அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம் ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:
——-
ஸமந்வய அத்யாயம் – வேத வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவையே ஜகத்துக்குக் காரணம் என்று சொல்லுகின்றன என்கிறார்
இயற்கையே -ப்ரக்ருத்தியே காரணம் என்பாரும்
ஜீவாத்மாவே காரணம் என்பாரும் உண்டே
ஆகவே ஆராய்ந்து ஸித்தாந்தம் நிரூபிக்க வேண்டுமே
வெவ்வேறு விதமான வேத வாக்யங்களைக் கொண்டு நிரூபிப்பதால் நான்கு பாதங்கள்
முதல் பாதம் – மிகவும் தெளிவற்ற அடையாளங்களால் ஜீவாத்மாவையையோ ப்ரக்ருதியையோ ஜகத் காரணம் என்று சொல்வது போல் தோன்றும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அவையும் பரமாத்மாவையே சொல்கின்றன என்னுதல்
இரண்டாம் பாதம் – சிறிது தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்
மூன்றாம் பாதம் – சிறிது தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்
நான்காம் பாதம் – மிகவும் தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்
——–
மூன்றாம் பாதத்தின் ஸங்கதிகள்
முதல் அத்யாயத்தின் இரண்டாவது மூன்றாவது நான்காவது பாதங்களில் பரமாத்மாவைத் தவிற வேறு ஒருவரும் ஜகத் காரணமாக இருக்க முடியாது என்று அந்ய யோக₃ வ்யவச்சே₂தம் செய்யப் படுகிறது.-அதிலும் இரண்டாவது பாதத்தில் தெளிவற்ற வாக்யங்களைக் கொண்டு பூர்வ பக்ஷீ எழுப்பிய ஐயங்களுக்கு வ்யாஸர் பதிலுரைத்தார், இப் போது மூன்றாம் பாதத்தில் தெளிவான வாக்கியங்களைக் கொண்டு பூர்வபக்ஷீ எழுப்பும் ஸந்தேஹங்களுக்கு விடை அளிக்கிறார்.-இரண்டாம் பாதத்தில் ப்ரஹ்மம் சேதந மற்றும் அசேதநப் பொருள்களைத் தனக்கு உடலாகக் கொண்டு, தான் அந்தர் யாமியாய் இருப்பவர் என்று சொல்லும் வாக்கியங்களை ஆராய்ந்தார். இனி மூன்றாம் பாதத்தில் சேதந அசேதநப் பொருள்களுக்கு ப்ரஹ்மம் ஆதாரமாய் (தாங்குபவராய்) இருக்கிறார் என்று கூறம் வாக்கியங்களை ஆராய்கிறார்.
ஸ்வ நிஷ்டா
கீழ் இரண்டாவது பாதத்தின் 6 அதிகரணங்களாலே பரமாத்மாவின் முக்கியமான பண்புகள் சொல்லப்பட்டன.
1-ஸ்வாதீ₄ந அசேஷ ஸத்தா ஸ்தி₂தி யதநதயா ஸர்வ பா₄வேந திஷ்ட₂ந்
2- க்₃ரஸ்தேசேஷ:
(3) அக்ஷி நித்ய ஸ்தி₂தி:
(4) அகி₂லதநு:
(5) கல்பித அக்₃ந்யாதி₃ கா₃த்ர: |
(6) ஸ்வர் லோகாத்₃யங்க₃வைஸ்வாநர மதி விஷய: லக்ஷணஸ்ய ஆதி₃மஸ்ய
ப்ரோக்த: பாதே ₃ த்₃விதீயே ஸ்ருதி நிகர சிரச் சேக₂ர: ஶ்ரீநிவாஸ: ||
1-எல்லாப் பொருள்களின் உண்டாக்கம், இருப்பு, செயல்பாடு இவை யனைத்தும் தன் அதீனமாக தானே அனைத்துப் பொருள்களாகவும் இருக்கிறார்
2-அனைத்தையும் ஸம்ஹரிப்பவர்
3-எப்போதும் நம் கண்ணில் உணர்பவர்
4-உலகிலனைத்தையும் தனக்கு உடலாகக் கொண்டவர்
5-அக்நி முதலானவற்றை உடலாகக் கொண்டவராக த்யானிக்கப்பட வேண்டியவர்
6-விண்ணுலகம் முதலானவற்றை அங்கங்களாகக் கொண்டவராக த்யானிக்கப்பட வேண்டியவர் என்று முதல் அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தில் ஶ்ரீநிவாஸனான பரமாத்மா சொல்லப் பட்டார்.
1.3.1 த்யுப்₄வாத்₃யதி₄கரணம்
நெறி வாசல் தானேயாய் நின்றான்
த்யுப்வாத்யதிகரணத்தின் பின்புலம்
1.3.1 த்₃யுப்₄வாத்₃யாத்₃யதி₄கரணம் – இந்த அதிகரணத்தின் முதல் ஸூத்ரம் ’த்₃யுப்₄வாதி₃’ என்று துவங்குகிறபடியால் இவ்வதிகரணம் இப் பெயரைப் பெற்றது.
ஸங்கதி – 1.2.5-அத்₃ருச்யத்வாதி₃கு₃ணகாதி₄கரணத்தில் முண்டக உபநிஷத்தை ஆராய்ந்து வந்தார் வ்யாஸர். அப்போது உலகத்தை யெல்லாம் உடலாகக் கொண்டவர் என்று சொன்னபடியால், அதோடு தொடர்பு பட்டதாய் 1.2.6-வைஸ்வாநர அதிகரணத்தில் உலகத்தை உடலாகக் கொண்டவர் யார் என்ற ஆராய்ச்சியைச் செய்தார். அது முடிந்ததும், விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்காக முண்டக உபநிஷத்தின் அடுத்த பகுதியை 1.3.1 அதிகரணத்தில் ஆராய்கிறார்
ஒரே உபநிஷத்தாய் இருந்தாலும் தெளிவான வாக்ய விசாரமாக இருப்பதால் இது மூன்றாம் பாதத்துக்கு வந்தது
உபநிஷத்தில் த்₃யயௌ: ப்ருதி₂வீ -சுருக்கமாக த்₃யு பூ₄ என்று ஸூத்ரம்
விஷய வாக்யம் – இரண்டாம் முண்டகத்தின் இரண்டாம் கண்டத்தில் உள்ள ஒரு வாக்யம்
யஸ்மிந் த்₃யயௌ: ப்ருதி₂வீ ச அந்தரிக்ஷம் ஓதம் மந: ஸஹ ப்ராணை : ச ஸர்வை : |
தமேவ ஏகம் ஜாநத₂ ஆத்மாநம் அந்யா: வாச: விமுஞ்சத₂……. ||
எவரிடத்தில் த்₃யௌ: (விண்ணுலகம்), ப்ருதி₂வீ (பூமி), அந்தரிக்ஷம் (வானம்), மனது, ஐந்து ப்ராண வாயுக்கள் இவை யெல்லாம் தாங்கப் படுகின்றனவோ , அந்த ஆத்மா ஒருவரையே அறிந்து கொள்வாய். மற்றப் பொருள்களைப் பற்றின பேச்சை யெல்லாம் கை விட்டு விடு
ஸம்சயம் – இங்கு த்₃யு பூ₄ முதலான வற்றுக்கு ஆதாரமாகச் சொல்லப் படுபவர் ஜீவாத்மாவா? பரமாத்மாவா–
பூர்வ பக்ஷியின் யுக்திகள்
பூர்வ பக்ஷம் – இங்கு த்₃யு பூ₄ முதலானவற்றின் ஆதாரமாகச் சொல்லப் படுபவர் ஜீவாத்மாவே . ஏனெனில் –
1- (அரா இவ ரத₂நாநபௌ₄ ஸம்ஹதா யத்ர நாட்₃ய:) அதாவது“சக்கரத்தின்
அரங்கள் நடுவிலுள்ள நாபியில் சேர்வது போல் உடலிலுள்ள நாடிகள் எல்லாம் இவரிடம் சேர்கின்றன” என்று சொல்லப் படுகிறது. ஜீவாத்மா தான் நாடிக்களைப் பயன்படுத்துபவர், அவற்றோடு சேர்ந்தவர்
2-(ஸ ஏஷ: அந்த: சரதி ப₃ஹுதா₄ ஜாயமாந:) அதாவது-“உள்ளே இருக்கும் இவர் பலவிதமான பிறவிகணை எடுக்கிறார்” என்று சொல்லப் பட்டுள்ளது. ஜீவாத்மா தான் தன் கர்மங்களின் காரணமாக தேவன் மனிதன் விலங்கு தாவரம் கல் முதலான பல விதமான பிறவிகளை எடுப்பவர்.
3- (ஓதம் மந: ஸஹ ப்ராணை: ச ஸர்வை : )-அதாவது “மனதும் ஐந்து விதமான ப்ராண வாயுக்களும் இவரால் தாங்கப் படுகின்றன” என்று சொல்லப் பட்டுள்ளது. மனதும் ப்ராணனும் ஜீவாத்மாவுக்குத் தானே .
கர்மங்கள் மூலம் உலகங்களை ஜீவாத்மா தாங்குகிறது என்று சொல்லலாம் அன்றோ
ஸித்தாந்தம் – இந்த பூர்வ பக்ஷத்தை 6 ஸூத்ரங்கைளால் நிராகரித்து, சரியான பொருளைக் காட்டுகிறார் வ்யாஸர்
1-த்₃யுப்₄வாதி₃ ஆயதநம் ஸ்வ சப்₃தா₃த்
த்₃யுப்₄வாதி₃ – விண்ணுலகம் மண்ணுலகம் முதலானவற்றின்
ஆயதநம் – ஆதாரம் (பரமாத்மாவே )
ஸ்வ சப்₃தா₃த் – அவருடைய சொல்லால் அதாவது அவருக்கே உரித்தான சொல்லால்
இங்கும் அந்ய பதம் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும் -அசாதாரண – அவருடைய சொல்லால் அதாவது அவருக்கே உரித்தான சொல்லால்-சொல்வதால் வேறு யாருக்கும் பொருந்தாதே
ஸித்தாந்த யுக்திகள்
ஸ்வ சப்₃த₃ம் அதாவது-பரமாத்மாவுக்கே உரித்தான சொல்’ இங்கு என்ன உள்ளது என்று பார்ப்போம் –
1-(அம்ருதஸ்ய ஏஷ ஸேது:) – ஸேது என்றால் அக்கரையை அடைவதற்கான பாலம் என்று பொருள். “அம்ருதம் எனப்படும் மோக்ஷத்தை அடைவதற்கான வழி இவர் தான்” எனப்படுகிறது. இது பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும்.(தமேவம் வித்₃வாந் அம்ருத: இஹ ப₄வதி)-அதாவது“அந்தப் பரமாத்மாவை அறிந்தவன் முக்தி அடைகிறான்” என்று உபநிஷத்தே கூறுகிறது.
2-(ஆத்மாநம் ஜாநத₂) – “அந்த ஆத்மாவை அறிய வேண்டும்” என்று சொல்லப் படுகிறது. ஆத்மா என்ற சொல்லுக்கு ’ ஒரு உடலுக்குள்ளே புகுந்து அதை இயக்குபவர்’ என்று பொருள். கல்லின் ஆத்மா, பூனையின் ஆத்மா, மனித உடலின் ஆத்மா என்று தான் பொதுவாகச் சொல்ல வேண்டும். எந்த அடை மொழியுமின்றி ’ஆத்மா’ என்று பொதுவாகச் சொன்னால், உலகப் பொருள்கள் அனைத்துக்கும் ஆத்மாவான பரமாத்மாவையே குறிக்கும்.
3-(யஸ் : ஸர்வஜ்ஞஸ் : ஸர்வ வித்) – “யார் ஸர்வஜ்ஞனோ ” என்று உலகங்களுக்கு எல்லாம் ஆதாரமான ஆத்மாவை ஸர்வஜ்ஞன் என்று சொல்கிற படியாலும் இது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.
இப்படி பூர்வபக்ஷீ மூன்று யுக்திகளையும் ஸித்தாந்தீ மூன்று யுக்திகளையும் சொன்னால் எப்படி முடிவெடுப்பது? அதைக் காட்டுகிறார் பகவத் ராமாநுஜர். வேதத்தின் எந்த ஒரு பகுதியையும் தவறானது என்று கூற இயலாது -. எனவே எந்தப் பொருளைக் கொண்டால் இங்கு காட்டப்பட்ட 6 வாக்கியங்களுமே பொருந்தும் என்று பார்க்க வேண்டும்.
ஜீவாத்மா என்று பொருள் கொண்டால் ஸித்தாந்தீ காட்டின மூன்று வாக்கியங்களும் முற்றிலும் பொருந்தாது.-ஆனால் பரமாத்மா என்று பொருள் கொண்டால் பூர்வ பக்ஷீ காட்டிய வாக்கியங்களுக்கும் ஒருவாறு பொருள் கொள்ளலாம் –
1-இதயத்தில் பரமாத்மா இருக்கிற படியால் நாடிகள் அவரிடம் சேர்கின்றன
2-பரமாத்மாவும் தான் ஆசைப் பட்டு பல விதமான அவதாரங்களைச் செய்கிறார்
3-பரமாத்மா உலகமனைத்தையும் தாங்குகிற படியால் மனதுக்கும் ப்ராணனுக்கும் ஆதாரம் என்பதும் பொருந்தும். ஆகவே த்₃யு பூ₄ முதலானவற்றின் ஆதாரம் பரமாத்மாவே .
வேண்டித் தேவர் இரக்கவும் –தானே விரும்பி -தேவர்களும் வேண்ட அவதாரம்-பஹுதா விஜாயதே -சன்மம் பலபல செய்து -பஹுதா ஜாயமானம் பொருந்தும் –
1.3.1 த்யுப்₄வாத்₃யதி₄கரணம்-பரமாத்மாவே உலகங்களைத் தாங்குபவர்
1.3.1 த்₃யுப்₄வாத்₃யாத்₃யதி₄கரணத்தில் உலகங்களை எல்லாம் தாங்குபவராகச் சொல்லப் பட்டவர் ஜீவாத்மா தான் என்று பூர்வ பக்ஷீ வாதிட, பரமாத்மாவுக்கே உரித்தான சொற்கள் இங்குள்ள படியால் இது பரமாத்மாவையே குறிக்கிறது என்று இவ்வதிகரணத்தின் முதல் ஸூத்ரத்தால் வேத வ்யாஸர் நிரூபித்தார். இனி மேலுள்ள ஸூத்ரங்கள் –
2- முக்த உபஸ்ருப்ய வ்யபதே₃சாத் ச – “முக்தனாலே அடையப் படுபவராகச் சொல்கிறபடியாலும்” உலகத்துக்கு எல்லாம் ஆதாரமாகச் சொல்லப்பட்ட பொருள் தான் முக்தி அடைந்த ஜீவாத்மாவால் அடையப்பட வேண்டியவர் என்று முண்டக உபநிஷத் கூறுகிறது –யதா₃ பஸ்ய: பஸ்யதே ருக்ம வர்ணன் கர்தாரம் ஈசம் புருஷம் ப்₃ரஹ்ம யோநிம் |
ததா₃ வித்₃வாந் புண்ய பாபே விதூ₄ய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யம் உபைதி ||-எப்போது ஒரு உபாஸகன் 1-தங்கம் போன்ற ஒளி பொருந்தியவராய், 2-உலகத்தைப் படைத்தவராய்,3- உலகப் பொருள்களை எல்லாம் இயக்குபவராய், 4-உலகத்துக்குக் காரணமாய் உள்ள பரம புருஷனைத் த்யானத்தால் காண்கிறானோ , அப்போது அவன் எல்லா பாப புண்யங்களையும் கழித்து, ப்ரக்ருதியோடு இருக்கும் தொடர்பையும் வெட்டிக் கொண்டு
பரமாத்மாவோடு ஒற்றுமை அடைகிறான் (அதாவது முக்தி அடைகிறான்).
யதா₂ நத்₃ய: ஸ்யந்த₃மாநா: ஸமுத்₃ரே அஸ்தம் க₃ச் ₂ந்தி நாம ரூபே விஹாய |
ததா₂ வித்₃வாந் நாம ரூபாத் விமுக்த: பராத் பரம் புருஷம் உபைதி தி₃வ்யம் ||
நதிகள் எல்லாம் தங்கள் தனிப்பட்ட பெயர்களையும் வடிவங்களையும் இழந்து கடலில் கலப்பது போல், உபாஸகன் ஸம்ஸாரத்திலிருக்கும் பெயர் உறுவ வேறுபாடுகளை எல்லாம் கடந்து பரம புருஷனை அடைகிறான்.-இப்படி முக்தனால் அடையப்படுபவர் பரமாத்மாவே ஒழிய ஜீவாத்மா அல்ல, எனவே அவரே தான் உலகங்களுக்கு எல்லாம் ஆதாரமானவரும் என்று தெளிவாகிறது.
பிரளயத்தில் நாம ரூபம் இல்லை -அத்தை வியா வ்ருத்திப்பதற்காக இங்கு முக்தனுக்கும் என்றும் சேர்த்து அருளிச் செய்கிறார்
இரண்டு ஸூத்திரங்களையும் சேர்த்துப் பார்த்து உபாயமும் உபேயமும் இவனே -நெறி வாசல் தானேயாய் நின்றான் அன்றோ –இங்கு தாங்குபவன் என்றும் சொல்ல வந்த பிரகரணமாக இருந்தும் இவ் வர்த்தம் கிடைக்கிறது அன்றோ –
ஜீவாத்மா உலகங்களுக்கு ஆதாரம் அல்ல
3-ந அநுமாநம் அதச் ச₂ப்₃தா₃த் ப்ராண ப்₄ருத் ச
அநுமாநம் – அநுமானத்தால் அறியப்படும் ப்ரதானம் என்ற மூல ப்ரக்ருதி
ந – உலகங்களுக்கு எல்லாம் ஆதாரம் அல்ல
அதச் ச₂ப்₃தா₃த் – அதைச் சொல்லும் பதம் இல்லாதபடியால்
ப்ராண ப்₄ருத் ச – ப்ராணனைத் தாங்கும் ஜீவாத்மாவும் அல்ல (அதே காரணத்தால்)
உலகங்களுக்கு எல்லாம் ஆதாரமாக இங்கு சொல்லப்பட்டது அசேதனமான மூல ப்ரக்ருதி என்கிற கேள்வியே எழவில்லை , ஏன் எனில் ப்ரதானத்தைக் குறிக்கும் சொல்லோ அடையாளமோ இங்கு காணப்படவில்லை . அதே போல், ப்ராண வாயுவைத் தரிக்கும் ஜீவாத்மாவைக் காட்டும் சொற்களோ அடையாளங்களோ இல்லாத படியால் இங்கு சொல்லப் படுபவர் ஜீவாத்மாவும் அல்ல என்று தெரிகிறது.
4-பேத₄₃ வ்யபதே₃சாத் ச – “-உலகங்களுக்கு எல்லாம் ஆதாரமான பொருளை, ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவராகச் சொல்கிற படியாலும் -அது ஜீவாத்மா அல்ல-”
ஸமாநே வ்ருஷே புருஷோ நிமக்₃ந: அநீசயா சோசதி முஹ்யமாந: |
ஜுஷ்டம் யதா₃ பஸ்யதி அந்யம் ஈசம் அஸ்ய மஹிமாநம் இதி வீதசோக: ||-ஸம்ஸாரத்தில் மூழ்கி யிருக்கும் ஜீவன் அசேதனமான ப்ரக்ருதியின் காரணமாக மயங்கி, சோகம் அடைகிறார்-அதைக் காட்டிலும் வேறு பட்டவராய், எல்லாருக்கும் ஈஸ்வரனாய், தன் கர்மங்களாலே மகிழ்பவரான பரமாத்மாவையும் அவரது பெருமை களையும் எப்போது அறிகிறானோ அப்போது சோகம் நீங்கப் பெருகிறான்.-இந்த உபநிஷத்தில் தொடக்கத்திலிருந்தே ’ஆத்மா ஒருவரே அறியப்பட வேண்டியவர்’ என்று சொல்லி , அவர் தான் உலகங்களை எல்லாம் தாங்குகிறார் என்று சொல்லி, இங்கு மறுபடியும் ’பரமாத்மாவை அறிந்தால் தான் சோகம் விலகும்’ என்று கூறுகிறபடியால் அந்த பரமாத்மா தான் உலகங்களைத் தாங்குபவர் என்று தெரிகிறது.
ஒரு மரத்தில் இரண்டு பறவைகள்
5-ப்ரகரணாத் ச – “ப்ரகரணத்தாலும் (உலகங்களுக்கு எல்லாம் ஆதாரம் பரமாத்மாவே)”
முன்னமே 1.2.5-அத்₃ருச்வாதி₃கு₃ண அதி₄கரணத்தில் இந்த முண்டக உபநிஷத் ப்ரகரணம் முழுவதும் பரமாத்மாவைப் பற்றியது என்று நிரூபிக்கப் பட்டது. எனவே அதில் அடங்கிய இந்த வாக்யமும் பரமாத்மாவைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். எனவே த்₃யுப்₄வாத்₃யாயதனம் பரமாத்மாவே –
6-ஸ்தி₂த்யத₃நாப்₄யாம் ச – “இருத்தலாலும் உண்பதாலும் கூட”–
ஸ்தி₂தி என்றால் இருத்தல். அதுவும், ஏதோ ஒரு செயலைச் செய்யாமல் வெறுமனே இருத்தல். எந்தச் செயல்? அடுத்து உள்ள அத₃நம் என்ற சொல்லுக்கு உண்பது என்று பொருள். எனவே அந்தச் செயல் தான் முன்னாலும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். இருத்தல் என்பதற்கு ’உண்ணாமல் இருத்தல்’ என்று பொருள்-நிர் வியாபரத்வம் -ஒன்றுமே செய்யாமல் இருப்பது ஸ்திதி -அடுத்து உன்பதைச் சொல்வதால் உண்ணாமல் இருப்பத்தைச் சொன்னவாறு
கூடிற்றாகில் நல்லுறைப்பே -கூடாமையைக் கூடினால் அது அதுவே – ஜீவன் பரனோடு ஒன்றாம் என்னும் அவ்வல்லல் எல்லாமே ஒழித்தான் ராமானுஜன்
இந்த ப்ரகரணத்தில் ஒரு வாக்யம் இருவரைப் பற்றிப் பேசுகிறது – ஒருவர் உண்கிறார், மற்ற ஓருவர் உண்பதில்லை என்று கூறுகிறது.
த்₃வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருஷம் பரிஷஸ்வஜாதே |
தயோ : அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநஸ்நன் அந்ய: அபி₄சாகசீதி ||
ஒற்றுமை யுடைய நண்பர்களான இரண்டு பறவைகள் (பரமாத்மாவும் ஜீவாத்மாவும்) ஒரு மரத்தில் (இந்த உடலில்) இருக்கிறார்கள். அதில் ஒருவர் (ஜீவாத்மா) அந்த மரத்தில் வளரும் பழங்களை (தன்னுடைய பாப புண்யங்களில் பயன்களான இன்ப துன்பங்களை ) உண்கிறார், ஒளி குறைந்து போகிறார். மற்ற ஓருவர் (பரமாத்மா) அந்தப் பழத்தை
(வினைப் பயனை ) உண்ணாமல் ஒளி விடுகிறார்.-இப்படி ஜீவனும் பரனும் வெவ்வேறாகச் சொல்லப் பட்டுள்ளார்கள். இவர்களில் த்₃யுப்₄வாத்₃ யாயதநமாக இருக்கும் தகுதி பரமாத்மாவுக்கே உண்டு. ஜீவாத்மாவுக்கு இல்லை . ஆகவே த்₃யுப்₄வாத்₃ யாயதனம் பரமாத்மாவே –
—————————–
ஸ்ரீ மத் ரெங்கம் ஜயது பரமந்தாம தேஜோ நிதாநம்
பூமா தஸ்மின் பவது குஸலீ கோபி பூமா ஸஹாய
திவ்யம் தஸ்மை திசது வைபவம் தேசிகோ தேஸிகா நாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களாநி –7-மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
பூமா – உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக்கடல்
பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ
வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்
ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும்.அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும்.ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்களங்களைச் செய்து கொண்டு அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.
1-3-2 -பூ₄மாதி₄கரணம்-கவலை போக்கும் ஆத்ம ஜ்ஞாநம்
பூமாதிகரணத்தின் பின்புலம்
1.3.2 பூ₄மாதி₄கரணம் – ஸங்கதி – கீழ் அதிகரணத்தோடு இவ்வதிகரணுத்துக்கு இரண்டு விதமான ஸங்கதிகள் உள்ளன
1-முண்டகோபநிஷத்தில் பரமாத்மாவைப் பற்றி பேசத் தொடங்கி, அந்தப் ப்ரகரணம் முடியாத படியால், உலகங்களுக்கு ஆதாரமாகச் சொல்லப் பட்டவரும் பரமாத்மா தான் என்று கூறப் பட்டது. அதே போல் இங்கு சாந்தோக்ய உபநிஷத்தில் ஜீவாத்மாவைப் பற்றி பேசத் தொடங்கி, அந்தப் ப்ரகரணம் முடியாத படியால் இந்த விஷய வாக்யமும்
ஜீவாத்மாவைப் பற்றித் தான் கூறுகிறது என்று பூர்வ பக்ஷீ வாதிடுகிறார்.
2-கீழ் அதிகரணத்தில் முண்டகோபநிஷத்தில் ப்ராணங்களுக்கும் ஆதாரமானவர் பரமாத்மா தான் என்று சொல்லப் பட்டது. ஆனால் சாந்தோக்யத்தில் ப்ராணன்களுக்கு ஆதாரமானவர் ஹிம்ஸை செய்யப்பட்ட முடிந்தவர் என்று சொல்லப் படுகிற படியால் அது ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆஷேபம் எழுகிறது.
விஷய வாக்யம் – பூம வித்யா – சாந்தோக்ய உபநிஷத்தின் 7ஆம் ப்ரபாடகம் முழுவதும் (1-26 கண்டங்கள்)-அதீ₄ஹி ப₄க₃வ இதி ஹோபஸஸாத₃ ஸநத் குமாரம் நாரத₃: | தம் ஹோவாச யத்₃வேத்த₂ தேந மோபஸீத₃ ததஸ்த ஊர்த்₄வம் வக்ஷ்யாமீதி-“எனக்கும் ப்ரஹ்மத்தை உபதேசிக்க வேண்டும்” என்று கூறி நாரதர் ஸநத் குமாரரைப் பணிந்தார். “உமக்கு என்ன தெரியுமென்று கூறினால் அதற்கு மேல் வேண்டியதை உபதேசிக்கிறேன்” என்றார் ஸநத் குமாரர்.
ருக்₃வேத₃ம் ப₄க₃வ: அத்₄யேமி யஜுர் வேத₃ம் ஸாம வேத₃மாத₂ர்வணம் சதுர்த₂மிதிஹாஸ புராணம் பஞ்சமம் வேதா₃நாம் வேத₃ம் பித்ர்யம் ராஶிம் தை₃வம் நிதி₄ம் வாகோ வாக்ய மேகாயநம் தே₃வ வித்₃யாம் ப்₃ரஹ்ம வித்₃யாம் பூ₄த வித்₃யாம் க்ஷத்ர வித்₃யாம் நக்ஷத்ர வித்₃யாம் ஸர்வ தே₃வ ஜந வித்₃யாம் ஏதத் ப₄க₃வ: அத்₄யேமி–எலலா வேதங்கள், அதன் அங்கங்கள், இதிஹாஸ புராணங்கள் இவற்றை எல்லாம் கற்றிருக்கிறேன் என்றார் நாரதர்.
வேதா₃நாம் வேத₃ம்-வியாகரணம்
பித்ர்யம் -பித்ரு பற்றியவை
ராஶிம் -ஜ்யோதிஷம்
தை₃வம்
நிதி₄ம் -அர்த்த சாஸ்தம்
வாகோ வாக்ய -நியாயம்
மேகாயநம் தே₃வ வித்₃யாம்
ப்₃ரஹ்ம வித்₃யாம்
பூ₄த வித்₃யாம்
க்ஷத்ர-சர்ப்ப – வித்₃யாம்-நாகங்கள் பற்றியவை
நக்ஷத்ர வித்₃யாம்
ஸர்வ தே₃வ ஜந வித்₃யாம்
ஏதத் ப₄க₃வ: அத்₄யேமி-
பூமா என்ற சொல்லின் பொருள்
ஸ: அஹம் ப₄க₃வோ மந்த்ர விதே ₃வாஸ்மி நாத்மவித் | ஸ்ருதம் ஹ்யேவ மே ப₄க₃வத்₃ த்₃ருஸேப்₄ய: – தரதி ஸோகம் ஆத்ம விதி₃தி | தம் மா ப₄க₃வாந் ஸோகஸ்ய பாரம் தாரயது--“ஆனால் நால் வெறும் மந்த்ரங்களை (நூல்களை ) அறிந்தவனாகவே உள்ளேன், ஆத்மாவை அறியவில்லை . உங்களைப் போன்றவர்களிடம் கேள்விப் பட்டிருக்கிறேன் – ஆத்மாவை அறிந்தவன் தான் ஸம்ஸாரமென்னும் துன்பத்தைக் கடக்கிறான் என்று. எனவே நீர் தான் என்னை ஸோகத்தைத் தாண்டு விக்க வேண்டும்” என்றார் நாரதர்.
யத்ர நாந்யத் பஶ்யதி நாந்யத் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ஸ பூ₄மா | அத₂ யத்ர அந்யத் பஶ்யதி அந்யத் ஸ்ருணோதி அந்யத் விஜாநாதி தத₃ல்பம்-எதை அறிந்தால் வேறு எதையும் பார்க்கவோ கேட்கவோ அறியவோ மாட்டானோ , அதுவே பூமா. எதை அறிந்தால்
மற்றவற்றைப் பார்ப்பானோ , கேட்பானோ , அறிவானோ , அது அல்பம்.-பூ₄மா என்ற சொல் ப₃ஹு என்ற சொல்லிலிருந்து வருகிறது. ப₃ ஹு என்றால் அதிகமானது என்று பொருள்.-இங்கு எண்ணிக்கையால் அதிகமானதைப் பற்றிச் சொல்ல வில்லை ; அடுத்த வாக்யத்தில் இருக்கும் அல்பம் என்ற சொல்லுக்கு அளவாலே குறைந்தது என்று பொருளான படியால், அதற்கு எதிர் மறையான இந்த பூ₄மா என்ற சொல்லுக்கு ’அளவால் அதிகமானது’ என்று பொருள் கொள்வது தான் தகுந்தது.-தொடக்கத்தில் ’ஆத்மாவை அறிந்தவன் ஸோகத்தைக் கடக்கிறான்” என்று சொல்லி, இடையில் ’ பூ₄மா’ என்ற பொருளைப் பற்றி உபதேசித்து, இறுதியில் ’இது அனைத்தும் ஆத்மாவே’ என்று உள்ள படியால், இந்த பூ₄மா என்ற பொருள் தான் ஆத்மா என்ற பொருள் என்று தெரிகிறது.
பூமா -விபுலம் -அதிகமான பொருளைப் பற்றிச் சொல்கிறது -அதிகமான இருத்தல் குணம் -அதைச் சொல்லாமல் -அதிகமானதாக இருக்கும் பொருள் பற்றியே சொல்கிறது –
ஸம்சயம் – ’
பூ₄மா’ அதாவது-அதிகமான அளவுடையது’ என்று சொல்லப் பட்ட பொருள் ஜீவாத்மாவா? பரமாத்மாவா
ஸநத்குமாரரின் உபதேசங்கள்
பூர்வ பக்ஷம் – ஜீவாத்மாவைப் பற்றி உபதேசித்து, அந்தப் ப்ரகரணம் முடியாமலிருக்கும் பொழுதே பூ₄மா என்பதை உபதேசிக்கிற படியால் பூ₄மா ஜீவாத்மா தான். ஸநத் குமாரர் செய்த உபதேசங்களைப் பார்ப்போம் –
யத்₃வை கிஞ்ச ஏதத் அத்₄யகீ₃ஷ்டா₂ நாம ஏவ ஏதத் | ஸ யோ நாம ப்₃ரஹ்ம இத் யுபாஸ்தே யாவந் நாம்நோ க₃தம் தத் ராஸ்ய யதா₂காம சாரோ ப₄வதி–நீர் கற்ற நூல்கள் எல்லாம் வெறும் நாமங்கள் (சொற்களே ). சொற்களையே ப்ரஹ்மம் என்று உபாஸித்தால் சொற்களால் அடைய முடிந்த பயனை மட்டும் தான் அடையலாம்
அஸ்தி ப₄க₃வோ நாம்நோ பூ₄ய: | வாக் வாவ நாம்நோ பூ₄யஸீ |….. மந: ஸங்கல்ப: சித்தம் த்₄யாநம் விஜ்ஞாநம் ப₃லம் அந்நம் ஆப: தேஜ: ஆகாச: ஸ்மர: ஆசா ப்ராண:“நாமத்தை விட உயர்ந்தது உண்டா?” என நாரதர் கேட்க ஸநத் குமாரர் “சொல்லை விட பேச்சு உயர்ந்தது” -என்றார். இதே போல் அடுத்தடுத்து உயர்ந்த பொருள் உண்டா உண்டா என்று நாரதர் கேட்க, அடுத்தடுத்து மனது, உறுதி, சிந்தனை , த்யானம், அறிவு, உடல் பலம், உணவு, நீர், நெருப்பு, ஆகாயம், நினைவு, ஆசை , ப்ராணன் என்பவற்றை ஸநத் குமாரர் உபதேசித்தார்.-இறுதியில் சொல்லப் பட்ட ப்ராணன் என்பவர் ஜீவாத்மா தான், வெறும் மூச்சுக் காற்று அல்ல என்று பூர்வ பக்ஷியும் ஒப்புக் கொள்கிறார், ஸித்தாந்தியும் அதை ஏற்கிறார். பூ₄மா எனப்படுபவர் யார் என்பதில் தான் விவாதம் உள்ளதே தவிற, ப்ராணன் எனப்படுபவர் ஜீவாத்மா தான் என்பதில் ஐயமில்லை . ஏன் என்று பார்ப்போம்.
(மனஸ்-இதுவே மூன்று ஆகாரங்கள் கொண்டதாய் இருக்கும் -முதலில் –புத்தி-உறுதியாக இருப்பது -அடுத்து அஹங்காரம்-கர்வம் அடைதல் -மூன்றாவது – சித்தம் -யோசித்துப் பார்க்கும் கருவி)
ப்ராணன்’ எனப்படுபவர் ஜீவாத்மாவே
’ப்ராணன்’ ஜீவாத்மா தான் என்பதற்கான காரணங்களைப் பூர்வ பக்ஷீ கூறுகிறார் –
1-ஆத்மாவைப் பற்றிய கேள்வியோடு தொடங்கிய உபதேசம் இந்தப் ப்ராணன் என்பதைப் பற்றிய உபதேசத்தோடு முடிகிறது. எனவே ப்ராணன் தான் அந்த ஆத்மாவாக இருக்க வேண்டும், இல்லாவிடில் கேள்விக்கும் பதிலுக்கும் தொடர்பே இல்லாமல் போகும்.
2- (ப்ராணோ பிதா ப்ராணோ மாதா) அதாவது“இந்தப் ப்ராணன் அன்றோ தந்தை , ப்ராணன் அன்றோ தாய்” என்று ஸநத் குமாரர் கூறுகிறார். மூச்சுக் காற்று என்ற அசேதனப் பொருள் தாய் தந்தை முதலான சேதன (அறிவுடைய) பொருள்களாக மாற இயலாது. எனவே , தாய் தந்தை அனைவரும் ஜீவாத்மாக்களாக இருக்கிறபடியால், இங்கு ’ப்ராணன்’ என்ற சொல் ஜீவாத்மாவையே குறிக்க வேண்டும்.
3-ஸ யதி₃ பிதரம் வா மாதரம் வா கிஞ்சித்₃ப்₄ருஸமிவ ப்ரத்யாஹ தி₄க் த்வா அஸ்து இதி ஏவ ஏநமாஹு ꞉ பித்ருஹா வை த்வமஸி இதி| அத₂ யத்₃யபி ஏநாந் உத்க்ராந்த ப்ராணாந் சூலேந ஸமாஸம் வ்யதிஷந்த₃ஹேத் நைவ ஏநம் ப்₃ரூயு꞉பித்ருஹாஸீ இதி-ஒருவன் தந்தை முதலானவர்களை சிறிது எதிர்த்துப் பேசினாலும் கூட அவனைப் பார்த்து உலகம் ’நீ தந்தையை ஹிம்ஸிக்கிறாய்’ என்று பழி கூறுகிறது. ஆனால் ’ப்ராணன்’ புறப்பட்டுச் சென்ற பிறகு சூலத்தால் குத்தினாலும் நெருப்பால் எரித்தாலும் ‘தந்தையைக் ஹிம்ஸிக்கிறாய்’ என்று பழி சொல்வதில்லை -இத்தால் ப்ராணன் எனப்படுபவரை ஹிம்ஸிக்க முடியும் என்று தெரிகிறது. வெறும் உடலோ , வெறும் மூச்சுக்காற்றோ , பரமாத்மாவோ ஹிம்ஸிக்கப் பட முடியாது. எனவே ப்ராணன் ஜீவாத்மா தான்
தர்ம புத்ரனை அர்ஜுனன் -காண்டீபத்தைக் குறை சொன்னதால் கொல்லப் புக -நீ -த்வங்காரம் -சொன்னாலே கொல்வதற்கு சமம் என்று கண்ணன் சொல்ல –த்வங்கார அத்யாயம் -உண்டே
இப்படி ஜீவாத்மா தான் ப்ராணன் என்ற முடிவாகி விட்டால், அவரைப் பற்றின உபதேசத்தை முடிக்காமலேயே பூ₄மா என்பதை உபதேசிக்கிறபடியால், பூ₄மா எனப்படுபவரும் ஜீவாத்மாவே என்பது பூர்வ பக்ஷியின் வாதம்.
1.3.2 பூ₄மாதி₄கரணம்-பொருளாலும் அளவு படாதவர் பரமாத்மா-
ப்ராணனே பூ₄மா என்று பூர்வ பக்ஷம்– – முக்தி அடைவதற்காக ஆத்மாவைப் பற்றி உபதேசிக்கும்படி நாரதர் கேட்க, ஸநத் குமாரர்-நாம, வாக், மனஸ், ஸங்கல்பம், பலம், அந்நம், ஜலம், தேஜஸ், ஆகாசம், ஸ்மரணம், ஆசா முதலான அசேதனப் பொருள்களைப் பற்றி உதேசித்து, பின் ப்ராணன் என்ற ஜீவாத்மாவைப் பற்றி உபதேசித்தார்-இனி, அந்த ப்ராணன் என்ற ஜீவாத்மா தான் பூ₄மா எனப்படுகிறார் என்று வாதிடுகிறார் பூர்வ பக்ஷீ.
இதுவரை பிராணன் பற்றிய விவாதம் –பிரகரண விச்சேதம் இல்லாமல் மேல் பூமா -அளவில் பெரியது என்று மேல் வருகிறது-என்று பூர்வ பக்ஷம் -பிரகரணம் மாற்றி பூமா பற்றி சொல்வதாக ஸித்தாந்தம்
ஸ வா ஏஷ ஏவம் விஜாநந் அதிவாதீ₃ ப₄வதி-எவன் ஓருவன் இவ்வாறு ப்ராணன் என்ற ஜீவாத்மாவை அறிந்து உபாஸிக்கிறானோ அவன் ’அதிவாதி₃’ ஆவான்.-அதிவாதி₃ என்றால் தான் அறிந்த பொருளை மற்ற அனைத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகப் புகழ்ந்து பேசக் கூடியவன்.-ஏஷ து வா அதிவத₃தி ய꞉ ஸத்யேந அதிவத₃தி-எவன் ஸத்யத்தோடு அதிவாத₃ம் செய்கிறானோ , அவன் அன்றோ அதிவாதி₃. இத்தால், ப்ராணன் என்ற ஆத்மாவை த்யானிப்பவன், அந்த த்யானத்தின் அங்கமாக, ஸத்யம் பேச வேண்டும் என்று கிடைக்கிறது என்கிறார் பூர்வ பக்ஷீ.
யதா₃ விஜாநாத்யத₂ ஸத்யம் வத₃தி | மநுதே அத₂ விஜாநாதி |ஶ்ரத்₃த₃தா₄த்யத₂ மநுதே | நிஸ் திஷ்ட₂த்யத₂ ஶ்ரத்₃த₃தா₄தி|கரோத்யத₂ நிஸ் திஷ்ட₂தி|ஸுக₂ம் லப₄தே அத₂ கரோதி | யோ வை பூ₄மா தத் ஸுக₂ம் நால்பே ஸுக₂ம்-எப்போது த்யானிக்கிறானோ , அப்போது அதிவாத₃ம் செய்கிறான். எப்போது சிந்திக்கிறானோ அப்போது தான் த்யானிப்பான். எப்போது ஸ்ரத்தா (ஈடுபாடு) கொள்கிறானோ , அப்போது தான் சிந்திக்கிறான். எப்போது நிஷ்டா₂ (கேட்க வேண்டும் என்கிற உறுதி) கொள்கிறானோ அப்போது தான் ஈடுபாடு கொள்கிறான். எப்போது மற்ற பொருள்களின் தாழ்ச்சியை சிந்திப்பதில் முயற்சி செய்கிறானோ (க்ருதி) அப்போது தான் உறுதி கொள்கிறான். எப்போது ஸுகத்தை அறிகிறானோ அப்போது தான் க்ருதியில் ஈடுபடுகிறான். எது அளவால் பெரியதோ, அதுவே ஸுகம் ஆகும்.-இவ்வாறு, ப்ராணன் என்ற ஆத்மாவின் தூய்மையான நிலை தான் அளவற்ற ஸுகமான பூ₄ம என்று சொல்லப் படுகிறது
உலக இன்பத்தின் தாழ்ச்சியையும் அவனது பெருமையையும் அறிந்த பின்பு-தானே முயற்சி வரும் -முதல்படி -பின்பு ஸ்ரத்தா-கேட்டு – -த்யானம் -சத்யம் -படிப்படியாக வரும் அன்றோ -அஹம் என்று சொல்லிக் கொள்வதால் இங்கு ஜீவாத்மாவையை பூமா என்கிறது என்பர் பூர்வ பக்ஷி
அதிவாதி₃கள் இருவர்
ஸித்தாந்தம் – 1- பூ₄மா ஸம் ப்ரஸாதா₃த் அதி₄ உபதே₃சாத்
பூ₄மா – பூ₄மா அதாவது அளவில் பெரியயவர் என்று சொல்லப் படுபவர்(பரமாத்மாவே )
ஸம் ப்ரஸாதா₃த் – ஸம் ப்ரஸாத₃ம் எனப்படும் ஜீவாத்மாவைக் காட்டிலும்
அதி₄ உபயத₃சாத் – அதி₄கமாக (உயர்ந்ததாக) உபதேசிக்கப் படுகிற படியால்-
ஸம் ப்ரஸாதம் -ஜீவாத்மாவுக்கு பதமாக பல இடங்களிலே ஸ்ருதியில் உண்ட -ஸ்வேந ரூபேண -ஆவிர்பாவம் அடைகிறான் என்ற ஸ்ருதியில் இப்பத பிரயோகம் உண்டு
ப்ராணன் என்ற ஜீவாத்மாவைப் பற்றி உபதேசித்து விட்டு, அவரைக் காட்டிலும் உயர்ந்தவராக ஸத்யம் என்று ஒருவரைச் சொல்லி, அந்த ஸத்யத்தைப் பற்றின உபதேசத்தின் நடுவே தான் பூ₄மா என்ற பொருள் சொல்லப் பட்டுள்ளது. -உபநிஷத்தில் ஸத்யம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிப்பதற்கே பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு, ப்ராணன் என்ற ஜீவாத்மாவின் ப்ரகரணம் முடிந்து, ஸத்யம் என்ற பரமாத்மாவின் ப்ரகரணமே நடக்கிற படியால், பூ₄மா எனப் படுபவர் பரமாத்மாவே என்கிறார் வேத வ்யாஸர்.
ப்ராணனைக் காட்டிலும் உயர்ந்ததாக ஸத்யம் என்ற பொருள் எங்கு சொல்லப்படுகிறது? அதற்கு விடை அளிக்கிறார் –-ஏஷ து வா அதிவத₃தி ய: ஸத்யேந அதிவத₃தி” என்ற வாக்கியம் உயிரானது. இதை நுட்பமாக ஆராய்வோம்.
எடுத்துக் காட்டு 1 – “ஆத்மாவை உணர்ந்தவன் ஜ்ஞாநீ. அஹிம்ஸை கடைப் பிடிப்பவன் அவன் அன்றோ ஜ்ஞாநீ”. -இதில் இரண்டு ஜ்ஞாநிக்கள் இருப்பதாக நமக்குத் தோன்றுவதில்லை – ஜ்ஞாநியாய் இருப்பவன், அஹிம்ஸை என்ற பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் பொருள் படுகிறது.
எடுத்துக்காட்டு 2 – “ஆத்மாவை உணர்ந்தவன் ஜ்ஞாநீ. பரமாத்மாவை உணர்ந்தவன் அன்றோ ஜ்ஞாநீ”.-இந்த வாக்கியங்களில் இரண்டு ஜ்ஞாநிகள் இருப்பதாகவும், ஜீவனை மட்டும் அறிந்த ஜ்ஞாநியை விட பரமாத்மாவை அறிந்த ஜ்ஞாநி உயர்ந்தவன் என்றும், இதன் காரணம் பரமாத்மா ஜீவனை விட உயர்ந்தவரானது என்றும் தெரிகிறது.-இங்கும் இந்த இரண்டாவது எடுத்துக் காட்டு போல், ஜீவனைப் பற்றி அதிவாத₃ம் செய்பவனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஸத்யம் என்ற பரமாத்மாவைப் பற்றி அதிவாத₃ம் செய்பவர் என்று தெரிகிறது. எனவே ஸத்யம் வேறு ப்ராணன் வேறு.
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்று ஸத்யம் பதபிரயோகம் ப்ரஹ்மத்தைக் காட்டுவது போல் இங்கும் என்றவாறு-ஸத்யம் என்ற பத பிரயோகம் பிரகரணம் மாற்றி -அதுவே பூமா என்று முடிகிறது –
மேலும் சில ஸித்தாந்த யுக்திகள்
மேலும், உபதேசத்தின் இறுதியில் ஸநத் குமாரர் “ஸத்யம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம்” அதாவது “ஸத்யத்தைத் தான் உபாஸிக்க வேண்டும்” என்கிறார்.-பூர்வபக்ஷீ சொன்னது போல் ஸத்யம் என்பது உண்ணம பேசுதல் என்று கொண்டால் அதை எப்படி த்யானிக்க இயலும்? எனவே , ஸத்யம் என்பது ஜீவாத்மாவை விட உயர்ந்தவராய், உபாஸிக்கத் தகுந்தவரான பரமாத்மாவாகத் தான் இருக்க முடியும்
மேலும், “ஆத்மாந: ப்ராண :” அதாவது “ஆத்மாவிடமிருந்து ப்ராணன் உண்டாகிறார்” என்று ஸநத் குமாரர் கூறுகிறார். -ஆத்மாவைப் பற்றி தான் நாரதர் தொடக்கத்தில் கேட்டால். எனவே ஸநத் குமாரரால் உபதேசிக்கப்பட்ட பூ₄மா தான் அந்த ஆத்மாவாக இருக்க வேண்டும். அந்த ஆத்மா என்ற பூ₄மாவிடமிருந்து ப்ராணன் எனப்படும் ஜீவாத்மா
உண்டாகிறார் என்று இந்த வாக்கியம் சொல்கிறபடியால், ப்ராணனைக் காட்டிலும் வேறே ஓருவர் தான் பூ₄மா என்று தெரிகிறது. எனவே , அவர் ஸத்யம் என்ற பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.
கேள்வி – ப்ராணனை விட உயர்ந்த பொருளாக ஸத்யம் என்ற பரமாத்மா உபதேசிக்கப்படுகிறார் என்றால், ஏன் நாரதர்-ப்ராணனைக் காட்டிலும் உயர்ந்த பொருள் எது?” என்று கேள்வி கேட்டு ஸநத் குமாரர் விடை கூற வில்லை ?
பதில் – நாமம் வாக் மநஸ் பலம் அந்நம் ஜலம் தேஜஸ் ஆகாசம் போன்ற அசேதனப் பொருள்களை ஒவ்வொன்றாக உயர்ந்தவை என்று உபதேசித்தார் ஸநத் குமாரர். அவை தாழ்ந்தவை யான படியால் தான் கேட்ட ஆத்மாவாக இருக்க இயலாது என்று நாரதர் உணர்ந்து, இதை விட உயர்ந்த பொருள் உண்டா என்று கேட்டுக் கொண்டே வந்தார். ப்ராணன் என்ற ஜீவாத்மாவைப் பற்றி உபதேசித்து, அவரைப் பற்றி அதிவாத₃ம் செய்ய வேண்டும் என்று ஸநத் குமாரர் கூறிய படியால், “இந்த ஜீவாத்மா தான் நான் அறிய ஆசைப் பட்ட ஆத்மா” என்று நினைத்து நாரதர் எண்ணி, அதை விட உயர்ந்தது உண்டா என்று கேட்காமல் இருந்தார். சிஷ்யன் அறியாமையால் கேட்கா விட்டாலும், உண்மை அறிந்த
ஸநத் குமாரர், பரமாத்மாவைப் பற்றின ஜ்ஞாநம் தான் ஸம்ஸாரத்தைத் தாண்டுவிக்கும் என்று அறிந்து, பரமாத்மாவைப் பற்றி நாரதர் கேட்காமலேயே உபதேசம் செய்தார். எனவே கேள்வி இல்லாமை ஒரு குற்றம் அல்ல.
பரமாத்மா ஏன் பூ₄மா எனப் படுகிறார்?
இவ்வாறு பரமாத்மா தான் பூ₄மா என்று நிரூபிக்கப்பட்டது. இனி பூ₄மா என்றால் என்ன பொருள் என்று பார்ப்போம்.
“எந்தப் பொருளை அறிந்தால் வேறு எதையும் அறிய மாட்டோமோ அதுவே பூ₄மா” என்று ஸநத் குமாரர் கூறினார். -உலகிலுள்ள சேதநங்கள் மற்றும் அசேதநங்கள் அனைத்தும் பரமாத்மாவுக்கு உடலாக இருக்கின்றன, அவர் அந்தர்யாமியாக உள்ளார். எனவே , பரமாத்மாவை அறிவது என்றால், உலகனைத்தோடும் கூடியவராக அவரை
அறிவது. அப்படி அறிந்து விட்டால், வேறு எந்தப் பொருளையும் அறிய இயலாது, ஏனென்றால் பரமாத்மாவைத் தவிற வேறு பொருளே உலகில் கிடையாது. அவரை அண்டாமல், அவருக்கு உடலாக இல்லாமல் எந்தப் பொருளும் உலகில் இல்லை . எனவே அவரை விட்டு தனித்திருப்பதாக எந்த ஒரு பொருளையும் அறிய இயலாது என்று பொருள்
மேலும், பரமாத்மா எல்லை யற்ற ஸுக வடிவமானவர் என்று சொல்லி, அவரை அறிந்தவர் வேறு ஒன்றை அறிய மாட்டார் என்று சொன்னால், துக்கத்தை அறிய மாட்டார் என்று பொருள். -உலகிலுள்ள பொருள்கள் நமக்கு துக்கத்தைத் தந்து கொண்டு தானே இருக்கின்றன என்று தோணும். ஆனால் அது உண்மையில் நம் அறியாமையால். பொருள்களை நம்மதென்றும் பிறரதென்றும் பிரித்துப் பார்ப்பதால் தான் துக்கம் எழுகிறது. எல்லாமே பகவானின் சொத்து என்று பார்த்தால் எல்லாமே ஸுகத்தை மட்டுமே வழங்கும்
2-த₄ர்மோப்பத்தே: ச – “(இங்கு பூ₄மாவுக்குச் சொல்லப்பட்ட) தர்மங்கள் பொருந்துகிற படியாலும்”இந்தப் ப்ரகரணத்தில் பூ₄மாவுக்குச் சொல்லப்பட்ட பண்புகள் எல்லாம் பரமாத்மாவுக்கே பொருந்துகின்றன-“ஏதத் அம்ருதம்” – “இவரே மரணமற்றவர்” என்று சொல்லப்பட்டது பரமாத்மாவுக்கே பொருந்தும்–“ஸ்வே மஹிம்நி ப்ரதிஷ்டி₂த:” – உலகனைத்தையும் தாங்கும் இந்த பூ₄மா,“தன் பெருமையிலேயே நிலை நிற்கிறார்”அதாவது இவரைத் தாங்கும் வேறு ஓருவர் கிடையாது என்று சொல்லப்படுகிறது.-இதுவும் பரமாத்மாவுக்கே உரியது-“ஆத்மத: ப்ராண :” என்று ப்ராணன் எனப்படும் ஜீவனுக்கும் காரணமாக பரமாத்மா தான் இருக்க இயலும்-ஆக இவ்வாறு, உலகில் அனைத்தாகவும் இருக்கும் பூ₄மா எனப்படும் பொருள் பரமாத்மாவே எனப் பட்டது
அஹம் -நான் -அனைத்துக்கும் அந்தராத்மா பரமாத்மாவே தானே -வஸ்தாந்த்ரம் -அப்ரஹ்மாத்வ வஸ்து இல்லையே
——–
1-3-3 அக்ஷராதி₄கரணம்-பரமாத்மாவின் தடையற்ற ஆணை
அத்ருஸ்யாதி குணக அதிகரணம் -1-2-5- -பார்க்க முடியாத பண்பு கொண்ட அக்ஷரம் பரமாத்மாவே -பார்த்தோம் -இங்கே நேரடியாக அக்ஷரம் பற்றிய விசாரம் –
1.3.3 அக்ஷராதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி -1.3.2 பூ₄மாதி₄கரணத்தில் “ த₄ர்மோப்பத் தேஶ்ச” என்ற இரண்டாம் ஸூத்ரத்தில், பூ₄மாவின் குணங்களில் ஒன்றாக “ஸ்வே மஹிம்நி ப்ரதிஷ்டி₂த:” என்று தன் பெருமையிலேயே நிலை பெற்றிருத்தல் சொல்லப் பட்டுள்ளதால் அவர் பரமாத்மவாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு மேல் ஒரு ஆஷேபம் எழுகிறது – ப்ருஹதாரண்யகத்தில் ’தன் பெருமையில் நிலை பெற்றவர்’ என்று வேறே ஓரு பொருள் சொல்லப்பட்டுள்ளதே என்று.
விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 3ஆம் அத்யாயத்தில் 8ஆம் ப்ராஹ்மணம் – கார்கீ ப்ரஸ்நம்–ஜநக மஹாராஜரின் ஸபையில் யாஜ்ஞ்ய வல்க்யரைப் பார்த்து கார்கீ என்ற பெண் 2 கேள்விகள் கேட்டாள்.
யதூ₃ர்த்₄வம் யாஜ்ஞவல்க்ய தி₃வவா யத₃வாக் ப்ருதி₂வ்யா꞉ யத₃ந்தரா த்₃யாவா ப்ருதி₂வீ இமே யத்₃பூ₄தம் ச ப₄வச்ச ப₄விஷ்யச் சேத்யா சக்ஷதே ஆசக்ஷதே கஸ்மிந் ததோ₃தம் ச ப்ரோதம் சேதி-விண்ணுலகத்து மேலும், பூமிக்குக் கீழும், பூமிக்கும் விண்ணுலகுக்கும் இடைப் பட்ட பகுதியிலும், கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் வருங் காலத்திலும் இருக்கும் எல்லாப் பொருள்களும் குறுக்கும் நீளமுமாக நூல்கள் கோர்க்கப் படுவது போல் எதில் கோர்க்கப் பட்டுள்ளன அதாவது- எதால் தாங்கப் படுகின்றன
என்று பொருள்.-ஸ ஹோவாச – ஆகாசே தத் ஓதம் ச ப்ரோதம் ச-யாஜ்ஞ்யவஸ்க்யர் கூறினார் – “ஆகாசத்தில் அவை அனைத்தும் தாங்கப் படுகின்றன” என்று.- ஸா ஹோவாச – கஸ்மிந் நு க₂லு ஆகாச: ஓத: ச ப்ரோத: ச இதி-கார்கீ கேட்டாள் – “அந்த ஆகாசம் எதால் தாங்கப் படுகிறது” என்று
ப்ரக்ருதியே அக்ஷரம் என்ற பூர்வ பக்ஷம்–ஸ ஹோவாச – ஏதத்₃வை தத₃க்ஷர(அ) கா₃ர்கி₃ ப்₃ராஹ்மணா அபி₄வத₃ந்தி – அயஸ்தூ₂லம் அநணு அஹ்ரஸ்வம்-அதீ₃ர்க₄ம் அலோஹிதம் அஸ்நேஹம் அச்சா₂யம் அதம: அவாயு அநாகாஶம் அஸங்க₃ம் அசக்ஷுஷ்கம் அஶ்ரோத்ரம்-அவாக் அமந: அதேஜஸ்கம் அப்ராணம் அமுக₂ம் அமாத்ரம் அநந்தரம் அபா₃ஹ்யம்-யாஜ்ஞ்யவஸ்க்யர் கூறினார் – அந்தப் பொருள் தான் உபநிஷத்துக்களில் ’அக்ஷரம்’ என்று கூறப்படுகிறது.-அப் பொருள் பெரியது அல்ல, சிறியது அல்ல, குள்ளம் அல்ல, நீளம் அல்ல, வாயு அல்ல, ஆகாசம் அல்ல, கண் உடையது அல்ல,காது உடையது அல்ல, பேச்சுக்கான புலன் உடையது அல்ல, ப்ராணன் உடையது அல்ல, முகம் உடையது அல்ல, புலன்கள் உடையது அல்ல, உள்ளே இருப்பது அல்ல, வெளியே இருப்பது அல்ல.
ஸம்சயம் – இங்கு அக்ஷரம் என்று சொல்லப் படுபடுவது மூல ப்ரக்ருதியா? ஜீவாத்மாவா? பரமாத்மாவா?
பூர்வபக்ஷம் – ப்ரதாநம்- மூல ப்ரக்ருதி எனப்படும் அசேதனப் பொருள் தான் இந்த அக்ஷரம் என்கிறார் பூர்வ பக்ஷீ.-“அக்ஷராத் பரத: பர:” முதலான உபநிஷத் வாக்கியங்களில் அக்ஷரம் என்ற சொல் மூல ப்ரக்ருதியையே குறிக்கிறது.-“அஸ்தூ₂லம் அநணு” முதலான பண்புகள் எல்லாம் இந்த மூல ப்ரக்ருதிக்குப் பொருந்துகின்றன-எல்லா உலகங்களிலும் முக் காலத்திலும் இருக்கும் பொருள்களுக்கு எல்லாம் ஆதாரமாக இருக்கும் ஆகாசம் எனப்படும்
வானத்துக்கும் ஆதாரமாய் இருத்தல் ப்ரக்ருதிக்குப் பொருந்தும், ப்ரக்ருதி ஆகாசத்துக்கே காரணமானபடியால்.
கேள்வி – ’கூடஸ்த₂: அக்ஷர: உச்யதே ”-யயா தத₃க்ஷரம் அதி₄க₃ம்யதே ” முதலான வாக்கியங்களில் ஜீவாத்மா -பரமாத்மா கூட அக்ஷரம் என்ற சொல்லால் அறியப் படுகிறார்களே ?
பதில் – ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்தால், அவற்றில் எது வேகமாகச் செயல்படும் ப்ரமாணத்தால் அறியப்பட்டதோ , அது தான் முதலில் தோன்றும். ஸந்யாஸம் என்ற சொல்லிலிருந்து துறவறம் தோன்றுவது போல்-எனவே , அக்ஷரம் என்பது அநுமானத்தால் அறியப்படும் ப்ரக்ருதியே , வேதத்தால் அறியப்படும் பரமாத்மா அல்ல.
ஸன்யாஸி -ப்ரத்யக்ஷமாக அறிவது துறவறம் -கீதை மூலம் அறிவது பயன்களில் ஆசை இல்லாமல் கர்மங்களைச் செய்வது-இதில் முதல் அர்த்தமே நேராக கொள்கிறோம் -இதே போல் ஈஸ்வரன் என்றால் சிவபெருமான் -அறிகிறோம் -வேதம் கற்ற பின்பே அவனும் கர்ம வஸ்யன் என்றும் அறிந்து பர ப்ரஹ்மமே ஸர்வேஸ்வரேஸ்வரன் என்றும் அறிகிறோம் -ஸாஸ்த்ர யோநித்வாத் -கீழேயே பார்த்தோம் –அதே போல் என்பர் பூர்வ பக்ஷி-
ஆகாசம் எனப்படுவதே ப்ரக்ருதி; அக்ஷரம் பரமாத்மாவே
ஸித்தாந்தம் – இந்தப் பூர்வ பக்ஷத்தை 3 ஸூத்ரங்களால் எதிர்க்கிறார் வேத வ்யாஸர்.
1-அக்ஷரம் அம்ப₃ராந் தத்₄ருதே :
அக்ஷரம் – அக்ஷரம் என்று இங்குச் சொல்லப்பட்டவர் (பரமாத்மாவே )
அம்ப₃ராந்த – ’அம்ப₃ரம்’ என்ற வானத்துக்கும் ’அந்தம்’ அதாவது முடிவான (காரணமான) ப்ரக்ருதியையும் கூட
த்₄ருவத: – தாங்குகிறபடியால்
உலகப் பொருள்களை எல்லாம் தாங்கும் ஆகாசம் என்றழைக்கப் பட்ட பொருள் வானம் தான் என்றார் பூர்வ பக்ஷீ. இது தவறு. ’ராஜ்யத்தில் உள்ளவர்களை எல்லாம் ஆள்பவர் யார்?’ என்று கேட்டால், ராஜ்யத்தில் ஒருவரான மந்திரி என்று கூறுவது தவறாகும். அதே போல் உலகப் பொருள்களுள் ஒன்றாய், தானே உண்டாகி அழியக் கூடியதான வானம் எப்படி உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாக இருக்க முடியும்? எனவே இங்கு ஆகாசம் என்ற சொல்லே மூல ப்ரக்ருதியைத் தான் குறிக்கிறது என்று கொள்ள வேண்டும். அது தான்’அம்ப₃ராந்தம்’ எனப்படுகிறது. அந்த மூல ப்ரக்ருதிக்கும் ஆதாரமான அக்ஷரம் பரமாத்மாகவே இருக்க முடியும்.-ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்தால் அதில் வேகமான ப்ரமாணத்தால் அறியப் பட்டதையே கொள்ள வேண்டும் என்பதும் தவறு. எந்தப் பொருளில் ஒரு சொல் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறதோ அது தான் அந்தச் சொல்லின் முக்கியமான பொருள் என்று கொள்வதே சரியானது. -அக்ஷரம் என்பது யௌகி₃கச் சொல் (காரணப் பெயர்). ’ந க்ஷரதி இதி அக்ஷரம்’ அதாவது-எது அழியாதோ அது அக்ஷரம்’ என்று பொருள் தோற்றுகிறது. அழியாமை எந்தப் பொருளுக்கு மிகுதியாகவோ இயற்கை யாகவோ உள்ளதோ , அந்தப் பொருளைத் தான் கொள்ள வேண்டும். அழியாமை இயற்கையில் பரமாத்மவுக்கே உள்ளது. அவரே அக்ஷரம்.–ஈஸ்வரன் என்ற சொல்லுக்கு ’ஆள்பவர்’ என்று பொருள். ஆனால் அச் சொல்லைக் கேட்டதும் ஓரிருவரை ஆளும் மனிதனா தோன்றுகிறான்? அனைத்தையும் ஆளும் பரமாத்மாவே தோன்றுகிறார்-அதே போல் தான் இங்கும்
விகார ஜாதம் -உலகப்பொருள்கள் அனைத்துக்கும் ஆதாரம் ஆகாசம் என்பது வானத்தைச் சொல்ல வில்லையே -இதனால் மூல பிரக்ருதியையே சொன்னவாறு – இதற்கும் மூலம் காரணம் பரமாத்மாவே -என்றவாறு
அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லும் அர்த்தமே பிரதானம் -ஈஸ்வரன் ஆள்பவன் -அரசனே ப்ரத்யக்ஷமாக இருந்தாலும் இறைவனையே குறிக்கும் அன்றோ –
ஜீவாத்மாவும் அக்ஷரம் அல்ல
மற்ற ஓரு பூர்வ பக்ஷீ கேள்வி எழுப்புகிறார்– “ஜீவாத்மாவே அக்ஷரம் என்று கொள்ளலாமே ?அவரைக் குறிக்கவும் அக்ஷரம் என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது. அஸ்தூ₂லம் முதலான பண்புகள் ஜீவனுக்கும் பொருந்தும். ப்ரக்ருதிக்கு ஆதாரமாக ஜீவன் இருக்கிறார் என்றும் கொள்ளலாம்” என்று. அதற்கு பதிலுரைக்கிறார் வேத வ்யாஸர் –
2- ஸா ச ப்ரசாஸநாத் – “அதுவும் (அனைத்தையும் தாங்குவதும்) தடையற்ற ஆளுமையாலே ”
அக்ஷரம் என்ற பொருள் உலகில் அனைத்தையும் தாங்குகிறது என்று மட்டும் யாஜ்ஞ்யவஸ்க்யர் கூறவில்லை . அப்படித் தாங்குவது அதனுடைய தடை யற்ற ஆணை – இயக்கத்தால் என்றும் கூறுகிறார்.
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஶாஸநே கா₃ர்கி₃ ஸூர்யா சந்த்₃ரமஸஸௌ வித்₄ருஸதௌ திஷ்ட₂த: | ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஶாஸநே கா₃ர்கி₃ த்₃யாவா ப்ருதி₂வ்யௌ வித்₄ருதே திஷ்ட₂த-இந்த அக்ஷரத்தின் ப்ரசாஸனத்தால் (ஆணையால்) தான் ஸூர்யனும் சந்திரனும் தாங்கப் படுகிறார்கள், விண்ணுலகும் மண்ணுலகும் தாங்கப்படுகின்றன.
ப்ரசாஸநம் = ப்ரக்ருஷ்டம் சாஸநம் = உயர்ந்த ஆட்சி = தடை யில்லாமல் அனைத்துப் பொருள்களையும் இயக்குதல்.-இது பரமாத்மாவுக்கே பொருந்தக் கூடியது, எந்த ஒரு ஜீவாத்மாவுக்கும் கிடையாது. எனவே அக்ஷரம் ஜீவாத்மா அல்ல.
3-அந்ய பா₄வ வ்யாவ்ருத்தே: ச – இந்த ஸூத்ரத்திற்கு இரண்டு விதமாகப் பபாருள் கொள்ளலாம்.
1-அந்ய பா₄வ -வேறு ஓன்றாய் இருக்கும் தன்மை
வ்யாவ்ருத்தே: ச தவிர்க்கப் படுகிறபடியால் –
அக்ஷரம் என்பது’அத்₃ருஷ்டம் த்₃ரஷ்ட்ரு’ அதாவது ’அறியப்படாதது, மற்றவற்றை அறிவது’ என்று சொல்லப்படுகிறது. மற்றவற்றை அறிகிற படியால் இது அசேதனம் அல்ல, தான் அறியப் படாதபடியால் இது அசேதனமும் அல்ல என்று தெரிகிறது.
2-அந்ய -வேறு ஓன்றினுடைய
பா₄வ: இருப்பு
வ்யாவ்ருத்தே: ச தவிர்க்கப் படுகிறபடியால் –
இந்த அக்ஷரம் அனைத்தையும் தாங்குவது போல், இதைத் தாங்கும் வேறு ஓரு பொருளில்லை என்று கூறப்படுகிறது – “நாந்ய: அத: அஸ்தி த்₃ரஷ்ட்ரு” என்று. எனவே அக்ஷரம் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்
ச -உம்மைத் தொகையால் -இவரை அறிந்தே மோக்ஷ பேறு போன்றவையைக் காட்டியவாறு
————————
1.3.4 ஈக்ஷதி கர்மாதி₄கரணம்-ஸ்ரீ வைகுந்தம் சென்று அடையப்படுபவர்
பரமாத்மாவே
(1-1-5- ஈஷத் அதிகரணம் பார்த்தோம்)
(யோ விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை” என ஸ்வேதாஸ்வதர உபநிஷத் வாக்கியம் கூறுகின்றது-அவரையே உபாஸித்து பேறு)
1.3.4 ஈக்ஷதிகர்மாதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி – முன் அதிகரணத்தில் ’அத்₃ருஷ்டம் த்₃ரஷ்ட்ரு’ அதாவது பரமாத்மா அனைத்தையும் பார்ப்பவர் என்று கூறப்பட்டது. அதற்கு மேல் தான் ஆஷேபம் எழுகிறது – உலகில் பொதுவாக பார்ப்பவரும் பார்க்கப்படும் பொருளும் வெவ்வேறாகத் தான் இருக்கும். எனவே பரமாத்மா பார்ப்பவர் என்று சொல்லப் பட்டுள்ள படியால், மற்ற ஓரு உபநிஷத்தில் பார்க்கப்படும் பொருளாகச் சொல்லப்பட்டது பரமாத்மா அல்ல, வேறு ஓன்று தான் – என்று.
விஷய வாக்யம் – அத₂ர்வண வேத₃த்தின் ப்ரஸ்ந உபநிஷத்தில் உள்ள ஐந்தாவது ப்ரஸ்நம்
அத₂ ஹைநம் ஸைப்₃ய꞉ ஸத்ய காம꞉ பப்ரச்ச₂ । ஸ யோ ஹ வை தத்₃ப₄க₃வந் மநுஷ்யேஷு ப்ராயணாந்தம் ஓங்காரம் அபி₄த்₄யாயீத ।கதமம் வா வஸதேந லோகம் ஜயதீதி ।-ஸத்ய காமம் என்ற சிஷ்யன் தன் ஆசார்யரிடம் கேட்டான் – “எந்த ஒரு மனிதன் தன் மரணம் வரை ஓம் என்ற ப்ரணவத்தைத் த்யானிக்கிறானோ , அவன் எந்த உலகங்களைச் செல்கிறான், அதாவது, எந்தப் பயனை அடைகிறான்?“
ஏதத்₃வை ஸத்ய காம பரம் ச அபரம் ச ப்₃ரஹ்ம யதோ₃ங்கார꞉ ।தஸ்மாத்₃ வித்₃வாநே தேநைவாயத நேதைக தரமந் வேதி-“உலகத்திலுள்ள தாழ்ந்த மற்றும் உயர்ந்த பொருள்கள் அனைத்தையும் தன் வடிவமாகக் கொண்ட ப்ரஹ்மத்தைக் குறிக்கும் சொல் இந்த ஓம் என்பது. எனவே இந்த ஓம்காரத்தைத் த்யானிப்பவன் அந்த உயர்ந்த மற்றும் தாழ்ந்த பொருள்கள் அனைத்தையும் அடைய முடியும்” என்றார் ஆசார்யன்.
ஸ யதி₃ ஏக மாத்ரம் அபி₄த்₄யாயீத தம் ருச: மநுஷ்ய லோகம் உபநயந்தே | ஸ தத்ர தபஸா ப்₃ரஹ்ம சர்யேண ஶ்ரத்₃த₄யா ஸம்பந்நோ மஹிமாநம் அநுப₄வதி-ஒரு மாத்திரை கொண்ட ஓம்காரத்தைத் த்யானிப்பவன் மநுஷ்ய லோகத்தை அடைந்து, தவம் ப்ரஹ்ம சர்யம் மற்றும்
ஸ்ரத்தையோடு கூடியவனாய் மேன்மையை அநுபவிக்கிறான்
நான்முகனே பார்க்கப்படுபவர் என்ற பூர்வ பக்ஷம்
அத₂ யதி₃ த்₃வி மாத்ரேண மநஸி ஸம்பத்₃யதே ஸ: அந்தரிக்ஷம் யஜுர் பி₄ருந்நீயதே ஸோமலோகம் । ஸ ஸோமலோகே விபு₄தி மநுபூ₄ய புநராவர்ததே ॥ இரண்டு மாத்திரை கொண்ட ஓம்காரத்தை த்யானிப்பவன், ஸோமலோகம் என்ற ஸ்வர்கத்தை அடைந்து, அங்குள்ள செல்வங்களை அநுபவித்து, மீண்டும் மநுஷ்ய லோகத்தை அடைகிறான்.
ய꞉ புநரேதம் த்ரிமாத்ரேண ஓமிதி ஏதேநைவ அக்ஷரேண பரம் புருஷமபி₄த்₄யாயீத ஸ ஸாம பி₄ருந்நீயதே ப்₃ரஹ்ம லோகம | ஸ ஏதஸ்மாத் ஜீவக₄நாத் பராத்பரம் புரிஸயம் புருஷம் ஈக்ஷதே । -எவன் மூன்று மாத்திரை கொண்ட ஓம்காரத்தைக் கொண்டு உயர்ந்த புருஷனை த்யானிப்பவன் ப்ரஹ்ம லோகத்தை அடைகிறான். அசேதனத்தோடு இறுகியுள்ள ஜீவாத்மாக்களைக் காட்டிலும் உயர்ந்த புருஷனை அங்கு காண்கிறான்.
(தத் க்ரது நியாயம் -உபாசிக்கப்படும் பொருளின் தன்மையை அடைந்து பேறு -அபஹத பாப்மத்தாதி அஷ்ட குண சாம்யம்)
(கணீ பூதர்கள் -பிரக்ருதியால் கட்டுப்பட்டு இருக்கும் ஜீவாத்மாக்கள் -ஜீவ கநம்)
ஸந்தேஹம் – இங்கு ப்ரஹ்மலோகம் சென்று காணப்படுபவராகச் சொல்லப் பட்டுள்ள ’உயர்ந்த புருஷன்’ எனப்படுபவர் இந்த அண்டத்திற்குத் தலைவரான நான்முகக் கடவுளா? அல்லது பரமாத்மாவா?
பூர்வ பக்ஷம் – இங்கு பார்க்கப்படுபவராகச் சொல்லப் படுபவர் நான்முகக் கடவுள் தான். ஏனெனில் –1-மநுஷ்ய லோகம், ஸ்வர்க லோகம், ப்ரஹ்ம லோகம் என்று வரிசையாகச் சொல்லப் பட்டுள்ளபடியால், இங்கு ப்ரஹ்ம லோகம் என்று சொல்லப் படுவது நான்முகக் கடவுள் இருக்கும் ஸத்ய லோகம் தான். எனவே அங்குச் சென்று காணப்படும் ’உயர்ந்த புருஷன்’ அந்த நான்முகனாகத் தான் இருக்க வேண்டும்-2-உடல் புலன்கள் முதலானவற்றைக் காட்டிலும் உயர்ந்தவராக ஜீவாத்மா இருந்தாலும், அந்த அசேதனப்
பொருள்களோடு பின்னிப் பிணைத்து இருக்கிற படியால் அவர் ஜீவ க₄நம் (இறுகிப் போன ஜீவன்) என்று சொல்லப் படுகிறார். அவரைக் காட்டிலும் உயர்ந்தவராகச் சொல்லப் பட்டவர், இந்த அண்டத்தில் பொருள்களை எல்லாம் ஸ்ருஷ்டிப்பவரான நான்முகனே . ஆக, அவர் தான் உயர்ந்த புருஷன்’ என்று சொல்லப் பட்டிருக்க வேண்டும்.
அவன் மேவு ஸ்ரீ வைகுந்தம்
ஸித்தாந்தம் – ஒரே ஸூத்ரத்தால் இந்தப் பூர்வ பக்ஷத்ணத கண்டிக்கிறார் வ்யாஸர்.
1-ஈக்ஷதி கர்ம வ்யபதே₃சாத் ஸ:-“பார்க்கப்படுபவர் பரமாத்மா, அவ்வாறு சொல்லுகிற படியால்”-இங்கு ப்ரஹ்ம லோகம் சென்று பார்க்கப்படும் பொருளுக்குச் சொல்லப்படும் குணங்கள் பரமாத்மாவுக்கே உரியவை –தம் ஓங்காரேண ஏவ ஆயதநேந அந்வேதி வித்₃வாந் யத் தத் சாந்தம் அஜரம் அம்ருதம் அப₄யம் பரம் சேதி–“அந்த ஓம்காரத்தைக் கொண்டு சாந்தமான, மூப்பற்ற, மரணமற்ற, பயமற்ற, உயர்ந்த பொருளை அடைகிறான்”-இந்தப் பண்புகள் எல்லாம் மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மாவுக்கே சொல்லப் பட்டுள்ளன. நான்முகனுக்கும் பிறப்பு, இறப்பு, கவலை , பயம் முதலானவை புராணங்களில் சொல்லப் பட்டுள்ளன. எனவே அவர் அல்ல- (ஏதஸ்மாத் ஜீவக₄நாத் பராத் பரம்) என்று சொல்வதும் பரமாத்மாவுக்கே பொருந்தும்.-ஜீவ கனம் என்றால் அசேதனப் பொருளோடு இறுகி யிருக்கும் ஜீவாத்மா.-அண்டத்துக்கே அதிபதியான நான்முகனும் பாப புண்யங்களால் உடற்பிறவி அடைந்து அசேதனத்தோடு பின்னிப் பிணைத்து இருப்பவரே . எனவே , ஜீவ கனத்தைக் காட்டிலும் உயர்ந்தவராக அவர் சொல்லப்பட முடியாது. பரமாத்மாவுக்கே அது பொருந்தும்.
(கர்த்தா- செய்பவன் -subject-கர்ம-செயப்படும் பொருள்-object)
(சாந்தி –பசி தாகம் கவலை மயக்கம் மூப்பு மரணம் -ஷட் ரஹிதம்)
(கணீ பூதர்கள் -பிரக்ருதியால் கட்டுப்பட்டு இருக்கும் ஜீவாத்மாக்கள் -ஜீவ கநம்–ஆ பிரம்மா ஸ்தம்ப பரியந்தம் -சம்சார வசத்தில் கட்டுப் பட்டவர்கள் தானே )
ப்ரஹ்ம லோகம் என்பது ஸத்ய லோகம் என்றும் கொள்ள இயலாது.
(யதா₂ பாதோ ₃த₃ரஸ்த்வஸா விநிர்முச்யத ஏவம் ஹ வை ஸ பாப்மநா விநிர்முக்த꞉ உந்நீயவத ப்₃ரஹ்ம லோகம்) – ஒரு பாம்பு தன் சட்டையை விட்டு வெளி யேறுவது போல் இந்த ஜீவாத்மா பாபங்களிலிருந்து விடுபட்டு ப்ரஹ்ம லோகம் அடைகிறான் என்று சொல்கிறபடியால், ப்ரஹ்ம லோகம் ஸ்ரீ வைகுந்தமே -(தத் கவயோ வேத₃யந்தே ) – கவிகள் எனப்படும் நித்ய ஸூரிகளால் பார்க்கப்படும் உலகம் என்று சொல்கிற படியாலும் அது ஸ்ரீ வைகுந்தமாகத் தான் இருக்க வேண்டும். ஸ்ரீ வைகுந்தம் சென்று காணப்படுபவர் பரமாத்மாவே , நான்முகன் அல்ல–இவ்வாறு ஓம்காரத்தை முழுமையாகக் கொண்டு பரமாத்மாவை த்யானிப்பவன், ஸ்ரீ வைகுந்தம் அடைந்து, அந்தப் பரமாத்மாவையே கண்டு அநுபவிக்கிறான் என்று சொல்லப் பட்டுள்ளது என்று வேத வ்யாஸர் நிரூபித்தார்
(பாதோதரம் -பாத -உதரம் -காலே வயிறாகக் கொண்ட பாம்பு -சஷுஸ்ஸு ஸ்ரவா கண்ணையே காதாக உடையது பாம்பு)
(பாட்டுக் கேட்க்கும் இடமும் -கவி-ஏதத் சாம காநம் ஆஸ்தே -சதா பஸ்யந்தி ஸூரயா-பார்த்துக் கொண்டே இருப்பார்கள் அன்றோ)
(மனுஷ்ய லோகம் ஸ்வர்க்க லோகம் -அடுத்து மகர் லோகம் தானே- சத்ய லோகமாகத்தான் இருக்க வேண்டாமே –ஆகவே ஸ்ரீ வைகுண்டமே -இதுவும் நாலாவது யுக்தி)
——–
1.3.5 த₃ஹரதி₄கரணம்-பரமாத்மா கல்யாண குணங்களை உடையவரே –
10 ஸூத்ரங்களால் ஸித்தாந்தம்
(வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||--ஶ்லோகம் 18 –)
நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.
உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||-ஶ்லோகம் 19 –
வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,
1.3.5 த₃ஹராதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி – முன் அதிகரணத்தில் முக்தி அடைந்த ஒரு ஜீவாத்மா ஸ்ரீ வைகுந்தம் அடைந்து பரமாத்மாவைக் காண்கிறான் என்று சொல்லப்பட்டது. அந்தப் பரமாத்மாவை ’புரிசயம்’ அதாவது-’எல்லாப் ப்ராணிகளின் உடல்களிலும் (எல்லாப் பொருள்களிலும்) இருப்பவர்’ என்று சொல்லிற்று உபநிஷத்-அதற்கு மேல் ஆஷேபம் எழுகிறது – மற்ற ஓரு
உபநிஷத்தில் எல்லா ப்ராணிகளின் உடல்களிலும் இருப்பவராக வேறு ஓருவர் தானே சொல்லப்பட்டுள்ளார் – என்று.-(புரிசயம் -பட்டணத்தில் வாழ்பவர்)
விஷய வாக்யம் – ஸாந்தோக்ய உபநிஷத்தின் எட்டாவது ப்ரபாடகம்-(அத்யாயம்) – த₃ஹர வித்₃யா அத₂ யதி₃த₃ம் அஸ்மிந் ப்₃ரஹ்ம புரே த₃ஹரம் புண்ட₃ரீகம் வேஶ்ம த₃ஹர: அஸ்மிந் அந்தராகாஶ: தஸ்மிந் யத₃ந்த: தத₃ந்வேஷ்டவ்யம் தத்₃வாவ விஜிஜ்ஞாஸி தவ்யமிதி–ப்ரஹ்ம புரம் என்றழைக்கப் படும் இந்த உடலின் உள்ளே தாமரை வடிவில் நுண்ணியதான ஓரிடம்(ஹ்ருதயம்) உள்ளது. அதற்கும் மிக நுண்ணியதான ஆகாஸம் உள்ளது. அந்த ஆகாஸத்தில் எது உள்ளதோ அதைத் தேட வேண்டும், அதையே த்யானிக்க வேண்டும்.
(ஸத்வித்யை -6 ப்ரபாடகம் -பூம வித்யை -7 ப்ரபாடகம் -இது-தஹர வித்யை எட்டாவது ப்ரபாடகம் -வேஸ்ம -இருப்பிடம்)
ஸந்தேஹம் – ஹ்ருதயத்துக்குள் ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூ₄தாகாஸம் (ஐம் பூதங்களில் ஒன்றான ஆகாஸம்) என்ற அசேதனப் பொருளா ? அல்லது ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?
பூர்வ பக்ஷம் – பூ₄தாகாஸம் தான் இங்கு சொல்லப்படுகிறது என்று முதலில் பூர்வ பக்ஷீ வாதிடுகிறார். காரணம் –1-ஆகாஸம் என்ற சொல் உலகில் பெரும் பாலும் பூதாகாஸத்தைக் குறிக்கத் தான் பயன் படுத்தப் படுகிறது. எனவே அச் சொல்லைக் கேட்டதும் பூதாகாஸம் தான் நினைவுக்கு வருகிறது- 2-“இந்த ஆகாஸத்தில் எது இருக்கிறதோ அதைத் த்யானிக்க வேண்டும்” என்று உபநிஷத் சொல்கிறபடியால், இந்த ஆகாஸம் த்யானிக்கப்பட வேண்டிய பொருளுக்கு இருப்பிடம் மட்டுமே , இந்த ஆகாஸத்தை த்யானிக்கத் தேவை யில்லை என்று தெரிகிறது. இது பரமாத்மாவுக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அவர் தான் த்யானிக்கப்பட வேண்டியவர் என்ற மற்ற உபநிஷத்துக்கள் கூறுகின்றன. எனவே இங்கு ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூதாகாஸம் தான்
பரமாத்மாவே தஹராகாஸம்
ஸித்தாந்தம் –1-த₃ஹர உத்தரேப்₄ய:-“தஹராகாஸாம் என்று சொல்லப்படுபவர் பரமாத்மாவே ,-பின்னால் வரும் வாக்கியங்களில் இருக்கும் காரணங்களால்”-ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜர: விம்ருத்யு: விஸோக: விஜிக₄த்ஸ: அபிபாஸ꞉ ஸத்ய காம꞉ ஸத்ய ஸங்க்ப:-“இந்த ஆத்மாவானவர் பாபங்களுக்கு அப்பாற் பட்டவர், மூப்பற்றவர், மரணமற்றவர், ஸோகமற்றவர், பசியற்றவர், தாகமற்றவர், அனைத்து ஆசைகளும் நிறை வேறியவர், நினைவாலேயே எதையும் நடத்தும் வல்லமை படைத்தவர்”-இங்கு ’ஆத்மா’ என்று பொதுவாகச் சொல்லப் படுகிறபடியால், இது அனைத்துப் பொருள்களுக்கும் ஆத்மாவான பரமாத்மாவையே குறிக்கும்-மேலும், இங்குச் சொல்லப்பட்ட குணங்களும் பரமாத்மாவுக்கே இயற்கை யானவை –
(கீழே -1-1-7- அந்தர் அதிகரணம் இதே உபநிஷத் வாக்கியம் பார்த்தோம்-ஆத்மா-அடைமொழி இல்லாமல் பொதுவாகச் சொன்னால் பரமாத்மாவாகத் தானே இருக்க வேண்டும் -மேலும் பல குணங்களும் பரமாத்மாவுக்கே இருந்தும் )
தத்₃யதே ₂ஹ கர்மசிதோ லோக꞉ க்ஷீயத ஏவமேவ அமுத்ர புண்ய சிதோ லோக꞉ க்ஷீயதே | ய இஹாத்மாந மநிவுத்₃ய வ்ரஜந்தி ஏதாம்ஶ்ச ஸத்யாந் காமாந் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ ப₄வதி | ஸ யதி₃ பித்ரு லோக காமோ ப₄வதி ஸங்கல் பாதே₃வ அஸ்ய பிதர꞉ ஸமுத்திஷ்ட₂ந்தி தேந பித்ரு லோகேந ஸம்பந்நோ மஹீயதே -“உலகச் செயல்களால் அடையப்படும் பயன்கள் அழிவது போல் புண்ணியத்தால் அடையப் படும் உலகங்களும் அழியக் கூடியவை தான். எவன் ஓருவன் இந்த ஆத்மாவை த்யானித்து உயிர் இழக்கிறானோ அவன் எல்லா உலகங்களிலும் தன்னிச்சையாக நடக்கும் ஏற்றம் பெருகிறான். அவன் தன் பித்ருக்களைக் காண நினைத்தாலும் அவர்கள் அவன் ஸங்கல்பத்தாலேயே அங்கு தோன்றுகிறார்கள்”.-இந்த தஹராகாஸத்தைத் த்யானித்தவர் இவ்வாறு ஸ்வதந்த்ரனாக தன்னிச்சையாக எல்லா உலகங்களிலும் செயல்படலாம்,-அவன் ஸத்ய ஸங்கல்பனாக (தன் நினைவாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவனாக) ஆகிறான்-என்று கூறியுள்ளது. -இந்தப் பெருமைகள் எல்லாம் முக்தி அடைந்தவனுக்குத் தான் உண்டு. எனவே தஹராகாஸத்தை த்யானித்தவன் முக்தி அடைகிறான் என்று தெரிகிறது. எனவே இந்த தஹராகாஸம் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.
தஹராகாஸத்திற்குள் இருப்பது என்ன?-யாவாந்வா அயம் ஆகாஶ: தாவாந் ஏஷ: அந்தர் ஹ்ருத₃ய ஆகாஶ:“இந்த (வெளியில் காணப்படும்) ஆகாஸம் என்ற வானம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இந்த தஹராகாஸம்”--இந்த வாக்கியத்தில் தஹராகாஸத்திற்கு உபமாநமாக (எடுத்துக் காட்டாக) பூதாகாஸம் என்ற வானம் சொல்லப் படுகிறது–எப்போதுமே உபமாநமும் உபமேயமும் வெவ்வேறாகத் தான் இருக்கும். எனவே இந்த தஹராகாஸம் என்பது பூதாகாஸமாக இருக்க இயலாது. அந்த பூதாகாஸம் போல் எங்கும் நிறைந்தவரான பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்–ஆகாஸத்தையே கற்பனையாகப் பிரிப்பது போல் இங்கும் இதயத்தில் உள்ள ஆகாஸம் தஹராகாஸம் என்று பிரித்து, அதற்கு எடுத்துக் காட்டாக வெளியே உள்ள ஆகாஸத்தைச் சொல்லி யிருக்கலாமே என்று கேள்வி எழலாம்-ஆனால், அப்படிக் கொண்டாலும், (யச்சாஸ்யேஹ அஸ்தி யச் நாஸ்தி ஸர்வம் தத₃ஸ்மிந் ஸமாஹிதம்) என்று “பூமி, விண்ணுலகம், ஸூர்யன், சந்த்ரன், நம்மிடம் இருக்கும் பொருள்கள், நாம் அடைய ஆசைப்படும் பொருள்கள் அனைத்தும் அந்த ஆகாஸத்தால் தாங்கப் படுகின்றன” என்று சொன்னது பொருந்தாது. ஹ்ருதயத்துக்குள் இருக்கும் சிறிய பூதாகாஸம் இவை யனைத்துக்கும் ஆதாரம் ஆக இயலாது. பரமாத்மாவுக்கே இது பொருந்தும்.
(மூன்றாம் பாதம் பகவான் தானே அனைத்தையுமே தாங்குபவர் என்ற அர்த்தம் தானே காட்டப்படுகிறது -)
கேள்வி – பரமாத்மா அளவு கடந்தவர் என்று தானே உபநிஷத் கூறுகிறது. அப்படி இருக்க, இங்கு பரமாத்மா தான் தஹராகாஸம் என்று கொண்டால் அவர் ’பூதாகாஸம் அளவு பெரியவர்’ என்று அளவு படுத்திச் சொல்வது எப்படிப் பொருந்தும்?
பதி்ல் – உலகத்தில் பொதுவாக –இஷுவத் கச்சதி ஸவிதா –’அம்பைப் போல் ஸூர்யன் செல்கிறார்’ என்கிறோம். உண்மையில் ஸூர்யன் அம்பை விட மிக வேகமாகச் செல்கிறார். ஸூர்யன் மெதுவாகச் செல்ல வில்லை என்று சொல்வதே இந்த வாக்கியத்தின் குறிக்கோள்-அதுபோல், பரமாத்மா ஹ்ருதயத்துக்குள் இருக்கிறார் என்று சொன்னால் அவர் அளவில் சிறியவரா என்று ஸந்தேஹம் வரக் கூடும் என்பதால், பூதாகாஸம் போல் பெரியவர் அவர்’ என்று சொல்லும் வாக்கியம் அவர் சிறியவரல்ல என்று சொல்கிறதே தவிற, அவர் பூதாகஸம் போல் அளவு பட்டவர் என்று சொல்ல வில்லை
கேள்வி – தஹராகாஸம் பரமாத்மா என்றால் அதற்குள் இருக்கும் த்யானிக்கப் பட வேண்டிய பாருள் எது?
பதி்ல் – ’அஸ்மிந் காமா: ஸமாஹிதா:’ என்று கல்யாண குணங்களே இவ்வாறு சொல்லப் படுகின்றன. தஹராகாஸம் என்ற பரமாத்மாவையும் அவருடைய ஒப்பற்ற கல்யாண குணங்களையும் த்யானிக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது.-(காமா -ஆசைப்பட வைக்கும் கல்யாண குணங்களையே சொன்னவாறு -)
————
1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல-
நாம் அறியாத செல்வம்
தஹராகாசம் பரமாத்மா தான் என்று நிரூபிக்க, பின் வரும் வாக்கியங்களில் உள்ள சில காரணங்கணளப் பயன் படுத்தினார் வேத வ்யாஸர் ’-த₃ஹர உத்தரேப்₄ய:’ என்ற முதல் ஸூத்ரத்தில். இனி, மேலும் சில காரணங்களக் காட்டுகிறார்.
(உயர்வற உயர் நலமுடையவன் -அபரிமித கல்யாண குணங்கள் உடையவன்-குணங்கள் விபூதிகள் இல்லாதவன் என்பவரை -மிடற்றைப் பிடிக்குமா போல் முதலடியிலே அருளிச் செய்கிறார்)
2- க₃தி சப்₃தா₃ப்₄யாம் ததா₂ ஹி த்₃ருஷ்டம் லிங்க₃ம் ச
க₃தி சப்₃தா₃ப்₄யாம் – “செல்வதாலும் சப்தத்தாலும் (தஹராகாசம் பரமாத்மா என்று தெரிகிறது)”
ததா₂ ஹி த்₃ருஷ்டம் – அவ்வாறு அன்றோ மற்ற உபநிஷத் வாக்கியங்களில் காணப்படுகிறது.
க₃தி--அதாவது செல்வது என்பதைப் பற்றி உபநிஷத்துக்களில் இரண்டு விதமான உபதேசங்கள் காணப்படுகின்றன –
(தத்₃யதா₂பி ஹிரண்ய நிதி₄ம் நிஹிதம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே ₃யுரேவமேவேமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா: அஹரஹர்க₃ச் ச₂ந்த்ய ஏதம் ப்₃ரஹ்ம லோகம் ந விந்த₃ந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா₄꞉ )
“எப்படி பூமிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தை அறியாமல் மக்கள் அந்த பூமியின் மேல் சென்று வருகிறார்களோ-அது போல் இந்த ப்ரஹ்மம் என்ற தஹராகாசம் உள்ளே இருப்பதை அறியாமல் ஜீவாத்மாக்கள் மேலோட்டமாகச் சென்று வருகிறார்கள் (உடலில் வாழ்கிறார்கள்), ஏனெனில் அவர்கள் தங்கள் பாபங்களாலே திசை மாறிப் போகிறார்கள்”
இவ்வாறு புதைக்கப்பட்ட தங்கமாக தஹராகாசம் சொல்லப் படுவதால் அவர் பரமாத்மாவகத் தான் இருக்க வேண்டும்.
2-(ஸதி ஸம்பத்₃ய ந விது₃꞉ ஸதி ஸம்பத்₃யாமஹ இதி, ஸத ஆக₃ம்ய ந விது₃꞉ ஸத ஆக₃ச்சா₂மஹ இதி) – “ஜீவாத்மாக்கள் தூக்கத்தில் பரமாத்மாவோடு சேர்ந்து, உணரும் போத அவரிடமிருந்து பிரிந்து வந்தாலும் அவரை அறிவதில்லை ”. இப்படி ஸுஷுப்தி(ஆழ்ந்த உறக்கத்தில்) ஜீவாத்மாவால் அடையப் படுபவராக பரமாத்மா தான் இருக்க முடியும், பூதாகாசம் அல்ல.
“சப்தம்” என்பது இங்கு ’ப்₃ரஹ்ம லோகம்’ என்ற சொல்லைக் குறிக்கிறது. அந்த ப்ரஹ்மம் என்ற சொல் மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கவே பயன்படுத்தப் படுகிறபடியால் அவரே தஹராகாசம் என்று காட்டுகிறது.(’ப்₃ரஹ்ம லோகம்-ப்ரஹ்மமாகிற லோகம் -என்று பொருள் )
லிங்க₃ம் ச – மற்ற உபநிஷத்துகளில் இது சொல்லப்படா விட்டாலும் இந்த அடையாளங்களே போதுமானவை .
உலகங்களைத் தாங்கும் ஆகாசம்
3-த்₃ருதே : ச மஹிம்ந: அஸ்ய அஸ்மிந் உபலப்₃தே ₄:
அஸ்ய- இந்தப் பரமாத்மாவினுடைய மஹிம்ந: மஹிமையான
த்₃ருதே : உலகங்களை யெல்லாம் தாங்கும் சக்தி
அஸ்மிந்- இந்த தஹராகாசத்திடம் உபலப்₃தே ₄ ச காணப்படுகிற படியாலும் (தஹராகாசம் பரமாத்மாவே ).
இந்த தஹராகாசத்தைப் பற்றி வருணிக்கும் போது, (அத₂ ய ஆத்மா ஸ
ஸேதுர் த்₄ருதி ரேஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய) அதாவது
“இந்த தஹராகாசம் என்கிற ஆத்மா தான் அணை போல் இருந்து எல்லா உலகங்களையும் ஒன்றொடொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
இப்படி உலகங்களை யெல்லாம் தாங்கும் தன்மை யானது உபநிஷத்துக்களில் பல இடங்களிலும் பரமாத்மாவுக்குத் தான் சொல்லப்பட்டுள்ளது – (ஏஷ ஸர்வேஶ்வர: ஏஷ பூ₄தாதி₄பதி: ஏஷ பூ₄தபால | ஏஷ ஸேதுர்வித₄ரண ஏஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய) என்று ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் “இவர் தான் ஸர்வேஸ்வரன், இவர் தான் ஜீவ ராசிகளுக்கெல்லாம் தலைவர், இவர் தான் அனைவரையும் காப்பவர், இவர் தான் அணை போல் எல்லா உலகங்களும் ஒன்றொ டொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று உள்ளது.-எனவே பரமாத்மாவுக்கே உரிய பெருமை தஹராகாசத்துக்குச் சொல்லப் பட்டுள்ளபடியால் தஹராகாசம் பரமாத்மாவே .
4- ப்ரஸித்₃தே ₄: ச – “(ஆகாசம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்கும் என்கிற) ப்ரஸித்தியாலும்” ஆகாசம் என்கிற சொல் உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுவதைப் பல இடங்களில் காண்கிறபடியால் “ஆகாசம் என்றால் பரமாத்மா” என்று ப்ரஸித்தியும் உள்ளது. அத்தாலும் தஹரகாசம் பரமாத்மாவே .
தைத்திரீய உபநிஷத்தில் (கோ ஹ்யே வாந்யாத் க꞉ ப்ராண்யாத் । யதே ₃ஷ ஆகாஶ ஆநந்தோ ₃ ந ஸ்யாத்) அதாவது”ஆனந்தமே வடிவானவரான இந்த ஆகாசம் என்கிற பரமாத்மா இல்லா விட்டால் யார் இவ் வுலகத்திலும் மற்றை யுலகங்களிலும் ஜீவ ராசிகளை ரக்ஷிப்பார்கள்?”என்றுள்ளது.
சாந்தோக்ய உபநிஷத்தில் (ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாந் யாகாஶாதே ₃வ
ஸமுத்பத்₃யந்தே ) அதாவது-“ஆகாசம் என்ற ப்ரஹ்மத்திடமிருந்து தான் எல்லா பூதங்கள் உண்டாகின்றன” என்றுள்ளது-(தானும் பிரகாசமாய் இருந்து மற்றவற்றையும் பிரகாசப்படுத்துவதால் பரமாத்மாவே ஆகாசம்)
ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல
இது வரை ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாசமே தஹராகாசம் என்ற பூர்வபஷம் தவறென்று நிரூபிக்கப்பட்டது. இனி ஜீவாத்மாவே தஹராகாசம் என்ற பூர்வபஷம் முன் வைக்கப்படுகிறது. அதை வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
5(्இதர பராமர்சாத் ஸ: இதி சேத் ந அஸம்ப₄வாத்)
இதர பராமர்சாத் ஸ: -பரமாத்மாவைக் காட்டிலும் வேறு ஓருவர் நினைவு கூறப்படுகிற படியால் அவர் தான் (தஹராகாசம்)
இதி சேத் ந – என்று கூறினால் அது சரி அல்ல
அஸம்ப₄வாத் – பொருந்தாதபடியால்
பூர்வ பக்ஷம் – தஹராகாசத்தைப் பற்றி உபதேசித்துக் கொண்டு வரும் உபநிஷத் இடையில் (அத₂ ய ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்
ஜ்யோதி ருப ஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄நிஷ்பத்₃யதே ) அதாவது
“இந்த ஸம் ப்ரஸாதன் எனப்படுகிற ஜீவாத்மா இந்த சரீரத்திலிருந்து புறப்பட்டு பரஞ்ஜ்யோதிஸ்ஸான பரமாத்மாவை அடைந்து தன் இயற்கையான வடிவத்தோடு வெளிப்படுகிறார்” என்று கூறுகிறது.
தஹராகாசத்தைப் பற்றிப் பேசி வரும் போது “இந்த ஜீவாத்மா” என்று கூறப்படுகிற படியால், ’இந்த’ என்ற சொல்லால் நினை கூறப்படும் தஹராகாசம் ஜீவாத்மா தான் என்று தெரிகிறது. ’இதர’ பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவரான ஜீவாத்மா ’பராமர்சாத்’ நினை கூறப்படுகிற படியால் ’ஸ:’ அந்த ஜீவாத்மா தான் தஹராகாசம்.
இந்தப் பூர்வ பஷத்தை கண்டிக்கிறார் வேத வ்யாஸர் – “இதி சேத் ந” – இவ்வாறு கூறினால் அது தவறு
அஸம்ப₄வாத் – முதல் 4 ஸூத்ரங்களில் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால்.-பாபங்களற்றவராய் இருத்தல், ஸத்ய ஸங்கல்பம், அனைத்தையும் தாங்கும் சக்தி, இவரை அறிந்தால் முக்தி அடைவது என்னும் பண்புகள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது. எனவே அவர் தஹராகாசமாக இருக்க முடியாது.
————–
1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவின் உண்மையான தன்மை
(அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I -ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –)
ஜீவாத்மாவும் இயற்கையில் பாபமற்றவரே
1.3.5 தஹராதிகரணத்தின் 5ஆம் ஸூத்ரத்தில், தஹராகாசத்துக்குச் சொன்ன பாபங்களற்றிருத்தல் (அபஹத பாப்மத்வம்) முதலான பண்புகள் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால், ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல என்று வ்யாஸர் கூறினார். அதற்கு மேல் எழும் ஓர் ஆஷேபத்தைச் சொல்லி அதற்கு பதில் அளிக்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்.
6-உத்தராத் சேத் ஆவிர்பூ₄த ஸ்வரூப: து
உத்தராத் சேத் – “பின் வரும் வாக்கியத்தால் (ஜீவாத்மாவுக்கே அபஹத பாப்மத்வம் உள்ளதே ) என்றால்”
ஆவிர்பூ₄தஸ்வரூப: து – “ஆவிர்பாவம் அடைந்த ஸ்வரூபத்தை உடையவன் அன்றோ (அங்கு சொல்லப்படுகிறான்)”
ப்ரஜாபதியான நான்முகன் ஜீவாத்மாவைப் பற்றி செய்த உபதேசம் ஒன்று கதை வடிவத்தில் சொல்லப்பட்டுள்ளது.“எந்த ஆத்மா பாபங்களற்றவரோ , மூப்பு மரணம் சோகம் பசி தாகம் அற்றவவரோ , எல்லா ஆசைகளும் நிரம்பியவரோ ,ஸங்கல்பத்தாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவரோ அவரை அறிந்தால் எல்லா உலகங்களையும் ஜயிக்கலாம்” என்று நான்முகன் ஒருமுறை அறிவித்தார். தேவர்களுக்காக இந்த்ரனும், அஸுரர்களுக்காக விரோசனனும் அந்த ஆத்மாவை அறிவதற்காக நான்முகனிடம் வந்தனர். அவர் முதலில் தண்ணீரில் தெரியும் ப்ரதி பிம்பமே ஆத்மா என்று சொன்னார். விரோசனன் த்ருப்தி யடைந்து உடலே தான் ஆத்மா என்று நினைத்துக் கொண்டே திரும்பச் சென்றார். -ஆனால் இந்த்ரனுக்கு இது பொருத்தமாகப் படவில்லை , உடலில் பல குறைகள் காணப்படுகிறபடியால். எனவே அவருக்கு மட்டும் ப்ரஹ்மா வரிசை யாக கனவில் காணப்படுபவனும். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரும் ஆத்மா என்று கூறினார். அதையும் இந்த்ரன் ஏற்கவில்லை -கனவிலும் குறைகளைக் காண்கின்றோம் -ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையுமே அறியாதவனாய் இருப்பவன் எப்படிப் மேலானவனாக இருக்க முடியும் -இவ்வாறு ஒவ்வொரு நிலையையும் கழித்து -ஒவ்வொரு தடாவையும் 32 வர்ஷம் கைங்கர்யங்கள் செய்து அவனை மகிழ்வித்து இறுதியில் உண்மையான ஆத்ம உபதேசம் பெற்றான் – . எனவே இறுதியாக ஆத்மாவின் உண்மைத் தன்மையைக் கூறி அந்த ஆத்மா பாபங்களற்றிருத்தல் முதலான குணங்களை உடையவர் என்று நான்முகன் கூறினார்.இதைக் கொண்டு பூர்வபக்ஷீ ஆஷேபிக்கிறார் – ஜீவாத்மாவுக்கே அபஹதபாப்த்வம் பொருந்துமே ? என்று-ஆவிர்பூ₄த ஸ்வரூப: து – இது வ்யாஸரின் பதில். ஜீவாத்மாவுக்கு பாபமற்றிருத்தல் முதலான 8 குணங்கள் முக்தி அடைந்து, ஸ்வரூபம் முழுவதும் ஆவிர்பாவம் (விளக்கம்) அடைந்த பிறகு தான் சொல்லப்பட்டுள்ளது. தஹராகாசவமோ உடலிலிருக்கும் போதே அப் பண்புகளை உடையது என்று கூறப்பட்டுள்ளது. எனவே தஹராகாசம் ஜீவாத்மா அல்ல.
(அஶரீரோ வாயுரப்⁴ரம் வித்³யுத்ஸ்தநயித்நுரஶரீராண்யேதாநி
தத்³யதை²தாந்யமுஷ்மாதா³காஶாத்ஸமுத்தா²ய பரம் ஜ்யோதிருபஸம்பத்³ய
ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யந்தே ॥ 8.12.2॥।
ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யதே ஸ உத்தமபுருஷ:
ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத்க்ரீட³ந்ரமமாண: ஸ்த்ரீபி⁴ர்வா யாநைர்வா
ஜ்ஞாதிபி⁴ர்வா நோபஜநꣳ ஸ்மரந்நித³ꣳ ஶரீரꣳ ஸ யதா²
ப்ரயோக்³ய ஆசரணே யுக்த ஏவமேவாயமஸ்மிஞ்ச²ரீரே
ப்ராணோ யுக்த: ॥ 8.12.3॥)
முக்தியில் பரமாத்மாவுக்கு நிகரானவர்
ஜீவாத்மா தஹராகாசம் அல்ல என்றால் எதற்காக “
ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்ஜ்வயாதி:
உபஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄” அதாவது’இந்த ஜீவாத்மா இவ்வுடலை விட்டு பரமாத்மாவை அடைந்து தன்னுடைய இயற்கை நிலையை அடைகிறான்” என்று இங்கு கூறப்படுகிறது? அதற்கு பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
7-அந்யார்த₂: பராமர்ச : – “(ஜீவாத்மாவை ) நினைவு கூறியது வேறு பயனுக்காக”
இங்கு ஜீவனைப் பற்றிப் பேசியது, ஜீவாத்மா தான் தஹராகாசம் என்று சொல்வதற்காக அல்ல. தஹராகாசம் என்ற பரமாத்மாவுக்கு உள்ள மற்ற ஓரு சிறப்பை உணர்த்துவதற்காக – அதாவது அந்தப் பரமாத்மாவின் கருணை மற்றும் அநுக்ரஹத்தால் தான் ஜீவாத்மா முக்தியை அடைகிறார் என்று காட்டுவதற்காகவே .
8-அல்ப ஸ்ருதே : இதி சேத் தது₃க்தம்
அல்பஸ்ருதே : – தஹராகாசம் அல்பமானது (சிறியது) என்று சொல்லப் படுகிறபடியால் அது பரமாத்மாவாக இயலாதே
இதி சேத் – என்று கேட்டால்
தது₃க்தம் – அதற்கான விடை முன்னமே 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் “அர்ப₄கோகஸ்த்வாத் தத்₃ வ்யபதே ₃சாத் நேதி சேத் ந நிசாய்யத்வாதே₃வம் வ்யோமவச்ச” என்கிற ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது. பரமாத்மா அளவற்றவராய் இருந்தாலும், உபாஸகனுக்கு அனுக்ரஹிப்பதற்காக அவர் ஹ்ருதயத்துக்குள்ளும் சிறிய வடிவத்வதாடு இருக்கிறபடியால் இதில் பொருந்தாமை இல்லை.
9-அநுக்ருதே : தஸ்ய ச –
தஸ்ய அந்த தஹராகாசத்தோடு
அநுக்ருதே : ஸாம்யம் அடைகிறான் ஜீவாத்மா
என்று சொல்லப்படுகிறபடியாலும், ஜீவாத்மா வேறு தஹராகாசம் வேறு என்று தான் கொள்ள வேண்டும்.
10-அபி ஸ்மர்யதே – “மேலும் ஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது” – ஸம்ஸாரத்திலிருக்கும் ஜீவாத்மாவுக்கு முக்தி யடையும் போது பரமாத்மாவோடு ஸாம்யம் ஏற்படுகிறது என்பது பகவத் கீதை என்ற ஸ்ம்ருதியிலும் (மம ஸாத₄ர்ம்யம் ஆக₃தா🙂 (14.2) என்று கூறப் பட்டுள்ளது.
இதம் ஜ்ஞாநமுபாஸ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா:
ஸர்கேऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச
இதம் ஜ்ஞாநம் உபாஸ்ரித்ய-இந்த ஞானத்தை அடைந்து,
மம ஸாதர்ம்யம் ஆகதா:-அதனால் என்னியல்பு பெற்றோர்,
ஸர்கே அபி ந உபஜாயந்தே-படைப்புக் காலத்தில் பிறவார்,
ப்ரலயே ந வ்யதந்தி ச-ஊழியிலும் சாகமாட்டார்.
இந்த ஞானத்தை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.
ஆக இவ்வாறு தஹராகாசம் பரமாத்மாவே , பூதாகாசமுமல்ல ஜீவனுமல்ல என்று நிரூபிக்கப்பட்டது.
——————————
1.3.6 ப்ரமிதாதி₄கரணம்-பரமாத்மா அருவெறுப்பு இல்லாமல் உறைகிறார்
சப்தா தேவ ப்ரமித-ஸூத்ரம் இருப்பதால் இந்த அதிகரணத்தின் பெயர்-மித -அளக்கப் பட்டது –அமித-அளவிடமுடியாதவர் –பிரமித -கட்டை விரல் அளவாக அளக்கப்படுபவர்
ப்ரமிதாதி₄கரணத்தின் பின்புலம்
1.3.6 ப்ரமிதாதி₄கரணம் – ஸங்கதி – இதற்கு முன் தஹராதிகரணத்தில் “அல்பச்ருதே : இதி வேத் தது₃க்தம்” என்கிற ஸூத்ரத்தில் பரமாத்மாவுக்கு சிறிய வடிவம் எப்படிப் பொருந்தும் என்று காட்டப்பட்டது.-அதற்கு மேல் ஒரு ஸந்தேஹம் எழுகிறது – கடோபநிஷத்தில் இப்படி சிறிய வடிவம் ஜீவாத்மாவுக்குத் தானே சொல்லப்பட்டுள்ளது என்று
விஷய வாக்யம் – கடோபநிஷத்தின் இரண்டாவது அத்யாயத்தின் முதல் வல்லியில் உள்ள வாக்கியங்கள் –அங்கு₃ஷ்ட₂மாத்ர: புருஷ: மத்₄யே ஆத்மநி திஷ்ட₂தி | ஈசாநோ பூ₄தப₄வ்யஸ்ய ததோ ந விஜுகு₃ப்ஸதே ||-கட்டை விரல் அளவுடைய ஒரு புருஷன் உடலுக்குள்ளே இருக்கிறார். அவர் கடந்த காலப் பொருள்கள் வருங்காலப் பொருள்கள் என அனைத்தையும் இயக்குபவர்.
அங்கு₃ஷ்ட₂மாத்ர: புருஷ: ஜ்யோதிரிவ அதூ₄மக: | ஈசாநோ பூ₄தப₄வ்யஸ்ய ஸ எவாத்₃ய ஸ உ ஶ்வ: ||-கட்டை விரல் அளவுடைய புருஷன் புகை யில்லாத நெருப்புபோல் ப்ரகாஸ மானவர். அவர் தான் உலகில் அனைத்துப் பொருள்களாகவும் இருக்கிறார்.
தம் ஸ்வாத் சரீராத் ப்ரவ்ருஹேத் | தம் வித்₃யாத் சுக்ரம் அம்ருதம் -அந்தக் கட்டை விரல் அளவுடைய புருஷனைத் தன் உடலைக் காட்டிலும் வேறுபட்டவனாய் அறியவேண்டும். அவரே ப்ரகாஸ மானவர், மிக இனியவர்.
ஸந்தேஹம் – இந்தக் கட்டை விரல் அளவுடைய புருஷன் ஜீவாத்மாவா? பரமாத்மாவா?
பூர்வ பக்ஷம் – இங்கு சொல்லப்படுபவர் ஜீவாத்மாவே -வேறொரு உபநிஷத்தில் அவ்வாறு சொல்லப்பட்டபடியால்.
ப்ராணாதி₄ப: ஸஹ்சரதி கர்மபி₄: | அங்கு₃ஷ்ட₂மாத்ரோ ரவிதுல்யரூப: ஸங்கல்பாஹங்கார ஸமந்விதோ ய: ||-அந்த கட்டை விரல் அளவுடை யவர் ப்ராண வாயுவுக்கு தலைவன், கர்மங்களால் பிறந்தவர் என்று சொல்கிற படியால்.
தன் சொத்தில் அழுக்கையும் ஏற்கும் பரமாத்மா
கேள்வி – ஜீவாத்மா உண்மையில் அணுவானவர் என்று தானே சொல்லப்படுகிறார். எனவே இங்கு கட்டை விரல் அளவு என்று சொன்னது ஒரு பேச்சுக்காகத் தான் இருக்க வேண்டும். பரமாத்மாவுக்கும் அப்படிச் சொல்லலாமே ?
பதில் – உண்மை தான், ஜீவாத்மா அணுவே . ஆனால் அவர் ஹ்ருதயத்துக்குள் இருக்கிற படியால் ஒரு பேச்சுக்காவது அவரை கட்டை விரல் அளவுடையவர் என்று சொல்லலாம். பரமாத்மாவை அப்படிச் சொல்ல வழியே இல்லை .
கேள்வி – கடந்தகால மற்றும் வருங்காலப் பொருள்களை யெல்லாம் இயக்குபவராக ஜீவாத்மா எப்படி ஆவார்?
பதில் – தன்னுடைய சொத்தான உடல், புலன்கள், பொருள்கள் முதலானவற்றை இயக்குகிற படியால்
ஸித்தாந்தம் – 1-சப்₃தா₃தே₃வ ப்ரமித: – (ஸப்தாத் ஏவ ப்ரமித)கட்டை விரல் அளவுடையவர் (பரமாத்மாவே ) சப்தத்தாலேயே –இங்கு கட்டை விரல் அளவுடையவரை ’ஈசாந :’ அதாவது’இயக்குபவர்’ என்று சொல்கிற படியால் அந்தச் சொல்லைக் கொண்டு அவர் பரமாத்மா தான் என்று புரிந்து கொள்ளலாம். உலகில் சில பொருள்களை மட்டும் இயக்கும் பண்பு ஜீவாத்மாவுக்கும் உள்ளதே என்று பொருளைக் குறைத்துக் கொள்ள முடியாது-வேதமே ஸ்பஷ்டமாக ’பூ₄தப₄வ்யஸ்ய’ என்று ’முக் காலத்திலிருக்கும் எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரன்’ என்று சொல்லப்பட்டபடியால்-
(பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் -பரந்த அண்டம் இதுவென கரந்து எங்கும் பரந்துளன்-அனைத்தும் சொத்து என்பதால் ஜுகுப்ஸை இல்லாமல் உள்ளே உகந்து உறைகிறான்–ஆமவை ஆயவை யாய் நின்ற அவரே–யானும் நீ என்னுடைமையும் நீயே -ஆத்மாவும் சரீரம் அவனுக்கு சரீரம் -அவரே ஆத்மா)
அளவற்ற பரமாத்மா ஹ்ருதயத்துக்குள் சிறிய வடிவம் கொண்டவர் என்று சொல்லலாம் என்கிறது அடுத்த ஸூத்ரம்-2- ஹ்ருதி அபேக்ஷயா து மநுஷ்யாதி₄காரத்வாத் –
ஹ்ருதி₃ – (உபாஸநத்தின் ஸௌகர்யத்துக்காக) ஹ்ருதயத்தில் (பரமாத்மா இருக்கிற படியால்)
அபேக்ஷயா து – அதன் அளவை வைத்து (பரமாத்மாவுக்கு அளவு சொல்வதில் தவறில்லை )
ஹ்ருதயம் கட்டை விரல் அளவுடையது என்று புராணங்கள் சொல்கிறபடியால் அதற்குள் இருக்கும் பரமாத்மாவுக்கும் அதே அளவு சொல்லப்படுவதில் தவறில்லை
கேள்வி – விலங்குகளுக்குக் கட்டை விரல் இல்லாததால் அவர்கள் ஹ்ருதயத்திலிருக்கும் பரமாத்மாவின் அளவு என்ன?
பதில் – மநுஷ்யாதி₄காரத்வாத் – மனிதர்களுக்கு மட்டுமே உபாஸநத்தில் தகுதி உள்ளபடியால் (இக்குறை இல்லை )
(வாலாக்ர்யம் –இத்யாதி –அணு மாத்ரம் -நுண்ணியவர் -கட்டை விரல் என்பது பேச்சுக்குச் சொன்னபடி -உபசார யுக்தி)
(கொண்டல் வண்ணன் –ஒண் சங்கதை வாள் ஆழியான் அடியேன் உள்ளான் -விக்ரஹத்துடன் உள்ளான் –கருட வாஹனம் கொண்டு அருளுகிறவன் ஆழ்வார் திரு உள்ளத்தில்-அரவிந்தப்பாவையும் தானும் –அகம்படி வந்து புகுந்தான் -பாற்கடலுடன் -அலைஓசை கேட்க்கும்)
இந்த அதிகரணத்தின் மீதமுள்ள இரண்டு ஸூத்ரங்கள்-அடுத்த மூன்று அதிகரணங்களுக்குப் பின்னர் அமைத்துள்ளார்
———————————-
1.3.7 தே₃வதாதாதி₄கரணம்-தேவதைகள் உபாஸனம் செய்யலாமா?
தே₃வதாதி₄கரணத்தின் பின்புலம்
1.3.6 ப்ரமிதாதி₄கரணம் இன்னும் முடியவில்லை . அதற்கு இடையிலேயே மூன்று அதிகரணங்களை அமைத்துள்ளார் வேத வ்யாஸர். அதற்குப் பிறகு மறுபடியும் ப்ரமிதாதி₄கரணத்தின் மீதமிருக்கும் ஸூத்ரங்களைப் பார்க்கலாம்.
(ஸ்ம்ருதஸ்ய உபேஷா அநஹர்த்வம் -நினைவுக்கு வந்தவற்றை விலக்க முடியாமை பிரசங்காத் மூன்று அதிகரணங்களில் விசாரம் -அனைத்தையும் தாங்குபவரைப் பற்றிய விசாரம் மூன்றாம் பாதத்தில் பார்த்து வருகிறோம் -இந்த மூன்றிலும் அது இல்லாவிட்டாலும் தொடர்புடைய விசாரம் என்பதால் இங்கே அமைத்துள்ளார்)
1.3.7 தே₃வதாதி₄கரணம் – ஸங்கதி – ப்ரமிதாதிகரணத்தின் இரண்டாவது ஸூத்ரத்தில் “மநுஷ்யாதி₄காரத்வாத்”-அதாவது “மனிதர்களுக்கு மட்டும் உபாஸநத்தில் தகுதி உள்ள படியால்” என்று சொல்லப்பட்டது. அதன் அடிப்படையுள் ஒரு கேள்வி எழுகிறது – ’மனிதர்களுக்கு மட்டும்’ என்று சொல்வதால் யாருக்குத் தகுதி இல்லை என்று சொல்லப்படுகிறது? என்று.
விஷய வாக்யம் – இந்த அதிகரணத்தில் விஷய வாக்யம் கிடையாது. யுக்திகளின் அடிப்படை யில் தான் விசாரம்.
ஸந்தேஹம் – விலங்குகள் முதலான தாழ்ந்த பிறவிகளுக்கு மட்டும் உபாஸநம் செய்யத் தகுதி இல்லை என்று சொல்லப்படுகிறதா? அல்லது மனிதர்கணை விட உயர்ந்த பிறவிகளான தேவர்கள் முதலானவர்களுக்கும் தகுதி இல்லை என்றும் சொல்லப்படுகிறதா?
பூர்வ பக்ஷம் – தேவர்களுக்குத் தகுதி இல்லை , அர்தி₂த்வம் ஸாமர்த்₂யம் என்ற இரண்டும் இல்லாதபடியால்.
அர்தி₂த்வம் – ஒரு பயனை அடைய வேண்டும் என்னும் ஆசைக்கு அர்தி₂த்வம் என்று பெயர். உபாஸநத்தின் பயன் முக்தி, அதாவது உலகத் துன்பங்களிலிருந்து விடுபடுதல். எனவே முக்தியில் ஆசை இருப்பவர்கள் தான் உபாஸநம் செய்யத் தகுதி உடையவர்கள். ஆனால் தேவர்களுக்கு அந்த ஆசை கிடையாது. ஒருவருக்கு துக்கம் இருந்தால் தான்-அதைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட முடியும். துக்கம் இருக்க வேண்டும் என்றால் உடல் இருக்க வேண்டும். தேவர்களுக்கு உடலே இல்லாதபடியால் துக்கம் கிடையாது, எனவே அந்த துக்கத்தைப் போக்கிக் கொள்வதில் ஆசையும் இருக்க முடியாது. எனவே அர்தி₂த்வம் இல்லாதபடியால் தகுதி கிடையாது.
ஸாமர்த்₂யம் – ஒரு செயலைச் செய்வதற்கான திறமை தான் ஸாமர்த்₂யம். உபாஸநம் என்பது கர்மாநுஷ்டானம்,-ப்ராணாயாமம், ஆஸனம், அர்ச்சனை , நாம ஸங்கீர்தனம் முதலான பல செயல்களை உள்ளடக்கியது. இவற்றைச் செய்வதற்கு உடல் தேவை -தேவர்களுக்கு உடல் இல்லாதபடியால் உபாஸநம் செய்யும் ஸாமர்த்₂யம் கிடையாது –
(மீமாம்சகர் -தேவதை வியக்தி அல்ல -சொற்களைக் கொண்டே -அடையாளம் என்பர்-விவேகம் -விமோகம் -அப்பியாசம் -கிரியா -கல்யாணம் -அநவசாதம் -அனுத்ருஷ்யம் -சாதன சப்தகம் சொல்வார்கள் அன்றோ)
தேவர்களுக்கு உடல் உண்டா?
பூர்வ பக்ஷியின் வாதத்தின் அடிப்படை தேவர்களுக்கு உடல் கிடையாது என்பது தான். அதை எப்படி நிரூபிக்கலாம்?-உடல் உள்ளது என்று சொல்லும் ப்ரமாணம் இல்லாதபடியால் உடல் கிடையாது என்று முடிவு செய்கிறார்கள்.-கேள்வி 1 – உபநிஷத்துக்களில் பல இடங்களில் தேவர்களின் செயல்கள் சொல்லப்படுகின்றனவே ?
பதில் 1 – உபநிஷத்துக்களில் சொல்லப்படும் பொருள்களுக்கு ஏதாவது ஒரு ப்ரயோஜநம் இருக்க வேண்டும். அதில் சொல்லப்படும் உபாஸனத்துக்குப் பயன் உள்ளது. அதில் சொல்லப்படும் ப்ரஹ்மம் தானே புருஷார்த்தமாக உள்ளது, எனவே அந்த வாக்கியங்களுக்கும் ப்ரயோஜனம் உள்ளது. ஆனால் தேவதைகளுக்கு உடல் உள்ளது என்று சொல்வதால் எந்தப் பயனும் இல்லை. எனவே அந்த வாக்கியங்களுக்கு அப்படியே உண்மைத் தன்மையை ஏற்க முடியாது.
கேள்வி 2 – கர்ம காண்டத்தில் சில மந்த்ரங்களிலும் அர்த்த வாதங்களிலும் தேவர்களின் உடல்கள், அவர்களின் சக்திகள்,அவர்கள் செய்யும் வீரச் செயல்கள் முதலானவை சொல்லப் பட்டுள்ளனவே ? எனவே உடல் இருக்க வேண்டுமே ?
பதில் 2 – அந்த வாக்கியங்களும் செய்யப்படும் யாகத்தைப் புகழ்வதற்காகவே வந்தவை – யாகம் உயர்ந்தது என்று சொல்வதற்காக அந்த யாகத்தில் பூஜிக்கப்படும் தேவதையைப் பற்றி இல்லாத பெருமைகளை எல்லாம் சொல்லி நம்மை யாகம் செய்ய ஊக்குவின்றனவே தவிற, அந்தப் பெருமைகளை எல்லாம் உண்மை என்று கொள்ள முடியாது.
கேள்வி 3 – கர்ம காண்டத்தில் இந்த இந்த பயனை விரும்புபவன் இந்த இந்த கர்மத்தைச் செய்ய வேண்டும் என்று கர்ம விதி₄கள் (கட்டளைகள்) உள்ளனவே . இன்று செய்யப்படும் ஒரு யாகம் என்றோ பயனளிக்கும் என்று சொல்வது பொருந்தாது. எனவே அந்த யாகத்தின் ஹவிஸ்ஸை ஏற்று உண்ட தேவதை தான் த்ருப்தி அடைந்து பிற்காலத்தில்
பயனளிக்கிறார் என்று கொள்ள வேண்டும். இதெல்லாம் தேவர்களுக்கு உடல் இருந்தால் தானே நடக்க முடியும்
பதில் 3 – கர்மங்களைச் செய்வதால் அபூர்வம் என்றழைக்கப்படும் புண்ணியம் உண்டாகிறது. அது ஆத்மாவிடம் வெகு காலத்துக்கு இருக்கும். அது தான் பிற்காலத்தில் ஸ்வர்கம் முதலான பயன்களை அளிக்கிறது. தேவர்கள் ஹவிஸ்ஸை ஏற்பதோ , உண்பதோ , த்ருப்தி அடை வதோ , பயனளிப்பதோ கிடையாது. எனவே அவர்களுக்கு உடல் கிடையாது.
தேவர்களும் ஸம்ஸாரிகளே
ஸித்தாந்தம் – இந்தப் பூர்வபக்ஷத்தை 5 ஸூத்ரங்களாலே வேத வ்யாஸர் தவறென்று நிரூபிக்கிறார்.
1- தத் உபரி அபி பா₃த₃ராயண: ஸம்ப₄வாத்
தத் – “அது”-, அதாவது மோக்ஷம் அடைவதற்காக ப்ரஹ்மத்தைப் பற்றின உபாஸநம் என்பது
உபரி அபி – “மேலேயும் உண்டு”-, மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்த தேவர்கள் முதலானவர்களுக்கும் உண்டு
பா₃த₃ராயண: – என்பது பா₃த₃ராயணர் என்கிற வேத வ்யாஸரின் கருத்து
ஸம்ப₄வாத் – “ஸாத்தியமான படியால்”-, அதாவது அர்தி₂த்வமும் ஸாமர்த்₂யமும் தேவர்களுக்கு ஸாத்தியமானபடியால்
அர்தி₂த்வம் – இந்த்ரன் சந்த்ரன் முதலான தேவர்களும் இந்த உலகத்தில் தான் பிறந்துள்ளார்கள். ஒரு புல் தொடங்கி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா வரை இந்த உலகில் பிறந்த அனைவருமே கர்மத்துக்கு வஸப்பட்டு உடற்பிறவி அடைந்து அதனால் துன்பங்களை அனுபவிக்கும் ஸம்ஸாரிகள் தான். எனவே தேவர்களுக்கும் அந்த துக்கத்திலிருந்து விடுதலை அடைவதாகிற முக்தியில் ஆசை இருக்கலாம். எனவே அர்தி₂த்வம் அவர்களுக்கு ஸாத்தியமே .
ஸாமர்த்₂யம் – உபாஸநம் செய்யும் திறமையும் கூட அவர்களுக்கு உண்டு, மிக உயர்ந்த உடல் இருக்கிறபடியால்.
அவர்களுக்கு உடல் இருப்பதற்கு என்ன ப்ரமாணம் உள்ளது என்று கேட்டார் பூர்வ பக்ஷி. அதற்கான பதில் –
(1) உபநிஷத்துக்களில் தத்த்வங்களைச் சொல்லும் வாக்கியங்கள் – சாந்தோக்ய உபநிஷத்தில் பரமாத்மா உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது “நான் பலவாக ஆகக் கடவேன். என்னுடைய உடலான ஜீவாத்மாக்களைக் கொண்டு ப்ராணிகளின் உடல்களுக்குள்ளே புகுந்து அவர்களை பெயராலும் உருவத்தாலும் வேறுபடுத்தப் போகிறேன்” என்று ஸங்கல்பம் எடுத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. ஜீவாத்மாக்களை பெயராலும் உருவத்தாலும் தேவர்கள்,மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்று வேறுபடுத்துகிறார் பரமாத்மா. இந்த வேறுபாடுகள் ஜீவாத்மாவுக்கு நேரடியாக ஏற்பட முடியாது. ஒரு உடல் மூலமாகத் தான் வர முடியும். எனவே , தேவர்கள் என்று சொன்னாலே ஒரு விதமான உடலை எடுத்துக் கொண்டுள்ள ஜீவாத்மா என்று தான் பொருள். எனவே தேவர்களுக்கும் உடல் உண்டு.
தேவர்களுக்கும் உடல் உண்டு
2–உபநிஷத்துக்களில் உபாஸநத்தைப் பற்றிச் சொல்லும் கதைப் பகுதிகள் – ப்ரதர்தனனுக்கு இந்த்ரன் உபதேசம் செய்தார், இந்த்ரன் ப்ரஜாபதியிடம் உபதேசம் பெருவதற்காகச் சென்றார், 32 ஆண்டுகள் தொண்டு செய்தார், தன் ப்ரதிபிம்பத்தைத் தண்ணீரில் பார்த்தார், ப்ரஜாபதியிடம் கேள்வி கேட்டார் என்று தேவர்கள் செய்யும் பல செயல்கள் உபநிஷத்துக்களில் சொல்லப்படுகின்றன. இவற்றை யெல்லாம் பொய் என்று கொள்ள இயலாது. எனவே உடல் உண்டு
3-கர்ம காண்டத்தில் மந்த்ரங்களும் அர்த்த வாதங்களும் – ’வஜ்ர ஹஸ்த: புரந்த₃ர:’ முதலான பல மந்திரங்களும் அர்த்தவாதங்களும் (புகழ்ச்சி வாக்கியங்களும்) தேவர்களின் உடல்கள், ஆயுதங்கள், சண்டைகள், சக்திகள் எல்லாம் சொல்லப்பட்டுள்ளன. எனவே அவற்றை ஏற்க வேண்டும்.
(தை. ஸம். (2-4-12) –வஜ்ர ஹஸ்த: புரந்தர: | தேவேந்த்ரோ. வஜ்ரம் உதயச்சத் இந்த்ரன் வஜ்ராயுதத்தைக் கையில் கொண்டிருந்தான்.)
ஆஷேபம் – ஒரு குழந்தையை மருந்து சாப்பிட வைப்பதற்காக ’இதை சாப்பிட்டால் உயரமாக ஆவாய்’ என்று பொய் சொல்வது போல், யாகத்தில் நம்மை ஊக்குவிப்பதற்காகப் பொய்யான பண்புகளை யெல்லாம் சொல்லுகிறது வேதம்
ஸமாதாநம் – அக்குழந்தைக்கு அந்த வார்த்தை பொய்யானது என்று தெரிந்து விட்டால் மருந்து உண்பதில் ஆசையே பிறக்காது. அது போல், யாகம் செய்வதற்கு முன்னால் வேதத்தை ஆராய்ந்து புரிந்து கொள்ளும் ஒருவனுக்கு இந்தப் புகழ்ச்சி வாக்கியங்கள் எல்லாம் பொய்யானவை என்று தெரிந்து விட்டால் ஊக்கமே ஏற்படாது. வேதத்தின் குறிக்கோள் நிறை வேறாமல் போய்விடும். இல்லாத குணத்ணதச் சொல்லிப் புகழ்வதை விட, இருக்கும் உயர்வுகளைச் சொல்லிப் புகழ்ந்தால் தான் கேட்டு ஆராய்பவர்களுக்கு உண்மையான ஊக்கம் ஏற்படும். எனவே இவை எல்லாம் உண்மையே .
4-கர்ம விதி₄கள் – கர்மங்கள் எப்படிப் பயனளிக்கின்றன என்னு கேள்வி எழும் போது வேதமே சொல்லுகிறது – நீ செய்யும் யாகத்தால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பயன் அளிக்கிறார்கள் என்று. இதை விட்டுவிட்டு,’அபூர்வம்’ அல்லது ’புண்ணியம்’ என்று புதிதாக ஒரு பொருளைக் கற்பிப்பது வீணானது. நம் ஸித்தாந்தத்திலும் புண்ணியத்தை
ஏற்கிறோம், ஆனால் அது யாகம் செய்யும் நம்மிடம் இருப்பதல்ல. வேதத்தின்படி நாம் நடந்தால் பகவானுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே புண்ணியம். வேதத்தை மீறி நடந்தால் அவருக்கு ஏற்படும் சீற்றமே பாபம். எனவே தேவர்களின் த்ருப்தியாலும் கோபத்தாலும் தான் நமக்குப் பயன்கள் கிடைக்கின்றன. எனவே அவர்களுக்கு உடல் உண்டு.
1.3.7 தே₃வதாதாதி₄கரணம்-வேதங்களின் நித்யத்துவம்
ஆஷேபங்களுக்கு விடை
தேவர்களுக்கும் உடல் இருக்கிறபடியால் அவர்களுக்கும் அர்தி₂த்வம் ஸாமர்த்₂யம் என்ற இரண்டும் இருக்கக் கூடும் என்பதால் அவர்களுக்கும் உபாஸனத்தில் அதிகாரம் உண்டு என்றார் வேத வ்யாஸர்.-அதற்கு மேல் எழும் சில ஆஷேபங்களுக்கு மேல்வரும் ஸூத்ரங்களில் விடை அளிக்கிறார் –
2-விரோத₄: கர்மணி இதி தேத் ந அநேக ப்ரதிபத்தே: தர்ஸநாத்
விரோத₄: கர்மணி – (தேவதைகளுக்கு உடல் உண்டு என்று கொண்டால்) கர்மத்தில் முரண்பாடு ஏற்படும்
இதி தேத் ந – என்று கூறினால் அது தவறு
அநேக ப்ரதிபத்தே: தர்ஸநாத் –சக்திசாலிகள் பல சரீரங்கணை ஏற்றுக் கொள்வதை புராணங்களில் காண்கிறபடியால்
ஆஷேபம் – ஒரே தேவதையைக் குறித்து பலரும் ஒரே காலத்தில் கர்மங்களைச் செய்யும் போது, அந்த தேவதை தன் உடலோடு ஒருவரிடம் மட்டும் தான் ஹவிஸ்ஸை ஏற்க முடியும் என்பதால் மற்றவரின் கர்மங்கள் பயனற்றவை ஆகும்.
ஸமாதாநம் – ஸௌபரி முதலான ருஷிகளைப் போல் மிகவும் சக்தி வாய்ந்தவர்களான தேவர்களும் ஒரே காலத்தில் எண்ணற்ற உடல்களை எடுத்துக் கொள்ள முடியும். எனவே எத்தனை பேர் ஒரே காலத்தில் ஹவிஸ்ஸை வழங்கினாலும் அந்த தேவதை அதை ஏற்றுக் கொள்வதில் முரண்பாடு ஒன்றுமில்லை
3-சப்₃தே₃ இதி தேத் ந அத: ப்ரப₄வாத் ப்ரத்யஷ அநுமானாப்₄யாம்
சப்₃தே₃ – (வேதம் என்கிற) சப்தத்தில் (இந்த்ரன் முதலான அழியக் கூடிய பொருள்களைப் பற்றிப் பேசுவதால், இந்தரன் இல்லாத போது இல்லாத பொருளைச் சொல்லுவதால் உண்மைத் தன்மை இல்லாமை என்ற முரண்பாடு ஏற்படும்)
இதி தேத் ந – என்று குறினால் அது தவறு
அத: ப்ரப₄வாத் – அந்த சப்தத்திலிருந்தே உலகப் பொருள்கள் உண்டாகிறபடியால்
ப்ரத்யஷ அநுமானாப்₄யாம் –-ஸ்ருதிகளாலும் ஸ்ம்ருதிகளாலும் (இவ்வாறு கூறப்படுகிறபடியால்)
ஒரு இந்த்ரன் அழிந்தாலும் அதே போன்ற மற்ற ஓருவரை நான்முகன் படைத்து விடுகிறார் என்பதால் வேதத்தில் சொல்லப்பட்ட பொருள்கள் இல்லாமல் போகும் காலமே கிடையாது. எனவே இந்த தோஷமில்லை-
4-அத ஏவ ச நித்யத்வம் – ஆகையாலேயே (வேதத்தின்) அழியாத் தன்மையும் (உறுதி யாகிறது)
ஆஷேபம் – வேதத்திலேயே சில ரிஷிகளை ’மந்த்ர க்ருத்’ அதாவது மந்த்ரங்களைச் செய்தவர்கள் என்று சொல்கிறபடியால், வேதங்கள் இயற்றப்பட்டவையே , நித்யமாக இருக்க முடியாது
ஸமாதாநம் – ’இந்த ரிஷி இந்த மந்த்ரத்தைச் செய்தார்’ என்பதும் வேதத்தலேயே உள்ள படியால், கீழ் ஸூத்ரத்தில் சொன்னபடிக்கு, அந்த ரிஷியின் பெயரைத் தன் மனதில் கொண்டுள்ள ப்ரஹ்மா அந்த ரிஷியைப் படைத்து, அவரைத் தவம் செய்யத் தூண்டி, அவர் ஆழ்ந்த த்யானத்தில் இருக்கும் போது அந்த மந்த்ரத்தை அவருக்குக் காட்டித் தருகிறார்.
இப்படி யாரிடமும் கற்காமல் த்யானத்தில் மந்த்ரத்தைக் கண்டறிந்தபடியால் அவர்கள் ’மந்த்ர க்ருத்’ எனப்படுகிறார்கள்.
(ஒவ்வொரு சதுர்யுகத்திலும் வியாசர் படைக்கப்படுகிறார் -வசிஷ்டர் வால்மீகி போல்வாரும் அவ்வாறு படைக்கப்பட்டு -தவம் செய்யத்தூண்டி -மந்த்ர த்ரஷ்டா -கண்டு அறிந்தவர்கள் -discovery வேறு invention வேறு -வர்ணதயா தர்சனம் -சந்தஸ்ஸுடன் கண்டு வெளியிடுகிறார்கள்-தமிழ் வேதம் -அருளிச் செயல்களும் அவ்வாறு தான் -இவையும் நித்யம் -யானாய்த் தன்னைத்தானே பாடி -என் முன் சொல்லும் மூவா முதல்வன் -இவர்கள் மூலமும் வெளிப்படுத்தினான்-ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் |
ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் ||-எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை சாஷாத் கரித்தாரோ, ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!)
5-ஸமாந நாம ரூபத்வாச்ச ஆவ்ருத்தவ் அபி அவிரோத ₄: த₃ர்ஸநாத் ஸ்ம்ருதே:
ஆவ்ருத்தவ் அபி ச – ப்ரளயத்தில் உலகமே அழிந்து திரும்பவும் ஸ்ருஷ்டி ஏற்படும் போதும்
அவிராேத₄: – ப்ரஹ்மாவோ வேதச் சொற்களோ இல்லாதபடியால் வரும் முரண்பாடு இல்லை
ஸமாந நாம் ரூபத்வாத் – ஒரே வடிவத்தோடும் பெயரோடும் பொருள்கள் உள்ள படியால் வேதமும் மாறாதபடியால்
த₃ர்ஸநாத் ஸ்ம்ருதே: ச – ஸ்ருதியாலும் ஸ்ம்ருதியாலும் இவ்வாறு அறிகிறபடியால்.
ப்ரளயத்தில் ப்ரஹ்மாவும் அழிந்து வேதச் சொற்களும் அழிந்தாலும், பகவானின் மனதில் எப்போதும் வரிசை மாறாமல் நித்யமாக வேதங்கள் உள்ள படியால் அவர் அடுத்தமுறை ஸ்ருஷ்டி செய்து, தன் நாபீ கமலத்தில் ப்ரஹ்மாவை உண்டாக்கி, அவருக்கு வேதங்களையும், பொருள்களின் வடிவங்களைப் பற்றின ஜ்ஞாநத்தையும் கொடுத்து, அவரை ஸ்ருஷ்டி செய்யச் சொல்கிறபடியால் அப்போதும் வேதச் சொற்களிலிருந்து தான் ஸ்ருஷ்டி நடக்கிறது, வேதமும் நித்யமானது அதாவது என்றும் மாறாத ஒரே வரிசையைக் கொண்டது என்பது நிரூபிக்கப்படுகிறது.
ஆக, எந்த முரண்பாடுகளும் இல்லாதபடியால் தேவர்களுக்கும் உடல் உண்டு. எனவே அவர்களுக்கும் அர்தி₂த்வமும் ஸாமர்த்₂யமும் இருக்கிறபடியால் அவர்களுக்கும் உபாஸநத்தில் தகுதி உண்டு என்று நிரூபிக்கிறார் வேத வ்யாஸர்.
(யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –(யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை -தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணமஹம் ப்ரபத்யே –தை நா -11-எவன் பிரமனை முன் படைத்தானோ எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேஸித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தன் விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரமபுருஷனை மோக்ஷமடைய விரும்பும் நான் சரணம் அடைகிறேன் -)
—————–
1.3.8 மத்₄வதி₄கரணம்-குறிப்பிட்ட உபாஸநத்தில் ஸந்தேஹம்-மத்₄வதி₄கரணத்தின் பின்புலம்-மத்₄வதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் பொதுவாக தேவர்களுக்கு உபாஸநம் செய்யத் தகுதி உண்டு என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில குறிப்பிட்ட தேவர்களுக்கு சில குறிப்பிட்ட உபாஸநங்களில் தகுதி உண்டா என்கிற சிறப்புக் கேள்விக்கு இந்த அதிகரணத்தில் பதில் அளிக்கப்படுகிறது.
விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தின் மூன்றாம் அத்யாயத்தில் உள்ள மது₄ வித்₃யா
அஸஸௌ வா ஆதி₃த்ய: தே₃வ மது₄, தஸ்ய த்₃யௌதேவ திரஶ்சீனவம்ச:, அந்தரிக்ஷம் அபூப:, மரீசய: புத்ரா:-இந்த ஸூர்யன் தான் தேவர்களின் தேன். த்₃யுலோகம் தான் கிளை , வானம் தான் தேன்கூடு, கிரணங்களே தேனீக்கள்
ப்ராஞ்ச: ரச்மய: ப்ராச்ய: மது₄நாட்₃ய: | ருச: ஏவ மது₄க்ருத:, ருக்₃வேத₃ ஏவ புஷ்பம் | யச: தேஜ: இந்த்ரியம் வீர்யம் அந்நாத்₃யம் ரஸ: | தத் வஸவ: உபஜீவந்தி |
ஸூர்யனின் (1) கிழக்குக் கிரணங்களே கிழக்கு தேன்கூடு- ருக் மந்த்ரங்களே தேனீக்கள், -ருக்வேத கர்மங்களே புஷ்பங்கள். அந்தக் கர்மங்களிலிருந்து பிறக்கும் தேஜஸ், ப₃லம் முதலானவையே தேன். அதை வஸுக்கள் பயன்படுத்துகிறார்கள்.
(2) தெற்கு–யஜுஸ்– யஜுர்வேத-ருத்ரர்கள்
(3) மேற்கு -ஸாமங்கள்-ஸாமவேத-ஆதித்யர்கள்
(4) வடக்கு மற்றும்–அத₂ர்வாங்கி₃ரஸ் மந்த்ரங்கள் மற்றும் -இதிஹாஸ புராணக் கர்மங்கள் மற்றும்-மருத்துக்கள் மற்றும்
(5) மேல் புறங்களில்,-உபநிஷத்துக்கவள தேனீக்கள், -ப்ரஹ்மம் தான் புஷ்பங்கள், – அத் தேனை ஸாத்ய தேவர்கள் பயன்படுத்துகிறார்கள்
ந வை தே₃வா: அச்நந்தி ந பிப₃ந்தி ஏத்தே₃வ அம்ருதம் த்₃ருஷ்ட்வா த்ருப்யந்தி
தேவர்கள் தேனை உண்பதோ குடிப்பதோ கிடையாது, அது பார்த்து மட்டுமே த்ருப்தி அடைகிறார்கள்
(அந்தர்யாமியான அவனே தேன் -அவனைப் பார்த்தே திருப்தி அடைகிறார்கள் -வஸூக்களில் ஒருவனாக இருந்து பார்த்து மகிழ்கிறார்கள் -இதே போல் ருத்ரர்களில் ஒருவனாகவும் ஆதித்யர்களில் ஒருவனாகவும் மருத்துக்களில் ஒருவனாகவும் -ஸாத்ய புருஷர்களில் ஒருவராக கண்டு மகிழ்கிறார்கள் –இதுவே பலன்)அந்தர்யாமி உபாஸனமே சொல்லிற்று
பூர்வபக்ஷியின் வாதம்
ஸ ஏவ ஏத்தே₃வ ஏவம் அம்ருதம் வேத₃ வஸூநாமேவ ஏகோ பூ₄த்மா த்ருப்யதி
எவனொருவன் இப்படி உபாஸநம் செய்கிறானோ அவன் வஸுக்கள்/ஆதித்யர்கள்/ருத்ரர்கள்/மருத்துக்கள்/ ஸாத்ய தேவர்களுக்குள் ஒருவனாக ஆகி அந்த அம்ருதத்தைப் பயன்படுத்தி மகிழ்கிறான்
அத₂ த்த ஊர்த்₄வ: உதே₃த்ய நைவ உதே₃தா ந அஸ்தமேதா ஏகல ஏவ ஸ்தா₂தா | ஸக்ருத்₃தி₃வா ஹைவ அஸ்மை ப₄வதி ய ஏதாம் ஏவம் ப்₃ரஹ்ம உபநிஷத₃ம் வேத₃-இந்த உலகத்தைத் தாண்டிய பிறகு அவனுக்கு ஸூர்யன் உதிப்பதுமில்லை , அஸ்தமிப்பதுமில்லை . ப்ரஹ்மத்தைப் பற்றிய இந்த ரஹஸ்யமான உபதேசத்தை அறிந்து உபாஸநம் செய்பவனுக்கு எப்போதுமே பகல் போல் இருக்கிறது.
ஸந்தேஹம் – இந்த மது₄ வித்₃யையில் வஸுக்கள் ஆதித்யர்கள் முதலாவனாருக்குத் தகுதி உண்டா? கிடையாதா?
பூர்வ பக்ஷம் – அவர்களுக்கு இந்த உபாஸநத்தில் தகுதி கிடையாது.
(இதில் முதல் இரண்டு ஸூத்ரங்களும் பூர்வபக்ஷ வாதம் மட்டுமே -மூன்றாவது மட்டுமே ஸித்தாந்த ஸூத்ரம்)
1-மத்₄வாதி₃ஷு அஸம்ப₄வாத் அநதி₄காரம் ஜைமிநி:
மத்₄வாதி₃ஷு – மது₄ வித்யை முதலான வற்றில்
அநதி₄காரம் – (வஸுக்கள் முதலான தேவர்களுக்கு) அதிகாரம் இல்லை
ஜைமிநி: – என்று ஜைமிநி மஹரிஷி கூறுகிறார்
அஸம்ப₄வாத் – (அர்தி₂த்வமும் ஸாமர்த்₂யமும் அவர்களுக்கு இருக்க) வாய்ப்பு இல்லாதபடியால்.
ஸாமர்த்₂யம் இல்லை – எந்த ஒரு செயலிலும் கர்த்தா (எழுவாய்) வேறாகவும் கர்மம் (செயப்படுபொருள்) வேறாகவும் இருக்க வேண்டும். எனவே , இந்த மது₄ வித்₃யையில் வஸுக்கள் முதலானோர் உபாஸிக்கப் படுகிறபடியால், அவர்கள் தங்களையே உபாஸித்துக் கொள்வது பொருந்தாத படியால், அவர்களுக்கு இவ் வுபாஸநத்தில் ஸாமர்த்₂யம் இல்லை .
அர்தி₂த்வம் இல்லை – நம்மிடம் இல்லாத பொருளைத் தான் ஆசைப் பட முடியும். இந்த உபாஸநத்தின் பயன் வஸுக்கள் முதலானவர்களாக ஆகுவது. அதில் வஸுக்களாகவே இருப்பவர்களுக்கு ஆசை பிறக்க முடியாது.
வேத வ்யாஸரின் பதில்
2-ஜ்யோதிஷி பா₄வாத் ச – “ஜ்யோதிஸ்ஸில் இருக்கிறபடியாலும்”
“தம் தே₃வா: ஜ்யோதிஷாம் ஜ்யோதி: ஆயு: ஹ உபாஸதே அம்ருதம்” என்று ஓரு வேத வாக்யம். அதில், “தேவர்கள் ப்ரஹ்மத்தை உபாஸிக்கிறார்கள்” என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதைச் சொல்வதால் ப்ரயோஜநம் இல்லை . “தேவர்கள் மட்டும் தான் ப்ரஹ்மத்தை உபாஸிக்கிறார்கள்” என்று பொருள் கொள்வது பொருந்தாது, மனிதர்களுக்கும்
அத் தகுதி இருக்கிறபடியால். எனவே , “தேவர்கள் ப்ரஹ்மத்தை மட்டுமே உபாஸிக்கிறார்கள்” என்று தான் பொருள் கொள்ள வேண்டும். எனவே , மது வித்யை என்ற உபாஸநம் ப்ரஹ்மத்தைப் பற்றியது அல்ல என்பதால் வஸுக்கள் முதலான தேவர்களுக்கு அதில் தகுதி கிடையாது.
ஸித்தாந்தம் – ஒரே ஸூத்ரத்தாலே இதற்கு வ்யாஸர் பதிலளிக்கிறார்.
3- பா₄வம் து பா₃த₃ராயண: அஸ்தி ஹி
பா₄வம் து – (அந்த தேவர்களுக்கும் இந்த உபாஸநத்தில்) தகுதி உள்ளது
பா₃த₃ராயண: – என்று பா₃த₃ராயணர் எனப்படும் வேத வ்யாஸர் கூறுகிறார்.
அஸ்தி ஹி – (அவர்களுக்கும் அர்தி₂த்வமும் ஸாமர்த்₂யமும் இருப்பதற்கு வாய்ப்பு) உள்ளதன்றோ
இந்த உபாஸநத்தின் பயனைச் சொல்லும் போது “ஸக்ருத்₃தி₃வா ப₄வதி” அதாவது எப்போதும் பகல் போல் இருக்கிறது என்று ஸர்வஞ்ஜத்வம் (அனைத்தையும் அறியும் தன்மை ) சொல்லப் படுகிறது. எனவே இந்த உபாஸநத்தின் பயன் மோக்ஷம் தான். அதனால் இதுவும் பரமாத்மாவைப் பற்றிய உபாஸநமாகத் தான் இருக்க வேண்டும். நேரடியாகவும்-“ப்₃ரஹ்மோபநிஷத்” அதாவது-“ப்ரஹ்மத்தைப் பற்றிய ரஹஸ்யமான உபதேசம்” என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஆகையால், இங்கு உபாஸநம் செய்யும் வஸுக்களைக் காட்டிலும் உபாஸிக்கப்படும் ப்ரஹ்மம் வேறானபடியால்,அவர்களுக்கு ஸாமர்த்₂யம் உண்டு. ஒருமுறை வஸுவாக இருந்தாலும் திரும்பவும் வஸுவாக ஆகி, பின் பரமாத்மாவை அடையும் ஆசையும் இருக்கும் வாய்ப்பு உள்ளபடியால் அர்தி₂த்வமும் உள்ளதே -எனவே வஸுக்கள் முதலானவர்களுக்கு இந்த மது₄வித்₃யையில் அதிகாரம் உண்டு என்று தெளிவாகிறது.
(மன்னவராய் உலகாண்டு பின் வானவராய் மகிழ்வு எய்துவர் போல் வசுவாகி பின்பு ப்ரஹ்ம அனுபவம் இந்த உபாசனத்தின் பலன்-இது பூர்வகமாக ப்ரஹ்ம பிராப்தி என்றவாறு -ப்ரஹ்மத்தைப் பற்றிய உபாசனமே -போதாயனாரும் அருளிச் செய்கிறார் -)
————————
1-3-9-அபசூத்ராத்₄வதி₄கரணம்-சோகமே ப்ரஹ்ம ஜ்ஞாநத்துக்குத் தகுதி
அபசூத்₃ராதி₄கரணத்தின் பின்புலம்-1-3-9-அபசூத்₃ராதி₄கரணம் – ஸங்கதி – அர்தி₂த்வம் மற்றும் ஸாமர்த்₂யம் இருந்தால் உபாஸநம் செய்யும் தகுதி உண்டு என்று சொல்லப்பட்டபடியால், மனிதர்களுள் நான்காம் வர்ணத்தவர்களுக்கும் தகுதி உண்டா என்று கேள்வி எழுகிறது.
விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தின் நான்காம் அத்யாயத்தில் உள்ள ஸம்வர்க₃ வித்₃யா ஜாநஶ்ருதிர்ஹ பௌத்ராயண꞉ ஶ்ரத்₃தா₄தே₃யோ ப₃ஹுதா₃யீ ப₃ஹுபாக்ய ஆஸ | ஸ ஹ ஸர்வத ஆவஸதா₂ந்மா பயாஞ்சக்ரே ஸர்வத ஏவ மே அந்ந மத்ஸ்யந்தீதி
ஜாநஸ்ருதி என்பவர் ஸ்ரத்தையோடு பல தானங்களைச் செய்பவராய், அதிகமாக அன்ன தானம் செய்பவராய் இருந்தார்.-மக்களுக்கு உணவளிப்பதற்காகப் பல சத்திரங்களைக் கட்டி வைத்திருந்தார். அவருடைய தர்ம ஸ்ரத்தையால் மகிழ்ந்த இரண்டு ரிஷிகள் அவருக்கு ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணி, ஹம்ஸத்தின் வடிவத்தை
எடுத்துக் கொண்டு அவர் அருகிலே பரந்தனர்
ஹம்ஸோ ஹம்ஸம் அப்₄யுவாத₃ – ஹோ ஹோ அயி ப₄ல்லாக்ஷ ப₄ல்லாக்ஷ ஜாநஶ்ருதே ꞉ பௌத்ராயணஸ்ய ஸமம் தி₃வா ஜ்யோதிராததம் | தந்மா ப்ரஸாங்க்ஷீ ஸ்தத்த்வா மா ப்ரதா₄க்ஷீரிதி-ஒரு ஹம்ஸம் மற்ற ஓன்றிடம் சொன்னது – “அடேய்! உனக்குக் கண் தெரிய வில்லையா? அங்கு ஜாநஸ்ருதியின் தேஜஸ் ஸூர்யனைப் போல் ப்ரகாஸமாக உள்ளது. அதனருகில் செல்லாதே , அது உன்னை எரித்து விடும்”கம்வர ஏநமேதத் ஸந்தம் ஸயுக்₃வாநமிவ ரைக்வமாத்த₂ | ஸர்வம் தத₃பி₄ஸமைதி யத் கிஞ்ச ப்ரஜா꞉ ஸாது₄ குர்வந்தி
யஸ்தத்₃வேத₃ யத்ஸ வேத₃ ஸ மயைதது₃க்த-அதற்கு அந்த ஹம்ஸம் பதில் சொன்னது – “எதற்கு இந்த ஜாநஸ்ருதியை ரைக்வர் அளவுக்கு உயர்ந்தவன் போல் புகழ்கிறாய்? அவருடைய செயலிலும் ஜ்ஞாநத்திலும் தான் மற்ற அனைவர் செயலும் ஜ்ஞாநமும் அடக்கம்”
செல்வம் கொடுத்து உபதேசம் பெற்றான்
ஜாநஶ்ருதி꞉ உபஶுஶ்ராவ | ஸ ஹ ஸஞ்ஜிஹாந ஏவ க்ஷத்தாரமுவாச | ஸ ஹ க்ஷத்தாந்விஷ்ய நாவித₃மிதி ப்ரத்யேயாய| தம் ஹோவாச – யத்ராரே ப்₃ராஹ்மணஸ்யாந்வேஷணா ததே ₃நமர்ச்சே₂தி–இதைக் கேட்ட ஜாநஸ்ருதி, தனக்குக் குறை இருப்பதை உணர்ந்து வருந்தினான். அப் பெருமையை உடைய ரைக்வரைக்
காண வேண்டும் என்று ஆசைப்பட்டு தன்னுடைய தூதர்களை அனுப்பி அவரைத் தேடினார். அவர்கள் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினார்கள். இப்படிப்பட்ட ஜ்ஞாநீ நகரங்களில் இருக்க மாட்டார், காடுகளில் தேட வேண்டும் என்று ஜாநஸ்ருதி கூறினார். அங்கு தேடி ரைக்வரைக் கண்டுபிடித்தார்கள் தூதர்கள்.
ஷட்ஶதாநி க₃வாம் நிஷ்கம் அஶ்வதரீரத₂ம் ததா₃தா₃ய ப்ரதிசக்ரமே | அநு ம ஏதாம் ப₄க₃வோ தே ₃வதாம் ஶாதி₄ யாம் தே₃வதாமுபாஸ்ஸ இதி தயைவ ஸஹ கோ₃பி₄ரஸ்த்விதி-ஜாநஸ்ருதி உடனே அவரைக் காண ஓடி வந்தார். அவருக்கு 600 மாடுகள், தேர்கள் முதலானவற்றை ஸமர்ப்பித்து, நீங்கள் உபாஸிக்கும் தெய்வத்தை எனக்கும் உபதேசிக்க வேண்டும் என்றான். ஆனால் ரைக்வர், இந்தச் செல்வத்தை நீயே வைத்துக் கொள் என்றார். ஏனென்றால், பணி விடை செய்யாமல் உபதேசம் பெற விரும்பும் ஜாநஸ்ருதி தன்னுடைய செல்வத்துக்கு ஏற்ற தக்ஷிணையைக் கொடுத்தால் தான் அவனுக்கு ஸ்ரத்தை இருக்கும் என்ற ரைக்வருக்கு எண்ணம்.ஸஹஸ்ரம் க₃வாமயம் நிஷ்க: அஶ்வதரீரத₂ இயம் ஜாயாயம் க்₃ராமோ -யஸ்மிந்நாஸ்ஸே | அந்யேவ மா ப₄க₃வ꞉ ஶாதீ₄தி–ஜாநஸ்ருதி மறுபடியும் 1000 மாடுகள், தேர்கள், பெண் மற்றும் க்ராமங்களை ஸமர்ப்பித்துப் ப்ரார்த்தித்தான்.
ஆஜஹார இமா꞉ ஶூத்₃ர அநேநைவ முகே₂ந ஆலாபயிஷ்யதா₂-“சூத்ரனே ! இந்தச் செல்வத்தைக் கொண்டு நான் உனக்கு உபதேசிக்கிறேன்” என்று ரைக்வர் கூறினார்.
ஸந்தேகம் – நான்காம் வர்ணத்தைச் சேர்ந்தவர்களுக்கு ப்ரஹ்ம உபாஸநத்தில் தகுதி உண்டா? கிடையாதா?
பூர்வபக்ஷியின் வாதங்கள்-பூர்வபக்ஷம் – அவர்களுக்கும் அர்தி₂த்வம் மற்றும் ஸாமர்த்₂யம் இருக்கிறபடியால் அவர்களுக்கும் தகுதி உண்டு.-வேத அத்யயனம் செய்து அதன் மூலம் அடையும் ஜ்ஞாநமும், ஆதா₄னம் என்ற வைதிகச் செயலால் கிடைக்கும் மூன்று
அக்நிகளும் இருந்தால் தான் யாகம், ஹோமம் முதலானவற்றைச் செய்ய முடியும். நான்காம் வர்ணத்தவர்களுக்கு அத்யயனமும் ஆதானமும் இல்லாதபடியால் அவர்களுக்கு வைதிக கர்மங்களில் தகுதி இல்லை என்று பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரத்தில் -ஆறாவது அத்தியாயத்தில் -ஜைமிநி ரிஷியால் சொல்லப்பட்டது. ஆனால் உபாஸநம் என்பது மனதால் செய்யும் செயலானபடியால்-அதற்கு வேறு எதுவும் தேவையில்லை , எனவே நான்காம் வர்ணத்தவர்களும் அதைச் செய்ய இயலும்.
கேள்வி – உபாஸநத்துக்கு அங்கமாக யாகம் ஹோமம் முதலான வைதிக கர்மங்கள் தேவை யாயிற்றே ?
பதில் – அது யாகம் ஹோமம் தான் என்று நிர்பந்தம் இல்லை . நான்காம் வர்ணத்தவர்கள் வர்ணாஸ்ரம தர்மமே போதும்
கேள்வி – வேதம் கற்காமல் ப்ரஹ்மத்தைப் பற்றியும் அதை உபாஸிக்கும் முறையையும் அறிய இயலாதே ?
பதில் – இதிஹாஸ புராணங்களை நான்காம் வர்ணத்தவர்களும் கேட்கலாம் என்று ஸாஸ்த்ரம் சொல்கிறபடியால்-அதன் மூலம் அவர்களும் ப்ரஹ்மத்தை யும் அதை உபாஸிக்கும் முறையையும் அறிய முடியும்.
ஸித்தாந்தம் – இந்த பூர்வ பக்ஷத்துக்கு 7 ஸூத்ரங்களில் விடை அளிக்கிறார் வேத வ்யாஸர்.
1–சுக் அஸ்ய தத₃நாத₃ர ஸ்ரவணாத் ததா₃ ஆத்₃ரவணாத் ஸூஸ்யதே ஹி
அஸ்ய சுக் – இந்த ஜாநஸ்ருதியின் ஸோகம்
தத₃நாத₃ரஸ்ரவணாத் – தன்னை அநாதரித்துப் பேசிய ஹம்ஸத்தின் வாக்கியத்தைக் கேட்டதாலும்
ததா₃ ஆத்₃ரவணாத் – அப்போதே ரைக்வரைக் காணத் துடிப்போடு ஓடிவந்த படியாலும்
ஸூஸ்யதே ஹி – கோடி காட்டப்படுகிறது அன்றோ
இங்கு ’சூத்ரன்’ என்ற சொல் நான்காம் வர்ணத்தைக் குறிக்கவில்லை . அச் சொல்லுக்கு’ஸோகம் உடையவன்’ என்று மற்ற ஓரு பொருளும் உள்ளது. அந்த அர்த்தத்தில் தான் ரைக்வர் ஜாநஸ்ருதியை அழைக்கிறார். அவனுக்கு ஹம்ஸத்தின் வாக்கியத்தைக் கேட்டதால் ஸோகம் இருந்தது என்பதை அவன் ஓடிவந்ததே காட்டிக் கொடுக்கிறது.
வேத வ்யாஸரின் பதில்கள்
தான் தற்போது இருக்கும் நிலையைக் குறித்து ஸோகம் இருந்தால் தான் ஒருவன் ப்ரஹ்மத்தை அறிவதற்குத் தகுதி உடையவன் ஆகிறான். அதனால் தான் ரைக்வர் ஜாநஸ்ருதியை ’ஸோகம் உடையவனே ’ என்று அழைக்கிறார்.-இதிஹாஸ புராணங்களை நான்காம் வர்ணத்தவர்களும் கேட்கலாம் என்று ஸாஸ்த்ரம் சொன்னாலும், அது தங்கள்
பாபங்களைப் போக்கிக் கொள்வதற்காகத் தான். அதன்மூலம் உபாஸநம் செய்வதற்கு அல்ல.-உபநிஷத்துக்களைக் கற்காமல் இதிஹாஸ புராணங்கள் மூலம் மட்டும் ப்ரஹ்மத்தையும் அவரை உபாஸிக்கும் முறையையும் சரியாக முழுமையாக அறிய இயலாது. அவை விவரண நூல்கள் தான், மூல நூல்கள் அல்ல. உபாஸநத்துக்கு அங்கமாக யாகம், வேதம் ஓதுதல், தவம் முதலானவை சொல்லப்பட்டுள்ளன. அவற்றைச் செய்ய
தகுதி இல்லாதபடியால், நான்காம் வர்ணத்தவர்களுக்கு உபாஸநம் செய்யத் தகுதி கிடையாது
2-ஷத்ரியத் வக தேச – “க்ஷத்ரியன் என்று அறிகிறபடியாலும்”
ஜாநஸ்ருதி அதிகமாக அன்னதானம் செய்தார், அவருக்குத் தூதர்கள் இருந்தார்கள், அவர் ரைக்வருக்கு க்ராமம் தேர்கள் முதலானவற்றை வழங்கினார் என்னும் அடையாளங்களை வைத்து அவர் க்ஷத்ரியன் என்று அறிய முடிகிறது. எனவே அவர் நான்காம் வர்ணத்தவர் அல்ல.
3- உத்தரத்ர ஸைத்ர்ரதே₂ந லிங்கா₃த் – “மேலே ஸைத்ர்ரதனாலே ,-அடையாளத்தால்”
ரைக்வர் ஜாநஸ்ருதிக்குச் செய்யம் உபதேச த்தில் காபேயர்கள் என்ற ப்ராஹ்மணர்கணளயும் அபிப்ரதாரி என்ற க்ஷத்ரியனையும் பற்றிச் சொல்கிறார். எனவே இந்த வித்யையில் க்ஷத்ரியர்களுக்கு தான் தொடர்பு உள்ளது என்று தெரிகிறது. எனவே ஜாநஸ்ருதியும் க்ஷத்ரியனாகத்தான் இருக்க வேண்டும்.-அபிப்ரதாரி என்பவன் க்ஷத்ரியன் என்று எப்படித் தெரியும்? அதற்கு பதில் ’லிங்கா₃த்’ என்று. அவனுக்குச் சைத்ர்ரத₂ன் (அழகான தேரை உடையவன்) என்று சொல்லப்பட்ட அடையாளத்தைக் கொண்டு அவன் க்ஷத்ரியன் என்று அறியலாம்.
வேத வ்யாஸரின் பதில்கள்
4- ஸம்ஸ்கார பராமர்சாத் தத₃பா₄வ அபி₄லாபாத் ச-ப்ரஹ்ம உபாஸநத்தைப் பற்றிச் சொல்லும் இடங்களில் எல்லாம் ’உபநயனம்’ என்ற ஸம்ஸ்காரம் சொல்லப்படுகிறது. ஆனால் நான்காம் வர்ணத்தவர்களுக்கு உபநயனம் என்ற ஸம்ஸ்காரம் கிடையாது என்று
ஸாஸ்த்ர நூல்கள் கூறுகின்றன. எனவே நான்காம் வர்ணத்தவர்களுக்கு உபாஸனத்தில் அதிகாரம் கிடையாது.
5-தத₃பா₄வ நிர்தா₄ரணே ச ப்ரவ்ருத்தே : சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ள ஸத்யகாமனின் கதை முதலான இடங்களில் மாணவன் நான்காம் வர்ணத்தவன் இல்லையா என்று தெரிந்து கொண்டு ஆசார்யன் ப்ரஹ்ம உபாஸனத்தைப் பற்றி உபதேசிப்பது காணப்படுகிறது.
ஜபாலை என்பவரின் குமாரன் சத்யகாமன் ஒரு குருவிடம் ப்ரஹ்ம வித்யை கற்க செல்ல –
உனது கோத்ரம் என்ன என்று கேட்டதும் தெரியாது என்று சொன்னதும்
இத்தை கேட்டதும் பிராமணன் மட்டுமே இப்படி உண்மை சொல்வான் –
எனவே உனக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கிறேன் -என்றார் –
6- ஸ்ரவண அத்₄யயன அர்த₂ ப்ரதிஷேதா₄த்-நான்காம் வர்ணத்தவர்கள் வேதத்தைக் கேட்கவவோ , ஓதவவோ , அதில் சொல்லப்பட்ட யாகம் முதலானவற்ணறச் செய்யவோ கூடாது என்று கட்டளைகள் வேதத்தில் உள்ளபடியால், அவர்கள் உபாஸநம் செய்வது பொருந்தாது.
தஸ்மத் ஸூத்ர சமீபே நாத்யேதவ்யம்-என்பதாலும் ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை –
7-ஸ்ம்ருதே : ச-ரிஷிகள் எழுதிய ஸ்ம்ருதிகளிலும் இதே போல் கட்டளைகள் காணப்படுகிறபடியாலும் இந்த அர்த்தம் நிரூபிக்கப்படுகிறது.
அத ஹாஸ்ய வேதம் உப ஸ்ருண்வதஸ் த்ரபு ஜதுப்யாம் ஸ்ரோத்ர பரிபூரணம் –இத்யாதி
ஸ்ம்ருதியாலும் ஸூத்ரனுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று ஸித்தம்
இவ்வாறு, நான்காம் வர்ணத்தவர்களுக்கு பக்தி யோகம் எனப்படும் உபாஸநத்தைச் செய்ய அதிகாரம் இல்லை என்று வேதவ்யாஸர் நிரூபித்தார். ஆனால் அவர்களுக்கும் முக்தி அடையவதற்கான எல்லா உரிமையும் உண்டு. -அதனால் தான் வேதமே ’ ஸரணாகதி ’ என்ற மற்ற ஓரு உயர்ந்த மார்கத்தை உபதேசித்து, அது அனைவருக்கும் பொதுவானது, யார் வேண்டுமானாலும் ஸரணாகதியின் மூலம் முக்தி அடையலாம் என்று கூறுகிறது. ஆழ்வார்கள், நம்முடைய ஆசார்யர்கள் முதலான அனைவருமே ஸரணாகதியை சிறந்த மார்கமாகக் கருதி பின்பற்றினார்கள்
உடலை வைத்து வர்ணாஸ்ரம தர்மங்களைச் செய்ய வேண்டும் -பக்தியோகம் த்ரைவர்ணத்தவர்க்கும் ஆண்களுக்கும்-யாகம் ஹோமம் செய்ய பல கட்டுப்பாடுகள் உண்டே- -உடலைப் பார்க்காதே -ஆத்மாவை உஜ்ஜீவிக்க சரணாகதி விதிக்கப்பட்டுள்ளதே
—————
1.3.6 ப்ரமிதாதி₄கரணம்–மீதமிருக்கும் ஸூத்ரங்கள்-பரமாத்மாவைக் கண்டு பயப்படும் தேவர்கள்-1-3-6-ப்ரமிதாதிகரணத்தில் கட்டை விரல் அளவில் உடலுக்குள் இருப்பவர் பரமாத்மா தான், ஜீவாத்மா அல்ல என்று-முதல் இரண்டு ஸூத்ரங்களால் நிரூபித்தார் வேதவ்யாஸர். அப்போது உபாஸநத்தில் யாருக்கு அதிகாரம் என்ற கேள்வி எழ, மூன்று அதிகரணங்களாலே அதற்கு பதில் அளித்தார். இனி, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து, மேலும் இரண்டு ஸூத்ரங்களால் கட்டை விரல் அளவுடையவர் பரமாத்மாவே என்று நிரூபிக்கிறார்.
3-கம்பநாத் – “நடுக்கத்தால்”-கட்டை விரல் அளவுடைய புருஷனைப் பற்றிச் சொல்லும் வாக்கியங்களுக்கு இடையே , இந்த வாக்யம் உள்ளது –
யதி₃த₃ம் கிம்ச ஜக₃த் ஸர்வம் ப்ராண ஏஜதி நி꞉ஸ்ருதம் ।
மஹத்₃ப₄யம் வஜ்ரமுத்₃யதம் ய ஏதத்₃விது₃ரம்ருதாஸ்தே ப₄வந்தி ||
இந்த உலகத்திலிருக்கும் அனைத்து ப்ராணிகளும் எந்தப் ப்ராணனால் வாழ்கின்றனவோ , யாரிடமிருந்து உண்டாகின்றனவோ , தூக்கிய வஜ்ராயுதம் போலிருக்கும் யாரைப் பார்த்துப் பயந்து செயல்படுகின்றனவோ அவரே கட்டை விரல் அளவுடையவர்.
ப₄யாத₃ஸ்யாக்₃நிஸ்தபதி ப₄யாத்தபதி ஸூர்ய꞉ । ப₄யாதி₃ந்த்₃ரஶ்ச வாயுஶ்ச ம்ருத்யுர்தா₄வதி பஞ்சம꞉ ||
அவருக்கு பயந்து தான் அக்₃நி தஹிக்கிறார், ஸூர்யன் உதிக்கிறார், இந்த்ரன் அக்₃நி வாயு ம்ருத்யு முதலான தேவர்களும் செயல்படுகிறார்கள்.
இவ்வாறு தேவர்கள் எல்லாரும்கூட ’இவருடைய ஆணையை மீறினால் என்ன ஆகுமோ ?” என்று பயந்து செயல்படுவது பரமாத்மாவைக் கண்டு மட்டும் தான் என்று மற்ற உபநிஷத்துக்களில் நாம் காண்கிவறாம் – “ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கீ ஸூர்யா சந்த்₃ர மஸௌ வித்₄ருதௌ திஷ்ட₂த:” முதலான இடங்களில்.-எனவே இந்த கட்டை விரல் அளவுடையவர் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.
பரமாத்மாவின் ஒப்பற்ற ஒளி
4-ஜ்யோதி: த₃ர்சநாத் – “ஒளி காணப்படுகிறபடியால்”
கட்டை விரல் அளவுடைய புருஷனைப் பற்றிச் சொல்லும் வாக்கியங்களுக்கு இடையே இந்த வாக்யம் உள்ளது –
ந தத்ர ஸூர்யோ பா₄தி ந சந்த்₃ரதாரகம் நேமா வித்₃யுதோ பா₄ந்தி குத: அயமக்₃நி꞉ ।
தமேவ பா₄ந்தமநுபா₄தி ஸர்வம் தஸ்ய பா₄ஸா ஸர்வமித₃ம் விபா₄தி ||
“அந்தப் புருஷனுக்கு முன் ஸூர்யனோ , சந்த்ரனோ , நக்ஷத்ரங்களோ , மின்னலோ , அக்நியோ ஒளிவிடுவதில்லை . அவருடைய ஒளியில் ஒரு பகுதியை அவர் அநுக்ரஹத்தால் அடைந்து தான் இவை ஒளி விடுகின்றன”
இப்படி மிகவும் ஒளி பொருந்திய உலகப் பொருள்களையே இருட்டடிப்பு செய்யும் அளவுக்கு ஒளி வாய்ந்தவராய், அவர் அநுக்ரஹத்தால் ஸூர்யன் முதலானவற்றைப் ப்ரகாசிக்க வைப்பவர் பரமாத்மா தான் என்று மற்ற உபநிஷத்துக்களில் காணப்படுகிறது.
பரமாத்மா தான் பல இடங்களில் ’பரம் ஜ்யோதிஸ்’ (மிக உயர்ந்த ஜ்யோதிஸ்) என்று அழைக்கப்படுகிறார்.-எனவே , இங்கு கட்டை விரல் அளவுடையவராகச் சொல்லப்பட்டவர் பரமாத்மாவே என்று நிரூபிக்கப்பட்டது.
————–
1-3-10-அர்த்தாந்தரத்வாதி₃ வ்யபதே₃சாதி₄கரணம்-முக்தாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவர் பரமாத்மா
அதி₄கரணத்தின் பின்புலம்
1.3.10 அர்தா₂ந்தரத்வாதி₃ வ்யபதே₃ச அதி₂கரணம் – ஸங்கதி – கீழ் 1.3.5 தஹராதிகரணத்தில் சாந்தோக்ய உபநிஷத்தின்-8ஆம் அத்யாயத்தில் சொல்லப்பட்ட தஹர வித்யை ஆராயப்பட்டது. அதில் எழுந்த கேள்விகளுக்கு விடை யளிக்கத் தான்
6,7,8,9 அதிகரணங்கள் பிறந்தன. அவை முடிந்தபடியால், மறுபடியும் விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்காக அதே சாந்தோக்யத்தின் 8ஆம் அத்யாயத்தின் இறுதியான பகுதியை ( 14 கண்டங்கள் இதில் உண்டு -இறுதி இரண்டு கண்டங்கள் இதன் விஷயம் )இந்த அதிகரணத்தில் ஆராய்கிறார் வ்யாஸர்.
விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தின் 8ஆம் அத்யாயத்தின் 14ஆம் கண்டத்திலிருக்கும் முதல் மந்த்ரம்-ஆகாஸோ வை நாம நாமரூபயோர் நிர்வஹிதா தே யத₃ந்தரா தத்₃ப்₃ரஹ்ம தத₃ம்ருதம் ஸ ஆத்மா-ஆகாசம் தான் பெயர்களையும் வடிவங்களையும் நிர்வாஹம் செய்கிறது, அது பெயர்களும் வடிவங்களும் அற்றது,
அதுவே ப்ரஹ்மம் (பெரியது), அதுவே அம்ருதம் (மரணமற்றது), அதுவே ஆத்மா (உள் புகுந்து வ்யாபிக்கக் கூடியது)
ஸந்தேகம் – இங்கு ஆகாசம் என்று சொல்லப்படுபவது முக்தி அடைந்த ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?
பூர்வபக்ஷம் – முக்தி அடைந்து, தன் இயற்கையான நிலையில் இருக்கும் ஜீவாத்மா தான் இங்கு சொல்லப்படுகிறார்.
அஶ்வ இவ ரோமாணி விதூ₄ய பாபம் சந்த்₃ர இவ ராஹோ : முகா₂த் ப்ரமுச்ய |
தூ₄த்வா ஸரீரம் அக்ருதம் க்ருதாத்மா ப்₃ரஹ்ம லோகம் அபி₄ஸம்ப₄வாமி ||
இதுக்கு முன் மந்த்ரத்தில் ’குதிரை ரோமங்களை உதிர்ப்பது போல் பாபங்களை உதிர்த்து, ராஹுவின் முகத்திலிருந்து சந்த்ரன் வெளி யேறுவது போல் உடலிலிருந்து வெளியேறி, நித்யமான ப்ரஹ்ம லோகத்தை அடைகிறான்’ என்றுள்ளது.–எனவே , முன் மந்த்ரத்தில் முக்தாத்மாவைப் பற்றி பேசியிருக்கிறபடியால், இந்த மந்த்ரமும் அவரைப் பற்றியது தான்.நாமரூபயோ : நிர்வஹிதா’ (பெயர் உருவங்களை உடையவர்) என்று முக்தி அடைவதற்கு முன் ஜீவாத்மாவின் நிலை சொல்லப்படுகிறது. ’தே யத₃ந்தரா’ (பெயர் உருவங்களுக்கு அப்பாற்பட்டவர்) என்று முக்தி நிலை சொல்லப்படுகிறது.
’ஆகாசம்’ என்பது ஜீவாத்மாவே . இடையில் ப்ரஜாபதி வாக்யம் உள்ள படியால் தஹராகாசம் என்கிற பரமாத்மா அல்ல.
ஆ காசம் நன்றாகப் ப்ரகாசிப்பதால் -தல் லிங்காத் -முன்பே பார்த்தோம் -இதுவும் முக்தாத்மாவுக்கும் பொருந்தும் -பிரஜாபதி வாக்கியத்தில் விஷயமும் முக்தாத்மா பற்றியதே -என்பது அவர் வாதம்
வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்
(1) ஆகாச: அர்தா₂ந்தரத்வாதி₃ வ்யபதே ₃சாத்
ஆகாச: – இங்கு ஆகாசம் என்று சொல்லப்படுபவர் [பரமாத்மா தான்]
அர்தா₂ந்தரத்வாதி₃ – வேறுபடுத்தும் தன்மை முதலானவை
வ்யபதே ₃சாத் – சொல்லப்படுகிறபடியால்
அர்த₂ம் என்றால் பொருள். அர்தா₂ந்தரம் என்றால் வேறு பொருள். அர்தா₂ந்தரத்வம் என்றால் வேறுபாடு. இங்கு அதே சொல் வேறுபாட்டை உணர்த்தும் தன்மைகளைக் குறிக்கிறது. இந்த ஆகாசம் என்ற பொருளை ஜீவாத்மாவிடமிருந்து வேறுபடுத்தும் தன்மை இங்கேயே சொல்லப்பட்டுள்ளது தான் முதல் யுக்தி, இந்த ஆகாசம் பரமாத்மா என்று நிரூபிக்க.
“ஆகாஸோ வை நாம நாமரூபதயா: நிர்வஹிதா” என்று இந்த ஆகாசம் தான் பெயர்களையும் உருவங்களையும் நிர்வாஹம் செய்கிறது அதாவது ஆள்கிறது என்று சொல்லப்படுகிறது. ஸம்ஸாரத்தில் இருக்கும் பத்₃த₄ ஜீவாத்மா இந்த பெயர் உருவங்களை உடையவரே தவிற அவற்றை ஆள்பவர் அல்ல. முக்த ஆத்மாவும் இதைப் போன்ற உலகச்
செயல்களைச் செய்வதில்லை என்று உபநிஷத்துக்கள் சொல்வதை ’ஜக₃த்₃ வ்யாபார வர்ஜம்’ என்ற அதிகரணத்தில் காட்டப் போகிறோம். மேலும், பெயர் உருவங்களை ஆள்பவர் பரமாத்மாவே என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன.
“அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி” (சாந்தோக்ய உபநிஷத் 6.3.2)
“என் உடலாக இருக்கும் இந்த ஜீவாத்மா மூலம் பொருள்களுள் புகுந்து பெயர் மற்றும் வடிவங்களைப் பிரிப்பேனாக”
“ஸர்வாணி ரூபாணி விசித்ய தீ₄ர: நாமாநி க்ருத்வா அபி₄வத₃ந் யதா₃ஸ்தே ” (புருஷ ஸூக்தம்)
“எல்லா உருவங்களையும் செய்த பரமாத்மா பெயர்களையும் செய்து அவற்றை ஓதிக் கொண்டிருகிறார்”
மேலும், ’தே யத₃ந்தரா’ என்று இதற்குப் பொருத்தம் சொல்லப்படுகிறது. பரமாத்மா நாம ரூபங்கள் இல்லாதவர், -அதாவது பாபமற்றவரான படியால் பிறப்புக்கு அப்பாற்பட்டவர். எனவே அவரே இவற்றை ஆள்கிறார் என்று.
’ஆதி₃ வ்யபதே ₃சாத்’ (முதலானவை சொல்லப்படுகிறபடியால்) என்று ’ப்ரஹ்மம்’
, ’அம்ருதம்’, ’ஆத்மா’ என்ற சொற்கள் குறிப்பிடப்படுகின்றன. இவையும் இயற்கையில் பரமாத்மாவுக்கே முழுமை யாகப் பொருந்தக் கூடியவை .
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறு
கேள்வி – ’அச்வ இவ ரோமாணி’ என்ற முன் மந்த்ரத்தில் முக்தாத்மா தானே சொல்லப்படுகிறார்?
பதில் – அல்ல, அங்கும் இறுதியில் ’ப்ரஹ்மத்தின் லோகத்தை அடைகிறான்’ என்றுள்ள படியால், இந்த மந்த்ரமும் முன்னால் தஹராகாசம் என்று சொல்லப்பட்ட பரமாத்மாவைப் பற்றித் தான் சொல்கிறது. உபாஸநம் செய்பவனால் இவ்வாறு அடையப்படுகிறார் பரமாத்மா என்று அவர் பெருமையே சொல்லப்படுகிறது. எனவே அவரே ஆகாசம்.
ஆகாசம்’ என்ற சொல்லும் நமக்கு ’தஹராகாசம்’ என்று இதே அத்யாயத்தில் சொல்லப்பட்ட பரமாத்மாவையே நினைவூட்டுகிறது. இடையில் ப்ரஜாபதி வாக்யத்தில் ஜீவாத்மா பேசப்பட்டிருந்தாலும், அங்கு ஜீவாத்மாவின் தன்மையைச் சொன்னதும் “இவ்வாறு தன் உண்மைத் தன்மையை உணர்ந்த உபாஸகன் தஹராகாசம் என்கிற பரமாத்மாவைத் த்யானிக்க வேண்டும்” என்று சொல்வதற்கே . எனவே பரமாத்மாவைப் பற்றின பேச்சு முடியவில்லை
கேள்வி – ஸம்ஸாரத்திலிருக்கும் ஜீவாத்மாவே தான் முக்தி அடைந்த பிறகு தூய்மையான நிலையில் இருக்கிறபடியால் பரமாத்மா, பர ப்ரஹ்மம் எனப்படுகிறார். தனியாக பரமாத்மா கிடையாதே ? எனவே முக்தனே தான் இந்த ஆகாசம்.
பதில் – இதற்கு மேல் இரண்டு ஸூத்ரங்களாலே விடை யளிக்கிறார் வேத வ்யாஸர்.
2-ஸுஷுப்தி உத்க்ராந்த்தயோ : பே ₄தே ₃ந – ’வ்யபதே ₃சாத்’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொள்க.
ஸுஷுப்தி உத்க்ராந்த்தயோ : – ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) மற்றும் உத்க்ராந்தி (மரணம்) ஏற்படும் போது
பே ₄தே ₃ந – [ஜீவாத்மாவைக் காட்டிலும்] வேறுபட்டவராக [பரமாத்மா சொல்லப்படுகிறபடியால்]
ஸுஷுப்தி –(्ப்ராஜ்ஜேந ஆத்மநா ஸம்பரிஷ்வக்த: ந பா₃ஹ்யம் கிஞ்சந
வேத₃ நாந்தரம்) – “ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையும் வெளிப் பொருள்களையும் அறியாதவனான அறிவிலியான ஜீவாத்மாவை மிக்க அறிவுடையவர் அணைக்கிறார்”. எனவே , அந்த மிக்க அறிவுடையவர் வேறு ஓருவர் தான்.
உத்க்ராந்தி -(ப்ராஜ்ஜேந ஆத்மநா அந்வாரூட₄: உத்ஸர்ஜந் யாதி) – “இந்த ஜீவன் மிக்க அறிவுடை யவரான ஆத்மாவாலே செலுத்தப்பட்டு உடலை விட்டுப் புறப்படுகிறான்”. இங்கும் மிக்க அறிவுடையவர் என்று சொல்லப்படும் பரமாத்மா முக்தி அடையும் ஜீவனைக் காட்டிலும் வேறு என்று தெரிகிறது.
கூடிற்றாகில் நல் உறைப்பு கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை உயர் கொடி எம் மாயன் ஆவது அது அதுவே
வீடைப் பண்ணி ஒரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும் உளரும் இல்லை அல்லரே
3- பத்யாதி₃ சப்₃தத₃ப்₄ய: – “பதி முதலான சப்தங்களாலும்”
பரமாத்மாவைப் பற்றிப் பேசும் இடங்களில் பதி, ஈச்வரன், பாலகன், ஸேது, அம்ருதம், அபயம் முதலான சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும், எந்த ஜீவனுக்கும் பொருந்தாது.
(ஸர்வஸ்ய அதி₄பதி: ஸர்வஸ்ய வசீ ஸர்வஸ்ய ஈசாந: )
“அனைத்துக்கும் தலைவர் (ஸ்வாமீ), அனைத்தையும் தன் வசத்தில் கொண்டவர், அனைத்தையும் இயக்குபவர்”
( ஸ ந ஸாது₄நா கர்மணா பூ₄யாந் நோ ஏவ அஸாது₄நா கநீயாந்)
“அவர் நற் செயல்களால் பெருமை அடை வதும் இல்லை , தீய செயல்களால் தாழ்ச்சி அடைவதும் இல்ல, அதாவது பாப புண்யங்களுக்கு அப்பாற்பட்டவர்.”
(ஏஷ ஸேது: வித₄ரண : ஏஷாம் லோகாநாம் அஸம்பே ₄தா₃ய)
“இவர் தான் அணையாக இருந்து உலகங்களைத் தாங்குகிறார், பொருள்களில் தன்மைகள் கலக்காமல் பார்க்கிறார்”
இவ்வாறு வருணிக்கப்படுபவர் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்
(ஸ்வ நிஷ்டா -தானே தமது பெருமையில் நிலை நின்றும் அனைத்தையுமே தாங்குகிறார்)
பாதத்தின் சுருக்கம்
இந்த பாதத்தில் பரமாத்மாவுக்குச் சொல்லப்பட்ட குணங்கணை ஶ்ரீ வேதாந்த தேசிகன் கூறுகிறார் –
(1) விச்வாத்மா
(2) அநந்த பூ₄மா
(3) நியமந த்₄ருதி க்ருத்
(4) முக்த போ₄க்ய ஸ்வபா₄வ:
(5) த₃ஹ்ர ஸ்வாதா₄ர ஸர்வ:
(6) ஹ்ருத₃ய பரிமித அவஸ்த₂யா ஸர்வ யந்தா |
(7) தே ₃வாதீ₃நாம் உபாஸ்ய:
(8) வஸுமுக₂ விபு₃தை ₄: ஸ்வாத்ம பா₄வேந ஸேவ்ய:
(9) சூத்₃ராத்₃ யுபாஸ்த்யனர்ஹ : ப்ரபு₄ ரிஹ பு₃பு₃தே ₄
(10) நாமரூபைக கர்தா ||
(1) உலகத்தை உடலாகக் கொண்டவர்,
(2) எல்லை யற்ற ஆநந்தமே வடிவானவர், (3) அனைத்தையும் தாங்கி இயக்குபவர்,
(4) முக்தர்களால் அநுபவிக்கப்படுபவர்,
(5) மிகச்சிறிய ஆகாசமாக அனைத்தையும் தாங்குபவர்,
(6) ஹ்ருதயத்திலிருந்து இயக்குபவர்,
(7) தேவர்களாலும் உபாஸிக்கப்படுபவர்
(8) வஸு முதலான வர்களாலும்கூட தனக்கு அந்தர்யாமியாக உபாஸிக்கப்படுபவர்,
(9) நான்காம் வர்ணத்தவர்களால் உபாஸிக்கப் படாதவர்,
(10) பெயர் உருவங்களை நிர்வஹிப்பவர் பரமாத்மா
என்று மூன்றாம் பாதத்தில் பத்து அதிகரணங்களால் சொல்லப்பட்டது.
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply