ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் –மூன்றாம் பாதம் – வியத் பாதம்-ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

அவிரோத அத்யாயம் -பர ப்ரஹ்மமே நிகில ஜகத் ஏக காரணம் -இந்தப் பொருளோடு எந்த முரண்பாடும் இல்லை என்றும் இதில் நிரூபணம் -எந்த விதத்தாலும் அசைக்க முடியாதது-ஸர்வ பிரகார துர் தர்ஷணம் –

2-3-1-வியத₃தி₄கரணம்-ப்ரஹ்மம் தவிர அனைத்தும் படைக்கப் படுவதே

பாதத்தின் ஸங்கதி
முதல் அத்யாயத்தில் “-அகில ஜகத் ஏக காரணம்-உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்கிற முடிவு எட்டப்பட்டது. இரண்டாவது அத்யாயத்தில் அந்த முடிவை எதிர்த்து எழக் கூடிய ஆஷேபங்களுக்கெல்லாம் வேத வ்யாசர் பதில் கூறுகிறார்.-உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்பதில் இரண்டு பகுதிகள் உள்ளன. “ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்பது ஒரு பகுதி, “உலகம் அனைத்துக்கும் காரணம்” என்பது இரண்டாவது பகுதி.-அதில் முதல் பகுதியைத் தாக்குவதற்காக ப்ரஹ்மம் காரணமாக இருக்க முடியாது என்று பலரும் செய்த ஆஷேபங்கள் அனைத்துக்கும் இரண்டாவது அத்யாயத்தின் முதல் பாதத்தில் வேத வியாசர் பதிலுரைத்தார். அதற்கு மேல் இரண்டாவது பாதத்தில் மற்ற மதங்களில் உலகத்துக்கு காரணமாக மற்ற பொருள்கள் சொல்லப் படுகின்றனவே , அவை எதுவும் ஜகத் காரணமாக இருக்க முடியாது. அந்த மதங்கள் அனைத்துமே தவறானவை என்பதை வேத வியாசர் நிரூபித்தார். ஆக இரண்டு பாதங்களால் “ப்ரஹ்மம் ஒரே காரணம்” என்பது நிலை நாட்டப்பட்டது.
இனி அடுத்த இரண்டு பாதங்களில் நாம் எடுத்த முடிவின் இரண்டாவது பகுதியான “உலக அனைத்துக்கும் காரணம்” என்கிற பகுதியைத் தாக்குவதற்காக பல விதமான ஆஷேபங்களை மற்றவர்கள் எழுப்புகிறார்கள். ப்ரஹ்மம் ஒரு சில பொருட்களுக்குக் காரணமாக இருக்கட்டும், உலகில் அனைத்தும் ப்ரஹ்மத்தால் படைக்கப்பட்டதல்ல, என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். அதற்கு பதில் சொல்லி “உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்கிற முடிவை மறுபடியும் நிலை நாட்டுகிறார் வேத வியாசர் அடுத்த இரண்டு பாதங்களால்.

இந்த அத்யாயத்தின் முதல் பாதத்துக்கு ஸ்ம்ருதி பாதம் என்று பெயர்,ஸ்ம்ருதிகளைக் கொண்டு பூர்வ பக்ஷிகள் ஆஷேபங்களை எழுப்பிய படியால். இரண்டாவது பதத்துக்கு தர்க்க பாதம் என்று பேயர், தர்க்கத்தின் அடிப்படையில், அதாவது யுக்திகளைக் கொண்டு மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை என்று வியாசர் நிரூபித்த படியால். இந்த மூன்றாவது பதத்துக்கு வியத் பாதம் என்று பெயர். வியத் என்றால் ஆகாசம். ஆகாசம் முதலான பொருள்களும் கூட ப்ரஹ்மத்தால் தான் படைக்கப் படுகின்றன என்று இதில் நிரூபிக்கிற படியால். அடுத்தது நான்காவது பதத்துக்கு ப்ராண பாதம் என்று பெயர், ப்ராணன், இந்திரியங்கள் முதலானவையும் பகவானால் தான் படைக்கப் படுகின்றன என்று அந்த பாதத்தில் நிரூபிக்கப் போகிறார். இது தான் இந்த பாதத்திற்கும் முன் பின் பாதங்களுடன் இருக்கும் ஸங்கதியாகும்.

ஆகாசம் உண்டாக முடியுமா?
2-3-1-வியத₃தி₄கரணம் – பூர்வ பக்ஷம் – ஆகாசம் உண்டாக்கப் படுவதில்லை , அது நித்யமானது என்கிறார் பூர்வ பக்ஷீ
1-ந வியத் அஸ்ருதத:
– “ஆகாசம் உண்டாவதில்லை , அப்படிச் சொல்லும் ஸ்ருதி இல்லாதபடியால்”
பூர்வ பக்ஷி சொல்வது – உலகத்தில் நாம் புலன்களால் அறிந்ததோடு முரண்பட்ட ஒரு விஷயத்தை வேதமாகவே இருந்தாலும் போதிக்க முடியாது. வேதமே கூட “நெருப்பு குளிர்ந்தது” என்று சொன்னால், அதை அப்படியே ஏற்க முடியாது, புலன்களால் ’நெருப்பு சூடானது’ என்று நாம் அறிந்திருக்கிற படியால். எனவே , அச் சொல் தொடருக்கு வேறு மாதிரி தான் பொருள் கொள்ள வேண்டும்.
அதே போல், ஆகாசம் உண்டாவது என்பது நடக்க முடியாத ஒன்று. எனவே , வேதத்தால் கூட “ஆகாசம் உண்டாக்கப் படுகிறது” என்று போதிக்க முடியாது.

ஆகாசம் உண்டாக்கப் படமுடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள்
(1) உலகில் உண்டாக்கப்படும் பொருள்கள் அனைத்துமே பகுதிகளோடு கூடியவை தான். ஆனால் ஆகாசத்துக்குப் பகுதிகள் இல்லை . எனவே ஆகாசம் உண்டாக்கப் படமுடியாதது
(2) உலகில் உண்டாக்கப்படும் பொருள்கள் அனைத்துமே நடுத்தர அளவோடு (பரிமாணத்தோடு) தான் இருக்கும்.-ஆனால் ஆகாசமோ எல்லா இடத்திலும் பரந்துள்ளது. எனவே ஆகாசம் உண்டாக்கப் படமுடியாது.

மேலும், சாந்தோக்ய உபநிஷத்தில் ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கும் முறையை வருணிக்கும் போது “(ததை ₃ஷத ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி, தத்வதஜ: அஸ்ருஜத) அதாவது ’அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பம் செய்தது – “நான் பலவாக ஆகக் கடவேன், அதற்காக ஸ்ருஷ்டிக்கக் கடவேன்” என்று. (ஈஷத் அதிகரணம் -1-1-5 முன்பே பார்த்துள்ளோம்-நெருப்பு ஜலம் பிருத்வி மூன்றும் இங்கு சொல்லப்பட்டுள்ளது -ஆகாசம் வாயு இவை பற்றி சொல்லப் பட வில்லை இங்கு -)அந்த ப்ரஹ்மம் தேஜஸ் என்ற நெருப்பைப் படைத்தது’ எனப்படுகிறது. எனவே , ஸ்ருஷ்டியைச் சொல்லும் போது முதன் முதலில் ஐம்பூதங்களுக்குள் தேஜஸ் தான் உண்டாக்கப் படுகிறது என்று கூறி, அதற்குப் பிறகும் ஜலம் பூமி ஆகியவற்றின் ஸ்ருஷ்டி மட்டும் தான் சொல்லப்படுகிற படியால் ஆகாசம் உண்டாக்கப் படுவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆக இவ்வாறு ஆகாசம் ப்ரஹ்மத்தால் படைக்கப் படாதபடியால் “உலகமனைத்தும் ப்ரஹ்மம் காரணம்” என்று நீங்கள் சொல்வது தவறானது என்று வாதிடுகிறார் பூர்வ பஷி

ஆகாசமும் உண்டாக்கப்படுவதே
ஸித்தாந்தம் – 2-அஸ்தி து
– “ (ஆகாசம் உண்டாவதைச் சொல்லும் வேத வாக்யம்) இருக்கிறது அ்ன்றோ ”
தைத்திரீய உபநிஷத்தில் (ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த: ) அதாவது “பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டானது” என்று ஸ்பஷ்டமாக ஆகாசத்தின் ஸ்ருஷ்டி சொல்லப்படுவதால் ஆகாசமும் படைக்கப்படுவதே .(ஆனந்தாதி அதிகரணம் -முன்பே இது பற்றி பார்த்துள்ளோம்)
புலன்களால் அறியப்பட்ட விஷயங்களோடு முரண்பட்ட ஒரு விஷயத்தை வேதமாகவே இருந்தாலும் போதிக்க முடியாது என்று நீங்கள் சொன்னதை ஏற்கிறோம். ஆனால் வேதத்துக்கு ஒரு சிறப்பு உள்ளது, புலன்களோடு முரண் படாமல் ஆனால் புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை வேதத்தால் போதிக்க முடியும். இவ் விடத்திலும் ஆகாசத்தின் உத்பத்தி என்பது நம்முடைய புலன்களுக்கு அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட ஸ்ருஷ்டி உண்டு என்று வேதம் சொல்லும் போது அது புலன்களுக்கு முரண் பட்டதே அல்ல. “ஆகாசம் உண்டாவதில்லை ” என்று நாம் புலன்களால் அறிந்தது கிடையாது. “ஆகாசம் உண்டாகிறது” என்று தெரிந்து கொண்டதில்லை , அவ்வளவே . ஆகையால் புலன்களுக்கு முரண் படாமல், ஆனால் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆகாசத்தின் உத்பத்தியை வேதம் சொல்வதில் எந்த முரண்பாடும் இல்லை

மேலும் பகுதிகள் இல்லாத்படியால் ஆகாசம் உண்டாக்கப் படவே முடியாது என்று சொல்லியிருந்தீர்கள். அதுவும் தவறானது. ஏன் என்றால் ஆகாசத்துக்கு பகுதிகள் கண்டிப்பாக உள்ளன. வேதத்திலும் புராணங்களிலும் த்ரிவித் கரணம் என்றும்
பஞ்சீகரணம் எ
ன்ற ஒரு செயல் சொல்லப்படுகிறது. ஐம் பூதங்களையும் படைத்த பிறகு பரமாத்மா இந்த ஐந்து பூதங்களையும் ஒன்றோடு ஒன்று கலக்கிறாராம். கலந்த பிறகு பார்த்தோ மென்றால் ஆகாசம் என்பதில் 50% ஆகாசமும் தலா 12.5% நிலம், நீர், தீ, காற்று ஆகிய மற்ற நான்கு பூதங்களும் உள்ளன என்று சாஸ்த்ரம் கூறுகிறது. ஆகாசத்திற்கு பகுதிகளே இல்லை என்றால் எப்படி இப்படி பிரித்து கலக்க முடியும்? அதனால் பகுதிகளில்லை என்று நீங்கள் சொல்வதும் தவறானது.
ஆகவே , இந்த வேத வாக்கியம் ஆகாசத்தின் உண்டாக்கத்தைச் சொல்லுகிறபடியால் ஆகாசமும் உண்டாக்கப் படுவது தான் என்பது வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்.

பூர்வ பக்ஷியின் கேள்வி
3-கௌ₃ணீ அஸம்ப₄வாத் சப்₃தா₃த் ச –
“இரண்டாம் பக்ஷம், முடியாத படியாலும் சொல்லாலும்”
இங்கு பூர்வபக்ஷீ ஆஷேபம் செய்கிறார் –கௌ₃ணீ- “ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த:” என்ற வாக்கியத்தில் உள்ள ’ஸம்பூ₄த:’(உண்டானது) என்ற சொல்லுக்கு நேரடியாக உண்டாக்கம் என்ற பொருள் கொள்ள முடியாது. இரண்டாம் பஷமாக-கௌணமாக) தோற்றம் -வெளிப்பாடு என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு வீரனை ’இவன் சிங்கம்’ என்று சொல்வது எப்படி Figurative (உருவகம்) என்று சொல்லப்படுகிறதோ அது போல் இங்கும் முதன்மையான பொருளல்ல.
அஸம்ப₄வாத் – முடியாத படியால் – தேஜஸ்ஸே முதலில் தோன்றுகிறது என்று வேதம் சொல்வதால் ஆகாசம் உண்டாக்கப்பட முடியாதபடியால்
சப்₃தா₃த் ச – சொல்லாலும் – வேதத்திலேயே (्வாயு: ச அந்தரிஷம் ச ஏதத் அம்ருதம்) அதாவது
’வாயுவும் ஆகாசமும் நித்யமானவை ’ என்று சொல்கிற படியாலும் ஆகாசத்துக்கு உண்டாக்கம் கிடையாது.

4-ஸ்யாத் ् ச ஏகஸ்ய ப்₃ரஹ்ம சப்₃த₃வத் – “ஒ்ன்றுக்கு இருக்கலாம், ப்ரஹ்மம் என்ற சொல் போல்”
இங்கு ஒரு கேள்வி எழுகிறது. அதற்கான விடையை இந்த ஸூத்ரத்தில் பூர்வ பஷி கூறுகிறார்.
கேள்வி – “பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டானது” என்று சொன்ன பிறகு “வாயுவிலிருந்து நெருப்பு”,“நெருப்பிலிருந்து ஜலம்” முதலான வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்யத்தில் இருக்கும் ’உண்டானது’ (ஸம்பூ₄த: ) என்ற சொல்லை பின் வாக்கியங்களிலும் சேர்க்க வேண்டும்.இதை அனு க்ஷங்கம் என்பர் – அப்போது, முதல் வாக்கியத்தில் ஆகாசம் உண்டாக முடியாததால் ’உண்டாகிறது’ என்ற சொல்லுக்கு ’வெளிப்படுகிறது’ என்று பொருள் கொண்டு விட்டு, பின்னால் உள்ள வாக்கியங்களில் தேஜஸ் முதலானவை உண்மை யாகவே உண்டாகிற படியால் ’உண்டாகிறது’ என்ற சொல்லுக்கு ’உண்டாக்கம்’ என்ற பொருளை எப்படிக் கொள்ள முடியும்?-பதில் – ஒரே சொல்லுக்கு வேறு இடங்களில் வேறு பொருள்கள் இருக்கலாம். உபநிஷத்தில் ஒரே இடத்தில் ஒரு முறை ப்ரஹ்மம் என்ற சொல்லுக்கு மூல ப்ரக்ருதி என்றும் இரண்டாம் முறை பரமாத்மா என்று பொருள் கொள்வது போல்.

வ்யாஸரின் பதில்
5-ப்ரதிஜ்ஞ அஹாநி அவ்யதிரேகாத் –
“ப்ரதிஜ்ஜைக்கு பாதிப்பில்லாமை வேறல்லாத படியால்”
பூர்வ பக்ஷியின் வாதத்துக்கு இந்த ஸூத்ரத்தில் வேத வ்யாஸர் பதில் அளிக்கிறார்.
சாந்தோக்ய உபநிஷத்தில் முதலில் தேஜஸ்ஸின் உண்டாக்கம் சொல்லப்படுவதைக் கொண்டு ’ஸம்பூ₄த:’ என்ற சொல்லுக்கு இரண்டாம் பஷமாகப் பொருள் கொள்ள இயலாது-சாந்தோக்யத்திலேயே ஆகாசத்தின் உத்பத்தி சொல்லப் பட்டுள்ள படியால் என்கிறார் வேத வ்யாஸர்.

சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாம் ப்ரபாடகத்தில் உள்ள ஸத்₃வித்யையில் தான் தேஜஸ்ஸின் உண்டாக்கம் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அந்த ப்ரகரணத்தின் தோடக்கத்திலேயே உத்தாலகர் என்ற தந்தை ஸ்வேத கேது என்ற மகனைப் பார்த்து “எந்த ஒன்றை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை உன் ஆசார்யர்களிடம் கேட்டாயா?” என்று வினவுகிறார். இதில் ஒரு ப்ரதிஜ்ஜை (அறிவிப்பு) உள்ளது – “ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று. அந்த ப்ரதிஜ்ஜை உண்மையாக இருக்க வேண்டும், அதற்கு அஹாநி(பாதிப்பில்லாமை ) இருக்க வேண்டும் என்றால், ஆகாசமும் உண்டாக்கப் படுவது தான் என்று ஏற்கத் தான் வேண்டும்.

இவ் விடத்தில் உத்தாலகர் சொல்வது – ’உலகத்தில் ஒரு காரணப் பொருளை அறிந்தால் அதன் கார்யங்கள் அனைத்தையும் அறிந்ததாகும். எடுத்துக் காட்டுக்கு, ஒரு மண் கட்டியை அறிந்தால், அதிலிருந்து உண்டாகும் குடம், தட்டு, சுவர் முதலான அனைத்தையுமே நாம் ஒரு விதத்தில் ’மண்’ என்ற அளவிற்கு அறிந்ததாகத் தான் ஆகும். ஏனெனில் குடம் என்பது மண்ணைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல. அது போல் தான் இங்கும் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகனைத்தையும் அறிந்ததாகும் என்கிறார். அதாவது, உலகில் அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாவதால், ப்ரஹ்மத்தைக் காட்டிலும்
வேறு பொருளல்ல. ஆகையால் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்கிறார். இது உண்மையாக இருக்க வேண்டுமென்றால் ஆகாசமும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி யிருக்கத் தான் வேண்டும். இல்லா விட்டால், ப்ரஹ்மத்தை அறிந்தாலும் ஆகாசத்தை அறிந்ததாக ஆகாதபடியால் உத்தாலகர் ’அனைத்தையும் அறிந்ததாகும்’ என்று சொன்னது பொய்யாகி விடும். எனவே சாந்தோக்யமே ஆகாசத்தின் உத்பத்தியைக் கூறுகிறது.

மேலும் சில யுக்திகள்
6–சப்₃தே₃ப்₄ய: –
“(ஆகாசம் உண்டாவதை மற்ற சில வாக்கியங்களிலிருந்து அறியலாம்”
ஸதே₃வ ஸோம்ய இத₃ம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்” –-ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகனைத்தும் ஸத் என்ற ஒரே பொருளாக இருந்தது, வேறு எதுவுமில்லை –இவ்வாறு வேதம் சொல்வதால், ப்ரளயத்தின் போது ஸத் என்ற பரமாத்மா மட்டுமே இருந்தார் என்று தெரிகிற படியால், அப்போது ஆகாசமும் இல்லை , பிற்பாடு தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாயிற்று என்று தெரிகிறது.

(ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!
–4-10-1-)

“ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்” – இது அனைத்தும் ப்ரஹ்மமே -குடம் தட்டு சுவர் முதலான பொருள்கள் எல்லாம் மண்ணிலிருந்து உண்டான படியால் ’இவை அனைத்தும் மண் தான்’ என்று சொல்வது போல் இங்கு வேதம் ’இவ் வுலகில் அனைத்துமே ப்ரஹ்மம் தான்’ என்று கூறுவதால், உலகில் ஒரு பகுதியான ஆகாசமும் ப்ரஹ்மத்திட மிருந்து தோன்றியது தான் என்று தெளிவாகிறது.

7– யாவத் ₃விகாரம் து விபா₄க₃: ஸ்யாத் லோகவத்
விகாரம்
என்றால் காரியப் பொருள். விபா₄க₃ம் என்றால் உண்டாக்கம். ஆகாசம் முதலானவை காரியப் பொருள்கள் தான் என்று சொல்வதாலேயே அவை ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றன என்பது சொன்னதாகிறது
லோகவத் – உலகத்தில் போல் – உலகத்தில் ’இவர்கள் அனைவரும் தேவ தத்தனின் புதல்வர்கள்’ என்று சொல்லி விட்டு, ஒரு சிலர் அவனிடமிருந்து பிறந்தது விளக்கப் பட்டால், அனைவரும் அவனிடமிருந்து பிறந்தது சொல்லப்பட்டதாகும். -அது போல், ’உலகில் அனைத்தும் ப்ரஹ்மத்தின் காரியங்கள்’ என்று சொல்லி விட்டு, தேஜஸ் ஜலம் பூமி என்பவை உண்டாகும் முறையை வேதம் காட்டினால், அது மற்றவை உண்டாக வில்லை என்ற பொருளைத் தராது, அவை அனைத்தும் அதே போல் தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி யுள்ளன என்பதையே குறிக்கும்-’வாயுவும் ஆகாசமும் நித்யமானவை ’ என்று வேதம் சொல்வது, முற்றிலுமாக உண்டாக்கமும் அழிவும் இல்லாததால் அல்ல, மற்ற பொருள்களை விட நீண்ட காலத்துக்கு இவை இரண்டும் அழியாமல் இருப்பதால் மட்டுமே –

அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது
8–ஏதேந மாதரிச்வா வ்யாக்₂யத:
– “இத்தால் வாயு (உண்டாகக் கூடியதாக) விளக்கப் பட்டது”
இப்படி ஆகாசம் உண்டாகக் கூடியது தான் என்பதற்குச் சொன்ன யுக்திகளாலேயே வாயுவும் உண்டாகக் கூடியது தான் என்பது நிரூபமாகிறது.-இதை முன் ஸூத்ரத்திலேயே சேர்க்காமல், தனி ஸூத்ரமாக வ்யாஸர் வைத்தது, அடுத்த அதிகரணத்தில் வாயுவை மட்டும் நினைவு கூறுவதற்காக. இது அடுத்த அதிகரணத்தில் தெளிவாகும்

9-அஸம்ப₄வஸ்து ஸத: அநுபபத்தே :
(உண்டாக) முடியாமை ஸத் என்கிற பரமாத்மாவுக்கே , (மற்ற பொருள்களுக்கு உண்டாகாமை ) பொருந்தாத படியால்-இவ் வதிகரணத்தில் ஆகாசமும் வாயுவும் உண்டாகக் கூடியவை என்று சொன்னதோடு நிற்காமல், உலகில் அனைத்துமே உண்டாகக் கூடியது தான் என்று நிரூபிக்கிறார் இந்த ஸூத்ரத்தால். உலகில் உண்டாகாமை என்ற பண்பு பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும், மற்றப் பொருள்களுக்குப் பொருந்தாது. ஏன் என்றால், முன்னமே சொன்னபடி, சா₂ந்தோக்₃ய உபநிஷத்தின் 6ஆம் ப்ரபாடகத்தில் உள்ள ஸத் வித்யை என்ற பகுதியில் உத்தாலகர் என்ற தகப்பனார் ஸ்வேதகேது என்ற மகனிடம் ’ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்’ என்கிறார். இது உண்மையாக வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி தான் உள்ளது –உலகப் பொருள்களும் ப்ரஹ்மமும் ஒரே போருளாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி தான் உள்ளது – உலகப் பொருள்கள் அனைத்தும் ப்ரஹ்டமிருந்து உண்டாகி யிருக்க வேண்டும். ஆகையால், எந்தப் பொருளுமே உண்டாகாததாக
இருக்கவே முடியாது.

ஆக, இவ்வதிகரணத்தால், தன்னைத் தவிர்ந்த அனைத்துப் பொருள்களுக்கும் பரமாத்மாவான ப்ரஹ்மம் காரணமாக உள்ளது என்று நிரூபிக்கப் பட்டது. எனவே , முதல் அத்யாயத்தில் நாம் எட்டிய முடிவு சரியானதே என்று நிலை நாட்டப்படுகிறது.


2-3-2-தேஜோதி₄கரணம்-அனைத்தும் ப்ரஹ்மத்திடமிருந்தே உண்டாகிறதுபூர்வ பக்ஷியின் வாதம்-ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஆகாசமும் வாயுவும் உண்டாக்கப் படுகின்றன எனப்பட்டது.-அதற்கடுத்து உண்டாகக் கூடிய தேஜஸ், ஜலம், ப்ருதிவீ ஆகியவற்றைப் பற்றின ஆராய்ச்சி இங்கு செய்யப்படுகிறது
முன் அதிகரணத்தில் உலகப் பொருள்கள் அனைத்துமே உண்டாக்கப் படுகின்றன என்று சொல்லப் பட்டது. மூல ப்ரக்ருதியிலிருந்து அவ்யக்தம், மஹான், அஹங்காரம், புலன்கள், தன்மாத்ரங்கள், ஐம் பூதங்கள் என்பவை அனைத்தும் உண்டாகின்றன என்று வேதம் கூறுகிறது. அதில் ஒரு கேள்வி எழுகிறது – இவை ஒவ்வொன்றுமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றனவா? அல்லது ப்ரஹ்மம் மூல ப்ரக்ருதியிலிருந்து அவ்யக்தம் என்பதை மட்டும் உண்டாக்கும், அதற்குப் பின் அந்தந்த அசேதனப் பொருள்களே அடுத்தடுத்த அசேதனப் பொருள்களை உண்டாக்குகின்றனவா? என்று.

பூர்வ பக்ஷம் – அந்தந்த அசேதனப் பொருள்களே அடுத்தடுத்த பொருள்களை உண்டாக்குகின்றன
1-தேஜ : அத: ததா ₂ஹிஆஹ
அத:
– அதிலிருந்து -முன் அதிகரணத்தின் 8ஆம் ஸூத்ரத்தில் சொல்லப்பட்ட மாதரிச்வா எனும் வாயுவிடமிருந்து
தேஜ : – தேஜஸ் என்ற நெருப்பு உண்டாகிறது
ததா₂ஹிஆஹ– அவ்வாறு அன்றோ (வேதம்) சொல்கிறது
தைத்திரீய உபநிஷத்தில் ஆத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டாயிற்று, ஆகாசத்திலிருந்து வாயு உண்டாயிற்று என்று சொன்ன பிறகு, (வாயோர் : அக்₃நி: ) அதாவது வாயுவிலிருந்து நெருப்பு உண்டாகிறது என்று தான் கூறப்பட்டுள்ளது. எனவே அசேதனப் பொருளே அடுத்த அசேதனப் பொருளை உண்டாக்குகிறது, ப்ரஹ்மம் அல்ல.

2-ஆப: – “(அதிலிருந்து அதாவது தேஜஸ்ஸிலிருந்து) ஜலம் (உண்டாகிறது, அவ்வாறு அன்றோ சொல்கிறது)”
தைத்திரீயத்தில் (அக்₃நே : ஆப: ) அதாவது “அக்₃நியிலிருந்து ஜலம் உண்டானது” என்றும், சாந்தோக்யத்தில்(தத் அப: அஸ்ருஜத) அதாவது “அந்த தேஜஸ் ஜலத்தைப் படைத்தது” என்றும் தான் சொல்லப்படுகிறது.

பூர்வபக்ஷியின் வாதம் தொடர்கிறது
3-ப்ருதி₂வீ –
(அதிலிருந்து அதாவது ஜலத்திலிருந்து) ப்ருதி₂வீ (உண்டாகிறது, அவ்வாறு அன்றோ சொல்கிறது)”
தைத்திரீயத்தில் (அத்₃ப்₄ய: ப்ருதி₂வீ ) அதாவது “ ஜலத்திலிருந்து ப்ருதிவீ உண்டானது” என்றும்,
சாந்தோக்யத்தில் (தா: அந்நம் அஸ்ருஜந்த) அதாவது “அந்த ஜலம் அந்நத்தைப் படைத்தது” என்று தான் சொல்லப்படுகிறது. எனவே அந்தந்த அசேதனப் பொருளே அடுத்த காரியத்தை உண்டாக்கி விடுகிறது.

4–அதி₄கார-ரூப- சப்₃தா₃ந்தரேப்₄ய: – அந்நம் எனப்படுவது ப்ருதி₂வீ தான் என்று நிரூபிக்கிறார்
அதி₄காரம் – இந்த ப்ரகரணத்தில் (வேதப் பகுதியில்) ஆகாசம் வாயு முதலான பூதங்களின் உண்டாக்கமே பேசப்படுகிற படியால் இங்கும் அந்நம் என்பது உணவல்ல, உணவுக்கெல்லாம் காரணமாக இருக்கும் ப்ருதிவீ தான்
ரூபம் – இதே வேதப் பகுதியில் “நெருப்பில் இருக்கும் சிவப்பு, வெண்மை மற்றும் கருமை ஆகிய வண்ணங்கள் தேஜஸ், ஜலம் மற்றும் அந்நத்திலிருந்து வந்தவை ” என்று கூறப் படுகிறது. இப்படி தேஜஸ்ஸுக்கும் ஜலத்துக்கும் ஸமமாகச் சொல்லப்படுவதால், அந்நம் என்பதும் ஐம் பூதங்களில் ஒன்றான ப்ருதிவியாகத் தான் இருக்க வேண்டும்.
சப்₃தா₃ந்தரம் – சாந்தோக்ய உபநிஷத்தில் அந்நம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டாலும் இதே போன்ற இடத்தில் தைத்திரீயத்தில் ப்ருதிவீ என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்நம் என்பது ப்ருதிவீ தான்.எனவே அந்நம் என்பது ப்ருதி₂வியே . ஆக, தேஜஸ் முதலான அசேதனங்களே அடுத்த பொருள்களை உண்டாக்குகின்றன

கேள்வி – வேதத்தில் ஓரிடத்தில் எல்லாப் பொருள்களும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாவதாகச் சொல்லப்படுகிறதே ?-ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண: மந: ஸர்வேந்த்₃ரியாணி | க₂ம் வாயு: ஜ்யோதி: ஆப: ப்ருதி₂வீ விச்வவஸ்ய தா₄ரிணீ || ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராணன், மனது, புலன்கள், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதி₂வீ ஆகியவை உண்டாகின்றன –

பதில் – இவை யெல்லாம் நேரடியாக ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றன என்று வேதம் சொல்லவில்லை , அடுத் தடுத்து வரிசையாக இவை உண்டாகிற படியால், பரம்பரையாக எல்லாம் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டானது என்றே சொல்கிறது

ஸித்தாந்தியின் பதில்-ஸித்தாந்தம் –5–த₃பி₄த்₄யாநாத் ஏவ து தல்லிங்காத் ஸ:
ஸ: து
– (மஹான் முதலானவைக்கு காரணம்) அவரே = அவ்யக்தம் முதலானவற்றை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவே –
த₃பி₄த்₄யாநாத் ஏவ தல் லிங்காத் – அபி₄த்₄யாநம் (ஸங்கல்பம்) என்கிற தனிப்பட்ட லிங்கத்தால் (அடையாளத்தால்) தேஜஸ், ஜலம் முதலானவை அடுத்தடுத்த பொருளைப் படைப்பதற்கு முன் ஸங்கல்பம் (எண்ணம்) செய்கின்றன என்று வேதம் சொல்கிறது – தத் தேஜ ஐக்ஷத” தா ஆப ஐக்ஷந்த” என்று. அசேதனப் பொருள்களுக்கு இது பொருந்தாது, எனவே அந்தந்த அசேதநப் பொருளே சரீரமாகக் கொண்ட பரமாத்மா தான் அடுத்தடுத்த பொருளை உண்டாக்குகிறார் என்பதே பொருத்தமானது. பரமாத்மா அனைத்துக்கும் அந்தர்யாமியே –

(ஏ தஸ்மாத் ஜாயதே பிராணன் மனஸ் ஸர்வேந்த்ரியாணி கம் வாயு ஜ்யோதி ஆபோ பிருத்வீ -அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது -என்றும் வேத வாக்கியம் உள்ளது)

6–விபர்யயேண து க்ரம: அத: உபபத்₃யதே ச –”மாறுபட்ட வரிசை இத்தால் பொருந்துகிறது”
விபர்யயேண து – (அவ்யக்தம் மஹான் அஹங்காரம் என்கிற ஸ்ருஷ்டி வரிசையிலிருந்து) மாறுபட்ட
க்ரம: – (எல்லாமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது என்று சொல்லப்பட்ட) க்ரமம் அதாவது வரிசை
அத: – இதனால் (அதாவது அனைத்துமே பரமாத்மா விடமிருந்தே உண்டாகிற படியால்)
உபபத்₃யதே ச – பொருந்துகிறது-

“ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :” என்ற வேத வாக்கியத்தில் பரமாத் மாவிடமிருந்து அவ்யக்தம், அதிலிருந்து மஹான்,-அதிலிருந்து அஹங்காரம், அதிலிருந்து ஐம் பூதங்கள் உண்டாகின்றன என்கிற வரிசையைச் சொல்லாமல் “எல்லாமே பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது” என்று சொல்லப்படுகிறது.
அதற்கு பூர்வ பஷி – எல்லாமே நேரடியாக பரமாத்மாவிமிருந்து உண்டாகா விட்டாலும், பரம்பரையாக உண்டாவதை இந்த வாக்கியம் சொல்கிறது என்றார்.
இப்போது ஸித்தாந்தத்தில் அந்தந்த அசேதனப் பொருள்களை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவிடமிருந்தே அனைத்தும் உண்டாகிற படியால், அனைத்துமே நேரடியாக பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று சொல்வது கூடப் பொருத்தமானதே – அதனால் “ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :” என்ற வாக்கியம் எங்கள் பக்ஷத்துக்கு ஸாதகமானது-

7-அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரமேண தல் லிங்காத் இதி சேத் ந அவிசேஷாத்
பூர்வ பஷி கேள்வி கேட்கிறார்
– இந்த வேத வாக்கியம் அனைத்தும் நேரடியாக பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று சொல்லவில்லை , ஒரு வரிசையில் தான் அடுத்தடுத்த பொருள்கள் உண்டாவதைச் சொல்கிறது என்று.
தல் லிங்காத் – (’ஆகாசம் வாயு தேஜஸ்’ என்ற வரிசையோடு சேர்த்துப் படிக்கப் படுதல் என்ற) அடையாளத்தால்
அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரமேண – ப்ராணனுக்கும் பூதங்களுக்கும் நடுவில் புலன்களும் மனதும் உண்டாகின்றன
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
அவிசேஷாத் – வேறுபாடில்லாத படியால்

’ஏதஸ்மாத் ஜாயதே ’ அதாவது ’பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறாது’ என்ற சொற்றொடர் ப்ராணனோடு மற்றும் சேரவில்லை , இங்கு சொல்லப்பட்ட அனைத்துப் பொருள்களோடும் சேர்கிறது. எனவே எல்லாமே பரமாத்மாவிடமிருந்து நேரடியாக உண்டகிறது என்று தான் கொள்ள வேண்டும்.
மேலும், இங்கு ஒரு குறிப்பிட்ட வரிசை சொல்லபடுகிறது என்று கூறுவது உங்கள் வேதத்திலும் பொருந்தாது. ஏனென்றால் இந்த வாக்கியத்தில் முதலில் ப்ராணன் உண்டாகிறது என்று கூறி, அதற்குப் பிறகு தான் ஆகாசத்திலிருந்து வாயு உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. இது பொருந்தாது. ப்ராணன் (மூச்சுக் காற்று) என்பது வாயுவின் குறிப்பிட்ட வகையானபடியால் அது வாயுவுக்கு முன் உண்டாக முடியாது. எனவே இங்கு க்ரமம் (வரிசை ) சொல்லப்படவில்லை , எல்லாமே பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று தான் சொல்லப் படுகிறது.

ஆக இந்த அதிகரணத்தில் ’தேஜஸ்’’ஜலம்’ முதலான சொற்கெல்லாம் அந்தந்த அசேதனப் பொருளை மட்டும் குறிப்பிடவில்லை , அந்தந்த அசேதனப் பொருளை சரீரமாகக் கொண்ட பரமாமைவையே குறிக்கின்றன என்று கூறப்பட்டது. இதில் ஓர் ஆஷேபத்தை பூர்வபஷி எழுப்புகிறார் – எல்லாச் சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன என்றால், உலகில் அனைவரும் தினமும் குடம் துணி மேஜை ஆடு மாடு முதலான பொருள்களைக் குறிக்க அந்தந்த சொற்களைப் பயன்படுத்துவது தவறாகி விடுமே ? பிறகு உலகப் பேச்சு வழக்கு என்பதே நின்று போய் விடுமே? என்று.-இதற்கு வேத வ்யாஸர் அடுத்த ஸூத்ரத்தில் விடை அளிக்கிறார்.

8-சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேசோ பாக்த தத் பாவ பாவாத்
சராசர வ்யபாஸ்ர யஸ்து-
-அசையும் மற்றும் அசையாத உலகப் பொருள்களைப் பற்றி
தத்₃வ்யபதே₃ ச : – அந்தந்த சொற்களின் ப்ரயோகமானது (பயன்பாடானது)
பா₄க்த: ஸ்யாத் – உடைக்கப்பட்டதாக – இரண்டாம் பக்ஷமாக இருக்கும்
தத்₃பா₄வ பா₄வித்வாத் – அனைத்துச் சொற்களும் பரமாத்வையே சொல்கின்றன என்று தெரிந்து கொண்ட பிறகு மட்டுமே எல்லாச் சொற்களும் பரமாத்வையே போதிக்கிறபடியால்.

அதாவது, உலகத்தில் பொதுவாகக் காணப்படும் சொற்களின் பயன்பாடு தவறானது அல்ல, ஆனால் முழுமையானதும் அல்ல. ஒவ்வொரு சொல்லுக்கும் பரமாத்மா வரை போதிக்கும் சக்தி இருந்தாலும், அது தெரியாமல் மக்கள் அந்தந்தச் சொற்களைப் பயன்படுத்துவதால், அக் காலத்தில் குடம் துணி முதலான பொருள்களை மட்டும் அந்தந்தச் சொற்கள் குறிக்கின்றன. எப்போது வேதாந்தம் கற்று, ’எல்லாச் சொற்களும் பரமாத்வையே கூறுகின்றன’ என்று உணர்கிறார்களோ அப்போது அந்தந்தச் சொற்களின் முழுமையான சக்தியை உணர்ந்த படியால் அதற்குப் பின் அவர்களுக்கு அந்தந்தச் சொற்கள் பரமாத்மா வரை போதிக்கின்றன.

(அனைத்து சொற்களும் அவனைக் குறிக்கும் என்றும் அறிந்த பின்பு –புகழும் நல் ஒருவன் என்கோ –இத்யாதிகண்ணனைக் கூவுமாறு அறியேன்–குன்றங்கள் அனைத்தும் என்கோ -ஆழ்வார் –)

ஆக, இந்த அதிகரணத்தில், அனைத்துப் பொருள்களும் ப்ரஹ்மத்திடமிருந்து தான் உண்டாகின்றன என்று நிரூபித்தார்.

2-3-3-ஆத்மாதி₄கரணம்–ஜீவாத்மாவும் உண்டாக்கப்படுகிறாரா?—-ஸங்கதி – இந்த பாதத்தின் முதல் அதிகரணத்தில் ப்ரஹ்மத்தைத் தவிர்ந்த மஹான், அஹங்காரம், ஆகாசம், வாயு முதலான அனைத்துப் பொருள்களுமே உண்டாக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப் பட்டது. அதற்கு மேல் இரண்டாவது அதிகரணத்தில் அவை அனைத்துமே பரமாத்மாவிடம் இருந்து தான் உண்டாகின்றன என்றும் சொல்லப்பட்டது. இப்படி அசேதன பொருள்களின் உண்டாக்கத்தைச் சொன்ன பிறகு சேதனனான ஜீவாத்மாவைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது. ஜீவாத்மாவும் ஆகாசம் முதலானவற்றைப் போல் உண்டாக்கப் படுகிறாரா? இல்லையா? என்பது இந்த அதிகரணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி.

(இதில் ஸித்தாந்தம் ஸூத்ரம் ஒன்றே உள்ளது)

பூர்வ பக்ஷியின் வாதம்–ப்ரஹ்மத்தைத் தவிர அனைத்தும் உண்டாக்கப்படுகிறது என்று முன் அதிகரணங்களில் நிரூபித்ததால், ஜீவாத்மாவும் உண்டாக்கப் படுகிறார் என்று பூர்வபக்ஷி வாதிடுகிறார். இதற்கு இரண்டு யுக்திகளைக் கூறுகிறார் –
1-ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந பிரதிஜ்ஞா உபபத்தி –
அதாவது சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாவது ப்ரபாடகத்தில் ஸத் வித்யா என்கிற பிரகரணத்தில் உத்தாலகர் என்கிற தந்தை ஸ்வேதகேது என்கிற மகனைப் பார்த்து, “எந்த ஒன்றை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகுமோ , அதை உன் ஆசார்யர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டாயா?” என்று கேட்கிறார். அங்கு இருக்கும் பிரதிஜ்ஜை – “ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்பது. இது எப்படிப் பொருந்துமென்றால் – எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால், அதிலிருந்து உண்டாகக் கூடிய குடம், தட்டு முதலானவற்றை அறிந்ததாகுமோ , அதே போல் உலகமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறபடியால் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும் என்று உத்தாலகர் கூறுகிறார். இந்த ப்ரதிஜ்ஜை பொருந்த வேண்டும் என்றால் ஜீவாத்மாக்களும் ப்ரஹ்மத்திடம் இருந்து உண்டாகி யிருக்க வேண்டும். இல்லா விட்டால் ப்ரஹ்மத்தை அறிந்தால் ஆகாசம் முதலான அசேதனப் பொருள்களை மட்டுமே அறிந்ததாகுமே தவிர ஜீவாத்மாக்களை அறிந்ததாக ஆகாது. எனவே ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று சொல்வது பொய்யாகி விடும். அதனால் ஜீவாத்மாக்களும் ப்ரஹ்மத்திடம் இருந்து உண்டாகிறார்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

(2) ப்ராக் ஸ்ருஷ்டே : ஏகத்வ அவதாரணம் – “ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகமனைத்தும் ஒரே பொருளாகத் தான் இருந்தது” என்று வேதம் கூறுகிறது. இந்த வாக்கியம் சரியாக இருக்க வேண்டும் என்றால் ப்ரளய காலத்தில் ஆகாசம், வாயு முதலானவை எப்படி இல்லையோ , அதே போல் ஜீவாத்மாக்களும் தனித்து இல்லை . பரமாத்மா ஒருவரே இருந்தார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ஆகையால் ப்ரளய காலத்தில் ஜீவாத்மாக்கள் இருக்க வில்லை . அதற்குப் பிறகு தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டானார்கள் என்று தான் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஆகவே , ஜீவாத்மாவும் உண்டாக்கத் தான் படுகிறார். இதற்கு வேதத்திலும் சில வாக்கியங்கள் வலுவூட்டுகின்றன –
தோயேந ्ஜீவான் வ்யஸ்ஸர்ஜ பூ₄ம்யாம் –
தண்ணீரோடு ஜீவன்களைப் படைத்தார்
ப்ரஜாபதி: ப்ரஜா: அஸ்ருஜத – ப்ரஜாபதி உடலோடு கூடிய ஆத்மாக்களைப் படைத்தார்
யதோ வா இமாநி பூ₄தாநி ஜாயந்தே – இந்த ஜீவ ராசிகள் எதிலிருந்து உண்டாயினவோ
இந்த வாக்கியங்களில் எல்லாம் ஜீவனோடு கூடின உலகப் பொருட்கள் உண்டாக்கப் படுகின்றன என்று சொல்லப் படுகிறபடியால் ஜீவாத்மாவும் உண்டாக்கத் தான் படுகிறார்.

கேள்வி – ப்ரஹ்மம் நித்தியமானது என்று வேதம் சொல்கிறது. “தத் த்வம் அஸி”. “அஹம் ப்ரஹ்மாஸ்மி” முதலான வாக்கியங்கள் ஜீவாத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்று தான் என்று சொல்லுகின்றன. ஆகையால் ஜீவாத்மாவும் நித்தியமானவராக தானே இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேள்வி யெழுப்புகிறார்கள்.
பூர்வ பக்ஷியின் பதில் – அப்படிப் பார்த்தால் “ஸர்வம் க₂லு இத₃ம் ப்₃ரஹ்ம”, ”ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்”-முதலான வாக்கியங்களில் அசேதனப் பொருட்கள் கூட ப்ரஹ்மமே தான். ஜகத்தே ப்ரஹ்மம் தான் என்று சொல்லப் படுகிறபடியால், ப்ரஹ்மம் நித்தியமான படியால் அசேதனப் பொருள்களும் நித்யமானவை என்று ஏற்க வேண்டி வரும். அது எப்படிப் பொருந்தாதோ , அதுவே போல் உங்கள் வாதமும் பொருந்தாது.
எனவே ஆகாசம் முதலானவற்றைப் போல் ஜீவாத்மாக்களுக்கும் உத்பத்தி உண்டு என்று பூர்வ பக்ஷி கூறுகிறார்.

ஸித்தாந்தியின் பதில்
ஸித்தாந்தம் – 1- ந ஆத்மா ச்ருதே : நித்யத்வாத் ச தாப்₄ய:
ஆத்மா ந –
ஜீவாத்மாக்கள் (உண்டாக்கப் படுவது) இல்லை
ச்ருதே : – வேதத்திலிருந்து (அவர்களுக்கு உண்டாக்கம் இல்லை என்று தெரிகிறபடியால்)
தாப்₄ய: – அந்த வேத வாக்கியங்களிலிருந்தே
நித்யத்வாத் ச – ஆத்மாக்கள் நித்யமானவை என்று அறிகிற படியாலும்
வேதத்தில் தெளிவாகவே ஆத்மாக்களுக்கு உண்டாக்கம் இல்லை என்று சில வாக்கியங்களில் சொல்லபடுகிறது.
ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சித்-அனைத்தையும் அறியும் சக்தி கொண்ட ஜீவாத்மா உண்டாவதும் இல்லை, அழிவதும் இல்லை
ஜ்ஞாஜ்ஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீசௌ-முழுமையான ஜ்ஞாநம் கொண்ட பரமாத்மா, குறைந்த ஜ்ஞாநம் கொண்ட ஜீவாத்மா ஆகிய இருவருமே அஜர்கள்-அதாவது உண்டாக்கம் இல்லாதவர்கள்
அதே போல் சில வேத வாக்கியங்கள் ஜீவாத்மாக்கள் நித்யமானவர்கள், அதாவது அழிவற்றவர்கள் -எப்போதும் இருக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன –நித்யோ ् நித்யாைநாம் யோ வித₃தா₄தி காமாந்--நித்யமானவரான ஒரு பரமாத்மா நித்யமான எண்ணிறந்த ஜீவாத்மாக்களுக்கு ஆசைப்பட்டதைக் கொடுக்கிறார்-
அஜ: நித்ய: சாச்வத: அயம் புராண:-ஜீவாத்மா பிறப்பில்லாதவர், நித்யமானவர், மாறுபாடுகள் அற்றவர், மிகப் பழமையானவராய் இருந்தாலும் புதுப் பொருள் போல் ஆச்சர்யமூட்டுபவர்
ஆகவே , ஜீவாத்மாக்கள் உண்டாக்கப் படுவதில்லை என்று வேதத்திலிருந்து தெரிகிறது என்கிறார் வேத வ்யாஸர்.

ஸித்தாந்தியின் பதில் -இதற்கு மேல் பூர்வ பக்ஷி சொன்ன யுக்திகளுக்கு பதில் கூற வேண்டும்.
கேள்வி
– ஜீவாத்மாக்கள் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகவில்லை என்றால் “ப்ரஹ்மம் ஒன்றை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று உத்தாலகர் கூறியது எப்படிப் பொருந்தும்?
பதில் – ஜீவாத்மாக்கள் உண்டாக்கப் படாவிட்டாலும் ப்ரஹ்மத்தினுடைய கார்யங்கள் தான் என்று ஏற்கப்படுகிறது. மண்ணை அறிந்தால் அதன் கார்யங்களை அறிந்ததாவது போல் ப்ரஹ்மத்தை அறிந்தால் ஜீவர்களை அறிந்ததாகும்.
கேள்வி – ஜீவாத்மாக்கள் கார்யம் தான், ஆனால் உண்டாவதில்லை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்?
பதில் – ’கார்யம்’ என்றால் ’வேறொரு நிலையை -மாறுபாட்டை அடைந்திருக்கும் பொருள்’அவஸ்தாந்தர ஆபபத்தி-. அந்த வேறொரு நிலை மாறுபாடு (Transformation) என்பது இரண்டு வகைப்படும்
1-ஸ்வரூப விகாரம் உருவ மாறுபாடு – இது தான் ஒரு பொருளின் உண்டாக்கம் என்று சொல்லப்படுகிறது.
2-ஸ்வபா₄ப விகாரம் – தன்மையில் மாறுபாடு – இது ஏற்படும் போது உண்டாக்கம் என்று சொல்வதில்லை .-அசேதனப் பொருள்களுக்கு மட்டும் தான் ஸ்வரூப விகாரம் (உருவ மாறுபாடு) என்பது உண்டு. ஒரே தங்கம் காசாகவும், மோதிரமாகவும், தோடாகவும், சங்கிலியாகவும் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. அப்போது மோதிரம் உண்டாகிறது, சங்கிலி உண்டாகிறது என்று சொல்கிறோம்.
சேதனர்களான ஜீவாத்மாக்களுக்கு ஸ்ருஷ்டியின் போது உருவ மாறுபாடுகள் கிடையாது, ஆனால் தன்மைகளில் மாறுபாடுகள் உண்டு -– ஒரு ஸமயம் அறிவு குறைந்திருக்கும், ஒரு ஸமயம் மலர்ந்திருக்கும். இதற்கு ஸ்வபாவ விகாரம் என்று பெயர். இது ஏற்படும் போது அந்தப் பொருள் உண்டாகிறது என்று சொல்வது கிடையாது.
ஆக, அசேதனங்கள் சேதனர்கள் அனைத்துமே ப்ரஹ்மத்தால் மாறுபாடுகளை அடைகிறபடியால் ப்ரஹ்மத்தின் கார்யங்கள் தான், ஆனால் ஜீவாத்மா உண்டாகிறார் என்று கூற முடியாது என்று வ்யாஸர் கூறுகிறார்.-ஜீவாத்மாவைப் பற்றி பிறப்பு மரணம் முதலான சொல்லாலெல்லாம் ஓர் உடலை எடுத்துக் கொள்வதையும் அதை விடுவதையும் வைத்துச் சொல்லப்படுகின்றன. ஜீவாத்மா உண்டாவதுமில்லை அழிவதுமில்லை என்பதே உண்மை .

(சம பரதேவ ஏகி பவதி-நாம ரூப விபாகம் இல்லாமல் ஒன்றாகவே ப்ரஹ்மம் இருந்தது என்று சொல்லிற்று தவிர சேதன அசேதன பொருள்கள் இல்லை என்றதல்ல –தத்வ த்ரயங்களும் நித்யமானவையே தான்)

2-3-4-ஜ்ஞாதி₄கரணம்-ஜீவாத்மாவைப் பற்றின ஆராய்ச்சி-
முதல் பூர்வ பக்ஷம் -ஜ்ஞாதி₄கரணம் –ஸங்கதி
– இந்தப் பாதத்தின் முதல் மூன்று அதிகரணங்களால் உலகிலுள்ள அனைத்துமே ப்ரஹ்மத்தால் தான் படைக்கப் படுகிறது என்று நிரூபித்தார் வ்யாஸர். அதில் மூன்றாவது அதிகரணத்தில் ஜீவாத்மாவைப் பற்றிய பேச்சு வந்தபடியால், இனி அடுத்த நான்கு அதிகரணங்களால் ஜீவாத்மாவினுணடய ஸ்வரூபம் எப்படிப்பட்டது என்று ஆராய்கிறார்.
இந்த விவாதத்தில் மூன்று பக்ஷங்கள் இருக்கின்றன–2 பூர்வ பக்ஷங்கள், 1 வேதாந்தம் சொல்லும் ஸித்தாந்தம்.
1-பௌத்தர்கள், ஸாங்க்யர்கள் முதலானவர்களின் பக்ஷம்
– ஜீவாத்மா ஜ்ஞாநம் மட்டுமே
இந்த மதங்களில் ஆத்மாவை ’சிந் மாத்ரம்’ -’ஜ்ஞாந மயம்’ என்று கூறுவார்கள். இதற்கு “ஜ்ஞாநம் மட்டுமே ஆத்மா ”என்று பொருள். அதாவது, ஒரு குடம் மண்ணால் ஆனது, ஒரு மோதிரம் தங்கத்தால் ஆனது, அது போல் ஜீவாத்மா ஜ்ஞாநத்தாலேயே ஆனவர் என்று பொருள். “மாத்ரம்” சொல்லால் “ஜ்ஞாநம் மட்டுமே ” என்று சொல்வதால் ஆத்மா ஜ்ஞாநமுடையவர் (ஜ்ஞாதா) அல்ல, அதாவது அறிவாளி அல்ல, அறிவே தான் ஜீவாத்மா.

இதற்கு இவர்கள் சில வேத வாக்யங்களைச் சான்றாகக் காட்டுகிறார்கள் –
1–சுக்ல யஜுர் வேதத்தில் இரண்டு சாகைகள் (கிளைகள்) உள்ளன. ஒன்று மாத்யந்தின சாகை , மற்றொன்று காண்வ சாகை -இரண்டிலுமே அந்தர்யாமி ப்ராஹ்மணம் என்ற உபநிஷத் பகுதி உள்ளது. இப் பகுதியில், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ப்ரக்ருதி மஹான் அஹங்காரம் புலன்கள் ஆத்மாக்கள் முதலான உலகிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அந்தர்யாமி பரமாத்மாவே என்று கூறப்படுகிறது. அச் சமயத்தில், மாத்யந்தின சாகையில் (ய: ஆத்மநி திஷ்ட₂ன்) அதாவது ’யாரொருவர் ஆத்மாவில் இருக்கிறாரோ ’ என்று கூறப்படுகிறது. அதே இடத்தில் காண்வ சாகையில் (யோ விஜ்ஞாநே திஷ்ட₂ன்) அதாவது ’யாரொருவர் ஜ்ஞாநத்தில் இருக்கிறாரோ ’ என்று கூறப்படுகிறது. ஆகவே ,ஆத்மா என்பவரைத் தான் ஜ்ஞாநம் என்று வேதம் கூறுவதை நாம் உணரலாம். எனவே ஜ்ஞாநமே ஆத்மா .

2-தைத்திரூய உபநிஷத்தில் ஓரிடத்தில் (விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே ) அதாவது “அறிவு யாகம் செய்கிறது” என்றுள்ளது. ஆத்மா தானே யாகம் செய்ய முடியும். அதனால் ஆத்மா தான் இங்கு அறிவு எனப்படுகிறார்

இரண்டாவது பூர்வபக்ஷம்–வைஸேஷிகம்- ந்யாய மதம் முதலானவற்றின் பக்ஷம் – ஜடமான ஆத்மாவுக்கு அறிவு செயற்கையான பண்பு-இவர்கள் முன் சொன்ன பக்ஷத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார்கள். ஆத்மா ஜ்ஞாநமே வடிவானவர் என்று முன் பக்ஷத்தில் சொல்லப்பட்டதை இவர்கள் ஏற்கவில்லை-ஆத்மா குடம் மேஜை புத்தகம் போன்ற ஒரு பொருள் தான்,அதாவது ஜடமான பொருள் தான், ஜ்ஞாந வடிவானவர் அல்ல என்கிறார்கள்.

இந்த ஸந்தர்பத்தில் ஜ்ஞாநம் என்றால் என்ன என்று பார்ப்போம். ஜ்ஞாநம் என்ற பொருளுக்கு இலக்கணமே-’ஸ்வயம் ப்ரகாஸத்வம்’ அதாவது ’தானாகத் தோற்றுவது – அறியப்படுவது’ என்ற பண்பு தான். உலகத்தில் குடம் மேஜை முதலான பொருள்கள் அறியப் படுவதற்கு அவை மட்டும் இருந்தால் போதாது, வெளிச்சம் வேண்டும், கண் வேண்டும், நமக்கு அறிவு வேண்டும்; இப்படி மற்ற பொருள்களின் உதவியால் அறியப்படும் பொருள்களை ஜடம் என்பார்கள். இவை அஸ்வயம் ப்ரகாஸம் -அதாவது தானாகத் தோற்றாத பொருள்கள்-ஆனால் ஜ்ஞாநம் என்பது அப்படி யல்ல, தான் இருந்தாலே தானாகத் தோற்றிவிடும், ஜ்ஞாநத்தை அறிவதற்கு வேறொரு ஜ்ஞாநம் கூடத் தேவை யில்லை – தானே அறியப் படுகிறது. எனவே அதை அஜடம் என்றும்ஸ்வயம் ப்ரகாஸம் என்று கூறுவார்கள். ந்யாய மதத்தவர்கள் சொல்வது ஆத்மா குடம் முதலானவற்றைப் போல் ஜடமான பொருள் தான் என்று.

அதே போல், முதல் பக்ஷத்தில் ஏற்கப்படாத ஒன்றை இவர்கள் ஏற்கிறார்கள் – ஆத்மா அறிவாளி (ஜ்ஞாதா) தான், அவருக்கு அறிவு (ஜ்ஞாநம்) என்ற பண்பு உள்ளது, ஆனால் அது இயற்கை யானதோ நிரந்தரமானதோ அல்ல, அவ்வப்போது செயற்கையாக வரக் கூடியது என்கிறார்கள். மோக்ஷம் அடையும் பொழுது ஜ்ஞாநம் முழுமையாக இல்லாமல் போய்விடும், எனவே ஆத்மா முழுமையாக ஒரு கல்லைப் போல் ஆவதே மோக்ஷம் என்கிறார்கள்.

இதற்கு இவர்கள் கூறும் யுக்திகணளப் பார்ப்போம் –முதலில், ஜீவாத்மா உலகெங்கும் வ்யாபித்து அதாவது நீக்கமற நிறைந்திருக்கிறார் என்று ஏற்க வேண்டும். ஏனென்றால்,ஒரு ஜீவாத்மா பயன்படுத்தப் போகும் பொருள்கள் உலகில் வெவ்வேறு இடங்களில் உண்டாகின்றன. அவற்றின்
உண்டாக்கத்துக்கு அந்த ஜீவாத்மாவின் பாபமும் புண்யமும் காரணம் என்று கண்டிப்பாக ஏற்க வேண்டும். (ஸர்வத்ர கார்ய உத்பத்யதே -பொருள்கள் உண்டாவதற்கு ஆத்மாவின் கர்மங்கள் காரணம் –
)ஆனால் பாப புண்யங்களை உடைய ஆத்மா ஓரிடத்தில் இருந்தால், வேறிடத்தில் உண்டாகும் பொருளுக்கு எப்படி காரணமாக முடியும்? எனவே ஆத்மா எங்கும் வ்யாபித்து இருக்கிறார் என்று ஏற்க வேண்டும்.

இப்படி வ்யாபித்திருக்கும் ஆத்மாவை ’ஜ்ஞாநமே வடிவானவர்’ என்று சொன்னாலோ ’இயற்கை யாகவே ஜ்ஞாநம் என்ற நிரந்தரமான பண்பை உடையவர்’ என்று சொன்னாலே கீழ்க் கண்ட குற்றங்கள் ஏற்படும் –
1-(ஸர்வத்ர உபலப்த பிரஸங்க)உலகெங்கும் இருக்கும் பொருள்களை எல்லாம் நாம் எப்போதும் அறிய முடிய வேண்டும். அப்படி ஏற்பட வில்லை
2-பொருள்களை அறிவதற்கு புலன்களின் தேவையே இல்லாமல் போய் விடும்.
3-ஆழ்ந்த உறக்கத்திலும் கூட ஆத்மாவுக்கு அறிவு ஏற்பட வேண்டும், ஆனால் அப்படி நாம் கண்டதில்லை

தங்கள் பக்ஷத்துக்குச் சான்றாக இவர்கள் காட்டும் வேத வாக்யங்கள் –
1-நாஹ க₂ல்வயம் ஸம்ப்ரதி ஆத்மானம் ஜானாதி-அயம் அஹம் அஸ்மி இதி, நோ ஏவ இமாநி பூதாநி–என்ற வாக்கியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது இந்த ஜீவாத்மா தன்னையும் அறிவதில்லை , மற்றப் பொருள்களையும் அறிவதில்லை என்று கூறப் படுகிற படியால் உறக்கத்தில் ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் எதுவும் இல்லை என்று தெரிகிறது.

(ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞா அஸ்தி) என்ற வாக்கியத்தில் ’முக்திக்குப் பின் ஜ்ஞாநம் இல்லை ’ என்று சொல்லப்படுவதால், முக்தியில் ஆத்மா கல்லைப் போல் தான் இருக்கிறார். எனவே ஜ்ஞாநம் என்பது ஆத்மாவுக்கு இயற்கையான நிரந்தரமான பண்பல்ல, செயற்கையாக அவ்வப்போது வரக்கூடியது மட்டுமே என்கிறார்கள்.

வேதாந்தம் கூறும் ஸித்தாந்தம்
இந்த இரண்டு பூர்வ பக்ஷங்களையும் தகர்த்து, வேதாந்தம் கூறும் ஆத்மாவின் உண்மையான தன்மையை வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தில் காட்டுகிறார். முதலில் ஸித்தாந்தம் என்ன என்று பார்ப்போம், பிறகு ஸூத்ரங்களின் பொருளைப் பார்க்கலாம்.(இதில் 14 ஸூத்ரங்கள் உள்ளன )

உபநிஷத்துக்கள் கூறும் பக்ஷம் – ஜ்ஞாநமே வடிவான ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் என்ற இயற்கையான பண்பும் உள்ளது-உபநிஷத்துக்களை ஆராய்ந்தால், முன் சொன்ன இரண்டு பக்ஷங்களிலிருந்து வேறுபட்ட ஒரு பக்ஷம் சொல்லப்படுகிறது.-முதல் பக்ஷத்தில் சொன்னது போல் ஆத்மா ஜ்ஞானமே வடிவானவர் என்பதை நாமும் ஏற்கிறோம். எனவே ந்யாய மதத்தவர்கள் சொல்வது போல் ஆத்மா குடம் போல் ஜடமானவர் அல்ல, ஸ்வயம் ப்ரகாஸமான ஒரு பொருள் தான் என்றுnஆகிறது. ஆனால் முதல் பக்ஷத்தில் ஆத்மா அறிவாளி அல்ல, ஆத்மாவுக்கு அறிவு என்ற பண்பு கிடையாது என்றார்கள்,
அதை நாம் ஏற்க வில்லை . ஆத்மா ஜ்ஞானமே வடிவானவர், அதோடு கூட அவருக்கு ஜ்ஞாநம் என்ற பண்பும் உள்ளது என்று கூறுகிறோம். ஜ்ஞாந வடிவான ஆத்மாவுக்கு த₄ர்மி ஜ்ஞாநம் அதாவது பண்பாளனான ஜ்ஞாநம் என்று பெயர். ஆத்மாவிடம் இருக்கும் ஜ்ஞாநத்துக்கு த₄ர்ம ஜ்ஞாநம் – த₄ர்மபூ₄த ஜ்ஞாநம் – பண்பான ஜ்ஞாநம் என்று பெயர்.

ஒரு விளக்கு எரியும் பொழுது அதில் ஜ்வாலை என்ற ஒரு பொருள் உள்ளது. அது நெருப்பே வடிவானது. ஆனால் அது ஓரிடத்தில் மட்டும் தான் இருக்கும். அதற்கு மேல், அந்த ஜ்வாலையில் பண்பாக, அந்த ஜ்வாலையையே அண்டி இருக்கும் ’ஒளி’ – ’ப்ரபா₄’ என்ற ஒரு பொருள் உள்ளது. அது பல இடங்களுக்குப் பரவுகிறது. அதுவும் நெருப்பால் ஆனது தான். எப்படி தேஜஸ்ஸால் (நெருப்பால் ) ஆக்கப்பட்ட ஜ்வாலைக்கு நெருப்பால் ஆக்கப்பட்ட ஒளி என்பது பண்பாக இருக்கிறதோ , அதே போல் ஜ்ஞாநமே வடிவான ஜீவாத்மாவுக்கும் பண்பாக வேறொரு ஜ்ஞாநம் இருக்கிறது.

ஜீவாத்மா ’நான்’, ’நான்’ என்று தோற்றுவதெல்லாம் த₄ர்மி ஜ்ஞாநத்தின் தோற்றம். தன்னைத் தவிர்ந்த மற்ற பொருள்களை யெல்லாம் அறிவது தன்னுடைய த₄ர்ம ஜ்ஞாநத்தைக் கொண்டு தான். இந்த ஜ்ஞாநம் என்பது ஆத்மாவுக்கு இயற்கையானது, என்று ஆத்மாவோடு நிரந்தரமாக இருப்பது, உறக்கத்திலும் சரி மோக்ஷத்திலும் சரி இது ஒரு நாளும் ஆத்மாவை விட்டுச் செல்லாது, மோக்ஷத்தில் ஜ்ஞாநம் முழுமையாக மலர்கிறது என்பதே வேதாந்தத்தின் ஸித்தாந்தம்

2-3-4-ஜ்ஞாதி₄கரணம்-ஜீவாத்மா அறிவுடையவரே -ஜீவாத்மா இயற்க்கையாக அறிவுடையவரே – ஸித்தாந்தம் – முன் சொல்லப்பட்ட இரண்டு பூர்வ பக்ஷங்களையும் கண்டித்து வேதாந்தம் கூறும் ஸித்தாந்தத்தை வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தில் 14 ஸூத்ரங்களால் காட்டுகிறார்.

1– ஜ்ஞ: அத எவ – “(ஜீவாத்மா) அறிவுடையவர் தான், அதனாலேயே ”
ஜ்ஞ:என்றால் அறிபவர் -அறிவாளி-ஜ்ஞாதா என்று பொருள். (ஸர்வஞ்ஞன் -அனைத்துக்கும் அறிபவர் போல் )ஜீவாத்மா அறிவாளி தான் என்கிறார் வ்யாஸர். இத்தால், ஜீவாத்மா அறிவு மட்டுமே , அறிவாளி அல்ல என்ற ஸாங்க்யர்களின் மதத்தை மறுக்கிறார்.
அத ஏவ’ என்றால் அதனாலாயே -அந்தக் காரணத்தாலேயே என்று பொருள். முன் அதிகரணத்தில் ஆத்மா நித்யமானவர் என்று நிரூபிக்க ஸ்ருதி என்ற வேதத்தையே காரணமாகக் கூறி யிருந்தார் வ்யாஸர் – “நாத்மா ஸ்ருதே :” என்று. ஆகவே , ஸ்ருதி (வேதம்) என்ற அதே காரணத்தாலேயே ஜீவாத்மா அறிவுடையவர் என்றும் தெரிகிறது என்று ஸூத்ரத்தின் பொருள்.

வேதத்தில் பல இடங்களில் ஆத்மா அறிவுடையவர் என்று கூறப்படுகிறது –
அத₂ யோ வேத₃ ஜிக்₄ராணீதி ஸ ஆத்மா – “எவனொருவன் ’நான் முகர்கிறேன்’ என்று அறிகிறானோ அவன் தான் ஆத்மா
ஸத்ய ஸங்கல்ப: – “முக்தனான ஜீவாத்மா நினைப்பதெல்லாம் நடக்கிறது”
ய: அயம் விஜ்ஞாந மய: ப்ராணேஷு ஹ்ருதி₃ அந்தர் ஜ்யோதி: புருஷ: -“ஹ்ருதயத்தில் மூச்சுக் காற்றோடு இருக்கும் ஜீவாத்மா தான் ஜ்ஞாநமே வடிவானவர், ஜ்ஞாநத்தை உடையவரும் கூட”

ஞானாத்யேவ அயம் புருஷ போன்ற ஸ்ருதி வாக்கியங்களும் உண்டு

ஆத்மா மிக நுண்ணியவர் (அணு) ஆத்மா விபு₄வாக எங்கும் வ்யாபித்திருப்பதால், அவருக்கு ஜ்ஞாநம் இயற்கையான பண்பாக இருந்தால் அவர் எப்போதும் அனைத்தையும் அறிய வேண்டுமே ? அப்படி உலகில் காண்பதில்லை -.எனவே ஆத்மாவுக்கு இயற்கையாக ஜ்ஞாநம் கிடையாது – என்று பூர்வ பஷி கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் சொல்கிறார் வ்யாஸர் –
2–உத் க்ராந்தி ् க₃தி ஆக₃தீநாம் –
“புறப்படுதல், செல்லுதல் மற்றும் வருதல் (சொல்லப் படுவதால்)”
ஆத்மா எப்போதும் அனைத்தையும் அறியாததற்குக் காரணம் அவருக்கு இயற்கையாக ஜ்ஞாநம் இல்லாமை அல்ல.-அவர் விபு₄வாக இல்லாத படியால் தால். வேதத்தில் உத்க்ராந்தி (ஆத்மா உடலில் இருந்து புறப்படுதல்) க₃தி (ஆத்மா ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்குச் செல்லுதல்) மற்றும் ஆக₃தி (திரும்பவும் இவ் வுலகுக்கு வருதல்) சொல்லப்படுவதால் ஆத்மா சிறிய அளவுடையவர் தான் என்று நாம் அறியலாம். எங்கும் நிறைந்திருக்கும் பொருள் எப்படி ஓரிடத்திலிருந்து புறப்படவோ வேறிடம் செல்லவோ முடியும்?
உத்க்ராந்தி ஏஷ ஆத்மா நிஷ்க்ராமதி சக்ஷுஷோ வா மூர்த்₄நோ வா. –“இந்த ஆத்மா கண் மூலமோ தலை மூலமோ வேறொன்றாலோ உடலிலிருந்து புறப்படுகிறார்”
க₃தியே அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ர மஸமேவ ரத க₃ச்ச₂ந்தி -“யாரெல்லாம் இவ் வுலகத்திலிருந்து புறப்படுகிறார்களோ அவர்கள் சந்த்ரனையே அடைகிறார்கள்”
ஆக₃தி – தஸ்மாத் லோகாத் புந: ஏதி அஸ்மை லோகாய கர்மணே – “அவ் வுலகத்திலிருந்து திரும்பவும் இவ் வுலகத்துக்கு வருகிறார்கள், வினைப் பயன்கணை அநுபவிக்க”

3-ஸ்வாத்மநா ச உத்தரயோ : – “கடைசி இரண்டையும் தானாகவே தான் (செய்கிறார்)”
ஆஷேபம் – ஆத்மா உடலை விடுவது என்பது செல்வதல்ல, இருக்கும் இடத்திலேயே தொடர்பு அறுவது தான்
பதில் – அவ்வாறு இருந்தாலும் க₃தி (செல்லுதல்) ஆக₃தி (வருதல்) என்ற அடுத்த இரண்டையும் ஆத்மா தானாகவே தான் செய்ய வேண்டும், எனவே ஆத்மா சிறியவர் தான். நீக்கமற நிறைந்தவராக இருக்க முடியாது.

ஆத்மா மிக நுண்ணியவர் (அணு)
4- ந् அணு: அதச்ச்₂ருதே : இதி சேத் ந இதராதி₄காராத்
ந அணு:
– ஜீவாத்மா அணுவானவர் அல்ல
அதச்ச்₂ருதே : – அதற்கு நேர் எதிரான மஹத்த்வம் (பெரிய அளவு) அவருக்குச் சொல்லப்படுகிறபடியால்
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
இதராதி₄காராத் – வேறொருத்தரைப் பற்றின பேச்சுக்கு நடுவில் இருப்பதால்.

பூர்வ பக்ஷியின் கேள்வி – உபநிஷத்தில் “
ய: அயம் விஜ்ஞாந மய: ப்ராணேஷு ஹ்ருதி₃ அந்தர்ஜ்யோதி: புருஷ:
” என்று ஹ்ருதயத்தில் இருக்கும் ஜீவாத்மாவைப் பற்றிப் பேசத் துவங்கி விட்டு, (ஸ வா ஏஷ மஹாந் அஜ ஆத்மா) அதாவது “இந்த ஆத்மா பிறப்பில்லாதவரும் பெரியவரும் ஆவார்” என்று கூறப்படுகிறது. மஹாந் என்ற சொல்லுக்கு பெரிய அளவுடையவர் என்று பொருள். எனவே ஜீவாத்மா அணுவாக இருக்க முடியாது.
பதில் – ஜீவாத்மாவைப் பற்றிப் பேசி வரும் போது இந்த வாக்கியம் இடம் பெற வில்லை , இடையிலேயே பரமாத்மாவைப் பற்றி உபநிஷத் பேசத் துவங்கி விட்டு – “ (யஸ்ய அநுவித்த: ப்ரதிபு₃த்₃த₄: ஆத்மா) அதாவது “இந்த ஜீவாத்மாவால் உபாஸிக்கப்படுபவர் சிறந்த ஜ்ஞாநமுடைய பரமாத்மா” என்று. அதற்குப் பின்னால் தான் நீங்கள் காட்டிய வாக்கியம் உள்ளது. எனவே , அதில் மஹாந் என்று சொல்லப்படுபவர் பரமாத்மா தான், ஜீவாத்மா அல்ல.

5–ஸ்வ சப்₃த₃ உந்மாநாப்₄யாம் ச – “தன் சொல்லாலும், எடுத்து அளப்பதாலும் (ஆத்மா அணு தான்)”
ஸ்வ சப்₃த₃
: – நேரடியாகவே நுண்ணிய அளவைக் கூறும் ’
அணு’ என்ற சொல் ஜீவாத்மாணவப் பற்றிப் பயன் படுத்தப் படுகிறது உபநிஷத்தில் – (ஏஷ: அணு: ஆத்மா சேதஸா வேதி₃தவ்ய: )-அதாவது “இந்த அணுவான (நுண்ணிய) ஆத்மா மனதால் அறியப் பட வேண்டும்” என்று.
உந்மாநம் – ஒரு பொருளை அளவு கோலாக எடுத்து, அதைக் கொண்டு வேறொன்றை அளப்பது. வேதத்திலும்-(வாலாக்₃ர சத பா₄க₃ஸ்ய ததா₄ கல்பிதஸ்ய ச பா₄க₃: ஜீவஸ்ய விஞ்ஞஸ்ய:) அதாவது’ஒரு நெல் மணியின் நுனியில் நூற்றில் ஒரு பங்கில் நூற்றில் ஒரு பங்கு அளவு ஆத்மா இருப்பார்” எனப்படுகிறது –

ஓரிடத்திலிருந்து அனைத்தையும் அறிதல்
பூர்வ பக்ஷியின் கேள்வி –
ஆத்மா நுண்ணியவராக இருந்தால் உடல் முழுவதும் எப்படி உணர்ச்சி ஏற்படுகிறது? இதற்கு வேதவ்யாஸர் முதலில் வேறொருவரின் கண்ணோட்டத்தில் பதில் கூறுகிறார் அடுத்த 2 ஸூத்ரங்களால் –

6–அவிரோத சந்த₃நவத் – “முரண்பாடு இல்லை , சந்தநத்தைப் போல்”
சந்தனம் எப்படி உடலின் ஒரு பகுதியில் பூசப் பட்டாலும் உடல் முழுவதுக்கும் குளிர்ச்சி (ஆஹ்லாதம்) ஊட்டுகிறதோ , அதே போல் ஜீவாத்மாவும் உடலில் ஓரிடத்தில் மட்டும் இருந்தாலும் உடலெங்கும் ஏற்படும் வேதனையை அறிவதில் முரணில்லை –

7–அவஸ்தி₂தி வைஸேஷ்யாத் இதி சேத் ந அப்₄யுபக₃மாத், ஹ்ருதி₃ ஹி
மேற் சொன்ன பதிலில் பூர்வ பஷி கேட்கும் கேள்வியும் அதற்கு வ்யாஸரின் பதிலும் இந்த ஸூத்ரத்தில் உள்ளன.
அவஸ்தி₂தி வைஸேஷ்யாத் – “குறிப்பிட்ட (சிறப்பான) இடத்தில் இருப்பதால்” என்று பொருள். சந்தனம் உடலில் எங்கு பூசப் பட்டாலும் உடல் முழுவதுக்கும் குளிர்ச்சி ஏற்படுத்தாது. அதற்கென்று சில மர்மமான இடங்கள் உள்ளன –-நெஞ்சு, மூக்கு, கண், காது, என்பது போல். அங்கு பூசப் பட்டால் மட்டுமே உடலுக்குக் குளிர்ச்சி தரும். அதுபோல் ஆத்மாவுக்கு சிறப்பான ஸ்தா₂னம் (இருப்பிடம்) இல்லாத படியால் அவருக்கு உடல் முழுவதிலும் உணர்ச்சி வராது.
இதி சேத் ந – இவ்வாறு நீங்கள் கூறினால் அது தவறானது
அப்₄யுபக₃மாத் – ஆத்மாவுக்கும் உடலில் அதுபோல் குறிப்பிட்ட சிறப்பான இருப்பிடத்தை ஏற்கிறபடியால்
ஹ்ருதி₃ ஹி – ஹ்ருதயத்திலன்றோ (ஜீவாத்மா உணர்கிறார்)
(ஹ்ருதி₃ ஜி அயம் ஆத்மா தத்ர ஏக சதம் நாடீ₃நாம்) அதாவது உடலிலிருக்கும் 101 நாடிகளும் வந்து சேரக் கூடிய ஹ்ருதயத்திலன்றோ ஜீவாத்மா இருக்கிறார்” என்று வேதம் கூறுகிறது. எனவே நாடிகள் அனைத்தும் வந்து சேரக் கூடிய ஹ்ருதயம் என்கிற சிறப்பான இடத்தில் ஜீவாத்மா உள்ள படியால் அவரும் உடலெங்கும் ஏற்படும் இன்ப துன்பங்களை உணர்வதில் எந்த முரண்பாடும் இல்லை-

ஓரிடத்திலிருந்து அனைத்தையும் அறிதல்
-இவ்வாறு பூர்வபஷி எழுப்பிய கேள்விக்கு இரண்டு ஸூத்ரங்கைளால் வேறொருவர் கண்ணோட்டத்தில் பதிலளித்து விட்ட அநந்தரம் இனி தன்னுடைய பதிலைக் கூறுகிறார் வ்யாஸர் –

8– கு₃ணாத் வா ஆலோகவத் – “அல்லது (தன்னுடைய) குணத்தின் மூலம், ஒளியைப் போல்”
ஜீவாத்மா உடலில் ஓரிடத்தில் இருந்தாலும், உடலெங்கும் உணர்ச்சி ஏற்படுவதில் எந்த முரண்பாடும் இல்லை -ஏனென்றால், அந்த ஜீவாத்மா தன்னுடைய தனித் தன்மையான ஜ்ஞாநம் (அறிவு) என்ற குணத்தின் மூலம் இந்த உடல் முழுவதிலும் வ்யாபித்து (நிறைந்து) இருக்கிறார்.
ஒளியைப்போல் – தீபம் (சுடர் -ஜ்வாலை ) என்பது ஓரிடத்தில் இருந்தாலும், அதனுணடய ஒளி (ப்ரபா₄) என்பது அறை முழுவதும் நிறைந்திருப்பது போல், ஜீவாத்மாவும் தன் ஜ்ஞாநத்தால் உடலை வ்யாபித்து இருக்கிறார்-(ஸுவ்பரி ஆபாத விருத்திக்கு -50 சரீரங்களை எடுத்துக் கொண்டு ஞானத்தைக் கொண்டு இயக்கிய வ்ருத்தாந்தம் உண்டே-).
பூர்வ பக்ஷியின் கேள்வி – ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் பண்பு என்று எப்படி அறிகிறீரர்கள்? ஜ்ஞாநமே தானே ஆத்மா?
வ்யாஸரின் பதில் – அடுத்த இரண்டு ஸூத்ரங்களால்

9– வ்யதிரேக: க₃ந்த₄வத் ததா₂ ச த₃ர்ஸயதி –“(ஜ்ஞாநத்துக்கு ஆத்மாவிடமிருந்து) வேறுபாடு மணத்தைப் போல், (வேதம்) அவ்வாறு காட்டுகிறது”
உலகில் “மணமுடைய புஷ்பம்” என்று அறிவதால், புஷ்பம் என்கிற பொருளுக்கு மணம் என்பது குணம் (பண்பு) ஆகிறது. அதனால் மணம் என்பது புஷ்பத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்று தெரிகிறது. அதே போல் வேதமும்- (ஜாநாத் யேவாயம் புருஷ:) அதாவது இந்த ஆத்மா அறிவுடையவரே ” என்று கூறுவதால், ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் பண்பாகிறது, எனவே ஆத்மாவைக் காட்டிலும் ஜ்ஞாநம் வேறு என்று தெரிகிறது.

10-ப்ருத₂க் உபதே₃சாத் – “தனியானது என்கிற உபதேசத்தால் ”
வேதத்தில் (ந விஜ்ஞாது: விஜ்ஞாதே : விபரிலோபோ வித்₃யதே ) அதாவது “ஆத்மாவினுடைய ஜ்ஞாநத்துக்கு அழிவு இல்லை ” என்று தெளிவாக ஆத்மா வேறு ஜ்ஞாநம் வேறு என்று உள்ளது –

ஆத்மாவை எப்படி ஜ்ஞாநம் என்று அழைக்கலாம்?–பூர்வ பக்ஷியின் கேள்வி – ஜ்ஞாநம் ஆத்மாவின் பண்பு தான் என்றால், அந்தர்யாமி ப்ராஹ்மணத்திலும் தைத்திரீயத்திலும் ஏன் ஜீவாத்மா ’ஜ்ஞாநம்’ என்று குறிப்பிடப்படுகிறார்? ஜ்ஞாநமுடையவர் என்று தானே சொல்ல வேண்டும்?
பதில் –
11-தத் ₃கு₃ண ஸாரத்வாத் து தத்₃வ்யபதே ₃ச : ப்ராஜ்ஞவத்
தத்₃கு₃ண ஸாரத்வாத் து –
ஜ்ஞாநம் என்ற குணத்தையே ஸாரமாகக் (முக்கியமான அடையாளமாகக்) கொண்டபடியால்
தத்₃வ்யபதே ₃ச : – ஜீவாத்மா ’ஜ்ஞாநம்’ என்றே அழைக்கப்படுகிறார்
ப்ராஜ்ஞவத் – பரமாத்மாவைப் போல
ஒரு பொருளினுடைய ஸாரமான (ப்ரதானமான) பண்பு எதுவோ , அப் பண்பைக் குறிக்கும் சொல்லைக் கொண்டு அந்தப் பொருளையும் குறிக்கலாம் என்று உலகில் ஒரு வழக்கமுண்டு. நம்மாழ்வாரை ’க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வம்’அதாவது ’க்ருஷ்ண பக்தி’ என்றே அழைக்கிறோம், அவருக்கு க்ருஷ்ண பக்தியை முக்கியமான பண்பான படியால்.

(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் தன்னைத் தாழ்ந்தவன் என்று கொள்ளாமல் -புன்மையாகக் கருத்துவர் -தாழ்ச்சி யாகவே-கருதுவர் என்கிறார்)

அதுபோல் ஜீவாத்மாவின் ப்ரதானமான குணம் ஜ்ஞாநம். அதனால் ஆத்மாவையே ஜ்ஞாநம் என்று சொல்லலாம். இதுபோல் பரமாத்மாவுக்கும் உள்ளது. பரமாத்மாவின் ஸாரமான குணம் எல்லை யற்ற ஆநந்தம்-(ஸ ஏகோ ப்₃ரஹ்மண ஆநந்த₃: ) முதலான இடங்களில் ஆநந்தம் பரமாத்மாவின் பண்பு எனபட்டிருந்தாலும், (ஆநந்தோ ₃ ப்₃ரஹ்மேதி வ்யஜாநாத்) முதலான இடங்களின் பரமாத்மாவை ஆநந்தம் என்றே குறிப்பிடப்படுகிறது வேதம். இதுவும் இதே வழக்கத்தை அடி யொற்றித்தான்.
12-யாவதா ₃த்ம பா₄வித்வாத் ச ந தோ₃ஷ: தத்₃த₃ர்ஸநாத்
ஜ்ஞாநத்தைக் குறிக்கும் சொல் ஆத்மாவைக் குறிப்பதில் எந்த தோஷமும் இல்லை , ஏனென்றால் ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் இயற்கையான நிரந்தரமான பண்பு, ஆத்மா உள்ள வரை அதுவும் இருக்கும்.
இங்கு ’ ச ’ என்ற சொல்லால் ஆத்மாவை ஜ்ஞாநம் என்று அழைப்பதற்கு வேறொரு காரணமும் கூறப்படுகிறது – நம் மதத்தில் அறிவாளியான ஆத்மா தானும் ஜ்ஞாநமே வடிவமானவர் என்பதால் எந்த தோஷமும் இல்லை – என்று.

(ஸ்வரூப நிரூபக தர்மம் என்பதால் ஞானம் என்றே சொல்லலாம் –ச -அதனாலும் தோஷம் இல்லை என்றது மறைமுகமாக வேதாந்தப்படி ஞானமயமாயும் ஞானத்துடனும் இருப்பதால் -)

உறங்கும் போது ஏன் ஜ்ஞாநம் தோன்றவில்லை ?
பூர்வ பக்ஷியின் கேள்வி –
ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் இயற்கையாக என்றுமே இருக்கும் பண்பு என்றால் ஆழ்ந்த உறக்கத்தில் அது வெளிப்பட வேண்டுமே ? அப்படி காணப்படவில்லை . ஆக அப்போது ஆத்மாவுக்கு ஜ்ஞாநமே இல்லை – பதில் –
13–பும்ஸ்த்வாதி ₃வத் து அஸ்ய ஸத: அபி₄வ்யக்தி யோகா₃த்
அஸ்ய-
– இந்த ஜ்ஞாநத்துக்கு
ஸத: எப்போதும் இருப்பினும்
அபி₄வ்யக்தி யோகா₃த் –ஒரு காலத்தில் வெளிப்பாடு என்று ஏற்பட முடியுமான படியால்
பும்ஸ்த்வாதி₃வத் து – ஆண்மை முதலானவற்றைப் போல
ஒரு குழந்தை பிறக்கும் போதே ஆண் தன்மை அல்லது பெண் தன்மை யோடும், அதற்கான உருப்புகளோடும் தான் பிறக்கிறது.(சரீரம் ஏழு தாதுக்களுடன் பிறக்கிறது – ) ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை அப் பண்புகள் வெளிப்படுவதில்லை -, உருப்புகள் இயங்குவதில்லை -. அதற்காக அது வரை அந்தக் குழந்தைக்கு ஆண் தன்மையோ பெண்தன்மையோ இல்லவே இல்லை என்று சொல்லி விட முடியாது. அதே போல் தான் ஜ்ஞாநம் எப்போதுமே ஆத்வாவிடம் இருந்தாலும், விழித்திருக்கும் போது மட்டும் வெளிப்படுகிறது -தோற்றமளிக்கிறது என்று கொள்வதே பொருத்தமானது. ஜ்ஞாநமே இல்லை என்னக் கூடாது.
(ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞாஸ்தி) என்னும் வாக்யமும், முக்திக்குப் பின் ஜ்ஞாநமே இல்லை என்று சொல்லவில்லை – உடலையும் ஆத்மாவையும் ஒன்றாக நினைக்கும் மயக்கமில்லை என்று தான் கூறுகிறது.

14-நித்யோ பலப்₃தி₄ப்ரஸங்க₃: அந்ய தர நியமோ வா அந்யதா₂-
இப்படி வேதாந்தம் சொன்ன பக்ஷத்தை ஏற்காமல் எங்கும் நிறைந்த ஆத்மா ஜ்ஞாநம் மட்டுமே என்று கொண்டால் எப்போதுமே அறிவும் அறிவின்மையும் சேர்ந்தே இருக்க வேண்டும், அல்லது எப்போதுமே அறிவு மட்டும் தான் இருக்க முடியும், அல்லது எப்போதுமே அறிவின்மை தான் இருக்க முடியும். எனவே அது பொருந்தாது.

இவ்வாறு இவ்வதிகரணத்தில் ஜ்ஞாநமே வடிவான ஆத்மா ஜ்ஞாநத்தை உடையவரும் கூட என்று நிரூபிக்கப்பட்டது

2-3-5-கர்த்ரதி₄கரணம் –ஜீவாத்மா தான் செயல் படுபவர் -கர்த்ரதி₄கரணம்–ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஆத்மா ஜ்ஞாந முடையவர் தான் என்று நிரூபிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த அதிகரணத்தில் அந்த ஆத்மா ’கர்த்தா’ அதாவது செயல்படுபவரா? அல்லவா? என்கிற ஆராய்ச்சி செய்யப்படுகிறது.-
பூர்வ பக்ஷியின் வாதம்-– ஆத்மா ’கர்த்தா’ அல்ல, அதாவது அவர் எந்தச் செயல்களையும் செய்வதில்லை . ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களை உடைய ப்ரக்ருதி- ப்ரதானம் என்ற அசேதனப் பொருள் தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது. ஆத்மாவைப் பற்றிப் போதிக்கும் பல ஸாஸ்த்ரங்கள் இவ்வாறே கூறுகின்றன-

கடோபநிஷத்தில் -ஹந்தா சேத் மன்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம்| உபௌ₄தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே || “ஒருஜீவாத்மா தன்னைக் கொல்பவனாக நினைத்தால் அவன் தன்னை உணர வில்லை என்று பொருள். ஜீவாத்மா கொல்வதே இல்லை ”

பகவத்கீதையில்- ப்ரக்ருதே : க்ரியமாணாநி கு₃ணை : கர்மாணி ஸர்வச : | அஹங்கார விமூடா₄த்மா கர்த்தா அஹம் இதி மந்யதே || “ப்ரக்ருதியின் குணங்களான ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்பவை தான் அனைத்துச் செயல்களையும் செய்கின்றன. உடலும் தானும் ஒன்று என்னும் மயக்கத்தில் இருப்பவன் தான் தன்னையே கர்த்தா என்று தவறாக நினைத்துக் கொள்கிறான்.
ஆக இப்படி பல இடங்களில் ஆத்மா எந்தச் செயலையும் செய்வதில்லை என்று சொல்லப்பட்டுள்ளதால் ஆத்மா கர்த்தா அல்ல, ப்ரக்ருதி தான் செயல் படுகிறது என்று பூர்வ பஷி கூறுகிறார்.

வேதம் வீணாகக் கூடாது (இந்த பூர்வ பக்ஷத்தை 7 ஸூத்ரங்களால் கண்டித்து உபநிஷத் சொல்வதை நிரூபிக்கிறார் வ்யாஸர்)1–கர்த்தா ஸாஸ்த்ரார்த்த₂ வத்த்வாத்–“(ஜீவாத்மா தான்) செய்பவர்; ஸாஸ்த்ரம் பயனுள்ளதானபடியால்” • வேதங்களில் உள்ள கட்டளைகள் எல்லாம்-

(ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க₃காம: யஜேத) அதாவது “ஸ்வர்கத்தை ஆசைப் படுபவன்(அதை அடைவதற்காக) ஜ்யோதிஷ்டோமம் என்னும் யாகத்தைச் செய்யக் கடவன்” என்பது போல் தான் உள்ளன. எனவே , யார் பயனை அடையப் போகிறாரோ (போ₄க்தா) அவர் தான் செயல்களைச் செய்பவர் (கர்த்தா) என்று தெரிகிறது. எனவே , இன்ப துன்பங்களை அநுபவிக்கக் கூடியஜீவாத்மா தான் கர்த்தாவாக(செயல் படுபவராக) இருக்க முடியும், ப்ரக்ருதி அல்ல.
மேலும், இந்த ஸூத்ரத்தில் வேதத்தை ’ஸாஸ்த்ரம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வ்யாஸர்.’ஸாஸ்த்ரம்’ என்ற சொல்லுக்கே ’ஸாஸநம் செய்வது – ஆணை யிடக் கூடியது-செயல் பட வைப்பது’ என்று பொருள். அதாவது, செயல் படாமல் இருப்பவனை செயல் பட வைக்கும் நூல் தான் ஸாஸ்த்ரம். ஒரு நூலானது அறிவை ஏற்படுத்துவதன் மூலம் தான் ஒருவனை செயல் பட வைக்க முடியும். எனவே , அறிவுடையவனான(ஜ்ஞாதா) ஜீவாத்மா தான் செயல்படுபவனாக(கர்த்தா) இருக்க முடியும், ப்ரக்ருதி அல்ல. –இதை ஏற்காமல், அறிவும் இல்லாத இன்ப துன்பங்களையும் அநுபவிக்காத ப்ரக்ருதி தான் செயல்படுகிறது என்றால், அப்போது ஸாஸ்த்ரத்தால் அந்த செயல்பாடு ஏற்பட முடியாத படியால் ஸாஸ்த்ரம் அனைத்தும் வீணாகி விடும்

(ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் போக்த்ருத்வம் -அறிவு செயல்பாடு அனுபவம் -மூன்றும் யாருக்கு யாரால் என்பதை சரியான அறிய வேண்டும்-ஆத்மா நித்யம் என்பதைக் காட்டவே கீழ்ச் சொன்ன வேத வாக்கியங்களும் கீதா ஸ்ம்ருதியும் – கொல்லவும் இல்லை கொலை பண்ணவும் இல்லை என்கிறது -கொல்லப்படுபவன் கொல்கிறேன் என்றும் நினைப்பவன் முட்டாள் என்கிறது -பிரக்ருதியுடன் தொடர்பால் வந்தவை செயற்கை -இயற்கையில் சுக வடிவம் -இங்கு குணங்களால் செய்விக்கப்படுகிறாய் என்பதைக் காட்டவே கீதா வசனம் –உடல் ஜீவாத்மா இந்திரியங்கள் மூச்சுக் காற்று பரமாத்மா ஐவரும் சேர்ந்து தான் செயல்களைச் செய்கிறார்கள் என்றும் கீதையில் உண்டே)

2–உபாதா₃நாத் விஹாரோ தே₃ஸாத் ச – “கைக் கொள்வதும் திரிவதும் சொல்லப்படுவதாலும்”
வேதத்தில்(ஏவமே வைஷ ஏதாந் ப்ராணாந் க்₃ருஹீத்வா ஸ்வே ஸரீரே யதா₂காமம் பரிவர்ததே )அதாவது “இந்த ஜீவாத்மா ஐந்து வகையான ப்ராண வாயுக்களையும் எடுத்துக் கொண்டு தன் ஆணைப்படி உடலுக்குள் திரிகிறார்” என்று சொல்லப் படுகிறது. இதில் தெளிவாக ப்ராணங்களை எடுத்தல்- கைக் கொள்ளுதல் என்ற செயலையும் திரிதல் என்ற செயலையும் செய்பவர் ஆத்மாவே என்று கூறப்படுள்ள படியாலும் எல்லாச் செயல்களிலுமே ஜீவாத்மா தான் கர்த்தாவாக இருக்க வேண்டும், ப்ரக்ருதி அல்ல.

ஸித்தாந்தியின் வாதங்கள் -தொடர்கிறது –
3) வ்யபதே ₃சாத் ச க்ரியாயாம், ந சேத் நிர்தே₃ச விபர்ய்ய:
க்ரியாயாம்
– எல்லாச் செயல்களிலும் வ்யபதே ₃சாத் (ஜீவாத்மாவையே செய்பவராக வேதம்) குறிப்பிடுகிற படியாலும்(அவரே கர்த்தா)
தைத்திரீய உபநிஷத்தில் (விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே கர்மாணி தநுதே அபி ச ) அதாவது “விஜ்ஞாநம் எனப்படும் ஜீவாத்மா யாகம் முதலான வைதிகச் செயல்களையும் ஸாதாரண உலகச் செயல்களையும் செய்கிறார்” என்று தெளிவாக ஜீவாத்மாவே கர்த்தா என்று சொல்லப்பட்டுள்ளது என்று காட்டுகிறார் வ்யாஸர்.
ந சேத்–(இவ்வாறு) இல்லை யென்றால்-(அதாவது இந்த வேத வாக்யத்தில் விஜ்ஞாநம் என்று சொல்லப்படுவது ஜீவாத்மாஅல்ல, புத்₃தி₄ எனப்படும் மனது தான்,-அது தான் செயல்களை யெல்லாம் செய்கிறது என்றால்)
நிர்தே ₃ச விபர்ய்ய:-குறிப்பிடுவதில் மாற்றம் இருந்திருக்க வேண்டும்–அதாவது, மனது என்பது கருவியான படியால் “விஜ்ஞாநத்தால் யாகம் செய்யப் படுகிறது” என்று சொல்லி யிருக்க வேண்டும், ஆனால் “விஜ்ஞாநம் யாகம் செய்கிறது” என்றே சொல்லப் பட்டுள்ளது. எனவே இங்கு விஜ்ஞாநம் என்பது மனது அல்ல, ஜீவாத்மாவே ; அவரே கர்த்தா.

4–உபலப்₃தி₄வத் அநியம:- “அறிவைப் போல் வரை யறை இல்லாமை ஏற்பட்டு விடும்”
முன் அதிகரணத்தில் “நித்யோபலப்₃த்₄யநுபலப்₃தி₄ப்ரஸங்க₃:…” என்ற கடைசி ஸூத்ரத்தில் இவ்வாறு கூறப்பட்டது– ஜீவாத்மா எங்கும் உள்ளார், அவர் ஜ்ஞாநமே வடிவமானவர் என்று பூர்வபக்ஷிகள் சொல்வது உண்மை யானால் ஒன்று எப்போதுமே நமக்கு அறிவு ஏற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அல்லது எப்போதுமே ஏற்படாமலேயே இருக்க வேண்டும். ஒரு ஸமயத்தில் அறிவு, ஒரு ஸமயத்தில் அறிவின்மை என்கிற வரை யறை பொருந்தாது”.
அதே போல் ப்ரக்ருதி தான் செயல்படுகிறது என்றால், அது எல்லா ஜீவாத்மாக்களுக்கும் பொதுவானபடியால், ப்ரக்ருதி ஒரு செயலைச் செய்ததும் ஒரே ஸமயத்தில் எல்லா ஜீவாத்மாக்களும் அதே பயனை அடைந்து விட வேண்டும், ப்ரக்ருதி செய்யா விட்டால் எல்லாருமே பயனை அடையாமல் இருக்க வேண்டும். சிலர் அடைந்து சிலர் அடையாமலிருப்பது என்கிற நியமம்(வரை யறை ) ஏற்பட முடியாமல் போய் விடும். அதனால் ஜீவாத்மா தான் கர்த்தா.-

( ஸித்தாந்தியின் வாதங்கள் தொடர்கின்றன )
5-சக்தி விபர்யயாத்
– “(இன்ப துன்பங்களை அநுபவிக்கும்) சக்தி மாறி யிருக்க வேண்டும்”
புத்தி எனப்படும் மனது தான் செயல்படுகிறது என்றால், அப்போது அச் செயல்களின் பயனாய் ஏற்படும் இன்ப துன்பங்களையும் அந்த மனது தான் அநுபவிக்க வேண்டும். அப்படியானால் போ₄க்த்ருத்வம் (இன்ப துன்பங்களை அநுபவிக்கும் சக்தி) என்பதும் ஜீவாத்மாவிட மில்லை -மனதில் தான் உள்ளது என்று மாற்றி ஏற்க வேண்டும்.
ஆனால் உங்கள் மதத்தில்“(புருஷ: அஸ்தி போ₄க்த்ரு பா₄வாத்) அதாவது“இன்ப துன்பங்களை அனுபவிக்கும் தன்மை யிருப்பதால் தான் ஜீவாத்மா என்ற பொருளை ஏற்கிறோம்”என்று கூறுகிறீர்கள். அந்த போ₄க்த்ருத்வமும் மனதுக்குத் தான் உள்ளது என்றால், ஜீவாத்மா என்ற ஒரு பொருளே இல்லை என்றாகி விடும்.

6–ஸமாத்₄ யபா₄வாச் ச – “ஸமாதி₄ என்பதும் ஏற்ப முடியாமல் போய்விடும்”
உங்களுடைய(ஸாங்க்ய) மதத்தில் “அசேதனமான ப்ரக்ருதி வேறு, அறிவுடையவனான நான் வேறு” என்கிற த்யானம் தான் மோக்ஷத்தை அடையும் வழி ஆகும். இதற்கு ஸமாதி₄ என்று பெயர் (நிரீஸ்வர சாங்க்ய மதத்தில் ஈஸ்வரனே இல்லை -நாம் த்யானம் என்பதை பரமாத்மாவைப் பற்றியே-இது வாசி ). ப்ரக்ருதி தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது என்றால், அப்போது ஸமாதி எனும் த்யானத்தையும் ப்ரக்ருதி தான் செய்ய வேண்டும். ஆனால், ப்ரக்ருதி எப்படி “நான் ப்ரக்ருதி அல்ல” என்று த்யானிக்க முடியும்? எனவே உங்கள் மதத்தில் ஸமாதி என்பதே பொருந்தாது

பூர்வ பக்ஷியின் கேள்வி–ஜீவாத்மா தான் கர்த்தா என்றால், ஏன் எப்போதுமே செயல்பாடுகள் இருப்பதில்லை?
பதில் –7– யதா₂ ச தக்ஷா உப₄யதா₂-
“தச்சனைப் போல் இரண்டு விதமாகவும் (பொருந்தும்)”
ஒரு தச்சன், தன்னிடம் எல்லாக் கருவிகளும் இருந்தாலும், தான் சில ஸமயங்களில் வேலை செய்கிறான், சில ஸமயங்களில் ஓய்வெடுக்கிறான். அதே போல் புலன்கள் என்ற கருவிகளை உடைய ஜீவாத்மாவும் தன்னுடைய ஆணைப்படி சில ஸமயங்களில் மட்டும் செயல்படுகிறார் என்பது பொருத்தமானதே . உங்கள் மதத்தின் படி ப்ரக்ருதி செயல்படுகிறது என்றால் தான் அதற்கு அறிவு- ஆணை இல்லாத படியால் எபபோதுமே செயல்பாடு ஓயாது.

ஆக, இவ்வாறு அறிவுடையவரான ஜீவாத்மா தான் கர்த்தா (செயல்படுபவர்) என்று நிரூபித்தார் வ்யாஸர்.

ஆத்மாவுக்கும் உத்பத்தி உண்டா-மூன்றாம் அதிகரணத்தில் சொல்லி -மேல் நான்கு அதிகரணங்கள் ஆத்மாவைப் பற்றிய ஆராய்ச்சி செய்கிறார் அன்றோ -கீழே-ஞாத்ருத்வம் -சொல்லி -மேல் கர்த்ருத்வம் சொல்லி -இனி போக்த்ருத்வம் பற்றிச் சொல்ல வேண்டுமே -தானாக செய்கிறாரா பிறர் வசத்தால் செய்கிறாரா -என்கிற விசாரம் வேண்டுமே –

2-3-6-பராயத்தாதி₄கரணம்-பரமாத்மா எப்படி ஜீவாத்மாக்களை இயக்குகிறார்?
ஜீவாத்மா பரமாத்மாவால் இயக்கப்படுகிறார்–2-3-6-பராயத்தாதி₄கரணம் – ஸங்கதி
– ஜீவாத்மா தான் கர்த்தா (செயல்படுபவர்) என்று முன் அதிகரணத்தில் நிரூபிக்கப்பட்டது. அதில் ஒரு ஸந்தேகம் எழுகிறது – ஜீவாத்மா தன்னிச்சையாக ஸ்வ தந்த்ரனாகச் செயல் படுகிறாரா?அல்லது பரமாத்மாவை எதிர்பார்த்து, அவரால் இயக்கப்பட்டு செயல் படுகிறாரா? என்று. அந்த ஆராய்ச்சியைத் தான் இந்த அதிகரணத்தில் வ்யாஸர் செய்கிறார்.
பூர்வபக்ஷம் – ஜீவாத்மா ஸ்வ தந்த்ரமாகத் தான் செயல் படுகிறார், பரமாத்மாவை எவ் விதத்திலும் எதிர்பார்ப்பதில்லை , அவருக்கு வஸப்பட்டும் இல்லை . ஏனென்றால், இப்படி ஏற்கா விட்டால், வேதத்தில் உள்ள கட்டளைகள் எல்லாம் வீணாகப் போய்விடும்.

வேதத்தில் “இதைச் செய்” என்ற கட்டளைகளுக்கு ’விதிகள்’ என்று பெயர். “இதைச் செய்யாதே ” என்ற
கட்டளைகளுக்கு ’நிஷேதங்கள்’ என்று பெயர். இந்தக் கட்டளைகள் அனைத்துமே ஜீவாத்மாவை நோக்கித் தான் உள்ளன. ஒருவருக்குக் கட்டளையிட வேண்டுமென்றால் அவர் தன் புத்தியாலே சிந்தித்து, முடிவெடுத்து ஒரு செயலைச் செய்யவோ செய்யாமலிருக்கவோ சக்தி உடையவராக இருக்க வேண்டும். ஆகவே , ஜீவாத்மா ஸ்வதந்த்ரமாகச் செயல் படுபவராகத் தான் இருக்க வேண்டும். பரமாத்மாவால் இயக்கப்படுபவராக இருந்தால், அவரைக் குறித்து வேதம் கட்டளை யிடுவதே வீணானதாகும்.

ஸித்தாந்தம் – 1–பராத் து தத் ச்ருதே : – “அந்த கர்த்ருத்வம் பரமாத்மாவிடமிருந்து; வேதம் சொல்வதால்”
ஜீவாத்மா செயல் படுவதெல்லாம் பரமாத்மாவை எதிர் பார்த்து தான், ஸ்வ தந்த்ரமாக அல்ல என்று வேதம் கூறுகிறது –
(அந்த: ப்ரவிஷ்ட: ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா) –“எல்லா ஆத்மாக்களுக்கும் உள்ளே புகுந்து இயக்குபவர் பரமாத்மாவே ”
(யஸ்ய ஆத்மா ஸரீரம், ய ஆத்மாநம் அந்தரோ யமயதி) –“யாருக்கு இந்த ஜீவாத்மா உடலாக உள்ளாரோ , யார் இந்த ஜீவாத்மாவை இயக்குகிறாரோ ”-

பர ஆயத்தம் -அவனால் நியமிக்கப்பட்டே செய்கிறான் –பராத் து -து –அன்றோ -தத் -அது -கீழ் சொல்லப்பட்ட கர்த்ருத்வம் -செயல்படும் தன்மை -பரமாத்மாவால் –பர -மிக உயர்ந்த -அவனிடம் இருந்து அன்றோ –ஆகாஸம் போல் எங்கும் பரவி ராஜா போல் நியமித்த ஸ்தாபனம் செய்கிறார் -ஆத்மா என்றாலே உள்ளே இருந்து இயக்குபவர் -ஆத்மா தனது சரீரத்தை இயக்க -பரமாத்மா அனைத்துக்குள்ளும் -ஆத்மாக்கள் உள்ளும் இருந்து –ஈஸ்வரன் -ஈஸன ஸாமர்த்யம் -கீதையிலும் தானே –யந்த்ர ஆரூடனான -மாயையால் ஸங்கல்பத்தால் இயக்குகிறேன் -என்றானே –

ஜீவனுக்குப் பரமாத்மா கொடுக்கும் ஸ்வாதந்த்ரம்
இங்கு ஒரு கேள்வி எழும்
– ஜீவாத்மா பரமாத்மாவால் தான் இயக்கப்படுகிறார் என்றால் வேதத்தில் அவரைக் குறித்த கட்டளைகள் எல்லாம் வீணாக ஆகி விடாதா? என்று. அதற்கான விடையை அடுத்த ஸூத்ரத்தில் அளிக்கிறார் வ்யாஸர்
2-ः க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ்து விஹித ப்ரதிஷித்₃த₄ அவையர்த்₂யாதி₃ப்₄ய:
விஹித ப்ரதிஷித்₃த₄ அவையர்த்₂யாதி₃ப்₄ய:
– வேதத்திலுள்ள விதிகளும் நிஷேதங்களும், அவற்றின் படி நடப்பவர்களுக்குக் கிடைக்கும் பகவானின் அநுக்ரஹமும் நிக்ரஹமும், அதன் விளைவான இன்ப துன்பங்கணளயும் வீணாகப் போகக் கூடாது என்பதற்காக
க்ருத ப்ரயத்ந அபேக்ஷ: து – ஜீவாத்மாவால் செய்யப்பட்ட முயற்சியை எதிர்பார்த்து அன்றோ (பரமாத்மா இயக்குகிறார்)
பரமாத்மா ஜீவாத்மாவை இயக்குவது என்பது, செயல் படாமலிருக்கும் ஜீவாத்மாவை ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வைப்பதல்ல. ஒரு ஜீவாத்மா தானாகச் சிந்தித்து, முடிவெடுத்து, ஒரு செயலில் முதல் முயற்சியை எடுக்கும் வரை பரமாத்மா உதா₃ஸீனனாக (தலை யிடாமல்) இருக்கிறார். நாம் செய்வதைப் பார்த்துக் கொண்டு அத்₄யக்ஷராக மட்டும் உள்ளார்.(உதாசீனனாகவும் –அத்யக்ஷ —அனுமந்தா ச –நடப்பதைப் பார்த்துக் கொண்டும் -அனுமதி வழங்கியும் அருளுகிறவன் ) அதற்குப் பின், இரண்டாவது வினாடியில், அச் செயலுக்குத் தன் அநுமதியை வழங்குகிறார். அந்த அநுமதி இல்லாமல் போனால் ஜீவனால் அந்தச் செயலைத் தொடர்ந்து செய்ய இயலாது. எனவே அவருக்கு வஸப்பட்டவனே .
1-விதி நிஷேங்களும் வீணல்ல – வேதத்தில் ஜீவனைக் குறித்து உள்ள விதிகளும் நிஷேதங்களும் வீணாக மாட்டா; ஜீவாத்மா முதல் முயற்சியில் முழுவதுமாக ஸ்வ தந்த்ரனாக (தன்னிச்சையாகச்) செயல் படுகிற படியால்.
2-பகவான் முழு முதற் காரணமே – இவ்வாறு கொள்வதால் பரமாத்மா உலகத்தில் அனைத்துக்கும் காரணம் என்பதும் காக்கப்படுகிறது. ஜீவாத்மாவுக்கு உடல், புலன்கள், ஜ்ஞாநம், இயங்கும் சக்தி என்னும் அனைத்தையும் பரமாத்மாவே அளிக்கிற படியால், ஜீவாத்மாவின் எல்லா முயற்சிகளுக்குமே பகவான் கண்டிப்பாகப் பொதுவான காரணமாக ஆவார்,
வெவ்வேறு செடிகள் அதனதன் விதையிலிருந்து உண்டாவதற்கு நிலம்-மண் பொதுவான காரணமாக இருப்பது போல்-அந்தந்தச் செயலுக்கு இரண்டாவது வினாடி தொடங்கி தன்னுடைய அநுமதியையும் கொடுக்கிறபடியால், சிறப்புக் காரணமும் ஆவார். ஆக மொத்தம், உலகில் அனைத்து அஸைவுகளுக்கும் கூடப் பரமாத்மா காரணம் தான்

சிலரை மட்டும் சிறப்பாக இயக்குகிறார்
3-பயனில் வரை யறை
– இப்படி பரமாத்மாவை எதிர்பார்த்தே ஜீவாத்மா இயங்கினாலும், அந்தச் செயல்பாடுகளின் பயனாக வரும் இன்ப துன்பங்களை ஜீவாத்மா மட்டுமே அநுபவிக்கிறார். பரமாத்மா அதற்குக் காரணமாக இருந்திருந்தாலும், அநுமதி கொடுத்திருந்தாலும், அவருக்கு அந்தச் செயல்களின் பயன் சேராது. இதை உலகத்திலேயே காணலாம் – ஒரு தந்தை தன் இரண்டு குழந்தை களுக்குத் தன்னுடைய செல்வத்தைப் பிரித்துக் கொடுக்கிறார். அதைக் கொண்டு ஒருவன் நற் செயல்களையும் மற்றொருவன் தீய செயல்களையும் செய்கிறார். அதன் விளைவாக வரும் புண்ய பாபங்களையும் இன்ப துன்பங்களையும் அவரவர் தான் அநுபவிக்க வேண்டும், அந்த தந்தைக்கு அதில் பங்கு கிடையாது. அதுபோல் பரமாத்மா நம்மை இயக்கினாலும் அவருக்கு கர்ம வினைகளில் தொடர்பு கிடையாது.

4-தயை உடைமை – சக்தி இருந்த போதும் தீய செயலில் ஈடுபடும் ஜீவாத்மாவைத் தடுக்காமல் இருந்ததால் பகவானை தயை அற்றவர் என்று கூறி விட முடியாது. அவர் கொடுக்கும் அநுமதி தான் அவர் நம் முயற்சிக்குக் கொடுக்கும் பரிசும் தண்டனையும். -ஒருவன் தவறு செய்வதை நிறுத்தின வினாடியிலேயே அவனுடைய அனைத்துப் பாபங்களை பகவான் மன்னிப்பதால் அவர் கண்டிப்பாக தயை உடையவரே (தத் அபிஸந்தி விராம மாத்ராத் -தவறு செய்யும் எண்ணம் நிறுத்திய உடனே -அல்ப அனுகூல்யமானவாறே -தயையைக் காட்டி அருளுகிறவன் ).

கேள்வி – பரமாத்மா நேரடியாகவே செயல் பட வைக்கிறார் என்றன்றோ வேதம் சொல்கிறது? –
(ஏஷ ஹி ஏவ ஸாது₄ கர்ம காரயதி தம் யம் ஏப்₄ய: லோகேப்₄ய: உந்நிநீஷதி)-அதாவது“பரமாத்மா யாரை உயர்த்த நினைக்கிறாரோ அவரை நற் செயல்களைச் செய்ய வைக்கிறார்” என்றும் (ஏஷ ஏவ அஸாது₄ கர்ம காரயதி தம் யம் அதோ ₄ நிநீஷதி) அதாவது “பரமாத்மா யாரைக் கீழே தள்ள ஆசைப் படுகிறாரோ அவர்களைத் தீய செயல்களைச் செய்யும்படி இயக்குகிறார்” என்றும் வேதம் சொல்கிறதே ?
பதில் – இது அனைவருக்குமல்ல. பகவானிடம் மிகவும் நெருக்கமான பக்தர்களுக்குத் தானே சில நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி, சில நற் செயல்களைச் செய்ய வைக்கிறார். மிகவும் பகைமை பாராட்டும் தீயவர்களுக்குச் சில தீய எண்ணங்களை ஏற்படுத்தி, சில தீய செயல்களைச் செய்ய வைக்கிறார். இது ஒரு சிலருக்கு மட்டுமே-(அதிமாத்ர அனுகூல்யர் -அதிமாத்ர பிரதிகூல்யர் -போல்வாருக்கு பிரதம பிரவிருத்தியிலேயே பகவான் செய்யும் செயல்கள் இவை-ததாமி புத்தி யோகம் –ஷிபாமி ஆஸூரா யோனி -இரண்டும் செய்வதாக தானே அருளிச் செய்துள்ளான் அன்றோ ) .
ஆக, ஜீவாத்மாவின் கர்த்ருத்வம் பரமாத்மாவின் வசத்துக்கு உட்பட்டது தான், ஸ்வதந்த்ரமானது அல்ல.

2-3-7-அம்சாதி₄கரணம்-ஜீவாத்மா பரமாத்மாவின் உடல்-
பூர்வபக்ஷிகளின் வாதங்கள்
2-3-7-அம்சாதி₄கரணம் – ஸங்கதி –
முன் அதிகரணத்தில் ஜீவாத்மா பரமாத்மாவின் வசத்தில் இயங்குகிறார் என்று கூறப்பட்டது. அப்படியானால் அவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்களா? அல்லது ஒருவரே தானா? என்று ஸந்தேஹம்.
வேதத்திலேயே பரமாத்மா படைப்பவர், இயக்குபவர், ஸர்வஜ்ஞர், தூய்மையானவர், ஸ்வதந்த்ரர் என்றும், ஜீவாத்மா படைக்கப் படுபவர், இயக்கப்படுபவர், அல்பஜ்ஞர், கர்மங்களால் மாசு பட்டவர், பரதந்த்ரர் என்றும் அவர்களுக்குள் வேறு பாட்டைச் சொல்லும் பே₄த₃ ஸ்ருதிகள் உள்ளன. அதே போல் ’தத் த்வம் அஸி’, ’அஹம் ப்ரஹ்மாஸ்மி’ ’அயம் ஆத்மா ப்ரஹ்ம’ போன்ற அபே₄த₃ ஸ்ருதிகள் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று என்று கூறுகின்றன. அதனால் தான் இந்த ஸந்தேஹம் எழுகிறது. இதை இந்த அதிகரணத்தில் ஆராய்கிறார்.

பூர்வ பக்ஷம் 1 – ந்யாய மதம் முதலானவை – பரமாத்மாவும் ஜீவாத்மாவும் முற்றிலும் வேறு பட்டவர்கள், தொடர்பற்றவர்கள்-வேதத்தில் உள்ள பே₄த₃ ஸ்ருதிகள் அப்படியே உண்மை யானவை . எனவே இருவரும் வெவ்வேறு தான். அபே₄த₃ ஸ்ருதிகள் ஒரு புகழ்ச்சிக்காக ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்கின்றன – கோயிலை சிறப்பாக நிர்வாஹம் சேய்யும் தர்ம கர்த்தாவைப் புகழ “இந்தக் கோயிலே இவர் தான்” என்று சொல்வது போல்.

பூர்வ பக்ஷம் 2 – அத்வைதம் முதலானவை – பரமாத்மாவே தான் அவித்யையால் மயங்கி ஜீவாத்மாவாக ப்ரமிக்கிறார்-இவர்கள் வேதத்தில் உள்ள அபே₄த₃ ஸ்ருதிகளை அப்படியே உண்மை என்று ஏற்கிறார்கள் – அதனால் ஜீவனும் பரனும் ஒன்று தான் என்கிறார்கள். பே₄த₃ ஸ்ருதிகள் நாம் உலகத்தில் பார்க்கும் பொய்யான வேறுபாடுகளைத் தான் மறுபடியும் ஒரு முறை கூறுகின்றன, உலகமனைத்தும் பொய் என்ற உண்மையைப் பிறகு உபதேசிப்பதற்காக என்கிறார்கள்.

பூர்வ பக்ஷம் 3 – பா₄ஸ்கர மதம் முதலானவை – பரமாத்மாவே ஓர் உபாதியின் சேர்க்கையால் ஜீவனாக ஆகிறார்-இரண்டாவது பூர்வ பக்ஷத்தில் ஒரே பரமாத்மா தன்னை பல ஜீவர்களாக நினைத்தால், ஒரு ஜீவன் முக்தி அடைந்தால் அனைவரும் முக்தி அடைய வேண்டி வரும். அதனால் அப்படிச் சொல்லாமல், பரமாத்மாவின் ஒவ்வொரு பகுதியிலும் உபாதிகள் என்று சில பொருள்கள் போய் சேர்கின்றன; ஒவ்வொரு உபாதியோடு கூடின பரமாத்மாவின் பகுதி தான் ஒவ்வொரு ஜிவாத்மா. எனவே ஓர் உபாதி பிரிந்தால் அந்த ஜீவாத்மா முக்தி அடைந்து விட்டார், மற்றவர்கள் இன்னும் அடைய வில்லை எனக் கொள்ளலாம்.-ஆக, பரமாத்மாவே உபாதிகளின் சேர்க்கையால் ஜீவர்களாகிறார் என்கிறார்கள்.

பரமாத்மாவின் பகுதி ஜீவாத்மா-ஸித்தாந்தம் – இந்த அதிகரணத்தில் 11 ஸூத்ரங்களால் இந்த பக்ஷங்களை யெல்லாம் தவறென்று நிரூபிக்கிறார் வ்யாஸர். பே₄த₃ ஸ்ருதிகளும் உண்மை யானவை , அதனால் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறு பொருள்கள் தான். அபே₄த₃ ஸ்ருதிகளும் உண்மை யானவை , எனவே பரமாத்மாவை விட்டுப் பிரியாத அம்சமாக (பகுதியாக) ஜீவாத்மா இருக்கிறார்.

1–அம்ச: நாநா வ்யபதே₃சாத் அந்யதா₂ ச அபி தா₃ச கிதவாதி₃த்வம் அதீ₄யத ஏகே
அம்ச:
– ஜீவாத்மா பரமாத்மாவின் அம்சம் (பகுதி) தான், முற்றிலும் தனிப்பட்டவரோ பரமாத்மாவேயோ அல்ல
நாநா வ்யபதே ₃சாத் – (பே₄த₃ ஸ்ருதிகளில்) வேறு பட்டவராகக் குறிப்பிடப் படுகிற படியால்
அந்யதா₂ ச – வேறு மாதிரியும் (அதாவது அபே₄த₃ ஸ்ருதிகளில் பரமாத்மாவோடு ஒன்றாகவும்) குறிப்பிடப் படுவதால்
அபி தா₃ச கித வாதி₃த்வம் அதீ₄யத ஏகே – மேலும் ஒரு சிலர் பரமாத்மாவே தாசன் கிதவன் முதலானவர் என்பதால்-(கிதவன்-ஏமாற்றுக்காரன்-வஞ்சகன்- பகைவன் கைதவம் கைடவன் கிதவன் தவன் கைவந்தவன் தகாதவன் -பர்யாய சொற்கள் )

முதல் பூர்வ பக்ஷத்தில், அபே₄த₃ ஸ்ருதிகள் எல்லாம் வெறும் புகழ்ச்சிக்காக, உண்மை யானவை அல்ல எனப்பட்டது-தவறு. அதர்வண வேதத்தில் (ப்₃ரஹ்ம தா₃சா: ப்₃ரஹ்ம தா₃ஸா: ப்₃ரஹ்ம இமே
கிதவா:)
அதாவது“ப்ரஹ்மமே தான் அடிமைகள், ப்ரஹ்மமே தான் ஏமாற்றுக்காரர்கள்” என்று பரமாத்மாவைத் தாழ்ந்தவர்களோடு ஒன்றாகச் சொல்வது எப்படி புகழ்ச்சிக்காக இருக்க முடியும்? எனவே அது உண்மையைத் தான் சொல்கிறது. பரமாத்மா அவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறபடியால் அவர்களாகவே சொல்லப்படுகிறார்.

இரண்டாம் பூர்வ பக்ஷத்தில் பே₄த₃ ஸ்ருதிகள் உலகத்திலுள்ள பொய்யான வேறுபாடுகளையே நினைவு கூறுகின்றன என்றதும் தவறு. அப்படியானால் நமக்குத் தெரியாத பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் இந்த வேதப் பகுதி நமக்குள்ள மயக்கத்தை வளர்க்கிறது என்றாகி விடும். வேதம் மயக்கத்தைப் போக்க வந்தது– வளர்க்க வந்ததல்ல.

மூன்றாவது பூர்வ பக்ஷத்தில் சொன்னது போல் ஒரே ப்ரஹ்மமே வெவ்வேறு உபாதிகளின் சேர்க்கையால் வெவ்வேறு தன்மை களை உடைய ஜீவர்கள் ஆகிறது என்று கூறியதும் தவறு. ஒருவரே வெவ்வேறு உபாதிகளால் வெவ்வேறு இடங்களில் தானே இயக்குபவராகவும் இயக்கப்படுபவராகவும் முரண்பட்ட பண்புகளோடு இருக்க முடியாது.

வெவ்வேறு; ஆனால் ஒன்று
2-மந்த்ர வர்ணாத் ् –
“மந்த்ரத்திலும் சொல்லப்படுவதால்”
வேதத்தில் (பாத₃: அஸ்ய ஸர்வா பூ₄தாநி) அதாவது-இந்த உலகிலுள்ளவை அனைத்தும் பரமாத்மாவின் ஒரு பாதம்’ எனப்படுகிறது. பாதம் என்பதற்கு பகுதி – அம்சம் என்று தான் நேரடியான பொருள்.

(ஜீவாத்மாக்கள் பலர் –ஸர்வ -எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில-அனைவரும் அவனின் அம்சமே)

3-அபி ஸ்மர்யதே – “மேலும் ஸ்ம்ருதியிலும் கூறப்படுகிறது (ஜீவாத்மா பரமாத்மாவின் அம்சம் என்று)”
பகவத் கீதையில் –(மமைவ அம்ச: ஜீவலோகே ஜீவ பூ₄த: ஸநாதன: )அதாவது“இந்த ஸம்ஸாரத்தில் உள்ள ஜீவாத்மாக்கள் அனைவரும் என்னுடைய அம்சங்கள் தான்” என்று கண்ணனும் ஸ்பஷ்டமாக அம்சம் என்ற சொல்லால் ஜீவாத்மா பரமாத்மாவின் ஒரு பகுதி தான் என்கிறார்.

ஜீவாத்மா பரமாத்மவின் அம்சம் (பகுதி) என்றால் ஜீவாத்மாவுக்கு இருக்கும் அறிவின்மை , துன்பங்கள், களைப்பு முதலான தோஷங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கும் உண்டு என்றாகி விடாதா? அடுத்த ஸூத்ரத்தில் பதிலளிக்கிறார் –
4–ப்ரகாசாதி₃வத் து; ந ஏவம் பர: – ப்ரகாசம் முதலானவை போல் அன்றோ ; பரமாத்மா அப்படி யல்ல
தீபத்தில் உள்ள ஜ்வாலை (சுடர்) என்பது ஒரு பொருள். ஒளி (ப்ராகாசம்) என்பது மற்றொரு பொருள் தான், ஆனால் அது ஜ்வாலையை விட்டுப் பிரியாமல் அதனுடைய அம்சமாக (பகுதியாக) உள்ளது. ப்ரகாசத்தோடு கூடிய ஜ்வாலை என்பது ஒரே பொருள் தானே . அதுபோல் ஜீவாத்மாவும் சரீரமும் வெவ்வேறு தான், ஆனால் பிரிக்க முடியாதபடியால் சரீரத்தோடு கூடிய ஆத்மா ஒன்றாகவே பேசப் படுகிறார். அது போல் ஜீவாத்மாவோடு கூடிய பரமாத்மாவே ஒரு பொருள் ஆகிறார்.
ஜீவாத்மா தனிப் பொருளாக இருந்தாலும் பரமாத்மாவிடமிருந்து பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறார்.
ந ஏவம் பர:
– “ஜீவாத்மா எப்படியோ அப்படி பரமாத்மா இல்லை ” என்கிறார் வ்யாஸர். அதாவது, இப்படி பகுதியாக இருக்கும் பொழுது, ப்ரகாசத்துக்கு உள்ள ’பரவுகிற’ தன்மை ஜ்வாலைக்கு இல்லை , உடலுக்கு உள்ள வளரும் -அழியும் தன்மை ஆத்மாவுக்கு இல்லை . அதுபோல் தான் ஜீவாத்மா என்கிற பகுதிக்கு (அம்சத்துக்கு) இருக்கும் அறிவின்மை , துக்கம் முதலானவை பரமாத்மாவுக்கு வராது.
ஆக இவ்வாறு பே₄த₃ ஸ்ருதிகள் அபே₄த₃ ஸ்ருதிகள் இரண்டுமே உண்மை யாகின்றன. இதுவே சரியான பொருளாகும் –

(ஆதி -கோத்வம்-கோ –உடல் ஆத்மா வேறாக இருந்தாலும் நாய் என்றதும் இரண்டையும் குறிக்கும் அன்றோ -அம்சமாக விட்டுப் பிரியாமல் இருப்பவை இவையும் – அப்ருதக் ஸித்த விசேஷணம் -உடலை விட்டுப் பிரிந்தால் சரீரம் இருக்காதது போல் பரமாத்மாவை விட்டு பிரிந்தால் ஜீவாத்மாவுக்கு ஸத்தையே இருக்காது —ந ஏவம் பர:உடலில் உள்ள குறைபாடுகள் ஆத்மாவுக்குத் தட்டாதவை போல் ஆத்மாவுடைய தோஷங்கள் பரமாத்மாவுக்கும் தட்டாதே -அபஹத பாப்மா இத்யாதி-)

தகுதிகளும் இன்ப துன்பங்களும் வெவ்வேறு
5- ஸ்மரந்தி ச
– “ஸ்ம்ருதியிலும் சொல்லப்படுகிறது (ஜீவாத்மா பரமாத்மவின் சரீரமானதால் அம்சம் என்று)”பராசர மஹரிஷி தன் விஷ்ணு புராணத்தில் இந்த ஜீவாத்மா பரமாத்மாவுக்கு சரீரமாக உள்ளதால் அம்சம் என்கிறார்.
ஏகதே ₃சஸ் தி₂தஸ்ய அக்₃நே : ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா₂ | பரஸ்ய ப்₃ரஹ்மண: சக்தி: ததே₂த₃ம் அகி₂லம் ஜக₃த் ||
சுற்றும் விரிந்திருக்கும் ஒளியானது எப்படி ஓரிடத்தில் இருக்கும் நெருப்புக்கு (அம்சமாக) இருக்கிறதோ ,அது போல் தான் இந்த உலகமனைத்தும் பரமாத்மாவுக்கு (அம்சமாக) இருக்கிறது.
(தத் ஸர்வம் வை ஹரே : தநு: ) – “அந்த உலகனைத்தும் ஹரியின் தநு (உடல்) ஆகிறது

கேள்வி – ஜீவாத்மாக்கள் அனைவருமே பரத்மாவுக்கு உடல் என்றால் அவர்களுக்குள் எந்த வேறுபாடுகளும் இல்லை -பிறகு ஏன் வேதங்களில் சிலருக்கு மட்டும் சில செயல்களில் தகுதி உண்டு, சிலருக்கு இல்லை என்று கூறப் படுகிறது?
6-அநுஜ்ஞா பரிஹாதரௌ ् தே₃ஹ ஸம்ப₃ந்தா₄த் ஜ்யோதிராதி₃வத்
அநுஜ்ஞா பரிஹாதரௌ
– அநுஜ்ஞா அநுமதி. பரிஹாரம் அநுமதி யின்மை . வேதத்தில் சிலருக்கு மட்டும் சில செயல்களைச் செய்ய அநுமதியும், சிலருக்கு அது தவிர்க்கப் படுவதும்
தே₃ஹ ஸம்ப₃ந்தா₄த் – (அவனவன் முன் வினைகளின்படி வெவ்வேறு விதமான) உடலோடு உள்ள தொடர்பால்
ஜ்யோதிராதி₃வத் – நெருப்பு முதலானவற்றைப் போல.
நெருப்பு ஒன்றாக இருந்தாலும், ஒருவர் வீட்டிலிருந்து நெருப்பு வாங்கிக் கொள்வோம், மயானத்திலிருந்து வாங்கிக் கொள்ள மாட்டோம் – தாழ்ந்த பொருளோடு தொடர்பு பட்டதால்.

(ஆதி -அன்னம்-பெருமாள் அமுது செய்து அருளிய ஒன்றே கொள்ளுகிறோம் – –உச்சிஷ்டம் -சிலர் இடம் தான் கொள்ளுகிறோம் -சிலர் இடம் கொள்ள மாட்டோம் -)

கேள்வி – பல ஜீவாத்மாக்கள் உள்ளார்கள் என்றால் ஒருவர் இன்ப துன்பங்களை மற்றொருவர் ஏன் அநுபவிப்பதில்லை ?
பதில் – 7-அஸந்ததே : ச அவ்யதிகர: – “அணுவான படியாலும் வேறான படியாலும் கலப்பு இல்லை ”
பரமாத்மாவே தான் அனைத்து ஜீவாத்மாக்கள் என்றாலோ ஜீவாத்மாக்கள் அநைவரும் விபுக்கள் என்றாலோ தான் எல்லாரும் எல்லா உடல்களோடும் தொடர்புள்ளபடியால் இன்ப துன்பங்கள் அனைவருக்கும் வரும், எங்கள் மதத்தில் ஜீவாத்மாக்கள் தனித் தனியான படியாலும் அணுவானவரான படியாலும் இந்த தோஷம் வராது –

மற்ற மதங்களில் குற்றங்கள்
பூர்வபக்ஷீ 2 –
எங்கள் மதத்திலும் ப்ரஹ்மம் அவித்₃யை என்ற தோஷத்தால் ஏற்பட்ட மயக்கத்தால் தான் ஜீவாத்மா ஆகிறார் என்கிறபடியால், அந்தந்த ஜீவனுக்கு இன்ப துன்பங்கள் தனித் தனியாக இருக்கலாமே ?
பதில் – 8- ஆபா₄ஸ ஏவ ச – “அந்தக் காரணங்கள் எல்லாம் தவறானவை”
ப்ரகாசமே வடிவமான விளக்கை இருட்டு மூடுவது என்பது விளக்கின் அழிவு தான், வேறல்ல, அதுபோல் ஜ்நாநமே வடிவமான ப்ரஹ்மத்தை அவித்₃யை (அறிவின்மை ) மூடுகிறது என்று நீங்கள் சொல்வது ப்ரஹ்மமே அழிகிறது என்று சொல்வதாகும். அது தவறானது.(ச -ஸ்ருதி ஸ்ம்ருதிகளுக்கும் பொருந்தாது)

பூர்வபக்ஷீ -3 – எங்கள் மதத்தில் உண்மையான உபாதிகளால் பிரிக்கப்பட்ட பரமாத்மாவின் பகுதிகள் தான் ஜீவாத்மா. அதனால் அவர்களுக்கு தனித் தனியாக இன்ப துன்பங்கள் இருப்பது பொருந்துமே ?
பதில் – 9- அத் ₃ருஷ்ட அநியமாத் – “அத்₃ருஷ்டத்துக்கு வரை யறை இல்லாத படியால் (பொருந்தாது)”
வெவ்வேறு உபாதிகள் வந்து பிரிக்கைக்குக் காரணமாக அத்ருஷ்டம் ஒரே பரமாத்மாவிடம் தான் இருக்கிற படியால், அதன் விளைவாக வரும் இன்ப துன்பங்கள் அனைத்துமே ஒரே பரமாத்மவுக்குத் தான் வந்து சேரும் உங்கள் மதத்திலும்.

10-அபி् ₄ஸந்த்₄யாதி₃ஷு அபி ச ஏவம் – “ஸங்கல்பம் முதலானவற்றிலும் அப்படியே ”
உபாதிகள் வந்து ப்ரஹ்மத்தோடு சேர்வதற்குக் காரணமானது அத்ருஷ்டம் என்கிறீர்கள். அதற்கும் காரணமானது செயல், அதற்கு முயற்சி வேண்டும், அதற்கு முன் ஸங்கல்பம் (எண்ணம்) வேண்டும். இவை அனைத்தும் ப்ரஹ்மத்திடம் தான் இருக்க வேண்டும், ஏனென்றால் இன்னும் ஜீவன் என்று ஒருவர் ஏற்படவே இல்லை . ஆக ஸங்கல்பம் முதலானவை பொதுவாக ப்ரஹ்மத்திடம் இருந்தால் எல்லா இன்ப துன்பங்களும் அவருக்கே வரும்.

11-ப்ரதே ₃ச பே₄தா₃த் இதி சேத் ந அந்தர் பா₄வாத்
ப்ரதே ₃ச பே₄தா₃த் –
அந்தந்த உபாதி₄ ப்₃ரஹ்மத்தின் வெவ்வேறு இடத்தில் சேர்கிறபடியால் இன்ப துன்பங்கள் தனி
இதி சேத் ந அந்தர்பா₄வாத் – என்று சொல்வது தவறானது, எல்லாம் ப்ரஹ்மத்தின் ப்ரதேசமான படியால் இறுதியில் அந்தந்த ப்ரதேசத்தில் அநுபவிக்கும் இன்ப துன்பங்களும் எல்லாம் ப்ரஹ்மத்தினுடைய தாகத் தான் ஆகும்.

ஆம்னாய அன்யோன்ய பாதம் -வேத முரண்பட்ட ஸ்ருதிகளை சமன்வயப்படுத்தி -இந்த பாதத்தால் வேத வ்யாஸரும் பாஷ்யகாரரும் விளக்கி அருளுகிறார்கள் -தேசிகன்

அடுத்து நான்காம் பாதம் -பிராண பாதம் -எட்டு அதிகரணங்கள்-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading