏதுமில்லாமல், ஒரே குரலில், நமது ஸம்ப்ரதாயக் கொள்கைகளைச் சொல்கின்றன.
இதை ”உபய வேதாந்த ஐக கண்ட்யம் ” என்று சொல்வார்கள்.

——-

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்
இது 4 பாகம்—-32 அதிகாரங்கள்
1. அர்த்தாநு சாஸன பாகம்
2.ஸ்த்திரீகரண பாகம்
3. பத வாக்ய யோஜனா பாகம்
4. ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம்

1-அர்த்தாநு சாஸன பாகத்தில் –22 அதிகாரங்கள்
2-ஸ்த்திரீகரண பாகத்தில் —4 ”
3-பத வாக்ய யோஜனா பாகத்தில் — 3 ”
4. ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகத்தில்–3 ”

——–

அதிகாரம் 1—உபோத்காத அதிகாரம் –

ஆபகவத்த :ப்ரதிதாம் அநத்யாம் ஆசார்ய ஸந்ததிம் |
மனஸி மம யத் ப்ரஸாதாத் வஸதி ரஹஸ்ய த்ரய ஸார : அயம் ||

தோஷங்கள் —அதாவது குற்றங்கள் எதுவுமே இல்லாததும் , மிகவும் ப்ராபல்யமானதும்,
பகவானே முதல் ஆசார்யனாக இருப்பதுமான , இந்தக் குரு பரம்பரையை நமஸ்கரிக்கிறேன் –
அவர்களின் க்ருபையால், அடியேன் மனஸ்ஸில் மூன்று முக்ய ரஹஸ்யங்களின்
( திருவஷ்டாக்ஷரம், த்வயம், சரமஸ்லோகம் ) ஆழ்ந்த உட் கருத்துக்கள் எப்போதுமே நிலைத்து உள்ளன

2. கர்மம் ப்ரஹ்ம ஆத்மகே சாஸ்த்ரே கௌதஸ்குத நிவர்த்தகாந் |
வந்தே ஹஸ்திகிரி ஈசஸ்ய வீதீ சோதக கிங்கராந் ||

கர்மா விசாரம், ப்ரஹ்ம விசாரம் என்று இரண்டு பாகங்களை உடைய வேத சாஸ்த்ரங்களில் , ஹைதுகர்கள் —-
அதாவது, எதற்கும் காரணம் கேட்பவர்கள்–ப்ரமாணங்களை நம்பாதவர்கள்—இவர்களைக் கண்டித்தவர்களும்,
ஸ்ரீ தேவாதிராஜனுடைய திருவீதிக் குப்பைகளைச் சுத்தம் செய்யும் கைங்கர்யங்களைச் செய்பவர்களுமான
ஆசார்யர்களை நமஸ்கரிக்கிறேன்.
இவர் ஸ்ரீ அப்புள்ளார் — ஸ்ரீ தேவப்பெருமாளை அடையும் வழியை–மார்க்கத்தைத் தூய்மை ஆக்கினார்

3. ஆளும் அடைக்கலம் என்று எம்மை அம்புயத்தாள் கணவன்
தாளிணை சேர்ந்து எமக்கும் அவை தந்த தகவுடையார்
மூளும் இருட்கள் விள்ள முயன்று ஓதிய மூன்றின் உள்ளம்
நாளும் உகக்க இங்கே நமக்கு ஓர் விதி வாய்க்கின்றதே

நம்மைக் காப்பாற்ற வேண்டியதாகத் தீர்மானித்து, நம்மைக் காக்கச் சங்கல்பித்து இருக்கிற ,தாமரைப் புஷ்பத்தில்
வசிக்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் நாதனான எம்பெருமானின் ஒன்றுக்கொன்று ஒப்பான திருவடிகளை உபாயமாகப் பற்றி,
நமக்கும் அத் திருவடிகளையே உபாயமாகக் காட்டிக் கொடுத்த க்ருபையை உடைய ஆசார்யர்கள் ,
மேலும் மேலும் பெருகுகின்ற அஜ்ஞான இருட்டுக்கள் அழிய வேணுமென்று ஆசைப்பட்டு–முயற்சித்து ,
உபதேசித்த மூன்று ரஹஸ்யங்களின் உள்ளார்ந்த அர்த்தத்தை எந்நாளும் –எப்போதும் நினைத்து
உகக்க இவ்வுலகில் நமக்கு ஒப்புவமை இல்லாத ஒரு விதி–பாக்யம் கிடைக்கிறதே

திருமகள் கேள்வனான எம்பெருமானின் திருவடிகள் மட்டுமே தங்களைக் காக்கும் என்றும் அவன் மட்டுமே தங்களுக்கு
அடைக்கலம் என்றும், அறிந்த நமது ஆசார்யர்கள் அவனது திருவடிகளையே தங்களுக்கு உபாயமாகப் பற்றி,
அந்தத் திருவடிகளே நமக்கும் உபாயம் என்று காட்டிக் கொடுத்தார்கள்.
இப்படிப்பட்ட ஆசார்யர்கள் நமது அறியாமை என்கிற இருளை ஒழிக்க மூன்று ரஹஸ்யங்களின் உட்பொருளை நமக்கு அளித்தார்கள்.
இதைத் தினமும் இடைவிடாது அனுபவித்து சந்தோஷப்படும் பாக்யம் இவ்வுலகில் நாம் எந்தவொரு ப்ரயத்னமும் செய்யாதிருக்க
நமக்கு, ஆசார்ய பரம்பரை மூலமாகக் கிடைத்துள்ளதே !

4. மணிவர இவ சௌரே :நித்ய ஹ்ருத்ய அபி ஜீவ :
கலுஷமதி : அவிந்தந் கிங்கரத்வ ஆதி ராஜ்யம் |
விதி பரிணதி பேதாத் வீக்ஷித :தேந காலே
குருபரிஷத் உபஜ்ஞாம் ப்ராப்ய கோபாயதி ஸ்வம் ||

கௌஸ்துபமணி போன்ற ஜீவாத்மா ,எம்பெருமானுக்குப் பிரியமானவன். எம்பெருமானும் கௌஸ்து பமணிக்குப் பிரியமானவன்.
ஜீவன் , தனது அறியாமையால் புத்தி தடுமாறி எம்பெருமானுக் செய்யும் கைங்கர்யத்தை , ஒரு கால கட்டத்தில் கைவிடும்போது,
எம்பெருமானின் கடாக்ஷத்தால் , ஆசார்யர்களின் உபதேசங்கள் மூலமாக, தனது ஸ்வரூபம் பற்றிய உண்மை அறிவு, –
அதாவது–ஜீவன் எம்பெருமானின் அடிமை, ஜீவன் எம்பெருமானுக்காகவே இருக்கிறான்–என்கிற ஞானம் ஏற்படுகிறது.
இதனால், ஜீவாத்மா தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான்.

ஜீவாத்மாவின் ”ஸ்வரூப ” யோக்யதை
————————————————————–

ஸ்ரீயப்பதியான ஸர்வேச்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துப ஸ்தானீயனாய்க் கொண்டு
ஹ்ருதயங்கமனாய் குமாரனென்றும், புத்ரனென்றும், சிஷ்யனென்றும் ,ப்ரேஷ்யனென்றும் ,சேஷபூதனென்றும் , தாஸபூதனென்றும் ,
அவ்வோ ஸாஸ்த்ரங்களிலே ப்ரதிபன்னனாயிருக்கும் ஜீவாத்மா , இவன் தனக்கு வகுத்த சேஷியாய் ,அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் ,
உயர்வற உயர்நலம் உடையவனாய் ,நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனாய்
ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானான ஸர்வேச்வரன்

வ்யாக்யானம் :—
ஸ்ரீ லக்ஷ்மி நாயகனான பகவானுக்கு , ஜீவாத்மா பகவானின் கௌஸ்துபமணி போன்று மிகவும் பிரியமானவன் என்றும் .
இவன் , பகவானுக்கு இளவரசன் எனவும் , புத்ரன் எனவும் சிஷ்யன் எனவும் வேலைக்காரன் எனவும் , அவனுக்காக மட்டுமே உள்ளவன் எனவும்,
அடிமை எனவும் பற்பல சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
இந்த ஜீவாத்மாவுக்கு , வகுத்த எஜமானனாய் ,அறியாமையே இல்லாத நித்ய ஸூரிகளுக்கு அதிபதியாய், தன்னையொத்தாரும் ,மிக்காரும்
என்று ஏதுமில்லாத கல்யாண குணசாலியாய் , தனது திருமார்பில் தாமரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை எந்த அளவுக்கு
விரும்புகிறானோ அந்த அளவுக்கு விரும்புகிறவனாய் இவ்வுலகவாசிகள், அவ்வுலகவாசிகள் அனைவருக்கும் எம்பெருமான் ,ஸர்வேச்வரனாக உள்ளான் .

வைகுண்டேது பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி : ஆஸ்தே என்றும்
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப என்றும் சொல்லுகிறபடியே
பெரிய பிராட்டியாரோடே கூடத் தெளி விசும்பிலே ,
யா அயோத்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்திதா என்கிறபடியே
அயோத்யாதி சப்த வாச்யமான கலங்காப் பெரு நகரிலே ,ஸஹஸ்ரஸ்தூணாதி வாக்யங்களாலே ஓதப்படுகிற திருமாமணி மண்டபத்திலே ,
கௌஷீதகி ப்ராம்மணதிகளிலே ஓதப்படுகிற பர்யங்க விசேஷத்திலே ,
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்றும்
நிவாஸ சய்யாஸந என்றும் சொல்லுகிறபடியே ,
ஸர்வ தேச –ஸர்வ கால –ஸர்வவஸ்தோசித் –ஸர்வ வித கைங்கர்யங்களையும் ,ஸர்வவித சரீரங்களாலே அனுபவித்துச் சேஷத்வமே
தனக்கு நிரூபகமாகையாலே சேஷன் என்றே திருநாமமாகும்படியான திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளி மெத்தையிலே
வானிளவரசாய்க் கொண்டு தான் வாழ்கிற வாழ்வை ஸர்வாத்மாக்களும் அநுபவித்து க்ருதார்த்தராக வேணும் என்று ஸஹ்ருதனாயிருக்கிற
இருப்பு அடியாக நித்யானுபவம் பண்ணுகிற அந்தமில் பேரின்பத்தடியரான நித்யஸூரிகளோடு ஒக்கத் தானும்
ஸ்வாமி கைங்கர்யத்துக்கு ஸ்வரூப யோக்யதையாலே இட்டுப் பிறந்து வைத்து அநாதி மாயையாலே ஸுப்தனாய் —
அநேக ஜன்ம ஸஹஸ்ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜந் மோஹ ச்ரம ப்ரயாதோ அஸௌ வாஸனா ரேணு குண்டித :—- என்கிறபடியே
ப்ரக்ருதியாகிற பாழிலே விழுந்து ஓடியோடிப் பல பிறப்பும் பிறந்து தட்டித்தாவற்று அழுக்கடைந்து, ஒளி அழிந்தபடியாலே
தத்வஹித விஷயமாய் யதாவத் ப்ரகாசா ரஹிதனாய் நிற்க—-

வ்யாக்யானம் :—
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி : லைங்க புராணம் இப்படிக் கூறுகிறது—-ஸமஸ்த உலகங்களுக்கும்
எஜமானன் ஆக இருக்கிற பகவான் ,வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் விளங்குகிறான்.

கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் , தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
—————————————————————————-
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே –————–திருவாய்மொழி (4-9-10)

அழகிய வளையல்களை அணிந்த பிராட்டியும் , நீயும் , உங்களைத் தவிர வேறு ஈச்வரர்களில்லை என்னும்படியாக ஸேவை சாதிக்க
நித்ய ஸூரிகளைப்போல எல்லா ஆத்மாக்களும் உன்னை அநுபவித்துக் கைங்கர்யம் செய்யும்படியான –
இப்படி உன்னால் ஏற்பட்ட புருஷார்த்தத்தை நான் ஸாக்ஷாத்கரித்தேன்
ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி, தன்னுடைய பிரபந்த ரக்ஷையில் கூறுகிறார்—
பொருள் அழிவு, ஆயுள் முடிவு, பேராசை பரஹிம்ஸை பலநரக பாதையான ஸம்ஸாரத்திலே , ஐங்கருவி( ரூபம்,சப்தம், ஸ்பர்சம் ,வாஸனை , ரஸம் )
இன்பத்தை அநுபவித்து அதன் வாசனையால் மேன்மேல் திரிகின்ற பஞ்சேந்த்ரியங்களால் மறுபடியும் மறுபடியும் சிற்றின்பத்தை நுகர்ந்து,
அவை அற்பமாய் துயரமாகவே இருப்பதையும் , ஆத்ம அனுபவமென்கிற ”கைவல்யம் ”எம்பெருமானைப் பற்றிய அறிவு சிறிதும்
அப்போது இல்லாததால் மிகக் கேவலமே என்றும், அவற்றில் இழிந்தாரோடு ஸ்நேஹம் அனர்த்தம் விளைவிக்கும் என்றும்
இவைகளை விட்டொழித்து,நேராக உன் திருவடிகளை ஆச்ரயித்தேன்

ஸ்ரீ குணரத்னகோசம் ( 23 ) ( ஸ்ரீ பராசர பட்டர் அருளியது–)
ஆஜ்ஞாநுக்ரஹ பீமகோமலபுரீபாலா பலம் பேஜுஷாம்
யாயோத்யேத்யபராஜிதேதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா |
————————————————————————————————–
பாவை ரத்புத போகபூமகஹநை : ஸாந்த்ரா ஸுதாஸ்யந்திபி :
ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லக்ஷ்மி !யுவயோ :தாம் ராஜதாநீம் விது : ||

ச்ருதி–ஸ்ம்ருதி –இதிஹாஸ –புராண–ஸ்ரீ பாஞ்சராத்ராதிகளிலும் , ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் விவரிக்கும் பரமபதத்தை
இந்த ச்லோகத்தில் , ஸ்ரீ பட்டர் கூறுகிறார்
ஆணையிடுவதும் , வாழ்த்துவதும் ஆகிய செயல்களைச் செய்யும் த்வாரபாலகர்களை உடைய நகரம்—
எம்பெருமானை, -பக்தி-ப்ரபத்தி வழிகளில் ஆச்ரயித்தவர்களுக்கு, அடைய வேண்டிய பயன் ——–
யுத்தம் செய்து வெல்ல இயலாத நகரம்—— என்றும் எவராலும் தோற்கடிக்கப்பட முடியாத நகரம்——–
வேதங்களால் அறியப்பட்ட நகரம் ——— ஸ்வர்காதிகளுக்கும் மேலே உள்ள நகரம் ——–என்றும் நிலைத்திருக்கும் நகரம் ——–
அத்புதமான பகவதனுபவம் நிறைந்த பொருட்களால் செழிப்பான நகரம்———–
அத்தகைய நகரம்–வைகுண்டம் –பரமபதம் என்பது– திவ்ய தம்பதியரான உங்கள் தலைநகர்
என்று வேத விற்பன்னர்கள் புகழ்கிறார்கள்

தலவகாரோபநிஷத் கூறுகிறது—

அயோத்யாதிசப்தவாச்யமான கலங்காப் பெருநகரிலே ,ஸஹஸ்ரஸ்தூணாதி
வாக்யங்களாலே ஓதப்படுகிற திருமாமணி மண்டபத்திலே
————————————————————————————–
வைகுண்டத்துக்கும் அப்பால், அயோத்யா என்றும், எவராலும் வெல்ல இயலாத அபராஜிதா என்றும் கூறப்படும் நகரத்தில்,
ஆயிரமாயிரம் தூண்களையுடைய திருமாமணி மண்டபத்தில்,

கௌஷீதகி
ப்ராம்மணதிகளிலே ஓதப்படுகிற பர்யங்க விசேஷத்திலே ,
——————————————————————————————–
கௌஷீதகி ப்ராம்மணம் போன்றவைகள் சொல்கின்றன—

பர்யங்கம்–உயர்ந்த ஸிம்ஹாஸனத்திலே அமர்ந்துள்ளான்
முக்தனான ஜீவன், அளவற்ற பிரகாசத்தை உடைய ஸிம்ஹாஸனத்தை நெருங்குகிறான்.
அந்த ஸிம்ஹாஸனத்தில் , பரமாத்வாகிய பகவான் வீற்றிருக்கிறான்.

அந்தஸிம்ஹாஸனம் .

— சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்றும்
——————————————————————————————————-
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் —-என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு

ஆதிசேஷன், எம்பெருமான் நடந்தால் குடையாகவும், அமர்ந்தால் ஸிம்ஹாஸனம் ஆகவும், இருக்கிறான் .

நிவாஸஸய்யாஸந என்றும் சொல்லுகிறபடியே
———————————————————————————-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம் —-ஸ்தோத்ர ரத்னம் ( ச்லோகம் 40 )

நிவாஸசய்யாஸந பாதுகாம்சுக உபதாந வர்ஷாதப வாரணாதிபி : |
———————————
சரீர பேதைஸ்தவ சேஷதாம் கதை :யதோசிதம் சேஷஇதீரிதே ஜநை : ||

ஆளவந்தார் ஸ்தோத்தரிக்கிறார் —
திருக்கோயில், திருப்பள்ளி ,சிங்காசனம் ,திருவடிநிலை, பீதாம்பராதி,தலையணை முதலானவை,
மழையையும் வெய்யிலையும் விலக்கவான குடை,பாதபீடம் முதலாக மாற்றுமான தகுமாறு உனக்கு பணிவிடைக்கான
நிலையைப் பெற்றவனான தனது உருவங்களாலே அந்தந்தக் கார்யங்களுக்குத் தகுந்தாற்போல
எல்லா ஜனங்களாலும் சேஷனென்றே அழைக்கப்படுகிற –ஆதிசேஷன் .
இவ்வாறு, எண்ணற்ற உருவங்களெடுத்து , தனக்கென்று எந்த எண்ணமுமின்றி, பகவானுக்கு மட்டுமே அடிமையாகி,
எல்லாக் கைங்கர்யங்களையும் செய்துவருவதால், சேஷனாயிருப்பவனின் செயல்கள் எல்லாம் இருப்பதாலே,
சேஷன் என்றே பேர் பெற்று, அறிந்தவர், அறியாதார் எல்லோராலும் சேஷன் என்றே பேசப்படுகிறான்

இவ்விதம் , தான் பெறுகின்ற நிலையான கைங்கர்யத்தைப் போன்று, அனைத்து ஆத்மாக்களும் செய்து
தன்னை அனுபவிக்க வேண்டும் என்கிற திருவுள்ளம் கொண்டவனாக எம்பெருமான் உள்ளான்
—இப்படியாக, ஜீவாத்மா , தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ஏற்றவாறு , எம்பெருமானுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்வதில்
எல்லையற்ற பரமானந்தம் உள்ள நித்ய ஸூரிகளைப் போலவே ,கைங்கர்யம் செய்யும் தகுதி உள்ளவனே—
ஆனால், இந்த ஜீவாத்மா, அநாதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் எண்ணிலாப் பிறப்புகள் அடைந்து, தட்டித் தடுமாறி, ஸம்ஸார அழுக்கடைந்து,
சுருங்கிய ஞானத்தை உடையவனாய் , ஒன்றும் விளையா நிலம் போலே ,கிடைக்கவேண்டியது கிடைக்காமல்,
இளைப்பாறும் இடமில்லாதவனாகி,விபரீத வாஸனா ருசிகளை அடைந்து, ஸ்வரூபப் பிரகாசத்தையும் இழந்து,உண்மையான ஞானமில்லாமல் இருக்கிறான்
இதை ஸ்ரீ விஷ்ணு புராணம் இவ்வாறு சொல்கிறது—
அநேக ஜன்ம ஸஹஸ்ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜந் மோஹ
ச்ரம ப்ரயாதோ அஸௌ வாஸனா ரேணு குண்டித :

அநேகமாயிரமாயிரம் ஜன்மமெடுத்து, ஸம்ஸார மார்க்கத்தில் சென்று, மோஹத்தில் மூழ்கி, ச்ரமத்தை அடைந்து, தான் யாரென்றே அறியாதபடி,
மயக்கத்தில், கர்மாக்களின் வாஸனையாகிற புழுதியில் அகப்பட்டு, ஞானத்தை இழந்து ஜீவாத்மா உள்ளான் .

இனி, ஸ்வாமி தேசிகன்,” ராஜகுமார த்ருஷ்டாந்தம்” சொல்கிறார்—
வழி தவறிய ராஜகுமாரன் —உதாரணம்

ஒரு ராஜா அந்தப்புரத்துடனே வேட்டைக்குச் சென்று விளையாட்டிலே ஸக்தனான அளவிலே
வார்த்தை அறிவதற்கு முன்பே வழிதப்பின ராஜகுமாரன் எடுத்தார்கையிற் பிள்ளையாய்
ஏதேனும் ஒரு குறிச்சியிலே வளர , அவன் தனக்கில்லாத சபரத்வாதிஜாதிகளை ஏறிட்டுக்கொண்டு ,

மாதா அபி ஏகா பிதா அபி ஏக : மம தஸ்ய ச பக்ஷிண :
அஹம் முநிபி : ஆநீத :கவாசனை :
அஹம் முநீநாம் வசனம் ச்ருணோமி கவாசனானாம் ஸ வச :ச்ருணோதி
ப்ரத்யக்ஷம் ஏதத் பவதா அபி த்ருஷ்டம் ஸம்ஸர்கஜா தோஷ குணா பவந்தி |–என்கிறபடியே
வேடுவச் சேரியிலே கிளிபோலே அவர்கள் பழக்கி வைத்த பாசுரமே தனக்குப் பாசுரமாய் , அவர்களுக்குப் பிறந்தவர்களைப் போலே
அவர்கள் ஊணும் வ்ருத்தியுமே தனக்கு ஊணும் வ்ருத்தியுமாய் ,தன் பிறவிக்கு உரிய போகங்களில் ஆசார ஸம்ஸ்காராதிகளிலும்
புதியது உண்ணாதே ராஜபோக விருத்தங்களான ஜூகுப்ஸித விஷயங்களிலே தனக்குப் பேறுமிழவும் ஹர்ஷ சோகங்களுமாய் ,
ராஜகுமாரனென்று தன்னடி அறிவார் சில ரிஷிப்ராயர் உண்டானாலும் அவர்களுக்குக் கிட்டவொண்ணாத அவஸ்தையையுடையவனாய்
இப்படி ப்ராந்திஸித்த சபரத்வாத்யவஸ்தையோடே யாவஜ்ஜீவனம் நடக்கில் உத்தர ஜன்மங்களிலும் ஒரு யோக்யதை பெற
விரகில்லாதபடியாய்த் தட்டுப்பட்டு நிற்குமாப்போலே , இவனும் தேஹாத்மாபிமானாதிகளாலே தன்னுருக்கொடுத்து
வேற்றுருக்கொண்டு நிற்க —

வ்யாக்யானம் : —

ஒரு அரசன் , தனது அந்தப்புரத்திலுள்ள எல்லோருடனும் வேட்டையாடக் காட்டுக்குச் சென்று, அந்த வேட்டையிலேயே ஆழ்ந்திருக்க ,
அப்போது அந்த அரசனின், சிறுபிள்ளை— அறியாச் சிறுபிள்ளை– பேச்சு வராத சிறுபிள்ளை–
தன்னுடன் ஒருவரும் இல்லாத நிலையில், காட்டில் வழியைத் தவறவிட்டு , அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க ,
அப்போது அந்தக் காட்டில் இருந்த வேடர்கள் இச் சிறுபிள்ளையைப் பார்த்து, இக்குழந்தையை அழைத்துச் சென்று
தங்கள் இருப்பிடத்தில் வைத்து வளர்த்தார்கள்.
இச் சிறுபிள்ளையும், தான் யார் என்று அறியாத நிலையில், தனக்குப் பொருந்தாத, வேடுவர்கள் வாழ்க்கை வாழலானான் .
விஷ்ணு புராணம் கூறுகிறது—-

மாதா அபி ஏகா பிதா அபி ஏக : மம தஸ்ய ச பக்ஷிண :
அஹம் முநிபி : ஆநீத :கவாசனை :
அஹம் முநீநாம் வசனம் ச்ருணோமி கவாசனானாம் ஸ வச :ச்ருணோதி
ப்ரத்யக்ஷம் ஏதத் பவதா அபி த்ருஷ்டம் ஸம்ஸர்கஜா தோஷ குணா பவந்தி |

விஷ்ணு புராண ச்லோகத்தின் மூலமாக,
தாய் தகப்பனாக கிளிகளின் பெற்றோருக்குப் பிறந்த இரண்டு கிளிகள் பற்றிய சம்பவத்தை ஸ்வாமி தேசிகன் இங்கு எடுத்துரைக்கிறார்—
கிளி, ஒரு முனிபுங்கவரிடம் சொல்கிறது——-
எனக்கும் இன்னொரு கிளிக்கும் தாயும் ஒருத்தி; தகப்பனும் ஒருவனே !
நான், ஆஸ்ரமவாசிகளான ரிஷிகளாலும், இன்னொரு கிளி பசு மாம்ஸம் தின்பவர்களாலும் வளர்க்கப்பட்டோம்.
நான், தினந்தோறும் முனிவர்களின் பேச்சுக்களைக் கேட்கிறேன்; அந்தக் கிளியோ மாட்டிறைச்சி உண்பவர்களின் பேச்சுக்களைக் கேட்கிறது.
நான் பேசும் பேச்சுக்களின் தன்மையையும், அந்தக்கிளி பேசும் பேச்சுக்களின் தன்மையையும் கேட்டு,
இவற்றிலுள்ள வேறுபாட்டை நீ தெரிந்துகொண்டு இருக்கலாம்.
இவற்றிலிருந்து, குணங்களும் குற்றங்களும் —- நல்ல பண்புகளும், தீய பண்புகளும் , சேர்க்கையால் ஏற்படுகின்றன
என்று சொல்லிற்று

வேட்டுவர்களால் வளர்க்கப்பட்ட கிளியைப் போன்றே , இந்த ராஜகுமாரனும் வேடர்கள் மொழியே தன் மொழியாகவும்,
அவர்கள் எப்படிப் பேசுகிறார்களோ அப்படியே பேசியும் , அவர்களுக்குப் பிறந்தவர்களைப்போல
அவர்கள் உண்ணும் உணவையே உண்டும் வாழலானான்
அரசனுக்கு உரிய ஆசாரங்கள், ஸம்ப்ரதாயம், போகங்கள் –இவற்றை அறவே அறியாமல், ஒரு ராஜகுமாரன் எப்படி நடந்துகொள்வானோ
அதற்கு நேர் எதிரிடையாக , வாழ்ந்தான். அந்த வனத்தில் வசித்த சில ரிஷிகளுக்கு, இவன் ஒரு ராஜகுமாரன் என்று தெரிந்து, இவனைத்
திருத்த முயற்சி செய்தபோதும், இவன் அவர்கள் பக்கலிலேகூடப் போகாமலிருந்தான். இன்னொரு ஜன்மம் எடுக்கும்போதாவது,
உன்னதமான பிறவி எடுக்கவேணும் என்கிற எண்ணமோ , முயற்சியோ இல்லாதவனாக இருந்தான்.

தனது நிஜ ஸ்வபாவத்தை இழந்து, வேறு ஸ்வபாவம் எடுத்த ராஜகுமாரனைப் போன்றே —ஜீவாத்மா—தானும் ,தான் உள்ள உடலும்
ஒன்றே என்கிற மயக்கத்தில், தன்னுடைய நிஜ ஸ்வபாவத்தை இழக்கிறான்.

அதிகாரத்திலிருந்து—–

அந்த ராஜகுமாரனுடைய லக்ஷணாதிகளாலே ஜாதி விசேஷத்தை அறிவார் சில தார்மிகர் . ஒரு விரகாலே இவனை மீட்கப் பெற்று
அபிமானிக்க இவனுக்கு வந்தேறியான ஜாத்யந்தராபிமானத்தை வழிவிலக்கி த்ருஷ்டாத்ருஷ்ட ஸம்ஸ்காராதிகளாலே உத்தரோத்தர போக
ததுபாயங்களுக்கு யோக்யநாம்படி விரகு செய்து , இவனுக்கு ஸ்வஜாத்யனுரூபமான குண வ்ருத்தங்களைத் தங்கள் உபதேச
அநுஷ்டானங்களாலே குடிபுகரவிட்டு இவனுக்கு அநேக தோஷ த்ருஷ்டங்களான சபராதி போக்ய க்ஷுத்ர விஷயங்களை
அருவருப்பித்து ராஜாதி போக்யங்களான அதிசயித புருஷார்த்தங்களை ஆய்ந்து எடுக்கவல்ல அளவுடைமையை உண்டாக்கி நிறுத்துமாப்போலே
இவ்வாத்மாவுக்குச் சில தார்மிகர் பித்ராதி முகேந நொடித்து,

புமாந் ந தேவோ ந நரோ ந பகர் ந ச பாதப :
சரீராக்ருதிபேதா : அஸ்து பூயைதே கர்மயோநய :–என்கிறபடியே உரு வியந்த விந்நிலைமையை உணர்த்தி ,
அதுக்கு அநுரூபமான புருஷார்த்த ததுபாயங்களிலே அந்வயிக்கிலாம்படி விரகு செய்து உடம்பு தின்றார்படி யன்றிக்கே
ஒரு வெளிச் சிறப்புடையார்க்கு வரும் குண வ்ருத்தங்களை உண்டாக்கி ஹேயோபாதேய விபாகக்ஷமனுமாக்கி நிறுத்தின வளவிலே ,

இவனுடைய அடியுடமையையும் சில தார்மிகரடியாக வந்த யோக்யதையும் அளவுடைமையையும் நேராகக் கண்டு பரம காருணிகனான பரம
சேஷியாலே ப்ரேரிகராய்த் தாங்களும் காருணிகோத்தமராயிருப்பார் சில தேசிகர் .

ஈச்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸுக்ருதம் ததா
விஷ்ணோ :கடாக்ஷமத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்த்விகை :
ஸம்பாஷணம் ஷடேதாநி ஹி ஆசார்ய ப்ராப்திஹேதவ :–என்கிறபடியே நேர்பட்டு ——

வ்யாக்யானம் :—
இச்சிறுபிள்ளையின் தேஜஸ் போன்ற முக விலக்ஷணங்களாலே இவன் ராஜகுமாரன் என்று உணர்ந்த சில தார்மிகர்—மஹான்கள்—
இவனை ஏதேனும் ஓர் உபாயத்தால், மீட்க எண்ணி முதலில் அவன் ஒரு வேடன் என்கிற மதி மயக்கத்தைப் போக்கடித்தனர் .
த்ருஷ்ட ஸம்ஸ்காரம்—-ஸ்நானம், வஸ்திரம் இவை
அத்ருஷ்ட ஸம்ஸ்காரம் — செளள , உபநயனங்கள் இவை
ஸாஸ்த்ரப்படி ஸ்நானம் செய்தல், வஸ்திரம் உடுத்தல், ,பிற ஆசாரங்களை அறியும்படி செய்தனர்.
இதன்மூலமாக ராஜகுமாரன் ஒருவன் ,அனுபவிக்கத்தக்க விஷயங்களை அனுபவிக்கும் தகுதியை இந்த ராஜகுமாரன் அடைந்தான்.
அரசகுமாரனுக்கு ஏற்றதான குணங்கள், உருவம் முதலியவற்றை உபதேசம் மூலமாகவும், எடுத்துக்காட்டுக்கள் மூலமாகவும் அறியச் செய்தார்கள்.
இதனால், இவன் இதுவரை கொண்டிருந்த தாழ்வான வாழ்க்கையை வெறுக்கும்படி செய்தனர் .
புருஷார்த்தங்களை ஆராய்ந்து தெளியவும் தேவையான அறிவையும் அளித்தனர்

இந்த ஜீவாத்மாவுக்கு , தந்தை முதலான பித்ருக்கள் மூலமாக, சில தார்மிகர்களின்
தொடர்பு ஏற்படுகிறது அந்த நல்லவர்கள்—மஹான்கள், இந்த ஜீவாத்மாவுக்கு
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் உள்ள நல்லதைச் சொல்கிறார்கள்

புமாந் ந தேவோ ந நரோ ந பகர் ந ச பாதப :
சரீராக்ருதிபேதா : அஸ்து பூயைதே கர்மயோநய :

ஜீவாத்மா என்பவன் , தேவன் இல்லை; மனிதன் இல்லை ; மிருகமும் இல்லை; மரமும் இல்லை— ஒவ்வொருவருக்கும் சரீர அமைப்பில்
ஏற்பட்ட வேறுபாடானது, அவரவர் கர்மவினைக்கு ஏற்ப உண்டானவை—
இப்படிப் பலப் ப்ரமாணங்களைச் சொல்லி, ஜீவன் உடலைக்காட்டிலும் வேறுபட்டவன்; ஜீவனின் ஸ்வரூபத்துக்கு ஏற்றதாக உள்ள புருஷார்த்தங்கள் எவை ,
அவற்றை அடையும் உபாயம், இவற்றையெல்லாம் உபதேசிக்கின்றனர்
(ஆத்மா, சரீரத்தைக் காட்டிலும் வேறு என்கிற ஞானம் இல்லாதார் –உடம்பு தின்றார் )
இப்படி உயர்ந்த குணங்களை உண்டாக்கி, எவற்றை ஏற்கவேண்டும் எவற்றை விலக்க வேண்டும் என்கிற விவேகம் வளரும்படி செய்கின்றனர்.

இப்படி இந்த ராஜகுமாரன், அவனுடைய ஸ்வரூபத்துக்கு மாறியிருப்பதையும், சில தார்மிகர்கள் செய்த நல்லுபதேசங்களையும்
அவற்றால் அவனது அறிவு பிரகாசிப்பதையும், பகவானின் கருணையால் சில ஆசார்யர்கள் காண்கிறார்கள்
இப்படிப்பட்ட ஆசார்யர்களின் தொடர்பு எப்படி ஏற்படுமென்றால்

ஈச்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸுக்ருதம் ததா
விஷ்ணோ :கடாக்ஷமத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்த்விகை :
ஸம்பாஷணம் ஷடேதாநி ஹி ஆசார்ய ப்ராப்திஹேதவ :

ஜீவர்கள் நன்றாக இருக்கவேண்டுமென்று ஈச்வரன் எண்ணுவது
ஜீவனுக்குத் தற்செயலாக வரும் புண்ய கர்ம பலன்
ஜீவனுக்கு எம்பெருமானின் கடாக்ஷம்
ஜீவனுக்கு, எம்பெருமானிடத்தில் இருந்த த்வேஷம் போவது
ஜீவனுக்கு, எம்பெருமானின் கல்யாணகுணங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம்
ஜீவனுக்கு, ஸத்வ குணம் உள்ளவர்களுடன் ஸ்நேஹம் —
இந்த ஆறும், ஒருவனை, மிகவும் நல்ல ஆசார்யனிடம் சேர்த்துவிடும் –என்கிறபடி அணுகி,
ஆசார்ய உபதேசம் மூலமாக, முமுக்ஷு தெரிந்துகொள்ள வேண்டியவன

அதிகாரத்திலிருந்து——
அந்த ராஜகுமாரனுக்குச் சில ராஜாந்தரங்கர் மேற்பட்டு, பிறவியை உணர்த்தி, மேலுள்ள ப்ரிய தமங்களையும் ஹிததமங்களையும் தெளிவித்து
ஒரு விரகாலே அந்த ராஜாவுக்கும் ராஜகுமாரனுக்கும் பரஸ்பர ஸம்ச்லேஷாகாங்க்க்ஷையை உத்தம்பிக்குமாப்போலே ,இவனுக்கும்

நாயம் தேவோ ந மர்த்யா வா ந திர்யக் ஸ்தாவரோ அபி வா
ஞானானந்தமய ஸ்த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மன :–என்றும்,
தாஸபூதா : ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மன : பரமாத்மன :-என்றும்,–ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகுமங்காதுஞ்சோராமே ஆள்கின்ற செங்கோலுடைய ஸ்ரீய:பதி நாராயணனுடனே
குடல் துவக்கத்தைத் தெளிவித்து இவனுக்கு தத்ப்ராப்த்யுபாயங்களிலே முயன்று இவன் பெறுகிற பேறே
தங்களுக்குப் பொன்னுலகையும் புவனி முழுவதையுமாளுகையாக உகந்து
அதடியாக அன்று ஈன்ற கன்றுக்கு இரங்கிச் சுரக்கும் தேநுவைப் போல
இத்தேசிகர் இவ்வாத்மாவுக்கு அஜ்ஞான ஸம்சய விபர்யயங்கள் தீரவேண்டுமென்று மிகுந்து குறைவரச் சுரக்கும் பாசுரங்களைக் கொண்டு
தத்த்வேந யச்சித சிதீச்வர தத் ஸ்வபாவ–இத்யாதிகளிற்படியே
ஈச்வரனுடையவும் ஈசிதவ்யங்களுடையவும் ஸ்வரூப, ஸ்வபாவ ஸம்பந்தங்களும்
இவற்றின் த்யாஜ்யோபாதேயங்களான இவற்றினுடைய உபாயங்களும்
இவற்றின் கதிப்ரகாரங்களும் உக்தாநுக்தங்களான மோக்ஷ விரோதிகளுமாகிற
இவ்வர்த்தங்கள் முமுக்ஷுவான இவ்வாத்மாவுக்கு ஞாதவ்யங்கள்
இவ்வர்த்தங்கள் எல்லாம் அத்யாத்ம விஷய ஸப்தராசியில் ஸாரதமமான ரஹஸ்யத்திலே ப்ரதிதந்த்ர ஸாரோத்தாரேண ஸங்க்ரஹிக்கப்படுகின்றன

திருவுடன் வந்த செழுமணிபோல் திருமால் இதயம்
மருவு இடம் என்ன மலரடி சூடும் வகை பெறும் நாம்
கருவுடன் வந்த கடுவினையாற்றில் விழுந்தொழுகாது
அருவுடனைந்தறிவார் அருள் செய்ய அமைந்தனரே

கர்மவித்யாதி சக்ரே ப்ரதிபுருஷமிஹாநாதி சித்ரப்ரவாஹே
தத்தத்காலே விபக்திர்பவதி ஹி விவிதா ஸர்வ ஸித்தாந்த ஸித்தா
தல்லப்த ஸ்வாவகாச ப்ரதபகுரு க்ருபா ம்ருஹ்யமாண : கதாசித்
முக்தைச்வர்ய அந்த ஸம்பத் நிதிரபி பவிதா கச்சிதித்தம் விபச்சித்

வ்யாக்யானம் —–
அவர்கள், இந்த ராஜகுமாரனுக்கு அவனுடைய அரச பிறப்பைக் கூறி, அதற்கு ஏற்றதான நன்மைகள் எவை என்றும், அவற்றை அடைவதற்கான
உபாயங்கள்–வழிகள் –எவை என்றும், உணர்த்தி, அவனும் , ராஜாவும் ஒன்றுசேர்வதற்கான எல்லா முயற்சிகளையும் செய்கின்றனர்.
இதைப்போலவே, ஜீவனுக்கும் ஆச்சார்யர்கள் மூலமாக நடைபெறுகிறது–

நாயம் தேவோ ந மர்த்யா வா ந திர்யக் ஸ்தாவரோ அபி வா
ஞானானந்தமய ஸ்த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மன :–ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே

ஜீவாத்மா என்பவன் , தேவன் இல்லை; மனிதன் இல்லை ; மிருகமும் இல்லை; மரமும் இல்லை— அவன் , ஞானம் மற்றும் ஆனந்தத்தையே ஸ்வரூபமாக
உடையவன். அவன் பகவானுக்கு அடிமை.பகவானையே அண்டி இருக்கிறான். அவனது கைங்கர்யத்துக்காகவே இருக்கிறான்.

தாஸபூதா : ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மன : பரமாத்மன :

மந்த்ரராஜபத ஸ்தோத்ரத்தில் சிவன் சொல்கிறார் —
எல்லா ஆத்மாக்களும், பரமாத்மாவுக்கு இயற்கையாகவே தாஸர்கள்.ஆகையால், நானும் உனக்குத் தாஸன் என்று நினைத்து வணங்குகிறேன்

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையா லிடர் தீர்வ ராகாதே –நாச்சியார் திருமொழியில் ( 11–3 )

”பொங்குகிற ஸமுத்ரத்தால் சூழப்பட்ட பூமியையும், வைகுந்தமென்னும் உலகத்தையும் அவைகளில் ஒன்றும்
விட்டுப்போகாமல் செங்கோல் செலுத்தி ஆளுகின்ற எம்பெருமானான ,லக்ஷ்மிகாந்தனுக்கும், ஜீவனுக்கும் உள்ள—
பிறப்பால் வந்த—-உறவை ஆசார்யர்கள் உபதேசிக்கின்றனர் .
அந்த ஜீவன், பகவானை அடைவதற்கு முயற்சிக்கின்றனர் .இப்படி அந்த ஜீவன் பெறுகின்ற பேறு மூலமாக , தங்களுக்கே
இந்த நித்ய விபூதியும், இவ்வுலகம் முழுவதும் கிடைத்ததாக எண்ணுவர்.
அன்று பிறந்த தன்னுடைய கன்றுக்கு ,பசுவானது , தானே பாலைச் சுரப்பதுபோல, ஜீவனிடம் அன்பு செலுத்துகின்றனர்.
அவனுடைய அஜ்ஞானம், தவறான ஞானம் , சாஸ்த்ர சந்தேகம் இவற்றையெல்லாம்,
தங்களுடைய கச்சிதமான உபதேசங்கள் மூலமாக விலக்குகின்றனர்.

ஸ்வாமி தேசிகன் , ஸ்தோத்ர ரத்னத்திலிருந்து ச்லோகத்தை இங்கு சொல்கிறார் —
தத்த்வேந யச்சித சிதீச்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க தாதுபாயகதீருதார : |
ஸந்தர்சயந் நிரமிமீத புராணரத்னம்
தஸ்மை நமோ முனிவராய பராசராய ||

ஜீவர்கள், அசேதனம் , ஈச்வரன் என்னும் தத்வத்ரயம் , அவற்றின் ஸ்வபாவங்கள் ( குணங்கள் ) , இவ்வுலக போகங்கள், மோக்ஷம் , மோக்ஷ சாதனங்கள்,
ஜீவன் மோக்ஷத்துக்குச் செல்லும் மார்க்கம், இவைகளையெல்லாம் உள்ளபடி விளக்கி ,எந்த உதார புருஷரான ஸ்ரீ பராசரர் , ஸ்ரீ விஷ்ணு புராணத்தை
அருளினாரோ , அந்த ருஷிச்ரேஷ்டருக்கு நமஸ்காரம்
இப்படி ஸ்ரீ பராசரர் கூறுவதை போன்று,
ஆசார்யர்கள் ஜீவனுக்கு, சேதன–அசேதனங்களை நியமிப்பவரான பகவானின் குணங்களை உபதேசிக்கின்றனர்.
சேதன–அசேதனங்களின் தனமைகள், அவற்றின் இடையே உள்ள உறவு இவற்றையும் சொல்கின்றனர்.
இவ்வுலக வாழ்க்கையில் அனுபவிக்கும் சுகம்—துக்கம் இவற்றையும் விளக்கி, இந்தப் பிறவியிலிருந்து விடுபடும் உபாயங்கள், அடையப்படும்
மோக்ஷம், ஜீவன் மோக்ஷத்துக்குச் செல்லும் வழி , அதற்கு ஏற்படும் தடைகள்,
இப்படி ”அர்த்த பஞ்சகத்தை”— விளக்குகின்றனர்.
இவை யாவுமே, மோக்ஷத்தில் ஆசை உடைய ” முமுக்ஷு ”தெரிந்துகொள்ள வேண்டியவை
இவை யாவும் ”ரஹஸ்யத்ரயத்தில் ”சொல்லப்படுகின்றன.

திருவுடன் வந்த செழுமணிபோல் திருமால் இதயம்
மருவு இடம் என்ன மலரடி சூடும் வகை பெறும் நாம்
கருவுடன் வந்த கடுவினையாற்றில் விழுந்தொழுகாது
அருவுடனைந்தறிவார் அருள் செய்ய அமைந்தனரே

ஜீவாத்மாக்களாகிய நாம், பகவானின் திருமார்பில் இருப்பதும், திருப்பாற்கடலைக் கடைந்தபோது, ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் வெளியே வந்ததுமான
”கௌஸ்துப மணி ”போன்று , பகவானின் திருமார்பில் இருப்பதற்குத் தகுதி உடையவர்களே —
தவிரவும், அவனது தாமரை போன்ற திருவடிகளை , நமது தலையில் கிரீடம் போன்று அணிந்துகொள்ளும் தகுதியும் உள்ளவர்களே
ஆனாலும், தாயின் கர்பத்தில் , நமது கர்மங்கள் என்கிற வெள்ளத்தில் விழுகிறோம். அந்தக் கர்மானுபவ வெள்ளத்தில்
அடித்துச் செல்லாமல் , நம்மைக் காப்பாற்றுவதற்காகவே ”அர்த்த பஞ்சக ” ஞானம் பெற்ற ஆசார்யர்கள் , அவதரித்தனர்

கர்மவித்யாதி சக்ரே ப்ரதிபுருஷமிஹாநாதி சித்ரப்ரவாஹே
தத்தத்காலே விபக்திர்பவதி ஹி விவிதா ஸர்வ ஸித்தாந்த ஸித்தா
தல்லப்த ஸ்வாவகாச ப்ரதபகரு க்ருபா ம்ருஹ்யமாண : கதாசித்
முக்தைச்வர்ய அந்த ஸம்பத் நிதிரபி பவிதா கச்சிதித்தம் விபச்சித்

ஸம்ஸாரத்தில் உழலும் ஒவ்வொரு ஜீவனும் , கர்மாக்கள், அறியாமை போன்ற வினைகளில் சிக்குண்டு ,
எத்தனையோ வருஷங்களாக, அல்லல்படுகிறான். பூர்வ கர்மாக்கள் பலன் கொடுக்கத் தொடங்கும்போது,
பகவானின் கருணை கிடைக்கிறது–இது மிக்க குறைவான ஜீவன்களுக்கே கிடைக்கிறது –
இப்படிப் பெறும் கருணையால், இவன் பெருத்த ஐச்வர்யத்தை அடைகிறான் –
இந்த ஐச்வர்யம் நித்யஸூரிகள் பெரும் ஐச்வர்யத்தைப் போன்றது

———–

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் 2–ஸாரநிஷ்கர்ஷாதிகாரம் —–

April 11, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

2–ஸாரநிஷ்கர்ஷாதிகாரம் —-
முமுக்ஷு –மோக்ஷத்தில் மிக ஆர்வமுடையவன் —
மிக முக்யமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய மிகவும் ஸாரமான விஷயத்தை , நிர்ணயித்துச் சொல்கிறது ரஹஸ்ய த்ரயம்—
அதன் பிரயோஜனம்–மோக்ஷம்– மோக்ஷ உபாயம்–இவற்றுக்கு சாஸ்த்ரமே ப்ரமாணம்–
அஸாரம் , அல்பஸாரம் , ஸாரதமம் —இவற்றின் விளக்கம்

அதிகாரத்திலிருந்து—–
ஸ்ருதி பத விபரீதம் க்ஷ்வேள கல்பம் ஸ்ருதை ச
ப்ரக்ருதி புருஷ போக ப்ராபக அம்ச : ந பத்ய :
தத் இஹ விபுத குப்தம் ம்ருத்யுபீதா விசன்வந்தி
உபநிஷத் அம்ருத அப்தே :உத்தமம் ஸார மார்யா :

வ்யாக்யானம் —-
வேதங்கள் காட்டும் வழிக்கு, நேர் எதிராக , அர்த்தங்களையும் வழியையும் சொல்லும் எல்லா மதங்களும் விஷத்துக்குச் சமமானவை.
வேதங்களிலும், இவ்வுலக சௌகர்யங்களையும், கைவல்யம் என்று சொல்லப்படும்
தனது ஆத்மாவையே அனுபவிக்கும் பொருட்டுச் சொல்லப்படும் பகுதிகள் , அனுகூலமற்றவையாகும்.
ஆதலால், ஸம்ஸாரத்தைக் கண்டு அச்சப்படுகிற நல்ல விவேகமுள்ளவர்கள் ,இந்த வேதத்தில்,உபநிஷத்தாகிற திருப்பாற்கடலிலிருந்தும் ,
முன்பு ஆசார்யர்களால் காப்பாற்றப்பட்டு வருகிறதுமான ,
மிகவும் ஸாரமானதை ( ரஹஸ்ய த்ரயத்தை )–இந்த அம்ருதத்தை —-மிகவும் விரும்புகிறார்கள்.

அதிகாரத்திலிருந்து—-
ரஹஸ்யத்ரயத்தின் ப்ரயோஜன விசேஷங்கள்
இந்த ரஹஸ்ய த்ரயத்தில் , திருமந்த்ரம் , ஸர்வம் அஷ்டாக்ஷராந்த :ஸ்தம் என்கிறபடியே
தன் அர்த்தத்தை அறிய எல்லா அர்த்தங்களையும் அறிந்து தரும்படியாயிருக்கையாலும்
சரம ச்லோகம் ”ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ” என்று தான் சொல்லுகிற
உபாயம் ஒன்றையுமே அவலம்பிக்க ஸர்வோபாய பலஸித்தி உண்டாம் என்று ஸ்தாபிக்கையாலும் ,
த்வயமும் கட ஸ்ருத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன்னை ஒருகால் உச்சரித்தவனை
ஸர்வ ப்ராகாரத்தாலும் க்ருதக்ருத்யனாக்க வல்ல வைபவத்தை உடைத்தாயிருக்கையாலும்
ரஹஸ்ய த்ரயமே முமுக்ஷுக்களுக்கு ஆதரணீயம்

வ்யாக்யானம் —–
ரஹஸ்யத்ரயம் –என்கிற மூன்று மந்த்ரங்களில், திருமந்த்ரம் என்று புகழப்படும், அஷ்டாக்ஷரம்
மற்றவற்றின் அர்த்தங்களையும் , அறியும்படி செய்யக்கூடியதாக இருக்கிறது.
ஸ்ரீமதஷ்டாக்ஷரப்ரஹ்ம வித்யை ( நாரதீய கல்பம்–1–9 ) மற்றும் ஹாரீத ஸ்ம்ருதி சொல்கிறது–
ஸர்வம் அஷ்டாக்ஷராந்த :ஸ்தம் –அனைத்துமே அஷ்டாக்ஷரத்தில் உள்ளது–
சரம ச்லோகம் ”ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ” என்கிறது—-
அதாவது, மோக்ஷத்துக்கான அனைத்து உபாயங்களையும் கைவிட்டு, என்னை அடைக்கலமாக அடைவாயாக —என்கிறது.
இப்படி ஒரே வழியைக் கடைப்பிடிக்க வேண்டும்;
இதுவே ”சரணாகதி ” –இந்த வழி , மற்ற எல்லா வழிகளின் பலனையும் அளிக்கக்கூடியது.
த்வயம் என்பது, கடோபநிஷத்தில் சொல்வதைப்போல, தன்னை ஒரு தடவை உச்சரித்தவனை, அவன், மோக்ஷம் பெறுவதற்கான
எல்லாக் கர்மாக்களையும் , செவ்வனேவாகவும், மிகச்சிறப்பாகவும் முடிக்க உதவுகிறது—
ஆகவே, முமுக்ஷுக்களுக்கு , ரஹஸ்யத்ரயமே சிறந்தது.

அதிகாரத்திலிருந்து—–
மோக்ஷம், மற்றும் மோக்ஷ உபாயங்களுக்கு , சாஸ்த்ரமே ப்ரதானம்
அஸார மல்பஸாரம் ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத்
பஜேத் ஸாரதமம் சாஸ்த்ரே (ஸ்த்ரம் ) ரத்நாகர இவாம்ருதம்
பரம புருஷார்த்தமும் ததுபாயமும் ப்ரத்யக்ஷாதி ப்ரமாணங்களால் அறியவொண்ணாத படியாலே இவற்றுக்கு—
சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் என்றும்
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதொள என்றும்
சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத : பரம் ப்ரஹ்மாதி கச்சதி என்றும்-சொல்லுகிறபடியே சப்தமே ப்ரமாணம்

வ்யாக்யானம்—-
சாஸ்த்ரங்களில் , 1.அஸாரம் — ஸாரமே இல்லாதது (பலனே இல்லாதது)
2. அல்ப ஸாரம்—(-கொஞ்சம் ஸாரமுள்ளது) அற்பமான பலனைக் கொடுப்பது
3. ஸாரம் —-( ஸாரமுள்ளது ) பலனைக் கொடுப்பது
4.ஸார தரம்—(மிகவும் ஸாரமுள்ளது )அதிக பலனைக் கொடுப்பது–இவற்றை விடவேண்டும்.
க்ஷீர சமுத்ரத்தில் அம்ருதம் போல, சாஸ்த்ரங்களில் மிக உயர்ந்த ,உத்தமமான ஸாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒருவன், அவனுடைய வாழ்க்கையில், மிக உயர்ந்த புருஷார்த்தமாகிய மோக்ஷம் என்பதையும்
அதை அடையும் உபாயத்தையும், ப்ரத்யக்ஷம் –கண்ணால் காண்பது அல்லது, அநுமானம் –ஊகித்து அறிவதாலோ
இவைகளால், புரிந்துகொள்ள முடியாது.
ஆனால், சாஸ்த்ரமே ப்ரமாணம் என்பதன் மூலம் அறியலாம்
சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் —–மஹாபாரதம் –உத்யோக பர்வம் கூறுகிறது
சாஸ்த்ரம் மூலமாக ஜநார்த்தனனை அறிகிறேன்
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதொள — ஸ்ரீமத் பகவத் கீதை ( 16–24 )–ச்லோகம் இதோ—
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதொள
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்து மிஹார்ஹஸி
அர்த்தம்—செய்யத் தக்கது , செய்யத் தகாதது, என்பதை முடிவு செய்வதில்,சாஸ்த்ரம்தான் ப்ரமாணம் –ஆகவே, சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட
முறையை அறிந்து, கர்மாக்களைச் செய்வாயாக ——
சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத : பரம் ப்ரஹ்மாதி கச்சதி –மஹாபாரதம்–சாந்தி பர்வம் (276–2 )
சப்தமாகிய வேதங்களை அறிந்தவன், ”ப்ரஹ்ம”த்தை—அதாவது–
ஸ்ரீமந் நாராயணனை அறிந்தவன் ஆகிறான்

அதிகாரத்திலிருந்து —-
அஸாரம் , அல்பஸாரம் —-விளக்கம்
———————————————————
அவ்விடத்தில்,
அனந்தபாரம் பஹு வேதிதவ்யம் அல்பச்ச காலோ பகவச்ச விக்நா :
யத்ஸாரபூதம் ததுபாததீத ஹம்ஸோ யதா க்ஷீரம் இவ அம்புமிச்ரம்–என்கிற ச்லோகத்தில்,
ஸார பூதம் என்கிற பதத்தாலே பிரதிபன்னமான நிரூபாதிக ஸாரத்தை விஷயீகரிக்கிற ஸாரதம ஸப்தம் உபாதேயம் .
பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்த்ரங்கள் அத்யந்தா ஸாரங்களாகையாலே அநூபாதேயங்கள்.
வேதத்தில் பூர்வ பாகத்தில், ஐஹிகபலஸாதன ப்ரதிபாதகமான ப்ரதேசம் அத்யல்ப ஸாரமாகையாலே அனுபாதேயம் .
ஆமுஷ்மிகபல ப்ரதிபாதகாம்சம் ஐஹிக பலத்திற்காட்டில், அதிசயித பலத்தை உடைத்தாகையாலே சிலர்க்கு ஸாரம்
என்னவாயிருந்த போதிலும் துக்க மூலத்வாதி தோஷ த்ருஷ்டமாகையாலே அனுபாதேயம்.
ஆத்ம தத் ப்ராப்தி தத் ஸாதன மாத்ரத்தை ப்ரதிபாதிக்கும்
அம்சமும் ஸாரதரமாய் இருந்ததேயாகிலும் அதிலும் அத்யந்தாதிசயிதமான பரமாத்மாநுபவ ஸாபேக்ஷர்க்கு அனுபாதேயம் .
பரமாத்ம தத்ப்ராப்தி தாதுபாயங்களை வெளியிடும் ப்ரதேசம் ஸாரதமமாகையாலே விவேகிக்கு உபாதேயம்

வ்யாக்யானம்—
ஸ்வாமி தேசிகன் உத்தவ கீதையிலிருந்து ( 3–10 ) உதாரணம் சொல்கிறார்–
நாம் அறியவேண்டிய வேதாந்த பாகங்கள் பற்பல இருக்கின்றன;இவ்வளவுதான் என்று நிச்சயிக்க முடியாத அளவுக்கு இருக்கின்றன.
ஆனால், அறிவதற்கான ,காலமோ ( ஆயுட்காலம் ) மிகக் குறைவு;தவிரவும், தடங்கல்கள் –இடைஞ்சல்கள் பல உள்ளன;
ஆகவே, அன்னபக்ஷி ,எப்படி பாலிலிருந்து ,தண்ணீரைப் பிரிக்கிறதோ அதைப் போன்று,ஸாாரமில்லாதவைகளுடன் கலந்திருக்கும் ,
மிகவும் ஸாரமானதையே ஒருவன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வேதத்தில் சேராத சாஸ்த்ரங்களும் , வேதத்தை மறுத்துச் சொல்லும் ,வேதத்திற்குப் புறம்பான ஸாங்க்ய, சார்வாக, ஜைன , யோக , பாசுபதாதி
மதவாதிகளாலும் ( இவர்கள் பாஹ்யர் எனப்படுவர் ) , அத்வைத ,பூர்வ மீமாம்ஸா மதவாதிகளாலும் ( இவர்கள் குத்ருஷ்டிகள் ),
செய்யப்பட சாஸ்த்ர விதிகள் என்று சொல்லிக்கொள்ளும் நூல்கள் அடியோடு ஸாரமற்றவை ; உயர்ந்தவை அல்ல ; தள்ளப்படவேண்டியவை.
வேதத்தின் பூர்வ பாகமாகிய முதல் பாகம், கர்ம காண்டத்தைச் சொல்கிறது;
உலக விஷயங்களை –இன்பங்களை –இவைகளை எப்படிப் பெறுவது ,என்பதைச் சொல்கிறது. இவையும் உயர்ந்தவை அல்ல.தள்ளப்படவேண்டியவை.
மேலுலகமான –ஸ்வர்க்கம் –இவற்றைப்பற்றிய பகுதி, உலக இன்பங்களைச் சொல்லும் பகுதியைவிட உயர்வாகத் தோன்றினாலும்,
இவையும் முடிவில் துன்பத்தில் முடிகிறது. ஸ்வர்க்க போகமும் நிலையானதல்ல ! மறுபடியும் பிறவியே–ஆகவே, இதுவும் பயனில்லாதது.
இவற்றைவிட , இன்னும் உசத்தியாகப் புலப்படும், ஆத்மாவை அறியும் பகுதியும் ஆத்மானுபவம்—அதற்கான உபாயத்தைச் சொல்லும் பகுதியும்,
உண்மையில் உயர்ந்தவை அல்ல ; இதுவும் தள்ளப்படவேண்டியதே !
பகவானை மட்டுமே அறியவும் அவனடி அடையவும் ஆவல்கொண்டவனுக்கு– விவேகிக்கு— பரப்ரஹ்மம் பற்றிய வேதப் பகுதிகள்
அவனை அடையும் உபாயம் பற்றிக் கூறும் வேதப் பகுதிகள் மிக மிக முக்கியமானதாகும்.
இதுவே ஸார தமம்

ஜீவனுடன் சேர்ந்து, அவன் ஜ்ஞானம், கர்மங்கள் , வாஸனை –மூன்றும் தொடர்ந்து வருகின்றன.
ஜ்ஞானம், கர்மங்கள் –இவை, ஜீவனுக்கு அடுத்த பிறவியில், அநுபவிக்க வேண்டிய விஷயங்களைச் சேர்த்துவைக்கின்றன.
இந்த விஷயங்களைக் கையாள, பூர்வ ஜன்ம வாஸனை உதவுகிறது.
இல்லாவிடில், புது ஜன்மத்தில் ,இந்த்ரியங்களின் பழக்கம் இல்லாமலேயே வேலை செய்ய இயலாது. புது ஜன்மத்தில் ,வேலைகளைச் செய்வது,
பூர்வ ஜன்ம வாஸனை இருப்பதால்தான்.
ஜீவன், செயல்படுவதற்கு, பகவான் 16 கலைகளைத் தருகிறான்
1. ப்ராணன் 2. புத்தி 3.த்ரேகம் ( சரீரம் ) 4.ச்ரத்தை 5. ஐந்து பூதங்கள் 10. இந்த்ரியம் 11. மனஸ் 12. அன்னம்
13.வீர்யம் 14.தபஸ் 15.மந்த்ரம் 16.கர்மம் (ஹோமம்,யாகம் போன்றவை ) இவன் ஷோடச கல புருஷன்

அதிகாரத்திலிருந்து—
ஸாரதமமானதால் , ரஹஸ்ய த்ரயமே மிகவும் உபாதேயம்
——————————————————————————————-
பஹுப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமாந்நர :
ஸர்வதஸ்ஸாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத :–என்கிறபடியே ரஹஸ்ய த்ரயம் முமுக்ஷுவான இவ்வாத்மாவுக்கு மிகவும் உபாதேயமாகக்கடவது

அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கல்விகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய —நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே

சாகாநாம் உபரி ஸ்திதேந மனுநா மூலேன லப்த ஆத்மக :
ஸத்தாஹேது ஸக்ருத் ஜபேந ஸகலம் காலம் த்வயேந க்ஷிபந்
வேத உத்தாம்ஸ விஹார ஸாரதி தயாகும்பேந விஸ்ரம்பித :
ஸாரஞ்ஓ யதி கச்சத் அஸ்தி புவனே நாத : ஸயூதஸ்ய ந :

வ்யாக்யானம் —-
ஸ்வாமி தேசிகன், மஹாபாரதம்—சாந்தி பர்வத்திலிருந்து ,மேற்கோள் காட்டுகிறார்
பஹுப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமாந்நர :
ஸர்வதஸ்ஸாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத : ( 176–66 )
பற்பல பெரிய சாஸ்த்ரங்கள் இருக்கின்றன—-அவைகளில், வேதாந்தங்கள் ஸாரமானவை . புத்திசாலியானவன், அவைகளிலிருந்தும் ,மிகுந்த
ஸாரமானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேனீ எப்படி, மலர்களைத் தேடித் தேடிச் சென்று, தேனை உறிஞ்சி எடுக்கிறதோ,அதைப்போல, முக்கியமானவற்றை–மிகவும் ஸாரமானவற்றை
க்ரஹிக்கவேண்டும்.
அதுவே, உள்ளபடியே அறியப்படவேண்டிய தத்வங்கள்—மோக்ஷத்துக்கு உபாயமாக உள்ளவை. தனித்து விளங்குபவை.
அவையே, மூன்று ரஹஸ்யங்கள்– மோக்ஷத்தை விரும்பும் முமுக்ஷுவுக்கு மிக முக்யமானவை

ஸ்வாமி தேசிகன், இதற்குப் பிறகு ஒரு பாசுரமிடுகிறார் —-
அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கல்விகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய —நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே
இதுவரை, நாம் கற்றவைகள் போதாதென்று, இன்னும் கற்கவேண்டும் என்கிற ஆசையால், உபயோகமில்லாமல், வெறும் சுமையாக இருக்கிற
பதினெட்டு வித்யைகள்— அதாவது–
நான்கு வேதங்கள், சிக்ஷை , வ்யாகர்ணம் , சந்தஸ் , நிருக்தம், ஜோதிடம், கல்பம், மீமாம்ஸை , ந்யாயம் ,
புராணம் , தர்மம், ஆயுர்வேதம், தனுர் வேதம்,காந்தர்வம், அர்த்தசாஸ்த்ரம்
இவை வெறும் எண்ணிக்கை— இவ்வளவு படித்திருக்கிறான் என்கிற கணக்குக்கு மாத்ரம் உபயோகப்படும் –இந்தக் கல்வி–சுமை என்கிறார்
ஆகவே,கண் இமையா–அதாவது ஞானக் குறைவே இல்லாத — நித்ய ஸூரிகள் பெருமையுடன் புகழ்ந்த–கொண்டாடிய —
எட்டு அக்ஷரமுள்ள மூல மந்த்ரத்தையும், மற்றும் இரண்டு— த்வயம், சரம ச்லோகம் இரண்டையும் எப்போதும் மனதில் தரித்துக்கொண்டிருக்கும்
நமது ஸித்தாந்தத்தை எங்கும் பரப்புகின்ற நமது ஆசார்யர்கள் ,சிறிய முயற்சியால் –ப்ரயத்தனத்தால்– ஸர்வார்த்த ஸித்தியைக்
கொடுக்கும், ஸாரத்தையே கொண்டிருக்கிற ஒப்பற்ற இருப்பைத் தந்தனர்—அதாவது—அஷ்டாக்ஷரத்தையும், த்வயம் , சரமச்லோகம்
இவற்றை , நமது ஆசார்யர்கள் நமக்கு அளித்தனர்.

ஸ்வாமி தேசிகனின் ஸம்ஸ்க்ருத ச்லோகம்—-
சாகாநாம் உபரி ஸ்திதேந மனுநா மூலேன லப்த ஆத்மக :
ஸத்தாஹேது ஸக்ருத் ஜபேந ஸகலம் காலம் த்வயேந க்ஷிபந்
வேத உத்தாம்ஸ விஹார ஸாரதி தயாகும்பேந விஸ்ரம்பித :
ஸாரஞ்ஓ யதி கச்சத் அஸ்தி புவனே நாத : ஸயூதஸ்ய ந :
வேதங்களின் மேல் பாகம் , உபநிஷத் என்பர். இதில்,மூல மந்த்ரமான அஷ்டாக்ஷரம் ப்ரகாசிக்கிறது— விவேகியானவன்,
அஷ்டாக்ஷரம் மூலமாகத் தன்னுடைய உண்மையான நிலையை உணர்கிறான்.
இவன், தனது வாழ்நாள் முழுவதும் மிக உயர்ந்த புருஷார்த்தத்தை அளிக்கும் த்வயத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தாலோ,
ஒரு தடவை மட்டும் சொன்னாலோ, வேதத்தின் சிரத்துக்கு பூஷணம் போன்றவனும், தனது லீலையாக, அர்ஜுனனுக்கு தேர் சாரத்யம்
செய்தவனுமான ஸ்ரீ க்ருஷ்ணன் , கருணை மேலிட்டுச் சொன்ன சரம ச்லோகத்தில் மஹாவிச்வாஸம் உள்ளவனாக இருந்தாலோ,
இப்படிப்பட்டவன், நமது கூட்டம் அனைத்துக்கும் ஸ்வாமி போன்றவன் .

2ம் அதிகாரமான ஸாரநிஷ்கர்ஷ அதிகாரம் நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ப்ரபந்ந க்ருத்யம் /ஸ்ரீ சின்னி அம்மாள் ரஹஸ்யம் /ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த ஸ்ரீ திருக்குருகூர் ரத்னம் /ஸ்ரீ சரம ரஹஸ்ய த்ரயம்/ஸ்ரீ திரு நகரிப்பிள்ளை ரஹஸ்யம் /ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த ஆத்ம விவாஹம் —

March 21, 2021

ஸ்ரீ முதலியாண்டான்
முமுஷுவாய் -ப்ரபன்னனாய் இருக்கும் அவனுக்கு இருக்கும் நாளைக்கு
கால ஷேபம் பண்ணும் பிரகாரம் இருக்கும்படி எங்கனே என்று
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே விண்ணப்பம் செய்ய
குரு பரம்பரா பூர்வகமாக த்வயத்தை அனுசந்தானம் பண்ணுவான்

உபய விபூதி நாதனாய் ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரனும் நாச்சிமாரும் நித்ய ஸூரிகளும் கூட
எழுந்து அருளி இருக்கும் பீட கட்டணமாய் இருக்கும் த்வயம் –
பெரிய பெருமாள் திருவடிகளைப் பார்த்தவாறே -பொது நின்ற பொன்னம் கழல் -என்கிறபடியே
சர்வாத்மாக்களுக்கும் சாதாரணமாய் இருக்கும் –
பெரிய பெருமாளை அபய ஹஸ்தராய் பார்த்தவாறே அநந்ய சரண்யராய் இருக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே அசாதாரணமாய் இருக்கும் –
பெரிய பெருமாள் திரு முக மண்டலத்தைப் பார்த்தவாறே நித்ய ஸூரிகளுக்கும் சாதாரணமாய் இருக்கும் –

ப்ராப்ய பரமான திரு மந்த்ரத்தைப் பெரிய பெருமாள் திருவடிகளிலே அநு சந்தானம் பண்ணுவான் –
ப்ராபகமான சரம ஸ்லோகத்தைப்பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
இரண்டும் கூடி போக ரூபமான த்வயத்தைப் பெரிய பெருமாள் திரு முக மண்டலத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
மத்ஸ்யத்தின் வடிவு எல்லாம் ஜல மயமாய் இருக்குமா போலே இவள் அவன் ஸ்வரூபாதிகளுக்கு
நிரூபக பூதை யாகையாலே அவையாவும் எல்லாம் ஸ்ரீ மயமாய் இருக்கும் –

ஸ்ரீஞ்ஸேவாயாம் என்கிற தாது அர்த்த ப்ரகாசமாய் -புருஷகார ஸ்வரூபமான ஸ்ரீ என்கிற திரு நாமத்தைப்
பெரிய பெருமாள் திரு நன் மார்பில் ப்ராப்ய பரமான திரு மந்த்ரத்தைப் பெரிய பெருமாள் திருவடிகளிலே அநு சந்தானம் பண்ணுவான் –
ப்ராபகமான சரம ஸ்லோகத்தைப் பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
இரண்டும் கூடி போக ரூபமான த்வயத்தைப் பெரிய பெருமாள் திரு முக மண்டலத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
மந் -என்று இப்புருஷகாரம் நித்யம் என்று அநு சந்தானம் பண்ணுவான் –
நாராயண என்று ஆஸ்ரயண சவ்கர்ய ஆபாதகங்களான வாத்சல்யாதி குணங்களையும் ஆஸ்ரய கார்ய ஆபாதகங்களான
ஞான சக்த்யாதி குணங்களையும் உடையவன் என்று அநு சந்தானம் பண்ணுவான்
சரணவ் என்று பெரிய பெருமாள் திருவடிகளை அநு சந்தானம் பண்ணுவான்
சரணம் என்று சரண்யரான பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநு சந்தானம் பண்ணுவான்
ப்ரபத்யே என்று ப்ராப்தாவான தன்னுடைய ஸ்வரூப அநு ரூப ஸ்வீ காரம் என்று அநு சந்தானம் பண்ணுவான்
ஸ்ரீ மதே நாராயணாய என்கிற பதங்களை ஸ்வாமிநியையாய் அவனுக்கு வல்லபையாய் -ப்ராப்யையாய் –
கைங்கர்ய வர்த்தகையாய் -பகவன் முகோலாஸ ஜநகையாய் -தத் ப்ரீதி அனுபவ ஏக யாத்ரையாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரோடே சேஷத்வ கார்யமான கைங்கர்ய பிரதிசம்பந்தியாய் இருக்கும்

அவனுடைய தாரகத்வ வியாபகத்வ நியந்த்ருத்வ ஸ்வரூபம் என்ன
ஸ்வரூப குணங்களான ஞான பலாதிகள் என்ன
அதில் நின்றும் எழுந்த வாத்சல்யாதிகள் என்ன
திவ்ய ஆத்ம தத் தத் ஸ்வரூப குண ப்ரகாசகமான பஞ்ச உபநிஷண் மய விக்ரஹங்கள் என்ன
விக்ரஹ குணங்களான ஸுந்தர்ய ஸுகுமார்யாதிகள் என்ன
ஆஸ்ரித விரோதி விஷயமான ஸுர்யாதிகள் என்ன
திவ்ய மங்கள விக்ரஹ ப்ரகாசகமான திவ்ய ஆபரணங்கள் என்ன
தத் அனுபவ விரோதி நிவர்த்தகமான திவ்ய ஆயுதங்கள் என்ன
அவற்றுக்கு அநு ரூபமான ஸ்ரீ வைகுண்டத்தில் -திவ்ய நகரியிலே -திவ்ய மண்டபத்திலே –
மற்றை திவ்ய மஹிஷிகளோடு திவ்ய பரிச்சத்தங்களாலே சேவிக்க
ஸ்வாமித்வ ப்ரகாசகமாக எழுந்து அருளி இருக்கிற இருப்பில் அநு சந்தானம் பண்ணுவான்

ஆய என்று
அவன் சரண்யன் ஆகையாலும் -சேஷி யாகையாலும் -இவன் அடி சூடும் அரசாகையாலும் -சேஷம் யாகையாலும்
ஸர்வவித சேஷ விருத்திகளையும் பண்ணப் பெறுவேனாக வேணும் என்று அநு சந்தானம் பண்ணுவான்

நம
த்வய அக்ஷரஸ்து பவேன் மிருத்யு -என்றும்
மமேதி த்வய அஷரோ ம்ருத்யு -என்றும்
யானே என் தனதே என்று இருந்தேன் -என்றும் சொல்லப்படுகிற ம என்ற ஷஷ்ட் யந்தமான பதத்தை
த்ரயக்ஷரம் ப்ரஹ்மண பதம் -என்றும்
நமமேதிச ஸாஸ்வதம் -என்றும்
யானே நீ என்னுடைமையும் நீயே -என்றும் -சொல்லுகிற நகாரார்த்த பலத்தாலே ஷஷ்ட் யந்தமான பதத்தை நிஷேதித்து
தனக்கே யாக -என்கிறபடி அத்தலையில் நினைவே நினைவால் படி
கீழ்ச் சொன்ன சகல சேஷ விருத்திகளையும் கொண்டு அருள வேணும் என்று
பெரிய பெருமாள் திரு முகத்தைப் பார்த்து அநு சந்தானம் பண்ணுவான் என்று அருளிச் செய்தார் –

————

ஸ்ரீ அம்மங்கி அம்மாளுக்கு ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த வார்த்தை –
ஸ்ரீ அம்மங்கி அம்மாள் ஸ்ரீ உடையவருக்குத் தீர்க்க பிரணாமமாக தண்டம் ஸமர்ப்பித்து –
அடியேன் திருக்கண்ண புரம் சேவித்து விடை கொள்ளுகிறேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவர் அஞ்சு வார்த்தைகள் அருளிச் செய்தார் –

அவை எவை என்னில் –
அக்னி ஜ்வாலையை அணுகாதே
அசுசியை மிதியாதே
அற நஞ்சு தின்னாதே
அபலர்களைக் கூடாதே
ஆர்த்தரோடே கூடி அணுகி வர்த்தித்து வாரும் -என்று அருளிச் செய்தார் –

அக்னி ஜ்வாலை-யாவது -சைவ மாயா வாதிகள் -அவர்களைக் கண்டால்
அக்னியையும் சர்ப்பத்தையும் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்

அசுசி யாவது -சரீர தத் பரரான ஸம்ஸாரிகள் -அவர்களைக் கண்டால்
காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்

அற நஞ்சு ஆவது –
ரூப நாமங்களை உடையராய் அந்யோன்ய பரராய் ப்ரயோஜனாந்தர பரராய் மயக்கப் பட்டவர்கள்
அவர்களைக் கண்டால்
கற்பூரத்தையும் எலுமிச்சம் பழத்தையும் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்

அபலர்கள் ஆவது –
அருளிச் செயலில் வாசனை பண்ணி ஸ்வரூப சிஷை இல்லாதவர்கள் -அவர்களைக் கண்டால்
காம ரசம் அறியாத கன்னிகைகளைக் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்

ஆர்த்தர் ஆகிறார் -பூர்ண அதிகாரிகள் -அவர்களைக் கண்டால்
தென்றல் நிலாவைக் கண்டால் போலவும்
சந்தன குஸூம தாம்பூலாதிகளைக் கண்டால் போலவும்
பசியன் சோற்றைக் கண்டால் போலவும் கண்டு சேர்ந்து அணுகி வர்த்தித்து வாரும் -என்று அருளிச் செய்தார் –

————————

ஸ்ரீ சின்னி அம்மாள் ரஹஸ்யம்

ஸ்ரீ சேற்றுத் தாமரை கயத்தில் ஸ்ரீ ஜீயர் நீராடா நிற்க
ஸ்ரீ சின்னி அம்மாள் வந்து தண்டம் சமர்ப்பிக்க
பெண்ணே உங்கள் தேசம் எது நித்ய வாசம் எது

நாடு எது என்ன -திருவழுதி வள நாடு என்ன
வூர் எது என்ன -திருக் குருகூர் என்ன
வீடு எது என்ன -பண்டுடையான் வீடு என்ன
குலம் எது என்ன -அச்சுத குலம் என்ன
வேதம் எது என்ன -திராவிட வேதம் என்ன
கோத்ரம் எது என்ன -பராங்குச கோத்ரம் என்ன
ஸூத்ரம் எது என்ன -ராமானுஜ ஸூத்ரம் என்ன –
காரிகை எது என்ன -பர கால காரிகை என்ன –
குடி எது என்ன அஞ்சும் குடி என்ன
பந்துக்கள் ஆர் என்ன -ஆத்ம பந்துக்கள் என்ன
உறவார் ஆர் என்ன -ஓட்ட உணர்ந்தவர் என்ன
உற்றார் ஆர் என்ன -உற்றதும் உன் அடியார் என்ன
தகப்பனார் ஆர் என்ன -தைவ நாயகன் என்ன

தாயார் ஆர் என்ன -ஸ்ரீ வர மங்கை என்ன
புக்கிடம் எவ்விடம் என்ன -வான மா மலை என்ன
பார்த்தா யார் என்ன -வர மங்கை மா முனிவன் என்ன
மாமனார் யார் என்ன -காந்தோ பயந்த்ரர் என்ன
உத்யோகம் எது என்ன பாகவத கைங்கர்யம் என்ன
அத்தால் பிரயோஜனம் எது என்ன -அதுவே பிரயோஜனம் என்ன
அதிகாரம் எது என்ன -சர்வாதிகாரம் என்ன
நிஷ்டை எது என்ன பஞ்சம உபாய நிஷ்டை என்ன
உபாயம் எது என்ன -சரம உபாயம் என்ன
அபிமானம் எது என்ன -பாகவத அபிமானம் என்ன
பிரார்த்தனை எது என்ன -கைங்கர்ய பிரார்த்தனை என்றாள்

அந்த அம்மையாருடைய அத்யாவசாயத்துக்கு வான மா மலை ஜீயர் திரு உள்ளம் உகந்து
பரமபதம் ப்ரசாதித்து அருளினார் –

————–

ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த ஸ்ரீ திருக்குருகூர் ரத்னம்

திரு நாம தாரி- மந்த்ர சம்பந்தி-முத்ர தாரி என்கிறவன் ப்ரக்ருதி ருசியை ஒழிய ஸ்வரூப ருசியை அறியான் –
ஆகையால் ரூப நாமங்கள் ஆகிறது போராது –
ஸச் சிஷ்ய ஸதாசார்ய ஸம்பந்தமும் -ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தமும் சேர திரு மந்த்ரத்திலே தன்னை உள்ளபடி அறிய வேண்டும் –
சரம ஸ்லோகத்தாலே எம்பெருமானே உபாயம் என்று தெளிய வேண்டும் –
த்வயத்தாலே உபாய உபேய நிஷ்டனாய் -த்வய அனுசந்தான பரனாய் -நிர்ப் பரனாய் -நிர் விகாரனாய் –
ஸ்ரீ மன் நாராயணன் திருவடிகளில் பண்ணும் நித்ய கைங்கர்யம் அறிய வேண்டும்

இப்படி இன்றிக்கே அசித்தாலே பாவித்து நான் அறிகிறேன் என்கிறவன் அறியான் –
அவனுடைய ஸஹ வாசமும் அந்நிய சேஷத்வ சமம்
ஆகையால் ஸ்வரூப நாசமாம்

அங்கன் அன்றிக்கே -ஸ்வரூபவானாய் -புருஷகார பூதனான ஆச்சர்யன் அறிவிக்க –
தத்வ த்ரய சிஷை உடையவன் ஆகில் அவனோட்டை ஸஹ வாஸமே ஸ்வரூப உஜ்ஜீவனமாம் –

இப்படி இன்றிக்கே உபாயாந்தர பரனாய் ஆகையால் இறே கூழாள் ஆகிறது –

தானும் பிறரும் தஞ்சம் அன்று இருக்கும் அகிஞ்சனன் அன்றோ -நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா என்கிற படியே
அநந்தாவை வேதா -வேதங்களுக்கு அதிகாரியாய் -தேகம் இட்ட வழக்கன்றிக்கே -தேசிகர் இட்ட வழக்கன்றிக்கே
தேஹ அனுபந்திகளான பதார்த்தங்கள் இட்ட வழக்கன்றிக்கே
ஸ்வரூபம் இட்ட வழக்கான போது அன்றோ அவன் திரு உள்ளம் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவன் ஆவது –

பூர்வ தசை பரித்யாஜ்யம் -உத்தர தசை பரிக்ராஹ்யம் என்கிறபடியே
ஆத்ம சாஷாத்கார ஞானம் உடையவனாய் -இப்படிப் பிடித்தார் பிடித்தாரைப் பற்றித் திருவடிகளில் பண்ணும்
அனவரத நித்ய கல்யாண போக சர்வரஸ ஸர்வ கந்தனானவனை ஸதா பஸ்யந்தி பண்ணுகை அன்றோ ஸ்வரூப லாபம் –
இப்படி ஞானமும் விரக்தியும் சாந்தியும் உடையனாய் இருக்கும் ஒரு ப்ரபன்னன் அபிமானத்திலே ஒதுங்கி வர்த்திக்கை –
அப்போது அன்றோ தன் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ரீதியும் ஸ்வயம் ப்ரகாஸமும்
திரு மண்ணும் ஸ்ரீ சூர்ணமும் தீர்த்தப் ப்ரஸாதமும் உடையனாய் வாழல் ஆவது –

அப்போது அன்றோ சரீரம் அர்த்தம் பிராணாஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் என்று பிரமாணம் சொல்லுகையை அறிகை –
இத்தை அறிகை யன்றோ தன் உஜ்ஜீவனம் அறிகை
இது தர்சன அர்த்தம் உள்ளபடி அறிகை
இது ஸ்வரூப சோதனை -அதிகாரிக்கு அறிய வேண்டுவது –
அவ் வதிகாரி தீர்த்த பிரசாதமும் ஸ்வரூப உஜ்ஜீவனம்
அவன் தீர்த்த ப்ரஸாதம் உடையவன் ஆகையால் வருகிற ஞானம் எல்லாம் அடைவிலே வந்து நிறைந்தது –
வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்கிறவன் அன்றோ அதிகாரி –
இப்படி இன்றிக்கே சகல வேத ஸாஸ்த்ரங்களாலும் சகல ப்ரமாணங்களாலும் சொல்லுகிறது என்று சப்தத்தால் அறிய ஒண்ணாது
சதாசார்ய கடாக்ஷத்தாலே அனுபவ சித்தி தன்னைக் கொடுத்து ரஷித்த போது இவை இத்தனையும் பிரமாணம் –

தர்சன வார்த்தை சொன்னான் என்றும் -தர்சன ப்ரபாவங்கள் போம் என்றும் ரூப நாமங்களைக் கொண்டு
தன் ப்ரேமத்தாலே செய்யுமாகில் அவன் தீர்த்த ப்ரஸாதம் ஆத்ம நாசனமாகும் –
பெருக்கு ஆற்றில் இழிவான் ஒருவன் துறை அறியாதே இழிந்தான் ஆகில் தன் கார்யம் அடியும் –
அதிகாரியோடே இழிந்தால் அன்றோ அக்கரைப்படல் ஆவது -அக்கரை யாவது -விரஜைக் கரை
அப்போது அன்றோ நித்யனாய் -நித்ய அனுபவம் பண்ணி -நித்யர் உடன் ஒரு கோவையாய்க் கலக்கல் ஆவது –
இது பெரிய பிராட்டியாருக்குப் பெரிய பெருமாள் அருளிச் செய்த த்வய அர்த்த அனுசந்தானம் –
ஆச்சார்ய பரம்பரா ப்ராப்தமாக வந்தது என்று அஸ்மத் ஆச்சார்யர் யுக்தம் –

இது ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம்

——–

ஸ்ரீ சரம ரஹஸ்ய த்ரயம்

முமுஷுவான சேதனனுக்கு மோக்ஷத்திலே இச்சை உண்டாம் போது ரஹஸ்ய த்ரயம் அறிய வேணும் –
ரஹஸ்ய த்ரயம் ஆவது -திரு மந்த்ரமும் த்வயமும் சரம ஸ்லோகமும்
இவற்றுக்குப் ப்ரகரணம் என்றும் பிரயோஜனம் என்றும் இரண்டாய் இருக்கும் –
இதில் ப்ரகரணம் அறிகை யாவது ரஹஸ்ய த்ரயத்தில் உண்டான அர்த்த விசேஷங்களை பதங்கள் தோறும் ச க்ரமமாக அறிகை –
பிரயோஜனம் அறிகை யாவது -தாத்பர்யம் அறிகை

திரு மந்த்ரத்துக்கு நாராயண பதமும்
த்வயத்துக்கு சரண பதமும்
சரம ஸ்லோகத்துக்கு ஏக பதமும் தாத்பர்யமாய் இருக்கும் –
இந்த பத த்ரயங்களிலும் உண்டான பரமார்த்தம் யதார்த்தமாக அறிய வேணும்

திருமந்திரத்தில் நார பதத்தில் சேதன அசேதனங்களுடைய எல்லாம் சொல்லிற்றே யாகிலும்
நார பதத்துக்கு அவன் விக்ரஹத்திலே ஊற்றமாய் இருக்கும்
விக்ரஹம் தான் இரண்டு விதமாய் இருக்கும் -அதாவது சேதனம் என்றும் அசேதனம் என்றும்
சேதனம் என்கிறது நம்மாழ்வாரை
அசேதனம் என்கிறது பரத்வாதிகளிலே அவன் பரிக்ரஹித்த திவ்ய மங்கள தேஹங்களை
அதுக்கும் இதுக்கும் நெடு வாசி உண்டு –
இது நினைவிலே எழுந்து இருந்து விநியோகப்படும்
அதுக்கு இவன் தான் அறிந்து யத்னிக்க வேண்டும்
அங்கு போக வேளையாய் ஆனந்தம் சரீரம் -அறிவார் உயிரானாய் –
நார பதத்தாலே ஸர்வேஸ்வரனுக்குத் திரு மேனியாக அனுசந்தித்து
அயன பதத்தாலே ஆழ்வாரை ஸர்வேஸ்வரனுக்கு உயிராக அனுசந்திக்கை –
அங்கனம் அன்றியே
என்னது உன்னதாவி என்றும் –
ஞாநீத் வாத்மைவ மே மதம் என்றும் -இவரை அவனுக்கு உயிராக அனுசந்திக்கை
அங்கனமும் அன்றிக்கே
ஸர்வேஸ்வரேஸ்வரன் நினைவாலே ஸம்பந்தம் அறிகை யாவது –
சரீராத்மா சம்பந்தம் போலே ஆழ்வாருக்கும் நமக்கும் உண்டான ஸம்பந்தம் என்று அறிகை

த்வயத்துக்குத் தாத்பர்யம் சரணவ் -பதத்தாலே
ஆழ்வாரை ஸர்வேஸ்வரேஸ்வரனுக்குத் திருவடிகளாகவே அனுசந்தித்து
திருவடிகளை உபாயமாகப் பற்றும் போது ஆழ்வாரையே உபாயமாக அனுசந்தித்துப் பற்ற வேணும் –

சரம ஸ்லோகத்தாலே மாம் என்று தன்னைத் தொட்டுக் காட்டி –
ஏகம் – என்று
திருக் கையும் ஞான முத்திரையாக ஆச்சார்ய பதத்தை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற
என்னை ஒருவனையுமே உபாயமாகப் பற்று என்று விதிக்கையாலே
ஆழ்வார் ஒருவரையும் உபாயமாகப் பற்ற வேணும் –
ஆழ்வாரைப் பற்றும் போது அவர் திருவடிகளைக் பற்ற வேண்டுகையாலே
எம்பெருமானார் திருவடிகளோட்டை சம்பந்தமே இவ்வாத்மாவுக்கு உஜ்ஜீவனம் –

இதற்குப் பிரமாணம் -கண்ணி நுண் சிறுத் தாம்பும் -ராமானுச நூற்று அந்தாதியும் –
இவ்வர்த்தம் அறியாதவனுக்கு யாவதாத்ம பாவியாக சம்சாரம் அநு வர்த்திக்கும்
இவ்வர்த்த நிஷ்டரான அதிகாரிகளுக்கு ஆழ்வார் ப்ரபத்தியும் உடையவர் ப்ரபத்தியும் நித்ய அநு சந்தேயமாகக் கடவது
இவ்வர்த்தம் ப்ரசாதித்த ஆச்சார்யன் திருவடிகளே உபாயமாகக் கடவன் –

——————

ஸ்ரீ திரு நகரிப்பிள்ளை ரஹஸ்யம்

ஸ்ரீ பிள்ளை செண்டு அலங்கார தாஸர் -ஸ்ரீ திரு நகரிப் பிள்ளை ஸ்ரீ பாதத்திலே நெடு நாள் அபேக்ஷித்து
ஒரு பத்த சேதனன் முமுஷுவாய் முக்தனாம் போது
ஸ்வரூப ஆவேச வியாப்தியை ஸதாவாக உள்ளவர்களுடைய அபிமானமும் –
பகவத் பாகவத ஆச்சார்ய அபிமான நிஷ்டர் விஷயங்களில் மானஸ கைங்கர்ய அனுசந்தானமும்
கூட வேணும் என்று பல நாளும் அருளிச் செய்யா நின்றது –
அடியேனுக்கு அவை கூடும்படி எங்கனேயோ அறிகின்றிலேன் -என்று விண்ணப்பம் செய்ய

ஆகில் இவ்வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள்ளும் என்று தம்முடைய
ஸ்ரீ பாதத்தளித்த தொட்டு ஆணை இடுவித்துக் கொண்டு அங்கீ கரித்து
பூர்வாச்சார்யர்கள் தங்களுக்குத் தஞ்சமாக அனுசந்தித்தும்
தங்களைப் பற்றினவர்களுக்குக் குஹ்ய தமமாக உபதேசித்தும் போரும் அர்த்த விசேஷங்கள் உண்டு

அவை எவை என்னில் –
வஸ்து நிர்தேசமும்
உபாய நிர்தேசமும்
உபேய நிர்தேசமும்

இவை இவை தன்னை நிர்தேசிக்கும் போது பிரமாணம் கொண்டே நிர்தேசிக்க வேண்டுகையாலே
இவ்வர்த்த விசேஷங்களுக்கு நிர்ணாயக பிரமாணம் தன்னை பிரதமத்திலே நிர்ணயித்துக் கொள்ள வேணும் இறே -அதாவது –
அபவ்ருஷேயமாய் –நித்ய -நிர்தோஷமாய் -அகில பிராமண உத்க்ருஷ்டமான வேதத்துக்கு ஸங்க்ரஹமான திரு மந்த்ரத்திலும்
அதனுடைய விவரணமான ரஹஸ்ய த்வயத்திலும் உண்டான அர்த்த விசேஷங்களை ப்ரதிபாதியா நின்ற உள்ள
ஆழ்வார்கள் அருளிச் செய்த திராவிட வேதத்துக்கு கருத்து அறிவிக்கும் ஆச்சார்யர்கள்
தங்களுக்குத் தஞ்சமாக நினைத்து இருக்குமதாய் ரஹஸ்ய த்ரயத்திலும் அர்த்தமாக மறைத்து உபதேசிக்கக் கடவ
அர்த்த விசேஷங்களை சாப்தமாக ப்ரதிபாதிக்கையாலே
இவ்வர்த்த விசேஷங்களுக்கு நிர்ணாயகமான பிரமாணம் -கண்ணி நுண் சிறுத்தாம்பாய் -இருக்கும் –

இனி வஸ்து நிர்த் தேசமாவது
இந்த பிராமண ப்ரதிபாத்யரான நம்மாழ்வாருடைய ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து இவரே நமக்குத் தாரகர்
என்று ஸ்ரீ மதுர கவிகள் போல் அறுதி இடுகை

அது செய்யும் இடத்தில் இதுக்குப் பிரமாணம் மூல மந்த்ரம் ஆகையாலும்
வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -என்று தாமே அருளிச் செய்கையாலும்
திரு மந்த்ரம் கொண்டே அறுதி இட வேணும் –

அது நாராயணாய என்று சொல்லா நிற்க இறே -அவ்வர்த்த அனுசந்தானம் பண்ணுகிற இவரும் தேவு மற்று அறியேன் என்றதும்
திரு மங்கை ஆழ்வாரும் -நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை -என்றதும்
இவர்கள் இப்படி சொல்லுகைக்கு அடி ஸர்வேஸ்வரனுடைய நாராயணத்வ பூர்த்தி உள்ளபடி அறிந்து பற்றின ஊற்றம் இறே

அல்லது நாராயணாய என்று மந்த்ர சரீரத்திலே வியக்தமாய்ச் சொல்லா நிற்க –
தேவு மற்று அறியேன் -என்பது
அடியார்க்கு அடிமை என்பதாக ஒண்ணாது இறே

இத்தனையும் அறிய வேண்டுவது உஜ்ஜீவன அம்சத்துக்கு நாராயணத்வ பூர்த்தி யாவது தான் ஏது என்னில் –
நாராயண பதம் -நார பதத்தாலே பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த பதார்த்தங்களையும்
அயன பதத்தாலே தத் ஆஸ்ரயமான பகவத் ஸ்வரூபத்தையும் ப்ரதிபாதியா நின்று கொண்டு
யோக ரூடி நியாயத்தாலும் சாதாரணமாயும் அசாதாரணமாயும் இருக்கும் –

இதிலே வஸ்து நிர்த்தேசம் பண்ணும் போது சாதாரணத்துக்கும் அசாதாரணத்துக்கும் வாஸி அறிய வேண்டும் –
சாதாரணமானது –
விதி சிவாதிகளான அதிகாரி ஜீவர்களை அதிஷ்டித்துக் கொண்டு அஹங்கார யுக்த ஜீவர்களுக்கு
அந்தராத்மாவாய் நின்று கொண்டு அவர்களைச் சொல்லும் வாசகத்தாலே தன்னைச் சொல்லலாம் படி நிற்கும் நிலை –
அதாகிறது -நான்முகனே முக்கண் அப்பா -என்று சம்போதிக்கலாம் படியாய் இருக்கை –

இனி அசாதாரணம் ஆவது –
அப்ராக்ருதமாய் ஸுத்த ஸத்வமாய் இச்சா க்ருஹீத மான திவ்ய விக்ரஹத்தோடே கூடி இருக்கும் இருப்பு –
இவ்விரண்டிலும் நாராயணத்வ பூர்த்தி இல்லை –

இனி சாதாரண பரமான விதி ஸிவாதி வியக்திகள் போலே அஹங்கார யுக்தமாய் இருத்தல் –
அசாதாரண திவ்ய விக்ரஹம் போலே நினைவு அறியாது இருத்தல் செய்கை அன்றிக்கே
தனக்கே யாக -என்கிற அத்யந்த பாரதந்தர்யத்தாலே –
உந்தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் -என்றும்
நினைவு அறிந்து பரிமாற்ற வல்ல வியக்தி பாரதந்தர்யத்தாலும் அசாதாரண திவ்ய விக்ரஹத்திலும்
அவன் உகந்த அந்தரங்க சரீரம் ஆழ்வாராய் இருக்கும் –

ஈஸ்வர ஸ்வரூபம் தான் பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதார ஆச்சார்யத்வம் என்று ஆறு பிரகாரத்தோடே கூடி இருக்கும் –
அதில் பரத்வாதிகள் ஐந்திலும் தத்வ த்ரயத்தினுடைய வைச்சித்யம் இல்லாமையால் நாராயணத்வ பூர்த்தி இல்லை –
இனி ஆச்சார்யத்வம் என்கிற மதுரகவி ஆழங்கால் பட்ட இதிலே யாய்த்து நாராயணத்வம் பூர்ணம் ஆவது
கேவலம் ப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தோடே இங்கேயே கூடி இருக்கையாலே
தத்வ த்ரயங்கள் மூன்றும் ஒன்றோடு ஓன்று கூடி இருக்கிற இது அன்றோ பூர்ணம் –
அங்கனம் அன்றிக்கே ஆழ்வாரையும் அவரது திரு மேனியையும் இரண்டையும் தனக்கு விக்ரஹமாய்க் கொண்டு
அவருடைய அஹந்தை தன்னுடைய அஹந்தையில் அந்தர்பூதமாய் இருக்கிற இருப்பு இறே
தானும் தானாய் ஒழிந்தானே தானே யான் என்பானா தானே யாகி நிறைந்தானே என்றபடி தத்வத்ரய விசிஷ்டமாய் அன்றோ
சகல ஜகத்தும் இருப்பது என்னில் அங்கனம் சொல்ல ஒண்ணாது –
வியவஸ்திதமாய் இருக்கையாலே பிராட்டிமார் எல்லாம் ஒத்து இருக்கச் செய்தே பெரிய பிராட்டியார் அவன் ஸ்வரூபாதிகளுக்கு
நிரூபக பூதையாய் -பிரதான மஹிஷியாய் திருவின் நிழல் போல் யாம்படி
அல்லாதவர்கள் தனக்கு சாயா பரதந்த்ரராம் படி வியாவ்ருத்தியாய் இருக்கிறாப் போலே இதுவும் இவ்விஷயத்துக்கே வியவஸ்திதம்
மற்றை ஆழ்வார்கள் இவருக்கு விஷய பூதர் –

இது முடியானேயிலே -ஸூ ஸ்பஷ்டம்
இவ்வாழ்வாருக்கும் இத்தனை பிரகாரம் உண்டு -நாச்சிமாரோடு ஸர்வதா சாத்ருஸ்யம் உண்டு –
பின்னை கொல் -இத்யாதிப்படியே ஆழ்வாருக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள பிரகார சம்பந்த ஐக்யத்தை
யதா தர்சனம் பண்ணினால் யாய்த்து -தேவு மற்று அறியேன் -என்று இருப்பது –

ஆக இப்படி ஆழ்வாருக்கும் ஈஸ்வரனுக்கு உள்ள சம்பந்தத்தை யதா தர்சனம் பண்ணி -தேவு மற்று அறியேன் -என்று
இருக்கும் அதிகாரிக்கும் எம்பெருமானது கிருபை பள்ள மடை யாவது –
ஆழ்வாரைப் பற்ற அவர் திருவடிகளைப் பின்பற்ற வேண்டுமே -மேவினேன் அவன் பொன்னடி – என்று
மதுரகவிகள் ஆழ்வாரை விட்டு எம்பெருமானாரை ஊன்றுகைக்கு அடி –
தத் தர்மி ஐக்யத்தாலே ஏக விஷயம் ஆகையாலும் -ப்ரயோஜன அம்சத்தில் நிற்க வேண்டுகையாலும் –
பாவின் இன்னிசை பாடித் திரிவேன்
கரிய கோலத் திரு உருக் காண்பன்
எண்டிசையும் அறிய இயம்புகேன் -என்று பாரித்த படியே
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரு அரங்கத்து அம்மானுக்கே காவல் செய்து –
ஆழ்வார் கிருபையையே ஸூ ப்ரஸித்தம் ஆக்குவதாக அவதரித்த படி இறே
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர் தாம் மன்ன வந்த ராமாநுசன் இறே

பகவத் கிருபையையும் ஆழ்வார் கிருபையையும் சீர் தூக்கிப் பார்த்தால் –
பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே–என்று ஆழ்வார் கிருபை விஞ்சின் இருக்குமா போலே –
ஆழ்வார் கிருபையையும் இவருடைய கிருபையையும் தனித்தனியே விகல்ப்பித்தால்
உன் அருள் அன்றி –புகல் ஓன்று இல்லை -என்னும்படியான கிருபா வைபவத்தாலும்-
சேதனருடைய துர்கதியைக் கண்டு -சர்வ அவஸ்தைகளிலும் கை விட மாட்டாதே -தம்மை அழிய மாறியும்
உபதேசித்து அருளும் வாமனன் சீலன் ராமாநுசன் உபய விபூதியும் இவர் இட்ட வழக்காக பெரிய பெருமாள்
ப்ரசாதித்து அருள உடையவர் என்று நிரூபகம் ஆகையாலும்
ஆழ்வார் திருவடிகளில் சம்பந்தம் உணர்ந்தவர்களுக்கு அல்லாரும்
எம்பெருமானாரே தங்களுக்குத் தஞ்சகமாக நினைத்து இருப்பார்கள் –

இது தான் ஈஸ்வர சம்பந்தம் போலே பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கை அன்றிக்கே
மோக்ஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –
ஆகை இறே -ஞானப்பிரானை அல்லால் இல்லை என்றும்
திருக்குருகூர் அதனை யுளம் கொள் ஞானத்து வைமின் -என்றும் தாமே அருளிச் செய்தது –
ஆச்சார்ய பதம் என்று ஓன்று உண்டு -அது உள்ளது எம்பெருமானாருக்கே –
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று ஆய்த்து வடுக நம்பி உபதேசித்து அருளுவது –
எம்பெருமானாருக்கே என்றது ஆழ்வார் திருவடிகளில் உள்ள ஐக்யத்தாலே –
அவர் தமக்கு அடி ஏது என்னில் கீழ்ச சொன்ன நாராயணத்வ பூர்த்தியாலே –
இவ்வாறு உள்ள சரம பர்வ நிஷ்டனுக்கு உபாயம் ஆச்சார்யர் பண்ணிய ப்ரபத்தியே யாகுமே –

இவனுக்குத் தனியே சரண வரணம் பண்ணத் தேவையில்லை -பண்ணினான் ஆகில் சம்பந்தம் குலையும் –
கரணம் தானே தனக்கு ரக்ஷண சிந்தை பண்ணாதே –
அநாதி காலம் ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆச்சார்ய அபிமானம் ஒழிய கதி இல்லையே –
ஸ்வ அபிமானமாவது -கரணவத் பரதந்த்ரனாய் -ஒருவன் அபிமானத்திலே அந்தர்பூதனாய் இருக்கக் கடவ இவன் –
தன்னை ப்ருதக் ஸ்திதி பண்ணி தனக்கு என்று ஒரு புருஷார்த்தம் உண்டாகவும் நினைத்து
தத் பிராப்தி யுபாயம் ஈஸ்வரனே என்று இருக்கை

ஆச்சார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை என்று இருக்கை யாவது –
தன் பேற்றுக்குத் தான் ஒரு பிரபத்தி பண்ணுகை அன்றிக்கே அவன் பண்ணின ப்ரபத்தியே
தனக்கு உபாயமாகக் கொண்டு தன்னை அவனுக்குக் கரணமாகவே அநு சந்திக்கை –

தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரே வெல்லும் மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம் –
நாத முனிம் விலோக ப்ரஸீதம் –

புருஷார்த்த நிர்த்தேசமாவது
ஆச்சார்ய முகோலாஸ ஹேதுவான கைங்கர்யமே புருஷார்த்தம்
திரி தந்தாகிலும்
ஆழ்வார் எம்பெருமானார் பாக்கள் உத்தாரகத்வ பிரதிபத்தி பண்ணி -இவ்வர்த்தம் உபதேசித்து அருளிய
ஆச்சார்யர் எம்பெருமானாருக்கே கரணவத் பரதந்த்ரர் ஆகையால் அந்த ஐக்யத்தாலும்
ஒரு காலத்துக்கு ஒரு சேதனன் முகேன நின்று சேதனனுக்கு அஞ்ஞாத ஞாபனம் பண்ணி அங்கீகரித்து அருளுவான் என்கிற உபதேசத்தாலும்
அவ்வோ வியக்தி விசேஷங்கள் தான் ஞான அனுஷ்டான பரி பூர்த்தியாலே இதர விஸஜாதீயமாகத் தோற்றுகையாளலும்
எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தத்தை யுணர்த்தின அளவிலே கேவல யுபகார பிரதிபத்தியே அன்றிக்கே
யுத்தாரகர் என்று அனுசந்திக்கக் குறையில்லை –

ப்ரபந்ந காயத்ரி ஜபித்து
திருவாய் மொழி வேதம் அத்யயனம் பண்ணி
உபதேச ரத்னமாலை ரஹஸ்யங்கள் அப்யஸிக்க வேணும் –

1-ஈஸ்வரன் அளவில் உத்தாரகத்வ பிரதிபத்தியும்
2-ஆச்சார்யர் அளவிலிலே உபகாரத்வ பிரதிபத்தியும்
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே உத்தேச்ய பிரதிபத்தியும்
4-உபாயத்து அளவிலே அத்யாவசிய பிரதிபத்தியும்
5-உபேயத்து அளவில் த்வரா பிரதிபத்தியும்
6-சரீர அளவிலே விரோதி பிரதிபத்தியும்
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவாகிற பிரதிபத்தியும்
8-சம்சாரிகள் அளவில் த்ருணவத் பிரதிபத்தியும்
9-ஐஸ்வர்யத்து அளவில் அக்னிவத் பிரதிபத்தியும்
10-விஷயாந்தரங்கள் பக்கல் இடி வத் பிரதிபத்தியும்
ஆக இப்பத்து பிரதிபத்தியும் இவ்வதிகாரிக்கு அவஸ்யம் ஞாதவ்யமாகக் கடவது –

1-ஈஸ்வரன் அளவில் உத்தாரகத்வ பிரதிபத்தி யாவது
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்
என்னுடைய வாழ் நாள்
ஆவியை அரங்க மாலை
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு -என்கை

2-ஆச்சார்யர் அளவிலிலே உபகாரத்வ பிரதிபத்தி யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
மருவித் தொழும்  மனமே தந்தாய்
தேவு மற்று அறியேன் -என்று இருக்கை

3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே உத்தேச்ய பிரதிபத்தி யாவது
சீதரனையே தொழுவார்
பயிலும் திரு உடையார்
எம் தொழு குலம் தாங்களே -என்று இருக்கை –

4-உபாயத்து அளவிலே அத்யாவசிய பிரதிபத்தி யாவது
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -இத்யாதிப்படியே இருக்கை –

5-உபேயத்து அளவில் த்வரா பிரதிபத்தி யாவது
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே
வானுலகம் தெளிந்தே என்று எய்வது
களிப்பும் கவர்வும் அற்று–அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –
ஒழி வில் காலம் எல்லாம் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கை –

6-சரீர அளவிலே விரோதி பிரதிபத்தி யாவது
பாம்போடு ஒரு கூறையில் பயின்றால் போல்
பொல்லா ஆக்கை
ஆக்கை விடும் பொழுது எண்ணே
மங்க ஒட்டு -என்று இருக்கை

7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவாகிற பிரதிபத்தி யாவது –
தாயே தந்தையே -இத்யாதி
கொண்ட பெண்டிர் இத்யாதி
என்று இவை பேணேன் என்று இருக்கை

8-சம்சாரிகள் அளவில் த்ருணவத் பிரதிபத்தி யாவது
மிண்டர் இவர் என்று இருக்கை

9-ஐஸ்வர்யத்து அளவில் அக்னிவத் பிரதிபத்தி யாவது
ஆண்டவரே மாண்டு ஒழிந்தார்
செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் -என்று இருக்கை –

10-விஷயாந்தரங்கள் பக்கல் இடி வத் பிரதிபத்தி யாவது புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
மென் முலையார் தடம் தோள் புணர் இன்பத்து வெள்ளத்து ஆழ்ந்தேன்
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
கூறை சோறு இவை தா வென்று குமைத்துப் போகார் -என்று இருக்கை –

1-ஈஸ்வரன் அளவில் உத்தாரகத்வ பிரதிபத்தியை – உயர்வற உயர் நலம் தொடக்கமான இவற்றாலும்
2-ஆச்சார்யர் அளவிலிலே உபகாரத்வ பிரதிபத்தியை தூது நாலிலும்
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே உத்தேச்ய பிரதிபத்தியை பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -யாலும்
4-உபாயத்து அளவிலே அத்யாவசிய பிரதிபத்தியை நோற்ற நாலிலும்
5-உபேயத்து அளவில் த்வரா பிரதிபத்தியை முடியானே -பா மறு மூ வுலகு மாயக்கூத்தன் தொடங்கி முனியே நான்முகன் முக்கண் அப்பா இவற்றாலும்
6-சரீர அளவிலே விரோதி பிரதிபத்தியை முந்நீர் ஞாலம் தொடக்கமான வற்றாலும்
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவாகிற பிரதிபத்தியை கொண்ட பெண்டிரிலே அபாந்தவாதிகளாகச் சுற்றிச் சாற்றி யதாலும்
8-சம்சாரிகள் அளவில் த்ருணவத் பிரதிபத்தியை நண்ணாதார் முறுவலிப்ப -இத்யாதியாலும்
9-ஐஸ்வர்யத்து அளவில் அக்னிவத் பிரதிபத்தியை ஒரு நாயகத்தாலும்
10-விஷயாந்தரங்கள் பக்கல் இடி வத் பிரதிபத்தியை உண்ணிலா விலும்
பிரதம ஆச்சார்யரான நம்மாழ்வார் அருளிச் செய்து அருளினார்
ஆக இப்பத்தும் ஓர் அதிகாரிக்கு அவசியம் ஞாதவ்யம் என்றதாயிற்று –

———–

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த ஆத்ம விவாஹம்

ஸ்ரீ யபதியாகிற காள மேகம்
க்ருபா ப்ரவாஹம் பொழிய
நிலத்திலே முளை போலே ஜீவாத்மா முளைத்து
ஆச்சார்யர் சங்கமம் கிட்டி
ஞானம் முளைத்துப் பெருகி
ருசி வளர்த்துக் கொண்டு போந்து
விவேகம் ஆகிற பக்குவம் பிறந்து
பரம சேஷிகள் ஆகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைச் சேர்த்து
எம்பெருமான் ஆகிற வரன் கையிலே
ஸ்வரூப ஞானம் என்னும் தாரை வார்த்துக் கொடுத்து

அவனும் சேஷத்வம் ஆகிற மந்த்ர வாஸஸ்ஸை யுடுத்தி
சேஷ விருத்தியாகிற மங்கள ஸூத்ரத்தையும் கட்டி
ரூப நாமங்கள் ஆகிற ஆபரணங்களையும் சூட்டி
கையைப் பிடித்துக் கொண்டு போந்து
அத்யவசாயம் என்கிற ஆஸனத்திலே இருத்தி
வியாபக ஞானம் என்கிற அக்னியை வளர்த்து
இதர உபாய தியாகம் என்கிற சமித்துக்களை இட்டு
ஸித்த உபாய ஸ்வீ காரம் என்கிற பிரதான ஆஹுதியைப் பண்ணி
ஸாஸ்த்ரங்கள் ஆகிற பொறியைச் சிதறி

சம்பந்த ஞானம் என்கிற பூர்ண ஆஹுதியாலே பிராப்தி பிரதிபந்தகங்களை நிவர்த்தமாக்கி
நிர்ப் பரத்வ அனுசந்தானம் பண்ணுகிற சதாச்சார்யர்கள் ஆகிற பந்துக்கள் முன் நிற்க
மாதா பிதாக்கள் இருவரும் சேர இருந்து
ஆழ்வார்கள் ஈரச் சொற்களால் வாத்சல்ய யுக்தனானவன் அணைத்துக் கொண்டு
ப்ரீதி வெள்ளம் ஆகிற படுக்கையில் கொண்டு போய்
விஷய வைலக்ஷண்யங்கள் ஆகிய போக போக்யங்களோடே சகல வித கைங்கர்யங்கள் ஆகிய அனுபவத்தில் மூட்டி
ஆனந்தம் ஆகிற பெருக்காற்றோடு ஆழங்கால் பட்டு

நம என்பது
போற்றி என்பது
ஜிதந்தே என்பது
பல்லாண்டு என்பது ஆகா நிற்கும் –
ஆத்ம விவாஹம் சம்பூர்ணம் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .