அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-
ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்
அறிகையும் அறியாது ஒழிகையும் ஆகிற இவ்வர்த்தம் கிடக்க சர்வ லோகேஸ்வரனாக சர்வருக்கும் சம்பிரதி பன்னன்
விசேஷித்து என்னை அடிமை கொண்டவன்–அஸ்மத் ஸ்வாமின் –
———————-
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
பொள்ளைக் கரைத்த போதகத்தின் துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்
பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே–5-1-2-
ஸ்ரீ ஆலவாய் உடையான் கேட்க ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று நாம் பிரசித்தமாக சொல்லிப் போருமது இறே
கயல் உகளா நின்றதாகில்-புள்ளுக்குத் தேடித் போக வேண்டுகிறது என் -என்ன
ஸ்ரீ பிள்ளை -அவ்விடம் அறிந்தது இல்லையோ-பிள்ளைக்கு அன்றோ தேடுகிறது
நிலமிதியாலே அவை தான் தூணும் துலாமும் போலே வளர்ந்து இருக்கும்
அதில் இதுக்கு சாத்மிக்கும் அவை தேடித் போகா நிற்கும் –
———————–
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து
மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம்
காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும்
பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-3-
பிராட்டி பக்கலிலும் ஆஸ்ரிதர் பக்கலிலும் ஒக்க வ்யாமோஹம்
பண்ணுகிறவன் வர்த்திக்கிற தேசம் –
———————
வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம்
கற்பார் புரிசை செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-4-
வன்மை மிக்கு திரண்டு இருந்துள்ள தோள்கள் இருபதையும் துணித்த மிடுக்கை உடைத்தான வில்லை உடைய
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம் –
———————
மையார் தடங்கண் கருங்கூந்தல் யாய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயனிடம்
செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்று அணையும்
பொய்யா நாவில் மறை யாளர் புள்ளம் பூதங்குடி தானே –5-1-5-
இவன் அறியாத தோர் இடம் தேடி வைக்கும் யாய்த்து சாந்துப் பரணியிலே தயிரை வைக்கும் யாய்த்து –
ஸ்ரீ நேமி யம் கையனான ஸ்ரீ நாராயணனுக்கு ஒளிக்கப் போமோ
பூசும் சாந்து என் நெஞ்சமே -என்னும்படி நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தம் உடம்பிலே
சிநேகத்தையும் போக்யதா புத்தியையும் பண்ணினாலும் அவன் விடாதே
தனக்கு ஆக்கிக் கொள்வன் என்னுமது ஸ்புரிக்க -சாந்துப் பரணியிலே -என்கிறார் –
———————–
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-6-
நப்பின்னை பிராட்டிக்காக கரு மாரி பாய்ந்தும் -குளத்தில் இரண்டு குச்சுகள் நடுவே குதிக்கை –
அணைய வேணும் யாய்த்து வடிவு அழகு –
மாறாத சினத்தை உடைத்தாய் காட்டு காட்டு என்று வருகிற இளைமையை உடைத்தான
ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக நெரித்த பரம பிரணயி யானவன் வர்த்திக்கிற தேசம் –
———————
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
சடையானோடே வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7-
பிரதானனான இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்த மாம்படி – பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை ரஷித்து –
நாம் இவனைத் தலை அறுக்கல் ஆகாது -என்று இரங்கி தோள்களைக் கழித்து விட்டான் ஆய்த்து
ருத்ரன் விட்டுப் போனதாய்த்து இவனுக்கு இரக்கத்துக்கு அடி –
மாறாத இவ் வாதிக்யத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம் –பரந்த கழனியில் உண்டான
எழில் மிக்கு இருந்த –புள்ளம் பூதங்குடி தானே
————————-
கறையார் நெடுவேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த வெந்தை விடம்
மறையால் முத்தீயை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க வந்தணர் வாழ் புள்ளம் பூதங்குடி தானே—5-1-8-
ராஜாக்கள் அடைய முடியும்படி – அர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணி-ஈஸ்வர அபிமானியான ருத்ரன் கையில்
ப்ரஹ்மா வினுடைய சாபத்தாலே ஒரு காலும் நிறையாது இருக்கிற தலை யோட்டையைத்
தன் திரு மேனியில் ஜல பிந்துவாலே நிறைத்த என் ஸ்ரீ ஸ்வாமி வர்த்திக்கிற தேசம் –
————————–
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள்
அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் இடம்
மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம் பூதங்குடி தானே—5-1-9-
ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்கைக்கு அநாதிகாரிகளாய் இருக்கவும் கூடும் -என்று
திர்யக் வேஷ பரிக்ரஹம் பண்ணினான் ஆய்த்து – ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே –
அசூரர்களோடே கலந்து உரு மாய்ந்து போனத்தை பிரிக்கைக்காக
நீரையும் பாலையும் பிரிக்கும் பதார்த்தத்தின் வடிவைக் கொண்டான் ஆய்த்து –
பிரத்யுபகார நிரபேஷமாகவும்-உபகரித்த சுத்தியும் ஒரு சுத்தியே –
சிலர் அபேஷிக்க அன்றிக்கே தன் பேறாக உபகரித்தான் ஆய்த்து –
———————
கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற
பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல்
கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10-
ஸ்ரீ ராமோ ராமோ ராம -என்கிற படியே இரண்டு அஷரம் பிணைக்க வல்லார் எங்கும் உண்டு –
ஸ்ரீ ஆழ்வாரும் ஒருவரே -என்னா நிற்கும் அத்தனை யாய்த்து –
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே யாய்த்து கொடை இருப்பது – இத் திரு மொழியை உபகரித்தவர் இறே –
சொல் தான் ஈரைந்து இவை பாட-இதுக்கு மேற்பட்டது இல்லை இறே ரச்யதைக்கு-
இவ்வாத்ம வஸ்துவை சோரக் கொடுக்கும் வினை நில்லாது –
—————————–
தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே –5-2-1-
ஆஸ்ரிதராய் இருப்பவர் தம்மை அனுபவித்து ஆஸ்ரிதர்க்காக தாழ நிற்கும் இதுவும் ஒரு நீர்மையே
என்று ஆழங்கால் படுமது ஒழிய தம்மால் அறியப் போகாது –இவன் இப்படியே தன்னை தாழ விட்டாலும்
இவனைத் தாழ நினைத்து இருப்பாரைக் கிடையாதே-ராஜாதி ராஜன் என்கிற பெருமையாலும் மிக்குத் தோன்றுகிறது –
சர்வ கந்த என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசமாய் இருக்கச் செய்தேயும் அத்தை யமுக்கி
இவர்கள் உடைய குழலில் பரிமளமே விஞ்சி வாரா நிற்கும் யாய்த்து –
————————
செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றாரூர் போல்
நறும் தண் தீன் தேனுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே—-5-2-2-
ஸ்ரீ நப்பின்னை பிராட்டி ஒருதிக்குமேயாய் வேறு ஒரு ஆஸ்ரயத்தில் கிடவாத படியான அழகை லபித்து
பெறாப் பேறு பெற்றானாய் அவன் வர்த்திக்கிற தேசம்
———————–
பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவரூர் போல்
கள்ள நாரை வயலுள் கயல் மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே —5-2-3-
ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யத்தால் அல்லது செல்லாத நீர்மையைக் காட்டி அனந்யார்ஹன் ஆக்கி
விலக்காத ஓர் அவகாசம் பெற்றவாறே ஹிருதயத்திலே வந்து அவன் வர்த்திக்கிற தேசம்
——————–
கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர்
ஏற்றான் எந்தை பெருமானூர் போல்
சேறு ஏர் உழவர் கோதைப் போதூண்
கோல் தேன் முரலும் கூடலூரே –5-2-4-
தன்னது அல்லாதது ஒன்றை பெற்றால் போலே இருக்கிற பூமிப் பரப்படைய நீர் ஏற்று
அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட என் குல நாதன் ஆனவன் வர்த்திக்கிற தேசம்
————————
தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ
அண்டத்து அமரும் அடிகளூர் போல்
வண்டல் அலையுள் கெண்டை மிளிரக்
கொண்டல் அதிரும் கூடலூரே —5-2-5-
உடம்பிலே புகரைக் கண்ட மேகமானது தன் உடம்பின் மின்னாகக் கொண்டு
அதுக்கு அனந்தரமான முழக்கத்தை முழங்கா நிற்கும் ஆய்த்து-
நீர் விழுகிற போது இங்கே கண்டு-கார்ய காலத்தில் அங்கே கண்ட
ஸ்ரீ வாமனைப் போலே யாய்த்து இவையும் –
———————-
தக்கன் வேள்வித் தகர்த்த தலைவன்
துக்கந்துடைத்த துணைவரூர் போல்
எக்கலிடு நுண் மணல் மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ் கூடலூரே–5-2-6-
ருத்ரனை துக்கத்தைப் போக்கின ஆபத்சகன் ஆனவன் வர்த்திக்கிற ஊர்
——————
கரும் தண் கடலும் மலையும் உலகும்
அருந்தும் அடிகள் அமருமூர் போல்
பெரும் த ண் முல்லைப் பிள்ளையோடிக்
குருந்தம் தழுவும் கூடலூரே —5-2-7-
ஆபத்துக்களைப் போக்கி ரஷிப்பதாக பொருந்தி வர்த்திக்கிற தேசம்
———————
கலை வாழ் பிணை யோடு அணையும் திரு நீர்
மலை வாழ் எந்தை மருவுமூர் போல்
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்
குலை தாழ் கிடங்கின் கூடலூரே—-5-2-8-
ஸ்ரீ திருநீர் மலையைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு வர்த்திக்கிற என் ஸ்வாமி யானவன்
அத்தேசமும் தனக்கு உண்டாய் இருக்க பொருந்தி வர்த்திக்கிற தேசம் –
——————–
பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருவப் புகுந்து ஒருவரூர் போல்
அருகு கைதை மலரக் கெண்டை
குருகு என்றும் அஞ்சும் கூடலூரே–5-2-9-
ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள காதலை உடைய அடியேனுடைய ஹிருதயமானது உருகும்படியாகப்
புகுந்த அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம்
—————-
காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர் மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாடப் பாவம் போமே –5-2-10-
காவி போலேயும் பெரும் கடல் போலேயும் இருந்துள்ள வடிவை உடைய ஸ்ரீ கிருஷ்ணன்
திரு உள்ளத்தோடு பொருந்தி உஜ்ஜ்வலனாய் வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கூடலூர்
————————–
வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ் தரவரு திரு வெள்ளறை நின்றானே —-5-3-1-
பூமிக்கு ராஜாக்களால் வரும் நலிவைப் போக்கி ரஷித்த அருமை வேணுமோ
என்னுடைய பிரதிபந்தகத்தைப் போக்கி என்னை அடிமை கொள்ளுகைக்கு -என்கிறார்
முன் – நீ தான் விரோதியைப் போக்கப் புக்கது இன்றோ-
—————–
வசையில் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசைகொள் வேதநூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர்கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2-
ஓர் ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்க என்றால் இவன் இறாய்க்கும்-என்று இவன் தன்னை தாழ விட்டு
ஸ்ரீ ஹயக்ரீவனாய் நின்று யாய்த்து உபதேசித்தது –ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே யாய்த்து –
வேதம் இதிஹாசாதிகள் இவற்றை உண்டாக்கினவனே என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் –
————————-
வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலம் இரு பிளவாகக்
கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே
மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-3-
ஸ்ரீ திரு வாழியைக் கொண்டு கார்யம் செய்யப் பெறாத படி அவன் வரம் பெற்று இருக்கையாலே
ஸ்ரீ திரு உகிரே ஆயுதமாகக் கொண்டு வ்யாபரித்தவனே –
என்னுடைய விரோதியைப் போக்கி என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும் –
————————-
வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர் திரு வெள்ளறை நின்றானே—5-3-4-
தேவர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான
பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும் –
————————–
மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு குக்கும் திரு வெள்ளறை நின்றானே —5-3-5-
ஸ்ரீ பூமிப் பிராட்டி தன் விபூதி முகத்தாலே புக்கு அழுந்த –பிரளயத்தில் அகப்பட நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத
ஸ்ரீ வராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனே –
அர்த்திக்கவும் மாட்டாதே பூமியை ரஷித்த உனக்கு அர்த்தித்த என்னுடைய ரஷணம் பண்ணுகை பெரிய பணியோ –
——————
பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான்
அங்குஒர் ஆமையதாகிய வாதி நின்னடிமையை யருள் எனக்கு
தங்கு பேடை யோடூடிய மதுகரம் தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே—5-3-6-
மந்தரத்தை தரிக்க வல்ல ஸ்ரீ ஆமையின் வேஷத்தை பரிக்ரஹித்து அவர்களை ரஷித்து
அவர்களுக்கு சத்தா ஹேது வானவனே –நின்னடிமையை யருள் எனக்கு
————————–
ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-7-
ராவணன் உடைய தலை பத்தையும் சின்னம் பின்னமாய் போம்படி யாக வில்லை வளைத்தவனே –
என் பக்கலில் கிருபையை பண்ணி யருள வேணும் –
————————–
முன் இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த
அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8-
நீரையும் பாலையும் பிரிக்க வல்ல அன்னத்தின் வடிவினைக் கொண்டு தன் படிகளை அடங்கலும்
பேச வற்றை இருக்கிற வேதத்தை உண்டாக்கினவனே-என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும் –
——————–
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே—5-3-9-
ஔதார்யத்துக்கு சமைந்து இருந்த படியால் தன்னை இரப்பாளனாக்கி அவனதாக்கிக் கொண்டான் ஆய்த்து –
இந்த்ரன் உடைய ஆஸ்ரயணத்தோ பாதி போராதோ என்னுடைய ஆஸ்ரயணம் –
———————–
மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்
எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே –5-3-10-
அசந்நிஹிதனே யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து வடிவழகு –
அழகு இல்லை யாகிலும் விட ஒண்ணாதது ஆய்த்து பிராப்தி –
பிராப்தி இல்லை யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து போக்யதை –
இப்பத்தையும் ஒன்றும் விடாதே ஏத்த வல்லவர்களை ஸ்ரீ நித்ய சூரிகள் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட்டு
இவர்களை ஆதரியா நிற்பர்கள் –
———————–
உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1-
சர்வ ஸ்ரஷ்டாவாய் ஆபத் சகனுமாய் இருக்கும் இருப்பைக் காட்டி என் குலத்துக்கு நாதன் ஆனவன் –
அடியார்களை குழாங்களை– உடன் கூடுவது என்று கொலோ -என்று சொல்லும் ஸ்ரீ நித்ய சூரிகளும்
இவ்விடத்தை விரும்பி இங்கே படுகாடு கிடப்பார்கள் ஆய்த்து –
———————-
வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப்
பை கொள் நாகத்தணையான் பயிலும் இடம் என்பரால்
தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச்
செய்ய சந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே —5-4-2-
கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடையனாய் இருக்கிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிறவன் விடாதே வர்த்திக்கிற தேசம்
————————
பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-3-
யஞ்ஞவாடத்திலே சென்று ஸ்ரீ திரு ஆழியைப் பிடிக்கக் கடவ கையாலே நீரை ஏற்ற ஸ்ரீ வாமனன்
வர்த்திக்கிற தேசம் –
———————
விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட
வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால்
துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே –5-4-4-
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் சாய்ந்து அருளுகிற தேசம் என்னா நிற்பார்கள்
——————–
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற்
செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-5-
வழி கெட அன்றிக்கே நேர் கொடு நேரே அம்பாலே அழியச் செய்த வீர ஸ்ரீ யால்
குறை வற்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்
————————
கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழும் இடம் என்பரால்
குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே—5-4-6-
முலை உண்ணா விடில் தரியாதானாய் அவள் உயிரை முடித்தவன் இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக
அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்-
————————–
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால்
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே –5-4-7-
ஸ்ரீ திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே
திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே ஸ்ரீ திருவடிகளாலே அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம் –
—————————-
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-
அநேக அவதாரங்களைப் பண்ணிக் கொண்டு வந்து ரஷகன் ஆனவன் அவ்வவதார காலங்களிலே
பிற் பாடர்க்கும் இழக்க வேண்டாத படி வந்து சந்நிஹிதனான தேசம் கோயில் -என்கிறார்-
———————-
சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம்
மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால்
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே—5-4-9-
உள்ளுச் சாய்ந்த வஸ்துவுக்கு அரணாகப் போரும்படியான ஸ்ப்ருஹநீயமாய் இருந்துள்ள
மதிள்களாலே சூழப்பட்ட தர்ஸநீயமான ஸ்ரீ கோயில் –
———————–
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10-
உந்தி – வையம் -இரண்டும் ஸ்ரீ உலகுண்ட ஸ்ரீ வடதள சாயி விஷயம்
விளைத்த -வம்பு -ஸ்ரீ ராமன் விஷயம்
கலை -கஞ்சன் -ஸ்ரீ கிருஷ்ண விஷயம்
சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்–இப்படி நாலு இரண்டும்
பண்டு -ஸ்ரீ திருக் குறளன் விஷயம்
ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்–இப்படி இரண்டும்-இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள்
ஸ்ரீ கோயிலிலே இருந்து அனுபவித்து பின்னை சரீர சமனந்தரம் ஸ்ரீ பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள் –
—————————-
வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே—-5-5-1-
ஸ்ரீ பெருமாள் உடைய இங்குத்தை வரவாறே பிடித்து ஆற்றாமைக்கு உடலாம்படி காணும்
பிறந்த ப்ராவண்ய அதிசயம் –
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் -அன்று நேர்ந்த நிசாசரரை -என்று ராவண வதம் தொடங்கி
ஸ்ரீ பெருமாளை அடி ஒத்தினார் –அது தெற்கு திரு வாசலாலே புகுந்து கிடந்தது –
மந்தி பாய் -என்று ஸ்ரீ பரம பதமே தொடங்கி அடி ஒத்தினார் –ஸ்ரீ திரு மலையிலே புகுந்து கிடந்தது
அங்கே பார்த்த வாறே நின்ற படியைக் கண்டார் –
இன்னமும் போக்கிலே ஒருப்பாடு தோற்றி இருந்தது என்று அவ்விடமே தொடங்கி
அடி ஒத்தினவாறே வடக்குத் திரு வாசலாலே புகுந்து படுக்கை இங்கேயாய் இருந்தது -என்று
ஸ்ரீ பட்டர் ஸ்ரீ அமலனாதி பிரான் அருளிச் செய்யா நிற்க நான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் –
—————————
கலையாளா வகலல்குல் கனவளையும் கை யாளா என் செய்கேன் நான்
விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் ஏழு எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே –5-5-2-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து – தன் சௌலப்யத்தைக் காட்டி
விலையாளா யடியேனை வேண்டுதியோ -என்று இவளை இட்டு சொல்லுவித்துக் கொள்ளுகைகாக
திரு மெய்யத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் -பின்னானார் வணங்கும் சோதியில் போலே –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவ -என்கிறபடியே முற்பாடரான சூரிகளுக்கும் அவ்வருகாய் இருந்து வைத்து
இவ்வருகு உண்டான பிற்பாடருக்கும் உதவுகைக்காக இறே இங்கு வந்ததும் –
தானே ரஷகன் என்று இருக்கும் இவளை வாய் விட்டுக் கூப்பிடும்படி பண்ணினானே-
நமக்கு ஓன்று செய்யப் பிராப்தி உண்டோ -என்று இருக்கிறாள் இவள்
பெறுவது அவனை யானால் இருந்த இடத்தே இருக்கப் போமோ -என்று இருக்கிறாள் மகள் –
——————-
மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே–5-5-3-
ஸ்ரீ சக்கரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் என்று ஒரு நோன்பு நோற்று பெற்றால் போலே
கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது-இவற்றை புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும்
என்று இதுக்கு அன்றோ இவனைப் பெற்றது
ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை –
————————
தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கை
யே யாரச் சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
பேய் மாய முலை உண்டு இவ்வுலகுண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே —5-5-4-
தாயையும் அல்லாதாரையும் ஒக்க அபேஷிக்கும் படி நிருபாதிக பந்துவான தன் பக்கலிலே பாவ பந்தத்தை
பிறப்பிக்கிறவன் வர்த்திக்கிற தேசம் எங்கே -என்னா நின்றாள்
ஸ்வாமித்வம் இவை போலே ஔபாதிகம் அல்ல இறே
எம்பெருமான் -என்னைத் தோற்பித்தவன் என்றே காணும் அவனை அறிவது
இது இறே நமஸ் சப்தார்த்தம் –
—————————
பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-5-
ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ தம்மை வ்யபதேசிப்பது
நாம் அறிய -இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ-இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ
நம்பி- பெண்களுக்கு கையாளாய்-அத்தாலே தன்னைப் பூர்ணனாக நினைத்து இருக்குமவன் அன்றோ
————————–
தாதாடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே–5-5-6-
இத்தனை அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது காண்-இது குடிப் பிறப்புக்கு போராது காண்
இது தர்மி லோபத்தைப் பலிப்பிக்கும் காண்
அவன் ஸ்த்ரரைணன் காண் -என்று ஒரு ஹித வசனம் பண்ணினால்
அதுக்கு உத்தரமாக என்னை அனந்யார்ஹை ஆக்கினவன் வர்த்திக்கிற தேசம் என்னா நின்றாள் –
———————–
வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் தேர் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே—5-5-7-
ஸ்வ விஷயத்திலும் இதர விஷயத்திலும் விரக்தியும் பகவத் விஷயத்தில் ப்ரீதியும் மாறாதே
செல்லும்படியாய் இருப்பாள் ஒரு பெண் பிள்ளையை என்னைப் போலே புறம்பு பெற்றார் உண்டோ –
அப்போது பீஷ்மாதிகள் அம்புக்கு தன்னை இலக்கு ஆக்கினால் போலே
இப்போது தனக்காக இவளை காம ரசத்துக்கு இலக்கு ஆக்குகிறான்
இப்போது இவளை அழிவுக்கு இட்ட படி என்னாலே பேசப் போமோ -என்கிறாள் –
————————
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே—-5-5-8-
கலக்கிற இடத்தில் தாழ நின்று பரிமாறின படியையும்-அதுக்கடியான சீலத்தையும்
கலந்த போதை பரிமாற்றத்தின் வகைகளையும் – இதில் ஸ்ரோத்ரியன் ஆகைக்கு வ்யுத்புத்தி பண்ணின இடத்தையும்
சொல்லா நிற்கும் –ஆஸ்ரித விஷயத்தில் வ்யாமோஹாதிசயத்தை உடையவன்-பெரியோன் என்றபடி –
பிறவியை அறுப்பதான திரு நாமத்தை உடையவன் துக்க நிவர்தகமான திரு நாமங்கள் கிடீர்
இவளுக்கு துக்கத்தை பண்ணுகிறது
————————–
பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-9-
ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால்-இதுக்கு மேல் எனனால் போக்கடி தேடப் போமோ
இவள் தன் திறத்து படாது இருக்க தானே வந்து இப்படி பண்ணி-தானே உபேஷிப்பதே
முன் தீமை செய்வானும் தானேயாய்-உபேஷிப்பானும் தானே யாவதே –
—————————-
சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே–5-5-10-
இதன் பொருளை ஆசார்யர்களோடே கற்று அறியுமவர்கள்-தனி முத்துக் குடைக் கீழே
இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து
ஸ்ரீ பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்-
————————
கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-1-
தான் அல்லது ரஷகர் அல்லாதாரை அரியன செய்தும் ரஷிக்குமவனை –
ஒரு கால் மலையை எடுத்து பசுக்களையும் இடையரையும் ரஷித்தான் –
ஸ்ரீ திருப் பாற் கடலிலே கிடந்தான் -என்று கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே
நான் ஸ்ரீ கோயிலிலே காணப் பெற்றேன் –
—————-
பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே —5-6-2-
ஸ்ரீஸ்ரீ
இந்த லோகங்கள் ஏழையும் தன் வயிற்றிலே வைத்து ரஷிக்கச் செய்தேயும் ஒன்றும் செய்திலனாய் இருக்கையாலே
உபகாரம் கொண்டார்க்கு பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டாத படி இருந்தவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே
———————-
ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-
ஒருவன் காலில் முள் பாய்ந்தால் சரீரி யானவன் நோவு படுமா போலே ஜகத்துக்கு வந்த ஆபத்து தன்னதாம் படி
இதுக்கு அபிமானியாய் இருக்கிற இருப்பை அனுசந்தித்து இருக்கும்
தனக்கு அசாதாராணர் ஆனவருக்கு சர்வ வித போக்யனாய் அத்தாலே உஜ்ஜ்வலனாய் இருக்குமவனை –
ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்து ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க நமக்கு இங்கே வந்து குறைய நிற்க வேண்டா நின்றது
என்னும் இன்னாப்போடு அன்றிக்கே இப்படி யாகிலும் இவர்களுக்கு உறுப்பாக பெற்றோம் என்னும் ப்ரீதி பிரகர்ஷத்தோடே
பண்டு ஒரு கால் பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் இடையனாய் அதில் புரையற வர்த்தித்தவனை கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே –
——————–
வளர்ந்தவனைத் தடம் கடலுள் வலியுருவில் திரிசகடம்
தளர்ந்து திற யுதைத்தவனைத் தரியாதன்றி ரணியனைப்
பிளந்தவனைப் பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-
ஊர்ந்து வருகிற சகடம் சின்னம் பின்னமாய் போம்படி திருவடிகளாலே உதைத்தவனை-
ஸ்ரீ நரசிம்ஹமாய் ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவனை –
பரைப்பை உடைய பூமி இரண்டு அடியாலே அடங்கும்படி திருவடிகளை நீட்டி அளந்து கொண்டவனை –
யான் கண்டது அணி நீர் ஸ்ரீ தென்னரங்கத்தே
————–
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே
பேர் அழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையோர் மந்த்ரத்தின்
ஆர் அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5-
இங்குத்தை மர்யாதைகளைத் தப்பி-அவ்வருகே பட்டார்க்கு பிராப்யமான ஸ்ரீ பரம பதமுமாய் –
அத்தை அவர்கள் பெறுகைக்கு உறுப்பாக-பிராமணர்கள் உடைய யாகங்களிலே
மந்திர பூர்வமான ஹவிஸ் ஸூக்களை த்ரேத அக்னி முகத்தாலே புஜிக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே –
————————
தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியைத் தரியாது
கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசையுருவை யசைவித்த
அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே–5-6-6-
த்வேஷத்தை தவிர்ந்து-தன்னை அடைந்தவர்கள் உடைய ஸ்வ பிராப்தி உபாயத்தை
தானே நிர்வஹித்துக் கொடுக்குமவனை –
த்வேஷமேயாய் இருப்பார் அளவில் இருக்கும் படி –
ஸ்ரீ தேவகியாரையும் ஸ்ரீ வசுதேவரையும் நலியப் புக்க வாறே அத்தைப் பொறாதே
இனி அரை ஷணம் இவனை வைக்க ஒண்ணாது என்று அவனைக் கொன்றான் ஆய்த்து-
த்வேஷமும் பண்ணாதே தன்னை அடைவதும் செய்யாதே இருப்பார் அளவில் இருக்கும் படி
ஆபத்தை அடையாளமாக ரஷிக்கும் இத்தனை யாய்த்து-தான் அறிந்த சம்பந்தத்தையே பார்க்கும் இத்தனை –
கற்பகத்தை –இப்படி உபகரித்தோம் என்று நினைத்து இராதவனை-
——————-
சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-7-
இப்படி பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானேயாய் இருக்கிற வஸ்து தான் ஏது என்ன –
ஸ்ரீ திருமாலை – பிராபகத்தில் புருஷகாரமுமாய் பிராப்யத்துக்கு அவனோபாதி இறே இருப்பது –
ஸ்ரீ ஸ்ரீ திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவனாய் இருந்து வைத்து
இவ் வவஸ்தைகளை என் நெஞ்சிலே பிறப்பிக்கைக்கு தானே வந்து மனசிலே விடாதே
பொருந்தி இருக்கிறவனை-தானே அர்த்தியாய் கொண்டு இருக்க-நான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே-
———————-
துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும்
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானைத் தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-8-
தன்னையே பற்றின என்னோடு-சம்பந்தம் உடையாருக்கும்-வைஷ்ணவர்களுக்கும் -என்றபடி
எனக்கும்-எனக்கு தாயும் தமப்பனும் என்று இருக்கிற இவர்களுக்கும்
நித்ய சூரிகளுக்கும் ஒக்க தரம் வையாதே சேஷியாய் இருக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே
———————-
பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கும் மெய் நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-9-
பாஹ்யேந்திரங்கள்-விஷயங்களில் போகாதபடி பண்ணி – ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக
தன் பக்கலிலே பக்தியைப் பண்ணுமவர்களுக்கு-தன் ஸ்வரூபாதிகளை உள்ளபடியே காட்டிக் கொடுக்கும்
விஸ்மயநீயனை –யான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே –
——————
ஆமருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாமருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே —5-6-10-
ஸ்வ ரஷணத்துக்கு ஒரு கைம்முதல் இல்லாத பசுக்களை அவற்றோடு பொருந்தி ரஷித்து
அது தான் பர தசை-என்னும்படி ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனை -சுலபன் ஆனவனை –
மனஸ் சோடே இத்தை அனுசந்தித்துக் கற்றவர்கள் மேல் இவர்கள் போக்க வேணும் -என்று நினையாதே இருக்க
துஷ் கர்மங்கள் தாமே இது நமக்கு நிலம் அல்ல -என்று விட்டு ஓடிப் போம் –
——————–
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-
இவற்றைச் சொன்ன பாசுரம் தன்னளவும் வரும்படியாய் இருக்கையாலே இவை அடைய -தான் -என்று சொல்லும்படி
சரீரதயா சேஷமாகத் தான் சேஷியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் – என்கிறார்
——————–
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே —5-7-2-
சகல பிராணிகள் உடைய சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்கும் கடவனாய் இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரன் –ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ அரங்க நகர் அமர்ந்தானே –
————————–
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறந்கிருள் நிறம் கெட ஒரு நாள்
அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-3-
தன்னைப் பேணாதே கேட்கிறவனுக்கு ஆச்சார்ய அநுவர்த்தனம் பண்ண வேண்டுகிறதோ -என்று
கூச வேண்டாத வடிவைக் கொண்டு தன்னைப் பெறிலும் பெற ஒண்ணாத வேதங்களை வெளியிட்டவன் –
அன்று பிரமாணத்தை வெளி இட்டுத் தந்தவன்-இன்று பிரமேய பூதனான தன்னை
வெளி இட்டுக் கொண்டு வந்து கண் வளர்ந்து அருளினான் –
———————–
மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக மாசுணம் அதனோடும் அளவி
பாயிரும் பௌவம் பகடு விண்டலறப் படுதிரை விசும்பிடைப் படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவும் தாமுடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-4-
நான்கு தோள்கள் கொண்டு வ்யாபரித்த படி தான் ஆயிரம் தோள் கொண்டு
வ்யாபரித்தான் என்னலாம்படி யாய்த்து –
———————-
எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து இழிய
வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது
அங்கனே ஒக்க வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-5-
ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தைக் கொண்டவன் இன்னம் அப்படிக்கொத்த விரோதி வர்க்கம்
வந்து கிட்டினால் போக்குகைக்காக இங்கே வந்து சந்நிஹிதன் ஆனவன்-
———————–
ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-6-
நித்ய அனுபவம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாக புகரை உடைத்தான பல வாய்களையும் உடைய
ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினவன் அப்படியே காணலாம்படி இங்கே வந்து சந்நிஹிதன் ஆனான் –
—————–
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம் பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5-7-7-
ஏதேனுமாக இட்ட தடையைக் கொண்டு ஆழக் கடவ கடல் வழி பட நீரிலே புக்கு அமிழக் கடவ மலைகள்
மிதந்து அணையாக -கணக்கு வழக்குப்பட ஒரு வியாபாரம் பண்ண மாட்டாத வானர ஜாதியைக் கொண்டு
அடிமை கொண்டு நீர்க் கிளப்பத்தை உடைத்தான கடலை அடைத்தான் –அரங்க மா நகர் அமர்ந்தானே –
—————————
ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடுசரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-8-
அவனுடைய பிரகாசத்துக்கு அடைத்த சாலம் தன்னிலே அநேக ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே
இருந்துள்ள புகரை உடைய ஸ்ரீ திரு ஆழியைக் கொண்டு அந்த ஆதித்யனை மறைத்தவன் –
இந்த ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே முகக்கலாம் படி அளவு பட்டு இருக்கையாலே
தமஸ்ஸூ போம்படியாய் இருக்கும் –-
அங்கன் அன்றிக்கே ஸ்ரீ திரு ஆழி ஆழ்வான் தேஜஸ்ஸூ நேர் கொடு நேர் கண் கொண்டு பார்க்க ஒண்ணாத படி
மிக்கு இருக்கையாலே பளபளத்து கண்ணை இருளைப் பண்ணிற்று
———————
பேயினார் முலை யூண் பிள்ளையாய் ஒரு கால் பெரு நிலம் விழுங்கி யது உமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்குச்
சேயனாய் அடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும்
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-9-
ப்ரஹ்மாதிகளுக்கு தூரஸ்தனாய்–என் போல்வாருக்கு கையாளாய்- என் பக்கல் அபேஷா மாத்ரமும் இன்றிக்கே இருக்கத்
தானே வந்து என்னுடைய மானஸ வ்யசனத்தைப் போக்கும் –ஆயனாய்
ஸ்ரீ கோவர்த்தன கிரியைத் தரித்து பண்ணின உபகாரம் அறியாத பசுக்களையும் இடையரையும் நோக்கினவன் –
———————–
பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே —-5-7-10-
லஷணங்களில் ஒன்றும் குறையாத படி விஸ்ருதமான வித்தை அப்யசிக்க வல்லார்
ப்ராரப்தமான கர்மங்களை வாசனையோடு போக்கப் பெறுவார் –
———————————-
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-
இத்தனை குறைவாளனை விஷயீ கரியாது ஒழிகிறது என் –என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது –
இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால் இவள் வழியே போவான் ஒருவன் இறே –
பிராட்டியை தோழி என்றும்-இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –
சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம் சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடக்குமா போலே
சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக –
ஸ்ரீ ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே
அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது
உடையவன் ஆகையாலே-உடைமை தேட்டமாய் அன்றோ-இங்கு வந்து சாய்ந்து அருளிற்று
————————–
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2-
ஜன்ம வ்ருத்தங்களால் குறைய நின்ற ஸ்ரீ குஹப் பெருமாள் பக்கல் பண்ணின
விஷயீ காரத்தை என் பக்கலிலே பண்ண வேணும் என்று சரணம் புக்கார் -கீழில் பாட்டில்
மனுஷ்ய சஜாதீயத்வம் கிடக்கச் செய்தே வந்த நிகர்ஷம் இறே -கீழ்ச் சொல்லிற்று
இங்கு விசஜாதியமான திர்யக்கை அகப்பட-தத்கத நிகர்ஷம் பாராதே விஷயீ கரித்த மாத்ரம் அன்றிக்கே
அந்தபுர கைங்கர்யத்திலே ஏவி அடிமை கொண்டால் போலே என் அளவிலும் கைங்கர்யத்தைக் கொள்ள வேணும் -என்கிறார் –
இவ்வதிகாரிக்கு விஷயீகார அநந்தரம் கைங்கர்யத்தில் அன்வயிக்கும் அத்தனை போக்கி
சாதனத்தில் அன்வயிக்க வேண்டியது இல்லை போலே காணும்
இங்கு ஒழி என்கிற இடத்தில் சொல்லிற்று இத்தனை இறே –
—————————–
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3-
விஷயீகாரத்தையும்-விஷயீகார பலமான கைங்கர்யத்தையும்-சொல்லிற்று கீழ்
கைங்கர்யத்துக்கு இடைச் சுவரான விரோதியைப் போக்கி-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை கைங்கர்யத்திலே அன்வயித்தால் போலே
என்னுடைய விரோதியைப் போக்கி என்னைக் கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்க வேணும் -என்கிறார் –
விஷயீகாரத்துக்கும் கைங்கர்யத்துக்கும் நிகர்ஷம் முன்னிட வேண்டுகையாலே சொன்னார் கீழ்
விரோதி நிரசனத்துக்கு நிகர்ஷம் முன்னிட வேண்டியது இல்லை இறே
விஷயீகாரம் ஆகிறது -உபாயத் தளவும் செல்ல பலிக்குமது இறே
அவன் உபாயம் ஆனால் பின்னை கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்கும் இத்தனை
அதுக்கு விரோதி அறுகை இறே பின்னை உள்ளது-அந்த விரோதி தான் உபய ஆகாரமாய் இருக்கக் கடவது
அவை ஆகிறன-இந்த்ரிய வஸ்யதையும் யம வஸ்யதையும் இறே
மேலில் பாட்டில் யம வச்யததை-இங்கு இந்த்ரிய வச்யதை சொல்லுகிறது
எங்கனே என்னில்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையை நிரசித்தால் போலே
எனக்கு விரோதியான இந்த்ரியங்களை நிரசித்து அருள வேணும் -என்கிறார்
இவ்வதிகார்க்கு இந்த்ரிய வஸ்யதையாவது-விஷயாந்தர ப்ராவண்யம் முதலாய் கைங்கர்ய ஸ்பர்சியான
அஹங்காரம் மமகாரம் முடிவாய் இறே இருப்பது –
————————
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-4-
விஷயீகாரம் சொல்லி-விஷயீகார கார்யமான கைங்கர்யம் சொல்லி
அதுக்கு இடைச் சுவரான தேக சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும்என்கிறதே -இரண்டு பாட்டாலே –
அதில் தேக சம்பந்தம் கிடக்கச் செய்தே அனுபவ விரோதியான பாபைகதேச பலமான இந்த்ரிய வஸ்யதையைப்
இதில் சரீர சம்பந்தம் அற்றால்-சர்வ பாப பலமாய் அனுபவ விரோதியாய்க் கொண்டு வரும் யம வஸ்யதையை
தவிர்க்க வேணும் -என்கிறார் –
ஸூமுகனுக்கு பெரிய திருவடியால் வந்த பயத்தை தவிர்த்துக் கொடுத்தால் போலே
எனக்கு எம வச்யதையால் வந்த பயத்தை அறுத்து
அவனை இட்டே பரிஹர -என்னும்படி பண்ணித் தர வேணும் -என்கிறார்
சரணம் புகுவார் தாம்தாம் உடைய நிகர்ஷத்தை முன்னிட்டுக் கொண்டு இறே சரணம் புகுவது –
அந்நிகர்ஷம் தான் ஆகிஞ்சந்ய ரூபமாயும்-அபராத ரூபமாயும் இறே இருப்பது
அதாகிறது-அது தன்னை அனுசந்தித்தார் இறே அடைவே
ந தர்ம நிஷ்டோச்மி-ந நிந்திதம் கர்ம-ஜ்ஞான கிரியாச பஜநா-இத்யாதிகளும்
ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டது கீழ்–இதில் அபராதத்தை முன்னிடுகிறது –
———————–
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக்கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமை யிலத்த விங்கு ஒழிந்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே—5-8-5-
விஷயீ காரத்தைச் சொல்லி-கைங்கர்யத்தைச் சொல்லி
கைங்கர்யத்தின் உடைய உபய ஆகாரமான விரோதிகளைப் போக்கி தந்து அருள வேணும் -என்றார் கீழ்
இதில் ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி உடைய கருத்து அறிந்து செய்தால் போலே
என்னுடைய கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் –
கீழ் நின்ற நிலைக்கு இவர்க்கு கருத்தாவது
இந்த்ரிய வஸ்யதைக்கும் யம வஸ்யதைக்கும் அடியான-தேக சம்பந்தத்தை அறுத்து தர வேணும் என்கை
மரணமானால் -என்கிறபடியே தன்னடையே சரீர விச்லேஷம்
சித்திக்குமாகில் அபேஷிககிறது என் என்னில்-க்ரம ப்ராப்தி பற்றாத த்வேரா திரேகத்தாலே –
ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி-என்பான் ஒரு பிராமணன் இதிஹாச புராண ஸ்ரவணத்தாலே
ஸ்ரீ கிருஷ்ணன் உடைய பால்ய சேஷ்டிதங்களையும் ராச க்ரீடாதிகளையும் சாஷாத்கரித்து காமனாய்
முன்பு காண வாராய் -என்று எண்ணி இருப்பார்க்கு
பரித்ராணாயா சாது நாம் -என்கிறபடியே காட்டிக் கொடுத்து போருமவன் அன்றோ
நமக்கும் அவ்வாசை உண்டானால் சித்தியாமை இல்லை-ததர்த்தமாக அர்த்திப்போம் -என்று
சரீரத்தை ஒறுத்து தபஸை பண்ண-இவன் நினைவின் படியே ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் படிகளை
அடைய சிருஷ்டித்துக் காட்டி அனுபவிப்பித்து-உனக்கு வேண்டுவது என் என்று கேட்டு அருள
கூடப் போந்து இப்படி தேவரை அனுபவிக்கும் அத்தனை -என்ன
நீ தபஸ் பண்ணுகிற போது விஷய விதுரனாய்-அன்ன பாநாதிகளையும் கழித்து
உடம்பையும் நாரும் நரம்புமாய் ஆக்கிக் கொடு போந்தாய்
இங்கே இருந்து நெகிழ்ந்த போகங்களையும் கழித்து வா என்று அவன் கருத்து அறிந்து அருளிச் செய்தால் போலே
என் கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் –
இவ்வர்த்தம் சாப்தம் அன்றிக்கே இருக்க இவருக்கு இது கருத்தாக சொல்லுகிறது
பிரகரண பலத்தாலும்-அர்த்த க்ரமத்தாலும்-நாசமான பாசம் -என்றும்
போந்தேன் -என்றும் சொல்லுகிற இவருக்கு இது கருத்தாக வேணும் இறே-
———————
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய் தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-
ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி கருத்து அறிந்து அவனுடைய கார்யம் செய்தாப் போலே
என் கருத்து அறிந்து என்னுடைய அபிமதம் செய்ய வேணும் என்றார் -கீழ் –
ஸ்ரீ மார்கண்டேயன் மிருத்யு பய பீதனாய் சரணம் புக அவனுக்கு மிருத்யுவை நிரசித்து
அந்த பய நிவ்ருதியை பண்ணிக் கொடுத்த அளவன்றிக்கே
ஒரு காலமும் உன் திருவடிகளைப் பிரியாதபடியான பேற்றை அவனுக்குப் பண்ணிக் கொடுத்தால் போலே
என் சம்சார பயத்தை பரிக்ரஹித்து உன் திருவடிகளை நான் பிரியாத படியான பேற்றை பண்ணித் தந்து
அது நான் அர்த்திக்க இரப்புக்குக் கார்யம் செய்ததாய்
காலன் கொண்டு மோதிரம் இடுமா போலே பண்ணப் பெற ஒண்ணாது
என் ஸ்வரூப அநு ரூபமான பேறாகிறது-நீ தரப் பெறுமது -அது வேணும் என்கிறார் –
————————-
ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே —5-8-7-
விஷயீ காரத்தை சொல்லி கைங்கர்யத்தை சொல்லி
அதுக்கு விரோதியாய் வருமதில் இந்த்ரிய வஸ்யதையைத் தவிர்த்து தர வேண்டுமேன்று சொல்லி
அதுக்கடியான பாபமடியாக வந்த யம வஸ்யதையை பரிஹரிக்க வேணும் என்று சொல்லி
அதுக்கடியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று சொல்லி
கருத்து அறிந்து செய்யும் அளவு அன்றிக்கே உன் பரிவாலே செய்ய வேணும் என்று நின்றது -கீழ் –
இதுக்கு அவ்வருகு அபேஷிக்கலாவது இல்லாமையாலே-மேலில் பாட்டுக்களுக்கு உதயம் இல்லை
ஆனால் மேல் செய்கிறது என் என்னில்
ஆழ்வீர்-சேஷியும் சேஷ பூதனும் ஆனால் சேஷி செய்தபடி கண்டு தத்தச்ய சத்ருசம் பவேத் -என்று
சேஷ பூதன் இருக்கும் அத்தனை அல்லது இத்தனை த்வரிக்க கடவது அல்ல காணும் -என்ன
தன்னைப் பார்த்தால் தன் சரீர அவசானத்தில் தான் பேறு உண்டோ
உன் சர்வ சக்தித்வத்தாலே த்வரிக்கிறேன் இத்தனை அன்றோ
அவனுடைய போக்யதை போலே-சர்வ சக்தித்வமும் த்வரிப்பிக்கும் இறே
சாந்தீபிநீ புத்ரனை கடல் கொள்ள மீட்டுக் கொடுத்த அகடிதகட நா சாமர்த்த்யத்தையும் விஞ்சி இருப்பது ஓன்று இறே
சம்சார ஆர்ணவத்திலே அகப்பட்டு நோவுபடுகிற என்னையும் மீட்டு உன் திருவடிகளை தருகை யாவது
தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தாலே அத்தை செய்து அருள வேணும் -என்கிறார் –
———————
வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-8-
வைதிக புத்ர இதிகாசத்தை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறார் –
இப்பாட்டிலும் சொல்லுகிறது -கீழ்ச் சொன்ன சர்வ சக்தி யோகத்தை
ஆனால் வாசி என் என்னில்
தேச கால விப்ரகர்ஷம் கிடக்கச் செய்தே-கார்யம் செய்த சக்தி மத்தையைச் சொல்லுகிறது –
——————————-
துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9-
கீழ் இரண்டு பாட்டாலே அவனுடைய-சக்தி யோகத்தைச் சொல்லி-உபாய பூர்த்தியைச் சொல்லிற்றாய் நின்றது –
இப்பாட்டுக்கு உதயம் என் என்னில்
சம்சாரத்தின் உடைய தண்மையையும்-நம்முடைய அதிசய சக்தி த்வத்தையும் அனுசந்தித்து த்வரிக்கை யாகிற்
இது ஔபாதிகம் காணும்-நாம் செய்தபடி கண்டிருக்குமது காணும் உமக்கு ஸ்வரூபம் -என்ன
உன்னை அல்லது அறியாத தொண்டைமான் சக்கரவர்த்திக்கு ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினால் போலே
எனக்கும் ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்க வேணும் என்று சரணம் புகுகிறார் –
கீழே
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்று திரு மந்த்ரத்தை சார்த்தமாக லபித்து
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்தித்தார் –
அதின் முன்பு ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தது இல்லையோ -என்னில்
தம்தாமுக்கு பிறக்கும் ஜ்ஞானம் விச்வச நீயம் அன்று என்று காணும் இருக்க அடுப்பது
ஸ்ரீ நாரத பகவானை இட்டு ஸ்ரீ புண்டரீகனுக்கு-கிந்தத்ர-என்றும்-நராஜ்ஜா தாநி-என்றும்
திரு மந்த்ரத்தை சார்த்தமாக உபதேசித்து
பிராப்தி வேளையில் உனக்கு வேண்டுவது என் என்று ஈஸ்வரன் கேட்க
க்வாஹமத்யந்த துர்ப்புத்தி -என்றான் இறே
சர்வ அபிமத சாதனம் இறே சரணா கதி யாகிறது –
—————————-
மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே —-5-8-10
இவருடைய பாவ வருத்தி இல்லையாகிலும் இவருடைய பாசுரத்தைச் சொல்லவே
ப்ராப்தி பிரதிகந்தகங்கள் போம் என்கிறது –
—————————
கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன்
பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்
செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே –5-9-1-
————————————————
வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த வெந்தை
திங்கள் மா முகிலணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே –5-9-2-
————————————————
ஒருவனை யுந்திப் பூ மேல் ஓங்குவித் தாகம் தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான்
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல்
கருவரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே –5-9-3-
—————————————————–
ஊனமர் தலை யொன்று ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன்
ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை யீந்தான்
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர்
வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே –5-9-4-
—————————————————-
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத் தானை
நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே —5-9-5
——————————————————-
விலங்கலால் கடலடைத்து விளங்கு இழை பொருட்டு வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புய்ம் துணிந்தான்
நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே—5-9-6-
ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத இலங்கை அன்றோ எனக்குப் படை வீடு
நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அன்றோ -என்று அபிமானித்து இருக்கிற ராவணன் உடைய
அவ் ஊருக்கு கணையம் போலே இருக்கிற தோள்களைத் துணித்தான் ஆய்த்து –
———————-
வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி ஓச்சிக்
கண்ணியார் குருங்கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே —5-9-7-
சாமான்யன் என்று இடுமீடு எல்லாம் இட அமையும் -என்று இருப்பாரைப் போலே
வேறு ஒரு ஹேதுவைச் சொல்லி அன்றியே இது சொல்லியே நம்மைக் கட்டுவதே
என்று இசைந்து இருந்தான் ஆய்த்து –
————–
அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே—5-9-8-
ஓர் இடைச் சேரி மாதரம் அன்றிக்கே ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய
ஸ்ரீ திரு வாய்ப்பாடியிலே வஞ்சிக் கொம்பு போலே இருக்கிற வடிவை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டி உடைய ஒப்பனையோடே சேருகைக்காக ருஷபங்கள் ஏழையும் நிரசித்தான் –
———————-
நால் வகைவேதம் ஐந்து வேள்வி யாறங்கம் வல்லார்
மேலை வானவரில் மிக்க வேதியர் ஆதி காலம்
சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலொடும் வாழ்வார்
சீல மா தவத்தர் சிந்தையாளி யென் சிந்தையானே—5-9-9-
ப்ரஹ்மாதிகளிலும் காட்டில் கை வந்து இருக்கிற பிராமணர் ஆனவர்கள் சிருஷ்டி காலம் தொடங்கி
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கக் குடி ஏறி ஜீவித்துப் போருகிறவர்கள் ஆய்த்து –
சீலகுண பிரசுரராய் மிக்க தபசை உடையராய் இருக்கிற பிராமணர் ஹிருதயத்தை
தனக்காக்கிக் கொண்டு இருக்கிறவன் என்னுடைய ஹிருதயஸ்தன் ஆனான் –
———————-
வண்டறை பொழில் திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-
இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக இவ் வனுபவத்துக்கு மேலே
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்-
——————
தீதறு நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய்
மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான்
தாய் செற வுளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகை சேர்
நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-1-
அந்தராத்மதயா நின்று ரஷகனாம் படி சொல்லி- கண்ணுக்கு இலக்காம்படி வந்து அவதரித்து ரஷகனாம்படி சொல்லி
ஒதுங்குவார் அளவு பட்டு இத் தோள் நிழலே மிக்கு இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாஸம் பண்ணுகிற நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே
———————–
உய்யும் வகை யுண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள்
மெய்யின் அளவே யமுது செய்ய வல ஐயன் வான் மேவு நகர் தான்
மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-2-
நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்
———————–
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை எழும் ஒழியாமை முன நாள்
தம் பொன் வயிராரளவும் உண்டவை உமிழ்ந்த தடமார்வர் தகை சேர்
வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வருதும்பி மணி கங்குல் வயல் சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —-5-10-3-
ஏதேனும் தசையிலும் விச்வச நீயானாய் இருக்கிறவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
———————
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி யெதிர் பொருதுமென வந்த வசுரர்
இறைகளவை நெறு நெறு என வெறியவவர் வயிறு அழல நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்களுக வளி முரல அடி கொள் நெடுமா
நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-4-
சிறகை உடைத்தாய் இருக்கிற மயில்கள் குயில்கள் இவை நெருங்க
அத்தாலே பூக்கள் உதிர வண்டுகள் ஆளத்தி வைக்க –பொழிலிலே
மேகங்கள் வந்து சஞ்சரியா நின்றுள்ள தேசம் –
————————
மூள வெரி சிந்தி முனி வெய்தியமர் செய்தும் என வந்த வசுரர்
தோளுமவர் தாளும் முடியோடு பொடியாக நொடியாம் அளவெய்தான்
வாளும் வரி வில்லும் வளை யாழி கதை சங்கம் இவை யங்கை யுடையான்
நாளும் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே—5-10-5-
யுத்தத்துக்கு பரிகரமான வாளும்-தர்ச நீயமான வில்லும் வளைந்த வாயை உடைத்தான திரு ஆழியும்
கதையும் இவற்றை அழகிய திருக் கையிலே உடையவன்
அவதாரங்கள் போலே இப்போது சந்நிதி இல்லை என்ன வேண்டாத படி நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
————————–
தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள்
வெம்பி யெரி கானக முலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான்
கொம்புகுதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழிலார் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —-5-10-6-
வெம்மையை உடைத்தாய் நிலம் தன்னையே விறகாகப் பற்றி எரிகிற காட்டிலே உலாவினவர்
அப்பிராட்டியோடே புணர்ந்து சமஸ்த கல்யாண குணாத்மகன் வர்த்திக்கிற தேசம் –
—————-
தந்தை மனமுந்து துயர் நந்தவிருள் வந்த விறல் நந்தன் மதலை
எந்தை யிவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான்
மந்த முழ வோசை மழையாக வெழுகார் மயில்களாடு பொழில் சூழ்
நந்தி பணி செய்த நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே—5-10-7-
ஆசூர பிரக்ருதிகள் கண்ணுக்குத் தோற்றாதபடி இருளிலே வந்த பெரு மிடுக்கனான ஸ்ரீ நந்த கோபர் பிள்ளை –
பிறந்தது அங்கே ஆகில்-மீண்டும் போய் வளர்ந்தது அங்கே யாகில் –
கம்ச பயத்தாலே நாலு நாள் வளர்ந்த இத்தனையும் கொண்டு அறிவு குறைய நின்றார் சொல்லுகை அன்றிக்கே
அறிவில் தலை நின்ற நம் போல்வார் இங்கன் சொல்லுகிற இதுக்கு ஹேது என்-என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க –
நாமே அன்று காணும்-அவதார காலத்துக்கு முன்பே அறிவுடையராய் இருப்பாரும் இப்படி சொன்னார்கள் காணும் –
அயம் ச கத்யதே ப்ராஜ்ஞை-இத்யாதிகளாலே-அவர்களுக்கு முலை சுரவா நின்றது ஆகில்
இவன் தான் அஞ்சா நின்றான் ஆகில் உமக்கு இவ்வாராய்ச்சி என் தான் -என்று அருளிச் செய்தார் –
அந்ய பரன்-அநந்ய பரனாய் அடிமை செய்து வர்த்திக்கிற தேசம் – அதாவது
நந்தி என்பான் ஒருவன் அக்காலத்தில் அங்கே அனுகூலித்து வர்த்தித்தான் போலே –
———————–
எண்ணில் நினைவெய்தி யினியில்லை இறையென்று முனியாளர் திருவார்
பண்ணில் மலி கீதமொடு பாடியவராடலொடு கூட வெழிலார்
மண்ணிலிது போலு நகரில்லைஎன வானவர்கள் தாம் மலர்கள் தூய
நண்ணி யுறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —-5-10-8-
பூமியிலே பாரத வர்ஷமே உத்தேச்யம்-பண்ணின புண்யமானது-சாலில் எடுத்த நீர் போலே ஷயித்தவாறே
முகம் கீழ்ப்படத் தள்ளுகிற ஸ்வர்க்கமும் ஒரு தேசம் ஆய்த்தோ –
கோலின பலங்களுக்கு எல்லாம் சாதன அநுஷ்டானம் பண்ணலாம் பாரத வர்ஷத்தை ஒழிய -என்றார்கள் இறே
அப்படியே பூமிப் பரப்பில் ஸ்லாக்கியமாய் இருந்துள்ள இந்த நகரத்தோடே ஒக்க கடவது இல்லை என்று தேவர்கள்
புஷ்பாதி உப கரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
————————–
வங்க மலி பௌவமதுமா முகட்டின் உச்சி புக மிக்க பெரு நீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால்
நாங்கள் பெருமான் உறையும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-9-
நங்கள் ஸ்ரீ பெருமான் உறையும் –ஸ்ரீ பர அவஸ்தை ஸ்ரீ நித்ய சூரிகளுக்காய் இருக்கும்
ஸ்ரீ வ்யூஹம் ப்ரஹ்ம ருத்ராதிகள் பரிபவத்தைப் போக்கவாய் இருக்கும்
ஸ்ரீ அவதாரங்கள் ஸ்ரீ வசுதேவர் ஸ்ரீ சக்கரவர்த்திகள் தொடக்கமான பாக்யாதிகருக்காய் இருக்கும்
பிற்பாடரான நம் போல்வாருக்காய் இருக்கும் இறே உகந்து அருளின நிலங்கள்
ஸ்ரீ நித்ய சூரிகளும் இங்கே வரும் போது குறைவாளராய் வர வேணும்
அந்தருக்கு வைத்த சாலையில் கண்ணை மறைத்து வர வேணும் இறே –
————————-
நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே—5-10-10-
நண்ணு மனமே என்று உத்தேச்யமாக சொன்ன தேசம் ஆகையாலே இவ்விடம் நமக்கு ஆஸ்ரயநீய ஸ்தலம்
என்னும் பிரதிபத்தியோடே கூட அப்யசிக்க வல்ல அடியவர்கள் உடைய
க்ரூரமாய் அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவது அன்றிக்கே இருக்கிற பாபங்கள் சவாசனமாகப் போம் –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .