ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -ஆறாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-பிரவேசம்

இவருக்கு உகந்து அருளின நிலங்களில் உண்டான ருசியைப் பற்ற ஸ்ரீ ஈஸ்வரன் இங்கே வைத்தான் –
சப்தாதி விஷயங்களும் இந்நிலத்திலேயாய் இருந்தது –
நீர் மனிசரைக் கரையினிலே நிறுத்தினால் பழைய வாசனையாலே நீரிலே போய்ப் புகுமா போலே
உகந்து அருளின நிலங்கள் இங்கே உண்டானாலும் விஷயங்கள் பரிமாறுகிற இடத்தில் உண்டான இருப்பு
அவற்றில் கை கழிய போகைக்கும் உடலாய் இருக்கையாலே
ஸ்ரீ ஈஸ்வரனுக்கும் இவருக்கு இங்கனேயும் ஒரு நினைவு உண்டோ -என்று
கை கழிய விடுகைக்கு உடலாய் இருக்கையாலே-சாஷாத் கரித்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பகவத் விஷயத்தில் தமக்கு உண்டான ருசியையும்
விட்டு அல்லது நிற்க ஒண்ணாத படி சம்சாரத்தில் பிறந்த அருசியையும்
அவன் திரு உள்ளத்தில் படும்படி-விண்ணப்பம் செய்கிறார் –
ஆத்மவஸ்து பகவத் அர்ஹம் அல்லாமை அன்று இறே –

அநாதி காலம் சம்சரித்தது அசித் ப்ரத்யா சத்தியாலே இறே-ஆன பின்பு-இத்தை தவிர்த்துக் கொள்ள வேணும் இறே –

இத்தால் –
வேண்டேன் மனை வாழ்க்கையை -ஒரு கால் சொன்னால் போலே ஒன்பதின் கால் சொல்லிக் கூப்பிடுகிறார் –

————————

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-1- பிரவேசம் –

சம்சாரத்தில் தமக்கு உண்டான அருசியை விண்ணப்பம் செய்தார் –
விண்ணப்பம் செய்யச் செய்தேயும் கடுக வந்து அத்தைத் தவிர்த்து தன்னைக் கொடு நிற்கக் கண்டிலர்
காணாமையாலே
முன்பு அநாதி காலம் அவற்றை விரும்பி தன்னை நெகிழ்ந்து போந்தோம்
இப்போதும் அவ்வாசனையைக் கொண்டு அவற்றை விரும்பி தன்னை நெகிழ்ந்து இருந்தோம் -என்று
நினைத்து இருந்தானாக வேணும்
பூர்வ வருத்தத்தை ஸ்மரிப்பித்து அதில் எனக்கு ருசி இல்லை என்னும் இடத்தை
ஸ்ரீ சர்வஞ்ஞன் திரு உள்ளத்திலே படுத்தி
கடுக கிட்டலாவது ஒரு சாதனத்தை பரிக்ரஹித்து கொடு நிற்க வேணும் -என்று பார்த்து
அதுக்கு உறுப்பாக அநாதிகாலம் தாம் சம்சாரித்து போந்த படியையும்
அது தன்னில் ஜன்ம பரம்பரைகளில் கை கழிந்த படியையும்
அர்த்த காமங்களை விரும்பிப் போந்த படியையும்
இந்த்ரிய வச்யனாய் போந்த படியையும்
இப்போது மேல் வரக் கடவ நரகாநுபவத்தை நினைத்து அஞ்சுகிறபடியையும்
விண்ணப்பம் செய்து
இவை என்னால் கழித்துக் கொள்ளல் ஆவது அன்றிக்கே இருந்து
என்னுடைய இக்குற்றங்கள் ஒன்றையும் பாராதே-தேவரோடு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையே பார்த்து
ஸ்ரீ பிராட்டி புருஷகாரமாக என்னை ஸ்வீகரித்து அருள வேணும்
என்று திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார் –

—————–

துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின்னுருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில்
பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே–6-3-1- பிரவேசம் –

வண்டுண் நறு மலரிலே -வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே -என்று
தாம் பல காலும் விண்ணப்பம் செய்த வார்த்தை சஹ்ருத்யம் என்று ஸ்ரீ அப்பன் திரு உள்ளத்தில் படும்படியாக
பொறுத்தேனில் -அம்மனை வாழ்க்கையிலே அந்வயித்து அவற்றால் தாம் மாறுபடுருவ கிலேசப்பட்ட படிகளையும்
தத் தேதுக்களையும் விண்ணப்பம் செய்து – இவ் வநிஷ்டமான வாழ்க்கையை தவிர்த்து
எனக்கு இஷ்டமான உன் தாளிணைக் கீழ் வாழ்ச்சியை நான் பெறும்படி பண்ணித் தந்து அருள வேணும்
என்று திருவடிகளிலே சரணம் புகுகிறேன் -என்கிறார் –

ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஒரு ஸ்வ பாவம் உண்டு-அநாதி காலம் சம்சாரித்துப் போந்தான் ஒருவன்
சம்சாரத்தில் விரக்தி பிறந்து-இத்தை வேண்டேன் என்று இதில் தோஷங்களை சொல்லிக் காட்டுவது
இத்தைத் தவிர்த்து தர வேணும் என்று சரணம் புகுவதானாலும்
திரியவும்-பூர்வ வாசனையாலே அவற்றில் சில பாசம் கிடக்க அடுக்கும் என்று
அவற்றில் தன்னால் ஆராயும் அளவிலே ஆராய்ந்து
தனக்கேயாக-அவற்றில் கடையறப்பாசங்கள் விட்டார்க்கு அன்றி கார்யம் செய்யான் –
ஆகையாலே -பொறுத்தேன் -என்று கீழ் இவர் சொன்ன வார்த்தைகளைத் -தனித் தனியே ஆராய்ந்து
இவற்றில் அறவிடாதே-எத்தை இன்னும் அனுசந்திக்கப் பார்த்தீர் -என்றாப் போலே கேட்க
அவற்றில் தமக்கு அவிருத்தமாய் விடாதே ஒழிய நினைத்தவற்றையும்-விருத்தமாய் விட நினைத்தவற்றையும் –
விண்ணப்பம் செய்து-குலவானவர் தம் கோதா -என்று கீழ் சொன்ன தேச விசேஷ பிராப்தியில்
தமக்கு உள்ள த்வரையும் அறிவித்துத் தலைக் கட்டுகிறார்
பொறுத்தேன் பதிகத்தில் முதல் பாட்டில்-பொருள் இன்பம் -இவற்றில் பிரதானமான இன்பத்தில்
நீர் நின்ற நிலை என் என்ன -சொல்லுகிறார் –

———————–

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1- பிரவேசம் –

வினைகள் நலியாமை நம்பு நம்பீ-என்றார்-அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட்டு இருக்க –
அத்தனை க்ரமம் பார்த்து ஆறி இருக்க ஒண்ணாத படி ஆற்றாமை விஞ்சிற்று –
சேஷ பூதன் சேஷி செய்த படி செய்யக் கண்டு இருக்கும் அது ஒழியக்
கால் கட்டி நிர்பந்திக்கக் கடவன் அல்லேன் இறே-
அம்முறை பார்த்து நிற்க ஒண்ணாத படி ஆற்றாமை கரை புரளுகையாலே இனிச் செய்யும் அது எத்தனை -என்று பார்த்து
சரீர விச்லேஷத்து அளவும் இருந்து அர்ச்சிராதி மார்க்கத்திலே ஒரு தேச விசேஷத்திலே கொடு போய்
தன்னை அனுபவிப்பிக்கும் அளவும் செல்ல
அவன் வைத்த தண்ணீர் பந்தலிலே ஒதுங்குவோம் என்று பார்த்தார் –
அதாகிறது
அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூ கமாஸ்வே-என்கிறபடியே
அத்தோடு போலியாக சொல்லலாய் இருக்கிற உகந்து அருளின நிலங்களிலே அனுபவிக்கை இறே –
பிரஜையினுடைய ஆர்த்திக்கு உதவுகைக்காக மாதா பிதாக்கள் சேர இருக்குமா போலே
ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஸ்ரீ பிராட்டியும் கூடே வந்து சந்நிதி பண்ணுகிற ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு அனுபவிக்கப் பார்த்தார்
அத்தை ஒழிய வேறு சிலவற்றை அனுபவிக்கும் இடத்தில் அதுக்கு பரிகரம் சரீரமே
அது தான் பரிணாமி ஆகையாலே ஒரு நாள் இருந்த படி இராதே-ஷணம் தோறும் வேறுபடா நிற்கும் இறே
அந்த சரீரம் கொண்டு அனுபவிக்கும் இடத்தில் அதுக்கு விஷயம் ஸ்திரீகளே
அவர்கள் ஆகிறார் –
இவன் பக்கல் ஏதேனும் சில உபாதியைப் பற்ற சில நாள் ஸ்நேஹித்து அது போனவாறே அவனை அநாதரித்து
உபேஷாவாதத்தைப் பண்ணி-பரிபவிக்குமவர்களாய் இருந்தார்களே -ஆனபின்பு அவர்களை விட்டு
சர்வ அவஸ்தையிலும் சென்று பற்றலாம் படி ஸூலபனாய் தான் சந்நிஹிதனுமாய்க் கொண்டு
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திரு நறையூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
மோஷார்த்தமாக யத்தனித்த நீ-அதில் தோள் மாறும் அளவும் செல்ல அத்தோடு போலியாய் சொல்லலாயிருக்கிற
ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு ஆஸ்ரயிப்போம் வா -என்று திரு உள்ளத்தோடே கூட்டுகிறார் –

————————

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி இடங்கைச் சங்கம் உடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே –6-5-1-பிரவேசம் –

ஸ்திரீகள் உடைய பரிபவத்துக்கு பரிஹாரமாக ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு ஒதுங்குகை அன்றிக்கே
அங்கே போய்ப் புகவே அம்ருத மதனம் தொடக்கமான அபதானங்களைப் பண்ணி தேவ ஜாதிக்கு உபகாரகனாய் –
ஆஸ்ரிதருக்கு உதவும் ஸ்வ பாவனாய்-
உதவும் இடத்து ஸ்ரீ பிராட்டிமாரோடு ஆஸ்ரிதரோடு வாசி அற உதவும் ஸ்வ பாவன் வந்து நிற்கையாலே
அவ்வருகே உள்ளவை எல்லாம் அவன் தானே தலைக் கட்டித் தரும் –
அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே முக்த ப்ராப்யமான பூமியோடு போலியான தேசம் என்று
அத்தேசத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

————————-

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1- பிரவேசம் –

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனானவன் வந்து நிற்கிற தேசம் ஸ்ரீ திரு நறையூர் என்று அனுசந்தித்தார் –
நமக்கு அந்த ஸ்நேஹமும் இன்றிக்கே தாந்தரும் அன்றிக்கே இருக்கிற நாம் ஆஸ்ரயிக்கும் படி எங்கனே -என்கிற
திரு உள்ளத்தைக் குறித்து
தான் துர் மாநியுமாய்-ஸ்நேஹமும் இன்றிக்கே இருக்கிற ராஜா தான் ஸ்ரீ மார்கண்டேய பகவானைப் போலே
தேவதாந்திர பஜனம் பண்ணி-அங்கு தன்னுடைய அபிமதம் தலைக் கட்டிக் கொள்ளப் பெறாமையாலே
இங்கே வந்து பக்ன அபிமானனாய் திருவடிகளிலே விழுந்து ஆஸ்ரயித்து ஐஹிக ஆமுஷ்மிகங்கள் இரண்டையும் பெற்றுப் போனான் –
ஆனபின்பு-ஸ்ரீ திரு நறையூரை ஆஸ்ரயி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து
பர உபதேச பிரவ்ருத்தர் ஆகிறார் –
ஸ்ரீ நம்பி ஒரு வாள் கொடுத்து அருள அத்தைக் கொண்டு பூமியை அடைய தன் காலின் கீழே
இட்டுக் கொண்டான் -என்று ஒரு பிரசித்தி உண்டாய்த்து –

——————————–

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே–6-7-1- பிரவேசம் –

ராஜ்ய லாபத்துக்காக ஆஸ்ரயிக்கை அன்றிக்கே ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியைக் கொண்டான் என்னை –
ஆனபின்பு ஆபன்னர்க்கு எல்லாம் புகல் அவன் அல்லது இல்லை –
இப்படி இருந்த பின்பு எல்லாரும் அத்தேசத்தில் போய்ப் புக்கு அவனை அனுபவிக்கப் பாருங்கோள்- என்கிறார்-
புனஸ்ஸ
நான் சொன்ன ஹிதத்தில் நாட்டாருக்கு அபேஷை இல்லை யாகிலும்
எனக்கு ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்திலே ருசியைப் பிறப்பித்து
அதுக்கு விரோதியையும் போக்கின அவன் அல்லது ஆபன்னார்க்கு புகல் இல்லை
ஆனபின்பு அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசமே ஆஸ்ரயநீய ஸ்தலம் என்கிறார்-

———————-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –6-8-1- பிரவேசம் –

இந்த்ராதி தேவதைகள் தன்னைக் கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே பிரயோஜனாந்தரங்களை அபேஷிக்க
அவர்களுக்காக தன்னைப் பேணாதே இரப்பாளன ஆக்கி –
கடல் கடைந்தும்-இப்படி அபேஷித சம்விதானம் பண்ணும் அவனை
நான் உத்தேச்யனாகப் பற்றி
அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற திரு நறையூரிலே நான் காணப் பெற்றேன் –
அத் தேசமே உத்தேச்யம் -என்கிறார் –

——————————

பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர்கெடுத்த திருவாளன் இணை யடியே யடை நெஞ்சே —6-9-1- பிரவேசம் –

நான் சென்று நாடி நறையூரிலே கண்டேனே -என்று
ஆஸ்ரயநீய வஸ்துவை ஒரு தேச விசேஷத்தில் போய் காண்கை அன்றிக்கே
சம்சார பூமியிலே-ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெருகையால் வந்த அலாப்ய லாபத்தால் ஹ்ருஷ்டர் ஆனார் –
அவனைக் காணப் பெற்ற பின்பு-அவன் ஸ்வரூபத்துக்கும் நம் ஸ்வரூபத்துக்கும்
அனுரூப்மான வ்ருத்தி விசேஷத்தை பண்ணப் பார் கிடாய் நெஞ்சே
என்று திரு உள்ளத்தைப் பார்த்து அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ திரு நறையூரிலே திர்யக்குகளும் அகப்பட பேடை பிரதானமாய்த்து இருப்பது –
ஆகையால் அங்கு நிற்கிற ஸ்ரீ நம்பிக்கும் ஸ்ரீ பிராட்டி பிரதாந்யம் உண்டாகக் கடவதே
ஆகையால் ஆஸ்ரயநீயதை குறைவற்ற தேசம் ஆயத்து –

ஷணம் தோறும் ஸூகுமாரராய் இருக்குமவர்கள் முகத்திலே நீர் ஏறிட்டுக் கொள்ளுமா போலே
பிராப்தி அளவும் பிரபத்தி பண்ணா நிற்பார் ஆயத்து
சக்ரு தேவவுக்கு -சஹ சைவ -என்று ஸ்ரீ ஆழ்வான் நிர்வஹிப்பதோர் பொருள் உண்டு இறே-
ஒரு ஜென்மமாக பிரபத்தி பண்ணுமது சாலவும் அசக்ருத்தாய் இருந்ததோ
பெற்ற பேற்றைப் பார்த்தால் -என்று அருளிச் செய்தார் ஸ்ரீ எம்பார் –
பகவல் லாபம் ஒழிய புறம்பு தரிக்க வல்லர் அல்லர் –
இது ஒழிய வேறு ஒரு உபாயம் உண்டு என்று இருக்குமவர் அல்லர் –
வேறு ஒரு உபாயம் உண்டு என்று இருக்கும்படி அன்று இறே இதில் உண்டான நிலை –

————————–

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1–பிரவேசம் –

திரு உள்ளத்தைக் குறித்து -திருவடிகளிலே சரணம் புகு -என்றார் –
சரணம் புகுகைக்கே ஈடாக இங்கு எல்லாம் சரண்யதை குறை வற்றதோ என்ன –
அவனுடைய திரு நாமம் கேட்டு அறிவது இல்லையோ -என்கிறார் –
ஆஸ்ரித சுலபனாய் –அதி மானுஷ சேஷ்டிதங்களை உடையனாய் –விரோதி நிரசன சீலனாய் – உபய விபூதி உக்தனாய் –
இருக்கிற இருப்புக்கு வாசகமான திரு நாமத்தோடே – ஸ்ரீயபதித்வத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார் –

———————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading